திங்கள், 31 அக்டோபர், 2011

ஆண் பெண் என்ற பேதம் எதிலும் இல்லை !\


ஆண் பெண் என்ற பேதம் எதிலும் இல்லை !\

ஆண் பெண் என்ற பேதம் உருவத்தால் அறிகிறோமே தவிர உண்மையில் இல்லை உண்மையில் அனைத்தும் ஒன்றுதான் அதன் பெயர் அருட் பிரகாச ஒளி அருட்பெரும் ஜோதி என்பதாகும் .அதைத்தான் ஆன்மா என்றும் ஆன்ம பிரகாசம் என்றும் உயிர் ஒளி என்றும் ,முச்சுடர் என்றும் ,அறிவு என்றும் பல பெயர் வைத்து உள்ளார்கள் நமது பெரியோர்கள் .அந்த உண்மையான ஒளியைக் கண்ணால் கண்டவர்கள் யாரும் இல்லை கண்டதாக சொல்லுவார்கள் அனைத்தும் பொய்யானதாகும் .ஏதோ ஒன்றைக் கண்டுவிட்டு அதுதான் இது என்பார்கள் அதில் உண்மை இல்லை

அந்த உண்மையான ஒளி எப்பொழுது தெரியும் என்றால் தன்னுடைய உடம்பில் உள்ள அணுக்கள் முழுவதும் தோற்றம் இல்லாமல் ஒளி அணுக்களாக அதாவது ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து விட்டப் பிறகு தான் அந்த உண்மையான அருட்பெரும் ஜோதி ஒளி அதன் வாயிலாகத் தெரியும் அப்போது புறத்தில் தோன்றும் கண்கள் அகக் கண்களாக மாறி விடும் அப்போது புறத்தில் உள்ளது அனைத்தும் உருவம் அற்ற ஒளி அணுக்களாக தோற்றம் அளிக்கும்
அதுவே உண்மையான அருள் ஒளி தேகம் பெற்றதாகும் .மரணம் இல்லாத ,பிறப்பு இறப்பு அற்ற அருள் நிலையாகும்

நாம் அனைவரும் ஆணாகவும் பெண்ணாகவும் உருவத்தால் பேதப் பட்டு வாழ்ந்து வருகிறோம் .நாம் உண்ணும உணவு அதன் தன்மைக்கு தகுந்தாற் போல் இரத்தமாக மாற்றி அதன் மத்தியத் தரமாகிய சக்தியை விந்துவாக மாற்றம் செய்து விடுகிறது .இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரித்தான் செயல் படுகிறது .அந்த விந்துவின் தன்மைக்குத் தகுந்தாற் போல் உணர்ச்சி என்னும் அன்பு ஆசை காமம் .மோகம் தூண்டுகிறது ,அதற்கு காதல் அன்பு என்று  பொதுவாக சொல்லிக் கொண்டு வருகிறார்கள்

அதற்கு சாதி மதம் சமயம் இனம் என்ற பேதங்கள் கிடையாது விந்துவின் இயல்புக்குத் தகுந்தாற் போல் செயல்படுவதாகும் இவற்றால் ஆண் பெண் சேர்க்கை தொடர்ந்து கொண்டே உள்ளன உயிர்கள் உருவாகிக் கொண்டே உள்ளது விந்துவின் அணுக்களின் அளவைக் கொண்டுஆண் பெண் என்ற உருவம் பேதப் படுகிறது இவைகள் எக்காலத்தும் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றன .இதனால் மக்கள் தொகை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன இவற்றை தடை செய்ய மக்கள் தொகையைக் குறைக்க அரசாங்கம் குடும்பக் கட்டுப்பாடு போன்ற பல வழிகளை கை  ஆள்கிறது அதனால் மக்கள் தொகை அதிகரிப்பு குறையுமா என்றால் எக்காலத்திலும் குறையாது .

ஆண் பெண் சேர்க்கை இல்லாமல் இருந்தால் குறையுமே தவிர வேறு எந்த வழியாலும் குறைக்க முடியாது .ஆண் பெண் சேர்க்கை எப்போது குறையும் என்றால் அவரவர்கள் உயிரின் இயக்கமாகிய அருள் ஒளியின் {அதாவது ஆன்மாவின் }உண்மைத் தன்மையை உணர்ந்தால் ஆண் பெண் சேர்க்கை தவறானது என்பதை அறிந்து அதில் நாட்டம் கொள்ளாமல் வாழ்ந்தால் மக்கள் தொகை குறையும்

,எப்படி உணர முடியும் யார் அதற்கு வழி காட்டுபவர் என்ற கேள்வி எழும் அல்லவா ?நமக்கு பல வழிகளில் நம்முடைய பெரியோர்கள் வழி காட்டி உள்ளார்கள் அத்தனையும் பொய்யான வழிகள் அவர்கள் காட்டிய வழிகள் உண்மையாக இருந்தால் நாம் இப்படி துன்பப்பட வேண்டியது இல்லை .அவரவர்களுக்கு தெரிந்த பொய்யான கற்பனைக் கதைகளையும் பொய்யான வழிமுறை போதனைகளையும் சொல்லி விட்டு போய் விட்டார்கள் நாமும் இதுவரை அதுவே உண்மையாக இருக்கும் என்று நம்பி ஏமாந்து வாழ்ந்து கொண்டு வருகிறோம் .

சரி எப்படி உண்மையை அறிந்து கொல்வது என்ற கேள்வி நம் மனதில் எழுகின்றது அல்லவா ?நாம் யாருடைய நூலகளையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை !நமக்கு உள்ளே ஒரு மெய்ப் பொருள் உள்ளது அதுதான் இந்த உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளது என்பதை அறிவின் வாயிலாக அறிந்து அந்த மெய்ப் பொருளைத் நம்மை நாமே நம் உடம்பில் உள்ளதை இடை விடாது தேட வேண்டும் அப்படித் தேடிக் கொண்டே இருந்தால் அதுவே நல்லது எது கெட்டது எது,கேட்டது எது என்பதை தெரிவிக்கும்

ஆனால் உண்மை உணர்வுடன் தேடவேண்டும் அதை தேடுவதற்கு விந்தை வெளியே விடாமல் இருந்தால் சரியான விடை கிடைக்கும் விந்து அறிவைத் தூண்டும் திரியாகும் அதனால் விந்தை வெளியேற்றக் கூடாது.சரி இதனால் என்ன பயன் என்ன லாபம் என்றால் .ஒரு ஆணும பெண்ணும் சேரும் போது உண்டாகும் இன்பத்தைக் காட்டினும் கோடி மடங்கு பல கோடி மடங்கு அளவிற்கு இன்பம் உண்டாகும் ஏன் உண்டாகும் என்றால் நம்முடைய ஆன்மா என்ற ஒளியில இருந்து அருள் என்ற விந்து சுரக்கும் அதற்கு அமுதம் என்று பெயராகும் அந்த அமுதம் சுரக்கும் போது அடையும், அந்த இன்பத்தை சொல்லால் அளவால் அளவிட முடியாது அந்த அளவிற்கு மகிழ்ச்சி தருவதாகும் .

இவை ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமானதாகும் இதில் பேதம் கிடையாது அந்த இன்பம் கிடைக்கும் போது நீங்கள் நினைத்தது நினைக்காதது எல்லாம் நடக்கும், கிடைக்கும் அதனால் பல வகையான சித்துக்கள் கை கூடும், நடக்கும் அதை தவறான வழிகளில் பயன் படுத்த கூடாது.அப்படியே மேலும் தேடிக் கொண்டே இருந்தால்

நம்முடைய பூத விந்து அணுக்களால் உருவான உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும் .முழுமையாக மாற்றம் அடைந்த பின் தான் உண்மையான அந்த அருட்பெரும் ஜோதி ஒளி தெரியும் அப்போது புறக் கண்கள் தெரியாது இருக்காது அதுவும் அந்த அருட்பெரும் ஜோதி உள்ளே அடங்கி விடும் அப்போது தெரிவது ஒரே கண் அதுதான் அருட் கண் என்பதாகும் .ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் பிறப்பு இல்லை .இறப்பு இல்லை, அந்த ஒளி உடம்பை எந்த
சக்தியாலும் அழிக்க முடியாது அது எங்கு வேண்டுமானாலும் செல்லும் அந்த உடம்பைப் பெற்றவர்கள் தான உயிர்களுக்கு நன்மை செய்ய முடியும் உயிர்களை காப்பாற்ற முடியும்

அப்படி பெற்றவர்கள் இந்த உலகத்தில் யார் என்றால் ஒரே ஒருவர்தான் அவர்தான் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .அவர் என்னை வணங்க வேண்டாம் வழிபட வேண்டாம் என்றார் . எல்லோருக்கும் பொதுவாகிய அருட்பெரும் ஜோதி ஆண்டவர் ஒருவர் உள்ளார் அவரை வெளியே எங்கும் தேட வேண்டாம்  ஒவ்வொருவரின் உடம்பை இயக்கும் உள் ஒளியாக புருவ மத்தியின் , உச்சிக்கும் கீழே உள் நாக்கிற்கும் மேலே ஒரு ஒளி வடிவமாக இயங்கிக் கொண்டு இருக்கிறது .
அதை உண்மை அன்பால் உண்மை இரக்கத்தால் அதையே தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு எல்லா உண்மைகளையும் எல்லா நன்மைகளையும் அதுவே கொடுக்கும் என்றார்கள் ஆதலால் மனிதனாக பிறந்த அனைவரும் ஆண் பெண் என்ற பேதம் இல்லாமல் உண்மையைத் தேடுவோம் உண்மையை அறிவோம் உண்மையுடன் வாழ்வோம் உண்மையான இடத்திற்கு செல்வோம் அதுவே இந்த உலகத்தில் மக்கள் தொகையை குறைக்கும் வழியாகும் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.

புதன், 26 அக்டோபர், 2011

கொலை செய்யாதீர்கள் புலால் உண்ணாதீர்கள் !


கொலை செய்யாதீர்கள் புலால் உண்ணாதீர்கள் !

ஆனமநேய அன்புடைய அனைவருக்கும்  வணக்கம் இந்த உலகம் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் அடைவதற்கு முக்கிய காரணம் வாயில்லாத உயிர்களைக்  கொன்று தினபது தான் என்பது ,புலால் உண்பவர்கள் அறியாத உண்மையாகும்,மாதம் ஒருநாள் வாரம் ஒருநாள்  தினமும் தின்பது, எல்லாம் தவறான பழக்கமாகும் உயிரின் உண்மை ,அதன் தன்மை அதன் ஆற்றல் என்ன என்பது தெரியாமல் பழக்கத்தின் காரணமாகவும் நாக்கு ருசியின் காரணமாகவும் கடவுளின் வேண்டுதல் காரணமாகவும் புலால் உண்கிறார்கள் இவை யாவும் அறியாமையாகும் மனித அறிவுக்கு குறைவான செயலாகும்

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு ,இறைவன் குடி இருக்கும் ஆலயம் என்பதை என்பதை அறிவு மூலமாக உணர வேண்டும் அதுவே பகுத்தறிவாகும்,பகுத்தறிவு என்று பேசுபவர்களும்,இவற்றை அறியாமல்  தவறு செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை பகுத்தறிவு என்று சொல்ல முடியாது .

கடவுளை வணங்கும் வழிபாடு செய்யும் பக்தியில் உள்ளவர்களும் .ஒரு சில நாட்கள் தவிர மற்ற நாட்களில் புலால் உண்கிறார்கள் .கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்வார்களா என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார் அவர்களும் அறியாமையால் மூட பழக்க வழக்கத்தால் புலால் உண்கிறார்கள் அவர்களை பக்தியாளர்கள் என்று சொல்வது நியாயமாகாது .அதேபோல் எல்லா மதத்தார்களும்,சமய வாதிகளும் அதே தவறையும் ,குற்றங்களையும் செய்து வருகிறார்கள்

யோகம ,தவம தியானம் செய்யும் ஆன்மீக வாதிகளும் உயிர்களின் உண்மை தெரியாமல் புலால் உண்டுக் கொண்டு செய்கிறார்கள்  தியானம் தவம யோகம அவர்களுக்கு கை கூடுமா ,மனம் அடங்குமா என்றால் உண்மையாக எதுவும் நடக்காது அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்

ஒரு உயிரை உண்டாக்குவதற்கு கடவுளைத் தவிர மனிதர்களால் முடியாது, முடியாததை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை எனபது இயற்கையின் கட்டளையாகும் ,சட்டமாகும்

எவ்வளவு செல்வம் இருந்தாலும் பட்டம் பதவிகள் இருந்தாலும்.அவனுக்கும் உயிர்மேல் அளவுகடந்த ஆசையும் பற்றுதலும்  வருகிறது.உயிரைக் காப்பாற்ற அத்தனை செல்வங்களையும்  இழக்க தயாராகிறார்கள் .அந்த உயிரின் தன்மையும் பெருமையும் மகத்துவத்தையும் எப்படி சொல்லமுடியும்.உயிர் இருக்கும் வரைதான் அவன் மனிதன்.உயிர் போய் விட்டால் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,அந்த உடலுக்கு பிணம என்று பெயராகும் .

அதேபோல் ஒரு உயிரை அழித்தால்,அந்த உயிர்போன பிறகு அதற்கு பெயர் பிணம என்பதாகும் ,மனிதன் இறந்தால் சுடுகாட்டில் பிதைக்கிறோம்.வாயில்லாத ஆடு மாடு,கோழி ,பன்றி ,போன்ற ஜீவன்கள் இறந்தால் மனிதன் வயிற்றில் பிதைக்கிறோம் .மனிதன் வயிறும் சுடுகாடுதான் என்பதை உணரவேண்டும்.சுடுகாட்டில் எண்ண இருக்கும்.அங்கு யார் வாழ்வார் .என்பதை நினைத்து பாருங்கள் ,மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால்.தாவர உணவுதான் சிறந்ததாகும்.

இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம்.மதவாதம் நக்சல் பார்ட்டிகள், கொலைகொள்ளைகள்.இலங்கை படுகொலை.களவு,கற்பழிப்பு,போனற,கொடுரமான செயல்கள் யாவும் செய்பவர்கள் யார் என்பதை சிந்தித்து பாருங்கள்,அனைவரும் மிருகத்தின் புலால் உணபவர்கள் என்பது தெளிவாகத்தெரியும்,மிருகத்தை தின்பவர்கள் அறிவு மிருக (அறிவு) குணமாகத்தான் இருக்கும் என்பது அறிவியல் வல்லுனர்களின் கருத்தாகும் .

ஆனால் இதை வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே தெளிவாக விளக்கியுள்ளார் .திருவள்ளுவரும் 2000,ஆண்டுகளுக்கு முன்னாடியே தெரியப்படுத்தி உள்ளார்.மனிதன் இதையெல்லாம் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளாமல் மனம் போனபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறான்

வள்ளலார் பாடல் வருமாறு '-

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
பலிகடா முதலிய உயிரைப்
போலியுறக் கொண்டே போகவுங் கண்டே
பந்தி நொந்து உளம நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில்
கண்டகாலத்தும் பயந்தேன் .

இப்படி பலபாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள் .

திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டு அதிகாரம் கொல்லாமை புலால் மறுத்தல் பற்றி மிகவும் தெளிவாக எழுதிவைத்துள்ளார்

தன்ஊன் பெருக்கற்கு பிருதூன் உண்பான்
எங்கணும் ஆளும் அருள் .
 

கொல்லான் புலால் மறுத்தானை எல்லா
உயிர்களும் கை கூப்பி தொழும் .

என்கிறார் திருவள்ளுவர் இவைபோல் இருபது குறள்கள் உள்ளன.இதையெல்லாம் ஏன் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை மனிதர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டாமா ?

உலகிலேயே பெரிய குற்றம் எதுவென்றால் பிற உயிர்களை கொலை செய்வதும்,அதனுடைய புலாலை (மாமிசம் ) உண்பதும் என்பதை அனைவரும் உணரவேண்டும்..இவைகளுக்கு கடவுளிடம் மன்னிப்பு கிடையாது .

நம்முடைய குழந்தைக்கு உடலில் எதாவது ஒரு கீறல் பட்டால் எவ்வளவு துடி துடிக்கிறோம்.அதுபோல் வாயில்லாத ஜீவனை கத்தியை வைத்து அறுக்கின்ற போது அந்த ஜீவன் எவ்வளவு துன்பப்படும் என்பதை உணராமல் அதை வெட்டி கூறு போட்டு தின்கிறோமே,இவை எந்த விதத்தில் ஞாயம் .

மனிதனை மனிதன் கொலை செய்தால் தூக்கு தண்டனை என்கிறது உலகியல் சட்டம்.வாயில்லாத உயிர்களை கொலை செய்தால் அதற்கு உங்கள் சட்டத்தில் என்ன தண்டனை?அனைவரும் சேர்ந்து உண்பதுதான் உங்கள் சட்டத்தின் தீர்ப்பா ?.ஆண்டவன் தீர்ப்பு எண்ண தெரியுமா ?நீங்கள் பல பிறவிகள் எடுத்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.உங்கள் வாழ்க்கையில் நிம்மதி மகிழ்ச்சி ஆனந்தம் என்பது இறுதிவரைக் கிடையாது கிடைக்காது .

மனிதப் பிறவி எடுத்ததின் நோக்கம், கிடைத்ததின் நோக்கம்,மரணத்தை வென்று கடவுள் நிலை அடைவதாகும் .அதாவது மரணமில்லா பெருவாழ்வு என்பதாகும்.நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்ல வேண்டும்.வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது!வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது ? என்று கண்ணதாசன் பாடல் வரிகள் சொல்லுகின்றன.

அப்படி என்றால் மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்பதை வாழ்ந்து காட்டியவர் வள்ளலார் .அவர் வாழ்ந்து வந்த பாதையை கடைப் பிடித்தால் மரணத்தை வென்று கடவுள் மயமாகலாம்.அவர் எழுதி வைத்த திரு அருட்பாவில் அனைத்து உண்மைகளும் மிகவும் தெளிவாக இருக்கிறது .அதை வாங்கி படித்து மனிதர்கன் மனிதர்களாக வாழுங்கள் .

நீங்கள் அப்படி வாழ்கிறீர்களா ?என்று கேள்வி கேட்கலாம்.நான் சத்தியமாக அப்படித்தான் வாழ்கிறேன் .
இந்த உலகத்தில் எனக்கு என்று எதுவும் இல்லை.மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை எதுவுமில்லை.
பணம் சொத்து வீடு என்று எதுவும் இல்லை.நான் யாரிடத்திலும் எதுவும் வாங்குவதில்லை .ஆனால் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

எனக்கு வேண்டியதை எல்லாம் இறைவன் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தருகிறார்.என்னை ஆண்டவர் வழி நடத்துகிறார்.அவர் வழியில் நான் செல்கிறேன் இதுதான் உண்மையாகும் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் ஜோதி !
எங்கு எங்கு இருந்து உயிர் ஏது ஏது வேண்டினும்
அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும் ஜோதி

என்பார் வள்ளலார் ;-சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற பேதமில்லாமல்,அனைவரும் அனைத்து உயிர்களும் நம்முடைய சகோதரர்கள் என்ற உண்மை தெரிந்து விட்டால்.நாம் கடவுள்கள்தான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மை தெரிந்து விட்டால் எந்த தவறும் செய்யமாட்டோம்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் !அவரால்தான் இந்த உலகமும் உலக உயிர்களும் படைக்கப்ட்டுள்ளன என்ற உண்மை உணரவேண்டும்.அவர் உருவமாக இல்லை ஒளியாக உள்ளார்,அருள் அணுவாக உள்ளார் ! அதற்கு மேல் எந்த சக்திகளும் இல்லை என்பதை அறிவால் உணர்ந்தால் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும்

மனிதன் படைத்த உருவங்களில்  எல்லாம் கடவுள் இல்லை,கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கடவுள்கள் இல்லை, கடவுள் உயிர் ஒளியாக எல்லா உயிர்கள் இடத்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்.அந்த உயிர் ஒளிதான் கடவுளின் ஏக தேசங்கள் என்பதை ,உண்மையுடன் உணர்ந்தால் எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்.நமக்கு வழி காட்டிய பெரியவர்கள் உண்மைக்கு புறம்பாக சொல்லியும் எழுதியும் வைத்து விட்டார்கள் அதையே உண்மை என்று நம்பி அறியாமையால் வாழ்ந்து வருகிறோம்.நம்மீது குற்றமில்லை நமக்கு வழி காட்டியவர்கள் தான் குற்றவாளிகளாகும் .அவர்கள் காட்டிய வழியில் கண்ணை மூடிக்கொண்டு பின் பற்றி வாழ்ந்து கொண்டு வருகிறோம் .

வள்ளலார் வந்துதான் எல்லா உண்மைகளையும் தெளிவு படுத்தியுள்ளார் இந்த உலகத்திற்கு உண்மையை சொன்ன ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவர்தான் ஒருவர்தான் !

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம உயிர்போல் எண்ணி யுள்ளே
ஒத்து உரிமை உடையவராய் யுவக்கின்றார் யாவர அவர் உலந்தான் சுத்த
சித்துருவாய்  எம்பெருமான் நடம புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த

வித்தகர் தம் அடிகேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த்தாலோ !

எல்லா உயிர்களும் ஒரே தன்மை உடையது  என்று யார் உண்மை அறிவுடன் அறிந்து கொள்கிறார்களோ  நினைக்கின்றார்களோ அவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன் அவர்கள் இட்ட பணியை என்னுடைய சிரமேற் கொண்டு செயல் பட  என்னுடைய அறிவு தயாராக இருக்கிறது என்கிறார். வள்ளலார்.

உண்மையை உணர்ந்து உறுதியுடன் வாழ்வோம் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
. .
அன்புடன் உங்கள் ஆன்மநேயன் ;-கதிர்வேலு

செவ்வாய், 25 அக்டோபர், 2011

தீப ஒளி நல் வாழ்த்துக்கள் !

தீப ஒளி நல் வாழ்த்துக்கள் !

ஆன்மநேய ஒருமைப்பாடு உரிமை உடைய அனைவருக்கும் தீப ஒளி நல்வாழ்த்துக்கள் .தீபாவளி எதற்க்காக வருகிறது என்பதை விளக்க வேண்டுமானால் கதைகளும் கற்பனைகளும் நிறைந்து உள்ளது .எப்படி இருப்பினும் நாம் தீபாவளியைக் கொண்டாடுவது தீபத்தை முன் வைத்துக் கொண்டாடுகிறோம் .அன்று நாம் அனைவரும் புத்தாடை உடுத்தி ,பட்டாசுகள் வெடித்து ,பலகாரங்கள் செய்து .உற்றார் உறவினர் ,நண்பர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம் உங்கள் உள்ளங்களில் நானும் கலந்து கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுகிறேன் .

ஆனால் அன்று ஒரு சில குடும்பங்களில் பல வாயில்லாத உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உணவாக சுவைத்து உண்கிறோம்,அவைகள் என்ன பாவம் செய்தது.இறைவன் படைப்பில் அதுவும் ஒரு உயிர் அல்லவா! நாம் மகிழ்ச்சி அடைவதற்காக அதன் உயிர்களை கொள்வது கடவுள் சம்மதம் ஆகுமா ? என்பதை சிந்திக்க வேண்டும் யாரோ அறியாமல் காட்டிய வழி முறைகளை நாம் பின் பற்றி செய்து வருகிறோம் அறிவுள்ள மனிதர்களாகிய நாம் சிந்திக்க வேண்டும் .

இந்த தீபாவளி திருநாளில் இருந்து உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருப்பதாக் இறைவனிடம் வேண்டிக் கொள்ளுங்கள் எல்லா உயிர்களும் உங்களை கடவுளாக கை கூப்பி வணங்கும் இதுவே நீங்கள் இறைவனுக்கு செய்யும் வழிபாடாகும் .

உங்கள் அனைவரையும் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் எந்த குறையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழி காட்டுவார்

அருட்ஜோதி தெய்வம் எனை ஆண்டு கொண்ட தெய்வம்
அமபலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் .
பொருட் சாரும் மறைகள் எல்லாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்த தெய்வம் உயர நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
எண்ணிய நான் எண்ணிய வாறு எனக்கு அருளும் தெய்வம்
தெருட் பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற சபையில் விளங்கு கின்ற தெய்வம் அதே தெய்வம் !

சிற்சபை என்பது கடவுள் உயிர் ஒளியாக எல்லா உயிர்களிலும் இருக்கும் இடமாகும் அதலால் உயிர்களை கொல்வது இறைவனைக் கொள்வதாகும் என் உயிரினும் மேலான நண்பர்கள் அனைவருக்கும் இந்த தீபாவளியை உயிர்க் கொலை செய்யாமல் மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் .உங்கள் அனைவருக்கும் தீப ஒளி நல வாழ்த்துக்கள் .
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆனமநேயன் --கதிர்வேலு

சனி, 15 அக்டோபர், 2011

ஏமாற்று பேர் வழிகள் !


ஏமாற்று பேர் வழிகள் !

வள்ளலார் வழியைப் பின் பற்றி வந்தவர்கள் எல்லாம் பகுத்தறிவு வாதிகள் என்பது உண்மையாகும் .

நம் தமிழ் நாட்டில் ,பாரதியார் ,பாரதிதாசன் ,போன்றவர்களும் பெரியாரின் பகுத்தறிவும் அண்ணாவின் உலக அறிவும் இரண்டையும் சேர்ந்த பொது அறிவுக்கு இரைபோடும் முன்னாள் தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்களும் மற்றும் உள்ள பகுத்தறிவு சிந்தனையாளர்களும் வள்ளலார் காட்டிய பாதை என்பதை மறைத்து அவர்கள் சொல்லியது போல மக்களிடம் போதித்து உள்ளார்கள் என்பது யாரும் மறுக்க முடியாது மறைக்கவும் முடியாது .

எது எப்படியார் சொல்லி இருந்தாலும் மக்களுக்கு அறிவு தெளிவு ஏற்பட்டால் போதுமானதாகும் .

இந்த உலகம் அறியாமையில் சாதி ,சமயம் மதம் என்ற பொய்யான கற்பனைக் கதைகளை உண்மை என்று நம்பி வாழ்ந்து அழிந்துக் கொண்டு இருந்த மனித சமுதாயத்தை திருத்துவதற்கு வந்தவர்தான் வள்ளலார் என்பவராகும் .ஆன்மீகம் என்ற பகுத்தறிவுக கொள்கையின் மூலம் மக்களை திருத்த வேண்டும் என்பதுதான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கை களாகும், அவரை இறைவனே அனுப்பி வைத்தார் என்பது அவர் எழுதிய அருட்பாவில் பதிவு செய்துள்ளார்.அதில் சந்தேகம் எதுவும் இல்லை .

வள்ளலார் கொள்கைகளை பின் பற்றும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்த சன்மார்க்கர்கள் கண்ட உண்மையாகும்

ஆனால் இன்று சமுதாயத்தில் என்ன நடந்து கொண்டு உள்ளது .

ஆன்மிகம் என்ற பெயரில் கடவுள் பெயரை கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் காவி உடை சாமியார்களும், துறவி, சந்நியாசி என்ற ஏமாற்றுப் பேர்வழிகளுக்கும் மற்றும் வேறு பல வழிகளில் போலி சாமியார்களும், புற்று ஈசல் போல் நாட்டில் பரவிக் கொண்டு வருகிறார்கள். மக்களும் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து வீண் போய்க் கொண்டு இருக்கிறார்கள்.

இதற்கு அடிப்படைக காரணம் பேராசையே. ஆசையே அழிவிற்கு காரணம் என்ற உண்மையை உணராத மக்கள் பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்து அழிந்து போய்க் கொண்டே இருக்கிறார்கள்.

ஏமாற்றுக்காரர்கள் முதலில் - அரசியல் வாதிகளையும், உயர் அதிகாரிகளையும், பெரும் பணக்காரர்களையும் அழைத்து அவர்கள் தலைமையில், யோகம், தவம், தியானம், மந்திரம் தந்திரம் அபிஷேகம், ஆராதனை, வழிபாடு போன்றவற்றை நடத்தி நம்பவைத்து ஏமாற்று வேலையை ஆரம்பிக்கிறார்கள்.

அதைப் பார்த்த மற்ற சமூகத்தில் உள்ள பெரியவர்களும், திரைத்துறையை சார்ந்த பிரபல நடிகர்களும் நடிகைளும் மற்றும் மக்கள் மத்தியில் அறிமுகமான தொழில் அதிபர்களும் மற்றும் பலரும் போக ஆரம்பித்,து விடுகிறார்கள்.

பெரிய, பெரிய ஆட்களே நம்பித் தானே போகிறார்கள் நாமும் போகலாம் என்ற ஆசைகள் மக்கள் மன்தில் தோன்றிவிடுகிறது. அதன் அடிப்படையில் நடுத்தர மக்கள் ஏமாந்து வீண் போக ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் சேர்ந்து விடுகிறது. ஏமாற்றுக்காரர்களுக்கு வேட்டையாட வசதியாகி விடுகிறது. பணம் பறிக்கும் வேலையை மிக சுலபமாக ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களுக்கு கவலையே இல்லாமல் போய் விடுகிறது.

சில பல போலி சாமியாகள் மாட்டிக்கொண்டாலும் மக்கள் திருந்துவதாக இல்லை. திருந்தவே மாட்டார்கள். சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக்கொண்டே இருந்தாலும் திட்டம் போட்டு திருடர கூட்டம் திருடிக்கொண்டே தான் இருக்கிறார்கள்.

இதற்க்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் வாதியல்களும் அரசியல் தலைவர்களும் பெரும் பணக்காரர்களும், அரை குறை ஆன்மிக வாதிகளும் உடந்தையாக இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

மாயைக்கும் கடவுளுக்கும் வித்தியாசம் என்ன என்பதே தெரியாத ஆன்மிக வாதிகள் எல்லா மதத்திலும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

இவ்வுலகை கடவுள் படைத்தாலும் கடவுளை இவர்களால் படைக்க முடியுமா? மனிதர்களால் கடவுளை படைக்க முடியாது என்பது உண்மை.

கடவுள் இவ்வுலகை படைத்தாலும் கடவுள் கட்டுப்பாட்டில் இவ்வுலகம் கிடையாது. பஞ்சம் பூதங்களான மாயையின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதை தெரியாத ஆன்மிக வாதிகளும் மக்களும் மாயா உருவங்களை கடவுள் என்றும் தத்துவங்களை கடவுள் என்றும் மனிதர்களை கடவுள் என்றும் நம்பி வீண் போய் கொண்டு இருக்கிறார்கள்.

இதனுடைய உண்மை இரகசியங்களை வள்ளலார் திரு அருட்பா நூலில் தெளிவாக எழுதி வைத்துள்ளார் வள்ளலாரைத் தவிர வேறு எந்த ஞானிகளுக்கும் தெரியாது என்றே சொல்ல முடியும்.

அதனால் தான் கோயில் ஆலயம், சர்ச் மசூதி, பிரமீடு போன்ற சமய மதங்களில் உள்ளது போல் அமைக்காமல் ஜாதி மதம் சமயம் ஆசாரங்கள் அற்ற எல்லோருக்கும் பொதுவாகிய உருவ வழிபாடு அற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை வடலூரில் 1872 -ஆம் ஆண்டு தோற்றி வைத்துள்ளார். ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார். அதற்காக வடலூரில் சத்திய தருமச் சாலையை 1867 -ல் துவங்கிவைத்துள்ளார். இன்று வரை ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய அன்னதானம் நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

வள்ளலார் தோற்றுவித்த சத்திய ஞான சபையில் வள்ளலார் கூறிய படி வழிபாட்டு முறையை செயல் படுத்தாமல் சமய மத வாதிகள் உள்ளே பகுந்து கொண்டு வள்ளலார் கருத்துக்களுக்கு மாறாக செயல் பட்டு வந்தார்கள்.

எங்களைப் போன்றவர்களின் எதிர்ப்புகளால் பல ஆண்டுகளாக போராடி பல ஆட்சியாளர்கள் செய்ய முடியாத காரியத்தை நீதி மன்றத்தின் வழியாக முன்னாள் தமிழக திராவிட முன்னேற்றக் கழக அரசு தீர்த்து வைத்தது அதற்க்காக வள்ளலார் வழியில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சமர சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் அன்பர்களின் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்து கொள்கிறோம்.

 கடவுள் உருவமற்றவர் கல்லிலும் செம்பிலும் தங்கத்திலும் மரத்திலும் மண்ணிலும் கடவுள் இல்லை கடவுள் ஒளி மயமானவர். அவர் எல்லா உடம்பிலும் உயிர் ஒளி யாக இயங்கிக்கொண்டு இருக்கிறார். அதைத்தான் ஆன்மா என்கிறார்கள். உள்ளமே பெருங் கோயில் ஊன் உடம்பே ஆலயம். ஆலயமான உடம்பில் வாழும் உயிர்களுக்கு தொண்டு செய்யுங்கள் கருணை புரியுங்கள் அதுவே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார்.

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்துதல் வேண்டும் என்றார். வள்ளலார்,வள்ளலார் கூறும் கடவுள் வழிபாடு ஜீவகாருண்யம். பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பதும் பிணி தாகம் இச்சை எளிமை பயம் நேரிடும் போது அவற்றை நிவர்த்தி செய்வதும் இறைவழிபாடு என்றார்.

இப்பொழுது பசி என்ற அரக்கன் ஓர் அளவு குறைந்து உள்ளது ஏழைகளின் பசியை போக்கிக் கொண்டு இருக்கிறார்கள். பட்டினி இல்லாமல் மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பசி பிணி இரண்டும் மனிதனை கொள்ளும் விஷமாகும் இவை இரண்டையும் முக்கியமாக கவனிக்க வேண்டியது அரசின் கடமையாகும் .பொது நல அமைப்புகளின் கடமையாகும் .சன்மார்க்கர்களின் கடைமையாகும் .

மக்கள் தொண்டே மகேசன் தொண்டாகும்.

மக்கள் தொண்டு என்ற பெயரில் போலி சாமியார்களும் போலி மடாதிபதிகளும் போலி ஆசிரமங்களும் போலி குடில்கள், போலியான யோகம ,தவம தியானம்,காயகல்பம்,குண்டலினிசக்தி,பேராற்றல் ,ஈஷா யோகம மனோ சக்தி, என்பனவற்றை வைத்துக் கொண்டு ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை நம்ப வைத்து,கோடி கோடியாய் பணம் சம்பாதித்து வாழ்ந்து வருகிறார்கள்,

இவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். தயவு தாட்சண்யம் இன்றி, போலிகளை கைது செய்து சட்டப்படி சிறையில் அடைக்க வேண்டும்.

நம் நாட்டிலே முறையான ஆன்மிகமும் இல்லை முறையான வழிகாட்டுதலும் இல்லை. ஆன்மிகத்தை பற்றி போதிப்பதற்கு ஆன்மிகவாதிகளின் தகுதி எப்படி இருக்க வேண்டும் என்ற கட்டும் பாடும் இல்லை.

அரை குறை எல்லாம் ஆன்மிகம் பேசுகிறது. அரை குறை எல்லாம் ஆன்மிக ஆன்மிக நூல்கள் எழுதுகிறது. அரை குறை எல்லாம் அதற்க்கு ஆதரவு தருகிறது. ஏதும் தெரியாத அப்பாவி மக்கள் பார்த்தும் கேட்டும் படித்தும் வீண் போய் கொண்டு இருக்கிறார்கள்.

இந்து மதம் மட்டும் அல்ல எல்லா மதங்களிலும் உலக மக்களின் அறியாமையை பயன் படுத்தி குழப்பி கொண்டு தான் இருக்கிறார்கள்.

கண்களுக்கு தெரியாத கடவுளை பற்றி யார் யார் எதை வேண்டுமானாலும் பேசலாம் எழுதலாம் வணங்கலாம் வழிபடலாம் கடவுள் பெயரால் கொலையும் செய்யலாம். என்ற மூட நம்பிக்கைகள் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை பரவிக் கிடக்கிறது. ஆதலால் தான் போலி சாமியார்கள் போலி வேடம் போட்டு மக்களை ஏமாற்றி கொண்டு  இருக்கிறார்கள்.

கடவுள் கொள்கையால் தான் இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம், மத வாதம் மிதவாதம், பயங்கரவாதம், நக்சல் பார்ட்டிகள், எல்லைத் தகராறுகள்,  அணு ஆயுதப் போர்கள், குண்டு வெடிப்பு போன்ற போர்கள் நடந்து கொண்டே தான் இருக்கிறது.

எல்லோரும் ஓர் குலம் எல்லோருக்கும் ஓரே இறைவன் என்பதை அறியாத சமய,மத வாதிகளால்தான் குழப்பமும் போராட்டமும் போர்களும் நடந்து கொண்டே இருக்கிறது. இதற்க்கெல்லாம் அடிப்படை காரணம் கடவுள் ஒருவரே! என்பதை அறியாத ஆன்மிக வாதிகளின் செயல்களாகும்.

ஆன்மீகத்தில் பகுத்தறிவு கொள்கைகளை விதைத்த வள்ளலார் அவர்கள் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க அமைப்பின் வழியாகவும் அவைகளை பின்பற்றி வாழ்ந்த பாரதியார்,பாரதிதாசன் மற்றும் பகுத்தறிவுப் பகலவன் பெரியாரின் கொள்கைகளையும் பேரறிஞர் அண்ணாவின் வழிகாட்டுதலையும் பின் பற்றி வாழ்வாங்கு வாழ்வோம் .

நம்முடைய மத்தியஅரசும் தமிழக அரசும் மூட நம்பிக்கைக்கு முடிவு கட்டுமா? எப்படியோ போகட்டும் என்று விட்டு விடுமா? பொறுத்து இருந்து பார்ப்போம் .


அரசும் அதிகாரிகளும் என்ன செய்ய போகிறார்கள், சட்டமும் நீதி மன்றமும் என்ன தீர்ப்பு வழங்க போகிறது என்பதை மக்கள் கவனித்து கொண்டு இருக்கிறார்கள்.


.இதை ஏன் எழுதுகிறேன் என்றால் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை பெரியார் அண்ணா மற்றுமுள்ள அனைவரும் நன்கு படித்தவர்கள்.உலக பொது மறையான திருக்குறள் எழுதிய திருவள்ளுவர் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு வழிகாட்டியவர். வள்ளலார் மனிதனாக எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியவர், வாழ்ந்து ஒளி தேகம் அடைந்தவர். மூட நம்பிக்கைகளையும் கலை உரைத்த கற்பனை களையும் குழி தோண்டி புதைத்தவர். ஜாதி மத சமய இன வேறுபாட்டை எல்லாம் பற்றற விட்டால் தான் மனிதனாக வாழ முடியும் என்றார் வள்ளலார்.

பெரியாருக்கும் அண்ணாவிற்கும் முன்னாடியே பகுத்தறிவு கொள்கைகளை நம் தமிழ் நாட்டில் விதைத்தவர். அவரை இன்னும் நம் தமிழக மக்கள் புரிந்து கொள்ள வில்லை. அவரை சமய வாதியாகவே சமய வாதிகள் போற்றி வருகிறார்கள். ஆதலால் அவருடைய முற்போக்கான பகுத்தறிவு கொள்கைகள் மக்கள் மத்தியில் முடங்கி கிடக்கிறது. அவர்களிடம் இருந்து வள்ளலாரையும் அவர் எழுதிய திரு அருட்பாவையும் காப்ற்ற வேண்டியது நமது சுத்த சன்மார்க்கிகளின் கடமையும் தமிழக அரசின் கடமை யாகும்.

திரு அருட்பா முழுவதும் அறிவியல், வேதியல், விஞ்ஞானம், மெய்ப்பொருள் அடங்கியதாகும். உலக ஆராய்ச்சிக்கு பயன்படக் கூடியதாகும்.

வள்ளலார் தமிழில் தமிழ் நாட்டில் பிறந்ததற்காக இறைவனுக்கு பாராட்டுதலும் நன்றியும் பெருமையும் அடைவதாக தன் அருட்பாவில் குறிப்பிடுகிறார்.தமிழ் இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மொழி என்று உறுதிப்பட பதிவு செய்துள்ளார் தமிழ் மெய்மொழி என்றும், எல்லா மொழிகளுக்கும் தந்தை மொழி என்கிறார் உலகிலேயே முதன் முதலில் தோன்றிய மொழி தமிழ் மொழி என்கிறார்.

மனிதன் உயிரையும் உடம்பையும் உலகத்தையும் அறிந்து கொள்ள மொழி என்ற வரிவடிவம் சபதம் என்ற ஒலி வடிவம் வெளிச்சம் என்ற ஒளி வடிவம் தேவைப்பட்டது அதற்கு மொழி என்ற எழுத்துக்கள் தேவைப்பட்டது .அந்த மொழிதான முதன் முதலில் இறைவனால் தோற்று விக்கப் பட்ட மொழி தமிழ் மொழி என்கிறார் வள்ளலார்
 .
ஆதலால் இறைவன் சிறசபையாகிய ஆன்மாவில் விளங்குகிறார் செந்தமிழில் வாழ்கிறார் என்கிறார் வள்ளலார் .சாகாத கல்வியை கற்றுக் கொடுக்கும் மொழி தமிழ் என்கிறார் தமிழ் மொழியைக் கற்போம் காகாத மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்வோம் ..
 
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கடவுள் ஒருவரே !
அவர் அருட்பெரும் ஜோதியாக உள்ளார் !

நன்றி

தங்கள் ஆன்மநேயன்
செ.கதிர்வேல்.

மேலும் பூக்கும் 

செவ்வாய், 11 அக்டோபர், 2011


kathir -Your confirmed eligibility for 1 crore Sweepstakes
இன்பாக்ஸ்
X

பதிலளிபதிலளி
மேலும்
அனுப்புனர்Bag It Today salesupdate@bagittoday.comvertical.cleanmail.in மூலம் 
பெறுநர்aanmaneyan.kathirvelu@gmail.com
தேதி11 அக்டோபர், 2011 2:09 am
தலைப்புkathir -Your confirmed eligibility for 1 crore Sweepstakes
அஞ்சல் அனுப்பியவர்vertical.cleanmail.in
குழுவிலகுஇந்த அனுப்புநரிடமிருந்து குழுவிலகு

விவரங்களை மறை 2:09 am (17 மணி நேரத்திற்கு முன்பு)


If you are not able to view this email properly, Please view it online by clicking here.
To ensure delivery to your inbox, please add [salesupdate@bagittoday.com] to your address book

Bag It TodayThe India Today Group
Rs. 1,00,00,000.00 Fortune

Awarded to

kathir
Congratulations! Lady luck seems to be smiling on you. You have qualified to enter the Final Stage of our Rs. 1 Crore Fortune and you have an incredible opportunity to win this in our Rs 1 Crore Sweepstakes Program. This can change your life completely.

After a rigorous process of selection, your name was chosen for the final stage of our Rs. 1 Crore Fortune wherein you stand a chance to win Rs. 10,00,000.00 Grand Prize.

The Eligibility Certificate issued in your name is an attestation of your entry to the Rs.1,00,00,000.00 Fortune. But make sure you validate your eligibility to become the Grand Prize winner by getting your Fortune Passcode.

Yours sincerely,

Nitin Sawhney
Award Administrator
Bag It Today
Click here to get your Fortune PassCode
Grand Prize:
First Prize:
Rs. 10,00,000.00
Rs.   2,00,000.00
Second Prize:
1700 Bag It Today Prizes worth:
Rs.   1,00,000.00
Rs. 87,00,000.00
Click here to meet our previous year winners

சனி, 8 அக்டோபர், 2011

உலகம் என் வசம இருந்தால் !


உலகம் என் வசம இருந்தால் !

1)  சாதி ,சமயம் .மதம் .என்ற கொள்கைகளையும் ,கோட்பாடுகளையும் .மக்கள் மனதில் இருந்து எடுத்து விடுவேன் .பொய்யான கற்பனைக் கதைகளை  விளக்கும் நூல்களை அதாவது புத்தகங்களை மண்ணைப் போட்டு மறைத்து விடுவேன் .

2) கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதியர் !அவர் ஒளியாக உள்ளார் அவர்தான் இந்த உலகத்தை இயக்கக் கொண்டு உள்ளார் என்பதை உலகுக்கு தெரியப் படுத்துவேன் .

3) உலகில் உள்ள ஆலயங்கள் .மசூதிகள் .சர்ச்சுகள் .போன்ற இறைவன் வழிபாட்டுத் தளங்கள் அனைத்திலும் ,உருவ வழிபாட்டை அப்புறப் படுத்தி ஒளி வழி பாட்டை அமல் படுத்துவேன் .

4) உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவன் வாழும் ஆலயம் என்பதை உணர்த்தி உயிர்க் கொலையும் புலால் உண்ணாமல் இருக்கவும் மக்களுக்கு தெளிவுப் படுத்துவேன் .

5) மக்கள் நலமுடன் வாழ்வதற்கு உணவு முக்கியம் என்பதை தெளிவுப் படுத்தி பசுமைப் புரட்ச்சி செய்து விவசாயம் தன்னிறைவு அடையச செய்வேன்

6) காடு ,வனம,மலை மற்றும் ,ஆடு,மாடு,போன்ற கால் நடைகள் முதலியவைகளை அழிக்காமல் அதனால் வரும் கழிவுப் பொருள்களை பயன் படுத்தி இயற்கை உரங்கள் தயாரித்து விவசாயத்திற்கு பயன் படுத்துவேன் .

7}மனிதன் மனிதனாக வாழ்வதற்கு சந்தைப் படிப்பை அகற்றி ,நம் சொந்தப் படிப்பான சாகாக் கல்வியை மக்களுக்கு போதிக்க செய்வேன் .

8) அனைத்து மக்களுக்கும் உண்ண உணவு ,உடுக்க உடை ,இருக்க இடம் அதாவது வீடு .சரி சமமாக வாழ்வதற்கு வகை செய்வேன் .

9) பஞ்சம் .பட்டினி ,வறுமை, ஏற்றத் தாழ்வு ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் .ஏழை ,பணக்காரன் என்ற கொடுமையான அரக்கனை இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விடுவேன் .

10) எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் சமமான ஊதியம் அதாவது சம்பளம் வழங்குவேன் .வேளைகளில்அதாவது உழைப்பில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இல்லாமல் இருக்க வழி செய்வேன்

11}மதுக் கடைக்களும்,மாமிசக் கடைகளும் உலகில் எங்கும் இல்லாமல் செய்து மக்களுக்கு உணர்த்தி மக்களை நல்வழிப் படுத்துவேன் .

12)காவல்துறை ,எல்லைப் பாதுகாப்பு,ராணுவம்,தனி மனித பாதுகாப்பு,நீதி மன்றங்கள் எதுவும் மக்களுக்கு தேவையற்றது என்பதை உறுதி செய்வேன் .குற்றம் செய்யாத மனித சமுதாயத்தை உருவாக்குவேன்

13) மக்களை அழிக்கும் ஆணு ஆயுதம் ஆணு குண்டு,போர்ப் படை,அதிகார துஷ்பிரயோகம் போன்ற கொடுமையான தீய சக்திகளை நாட்டை விட்டு விளக்கி விடுவேன் .

14) கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது.வேறு திருமணம் செய்துக் கொள்ளக் கூடாது.அதேபோல் மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது என்பதை உணர்வு பூர்வமாக உணர வைப்பேன்.

15) மக்களுக்கு இயற்கை மரணம் வரவேண்டுமே ஒழிய செயற்கை மரணம் வரக்கூடாது என்பதை பாதுகாப்பேன்.மரணம் வந்தால் உடலை புதைக்க வேண்டுமே தவிர எரிக்க கூடாது என்பதை அறிவியல் ரீதியாக உணர்த்துவேன் .

16) உலகம் இப்போது வெப்பமயமாகிக் கொண்டு இருப்பதற்கு காரணம் பிணத்தை எரிப்பதும் ஒரு காரணமாகும் .வாயில்லாத ஜீவன்களாகிய ஆடு மாடு ,பன்றி,கோழி ,மீன்கள் போன்ற உயிர்களை கொலை செய்வதால் ,உயிர்களில் இருந்து வரும் உயிர் ஆற்றல் என்னும் மின் காந்த சக்திதான் வெளியே வந்து அனுக்களோடு கலந்து வெப்பமாகிறது .அதனால் உயிர்க் கொலை செய்யாமல் உலகைப் பாது காப்பேன.   

17}உலகியல் கல்வியான சாகும் கல்வியை எடுத்துவிட்டு காகாக் கல்வியான அருள் கல்வியை அனைவருக்கும் போதிக்க வழி செய்வேன் .

18} அரசியல் என்ற கொள்கையை குழியைத் தோண்டி புதைத்து விடுவேன் .நாட்டை பாது காக்க அருள் கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களை நாட்டை ஆளும் உரிமையை வழங்குவேன் .அவர்களுக்கு அருள் நயந்த நன்மார்க்கர்கள் என்ற பட்டத்தை கொடுத்து வரிசைகரமாக ஆட்சி பீடத்தில் அமர்த்துவேன் .

19}உலகில் உள்ள மனித தேகம் படைத்தவர்களை மரணம் அடையாமல் ஒளி தேகமான அருள் தேகம் பெற்று ,மெய்ப் பொருளான அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இருக்கும் இடத்திற்கு ஒவ்வொருவராக அனுப்பி வைப்பேன் .ஏன் என்றால் அனைவரும் அங்கு இருந்து தான் வந்தவர்களாகும் .வந்த இடத்திற்கு அனுப்பி வைப்பதுதான இயற்கை சட்டமாகும் .அந்த சட்டத்தை முழுமையாக்கப் பாடுபடுவேன் .

20} உலக உண்மைகளையும் உலகம் எப்படி படைக்கப் பட்டது ,உயிர்கள் எங்கு இருந்து வந்தன உயிர்த் தோற்றங்கள் எப்படி உருவானது ஏன் உருவானது ஏன் அழிகின்றது ,அழியாமல் அதாவது மரணம் அடையாமல் இருக்க என்ன வழி என்பதை சாகாக் கல்வியின் மூலம கற்பித்து அனைவரையும் மெய்ப் பொருளை அடையச செய்வேன்

21}உலகில் உள்ள அணுக்கள் எத்தனை வகைகள் அவைகளின் வேலைகள் என்ன ?அதன் சேர்க்கைகள் எப்படி நடை பெறுகிறது ,என்ன என்ன அணுக்கள் சேர்ந்து உருவங்களை உருவாக்குகிறது ,உயிருள்ள அணுக்கள் ,உயிர் இல்லாத அணுக்கள் ,அதன் தோற்றங்கள் மாற்றங்கள் அனைத்தையும் .அறிவியல் விஞ்ஞானம் .உளவியல் அருளியல், மூலம அறிய உலக அளவில் பல்கலைக் கழகங்கள் அமைத்து உண்மை அறியும் வகை செய்வேன் ,

22}மக்கள் அனைவரும் ஒத்தார் உயர்ந்தார் தாழ்ந்தார் என்ற பேதம் இல்லாமல் துன்பம் என்ன என்று தெரியாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அருள் நயந்த நன் மார்க்கர்களைக் கொண்டு நல் ஆட்சியை நிரந்தரமாக நடத்த செய்வேன்

23}மக்களுக்கு உண்மை என்பது எது ?பொய் என்பது எது ?என்பது தெரியாத மக்களுக்கு ஒட்டு உரிமையைக் கொடுத்து அவர்களால் தேர்வு செய்யம் அரசியலை அழித்து விடுவேன் .அவர்களால் தேர்வு செய்யும் அரசியல் வாதிகள் நாட்டை அழித்துக் கொண்டு உள்ளார்கள் எம்பதை மக்களுக்கு புரிய வைப்பேன் .

24}உண்மையை உணர்த்தும் அருள் சட்டத்தை உருவாக்குவேன் .ஒவ்வொருவரும் அருளாளர்களாக வாழ வழி வகுப்பேன்.பேராசை இல்லாத சமுதாயத்தை உருவாக்குவேன் .காமம் குரோதம் லோபம் ,அகங்காரம் ஆச்சர்யம் இல்லாத புனித முறு சுத்த சன்மார்க்க சமுதாயத்தை உருவாக்குவேன் .

25}எல்லோருக்கும் பொதுவான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை அமைத்து அதன் வாயிலாக மக்களை ஒழுக்க நெறியில் வாழ வைப்பேன் .மனிதனை மனிதனாக வாழ வைப்பேன் .அதன் பின் மனிதன் தெய்வ நிலைக்கு செல்லும் வழிக் காட்டுவேன் .

26} மாயை ,சாத்தான் ,சைத்தான என்பது அனைத்தும் ஒன்றுதான.அந்த மாயை உலகத்தில் வாழும் நாம அதைனிடம் இருந்து விடுபட்டு புனிதர்களாக வாழ்வதற்கு,மாயையை மனிதர்களுக்கு கட்டுபட வைப்பேன் .

27}இதுவரை மக்களுக்கு போதித்த அனைத்து,சமய, மத வாதிகளும்  அருளாளர்களும் மாயையில் சிக்குண்டவர்கள் அவர்கள் கருத்துக்கள் அனைத்தும் பொய்யான கற்பனை கதைகளாகும் சாத்தானின் வேதங்களாகும் .அதனால்தான் மக்கள் ஆன்மநேயம் ,மனித நேயம் இல்லாமல் பேதங்களும்,குழப்பங்களும் உருவாக்கி விட்டன.அதனால் மனித இனம் அழிந்து கொண்டுள்ளன .அதிலிருந்து மீட்டு மக்களை காப்பாற்றுவேன் .

28}மரணம் என்பது இன்றுவரை இயற்கை என்று இருந்தார்கள் .அவை இயற்கை அல்ல !நாம் வாழும் வாழ்க்கை முறையானது அல்ல ,அதனால் மரணம் செயற்கை யால்தான் வருகிறது ,மனிதன் மரணம் அடையாமல் அருள் தேகமான ஒளி தேகம் பெற்று பேரின்பமான பெரிய வாழ்வைப் பெற்று கடவுள் நிலையை அடையலாம் என்பதை சாகாக் கல்வி மூலம பயிற்சிக் கொடுத்து மரணம் அடையாமல் இருக்க வழி வகை செய்வேன்.

மேலும் பூக்கும் ;--
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு.    
. ,..  

வியாழன், 6 அக்டோபர், 2011

சந்தைப் படிப்பு எது ! சொந்தப் படிப்பு எது ?


மனிதனை திருத்த உலகில் எத்தனை நூல்கள்!

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து இன்று வரை மனிதரகளை திருத்த எண்ணில் அடங்காத அறிவு நூல்கள் எழுதி வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள் .இன்று வரை மக்கள் திருந்தியதாக தெரியவில்லை .ஏன் ?எழுதியவர்கள் குற்றமா ?எழுதிய கருத்துக்கள் குற்றமா ?மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லையா?அவற்றை ஏற்றுக் கொள்ளும் அளவிர்க்கு மக்களுக்கு தெளிவு இல்லையா ? ஒண்ணுமே புரியவில்லை .உண்மையிலே மக்கள் மீது அக்கறை உள்ளவர்கள் யாரோ சொல்லியதை யாரோ எழுதி வைத்தியதை பார்த்து படித்து பதிய வைத்ததையே வாந்தி எடுத்துக் கொண்டு உள்ளார்கள் .

அதனால் மக்கள் மனதையும் அறிவையும் மாற்ற முடிய வில்லை ஏன் என்றால் இவர்கள் சொல்லிய கருத்துக்கள் யாவும் அவர்களுக்கும் தெரியும் இந்த உலகத்தில் இல்லாத எந்த கருத்துகளும் புதியவை அல்ல அரைத்தையே அரைத்துக் கொண்டு உள்ளார்கள் .ஒரே கருத்து வேறு வேறு கோணங்களில் மக்களுக்கு பதிவு செய்கிறார்கள் .அதனால் மக்களை நல்வழிப் படுத்தும் உண்மையான கருத்துக்கள் சொல்லும் தகுதி யாருக்கும் இல்லை .

மக்கள் சமுதாயத்திற்கு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று முதன் முதலில் அறிவு நுல் எழுதி வைத்து இப்படித்தான் வாழ வேண்டும் என்று பதிவு செய்து வைத்தார்களே !அவர்கள் செய்த அறியாமை களாகும் .அவர்கள் உண்மையைச சொல்லி இருந்தால் மக்களும் உண்மையை அறிந்து அதன்படி வாழ்ந்திருப்பார்கள் .உண்மையை மறைத்து குழித் தோண்டி புதைத்து விட்டார்கள் .

அதற்கு பின்னாடி வந்த பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்களும் ,முத்தர்களும் சித்தர்களும் யோகிகளும் ஞானிகளும் முன்னுக்கு பின் முரணாகவே சொல்லி வைத்து விட்டார்கள் .அவர்களை பின் பற்றி வந்த மனிதர்கள் அவரவர் பின் பற்றும் கருத்துகள் தான உயர்ந்தது என்றும்  உண்மை எது என்று தெரியாமல் புரியாமல் அறியாமல் போட்டிப் பொறாமை பேதம் கொண்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்

அன்று முதல் இன்று வரை இதுதான் நடந்து கொண்டு வருகின்றன.இனி மக்கள் என்ன செய்ய வேண்டும் .எல்லா மனிதர்களுக்கும் இந்திரியம் கரணம் ஜீவன் ஆன்மா என்னும் அமைப்புகள் மனிதனுடைய உடம்பில் வைக்கப் பட்டு உள்ளன,இவற்றை படிப்பால் அறிய வேண்டியது இல்லை எல்லாம் இறைவனால் கொடுக்கப் பட்டது

இவற்றை அறிந்து கொள்ள ஒழுக்கம் தான் தேவைப் படுகிறது அந்த ஒழுக்கம் எது என்றால் இந்திரிய ஒழுக்கம்,காரண ஒழுக்கம் ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் .என்பதாகும் .இந்த ஒழுக்கம் தெரிந்து கொள்ள அனைத்து உயிர்களிடத்தும் அன்பு, தயவு, கருணை என்னும் இரக்கத்தை வர வழைத்துக் கொள்ள வேண்டும் .அப்படி வர வழைத்துக் கொள்ள படிப்பு அறிவு தேவை இல்லை ,  

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே
நரர் களுக்கும் சுரர் களுக்கும் நலம் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற சிவமே
என் அரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !
  
அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் அறிவு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் அனைத்து உண்மைகளும் தன்னைத் தானே தெரியவரும் .அப்போது மனிதன் மனிதனாக வாழ்ந்து கடவுள் நிலை அறிந்து அம் மயமாகலாம் இதுவே இறை நிலையை அடையும் உண்மையான வழியாகும்

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவமாகின்றது
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம்

அதனால் அருளைப் படிப்பால் அறிய வேண்டியது இல்லை உலகியல் படிப்பு சந்தைப் படிப்பு ,நம் சொந்தப் படிப்பு ஒழுக்கம் தான் என்பதை உணர்ந்து உண்மையை அறிந்து உயர்ந்த நிலையை அடைவோம் .

ஒரு உண்மைப் பாடல் ;--

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட்  கொண்டது எல்லாம் குறையே
உலகிலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைப் பிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து
எண்டகு சிற்றம் அமபலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;--கதிர்வேலு .