செவ்வாய், 17 ஜனவரி, 2017

பேருபதேசம் !

பேருபதேசம் !

வள்ளலார் பேருபதேசம் என்ற உரைநடைப் பகுதியில்.இறுதியாக வெளியிட்டது !

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேலே ஏற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது

யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது. என்று தெளிவாக பதிவு செய்து உள்ளார்.

இங்கே தயவு என்பது எதைக் குறிக்கிறது என்றால். உயிர்களுக்கு உபகாரம் செய்வது.அன்பு காட்டுவது.

தயவு.அன்பு இரண்டும் இணைந்தது.தயவு பெறுகப் பெறுக அன்பு பெறுகும்.அதற்கு மேல் கருணை என்ற பொது உரிமை தோன்றும்.

தயுவு.அன்பு.கருணை.அருள் என்பவை ஒரு பொருனையே குறிக்கும்.ஆனால்.ஒவ்வொன்றும்.ஒவ்வொரு தன்மையும்.ஆற்றலும் உடையது.

ஜீவ காருண்யம் என்னும் தயவு உண்டானால்.அன்பு உண்டாகும்.அன்பு உண்டானால்.கருணை என்னும் பொது உரிமை உண்டாகும்.கருணைப்பெறுக பெறுக.ஆன்ம நெகிழ்ச்சி..ஆன்ம உருக்கம் உண்டாகும்.அந்த நெகிழ்ச்சியாலும்.உருக்கத்தாலும்.ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அந்த அருள் ஏழு வண்ணமாகவும்.ஏழு சுவையாகவும்.சுரக்கும்.ஒவ்வொரு வகை அருள் அமுதமும்.ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும்.

இருதியாக கிடைக்கும் அருள் அமுதம் மவுனா அமுதம்.அந்த அமுதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெரும் கருணையால்  கொடுக்கப்படும் அமுதமாகும்.

அந்த அமுதத்தை அனுபவிப்பவர்களுக்கு.ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.அவர்களே அருட்பெருஞ்ஜோதியுடன் தொடர்பு கொள்ள முடியும்.

அதுவே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.அதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.மீண்டும் பிறப்பு.இறப்பு இல்லாத பெருவாழ்வாகும்.

இவை சுருக்கம் விரிக்கில் பெருகும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு