வெள்ளி, 25 டிசம்பர், 2015

மனைவி இல்லாத தனிமை மிகவும் கொடுமையானது

மனைவி இல்லாத தனிமை மிகவும் கொடுமையானது

எங்களுக்கு திருமணம் நடந்து 49,ஆண்டுகள் ஆகின்றது.எங்களுக்குள் சிறு சிறு சண்டைகள் வந்தாலும் அப்போதே மறந்து சுமார் ஒருமணி நேரத்தில் சரியாகிவிடும்.

இதுவரையில் சண்டையிட்டுக் கொண்டோ ,கோபித்துக் கொண்டோ என்னுடைய மனைவி தாய் வீட்டிற்கோ ,சொந்தம் பந்தம் வீட்டிற்கோ சென்றதில்லை.

நான் வெளியூர்களுக்கு அதிகம் தொழில்  ரீதியாகவும் சொற்பொழிவு செய்யவும் சென்றுவிடுவேன் .நான் எப்போது வீட்டிற்கு வந்தாலும் என்மனைவி வீட்டில் இல்லாமல் இதுவரையில் இருந்தது இல்லை.

என்னுடைய மனைவி என்னை விட்டுவிட்டு வெளியூர் தனியாக எங்கும் சென்றதில்லை, உறவினர்கள் வீட்டுக்கு சென்றாலும் ,சுற்றுலா சென்றாலும்,திருமண வைபவங்களுக்கு சென்றாலும் வெளியூர்களுக்கு சென்றாலும் இருவரும்தான் போவோம் ,

எங்கள் மனைவியின் தங்கை பேத்தி வீடு பூனாவில் உள்ளது அவர்கள் அவசியம் வரவேண்டும் என்று அன்புடன் பலமுறை அழைத்தார்கள் .என்னால் வரமுடியாது உங்கள் ஆக்காவை வேண்டுமானால் அழைத்துபோங்கள் என்று சொல்லிவிட்டேன் அவர்களும் சரி என்று சொல்லி விட்டார்கள். .

என்மனைவி நீங்கள் வராமல்  நான் போகமாட்டேன் என்று சொல்லிவிட்டார் .

உங்களின் தங்கையின் குடும்பம் மற்றும் அனைவரும் போகிறார்கள் நீங்களும் அவர்களுடன் போய்விட்டு வாருங்கள் அம்மா என்று, என்னுடைய மகன் ஆகாயவிமான டிக்கெட் எடுத்துக் கொடுத்து அனுப்பி விட்டான் .

அப்போதும் என்னுடைய அனுமதி கேட்டுத்தான் சென்று உள்ளார்கள் .நானும்  அவர்களுடன் சென்று வழி அனுப்பிவிட்டு வந்து விட்டேன்.

அவர்கள் போய் பதினைந்து நாட்கள் ஆகின்றது வருகின்ற ஐந்தாம் தேதிதான் வருவார்கள்.

தினமும் போனில் பேசிக் கொண்டுதான் உள்ளோம்.இருந்தாலும்.

தனிமையின் சோகம் !

அவர்கள் சென்று விட்டார்கள் நானும் அனுப்பிவிட்டேன் .ஆனால் மனைவி இல்லாமல் வீட்டில் தனியே இருக்கவே முடியவில்லை.தனிமையின் அவத்தையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை .

வீடு எதோ ஒன்றை இழந்து விட்டது போல் உள்ளது.தூக்கம் வரவில்லை,படிக்க முடியவில்லை உணவு உண்ண முடியவில்லை.டிவி பார்க்க முடியவில்லை ,எந்நேரமும் மனைவியின் நினைவாகவே உள்ளது .

எனக்கு பாதுகாப்பாய் இருந்த ஒரு பொருள் இல்லாமல், அந்த இடம் வெற்று இடமாக உள்ளதுபோல் தோன்றுகின்றது.

வீட்டில் உள்ளவர்கள் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள் அதில் எந்த குறைபாடும் இல்லை.

ஆனால் வீடு இருள் அடைந்ததுபோல் உள்ளது. ..மனைவி இல்லாமல் ஆண் தனிமையில் உள்ளது மிகவும் கொடுமையானது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது..

ஆண் இல்லாமல் பெண் தனிமையில் இருந்துவிடலாம் .ஆனால் பெண் இல்லாமல் ஆண் தனிமையில் இருப்பது நினைத்துப் பார்க்க முடியாத சோகமாகும்.

அதனால் தான் ஆண்களுக்கு பெண்கள் மனைவி என்றும்  ,துணைவி என்றும்  பெயர் வைத்தார்கள் போலும்.மேலும் இல்லாள் என்ற பெயரும் உண்டு.

இல்லாள் இல்லத்தில் இல்லை என்றால் எது இருந்தும் பயன் இல்லை.

கணவனும் மனைவியும் அன்புடன் வாழ்ந்து விட்டால் பிரிவது என்பது எவ்வளவு கடினமானது .சகித்துக் கொள்ளவே முடியாது என்பது தனிமையில் இருக்கும் போதுதான் அந்த துன்பம் எப்படி உள்ளது என்பது தெரிகின்றது.

பெண்கள் இல்லாத வீடு பேய் வாழும் வீடு போல் உள்ளது.

இறைவன் படைப்பு எவ்வளவு அதிசயமானது,ஆச்சரியமானது, அனுபவமானது .

ஏன் இதை எழுதுகிறேன் என்றால் பெண்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் இருளைப் போக்கும் விளக்காக விளங்கக் கூடியவர்கள் என்பதை ஆண்கள் புரிந்து கொண்டு பெண்களை பாது காக்க வேண்டும்.

சமையல் செய்யமட்டும் பெண்கள் அல்ல...குடும்பத்தின் மேல்.. கணவன் மேல்.குழந்தைகள் மேல்.. குடும்ப நிர்வாகத்தின் மேல்.சுற்றத்தார்களின் மேல்   அதிக அன்பு செலுத்துபவர்கள் பெண்கள் தான் என்பதை ஆண்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது ....

அன்பின் வழியது உயிர் நிலை அக்திலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு .......என்கின்றார் திரு வள்ளுவர் .

ஒரு வீட்டில் கணவன் மனைவி பிரியா அன்பு செலுத்தினால் அங்கே அறம் தழைக்கும்.உயிர் பாது காக்கப்படும்...இல்வாழ்க்கை பயன் உள்ளதாக இருக்கும், அந்த வீடு மகிழ்ச்சியுடன் விளங்கும்.என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ...


வியாழன், 24 டிசம்பர், 2015

நடிகர் சின்புவின் விவகாரம் சதி திட்டம் !

நடிகர் சின்புவின் விவகாரம் சதி திட்டம் !

அரசியலின் திட்டமிடப்பட்ட சதியாகும்

மக்களை திசை திருப்பும் வழியாகும்.

மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு ,அரசையும் அதிகாரிகளையும் மக்கள் தூற்றி வருகின்றார்கள்

மழை வெள்ளம் பாதிப்பிற்கு அரசுதான் முழுமுதற் காரணம் என்று மக்களும்,மீடியாக்களும் பத்திரிகைகளும் டிவிக்களும் பறை சாற்றிக் கொண்டு இருக்கின்றன ,

அவற்றை மாற்று வதற்காக ஆளும் கட்சிக் கார அரசியல் வாதிகள் மக்களை தூண்டிவிட்டு நடிகர் சிம்புவின் விவகாரத்தை பெரிதுபடுத்தி கிளப்பி விட்டு வேடிக்கைப் பார்த்துக் கொண்டு உள்ளார்கள் .

மக்கள் பழையதை மறந்து புதியதை எடுத்துக் கொள்வார்கள் என்பது ஆட்சியாளர்களுக்கு நன்றாகவே தெரியும்.அதனால் சிம்புவின் விபகாரம் பெரிதாக்கப் பட்டு உள்ளது.

பாவம் நடிகர் சிம்பு ..அவரின் தந்தை தாய் அவரின் குடும்பமே மிகவும் நொந்து போய் உள்ளார்கள்.மக்களாவது ஆதரவு தரவேண்டும்.

அவர் செய்தது பெரிய தேச துரோகம் அல்ல ..சிறுபிள்ளை விளையாட்டு என அறிந்து பொது மக்கள் மறப்போம் மன்னிப்போம்.மனிதநேயத்தோடு துணையாக இருப்போம்.

கண்டதற்கு எல்லாம் கோஷம் போடும்,சங்கங்கள் ,பொதுநல அமைப்புகள்,மாதர் சங்கங்கள் மேலும் அரசியல் தலைவர்கள் ,  அரசியல்வாதிகள் இப்போது என்ன செய்து கொண்டு உள்ளார்கள்.சிந்திக்க வேண்டும் .

சிம்பு விபகாரம் .
நடிகர் சிம்புவின் பீப்சாங் பாடல் பதிவு பெண்களின் மத்தியில் பெரும் பரபரப்பை என்ற்படுத்தி உள்ளது.அனைவருக்கும் தெரிந்ததே .
ஆனால் இவ்வளவு பெரிய பிரச்சனை வரும் என்று தெரியாமல் சிறுபிள்ளைத் தனமாக செய்துவிட்டார் .
அவற்றை மேலும் பெரிது படுத்தாமல் மறப்போம் மன்னிப்போம் என்று விட்டுவிடுவது நலம் என்று கருதுகிறேன்.
சிம்புவின் தாயாரும் தந்தையும் தன்னுடைய மகனுக்காக உருக்கமாக பேசுவது ஒவ்வொருவரின் கண்ணீரும் கலங்க வைக்கின்றது.
எனவே மனித நேயத்தோடு சிம்புவின் மேல் சுமத்திய குற்றசாட்டுகளை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் இதுபோல் தவறுகள் இனி வருங்காலங்களில் எவரும் செய்யாமல் இருக்க இது ஒரு அடையாளமாக இருக்க வேண்டும்.
நாட்டில் செய்யக் கூடாத தவறுகள் எல்லாம் செய்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தியும் தண்டனைக் கொடுத்தும் பணத்தை வைத்து நீதி மன்றத்தையே விலைக் கொடுத்து வாங்கி வெளியே வந்து தைரியமாக உலாவிக் கொண்டு இருக்கின்றவர்கள் இருக்கின்றார்கள்
நாட்டையே அழித்துவிட்டும் கொலைக் குற்றங்கள் பல செய்தும் விட்டும் வாழ்ந்துகொண்டு இருப்பவர்களை எல்லாம் மன்னித்து ஏற்றுக் கொண்டு உள்ளீர்கள்
சிம்பு செய்தது சிறு பிள்ளை விளையாட்டுத்தனம் போன்றது .அவற்றை மேலும் பெரிதுப் படுத்தாமல் மன்னிக்க வேண்டியது தமிழ் நாட்டின் மக்களின் மனித நேயமாகும்.
நம்மமுடைய குழந்தை தவறு செய்து விட்டால் மன்னிப்போம் இல்லையா ..அது போல் சிம்புவை மன்னித்து அவர்மேல் உள்ள குற்றச்சாட்டுகளை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு ஆன்மநேயத்துடன் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்
மேலும் காவல்துறையும் ,தமிழக அரசும் நீதி மன்றமும் சிம்புவுக்கு கருணை புரிய வேண்டும்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வேதனையில் பெரிய வேதனை !

வேதனையில்  பெரிய வேதனை !

வேதனைகளில் தாங்கிக் கொள்ள முடியாதது ..,

நரக வேதனை,...ஜனனவேதனை,..மரண வேதனை .இந்த மூன்று வேதனைகள்  தான் தாங்க முடியாத வேதனைகளாகும் .

இந்த மூன்று வேதனைகளை விட கொடுமையான பெரிய வேதனை ''பசி வேதனை ''என்று வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளார் .

நரக வேதனை,ஜனன வேதனை,மரண வேதனையைத் தாங்கிக் கொள்ளலாம் பசி வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாது.

பசி வந்தால்'--நெருப்பு சுடுவதுபோல் இருக்கும்,

விஷக் காற்றை சுவாசிப்பது போல் இருக்கும்,

உடம்பு பாழாகுவது போல் இருக்கும்

உடம்பில் உள்ள உறுப்புக்கள் இயங்க முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கும்,

புலி வந்து கொல்லுவது போல் இருக்கும்.

விஷம் தலைக்கு ஏறுவது போல் இருக்கும்.

தேள் வயிற்றின் புகுந்து கொட்டுவது போல் இருக்கும்.

விஷப் பாம்பு உடல் முழுவதும் விஷத்தை கக்குவது போல் இருக்கும்

இவ்வளவு கொடுமைகளும் துன்பங்களும் வேதனைகளும் பசி வந்த காலத்தில், எல்லா ஜீவன் களுக்கும் பொதுவாகவே உண்டாகும்

அதனால்தான் பசி என்பது இறைவனால் கொடுக்கப் பட்ட ஒரு உபகாரக் கருவி என்றார் வள்ளல்பெருமான்.

இறைவனால் கொடுக்கப்பட்ட உபகார கருவியைக் கொண்டு உபகாரம் செய்ய வேண்டும் .அதற்குப் பெயர்தான் பரோபகாரம் என்பதாகும் .

அந்த கொடுமையான பசி வேதனையைப் போக்குகின்றவர்களே ,கடவுளும் ஆவார்கள்  கடவுளைக் காணும் அருளைப் பெறுவதற்கும்  தகுதி உடையவர் என்று தெளிவாக விளக்கி உள்ளார் ...

எனவே தான் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ''ஜீவ காருண்யம் என்னும் பரோபகாரமே கடவுள் வழிபாடு'' என்றார் .

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார்.

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார்.

திறவுகோல் என்பது ! அருள் என்பதாகும்.

அருள் பெற்றால்தான் கடவுள் வீற்று இருக்கும் மேல் வீட்டின் கதவு திறக்கப்படும் .

திறவுகோல் என்பது சாவி அல்ல .அதற்கு அருள் என்னும் பொருளாகும்.பெயராகும் .

வள்ளலார் சொல்லிய ''சுத்த சன்மார்க்கம்'' ஒன்றுதான் அருளைப் பெரும் வழியைக் காட்டி உள்ளது.

வள்ளலார் பதிவு செய்துள்ள அகவலில் உள்ள வரிகளை நன்கு படித்து அதில் உள்ள மெய்ப் பொருளை நன்கு அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எல்லாம்
இருள் நெறி என இயம்பிய சிவமே !

அருள் பெறிற் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்
தெருள் இது எனவே செப்பிய சிவமே !

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !

அருள் சுகம் ஒன்றே அரும் பெறற் பெருஞ்சுகம்
மருட்சுகம் பிறவென வகுத்த மெய்ச்சிவமே !

அருட்பேர் அதுவே அரும் பெறற் பெரும் பேர்
இருட் பேர் அறுக்கும் என்று இயம்பிய சிவமே !

உலகில் உள்ள எல்லா நெறிகளும் இருள் நிறைந்த நெறிகளாகும்,சுத்த சன்மார்க்கம் ஒன்றே இருளை அகற்றி அருளைத் தரும் மார்க்கமாகும்.

மேலே உள்ள வரிகளில் வள்ளலார் சிவமே சிவமே என்று சொல்லுகின்றார் .அவை சைவ சமயத்தில் சொல்லிய சிவம் அல்ல ..சிவம் என்பது ஒளியைக் குறிப்பதாகும்

அருபெருஞ்ஜோதியைத் தான் வள்ளலார் சிவமே என்று சொல்லுகின்றார் .என்பதை சுத்த சன்மார்க்கிகள் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் .

வள்ளலார் பசியை, ''பசிப்பிணி'' என்றும்... ''பசி வேதனை''என்றும் ......''பசிக் கொடுமை''  என்றும் ...பதிவு செய்து மக்களுக்குத் தெரியப்படுத்தி உள்ளார் .

எனவே வள்ளலார் சொல்லிய பசி வேதனையை.பசிப்பிணியை,பசிக் கொடுமையைப்  போக்கி பசியை இருக்கும் இடம் இல்லாமல் விரட்டுவது சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்,

மக்களை அன்பு,தயவு,கருணை உள்ளவர்களாக மாற்ற வேண்டியது சுத்த சன்மார்க்கிகளின் செயல்களாக இருக்க வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

புதன், 23 டிசம்பர், 2015

வள்ளல்பெருமான் சொல்லிய தியானம் செய்யும் முறை !

வள்ளல்பெருமான் சொல்லியது !

மேட்டுக் குப்பம் சித்தி வளாக திரு மாளிகையில் 22-10-1873,அன்று கொடியேற்று விழாவில் வள்ளல்பெருமான் திருவாய் மலர்ந்து அருளிய பேருபதேசம் ,,,அதில் தெரிவித்துள்ளது .

இங்குள்ள நீங்கள் எல்லாவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள் என்று மக்களுக்கு  கட்டளை இடுகின்றார்.

இதுமுதல் சாலைக்கு ஆண்டவர் போகிற பத்துத் தினமாகிய கொஞ்ச காலம் வரையில் நீங்கள் எல்லாவரும் நல்ல விசாணையில் இருந்து கொண்டு இருங்கள் .அந்த விசாரணை எது என்றால் ...நம் நம்முடைய நிலை எப்படிப் பட்டது ? நமக்குமேல் நம்மை இயக்குகின்ற தெய்வத்தின் உடைய நிலை எப்படிப் பட்டது ? என்று விசாரிக்க வேண்டியது அவசியம் .

அதற்கு தக்கபடி நீங்கள் ஒருமித்தாவது அல்லது தனித்தனியாவது உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது விசாரணை செய்து கொண்டு இருங்கள் என்கின்றார்.

இப்படி விசாரித்துக் கொண்டு இருந்தால் ,நமது ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக் கொண்டு இருக்கின்ற அனந்த திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத் திரை முதலில் நீங்கி விடும் .அது நீங்கினால் மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கி போய் விடும் என்கின்றார் .

மேலும் அந்த பசுமை வண்ணம் எப்படிப்பட்டது என்றால் கருமைக்கு முதல் வர்ணமான மசுமையாக இருக்கின்றது .அதாவது கருமையும் பசுமையும் சேர்ந்தால் அடர்த்தியான கருப்பு என்பதாகும்..விரைவில் நீக்கமுடியாத (டார்க் பிளாக்) கருப்பு வண்ணமுடைய அழுத்தமான திரையாகும்

அந்த அழுத்தமான திரை நீங்க வேண்டும் என தோத்திரத்தும் ,தெய்வத்தை நினைத்தும் நமது குறையை உன்னியும் ,இவ் வண்ணமாக இருக்கின்ற போதும் ,படுக்கின்றபோதும்,இடைவிடாதும் இவ் விசாரத்தில் இருந்தால் ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால் ,தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் என்பதைத் தெளிவு படுத்தி உள்ளார்கள்.

இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ?

தெய்வத்தை நினைத்து தோத்திரம் செய்யவும் ,நினைக்கவும் சொல்லுகின்றார் .தோத்திரம் என்றால் புற வழிபாடு ,இடைவிடாது நினைத்து என்றால் அக வழிபாடு என்பதாகும் ,

அதற்கு விசாரம் என்று பெயர் சூட்டுகின்றார்;--

பரம், அபாரம் என்று இரண்டு வகையா இருக்கின்றது ,இவற்றில் பரம் என்பது பரலோகம் விசாரம் என்பதாகும் .அபரம் என்பது இகலோகம் விசாரம் என்பதாகும்.

கண்களுக்குத் தெரியாத உண்மையான அருட்பெருஞ்ஜோதிக் கடவுளை இடைவிடாது நினைத்துக் கொண்டு இருப்பது பரவிசாரம் என்பதாகும் .கண்களுக்குத் தெரிந்த புறத்தில் உள்ள தீப ஒளி ஜோதியை தோத்திரம் செய்வது இகலோகம் விசாரம் என்பதாகும்.

இரண்டும் ஜோதிதான் ;--.ஒன்று அருளைத் தரும் அருட்பெருஞ்ஜோதி அது  பரத்தில் உள்ளது ...ஒன்று அருளைப் பெறுவதற்கு துணையாக இருப்பது புறத்தில் உள்ளது அதுதான் சத்தியஞான சபையில் உள்ள புற வழிப்பாட்டு தோத்திரம் செய்யும் ஜோதியாகும்.

வெளியூரில் உள்ளவர்கள் தினமும் வடலூர் வந்து ஜோதியை தரிக்க முடியுமா? முடியாது அதனால் வீட்டில் இருந்த படியே  ஜோதியை வழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக புறத்தில் ஜோதியை வைத்து வழிபாடு செய்யுங்கள் என்று புற வழிப்பாட்டு முறையை காட்டி உள்ளார் .

நாம் அடைய வேண்டிய மிகவும் முக்கியமான லாபம், ஆன்ம லாபம் என்பதாகும் அந்த ஆன்ம லாபத்தில் மூன்று லாபம் உள்ளது .அவைகள் ..இம்மை இன்ப லாபம்...மறுமை இன்பலாபம் ..பேரின்ப லாபம் என்பதாகும்.அதேபோல் நம்முடைய வாழ்க்கையும் இன்பமும் மூன்று பிரிவுகளாக உள்ளன.

இன்மை இன்பவாழ்வு,மறுமை இன்ப வாழ்வு ,பேரின்ப வாழ்வு என்பதாகும்.

அந்த லாபத்தாலும்,வாழ்க்கையாலும் தேகத்திற்கு  மூன்று மாற்றங்கள் உண்டாகும் என்கின்றார் வள்ளல்பெருமான்.

அந்த தேகத்திற்கும் பெயர் வைத்துள்ளார் ;--சுத்த தேகம்,..பிரணவ தேகம்,..ஞான தேகம் என்பதாகும்.

அந்த மூன்று தேகமும் சேர்ந்து ஒரே தேகமாக மாற்ற வேண்டும் என்கின்றார் .

அந்த தேகத்திற்குப் பெயர் ''சுத்த பிரணவ ஞான தேகம்'' என்று பெயர் வைத்துள்ளார் .

இந்த 'சுத்த பிரணவ ஞான தேகம் ''பெற்றவர்களால் மட்டுமே இறைவனை காணமுடியும் இறைவனுடன் கலந்து கொள்ளமுடியும். அவர்களுக்கு இறப்பும் இல்லை ,மீண்டும் பிறப்பும் இல்லை .அதற்கு கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும் ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.

உலகில் பிறந்து வாழ்ந்துள்ள அருளாளர்கள் இம்மை இன்ப வாழ்வு..,மறுமை இன்ப வாழ்வு,பெற்று இருக்கின்றார்கள் .....பேரின்ப வாழ்வு என்னும் வாழ்க்கை வள்ளல் பெருமானைத் தவிர வேறு எவரும் பெற்றதில்லை.

அதற்கு பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.பேரின்ப  சித்திப் பெருவாழ்வு பெற்றவர்களால் மட்டுமே பிறப்பு ,இறப்பு இல்லாமல் வாழ முடியும்.அதற்கு வள்ளலார்  வைத்தப் பெயர் ''மரணம் இல்லாப் பெருவாழ்வு '' என்பதாகும்

மனிதனாக பிறந்த அனைவரும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு பெற்று ,பிறப்பு இறப்பு  இல்லாமல்,மரணத்தை வென்று  வாழ வேண்டும்,

 உலக மக்களுக்கு வள்ளல்பெருமான் தோற்றுவித்து காட்டிய உண்மையான மார்க்கம் தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''என்ற மார்க்கமாகும்.அந்த மார்க்கத்தின் வழியாக கற்றுக் கொள்வதுதான் ''சாகாக் கல்வி'' என்னும் ஒழுக்கம் நிறைந்த ,உயர்ந்த அருள் கல்வியாகும்.

உலக மக்கள் அனைவரும்,அருளைப் பெற்று மரணத்தை வெல்லுவதற்காக, தோற்று விக்கப் பட்ட மார்க்கம் தான்  ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்னும் உயர்ந்த ஒப்பற்ற மார்க்கம் என்பதாகும்.மேலும் வள்ளல்பெருமான்  சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை முழுமையாக கடைபிடித்தால் மட்டுமே ''சாகாக் கல்வியில்'' தேர்ச்சி பெற முடியும். ,தேர்ச்சி பெற்றால் மட்டுமே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் ''முத்தேக சித்தியைப்'' பெறமுடியும்.

சுத்த சன்மார்க்க கொள்கைகளில்,நாம் கடைபிடிக்க வேண்டிய  முக்கியமானது இரண்டே வழிகள்தான்..ஒன்று ஜீவ காருண்யம்,அதாவது ''பரோபகாரம்'' .ஒன்று ''சத் விசாரம்''.அதாவது கடவுளை தொடர்பு கொள்வது .இந்த இரண்டும் எது வென்பதை தெளிவாக அறிந்து,தெரிந்து,புரிந்து கடைபிடித்து அனுபவித்து வாழ்ந்தோம் என்றால் நிச்சயம்  மரணத்தை வெல்ல முடியும்,

அதைவிடுத்து குறுக்கு வழிகளில் சென்றால் பயன் ஏதும் கிடைக்காது .

சன்மார்க்க அன்பர்கள், ''ஜீவ காருண்யம்'' என்பதில் முதலில் உள்ள பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகின்றார்கள் .அதற்கு மேல் உள்ள .கொலை,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம் போன்ற மக்களுக்கு வரும் துன்பங்களைப் போக்குவதற்கு,தங்களால் முடிந்த அளவு வழிவகைகளை செய்ய வேண்டும்.

அடுத்து சத்விசாரம் என்பதாகும்.,,மேலே சொன்னவாறு சத்விசாரத்தில் இரண்டு வகைகள் உள்ளன .''பரலோக விசாரம்,இகலோக விசாரம்'' என்பதாகும்.

இகலோக விசாரம் செய்து கொண்டு வந்தால் பரலோக விசாரம் தன்னைத்தானே விளங்கும்..இகலோகம் விசாரம் என்பதுதான் சுத்த சன்மார்க்க புற வழிப்பாட்டு முறையாகும்.

 புற வழிபாடு எப்படி செய்வது ?

சமய மதங்களில் சொல்லி காட்டியுள்ள உருவ வழிப்பாட்டு முறையைத் தவிர்த்து சுத்த சன்மார்க்க வழிப் பாட்டு முறையைக் கடைபிடிக்க வேண்டும் ..

வள்ளல்பெருமான் பேருபதேசத்தில் பதிவு செய்துள்ளது ...

நாம் இதுவரையில் நாம் நாமும், பார்த்தும்,கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம் ,ஏன் என்றால் ...அவைகளின் ஒன்றிலாவது வெளிப்படியாக காட்டாமல் சொல்லாமல்  உண்மைக்குப் புறம்பாக வெளியில் ஆலயங்களை அமைத்து அதன் நடுவில் சிலைகளை வைத்து,ஆச்சார, சங்கற்ப, விகற்பங்களான அபிஷேக ஆராதனை போன்ற சடங்குகள் சம்பரதாயங்கள்  உருவாக்கி   கடவுள் வழிப்பாட்டு முறைகளை செய்து இருக்கின்றார்கள்

தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் வெளிப்படையாய்  காட்டாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள். அணு அளவு கூட உண்மையைத் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள் .

எவ்வாறு எனில் ;--கைலாசபதி,என்றும் வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயர் இட்டு இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவை யாவும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பது போலவே சொல்லி இருக்கின்றார்கள் .

தெய்வத்திற்கு கை,கால்,முகம்,வாய்,உடம்பு முதலியன இருக்குமா என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள் .

இஃது உண்மையாக இருப்பதாகவே ...முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கின்றார்கள் என்கின்றார் வள்ளலார் ...அதாவது ,அனைவரையும் கண் இருந்தும் குருடர்கள் என்கின்றார் வள்ளல்பெருமான்,  

உடம்பில் உள்ள ஆன்மா ,உயிர்,அந்த கரணங்கள்,இந்திரியங்கள் நடத்தும்  செயல்படும் கலையை,புறத்தில் பொய்யான கற்பனைக் கதைகளாக எழுதி கதா பாத்திரங்களை உருவாக்கி அதற்கு தகுந்தாற் போல் பெயர்களை வைத்து ,இடம்,வாகனம், ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ஒரு மனிதனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாக சொல்லி இருக்கின்றார்கள்.

மேலும் தெயவத்தின் உடைய உண்மை இன்னதென்றும்,கொஞ்சமேனும் புறங் கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .அணு அளவு கூட உண்மையைத் தெரிவிக்காமல் பிண்ட லஷ்ணத்தை அண்டத்தில் காட்டினார்கள்,

யாதெனில் ;--கைலாசபதி என்றும்,வைகுண்ட பதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பயர் இட்டு பொய்யை விதைத்து விட்டார்கள் .அவைகள் யாவும் உண்மை என்று நம்பி மக்கள் வாழ்க்கையில் கடைபிடித்து அழிந்து கொண்டு உள்ளார்கள்.

தெய்வத்திற்கு  கை, கால் , முதலியன இருக்குமா ? என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள் ,

உண்மையாக இருப்பது போலவே கடவுள்களை படைத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள்  .மக்களும் ஏமாந்து கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண் மூடி வழக்கம் எல்லாம் மண் மூடிப் போக
மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலை பெற மெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதி அருள் வழங்கினை என் தனக்கே
உலை வறும் இப்பொழுதே நல் தருணம் என நீயே
உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை உரைத்தவனே
சிலை நிகர் வன் மனம் கரைத்துத் திரு அமுதம் அளித்தோய்
சித்த சிகாமணியே என் திரு நட நாயகனே !

என்று தெளிவாக பதிவு செய்து உள்ளார் ...

மேலும் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்ட பாடில்லை .அவன் பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்க வில்லை ..இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை ..நான் உடைத்து விட்டேன் என்கின்றார் வள்ளல்பெருமான் ..

அப்படி அவர்கள் சொல்லிய கற்பனைக் கதைகளில் கவனம் செலுத்தினால் ஏகதேசம் கர்ம சித்திகளைப் பெறலாம் அதற்குமேல் அவைகளில் லாபம் ஒன்றும் இல்லை.

அதற்காக ஒவ்வொரு சித்துக்கும் பத்து வருடம்,எட்டு வருடம்,பிரயாசை எடுத்துக் கொண்டால் அற்ப சித்திகளை அடையலாம் .அதற்காக அவற்றில் லஷியம் வைத்தால் உண்மையான ஆண்டவர் இடத்தில் வைத்த லஷியம் போய் விடும்.

ஆண்டவர் இடத்தில் வைத்த லஷியம் போய் விட்டால் நீங்கள் அடையப்போகிற பெரிய பிரயோஜனம் (லாபம் ) போய் விடும்.என்பதை அழுத்தம் திருத்தமாக மக்களுக்கு வள்ளலார் தெரியப்படுத்து கின்றார் ..

நீங்கள் அடைய வேண்டுவது பெரிய லாபம் ஆகிய ஆன்ம லாபம்,..ஆன்ம லாபம் கிடைத்தால் தான்  இம்மை இன்ப லாபம்,.மறுமை இன்பலாபம் ..,பேரின்ப லாபம் கிடைக்கும். சிறிய லாபம் வேண்டுமா ?பெரிய லாபம் வேண்டுமா ? நீங்களே முடிவு எடுத்துக் கொள்ளுங்கள் என்கின்றார் .

ஆதலால் சுத்த சன்மார்க்கிகள் அவைகளில்  கவனத்தை செலுத்தாமல், உண்மையை உணர்ந்து கொண்டு வழிப்பாட்டு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றார் .

மேலும் இதற்கு மேற்பட நாம் நாமும் ,பார்த்தும் ,கேட்டும்,லஷியம் வைத்துக் கொண்டு இருந்த  வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனிலும் லஷியம் வைக்க வேண்டாம் என்று கண்டிப்பாக சொல்லி உள்ளார் .

மேலும் சுத்த சன்மார்க்கத்தின் கொள்கை யானது எதுவெனில்.முழுமையான அருளைப் பெறுவதாகும்.அருள் பெறுவதுதான் ஆன்ம லாபம் என்பதாகும். .அருளைப் பெற்று  பேரின்ப லாபம் அடைவதற்கு எது எது தடையாக இருக்கின்றதோ அதை கண்டிப்பாக அகற்ற வேண்டும் என்கின்றார் .

மேலும் வள்ளலார் சொல்லியது ;--
சர்வ வல்லபராகிய தனித் தலைமைக் கடவுளே !
தேவரீர் எங்கள் ஆன்மாவில் அமர்ந்து அருளி அற்புதத் திருவருள் விளக்கத்தால் எங்களையும்,இவ் உலகில் இத் தேகத்தைப் பெற்ற மற்றவர்களையும் உண்மை அடியார் களாக்கி  ,உண்மை அறிவை விளக்கி உண்மை இன்பத்தை அளித்துச் சமரச சுத்த சன்மார்க்க நிலையில்  வைத்துச் சத்திய  வாழ்வை அடைவித்து  ,நித்தியர் களாக்கி ,வாழ்வித்தல் வேண்டும்.

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும்,சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய  சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,

வருணம் ,ஆசிரமம் ,முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்,எங்கள் மனதில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சயமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை ,எங்களுக்குள் ,

எக்காலத்தும்,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,எவ்வளவும்,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !
தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்,வந்தனம்,

என்றும் ...இறைவனிடம் வேண்டுதல் எப்படி வேண்ட வேண்டும் என்றும்,  விண்ணப்பம் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தெளிவாக சொல்லி உள்ளார் .நாம் தினம் தோறும்  வேண்டுதல்,விண்ணப்பம் செய்கின்றோம்,.எவை எவை சுத்த சன்மார்க்கத்திற்கு தடை என்பதை அறிந்து உணர்ந்து தெரிந்து ,அவைகளை எல்லாம் விட்டு விட்டோமா ? என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

சாதி,சமயம்,மதம் என்பதின் கொள்கைகள் யாவும் சுத்த சன்மார்க்கத்திற்கு தடையாக உள்ளது ..இந்த மூன்றையும் முழுமையாக விட்டவர்கள் மட்டுமே சுத்த சன்மார்க்கத்தின் கொள்கையை  முழுமையாக கடைபிடிக்க தகுதி உள்ளவர்கள் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார் ..

சாதியும்,மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி.

எங்குலம் எம் இனம் என்பது தொண்ணுற்று ஆறு
அங்குலம் என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி .

சமயம் குலம் முதல் சார்பு எலாம் விடுத்த
அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி .

சாதி சமயச் சழக்கை விட்டேன் அருட்
ஜோதியைக் கண்டேன் .....என்றும்

பொய்யை ஒழித்துப் புறப்பட்டேன் மன்றாடும்
ஐயரைக் கண்டேன் .....என்றும்

மேலே கண்ட வரிகளில் வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார் .

மேலும் ;--சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறை !


சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறை !

தியானம் செய்யும் முறை !

தியானம் செய்ய வேண்டுமானால் கண்களைத் மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்களைத் திறந்து கொண்டுதான் தியானம் செய்ய வேண்டும் ...

நம் வீட்டில் தனியாக ஒரு அறையோ அல்லது பூசை அறையோ  இருக்க வேண்டும். அந்த அறையில் நான்கு சதுரம் கொண்ட தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும். அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும்.

 அதில் ''நல்ல எண்ணெய் '' அல்லது ''தேங்காய் எண்ணெய்'' அல்லது பசுநெய் ..ஊற்றி சிறிய திரியைப் போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அந்த தீபத்தின் முன்னாடி நான்கு அடி தூராம் தள்ளி நாம் கிழே ஒரு விரிப்பை போட்டு அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப சுடர் ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் ...

தீபம்,.. அலை பாயாமல் எரிய வேண்டும் .கண்கள் தீப சுடர் ஒளியை மட்டும் தான் பார்க்க வேண்டும் .ஒரு ஆன்மாவிற்கும்,ஜீவனுக்கும் ,மனதிற்கும்,கண்களுக்கும் ,அந்த திரு விளக்கிற்கும் நெருங்கிய சம்பந்தம் இருக்கின்றது .என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

நம்மால் எவ்வளவு நேரம் தீபத்தைப் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .

நம் உடம்பின் ஐம் புலன்கள் {கண்...காது....மூக்கு ....வாய் ...உடம்பு) என்பதாகும் அதில் முக்கியமானது,முதன்மையானது இந்திரியங்களில் உள்ள கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் புறத்தில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம்

ஐம் புலன்களான கண்,காது,வாய்,மூக்கு,உடம்பு என்பதில் முதல் இடம் கொள்வது கண்கள் ,கண்களில் பார்க்கும் அனைத்தும்...கரணங்கள் என்னும் ...மனம் ...புத்தி ....சித்தம் ...அகங்காரம் ...என்னும் காரணங்களில் உள்ள மனத்தில் பதிவாகின்றன.

கரணங்களில் முதன்மையானது   மனமாகும் .கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகிறது ...

அதே நேரத்தில் கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது...கண்களில் பார்ப்பது அனைத்தும் மனதில் பதிவாகும்.

மனதில் பதிவாகியது, அனைத்தும் ஜீவன் என்னும் உயிரில் பதிவாகும் ...ஜீவனில் பதிவானது அனைத்தும் ஆன்மா என்னும் உள் ஒளியில் பதிவாகும்,அந்தப்பதிவுகள் தான் மாயா திரைகள் என்பதாகும்.

நமக்கு வரும் ,துன்பத்திற்கும் துயரத்திற்கும், அச்சத்திற்கும், பயத்திற்கும், நோய்க்கும்,மரணத்திற்கும்  அந்தப் பதிவின் அறியாமை என்னும் திரைகளே காரண காரியமாகும்.

துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் முதலியவற்றைப் போக்க வேண்டுமானால்,மரணத்தை வெல்ல வேண்டுமானால்,வெளியில் செல்லும் மனத்தை உள்ளே கொண்டு செல்ல வேண்டும்.அதை கண்கள் வழியாகத்தான் கொண்டு செல்ல முடியும்.

ஏன் என்றால் ? ஆன்மாவில் இருந்துதான் கண்களுக்கு ஒளி வழங்கப் படுகின்றது.

மனம் ;--

மனம் என்பது பேய் பிடித்த குரங்கு போன்றது...அதை சமய மதங்களில் சொல்லிய தியானம்,தவம்,யோகம் போன்ற வழி முறைகளால் அடக்கவே முடியாது.

மனதை அடக்க முடியாது,ஆனால் மனதை மாற்ற முடியும் என்கின்றார் வள்ளலார் .

மனதை அடக்க வேண்டுமானால்,மாற்ற வேண்டுமானால்  கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .மாற்ற முடியும் மனிதன் மனதை மாற்றியே ஆக வேண்டும் .அதற்குத்தான் சுத்த சன்மார்க்க தியானம் செய்யும் முறைத் தேவைப்படுகிறது .

சுத்த சன்மார்க்க தியான முறைக்கு சத் விசாரம் என்றும்,ஞான சரியை என்றும் வள்ளலார் பெயர் வைத்து உள்ளார்.

புறத்தில் திரியும் மனத்தை அகத்தில் செலுத்த வேண்டும்.அதாவது மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் .சிற்சபை என்பது ஆன்மா இருக்கும் இடமாகும்.

அகம் என்பது ஆன்மா உள் ஒளியாக இருந்து இயங்கும் இடமாகும். ஆன்மாவை கண்கள் பார்க்க முடியாது,

மனம், கண்களின் துணைக்  கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.அப்போது தான் மனம் அடங்கும்.மனத்தை மாற்ற முடியும் .

கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக என்றார் வள்ளலார்

எனவே கண்களைத் திறந்து கொண்டுதான் சுத்த சன்மார்க்க தியானம் செய்ய வேண்டும் .

கண்களை மூடிக் கொண்டால் !

கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால், அளவு இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய்க்  குரங்கு... அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் மனத்தை அடக்க முடியும் அதைக் கண்களால் தான் அடக்க முடியுமே தவிர, வேறு எந்த வழியாலும் அடக்க முடியாது.வேறு வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

உருவங்களை வைத்தோ .உருவங்களைப் பார்த்தோ ,மந்திரம் சொல்லிக் கொண்டோ மணியை எண்ணிக் கொண்டோ தியானம் செய்வதால் எந்தப் பயனும் இல்லை ,நன்மையையும் இல்லை,மனமும் அடங்காது.

அந்த நேரம் எதோ ஒரு சிறிய மகிழ்ச்சி கிடைப்பதுபோல் தோன்றும் ,கொஞ்ச நேரத்தில் அழிந்துவிடும்,மேலும் பழைய நிலைக்கே திரும்பி விடும்.

உருவம் அற்ற ஒளி !

ஆதலால் நம் கண்கள் உருவம் அற்ற, ஒளியை பார்த்து தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ...ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்தது,படித்தது,கேட்டது,செய்தது ,உண்டது,அனுபவித்தது , அனைத்தும் மனம் ...ஜீவன் ,,,வழியாக ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுகள் தான் நினைவு அலைகளாக திரும்பி நமக்கு துன்பமும் ....துயரமும் ......அச்சமும்,...பயமும்,.... நோயும்....மரணமும் தந்து கொண்டு வருகின்றது .

அந்த பதிவுகளை அறவே நீக்கினால் தான் மனம் அமைதி பெரும்,அலைபாயும் மனம் அமைதியடையும்,பின் அனைத்து துன்பங்களும் நீங்கும் .

ஆன்மாவை வெற்று இடமாக மாற்ற வேண்டும்.

அந்த பதிவுகளை அகற்ற சுத்த சன்மார்க்க ஞான  தீப ஒளி தியானம் தான் முக்கியமானதாகும். மேலே கூரியபடி தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால்,தீப ஒளி கண்களின் வழியாக உள்ளே சென்று ஆன்மாவை மோதுகின்ற போது அந்த மோதலில் சுத்த உஷ்ணம் உண்டாகும்.

 அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவில் பதிவாகி உள்ள அசுத்த மாயை என்னும் (அறியாமைத் திரைகள் ) திரைகளை கரைத்துவிடும்.

அதன்பின் தடைகள் இல்லாமல் கண்கள் மனம் இரண்டும் ஆன்மாவை நேரடியாகத் தொடர்பு கொள்ளும்.,

மனம் நேரடியாக சிற்சபையில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ளும்.

அதுவரையில் புறத்தில் சுத்த சன்மார்க்க ஞான தீப ஒளி வழிபாடு அவசியம் செய்ய வேண்டும்.

புறத்தில் பார்த்து வந்த தீப ஒளியின் உருவம் மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்கு அதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் ..இதுதான் சமரச  சுத்த சன்மார்க்க சத்தியமான தியான முறையின் உண்மையாகும் .

மலம் ஒழிப்பு !

சமய மதங்களில் மலம ஒழிப்பு என்பார்கள் ,சமய மதங்களில் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது ஆணவம் மாயை,கன்மம், என்னும் மூன்று மலங்களை சொல்லுவார்கள். அந்த மலத்தை ஒழிப்பதற்கு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள்,தீட்ஷை கொடுக்கும் தகுதி மனிதர்களுக்கு கிடையாது.

மரணத்தை வென்ற ''வள்ளலார் போன்ற சுத்த பிரணவ ஞான தேகிகளுக்கு மட்டுமே'' சாத்தியமாகும். .

வள்ளல்பெருமான்.. ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது என்கின்றார் .

மலம என்பது யாதெனில் ஆணவம், மாயை, கன்மம், மாமாயை, பெருமாயை என்னும் ஐந்து மலங்கள் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள பதிவுகளாகும் அதுவே மலங்களாகும்,

அதற்கு மலம்  ஒழிப்பு என்பார்கள்.மலம் ஒழிப்பு என்றால் பதிவு அகற்றம் என்பதாகும். அந்த மலத்தை நீக்குவதற்காக  தீட்சை கொடுப்பேன் என்பார்கள் , மனிதர்களை நம்பி ஏமாந்து விடாதீர்கள்

பல சகோதரர்கள்.. விபரம் தெரியாமல் நிறைய பணத்தை கட்டி தேவை இல்லாமல் சென்று  தியானம் ...யோகம.... தவம்  .....காயகல்பம் ...மனவளக்கலை ...குண்டலினி யோகம்..ஈசா யோகம்,  போன்ற தவறான பயிற்சி முறைகளை கற்று,அதனால் எந்தப் பயனும் இல்லாமல்  துன்பப் படுகின்றார்கள்.ஆதலால் அப்படி செய்வது செல்வது அறியாமையாகும்,விபரம்  அறியாத மக்களை ஏமாற்றி நிறைய பணம் சம்பாதிக்கும்,மன்றங்களும்,தியானப் பயிற்ச்சி கூடங்களும்,மேலும் நிறைய அமைப்புகளும் நாட்டில் நிறைய உருவாகி விட்டது...

மலத்தை எவராலும் ஒழிக்க முடியாது !

அறியாமையின் செயல்களால் ஆன்மாவில் பதிவான திரைகள்   என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது,அகற்றவும் முடியாது. அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்க முடியும்,நீக்க வேண்டும்.வேறு ஒருவரால் ஒழிக்கவும் அழிக்கவும் முடியாது,நீக்கவும் முடியாது  என்பதை அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்....

தீதும் நன்றும் பிறர் தர வாராது ! என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தாலும்,...சத்விசாரம் என்னும் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் தியானத்தாலும் மட்டுமே மலம் என்னும் திரைகளை நீக்க முடியும் ,ஒழிக்க முடியும் என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார்.அதனைக் கருத்தில் கொண்டு,  அனைத்துத் தர மக்களும் தெரிந்து கொண்டு சுத்த சன்மார்க்க ஞான சரியை என்னும் ஆன்ம தியானம் செய்ய வேண்டும் . .

வள்ளலார் சொல்லியது !

ஆண்டவர் தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் ,உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ,தீபத்தை புறத்தில் வைத்து தடைபடாது, இடைவிடாது ஆராதியுங்கள் என்று தெளிவாக விளக்கி உள்ளார் .ஆதலால் தீபத்தை இடைவிடாது ,கண்களை திறந்து கொண்டு பார்த்து தியானம் செய்ய வேண்டும் .

கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .

கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .

என்மனக் கண்ணே என்னருட் கண்ணே
என்னிரு கண்ணே என் கண்ணுன் மணியே !

கண் களிக்க புகை சிறிதும் காட்டாதே
விளங்குகின்ற கற்பூர விளக்கே !

கண்ணே கண்மணியே கருத்தே கருத்தின் கனிவே
விண்ணே விணணிறைவே சிவ சிவ தனி மெய்ப் பொருள!

வள்ளலார் வாக்கு !

மேலே சொல்லியபடி செய்து பாருங்கள்,செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும்.ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்.அதனால் பல் இளித்து இறுமாந்து கெட நேரிடும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் .

ஆதலால் மேலே கூறிய வண்ணம் சந்தேகம் இல்லாமல் தியானம் செய்து வாருங்கள் .எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் அனைத்து உயிர்களுக்கும் அருள் புரிவார் ..
இது சத்தியம்... .இது சத்தியம்,..இது சத்தியம்.

ஏதாவது உங்களுக்கு சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சுத்த சன்மார்க்க ஞான சரியை தியானம் செய்யும் முறையாகும் ..

போன் நெம்பர் ;-0424 2401402 -செல் --9865939896 .

உங்கள் அன்பு ஆன்மநேயன் --கதிர்வேல...

செவ்வாய், 22 டிசம்பர், 2015

தமிழ் நாட்டில் புதிய ஆட்சி அமைக்க ஒரே ஒருவழி உள்ளது.!

தமிழ் நாட்டில் புதிய ஆட்சி அமைக்க ஒரே ஒருவழி உள்ளது.!

தமிழ் நாட்டில் உள்ள மாவட்டங்களை ஆட்சி செய்யும்,மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர்கள்,ஒன்று சேர்ந்தும்,

மற்றும் வருங்கால I A S ...I P S ,படித்தவர்கள் அனைவரும் ஒன்று இணைந்து ,வருகின்ற சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிப் பெற்று ஆட்சியை அமைத்தால் தமிழ் மக்களை காப்பாற்றலாம்.

ஏன் என்றால் அவர்களுக்குத்தான் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்ற முடியும்.காப்பாற்றும் வழி தெரியும் அதற்காகவே படித்தவர்கள்.

அரசியவாதிகளின் பேச்சைக் கேட்டு ஆட்சி செய்பவர்கள் அவர்கள்தான் .அவர்களே அட்சி பீடத்தில் அமர்ந்தால் தடை இல்லாமல் சுதந்தரமாக மக்கள் பணி ஆற்ற முடியும்.

அரசியவாதிகளை ஓரம் கட்டி,..அவர்கள்  துணிந்து அரசியலுக்கு வந்தால் மக்கள் நிச்சயமாக ஓட்டுப் போட்டு தேர்வு செய்ய காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

இப்போது உள்ள நேரம் காலம்,அதற்கு ஒத்ததாக இருக்கின்றது.மக்களும் எதிர் பார்க்கின்றார்கள்.

எந்த அரசியல்வாதிகளையும் மக்கள் நம்புவதற்கு தயாராக இல்லை .

இதுபோல் ஒரு நிகழ்ச்சி நடந்தால் உலகமே ஆச்சரியப்படும்.மேலும் உலகமே அவற்றை பின்பற்றும்.

இதற்கு மாவட்ட ஆட்சியாளர்களும் .காவல் துறை கண்காணிப்பாளர்களும் ஒன்று சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும்.

நாட்டின் நலன் கருதி,மக்களின் நலன் கருதி முடிவு எடுங்கள் .வெற்றி நிச்சயம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

மனிதன் உயர்ந்த அறிவு உள்ளவன் என்பதற்கு ஒரே ஒரு சாட்சி.!

மனிதன் உயர்ந்த அறிவு உள்ளவன் என்பதற்கு ஒரே ஒரு சாட்சி.!

உலகில் இறைவன் படைத்த தாவரம் முதல் எல்லா உயிர்களின் உடம்பில் உள்ள தோலை உரித்து எடுத்துவிடலாம் .

ஆனால் மனிதனின் உடம்பில் உள்ள தோலை தனியாக பிரித்து எடுத்துவிட முடியாது.ஏன் ?

மனிதனின் உடம்பும் உயிரும் அதில் உள்ள பொருள்கள் அனைத்தும் பின்னப்படாமல் ,மரணம் அடையாமல், ஒளியாக மாற்றம் அடையவேண்டும் .என்பதற்காக இறைவன் மனித தேகத்தைப் படைத்துள்ளான்.

உடம்பில் உள்ள ஒரு முடியை கூட வேரோடு பிடுங்கி  விட்டாலும் மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்காது.

எனவே தான் வள்ளலார் உடம்பை அலட்சியம் செய்யாமல் பொன்போல் பாதுகாக்க வேண்டும் என்கின்றார்.

உயர்ந்த அறிவு விளங்கிய மனிதர்கள் முதலில் உடம்பை பாதுகாக்க வேண்டும்,உடம்பை பாது காத்துக் கொண்டால்தான் உயிரைப் பாதுகாக்க முடியும்,

உடம்பையும் உயிரையும் வள்ளல்பெருமான் சொல்லியவாறு பாதுகாத்துக் கொண்டு வாழ்ந்தால் .ஆன்மா உடம்பை விட்டு பிரியாது.

ஆன்மாவில் இருந்து அருள் சுரக்க வேண்டும் என்றால் உடம்பு பரிசுத்தமாக இருக்க வேண்டும்.

உடம்பிற்குள் கண்ட கண்ட குப்பைகளைக் கொட்டாமல் சுத்த உடம்பாக வைத்திருக்க வேண்டும்.

உடம்பு அசுத்தம் இல்லாமல் சுத்தமாக வைத்திருந்தால்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நாம் கேட்காமலே அருள் வழங்க வழி செய்வார் .

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல்.

மருநெறி சேர் மல உடம்பை அழியாத விமல
வடிவாக்கி

எல்லாஞ் செய் வல்ல சித்தாம் பொருளைத்

தருணமது தெரிந்து எனக்குத் தானே வந்து அளித்த

தயா நிதியே எனை யீன்ற தந்தையை  என் தாயைப்

பொருண் நிறை சிற்றம்பலத்தே விளங்குகின்ற பதியைப்

புகல் அரிதாஞ் சுத்த சிவ பூரண மெய்ச் சுகத்தைக்

கருணை அருட் பெருஞ்ஜோதிக கடவுளை என் கண்ணால்

கண்டு கொண்டேன் கனிந்து கொண்டேன் கலந்து கொண்டேன் களித்தே !

வள்ளல்பெருமான் தன்னுடைய உடம்பையும் உயிரையும்  எப்படிப் பாதுகாத்தார் .அவருக்கு இறைவன் அருள் எப்படி வழங்கினார் என்பதை நாம் புரிந்து கொண்டால் ,அருள் பெரும் வழியை நாம் தெரிந்து கொள்ளலாம்.

நாம் எதை எதையோ செய்துகொண்டு அருள் வழங்க வேண்டும் என்றும் ,அருள் கிடைக்கும் என்றும் நம்பிக் கொண்டு வாழ்ந்தால் ,அருள் நிச்சயம் கிடைக்காது .

சுத்த சன்மார்க்கிகள் தவறான பாதையில் செல்லாமல்,வழி இது,..முறை இது,..துறை இது,..நீ செய்யும் துணிவு இது ..என்பதை அறிந்து வள்ளலார் சொல்லிய பாதையை விட்டு விலகாமல் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.

தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாண நான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என் தோழி நீ என்னோடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்த சன்மார்க்க
ஜோதி என்று ஓதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ்ஜோதி கண்டு ஆடேடி பந்து !

இறைவனால் படைக்கப் பட்ட ''சுத்த சன்மார்க்கம்'' என்ற வீதியை விட்டு ,வேறு வழிகளில் சென்றால் என்னவரும் ? நிச்சயம் மரணம் வரும்.

இதுவரையில் வள்ளலார் வழியில் பின்பற்றி வாழ்பவர்கள் மரணம் இல்லாமல் வாழ்ந்து
உள்ளார்களா ? என்று கேள்வி கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றோம்.

பதில் சொல்லத் தெரியாதற்குக் காரணம் ...எவரும் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கக் கொள்கையின் படி வாழவில்லை .என்பது தெளிவாகத் தெரிகின்றது.

மரணம் வராமல் இருக்க வேண்டும் என்றால் நாம் வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் வாழ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

அபுடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

திங்கள், 21 டிசம்பர், 2015

தீட்ஷை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் சில விஷமிகள் நாட்டில் நிறைந்து உள்ளார்கள்.,

தீட்ஷை என்ற பெயரில் மக்களை ஏமாற்றும் சில விஷமிகள் நாட்டில் நிறைந்து உள்ளார்கள்.,

தீட்ஷை என்ற பெயரில் ,,மலங்களைப் போக்குகின்றோம்,துன்பங்களைப் போக்குகின்றோம், வியாதிகளை குணப்படுத்துகொன்றோம், என்று மக்களை ஏமாற்றும் விஷமிகள் நாட்டில் நிறையப்பேர்  உள்ளார்கள் .

தீட்சை என்றால் மலம் ஒழிப்பு என்பதாகும்.மலங்களை ஒழிக்க மனிதர்கள் எவராலும் முடியாது .கடவுளால் மட்டுமே முடியும்.

மரணத்தை வென்ற வள்ளலார் போன்ற அருளாளர்களால் மட்டுமே முடியும்...இந்த உலகத்தில் வள்ளலார் போன்று இன்றுவரையில் யாரும் பிறக்கவில்லை .யாரும்  வரவில்லை.

பணம் சம்பாதிக்க இது ஒரு நல்ல குறுக்கு வழியாகும்.

சில சோம்பேறிகள் ஆட்களை வைத்து பேச வைத்து நன்மை செய்வதுபோல் பதிவு செய்து மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகின்றார்கள் .

சீட்டுக் கம்பெனிகள் போல் ஆள் பிடித்துக் கொண்டு உள்ளார்கள்.போன் நெம்பரைக் கொடுத்து தொடர்புகொண்டு வரவழைத்து உங்களின் பணத்தை அபகரித்துக் கொள்வார்கள் .

உங்களை நீங்கள்தான் காப்பாற்றிக் கொள்ளவேண்டும்.

அறியாமையால் மக்கள் ஏமாந்து விடாதீர்கள். அவரவர்கள் செய்த நன்மையையும் தீமையும் அவர்களே தான் நீக்கிக் கொள்ள முடியும்,

தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தீதும் நன்றும் பிறர்தர வாராது.

உங்களுக்கு எவ்வளவு துன்பம் வந்தாலும்,அவற்றைப் போக்க ஒரே வழி .ஜீவ காருண்யம் மட்டுமே .

பசித்த ஏழைகளுக்கு பசியைப் போக்குவதே விரதமாகக் கொண்டு ,உங்களால் முடிந்த அளவிற்கு மற்றவர்களுடைய பசியைப் போக்குங்கள் .அதுவே நல்ல  மருந்தாக ,அருள் மருந்தாக உங்களின் துன்பங்களைப் போக்கி இன்பம் தரும்.

ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்.

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார் .

அறிவுள்ள ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே வழிபாடு என்றார் வள்ளலார் .

ஜீவகாருண்யம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்,அதனால் உபகார சக்தி விளங்கும்,அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும் .

ஜீவகாருண்யம் மறையும் போது ;--அன்பும் அறிவும் உடனாக நின்று மறையும்,அதனால் உபகார சக்தி மறையும்,உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.

இது வள்ளலாரின் அருள் வாக்கு .இவற்றை நம்பி செயல்படுங்கள் துன்பம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை மூடர்களின் பேச்சை கேட்டு வீணாக அழித்து விடாதீர்கள்.

ஆன்மநேய உடன் பிறப்புகளே உஷார் உஷார் உஷார் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

வெள்ளி, 18 டிசம்பர், 2015

அறிவின் விரிவு !

அறிவின் விரிவு !

நம் உலகில் அறிவைப் பற்றி பேசாதவர்களே இல்லை என அறியலாம் .

எது அறிவு ? வள்ளலார் சொல்லுகின்றார் ,

அயர் வறு பேரறிவாகி

அவ் அறிவுக்கு அறிவாய்

அறிவறிவுள் அறிவாய்

அதன் உள்ளோர் அறிவாய்

மயர் வறும் ஓர் இயற்கை உண்மைத் தனி அறிவாய்ச்

செயற்கை மன்னு அறிவு அனைத் தினுக்கும் வயங்கிய தாரகமாய்த்

துயரறு தாரக முதலாய் அம் முதற்கோர் முதலாய்த்

துரிய நிலை கடந்து அதன்மேல் சுத்த சிவ நிலையாய்

உயர்வறு சிற்றம்பலத்தே எல்லாம் தாமாகி

ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

என்று வள்ளலார் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அறிவு நிலையையும் அருள் நிலையையும் அதன் நிலையைப் பற்றிப் பதிவு செய்கின்றார்.

மனிதர்கள் எந்த அறிவில் உள்ளார்கள்.

மனிதர்களின் உடம்பில் நான்கு அறிவு உள்ளது .

இந்திரிய அறிவு,கரண அறிவு,ஜீவ அறிவு ,ஆன்ம அறிவு,என நான்கு அறிவுகள் நம்முடைய உடம்பில் உள்ளது .

ஒவ்வொரு மனிதனுக்கும் செயல்படும் அறிவு இந்திரியம் என்னும் ,கண்,காது,மூக்கு,வாய்,மெய்
( உடம்பு ) என்பன போன்ற அறிவுதான் செயல்ப் பட்டுக் கொண்டு உள்ளது.

அதற்கு மேல் உள்ள அறிவுக்கு நாம் வேலைக் கொடுப்பதில்லை,புற அறிவான இந்திரிய அறிவிலே நின்று விடுகின்றோம்.

இந்திரிய அறிவை அடக்கினால் கரணம் என்னும் மனம், புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் அறிவு விளங்கும்,

கரண அறிவை அடக்கினால் ஜீவன் என்னும் உயிரின் அறிவு விளங்கும்,

இந்திரியம் ,கரணம்,ஜீவன் என்னும் மூன்று அறிவையும்  அடக்கினால் தான் ஆன்ம அறிவு விளங்கும்,

ஆன்ம அறிவுதான் உண்மையை வெளிக்காட்டும் அறிவாகும்,

அதற்குமேல் அருள் அறிவு வெளிப்பட வேண்டும்,

அருள் அறிவு பூரண மாகும் போதுதான் கடவுள் அறிவு என்னும் பேரறிவு வெளிப்படும்,

கடவுள் அறிவு விளங்கும் போதுதான் கடவுள் யார் ? என்பதுத் தெரியும்.

கடவுள் அறிவு விளங்கினால்தான் கடவுள் நிலை அறிந்து அம் மயமாக மாற முடியும்.,

மனிதன் தெரிந்து கொள்ள வேண்டிய அறிவு ஏழு வகையாக உள்ளன.

ஆன்ம அறிவு விளங்கும் போது !

ஆன்ம அறிவு விளங்கும் போது ஆன்மாவில் இருந்து அருள் சுரக்க ஆரம்பித்து விடும்.

அந்த அருளை தக்கவைத்துக் கொண்டு மேலும் உயர வேண்டும்.

சித்தர்களும் யோகிகளும் ஆன்ம அறிவோடு நின்று விசித்தரங்கள் பல செய்து பல பேர் சமாதி நிலையை அடைந்து விட்டார்கள் பல பேர் தண்ணீரிலும், அக்கினியிலும் ,காற்றிலும்,ஆகாயத்திலும் கலந்து போய் விட்டார்கள்.,

''வள்ளல்பெருமான் மட்டுமே முழு அறிவையும் பெற்று பூரண அருளைப் பெற்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி அருள் ஆட்சி செய்து கொண்டு உள்ளார்''.

இப்போது நம்முடைய அறிவு எந்த இடத்தில் உள்ளது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவு மேலோங்க ஜீவ காருண்யமும் என்னும் பரோபகாரமும் ,உயிர் இரக்கமும் ஆன கடவுள் வழிபாடும்,..ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் சத் விசாரமும்,இடை விடாது செய்து கொண்டு இருந்தால் மட்டுமே அறிவு படிபடியாக மேலோங்கும்,

ஆன்ம அறிவு விளங்கும் போதே பசி,பிணி,தாகம், இச்சை, எளிகை,பயம்,கொலை ,போன்ற துன்பங்கள் யாவும் தன்னைத்தானே  நின்று விடும்.

சுத்த சன்மார்க்கிகள் வள்ளலார் காட்டிய வழியை முழுமையாகப்  பின் பற்றினால் அறிவு விளக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

அறிவு விளக்கம் அதிகரிக்க அதிகரிக்க அருள் விளக்கம் தோன்றும்.அருள் விளக்கம் தோன்றினால் மட்டுமே நாம் மேலே ஏறமுடியும் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896, 

ஆகம ஆரண விதிகள் தூர் நாற்றம் உள்ள குப்பைகள்.!

ஆகம ஆரண விதிகள் தூர் நாற்றம் உள்ள குப்பைகள்.!


ஆகமங்கள் ஆரணங்கள் போற்றிய பாதம் !

எந்தபாதம் அருட்பெருஞ்ஜோதியின் பாதம்.!

ஆரணம் ஆகமம் எல்லாம் பொய்யானது .ஆகம விதிகளும்,ஆரண விதிகளும் .கற்பனா விதிகள்.அதுதான் மக்களை அழித்துக் கொண்டு உள்ளது.

ஆகமங்களும்,ஆரணங்களும்,உண்மையான கடவுளைத் தேடிக் கொண்டு உள்ளன .இதுவரையில் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

விதிகளை வைத்துக் கடவுளைக் காணமுடியாது .மதி என்னும் அறிவை வைத்துத்தான் கடவுளைக் காணமுடியும்.என்கின்றார் வள்ளல்பெருமான்.

நம்முடைய நீதி மன்றங்களுக்கோ .சட்டங்களுக்கோ .ஆரண ஆகம விதிகள் என்னவென்றே தெரியாமல் .ஆலயங்களில் ஆகமப் விதிப்படி அர்ச்சகர்களை அமர்த்தவேண்டும் என்று தீர்ப்பு சொல்லி உள்ளது.

கடவுளுக்கு இடைத்தரகர்கள் வேண்டுமா ? வேண்டாமா ? என்பது கடவுளின் உண்மைத் தெரிந்தவர்களுக்கு மட்டுமேத் தெரியும்.நீதிபதிகளுக்கு எப்படித் தெரியும்.

சட்டப் புத்தகங்களைப் படித்த அறிவுக்கு அருள் அறிவைப் பற்றித் தெரியாது.

வள்ளலார் பதிவு செய்துள்ளப் பாடலைப் படியும் தெரிந்து கொள்ளலாம்.

ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்
பாடிய வேதங்கள் தேடிய பாதம்
பக்தி செய் பக்தருக்கு தித்திக்கும் பாதம்

நாடிய மாதவர் தேடிய பாதம்
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம்.
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம்
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம்

வாரா வரவாகி வந்தபொற் பாதம்
வஞ்ச மனத்தில் வசியாத பாதம்
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம்
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம்

நாராயணன் விழி நண்ணிய பாதம்
நான் புனை பாடல் நயந்தபொற் பாதம்
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம்
நாத முடிவில் நடிக்கின்ற பாதம்

வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம்
மந்திர யந்திர தந்திர பாதம்
எச்சம யத்தும் இலங்கிய பாதம்
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம்

அச்சம் தவிர்த்து என்னை ஆட்கொண்ட பாதம்
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம்
தெள்ளமு தாய் உளந் தித்திக்கும் பாதம்

மூவரும் காணா முழுமுதற் பாதம்
முப்பாழுக் கப்பால் முளைத்த பொற் பாதம்
துரிய வெளிக்கே உரிய பொற் பாதம்
சுக மயமாகிய சுந்தரப் பாதம்

பெரிய பொருள் என்று பேசும் பொற் பாதம்
பேர் எல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம்
சாகா வரம் தந்த தாரகப் பாதம்
சச்சிதா ஆனந்த சதோதய பாதம்

தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம்
திதி முதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம்
ஓங்கார பீடத் தொளிர் கின்ற பாதம்
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம்
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம்

துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்
ஐவண்ணமும் கொண்ட அற்புதப் பாதம்
அபயர் எல்லார்க்கும் அமுதான பாதம்
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம்

கண்ணும் கருத்தும் கலந்த பொற் பாதம்
ஆருயிர்க் காதாரம் ஆகிய பாதம்
அண்ட பிண்டங்கள் அளிக்கின்ற பாதம்
சாருயிர்க் கின்பம் தருகின்ற பாதம்

சத்திய ஞான தயாநிதி பாதம் ஆடிய
தாங்கி எனைப்பெற்ற தாயாகும் பாதம்
தந்தையு மாகித் தயவுசெய் பாதம்
ஓங்கி என் னுள்ளே உறைகின்ற பாதம்

உண்மை விளங்க உரைத்தபொற் பாதம்
எண்ணிய வாறே எனக்கருள் பாதம்
இறவா நிலையில் இருத்திய பாதம்
புண்ணியர் கையுள் பொருளாகும் பாதம்

பொய்யர் உளத்தில் பொருந்தாத பாதம்
ஆறந்தத் துள்ளும் அமர்ந்தபொற் பாதம்
ஆதி அனாதியும் ஆகிய பாதம்
மாறந்தம் இல்லா என் வாழ்முதற் பாதம்

மண்முதல் ஐந்தாய் வழங்கிய பாதம்
அருட்பெருஞ் ஜோதிய தாகிய பாதம்
அம்மையும் அப்பனும் ஆகிய பாதம்
பொருட்பெரும் போகம் புணர்த்திய பாதம்

பொன் வண்ண மாகிய புண்ணிய பாதம்
நாரண னாதியர் நாடரும் பாதம்
நான் தவத்தாற் பெற்ற நற் றுணைப் பாதம்
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம்

ஆசை விட்டார்க்கே அணிமையாம் பாதம்

ஆடிய பாதம் மன்றாடிய பாதம்
ஆடிய பாதம் நின்றாடிய பாதம்

ஆரணம் ஆகமம் எல்லாம் பொய்யானது .ஆகம விதிகளும்,ஆரண விதிகளும் .கற்பனா விதிகள்.அவற்றைப் பின்பற்றித்தான் மக்களை அழித்துக் கொண்டு உள்ளது.

உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி என்பதை அறியாமல் இருக்கும் வரை

மக்கள் ஆகம. ஆரண,போன்ற வேத  விதிகளின் தூர் நாற்றம் உள்ள குப்பைகளில் இருந்து வெளியே வரமுடியாது.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

Dürr arana Agama rules debris in odor.!

Dürr arana Agama rules debris in odor.!


Aranankal gospels foot glorification!

Entapatam Arutperunjothi feet.!

Everything Agamam aranam false akama rules and regulations arana with karpana vitikalatutan is destroying people.

Gospels, aranankalum, true God ituvarai are looking for is not available to them.

With the knowledge of God, God, can not keep the rules kanamutiyumenkinrar vallalperuman mati.

Agama rules without knowing the first thing about our justice arana manrankalukko cattankalukko alayankal priest and put him in the judgment that akamap fate is telling.

Should intermediaries to God? Or not? Those who know the truth of God knows how mattumet teriyumnitipatikal.

Grace and knowledge of legal books, reading comprehension do not know about.

Live recording ceytullap succumb to know the song.

Pleaded poor foot foot
Almond Almond scored ninratiya
Scouring the Vedas sung by foot
HAPPY devotee devotion to foot

Nadia scouring foot matavar
Foot natanta General of the country.
Solving chronic foot valvinai
Gods of the foot ellan terici

Will varavaki foot vantapor
Vaciyata foot craft in mind
Amutaki examine the foot-in-law
Anbar ulatte foot amarntarul

Ocular tion foot nanniya
Almond pseudonym song I nayantapor
Everything is good foot nayakkinra
At the end of nata starring Almond

Manly collellam foot vallapor
Yantra Tantric magical feet
Almond Classics eccama yattum
If ellukkul enkumam foot enneype

Excluding foot prevailing fear me
Almond joy country katipati
Thinking of all the gods foot
HAPPY tellamu Thai foot ulan

Absolute foot trio never before
The golden cup sprouted almonds muppaluk
Pick the right foot turiya velikke
Suga mayamakiya foot cuntarap

That means speaking the big toe pick
Persons who ellan foot perumpukalp
Foot-given gift tarakap
Ananda caccita foot catotaya

Everything tekati the foot Srishti
FF that first foot in aintol
Onkara foot pedestal which tolir
Divided by raising one foot
Sleep sleep uplifted foot

In turiyat foot unrit tulankiya
With a wonderful foot aivannamum
Everyone apayar foot amutana
Almond gooseberry fruit creations

Golden keen foot mixed
Aruyirk the foot kataram
Giving lumps of cosmic foot
Almond provided caruyirk kinpam

Wisdom Truth foot playing Maran
Bearing foot is expecting enaipperra
Please makit father's feet
Live in my foot up nulle

Almond be really uraittapor
Vare pauses foot enakkarul
Foot is placed in the position of immortality
Almond is punniyar kaiyul

Lair of the mismatched feet morale
Arantat prancing feet amarntapor
The original eternal Almond
My feet no marantam valmutar

Five and a half feet of manmutal
Takia arutperun foot jotiya
Almond Pancakes in Amman
Porutperum pokam foot punarttiya

Holy foot golden color makiya
Nader narana foot natiyar
I received tavattar foot chop runaip
Almond hailed aranam Agamam

Almond animaiyam desire vittarkke

Pleaded poor foot foot
Almond Almond scored ninratiya

Everything Agamam aranam false akama rules and regulations arana with karpana vitikalavarraip follows is destroying people.

Knowing that God will be true to Arutperunjothi

Agama people. Arana, Vedic rules, such as the odor of the enemy, come out from the debris.

Arutperunjothi antavartan to save people.

Regards katirvel anmaneyan Erode.
9865939896.

வியாழன், 17 டிசம்பர், 2015

முட்டாள்கள் மறைந்து அறிவாளிகள் வரவேண்டும்.!

முட்டாள்கள் மறைந்து அறிவாளிகள் வரவேண்டும்.!


முட்டாள்கள் எல்லாம் நாட்டை ஆள்கிறார்கள்.

அறிவாளிகள் எல்லாம் ஒதுங்கி இருக்கின்றார்கள்

அறிவாளிகள் எல்லாம் அரங்கத்திற்கு வந்தால் ,முட்டாள்கள் எல்லாம் மறைந்து விடுவார்கள்..

அறிவாளிகளே வெளியே வந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுங்கள்.

முட்டாள்கள் நோட்டைக் கொடுத்து ஓட்டைக் கேட்டு வாங்குகின்றார்கள் .

நோட்டை விதைத்து ஓட்டை வாங்கி நாட்டை ஆள்கிறார்கள்.

நோட்டும் ஓட்டும் நாட்டை ஆளுமா ?

கோட்டைக்கு நோட்டும் ஓட்டும்  போக அனுமதிக்கலாமா ?

அறிவாளிகள் தூங்கினால்,முட்டாள்கள் விழித்து கொள்வார்கள்.

அறிவாளிகளுக்கு தூக்கம் வராமல் மக்களைப் காப்பாற்றும் ஏக்கம் வரவேண்டும்.

இறைவன் கொடுத்த அறிவு மக்களுக்குப் பயன்பட வேண்டும்

அறிவாளிகளே உங்கள் அறிவை விதைத்து மக்களின் அன்பை வாங்குங்கள் .

அறிவு உடையார் அன்பு உடையார்.!

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள் !

அன்பும் அறிவும் இருந்தால் ஓட்டை இல்லாமல் நாட்டைக் காப்பாற்ற முடியும்.

அன்பிற்கு விலை இல்லை,அறிவுக்கு விலை இல்லை .ஆள்வதற்கும்  விலை இல்லை.

அன்பை விதைப்பவனும் அன்பை வாங்குபவனும் ,,,.அறிவை விதைப்பவனும்,அறிவை வாங்குபவனும்...அருளைப் பெறுகின்றான் .

அன்பிற்கு விலை இல்லை,..அறிவிற்கு விலை இல்லை,...அருளுக்கும்  விலை இல்லை.

அன்பே வா ...அறிவே வா ....அருளே வா ..அனைவருக்கும் ஆதரவு தா !

மக்களே ஏமாற்றுபவர்களை நம்பி,ஏமாறாதீர்கள்.

விழித்து எழுங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,...

புதன், 16 டிசம்பர், 2015

''திருஅருட்பா உலகின் உண்மையான அருள் நூல் ''

''திருஅருட்பா உலகின் உண்மையான அருள் நூல் ''


பல்லாயிரம் ஆண்டுகளாக மக்களை நல்வழிப் படுத்த பல ஞானிகளால் பல நூல்கள் எழுதி உலகம் எங்கும் படைக்கப் பட்டு உள்ளன.

பல போதகர்களாலும் பல நூல்கள் எழுதப்பட்டு உள்ளன.உலகில் உள்ள அனைத்து நூல்களும் பொய்யான நூல்களே யாகும்.

எல்லா நூல்களும் சாதி,சமய,மதப் பற்றுள்ள கற்பனை நூல்கள்.

உலகில் மக்களின் நலனுக்காக. மக்களின்  வாழ்க்கைகாக, மனிதன் கடவுளின் உண்மையைத் தெரிந்து கொண்டு ,அருளைப் பெரும்  வழி முறைகளை உள்ளது உள்ளபடி உண்மையாக தெரிவிக்கின்ற ஒரே நூல் ''திரு அருட்பிரகாச வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பா'' மட்டுமே என்பதை மனித குலம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உலக மக்களைத் திருத்துவதற்கு இறைவனால் வருவிக்க உற்றவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

திருஅருட்பா ஒன்றுதான் இறைவனால் எழுதப்பட்ட நூல்.என்பதை உலக மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்களோ ? தெரியவில்லை.

புரிந்து கொள்ளும் காலம் நிச்சயம் வரும் ,இது இறைவன் கட்டளை,

வள்ளலாரைப் பற்றி வெளி நாட்டினர் அறிந்து தெரிந்து புரிந்து கொண்ட அளவிற்கு.இன்னும் தமிழகம்,இந்தியா மாநில நாடுகள் முழுவதும் அறிந்து கொள்ளவில்லை,

கண்ட கண்ட நூல்களுக்கு பரிசும் பாராட்டுகளும் மத்திய அரசும் மாநில அரசும் ,தமிழ் மொழிக்கும்  ,பிறமொழிக்கும்  சான்றோர்களும் அரசியல் வாதிகளும் வழங்கிக் கொண்டு வருகின்றார்கள்.

படித்த அறிவுள்ள ஜீவிகள் திருஅருட்பாவைப் நன்கு படித்து இருந்தால் அவர்களுக்கு அறிவு விளங்கி இருக்கும்..

திருஅருட்பாவைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கும் வரை உலகம் உருப்படி ஆகாது.

உண்மையை அறிந்து கொள்ளாமல் பொய்யை பின்பற்றுபவர்கள் அழிந்து போவார்கள்.

உலக உண்மையும் ,மனித வாழ்க்கையும் ,உயிர்களின் தோற்றமும்,மாற்றமும்,,இயற்கை உண்மையும், கடவுளின் தன்மையும்,ஆட்சி அதிகாரங்கள் நடத்தும் முறைகளையும்,மிகத் தெளிவாக மக்களுக்கு காட்டியுள்ள ''ஒரே நூல் திருஅருட்பா '' மட்டுமே...

திரு அருட்பாவைப் படித்துப் பயன் பெறுங்கள் ....

பன்மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே--சொன்மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு,../

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ
சன்மார்க்கம் சங்கம் தலைப் பட்டேன் --என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்
மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து !

உலகில் உள்ள பொய்யான நூல்கள் அனைத்தும் அழிந்து போகும்.உண்மையான சுத்த சன்மார்க்கம் என்னும் புனித மார்க்கமான கொள்கைகள் ஒன்றே இனி எல்லா உலகும் நிலைபெறும் என்பது இறைவன் கட்டளை,இறைவன் ஆணையாகும்......என்கின்றார் வள்ளலார் .....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

செவ்வாய், 15 டிசம்பர், 2015

தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதி எவரிடமும் இல்லை,!

தமிழகத்தை ஆட்சி செய்யும் தகுதி எவரிடமும் இல்லை,!

தமிழகத்தை முறையாக, சரியாக, சுய நலம் இல்லாமல் ஆட்சி செய்யும் தகுதி எந்த அரசியல் கட்சிகளுக்கும் கிடையாது.

மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் ,அறிவு தெளிவு இல்லாத,எந்த முட்டாள்களைத் தேர்வு செய்யப் போகிறாகள் என்பது கடவுளுக்குத்தான் தெரியும்,

தமிழக மக்களை இன்னும் பத்து ஆண்டுகள் காப்பாற்றுவது கடினம் .

அதற்குமேல்தான் வருங்கால மக்கள் நாட்டையும் நாட்டைக் காப்பாற்றும் தகுதி உடையவர்களையும் அறிந்து தெரிந்து அறிவுடன் தேர்வு செய்வார்கள். அதுவரையில் மக்கள் சிரமப் பட்டுத்தான் ஆக வேண்டும்.

இப்போது நாட்டில் அரசியல் விஷக் கிருமிகள் அதிகம் பரவி விட்டது.கொள்கைகள் இல்லாத அரசியல் கட்சிகளும்,அரசியல் கட்சி தலைவர்களும்,கொள்ளை அடிக்கும் குணம் உள்ளவர்களும் அதிகமாக  வேர் ஊன்றி உள்ளார்கள் .

சாதாரண வட்டம் ,மாவட்டம்,மற்றும் மாவட்ட பிரதி  நிதிகள்,மந்திரிகள்,அனைவருமே கொள்ளை அடிக்கும் வல்லமை உள்ளவர்களாக மாறி விட்டார்கள்,

அவர்களுக்கு உடந்தையாக அதிகாரிகளும் அப்படியே உள்ளார்கள்.நல்லவர்கள் ஒரு சிலர் இருந்தால் அவர்களுக்கு சொல்லவொணாத்  துன்பங்களைக் கொடுத்து வெளியேற்றி விடுகின்றார்கள்,

அவர்களுக்கு அடிப்படையான அறிவே இல்லை,எப்படி நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றப் போகின்றார்கள்,

அரசியல் நடத்துவதற்கு ஆட்சியில் அமர்வதற்கு படிப்பும் பட்டமும் தேவை இல்லை,கட்சியும் தேவை இல்லை.

மக்களின்மேல் அன்பு,தயவு,கருணை, அறிவு, எதிலும்,பொது நோக்கம்,சுயநலம் இல்லாமை, சாதி,சமயம்,மதம் போன்ற பற்றுதல்கள் இல்லாமை, தனக்கு என்று வாழாமல் மக்களுக்காக வாழும் தகுதி உடையவர் எவரோ அவரே நாட்டை ஆளும் தகுதி உடையவர்.

அப்படிப் பட்ட நேர்மையானவர் மக்களுக்கு எப்போது கிடைப்பார் என்று மக்கள் எதிர்ப் பார்த்துக் கொண்டு உள்ளார்கள்.

இப்போது படித்து விபரம் தெரிந்தவர்களை விட ,பாமர மக்களிடம் தான் ஒட்டு வங்கிகள் அதிகம் உள்ளன,

பாமர மக்களை ஏமாற்றுவது மிகவும் சுலபம் என்பது அரசியல் கட்சிகளுக்குத் தெரியும்.,தேர்தல் நேரத்தில் அவர்களுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்தால் கண்ணை மூடிக் கொண்டு ஓட்டுப் போட்டு விடுவார்கள்.என்பது அவர்களுக்கு நன்றாகவேத் தெரியும்.

திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பது போல் .மக்களாய் பார்த்து திருந்தா விட்டால் அரசியல் கட்சிகளை ஒழிக்க முடியாது.

இப்போது திருந்துவது திறித்திக் கொள்வது,அரசியல் கட்சிகள் அல்ல ,..மக்கள்தான்,.மக்கள் திருந்தினால் தான் மட்டுமே நாட்டில் நல்லாட்சி மலரும்.மக்கள் துன்பம் இல்லாமல் நலமுடன் மகிழ்ச்சியுடன் வாழ முடியும்.

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் ,உங்களுக்கு நீங்கள்தான் நீதிபதி ,நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

இது சுதந்திர நாடு,..இது ஜனநாயக நாடு, ..இது குடி அரசு நாடு ,..உங்கள் குடும்பத்தைக் காப்பாற்ற நீங்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

பண்ணாத தீமைகள் பண்ணு கின்றீரே
பகராத வன்மொழி பகரு கின்றீரே
நண்ணாத தீயினம் நண்ணு கின்றீரே
நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்து அதனை நினைந்தே
கண்ணார நீர் விட்டுக் கருத அறியீரே
எண்ணாத எண்ணவும் நேரும் மோர் காலம்
எத்துணைக் கோள் கின்றீர் பித்து உலகீரே !

யாரும் நினைத்துப் பார்க்க முடியாத தீமைகள் செய்கின்றீர்கள்,சொல்லமுடியாத பொய்களை சொல்லி மக்களை ஏமாற்று கின்றீர்கள்,கண்போன்று மக்களைக் காப்பாற்ற வேண்டியதை விட்டு ,மக்கள் கண்ணீர் வடிக்கும் அளவிற்கு தீமைகள் செய் கின்றீர்கள்,

எல்லா வற்றுக்கும் ஒரு காலம் வரும் அப்போது  உங்களுக்கு வரும் துன்பங்களில் இருந்து யாரும் உங்களைக் காப்பாற்ற முடியாமல் பைத்தியக் காரர்கள் போல் அலைந்து கொண்டு இருப்பீர்கள் என்கின்றார் வள்ளலார்.

மக்களே நல்லது செய்யுங்கள் நலமுடன் வாழ்வீர்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
sell ..9865939896....

உலகில் உள்ளது எவருக்கும் சொந்தம் கிடையாது !

உலகில் உள்ளது எவருக்கும் சொந்தம் கிடையாது !

இங்கு இந்த உலகில்  நாம் வாழ்வதற்காக அனைத்தும் இறைவனால் படைக்கப் பட்டு உள்ளது.

எல்லா உயிர்களும் இன்பமுடன் வாழ வேண்டும் என்பதே இறைவனின் விருப்பம், இறைவனின்  கொள்கை, இறைவனின் சட்டம்.

இறைவன் சட்டத்தை மீறி சொத்து சேர்த்து வைப்போதோ ,பொருள்களை சேர்த்து வைப்போதோ ,மனைவி இருக்க வேறு பெண்களைத் தேடுவதோ இயற்கைச் சட்டப்படி தவறான செயல்களாகும் .

உங்களுக்கு மரண வருகின்ற போது நீங்கள் நேசித்த நிலமோ,பொருளோ,பெண்ணோ எதையும் நீங்கள் எடுத்த செல்ல முடியாது...ஏன் எதனால் என்று அறிவுள்ள மனிதர்கள் சிந்தித்தால் உண்மைகள் தெளிவாகும்.

உங்களின் சொந்தம் என்றும் சொல்லும்  பூமியோ,பொருளோ,பெண்ணோ எதுவாக இருந்தாலும் மரணம் வருகின்ற போது எதையும் எடுத்து செல்ல முடியாது, அதற்கு அனுமதிக் கிடையாது.

நீங்கள் வைத்திருந்த அனைத்தும் இறைனிடம் இருந்து திருடியது என்பது இறைவனுக்குத் தெரியும். இறைவனிடம் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

எனவே நீங்கள் திருடியதை எவ்வளவு காலம் மறைத்து வைத்து இருந்தாலும் மரணம் வருகின்றபோது நீங்கள் அனைத்தையும் விட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும் .

எனவே நீங்கள் கொள்ளை அடித்து சேர்த்து வைப்பது உங்களுடையது அல்ல இறைவனுடையது என்பதை புரிந்து கொண்டால் எவரும் கொள்ளை அடித்து சேர்த்து வைக்க மாட்டார்கள்.

உங்களின் வாரிசுளுக்காக சேர்த்து வைப்பது என்பது பெரிய முட்டாள் தனமாகும்,நீங்கள் மரணம் அடைந்து விட்டப்பிறகு உங்கள் வாரிசுகள் யார் ? என்பதே உங்களுக்குத் தெரியாது.நீங்கள் யார் ? என்பதே உங்களுக்குத் தெரியாது.

உங்கள் வாரிசுகளும் அவற்றை அழிக்காமல் மறைத்து வைக்க முடியாது .அவர்களும் அதை அனுபவிக்க முடியாது.உலகில் உள்ளது யாவும் கை மாறிக் கொண்டே இருக்கும்.உருவம் மாறிக் கொண்டே இருக்கும்.

எனவே அறிவுள்ள மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டியது ;-- அழிந்து போகும் பொருளை விரும்பாமல்,தேவை இல்லாமல் பொருள்களை சேர்த்து வைக்காமல் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.

உங்களிடம் உள்ளப் பொருள்களை, பொருள் இல்லாமல் துன்பப் படும் ஜீவன்களுக்கு,அதாவது உயிர்களுக்கு ... உங்களிடம் தேவை இல்லாமல் சேர்த்து வைத்திருக்கும் பொருட்களை வாரி வழங்குங்கள்,அப்போதுதான்  உங்களுக்கு இறைவன் நன்மையைச் செய்வார் /

இறைவன் என்ன ? நன்மையை செய்வார் என்றால் ? அழியும் பொருளை விட்டு விட்டால் அழியாப் பொருளான ''அருளை '' வழங்குவார் .

அருள் என்பது என்றும் அழியாதது .ஏன் என்றால் இறைவன் உங்களுக்கு அன்பினால் கொடுப்பது .

இறைவன் அன்பினால் கொடுக்கும் ''அருள்'' ஒன்றுதான் மனிதர்களுக்கு சொந்தமானது அவர்கொடுத்த ''அருளை'' அவர் திரும்ப பெற மாட்டார் .

அந்த ''அருள்தான்'' உங்கள் உடம்பையும்,உயிரையும், என்றும் அழியாமல்,மரணம் வராமல் பாது காக்கும் கருவியாகும்.

எனவே மனிதர்களாகிய நாம் அழிந்து போகும் பொருள்மீது பற்று வைக்காமல் ,என்றும் அழியாமல் இன்பமுடன் நம்மை வாழ வைக்கும் அருளைத் தேடவேண்டும்.

பொருளைத் தேடுவதற்கு அலைந்து அலைந்து தேடுகின்றீர்கள் .அதேபோல் அருளைத் தேடுவதற்கு அலைந்து அலைந்து தேடுங்கள் .உங்கள் மீது கருணைக் காட்டி இறைவன் அருளை வழங்குவார்.

பொருள் புறம் என்னும் வெளியில் உள்ளது,அருள் அகத்தில் அகம் என்னும் ஆன்மாவில் உள்ளது,

உங்களிடம் உள்ள அழியாத அருளைத் தேடாமல் ,புறத்தில் அழிந்து போகும் பொருளைத் தேடுவது இறைவன் சட்டப்படி குற்றமாகும்.

பொருளை அருளாக மாற்றும் வழியைக் காட்டியவர் வள்ளலார்.

அதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யமே போட்ச வீட்டின் திறவு கோள் என்றார்.

உங்களிடம் உள்ளப் பொருள்களை ஏழை எளிவர்களுக்கு வாரி வழங்குகின்ற போது அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றார்கள்,அந்த மகிழ்ச்சி ஆன்மாவில் இருந்து தோன்றுகின்றது.அதனால் அதற்கு ஆன்ம மகிழ்ச்சி என்று பெயராகும் .

அந்த ஆன்ம மகிழ்ச்சி..ஆன்ம நெகிழ்ச்சியாக மாற்றம் அடைந்து உங்களின் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கும் வல்லபம் உடையது .''அதற்கு மோட்ச வீட்டின் திறவு கோள்'' என்று வள்ளல்பெருமான் பெயர் வைத்தார்.

அந்த திறவுகோளைக் கொண்டு தான் .நம்முடைய ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் கதவு என்னும் அசுத்த மாயா திரைகளை நீக்க முடியும், கதவைத் திறந்துதான் உள்ளே இருக்கும், நமக்கு சொந்தமான அருளைப் பெற வேண்டும் .பெற முடியும் என்றார் .

அந்த அருளை அனுபவிப்பது தான் பேரின்ப வாழ்வு என்பதாகும்.

எனவே நமக்கு சொந்தம் இல்லாத பொருளைத் தேடிப் பிடித்து, அலைந்து திரிந்து கொண்டு வந்து பதுக்கி வைத்து கொண்டு  அழிந்து போகாமல்,  நமக்கு சொந்தமான அருளைத் தேடிப் பிடித்து,தெரிந்து அறிந்து பிரிந்து  அதை அனுபவித்து என்றும் அழியாமல் வாழும் பேரின்ப பெருவாழ்வு வாழ வேண்டும் ,

இதுதான் மனித வாழ்வின் உன்னதமான லட்சியமாகும் .

வள்ளலார் பாடல் ;--

உற்ற மொழி உரைக்கின்றேன் ஒருமையினால் உமக்கே
உறவன் அன்றிப் பகைவன் என எண்ணாதீர் உலகீர் !

புகுந்தருணம் இது கண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் ஏன் மொழி யோர் பொய் மொழி எண்ணாதீர்

உகுந்தருணம் உற்றவரும், பெற்றவரும்,பிறரும்

உடமைகளும்,உலகியலும் உற்ற துணை அன்றே

மிகுந்த சுவைக் கரும்பே செங்கனியே கோற்றேனே

மெய்ப்பயனே கைப் பொருளே விலை அறியா மணியே ,

தகுந்த தனிப் பெரும் பதியே தயா நிதியே கதியே

சத்தியமே என்று உரைமின் பத்தி யொடு பணிந்தே .!

என்று தெளிவுபட சொல்லி பதிவு செய்கின்றார் வள்ளலார்.

நமக்கு சொந்தம் இல்லாத பொருளை விட்டுவிட்டு சொந்தம் உள்ள அருளைப் பெற்று  வாழ்வாங்கு வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
sell ....9865939896,

திங்கள், 14 டிசம்பர், 2015

பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் !

பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியை தடை செய்ய வேண்டும் !

மக்காத பிளாஸ்டிக் பைகள் மக்கள் பயன் படுத்த கூடாது என்று அரசும் அதிர்காரிகளும் சொல்லிக் கொண்டு உள்ளார்கள்

கொஞ்சமாவது அறிவு இருந்தால் இப்படி சொல்லுவார்களா !

மக்கள் எப்படி பயன் படுத்துகிறார்கள் பை கிடைத்தால் தானே பயன் படுத்துவார்கள் .பைகள் மக்களுக்கு கிடைக்காமல் இருக்க இருக்க என்ன நடவடிக்கைகள் அரசும் அதிகாரிகளும் செய்து இருக்கின்றார்கள்.

மக்காத பிளாஸ்டிக் பைகள் தயாரிக்கும் கம்பெனிகளை இழுத்து மூட வ்ண்டியதுதானே .அதனுடைய லைசென்சை ரத்துசெய்ய வேண்டியதுதானே .

பைகள் தயாரிக்கும் கம்பெனிகள் இடம் இருந்து லஞ்சம் வாங்கிக் கொண்டு அனுமதி வழங்குவார்களாம் அவர்கள் தயாரிப்பார்களாம் .மக்கள் வாங்கக் கூடாதாம் இது என்ன நியாயம் ?

எரிவதை பிடிங்கினால் கொதிப்பது அடங்கி விடும் என்பது தெரியாதா ?.

அறிவுள்ள ஜீவிகளே முதலில் தயாரிப்பதை தடை செய்யுங்கள் .மக்கள் பயன் படுத்துவது தானே நின்று விடும் .

மேலும் குடிப்பது உயிருக்கு ஆபத்து என்றும் ,குடி குடியைக் கெடுக்கும் என்றும்  மது பானங்களின் பாட்டில் மேல் எழுதி ஒட்டி உள்ளீர்கள் .

அறிவுள்ள ஆட்சியாளர்கள் அதிகாரிகள் எப்படி நாட்டைக் காப்பாற்றுவார்கள் என்றே தெரியவில்லை.

மது பானங்களை தாயரித்து அரசே விற்பனை செய்துவிட்டு மக்களை குடிக்காதீர்கள் என்றால் அரசுக்கும் அதிகாரிகளுக்கும் என்னதான் அறிவு இருக்கு என்பதே தெரியவில்லை .

மதுவினால் அரசுக்கு அதிக அளவு பணம் வருகிறது என்று மக்களை அழித்து அதனால் வரும் பணத்தை வைத்துக் கொண்டு ஆட்சி செய்வது எந்த விதத்தில் நியாயமானது .

இப்போது நம்முடைய தமிழ் நாட்டில் பெருமழை வந்து அளவில் அடங்காத உயிர் சேதம் ,பொருள் சேதம்,ஏற்ப்பட்டு உள்ளது .ஏன் உங்களால் காப்பாற்ற முடியவில்லை.

மதுவினால் மக்களை அழித்து பொருளை ஈட்டிநீர்களே அந்தப்பணத்தை வைத்து மக்களை காப்பாற்ற முடிந்ததா ? மத்திய அரசிடமும்,மக்களிடமும்,கை ஏந்தி நிற்கின்றீர்களே .

ஆட்சி செய்வது முக்கியம் அல்ல .மக்களை நல்வழியில் கொண்டு சென்று மக்களுக்கு எந்த வகையிலும் துன்பம் இல்லாமல் வாழ வைப்பதே ஆட்சியாளர்களின் கடமை .

பட்டம் பதவி,புகழ் அதை வைத்துக் கொண்டு மக்களிடம் கொள்ளை அடிப்பது ஆட்சி அல்ல .

எதை செய்தாலும் அவை மக்களுக்கு நன்மை தரக்
கூடியதா என்பதை அறிவு சார்ந்த சான்றோர்களை அணுகி அவர்களின் நல்ல யோசனைகளை கேட்டு அதை யும் மறு பரிசீலனை செய்து செயல்படுத்த வேண்டும்.

தான் தோன்றித் தனமாக தனக்கே எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தால் எதை செய்தாலும் அவை மக்களையும் அழித்துவிடும் உங்களையும் அழித்துவிடும்.

ஆட்சி அதிகாரம் என்பது சத்தியத்தின் செயலாகும் .கடவுளுக்கு நிகரானது ,உண்மை ஒழுக்கம் ,நேர்மை.சத்தியம்  தவறாமல் செயல்பட்டால் மட்டுமே மக்களைக் காப்பாற்ற முடியும்.

சாதாரண மக்காத பிளாஸ்டிக் பைகளை தயாரிக்கும் கம்பெனிகளின் தாயரிக்கும் உரிமையை ரத்து செய்யாமல் .தயாரித்து வியாபாரம் செய்து கொண்டு இருந்தால் மக்கள் எப்படி பயன் படுத்தாமல் இருப்பார்கள்

முதலில் தாயாரிப்பை நிறுத்துங்கள் மக்கள் பயன் படுத்த மாட்டார்கள் மக்களுக்கு பைகள் கிடைக்காமல் இருக்க வழி வகை செய்யுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கருணை உள்ள ஆட்சி வரவேண்டும் !

கருணை உள்ள ஆட்சி வரவேண்டும் !


கருணை உள்ள ஆட்சி வரவேண்டும் என்றால் .வள்ளலார் கொள்கையைப் பின் பற்றி வாழும் மாணவர்கள் படித்துப் பட்டம் பெற்று .ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் களாகவும்,மாவட்ட காவல் துறை கண்காணிப்பு பனியின் பொறுப்பில் இருக்க வேண்டும்

மேலும் மத்திய மாநில ஆட்சியில் அமரும் தலைவர்கள் வள்ளலார் கொள்கையை முற்றிலும் கடைபிடிக்கும் கருணை உள்ளவர்களை மக்கள் தேர்வு செய்ய வேண்டும்.

மக்கள் புரிந்து கொள்ள இன்னும் கொஞ்சம், பல வருடங்களாகும்

மக்கள் மனதில் ..வள்ளலார் சொல்லிய வலியுறுத்திய ''சுத்த சன்மார்க்க'' கொள்கைகளை மக்கள் புரிந்து கொள்ளும்படி தெரிந்து கொள்ளும்படி ,மக்கள் எப்படி வாழ வேண்டும் என்ற வாழும் வழிமுறைகளை சுத்த சன்மார்க்க அன்பர்கள் மக்களுக்கு தெளிவாக போதிக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் சொல்லிய ''சுத்த சன்மார்க்க கொள்கை''விதிகளை  விதைகளை உலகம் முழுவதும் விதைக்க வேண்டும்.

வள்ளல்பெருமான் நமக்கு இட்ட கட்டளையை ஆன்மாவில் பதிய  வைத்து கொண்டு வழி இது,  துறை இது,  நீ செய்யும் முறை இது ..என்பதை தெளிவாக ,உலக  மக்களை காப்பாற்ற சுத்த சன்மார்க்கிகள் தீவிரமாக ஜீவ காருண்யத்துடன் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

இது நிச்சயம் நடக்கும் இவை வள்ளலார் சொல்லிய அருள் வாக்காகும்.

மக்கள் துன்பம் இல்லாமல் இன்பமுடன் வாழ வேண்டுமானால் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை விட்டால் வேறு வழியே இல்லை.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.;--

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்த்திடலாம்
எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்புடையீர் வம்மின் இங்கே''சமரச சன்மார்க்கம்''
அடைந்திடுமின் அகவடிவு இங்கு அனக வடிவாகிப்

பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேற் பொருளே
வன்புடையார் பெறற் அரிதாம் மணியே சிற்சபையின்
மாமருந்தே என்று உரைமின் தீமை எல்லாம் தவிர்ந்தே !

நீங்கள் துன்பம் இல்லாமல் இன்பமுடன் வாழ்வதற்கு நீங்கள் சேர வேண்டிய ஒரே இடம்,வள்ளல்பெருமான் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்பதாகும்.

இங்குதான் உங்களின் உயிர்,உடம்பு,உடமைகள் என்றும் அழியாமல் காப்பாற்றும் உண்மையான வழியைக் காட்டுகின்றது.

சுத்த சன்மார்க்கம் ஒன்றில்தான் அறிவு விளக்கம் தரப்படுகின்றது.

ஒருமனிதன் உண்மையான அறிவு விளக்கம் பெற்றால் எக்காலத்திலும் தவறு செய்யவே மாட்டான்.

மனிதர்கள் தவறு செய்வதற்கும் ,அழிந்து போவதற்கும் அடிப்படைக் காரணம் அறிவு தெளிவு இல்லாமையே காரணமாகும்.

இதுவரையில் எந்த ஒரு சமயங்களும்,மதங்களும், போதகர்களும்,விஞ்ஞானிகளும்,அறிவியல் ஆராய்சி யாளர்களும் ,அரசியல் தலைவர்களும்.மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற அறிவின் செயல் பாட்டுக்கு செல்லவில்லை.

புத்தியைக் கொண்டுதான் செய்லபடு கின்றார்கள் .அறிவைக் கொண்டு செயல்பட வில்லை.புத்திவேறு .அறிவு வேறு  என்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

புத்தி என்பது புறத்தில் செல்லும் இயல்பு  உடையது .அறிவு என்பது அகத்தில் உள்ளது...

புத்தியின் வழியில் சென்றால் துன்பம்,துயரம்,அச்சம, பயம்,போன்ற துன்பங்களினால் மனிதன் அழிந்து போவான் .

அறிவின் வழியில் சென்றால் மனிதன் என்றும் அழியாமல் மகிழ்ச்சியுடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வான் .

அகத்தில் உள்ள அறிவை தட்டி எழுப்புவதுதான் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கை களாகும்

தானும் வாழ்ந்து மக்களை காப்பாற்ற வேண்டுமானால் வள்ளலார் சொல்லிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற புனிதமுறும் சங்கத்தில் சேர்ந்து பயன் பெறுவோம்.

அறிவாலே அறிவினை அறிகின்ற போது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !

அருளாலே அருள் இறை அருள்கின்ற போது
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே !

அறிவு விளக்கம் அடைகின்ற போது அறிவுனுள் இருக்கும் அருளின் தன்மை என்னவென்று தெரியும்.என்கின்றார் வள்ளல்பெருமான் .

அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் தெரிந்தால் நாம் யார் ? என்ற உண்மையும் ,நம்மைப் படைத்தவன் யார் ? என்ற மெய்ப்பொருள் உண்மையும் தெரியும்.

இவை யாவும் மனிதன் தெரிந்து கொண்டு வாழ்வதற்கு உலகில் எவரும் மக்களுக்கு சரியான வழியைக்  காட்டவில்லை..காட்டி இருந்தால் மக்கள் தவறான வழியில் சென்று அழிந்து கொண்டு இருக்க மாட்டார்கள்.

எனவே உலகில் உள்ள துன்மார்க்க செயல்களை எல்லாம் அழித்து விட்டேன் என்கின்றார் வள்ளல்பெருமான்.

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்தசிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்
மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து !.....என்கின்றார் .

மேலும்

பன் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத் ததுவே --சொன்மார்க்கத்து
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு !

இனிமேல் எந்த மார்க்கமும் செயல்பட முடியாமல் அழித்து விட்டேன் சுத்த சன்மார்க்கம் ஒன்றே செயல்படும்.இது இறைவன் சட்டம் இறைவன் செயல் என்கின்றார் வள்ளல்பெருமான்.

மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ,மனிதனுக்கு அறிவு விளக்கம் இல்லாமல் தடுத்துக் கொண்டு இருக்கும்,மனிதனை அழித்துக் கொண்டு இருக்கும் சாதி,சமயம்,மதம்,முதலிய பொய்யான கற்பனைக் கதைகளை குழி தோண்டி புதைத்து விட்டு மனிதனாக வாழ்வோம்

கருணை உள்ள ஆட்சியை கொண்டு வருவோம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

வெள்ளி, 11 டிசம்பர், 2015

மக்களின் மன மாற்றங்கள் ! யார் ஆட்சியில் அமர்வது !

மக்களின் மன மாற்றங்கள் ! யார் ஆட்சியில் அமர்வது !

தமிழகத்தில் நிரந்தர முதல்வர் ஜெயலலிதா தான் என்று அ,இ,அ ,தி,மூ,க,வினர் ஜெயலலிதாவின் ஆணைப்படி மக்கள் மனதிலே விதையை விதைத்து விட்டார்கள் .

அ,இ,அ,தி,மூ,க,வுக்கு அதிகமாக ஒட்டு போடுபவர்கள் ஏழை எளிய அப்பாவி மக்கள் என்பதை புரிந்து கொண்டு அவர்களை எம்,ஜி,ஆரின் மாய வலையில் சிக்கவைத்து இது வரையில் ஆட்சியில் அமர்ந்து உள்ளார்கள்.

அதற்குத் தகுந்தாற்போல் எதிர் கட்சிகளும் சிதறிப் போய் வலுவு இழந்து உள்ளது .அதைப் பயன்படுத்தியும் அடுத்த தேர்தலில் மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிடுவார்கள் .நாம்தான் ஆட்சியில் அமரப்போகிறோம் என்கின்ற ஆணவத்தில் இருந்தார்கள்.

இயற்கையின் செயல்பாடு !

சட்டத்தை நீதியை ஏமாற்றலாம்,மக்களை ஏமாற்றி விடலாம் இயற்கையை எவராலும் ஏமாற்ற முடியாது.என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,

ஜெயலிதாவை மாற்ற வேண்டுமானால் இயற்கையால் தான் முடியும் என்பதை இயற்கை சீற்றம் மக்களுக்கு சுட்டிக் காட்டி உள்ளது.

தமிழகத்தின் பெரு மழையால்,பெரு வெள்ளப் பெருக்கால் மக்கள் வீடு இழந்து,பொருள்களை இழந்து ,உயிர்களை இழந்து ,உற்றார் உறவினர்களை இழந்து,உணவு இல்லாமல்,உடை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தண்ணீரில் மிதந்து கொண்டு ,பசி பட்டினி ,வறுமை என்று தமிழகமே கண்ணீர் சிந்தி ஓலமிட்டுக் கொண்டு அவதியுறும் காட்சிகள் கண்களை விட்டு அகலாமல் உள்ளது.

பார்ப்பவர் நெஞ்சங்கள் பதறுகின்றது.கள் நெஞ்சங்களையும் கரைய வைத்துள்ளது.அவற்றைப் பார்த்து கண்ணீர் விடாத மக்களே இல்லை என்று சொல்லலாம்.

கருணை உள்ள உள்ளங்கள் தன்னலம் கருதாது பல வழிகளிலும் ,முறைகளையும்,துறைகளிலும் மக்களைக் காப்பாற்றிக் கொண்டு உள்ளார்கள்.காப்பாற்றிக் கொண்டும் வருகிறார்கள்.

பொது மக்கள் .நிறுவனங்கள்.தொண்டு நிறுவனங்கள்,வெளி மாநிலங்கள்,வெளி நாடுகள் மற்றும் அனைத்து அன்பு உள்ளங்களும் கருணை உள்ளங்களும் .மக்களுக்கு பொருளாகவும்,பணமாகவும் வாரி வழங்கிக் கொண்டு உள்ளார்கள்.

தமிழக ஆட்சியாளர்களும்,அதிகாரிகளும் மந்திரிகளும்,சட்டசபை  உறுப்பினர்களும் வட்டம்,மாவட்டம் போன்ற அ,இ,அ,தி,மூ,க,அன்பர்கள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி மக்கள் மத்தியிலே கேள்விக் குறியாக உள்ளது.

மக்கள் கொடுக்கின்ற பொருள்களை வாங்கி தாங்கள் கொடுப்பது போல் விளம்பரம் செய்து கொண்டு உள்ளார்கள் என்பது ஓட்டுப்போடும் மக்களுக்குத் தெளிவாக புரிந்து விட்டது.

பல லட்சம் விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது.விவிசாயிகளின் விலை நிலங்கள் எல்லாம் பயிர்கள் அழிந்து தண்ணீருடன் மண் முடிக் கொண்டது.

விவசாயிகளுக்கும்,அனைத்தையும்  இழந்து தவிக்கும்  மக்களுக்கும் இந்த அரசு என்னச் செய்யப்போகின்றது என்ற கேள்விக் கணைகள் மக்கள் மனத்திலே வேர் ஊன்றி விட்டது.

மக்களைக் காப்பாற்றும் அரசின் மெத்தனப் போக்கு மக்களுக்கு புரிந்து விட்டது.

அ,இ,அ,தி,மூ,க,அரசால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள் .

யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவப் போக்கை இயற்கை அழித்து விட்டது.

அடுத்த தேர்தலில் யாரை ஆட்சி பீடத்தில் அமர்த்துவது என்பதை ஓட்டுப்போடும் மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.

மக்களே நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும் .யாரை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற அதிகாரம் உங்கள் கையில்தான் உள்ளது .

மக்களுக்காக ஆட்சி இருக்க வேண்டும்,ஆட்சிக்காக மக்கள் இருக்கக் கூடாது.

இயற்கை மாற்றி உள்ளது .நீங்கள் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டிய தருணம் இது .

வள்ளல்பெருமான் சொல்லுவார் ;--

இது நல்ல தருணம் --அருள் செய்ய
இது நல்ல தருணம்

பொது நல்ல நடம் வல்ல புண்ணியரே கேளும்
பொய்யேதும் சொல்கிலேன் மெய்யே சொல்கின்றேன் /

மதித்த சமய மத வழக்கெல்லாம் மாய்ந்தது
வருண ஆச்சிரமம் எனும் மயக்கமும் சாய்ந்தது
கொதித்த லோகாசார கொதிப்பு எல்லாம் ஒழிந்தது
கொலையும் களவும் மற்ற புலையும் அழிந்த்து.

குறித்த வேதாகமக் கூச்சலும் அடங்கிற்று
கொதித்த மன குரங்கும் முடங்கிற்று
வெறித்த வெவ் வினைகளும் வெந்து குலைந்தது
விந்தை செய் கொடு மாயை சந்தையுங் கலைந்தது

கோபமும் காமமும் குடிக் கேட்டுப் போயிற்று
கொடிய ஓர் அகங்காரம் பொடிப் பொடி ஆயிற்று
தாபமும் சோபமும் தான் தானே சென்றது
தத்துவம் எல்லாம் எந்தன் வசம் நின்றது

கரையா எனது மனக் கல்லும் கரைந்தது
கலந்து கொளற்கு  என் கருத்தும் விரைந்தது
புரையா நிலையில் என் புந்தியும் தங்கிற்று
பொய்படாக் காதல் ததும்பி மேற் பொங்கிற்று

இது நல்ல தருணம் அருள் செய்ய
இது நல்ல தருணம் அருள் செய்ய !

என வள்ளல்பெருமான தெளிவாக சொல்லி உள்ளார் .நல்ல தருணம் வரும்போது அதை மக்கள் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் வள்ளல்பெருமான் சொல்லியது ;--

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க --தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக
எல்லோரும் வாழ்க இசைந்து .

மக்கள்மேல் அன்பும்,தயவும் .கருணையும் உள்ள நல்ல குணமுடையவர்கள் தான் நாட்டை அட்சி செய்ய வேண்டும் என்கின்றார் வள்ளல்பெருமான் .

ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 10 டிசம்பர், 2015

இறைவன் ஒருவரே உயர்ந்தவர் !

இறைவன் ஒருவரே உயர்ந்தவர் !

அந்த இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி என்பவராகும்.அவர் மனிதர் அல்ல ..அவர் அருள் ஒளியாக உள்ளார் .

வேதங்களிலும்,ஆகமங்களிலும்,புராணங்களிலும்,இதிகாசங்களிலும்,சொல்லிய கடவுள் உண்மையானக் கடவுள்கள் அல்ல !

உலகில் உள்ள எல்லா மதங்களையும் வேதங்களையும் விட இறைவனே உயர்ந்தவர்

தனது பெயருக்கு பின்னால் உள்ள சாதி,சமயம், மதம் போன்ற சடங்குகளை  கூட துறக்க முடியதவர்களா மண் ஆசை, பெண் ஆசை, பொன் ஆசை எல்லாம் துறந்து என்ன சாதிக்கப் போகின்றார்கள், 

பொருள் தன்மை உள்ள கடவுளை போற்றி வழிபடுவதால் என்ன உணர போகிறார்கள்

எவ்வளவு வேதங்கள், உபநிடங்கள், கீதை பற்றி பக்கம் பக்கமாக எழுதி விடுவதால் மட்டுமே ஒருவர் இறைவனை நெருங்கி விட முடியாது

கண்ணப்பர் காலத்தில் இருந்தே இந்நிலை அப்படி தான் இருக்கிறது

தனக்கு தினமும் பூஜைகளை வழுவாமல் செய்து வரும் கோவில் குருக்களுக்கு காட்சி தராமல் மாமிச உணவை படைத்த போதிலும் இறைவனின் மீது தயவு கொண்டு தனது கண்ணையே கொடுத்த கண்ணப்பருக்குதான் இறைவன் காட்சி தந்தார் என்று சொல்லுவதும் கதைகள்தான் .

இதுபோல் எத்தனைக் கதைகளை மக்களுக்கு போதித்து உள்ளார்கள்.

கடவுளிடம் அருளைப் பெறுவதற்கு எது தேவை ?

இறைவனிடம் அன்பும் ,உயிர்களிடம் இரக்கமும்,போன்ற ஜீவ காருணயம் ஒன்றாலே கடவுளின் அருளைப் பெறமுடியும்.வேறு எந்த வழியாலும் பெறமுடியாது  என்று வள்ளல் பெருமகனார் மிகத் தெளிவாக சொல்லி உள்ளார் .

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்கின்றார்.

இறைவனிடம் அருளைப் பெறுவதற்கு வேதம் ,ஆகமம், புராணம்,இதிகாசம், சாத்திரங்கள்  சொல்லிய சங்கற்ப ,விகற்ப,சடங்குகள் எதுவும் தேவை இல்லை என்கின்றார் வள்ளலார் .

 மேலும்;--
இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார்.அதற்கு காரணம் இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் தான் இது .
ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.என்கின்றார் .
மேலும் இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்றால் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை..
நான் பாடிய பாடல்களோ,? நான் வணங்கிய தெய்வங்களோ  ? நான் பின் பற்றிய சமய மதங்களோ ?என்னைத் மேலே தூக்கி விடவில்லை.
எல்லா உயிர்களிலும் ,உடம்புகளிலும் இறைவன் இருக்கின்றார் என்னும் உண்மையை அறிவால் அறிந்து கொண்டு உண்மை ஒழுக்க நெறியான சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து ,மெய்ப் பொருள் எது என்பதை நன்கு உணர்ந்து கொண்டேன்.

மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெரு நெறி ஒழுக்கம் யாதெனில் .''கருணையும்,விவமே பொருள் எனக் காணும் காட்சியும்;; அறிந்தேன் என்கின்றதுதான் என்னை ஏறா நிலை மிசை ஏற்றி விட்டது என்கின்றார்.

அது எதுவெனில் .அன்பு,தயவு,கருணை .என்பதாகும் மேலும் தயவு என்னும் கருணைதான் என்னை மேலே ஏற்றி விட்டது என்கின்றார்.

அன்பு,தயவு,கருணை என்கின்ற மூன்றும்,ஒன்றோடு ஒன்று இணைகின்றபோது அருள் என்பது தடை இல்லாமல் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அந்த அருள்தான் உடம்பையும் ,உயிரையும்,மாற்றும் ஆற்றல் உடையது .

அன்பு,தயவு,கருணை உடையவர்களை எவ்வித ஆபத்துகளும் நெருங்காது..துர்மரணங்களும் நெருங்காது.,இயற்கை சீற்றங்களால் மேலும் ஐந்து பஞ்ச பூதங்களாலும் அழிவு உண்டாகாது .

இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடைவிடாது நம்மை பாதுகாத்துக் கொண்டே இருப்பார்.

அந்த உண்மையான இறைக்  காட்சியைப் பெறுவதற்கு தடையாக இருப்பது சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கற்பனைக் கதைகளின் நம்பிக்கைதான்.

நம்மை படைத்த இறைவன் நமது உண்மையான தந்தை நம்மிடம் மிக அருகில்,நம் உடம்பில் இயற்கை உண்மையாக ,இயற்கை விளக்கமாக ,இயற்கை இன்பமாக அமர்ந்து இயக்கிக் கொண்டு உள்ளார். 
கருணையுடன் நம்முடைய சிரசின் நடுவிலே ஒளியாக அமர்ந்து இயக்கிக் கொண்டு உள்ளார்.அதுதான் இயற்கை உண்மை யான ஆன்ம ஒளி ...இயற்கை விளக்கமான உயிர்,..இயற்கை இன்பமான உடம்பு என்பதாகும்.

,இயற்கை உண்மையாக இயற்கை விளக்கமாக ,இயற்கை இன்பமாக இருக்கும் அருட்பெருஞ்ஜோதி இறைவனை... நாம் வெளியே உள்ள வேதங்களிலும், ஆலமங்களிலும்,புராணங்களிலும்,இதிகாசங்களிலும், சாஸ்திர சம்பிர்தாயங்களில் தேடி கொண்டு இருக்கின்றோ,/

இறைவன் கொடுத்த இந்த பிறவியை,இறைவன் குடி இருக்கும் வீடு என்னும்(உடம்பை ) ஆலயத்தை வீண் செய்து விடுகின்றோம் என உலக மனித இனத்தினை எண்ணி எண்ணி வள்ளல் பெருமகனார் வேதனை படுகின்றார்கள்.
*மனிதனை மனிதனாகவும் சக உயிரினங்களை உயிரனங்களாக பார்க்க தெரியாமல் சாதி மத சமய போர்வை கொண்டு செயற்கையாக பார்க்கும் மனிதர்களின் பகுத்தறிவு கொண்டு எப்படி இறைக்கை உண்மையாக,இயற்கை விளக்கமாக  உள்ள இறைவனை அடைய முடியும்
*எனவேதான் சாதி மதம் சமயங்கள் சாஸ்திர சம்பிர்தாயங்கள் எல்லாம் இனி பொய்யாக போய்விடும்.என்றும் அவற்றை இருக்கும் இடம் தெரியாமல் மறைத்து விடுவேன்  என்றும் வள்ளல் பெருமகனார் கூறுகின்றார்கள்.

வள்ளல் பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

வேதங்கள் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் 
வேதாகமத்தின் விளைவு அறியீர் --சுதாகச்
சொன்னதலால் உண்மை வெளி தோன்ற உரைத்தலிலே 
என்ன பயனோ இவை ...

என்கின்றார் வள்ளல்பெருமான்.

அதன் வழியாக இறைவனை அடைய முற்பட்டால் இந்த ஒருபிறவி மட்டும் இல்லை பல நூறு பிறவி கூட ஆகலாம் இறைவனை அடைய என்று எச்சரிக்கை செய்கிறார்கள்

அடுத்த பிறவியும் நமக்கு இந்த உயர்ந்த மனித பிறவி தான் கிடைக்கும் என எந்த உத்தரவாதமும் கிடையாது மிருகங்களாகவோ தாவரங்களாகவோ நமது ஊழ் வினையின் அடிப்படையில் கிடைக்கலாம்

எனவே சாதி,சமய,மதம் என்னும் மாயை,கன்மம்,வசப்  பட்டு சாதி மத சமயங்களில் முழுகி இறைவனை அடைய முடியாமல் தவிக்கின்ற அனைவரும் அவர்களால் தவறாக வழி நடத்தப்படும் அனைவரையும் அருள்பெரும்ஜோதி ஆண்டவர் தனது அருளால் நிரப்பி அவர்கள் அனைவரும் சுத்த சன்மார்க்க வழியில் வந்து எல்லாம் வல்ல இறைவனை உணர்ந்து கொள்ள அனைவரும் இணைந்து பிரார்த்தனை செய்வோம்

பெறுவதற்கு அரிய இந்த மானிட பிறவியில் பிறந்தவர் இந்த பிறவிலேயே இறைவனை அடைய வில்லை எனில் அவன் வீணில் பிறந்தவர்ரே ஆவர்.

இனி சாதி,சமய,மதங்களை பின் பற்றி வாழாமல் வள்ளல்பெருமான் சொல்லிய வழிகாட்டிய சுத்த சன்மார்க்க நெறியைப் பின்பற்றி வாழ்வோம் வளம் பெறுவோம்.

எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதி ,பரம் பொருள் அருட்பெருஞ்ஜோதி ஒருவரே ! அவர் நம்முடனே இருக்கின்றார் .அவரை தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,