செவ்வாய், 31 ஜனவரி, 2017

திரு அண்ணாதுரை ISO. அவர்கள் கேட்டு உள்ள கேள்விகள்!

திரு அண்ணாதுரை ISO. அவர்கள் கேட்டு உள்ள கேள்விகள்!

சன்மார்க்கிகள் என்று சொல்லுகிறோம்."சாகாதவனே சன்மார்க்கி"' என்று வள்ளலார் சொல்லுகிறார்.
.அப்போது நாம் எல்லாம் சன்மார்க்கிகள் இல்லையா ? சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள்.ஏன் இந்த நிலை சன்மார்க்கத்தில் உள்ளது.கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. என்றும்.இதற்கு சரியான விளக்கம் தரவேண்டும் என்று கேட்டு உள்ளார்.

வள்ளலார் நமக்கு "அருள் விளக்க மாலை''என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

தயை உடையார் எல்லாரும் சமரச  சன்மார்க்கம் சார்ந்தவர்கள் என்றும்.

அருள் உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவர்கள் என்றும் விளக்கம் தந்து உள்ளார்.

நாமும் நமக்கு முன்னாடி இருந்தவர்களும் .தயவுடன் சன்மார்க்கத்தில் சார்ந்து  ஜீவகாருண்யம் செய்து வருகிறோமேத் தவிர.  எவரும் அருளைப் பெற முயற்சி செய்ய வில்லை.அருளைப்பெற்று சாகாமல் இருந்தால் மட்டுமே முழுமையான சன்மார்க்கி என்பதை "சாகாதவனே சன்மார்க்கி'' என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

வள்ளலார் சொல்லிய உண்மையான சுத்த சன்மார்க்க பாதையை பின் பற்றாமல் அவரவர்களுக்கு தெரிந்ததை பின் பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளதால்.அருளைப் பெற முடியாமலும்.மரணத்தை வெல்ல முடியாமலும் மடிந்து கொண்டே உள்ளார்கள்.

மேலும் வள்ளலார் சொல்லி உள்ளபடி நாம் வாழ்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்.வள்ளலார் சொல்லி உள்ளதை பாருங்கள்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.என்று தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

மேலே சொல்லியவாறு எந்த சன்மார்க்கியாவது பின் பற்றி வாழ்ந்து உள்ளார்களா ? வள்ளலார் சொல்லியபடி வாழாததால்  மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள்.

* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தைக் குறிக்கும். வள்ளலார் சித்திவளாகத்தில். அங்கிருந்த மக்களுக்கு தெளிவாக  உபதேசம்.செய்து உள்ளார்.

அப்போது உள்ளவர்களும் கேடகவில்லை.இப்போது உள்ளவர்களும் வள்ளலார் சொல்லிய வண்ணம் பின் பற்றவில்லை.எப்படி மரணத்தை வெல்ல முடியும். சிந்திக்க வேண்டும்.

ஆனால் இப்போது சன்மார்க்கத்திற்கு புதியதாக வருபவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.சாதிசமய மத ஆச்சாரங்களை தூக்கி எறிபவர்களாக இருக்கின்றார்கள்.ஒரேகடவுள் என்ற பூரண நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.அந்த கடவுள் அருட்பெரும்ஜோதிதான் என்ற உண்மையை ஏற்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

இனி சுத்த சன்மார்க்க காலம். இனிமேல் சுத்த சன்மார்க்கிகள் மரணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

சன்மார்க்கிகள்.ஜீவகாருண்யத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.சத்விசாரத்தில் தெளிவு இல்லாமல் இருக்கின்றார்கள்.

சத்விசாரம் என்பது தன்னையும்.தலைவனையும் அறிதல்.அதாவது ஆன்மாவையும்.அருட்பெருஞ்ஜோதியையும் தொடர்பு கொள்ளும் தந்திரத்தை அறிவாலே அறிந்து கொண்டால் .அருள் கிடைக்கும் வழி தெரிந்து கொள்ளலாம்.மரணத்தையும் வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழி காட்டலாம்.

எது எப்படியோ.இந்த பிறவியில் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க சங்கத்தில் சார்ந்து வாழ்வதற்கே கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.அருளைப் பெருவதற்கு முயற்சி செய்து அருளைப்பெற்று .சன்மார்க்கத்தை அடைந்து காட்டுவோம்.

எக்காரணத்தைக் கொண்டும் நம்மை. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கைவிட மாட்டார்.

முயற்சி செய்து கொண்டே இருப்போம்.நமக்கு நல்ல வழியைக் காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம்.

தாயாகவும்.தந்தையாகவும் தாங்கிக் கொண்டு உள்ளவர்தான் எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உண்மை அறிவால் அறிந்து.

அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை இடைவிடாது தோத்திரம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தந்திரம்.....

தொடரும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 30 ஜனவரி, 2017

ஆட்சியில் இருக்க தகுதி உடையவர்கள் !

ஆட்சியில் இருக்க தகுதி உடையவர்கள் !

கொலை.புலை தவிர்த்தவர்கள் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டும்.

உலகில் உள்ள எந்த ஆட்சியாக இருந்தாலும்.இதுதான் உண்மை.

மந்திரிகளும் சட்டசபை உறுப்பினர்களும்.நாடாளுமன்ற உறுப்பினர்களும்.நாடாளுமன்ற மந்திரிகளும்.கொலை.புலை தவிர்த்தவர்களாகவே இருக்க வேண்டும்.

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா உயிர்களும் கை கூப்பித் தொழும்.....என்று திருவள்ளுவரும்.வள்ளலாரும் சொல்லி உள்ளார்கள்.

இவற்றை கடைபிடிப்பவன் எவனோ அவனே மனிதன்.மற்றவர்கள் எல்லாம் மிருககுணம் உள்ளவர்கள்.

எனவே மக்களை ஆட்சி செய்பவர்கள் யாராக இருந்தாலும். கொலை .புலை தவிர்த்து இருந்தால் மட்டுமே ஆட்சி பீடத்தில் அமரவேண்டும்.

இல்லையேல் ஆட்சி அழிந்துவிடும்.இது இயற்கையின் நியதி.இதை யாராலும் மாற்ற முடியாது. தடுக்க முடியாது.

உயிர்கள் மேல் கருணை இல்லாத ஆட்சி கடுகி ஒழிந்துவிடும்... இதுதான் வள்ளலார் வாக்கு.

ஆட்சியாளர்களே தெரிந்து.புரிந்து.அறிந்து நடந்து கொள்ளுங்கள்

சொல்லிபுட்டேன் அவ்வளவுதான்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்..

சனி, 28 ஜனவரி, 2017

ஆட்சியை யார் ? ஆள வேண்டும்.!

ஆட்சியை யார் ? ஆள வேண்டும்.!

நாட்டையும் .நாட்டு மக்களையும் மற்ற உயிர் இனங்களையும் காப்பாற்ற வேண்டிய பொருப்பு நாட்டை ஆள்பவரிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளன.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ஆன்மீகம் சார்ந்தவர்களே ஆட்சியை ஆண்டு கொண்டு வந்தார்கள்.

ஆட்சி முறைகள் சட்டதிட்டங்கள் முறையாக மக்களுக்கு நன்மை பயக்காமல் மதக்கலவரங்களாக.சமயக்கலவரங்களாக.சாதிக்கலவரங்களாக மாறின.அதனால் பல கோடி மக்கள் உயிர் இழந்தார்கள்.

அதன் பின்பு அரசியல் கட்சிகள் பல உருவெடுத்தன.பல பல  கொள்கைகளை முன் வைத்து மக்களைக் காப்பாற்ற மக்களே .ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கொள்கைப்படி .மக்களுக்கு சுதந்தரம் என்னும் உரிமையை பெற்றுத் தரப்பட்டன. அந்த சுதந்தரம் பெருவதற்கும் பல கோடி உயிர்கள் பலி ஆயின.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு குடி அரசு நாடு என்றும்.சுதந்தர நாடு என்றும் பெயர் வந்தன.

ஆனால் மக்களின் ஏழ்மையினாலும்.வறுமையினாலும். அறியாமையாலும் .திருடர்களையும்.கொள்ளைக்காரர்களையும்.கொலைக்காரர்களையும்.குடிகாரர்களையும் .தேர்வு செய்து ஓட்டு போட்டு .நாட்டையே அழிப்பவர்களை ஆட்சியில் அமர வைத்து விட்டு .அழுதுகொண்டும் புலம்பி கொண்டும் உள்ளார்கள்.

இனிமேல் எந்த அரசியல் கட்சிகளாலும்.நாட்டையும் நாட்டு மக்களையும் எக்காலத்திலும் காப்பாற்றவே முடியாது.

எனவேதான் நாட்டை ஆளும் தகுதி உடையவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவுப்படுத்தி பதிவு செய்கிறார்.

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க

தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக

நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து !

என்று புரட்சி குரல் கொடுக்கின்றார்.

மக்கள் ஏற்ற தாழ்வு அற்ற .ஒத்தாரும்.உயர்ந்தாரும்.தாழ்ந்தாரும்.இல்லாத சமுதாயத்தை உறுவாக்க வேண்டுமானால்."அருள் பெற்றவர்கள்''மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்கின்றார்.

இனிமேல் வள்ளலார் சொல்லியபடிதான் எல்லாமே நடக்கும்.இதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதற்கு சுத்த சன்மார்க்கிகள் அருள் பெறுவதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி வருங்காலம் சுத்த சன்மார்க்க காலம் என்பதை மறந்து விடாதீர்கள்.

மக்களைக் காப்பாற்ற சன்மார்க்கிளால் மட்டுமே முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நமக்கு எல்லாம் அரசியல் வேண்டாம் என்பது நமது கோழத்தனமாகும்.ஆன்மீகம் வேறு.அரசியல் என்று ஒதுங்கி விடாதீர்கள்.

அருள் ஆட்சியின் மூவமாகத்தான் சாகாக்கலவியை மக்களுக்கு போதிக்க முடியும்.மக்களை.கொலை.புலை தவிர்த்து ஒழுக்கமுள்ளவர்களாக மாற்ற முடியும்.

சிந்தியுங்கள் செயல் படுங்கள்.இனி வருங்காலம் சன்மார்க்க காலம்.என்பதை மறந்து விடாதீர்கள்.சன்மார்க்க அருளார்கள்தான் நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

வள்ளலார் வாய்மொழி என்றும் பலிக்கும்.வள்ளாரின் புரட்சிக் குரல் எங்கும் ஒலிக்கும்.

மகிழ்ச்சியுடன் வாழ்க மக்கள் !

வளர்க சுத்த சன்மார்க்கம் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 27 ஜனவரி, 2017

ஒர் அன்பான வேண்டுகோள் !

மாணவ. மாணவிகள் இளை
ஞர்களுக்கு ஒர் அன்பான வேண்டுகோள்!

வள்ளலார் அன்றே சொன்னார் !

சுமார் 150.ஆண்டுகளுக்கு முன்பே வள்ளலார் சொன்னார்.

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு.எல்லா உயிர்களிலும் இறைவன் குடிஇருக்கின்றான்.எனவே எல்லா  உயிர்களையும் தன் உயிர்கள் போல் பாவியுங்கள்.என்று மிகவும் வேதனைப்பட்டு.வருத்தப்பட்டு அழுது புலம்பி சொன்னார்.

உயிர்க்கொலை செய்வதும் தவறு பாவம்.அதன் புலாலை.உண்பதும் தவறு பாவம் என்று சொன்னார்.

நம் மக்கள் அறியாமையால்.அறிவு இல்லாதவர்கள் காட்டிக் கொடுத்த.கட்டிக் கொடுத்த கடவுளின் பெயரால் உயிர்களை பலிஇடுவது..அதன் புலாலை உண்பது.கொடிய பாவச் செயலாகும் என்பதை  மக்களுக்கு அறிவுறித்தினார்.போதித்தார்.

அவற்றை.அந்த கொடிய செயலை தடுப்பதற்காகவே .சங்கத்தை ஆரம்பித்தார்.அதற்கு 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்ற அமைப்பை உறுவாக்கினார்.அதில் மிகவும் முக்கியமானது .தலைமையானது ஜீவகாருண்யம் தான் என்பதை மக்களுக்கு விளக்கி.ஜீவகாருண்ய ஒழுக்கம் .என்ற மாபெரும் சக்தி வாய்ந்த உண்மை ஒழுக்கம் நெறிகள் அடங்கிய .அருள் நூலை எழுதி வெளியிட்டார்.

அந்த நூல்தான் இன்று உலகம் முழுவதும் உள்ள  சன்மார்க்கிகளால் மக்களுக்கு போதிக்கப் படுகிறது. வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள்.தன் வாழ்நாள் முழுவதும் உயிர்க் கொலையும் செய்ய மாட்டார்கள்.புலால் என்னும் மாமிசத்தையும் உண்ணமாட்டார்கள்.

வள்ளலார் இரண்டே சாதியைப் பிரித்தார்.ஒன்று உயிர்க்கொலை செய்யாதவர்கள் புலால் உண்ணாதவர்கள்.ஒன்று உயிரக்கொலை செய்பவர்கள் புலால் உண்பவர்கள்.எனப்பிரித்தார்.

புலால் உண்ணாதவர்களை அக இனத்தார் என்றும்.புலால் உண்பவர்களை் புற இனத்தார் என்றும் பிரித்தார்.

உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும்்.கடவுளை வணங்கவோ.வழிபடவோ தகுதி அற்றவர்கள.அவர்களுக்கு கடவுளின் அருள் .கடவுளின் பார்வை எக்காலத்திலும் கிடைக்காது.என்றும் அவர்களின் குடும்பத்தில்..துன்பம்.துயரம்.அச்சம்.பயம் போன்ற தீராத பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும் என்றும்.் அவர்களுக்கு ஆன்ம நெகிழ்ச்சியோ.ஆன்ம உறுக்கமோ. ஆன்ம மகிழ்ச்சியோ. அருளின் விளக்கமோ. என்ன என்பதே தெரியாமல்.புரியாமல் வாழ்ந்து மாண்டு அழிந்து போவார்கள் என்பதை தெளிவாக விளக்கி விளக்கம் தந்து உள்ளார்.

இன்று உலகம் முழுவதும் பீட்டாவின் செயல்பாடுகள் குறித்து தமிழக மாணவ மாணவிகள.மற்றும்பொது மக்கள் ஜல்லிக்கட்டுக்காக போராடி வெற்றி கண்டு உள்ளார்கள்.மிகவும் பாராட்டக்கூடியது.போற்றக்கூடிய செயல்களாகும்.அவர்களுக்கு தலை வணங்குகிறேன்.அவற்றிற்கு என்னுடைய முழு ஆதரவையும் தந்து உள்ளேன்.

அதே நேரத்தில்.மாணவ மாணவிகள். பொது மக்கள் அனைவரும் எந்த உயிர்களையும் கொலை செய்யவோ.அதன் புலாலை உண்ணாமலோ இருந்தால்.மிகவும் பாராட்டுக்குறியது.போற்றக்கூடியதாகும்.  வாய் இல்லாத எல்லா  உயிர்களுக்கும்். நம்மைப்போன்றே. அவைகளுக்கும் உயிரை  இறைவன் படைத்து உள்ளார்.கொடுத்து உள்ளார்.

 எத்துனையும் பேதம் இல்லாமல் எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் குணம் வந்து விட்டாலே.நம் வீடும்.நம் நாடும் உயர்ந்து விடும்.

கருணை இல்லாத ஆட்சி கடுகி அழிந்துவிடும்.

நாம் அனைவரும் என்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

இன்றில் இருந்து எந்த உயிர்களையும் கொலை செய்யமாட்டோம்.அவற்றின புலால் என்னும் மாமிசத்தை உண்ணமாட்டோம் என்ற உறுதிப்பாட்டை கடைபிடிக்க வேண்டுமாய்.உங்கள் அனைவரையும்.வாழ்த்தி. வணங்கிக் கேட்டுக் கொள்கிறோம்.

நமது தமிழ் நாட்டில் தோன்றிய முற்றும் உணர்ந்து .தெரிந்து.அறிந்து மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர.வாடிய பயிரைக் கண்ட போது எல்லாம் வாடிய.் வள்ளலார் அவர்கள் உலக மக்களுக்கு போதித்த உண்மையான வாழ்க்கை முறை ஒழுக்க நெறியாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 19 ஜனவரி, 2017

வேறுஆட்களேஇல்லையா?

தமிழ் நாட்டை ஆள்வதற்கு வேறு ஆட்களே இல்லையா?

தன்மானம் உள்ள தமிழர்களே! தமிழ் நாட்டை ஆள்வதற்கு .ரஜினி.தீபா.சசிகலாவை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா ?

இவர்களின் கொள்கைகள் என்ன ? இவர்களின் திறமைகள் என்ன ? இவர்கள் நாட்டு மக்களுக்காக என்ன தியாகம் செய்து உள்ளார்கள்.எத்தனை வருடம் மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறைச்சாலை சென்று உள்ளார்கள்.

தமிழகத்தை ஆட்சி செய்ய இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது.என்ன கொள்கை உள்ளது.என்ன திறமை உள்ளது என்பதே தெரியாமல் இவர்களை .வாங்க வாங்க என்று அழைக்கின்றீர்களே .அதற்கு என்னக் காரணம்.

உங்களின் அறியாமையை நினைந்து வேதனைப் படுவதா ? வெட்கப் படுவதா ? என்றே தெரிவதில்லை....

நம் நாட்டில் திறமை உள்ளவர்கள.அறிவு ஆற்றல் உள்ளவர்கள்.நாட்டை ஆளும் திறமை உள்ளவர்கள்.மக்களின் மேல் அக்கரை உள்ளவர்கள் .மக்களின் அறியாமையை நீக்கும் கொள்கைப்பாடு  உடையவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

அவர்கள் யாரும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா.தெரிந்து கொள்ளும் அறிவு இல்லையா ?

நான் யாரையும் குறைகள் சொல்ல விரும்ப வில்லை.அவரவர்களுக்கேத் தெரியும்.

நல்ல அறிவுடனும் நல்ல சிந்தனையுடனும் செயல் படுங்கள்.

நல்ல ஒழுக்கம் உள்ள .கருணை உள்ள .அக்கரை உள்ள .அறிவு உள்ள.அருள் உள்ள.கொள்கை உள்ள நபரை தேர்வு செய்யுங்கள்.

அப்போதுதான்.நாடும். நாட்டு மக்களும்.நலமுடனும்.ஒழுக்கமுடனும். மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

சிந்தித்து செயல் படுங்கள். அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளி எறியாதீர்கள்.

உங்களில் ஒருவன்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

மக்கள்பக்கம்இருப்போம் !

மக்களின் பக்கம் இருப்போம் !

இப்போது ஆன்மீகம் வேண்டாம்.மக்களின் எண்ணங்கள் யாவும் .தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம்.பண்பாடு.உழவர்களின் வாழ்க்கை.உழவர்களின் தவிப்பு.மற்றும் உழவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம்.மாணவர்கள்.இளைஞர்களின்.நியாயமான கொந்தளிப்பு யாவும் அரசியல் ஆட்சி.சட்த்தை நோக்கி சென்று கொண்டு உள்ளது.

இதுவும் ஒரு சிறந்த ஆன்மீகம்.சாதி.சமயம்.மதம் அற்ற ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப் போராட்டம்.

இது ஆரம்பம்.இனி மனித சமுதாயம்.புதிய சிந்தனைக்கு ஆரம்பமாகிக் கொண்டு  உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகின்றது.

இப்போதுதான் உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உண்பது உயிர் வதை இல்லையா ? ஐல்லிகட்டுதான் உயிர்வதையா ?என்பதை அனைத்து தர மக்களும் பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இதுதான் வள்ளலார் சொன்ன.உயிர்களை கொல்லாதே.அதன் மாமிசத்தை உண்ணாதே என்னும். ஜீவகாருண்யம் என்பதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள்.

சன்மார்க்கிகள் சொல்லிக் கொண்டு இருந்த கொல்லாமை என்னும்  வார்த்தைகளை மக்களே பேச ஆரம்பித்து விட்டார்கள்.

இதுதான வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க சத்திய சங்க காலத்தின் ஆரம்பம்.இனி சன்மார்க்கம் தான் உலகம் முழுவதும் பரவும் காலம்.

வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தை தமிழ் நாட்டில் தான் விதைத்து உள்ளார்.இனி உலகம் முழுவதும் வேர் ஊன்றி பரவ தொடங்கி விட்டது.

இவை ஜல்லிக்கட்டு போராட்டம் மட்டும் அல்ல.இதில் எல்லாம் அடங்கி உள்ளது.அரசியல்.ஆட்சி.சட்டம்.ஒழுக்கம்.விவசாயம்.வாழ்க்கை அனைத்தும் அடங்கி உள்ளது.

இனி வருங்காலம்.மாணவர்கள்.இளைஞர்கள் கையில்தான் உள்ளது.சன்மார்க்கிகள் அவர்களுக்கு துணையாக இருந்து .அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தருவோம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

தமிழனின்எழுச்சி !

[19/01, 9:35 a.m.] Sumathi I: தமிழனின் தன்னெழுச்சி♦

உலகிற்கே தாய்நாடு தமிழ்நாடு
உலகிற்கே தாய்மொழி தமிழ்மொழி
தமிழனென்ற உணர்வில் நம்பிக்கை பிறந்திருக்கிறது

மீரட் புரட்சி நடக்கும் முன்பே வேலூர் புரட்சியை  நிகழத்தியர்கள் நாங்கள்..
நீங்கள் மீரட் புரட்சியையே முதல் இந்திய சுதந்திர போராக பதிந்து கொண்டீர்கள்.
ஆங்கிலேயரை  வெற்றிக்கொண்ட வேலுநாச்சியாரை தந்தவர்கள் நாங்கள்..
நீங்கள் தோற்ற ஜான்சிராணியே வீரத்தின் அடையாளமாக கொண்டாடினீர்கள்..

வங்கத்தேசத்திற்கு முன்பே மொழிப்போரை நிகழ்த்தி மொழிக்காக அதிக உயிர் தியாகம் செய்தவர்கள் நாங்கள்.

நீங்கள் வங்க தேசத்தினருக்காகவே தாய்மொழி தினத்தை நினைவு கூறுகின்றீர்கள்..

வடக்கே ஒருத்தி (மீரா) வடமொழியில் கடவுளை கணவனாக அடைய பாடி கடைசி வரை காத்திருந்தபோது..

தெற்கே ஒருத்தி தமிழில் திருபாவை பாடி சூடி தந்த சுடர்கொடியாய் (ஜோதியாக மாறி மரணம் இல்லாத பெருவாழ்வு பெற்ற  ஆண்டாள்) அதே கடவுளை கணவனாக அடைந்தாள்..

நீங்கள் வடமொழியை  தேவபாசை என்றும்  உலகில் முதலில் தோன்றிய மூத்த  மொழியாம் தமிழ்மொழியை  நீசபாசை என்றீர்கள்..

நாங்கள் அவ்வையார், வள்ளுவர், கம்பன், வள்ளலார்,  பாரதியை என பலரை  தந்தோம்.. நீங்கள் தாகூரை மட்டும் கொண்டாடினீர்கள்..

நாங்கள் கணவனுக்கு கற்பை நீருபிக்க வேண்டி  தீயில் மூழ்கி வந்த உங்கள் சீதையையும் வணங்குகிறோம்..(நீங்கள் கற்புடன் அனுப்பிய இராவணனை அரக்கனான கதைகட்டி புராணத்தை மாற்றி காட்டுறீங்க)

 கணவனுக்காக மரணத்திற்கான  நீதி வேண்டி பாண்டிய அரசனை எதிர்த்து தனியாக போராடி வென்ற கற்பு தெய்வமே எங்கள் கண்ணகி தாய்  மதுரை நகரை தீயிட்டு எரித்த கற்புகரசி  கண்ணகியை நீங்கள் யாரென்றே இன்னும் அறிவதில்லை..

உங்களது ரிஷிகளை பற்றி எங்களுக்கு கற்பிக்கிறீர்கள்..

எங்களது சித்தர்களை பற்றி நீங்கள் கற்பதில்லை..

நாங்கள் குப்தர்களை பற்றி படிக்கும் அளவுக்கு நீங்கள் சோழப்பேரரசை சேர, பாண்டியர்  பற்றி நீங்கள் அறிவதில்லை..

கலிங்கம் வென்ற அசோகரை நாங்கள் புகழ்கிறோம்..

கல்லணை கட்டிய கரிகால் சோழனை நீங்கள் பேசுவதில்லை..

இராமகிருஷ்ணரும், சீரடி சாய் பாபாவும் எங்கள் தமிழ் நாட்டில்  வழிபாட்டு கடவுளாக விளங்குவது உங்களுக்கு தெரியுமா?

கருணை இல்லாத ஆட்சி கடிந்து ஒழிக! என  ஆங்கிலேயர் ஆட்சியில் முழங்கியவர்
 அனைத்து உயிர்களும் ஒருமைப்பாடு உணர்வுடன்  எல்லா உயிர்களும் இன்புற்று  வாழ வேண்டிவர்  ஜீவகாருண்ய ஒழுக்கம்  கடைபிடித்து மரணம் இல்லாத  பெரும் வாழ்வு பெற்ற மகான் இராமலிங்க அடிகள் என்கிற   வள்ளலார் பற்றி வட (மட) நாடு மக்களுக்கு  தெரியுமா?

தமிழக முதல்வராக விளங்கி ஓமந்தூரார் பதவி துறந்து எளிமையாக  வடலூர் சென்று கடைசி காலம் வரை திரு இராமலிங்க அடிகளார் அவர்கள் திருப்பணி செய்து வாழ்ந்தது போல் முதல்வர் அங்கே யாராவது   உண்டா?

தமக்கு வந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு விட்டுகொடுத்து உலகறியச் செய்தவர் இராமநாதபுர சேதுபதி மன்னர் அவரை நீங்கள்  அறிந்துகொள்ள நினைத்தது உண்டா?.

நேதாஜி படைகட்டியபோது தமிழர்களிடத்தில் அதிக அளவு ஆதரவை திரட்டி தந்தவர் வள்ளலார் வழிவந்த எங்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பதை நீங்க எத்தனை பேர் அறிவீர்

தமிழகத்தின் தெருக்கள் தோறும், வீடுகள் தோறும் நேதாஜிகளும், காந்திகளும், அம்பேத்கர்களும்
உண்டு.

ஆனால், தமிழ்நாட்டில் பிறந்த தலைவர் பெயர் ஏதாவது உண்டா வட இந்தியாவில்?

வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்..

ஆம்..
நாங்கள்
தமிழர்கள்.

பகிர்வில் வந்தது
உண்மை உரைத்தது

🦁🦁🦁🦁🦁🦁🦁
[19/01, 9:38 a.m.] aanmaneyan.kathirvelu@gma: மேலே கண்ட தமிழனின் உண்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்ளவும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 17 ஜனவரி, 2017

பிறப்பின்ரகசியங்கள் !

[09/01, 10:56 a.m.] aanmaneyan.kathirvelu@gma: உண்மையான பிறப்பின் ரகசியங்களை தெரிந்து கொள்ளாமல் பேசுவது அறியாமையாகும்.

பலகோடி பெண்கள் வாழும் உலகத்தில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் சின்னம்மையை தேர்வு செய்து இருக்கின்றார் என்றால் அது உங்களுக்கு சாதாரண கேலிகூத்தான விஷயமா ? ஒரு ஞானக்குழந்தையை சுமப்பது யார் வேண்டுமானாலும் சுமந்துவிட முடியாது.

அதற்கு எவ்வளவு பெரிய தகுதியும் ஒழுக்கமும் வேண்டும்.என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் சொல்லி உள்ள பிறப்பின் ரகசியத்தை ஊன்றி படித்து உணர்ந்தால் மட்டுமே புரியும்.

என்னுடைய கருத்தை ஊரன் அடிகள்.தொண்டர்குல பெருமாள் .விழுப்புரம் கோவிந்தசாமி போன்ற சான்றோர்கள் முன்னிலையில் மேடையிலே தெரிவித்து உள்ளேன்.அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

வள்ளலார் சொல்லி உள்ள கருத்துக்களுக்கு விரோதமாக என்றுமே வெளியிட மாட்டேன்.

முதலில் நான் அனுப்பி உள்ள கட்டுரையை ஊன்றி படியுங்கள் அதிலே வள்ளலார் தெளிவாக பிறப்பின் உண்மைகளை தெரிவித்து உள்ளார்.அரைகுறையாக படித்துவிட்டு உளரக்கூடாது.

எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள கொஞ்சம் அறிவு தெளிவு வேண்டும்.உலக அற்ப அறிவைக் கொண்டு பார்த்தால்.விளங்காது.கொஞ்சமாவது அனுபவ அறிவும்.அருள் அறிவும் வேண்டும்.

அறிவு விளங்கும் போது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் எவ்வளவு திட்டினாலும் நான் வருத்தப்பட மாட்டேன்.நீங்கள் அனைவரும் ஆன்ம நேய உரிமை உடையவர்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
[09/01, 11:36 a.m.] aanmaneyan.kathirvelu@gma: உண்மையான பிறப்பின் ரகசியங்களை தெரிந்து கொள்ளாமல் பேசுவது அறியாமையாகும்.

பலகோடி பெண்கள் வாழும் உலகத்தில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் சின்னம்மையை தேர்வு செய்து இருக்கின்றார் என்றால் அது உங்களுக்கு சாதாரண கேலிகூத்தான விஷயமா ? ஒரு ஞானக்குழந்தையை சுமப்பது யார் வேண்டுமானாலும் சுமந்துவிட முடியாது.

அதற்கு எவ்வளவு பெரிய தகுதியும் ஒழுக்கமும் வேண்டும்.என்பது தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் சொல்லி உள்ள பிறப்பின் ரகசியத்தை ஊன்றி படித்து உணர்ந்தால் மட்டுமே புரியும்.

என்னுடைய கருத்தை ஊரன் அடிகள்.தொண்டர்குல பெருமாள் .விழுப்புரம் கோவிந்தசாமி போன்ற சான்றோர்கள் முன்னிலையில் மேடையிலே தெரிவித்து உள்ளேன்.அவர்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள்.

வள்ளலார் சொல்லி உள்ள கருத்துக்களுக்கு விரோதமாக என்றுமே வெளியிட மாட்டேன்.

முதலில் நான் அனுப்பி உள்ள கட்டுரையை ஊன்றி படியுங்கள் அதிலே வள்ளலார் தெளிவாக பிறப்பின் உண்மைகளை தெரிவித்து உள்ளார்.அரைகுறையாக படித்துவிட்டு உளரக்கூடாது.

எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள கொஞ்சம் அறிவு தெளிவு வேண்டும்.உலக அற்ப அறிவைக் கொண்டு பார்த்தால்.விளங்காது.கொஞ்சமாவது அனுபவ அறிவும்.அருள் அறிவும் வேண்டும்.

அறிவு விளங்கும் போது உங்களுக்கே தெரியும்.

நீங்கள் எவ்வளவு திட்டினாலும் நான் வருத்தப்பட மாட்டேன்.நீங்கள் அனைவரும் ஆன்ம நேய உரிமை உடையவர்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
[09/01, 2:33 p.m.] aanmaneyan.kathirvelu@gma: அன்பே ஆன்மாவின் ஊற்று.!

அன்பை பெறுவதற்கு .உயிர்களின் மேல் தயவும் கருணையும் வேண்டும்.அவை இல்லை என்றால் மூடமாகத்தான் வாழமுடியம்.

வள்ளலார் இறைவனிடம் பிரார்த்தனை செய்து வேண்டுகிறார்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும்

ஆருயிர்கு எல்லாம் அன்பு செயல் வேண்டும்.

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே என் தந்தை நினது அருட் புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலை மேற் சுத்த சிவ சன்மார்க்கம் திகழ்ந்து ஓங்க அருட் ஜோதி செலுத்தியிடல் வேண்டும்.

தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் .தலைவா நினை பிரியாத நிலைமையும் வேண்டுவனே.!

என்று உயிர்களுக்கு எல்லாம் அன்ப செய்ய அருள் புரிய வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து வேண்டுகின்றார்.

அன்பு கிடைத்தால் அடையும் நன்மையும் லாபத்தையும.அறிந்து கொள்ளும் அறிவையும்
் பதிவு செய்கிறார்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே.அன்பெனும் குடில் புகும் அரசே.

அன்பெனும் வலைக்குட் படும் பரம் பொருளே அனபெனும் கரத்து அமர் அமுதே.

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே.அன்பெனும் உயிர் ஒளி அறிவே.

அன்பெனும் அணுவுள் அமைந்த பேர் ஒளியே அன்பு உருவாம் பரசிவமே.!

என்கிறார் அன்பினால் எல்லாவற்றையும் அறிந்து கொள்ளும். அறிவும் ஆற்றலும் அருள் திரமும் .அன்பு உருவான இறைவனையும் அன்பால் அறிந்து கொள்ளலாம் என்கிறார் வள்ளலார்.

அன்பின் வழி தெரியாமல் .ஏதோ ஒன்றை படித்து விட்டு வாதம் செய்வதால் பயன் ஒன்றும் கிடைக்காது. வாழ்நாள் விரயம் ஆவதுதான் லாபம்.

நல்லதை செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடிச் சென்றனர்.
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்.
தஞ்சம் எமக்கு அருள் சாமி நீ என்றனர்.சன்மார்க்கத்தவர்களே வென்றனர்.

புறங் கூறினர் எல்லாம் புல்லெனப் போயினர்
பொற்படிக் கீழ்ப் புறம் மீளவும் மேயினர்

மறங் கூறினோம் என் செய்வோம் என்று கூவினர்.வாழிய வென்ற சொல் வாயின ராயினர்.

என்றும் வள்ளலார் சொல்லியுள்ள சுத்த சன்மார்க்கத்தில் இடம் உண்டு.எஙகு சென்றாலும் இறுதியில் இங்குதான் வரவேண்டும்.வந்தே ஆக வேண்டும்.

எவ்வளவு தாழ்ந்ந தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களை நம்மவர்களாய் பாவிப்பதுதான் .ஆக்கிக் கொளவதுதான் வள்ளலார் காட்டிய அன்பு நெறியாகும்.தயவு நெறியாகும்.கருணை நெறியாகும்.அருள் நெறியாகும்.எல்லார்க்கும் பொது நெறியாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சிவபுண்ணியபேறு !

[10/01, 12:35 p.m.] aanmaneyan.kathirvelu@gma: சிவ புண்ணியப் பேறு !

என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடலை ஊன்றி படித்து பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வள்ளலார் செய்துள்ள தவம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

1. மாலிலே மயங்கி மண்ணிலே அநித்த 
வாழ்விலே வரவிலே மலஞ்சார் 
தோலிலே ஆசை வைத்துவீண் பொழுது 
தொலைக்கின்றார் தொலைக்கநான் உனது 
காலிலே ஆசை வைத்தனன் நீயும் 
கனவினும் நனவினும் எனைநின் 
பாலிலே வைத்தாய் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே. 
2. மதத்திலே சமய வழக்கிலே மாயை 
மருட்டிலே இருட்டிலே மறவாக் 
கதத்திலே மனத்தை வைத்துவீண் பொழுது 
கழிக்கின்றார் கழிக்கநான் உன்பூம் 
பதத்திலே மனத்தை வைத்தனன் நீயும் 
பரிந்தெனை அழிவிலா நல்ல 
பதத்திலே வைத்தாய் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே. 
3. குலத்திலே சமயக் குழியிலே நரகக் 
குழியிலே குமைந்துவீண் பொழுது 
நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து 
நிற்கின்றார் நிற்கநான் உவந்து 
வலத்திலே நினது வசத்திலே நின்றேன் 
மகிழ்ந்துநீ என்உளம் எனும்அம் 
பலத்திலே நின்றாய் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே. 
4. கூடவும் பின்னே பிரியவும் சார்ந்த 
கொழுநரும் மகளிரும் நாண 
நீடஎன் உளத்தே கலந்துகொண் டென்றும்
நீங்கிடா திருந்துநீ என்னோ 
டாடவும் எல்லாம் வல்லசித் தியைப்பெற் 
றறிவுரு வாகிநான் உனையே 
பாடவும் பெற்றேன் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே. 
5. உயத்திடம் அறியா திறந்தவர் தமைஇவ் 
வுலகிலே உயிர்பெற்று மீட்டும் 
நயத்தொடு வருவித் திடும்ஒரு ஞான 
நாட்டமும் கற்பகோ டியினும் 
வயத்தொடு சாகா வரமும்என் தனக்கே 
வழங்கிடப் பெற்றனன் மரண 
பயத்தைவிட் டொழித்தேன் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே. 
6. நாடல்செய் கின்றேன் அருட்பெருஞ் சோதி 
நாதனை என்உளே கண்டு 
கூடல்செய் கின்றேன் எண்ணிய எல்லாம்
கூடிடக் குலவிஇன் புருவாய் 
ஆடல்செய் கின்றேன் சித்தெலாம் வல்லான் 
அம்பலம் தன்னையேஷ குறித்துப் 
பாடல்செய் கின்றேன் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே.
[10/01, 12:35 p.m.] aanmaneyan.kathirvelu@gma: 7. துதிபெறும் அயனோ டரிஅரன் முதலோர் 
சூழ்ந்துசூழ்ந் திளைத்தொரு தங்கள் 
விதியைநொந் தின்னும் விழித்திருக் கின்றார் 
விழித்திருந் திடவும்நோ வாமே 
மதியிலேன் அருளால் சுத்தசன் மார்க்க 
மன்றிலே வயங்கிய தலைமைப் 
பதிபதம் பெற்றேன் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே. 
8. புரிசைவான் உலகில் பூவுல கெல்லாம் 
புண்ணிய உலகமாய்ப் பொலிந்தே 
கரிசெலாம் தவிர்ந்து களிப்பெலாம் அடைந்து 
கருத்தொடு வாழவும் கருத்தில் 
துரிசெலாம் தவிர்க்கும் சுத்தசன் மார்க்கம் 
துலங்கவும் திருவருட் சோதிப் 
பரிசெலாம் பெற்றேன் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே. 
9. வேதமே விளங்க மெய்ம்மையே வயங்க 
வெம்மையே நீங்கிட விமல 
வாதமே வழங்க வானமே முழங்க 
வையமே உய்யஓர் பரம 
நாதமே தொனிக்க ஞானமே வடிவாய் 
நன்மணி மன்றிலே நடிக்கும் 
பாதமே பிடித்தேன் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே. 
10. கட்டமும் கழன்றேன் கவலைவிட் டொழித்தேன் 
கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச் 
சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்
சாவையும் நோவையும் தவிர்ந்தேன் 
சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான் 
செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப் 
பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும் 
பண்ணிய தவம்பலித் ததுவே
[10/01, 12:46 p.m.] aanmaneyan.kathirvelu@gma: மேலே கண்ட அனைத்து பாடல்களிலும் பண்ணிய தவம் பலித்ததுவே என்றே முடிவு பெறும்.

இங்கே தவம் என்பது இடைவிடா  முயற்ச்சி.இறைவனிடம் அசைக்க முடியாத பற்று வைத்தல் என்பதாகும்.

அதனால் கிடைத்த லாபத்தையும் வரிசையாக தெரியப்படுத்தி உள்ளார்.

ஒவ்வொரு பாடலாக பொருமையாக படியுங்கள் உண்மை எது என்பது விளங்கும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
[10/01, 1:29 p.m.] aanmaneyan.kathirvelu@gma: அனைவரும் பொருமை காக்க வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

வேண்டும் என்றே வாதம் செய்பவர்களை அவர்கள் மனமே அவர்களைத் தாக்கும்.

ஆன்மநேய உடன் பிறப்புகளே வள்ளலார் எல்லாவற்றையம் பார்த்து கொண்டு தான் இருக்கின்றார்.அவருக்குத் தெரியும் யார் உண்மையானவர்.யார் பொய்யும் புணை சுருட்டும் செய்கிறார்கள் என்று.

நாம் மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தி உண்மை  ஒழுக்கத்திற்கு கொண்டு வருவோம்.அதில் பின் வாங்கக் கூடாது. அவை நமக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இட்டப் பணி.அவற்றை செய்து கொண்டே இருப்போம்.

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே
பகராத வன்மொழி பகருகின் றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே
நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே
கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே
எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

பேருபதேசம் !

பேருபதேசம் !

வள்ளலார் பேருபதேசம் என்ற உரைநடைப் பகுதியில்.இறுதியாக வெளியிட்டது !

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலே ஏற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது

யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. என்று தெளிவாக பதிவு செய்து உள்ளார்.

இங்கே தயவு என்பது எதைக் குறிக்கிறது என்றால். உயிர்களுக்கு உபகாரம் செய்வது.அன்பு காட்டுவது.

தயவு.அன்பு இரண்டும் இணைந்தது.தயவு பெறுகப் பெறுக அன்பு பெறுகும்.அதற்கு மேல் கருணை என்ற பொது உரிமை தோன்றும்.

தயுவு.அன்பு.கருணை.அருள் என்பவை ஒரு பொருனையே குறிக்கும்.ஆனால்.ஒவ்வொன்றும்.ஒவ்வொரு தன்மையும்.ஆற்றலும் உடையது.

ஜீவ காருண்யம் என்னும் தயவு உண்டானால்.அன்பு உண்டாகும்.அன்பு உண்டானால்.கருணை என்னும் பொது உரிமை உண்டாகும்.கருணைப்பெறுக பெறுக.ஆன்ம நெகிழ்ச்சி..ஆன்ம உருக்கம் உண்டாகும்.அந்த நெகிழ்ச்சியாலும்.உருக்கத்தாலும்.ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அந்த அருள் ஏழு வண்ணமாகவும்.ஏழு சுவையாகவும்.சுரக்கும்.ஒவ்வொரு வகை அருள் அமுதமும்.ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும்.

இருதியாக கிடைக்கும் அருள் அமுதம் மவுனா அமுதம்.அந்த அமுதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையால்  கொடுக்கப்படும் அமுதமாகும்.

அந்த அமுதத்தை அனுபவிப்பவர்களுக்கு.ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.அவர்களே அருட்பெருஞ்ஜோதியுடன் தொடர்பு கொள்ள முடியும்.

அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.மீண்டும் பிறப்பு.இறப்பு இல்லாத பெருவாழ்வாகும்.

இவை சுருக்கம் விரிக்கில் பெருகும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

வள்ளலார் சொல்லி சத்விசாரம்.!

[12/01, 3:12 p.m.] aanmaneyan.kathirvelu@gma: வள்ளலார் சொல்லி சத்விசாரம்.!

தியானம் தவம் என்பது எவை என்பதை பேருபதேசத்தில் விளக்கி உள்ளார்.!

அவ்விசாரம் பரம் அபரம் என்று இரண்டு வகையா யிருக்கின்றது இவற்றிற் பரம் பரலோக விசாரம், அபரம் இகலோக விசாரம். இவ்விரண்டில் இகலோக விசாரம் விசார மல்ல. சாதாரணமாக ஒருவன் விசாரம் செய்து கொண்டிருக்கின்றானேயென்றால், அவ்விசாரம் விசாரமாகாது, உண்மை விசாரமுமல்ல. ஏனெனில்: விசார மென்கின்றதற்குப் பொருள்: வி-சாரம் என்பதில் வி சாதாரண உலக விசாரத்தை மறுக்க வந்தது; அது மேலும் பரலோக விசாரத்தையே குறிக்கும் பொருட்டு வந்தது. ஜலத்திலிருக்கின்ற பாசியை நீக்குவதுபோல், நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடியிருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை "விசார அதியுஷ்ணத்தாலல்லது, மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது." அந்த உஷ்ணம் யோகியினுடைய அனுபவத்தில் தெரியும். அதை மனுஷ்ய தரத்தில் உண்டுபண்ணுவதற்குத் தெரியாது. அந்த விசாரத்தைவிட "ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் தெய்வத்தை நினைக்கின்றதிலும்"' அதிக உஷ்ணம் உண்டாகும். யோகிகள் வனம் மலை மழை முதலியவற்றிற்குப் போய், நூறு ஆயிரம் முதலிய வருஷ காலம் தவஞ்செய்து, இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறார்கள். இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும், ""தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் - இதைவிடக் - கோடிப்பங்கு, பத்து கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்."' எவ்வாறெனில்: ஒரு ஜாம நேரம்,(3'மூன்று மணி) மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு ""தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால், நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்."" ஆதலால், இவ்வுலகத்தில் வி-சாரமென்கின்ற உண்மை தெரியாது, விசாரமென்று வழங்கி, அதைத் துக்கமென்றே சொல்லுவார்கள். நாம் அப்படி அர்த்தம் பண்ணக்கூடாது. அவர்கள் பண்ணுகின்றது -
[12/01, 3:18 p.m.] aanmaneyan.kathirvelu@gma: பஞ்சகிருத்திய விபவங்களும் இதர சித்தி முதலியவையும் ஆன்மானுபவத்தையும் செய்யவும் பெறவும் கூடாது. பின்னும் நன்முயற்சி செய்தே மேலேற வேண்டும்.

மேலும், இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின. ஆதலால் நாம் எல்லவரும் இத்தருணம் இப்போதே விசேஷ நன்முயற்சியுடனே இருந்தால், ஆண்டவர் வருகிறபோது, நம் கீழ்ப் பாகத்திலுள்ள அசுத்த மாயாதிரையோடு கூடி மேற்பாகத்திலிருக்கிற சுத்த மாயையினுடைய பச்சைத் திரையும் நீங்கிப் போய்விடும். கருமையிற் பச்சை வண்ணமுடையது அசுத்தமாயாதிரை. பொன்மையிற் பச்சை வண்ணமுடையது சுத்தமாயா திரை. கருமையிற் பச்சை வண்ணமுடைய அசுத்தமாயாதிரை நீங்கினபிறகு, மற்ற எட்டுத் திரைகளும் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். இத்திரைகளின் விவரத்தைத் திருவருட்பெருஞ்ஜோதி அகவலில் கண்டுணர்க. மேலும், இது நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான். ஆதலால், ஒவ்வொருவரும் முயற்சியுடனே இருந்தால், அதற்குத் தக்க லாபத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
[12/01, 3:44 p.m.] aanmaneyan.kathirvelu@gma: எனவே சத்விசாரம் என்பது.இறைவனை நினைந்து நினைந்து.உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து தோத்திரம் செய்வதாலும்.ஒரு ஜாம நேரம இறைவரை் இடைவிடாது நினைப்பதுவே.சத்விசாரமாகும்.இந்த விசாரம் மட்டுமே ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வைக்கும்.

மற்ற புற வழிபாடு.தியானம் தவம மற்ற்  அனைத்தும கரணங்களோடு்ம் மனதோடு நின்று விடும். ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியாது.

ஆன்மா என்னும் உள் ஒளியைத் தொடர்பு கொள்வதுதான்.சுத்த சன்மார்க்கம்.

உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட வெள்ளொளி காட்டிய மெய் அருட் கனல் என்கிறார் வள்ளலார்.

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

தமிழ் நாட்டை யார் ஆளுகிறார்கள் ?

தமிழ் நாட்டை யார் ஆளுகிறார்கள் ?

தமிழ் நாட்டை மத்திய அரசு ஆள்கிறதா.மாநில அரசு ஆள்கிறதா ? என்பதே தெரியாமல் மக்கள் தவிக்கிறார்கள்.

தமிழ் நாட்டை ஆளும் மந்திரிகள் அனைவரும். அதிகாரிகள்.அனைவரும் கொள்ளை அடித்து குவித்து வைத்திருக்கும் கள்ளப் பணம் அனைத்திற்கும்் .உண்டான ரகசிய விபரங்கள் மத்திய அரசிடம் சிக்கி விட்டன.அதனால் மத்திய அரசை மீறி எந்த செயகளும் செய்ய முடியாமல்.தமிழக மந்திரிகள் மவுனிகளாக.மூடர்களாக இருக்கிறார்கள்.

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவை நடத்த முடியாமல் மக்கள் போராடிக் கொண்டு உள்ளார்கள்.தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உள்ளது.மிகவும் கேவலமாக உள்ளது.

தமிழக அரசு தமிழர்களின் உரிமையைக் காப்பாற்ற முடியாமல் தலை குனிந்து செத்துக் கிடக்கிறது.

மாநில ஆட்சி எதற்கு ?  மத்திய அரசிடமே தமிழர்களை அடகு வைத்து விட்டு போக வேண்டியது தானே.

மக்களால் தேர்ந்து எடுத்துள்ள தமிழக அரசு .துணிவு இருந்தால்.மத்திய அரசின் காலில் விழுந்து கிடக்காமல்.அவர்களின் அனுமதியைப் பெறாமல்.தமிழக ஆட்சியாளர்கள் தமிழக மக்களின் நியாயமான கோரிக்கையை ஏற்று ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி வழங்க வேண்டும்.இல்லையேல் ஆட்சியை களைத்துவிட்டு வெளியேறுவது தான் ஆட்சியாளர்களின் அறிவார்ந்த செயலாகும்.

பின் மக்களே பார்த்துக் கொள்வார்கள்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

தமிழ் நாட்டு உறவுகளே வந்தனம்.

தமிழ் நாட்டு உறவுகளே வந்தனம்.

ஜல்லிக்கட்டு விழா நடத்த எவரிடத்திலும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.

பாது காப்பு வேண்டி காவல் துறையிடம் அனுமதி கேட்டால் தானே பிரச்சனை.

உங்களுக்கு எந்த பாதுகாப்பும் தேவை இல்லை. நீங்கள் உணவு உண்பதற்கு பாதுகாப்பு தேவையா ? அதுபோல் அவரவர்கள் அவரவர் ஊர்களில் ஐல்லிக்கட்டு விழா நடத்தி மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை எப்போது போல்
 கொண்டாடுங்கள்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அரசையும் ஆட்சியாளர்களையும்.காவல் துறையும் கேட்டா.தைப்பொங்கல் விழாவாக நான்கு நாட்கள் பொங்கல் விழா கொண்டாடினோம் .

எனவே எவருடைய பாதுகாப்பம் அனுமதியும் தேவை இல்லை.

நம்முடைய  தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு  முறைககளை சீர் அழிக்க வேண்டும் என்ற உள் நோக்கத்துடன் மத்திய அரசும் மாநில அரசும் செயல் படுகிறது.

இந்தியாவில் உள்ள எல்லா பண்டிகைகளையும் விழாக்களையும் முதலில். தடை செய்யட்டும்.அதன் பின்பு யோசிப்போம்.

 யாணை சவாரி செய்கிறார்கள்.குதிரை சவாரி செய்கிறார்கள்.குதிரை பந்தையும் நடத்துகிறார்கள்.ஓட்டகத்தின் மேல் சுமையை வைத்து துன்பப் படுத்துகிறார்கள்.ஒட்டக சவாரி செய்கிறார்கள்.

அரசாங்கம் குதிரைப் படை என்ற வகையில் குதிரைகளைத் துன்பப் படுத்துகிறார்கள்.

இவை எல்லாம் உயிர் வதை இல்லையா? தமிழர்களின் ஜல்லிக்கட்டு விழா மட்டும் தான் உயிர் வதையா ? மத்திய அரசும் மாநில அரசும்.நீதி மன்றங்களும் சிந்திக்க வேண்டும்.அறிவு தெளிவு வேண்டும்

எனவே தமிழர்கள் தங்கள் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டாம்.நம்முடைய உரிமையை எக்காரணம் கொண்டும  விட்டுக் கொடுக்க கூடாது.

துணிந்து ஜல்லிக்கட்டு விழாவை கொண்டாடி மகிழ வேண்டும். இது நமது உரிமை.நமது கலாச்சாரம். இதில் நாம் பின் வாங்கக் கூடாது.
நமக்கு இயற்கை எப்போதும் துணை இருக்கும்.

அன்புடன்
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

மலேசிய அன்பர் முருகதாஸ் அய்யா அவர்கள்.கீழே கண்ட பாடலுக்கு விளக்கம் கேட்டு உள்ளார்.

மலேசிய அன்பர் முருகதாஸ் அய்யா அவர்கள்.கீழே கண்ட பாடலுக்கு விளக்கம் கேட்டு உள்ளார்.


விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம் தோன்றாது !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

விழித்து விழித்து  இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல்
விழிகள ்விழித் திளைப்பதலால் விளைவு வொன்றும் இலையே
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகி முயன் றாலும்
முன்னவநின் பெருங்கருணை முன்னிடல ்இன் றெனிலோ
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.

என்று ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.

நாம் அனைவரும் நம்மை இயக்கும் சுடர் என்னும் ஆன்ம ஒளியை அறிந்து கொள்வதற்கும்.அருளைப் பெருவதற்கும்.தினமும் கண்களை மூடிக்கொண்டும்.திறந்து கொண்டும் தவமோ.தியானமோ.யோகமோ.பக்தியோ தினமும் செய்து கொண்டு இருக்கிறோம்.

 உண்மையான ரகசியம் என்ன என்று  தெரியாமல்.எந்ந முறையில்.எந்த வழியில் தியானம்.தவம்.யோகம்.பக்தி செய்தாலும் .சுடர் உதயம் தோன்றாமல்.கண்கள் இளைத்து சலித்துப் போகின்றன.என்கிறார் வள்ளலார்.

கருணை ஒன்றினால் மட்டுமே சுடர் உதயத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற உண்மையை எனக்கு தெரிவித்தயாய் நானும் தெரிந்து கொண்டேன். மற்ற ஆன்ம நேய உடன் பிறப்புகளுக்கும்.உரிமையுடன் சொல்லுகின்றேன்.

எங்கே கருணை இயற்க்கையில் உள்ளன .அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே .அருட்பெரும் ஜோதியே என்கிறார்.

எனவே தான் கருணை இல்லாமல் செய்கின்ற தியானம்.தவம்.யோகம்.பக்தி யாவும் வெற்று மாயா ஜால செய்கைகளே .என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்.

நம்முடைய உடம்பக்குள்.இந்திரியம்.கரணம்.ஜீவன்.ஆன்மா என்னும்  நான்கு பகுதிகள் உள்ளன.இதில் ஆன்மா தான் உயிரை.கரணங்களை.இந்திரியங்களை இயக்கும் உள் ஒளி என்னும ஆன்ம  சுடராகும்.

நாம் இந்திரியங்கள்.கரணங்கள் வழியாக செய்யும்.அன்பு.தயவு.கருணை.மட்டும் தான் ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியும்.

மற்றைய அனைத்தும் இந்திரியங்கள் கரணங்கள் வரைதான் செல்லும். என்ற உண்மையை அறிவு பூரணமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் சிறு தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதல் போல்.சிறிய கருணையைக் கொண்டு பெரிய கருணையைப் பெற முடியும் என்பதாகும்.

மேலும் சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சத்தை உண்டாக்க வேண்டும் என்கிறார்.

வெறுமென தியானம்.தவம்.யோகம்.பக்தி.போன்ற வழிமுறைகளை பின்பற்றி  செய்வதால் .இந்திரியங்களும்.கரணங்களும் இளைத்து போகுமேத் தவிர.சுடர் உதயம் தோன்றாது. ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்.திரைகள் விலகாது.அருள் சுரக்காது.

கருணைக்குப் பெயர்தான் ஜீவகாருண்யம் என்பதாகும்.உயிர் இரக்கம் என்பதாகும்.

ஜீவகாருண்யமும் வேண்டும்.சத்து.சித்து ஆனந்தம் பெறுவதற்கு ்  அக விசாரமும் என்னும் ஆன்ம விசாரம் வேண்டும்.

அக விசாரத்தைத் தான் தியானம்.தவம்.யோகம் என்பதாகும்.அதன் உண்மையை உணர்ந்து செய்தால் எல்லா நன்மையும் கிடைக்கும்.

அகவிசாரம் என்றால் என்ன என்பதை பற்றி "பேருபதேசம்" என்ற பகுதியில் தெளிவாக விளக்கி விளக்கம் தந்து உள்ளார் படித்து தெரித்து கெள்ளவும்.

இன்னும் விரிக்கில் பெறுகும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

தமிழ் நாட்டை ஆள்வதற்கு வேறு ஆட்களே இல்லையா ?

தமிழ் நாட்டை ஆள்வதற்கு வேறு ஆட்களே இல்லையா?

தன்மானம் உள்ள தமிழர்களே! தமிழ் நாட்டை ஆள்வதற்கு .ரஜினி.தீபா.சசிகலாவை விட்டால் வேறு ஆட்களே கிடையாதா ?

இவர்களின் கொள்கைகள் என்ன ? இவர்களின் திறமைகள் என்ன ? இவர்கள் நாட்டு மக்களுக்காக என்ன தியாகம் செய்து உள்ளார்கள்.எத்தனை வருடம் மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறைச்சாலை சென்று உள்ளார்கள்.

தமிழகத்தை ஆட்சி செய்ய இவர்களுக்கு என்ன தகுதி உள்ளது.என்ன கொள்கை உள்ளது.என்ன திறமை உள்ளது என்பதே தெரியாமல் இவர்களை .வாங்க வாங்க என்று அழைக்கின்றீர்களே .அதற்கு என்னக் காரணம்.

உங்களின் அறியாமையை நினைந்து வேதனைப் படுவதா ? வெட்கப் படுவதா ? என்றே தெரிவதில்லை....

நம் நாட்டில் திறமை உள்ளவர்கள.அறிவு ஆற்றல் உள்ளவர்கள்.நாட்டை ஆளும் திறமை உள்ளவர்கள்.மக்களின் மேல் அக்கரை உள்ளவர்கள் .மக்களின் அறியாமையை நீக்கும் கொள்கைப்பாடு  உடையவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

அவர்கள் யாரும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா.தெரிந்து கொள்ளும் அறிவு இல்லையா ?

நான் யாரையும் குறைகள் சொல்ல விரும்ப வில்லை.அவரவர்களுக்கேத் தெரியும்.

நல்ல அறிவுடனும் நல்ல சிந்தனையுடனும் செயல் படுங்கள்.

நல்ல ஒழுக்கம் உள்ள .கருணை உள்ள .அக்கரை உள்ள .அறிவு உள்ள.அருள் உள்ள.கொள்கை உள்ள நபரை தேர்வு செய்யுங்கள்.

அப்போதுதான்.நாடும். நாட்டு மக்களும்.நலமுடனும்.ஒழுக்கமுடனும். மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

சிந்தித்து செயல் படுங்கள். அவசர கோலத்தில் வார்த்தைகளை அள்ளி எறியாதீர்கள்.

உங்களில் ஒருவன்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 10 ஜனவரி, 2017

வேலாயுதம் !

"எனது குரு வள்ளலார் தமது மார்க்கம் அறுவியலையே அடிப்படையாகக் கொண்டதென்று இடையறாது வற்புத்துவார்." - தொழுவூர் வேலாயுத முதலியார்

தியாசபிகல் சொசைட்டி யாருக்குத் தொழுவூர் வேலாயுத முதலியார் அளித்த‌ வாக்குமூலத்தின் தமிழாக்கம்

நான், தென்னிந்தியாவில் புகழ் வாய்ந்த‍ யோகியரான அருட்பிரகாச வள்ளலா ரென்னும் சிதம்பரம் இராமலிங்க பிள்ளை யவர்களின் சீடன். மகாத்மாக்கள் இருக்கிறார்களா என்பதிலும் அவர்களது விசேஹ கட்டளைப்படியே பிரம்மஞான சபை ஏற்படுத்தப்பட்டதா என்பதிலும் ஆங்கிலேயரும் இந்தியருட் சிலரும் ஐயுறுவதாகத் தெரிகிறது. தாங்கள் பெரிது உழைத்து மகாத்மாக்களைப்பற்றி எழுதி வரும் நூலைப்பற்றிக் கேள்வியுற்றேன். எனது குருவைஎனது குருவைப்பற்றியப்பற்றிய சில செய்திகளை வெளிப்படுத்த விரும்புகிறேன். அவை முற்கூறிய ஐயங்களை அகற்றுவதோடு பிரம்மஞானம் பொருளற்றதொரு மயக்கமன்று என்பதையும் பிரம்மஞா ச‌பை வலிவற்ற அடிப்படையில் அமைக்கப்பட்டதன்று என்பதையும் மெய்ப்பிக்கும் என நம்புகிறேன்.

முதலில் இராமலிங்க பிள்ளையின் தனித்தன்மைகளையும் கொள்கைகளையும் சுருக்கமாக விவரிக்கிறேன்:

சென்னைமாகாணத்தில் தென்னார்க்காடு ஜில்லா சிதம்பரம் தாலுகாவிலுள்ள மருதூரில் அவர் பிறந்தார். இளமையிலேயே சென்னைக்கு வந்து நெடுங்காலம் வசித்தார். ஆரியர்களாலும் திராவிடர்களாலும் ஒப்பப் பாராட்டப்பெறும் அகத்தியர் முதலிய முனிவர்களின் நூல்களை ஓதாமலேயே ஒப்புவிக்கும் ஆற்றலை அவர் ஒன்பதாம் வயதிலேயே பெற்றிருந்ததைப் பலர் நேரில் அறிவர். 1849ஆம் ஆண்டில் நான் அவரது சீடனானேன். அவர் யாரிடம் உபதேசம் பெற்றார் என்பதை ஒருவரும் அறியார், ஆயினும் சில காலத்துள் பல சீடர்கள் அவரைச் சூழ்ந்தனர். அவர் ஒரு பெரிய ரசவாதி. புலால் உண்பவர்களைப் புலால் உண்ணாதவர்களாக மாற்றும் ஒரு தனிச் சக்தி அவரிடம் இருந்ததைக் கண்கூடாகக் கண்டோம். அவரது பார்வை ஒன்றே ஒருவரது புலால் விருப்பத்தை ஒழிக்கப் போதுமானது. பிறரது உள்ளத்தை ஊடுருவி அறியும் வியத்தகு ஆற்றல் அவரிடம் இருந்தது. 1855ஆம் ஆண்டில் அவர் சென்னையை விட்டுச் சிதம்பரம் சென்றார். பின் அங்கிருந்து வடலூருக்கும் கருங்குழிக்கும் சென்று அங்கேயே பல ஆண்டுகள் தங்கினார் அக்காலங்களில் பலமுறை தம்மைச் சூழ்ந்திருந்தவர்களைப் பிரிந்து பிறர் கண்களுக்குப் புலப்படா வண்ணம் மறைந்துபோவார். நீண்டகாலம் அவ்வாறே பிறரறியா வண்ணமிருப்பார்.

தோற்றத்தில் இராமலிங்கர்:

நடுத்தர உயரமுள்ளவராக, பார்ப்பதற்கு எலும்புக்கூடெனவே தோன்றும் மெலிந்த மேனியராக இருப்பார். ஆயினும் வலிமையுடையவர். மிக விரைந்து நடப்பார். நிமிர்ந்த தோற்றம், தெள்ளிய சிவந்த முகம், நேரான கூரிய மூக்கு, ஒளி வீசும் பெருங்கண்கள். முகத்தில் இடைவிடாத ஒரு துயரக்குறி.இறுதிக் காலத்தில் தலைமயிரை நீள வளரவிட்டிருந்தார்.யோகிகளின் வழக்கத்திற்கு மாறாக ஜோடு அணிவார்.உடை இரண்டு வெள்ளை ஆடைகளே.எதிலும் மிக்க அளவோடு இருப்பார்.ஓய்வு கொள்வதேயில்லை கடும் மரக்கறி யுணவினர்.இரண்டு மூன்று நாளைக்கு ஒரு முரையே உண்பார்.அதுவும் சில கவளங்களே.அக்காலங்களில் சிறிது சர்க்கரை கலந்த வெந்நீரை மட்டுமே அருந்துவார் அவர் சாதி வேற்றுமைகளைக் கண்டித்துப் பேசியதால் அனைவரது பெரும் பாராட்டுக்குரியவராக இல்லை, ஆயினும் எல்லாச் சாதியாரும் பெருந்திரளாக அவரைச் சூழ்ந்திருந்தனர். உபதேசங்களைக் கேட்டுப்பயன் பெற அவர்கள் வரவில்லை. சித்தாடல்களைக் கண்டு களிக்கவும் அவற்றின் பயனைப் பெறவுமே வந்தனர். சித்தாடல்களில் அவர் வல்லவர் இயற்கைக்கு மேம்பட்ட எதையும் அவர் ஒப்புவதில்லை. தமது மார்க்கம் அறுவியலையே அடிப்படையாகக் கொண்டதென்று இடையறாது வற்புத்துவார்.

அவர் போதித்தவற்றுள் சில பின்வருவன:

1. இந்துக்கள் தம் கருத்துகளுக்குச் செவி சாய்க்காத போதிலும் வேதங்கள் முதலிய கீழை நாட்டுப் புனித நூல்களின் உட்கிடையை அவற்றைக் காப்பாற்றி வைத்திருக்கும் மகாத்மாக்கள் அயல் நாட்டார்க்கு அறிவுறுத்த அவர்கள் மகிழ்வுடன் கேட்பர்

2. உலகைத் தற்போது ஆளும் கலிபுருசனின் கொடிய ஆட்சி ஏறத்தாழப் பத்தாண்டுகளில் சமனாகும்.
3. புலாலுணவு படிப்படியாகக் காலப்போக்கில் கைவிடப்படும்.

4. சாதி சமய வேற்றுமைகள் இறுதியில் ஒழிந்துபோம். அகில உலக சகோதரத்தும் வரும். இந்தியாவில் அது நிலை நாட்டப்படும்.

5. மக்களால் கடவுள் என்று சொல்லப்படுவது உண்மையில் எல்லா உயிர்களிடத்தும் காட்டும் அன்பே. இவ்வன்பே இயற்கை முழுவதையும் ஒழுங்காக இயங்கச் செய்கிறது.

6. மக்கள் தமக்குள்ளே மறைந்து கிடக்கும் தெய்விக சக்தியை உணர்ந்து கைவரப்பெற்றால், பூமியின் ஈர்ப்பாற்றல் முதலிய இயற்கை நியதிகளையும் மாற்றும் அரிய சக்திகளையும் பெற‌க்கூடும்.
அகில உலக சகோதரத்துவத்தின் அடிப்படையில் வேதாந்தத்தின் உண்மைக் கருத்துகளைப் பரப்புவதற்காகச் சமரச "சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்" என்றொரு சங்கத்தை 1867ஆம் ஆண்டில் நிறுவினார் அவரது கொள்கைகள் பிரம்மாஞான சபையின் கொள்கைகளை ஒத்தன. எங்கள் சங்கம் ஐந்தாறு ஆண்டுகளே நிலவிற்று. அக்காலத்தில் பேரெண்ணிக்கையான ஏழைகளுக்குச் சங்க உறுப்பினர்கள் செலவில் அன்னதானம் செய்யப்பட்டது.

அவர் தனது 50 ஆம் வயதை அடைந்த போது (1873) இவ்வுலகைத் தாம் நீப்பதற்கேற்பத் தமது சீடர்களைப் பக்குவப்படுத்தத் தொடங்கினார். தாம் சமாதி கூடுவதற்கு எண்ணியிருப்பதையும் தெரிவித்தார்.1873 ஆம் ஆண்டின் முற்பாதியில் மனித சகோதரத்துவத்தை மிகவும் வற்புறுத்திப் போதித்து வந்தார். அவ்வாண்டு இறுதி மூன்று மாதத்தில் பேசுவதையும் உபதேசிப்பதையும் அறவே விடுத்து இடையறா மெளனத்தில் ஆழ்ந்தார். 1874ஜனவரி மாதம் இறுதி நாள்களில் பேசத் தொடங்கித் தாம் கூறி வரும் தீர்க்க தரிசனங்களை மீண்டும் கூறினார். அவை பின் வருவனவாம்.

அம்மாதம் 30 ஆம் தேதி நாங்கள் மேட்டுக்குப்பத்தில் எங்கள் குருவைக் கடைசியாகப் பார்த்தோம். சீடர்களிடம் அன்போடு விடைபெற்ற பின் ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறு கட்டிடத்தின் தனி அரை ஒன்றில் நுழைந்து விரிப்பில் சயனித்துக் கொண்டார். அவரது கட்டளைப் படி அறைக்கதவு பூட்டப்பட்டது. இருந்த ஒரே துவாரமும் சுவர் வைத்து அடைக்கப்பட்டது. ஓராண்டுக்குப்பின் திறந்து பார்த்தபோது அறையில் ஒன்றுமில்லை. வெற்றறையாகவே இருந்தது. பின் ஒரு சமயம் தோன்றுவதாக உறுதியாகக் கூறிடிருந்தாரெனினும் தோன்றும் காலம் இடம் சூழ்நிலைகளைத் தெரிவிக்கவில்லை. அப்படித் தோன்றும் வரை இந்தியாவில் மட்டுமின்றி ஐரோப்பா அமெரிக்கா முதலிய மற்றெல்லாத் தேசங்களிலும் தக்கவர்களின் உள்ளத்தில் அதிட்டித்து உலகைத் திருத்தும் பணியில் வேலை செய்யப் போவதாகக் கூறினார். இதுவே இப்பெரியாரின் வரலாற்றுச் சுருக்கம். மேற்கூறிய செய்திகள் ஆயிரக்கணக்கானவர்களுக்குத் தெரிந்தவையே. இந்து சாத்திரங்களிலுள்ள ஆழ்ந்த நீதிகள், அகில உலக சகோதரத்துவம், உயிரிரக்கம், அறம் இவற்றைப் பாமரமக்களுக்கும் விளக்கி உபதேசிப்பதே அவரது முழுவேலையாக இருந்தது ஆயினும் அவரைச் சூழ்ந்த‌ பெருங்கூட்டத்தாரில் மிகச்சிலரே அவரது உயர்ந்த உபதேசங்களை உணர்ந்ததைக் கண்டு பெரிதும் ஏமாற்ற மடைந்தார்.

கட்புலனாகிய அவரது இகவாழ்வின் பிற்பகுதியில் இவ்விரங்கத்தக்க நிலையால் தமக்குண்டான பெருவருத்தத்தை அடிக்கடிக் குறிப்பிட்டு அடுத்தடுத்து அவர் கூறியதாவது:

"இவ்வகில உலக சகோதரத்துவ சங்கத்தின் உறுப்பினராவதற்கு நீங்கள் அருகரல்லர். உலக சகோதரத்துவத்தின் உண்மையான உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வடக்கே வெகு தொலைவில் இருக்கிறார்கள் நீங்கள் பின்பற்றவில்லை. நான் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளுவதில்லை என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் போலும். ரஸ்யாவிலிருந்தும் அமெரிக்காவிலிருந்தும் (இவ்விரு நாடுகளின் பெய‌ர் அடிக்கடி சொல்லப்படும்) இன்னும் வெளி நாடுகளிலிருந்தும் வந்து இதே அகில உலக சகோதரத்துவத்தைப் பிரச்சாரம் செய்யும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்போதுதான் நான் உங்களுக்கு வீணில் இப்போது சொல்லிவரும் பேருண்மைகளை உணர்ந்து பாராட்டுவீர்கள். வடக்கே வெகு தொலைவில் வாழும் அச்சகோதரர்கள் இந்தியாவுக்கு வந்து வியக்கத்தக்க பணிகளால் நம் நாட்டிற்கு அளவிடற்கரிய நன்மைகளைச் செய்வதை நீங்கள் காண்பீர்கள்."

இந்தத் தீர்க்கதரிசனம் அப்படியே பலித்து விட்டதெனக் கருதுகிறேன். வடக்கே மகாத்மாக்கள் இருக்கிறார்கள் என்பது இந்துக்களுக்குப் புதிய கருத்தன்று. ரஸ்யாவிலிருந்து மேடம் பிளாவட்ஸ்கியும் அமெரிக்காவிலிருந்து கர்னல் ஆல்காட்டும் இந்தியா வருவதற்குப் பல ஆண்டுகள் முன்னமே அவர்கள் வருகை இங்கு முன்னறிவிப்பாகக் கூறப்பட்டுவந்ததே பின்னர் பிரம்மஞான சபை நிறுவக்கட்டளையிட்ட மகாத்மாக்களுடன் எங்கள் தொடர்புடையவர் என்பதற்கு மறுக்கவொண்ணாச் சான்றாகும்.

நன்றி : ஊரன் அடிகளுக்கு .

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
திருச்சிற்றம்பலம்
Limitless Grace-Energy Limitless Grace-Energy
Limitless Unique Grace Limitless Grace-Energy
Sanctum Sanctorum

எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே
எல்லாம்வல் லான்தனையே ஏத்து
All Possible, I swear on Divine Abode
Exalt HIM - the Almighty only

அனைத்து உயிர்களுக்கும் அருட்சுகம் உண்டாகட்டும்!
அருள்வள்ளல் மலரடிக்கே அருளாட்சி உண்டாகட்டும்!
Let all living beings gain Grace-Bliss!
Let the Grace-Feet reign Grace-Rule!

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 7 ஜனவரி, 2017

ஆன்மீகத்துறவிகளின்அடையாளம் !

ஆன்மிக துறவிகளின் அடையாளம்,,,

வள்ளலார் வழியில் வாழ்ந்து காட்டுவோம்:::
ஆன்மிக துறவிகளின் அடையாளம்

1. சாதி, மதம், சமயம், தேசம், மொழி, இன, வேறுபாடுகள் எதுவும் இருக்கக் கூடாது.
2 . மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கனவிலும் இருக்கக் கூடாது.
3 . எல்லா ஜீவர்களிடத்தும் தயவும், மெய்ப்பொருளின் (கடவுள்) இடத்தில் அன்பும் இருக்க   வேண்டும்.
4. தம் உயிர் போல் எல்லா உயிர்களையும் ஒன்று என என்ன வேண்டும்.
5. ஆன்மநேய ஒருமைப்பாடு எக்காலத்தும் விலகாமல் இருக்க வேண்டும்.
6. ஆகாரம், மைத்துனம், நித்திரை, பயம் இவை நான்கும் இருக்கக் கூடாது.
7 . பஞ்ச பூத உணவுகள் எதுவும் புசிக்கக் கூடாது. ஏக தேசத்தில் கொள்ளலாம்.
8. அருள் என்ற அமுதம் ஆன்மாவில் சுரக்கும் அதைத்தான் சுவைக்க வேண்டும்.
9. நரை, திரை, பிணி, மூப்பு இவைகள் எதுவும் இருக்க கூடாது.
10. கடவுள் ஒருவரே! அவர் ஒளியாக இருக்கிறார் என்ற உண்மையை உணர்ந்து இருக்க வேண்டும்.
11. ஏழைல்களின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடை பிடிப்பவராக இருக்க வேண்டும்.
12. தனக்கென்று வீடு, ஆசிரமம், மடம், குடில், ஆலயம் போன்ற எந்த வசதியும் இல்லாது இருத்தல் வேண்டும்.
13. யோகம், தவம், தியானம், வழிபாடு என்பவை யாவும், உடற் பயிற்சியே தவிர கடவுளை காணும் வழிபாடு அல்ல என்பதை மக்களுக்கு போதிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
14. தான் அணியும் ஆடை ஒன்றுக்கு மேல் இருக்கக் கூடாது.
15. காவி உடை உடுத்தவே கூடாது, காவி உடை உடுத்துபவர் கடின சித்தர்களாவர். ஆதலால் வெண்ணிற ஆடையைத் தான் உடுத்த வேண்டும். வெண்ணிற ஆடை தயவின் அடையாளமாகும்.
16. தன் உடம்பில் ஆடையை தவிர வேறு எந்த அணிகலன்களும் வேறு எந்த பொருளும் அணியவோ தொடவோ கூடாது.
17. சமய, மத சின்னங்கள் எதுவும் உடம்பில் இருக்கக் கூடாது.
18. எதிலும் பொது நோக்கம் தேவை.
19. எந்த உருவத்தையும் வணங்கவோ, வழிபடவோ கூடாது. பாத பூசை எதுவும் செய்யக் கூடாது, ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
20. மரணத்தை வெல்லும் முயற்ச்சியில் இருக்க வேண்டும்.
21. மறு பிறப்பு என்ற நிலையில் வாழ கூடாது.
22. ஒழுக்கம் முக்கிய தேவையாகும்.
      1. இந்திரிய ஒழுக்கம்
      2. கரண ஒழுக்கம்
      3. ஜீவ ஒழுக்கம்
      4. ஆன்மா ஒழுக்கம்
      இவை நான்கும் எவரிடத்தில் முழுமைப் பெற்று இருக்கிறதோ அவரையே துறவியாக   ஏற்றுக்கொள்ளலாம். (இதை இன்னும் விரிக்கில் பெருகும்).
மேற் கூறிய கட்டளைகளை யார் கடைப்பிடித்து வாழ்கிறார்களோ அவர்களை துறவி(ஞானி) என்று ஏற்றுக் கொள்ளலாம். அப்படி வாழ்ந்தவர்தான் நம் தமிழ் நாட்டில் தோன்றிய அருட் பிரகாச வள்ளலார் என்பவராகும்.

வள்ளலார் வழியில் வாழ்ந்து காட்டுவோம்::::::::::::::

ஆன்மநேய அன்புடைய அன்பர்களே! நாம் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியை திருவருட்பாவின் மூலமாக படிக்கிறோம், தெரிந்துகொள்கிறோம், மற்றவர்களுக்கு போதிக்கிறோம். ஆனால், அதன் படி நாம் வாழ்கையில் கடைபிடிக்கிறோமா என்று அடிக்கடி சிந்தித்துப் பார்க்க வேண்டும். நாம் திருவருட்பாவை படிப்பது பேசுவதற்காக அல்ல, வாதம் செய்வதற்காக அல்ல, விழா நடத்துவதற்காக அல்ல. வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறி ஆகிய அருளைப் பெற வேண்டுவதற்காக.

மனித தேகம் எடுத்துக்கொண்டுள்ள நாம் அனைவரும் மனித தேகம் எடுத்ததின் நோக்கம் என்ன என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார், வாழ்ந்தும் காட்டியுள்ளார்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுகநிலை பெருக
உத்தமனாகுக ஓங்குக

என அருட்பா அகவலில் தெளிவாகக் கூறியுள்ளார். நாம் உத்தமனாக வாழ வேண்டுமென்றால் உலகிலுள்ள உயிர்களுக்கு எந்த வகையிலும் துன்பம் நேராத படி பார்த்துக்கொள்ள வேண்டும். உயிர்களுக்கு துன்பம் வருகிற பொழுது எவ்வித தந்திரத்திலாவது அவைகளை தடுத்து நிறுத்த வேண்டும். அப்படி இடைவிடாது செய்து வந்தால் நம் உடம்பில் இருந்து உயிர் பிரியாமல் பாதுகாக்க முடியும் என்கிறார். நம் உடம்பும் உயிரும் நீண்ட நாட்களுக்கு பிரியாமல் இருக்கும்.

சுத்த சன்மார்க்கம் என்பது நம் உடம்பை சுத்தமாக வைத்திருப்பதல்ல ஆன்மா குடியிருக்கும் ஆலயமாகிய நம் உடம்பில் எந்த விதமான பஞ்ச பூதங்களான உணவை உண்ணாமல் இருக்கப் பழகிக்கொள்ள வேண்டும். சோற்றாசையோடு காம சேற்றாசை படுவாரை துணிந்து கொள்ள கூற்றாசைப் படும் என்கிறார் வள்ளலார். நாம் உண்ணும் உணவும் உணவினால் உண்டாகும் காமமும் நம்மை கூற்றுவன் என்னும் எமன் ஆசையோடு கொன்றுவிடுவான் என்று கூறுகிறார் வள்ளலார்.

வள்ளலார் உணவு வகைகளை இரண்டாகப் பிரிக்கின்றார். ஒன்று அருள் உணவு மற்றொன்று பொருள் உணவு. அருள் உணவு ஆண்டவனால் கொடுப்பது. பொருள் உணவு மாயையினால் கொடுப்பது இவை இரண்டில் எது நமக்கு தேவை என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும். பொருள் உணவு மரணத்தை உண்டாக்குவது. அருள் உணவு மரணத்தை வென்று பேரின்பத்தை அடையச் செய்விப்பது.

வள்ளலார் உணவை தேடிப் போய் உண்டதாக வரலாறு இல்லை. அன்பர்களுக்காக நண்பர்களுக்காக அவர்கள் தம்மேல் வைத்துள்ள அன்பிற்காக ஒரு பிடி அதாவது கைப் பிடி எடுத்து உண்டு இருக்கிறார். வேறு பொருள் உணவு உண்ணவில்லை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.

அன்னமுன அழைக்கின்றார் தொளியிங்கே நான்தான்
அம்பலத்தே ஆடுகின்ற அண்ணல் அடிமலர்த்தேன்
உன்னை நினைத்து உண்டேன் என் உள்ளகத்தே வாழும்
ஒரு தலைமை பெருந்தலைவர் அவருடைய அருட்புகழாம்
இன்னமுதம் என்னுடைய அன்பெனும் நறுங் கனியின்
இரதமும் என் தனித்தனைவர்  உருக்காட்சிஎனுமோர்
கன்னனுளே தனித்தெடுத்த தேன் பாகும் கலந்தே
களித்துண்டேன் பசி சிறிதும் கண்டிலன் உள்ளகத்தே.

என்னும் அனுபவமாலையில் விளக்கமாக எழுதி வைத்துள்ளார். நாம் எதை நினைத்து வாழ வேண்டுமோ அதை நினைத்து வாழ்ந்தால் தான் அது கிடைக்கும். பொருளை நினைத்துக்கொண்டு அருளை நினைத்தால் எப்படி கிடைக்கும்? ஒன்றை விட்டால் தான் மற்றொன்று கிடைக்கும்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு.
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

அன்று திருக்குறளில் திருவள்ளுவரும் மெய்ப்பொருளைப் பற்றி கூறியுள்ளார்.

அருட்பெருஞ்சோதியிடம் செல்லவேண்டுமானால் அருளைத்தேடு பூலோகத்தில் வாழ வேண்டுமானால் பொருளைத் தேடு. இரண்டையும் பிடித்துக்கொண்டு வீணாக அழிந்து விடக்கூடாது. வள்ளலார் வழியில் இருந்து கொண்டு வள்ளலார் கருத்துக்களை போதிக்கும் சன்மார்க்க அன்பர்கள் இன்று வரை சுத்த சன்மார்கத்தை கடைப்பிடித்து இருக்கின்றார்களா என்றால் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.

வள்ளலாருடன் இருந்த மெய்யன்பர் வேலாயுதம் மற்றும் அன்பர்கள் அனைவரும் வள்ளலார் மீது அன்பும் பண்பும் பாசமும் மரியாதையும் வைத்துக்கொண்டிருந்தார்களே  தவிர அவர்க்காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடிக்கவில்லை. அதனால் வருத்தமடைந்த வள்ளலார் வேலாயுதமும் கைவிட்டுவிட்டார் என்பதை வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

ஜாதி மத சமய சம்பிரதாயங்கள் அவர்களை விட்டு விலகவில்லை அவர்களும் விடவில்லை. உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்துகொள்வாரில்லை என்று வேதனைப் படுகிறார் வள்ளலார். ஏன் தெரிந்து கொள்ளவில்லை என்றால் ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அந்த பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது.அது போல் தெய்வத்தை உண்மை அன்புடன் உள்ளபடி அனுபவித்தாலல்லது அத்தெய்வத்தினிடத்தில் பிரியம் வராது. ஆதலால் தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற முக்கிய லட்சியத்தில் இருந்து கொண்டு விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று நம்மை பார்த்து வேண்டிக்கொள்கிறார்.

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியே னுமது
தான் வணங்கிச் சாற்றுகிறேன் தயவினோடுங் கேட்பீர்
என்மார்கத்தில் எனை உமக்குள் ஒருவரெனக்கொள்வீர்
எல்லாம் செயவல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன்மார்கத்தவர் போல வேறு சிலப் புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மே விளங்குச் சுத்தசிவ மொன்றே
தன்னானை என்னானை சார்ந்தரிமி னீண்டே

என்று தன் மீது ஆணை வைத்து சொல்லுகிறார். சத்தியம் வைத்து சொல்லியும் நாம் வள்ளலார் கருத்துக்களை கேட்கவில்லை என்றால் சுத்த சன்மார்கத்திளிருந்து என்ன பயன் என்பதை சிந்தித்து பாருங்கள்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்று நம் காலைத்தொட்டு வணங்கி சொல்கிறார். தயவு செய்து புன்மார்கத்தவர் போல் (அதாவது சமயவாதிகளைப் போல்) அறிவு மழுங்கி தெளிவில்லாமல் இருக்காதீர்கள் எல்லாம் வல்ல நம் அருட்பெருஞ்சோதியர் ஒருவர்தான் உண்மைக்கடவுள் என்பதை உறுதியாக நம்பிக்கை வைத்து சன்மார்க்க அன்பர்கள் கடைபிடிக்க வேண்டும். அதை பார்த்து மற்றவர்களும் நம்மை பின்தொடர்ந்து வருவார்கள்.

ஆடாதீர் சற்று மசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் -- வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தை சார்வீர் -- விரைந்திநியிங்
கென் மார்கமு மொன்றாமே.

என்னும் கருத்தாழமுள்ள பாடலில் தெளிவு படுத்தியுள்ளார். சன்மார்கத்தை மக்கள் மத்தியில் எடுத்துரைக்கும் அன்பர்கள் வள்ளலார் சுத்தசன்மார்க்க கருத்துக்களுக்கு விரோதமில்லாமல் தானும் கடைப்பிடித்து மற்றவர்களுக்கும் எடுத்துரைக்க வேண்டும் என தயவு செய்து கேட்டுக் கொள்கிறேன்............

ஆன்மநேயன்ஈரோடுகதிர்வேல்.

வாயைமூடிக்கொண்டுஇருக்கவேண்டும் 1

வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்!

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை விசாரம் செய்கிறீர்களா? வள்ளலாரை கேவலப் படுத்துகிறீர்களா?

உங்களை ஆண்டவர் மன்னிக்க மாட்டார்.

மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.சொல்லிவிட்டேன்.அவ்வளவுதான்.

நீங்கள் யாவரும் அருள் நெருப்போடு விளையாடுகிறீர்கள். அதனால் வரும் பாதிப்பு அளவில் அடங்காது.

வள்ளலாரைப். பற்றி முழுமையாக தெரிந்தால் பேசுங்கள்.இல்லையேல் தெரிந்தவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.அதை விட்டு வாய்க்கு வந்தபடி உளறாதீர்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல.

பகுத்தறிவுஎன்றால்என்ன ?

பகுத்தறிவு என்றால் என்ன?

 மனித வாழ்க்கையில் பழைய மூடநம்பிக்கைக்கு தங்களுடைய  அறிவை செலுத்தாமல்.உண்மை எதுவோ அதை அறிந்து வாழ்வதே பகுத்தறிவு என்பதாகும்.

பகுத்தறிவு என்றால் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது பைத்தியக் காரத்தனம்.

உலக வரலாற்றில் பகுத்தறிவு என்றால் என்ன ? என்பதை போதித்தவர் வள்ளலார்  ஒருவரே!

வள்ளலார் சொல்லி உள்ள "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் " கொள்கைகள் யாவும் பகுத்தறிவுக் கொள்கையாகும்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறிந்து கொள்வதே பகுத்தறிவாகும்.

எல்லவரும் ஏற்றுக் கொள்ளும் பொது நோக்கம் கொண்ட பொது உடமைக் கொள்கையாகும்.

வள்ளலார் காட்டிய வழியில் வாழ்வதே பகுத்தறிவாகும்.

ஒத்தாரும்.உயர்ந்தாரும்.தாழ்ந்தாரும் எவரும்.  ஒருமையுடன் சமமாக வாழ்வதே. வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பகுத்தறிவு கொள்கையாகும் .

அதுவே ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க  கொள்கையைக் கடைபிடித்து பகுத்தறிவு  கொண்டு வாழ்வோம் மற்றவர்களையும் வாழ வைப்போம்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

சாதி.சமயம்.மதம் பற்றுகளை விட வேண்டும்!

நம்முடைய சாதி.சமய.மத பற்றள்ள சன்மார்க்கிகள். மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பற்றி பேசி வருகிறார்கள்.  அவற்றைப் பெறுவதற்கு உண்டான வழியைக் காட்டுகிறார்கள் .இது சாத்தியம் ஆகுமா.? அவர்களின் அறியாமையை என்னவென்று சொல்வது.

புறப்பற்றை ஒழிக்காமல் அகப்பற்றை எப்படி பற்ற முடியும்.

பற்றிலே முக்கியமானது சாதி சமயம் மதம் என்பதுதான்.விலக்க முடியாத பற்றுகளாகும்.அவைகள் தான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான திரைகளாகம்.

அதனால்தான் வள்ளலார் .சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியைக் கண்டேன் என்கின்றார்.

நம்மை பற்றியள்ள பற்றுக்கள் அனைத்தும் .சாதி சமயம் மதத்தின் வழியாகத்தான் வந்துள்ளன என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்.

அதனால் தான் .சாதியும் சமயமும் மதமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெரும் ஜோதி என்கிறார் வள்ளலார்..

இதில் இருந்து நாம் அனைவரும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மேலே கண்ட சாதி சமய மத பற்றுக்களின் சூட்சமத்தின் உண்மையை அறிந்து கொண்டால்  மரணத்தை வெல்லும் வழியை சுலபமாக அறிந்து கொள்ளலாம்.அதுதான் வள்ளலார் சொன்ன உளவாகும்.

உளவினில் அறிந்தால் ஒழிய மற்று அளக்கின்
 அளவினில் அளவா அருட்பெருஞ்ஜோதி ! என்கிறார்.

பொது உணர்வு உணரும் போதலால் பிரித்தே அது வெனிற் தோன்றா அருட்பெருஞ்ஜோதி.!

 எனவே சாதி சமய மத பற்றுகளை விட்டால் தான் பொது உணர்வு உண்டாகும்.உண்மைகள் விளங்கும்.அருள் பெறும் வழி கிடைக்கும்.மரணத்தை வெல்ல முடியும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சமயமதவாதிகள் !

சமய மத வாதிகள் !

வள்ளலார் காலத்தில் .சமய மத வாதிகள்.வள்ளலாரின் கடவுள் கொள்கைகளை வெளியில் இருந்து எதிர்த்து.அருட்பா மறுட்பா  போராட்டங்கள் நடத்தினார்கள்.நீதிமன்றம் வரை சென்று தோல்வி அடைந்தார்கள்.

இப்போது சன்மார்க்கத்தின் உள்ளே நுழைந்து கொண்டு சுத்த சன்மார்க்க வளர்ச்சிக்கு தடையாக செயல் படுகிறார்கள்.

சைவ சமயத்தை சார்ந்தவர்கள் தான் வள்ளலார் கொள்கைக்கு விரோதமாக குழப்பிக் கொண்டு உள்ளார்கள்.

அவர்களை இனம் கண்டு களைஎடுக்க வேண்டும்.சுத்த சன்மார்க்கத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தடையாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்களும்..அவற்றினால் பின் பற்றப்படும்.ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் பற்றாத வண்ணம் இருக்க வேண்டும் என்று வள்ளலார் ஆணையிட்டு உள்ளார்கள்

இப்போது ஆங்காங்கு உள்ள சன்மார்க்க சங்கங்களில் .சமய மத சடங்குகள் போல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருகிறார்கள்.

பழம் தேங்காய்.விபூதி.சூடம்.ஊதுவத்தி.மற்றும்  பூமாலை.படையல் வைத்து சமய மத  வழிபாடுகள் போல் செய்து வருகிறார்கள்.

 அவை அனைத்தும் சுத்த சன்மார்க்கதிற்கு நேர் விரோதமான செயல்களாகும்.

அனைத்து சன்மார்க்க சங்கங்களிலும் வள்ளலார் சொல்லிய வண்ணம் அருட்பெருஞ்ஜோதியை மட்டும் வைத்து வழிபாடு செய்து வர வேண்டும்.

ஜோதி முன் அமர்ந்து மெல்லென அருட்பா பாடல்களை பாடி துதி செய்தல் வேண்டும்.

பசித்த ஏழைகளுக்கு அவரவர்களால் முடிந்த அளவிற்கு அன்ன விரையம் செய்ய வேண்டும்.

இவைகளை முழு நம்பிக்கையுடன் செய்து வந்தாலே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செய்ய வேண்டியதை செய்வார்.

எனவே சமய மதம் சாரந்தவர்களை சாராமல்.வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க கொள்கையை கடைபிடித்து.ஆன்ம நேயம் கொண்டு உயிர் இரக்கத்தை கடைபிடித்து .வழிபாடு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்தி வழிபாடு செய்ய வேண்டும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

சன்மார்க்கசங்கத்தவர்களுக்குவேண்டுகோள் !

சன்மார்க்க சங்கத்தார்க்கு வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்
எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே
புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்
தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே
தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.!

மேலே கண்ட பாடலை பொருமையுடன் படித்து அதன் உண்மையைத் தயவு செய்து அறிந்து கொள்ளுங்கள்.

ஆன்ம நேயம் கொண்ட அன்பர்களே உங்கள் தாள் வணங்கி சொல்லுகிறேன் தயவு செய்து கேளுங்கள்.

என் மார்க்கமான சன்மார்க்கத்தைக் கடைபிடிப்பவர்கள்.என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்துக் கொள்ளுங்கள்.என்னை வைத்து வணங்காதீர்கள்.வழிபாடு செய்யாதீர்கள்.

எல்லாம் வல்ல நமது அருட்பெருஞ்ஜோதி இறைவனையே வணங்குங்கள் வழிபாடு செய்யுங்கள் என்கிறார்.

புன்மார்க்கத்தவர்கள் போல் வேறு சில புகன்ற புந்தி மயக்கம் அடையாதீர் என்கிறார்.

அதாவது அறிவு தெளிவு இல்லாத சமய மத வாதிகள் போல் பைத்தியக்காரத்தனமாம செயல் படாதீர்கள்.

பூரண மெய்ப் பொருளாகிய சுத்த சிவம் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே.உண்மைக் கடவுளாக உள்ளார்.அவரையே உண்மை அன்பால் வணங்குங்கள் வழிபாடு செய்யுங்கள் என்று .ஆணை ஆணை என்று சத்தியம் சத்தியம் என்றும்.சொல்லுகின்றார்.

நமக்காகவே மேலே கண்ட பாடலை பதிவு செய்து உள்ளார் நமது அருள் தந்தை வள்ளலார்.

வள்ளலார் சொல்லிய உண்மைகளை எடுத்து சொன்னால் என்னைச் சமய. மத ஈடுபாடு உள்ள சன்மார்க்கிகள் சாடுகிறார்கள் . அதைப்பற்றி எப்போதும் நான் வருத்தப்பட மாட்டேன்.

உண்மை உணர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்.பாராட்டுகிறார்கள்.

வள்ளார் சொல்லுவது போல்.வைதாலும் வைதிடுமின் வாழ்த்து என கொண்டிடுவேன் மனம் கோனேன்.மானம் எலாம் போன வழிவிடுத்தேன்.பொய்தான் ஓர் சிறிது எனினுன் புகல மாட்டேன் .நீவீர் எலாம் புனிதம் உறும் பொருட்டே.என்பார்.

நீங்கள் எல்லாம் என்னுடைய ஆன்ம நேய உடன் பிறப்புக்கள்.என்ற உரிமையுடன் சொல்லுகிறேன் எழுதுகிறேன்.  வேறு எந்த லாபத்தைக் கருதியும் அல்ல என்பதை இங்கே தெரிவித்துக் கொள்கிறேன்.

வள்ளலார் அடிக்கடி சொல்லுகின்றார்.வழிபாடு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பார்.

பொய்யை வழிபடுவதற்கும்.உண்மையை வழிபடுவதற்கும்.வித்தியாசம் என்ன என்பதை சன்மார்க்கிகள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் அறிந்து கொண்டால்தான் மற்றவர்களுக்கு சுத்த சன்மார்க்கத்தை.உண்மைக் கடவள் யார்? என்பதை உலக மக்களுக்கு விளக்க முடியும்.ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்ற முடியும்.

நமக்கு காலம் இலை காலம் உள்ளபோதே உண்மையை உணர்ந்து ஒழுக்கமுடன் வாழ்ந்து .மற்றவர்களுக்கும் நல்வழி காட்டுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வணங்குவது ஏன்வழிபடுவதுஏன் ?

[05/01, 11:47 a.m.] aanmaneyan.kathirvelu@gma: வணங்குவது ஏன் ? வழிபடுவது ஏன் ?

வணங்குவது என்பது மரியாதை. நம்மைவிட உயர்ந்தவர்களுக்கு வணக்கம் வந்தனம் போன்று செய்கையால் காட்டுவது.

வழிபடுவது என்பது:_ வேண்டுதல். முறையீடு.விண்ப்பம் செய்தல். இவை இறைவனிடம் உணர்வு பூர்வமாக கரணங்கள்.இந்திரியங்கள் மூலமாக செய்தல்.

இதில் வள்ளலார் வழிபடு விஷயத்தில் கவனமாக இருங்கள் என்கின்றார்.

இதில் உருவத்தை வணங்குங்கள்.அருட்பெரும்ஜோதியை வழிபடுங்கள்.என்பதை அறிவுத்தரம் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் உருவ வழிபாடு வேண்டாம் என்றவர் .தன்னுடைய உருவத்தை வழிபடுவதை ஏற்றுக் கொள்வாரா? என்பதை சிந்திக்க வேண்டும்.

வள்ளலார் உருவத்தில் இல்லை !

வள்ளலாரை. அருட்பெரும்ஜோதி ஆண்டவர். தன்வசமாக தன்னைப்போல் மாற்றிக் கொண்டது.இதுதான் உண்மை.இதுதான் சத்தியம்.

வள்ளலார் படத்தையோ.உருவத்தையோ.வழிபாடு செய்வதால் எந்த பயனும் இல்லை.ஏன் என்றால் அதில் வள்ளலாரும் இல்லை.ஆண்டவரும் இல்லை.அது வெரும் படம் அவ்வளவுதான்.நாம் ஒரு மரியாதைக்காகவும்.பழக்கத்திற்காகவும் வைத்து கொள்ளலாம் அவ்வளவுதான்.

அருட்பெரும்ஜோதியில் வள்ளலார் உள்ளார்!

அருட்பெரும்ஜோதியை வழிப்பட்டால் அதன் உள் வள்ளலார் கலந்து உள்ளார். ஜோதியிலே ஆண்டவரும் உள்ளார் வள்ளலாரும் உள்ளார்.

அதனால் வள்ளலார் சொல்லுகின்றார்.
 ஆதி அந்தமும் இல்லா.அருட்பெரும் ஜோதி தன்னையே நினைமின்கள் சகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைக்கின்றேன்.நீவீர் எல்லாம் மேல் ஏறும் வீதி. மற்ற வீதிகள் யாவும் கீழ் செல்லும் வீதி என்கிறார்.

கீழ் செல்வதும் மேல் செல்வதும் உங்கள் விருப்பம்.

மேலும் தான் எந்த நிலையில் உள்ளேன் என்பதை வள்ளலாரே சொல்லுகின்றார்.

அருட்ஜோதி ஆனேன் என்று அரையப்பா முரசு.
அருள் ஆட்சி பெற்றேன் என்று அரையப்பா முரசு.
மருட்சார்பு தீர்ந்தேன் என்று அரையப்பா முரசு.
மரணம் தவிர்த்தேன் என்று அரையப்பா முரசு! என்று வெற்றி முரசு கொட்டுகின்றார்.

மேலும் :-

என்சாமி எனது துரை என் உயிர் நாயகமே

இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்

பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது

பேருடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்

தன் சாதி யுடையப் பெரிய தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியம் சத்தியமே

மின்சாரும் இடைமடவாய் என் மொழி நின்தனக்கே

வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

என்பதை தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

அருட்பெரும்ஜோதி வேறு வள்ளலார் வேறு அல்ல. என்பதை அறிவு சார்ந்ந சுத்த சன்மார்க்க அன்பர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

நாம் எல்லாம் இந்த பிறவியில் வள்ளலார் காட்டிய வழியில் செல்வதற்கு கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.....
[05/01, 6:56 p.m.] aanmaneyan.kathirvelu@gma: உங்கள் எல்லோரையும் விட வள்ளலார் மீது அளவு கடந்த பற்று உள்ளவன் நான்.

வள்ளலார் அவர்கள் சொல்லி உள்ளதை மீறாமல் செயல் படுவதுதான் அவருக்கு நாம் செய்யும் நற் பண்பகளாகும். அடிபணியும் செயல்களாகும்.

அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தில் குரு சிஷயன என்ற பேதம் என்பது கிடையாது.

எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும்.ஒன்றெனக் காண்பதே .வள்ளலார் நமக்கு சொல்லித் தந்த பாடமாகும். அவைதான் ஒருமை என்பதாகும்.அதுதான் சாகாக்கல்விக்கு நம்மை இட்டுச் செல்லும் துவாரமாகும்.

வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்க கொள்கையில் நான் மிகவும் கவனமாக இருக்கிறேன்.

இவை சொல்லி வருபவை அல்ல .முழுமையான ஜீவகாருண்யத்தால்.அறிவால் அனுபவத்தால்
[05/01, 6:56 p.m.] aanmaneyan.kathirvelu@gma: அறிந்து கொள்ள வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

விண்ணப்பம் !

[06/01, 4:37 p.m.] aanmaneyan.kathirvelu@gma: கீழே கண்ட விண்ணப்பத்தை கவனமாக.பொருமையாகப்படியுங்கள்.

சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.

உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!

இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம் பிணி மூப்பு பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தி இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.

எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது, எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
[06/01, 4:37 p.m.] aanmaneyan.kathirvelu@gma: பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேகசுதந்தரத்தையும், போகசுதந்தரத்தையும், ஜீவசுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமும் தேற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.

தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்!
[06/01, 4:43 p.m.] aanmaneyan.kathirvelu@gma: மேலே கண்ட விண்ணப்பத்தில் வள்ளலார் எப்படி இறைவனிடம் தன்னுடைய சதந்தரத்தை ஒப்படைத்தார் என்பதை ஊன்றி கவனித்தால் மரணத்தை வெல்லும் வழி கிடைக்கும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஆன்மாவின் வாழ்க்கை !

ஒரு சன்மார்க்க அன்பர் கேட்டார் அவருக்குண்டான பதில்.!

ஆன்மாவின் வாழ்க்கை !

இந்த பஞ்ச பூத உலகத்தில் ஆன்மா வாழ்வதற்கு இறைவனால் மூன்று சுதந்தரம் கொடுக்கப் படுகின்றது.உயிர் கொடுக்கப்படுகின்றது.உடம்பு கொடுக்கப்படுகின்றது.அனுபவிக்க மண்ணாசை.பெண்ணாசை.பொன்னாசை என்ற போகப்பொருள்கள் கொடுக்கப் படுகின்றது.

இதை விருப்பம்போல் அனுபவிக்க சுதந்தரமும் வழங்கப் படுகின்றது.அவற்றை அனுபவக்கின்ற வகையில்.இன்பம் துன்பம் என்ற நல்வினை.தீவினை ஆன்மாவில் பதிவாகிக்கொண்டே இருக்கும்.ஆன்மாவுக்குத் தெரியாமல் எதுவும் செயல்பட முடியாது.அவைதான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளாகும்.திரைகள் நீங்காது இருக்கும் வரை.பிறந்து பிறந்து இறந்து இறந்து பிறவிகள் மாறி மாறி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இந்த உலகத்தில் இருந்து ஆன்மா வெளியேற வேண்டுமானால்.அருள் பெற்றால் மட்டுமே செல்ல முடியும்.

அருள் பெருவதற்கு வேண்டிய வழிகளை பல அருளாளர்கள் பல வழிகளை காட்டி உள்ளார்கள்.அத்தனையும் குறுக்கு வழிகளாகவே உள்ளன.அதனால் ஆன்மாக்கள் எந்த பயனும் பூரணமாக அடையவில்லை.

அதனால்தான் ஆன்மாக்களை அனுப்பிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.பக்குவம் உள்ள ஆன்மாவை அனுப்பி வைத்தார்."அவர்தான் வள்ளலார்."

அவர் வந்துதான் அருளைப்பெரும் உண்மையான நேர் வழியைக் காட்டி உள்ளார்.அதற்குப் பெயர்தான் "சாகாக்கல்வி" என்பதாகும். இதுவரையில் சாகும் கல்வியைத்தான்.அனைத்து அருளாளர்கள் போதித்து உள்ளார்கள்.அதனால் ஆன்மா லாபம் அடையவில்லை.

அருளைப் பெற்று.மனிதன் மரணம் அடையாமல் வாழ்ந்தால் மட்டுமே பேரின்ப லாபத்தை அடையமுடியும் என்ற உண்மையை தெரிவித்து உள்ளார் வள்ளலார்.

சொல்லியது மட்டும் அல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை வாழ்ந்தும் காட்டி உள்ளார்.

எனவே இந்த உலகத்தில் வாழ்வதற்காக ஜீவ சுதந்திரம்.தேக சுதந்தரம்.போக சுதந்தரம என்னும் மூவகைச் சுதந்திரங்களை இறைவனால் கொடுக்கப் பட்டு உள்ளது. அவற்றை எப்படி திருப்பிக் கொடுப்பது.அப்படியே கொடுக்க முடியுமா ? என்றால் முடியாது.

உயிர.் உடம்பு. இதுவரையில் அனுபவித்த போகப்பொருள்கள்  எல்லாம் இங்கேயே திருப்பித் தந்துவிட வேண்டும்.எப்படித்தருவது. அதற்காகத்தான் ஜீவ காருண்யம்.சத்விசாரம் என்ற இரண்டு வழிகளைக் காட்டி உள்ளார். ஒன்று உயிர்களுக்கு உபகாரம் செய்வது.ஒன்று இடைவிடாது இறைவனிடம் பிரார்த்தனை செய்வது.இவை இரண்டும் சமமாக செய்து வரவேண்டும்.இப்படி செய்து வந்தால்.உலக பற்றுக்கள் தானே விளகும். உயிர்கள் அனைத்தும் நம்மிடம் அன்பு காட்டும்.உயிர்கள் நம்மிடம் அன்பு காட்டினால்.இறைவன் நம்மிடம் அன்ப.தயவு.கருணைக் காட்டுவார்.இறைவன் நம்மீது முழுமையான கருணைக் காட்டும் போது .ஆன்மாவில் சுத்த உஷ்ணம் உண்டாகும்.அந்த உஷ்ணத்தினால்.ஆன்மாவை. மறைத்துக் கொண்டு இருக்கும் மாயா திரைகள் விலகி அருள் சுரக்கும்.

அருள் முழுமையாக சுரக்கும் போது வேதியல் மாற்றம் செய்வதுபோல்.நம்முடைய உடம்பில் உள்ள அணுக்கள் அனைத்தும் கரைந்து பிரிந்து விடும்.

முழுமையாக கரைந்து பிரிந்து விட்டப்பின் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறிவிடும்.அதற்குத்தான் ஆன்ம தேகம் என்று பெயர்.பொன் உடம்பு என்றும் பெயர். அதற்கு மேல் சித்தி நிலைகள் நிறைய உண்டு.கருமசித்தி.யோகசித்தி.ஞானசித்தி.அந்த மூன்று சித்திகளும் இணைந்தால் முத்தேக சித்தி என்று பெயர்.

இந்த முத்தேக சித்திப் பெற்றவர்கள்.பேரின்ப லாபத்தை அடைந்தவர்கள்.அவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வார். அவர்களுடன் கலந்து கொள்வார்.அவர்களுக்கு எல்லா வல்லபமும் கிடைக்கும்.

இதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

வள்ளலார் அகவலில் பதிவு செய்து உள்ளது.

தோல் எலாம் குழைந்திடச் சுழ் நரம்பு அனைத்தும் மேல்எலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிட

என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட .மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட.

இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம் உரைத்திட பந்தித்து ஒரு திரள் ஆயிட.

மடல் எலாம் மீளை மலர்ந்திட அமுதம் உடல் எலாம் ஊற்று எடுத்து ஓடி நிரம்பிட.

ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத் தண்ணிய உயிர்ப்பினிற் சாந்தம் ததும்பிட .

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட.

வாய்த் துடித்து அலறிட வளர் செவித் துணைகளிற் கூயிசைப் பொறி யெலாம் கும்மெனக் கொட்டிட.

மெய்யெலாம் களிர்ந்திட மென்மார்பு அசைந்திடக் கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட.

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட.

அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச் சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட.

அறிவு உரும் அனைத்தும் ஆனந்தம் ஆயிடப் பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங்கு ஒழிந்திடச் சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட.

உலகு எலாம் விடயமும் உளம் எலாம் மறைந்திட அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட.

எனனுளத்து எழுந்து உயிர் எலாம் மலர்ந்திட என் உளத்தே ஓங்கிய என் தனி அன்பே.

பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே .என்உளத்து எழுந்த என்னுடை அன்பே.

தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால் 'என்னை வேதித்த என்தனி அன்பே."

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடை அன்பே.

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து என்னுளே கனிந்த என்னுடை அன்பே.

தன்னுளே நிறைவுறும் தரம் எலாம் அளித்தே என்னுளே நிறைந்த என்தனி அன்பே.

துன்புள அனைத்தும் தொலைத்து எனது உருவை இன்புற ஆக்கிய என்னுடை அன்பே.

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என் உளம் கலந்ந என் தனி அன்பே ! என்றும்

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளிதத்தோர் அருட்பெருஞ்ஜோதி!

என்கிறார்.இதுதான் அருளைப் பெரும் வழியாகும்.மரணத்தை வெல்லும் வழியாகும்.

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை நாடாதீர்.பொய் உலகை நம்பாதீர்.
வாடாதீர் .சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் .சத்தியம் நீர்.நன்மார்க்கஞ் சேர்வீர் இந்நாள்!

சுருக்கமாக சொல்லி உள்ளேன் விரிக்கில் பெருகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.