வெள்ளி, 8 ஏப்ரல், 2016

உண்மை இருக்கின்றது 1 மறைந்து இருக்கின்றது !

உண்மை இருக்கின்றது 1 மறைந்து இருக்கின்றது !


உண்மையான தெய்வம் ஒவ்வொரு மனிதர்களின் ,ஜீவன்களின் (உடம்பில் )அகத்தில் சிர நடுவில் உள் ஒளியாக மறைந்து இயக்கிக் கொண்டு இருக்கின்றது  ,

அதைத்  தெரிந்து கொள்ளாமல் பொய்யான தெய்வங்களை புறத்திலே சிலைகளாக வைத்து வழிபாடு செய்கின்றார்கள்,இந்த மக்கள் வழிபாடு செய்து கொண்டு இருப்பது எவ்வளவு அறியாமையாகும் /

நம் உடம்பின் அகத்தில் ஆன்மாவில் ''உள் ஒளியாக'' இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கும் உண்மையானக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை அறியாத மக்கள் ,

கல்லால் மண்ணால் ஆலயங்களைக் கட்டி அதன் உள்ளே உருவ பொம்மைகளான கண்ட,கண்ட சிலைகளை சிற்பங்களாக வைத்து  அதற்கு கடவுள் என்று பெயர் வைத்து சுற்றி திரிந்து அலைந்து கொண்டு உள்ளார்கள் .

சிலைகளுக்கு படைக்கின்றார்கள் வழிபடுகின்றார்கள் ,அந்த  சிலைகள் நீங்கள் படைக்கும் பொருள்களை உண்ணுமா ? உங்கள் வழிபாட்டை ஏற்குமா ? அதற்கு உயிர் இருக்கின்றதா ,உணர்ச்சி இருக்கின்றதா .நீங்கள் சொல்வதைக் காது கொடுத்துக் கேட்குமா ? நீங்கள்  கேட்டால் அந்த சிலைகளின் கை நீண்டு கொடுக்குமா ? நீங்கள்  அழைக்கும் இடத்திற்கு அதன் கால்கள் நடந்து வருமா ?

மக்களே சிந்திக்க வேண்டும் !

கடவுளால் படைத்த உயிர் உள்ள ஜீவன்களுக்கு உபகாரம் செய்வதுதான் கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார் !

எனவேதான் அறிவுள்ள ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார் ? உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் !

எவ்வளவுதான் படித்த அறிவுள்ள மேதைகளாக இருந்தாலும் அவர்கள் அறிவு சூன்யமாக இருப்பது கடவுள் கொள்கைகளில் மட்டுமே !

இன்று படிக்காதவர்களை விட படித்தவர்கள்தான் அதிக பக்தி பகல் வேஷம் போடுகின்றார்கள் .

அறியாமல் சுற்றிக் கொண்டு இருக்கும் இந்த அப்பாவி மனிதர்களுக்கு உண்மைத் தெரிவிக்க வேண்டும் என்று ,இறைவனிடம் வேண்டுகின்றார் வள்ளல்பெருமான் .

யார் அறிவார் ? எல்லாஞ் செய் வல்லவர் என் உள்ளே
அறிவித்த உண்மையை !

நீங்கள் கடவுள்களாக வழிபடும்  பிரம்மா .விஷ்ணு சங்கரன் மகேஸ்வரன் சதாசிவன்  போன்ற அதிகாரத் தலைவர்களே அறியார் !

மற்றைய தேவர்களும் முனிவர்களும் சித்தர்களும்,முத்தர்களும்,யோகிகளும் ஞானிகளும்,மேலும் சமயத் தலைவர்களும் மதத் தலைவர்களும் அறியார்!

சராசரி மனிதர்கள் எப்படி அறிவார்கள்  ?.

வள்ளலார் காட்டிய சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை பின் பற்றினால் மட்டுமே அனைவருக்கும் தெளிவாக கடவுள் யார் ? என்பது தெரியும்.

ஏன்? நாம் கடவுளைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல மேதாவிகள் கேட்கலாம் !

நம்மைப் படைத்தவன் யார் என்பது தெரியாமல் வாழ்வது .தாய் தந்தை யார் ? என்று தெரியாமல் வாழ்வதற்கு சமம் !

நாம் யாரும் இல்லாத அனாதிகள் அல்ல ! எல்லாம் இருந்தும் நாம் யார் ? என்று தெரியாமல் வாழ்ந்து கொண்டும் அழிந்து கொண்டும் உள்ளோம் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

எவ்வுலகில் எவ் எவருக்கும் அருட்பெருஞ்ஜோதியரே
இறைவன் என்பது அறியாதே இம் மதவாதிகள்
கவ்வை பெறு குருடர் கரி கண்ட கதைபோலே
கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார்
நவ்வி விழியாய் இவரோ சில புகன்றாய் என்றாய்
ஞான நடம் கண்டேன் மெய்த் தேன் அமுதம் உண்டேன்
செவ்வய் பெறு சமரச சன்மார்க்க சங்கம் தனிலே
சேர்ந்தேன் அத் தீ மொழி தேன் மொழி ஆயினவே !

என்னும் பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார் ,,குருடர் யானையைக் கண்ட கதைப்போல் கதைகளையும் கடவுள்களையும்  இவ்வுலகில் படைத்து உள்ளார்கள் .அதையும் உண்மை என்று நம்பி குருடர்கள் போல் வாழ்ந்து கொண்டு உள்ளோம் .

எல்லாம் இருந்தும் மூடமாய் இருக்கலாமா ? சிந்தியுங்கள் செயல்படுங்கள் !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,