வியாழன், 20 செப்டம்பர், 2012

சன்மார்க்க சான்றோர்களுக்கு அன்பான வேண்டுகோள் !

அருட்பெருஞ்ஜோதி !   அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !அருட்பெருஞ்ஜோதி !            

                                   கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
                                   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

 சன்மார்க்க சான்றோர்களுக்கு அன்பான வேண்டுகோள் !


உலக மெலாம் போற்ற வொளி வடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே---திலகனென
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் எம்பெருமான்
தானே யெனக்குத் தனித்து !-----வள்ளலார் /

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய சன்மார்க்க சான்றோர்களாகிய  பெருமக்களுக்கும் ,பொது மக்களுக்கும் வந்தனத்துடன் தெரியப்படுத்தும் விண்ணப்பம் .

அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்ற, வள்ளல் பெருமான் அவர்கள்,உண்மைக் கடவுளாகிய ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர்தான்'' --எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும் ,எல்லா உயிர்களையும் தோற்றுவித்தும் ,--இயக்குவித்தும் ,--அடக்குவித்தும்-- ,மயக்குவித்தும்,--தெளிவித்தலும் --ஆகிய தொழில்களை செய்கின்றார் என்ற உண்மையைத் தெரியப்படுத்தி உள்ளார் .

அந்த அருள் உண்மையை அறிந்து,தெரிந்து கொள்ள் வேண்டுமானால்,தயவு என்னும் கருணையினால் தான் தெரிந்து கொள்ள முடியுமே தவிர, வேறு எந்த வழியாலும் அறிந்து கொள்ள முடியாது என்பது --வள்ளல்பெருமான் கண்டுபிடித்த உண்மை வழியாகும் .அருள் என்னும் கோட்டையின் பூட்டைத் திறக்க அருள் என்னும் சாவி வேண்டும் --அந்த அருளைப் பெறுவதற்கு ஜீவகாருணயம் என்னும் உயிர் இரக்கம் வேண்டும்.என்பதை இறைவன் வள்ளலாருக்கு உணர்த்தியதாக வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் .

என்பாட்டுக்கு எண்ணாததை எண்ணி இசைத்தேன் என்
தன் பாட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான் ---முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான் .!

ஜீவகாருண்யம் என்னும் திறவு கோளைக் கொண்டுதான் கோட்டையின் பூட்டைத் திறந்து உள்ளே செல்லமுடியும் ,என்பதை அறிந்த வள்ளல் பெருமான,அவசர அவசரமாக வடலூரில் தருமச்சாலை அமைக்க துவங்குகிறார் .

23--5--1867,ஆம் ஆண்டு வடலூரில்--சத்திய தருமச்சாலைக் கட்டுவதற்கு வடலூர் மக்களால்,-- இனாமாகக் கொடுத்த இடத்தில் ''சத்திய தருமச்சாலை''தொடங்கி வைத்து,--ஜீவ காருண்ய பணியைத் தொடங்கி வைக்கிறார்,அன்று முதல், இன்றுவரை ஏழைகளின் பசிப்பிணியை போக்கிச் சிறப்பாக நடந்து கொண்டு வருகிறது .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் !

இறை உண்மையை கண்டு கொள்ளவும் ,அதை மக்களிடம் கொண்டு செல்லவும் ஒரு மார்க்கம் {வழி }வேண்டும் என்பதால் --வள்ளல் பெருமானால் துவங்கி வைக்கப்பட்ட மார்க்கம் தான் ---வடலூர் தருமச்சாலையில் இயங்கிவரும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மார்க்கமாகும்.''

வள்ளல்பெருமான் + தம் சுத்த சன்மார்க்க கொள்கைகளை,உலக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதால் --முடிந்த முடிவாக --1872,ஆம் ஆண்டில்
''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற பெயர் வைத்து --இயங்குவதற்கு உண்டான சட்டதிட்டங்களை வகுத்து வைத்துள்ளார் .

அவர் ஏற்ப்படுத்திய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ,---வள்ளலார் தெய்வ நிலையங்கள் நிர்வாகத்தின் கண்காணிப்பில் நடந்து வந்து கொண்டு இருக்கிறது ..அதை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை ஆட்சியின் கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டு வருகிறது .அதுவே வள்ளல் பெருமான் உருவாக்கிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தலைமைச் சங்கமாகும்''

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் ''தலைமைச்சங்கத்தின் ''மேற்பார்வையில் தான் செயல்பட்டுக் கொண்டு வருகிறது என்பதை சன்மார்க்க சான்றோர்களும் ,பொது மக்களும் அறிந்து கொள்ள வேண்டும் என்பதை இதன் மூலம் தெரியப்படுத்திக் கொள்கிறேன் .

தயவு உடையவர்கள் எல்லாரும் ,''தருமச்சாலையில் செயல்படும்  தலைமைச்சங்கத்தில்'' உறுப்பினர்களாகி,ஜீவகாருண்யம் செய்து,அதாவது பசித்த ஏழைகளின் பசிப்பிணியை போக்கி,-- அதனால் வரும் ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள்.என்பதை வள்ளல் பெருமான்,திருஅருட்பாவில் பதிவு செய்து, தெளிவுபடுத்தி உள்ளார்கள் .

வடலூரில் உள்ள ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை,--சங்கம --சபை--சித்திவளாகம் அனைத்தும் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் ஆணைப்படி'' ,வள்ளல்பெருமான் அமைத்துள்ளார் என்பதை அனைவரும்  கருத்தில் கொள்ள வேண்டும் .அதற்கு விரோதமாக எவரும் செயல்பட வேண்டாம் என்பதை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் .

 வடலூரில் பல அமைப்புகள் பல சங்கங்கள் வேண்டாம் !

வள்ளல் பெருமான் அவர்கள் ''நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்கிறார் .அதன் பொருள் என்ன ?சன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி யாருக்கும் இல்லை என்பதாகும்.,நாம் செய்யவேண்டியது என்ன ? வள்ளல்பெருமான் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைபிடித்து அதன்படி வாழ்ந்து ,,அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதுதான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம் விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !என்பது வள்ளலார் வாக்காகும் .

அதை விடுத்து வடலூரில் சிலபல சன்மார்க்க அன்பர்கள் ,--தலைமைச்சங்கம் ,----மத்திய சங்கம்,--அகில உலக சன்மார்க்க சங்கம் ,உலக மையம் --சன்மார்க்க சங்கங்களின் கூட்டமைப்பு ,போன்ற அமைப்புகளை உருவாக்கிக் மக்களை குழப்பிக் கொண்டு இருக்கின்றனர் . இவை வள்ளலார் கொள்கைகளுக்கு நேர் விரோதமாகும் . வள்ளலார் அவர்களால் அமைக்கப்பட்ட ''தலைமைச்சங்கம்'' என்பது வள்ளலார் தெய்வநிலையங்களை பாதுகாத்து வரும் தருமச்சாலையில் இயங்கிக் கொண்டு வருகிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

ஆதலால் தலைமைச்சங்கம் என்று பெயர் வைத்து,தனியாகச் செயல்படும் எந்த சங்கமும் வடலூரில் செயல்பட வேண்டாம் என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறேன் .அப்படி செயல்படும் சங்கத்தில் யாரும் ,--உறுப்பினர்கள் ஆக வேண்டாம் என்பதை அன்புடன் தெரியப்படுத்திக் கொள்கிறேன்.---அவர்களை நம்பி ஏமாந்து சிரமப்படவேண்டாம்.நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வீண் விரையும் செய்ய வேண்டாம் ..பட்டம், பதவி,புகழ் போன்ற அற்ப ஆசைகளுக்ககாக இப்படி பல அன்பர்கள் செயல்பட்டுக் கொண்டு உள்ளார்கள் .--யார் எதை சொன்னாலும் எதையும் நம்ப வேண்டாம் .

எதையும் பொருட்படுத்தாமல் தலைமைச்சங்கம் அமைக்கும் பொறுப்பாளர்களை,வள்ளலார் தெய்வநிலைய நிர்வாகிகள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் .வடலூர் பொது மக்களும் ஆட்ஷேபனை செய்யலாம் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒவ்வொருவரும்--வள்ளலார் தோற்றுவித்த --தருமச்சாலையில் இயங்கிவரும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தலைமைச் சங்கத்தில்,'' உறுப்பினராகி ஆன்ம லாபத்தை அடைய வேண்டுகிறேன் .தருமச்சாலையில் உள்ள நிர்வாகிகள்.ஊழியர்கள் ,ஏதாவது தவறு செய்தால் .உறுப்பினர்களாகிய உங்களுக்கு தட்டிக் கேட்கும் உரிமை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் .

தற்போது வடலூர் வள்ளலார் தெய்வநிலைய வளர்ச்சி பணிகள் சிறப்பாக நடைப்பெற்றுக் கொண்டு வருகிறது.மேலும் சிறப்புடன் செயல்பட ,சன்மார்க்க தயவுடையவர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும்.

சன்மார்க்க அன்பர்கள் --அவரவர்கள் ஊர்களில் ,மாவட்டங்களில்,சன்மார்க்க சங்கம் அமைத்து ஜீவ காருண்ய பணியை செய்யுங்கள்,ஜீவ காருண்ய ஒழுக்கத்தை மக்களுக்கு தெரியப் படுத்துங்கள்,உயிர்க்கொலை செய்வதும்  ,புலால் உண்பதும்,கடவுளுக்கு ஏற்புடையது அல்ல ,--அவை அறியாமை என்பதை மக்களுக்குத் உணர்த்துங்கள் .அதுவே சிறந்த பணியாகும்.அதுவும் வள்ளலார் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்படக்கூடாது.என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும் .

அயலார் நிதி ஒன்றும் நயவாத மனம் வேண்டும் என்கிறார் ---ஈ என்று நான் ஒருவரிடம் நின்று கேளாத இயல்பும் ---என்னிடம் ஒருவர் ஈ திடு என்றபோது அவர்க்கு இல்லை என்று சொல்லாமல் இடுகின்ற திறமும் வேண்டும் என்கிறார் ---மேலும் ஒருமையுடன் நினது மலரடி நினைக்கின்ற உத்தமர் தம் உறவு வேண்டும் என்கிறார் .உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் --பெருமை புகழ் நினது புகழ் பேச வேண்டும் பொய்மை பேசாதிருக்க வேண்டும் என்கிறார் --நமது அருட்தந்தை வள்ளல்பெருமானார் !

இவற்றை எல்லாம் உணர்ந்து தனிப்பட்ட எந்த தலைமைச் சங்கத்திலும் சேரவேண்டாம் .அவர்களுக்கு எந்த உதவிகளையும் செய்யவேண்டாம் .அப்படியும் உங்கள் விருப்பம்போல் செய்தால், அதனால் எவருக்கும் எந்த  நல்ல பயனும் தராமல் வேதனைப்பட வேண்டியதாக இருக்கும் .

இதனை என்னுடைய அனுபவத்தால் தெரியப் படுத்துகிறேன் .முப்பத்தைந்து ஆண்டுகால சன்மார்க்க அனுபவத்தில் நான் பல் பொறுப்புகளை ஏற்று அதனால் ஏற்பட்ட துன்பங்களும் துயரங்களும் அளவிடமுடியாது .இப்போது எந்த பொறுப்புகளிலும் எந்த பதவியும் இல்லாமல் மன நிறைவோடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் திருவடியைப் பற்றிக் கொண்டு மக்களுக்கு சுத்த சன்மார்க்க போதனைகளை போதித்திக் கொண்டு வருகிறேன்.

சாகாதவனே சன்மார்க்கி என்கிறார் நமது வள்ளல் பெருமானார் ! சாகாதவன் யாரோ அவர் வந்து சன்மார்க்க சங்கத்தை நடத்தட்டும் ,அவர் காலில் விழுந்து வணங்கி ஏற்றுக் கொள்ளலாம் .சனாமார்க்க கொள்கைகளை முழுதும் பின் பற்றாமல்,தடிஎடுத்தவர் எல்லாம் தண்டக்காரன் என்றால் எப்படி ஏற்றுக் கொள்வது சிந்தியுங்கள் .சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல்,இரண்டு மூன்று அருட்பா பாடல்கள் தெரிந்து கொண்டால் மேடை ஏறி வாய்க்கு வந்தபடி சன்மார்க்கம் பேசுகிறார்கள்.உடனே தலைவனாகி விடுகிறார்கள்.இவை என்ன சிறுபிள்ளை விளையாட்டுத்தனம் சுத்த சன்மார்க்கம் என்ன கேலிக் கூத்தா ? சிந்திக்க வேண்டும் .

சுத்த சன்மார்க்கம் என்பது ஞான மார்க்கம் .அருள் மார்க்கம் .--சாகாக்கலையை போதிக்கும் மார்க்கம் --.மற்ற மார்க்கங்கள் போல் இதுவல்ல !--புனிதமுறும் சுத்த சன்மார்க்கம் --.சன்மார்க்கத்தைப் பற்றி பேசுகிறவர்கள் எப்படி இருக்க வேண்டும்,அன்பு,தயவு,கருணை நிறைந்து ஒருமையுடன் இருக்க வேண்டும்.

பெருமைக்காக சொல்லவில்லை,--தயவுடன் சொல்கிறேன் தமிழ்நாடு ,ஆந்திரா மைசூர்,போன்ற மாநிலங்களில் உள்ள மக்கள்,--வெளிநாடுகளில் உள்ள ஆன்மநேய சகோதரர்கள் என்னுடைய சொற்ப் பொழிவைக் கேட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிர்க்கொலை செய்யாமலும் ,புலால் உண்ணாமலும்,புனிதமுறு சுத்த சன்மார்க்க தனிநெறியான பொது நெறியைக் கடைபிடித்து .மகிழ்ச்சியுடம் வாழ்ந்து வருகிறார்கள் .இறைவன் எனக்கு இட்ட கட்டளையை,எந்த பயனும் எதிர்ப் பார்க்காமல் முறையாக செய்து வருகிறேன்.எனக்கு எந்த பட்டமும் ,பதவியும் ,புகழும் வேண்டாம் .என்கடன் பணிசெய்து கிடப்பதே என்பதைக் கடைபிடித்து வருகிறேன் .

சன்மார்க்கம் என்ற பெயரில் பல சன்மார்க்க அன்பர்கள் செய்யும் காரியங்களை நினைக்கும்போது மனம் வேதனை அடைகிறது .அவர்களை அடையாளம் கண்டு கொண்டு மக்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைக் கொண்டு, இந்த விண்ணப்பத்தை, உங்கள் முன் வைக்கிறேன் .

நாம் அனைவரும் இறைவனுடைய குழந்தைகள்-- நமது
அருட்பெருஞ்ஜோதி தந்தையிடம் இருந்து,-- திருஅருளைப் பெறுவதற்கு
சாதி,--சமயம்,--மதம் --மொழி,--இனம்--நாடு, என்ற பேதமில்லாமல், பொது நோக்கம் கொண்டு ,உங்களால் முடிந்த அளவு , உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்ய பணியும்,''கடவுள் ஒருவரே'' என்னும் உண்மையான ஒளி வழிபாடும்,{சத்விசாரம் } செய்து கொண்டு வாருங்கள் .கடவுள் உங்களுக்கு எந்த தடையும் இல்லாமல் கருணைக் காட்டுவார் .இதுவே உண்மையாகும்.

''கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்பதை அனைத்து உலக மக்களும் அறிந்து கொள்ளும் பொருட்டு ,வடலூரில் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' வள்ளல்பெருமான் தோற்றுவித்து உள்ளார் .அங்கே உண்மைக் கடவுள்''ஒளி விளக்க பாவனையாக'' இயங்கிக் கொண்டு உள்ளார் ,ஆதலின் வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்கள் ஆனால் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்டைவதும் மன்றி , நரை,--திரை,--பிணி --மூப்பு,--பயம் --மரணம் --இன்றி பேரின்ப பெருவாழ்வில் வாழலாம்.

மேலும் உங்களுக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் !
நம்முடைய தலைமைச் சங்கம்,-- வடலூரில் வள்ளலார் தெய்வ நிலையங்களை பாதுகாத்து வரும் ---தமிழக அரசின் அறநிலையத் துறையின் ஆட்சியின் கீழ் செயல்படும் ---தருமச்சாலையில் உள்ள சங்கம் தான்-- தலைமைச் சங்கமாகும்,--அனைவரும் நினைவில் கொள்ளுங்கள் .யாரை நம்பியும் ஏமாந்து விடாதீர்கள் .கவனமுடன் இருங்கள்.அருட்பெருஞ் சோதி ஆண்டவரைத் தவிர வேறு யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாது .இது உண்மை உண்மை ,சத்தியம் சத்தியம், .

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் ---வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு
என்மார்க்கமும் ஒன்றாமே !

ஆன்மநேயன்;--

செ,கதிர்வேலு
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
108,c,நந்தா இல்லம் ,வள்ளலார் வீதி ,
வய்யாபுரி நகர்
46,--புதூர் அஞ்சல் {பச்சப்பாளி வயா }
ஈரோடு ,638002,
phone--9865939896,---0424,2401402,

              

திங்கள், 17 செப்டம்பர், 2012

அறிவு எங்கே இருக்கிறது !


அறிவு எங்கே இருக்கிறது !

அறிவு என்பது நமது ஆன்மாவில் உள்ளது !அவைதான் உண்மையான அறிவாகும், நமது உடம்பில் நான்கு அறிவு உள்ளது ....அதில் பொய்யான அறிவு என்றும் ....உண்மையான அறிவும் இரண்டு கூறுகளாக உள்ளது .

இந்திரிய அறிவு --கரண அறிவு ,--ஜீவ அறிவு ,--ஆன்ம அறிவு .என நான்கு அறிவும், நான்கு விதமான வேலை செய்கின்றன.

இதில் இந்திரியங்கள் என்னும் கண் --காது --மூக்கு--வாய் --உடம்பு ,இவைகளால் அறிவது இந்திரிய அறிவு என்பதாகும் . ,

கரணங்கள் என்னும், மனம்--புத்தி--சித்தம் --அகங்காரம் ,இவைகளால் அறிவது கரண அறிவு என்பதாகும் ,

ஜீவன் என்னும் உயிரால் அறிவது ஜீவ அறிவு என்பதாகும்.

 ஆன்மா என்னும் உள் ஒளியால் அறிவது ஆன்ம அறிவு என்பதாகும்.

இதில் எது உண்மையான அறிவு ? எது பொய்யான அறிவு ? என்பதைப் பார்ப்போம் .

இந்திரியங்களாலும்,கரணங்களாலும் அறிவது பொய்யான தோற்றங்களாகும்.பொய்யான தோற்றங்களை அறிவதால் ..அதற்கு பொய் அறிவு என்பதாகும் .

ஜீவனும்... ஆன்மாவும் அறிவது உண்மையான தோற்றங்களாகும்.ஆதலால் அவற்றிக்கு உண்மையை அறியும் அறிவு என்பதாகும் .

உயிராலும்,... ஆன்மாவாலும் ..அறிவதுதான் உண்மையான அறிவாகும் .இதை அறிந்தவர்கள் சுத்த ஞானிகள் ....ஆதலால்தான் சுத்த ஞானிகள் பின் செல்கிறோம்.

நம்முடைய தலைப் பாகத்தில் மூலையின் மத்தியில்..கண்களுக்கு தெரியாமல், வட்டம் போன்று... ஒரு சக்கரம் சுற்றிக் கொண்டு உள்ளது ...அதன் உள்ளே நான்கு பாகமாக நான்கு வட்டங்கள் சுற்றிக் கொண்டு உள்ளன.

அவை.. அகம் ...அகப்புறம் என்றும் ...புறம் ..புறப்புறம் என்றும் நான்கு வட்டங்களுக்கும் நான்கு பெயர் உள்ளன .

இந்திரியங்கள் என்னும் ,கண்..காது...மூக்கு...வாய் ...மெய் (உடம்பு )என்னும் புற உறுப்புகளால் அறிந்து உணர்ந்து அனுபவிப்பது எல்லாம் ,புறப்புறம் என்னும் வட்டத்திற்குள் பதிவாகிக் கொண்டு இருக்கும்...

கரணங்கள் என்னும் ..மனம்...புத்தி ...சித்தம் ...அகங்காரம் என்னும் கருவிகளால் அறிந்து ,உணர்ந்து ,தெரிந்து அனுபவிப்பது எல்லாம் ...புறம் ..என்னும் வட்டத்தில் பதிவாகிக் கொண்டு இருக்கும் .

ஜீவன் என்னும் உயிரால்,அறிந்து ,உணர்ந்து ,தெரிந்து,தெளிந்து அனுபவிப்பது எல்லாம்,..அகப்புறம் ...என்னும் வட்டத்திற்குள் பதிவாகிக் கொண்டே இருக்கும் .

ஆன்மா என்னும் ...உள் ஒளியால் ...அறிந்து ,உணர்ந்து,தெரிந்து ,தெளிந்து ..மெய் அறிவால்..மெய் அருளால் ..அனுபவிக்கின்ற உண்மைகள் யாவும்,--அகம் ..என்னும் உள் வட்டத்தில் பதிவாகிக் கொண்டே இருக்கும் .

உண்மை அறிவு !பொய் அறிவு !

இந்திரியங்களாலும் ,..கரணங்களாலும் ,உலக போகங்களை அனுபவிப்பது ...பொய்யான அனுபவங்களாகும் ,அந்த அனுபவங்களால் தோன்றும் அறிவு ,பொய்யான அறிவாகும் .

ஜீவனாலும் ...ஆன்மா என்னும் உள் ஒளியாலும் ..இறைவன் என்னும் கடவுள் அருளைப் பெற்று அனுபவித்து வாழ்வதாகும ...அதனால் அறியும் அறிவு உண்மை அறிவாகும் .

அதற்கு மேல் உண்டாகும் அறிவு ..அருள் அறிவாகும் அதுவே கடவுள் அறிவாகும் .அதுவே பேருண்மை அறிவாகும் .

அறிவை வெளியே எங்கும் தேட வேண்டியதில்லை .அவை நம்முடைய உடம்பிலே உள்ளன் .நம்முடைய தலைப் பாகத்தில் ..உச்சிக்கும் கீழே ..உள் நாக்கிற்கு மேலே மூளையின் மத்தியில் ஆன்மா என்னும் உள் ஒளி உள்ளது .அங்கு தான் உண்மையான அறிவை வெளிப்படுத்தும் ஆற்றல் உள்ளது .அதை இடைவிடாது தொடர்பு கொண்டால் உண்மையான அறிவு வெளிப்படும் .நம்முடைய உடம்பை இயக்கம் ஆற்றல் {சக்தி }அங்குதான் உள்ளது .

இந்திரியம் --கரணம்-- ,ஜீவன்-- ,ஆன்மா என்னும் ஒளியின் தொடர்பினால்தான் நம்முடைய உடம்பு இயங்கிக் கொண்டு உள்ளது இந்திரியங்களையும் ..கரணங்களையும் .வெளியே செல்ல வொட்டாமல் கட்டுபடுத்தி ...ஜீவ உணர்வால், ஆன்மாவின் தொடபு கொண்டால் உண்மை அறிவு இருக்கும் இடமும் ,இயங்கும் இடமும் தெரிந்து கொள்ளலாம் .

இந்திரிய அறிவுக்கும் ..மன அறிவுக்கும் ... ஆன்மா கட்டுப்பட்டால்,தவறான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும் .ஆன்ம அறிவுக்கு மனம் கட்டுப்பட்டால் உண்மையான பாதைக்கு நம்மை இட்டுச்செல்லும் .இதை உணர்ந்து உண்மையான ஆன்ம அறிவை தெரிந்து அறிந்து அதன் வழி சென்றால் மகிழ்ச்சியுடன் வாழலாம் .உண்மை அறிவை தெரிந்து கொள்வோம் உண்மையுடன் வாழ்வோம் .

ஆன்மாவை அறிந்து கொண்டால் ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் ஒருமைத் தெரியும் .ஒருமை என்பது ,எல்லா உயிர்களும் இறைவன் இருக்கும் ஆலயம் என்பது தெளிவாகத் தெரியும்.எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது புலனாகும். அந்த ஒருமை அறிந்தவர் யாரோ அவரே உலக உண்மைகளை அறிந்து கொள்ள முடியும். அதுவே உண்மை அறிவாகும் .

ஆன்மீகம் என்பது ஆன்மாவை அறிந்து கொள்வதே ஆன்மீகமாகும் .அதுவே  உண்மையான ஆன்மீகமாகும் ! அதுவே உண்மையான அறிவாகும் !உண்மை அறிவே அறிவாகும் .

மனிதனுக்கு ஆறு அறிவு என்பதும் ஆறாவது அறிவு என்பதும் பொய்யான கருத்துக்களாகும் .மனிதன் ஆறாவது பிறவி என்பதும் தவறான கருத்தாகும்.மனிதன் ஏழாவது பிறவியாகும் .

அறிவு என்பது.... உண்மை அறிவு ...பொய் அறிவு என இரண்டு வகைப்படும் .உண்மையை அறிந்து கொள்வது உண்மை அறிவு !பொய்யை அறிந்து கொள்வது பொய்யான அறிவு என்பதாகும் .இந்த உலகத்தை அறிந்து கொள்வதும் .உலகத்தில் உள்ள பொருள்களையும் அறிந்து கொள்வதும் பொய்யான அறிவாகும் .

இந்த உலகத்தையும் ,உலகத்தில் உள்ள பொருள்களையும் ,உலகத்தில் உள்ள உயிர்களையும் ,உயிர்களின் தோற்றங்களையும் ,மாற்றங்களையும், உலகத்தை இயக்கும் அருள் என்னும் மெய்ப் பொருளையும் (கடவுளையும் )அறிந்து கொள்வது உண்மை அறிவாகும் .இவற்றை அறிந்தவர் யாரோ !அவரே  கடவுளாவார் !

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் மாகின்றது என்னடித் தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !

அருளாலே அருளிறை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவ மாகின்ற என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே !

அறிவைக் கொண்டு அறிவை அறிகின்ற பொழுது அனுபவம் தோன்றும் .அனுபவத்தால் அருள் என்னும் உருவம் தெரியும் .

அருள் என்னும் அருளைக் கொண்டு அறிகின்ற பொழுது, அருளைத் தரும்... இறைவனுடைய திருநடனம் புரியும் உண்மைத் தெரியும்.அதுவே பேரின்பமாகும் . பேரின்பத்தை அடைவதே மனிதப் பிறப்பின் கொள்கையாகும்.மனிதப் பிறப்பின் லஷ்ணம்,லஷ்யமாகும் .

இதுவே மரணம் இல்லா பெருவாழ்வாகும் .மரணம் இல்லாமல் வாழ்வதே மனித வாழ்க்கையாகும் .இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும். மனிதனும் கடவுளாகலாம் என்பதாகும்.

உண்மை அறிவைக் கொண்டு உண்மையான அருளைப் பெற்று வாழ்வதே உண்மையான அறிவாகும் .உண்மை அறிவு நம்முடைய சிரசின் (தலைப்பாகத்தில் )சிற்சபை என்னும் இடத்தில் உள் ஒளியாக இயங்கிக் கொண்டுள்ளது .அவற்றை தொடர்பு கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .

ஆன்மநேய அன்புடைய உங்கள் தோழன்;--கதிர்வேலு

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

தெரிந்து கொள்ளுங்கள் !

தெரிந்து கொள்ளுங்கள் !

 எல்லாம் செயல்கூடும் என்ஆணை அம்பலத்தே 
 எல்லாம் வல்லான் தனையே யேத்து!

      இந்த உலகத்தை தோற்றுவித்தும் ,இயக்குவித்தும் 
அடக்குவித்தும்,மயக்குவித்தும்,தெளிவித்துலுமாகிய 
தொழில்களை செய்து கொண்டு இருக்கும் கடவுளாகிய 
அருட்பெருஞ் ஜோதியாகிய கடவுளே ,இந்த மக்களை 
அதாவது உலக உயிர்களை,காப்பாற்ற எடுத்த முயற்ச்சிகள் 
எல்லாம் தோல்வியடைந்து,இறுதியாக இராமலிங்கம் 
என்னும் ''திருஅருட் பிரகாசவள்ளலாரை'' அனுப்பி,உலக
உண்மைகளையும் 
கடவுளின் உண்மை நிலைகளையும் எடுத்து சொல்லி 
மக்களை நல்வழிப்படுத்த வேண்டும்,அதற்கு நீயே 
சாட்சியாக வாழ்ந்து காட்டவேண்டும்,அப்பொழுதுதான் 
மக்கள் உண்மையை உணர்வார்கள் என்ற கடவுளின் 
ஆணையை சிரமேற்க் கொண்டு வாழ்ந்து வழி காட்டினார்.

     5 --10 --1823 -ஆம் ஆண்டு முதல் 30 --1 --1874 - வரை 
வாழ்ந்து மரணத்தை வென்று,இறைவனோடு இரண்டறக்
கலந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சிம்மாசனத்தில் 
இன்று வரை அமர்ந்து ஆட்சி செலுத்துக் கொண்டும் இருக்கிறார்.
அவர் மக்களுக்கு சொல்லிய கருத்துக்களை.திருஅருட்பா
என்னும் நூல் வாயிலாக எழுதி வைத்துள்ளார்கள் .அது 
வேறெங்கும் இல்லை நம் தமிழ் நாட்டில்.நம் தமிழ் 
மொழியில்,எளிய முறையில் எழுதி வைத்துள்ளார்.
அனைவரும் படித்து பயன் பெறவேண்டும் .

உலகில் உள்ள அரசியல் வாதிகளோ,ஆன்மீககவாதிகளோ 
அனைத்தும் தெரிந்த அறிஞர் பெருமக்களோ.அறிவியல் 
விஞ்ஞான,அறிவாளிகளோ படித்தார்களா!சிந்தித்தார்களா 
என்றால் இன்று வரை இல்லை என்பது, அனைவரும் 
அறிந்ததே.இனிமேலாவது ''திருஅருட்பாவை ''படித்து
அதில் உள்ள உண்மைகளை அறிந்து மக்களுக்கு தெரியப்
படுத்த வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் .

ஆண்மநேயன்.கதிர்வேலு.

மிண்டும் பூக்கும் 
.