செவ்வாய், 29 நவம்பர், 2011

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும் !

கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறப்பபடும் !


கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்றால என்ன ? எதைக் கேட்க வேண்டும் ?எதைத் தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டால்தானே கேட்கவும் முடியும் தட்டவும் முடியும் .

இதற்கு வள்ளலார் கொடுக்கும் உண்மையான பதில்

மனிதனாக பிறந்தவர்கள் அனைவரும் மரணம் இல்லாமல் வாழ்ந்து மேல் நிலைக்கு செல்லும் தகுதி படைத்தவர்கள் ,மேல் நிலை என்றால் என்ன ?நாம் எங்கு இருந்து வந்தோமோ அந்த இடம்தான் மேல் நிலை என்பதாகும் .மேல் நிலைக்கு செல்வதற்கு,என்றும் அழியாத அழிக்க முடியாத அருள் என்னும் பொருள் வேண்டும் .அதைப் பெற்றால் தான் மேல் நிலைக்கு செல்லமுடியும் அதை எப்படி பெற முடியும் ?

நம்முடைய தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் அருள் நிறைந்த மாபெரும் கோட்டையாகும் அந்த கோட்டையின் கதவு பூட்டப்பட்டு இருக்கிறது .அதை தட்டினால் திறக்காது .சாவிப்போட்டு திறந்தால்தான் திறக்கும் அந்த திறவு கோல் சாதரணமாக கிடைக்காது .அருள் கோட்டைக்குள் நுழைய அருள் என்னும் திறவு கோல அதாவது சாவி வேண்டும் அப்பொழுதுதான் நாம் கதவை திறந்து உள்ளே செல்ல முடியும் .

அந்த சாவியை எப்படிப் பெறுவது ?

எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு செலுத்த வேண்டும் .அந்த அன்பு உயிர் இரக்கத்தாலும்.ஜீவ காருண்யத்தாலும் மட்டுமே கிடைக்கும் வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனபதை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் .

உயிர் இரக்கமும் ஜீவ காருண்யமும் எப்படி உண்டாகும் .நம்முடைய தந்தையாகிய அருட்பெரும் ஜோதிக் கடவுளின் பெருமையும் தரத்தையும்--நம்முடைய சிறுமையும் தரத்தையும் ஊன்றி விசாரிக்க வேண்டும் .அப்படி விசாரிக்கும் போது எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உயிர்கள் என்பது விளங்கும் .அந்த உண்மை விளங்கினால் எந்த உயிர்களுக்கும் இம்சை என்னும் துன்பம் துயரம் அச்சம் பயம் உண்டாகாமல் நடந்து கொள்வோம் .இதுவே உயிர் இர்க்கம் ஜீவ காருண்யம் என்பதாகும்.

தயவு என்பது இரண்டு வகைப்படும் --அவை யாதெனில் கடவுள் தயவு --ஜீவர்கள் தயவு என்பதாகும் அதே போல் அருள் என்பது இரண்டு வகைப்படும் .கடவுள் அருள் ஜீவர்கள் அருள் .அதனால் ஜீவ தயவால் ஜீவ அருளைப் பெற்று .க்டவுள் தயவால் கடவுள் அருளைப் பெறமுடியும் .அந்த அருளே கடவுளின் கோட்டையாகிய கதவையை திறக்கும் சாவியாகிய திறவு கோலாகும் .

ஆதாலால் நாம் கேட்க வேண்டியது அருள் என்னும் திறவு கோலாகும்.அதுவே கேளுங்கள் தரப்படும் என்பதாகும் .

தட்டினால் கதவு திறக்காது அருள் என்னும் திறவு கோல கொண்டுதான் மேல் வீட்டுக் கதவை திறக்க முடியும்

கடவுள் இருக்கும் இடம் என்பது நமது உடம்பில் உள்ள தலை பாகத்தில் உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்க்கும் மேலே புருவ மத்தியில்அசையாது ஒரு தீபம் அதாவது ஒளி இயங்கிக் கொண்டு உள்ளது .அதை சுற்றிலும் அசைக்க முடியாத மாயை என்னும் திரைகளால் மறைக்கப் பட்டுள்ளது அதுதான் கோட்டையின் கதவு என்பதாகும் அந்தக் கதவை தட்டினால் திறக்காது ஜீவ காருண்யத்தால் பெற்ற அருள் என்னும் திறவு கோலைக் கொண்டு திறந்தால்தான் திறந்து உள்ளே போக முடியும் .

இதுவே கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் என்பதாகும் .

அன்புடன் ஆன்மநேயன் .கதிர்வேலு .

மீண்டும் பூக்கும் .

.   
வியாழன், 24 நவம்பர், 2011

சாத்தானின் வேதங்கள் !

சாத்தானின் வேதங்கள் !

உலகில் தோன்றிய மதங்கள் ,சமயங்கள் சாதிகள் சாத்திரங்கள் யாவும் சாத்தானின் வேதங்களாகும் .சாத்தான் .சைத்தான் மாயை என்பது அனைத்தும் ஒன்றையே குறிப்பதாகும் இவைகளில் சிக்குண்டவர்கள் எழுதியதுதான் உலகில் உள்ள அனைத்து வேதங்களும்ஆகும். மாயையில் சிக்குண்டவர்க்ளால் சுத்தமான உண்மையை தெரியப் படுத்த முடியாது /

சாத்தானின் வேதங்கள் என்று இஸ்லாம் மதத்தை பற்றி இஸ்லாம் மதத்தை சேர்ந்த சாலமன் ருஷ்டி என்பவர் தெளிவாக விளக்கி உள்ளார்.அவர் அப்படி எழுதி உள்ளதால் அவரை எங்கு இருந்தாலும் சுட்டு கொலை செய்ய அரேபிய நாட்டு இஸ்லாம் மதத தலைவர்கள் ஆணை இட்டார்கள் அதனை கேள்வியுற்ற சாலமன் ருஷ்டி தலை மறைவானார் அவர் எழுதிய புத்தகத்தை வெளியே வராமல் அழித்து விட்டார்கள் உண்மையை சொல்பவர்களை இந்த உலகம் அழித்து விடுகிறது .

சமயங்கள் மதங்கள் யாவும் கொல்லும் கொலைககாரக் கடவுளையே அறிமுகப் படுத்தி உள்ளது கொல்லும் கடவுளைப் பற்றியே பேசுகிறது அந்த கடவுள் யாவும் கோபம உடையது என்றும் கூறுகிறது .இதற்கு சமய ,மத வேதங்களும் சாத்திரங்களே ஆதாராமாகும்.

எல்லா மதங்களும் கடவுளுக்கு களங்கம் கற்பித்து உள்ளன  உண்மையான கடவுளை யாரும் கண்டதில்லை காரணம் அனைவரும் மாயையில் சிக்குண்டவர்கள் அவர்கள் கண்டது எழுதியது அனைத்தும் குற்றம் உடையதே .உண்மையான கடவுளை கண்டவர்களுக்கு மரணம் வராது, எந்த சக்தியாலும் அவர்களை அழிக்க முடியாது .மரணம் அடைந்தவர்கள் எழுதியது அனைத்தும் சாத்தானின் வேதங்கள் என்பதை மனிதகுலம் அறிந்து கொள்ள வேண்டும் .

இன்றுவரை சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச சந்தடிகளிலே கோத்திர சண்டையிலே ஆதியிலே அபிமாநித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே அழிதல் அழகலவே என்று வள்ளலார் அனைத்து மதங்களையும் சாடி உள்ளார்.

நமது வள்ளல பெருமான் அவர்கள் உண்மையான கடவுளை அறிந்து உணர்ந்து கண்டு கலந்து இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் என்பது மாபெரும் உண்மையாகும்

அந்த உண்மையானக் கடவுள்தான் '''அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி என்பதாகும் .

.ஏன் அவர் மட்டும் உண்மையான கடவுளைக் கண்டார் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.அவர் மாயையில் அதாவது சாத்தானின் வழியில் வலையில் சிக்க வில்லை .உலகில் உள்ள எந்த பொருளையும் அவர் அனுபவிக்கவில்லை என்றும் அழியாமல் காக்கும் அருள் என்னும் பொருளை அருட்பெரும் ஜோதி ஆண்டவரிடம் முழுமையாக பெற்றுக் கொண்டவர் வள்ளலார் அந்த அருளைப் பெற்றவர்கள்தான் உண்மையை உணரமுடியும் உரைக்க முடியும் எழுத முடியும் ..அப்படி அவர் எழுதியதுதான்,''திருஅருட்பா' என்னும் ஞான நூலாகும்.

வள்ளலாருக்கு மரணம் என்பது கிடையாது கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் அதாவது ஒளி தேகம் பெற்றவராகும்.அவர் அருள் ஞானத்தால் மக்களுக்கு காட்டிய தெய்வம் அருளாகவும் கருனையாகவும் விளங்கிக் கொண்டு உள்ளது அதுவே அருட்பெரும்ஜோதி என்னும் கடவுளாகும் .அது எங்கும் உள்ளது அது எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளது ஆதலால் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும் .அதற்கு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் பெயர் வைத்தார் வள்ளலார் .

ஆதாலால் கொல்லாமையும் புலால் உண்ணாமையும் வேண்டும் என்று மிகவும் கடுமையாக வலியுறுத்தி உள்ளார் அதுவே கடவுளை அறிய முக்கிய திறவு கோலாகும் என்றார் .அவர் காட்டிய மார்க்கம் புனிதமானது உண்மையானது .

சுத்த சன்மார்க்கம் ;--சமயம் மதம் கடந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--ஞான மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--ஒப்பற்ற உயர்ந்த மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம் ;--சத்திய மார்க்கம் .
சுத்த சன்மார்க்கம்;---சாகாக் கல்வி கற்கும் மார்க்கம்.

ஆதலால் சாத்தானின் வேதங்களை ஓதாமல் உணராமல் ,உண்மையான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சார்ந்து உணர்ந்து ஆன்ம நேயத்தோடு ஜீவ காருண்யத்தோடு.உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .

வள்ளலார் அழியாத் தேகம் பெற்ற பாடல் ஒன்று ;--

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனாலே கதிர் ஆதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக கருவியாலே
கோளாலே பிறர இயற்றும் கொடுஞ் செயல் களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெரும் ஜோதி இறைவனைச சார்வீரே !

எல்லாருக்கும் பொதுவான உண்மையான அருட்பெரும் ஜோதிஆண்டவரை நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீரால் அழுது அழுது தேடுங்கள் எல்லா நன்மைகளும் கிடைக்கும் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு .

மீண்டும் பூக்கும் .' .

திங்கள், 21 நவம்பர், 2011

பட்டம் என்பது எது ?

பட்டம் என்பது எது ?

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து சாகாக் கல்வி என்னும் கல்வியை யாரும் கற்றுக் கொடுக்க வில்லை .மரணம் என்பது இயற்கை என்றே சொல்லி வைத்து உள்ளார்கள் ஆனால் மரணம் என்பது இயற்கை அல்ல அவை செயற்கையானது என்று கண்டு பிடித்தவர் வள்ளலார் அதில் வெற்றிப் பெற்று சாகாமல் வாழ்ந்து பட்டமும் வாங்கி உள்ளார் .

திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் பட்டம் வாங்கி உள்ளார்கள் என்ன பட்டம் என்றால் சாகாத கல்வி கற்று சாகாமல் இருக்கும் 'சாகாக் கல்வியை பயின்று நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கி பட்டம" வாங்கி உள்ளார். யாரிடம் வாங்கி உள்ளார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் .எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இடம் வாங்கி உள்ளார் இதுவரை எந்த அருளாளர்களும் இந்த பட்டத்தை வாங்க வில்லை என்பதை உலகில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .

சாகாக் கலவி என்பது கல்லூரில் களிலோ ,பல்கலை கழங்களிலோ பெறுவது அல்ல !என்றும்,எக்காலமும் எல்லாலமுமாய விளங்கும், எல்லாம் வல்ல,
எல்லா உயிர்களிலும் நிலைப் பெற்று உயிர் ஒளியாய் உள்ள, அருட்பெரும் ஜோதி ஆண்டவரால் வழங்கப்படும் பட்டமாகும் .அதைப் பெறுபவரும் என்றும் சாகாமல் நிலைப் பெற்று ஒளி உடம்பாக இருப்பார் என்பதை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் .

அந்த சாகாக் கல்வியை படித்து தெரிந்து அறிந்து வாழ்ந்து அருட்பெரும்ஜோதி இடம் பட்டம் பெற வேண்டும் அதற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை அமைத்து உள்ளார் வள்ளலார் அந்த சங்கத்தில் அவர் எழுதிய திரு அருட்பா என்னும் ஞான நூல் உள்ளது.அந்த நூல் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ளது அந்த ஞான அறிவு நூலை வாங்கி படித்து அதில் உள்ளபடி வாழ்ந்தால் சாகாக் கல்வி என்னும் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழலாம் நமக்கும் சாகாக் கல்வி என்னும் பட்டத்தை அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வழங்குவார் .

சாகாக் கல்வி கற்பதற்கு அருள் என்னும் பொருள் மிகவும் முக்கியமானதாகும் .அந்த அருள் மனிதனாக பிறந்த அனைவரிடமும் உள்ளது அதை எடுக்க வழி தெரியாமல் அனைவரும் அழிந்து பொய் விட்டார்கள் அந்த அருளைப் பெறுவதற்கு உண்மையான வழியைக் காட்டியவர் வள்ளலார் .அந்த அருளை முழுமையாக பெற்றவர்களுக்கு அருளாளர் என்ற பெரிய பட்டம் அருட்பேரும்ஜோதி ஆண்டவரால் வழங்கப் படுகிறது அந்த பட்டம் வாங்கியவர்களுக்கு மரணம் கிடையாது .

மனிதனாக பிறப்பு கொடுத்ததின் நோக்கமே சாகாக் கல்வி பயின்று பட்டம் பெற்று சாகாமல் வாழ்வதற்குத்தான் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார் .அதானால் நாம் அனைவரும் சாகாக் கல்வி பயின்று வெற்றி பெறுவோம் .

வள்ளலார் பாடல் ஒன்று !

கற்றேன் சி ற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினேனே!

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

மீண்டும் பூக்கும் .     

சனி, 19 நவம்பர், 2011

மலம என்பது யாது அதை ஏன் ஒழிக்க வேண்டும் ?

மலம என்பது யாது அதை ஏன் ஒழிக்க வேண்டும் ?


மலம என்பது ஆணவம் மாயை கன்மம் என மூன்றை குறிப்பிடுகிறார்கள் .ஆனால் வள்ளலார் ஐந்து மலங்களை குறிப்பிடுகிறார் ,அதாவது ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்பதாகும் ,அதன் விபரம் பின்பு தெரியப் படுத்துவோம் .

தேக சுதந்தரம் போக சுதந்தரம்,ஜீவ சுதந்தரம் என்னும் சுதந்தரத்தை இறைவன் நமக்கு கொடுத்து உள்ளார் அந்த சுதந்தரத்தை எப்படி பயன் படுத்துவது என்பதில்தான் அனைத்தும் அடங்கி உள்ளது இந்த மாயை{சாத்தான் ,சைத்தான் } உலகத்தில் எதை அனுபவித்தாலும் அவை ஆன்மாவை பற்றிக் கொள்கிறது அதுவே பதிவாகவும் திரைகளாகவும் மலங்களாகவும் சொல்லப் படுகிறது 

நம்முடைய ஆன்மாவின் பதிவான பதிவுகளை நீக்கினால் இறை நிலையை அடையலாம் என்பது எனபது ஆன்மீக சிந்தனையாளர்களின் கருத்தாகும் அந்த பதிவுகளை நீக்க பல குறுக்கு வழிகளை நம்முடைய முன்னோர்கள் சரியை கிரியை யோகம ஞானம் என காட்டியுள்ளார்கள் இதனால் மலங்கள் நீங்குமா என்றால் நீங்காது வழி காட்டியவரும் மாண்டு விட்டார் கேட்டு அதன்படி வாழ்ந்தவர்களும் மாண்டு கொண்டே இருக்கிறார்கள் .இதனால் என்ன பயன் என்றால் மூடநம்பிக்கை உலகம் முழுவதும் பரவி அறிவு இருந்தும் உண்மையான அறிவை பயன் படுத்தாமல் மக்கள் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் 

இந்த அழிவு பாதையில் இருந்து மக்களை மீட்டு உண்மை நெறியான சமரச  சுத்த சன்மார்க்க சத்திய நெறியை உலகிற்கு அறிமுகப் படுத்தியதோடு அதே போல் வாழ்ந்து வழியை காட்டி உள்ளார் /அவர்தான் வள்ளலார் என்பவராகும் /
அவர் ஆன்மாவை பற்றி உள்ள மலங்களை எப்படி நீக்கி உள்ளார் என்பதை பார்ப்போம் இறைவனால் கொடுத்த தேக சுதந்தரம்,போக சுதந்திரம் .ஜீவ  சுதந்திரம் என்னும் சுதந்தரத்தை இந்த உலகத்தில் எதற்காகவும் பயன் படுத்தாமல் இறைவன் இடமே திருப்பிக் கொடுத்து விட்டார் என்பது அவர் காட்டிய சத்த சன்மார்க்க நெறியின் முலம அறியலாம் இந்த உலகத்தில் உள்ளது எதையும் அவர் பயன் படுத்தவில்லை அனுபவிக்கவில்லை என்பதாகும்.நாம் எதை அனுபவித்தாலும் மலங்கள் பற்றிக் கொள்ளும் அப்படி பற்றிக் கொண்டால் நாம் இறை நிலையை அதாவது பேரின்ப பெருவாழ்வை அடைய முடியாது என்பதை அறிவால் அறிந்து வாழ்ந்து காட்டினார் 

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்ன ?நாம் மனைவி மக்கள் சுற்றம் பட்டம் பதவி சொத்து பணம் ,சாதி சமயம் மதம் இனம் போன்ற அனைத்தையும் விடாமல் வைத்துக் கொண்டு தவம தியானம் யோகம போன்ற செய்கைகளை செய்தால் நம்மை பற்றிக் கொண்டு உள்ள மலங்கள் நீங்கி விடுமா என்றால் சத்தியமாக நீங்காது .

மலங்கள் நீங்க வேண்டுமானால் வள்ளலார் போல் வாழ்ந்தால்தான் நீங்கும் அதை விட்டுவேறு எந்த வழிகளில் சென்றாலும் பயன் கிடைக்காது என்பதுதான் உண்மையான ஆன்மீக சிந்தனை செயல்களாகும்

வள்ளலார் பாடல் ஒன்று ;--

மற்று அறிவோம் எனச சிறிது தாழ்ந்திருப்பீர் ஆனால் 
மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ 
சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே 
சனராசா சன்மார்க்கத வர்கள் அல்லால் அதனை 
ஏற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் 
இல்லை கண்டீர் சத்தியம் இது என் மொழி கொண்டு உலகீர்  
பற்றிய பற்று அனைத்தும் பற்று அற விட்டு அருள் 
அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே

அன்புடன் ஆன்மநேயன் .கதிர்வேலு .
மீண்டும் பூக்கும் .             

வெள்ளி, 18 நவம்பர், 2011

பேசும் தெய்வம் !


பேசும் தெய்வம்

நம் வீட்டில் உள்ள தாத்தா பாட்டி பேசும் தெய்வங்களாகும்அவர்களை வணங்குவதே கடவுள் வழிபாடாகும் அவர்களை வணங்காமல் பேசாத பொம்மைகளை வணங்குவது அறியாமையாகும் வயதான காலத்தில் அவர்களை மகிழ்ச்சியுடன் வாழ வைப்பதே ஒவ்வொருவரின கடமையாக கருத வேண்டும் அதுதான் குடும்பமே கோயிளாகும் .அதுவே கடவுள் வழிபாடாகும் அதை பின்பற்றுபவர்கள் குடும்பம் இறைவன் வாழும் ஆலயமாகும் இறைவன் அனைத்து நலமும் மகிழ்ச்சியுடன் வாரி வழங்குவார் .அனைவரும் துன்பம் அற்ற மகிழ்ச்சியுடன் வாழலாம் .பேசும் தெய்வமான முதியோர்களை அன்பு தயவு கருணையுடன் நேசியுங்கள் அதுவே உண்மையான கடவுள்  வழிபாடாகும் .

புதன், 9 நவம்பர், 2011

காற்று நான்கு பேதங்களாக உள்ளன !

காற்று நான்கு பேதங்களாக உள்ளன

இவ்வுலகமும் இவ்வுலகத்தில் உள்ள ஜீவ ராசிகளும் வாழும் பொருட்டு நான்கு விதமான காற்றுகள் நான்கு பெதங்களாக உள்ளன அவை .அமுதக் காற்று ,
பூதக் காற்று,விஷக் காற்று ,உஷ்ணக் காற்று ,என்பவையாகும் இவற்றில் முக்கியமானது அமுதக் காற்றும் ,விஷக் காற்றுமாகும்.

பகல் காலத்தில் பூதக் காற்று,விஷக் காற்று,உஷ்ணக்காற்று அதிகமாகவும் அமுதக் காற்று மிகக் குறைவாகவும் கலந்து பூமியைக் நோக்கி இருந்து கொண்டு இருக்கும் அந்த குறைவான அமுதக் காற்றும் இல்லை என்றால் உயிர்கள் ஜீவிக்காது.

இரவு காலத்தில் விஷக் காற்று அதிகமாயும் ,பூதக் காற்றும் உஷ்ணக் காற்று குறைவாகவும் .அமுதக் காற்று பகல் காலத்தின் அளவை விட குறைவாகவும்  இருக்கும் .    

அமுதக் காற்று மட்டும் பல கோடி மைல்களுக்கு மேல் பகிரண்டத்தில் நிறைந்து இருக்கும் அங்கு மற்ற மூன்று காற்றுகளும் இருக்காது .

உயிர்கள் வாழும் பொருட்டு அதி காலையில் அதாவது இரவு முடியும் போதும் சூரியன் உதயமாகும் முன்பும் நான்கு மணி முதல் ஆறு மணி வரையில் பூமியைக் நோக்கி அதிகமாக வீசிக் கொண்டு இருக்கும் ,அந்த காலம் அமுதக் காற்று வீசுவதால் அமுத காலம் என்பதாகும் .இதை முகூர்த்தக் காலம் என்றும், ஒரு சாமக் காலம் என்றும்,  அதை வைத்துதான் ஆலயங்களில் கடவுளை எழுப்புவதாக திருப்பள்ளி எழுச்சி என்பார்கள் அதுவல்ல உண்மை அந்த காலத்தில் அனைத்து உயிர்களும் தூங்காமல் விழித்து இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையாகும் .அந்த காலத்தில் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் விழித்திருக்கும் .

அந்த காலை நேரத்தில் ஏசியோ ,பேனோ எதுவும் தேவைப்படாது காற்று குளு குளு என்று இருக்கும் .அதே நேரத்தில் எழுந்து இருக்க முடியாமல் துக்கம் அதிகமாக மகிழ்ச்சியாக வரும் .ஆனால் தூங்கக் கூடாது விழித்துக் கொள்ள வேண்டும்.

மனிதனாக பிறந்த அனைவரும் அந்த அமுத காலத்தில் தூங்காமல் விழித்து இருக்க வேண்டும் .அந்த அமுதக் காற்றை அதிகம் சுவாசித்து அனுபவிக்க வேண்டும் அப்படி பழகினால் நீண்ட ஆயுள் விருத்தியாகும் ,துன்பம் துயரம் அச்சம் பயம் நோய் எதுவும் நம்மை நெருங்காது அந்த காற்றை சுவாசிப்பதே இறை வழிபாடாகும் .தியானம் யோகம தவம செய்வதை விட அதிக சக்தியும் அதிகமான அறிவு விளக்கமும் அலைபாயும் மனமும் அடங்கும்

ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தில் தூங்காமல் எழுந்து விளக்கின் முன் அமர்ந்து கண்ணை திறந்து கொண்டு விளக்கின் ஒளியைப் பார்த்து தியானம் செய்ய வேண்டும் அந்த அமுதக் காற்று இல்லை என்றால் எந்த உயிர்களும் ஜீவிக்காது .

அந்த அமுதக் காற்றினால் தான் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்ற கிரக்ங்கள் எல்லாம் முறைப்படி தவறாமல் செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றன ஆதலால் நான்கு காற்றுகளில் அமுதக் காற்று மிகவும் முக்கியமாகும் .அமுதக் காற்றை சுவாசித்து அனைவரும் ஆனந்தமாக வாழ்வோம்.. மேலும் விரிக்கில் பெருகும் சந்தேகம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் ,

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு ;--9865939896---0424-2401402 /           

Kannan Mayilsamy Kannan mentioned you in a comment.


Hi Kathir,
Kannan Mayilsamy Kannan mentioned you in a comment.

Mayilsamy Kannan wrote: "Kathir Kathirvelu - மிக்க நன்றி சார் - தியானத்தில் எனக்கு சற்று அனுபவம் உண்டு - செய்தும் வருகிறேன் - உங்கள் கருத்துக்கள் அழகாவும் ஆழமாகவும் உள்ளது - சற்று விளக்கங்கள் தேவைப்படும் போது தொடர்பு கொள்கிறேன் - பகிர்வுக்கு நன்றியும் அன்பும் சார் -"

See the comment thread

Reply to this email to comment on this photo.
Thanks,
The Facebook Team

செவ்வாய், 8 நவம்பர், 2011

ஆன்மாக்கள் மூன்று வகைப்படும் !

ஆன்மாக்கள் மூன்று வகைப்படும் !

இந்த உலகம் அணுக்களால சூழப்பட்டது அந்த அணுக்கள் ஏழு வகைப்படும் அந்த அணுக்கள் ;-- வாலணு,திரவஅணு,குருஅணு,லகுஅணு ,அணு ,பரமஅணு,,விபுஅணு, , என்பவையாகும் ,இந்த அணுக்களுடன் அறுபத்து நான்கு கோடி அணுக்கள் துணை அணுக்களாக உள்ளன இந்த அணுக்கள் எவ்வாறு சேருகின்றதோ அதுவே ஒவ்வொரு தோற்றத்திற்கும் காரண காரியமாகும் .இதில் உயிர் உள்ளது உயிர் இல்லாதது என இரண்டு வகையாக உள்ளன உயிர் உள்ளது இயங்கும் தன்மை வளரும் தன்மை உள்ளது .உயிர் இல்லாதது அசைவு இல்லாதது ,சடப்பொருள்கள் என்பதாகும் .

ஆன்மா ,உயிர் !

ஆன்மா என்பது மூன்று வகைப்படும் .அவை பக்குவ ஆன்மா ,அபக்குவ ஆன்மா ,பக்குவா பக்குவ ஆன்மா என்பவையாகும் அவை எங்கு இருந்து யாரால் அனுப்பப் படுகிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்

ஆன்மா என்பது பல அண்டங்களுக்கும் வெளியே பஞ்ச பூதங்கள் இல்லாத அருள் வெளி என்னும் இடத்தில் இருந்து அருட்பெரும் ஜோதி என்னும் அருள் ஒளியால் ஒவ்வொரு அண்டங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன,அதனால் தான் அதை ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதி என்பதாகும் அதை கண்டவர் வள்ளலார் ஒருவர்தான் என்பது உலகம் கண்ட உண்மையாகும் அந்த அருட்பெரும் ஜோதிதான் கடவுள் என்பதும் ஆண்டவர் என்பதும் இறைவன் என்பதுமாகும் ..அதைக் கண்டவர்களுக்கு மரணம் என்பதும் பிறப்பு இறப்பு என்பதும் எக்காலத்திலும் இல்லை என்பதாகும் அவர்களுக்கு ஒளி தேகம் பெற்றவர்கள் என்பதும் சுத்த பிரணவ ஞான தேகம் பெற்றவர்கள் என்பதாகும் .அதற்கு பேரின்ப சித்திப் பேரு வாழ்வு என்பதாகும் .

சரி அந்த மூன்று வகையான ஆன்மாக்களை பற்றி பார்ப்போம் .
இந்த உலகத்திற்கு அந்த ஆன்மாக்கள் வந்ததும்அந்த ஆன்மாக்களுக்கு மேலே சொல்லப்பட்ட அணுக்கள் ஆன்மாக்களின் தகுதிக்கு தகுந்தாற் போல் உருவம் என்ற வீடு கட்டிக் கொடுக்கப் படுகிறது வீடு கட்டிய உடன் ,ஆன்மாவில் இருந்து உயிர்,ஜீவன் என்னும் சக்தி வெளியே வந்து .அதன் அதன் தன்மைக்கு தகுந்தாற் போல் இந்த உலகத்தில் வாழ்கிறது ,வாழ்க்கையில் எந்த எந்த அணுக்களை உண்கிறதோ அனுபவிக்கின்றதோ அதற்கு வினை என்று பெயர் ,கன்மம் என்றும் கர்மா என்றும் பெயர் வைத்துள்ளார்கள் .நல்ல அணுக்களை அனுபவிக்கும் போது நல் வினை என்றும் கெட்ட அணுக்களை அனுபவிக்கும் போது தீவினை என்றும் சொல்லப் படுகிறது

அணுக்களின் சேர்க்கையால் உண்டான உடம்பு அணுக்களின் சேர்க்கையால் முதிர்ந்து பின் தாங்க முடியாமல் இனி இந்த உடம்பில் வாழ முடியாது என்று உயிர் ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது உயிர் அடக்கம் கொள்ளும் போது உடம்பு என்னும் அணுக்கள் வேலை செய்யாது அதனால் உயிர் போய் விட்டது என்கிறோம் .ஆனால் உயிர் போக வில்லை உயிர் ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது ஆன்மாவும் அழிவதில்லை உயிரும் அழிவதில்ல

ஆன்மா, உடம்பு என்னும் அணுக்களின் வீழ்ச்சியால் அதில் இருந்து வெளியே சென்று வேறு ஒரு புதிய வீடு அதன் தகுதிக்கு தகுந்தாற் போல் மீண்டும் அணுக்களைக் சேர்த்துக் கட்டிக் கொண்டு வாழ்கிறது இவை எல்லா ஜீவ ராசிகளுக்கும் பொருந்துவதாகும் ஆதலால் பக்குவமுள்ள ஆன்மா என்பது மனித உடம்பின் சேர்க்கையாகும்.பக்குவா பக்குவம் உள்ள ஆன்மா என்பது ஊர்வன ,பறப்பன ,நடப்பன போன்ற ஜீவராசிகளாகும்,அபக்குவ ஆன்மா என்பது மரம்,செடி, கொடிபோன்ற தாவரங்கள் என்பவைகளாகும்..

அதனால் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றும் .பிற்ப்புகளிலே மனிதப் பிறப்பு உயர்ந்த பிறப்பு என்றும் .இந்த பிறப்பு போனால் அடுத்து எந்த பிறப்போ என்றும் சொல்லுவார்கள் .ஆனால் மனித பிறப்பு ஒன்றுதான் உயர்ந்த அறிவு உள்ள பிறப்பாகும் இந்த உலகத்தில் வாழாமல் வந்த இடத்திற்கே செல்ல வேண்டுமானால் உந்த உலகத்தில் உள்ள எந்த அணுக்களையும் உண்ணாமலும் அனுபவிக்காமலும் உண்மையைத் தேடி வாழ்ந்தால் ஆன்மாவில் உள்ள அருள் என்னும் அருள் ரசம் சுரக்கும் அந்த அருளை யார் சுவைக்கிறார்களோ!அனுபவிக்கிறார்களோ அவர்களுக்கு மறுபடியும் பிறப்பு இறப்பு என்னும் தொடர்ச்சி இல்லாமல் துண்டிக்கப் படும்.அவர்களே இறைவனை அடைந்தவர்கள் என்பதாகும் .அவர்களே பக்குவமுள்ள ஆன்மாக்களாகும்.இதை விரிக்கில் இன்னும் பெருகும் .அனுபவத்தால் அறிக .

வள்ளலார் பாடல் ஒன்று !
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் குறையே
உலகில்யலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடை பிடித்து மெய்ப்  பொருள் நன்கு உணர்ந்து
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

மேலும் தொடரும் .
அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .
         

   

திங்கள், 7 நவம்பர், 2011

அப்துல்கலாம் கருத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது


அப்துல்கலாம் கருத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது:கூடங்குளத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை

தற்போதைய செய்தி
சென்னை, நவ. 7-
கூடங்குளம் அணுமின் நிலையத்தை முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். அதை தொடர்ந்து அப்துல்கலாம் அளித்துள்ள பேட்டியில், “கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் எந்த வகையிலும் பயப்பட வேண்டியதில்லை. நவீன தொழில்நுட்பத்தில் இந்த அணுமின் நிலையம் உருவாக்கப்பட்டுள்ளதால் கதிர்வீச்சு அபாயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
இது குறித்து தீவிர ஆய்வு செய்த பிறகே இதை சொல்கிறேன். அணுக்கழிவு 25 சத வீதம்தான் வரும். அதுவும் கதிர்வீச்சு அகற்றப்பட்டு பூமிக்கு அடியில் வைக்கப்படும். கடலில் கதிர்வீச்சு இல்லாத தண்ணீர்தான் கலக்கும். இதனால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.
கூடங்குளம் அணுமின் நிலையம், 6 ரிக்டர் அளவு பூமி அதிர்ச்சியை தாங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. புயல், சுனாமியாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏதாவது பிரச்சினை ஏற்பட்டாலும் இந்த அணு உலை தானாகவே கதிர்வீச்சை தடுக்கும் நவீன தொழில்நுட்பம் கொண்டது.
இந்த அணுமின் நிலையத்தால் கூடங்குளம் பகுதி வளம்பெறும். இதை தடுக்க முயற்சி செய்வது சரியல்ல” என்று அப்துல்கலாம் கூறியுள்ளார்.
அப்துல்கலாம் இது பற்றி வெளியிட்டுள்ள கட்டுரையில் கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள ஒவ்வொரு சந்தேகத்துக்கும் பதில் அளித்துள்ளார். அதில் இந்த அணுமின் உலை எந்த அளவு பாதுகாப்பானது என்பதற்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளார்.
எந்த ஒரு விஷயத்திலும் நன்மை-தீமை, சாதகம்-பாதகம் என்று இரண்டும் உண்டு. இதில் நன்மையானவற்றையும், நாட்டின் வளர்ச்சிக்கு சாதகமானவற்றையும் எடுத்துக் கொண்டு முன்னேற வேண்டும். அப்போதுதான் மற்ற நாடுகளைவிட நமது நாடு வேகமாக முன்னேற முடியும். 2020-ல் வளர்ந்த நாடாக முடியும்.
தனி நபரின் நலனைவிட நாட்டின் நலன்தான் முக்கியம். நாட்டின் வளர்ச்சிக்கு மின்சார உற்பத்தி அவசியம். அணு மின்சாரம்தான் தூய்மையானது. மற்ற வகையில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தைவிட மிக குறைந்த செலவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
கல்லணை உடைந்தால் ஆபத்து என்று நினைத்து இருந்தால் கரிகாலசோழன் காவிரி குறுக்கே அணை கட்டி இருக்க மாட்டான். எனவே நல்லதை மட்டுமே நினைத்து செயல்பட வேண்டும் என அப்துல்கலாம் கூறி உள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவு பெருகி உள்ளது.
அப்துல்கலாமின் கருத்து பொதுமக்களிடம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் வளர்ச்சி முக்கியம். ஆபத்து எல்லா இடங்களிலும் உள்ளது. பஸ், கார், மோட்டார்சைக்கிள் எதில் பயணம் செய்தாலும் விபத்து ஏற்படும். விமான விபத்தில் பல உயிர் இழக்கிறார்கள். இதனால் பயணமே செய்யக்கூடாது என்று சொல்வது எவ்வளவு கேலிக்குரியதோ அதுபோல் கூடங்குளத்தில் அணுமின்சாரமே கூடாது என்பதும் தவறானது.
பாதுகாப்பான பயணத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் கவனிக்க வேண்டும். அதை விட்டுவிட்டு விபத்து நடப்பதால் இனி வாகனங்களையே பயன்படுத்தவே மாட்டேன். நடந்துதான் போவேன் என்பது பெரிய முட்டாள்தனமாகி விடும்.
எனவே அப்துல்கலாம் இவ்வளவு சொன்ன பிறகும் அதை ஏற்க மாட்டேன் என்று சொல்வது சரியானது அல்ல என்று அந்த பகுதி மக்களே பேசத் தொடங்கி விட்டனர்.
You can leave a response, or trackback from your own site.

No Responses to “அப்துல்கலாம் கருத்துக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகுகிறது:கூடங்குளத்தில் கதிர்வீச்சு அபாயம் இல்லை”

 1. kathirvelu says:
  Your comment is awaiting moderation.
  நமது நாட்டின் நலன் கருதியும் மக்கள் நலன் கருதியும் நமது இந்திய முன்னாள் குடி அரசுத் தலைவரும் .அணு ஆராய்ச்சி நிபுணருமான பொது சிந்தனையாளர் திரு அப்துல்கலாம் அவர்கள் வெளியிட்டுள்ள .கூடங்குள்ம் அணுமின நிலைய ஆராய்ச்சி பற்றிய செய்தி மிகவும் வரவேற்கக் தகுந்த செய்தி யாகும் .
  அவர் குரிப்புட்டுள்ளது போல் நன்மை தீமை இன்பம் துன்பம் எல்லா வகைகளிலும் வழிகளிலும் உள்ளது மக்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் .நம் நாட்டிற்கு மிகவும் முக்கியமானதும் தேவையானதும் மின்சாரமாகும் இதை மக்கள் புரிந்து கொண்டு உள்ளார்கள் .
  இதை வைத்து மக்கள் மத்தியில் தவறான கருத்துக்களை வெளியிட்டு குழப்புவது அரசியல் நோக்கமாகும் ,இந்த மாதிரியான விஷம் கலந்த செய்திகள் எப்போதும் நடந்து கொண்டுதான் உள்ளது இதை மக்கள் நம்பாமல் ஏற்றுக் கொள்ளாமல் நல்லதை செய்ய, நல்லது நடைபெற அனைவரும் துணை இருப்போம்
  இவை நாட்டிற்கும் வீட்டிற்கும் நல்லது திரு அப்துல்கலாம் அவர்கள் நல்லதைத்தான் சொல்வார் நல்லதைத்தான் செய்வார் என்ற நம்பிக்கையில் எல்லாம் இறைவன் செயல் என்று நம்பிக்கையுடன் ஏற்றுக் கொள்வோம் .நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் .
  எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
  கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
  அன்புடன் ஆன்மநேயன் –கதிர்வேலு.

வெள்ளி, 4 நவம்பர், 2011

தியானம் செய்யும் முறை !

தியானம் செய்யும் முறை !

தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப்  போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .

நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் காலம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .

நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .மனத்தில் பதிவானது உயிரில் பதிவாகின்றது.உயிரில் பதிவானது அன்மாவில் பதிவாகின்றது.அவைதான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளாகும் .

கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது.அதனால்  மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .

கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால், தேவை இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியுமே தவிர, வேறு மாறுபட்ட வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

ஆதலால் கண்கள் உருவம் அற்ற, ஒளியை பார்த்து தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்து , பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும்,பயமும் தந்து கொண்டே  வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மட்டுமே மனம் அமைதி பெரும்

அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம் தான் மிகவும் முக்கியமானதாகும்  அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த தீப ஒளி என்ற உருவமும்  மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்கு அதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும். .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும் .

மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு குரு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ+ட்சை என்பது மலம் ஒழிப்பு என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம்  தவம் போன்ற தவறான வழிகளில் சென்று நேரத்தையும்,பணத்தையும் வீண் விரையம் செய்து கொண்டு வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டது

அறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்கவேண்டும் ,அழிக்க வேண்டும் வேறு ஒருவரால் நீக்க முடியாது என்பதை அறிவால்அறிந்து கொள்ள வேண்டும்.வள்ளல்பெருமான் பாடிவைத்துள்ள பாடல் .

கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .
வள்ளலார் பாட்டு ,

மேலே சொல்லியபடி செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சன்மார்க்க தியானமாகும் .

போன் நெம்பர் ;-0424 2401402 -செல் --9865939896 .

உங்கள் அன்பு கொண்ட ஆன்மநேயன் --கதிர்வேல.

வியாழன், 3 நவம்பர், 2011

நன்மை தீமை என்பவை யாவை ?


நன்மை தீமை என்பவை யாவை ?

கடவுளது திருஅருளை எவ்வாறு பெற வேண்டுமானால் ,அருள் என்பது கடவுள் தயவாகும் .ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் தயவாகும்ஆதலால் சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சத்தைப் பெறுவது போல் ,சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெரிய தயவாகிய கடவுள் அருளைப் பெற வேண்டும் .

அக்கடவுள் தன்மை எத்தகை உடையது என்றால் .நமது ஆன்ம அறிவாகிய புத்தி தன்மைக்கு தகுந்த வாறு நன்மை தீமையை விளக்கி காட்டுவதாய் உள்ளது, அறிபவர்கள் அறிபவர்களின் தன்மைக்குத் தகுந்தவாறு அருள் விளங்கும் .எப்படி எனில் .

பிண்ட அண்டத்தில் எவ்வண்ணம் விளங்குகிறது என்றால் !

காண்பார் கானுமிடம் காணப்படும் இடம் --அறிவார் அறியும்இடம் ஆரியப்படும் இடம் --தூண்டுவார் தூண்டும் இடம் தூண்டப்படும் இடம் ,சுவைப்பார் சுவைக்கும் இடம் சுவைக்கப்படும் இடம் ,அனுபவிப்பார் அனுபவிக்கும் இடம் அனுபவிக்கப் படும் இடம் .கருதுவார் கருதும் இடம் கருதப்படும் இடம் .முகருவார் முகரும் இடம் முகரப்படும் இடம் ,கேட்பார் கேடக்கமிடம் .கேட்கப்படும் இடம் ,முதலியவை விளங்கும்

இவ்வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? அறிவால் நன்மை தீமையை விசாரித்து நன்மையே உருவாக்கி விளங்கும் ஆன்ம அறிவைக் கொண்டு {மன அறிவை விடுத்து }இடைவிடாது நமது ஆன்மா விளங்கும் இடமான புருவ மத்தியின் கண் மனத்தை செலுத்த வேண்டும் .அப்படி செய்து வந்தால் ஆன்மாவில் உள்ள அருள் சுரக்கும் அருளைப் பெறலாம்

புண்ணிய பாவம் நம்மை எவ்வாறு அடைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் ஆரம்பித்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருப்பது பாவமாகும் .ஆரம்பித்தில் துக்கமாயும் பின் சுகமாயும் இருப்பது புண்ணியமாகும் .

புண்ணியம் பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன என்றால் .மனம் ,வாக்கு .காயம் {உடம்பு }என்னும் மூன்றின் வழியாக அடையும்.மனத்தின் இடத்தில் நான்கும் .வாக்கின் இடத்தில் நான்கும் ,சரீரத்தின் இடத்தில் நான்கும் ஆகப பன்னிரண்டு வகையாய் நம்மை அடையும்.அவை யாவன என்பதை பார்ப்போம் .

மனம் ;-
மனத்தினால் பரதாரக மனம் பண்ண நினைத்தல் .அன்னியருடைய சொத்தை அபகரிக்க நினைத்தல் ,அந்நியருக்கு தீங்கு செய்ய நினைத்தல்,முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அந்நியர்களுக்கு முடிந்ததை நினைத்து பொறாமை அடைதல் இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்களாகும்.

வாக்கு;
பொய் சொல்லல ,கோள் சொல்லல,புறங் கூறல்,வீணுக்கு அழுதல் .இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவாஸ் செயல்களாகும் .

தேகம் {சரீரம் }
தேகத்தினால் பிறர மனைவியை தாழுவதல். புசிக்கத் தகாத விரோத ஆகாரங்களை [ மாமிசம் அதாவது புலால் இறைச்சி }புசித்தல் .அந்நியருக்கு இம்சை செய்தல் தீங்கு செய்கின்றவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரம் செய்தல் இவை நான்கும் சரீரத்தால் செய்யும் பவங்கலாகும் .

புண்ணியம் என்பது ;--

மனம் ,
இவை போன்றவைகளை தவிர்த்து அந்நியர்களுக்கு நன்மை உண்டாக நினைத்தல்,பொறாமை அடையாது இருத்தல்,அன்னியர் சொத்தை தனதாக்க என்னாது இருத்தல் ,தனது மனைவியைத் தவிர அந்நியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாக சிந்தித்தல் ,இவை மனத்தால் வரும் புண்ணியமாகும் .

வாக்கு ;--
பொய் சொல்லாமை ,கோள் சொல்லாமை இன் சொல்லாடல்,இடை விடாது கடவுளை நினைத்தால் இவை நான்கும் வாக்கால் வரும் புண்ணியமாகும் ,

தேகம் '-
அந்நியர்களுக்கு தீங்கு உண்டாகும் காலத்தில் எந்த விதத்திலாவது அதை விலக்கல முதலான நன்மையை செய்தல் தேகத்தால் உண்டாகும் புண்ணியமாகும் .  

அடுத்து அறிந்து செய்த பாவங்களும்,அறியாது  செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும் அறிந்து பாவங்கள் செய்த பின் ,தாம் பாவச செயல்களை முன்னமே தெரிந்தும் மோகத்தாலும் ,மறதியாலும்,அபி மானத்தாலும் அகங்காரத்தாலும் ,செல்வா செருக்காலும் தாட்சன்ய உடன் பாட்டாலும் உணவு பற்றியும் ,புகழ் பற்றியும் ,வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே என்று மனம் வருந்தி ,பசித்த ஏழை களுக்குஅன்ன விரயம் {அதாவது உணவும்} ,ஆதரவு அற்ற ஏழைகளுக்கும் .அதரவு அற்ற முதியோர்களுக்கும் நம்மால் முடிந்த அளவு உபகாரம்,ஜீவகாருண்யம் செய்து வந்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் குறைந்து விடும் .

அடுத்து நான் செய்த பாவக் காரியங்கள் என்னை விட்டு நீங்க வேண்டும் என்று இடை விடாது உண்மைக கடவுளாகிய அருட்பெரும் ஜோதியை இடை விடாது தோத்திரம் செய்தும் ,பாராயணம் செய்தும் வேண்ட வேண்டும் விருந்தினர்களுக்கு ,விருந்து உபசரிப்பு முடிந்த அளவு இடை விடாது செய்து வரவேண்டும் .

இப்படி செய்ய வில்லை என்றால் மனத்தால் செய்யும் பாவங்களுக்கு சண்டாள தேகங்களும் .வாக்கால் செய்த செய்த பாவங்களுக்கு மிருகம் முதலான தேகங்களும் .தேகத்தால் செய்த பாவங்களுக்கு மரம முதலான தேகங்களும் உண்டாகும் .அடுத்து மனிதப் பிறவி கிடைக்கும் என்பது உறுதி அல்ல !ஆதாலால் மேல் சொன்ன வழியில் மேலும் வாழ்க்கை அமைத்துக் கொண்டால அடுத்து மனிதப் பிறவிக்கு கடவுள் கருணை காட்டுவார் .நல்லதை செய்து நலமுடன் வாழ்வோம் .
,
ஆன்மநேய அன்புடைய கதிர்வேலு .  

.


புதன், 2 நவம்பர், 2011


287
More friends
Chennai
India
50
More friends
London
United Kingdom
39
More friends
Colombo
Sri Lanka
32
More friends
Bangalore
India
30
More friends
Coimbatore
India
26
More friends
Erode
India
24
More friends
Madurai
India
23
More friends
Singapore
Singapore
23
More friends
Dubai
United Arab Emirates
22
More friends
Kuala Lumpur
Malaysia
22
More friends
Paris
France
22
More friends
Toronto
Canada
21
More friends
Jaffna
Sri Lanka
10
More friends
Hyderabad
India
10
More friends
Salem
India
9
More friends
Mumbai
India
9
More friends
Madras
India
8
More friends
Abu Dhabi
United Arab Emirates
7
Zürich
Switzerland
7
Pondicherry
India
7
Tiruvannamalai
India
6
Tirupur
India
6
New Delhi
India
6
Penang
Malaysia
6
Riyadh
Saudi Arabia
6
Oslo
Norway
6
Batticaloa
Sri Lanka
5
Klang
Malaysia
5
Pulau Pinang
Malaysia
5
Tirunelveli
India
4
Vellore
India
4
Cochin
India
4
Pudukkottai
India
4
Trincomalee
Sri Lanka
4
Seremban
Malaysia
4
Selangor
Malaysia
4
Dindigul
India
4
Doha
Kuwait
4
Moscow
Russia
3
Petaling Jaya
Malaysia
3
Neyveli
India
3
Bern
Switzerland
3
Rajapalayam
India
3
Scarborough
Canada
3
Male
Maldives
3
Kanchipuram
India
3
Tiruppur
India
3
Berlin
Germany
3
Vriddhachalam
India
3
Ipoh
Malaysia
2
Cuddalore
India
2
Philadelphia
United States
2
Amsterdam
Netherlands
2
Osnabrück
Germany
2
Brussels
Belgium
2
Tenkasi
India
2
Milan
Italy
2
Wuppertal
Germany
2
Gosford
Australia
2
Johor
Malaysia
2
Sydney
Australia
2
Teluk Intan
Malaysia
2
Jeddah
Saudi Arabia
2
Nawalapitiya
Sri Lanka
2
Surat
India
2
Chicago
United States
2
Melbourne
Australia
2
Indore
India
2
Perth
Australia
2
Kanyakumari
India
2
Jakarta
Indonesia
2
Delhi
India
2
Nagercoil
India
2
Hatton
Sri Lanka
2
Chidambaram
India
2
Dortmund
Germany
2
Al Ain
United Arab Emirates
2
Zug
Switzerland
2
Villupuram
India
2
Kandy
Sri Lanka
2
São Paulo
Brazil
2
Vancouver
Canada
2
Los Angeles
United States
2
Karachi
Pakistan
2
Muscat
Oman
2
Krishnagiri
India
2
Karur
India
2
Namakkal
India
2
Mannargudi
India
2
Vavuniya
Sri Lanka
2
Puthukkudiyiruppu
Sri Lanka
2
Tiruchendur
India
1
Tashkent
Uzbekistan
1
Williamsville
United States
1
Kumbakonam
India
287
More friends
Chennai
India
50
More friends
London
United Kingdom
39
More friends
Colombo
Sri Lanka
32
More friends
Bangalore
India
30
More friends
Coimbatore
India
26
More friends
Erode
India
24
More friends
Madurai
India
23
More friends
Singapore
Singapore
23
More friends
Dubai
United Arab Emirates
22
More friends
Kuala Lumpur
Malaysia
22
More friends
Paris
France
22
More friends
Toronto
Canada
21
More friends
Jaffna
Sri Lanka
10
More friends
Hyderabad
India
10
More friends
Salem
India
9
More friends
Mumbai
India
9
More friends
Madras
India
8
More friends
Abu Dhabi
United Arab Emirates
7
Zürich
Switzerland
7
Pondicherry
India
7
Tiruvannamalai
India
6
Tirupur
India
6
New Delhi
India
6
Penang
Malaysia
6
Riyadh
Saudi Arabia
6
Oslo
Norway
6
Batticaloa
Sri Lanka
5
Klang
Malaysia
5
Pulau Pinang
Malaysia
5
Tirunelveli
India
4
Vellore
India
4
Cochin
India
4
Pudukkottai
India
4
Trincomalee
Sri Lanka
4
Seremban
Malaysia
4
Selangor
Malaysia
4
Dindigul
India
4
Doha
Kuwait
4
Moscow
Russia
3
Petaling Jaya
Malaysia
3
Neyveli
India
3
Bern
Switzerland
3
Rajapalayam
India
3
Scarborough
Canada
3
Male
Maldives
3
Kanchipuram
India
3
Tiruppur
India
3
Berlin
Germany
3
Vriddhachalam
India
3
Ipoh
Malaysia
2
Cuddalore
India
2
Philadelphia
United States
2
Amsterdam
Netherlands
2
Osnabrück
Germany
2
Brussels
Belgium
2
Tenkasi
India
2
Milan
Italy
2
Wuppertal
Germany
2
Gosford
Australia
2
Johor
Malaysia
2
Sydney
Australia
2
Teluk Intan
Malaysia
2
Jeddah
Saudi Arabia
2
Nawalapitiya
Sri Lanka
2
Surat
India
2
Chicago
United States
2
Melbourne
Australia
2
Indore
India
2
Perth
Australia
2
Kanyakumari
India
2
Jakarta
Indonesia
2
Delhi
India
2
Nagercoil
India
2
Hatton
Sri Lanka
2
Chidambaram
India
2
Dortmund
Germany
2
Al Ain
United Arab Emirates
2
Zug
Switzerland
2
Villupuram
India
2
Kandy
Sri Lanka
2
São Paulo
Brazil
2
Vancouver
Canada
2
Los Angeles
United States
2
Karachi
Pakistan
2
Muscat
Oman
2
Krishnagiri
India
2
Karur
India
2
Namakkal
India
2
Mannargudi
India
2
Vavuniya
Sri Lanka
2
Puthukkudiyiruppu
Sri Lanka
2
Tiruchendur
India
1
Tashkent
Uzbekistan
1
Williamsville
United States
1
Kumbakonam
India