சனி, 28 ஜனவரி, 2017

ஆட்சியை யார் ? ஆள வேண்டும்.!

ஆட்சியை யார் ? ஆள வேண்டும்.!

நாட்டையும் .நாட்டு மக்களையும் மற்ற உயிர் இனங்களையும் காப்பாற்ற வேண்டிய பொருப்பு நாட்டை ஆள்பவரிடம் ஒப்படைக்கப் பட்டு உள்ளன.

உலகத்தில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ஆன்மீகம் சார்ந்தவர்களே ஆட்சியை ஆண்டு கொண்டு வந்தார்கள்.

ஆட்சி முறைகள் சட்டதிட்டங்கள் முறையாக மக்களுக்கு நன்மை பயக்காமல் மதக்கலவரங்களாக.சமயக்கலவரங்களாக.சாதிக்கலவரங்களாக மாறின.அதனால் பல கோடி மக்கள் உயிர் இழந்தார்கள்.

அதன் பின்பு அரசியல் கட்சிகள் பல உருவெடுத்தன.பல பல  கொள்கைகளை முன் வைத்து மக்களைக் காப்பாற்ற மக்களே .ஆட்சியாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என்ற கொள்கைப்படி .மக்களுக்கு சுதந்தரம் என்னும் உரிமையை பெற்றுத் தரப்பட்டன. அந்த சுதந்தரம் பெருவதற்கும் பல கோடி உயிர்கள் பலி ஆயின.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு குடி அரசு நாடு என்றும்.சுதந்தர நாடு என்றும் பெயர் வந்தன.

ஆனால் மக்களின் ஏழ்மையினாலும்.வறுமையினாலும். அறியாமையாலும் .திருடர்களையும்.கொள்ளைக்காரர்களையும்.கொலைக்காரர்களையும்.குடிகாரர்களையும் .தேர்வு செய்து ஓட்டு போட்டு .நாட்டையே அழிப்பவர்களை ஆட்சியில் அமர வைத்து விட்டு .அழுதுகொண்டும் புலம்பி கொண்டும் உள்ளார்கள்.

இனிமேல் எந்த அரசியல் கட்சிகளாலும்.நாட்டையும் நாட்டு மக்களையும் எக்காலத்திலும் காப்பாற்றவே முடியாது.

எனவேதான் நாட்டை ஆளும் தகுதி உடையவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவுப்படுத்தி பதிவு செய்கிறார்.

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க

தெருள் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெறுக

நன்று நினைத்து எல்லோரும் வாழ்க இசைந்து !

என்று புரட்சி குரல் கொடுக்கின்றார்.

மக்கள் ஏற்ற தாழ்வு அற்ற .ஒத்தாரும்.உயர்ந்தாரும்.தாழ்ந்தாரும்.இல்லாத சமுதாயத்தை உறுவாக்க வேண்டுமானால்."அருள் பெற்றவர்கள்''மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்கின்றார்.

இனிமேல் வள்ளலார் சொல்லியபடிதான் எல்லாமே நடக்கும்.இதில் எந்த சந்தேகமும் இல்லை.

அதற்கு சுத்த சன்மார்க்கிகள் அருள் பெறுவதற்கு தங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும்.

இனி வருங்காலம் சுத்த சன்மார்க்க காலம் என்பதை மறந்து விடாதீர்கள்.

மக்களைக் காப்பாற்ற சன்மார்க்கிளால் மட்டுமே முடியும் என்பதை மறந்து விடாதீர்கள்.

நமக்கு எல்லாம் அரசியல் வேண்டாம் என்பது நமது கோழத்தனமாகும்.ஆன்மீகம் வேறு.அரசியல் என்று ஒதுங்கி விடாதீர்கள்.

அருள் ஆட்சியின் மூவமாகத்தான் சாகாக்கலவியை மக்களுக்கு போதிக்க முடியும்.மக்களை.கொலை.புலை தவிர்த்து ஒழுக்கமுள்ளவர்களாக மாற்ற முடியும்.

சிந்தியுங்கள் செயல் படுங்கள்.இனி வருங்காலம் சன்மார்க்க காலம்.என்பதை மறந்து விடாதீர்கள்.சன்மார்க்க அருளார்கள்தான் நாட்டை நல்வழிக்கு கொண்டு செல்ல முடியும் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

வள்ளலார் வாய்மொழி என்றும் பலிக்கும்.வள்ளாரின் புரட்சிக் குரல் எங்கும் ஒலிக்கும்.

மகிழ்ச்சியுடன் வாழ்க மக்கள் !

வளர்க சுத்த சன்மார்க்கம் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு