புதன், 27 ஜூலை, 2011

அருள் மருந்து !நல்ல மருந்து !
நாம் அனைவருக்கும் நோய் வந்தால் மருந்து உண்டு அந்த நோயை குணப்படுத்திக் கொள்கிறோம் .ஆனால் மரணத்தை ஒழிக்க மருந்து இருக்கிறதா என்றால்?இல்லை. அதற்கு மருந்து,மனிதர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை 


ஆனால் நமது அருளாளர் வள்ளல பெருமான் மரணத்தை வெல்லும் மருந்தை கண்டு பிடித்து தான் அருந்தி,மரணத்தை வென்று, மற்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியப்படுத்துகிறார் .அதுதான் நல்ல மருந்து எனப்படுவதாகும் .


அந்த மருந்து எல்லா உயிர்களிடத்தும் உள்ளன.அதை எடுக்க முடியாமல் இருக்கிறோம் ,அதை எடுக்கும் வழி தெரியாமல் இருக்கிறோம்.அந்த அருள் வடிவமான மருந்தை எடுப்பதற்கு பல அருளார்கள் பல வழிகளை சொன்னார்கள் .அந்த வழிகள் எல்லாம் தவறான வழிகளாகவே இருந்தது அதனால் அவர்களும் அந்த அருள் மருந்தை எடுத்து முறையாக அருந்த முடியவில்லை.மற்ற ஜீவர்களும் அந்த மருந்தை முறையாக கண்டு எடுத்து உண்டு மரணத்தை வெள்ளமுடியவில்லை .


அந்த அருள் வடிவமான மருந்து நம்முள் ஆன்மா என்னும் உயிர் ஒளியில உள்ளது அதை எடுத்து அருந்தினால் மரணம் நீங்கும் என்கிறார் வள்ளலார் .அந்த மருந்தை எடுப்பதற்கு பொது உணர்வை வரவழைத்துக் கொண்டு ,ஆண்மநேயத்துடன் ஜீவர்களுக்கு உண்டாகும் துன்பங்களை போக்க வேண்டும்.கடவுள் ஒருவரே அவர் அருட்பெரும்ஜோதியாக உள்ளார் என்ற உண்மையை அறிவால் அறிந்து உணர்ந்து,உயிர்கள் அனைத்தும் அருட்பெரும் ஜோதிதான் என்பதை அறிய வேண்டும்.அப்படி உண்மையை உணர்ந்து உயிர்களுக்கு வரும் துன்பங்களை போக்கும் போது நம்முடைய ஆன்மாவில் இருக்கும் உள் ஒளி மலர்ந்து விரிந்து உள் இருக்கும் அருள் மருந்து சுரக்கும் அதுவே மரணத்தை போக்கும் நல்ல அருள் மருந்தாகும் .


அந்த நல்ல மருந்தைதான் வள்ளலார் நல்ல மருந்து என்னும் தலைப்பில் திரு அருட்பா என்னும் அருள் நூலில் கீழே கண்ட பாடலில் பதிவு செய்துள்ளார்கள்.படித்து அதன்படி வாழ்ந்து பயன் பெறுவோம் ,       
நல்ல மருந்து

(2430)
நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து

( 2431 )
அருள்வடி வான மருந்து - நம்முள்
அற்புத மாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
கின்புரு வாக இருந்த மருந்து நல்ல

( 2432 )
சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்
தானேதானாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து நல்ல

( 2433 )
வித்தக மான மருந்து - சதுர்
வேத முடிவில் விளங்கு மருந்து
தத்துவா தீத மருந்து - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாள மருந்து நல்ல

( 2434 )
பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்
பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
என்று மதுரித் தினிக்கு மருந்து நல்ல

( 2435 )
நானது வாகு மருந்து - பர
ஞான வெளியில் நடிக்கு மருந்து
மோந வடிவா மருந்து - சீவன்
முத்த ருளத்தே முடிக்கு மருந்து நல்ல

( 2436 )
புத்தமு தாகு மருந்து - பார்த்த
போதே பிணிகளைப் போக்கு மருந்து
பத்த ரருந்து மருந்து - அநு
பானமுந் தானாம் பரம மருந்து நல்ல

( 2437 )
மாலயன் தேடு மருந்து - முன்ன
மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
காணுங் கனவினுங் காணா மருந்து நல்ல

( 2438 )
தற்பர யோக மருந்து - உப
சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
சிற்பர யோக மருந்து - உயர்
தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து நல்ல

( 2439 )
அம்பலத் தாடு மருந்து - பர
மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
எம்பல மாகு மருந்து - வேளூர்
என்னுந் தலத்தி லிருக்கு மருந்து நல்ல

( 2440 )
சேதப்ப டாத மருந்து - உண்டால்
தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
பேதப்ப டாத மருந்து - மலைப்
பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து நல்ல

( 2441 )
ஆர்க்கு மரிதா மருந்து - தானே
ஆதி யநாதியு மான மருந்து
சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்
தேடுவோர் தங்களை நாடு மருந்து நல்ல

( 2442 )
புண்ணியர்க் கான மருந்து - பரி
பூரண மாகப் பொருந்து மருந்து
எண்ணிய வின்ப மருந்து - எம
தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து நல்ல

( 2443 )
பால்வண்ண மாகு மருந்து - அதில்
பச்சை நிறமும் படர்ந்த மருந்து
நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே
நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து நல்ல

( 2444 )
பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்
பாராத வர்களைச் சேரா மருந்து
கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு
கூல மருந்தென்று கொண்ட மருந்து நல்ல

( 2445 )
கோதிலா தோங்கு மருந்து - அன்பர்
கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
மாதொரு பாக மருந்து - என்னை
வாழ்வித்த என்கண் மணியா மருந்து நல்ல

( 2446 )
ஏக வுருவா மருந்து - மிக்க
ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து
சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்
சோதியென் றன்பர் துதிக்கு மருந்து நல்ல

( 2447 )
கோமளங் கூடு மருந்து - நலங்
கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
நாமள வாத மருந்து - நம்மை
நாமறி யும்படி நண்ணு மருந்து நல்ல

( 2448 )
செல்வந் தழைக்கு மருந்து - என்றுந்
தீரா வினையெலாந் தீர்த்த மருந்து
நல்வந் தனைகொள் மருந்து - பர
நாதாந்த வீட்டினுள் நண்ணு மருந்து நல்ல

( 2449 )
வாய்பிடி யாத மருந்து - மத
வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்
நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து நல்ல

( 2450 )
பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து நல்ல

( 2451 )
என்றுங் கெடாத மருந்து - வரும்
எல்லாப் பிணிக்கு மிதுவே மருந்து
துன்றுஞ் சிவோக மருந்து - நம்மைச்
சூழ்ந்திரு மைக்குந் துணையா மருந்து நல்ல

( 2452 )
கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
கண்டு கலந்து களிக்கு மருந்து
விண்ணொளி யாரு மருந்து - பர
வீடு தருங்கங்கை வேணி மருந்து நல்ல

( 2453 )
காயாம்பூ வண்ண மருந்து - ஒரு
கஞ்ச மலர்மிசைக் காணு மருந்து
தாயாங் கருணை மருந்து - சிற்
சதாசிவ மானமெஞ் ஞாந மருந்து நல்ல

( 2454 )
அளவைக் கடந்த மருந்து - யார்க்கும்
அருமை யருமை யருமை மருந்து
உளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும்
ஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து நல்ல

( 2455 )
தன்மய மாகு மருந்து - சிவ
சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து
சின்மய ஜோதி மருந்து - அட்ட
சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து நல்ல

( 2456 )
மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை
மறவா தவருள் வழங்கு மருந்து
இறந்தா லெழுப்பு மருந்து - எனக்
கென்றுந் துணையா யிருக்கு மருந்து நல்ல

( 2457 )
கரும்பி லினிக்கு மருந்து - கடுங்
கண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து
இரும்பைக் குழைக்கு மருந்து - பே
ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து நல்ல

( 2458 )
அணிமணி கண்ட மருந்து - அருள்
ஆநந்த சுத்த வகண்ட மருந்து
பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்
பேசா மருந்தென்று பேசு மருந்து நல்ல

( 2459 )
மூவர்க் கரிய மருந்து - செல்வ
முத்துக் குமாரனை யீன்ற மருந்து
நாவிற் கினிய மருந்து - தையல்
நாயகி கண்டு தழுவு மருந்து
நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து

வியாழன், 21 ஜூலை, 2011

தமிழ் எழுத்தை உருவாக்கியவர் யார்?

தமிழ் எழுத்துக்கள் உருவாக்கியவர் யார் என்பது வரலாறுகளில் இல்லை தொல்காப்பியர்  அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் அதனால்தான் கல் தோன்றா மண் தோன்றா காலத்துக்கு முன் தோன்றிய மூத்த தமிழ் என்று அருளாளர்கள் பாடி உள்ளார்கள்.வள்ளலார் வந்து தமிழ் இறைவனால் தோற்றுவிக்கப் பட்டது.ஆதலால் தமிழ் தந்தை மொழி என்றார்.உலகத்தில் முதன் முதலாக தோன்றிய மொழி தமிழ் மொழி என்று ஆராய்ச்சி யாளர்கள் உறுதிப் படுத்தி உள்ளார்கள்.உயிர் உடல் எப்பொழுது உருவாக்கப் பட்டதோ அப்பொழுதே தமிழ் தோன்றியதாகும்.அதனால்தான் ,உயிர் எழுத்து,மெய் எழுத்து,உயிர் மெய் எழுத்து ,அடுத்து ஆயுத எழுத்து என்று சொல்லப்படுகின்றது.அந்த ஆயுத எழுத்தில் அனைத்தும் அடங்கி உள்ளன,அதனால்தான் அதற்கு வரி வடிவம் இல்லாமல் புள்ளி வடிவம் வைத்தது ஆகும் .அந்த புள்ளிதான் உடம்பு ,உயிர் ,கடவுள் என்பதாகும் ,இதை புரிந்து கொண்டால் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம் என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்,நாம் எங்கு இருந்து வந்தோம் என்ற விலாசம் தெரியாமல் அலைந்து கொண்டு உள்ளோம் .உலகில் தோன்றிய ஞானிகள் யாரும் சரியான விலாசம் தரவில்லை கண்களை மூடிக் கொண்டு உளறி விட்டு சென்று விட்டார்கள்,உலக மக்களுக்கு உண்மையை தெரிவிக்க இறைவனால் அனுப்பட்டவர் வள்ளலார் அவர்கள்.அவர் தான் வாழ்ந்து சென்ற உண்மையான வழியையும் உண்மையான விலாசத்தையும் தெளிவாக,திரு அருட்பாவில் எழுதி வைத்து உள்ளார்கள்,அதிலும் நிறைய பேர்களுக்கு குழப்பம் ,அந்த குழப்பம் தீர வேண்டுமானால் எந்த பற்றும் இல்லாமல்,பொது நோக்கம் வேண்டும்,அதை வள்ளலார்

பொது உணர்வு உணரும் போது அல்லால் பிரித்தே
அது வெனில்தோன்றா அருட்பெரும்ஜோதி!

என்றும்

எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள்
அச்சபை இடங் கொள்ளும் அருட்பெரும்ஜோதி!

என்கிறார் நமது அருளாளர் வள்ளலார் அவர்கள் .;--

அன்புடன் உங்கள் ஆண்மநேயன் கதிர்வேலு.         

புதன், 20 ஜூலை, 2011

அசையாமல் இருந்தால் ஏதும் கிடைக்காது !

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

________________________________________________________________
அசைவற்று இருப்பதாலும், அமைதியாக இருப்பதாலும், ஓரிரு நாட்கள் தியானம் பயில்வதாலும் இறை அனுபவம் கிட்டாது.அறிவு நிலைகள் உயர்ந்து இந்திரியங்கள், கரணங்களின் சேட்டைகள் நின்றால் துரிய அனுபவ நிலை நம்மை சூழ்ந்து கலந்திடும். இதுவே வள்ளல் பெருமானார் கூறிய துரிய அனுபவமாகும். ஒரிரு நாட்களில் தியானம் கற்று அதன் மூலம் துரிய அனுபவத்தை பெற்றுக்கொண்டேன் என்பது துரிய அனுபவமாகாது.
________________________________________________________________

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையினால் சுத்த சன்மார்க்க வாழ்வில் ஈடுபட்டு அதன் பயனால் இறைவனை எல்லா உயிர்களிலும் காணும் பக்குவம் பெற்றவர்கள், இறையருளால் “காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாத்சர்யம், அகங்காரம்/மமங்காரம் நீங்கி சுத்த சன்மார்க்க சிவானுபவம் பெறுவார்கள்” என்பது வள்ளல் பெருமானின் வாக்கு. ஆனால் இவ்வனுபவத்தை உணர வள்ளல் பெருமானார் காட்டிய அருள்நெறியில் நின்று உலகியியல் வாழ்வைத் தொடர வேண்டும். 

அசைவற்று இருப்பதாலும், அமைதியாக இருப்பதாலும், ஒரிரு நாட்கள் தியானம் பயில்வதாலும் இறை அனுபவம் கிட்டாது. அறிவு நிலைகள் உயர்ந்து இந்திரியங்கள், கரணங்களின் சேட்டைகள் நின்று துரிய அனுபவ நிலை தாமே ஏற்பட வேண்டும். இதனை வள்ளல் பெருமானார்:

சேட்டையற்றுக் கருவியெலாம் என் வசம் நின்றிடவே
சித்தியெலாம் பெற்றே நான் திருச்சிற்றம்பல மேல்..

"தனுகரணாதிகள் தாம் கடந்து அறியுமோர்
அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி"

மட்டகன்ற நெடுங்காலம் மனத்தால் வாக்கால்
மதித்திடினும் புலம்பிடினும் வாராது என்றே
கட்டகன்ற மெய்யறிவோர் கரணம் நீக்கிக்
கலையகற்றிக் கருவியெலாம் கழற்றி மாயை
விட்டகன்று கருமமல போதம் யாவும் விடுத்து
ஒழித்துச் சகசமல வீக்கம் நீக்கிச்
கட்டகன்று நிற்க அவர் தம்மை முற்றும்
சூழ்ந்து கலந்திடும் சிவமே துரியத்தேவே


என்று கூறுகிறார்.

ஆகவே அருள்நெறி என்றால் என்ன? என்பதை ஆன்மீகத் தேடுதலில் இருக்கும் ஆன்மாக்கள் முதலில் புரிந்துக்கொள்ள வேண்டும். அருள்நெறி என்றால் என்ன? என்பதை பக்குவப்பட்ட ஆன்மாக்களுடன் கலந்து, உரையாடி, பிறகு வள்ளல் பெருமானார் காட்டிய ஞானநெறியை முழுமையாக உணர்ந்தால் இயற்கையாகவே துரிய முதல் சிவ துரியம், குரு துரியம், பர துரியம் முதலிய அனுபவ நிலைகளெல்லாம் கடந்து இவற்றின் உச்ச நிலையான“ நிராசை” ஏற்படும்.

“நிராசை” நிலை இல்லாததால் தான் இன்றைக்கு எது மாயை? எது மாயை இல்லை என்று தெரியாமல் எத்தனை எத்தனையோ தற்கால குருமார்கள் மாயை வலையில் எளிதாக வீழ்கிறார்கள், அவர்கள் வீழ்வதும் மட்டுமல்லாமல் தங்களை நாடி வந்த பக்தர்களுக்கும் இறை ஞானத்தை அளிக்க முடியாமல் “அத்தனைக்கும் ஆசைப்பட்டு” முடிவில் விளக்கை நோக்கி ஓடும் விட்டில் பூச்சிப்போல் மாய்ந்துவிடுகின்றனர். இதனை அன்றே வள்ள பெருமானார்:

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர்-வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினி இங்கு
என் மார்க்கமும் ஒன்றாமே. என்று கூறுகிறார்

ஆகவே மனித வாழ்வில் சிவானுபவம் பெறுவதற்கு யாதொரு தடையுமில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும். ஜீவகாருண்ய ஒழுக்கம் மூலம் மனித தேகம் எடுத்தவர்கள் அனைவரும் சிவானுபவத்தைப் பெறலாம், நித்தியமாக வாழலாம். “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்” என்ற வள்ளவர் வாக்கிற்கிணங்க ஜீவகாருண்ய நெறியில் நாம் பழக ஆரம்பித்தால் மனித நிலையில் இருக்கும் அனைவரும் புல்லறிவு நிலையில் இருந்து மாறி தெய்வ நிலையான அருளறிவு நிலைக்கு செல்லலாம்.

“ஜீவகாருண்ய ஒழுக்கம் என்பது பசிப்பிணியை நீக்குவது மட்டுமல்ல, எந்த ஒரு உயிருக்கும் துன்பம் தராமலும், துன்பத்தில் இருக்கும் உயிர்களுக்கு தக்க சமயத்தில் அந்த துன்பத்தை போக்குவதிலும், சர்வ காலமும் இறை சிந்தனையுடன் யாதொரு இச்சையும் இல்லாமல் உலக உயிர்களின் நன்மையைப் பொருட்டு இறை சிந்தனையுடன் இருப்பதாம்”.


உங்கள் அன்பன் கதிர்வேலு 
மீண்டும் தொடரும் 

செவ்வாய், 19 ஜூலை, 2011

இறைவன் இருக்கிறானா?


இறைவன் இருக்கிறானா?

ஒரு பெரியவர் தனிமையான இடத்தில் அமர்ந்து இறைவனை தியானித்துக்
கொண்டிருந்தார்.அவரைக் கண்ட ஒரு இளைஞன் அவரருகே சென்றான்.
ஐயா தங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறீர்கள்?என்பதை
நான் அறிந்துகொள்ளலாமா?என்று கேட்டான்.

அதற்கு அவர்,இளைஞனே!!
"அனைத்திற்கும் ஆதாரமாய் விளங்கும் இறைவனுடன் இரண்டற
கலக்க முயன்றுக் கொண்டிருக்கிறேன்"என்றார்.
உடனே அவன்,
"ஐயா கடவுள்,கடவுள் என்று கூறுவது மூடத்தனம்,
"கடவுளை நீங்கள் கண்ணால் கண்டிருக்கிறீர்களா?"என்று கேட்டான்.

"தம்பி காண முயல்கிறேன்"

"கடவுளின் குரலை காதால் கேட்டுருக்கிறீர்களா?"

"இல்லை."

"இல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்துக்கொண்டு
அரிய நேரத்தை வீணடிக்கிறீரே?"

"தம்பி உன் சட்டைப் பையில் என்ன உள்ளது?"

"இது தேன் பாட்டில்."

"அப்பா,தேன் இனிக்குமா?,கசக்குமா?"

"இது தெரியாதா?இனிக்கும்"

"தம்பி இனிக்கும் என்றாயே!அந்த இனிப்பு என்பது கருப்பா,சிவப்பா?"

"ஐயா,தேனின் இனிமையை எப்படி சொல்வது?
இதை கண்டவனுக்கு தெரியாது,உண்டவனே உணர்வான்."

பெரியவர் புன்முறுவல் பூத்தார்.

"அப்பா,இந்த பௌதிகப் பொருளாக,ஜட பொருளாக உள்ள
தேனின் இனிமையையே உரைக்க முடியாது.உண்ணடவனே
உணர்வான் என்கிறாயே?ஞானப் பொருளாக,அனுபவப் பொருளாக விளங்கும் இறைவனும் அப்படித்தான்.அவரவர் சொந்த அனுபவத்தில்தான் உணர்தல் வேண்டும்" என்றார்.

இதையே திருமூலரும்

அவனும் அவனும் அவனை அறியார்
அவனை அறியில் அறிவானும் இல்லை
அவனும் அவனும் அவனை அறியில்
அவனும் அவனும் அவனிவன் ஆமே.

நான் அறிந்து அன்றே இருக்கின்றது ஈசனை
வான்அறிந் தார் அறியாது மயங்கினர்
ஊன்அறிந்து உள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தான்அறி யான்பின்னை யார்அறி வாரே?

முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்கள்
அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனோடு ஆடிய
சுகத்தைச் சொல்லென்றால் சொல்லுமாறு எங்ஙனே!
என்றுரைக்கிறார்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்

சார் உலக வாதனையை தவிர்த்தவர் உள்ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தம சற்குருவை
நேர உறவே எவராலும் கண்டு கொள்ள அரிதாம்
நித்திய வான் பொருளை எலா நிலைகளும் தானாகி
ஏருறவே விளங்குகின்ற இயற்கை உண்மை தன்னை
எல்லாம் செய் வல்லபத்தை எனக்கு அளித்த பதியை
ஓர் உறவு என்று அடைந்து உலகீர் போற்றி மகிழ்ந்திடுமின்
உள்ளமெலாம் கனிந்து உருகி உள்ளபடி நினைந்தே!

என்று பதிவு செய்துள்ளார்.அடுத்து எப்படி நினைக்க வேண்டும் என்று பதிவு எய்துள்ள பாடல் வருமாறு ;--

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகிலீர்
மரணம் இல்லா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல் கின்றேன்
பொற் சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே!

என்பதை தான் அடைந்த அனுபவத்தை அனைவரும் பெற வேண்டும் என்பதை தெரிவித்து உள்ளார் .இந்த உலக வாதனைகள் எதிலும் தொடர்பு இல்லாமல் இறைவனை நினைந்து உணர்ந்து கண்ணீர் மல்க அழவேண்டும் என்கிறார் வள்ளலார்.அவர் சென்ற பாதை அதாவது வழியை நமக்கும் தெரியப்படுத்தி யுள்ளார் அவர் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையில் நாமும் சென்று மரணம் இல்லா பெருவாழ்வில் வாழ்வோம்.

அன்புடன் உங்கள் ஆன்மநேயன்;--கதிர்வேலு.          

தமிழ் மொழியின் சிறப்பு அம்சம்!


தமிழ் மொழியின் சிறப்பு அம்சம்

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?


உலகில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அ தான் என்பது  உங்களுக்கு  தெரியுமா?   ( மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்).  அது தமிழானாலும் சரி... ஆங்கிலம் ஆனாலும் சரி...அரபியானாலும்  சரி. இது ஏன்? எப்படி சாத்தியம் என்று கேட்டால் எனக்கு பதில் தெரியாது. தெரிந்தவற்றை சொல்ல முயல்கிறேன்.


 நமது வள்ளுவரின் முதல் குறள் என்ன சொல்கிறது
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இதற்கு பொருள்

'' மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
நன்றி:தினமலர் "

ஆனால் இந்த குறளுக்கு உண்மையான பொருள் எப்படி இருக்க வேண்டும் எனில்

 "எப்படி  அனைத்து மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றதோ அதுபோல் உலகமானது கடவுளிலிருந்தே தொடங்கியது".

அதாவது மற்ற அறிஞர்கள்  கூறியது போல் அல்லாமல் எழுத்துக்களுக்கு பதில் மொழி என்று இருக்க வேண்டும் எனபதே என் கருத்து.

(வள்ளுவர் தமிழ் எழுத்துக்களுக்கு மற்றும் இதை சொல்லி இருக்க வாய்ப்பு  இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது அவர் அனைத்து மொழிகளுக்கும் தான் இதை கூறி இருக்க வேண்டும்)
எனக்கு தெரிந்து அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் தான் ஆரம்பிக்கின்றது.

ஏன் அனைத்து மொழிகளும்  அகரத்தில் ஆரம்பிக்க வேண்டும்? தெரியவில்லை....ஒரு வேலை இதுவும் கடவுளின் செயலா?

ஒருவேளை வள்ளுவர் மொழியைக் காட்டி கடவுளை நிரூபிக்கின்றாரா?
வள்ளுவர் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறார்  என்பது ஆய்வுக்குரிய ஒன்று ஆனால் கடவுளிலிருந்தே உலகம் தோன்றியது என்ற கூற்றில் அவர் உறுதியாக உள்ளார்.

உலகத்தில் முதலில் ஒரு வார்த்தை தோன்றியது  என்று வேதங்களும் கூறகிறது பைபிளும்  கூறுகிறது...
அது என்ன எழுத்து?
ஓம் எனும் எழுத்துதான் அது.

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
இருக்கின்றது...உண்மையில் அது ஓம் அல்ல
அது "அ உ ம்"  என்ற வார்த்தை தான்.அதாவது அகரம் உகரம் மகரம் என்பார்கள் இதை.
அடிக்கடி சொல்ல சொல்ல அது "ஓம்" என  மாறும்.

ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது.


இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஓம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்  என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு மனிதனின்  மூச்சு காற்றும்  ஓம்  என்று தான் சொல்லும்....உன்னித்து கவனித்து பாருங்கள். ஓம் நின்றால் உயிர் இல்லை உலகும்  இல்லை.


ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அ உ ம - ஓம் ஒலியினால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது. 

Courtesy: http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.கம
தமிழ் மொழியின் சிறப்பு அம்சத்தை சற்று பாப்போம்:

தமிழின் உயிர் எழுத்து யாது அது எத்தனை வகைப்படும் என்பது சிறு வயதில் படித்து இருப்போம்.

உயிர் எழுத்து = 12  வகைப்படும்
அவைகள் "அ" வில் ஆரம்பித்து "ஓள" வில் முடியும் மொத்தம் 12  எழுத்து. ஏன் பனிரெண்டு எழுத்து என்பதை பாப்போம்.


"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவ
முக்திக்கு மூலம் அது"  -------------- ஓளவைக் குறள்

இதற்கு ஞான அனுபவ விளக்கம் தெரிந்தவர் மட்டுமே கூறமுடியும் என் நினைகிறேன் - குரு உபதேசம் பெற்று திருவடி தீட்சை பெற்று ஞான சாதனை செய்பவர்களே இதனை உணர்வர்! சக்தி - சந்திரன் - இடதுகண்! செங்கதிரோன் - சிவம் - வலதுகண்! குருதீட்சை பெற்று சூரியகலை - வலது கண்ணில் தியானம் செய்யும்போது சந்திரகலைகள் ஊடுருவும்.  சூரியனுக்கு கலைகள் 12  சந்திரனுக்கு கலைகள் 12.

சூரியனின் ஒவ்வொரு கதிரும் சந்திரகலையுடன் சேரும்.  இவ்வண்ணம் சூரியனின் 12 கலைகள் சந்திரனிலிருந்து வரும் 12 கலையுடன் சேரும்! சந்திரனின் எஞ்சிய 4 கலைகளும் சூரியகலை வழியாக உள்ளே போய்விடும்.  சூரியனில் வேறு கலைகள் இல்லாததால் 4  சந்திர கலைகளை உள்ளே அக்னி கலைக்கு அனுப்பிவிடும். அங்கே 8 கலைகள் மட்டுமே இருக்கும்! சந்திரனின் எஞ்சிய 4  கலைகள் சூரியன் வழியாக அக்னியின் 8  கலையுடன் போய் சேர்ந்து அக்னி கலையும் 12  கலையாகும்!

இப்போது சந்திரன் 12 , சூரியன் 12 அக்னி 12 என் மூன்று தீயும் ஒன்றாகி விடும்.  மூன்று தீயும் சேர்வதே முக்தி! முத்தீ!

உயிரின் முதல் எழுத்து அகரம் "அ" வில் ஆரம்பித்து உயிர் எழுத்து 12  ஆகிறது.
பிறகு
ஆய்த எழுத்து:
ஃ – இதுவே ஆய்த எழுத்து.  இதன் வடிவம் இரு கண்கள் வடிவத்திலும் மேலே மூன்றாவது கண் இருப்பதும் காணலாம்.
உயிரின் எழுத்து 12 சேர்ந்து. அதாவது சூரியன் 12 , சந்திரன் 12 , அக்னி கலை 12 சேர்ந்து முத்தீ வடிவம் இருப்பதாய் காணலாம்.
இதை புள்ளியை மையமாக வைத்து மேல் நோக்கி கோடு போட்டால் "சூலாயுதம்" மாதிரியும், ஓரத்தில் மூன்று கோடு சேர்ந்து போட்டால் "வேல் ஆயுதம்" போலவும் வடிவம் வரும் (முக்கோண வடிவம்).  இதன் தத்துவம் சூலாயுதம் வேலாயுதம் ஆவதின் பொருள் விளங்கும்.
இதையே ஆயுத எழுத்து என்று பொருள் கொண்டனர் தமிழின் சிறப்பு அம்சம் விளங்குகிறதா.

மெய் எழுத்துக்கள்:
உயிர் இல்லாத உடம்பு(மெய்) ஆற்றலற்றது. அது போல், தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமலும் உயிர் எழுத்துக்களின் துணை கொண்டு இயங்கும் எழுத்துக்கள் ஆதலில் இவை மெய் எழுத்துக்கள் எனப்பட்டன. இதனை ஒற்று எழுத்து என்றும் அழைப்பர்.

"பள்ளிப்பாடம் புள்ளிகுதவாது" என்பர் மெய் எழுத்து என்பவை
க், ங், ச், ஞ் ..... ன் முடிய. எல்லாமே புள்ளிவைத்த எழுத்து மெய் எழுத்து.  ஆகா தமிழ் மொழி ஞான மொழியாகும்.

உயிர்மெய் எழுத்துக்கள்:
உயிர் எழுத்து பனிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் சேர்ந்து உருவாகும் 216 எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள்.
(எ.டு.) க் + அ = க.    

குறிப்பு: மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்.

மானிட உடம்பைப் பெற்ற பயன் !


மானிட உடம்பைப் பெற்ற பயன்

உடம்பைப் பெற்ற பயன்
-ஆசான் ஒளவையார்-

உடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.

"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்"

உடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.

இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.

மற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது.

நல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.

நமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.

"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்

ஈசனைக் காட்டும் உடம்பு"

என்கிறது ஒளவைக் குறள். இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.

"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே

உள் அகத்து ஈசன் ஒளி"

மனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது.
அது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான். இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு,

""பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே

நூலின் கண் ஈசன் நுழைந்து"

பாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.

மற்றுமொரு உதாரணம்

"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்

ஈசன் நிலை துதி செய்து கூறினால்"

ஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்
எல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.

ஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.

"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்அனைத்துயிர்க்கும் தாளும் அவன்"

ஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.

இரண்டாம் குறள் 

யோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.

இதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.


"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்

மாறில் தோன்றும் பிறப்பு''

பரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்.

இதற்கு மேல் சித்தர்கள் செல்லவில்லை,- வள்ளலார் அனைத்தும் கண்டு அதன் மயமானார் என்பது அவர் எழுதிய திரு அருட்பாவில் தெளிவாக்கி உள்ளார்.
சித்தர்களில் முன்று வகை ,-கர்மசித்தர் ,யோகசித்தர்,ஞானசித்தர் என்பதாகும்.அதேபோல் வாழ்க்கை என்பது முன்று வகைப்படும்,இம்மை இன்ப வாழ்வு! மறுமை இன்ப வாழ்வு!பேரின்பவாழ்வு !என்பதாகும். இந்த முன்று வகை வாழ்க்கையும் வாழ்ந்தவர் வள்ளலார்.
அதுதான் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும் .அதற்க்கு மரணம் இல்லா பெருவாழ்வு என்பதாகும்.மரணத்தை வென்றவர்கள் இறைவனோடு இரனடுஅற கலப்பதாகும்.அதுவே           
முத்தகச சித்தி என்பதாகும், அதாவது கடவுள் நிலை அறிந்து அதன் மயமாவது என்பதாகும் அந்த மாபெரும் வல்லபத்தை பெற்றவர் வள்ளலார்,
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலில் ஒன்று ;--

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவாவரம் எனைப்போற் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் இவ்வுலகில் 
யாருளர் சற்றே யறை.!

என்று கேள்வி கேட்கிறார் இறைவனிடம்.அதற்கு இறைவன் நீ நினைத்த நனமைஎல்லாம் யாம் அறிந்தோம் நினையே நேர்காண வந்தனம் என்றும் நீ ஒருவன்தான் என்னுடைய நல்லபிள்ளை,செல்லப்பிள்ளை ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளையாக தேர்வு செய்துள்ளேன் என்று வள்ளலாருக்கு புகழாரம்,இறைவனால் சூட்டப்படுகிறது.
ஆதலால் மெய் அன்பர்களே வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து நித்தியர்களாகி மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்திடுவோம் வாருங்கள் என்று உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

ஆதியும் அந்தமும் இல்லாதோர் அமலத்தாடும் 
ஜோதி தன்னையே நினைமின்கள் சகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும் 
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச செல்லும் வீதி !

என்கிறார் வள்ளலார் இந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க வீதிதான் உங்கள் அனைவரையும் மேலேற்றும் மற்றைய வீதிகள் மரணத்திற்கு கொண்டுபோய் விடும் என்கிறார் .
உண்மை மார்க்கம் சுத்த சன்மார்க்கம் வள்ளலார் காட்டிய மார்க்கம் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆண்மநேயன் --கதிர்வேலு .
       
     நீங்கள் எல்லோரும் இந்த பகிர்ந்து பார்க்க விரும்புகிறேன்:


ஆங்கிலம் மொழியிலிருந்து தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு — Alpha

நான் நீங்கள் எல்லோரும் இந்த பகிர்ந்து பார்க்க விரும்புகிறேன்:இந்த உரையாடல் ஜனகனின் (ராஜா) மற்றும் உபநிடதங்கள் இருந்து Yajnavalkya இடையே உள்ளது:
ஜனகா:அந்த சுய யார்?Yajnavalkya:சுய, தூய விழிப்புணர்வு புத்தி சூழப்பட்ட, இதயத்தில் உள்ள ஒளி என்று மினுமினுக்கிறது. தான் நகர்த்த காணப்படும், என்று காணப்படும், சுய இல்லை உறங்குகிறது அல்லது அல்லது கனவுகள் எழுப்புகிறான்.சுய ஒரு உடலில் எடுக்கும் போது, அவர் உடல் பலவீனத்திற்கு மற்றும் வரம்புகள் கருதுவது தெரிகிறார், ஆனால் அவர் இறந்த நேரத்தில் உடல் கொட்டகை போது, சுய இந்த பின்னால் இலைகள்.இந்த உலகில் ஒரு, அடுத்த மற்ற: மனித நனவின் இரண்டு மாநிலங்களில் கொண்டிருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இடையே ஒரு மூன்றாம் நிலை இல்லை அவர்களின் சுகம், துக்கம், இரண்டு உலகங்கள் எந்த நாம் விழிப்புடன் கனவுகள், உலக போலல்லாமல், அங்கு உள்ளது. ஒரு நபர் இறந்துவிட்டால் போது, அது மட்டுமே நபர் தனது கடந்த கால வாழ்க்கையின் உணர்வுகள் கொண்டுள்ளது இது ஒரு அல்லாத உடல், இல் வாழ்க்கை என்று, மரணம் என்று உடல் உள்ளது.இது அவரது அடுத்த வாழ்க்கையை நிர்ணயிக்கும் இந்த பதிவுகள் உள்ளது. இந்த இடைநிலை மாநில அவர் செய்கிறார் சுய ஒளி பதிவுகள் கரையக்கூடியது.நனவின் மூன்றாம் நிலை இல்லை chariots, இன்னும் அல்லது பயணிக்க எந்த சாலைகள் வரைதல் இல்லை குதிரைகள் உள்ளன, ஆனால் அவர் அவரது சொந்த chariots, குதிரைகள், மற்றும் சாலைகள் செய்கிறது. அந்த நிலை இல்லை மகிழ்ச்சிகளை அல்லது இன்பத்திற்கு உள்ளன, ஆனால் அவர் தனது சொந்த சுக இன்பங்களையும் செய்கிறது. அந்த நிலை இல்லை தாமரை குளங்கள், எந்த ஆறுகள் உள்ளன, ஆனால் அவர் அவரது சொந்த தாமரை குளங்கள், ஏரிகள் மற்றும் ஆறுகள் செய்கிறது.இது அவரது கடந்த அல்லது நடக்கும்போது வாழ்க்கை கருத்துக்களுக்காக இருந்து இந்த செய்கிறது, அவர் உள்ளது.இது கனவு மாநில என்று உணர்வு இந்த மாநிலங்களில், கூறினார் ஒன்று தூங்கும் போது, பளபளக்கும் சுய, யார் இல்லை எப்போதும் விழித்து யார் கனவுகள், அவரது சொந்த ஒளி கடிகாரங்கள் கடந்த செயல்களையும், தற்போது ஆசைகள் அவுட் நெய்யப்பட்ட கனவுகள். கனவு நிலையில், ஒரு தூங்கும் போது, பளபளக்கும் சுய பிராணாவின் முக்கிய சக்தியாக உயிரோடு உடல் பராமரிக்கிறது, மற்றும் எங்கு அவர் நினைத்தாலும் சிதறியதும். கனவு நிலையில், ஒரு தூங்கும் போது, பளபளக்கும் சுய, பல வடிவங்களில் கருதுகிறது நண்பர்களுடன் சாப்பிட்டால், பாலியல் indulges, fearsome கண்ணாடி பார்க்கும்.ஆனால் அவர் துண்டிக்கப்பட்ட மற்றும் இலவச ஏனெனில் எதையும் பாதிக்கப்பட்ட அல்ல; மற்றும், கனவு இன்பத்திற்கு சந்தோஷமாக மற்றும் நல்ல மற்றும் தீய பார்த்து மாநிலத்தில் இங்கே, அங்கே என்று அலைந்து பிறகு, அவர் தொடங்கிய மாநில திரும்புகிறார்.அது ஒரு நதிக்கரையில் இடையே ஒரு பெரிய மீன் குதித்து நீந்தி பிடிக்கும் போல, மிகவும் கனவு மற்றும் நடக்கும்போது மாநிலங்கள் இடையே பிரகாசிக்கும் சுய நகர செய்கிறது.ஒரு கழுகு போல், வானத்தில் உயரும் பிறகு சோர்வுற்றிருந்த, அதன் இறக்கைகள் மடிகிறது மற்றும், அதன் கூட்டில் மீதமுள்ள ஒரு அனைத்து ஆசைகள் இருந்து பேராசை தான் அங்கு மிக பிரகாசிக்கும் சுய, dreamless தூங்க மாநில நுழைய இல்லை கீழே பறக்கிறது.சுய, தீய இலவச அச்சம் இலவச ஆசை, இலவச உள்ளது.தனது காதலியை கரங்களில் ஒரு மனிதன் இல்லாமல் என்ன விருது அல்ல, உள்ளே என்ன இருக்கிறது, என்று சொந்த மாநிலத்தில் அனைத்து ஆசைகள் கண்டுபிடிக்க வேண்டும், உள்ளே என்ன சுய தொழிற்சங்க ஒரு நபர் இல்லாமல் என்ன தெரியாது அதனால் மற்றும் அவர்களதுசரியான பூர்த்தி. அங்கு நிறைவேற்றப்பட வேண்டும் என்று வேறு ஆசை உள்ளது, மற்றும் ஒரு துன்பத்தை தாண்டி.என்று unitive மாநில அப்பா அல்லது அம்மா, கூட உலகில் அல்லது கடவுளர்கள் அல்லது புனித இல்லை இல்லை அங்கே உள்ளன. அந்த நிலை திருடன் அல்லது ஸ்லாயர், குறைந்த சாதி அல்லது உயர், துறவி அல்லது துறவி இல்லை இல்லை இல்லை அங்கே உள்ளன. சுய மனித இதயத்தின் எல்லா கஷ்டங்களையும் தாண்டி, அப்பால் நல்ல மற்றும் தீய உள்ளது.தனி எதுவும் இல்லை என்று unitive மாநிலத்தில் ஒரு அவனை தனி எதுவும் அவரிடம் இருந்து தனி எதுவும், ருசி இல்லாமல் சுவை இல்லை அவரை இருந்து தனி இல்லை என்பதுடன்,, மணம் இல்லாமல்,, வாசனை இல்லாமல் பார்த்தால், பேசும் இல்லாமல் பேசுகிறது அவனை; அவனை தனி எதுவும் அவரிடம் இருந்து தனி எதுவும், தொட்டு தொட்டு இல்லாமல் இல்லை என்பதுடன், கேட்காமலே கேட்க, அவரிடம் இருந்து தனி இல்லை என்பதுடன்,, சிந்தனை இல்லாமல் நினைக்கிறது; அவனை தனி இல்லை என்பதுடன், தெரியாமல் தெரியும் .பிரிவினையை அங்கு எங்கே, ஒன்று, மற்றொரு பார்க்கும் மற்றொரு வாசனை, இன்னொரு சுவை, மற்றொரு பேசுகிறார், மற்றொரு கேட்க, மற்றொரு தொடுகிறது மற்றொரு நினைக்கிறார், மற்றொரு தெரியும்.ஆனால் பிரம்மன் உலக என்று ஒரு ஒற்றுமை, ஒரு இரண்டாவது இல்லாமல் ஒரு, அங்கே. இந்த வாழ்க்கை உச்ச இலக்கு, உச்ச புதையல், உச்ச சந்தோஷம். இந்த உச்ச நோக்கம் வாழ விரும்புகிறார்கள் ஆனால் இந்த மகிழ்ச்சி ஒரு பகுதியை யார். அந்த

திங்கள், 18 ஜூலை, 2011

சாதி சமயம் மதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை !சாதி சமயம் மதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை !


உண்மைதான் அன்பரே இங்கு சாதி சமயம் மதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை .சாதியையும் மதத்தையும் வள்ளலார் போல் சாடியவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை .சாதியையும் சமயத்தையும் மதத்தையும் வளர்த்தவர்கள் செய்த மோசடிதான் இன்று மக்கள் படும் துன்பத்திற்கு காரணம் .பொய்யான கற்பனை கதைகள் சொல்லி மக்களை ஏமாற்றி விட்டார்கள் .மக்கள் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து விட்டார்கள் .அதை வள்ளலார் பலபாடல்களில் தெளிவு படுத்தி யுள்ளார் அதில் ஒரு பாடல் ;--சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச சந்தடிகளிலே கோத்திரச சண்டையிலே,ஆதியிலே அபிமாநித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே நீர் அழித்தல் அழகலவே,நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிருத்தமிடும் தனித்தலைவர் {கடவுள் ஒருவரே }ஒருத்தர் அவர் வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே என்று சாடியுள்ளார் .சாதியையும் சமயமும் மதமும் பொய் ,அவற்றை குழி தோண்டி புதைத்து விடுங்கள் என்கிறார் .இன்று நடக்கும் அத்தனை துன்பங்களுக்கும் .சாதி சமய மத வாதிகள்தான் காரணம் அதில் எந்த சந்தேகமும் இல்லை .இதை ஒழிக்க வந்தவர்தான் வள்ளலார் .அவர் சாதி சமயம் மதங்களுக்கு அப்பாற பட்டவராகும் .அவரை சமய வாதிகள் மதவாதிகள் மறைத்து வைத்துக் கொண்டுள்ளார்கள் .இதுவும் அவர்கள் செய்யும் சூ ழ்ச்சியே அவர் எழுதிய திரு அருட்பா முழுவதும் உண்மையை உரைத்தவைகலாகும் .இந்த உலகத்தில் மக்களை பிரித்த் கடவுள் கொள்கைகளை துக்கி எரிய சொன்னவர் வள்ளலார் .ஒரே கடவுள் அவர் எங்கு உள்ளார் !அவர்யார் என்பதை கண்டு களித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுல்லார்கள் .

அவர் மனிதரல்ல ,உருவம் அல்ல ,பொய்யான கல் மண் செம்பு தங்கம் போன்ற உலோகங்களில் கடவுள் இல்லை .அவர் ஒளியாக உள்ளார் அணு ஆற்றலாக உள்ளார் .அருள் ஒளியாக உள்ளார் .அந்த ஒளியின் சிதரல்கள்தான் எல்லா இயங்கும் உயிர்களாக உள்ளது .அதனால் எந்த உயிரியையும் அழிக்க நமக்கு உரிமை இல்லை என்கிறார் , ஒரு உயிரை நம்மால் உருவாக்க முடியாததை அழிக்கவும் உரிமை இல்லை என்கிறார் .இந்த உண்மையை முன்னாடி வந்த அருளாளர்கள் சொல்லவில்லை.ஏன் சொல்லவில்லை என்றால் ,அப்படி அவர்கள் சொன்னால் அவர்களை மக்கள் கொன்று விடுவார்கள் என்ற பயம் இருந்தது,அதனால் அவர்கள் சொல்லவில்லை .

மரணத்தை வென்றவர்கள்தான் உண்மையை சொல்ல முடியும் ,அவர்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது .அதனால் வள்ளலார் மரணத்தை வெல்லும் அருள் சத்தியை பெற்ற பிறகுதான் உண்மைகளை உலகுக்கு தெரியப்படுத்துகிறார் என்பது உண்மையாகும் .அவர் எழுதிய பாடல்களே அவற்றிற்கு சான்றுகளாகும் .அவர் எழுதிய பாடல்களில்ஒன்று .

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே 
கனலாலே புனலாலே கதிராதியாலே 
கூற்றாலே பினியாலே கொலைக கருவியாலே 
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே 
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் 
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே 
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் 
என் தந்தை அருட்பெரும்ஜோதி இறைவனைச சார்வீரே !

என்கிறார் வள்ளலார்,-- முழுமையான இறை அருளைப் பெற்றவர் களுக்கு மரணம் வராது.அவர்களால்தான் உண்மையை சொல்ல முடியும் என்கிறார் அவரை எந்த தீய சத்திகளும் இயற்கையும் ஒன்றும் செய்து விட முடியாது.என்பதை அறிந்து வாழ்ந்து அனுபவித்து உலக ம்ககளுக்கு அனைத்து உண்மைகளையும் திரு அருட்பா வாயிலாக தெளிவு படுத்தியுள்ளார்.

இவற்றை அனைவரும்உணர்ந்து, உயிர்கள் மேல் அன்பு வைத்து --கொல்லா நெறியே குவலயம் ஓங்குக ,எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !என்ற கொள்கையை கடைபிடித்து மனிதன் மனிதனாக வாழ்வோம் .

அன்புடன் உங்கள் அனைவரின் அன்பு சகோதரன் ஆன்மநேயன் -கதிர்வேலு .

சேலம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபை


இது நேராக உங்களுக்கு அனுப்பப்பட்டதால் முக்கியம்.
விவரங்களை மறை ஜூலை 17 (1 நாட்களுக்கு முன்பு)
சேலம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபை


Venue

Details

Function

Vallalar Satsang

Place

Theosophical Society ,Cherry Road, Salem -1

Speech

By Erode. Thiru.Kathir Kathirvelu Ayya  

Timings

Evening 4.00 p.m to 7.00 p.m

Contact

Mohan Suresh /  psureshdreams@gmail.com

Date

July 24 -2011/ Sunday