புதன், 31 ஆகஸ்ட், 2016


சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

மலேசியாவில் உள்ள சன்மார்க்க அன்பர் செல்வம் அய்யா அவர்கள் கேட்டு உள்ள கேள்வி ?

 வடலூரில் வள்ளலார் தோற்று வித்த சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்று பெயர் வைத்து உள்ளார் .
ஒவ்வொரு ஊரிலும் மாநிலங்களிலும் வெளி நாடுகளிலிலும் சன்மார்க்க அன்பர்கள் கட்டிடங்கள் கட்டி அதற்கு ஞான சபை என்று பெயர் வைத்து உள்ளார்கள் அது சரியா ? தவறா ? என்று புரியவில்லை விளக்கம் கொடுங்கள் என்று கேட்டு இருந்தார் .

பதில்

 உலகத்திற்கே ஒரே "சத்திய ஞான சபை " வடலூர் மட்டுமே என்பதை அனைத்து சன்மார்க்க சங்கம் சார்ந்த அன்பர்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும் .

வடலூரில் வள்ளலார் தோற்று வித்துள்ள சத்திய ஞான சபை யானது  ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அறிவித்த வண்ணம்  எழுப்பபட்டதாகும் .அதற்கு வரை படமே ஆண்டவர் தான் வரைந்து கொடுத்து உள்ளதாகும .

மேலும் உண்மைக் கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,இந்த உலகத்திற்கு வந்த ஒரே இடம் வடலூர் .

 வள்ளலாரை ஆண்டவர் ஆட்கொண்ட இடம் மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் .

 ஆண்டவர் ஆட்சி செய்யும் இடம் வடலூரில் உள்ள "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை யாகும்"

வள்ளலார் எல்லா இடங்களிலும் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்று தான் பெயர் வைத்து சன்மார்க்க கொள்கையை மக்களுக்கு போதிக்கச் சொல்லி உள்ளார் .

இறைவன் இருக்கும் இடத்திற்கு மட்டுமே ஞான சபை என்று பெயர் வழங்குதல் வேண்டும் .

மேலும் எல்லா உலகத்தில் உள்ளவர்களையும் வடலூருக்கு அழைத்து  வாருங்கள் என்றும், வந்தால் பெறலாம் நல்ல வரமே ! என்றும் தெளிவாக பதிவு செய்து உள்ளார் .  

மேலும் வடலூர் சத்திய ஞான சபைக்கும் ,மேட்டுக்குகுப்பம்  .சித்தி வளாகத்திற்கும் வந்து வந்து தரிசிக்க வேண்டும் என்கிறார் .

எல்லோருக்கும் தாய் ,தந்தை ,அண்ணன் ,தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ ,அதற்குக் கோடி கோடிப்பங்கு அதிகமாக உதவி கொடுக்கும் படியான இடம் ,இரண்டு .அதுதான் வடலூர் ஞான சபை. மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் என்னும் இடங்களாகும் .

எனவே சன்மார்க்க அன்பர்கள் கட்டிடங்கள் கட்டி ஜீவ காருண்ய பணி செய்யவும் .விளக்கு வைத்து அருட்பாக்களை மெல்லென வாசித்து தோத்திரம் செய்யவும் . தெய்வத்தை இடைவிடாமல் நினைக்கவும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் .

சன்மார்க்க சங்கத்தின் சார்பில் சன்மார்க்க கொள்கைகளை வள்ளலார் சொல்லிய வண்ணம் ,போதித்து நம்மவர்களாக மாற்ற வேண்டும் .அவைகள் தான் சன்மார்க்க பணியாகும் .

உத்தர ஞான சிதம்பர மான்மியம் ! பாடல் !

உலகம் எலாம் தொழ உற்றது எனக்கு உண்மை யொண்மை தந்தே

இலக எல்லாம் படைத்து ஆருயிர் காத்து அருள் என்றது என்றும்

கலகம் இலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்

திலகம் எனா நின்றது உத்தர ஞான சிதம்பரமேே !

என்று 11, பாடல்களிலே விரிவான விளக்கம் தந்து உள்ளார் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் பற்றிய பாடல் !

மார்க்கம் எல்லாம் ஒன்றே ஆகும் மாநிலத்தீர் வாய்மை இது

தூக்கம் எல்லாம் நீக்கித் துணிந்து உளத்தே . . ஏக்கம் விட்டுச்

சன்மார்க்க சங்கத்தைச் சார்நதிடுமின் சத்தியம் நீர்

நன்மார்க்கம் சேர்வீர் இந்நாள் !

என்றும் ,

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ

சன்மார்க்க சங்கம் தலைப் பட்டேன் . . . என்மார்க்கம்

நன் மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ் கின்றார்

மன் மார்க்கதாலே மகிழ்ந்து  !

 என்று பல பாடல்களில் சன்மார்க்க அன்பர்களுக்கும் உலகத்தவர்களுக்கும் தெரியப் படுத்தி உள்ளார் .

மேலும் சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு கட்டளையிட்டுடு உள்ளார் .

ஆடாதீர் சற்றும்  அசையாதீர் வேறு ஒன்றை

நாடாதீர் பொய் உலகை நம்பாதீர . .  வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு
என்மார்க்கமும் ஒன்றாமே !

 எனவே சன்மார்க்க சங்கம் வைத்து இருப்பவர்கள் ,அவற்றை சார்ந்து இருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .நமக்கு காலம் இல்லை .

ஜீவ காருண்யமும் ,ஜோதி (ஒளி ) வழிபாடும் மிக மிக முக்கியமானது .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றுதான் பெயர் வைக்க வேண்டும் .அதுதான் வள்ளலார் கட்டளை .

வேறு பெயர் எதுவும் வைக்க  வேண்டாம் .அப்படி வைத்தால் வள்ளலார் சொல்லியதை மீறிய செயலாகும் .

ஞான சரியை பாடல் !

 சன்மார்க்கப் பெருங் குணத்தார் தம் பதியை என்னைத்

தாங்குகின்ற பெரும் பதியைத் தனித்த சபாபதியை

நன்மார்க்கம் எனை நடத்திச் சன்மார்க்க சங்கம்

நடு இருக்க அருள் அமுதம் நல்கிய நாயகனைப்

புன் மார்க்கற்கு அறிவு அரிதாம் புண்ணியனை ஞான

பூரண மெய்ப் பொருளாகி பொருந்திய மா மருந்தை

அன் மார்க்கம் தவிர்த்து அருளி அம்பலத்தே நடஞ் செய்

அருட்பெருஞ்ஜோதியை உலகீர் தெருட் கொளச் சார்வீரே !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .சனி, 27 ஆகஸ்ட், 2016

சிறு தெய்வ வழிபாடுகள் ஏன் கூடாது !

சிறு தெய்வ வழிபாடுகள் ஏன் செய்யக்  கூடாது !

மலேசியாவில் வாழும் அன்பு சகோதரி மலர் அவர்களுக்கு வந்தனம் .உங்கள் கேள்வி மிகவும் முக்கியமானதாகும் .ஒவ்வொரு மனித தேகம் எடுத்தவர்கள்  அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.

வள்ளலார் சிறிய தெய்வம், பெரிய தெய்வம் என இரண்டு பிரிவுகளாக பிரித்து உள்ளார் .அதிலே உயிரைப் பலி வாங்கும் தெய்வங்கள் எல்லாம் சிறிய தெய்வம் என்றும்,உயிரைப் பலி வாங்காத தெய்வங்கள் எல்லாம் பெரிய தெய்வம் என்று சொல்லுகின்றார் ..

உதாரணத்திற்கு ;-- சிவன்,பெருமாள்,விஷ்ணு ,முருகன்,விநாயகர்,போன்ற தெய்வ சன்னதிகளில் உயிர் பலி செய்வது இல்லை,மற்ற தெய்வங்களின் பெயரால் உயிர் பலி செய்கின்றார்கள் .ஏன் அப்படி செய்கின்றார்கள் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள்  வேட்டையாடி மிருகங்களை உணவாகப் பயன் படுத்தி உண்டு வந்தார்கள்.பிறகு மிருகங்களை வீட்டிலே கொண்டு வந்து வளர்த்தி கடவுள் பெயரால் அந்த உயிர்களை பலி கொடுத்து உணவாக உண்டு வந்தார்கள்..உயிர்களைக் கொன்று உணவாக உண்பது தவறானது என்று மக்களுக்கு போதிக்க வந்ததுதான் சமயங்கள் மதங்கள் .என்பவைகளாகும் ,  உண்மையை எடுத்துச் சொல்லத்தான் சைவ சமயமும்,வைணவ சமயமும் ,புத்த சமயமும் தோன்றின .ஆனால் அவர்கள் சொல்லிய விதம் சரியில்லை,தெளிவாக சொல்லவில்லை .அதனால் அவை மக்களுக்குப் போய் சேரவில்லை.,

சைவ ,வைணவ சமயத்தில் உள்ளவர்களே மாமிசம் உண்ணும் பழக்கத்தில் நிறையப்பேர் உள்ளார்கள் .அவர்களுக்கும் உயிரின் உண்மைத் தன்மை என்னவென்று புரியவில்லை,,தெரிந்த உயர்சாதிக் காரர்கள் என்னும் பிராமணர்களும் மக்களுக்கு எடுத்துச் சொல்லவில்லை.அவர்கள் உயிர்க்கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் இருந்தார்கள் .

உயிர்க்கொலை செய்வதும் புலால் உண்பதும் கடவுளுக்கு ஏற்புடையது அல்ல என்று, அவர்கள்  மக்களுக்கு ஏன்? எடுத்து சொல்லவில்லை.எல்லாமே சூழ்ச்சிதான் ...மக்கள் திருந்தி விட்டால் அவர்களுக்கு வரும் லாபம் போய் விடும்.அவர்களை சாமி,சாமி,என்று சொல்ல மாட்டார்கள்.

மக்களின் அறியாமையைப் பயன் படுத்தி அவர்கள் மேல் நிலையிலே தங்களை தக்க வைத்துக் கொண்டார்கள்...அதனால்தான் .மற்றவர்கள் யாவரும் கீழ் நிலையிலே உள்ளார்கள்...

மக்களும் அறியாமையாலும் ,நாக்கு ருசி கொண்டதாலும்,மாமிசத்தை (புலாலை ) விட முடியாமல் உணவாக உட்கொண்டு வருகின்றார்கள்.

வள்ளலார் வந்துதான் உயிர்க் கொலை செய்வதும் ,அதன் புலாலை உண்பதும் மாபெரும் தவறு என்றும்,குற்றங்களிலே பெரிய குற்றம் என்பதை மக்களுக்கு தெரியப் படுத்தினார்.

உயிர்க் கொலை செய்வோர்க்கும் அதன் மாமிசத்தை உன்போர்க்கும் இறைவன் அருள் எப்போதும் கிடைக்காது என்னும் உண்மையை மக்களுக்குத் தெரிவித்து உள்ளார் ..அதனால் தீர்க்க முடியாத துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும் என்கின்றார்,/

ஏன் என்னும் விளக்கம் ;--சிறிய தெய்வங்கள் !
''எந்த உயிராக இருந்தாலும் அனைத்து உயிர்களும்  இறைவனால் படைக்கப் பட்டது ,அந்த உயிரைக் கொலை செய்வதற்கு, யாருக்கும் உரிமை இல்லை,.உங்களால் ஒரு உயிரை கொடுக்க முடியாத,உண்டாக்க முடியாத போது அந்த உயிரைக் கொன்று உணவாகக் கொள்வது பாவங்களிலே பெரியபாவம் என்கின்றார்''.

அதுவும் தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கொடுப்பது மிகவும் கொடுமையான பாவம் என்கின்றார்....அதனால் உயிரைப் பலி  வாங்கும் தெய்வங்கள் யாவும் சிறிய தெய்வம் .அதனால் உங்களுக்கு எந்தப்பயனும் எந்த லாபமும் இல்லை எனவே அந்த தெய்வங்களை வணங்கவோ ,வழிபடவோ  வேண்டாம் என்கின்றார்.சிறிய தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யாதீர்கள் என்கின்றார்.உயிர்பலி வாங்கும் தெய்வங்கள் தெய்வங்களே அல்ல,அந்த தெய்வங்கள் உண்மையான தெய்வங்கள் அல்ல  என்கின்றார்.அதனால் சிறு தெய்வ வழிபாடு செய்ய  வேண்டாம் என்கின்றார்.

மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்
கண் விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணை யுற இறங்காது உயிர் உடம்பைக்
கடிந்து உண்ணும் கருத்தனேல் எங்கள்
குரு ஆணை எமது சிவக் கொழுந்தாணை
ஞானி எனக் கூற எண்ணாதே !

அதாவது ...ஒரு நிமிடத்தில் ஆணை பெண்ணாக்கவும், பெண்ணை ஆணாக்கவும் .,அருள் சித்தி  பெற்று  இருந்தாலும்,...இறந்த உயிர்களை எழுப்பும் ஆற்றல் படைத்த சக்தி பெற்று இருந்தாலும் ,அவன் மாமிசம் உண்பவனாக இருந்தால் அவனை ஞானி என்றோ ! அருளாளன் என்றோ ! சொல்ல வேண்டாம் ...இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது ஆணை என்கின்றார்...

உயிர்க்கொலையும் புலைப் பொசிப்பும் உடையவர்கள் எல்லாம் உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார் என்கின்றார். வள்ளலார் .அதாவது கொலை செய்பவர்களும்,அதன் புலாலை உண்பவர்களும் கடவுளை வணங்கும் தகுதி அற்றவர்கள் ..மேலும் ஜாதி இரண்டு என்கின்றார் ,புலால் உண்பவர்கள் ஒரு ஜாதி,புலால் உண்ணாதவர்கள் ஒரு ஜாதி,..அக இனத்தார் ,புற இனத்தார் என்பதாகும்.

உயிர்க்கொலை வாங்கும் தெய்வங்கள் !

கொலை வாங்கும் சிறிய  தெய்வங்களைப் பார்த்து நான் பயந்து  நடுங்கிய நடுக்கம் அளவில் அடங்காது .இன்னும் எத்தனை உயிர்களைப் பலி வாங்கப் போகின்றதோ ! என்று பதிவு செய்துள்ள பாடல்கள் கீழே !

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிக் குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப்
பொலி உறக் கொண்டே போகவும் கண்டே
புத்தி நொந்து உளம் நடுக்கம் உற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் !

என்கின்றார் /மேலும்

துண்ணெனக் கொடியோர் பிற  உயிர் கொல்லத்
தொடங்கிய போது எல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போது எல்லாம்
எண்ணி என்னுள்ள நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திரு உளம் அறியும் !

என்கின்றார் ..சிறிய தெய்வங்களின் பெயராலும் உயிர்களைக்  கொன்று உணவாக உட்கொள்ளுகிறார்கள் , ஆற்றிலே கடலிலே வலைகளை வீசியும்,தூண்டில் போட்டும் மீன்களை பிடித்து உணவாக உட் கொள்ளுகிறார்கள் .அவர்களைக் கண்ட காலத்திலும் பயந்தேன்,நடுங்கினேன்  என்கின்றார் வள்ளலார்.

அவர்களுக்கு ஆண்டவர் தண்டனைக் கொடுத்து ,அந்த தண்டனையைத் தாங்காமல் தவிப்பார்களே! துன்பம் அடைவார்களே! என்று அவர்களுக்காக இறைவனிடம் வேண்டுகின்றார்,அவர்களுக்கு உண்மையை அறிவையும் ! உண்மையான புத்தியும்!உண்மைத் தெள்வையும் ! கொடுக்கவேண்டும் என்கின்றார் வள்ளலார் .

ஆன்மா உயிர் உடம்பு !

ஆன்மா,உயிர்,உடம்பு அனைத்தும் ஆண்டவரால் கொடுக்கப் பட்டது,அனைத்து உயிரும்,,உடம்பும், இறைவன் வாழும் ஆலயம், அவற்றை அழிக்கவோ .அதன் புலாலை உண்ணவோ கூடவே கூடாது என்கின்றார்.

அடுத்தது எல்லா தெய்வங்களை விட ,பெரிய பெரும்  தெய்வம் எது ?   என்றால் ..

அருட்பெருஞ்ஜோதி தெய்வம்தான் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலான தெய்வம் என்பதை வள்ளலார் மக்களுக்கு அறிமுகப் படுத்துகின்றார்.

தூண்டாத மணி விளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரிய தெய்வம் அரிய தெய்வம் பெரிய பெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியை யோர் வலத்தில் வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்ட தெய்வம் அருட்ஜோதித் தெய்வம்
ஆகம வேதாதி எல்லாம் அறிவரிதாம் தெய்வம்
தீண்டாத வெளியில் வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்.

உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் உண்மையான தெய்வங்கள் அல்ல .எல்லாமே தத்துவ சித்தி கற்பனைக் கதைகளில் வரும் கதா பாத்திரங்கள்.என்கின்றார் வள்ளலார் ....

எல்லாச் சத்திகளும்,எல்லாச் சத்தர்களும்,எல்லாத் தலைவர்களும்,அறிந்து கொள்ளுதற்கு மிகவும் அரியதாய் ,எல்லாத் தத்துவங்களுக்கும் ,எல்லாத் தத்துவி களுக்கும்,அப்பாலப் அப்பாலாய் விளங்கும் ''ஓர் சுத்த ஞான வெளியில்''தமக்கு ஒரு விதத்தாலும்,ஒப்பு உயர்வு சிறிதும் குறிக்கப் படாத ''தனிப் பெரும் தலைமை அருட்பெருஞ்ஜோதியராகி ''விளங்குகின்ற ஒரேக் கடவுள்தான் வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுள் என்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த கடவுள்தான் ஒவ்வொரு உடம்பிலும், ,உயிராகவும்,ஆன்மாவாகவும்,உள் ஒளியாக இருந்து இயக்கிக் கொண்டு உள்ளவர் .அந்த ஒளி இயங்கும்  இடத்திற்குப் பெயர் ''சிற்சபை'' என்று பெயராகும் .

உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனல் !....அகவல்

சபை எனது உளம் என தான் அமர்ந்து எனக்கே
அபயம் அளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி !

இன்னும் விரிக்கில் பெரும் இத்துடன் நிறைவு செய்கிறேன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896,
வெள்ளி, 26 ஆகஸ்ட், 2016

படிக்காதவர்கள் சுத்த சன்மார்க்க கொள்கையை பின் பற்ற முடியுமா ?

படிக்காதவர்கள் சுத்த சன்மார்க்க கொள்கையை பின் பற்ற முடியுமா ?

ஒரு நண்பர் கேட்டு உள்ளார் ;--

படிப்பு அறிவு இல்லாதவர்கள் ,எழுத படிக்க தெரியாதவர்கள்,கை  எழுத்துக் கூட போடத்  தெரியாதவர்கள் ,வள்ளலார் எழுதி வைத்துள்ள அருட்பாவை படித்து தெரிந்து கொள்ளாமல் சன்மார்க்க கொள்கையைப் பின் பற்ற முடியுமா என்று கேட்டு உள்ளார் .

வள்ளலாரே சொல்லுகின்றார் ;--

பார்த்தாலும் நினைத்தாலும் படித்தாலும் படிக்கப்
பக்கம் நின்று கேட்டாலும் பரிந்து உள் உணர்ந்தாலும்
ஈர்த்தாலும் பிடித்தாலும் கட்டி அணைத்தாலும்
இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் கரும்பே
வேர்த்தாவி மயங்காது கனிந்த நறுங்கனியே
மெய்ம்மை அறிவு ஆனந்தம் விளக்கும் அருள் அமுதே
தீர்த்தா என்று அன்பர் எலாம் தொழப் பொதுவில் நடிக்கும்
தெய்வ நடத்து அரசே என் சிறு மொழி ஏற்று அருளே !

அருளைப் பெறுவதற்கும் திரு அருட்பாவில் உள்ள உண்மைக் கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கும் ,இறைவன் வேண்டியும் (பார்த்தாலும் ) அறிந்து கொள்ளலாம் ,மனதில் நினைத்தும் அறிந்து கொள்ளலாம்,படித்தும் தெரிந்துக் கொள்ளலாம் ,படிப்பவர்கள் அருகில்(பக்கம் ) இருந்து கேட்டும் தெரிந்து கொள்ளலாம்,, உள்ளத்தின் உள்ளே உணர்ந்தும் தெரிந்து கொள்ளலாம்,இறைவனை இடைவிடாது நினைத்தும் தெரிந்து கொள்ளலாம் .

சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுவதற்கு படிப்பு அவசியம் என்பது இல்லை,..முக்கியமானது ''ஒழுக்கமும்,விசாரமும் "'இருந்தால் போதும்..அருளைப் பெறுவதற்கு படிப்பு தேவை என்பது  இல்லை.

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;---

கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பு அருளும் களிப்பே
காணார்க்கும் கண்டவர்க்கும் கண் அளிக்கும் கண்ணே
வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரம் அளிக்கும் வரமே
மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியே
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நடுவே
நரர்களுக்கும் சுரர் களுக்கும் நலங் கொடுக்கும் நலமே
எல்லார்க்கும் பொதுவில் நடம் இடுகின்ற சிவமே
என்னரசே யான் புகலும் இசையும் அணிந்து அருளே !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடுகள் கிடையாது.கண்டவர் காணாதவர் என்ற வேறுபாடு கிடையாது ,எல்லா ஜீவன்களுக்கும் கண் இருப்பது போல ,கண் ஒளி கொடுப்பது போல ,எல்லார்க்கும் பொதுவாக இருப்பவர்தான் கடவுள்.

ஒழுக்கம் நிறைந்தவர்களுக்கு மட்டுமே இறைவன் அருள் வழங்குவார் அதுதான் உண்மை.

கடவுளை மதித்தாலும்,மதிக்கா விட்டாலும் அறிவு கொடுப்பவர் தான் கடவுள்,நல்லவர்களாக இருந்தாலும்,பொல்லாதவர்களாக இருந்தாலும்,நரகராக இருந்தாலும் தேவர்களாக இருந்தாலும்,நலம் கொடுப்பதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் செயலாகும்,அதனால்தான் அவருக்குத் ''தனிப்பெருங் கருணை உள்ளவர் ''என்று சொல்லப்படுவதாகும்...

வள்ளலார் எந்த பள்ளியிலும் சென்று படிக்க வில்லை ,..ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமானால் கல்வி தானே தானே வரும்,இறைவனே கல்வியைக் கற்றுக் கொடுப்பார் ..நாம் படிப்பது உலகியல் கல்வி .ஒழுக்கம் நிறைந்து கருணையே வடிவமானால் அருள் கல்வி என்னும் சாகாக் கல்வியை இறைவன் சொல்லிக் கொடுப்பார் ..

மேலும் வள்ளலார் சொல்லுவார் ;--

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்று கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே !

படிப்பிற்கும், அறிவுக்கும்,அருளுக்கும்  சம்பந்தம் இல்லை,படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு, பாடம் ,படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு என்பதை  உணர்ந்து கொள்ள வேண்டும்.

எனவே சன்மார்க்கத்தை பின் பற்ற உலகியல் படிப்புத் தேவை இல்லை..என்னுடைய நண்பர்கள் நிறைபேர் படிக்காமலே சன்மார்க்கத்தைப் பின் பற்றி வருகிறார்கள்,என்னுடைய பேச்சைக் கேட்டே சன்மார்க்கத்திற்கு வந்து சாதனைப் படைத்து வருகின்றார்கள் ..

சன்மார்க்கத்திற்கு அடிப்படையானது ,இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் .இந்த இரண்டு ஒழுக்கத்தையும் கடைபிடித்தவர்களே சுத்த சன்மார்க்கிகள் .ஒழுக்கம் என்பதுதான் சிறந்த படிப்பு....இன்னும் விரிக்கில் பெருகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2016

[23/08, 8:48 a.m.] Kathir Velu: காரணம் என்றால் என்ன? காரியம் என்றால் என்ன ?

என்று ஒரு அன்பர் கேட்டு இருந்தார் .

 காரணம் காரியம் காட்டிடு வெளி எனும்
ஆரணச் சிற்சபை அருட்பெருஞ்ஜோதி !

 என்று அகவலில் வள்ளலார் பதிவு செய்து உள்ளார் .

காரண காரிக் கல்விகள் எல்லாம் கற்பித்து என் உள்ளே கலந்து கொண்டு என்னை

நாரணர் நான்முகர் போற்றி மேல் ஏற்றி நாதாந்த நாட்டுக்கோர் நாயன் ஆக்கி

பூரணமாய் இன்பம் பொங்கித் ததும்பப் புத்தமுதமாம் போனகம் தந்தே

ஆரண வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவரே !

எனறும் சொல்லுகின்றார் .அடுத்து .

 காரண இது காரியம் இது மேற் காரண காரியக் கரு இது பலவாய்

ஆரணம் ஆகமம் இவை விரித்து உரைத்தே அளந்திடு நீ அவை அடைந்திடு என் மகனே

பூரண நிலை அனுபவமும் உறிற் கணமாம் பொழுதினில் அறிதி எப்பொருளின் நிலைகளுமே

தாரணி தனில் என்ற தயவு உடைய அரசே தனி நடராஜ என் சற்குரு மணியே !

என்றும் சொல்லுகின்றார் .

காரணம் என்பது உருவம் இல்லாதது . . .

காரியம் என்பது உருவம் உள்ளது .

காரணம் என்பது நிர்ணயம் செய்வது .

காரியம் எனபது அதை நிறைவேற்றுவது . . . .

மேலும் ,காரணம் ,காரியம் .காரண காரியம் என்று சொல்லுவார் .

அதேபோல் ஏகமாக இறைவன் இருப்பது காரணம் ,அநேக ஆன்மாக்களாய் இருப்பது காரியம் ,

அநேக உயிர் உடம்பாக இருப்பது காரண காரியம் .

மேலும் காரணம் இல்லாமல் காரியம் இல்லை , இதற்காகத்தான் இந்த வேலை செய்கிறேன் என்று சொல்லுகிறோம் .எதற்காக ?  என்று கேட்டால், அப்பா சொன்னார் அதனால்  செய்கிறேன் என்று சொல்லுவார் .

அப்பா என்பது காரணம் .செய்கிறேன் என்பது காரியம் .செய்து முடிப்பது காரண காரியம் என்பதாகும் .

அதேபோல் இறைவன் படைத்தல் காரணம் .காத்தல் காரியம் , பக்குவம் வருவித்தல் காரண காரியம் என்பதாகும் .

 இன்னும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ,   திருமணம் செய்வது காரணம் .கணவன் மனைவி இணைவது காரியம் ,குழந்தை உண்டாவது காரண காரியம் என்பதாகும் .

மேலும் இயற்கை உண்மை என்பது காரணம் .

இயற்கை விளக்கம் என்பது காரியம் .

இயற்கை இன்பம் என்பது காரண காரியம் .

அதேபோல் :-
தன்மை என்பது காரணம் .

முன்னிலை என்பது காரியம் .

படர்க்கை என்பது காரணம் காரியம் .என்றும் சொல்லலாம் .

அதேபோல் கடவுள் காரணம் ,ஆன்மா காரியம் .உயிரும் உடம்பும் காரண காரியம் என்பதாகும் .

எனவேதான் காரணம் இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது.

 வள்ளலார் சொல்லுவார்

என்ன காரணத்திற்காக இறைவன்  உலகத்தைப் படைத்தார ,ஆன்மாக்களை அனுப்பினார்,உயிரைக் கொடுத்து உடம்பை கொடுத்து  வாழ்க்கையைக் கொடுத்துள்ளார் என்பதை தெரியாமல் .சமய மதங்கள் சொல்லி உள்ள பொய்யான காரணத்தையும் காரியத்தையும் இறைவன் எனக்கு காட்டி உள்ளார் அதனால் சமய மதங்கள் காட்டிய காரணம், காரியம் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம் என்கிறார் வள்ளலார் .

மேலும் :-எல்லாவற்றுக்கும் காரணம் அருட்பெருஞ்ஜோதி ! அதுதான் சர்வ சாட்சி .ஞான தேகம் .

காரண காரிய ரூபத்தோடு  உள்ளது பிரணவதேகம் ,

காரிய ரூபத்தோடு உள்ளது சுத்த தேகம் .

இன்னும் சொல்ல வேண்டுமானால் .

காரணம் எனபது உண்மை !

 காரியம் என்பது பொய் .

காரண காரியம் என்பது பொய்யும் மெய்யும் கலந்தது .

காரணத்திற்கு உருவம் இல்லை .ஆனால் எல்லாவற்றுக்கும அதுவே காரணமாகவும், காரியமாகவும் .காரண காரியமாகவும் ,உள்ளதாகும்,

் காரணம் என்பது கடவுள், காரியம் என்பது அருள் ் காரணகாரியம் என்பது  இன்பம் .

அவற்றைத்தான் இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம் ,இயற்கை இன்பம் என்பார்.

 ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2016

முக்கியமான பாடல் !


வள்ளலார் பதிவு செய்துள்ள  பாடல் !

இந்தப்பாடலை  ஊன்றி கவனித்து படிக்கவும் !

கண்டது எல்லாம்  அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்ந் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

இன்புறலாம் இவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்
எல்லாம் செய் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்
அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்
அடைந்திடுமின் அகவடிவம் இங்கு அனக வடிவாகிப்
பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான
பூரணமே ஆரணத்தின் பொருள் முடிமேல் பொருளே
வன்புடையார் பெறற் அரிதாம் மணியே சிற்சபையின்
மாமருந்தே என்று உரைமின் தீமை எலாம் தவிர்த்தே !

நீர் பிறரோ யான் உமக்கு நேய உறவலனோ
நெடு மொழியே உரைப்பன் அன்றிக் கோடு மொழி சொல்வேனோ
சார்புரவே அருள் அமுதம் தந்து எனை மேல் ஏற்றித்
தனித்த பெருஞ் சுகம் அளித்த தனித்த பெரும் பதி தான்
சீர் பெறவே திருப் பொதுவில் திருமேனி தரித்துச்
சித்தாடல் புரிகின்ற திருநாள்கள் அடுத்த
ஒர்புரவே இது நல்ல தருணம் இங்கே வம்மின்
உலகியலீர் உன்னியவார் உற்றிடுவீர்  விரைந்தே !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
சனி, 20 ஆகஸ்ட், 2016

மரணத்தை வெல்லும் வழி !


மரணத்தை வெல்லும் வழி !

 மரணத்தை வெல்லுவதற்கு .இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழக்கம் என்ற நான்கு ஒழுக்கங்களை கடை பிடிக்க வேண்டும் என்று வள்ளலார் சொல்லுகின்றார் .

உலகியல் வழியில் செல்லாமல் ,அருளைப் பெறும் இறுதி வழியாகிய ,

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
 ஞானத்தில் ஞானம்

என்னும் சுத்த சன்மார்க்க பெறு நெறியாகிய தனிநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் என்கின்றார் .

முன்பு ஞான சரியை ,ஞான கிரியை ,ஞான யோகம் .என்றால் என்ன ? என்பதைப் பார்த்தோம் .இப்போது

"ஞானத்தில ஞானம்"  என்றால் என்ன என்பதைப் பார்ப்போம் .

ஞானத்தில் ஞானம் என்பது ஆன்ம ஒழுக்கத்தைக் குறிப்பதாகும் .முன் சொன்ன இந்திரிய ஒழக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் என்னும் உண்மை ஒழுக்கத்தை வள்ளலார் சொல்லியுள்ளபடி கடைபிடித்தால் மட்டுமே ஆன்ம ஒழுக்கத்திற்கு செல்ல முடியும் .ஆன்மாவை காண முடியும் .

வள்ளலார் சொல்லி உள்ள ஆன்ம ஒழுக்கம் !

 கடவுளால் அனுமதிப பெற்று மாயையால்  படைக்கப்பட்ட ,யானை முதல்  எறும்பு ஈறாகத் தோன்றிய சரீரங்களில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச்சபையாகவும் ,அதனுள் பரமான்வே பதியாகவும் கொண்டு யாதும் நீக்கமற ,எவ்விடத்தும் பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றல் .ஆன்ம ஒழுக்கம் என்று சொல்லுகின்றார் .

இவைதான் மனிதனின் சாகாக்கல்வியின் இறுதி படிப்பு .இந்த  தேர்வில் தேர்ச்சிப் பெற்றால் மட்டுமே .மரணம் இல்லாப்பெருவாழ்வு கிடைக்கும் .

முதல் மூன்று தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே . இறுதி தேர்விற்கு வரமுடியும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் .

முதல் மூன்று தேர்வு என்பது !

 ஞான சரியை என்னும் இந்திரிய ஒழுக்கம் ,ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் ,ஞான யோகம் என்னும் ஜீவ ஒழுக்கம் என்தாகும் ,இதில் மிகவும் முக்கியமானது ,இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழக்கம்  எனபவையாகும் .

இந்ந இரண்டு ஒழக்கங்களையும் முழுமையாக  கடைபிடித்தால் மேலே கண்ட ஜீவ ஒழுக்கமும் ,ஆன்ம ஒழுக்கமும  அருட் பெரும்ஜோதி ஆண்டவர் வந்து சொல்லிக் கொடுப்பார் .

வள்ளலார் பேருபதேசத்தில் இறுதியாக சொல்லி உள்ளதை நன்கு கவனிக்க வேண்டும் .

 இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள .

 உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வரப்போகின்றார் ஆதலால் நான் சொல்லிய வண்ணம் உண்மை ஒழுக்கத்துடன் நல்ல  விசாரணையில இருங்கள் என்கிறார் .

இவ்விசாரணையில் இருந்தால் நமது ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக்கொண்டு இருக்கின்ற அனந்தத்  திரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரை நீங்கி விடும் அது நீங்கினால் மற்ற திரைகள் அதிக விரைவில் நீங்கி விடும் என்கிறார் .

அந்த விசாரம் என்னவெனில் :--

ஆண்டவரை தோத்திம் செய்கின்றதிலும் ,தெய்வத்தை நினைக்கின்றதிலும் அதிக சுத்த உஷ்ணம் உண்டாகும் .

யோகிகள் வனம் ,மலை, குகை முதலிய இடங்களில்  போய் நூறு ஆயிரம் முதலிய வருஷகாலம் "தவம்" செய்து இவ் உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள் .

இப்படி தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகின்றதை பார்க்கிலும் , தெய்வத்தைத் தோத்திரம் செய்கின்றதிலும் .நினைக்கின்றதிலும் அதைவிடக் . . . . கோடி கோடி பங்கு அதிகமான சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளலாம் என்கிறார் .

எனவே இந்திரிய ஒழக்கத்தாலும் கரண ஒழுக்கத்தாலும் .சுத்த தேகம் பெற்று இம்மை இன்ப வாழவு வாழலாம் .அதற்கு ஞான சரியை ,ஞான கிரியை என்று பெயர் .

அடுத்த ஜீவ  ஒழுக்கத்தால்  சாதி சமயம் மதம் இனம் நாடு போன்ற பேதம்  அற்று எல்லா மனித ஜீவர்களையும் தம் உயிர் போல் நேசிக்க வேண்டும் .அதுவே ஞான யோகம் என்பதாகும் .

அதனால் கிடைக்ககூடிய லாபம் பிரணவ தேகம் . மறுமை இன்ப லாபம் . மறுமை இன்ப வாழ்வு , .அதுவே ஞானம் யோகம்  என்பதாகும் .

இந்த  மூன்று ஒழுக்கங்களும் ,இரண்டு லாபங்களும் முழுமை அடைந்தால் மட்டுமே ஆன்ம லாபம் என்னும் பூரண அருள் கிடைக்கும் ,

  பூரண அருள் கிடைத்தால் மட்டுமே உண்மைக் கடவுள் யார் ? என்பது தெரியும் . அதற்கு அருள் அறிவு என்று பெயர் .ஞானத்தில் ஞானம் என்பதாகும் .ஆன்ம ஒழுக்கம் என்பதாகும் .

அப்போது தான் எல்லா ஜீவராசிகளிலும் உள் ஒளியாக (ஆன்மா) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து செயல் படுகிறார எனபதை நேருக்கு நேர் காண முடியும் . மரணம் இல்லாப்பெருவாழ்வு கிடைக்கும் .

எனவே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் ,எவ்வளவும் ,விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும் என்கிறார் .

அவற்றைததான் :--

சாகாக்கல்வி
தத்துவ நிக்கிரகம் செய்தல்
ஏம சித்தி
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்

என்னும் நான்கு சுத்த சன்மார்க்க பயிற்சியைக் காட்டிக் கொடுத்து உள்ளார் .

இதுவே  ஆன்ம ஒழுக்கம் என்னும் ஞானத்தில் ஞானம் எனபதாகும் . பேர் அறிவு .அருள் அறிவு ன்பதாகும் .

அறிவாலே அறிவினை அறிகின்ற போது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !
என்றும் . . .

அருளாலே அருள் இறை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் ஆகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நடம் இன்பம் என்று அறியாயோ மகளே !

என்று உண்மை அறிவு .அனுபவம் ,அருள் .அருள் நடனம்  என்பதை எல்லாம் தெளிவாக சந்தேகம் இல்லாமல் விளக்கம் தந்து உள்ளார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு அடிப்படையானது ஜீவ காருண்யம் அடுத்ததுதான் சத்விசாரம் .இந்த இரண்டு வழிகளை இடைவிடாமல் பின் பற்ற வேண்டும் .

அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு ! என்பதை கருத்தில் கொள்ள வேண்டும் .

அருளைப் பெறுவதுதான் சுத்த சன்மார்க்கம் !

அருள் நெறி ஒன்றே தெருணெறி மற்று எல்லாம்
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே !

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம்
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே !

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமன் ஆகுக ஒங்குக !

இறை அருளைப் பெற ஒரே மார்க்கம் .வள்ளலார்  தோற்றுவித்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் " என்ற மார்க்கம் மட்டுமே என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும் .

இன்னும் விரிக்கில் பெறுகும்

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

வியாழன், 18 ஆகஸ்ட், 2016

சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !

தொடர்ச்சி :--3. ஆம் பாகம்

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க நெறியை கடைபிடிக்க , முக்கியமான படித்தரங்கள்

ஞான சரியை
ஞான கிரியை 
ஞான யோகம் 
ஞானத்தில் ஞானம் 

என்னும் அறிவு சார்ந்த வழிமுறைகளைக் கண்டு கொண்டு அதன் உண்மையான வழியைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே இறை அருளைப் பூர்வமாக பெற்று மரணத்தை வெல்ல முடியும் எனபதைத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார் .

முன்பு ஞான சரியை ,ஞானகிரியை என்றால் என்ன என்பதைப் பார்ததோம் .

இப்போது ஞான  யோகம் எனபதைப் பார்ப்போம் ! 

ஞான யோகம் என்பது ஜீவ ஒழுக்கத்தைக் குறிப்பதாகும் .

ஜீவன் என்றால் உயிர் , உயிர் உடம்பை விட்டு பிரியாமல பாதுகாக்கும் வழியைக் கற்பிக்கம் கல்வி தான் சாகாக்கல்வி என்பதாகும் .

ஞான சரியை என்னும் இந்திரிய ஒழுக்கம் ஜீவ காருண்யம் என்னும் பரோப காரத்தால் மட்டுமே அன்பும் அறிவும் வெளிப்படும் .

ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கத்தால் சத்விசாரம் என்றால் என்ன எனபதை அறிந்து ,புருவ மத்தியில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியை இடைவிடாமல் தொடர்பு கொள்வதே சத்விசாரம் எனபதை அறிந்தோம் .

 இப்போது உயிரைப் பாதுகாப்பது எப்படி எனபதைப் பார்ப்போம் .அதற்கு ஜீவ ஒழுக்கம் என்று பெயர் வைத்து உள்ளார் .அவைதான் ஞான யோகம் என்று பெயராகும் 

வள்ளலார் சொல்லும் ஜீவ ஒழுக்கம் ! 

ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்கள் இடத்திலும் ,சாதி், சமயம் ,ஆச்சிரமம் ,சூத்திரம் ,கோத்திரம் ,குலம் ,சாத்திர சம்பந்தம் ,தேசம் மாரக்கம் , உயர்ந்தோர் .தாழ்ந்தோர் 

என்னும் பேதம் நீங்கி எல்லவரும் தம்மவர்களாய் சமமாக அறிவதே ஜீவ ஒழுக்கம் என்று சொல்லுகின்றார் . 

நாம் இப்போது எந்த ஒழுக்கத்தில் உள்ளோம் எனபதை நம்மை நாமே பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் . 

மேலும் வள்ளலார் சொல்லுவது . சாகாக்கல்வி கற்பதற்கு எவை எவை தடையாக இருக்கின்றதோ அவற்றை நீக்க வேண்டும் என்கிறார் .நாம் நீக்கி உள்ளோமா ? என்பதை நமக்கு நாமே சிந்திக்க வேண்டும் .

சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத்  தடையாகிய சமயங்கள் ,மதங்கள் ,மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம் ,ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும் என்கிறார் .

எதில் பற்றாத வண்ணம் என்கிறார் மனதில் பற்றாத வண்ணம் என்கின்றார் ,எனவே மனம் எவ்வளவு வலிமை உள்ளது என்பதை அறிய வேண்டும் .

அதனால் தான் மனதை அலைய விடாமல் சிற்சபையில் தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார் .அங்கே தொடர்பு கொண்டால் மட்டுமே மனம் அடங்கும் .சொன்னபடி கேட்கும் .வேறு வழியால் அடக்கவே முடியாது .

ஏன் ?மேலே உள்ளவைகளை பற்றாது இருக்க வேண்டும் என்கிறார் எனபதை நாம் சிந்திக்க வேண்டும் . அதுவும் சாதாரண தடை என்று சொல்ல வில்லை ."முக்கிய தடை " என்கிறார் .அப்படி என்றால் என்ன? 

சமயங்கள் ,மதங்களும் .மற்றைய மார்க்கங்கள எதுவாக இருந்தாலும் அவர்கள் சொல்லி உள்ள .தியானம் ,தவம் ,யோகம் ,மந்திரங்கள் போன்ற எதுவானாலும் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது எனபதை தெளிவாக ஞான சரியை 28, பாடல்களின் வாயிலாக பதிவு செய்து உள்ளார் .

அதனால் தான் மேட்டுகுப்பம சித்தி வளாகத் திருமாளிகையில் இறுதியாக ,
உள் இருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில வைத்து "தடைபடாது ஆராதியுங்கள் "என்று சொல்லி விட்டு ,நினைந்து நினைந்து என்னும் தொடக்கம் உடைய பாடல்கள் 28, ல் கண்டு உள்ளபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் .என்கிறார் .

அதன் உண்மை என்ன ? என்று தெரிந்தவர்கள .சமயம் மதங்கள் சொல்லிய தியானம் தவம் யோகம் போன்ற பொய்யான வழிகளில் செல்ல மாட்டார்கள் .

ஏன் அவர்களுக்கு உண்மை விளங்கவில்லை என்றால் ,அன்பு தயவு கருணை இல்லை அதாவது வள்ளலார் சொல்லி உள்ள உண்மையான ஜீவ காருண்யம் இல்லை . உண்மையான சத்விசாரம் இல்லை என்பது தெளிவாகிறது ,

சாகாக்கல்வி என்பது உயிரைக் காப்பாற்றுவது அந்த உயிரைக் காப்பாற்ற அகவலில் வள்ளலார் சொல்லியது 

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே 
உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே !

எங்கே கருணை இயற்கையில் உள்ளன 
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே !

யாரே என்னினும் இரங்குகின்றார்க்கு 
சீரே அளிக்கும் சிதம்பர சிவமே !
உயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக 
செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே !

என்று சொல்லி விட்டு . . . 
பொய்ந்நெறி அனைத்தினும் புகுதாது எனை அருட் 
செந்நெறி செலுத்திய சிற்சபைச் சிவமே !

எல்லாமே பொய் நெறி என்கிறார் .அதில் என்னை செலுத்தாமல் உண்மை நெறியான சுத்த சன்மார்க்க அருள் நெறியில் செலுத்திய எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !

அருள் நெறி ஒன்றே தெருள் நெறி மற்று எல்லாம் 
இருள் நெறி என எனக்கு இயம்பிய சிவமே । 

உலகில் உள்ள அத்தனை நெறிகளும் இருள் நெறி என்பதை அறிவால் அறிந்து ,உள்ளத்தால் உணர்ந்தால் மட்டுமே உயிரைக் காப்பாற்ற  முடியும் .

 ஞான சரியை என்னும் இந்திரியங்களும் .ஞான கிரியை என்னும் கரணங்களும் ஞான யோகம் என்னும் உயிரும் இடைவிடாது ,ஆன்மா என்னும் உள் ஒளியை இடைவிடாமல் தொடர்பு கொண்டால் மட்டுமே 

ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள திரைகள் விளகி அருள் சுரக்கும .அருள் பூரணமாக கிடத்தால் மட்டுமே !உடம்பையும் உயிரையும் ஒளியாக மாற்றி மரணத்தை வெல்ல முடியும்.

மேலும் ஞான யோகம் என்பது ?
ஜீவ காருண்ய ஒழக்கத்தில சொல்லுவார்

ஜீவ காருண்யமே விரதமாக கொண்டு பசித்த  ஏழைகளுக்கு பசியை ஆற்றுவித்தால் .ஜீகாருண்யம் உள்ள  சமுசாரிகளுக்கு எப்படிப்பட்ட ஆபத்துக்களும் .அஜாக்கிறதையாலும் ஊழ்வகையாலும் சத்தியமாக வராது என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் .

அதேபோல்  ஞான யோகம் என்பது இந்திரியங்களையும் கரணங்களையும அடக்கி ஆன்மாவில் தொடர்பு கொள்வதே விரதமாக எடுத்துக் கொள்ள வேண்டும் . அதாவது விடாமுயற்ச்சி என்பதாகும் .

இதுவே ஞான யோகம் என்பதாகும் அதாவது ஆன்மாவிடம் ஒன்றுபடுதல் ,இணைத்தல் தொடர்பு  கொள்ளுதல் என்பதாகும் .

ஒழக்கம் நிறைந்து கருணையே வடிவமாவது ஞான யோகம் என்னும் ஜீவ ஒழுக்கமாகும் .

இன்னும் விரிக்கில் பெறுகும் .

அடுத்து ஞானத்தில் ஞானம் என்ன ? என்பதை பார்ப்போம் .

அன்புடன்  ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .புதன், 17 ஆகஸ்ட், 2016

சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !

தொடர்ச்சி :-

வள்ளலார் சொல்லியுள்ள .
.சுத்த சன்மார்க்க  உண்மை நெறியை பின்பற்ற
ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம்
என்னும் நான்கு படிகள் மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொண்டு பின் பற்ற வேண்டும் என்று முன் கட்டுரையில் "ஞான சரியை"" என்றால் என்ன ? எனபதை தெரிவித்து   உள்ளோம் .

ஞான சரியை என்பது இந்திரிய ஒழுக்கம் .அதுவே ஜீவ காருண்யம் என்பதைக் கண்டோம்.

இப்போது ஞான கிரியை என்றால் என்ன ? எனபதைப் பார்ப்போம் .

ஞான கிரியை என்பது , கரண ஒழுக்கத்தை குறிப்பதாகும் .

கரணங்கள் என்பது மனம் ,புத்தி ,சித்தம் ,அகங்காரம் ,உள்ளம் என்பதாகும் .இந்த ஐந்து கருவிகளும் ,கண்களுக்குத் தெரியாமல் செயல் படும் புறம் என்னும் சக்தி வாய்ந்த கருவிகளாகும் .

இந்தக் கருவிகள் தான் புறப்புறத்தில் உள்ள  இந்திரியங்களை வேலை வாங்கிக்கொண்டு இருப்பவைகளாகும் .
இந்த கரணங்களில் முதன்மையாக உள்ளது மனம் .மனம் என்ன நினைக்கின்றதோ அவற்றை நிறைவேற்றுவது தான் புத்தி சித்தம் அகங்காரம் உள்ளம் என்னும் துணைக ்கருவிகளின் விருப்பமாகும் .

எனவே மனத்தை அடக்க வேண்டும் .மனத்தை அடக்கினால்தான் அருளைப் பெற முடியும் என்பதால் .

மனத்தை அடக்க தியானம் .தவம் ,யோகம் ,பக்தி போன்ற பல வழி முறைகளை கடைபிடித்து வருகிறார்கள் .

ஆனால் வள்ளலார் மனத்தை அடக்க முடியாது . மனம் புறத்தைத் தேடும் ஆற்றல் மிகுந்த சக்தி படைத்த கருவியாகும் .

அதன் சொல்படிதான் இந்தி ரியங்கள் ஆகிய கண். காது, மூக்கு ,வாய் .மெய் என்னும் அனைத்து புறப்புற  உறுப்புகளும் புற உறுப்புகளின் அனுமதிப் பெற்று  செயல் படும் .

எனவே மனத்தை அடக்க முடியாது மனதை மாற்ற வேண்டும் என்கிறார் வள்ளலார் .

எப்படி மாற்ற வேண்டும் என்பதுதான் , ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் என்பதாகும் .

ஞான சரியை என்பது ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் ஜீவர்களுக்கு உபகாரம் செய்வது .

அந்த உபகாரத்தைக் கொண்டு கரண ஒழுக்கத்தைக் கடைபிடித்து மனதை மாற்ற வேண்டும் என்கிறார் .

கண்களுக்கம் மனத்திற்கும் எப்போதும் இடைவிடாத தொடர்பு உண்டு .கண்கள் போகும் இடத்திற்கு  மனம் போகும் .மனம் போகும் இடத்திற்கு கண்கள் போகும் .

இந்திரியங்களுக்கு கண்தான் முதன்மை யானது .கரணங்களுக்கு மனம் தான் முதன்மை யானது .

இந்த இரண்டையும் ஒரே பக்கமாக திருப்ப வேண்டும் என்பதுதான் ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் என்பதாகும் .

வள்ளலார் கரண ஒழுக்கத்தில் என்ன? சொல்லுகிறார்

கரண ஒழுக்கமானது !

மனதைச் சிறசபையின் கண்ணே நிறுத்தல் என்று சொல்லி விட்டு ,அதாவது முதலில் புருவ மத்தியில் நிற்கச் செய்தல் வேண்டும் என்கிறார் .

புருவ மத்தி என்பது ஆன்மா என்னும் உள் ஒளி இருக்கும் இடம் என்பதை சுட்டிக் காட்டுகின்றார் .

மனதை அங்கு நிற்க செய்தால் கருவி கரணங்கள் தானே அடங்கும் .ஏன் என்றால் இந்திரிய அறிவும் கரண அறிவும் ,ஆன்ம அறிவோடு தொடர்பு கொள்ளும் போது அதாவது நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து தொடர்பு கொள்ளும் போது  அங்கே சுத்த உஷ்ணம் உண்டாகும் ,அந்த உஷ்ணத்தால் ஆன்மாவிற்கு  நெகிழ்ச்சி உண்டாகும் அந்த நெகிழ்ச்சியினால்,


 ஆன்மாவை மறைத்து கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகள் ஒவ்வொன்றாக விலகும் ,

 முழு திரைகளும் விலகினால் தான்  இறை அருள் காரியப்படும் .

அதைத்தான் ஜீகாருண்யம் என்னும் ஜீவ தயவினால் ஆன்ம தயவு காரியப்படும் என்பதாகும் .

அப்படி காரியப்படும் போது துர் விஷயத்தைப் பற்றாது இருப்போம் ,
ஜீவ தோஷம் வசாரிக்க மாட்டோம் ,,தன்னை மதியாது இருப்போம் ,செயற்கை குணங்களால் ஏற்படும் இராகாதிகளை நீக்கி இயற்கை யாகிய சத்துவ குணம் உள்ளவர்களாக இருப்போம் ,பிறர் மீது கோபம் கொள்ளாமல் இருப்போம் .தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டிக்கும் குண்ம் வரும் .

இவை எல்லாம் ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கத்தால் நிலை பெறும் .

ஞான சரியை என்னும் இந்திரிய ஒழுக்கத்தால் அதாவது ஜீவ காருண்யத்தாலும் .

ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் மான  சத்விசாரமும் இடைவிடாது .அதி தீவிர முயற்சியுடன் அதாவது நன் முயற்சியுடன்  செயல் பட்டால் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப் பெருங்கருணை கொண்டு , திரைகளை நீக்கி அருள் வழங்குவார் எனபது உண்மையாகும் .

மேலும் இவைகளை படிப்பால் அறியக் கூடாது .அறிவது எப்படி எனில்

ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் .

அத் தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் , ஆதலால் இடைவிடாது நன் முயற்சியில் பழகல் வேண்டும் என்று அழுத்தமாக வள்ளலார் சொல்லுகின்றார .

ஞான கிரியை என்பது சத்விசாரம் என்பதாகும் .

சத்விசாரம் என்பது இரவும் பகலும்  என்நேரமும்  இடைவிடாது  ஆன்மாவிடம் தொடர்பு கொள்வதாகும் .

அதைத்தான் பசித்து இரு ,தனித்து இரு, விழித்து இரு என்று சொல்லுகின்றார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு பக்தி தேவை இல்லை என்கின்றார் .

பக்தி என்பது :- மன நெகிழ்ச்சி மன உருக்கும் .

அன்பு என்பது :-ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம்

மன நெகிழ்ச்சி நிலைக்காது .ஆன்ம நெகிழ்ச்சி நிலைக்கும் .ஆகவே அன்பு தான் முக்கியமானது .

அன்பை பெறுவதே ஞான கிரியை என்பதாகும் .

இன்னும் விரிக்கில் பெறுகும் .

அடுத்து ஞானம் யோகம் என்ன என்பதைப் பார்ப்போம் .

தொடரும்

 அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2016

சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !

வள்ளலார் சொல்லும் சாகாக்கல்வி !

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம் !

இந்த நான்கு படிகள் தான் சுத்த சன்மார்க்க கொள்கைகள். என்கின்றார் வள்ளலார் .

இதுதான் இறைவன் அருளைப் பெற உயர்ந்த பாதைகள் .

உயர்ந்த கல்வியாகும் அதாவது சாகாக்கல்வி என்று பெயர் வைத்து உள்ளார் .

இந்தக் கல்வி கற்க என்ன என்ன தகுதி வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் !

 சுத்த சன்மார்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம் ,மதம் ,முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவரகளும்

காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் ,கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் .

மரணம் ,பிணி ,மூப்பு ,பயம் ,துன்பம் ---இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள் .

அதாவது செயற்கையாகிய குணங்களை நன் முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலா அதிகார மரணம் நீங்கும் .

அப்படி இல்லாமல் இவ்விடம் காத்து இருப்பவர்கள் மரணத்தை தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள் .

அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்திற்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக் கூடும் .

பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெற மாட்டார்கள் .

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம்

என்றால் என்ன? என்பதை பின்பு பார்ப்போம் .

தொடரும் :----

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !

தொடரச்சி :---

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம்

மேலே கண்ட நான்கு படிகளும் சாகாக் கல்விக்கு வழி காட்டும் படிப்பு பயிற்சிகளாகும் .

அதற்கு தகுதி உள்ளவர்கள் யார் ? என்பதை நேற்று பாரத்தோம் .

ஞான சரியை என்றால் என்ன ?

 ஜீவ காருண்யமே முத்திக்கு முதற் படி என்கிறார் வள்ளலார் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு ! உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் அழுத்தமாக சொல்லுகின்றார் .

எனவே சுத்த சன்மார்க்கத்திற்கு ஜீவ காருண்யம் என்பது முதற் படியான ஞான சரியை என்பதாகும் .

நம்முடைய தலைவராகிய  அருட்பெருஞ்ஜோதி கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்து அருளைத் தர இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும் .

எனவே தான் ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் .

அருள் அனபினால் அல்லாது வேறு வகையால் அடைவது அரிது .

அவ் அன்பு ஜீவ காருண்யத்தால் அல்லது வேறு வகையால் வராது .

ஜீகாருண்யத்தின் லாபமே அன்பு .

அன்பு உடையார் எல்லாம் உடையார்.

 ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றேன்

என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் என்பார் வள்ளலார் .

உயிர்களிடத்தில் இரக்கம் காட்டினால் .கடவுள் இடத்தில் அன்பு தானாகவே வந்து விடும் .

ஜீவ காருண்யமே இந்திரிய ஒழுக்கம் .இந்திரிய ஒழுக்கமே ஞான சரியை . . . . .

இந்த ஜீவ காருண்யம் உண்டாவதற்கு ஏது?
அல்லது துவாரம் யாது எனில் ?

 கடவுள் உடைய பெருமையும் தரத்தையும் . . நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே . . . அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம .

இதுதான் முத்தி அடைவதற்கு முதல் அடியாக இருக்கின்றது . ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும் .

 முதற் படியாகிய ஞான சரியைக் கடைபிடித்து ,ஜீகாருண்யம் என்னும் இந்திரிய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் .

விரிக்கில் பெறுகும் -

அடுத்து ஞான கிரியையைப் பார்ப்போம்

தொடரும் . . .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

திங்கள், 15 ஆகஸ்ட், 2016

வேதனைகளில் முதன்மை யானது எது?

வேதனைகளில் முதன்மை யானது எது?

நரகவேதனை ,சனனவேதனை ,மரணவேதனை  மூன்று வேதனைகளும் கூடி முடிந்து வேதனையே "பசிவேதனை" என்பதாகும் .

பசி இல்லாத ஜீவன்கள் உலகத்தில் எதுவுமே இல்லை .

நம் உடம்பில் அகம் புறம் நடு கீழ் மேல் பக்கம் என்கின்ற எவ்விடத்தும் நிறைந்து எக்காலத்தும் வேறுபடாத மோட்சம் இன்பமே

ஆகாரத்தினால் உண்டாகும் திருப்தி இன்பம் என்றும் அறிய வேண்டும் .

பசி என்பது தான்  ஓர் உபகாரக் கருவி !

பசிக்கு சாதி சமய மதம் போன்ற எந்த வேறு பாடும் இல்லை .

பசி இல்லாவிடில் :-

ஜீவர்கள் ஆகாரம் குறித்து ஒருவரை ஒருவர் எதிர்ப்பார்க்க மாட்டார்கள் .

எதிர் பார்க்காத பட்சத்தில் உபகாரச் செய்கை தோன்றாது அது தோன்றாத போது ஜீவ காருண்யம் விளங்காது ,அது விளங்காத போது கடவுள் அருள் கிடைக்க மாட்டாது .

ஆதலால் பசியும் கடவுளாற் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி என்றே அறிய வேண்டும் .

அந்த உபகாரக் கருவியைப் பயன்படுத்தி செயல் பட்டால் மட்டுமே இறை அருள் கிடைக்க வாய்ப்பு உள்ளது .

அதுதான் விரதம் தவம் யோகம் என்பதை புரிந்து கொண்டு வாழ்வோம் .

ஜீவர்களுக்கு உபகாரம் செய்து பசிப்பிணியை போக்கினால் , இறைவன் நம்முடைய பசியைப் போக்கி அருள் பசியைப் போக்க உபகாரம் செய்வார்.

இதுதான் அடிப்படை அதற்கு மேல் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் .

நான் நாற்பது ஆண்டுகளாக இந்த விரதத்தை கடைபிடித்து வருகிறேன் .

வள்ளலார் சொல்லுவதைச் செய்வேன் ,செய்வதைத்தான் சொல்லுவேன் .

நான் செய்வதை எதுவும் வெளியில்  சொல்லுவதில்லை .உங்கள் சந்தேகம் தீர வேண்டும் என்பதற்காக சொல்லுகிறேன் .

நான் மட்டும் அல்ல எங்கள் குடும்பத்தில் உள்ளவர்களும் அனைவரும் ஜீவ காருண்யத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் .
அமைதி புரட்சி செய்து கொண்டு வருகிறோம் .

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

எல்லா மார்கங்களையும் மறுக்க வந்தது தான் சுத்த சன்மார்க்க
ம்

 எல்லா மார்கங்களும் நல்லது சொல்லி இருந்தால் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்கம் தேவை இல்லை .

நல்லது சொல்லுவது போல் மக்களை மூலச்சலவை செய்பவர்கள் சமய மதவாதிகள் .

மதம் பிடித்து ஆடுகின்றோர் எல்லோரும் மாநடம் காண்குவரோ ? என்று கேள்வி கேட்கின்றார் வள்ளலார் .

மக்கள் அறியாமைக்கும் தவரான வழியில் சென்று கொண்டு இருப்பதற்கும் .மன மாற்றத்திற்கும் உண்மை தெரியாமல் அழிந்து கொண்டு இருப்பதற்கும் காரணம் யார் ?

சாதி சமயம் மதங்களைத் தேரற்றுவித்தவர்கள் தான் என்று வள்ளலார் சொல்லும் போது ,

இல்லை இல்லை நான் அவர்கள் சொல்லுவதையும் கேட்பேன் ,நீங்கள் சொல்லுவதையும் கேட்பேன் அது என்னுடைய விருப்பம் .என்று சொல்பவர்களை வள்ளலார் குருடர்கள் என்று சொல்லுகின்றார .

பைத்தியக்காரர்கள் என்று சொல்லுகின்றார் .

பைத்தியத்திற்கு வைத்தியம் பார்த்த கதைதான். சமய மதவாதிகள் திறுந்துவதும் அவர்களைத் திருத்துவதும் என்று வள்ளலார் பதிவு செய்கின்றார் .

எவ்வுலகில் எவ் எவர்க்கும் அருட்பெருஞ்ஜோதி யரே

இறைவர் என்பது அறியாதே இம் மதவாதிகள்

கவ்வை பெறு "குருடர்" கரி கண்ட கதைபோலே

கதைக்கின்றார் சாகாத கல்வி நிலை அறியார்

நவ்வி விழியால் இவரோ சில புகன்றாய் என்றாய்

ஞான நடங் கண்டேன் மெய்த் தேன் அமுதம் உண்டேன்

செவ்வை பெறு சமரச சன்மார்க்க சங்கம் தனிலே

சேர்ந்தேன் அத் தீ மொழியும் தே மொழி யாய் ஆயினவே !

என்கிறார் வள்ளலார்

எனவே சமய மதத்தில் இருந்தால் நல்லதா? சன்மார்க்கத்தில் இருந்தால் நல்லதா ?

மேலும் சமய மதங்களின் நிலை எப்படி உள்ளது என்பதை சொல்லுகின்றார் .

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எலாம்

"பேய்"" பிடிப்பு உற்ற பிச்சுப் பிள்ளை விளையாட்டு என்று

உணர்ந்திடாது உயர்கள் பல பேதம் உற்று

அங்கும் இங்கும் போர் உற்று இரந்து வீண் போயினார்

இன்னும் வீண் போகாதபடி விரைந்தே

புனிதம் உறும் சுத்த சன்மார்க்க நெறி காட்டி

மெய்ப் பொருளினை உணர்த்தி எல்லாம் ஏருற்ற சுக நிலை அடைந்திடப் புரித நீ

என் பிள்ளை யானதினாலே இவ் வேலை புரிக என்று இட்டனன்

மனத்தில் வேறு எண்ணற்க என்ற குருவே

நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள் நிறைந்து இருள் அகற்றும் ஒளியே

நிர்க் குணானந்த பர நாதாந்த வரை ஓங்கும் நீதி நடராஜ பதியே !

 என்று சொல்லி உள்ளார் .இவற்றை படித்து தெரிந்து புரிந்து கொண்டு தான் என் வாழ்க்கை அமைத்து கொண்டு

சமய மதங்களின் சூழ்ச்சி தெரியாமல் வாழும்  ஆன்ம நேய  உடன் பிறப்புகளுக்கு என்னால் முடிந்து அளவுக்கு சுத்த சன்மார்க்க கொள்கையை சொல்லி வருகிறேன் .

விருப்பம் உள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளலாம் விருப்பம் இல்லாதவர்கள் விட்டு விடலாம் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

 கொல்லா  நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

 ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

வசைபாடும் அன்பர்களுக்கு வாழத்துக்கள் !

வசைபாடும் அன்பர்களுக்கு வாழத்துக்கள் !

செய்தாலும் தீமை எலாம் பொருத்து அருள்வான் பொதுவில்

திரு நடஞ் செய் பெருங்கருணைத் திறத்தான் அங்கு அவனை

மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம்

மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்

வைதாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன்

மனம் கோணேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்

பொய் தானோர் சிறிது எனினும் புகலேன் சத்தியமே

புகல்கின்றேன் நீவிர் எல்லாம் புனிதம் பொருட்டே !

என்னும் வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல் பட்டு கொண்டு வருகிறேன் .

யார் எதைச் சொன்னாலும் நான் அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை

எனக்கு இட்ட பணியை செயது கொண்டே இருப்பேன் .

எனக்கு மரணம் இல்லா பெரு வாழவு கிடைத்தாலும் கிடைக்காமல் இருந்தாலும் , அதைப்பற்றி நான் கவலைப் பட வில்லை அதை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் பார்த்து கொள்வார் .

அவருக்குத் தெரியும் யார் யார் என்ன என்ன செய்து கொண்டு உள்ளார்கள் என்று

யாரை ஏமாற்றினாலும கடவுளை ஏமாற்ற முடியாது .

சன்மார்க்கி யார் ? சமய மத சன்மார்க்கி யார் ? சுத்த சன்மார்க்கி யார்? உண்மையான சுத்த சன்மார்க்கி யார் ? என்பது எல்லாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்குத் தெரியும்

யாரும் தப்பிக்க முடியாது !

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது

மெய் உரையைப் பொய் உரையாய் வேறு நினையாதீர்

பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில்

புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்

செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்

சித்தி எலாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே !

என்று வள்ளலார் சொல்லி உள்ளார் .

இது வள்ளலார் சொல்லிது அல்ல

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது .என்று நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை எனபதில் இருந்து

நீங்கள் புரிந்து கொண்டு  உள்ளீகளோ இல்லையோ நான் புரிந்து கொண்டு உள்ளேன் .

எனவே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்டிய பாதையில் வாழந்து கொண்டு

மக்களுக்கும் சொல்லி கொண்டு வருகிறேன் .

ஆதலால் யார் எதைச் சொன்னாலும் எனக்கு வருத்தம் இல்லை .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சுத்த சன்மார்க்க சாகாக் கல்வி !

வள்ளலார் சொல்லும் சாகாக்கல்வி !

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம் !

இந்த நான்கு படிகள் தான் சுத்த சன்மார்க்க கொள்கைகள். என்கின்றார் வள்ளலார் .

இதுதான் இறைவன் அருளைப் பெற உயர்ந்த பாதைகள் .

உயர்ந்த கல்வியாகும் அதாவது சாகாக்கல்வி என்று பெயர் வைத்து உள்ளார் .

இந்தக் கல்வி கற்க என்ன என்ன தகுதி வேண்டும் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

சுத்த சன்மார்க்கத்திற்கு தகுதி உடையவர்கள் !

 சுத்த சன்மார்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம் ,மதம் ,முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவரகளும்

காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் ,கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் .

மரணம் ,பிணி ,மூப்பு ,பயம் ,துன்பம் ---இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள் .

அதாவது செயற்கையாகிய குணங்களை நன் முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலா அதிகார மரணம் நீங்கும் .

அப்படி இல்லாமல் இவ்விடம் காத்து இருப்பவர்கள் மரணத்தை தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள் .

அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்திற்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக் கூடும் .

பரலோக போகமாகிய ஞான சித்திகளைப் பெற மாட்டார்கள் .

ஞான சரியை
ஞான கிரியை
ஞான யோகம்
ஞானத்தில் ஞானம்

என்றால் என்ன? என்பதை பின்பு பார்ப்போம் .

தொடரும் :----

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

வியாழன், 11 ஆகஸ்ட், 2016

உண்மையான அருளாளர் யார் ?

உண்மையான அருளாளர் யார் ?

ஆன்ம நேய உடன் பிறப்புக்களே அனைவருக்கும் வந்தனம்.

இந்த உலகத்தை இறைவன்  ஏன் படைத்தார் என்றால் ,ஆன்மாக்கள் வாழ்வதற்காகவே படைத்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

இறைவன் குழந்தைகள் ஆன்மா என்பதால்  தன் குழந்தைகளாகிய ஆன்மா  உலகம் முழுவதிலும் சென்று விருப்போம் போல் வாழ்ந்து ,பின்பு தன்னுடைய சொந்த வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்பது இறைவன் ஆணை இறைவன்  கட்டளை ...

இந்த உலகிற்கு வந்த ஆன்மா பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து  இறுதியில் உயர்ந்த அறிவுள்ள மனிதப் பிறப்பு கொடுக்கப்படுகின்றது...

இங்குதான் பிரச்சனைகளே ஆரம்பமாகின்றது.!

ஆன்மாக்கள் பல பிறவிகள் எடுத்து உள்ளதால்,உயர்ந்த மனித பிறப்புக் கொடுத்தும் உயர்ந்த அறிவு கொடுத்து இருந்தும் , பக்குவம் இல்லாமல் உண்மைத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றது.,,அதற்கு பக்குவா பக்குவம் உள்ள  ஆன்மாக்கள் என்று பெயர்...மற்ற பிறப்புக்கள் எல்லாம் அபக்குவ ஆன்மா என்று பெயர். ........சுருக்கமாக சொல்லுகின்றேன்

உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்களை பக்குவப்படுத்தி,  உண்மையை தெரிவித்து இறைவனிடம் செல்லும் வழியைக் காட்டுவதற்காக ''பக்குவம் ''உள்ள  ஆன்மாக்களை இந்த உலகத்திற்கு அனுப்பிக் கொண்டே உள்ளார்  இறைவன்...அவர்கள்தான் ''வாழையடி வாழை என வந்த திருக் கூட்டம்'' அவர்கள்தான்  .சித்தர்கள்,யோகிகள், ஞானிகள்,போதகர்கள்,நாயன்மார்கள்  போன்ற அறிவுள்ள  அருளாளர்கள்  என்பவர்களாகும்...

அவர்கள் இந்த உலகத்திற்கு வந்து,மாயையால் சிக்கி,மாயையின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து ,முழு  உண்மையைத் தெரிந்து கொள்ளாமல்,  சொல்லாமல் தவறான வழியையே காட்டி விட்டார்கள்.அவர்களுக்குத் தெரிந்த அறிவு சார்ந்த  கதைகளையும் ,கற்பனைகளையும்,சொல்லி எழுதி வைத்து விட்டு சிலர்  மாண்டு போனார்கள்..சிலர் மறைந்து போனார்கள்,சிலர் சமாதி ஆனார்கள், ..

அவர்களால் தோற்று விக்கப் பட்டது தான் சாதி,சமயம்,மதங்கள் ..அவற்றைப் பின்பற்றி மக்கள் அழிந்து கொண்டு உள்ளார்கள் ..

இதைத்தான் வள்ளலார் ...

கலை உரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண் மூடிப் வழக்கம் எல்லாம் மண் மூடிப்போக
மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலை பெற மெய் உலகம்
வாழ்ந்து ஒங்கக் கருதி அருள் வழங்கினை என் தனக்கே
உலைவறும்  இபோழுதே நல் தருணம் என நீயே
உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை உரைத்தவனே
சிலை நிகர் வன் மனம் கரைத்துத் திருஅமுதம் அளித்தோய்
சித்த சிகா மணியே என் திரு நட நாயகனே !

என்று மக்களுக்குத் தெரிவிக்கின்றார் ..

மனித தேகம் எடுத்தவர்கள் பூரண  அருளைப் பெறாமல் இறைவனிடம் செல்ல முடியாது என்பதையும்,..பூரண அருளைப் பெறாதவர்கள் சொல்லுவது யாவும் குற்றம் உடையதே என்று சொல்லுகின்றார் .

பூரண அருள் பெற்றவர்கள் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்,மரணத்தை வென்றவர்கள் மட்டுமே இறைவனின் சொந்த வீட்டிற்கு செல்லமுடியும்...மாயையால் கட்டிக் கொடுத்த தேகத்தோடும்  செல்ல முடியாது. சில சித்தி முத்திகளைப் பெற்று ,பஞ்ச பூதங்களில் கலந்து கொண்டவர்களும் இறைவனிடம் செல்ல முடியாது...

பூரண அருளைப் பெற்று... ஊன உடம்பை ,ஒளி உடம்பாக மாற்றி  அருள் உடம்பாகிய ஞான தேகம் பெற்றவர்கள் மட்டுமே இறைவன் அருள்  கோட்டைக்குள்..இருக்கும் ''அருள் பெரு வெளிக்குள்''  செல்ல முடியும்.
அங்கு இருந்துதான் ஆன்மாக்கள் வந்தது என்பதையும்,அங்குதான் செல்ல வேண்டும் என்பதும், ஆன்ம உரிமை என்பதும் ,ஆன்ம சுதந்திரம் ,என்பதும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் தோன்றிய அருளாளர்கள் எவரும் இந்த உண்மையை ,அறிவு சார்ந்த மக்களுக்கு சொல்லவில்லை... அறிவை அறியாமையால் அஞ்ஞானத்தால்,ஊழ் வினையால்  மறைத்து விட்டார்கள்.அவைகள் தான் மாயா திரைகள் என்கின்றார் வள்ளலார்.

நம்முடைய தமிழ் நாட்டில் தோன்றிய ''திருவள்ளுவர்'' இலைமறை காய்மறையாக சொல்லி உள்ளார்,மரணத்தை வெல்லும் வழியையும் சொல்லி உள்ளார் ....கதைகளாக சொல்லாமல் கருத்துக்களை சொல்லி உள்ளார் ..மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்னும் வழியைக் காட்டியவர் ''திருவள்ளுவர் ''  ஆனால் அவர்  வாழ்ந்து காட்டவில்லை...

உலகில் மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் ''திரு அருட்பிரகாச வள்ளலார் '' என்பவராகும்..

இரண்டு பேரும் உயர்ந்த அறிவுள்ள அருளாளர்கள்..அவர்கள்  நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்துள்ளது .நாம் செய்த புண்ணிய பயனே !

இந்த இரண்டு அருளாளர்கள் தான் உலகின் உயர்ந்த அருளாளர்கள் என்பதை உலகில் உள்ள அனைவரும்  ஒப்புக் கொண்டே ஆக வேண்டும்.

இந்த இரண்டு அருளாளர்களில்  உயர்ந்தவர் யார் ? என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே பதில் சொல்லுகின்றார் ...

அந்தோ ஈது அதிசயம் ஈது அதிசயம் என் புகல்வேன்
அறிவறியா இச்சிறியேனை அறிவு அறியச் செய்வித்தே
இந்தோங்கு சடைமணி நின் அடியும் முடியும் காட்டி
இது காட்டி அது காட்டி என் நிலையம் காட்டிச்
சந்தோட சித்தர்கள் தன் தனிச்சூதும் காட்டி
சாகாத நிலை காட்டிச் சகச நிலை காட்டி
வந்தோடு நிகர் மனம் போய்க் கரைந்த இடங் காட்டி
மகிழ் வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க்கு உளது !

மேலே கண்ட பாடலை பலமுறைப் படித்து பாருங்கள் அதில் உள்ள உண்மையை உணருங்கள்.மேலும்

நாட்டானை நட்ட எனை நயந்து கொண்டே
நம் மகன் நீ அஞ்சலை என நவின்று என் சென்னி
தொட்டானை எட்டும் இரண்டும் சொல்லினானைத்
துன்பம் எல்லாம் தொலைத்தானைச் சோர்ந்து தூங்க
ஒட்டானை மெய் அறிவே உருவாய் என்னுள்
உற்றானை உணர்ந்தார்க்கும் உணர்ந்து கொள்ள
எட்டானை என்னளவில் எட்டி னானை
எம்மானைக் கண்டு களித்து இருக்கின்றேனே !.

இறுதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லுகின்றார் , என்னுடைய உண்மையான உருவத்தையும் ,என்னுடைய செயல்கள் யாவும்,ரகசியத்தையும்  எல்லாம் இந்த உலக மக்களுக்கு சொல்லி விட்டதால் .என்னுடைய துன்பம் எல்லாம் தீர்ந்தது என்று வள்ளலார் இடம்  சொல்லுகின்றார்...

துன்பம் எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்திரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வழி எலாம் ஆக்கி மெய்
வாழ்வு எல்லாம் பெற்று மிகவும்
மண் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெருக உலவாது நீடுழி
விளையாடுக ''அருட்ஜோதியாம் ''
ஆட்சி தந்தோம் உனைக் கை விடோம்  கை விடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திரு வாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாம் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்
இலங்கு நடத்து அரசே !

இவைபோல் ஆயிரக் கணக்கான பாடல்களிலே பதிவு செய்து உள்ளார்
அகவலில் தெளிவாக பதிவு செய்து உள்ளார் ..

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை ....என்றும்..மற்றும்

நோவாது நோன்பு எனைப் போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேர் அருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை !....

என்னைப்போல் இறைவனிடம் தொடர்பு கொண்டவர்களும்.சாகாக் கல்வி கற்றவரும்,சாவா வரம் பெற்றவரும் ,பூரண அருளைப் பெற்றவரும்  இந்த உலகில் எவரும் இல்லை , .என்பதை மிகவும் துணிச்சலாக ஆணித்தரமாக உலக மக்களுக்குத் தெரியப் படுத்தி உள்ளார் ..

இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன ? ;-- இந்த உலகில் உண்மையான அருளாளர் '''திரு அருட்பிரகாச வள்ளலார் '' மட்டுமே என்பதை அறிந்து போற்றி புகழ்ந்து ,,,அவர் காட்டிய பெரு நெறியான ,திரு நெறியான சுத்த சன்மார்க்கத் தனி நெறியைப் பின்பற்றி வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழி காட்டுவோம்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறு எல்லாம்
விளக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

சுத்த சன்மார்க்க சுக நிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை !

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன்  ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
புதன், 10 ஆகஸ்ட், 2016

வள்ளலார் பொய்யா சொல்லி உள்ளார் ?

வள்ளலார் பொய்யா சொல்லி உள்ளார் ?

பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் 
பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் 
உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் 
உயிரை மேவிய உடல் மறந்தாலும் 
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் 
கண்கள் நின்று இமைப்பது மறந்தாலும் 
நற்றவத்தவர் உள் இருந்து ஓங்கும் 
நமச்சிவாயத்தை நான் மறவேனே !

வள்ளலார் நமசிவாயத்தை  நான் மறவேன் என்கிறார் அது பொய்யா என்று ஒரு நண்பர் கேட்டார் அதற்கான விளக்கம் !

நமசிவாய என்பதும்.! சிவாயநம என்பதும் ! என்பதும் ஒரே பொருளையே  குறிப்பதாகும் .
அவை பஞ்ச பூதங்களை குறிப்பதாகும், .பஞ்ச பூத உடம்பை குறிப்பதாகும் .

பஞ்ச பூத உடம்பில் இறைவன் குடி இருக்கின்றார் என்பதால் நமசிவாயத்தை நான் மறவேன் என்கின்றார .

இறைவன் உடம்பைக் கொடுத்தார் ,உயிரைக் கொடுத்தார் அவற்றை இயக்கும் கலைகளைக் கொடுத்தார்  .இந்திரியங்களைக் கொடுத்தார் கரணங்களைக் கொடுத்தார்   இறைவன்  உள் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளார் .அவர்தான் நமசியவாயம் என்று நினைத்து சமயவாதிகள் சொல்லுவது போலவே தாமும் சொல்லி மக்களை தன் வசமாக மாற்றிக் கொள்கின்றார். ..

எல்லா தெய்வங்களைப் பற்றியும் பாடி உள்ளார் .ஆனால் அந்த தெய்வங்கள் எல்லாம் உண்மையான தெய்வம் இல்லை என்பதை உணர்ந்து கொள்கின்றார்.

அப்படி நமசியவாதத்தையும் மற்ற தெய்வங்களைப்  பற்றிக் பாடிக் கொண்டே உண்மையான இறைவனைத் தேடிக் கொண்டே உள்ளார்.  அவரே பதில் சொல்லுகின்றார் 

தேடியது உண்டு நினது உரு உண்மை 
தெளிந்திடச் சிறிது நின்னுடனே 
ஊடியது உண்டு பிறர் தமை அடுத்தே 
உரைத்ததும் உவந்ததும் உண்டோ 
ஆடிய பாதம் அறிய நான் அறியேன் 
அம்பலத்து அருட்பெருஞ் ஜோதி 
கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் 
கூறவும் கூசும் என் நாவே !

உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதியாக இருக்க பொய்க் கடவுளை பாடுகிறேனே என்று வேதனைப் படுகின்றார். ...மேலும் 

மாயையால் கலங்கி வருந்திய போதும் 
வள்ளல் உன் தன்னையே மதித்து உன் 
சாயையால் பிறரைப் பார்த்ததே அல்லால் 
தலைவா வேறு எண்ணியது உண்டோ 
தூய பொற்பாதம் அறிய நான் அறியேன் 
துயர் இனிச்சிறிதும் இங்கு  ஆற்றேன் 
நாயகா எனது மயக்கம் எல்லாம் தவிர்த்தே 
நன்று அருள் புரிவது உன் கடனே !

என்று தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.
அது மக்களைத்  தன் வசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக,  வள்ளலார் கடை பிடித்த ஆரம்ப பக்தி நிலை .

இறைவனின் உண்மையை அறிந்து ஞான நிலைக்கு வரும் போது எல்லா உயிர்களிலும் உள் இருந்து  இறைவன் செயல் படுகின்றார என்பதை அறிந்த பிறகு உண்மைக் கடவுளை உலக மக்களுக்கு தெரியப் படுத்துகிறார் .

அந்த உண்மையான கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி என்கிறார் .

மக்கள் இப்படி கேட்பார்கள் என்பதை உணர்ந்து தான் ,அப்போது எனக்கு அற்ப அறிவாக இருந்தது என்று பேருபதேசம் என்ற பகுதியில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் . .

வள்ளலாருக்கு  எப்போதும் ''உயர்ந்த அருள் ஞான அறிவு தான்'' .
மக்களுக்கு நம்பிக்கை வர வேண்டும் என்பதற்காக அப்படி சொல்லுகின்றார் .

நமசிவாய என்பதும் சிவாயநம என்பதும் கடவுள் அல்ல .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் படைக்கப்பட்ட பஞ்ச பூதகருவிகள் .அதேபோல் நம்முடைய உடம்பும பஞச பூத கருவிகள் .

உடம்பிற்குள் இருந்து உடம்பை இயக்கும் ஆன்மா தான் கடவுளின் ஏக தேசம் ,கடவுளின் குழந்தைகள் என்பதை தெரியப் படுத்துகின்றார் .

அதற்காகத்தான் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கிறார்

இன்னும் விரிக்கில்  பெருகும்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

மகா ஆத்மாக்கள் !

மகா ஆத்மாக்கள் !

இந்த உலகத்தில் மக்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைவாக ''மகா ஆத்மாக்கள் '' நிறை பேர் இருக்கின்றார்கள்.

அந்த மகா ஆத்மாக்கள் இறைவனின் அருளைப் பெற்று பல நல்ல காரியங்களை மறைமுகமாகச் செய்து கொண்டு வருகின்றார்கள் ..

அவர்களின் தூண்டுதலால் ,அவர்களுடைய ஆசிர்வாதத்தால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நாட்டில் பல நல்ல தலைவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள் .

அவர்கள் மறைந்தாலும் அடுத்து புதிய ஆத்மாக்கள்  வந்து கொண்டே இருப்பார்கள்.எனவே மக்கள் எதையும் நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கு பக்குவம் கொடுத்து அவர்களைத் தனித்து நின்று,மக்களுக்கு நன்மையைக் காட்டி  செயல்பட வைப்பதுதான் ''இறை அருள்'' ஆற்றலின் வேலைகளாகும்.

ஆனால் அந்த மனிதர்கள் தன்னுடைய அறிவு ஆற்றலும்,திறமையும் எதனால் வந்தது என்று தெரியாமல்,சொல்லத் தெரியாமல்,மக்களுக்கு போதிக்காமல் மரணம் அடைந்து மறைந்து போகின்றார்கள்.

மகா ஆத்மா காந்தி !

அந்த உண்மையைத் தெரிந்தவர் யார் என்றால் ? நமது நாட்டிலே பிறந்து வாழ்ந்து நமது நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்கள்.

அவர் சொல்லுவார் ,நான் எதை செய்தாலும் என்னுடைய ''ஆத்மா'' எதை செய்யச் சொல்லுகின்றதோ அதைத்தான் செய்வேன் என்பார் .அதனால்தான் அவருக்கு சாதாரண ஆத்மா என்று பெயர சொல்லாமல் ''மகா ஆத்மா'' என்று பெயர் வந்தது .

அதே ஆத்மா எல்லா உடம்பிலும் உள்ளது.

எனவே மனிதர்களாக பிறவி எடுத்த நாம் மனிதர்களை பின் தொடராமல் உண்மையான இறைவனை தொடர்பு கொள்ளவேண்டும்.ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

அந்த உண்மையான இறைவன் யார் ?>என்பதை உலகுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் வள்ளல்பெருமான்.

அந்த இறைவன்தான் ;--''அருட்பெருஞ்ஜோதி'' என்பதாகும் அந்த ஜோதியின் தனிப் பெருங் கருணையால்தான் உந்த உலகமும் ,உலகில் உள்ள பொருள்களும் ,ஆன்மாக்களும் அதனால் தோன்றும் உயிர்களும் வாழ்ந்து கொண்டு உள்ளன் .

நாம் தொடர்பு கொள்ள வேண்டியது;--தாயாகவும் தந்தையாகவும் இருந்து நம்மைத் தாங்கிக் கொண்டு உள்ள இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அந்த ஒளிதான் சிற்று அணு வடிவமாக நம்முடைய தலைப்பாகத்தில் உள் ஒளியாக இருந்து,நம்முடைய உயிரையும் உடம்பையும்,இயங்க வைத்து  இயக்கிச் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் உண்மையான தெய்வம்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே 
நினைமின்கள் சுகம் பெற விழைவீர் 
.நீதி கொண்டு உரைத்தேன் நீவீர் மேலே ஏறும் வீதி 
மற்றைய வீதிகள் யாவும் கீழ் செல்லும் வீதி !
 .
.என்பதை உணர்ந்து சன்மார்க்க வீதியில் சென்றால் நமக்கு அருள் அனுபவம் கிடைக்கும் ,,என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .
உண்மையை  மக்களுக்கு பறை சாற்றி உள்ளார் .
தேடுங்கள் தேடுங்கள் உள்ளே தேடுங்கள் மகா ஆத்மாக்களாக மாறுங்கள்..எல்லாம் அருள் ஆற்றலும்  கிடைக்கும்.

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம் 
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !

அருள் சுகம் ஒன்றே அரும் பெறல் பெருஞ் சுகம் 
மருட் சுகம் பிற என் வகுத்த மெய்ச்சிவமே !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

மகா ஆத்மாக்கள் !

மகா ஆத்மாக்கள் !

இந்த உலகத்தில் மக்கள் கண்களுக்குத் தெரியாமல் மறைவாக ''மகா ஆத்மாக்கள் '' நிறை பேர் இருக்கின்றார்கள்.

அந்த மகா ஆத்மாக்கள் இறைவனின் அருளைப் பெற்று பல நல்ல காரியங்களை மறைமுகமாகச் செய்து கொண்டு வருகின்றார்கள் ..

அவர்களின் தூண்டுதலால் ,அவர்களுடைய ஆசிர்வாதத்தால் ஒவ்வொரு காலக் கட்டத்திலும் நாட்டில் பல நல்ல தலைவர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள் .

அவர்கள் மறைந்தாலும் அடுத்து புதிய ஆத்மாக்கள்  வந்து கொண்டே இருப்பார்கள்.எனவே மக்கள் எதையும் நினைத்து வருத்தப்பட வேண்டியதில்லை.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆன்மாக்களுக்கு பக்குவம் கொடுத்து அவர்களைத் தனித்து நின்று,மக்களுக்கு நன்மையைக் காட்டி  செயல்பட வைப்பதுதான் ''இறை அருள்'' ஆற்றலின் வேலைகளாகும்.

ஆனால் அந்த மனிதர்கள் தன்னுடைய அறிவு ஆற்றலும்,திறமையும் எதனால் வந்தது என்று தெரியாமல்,சொல்லத் தெரியாமல்,மக்களுக்கு போதிக்காமல் மரணம் அடைந்து மறைந்து போகின்றார்கள்.

மகா ஆத்மா காந்தி !

அந்த உண்மையைத் தெரிந்தவர் யார் என்றால் ? நமது நாட்டிலே பிறந்து வாழ்ந்து நமது நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகாத்மா காந்தி அவர்கள்.

அவர் சொல்லுவார் ,நான் எதை செய்தாலும் என்னுடைய ''ஆத்மா'' எதை செய்யச் சொல்லுகின்றதோ அதைத்தான் செய்வேன் என்பார் .அதனால்தான் அவருக்கு சாதாரண ஆத்மா என்று பெயர சொல்லாமல் ''மகா ஆத்மா'' என்று பெயர் வந்தது .

அதே ஆத்மா எல்லா உடம்பிலும் உள்ளது.

எனவே மனிதர்களாக பிறவி எடுத்த நாம் மனிதர்களை பின் தொடராமல் உண்மையான இறைவனை தொடர்பு கொள்ளவேண்டும்.ஆன்மாவைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

அந்த உண்மையான இறைவன் யார் ?>என்பதை உலகுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் வள்ளல்பெருமான்.

அந்த இறைவன்தான் ;--''அருட்பெருஞ்ஜோதி'' என்பதாகும் அந்த ஜோதியின் தனிப் பெருங் கருணையால்தான் உந்த உலகமும் ,உலகில் உள்ள பொருள்களும் ,ஆன்மாக்களும் அதனால் தோன்றும் உயிர்களும் வாழ்ந்து கொண்டு உள்ளன் .

நாம் தொடர்பு கொள்ள வேண்டியது;--தாயாகவும் தந்தையாகவும் இருந்து நம்மைத் தாங்கிக் கொண்டு உள்ள இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அந்த ஒளிதான் சிற்று அணு வடிவமாக நம்முடைய தலைப்பாகத்தில் உள் ஒளியாக இருந்து,நம்முடைய உயிரையும் உடம்பையும்,இயங்க வைத்து  இயக்கிச் செயல் பட்டுக் கொண்டு இருக்கும் உண்மையான தெய்வம்.

ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி தன்னையே 
நினைமின்கள் சுகம் பெற விழைவீர் 
.நீதி கொண்டு உரைத்தேன் நீவீர் மேலே ஏறும் வீதி 
மற்றைய வீதிகள் யாவும் கீழ் செல்லும் வீதி !
 .
.என்பதை உணர்ந்து சன்மார்க்க வீதியில் சென்றால் நமக்கு அருள் அனுபவம் கிடைக்கும் ,,என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் .
உண்மையை  மக்களுக்கு பறை சாற்றி உள்ளார் .
தேடுங்கள் தேடுங்கள் உள்ளே தேடுங்கள் மகா ஆத்மாக்களாக மாறுங்கள்..எல்லாம் அருள் ஆற்றலும்  கிடைக்கும்.

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்று எல்லாம் 
மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச்சிவமே !

அருள் சுகம் ஒன்றே அரும் பெறல் பெருஞ் சுகம் 
மருட் சுகம் பிற என் வகுத்த மெய்ச்சிவமே !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

நாம் வணங்கும் தெய்வங்கள்!

நாம் வணங்கும் தெய்வங்கள்!
நாம் பிறந்ததில் இருந்து பேசாத தெய்வங்களையே வழிபாடு செய்கின்றோம்..அவற்றிற்குப் உணவைப் படைக்கின்றோம்.
அந்த தெய்வங்கள் மக்களுக்கு என்ன செய்து கொண்டு உள்ளது என்பதே தெரியாமல்.அறியாமையில் அலைந்து கொண்டு பொருளை அழித்துக் கொண்டு உள்ளோம்.
இந்த உலகில் பேசும் தெயவங்கள் நிறைய உள்ளன.அவர்கள் தான் மனித உயிர்கள் மனித தெயவங்கள்,.அவர்கள் பட்டினி,பசி,வறுமை,ஏழ்மை பிணி போன்ற துன்பங்களில் வாடி வதைந்து கொண்டு உள்ளார்கள்.
அவர்களுக்கு உதவி செய்யுங்கள் அதுதான் கடவுள் வழிபாடாகும் என்கின்றார் வடலூர் வள்ளலார்..
பேசாத கல்,மண்,வெள்ளி,தங்கம்,போன்ற பேசாத பொம்மை தெய்வங்களுக்கு கொண்டு போய் பொருள்களைக் கொட்டுகிறீர்கள்.,எந்த தெய்வமாவது அவற்றை பெற்றுக் கொள்கிறதா? படையல் படைக்கின்றீர்கள் ,எந்த தெய்வமாவது அவற்றை உன்னுகின்றதா ? சிந்திக்க வேண்டும்.
பசித்த ஏழைகளுக்கு உணவு அளிப்பதே கடவுள் வழிபாடு என்றார்.,உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்கின்றார்/
உங்கள் குடும்பத்தில் உள்ள துன்பங்கள், துயரங்கள்,அச்சம்,பயம்,பிணி, போன்ற தீராத பிரச்சனைகள் உண்டானால்,அவற்றைத் தீர்க்கும் ஒரே வழி தான் ,ஜீவ காருண்யம் என்னும் பசிப்பிணியைப் போக்குவதாகும்..
பேசாத தெய்வங்களுக்கு கொண்டு போய் கொட்டுவதால் எந்தபயனும் இல்லை.பேசும் தெயவங்களின் வயிற்றில் கொட்டுங்கள்.உங்களின் பிரச்சனைகள் யாவும் தீர்ந்துவிடும்..
இதை நான் சொல்லவில்லை, வள்ளலார் சொல்லுகின்றார்.கருணை உள்ள உள்ளத்திலே கடவுள் வாழ்கின்றார்.என்பதை முற்றும் அறிந்த அருளாளர்,மரணத்தை வென்ற வள்ளலார் ,கடவுள் நிலை அறிந்து அம் மயம் ஆனவர் சொல்லுகின்றார்.
எங்கே கருணை உள்ளதோ அங்கே அருள் உண்டாகும்.அந்த அருள்தான் உங்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றும்.
சிந்திப்பீர் செயல்படுவீர்..
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஆன்ம நேய உடன் பிறப்புகளே வந்தனம்

ஆன்ம நேய உடன் பிறப்புகளே வந்தனம்

மேலே ஒரு நண்பர் அனைவரையும் குறை சொல்லி பேசுகிறார் அவரும் நம்முடைய சோதரர் தான்

உலகில் உள்ள ஆன்மீக நூல்களை எல்லாம் படித்து உள்ளீர்களா என்று கேட்கின்றார் .

அவர் படித்து இருந்தால் எது உண்மை எது பொய் என்பது அவருக்கு தெரிந்த இருக்கும் .

அது ஒரு புறம் இருக்கட்டும் .

வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் முழுவதும் படித்தாலே போதும் .எல்லா அருளாளர் எழுதிய உண்மைக்கு புறம்பான கருத்துக்களை எல்லாம் வள்ளலார் சொல்லி விட்டார் .

எல்லா நூல்களில் உள்ள கருத்துக்கள் யாவும் திரு அருட்பாவில் உள்ளது .

திரு அருட்பாவில் உள்ள உண்மை கருத்துக்கள் வேறு நூல்களில் எதிலுமே இல்லை எனபதை ,அன்பர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் .

கதிர்வேல் எங்கோ போய் விட்டார் அவரைக் காணோம் என்று சொல்லி உள்ளார் .

நான் எங்கும் போகவில்லை உங்கள் உடன் தான் உள்ளேன் .

யாரையும் குறை சொல்லி பேசுவதை அவ்வளவு நல்லது அல்ல .

எல்லோருக்கும் எல்லாம் தெரிய வேண்டிய அவசியம் இல்லை .

உண்மை ஒழுக்கம் நேர்மை அன்பு தயவு கருணை இருந்தால் போதும் .அதுவே அவர்களை மேலே ஏற்றி விடும் .

அவர்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் ஏற்றுக் கொள்வார் .

வள்ளலார் நாம் எல்லோருக்கும் பொதுவாக ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார் அவற்றை ஊன்றி படியுங்கள் . . .

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே

உலகியலீர் இது வரையும் உண்மை அறிந்திலிரே

 விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க

மெய் நெறியைக் கடைபிடித்து மெய் பொருள் நன்கு உணர்ந்து

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்

இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

 என்று சொல்லுகின்றார் வள்ளலார் .

எனவே உங்கள் பேச்சை கேட்பதா ? வள்ளலார் சொல்லியதை கேட்பதா ?

நீங்களே பதில் சொல்லுங்கள் .

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார .

இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது , அசுத்த மாயா காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள் .

சுத்த மாயா காரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை .சன்மார்க்கமும் இல்லை .

சன்மார்க்கம் இருந்து இருந்தால் அனுபவித்து அறியாத அனுபவமும் ,கேட்டு அறியாத கேள்வியும் நாம் கேட்டு இருப்போம் என்கிறார் வள்ளலார் .

மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்து இருப்பார்கள் .ஆதலால் கேட்டு அறியாத கேள்விகளைக் கேட்கும் படி ஆண்டவா் செய்தது இத்தருணமே !

ஆதலால் இத்தருணம் . . . இக்காலமே சன்மார்க்க காலம் என்று தெளிவாக உலக மக்களுக்கு தெரிவிக்கின்றார .

வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள் பழைய குப்பைகளை பின் பற்றிக் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் உண்மைகளை தெரிந்து கொள்வது மிகவும் சிரமம் .

 ஆத்திரம் அடையாமல் கோபம் கொள்ளாமல் வள்ளலார் சொல்லி உள்ள கருத்துக்களை நன்கு பின் பற்றுங்கள் ,அதில் உண்மைகள் தானே விளங்கும் .

வள்ளலார் இருதியாக உபதேசித்த பேர்உபதேசம் மிகவும் முக்கிய மானது .அதை பல முறை படியுங்கள் அப்போது தான் அதில் உள்ள உண்மையான விளக்கம் யாவும் தெரிந்து கொள்ளலாம் .

நீங்கள் எப்போதும் என்னை தொடர்பு கொள்ளலாம் .சந்தேகம் தெளிவு பெறலாம் .நேரில் கலந்தும் பேசலாம் .

கருத்து பரிமாற்றம் தானே !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

சமயங்கள் மதங்கள் !

சமயங்கள் மதங்கள் !
எல்லா சமயங்களும் மதங்களும் மக்களுக்கு நல்லது தான் சொல்ல தோன்றியது .
ஆனால் மனித உயிர்களை பிரித்து விட்டது .ஆன்ம நேயத்தை அழித்து விட்டது .
இன்று உலகில் நடக்கும் போட்டி, பொறாமை ,வஞ்சகம் ,சூது ,எல்லைத் தகராறு ,தீவிர வாதம் ,பயங்கரவாதம் ,போன்ற தீய செயல்கள் அனைத்திற்கும் சமயங்களும் மதங்களுமே காரண காரியமாக உள்ளது என்பதை எவரும் மறுக்க முடியாத உண்மை .
மனித இனத்தை தொழில் ரீதியாக சாதியை பிரித்து வேறு படுத்தி ஒற்றுமையை குகுலைத்தது .
சாதி சமய மதங்களின் குற்றங்களை இன்னும் நிறைய சொல்லி கொண்டே போகலாம் .
வள்ளலார் வந்து தான் சாதி சமயம் மதங்கள் செய்த குற்றங்களை தெளிவாக விளக்கி உள்ளார் .
சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி !
எங்குலம் எம் இனம் என்பது தொண்ணூற்று ஆறு அங்குலம் என்ற அருள் அருட்பெருஞ்ஜோதி !
சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி !
என்று ஆயிரக்கணக்கான பாடல்களின் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் ,
மேலும்
சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !
என்று இந்து மதத்தை மட்டும் அல்ல .உலகில் உள்ள எல்லா மதங்களையும் சாடுகின்றார .
மேலும் கடவுளை வணங்குவதற்கும் நேசிப்பதற்கும் .அருளைப் பெறுவதற்கும் .சாதி சமயம் மதங்கள் தான் முக்கிய தடையாக உள்ளன .
சாதி சமய மதப் பற்று உள்ளவர்களுக்கு எக்காலத்திலும் இறைவன் தொடர்பு சத்தியமாக கிடைக்காது
என்பதை அறிவு உள்ளவர்கள் அறிந்து புரிந்து தெரிந்து கொண்டால் நல்லது .
இது சாதி சமய மதங்களை சாடுவது இல்லை .அதனால் உண்டாகும் தீமைகளை எடுத்து உரைப்பதாகும் .
நாம் எல்லோரும் இறைவன் குழந்தைகள் .ஆன்ம நேயம் எப்போதும் விளகி விடக்கூடாது
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

உடல் உறுப்புக்களை தானம் செய்யலாமா ?


உடல் உறுப்புக்கள் தானம் செய்யலாமா ?

உடல் உருப்புக்களை மரணம் அடைந்த பிறகு சன்மார்க்கிகள் தானம் செய்யலாமா என்ற கேள்வி ஒரு  நண்பர் கேட்டு உள்ளார் !

நல்ல கேள்வி

நாம் என்னும் ஆன்மா வாழ்வதற்கு மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட "வாடகை " வீடு தான் உடம்பும் அதில் உள்ள உருப்புக்களும் ஆகும் .

வாடகை வீட்டில் குடி இருக்கும் நாம் .வீட்டில் உள்ள பொருள்களை பிரித்து  மற்றவர்களுக்கு கொடுத்தால் .வீட்டுக்காரன் சும்மா விடுவானா ?

வாடகை வீட்டில் குடி இருக்க வரும் போதே ,வீட்டின் உரிமையாளர் வீட்டில் என்ன என்ன உள்ளது என்பதை பட்டியல் போட்டு தெரிவித்து எழுத்து மூலமாகவும் அல்லது வாய் பேச்சு மூலமாகவும் தெரிவித்து வீட்டை ஒப்படைக்கின்றார .

வீட்டை காலி செய்து வேறு வாடகை வீட்டிற்கோ அல்லது சொந்த வீட்டிற்கோ செல்லும் போது ,

வீட்டின் உரிமையாளர் என்ன செய்வார் .

வாடகை விடும் போது வீட்டில் என்ன என்ன இருந்ததோ அவைகள் அப்படியே இருந்தால் ,ஒன்றும் சொல்ல மாட்டார் .

எதாவது பழுது அடைந்து இருந்தால் அதை சரிசெய்து கொடுத்து விட்டு போங்கள் என்பார் .அல்லது அதற்கு உண்டாகும் செலவுத் தொகையை கொடுத்து விட்டு வீட்டை காலி செய்யுங்கள் என்று சொல்லுவார் .

இதுதான் உலகியலில்  வாடகை வீட்டில் குடி இருக்கும் நடை முறை செயல்களாகும் .

அதேபோல் தான் நாம் உடம்பு என்னும் வாடகை  வீட்டில் குடி இருக்கிறோம் .

வாடகை வீடு என்னும் உடம்பின் உருப்புகளை நாம் தானமாக கொடுக்க நமக்கு உரிமை இல்லை என்பதை சுத்த சன்மார்க்கிள் தெரிந்து கொள்ள வேண்டும் .

நாம் உழைத்து சம்பாதித்த பொருளை தானமாக கொடுக்கலாம் .

அடுத்தவருக்கு உரிமை உள்ள பொருளை எடுத்து தானமாக கொடுப்பது குற்றமாகும் .

 அருட்பெருஞ்ஜோதி ஆண்டவா் ஏற்றுக் கொள்ள மாட்டார் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்