திங்கள், 21 ஆகஸ்ட், 2017

நாம் என்ன என்ன அறிந்து கொள்ள வேண்டும் !

நாம் என்ன என்ன அறிந்து கொள்ள வேண்டும் !

முறையீடு என்ற தலைப்பில் வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்கள்..

எளிய நடையில் தமிழில் சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு எழுதி வைத்துள்ளார்.

கீழே உள்ள பாடல்களில் உள்ளபடி படித்து தெரிந்து கொண்டு அதன்படி வாழ்ந்தால் நாம் பெற வேண்டியதை எளிதில் பெற்றுக் கொள்ளலாம்.

இதைவிட சிறந்த வழிகள் வரிகள் உலகில் எங்கும் இல்லை என்றே சொல்லலாம்....படித்து பயன் பெறுவோம்.

பாடல்கள் !

இறைவன் இடம் முறையிட வேண்டும் ....

1. மருந்தறியேன் மணிஅறியேன் மந்திரம்ஒன் றறியேன்
மதிஅறியேன் விதிஅறியேன் வாழ்க்கைநிலை அறியேன்
திருந்தறியேன் திருவருளின் செயலறியேன் அறந்தான்
செய்தறியேன் மனமடங்கும் திறத்தினில்ஓர் இடத்தே
இருந்தறியேன் அறிந்தோரை ஏத்திடவும் அறியேன்
எந்தைபிரான் மணிமன்றம் எய்தஅறி வேனோ
இருந்ததிசை சொலஅறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

2. அகங்காரக் கொடுங்கிழங்கை அகழ்ந்தெறிய அறியேன்
அறிவறிந்த அந்தணர்பால் செறியும்நெறி அறியேன்
நகங்கானம் உறுதவர்போல் நலம்புரிந்தும் அறியேன்
நச்சுமரக் கனிபோல இச்சைகனிந் துழல்வேன்
மகங்காணும் புலவரெலாம் வந்துதொழ நடிக்கும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இகங்காணத் திரிகின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

3. கற்குமுறை கற்றறியேன் கற்பனகற் றறிந்த
கருத்தர்திருக் கூட்டத்தில் களித்திருக்க அறியேன்
நிற்குநிலை நின்றறியேன் நின்றாரின் நடித்தேன்
நெடுங்காமப் பெருங்கடலை நீந்தும்வகை அறியேன்
சிற்குணமா மணிமன்றில் திருநடனம் புரியும்
திருவடிஎன் சென்னிமிசைச் சேர்க்கஅறி வேனோ
இற்குணஞ்செய் துழல்கின்றேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

4. தேகமுறு பூதநிலைத் திறம்சிறிதும் அறியேன்
சித்தாந்த நிலைஅறியேன் சித்தநிலைஅறியேன்
யோகமுறு நிலைசிறிதும் உணர்ந்தறியேன் சிறியேன்
உலகநடை யிடைக்கிடந்தே உழைப்பாரில் கடையேன்
ஆகமுறு திருநீற்றின் ஒளிவிளங்க அசைந்தே
அம்பலத்தில் ஆடுகின்ற அடியைஅறி வேனோ
ஏகஅனு பவம்அறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

5. வேதாந்த நிலைநாடி விரைந்துமுயன் றறியேன்
மெய்வகையும் கைவகையும் செய்வகையும் அறியேன்
நாதாந்தத் திருவீதி நடந்திடுதற் கறியேன்
நான்ஆர்என் றறியேன்எங் கோன்ஆர்என் றறியேன்
போதாந்தத் திருநாடு புகஅறியேன் ஞான
பூரணா காயம்எனும் பொதுவைஅறி வேனோ
ஏதாந்தீ யேன்சரிதம் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

6. கலைமுடிவு கண்டறியேன் கரணமெலாம் அடக்கும்
கதிஅறியேன் கதிஅறிந்த கருத்தர்களை அறியேன்
கொலைபுலைகள் விடுத்தறியேன் கோபமறுத் தறியேன்
கொடுங்காமக் கடல்கடக்கும் குறிப்பறியேன் குணமாம்
மலைமிசைநின் றிடஅறியேன் ஞானநடம் புரியும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
இலைஎனும்பொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

7. சாதிமதம் சமயம்எனும் சங்கடம்விட் டறியேன்
சாத்திரச்சே றாடுகின்ற சஞ்சலம்விட் டறியேன்
ஆதிஅந்த நிலையறியேன் அலைஅறியாக் கடல்போல்
ஆனந்தப் பெரும்போகத் தமர்ந்திடவும் அறியேன்
நீதிநெறி நடந்தறியேன் சோதிமணிப் பொதுவில்
நிருத்தமிடும் ஒருத்தர்திருக் கருத்தைஅறி வேனோ
ஏதிலர்சார் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

8. சாகாத தலைஅறியேன் வேகாத காலின்
தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்
ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்
அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்
மாகாத லுடையபெருந் திருவாளர் வழுத்தும்
மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ
ஏகாய200 உலகினிடை எங்ஙனம்நான் தபுகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

9. தத்துவம்என் வசமாகத் தான்செலுத்த அறியேன்
சாகாத கல்விகற்கும் தரஞ்சிறிதும் அறியேன்
அத்தநிலை சத்தநிலை அறியேன்மெய் அறிவை
அறியேன்மெய் அறிந்தடங்கும் அறிஞரையும் அறியேன்
சுத்தசிவ சன்மார்க்கத் திருப்பொதுவி னிடத்தே
தூயநடம் புரிகின்ற ஞாயமறி வேனோ
எத்துணையும் குணமறியேன் எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

10. வரைஅபர மார்க்கமொடு பரமார்க்கம் அறியேன்
மரணபயம் தவிர்த்திடுஞ்சன் மார்க்கமதை அறியேன்
திரையறுதண் கடலறியேன் அக்கடலைக் கடைந்தே
தெள்ளமுதம் உணவறியேன் சினமடக்க அறியேன்
உரைஉணர்வு கடந்ததிரு மணிமன்றந் தனிலே
ஒருமைநடம் புரிகின்றார் பெருமைஅறி வேனோ
இரையுறுபொய் உலகினிடை எங்ஙனம்நான் புகுவேன்
யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே.

மேலே கண்ட பாடல்களில் உள்ளபடி நம்மிடம் உள்ள தீய பழக்க வழக்கங்களையும். தீய குணங்களையும் விட்டு விட்டாலே போதும்.கிடைக்க வேண்டியது தானே கிடைத்து விடும்

இதுவரையில் விடாமல் இருந்தவர்கள் எந்த லாபத்தையும் பெற முடியாமல் மாண்டு போய் விட்டார்கள்.

நாம் பெற வேண்டிய காலம் இதுவே  அதனால் தான் இந்த காலத்திற்கு சுத்த சன்மார்க்க காலம் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

எதையும் பிடிக்க வேண்டியது இல்லை.விட்டு விட்டால் போதும் நான்கு ஒழுக்கங்களும்  தன்னைத்தானே செயல்பட ஆரம்பித்துவிடும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

🌹🌹வாழ்க்கை வாழ்வதற்கே !🌹🌹🌹

🌹🌹🌹வாழ்க்கை வாழ்வதற்கே !🌹🌹🌹

நாம் இந்த உலகத்தில் உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பு பெற்றுள்ளோம் .

இந்த பிறப்பு எளிதில் கிடைத்தது அல்ல. பல்லாயிரம் யோனி பேதங்கள் சென்று இறுதியாக கிடைத்தப் பிறப்பு இந்த மனித பிறப்பு ...

நாம் இதுவரையில் பிறந்து பிறந்து.இறந்து இறந்து  மறுபிறப்பு எடுத்து எடுத்து வாழ்ந்து வந்தோம்.இப்போது கிடைத்துள்ள இந்த மனித பிறப்பு இறப்பதற்கும் பிறப்பதற்கும் அல்ல.

சொர்க்கம்.வைகுண்டம் கைலாயம்.எமலோகம்.பரலோகம் செல்வதற்கும் அல்ல.

நமக்கு கிடைத்துள்ள இந்த ஜீவ தேகத்தை .ஆன்ம தேகமாக மாற்ற வேண்டும்.ஆன்ம தேகமாக மாற்றக் கூடிய திறமை அறிவு .ஆற்றல் .அருள் அனைத்தும் மனித தேகத்தில் உள்ளது.அவற்றை கண்டுபிடித்து எடுத்து பயன் படுத்த தெரியாமல் மரணம் அடைந்து கொண்டே உள்ளோம்.

மரணம் என்பது இயற்கையானது அல்ல.நாம் வாழும் தவறான வாழ்க்கையினால் செயற்கையாக மரணம் வருகின்றது....

நமக்கு மரணத்தை வெல்லும் வழியையும் .ஆன்ம தேகம் பெரும் வழியையும்.முன்னாடி வாழ்ந்த அருளாளர்கள் .பெரியோர்கள் முறையாக.சரியாக உண்மையாக யாரும் காட்டவில்லை.அவர்களும் தெரிந்து கொள்ளவில்லை.நாமும் தெரிந்து கொள்ளவும் வாய்ப்புக்கள் இல்லை.

ஆன்ம தேகம் பெற்று .பின் ஞான தேகம் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாமல் வாழும் பேரின்ப வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் நமது அருள் தந்தை திரு அருட்பிரகாச வள்ளலார்.

மரணத்தை வெல்லும் வழியைத் தெரிந்து கொள்வதற்கு .""சாகாக்கல்வி"" என்று பெயர் வைத்துள்ளார்.அந்த  சாகாக்கல்வி கற்பதற்கு  ஒழுக்கம் மிகவும் அவசியமாகிறது.

இதுவரையில் நாம் கடைபிடித்து வந்த  உலகியல் புற ஒழுக்கம் அல்ல.அக ஒழுக்கம் அவசியம் என்கிறார் .

அதிலே  இந்திரிய ஒழுக்கம் .கரண ஒழுக்கம் புற ஒழுக்கமாகும்.அதுதான் அடிப்படையாகும்.இதைத்தான் அனைவரும் முடிந்த அளவு கடைபிடித்து செய்து வருகிறார்கள்.

அதற்கும் மேலே அக ஒழுக்கமான .ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் மிகவும் அவசியமாகும்.

ஜீவ ஒழுக்கம் நிறைவு பெற்றால்தான் உயிரைக் காப்பாற்ற முடியும்.உயிரையும் உடம்பையும் காப்பாற்றினால் தான் ஆன்ம ஒழுக்கம் கை கூடும்.ஆன்ம ஒழுக்கம் நிறைவு பெற்றால்தான் ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அருள் பெற்றால் மட்டுமே ஊன உடம்பு ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

இவை தெரியாமல் மற்றவர்கள் ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் ஏதோ ஒரு சிறு ஒளி கிடைப்பது போல் தோன்றும்.அதுவே உண்மை என்று நம்பி பல் இளித்து கெட்டுப் போய் அழிந்து விடுவீர்கள்.இறுதியில் எல்லோருக்கும் வரும் மரணம் நமக்கும் வந்து விடும்.

வள்ளார் பாடல் !

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்

மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே

மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனதுமெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே

செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலேசித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.!

மேலும் ஒரு பாடல் !

உற்றமொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கேஉறவன்அன்றிப் பகைவன்என உன்னாதீர் உலகீர்

கற்றவரும் கல்லாரும் அழிந்திடக்காண் கின்றீர்கரணம்எலாம் கலங்கவரும் மரணமும்சம் மதமோ

சற்றும்இதைச் சம்மதியா தென்மனந்தான் உமதுதன்மனந்தான் கன்மனமோ வன்மனமோ அறியேன்

இற்றிதனைத் தடுத்திடலாம் என்னொடும்சேர்ந் திடுமின்என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கந் தானே.!

என்று தெளிவாக சொல்லி உலகில் உள்ள அனைவரையும் ஆன்ம நேயத்துடன் அழைக்கின்றார்..

நாம் என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கை வாழ்வதற்கே மனித தேகம் கொடுக்கப்பட்டு உள்ளது.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை பின்பற்றி மரணத்தை வென்று என்றும் பேரின்ப பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896..🌹🌹🌹

செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

ஒன்றே கடவுள் !

ஒன்றே கடவுள் !

அருட்பெருஞ்ஜோதி;
       "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
ஆன்மநேய உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;
              இந்த உலகைப் படைத்து இவ்வுலகத்தில் வாழ்வதற்காக அறிவற்றுக்கிடந்த நமக்கு ஓரறிவு முதல் ஆறறிவு வரை தேகம் கொடுத்து புல்,பூண்டு ,செடிகொடி,மரம்,சிப்பி,நத்தை, எறும்பு,வண்டு,ஈ,பறவை,விலங்கு,மனிதர் என பல்வேறு தேகம் கொடுத்து ,
          நாம் வாழ்வதற்கு தேவையான வாழ்வியலுக்குற்ற பொருட்களையும் படைத்து நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் நமது "ஒரே கடவுளை"
 
          நாம் செய்த தொழில், சார்ந்திருந்த இனம்,பேசியமொழி,வாழந்த தேசம் என்ற வேற்றுமையால் நமக்கென்று பலசாதிகள்,மதங்கள்,சமயங்கள் பல்வேறு மார்க்கங்களை ஏற்படுத்தி ,
அம்மார்க்கத்திற்கு என்று பல நெறிமுறைகளை வகுத்து ,துதித்து , வணங்கி, வழிபட்டு நாம் அனைவரும்"உயிர்க்குலம்" என்ற ஒற்றுமை உணர்வை மறந்து நம்மைப் "படைத்த ஒரே கடவுளை" கூறுபோட்டுக்கொண்டு,
               
                உருவமற்று அருட்பெருஞ்ஜோதி வடிவாகி பாரொடுவிண்ணாய் பரந்ததோர் ஜோதியாய் எங்கும் நீக்கமற கலந்து நிறைந்து விளங்கும் கடவுளை  நமது கருத்து வேற்றுமைக்கு தக்கவாறு,
       
          அக்கடவுளுக்கு மனிதர்களைப் போன்றே கை கால்கள் அமைத்து பலவடிவத்தையும், வண்ணத்தையும் கொடுத்து , அவர்கள் கையில் பல கூறிய ஆயுதங்களையும்  கொடுத்து, அவர்களுக்கென்று வாகனமாக புலி,சிங்கம்,யானை,காளை,மயில்,எலி என்று ஒவ்வொரு வாகனத்தையும் காட்டி
   நமது அறியாமையால் இதுநாள் வரை நமது முன்னோர்கள் காட்டிய நெறிமுறையிலே கடவுளை தனித்தனியாக பித்துவைத்து நாமும் ஒற்றுமை இல்லாமல் பிரிந்துகிடந்து  உண்மைவிளங்காது
  பயனற்று வழிபட்டுவந்தோம்;

      தற்போது அதற்கு விடியல் உதயமாகிவிட்டது ஆம்,
    நமது கருணைவடிவாம் அருட்பிரகாச வள்ளல் பெருமான் இவ்வுலக உயிர்களின்மீது கொண்டஉயிர் இரக்கத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் "பரிபூரண அருளையும் ,
    அழியா நித்திய தேகத்தையும் பெற்றுக்கொண்டு,
  இவ்வுலகிலேயே நம்முடனும் நமது அகத்திலும் கலந்து நிறைந்து இவ்வுலகையும் இவ்வுலக சரஅசர பொருட்களையும் ஐந்து தொழிலால் அருளாள் ஆளுகின்ற வல்லபத்தையும் பெற்றுக்கொண்டு இன்று இவ்வுலகை அருளாட்சி செய்துவருகின்றார்கள்;

      இனி ஆன்ம உறவுடன் ஒன்றுபட்டு ஒருமையுடன் வாழவேண்டியநாம் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்த அவலநிலையில் இருந்து மாறி ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து வாழும் காலம் உதயமாகிவிட்டது ,

      அவற்றை வள்ளல் பெருமானே அருட்பாவில் தெளிவுபடுத்துகின்றார்கள் அவற்றைப் பார்ப்போம்;

          ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பேரொளி வடிவாய் என்உள்ளகத்தில் பொதுவில் கலந்து நிறைந்துவிட்டார்கள்;
      இதனால் நான் அழியா நித்திய தேகத்தைப் பெற்றுக்கொண்டு ,
 சுத்த,பிரணவ,ஞான தேகமாகிய முத்தேக சித்தியையும், எல்லாம் செய்ய வல்ல அருட்பெருஞ்சித்தியையும்,
பெற்றுக்கொண்டேன் உலகவரே ;
     
        ஆகலில் இனி நீர் கவலைக்கொள்ளவேண்டாம்,
  உங்கள் அனைவரையும் ஒன்று சேரவிடாமல் பிரித்துவைத்து , கடவுள் உண்மையை அறியவிடாமலும் ,
    பிறப்பு இறப்பு என்னும் பவக்கடலை கடப்பதற்குரிய வழியைக்காட்டாமலும் மூழ்கடித்த அந்த இரக்கமற்ற கொடியசாதி,சமய,மதத்தை எல்லாம் நீக்கி , கொலை புலை தவிர்த்த குருநெறியாம் சுத்தசன்மார்க்க புணித நெறியிலே உங்கள் அனைவரையும் புகுத்துவித்து,
"சுத்தசன்மார்க்கம்" என்னும் ஒரேநெறியிலே இவ்வுலகவலகவர் அனைவரையும் நிறுத்தி ,
   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கி துதித்து வழிபட்டிடவும்,
விரைந்து அவர்கள் வினைகளை நீக்கிக்கொண்டு பக்குவத்திலே அழியக்கூடிய இத்தேகத்தை அழியா நித்தியதேகமாக்கிக்கொண்டு வாழ்வை நிலைபெறச்செய்து இவ்வுலகிலேயே மரணத்தை தவிர்த்துக்கொண்டு "அனக" அருள்வாழ்க்கையில் வாழவைப்பேன் இது உண்மை ,
       ஆகலில் நீங்கள் அனைவரும் இனியும் காலம் தாழ்த்தாது விரைந்து வாருங்கள் சன்மார்க்கத்திற்கு என்று வள்ளல் பெருமான் உலகவரை அழைக்கின்றார்கள்;
     
       இது சாதாரண மனிதரின் அழைப்பு கிடையாது ;
      இவ்வுலகையே அருளாள் ஆண்டுவரும் அருளாளரின் அழைப்பு ,
   அவர்கள் நம்அனைவரையும் சன்மார்க்கத்தில் புகுத்துவிப்பது சத்தியமே என்பதை உணர்ந்து,

       நாமும் இதுநாள் வரையில் தனித்தனியாக பிரிந்துகிடந்தது போதும்
   நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழக்கூடிய புணித சுத்தசன்மார்க்க காலம் உதயமாகிவிட்டது ,
      நாம் நமது கருத்து வேற்றுமையை தூக்கி எறிந்துவிட்டு ஆன்மநேய சகோதரத்தன்மையுடன் ஒன்றுபடுவோம் !
  அழியா வாழ்வு பெறுவோம் !
    அனைவரும் வாரீர் சுத்தசன்மார்க்கத்திற்கே !
..........நன்றி;
வள்ளல் மலரடிப் போற்றி போற்றி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்🌼🌸🌺

வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா...

மன்னிக்க வேண்டுகிறேன் இறைவா....

இந்தப் பூவுலகில் நாம் படும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் ஒரு வகையில் நாமே காரணம். முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவங்களின் பலன்களை இந்த பிறவியில் அனுபவிக்கிறோம். அப்படி என்றால் "நாம் செய்த பாவங்களுக்கு விமோசனமே கிடையாதா?" என்றால்... "உண்டு!!".

செய்த தவறுகளுக்கு கண்ணீர் மல்க இறைவனிடம் மன்னிப்பு கேட்டு, இனி பாவமென்ற ஒன்றை செய்யமாட்டேன் என்று அவனிடம் உறுதியளித்தால் அவரவர் செய்த பாபங்களின் தன்மைக்கேற்ப அவர்களது கர்மாவின் கடுமை குறைக்கப்படும்.

உதாரணத்திற்கு ஒரு பெரிய மரத்தை கட்டி இழுத்துச் செல்வது தான் உங்களுக்கு தண்டனை என்று வைத்துக்கொள்வோம்....  நீங்கள் அதை அனுபவித்தே தீரவேண்டும் என்கிற விதி இருக்கும்போது, இறைவனிடம் மன்னிப்பு கேட்டால், அந்த தண்டனையின் கடுமை சற்று குறைக்கப்படுகிறது. எப்படி? அதே மரத்தை தண்ணீரில் இழுத்து செல்லவேண்டும் என்று தண்டனை மாற்றியமைக்கப்படுகிறது. தற்போது அது சுலபமல்லவா? மரத்தை தண்ணீரில் இழுத்துச் செல்வதற்கும் தரையில் இழுத்துச் செல்வதற்கும் நிறைய வேறுபாடு உண்டு.

பாபம் செய்ததால் தான் நாம் இந்த மானிடப் பிறவி எடுத்திருக்கிறோம். சென்ற ஜன்மத்திலோ ஏன் இந்த ஜென்மத்திலோ கீழ்கண்ட பாவங்களுள் சிலவற்றையோ பலவற்றையோ தெரிந்து தெரியாமலோ செய்திருப்போம்.

முதலில் உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்....

எந்தப் பிறவியில் என்ன பாவம் செய்தேன்?
என் இறைவா!

நல்லோர் மனதை நடுங்கச் செய்தேனோ?
வழிய வழக்கிட்டு மானங் கெடுத்தேனோ?
தானம் கொடுப்போரை தடுத்து நின்றேனோ?
கலந்த சிநேகரை கலகம் செய்தேனோ?

மனமொத்த நட்புக்கு வஞ்சகம் செய்தேனோ?
குடி வரி உயர்த்தி கொள்ளை கொண்டேனோ?
ஏழைகள் வயிறு எரியச் செய்தேனோ?
தருமம் பாராது தண்டம் செய்தேனோ?

மண்ணோரம் பேசி வாழ்வளித்தேனோ?
உயிர்கொலை செய்வோர்க்கு உபகாரம் செய்தேனோ?
களவு செய்வோர்க்கு உளவு சொன்னேனோ?
பொருளை இச்சித்து பொய் சொன்னேனோ?

ஆசை காட்டி மோசம் செய்தேனோ?
வரவு போக்கு ஒழிய வழி அடைத்தேனோ?
வேலையாட்களுக்கு கூலி குறைத்தேனோ?
பசித்தோர் முகத்தைப் பாராதிருந்தேனோ?
இரப்போர்க்கு பிச்சை இல்லை என்றேனோ?

கோள் சொல்லி குடும்பம் கலைத்தேனோ?
நம்பியோரை நட்டாற்றில் நழுவ விட்டேனோ?
கலங்கி ஒளிந்தோரை காட்டி கொடுத்தேனோ?
கற்பிழந்தவளை கலந்திருந்தேனோ?

காவல் கொண்டிருந்த கன்னியரை அழித்தேனோ?
கணவன் வழி நிற்போரை கற்பழித்தேனோ?
கருப்பம் அழித்து களித்திருந்தேனோ?
குருவை வணங்க கூசி நின்றேனோ?

குருவின் காணிக்கை கொடுக்க மறந்தேனோ?
கற்றவர் தம்மை கடுகடுத்தேனோ?
பெரியோர் பாட்டில் பிழை சொன்னேனோ?
பட்சியை கூண்டில் பதைக்க அடித்தேனோ?

கன்றுக்கு பாலூட்டாது காட்டி வைத்தேனோ?
ஊண் சுவை உண்டு உடல் வளர்த்தேனோ?
கல்லும், நெல்லும் கலந்து விற்றேனோ?
அன்புடையோர்க்கு துன்பம் செய்தேனோ?

குடிக்கின்ற நீருள்ள குளம் தூர்த்தேனோ?
வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழித்ததேனோ?
பகை கொண்டு அயலார் பயிரழித்தேனோ?
பொது மண்டபத்தை போய் இடித்தேனோ?

ஆலயக் கதவை அடைத்து வைத்தேனோ?
சிவனடியாரை சீற வைத்தேனோ?
தவம் செய்தோரை தாழ்வு சொன்னேனோ?
சுத்த ஞானிகளை தூஷணம் செய்தேனோ?
தெய்வம் இகழ்ந்து செருக்கு அடைந்தேனோ?

என்ன பாவம் செய்தேனோ? இன்னது என்று அறியேன்.
என் இறைவா...
உய்யும் வழியும் உண்டோ - உணர்த்திடுவாய்
உலகெலாம் காத்திடும் உமையொரு பாகா!
தாயும், தந்தையும் நீ ஆவாய்
தனயன் என்னை மன்னித்தருள் செய்வாய்...

"ஆம்" என்று உங்கள் உள் மனம் கூறினால், இனியாவது அவற்றை தவிர்த்திடலாமே! எஞ்சிய நாட்களில் உத்தமனாக வாழ்ந்து, கருணைக்கடலாம் இறைவனின் மன்னிப்பை பெற்று நல் வாழ்வை அடைந்திடலாம்.

நீ

புதன், 9 ஆகஸ்ட், 2017

உணவு தான் மரணத்திற்கு காரணம்!


உணவு தான் மரணத்திற்கு காரணம்!

நாம் பிறந்த நாள் தொடங்கி திரவ உணவு முதல் திட உணவு வரை.தினமும் ஏதோ ஒருவகை உணவை உட் கொள்கிறோம். மரணம் அடையும் வரை உணவை உட் கொண்டே வருகிறோம்

இதில் சாத்வீக உணவு.தாமஸ உணவு என்று இரண்டு வகையான உணவு உட் கொண்டு வருகிறோம்

தாவர உணவு வகைகள் ஒன்று.புலால் என்னும் மாமிச உணவு ஒரு வகை.இந்த இரண்டில் உடல் நலத்திற்கு சிறந்த்து தாவர உணவு வகைகள்.

உடல் நலத்திற்கு கெடுதல் செய்வதும்.அறிவு வளர்ச்சி குறைவதற்கும் காரண காரியமாக இருப்பது மாமிச உணவாகும்.

ஆனாலும் எந்த உணவு உட்கொண்டாலும் மரணம் என்பது நிச்சயம்.

உணவு உட் கொள்ளுகின்ற வரை இறைவன் அருளைப் பெற முடியாது.மரணத்தை வெல்லவும் முடியாது.

உணவு கொண்டால் விந்து என்னும் சுக்கிலம் உற்பத்தி யாகிக் கொண்டே இருக்கும்.சுக்கிலம் என்னும் பூதவிந்து உற்பத்தியானால் எக்காலத்திலும் மரணத்தை வெல்லவே முடியாது.

விந்துவை அடக்கினாலும் தவத்தால்.தியானத்தால்.யோகத்தால்.குண்டலினி சக்தியை மேலே ஏற்றினாலும் எந்த பயனும் கிடைக்காது.

வள்ளலார் சொல்லுவார் ....

சோற்றாசை யோடு காம சேற்றாசைப் படுவோரை துணிந்து கொள்ள கூற்று ஆசைப்படும் என்கிறார்.எமன் என்னும் கூற்றுவன் ஆசையோடு அழைத்து செல்வானாம்...அதாவது மரணம் தானேவந்து விடும்.

சுத்த சன்மார்க்கிகள் உணவை மாற்ற வேண்டும்!

நாம் உண்ணும் உணவு புழுக்கின்ற உணவு என்று பெயர். துற் நாற்றம் உள்ள மலம் வரும் உணவு.அதை நிறுத்தி புழுக்காத. உணவை உட் கொள்ளப் பழகிக்கொள்ள  வேண்டும் .

அதாவது.சர்க்கரை.கற்கண்டு.தேன்.அயன்நெந்தூரம்.தாமரை பஸ்பம்.போன்ற பொருள்களை உட் கொண்டு உடம்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.

அப்படி உணவை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும். அதன் பிறகு ஆன்மா.ஜீவன் உடம்பு புழுக்கின்ற உணவை விரும்பாது. சுத்த உடம்பாக மாறும்.உண்மை அறிவு.உண்மை இரக்கம்.உண்மை அன்பு.தானாகவே உண்டாகும்.

மண்ணாசை.பெண்ணாசை.பொன்ஆசைகள் தானே நின்று விடும்.பூத புழுக்கின்ற உணவினால்  தான் எல்லா ஆசைகளும்.துன்பங்களும் துயரங்களும் அச்சமும்.பயமும்.இறுதியில் மரணமும் வந்து விடுகின்றது.

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற் தவம் எல்லாம்சுருங்கி ஆற்றிலே கரைத்த புளி எனப் போகும் என்கின்றார் வள்ளலார்.

மேலும் அகவலில்

உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே !

எதை உட் கொள்ள வேண்டுமோ அதை உட் கொள்ள வைத்து என்னை நல்ல பண்போடு வளர்த்து  நல்ல உண்மையான வழிகாட்டி உயர்ந்த இடத்தில் வைத்துள்ள ஒப்பற்ற பரம சற்குருவே என்கிறார் வள்ளலார்.

வள்ளலாருக்கு உயர்ந்த குருவாக இருந்து வழி காட்டியவர்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும்.

நாமும் உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே உண்மை ரகசியங்கள் யாவும் விளங்கிக் கொண்டே இருக்கும்.

ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளவும்.அருளைப் பெறவும் தடையாக இருப்பது புழுக்கின்ற பூத உணவு பழக்கமாகும்.அவற்றை மாற்றி புழுக்காத உணவை உட் கொண்டு.சுத்த தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வழங்குவார்.

எனவே உணவே மரணத்திற்கு காரண காரியமாக இருக்கிறது என்பதை அறிந்து தெரிந்து புரிந்து  வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

 • ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
 • என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
 • காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
 • கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
 • ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
 • ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
 • ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
 • அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பந்து !

 • மேலும் விரிக்கில் பெருகும்.....

 • அன்புடன். ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
 • 9865939896..... • தொடரும்
  ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

  அன்பு எங்கே உள்ளது ?

  அன்பு எங்கே உள்ளது ?

  நாம் அன்பிற்காக தினமும் ஏங்கிக் கொண்டு உள்ளோம்.

  உண்மையான அன்பை பெற முடியாமல் தவிக்கிறோம்.

  அப்படியே அன்பு கிடைத்தாலும் அவை நிலைப்பதில்லை.

  நிரந்தரமான அன்பு.உண்மையான அனபு எங்கு தேடினாலும் கிடைப்பதில்லை.

  நம்முடைய தாய் தந்தையின் காம இச்சையினால் சுய உணர்ச்சியினால் சுய நல இன்பத்தினால் தோன்றிய அன்பினால் உடல் உறவு கொண்டு.ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

  அந்த இன்பத்தின் காம ஊற்றால் உண்டாகும் விந்து சக்தியால்  இரண்டு பேருடைய விந்து சக்தியும்  ஒன்று சேர்ந்து. உயிரும் உடம்பும்  பெற்று  இந்த உலகில் பிறந்து வாழ்கிறோம்.

  பெற்று எடுத்த கடமைக்காக்  தாய் தந்தையர்கள்  வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து பணத்திற்காக வேலை வாங்கிக் கொடுத்து.வயது வந்த உடனே அவர்களுக்கு துணை வேண்டும் என்பதற்காகவும் காமத்தை தீர்த்துக் கொள்வதற்கும். பெண்ணுக்கு ஆணும்..ஆணுக்கு பெண்ணும் பார்த்து   திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.அத்துடன் அவரகளின் அன்பும் கடமையும் தீர்ந்து விடுகின்றது.

  இது தொடர் கதையாக ஆணும் பெண்ணும் செய்து கொண்டே வருகிறார்கள்.

  எனவே தாய் தந்தையர்கள் அன்பும் நிலை இல்லாமல் போய்விடுகின்றது.

  அதே போல் தான் உலகில் உள்ள உற்றவர்கள்.பெற்றவர்கள். நண்பர்கள்.உறவினர்கள் .மற்றவர்கள்.கல்வி போதிக்கும் குருமார்கள்.ஆன்மீக வழிகாட்டும் குருமார்கள் மற்றும் உலகில் உள்ள எல்லோருக்குமே உண்மையான நிரந்தரமான அன்பை  செலுத்தவோ.காட்டவோ முடியாது.இதுதான் உண்மை.

  உண்மையான அன்பைக் காட்டும் ஒரே ஒருவர்..ஆன்மாவின் உண்மைத் தந்தை யாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரே !

  அவர் ஒருவர் மட்டுமே அனத்து ஆன்மாக்கள் இடத்தும் உயிர்கள் இடத்தும் உண்மையான .நிரந்தரமான அன்பைக் காட்டுபவர்.செலுத்துபவராகும்.

  அதனால் தான் தனிப் பெரும் தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவரே என்றும்

  தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்றும்.வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் என்று வள்ளலார் போற்றி புகழ்கின்றார்.வாழ்த்துகின்றார்.மற்றவர்களும் அறிந்து.தெரிந்து கொள்வதறகு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்  சொல்லுகின்றார்.

  அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் மட்டுமே நாம் தொடர்பு கொள்ள வேண்டும்.

  நமக்கு உண்மையான அன்பை செலுத்தும் கடவுளைப்பற்றி பதிவு செய்துள்ள பாடல் .....


  புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
  புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
  உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
  உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
  மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
  மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
  தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
  சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே. !

  மேலே கண்ட பாடல் வள்ளலார் சித்தி பெருவதற்கு முன் மக்களுக்குத் தெளிவாக தெரியப் படுத்துகின்றார்.

  எனவே உண்மையான அன்பை பெருவதற்கும்.அருளைப் பெருவதற்கும் .மரணத்தை வெல்லுவதற்கும் ஒரே கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும்..

  வேறு எந்த தெய்வங்கள் இடத்தும் தொடர்பு கொள்ள வேண்டாம்.அவர்களுக்கு உண்மையான அன்பும் அறிவும் அருளும் வழங்கும் தகுதி கிடையாது...

  மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்...

  அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசேஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதேஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவேஅன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.!

  என்ற பாடல் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார். எல்லா அணுக்களிலும் நீக்கமற நிறைந்து இயங்கிக் கொண்டு உள்ள அருட்பெரும்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அழிவில்லாத நிரந்தரமான அன்பையும் அறிவையும் அருளையும் பெற்று

  பேரின்ப பெருவாழ்வில் வாழ்ந்து மரணத்தை வென்று மகிழ்ச்சியுன் வாழ்வாங்கு வாழ்வோம்....

  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

  கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

  அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
  9865939896..../

  புதன், 2 ஆகஸ்ட், 2017

  சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது !

  சாதியை விடாமல் ஜோதியைக் காண முடியாது !

  அன்புள்ள ஆன்ம நேய உடன் பிறப்புக்களுக்கு வந்தனம்

  நாம் எவ்வளவு தான்  ஜீவகாருண்யம் செய்தாலும்.தியானம்.தவம்.யோகம். குண்டலினிபயிற்ச்சி.மூச்சு பயிற்சி. வழிபாடு போன்ற எந்த பயிற்சி செய்தாலும்  காண முடியாது.அருளைப் பெற முடியாது.

  நம் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான முதல் திரை ...சமய மதங்களால் கொண்டு வந்த சாதி என்னும் திரைகள்தான்..அது நீங்கினால் மற்ற திரைகள் அதி விரைவில் நீங்கி விடும் என்கிறார் வள்ளலார்.

  சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்சாத்திரக் குப்பையும் தணந்தேன்நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்நித்திய வாழ்க்கையும் சுகமும்ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாஅருட்பெருஞ் சோதிஎன்
   அனைத்தும் நீஅறிந் ததுநான்உரைப்பதென் அடிக்கடி உனக்கே.!

  சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளேஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும்நிறை ஒளியேஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவேசோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.!

  சாதியைநீள் சமயத்தை மதத்தைஎலாம்விடுவித்தென் தன்னை ஞானநீதியிலே சுத்தசிவ சன்மார்க்கநிலைதனிலே நிறுத்தி னானைப்பாதியைஒன் றானவனைப் பரம்பரனைப்பராபரனைப் பதிஅ னாதிஆதியைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோதியைப்பெற்றேன் அச்சோ அச்சோ.!

  சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!

  சாதிமதந் தவிர்த்தவரே அணையவா ரீர்தனித்தலைமைப் பெரும்பதியீர் அணையவா ரீர்ஆதியந்தம் இல்லவரே அணையவா ரீர்ஆரணங்கள் போற்றநின்றீர் அணையவா ரீர்ஓதியுணர் வரியவரே அணையவா ரீர்உள்ளபடி உரைத்தவரே அணையவா ரீர்ஈதிசைந்த தருணமிங்கே அணையவா ரீர்என்னுடைய நாயகரே அணையவா ரீர். அணையவா ரீர்!

  சாதி சமயச் சழக்கெலாம் அற்றதுசன்மார்க்க ஞான சபைநிலை பெற்றதுமேதியிற் சாகாத வித்தையைக் கற்றதுமெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது அற்புதம் !


  சாதி சமயச் சழக்கைவிட் டேன்அருட்சோதியைக் கண்டேன டி - அக்கச்சிசோதியைக் கண்டேன டி.!

  சாதிசம யங்களிலே வீதிபல வகுத்தசாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவேஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியேஅன்பால்இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம் பதியைச்சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!

  சாதியு மதமுஞ் சமயமும் பொய்யெனஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி !

  சாதியு மதமுஞ் சமயமுங் காணாஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!

  இப்படி பல ஆயிரம் பாடல்களை பதிவு செய்து வள்ளலார்....

  நாம் எவ்வளவு தான் சுத்த சன்மார்க்கம் பேசினாலும் சமய மதங்களால் விதிக்கப்பட்ட சாதி என்னும் கொடிய நோய் நம்மை விட்டு அகலவில்லை.அந்த கொடுமையான நோயை அகற்றினால் தான் நாம் உண்மையான அருட்பெரும்ஜோதியை காண முடியும்...

  ஆன்மாவைக் கண்களால் கண்டால் தான் இறைவன் அருளைப் பெற முடியும். அருளைப் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்...மரணத்தை வென்றால் தான் பேரின்ப லாபத்தைப் பெறமுடியும்.

  எனவே முதல் திரையாகிய கருமையில் பச்சைவண்ணமாகிய திரைதான் சாதி என்னும் அழுத்தமான திரையாகும் .அதை முதலில் நீக்கி விட்டால் மற்ற திரைகள் அதி விரைவில் நீங்கிவிடும்.

  அருள் வேண்டுமானால் சாதி என்னும் பற்றை முதலில் பற்று அற விட வேண்டும்...

  விட்டு பாருங்கள் அதன் லாபத்தை உண்மையாக காண்பீர்கள்..

  எனக்கு நாற்பது ஆண்டுகளாக சாதி.சமயம்.மதம் என்ற பற்று அறவே கிடையாது என்பதை மகிழ்ச்சி யுடன் தெரிவித்துக் கொள்கிறேன்....

  நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போன்ற பெரிய லாபத்தை பெறுவீர்கள்.பெற்றுக் கொள்வீர்கள்..இது சத்தியம்...

  அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
  9865939896....