வெள்ளி, 30 செப்டம்பர், 2011

திரு அருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற நாள் .
நாள் ;----5--10--2011


அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிபபெருங் கருணை அருட்பெரும் ஜோதி !

திரு அருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற நாள் .

     ஞான பூமியான இந்தியாவின் தமிழ் மாநிலத்தில் [தமிழ் நாட்டில்] இறைவனால் வருவிக்க உற்றவர் இராமலிங்கம் என்னும் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .

     தமிழ் நாட்டில் இறைவன், சிதம்பர சகசியம் என்னும் திரு உருவைத் தாங்கி திரு நடனமிடும் தில்லை சிதம்பரத்திற்கு வடக்கே மருதூர் என்னும் சிற்றூரில்,இராமைய்யா என்பவருக்கும் சின்னம்மை என்பவருக்கும் ஐந்தாவது குழந்தையாக 5--10--1823 ,சுபானு ,வருடம் புரட்டாசி மாதம் இருபத்தி ஒன்றாம் தேதி ஞாயிற்றுக் கிழமை அருள் குழந்தையாக அவதரித்தார் .இந்த நாளை இன்று உலக ஒருமைப் பாட்டுத் தினமாகக் கொண்டாடப் படுகிறது இவை உலகம் அறிந்த உண்மையாகும் .

     வள்ளலார் வளரும் காலத்தே தந்தையார் காலமாகி விட்டார் .மூத்த சகோதரர் சபாபதி குடும்ப பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று .குடும்பத் தேவைக்காக ஊழியம் செய்ய முன்னிட்டு,தாயாரையும் உடன் பிறந்தோரையும் அழைத்துக் கொண்டு சென்னை வந்து ஆசிரியர் பணி செய்து குடும்பத்தை பாதுகாத்து வந்தார் .

கல்வி ;--

     தன் தம்பி இராமலிங்கத்தை,கல்வி கற்க பள்ளியில் சேர்த்தார் .பள்ளியில் சேர்ந்த முதல்நாளில் ஆசிரியர் ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்.ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம் ,மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம் என்ற பாடத்தை நடத்த,அனைத்து மாணவர்களும் சொல்ல இராமலிங்கம் மட்டும் சொல்லாமல் இருக்க ஆசிரியர் கோபமாக நீ ஏன் சொல்லாமல் இருக்கிறாய் என்று கேட்டார் அதற்கு ,நீங்கள் சொல்லிய பாடல்களின் முடிவில் வேண்டாம் வேண்டாம் என்று வருகிறது அதனால் நான் சொல்லவில்லை என்றார் மேலும் ஆசிரியருக்கு கோபம வரவே நான் சொல்லிக் கொடுக்கும் பாடலில் குற்றம் சொல்லும் அளவிற்கு நீ பெரிய ஞானியா ?வேறு எப்படிச சொல்லவேண்டும் நீயே சொல்லு என்று அதட்டினார் .ஆசிரியரின் அனுமதி கிடைத்து விட்டது என்ற ஆனந்தத்தில் தன்னுடைய முதல் பாடலை அரங்கேற்றம் செய்தார் இராமலிங்கம் அந்தப்பாடல்

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்தும் புறம் மொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும் .
பெருமை பெரு நினது புகழ் பேசவே வேண்டும்
பொய்மை பேசாதிருக்க வேண்டும்
மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உன்னை மறவாதிருக்க வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ்ந்திடல் வேண்டும்

வேண்டும் வேண்டும் என்றுதான் இறைவனிடம் கேட்க வேண்டும் என்று பாடி முடித்தார் இராமலிங்கம் இதை கேட்ட ஆசிரியர் இவருக்கு பாடம் சொல்லும் தகுதி நமக்கு இல்லை ஆசிரியருக்கே பாடம் சொல்லும் அருள் ஞானம் பெற்றவர் என்பதை உணர்ந்து கை கூப்பி வணங்கினார்/அன்று முதல் பள்ளிக்கு செல்லாமல் யாரிடமும் பாடம் கற்காமல் இறைவனிடமே கல்வி பயின்று அருள் பாடல்களைப் பாடல்களைப் பாடி அருளினார், பல ஆலயங்களுக்கு சென்று அனைத்து தெய்வங்களின் பெயரால் பல்லாயிரம் பாடல்களை பாடி உள்ளார் அனைத்தும் தேனினும் இனிய தெய்வத் தமிழ் பாடல்களாக மக்கள் மத்தியில் பரவச செய்தன ..

கல்வி என்பது இரண்டு வகையாகும். சாகும் கலவி ,சாகாக் கல்வி என பிரித்தார்.உலகியலில் பொருளைத் தேடுதல் சாகும் கல்வி ,இறைவனிடம் அருளைத் தேடுதல் சாகாக் கல்வி என்றார் .சாகக் கல்வியை பெறுவதற்கு உயிர்கள் மேல் அன்பு, தயவு ,கருணைக் காட்ட வேண்டும் என்றார் .அதனால் தான் வள்ளலார் வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் .மண் உயிரெல்லாம் களித்திட நினைத்தார் .அதனால் இறைவன் அவருக்கு திருஅருளைக் கொடுத்து மரணத்தை வெல்லும் மார்க்கத்தை காட்டினார் .மரணத்தை வென்று மரணம் இல்லா பெருவாழுவு என்னும் ஒளிதேகத்தை பெற்றார் .இதற்கு சாகாக் கல்வி என்று பெயர் சூட்டினார்.அவர் பாடிய பாடல் ஒன்று ;--

வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடு தோறும இரந்தம் பசியறாது அயர்ந்த
வெறறரைக் கண்டு உளம பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்து கின்றோர் ஏன்
நெருறக் கண்டு உளம துடித்தேன்
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சம்
இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன் .

என்றார் வள்ளலார் .            

திரு அருட்பா ..

சென்னையில் உள்ள வள்ளலார் நகர,ஏழுகிணறு,வீ ராசாமி தெருவில் இரண்டு வயது முதல் முப்பத்தைந்து ஆண்டுகாலம் வாழ்ந்துள்ளார் அக்காலங்களில் அவருடைய அணுக்கத் தொண்டர்களாக அநேகர பின் தொடர்ந்து உள்ளார்கள்,அதிலே முக்கியமானவர்கள் திரு, தொழு ஊர வேலாயுதம்,tதிரு இறுக்கம் ரத்தினம்,திரு, செலவராயன் என்பவராகும் இவர்கள் முயற்ச்சியால உரை நடைப் பகுதிகளான ஒழிவியல் ஒடுக்கம் ,தொண்டைமண்டல சதகம்,சின்மயதீபிகை ,மனுமுறை கண்ட வாசகம் ,ஜீவ காருண்ய ஒழுக்கம் ,மற்றும் ஆறு திருமுறைகளும் எண்ணற்ற நூல்களும்  வெளிவந்தன ,

இறைவனுடைய திரு அருளால் பாடப் பெற்றதால் அவைகடகு திரு அருபா என்னும் பெயரிடப்பட்டது அதேபோல் இறைவனால் வருவிக்க உற்றவர் என்பதால் இராமலிங்கம் என்ற பெயரை திரு அருட்பிரகாச வள்ளலார் என்னும் பெயரிட்டு போற்றி மகிழ்ந்தனர் .ஆனால் இவை வள்ளலாருக்கு சம்மதமில்லை வள்ளலார் .என்பது இறைவனுக்கு மட்டுமே பொருத்தமானது அவை எனக்கு பொருத்தமில்லை என்று மறுத்தார் ,அன்பர்களின் வேண்டு கோளுக்கு இணங்க ஏற்றுக் கொண்டார் .

வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !

சென்னையை விட்டு சென்ற வள்ளலார் சிதம்பரம் சென்று பல ஆண்டுகள் கழித்து வடலூர் வந்து சேர்ந்தார் வள்ளலாரின் அன்பில் திளைத்து இருந்த கருங்குழி புருஷோத்தமர் அவர்களின் வீட்டில் பல ஆண்டுகள் தங்கி
 இருந்தார்,அங்குதான் தண்ணீரில் விளக்கு எரித்த அதிசயம் காணப் பெற்றது.அங்குதான் உலக உண்மையைத தெரிவிக்கும் அருள் பூரணமாகி ஆறாம் திருமுறையையும் ஒரே இரவில் எழுதிய, அருட்பெரும் ஜோதி அகவலையும் எழுதினார் .

கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதியாக உள்ளார் என்பதை உணர்ந்த வள்ளலார் .அந்த உண்மையான கடவுளை காண வேண்டுமானால் அன்பு,தயவு,கருணை என்னும் ஜீவ காருண்யத்தால் தான் காண முடியும்.என்பதை செயலால செயல் படுத்தி காட்டினார் .

வடலூர் பார்வதி புரத்தில் மக்கள் கொடுத்த என்பது காணி இடத்தில்.23--5--1867 ,ஆம் ஆண்டு வைகாசி பதினொன்றாம் நாள் சத்திய தருமச்சாலை தொடங்கப்பட்டது .அன்று முதல் இன்று வரை சாதி சமயம் மதம் ஏழை ,பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அண்ணம் பாலித்துக் கொண்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே .

கடவுள் ஒளியாக உள்ளார் என்பதை உலக மக்களுக்கு தெரியப்டுத்திக் காட்டுவதற்காக, வடலூர் பெருவெளியில் எண்கோண வடிவமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை தோற்றுவித்து 25--1--1872 ஆம் ஆண்டு முதல் ஜோதி வழி பாட்டை தொடங்கி வைத்தார் .அங்கு ஓவ்வொரு மாதத்தின் பூச நட்சரத்திலும் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனமும் .ஆண்டு தோறும தை பூசத்தில் சிறப்பு ஏழு கால ஜோதி தரிசனமும் காட்டப் படுகிறது. வள்ளலாரின் உண்மையை உணர்ந்து, உலக நாடுகளில் இருந்து அனைத்து  மதத்தினரும் வந்து அற்புதம் அற்புதம் என்று அதிசயித்து வணங்கி செல்கின்றனர்.

வள்ளலாரின் கொள்கைகள் ;--         

மனிதன் மரணம் அடையாமல் ஒளிதேகம் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழலாம் என்பதை கண்டு அறிந்து வாழ்ந்து காட்டினார் வள்ளலார் .மரணம் என்பது இயற்கை அல்ல அவை செயற்கையால் தான்  வருகிறது என்பார் அவருடைய முக்கியமான கொள்கைகள் .;--

கடவுள் ஒருவரே !
அவர் அருட்பெரும் ஜோதியாக உள்ளார் !
சிறு தெய்வ வழிபாடு கூடாது !
தெய்வங்கள் பெயரால் உயிர் பலி செய்யக் கூடாது !
புலால் [மாமிசம் ]உண்ணக கூடாது!
சாதி ,சமயம் ,மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது !
ஜீவ காருண்யமே பேரின்ப வீட்டின் திறவு கோல் !
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
ஏழைகளின் பசி தவிர்த்தல் வேண்டும் !
எவ்வுயிரையும் தம் உயிர் போல் பாது காக்க வேண்டும் !
ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைப் பிடிக்க வேண்டும் !
புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்காது !
இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது!
கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம் !
கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது !
மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்யக் கூடாது !
எதிலும் பொது நோக்கம் வேண்டும் .

போன்ற முற்போக்கு சிந்தனைகளை அறிவு பூர்வமாக அறியும் பொருட்டு  ஆன்மீக வழியில் உலக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார் .

பேரின்ப சித்திப் பெருவாழ்வு ;-

வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ,சமரச சுத்த சனமார்க்க சத்திய ஞான சபையை சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தையும் அமைத்து சங்கத்தின் வாயிலாக உலக மக்கள் அனைவருக்கும் ஆன்மீகத்தின் வாயிலாக, உண்மையான ஞான வழியைக் காட்டி,அருள் ஒளி,பெற்று மக்கள் நலமுடன் வாழ வகுத்துத் தந்துள்ளார், வடலூருக்கு அடுத்த மேட்டுக குப்பம் என்ற ஊரில் சில காலம் தனிமையில் தங்கி இருந்தார் வள்ளலார்,

மேட்டுக்குப்பம் என்ற ஊரில் பலவிதமான அருள் அற்புதங்கள் நடந்தன இறைவனும் தானும் கலந்து கலந்து பிரிவதை திரு அருட்பாவில் அருள் விளக்க மாலை அனுபவமாலை என்றப் பகுதியில் அருட் பாமாலையாக பதிவு செய்துள்ளார் .உலக மக்கள் எப்படி வாழ வேண்டும் என்பதற்காக உபதேசப் பகுதிகள்,பதிவு செய்துள்ளார் .அதிலே பேருபதேசம் என்றப் பகுதி அனைவரையும் மிகவும் கவர்ந்த்தாகும் .

இந்த உலகத்தை விட்டு நான் எங்கும் போக மாட்டேன் ,எல்லா உடம்பிலும் இருப்பேன் இதுவே எனது கடைசி வார்த்தையாகும் .

இந்த ஊன உடம்பை விட்டு ஒளி உடம்பாக மாற்றி அழைத்து செல்ல, இறைவன் என் குடிசைக்கு வரப போகிறார் ,நானும் அவரும் இணைந்து கலந்துக் கொள்ளப் போகிறோம் .யாரும் கவலைப் படவேண்டாம் .அவநம்பிக்கை அடைய வேண்டாம் இது நடக்கப் போவது சத்தியம் என்று மக்கள் முன்பு உரை நிகழ்த்துகிறார் அதன்பின்;- நான் இந்த குடிசையில் உள்ளே சென்று தாளிட்டுக் கொள்ளப் போகிறேன் யாரும் யாது ஒரு காரியம் குறித்தும் கதவைத் திறக்காதீர்கள்.அப்படியும் மீறித் திறந்துப் பார்த்தால் வெறும் வீடாகத்தான் இருக்கும் ஆண்டவர் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டார் என்று 30--1--1874 ஆம் ஆண்டு ஸ்ரீமுக ஆண்டு தை மாதம் பத்தொன்பதாம் நாள் உள்ளே சென்று தாளிட்டுக் கொண்டார் சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் முத்தேக சித்திப் பெற்று பேரின்ப பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார் வள்ளலார் .

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கடலூர் கலைக்டர் தாசில்தார் மற்றும் அதிகாரிகள் விபரம் அறிந்து வந்து ,-- மேட்டுக குப்பத்தில் வள்ளலார் உள்ளே
 சென்று தாளிட்டுக் கொண்ட குடிசையை திறந்து பார்த்தார்கள் ,வள்ளலார் சொன்னபடி வெறும் வீடாகத்தான் இருந்தது. கடலூர் அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்துள்ளது இதுவே வள்ளலாரின் வாழ்க்கை சுருக்கமாகும் .

மனிதர்களாக பிறந்த அனைவரும் கொலை செய்யாமலும் ,புலால் உண்ணாமலும் ஆன்ம நேய ஒருமைப் பாட்டைக் கடைபிடித்து ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடாக பின் பற்றி அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று மரணத்தை வென்று மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் .!

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்தரசே ஏன் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து எத்துது நாம் வம்மின் உலகிலீர்
மரணம் இல்லா பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !  

உங்கள் ஆன்மநேயன் ஈரோடு செ,கதிர்வேலு .-.                  

புதன், 28 செப்டம்பர், 2011

ஊழலை ஒழிப்பது எப்படி ?

ஊழலை ஒழிப்பது எப்படி ?


நாம் வாழும் இவ்வுலகம் அனைவரும் வாழ வழி வகுத்து தந்துள்ளது.உலகில் உள்ள பொருட்கள் அனைவருக்கும் சொந்தமானதாகும்,அப்படி இருக்க ஒருவரிடத்தில் அதிகப் பொருட்களும் ஒருவரிடத்தில் குறைந்த பொருள்களும் ஒருவரிடத்தில் பொருள்களே இல்லாமலும் வாழும் வகை எப்படி வந்தது,

ஏழைப் ,பணக்காரன் ,உயர்ந்தவன், தாழ்ந்தவன் எத்தனை சாதி, சமயம், மதங்கள் சாத்திரங்கள் என்ற நிலைப்பாடு ஏன் வந்தது.இதை சரி செய்ய முடியாமல் உலகமே தவித்துக் கொண்டு இருக்க என்ன காரணம் .இதற்காக எத்தனை சட்ட திட்டங்கள் ,எத்தனை ஆட்சியாளர்கள் ,எத்தனை எத்தனை அதிகாரிகள் ,எத்தனை பாது காவலர்கள் ,எத்தனை நீதி மன்றங்கள் ,எத்தனை எல்லைப் பாது காப்புகள் .மனிதனை மனிதன் அழித்து வாழும் வாழ்க்கையை பார்க்கும் போது, மிகவும் கொடூரமான மிருகத்தை விட கேவலமாக உள்ளது.  

இதனால் மனித உயிர்கள் பேய் பிடித்த குரங்கு விளையாட்டுகள் போல் சிறு பிள்ளை விளையாட்டுத் தனமாக பல பேத முற்று,வெளிநாட்டிலும்,உள் நாட்டிலும் போரிட்டு அழிந்து கொண்டு இருக்கிறார்கள்.இப்படி வீண் போகாமல் பாது காக்க வேண்டுமானால் எனக்குத் தெரிந்த சில வழிகளை சொல்லுகிறேன் இவை முடிவு அல்ல அறிவாளிகளின் சிந்தனைக்கு

இவ்வுலகில் வாழும் மனிதர்களுக்கு உண்ண உணவு ,உடுக்க உடை ,இருக்க இடம் என்ற வீடு ,இவை அனைவருக்கும் போதுமானது ,சரி உலகில் மனிதர்களால் உற்பத்தியாகும் பொருட்கள் அனைத்தும் இறைவன் படைத்த இவ்வுலகத்தில் தான் கிடைக்கின்றன,இதை பகிர்ந்து கொண்டு வாழாமல் வாழ்ந்து வருவது அனைவரும் அறிந்த உண்மையாகும் இவற்றை எப்படி சரி செய்வது என்பதைப் பார்ப்போம் ,

அரசாங்கம் செய்யும் கடமை என்ன ?
உழைப்பில் வித்தியாசம் இருக்கலாம் ஊதியத்தில் வித்தியாசம் இருக்க கூடாது .

நம் நாட்டில் படித்தவர் படிக்காதவர் என்ற இரு பிரிவுகளை அரசாங்கம் பிரித்து அனைவருக்கும் வேலை என்பதை உறுதிப் படுத்த வேண்டும் உழைக்கும்.வேலைகளில் வேறுபாடுகள் இருக்கலாம் வித்தியாசம் இருக்கலாம் .ஊதியத்தில் அதாவது சம்பளத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது,கக்கூஸ் எடுப்பவர் முதல் கலைக்டர் வரையிலும்.ஆண்டி முதல் அரசாட்சி செய்பவர் வரையிலும், அனைவருக்கும் வருமானம் சமமாக இருக்க வேண்டும் ,அப்படி பகிர்ந்து கொண்டால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் துன்பம் ,துயரம் ,அச்சம் ,பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம் .,.

வாரிசுகளுக்கு சொத்து உரிமை என்பது கூடாது !

ஒரு குடும்பத்தில் ஆண் பெண் அதாவது கணவன் மனைவி திருமணம் செய்து குழந்தை பிறந்தால் அவர்களை படிக்க வைக்கவும் ,அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவும் வரைதான் தாய் தந்தையர்களின் கடமையாக இருக்க வேண்டும் .தாய் தந்தையர்கள் சொத்தில் பெற்றக் குழந்தைகளுக்கு உரிமைக் கிடையாது அவர்கள் மரணம் அடையும் வரை அவர்கள் சம்பாதித்த சொத்தை அனுபவித்து பின் அவர்கள் சொத்தை அரசாங்கத்திடம் கொடுத்து விட வேண்டும் .அரசாங்கம் எடுத்துக் கொள்ள வேண்டும் .இவை அனைவருக்கும் பொதுவானதாகும் .

இதன் படி அரசாங்கம் செயல் பட்டால் ஊழல் செய்வதற்கு வாய்ப்பே இல்லை அவசியமும் இல்லை .எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் நிலை உருவாகும் ...
இதைத்தான் வள்ளலார் சொல்லுகிறார் ;--

ஒருமையில் உலகெலாம் ஓங்குக என்றார் .ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும் என்றார்.
உயிரெலாம் உலம்பட நோக்குக என்றார் உயிருள யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்றார் .

இதை யார் செய்வது ;-- பற்று இல்லாத பொது நோக்கம் உள்ளவர்கள் நடு நிலை உள்ளவர்கள், இறைவன் திரு அருளைப் பெற்றவர்கள் அதாவது அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க !தெருன் நயந்த நல்லோர் நினைத்த நலம் பெருக என்றார் ஒன்றே குலம் ஒருவனே தேவன என்ற உணர்வை அனைவரிடத்திலும் பதிய செய்ய வேண்டும் ,ஊழலால சம்பாதிக்கும் பொருள் எந்த உயிர்களையும் காப்பாற்றப் போவதில்லை,என்பதை உணரவேண்டும் ..

ஊழலை ஒழிக்கவும் அனைவரும் சரி சமமாக வாழ்வும் ஒற்றுமையுடன் வாழவும் பேராசையை ஒழிக்கவும் இதுவே வழியாகும் என்பதை உங்கள் முன் வைக்கிறேன் .சிந்திப்போம் செயல்படுவோம் .

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

செவ்வாய், 27 செப்டம்பர், 2011

ஒழுக்கம் என்பது என்ன ?

ஒழுக்கம் என்பது என்ன ?

மனிதனாக பிறந்தவர்கள் ஓழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.எல்லா ஞானிகளும் சொல்லி உள்ளார்கள் திருவள்ளுவரும் திருக்குறளில் பதிவு செய்துள்ளார் .

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் .

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்பழி !

என்று ஒழுக்கத்தைப் பற்றி நிறைய திருக்குறள் எழுதி வைத்துள்ளார் ஒழுக்கத்தைப் பற்றி பலபேர் பலவாறாக விளக்கம் தந்துள்ளார்கள் .ஆனால் ஒழுக்கம் என்ன என்பதைப் பற்றி யாரும் சரியான விளக்கம் தரவில்லை .

வள்ளலார் அவர்கள் ஒழுக்கம் எனபது எவை? என்பதை சரியான தெளிவான முறையில் விளக்கம் தந்துள்ளார்கள் .அவை யாது என்பதைப் பார்ப்போம் .

ஒழுக்கம் என்பது நான்கு வகைப்படும் என்று நான்கு வகையாக பிரித்தார் மனித உடம்பை நான்கு பாகங்களாக வகைப் படுத்தினார் .அவை யாவை ?

இந்திரிய ஒழுக்கம் ;--கண் ,காது,மூக்கு ,வாய் ,உடம்பு.என்பதாகும்
கரண ஒழுக்கம்;-------மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,ஆச்சர்யம்,என்பதாகும் ..
ஜீவ ஒழுக்கம் .;--------உயிர் என்பதாகும் .
ஆன்ம ஒழுக்கம் ;-----உயிரை இயக்கம் உள் ஒளியாகும்.

இவைகள் மனித உடம்பை இயக்கும் கருவிகளாகும்,இவைகளை கட்டுப் படுத்தி வாழ்வதே ஒழுக்கம் என்பதாகும் .

இந்திரிய ஒழுக்கம் என்பது ;---.

கொடிய சொல் செவி [காது ] புகாது நாதம் முதலிய தோத்திரங்களைக்  கேட்டல்

அசுத்த பரிச இல்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல் .

குரூரமாக பாராது இருத்தல்,

ருசி விரும்பாமல் இருத்தல் .

சுகந்தம் விரும்பாமல் இருத்தல் .

இன் சொல்லால் பேசுதல் .

பொய் சொல்லாமல் இருத்தல் ,

ஜீவர் களுக்கு துன்பம நேரிடும் போது எவ்வித தந்திரம் செய்தாவது தடை செய்தல் ,

பெரியோர்கள் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்குச் செல்லுதல் ,

ஜீவ உபகார சம்பந்தமாக சாதுக்கள் இருக்கும் இடத்திற்கும் ,திவ்ய திருப்பதிகளிலும் செல்லுதல் .

நன் முயற்ச்சியில் கொடுத்தல், வருவாய் [ வருமானம் ] செய்தல் ,

மிதமான ஆகாரம் செய்தல்,

மிதமான போகம் செய்தல் ,

மலம சிரமம் இல்லாமல் வெளியேற்றுதல் ,

கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும்,பவுதிக மூலங்களாலும்,சரபேத அஸ்த பரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியானத்தாலும் சங்கறபத்தாலும்,தடை தவிர்த்துக் கொள்ளல் ,

[மந்ததரனுக்கு ] சுக்கிலத்தை [விந்து ] அதிகமாக வெளியேற்றாமல் நிற்றல் .

[தீவிரதரனுக்கு ]எவ்வகையிலும் சுக்கிலம் வெளியே விடாமல் நிறுத்தல் ,

இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் [துணியால் ]மறைத்தல்,

இதே போல் உச்சி ,[தலை ] மார்பு முதலிய அங்க அவையங்களை மறைத்தல் ,

வெளியில் செல்லும் காலங்களில் காலில் கவசம் [செருப்பு] தரித்தல்

அழுக்கு ஆடை உடுத்தாமல் இருத்தல் ,

இவை யாவும் இந்திரிய ஒழுக்கங்களாகும்.

கரண ஒழுக்கம் ;--

மனதைச் சிற்சபையின் [புருவ மத்தி ]கண்ணே நிறுத்தல் ,அதாவது புருவ மத்தியில் நிற்கச செய்தல் .

கெட்ட விஷயத்தை பற்றாமல் இருக்க செய்தல் ,

ஜீவ தோஷம் விசாரக்காமல் இருத்தல்.

தன்னை மதியாமல் இருத்தல்

செயற்கை குணங்களால் ஏற்ப்படும் கெடுதிகளை [இராகாதி]நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாதல்,

பிறர மீது கோபம கொள்ளாமல் இருத்தல்,

தனது சத்துருக்கள் ஆகிய தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் ,

முதலியன கரண ஒழுக்கமாகும் ,

ஜீவ ஒழுக்கம் என்பது ;--

ஆண் மக்கள்,பெண் மக்கள்,முதலிய யாவர்கள் இடத்திலும் ஜாதி ,சமயம் ,மதம், ஆசிரமம் ,சூத்திரம் ,கோத்திரம், குலம் ,சாஸ்த்திர சம்பந்தம் ,தேச மார்க்கம் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,--என்னும் பேதம் நீங்கி எல்லோரும் நம்மவர்கள் என்பதை சமத்திற கொள்ளுதல்
ஜீவ ஒழுக்கமாகும் ,

ஆன்ம ஒழுக்கம் ;---

யானை முதல் எறும்பு ஈறாகத் தோன்றிய உடம்பில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச சபை யாகவும் ,அதன் உள் ஒளியே அதாவது பரமானமாவே பதியாகவும் ,கொண்டு ,யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றல் --ஆன்ம ஒழுக்கமாகும் ,

இத்துடன் இடம் தனித்து இருத்தல்,இச்சை இன்றி நுகர்தல், ஜெப தபம் செய்தல் ,தெய்வம் பராவல். பிற உயிர்களுக்கு இரங்கல் ,பெருங் குணம் பற்றல் ,பாடிப் பணிதல், பத்தி செய்து இருத்தல்,--முதலிய நல்ல செய்கைகளில் பல காலம்  முயன்று முயன்று பழகிப் பழகி நிற்றல் வேண்டும் .

இவையே மனித ஒழுக்கமாகும் .இவற்றை முழுவதும் பின் பற்றுபவர்கள் நான்கு புருஷார்த்தங்கள் அடைவார்கள் .

அவைகள் ;--

சாகாக் கல்வி .
ஏமசித்தி,
தத்துவ நிக்கிரகஞ் செய்தல் ,
கடவுள் நிலை அறிந்து அம மயமாதல் .

என்பதாகும் இவையே மனிதன் மரணத்தை வெல்லும் வழியாகும் .இதை வள்ளலார் கடை பிடித்தார் மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் ,நாமும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம் .

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

மீண்டும் பூக்கும் ;-                        

ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !


சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !

கடவுளுக்கு பொய்யான கற்பனைக் கதைகளை சொல்லி எழுதி வைத்து விட்டார்கள் .உண்மையாக இருப்பதாக கோயில்களையும் சிலைகளையும் வைத்து மக்களை மூட நம்பிக்கையில் வாழ வைத்து விட்டார்கள் .இதில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் .இதை மறுக்க எத்தனையோ அறிவாளிகளும் .பகுத்தறிவு உள்ளர்களும் மக்களுக்கு எடுத்து சொல்லியும் மக்கள் கேட்கவில்லை .

இதை எல்லாம் ஒழித்து கட்ட வந்தவர்தான் வள்ளலார் என்ற அருளாளர் .!

ஆன்மீக வாயிலாக உலக உண்மைகளையும் கடவுளின் உண்மைத் தன்மையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள் .இப்போது மக்கள் வள்ளலார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் .அதற்கு சமய ,மத வாதிகள் எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் .அதையும் மீறி மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் .

விஞ்ஞானம் ,அறிவியல் அணு ஆராய்ச்சிகள்,ஒப்புக் கொள்ளும் அளவிற்கு திரு அருட்பா என்னும் நூலில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் .

வள்ளலார் சமய மதங்களைப் பற்றி ஆயிரக்ககான பாடல்களிலும் உரை நடைப் பகுதிகளிலும் சாடிஉள்ளார்கள் .

அதிலே பாடல் சில ;--

கலை உரைத்தக் கற்பனையை நிலை எனக் கொண்டாடும்
கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக !

என்றும்

வேத நெறி ஆகமதத்தின் நெறி புராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே !

அனைத்து பொய்யானது என்று தெளிவு படுத்தியுள்ளார் .

கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டார் இல்லை வீணே
நீறு கின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர் போல்
நீடுலகில் அழிந்து விட நினைத்தோனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்று வித்தாய் ஆங்கே!

என்று பல்லாயிரம் பாடல்களில்,சமய மதங்களின் பொய்யான கற்பனைகளையும் .கதைகளையும் சொல்லி ,அவைகளை ஆழமான குழித் தோண்டி வெளியே வரமுடியாமல் மண்ணில் போட்டு மறைத்து விடுங்கள் என்று பறை சாற்றுகிறார் வள்ளலார் .

இனிமேல் சமய மதங்களின் வேலைகள் பலிக்காது .மக்கள் விழித்துக் கொண்டார்கள் .மக்கள் அனைவரும் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் பார்த்து படித்து உண்மையை உணர்ந்து பயன் பெறுவோம் .

அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு .

சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !

கடவுளுக்கு பொய்யான கற்பனைக் கதைகளை சொல்லி எழுதி வைத்து விட்டார்கள் .உண்மையாக இருப்பதாக கோயில்களையும் சிலைகளையும் வைத்து மக்களை மூட நம்பிக்கையில் வாழ வைத்து விட்டார்கள் .இதில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் .இதை மறுக்க எத்தனையோ அறிவாளிகளும் .பகுத்தறிவு உள்ளவர்களும் மக்களுக்கு எடுத்து சொல்லியும் மக்கள் கேட்கவில்லை .

இதை எல்லாம் ஒழித்து கட்ட வந்தவர்தான் வள்ளலார் என்ற அருளாளர் .!

ஆன்மீக வாயிலாக உலக உண்மைகளையும் கடவுளின் உண்மைத் தன்மையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள் .இப்போது மக்கள் வள்ளலார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் .அதற்கு சமய ,மத வாதிகள் எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் .அதையும் மீறி மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் .

விஞ்ஞானம் ,அறிவியல் அணு ஆராய்ச்சிகள்,ஒப்புக் கொள்ளும் அளவிற்கு திரு அருட்பா என்னும் நூலில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் .

வள்ளலார் சமய மதங்களைப் பற்றி ஆயிரக்ககான பாடல்களிலும் உரை நடைப் பகுதிகளிலும் சாடிஉள்ளார்கள் .

அதிலே பாடல் சில ;--

கலை உரைத்தக் கற்பனையை நிலை எனக் கொண்டாடும்
கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக !

என்றும்

வேத நெறி ஆகமதத்தின் நெறி புராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே !

அனைத்து பொய்யானது என்று தெளிவு படுத்தியுள்ளார் .

கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டார் இல்லை வீணே
நீறு கின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர் போல்
நீடுலகில் அழிந்து விட நினைத்தோனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்று வித்தாய் ஆங்கே!

என்று பல்லாயிரம் பாடல்களில்,சமய மதங்களின் பொய்யான கற்பனைகளையும் .கதைகளையும் சொல்லி ,அவைகளை ஆழமான குழித் தோண்டி வெளியே வரமுடியாமல் மண்ணில் போட்டு மறைத்து விடுங்கள் என்று பறை சாற்றுகிறார் வள்ளலார் .

இனிமேல் சமய மதங்களின் வேலைகள் பலிக்காது .மக்கள் விழித்துக் கொண்டார்கள் .மக்கள் அனைவரும் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் பார்த்து படித்து உண்மையை உணர்ந்து பயன் பெறுவோம் .

அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு .

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

உலகம் அமைதி பெற என்ன வழி ?


உலகம் அமைதி பெற என்ன வழி ?
ஆன்மநேய அன்புடையீர் வந்தனம்
நாம் அனைவரும் ஏதோ ஒரு லாபத்தைத் தேடி அலைந்து கொண்டுதான் இருக்கிறோம்.அது உலகியலாக இருந்தாலும் சரி,அருளைப் பெறுவதாக இருந்தாலும் சரி,.அந்த லாபம் எது என்றால்..பணம் என்னும் பொருள்தான், உலகியலில வாழ வேண்டுமானால் பொருள் தேவைப்படுவதாகும்.,அந்த பொருள் எப்படிவரும்,பலபேருடன் சேர்ந்து வாழும் நாம் பலபேருடைய கூட்டு முயற்சியினால் உருவாககப்படுவதுதான் பொருள் என்று சொல்லப்படுகிறது..அந்த பொருளை நாம் சரிசமமாக பகிர்ந்து கொள்கிறோமா?என்றால் இல்லை ஏன் இந்த நிலை உருவானது.பொருள் எல்லோருக்கும் சமம்தானே!அப்படி இருக்க ஒருவரிடத்தில் அதிகமாகவும்.ஒருவரிடத்தில் குறைவாகவும்,ஒருவரிடத்தில் ஒன்றுமே இல்லாமலும் இருப்பதை நாம் காண்கிறோம்.ஆனால் இந்த உலகத்தில் அனைவரும் ஏதோ ஒரு காரிய காரணத்தை முன்னிட்டு ஏதோ ஒரு தொழில் செய்து கொண்டுதான் இருக்கிறோம் யாரும் சும்மா இருந்து விடவில்லை.அப்டி இருக்க இந்த பேதங்கள் வர காரணம் என்ன?காரியம் என்ன? சிந்திக்க வேண்டும் .
இதற்கு அடிபடைக் காரணம் ஆன்மீகக் கொள்கைகள்தான் என்பது யாருக்கும் தெரியாததாகும் மக்களுக்கு தேவையான பொருள்களை தயாரிக்க தொழில்களைப் பிரித்தார்கள்,அதற்கு மனிதர்களை பிரித்தார்கள் அவர்கள் தொழிலுக்கு தகுந்தாற்போல் சாதிகளை பிறித்தார்கள்,தொழில் வளம் பெருகியது,பொருள் பரிமாற்றம் பகிர்ந்து கொள்ளப் பட்டது.அந்த பொருளை பெற்றுக் கொள்வதற்கு, [பரிமாற்றதிக்கு] பதிலாக தங்கம்,பணம்,என்ற நாணயம் தயாரிக்கப்பட்டது.அந்த நாணயம் என்னும் பணத்தைக் கொண்டு அவரவருக்கு வேண்டியப் பொருளை பரிமாற்றம் செய்து கொள்ளலாம், அந்த பணத்தைக் கொடுத்து அவரவர்கள் பொருளை பெற்றுக் கொள்ளலாம் என்ற சட்டம் உருவாக்கப்பட்டது,அந்த சட்டத்தை உருவாக்கியவர்கள்,அக்காலத்தில் இருந்த பெரியவர்கள் என்று சொல்லப்பட்ட ஆன்மீக வாதிகளாகும்,
அப்படியே வளர்ந்து வந்த தொழில்களில் பணம் யாரிடம் அதிகம் இருந்ததோ அவர்கள் பணக்காரர்கள் எனப்பட்டனர்.பணம் யாரிடம் அதிகம் இருக்கிறதோ அவர்கள் உயர்ந்தவர்கள்.அவர்கள் உயர்ந்த ஜாதிக்காரர்கள் என்றும்,யாரிடம் பணம் குறைவாக இருந்ததோ அவர்கள் ஏழைகள், அவர்கள் கீழ் சாதிக்காரர்கள்.என்று மதிப்பிடப்பட்டது.அடுத்து பணமே இல்லாதவர்கள் மிகவும் நீழ் ஜாதிக்காரர்கள்,அவர்களை கீழ்த்தரமான வேலைகளை கொடுத்து ஒதுக்கி வைத்தார்கள்,அவர்களுக்கு ஊரை சுத்தம் செய்தல்,இறந்துபோன உயிர்களை அடக்கம் செய்தல்,ஊரில் உள்ள செய்திகளை மற்றவர்களுக்கு தண்டோரா மூலம தெரியப்படுத்துதல் போன்ற எடுபிடி வேலைகளையெல்லாம்,செய்ய சொல்லியதோடு அல்லாமல்,அவர்களை ஊருக்கு வெளியே குடி இருக்கவைத்தார்கள்,அவர்களை தீண்டதகாதவர்கள் என்று ஒதுக்கி வைத்தார்கள்.
பணம்தான் மனிதனை பிரித்து !
மனிதனாக பிறந்த அனைவரும் ஒன்று என்ற நிலை மாறி,மனிதனை மனிதன் பிரித்து வைத்தது எது ?பணம் என்னும் பொருள்தான் மனிதனை பிரித்து வைத்தது.
இவற்றை எல்லாம் பிரித்தவர்கள் யார்?ஆன்மீகவாதிகள் என்று சொல்லப்பட்ட பெரியவர்கள் அல்லவா !
அவர்கள் கற்றுத்தந்த ஆன்மீகம் இன்று வளர்ந்து மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டன. மக்கள் கதிகலங்கி அவதிப்படுகிறார்கள்.அதுமட்டுமா உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதைகளை உலகம் முழுவதும் பரப்பி விட்டார்கள்.அந்த கற்பனைக் கதைகளை உண்மையென்று உண்மையாகவே நடந்துள்ளது போல் ஆலயங்களையும் புண்ணிய ஷேத்திரங்களையும் கட்டிவைத்த உள்ளார்கள் அதில் பொய்யான தத்துவ உருவங்களை சிலைகளாக அதாவது கடவுள்களாக வைத்து வழிபாடு செய்ய வைத்தார்கள்,அவைகள் மக்கள் மனதில் ஆழமாக வேர் ஊன்றி பதிந்து விட்டது .
கடவுளுக்கு கை கால மூக்கு வாய் கண் உடம்பு இருக்குமா என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கிறார்கள் .கடவுளுக்கு பணம் கொடுத்து அருளைப் பெற முடியுமா ?அப்படியானால் அந்தக் கடவுள் வியாபாரியா ?என்று கேட்பவர்களுக்கு என்ன பதில் சொல்லமுடியும் .இப்படி கடவுளை அசிங்கப் படுத்தி விட்டார்கள் .பணம் கடவுளையும் மனிதனையும் பிரித்து வைத்து விட்டது .இவைகள் எல்லாம் யாருடைய வேலை ,உண்மையான கடவுளை மறைத்தவன் யார் ?அவனைக் கண்டு பிடித்து மக்கள் மத்தியில் நிறுத்த வேண்டும் இல்லையா?இதை யார் செய்வது ?
இதை வள்ளலார் தான் உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் !
கடவுள் பெயரைச சொல்லி ஏமாற்றும் கூட்டம் இன்று அதிகமாகி விட்டது.அதனால் மக்கள் மூட நம்பிக்கையில்,பணத்தை பறிகொடுத்து கவலைப் பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.இவை இந்தியாமட்டும் அல்ல உலகம் முழுவதும் நடந்து கொண்டு உள்ளது .இதை மாற்ற என்ன வழி ! என்று தெரியாமல் உலகமே திணறிக் கொண்டு உள்ளது.
சாதி மதம் சமயம் என்று வைத்துக் கொண்டு மத ஒற்றுமை வேண்டும், மத நல்லிணக்கம் வேண்டும்.என்று வாய் கிழிய பேசினால் தீர்ந்து விடுமா? ஒற்றுமை வந்து விடுமா?எக்காலத்திலும் வாராது தீராது.எத்தனை சட்டங்கள் திட்டங்கள் போட்டாலும் போட்டாலும் வேலைக்கு உதவாது .
உலகத்தில் உள்ளவர்கள் அனைவருக்கும் ஒரே கடவுள்தான் என்ற உண்மையை உணரவைக்க வேண்டும்.எல்லோரும் இறைவனுடைய குழந்தைகள் என்பதை தெளிவுப் படுத்த வேண்டும் .சாதி மதம் சமயம் எல்லாம் பொய்யானது என்று மக்கள் அறிவு பூர்வமாக அறிய வேண்டும்.இவை அரசாங்கத்தால் ஆட்சியாளர்களால்,சட்டத்திட்டத்தால், முடியுமா என்றால் சத்தியமாக முடியாது.
இதை மக்கள் உணரவேண்டும்
இந்த உலகத்தை திருத்துவதற்கும் மாற்றுவதற்கும் இறைவனால் அனுப்பப் பட்டவர்தான் வள்ளலார் என்பவராகும் .அவர்தான் உலக உண்மைகளை மக்களுக்கு தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .
கடவுள் ஒருவரே !
அவரே அருட்பெரும்ஜோதியாக உள்ளார் !
சிறு தெய்வ வழிபாடு கூடாது!
தெய்வங்கள் பெயரால் உயிர்ப்பலி செய்யக் கூடாது !
புலால் உண்ணக கூடாது !
சாதி சமயம் மதம் அனைத்தும் பொய்யானது !
எவ்வுயிரையும் தம் உயிர்போல் நேசிக்க வேண்டும் .!
ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !
ஏழைகளின் பசி தவிர்த்தலே இறைவனை காணும் வழியாகும் !
வேதம் ஆகமம் புராணங்களும் உண்மையைத் தெரிவிக்காது
இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்ககூடாது!
ஜீவ கருணையே பேரின்ப வீட்டின் திறவுகோல் !
தனிமனித ஒழுக்கமே உயர்வுக்கு வழி வகுக்கும் !
மேலே உள்ளபடி ஒவ்வொரு மனிதனும் வாழ்ந்தால் இந்த உலகம் தூய்மை பெரும் அமைதி பெரும் ,மக்கள் மகிழ்ச்சியுடன் வாழலாம் வள்ளலார் எழுதியுள்ள திரு அருட்பாவை படியுங்கள் உலக உண்மைகள் யாவும் தெளிவாக விளங்கும் .
அன்புடன் ஆனமநேயன் கதிர்வேலு. .
 ·  · பகிர்தல் · நீக்க

ஞாயிறு, 18 செப்டம்பர், 2011

அறிவு இருக்கா இல்லையா ?

அறிவு இருக்கா இல்லையா ?


அறிவு இருக்கா இல்லையா ?என்பது நாம் அனைவரும் மற்றவர்களைப் பார்த்து அடிக்கடிக் கேட்கும் கேள்வியாகும் .நமக்கு அறிவு எப்படி விளங்க்குகின்றது என்பதை பார்ப்போம் .மனித பிறப்பு உயர்ந்த பிறப்பு ஏன் று சொல்லுகிறோம் .மனிதனுக்கு ஆறு அறிவு உள்ளதாக கருதுகிறோம் .எப்படி ஆறு அறிவு என்பதை .உயிர்களின் பரிணாம வளர்ச்சியை வைத்து .ஆறாவது பிறவி, ஆதலால் ஆறாவது அறிவு மனிதனுக்கு விளங்குவதாக கருதுகிறோம்.இல்லையா ?அது தவறான கருத்தாகும் .

அறிவு என்பது இரண்டு வகைப்படும்.உண்மை அறிவு .பொய் அறிவு என இரண்டு வகைப்படும் .நாம் இப்பொழுது உண்மை அறிவோடு செயல் படுகிரோமா?பொய் அறிவோடு செயல் படுகிரோமா?என்பதை சிந்திப்போம் .நம் உடம்பில் இந்திரியங்கள் ,கரணங்கள்.ஜீவன் ,ஆன்மா என்ற நான்கு பாகங்கள் இயங்கிக் கொண்டு கொண்டு உள்ளன .இந்திரியங்கள் என்பது ;--கண், மூக்கு ,வாய் .காது.உடம்பு என்னும் மெய் என்பதாகும் .கரண்ங்கள் என்பது ;-மனம் ,புத்தி ,சித்தம் அகங்காரம் .ஆச்சர்யம் .என்பதாகும் .--ஜீவன் எனபது உயிர் என்பதாகும் .ஆன்மா என்பது உடம்பை இயக்கம் சக்தி வாய்ந்த ஒளியாகும் .

இந்த நான்கு பிரிவுகளின் வாயிலாக அறிவு செயல்படுகிறது .இதில் எது உண்மை அறிவு? .எது பொய் அறிவு? --போன்ற செயல்களை கொடுக்கிறது என்பதைப் பார்ப்போம் .இந்திரியத்தால் அறிவது இந்திரியக் காட்சி ,இந்திரிய அறிவு என்பதாகும் .--கரணத்தால் அறிவது கரணக் காட்சி கரண அறிவு என்பதாகும் .ஜீவனால் அறிவது ஜீவக் காட்சியாகும் ஜீவ அறிவு என்பதாகும் .ஆன்மாவினால் அறிவது ஆண்மக் காட்சியாகும்,ஆன்ம அறிவு என்பதாகும் .

இதில் எது உண்மை அறிவைக் கொடுக்கும் .எது பொய் அறிவைக் கொடுக்கும் .

இந்திரியங்கள் .கரணங்கள் வாயிலாக தோன்றும் அறிவு பொய் அறிவாகும் .ஜீவன் ஆன்மாவின் வாயிலாக தோன்றும் அறிவு உண்மை அறிவாகும் .நமக்கு இந்திரியங்கள் கரணங்கள் வாயிலாகத்தான் அறிவு செயல்ப பட்டுக் கொண்டு இருக்கின்றன. ஜீவன் ஆன்மாவின் வாயிலாக செயல் படுவதில்லை .அவை எப்படி என்பதைப் பார்ப்போம் .

ஒரு பொருளை அதன் நாம ரூபமின்றிக் காண்பது இந்திரியக் காட்சி இந்திரிய அறிவு என்பதாகும் .உருவமாக பார்ப்பது காரணக் காட்சி கரண அறிவு என்பதாகும் .இன்னதென்று அறிவது ஜீவக் காட்சி ஜீவ அறிவு என்பதாகும் .எதையும் தானாக அறிதல் ஆண்மக் காட்சி ஆன்ம அறிவாகும் .இவைகளில் எவை உண்மை அறிவு எவை பொய் அறிவு என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் ..

இதற்கு ஞாயம் யாதெனில் ;--

நஷ்த்திரபிரகாசம் போல் தோன்றிய இந்திரியங்கள் ,கரணங்கள், ஜீவ அறிவே உபாய ஞானம் என்பதாகும்.சந்திரப் பிரகாசம் போல் தோன்றி அறியும் அறிவே ஆன்ம அறிவாகும் .இவை உண்மை ஞானமாகும் .எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற அறிவே கடவுள் அறிவாகும் .இதற்கு அனுபவ ஞானம் என்பதாகும் ..
அறிவு ;--

தோன்றும் அறிவு 
தோற்றுவிக்கும் அறிவு 
பதி அறிவு அதாவது கடவுள் அறிவு 

என்பதாகும்;- இதில் எந்த வகை அறிவு நம்மிடம் உள்ளது .இந்திரியங்களும் காரணங்களும் பொய் அறிவை கொடுக்கும் .ஜீவனும் ஆன்மாவும் உண்மை அறிவைக் கொடுக்கும் .உண்மை அறிவு முழுமைப் பெரும் போது கடவுள் அறிவு விளங்கும் .ஆதலால் மனிதனுக்கு ஆறு அறிவு என்பது இல்லை உண்மையை அறியும் அறிவு மெய்அறிவு என்பதாகும் .பொய்யை அறியும் அறிவு பொய் அறிவு என இரண்டு அறிவுதான் உள்ளன என்பதை உணர்வோமாக !

ஆதலால் ஒரு பொருளின் இடத்தில் பற்றுதல் அவா என்பதாகும் .--அதை அனுபவிக்க வேண்டும் என்று எழுவது ஆசை என்பதாகும் .அதன் மயமாக இருப்பது காமம் என்பதாகும் .அதைத் தன் வசப்படுத்த எழுவது மோகமாகும் .எந்த வஸ்த்து இடத்திலும் ஆசை காமம் மோகம் இருப்பது பொய் அறிவாகும் .அவா மாத்திரம் இருப்பது உண்மை அறிவாகும் .சிந்திப்போம் செயல் படுவோம் .

அன்புடன் ஆன்மநேயன் .கதிர்வேலு.

சனி, 17 செப்டம்பர், 2011

இறைவனை காணவேண்டுமா ?


இறைவனை காணவேண்டுமா ?எல்லாம் வல்ல இறைவனை காண வேண்டுமானால் அவர் இருக்கும் கோட்டையின் கதவை திறக்க அருள் என்னும் சாவி வேண்டும் .அந்த அருள் என்னும்  சாவி கிடைக்கும் வழி, அன்பு ,தயவு, கருணையால் தான் கிடைக்கும். அனைத்து உயிர்களின் துன்மம்,துயரம் அச்சம் பயம் போன்ற கஷ்டங்களை போக்கும் பண்பு அவசியமாகும்.அந்த கருணை நிறைவு பெறும்போது ஆண்டவரின் கோட்டையின் கதவு திறக்கும் சாவிக் கிடைக்கும்.இவைதான் சரியான முறையான தெளிவான வழியாகும் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சார்ந்த கொள்கை உடையவர்கள்,இறைவனை இந்த வழியில் காணத்தான் விரும்புவார்கள் .தான் தன் குடும்பம்,தன் இனம,தன் நாடு ,என்னும் குறுகிய மனப்பான்மையை விட்டு,உலகம் முழுவதும் அனைத்து உயிர்களும் நல்வாழ்வு வாழும் பொருட்டு,தொண்டு செய்வார்கள் இறைவனிடம் வேண்டுவார்கள் .

இறைவனுடைய அருளைப் பெற்று பேரின்பத்தை அடைய,--யோகம தியானம் ,தவம,போன்ற செய்கைகள் வேண்டியதில்லை .வேறு சாதனங்கள் எதுவும் தேவை இல்லை .ஒவ்வொரு மனிதரும் காலம் தாழ்த்தாது எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவிக்கும் உண்மையை,உணர்வை கருணையை  வரவழைத்துக் கொள்ள வேண்டும் இதுவே சாதனமாகும் .

மனிதன் புலால் உண்ணும பழக்கம் .பெற்றோர்களாலும்,நட்பாலும் .சூழ்நிலைகளாலும் ,முன்னோர்கள் சொல்லி வைத்த மூட நம்பிக்கையாலும்.பழக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே உள்ளது.,இது முற்றிலும் தவறானதாகும் .மனிதன் பிற உயிர்களை கொன்று அதன் மாமிசத்தை உண்பது ஆண்மநேயத்திற்கு  முற்றிலும் விரோதமாகும் .

வள்ளலார் இந்த உலகத்தில் இரண்டு பிரிவினரைப் பார்க்கிறார்-அவை -அகஇனத்தார்,புறஇனத்தார், .அதை பிரிக்கின்றார் .ஒன்று புலால் உண்பவர்கள் மற்றொன்று புலால் உண்ணாதவர்கள் என்று .இதைத்தான் இரண்டு குலம் எனறு பிரிக்கின்றார்---புலால் உண்ணாதவர்கள் .உயர்ந்த குலம் என்றும் --புலால் உண்பவர்கள் தாழ்ந்த குலம என்றும் அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார் .

அதவிட முக்கியமானது .புலால் உண்பவர்கள் கடவுளை நினைப்பதற்கும் ,துதிப்பதற்கும் வழிபாடு செய்வதற்கும் வேண்டுதலுக்கும் அருகதை அற்றவர்கள் என்கிறார் வள்ளலார். புலால் உண்பவர்கள் உடைய எந்த செய்கையும் ஆண்டவர் ஏற்றுக் கொள்வதில்லை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார் என்பதை உண்மையுடன் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .

ஆதலால் இதுவரை புலால் உண்பவராக இருந்தாலும் இனிமேல் உண்ணாமல் ஆண்டவரின் அன்பு குழந்தைகளாக இருப்போம் வாழ்வோம் .ஆண்டவர் அன்புடன் ஏற்றுக்கொள்வார்.அந்த உண்மையான கடவுளைக் காண்பதற்கு இதுவே சிறந்த வழியாகும். என்றும் ஆன்மநேயம் ஓங்குக !இறைவன் அருளைப் பெறுவோம் .

வள்ளலார் பாடல் ஒன்று '--

உயிர்க் கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் 
உறவினத்தார் அல்ல அவர் புற இனத்தார் அவர்க்குப் 
பயிர்ப்பு உறுமோர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக 
பரிந்து மற்றைப் பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே 
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையும் வரை இதுதான் 
நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே 
மயர்ப்பு அறு பெய்த்தவர் போற்றப் போது வெளியில் நடம புரியும் 
மாநடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே !

மேலே உள்ள பாடல் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்- வள்ளலாருக்கு சொல்லியதாக பதிவு செய்துள்ளார் .இந்த உண்மையை உணர்ந்து ,உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் -மனிதன் மனிதனாக வாழ்ந்து அருள் பெற்று வளமுடன் வாழ்வோம் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.   

வெள்ளி, 16 செப்டம்பர், 2011

உலகம் வெப்பமயமாக எண்ணக காரணம் ?


உங்கள் குறிப்பு உருவாக்கப்பட்டது.
உலகம் வெப்பமயமாக என்ன காரணம் ?
ஆன்மநேய அன்புடைய நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .கருணை என்னும் மாபெரும் சக்தியை மக்களை மறந்து விட்டார்கள் .கருனையினால் தான் இந்த உலகை காப்பற்ற முடியும் என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் .கருணை இல்லாமல் உயிர்களை கொன்றுதான் தின்றுதான் வாழ்வோம் என்ற மன அழுத்தம் மக்கள் மனதில் பரவி விட்டது.
இதனால்தான் உலகில் உள்ள துன்பங்களுக்கு காரணம் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை .உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ,விஞ்ஞானிகள்,அறிவியல் வல்லுனர்கள்.உலக ஐநாசபை அணு ஆராய்ச்சியாளர்கள் ,மதவாதிகள் ,சமயவாதிகள் ,ஆட்சியாளர்கள் .பகுத்தறிவு சிந்தனையாளர்கள் .மனித நேயமுள்ளவர்கள் .இன்னும் பல சிந்தனையாளர்கள் .இருந்தும் இந்த உண்மையை அறியாமல் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு உண்மை தெரியவில்லையா ?உண்மை தெரிந்தும் இந்த உலகம் எப்படிப் போனால் நமக்கு என்ன என்று இறுமாந்து இருக்கிறார்களா?என்பது தெரியவில்லை .
ஒவ்வொரு நாளும் பல கோடி உயிர்கள் மனிதனால் அழிக்கப் படுகிறது .அந்த உயிரின் ஆற்றல் அந்த உயிரின தன்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை ,அதன் தன்மை -- ஒரு உயிரின் தன்மை ஒரு கோடி சூரிய பிரகாசம் ஆற்றல் உள்ளது .அதன் ஆற்றலை மறைத்துக் கொண்டு ஐம பூதமான மண் .நீர் .அனல்,காற்று ஆகாயம் போன்ற கருவிகளைக் ,கொண்டு உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொண்டு இந்த உலகத்தில் வாழ்கிறது .அப்படியே பல பல பிறவிகள் எடுத்துக் கொண்டு வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறவி எடுத்து வாழ்கிறது.
எல்லா பிறவியை விட உயர்ந்த பிறவி மனிதப் பிறவி என்று உணர்ந்தும் .பகுத்தறிவு பெற்ற மனிதன் ,ஒரு உயிரைக் கொள்வதும் கொன்ற அந்த துர்நாற்றம் உள்ள அசுத்த மாமிச உணவை உண்பதும் ,குற்றம்,தவறு, அநியாயம் அக்கிரமம் என்பதை ஏன் உணராமல் போனார்கள் .அறிவு இல்லையா ?அறிவு தெளிவு இல்லையா?அறிவு இருந்தும் பழக்கத்தினால் செய்கிறார்களா ?என்பது தெரியவில்லை .
இன்று உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டு இருப்பதற்கு முக்கியக் காரணம் உயிர்களைக் கொல்வது புலால் உண்பது தான் என்பதை மறுக்க முடியாது மறைக்க முடியாது .இதுதான் உண்மையாகும் .உயிரைக் கொல்லுகின்றபோது ஆன்மாவில் உள்ள ஒளிக கதிர்கள் துடித்துடித்து வெளியே கக்குகிறது .அதனுடைய வெப்பம் அளவில் அடங்காதது .அந்த வெப்பம்தான் மண் ,நீர் அனல்,காற்று .ஆகாயம் அனைத்திலும் கலந்து உலகம் முழுவதும் வெப்பம் பரவிக் கொண்டு வருகிறது, /இப்படியே விட்டு விட்டால் உலகமே வெப்பக் காடாக மாறி மனிதனும் மற்ற உயிர்களும் அழிந்து விடும்.
இனிமேலாவது உயிர்களை கொல்லவும்.புலால் உண்ணவும் கூடாது என்பதை உலகமும் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறிவைக் கொண்டு சிந்தித்து உணரவேண்டும் வாழ்க உலக உயிர்கள் .
மேலும் சந்தேகம் இருப்பின் தொடர்பு கொல்லவும் .
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு. .
 ·  · பகிர்தல் · நீக்க

உலகம் வெப்பமயமாக என்ன காரணம் ?


உலகம் வெப்பமயமாக என்ன காரணம் ?

ஆன்மநேய அன்புடைய நண்பர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .கருணை என்னும் மாபெரும் சக்தியை மக்களை மறந்து விட்டார்கள் .கருனையினால் தான் இந்த உலகை காப்பற்ற முடியும் என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ளவேண்டும் .கருணை இல்லாமல் உயிர்களை கொன்றுதான் தின்றுதான் வாழ்வோம் என்ற மன அழுத்தம் மக்கள் மனதில் பரவி விட்டது.

இதனால்தான் உலகில் உள்ள துன்பங்களுக்கு காரணம் என்பதை ஏன் புரிந்து கொள்ளவில்லை .உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ,விஞ்ஞானிகள்,அறிவியல் வல்லுனர்கள்.உலக ஐநாசபை அணு ஆராய்ச்சியாளர்கள் ,மதவாதிகள் ,சமயவாதிகள் ,ஆட்சியாளர்கள் .பகுத்தறிவு சிந்தனையாளர்கள் .மனித நேயமுள்ளவர்கள் .இன்னும் பல சிந்தனையாளர்கள் .இருந்தும் இந்த உண்மையை அறியாமல் இருக்கிறார்கள் என்றால் இவர்களுக்கு உண்மை தெரியவில்லையா ?உண்மை தெரிந்தும் இந்த உலகம் எப்படிப் போனால் நமக்கு என்ன என்று இறுமாந்து இருக்கிறார்களா?என்பது தெரியவில்லை .

ஒவ்வொரு நாளும் பல கோடி உயிர்கள் மனிதனால் அழிக்கப் படுகிறது .அந்த உயிரின் ஆற்றல் அந்த உயிரின தன்மை என்னவென்று யாருக்கும் தெரியவில்லை ,அதன் தன்மை -- ஒரு உயிரின் தன்மை ஒரு கோடி சூரிய பிரகாசம் ஆற்றல் உள்ளது .அதன் ஆற்றலை மறைத்துக் கொண்டு ஐம பூதமான மண் .நீர் .அனல்,காற்று ஆகாயம் போன்ற கருவிகளைக் ,கொண்டு உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொண்டு இந்த உலகத்தில் வாழ்கிறது .அப்படியே பல பல பிறவிகள் எடுத்துக் கொண்டு வாழ்ந்து இறுதியாக மனிதப் பிறவி எடுத்து வாழ்கிறது.

எல்லா பிறவியை விட உயர்ந்த பிறவி மனிதப் பிறவி என்று உணர்ந்தும் .பகுத்தறிவு பெற்ற மனிதன் ,ஒரு உயிரைக் கொள்வதும் கொன்ற அந்த துர்நாற்றம் உள்ள அசுத்த மாமிச உணவை உண்பதும் ,குற்றம்,தவறு, அநியாயம் அக்கிரமம் என்பதை ஏன் உணராமல் போனார்கள் .அறிவு இல்லையா ?அறிவு தெளிவு இல்லையா?அறிவு இருந்தும் பழக்கத்தினால் செய்கிறார்களா ?என்பது தெரியவில்லை .

இன்று உலகம் வெப்பமயமாக மாறிக் கொண்டு இருப்பதற்கு முக்கியக் காரணம் உயிர்களைக் கொல்வது புலால் உண்பது தான் என்பதை மறுக்க முடியாது மறைக்க முடியாது .இதுதான் உண்மையாகும் .உயிரைக் கொல்லுகின்றபோது ஆன்மாவில் உள்ள ஒளிக கதிர்கள் துடித்துடித்து வெளியே கக்குகிறது .அதனுடைய வெப்பம் அளவில் அடங்காதது .அந்த வெப்பம்தான் மண் ,நீர் அனல்,காற்று .ஆகாயம் அனைத்திலும் கலந்து உலகம் முழுவதும் வெப்பம் பரவிக் கொண்டு வருகிறது, /இப்படியே விட்டு விட்டால் உலகமே வெப்பக் காடாக மாறி மனிதனும் மற்ற உயிர்களும் அழிந்து விடும்.

இனிமேலாவது உயிர்களை கொல்லவும்.புலால் உண்ணவும் கூடாது என்பதை உலகமும் உலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அறிவைக் கொண்டு சிந்தித்து உணரவேண்டும் வாழ்க உலக உயிர்கள் .

அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு. .

வியாழன், 15 செப்டம்பர், 2011

ஆன்மா என்பது எது ?

ஆன்மா என்பது எது.!

ஆன்மா என்பது சிறிய அணு வடிவம் கொண்டது.அதன் சக்தி கோடி சூரிய பிரகாசம் உடையது.அதில் இருந்துதான் உயிர் உண்டாகிறது.இது எல்லா ஜீவ
 ராசிகளிலும் உள்ளதாகும் பல கோடிபிறவிகள் எடுத்து இறுதியில் ,மனித தேகம் எடுக்கிறது. அதனால்தான் அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்றார்கள் நம்முடைய பெரியவர்கள் .

இது மனித தேகத்தில் எப்படி காரியப் படுகிறது என்றால்,மனிதேகத்தில் புருவமத்தியில் இருந்துகொண்டு உள்ளது .அதற்கு லலாடம் ஸ்தானம் என்பார்கள் .அதன் வண்ணம் கால பங்கு பொன்மை.முக்கால் பங்கு வெண்மை நிறம் கொண்டதாகும் .பல பிறவிகள் எடுத்த பதிவுகள் ,அதன் செயல்பாடுகள் எல்லாம் அந்த ஆன்மாவில் பதிவாகி இருக்கும் .அந்த பதிவுகளை களைந்து ,[அதாவது நீக்கி ]உண்மையான அதன் தன்மையைத் தெரிந்துக் கொள்ள மனித தேகம் கொடுக்கப் பட்டுள்ளது .

அதன செயல் பாட்டிற்க்காக ஐம புலன்கள் கொடுக்கப்பட்டுள்ளது .அதற்குப் பெயர் உபகாரக் கருவிகலாகும்.அதுதான் கண், காது,மூக்கு,வாய் உடம்பு என்பதாகும் .இவை கண்களுக்குத் தெரியும் .இவைகள் மூலமாக உடம்பின் உள்ளே கண்களுக்குத் தெரியாமல் செயல்படும் கருவிகள் ஏராளம் .அதில் முக்கியமானது.

இந்திரியங்கள் என்னும்;-- கண்,காத்து ,மூக்கு,வாய்,உடம்பு என்பதாகும் 
கரணங்கள் என்னும் ;--,மனம், புத்தி,சித்தம் .அகங்காரம் .ஆச்சர்யம் ,என்பதாகும்
ஜீவன் என்னும் ;--உயிராகும் .
ஆன்மா என்பது .;--அருள் நிறைந்த ஆற்றல் என்னும் ஒளி அணுவாகும்.

ஆன்மா எனபது இல்லை என்றால் எதுவும் இயங்காது .ஆன்மாவின் தேவைக்காக அனைத்து கருவி காரணங்களையும்,அதுவே உருவாக்கிக் கொண்டு உள்ளதாகும்.ஆதலால் ''நான் என்பது ஆன்மாவே'' என்பது உண்மையாகும்.

ஆன்மா உண்மையை அறிந்து கொள்ள கருவிகளை இந்திரியங்கள்,கரணங்கள், ஜீவன் என்னும் புறக் கருவிகளுக்கு வேலை கொடுள்ளது.ஆனால் புறத  தோற்ற க் கருவிகளான ஐம புலன்கள் கண் ,காத்து மூக்கு,வாய்,உடம்பு போன்ற கருவிகள், வெளியில் உள்ள மாயா தோற்றம் உள்ள அழகில் மயங்கி,மனம் புத்தி,சித்தம் அகங்காரம்,ஆச்சர்யம் .போன்ற கருவிகளுக்கு அனுப்பி விடுகிறது .இவற்றை ஜீவனும் ஆன்மாவும் மறுக்க முடியாமல் ஏற்றுக் கொள்ளும் கட்டாயம் உண்டாகி விடுகிறது .அந்த அளவிருக்கு மாயா சத்தியின் பலம் உள்ளது, மாயா சத்திக்கு அந்த அதிகாரம் கொடுக்கப் பட்டு உள்ளது [.இதை விரிக்கில் பேருக்கும் ].

அதனால்தான் புறக் கருவிகளை வெளியில் செல்ல விடாமல் உண்மையை அறிந்து கொள்ள ஆன்மாவை தொடர்பு கொள்ள வேண்டும் என்று உண்மையை அறிந்த ஞானிகள் மக்களுக்கு பல வழிகளில் பலவிதமாக சொல்லி உள்ளார்கள் .மண் ஆசை,பெண் ஆசை,பொன் ஆசை.இந்த மூன்று ஆசைகள்தான் அனைத்திற்கும் காரணம் என்று சொல்லி உள்ளார்கள் .

உடம்பின் முக்கிய கருவிகள் எது என்றால் .கண் ,மனம் ,என்பாதாகும் .கண்களில் பார்ப்பது மனதில் பதிவாகும் மனதில் பதிவானது அனைத்தும் செய்யும் .அதனால்தான் மனதை அடக்க வேண்டும் என்கிறார்கள் .கண்ணும் மனமும் எப்படி அடங்கும் .கண் போகும் இடம் மனம் போகும் .கண்கள் வெளியே செல்லாமல் புருவ மத்தியில் உள்ள ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.எப்படி தொடர்பு கொள்ள முடியும்? அதற்குததான் தியானம் ,தவம .யோகம ,வழிபாடு என்று வைத்துள்ளார்கள். இதனால் ஆன்மாவில் உள்ள பதிவுகள் நீங்கி விடுமா என்றால் நீங்காது என்கிறார் வள்ளலார் .

ஆன்மாவின் பதிவுகள் எப்படி நீங்கும் என்றால் உயிர்களுக்கு உபகாரம் செய்தால்தான் நீங்கும் என்கிறார் வள்ளலார் .ஏன் அப்படி செய்ய வேண்டும் ?என்ற கேள்விகள் எல்லாருடைய மனதில் உருவாகும் இல்லையா?நாம் மாயா சத்திகள் மூலமாக பல உயிர்களின் உதவியால்தான் அனைத்தும் அனுபவித்து உள்ளோம் .அதை திருப்பி தரவேண்டும் இல்லையா ?அதுவே நாம் வாங்க்கியக் கடனாகும் ,அந்தக் கடனை திருப்பித் தராமல் .தியானம் ,தவம ,யோகம ,வழிபாடு என்று செய்தால் .கடன் தீர்ந்து விடுமா ?தீராது .அதைத் தீர்ப்பதுதான் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்றார் வள்ளலார் .ஜீவ காருனயமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார் வள்ளலார்,சாவி இல்லாமல் போனால் ஆண்டவரின் மேல் வீட்டுக்கதவு திறக்காது.உங்கள் ஆன்மாவை சுத்தமாக்க வேண்டுமானால் ஜீவ காருண்யமே வழியாகும் என்றார்.ஜீவ காருண்யமே,வழிபாடு என்றார் .வேறு எந்த வழிகளில் சென்றாலும் உண்மையான இறை நிலையை அடையமுடியாது என்று திட்டவட்டமாக ''திருஅருட்பா'' என்னும் நூலில் பதிவு செய்துள்ளார்.

சொல்லியதோடு இல்லாமல் வாழ்ந்தும் வழி காட்டி உள்ளார் .அவர்போல் வாழ்ந்தால்தான்.மரணத்தை வென்று இறைவனை காண முடியும் .வேறு எந்த வழியாலும் காணமுடியாது அருள் பெற முடியாது ''நான என்னும் ஆன்மாவை'' காண இதுவே வழியாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் ;-- 

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே 
உண்டது எல்லாம் மலமே உட கொண்டது எல்லாம் குறையே 
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்தது இல்லீரே 
விண்டதினால் என்ன நீர் சமரச சன்மார்க்க 
மெய் நெறியைக் கடைபிடித்து மெய் பொருள் நன்கு உணர்ந்தே 
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின் 
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

அடுத்து ஒரு பாடல் .;-

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர் 
உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே அறிவீர் 
மடம் புகு பே ய் மனத்தாலே மயங்குகின்றீர் மனதை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி வகையை அறியீர் 
இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே 
எண்ணி எண்ணி இளைகின்றீர் ஏழை உலகிலீர் 
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம் 
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !.,. 

மேலும் தொடரும் .

உங்கள் ஆன்மநேயன் கதிர்வேலு 

புதன், 14 செப்டம்பர், 2011

சாதி சமயம் மதம் சாத்திரம் .அனைத்தும் பொய் !


சாதி சமயம் மதம் சாத்திரம் .அனைத்தும் பொய் !

மனிதன் வாழ்க்கை தேவைக்கு தொழில் தேவைப்பட்டது .தொழிலுக்கு வைத்த பெயர் மனிதனுக்கு வந்து விட்டது. தொழில் வளர்ச்சி அடையும் போது ,பொருள் வளர்ச்சி உண்டானது .பொருள் அதிகம் சம்பாதிப்பவர்கள் உயர்ந்த ஜாதியாகவும் .பொருள் குறைவாக உள்ளவர்களும் ,பொருள் இல்லாதவர்களும் தாழ்ந்த ஜாதியாகவும் அமைத்து விட்டார்கள் .ஆண்டவரைப் பற்றி பேசுபவர்களை .எல்லோரையும் விட உயர்ந்த ஜாதி என்று வைத்து ,மற்றவர்கள் உழைப்பில் தான் உழைக்காமல், வாழும் வழியை அமைத்துக் கொண்டார்கள் .எல்லாமே கடவுள் விதித்த விதி என்று கடவுள்மேல் பழியைப் போட்டு ,மக்களை முட்டாள்களாக மாற்றி விட்டார்கள் .

வேதம் ஆகமம் ,புராணம் இதிகாசம் சாத்திரம் போன்ற கட்டுக் கதைகளை கட்டி ,மக்களிடம் பரப்பி .மக்களை அறியாமையில் வைத்து ஏமாற்றி விட்டார்கள் .கடவுள்,-- வேதத்தில் ,ஆகமத்தில் புராணத்தில் சாத்திரத்தில் சொல்லியுள்ளார் என்று மக்களை இதுநாள் வரை ஏமாற்றி வருகிறார்கள் .இதற்கு என்று ஒரு கூட்டம் இந்தியாவில் நிறைந்து உள்ளது.

ஆனால் இன்றைய இளைஞர்கள்.விஞ்ஞானிகள்.அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்.விழித்துக் கொண்டார்கள்.எதையும் அறிவியல் உண்மையுடன் தெளிவுப் படுத்துகிறார்கள் ,இனிமேல் மக்களை ஏமாற்ற முடியாது .சாதி,மதம் சமயம் ,சாத்திரம் எல்லாம் பொய் பொய்யே .மனிதனை மனிதன் சாதி மதம் சமயம் சாத்திரம் என்ற வகையில் பிரித்து வைப்பது ,பெரும் பாதகச செயலாகும்,கொள்ளைக் கூட்டத்தின் செயலாகும் .மோசக் காரர்களின் செயல்களாகும்.   .சாதி,மதம்,சமயம்,சாத்திரங்களை எல்லாம் குழி தோண்டி பிதைக்க வேண்டும் என்கிறார் வள்ளலார்.

ஒன்றே குலம் ஒருவனே தேவன .!கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதி !ஆண்டவர் .அனைவரும் அவருடைய குழைந்தைகள் .நமக்குள் எந்த வேற்றுமையும் வேண்டாம் .

அன்புடன் ஆன்மநேயன் -கதிர்வேலு.  

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

வள்ளலார் கண்ட மெய்ப் பொருள் அருட்பெரும்ஜோதி !


வள்ளலார் கண்ட மெய்ப் பொருள் அருட்பெரும்ஜோதி !


வள்ளலார் கண்ட மெய்ப் பொருள் அருட்பெரும்ஜோதி !


இந்த உலகம் சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற வேறுபாட்டினால் மனிதனை மனிதன் வேறு படுத்தி ஒற்றுமை இல்லாமல் அழிந்து கொண்டு இருந்தார்கள் .இவை மனிதனுக்கு அறிவு தெரிந்த காலம் முதல் நடந்துக் கொண்டு வருகின்றன. 

மனிதர்களை நல்வழிப்படுத்த பல அருலாளர்களை இறைவன் அனுப்பிக்கொண்டே இருந்தார.அவர்கள் வந்து பல பொய்யான கலைகள், கற்பனைக் கதைகளாகவும் பலவழி முறைகளை சொல்லிப் பார்த்தார்கள் மனதை அடக்கும் .யோகம தவம தியானம் போன்ற பயிற்ச்சி முறைகளையும் சொல்லிப் பார்த்தார்கள் .பல உபதேசங்கள் சொல்லிப் பார்த்தார்கள் மக்களை ஒன்றும் மாற்றம் செய்ய முடியவில்லை .ஏன் ?

அவர்கள் அனைவரும் இறைவன் கட்டளைப்படி உண்மையைத் தெளிவாக சொல்லவும் இல்லை சொல்லியபடி வாழ்ந்து காட்டவும் இல்லை .அரசியல் கட்சிகள் போல் பல பிரிவுகள் ஆன்மீகத்தில் தோன்றி விட்டன .ஒவ்வொரு ஆன்மீகத் தலைவருக்கும் அவரவர்க் கொள்கைகளைப் பரப்ப ஒவ்வொருக் கூட்டம் உருவாக்கப் பட்டது. இதனால் சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற பேதம் ஏற்ப்பட்டு மக்கள் போரிட்டு அழிந்து வீண் போய் கொண்டு இருந்தார்கள் .

இதைப் பார்த்த இறைவன் .இதை உடனே நிறுத்த வேண்டும் என்ற எண்ணங் கொண்டு .ஒரு பரிசுத்தமான ஆன்மாவை இந்த உலகத்திற்கு 1823,ஆம் ஆண்டு அனுப்பி வைக்கிறார் .அவர்தான் சிதம்பர இராமலிங்கம் என்னும் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் 

அவர்தான் உண்மையான இறைவன் யார்/ என்பதை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் .அது மட்டும் அல்ல ,மனிதன் ,மரணம் அடையாமல் வாழ முடியும் என்ற உண்மையை உலகுக்கு வாழ்ந்து வழிக் காட்டியுள்ளார்.கடவுள் ஒருவர்தான் என்பதை உலகுக்கு காட்டுவதற்கு .தமிழ் நாட்டில் உள்ள வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' நிறுவி உள்ளார் ,அங்கே கடவுள் ஒளியாக உள்ளார் என்பதைக் காட்டும் வகையில் ,அணையா விளக்கு {அதாவது தீபம் }ஒளிர்ந்து கொண்டே இருக்கும் .அடுத்து இறைவனை வழிபடுவதற்கும்,அறிந்து கொள்வதற்கும் ,தெரிந்து கொள்வதற்கும் ஒரே மார்க்கம்தான் இருக்க வேண்டும் என்பதற்காக,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 'என்ற அனைவருக்கும் பொதுவான சங்கத்தை அமைத்துள்ளார் .

அந்த சங்கத்தில் உள்ளவர்கள் கொலை புலை {புலால் }மறுத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை வகுத்து தந்து உள்ளார் .உயிர்க் கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் ,இறைவனைப் பற்றி பேசுவதற்கும் வழிபடுவதற்கும் தகுதி அற்றவர்கள் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் .இறைவனை அறிவதறகும் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கும் முதல் தடையாக இருப்பது உயிர்க் கொலை செய்வதும் புலால் உண்பதும்தான் என்பதை /ஆதாரத்தோடு விளக்கி உள்ளார் .

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும் ,அவை மறையும் பொது அன்பும் அறிவும் தானே மறையும் ,விளங்காது .என்பது இறைவன் ஆணையாகும் என்பதை ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரை நடைப் பகுதியில் ,எழுதி வைத்து உள்ளார் அதைப் படித்தாலே மக்கள் ஒழுக்க நிலைக்கு வந்து விடுவார்கள். அடுத்து உலக உண்மைகளை ;;திரு அருட்பா ''என்னும் ஆறாம் திரு முறையில் எழுதி வைத்து உள்ளார் .இவை எல்லாம் வள்ளலார் எழுதவில்லை .கடவுள் ''இறைவன் அருட்பெரும் ஜோதி ஆண்டவர்'' சொல்ல'  சொல்ல வள்ளலார் ஒரு கருவியாக இருந்து எழுதி வைத்துள்ளதாகும் .வள்ளலார் கல்வி கற்காதவர் .யாருடைய போதனையும் கேட்காதவர் .இறைவனிடம் இருந்து ,''சாகாக் கல்வி கற்றவர் ''மற்றவர்கள் எல்லாம் சாகும் கல்வி கற்றவர்கள் .சாகாக் கல்வி கற்றவர்கள் கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர்கள் .என்பது உண்மையாகும் .

அதனால் இறைவன் வள்ளலார் அவர்களுக்கு இந்த உலகத்தை இயக்கும் பொறுப்பான ''ஐந்தொழில் வல்லபத்தை 1874,ஆம் ஆண்டு கொடுத்துள்ளார் .இது வரைக்கும் யாருக்கும் கிடைக்காத பெரிய உயர்ந்த பதவியான ''இந்த உலகத்தை ஆளும் அதிகார ஆட்சியைத் தந்துள்ளார் .வள்ளலார்தான் இந்த உலகத்தை ஆண்டுக் கொண்டு உள்ளார் என்பது.சுத்த சன்மார்க்கத்தை கடைப் பிடிக்கும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தெரியும் .இனிமேல் இந்த உலகத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது .உண்மைகள வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. 
மக்கள் இனிமேல் ஒழுக்கத்துடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வார்கள் .

துன்மார்க்கம் தொலைந்து நன் மார்க்கம் நடை பெரும் .இவை கடவுளுடைய ஆணையாகும் .வள்ளலார் ஆட்சி செய்யம் காலமாகும் .மக்கள் இனிமேல் துன்பமும் ,துயரமும் ,அச்சமும் பயமும் இல்லாமல் வாழலாம் .உலகம் முழுவதும் ஒரு குடை கீழ்தான் செயல்படும் .குற்றம் செய்யும் ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் ,அரசியல் வாதிகளும் .ஆண்டவர் தீர்ப்பான நீதி மன்றத்தில் இருந்து தப்பிக்க முடியாது .அவரவர்கள் முக மூடி வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் உலகம் எங்கும் விளங்கும் .இதற்கு எவ்விதப் பட்டத் தடைகளும் கிடையாது .இனிமேல் கலியுகம் கிடையாது .சத்திய யுகம் ஆரம்பித்து விட்டது. .பழைய பொய்யான வேதம், ஆகமம் ,புராணம் ,இதிகாசம் சாத்திரம் .எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடும் .மக்கள் உண்மையை உணர்ந்து உண்மையுடன் வாழும் காலம் ஆரம்பமாகி விட்டது. இன்மேல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் .

அதற்கு முக்கியமானது ஒழுக்கம் .அந்த ஒழுக்கம்தான் .இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்பதாகும் .இந்த ஒழுக்க வழிமுறைகளை .வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் .அதன் பின் அறிவு தானாக விளங்கும் .இனிமேல் பொய்ப் பொருளை நம்பாமல்,மெய்ப் பொருளை நம்புங்கள் .அந்த மெய்ப் பொருள்தான் ''அருட்பெரும் ஜோதி'' என்பதாகும்.அனைவரும் வளமுடன் வாழ்க !

உங்கள் ஆன்மநேயன் -கதிர்வேலு.  

வள்ளலார் கண்ட மெய்ப் பொருள் அருட்பெரும்ஜோதி !


வள்ளலார் கண்ட மெய்ப் பொருள் அருட்பெரும்ஜோதி !


இந்த உலகம் சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற வேறுபாட்டினால் மனிதனை மனிதன் வேறு படுத்தி ஒற்றுமை இல்லாமல் அழிந்து கொண்டு இருந்தார்கள் .இவை மனிதனுக்கு அறிவு தெரிந்த காலம் முதல் நடந்துக் கொண்டு வருகின்றன. 

மனிதர்களை நல்வழிப்படுத்த பல அருலாளர்களை இறைவன் அனுப்பிக்கொண்டே இருந்தார.அவர்கள் வந்து பல பொய்யான கலைகள், கற்பனைக் கதைகளாகவும் பலவழி முறைகளை சொல்லிப் பார்த்தார்கள் மனதை அடக்கும் .யோகம தவம தியானம் போன்ற பயிற்ச்சி முறைகளையும் சொல்லிப் பார்த்தார்கள் .பல உபதேசங்கள் சொல்லிப் பார்த்தார்கள் மக்களை ஒன்றும் மாற்றம் செய்ய முடியவில்லை .ஏன் ?

அவர்கள் அனைவரும் இறைவன் கட்டளைப்படி உண்மையைத் தெளிவாக சொல்லவும் இல்லை சொல்லியபடி வாழ்ந்து காட்டவும் இல்லை .அரசியல் கட்சிகள் போல் பல பிரிவுகள் ஆன்மீகத்தில் தோன்றி விட்டன .ஒவ்வொரு ஆன்மீகத் தலைவருக்கும் அவரவர்க் கொள்கைகளைப் பரப்ப ஒவ்வொருக் கூட்டம் உருவாக்கப் பட்டது. இதனால் சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற பேதம் ஏற்ப்பட்டு மக்கள் போரிட்டு அழிந்து வீண் போய் கொண்டு இருந்தார்கள் .

இதைப் பார்த்த இறைவன் .இதை உடனே நிறுத்த வேண்டும் என்ற எண்ணங் கொண்டு .ஒரு பரிசுத்தமான ஆன்மாவை இந்த உலகத்திற்கு 1823,ஆம் ஆண்டு அனுப்பி வைக்கிறார் .அவர்தான் சிதம்பர இராமலிங்கம் என்னும் திரு அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் 

அவர்தான் உண்மையான இறைவன் யார்/ என்பதை இந்த உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டி விட்டார் .அது மட்டும் அல்ல ,மனிதன் ,மரணம் அடையாமல் வாழ முடியும் என்ற உண்மையை உலகுக்கு வாழ்ந்து வழிக் காட்டியுள்ளார்.கடவுள் ஒருவர்தான் என்பதை உலகுக்கு காட்டுவதற்கு .தமிழ் நாட்டில் உள்ள வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' நிறுவி உள்ளார் ,அங்கே கடவுள் ஒளியாக உள்ளார் என்பதைக் காட்டும் வகையில் ,அணையா விளக்கு {அதாவது தீபம் }ஒளிர்ந்து கொண்டே இருக்கும் .அடுத்து இறைவனை வழிபடுவதற்கும்,அறிந்து கொள்வதற்கும் ,தெரிந்து கொள்வதற்கும் ஒரே மார்க்கம்தான் இருக்க வேண்டும் என்பதற்காக,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் 'என்ற அனைவருக்கும் பொதுவான சங்கத்தை அமைத்துள்ளார் .

அந்த சங்கத்தில் உள்ளவர்கள் கொலை புலை {புலால் }மறுத்தவர்களாக இருக்க வேண்டும் என்ற சட்டத்தை வகுத்து தந்து உள்ளார் .உயிர்க் கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் ,இறைவனைப் பற்றி பேசுவதற்கும் வழிபடுவதற்கும் தகுதி அற்றவர்கள் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் .இறைவனை அறிவதறகும் உண்மையை தெரிந்துக் கொள்வதற்கும் முதல் தடையாக இருப்பது உயிர்க் கொலை செய்வதும் புலால் உண்பதும்தான் என்பதை /ஆதாரத்தோடு விளக்கி உள்ளார் .

ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு !ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும் ,அவை மறையும் பொது அன்பும் அறிவும் தானே மறையும் ,விளங்காது .என்பது இறைவன் ஆணையாகும் என்பதை ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரை நடைப் பகுதியில் ,எழுதி வைத்து உள்ளார் அதைப் படித்தாலே மக்கள் ஒழுக்க நிலைக்கு வந்து விடுவார்கள். அடுத்து உலக உண்மைகளை ;;திரு அருட்பா ''என்னும் ஆறாம் திரு முறையில் எழுதி வைத்து உள்ளார் .இவை எல்லாம் வள்ளலார் எழுதவில்லை .கடவுள் ''இறைவன் அருட்பெரும் ஜோதி ஆண்டவர்'' சொல்ல'  சொல்ல வள்ளலார் ஒரு கருவியாக இருந்து எழுதி வைத்துள்ளதாகும் .வள்ளலார் கல்வி கற்காதவர் .யாருடைய போதனையும் கேட்காதவர் .இறைவனிடம் இருந்து ,''சாகாக் கல்வி கற்றவர் ''மற்றவர்கள் எல்லாம் சாகும் கல்வி கற்றவர்கள் .சாகாக் கல்வி கற்றவர்கள் கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர்கள் .என்பது உண்மையாகும் .

அதனால் இறைவன் வள்ளலார் அவர்களுக்கு இந்த உலகத்தை இயக்கும் பொறுப்பான ''ஐந்தொழில் வல்லபத்தை 1874,ஆம் ஆண்டு கொடுத்துள்ளார் .இது வரைக்கும் யாருக்கும் கிடைக்காத பெரிய உயர்ந்த பதவியான ''இந்த உலகத்தை ஆளும் அதிகார ஆட்சியைத் தந்துள்ளார் .வள்ளலார்தான் இந்த உலகத்தை ஆண்டுக் கொண்டு உள்ளார் என்பது.சுத்த சன்மார்க்கத்தை கடைப் பிடிக்கும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தெரியும் .இனிமேல் இந்த உலகத்தில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது .உண்மைகள வேலை செய்ய ஆரம்பித்து விட்டது. 
மக்கள் இனிமேல் ஒழுக்கத்துடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வார்கள் .

துன்மார்க்கம் தொலைந்து நன் மார்க்கம் நடை பெரும் .இவை கடவுளுடைய ஆணையாகும் .வள்ளலார் ஆட்சி செய்யம் காலமாகும் .மக்கள் இனிமேல் துன்பமும் ,துயரமும் ,அச்சமும் பயமும் இல்லாமல் வாழலாம் .உலகம் முழுவதும் ஒரு குடை கீழ்தான் செயல்படும் .குற்றம் செய்யும் ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் ,அரசியல் வாதிகளும் .ஆண்டவர் தீர்ப்பான நீதி மன்றத்தில் இருந்து தப்பிக்க முடியாது .அவரவர்கள் முக மூடி வெளிச்சம் போட்டுக் காட்டப்படும் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் உலகம் எங்கும் விளங்கும் .இதற்கு எவ்விதப் பட்டத் தடைகளும் கிடையாது .இனிமேல் கலியுகம் கிடையாது .சத்திய யுகம் ஆரம்பித்து விட்டது. .பழைய பொய்யான வேதம், ஆகமம் ,புராணம் ,இதிகாசம் சாத்திரம் .எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் சென்று விடும் .மக்கள் உண்மையை உணர்ந்து உண்மையுடன் வாழும் காலம் ஆரம்பமாகி விட்டது. இன்மேல் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள் .

அதற்கு முக்கியமானது ஒழுக்கம் .அந்த ஒழுக்கம்தான் .இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்பதாகும் .இந்த ஒழுக்க வழிமுறைகளை .வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் .அதன் பின் அறிவு தானாக விளங்கும் .இனிமேல் பொய்ப் பொருளை நம்பாமல்,மெய்ப் பொருளை நம்புங்கள் .அந்த மெய்ப் பொருள்தான் ''அருட்பெரும் ஜோதி'' என்பதாகும்.அனைவரும் வளமுடன் வாழ்க !

உங்கள் ஆன்மநேயன் -கதிர்வேலு.    

ஞாயிறு, 11 செப்டம்பர், 2011

என்னுடைய உயிரினும் மேலான அன்பர்கள் அனைவருக்கும் வணக்கம் .உங்கள் உயிரும் என்னுடைய உயிரும் ஒன்றுதான் அதே போல் எல்லா உயிர்களும் ஒன்றுதான் .ஆதலால் நாம் எந்த உயிர்களையும் கொலை செய்யக்  கூடாது.புலால் உண்ணக கூடாது இதுவே மனிதர்களாக பிறந்த அனைவரும் கடை பிடிக்க வேண்டும் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.இதுவே கருணை உள்ள கடவுளின் விருப்பமாகும் .கருணை உள்ளவர்களை கடவுள் ஏற்றுக் கொள்வார் .கருணையே கடவுளாகும் .   

கடவுள் உண்டா? இல்லையா?கடவுள் உண்டா? இல்லையா?

மனித பிறப்பின் அவசியமே உண்மையை அறிந்து கொள்வதுதான்.உண்மையை அறியத்தான் மனிதனுக்கு மட்டும் மனமும் அறிவும் சிந்திக்கும் திறனும் உள்ளது அதற்கு மேல், பேசும் திறனும் உள்ளது. மற்ற ஜீவ ராசிக்களுக்கு அத்தகைய வாய்ப்பு இல்லை .உண்மை என்பது நாம் எங்கிருந்து வந்தோம் ஏன் பிறந்தோம் ஏன் மரணம் அடைகிறோம், .ஏன் இன்பம் துன்பம் வருகிறது இதற்கு யார் காரணம் .இதை எல்லாம் தெரிந்து கொண்டோமானால் உண்மை விளங்கும் .அதை தெரிந்து கொள்ள ஏதோ ஒன்றை தேடுகிறோம் .அல்லது மற்றவர்கள் எழுதி வைத்த புத்தகங்களைப் படிக்கிறோம் .நம் அறிவு நமக்கு முன் ஏதோ ஒருவர சொன்ன கருத்தை வைத்துக் கொண்டுதான் சிந்திக்கிறோம் வாதம் செய்கிறோம் .

நாமாக எதையும் சிந்திக்க வில்லை அப்படியே சிந்தித்தாலும் மற்றவர்கள் சொல்லியதைத்தான்,சிந்திக்க வேண்டி உள்ளது. .இவை எப்படி நம் உயிரிலும் ஆன்மாவிலும் பதிவாகி உள்ளது .என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும் .இப்படி பல கோடிப பிறவிகள் தோறும பதிவானது தான் நமக்கு அறிவின் மூலம தெரிய வருகிறது என்பதையும் உணர வேண்டும் .அப்படி ஒரு புதிய சிந்தனையை நாம் அறிவின் மூலமாக சிந்தித்தால் .புதிய சிந்தனைகள் தோன்றும் .அந்த புதிய சிந்தனைகள் எங்கோ ஓர் இடத்தில் இருந்து வருகிறது என்பதை உணர்வோம் .அந்த இடம்தான் கடவுள் என்னும் இடமாகும் .அந்த இடம் உண்மையை தெரிவிக்கும் இடமாகும் .அது மனிதேகம் படைத்த உருவமில்லை மனித தேகம் உள்ள கடவுள் அல்ல, அறிவும் அருளும் நிறைந்த இடமாகும் /

அதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் பற்றுதலும் வேண்டும் .அதை தெரிந்து கொள்ள இவ்வுலக பற்றுதல் இல்லாமல் இருந்தால்தான் கிடைக்கும் .ஒன்றைப் பற்றிக் கொண்டு ஒன்றைத் தேடினால் கிடைக்காது.பற்று அற்ற இடத்தை தேடவேண்டுமானால் பற்று இல்லாமல் இருக்க வேண்டும் .அப்படி இருந்து தேடினால் உண்மை தானே தேடிவரும் .அப்பொழுது அனைத்து உண்மைகளையும் யாருடைய உதவியும் இன்றி தெரிந்து கொள்ளலாம் .இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலாகும் .இதுவே கடவுளுமாகும் .

இவ்வுலகைப் படைத்த அவருக்குத்தான் எல்லா உண்மைகளும் தெரியும் .படைக்காத, படைக்கத் தெரியாத ,பொய்யான கடவுளிடம் தேடினால் உண்மை விளங்காது. .மனிதனால் கடவுளைத் தோற்றுவிக்க முடியாது .என்பதை உணரவேண்டும் .எல்லா வற்றுக்கும் பொதுவான ஒன்றுதான் கடவுள் என்பதாகும் .சாதி மதம் ,சமயம் இனம் ,நாடு என்ற பேத மில்லாத்து .அதுவே மெய்ப் பொருளாகும் .அதுவே இறைவனாகும் அதுவே அனைத்து இயக்கங்களுக்கும் காரிய காரணங்களாகும் .அதுவே இயற்கையாகும்.அதுவே அருள் ஒளியாகும் ,அதுவே எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இருப்பதாகும் .அதனால்தான் எல்லாஉயிர்களையும் தம உயிர்போல் பாவிக்கவேண்டும் என்பதாகும் .

உயிர் உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே 
உயிர்நலம் பரவுக என உரைத்த மெய் சிவமே !
உலகினில் உயிர்களுக்கு உறும்இடையூறு எல்லாம் 
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

என்பதாகும். உண்மையை உணர்ந்து, உயர்ந்து, உண்மையுடன் வாழ்வோம்.
அன்புடன் ;ஆன்மநேயன் கதிர்வேலு/. 

வெள்ளி, 9 செப்டம்பர், 2011

கடவுள் இருக்கா இல்லையா ?


கடவுள் இருக்கா இல்லையா ?


கடவுள் இருக்கு இல்லை என்பதை யார் சொன்னாலும் ,அவரவர் செயகையாலும் நம்பிக்கையிலும் வரும் வார்த்தைகளாகும் .இந்த உலகத்தை இயக்குவது யார் என்பதை உணர்ந்தால் நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இயக்கிக் கொண்டு உள்ளது, இருக்கிறது என்பது தெளிவாகும் .அதைத்தான கடவுள் என்கிறார்கள் அந்த கடவுள் யார் என்பதில் தான் வேறுபாடுகள் .ஒவ்வொரு ஞானிகளும் ஒவ்வொரு கருத்தை சொல்கிறார்கள் .அந்த கருத்து பேதத்தை மாற்றி உண்மையைக் கண்டவர் வள்ளலார் அவர்கள் .அந்த சக்தி உருவம் தாங்கிய மனிதர்கள் அல்ல தத்துவங்கள் அல்ல .அது மாபெரும் அருள் ஆற்றல் உள்ள பேரொளியாகும்.அதற்கு பெயர் -அருட்பெரும் ஜோதியாகும் .அது தனிப்பெரும் கருனையாகும்.அதற்கு ஈடு இணை எதுவும் இல்லை .அதுதான் பல கோடி அண்டங்களை தன அருள் சக்தியால் இயக்கிக் கொண்டு உள்ளது .என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு தான் அறிந்து தெளிவு படுத்தியுள்ளார் .

யோகம தியானம் தவம அதன் நன்மை என்ன ?


யோகம தியானம் தவம அதன் நன்மை என்ன ?


யோகம தியானம் தவம போன்ற செயல்கள் செய்யும் போது நன்மையாக தெரியும் பின் அதே நிலைதான் வந்து சேரும் .நாம் உயிர்க் கொலை செய்யாமலும்  புலால் உண்ணாமலும,மற்றவர்கள் படும் துன்பத்தை போக்கு கின்றதிலும்,நம் உட்ம்புக்கு அதிக மாற்றம் உண்டாகும் .மற்றவர்கள் மகிழ்ச்சி நமக்கு பிராண சக்தியை அதிகம் உண்டாக்கும் அந்த பிராண சக்தி,யோகம தியானம் தவத்தை விட அதிக சக்தியான பிராண சக்திக் கூடும்.அதை அதிகம் செலவிடாமல் பாது காப்பதே, நம்முடைய செயலாக இருக்க வேண்டும் .அப்படி பாதுகாத்தால் நமக்கு வரும் துன்பம் துயரம் அச்சம் பயம் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம் .அதனால்தான் வள்ளலார் ஜீவ காருன்யமே மோஷச வீட்டின் திறவு கொல் என்றார் .ஜீவ காருன்யமே இறை வழிபாடு என்றார் .     மக்கள் சேவையே மகேசன் சேவை என்றார் .உயிர்களுக்கு உபகாரம் செய்தால் எல்லா
 நன்மைகளும் தானே வரும் என்பதை உணரவேண்டும் .

சிரிப்பு பகிழ்ச்சியை கொடுக்கும் .எப்படி ?


சிரிப்பு பகிழ்ச்சியை கொடுக்கும் .எப்படி ?
சிரிப்பு எதனால் வருகிறது மனிதன் அகம் மகிழ்கின்ற போது சிரிப்பு வருகிறது .அகம் எதனால் மகிழ்கின்றது மற்றவைகளை விட நலமாக உள்ளேன் .மற்றவர்களை வெற்றிக் கொண்டு விட்டேன் ,எனக்கு எந்த துன்பமும் இல்லை ,யாரைப்பற்றியும் எனக்கு கவலை இல்லை என்பது போன்ற தான் அடையும் சுகத்தாலே மகிழ்ச்சியின் வெளிப்பாடே சிரிப்பாகும் .
அடுத்தவர்களின் துன்பத்தைக் கண்டு சிரிப்பதும் சிரிப்புதான் ,அடுத்தவர்கள் துன்பம் நம்முடைய துன்பம் போல் என்று என்னும் என்னமுடையவர்களுக்கு சிறப்பு வருமா? மற்றவர்கள் சிரிக்கமுடியாமல் இருக்கிறார்கள் என்றால் என்ன ?அவர்கள் ஏதோ ஒரு துன்பத்தில் இருக்கிறார்கள் என்பது உண்மையாகும் .அவர்கள் துன்பபடுமபோது அதனால் கிடைக்கும் எதிர்பார்ப்பு தான் சிரிப்பாகும் .
ஒருவன் சிரிக்கிறான் என்றால் மற்றவர்கள் துன்பப் படுகிறார்கள் என்பது உண்மையாகும்.அதை ஏற்றுக் கொள்ளமுடியுமா?வாழ்க்கை என்பது சிரிப்பதற்கு இல்லை ,சிந்திப்பதற்கு !இந்த உலகில் உள்ள மக்கள் அறியாமல் ஏதோ ஒன்றை நினைத்துக் கொண்டு துன்பப் படுகிறார்கள் அவர்கள் துன்பத்தை எப்படி போக்குவது என்பதை நினைப்பவர்கள் ஞானிகள் .அவர்கள் சிரிக்க மாட்டார்கள் .அவர்கள் இறைவன் படைத்த உலகில் உண்மைத் தெரியாமல் போட்டியும் ,பொறாமையும் .வஞ்சகமும் ,கொண்ட வாழ்க்கையில் வாழ்ந்து அழிந்து கொண்டு இருக்கிறார்களே .அவர்களை எப்படி நல வழிப் படுத்துவது என்பதை நினைத்து மக்களுக்கு ஒழுக்கத்தையும் .இறைவனுடைய உண்மையும் எடுத்து சொல்லிக் கொண்டே இருப்பார்கள் .அதனால் அவர்கள் சிரிப்பதில்லை .
அதனால் அவர்கள் சிரிக்கத் தெரியாதவர்கள் என்பது பொருள் அல்ல !நாம் சிரிக்க பிறக்கவில்லை .நாம் செல்லும் இடம் வேகுதூரம் உள்ளது ,அதுதான் இறைவன் இல்லம் அந்த இடத்திற்கு செலவதுதான் மனித வாழ்க்கையாகும். மனித வாழ்க்கையின் லஷ்யமாகும் ,அதைவிடுத்து சிரித்து வாழ்வதில் எந்த நன்மையையும் இல்லை .சிரிப்பு எவ்வகவு நாளைக்கு தொடரும் ,அடுத்த கணமே துன்பம் நிறைந்து விடும் .சிரித்து வாழ்ந்திடாதே மற்றவர்கள் சிறக்க வாழ வேண்டும் .அதுவே மனித நேயமாகும் .அதுவே ஆன்மநேய ஒருமைப்பாடாகும் .அதை வலியுறுத்திச சொன்னவர் வள்ளலார் என்ற மாபெரும் ஞாநியாகும்
இறைவன் படைப்பில் நாம் எல்லோரும் சகோதரர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வழி காட்டுவோம் அதுவே நமது வாழ்க்கையின் குறிக்கோளாகும் .
அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு