வெள்ளி, 30 மார்ச், 2012

வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் யாவும் பொய்யே !



வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் யாவும் பொய்யே !

 வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர் .வேதாகமத்தின் விளைவை அறியீர் ,சூதாக சொன்னது அலால் உண்மை வெளித் தோன்ற உரைக்கவில்லை என்ன பயனோ இவை ;--என்கிறார் வள்ளலார் --பொய்யான கற்பனைக் கதைகளை கட்டி மக்களை படுகுழியில் தள்ளிவிட்டது .அதனால் அவைகள் அனைத்தையும் வழி துறை தெரியாமல் ஆழமாக குழியை வெட்டி புதைத்து விடுங்கள் என்கிறார்

 சாதி குலம் என்றும் சமய மதம் என்றும் உப நீதி இல்லா ஆச்சிரம நீட்டு என்றும் --ஓதுகின்ற பேய் ஆட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்தனவே பிறர் தம் வாயாட்டம் தீர்ந்தனவே-- மற்றும் உள்ள யாவும் என்கிறார் வள்ளலார்,  இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டுயது என்ன ?சமய மதங்கள் யாவும் பொய்யே சொல்லி வைத்துள்ளன .அதனால் மக்கள் பொய்யை உண்மை என்று நம்பி ஏமாந்து விட்டார்கள் இனிமேல் பொய் செல்லாது .மக்கள் விழித்துக் கொண்டார்கள் .மக்களை ஏமாற்ற முடியாது ,இது விஞ்ஞான உலகம் .உண்மையை உண்மை என்று உணரும் வரை ஏற்க மாட்டார்கள் .இப்போது உள்ள மக்கள் யாவரும் புத்தி சாலிகள் என்பதை மறந்து விடக்கூடாது

மெய் மொழியும் ஒழுக்கமும் ! பாகம் 1,



சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் !

தமிழ் நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள, வடலூரின் அருகில் உள்ள பார்வதி புறத்தில் வள்ளலார் --சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் --சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை --சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை தோற்றுவிக்கிறார் ,ஏன் எதற்க்காக அங்கு தோற்றுவித்தார் என்பதை தெரிந்து கொண்டால் உலக மக்களுக்கு உண்மை விளங்கும் ,
  • வள்ளலாரே அளிக்கும் அருள் விளக்கம்,! 
  • மெய் மொழியும் ஒழுக்கமும் ,
உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற சகோதரர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில் ;-

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும் ,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்க்குகின்றவர் என்றும் ,இரண்டும் படாத பூரண இன்பம் ஆனவர் என்றும் ,

எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும் ,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லா சத்தர்களையும்,எல்லாக் கலைகளையும்,எல்லா பொருள்களையும்,எல்லா தத்துவங்களையும்,எல்லா தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும்,எல்லா பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,மற்றை எல்லா வற்றையும் ,

தமது திருவருட் சத்தியால் ;--1,தோற்றுவித்தல்,2,வாழ்வித்தல்,3,குற்றம் நீக்குவித்தல்,4,பக்குவம் வருவித்தல்,5,விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும் சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை .
  • ''அருட்பெரும்ஜோதியர் ''என்றும்    
சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக கடவுள் ஒருவரே !

அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொதுவெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் ,
  • மக்கள் அறிந்து கொள்ள வேண்டியது !
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து,அன்புசெய்து அருளை அடைந்து,அழிவில்லாத சத்திய சுகப் பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,

பல்வேறு கற்பனைகளால் பல்வேறு சமயங்களிலும்,பலவேறு மதங்களிலும் ,பல்வேறு மார்க்கங்களிலும்,பலவேறு லஷ்யங்களைக் கொண்டு,நெடுங் காலம் பிறந்து,பிறந்து அவத்தை வசத்தர்களாகிச சிற்றறிவும் இன்றி விரைந்து,விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி இறந்து,இறந்து,வீண் போயினோம்.போகின்றோம் .

ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து,விரைந்து ,இறந்து இறந்து வீண் போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு, உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,எல்லாச சமயங்களுக்கும், எல்லா மதங்களுக்கும் ,எல்லா மார்க்கங்களுக்கும் உண்மைப் பொது நெறியாகி விளங்கும் 

சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெரும் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ;-மேற் குறித்த அருட்பெரும்ஜோதி என்னும் உண்மைக கடவுள் தாமே திருவுளம் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷ்யமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற 
  • ஓர் ஞானசபையை ;--
மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் உள்ள சித்திவளாகம் என்னும் அருள் சந்நிதானத்திற்கு அடுத்த உத்தரஞான சிதம்பரம் அல்லது ஞான சித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதி புரத்தில் தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ,

''இக் காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் ,அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருளி திருநடனம் செய்து அருள்கின்றோம்'' என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே ,தாயினும் சிறந்த தயவு உடைய நமது கருனையாங் கடலாராகிய அருமைத் தந்தையார் ,அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றாலும் பிரசித்திப்பட {வெளிப்பட }வெளிப்படுத்தி

அருட்பெரும்ஜோதி சொரூபராய் ,அப்பெருங்கருணை வள்ளலாரது  உடல்,பொருள்,அவைகளைக் கொண்டு பொற்சபை,சிற்சபைப் பிரவேசஞ் செய்து அருளி ,அரிய அவரது திருமேனியில் தாம் {அருட்பெரும்ஜோதி }கனிவுறக் கலந்து அருளிய ,எல்லாம் வல்ல சித்தத் திருக்கோலங் கொண்டு

அருள் அரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்து அருளும் நிமித்தம் எல்லா உலகங்களில் உள்ளவர்கள் யாவரும் ஒருங்கே ,இஃது என்னே !இஃது என்னே !என்று அதிசயிக்கும்படி வெளிப்பட எழுந்தருளும் தருணம் அடுத்த அதிசமீபித்த தருணமா இருத்தலினால்,அங்கனம் வெளிப்படும் திருவரவு பற்றி யாதொரு சந்தேகமும் வேண்டுவதில்லை .

உண்மையை அறிந்து கொள்ள காத்து நிற்கும் அல்லது நிற்க வேண்டிய நாம் எல்லாவரும் மேற்குறித்த அற்புதத் திருவரவு நேரிட்ட கணத்தில் தானே ,சுத்த சன்மார்க்க அரும் புருஷார்த்தங்களின் பெரும் பயனாகிய எக்காலத்தும் நாசம் அடியாத சுத்த தேகம்,{அல்லது சுவர்ணதேகம்} பிரணவ தேகம்,ஞான தேகம்,என்னும் சாகாத கலை அனுபவமும் ,சுத்த பிரணவ ஞான தேக சித்தித் தேகங்களும் தன் சுதந்தரத்தால் தத்துவங்கள் எல்லா வற்றையும் நடத்துகின்ற தனிப்பெரும் வல்லபமும் .

கடவுள் ஒருவரே !

கடவுள் ஒருவரே என்று அறிகின்ற உண்மை ஞானமும் ,கரும சித்தி,யோக சித்தி, ஞான சித்தி,முதலிய எல்லா சித்திகளையும் பெறுகின்ற அருட்பேறும் பெற்று வாழ்கின்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வை அடைவதற்கான --சுத்த சன்மார்க்கத் தனிப்பெரு நெறியைப் பற்றுவதற்கு உரிய உண்மை ஒழுக்கங்களில் நாம் எல்லவரும் தனித்தனி ஒழுகவேண்டியது அவசியம் ஆகையால் அவ் ஒழுக்கங்கள் எவை என்பதை உணர வேண்டுவது இன்றி அமையாததாகும்.  

திரு அருட்பிரகாச வள்ளலார் வடலூர்ப் பெருவெளியில் சன்மார்க்க போதனை செய்து வரும் காலங்களில் இந்த உண்மை நெறிகளை வரைந்து தருமச் சாலையில் உள்ள சுவரில் ஒட்டி வைத்து '' இந்நெறிகளை பெற்று உய்யுங்கள் என்பதை மக்களுக்கு தெரியப் படுத்தயுள்ளார் .அந்த ஒழுக்கங்கள் என்ன என்பதைப் பார்ப்போம் .
  • 1,} இந்திரிய ஒழுக்கம் ,
இந்திரிய ஒழுக்கமாவது ;--

காது;--கொடிய சொல் செவிபுகாது நாதம் முதலிய தோத்திரங்க்களை உற்று கேட்டல்,மற்றவை கேளாது இருத்தல் ,கொடுஞ் சொல் முதலியவை செவிபுகாமல் நிற்றல்,

உடம்பு --அசுத்தங்களைத் தீண்டாது இருத்தல்,

கண் --கொடூரமாகப் பாராது இருத்தல்,--

வாய் ;--ருசியின்மீது விருப்பம் இன்றி இருத்தல் --

மூக்கு;--சுகந்தம் விரும்பாது இருத்தல் என்னும் ஞானேந்திரிய ஒழுக்கமும் ,--

வாயின் உள் உள்ள நாக்கு பேசுதல்;--இனிய வார்த்தையாடுதல் ,--பொய் சொல்லாது இருத்தல் ,--

மற்ற புற உருப்புகளினால் செய்ய வேண்டியவை !

ஜீவ இம்சை நேரிடும் காலத்தில் எவ்விதத் தந்திரத்திலாவது தடை செய்தல் ,--பெரியோர்கள் {பற்று இல்லாதவர்கள் }இருக்கும் இடத்திற்கு செல்லுதல், என்றால் சாதுக்களிடம் பரிச்சயம் பண்ணுதல் .--உயிர்களுக்கு உபகரிக்கும் நிமித்தம் சஞ்சரித்தல்.--உயிர்களுக்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல்,--மலஜல உபாதைகள அளவு மீறாமலும் கிரமங் குறையாமலும் ,ஒழித்தல் ,--  

சுக்கிலத்தை அக்கிரமத்தில் அதிக்கிரமத்தில் விடாது நிற்றல் {இது மந்ததரனுக்கு }--எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமை நிறுத்துதல் ,{இது தீவிததரனுக்கு}--இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் மறைத்தல் ;--இதுபோல் உச்சி ,மார்பு,முதலிய அங்கங்களையும் மறைத்தல்;--வெளியில் சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் தரித்தல்:--அழுக்கு ஆடை உடுத்தாது இருத்தல் முதலியன இந்திரிய ஒழுக்கம் .


  • 2,} கரண ஒழுக்கம் ;--


கரண ஒழுக்கமாவது ;--

மனம்;--சிற்சபையின் கண் { அதாவது புருவமத்தியில் }மனதைச் செலுத்துவது தவிர மற்று எந்த வகை ஆபாசத்திலும் செலுத்தாமல் இழுத்து மேற் குறித்த இடத்தில் நிறுத்தல் ,--

புத்தி;--பிறர் குற்றம் விசாரியாது இருத்தல்,--தன்னை மதியாது இருத்தல்,--

சித்தம்;--செயற்கை குணங்களால் உண்டாகிய கெடுதிகளை நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாய் இருத்தல்.--

அகங்காரம் ;--பிறர் மேல் கோபிக்காமல் இருத்தல் .--தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல்,--அக்கிரம அதிக்கிரம புணர்ச்சி {உடல் உறவு } செய்யாது இருத்தல் முதலியன கரண ஒழுக்கமாகும் .
  • 3,} ஜீவ ஒழுக்கம் .--
ஜீவ ஒழுக்கமாவது ;--ஆண்மக்கள் .பெண்மக்கள் .முதலிய யாவர்கள் இடத்திலும் .ஜாதி,சமயம்,மதம்,ஆசிரமம ,சூத்திரம்,கோத்திரம்,குலம், சாஸ்த்திர சம்பந்தம்,தேசமார்க்கம், உயர்ந்தோர்,தாழ்ந்தோர்,என்னும் பேதம் நீங்கி எல்லாவரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுதல் ஜீவ ஒழுக்கமாகும்,
  • 4,} ஆன்ம ஒழுக்கம் ;--
ஆன்ம ஒழுக்கமாவது ;--எண்பத்து நூறாயிரம் யோனி பேதங்களின் இடத்தும்,உள்ள ஆன்மாக்களிடத்தும் இரங்கி ,ஆன்மாவே சபையாகவும் .அதன் உள் ஒளியே பதியாகவும் ,கண்டு கலந்து பூரணமாக நிற்றல் ஆன்ம ஒழுக்கமாகும்.

இங்கனம் மேலே கூறிய ஒழுக்கங்களில் உள்ள ,இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் .என்னும் இவற்றை நாம் ஒவ்வொருவரும் உண்மை உணர்ச்சியுடன் மேற் கொண்டு ஒழுக வேண்டும்.

ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், என்னும் இருவகையான அரிய ஒழுக்கங்கள் திருவருள் துணை பெற்ற பின்னர் அன்றி கைக்கூடாது ,ஆதலால் அவ்  ஒழுக்கங்களைப் பெற்று ஒழுக வேண்டுவதற்கும் ஆன நன் முயற்ச்சிகளில் பழக வேண்டும் என்பதை வள்ளலார் மிகவும் வலியுறுத்தி உள்ளார் .அன்றியும் '--

இவ்வண்ணமான ஒழுக்கங்களில் இயன்ற மட்டில் ஒழுகப் பெற்று ,இடம் தனித்து இருத்தல்,இச்சை இன்றி நுகர்தல்,தெய்வம் பராவல்,பிற உயிர்க்கு இரங்கல்,பெருங்குணம் பற்றல்,பாடிப்பணிதல்,பத்தி செய்து இருத்தல்,முதலிய நற் செய்கைகளில் பலகால் முயன்று பழகிப் பழகி இருத்தல் வேண்டும்,

  • அன்றியும் ;--

சைவம், வைணவம்,சமணம்,பவுத்தம்,முதலாகப் பல பெயர் கொண்டு பலபட் விரிந்த அளவிறந்த சமயங்களும் ,அச்சமயங்களிற் குறித்த சாதனங்களும்,தெய்வங்களும்,கதிகளும்,தத்துவ சித்தி விகற்ப பேதங்கள் என்றும்,அவ் வச்சமயங்களிற் பலபட விரிந்த வேதங்கள்,ஆகமங்கள்,சாத்திரங்கள்,புராணங்கள்,முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும்,

வேதாந்தம்,சித்தாந்தம் ,முதலாகப் பல பெயர் கொண்டு பலபட விரிந்த மதங்களும்,மார்க்கங்களும்,--சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்றும்.கேள்விப் பட்டு இருக்கின்றனம்.{அருட்பெரும்ஜோதி ஆண்டவரால் சொல்லப்பட்டது }

ஆகலின் அத்திரு வார்த்தைகளில் உண்மையான நம்பிக்கைக் கொண்டு அவற்றின் உண்மைகளை உள்ளபடியே உணர்த்தப் பெற்று அவைகளின் அனுபவங்களை அடைதல் வேண்டும் .மற்றபடி எந்த சமயம் ,மதம் ஆசாரங்களை சிறிதும் அனுட்ட்டியாது { பற்று வைக்காமல் } நிற்றலும் --அவற்றில் சத்திய உணர்ச்சி கொள்ளாமல் விடுதலும் வேண்டும்
  • அன்றியும் ;--
உலகியற்கண் பொன் விஷய இச்சை,பெண் விஷய இச்சை ,மண் விஷய இச்சை, முதலிய எவ்விஷய இசைகளிலும்,நமது அறிவை ஓர் அணுத்துணையும் பற்று வைக்காமல் ,பொதுப்பட நல்ல அறிவு ,கடவுள் பக்தி,உயிர் இரக்கம்,பொது நோக்கம் ,திரிகரண அடக்கம், முதலிய நற்குண ஒழுக்கங்களில் நின்று ,--உண்மை உரைத்தல்,இன் சொல்லாடல் ,உயிர்க்கு உபகரித்தல் ,முதலியவாகக் குறித்த நற் செய்கைகளையும் உள்ளபடி பெற்று ,வாழ வேண்டுவது ஒவ்வொரு சுத்த சன்மார்க்கர்களின் லஷ்யமாகும் ,அப்படி வாழ்பவர்கள் சுத்த சன்மார்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வருகை !

வள்ளலார் இதை ஏன் அவ்வளவு அழுத்தமாக சொல்லுகிறார் என்றால்-- ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,--முன் அறிவித்தபடி ஞானசபைக்கு  வருவதாக இருந்தது ,ஆனால் வள்ளலார் சொல்லியபடி ஞானசபை வழிபாட்டு முறைகளும், செயல் பாட்டு முறைகளும் ,கண்காணிப்பு முறைகளும்,பாதுகாப்பு முறைகளும்,ஞானசபைக்கு உள் சென்று சுத்தம் செய்பவர்களும் விளக்கு வைப்பவர்களும் வள்ளலார் சொன்ன பனிரண்டு வயதுக்கு உட்பட்டவர்களும் ,எழுபத்திரண்டு வயதுக்கு மேற்பட்டவர்களும் ஞான்சபைக்குள் செல்லாமல் மற்றவர்கள் சென்று இருப்பார்கள் போல் தெரிகிறது அதனால் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஞானசபைக்கு வருவது தடை ஏற்பட்டு காலதாமதம் உண்டாகி இருக்கும் போல் தெரிகிறது

இவை எல்லாம் வள்ளலாருக்குத் தெரிந்து,தான் சொன்னபடி யாரும் செயல்பட வில்லை என்று மனம் சஞ்சலம் அடைந்து வடலூர் விட்டு மேட்டுக குப்பம் சென்றுவிடுகிறார் ..

கருணையே வடிவான வள்ளலார் மேட்டுக குப்பம் சென்றாலும் அங்கும் மக்களுக்கு இடைவிடாது சுத்த சன்மார்க்க போதனைகளை போதித்துக் கொண்டே இருந்தார்கள் .அனைவரிடமும் அன்பும் தயவும் கருணையும் இடைவிடாது காட்டிக் கொண்டே இருந்தார்கள் .

அருட்பெரும்ஜோதி ஆண்டவர்;-- வள்ளலார் இருக்கும் இடமான மேட்டுக்குப்பம் வருவதாக அறிவிப்பு கிடைத்து இருக்கிறது ,அதனால்  மீண்டும்'' மெய்மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் மக்களுக்கு எழுதிவைத்தும் ,போதித்தும் வந்து இருக்கிறார் ,மேலே சொன்ன ஒழுக்கங்களை சொல்லிக் கொண்டே வந்து பின் என்ன சொல்கிறார் என்பதை கவனித்து பார்க்க வேண்டும் படிக்க வேண்டும்,

இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழித்துக் கொண்டு இருக்காதீர்கள் .

மேலே சொன்ன ஒழுக்கங்களை கடைபிடித்து வந்தீர்களானால் மேலே சொன்ன நற்செய்கை களையும் உள்ளபடி பெற்று ,வள்ளலார் சித்திப் பெறப்போகும் சித்திவளாகம் என்னும் இச்சன்னிதானத்தில் ,அனைவரும் தரிசிக்க பெறவும் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வந்து அமரப் போகிறார் ,அதுசமயம் நீங்கள் எப்படி இருக்க இருக்கவேண்டும் என்பதை வள்ளலார் தெரியப்படுத்துகிறார் ,

உலக முகப்பட்ட பராக்கினால் விலகி ஏமாந்து விடாமலும்,நமது எல்லாம் வல்ல ஆண்டவனார் அற்புதத் திருவரவு குறிக்கும் வெளிப் படுகைக்கு எதிர் பார்க்கும் நிலையினராய் ,எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவருட் செங்கோல் கொண்டு நடாத்துவித்து அருளும் பேரருட் பெருங்கருணை வாய்ந்த தனிப்பெருந் தலைவனது அரிய திருவருகைச் சம்பந்தமான வழிபடுகை அல்லது மங்கலம் புனைதல் ,முதலிய திருப்பணியின் இடம் நமது கரணம் இந்திரியங்களை விடுத்துக்
குதூகலத்துடன்

விந்து விளக்கம்,நாத ஒலி,என்பவற்றால் புறக்கடையில் விலகப் படாமலும்,ஆண்டவர் உடைய அருள் அற்புத ஞான சித்தத் திருமேனியின் மங்கலத் திருக் கோலத்தைக் கண்காட்சியாக ,உடல் குழைய ,உள்ளங் குளிர,ஆனந்தக் கண்ணீர் கொண்டு பரவசத்துடன் ,தரிசிக்கப் பெரும் ,பெரும் புண்ணிய உடையவர்களாய் எதிர்ப்பட வாய்க்கப் பெறவும் நின்றோமே யானால் ,

நாம் எல்லவரும் சுத்த சன்மார்க்கத்தினுக்கு உரிமை உடையவர்களாகி,அறிவு வந்த காலமுதல் கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும் அடைந்து ,அறியாத அற்புதக் குணங்களையும் ,செய்து அறியாத அற்புதச் செயல்களையும் ,அனுபவித்து அறியாத அனுபவங்களையும்,வெளிப்படத் தரிசிக்கும் அதே கணத்தின் உள்ளே பெற்றுப் பெருங் களிப்புடன் எக்காலத்தும்,எவ்விடத்தும்,எவ்விதத்தும் ,தடைபடாத சத்திய சுக பூரணப் பெருவாழ்வு என்னும் ,பேரின்ப சுத்திப் பெருவாழ்வில் வாழப் பெறுவோம் ,

இது சத்தியம்,சத்தியம்,சத்தியம்,

மேலே குறிப்பிட்ட மெய் மொழியும் ஒழுக்கமும் என்ற தலைப்பில் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து வாழும் மக்களுக்கு,துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,மரணம்,கிட்டே நெருங்காது . ஒழுக்கத்தின் வலிமையையும் வல்லமையும் எப்படி இருக்க வேண்டும் என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதை என்பது, , ஒழுக்கம் நிறைந்த பாதையாகும்,மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். அனைவரும் ஒழுக்கம் நிறைந்து வாழ்ந்து,என்றும் அழிவில்லாத அருளைப் பெறுவோம்.ஆனந்தமாய் வாழ்வோம்.

வந்தனம் .---அன்புடன் ஆன்மநேயன் -கதிர்வேலு .

தொடரும் ;--

செவ்வாய், 27 மார்ச், 2012


மாயன் காலண்டர் ! உண்மையா ?பொய்யா ?

மாயன் காலண்டரில் 2012,ஆம் ஆண்டில் உலகம் அழிந்து விடும் என்று விஜய் டி வி யில் ஒலிபரப்புக் கொண்டு உள்ளார்கள் .இவை மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பிக் கொண்டு உள்ளது .

உலகத்தை அழிக்க எந்த சக்தியாலும் முடியாது என்பதை முன்பே விளக்கமாக தெரிவித்து உள்ளேன் .ஜோதிடம் என்பது கிரகங்களின் வேலையாகும்.உயிர்களின் வாழ்க்கை முறையை ஒழுங்கப் படுத்த கிரகங்கள் படைக்கப் பட்டுள்ளன .கிரகங்கள் என்னும் ஜோதிடம் இவ்வுலகத்தின் வேலை செய்யும் கருவிகள் .

கருவிகளைப் படைத்தவன் இறைவன் கருவிகளை படைக்கவும்,உருவாக்கவும் மாற்றவும் அருட்பெரும்ஜோதி என்னும் ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத அந்த பரம்பொருள் ஆகிய ஜோதிக்கு மட்டுமே தெரியும் ,மற்றவை எதற்கும் தெரியாது .தெரிவதாக சொல்வது அனைத்தும் சுத்தமான பொய்யாகும் .

1974,ஆம் ஆண்டுக்கு பிறகு ஞான சித்தர்கள் காலமாகும் .சாதி, சமயம்,மதம் சாத்திரங்கள் ஆசாரங்கள் கற்பனை யான தத்துவங்கள் அனைத்தும் மறைந்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் மட்டுமே விளங்கும் .மக்கள் எதற்கும் அச்சமோ .பயமோ,கவலையோ படவேண்டிய அவசியம் இல்லை .இனி வருங்காலம் வசந்த காலமாக இருக்கும் .மக்கள் புதிய சிந்தனைகளையும் புதிய கண்டு பிடிப்புகளும் ,புதிய வாழ்க்கை முறைகளையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள் .இந்த உலகத்தின் உண்மையை உணரும் காலம் வரப்போகிறது .

மனிதன் தெய்வமாக மாறி உலகை கருவிகள் இல்லாமல் சுற்றிவரும் காலம் வரப்போகிறது .மனித சக்தி என்ன என்பதை அனைவரும் அறிந்து கொள்வார்கள் .ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளும் புறமும் என்ன நடந்து கொண்டு உள்ளது என்பதை ஞான அறிவால் அறிந்து கொள்வான் ,

ஆதலால் பொய்யான கற்பனைக் கதைகளை படித்து நம்பி ஏமாந்து விடாமல் உண்மையை உணருங்கள் .

மீண்டும் சொல்கிறேன் உலகை அழிக்க யாராலும் முடியாது ,நாகரீகம், வாழ்கை முறை,மாறிக்கொண்டே இருக்கும் மாறாதது உண்மை மட்டுமே .உண்மையை மட்டும் நம்புங்கள்

வள்ளலார் பாடல் ஒன்று ;-

உண்மை உரைக்கின்றேன் இங்கு உவந்து அடைமின் உலகீர்
உரை இதனிற் சந்தேகித்து உளறி அழியாதீர்
எண்மையினால் எனை நினையீர் எல்லாம் செய் வல்லான்
ஏன் உள்ளத்து இசைகின்றான் இது கேண்மின் நீவீர்
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில்
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய காழ்வு அளிக்கக்
கண்மைதரு வொரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

மேலே கண்ட பாடலில் உண்மையை சொல்லி உள்ளார் .

உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு,

ஞாயிறு, 25 மார்ச், 2012

சக்தி என்பது யாது?


சக்தி என்பது யாது ?

எதை அறிந்து கொண்டால் நாம் எல்லாவற்றையும் அறிந்து கொண்டதாகும்.

இக்கேள்விக்கு பதில் தெரிந்து கொள்ளவேண்டும் .

தன்னை அறியாமல் உலகத்தை அறிந்து பயன் இல்லை !தான் என்பது என்ன ?தன்னை இயக்கம் பிராணன் என்னும் சக்திதான் ஆன்மா என்னும் உயிர் ஒளியாகும் .தன் உடம்பை இயக்கம் தன் உடம்பில் உள்ள சக்தியான ஆன்மாவை அறிந்து கொண்டால்,நம்மையும் இப் பிரபஞ்சத்தையும் படைத்தவர் யார் என்பதை அறிந்து கொள்ளலாம்,

நம்முடைய பிராணன் என்னும் ஆன்மாவை அறியத் தொடங்கினால் அனைத்தும் நம் வசப்படும் .ஆன்மாவை வசப்படுத்த தெரிந்து கொண்டால் ,தன் மனத்தைக் கட்டிப் போடமுடியும்.மனத்தை கட்டிப்போட தெரிந்தவர்கள் தன் உடம்பை தன் வசப்படுத்த முடியும்,தன் உடம்பை வசப்படுத்தியவன், இயற்கையில் உள்ள அனைத்தையும் வசப்படுத்தி கட்டிபோட முடியும்.

ஆன்மா என்பது உண்மையானது உண்மையான சக்தியை அறிந்து வசப்படுத்தினால் அனைத்தும் தன் வசமாகும்
இதுவே சக்தி என்பதாகும் இதை அறிந்து கொண்டவர்களுக்கு மரணம் வராது .உண்மையை அறிந்து கொண்டால் .உண்மையானது நம்மை அழைத்துக் கொள்ளும் .உண்மையானது எது ?அதுதான் அருட்பெரும்ஜோதி என்பதாகும். ஆன்மா என்னும் ஒளியை அறிந்து கொண்டால் .நம்மை படைத்த அருட்பெரும்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்ளலாம் .

இதை அறியாமல் மற்றவை அறிவது அனைத்தும் அனித்தியமானது.அதாவது அழிந்து போவது, எதற்கும் உதவாத குப்பைகள் என்பதாகும் .

இதை வள்ளலார் ஒரு பாடலில் விளக்குகிறார் !

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என்ன இனி நீர் சமரச சன்மார்க்க
மேய்ந நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என்தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே .!

உணர்ந்து உயிர்வாழ்வோம் .

உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .

புதன், 21 மார்ச், 2012

உலக மக்கள் இனிமேல் எப்படி வாழ வேண்டும் ?


உலக மக்கள் இனிமேல் எப்படி வாழ வேண்டும் ?



1874,ஆம் ,ஆண்டு வரை கர்ம சித்தர்கள் காலம் ,அதனால் சாதிகளும், சமயங்களும் ,மதங்களும் பரவி இருந்தன .இப்போது நடந்து கொண்டு இருப்பது ஞான சித்தர் காலமாகும்..

இனிமேல் சாதி,சமயம்,மதம் ,முதலிய ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும் .சமய மதங்களில் சொல்லுகிற ,கர்த்தர்கள்,மூர்த்திகள் ஈசுவரன்,பிரமன்,சிவம்,முதலிய தத்துவங்கள் எல்லாம் பொய் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

ஏன் என்றால் சமய ,மதங்களில் ,சொல்லி வந்த கர்ம சித்தர்களின் காலம் முடிந்து விட்டது அவர்கள் கடவுளின் முழுமையான அருளைப் பெற வில்லை,- லேசான அருளைப் பெற்றதால் --அவர்களுக்கு மேலான ஞான சித்தியைப் பெற்றவர் வரும்போது அவர்கள் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் .இதுதான் அருட்பெரும்ஜோதி ஆண்டவருடைய கட்டளையாகும் .

இப்போது ஞானசித்தியைப் பெற்றவர் வள்ளலார் அவர்களாகும் அவர் கடவுள் நிலை அறிந்து அம்மயமானவராகும் .ஆதலால் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலார் அவர்களிடம் இவ்வுலகப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் இனிமேல் வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய கொள்கைகள் தான் உலகம் முழுவதும் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் .இது இறைவன் கட்டளையாகும் .

ஆதலால் இப்போது இருக்கும் வேதம் ,ஆகமம் ,புராணம், இதிகாசம் சாத்திரங்கள் எதனிலும் பற்று வைக்க வேண்டாம் அப்படி வைத்தால் உண்மையான கடவுள் நிலையை உங்களால் அறிந்து கொள்ள முடியாது.ஆதலால் அவைகளை முழுவதையும் பற்று அற விட்டு சர்வ சித்தி உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் ஒருவரே ''அருட்பெரும் ஜோதியர் ''என்றும் உண்மை அன்பால் வழிபாடு செய்யவேண்டும் .

அப்படிப்பட்ட சமரச சுத்த சன்மார்க்கத்திற்கு உரிய கடவுளை வழிபாடு செய்வதற்கு சாதனம் இருவகையாகும் .

ஒன்று ;--பர உபகாரம் அதாவது உயிர்கள் இடத்தில் இரக்கம் காட்டுவது. இரண்டாவது ;--சத் விசாரம் என்பதாகும் .
பர உபகாரம என்பது ,;-உயிர்களுக்கு தேகத்தாலும்,வாக்காலும்,திரவியத்தாலும் உபகாரம செய்வது.

சத் விசாரம் என்பது ;--நேரிட்ட மட்டில் ஆன்மநேய சம்பந்தமான தயவு விசாரத்தொடு இருப்பது,கடவுள் புகழை விசாரித்தல்,ஆன்மாவின் உண்மையை விசாரித்தல் ,தன் சிறுமையை கடவுள் இடத்தில் விண்ணப்பித்தல் ,இந்த மார்க்கத்தால் தான் நாம் மனிதர்களாக வாழ்ந்து சுத்த தேகம் ,பிரணவ தேகம் ,ஞான தேகம் .என்ற முத்தேக சித்தியை பெற முடியும் .

இவை வள்ளலார் அவர்கள் உலக மக்களுக்கு சொல்லி வைத்த கட்டளையாகும் .இனிமேல் கலைஉரைத்த கற்பனைக் கதைகளை நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கத்தை விட்டு உண்மையை அறிந்து கொண்டு நலமாக வாழ்வோம் .

இப்போது நடப்பது, நடந்து கொண்டு இருப்பது,தடை இல்லாதது ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய காலமாகும் ,அதாவது ஞான சித்தர் காலமாகும் .அந்த ஞானசித்தர் வள்ளலார் அவர்களாகும் .

உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு

செவ்வாய், 20 மார்ச், 2012

சன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி யாருக்கு >


சன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி யாருக்கு ?

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்


வள்ளலார் இந்த உலகத்திற்கு கொடுத்த கொடை தான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமாகும் ;-இவை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கட்டளைப்படி,  வள்ளலார் மக்கள் முன்னிலையில் வடலூரில் அமைத்துள்ளார்.சன்மார்க்க சங்கத்தை வழிநடத்தும் தகுதி சாதாரண மக்களுக்கு பொருந்தாது .அருள் பெற்றவர்கள் தான் வழி நடத்த முடியும் .

வள்ளலார் சங்கத்தை அமைத்துவிட்டார் அதில் அங்கம் வகிப்பவர்கள் தயவு உடையவர்களாக இருக்க வேண்டும்.அதனால்தான் தயவு உடையவர்கள் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்றார் வள்ளலார்.அருள் உடையவர்கள் எல்லாம் சன்மார்க்கத்தை அடைந்தவர்கள் என்று தெளிவான விளக்கம் தந்துள்ளார்.  

தயவு உள்ளவர்கள் சன்மார்க்க சங்கத்தில் உள்ள ஒழுக்கங்களையும்,கொள்கைகளையும் முதலில் கடைபிடிக்க வேண்டும் அருள் பெற்ற பின் சன்மார்க்க சங்கத்தை வழி நடத்த வேண்டும் என்பது வள்ளலார் மக்களுக்கு கொடுத்துள்ள உறுதியான செய்தியாகும்

அதனால்தான் வள்ளலார் நானே சன்மார்க்கத்தை நடத்துகிறேன் என்றார்.இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்ன ?அருள் பெறாதவர்கள் சன்மார்க்க சங்கத்தை நடத்தும் தகுதி அற்றவர்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்

சன்மார்க்க சங்கத்தலைவர் அருட்பெரும் ஜோதி ஆண்டவராகும் சன்மார்க்க சங்கத்தலைவனே நினைப போற்றும் மார்க்கம் என்மார்க்கமே,என்று புகழ்ந்து கூறுகிறார்.

ஆதலால் இறைவன் அருள் ஆணைப்படி சன்மார்க்க சங்கத்தை வழி நடத்துபவர் நமது அருட்தந்தை அருட்பிரகாச வள்ளலார் என்பது சத்தியமான உண்மையாகும்.அவர் ஒளி உடம்பாக இருந்து செயல் படுத்திக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் .

யார் அருள் பெறுகிறார்களோ அவர்களிடம் சன்மார்க்க சங்கத்தை,நடத்தும் பொறுப்பை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கொடுப்பார் .அது வரையில் வள்ளலார்தான் சன்மார்க்கத்தை நடத்துவார்

அருளைப் பெற முயற்ச்சி செய்வோம் ,பொறுப்பு தானே தேடிவரும்.அதன்பின் சன்மார்க்கத்தை வழி நடத்தும் தலைவன் ஆவோம் .

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு .