சுத்த சன்மார்க்க அருள் ஆட்சி !
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறக்கட்டளை கேள்வி பதில்:
சுத்த சன்மார்க்க அன்பர்கள் சுத்த சன்மார்க்க ஆட்சி எப்போது வரும்???
அரசியல் களம் என்பது ஆன்ம ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம் கரண ஒழுக்கம் இன்றி ஒழுக்கம் எதுவும் இல்லாத ஒரு கொடூர எண்ணம் கொண்ட காட்டு விலங்குகளின் வேட்டையாடும் குணம் படைத்தவர்களின் கூடாரமாக இருக்கின்றதே என்று கேட்கிறார்கள்....
இந்த உலகம் நன்மை தீமை என்கின்ற கட்டமைப்பில் வடிவமைக்கப்பட்டது இந்த உலகம் உலக உயிர்கள் ஆன்மாக்கள் அனைவரும் உண்மை அனுபவத்தை பெறுவதற்காக வழங்கப்பட்டுள்ளது இதில் மனிதர்களுக்கான சுதந்திரங்கள் அவரவர் ஒழுக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டு வழிகாட்டப்பட்டு வருகிறது. ஒரு மார்க்கத்திற்கு உள்ளே வந்து விட்டோம் என்பதற்காக அந்த மார்க்கத்தின் அடையாளமாக நாம் மாறுவதில்லை அதனுடைய முழுமையான பயனையும் அடைவதில்லை ஏனென்றால் அந்த மார்க்கத்தை அதன் கருத்துக்களை ஒழுக்கங்களை முழுமையாக வாழ்க்கை முறையாக மாற்றும்பொழுது தான் அதனுடைய லாபத்தை நாம் பெற முடியும்.
அப்படி இந்த உலகத்தையே பரலோக ஒழுக்கம் உடைய ஓர் உலகமாக படைப்பேன் என்று உறுதிப்பூண்டு உள்ளார் வள்ளல் பெருமானார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம் என்று நமக்கு இத்தருணத்தை உணர்த்தியுள்ளார் இந்த காலகட்டத்தை சுத்த சன்மார்க்க காலம் என்று வரையறைக்கு வழங்கி உள்ளார். இது தருணம் நாம் நல்லொழுக்கத்தில் பழக வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார். நாம் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயம் அரசியல் பொருளாதாரம் குடும்பம் உறவுகள் மற்றும் பணம் உபகரமாக கொடுக்கப்பட்டிருக்கின்ற பொருட்கள் யாவும் நித்தியம் அற்றவை இவை அனைத்தும் நமக்கு ஒரு உபகாரத்திற்காக வழங்கப்பட்டது. அந்த உபகாரத்தை நாம் நம்முடைய சுதந்திரத்தை சரியாக பயன்படுத்துவதன் மூலமாக நல்லொழுக்கத்திற்கு திசை திருப்புவதின் மூலமாக சுத்த சன்மார்க்க பாதையில் மேலோரும் வழியை கண்டடைகிறோம். பயனடைகிறோம் அவ்வாராகவே இந்த உலக உயிர்களுக்கு எல்லாம் வழங்கப்பட்டு இருக்கின்றது இதில் ஒருவர் பணக்காரர் என்று வசதி படைத்தவர் என்றோ அரசியல் செல்வாக்கு படைத்தவர் என்று மக்கள் செல்வாக்கு படைத்தவர் என்று சினிமா பிரபலம் என்றோ நாம் அவர்களை மிகவும் உயர்ந்த ஆன்மாக்ளாக கருத முடியாது ஆனால் அதே சமயம் அவர்களுக்கும் ஜீவகாருண்யத்தை பயில்வதற்காக ஓர் உணர்வை தூண்டப்பட்டு மக்களுக்காக சேவை செய்யும் நிலைகளை உருவாக்கி கொடுப்பதுதான் வள்ளல் பெருமானார் உடைய செயலாக இருக்கும். அப்படி அவர் நமக்கும் நம்மை சுற்றி இருக்கின்ற ஆன்மாக்களுக்கும் கொடுக்கப்படும் பணியை அவரவர் தரத்தில் சிறப்பாக ஒழுகும் பொழுது அவரவர் ஒழுக்கத்திற்கு ஏற்ற பலனையே அடைவார்கள் அதே நேரத்தில் அந்தப் பயிற்சியில் வாழ்க்கை முறையில் அவர்கள் தங்களை சீர்திருத்தம் செய்து கொள்கின்ற வாய்ப்பையும் மக்கள் அதனால் பயனடையும் வாய்ப்பையும் ஏற்படுத்தும் திருவருள் செயல்.
ஆகவே சுத்த சன்மார்க்க ஆட்சி என்பது உலகளாவியது மதங்களைக் கடந்தது அனைத்து பேதங்களையும் கடந்தது ஆன்மதரத்தில் இயங்குவது ஒருமையில் கட்டமைக்கப்படுவது அனைத்து வேற்றுமைகளையும் களைவது போன்ற உண்மைகளை உள்ளடக்கியது.
இந்த திருவருள் செயலானது அரசியல்வாதியாக இருப்பவர்கள் உலகத் தலைவர்களாக இருப்பவர்கள் அவர்கள் தரத்தில் ஆணவத்தில் செயல்பட்டாலும் அங்கு ஏற்படும் போட்டி பொறாமை சண்டை துரோகம் தந்திரம் போன்ற அனைத்து விஷயங்களும் மக்களுக்கு நன்மையாகவே மக்கள் உரிமைக்காகவே மக்களுக்கு பயன் அளிப்பதாகவே அமையும். அவரவர் செய்யும் வினைக்கு அவரவர் பலனை அடைவார்கள் என்பதும் உண்மை.
காலம் காலமாக சீர்திருத்தவாதிகள் ஞானிகள் யோகிகள் எல்லோரும் சமுதாயத்தில் நடக்கின்ற தீண்டாமைகள் அறியாமை கள் ஜாதி மத இன குல பாலின பொருளாதார பேதங்கள் போன்றவற்றை சாடி எதிர்த்து மக்களை நல்வழிப்படுத்த ஒழுக்கங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள் இது படிப்படியாக இந்த உலகில் மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது. அதுபோலவே இந்த காலகட்டத்தில் சுத்த சன்மார்க்க ஆட்சியில் மேலும் பல மடங்கு தீவிரமாகவும் அதீதமான செயல்பாடுகளும் திருவருளால் நிகழ்த்தப்பட்டு உலகமெல்லாம் மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கடந்த 150 ஆண்டுகளுக்குள்ளாக அனைத்து மக்களுக்கும் பெரும்பாலும் உணவு உடை உறைவிடம் கல்வி மருத்துவம் பொருளாதாரம் வேலை வாய்ப்பு சம உரிமை சகோதரத்துவம் சம நீதி போன்ற விஷயங்கள் உலக அளவில் பரவி இருப்பது மக்களுக்கு பயனளித்து வருகின்றது வாழ்க்கையை மேம்படுத்தி வருகின்றது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்
ஊழல் ஒழியவில்லை போர் ஒழியவில்லை வேற்றுமைகள் ஒழியவில்லை ஆணவம் அதிகாரப் போக்கு ஒழியவில்லை சண்டை சச்சரவு ஓயவில்லை உறவுகளில் விரிசல்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது போன்ற விஷயங்கள் காலம் காலமாக இந்த உலகத்தில் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றது நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும் இது ஒரு பயிற்சி கூடம் இதில் அனைவரும் பயிற்சி பெற்று வருகிறார்கள் என்று கோணத்தில் நாம் பார்க்கும் பொழுது மட்டும் தான் அதன் விளக்கம் புரியும்.
தனிமனித விதி என்பது கட்டுப்படுத்தக்கூடியது அல்ல ஆனால் அந்த தனிமனித விதி என்பது சமுதாய நீதிக்கு கட்டுப்படும் பொழுது மட்டும்தான் ஒரு சமூகம் சீரமைகிறது அப்படி இருக்கும்போது அந்த சமூகத்தை திருத்த வேண்டும் என்றால் சட்டங்களும் ஆட்சியாளர்களும் சரிவர அமைய வேண்டும் வழிநடத்த வேண்டும் என்கின்ற அடிப்படையில் தான் திருவருள் செயல் பல கட்சிகளை உருவாக்குகின்றது பல எதிர்ப்புகளை உருவாக்குகின்றது அதன் மூலமாக ஆட்சியாளர்களையும் திருத்துகின்றது பயமுறுத்துகின்றது அவர்களை எதிர்ப்பவர்களையும் ஊக்குவிக்கிறது செயல்பட்டு தூண்டுகிறது வெற்றி தோல்வி யாருக்காக இருந்தாலும் இவர்கள் போட்டியில் நன்மை அடையப்போவது மக்கள் மட்டும் தான் என்பதை புரிந்து கொள்கின்றோம். மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுகின்றார் உண்மையை விளக்கம் தெரிவிக்கின்றார்.
ஆகவே இந்த உலகத்தில் சுத்த சன்மார்க்க ஆட்சி என்பது அனைத்து உலக நாடுகளும் அனைத்து கட்சிகளும் பல வேற்றுமையில் இருந்தாலும் ஒரு ஒற்றுமையாக மக்கள் நலனில் மட்டுமே கவனம் செலுத்துவதாக அமையும் என்பதுதான் உண்மையாக இருக்கின்றது. அதை பிரதிநிதித்துவம் படுத்துபவர்கள் உண்மையானவர்கள் நேர்மையானவர்கள் மட்டும்தான் இனி நிலைக்க முடியும் என்கின்ற சூழலை உருவாக்குவது தான் சுத்த சன்மார்க்க ஆட்சி அது படிப்படியாக இந்த உலகத்தில் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றது.
கால ஓட்டத்தில் சுத்த சன்மார்க்க அன்பர்கள் தங்களுடைய ஒழுக்கங்களில் மிகச்சிறந்து விளங்கும் பொழுது சுத்த சன்மார்க்க பலனை அடையும் பொழுது அவர்களுடைய அருள் ஆற்றலாலும் அவர்களுடைய கருணையாலும் தொண்டாலும் இந்த உலக மக்களை அணுகும் பொழுது அவர்கள் இந்த உலகத் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமான நிலைகளை பெறுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ஏனென்றால் இந்த உலகம் எதிர்நோக்கி இருப்பது ஓர் பேரழிவை அந்த திசையில் ஓடிக் கொண்டிருக்கின்றது அந்த திசையை மாற்றுகின்ற ஒரு வழியைத்தான் சுத்த சன்மார்க்கத்தின் மூலமாகவும் இந்த மனித பிறவி லட்சியத்தை அறிவிப்பதாகவும், அறிவியல் பூர்வமாக ஆன்மாக்கள் ஒளி தேகம் பெறும் வழிகளையும் சுத்த சன்மார்க்கம் மட்டுமே வழங்கி உள்ளது இதை உலக தலைவர்களும் உலக விஞ்ஞானிகளும் உலக பணக்காரர்களும் ஏற்றுக்கொண்டு அவ் வழியை பயணிக்கும் பொழுது இந்த உலகமே ஜீவகாருண்யம் உள்ள ஆன்மநேய ஒருமைப்பாட்டு உள்ள அவ் வழிகளை ஏற்றுக்கொண்டு வாழ்கின்ற சுத்த சன்மார்க்க உலகமாக மாறும்.
மேற்குறித்த சங்கதிகள் அனைத்திற்கும் ஆதாரமாக நம்முடைய சுத்த சன்மார்க்க அன்பர்கள் அவர்களுடைய ஒழுக்கங்களை மேம்படுவது மூலமாக மட்டும்தான் இந்த உலக உயிர்களுக்கு அவர்கள் நல்வழியை போதிக்க முடியும் அவர்களுடைய ஆன்ம பலத்தை பெருக்கிக் கொள்ள முடியும்.
தயவு உடையவர் எல்லாம் சுத்த சன்மார்க்க அன்பர்களே என்பதுபோல உலகமெங்கும் எந்தெந்த மாதத்தினராக இருந்தாலும் இனத்தினவராக இருந்தாலும் வள்ளல் பெருமானார் சுத்த சன்மார்க்க அன்பர்களை உருவாக்கி வைத்துள்ளார் அவர்கள் வெளிப்படுவார்கள் அவர்களும் நம்மை சந்திப்பார்கள் உலக மாற்றத்திற்கு பெரும்பங்கு வகிப்பார்கள் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை. நாம் இப்பொழுது காண்பவர்கள் மட்டும்தான் சுத்த சன்மார்க்க அன்பர்கள் அவர்கள் தான் வெளிப்படுவார்கள் என்பது போன்ற மாயை தோற்றம் நமக்கு வேண்டாம் வள்ளல் பெருமானாருடைய இயக்கம் அவருடைய அறிவு எல்லாம் அந்த அண்டங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்தையும் உள்ளடக்கியது திருவருள் செயல் நம்மால் யூகிக்க முடியாதது.
அனைவரும் திருந்தி விடுவார்களா என்றால் முடிந்தால் அச்சில் வார்ப்போம் ஆகாவிடில் மிடாவில் வார்ப்போம் என்பது தான் விதி... அகவினத்தாருக்கு சாகா வரமும் ஏனையவர்க்கு பரிபாக நிலையும் கொடுப்பதுதான் விதி... அது அவரவர் முயற்சியையும் பயிற்சியையும் நம்பிக்கையையும் சார்ந்தது.
எல்லாம் செயல் கூடும் என்னானை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனியே ஏற்று...
நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
அருட்பெருஞ்ஜோதி ஜெரால்ட் ராபர்ட் வழக்கறிஞர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறக்கட்டளை
8220620369
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு