சனி, 7 ஜனவரி, 2017

ஆன்மாவின் வாழ்க்கை !

ஒரு சன்மார்க்க அன்பர் கேட்டார் அவருக்குண்டான பதில்.!

ஆன்மாவின் வாழ்க்கை !

இந்த பஞ்ச பூத உலகத்தில் ஆன்மா வாழ்வதற்கு இறைவனால் மூன்று சுதந்தரம் கொடுக்கப் படுகின்றது.உயிர் கொடுக்கப்படுகின்றது.உடம்பு கொடுக்கப்படுகின்றது.அனுபவிக்க மண்ணாசை.பெண்ணாசை.பொன்னாசை என்ற போகப்பொருள்கள் கொடுக்கப் படுகின்றது.

இதை விருப்பம்போல் அனுபவிக்க சுதந்தரமும் வழங்கப் படுகின்றது.அவற்றை அனுபவக்கின்ற வகையில்.இன்பம் துன்பம் என்ற நல்வினை.தீவினை ஆன்மாவில் பதிவாகிக்கொண்டே இருக்கும்.ஆன்மாவுக்குத் தெரியாமல் எதுவும் செயல்பட முடியாது.அவைதான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளாகும்.திரைகள் நீங்காது இருக்கும் வரை.பிறந்து பிறந்து இறந்து இறந்து பிறவிகள் மாறி மாறி எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இந்த உலகத்தில் இருந்து ஆன்மா வெளியேற வேண்டுமானால்.அருள் பெற்றால் மட்டுமே செல்ல முடியும்.

அருள் பெருவதற்கு வேண்டிய வழிகளை பல அருளாளர்கள் பல வழிகளை காட்டி உள்ளார்கள்.அத்தனையும் குறுக்கு வழிகளாகவே உள்ளன.அதனால் ஆன்மாக்கள் எந்த பயனும் பூரணமாக அடையவில்லை.

அதனால்தான் ஆன்மாக்களை அனுப்பிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.பக்குவம் உள்ள ஆன்மாவை அனுப்பி வைத்தார்."அவர்தான் வள்ளலார்."

அவர் வந்துதான் அருளைப்பெரும் உண்மையான நேர் வழியைக் காட்டி உள்ளார்.அதற்குப் பெயர்தான் "சாகாக்கல்வி" என்பதாகும். இதுவரையில் சாகும் கல்வியைத்தான்.அனைத்து அருளாளர்கள் போதித்து உள்ளார்கள்.அதனால் ஆன்மா லாபம் அடையவில்லை.

அருளைப் பெற்று.மனிதன் மரணம் அடையாமல் வாழ்ந்தால் மட்டுமே பேரின்ப லாபத்தை அடையமுடியும் என்ற உண்மையை தெரிவித்து உள்ளார் வள்ளலார்.

சொல்லியது மட்டும் அல்லாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்பதை வாழ்ந்தும் காட்டி உள்ளார்.

எனவே இந்த உலகத்தில் வாழ்வதற்காக ஜீவ சுதந்திரம்.தேக சுதந்தரம்.போக சுதந்தரம என்னும் மூவகைச் சுதந்திரங்களை இறைவனால் கொடுக்கப் பட்டு உள்ளது. அவற்றை எப்படி திருப்பிக் கொடுப்பது.அப்படியே கொடுக்க முடியுமா ? என்றால் முடியாது.

உயிர.் உடம்பு. இதுவரையில் அனுபவித்த போகப்பொருள்கள்  எல்லாம் இங்கேயே திருப்பித் தந்துவிட வேண்டும்.எப்படித்தருவது. அதற்காகத்தான் ஜீவ காருண்யம்.சத்விசாரம் என்ற இரண்டு வழிகளைக் காட்டி உள்ளார். ஒன்று உயிர்களுக்கு உபகாரம் செய்வது.ஒன்று இடைவிடாது இறைவனிடம் பிரார்த்தனை செய்வது.இவை இரண்டும் சமமாக செய்து வரவேண்டும்.இப்படி செய்து வந்தால்.உலக பற்றுக்கள் தானே விளகும். உயிர்கள் அனைத்தும் நம்மிடம் அன்பு காட்டும்.உயிர்கள் நம்மிடம் அன்பு காட்டினால்.இறைவன் நம்மிடம் அன்ப.தயவு.கருணைக் காட்டுவார்.இறைவன் நம்மீது முழுமையான கருணைக் காட்டும் போது .ஆன்மாவில் சுத்த உஷ்ணம் உண்டாகும்.அந்த உஷ்ணத்தினால்.ஆன்மாவை. மறைத்துக் கொண்டு இருக்கும் மாயா திரைகள் விலகி அருள் சுரக்கும்.

அருள் முழுமையாக சுரக்கும் போது வேதியல் மாற்றம் செய்வதுபோல்.நம்முடைய உடம்பில் உள்ள அணுக்கள் அனைத்தும் கரைந்து பிரிந்து விடும்.

முழுமையாக கரைந்து பிரிந்து விட்டப்பின் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறிவிடும்.அதற்குத்தான் ஆன்ம தேகம் என்று பெயர்.பொன் உடம்பு என்றும் பெயர். அதற்கு மேல் சித்தி நிலைகள் நிறைய உண்டு.கருமசித்தி.யோகசித்தி.ஞானசித்தி.அந்த மூன்று சித்திகளும் இணைந்தால் முத்தேக சித்தி என்று பெயர்.

இந்த முத்தேக சித்திப் பெற்றவர்கள்.பேரின்ப லாபத்தை அடைந்தவர்கள்.அவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வார். அவர்களுடன் கலந்து கொள்வார்.அவர்களுக்கு எல்லா வல்லபமும் கிடைக்கும்.

இதுதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

வள்ளலார் அகவலில் பதிவு செய்து உள்ளது.

தோல் எலாம் குழைந்திடச் சுழ் நரம்பு அனைத்தும் மேல்எலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிட

என்பு எலாம் நெக்கு நெக்கு இயலிடை நெகிழ்ந்திட .மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட.

இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம் உரைத்திட பந்தித்து ஒரு திரள் ஆயிட.

மடல் எலாம் மீளை மலர்ந்திட அமுதம் உடல் எலாம் ஊற்று எடுத்து ஓடி நிரம்பிட.

ஒண்ணுதல் வியர்த்திட ஒளிமுகம் மலர்ந்திடத் தண்ணிய உயிர்ப்பினிற் சாந்தம் ததும்பிட .

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக் கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட.

வாய்த் துடித்து அலறிட வளர் செவித் துணைகளிற் கூயிசைப் பொறி யெலாம் கும்மெனக் கொட்டிட.

மெய்யெலாம் களிர்ந்திட மென்மார்பு அசைந்திடக் கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட.

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட.

அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச் சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட.

அறிவு உரும் அனைத்தும் ஆனந்தம் ஆயிடப் பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங்கு ஒழிந்திடச் சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட.

உலகு எலாம் விடயமும் உளம் எலாம் மறைந்திட அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட.

எனனுளத்து எழுந்து உயிர் எலாம் மலர்ந்திட என் உளத்தே ஓங்கிய என் தனி அன்பே.

பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே .என்உளத்து எழுந்த என்னுடை அன்பே.

தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால் 'என்னை வேதித்த என்தனி அன்பே."

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து என்னுளே விரிந்த என்னுடை அன்பே.

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து என்னுளே கனிந்த என்னுடை அன்பே.

தன்னுளே நிறைவுறும் தரம் எலாம் அளித்தே என்னுளே நிறைந்த என்தனி அன்பே.

துன்புள அனைத்தும் தொலைத்து எனது உருவை இன்புற ஆக்கிய என்னுடை அன்பே.

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என் உளம் கலந்ந என் தனி அன்பே ! என்றும்

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளிதத்தோர் அருட்பெருஞ்ஜோதி!

என்கிறார்.இதுதான் அருளைப் பெரும் வழியாகும்.மரணத்தை வெல்லும் வழியாகும்.

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை நாடாதீர்.பொய் உலகை நம்பாதீர்.
வாடாதீர் .சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்திடுமின் .சத்தியம் நீர்.நன்மார்க்கஞ் சேர்வீர் இந்நாள்!

சுருக்கமாக சொல்லி உள்ளேன் விரிக்கில் பெருகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு