ஞாயிறு, 28 டிசம்பர், 2014

சுக்கு மருத்துவக் குணங்கள்

சுக்கு மருத்துவக் குணங்கள்

1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.

2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவ்வைந்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும்.

4. சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

5. சுக்கு, வேப்பம்பட்டை போட்டு கஷாயம் செய்து குடித்துவர, ஆரம்பநிலை வாதம் குணமாகும்.

6. சுக்குடன் சிறிது நீர் தெளித்து, விழுதாக அரைத்து, நெற்றியில் தடவினால் தலைவலி வந்தவழியே போய்விடும்.

7. சுக்கு, கருப்பட்டி, மிளகு(Pepper) சேர்த்து, "சுக்கு நீர்" காய்ச்சிக் குடித்து வர உடல் அசதி, சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.

8. சுக்குடன், தனியா வைத்து சிறிது நீர் தெளித்து, மைய்யாக அரைத்து உண்டால், அதிக மது அருந்திய போதை தீர்ந்து இயல்பு நிலை ஏற்படும்.

9. சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

10. சுக்கு, மிளகு, சீரகம்(Cumin), பூண்டு(Garlic) சேர்த்து கஷாயம் செய்து காலை, மாலை குடித்துவர மாந்தம் குணமாகும்.

11. சுக்குடன், சிறிது துளசி இலையை மென்று தின்றால், தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.

12. சுக்குடன், மிளகு, சுண்ணாம்பு சேர்த்து மைய்யாக அரைத்துப் பூசிவர, தொண்டைக் கட்டு மாறும். குரல் இயல்பு நிலைபெறும்.

13. சிறிது சுக்குடன், சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்துச் சாப்பிட்டால், மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.

14. சுக்குடன், கொத்தமல்லி இட்டு கஷாயம் செய்து பருகினால் மூலநோய் தீரும்.

15. சுக்கு, ஐந்து மிளகு, ஒரு வெற்றிலை சேர்த்து மென்று தின்று, ஒரு தம்ளர் நீர் குடித்தால் தேள், பூரான் கடி விஷம் முறியும்.

16. சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து, தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

17. தயிர்சாதத்துடன், சிறிது சுக்குப்பொடி இட்டு சாப்பிட்டால், வயிற்றுப்புண் ஆறும்.

18. சுக்கு(Dry Ginger) , மிளகு, பூண்டு, வேப்பிலை இவைகளைச் சேர்த்து கஷாயம் செய்து, தினம் மூன்று வேளை வீதம் இரண்டு நாட்கள் குடித்துவர விஷக்காய்ச்சல் குறையும்.

19. சுக்கு, மிளகு, சீரகம் இட்டு எண்ணெய் காய்ச்சி, தலைக்குத் தேய்த்துக் குளித்துவர, நீர்க்கோவை நீங்கும். ஈர், பேன் ஒழியும்.

20. சுக்குத்தூளுடன் உப்பு சேர்த்து பல் துலக்கிவர, பல்வலி தீரும். ஈறுகள் பலம் பெறும். வாய்துர்நாற்றம் விலகும்.


அன்புடன் கதிர்வேல் .

வியாழன், 18 டிசம்பர், 2014

பெண்களின் முக்திக்கு தடையானவர்கள் யார் ?


பெண்களின் முக்திக்கு தடையானவர்கள் யார் ?

முக்திக்கு தடைக் கற்கள் பெண்களே என்று வேதங்கள் சாத்திரங்கள் சொல்லி உள்ளன் .
பெண்களும் சூத்திரர்களும் இழி பிறவிகள் என்று பகவான் கிருஷ்ணபரமாத்மா கீதையில் எழுதி வைத்திருப்பதால் ,பிராமணர்கள் பெண்களின் முத்திக்கு தடை விதித்து உள்ளார்கள் .
குழந்தைகளைப் பெற்றுத் தருவது யார் ?
பெண்கள் பெண்கள்தான் ஆண்களையும் பெற்று எடுத்து தருகின்றார்கள் .வளர்த்து தருகின்றார்கள்.
குழந்தைகளை பெற்றுத் தருகின்ற, வளர்க்கின்ற பெண்களுக்கு அறிவில்லை என்று வேதம் சொல்லுகின்றது.
பிறக்கிற குழந்தைகளுக்கு பாலோடு சேர்த்து அறிவையும் ஊட்டி வளர்ப்பவள் பெண்கள் என்பது தெரியாதா கிருஷ்ண பகவானுக்கு / கடவுள் பேதம் பார்க்கலாமா ?
தாயால் பொது அறிவை ஊட்டி வளர்க்காத குழந்தைகளின் கதி என்னவாகும்/ நீங்களே புரிந்து கொள்ளுங்கள் .
வள்ளல்பெருமான் பெண்களுக்கும் அறிவு உண்டு ஞானம் உண்டு என்பதை தெரியப் படுத்தி உள்ளார் .பெண்களுக்கும் யோகம் ஞானம் முதலியவை சொல்லித் தரவேண்டும் என்றார்
பெண்கள் இல்லை என்றால் ஒவ்வொரு வீட்டிலும் உணவிற்கு எங்கு செல்வார்கள்.ஜீவ காருண்யம் எப்படி விளங்கும்.புரிந்து கொள்ளவேண்டும் .
அதனால்தான் வள்ளல்பெருமான் !
வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதம் ஆகமத்தின் விளைவு அறியீர் ...சூதாகச்
சொன்னதளால் உண்மை வெளி தோன்ற உரைக்கவில்லை
என்ன பயனோ இவை .....
வேதம்,ஆகமம்,சாத்திரங்கள்,புராணங்கள்,யாவையும் ஆழமாக குழியைத் தோண்டி புதைத்து விடுங்கள் என்றார் .
அதனால்தான் உயிர்களிடத்தில் பேதம் இருக்கக் வேண்டாம் என்பதால் ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை வேண்டும் என்று தெளிவுப் படுத்தி உள்ளார் .இறைவன் படைத்த உயிர்களிடத்தில் ஆண்,பெண்,அலி என்ற பேதம் எதுவும் .இருக்கக் கூடாது என்பதை வெளிப்படையாக பதிவு செய்துள்ளார் ..
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 16 டிசம்பர், 2014

அறிவு புரட்சி வேண்டும் .

அறிவு புரட்சி வேண்டும் .


ஞாயிறு, 14 டிசம்பர், 2014

எது சிறந்த நட்பு ?


எது சிறந்த நட்பு ?

நட்பு என்பது, சுயநலம் கருதாமல் அறத்தை நன்றாக செய்பவர்களின் நட்புதான் உயர்ந்த நட்பாகும் .

உயிரைக் கொடுப்பது நட்பு அல்ல .உயிரைக் காப்பாற்றுவது தான் நட்பு.
இதைத்தான் வள்ளலார் ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார் .ஜீவன்கள் மேல் நட்பு வைத்தால் இறைவன் நம் மேல் நட்பு வைப்பார் .

இறைவன் நட்பு வேண்டும் என்றால்,உயிர்கள் மேல் நட்பு வைக்க வேண்டும் .இதுவே சிறந்த நட்பு ஆகும். இதைவிட உயர்ந்த நட்பு உலகத்தில் வேறு எதுவும் இல்லை .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கடவுள் இருக்கும் இடம் !


கடவுள் இருக்கும் இடம் !

அறிவு மயமான கடவுள் இருப்பிடம் கோயில் அல்ல .ஒவ்வொருவருடைய உள்ளமே கோயில் .

ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் கடவுள் உள்ளார் என்ற உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து கொண்டால் மக்கள் கோயில்களுக்குப் போகிற வேலைகள் குறையும். வீண் செலவுகள் குறையும்.

கடவுளிடம் செல்லுவதால் கடவுள் எதுவும் கொடுப்பதில்லை உழைப்பால் தான் எல்லா நன்மைகளும் கிடைக்கும் .

உழைக்காமல் உண்பவர்கள் கடவுளின் அருகில் அமர்ந்து கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டு வாழ்ந்து வருகின்றார்கள் .

கொடுக்கும் கடவுளை நம்புங்கள் .வாங்கும் கடவுளை நம்பாதீர்கள் .

எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் உள்ளத்தில் கடவுள் நிலைப் பெற்று இருப்பார் .அதுவே கடவுள் இருக்கும் இடமாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 13 டிசம்பர், 2014

உண்மையான தெய்வம் எது ?உண்மையான தெய்வம் எது ?

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்ச் சமயாதியை மெச்சு கின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல் விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய் வந்த துன்பு ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

தெய்வங்கள் பலபல உண்டு என்று வழிபாடு செய்பவரும் நினைப்பவர்களும் அறிவு இல்லாதவர்கள் பொய்யான கற்பனைக் கலைகளான தத்துவங்களான உருவங்களை வைத்துள்ள சமயங்கள் மதங்கள் எல்லாம் உண்மைக்கு புறம்பான தெய்வங்களை படைத்து வைத்துள்ளார்கள் .

மக்கள் அறியாதவர்கள் அப்பாவிகள், அவர்களை அறிவு தெளிவு இல்லாதவர்களாக மாற்றி விட்டார்கள் ஆதலால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் மக்களுக்காக வேண்டுகின்றார் .

எனக்கு உண்மையை உணர்த்தி எழுப்பி அறிவை கொடுத்து மெய்யான திருவருள் விளக்கம் தந்து இன்பம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றாய் அதேபோல்

எல்லா ஜீவர்களுக்கும்.அறிவையும் திருவருள் விளக்கத்தையும் கொடுத்து... எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகத்தையும்,எல்லா உயிர்களையும்,எல்லா கிரகங்களையும் மற்றை எல்லா வற்றையும் படைத்து இயக்கும் ஆற்றல் மிகுந்த ஒரே கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை தெளிவிப்பாயாக என்று ஆண்டவரிடம் வேண்டுகின்றார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

வெள்ளி, 12 டிசம்பர், 2014

மனம் ஒரு கண்ணாடி !


மனம் ஒரு கண்ணாடி !

ஒவ்வொருவருடைய வாழ்வும் அவர்களின் மனத்தின் நினைவு களுக்கும் பதிவுகளுக்கும் தகுந்தாற்போல் தான் அமையும் .

மனத்தை தூய்மை படுத்த தெரியாதவர்கள் எதையும் தூயமைப் படுத்த முடியாது .
கண்ணாடி முன் எதைக் காட்டினாலும் அது தெரியும் அதேபோல் மனதில் எதை நினைத்தாலும் அது பதிந்து அதை செய்யத் தூண்டும்.

மனம் ஒரு கத்தி போன்றது .கத்தி மாம்பழம் அறுக்கவும் உதவும் பிறருடைய தலையை அறுக்கவும் உதவும் .அதுபோல் மனத்தினால் நன்மை செய்யவும் முடியும் .தீமை செய்யவும் உதவும்.

மனத்தில் நெடுங்காலமாக மாசு என்னும் அழுக்கு ஏறி தடிப்பாக உள்ளது .அதை தூய்மை படுத்த வேண்டும்.

நாம் தினமும் பாத்திரங்களை விளக்குகின்றோம் .பல் விளக்குகின்றோம்,அன்றாடம் ஆடைகளைத் துவைத்து அழுக்கை எடுக்கின்றோம்,வீட்டை அன்றாடம் சுத்தம் செய்கின்றோம் .நாம் பார்க்கும் கண்ணாடியை தினமும் சுத்தம் செய்கின்றோம்.

அதேபோல் நம்முடைய மனத்தை தினமும் தூயமைப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மனம் என்பது ஒரு பேய் பிடித்த குரங்கு போன்றது .அது சும்மாவே இருக்காது குரங்கு போன்று தாவிக் கொண்டே இருக்கும் .

மனத்தை அடக்க தெரிந்தவனே மனிதன் .

கண்ணாடி எப்படி அசையாமல் இருக்கின்றதோ அதேபோல் மனதை அசையாமல் அலையாமல் நிலை நிறுத்தப் பழகிக் கொள்ளவேண்டும்.அப்படி பழகினால் மனதில் மாசு என்னும் அழுக்கு படியாமல் சுத்தமாக இருக்கும் .

மனத்தை அடக்க வள்ளலார் சொல்லும் வழி ..மனத்தை சிற்சபையின் கண் செலுத்த வேண்டும் என்கின்றார் .வேறு வழிகளால் மனம் அடங்காது அமைதி அடையாது .

சிற்சபை என்பது ஆன்மா என்னும் உள் ஒளி இருக்கும் இடம் .நம் தலைப்பாகத்தின் உச்சிக்கும் கீழே, உள் நாக்கிற்கும் மேலே.மூளையின் மத்தியில் அந்தக் கரணக் கூட்டத்திற்கு நடுவில் உள்ளது .

அதை தெரிந்து மனத்தை வெளியே அலைய விடாமல் இழுத்து புருவ மத்தியில் செலுத்திக் கொண்டே இருந்தால் ,மனம் தானே அடங்கும் .மனத்திற்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு நீங்கியதால் மனம் அலைந்து கொண்டு உள்ளது .
மனத்தின் சங்கிலியை ஆன்மாவில் மாட்டிவிட்டால் அது துண்டிக்கப் படாமல் இணைந்து கொள்ளும்.அப்போது ஆன்மாவின் இயற்கை குணமான கருணை ,தயவு,அன்பு,அருள் என்ற தன்மைக்கு,குணத்திற்கு மனத்தை மாற்றி விடும் அதுவே சன்மார்க்க தியானம் ,

அப்போது மனம் அலையாமல் கண்ணாடிபோல் எப்போதும் தூய்மையாகவும் ,சுத்தமாகவும் ,மாசுபடாமல் இருக்கும் .

நமக்கு எக்காலத்திலும் துன்பம் ,துயரம்,அச்சம்,பயம்,மரணம் வராமல் பாதுகாக்கப் படும் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 1 டிசம்பர், 2014

இன்பமும் துன்பமும் இல்லா வாழ்க்கை !

இன்பமும் துன்பமும் இல்லா வாழ்க்கை !

உலகில் வாழும் மக்களுக்கு இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை இயற்கை என்பார்கள் .அது இயற்கை என்பது அறியாமையாகும்..எப்படி வாழ வேண்டும் என்ற உண்மை தெரியாமல் வாழ்வதால் இன்பமும் துன்பமும் வந்து கொண்டே இருக்கின்றன.

உலக மக்கள் இப்படித்தான் வாழ வேண்டும் என்பது வள்ளலார் வகுத்து தந்த பொது நெறிதான் சுத்த சன்மார்க்க நெறியாகும்.அவரால் தோற்றுவிக்கப் பட்ட சுத்த சன்மார்க்க நெறியை அறிந்து தெரிந்து அதை சார்ந்து வாழ்ந்தால் இன்பமுடன் வாழலாம் .

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பொது நெறியை மனித சமுதாயத்திற்கு வழி காட்ட வேண்டுவது இன்றைய சன்மார்க்கிகளின் கடமையாகும்.

நாம் யார் ? கடவுள் யார் ? அவர் எங்கே இருக்கின்றார் ? அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பை எப்படி அறிந்து கொள்வது என்பதை மக்கள் தெரிந்து கொண்டால் வாழ்க்கை இன்பமயமாய் இருக்கும்.உண்மையை அறிந்த சன்மார்க்க அன்பர்கள் அன்புடனும் பணிவுடனும் ,அனைவரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவுப் படுத்த வேண்டும்.

ஒன்றான தனிப்பெரும் தலைமை தெய்வமாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்,  தயவு கருணை வண்ணமாக இருப்பதால்,எல்லா ஜீவர்களின் தலைமை பீடமாகிய புருவ மத்தியில் உருவம் இல்லா அருவ நிலையில் ஆன்மா என்னும் உள் ஒளியாக இருந்து கருணையுடன் இயங்கிக் கொண்டு உள்ளார் என்னும் உண்மையை மக்களுக்கு காட்டுவதற்கு புற வழிபாடாகிய தெய்வ ஆலயங்களை கட்டி தெய்வ அடையாளச் சின்னங்களைப் பயன் படுத்தி புற வழிப்பாட்டு முறையைக் கொண்டு வந்து உள்ளார்கள் .

ஆதலால் புறத்தில் கடவுள் இருப்பதாக எண்ணி எண்ணி,மக்கள் புற வழிபாடு செய்து,அதனால் எந்த பயனும் இல்லாமல் அழிந்து கொண்டே உள்ளார்கள்.

ஆதலால் அந்த அடையாள சின்னங்கள் எதையும் அழிக்காமல் அங்கே வள்ளலார் காட்டிய ஒளியே கடவுள் என்னும் உண்மையை வைத்து வழிபாடு செய்தல் வேண்டும்.அந்த ஒளியை வழிபாடு செய்ய செய்ய ஆன்ம ஒளியை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் நீங்கி அக வழிபாட்டிற்கு வந்து விடுவார்கள்.

வள்ளல்பெருமான் சுத்த சன்மார்க்கத்திற்கு வித்திட்டு வழிகாட்ட வந்தவர் அவர் வடலூரில் சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து அதன் உள் வளர் பதியாகிய அருட்பெருஞ் ஜோதியாகக் கண்டு கொள்ளச் செய்து உள்ளார் .

இந்த தெளிவோடு உலகில் உள்ள எல்லா ஆலயங்களிலும் தெய்வ உண்மையையும் தத்துவ கற்பனைகள் அற்ற கற்பனாதீத அருள் ஒளி வண்ணமாக யாவரும் கண்டு அன்பு,தயவு,கருணை,வழி பாட்டிற்கு இடமாக விளங்கச் செய்தால் மக்கள் வேற்றுமை இல்லா ஒற்றுமை காணும் கடவுளைக் காணமுடியும்.

அப்படி வழிபாடு செய்து வந்தால் மக்கள் இன்பம் துன்பம் இல்லாமலும் ஏற்றத் தாழ்வு இல்லாமலும்,உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற வேறுபாடுகள் இல்லாமல்  அனைவரும் சமமான வாழ்க்கை வாழ முடியும்.

வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை கடைபிடித்து வாழ்ந்து கொண்டு இருக்கும் சன்மார்க்க அன்பர்கள் மக்களுக்கு போதிக்க வேண்டும்.எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே என் தந்தை அருட்பெருஞ்ஜோதியின் நின் அருட் புகழை இயம்பி இடல் வேண்டும்.என்ற வள்ளல்பெருமான் வாக்கை நிறைவேற்ற வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .