வியாழன், 24 ஜூலை, 2014

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம் ! ..I,

வடலூர் சத்திய ஞான சபை 

உலகில் உள்ள ஆலயங்களில் உள்ள தெய்வங்கள் எல்லாம் தத்துவங்களே ஒழிய உண்மையான கடவுள் விளங்கும் இடம் அல்ல என்பதை மக்களுக்கு உணர்த்தும் வகையில்,தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் வடலூர் என்னும் பார்வதி புரத்தில், திரு அருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்களால், உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை ..உலக மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக தோற்றி வைக்கப்பட்டதுதான்

''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையாகும்''

சத்திய ஞான சபையின் விளக்கம் !    

உத்தர ஞான சித்திபுரம் என்றும், உத்தர ஞான சிதம்பரம் என்றும்,
திருவருளால் ஆக்கப்பட்ட  சிறப்புப் பெயர்களும் ,பார்வதிபுரம் என்றும் ,வடலூர் என்றும் உலகியலால் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப்பதியின் இடத்தே ,இயற்கை விளக்க நிறைவாகி உள்ள ஓர் சுத்த சிவானுபவ ஞான சபையில் ,இயற்கை உண்மை நிறைவாகிய ,திரு உருவைத் தரித்து ,இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை,எவ்வுயிரும் இன்பம் அடைதல் பொருட்டே செய்து அருளுகின்றவர் யார் ?

அவர்தான் எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்.

வடலூரில் வள்ளல் பெருமான் அவர்கள் தோற்று வித்துள்ள, சபைக்கு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை'' என்று பெயர் வைத்துள்ளார் .

சபை என்பது எல்லோருக்கும் பொதுவானது.அங்கே சாதி, சமயம் ,மதம் என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாதது . ஞான சபையில், உண்மையானக் கடவுளை வரவழைத்து மக்களுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற பெருங் கருணையோடு தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' 'தோற்றுவித்து உள்ளார் .

மனித உடம்பில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப் பட்டு உள்ளன்.கழுத்துக்கும் மேலே ,கழுத்துக்கும் கீழே ,என இரண்டு பிரிவுகளாகும்.காழுத்துக்கு மேலே உள்ள தலைப்பாகம்,அண்டம் என்பதாகும்.கழுத்துக்கு கீழே உள்ளது பிண்டம் என்பதாகும்.அண்டத்தைப் பார்த்தால் அனைத்து உண்மைகளும் தெரியும்.பிண்டத்தைப் பார்த்தால் பொய்யான தோற்றங்கள்தான் தெரியும்.

வள்ளல்பெருமான் தலைப்பாகத்தில் உள்ள ஆன்ம ஒளியின் உண்மை சொரூபத்தைக் கண்டு அதன்,ஆற்றலைக் கண்டு,அதன் தலைவன் யார் என்பதைக் கண்டு அதன் எல்லையற்ற செயல்களைக் கண்டு அதன் அருள் ஆற்றலைக் கண்டு,அந்த அருள் ஆற்றலால் அடையும் இயற்கை இன்பத்தைக் கண்டு,அந்த இன்பம் என்றும் அழியாத இயற்கை இன்பம் என்பதை அனுபவித்து,..மரணத்தை வென்று ,அவைதான்  மரணத்தை வெல்லும் வல்லபம் என்பதை  உலக மக்களுக்கு தெரியப்படுத்தவே இயற்கை உண்மைக் கடவுள் விளங்கும் இடமாக தேர்வு செய்து வடலூரில் சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து உள்ளார் .  

சபையைத் தோற்றுவித்தது ஆண்டவர் கட்டளை. !

சத்திய ஞான சபையை கட்டுவதற்கு முன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு ஒரு கட்டளையை பிறப்பிக்கின்றார்.அந்தக் கட்டளை யாதெனில் ;--

என்பாட்டுக்கு  எண்ணாததை எண்ணி இசைத்தேன் என்
தன்பாட்டைச் சத்தியமாய்த் தான் புனைந்தான் --முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான் .

நான் பல தத்துவ தெய்வங்களை வணங்கியும், அந்த தெய்வங்களின் பெயரால் பல ஆயிரக்கணக்கான பாடல்களைப்  பாடியும் எழுதியும் வைத்துள்ளேன் .ஆனால் அவைகள் எல்லாம் உண்மையான தெய்வங்கள் அல்ல என்பதை அறிவால் அறிந்து கொண்டேன்.ஆதலால் உண்மையான இறைவன் யார் ? அவர் எங்கே இருக்கின்றார் .அவருடைய அருள் உருவத்தையும், ஆற்றலையும், செயல்களையும் அறிந்து கொள்ள விரும்புகின்றேன்,என்று இறைவனிடம் முறையிடுகின்றார் .

அதற்கு ஆண்டவர் சொல்லியது தான் மேலே கண்ட பாடல் ...

உன்னுடைய தேடுதலைப் புரிந்து கொண்டேன் உன்னையும் உன்னுடைய பாடல்களையும் ஏற்றுக் கொண்டேன் ,ஆனால் நீ ஒரு வேலை செய்யவேண்டும்.இந்த உலக மக்கள் பசி,பட்டினி, வறுமை,துன்பம்  போன்ற துயரங்களினால், கொடுமைகளினால் துன்பப்டுகிரார்கள் ,அந்த மக்களின்  பசியைப் போக்கக் கூடிய தருமச் சாலையைத்  தோற்றுவித்து, அதன் வழியாக வந்தால் தான் என்னைக் காணமுடியும்,அப்படித்தான்  வரவேண்டும் என்று ஆணை பிறப்பிக்கின்றார்

நான் சொல்லிய வண்ணம் தருமச்சாலையைத் தோற்றுவித்தால் நான் யார் ! எங்கு இருக்கிறேன் ? என்பதை உமக்குத் தெரிவிக்கிறேன் என்னுடைய உண்மையான உருவத்தைக்  காட்டுகிறேன் என்று வள்ளல்பெருமானிடம் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தெரிவிக்கின்றார்.

ஆண்டவர் ஆணையை ஏற்றுக் கொண்டு அவசர அவசரமாக தருமச்சாலையை கட்டி... 23-5-1967, ஆம் தேதி சத்திய தருமச்சாலையைத் தொடங்கி வைக்கின்றார்..

தொடங்கி வைத்த பின் வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே
சமரச சுத்த சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற்று அருளே !

தருமச்சாலையைத் தோற்றுவித்த பின் எல்லாப் பயன்களையும்,தருமச் சாலையில்  ஒரே பகலில் அளித்து விட்டதாக ஆனந்தம் மேலிட பறை சாற்றுகின்றார்.

மேலும் ;--

காலையிலே நின் தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்---ஞாலமிசை
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கடிமை யேய்ந்து...

என்னும் பாடல்கள் வாயிலாகத் தெளிவுப் படுத்தி உள்ளார் .

இன்மை இன்பவாழ்வு,மறுமை இன்ப வாழ்வு,பேரின்ப வாழ்வு என்னும் முத்தேக சித்தியைப் பெற்றுக் கொண்டேன்,சாகா வரமும் பெற்றுக் கொண்டேன்.மேலும் அளவில்லாத இன்பத்தைப் பெற்றுக் கொண்டேன் .இனிமேல் என்னுடைய அருட்பாமாலை எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தவிர வேறு யார் மீதும்,எழுத மாட்டேன், பாட மாட்டேன்.பதிவு செய்ய மாட்டேன் .இனிமேல் என்னுடைய அருட் பாமாலைகள் எல்லாம் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று இறைவனிடம் முறையிடுகின்றார் .

வள்ளல்பெருமான் வேண்டுதலை ஏற்றுக் கொண்ட அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .நீ எண்ணியபடி விளையாடி மகிழ்க என்று... தன்னுடைய அளவில்லா ஆற்றல் மிகுந்த உயரிய உரிமைகள் அனைத்தும் வழங்கி மகிழ்கின்றார் ..

உத்தர ஞான சித்தி மாபுரத்தின்
ஓங்கிய ஒரு பெரும் பதியை
உத்தர ஞான சிதம்பர ஒளியை
உண்மையை ஒரு தனி உணர்வை
உத்தர ஞான நடம் புரிகின்ற
ஒருவனை உலகெலாம் வழுத்தும்
உத்தர ஞான சுத்த சன்மார்க்கம்
ஒளியைக் கண்டு கொண்டேனே .

என்றும் ;--சத்திய ஞான சபை என்னுட் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன் .

சமரச சத்தியச் சபையில் நடம்புரி
சமரச சத்தியத் தற்சுயஞ் சுடரே

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !

மருள் எலாம் தவிர்த்து வரம் எலாங் கொடுத்தே
அருள் அமுதம் அருத்திய அருட்பெருஞ்ஜோதி

வாழி நின் பேரருள் வாழி நின் பெருஞ் சீர்
ஆழி யொன்று அளித்த அருட்பெருஞ்ஜோதி !

என்னும் பலப்பாடலகளின் வாயிலாகத்  தெரியப் படுத்தி உள்ளார் .

அருட் பெருஞ்ஜோதியைக் கண்டு கொண்டேன் ,அவர் ஒளியாக, ஒலியாக உள்ளார் .அவரை உலக மக்களுக்கு தெரியப் படுத்த போகிறேன் .அதற்காக வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' தோற்றுவிக்கப் போகின்றேன் அதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுமதி வழங்கிவிட்டார் என்பதை தெரியப்படுத்தி சத்திய ஞானசபையை தோற்றுவிக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள் .    

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை விளம்பரம் !  25-11-1872,ஆம் ஆண்டு !

உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

அறிவு வந்த காலம் முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்.கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்.செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்.என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியால் பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்.

நீவீர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு  அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது சுத்த சன்மார்க்க லஷியமாகிய ''ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமைப்'' பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன் .

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இடண்டுபடாத பூரண இன்பமானவர் என்றும்,எல்லா அண்டங்களையும் .எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும்,எல்லாச் சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,,

எல்லாத் தத்துவங்களையும் ,எல்லாத் தத்துவிகளையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாச் செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும்

தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை ,இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,

எல்லாம் உடையராய்த் தமக்கு ஒரு வாற்றானும் ஒப்புயர்வு இல்லாத் தனிபெருந்தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே'' அகம்புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்கள் (மனிதர்கள் ) அறிந்து,அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகப்பூரணப்  பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பல்வேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு,

நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிறிய அறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போகின்றோம்.

இனி இச்சீவர்கள் ( மக்கள் ) விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,

எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்கத்தைப் பெற்று ''பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுளங் கொண்டு......

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சமமதத்தால் இயற்று வித்து இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம்,அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்'' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,அருட்பெருஞ் ஜோதியராய் வீற்று இருக்கின்றார்.

ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெருவீர் களாகில்  கருதிய வண்ணம் பெற்றுக் களிப்பு அடைவதும் அன்றி,இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பல்வகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள்.

என்று வள்ளல்பெருமான் ஞான சபையைக் தோற்றுவிக்கும் முன் ,அருட்பெருஞ் ஆண்டவர் யார் ? என்பதையும்.அவர் எப்படி செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதையும்,,ஆண்டவரே ஞானசபைக்குள் வந்து அமர்ந்து செயல்படுவார் என்பதையும்,மேலே கண்ட ஞான சபை விளம்பரம் என்னும் தலைப்பில் மக்களுக்கு அறிவித்து விட்டுத்தான் ஞான சபையைத் தோற்று விக்கின்றார்.    

ஞான சபையின் அமைப்பு !

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பது வள்ளலாரின் முக்கிய கொள்கையாகும் .

அதனால்தான் முதன் முதலில் வடலூரில் 23--5--1867,ஆம் ஆண்டில் சத்திய தருமச்சாலையைத் தோற்றுவித்து உள்ளார் .

பசிப்பிணியைப் போக்கும் ஜீவகாருண்யம் என்னும் தருமச்சாலையின் வழியாக வந்தால் தான் உண்மையான இறைவனைக் காண முடியும் என்ற நோக்கத்தில் ,தருமச்சாலையின் அருகாமையில் வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை

''25--1--1872,ஆம் ஆண்டு தொடங்கி வைத்துள்ளார் .

சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்ப்ருஞ் ஜோதி .          

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்

வள்ளல்பெருமான் அவர்கள், தன் ஆன்மாவில் கண்ட காட்சியை வரைபடம் வரைந்து சத்திய ஞான சபையைத் தோற்று விக்கின்றார்..உலக அதிசயங்களிலே வடலூரில் உள்ள சத்திய ஞானசபை முதன்மையானதாகும் .இதை அரசாங்கமும்,உலக மக்களும் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனைத் தரும் விஷயமாகும்.. காலம்தான் பதில் சொல்லவேண்டும்.                                                                                                                      

உடம்பின் தலைபகுதி !                                                                                                                                                                    
உயிர் உள்ள ஒவ்வொரு ஜீவன்களின் உடம்பின் தலைப்பாகத்தில்  உண்மையான தெய்வம் குடிகொண்டு இருக்கும் இடமாகும்,அதுவே கடவுள் விளங்கும் ஆலயமாகும்..அதிலும் முக்கியமாக ''இயற்கை விளக்கமாக'' மனித உடல்களின் தலைப் பாகத்தில்,உச்சிக்கும் கீழே, உள் நாக்கிற்கும் மேலே சிரசின் நடுவில் துரிய பீடத்தில் ஆன்மா என்னும் ஒளி,  உள் ஒளியாக இருந்து உயிர் மற்றும் மனம் முதலான அந்தக் கரணக் (கரணங்கள் ) கூட்டத்தின் மத்தியில் அமர்ந்து  இயங்கிக் கொண்டு இருப்பது அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.அதுவே ஆன்மாவாகும்.

எல்லாப் பிறப்புகளிலும் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தைப் பெற்றவர்கள் மட்டுமே ,இறைவனிடம்  உண்மையான அருளைப் பெற்று மரணத்தை வென்று ,கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் வல்லமை பெற்றவர்கள் ஆவார்கள்  மனிதர்களுக்கு மட்டுமே அறிவு விளக்கமும்,,ஆன்ம விளக்கமும்,,அருள் விளக்கமும், பெறுவதற்குண்டான உடல் அமைப்பை இறைவன் கொடுத்துள்ளார். ஆதலால் மனிதர்களுக்கு  மட்டுமே  உயர்ந்த அறிவை கொடுத்து உயர்ந்த பிறப்பையும்  கொடுத்துள்ளார்

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை சுட்டிக் காட்ட தருமச்சாலையைத் தோற்றுவித்துள்ளார் .கடவுள் ஒருவரே என்பதை சுட்டிக் காட்ட ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து உள்ளார் .கடவுளின் அருளைப் பெருவதற்கு இரண்டு வழிகளை வள்ளல்பெருமான் சுட்டிக் காட்டி உள்ளார்கள் அதாவது --சத் விசாரம் ,பரோபகாரம்,..

சத்விசாரம் என்பது உண்மையான இறைவன் யார் என்பதையும், ஆன்மா என்றால் என்ன ? உயிர்கள் என்றால் என்ன ? கரணம் என்றால் என்ன ?இந்திரியங்கள் என்றால் என்ன ? உயிர்கள் எப்படி தோன்றியது ? உயிருக்கு உடம்பு எப்படி கிடைத்தது ? ஏன் பிறக்கிறோம் ? ஏன் வாழ்கிறோம் ?ஏன் மரணம் வருகின்றது ? மற்ற உலகில் உள்ள உயிர்கள்  தோன்றும் விதத்தையும், அழியும் விதத்தையும் ,மேலும் சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள்,கிரகங்கள் போன்ற அண்டபிண்ட ரகசியங்களையும் அறிந்து கொள்ளும் அறிவைச் சார்ந்தது சத்விசாரம் என்பதாகும்

பரோபகாரம் என்பது;--எல்லா உயிர்கள் இடத்தும்  இரக்கமும்,கடவுள் இடத்தில் அன்பும், உயிர்களுக்கு வரும் துன்பங்களான பசி,பிணி,கொலை,தாகம்,இச்சை,எளிமை,பயம்,போன்ற துன்பங்களில் இருந்து காப்பதுவே பரோபகாரம் என்பதாகும்  இதுவே கடவுள் வழிபாடாகும் .
அதனால்தான் ஜீவகாருண்யமே மோஷ்ச வீட்டின் திறவு கோள் என்றும் .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் ,மிகவும் அழுத்தமாக தெரிவித்துள்ளார் .

மனித ஆன்மாவின்  உள் ஒளியின் அமைப்பே ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையாக'' வடலூரில் வள்ளலார் எண்கோண வடிவமாக அமைத்துள்ளார்கள்.

மனிதனின் உடம்பு எண்சான்  அமைப்பைக் கொண்டது,எட்டுக் குணங்களை உடையது  என்பதை உணர்த்தும் வகையிலும், உலகம் எட்டுத் திக்குகளைக் கொண்டது என்பதையும் தெளிவுப் படுத்தி  எண்கோண வடிவில் ''சத்திய ஞான சபை'' அமைக்கப் பட்டதாகும்.அதற்கு ''கடவுள் இயற்கை விளக்கம்'' என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்பெருமான் .

உலகம் எட்டு திக்குகளைக் கொண்டது .எட்டுத் திக்கு மக்களும் வந்து உண்மையானக் கடவுளை வடலூரில் காண வேண்டும் என்பது வள்ளலாரின் அழுத்தமான நம்பிக்கையாகும்

உண்மையான இறைவன்  ''ஒளி வடிவமாக'' உள்ளார் என்பதை உலக மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து கொண்டு வடலூர் வந்து வழிபாடு செய்யவேண்டும் என்பது வள்ளலாரின் முக்கிய முதன்மையான கொள்கையாகும்.''கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்''  என்பதே அடிப்படை உண்மையாகும். ஆகவே மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் முதல் உண்மை செய்தியுமாகும்.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதியர் ! என்பது வள்ளலாரின் முதல் கட்டளையாகும்.

சத்திய ஞான சபை !

சத்திய ஞான சபை செப்புத் (செம்பு )தகடுகளால் மூடப்பட்ட கூரையும், தங்கமுலாம பூசிய உச்சித் தூபியும் வைத்து கட்டப்பட்டதாகும். ஞானசபையின் கட்டிட உருவ அமைப்பு எண்கோண வடிவமானது இதைச்சுற்றி எண்கோண அமைப்பில் வேலிபோல் சிறு சிறு தூண்கள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.

இந்த தூண்கள் நீளமான இரும்பிச் சங்கிலியால் இணைக்கப்பட்டு உள்ளன அதைத் தாண்டி உள்ளே மக்கள் செல்லக் கூடாது என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.அந்த சங்கிலி வளையம் ஞானசபையை சுற்றி இடைவெளி இல்லாமல் இருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கருத்தாகும்.

வழிபாடு செய்கிறவர்கள் சங்கிலி தூண்களுக்கு வெளியே நின்றுதான் வழிபாடு செய்து வணங்க வேண்டும்.யாதொரு காரியம் குறித்தும் மக்கள் உள்ளே செல்லக் கூடாது.

ஒருசில அன்பர்கள் அந்த சங்கிலியின் கணக்கை வைத்து நாம் தினமும் விடும் மூச்சு காற்றை  வைத்து சங்கிலி பின்னப்பட்டது என்று கூறுகின்றனர் .அவை ஏற்றுக் கொள்ள முடியாது.ஒவ்வொரு மனிதருக்கும் அவரவர்கள் பணிகள் செயல்கள்,தொழில்கள்,நடத்தைகள் வழியாக அவரவர் சுவாசிக்கும் காற்று முறையில் கூடுதலும் குறைதலும் மாறுபடுகின்றன.மூச்சுக் காற்றுக்கும் அந்த சங்கிலிக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை.அப்படி இருந்தால் வள்ளலாரே அதன் விளக்கத்தை சொல்லி இருப்பார் .

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அழுத்தமான இரும்புச் சங்கிலிப் போன்ற மாயாத்  திரைகள்தான் மாயா சக்தியாகும்.அதுவே மாயா திரையாகும் .என்பதை சுட்டிக் காட்ட இரும்பு சங்கிலியை ஞாசபையைச் சுற்றி  அடையாளமாக வைத்து அமைத்து உள்ளார் .ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமாக மாறியவர்கள் மட்டுமே உள்ளே போகத் தகுதி உடையவர்கள். மேலும் புலால் (மாமிசம் )மறுத்தவர்கள் மட்டுமே உள்ளே போக அனுமதி வழங்கப் பட்டுள்ளது.

புலால் மறுக்காதவர்கள் இரும்பு சங்கிலியின் வெளியில் இருந்து வழிபாடு செய்ய வேண்டும் என்பது வள்ளல்பெருமான் இட்ட அன்பு கட்டளையாகும்.

தற்போது அந்த சங்கிலி துண்டிக்கப்பட்டு இருக்கிறது .

ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து ஒளி வடிவமாக மக்களுக்கு காட்சித் தருவார் என்பதை உணர்த்தும் வகையில் சத்திய ஞானசபையின் அகம் என்னும் மத்தியில் ''ஞான சிங்காதன பீடம் '' என்னும் ஒரு மேடை உள்ளது, அந்த மேடையின் மேல் கண்ணாடிக் கூண்டுக்குள் அணையா விளக்கை வைத்துள்ளார்கள் .

வள்ளலார் ஞானசபையின் விளக்கப் பத்திரிகையில் ஓர் முக்கிய செய்தியை தெரிவித்து உள்ளார் .

சபை விளம்பரம் !

இன்று தொடங்கி ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும்,ஞானசபைக்கு உள்ளே தகரக் கண்ணாடி விளக்கு வைத்தல் வேண்டும் ,பித்தளை முதலிய வற்றால் செய்த குத்து விளக்கு வேண்டாம்.

தகரக்கண்ணாடி விளக்கு வைக்குங் காலத்தில் தகுதி உள்ள நம்மவர்கள் தேகசுத்தி,கரணசுத்தி உடையவர்களாய் '''திருவாயிற்படிப் புறத்தில் இருந்து கொண்டு விளக்கு ஏற்றி பன்னிரண்டு வயதுக்கு உட்பட்ட சிறுவர் கையில் கொடுத்தாவது,எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்ட பெரியவர் கையில் கொடுத்தாவது ,

''உட்புற வாயில்களுக்குச் சமீபங்களில் வைத்து வரச் செய்விக்க வேண்டும் ''.
என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.

இந்த கட்டளைகளில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது..வள்ளலார் சபையை அமைத்து ஜோதி தரிசனம் காட்டவில்லை.என்பது தெளிவாகிறது.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் ,நான் சொல்லிய வண்ணம் சபையை கவனித்து செயல்படுங்கள் என்று ஆணையிடுகிறார்.அருட்பெருஞ் சித்தி என்றால் என்ன ? அது எப்போது வெளிப்படும் என்பதை வள்ளலார் அப்போது தெரிவிக்க வில்லை..

அடுத்து சபையின் மத்தியில் தகரக் கண்ணாடி விளக்கு வைக்க வேண்டும் என்று சொல்லவில்லை.உட்புற வாயில்களுக்கு சமீபங்களில் வைக்க வேண்டும் என்கிறார் .உட்புற வாயில்கள் சமீபங்கள் என்பது கதவுகளின் உட்புறத்தின் ஓரமாக வைக்கச் சொல்லுகிறார்.

''நாம் வழிபடுவதற்கு தகரக் கண்ணாடி விளக்கு வைத்து வழிபட வேண்டும் என்கிறார்.''விளக்கு வைத்தால் தகரக் கண்ணாடி விளக்குத்தான் வைக்க வேண்டும் என்பது  வள்ளல்பெருமான் கட்டளை.

இங்கே சபையின் உட்புற வாயில்கள் என்பதால் எட்டு கதவுகள் உள்ளன என்பது தெளிவாகின்றன.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சித்தி வெளிப்படும் வரைக்கும் என்பதால், ஆண்டவர் வருகின்ற வரையில் அந்த இடம் இருள் இல்லாமல் வெளிச்சம் இருக்க வேண்டும் என்பதாகும்,எரியும் விளக்கில் கண்களுக்கு தெரியாத பூச்சிகள் வந்து உயிர் இழ்ந்துவிடக்கூடாது என்பதால், ஜீவகாருண்ய அடிப்படையில் தகரக் கண்ணாடி விளக்கு வைக்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார் .

சபையின் விளக்கப் பத்திரிகையின் விளக்கத்தைப் உற்று கவனித்தால் வள்ளல் பெருமான் ஜோதி தரிசனம் காட்டவில்லை என்பதும் ,எழுதிரைகளை வள்ளல்பெருமான சபையில் தொங்க விடவில்லை என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெருஞ் சித்தி வெளிப்படும் வரைக்கும் என்பதால் .வள்ளல்பெருமான் .இறைவன் கட்டளைப்படி சித்திவளாகத் திருமாளிகையில் சென்று கதவை தாளிட்டுக் கொள்ளாமல் ''ஞானசபைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டு இருக்க வேண்டும்'' அதைத்தான் சித்தி வெளிப்படும் வரைக்கும் என்று பதிவு செய்கிறார் . ஞான சபையை வள்ளல்பெருமான் சொல்லியபடி,அன்பர்களிடம்  முறையாக, கவனமாக செயல்படுத்த வேண்டும் என்று கட்டளை இடுகிறார் .

வள்ளல்பெருமான சொல்லிய வண்ணம் தொண்டர்கள் செயல் படாததால் கோபத்துடன் ஞான சபையை பூட்டி சாவியை எடுத்துக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிடுகிறார் .தன்னுடைய சீடர்களுக்கு வள்ளல்பெருமான் சொல்லியது ..இதுநாள் வரையில் என்னுடன் பழகியும் என்னுடன் இருந்தும் சுத்த சன்மார்க்கம் இன்னதென்று புரிந்து கொள்ளவில்லையே என்று சொல்லி வேதனைப்படுகிறார், இதுதான் சபையில் நடந்த செய்திகளாகும்.

வள்ளலார் ஜோதி தரிசனம் காட்டினார் என்பதும்,...ஏழு திரைகளை வள்ளல்பெருமான் தொங்கவிட்டார் என்பதும்....திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டினார் என்பதும் ...ஏற்றுக் கொள்ளமுடியாது, என்பது என்னுடைய அறிவுக்கு கிடைத்த விளக்கமாகும் .அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு திரை மறைப்பு எல்லாம் கிடையாது.என்பதையும் நாம் உணர வேண்டும்.

மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருப்பதுதான் அஞ்ஞானம் என்கிற  அறியாமை என்னும் மாயா திரைகளாகும்.இதை புரிந்து கொள்ளாமல் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவருக்கு திரைப் போடுவது என்ன நியாயம் ? இவைகள் அனைத்தும் சமயவாதிகள் செய்த சூழ்ச்சியாகும் ,என்பதை.சுத்த சன்மார்க்கிகள் சிந்திக்க வேண்டும்.மேலும் சபையின் விளக்கத்தை பின்னாடிப் பார்ப்போம் .

தற்போது ஞானசபைக்குள் சுத்தம் செயவதற்கும்,தீபம் ஏற்றுவதற்கும் 72,வயதுக்கு மேற்பட்டவர்களும்,12,வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் மட்டுமே உள்ளே செல்ல வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளையாகும் .

ஞானசபையில், சமய மத கோவில்கள் போல் அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை, மேளதாளம்,பிரசாதம்,அகல் விளக்கு,சூடம், விபூதி, குங்குமம், போன்ற எந்த ஆச்சார சங்கற்ப செய்கைகளும் செய்யக்கூடாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கைகளாகும்.

எட்டுக் கதவுகள் !

எண்கோண வடிவமாக கட்டப்பட்டுள்ள ஞான சபையில் எட்டுக் கதவுகள் வைத்து கட்டப்பட்டுள்ளன.எட்டுக் கதவுகளுக்கும் எட்டு அம்பலம்.என்று பெயர் வைத்துள்ளார் .எட்டுக் கதவுகளும் திறந்தே வைத்திருக்க வேண்டும் என்பது வள்ளலாரின் கட்டளையாகும்.

ஆதாரமான பாடல் !

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே .

திருவார் பொன்னம்பலத்தே செழிக்குங் குஞ்சித பாதர்
சிவ சிதம்பர போதர் தெய்வச் சபாநாதர்....வருவார்

சிந்தை களிக்கக் கண்டு சிவானந்த மதுவுண்டு
தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரிகொண்டு
இந்த வெளியில் நடம் இடத் துணிந்தீரே அங்கே
இதைவிடப் பெருவெளி இருக்குது  என்றால் இங்கே ..........................வருவார்

இடுக்கு இல்லாமல் இருக்க இடம் உண்டு நடஞ் செய்ய
இங்கு அம்பலம் ஒன்று அங்கே எட்டு அம்பலம் உண்டைய
ஒடுக்கில் இருப்பது என்ன உளவு கண்டு கொள்வீர் என்னால்
உண்மையிது வஞசமல்ல உன்மேல் ஆணை என்று சொன்னால் ....வருவார்

மெல்லியல் சிவகாம வல்லி யுடன் களித்து
விளையாடவும் எங்கள் வினை யோடவும் ஒளித்து
எல்லையில் இன்பம் தரவும் நல்ல சமயம்தான் இது
இங்கும் அங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே .

தில்லை சிதம்பரத்தில் இறைவனை சிதம்பர ரகசியமாக வைத்து அதை மறைத்து திரையிட்டு ,பின் திரையை விளக்கி வழிபாடு செய்கின்றார்கள் .அதன் உண்மையை மக்களுக்கு தெரிவிக்க தெளிவிக்க,உணர்த்த  யாரும் இல்லை .அதே நேரத்தில் அங்கு ஒரு அம்பலத்தில் இறைவன் ரகசியமாக காட்சி தருவது ஏற்புடையது அல்ல என்பதாலும்.மக்கள் அதிகமாக கூடினால் பார்ப்பதற்கு சிரமமாக இருக்கின்றது .

இங்கு வடலூரில் எட்டு அம்பலம் உள்ளது .அதாவது எட்டுக் கதவுகள் வைத்து ,எட்டுக் கதவுகளும் திறந்தே இருக்கும். .ஆகையால் இங்கே வந்தால் மக்கள் எட்டுத் திக்குகளிலும்  எங்கு இருந்தும் பார்த்தாலும் ஜோதி தெரியவேண்டும். .அந்த அளவில் சத்திய ஞான சபையை அமைத்துள்ளேன் என்று சொன்னால் அருட்பெருஞ்சோதி ஆண்டவர வந்து விடுவார் அதனால் வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே என்று மேலே கண்ட பாடலின் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் .

மேலே கண்ட பாடல் வாயிலாக, வடலூர் பெருவெளியில்,எண்கோண வடிவமாக தோற்றுவிக்கப் பட்டுள்ள  சத்திய ஞான சபைக்கு வந்து அமர்ந்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று  அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை அழைக்கின்றார் . இதவிட பேருண்மை எதுவேண்டும் .

வடலூர் மக்கள் !

வள்ளல்பெருமானின் அன்பால் அருளால் ஈர்க்கப்பட்ட வடலூர் பார்வதி புரத்து மக்கள் எண்பது காணி இடம் கொடுத்துள்ளார்கள் அதன் மத்தியிலே ஞான சபையை தோற்றுவித்து உள்ளார் ..எதற்காக அவ்வளவு இடம் என்றால் உலகில் உள்ள எட்டு திக்கு மக்களும் வந்து, எந்த திக்கில், எந்த இடத்தில் இருந்து பார்த்தாலும் அருட்பெருஞ்ஜோதி தரிசனம் தெரியவேண்டும் என்பதால், எட்டு அம்பலம் என்னும் எட்டுக் கதவுகள் வைத்து ஞானசபையைக் கட்டி வைத்துள்ளார் .

காலம் கடந்த கடவுளைக் காண்பதற்கு காலம் கருதுவதேன் ? ..என்றும்,
அடங்கு நாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே தொடங்கு நாள் நல்லது அன்றோ!  என்றும் ...தடையாது இல்லாத தலைவனைக் காணற்கே தடையாது இல்லை கண்டாய் ! ..என்றும், ஆலயக் கதவை அடைத்து வைக்காதே ! என்றும் திருஅருட்பாவில் பல இடங்களில் பதிவு செய்துள்ளார் .

சத்திய ஞான சபையில் ,மாதப்பூசத்   தரிசனமோ,தைப்பூசத்   தரிசனமோ,தினமும் மதியம்,இரவு போன்ற தரிசனமோ காட்டச் சொல்லவில்லை.கடவுளைக் காண்பதற்கு நேரம்,காலம்,நட்சத்திரம்,சாத்திரம்  போன்ற, சடங்கு முறைகள் தேவை இல்லை என்பது வள்ளலார் வகுத்த தந்த வழிமுறை களாகும்.

உலகில் உள்ள மக்கள் அனைவரும் வடலூருக்கு வந்து ஜோதி தரிசனம் காண வேண்டுமானால் சத்திய ஞான சபையில் இடைவிடாது தினசரி ஜோதி தரிசனம் காண வேண்டும் என்பதும்,காட்ட வேண்டும் என்பதும் வள்ளலாரின் விருப்பமாகும்.அதை விடுத்து ,சமய,மதம் சாதிக் கோவில்கள் போல் காலம்,நேரம்,பார்த்து ஜோதி தரிசனம் காண்பிக்க கூடாது.அவை இறைவனுக்கு ஏற்புடையது அன்று என்பதை தெளிவு படுத்தி உள்ளார் .

திருஅருட்பாவின் உண்மை தெரிந்த சன்மார்க்க அன்பர்களின் விருப்பமும் ,பொது நோக்கமுள்ள லட்சகணக்கான மக்களின் விருப்பமும் இதுவேயாகும்  தினசரி இறைவனை எந்நேரமும், எப்போது வேண்டுமானாலும் தரிசனம் காண வேண்டும்.காட்ட வேண்டும்  என்பது தான் அனைவரின் கோரிக்கையாகும்.

எனவே சத்திய ஞான சபையில் தினசரி ஜோதி தரிசன வழிபாடு எந்நேரமும் நடைபெறுவதுதான் உண்மையான வழிப்பாட்டு முறையாகும். உடனே அதற்கு உண்டான வழிமுறைகளை  ஏற்பாடு செய்ய வேண்டும்.

சத்திய ஞான சபையில் ஜோதிசுடர் அணையாமல் எப்போதும் ஒளிர்ந்து கொண்டே இருக்க வேண்டும்.

ஞான சபையில் சன்மார்க்க கொடி ஓங்கி உயர்ந்து பறக்க வேண்டும்.

இது தொடர்ந்து நடைபெறும் வரைக்கும் சன்மார்க்க அன்பர்கள் தொடர்ந்து பாடுபட வேண்டும்.

வள்ளல் பெருமானின் விருப்பத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து மக்கள் தினந்தோறும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுவதற்கு வகை செய்து கொடுங்கள் என்று, இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கும் தமிழக ஆட்சிக்கும்,தமிழக முதல்வருக்கும் முறைப்படி தெரிவிக்க வேண்டும்.வள்ளல்பெருமான கட்டளைப்படி சட்டப்படி வழிபாட்டு முறையை மாற்றி அமைக்க வேண்டும் .

வடலூர் உலகின் புண்ணிய தலமாகவும் ,சாதி,சமயம்,மதம் என்ற பேதம் இல்லாமல் அனைத்து தர மக்களும் வந்து வழிபாடு செய்து வணங்கும் ,உண்மைக் கடவுள் விளங்கும் இடமாகும்., உலகின் அதிசயங்களில்  ஒன்றாக, தமிழக அரசு அறிவித்து அதற்குண்டான பணிகளைத் தொடங்க வேண்டும்.மேலும் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களை ,உலக சுற்றுலா ஆன்மீக முக்கிய அதிசய ஸ்தலமாக அறிவிக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல்கள் !

சித்தி புரத்தே தினந்தோறும் சீர் கொள அருள்
சித்தி விழா நீடித்து தழைத்து ஒங்க --எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உருக மதத்
துள்ளல் ஒழிக தொலைந்து .

உலகம் எல்லாம் தொழ உற்றது எனக்கு உண்மை யொண்மை தந்தே
இலக எலாம் படைத்து ஆருயிர் காத்து அருள் என்றது என்றும்
கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்
திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே .

காணாத காட்சிகள் காட்டு விக்கின்றது காலமெல்லாம்
வீணாள் கழிப்பவர்க்கு எய்தரிதானது வெஞ்சினத்தார்
கோணாத நெஞ்சிற் குலாவி நிற்கின்றது கூடிநின்று
சேணாடர் வாழ்த்துவது உத்தர ஞான சிதம்பரமே !

என்று பல பாடல்களில் வள்ளலார் சத்திய ஞானசபையைப் பற்றி பதிவு செய்துள்ளார்.

உலகுக்கு ஒரு புதிய ஆன்மீக விழிப்பு உணர்வை தரக்கூடிய உண்மையான ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை வலியுறுத்தும்,சாதி,சமயம்,மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாத ''உலகின் பொது வழிபாட்டுச் சபைதான் '' வடலூரில் உள்ள சத்திய ஞான சபையாகும்.

நம் உடம்பின் தலை பாகத்தின் உள்ளிருக்கும் ஆன்ம ஒளியை ,அருட்பெருஞ் ஜோதியைப் புறத்தில் அருட்பெருஞ்ஜோதியாகக் சுட்டிக் காட்டி இருக்கும் ஆன்ம ஒளி தான் சத்திய ஞான சபையாகும் .அங்கு இரவு பகல் இருபத்து நான்கு மணி நேரமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் ஒளி வடிவாகக் காட்சி தரும் திருவிளக்குத் தான், சத்திய ஞான சபையில் ஒளிர்ந்து கொண்டு இருக்க வேண்டும்.

எல்லா உலக மக்களும், எந்த நேரத்திலும் வந்து வழிபடக் கூடிய அருள் ஜோதி வழிப்பாட்டு ஸ்தலம் தான் சத்திய ஞான சபையாகும் .

இந்த உண்மையை மறைத்து சத்திய ஞான சபையை,சில நாட்கள் தவிர மற்றைய நாட்களில் ஆண்டுதோறும் பூட்டி வைக்க எண்ணுவது உண்மையான இறை உணர்வை மறைக்கும் நோக்கமாகும் .

இதை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் உணர வேண்டும்.வெளிநாட்டில் இருந்தோ உள் நாட்டில் இருந்தோ ,வடலுருக்கு வருபவர்களை அழைத்துக் கொண்டு சென்றால் அங்கு சத்திய ஞான சபையை  அடைத்து வைத்து இருந்தால் அவர்களுக்கு எப்படி அருட்பெருஞ் ஜோதியைக் காண்பிப்பது .

வடலூருக்கு வள்ளலார் வைத்த பெயர் ''ஞான சித்திபுரம்'' என்பதாகும். அதாவது சித்தி என்னும் அருள் நிறைந்த இடமாகும் .அருள் நிறைந்த இடம் அடைக்கப்பட்டு இருக்கலாமா என்பதை சிந்திக்க வேண்டும்.

சாதி,சமயம்,மதம்,போன்ற பற்று உள்ளவர்கள் வடலூர் வந்து ஜோதி தரிசனத்தை கண்டு களிக்கும் போது,தங்களுக்குள் இருக்கும் சாதி,சமய ,மதப் பற்றுகள் மறைந்து உண்மையான சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடித்து தங்களை மாற்றிக் கொள்வார்கள் என்பது வள்ளலாரின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும் .

இப்படி உலகில் உள்ள ஒவ்வொரு மக்களும் வந்து ஜோதி தரிசனம் கண்டு களித்து பின் ....உலக மக்கள் அனைவரும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைக் கடைபிடித்தால் உலகமே தூய்மையாகும்,உலகமே அமைதி பூங்காவாக மாறிவிடும்  என்பது வள்ளலாரின் எண்ணமும்,கொள்கை களுமாகும்

வடலூரில் சத்திய ஞான சபையில் --25--1--1872,ஆம் ஆண்டு ,திறப்பு விழா செய்து ,ஆண்டவர் அருள் சித்தி வெளிப்படும் வரைக்கும் இப்படித்தான் சபையைக் காத்து நடத்தி வர வேண்டும் என்று அன்பர்களுக்கு கட்டளை இட்டுள்ளார் .வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் செயல்படவில்லை என்பது தெளிவாகின்றது .

வள்ளலார் சொல்லியபடி வழிப்பாட்டு முறைகள் நடைபெறாததால் சபையை பூட்டி அதன் சாவியை எடுத்துக் கொண்டு ,சித்திவளாகம்,என்னும் மேட்டுக் குப்பத்திற்கு சென்று விட்டார் .இதுவே உண்மையாகும் .

வள்ளலார் சித்தி பெறுகின்ற வரையில் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காட்டப்படவில்லை.

வள்ளலார் சித்தி பெற்ற பின்பு சில மாதங்கள் கழித்து .சபாபதி குருக்களின் சூழ்ச்சியால், சமயவாதிகளின் துணையுடன் சமய,மதம் போன்ற  சடங்குகளுடன் ஏழு திரைகளை வைத்து ,தினமும் மதியம்,இரவும்... மாதப்பூசம்,தைப்பூசம் என்னும் சமய வழிப்பாட்டு முறையைக் கொண்டு வந்துள்ளார்கள்.. அது தொடர்ந்து நடைப்பெற்றுக் கொண்டு வந்தது.

வள்ளலார் சித்திப் பெற்றபின் சபாபதி குருக்கள் ஞான சபையைத் திறந்து வழிபாட்டு முறைகளை அவர் விருப்பத்திற்கு சில பல ஆதாரங்களை காட்டி செயல்படுத்தி விட்டார் .அவரும் இல்லை என்றால் அதுவும் நடைப்பெற்று இருக்காது.அதுவும் இறைவன் சம்மதமே,அதுவும் காலத்தின் கட்டாயமாகும்.கெட்டதில் ஒரு நல்லதாகும்.

சபாபதியின் குடும்பத்தின் வாரிசுகளை வெளியேற்ற,சுத்த சன்மார்க்க அன்பர்கள் பலர் பல போராட்டங்கள் செய்தும் பலப்பல முயற்சி செய்தும் வெற்றிபெற முடிய வில்லை.சாபாபதி குருக்களின் வாரிசுகள் தொடர்ந்து சத்திய ஞான சபையை கைப்பற்றி சமய,மத  சடங்குகளுடன் வழிபாட்டு முறைகளை செய்து வந்தனர்.

சத்திய ஞான சபையை வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல்படுத்த வில்லை என்பதால்  ஈரோடு கதிர்வேல் ஆகிய நான் பல போராட்டங்கள் செய்து உள்ளேன் சபை குருக்களாக இருந்த 'சபேசன்'' என்பவருக்கும் எனக்கும் வாதங்கள் உண்டாகி அவரிடம் இருந்த சபை சாவியை பிடுங்கி வைத்துக் கொண்டு அவரிடம் கொடுக்காமல் தருமச்சாலை நிர்வாகத்திடம் கொடுத்து சபையை வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல் படுத்த வேண்டும். இல்லையேல் பெரிய போராட்டம் நடக்கும் என்று முறையிட்டேன் .

அதன்பின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக இருந்த இராமவீரப்பன் அவர்களின் அனுமதியோடு இந்து சமய ஆணையர் அவர்களும் ,காவல்துறை கண்கானிப்பாளரும் வந்து பேச்சு வார்த்தை நடத்தி அந்த நேரத்தில் சுமுகமாக பிரச்சனையைத் தீர்த்து வைத்து சாவியை குருக்களிடம் கொடுத்து வழிபாடு தொடர்ந்தது என்பது வரலாறுகளாகும்.

அதன்பின் எப்படியோ திருவருள் சம்மதத்தால்,பல சன்மார்க்க அன்பர்கள் முயற்சியால் இந்து சமய அறநிலையத்துறை ஆட்சியாளரின் உதவியாலும் தமிழக அரசின் உதவியாலும் ,பழைய குருக்களின் குடும்பத்தை, சட்டப்படி நீக்கி விட்டு சடங்குகள் இல்லாத ஜோதி தரிசனம்,பழையப்படி காட்டப்பட்டு வருகிறது.

இன்னும் வள்ளலார் கட்டளைப்படி ,வடலூர் சத்திய தருமச்சாலையும்,சத்திய ஞான சபையும்,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும். மேட்டுக்குப்பத்தில் உள்ள வள்ளலார் சித்தி பெற்ற சித்தி வளாகமும் முழுமையாக வள்ளலார் கொள்கைப்படி நடைபெறவில்லை.

இனிமேலாவது இந்து சமய அறநிலையத்துறை ஆட்சியாளர்களும்,தமிழக அரசும் முன்வந்து,வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களை, வள்ளலார் திருஅருட்பாவில் எழுதி வைத்துள்ளபடி,உண்மைக்கு மாற்றம் இல்லாமல் சீர் திருத்தங்கள் செய்ய வேண்டும் என்பது சுத்த சன்மார்க்கிகளின் வேண்டு கோளாகும்.

இதற்கு தமிழக அரசு கண்டிப்பாக செயல்படும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.சுத்த சன்மார்க்கிகள் விடா முயற்சி செய்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

இந்தியா சுதந்திரம் அடைந்ததும் தமிழ் நாட்டின் முதன் முதல் மந்திரியாக இருந்தவர் ஓமந்தூர் இராமசாமி என்பவராகும்.அவர் வள்ளலார் மீது அதிக பற்று கொண்டவர் .அவருடைய சொத்துக்கள் யாவும் தமிழக அரசுக்கும்.வள்ளலார் கல்வி நிலைய அறக்கட்டளைக்கும் எழுதி வைத்தவராகும்.இன்று சென்னையில் தமிழக சட்டசபை இயங்கும் இடம் அனைத்தும் ஓமந்துறார் தோட்டம் என்பதாகும்.

பட்டம் பதவி,புகழ் எதுவும் வேண்டாம் என்று தூக்கி எறிந்துவிட்டு வள்ளலார் கொளகைகளை பின்பற்றுவதே சிறந்த வாழ்க்கையாகும் என்பதை உணர்ந்து ஓமந்தூர் இராமசாமி அவர்கள் வடலூரில் வந்து தங்கி தன் வாழ்க்கையை நிறைவு செய்தார் என்பது இன்று உள்ள இளைய சமுதாயத் தார்களுக்கு தெரியவே தெரியாது.அந்த உத்தமரை தமிழகம் கண்டு கொள்ளவே இல்லை.

அவருக்கு பின்ன்ர் தமிழக ஆட்சியாளர்களும் தமிழ் சான்றோர்களும் வள்ளல்பெருமான் கொளகைகளை பின்பற்றாத காரணம் என்ன வென்று தெரியவில்லை.பின்பற்ற தவறினாலும் அவருடைய சுத்த சன்மார்க்க கொள்கைகளை மக்கள் உணரும்படி தெரிவிக்க வேண்டும் அல்லவா.அவை தமிழக அரசின் கடமை இல்லையா ?

வள்ளலார் கொள்கை களையும் ஒழுக்க நெறிகளையும் இன்றைய தலைமுறை மாணவர்களுக்கு பள்ளி, கல்லூரிகளில் பாடமாக கொண்டு வந்தால் மாணவர்கள் ஒழுக்கம் நிறைந்த உயர்ந்த அறிவுள்ள மாணவர்களாக உருவாக்க முடியும் இல்லையா ? ஏன் அதை தமிழக அரசு கொண்டுவர தயங்குகிறது என்பது தெரியவில்லை .  

உலக அரங்கில் தமிழ் நாடு பேசப்படும் நிலை உயர வேண்டுமானால் ,வள்ளலார் காட்டிய ஒழுக்க நெறிகளும்,ஜீவ காருண்ய ஒழுக்க  நெறிகளும்,ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் ஒருமைப்பாடும்...உலகப்  பொது நெறியாகக் போற்றப்படும் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும்'' அதன் வழியாக அவர் காட்டிய கொள்கைகளும் வள்ளலார் விதைத்த புனிதமான அருள் விதைகளாகும்.

அவர் விதைத்த பகுத்தறிவு ஆன்மீக விதையை உலகம் முழுவதும் விதைக்க வேண்டும்.இதை உணர்வது  உயர்த்துவது,வளர்த்துவது,உலகம் முழுவதும் பரப்புவது, சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க உறுப்பினர்களின் கடமையாகும் .வள்ளலார் காட்டிய உண்மை நெறியை தமிழக அரசின் கவனத்திற்குப் கொண்டு போவதும் சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்.மேலும் இவற்றை ஏற்றுக் கொண்டு நிறை வேற்றுவது தமிழக அரசின் முக்கிய கடமையாகும்.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வளர்ப்போம்,!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை காப்போம்,!
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைக் காண்போம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சித்திவளாக ஞான சித்தி புறத்திற்கு செல்வோம்!

ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையை கடைபிடிப்போம் !
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலகிற்கு காண்பிப்போம்!
உலகம் எல்லாம் சமரசத்தை காண்போம் !.
தமிழக அரசுக்கு வள்ளலாரின் உண்மைகளை எடுத்து உரைப்போம்.!
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ பாடுபடுவோம்.!

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
வாழ்க உலக உயிர்கள் !
வளர்க சுத்த சன்மார்க்க நெறி !

அன்புடன் ஆன்மநேயன் ;--
செ,கதிர்வேல்
108,C, நந்தா இல்லம்
வள்ளலார் வீதி
வய்யாபுரி நகர் .
46,புதூர் அஞ்சல்
ஈரோடு 638002.
தமிழ் நாடு ..இந்தியா .
கைபேசி ..9865939896 .
தொலை பேசி --0424 2401402,ஞாயிறு, 20 ஜூலை, 2014

கொல்லாமை ! ,புலால் உண்ணாமை !

கொல்லாமை ,புலால் உண்ணாமை !

நமது தமிழ் நாட்டிலும் இந்தியாவிலும் மற்றைய நாடுகளிலும்  தற்போது ஆட்சி புரியும் ஆட்சியாளர்கள்,முன்னாடி ஆட்சி புரிந்த ஆட்சியாளர்கள்.மற்றும் தமிழ் அறிஞர்கள்,தமிழ் ஆராய்சியாளர்கள், தமிழ்ப் புலவர்கள்.தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மேல் பற்று உள்ளவர்கள் ,தமிழுக்கு வக்காலத்து  வாங்குபவர்கள்.என தமிழ் அறிந்த பெருமக்கள் அனைவரும் வாழ்ந்து வரும் நாடு தான் தமிழ் நாடாகும் .

தமிழ் கற்ற ஆன்மீக பெரியோர்கள்,நாயனமார்கள் ஆழ்வார்கள்,சித்தர்கள்,யோகிகள் ,ஞானிகள் என பல்லாயிரம் தமிழ் அருளாளர்கள் தோன்றிய நாடு தமிழ் நாடாகும்.

இவர்களில் எத்தனை பேர் உயிர்க் கொலை செய்யாதவர்கள்,புலால் உண்ணாதவர்கள்.என்பதை அவரவர்களே சிந்திக்க வேண்டும்.ஒரு உயிரை கொலை செய்வதும் கொலை செய்த புலாலை உண்பதும்,கொடியப் பாவச்செயல் என்பதை மக்களுக்கு போதிக்காது இருப்பதின் நோக்கம் ஏன் ? மேலும் கடவுளின் பெயரால் உயிர்பலி செய்வது எவ்வளவு குற்றம் என்பதை ஆன்மீக பெரியவர்கள்,ஆன்மீக சிந்தனையாளர்கள்,ஆன்மீக ஆதினங்கள ஏன் மக்களுக்கு புரிய வைக்கவில்லை ? பகுத்தறிவை போதித்த பெரியார்,போன்ற பகுத்தறிவு வாதிகளும்,  கொலையும் புலையும் உடம்புக்கு கெடுதலை விளைவிக்கும் என்பதை ஏன் போதிக்கவில்லை.

ஏன் என்றால் அனைவரும் புலால் உண்பவர்கள், புலால் உண்பவர்கள் எல்லாம் தமிழைப் பற்றி பேச தகுதி உடைவர்களா ? இவர்களால் தமிழை பாதுகாக்க முடியுமா ? சித்திக்க வேண்டும்.

தமிழ் பேசும் தமிழ் அறிஞர் என்று சொல்பவர்கள் அனைவரும் ஓர் அளவிற்கு திருவள்ளுவர் எழுதிய திருக்குறளைப் படித்து இருப்பார்கள்.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி,.திருவள்ளுவர் ,தாம் எழுதிய திருக்குறளில் இரண்டு அதிகாரம் ,கொல்லாமை ,புலால் மறுத்தல் (புலால் உண்ணாமை ), பற்றித் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.அதைப் படித்து இருப்பார்கள் அதன் விளக்கம் தெரிந்து இருப்பார்கள்..இன்று தமிழ் நாட்டில்,கலவிக் கண்ணை திறக்கும் கல்வி அதிகாரிகள்,கல்வி ஆய்வாளர்கள்,தமிழ் நாட்டு ஆட்சியில் இருப்பவர்கள்,கல்லூரி, பள்ளிகளில் பணிபுரியும் தமிழ் ஆசிரியர் ஆசிரியைகள் பணியில் இருக்கிறார்கள்.அவர்கள் புலால் உண்ணாமல் இருக்கிறார்களா ?அவர்களுக்கு திருக்குறளில் உள்ள கொல்லாமை புலால் உண்ணாமைப் பற்றிய கருத்துக்கள் திருக்குறளில் உள்ளது அவர்களுக்குத் தெரியாதா >அதன் உண்மைகளை மாணவர்களுக்கு போதிக்கிறார்களா ? போதிக்காது ஏன் ?

கல்வித்துறை அதிகாரிகள் திருக்குறள் படித்து இருக்க மாட்டார்களா ? பள்ளிக் குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைப் பற்றி போதிக்கும்,கல்வித் துறை அதிகாரிகள் ,ஆசிரியர் ஆசிரியைகள் ,தாம் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல் மாணவர்களுக்கு எப்படி ஒழுக்கத்தைப் பற்றி போதிப்பார்கள்?.எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று வாய் கிழிய பேசிவிட்டால் போதுமா ?

தமிழன் என்று சொல்பவன் ,உயிரைபற்றியும் உடம்பைப் பற்றியும் தெரிந்து கொள்ளாதவன், தமிழன் என்று எப்படி சொல்ல முடியும்.இவை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னாடி ஆன்மீக வாதிகள் செய்த சூழ்ச்சியாகும்.மக்களை அறியாமையில் தள்ளிவிட்டு ,ஒரு கூட்டம் சுகபோக வாழ்க்கை வாழ்வதற்கு கடவுள் பெயரால் மக்களை முட்டாள்களாக்கி,அவர்களை அழியவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்து இருக்கிறார்கள்.

ஆரியர்கள் ,பிராமணர்கள் என்பவர்கள்.தங்களை ஆண்டவரின் பிரதிநிதி என்றும் ,ஆண்டவரின் அடியாட்கள் என்றும் ,அவர்களே கடவுள் என்றும்,அவர்களை அனைவரும் வணங்க வேண்டும் என்றும் .அவர்கள் காட்டிய தெய்வங்களை வழிபட வேண்டும் என்றும்.வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற நூல்களை எழுதி மக்களுக்கு பொய்யான தகவல்களை மெய்யாக இருப்பது போலவே ,ஆலயங்கள் கட்டி வழிபாட்டு முறைகளை வகுத்து வைத்துள்ளார்கள்.

அதுமட்டும் அல்ல,சாதி,சமயம் மதம் போன்ற கொள்கைகளை வகுத்து,உயர்ந்தவன் தாழ்ந்தவன்,உயர்ந்தசாதி ,தாழ்ந்த சாதி,என மக்களை பிரித்து வைத்து,வேதங்கள் சொல்கிறது என்று வேறுபடுத்தி விட்டார்கள்.

அவர்கள் வணங்கும் தெய்வங்கள் உயிர்க் கொலை செய்யக் கூடாத பிரம்மா,விஷ்ணு சங்கரன்,மகேஸ்வரன்.சதாசிவம் போன்ற ஆண் தெய்வங்களும்,லஷ்மி,சரஸ்வதி.பார்வதி,போன்ற பெண் தெய்வங்களையும்,
படைத்து வைத்துள்ளார்கள்.அந்த தெய்வங்களுக்கு ,பால்,பழம்,தேன்,நெய்,சர்க்கரை ,கற்கண்டு,போன்ற உயர்ந்த சக்தி உள்ள பொருள்களைப் படைத்து சாமிக்கு அபிஷேகம்,என்ற பெயரில் அவர்களே எடுத்து சென்று விடுவார்கள்.கடவுள் என்னும் பொம்மைகளை வைத்து அதன் அருகில் உள்ளதால் அவர்கள் உயர்ந்த சாதிக்காரர்கள் என்று மக்கள் மத்தியில் அறிமுகப் படுத்திக் கொண்டார்கள்.

சாதாரண மக்கள் வழிபடும் தெய்வங்கள்,உயிர்களை பலிவாங்கும் தெய்வங்களான,காட்டேறிக் கருப்பன்,மாடன்,காடன்,மூடன் போன்ற ஆண் தெய்வங்களும்,காளி,மூளி பத்ரகாளி,போன்ற பெண் தெய்வங்களையும் படைத்து வழிபாடு செய்ய வைத்து விட்டார்கள்.அந்த தெய்வங்கள் எப்படி இருக்கும் தெரியுமா,கையில் கத்தி,சூலம்,அரிவாள் ,துப்பாக்கி,போன்ற கருவிகளை வைத்து,நாக்கை நீளமாக வெளியே நீட்டி மிகவும் கோடுரமான தோற்றத்துடன் ஊருக்கு வெளியே கோயிலைக் கட்டி வைத்து இருப்பார்கள்.

 சாதாரண மக்களுக்கு துன்பம் சோதனை வந்தால் அந்த தெய்வங்களுக்கு,சாராயம்,கஞ்சா,கள்ளு,போன்ற போதை வஸ்துக்களையும் ஆடு,மாடு,பன்றி,கோழி,போன்ற  உயிர்களை பலிக்கொடுத்து ரத்தத்தினால் அபிஷேகம் செய்து,அந்த புலாலையும் போதை வஸ்துக்களையும் உட் கொண்டால் துன்பங்கள் தீர்ந்துவிடும்,என்று பொய்யான வழிமுறைகளை மக்களுக்குக் காட்டி மக்களை படுகுழியில் தள்ளி விட்டார்கள்.அதனால் மக்கள் உண்மை தெரியாமல் கடவுள் பெயரால் தவறு செய்து கொண்டு உள்ளார்கள்.இவை பால்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டு வருகிறது.

திருக்குறள் !

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பொய்யா மொழிப் புகன்ற அருளாளர்  திருவள்ளுவர் இவற்றை எல்லாம் பார்த்து மக்களை நல்வழிக்கு கொண்டு வரவேண்டும் என்ற பெருங் கருணையோடு திருக்குறளை மக்களுக்குத் தந்துள்ளார்கள்.

மனிதனாக பிறந்தவன் எப்படி வாழ வேண்டும் என்பதை திருவள்ளுவர் ,அறம்,பொருள்,இன்பம் ,வீடு என்னும் உண்மை நெறிகளைப் பற்றி தமிழில் மக்களுக்கு,133,அதிகாரங்கள் அடங்கிய, 1330,..திருக்குறளை வகுத்து தந்துள்ளார் .மனிதனாக பிறந்தவன்,உண்மையான அறம்,நேர்மையான பொருள்,என்றும் அழியாத இன்பம் பெற்று வாழ்பவன்தான்,வீடுபேரான இறைநிலையை அடையமுடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக ஒன்றே முக்கால் வரிகளில் வடித்து தந்துள்ளார் .

திருவள்ளுவர் எழுதியுள்ள திருக்குறள் அனைத்தும்,என்றும் அழியாத பொன் (தங்கம் ) போன்ற பொக்கிஷமாகும்.,அனைத்து குறள்களும் உடம்பைப் பற்றியும் ,உயிரைப் பற்றியும் பேசுவதாகும்.அதிலே தலையாய குறள் கொல்லாமை,புலால் உண்ணாமைப் பற்றியதாகும்.

அவர் அறிவுடமைப் பற்றி ;--,அறிவுள்ள மனிதன் யார் என்பதை தெளிவு படுத்துகிறார்.

எப்பொருள் யார் யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு .

எந்த சமாசாரத்தையும், எந்த விபரத்தையும்,எந்தப் பொருள் பற்றியும் எவர் ரெவர் வாய் மூலமாகக் கேட்டாலும் அந்த விஷயத்தின் நிஜத்தின் அதாவது உண்மையை அறிந்து கொள்வது மனிதனின் உயர்ந்த அறிவாகும்,அப்படி அறிந்து கொள்பவனே மனிதன்.அவனே உயர்ந்த அறிவுள்ள மனிதனாகும் என்பதை விளக்குகிறார்.

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண்.

எந்த உயிர்களுக்கும் அழிவு வராமல் காக்கும் கருவி அறிவாகும்.அந்த அறிவு பகைவராலும் அழிக்க முடியாத கோட்டையாகும் என்கிறார் திருவள்ளுவர்.மேலும் கொல்லாமை ,புலால் உண்ணாமைப் பற்றி இரண்டு அதிகாரங்களைத் தந்துள்ளார் .

கொல்லாமை !

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும்,

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை .

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்று அதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி .

நிலை அஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலை அஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை.

கொல்லாமை மேற்கொண்டு ஒழுகுவான் வாழநாளமேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை .

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை .

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து.

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர்உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர்.

புலால் உண்ணாமை !

தன்னூன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன்உண்பான்
எங்கனம் ஆளும் அருள்.

பொருள் ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு .

படை கொண்டார் நெஞ்சம்போல் நன்ரூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.

அருள் அல்லது யாதெனின் கொல்லாமை கோறல்
பொருள்அல்லது அவ்வூன் தினல்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு .

தினற் பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப் பொருட்டால் ஊன்தருவார் இல்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத் துண்ணாமை நன்று.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைக்கூப்பி
எல்லா உயிரும் தொழும்.

மேலே கண்ட குறள் வரிகள் மனிதனை மனிதனாக்கி தெய்வநிலையை அடையும் மாண்புடையதாகும்.உலகிலே வாயில்லாத உயிர்களை கொலை செய்தலும்,அதன் புலாலை உண்பதும் மன்னிக்க முடியாத பெருங் குற்றமாகும்.என்பதை திருவள்ளுவர் தெளிவாக விளக்கி உள்ளார்.

மேலே உள்ள திருவள்ளுவர் எழுதியுள்ள திருக்குறளை தமிழ் சான்றோர்கள் படித்திருப்பார்கள்,கொல்லாமைப் பற்றியும் ,புலால் உண்ணாமைப் பற்றியும் மக்களுக்கு ஏன் போதிக்கவில்லை.பள்ளி கல்லூரிகளில் ஏன் கட்டாய பாடமாக கொண்டு வரவில்லை.ஏன் என்றால் அனைவரும் புலால் உண்பவர்களாக இருப்பதால் அதைப்பற்றி யோசிப்பதும் இல்லை,கவனம் செலுத்துவதும் இல்லை.

தமிழ் மொழியின் உண்மை அறிந்து இருந்தால்,நாம் தமிழ் கற்கும் பண்புடையோர் என்பதை உணர்ந்து இருந்தால்.தமிழ் மொழியின் சிறப்பு என்ன என்பதை அறிந்து இருந்தால்,தமிழின் தோற்றம் அதன் இலக்கணம்,இலக்கியம் உண்மையிலே அறிந்து தெரிந்து புரிந்து இருந்தால் ,உயிர்க்கொலையும்,புலைப் புசிப்பும் செய்யமாட்டார்கள்.      

தமிழ் !

இறைவனால் கொடுக்கப்பட்ட உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பை பெற்றுக் கொண்ட மனிதர்களாகிய நாம், உயிரையும் உடம்பையும்,தெரிந்து கொள்ளவும் ,அவற்றைக் பாதுகாத்துக் கொள்ளவும்,மற்ற உயிர்களை அழிக்காமல் இருக்கவும், தோற்றுவிக்கப் பட்டதுதான் தமிழ் மொழியாகும்.தமிழ் மொழி இறைவனால் படைக்கப் பட்ட மொழியாகும்.மனிதர்களால் படைக்கப் பட்ட மொழி தமிழ் மொழி அல்ல என்பதை மனிதர்களாய் பிறந்தவர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

உயிரைப் பற்றித் தெரிந்து கொள்ள உயிர் எழுத்தும்,உடம்பைப் பற்றித் தெரிந்து கொள்ள மெய் எழுத்தும்,உயிரையும் உடம்பையும் அறிந்து கொண்டு இறைநிலையை அடைய ஆயுத எழுத்தையும் இறைவனால் படைக்கப் பட்டதாகும்.ஆதலால் உலக மொழிகளிலே தலைசிறந்த மொழி தமிழ் மொழியாகும்.

தமிழ் மொழி என்பது படித்து பட்டம் பெற்று பொருள் ஈட்டி வாழ்ந்து பின் அழிந்து போவதற்கு அல்ல ! என்றும் அழியாமல் மரணத்தை வென்று பேரின்ப பெருவாழ்வை பெற்று கடவுள் நிலையை அடைய,இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மொழிதான் தமிழ் மொழியாகும்.

பிற உயிர்களைப் பாதுகாத்தால் தான் தன் உயிரை பாதுகாக்க முடியும் என்ற மாபெரும் உண்மையை திருவள்ளுவர் தமிழ் மொழியின் வாயிலாக தெரிவித்துள்ளார்.இவற்றை தெரிந்து கொள்ளாதவனை தமிழன் என்று எப்படி சொல்லுவது.?

வள்ளலார் கொல்லாமைப் பற்றியும் புலால் உன்னாமைப் பற்றியும்.தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .  

வள்ளல்பெருமான் ஒருவர்தான் மனித குலத்திற்கு கொல்லாமை ,புலால் உண்ணாமைப் பற்றி தெளிவாக போதித்து உள்ளார் .

உயிர்க்கொலை செய்பவர்களும் ,புலால் உண்பவர்களும் கடவுளைப் பற்றிப் பேசுவதற்கு தகுதி இல்லாதவர்கள் ,அவர்களை எப்போதும் கடவுள் ஏற்றுக் கொள்வதில்லை.கடவுளின் அருள் துளி கூட அவர்களுக்கு கிடைக்காது .அவர்கள் எப்பொதும் துன்பங்களையே அனுபவிக்க நேரும்.,அவர்களுக்கு,அடுத்த பிறவியில்  துன்மார்க்க பிறவிகளே கிடைக்கும்.மேலும் பலகோடி பிறவிகள் கடந்து தான் மனித பிறவி கிடைக்கும் அதுவரையில் அவர்கள் படும் துன்பங்களுக்கு அளவே இல்லை என்பதை அவர் எழுதி உள்ள திருஅருட்பாவில் மிகவும் தெளிவாக எழுதி வைத்துள்ளார் .  

வெள்ளி, 18 ஜூலை, 2014

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம் !...2,..

வடலூர் சத்திய ஞான சபை விளக்கம்...2,.

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் அவர்கள் .உலகில் உள்ள மக்களின் பசிப்பிணியை போக்க வேண்டும் என்ற பெருங் கருணையால் வடலூரில்
23--5--1867,ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11,ஆம் நாள் தருமச்சாலையை தொடங்கி வைக்கிறார்கள் .

அதன் பின்பு ,உலக மக்கள் அனைவரும் உண்மையான இறைவனைக் காண வேண்டுமானால், உண்மையான இறை நிலையை மனிதன்  அடைய வேண்டுமானால் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் '' வாயிலாக அருட் பெரு நெறியின் உண்மை ஒழுக்கங்களை மக்கள் அனைவரும் கடைபிடித்து ஒழுக வேண்டும் என்னும் திரு குறிப்பை வள்ளல் பெருமானின் ஆன்மாவின் வழியாக, ஆண்டவர் அறிவிக்கிறார்.

அந்த ஆண்டவர் யார் ? என்பதையும் அந்த ஒழுக்க நெறிகள் என்ன ? என்பதையும் ''திருவருண் மெய்மொழி ''என்னும் தலைப்பில் மக்களுக்கு எழுத்து மூலமாக தெளிவு படுத்துகிறார்.

தருமச்சாலையை  ஆரம்பிக்கும் முன்பு ''சமரச வேத சன்மார்க்க சங்கம்'' என்னும் தலைப்பில் சங்கம் அமைக்கிறார் ,தருமச்சாலை ஆரம்பித்த பிறகு ஆண்டவர் அறிவித்த வண்ணம் ''ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்க சங்கம்'' என்று பெயர் மாற்றம் செய்கிறார் .அதன்பின் சத்திய ஞானசபைத் தோற்று வித்தப் பின்பு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் மாற்றம் செய்கின்றார் .

ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கப் பெரு நெறியின் உண்மை ஒழுக்கங்களைக் குறித்து ''திருவருண் மெய்மொழி ''  என்னும் உண்மையை, தனித் தலைப்பில் உலக மக்களுக்கு தெரியப் படுத்துகிறார் .இவை யாவும் சுத்த சன்மார்க்க கொளகைகளை கடைபிடிப்பவர்களும் ,உலக ஆன்மீக சிந்தனை யாளர்களும் ,மற்றும் பகுத்தறிவு உள்ளவர்களும்,அறிவியல் வல்லுனர்களும்,விஞ்ஞானிகளும் ,ஆராய்ச்சியாளர்களும் மற்றும் பொது மக்களும்,ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் மற்றும் அரசியல் வாதிகளும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகளாகும்.

திருவருண் மெய்மொழி !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு முகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் ?

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்,

எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும் ,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லாப் பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும்,எல்லாத் தத்துவிகளையும் ,

எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபங்களையும்,மற்றை எல்லா வற்றையும் ,தமது திருவருட்  சத்தியால் ,

தோற்றுவித்தல்,...வாழ்வித்தல்,...குற்றம் நீங்குவித்தல்,....பக்குவம் வருவித்தல்,...விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப் பெருந்தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' என்றும்

அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில் ,(அருள் வெளி }அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்.என்ற உண்மையை வள்ளல் பெருமான் வெளிப்படுத்துகிறார்.

அந்த உண்மைக் கடவுளை அறிந்து கொள்வது எப்படி ?

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து, அன்பு செய்து, அருளை அடைந்து, அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று ( மரணம் அடையாத உடம்பாகிய மரணம் இல்லாப் பெருவாழ்வு  ) வாழாமல் பல்வேறு கற்பனைகளால்,பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,  பல்வேறு மார்க்கங் களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலம் பிறந்து பிறந்து ,அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம் போகின்றோம்,

ஆதலால் ,இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து ,இறந்து இறந்து, வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவர்களாய் ,

எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் ,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்'' பேரின்ப சித்திப் பெருவாழ்வில்,பெருஞ் சுகத்தையும்,,பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருஉள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ''ஞானசபையை'' சித்திவளாகம் என்னும் இச் சன்னிதானத்திற்கு அடுத்த ,

உத்தர ஞான சிதம்பரம், அல்லது, ஞான சித்திபுரம் என்று குறிக்கப்படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து

''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கபடாத நெடுங்காலம் அற்புத ''சித்திகள்''
எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருள் திருவிளையாடல் செய்து அருள்கின்றாம்

என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெருந் தயவுடைய நமது கருணையாங் கடலாராகிய அருமைத் தந்தையார்
''அருட்பிரகாச வள்ளலார் ''முன்னிலையாகப் பலவாற்றானும் பிரசித்திப்பட வெளிப்படுத்தி ,

அருட்பெருஞ்ஜோதி சொரூபராய் ( அருள் ஒளி }  அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்து அருளி ,அறிய அவரது திருமேனியில் தாம் கனியுறக் கலந்து அருளிய எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு ,''அருள் அரசாட்சித் திருமுடி ''பொறுத்து அருள் விளையாடல் செய்து அருளும் நிமித்தம் ,ஈரேழு பதினான்கு உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் ஒருங்கே ,

இஃது என்னே ! இஃது என்னே ! என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமாய் இருத்தலினால் அங்கனம் வெளிப்படும் திருவரவு பற்றி எதிர் பார்த்தலாகிய விரதங் காத்தலில் நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லாவரும் மேற் குறித்த அதிசிய அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்தில் தானே ,

சுத்த சன்மார்க்க அரும் புருஷார்த்தங்களின்{ஒழுக்கம் } பெரும் பயன்களாகிய எக்காலத்தும் நாசமடையாத சுத்த அல்லது சுவர்ணதேகம் ,பிரணவதேகம், ஞான தேகம்,என்னும் சாகாக்கலை அனுபவ சொரூப சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லாவற்றையும் நடத்துகின்ற தனிப்பெரு வல்லபமும் ,

கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும், கருமசித்தி, யோகசித்தி,ஞானசித்தி முதலிய எல்லாச் சித்திகளும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான சுத்த சன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்கு உரிய உண்மை ஒழுக்கங்களில் நாம் எல்லவரும் தனித்தனி ஒழுக வேண்டுவது அவசியம் ஆதலில் அவ் வொழுக்கங்களை இவை என உணரவேண்டுவது அவசியமாகும். என்பதை வெளிப்படுத்துகிறார் .

''சத்திய ஞான சபை'' இறைவன் அறிவித்த வண்ணம் அமைத்தல் !

உலக மக்கள் அனைவரும் அறிந்து கொள்ளும் பொருட்டு வடலூர் பெருவெளியில்,இறைவன் வள்ளல் பெருமானுக்கு அறிவித்த வண்ணம் உருவாக்கியதே ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான'' சபையாகும்.

சத்திய ஞான சபையைக் கட்டுவதற்கு இறைவனே வள்ளலாரின் ஆன்மாவின் வழியாக வரைப்படம் (புளுபிரிண்ட்) போட்டுத் தருகிறார் .அந்த வரைப்படத்தில் கண்டபடி எண்கோண வடிவமான ஞான சபையை .பிரஜோற்பத்தி வருடம் ஆனிமாதம் அதாவது 1871 ,ஆம் ஆண்டு தொடங்கி சுமார் ஆறு மாத காலத்தில்  கட்டிட வேலையை முடிக்கத் திட்டமிட்டு முடித்து விடுகிறார் .நம்பெருமானார். இறைவன் அறிவித்த அருள் வார்த்தையை, இறைவன் அருள் செயலால் நிறைவேற்றி வைக்கிறார்.

கட்டிட வேலையை ஆரம்பித்த பின் நடந்த அற்புதங்கள் பலப்பல ,சாரங் கட்டி கட்டிட வேலை செய்த பலர் சாரம் அவிழ்ந்து கீழே விழுந்தனர் .அப்படி விழுந்தும் யாருக்கும் எந்த அடியும் படாமல் இறைவனும் வள்ளல் பெருமானாரும் அவர்களை காப்பாற்றினார்கள் என்றால் அது வியப்பு அன்றோ !

ஞான சபையைக் கட்டி முடிப்பதற்குள் உலகு கட்டி ஆளும் கொடியான சன்மார்க்கக் கொடி கட்டுவதற்கு... கொடிமரம் வாங்குவதற்கு காண்ட்ராக்டர் ஆறுமுகம் என்பவரை சென்னைக்கு அனுப்பி வைக்கிறார் வள்ளல்பெருமான்.
அவர் சென்னை சென்று சரியான மரம் கிடைக்கவில்லை என்பதை வள்ளல்பெருமானுக்கு தெரிவிக்கிறார் ,உடனே வள்ளல்பெருமான் நான் வருகிறேன் நீர் அங்கேயே இருங்கள் என்று சொல்லிவிடுகிறார் ,

அடுத்த கணத்தில் வள்ளலார் அங்கு ஒரு நீண்ட,திரண்ட  பருத்த மரத்தின் மீது நடந்து கொண்டு உள்ளார் .அதைப் பார்த்த ஆறுமுகம் அதிர்ந்து போய் விட்டார். ஆறுமுகத்தை அழைத்து இந்த மரத்தை வடலூருக்கு கொண்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்.வடலூருக்கு மரத்தைக் கொண்டு வந்த ஆறுமுகம் வள்ளல்பெருமான வந்து, இந்த மரத்தை தேர்வு செய்து அனுப்பி வைத்தார்கள் என்று வடலூரில் உள்ளவர்களிடம் சொல்ல, அவர்கள் வள்ளல் பெருமான் இங்கேதான் இருந்தார் அங்கே எப்படி வந்தார் ? என்று ஆச்சரியப்பட்டார்கள் .இதுபோல் பல அற்புதங்கள் வடலூரில் நடந்து உள்ளது .ஆனால் வள்ளல்பெருமான எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் ,இருந்துள்ளார்கள்.

அதே நேரத்தில் எந்த அற்புதத்தையும் மக்களிடம் வெளியில் சொல்ல வேண்டாம் என்று அன்பர்களுக்கு கட்டளை இட்டுள்ளார்கள்.சித்துக்களையும் அற்புதங்களையும் வெளியில் சொல்லாமலும் ,காட்டாமலும் இருந்த ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே ! அறுபத்து நான்கு கோடி சித்துக்களையும் கைவரப் பெற்றவர் வள்ளல்பெருமான் ஒருவரே !

இறைவன் கொடுத்த அருள் அற்புதத்தை,பெருமைக்காக ,புகழுக்காக,சுய நலத்திற்க்காக, மற்றவர்கள்  தேவைக்காக  வெளியில் தேவை இல்லாமல் விரையம் செய்தால் மரணத்தை வெல்ல முடியாமல் போய்விடும் எனற உண்மையை உணர்ந்தவர் வள்ளல்பெருமான் அதனால் அவருக்கு கிடைத்த அருள் ஆற்றலை,பேராற்றலை, அருள் சித்துக்களை வெளியில் காட்டாமல்  தனக்குள்ளே அடக்கி வைத்துக் கொண்டவர் வள்ளல்பெருமான் .

மக்களுக்காக ஆண்டவர்  எந்த எந்த நேரத்தில் என்ன என்ன அறிவிக்க சொன்னாரோ அதைமட்டும் தான் அறிவிப்பார் வள்ளல்பெருமான்.அதே போல்தான் வடலூரில் சத்திய ஞான சபையைத் தோற்றுவித்தார் .

சபையைத் தோற்றுவித்து வள்ளல்பெருமான் சித்திப்பெரும் வரைக்கும் சபையை இப்படித்தான் கவனித்து வரவேண்டும் என்று சத்திய ஞானசபை விளக்கப் பத்திரிக்கையை வெளிட்டார்கள்.அவர் சொல்லியபடி அவருடைய் தொண்டர்கள் செயல்படவில்லை என்பதை அறிந்து கொண்டு சபையை சாத்தி பூட்டுப்போட்டு சாவியை எடுத்துக் கொண்டு மேட்டுக்குப்பம் சென்றுவிட்டார்.

அதன்பின் மக்கள் சுத்த சன்மார்க்க தனிநெறி என்ன என்பதை தெரிந்து புரிந்து கொள்ள சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம் என்னும் தலைப்பில் ஒழுக்கத்தைப் பற்றி போதிக்கின்றார் அதன் விளக்கம் கீழே தரப்பட்டுள்ளது .

சன்மார்க்க பெருநெறி ஒழுக்கம்  !

உண்மை சன்மார்க்கப் பெருநெறியின் ஒழக்கம்  என்ன என்பதை மக்களுக்கு போதித்தார் ,அதற்கு மெய்மொழியும் ஒழுக்கமும் என்று பெயர் வைத்தார் .

இறைவன் சொன்ன மெய்மொழியும் ஒழுக்கமும் .!

ஒழுக்கம் நான்கு வகைப்படும் !

1,இந்திரிய ஒழுக்கம்
2,கரண ஒழுக்கம்
3,ஜீவ ஒழுக்கம்
4,ஆன்ம ஒழுக்கம் .

1,..இந்திரிய ஒழுக்கம்

நம்முடைய ஐம்புலன்களாகிய கண்,காது,மூக்கு,வாய் ,மெய் என்னும் உடம்பு,ஆகியவை இந்திரியங்கள் என்பனவாகும் இதிலே இரண்டு வகை உள்ளன .

ஒன்று உருவமுள்ள உறுப்புகள் இதற்கு கர்மேந்திரங்கள் என்று பெயர்,..இன்னொன்று உருவம் இல்லாதது அதற்கு ஞானேந்திரங்கள் என்று பெயர் .

புறத்திலே உள்ள கருவிகள் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பு போன்ற கண்மேந்திரங்கள் என்பவையாகும்.அதை இயக்குவதற்கு கண்களுக்குத் தெரியாமல் உள்ளே இருந்து இயக்கும்  மின் காந்த சக்தி போன்ற கருவி ஞானேந்திரங்கள் என்னும் கருவிகளாகும் .அந்த உருவமற்ற கருவிகள் இயங்கினால்தான் புறத்தில் இருக்கும் கருவிகள் தடையில்லாமல் அதனதன் வேலைகள் முறையாக செயல்படும் .

இந்த புறப் புறக்கருவிகள்,அகத்தே செல்லாமல் புறத்தே  வெளியே செயல்படுவதாகும் .இவைகள் வெளியே செயல்படுவதால் துன்பங்களும் துயரங்களும் அச்சமும் பயமும்,இறுதியில் மரணமும் வந்து விடுகின்றன.இந்த ஐம் புலன்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதை விபரமாக ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற பகுதியில் தெளிவுப் படுத்தி எழுதி வைத்துள்ளார் .இதற்கு இந்திரிய ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார் .

கரண ஒழுக்கம் !

கரண ஒழுக்கம் என்பது கண்களுக்குத் தெரியாமல் இயங்கும் ,மனம்,புத்தி ,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகளாகும்.இவைகள் புறம் என்னும் கருவிகளாகும்.இதுவும் புறத்தை நோக்கியே  செயல்படும் கருவிகளாகும்.அந்த உருவம் இல்லாத கருவிகள் தனக்கு சாதகமாக புறப்புறத்தில் உள்ள ஞான இந்திரியங்களையும் ,கர்ம இந்திரியங்களையும் பயன் படுத்தி வேலையை வாங்கிக் கொண்டே இருக்கும். உடம்பில் உள்ள உறுப்புகள் அனைத்தையும் வேலை வாங்கிக் கொண்டே இருக்கும் கருவிகளாகும்.

இந்த புறக்  கருவிகளில் முதனமையாக இருப்பது மனம் ..மனம் என்ன நினைக்கின்றதோ அதை புத்திக்கு அனுப்பி ,புத்தி வாங்கி சித்தம் என்னும் கருவிக்கு அனுப்பி ,சித்தம் அகங்காரம் என்னும் கருவிக்கு அனுப்பி ,அகங்காரம் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி, இந்திரியங்களை தனக்கு சாதகமாக பயன்படுத்தி புற வேலைகளை செய்ய வைக்கும்.

கரணங்களில் உள்ள மனமானது உலகில் உள்ள போகப் பொருள்களையே விரும்பும்.அதுதான் மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என்பதாகும்.இந்த மூன்று ஆசைகளில் எல்லாமே அடங்கி விடுகின்றது..ஆதலால் மனதை அடக்க வேண்டும் என்று எல்லா ஞானிகளுமே சொல்லி உள்ளார்கள்.ஆனால் மனதை அடக்க முடியுமா என்றால் எக்காலத்திலும் மனதை அடக்க முடியாது.

மனதை அடக்க வேண்டும் என்பதற்காக ஆலய வழிபாட்டு முறைகளும்,தியானம்,தவம்,யோகம் போன்ற பயிற்சிகளும் சொல்லி வைத்துள்ளார்கள் அதனாலும் மனம் அடங்குவதே இல்லை.

மனமானது பொய்யையே விரும்புகிறது அதற்கு உண்மையே தெரியாது.மனம்  மாற்றம் அடைவதற்கு உண்டான உண்மையான வழிமுறைகளை யாரும் சொல்லித் தரவில்லை அதனால் மனம் அடங்குவதில்லை.மாற்றம் அடைவதும் இல்லை.

பேய் குரங்குபோல் அலையும் மனதை மாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் கரண ஒழுக்கம் என்ற ஒழுக்க முறையைக் காட்டி யுள்ளார்.மனமானது உண்மையைத் தொடர்பு கொண்டால் உண்மையை அறிந்து உண்மை பக்கம் திரும்பி விடும்.அந்த கலையைத்தான் வள்ளல்பெருமான் கரண ஒழுக்கத்தில் சொல்லி வைத்துள்ளார் .

கரணங்களாகிய மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கருவிகளை புறத்தில் செல்ல விடாமல் ,அகத்தில் செல்ல வைப்பதே  கரண ஒழுக்கம் என்று பெயர் வைத்துள்ளார்.அதற்கு சத்விசாரம் செய்து உண்மையை உணர்ந்து புறத்தில் செல்லாது அகத்தில் செல்ல வைப்பதையே  கரண ஒழுக்கம் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் நமது வள்ளல்பெருமான்.

அதனால்தான் இடைவிடாது மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் என்கின்றார்.சிற்சபை என்பது உடம்பை இயக்கும் மெய்ப்பொருள் இருக்கும் இடமாகும் அதுதான் ஆன்மா என்னும் உள் ஒளி இருக்கும் இடம் அதை இடைவிடாது தொடர்பு கொண்டால் மனம் தானே அடங்கும்.அதற்கு கரண ஒழுக்கம் என்று பெயராகும்.

ஜீவ ஒழுக்கம் !

ஜீவ ஒழுக்கம் என்பது அகப்புறம் உள்ள உயிராகும்.உயிர் இயங்குவதற்கும் உயிர் உடம்பில் நிலைப்பதற்கும் ,உணவு என்னும் பொருள் தேவைப் படுகிறது.பொருளை பெறுவதற்கும்,பொருளை உண்பதற்கும் புறம்.புறப்புறம் என்னும் காரணங்களையும் இந்திரியங்களையும் உயிர் என்னும் ஜீவன் பயன்படுத்திக் கொள்கின்றது .இதுவும் ஒரு அகப்புறக் கருவியாகும்

புறத்தில் உள்ள உலக வாழ்க்கை வாழ்வதற்கு இந்திரியங்களையும், காரணங்களையும் பயன் படுத்திக் கொள்கின்றது .உலகில் உள்ள சாதி,சமயம்,மதம் போன்ற கொள்கைகளை பார்த்து பார்த்து,படித்து படித்து அவற்றை பின் பற்றி  வாழ்ந்து கொண்டு இருப்பது   ஜீவன் என்னும் உயிராகும்.

சாதி, சமயம்,மதம்,கோத்திரம்,சூத்திரம், சாத்திரம், தேசம், மார்க்கம்,உயர்வு,தாழ்வு,முதலிய பேதம் இல்லாமல் தானாக நிற்க வேண்டும்.இந்த ஜீவன் என்னும் உயிரும் புறப் பொருள்களை வேண்டாமல்,விரும்பாமல் ,இருக்க வேண்டும். இந்திரியங்களும், கரணங்களும் புறத்தில் செல்லாமல் நிறுத்திக் கொண்டால் ஜீவன் என்னும் உயிரும் புறத்தில் செல்லாமல் அகத்தில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும்.அப்படி தொடர்பு கொண்டால் ஆன்மாவானது இந்திரியங்களையும், கரணங்களையும், ஜீவனையும் தன் வசமாக தக்க வைத்து கொள்ளும்.

அகத்தில் உள்ள ஆன்மா, அருளைப் பெற வேண்டுமானால் அந்த மூன்று கருவிகளையும் புறத்தில் அனுப்பாமல் தக்க வைத்துக் கொண்டால்தான்,ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.  

இறைவனிடம் இருந்து அருளைப் பெற வேண்டுமானால் அகம் என்று சொல்லப்படும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும் அகத்தையே  நோக்க வேண்டும்.அப்படி நோக்குவதற்கு, செய்லபடுவற்கு  ஜீவ ஒழுக்கம் என்பதாகும்.அதுவே உயிரைக் காப்பாற்றும் வல்லபம் என்பதாகும்

இந்திரியம்,கரணம்,ஜீவன் என்னும் மூன்று ஒழுக்கங்களையும் முறையாக,முழுமையாக அறிந்து செயல்பட்டால் தான் உயிர் காப்பாற்றப் படும்.அப்படி செயல் படுவதற்கு ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.ஜீவன் என்றால் உயிர், உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்றார் நமது வள்ளல்பெருமான்.அதன்பின்தான் ஆன்ம ஒழுக்கம் கைவரப்படும்..

ஆன்ம ஒழுக்கம் !

ஆன்ம ஒழுக்கம் என்பது ;;எண்பத்து நான்கு நூறு ஆயிரம் யோனி பேதங்கள் இடத்தும் உள்ள ஆன்மாக்களிடத்தும் இரங்கி ஆன்மாவே சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாகும்.

இங்கனம் கூறிய ஒழுக்கங்களுள்ளே இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்க, என்னும் இவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை உணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுக வேண்டும்.ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் இரு வகையான அறிய ஒழுக்கங்கள் திருவருட் துணை பெற்ற பின்னர் அன்றி கைகூடாது.

ஆதலால் அவ் ஒழுக்கங்களைப் பெற்று ஒழுக வேண்டுவதற்கும் ஆன நன் முயற்சிகளில் பழக வேண்டும்.

அன்றியும் இவ்வண்ணமாக ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று
இடம் தனித்து இருத்தல்,...இச்சை இன்றி  நுகர்தல்,...தெய்வம் பராவல் ,..பிற உயிர்க்கு இரங்கல்...பெருங் குணம் பற்றல்,...பாடிப்பணிதல்....பத்தி செய்து இருத்தல்,முதலிய நற் செய்கைகளில் பலகால் முயன்று முயன்று பழகிக் பழகி இருத்தல் வேண்டும்.

சைவம்,வைணவம்,சமணம்,பவுத்தம் ,முதலாகப் பல பெயர் கொண்டு பலப்பட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் ,தெய்வங்களும்,கத்திகளும்,தத்துவ சித்தி விகற்ப பேதங்கள் என்றும்,அவ் அவ் சமயங்களில் பலப்பட விரிந்த வேதங்கள் .ஆகமங்கள்,சாத்திரங்கள்,புராணங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், 

வேதாந்தம் ,சித்தாந்தம் முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும் மார்க்கங்களும்,சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்றும் கேள்விப் பட்டு இருக்கின்றனம்,( அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்
சொல்லியது )  .ஆகலில் அத்திரு வார்த்தைகளில் உண்மையான நம்பிக்கைக் கொண்டு,அவ் அவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப் பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டுவது பற்றி அவ் அவ் சமய மதங்களைச் சிறிதும் பற்று வைக்காமல் (அனுட்டியாது) நிற்றலும் ,அவற்றின் மேல் சத்திய உண்ர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும் .

அன்றியும் ;--

உலகியல்  கண்... பொன் விஷய இச்சை,..பெண் விஷய இச்சை,...மண் விஷய இச்சை முதலிய எவ்வித இச்சைகளிலும் நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்றுவிக்காமல் ,பொதுப்பட நல்ல அறிவு,..கடவுள் பக்தி,....உயிர் இரக்கம்,...பொது நோக்கம்,...திரிகரண அடக்கம், ..முதலிய நற்குண .ஒழுக்கங்களில் நின்று,உண்மை உரைத்தல்,..இன் சொல்லாடல்...,
உயிர்க்கு உபகரித்தால்,முதலிய வாகக் குறித்த நற் செய்கைகளையும் உள்ளபடி பெற்று ,சித்திவளாகம் என்னும் இம் மகா சந்நிதானத்தில் தானே தரிசிக்கப் பெறவும்,உலக முகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்,நமது எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப்படுகைக்கு எதிர்பார்க்கும் நிலையினராய் ,
எல்லா அண்ட சராசரங்களையும் தமது திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித்து அருளும் பேரருட் பெருங்கருணை வாய்ந்த தனிப்பெரும் தலைவரது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம் புனைதல் முதலிய திருப்பணியிடம்

நமது கரணம் இந்திரியங்களை விடுத்துக் குதூ கலத்துடன் விந்து விளக்கம்,..நாத ஒலி என்பவற்றால் புறக்கடையில் விலகப்படாமலும்,
ஆண்டவனாரது அருள் அற்புத ஞான சித்தித் திருமேனியின் மங்கலத் திரு கோலத்தைக் கண்காட்சியாக உடல் குழைய உள்ளங் குளிர ஆனந்தக் கண்ணீர் கொண்டு பரவசத்துடன் தரிசிக்கப் பெரும் ,பெரும் புண்ணிய உடையவர்களாய் எதிர்பட வாய்க்கப் பெறவும் நின்றோமே யானால்;

நாம் எல்லாவரும் சுத்த சன்மார்க்கதினுக்கு உரிமை உடையவர்களாகி,அறிவு வந்த கால முதல் கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும் கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும் ,அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,
அடைந்து அறியாத அற்புதக் குணங்களையும்,செய்து, அறியாத அற்பதக் செயலகளையும்,

அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும், வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தின் உள்ளே பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் தடைபடாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம்.

இது சத்தியம் ,இது சத்தியம்,இது சத்தியம்,

இங்கனம் நமது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் விரித்து விவரிக்கப்பட்ட மலை இலக்கான பொய்யாப் பெருமொழி என்னும் கருணா ரசத்தின் வெள்ளப் பெருக்கத்தில் ததும்பி வழிந்த திரு மந்திரத் திருவருள் மெய்மொழியின் சுருக்கமாகும்

என்று வள்ளல்பெருமான் மெய்மொழி என்னும் தலைப்பில்,உலகில் உள்ள மக்களுக்கு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியத்தையும் ,அதன் உண்மைகளையும் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .

வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்ட தினம் வெளியிட்ட அற்புதப்பத்திரிகை 

மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகையில்  சித்திப் பெறுவதற்கு முன் வெளியிட்ட அற்புதப் பத்திரிகையில் முக்கிய அறிவிப்பை வெளிப்படுத்துகின்றார்.

இனி இச் ஜீவர்கள் விரைந்து விரைந்து  ,இறந்து இறந்து வீண்போகாமல் ,உண்மை அறிவு ,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவராய் ,எல்லாச் சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மார்க்கங் களுக்கும் ,உண்மைப் பொது நெறியாக விளங்கும்  சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெரும்  சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு வுள்ளங் கொண்டு

''சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கம் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது சம்மதத்தால் இயற்றுவித்து ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் '' என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி வீற்றி இருக்கின்றார் .

ஆகலின் அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து ,தரிசிக்கப் பெறுவீர் களாயிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் இன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல் மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள் என்று இறுதியாக வெளிப் படுத்துகின்றார் .

அதன் உண்மை !   

வள்ளல்பெருமான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை வடலூரில் தோற்றுவித்து, இன்று தொடங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரது அருட்பெரும்  சித்தி வெளிப்படும் வரைக்கும் இப்படித்தான் சத்திய ஞான சபையை கவனித்து பாது காக்க வேண்டும் என்னும் ஞான சபை விள்க்கப் பத்திரிகையில் தெரியப் படுத்தி உள்ளார் .

கோடி ஏற்று விழாவில் திருவாய் மலர்ந்து அருளிய பேருபதேசம் என்ற தலைப்பில் வள்ளல்பெருமான் வெளியிட்டு உள்ளது !

 இது கடைசி வார்த்தை !

இது முதல் --கொஞ்ச காலம் ---சாலைக்குப் போகின்ற வரைக்கும் ஜாக்கிரதையாக மேற் சொன்ன பிரகாரம் விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று சொல்லுகின்றார் .

சித்தி பெரும் வரை என்பதும்,...சாலைக்குப் போகின்ற வரைக்கும் என்பதும்,...சித்தி வெளிப்படும் வரைக்கும் என்பதும் நாம் அவசியம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

முதலில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் ஞான சபையைத்  தோற்றுவித்து வள்ளலார் சொல்லிய வண்ணம் ,சன்மார்க்க அன்பர்கள் சபையை கவனித்து இருந்து இருந்தால் வள்ளல்பெருமான் சித்தி வளாகத் திருவரைக்குள் செல்லாமல் ஞானசபைக்குள் நுழைந்து இருப்பார் ..

வள்ளல்பெருமான எங்கு இருந்தாலும் அங்கு சென்று ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர வல்லபெருமானை  ஆட் கொண்டு தன்வசமாக மாற்றி மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் முத்தேக சித்தியை அளித்து இருப்பார் இதுதான் உண்மை  இதுதான் சத்தியம்.

வள்ளல்பெருமான் முன் சொல்லிய வண்ணம் ஞானசபைக்கு செல்லாமல் மேட்டுக் குப்பத்தில் இருந்ததால், அருட்பெருஞ்சோதி ஆண்டவர்,அவர் இருக்கும் இடமான  சித்தி வளாகத் திருவறைக்குள் சென்று ஆட்கொண்டார் .

வள்ளல்பெருமான் சித்தி பெற்ற பின் எங்கே சென்றார் ?

தான் இருக்கும் இடமான சித்தி வளாகத் திருமாளிகையில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்து கொண்டு உள்ளார். அவர் என்னை அழைத்து செல்வதற்காக வந்து இருக்கின்றார் .இன்னும் பத்து பதினைந்து நாட்கள் இங்கு இருப்பேன் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் கொஞ்ச  காலத்தில் நான் சென்று விடுவேன் இனிமேல் உங்கள் கண்களுக்குத் தெரியாமல் இருப்பேன் என்று வல்ள்ளபெருமான் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் சத்திய ஞான தீப விளக்கம் என்னும் தலைப்பில் மக்களுக்காக எழுதி வைத்து உள்ளார்கள் .

ஞான தீப விளக்கம் !  


ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில்  உள்ளிருந்த விளக்கைத்  திருமாளிகைப் புறத்தில் வைத்து ''தடைபாடாது ஆராதியுங்கள்'' 
இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம் .இனி கொஞ்சகாலம் எல்லோரும் ஆண்டவர தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே 
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு 
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான 
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று 
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர் 
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன் 
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என்னும் இருபத்தெட்டு பாசுரங்கள் அடங்கிய பாடலில் கண்டபடி ,தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் ,நாம் இப்போது இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வோம் .;--

நாம் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறோம் .பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ,ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் .என்னைக் காட்டிக் கொடார் .

சுத்த பிரணவ ஞான தேகத்தோடு வெளிப்படுவோம் .நாம் திருக்கதவை மூடி இருக்கும் காலத்தில் அதிகாரிகள் திறக்கும்படி சொல்லித் திறந்து பார்த்தால் ஆண்டவர் அருள் செய்வார் என்பதைத் தெளிவாக விளக்கி உள்ளார் ..

ஸ்ரீமுக வருடம் தை மாதம் வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொள்ளும் தருணம் வெளியிட்டவை ;--  

என்னும் விபரத்தை வள்ளல்பெருமான் தெளிவாக எழுதி வைத்துள்ளார்

வள்ளல்பெருமான் சித்திவளாக திருமாளிகையின் உள்ளே சென்று பத்து பதினைந்து தினங்கள் இருக்கப் போகிறோம் என்றும் ,பார்க்க நேர்ந்து பார்த்தால் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்பதை சற்று நாம் ஊன்றி கவனிக்க வேண்டும் .

நான் உள்ளேதான் இருக்கிறேன், ஒளி தேகமாக (சுத்த பிரணவ ஞான தேகம்) ஆண்டவர் என்னை மாற்றி விட்டதால் பார்ப்பவர் கண்களுக்கு நான் தெரிய மாட்டேன் என்றும் ஆண்டவர என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்றும் வெறு வீடாகத்தான் இருக்கும் என்றும் தெளிவாக விளக்கி உள்ளார்

அருட்பெருஞ்ஜோதியின் ஒளி தன்மைக்கே தன்னையும்  மாற்றிக் கொண்டார் .இரு உருவமும் ஒரே உருவமாக மாற்றிக் கொண்டது.சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் ஒளிதேகம் மற்றவர் கண்களுக்கு எப்படித் தெரியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து பத்து பதினைந்து நாட்களுக்குப்பின் வள்ளல்பெருமான் எங்கே சென்றார் .

இந்த உடம்பில் இருக்கிறேன் இனிமேல் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்ற ஒரு வார்த்தையை பதிவு செய்கின்றார்

வள்ளல்பெருமான் உலகத்திற்கு காட்டிய அறிமுகப்படுத்திய உண்மைக் கடவுள் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர். .அவர் என்ன செய்து கொண்டுள்ளார்? .

எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக (ஆன்மாவாக ) இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் ,அதே போல் வள்ளல்பெருமானும் எல்லா உயிர்களின் உள்ளும் ஆன்மாவின் உள் ஒளியாக இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

அதேபோல் அருட்பெருஞ் ஆண்டவர் இருக்கும் இடம்;--பல கோடி அண்டங்களையும் இயக்கி இயங்க வைத்துக் கொண்டு இருக்கும் இடம்  அருட்பெருவெளி என்பதாகும் .,

அதேபோல் வள்ளல்பெருமான் ஒளி தேகம் பெற்று ஐந்தொழில் பணிகளை செய்யும் இடம் ;--வடலூர் பெருவெளியில் உள்ள ''சத்திய ஞான சபையில்'' அமர்ந்து செயல் பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமான் சித்திவளாகத்தில் சித்திப் பெற்றார் ,வடலூர் பெருவெளியில் உள்ள சத்திய ஞானசபையில் அமர்ந்து மக்களுக்கு அருள் வழங்கிக் கொண்டு உள்ளார் என்பதை  அற்புதப் பத்திரிகையில் தெளிவாக தெரியபடுத்தி உள்ளார் .

விளக்கம் ;--

இனி ஜீவர்கள்  விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் ,உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம்முதலிய சுபகுணங்களைப் பெற்று ,நற்செய்கை உடையவராய் ,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங் களுக்கும் ,உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ்சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திரு உள்ளங் கொண்டு

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞான சபையை'' இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து '' '' ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங் காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம்"'  என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி அருட்பெருஞ் ஜோதியிராய் வீற்றுஇருக்கின்றார்

ஆகலின் அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து ,தரிசிக்கப் பெறுவீர்கள் ஆகின் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவது மன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல்,முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பையும் அடைவீர்கள் ...என்னும் குறிப்பை வள்ளல்பெருமான் தெளிவாகத் தெரியப்படுத்தி உள்ளார் .

இறுதியில் உண்மை பத்திரிக்கை என்னும் தலைப்பில் வள்ளல்பெருமான் மக்களுக்கு வெளியிட்டவை ;--

உண்மைப் பத்திரிக்கை !

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மென்மேலும் வழங்கும்.

பல வகைப்பட்ட சமய பேதங்களும் ,சாத்திர பேதங்களும் ,ஜாதி பேதங்களும்,ஆசார பேதங்களும் போய் ,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.அது கடவுள் சம்மதம்.இது 29...வருடத்திற்கு மேல்
( கலி 5000 ..க்கு மேல்)

இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய,மத  சாத்திர புராணங்களில் வந்தததாகப் சொல்லப்படுகின்ற  ஏற்பாட்டுக் கர்த்தர்கள், ,மூர்த்திகள்,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல !

அப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும் ,எல்லாத் தலைவர்களும்,எல்லா யோகிகளும் ,எல்லா ஞானிகளும் தாங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர் பார்க்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெருஞ்ஜோதியாகும்  .

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் !பெறுகின்றேன் !! பெற்றேன் !!! என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை.பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள் !! பெற்றீர்கள் !!! அஞ்ச வேண்டாம் .

ஆன்மநேய அன்புடைய மனித தேகம் எடுத்துள்ள அன்பர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டுவது யாதெனில்.

மக்கள் இதுவரை கடவுள் உண்மை அறியாது துன்மார்க்க புலன்
நெறியில்,மூழ்கி அழிந்துப் போய் கொண்டு இருக்கின்றார்கள் அதுபோல் வீண் போகாமல் நம்முடைய அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுளை உள்ளபடி உணரவேண்டும் .மெய்ப்பொருள் விளக்கம் என்னும் சத்திய ஞான சபையில் அவரைத் தரிசித்து வழிபடவேண்டும்.

ஆகவே எல்லோருக்கும் பொதுவான அருட்பெருஞ்ஜோதிக கடவுள் கருணையோடு அருட்பிரகாச வள்ளலார் உடம்பில் கலந்து கொண்டு கோடி கோடி அருட்ஜோதிக் கதிர் பரப்பிக் கொண்டு வெளியாகி இருக்கின்றார் .

இனி அருட்பெருஞ்சோதி வேறு அருட்பிரகாச வள்ளலார் வேறு அல்ல, இருவரும் ஒருவரே என்பதை உணரவேண்டும்.

வடலூர் பெருவெளியில் உள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் திருஅருட் பிரகாச வள்ளல்பெருமான் அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் உருவத்தில் அமர்ந்து தனிப்பெருங் கருணையோடு அருள் பாலித்துக் கொண்டு உள்ளார்.ஆதலால் அனைவரும்  வந்து வந்து தரிசித்து,வழிபட்டு  அருளைப் பெற்று, மரணத்தை வென்று, மரணம் இல்லாப் பெருவாழ்வாகிய பேரின்ப லாபத்தைப் பெற்று பெருங் களிப்பை அடைவோம் .  இது சத்தியம் ! இது சத்தியம்!! இது சத்தியம் !!!
 .
அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு செ கதிர்வேல்
நந்தா இல்லம்
108,C,வள்ளலார் வீதி
வய்யாபுரி நகர்
46,புதூர் அஞ்சல்
ஈரோடு மாவட்டம்.638002
SELL.9865939896.
LAND LAINE ...0424 2401402,
 

           

 
வெள்ளி, 11 ஜூலை, 2014

வள்ளல் பெருமான் தருமச்சாலையை உருவாக்கியது ஏன் ?

வள்ளல் பெருமான் தருமச்சாலையை உருவாக்கியது ஏன் ?


வள்ளல்பெருமான் தன்னுடைய  நாற்பத்து ஏழு ஆண்டுகால வாழ்க்கையில் பல தெய்வங்களை வழிபாடு செய்தும்,அத் தெய்வங்கள் பெயரால் பல ஆயிரம் பக்தி பாடல்களை தோத்திரங்களாகவும்,சாத்திரங்களாகவும்   பாடியும், எழுதியும்  இயற்றிக் கொண்டு வந்தார் .

அவருடைய வாழ்க்கை முறையும் ,அவர் கடைபிடித்த ஒழுக்க நெறி முறைகளையும் ,அவருக்கு உண்மையைத் தேடும் ஆன்ம அறிவும் தெளிவும் மேலோங்கியது..

தாம் வணங்கி வந்த  தெய்வங்களும்,,தாம் பாடிய பக்தி பாடல்கள் யாவும் தத்துவங்களை பற்றியே பாடிய பாடல்கள் என்பதை அறிந்து கொண்டார்   அவைகள் உண்மை அல்ல என்பதை அறிந்து, உண்மை எங்கோ மறைந்து இருக்கின்றது ,அதைக் கண்டு பிடிக்க வேண்டும் என்ற உறுதி பூண்டார் .

நான் இந்த உலக மாயையில் சிக்கித்  தவித்துக் கொண்டு உள்ளேன் ,எனக்கு உண்மையைக் காட்ட வேண்டும்,உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று இயற்கையிடம் போராடுகின்றார்.அந்த போராட்டத்தின் பலபாடல்கள் .

கண்ணே கண்மணியே --
கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விண்ணிறைவே --சிவ
மேதினி மெய்ப் பொருளே
தண் நேர் ஒண்மதியே---எனைத்
தந்த தயாநிதியே
உண்ணேர் உள்ளொளியே --எனக்
உண்மை உரைத்தருளே ...

என்றும்,...

நந்நாலுங் கடந்தே --ஒளிர்
ஞான சபாபதியே
பொன்னாருஞ் சபையாய் --அருட்
பூரண புண்ணியனே
என்னால் ஆவதொன்றும் --உனக்
இல்லை எனினும் எந்தாய்
உன்னால் வாழுகின்றேன்--எனக்
உண்மை உரைத்தருளே ..

என்னும் பாடல்கள் வாயிலாக...,எல்லாவற்றையும் கடந்து எல்லா வற்றையும் இயக்கி இயங்கிக் கொண்டு இருக்கும்,சக்தியும்,ஆற்றலும் வாய்ந்த  நீங்கள் யார் ? என்பதை எனக்குத் தெரிவிக்க வேண்டும்.உன்னை அறிந்து தெரிந்து கொள்ளவே நான் வாழுகின்றேன்,ஆதலால் எனக்கு  உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று அழுது புலம்புகின்றார்
அடுத்து ;--

மாயையாற் கலங்கி வருந்தியபோதும்
வள்ளல் உன் தன்னையே மதித்து உன்
சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவா வேறு எண்ணியது உண்டோ
தூய பொற்பாதம் அறிய நான் அறியேன்
துயர் இனிச் சிறிதும் இங்காற்றேன்
நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்து
நன்று அருள் புரிவது உன் கடனே !

என்றும்,

வண்ணம் வேறு எனினும் வடிவம் வேறு எனினும்
மன்னிய உண்மை ஒன்று என்றே
எண்ணியது அல்லால் சச்சிதானந்தத்
இறையும் வேறு எண்ணியது உண்டோ
அண்ணல் நின்பாதம் அறிய நான் அறியேன்
அஞர் இனிச்சிறிதும் இங்கு ஆற்றேன்
திண்ணமே நின்மேல் ஆணை என் தன்னைத்
தெளிவித்துக் காப்பது உன் கடனே !

என்னும் பாடல்கள் வாயிலாக எல்லாம் வல்ல இறைவனைப் பற்றி பாடி தொழுது  வேண்டுகின்றார்..
நான் மாயை என்னும் இந்த உலகில் வாழ்வதற்கு உயிர் எடுத்து உடம்பு எடுத்து அலைகின்றேன்.

உண்மை என்பது ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும்.வேறு அனைத்தும் பொய் என்பது எனக்குத் தெரிந்து விட்டது .

இந்த உலகத்தில் உண்மையை மறைத்து,தத்துவங்களை எல்லாம், பல வண்ணங் களாகவும்,பல வடிவங்களாகவும் தத்துவ கடவுள்களாகவும், சமய,மத வாதிகள்,கதைகளாகவும்,கற்பனைகளாகவும் படைத்துள்ளார்கள் என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கொண்டேன் இனிமேல் என்னால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.இனிமேல் சிறிது நேரம் கூட தாமதப் படுத்த வேண்டாம் .என்னால் தாங்க முடியாது .என்னுடைய பொறுமையை சோதிக்க வேண்டாம்.தயவு கூர்ந்து எனக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் .

உன்மேல் ஆணை இட்டுச் சொல்கிறேன் எனக்கு தெளிவுபட காட்டி தெளிவு படுத்துவது உன்னுடைய கடமையாகும் உன்னுடைய கடனாகும்.என்பதைப் மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவு படுத்துகின்றார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.

இறைவன் !

வள்ளல்பெருமான் ஆணையை ஏற்றுக் கொண்ட அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானுக்கு ஒரு கட்டளையைப்  பிறப்பிக்கின்றார் .

என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன் என்
தன்பாட்டைச் சத்தியமாய்த் தான் புனைந்தான் --முன்பாட்டுக்
கலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான்.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு சொன்னது ---நீ எப்படி எண்ணிப் பாடினாலும்,யாரை நினைத்து பாடினாலும்,எந்த உருவத்தை நினைத்து பாடினாலும் உன்னுடைய பாடல்களை நான் சத்தியமாக ஏற்றுக் கொள்கிறேன்..வருத்தப்பட வேண்டாம் .

உனக்கு,.. என்னுடைய உண்மையை தெரிவிக்க வேண்டுமானால் என்னுடைய உருவத்தை காட்ட வேண்டுமானால்,என்னுடைய ஆற்றலை தெரிவிக்க வேண்டுமானால், என்னுடைய அருள் வல்லபத்தை தெரிவிக்க வேண்டுமானால்  நீ ஒன்று செய்தாக வேண்டும்.அதை கவனமாக கேள் சொல்கின்றேன். இந்த உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் உடம்பை வளர்ப்பதற்கும் உயிரை வளர்ப்பதற்கும் உண்மை தெரியாமல்  பசி,பட்டினி வறுமையில் வாடிக் கொண்டு உள்ளார்கள்.அவர்களின் துன்பத்தை போக்க வேண்டும்.அதற்கு தகுந்த வழிகாட்டியாக நீர் திகழ வேண்டும்.ஆதலால்

ஏழைகளின் பசியைபோக்க முதலில் தருமச்சாலையை தோற்றுவிக்க வேண்டும் என்று இறைவன் கட்டளைப்  பிறப்பிக்கின்றார் .வள்ளல்பெருமான் இறைவன் கட்டளையை சிரமேற்  ஏற்று கொண்டு   தருமச்சாலையை தோற்றுவிக்க முற்படுகின்றார்.

தருமச்சாலை அழைப்பு !

தருமச்சாலைத் தொடக்க விழா அழைப்பு ! 25--4--1867 ,ஆம் ஆண்டு !

ஆன்மநேய சித்தமுடைய தயவுடைய அனைவருக்கும் வந்தனம் .

சிதம்பர தலத்திற்குச் சுமார் இரு காத வழிநடை எல்லையில் கடலூரைச் சார்ந்த வடலூர் என்றும், பார்வதிபுரம் என்றும் வழங்கப்படுகின்ற ஊருக்கு வடபுறத்தில்,சென்னை நகரில் இருந்து கும்பகோணத்திற்கு போகின்ற பெரியபாட்டைசுமார் நூறு-மயிலில் மஞ்சகுப்பத்திலிருந்து விருத்தாசலம் போகின்ற பாட்டை சுமார் ஐம்பதாவது மயிலில் பிரபவ வருடம் வைகாசி மாதம்.குருவாரம் உதய காலம்,ருஷப  லக்கினத்தில்

சமரச வேத தருமச்சாலையின் செங்கற் கட்டங்களுக்கு அஸ்திவாரங்களும் ,கிணறு,கேணி,முதலிய நீர் நிலை எடுப்புகளும் தற்காலம் அவ்விடத்தில் நூதனமாகக் கட்டப்பட்ட விழன் மேய்ந்த மண் கட்டடச் சாலையில்,ஒருசார் ஆகார தரும விருத்தியும் தொடக்கம் செய்யும்படி நிச்சயித்து இருக்கின்றது.

ஆதலில் அந்த தினத்தில் தாங்கள் தங்கள் மனைவியர், புத்திரர்,துணைவர்,தந்தையர்,தாயார்,உறவினர் ,சினேகிதர், முதலியவர் களோடும்,வந்திருந்து நடத்து விப்பீர்கள் என்று நம்புகிறேன்.

பிரபவ வருடம் சித்திரை மாதம் 14,ஆம் நாள் மேலே கண்ட கடிதம் அனைவருக்கும் அனுப்பட்டதாகும்.

சமரச வேதத்  தருமச்சாலைத் தலைவராகிய சிதம்பரம் இராமலிங்க பெருமான் கட்டளைப்படி மேற்படி தருமச்சாலையை நடத்துகின்ற சமரச வேத சன்மார்க்க சங்கத்தாரில் ஒருவராகிய மு,அப்பாசாமி அவர்கள் மூலமாக கடிதங்கள் அனுப்பி வைக்க படுகின்றன ..

சாலை விளம்பரம் -- 23--5--1867. ஆம் வெளியிட்டது.

ஜீவகாருண்ய ஒழுக்க விளம்பரம் என்ற தலைப்பில்... வள்ளல்பெருமான் அவர்கள் தருமச்சாலையை தோற்றுவித்தது ஏன் ? எதற்காக ? என்பதை ஆண்டவர் கட்டளைப்படி ,மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்.

கல்வி கேள்விகளால் பகுத்து  அறியத்தக்க அறிவை உடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வந்தனம் செய்து அறிவிப்பது.

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத்தக்க பிரயோசனத்தைக் காலம் உள்ளபோதே அறிந்து அடையவேண்டும் .

அந்த பிரயோஜனம் யாதெனில் ;--

எல்லா அண்டங்களையும்,...எல்லா புவனங்களையும் ...எல்லாப் பொருள்களையும் ...எல்லாச் சீவர்களையும் ...எல்லாச் செயல்களையும் ,,,எல்லாப் பயன்களையும் ...

தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட்சத்தியால் தோன்றி விளங்க விளக்கஞ் செய்விக்கின்ற ''இயற்கை உண்மை வடிவினராகிய கடவுளின்'' பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும் எவ்விடத்தும், எவ்விதத்தும்,எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை அடைவதே இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க பிரயோஜனம் என்று அறிய வேண்டும்.

இயற்கை இன்பத்தைப் பெற்றுத் தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடைய வேண்டும் எனில் ?;;--

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடைய வேண்டும்.என்று அறிய வேண்டும் .

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக் கூடும் எனில் ?;--

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக் கூடுமே அல்லது வேறு எந்த வழியாலும்  சிறிதும் பெறக் கூடாது என்று உறுதியாக அறியவேண்டும்.

ஜீவகாருண்யத்தின் முக்கிய லஷியமாவது எது எனில்  ?;--

எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குக் உண்டாகின்ற ''பசி'' என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லஷியம் என்று அறிய வேண்டும்.

ஆகலில் அந்த ஜீவகாருண்ய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு கூடலூர் ஜில்லா கூடலூர் தாலுக்காவைச்சார்ந்த வடலூர் என்கின்ற பார்வதிபுரத்தில்,சமரச வேத தருமச்சாலை என்று, ஒரு தருமச்சாலை ஏற்படுத்தப் பட்டு இருக்கின்றது.

அது பலர் சகாயத்தாலேயே நிலைபெற வேண்டும் ஆதலால் ,ஜீவ தயை உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடிய வரையில் பொருள் முதலிய உதவி செய்து அதனால் வரும் லாபத்தைப் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் கோரிக்கையாகும்.என்பதை வள்ளல்பெருமான் மக்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார்.

பசியினால் வரும் அவத்தைகள் !

உலகம் முழுவதும் ஆளுகின்ற சக்கிரவர்த்தியாகிய அரசனுக்கும் ,...உலகம் முழுவதும் ஒரு நிமிடத்தில் வெல்லத்தக்க சுத்த வீரனுக்கும்,...  மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை போன்ற மூன்று ஆசைகளையும் ஒழித்து உண்மை அறிந்து பிரம்ம அனுபவத்தைப் பெற்ற ஜீவன் முததர்களுக்கும் பசி நேரிட்டபோது மனம் இளைத்தும், வலி குலைந்தும் அனுபவம் தடைப்பட்டும் வருந்துகின்றார்கள் என்றால் ,

எந்த வகையிலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டால் என்ன பாடு படுவார்கள் என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும் .

பசியினால் உண்டாகும் அவத்தைகள் !

பசி அதிகரித்த காலத்தில் முகம் புலர்ந்து போகின்றது ...
உச்சி வெதும்பு கின்றது ...
பிரமரந்திரம் அடிபடுகின்றது ..
காது கும்மென்று செவிடு படுகின்றது ...
கண் பஞ்சடைந்து எரிந்து நீர் உலர்ந்து குழிந்து போகின்றது ..
நாசி அழன்று கலைமாறி பெரு மூச்சு விடுகின்றது ...
நாக்கு நீர் உலர்ந்து தடிப்பு ஏறுகின்றது...
மெய் முழுதும் கருகி சக்தி அற்று ஸ்மரணை கெடுகின்றது ...
வாக்கு குழறித் தொனி மாறுகின்றது ...
கைகளும் கால்களும் தடதடத்துச் சோர்ந்து தடுமாறுகின்றது ..
மலசல வழி வெதும்பி வேறு படுகின்றது ...
உரோமம் வெறிக்கின்றது ....
பற்கள் கருகித் தளர்கின்றது...
இரத்தமும் சலமும் சுவறுகின்றது ...
சுக்கிலம் தன்மை மாறி வறளுகின்றது ...
எலும்புகள் குழைந்து நோக்காடு உண்டாகின்றது...
நாடி நரம்புகள் வலியிழந்து மெலிந்து கட்டு விடுகின்றது ...
வயிறு பகீர் என்கின்றது ..
மனசு தளர்ந்து நினைவு மாறுகின்றது ...
புத்தி கெட்டு நிலை மாறுகின்றது ...
சித்தம் கலங்கித் திகைப்பு ஏறுகின்றது...
அகங்காரம் குலைந்து அச்சம் உனாடாகின்றது ....
பிரகிருதி சுருங்குகின்றது ,...

கடவுள் விளக்கமும் ஆனம் விளக்கமும் மறைபடுகின்றது ..
தாப சோபங்கள் மென்மேலும் உண்டாகின்றது .

இவ்வளவு அவத்தைகளும் ஏக காலத்தில் உணடாகின்றது ...
     
எல்லாச் சீவர்களுக்கும் பொதுவாகவே இருக்கின்றது .ஆகாரம் உண்டு பசி நீங்கிய தருணத்தில் தத்துவங்கள் எல்லாம் தழைத்து கடவுள் விளக்கமும்,ஆன்ம விளக்கமும்,அகத்திலும் புறத்திலும் முகத்திலும் வெளிப்பட்டு திருப்தி இன்பம் உண்டாகின்றது .

ஆகலில் நாம் அனைவரும் எந்த வகையிலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டபோது மிகவும் கருணை உள்ளவர்களாகி நம்மால் கூடிய மட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக  நிவர்த்திப் பதற்கு முயற்சி செய்வதே ஆன்மலாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.

பிரபவ வருடம் வைகாசி பதினொன்றாம் தேதி பார்வதிபுரம் சமரச வேத தருமச்சாலை ;--சன்மார்க்க சங்கத்தார் என்று வெளியிடப்பட்டுள்ளது .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லிய வண்ணம் தருமச்சாலையை வள்ளல்பெருமானால் தோற்றுவிக்கப் பட்டது என்பதை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அன்பர்களும் ,மற்றும் அனைத்துலக ஆன்மநேய அன்பர்களும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல் பெருமானுக்கு அருள் வழங்கியது !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளையை ஏற்றுக் கொண்டு வள்ளல்பெருமான் தருமச்சாலையை தோற்றுவித்து அனைவருக்கும் சாதி,சமயம்,மதம் என்ற பேதம் இல்லாமல் அன்னதானம் தினந்தோறும்  நடை பெற்றுக் கொண்டு வருக்கின்றது .

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானுக்கு அருளை எப்படிக் கொடுத்தார் என்பதை பின் வரும் பாடலில் பதிவு செய்கின்றார் .

காலையிலே நின் தன்னைக் கண்டு கொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைகின்றேன்---ஞாலமிசைச்
சாகா வரம் பெற்றேன் தத்துவத்தின் மேல் நடிக்கும்
ஏகா நினக்கு அடிமை ஏற்று  !

என்றும் .மேலும் ;--

கலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே
களிப்பே என் கருத்தகத்தேகனிந்த நறுங் கனியே
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம் தருமச்
சாலையிலே ஒருபகலில் தந்த தனிப்பதியே
சமரச சன்மார்க்க சங்கத்து தலை அமர்ந்த நிதியே
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும்
மாநடத் தென் அரசே என் மாலையும் ஏற்று அருளே !

தருமச்சாலையை தோற்றுவித்த பின் இறைவன் முழுமையான உண்மையை காட்டியதோடு அல்லாமல் ,அருளை வாரி வாரி வழங்கி உள்ளார் .

அதனால் அடைந்த இன்பத்தை சொல்ல முடியாமல் பாடல்களாக பதிவு செய்கின்றார் .மரணம் என்பது இயற்கை அல்ல ! மரணத்தை வெல்லமுடியும்...
நான் காகா வரம் பெற்றேன்

தத்துவங்களை எல்லாம் தாண்டி உண்மையான மெய்ப் பொருளைக் கண்டு கொண்டேன் .தருமச்சாலை வழியாக சென்றால் மரணத்தை வெல்ல முடியும் என்ற உண்மையை மக்களுக்கு பறை சாற்றுகின்றார் .

வேத சன்மார்க்கம் என்பதை தூக்கி எறிந்துவிட்டு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்று பெயர் மாற்றம் செய்கின்றார்.,சாதி சமயம்,மதம்,எல்லாம் பொய்யானது .சமரசம் ஒன்றுதான் இறைவனிடம் அருளைப் பெரும் வழி என்பதை உணர்ந்து கொள்கின்றார்.''கருணை'' ஒன்றினால்தான் எல்லா நன்மைகளையும் பெறமுடியும் என்பதை தெளிவு படுத்துகின்றார். ''எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி'' என்றும் ''யாரே என்னினும் இரங்கு கின்றார்க்கு சீரே அளிக்கும் சிதம்பர சிவமே''என்றும் ''மேயினை மெய்ப் பொருள் விளங்கினை நீ அது ஆயினை என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி''  என்பதை அருட்பெருஞ் ஜோதி அகவலில்,தகவலாக பதிவு செய்கின்றார் .

பல ஆண்டுகள் இடைவிடாது தவம் செய்து பெற முடியாத,.. இம்மை இன்ப லாபத்தையும்,...மறுமை இன்ப லாபத்தையும்,...பேரின்ப லாபத்தையும் தருமச்சாலையில் ஒரே பகலில் இறைவன் தந்துவிட்டதாக,ஆனந்த  கூத்தாடி எக்காலம் இடுகின்றார் .இறைவன் என்னுடைய ஆன்மாவில்,உயிரில், உடம்பில்,உள்ளத்தில்,கருத்தில் யாவுமாக கலந்து என்றும் சுவை மாறாத நறுங்கனி போன்று இனித்துக் கொண்டு உள்ள அருள் என்னும் பெரும் பொருளே என்கின்றார் .

இனிமேல் இறைவனை அடையும் மார்க்கம்....இறைவனுடைய மார்க்கம்.....இறைவன் அருளைப் பெரும் மார்க்கம், ..சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கம் என்பதை மக்களுக்கு தெளிவுப் படுத்துகின்றார்.

அடுத்து உலக மக்களுக்கு உண்மையானக் கடவுள் யார் ? என்பதையும்.அவர் எங்கு உள்ளார் என்பதையும்,அவர் எப்படி செயல் படுகின்றார் என்பதையும் அவருக்கும் நமக்கும் என்ன தொடர்பு என்பதையும், அருளைப் பெறுவதற்கு எதை விடவேண்டும்,எதை விடாமல் பிடிக்க வேண்டும் என்பதையும் ,எந்த கடவுளை வழிபட வேண்டும் என்பதையும் .மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார் நமது வள்ளல்பெருமான் அவர்கள் .
 ..
அதன் அடையாளமாக.சாதி,சமயம் ,மதம் ,இனம்,நாடு,மொழி என்ற பேதம் இல்லாமல்  ..சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் உண்மைக் கடவுள் ஒளியாக உள்ளார் .அவர்தான் சத்திய ஞான சபையில் அமர்ந்து கொண்டு உலக மக்களுக்கு  அருள் பாலித்துக் கொண்டு உள்ளார்

அனைவரும் வடலூர் வந்து வந்து தரிசித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று,பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும்  மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வோம்  .

ஆன்மநேய அன்புடைய
 ஈரோடு அமுதா கதிர்வேல்
108,C,நந்தா இல்லம்
வள்ளலார் வீதி
வய்யாபுரி நகர்
46,புதூர் அஞ்சல்
ஈரோடு 638002
தமிழ் நாடு ,இந்தியா
sell ..91.8526906100 .
    


             

செவ்வாய், 8 ஜூலை, 2014

கடவுளை நிலை அறிந்து அருளைப் பெரும் நிலை !

கடவுளை அறிந்து அருளைப் பெரும் நிலை !

ஆன்மீகத்தில் ...சரியை ,கிரியை,யோகம்,ஞானம் ,என்னும் நான்கு நிலைகள் உண்டு .ஒவ்வொன்றிலும் நான்கு நிலைகள் உண்டு. மொத்தம் பதினாறு நிலைகள் உள்ளன .கடைசி நிலையான ஞானத்தில் ஞானம் என்னும் பதினாறாவது நிலையைப் போதிக்க வந்தவர்தான் வள்ளல்பெருமான்.

சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும்
தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன்
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்று ஒன்றாய் அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன்
அரிய சிவ சிந்தாந்த வேதாந்தம் முதலாம்
ஆறு அந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும்
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம்
பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி .

சரியை ;--என்பது பக்தியின் முதல் நிலையாகும். உயிர் இல்லாத தத்துவ உருவங்களான கல்,மண்,செம்பு ஐம்பொன்,தங்கம்,போன்ற உலோகங்களால்   செய்த மொம்மைகளை வைத்து,  நடுவர் என்னும் பூசகர் மூலமாக வழிபாடு செய்து,  புறத்தில் இருந்து கொண்டு கை கூப்பி வணங்கி  வழிபாடு செய்வது.  அவை .''புறப்புறம்'' என்பதாகும்.இவை ஆன்மீக கல்வியின் ஆரம்பநிலை கல்வியாகும் ,ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து படிப்பது போலாகும்.

இந்த படிப்பால் கிடைக்கும் லாபம்.''புறப்புறம்'' என்னும் இந்திரியங்களான ,கண்,காது,மூக்கு,வாய்,உடம்பு போன்ற புறப்புறக் காட்சி யாகும்.இதனால் இந்திரியங்கள் என்னும் கருவிகள் மட்டும் மகிழ்ச்சி அடையும்.இது நிலை அற்றதாகும் .

கிரியை ;--என்பது பக்தியின் இரண்டாவது நிலை....உயிர் இல்லாத தத்துவங்களை,அதாவது மேலே சொன்ன மொம்மைகளான கடவுள்களை வைத்து தாமே அருகில் சென்று தொட்டு கழுவி  அதற்கு பூ வைத்து,பொட்டு வைத்து   அலங்காரம், அபிஷேகம்,ஆராதனை,செய்து,அதன் முன் இலையை  வைத்து  படையல்  செய்து வழிபடுவதாகும் இவை ''புறம்''என்னும்   வழிபாடாகும்''. .இவை ஆன்மீக கல்வியின் பத்தாம் வகுப்பு படிப்பது போன்றதாகும்.

இந்த படிப்பால் கிடைக்கும் லாபம் .''புறம்'' என்னும் கரணங்களான  ,மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகள் மட்டும் மகிழ்ச்சி அடையும்.அதனால் மன நெகிழ்ச்சி, மன உருக்கம் மட்டும் உண்டாகும். இது கர்ம சித்தியைக் கொடுக்கும் இதுவும் நிலை அற்றதாகும்.

யோகம் ;--இவை உயிர் இல்லாத,மேலே சொன்ன உருவங்கள் அனைத்தும் தத்துவங்கள் என அறிந்து உருவ வழிபாட்டை விட்டு தன்னைத் தானே அறிந்து ஜீவன் நிலையில் இருப்பதாகும். இதற்கு யோக நிலை என்பதாகும்.இதனால் உயிரைக் காப்பாற்றி நீண்ட நாட்கள் வாழ்வதற்கு உண்டான  வழியை கண்டு பிடிப்பதாகும். இதற்கு சமாதி நிலை என்றும் பெயர் ...இவை ''அகப்புறம்' என்னும் வழிபாடாகும்.இவை யோக சித்தியைக் கொடுக்கும். இவை ஆன்மீக கல்வியின் கல்லூரியில் படிக்கும் நிலைப் போன்றதாகும்.

இந்த படிப்பால் கிடைக்கும் லாபம் ''அகப்புறம்'' என்னும் உயிர் (ஜீவன் ) மகிழ்ச்சி அடையும். உயிருடன் நீண்ட நாள் வாழலாம் .

ஞானம் ;--இவை ஆன்மாவை அறிந்து கொள்ளும் அனுபவநிலை, உலகத்தைப் பற்றி, உயிர்களைப் பற்றி,பஞ்சபூதங்களைப் பற்றி,கிரகங்களைப் பற்றி, அண்டங்களைப் பற்றி, அவைகளை இயக்கும் சத்தி சத்தர்களைப்  பற்றி,அதற்கு மேல் கடவுள் யார் ? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வதாகும்

உண்மைக் கடவுள் யார் ? என்பதை முழுமையாக தெரிந்து கொள்வதும் இறைவன் இடம் இருந்து முழுமையான அருளைப் பெரும் வழியாகும்.

தத்துவங்கள் எல்லாம் கடவுள் இல்லை அவை வெறும் ஜடங்கள் ,  சமய மதங்கள் சொல்லிய கதைகள் யாவும் கற்பனைக் கதைகள் என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கொள்தாகும்.. எல்லா உயிர்களும் அந்த உயிர்களை இயக்கும் ஆன்மாவை அறிந்து கொள்வதாகும்.அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்பதாகும்.

நாம் யார் ? நமக்கு உயிர் எப்படி வந்தது ? உடல் எப்படி வந்தது ? ஏன் பிறக்கின்றோம் ? ஏன் இறக்கின்றோம்,? மறுபடியும் பிறப்பு உண்டா ?இல்லையா ? இறந்த பின் எங்கு செல்கின்றோம்,? என்னாவாகின்றோம் ?,

ஆரம்பம் எங்கே ? வாழ்க்கை எங்கே ? முடிவு எங்கே ?  முதலில் உயிர் வந்ததா ? உடல் வந்ததா ? ஆன்மா வந்ததா ? போன்ற எண்ணற்ற கேள்விகளுக்கு விடை காண்பது ..ஞானம் என்னும் ஆனம் அறிவாகும் ..

ஞானம் என்பது  முழுமையான,பூரணமான ,அருள் அறிவு , என்பதாகும்

இவைதான் ஆன்மீகத்தின் பல்கலைக் கழகப் பட்டப் படிப்பாகும்.இங்கு உண்மையைத் தவிர வேறு எதுவும் போதிப்பதில்லை.

இந்த படிப்பால் கிடைக்கும் லாபம் ஆன்ம லாபம் என்பதாகும். இதனால் ''அகம் '' என்னும் ஆன்மா மகிழ்ச்சி அடையும். இந்த லாபத்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.

அதற்கு மேல் ஆறு அந்தங்களான  சித்தாந்தம், வேதாந்தம், போதாந்தம், கலாந்தம்,யோகாந்தம் நாதாந்தம்,முதலான அந்தங்களைக் கடந்து ,பல கோடி அண்டங்களைக் கடந்து ..அதற்கு அப்பால்.அருட்பெரு வெளியில் திருவருட் செங்கோல் நடத்தும். அருட்பெருஞ் ஜோதியை கண்டு அதன் மயமாக மாற்றிக் கொள்வதாகும்.

ஆன்ம லாபம் அடைந்தவர்கள் ஆன்ம தேகம் என்னும் ஞான தேகத்தைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள்...மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மய மாவார்கள்...அவர்களை பேரின்ப லாபம்,பேரின்ப வாழ்வு  பெற்றவர்கள் என்று அறியலாம். அவர்களை கடவுள் உரிமையுடன் ஏற்றுக் கொள்வார்.இதுவே கடவுள் நிலை அறிந்து அருளைப் பெரும் நிலையாகும்

ஞானம் என்னும் சாகாக் கல்வியை போதிக்க வந்தவர்தான் வள்ளல்பெருமான் அவர்களாகும்.

மனிதனால் ஞானத்தை போதிக்க முடியாது என்பதால் .இறைவனே
வள்ளலார் உருவம் தாங்கி வந்து ஞானம் என்னும் சாகாக் கல்வியைப் போதிக்கின்றார்.

அதற்கு ''சாகாக் கல்வி'' என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளல்பெருமான் .

சாகாக் கல்வியைப்  போதிக்கும் பல்கலைக்கழகம் ,வள்ளலார் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்னும் கல்விக் கூடமாகும்.

சரியை,கிரியை,யோகம்,என்னும் ஆன்மீக வழிபாடு, சாகும் கல்வியைப் போதிக்கின்றது....ஞானம் என்னும் ஆன்மீக அக வழிபாடு ''சாகாக் கல்வி'' யைப் போதிக்கின்றது .

ஆகையால்,''ஞானத்தில் ஞானம்'' என்னும் பதினாறாவது கல்வியான  ''சாகாக் கல்வியைக் கற்று'' கடவுளிடம்  அருள் என்னும் பட்டத்தைப் பெற்று,ஆன்ம லாபத்தை அடைந்து ,மேலும்,இம்மை இன்பலாபம்,..மறுமை இன்பலாபம்,..பேரின்ப லாபத்தை அடைந்து  .மரணத்தை வென்று.ஞான தேகத்துடன் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

அவர்காட்டிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில்''அங்கத்தினர் களாகி  உண்மை ஒழுக்க நெறியைக் கடைபிடித்து கடவுளை நிலை அறிந்து அருளைப் பெற்று பேரின்ப லாபத்தை அடைந்து பெரு மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.