புதன், 16 ஏப்ரல், 2014

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும் !

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும் !

நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்பதை மறந்து விட்டதால் கடவுளிடம் அது வேண்டும் இது வேண்டும் என்று கேட்டுக் கொண்டு இருக்கின்றோம்.இதுவே அறியாமையாகும்..

நாம் உண்மையான ஒழுக்கமுள்ள குழந்தைகளாக,மனிதர்களாக வாழ்ந்தால் நமக்கு என்ன தரவேண்டும் என்பது கடவுளுக்குத் தெரியும்.

எல்லோரும் பொருள் இருந்தால்தான் மகிழ்ச்சி என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள் .அதனால் பொருளையே விரும்புகிறார்கள் .பொருள் இருந்தால் பொன்னையும், பெண்ணையும் மண்ணையும் தான் வாங்க முடியும்.

மனிதர்களை அழித்துக் கொண்டு இருப்பது மண்ணாசை பெண்ணாசை ,பொன்னாசை ,என்பதாகும்.

துறவிகள் என்பவர்கள் இந்த மூன்று ஆசைகளையும் விட்டு விட்டால் கடவுள் நமக்கு அருளைக் கொடுத்தது விடுவார் என்று நினைந்து கொண்டு மனித நடமாட்டம் இல்லாத காடு,மலை,குகை போன்ற இடங்களுக்கு சென்று தவம் கிடந்தார்கள் .அவர்களுக்கு கடவுள் எந்த விதமான நன்மைகளையும் செய்யவில்லை.

வள்ளல்பெருமான் முன்பு கடவுள் தோன்றி என்ன வேண்டும் என்று கேட்கிறார் .வள்ளல்பெருமான் அவர்கள் கடவுள் இடத்தில் தனக்காக எதையும் கேட்கவில்லை ,எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் .கொல்லா நெறியே  குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும்,அதை நீங்கள்தான் செய்ய வேண்டும் என்று மட்டும் கேட்கின்றார் .

அதைக் கேட்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .தன்னுடைய் அருள் முழுவதையும் கொடுத்து தன்னுடைய கையில் பிடித்திருந்த தனி அருட்ஜோதி செங்கோலை வள்ளல்பெருமானிடம் கொடுத்து,ஐந்தொழில் ஆற்றலையும் நீயே செய் என்று அனுமதி வழங்கி உள்ளார்.

இது கதை அல்ல ,கற்பனை அல்ல ,உண்மை !

இது நடந்தது ஸ்ரீ முக வருடம் தை மாதம் ,வெள்ளிக்கிழமை ,30--1--1874 ,ஆம் ஆண்டு இரவு பனிரண்டு மணிக்கு என்பது சன்மார்க்க சங்கத்தை சார்ந்த அனைத்து அன்பர்களுக்கும் தெரிந்த விஷயமாகும் .

மனிதனாக பிறந்த அறிவுள்ள ஜீவர்கள் கடவுளிடம்,என்ன எப்படி எதைக் கேட்கவேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .நமது தாயாகவும் தந்தையாகவும் உள்ள ஆண்டவரிடம்

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
என்தந்தை நினது அருட்புகழை இயம்பி இட்டால் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செய்யுனும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினை பிரியாத நிலையும் வேண்டுவனே !

என்னும் பாடல் வாயிலாக ஆண்டவரிடத்தில் எப்படி வேண்டுதல் செய்ய வேண்டும் என்பதை மனிதர்களுக்கு சொல்லிக் கொடுத்துள்ளார் .அப்படி வேண்டினால் நமக்கு என்ன வேண்டும் என்பதை அவரே தந்து அருள் புரிவார் .

உலக உயிர்கள் நலமுடன் இருக்க வேண்டும் என்று வேண்டினால் அதிலே நாமும் அடங்கி விடுகின்றோம்.

ஆன்மநேயன் ஈரோடு ..கதிர்வேல் .

ஆன்மாக்கள் மூன்று வகைப்படும் !

ஆன்மாக்கள் மூன்று வகைப்படும் !

ஆன்மாக்கள் மூன்று வகைப்படும் !

ஆத்மா என்பதும் ,ஆன்மா என்பதும் ,உள் ஒளி என்பதும், ஆன்ம தயவு என்றும்,அருட்சத்தி என்றும் ,அருள் வெளி என்றும்,விருஷ்யம் என்றும்,தர்ம தேவதை என்றும்,அனாதி இயற்கை குணம் என்றும்,பரஞானம் என்றும்,அகரவுகரம் என்றும்,அருள்நடம் என்றும்,அன்பு என்றும் ,ஆன்ம நெகிழ்ச்சி என்றும் ,ஆன்ம அசைவு என்றும்,சுத்த தத்துவம் என்றும்,ஆன்ம அறிவின் பேதம் என்றும் ,ஆன்ம அறிவு விளங்கும் இடம் என்றும்,அருள் வடிவம் என்றும்.பல பெயர்கள் புருவ மத்தியில் உள்ள ஆன்மாவிற்கு உண்டு.

மேலும் ;--ஆன்மா உடம்பில் நான்கு விதமாக ,நான்கு உறுப்புகளின் வழியாக இயங்கிக் கொண்டுள்ளது.

ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் அந்தப் பொருளைக் காணுதல் இந்திரியக் காட்சி அதற்கு இந்திரிய அறிவு என்பதாகும்.இவை கண்கள் வழியாக காணுதல் .

ஒரு பொருளின் நாம ரூபத்தையும் குண குற்றங்களையும் விசாரித்து அறிதல் மனக்காட்சி ,மன அறிவு என்பதாகும்.இவை மனத்தின் வழியாகக் காணுதல் .

ஒரு பொருளின் பிரயோசனத்தை அறிதல் ஜீவக் காட்சி ,ஜீவ அறிவு என்பதாகும்.இவை உயிரின் வழியாகக் காணுதல் .

ஒரு பொருளினது உண்மையை அறிதல் ஆன்ம காட்சி ஆன்ம அறிவு என்பதாகும்.இவை ஆன்மா அறிவின் வழியாகக் காணுதல் .

அதுவே ஞான சபை என்பதும்.ஆன்மப் பிரகாசம் என்பதும்.அந்தப் பிரகாசத்திற்குள் இருக்கும் பிரகாசம் கடவுள் என்பதாகும்.அந்த உள்ளொளியின் அசைவே நடனம் என்பதாகும்.இவற்றைத்தான் சித்சபை அல்லது ஞானசபை என்றும்.நடராஜர் என்றும் ,அருள் நடனம் என்றும் சொல்லப்படுகின்றது .

ஆன்மா

இந்த பஞ்ச பூத உலகம் அணுக்களால சூழப்பட்டது அந்த அணுக்கள் ஏழு வகைப்படும் 

அந்த அணுக்கள் ;-- வாலணு,..திரவஅணு,..குருஅணு,..லகுஅணு ,அணு ,..பரமஅணு,,..விபுஅணு, , ..என்பவைகளாகும்  ,இந்த அணுக்களுடன் அறுபத்து நான்கு கோடி அணுக்கள் கண்களுக்குத் தெரியாத அணுக்கள் ஒரு கூட்டம் ,தெரிந்து கொள்கிற அனுக்கள் ஒரு கூட்டமாக இருக்கும் ,இவை அனைத்தும் மேலே கூறிய ஏழு அனுக்களுக்குத்  துணை அணுக்களாக உள்ளன இந்த அணுக்கள் ஆன்மாவில் எவ்வாறு சேருகின்றதோ அவ்வாறு ஒவ்வொரு தோற்றத்திற்கும்,மாற்றத்திற்கும்,வண்ணத்திற்கும் வடிவத்திற்கும் உருவத்திற்கும் ,காரண காரியமாக உள்ளன. .

ஏழு விதமான அணுக்கள் காரண மாக உள்ளன.மற்ற அணுக்கள் கூட்டம் காரிய மாக உள்ளன், 

இதில் உயிர் உள்ளது உயிர் இல்லாதது என இரண்டு வகையாக உள்ளன.ஆன்மா எங்கு உள்ளதோ அங்கு உயிர் தோன்றும்.உயிர் வாழ்வதற்கு ஏழு விதமான அணுக்களும்,அதற்கு உண்டான துணை அணுக்களும் ஒன்று சேர்ந்து உடம்பு என்னும் உருவம் அந்த அணுக்களால் கட்டிக் கொடுக்கப் படுகிறது.அதற்கு உயிர் உள்ள ஜீவன்கள் என்பதாகும்.இவை இயங்கும் தன்மை, வளரும் தன்மை,உதிரும் தன்மை,மறையும் தன்மையாக உள்ளது .

ஆன்மா இல்லாது ,உயிர் இல்லாது அசைவு இல்லாது ,கல் ,மண்,மலை,மணல்,பாறை,போன்ற பொருள்கள் .இவை வளர்ந்து பின்பு பொரிந்து போய் விடுவதாகும் இவைகள்  யாவும் சடப்பொருள்கள் என்பவைகளாகும்.இவைகளுக்கு ஆன்மா உயிர் என்பது கிடையாது .

ஆதலால் கல்லிலும் ,செம்பிலும் .மண்ணிலும் பாறையிலும் கடவுள் இல்லை என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.ஆன்மா ,உயிர் எங்கு இருக்கின்றதோ ,இயங்குகின்றதோ அங்கு கடவுளின் ஆற்றல் ,அதன் தன்மை அங்கு இருக்கும்.என்பதை மனிதர்களாகிய நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மா உள்ள இடத்தில் உயிர் இருக்கும்,அது  இயங்கும் என்பதை அறிந்த வள்ளல்பெருமான் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார் .

ஆன்மா ,மூன்று வகைப்படும் !

ஆன்மாக்கள்  என்பது மூன்று வகைப்படும் .அவை பக்குவ ஆன்மா ,அபக்குவ ஆன்மா ,பக்குவா பக்குவ ஆன்மா என்பவைகளாகும்  அவைகள்  எங்கு இருந்து யாரால் அனுப்பப் படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

அண்டங்கள் !

நாம் வாழும் உலகம் என்பது ஒரு அண்டம் ..இதுபோல் பல கோடி அண்டங்களையும் இயக்கி இயங்க வைத்துக் கொண்டு இருக்கும் ஓர் பேரண்டம் உள்ளது.அதற்கு அருள் பெரு வெளி என்பதாகும்.அருள் அண்டம் என்பதாகும்

அங்கு, மண்,..நீர்,..அக்கினி,..காற்று,..ஆகாயம்,போன்ற பஞ்ச பூதங்கள் கிடையாது.அதற்கு ''அருட் பெரு வெளி'' என்ற பெயராகும்..

அங்குதான்,மெய்ப்பொருள் என்னும்  அருட்பெருஞ்ஜோதி (அருள் ஒளி )ஆண்டவர் ஆட்சி புரிந்து கொண்டு உள்ளார் .என்பதை வள்ளல் பெருமான்  கண்டு பிடித்து உள்ளார் .அதற்கு அருள் அரசு ஆட்சி செய்யும் இடம் என்பதாகும் .

அந்த அருள் அரசாட்சியின் சட்டப்படி கொள்கைப்படி தான் எல்லா அண்டங்களும் ,எல்லா உலகங்களும்,எல்லா ஆன்மாக்களும் எல்லா உயிர்களும்,எல்லா பொருள்களும், அருள் நியதிப்படி (சட்டப்படி } செயல்பட்டு நடந்து கொண்டுள்ளன.

இவ்வளவு அண்டங்களையும்,பஞ்ச பூத அணுக்களையும், சூரியன் ,சந்திரன்,நட்சத்திரம் போன்ற அனைத்து கிரகங்களையும், தோற்று வித்ததின் நோக்கமே ...அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் குழந்தைகளாகிய ஆன்மாக்கள் வந்து ,உயிர் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் என்தற்குத்தான் தோற்றுவிக்கப் பட்டதாகும். ,

ஆன்மாக்கள் உயிர் பெற்று வாழ்ந்து, பின் வாழ்க்கையில் சலிப்புற்று ,இறைவனுடைய அருளைப்பெற்று ,உயிர் இல்லாத ஆன்ம தேகமான ஒளி உடம்பை பெற்று ,மரணத்தை வென்று மீண்டும் ,ஆன்மா எங்கு இருந்து வந்ததோ அங்கு திரும்பிச்செல்ல வேண்டும் என்பது ஆன்மாவிற்கு அளித்துள்ள சட்டதிட்டமாகும்.ஆனால் ஆன்மாக்கள் எதுவும் இதுவரையில் திரும்பிச் செல்லவில்லை என்பதை நினைந்து நமது அருட் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருத்தப்படுகிறார் வேதனைப்படுகிறார்.அதைப் பற்றி வள்ளல்பெருமானிடம் சொல்லுகின்றார் .

சமய மதவாதிகள் !

மக்களுக்கு வழி காட்டிய ஞானிகள் ,வேதம்,ஆகமம் ,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,போன்ற கலைகளையும் சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கொள்கைகளையும் கற்பனைகளாக சொல்லி மக்களை குழப்பி விட்டுவிட்டார்கள் .

அதனால் மக்கள் உண்மையான வழி தெரியாமல் அலைந்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.மக்களுக்கு ஆன்மா வந்த வழியும்,உயிர் வந்தவழியும்,உடம்பு வந்த வழியும்.தெரியாமல் ,பொய்யான வாழ்க்கை வாழ்ந்து ,மரணம் அடைந்து ,பின்பு மறுபடியும் வேறு வேறு உடம்பும் உயிரும் ,எடுத்து சுழன்று சுழன்று அழிந்து கொண்டே உள்ளார்கள்.

இவைகள் யாவும் ஆன்மாக்களின் குற்றம் அல்ல ...வழிகாட்டிய சித்தர்கள், ஞானிகள் என்னும் அருளாளர்களின் குற்றமாகும்.

வள்ளலார் பேருபதேசத்தில் சொல்லியுள்ளது.!

இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது ,அசுத்த மாயா  காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள் .சுத்த மாயா காரிகளாகிய தெரிந்த பெரியோரும் இல்லை.சுத்த சன்மார்க்கமும் இல்லை.சுத்த சன்மார்க்கம் இருந்து இருந்தால் ,அனுபவித்து அறியாத அனுபவமும்,கேட்டு அறியாத கேளிவியும் நாம் கேட்டி இருப்போம்.

மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள்..ஆதலால் கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர செய்தது இத்தருணமே .ஆதலால் இத்தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்க காலமாகும் என்று வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார்.

மேலும் ;---இதற்கு மேற்பட,நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம்,முதலிய கலைகளில் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம் .ஏன் என்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுக்குறி அன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தினுடைய உண்மை இன்ன தென்றும் ,கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் ,மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

அணு மாத்திரமேனும் தெரிவிக்காமல் ,பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள்.யாதெனில் ;--கைலாசபதி என்றும் ,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும்,பெயரிட்டு ,இடம் வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து ,உண்மையாக இப்பதாகச் சொல்லி இருக்கின்றார்கள் ...

தெய்வத்துக்குக் கை,...கால்,...வாய்,,மூக்கு, உடம்பு முதலியன இருக்குமா ?என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் ,உண்மை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள் .ஆதலால் எதையும் உண்மை என்று நம்ப வேண்டாம் .

இப்பொழுது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே உண்மையை மக்களுக்கு போதிக்கிறார் !   

ஆன்மாக்கள்;-- மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் .உண்மையான அருளைப் பெற்று உடம்பையும் உயிரையும்,அழிக்காமல் ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றிக் கொண்டு வாழ்வதற்கு வழிக்காட்ட வேண்டும் என்பதற்காக ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,பக்குவமுள்ள ஓர் ஆன்மாவை இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார் .அவர்தான் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

வள்ளல்பெருமான வந்து உலக மக்களுக்கு உண்மையை போதிக்க வேண்டும் என்பதற்காக ...இப்படித்தான் மனித பிறப்பு எடுத்தவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக ..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெற்று ,மரணத்தை வென்று வாழ்ந்து காட்டி .. ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாளையும்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையையும் தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் வடலூல் என்னும் உத்தர ஞான சிதம்பரத்தில் தோற்றுவித்து உள்ளார் .

ஆன்மாவின் உண்மை சொரூபத்தை தெரிந்து கொண்டால் தான் நாம் யார் ? நாம் எங்கு இருந்து வந்தோம் ? எதற்காக வாழ்கிறோம்,? ஏன் மரணம் அடைகிறோம், ? மரணம் அடைந்தபின் எங்கே செல்கிறோம் ? மீண்டும் மனித பிறப்பு கிடைக்குமா ?கிடைக்காதா ?என்பன போன்ற உண்மை விபரங்கள் தெரிந்து கொள்ளப்படும்.

ஆன்மாவின் விபரங்களை வள்ளல்பெருமான் தெளிவு படுத்துகின்றார் . 

ஆன்மா என்றால் என்ன ?

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்சி செய்யும் அருட்பெருவெளியில் ஆன்மாக்கள் இருக்கும் இடத்திற்கு ஆன்ம ஆகாயம் என்று  பெயராகும்.அங்கு ஆன்மாக்கள் நீக்கமற (அடர்த்தியாக) நிறைந்து இருக்கும்.

வள்ளல்பெருமான் சொல்லியதைப் பார்ப்போம்.!

ஆகாசம் அனாதி,அதேபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி,..அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி ...அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ ,..அப்படிக் கடவுள் இடத்தில் அருட் சத்தி அனாதியாய் இருக்கின்றது...ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பி இருக்கின்றன...அதுபோல் கடவுள் சமூகத்தில் அதாவது ஆன்மாகாசத்தில் அணுக்கள் சந்தான மயமாய் நிரம்பி இருக்கின்றன...அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர் !   

பூத உலகத்தில் !
நாம் வாழும் பூத ஆகாயத்தில் இருக்கும் சாதாரண,அசாதாரண.. அணுக்கள் எழுவகையாய்ப் பிரியும்.அவையாவன ;--வாலணு,...திரவணு,...குருஅணு ,...லகுஅணு ,...அணு ...பரமாணு ...விபு அணு ....என்பவைகளாகும்.மேற்படி அணுக்கள் அனந்த வண்ண பேதமாய் இருக்கும்.

இவற்றில் காரிய அணு ...காரிய காரண அணு ...காரண அணு ...என மூன்று வகையாய் ..பக்குவ,,,அபக்குவ ,,பக்குவா பக்குவம்..என நிற்கும்.இவைகள் யாவும் இந்த பஞ்ச பூத உலகத்தில் உள்ளன்.

இதேபோல் கடவுள் சமூகத்தில் !

ஆன்மா ஆகாயமான கடவுள் சமூகத்தில் ஆன்மாக்களும் மூவகையாய் நிற்கும்.யாவை எனில் ?;--பக்குவ ஆன்மா ...அபக்குவ ஆன்மா ...பக்குவா பக்குவ ஆன்மா ...என மூவகைப்படும் .

பஞ்ச பூத உலகத்தில் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றேயாம் ..அதுபோல் ஆன்மாக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் கடவுள் சமூகத்தில் உள்ள அருட் சத்தியேயாம்.

அப்படி மூன்று வகையான ஆன்மாக்களுக்கு அருட் சத்தியின் சமூகத்தில் தோன்றிய இச்சை,,,ஞானம்..கிரியை என்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் மூன்று உள்ளன.

அவை யாவை எனில் ;--

கர்ம தேகம்...பிரணவ தேகம்...ஞான தேகம்.என மூன்று விதமாகும்...அப்படி மூன்று தேகம் உண்டானதற்குக் காரணம் ;---பூத ஆகாயத்தில் உண்டான வாயு பேதத்தினால் ..சோம சூரிய அக்கினி (சந்திரன்,சூரியன்,அக்கினி )என மூன்று வகை நிற்பன போல் உணர்க ..அந்த ஆகாயத்தை விரிக்கில் அனந்த பேதமாம் .வாயுவின் பேதம் அதுபோல் ஆனந்தம் ..ஒருவாறு அறுபத்து நான்கு கோடி பேதம் ..

இவற்றில் ;--அமுதபாகம் ....விஷபாகம்...பூத பாகம்...உஷ்ண பாகம் ..எனப் பலபேதப்படும் .

உயிர்களும் உடம்பும் ;---

மேற்படி அணுக்கள் அனந்த வண்ணம் ஆதலால் அனந்த அணுக்கள் சேர்ந்து ஒரு வித்தாய் ..இவ்வித்து திரவ அணு சம்பந்தமாய் குரு அணுவோடு சேரும்போது ..பூதகாரிய  அணுவாகிய கிரண உஷ்ணத்தால் ஜீவிக்கும் 

ஜீவித்த ஓஷதி (தாவரம் )முதலியன இந்த நியாத்தால் வர்ணம் ,ருசி முதலிய பேதப்படுகின்றன.இவ்வண்ணமே பவுதிக பிண்ட அணுக்கள் ,காரண சூரிய உஷ்ணமாகிய ஜீவ உஷ்ணத்தால் வடிவமாய் ,பரம காரண தயையால் ஜீவிக்கின்றன .சில காலத்தில் வித்துக்களாதியாம் .சில காலத்தில் விருஷம் மாதியாம் .எல்லா வற்றிற்கும் ஆதியாய் உள்ளது பூதகாரிய அணுவாகிய சூரிய கிரணமேயாம் .இதுபோல் 

இவ்வண்ணமே ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் (ஆன்ம ஆகாயத்தில்) அருட் சத்தி ஆன்ம ஆகாயத்தில் விசிரிம்பிக்க 
( அசைக்க ),ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்ச கிருத்தியத் தொழிற்படும்.மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே ,மேற்படி ஆன்ம ஆகாயம் சந்தான மாதலால் .ஆன்மாக்கள் நிரம்பி நிற்கும்.ஆதலால் பஞ்ச கிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது.

ஆன்மாக்கள் தாழ்ந்த கதி அடைவது அனாதி இயற்கை அல்ல ..ஆதி செயற்கையாம்.

ஆணவம் அனாதி இயற்கையேயாம் இதன் ரகசியம் குரு முகத்தால் அறிக என்று வள்ளல்பெருமான் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார் .

உருவமும் பேதமும் ;--

சிருஷ்டிகள் அணு பேதத்தால் அனந்த வகை .;--
பஷ்சமாவன .அணு பட்ஷம்...பரமாணு பட்ஷம்,...சம்பு பட்ஷம் ..விபு பட்ஷம் ...பிரகிருதி பட்ஷம் ,ஆக ஐந்து வகையாக உள்ளன.

இவற்றில் சம்பு ,விபு இவ்விரண்டிற்கும் அபக்குவமில்லை ,..மற்ற மூன்றிற்கும் பக்குவம் அபக்குவம்,உள்ளது.

இதற்கு உதாரணம் ;--

தடையுறாப் பிரமன் விண்டு ருத்திரன் மயேச்சுரன் சதாசிவன் விந்து 
நடையுறாப் பிரமம் உயர் பராசத்தி நவில் பரசிவம் எனும் இவர்கள் 
இடையுறாத் திருச்சிற்றம் பலத்தாடும் இடது கால் கட்டைவிரல் நகத்தின் 
கடையுறு துகள்கள் என்று அறிந்தேன் அதன் மேற் கண்டனன் திருவடி நிலையே .....என்றும் 

அடர் மலத்தடையால்நடையுறு அயன் மால் அரண் மயேச்சுரன் சதாசிவன் வான் 
படர்தரு விந்து பிரணவப் பிரமம் பரை பரம் எனும் இவர்கள் 
சுடர் மணிப் பொதுவில் திருநடம் புரியும் துணையடிப் பாதுகைப் புறத்தே 
இடர்கெட வயங்கும் துகள்கள் என அறிந்தே னேத்துவன் திருவடி நிலையே .

என்று திருவடி நிலை என்ற தலைப்பில் பத்து பாடல்களில் வள்ளல்பெருமான் விளக்கி உள்ளார்.

மேலே கண்ட பாடல்களில் விபரம் ;--நாம் வணங்கும் தெய்வங்கள் .பிரம்மன்,விஷ்ணு ,சங்கரன்,மகேச்சுரன் ,சதாசிவம் ,சத்தி ,பராசத்தி,பரசிவம் போன்ற தெய்வங்கள் யாவும் ..பக்குவ ஆன்மாக்களாகும் ,கடவுள்கள் அல்ல .!

உண்மையான கடவுளின் (அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் )
இடது கால் கடைவிரல் நகத்தின் சிறு துகள்கள் என்று அறிந்தேன் .அவைகள் நாம் வணங்கும் தெய்வங்கள் அல்ல ..அவைகள் யாவும் தத்துவங்கள் உண்மையான கடவுள்கள் அல்ல ! என்பதை தெரியப்படுத்தி உள்ளார் .உண்மையான கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் ஒளியாகும்.

ஆன்மாக்கள் உயர்ந்த பதவி அடைந்தாலும் அவைகளை கடவுளாக வழிபடவோ ,வணங்கவோ கூடாது,அப்படி வழிபட்டாலோ வணங்கினாலோ மனித ஆன்மாக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் படைத்த அன்பர்களுக்குத் தெளிவு படுத்தி உள்ளார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

ஆன்மாக்கள் மூன்று வகையான தோற்ற விசித்திரங்கள்  .;--

அபக்குவ ஆன்மா ;--அபக்குவ சிருஷ்டி என்பதாகும்.அவை ஓஷதிகளாலும் பவுதிகங்களாலும் .ஆகார மூலமாய் பெண் ,ஆண் சம்பதத்தோடு உண்டாக்குவது.

அபக்குவ பக்குவ ஆன்மா ;--பக்குவ சிருஷ்டியாவது, புருஷன் அதாவது ஆண் பெண்ணைப் பார்ப்பதுபோல் தன அஸ்தத்தால் பெண்ணைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு தேக சம்பத்தம் செய்வித்து உண்டாக்குவது .  

பக்குவ ஆன்மா ;--இவை கடவுளின் அருளால் உண்டாக்குவது.
இதற்கு பரமாணு பட்ஷம் என்பவைகளாகும் .இவைகளில் ஐந்து விதமான சிருட்டிகள் உள்ளன பக்குவ சிருஷ்டி ,.

பரமாணு பட்ஷ ;அபக்குவ சிருட்டியாவது ,கடவுள் பெண் தேகத்தைத் தடவி பார்த்த உடனே கருத்தரித்தல் .

பரமாணு பக்குவ சிருட்டியாவது ;--கடவுள் பெண்ணை கண்ணால் பார்த்த உடனே கருத்தரித்தல் .

சம்பு பட்ஷ அபக்குவ சிருட்டி ;-- கடவுள் வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல் .

சம்பு பட்ஷ பக்குவ சிருட்டியாவது ;--கடவுள் சங்கற்பித்த மூன்றே முக்கால் நாழிகைக்குள் கருத்தரித்துக் கீழே பிண்டம் வெளிப்படல்.

விபு பட்ஷம் எம்பது ;--.கடவுள் பார்த்தவுடன் திருண முதலான வற்றை மனிதனாக செய்து ,அதில் அனேக விசித்திரங்கள் செய்வது.

வள்ளல்பெருமான் தோற்றம் !

மேலே கண்ட சிருட்டியில் வள்ளல்பெருமான் அவர்கள்,சம்பு பட்சத்தால்  கடவுளின் வாக்கால் கருத்தரித்தவர் ,ஆண்,பெண் உறவால் கருத்தரித்தவர் அல்ல ...என்பதை சன்மார்க்க சங்க அன்பர்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.  

மேற்படி ஆன்மாக்களுக்கு ஆணவம் மட்டும் உண்டு ,,மாயை என்னும் உடம்பு கொடுக்கப்பட்டுள்ளது.கன்ம (கர்மம்) என்னும் வினைகள் என்பது கிடையாது. 

உந்த உலகத்திற்கு வந்து வாழும் ஆன்மாக்கள் ! 

மும்மல பேதமும் சிருட்டியும் ! ஆணவம்,...மாயை,...கன்மம் ...என மலம் மூன்று .!

ஆணவம்,--ஆன்மாவின் இயற்கையாகும் ,
மாயை ;-- ஆன்மா வாழ்வதற்கு கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பு என்னும் வீடாகும்.
கன்மம் ;---ஒவ்வொரு ஆன்மாவும் அனுபவிக்கும் செயல்களுக்கு கன்மம் என்பதாகும்.நல்லதை செய்தால் நல்வினை என்றும், தீயவை செய்தால் தீவினை என்றும் ஆன்மாவில் பதிவாகிக் கொண்டே இருக்கும்.

ஆணவம் ,மாயை ,கன்மம்,என மலம் மூன்று ;--இதில் பக்குவம் மூன்று ..அபக்குவம் மூன்று ,,,ஆக ஆறு .இவை ஒவ்வொன்றும் மும்மூன்றாக விரிதலின் பதினெட்டு ஆம் .இந்தக் கன்ம பேதத்தால் அருட் சத்தியின் சமூகத்தில் எழுவகைத் தோற்றம் உண்டானது.

மேற்படி கன்ம மலத்தால் சிருட்டி உண்டாகும் விபரம்,ஒருவாறு ;--பக்குவ ஆணவம் பக்குவ மாயை ,இவை இரண்டினாலும்,விஞ்ஞான கலாபேதம் .போன்ற பிறப்புகளாகும் 

அபக்குவ மாயை அபக்குவ கன்மம்,அபக்குவ ஆணவம் கூடியது,தேவ நரக பைசாசங்கள் என்னும் பிறப்புகளாகும் .

பக்குவ மாயை,அபக்குவ கன்மம் ,கூடியது,ஜீவர்கள் என்னும் மனிதப் பிறப்பாகும் .

அபக்குவ கன்மம்,..அபக்குவ கன்ம ஆணவம் ...அபக்குவ கன்ம மாயை ..இவை கூடியது...தாவர உயிர்கள்.இதை விரிக்கில் பெருகும்.

ஆணவம் ..மாயை..கன்மம்.;--பக்குவம் மூன்று ..அபக்குவம் மூன்று ஆக ஆறில் ...ஒவ்வொன்றில் மும் மூன்றாக விரிந்தவை பதினெட்டு ..

பக்குவ ஆணவம்,... பக்குவ மாயை,...இவ்விரண்டும் தனித்து நிற்பது விஞ்ஞானகலர்,

கர ..நரக ..பைசாசங்கள் ;--அபக்குவ மாயை,,,அபக்குவ மாயை,..அபக்குவ கன்மம்...அபக்குவ ஆணவம் கூடிதடித்தது .

ஜீவர்கள் (மனிதர்கள் ) ;--பக்குவ மாயை..அபக்குவ கன்மம்,கூடியதாகும்..

தாவரங்கள் ;---அபக்குவ கன்மம் ..அபக்குவ  மாயை ...அபக்குவ ஆணவம் ..கூடியதாகும்.இந்த மயமாக உயிர்கள் தோன்றிக் கொண்டே இருக்கும்.

ஆன்மாக்களுக்கு ஏழு வகைப் பிறப்பு !

இந்தத் தேகத்திற்குப் பிறப்பு ஏழு உண்டு ...அதுபோல் எழுவகைப் பிறப்பிலும் ..ஒவ்வொரு பிறப்பிற்கும் எவ்வேழு பிறப்புண்டு .அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் ஆனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம் .

ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டம் அடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்றம் இல்லாமல் மண்ணில் மறைந்து இருந்து மறு கல்பத்தில் தோன்றுகிறது .இவ்விதமாகவே மற்ற யோனிகள் இடத்தும் பிறந்து பிறந்து,,இறந்து இறந்து முடிவில் இந்த மனித தேகம் கிடைத்துள்ளது.

இத்தேகத்திற்கும் ஏழு பிறவி உண்டு ..

யாதெனில் ;--கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாய் இருப்பது ஒன்று ...அவயவாதி உற்பத்திக் காலம் ஒன்று ...பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று ...குழந்தைப் பருவம் ஒன்று ....பாலப் பருவம் ஒன்று ....குமாரப்பருவம் ஒன்று ...விருத்தப்பருவம் ஒன்று ...ஆகப் பிறவி ஏழு ..இவ்வாறே தாவர முதலிய வற்றிற்கும் உள...

மேலும் ஸ்தூலப் பிறப்பு ஏழு ...சூட்சுமப் பிறப்பு ஏழு ...காரணப் பிறப்பு ஏழு ../ஆதலால் மேற்குறித்த ஸ்தூலப் பிறப்பு ,,சூட்சுமப் பிறப்பு ..யாதெனில் சாக்கிரம் ..சொப்பனம்..சுழுத்தி என்பதாகும்.சாக்கிரத்தில் சொப்பனம் .சாக்கிரத்தில் சுழுத்தி ,..சொப்பனத்தில் சொப்பனம்,சொப்பனத்தில் சுழுத்தி ஆக பிறப்பு ஏழு ...

காரணப் பிறப்பு ,..மனோ சங்கற்பங்கள் எல்லாம் பிறவி .ஆதலால் மேற்குறித்த பிறவிக்குக் காரணம் ,நினைப்பு மறைப்பு ...அது அற்றால் பிறவி இல்லை.எப்படி அரும் எனில் ;--பரோபகாரம் .சத்விசாரம் ..இவ்விரன்டாலும் மேற்குறித்தது நீக்கிக் சிவானுபவம் பெறலாம் .  


அந்த மூன்று வகையான ஆன்மாக்களை பற்றி பார்ப்போம் .
இந்த உலகத்திற்கு அந்த ஆன்மாக்கள் வந்ததும் அந்த ஆன்மாக்களுக்கு மேலே சொல்லப்பட்ட அணுக்கள் ஆன்மாக்களின் தகுதிக்கு தகுந்தாற் போல்,உடம்பு உள்ள உருவம் என்ற வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது வீடு கட்டிய உடன் ,ஆன்மாவில் இருந்து உயிர்,என்னும் ஜீவ சக்தி தோன்றி வெளியே வந்து .அதன் அதன் தன்மைக்கு தகுந்தாற் போல் இந்த உலகத்தில் வாழ்கிறது

அந்த ஆன்மாக்களின் வாழ்க்கையில் எந்த எந்த பஞ்ச பூத அணுக்களை உண்கிறதோ அனுபவிக்கின்றதோ அதற்கு நன்மை தீமைகள் உண்டாகும் அதற்கு வினை என்று பெயர் வைத்துள்ளார்கள்.அதற்கு ,கன்மம் என்றும் கர்மா என்றும் பெயர் வைத்துள்ளார்கள் .நல்ல அணுக்களை அனுபவிக்கும் போது நல் வினை என்றும் கெட்ட அணுக்களை அனுபவிக்கும் போது தீவினை என்றும் சொல்லப் படுகிறது,

அணுக்களின் சேர்க்கையால் உண்டான உடம்பு அணுக்களின் சேர்க்கையால் முதிர்ந்து வலிவு இழந்து ,உணர்ச்சி குன்றியதால்அணுக்களின் செயல்பாடுகள் குன்றி செயல் இழந்து விடுகின்றன. பின் ஆன்மாவும் உயிரும் .. இனி இந்த உடம்பில் உயிர் வாழ முடியாது என்று உயிர் ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது உயிர் அடக்கம் கொள்ளும் போது உடம்பு என்னும் அணுக்கள் வேலை செய்யாது அதனால் உயிர் போய் விட்டது என்கிறோம் .மரணம் வந்து விட்டது என்கிறோம்.ஆனால் உயிர் போக வில்லை உயிர் ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது ஆன்மாவும் அழிவதில்லை உயிரும் அழிவதில்ல

ஆன்மாவானது , உடம்பு என்னும் அணுக்களின் வீழ்ச்சியால் அதில் இருந்து வெளியே சென்று வேறு ஒரு புதிய உடம்பு என்னும் வீடு கட்டிக் கொள்கிறது..ஆன்மாவின் தகுதிக்கு தகுந்தாற் போல் மீண்டும் அணுக்களைக் சேர்த்து வீடு  கட்டிக் கொண்டு வாழ்கிறது இவை எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொது வானதாகும் ஆதலால் பக்குவமுள்ள ஆன்மா என்பது மனித உடம்பின் சேர்க்கையாகும்.பக்குவா பக்குவம் உள்ள ஆன்மா என்பது ஊர்வன ,பறப்பன ,நடப்பன போன்ற ஜீவராசிகளாகும்,அபக்குவ ஆன்மா என்பது மரம்,செடி, கொடிபோன்ற தாவரங்கள் என்பவைகளாகும்..

அதனால் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றும் .பிறப்புகளிலே மனிதப் பிறப்பு மிகவும் உயர்ந்த பிறப்பு என்றும் .இந்த பிறப்பு போனால் மறுபடியும் அடுத்து கிடைப்பது எந்த பிறப்பு என்று எவருக்கும் தெரியாது.அதனால் மனித பிறப்பு ஒன்றுதான் உயர்ந்த அறிவு உள்ள பிறப்பாகும் இந்த உலகத்தில் வாழாமல் வந்த இடத்திற்கே செல்ல வேண்டுமானால் இந்த உலகத்தில் உள்ள எந்த அணுக்களையும் உண்ணாமலும் அனுபவிக்காமலும் இருக்க வேண்டும் .

ஆன்ம அறிவைக் கொண்டு ,,உண்மையைத் தேடி வாழ்ந்தால் ஆன்மாவில் உள்ள அருள் என்னும் அருள்அமுத  ரசம் சுரக்கும் அந்த அருளை யார் சுவைக் கின்றார்களோ!அனுபவிக் கின்றார்களோ அவர்களுக்கு மறுபடியும் பிறப்பு இறப்பு என்னும் தொடர்ச்சி இல்லாமல் துண்டிக்கப் படும்.அவர்களே இறைவனை அடைந்தவர்கள் என்பதாகும் .அதுவே பேரின்பமாகும் அவர்களே பக்குவமுள்ள ஆன்மாக்களாகும்.இதை விரிக்கில் இன்னும் பெருகும் .அனுபவத்தால் அறிக .

வள்ளலார் பாடல் ஒன்று !
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடை பிடித்து மெய்ப்  பொருள் நன்கு உணர்ந்து
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

மேலும் தொடரும் .
அன்புடன் ஆன்மநேயன் ;--ஈரோடு கதிர்வேலு .
sell  9865939896 .... laand line...0424 2401402...