செவ்வாய், 29 மார்ச், 2022

இயற்கை உண்மை என்பது எது ?

 *இயற்கை உண்மை என்பது எது ?*


*இயற்கை என்பது ! பஞ்ச பூதங்கள் அற்ற மாபெரும் அருள் நிறைந்த பெருவெளியாகும். அதற்கு அருள் நிறைந்த ஆகாயம் என்று பெயர். அந்த ஆகாயத்தின்  தலத்தின்மேல் பீடத்தில் அருட்பெரு வடிவில்.அருட்பெருந் திருவிலே அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே இயற்கை உண்மை கடவுளாகும்.* 


*அவரே அருட்பெரும் பதியாகவும் அருட்பெரும் நிதியாகவும் அருட்பெரும் சித்தியாகவும் அருட்பெரும் களிப்பாகவும்.அருட்பெரும் சுகமாகவும். எல்லை அற்ற பெருவெளியில் ஓங்கி உயர்ந்து அமர்ந்து அருள்ஆட்சி செய்யும் மாபெரும் தனித்தலைமை  பெரும்பதியே அருட்பெருஞ்ஜோதியாகும். அதன் சமூகத்தில் உள்ள ஆன்ம ஆகாயமும் அங்கு நீக்கமற நிறைந்து இருக்கும் ஆன்மாக்களும். ஜீவன்களும் மட்டுமே இயற்கை உண்மையாகும்.*


*இவற்றைத்தான் இயற்கை உண்மை என்றும்.இயற்கை விளக்கம் என்றும்.இயற்கை இன்பம் என்றும் வள்ளலார் தெளிவுபட உரைநடைப் பகுதி வாயிலாகவும்.  ஆறாம் திருமுறை திருஅருட்பாவில் பாடல் வாயிலாகவும் எழுதி பதிவு செய்து வைத்துள்ளார்.*


*இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் மனிதன் வாழ்ந்து வருகிறான்.*

*எக்காலத்தும் அழிவில்லாமல் நிலையானதும் தோற்றம் மாற்றம் இல்லாததும் எதுவோ அதுவே இயற்கையாகும்.* *இயற்கை உண்மையாகும்.*

*இயற்கை உண்மைக்குள் நிறைந்து விளங்குவது இயற்கை விளக்கமான திருஅருளாகும்.*

*அத் திருஅருளை பெற்று என்றும் அழியாமல் வாழ்வாங்கு வாழ்வதே இயற்கை இன்பமாகும்*


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வதே ஆன்மாக்களின் இயற்கை நியதியாகும்* 


*அவற்றைவிட்டு செயற்கை கடவுள்களான தத்துவ உருவங்களை வணங்குவதாலோ வழிபாடு செய்வதாலோ ஆன்மாக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை ஒவ்வொரு மனிதேகம் எடுத்துள்ள ஆன்மாக்களும் தெரிந்து கொள்ள வேண்டும்*


*வள்ளலார் பாடல்!*


*இயற்கையிலே பாசங்கள் ஒன்றும்இலார்* குணங்கள்

ஏதுமிலார் தத்துவங்கள் ஏதுமிலார் மற்றோர்


*செயற்கை இல்லார்* *பிறப்பில்லார் இறப்பில்லார்* *யாதும்*

*திரிபில்லார்*  *களங்கம் இல்லார்*

*தீமைஒன்றும் இல்லார்*


வியப்புறவேண் டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்

*மெய்யேமெய் ஆகிஎங்கும் விளங்கி இன்ப மயமாய்*


உயத்தரும் ஓர் *சுத்தசிவா னந்தசபை தனிலே*

*ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவருண்டே கண்டீர்.!*


*இயற்கை என்பது அருட் பெருவெளி என்பதாகும். பலகோடி அண்டங்களையும் உலகங்களையும் அதில் நிறைந்த பொருள்களையும் படைத்து தன் கட்டுபாட்டில் இயக்கிக் கொண்டு உள்ள இடமே அருட்பெருவெளி என்பதாகும்.அதாவது  (அருள் நிறைந்த ஆகாயம் ) அதன் உள்ளே கடவுள். அருள்.  ஆன்மா. ஆணவம். ஜீவன்  என்னும் உயிர்கள் மட்டுமே இயற்கையானது* மற்றவை யாவும் செயற்கையாகும்.


*நாம் இயற்கை என்று நினைத்துக் கொண்டு இருப்பதும் பேசிக்கொண்டு இருப்பதும் எழுதிக் கொண்டு இருப்பதும் இயற்கை அல்ல எல்லாம் செயற்கையே !* எல்லாம் தோற்றம் மாற்றம் உள்ளவைகளேயாகும்.


*நாம் வாழும் இவ்வுலகம் மண்.நீர்.அக்கினி.காற்று.ஆகாயம் என்னும் பஞ்ச பூதங்கள் மற்றும் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் போன்ற கிரகங்கள். மேலும் மலைகள் நதிகள் ஆறுகள் நீர் ஓடைகள் கற்கள் வனங்கள் காடுகள் குகைகள். மரம் செடி கொடிகள் காய் கனிகள் போன்ற அனைத்தும் செயற்கையாகும்*

*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகளான ஆன்மாக்கள் சுதந்தரமாக வாழ்வதற்காகவும் அருளைப் பெறுவதற்காகவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால். படைக்கப்பட்டது யாவும் செயற்கையாகும்.*

*அருள் என்பது இயற்கை. பொருள் என்பது செயற்கை.*

*செயற்கையான பொருள் உடம்பில் வாழும் ஆன்மாக்கள் இயற்கையான அருள் உடம்பு பெற்றால் மட்டுமே இயற்கை உண்மை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலக்க முடியும்.*


*நாம் அனுபவிக்கும் இன்பம் துன்பங்கள் யாவும் ஆன்மாவையே சார்ந்ததாகும்* 


அதே நேரத்தில் ஆன்மா வாழும் பூத உடம்பை அருள் உடம்பாக மாற்றும் புதிய கல்வி கொள்கையை (சாகாக்கல்வி) உலகிறகு கொண்டு வந்தவர் வள்ளலார். 


செயற்கை உடம்பை இயற்கை உடம்பாக மாற்றும் ரகசியத்தை கற்றுக் கொடுப்பதே வள்ளலார் தோற்றுவித்த *சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்பதாகும்


வள்ளலார் பாடல்! 


நான்செய்த புண்ணியம் என்னுரைக் கேன்பொது நண்ணியதோர்


வான்செய்த மாமணி என்கையில் பெற்றுநல் வாழ்வடைந்தேன்


*ஊன்செய்த தேகம் ஒளிவடி வாகநின் றோங்குகின்றேன்*


கோன்செய்த விச்சை குணிக்கவல் லார்எவர் கூறுமினே.!


மேலும்...


*ஊன உடம்பே ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க*

*ஞான அமுதெனக்கு நல்கியதே -*


வானப்

பொருட்பெருஞ் சோதிப் பொதுவில் விளங்கும்

அருட்பெருஞ் சோதி அது.!


மேலும்...


*சுத்த வடிவும் சுகவடிவாம்* *ஓங்கார*

*நித்த வடிவும்* நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர்*


*ஞான வடிவுமிங்கே நான்பெற்றேன்* எங்கெங்கும்

தானவிளை யாட்டியற்றத் தான்.!


இவ்வாறு பல பாடல்களில் தன் சாகாக்கல்வி அனுபவத்தை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்.


*மனிதனுக்கு உயர்ந்த அறிவு கொடுத்திருந்தும் அறிவு விளக்கம் இல்லாமல் அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும்  இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல். செயற்கையை இயற்கை என்றும்.. இயற்கையை செயற்கை என்றும் தெரியாமல் பாவிப்பதால். இயற்கையானது எதுவென்று தெரியாமலும்.அதன் ரகசியம் என்னவென்று புரியாமலும். இயற்கையுடன் தொடர்பு கொள்ள முடியாமலும். நெருங்க முடியாமலும்.மாயா திரைகளால் ஆன்மா மறைக்கப்பட்டு அருள் பெறமுடியாமல்  நரை திரை பிணி மூப்பு பயம் மரணம் வந்து அழிந்து கொண்டே உள்ளான் மனிதன்.*


*பெரியவர்கள்!*


*இயற்கைக்கும் செயற்கைக்கும் வித்தியாசம் தெரியாமல் நமக்கு வழிகாட்டிய முன்னோர்கள் மற்றும் ஆன்மீகப் பெரியவர்களிடம்.*

*தெய்வத்துக்குக் கை.கால்.முதலியன இருக்குமா ?* *என்று கேள்வி  கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்.* *இது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று  பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும்.*

*உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக்கொண்டு* *(குருடனைப்போல்)

*உளறிக் கொண்டு இருக்கிறார்கள்.*


*ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவன் பூட்டிய அந்தப் பூட்டை (மறைத்ததை) ஒருவரும் திறக்கவரவில்லை.இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை என்கிறார் வள்ளலார்.அதன் உண்மை என்னவென்றால்  அவர்கள்  மறைத்து வைத்து இருந்த பொய்யான பூட்டை நான் உடைத்துவிட்டேன் என்பது பொருளாகும்*

*இனிமேல் இயற்கையான மெய்ப்பொருளை மக்கள் தெரிந்து கொள்வார்கள்*


வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனிக்க வேண்டும் !


உயிர்க் கொலையும் புலை புசிப்பும் ஏன் செய்யக்கூடாது ?


*ஜீவகாருண்யத்திற்கு நேர் விரோதம்!*


*எல்லா ஜீவர்களும் அதாவது உயிர்களும் இயற்கை உண்மை ஏகதேசங்களாகிக் கடவுள் இயற்கை விளக்கமாகிய அருளுக்கு இடமாக இருக்கின்ற படியாலும்.கடவுள் இயற்கை விளக்கம் மறைபடும்போது ஜீவத்தன்மை இல்லாதபடியாலும்.கடவுளின் இயற்கை விளக்கமும்.ஜீவன் இயற்கை விளக்கமும்  ஒன்றோடு ஒன்று மாறுபாடு இல்லாததாலும்.கடவுள் இயற்கை விளக்கமும் ஜீவன் இயற்கை விளக்கமும் அந்தந்தத் தேகங்களிலும் விளங்குகின்ற படியாலும்.*


*ஒரு ஜீவனை வதைத்து அதனால் மற்றொரு ஜீவனுக்குப் பசியாற்றுதல்  ஜீவகாருண்ய ஒழுக்கத்திற்கு முழு விரோதம் என்று அறிய வேண்டும்* 


*உயிர்க்கொலை செய்யக்கூடாது புலால் உண்ணக்கூடாது என்பதற்கு இதைவிட அறிவியல் சார்ந்த உயர்ந்த விளக்கம் உலகில் எவராலும் சொல்ல முடியாது* 


எனவே இயற்கை உண்மையான அழிவில்லாத ஆன்மாக்கள் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு இயற்கை விளக்கமான அருளைப்பெற்று.இயற்கை இன்பத்துடன் வாழ்வாங்கு வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

சனி, 26 மார்ச், 2022

கடவுள் உண்மை !

 *கடவுள் உண்மை !* 


*உயர்ந்த அறிவு பெற்ற மனிதன் இயற்கை உண்மையை அறிய வேண்டும்.இல்லை எனில் அவன் மனித தேகம் எடுத்து எந்தவித பயனும் இல்லை.*


*கடவுள் சத்து நிலையாகவும்.சித்து நிலையாகவும்.ஆனந்த நிலையாகவும் மூன்று விதமாகவும் செயல்பட்டுக்கொண்டு உள்ளார்.*


*இதைத்தான் வள்ளலார் இயற்கை உண்மை என்றும்.இயற்கை விளக்கம் என்றும்.இயற்கை இன்பம்  என்றும் கடவுளின் உண்மையைத் தெளிவு படுத்தி புரிய வைக்கின்றார்.*


*தன்னை வெளிக் காட்டாமல் அகத்தில் நின்று ( ஆன்மா) நிலைத்து ஒளிர்கின்ற நிலை ஒன்று. இதற்கு இயற்கை உண்மை என்று பெயர்.*


*புறத்தில் பலவாய் தோன்றி மறைந்து கொண்டுள்ள சித்து நிலை ஒன்று உள்ளது இதற்கு இயற்கை விளக்கம் என்று பெயர்*


*மேலே கண்ட இரு நிலைகளுக்கும் இடையில் உள் உணர்வாய் இருந்து அறிவாய்  விளங்கி இன்பமாய் அனகமாய் விரிந்து நிலவும்   அனுபவ நிலைக்கே இயற்கை இன்பம் என்று பெயர்*


*இவை மூன்றுமே அருவாய் உருவாய் அருவுருவாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் முழுமைத் தோற்றமாகும்.* 


சத்தி சித்தி(சித்து) வகைகள் !


*கருமசித்தி.யோகசித்தி.ஞானசித்தி என மூன்று வகையான சத்து சித்து நிலைக்கும் மூன்று விதமான தேகமாற்றம் உண்டாகும்.அதாவது சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் போன்ற மாற்றம் அதாவது முத்தேக சித்தி பெற்ற ஆன்மாக்கள் (மனித தேக ஆன்மாக்கள்) பூரண அருள் உருவாய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணமுடியும்.*

( அருள் சித்தை எக்காரணம் கொண்டும் எக்காலத்திலும் விரையம் செய்யாமல் இருக்க வேண்டும்)


*வள்ளலார் அகவல்!*


மூவகைச் சித்தியின் முடிபுகள் முழுவதும்

ஆவகை யெனக்கரு ளருட்பெருஞ் ஜோதி!


மூவிடத் திருமையின் முன்னிய தொழிற்களில்

ஆவிடத் தடக்கு மருட்பெருஞ் ஜோதி!


மூவிட மும்மையின் முன்னிய தொழிற்களில்

ஆவிட மடக்கு மருட்பெருஞ் ஜோதி!


மூவிரு நிலையின் முடி நடு முடிமேல்

ஓவற விளங்கு மொருமை மெய்ப் பொருளே! 


*ஆன்மாவின் பக்திநிலை முக்திநிலை  என்பது சரியை கிரியைச் சார்ந்த கீழ்நிலையாகும். முக்தி என்பது முன்னுறு சாதனம். சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்பார் வள்ளலார்.*

 *கர்மசித்தி.யோகசித்தி.ஞானசித்தி எனும் மூவகை சித்தி நிலைக்கும் தாழ்ந்த தரத்தில் உள்ளது பக்தி முக்தி நிலையாகும்* *நாம் அடைய வேண்டியது பூரண அறிவு அருள் சார்ந்த ஞானசித்தி பெரும்போக நாட்டரசு இயற்கை இன்பமாகும்*


*!ஆன்மா உண்மை அறிய வேண்டும்*


*உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகத்தில் உள்ள ஆன்மாக்கள். மிகவும் தாழ்ந்த  நிலையில் உள்ள சாதி சமயம்  மதம் சார்ந்த புறபக்தி புறமுக்தி கொள்கையில் சிக்கி சிலைவடிவமான தத்துவ உருவக் கடவுள்களை உண்மை என நம்பி. இயற்கை உண்மை மெய்ப்பொருளைஅறிய அடைய முடியாமல். அறிவை இழந்து உண்மை உணர்வை இழந்து. மனம் போன போக்கில் உழன்று உழன்று.சுழன்று சுழன்று அழிந்து கொண்டே உள்ளார்கள்.*


*வள்ளலார் பாடல்!*


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

*பவநெறி* இதுவரை பரவிய திதனால்


*செந்நெறி அறிந்திலர்* *இறந்திறந் துலகோர்*

*செறிஇருள் அடைந்தனர்* ஆதலின் இனி நீ


புன்னெறி தவிர்த்தொரு *பொதுநெறி* எனும்வான்

புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*


தன்னெறி செலுத்துக என்ற என்அரசே

தனிநடராஜ என் சற்குரு மணியே.! 


*உலகின் பொது நெறியான சுத்த சன்மார்க்க நெறி ஒன்றே கடவுள்  உண்மையை அறியும் அருள் நெறியாகும்* *இதுவே வள்ளலார் தோற்றுவித்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" நித்திய பொது தனி நெறியாகும்*


*கடவுளின் உண்மை அறிந்தால் மட்டுமே மனிதன் பூரண அருள் பெற்று ஆன்ம இன்ப லாபமான இம்மை இன்பலாபம்.மறுமை இன்பலாபம்.பேரின்பலாபம் எனும் மூன்று வகையான இன்ப லாபத்தை  அனுபவிக்க முடியும்*


*எனவே  உண்மை ஒழுக்கத்தோடு அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும்போது கடவுளின் சத்துப் பொருளான அருள் வெளிப்பட்டு.இயற்கை உண்மையான சத்து உண்மையும்.இயற்கை விளக்கமான சித்து விளக்கமும் .இயற்கை இன்பமான ஆனந்த அனுபவமும் பெற்று மரணத்தை வென்று கடவுளநிலை அறிந்து அம்மயமாகி வாழ்வாங்கு வாழலாம்* 


*மனிதன்  முதலில் அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் பெறவேண்டும். அதற்கு தடையாய் இருப்பது சாதி சமயம் மதம் சார்ந்த கொள்கைகளாகும்* *அவற்றை விட்டு வெளியே வந்தவர் எவரோ அவரே சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிக்கும் தகுதி பெற்றவராகும்*


*சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்கிறார் வள்ளலார்*


*சாதி சமயச் சழக்கெலாம் அற்றது*

*சன்மார்க்க ஞான சபைநிலை பெற்றது*


*மேதியிற் சாகாத வித்தையைக் கற்றது*

*மெய்யருட் சோதிஎன் உள்ளத்தில் உற்றது!*


*வடலூர் சத்திய ஞானசபை சாதி சமயம் மதம் சாராத பொது வழிப்பாட்டு அமைப்பாகும்*


*சன்மார்க்கம் என்றாலே அருள் பெறும் இடமாகும். சாதி சமயம் மதங்களின் மேல் பற்று வைக்காமல் பற்றிய பற்று அனைத்தையும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப் பற்றை பற்றிக் கொள்ள வேண்டும்.பற்றுகளை அகற்றாதவரையில் அருள் கிட்டாது கடவுள் உண்மையை காண இயலாது* 


*வள்ளலார் பாடல்!*


*உண்மையுரைக் கின்றேன்* இங் குவந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்


எண்மையினான் *எனநினையீர்* *எல்லாஞ்செய் வல்லான்*

*என்னுள்அமர்ந் திசைக்கின்றான்* *இதுகேண்மின் நீவிர்*


தண்மையொடு *சுத்தசிவ சன்மார்க்க நெறியில்*

*சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்*


கண்மைதரும் ஒருபெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு களித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ள வள்ளலார்.* *நீங்களும் என்போல்*

 *சத்திய நித்திய வாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்* *வாருங்கள் என ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையோடு  அழைக்கின்றார் வள்ளலார்* 


வள்ளலார் பாடல்!


*இயற்கைஉண்மை வடிவினரே* அணையவா ரீர்

எல்லாம்செய் வல்லவரே அணையவா ரீர்


*இயற்கைவிளக் கத்தவரே* அணையவா ரீர்

எல்லார்க்கும் நல்லவரே அணையவா ரீர்


*இயற்கைஇன்ப மானவரே* அணையவா ரீர்

இறைமையெலாம் உடையவரே அணையவா ரீர்


*இயற்கைநிறை வானவரே* அணையவா ரீர்

*என்னுடைய நாயகரே* அணையவா ரீர். அணையவா ரீர்!


இயற்கை உண்மை நிலை அறிவோம் உண்மையுடன் வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

சனி, 19 மார்ச், 2022

அருட்பெருஞ்ஜோதியும் வள்ளலாரும்!

 *அருட்பெருஞ்ஜோதியும் வள்ளலாரும்!*


நிதானமாக படிக்கவும்!


*இயற்கை உண்மையாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட இவ்வுலகத்தில் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தை எடுத்த ஆன்மாக்கள் அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும்  இந்த பஞ்சபூத மாயா உலகத்தில் சாதி சமயம் மதங்களில் நாட்டம் கொண்டு. ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளாமலும்.அருள் பெறும் வழிமுறைகள் தெரிந்து கொள்ளாமலும். தெரிய வேண்டியதை தெரிந்து கொள்ளாமலும். சாதி சமயம் மதமான பேய்பிடித்து  போரிட்டு( சண்டையிட்டு) உடலையும் (உடம்பு) உயிரையும் அழித்து கொண்டே உள்ளார்கள்* 


*வள்ளலார் பாடல்!*


பேருற்ற உலகிலுறு சமய மத நெறிஎலாம்

*பேய்ப் பிடிப்புற்ற* பிச்சுப்

பிள்ளை விளை யாட்டென உணர்ந்திடாது உயிர்கள் பல

பேதமுற்று அங்கும் இங்கும்


*போருற்று இறந்து வீண் போயினார்* இன்னும் வீண்

போகாத படிவிரைந்தே

*புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டி*  *மெய்ப்*

*பொருளினை* உணர்த்திஎல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

*என்பிள்ளை ஆதலாலே*

இவ்வேலை புரிக என்றிட்டனம் மனத்தில் வே

றெண்ணற்க என்றகுருவே


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணானந்த பரநாதாந்த வரைஓங்கு

நீதி நட ராஜபதியே.!


என்னும் பாடலில் ஓர் உண்மையைத் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படுத்துகின்றார்.


*உலக மக்கள் அனைவரும் மெய்ப்பொருளை தெரிந்து கொண்டு. சுகநிலை அடைய வேண்டும் என்ற பெரும் நோக்கத்தோடும் பெருங் கருணையோடும்.*

*நீ என் பிள்ளை ஆதலாலே இவ்வேலையை செய்ய வேண்டும் என ஆணையிட்டு வள்ளல்பெருமான் அவர்களை இவ்வுலகிற்கு அனுப்பி வைக்கிறார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.*


*கர்மசித்தர் யோகசித்தர் காலம் கலியுகம்.*  *கலியுகம் முடியும் தருவாயில் உலக உயிர்கள் அனைத்தும் அழிந்துவிடும் சூழல் உண்டாயிற்று. கலியுகம் முடிவதற்கு முன்பே சமரச சுத்த சன்மார்க்க சத்திய யுகத்தை தொடங்கி உயிர்களை காப்பாற்ற வந்தவர் வள்ளலார்* *அதாவது ஞானசித்தர் காலம் என்பதாகும்*


*வள்ளலார் பதிவு செய்துள்ளதை ஊன்றி படித்தால்தான் உண்மையை தெரிந்துகொள்ள முடியும்.!*


*சமரச சுத்த சன்மார்க்க*

*சத்திய ஞானாசாரம்* என்னும் தலைப்பில்  உண்மையை வெளிப்படுத்துகிறார்!


*இதுவரையில் கர்ம சித்தருடைய காலம் அதனால் சமயங்களும், மதங்களும் பரவி இருந்தன, இப்போது வரப்போகிறது ஞான சித்தருடைய காலம். இனி ஜாதி, சமய, மதம், முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே  விளங்கும்.*


*சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்கள், மூர்த்திகள், ஈஸ்வரன், பிரம்மன், சிவம், முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்க்கு மேல் இருக்காது.*


*சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்களுடைய சித்திகள் சர்வ சித்திகளையுடைய கடவுளின் சித்தியின் லேசங்கள் அதாவது (சிறிய துகள்கள்). அந்த சர்வ சித்திகளுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள். கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.*


*இப்போது இருக்கும் வேதாகமங்கள் புராணங்களிலும் சமய மதங்களிலும் லட்சியம் வைக்காதீர்கள். வைத்தால் சமரச சுத்த சன்மார்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது. வராவிட்டால் நீங்கள் அடையப்போகிறது ஒன்றும் இல்லை. ஆதலால், அவைகளையெல்லாம் பற்றற விட்டு சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் ஒருவரே அருட்பெரும் ஜோதியர் என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்ய வேண்டும் என்று அழுத்தமாக சொல்லுகிறார்* 


**தன்னுள் இருந்து இயங்கும் இயக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியவாறு உண்மையை  வெளிப் படுத்தியவர் வள்ளலார்.*


*உலக உயிர்களை காப்பாற்ற வேண்டும் என்ற பொறுப்புடன் வருவிக்க உற்ற ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே!* என்ற உண்மையை உலக மக்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை என்பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிய என்று இட்டனன் என்கிறார். அதன் உண்மை யாதெனில்?* 


*இதுவரையில் உலகில் தோன்றிய  ஞானிகள் எவரும் இதுவரையில்* *மக்களை நல்வழியில் கொண்டு செல்லவில்லை.*

*ஆதலால் பூரண அருள் பெற்ற* *பக்குமுள்ள ஆன்மாவை *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* *சம்பு பட்சம்*  *என்ற வகையில். வாக்கால் சொன்னவுடன்  சின்னம்மை வயிற்றில் கருவை உருவாக்கி  நேரிடையாக வருவிக்க உற்றவர் வள்ளல்பெருமான் ஆவார்கள்*


*கருவிலே கலந்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*வள்ளல்பெருமான் அவர்களுக்கு கருவிலே அருள் நிறைந்து கலந்து விட்டதால் உலக ரகசியங்கள் யாவும் பட்டநடுப் பகல் போல் வெட்ட வெளிச்சமாகத் தெரியும்.*


*வள்ளலார் பாடல்!*


*கருவிற் கலந்த துணையே* என் கனிவில் கலந்த *அமுதே* என்

கண்ணிற் கலந்த ஒளியே என் கருத்திற் கலந்த களிப்பே என்


உருவிற் கலந்த அழகே ! என் உயிரிற் கலந்த உறவே! என்

உணர்விற் கலந்த சுகமே! என் னுடைய ஒருமைப் பெருமானே!


*தெருவிற் கலந்து விளையாடுஞ் சிறியேன் தனக்கே* *மெய்ஞ்ஞான*

*சித்தி அளித்த* *பெருங்கருணைத் தேவே*  உலகத் திரளெல்லாம்


மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே

வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் *கருணை* வலத்தாலே.! 

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அளித்த அருள் கொடையால். தனிப்பெருங் கருணையால் வருவிக்க உற்ற விளக்கத்தை  மேலே கண்ட பாடலில் வாயே பறையாய் அறைகின்றேன் என்று தெளிவாக பதிவு செய்கிறார்*


ஐந்து மாதக் குழந்தையாய் இருக்கும்போதே *சிதம்பரம்* தில்லையில் *சிதம்பர ரகசியமாய்* மறைத்து வைத்திருந்த உண்மையை திரையை விளக்கி காட்டியபோது *மெய்ப்பொருளை* வெளிப்படையாக கண்டவர் வள்ளலார்.


*ஐந்து மாதக் குழந்தையாக இருந்தபோது தான் கண்ட காட்சியை தன்னுடைய  47 ஆவது வயதில் ஆறாம் திருமுறையில் அருள்விளக்க மாலை பாடலில் பதிவு செய்கிறார்*


*வள்ளலார் பாடல்!*


தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் *தில்லைத்*

*தலத்திடையே* திரைதூக்கத் தரிசித்த போது


வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே *எல்லாம்*

*வெளியாகக்* காட்டியஎன் மெய்உறவாம் பொருளே


காய்வகை இல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே


தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்

சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.!


*வள்ளலார் வேறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறு அல்ல இருவரும் ஒருவரே* அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார் உருவில் வந்து உண்மையை தெரிவிக்கிறார்.

எனவேதான் *நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்கிறார்.*


*வள்ளலாருக்கும் மற்ற ஞானிகளுக்கும் எந்த தொடர்பு இல்லை* *வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்டத்தின் மறபில் வந்தவர் அல்ல.சிறு வயது முதலே அனைத்தும் திருவருளால் அறிந்தவர்* 


வள்ளலாரே சொல்லுகிறார்!


*அச்சிறு பருவத்திற்றானே ஜாதிஆசாரம். ஆசிரம்ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தைப் பொய்யென்றறிவித்து அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும் எனது அறிவை விளக்கஞ் செய்து செய்து என்னை மேல்நிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத் தருளினீர்.*


*வாலிபப் பருவம் அடுக்குந் தருணத்திற்றானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலையெடுக்க வொட்டாது அடக்குவித்தருளினீர்.*


*அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.*


 *வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும், அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.*


*அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் "சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து" அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்.*


*அங்ஙனம் செய்வித்ததுமன்றி, உலகியற்கண் பொன்விஷய இச்சை. பெண்விஷய இச்சை. மண்விஷய இச்சை முதலிய எவ்விஷய இச்சைகளிலும் என் அறிவை ஓரணுத்துணையும் பற்றுவிக்காமல் எல்லா உயிர்களையும் பொதுமையில் நோக்கி எல்லா "உயிர்களும் இன்பமடைதல்" வேண்டுமென்னும் கருணை நன்முயற்சியைப் பெறுவித்துச் சுத்த "சன்மார்க்கத் தனிநெறி ஒன்றையே" பற்றுவித்து எக்காலத்தும் நாசமடையாத சுத்ததேகம் பிரணவதேகம் ஞானதேகம் என்னும் சாகாக் கலானுப தேகங்களும்,*


*தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் கடவுள் ஒருவரே என்றும் அறிகின்ற உண்மை ஞானமும்*


 *கருமசித்தி யோகசித்தி ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெருகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்பப் பெருவாழ்வில் என்னை அடைவிப்பதற்குத் திருவுளங்கொண்டு அருட்பொருஞ்ஜோதியராகி நான் எவ்விதத்தும் அறிதற்கரிய "உண்மைப் பேரறிவை அறிவித்தும்," நான்  எவ்விதத்தும் காண்பதற்கரிய உண்மைப் பெருஞ் செயல்களைச் செய்வித்தும், நான் எவ்விடத்தும் அனுபவித்தற்கரிய உண்மைப் பேரனுபவங்களை அனுபவிப்பித்தும் எனது அகத்தினும் புறத்தினும் இடைவிடாது காத்தருளி எனது உள்ளத்திருந்து உயிரிற்கலந்து பெருந்தயவால் திருநடஞ்செய்தருளுகின்றீர்*.


*இங்ஙனஞ் செய்தருள்கின்ற தேவரீரது திருவருட் பெருங்கருணைத் திறத்தை என்னென்று கருதி என்னென்று துதிப்பேன்!*


*என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மையும் தன்னை இவ்வுலகத்திற்கு அனுப்பிய விளக்கத்தையும் தெரியப்படுத்துகிறார்.*


தெரிந்து கொள்வோம் தெளிவடைவோம்


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

திங்கள், 7 மார்ச், 2022

குடும்ப கோரம் !

 வள்ளலார் சொன்ன ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய

மூன்று மனைவிகள் கதை


திருவருட்பிரகாச வள்ளலார் இயற்றிய குடும்பக் கோரம் என்னும் பாடல் இந்தக் கதையை நமக்கு உணர்த்துகிறது. 


குடும்பக் கோரம் யாருக்காக எழுதப்பட்டது என்றால் முத்துசாமி என்பவர் தன் திருணமத்திற்கு திருவருட்பிரகாச வள்ளலாரை அழைத்திருந்தார். 


வள்ளற்பெருமான் திருமணத்திற்கு செல்லவில்லை. 


வள்ளற்பெருமான் வராததை எண்ணி வருத்தம் கொண்டார் முத்துசாமி அவர்கள். 


அவர் வருந்துவதை உணர்ந்த வள்ளற்பெருமான் தன்னுடைய மூன்று மனைவிகள் 

8 பிள்ளைகள் படுத்தும் பாட்டால் திருமணத்திற்கு வரஇயலவில்லை என்று குறிப்பிட்டு பாடல் வடிவில் 

ஒரு கடிதம் எழுதுகிறார். 


அந்தப் பாடல்களே குடும்பக்கோரம். 


மனிதனாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்ட மிக உயர்ந்த உபதேசம் இது. 


தத்துவக் குடும்பத்தில் அகப்பட்டுத் தடுமாறும் கோர நிலையைக் கூறுவதாதலின் இது குடும்பகோரம் எனப்பெயர் பெற்றது. 


வள்ளலார் சொன்ன இந்தக் கதையை உங்களால் உணர்ந்துகொள்ள முடிந்தால் நீங்களே ஞானதேகம் பெற தகுதியுடையவர்கள்.


நூலின் அமைப்பு:


நானூற்று பன்னிரெண்டு(412)

அடிகளையுடைய நிலைமண்டில ஆசிரியப்பாவால் செய்யப்பெற்ற 

அத்திருமுகச் செய்யுள் 

*குடும்ப கோரம்*என்று 

பெயர் பெற்றது. 


(வள்ளற்பெருமானார் இளமையில் சென்னையிலிருந்த காலத்தில் இயற்றியது குடும்பகோஷம்).


நூலின் உட்கருத்து:


குடும்பகோரத்தில் பெருமான் தமது தத்துவக் குடும்பத்தின் சேட்டைகளை அழகாக விரித்துரைக்கின்றார்.


குடும்பத் தலைவன் பெயர் - ஏழை


அவனுக்கு மூன்று மனைவிகள்:


முதல் மனைவி - ஆணவம்


இரண்டாம் மனைவி - மாயை


மூன்றாம் மனைவி - கன்மம்.


முதல் மனைவியாகிய ஆணவத்திற்கு ஒரே மகன் - அவன் பெயர் அஞ்ஞானம்.


இரண்டாம் மனைவியாகிய மாயைக்கு நான்கு பிள்ளைகள் - 1. மனம், 2. புத்தி, 3.சித்தம், 4.அகங்காரம்.


மூன்றாம் மனைவியாகிய கன்மத்திற்கு மூன்று பிள்ளைகள் - 1.சத்துவம், 2.இராசசம், 3.தாமசம்


மூன்று மனைவியரோடும், எட்டுப்பிள்ளைகளோடும் ஏழைத்தலைவன் வாழ்வதோ வாடகை வீட்டில்.


வாடகை வீடோ ஒருவர்க்குச் சொந்தமானதன்று. 


மூவர்க்குச் சொந்தமானது. அம்மூவர் 1. வாதம், 2.பித்தம், 

3. சிலேத்துமம் என்போர்.


வீட்டு வாடகையும் மாதவாடகையன்று, நாள் வாடகை. வீட்டுக்காரர்கள் மூவரும் அன்றைக்கன்றே வாடகையை வசூலிக்கின்றனர். (வீடு - உடம்பு, வாடகை - உணவு).


இவ்வாறு துன்புறும் குடும்பத்தலைவனுக்கு எத்தனையோ வெளி விவகாரம்; உள்விவகாரம்.


வேதாந்தம் பேச வருவோர்,சித்தாந்தம் பேச வருவோர், இதிகாசம் கூற வருவோர், இலக்கணம் இயம்ப வருவோர், மத தூஷணம் செய்ய வருவோர், விவகாரம் பேச வருவோர், வீண் கதை 

பேச வருவோர், இப்படி எத்தனையோ வெளிவிவகாரங்கள்.


மலங்கழித்தல், பல்துலக்குதல், ஆடை துவைத்தல், நீராடல், சிவசின்னமணிதல், பூசனை, யோகம் என எத்தனையோ உள்விவகாரங்கள்.


இத்தனை விவகாரங்களுக்கும் பகற் பொழுது சரியாய்ப் போகிறது. 


இரவு வந்தது, 

இனிப் பரத்தை வீட்டுக்குச் செல்ல வேண்டும்.


பரத்தை யார்? நித்திரை. 


"நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும் பொழுதுஞ் சரியாய்ப் போகின்றதுவே" என்று வள்ளலாரின் குடும்ப கோரம் நிறைவு பெருகின்றது:


நூற்பெயர் காரணம்:


தத்துவக் குடும்பத்தில் அகப்பட்டுத் தடுமாறும் கோர நிலையைக் கூறுவதாதலின் இது குடும்ப கோரம் 

எனப்பெயர் பெற்றது.


வள்ளல் பெருமானுக்கு குடும்ப கோரமா?:


உண்மையில் வள்ளற் பெருமானின் குடும்பம் இதன்று.்"இது நம் குடும்பமாகும்".


பெருமானின் குடும்பத்திலோ:


மனைவி - நிராசை.


புதல்வன் - சாந்தம்.


பொருள் - உதாரகுணம்.


நண்பர்கள் - அறிவு, நிராங்காரம்.


ஏவல் - சுத்தமனம்,


இருப்பிடம்(வீடு) - சகலகேவலமற்ற இடம்


நிலைஉறும் நிராசையாம் உயர்குலப் பெண்டிரொடு

நிகழ்சாந்த மாம்புதல்வனும்

நெறிபெறும் உதாரகுணம் என்னும்நற் பொருளும்மருள்

நீக்கும்அறி வாம்துணைவனும்

மலைவறு நிராங்கார நண்பனும் சுத்தமுறு

மனம்என்னும் நல்ஏவலும்

வருசகல கேவலம் இலாத

இடமும்பெற்று வாழ்கின்ற வாழ்வருளுவாய்

அலைஇலாச் சிவஞான வாரியே ஆனந்த

அமுதமே குமுதமலர்வாய்

அணிகொள்பொற் கொடிபசுங் கொடிஇரு புறம்படர்ந்

தழகுபெற வருபொன்மலையே

தலைவர்புகழ் சென்னையில் கந்தகோட் டத்துள்வளர்

தலம்ஓங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி

சண்முகத் தெய்வமணியே.


இவ்வாறு அருளியற் குடும்ப மியற்றும் வள்ளற் பெருமான் நம் போன்றோர் செய்யும் உலகியற் குடும்பத்தின் கோரங்களைத் தம்மீதேற்றிக் கூறி இத்தடைகளால் திருமணத்திற்கு வரவில்லை என முத்துசாமி அவர்களுக்குஇக்குடும்ப கோரத்தை வரைத்து விடுத்தனர்.


குடும்ப கோரம் பதிப்பிக்கபட்ட பின்னனி:


பெருமானிடமிருந்து குடும்பகோரக் கடிதத்தை முத்துசாமியிடம் கொண்டு சென்றவர் கொந்தமூர் வரதாசாரியார்.


முத்துசாமி இவ்வகவலை மனப்பாடஞ் செய்து வைத்திருந்தார். 


மனப்பாடமாக அவர் சொல்லக் கேட்டதனை மோசூர் கந்தசாமி அவர்கள் எழுதி வைத்தார், 


அது சித்தந்த சரபம் கலியாண சுந்தரனார்(அட்டாவதானம் பூவை கலியான சுந்தரனார்)

பார்வையிடப் பெற்று, காஞ்சி நாகலிங்கனார் நடத்தி வந்த தொழிற்கல்வி இதழில் 1914 ஜூலை(ஆனந்த, ஆடி தொகுதி 1, பகுதி 4)ஒரு பாதியும். ஆகஸ்டு (ஆவணி, தொகுதி 1, பகுதி 5)இதழில் மறுபாதியுமாக வெளிவந்தது.


நூல் சிறப்பு:


இன்று அனைத்து திருஅருட்பா பதிப்புகளிலும் குடும்ப கோரம் பிற்சேர்க்கை பகுதியில் உள்ளது, 


தமிழ் இலக்கியத்தில் இதுவே மிக நீண்ட செய்யுள் கடிதம் ஆகும். 


இதை ஒருமுறை படித்தால் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் சிறப்பினை உடையது, 


பெருமானாரின் கவி நயத்திற்கு இது ஒரு உதாரணம். தத்துவ குடும்ப கோரத்தை பெருமான் மிகவும் நகைச்சுவையாகவும், எளிமையாகவும் விளக்கி உள்ளார்கள்.

ஞாயிறு, 6 மார்ச், 2022

பாவம் புண்ணியம்!

 **பாவம் புண்ணியம் !* 


*பாவம் புண்ணியம் என்பது நம் ஆன்மாவில் எவ்வாறு பதிவாகிறது என்பதை வள்ளலார் மிகவும் தெளிவாகச் சொல்லுகிறார்.*


*மனம். வாக்கு. காயம்(செயலால்) என்னும் மூன்றினாலும் பாவம் புண்ணியம் நம் ஆன்மாவில் பதிவாகின்றது*


*நாம் செய்யும் பாவம் அதிகமானால் துன்பம் வருகிறது.புண்ணியம் அதிகமானால் இன்பம் (மகிழ்ச்சி )வருகிறது.*


*மனிதன் அறிந்தோ  அறியாமலோ* தெரிந்தோ தெரியாமலோ 

*உயிர்களுக்கு  துன்பம்.துயரம்.அச்சம்.பயம்.பசி போன்ற துன்பங்களை உண்டாக்குவதால் எதிர்வினையாக திரும்பவும் தன் ஆன்மாவில்  எதிர் அலைகளாக வந்து பதிவாகிறது.அதுவே பாவம் என்பதாகும். அந்த பாவமே இறுதியில் நரை திரை பிணி மூப்பு பயம் துன்பம் மரணம் வந்து சேருகிறது.*.


*இதைத்தான் வள்ளலார் தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் என்கிறார்*


*உயிர்களின் துன்பத்தை அறிந்து.அத் துன்பத்தை போக்குவதற்கு செய்யும் தொடர்  ஜீவகாருண்ய  செயலால் ( உயிர் இரக்கத்தால் ).அறியாமல் செய்து சேர்த்து வைத்துள்ள பாவத்தை  (துன்பத்தை) நீக்கி புண்ணியத்தை சம்பாதித்து நரை திரை பிணி மூப்பு பயம் துன்பம்  மரணம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்* *இதுவே ஜீவகாருண்ய வல்லபம்.*


*மனிதன் உயிர்களுக்கு துன்பம் தருவதே பாவமாகவும் தீவினையாகவும் ஆன்மாவில் துன்ப அலைகளாக பதிவாகிறது. இறுதியில் அப்பதிவே  துன்பத்தை  உண்டாக்குகிறது*


*ஆன்மாவில் பதிவாகிய அத்துன்பத்தை போக்குவதற்கு அகற்றுவதற்கு. ஒரேவழி.*!

*பசி. பிணி. தாகம்.

இச்சை. எளிமை. பயம். கொலை போன்ற* *துன்பங்களால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ( உயிர்களுக்கு) அத்துன்பத்தில் இருந்து விடுவிப்பதே ஜீவகாருண்யம். பாவத்தை நீக்கி புண்ணியத்தை சேர்க்கும் சிறந்த வழியே  ( தருமச்சாலை ) என்பதாகும்.*


*வள்ளலார் எழுதிய ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற தலைப்பில் மிகவும் தெளிவாக எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம்  அழகு தமிழில் நன்மைதரும் வகையில் எழுதி பதிவு செய்துள்ளார். அவற்றை பலமுறை படித்து தெரிந்து கொண்டு ஒவ்வொருவரும் வாழ்க்கையில்  பின்பற்றினால் எல்லா பாவங்களும் விலகிவிடும். மேலும் புண்ணியத்தை  சேர்த்து  மரணத்தை வென்று   மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்.*


*ஜீவகாருண்ய முதற்பதிப்பில் வள்ளலார் தெளிவாக சொல்லியுள்ளார்*!


*ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு!*

 *உலகத்தில் மனிதப்பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்ம லாபத்தைக் காலமுள்ள போதே அறிந்து அடையவேண்டும்.*


*அந்த ஆன்மலாபம் எதுவென்று அறியவேண்டில்:?* 


*எல்லா அண்டங்களையும், எல்லாப் புவனங்களையும், எல்லாப் பொருள்களையும், எல்லாச் சீவர்களையும், எல்லா ஒழுக்கங்களையும், எல்லாப் பயன்களையுந் தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற இயற்கை உண்மை வடிவினராகிய அருட்பெருஞ்ஜோதி கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று*


*எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும், எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரியவாழ்வே இந்த மனிதப் பிறப்பினால் அடையத்தக்க ஆன்மலாபம் என்று உண்மையாக அறியவேண்டும்.*


*இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்த ஒப்பற்ற பெரியவாழ்வை எதனால் அடையக்கூடும் என்று அறியவேண்டில்:-?* 


*கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடையக்கூடும் என்றறிய வேண்டும்.*


*கடவுளின் இயற்கைவிளக்கமாகிய அருளை எதனாற் பெறக்கூடுமென்று அறியவேண்டில்:-?*


 *சீவகாருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக்கூடும் அல்லது வேறெந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.*


*கடவுள் அருளைச் சீவகாருணிய ஒழுக்கத்தினால் பெறக் கூடுமல்லது வேறெந்த வழியாலும் பெறக்கூடாது என்பது எப்படி என்னில்:-?*


*அருளென்பது கடவுள் தயவு, கடவுளியற்கை விளக்கம்.* 


*சீவகாருணிய மென்பது சீவர்கள் தயவு, சீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்*. 


*அதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும் விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலுங் கூடும்.* 


*அதாவது சிறிய வெளிச்சைக் கொண்டு பெரிய வெளிச்சத்தை உண்டாக்குவதுபோல்.ஆன்மாவின் சிறிய தயவைக்கொண்டு கடவுளின் பெரிய தயவைப் (அருள்) பெறுதல் வேண்டும்.*


*வேறொன்றினால் பெறக்கூடாமை அனுபவமாகலின், சீவகாருணியத்தைக் கொண்டு அருளைப் பெறுதல் கூடும்; வேறொன்றினாலும் பெறக்கூடாமை நிச்சயம். இதற்கு வேறு பிரமாணம் வேண்டாமென்றறிய வேண்டும்.*


*அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், அவற்றிற்கு "ஞான வழி என்பதும்" "சன்மார்க்கம் என்பதும்" "சீவகாருணிய ஒழுக்கம் என்றும்,*" சொல்லப்படும்.


*அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கம் இல்லாமை என்றும் அறியப்படும்.*


 *சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்;* *அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும்.*


 *சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளும் துன்பங்களும் தோன்றும்.*


 *ஆகலின் புண்ணிய மென்பது சீவ காருணியம்  ஒன்றே என்றும், பாவமென்பது சீவகாருணியம்  இல்லாமை ஒன்றே என்றும் அறியப்படும்.*


*வள்ளலார் பாடல் !*


கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்


மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்


இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்


தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.! 


என்னும் பாடலில் தெளிவுப் படுத்துகின்றார்.


*கருணை வேறு கடவுள் வேறு அல்ல என்பதை உணர்ந்தவர் வள்ளலார்.*

*அதனால் ஜீவகாருண்யம் என்னும் அன்பு தயவு இரக்கம் என்னும் மூன்றும் கலந்ததே கருணை என்பதாகும். கருணையால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை என்னும் அருளைப் பெற்று புண்ணியத்தை பூரணமாக பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்*.


 *கருணையுடன் வாழ்வதே ஆன்மலாபம்  என்று அறிய வேண்டும்*


**சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும்,*

 *இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.*


*கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆதலே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்*

*அதுவே முத்தேக சித்தி என்பதாகும்.பேரின்ப சித்தி்ப்  பெருவாழ்வு என்பதாகும்*


*மனித வாழ்க்கைக்கு இதைவிட ஒரு சிறந்த விளக்கம் எவராலும் சொல்ல முடியாது.*


*வள்ளலார் எழுதியுள்ள ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் நூலை பலமுறை படித்து அதில் உள்ளவாறு* *ஒவ்வொருவரும் வாழ்க்கையில் கடைபிடித்தாலே போதும்* சாதி சமயம் மதம் என்ற  *வேற்றுமை இல்லாத ஒருமைப்பாட்டு  உலகத்தை காணலாம்.*


*உலகப்போர் ( சண்டை ) இல்லாத உயிர்களுக்கு ஆபத்து இல்லாமல். பயம் இல்லாமல். சமாதானத்துடன் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியுடன் வாழலாம்*


 *எல்லோரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழலாம்*

*எல்லா உலகும் அமைதி பூங்காவாக திகழும் என்பது சத்தியம்* 


*நல்லோர் நினைத்த நலம் பெறுக ! எல்லோரும் வாழ்க இசைந்து*!*


*நல்லதை செய்வோம் நலமுடன் வாழ்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

வெள்ளி, 4 மார்ச், 2022

இந்தியாவின் கண்டுபிடிப்புக்கள்!

 இந்தியாவுக்கு மட்டுமான கண்டுபிடிப்பாளர்கள் பார்பனர்கள்..!!!


இவர்கள் கண்டுபிடிப்பவை எல்லாம் இந்தியாவுக்கும் இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமானவை! மற்றநாடுகள் இந்த கண்டுபிடிப்புகளுக்கு எந்தவகையிலும் சொந்தங்கொண்டாட முடியாது!


அர்ச்சனை செய்தால் வேலை கிடைக்கும்


அபிஷேகம் செய்தால் மாப்பிள்ளை கிடைக்கும்


கும்பாபிஷேகம் செய்தால் மழை பெய்யும்


தீபாராதனை செய்தால் நல்ல பெண்கிடைக்கும்


ஹோமம் செய்தால் செல்வம் பெருகும்


யாகம் செய்தால் பதவி கிடைக்கும்


அங்கப்பிரதட்சணம் செய்தால் நோய்தீரும்


சகஸ்ரநாமம் சொன்னால் படிப்பு வரும்


ராமநாமம் சொன்னால் தைரியம் வரும்


கோயிலுக்குப்போனால் பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்து நிம்மதி வந்து மனநோய் தீரும்


மூத்திரம் கேன்சரை குணப்படுத்தும்


சாணி தொற்றுநோயை விரட்டும்


மண்சோறு தின்றால் குழந்தைபிறக்கும்


திருநீறு ஜலதோஷத்தை போக்கும்


ஓம் சொன்னால் காஸ்மிக் எனர்ஜி கிடைக்கும்


யாகம் செய்தால் ஆபத்துகள் போய்விடும்


கைதட்டினால் கோவிட் 19 வைரஸ் பயந்து ஓடிவிடும்


விளக்குபிடித்தால் கொரோனிவைரஸ் தற்கொலைசெய்து செத்துப்போயிடும்


வேதம் ஓதினால் வாயிலிருந்து பிறக்கமுடியும்


தோள்,மார்பு, கால்களில்கூட யோனி முளைக்கும்


பூமியை பாயாக சுருட்டி தூக்கிட்டுப்போக முடியும்


பாம்புகள் பால்குடிக்கும்


குடிக்கிற பாயாசம் நேராக கர்ப்பப்பையை அடைந்து குழந்தைப்பேறை தரும்


திருநள்ளாறு கோபுரத்துக்கு நேர்மேலாக ரேடியோ அலைகள் செல்லாது


ஆணுக்கும் ஆணுக்கும் குழந்தை பிறப்பது


யானைத்தலையை மனிதவுடலில் இணைப்பது


சூரியனுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் டெக்னிக்


மான்கள் மனிதக்குட்டி போடுவது


அக்கினி சட்டியிலிருந்து மனிதர்கள் பிறப்பது


அறுபதாயிரம் வருடங்கள் வாழ்வது


குதிரைகள் மனிதர்களை திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்கிற டெக்னிக்


யானையை சுமக்கிற அளவுக்கு பெரிய எலியை வளர்ப்பது


நட்சத்திரங்களை கோள்களாக மாற்றும் பயங்கர ஜோசிய டெக்னிக்குகள்


முதுகில் தடவினால் கோடுவிழும் டெக்னிக்


குரங்குகள் மலையை தூக்கிக்கொண்டு பறக்கும் டெக்னிக்


வாய்க்குள்ளே பிரபஞ்சத்தை காட்டுகிற டெக்னிக்


யாகம் செய்து மழைபெய்விக்கிற டெக்னிக்


யக்ஞம் செய்து எதிரிநாடுகளை அழிக்கிற நவீன தொழில்நுட்பம்


இன்னும் சொல்லமுடியாத அளவுக்கு பல விஞ்ஞான கண்டுபிடிப்புகளை இந்தியாவுக்குள் மட்டும் பயன்படுத்திக்கொள்கிற வகையில் கண்டுபிடித்து தந்தவர்கள் பயங்கரமான மூளையில் பலகீனமுள்ள பிராமணர்கள் மட்டுமே....!!!


💐💐💐

வியாழன், 3 மார்ச், 2022

வழிபாடு என்றால் என்ன ?

 *வழிபாடு என்றால் என்ன ?*


*உயிர் இனங்களில் மனித குலத்தை தவிர வேறு எந்த ஜீவராசிகளும் கடவுளை நினைப்பதும் இல்லை வேண்டுவதும் இல்லை வழிபாடு செய்வதும் இல்லை.* 


*மனிதன் மட்டும் பல கடவுள்களை மனிதனே படைத்து   அக் கடவுளுக்கான இடங்களை தேர்வு செய்து.* *கோயில்களாகவும்* *ஆலயங்களாகவும்* *மசூதிகளாகவும்*

*பிரமிடுகளாகவும்* மற்றும்

*பல பெயர்களில் பல  கட்டிடங்களை எழுப்பி.உண்மைக்கு புறம்பான கடவுள்களை தோற்றுவித்து* *அக் கடவுள்களுக்கு பல பெயர்கொண்ட தெய்வங்களை சிற்ப சிலைகளாக பல பல உருவங்களாக அருவங்களாக உருவ அருவங்களாக செய்து வைத்து அக் கடவுள்களின் பெயரால் பல பல தத்துவப் பாடல்கள் இயற்றியும் மந்திரங்களை உண்டாக்கியும் அபிஷேகம் ஆராதனைகளும்மற்றும் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.தோத்திரங்களும்  செய்து வணங்கி வழிபாடு செய்து வருகிறார்கள்*


*மனிதன் கடவுளை வணங்க வேண்டிய அவசியம் ஏன்!*


*இவ்வுலகில் தவறான வழிகளில் பொருள் ஈட்டுபவர்களும்.*

*ஒழுக்கம் இல்லாதவர்களும்*. *பல உயிர்களுக்கு பல சமயங்களில் துன்பம் செய்பவர்களும் பல வழிகளில் குற்றம் செய்பவர்களுக்கும் துன்பம் துயரம் அச்சம் பயம் பிணி மரணம் போன்ற தீராத துன்பங்கள் வருகின்றது.* 


*அக் குற்றங்களில் இருந்தும் துன்பங்களில் இருந்தும்  தங்களை விடுவிக்க வேண்டும் என்றும் கடவுளிடம் சென்று  வேண்டுகிறார்கள் வழிபடுகிறார்கள்*.*மேலும் தன் குடும்பமும் தங்களைச் சார்ந்தவர்கள் மட்டும்  வசதியாகவும் வளமுடனும் வாழ வேண்டும் என்று சுயநல நோக்கத்தோடும் பல வகைகளில் காணிக்கை செலுத்தி வழிபடுகிறார்கள்மேலும் கடவுளிடம் அதை செய்கிறோம் இதை செய்கிறோம் என்று பேரம் பேசுகிறார்கள்.*

*இதுபோலவே  பலநூறு ஆண்டுகளாக கடவுளிடம் வழிபாடாக  எண்ணி வழிபடுகிறார்கள்*.


*எல்லா உயிர் இனங்களும் தோன்றுகின்றன வாழ்க்கையில் ஏற்படும் துன்பம். துயரம்.அச்சம் பயம். பிணி மூப்பு அடைந்து இறுதியாக மரணம் வந்து மாண்டு போகின்றன.* 


*அதேபோல் மனிதனும் பிறக்கிறான் வாழ்க்கையில் துன்பம் துயரம் அச்சம் பயம் நரை திரை பிணி மூப்பு உண்டாகி இறுதியில் உடம்பைவிட்டு  ஆன்மா உயிர் பிரிந்து மரணம் வந்து மாண்டுபோகின்றான்*.


*எல்லா உயிர் இனங்களுக்கும் மரணம் பொதுவானதா ? மரணம் அடைந்தால் உடம்பை விட்டுவிட்டு ஆன்மா உயிர் எங்கே? செல்கிறது.*

*அதே ஆன்மா உயிர் உடம்பிற்குள் எவ்வாறு வந்தது ? மரணம் அடைந்தால் மீண்டும் பிறப்பு எடுக்கின்றதா ? அப்படியே மீண்டும் பிறப்பு எடுத்தாலும் எந்த எந்த ? பிறப்பு எடுக்கின்றது.* *என்ற கேள்வி மனிதனுக்கு மட்டுமே தோன்றியது.* *மேலும் சிந்திப்பது செயல்படுவது தெரிந்து கொள்வது புரிந்து கொள்வது பேசுவது கொடுப்பது.வாங்குவது.சேமிப்பது  போன்ற எல்லாவற்றையும் அறிந்து கொள்ளவும். தெரிந்துகொள்ளவும் அறிவு வழங்கப்பட்டுள்ளது.*


*அதனால் மனிதர்களுக்கு உயர்ந்த அறிவு பெற்றவர்கள்  என்ற பெயர் மனிதர்களால் சூட்டப்பட்டது.* 


*அதிலும் சிறந்த உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்களின் ஆன்ம அறிவில் தோன்றியதுதான் கடவுள் கொள்கையாகும*

*ஆன்மாக்களையும் உயிர்களையும் உடம்பையும் மற்றும் பஞ்ச பூத உலகங்களையும்.கிரகங்களையும் படைத்தவர்  ஆதிபகவன் என்றும். கடவுள் என்றும். இறைவன் என்றும்.அல்லா என்றும்.பரமபிதா என்றும் ஆண்டவர் என்றும் பல பல பெயர்கள் பல அறிவாளிகளால்(அருளாளர்களால்) சூட்டப்பட்டதாகும்.*


*மனித குலத்தின் நன்மைக்காகவும்.அடுத்து மனிதன் துன்பம் துயரம் அச்சம் பயம் நரை திரை பிணி மூப்பு மரணம் வராமல் பாதுகாத்து கொள்ள வேண்டும். அதற்காக நம்மை படைத்த இறைவனை தொடர்பு கொள்வதே சிறந்த வழியாகும் என நினைந்துதான் கடவுள் கொள்கையை அருளாளர்கள் உண்டாக்கினார்கள்* *கடவுளால்தான் எல்லா துன்பங்களில் இருந்தும் பாதுகாக்க முடியும். என்ற உண்மையை அறிந்து கொண்டார்கள்*


*அந்த அருளாளர்கள்  ஒரே கடவுள் ஓரே கொள்கையைச்  சொல்லாமல் பலப்பல கடவுள்களின் பெயர்களைச் சொல்லியும் பலப்பல கொள்கைகளைச் சொல்லியும் பல பல வழிமுறைகளைச் சொல்லியும் மக்களை பிரித்து வைத்து விட்டார்கள்* 


*விரிக்காமல் சுருக்கமாக சொல்கிறேன்!*


*அதுவே பல மதங்களாக பல சமயங்களாக பல சாதிகளாக மக்களை பிளவுபடுத்தி விட்டன*. *ஏதும் அறியாத அப்பாவி மக்கள் உண்மையான கடவுளைத் தெரிந்து கொள்ள வழித் தெரியாமல் மதங்களைப் படைத்தவர்களையும்.அவர்கள் காட்டிய தத்துவ சிற்பங்களையும். அவர்களது கொள்கைகளையும் கடவுளாக நினைந்து வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.*


*வள்ளலார் பாடல்!*


பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற *சுத்தசன் மார்க்கத்*


தன்னெறி செலுத்துக  என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


*உலகம் முழுவதும் பலவகையான மதங்களும்  சமயங்களுமான பொய்நெறிகள் தோன்றியதால்.* *கடவுளின் உண்மைநெறி எதுவென்று தெரியாததால் மக்கள் இறந்து இறந்து வீண்போய் கொண்டு உள்ளார்கள்.*

*ஆதலால் பொய்நெறியை அகற்றி* *எல்லோரும் நன்மைஅடையும் பொருட்டு ஒரு பொது நெறியை தோற்றுவித்து மக்களைக் காப்பாற்ற வேண்டு என்று* 


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணை யோடு வள்ளலாரைத் தேர்வு செய்து (பக்குவ ஆன்மா) இவ்வுலகிற்கு அனுப்பி வைத்து உள்ளார்*  


மேலும் ஒருபாடலில் வள்ளலார் தெளிவாகப் பதிவு செய்கிறார் ! 


*அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்*


*சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்*


*இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த*


*உகத்தே *இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!*


*உலக மக்கள் சாதி சமய மதங்களில் சிக்கி தவிக்கும் நிலைமையை அகற்றி நல்வழியில் திருத்தி இவ்வுலகிலே  இவ்வாழ்க்கையிலே பரத்தை பெற்று (அருளைப்பெற்று)  மரணத்தில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக இறைவனால் வருவிக்க உற்றவரே திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.*


*ஒரேகடவுள் ஒரே வழிபாடு !*


*இயற்கை உண்மையான. இயற்கை விளக்கமான இயற்கை இன்பம் அளிக்கும் ஒரே கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை  இவ் உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் வள்ளலார்.*


*உலகம் முழுவதும் ஒரே கடவுள்! ஒரே வழிபாடு என்ற கொள்கையை கொண்டு வந்தவர் வள்ளலார்.*


*ஒர்  உடம்பிற்கு ஓர் உயிர்தான் இருக்க முடியும்.அதேபோல் எல்லா உலகத்திற்கும் எல்லா உயிர்களுக்கும் ஒரே கடவுள்தான் இருக்குமுடியும் இருக்க வேண்டும் என அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் சொல்லி புரிய வைத்தவர் வள்ளலார்*


*வள்ளலார் பாடல்!*


*உருவராகியும் அருவினராகியும் உருஅரு வினராயும்

ஒருவ ரேஉளார் கடவுள்கண் டறிமினோ உலகுளீர்*


உணர்வின்றி

இருவராம் என்றும் மூவரேயாம் என்றும் இயலும்

ஐவர்கள் என்றும்

எருவராய் உரைத்து உழல்வது ஏன் உடற்கு உயிர் இரண்டு மூன்று எனலாமே.! 


*எனவும் மேலே கண்ட பாடலில் தெளிவுபடுத்துகிறார்*


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும்* *வழிபாட்டு முறையை திருத்தி மாற்றி அமைத்தவர் வள்ளலார்* 


*ஏன் என்றால் ?  உயிர்களுக்கு துன்பம் செய்ததால்தான் நமக்கு துன்பம் வருகிறது.அத் துன்பத்தை ஜீவ காருண்யத்தாலும் உயிர் இரக்கத்தாலும் மட்டுமே போக்கமுடியும்* *வேறுவழியில் நமது துன்பத்தை போக்கிக்கொள்ள வாய்ப்பே இல்லை*


*உயிர்கள் மேல் இயற்கையாக அன்பு தயவு கருணை காட்டுபவர்களுக்கு மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்க தயாராக உள்ளார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகிறார்.*


*எங்கே கருணை யியற்கையி னுள்ளன*

*அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே!*( அகவல்)


*ஜீவ காருண்ய ஒழுக்கத்தால் ஜீவ காருண்ய வழுபாட்டால் மட்டுமே எல்லாத் துன்பங்களில் இருந்தும் காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் கடவுள் அருளைப் பெறமுடியும்  என்ற உண்மையை வெளிப்படுத்தினார்.அதற்காகவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை 1867 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11 ஆம் நாள் தோற்றுவித்துள்ளார்*


*அதேபோல் கடவுளை வெளியில் தேடவேண்டாம் எல்லா ஆன்மாக்களையும் உயிர்களையும் உடம்பையும் உள் ஒளியாக இருந்து  இயக்கிக்கொண்டு இருப்பவர் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.* *அவரை உண்மை அன்பால் நேசித்து சத்விசாரம் செய்ய வேண்டும் அதுவே கடவுள் வழிபாடாகும்.*


*அந்த உண்மையை வெளிப்படுத்தவே வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை 1872 ஆம் ஆண்டு தோற்றுவித்துள்ளார்*  *அங்கே சிலைகள் சார்ந்த உருவ வழிபாடுகள் எதுவும் கிடையாது. ஓளி வழிபாடே உண்மையானது என்பதை வெளிப்படுத்தி காட்டி உள்ளார்*


*அந்த ஒளிவழிபாடு என்பது ஒவ்வொரு ஆன்மாவையும் குறிப்பதாகும்*


*உள்ளொளி யோங்கிட வுயிரொளி விளங்கிட

வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே!* (அகவல்)


*சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்*

*சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்*

*நித்திய ஞான நிறையமு துண்டனன்*

*நிந்தை உலகியற் சந்தையை விண்டனன்!*


*என்னும் அருள் வரிகளில் ஜீவகாருண்ய வல்லபத்தையும்.* *கடவுளின் உண்மையும் உலகம் தெரிந்து கொள்ளும் வகையில் வெளிப்படையாக  வடலூரில் சத்திய தருமச்சாலையும்.*

*சத்திய ஞானசபையும் தோற்றி வைத்துள்ளார்.*

*மக்கள் வடலூர் சென்று தெரிந்து கொள்ள வேண்டும்* .


*பாவம் செய்பவர்களை எமன் என்னும் கூற்றுவன் நேசிக்கிறான்.*


*புண்ணியம் செய்பவரை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேசிக்கிறார்* 


*ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப் படுகின்ற  தியானம். யோகம்.தவம்.வழிபாடுகள் யாவும் பிரயோசனம் இல்லாத வெற்று மாயா ஜாலங்கள் என்று வெளிப்படையாக சொல்லுகிறார்.* 


*ஜீவர்களுக்கு ஜீவர்கள் விஷயமாக ஆன்ம இருக்கும் காருண்யம் உண்டாக உண்டாக அந்த ஆன்மாவின் உள்ளிருக்கின்ற கடவுள் விளக்கமாகிய அருள் வெளிப்பட்டுப் பூரணமாக விளங்கும்.அத்திருவருள் விளங்கவே கடவுள் இன்பம் அனுபவமாகிப் பூரணமாகும்.அவ்வனுபவம் பூரணமாதலே கடவுள் வழிபாடு என்று அறிய வேண்டும்*


*வள்ளலார் பாடல்!*


எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்

தம்உயிர்போல் எண்ணி உள்ளே


ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்

யாவர்அவர் உளந்தான் சுத்த


சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்

இடம்எனநான் தெரிந்தேன் அந்த


வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்

சிந்தைமிக விழைந்த தாலோ.! 


*எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமையுடன் உபசரித்து உபகாரம் செய்யும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடையவர்கள் எவரோ அவரே எல்லாம் அறிந்த வித்தகர் என்பதால் அவருடைய உள்ளத்தில் இறைவன் நீங்காத இடம் பெற்று அருளை வாரி வழங்கி அவருடன் கலந்து கொள்வார்* என்பதே இயற்கை உண்மை வழிபாடாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

செவ்வாய், 1 மார்ச், 2022

கலந்தாரா? மறைந்தாரா ? கரைந்தாரா ?

 *வள்ளலார் இறைவனுடன்*


*கலந்தாரா ? மறைந்தாரா ? கரைந்தாரா ?*


*வள்ளலார் இறைவனுடன் கலந்தாரா ? பஞ்ச பூதங்களில் மறைந்தாரா ? தன் உடம்பை தானே கரைத்துக் கொண்டாரா ? என்பன போன்ற பல சந்தேகங்கள் மக்கள் மனதில் நிலவுகின்றது* 


*இதற்கு எல்லாம் சரியான விடை தெரிந்தால்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றால்  என்னவென்று தெரிந்து கொள்ள முடியும்.  இந்த உண்மையை சன்மார்க்கிகள் தெரிந்து அறிந்து புரிந்து பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.*


*துறையிது வழியிது* *துணிவிது நீசெயும்*

*முறையிது* வெனவே மொழிந்தமெய்த் துணையே !* என அகவலில் சொல்லி உள்ளார்.


**வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  காட்டிய  துறையும் வழியும் துணிவும்  அவற்றை பின்பற்றும் செயலும் அறிந்து.அருட்பெருஞ்ஜோதியைத் தொடர்பு கொண்டு பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்றவர் வள்ளலார்*


*தான் அடைந்ந அருள்  அனுபவத்தை உலக மக்கள் அனைவரும் தெரிந்து அவற்றை பின்பற்றி பூரண அருள்பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்ற பெருங்கருணையோடு திருஅருட்பா ஆறாம் திருமுறையில் பல கோணங்களில் பலப்பல பாடல்களிலும். உரைநடைப் பகுதியிலும் எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக  தெரியப்படுத்தி உள்ளார்*


மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு

கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே ! 


நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்

உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே! 


என்றே யென்னினு மிளமையோ டிருக்க

நன்றே தருமொரு ஞானமா மருந்தே! (அகவல்)


 *ஆனாலும் வள்ளலார் கடைபிடித்த உண்மையை அனுபவத்தை தெளிவாக புரியவைத்தும் தெரியப்படுத்தியும் வாழ்ந்தும் காட்டியுள்ளார். சன்மார்க்கிகள் இன்னும் குழப்பத்திலே உள்ளார்கள் என வள்ளலாரே வருத்தப்படுகிறார்*


*என் மார்க்கம் இறப்பு ஒழுக்கும் சன்மார்க்கம் தானே!  என்று மிகவும் அழுத்தமாகவும் தெளிவாகவும் சொல்லுகின்றார்* *இதுவரையில் எந்த ஒரு அருளாளர்களும் மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழவேண்டும் என்றும் சொல்லவில்லை. இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிமுகப்படுத்தவும் இல்லை.அவரை தொடர்பு கொள்ளவும் இல்லை.* 


*நீங்கள் எந்த தத்துவ கடவுள்களை வணங்கி. வாழ்த்தி. போற்றி.  வேண்டி வழிப்பட்டாலும் உங்கள் பிரார்த்தனைகள் யாவும் செல்லும் ஒரே இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகத்திற்கு மட்டுமே செல்லும் என்பதை வள்ளலா அகவலில் பதிவு செய்கிறார்.* 


எங்கெங் கிருந்து உயிர் ஏதேது வேண்டினும்

அங்கங் கிருந்து அருள் அருட்பெருஞ் ஜோதி!! ( அகவல்) 


*மனிதர்கள் இவ்வுலக வாழ்க்கையில் ஏற்படும் துன்பத்தை தாங்கமுடியாமல்  வெறுத்து துறவறம் ( சந்நியாசம்) கொண்டு பிறப்பு அறுக்க வேண்டும் என எதாவது ஒரு தத்துவ தெய்வத்தை நினைந்து இடைவிடாது வேண்டுகிறார்கள். அவர்கள் வேண்டுவதில் மூன்று வகையான முக்கிய அருளை அவரவர்கள் தகுதிக்கு தகுந்தவாறு பெற வாய்ப்புள்ளது.*


*அருள் வழங்கும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*


*அறிவார் அறிகின்ற வண்ணங்களும்.* *கருதுவார் கருதுகின்ற வண்ணங்களும்.*துதிப்பார் துதிக்கின்ற வண்ணங்களும் ஆகிய எல்லா வண்ணங்களும் உடையவர் அருட்பெருஞ்ஜோதித் தனிப்பெருங்கருணை கடவுளாகும்.* 


*அவ்வாறு விளங்குகின்ற கடவுளின் பூரண அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றினால் மட்டுமே உயிர் உடம்பு அழியாது* *அருள் ஒளி உடம்பாக மாற்றம் பெற முடியும்.அதுவே ஞானதேகமாகும். அருள் உடம்பானதும் அருள் உடம்பான ஞான தேகம் கொண்டுள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலப்பதே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.*


வள்ளலார் பாடல்!


சோதிமலை மேல்வீட்டில் தூய திருஅமுதம் மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன்...

ஓதரிய ஏகா அனேகா எழிற்பொதுவில் வாழ் *ஞானதேகா* கதவைத்திற ! 


*அருள் ஒளி உடம்பான ஞான தேகம் பெற்றால்தான் ஞானதேகமான அருட்பெருஞ்ஜோதி யுடன் கலக்கமுடியும்*


*வள்ளலார் மற்ற ஞானிகள்போல் மண்ணிலும் தண்ணீரிலும் கரைந்து போகவும் இல்லை.பஞ்ச பூதங்களில் மறைந்து போகவும் இல்லை.* 


*கரைந்து போனவர்களுக்கும் பஞ்ச பூதங்களில் மறைந்து போனவர்களுக்கும் அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு மீண்டும் எதாவது ஒரு பிறப்பு எடுப்பார்கள்.*


*வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியுடன் கலந்து நிலையாக வாழ்ந்துகொண்டு இருப்பவர்* அவருக்கு மீண்டும் பிறப்பும் இறப்பும் கிடையாது.

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு வந்து வள்ளலார் உடம்பில் கலந்து கொண்டார் என்பதை பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்.*


*வள்ளலார் பாடல்!*


என்சாமி எனதுதுரை என் உயிர் நாயகனார்

இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்


பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே *எனது*

*பேருடம்பில்* *கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்*


தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்

சாற்றுகின்றேன் அறிந்திதுதான் *சத்தியம்சத் தியமே*


மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே

வெளியாகும் *இரண்டரைநா ழிகைகடந்த போதே.!* 

(இரண்டரை நாழிகை என்பது ஒருமணிநேரம்)


என்னும் பாடல் மூலம் மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.


*ஞானம் என்பது மூன்று  வகைப்படும்* அவை ! 


*உபாயஞானம்* *உண்மை ஞானம்* *அனுபவ ஞானம்*


1. *நட்சத்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஜீவ அறிவே உபாய ஞானம் என்பதாகும் இவர்களுக்கு சகலர் என்றும் பெயர்.இவர்கள் மண்ணிலோ தண்ணிலோ கரைந்து போகின்றவர்களாகும்.*


2. *சந்திரபிரகாசம் போல் தோன்றி அறியும் ஆன்ம அறிவே உண்மை ஞானம் என்பதாகும்* . *இவர்களுக்கு* *பிரளயாகலர் என்பதாகும்*

*இவர்கள் ஐந்து பூதங்களான காற்றிலோ வானத்திலோ அக்கினியிலோ மறைந்து போனவர்களாகும்.  இவர்களுக்கும்/ மீண்டும் பிறப்பு உண்டு*


3. *எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள் அறிவே அனுபவஞானம் என்பதாகும்* *இவர்களுக்கு விஞ்ஞானகலர் என்று பெயராகும்.* *இவர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் போல் காலம் கடந்தவர்கள்.* *இவர்கள் மரணத்தை வென்றவர்கள்.*


இதற்கு வள்ளலார் பாடல் விளக்கம் தருகிறது!


வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்


மையகத்தே *உறுமரண வாதனையைத் தவிர்த்த*

வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே


மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே


செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலே

சித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.! 


என்னும் பாடல் விளக்கம் அளிக்கிறது.


மேலும்

*காலம் கடந்தது... எவ்வுயிரையும் தம் உயிர்போல்  என்னும் கடவுள் அறிவான அனுபவ ஞானம் பெற்று தன் உடம்பை அருள் உடம்பாக மாற்றி (ஞானதேகம்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தவர் வள்ளலார் ஒருவரே !*

 

*எக்காலத்திலும் வள்ளலாருக்கு பிறப்பு இறப்பு என்பது எப்போதும் கிடையாது.*

*வள்ளலார் மட்டுமே கடவுள் நிலை அறிந்து  அம்மயமானவர்.* *அதாவது அருட்பெருஞ்ஜோதி யுடன் கலந்தவர்.* 


*அதாவது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.தான் செய்யும் ஐந்து தொழில்களையும் வள்ளலாருக்கு வழங்கி உள்ளலார்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் நிலையானவர் அதேபோல் வள்ளலாரும் என்றும் நிலையானவர் என்பதை உலகம் தெரிந்து கொள்ள வேண்டும்* 

*சுத்த சன்மார்க்கிகள் இவ்வுண்மையை அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.* 


*வள்ளலார் பாடல்!*


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும்பேற்றை

ஓத முடியாது தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் தங்கியிருக்கும் மேட்டுகுப்பம் சித்திவளாக திருமாளிகைக்கு சென்று பாதி இரவில் வள்ளலாரை எழுப்பி அருட்ஜோதி அளித்து அவர் உள்ளகத்தே கலந்து சூழ்ந்து நிலைத்து விளங்குகிறாய். நீதிநடஞ் செய்யும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! எனக்கு அளித்த பேரின்ப நிதி போதாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என உலக மக்களுக்காக ஆண்டவரிடம் வேண்டுகிறார்*


வள்ளலார் பாடல்!


சுதந்தரம் உனக்கே கொடுத்தனம் உனது

தூயநல் உடம்பினில் புகுந்தேம்


இதந்தரும் உளத்தில் இருந்தனம் *உனையே*

*இன்புறக் கலந்தனம்* அழியாப்


பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் சோதிப்

பரிசுபெற் றிடுகபொற் சபையும்


சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்

தெய்வமே வாழ்கநின் சீரே.!


*வள்ளலார் மற்ற ஞானிகள்போல் கரைந்து போகவும் இல்லை பஞ்ச பூதங்களில் மறைந்து போகவும் இல்லை.*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தவர் வள்ளலார் ஒருவரே !*


மரணத்தை வென்றவரை எதனாலும் அழிக்க முடியாது என்பதை கீழே வரும் பாடல் வாயிலாக பதிவு செய்கிறார்.


வள்ளலார் பாடல்!


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! 


*என்னும் பாடல் அனைவருக்கும் விளக்கம் அளிக்கிறது. வள்ளலாரின் உண்மை தெரியாமல் வள்ளலாரை எவரும் சந்தேகப்பட வேண்டிய அவசியமே கிடையாது.*


நாமும் வள்ளலார்போல்  பூரண அருள் பெற்று மரணத்தை வென்று  வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!


அன்புடன் ஆன்மநேயன் டாக்டர் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.