ஞாயிறு, 30 ஜூலை, 2017

சுகம் எனைப்போல் பெறுவீர்!*

*சுகம் எனைப்போல் பெறுவீர்!*

ஆன்மநேய அன்பு உடன் பிறப்புகளுக்கு அன்பான வந்தனம்...

மனித வாழ்க்கை என்பது கிடைப்பதற்கு அறிய வாழ்க்கை என்பது எல்லோருக்கும் தெரியும்.

இந்த பிறப்பினால் அடையத் தக்க உண்மையான ஆன்ம லாபம்.ஆன்ம சுகம் என்ன என்பது தெரியாமல் ஆட்டு மந்தைகள் போல்.அலைந்து உண்ணுதற்கும்  உறங்குதற்கும் உணர்ந்து உலகம் எல்லாம் காண முடியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

அதற்கு மேல் பெண் சுகம்.பொன் சுகம்.மண் சுகம் பெற்று வாழ்ந்து வருகின்றோம் இவை யாவும் நிரந்தர சுகமா என்றால் இல்லை என்பதும் எல்லோருக்கும் தெரியும்.

அதற்குமேல் பட்டம்.பதவி.ஆட்சி.அதிகாரம்.புகழ் பெற்று வாழ்கின்றோம் இதுவும் நிரந்தரமா ? நிரந்தர சுகத்தை தருகிறதா என்றால் இல்லை என்பதும் தெரியும்.

 எவ்வளவு வசதி வாய்ப்புக்கள புகழ்்உற்றவர்கள்.பெற்றவர்கள் மற்றவர்கள் எல்லாமும். இருந்தும்  இறுதியில் நோய்வாய் பட்டு உடல் தளர்ந்து .உள்ளம் தளர்ந்து மனம் கசந்து .பேச முடியாமல் .நடக்க முடியாமல்.மலம் ஜலம் படுக்கையிலே கழிந்து துர்நாற்றம் முகர்ந்து தாங்கிக் கொள்ள முடியாமல்... உடம்பு ஒத்துக் கொள்ள முடியாமல் தவிக்கும் போது. உடம்பை விட்டு உயிர் பிரிந்து மரணம் வந்து விடுகின்றது.

பின் எதுவுமே தெரியாது தெரிவதில்லை.உடம்பை விட்டு உயிரும் ஆன்மாவும் பிரிந்து விடுகின்றது.

இதுவா? சுகமான மனித வாழ்க்கை..

இதற்காகவா உயர்ந்த அறிவு உள்ள மனித தேகம் இறைவனால் கொடுக்கப் பட்டது.

*பொய் சுகத்தை விட்டு என்றும் அழியாத மெய்ச் சுகம் அடைந்து அனுபவிக்க வேண்டும்.*

சமய மதங்கள் யாவும் பொய்ச் சுகத்தைக் காட்டி மக்களைத் தாறுமாறாக அழித்துக் கொண்டு உள்ளது.அதனால் தான் சாதியும்.மதமும்.சமயமும் பொய் என்றார் வள்ளலார்.

நான் மெய்ச் சுகத்தை அனுபவிக்கும் வழியைக் கண்டு கொண்டேன் .மெய்ச் சுகத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளேன்.

கண்டேன் களித்தேன் கலந்து கொண்டேன் ..மெய்ச் சுகத்தில் வாழ்ந்து கொண்டு உள்ளேன்

நீங்களும் அப்படியே வாழ வேண்டும் என்ற பெருங் கருணையினால் அழைக்கின்றேன் வாருங்கள் என்று தயவினால் அன்பினால்.கருணையினால் வள்ளலார் அழைக்கின்றார்....

வள்ளலார் பாடல் !

அடைந்திடுமின் உலகீர்இங் கிதுதருணம் கண்டீர்

அருட்சோதிப் பெரும்பதிஎன் அப்பன்வரு தருணம்

கடைந்ததனித் திருவமுதம் களித்தருத்தி எனக்கேகாணாத காட்சிஎலாம் காட்டுகின்ற தருணம்

இடைந்தொருசார் அலையாதீர் *சுகம்எனைப்போல் பெறுவீர்*யான்வேறு நீர்வேறென் றெண்ணுகிலேன் உரைத்தேன்

உடைந்தசம யக்குழிநின் றெழுந்துணர்மின் அழியாஒருநெறியாம் சன்மார்க்கத் திருநெறிபெற் றுவந்தே.!

என்று தெளிவு படுத்தி அழைக்கின்றார்.

நமது உயிர் தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே.பூரண அருளைப் பெற்று என்றும் அழியாத பேரின்பமான மெய்ச் சுகத்தை அனுபவித்து.மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்..

எனவே சாதி .சமய.மதம் என்ற சாக்கடையில் விழாமல் உண்மை அறிந்து உணர்ந்து .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க உண்மை நெறியை பின்பற்றி ஒழுக்கத்துடன் வாழ்ந்து *மெய்ச் சுகத்தை* அனுபவிப்போம்..

வாரீர் வாரீர் வாரீர்...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896....

வெள்ளி, 28 ஜூலை, 2017

நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் !

நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் !

அன்பு உள்ளம் கொண்ட ஆன்ம நேய உடன் பிறப்புக்கள் அனவருக்கும் ஈரோடு கதிர்வேலின் அன்பு கலந்த வந்தனம் !

உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன்என நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்குத் தனித்து.!

என்று வள்ளலார் உலக மக்களுக்கு தெரியப் படுத்து கின்றார்

உலகம் எல்லாம் படைத்து .அவற்றில்  வாழும் உயிர்கள் என்னும் உயிர் அணுக்களைப்  படைத்து.உயிர்கள் வாழுவதற்கு ஏழு விதமான அணுக்களைப் படைத்து.அவற்றை நெறிப்படுத்தும் கிரகங்களைப் படைத்து.ஐந்து பஞ்ச பூதங்களைப் படைத்து..

ஆன்மா என்னும் ஒளியை அனுப்பி் ஆன்மா இவ்வுலகில் வாழ்வதறகு.அதற்கு உயிர் வழங்கி.உயிரும் ஆன்மாவும் வாழ்வதற்கு.ஏழு விதமான அணுக்களால் மேய்ந்த  அழகான உடம்பு என்னும் வீட்டைக் கட்டி கொடுத்து அதில் ஆன்மாவை வாழ வைத்துள்ளவர் தான்

உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் ஒளியாகும்.

அந்த உண்மையான அருட்பெரும்ஜோதி யைத் தெரிந்து கொள்ளாமல் அவரிடம் இருந்து அருளைப் பெற முடியாமல் உயர்ந்த அறிவு கொண்ட மனித  ஆன்மாக்கள் கண் இருந்தும் குருடர்களாய்.காது இருந்தும் செவிடர்களாய்.

சாதி.சமய.மதம் என்ற அசுத்த குப்பைகளிலே.உருண்டு.அதுவே உண்மை என்று நம்பிக்கைக் கொண்டு அதிலே மூழ்கி
மருள் சூழ்ந்து.இருள் சூழ்ந்து மரணம் அடைந்து அதாவது இறந்து இறந்து .பிறந்து பிறந்து உழன்று கொண்டே  உள்ளார்கள்.

அவர்களை காப்பாற்றி கரைசேர்க்க வேண்டியது தனிப்பெரும் கருணைக் கொண்ட.அருள் தந்தை அருட்பெரும்ஜோதி இறைவன் கடமையாகும்

உயர்ந்த அறிவைக் கொடுத்து வாழ்கின்ற மனித தேகத்தைப் பெற்ற  ஜீவர்களை.உண்மை அடியர்களாக்கி.உண்மை அறிவை விளக்கி.உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில் வைத்துச் சத்திய வாழ்வை அளிக்க வேண்டும்

என்ற பெருங் கருணை கொண்டு வள்ளலார் இடத்திலே.ஒப்பற்ற பெரிய பொருப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வழங்கி உள்ளார்.

அந்த மாபெரும் பொருப்பை வள்ளலார் சிரமேற் ஏற்றுக் கொண்டு திலகன் என நானே சன்மார்க நடத்துகின்றேன் நம் பெருமான் தானே எனக்கு தனித்து என்று தெளிவாக சொல்லி உள்ளார்.

அவர்தான் உலகம் எல்லாம் போற்றக் கூடிய ஓளி வடிவம் பொருந்திய கருணை வடிவனாகிய அருள் வள்ளலாகும் கருணைக் கடலாகும்.

நம்மை படைத்த உண்மையான
 இறைவனை அதாவது நமது அருள் தந்தையைத் தெரிந்து கொள்ளாமல் அருளைப் பெற முடியாது.

எனவே அருள் பெருவதற்கான  உண்மை ஒழுக்க நெறியை  வள்ளலார் நமக்கு தெளிவாக காட்டி  யும்.அதன்படி கடைபிடித்தும் வாழ்ந்தும் .பூரண அருளைப் பெற்றும் மரணத்தை வென்றும்.ஒளிதேகம் பெற்றும் வாழ்ந்து கொண்டு உள்ளவர் தான் நமது அருள் தந்தை வள்ளலாராகும்.

எனவே சன்மார்க்கம் நாம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை.அவரே நடத்துகின்றார்.

நாம் அவர்காட்டிய சுத்த சன்மார்க்க வழியில் வாழ்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று காட்டுவதே நாம் அவருக்கு செய்யும் கைமாறாகும்.

அப்படி வாழ்ந்தால் மட்டுமே நாம் அனைவரும் நம் தந்தை சொல் தட்டாத செல்லப் பிள்ளைகளாக அருட்பெரும்ஜோதி இறைவனால் ஏற்றுக் கொள்ள படுவோம்.

இன்று உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கம் அதிவேகமாக விதைக்கப்பட்டு வருகின்றது.அதற்கு காரணம் நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என்ற வள்ளலாரின்  அருள் வாக்கு.அருள் கட்டளை.அருள் செயல் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமாய் பணிவான அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்...

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்

எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.!

வாழ்க உலக உயிர்கள்
வளர்க சுத்த சன்மார்க்கம்

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

புதன், 26 ஜூலை, 2017

திருவடி என்றால் என்ன ?

திருவடி என்றால் என்ன ?

அனனைவருக்கும் வணக்கம் !

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் உருவம் அற்றவர் .

அவருக்கு அடியும் கிடையாது முடியும் கிடையாது..

தலையும் கிடையாது..காலும் கிடையாது.

எங்கும் நீக்கமற நிறைந்த பரம் பொருள்..

வள்ளலார் பாடல்.!

எங்குமாய் விளங்கும் சிற்சபை இடத்தேஇதுஅது எனஉரைப் பரிதாய்த்தங்கும்ஓர் இயற்கைத் தனிஅனு பவத்தைத்தந்தெனைத் தன்மயம் ஆக்கிப்பொங்கும்ஆ னந்த போகபோக் கியனாய்ப்புத்தமு தருத்திஎன் உளத்தேஅங்கையில் கனிபோன் றமர்ந்தருள் புரிந்தஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

இங்கு இறைவன் திருவடி என்பது  சுத்த சன்மார்க்கத்தில் .
வள்ளலார் சொல்லும் திருவடி.
*அருள்* தான் திருவடி.நிலையாகும்.

அருளைப் பற்றுவது தான்  பெருவதுதான் திருவடியை வணங்கி வாழ்த்துவதாகும்.

சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுமின் சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே !என்கிறார் .

சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடமாகும் ஆன்மாவை தொடர்பு கொள்வதே திருவடி நிலையாகும்.

ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள மாயா திரைகள் விலக வேண்டும் .திரைவிலகினால் அருள் சுரக்கும்.அருள் சுரந்து உடம்பு முழுவதும் நிரம்ப வேண்டும்.அருளான் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் வல்லபம் உடையது.

எனவே....அருள் தனி வல்லபம் உடைய திருவடியாகும்.

அகவல் வரிகளை நன்கு  படித்தால் விளங்கும்.

அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே

அருளறி யார்தமை யறியார் எம்மையும்பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே.

அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலைபொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே

அருள்வடி வதுவே யழியாத் தனிவடிவருள்பெற முயலுகென் றருளிய சிவமே

அருளே நம்மிய லருளே நம்முருஅருளே நம்வடி வாமென்ற சிவமே

அருளே நம்மடி யருளே நம்முடிஅருளே நம்நடு வாமென்ற சிவமே

அருளே நம்மறி வருளே நம்மனம்அருளே நங்குண மாமென்ற சிவமே

அருளே நம்பதி யருளே நம்பதம்அருளே நம்மிட மாமென்ற சிவமே

அருளே நந்துணை யருளே நந்தொழில்அருளே நம்விருப் பாமென்ற சிவமே

அருளே நம்பொரு ளருளே நம்மொளிஅருளே நாமறி வாயென்ற சிவமே

அருளே நங்குல மருளே நம்மினம்அருளே நாமறி வாயென்ற சிவமே

அருளே நஞ்சுக மருளே நம்பெயர்அருளே நாமறி வாயென்ற சிவமே

அருளொளி யடைந்தனை யருளமு துண்டனைஅருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே

அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனைஅருளர சியற்றுகென் றருளிய சிவமே

அருளமு தேமுத லைவகை யமுதமும்தெருளுற வெனக்கருள் செல்வனற் றாயே

அருளொளி விளங்கிட வாணவ மெனுமோர்இருளற வென்னுளத் தேற்றிய விளக்கே

அருளமு தளித்தனை யருணிலை யேற்றினைஅருளறி வளித்தனை யருட்பெருஞஜோதி

அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி !

நான்கு அருட்பெரும்ஜோதி யிலும் .அருள் நிறைந்த பெருஞ்ஜோதியாக  உள்ளது.என்கிறார் வள்ளலார்

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்தருட்பெருந் தலத்துமேல் நிலையில்அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்அருட்பெருந் திருவிலே அமர்ந்தஅருட்பெரும் பதியே அருட்பெரு நிதியேஅருட்பெருஞ் சித்திஎன் அமுதேஅருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமேஅருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

சமயத்தையும் மத்த்தையும்  பற்று வைத்துக் கொண்டு சுத்த சன்மார்க்கத்தில் திருவடியை தேடாதீர்கள்...

தேடினால் கிடைக்காது.தவறான வழிகள் தான் தோன்றும்...

ஒவ்வொரு ஆன்மாவும் அதன் உள் இருக்கும் அருளே திருவடியாகும்...

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

செவ்வாய், 25 ஜூலை, 2017

விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் ! என்றால் என்ன ?

 விந்து நாதம் ! பரவிந்து பர நாதம் ! என்றால் என்ன ?

விந்து நாதம் என்பது ;-- மனித உடம்பில் உண்ணும் உணவு இரைப்பையில் சேர்ந்து .அரைக்கப்பட்டு திரவமாக மாற்றி, பின் நுரையீரல்,கல்லீரல் கணையம் போன்ற உறுப்புக்களால் அந்த திரவத்தை வேதியல் மாற்றம் செய்து இரத்தமாக்கி ,அவற்றை உடம்பு முழுவதற்கும் அனுப்பப் படுகின்றது .அந்த இரத்ததில் உள்ள முக்கிய வீரியமுள்ள பகுதியை வடிகட்டி(பில்டர் செய்து )  தனியாக எடுத்து குண்டலிப் பைக்கு அனுப்ப படுகின்றது.

அதற்கு மூல ஆதாரம் என்று சொல்லப் படுகின்றது ,அந்தப் பையில் சேரும் திரவத்திற்கு விந்து என்றும் .சுக்கிலம் என்றும் சொல்லப் படுகின்றது .அந்த விந்து பையில் இருந்து ஆறு ஆதாரங்கள் வழியாக உள் நாக்கின் வழியாக அதன் ஆவி இறங்கினால் தான் பேச்சு வரும் ,அந்த பேச்சுக்கு நாதம் என்று பெயர்.அதனால் தான் அதற்கு விந்து நாதம் என்று பெயர். விந்துவின் ஆவி மேலே வரவில்லை என்றால் பேச்சு என்னும் சப்தம் .நாதம் என்னும் ஒலி வராது.பேச்சு வராதவர்களை ஊமையன் என்றும் சொல்லுவது உண்டு ..

வள்ளலார் சொல்லுவதைப் பார்ப்போம் .!

மனித தேகத்தில் கோசத்திற்கு இரண்டரை அங்குலத்திற்கு மேல் நான்கு சதுரமான ஒரு பை உண்டு .அதில் 16.வயதளவும் உண்டாகும் இந்திரியம் ஜலமாகச் சேருகின்றது .அதைத்தான் மானச தடாகம் என்று சொல்லுகின்றது. 16 வயதுக்கு மேல் சேரும் இந்திரியம் உறைந்த அந்த ஜலத்திற்கு மத்தியில் சேருகின்றது.

அப்படியாகச் சேர்ந்து கொண்டு வரும் இந்திரியம் பொன் வண்ணமாக இருக்கும்.அது தாமரைப்பூ வென்று சொல்லப்படும்.அதன் மத்தியில் ஒரு ஆவி சாதாரண காற்றில் ஒரு பங்காக வெகு நேர்மையாய் இருக்கும்.அதன் வண்ணம் பொன் மயமாய் இருக்கும்.அதற்கு அதிஷ்டான தெய்வம் பிரமன் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

அந்த ஆவி உண்டாகும் காலம் அவருக்குச் சகலகாலம் என்றும் .அடங்கும் காலம் என்றும்,கேவல காலம் என்றும் சொல்லப்படும்.அந்த ஆவி உண்டாகும் காலத்தில் செயற்கையானால்  ( உடல் உறவு கொண்டால் ) கருத்தரிக்கும் .அதுதான் சிருட்டி என்று சொல்லப்படுகின்றது .இன்னும் விரிக்கில் பெருகும் ...

இந்திரியம் என்னும் விந்து இருக்கும் குண்டலிப் பையில் குண்டலி வட்ட நரம்பு ஒன்று உண்டு .அதில் மூன்றாகப் பிரியும் கிளை உண்டு அதன் மூலம் முதல் பிரமந்திரம் வரையில்... இடம்,வலம்,நடு வென்று ...கத்திரி மாறலாய்ப் பிராண அபானனுக்கு இடம் கொடுத்து ஊடுருவி நிற்கும் .இந்த நரம்புகளுக்குச சோம சூரியா அக்கினி  என்று பெயர் வைத்துள்ளார்கள் என்று  ...வள்ளலார் சொல்லுகின்றார் .

இந்த விந்து சக்தியின் வழியாகத்தான் நாதம் என்னும் ஒலி வருகின்றது...நாம் உண்ணும் உணவினால் உண்டாகும் இந்திரியம் என்னும் திரவத்திற்கு.சுக்கிலம் என்றும்,விந்து என்றும் சொல்லப் படுகின்றது.

அந்த குண்டலி வட்ட பையில் இடம்,வலம்,நடு என்ற கிளைகளாக உள்ள நடுவில் உள்ள நரம்பின் வழியாகத்தான் பூத உஷ்ண ஆவி உள் நாக்கின் வழியாகச் சென்று நாக்கின் வழியாக சப்தத்தை எழுப்புகின்றது .அந்த ஆவி எப்போதும் ஈரம் உள்ளதாகவே இருக்கும் ...உமிழ் நீர் உற்பத்தி யாகிக் கொண்டே இருக்கும்.நாக்கு வரண்டு போனால் பேச்சு வராது .ஆவி வருவது குறைந்தால் நாக்கு வரண்டு போகும்.சப்தம் என்னும் நாதம் ஒலிக்காது...

இடம் வலம் உள்ள நரம்பின் வழியாக கீழே செல்வது கீழ் நிலை சுக்கிலம்,என்றும்,மேலே செல்வதை மேல் நிலை சுக்கிலம் என்றும் சொல்லப்படுகின்றது. மேலே செல்லும் சுக்கிலம் என்னும் ஆவி  நின்று விட்டால்,சப்தம் என்னும் நாதம் என்னும் ஒலி நின்று விட்டால்  மரணம் வந்து விடும்.

இதற்கு அசுத்த பூத காரிய விந்து என்றும்,அசுத்த பூத காரிய நாதம் என்றும் பெயர் .

மேலும் வள்ளலார் சொல்லியது !

பிரம ஸ்தானம் தொடங்கிச் சுத்த சிவ ஸ்தானம் வரையில் ஒரு ஸ்தம்பம் .,இருதயம் வரையில் வாயுநாடி வண்ணமாயும் ,அதற்கு மேல் அக்கினி  வண்ணமாயும் இருக்கும் .இது அடியிற் பருத்து வரவர நேர்மையாய் ,இந்திரிய கரணங்களுக்குப் புலப்படாமல் அணுவுக்கு அணுவாய் ஜீவனுக்கும் புலப்படாமல் அகண்டமாய் ,ஆன்மக் காட்சியில் அருகித் தோன்றுவதாய் ,இரண்டற நிற்கும்.இதற்கு சிவா காரண பூரண ஸ்தம்பம் என்று பெயர் .

முன் சொன்ன இருதயா அக்கினிப் பை அக்கிரமாய் விரிந்து ,விசேஷ அக்கினி ஜிவாலை விசிரிம்பித்துக் கீழ் இருக்கும் ஷீராப்திப் பையில் இருக்கும் ஜலத்தைச் சுருட்டிக் கொள்ள ,ஜீவனுக்கு மரண காலம் நேரிடும் .மேற்படி பை விரிவதற்கு ஆதாரம் ...அருந்தல் ...பொருந்தல் இவை சமமானால் மரணம் வராது....

இவை சாதாரண அறிவைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியாது...ஆன்ம அறிவைக் கொண்டுதான் தெரிந்து தெளிவு பெற முடியும்.

பர விந்து பர நாதம் என்பது !

விந்து நாதத்தைக் கொண்டு பர நாதத்தை பெற வேண்டும்.

தொடரும் ;---

  


     

செவ்வாய், 18 ஜூலை, 2017

கடவுளைத்தேடு ! ஓழுக்கத்தை பிடி !

கடவுளைத்தேடு ! ஓழுக்கத்தை பிடி !

மனிதன் கடவுளைத் தேடுகிறான்
கடவுள் கிடைக்கவில்லை

கடவுள் மனிதனைத் தேடுகின்றார் மனிதன் கிடைக்கவில்லை.

மனிதன் மனிதனாக வாழ்ந்தால் கடவுள் கிடைப்பார்.மனிதன் மிருகமாக வாழ்வதால் கடவுள்
கிடைக்கமாட்டார்.

கடவுள் மனிதனைத் தேடுகிறார் ஏன் கிடைக்கவில்லை.மனிதன் மனிதனாக வாழவில்லை .அதனால் கிடைக்கவில்லை.

அதனால் யார?் மனிதனாக வாழ்கிறார் என்றே கடவுள் தேடிக் கொண்டே உள்ளார்.

மனிதன் வள்ளலார் சொல்லியபடி அன்பு.தயவு.கருணையுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்தால் மட்டுமே  மனிதனுக்கு கடவுள் காட்சிக் கொடுப்பார்.

மனிதனை கடவுள் தேடிக்கொண்டே உள்ளார் அருளை வழங்குவதற்கு....

வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி மனிதன் வாழ்ந்தால் கடவுள் அன்புடன் அனைத்துக் கொள்வார்.அருளையும் வாரி வழங்குவார்.

 அன்பு.தயவு கருணைக் கொண்டு ஒழுக்கத்துடன் வாழ்ந்தேன்....
கடவுளைக் கண்டேன் களித்தேன் கலந்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்.

நாமும் வள்ளலார் போல் வாழ்ந்தால்.கடவுளைக் காணலாம் களிக்கலாம் கலந்து கொள்ளலாம்.

இதைவிட வேறு வழியே இல்லை !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

சனி, 15 ஜூலை, 2017

உயர்ந்த உறவு !

உயர்ந்த உறவு !

கணவன் மனைவி உறவு !

கணவன் மனைவி உறவு இன்று சுதந்திரமாக உள்ளது.

யாரும் யாருக்கும் பயப்படுவதில்லை.அடிமைத்தனம் இல்லை.கோபம் கொள்வதில்லை.எதிர்பார்ப்புக்கள் இல்லை.   கண்டிப்புக்கள் இல்லை. கவலைகள் இல்லை.

பணம் சம்பாதிக்க நல்ல தொழில்கள் இருக்கு.

கைநிறைய. பை நிறைய பணம் இருக்கு.எங்கு செல்ல வேண்டுமானாலும் வண்டி வாகனங்கள் இருக்கு.

நட்பு கொள்ள ஆணுக்கு பெண்ணும்.பெண்ணுக்கு ஆணும் நிறைந்து இருக்கு.

தேர்வு செய்ய நல்ல மனம் இருக்கு.

தொடர்பு கொள்ள வாட்ஸ்அப் இருக்கு.பேஸ்புக் இருக்கு.டிவிட்டர் இருக்கு.வாய்ஸ் ரிக்கார்டு இருக்கு .வீடியோ இருக்கு.

சந்திக்க நிறைய மால் இருக்கு.பீச்சு  இருக்கு. பார்க் இருக்கு.சினிமா தியேட்டர் இருக்கு.இன்னும் நிறைய இடம் இருக்கு.

சந்தித்து பேச பழக நல்ல மனம் இருக்கு.

வீட்டில் ஒவ்வொரு ரூமிலும் TV.இருக்கு.

தனித்தனி பெட்ரூம் இருக்கு.

விரும்பினால் சேர்ந்து படுக்கலாம்.இல்லையேல் பிரிந்து படுக்கலாம்.

விரும்பினால் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் வேண்டாம் என்றால் நிறுத்திக் கொள்ளலாம்.

விரும்பினால் சேர்ந்து வாழலாம்.இல்லையேல் பிரிந்து வாழலாம்.

இதைவிட சுதந்திரம் கணவன் மனைவிக்கு வேறு என்ன வேண்டும்.

சட்டத்திலும் நல்ல வசதி இருக்கிறது.  எல்லா சுதந்தரமும் இவ்வுலகில் சிரம்ம் இல்லாமல் கிடைக்க  வசதி வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

காலம் கடந்து இளமை தொலைந்து. வயது முதிர்ந்து பிணிகள் தொடர்ந்து துன்பம் நிறைந்து. மரணத்தை எதிர்கொள்ளும் போது உங்கள் சுதந்தரம் எங்கு தேடினாலும் கிடைக்காது.

இதுதான் வாழ்க்கையா  ? இதற்கு மேலும் ஒரு சிறந்த வாழ்க்கை உண்டு.சிறந்த உறவு உண்டு என்பதை ஆணும் பெண்ணும் தெரிந்து கொள்ள வேண்டும்.

அவைதான்  இறைவன் உறவு.இறைவனைக் காதலிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

நாம் அனைவரும் பெண்கள் குணம்.பெண் தன்மை உடையவர்கள் இறைவன் மட்டுமே ஆண் தன்மை ஆண்மை குணம் உடையவர்.

இறைவன் உறவால் கிடைப்பதுதான் அருள்.

அருளால் கிடைப்பதுவே நிலையான இன்பம்.

வள்ளலார் பாடல் !

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவேமெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனதுமெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலேசெய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலேசித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.

என்று வள்ளலார் உலக மக்களுக்கு அழைப்பு விடுகின்றார்.

உலகில் வாழும் எவ்வளவு உயர்ந்த வாழ்க்கையாக இருந்தாலும் இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.

மரணம் வந்தால் எல்லாம் அழிந்துபோகும்.

 நரை.திரை.பிணி.மூப்பு பயம்.துன்பம் இல்லாமல் மரணம் அடையாமல் உடம்பை விட்டு உயிர் பிரியாமல் வாழும் வாழ்க்கையே உயர்ந்த வாழ்க்கை யாகும்.அழியாத பேரின்ப வாழ்க்கையாகும்.

அந்த சுவையை சுவைத்து இன்பத்தை அனுபவித்தால் மட்டுமே தெரியும்

அந்த இன்பத்தை வெளியில் சொல்ல வார்த்தைகள் இல்லை.

அந்த வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் கலைக்குப் பெயர் தான் சாகாக்கலை என்றும் சாகாக்கல்வி என்றும் பெயர் வைத்து உள்ளார் வள்ளலார்.

அந்த கல்வியின் வழிமுறைகளை திருஅருட்பா ஆறாம் திருமுறையில் தெளிவாக எழுதிவைத்துள்ளார் .

பாடல்களாகவும்.உரைநடைப் பகுதிகளாகவும் உள்ளன.

தகுந்த நம்பிக்கை உள்ள சுத்த சன்மார்க்கிகளின்.வாழ்க்கைத் தரத்தை அறிந்து உணர்ந்து.அவர்களின் துணை கொண்டு கற்று தெளிவு அடைந்து .பின் தன் சொந்த ஒழுக்க நெறியில் நின்று.ஆன்ம அறிவை துணைக் கொண்டு இறை அருளைப் பெற்று அனுபவத்தால் வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும்.

பொருள் வாழ்க்கை நிரந்தரம் அல்ல !

அருள் வாழ்க்கையே நிரந்தரம் !

அருள் வாழ்க்கைதான் இறைவனின் சட்டம்
இறை சட்டத்தை மீறினால் மரணம் நிச்சயம்.

பாவத்தின் சம்பளம் மரணம் !

இரை தேடும் மனிதர்களே ! இறையைத் தேடுங்கள் !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

கடவுள் ஒருவரே ! அவரேம அருட்பெரும்ஜோதி ஆண்டவர்!

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வெள்ளி, 14 ஜூலை, 2017

சிருட்டி நியாயம் !

சிருட்டி நியாயம் !

இந்த மாபெரும் உண்மையை வள்ளலார் தவிர வேறு எவறும் சொல்ல வில்லை சொல்லவும் முடியாது.!

பொருமையாக ஆழ்ந்து சிந்திந்து படித்தால் மட்டுமே புரியும்....பல முறை படியுங்கள்....

சிருட்டியின் ரகசியம் !

ஆகாசம் அனாதி. அதுபோல் அதற்குக் காரணமான பரமாகாச சொரூபராகிய கடவுள் அனாதி. அனாதியாகிய ஆகாசத்தில் காற்றும் அனாதி. அனாதியான வெளியில் காற்று எப்படி அனாதியோ, அப்படிக் கடவுளிடத்தில் அருட்சத்தி அனாதியாய் இருக்கின்றது.

ஆகாயத்தில் அணுக்கள் நீக்கமற நிரம்பியிருக்கின்றன. இது போல் கடவுள் சமுகத்தில் - ஆன்மாகாசத்தில் - அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பியிருக்கின்றன. அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.

பூதாகாயத்தி லிருக்கும் சாதாரண அசாதாரண அணுக்கள் எழுவகையாய்ப் பிரியும்.

அவையாவன: வாலணு, திரவவணு, குருவணு, லகுவணு, அணு, பரமாணு, விபுவணு, மேற்படி அணுக்கள் அனந்தவண்ண பேதமாய் இருக்கும்.

 இவற்றில் காரியவணு, காரிய காரணவணு, காரணவணு என மூன்றுவகையாய் நிற்கும்.

 யாவையெனில் பக்குவ ஆன்மா, அபக்குவ ஆன்மா, பக்குவாபக்குவ ஆன்மா என மூவகைப்படும்.

ஆகாயத்திலிருக்கும் அணுக்கள் மூன்று விதமானதற்குக் காரணம் அங்குள்ள காற்றேயாம்.

அதுபோல் ஆன்மாக்கள் மூவிதமானதற்குக் காரணம் கடவுள் சமுகத்திலுள்ள அருட்சத்தியேயாம்.

அப்படி மூவகையான ஆன்மாக்களுக்கு - அருட்சத்தியின் சமுகத்தில் தோன்றிய ஞானம்் கிரியை யென்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் மூன்றுள.

யாவையெனில்: கர்ம தேகம், பிரணவ தேகம், ஞானதேகம், என மூன்று விதம். அப்படி மூன்று தேகம் உண்டானதற்குக் காரணம்: பூத ஆகாயத்தி லுண்டா ன வாயு பேதத்தினால் சோமசூரியாக்கினி யென மூன்று வகை நிற்பன போலுணர்க. அதாவது.அக்கினி.சூரியன்.சந்திரன்.

அந்த ஆகாயத்தை விரிக்கில் அனந்த பேதமாம். வாயுவின் பேதம் அதுபோலனந்தம்.

ஒருவாறு அறுபத்து நான்குகோடி பேதம். இவற்றில் அமுதபாகம், விஷபாகம், பூதபாகம், உஷ்ணபாகம் எனப் பலபேதப்படும்.

மேற்படி அணுக்கள் அனந்த வண்ண மாதலால், அனந்த அணுக்கள் சேர்ந்து ஒரு வித்தாய், இவ்வித்து திரவஅணு சம்பந்தமாய் குரு அணுவோடு சேரும்போது, பூதகாரிய அணுவாகிய கிரண உஷ்ணத்தால் ஜீவிக்கும். ஜீவித்த ஓஷதி முதலியன இந்த நியாயத்தால் வர்ணம் ருசி முதலிய பேதப்படுகின்றன.

இவ்வண்ணமே பௌதிக பிண்ட அணுக்கள் காரண சூரிய உஷ்ணமாகிய ஜீவ   வடிவமாய், பரமகாரணதயையால் ஜீவிக்கின்றன.

சிலகாலத்தில் வித்துக்களாதியாம். சிலகாலத்தில் விருக்ஷமாதியாம். எல்லாவற்றிற்கும் ஆதியாயுள்ளது பூதகாரிய அணுவாகிய சூரிய கிரணமேயாம்.

இவ்வண்ணமே, ஒரு காலத்தில் கடவுள் பிரேரகத்தால் அருட் சத்தி ஆன்மாகாசத்தில் விசிரிம்பிக்க, ஆன்மாக்கள் வெளிப்பட்டுப் பஞ்சகிருத்தியத் தொழிற்படும். மேற்படி ஆன்மாக்கள் வெளிப்பட்ட அக்கணமே, மேற்படி ஆகாயம் சந்தானமாதலால், ஆன்மாக்கள் நிரம்பி நிற்கும்.

ஆதலால் பஞ்சகிருத்தியம் எக்காலத்தும் தடையுறாது. ஆன்மாக்கள் தாழ்ந்த கதியடைவது அனாதியியற்கை யல்ல; ஆதி செயற்கையே யாம். ஆணவம் அனாதி யியற்கையே யாம். இதன் ரஹஸ்யம் குருமுகமாயறிக.

குரு என்பது இறைவன் .இறைவனை தொடர்பு கொள்ளும் போது ஆன்ம அறிவு விளங்கும்.ஆன்ம அறிவு விளங்கும் போது அருள் அறிவு தோன்றும்.

அருள் அறிவு தோன்றும் போது கடவுள் அறிவு தானே தோன்றும்..

கடவுள் அறிவு தொடர்பு கொண்டால் பிறப்பும் இறப்பும் மாற்றும் வழி கிடைக்கும்.

இவைதான் மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழும் வழியாகும்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் துணைக் கொண்டு பூரண அருள் பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.

ஆன்மாவை மறைத்துள்ள அணுக்களால் ஆன ஊன் உடம்பை அருளைக்் கொண்டு அழியாமல் பிரித்து எடுத்து கொடுத்து விட்டு ஆன்மா தனி சுதந்தரம் பெற வேண்டும்.

ஆன்ம சுதந்தரம் பெற்றால் தான் கடவுள் சுதந்தரம் தானே கிடைக்கும்.

இவைதான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்...

பிறப்பின் ரகசியம் தெரிந்தால் தான் உடம்பை மாற்றும் வழியை தெரிந்து கொள்ள முடியும்.

விரிக்கில் பெருகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

புதன், 12 ஜூலை, 2017

இன்பம் இரண்டு வகையாக உள்ளது !

இன்பம் இரண்டு வகையாக உள்ளது !

அழியும் இன்பம் ! அழியா இன்பம் !

அழியும் இன்பம் சிற்றின்பம் என்றும் .அழியா இன்பம் பேரின்பம் என்றும் சொல்லுகின்றார்கள்.

சிற்றின்பம் என்பது சிறிய இன்பம் அதாவது நிலைத்து நிற்காது உடனே நின்றுவிடும் அல்லது அழிந்து விடும்.!

பேரின்பம் என்பது நிலைத்து நிற்கும் .என்றும் எக்காலத்தும் அழியாதது !

எக்காலத்தும் அழியாத இன்பத்தைப் பெறுவதற்கு அனுபவிப்பதற்கு எல்லோருக்கும் ஆசைதான் .அதில் எந்த சந்தேகமும் இல்லை இருக்கவும்  முடியாது .

உலகில் உள்ள பொருள்களை பெற்று .அதாவது பொன்.பெண்.மண் இவைகளைப் பெற்று அனுபவிப்பது சிறிய இன்பம் அதாவது சிற்றின்பம் .இவைகள்தான் மனிதனை அழித்துக் கொண்டு உள்ளது .எல்லாம் இருந்தும் இறுதிவரை முழுமையாக  அனுபவிக்க முடியாமல் இறுதியில்,அச்சம் .பயம் துன்பம்  மரணம் வந்து அழிந்து போகின்றார்கள்

அதே மனிதன் மேலே கண்ட .பொன்.பெண்.மண்ணை  விட்டு உண்மையான  இறைவனிடம் தொடர்பு கொண்டு  அருளைப் பெறுகின்ற போது.அச்சம் பயம்,துன்பம்  மரணம் அடையாமல்.என்றும் அழியாமல் வாழ்கின்ற பேரின்ப பெரிய லாபத்தைப் பெறுகின்றார்கள்  .

இந்த உலகத்தில்  மாயையால் கொடுப்பது எல்லாம் பொருள். அதனால் மனிதன் மரணம் அடைந்து  காணாமல் போய் விடுகின்றான்.

எல்லாம் வல்ல பரம் பொருளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் எல்லா வற்றையும் படைத்தவராகும் .அவரை மட்டுமே தொடர்பு கொள்ளுகின்ற போது அருளை வாரி வாரி  வழங்குகின்றார் .அந்த அருளைப் பெறுகின்றவர் எவரோ! அவரே ! மரணத்தை வென்று பேரின்ப லாபத்தைப் பெற்று பேரின்ப சித்தி என்னும் பெரு வாழ்வாகிய மரணம் இல்லாப் பெருவாழ்வில் திளைத்து வாழும் தகுதி உடையவர் ஆகின்றார் .

மனிதன் !

உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பிற்கு மட்டுமே அந்த அழியா ஆன்ம  இன்ப லாபமான  பேரின்பத்தை பெறுவதற்கும் ,அனுபவிப்பதற்கும் இறைவன் அனுமதி வழங்கி உள்ளார்.

பேரின்பத்தைப் பெறுவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் ஆன்மீகம் என்னும் போர்வையில் பல ஞானிகள் பல அருளாளர்கள் பலப்பல வழிகளைக் காட்டி உள்ளார்கள் ...துறவறம்.சந்நியாசம்,பற்று அறுத்தல்,வீட்டை விட்டு வெளியேறுதல்..மலை.வனம்..குகைகளுக்கு செல்லுதல் .தியானம்.தவம்.யோகம்.போன்ற கலைகளை கற்று அதிலே மூழ்கி போய்.அப்படியே சமாதி நிலையாகி .எந்தவிதமான பெரிய ஆன்ம  லாபத்தையும் பெற முடியாமல் .இறுதியில் மரணம் வந்து மாண்டு போய் விடுகின்றார்கள்.

இதற்காகவா உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பை இறைவன் கொடுத்தார் .சிந்திக்க வேண்டும்.

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை அறிந்து உணர்ந்து கொள்வார்கள்.அறிவு இல்லாதவர்கள் பல தவறான வழிகளில் சென்று இறுதியில் வழி தெரியாமல் மாண்டு போய் விடுகின்றார்கள்.

வள்ளலார் வருகை !

உலக மக்கள் அனைவருக்கும்  உண்மையான .தூய்மையான.ஒழுக்கம் நிறைந்த வாழ்க்கை வாழ்வதற்கு உண்டான   வழிக் காட்டவே இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டவர்தான் '''திரு அருட்பிரகாச வள்ளலார்'' என்பவராகும்.

உலகப்  பொது நெறியாகிய உண்மை நெறியில் மக்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற ஒரு  அமைப்பை.ஒரு இயக்கத்தை வடலூரில்  25-1-1872..ஆம் ஆண்டு தோற்றுவித்தார் .

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற உண்மைக் கடவுளைத் தெரிந்து கொள்ள...உலக மக்கள் அனைவரும்  அவற்றுடன் தொடர்பு கொள்ள வடலூரில் 25-1-1872.ஆம் ஆண்டு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ''' என்ற பொதுவான கடவுள் வழிப்பாட்டு இடமாக ''சமரச சுத்த சன்மார்க்க  சத்திய ஞான  சபையை''  தோற்றுவித்து உள்ளார் .

இறைவன் அருளைப் பெறுவதற்கு ;---

இயற்கை உண்மையாகிய இறைவனை அறிந்து.அவற்றுடன் தொடர்பு கொண்டு ... இயற்கை விளக்கமாகிய அருளைப் பெற்று ,இயற்கை இன்பமாகிய ஆன்ம லாபத்தை பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று  வாழ்வதற்கு சிறந்த  வழி இதுதான் என்பதை விளக்கும் விதமாக ..ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால் என்ன ? என்பதை எழுத்து வடிவமாக ''ஜீவ காருண்ய ஒழுக்கம்''  என்னும் தலைப்பில் ஒரு சிறந்த அருள்  நூலை 23-5-1867..ஆம் ஆண்டு வெளியிட்டார் ..

 இறைவன் அருளைப் பெறுதற்கு இரண்டு வழிகளைக் காட்டினார் .ஒன்று சத் விசாரம் ! .ஒன்று ஜீவ காருண்ய ஒழுக்கம்! இந்த இரண்டு  வழிகளைத் தவிர வேறு வழிகளில் செல்ல வேண்டாம் என்று ஆணையிட்டு சொல்லுகின்றார் .

  இறைவனிடம் தொடர்பு கொள்ள சிறந்த  வழி ஜீவ காருண்யம் ஒழுக்கம் மட்டுமே.என்பதை விளக்கும் விதமாக 23-5-1867.ஆம் ஆண்டு  அதே நாளில்  வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையை ''தோற்றுவித்து உள்ளார் ......

வள்ளலார் சொல்லிய வண்ணமே ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து .எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு கொண்டு .பூரண அருளைப் பெற்றார்....

எல்லாம் வல்ல  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை ...வடலுறுக்கு அடுத்துள்ள  மேட்டு குப்பம் என்னும் சிறிய ஊருக்கு வரவழைத்து அங்கே ஒரு சிறு குடிசையில் தங்க வைத்து .பூரண அருளை வழங்கி .அவருடைய ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி தானும் அவர் உடம்பிலே கலந்து கொண்டார்..

அதற்கு ஆதாரமான பாடல் ;---- சத்திய அறிவிப்பு ஆறாம் திருமுறை !.

 • 1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர் 
  ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை 
  மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில் 
  விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன் 
  துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன் 
  சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க 
  வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே 
  மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே. 
 • 2. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற 
  தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின் 
  இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க 
  இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற 
  மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி 
  மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே 
  கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே 
  களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே. 
 • 3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய் 
  சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய் 
  இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம் 
  இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள் 
  சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும் 
  தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும் 
  செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார் 
  திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே. 
 • 4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார் 
  இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார் 
  பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது 
  பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார் 
  தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான் 
  சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே 
  மின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கே 
  வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே. 


மேலே கண்ட பாடல்கள் நான்கும் வள்ளலார் சித்தி பெறுவதற்கு முன்பு பதிவு செய்துள்ள பாடல்களாகும்.
வள்ளல்பெருமான் அவர்கள் உலக மக்களுக்கு வாழ்ந்து வழி காட்டி உள்ளார் .அவர் வாழ்ந்த வாழ்க்கைதான் என்றும் அழியாத பேரின்ப சித்தி பெரு வாழ்க்கை என்பதாகும் .இறைவனுடன் கலந்து வாழ்வதாகும்.கடவுள் நிலை அறிந்து அம் மயமாகி வாழ்வதாகும் ..

வள்ளலார் இப்போது எங்கே இருக்கின்றார் என்ன செய்து கொண்டு இருக்கின்றார் என்ற கேள்வி மக்களிடையே நிறைந்து உள்ளன ..வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளைப் படி ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று ஐந்தொழிலையும் அவரே  செய்து கொண்டு உள்ளார் .
இவை போல் நிறைய பாடல்களை பதிவு செய்துள்ளாளர் .வள்ளலார் ...

இதுவரை இறைவனை தொடர்பு கொண்டு உள்ளவர்கள் காத்துக் கொண்டு இருக்க வள்ளலாரை மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தேடிவந்து அருள் வழங்கி உள்ளார் என்பதை விளக்கும் பாடல்.என்னும் பாடல் வாயிலாக நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

எனவே நாம் பேரின்பம் பெற்று பேரின்ப வாழ்க்கை வாழ வேண்டுமானால் இறைவனுடைய திருவருள் வேண்டும்...அத் திருவருளைப் பெற வேண்டுமானால்.வள்ளலாரைப் போல் ஜீவ காருண்ய ஒழுக்க நெறியிலும் ,இடைவிடாது இறைவனிடம் தொடர்பு கொண்டு  வாழ்ந்தால் மட்டுமே பூரண அருள்  கிடைக்கும்.வேறு வழிகளில் சென்றால் நிச்சயம் எந்த லாபத்தையும் பெற முடியாது..என்பதை கவனமாகக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ வேண்டும்.... • 1. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும் 
  மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன் 
  சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால் 
  தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி 
  ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும் 
  உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை 
  ஆழி கரத்தணிந் தாடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • 2. இசையாமல் போனவர் எல்லாரும் நாண 
  இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் 
  வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி 
  வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு 
  நசையாதே என்னுடை நண்பது வேண்டில் 
  நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில் 
  அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • 3. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண 
  இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன் 
  தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற 
  திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி 
  துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே 
  சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி 
  அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • 4. சதுமறை335 ஆகம சாத்திரம் எல்லாம் 
  சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ 
  விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா 
  வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர் 
  பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும் 
  பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான் 
  அதுஇது என்னாமல் ஆடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • 5. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார் 
  தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே 
  எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன் 
  என்தோழி வாழிநீ என்னொடு கூடி 
  துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச் 
  சோதிஎன் றோதிய வீதியை விட்டே 
  அப்பாலே போகாமல் ஆடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • 6. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன் 
  விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம் 
  எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி 
  என்மொழி சத்தியம் என்னோடும் கூடி 
  இங்கே களிப்பது நன்றிந்த உலகோ 
  ஏதக் குழியில் இழுக்கும் அதனால் 
  அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • 7. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன் 
  செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன் 
  உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில் 
  ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன் 
  தவமே புரிகின்றார் எல்லாரும் காணத் 
  தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி 
  அவமேபோ காதென்னோ டாடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • 8. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச் 
  சூழலில் உண்டது சொல்லள வன்றே 
  எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன் 
  இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன் 
  விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே 
  வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே 
  அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • 9. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன் 
  என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி 
  காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும் 
  கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி 
  ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ 
  ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும் 
  ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
 • io.. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச் 
  சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப் 
  பதிசெயும் சித்திகள் பற்பல வாகப் 
  பாரிடை வானிடைப் பற்பல காலம் 
  விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும் 
  மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ் 
  அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி 
  ஆடேடி பந்து ஆடேடி பந்து 
  அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. 
மேலே கண்ட பாடல்கள் அனைத்தும் சுத்த சன்மார்க்க கொள்கையை விளக்கும் பாடல்களாகும் ..பொருளை உணர்ந்து படியுங்கள் ..

சிற்றின்பம் வேண்டுமா ? பேரின்பம் வேண்டுமா ? நீங்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

செவ்வாய், 11 ஜூலை, 2017

அன்னதானம்

அன்னதானம்

வாழ்க்கைக்கான அத்தியாவசிய தேவையான உணவை மற்றவர்க்கு தானமாக அளிப்பதே அன்னதானம் ஆகும். அன்னதானம் அளவற்ற புண்ணியத்தினை நல்கும்.

பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு போன்ற மற்றப் பொருட்களையெல்லாம் தானமாகக் கொடுத்தாலும், பெறுபவர், இன்னும் கொஞ்சம் அதிகம் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் தோன்றச் செய்யும். ஆனால்,

அன்னதானம் செய்தால் மட்டுமே போதும் என்ற சொல்லை தானமாகப் பெறுபவரிடமிருந்து கொண்டு வரும். ஆகையாலே பூரணமான தானம் – அன்னதானம் மட்டுமே ஆகும்.
அன்னத்தை துவேஷிக்கக் கூடாது. அன்னத்தை மிகுதியாக உண்டாக்க வேண்டும். அன்னத்தை வேண்டி வந்த எவருக்கும் இல்லை என சொல்லக் கூடாது.

உதரம் (வயிறு) நிறைந்து, உள்ளம் நிறைந்த வாழ்த்துக்கள் ஈரேழு ஜன்மங்களையும் தொடர்ந்து வரும். அன்னதானம் மட்டுமே செய்தவரை மட்டும் சென்றடையாமல், செய்தவரின் சந்ததியினரையும் காத்துத் தொடரக் கூடியது.

தானம் செய்வதில் பெரும் பெயர் அடைந்தவன் –
கர்ணன்.
மஹாபாரதப் போரில் கர்ணனின் மார்பை அம்புகளால் துளைத்தெடுக்கின்றான் அர்ஜுனன். ஆயினும் கர்ணனின் உயிர் பிரியவில்லை.

அவன் செய்த தர்மம் அவனின் தலையைக் காக்கின்றது. பகவான் கிருஷ்ணர் ஒரு வேதியர் வடிவம் கொண்டு கர்ணனிடம், இதுவரை கர்ணன் செய்த புண்ணியத்தை அனைத்தையும் தானமாக வேண்டுகின்றார்.
இறந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்கின்றான் கர்ணன்.

 எல்லாவிதமான சௌகரியங்களும் கிடைக்கின்றது கர்ணனுக்கு. ஆனால், கடுமையான பசி எடுக்கின்றது. சொர்க்கத்தில் பசி என்ற உணர்வே கிடையந்தாயிற்றே! தனக்கு மட்டும் பசியெடுக்கக் காரணம் என்று எண்ணியபோது, நாரத மகரிஷி அங்கு தோன்றுகின்றார்.

கர்ணனிடம் நாரதர், பசி நீங்கவேண்டுமானால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைத்துக் கொள் என்கிறார். அதன்படி, ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால், பசி நீங்குகின்றது. ஆனால், மறுபடிப் பசியெடுக்கின்றது.

மறுபடியும் நாரதரை கர்ணன் நினைக்க, அவர் தோன்றுகின்றார். அவரிடம் கர்ணன் தனக்குப் பசியெடுப்பதற்கும், ஆட்காட்டி விரலை வாயில் வைத்தால் பசி நீங்குவதற்கும் காரணம் கேட்கின்றார்.

அதற்கு, நாரதர் உன் வாழ்வில் நீ அனைத்து தானங்களையும் செய்திருக்கின்றாய்,
ஆனால், ஒரே ஒரு தானத்தைத் தவிர. அது அன்னதானம். அன்னதானம் செய்யாமல் சொர்க்கத்திற்கு வந்ததால்,

இங்கு வந்தும் உனக்குப் பசியெடுக்கின்றது.
உன் பூலோக வாழ்நாளில் ஒருநாள் உன்னிடமிருந்து தானம் பெற்றவர் அன்னசத்திரம் எங்கிருக்கிறது எனக் கேட்க அதற்கு நீ உன் ஆட்காட்டி விரலைக் காட்டி அங்கிருக்கின்றது என்றிருக்கின்றாய்.

நேரடியாக அன்னதானம் செய்யாவிட்டாலும், அன்னதானத்திற்கான காரணியாக விளங்கிய உன் ஆட்காட்டி விரல் மட்டும் அன்னதானப் பலன் பெற்றது. ஆகையால், உன் ஆட்காட்டி விரலை வாயில் வைக்கும்போது,

 சொர்க்கத்தின் முழுப்பலனாகிய பசியின்மையும் சேர்த்து உனக்குக் கிடைக்கின்றது என்றார்.
அன்னதானம் செய்யாமலேயே,அன்னசத்திரம் இருந்த இடத்தைக் காட்டியமைக்கே இந்தப் புண்ணியம் என்றால்,

 அன்னதானத்தின் மகிமையை எப்படி அளவிடமுடியும்.
மற்ற எந்தத் தானம் செய்யினும் யாரையும் போதுமென்ற அளவுக்குத் திருப்தி்ப்படுத்த முடியாது. எத்தகைய பசியாக இருப்பினும் ஒரு எல்லையில் போதுமென்று கூறுவர்

 மற்ற எந்தத் தானங்களையும் விட அன்னதானம் என்னும் உயிர்காக்கும் தானம் மிக உயர்வான அறமாகும்.
அன்னதானம் செய்வோம் இன்புற்று வாழ்வோம். ஆகவே , நாம் எல்லோரும் ,
பசியுற்றவர் முகம் பாராமல் இருந்தேனே

என்ற மனு முறை கண்ட வாசகத்தில் உள்ள கருத்தை நினைத்து பசியால் வாடும் எந்த உயிருக்கும் அது செடியாக இருந்தாலும், எறும்பாக இருந்தாலும், யானையாக இருந்தாலும்  நம்மால் இயன்ற வரை பசியாற்றும் வழி செய்வோம்...
🌸🙏🏻🙏🏻🙏🏻🐜🐘🙏🏻🙏🏻🙏🏻🌸

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்,
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்,
ஊன்பற்றி நின்ற உணர்வுறும் மந்திரம்,
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.

ஆன்ம தேகம் பெறுவது எப்படி ?


ஆன்ம தேகம் பெறுவது எப்படி ?


ஆன்மா என்றால் என்ன ?

ஆன்மா ஆவி வடிவமாகவும் ஒளி வடிவமாகவும் உள்ளது அதனால்.பூத உடம்பில் உள்ள புறக் கண்களுக்குத் தோன்றாது .

 நம் தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங் கருணையால் ஆன்மாவை இந்த பூத உலகத்திற்கு அனுப்பு வைக்கிறார்.  இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வரும் போது ஆன்ம தேகம் என்னும் ஒளித் தேகத்தோடு தான் வந்தது .இந்த உலகத்தில் வந்த ஆன்மா ! ஆன்ம தேகத்தோடு வாழ முடியாது .

எனவே ஆன்மாவிற்க்கு வேறு ஒரு தேகமான பூத தேகம் கொடுக்க வேண்டும் என்பது இறைவன் ஆணை யாகும்.  தேகம் கொடுக்கும் பொறுப்பு மாயையிடம் இறைவனால்  வழங்கப் பட்டு உள்ளது .ஆன்ம தேகத்தின் மேல் பஞ்ச பூதங்களின் அணுக்களைக் கொண்டு .மனித தேகமான ஊன் உடம்பை மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகின்றது .உடம்பு இயங்க உயிர் அவசியம் ...உயிரை மையமாக வைத்துத் தான் உடம்பு இயங்க வேண்டும் ..உடம்பும் உயிரும் இயங்க அருள் ஒளி வேண்டும்.அந்த அருள் ஒளியை வழங்குகின்ற வேலை ஆன்மாவின் வேலை யாகும்..

ஆன்மா ..உயிர்...உடம்பு  முன்றும் சேர்ந்த வாழ்க்கைதான் மனித வாழ்க்கை !

இங்கே வாழ்வதற்கு இறைவனால் மூன்று சுதந்திரம் ஆன்மாவிற்கு  வழங்கப் பட்டு உள்ளன.

அவைதான்;---
தேக சுதந்தரம்.....போக சுதந்தரம் ....ஜீவ சுதந்தரம் என்பதாகும் !

இந்த மூன்று சுதந்தரத்தை வைத்துக் கொண்டு இந்த உலகத்தில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் அதற்கு இறைவன் தடை இல்லை .அதற்கு உண்டான நன்மை தீமைகள் அவரவர்களையே சார்ந்ததாகும். ..அந்த மூன்று சுதந்திரத்தையும் விரும்புவதுதான் ''மனம்'' என்னும் கருவியாகும் மனம் என்னும் கருவி மிகவும் வலிமை  உடையது ..அதனால் தான் மனம் போனபடி போக வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்லி உள்ளார்கள் .

மனதை அடக்கும் வழி தெரியாமல் .மாற்றும் வழி தெரியாமல் பல வழிகளில்  தியானம்.தவம்.யோகம்.வழிபாடு போன்ற தவறான வழிகளில் சென்று   அலைந்து கொண்டு உள்ளோம்.

இவற்றை எல்லாம் ஆன்மா மிகவும் கவனமாக கவனித்துக் கொண்டும்   ஆன்மாவில் பதிவு செய்து கொண்டும்  இருக்கும்.அந்தப் பதிவுகள்தான் மாயை என்னும் அஞ்ஞான  திரைகள் என்பதாகும்.இந்த பூலோக வாழ்க்கையில் இன்பம் துன்பம் அனுபவித்து பின்பு வெறுத்து இந்த உலகத்தை விட்டு செல்ல வேண்டும் என்று ஆன்மா நினைக்கும் போது வெளியே செல்ல முடியாமல் தவிக்கின்றது ..

ஆன்மா உடம்பையும் உயிரையும் விட்டு வெளியே  செல்ல வேண்டுமானால்
பழைய தேகமான  ஆன்ம தேகம் பெற வேண்டும் .ஆன்ம தேகம் பெறுவதற்கு மாயா திரைகள் என்னும் அறியாமையான அஞ்ஞான  திரைகள் விலக வேண்டும் .திரைகள் விலக வேண்டுமானால் ''அருள்'' வேண்டும்.அருள் வேண்டுமானால் இறைவன் தொடர்பு வேண்டும் . உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்க வழி கிடைக்கும்.அருள் சுதந்திரம் கிடைக்கும் .அருள் பெற்றால் தான் ஆன்ம சுதந்திரம் என்னும் திருவருள் சுதந்திரம்  கிடைக்கும் .

மேலும்  அருளைப் பெறுவதற்கு பல ஞானிகள்,பல அருளாளர்கள்  பலப்பல  வழிகளைக் காட்டி உள்ளார்கள் .எல்லாம் தவறான வழிகளாகவே இருக்கின்றன .

வள்ளலார் வந்து தான் நேர் வழியைக் காட்டி உள்ளார் ! அதற்கு சுத்த சன்மார்க்கம் என்றும் ..சாகாக் கல்வி என்றும்,,,.மரணம் இல்லாப் பெரு வாழ்வு என்றும் பெயர் வைத்து உள்ளார் .

வள்ளலார்  காட்டிய வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் மட்டுமே.ஊன தேகத்தை மாற்றம் செய்து. ஆன்ம தேகமான ஒளி தேகத்தைப் பெற முடியும் ..ஆன்ம தேகம் கிடைக்காத வரை இந்த உலகத்தில் .இறந்து இறந்து..பிறந்து பிறந்து பல பிறவிகள் எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் ..

வள்ளலார் சொல்லும் எளிய வழி ! எளிய விண்ணப்பம் !

சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பத்தில் மிகவும் தெளிவாக விளக்கி உள்ளார் அவற்றை ஊன்றி கவனமாக பல முறை படிக்க வேண்டும் .

  4. சுத்த சன்மார்க்க சங்க சத்தியவிண்ணப்பம்.
உத்தர ஞான சித்திபுரம் என்றும் உத்தர ஞான சிதம்பரம் என்றும் திருவருளால் ஆக்கப்பட்ட ஆக்கச் சிறப்பு பெயர்களும், பார்வதிபுரம் என்றும் வடலூர் என்றும் உலகியலாற் குறிக்கப்பட்ட குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியினிடத்தே, இயற்கை உண்மை நிறைவாகியுள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபையில், இயற்கை உண்மை நிறைவாகிய திருவுருவைத் தரித்து, இயற்கை இன்ப நிறைவாகிய சிவானந்த ஒருமைத் திருநடச் செய்கையை எவ்வுயிரும் இன்பமடைதற் பொருட்டே செய்தருளுகின்ற எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீரது திருவருட் சமூகத்தில் யான் செய்து கொள்ளும் சமரச சுத்த சன்மார்க்க சங்க சத்திய விண்ணப்பம்!
இவ்வுலகினிடத்து ஆறறிவுள்ள உயர்வுடையத்தாகிய தேகத்தைப் பெற்ற யான் இத் தேகத்தில் இடைக்கிடை நேருகின்ற மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் நிவர்த்தித்து இத் தேகத்தையே நித்திய தேகமாக்கிக்கொண்டு எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எத்துணையும் தடைபடாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் வேண்டும் என்பதே எனது சத்தியமான அதிதீவிர விருப்ப முயற்சியாக இருக்கின்றது.
எனது விருப்ப முயற்சி இங்ஙனமாக, அவத்தைகள் எல்லாவற்றியும் நீக்கி இத்தேகத்தை நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வைப் பெற்று வாழ்தல் எதனால் பெறுதல் கூடும் என்று அறியத்தொடங்கிய தருணத்து வேறு எந்த வழியாலும் பெறுதல் கூடாது,எல்லாமுடைய கடவுளது திருவருட் சுதந்திரம் ஒன்றாலே பெறுதல் கூடுமென்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
பின்னர், திருவருட்சுதந்தரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்து, எனது யான் என்னும் தேகசுதந்தரம், போகசுதந்தரம், ஜீவசுதந்தரம் என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.
ஆகலில், எனது சுதந்தரமாகக் கொண்டிருந்த தேக சுதந்தரத்தையும், போக சுதந்தரத்தையும், ஜீவ சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன் கொடுத்த தருணத்தே இத்தேகமும் ஜீவனும் போகப்பொருள்களிடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்றமாட்டாது. தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி, மரணம், பிணி, மூப்பு, பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து, இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.
இத் தேகத்தைப் பெற்ற எல்லாச் சீவர்களுக்கும் எனக்கு அறிவித்த வண்ணமே அறிவித்து, அவரவர்களையும் உரிமையுடையவர்களாக்கி வாழ்வித்தல் வேண்டும்.
தேவரீர் பெருங்கருணை ஆட்சிக்கு வந்தனம்! வந்தனம்! என்று வள்ளலார் பதிவு செய்து உள்ளார் !
மேலே கண்டபடி நமக்கு கொடுத்த தேக சுதந்திரம் .போக சுதந்திரம் .ஜீவ சுதந்தரத்தை.திரும்ப மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்..அதற்கு சிறந்த வழிதான் ஜீவர்கள் இடத்தில் தயவும்,கருணையும் .கடவுள் இடத்தில் இடைவிடாது அன்பும் செலுத்த வேண்டும் ...அதற்குத்தான் சத் விசாரம் ...பரோபகாரம் என்று இரண்டு வழிகளைக் காட்டி உள்ளார்.
நாம் ஜீவ காருண்யம் செய்கிறோம் .உண்மையான விசாரம் செய்வதில்லை ,சமயம் மதங்கள் காட்டிய விசாரம் தான் செய்து கொண்டு உள்ளோம்.வள்ளலார் காட்டிய உண்மை  விசாரம் செய்வதில்லை .
வள்ளலார் சொல்லியுள்ள விசாரணையில் இருந்தால் .!

இவ்விசாரணை முகத்திலிருந்தால், நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டிருக்கின்ற அனந்தத்திரைகளில் அழுத்தமாயிருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத்திரை முதலில் நீங்கிவிடும். அது நீங்கினால், மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய்விடும். அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டதென்றால், கருமைக்கு முதல் வர்ணமான பசுமையாக இருக்கின்றது. இப்படிப்பட்ட அழுத்தமான திரை நீங்கவேண்டுமென ஸ்தோத்திரித்தும், தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் - இவ்வண்ணமாக, இருக்கின்றபோதும் படுக்கின்றபோதும் இடைவிடாது இவ்விசாரத்தோடு ஆண்டவர் நமக்குண்மை தெரிவிக்க வேண்டு மென்கின்ற முயற்சியுடனிருந்தால், தெரிய வேண்டியதைத் தெரிந்துகொள்ளலாம்.
இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும்,இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டதுயாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

எல்லா வற்றையும் விட்டு விட்டேன் என்கின்றார் வள்ளலார் ..அவைதான் தேக சுதந்திரம்...போக சுதந்திரம்.....ஜீவ சுதந்திரம் ...என்பதாகும் .இந்த மூன்றிற்க்குள் தான் எல்லாம் அடங்கி உள்ளது .. இவற்றை விடாமல் இருக்கும் ..வரையில் அறிவு விளங்காது ..அருள் கிடைக்காது ..மரணத்தை வெல்ல முடியாது ..ஆன்ம தேகம் கிடைக்காது  அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் இடம் தொடர்பு  கொள்ள முடியாது .பேரின்ப லாபம் கிடைக்காது .ஆன்மா எங்கும் செல்ல முடியாது 

வள்ளலார் தன் சுதந்தரத்தை திருப்பிக் கொடுத்துள்ள பாடல்! 

வள்ளலார்  தனக்கு கொடுத்த சுதந்தரத்தை திரும்ப கொடுத்து விட்டப் பிறகுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருள் சுதந்தரம் பெருகின்றார் .

சுதந்திரம் உனக்கே கொடுத்தனன் உனது 
தூய நல் உடம்பில் புகுந்தேம் 
இதம் தரும் உளத்தில் இருந்தனம் உனையே 
இன்புறக் கலந்தனன் அழியாப் 
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ்ஜோதிப் 
பரிசு பெற்றிடுக பொற்சபையும் 
சிதந்தரும் சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே !

வள்ளலார் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வைப் பெற வேண்டுமானால்  
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் நீங்க வேண்டும்.அத் திரைகளை நீங்க வேண்டுமானால் வள்ளலார் காட்டிய சத்த சன்மார்க்க கொள்கையைப் பின்பற்ற வேண்டும்.அப்போதுதான் ஆன்ம தேகம் பெறமுடியும்  வேறு தவறான வழியில் செல்லக் கூடாது .

இவைதான் வள்ளலார் சொல்லியுள்ள  ஆன்ம தேகம் பெரும் வழி .முயற்ச்சி செய்வோம் முடியாதது எதுவும் இல்லை !   எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு 
கதிர்வேல் 
9865939896 ...


திங்கள், 10 ஜூலை, 2017

தீட்டு என்றால் என்ன...?

தீட்டு என்றால் என்ன...?

தீட்டு’ என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை. இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்
தீட்டு என்பது என்ன?
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு. இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!

1. காமத் தீட்டு:

காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

2. குரோதத் தீட்டு:

குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,

கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

3. லோபத் தீட்டு:

லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

4. மதத் தீட்டு:

மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும் மதிக்காது மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

5. மாற்சரியத் தீட்டு:

மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது. ..
ஞாயிறு, 9 ஜூலை, 2017

தமிழ்மொழி!

👌👌👌🙏👍🙏👌👌👌

ஹிந்தியை தாய்மொழியாக கொண்டவர்கள். . .

தங்களது பெயரில் ஹிந்தி எனும் வார்த்தையை இணைத்துக்கொள்ள முன்வரவில்லை.

👉 *முடியவும் முடியாது.*

*கன்னடா*------முடியாது.

*தெலுங்கு*----- முடியாது.

*மலையாளம்*------முடியாது.

*ஏனைய மொழிகள்*----முடியாது.

ஏனென்றால் மற்ற மொழிகள் யாவும் மொழியாக மட்டுமே வரையறுக்கப்பட்டது.

ஆனால் . . .

தமிழில்.....

👇
👇

தமிழ்,
தமிழ்ச்செல்வி,
தமிழ்ச்செல்வன்,
தமிழரசன்,
தமிழ்க்கதிர்,
தமிழ்க்கனல்,
தமிழ்க்கிழான்,
தமிழ்ச்சித்தன்,
தமிழ்மணி,
தமிழ்மாறன்,
தமிழ்முடி,
தமிழ்வென்றி,
தமிழ்மல்லன்,
தமிழ்வேலன்,
தமிழ்த்தென்றல்,
தமிழழகன்,
தமிழ்த்தும்பி,
தமிழ்த்தம்பி,
தமிழ்த்தொண்டன்,
தமிழ்த்தேறல்,
தமிழ்மறை,
தமிழ்மறையான்,
தமிழ்நாவன்,
தமிழ்நாடன்,
தமிழ்நிலவன்,
தமிழ்நெஞ்சன்,
தமிழ்நேயன்,
தமிழ்ப்பித்தன்,
தமிழ்வண்ணன்,
தமிழ்ப்புனல்,
தமிழ்எழிலன்,
தமிழ்நம்பி,
தமிழ்த்தேவன்,
தமிழ்மகன்,
தமிழ்முதல்வன்,
தமிழ்முகிலன்,
தமிழ் வேந்தன்,
தமிழ் கொடி.

என்று தமிழோடு...
தமிழ் மொழியோடு பெயர் வைத்துக்கொள்ள முடியும்!!!

தமிழன் மட்டுமே,
தமிழை மொழி மட்டுமல்லாது உயிராக நேசிக்கிறான்!!

அனைவருக்கும் பகிருங்கள் .

*​தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...​*

 பெத்தவங்கள ஏன் ..............???

*"அம்மா"*

*"அப்பா"* ன்னு கூப்பிட்றோம்..!!

எப்பவாவது யோசிச்சிருக்கீங்களா.?

அந்த வார்த்தைக்கும் நமக்கும் என்ன தொடர்பு..?

*அந்த வார்த்தைகளுக்கான அர்த்தங்கள் என்ன...?*

*அ – உயிரெழுத்து.*

*ம் – மெய்யெழுத்து.*

*மா – உயிர் மெய்யெழுத்து.*

*அ – உயிரெழுத்து.*

*ப் – மெய்யெழுத்து.*

*பா – உயிர் மெய்யெழுத்து.*

தன் குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை.

தாயானவள் தன் கருவறையில் அந்த உயிருக்கு மெய்
(கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். .

இந்த *உயிரும் , மெய்யும்* கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை.

*எந்த மொழியிலும் அம்மா, அப்பாவுக்கு இந்த அர்த்தங்கள் கிடையாது.*

*நமது "தமிழ்" மொழியில் தான் இத்துனை அற்புதங்கள் உள்ளது..!!*

*_"மம்மி -என்பது பதப்படுத்தப்பட்ட பிணம்..."_*

*படித்தேன் பகிர்கிறேன்*

👌👌👌👍🙏👍👌👌👌

வெள்ளி, 7 ஜூலை, 2017

திரு அருள் வல்லபம்*!

*திரு அருள் வல்லபம்*!

வள்ளலார் சொல்லி உள்ளார் !

*செத்தவனையே எழுப்ப முடியும் என்று*

 அதைவிடவா மிக்‌ஷிகன்  பல்கலைக் கழகம் கண்டு பிடித்து உள்ளது.

வள்ளலார் சொல்லியுள்ள மூலிகையை பயன் படுத்தினாலே பல வினோதங்கள் நடக்கும்.

*கருப்பு நாயுருவி*..

கறுப்பு நாயுருவிக் கஷாயம் ஐந்து மாத்த்துக் கர்ப்பிணிக்குக் கொடுக்க .கொடுத்த ஐந்து நாழிகைக்குள் 10.மாத்த்துப் பூரண கர்ப்பம் உண்டாகிப் பிரசவமாகும்.

*குளிர்ந்த கொள்ளி*....

குளிர்ந்த கொள்ளி என்னும் பச்சிலையைக் கசக்கிக் குக்குட அண்டத்தின் கீழும் மேலும் வைத்து மூடிய இரண்டரை நாழிகைக்குள் கரு முற்றி குஞ்சு பொரிக்கும்.

*திப்பூடு*....

திப்பூடு என்னும் மூலிகையை நசுக்கி இறந்த கிளி முதலிய பறவைகளின் வலது காதில் வைக்க அவைகள் பிழைக்கும்.

திப்பூடு பிடுங்கி நசுக்கி இறந்தவனுடைய வலது காதில் வைத்தால் உடனே பிழைப்பான்.

*முத்து பூண்டு*....

முத்துப்பூண்டுச் சாற்றை இறந்து போன பஷி மற்றும் எது ஆனாலும் அதன் காதில் சிறுக்க் சிறுக இரண்டரை நாழிகை பிழிந்தால் பிழைக்கும்.

*கருங்காந்தள்்*....

கருங்காந்தள் இலையைக் கசக்கி.வேட்டப்பட்ட துண்டுகளைச் சேர்த்து .கட்டி இரண்டரை நாழிகை வைத்து இருந்தால் .துண்டுகள் ஒன்றாய்ச் சேர்ந்து போகும்..

மேலே கண்டவை எல்லாம் மூலிகைகளைக் கொண்டு செய்யப்படும் அற்புதங்கள்

*பற்று அற்றவன்*...

வள்ளலாரைப் போல் பற்று அற்று அருள் பெற்றவர்கள்.அவர்கள் நினைத்த உடனே எது வேண்டுமானாலும் உடனே நடக்கும்.

எனவே உபாய மார்க்க வகைகளை விட உண்மை மார்க்க மான அருளே சிறந்த்து.எல்லாம் செய்ய வல்லது.

*உண்மை மார்க்கத்தை சொல்லித் தருவதுதான் சுச்த சன்மார்க்கம்*

அதற்குப் பெயர்தான் திருஅருள் வல்லபம் என்பதாகும்....

*அகவல்*...

அருளலா தணுவு மசைந்திடா ததனால்
அருணலம் பரவுகென் றறைந்தமெய்ச் சிவமே
490. அருளுறி னெல்லா மாகுமீ துண்மை
அருளுற முயல்கவென் றருளிய சிவமே
491. அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்
இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே
492. அருள்பெறிற் றுரும்புமோ ரைந்தொழில் புரியுந்
தெருளிது வெனவே செப்பிய சிவமே
493. அருளறி வொன்றே யறிவுமற் றெல்லாம்
மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே
494. அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே
495. அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே
றிருட்பே றறுக்குமென் றியம்பிய சிவமே
496. அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்
பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே
497. அருளறி யார்தமை யறியார் எம்மையும்
பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே
498. அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை
பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே
499. அருள்வடி வதுவே யழியாத் தனிவடி
வருள்பெற முயலுகென் றருளிய சிவமே
500. அருளே நம்மிய லருளே நம்முரு
அருளே நம்வடி வாமென்ற சிவமே
501. அருளே நம்மடி யருளே நம்முடி
அருளே நம்நடு வாமென்ற சிவமே
502. அருளே நம்மறி வருளே நம்மனம்
அருளே நங்குண மாமென்ற சிவமே
503. அருளே நம்பதி யருளே நம்பதம்
அருளே நம்மிட மாமென்ற சிவமே
504. அருளே நந்துணை யருளே நந்தொழில்
அருளே நம்விருப் பாமென்ற சிவமே
505. அருளே நம்பொரு ளருளே நம்மொளி
அருளே நாமறி வாயென்ற சிவமே
506. அருளே நங்குல மருளே நம்மினம்
அருளே நாமறி வாயென்ற சிவமே
507. அருளே நஞ்சுக மருளே நம்பெயர்
அருளே நாமறி வாயென்ற சிவமே
508. அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை
அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே
509. அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை
அருளர சியற்றுகென் றருளிய சிவமே !

என்று அகவல் என்னும் வரிகளின் மூலம் நமக்குத் தெளிவான விளக்கம் தந்து உள்ளார்

நாம் பெற வேண்டுவது அருள்.அதுதான் எல்லாம் செய்ய வல்ல வல்லபம் எனபதாகும்.

அருள் பெறுவதற்கு எவை எல்லாம் தடையாக இருக்கின்றதோ அவைகளை எல்லாம் விட்டால்தான் பெற முடியும்..

அன்புடன் ஈரோடு கதிர்வேல்
9865939896....

புதன், 5 ஜூலை, 2017

வள்ளலார்**சமூக* *புரட்சியாளர்*!


*வள்ளலார்**சமூக* *புரட்சியாளர்*!

வள்ளலார் சமூக புரட்சியாளர் என்பதற்கு ஒரே ஒரு சான்று போதும்

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க கூடாது என்றும்.

மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது என்றும்

புதிய ஆன்மீகப் புரட்சியை மனித சமுதாயத்திற்கு கட்டளையாக.சட்டமாக வெளியிட்டார்.

மேலும் பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்களைக் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார்.

பெண்ணும் ஆணும் சம்ம் பேதம் பார்க்க கூடாது என்று கட்டளை இட்டார்.

முதன் முதலில் 1870 ஆம் ஆண்டு பெண்கள் முன்னேற்றத்திற்காக குரல் கொடுத்த முதன்மையான புரட்சியாளர்  வள்ளலார் என்பதை பெண்கள் சமுதாயம் .ஆண்கள் சமுதாயம் மறந்து விடக் கூடாது.

இன்று பெண்களுக்காக எல்லாத் துறைகளிலும் சம உரிமை வேண்டும் என்று போராடுவதற்கு வித்திட்டவர் வள்ளலார் என்பதை எவறும் மறந்து விட வேண்டாம்.

ஆன்மீக வழியாக சமய புரட்சி.மதப்புரட்சி.சாதி புரட்சி.சமூக முன்னேற்ற புரட்சிக்கு வித்திட்டவர்  வள்ளலார் தான்.

சாதி.சமய.மதங்களை.சாத்திரங்களை வேரோடு பிடுங்கி இருக்கும் இடம் தெரியாமல் அழித்து ஒழித்து விட வேண்டும் என்று குரல் கொடுத்தவர.அழித்துக் கொண்டே இருப்பவர்.

மனித குலத்தை அழிக்கும்.எந்த கொள்கையாக இருந்தாலும் சட்டமாக இருந்தாலும் அவற்றை அப்புறப் படுத்துவதே வள்ளலாரின்""சுத்த சன்மார்க்க கொள்கையாகும்"'

அவர் போட்ட வித்துதான் இன்று செடியாகி.மரமாகி.பூவாகி.காயாகி கனிந்து கொண்டு உள்ளது.

வள்ளலார் என்ற அருளாளர் புரட்சியாளரின் வார்த்தைகள்் சொல்லிய வண்ணம் என்றும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும்.

"வள்ளலார.பாடல்*!

நான்உரைக்கும்
வார்த்தை எல்லாம் நாயகன்றன் வார்த்தைநம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே.,!

மனித குலத்தை மேம்படுத்தவே புரட்சி குரல் கொடுத்த ஆன்மீக புரட்சி யாளர்  வள்ளலார ஒருவரே !

இன்னும் நிறைய உள்ளது.இது ஒரு மாதிரி வடிவம்.

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்.
9865939896.....

செவ்வாய், 4 ஜூலை, 2017

தவம் என்றால் என்ன ?

தவம் என்றால் என்ன ?

ஒழுக்கத்தோடு வாழ்வதுதான் தவம்

அதுதான் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

ஜீவன் என்றால் உயிர்...உயிரை காப்பாற்றுவது எதுவோ அதற்குப் பெயர்தான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பதாகும்.

சோறு போடுவது மட்டும் ஒழுக்கம் அல்ல!
 அதற்கு மேல் நிறைய உள்ளது...

உலக வாழ்க்கையில் வெறுப்பு கொண்டு மக்களுக்காக எந்த நல்ல காரியங்களும்.உபகாரங்களும் செய்யாமல் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு

தனியாகப் போய் உட்கார்ந்து கொண்டு என்ன நினைத்து தவம் செய்கிறார்கள் எனபது தெரியவில்லை.

ஒவ்வொருவரும் எதாவது ஒரு மந்திர வார்த்தையை மனதிலோ் வெளியிலோ சொல்லிக் கொண்டும்.மணிகளை உருட்டிக் கொண்டும் தனியே அமர்ந்து விடுகின்றார்கள்.அதற்கு பெயர் தவம் என்கிறார்கள்.

அதனால் மனம் அமைதி பெருவதாக நினைத்துக் கொள்கிறார்கள்.

எதுவும் பேசாமல் வாயை அடக்கிக் கொண்டு இருந்தாலே மனம் அமைதிபெறும் அதுதான் உண்மை.

அதே நேரத்தில் சாத்வீக உணவு அரை வயிறு உட் கொண்டாலே தூக்கம்.மைத்துனம்.பயம்  குறைந்து மனம் அமைதி பெறும். வெளியில் சென்று அலைமோதும் மனத்தை ஒருவாறு கொஞ்சம் நேரம் அமைதிப் படுத்தலாம் முழுமையாக அமைதி படுத்த முடியாது.

 மனதை அமைதிப் படுத்த வேண்டுமானால் .

உடம்பின் தலைவர் ஆன்மா என்னும் உள் ஒளியாகும்.அந்த உள் ஒளி மறைபொருளாக உள் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளது.அது அறியாமை என்னும்(மாயா) ஏழு திரைகளால் மறைக்கப்பட்டு உள்ளது.

மனம் என்னும் கருவியை ஆன்மாவுடன்  தொடர்பு கொள்ள வைப்பதே தியானம் என்பதாகும்....

கேட்டுப் பெறுவது தவம்.
கேட்காமல் பெறுவது தியானம் ...

கேட்டுப்பெறுவதால் கிடைப்பது மனம் நெகிழ்ச்சி மனம் உருக்கம்.

கேட்காமல் பெறுவது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம்.

ஆன்ம நெகிழ்ச்சியும் ஆன்ம உருக்கமும் சத்விசாரம் என்னும் தியானத்தாலும்.பரோபகாரம் என்னும் ஜீவகாருண்யத்தாலும் மட்டுமே உண்டாகும்.

ஆன்ம நெகிழ்ச்சி.ஆன்ம உருக்கம் உண்டானால் அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விடும்.அறிவு வேலை செய்ய ஆரம்பித்து விட்டால் மனம் அறிவுப் பக்கம் திரும்பி விடும்.

மனம் ....அகம் என்னும் ஆன்மாவின் உள்ளே உள்ள அறிவுப் பக்கம் திரும்பி விட்டால்.

புறம் உள்ள கரணங்களும்.புறப்புறம் உள்ள இந்திரியங்களும் அறிவு சொல்படி கேட்டு இயங்க ஆரம்பித்துவிடும்.

அறிவு உண்மைக்கு மட்டுமே.. ஜீவனையும்.கரணங்களையும் .இந்திரியங்களையும் பயன் படுத்திக் கொள்ளும்

உண்மையான ஜீவகாருண்யம் என்னும் தயவால்.அன்பால்.கருணையால் அறிவு விளக்கம் உண்டாகும்.அறிவு விளக்கத்தால் அருள் விளக்கம் உண்டாகும்

அருள் பூரணத்தால் மரணத்தை வெல்ல முடியும்.

வள்ளலார் பாடல் !

அறிவில் அறிவை அறியும் பொதுவில்ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும்செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழிசெல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி!

என்றும்

அறிவாலே அறிவினை அறிகின்ற போது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !.....என்றும்

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே !

என்று அறிவைப் பற்றியும்.அருளைப் பற்றியும் தெளிவாக விளக்கி உள்ளார்..

அறிவு அருள் கருணை இருக்கும் இடத்தில் கடவுள் செயல்படுகின்றார்..

கருணை இல்லாமல் வேறு எந்த வித தியானம்.தவம் யோகம் போன்ற செய்கைகளினால்  இறை அருளைப் பெற முடியாது என்பது திண்ணம்.உண்மை.

எனவேதான் ஜீவ காருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற தியானம்.தவம்.யோகம் போன்ற காரியங்கள் எதுவாக இருந்தாலும் எப்படி செய்தாலும் .. எல்லாம் வெற்று மாயா ஜாலங்களே என்கின்றார் வள்ளலார்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும்ஜோதி!

கருணை உள்ள உள்ளத்திலே கடவுள் வாழ்கின்றார் என்பதாகும்.

இறைவனை இடைவிடாது நினைப்பதுவே தியானம் .தவம்.யோகம் என்பதாகும்.

ஆன்மாவிடம் மனம் தோடரபு கொள்வதே சுத்த சன்மார்க்க தியானம் என்பதாகும்.

சுத்த சன்மார்க்க தியானம் செய்வது எப்படி என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் தெரியப் படுத்துகிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....