சனி, 30 அக்டோபர், 2021

அழிஉடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்!

 *அழியுடம்பை அழியாமை ஆக்கும் வகை அறியீர்*! 


வள்ளலார் பாடல்!


எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்

எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று


கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்

கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்


ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்

*அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்*


உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே.! 


*மேலே கண்ட பாடல் ரொம்பவும் முக்கியமான பாடல் எளியதமிழில் பதிவு செய்துள்ளார் அதிலே தெளிவான விளக்கம் உள்ளன அப்பாடலை ஊன்றி கவனித்து படித்து தெரிந்துகொண்டு மனிதன் வாழ்க்கையில் கடைபிடித்தால்  கடை தேறலாம்*


*உலகம் தோன்றி  மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே இன்றுவரை உலகத்தைப் படைத்த கடவுளை எவரும் அகக்கண்களிலும் காணவில்லை புறக்கண்களிலும் காணவில்லை*.

அவருடைய உண்மையான நாம ரூப சொரூபம் என்னவென்றும் எவரும் தெரிந்துகொள்ளவில்லை*.


*வள்ளலார் ஒருவர்தான் கடவுளைக் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் கலந்துகொண்டேன் என்கிறார்* 


*சமய மதவாதிகள்*


*கடவுளைப்பற்றி சொல்லவந்த அருளாளர்கள் யாவரும் சமய மதவாதிகளாகவே ஆதிக்கம் செலுத்தி வந்து உள்ளார்கள். அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சாதி சமய மதங்களின் பொய்யான வகை வகையான சாத்திரங்கள் தோத்திரங்கள் சம்பிரதாயங்கள் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் போன்ற உலகாச்சார விஷயங்களை  எடுத்து எடுத்து உரைத்து உரைத்து ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு விதமான கடவுள்களை அறிமுகப்படுத்தி உள்ளார்கள். மேலும் அக் கடவுள்களுக்குண்டான  சாத்திரங்கள் மற்றும் சடங்குகளைப் படைத்துள்ளார்கள்*


மேலும் *கடவுள்களைப் பிரித்ததுபோல் கடவுள் இருக்கும் இடங்களையும் பிரித்து வைத்துள்ளார்கள் ஆலயங்கள் கோயில்கள் சர்ச்சுக்கள் மசூதிகள் போன்ற பலப்பல முக்கியமான நம்பகத்தன்மையான இடங்களைப் தோற்றுவித்து அங்கு மட்டுமே கடவுள் இருப்பதாக சொல்லி மக்களை நம்ப வைத்துவிட்டார்கள் மேலும் அக்கடவுளின் பெயரில்  நம்பிக்கையை உண்டாக்கி சாதி சமயம் மதங்களின் பெயரால் மக்களையும் பிரித்து ஊர் ஊராக  தெருத் தெருவாக அலைய வைத்து விட்டார்கள்*. 


*இந்த உண்மை அறிந்தவர் எவரோ அவரே சுத்த சன்மார்க்கி*


*இந்த உண்மையை அறிவு தெளிவுடன் தெரிந்து அறிந்து புரிந்து அந்த சாதி சமய மதங்களின் சாத்திரக் குப்பைக்குழியில் இருந்து தப்பித்து மேலே ஏறி வெளியே வந்து மேலும் அச்சிக்கலில் இருந்து விடுபட தெரிந்தவர் எவரோ அவரே சுத்த சன்மார்க்கத்தின் தரத்திற்கு ஒத்தவராகும்* *அவரே உண்மை அன்பால் கடவுளைத் தொடர்புகொள்ள தகுதிபெற்றவராகும்*


*வள்ளலார் பாடல்*


சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

சாத்திரக்குப் பைகள்எல்லாம் பாத்திரம்அன் றெனவே


ஆதியில் என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால் இன் றுண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்


ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்

உற்றேன் சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்


சோதிநடத் தரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவைஉள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.! 


மேலே கண்ட பாடலில் உண்மை நிலை உணர்ந்து மக்களுக்கு உண்மையைத் உணர்த்துகின்றேன் என்கிறார் வள்ளலார்.


*நானும் உங்களைப்போன்றுதான் இருந்தேன் இப்போது என்னை ஆண்டவர் ஏறாநிலைமிசை ஏற்றியுள்ளார்*.

ஏதனால் என்றால் ? எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபமாகும்.

நீங்களும் என்னைப்போன்று விட்டுவிட்டீர்களானால் பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம் ஆகையினால் மேலே ஏறி வாருங்கள்  என்கின்றார்


*இந்த உலக மக்களுக்கு தெய்வம் ஒன்றுதான் என்று புரியவைக்க தெரியாமல் பல தெய்வங்கள் உண்டு என்பதை குருடன் யானையைத் தொட்டுபார்த்து சொன்ன கதைப்போல் உளரிக் கொட்டி உள்ளார்கள் முன்பு உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டு கொண்டவர்கள் என்கிறார் வள்ளலார்*.


*உலகில் வாழும் மக்கள் மீது எந்த குற்றமும் இல்லை அவர்கள் எல்லாம் ஒன்றும் தெரியாத அறியாமையில் வாழும் அப்பாவிகள். மக்களை திசை திருப்பியவர்கள் உண்மைக்கு புறம்பான மோசமான கற்பனை கதைகளைச் சொல்லி வழிகாட்டியவர்கள். அவர்கள்தான் சாதி சமய மதங்களை தோற்றுவித்த அருளாளர்கள் என்னும் ஞானிகளாகும்*


*உண்மை தெரியாதவர்கள்*


*மனித தேகம் எடுத்தவர்கள் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தொடர்புகொண்டு அருள் பெற்று  எக்காலத்தும்  அழியாமல் வாழும் வாழ்க்கையைப் பெறவேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி சட்டமாகும்.*


*ஆனால் முன்பு வழிகாட்டியவர்கள் பிறப்பு இறப்பு என்பது இயற்கை என்றும் இறந்தால் பாவ புண்ணியத்திற்கு தகுந்தாற்போல் ஆன்மாக்கள் சொர்க்கம் நரகம் கைலாயம் வைகுண்டம் பரலோகம் சத்தியலோகம் போன்ற இடங்களுக்கு சென்றுவிடும் என்றும் உடம்பு அழிந்துவிடும் ஆன்மா அழியாது என்றும் சொல்லிவைத்து அதற்குத் தகுந்தாற்போல் பொய்யான கதைகளையும் எழுதிவைத்துவிட்டு சென்றுவிட்டார்கள்*


*கலையுரைத்த கற்பனைக் கதைகளை  வள்ளலார் ஏற்றுக்கொள்ளவில்லை*.


*மக்களுக்கு உண்மையான கடவுளைக்காட்டி உண்மையைத் தெளிவாக எடுத்து சொல்லி புரியவைத்து சாகாக்கல்வி என்னும் புதிய கல்வி முறையை கற்றுகொடுத்து மரணத்தை வெல்லும் வழியைக் காட்டவேண்டியே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்தான் வள்ளலார் என்பதை நாம் தெரிந்து கொள்ள. வேண்டும்.*


*உண்மை சொல்ல வந்தேன் என்று உண்மைசொல்ல புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை என மிகவும் வேதனைப்படுகிறார்.* 


*ஏன் என்றால் சன்மார்க்கத்தில் உள்ளவர்களே இன்னும் சாதி சமய மதங்களை விடமுடியாமல் தவித்துக்கண்டு உள்ளார்கள்.அந்த அளவு அவர்கள் ஆன்மாவை அறியாமை என்னும் திரைகள்  மறைத்துக்கொண்டுள்ளது. திரைகள் விலகினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியும். தொடர்பு கொண்டு அருள் பெற்றால் மட்டுமே அழியுடம்பை அழியாமல் ஆக்கும் வகையைத் தெரிந்து கொள்ள முடியும்.*


*சாதி சமய மதக் கொள்கைகளை விடாமல் அவரவர்கள் விருப்பம்போல் திருஅருட்பா பாராயணம் செய்தாலும் வடலூர் சென்று ஜோதிதரிசனம் கண்டாலும் புறவழிபாடு செய்தாலும் மற்றும் எதைச்செய்தாலும் மேலும் மற்றவர்கள் பாராட்டவேண்டும் என்பதற்காக  விளம்பரத்திற்காக போட்டிபோட்டுக்கொண்டு  இடைவிடாது ஜீவகாருண்யம் செய்தாலும் மரணத்தை வெல்லுவது கடினம் சிரமம் என்பதை உணர்ந்து தங்களை மாற்றிக் கொண்டால் வெற்றி நிச்சயம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் துணையாக இருந்து காப்பாற்றுவார்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

செவ்வாய், 26 அக்டோபர், 2021

உண்மையான தாய் தந்தை !

 *உண்மையான தாய் தந்தை !* 


*வள்ளலார் பாடல்!*


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்

தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்


வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்

மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்


காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்

கருணைநிதித் தெய்வம் முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்


சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்

*சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.!* 


*தாய் தந்தையர் எனும் இரண்டும் இல்லாமல் உயிரும் உடம்பும் தோன்றாது* 


*தாய் தந்தை இணைந்தால் குழந்தை உண்டாகும் என்பது அனைவரும் அறிந்த்தே.தாயையும் தந்தையும் படைத்தவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்*   

அதனால்தான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்கிறார்.


*ஆன்மாவை அனுப்பியவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதால் தந்தையாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.உயிரையும் உடம்பையும்  கொடுப்பதால் தாய் என்று ஏற்றுக்  கொள்ள வேண்டும்*.


*நமது கண் கண்ட தெய்வம் மனித உருவில் உள்ள தாய் தந்தை என்பவர்களாகும்*. *நமது கண்களுக்குத் தெரியாமல் நமது தாயையும் தந்தையும் படைத்தவர் தான் உண்மையான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.* 


*ஒரு ஆண் உருவத்தையும் ஒரு பெண் உருவத்தையும்  படைத்தால் தான் ஆன்மா வேறு ஒரு உருவத்தை உருவாக்கமுடியும்.இவை எண்ணிப்பார்க்க முடியாத அதிசயம் அற்புதம் எவராலும் செய்ய முடியாத  அற்புத செயலாகும். இதுதான் அருள் அற்புத செயலாகும்* 


*நாம் தாய் தந்தை என்று சொல்லுவது பஞ்ச பூத அணுக்களால் பின்னப்பட்ட ஓர் உபகார கருவிகளேயாகும்.அதாவது உடம்பு என்னும் வீடாகும். உபகார கருவிகள் உண்மையான தாய்தந்தை ஆகாது.* 


*ஒரு குழந்தை உண்டாக ஆண் சுக்கிலம் பெண் சுக்கிலம் என இரண்டுவிதமான வீரியமான உணர்ச்சியுள்ள சுக்கிலம் தேவைப்படுகிறது*. 

*சுக்கிலத்தால் உண்டாகும் உயிர் உடம்பு என்னும்  பொருள்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஆன்மாவை விட்டு விலகிவிடும்*.

*ஆதலால் அவை நிரந்தரம் இல்லை. அந்த சுக்கிலம் உணவினால் உண்டாகும்  வீரியமுள்ள உணர்ச்சியைத் தூண்டும் திரவமாகும்* *சுக்கிலத்தால் உண்டாகும் எந்த பொருளும் நிலைபெறாது.*


*அழிஉடம்பை அழியாமை ஆக்கும் வகையை கண்டுபிடித்தவர் வள்ளலார்* 


*ஆன்மா மனித தேகம் எடுத்து உண்மையான தாய் தந்தையரைத் தொடர்புகொண்டு அருள் பெற்றால் மட்டுமே அழியுடம்பை அழியாமல் ஆக்கும் வகையை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள முடியும்.*  


*வள்ளலார் பாடல் !* 


அச்சையும் உடம்பையும் அறிவகை அறியீர்

அம்மையும் அப்பனும் ஆர்எனத் தெரியீர்


பச்சையும் செம்மையும் கருமையும் கூடிப்

பலித்தநும் வாழ்க்கையில் பண்பொன்றும் இல்லீர்


பிச்சையிட் டுண்ணவும் பின்படு கின்றீர்

பின்படு தீமையின் முன்படு கின்றீர்


இச்சையில் கண்மூடி எச்சகம் கண்டீர்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே! 


மேலே கண்ட பாடலில்  உயிர் வந்தவழியும் உடம்பு வந்த வழியும் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள்.உண்மையான அம்மாவையும் அப்பாவையும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றீர். பல வடிவங்களில் வண்ணங்களில் உடம்பு என்னும் உருவங்கள் தோன்றுகின்றன என்பதையும் அறியீர்கள்.


*நமது உடம்பின் உள்ளே சிரநடு சிற்சபையில் உள் ஒளியாக நம்மை இயக்கிக் கொண்டு உள்ள மெய்ப்பொருளான ஆன்மாக்களின் வண்ணம் வேறு வடிவம் வேறு அல்ல. எல்லா ஆன்மாக்களும் ஒரேத் தன்மை உடையது -என்பதையும் அறிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள்*

*ஆகையால்தான் உடம்பின் பல வடிவங்களையும் வண்ணங்களையும்  பார்த்து உயிர் இரக்கம் இல்லாமல் அன்பு தயவு கருணை இல்லாமல் துன்பப்படும் ஜீவன்களுக்கு பிச்சையிட்டு உண்ணவும் மனம் இல்லாமல் பின்னாடி வரும் தீமைகளுக்கு முன்பட்டு  வாழ்கின்றீர் என்கிறார்.


*உயர்ந்த அறிவுள்ள மனிதர்களாகிய நம்மவர்களைப் பார்த்து அறிவு விளக்கம் பெறாமல் வாழ்கின்ற பித்துலகீரே என்கின்றார்* *பித்துலகீரே என்றால் பைத்தியம் பிடித்தவர்களே என்பது பொருளாகும்*


*பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்க வந்தவர்தான் வள்ளலார்* 


*அனைத்து பைத்தியங்களையும் குணப்படுத்த ஒரே மருந்துதான் அதுதான் ஞானமருந்து என்னும் அருள் மருந்தாகும்* *அதாவது அருள் அமுதமாகும்.*


அந்த அருள் அமுதம் ஒவ்வொரு ஆன்மாவிலும் உள்ளது அவற்றை எடுக்க முடியாமல்  ஏழு விதமான மாயா வண்ணத் திரைகளால் மறைக்கப்பட்டுள்ளது. அத்திரைகளை நீக்கும் வழியைக் காட்ட வந்தவர்தான் வள்ளலார்.


*வள்ளலார் பாடல்!*


திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே

திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ


உருக்கிஅமு தூற்றெடுத்தே உடம்புயிரோ டுளமும்

ஒளிமயமே ஆக்குறமெய் உணர்ச்சிஅரு ளாயோ


கருக்கருதாத் தனிவடிவோய் நின்னை என்னுட் கலந்தே

கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ


செருக்கருதா தவர்க்கருளும் சித்திபுரத் தரசே

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


*ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகளின் கதவுகளை திறக்க நாம் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரே ஒருத்தர் உள்ளார் அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*.


அவரைத் தொடர்பு கொள்ள  இரண்டு எளிய வழிகளை காட்டியுள்ளார் வள்ளலார்.அவை ஜீவகாருண்யம் என்னும் (உயிர்இரக்கம்) பரோபகாரம்.

சத்விசாரம் என்னும் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களாகும்.

இவற்றை முழுமையாக கடைபிடிப்பவர்கள் எவரோ அவருடைய திரைகள் விலகி அருள் என்னும் நன்னிதி சுரந்து உடம்பும் முழுவதும் பரவி உயிர் உடம்பு முழுவதும் ஒளிமயமாகி இறைவனுடன் கலக்க வேண்டும்.

இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். 


*தாயாகவும் தந்தையாகவும் நம்மை பாதுகாக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வோம்* மரணத்தை வெல்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 24 அக்டோபர், 2021

சூட்சும விஞ்ஞானம் !

 சூட்சும விஞ்ஞானம் :

------------------------------------


1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.


2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.


3. நிலப் பிராண சக்தி உடலுக்கு உறுதியைத் தருகிறது.


4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.


5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.


6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.


7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.


8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.


9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராண சரீரம் குணப்படுத்துகிறது.


10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.


11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.


12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜீவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.


13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.


14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெருகும்.


15. நோயாளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.


16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.


17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.


18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது. 


19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்குச் சமம்.


20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.


21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.


22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.


23. வலி என்பது உடலின் மொழி. அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.


24. நிகழ்கால உணர்வுடன் இருக்கப் பழகுங்கள்.


25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.


26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.


27. விவசாய நிலத்தில் தாயின் கருவறையில் உள்ளதைப் போன்ற பிராணசக்தி உள்ளது.


28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.


29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.


30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.


31. அருவி நீரில் அதிக பிராண சக்தி உள்ளது.


32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.


33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.


34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.


35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரீரத்தின் கவசம் பெறுகிறது.


36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.


37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.


38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.


39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.


40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரீரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.


41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.


42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.


43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது. 


44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.


45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.


46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.


47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே. 


48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.


49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.


50. தூக்கம் என்பது விழிப்புணர்வு அற்ற தியானம்.

     தியானம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய தூக்கம்.


(கொஞ்சம் படித்துப் பாருங்களேன்! பிடிக்கவில்லை என்றால்  உடன் மனதிலிருந்தே நீக்கி விடுங்கள்! )

வியாழன், 21 அக்டோபர், 2021

பேருபதேசம் செய்த நாள் !

 *பேருபதேசம் செய்த நாள்!*


*மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 22-10-1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 ஆம்நாள் செவ்வாய்க்கிழமை காலை 8 எட்டு மணிக்கு  முதன் முதலாக சுத்த சன்மார்க்க கொடி கட்டிக்காட்டி நீண்ட உபதேசம் ஒன்றை வள்ளல்பெருமான் செய்து அருளினார்கள்*


*வள்ளல்பெருமானின் முடிந்த முடிபான   சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கொண்ட அவ் வுபதேசம் மகாஉபதேசம் பேருபதேசம் என வழங்கப்படுகின்றது.* *அந்த உபதேசத்தில் உள்ள கருத்துக்கள் ரொம்ப ரொம்ப முக்கியமான உண்மையான  புதிய ஆழமான வெளிப்படையான அனுபவம் நிறைந்த கருத்துக்களாகும்*

*அதில் உள்ள உண்மைக் கருத்துக்களை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் படித்து தெரிந்துகொண்டாலே போதும் திருஅருளைப் பெற்று துரிதமாக மேல்நிலைக்கு செல்ல வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை எனலாம்*


*அதில் உள்ள முக்கியமான கருத்துக்கள் !*


1. *இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டு இருக்காதீர்கள்.*


2. *இதுமுதல் சாலைக்கு ( வடலூருக்கு) இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மக்களுக்கு அருளை வழங்க வரப்போகின்றார்.*


3. *நீங்கள் எல்லவரும் நான் சொல்லியவாறு உண்மையான நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள்*


4. *நம்மை இயக்குகின்ற தெய்வத்தின் இயற்கை உண்மை நிலை என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*.


5. *ஆன்ம அறிவை விளக்கம் இன்றி  மூடிக்கொண்டு இருக்கின்ற அசுத்த மாயா திரைகளை ஒழுக்கத்தைக் கடைபிடித்து நீக்கி கொள்ள வேண்டும்  *சுத்த மாயா திரைகளை ஆண்டவர் வந்தவுடன்  நீக்கிவிடுவார்.*


6.  *அதுவரையில் நமது குறையை ஊன்றியும் தெய்வத்தை நினைத்தும் ஸ்தோத்திரம் செய்தும் இடைவிடாது விசாரம் செய்து கொண்டும் இருக்கவேண்டும்.*


7. *விசாரம் என்பது பரம் அபரம் என இரண்டு வகையாக உள்ளது. பரலோக விசாரமே உண்மை விசாரமாகும் ஒருஜாம நேரம் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்.* *அவ்வாறு விசாரித்துக் கொண்டு இருந்தால் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார்*


8. *தியானம் தவம் யோகம் முதலிய சாதனங்கள் எதுவும் செய்ய வேண்டாம். உயிர் இரக்கம் அன்பு தயவு கருணை வரவைத்துக் கொள்ளவேண்டும்*


9. *நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம்.*


10. *கைலாயபதி. வைகுண்டபதி. சத்தியலோகாதிபதி. சொர்க்கம். நரகம் என்பவைகளில் எல்லாம் நம்பிக்கை வைக்க வேண்டாம்.* *எல்லாம் கற்பனையே*


11. *இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபங்கள் மனிதனுக்கு உள்ளதுபோல்  கை கால் உடம்பு போன்ற உருப்புக்கள்  வைத்த சிற்ப உருவங்களை (அதாவது ஜட  தத்துவ உருவ  கடவுள்களை) வணங்கவோ வழிபடவோ வேண்டாம்*.


12. *சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும்.வேதாந்தம்.சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சயம் வைக்க வேண்டாம்.*


13. *அகத்தில் உள்ள மெய்ப்பொருள் உண்மையை பொய்யாக  புறத்தில் கலையுரைத்த கற்பனை கலைகளை காட்டியவன் ஒருவல்லவன்* *அவன் பூட்டிய அந்த பூட்டை உடைத்து உண்மையை வெளிப்படையாக காட்டி உள்ளேன்*.

*உண்மை உணர்ந்து  பயம் இல்லாமல் பின் பற்றுங்கள்.*


14. *இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய மத சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லப்படுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்களான மூர்த்திகள். கடவுளர்.தேவர்.அடியார்.யோகி்.ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல. தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளான தனிப்பெருங் கருணை வடிவமாக உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் ஒளியாகும்*.


15. *அக்கடவுளின் உண்மையான பெயர்* *அருட்பெருஞ்ஜோதி*

*அருட்பெருஞ்ஜோதி*

*தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோதி!*

 *என்னும் மகாமந்திரமே கடவுளின் பெயராகும்* .


16. *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அன்பு அருள் கருணை சேர்ந்த பூரண ஒளிவடிவமாக  உள்ளவராகும் ஆதலால் ஒளியே கடவுளாக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும்.*


17 *எல்லா உயிர்களையும் இயக்கும் உள் ஒளியே ஆன்மா என்பதாகும்.எனவே எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து ஒத்து உரிமை உடையவர்களாக உவக்க வேண்டும்.*


18 . *எல்லா உயிர்களையும் இயக்கிக்கொண்டு இருப்பது ஆண்டவரின் குழந்தையாகிய ஆன்மா என்னும் உள் ஒளியாகும் ஆகவே ஆன்மநேயத்தை அவசியம் யாவரும் கடைபிடிக்க வேண்டும்*


19 . *நமக்கு ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் பொது உரிமையை வரவைத்துக் கொண்டால் மட்டுமே ஆண்டவரின் தொடர்பு லகுவாக கிடைக்கும்.*


20. *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றி  குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன் குறிப்பிப்பேன் என அழுத்தமாகச் சொல்லுகிறார்.*


21. *கருணையும் சிவமும் ( அருட்பெருஞ்ஜோதி) பொருள் என கொள்ள வேண்டும்.*


22. *ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு உயிர்களுக்கு செய்யும் பரோபகாரம் என்னும் ஜீவகாருண்யமும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது வைக்கும் இடைவிடாத அன்பும் என்னும் சத்விசாரமும் மட்டுமே போதுமானதாகும்*.


23. *இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார் எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம்தான் இது.*


24. *நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப்போன்ற பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரை விடாமல் இருந்தவர்கள் எதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? பெற்றுக்கொள்ளவில்லை.*


25 . *நான் சமய மதங்களில் வைத்திருந்த லட்சயம் அளவிடமுடியாது  ஆனால் அந்த லட்சியம் என்னை தூக்கிவிடவில்லை*


26. *என்னை இந்த இடத்திற்கு தூக்கிவிட்டது யாதெனில் உண்மைப் பெருநெறி ஒழுக்கம் மட்டுமே! அதாவது கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக என்றது தான் என்னை ஏறாநிலைமிசை ஏற்றிவிட்டது*


27. *என்னை யேறா நிலைமிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. என்பதை தெளிவாக விளக்குகிறார்*


28 . *இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது அது அந்த ஒருமையினால் தான் வந்த்து.*


29.  *நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் எல்லா நன்மையும் உண்டாகும்.*


30. *நீங்கள் இதுவரைக்கும் ஒழுக்கத்திற்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் நல் ஒழுக்கத்திற்கு வருவதோடு மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி  எவ்வித தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்*.


31. *சமயம் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி என்று பெயரிட்டுக்கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது சமயவாதிகளைப் போலவே தெய்வத்தைப்பற்றி ஒன்றுகிடக்க ஒன்றை உளரியுள்ளார்கள் ஆதலால் நீங்கள் அது ஒன்றையும் நம்ப வேண்டாம்.*


32. *நீங்கள் என்னை தெய்வம் என்று நினைத்து வணங்கவோ வழிபடவோ கூடாது எல்லாம்வல்ல நமது இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கி வழிபடவேண்டும்.*

33. *எல்லாவற்றுக்கும் சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக்கொண்டது.அக்கொடியின் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.*


34. *அக்கொடியின் உண்மை யாதெனில் நமது நாபிமுதல் புருவமத்தி ஈறாக ஒருநாடி இருக்கின்றது.*

*அந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் ஜவ்வு தொங்குகின்றது* 

35. *அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்  மேற்புறம் மஞ்சள் வர்ணம் அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது.இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும்.*


36 . *இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான சுத்த சன்மார்க்க  கொடிகட்டியது* 


37 . *இனி எல்லவர்க்கும் சுத்த சன்மார்க்க நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்*


38 *கொடி கட்டிக்கொண்ட படியால் இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள் நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.*


39 *இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மைஅறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்* *அவசியம் இதற்கு காரணமான தயவு இருக்க வேண்டியது* *அந்த தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும்* 


40 . *மேலே சொல்லியவாறு பின்பற்றி இருந்து கொண்டு இருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள் இதுசத்தியம் சத்தியம் சத்தியம் இது ஆண்டவர் கட்டளை என நிறைவு செய்கிறார்.*


41. *மேலும் சொல்லுகிறார் எல்லோருக்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி  எவ்வளவோ அதற்குக் கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம் இதுவும் ஆண்டவர்  கட்டளை என பேருபதேசத்தை நிறைவுசெய்கிறார்* 


*மேலே கண்ட விபரங்கள் வள்ளலார் செய்த  பேருபதேசத்தின் சுருக்கமான செய்திகளாகும்.விரிவான செய்தியை அனைவரும் பேருபதேசத்தின் முழுமையான உண்மை விளக்கத்தை  திருஅருட்பாவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.* 


*வள்ளலார் பாடல்!*


கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்


மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்


இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்


தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.! 


மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்.


*நமக்குள் சாதி சமயம் மதம் என்ற வேறுபாடுகள் எக்காலத்திலும் பின்பற்ற கூடாது.* 


*சன்மார்க்க அன்பர்கள் தனித்தனியாவது உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது மஞ்சள் வெண்மை கலந்த சன்மார்க்க கொடியை ஏற்றி கொடிப் பாடலையும் பேருபதேசத்தையும் .ஞானசரியை 28 பாடல்களையும் படித்து தோத்திரம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப்பெற வேண்டுகிறோம்.* 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

சனி, 16 அக்டோபர், 2021

உயிர் பெற்ற ஆன்மா ! உயிர் அற்ற ஆன்மா !

 *உயிர் பெற்ற ஆன்மா ! உயிர் அற்ற ஆன்மா !*


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகமான அருட்பெருவெளியில் உள்ள ஆன்ம ஆகாயத்தில் இருந்து ஆன்மாக்கள் பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பப்படுகிறது


*ஆன்மா இங்கு வாழ்வதற்கு உயிர் உடம்பு கொடுத்து பொருள் உணவு வழங்கப்படுகிறது.* *உயிர் உடம்பு ஏன் கொடுக்கப்படுகிறது என்றால் ஆன்மா இங்கு வந்து பஞ்சபூத உடம்பு எடுத்து  இன்பம் துன்பம்  அனுபவித்து அவற்றின் மேல் விருப்பும் வெறுப்பும் உண்டாகி இனி உயிர் உடம்பு வேண்டாம் பிறப்பும் இறப்பும் வேண்டாம் என்ற வெறுப்பிற்கு ஆன்மா தன் உணர்வை மாற்றிக்கொள்கிறது*.


இங்கேதான் ஆன்மாக்களுக்கு வழிகாட்ட அருளாளர்கள் என்னும் ஆன்மீகவாதிகளின் அறிவும் அருளும் போதனைகளும் தேவைப்படுகிறது.


*அவர்கள் காட்டிய பாதையில் சென்றால் ஆன்மாக்கள் மரணம் அடைந்து பின் உயிர் உடலை பிரிந்து பிறப்பு இறப்பு அற்று  மோட்சம் அடைந்து நல்வினை தீவினைக்குத் தகுந்தவாறு சொர்க்கம் நரகம் கைலாயம் வைகுண்டம் பரலோகம் சத்தியலோகம் பிரம்மலோகம் சிவலோகம் விஷ்ணுலோகம் உள்ளது என்றும் பலவகையான  இடங்களைக் காட்டியுள்ளார்கள். ஆன்மாக்கள் அங்கு சென்று பேரின்பவாழ்வு வாழலாம் என்றும் தவறான வழியைக் காட்டி யுள்ளார்கள்*


அப்படி பல இடங்கள் இருப்பதாக ஆன்மாக்கள் நம்பி செல்ல முயன்று அவ்வாறு எந்த இடங்களும் இல்லை என்பதை அறிந்து மீண்டும் இறந்து இறந்து பிறந்து பிறந்து துன்பத்தை அனுபவித்துக் கொண்டும் வாழ்ந்து கொண்டும் உள்ளது. 


*ஆன்மாக்கள் உயிரையும் உடம்பையும் விட்டு பிரிந்தாலும் அதாவது இறந்தாலும் உயிர் உடம்பு பிரியாமல் சமாதி அடைந்தாலும். உயிர் உடம்போடு ஆன்மா பஞ்ச பூதங்களில் கலந்தாலும் மீண்டும் பிறப்பு உண்டு என்ற உண்மை எந்த அருளாளர்களுக்கும் இதுநாள்வரை தெரியவில்லை.*


*வள்ளலார் பாடல்*


வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமது

வாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்


மையகத்தே *உறுமரண வாதனையைத் தவிர்த்த*

வாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே


மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனது

மெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே


செய்அகத்தே *வளர்ஞான சித்திபுரந் தனிலே*

*சித்தாடல் புரிகின்றார்* திண்ணம்இது தானே*.! 


மேலே கண்ட பாடல் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்


*வள்ளலார் வருகை*


*இயற்கை உண்மைக் கடவுளை ஆன்மாக்கள் தொடர்பு கொள்ள வேண்டும்* என்ற உண்மையை தெரிவிக்கவே வள்ளல்பெருமான் அவர்களை இவ்வுலகத்திற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவராகும்.


*இன்னும் வள்ளலார் கொள்கையை முழுமையாக தெளிவாக புரிந்து கொள்ளாமல் மக்கள் அறியாமையிலே வாழ்ந்து வருகிறார்கள்* 


*வள்ளலார் கொள்கையிலே முக்கியமானது சாகாக்கல்வி கற்பதாகும்*


*ஆன்மாக்கள்*


*உயிர் உடம்பு இல்லாமல் வந்த ஆன்மாக்கள் உயிர் உடம்பு எடுத்து பொருள் உணவு உட்கொண்டு வாழ்ந்து வருகின்றது. உயிர் உடம்பு எடுத்த ஆன்மாவால் மட்டுமே இயற்கை உண்மைக்கடவுளான நமது தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள வேண்டும்.* தொடர்பு கொள்ள முடியும்.


*அருள் இல்லாமல் வந்த ஆன்மா ஆணவம் மாயை கன்மம் என்னும் பிடுயுள் சிக்கியுள்ளது*.

*ஆன்மா திரும்ப அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடமான அருட்பெருவெளிக்கு செல்ல வேண்டுமானால் அருள்தேகத்தோடுதான் செல்ல வேண்டும் என்பதே ஆண்டவர் கட்டளை ஆணையாகும்.*


*ஆன்மா இங்கு வந்து வாழ்வதற்காக கட்டிக் கொடுக்கப்பட்ட உயிர் உடம்பு என்னும் வாடகைவீட்டை  சொந்த வீடாக மாற்றிக்கொள்ள வேண்டும்*. 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற வேண்டும் அருள் பெற்றால் மட்டுமே பொருள் உடம்பை அருள் உடம்பாக மாற்ற முடியும் என்பதை வள்ளலார் தெளிவாகச் சொல்லியுள்ளார். சொல்லியதோடு அல்லாமல் வாழ்ந்தும் காட்டி உள்ளார்* 


*வள்ளலார் பாடல்*


*சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும்பாவம்* தன்னைஎண்ணி


நோவதின்று புதிதன்றே *என்றும் உளதால்* இந்த 


நோவை நீக்கி

ஈவது மன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும் *மற்றை இறைவ ராலே*


*ஆவதொன்றும் இல்லைஎன்றால்* அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.! 


*சாவதும் பிறப்பதும் இன்று நேற்று நடப்பது அல்ல என்றும் காலம் காலமாக நடந்து கொண்டே உள்ளது இது பெரும் பாவச்செயல் என்கிறார். இதுவே பெரும் மரணப் பெரும்பிணி என்கிறார் இந்த பெரும்பிணியைப் போக்கும் அருள் மருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே வழங்கமுடியும் மற்ற எந்த இறைவர்களாலும் வழங்கவே முடியாது என மிகவும் அழுத்தமாக சொல்லுகிறார்.


*ஆன்மா வாழ்ந்து வந்த உயிர் உடம்பு கொண்ட அசுத்த பூதகாரிய தேகத்தை அருள் உஷ்ணத்தால்  சுத்த பூதகாரிய தேகமாக மாற்றவேண்டும்*

*பின்பு பிரணவ தேகமாக மாற்ற வேண்டும். பின்பு ஞானதேகமாக மாற்ற வேண்டும்* *இந்த மூன்று விதமான தேக மாற்றத்திற்கு பெயர் முத்தேக சித்தி என்றும் சுத்த பிரணவ ஞானதேகம் என்றும் பெயர் சூட்டியுள்ளார்*  


ஆணவத்தின் துணைகொண்டு வந்த வெற்று ஆன்மா மாயை கன்மத்துடன் இவ்வுலகில் வாழ்ந்து அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கையும் நான்கு காலங்களில் அனுபவித்து பின்பு பற்று அற விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று ஞானதேகத்துடன் திரும்பவும் செல்லவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆன்மாக்களை இவ்வுலகிற்கு அனுப்பி உள்ளார் என்ற மாபெரும் உண்மையை ஒவ்வொரு ஆன்ம தேகம் எடுத்துள்ளவர்களும் அறிந்து தெரிந்து புரிந்து  கொள்ள வேண்டும்.


*உயிரும் உடம்பும் பெற்ற ஆன்மா உயிரையும் உடம்பையும் அருள்ஒளியாக மாற்றி அருள் தேகமாக மாற்றி திரும்பச் சென்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வார்*


அருளை எவ்வாறு பெறவேண்டும் என்பதை அறிந்து கொள்ளவே வள்ளலார் எழுதிய திருஅருட்பா என்ற அருள் நூல் உண்மை விளக்கத்தைப் போதிக்கிறது படித்து அதில் சொல்லியவாறு வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்வாங்கு வாழ்வதே மனித தேகம் எடுத்துள்ள ஆன்மாக்களின் செயலாகும்.


துறையிது வழியிது துணிவிது நீசெயும்

முறையிது வெனவே மொழிந்தமெய்த் துணையே! (அகவல்) 


உளவினி லறிந்தா லொழிய மற் றளக்கின்

அளவினி லளவா வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


அருள் பெறும் உளவை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

பெரியாரின் அரிய செயல் !

 

பெரியாரின் அரிய செயல்!

பெரியாரை சுற்றியிருந்த அனைவருக்கும் பெரும் ஆச்சரியம் .


ஏனெனில் முதன்முதலாக ஒரு ஆன்மீகவாதியின் தத்துவங்களை முழுமனதோடு ஏற்றுக் கொண்டு 

அதை தன் செலவில் அழகான புத்தகமாகவும் அச்சிட்டு வெளியிட்டார் பெரியார்.


அவர் அருகில் இருந்த அத்தனை பேரும் அசந்து போனார்கள் பெரியாரிடம் ஏற்பட்ட இந்த மாற்றத்தை கண்டு.


பெரியாரை இப்படி கவர்ந்த அந்த ஆன்மீகவாதி வள்ளலார்.


சாதி, வர்ணாசிரம முறைகளை கடுமையாக சாடி  எழுதியிருந்தார் வள்ளலார்.


சமயத்தின் பேரால் பலி கொடுப்பதை கண்டித்தார்.


போலி சமயவாதிகளை தீவிரமாக எதிர்த்தார் .


இதையெல்லாம் படித்து பார்த்தவுடன் பெரியாரின் பார்வை கொஞ்சம் கொஞ்சமாக வள்ளலாரை நோக்கித் திரும்பியது


இன்னும் சிறிது அருகில் நெருங்கி சென்று வள்ளலார் கூறியவற்றை எல்லாம் கூர்ந்து கவனித்தார் பெரியார்.


வள்ளலார் சொல்லி இருந்தார் :

"உருவ வழிபாட்டை முற்றிலும் விலக்குங்கள். ஆன்ம ஜோதியே கடவுள்."


'ஆஹா' என ஆனந்தம் கொண்டார் பெரியார்.


"ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் கல்வியைக் கொடுக்க வேண்டும்."


இப்படி வள்ளலார் சொல்லியிருந்ததை அறிந்தவுடன் பெரியாரின் உள்மனம் உற்சாகமாக கூறியது: 


"அடடா, இவர் புரட்சித் துறவியாக இருக்கிறாரே !"


இன்னும் கொஞ்சம் வள்ளலாரின் பக்கத்தில் நெருங்கி சென்றார் பெரியார்.


"கணவன் இறந்தால் மனைவி தாலி அறுக்க வேண்டாம்."  வள்ளலாரின் இந்த கருத்து பெரியாரை வலிமையாக ஈர்த்தது.


'அற்புதமானவை வள்ளலாரின் கருத்துகள்' என்ற பெரியார்

உற்சாகமாக கூறினார் :

"இந்த மனிதர் கொண்டாடப்பட வேண்டியவர். இவரது கருத்துக்கள் அனைவருக்கும் சென்று சேர வேண்டும்."


சொன்னதோடு நிற்கவில்லை பெரியார். வள்ளலாரின் புத்தகங்களை ஏராளமாக தன் சொந்த செலவிலேயே அச்சிட்டார். அவற்றை மலிவு விலையில் மக்கள் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்தார்.


எல்லோருக்கும் போய்ச் சேர்ந்து விட்டதா என்பதை கவனித்தார். புத்தகங்களின் விற்பனையை அதிகரிக்க தன் செலவிலேயே விளம்பரங்களையும் செய்தார்.


வள்ளலார் எழுதிய,

“திருவருட்பா நூலின் ஆறாம் திருமுறையின் நூறு பாடல்கள்.”


இந்த பாடல்களைத்தான்  பெரியார் பாராட்டி அவற்றை  தானே புத்தகமாக அச்சிட்டு விளம்பரமும் செய்து வெளியிட்டு இருக்கிறார் .


ஆரம்ப திருவருட்பா பாடல்களில் 

கடவுளை எண்ணி பாடிய வள்ளலார், பின்னர் மாறுதலடைந்து ஒளியை மட்டுமே வணங்கும் நிலைக்கு வந்தபிறகு எழுதியவைதாம் இந்த ஆறாம் திருமுறைப் பாடல்கள்.


ஒரு ஆன்மீகவாதியின் கருத்துக்களை தான் அச்சிட்டு வெளியிடுவதா என தயக்கம் எதுவுமின்றி வள்ளலாரின் தத்துவங்களை அச்சிட்டு வெளியிட்ட பெரியாரின் பண்பு போற்றுதற்குரியது.


அந்த மாற்றத்தை உருவாக்கிய மாபெரும் சக்தி வள்ளலாரின் 

வற்றாத அன்பும் வளமான கருணையும்தான்.

  

"அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி 

தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி"


அக்டோபர் 5 - 

"வாடிய பயிரை கண்டபோதெல்லாம், வாடினேன்" என்று பாடிய 

வள்ளலாரின் பிறந்த தினம் .

வெள்ளி, 15 அக்டோபர், 2021

ஆசை உண்டேல் வம்மின் இங்கே !

 *ஆசை உண்டேல் வம்மின் இங்கே !*


*வள்ளலார் பாடல்!*


*ஆசைஉண்டேல் வம்மின் இங்கே* *அருட்சோதிப் பெருமான்*

*அம்மையுமாய் அப்பனுமாய்* *அருளும்அரு ளாளன்*


ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே


*மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்*

*முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.!* 


*வள்ளலார் மனித குலத்தை பார்த்து ஆசை உண்டேல் வம்மின் இங்கே என்று அன்புடன் அழைக்கின்றார்*.


*எங்கே ? அழைக்கின்றார்* *எதற்காக அழைக்கிறார் ?*


*வடலூர் பெருவெளிக்கு  அழைக்கின்றார்*


*வடலூர் பெருவெளிக்கு வந்தால் நல்ல வரம் பெறலாம் என்கிறார்*  


மனிதர்கள் நல்ல வரம் பெறுவதற்காக உலகம் எங்கும் உள்ள ஆன்மீக ஆலயங்களுக்கும் தேவாலயங்களுக்கும் சர்சுக்களுக்கும் மசூதிகளுக்கும் மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் என்று சொல்லப்படும் எல்லா இடங்களுக்கும் சென்று தங்கள் குற்றம் குறைகளை நிவர்த்தி செய்து மன்னித்து அருள்புரிய வேண்டும் என்று  வேண்டி வேண்டி  அலைந்து அலைந்து திரிந்து திரிந்து அவதிக்கு உள்ளானார்களேத் தவிர எந்த கடவுளாலும் எந்த இடத்திலும் நல்ல வரம் வழங்க முடியவில்லை. 


*ஆதலால் நல்ல வரம் பெற்று இன்பம் அடைய ஆசை உள்ளவர்கள் இங்கே வாருங்கள் என ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்.* *நல்ல வரம் வழங்கும் ஒரே இடம் வடலூர் மட்டுமே!*


*எனக்கு அருள் வழங்க வருகிறார்* 


நானும். உங்களைப்போன்று பல கடவுள்களைத்தேடி  அலைந்தேன் எந்த கடவுள்களாலும் எந்த பயனும் எந்த இன்பமும் எந்த லாபமும் கிடைக்கவில்லை *இறுதியாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மை நிலை அறிந்து இடைவிடாது தொடர்பு கொண்டேன் என் உண்மை ஒழுக்க நிலை அறிந்து அருள் வழங்குவதற்கு நான் இருக்கும் இடம்தேடி வருகின்றார்* 


*வள்ளலார் பாடல்!*


*பாதி இரவில்* *எழுந்தருளிப் பாவி யேனை* *எழுப்பிஅருட்*

*சோதி அளித்தென் உள்ளகத்தே* *சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்*


*நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும்பேற்றை*

*ஓதி முடியா* *தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே*.!


என்னை பாதி இரவில் எழுப்பி

*எனக்கு அருள்ஜோதி வழங்கி என் உடம்பிலே உயிரிலே உள்ளத்திலே கலந்து துலங்குகிறாய் நீதி நடம் செய்கின்ற அழியாத நிதியை வழங்கியுள்ளாய் நான்பெற்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வான அருள்பூரண லாபத்தைப்பற்றி சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை*

எனக்கு மட்டும் கிடைத்தால் போதாது என்போல் உலகம் முழுவதும் உள்ள மனிதகுல ஆன்மாக்களும் பெறவேண்டும் என்ற கோரிக்கையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வைக்கிறார்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு *நான் அமர்ந்து அருள்வழங்க பொதுவான ஒரு சமரச சுத்த சன்மார்க்க சத்திய  ஞானசபையை தோற்றுவிக்க வேண்டும் என ஆணையிடுகிறார்*.


*அருள் வழங்கும் ஒரே தெய்வம் !*


எல்லா உலகங்களையும் எல்லா  ஆன்மாக்களையும் எல்லா உயிர்களையும் எல்லாப் பொருள்களையும் மற்றை எல்லாவற்றையும் *படைத்தல் காத்தல் துரிசுநீக்கல் அருளல் பக்குவம் வருவித்தல்* போன்ற ஐந்தொழில் செய்கின்ற ஒரே கடவுள் *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே* ! *அவரைக் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் அருள் பெற்றேன் கலந்து கொண்டேன்* என்கிறார்


*அந்த இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் வழங்க வேண்டும் என்பதற்காக ஆண்டவர் ஆணைப்படி 1872 ஆம் ஆண்டு வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத் தோற்றுவித்துள்ளார் வள்ளலார்.*


*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கு வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று உலகில் உள்ள எல்லோரையும் வாருங்கள் வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார்.*

*நீங்கள் வருவதோடு மற்றவர்களையும் அழைத்து வாருங்கள் என அன்புடன் கருணையோடு சொல்லுகின்றார்.*


*வள்ளலார் பாடல்!* 


*சத்தியவான் வார்த்தைஇது* *தான்உரைத்தேன் கண்டாய்*

*சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்*


*இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்*

*இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்*


*சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்*

*தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்*


*செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்*

*திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!*


மேலே கண்ட பாடலில் வள்ளலார் தெளிவாகச் சொல்லுகிறார்.


*இது நான் சொல்லவில்லை சத்தியவான் வார்த்தையாகும்* *யாரும் சந்தேகப் படவேண்டாம் இனிவரும் தினங்கள் யாவும் இன்பம் உறும் தினங்கள் என்கிறார் அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும் அலட்சியத்தாலும் இறந்துபோனவர்களும் மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து வடலூருக்கு வந்தால் போதும் இன்பம் பெறும் தினங்களாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்கி ஏற்றுக்கொள்வார்*


*காரணம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் செங்கோல் எங்கும் செல்கின்றது* 


வள்ளலார் இறுதியாக வடலூரைப்பற்றிச் சொல்லுகிறார்.


*இதுதருணம் தொடங்கி  வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகில் கருதியவண்ணம் பெற்று களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர்பெற்று எழுதல் மூப்பினர். இளமை பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பு அடைவீர்கள் என்கிறார்*


மேலும் எல்லோருக்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்குக் கோடி கோடிபங்கு அதிகமாக உதவி கிடைக்குபடியான இடம் இந்த இடம் இது ஆண்டவர் கட்டளை என தெளிவு படுத்துகிறார்.


*நாம் இனி ஆண்டவரைத் தேடி புறத்தில் அலையவேண்டாம் வடலூர்வந்தால் பெற வேண்டியதை பெற்றுக்கொள்ளலாம்*.


*வள்ளலார் பாடல்*!


அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்


இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்

எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்*.! 


*நம் சிரநடு சிற்சபை தோற்றமே சத்திய ஞானசபையாகும் அதன் உள்ளே விளங்கும் உள் ஒளியே  அருட்பெருஞ்ஜோதியாகும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

புதன், 13 அக்டோபர், 2021

உடம்பும் உயிரும் !

 *உடம்பும் உயிரும்!*


வள்ளலார் பாடல்!


உடம்பு வரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்


மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற் றறியீர்


இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே


நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகம்*!


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சமூகமான ஆன்ம ஆகாயத்தில் இருந்து ஆன்மாக்களை பஞ்ச பூத உலகத்திற்கு ஆணவத்தின் துணைக் கொண்டு அனுப்பி வைக்கப்படுகிறது.


*மாயை உலகம்!*


*பஞ்ச பூத உலகத்திற்கு வந்த ஆன்மாக்கள் உயிர் உடம்பு எடுத்து வாழ வேண்டும்.உயிரையும் உடம்பையும்  மாயையால் கட்டிக்  கொடுக்கப்படுகிறது.மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வாடகை என்னும் வீட்டில்  உடம்பையும உயிரையும் இயக்கிக்கொண்டு  ஆன்மா இவ்வுலகில் வாழ்ந்து வருகிறது*  


*வள்ளலார் பாடல்!* 


பெருமாயை என்னும்ஒரு பெண்பிள்ளை நீதான்

பெற்றவுடம் பிதுசாகாச் சுத்தவுடம் பாக்கி


ஒருஞானத் திருவமுதுண் டோங்குகின்றேன் இனிநின்

உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடைநான் விரும்பேன்


அருளாய ஜோதிஎனக் குபகரிக்கின் றதுநீ

அறியாயோ என்னளவில் அமைகஅயல் அமர்க


தெருளாய உலகிடைஎன் சரிதமுணர்ந் திலையோ

சிற்சபைஎன் அப்பனுக்குச் சிறந்தபிள்ளை நானே.! 


*மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும் வள்ளலார் எவ்வாறு மீண்டுவர வழிகாட்டியுள்ளார் என்ற உண்மை விளங்கும்* 


ஆன்மாவானது தன் இயற்கை குணமான தயவை மறந்து உயிரின் விருப்பபடி வாழ்வதால் தன்னை மறந்துவிடுகிறது.அதனால் பொய் வாழ்க்கையில் ஈடுபட்டு இன்பம் துன்பம் அனுபவித்து எண்ண எண்ணி இளைத்துக் கொண்டே உள்ளது.


*ஆன்மா சொல்படி கேட்டு உயிர் உடம்பு செயல்பட வேண்டும்.ஆனால் உயிரின் செயலுக்குத் தகுந்தவாறு ஆன்மாவும் உடம்பும் செயல்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறது*


உதாரணத்திற்கு:- *ஆன்மா கணவன் உயிர் மனைவி என்று வைத்துக்கொள்ளுங்கள்* *கணவன் மனைவி வாழ்வதற்கு உடம்பு என்னும் வீடுதேவை*. 


வீடு மாயையால் கட்டிக் கொடுக்கப்படுவதால் மனைவி என்னும் உயிரின் ஆதிக்கம் அதிகமாகிறது.

உயிரின் ஆதிக்கத்தால் ஆன்மா தன்னை மறந்து உயிரின் வழியே உடம்பின் வழியே சென்று துன்பம் அடைந்து கொண்டுள்ளது.


*உயிரின் வழியே ஆன்மா செல்வதால் உயிரின் சுயநலத்தால் செய்கின்ற கன்மம் என்னும் வினைகள் ஆன்மாவில் பதிவாகி ஆன்மா துன்பத்தை அனுபவிக்கின்றது*  


*ஆன்மாவில் பதியும் அறியாமை அஞ்ஞானம் என்னும் தீவினை நல்வினையால் மாயா திரைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ளது. ஆதலால் ஆன்மாவில் உள்ள இயற்கை குணமான தயவும் அன்பும் அறிவும் அருளும் வெளிப்படுவதில்லை*.


 *உயிர் இறந்து இறந்து பிறந்து பிறந்து வேறு வேறு உடம்பு எடுத்து கொண்டே உள்ளது* ஆன்மாவும் தன்னிடம் உள்ள தயவு அன்பு அறிவும் அருளும்  பெற முடியாமல் உயிரின் வழியே சென்று கொண்டுள்ளதால்.பிறப்பையும் இறப்பையும் தவிர்க்க முடியாமல் மரணத்தை வெல்ல முடியாமல் ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டுள்ளது. 


ஆன்மாவானது தன்னை அறிந்து இன்பம் பெற்று வாழவேண்டுமானால் உயிரையும்   உடம்பையும் தன் சொல்வழி கேட்க செய்ய வேண்டும்.அதற்கு அருள் இன்பத்தை உயிருக்கும் உடம்பிற்கும் ஊட்ட வேண்டும். 


அதாவது பொருள் இன்பத்தை தவிர்த்து அருள் இன்பத்தை ஊட்ட வேண்டும். 


*உயிரையும் அழிக்காமல் உடம்பையும் அழிக்காமல் பாதுகாக்க வேண்டும்* 


 அதற்கு ஆன்மாவில் இருந்து அருள் சுரக்க வேண்டும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்  தொடர்புகொண்டு மாயா திரைகளை விலக்கி அருள் பெற்று ஊன் உடம்பை  ஒளி உடம்பாக மாற்ற வேண்டும். 


*கரைவின்மா மாயைக் கரும்பெருந் திரையால்*

*அரைசது மறைக்கு மருட்பெருஞ் ஜோதி*! (அகவல்)


ஆன்மாக்கள் அருள்பெற்று மரணத்தை வெல்லும் வழியைக் காட்ட வந்தவர்தான் நமது அருள்தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும். 


 ஆன்மாக்கள்  உண்மை தெரிந்து கொள்ளவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்துள்ளார் அவற்றில் சொல்லி உள்ள ஜீவகாருண்ய ஒழுக்க நெறிகளை கடைபிடித்து மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 10 அக்டோபர், 2021

ஆன்ம மகிழ்ச்சியா ? மனம் மகிழ்ச்சியா ?

 *ஆன்ம மகிழ்ச்சியா ? மனம் மகிழ்ச்சி யா?*


*மனித தேகம் நான்கு பிரிவுகளாக இணைந்துள்ளன*


1.அகம்:- ஆன்மா

2.அகப்புறம்:- ஜீவன் (உயிர்)

3.புறம் :- கரணங்கள் எனும் மனம் புத்தி சித்தம் அகங்காரம்

4.புறப்புறம்:- இந்திரியங்கள் எனும் கண் மூக்கு காது வாய் உடம்பு (மெய்) 


1.ஆன்மா :- அக்கினி பிரகாசம் போன்றது

2.ஜீவன்:- சூரிய பிரகாசம் போன்றது.

3.கரணங்கள்:- சந்திரிபிரகாசம் போன்றது.

4. இந்திரியங்கள்:- நட்சத்திர பிரகாசம் போன்றதாகும்.


*மனித தேகம் இயங்குவதற்கு மேலே கண்ட  நான்குவகையான இணைப்புகளும் அவசியம் தேவைப்படுகிறது*.


*தேகத்தின் தலைவன் அகத்தில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளி என்பதாகும்*. *உடம்பை இயக்குவதற்கு அகப்புறத்திலுள்ள உயிர் என்னும் ஜீவ ஒளி இயக்கம் தேவைப்படுகிறது.* 


*புறம் என்னும் மனம் முதலான கரணங்களும் புறப்புறம் என்னும்  இந்திரியங்களான கண் முதலான கருவிகளும் வெளிப்புறமாக செயல்படும் முக்கியமான உடம்பில் உள்ள தத்துவ கருவிகளாலும்* 


*மேலும் உடம்பிற்குள் உள்ள உறுப்புக்கள் அனைத்தும் உடம்பை இயக்கும் உட்கருவிகளாகும்* 


*உடம்பு இயங்க உயிர் தேவை. உயிர் இயங்க ஆன்மா தேவை. ஆன்மா இயங்க அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளிதேவை. அருள் இயங்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணை தேவை* இந்த உண்மையை நாம் தெரிந்து கொள்வதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனித தேகம் கொடுக்கப்பட்டது.


*மனித தேகத்தில் நாம் பெற வேண்டியது !*


*மனிதப்பிறப்பில் நாம் பெற வேண்டியது ஆன்ம லாபம் மட்டுமே* *ஆன்மா மகிழ்ச்சி அடைந்தால்தான் ஆன்ம நெகிழ்ச்சி உண்டாகி அன்பு பெருகும் அன்பு பெருகினால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியும்*


*அன்பெனும் பிடியுள் அகப்படும் ஆண்டவர் ஆன்மாவுடன் இணைந்து ஆன்மபோகத்தை அனுபவித்து அருள் வழங்குவார் அந்த அருள் உடம்பு முழுவதும் நிறைந்து கலந்து தனிப்பெருங்கருணையாக மாற்றம் அடைந்து பூத உடம்பு மாற்று குறையாத  பொன்உடம்பாக ஒளிவீசும்.*


இவற்றைத்தான் வள்ளலார்


*பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும்* *பொருட்டா*

*என்னுளங் கலந்த என்றனி யன்பே!* (அகவல்)


 *பொன்னடி கண்ட அருட் புத்தமு துணவே*

*என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே!*(அகவல்) என்கிறார்


*அருள் நிறைந்த உடம்பே மரணத்தை வென்று என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.*


*அருள் பெற முடியாமைக்கு காரணம் என்னவென்று சிந்திப்போம்!*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு ஆன்ம லாபத்தை பெற வேண்டிய மனிதன் புறத்தில் உள்ள பொய்யான கற்பனை தத்துவ  உருவ சிலை கடவுள்களை வழிபாடு செய்து வணங்கி வருகிறார்கள்*.


கரணங்களில் உள்ள மனத்தின் மகிழ்ச்சிக்காக நெகிழ்ச்சிக்காக  உருக்கத்திற்காக சரியை கிரியை என்னும் பக்தியிலே மூழ்கி புறத்திலேயே கடவுளைத் தேடி தேடி அலைந்து அலைந்து அழிந்து கொண்டே உள்ளார்கள்.


*இந்திரிய கரணங்களில் மட்டுமே பக்தி பதிவாகும் (ஆன்மாவில் பதிவாகாது) 

*பக்தி என்பது மனநெகிழ்ச்சி மன உருக்கம் மன மகிழ்ச்சி உண்டாகும்*. *மனத்தினால் உண்டாகும் எந்த செயலும் ஆன்மாவையோ ஆண்டவரையோ தொடர்பு கொள்ள முடியாது*.


*ஆன்ம லாபம்!*


*அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம் ஆன்ம மகிழ்ச்சி ஆன்ம லாபத்தை உண்டாக்கும் ஆன்ம  லாபத்தினால் மட்டுமே ஆண்டவரைத் தொடர்பு கொள்ள முடியும்.* 


இங்குதான் வள்ளலார் மக்களுக்குத் தெளிவுப்படுத்துகிறார்! 


*ஜீவகாருண்யத்தால் ஜீவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். ஜீவர்கள் மகிழ்ச்சி அடைவதால் ஆண்டவர் மகிழ்ச்சி அடைவார். ஆண்டவர் மகிழ்ச்சி அடைவதால் ஆன்மாவிற்கு அன்பு உண்டாகும் அன்பு உண்டானால் அருள் உண்டாகும் அருள் உண்டானால் மரணத்தை வெல்லலாம்* 


*எனவே இந்திரிய கரணங்களால் பக்தி உண்டாக்கும் பக்தியால் மனநெகிழ்ச்சி மன உருக்கம் மன மகிழ்ச்சி உண்டாகும். அந்தகரண சுத்தியின் பிரயோஜனமே பக்தியாகும். *அதனால் புறவழிபாடு வேண்டாம் என்கிறார் வள்ளலார்* 


*வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமானது ஜீவகாருண்யத்தை போதிக்கிறது.* *அன்பை போதிக்கிறது கருணையைப் போதிக்கிறது*


*அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்று அழுத்தமாக சொல்லுகிறார் வள்ளலார்.*


மேலும் *ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்கிறார்* 


மேலும் ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற சரியை கிரியை யோகம் ஞானம் எல்லாம் வெற்று மாயாஜாலங்களே என்கிறார்.


மேலும் *ஜீவகாருண்யம்  விளங்கும்போது  அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும் அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்* என்கிறார்.


*சீவகாருணியத்தின் வல்லபம்*

 

பிற உயிர்களிடத்துப் பசி கொலை முதலியவற்றுள் எதனாற் காருணியந் தோன்றியதோ அதனால் அவ்வுயிர்கள் வருந்தாதபடி அதை நீக்குதற்கு முயல்விப்பது அதன் வல்லபமென் றறியவேண்டும்.


*சீவகாருணித்தின் பிரயோசனம்* 


உயிர்களுக்கு இன்பம் உண்டுபண்ணுவது அதன் பிரயோசனம் என்றறியவேண்டும். 


*பக்தியை விட ஜீவ காருண்யத்தால் மட்டுமே ஆன்ம மகிழ்ச்சி ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மலாபம் பெறமுடியும்* 


*ஆன்ம லாபத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருள் பெற்று  மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

சனி, 9 அக்டோபர், 2021

அண்டங்களை ஆட்சி செய்பவர்!

 *அண்டங்களை ஆட்சி செய்பவர்!* 


*வள்ளலார் பாடல்!*


ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே

உன்னமுடியா அவற்றின்


ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்

உற்றகோ டாகோடியே


திருகலறு பலகோடி ஈசன் அண்டம் 

சதாசிவ அண்டம் எண்ணிறந்த

திகழ்கின்ற மற்றைப் 


பெருஞ்சத்தி சத்தர்தம்

சீரண்டம் என்புகலுவேன்

உறுவும் இவ் வண்டங்கள் அத்தனையும் 


*அருள்வெளியில்*

உறுசிறு அணுக்களாக

ஊடசைய *அவ்வெளியின் நடுநின்று* *நடனமிடும்*

*ஒருபெருங் கருணைஅரசே*


*மருவிஎனை ஆட்கொண்டு* *மகனாக்கி அழியா*

*வரந்தந்த* *மெய்த்தந்தையே*

*மணிமன்றின் நடுநின்ற*

 *எலாம்*

*வல்ல நட* *ராஜபதியே*.! 


மேலே கண்ட பாடலில் இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி நடராஜபதி என்னும் அருட்பேரொளி எங்கிருந்து செயல்படுகிறது என்பதை விளக்குகிறார். 


*வள்ளலார் சொல்லும் கடவுள் நாம் வணங்கும் வழிபடும் சமயம் மதம் சார்ந்த கடவுள்களில் ஒருவர் அல்ல என்பதை அறிவுள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்*.


*இவ் உலகமே தெரியாத மக்கள் மற்றும் உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாத மக்கள்  கடவுளை எவ்வாறு தெரிந்து கொள்ள முடியும்*


நாம் வாழும் பஞ்ச பூத உலகம் ஒன்று மட்டும்தான் நமக்குத் தெரியும் அதுவும் முழுதாய் தெரியாது தெரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் குறைவு. *அருள்பெற்றால் மட்டுமே அறிந்துகொள்ள முடியும்*


*ஐந்து பூதங்களின் உருண்டையான இவ்வுலகத்தின் அடி முடி நடு பக்கம் அளவு எவ்வளவு என்றே தெரிந்துகொள்ள முடியாது. அதற்குத் தகுந்த அளவுகோலும் கிடையாது. கணக்கு வழக்குகளும் எண்ணில் அடங்காது நீண்டுகொண்டே போகும் கணக்கு வழக்குகளில் அடக்கமுடியாது என்றால் *பலகோடி உலகங்களையும் அண்டங்களையும் தெரிந்து கொள்வது எங்கனம்?*  


*வள்ளலார் பாடல்!* 


கிளக்கின்ற மறைஅளவை ஆகமப் பேரளவை

கிளந்திடுமெய்ச் சாதனமாம் அளவைஅறி வளவை


விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டுநெடுங் காலம்

மேலவர்கள் அளந்தளந்து மெலிகின்றார் ஆங்கே


அளக்கின்ற கருவிஎலாம் தேய்ந்திடக் கண்டாரே

அன்றிஒரு வாறேனும் அளவுகண்டார் இலையே


துளக்கம்உறு சிற்றறிவால் ஒருவாறென் றுரைத்தேன்

சொன்ன வெளி வரையேனும் துணிந்தளக்கப் படுமோ.! 


*வேதங்கள் திருமறைகள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்கள் மற்றும் அறிவியல் விஞ்ஞான அணு ஆராய்ச்சி வல்லுனர்கள் எல்லாம்  அவரவர்களுக்கு தெரிந்த அறிவுசார்ந்த அருள்சார்ந்த மெய் அளவை ஒளிஅளவை அணு வேகத்தின் அளவுகளை வைத்து அளந்து பார்த்தார்கள் அளக்கின்ற கருவிகள் எல்லாம் தேய்ந்திட கண்டார்களேத் தவிர அளவு கண்டார்கள் இல்லை என்கின்றார் வள்ளலார்* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


பலகோடி அண்டங்களை படைத்து காத்து இயக்கிகொண்டு இருக்கும் அருட்பேரொளி சிந்தாமல் சிதராமல் மாபெரும் சக்திவாய்ந்த பெருங்கருணை பெருந்தொழிலை இயக்கிக்  கொண்டுள்ளவர்தான் அருட்பெருஞ்ஜோதி நடராஜபதி என்பவராகும்.


அவரின் தன்மை எவ்வாறாக உள்ளன என்பதை வள்ளலார். சொல்லுவதை பாருங்கள்.


இயற்கை உண்மையர் என்றும்,


இயற்கை அறிவினர் என்றும்,


இயற்கை இன்பினர் என்றும்,


நிர்க்குணர் என்றும்

சிற்குணர் என்றும்,


நித்தியர் என்றும்,


சத்தியர் என்றும்,


ஏகர் என்றும்,


அநேகர் என்றும்,


ஆதியர் என்றும்,


அமலர் என்றும்,


அவரே அருட்பெருஞ்ஜோதியர் என்றும்,


அற்புதர் என்றும்,


நிரதிசயர் என்றும்,


எல்லாமான வர் என்றும்,


எல்லாமுடைய வர் என்றும்,


எல்லாம் வல்லவர் என்றும்,


குறிக்கப்படுதல் முதலிய அளவு கடந்த


*திருக்குறிப்பு திருவார்த்தைகளாற் சுத்த சன்மார்க்க ஞானிகள்*


துதித்தும்,


நினைத்தும்,


உணர்ந்தும்,


புணர்ந்தும்,


அனுபவிக்க விளங்குகின்ற *தனித்தலைமை பெரும் பதியாகிய பெருங்கருணை கடவுளே*! 


என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றி தெளிவாகச் சொல்லுகிறார். 


*நாம் தொடர்பு கொள்ள வேண்டிய ஒரே உண்மைக் கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு என்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை* *சாதி சமயம் மதம் சாராத (சாதி சமயம் மதம் கடந்த )  சர்வதேச பொது மையமாக  வடலூரில் அமைத்தவர் வள்ளலார் என்பதை எவரும் மறந்துவிடக் கூடாது.* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் நம்மைப் படைத்தவர்* *நம் சிரநடு சிற்சபையில்  ஆன்ம ஒளியாக இயங்கி இயக்கிக் கொண்டுள்ளார்*


*வள்ளலார் பாடல்!* 


*அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்*

*அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்*


*பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்*

*போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்*


*இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்*

*எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்*


*தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்*

*சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.!*


மேலே கண்ட பாடலிலே மிகத் தெளிவாக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப்பற்றியும் அவர் விளங்குகின்ற இடத்தைப் பற்றியும் தெளிவாக எளிய தமிழில் சொல்லியுள்ளார்.

படித்து உணர்ந்து பின்பற்றுங்கள் தகுதிக்கு தகுந்தவாறு ஆன்மலாபமும் அருள் லாபமும் பெறலாம்.


*மேலும் குடும்பம் நடத்தும் சமய மதம் சார்ந்த தெய்வங்களையும் வணங்குவோம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் வணங்குவோம் என்றால் உங்கள் விருப்பம்* *அதனால் கிடைக்கும் நன்மையும் தீமையும் உங்களைச் சார்ந்த்தே !*


*அருட்பெருஞ்ஜோதி தான் மனிதனின் தலை நடுவுள் அணுவாய் அருகிக் கிடப்பது உண்மையில் ஆன்மா என்னும் ஒளியாகும்.எனவே நாம் தொடர்பு கொள்ள வேண்டியது நம்தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே என்பதுதான் உண்மையான அன்பான  வழிபாடாகும்*.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

புதன், 6 அக்டோபர், 2021

தனிப்பெருங்கருணை தினம்!

 *தனிப்பெருங்கருணை தினம் !* 


*இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார் தினத்தை ( பிறந்தநாளை) தனிப்பெருங்கருணை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டிற்குறியது* *வரவேற்கதக்கது*


இயற்கை உண்மை கடவுளின் பெயர் *அருட்பெருஞ்ஜோதி*

*அருட்பெருஞ்ஜோதி*

*தனிப்பெருங்கருணை*

*அருட்பெருஞ்ஜோதி!*


என்னும் பெயரைச் சூட்டியவர் வள்ளலார்.


*அன்பு தயவு அருள் என்ற மூன்றும் சேர்ந்த முழுவடிவமே தனிப்பெருங்கருணை என்பதாகும்* 


*மனிததேகம் எடுத்தவர்கள் ஒவ்வொருவரும் இயற்கை விளக்கமான கருணை வடிவமாக (அருள்வடிவம்) மாறினால்தான் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இணைந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதற்கு வாய்ப்புக்கள் தானே வந்து அடையும் அதுவே இயற்கை நியதியாகும்* 


*வள்ளலார் இறைவனிடம் கேட்டதே தான் கருணைமயமாக மாற வேண்டும் என்பதுதான்*.


*வள்ளலார் பாடல் !*


*கருணையே வடிவாய்ப்* பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்


தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும் வன்புலை கொலை இரண்டும்


ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே


மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண்எந்தாய்.! 


மேலும் திருஅருட்பா முழுவதும் *கருணைப்பற்றியே* பேசியும் பாடல்கள் இயற்றியும் உள்ளார்.


*கருணையும் சிவமே* பொருள்எனக் காணும் காட்சியும் பெறுக மற் றெல்லாம்


மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்


இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்


தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.!


*கருணை என்றால் என்ன ?*


*ஆன்மாவில் இருந்து சுரக்கும் சுத்த அமிலம் போன்ற திரவத்திற்கு அழியாத நந்நிதி என்றும் பெயர் அவற்றிற்கு கருணை  என்றும் பெயர்* *அந்த திரவத்திற்கு பெயர்தான் அருள் என்றும் அமுதம் என்றும் சொல்லப்படுவதாகும்*


*ஆண்டவர் மீது அன்பும் ஜீவன்கள் மீது தயவும் இரக்கமும் காருண்யமும் அதிகரிக்கும் போது சுத்த உஷ்ணம் உண்டாகும்* 


*சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள அறியாமை அஞ்ஞானம் என்னும் ஏழுவகையான திரைகள் ஒவ்வொன்றும் உஷ்ணத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொன்றாக விலகும்*


அதைத்தான் வள்ளலார் 


*திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே*

*அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி!*


*திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே*

*வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே!* (அகவல்) 


*எங்கே கருணை யியற்கையி னுள்ளன*

*அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே!*  (அகவல்) 


ஆன்ம சிற்சபையில் இயற்கையான கருணை என்னும் அருள் சுரக்கும் இடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையுடன் ஆட்கொண்டு காரியப்படுவார்.


மேலும் பதிவு செய்கிறார்


*கருணைக் கடலே அதில் எழுந்த கருணை அமுதே* கனியமுதில்


*தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே*


*பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே*


*தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே*.! 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் இடமே நம் சிரநடு ஆன்ம சிற்சபை இடமாகும் எனவேதான் மனதை சிற்சபையின்கண் இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்*  


*சன்மார்க்கத்தை பின்பற்றும் சன்மார்க்கிகள் எத்தனைபேர் அவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் நீங்களே  சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்* 


*பொய்யான புறவழிபாட்டை பின்பற்றுகின்ற வரையில் அன்பு உயிர்இரக்கம் தயவு அருள் கருணை தோன்றாது மரணம் நிச்சயம்*


*வள்ளலார் பாடல்!* 


*ஆடாதீர் சற்றும் அசையாதீர்* *வேறொன்றை*

*நாடாதீர்* 

*பொய்உலகை நம்பாதீர்* - வாடாதீர்


சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும்ஒன்றாமே.! 


*வள்ளலார் இவ்வளவு எடுத்து சொல்லியும் சாதி  சமய மதம் சார்ந்த சாத்திரக் குப்பைகளில் இருந்து வெளியே வரமுடியாமல் அருளைப் பெற முடியாமல் தனிப்பெருங்கருணையைத் தொடர்பு கொள்ள முடியாமல் அழிந்து கொண்டே உள்ளோம்*


*வள்ளலார் பாடல்!*


குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது

*மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்*


*பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே* *அவற்றில்*

*புகுதாதீர்* *சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்*


*செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!*


*மேலே கண்ட பாடலில் நான் சொல்வதை பொய் என நினையாதீர்கள்* *பொய்யான சாதி சமயம் மதங்களைப் பின்பற்றாதீர்கள் அதில் உண்மை இல்லை* 


*ஒவ்வொரு ஆன்ம சிற்சபையிலும் கடவுள் கருணையுடன் விளங்குவதால் சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் சத்தியம் சேர்ந்திடும் என்று சத்தியம் வைத்து வள்ளலார் சொல்லுகிறார்* 


வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க உண்மை நெறியான கருணை நெறியை கடைபிடித்து உயிர்இரக்கம் காருண்யம் தயவு அன்பு அருள் பெற்று தனிப்பெருங்கருணையுடன் இணைந்து மரணத்தை வென்று பேரின்பசித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

செவ்வாய், 5 அக்டோபர், 2021

நேர் வழியில் செல்வோம் உண்மை அறிவோம்!

 *நேர் வழியில் செல்வோம் உண்மை அறிவோம்!* 


*துறையிது வழியிது* *துணிவிது* *நீசெயும்முறையிது* *வெனவே மொழிந்த மெய்த் துணையே!* ( அகவல்) 


*நாம் செல்ல வேண்டிய துறையை தெரிந்துகொண்டு அங்கு செல்வதற்குண்டான நேர்வழியைக் கண்டு கொண்டு தவிர்க்க வேண்டியதை தவிர்த்து பயம் இல்லாமல் துணிச்சலுடன் சென்றால் மட்டுமே பெறவேண்டியதை பெறமுடியும் கிடைக்க வேண்டியது திருவருளாலே கண்டிப்பாய் கிடைக்கும்.*


நாம் செய்யும் ஒவ்வொரு சொல்லும்  செயலும் எண்ணமும் பயனுமும் வாழ்க்கை முறையும் நேர்மறையாக இருக்க வேண்டும் அதாவது தடம் மாறாமல் நேர்வழியில் சென்றால் மட்டுமே வெற்றி நிச்சயம் கிட்டும். 


*வள்ளலார் ஆரம்ப காலத்தில் வாழையடி வாழைஎன வந்த திருக்கூட்டாத்தார்கள் சொல்லிய  வாழ்ந்து காட்டிய வாழ்க்கை முறையை பின்பற்றி வாழ்ந்து பார்த்தார் வள்ளலார்.*

 *வள்ளலாருக்குமுன்னாடி தோன்றிய அருளாளர்கள் வாழ்ந்து காட்டிய ஆன்மீக சிந்தனையாளர்கள் வழியில் பயணம் செய்தார் முழுமையான  இறை அருள் கிடைக்க வாய்ப்பு இல்லை என்பதை உணர்ந்தார்*. 


*அவர்கள் சென்ற பாதையில் செல்கின்ற தருணம் தத்துவங்களைத்தான் காணமுடிந்த்து*

*இயற்கை உண்மை கடவுளைத் தொடர்பு கொள்ள முடியவில்லை காணமுடியவில்லை. முன்னாடி சென்ற ஆன்மீக அருளாளர்கள் பதிவு செய்த கொள்கைகளும் அவர்கள் சென்ற  பாதைகளும் தவறானது என்பதை வள்ளலார் அறிந்து கொண்டார்* 


*முன்னாடி சென்ற ஆன்மீகவாதிகள் சொல்வதையும் அவர்கள் சென்ற பாதையில் சென்றால்  சிறு ஒளி உண்டாகும் அதனால் பல்லிளித்து இருமாந்து கெடநேரிடும் என்பதை  அறிந்த தெரிந்த வள்ளலார் புதிய நேர்பாதையை எனக்கு காட்ட வேண்டும் என்று இறைவனிடமே முறையிட்டார் அழுதார் கெஞ்சினார் புலம்பினார் வேண்டினார் உணவு உண்ணாமல் உறக்கம் கொள்ளாமல் இரவு பகலாக இடைவிடாது ஆன்மாவைத்  தொடர்பு கொண்டார்.விடை கிடைத்தது பலன் கிடைத்தது*


*வள்ளலார் பாடல்!*


தேடியதுண்டு நினது உரு உண்மை தெளிந்திடச் சிறிது நின்னுடனே


ஊடியதுண்டு பிறர்தமை அடுத்தே உரைத்ததும் உவந்த்தும் உண்டோ


ஆடிய பாதம் அறியநான் அம்பலத்து அருட்பெருஞ்ஜோதி


கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக் கூறவும் கூசும் என் நாவே! 


*வள்ளலார் பாடல்!*


சரியை ஓர் நான்கும் கிரியை ஓர் நான்கும் சாற்றிடும் யோகமோர் நான்கும்


புரியவும் பதங்கள் பொருந்தவும் எனது புந்தியில் ஆசை சற்றறியேன்


பெரியதோர் ஞானம் நான்கினும் ஆசை பெற்றிலேன் முத்திபெற் றிடவும்


உறியதோர் 

இச்சை எனக்கிலை என்றன் உள்ளம் நீ அறிந்ததே எந்தாய்.! 


*உலகியலில் ஆன்மீகவாதிகளால் பின்பற்றும் ஆன்மீகப் பாதைகளான சரியை கிரியை யோகம் ஞானம் போன்ற கலைகளில் எனக்கு ஆசையில்லை*

அவற்றால் கிடைக்கும். முக்தியிலும் ஆசையில்லை என்கிறார்.


மேலும் சொல்லுகிறார் !


*இறக்கவும் ஆசையில்லை* இப்படி நான் இருக்கவும் ஆசையில்லை இன்றினி நான்


*பிறக்கவும் ஆசை இல்லை* உலகெல்லாம் பெரியவர் பெரியவர் எனவே


சிறக்கவும் ஆசை இல்லை விசித்திரங்கள் செய்யவும் ஆசை ஒன்றில்லை


*துறக்கவும் ஆசைஇல்லை துயர் அடைந்து தூங்கவும் ஆசை ஒன்றிலையே* ! 


இப்படி உலகியல் வாழ்வியலில் எந்த ஒரு ஆசையும் இல்லாமல் வாழ்ந்த வள்ளல் பெருமானுக்கு எதன் மீதுதான் ஆசை கொண்டார் என்பதைப் பார்ப்போம்.


வள்ளலார் பாடல் !


எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணிநல் இன்புறச் செயவும்


அவ்வுயிர் களுக்கு வரும்இடை யூற்றை அகற்றியே அச்சம் நீக் கிடவும்


செவ்வையுற் றுனது திருப்பதம் தபாடிச் சிவசிவ என்றுகூத் தாடி


ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.! 


*சுயநலம் இல்லாமல் எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு என்பதை அறிந்து அவ் வுயிர்களுக்கு வரும் இடையூற்றை அகற்ற வேண்டும் என்ற ஆன்மநேயத்துடன் பொதுநல நோக்கத்தோடு பொது உரிமையோடு வாழும் வாழ்க்கையே வேண்டும் என ஆண்டவரிடம் கேட்கிறார்.இதுவே வள்ளலாரின் தனிசிறப்பாகும்* 


*மேலும் உடற்பிணி உயிர்பிணி மரணப்பெரும்பிணி வராமல். என்னைக் காப்பாற்ற வேண்டும் என கேட்கிறார் வள்ளலார்*


*உண்மை ஒழுக்கம் தயவு கருணை ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் இயற்கை உண்மை கடவுளிடம் விண்ணப்பம் வைத்து முறையிட்டு இடைவிடாது வேண்டி விண்ணப்பம் செய்த வள்ளல்பெருமானை கருணையே வடிவமான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கைவிடுவாரா*?


*நீ நினைத்த நன்மை எல்லாம் யாம் அறிந்தோம் நினையே நேர்காண  வந்தனம் என்று வள்ளலார் முன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தோன்றுகிறார்*


தோன்றியது மட்டுமல்ல  வள்ளலார் சொல்லுவதை கேளுங்கள்.


*தந்தேகம் எனக்கு  அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு எனக்கு அளித்தார் எம்மையினும் பிரியார்* 


*எந்தேகம் அதிற்புகுந்தார் என் உளத்தே இருந்தார் என் உயிரில் கலந்த நடத்திறையவர் காலையிலே*


*வந்தே இங்கு அமரந்து அருள்வார் ஆதலினால் விரைந்து மாளிகையை அலங்கரித்து வைத்திடு இதற்குச்* 


*சந்தேகம் இல்லை என்றன் தனித்தலைவர் வார்த்தை சத்தியம் சத்தியம் மீது சத்தியம் சத்தியமே* !  


*இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்றதால் அருள்உடம்பு என்னும் மாளிகையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நுழைந்து நிறைந்து பேரின்பசித்தி பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்*.

*இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.* 


*ஒவ்வொரு மனிததேகம் எடுத்துள்ள உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்களும் வள்ளலார் காட்டிய நேர் வழியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகளான ஜீவகாருண்ய ஒழுக்க நெறிகளைப் பின்பற்றி.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ளும் சத்விசாரம் என்னும் நேர்வழியில் சென்றால் மட்டுமே பெறவேண்டியதைப் பெற்றுக்கொள்ளலாம்.* 


தவறான ஆன்மீக நெறிகளில்  செல்லாமல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க செந்நெறியில் செல்வோம்.


*வள்ளலார் பாடல்!*


பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்


செந்நெறி அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்


தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


*பல சமயங்கள் மதங்கள் தோன்றியதாலும் அவற்றின் தவறான கடவுள் கொள்கைகளாலும்  மக்களை இருளில் மூழ்கடித்து விட்டார்கள்.  இருள் சூழ்ந்த மக்களால் ஒழுக்க நெறிகளை கடைபிடித்து அருளைப்பெற முடியாமல் அழிந்து கொண்டே உள்ளார்கள்*


*இனி எதற்கும் கவலைப்பட வேண்டாம் எல்லோருக்கும் பொதுவான அருள்பெறும் வாய்ப்புள்ள  செந்நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வள்ளலார் வடலூரில் தோற்றுவித்துள்ளார்* அறிவுள்ள மனிதகுலம் அவற்றில் இணைந்து நேர்வழியில் சென்று ஒழுக்க நெறியை கடைபிடித்து சாகாக்கல்வி கற்று மரணத்தை வென்று பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம் என்பதை மேலே

 கண்ட பாடலின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.


*சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் என்பார் வள்ளலார்* 


*உண்மை அறிவோம் நேர்வழி செல்வோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம் 

9865939896

ஞாயிறு, 3 அக்டோபர், 2021

வள்ளலார் வருவிக்க உற்ற நாள்!

 *வள்ளலார் வருவிக்க உற்ற நாள் !*


 05-10-2021 ஆம் நாள் வள்ளல்பெருமான் அவர்கள் இவ்வுலகிற்கு இறைவனால் வருவிக்க உற்ற நாளை *ஆன்மநேய ஒருமைப்பாட்டு தினமாக* ஒவ்வொரு ஆண்டும் உலகம் எங்கும் உள்ள சன்மார்க்க அன்பர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது. 


*உலகில் தோன்றிய ஞானிகள்  அருளாளர்கள் சித்தர்கள் மற்றும் ஆன்மீக போதகர்கள் எல்லோரும் இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று. மனிதர்களுக்கு மட்டும் நன்மை பயக்கும் வகையில் பலவிதமான ஆன்மீக போதனைகளையும் வாழ்க்கை முறைகளையும் எண்ணம் சொல் செயல் வழியாக அவரவர்களுக்கு தெரிந்த வகையில் தெரிவித்துள்ளார்கள். ஆனால் வள்ளலார் எல்லா உயிர்களும் இன்பம் அடைய வேண்டும் என்பதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும்* 


*வள்ளலார் பாடல்!*


வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே


வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்


நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்


ஈடின்மா னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.! 


என்னும் பாடல்வாயிலாக  *தாவரம் முதல் மனிதர்கள்வரை  துன்பப் படுவதை சகிக்க முடியாமல் வாடினேன் இளைத்தேன் நொந்தேன் நடுக்குற்றேன் என்கிறார்* *அதுதான்  ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாகும்*  *அதுவே வள்ளலாரின் தனிசிறப்பாகும்*


*வள்ளலார் பாடல்*


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த


*உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே*.!


மேலே கண்ட பாடல் வாயிலாக வள்ளலார் தன்னை இறைவன் எதற்காக வருவிக்க உற்றார் என்ற விபரத்தை மக்களுக்குத் தெரியப்படுத்துகிறார்.


*வள்ளலார் வருவிக்க உற்ற நாளை சன்மார்க்கிகளாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கிறோம்* 

*அது அவசியமானதுதான்* *வள்ளலார்  சொல்லியவாறு வாழ்க்கையில் நாம் கடைபிடிப்பதே அவருக்கு நாம் செய்யும் கைமாறாகும்*


*ஆன்மீகம் என்பது பல்லாயிரம் ஆண்டுகளாக கடவுளைப் பற்றியும் வழிபாடுபற்றியும் கடவுளிடத்தில் இருந்து அருளைப் பெறுவது பற்றியும் பேசிக் கொண்டே வருகிறது.மேலும் சிற்றின்பம் பற்றியும் பேரின்பம் பற்றியும் பேசாத அருளாளர்களே இல்லை என சொல்லலாம்*


*உயர்ந்த அறிவுள்ள மனிதபிறப்பு !*


*அருளைப்பெற்று என்றும் அழியாத  பிறப்பு இறப்பு அற்ற பேரின்ப சித்திப் பெருவாழ்வு அடைய வேண்டும் என்பதற்காகவே உயர்ந்த அறிவுள்ள மனிதபிறப்பு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஆன்மாவிற்கு கொடுக்கப்பட்டு உள்ளது* 


*இதுவரையில் மனித இனம் பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழும் வழிதெரியாமால் அகம் கருத்து புறம் வெளுத்து பிறந்து பிறந்து இறந்து இறந்து  வாழ்ந்து   அழிந்து பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளார்கள்* 


பிறப்பு இறப்பு அற்ற அருள் உடம்பை (ஆன்மதேகம்) பெறுவதே வள்ளலார் காட்டிய புதிய ஆன்மீகமாகும்.


*மனித குலம் பரத்தில் சென்று அருளைப்பெற்று வாழ்வது சரியான முறையான வழிஅல்ல*. *இகத்தே  அதாவது இந்த பஞ்ச பூத உலகமாகிய இவ்வுலகிலே அறம் பொருள் இன்பம் வீடு என்னும் நான்கு வகையான வாழ்க்கை முறைகளில் தடம் மாறாமல் வாழ்ந்து பின்பு உலகப் பற்று அற்று இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வதே இகத்தே பரத்தைப் பெற்று வாழும் வாழ்க்கையாகும் என்கிறார் வள்ளலார்*


*வள்ளலார் பாடல் !* 


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன் அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும்இதை நினைக்கில் நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


*சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே* *பிணிமூப்பு மரணம்*

*சேராமல்* *தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே*


*பிறந்தபிறப் பு இதில் தானே* *நித்திய மெய் வாழ்வு*

*பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே*.! 


*மேலே கண்ட பாடலில் ஓர் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.இறந்துவிட்ட பிறகு சொர்க்கம் நரகம் கைலாயம் வைகுண்டம் பரலோகம் சத்தியலோகம் சிவலோகம் மோட்சம் என்பது எல்லாம் அடையமுடியாது*.

*உடல் உயிரை விட்டு ஆன்மா பிரிந்தால்( இறந்தால்) அடுத்து நன்மை தீமைக்குத் தகுந்தாற்போல் தீவினை நல்வினைக்குத் தகுந்தாற்போல் எதாவது ஒருபிறப்பு மீண்டும் கட்டாயம் ஆன்மாவிற்கு கொடுக்கப்படும் என்பது ஆண்டவர் ஆணையாகும்.*அதுவே நியதியாகும் *ஆதலால் இறந்தவரை எடுத்திடும் போது சத்தம் போட்டு புலம்பி அழுவது அழகல்ல. பிணி மூப்பு மரணம் வராமல் வாழும் வழியைத் தெரிந்து கொண்டு வாழ்வதே இறவாத பெருவரம் பெறும் வாழ்க்கையாகும் என்கிறார் வள்ளலார்*


இதுநாள் வரையில் மக்கள் தெரிந்து கொள்ளாத தெரிந்து கொள்ள முடியாத  உண்மையைத் தெரிந்து கொள்ளவே *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* 1872 ஆம் ஆண்டு வடலூரில்  புதிப்பித்து தோற்றுவிக்கிறார்.அச்சங்கத்தின் வாயிலாக *சாகாக்கல்வியை* கற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்கிறார்.


*உலக வரலாற்றில் சாகாக்கல்வி கற்க சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் தோற்றுவித்தவர் வள்ளலார் ஒருவரே !*


*அக்கல்வியை கற்று தேர்ச்சி பெறுவதற்கு  *இந்திரிய ஒழுக்கம்*

*கரண ஒழுக்கம்*

*ஜீவ ஒழுக்கம்*

*ஆன்ம ஒழுக்கம்*

*என நான்கு ஒழுக்கங்கள் மிகவும் அவசியமாகும் என்று சொன்னவர் வள்ளலார் ஒருவரே*


*ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்று புதுமைப் புரட்சி செய்தவர் வள்ளலார் ஒருவரே* 


*இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே என்கின்ற உண்மையை வெளிச்சம் போட்டு உலகிற்கு சொன்னவர் வள்ளலார் ஒருவரே*! 


ஒருமை என்பது கடவுள் ஒரேவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற கடவுளின் உண்மை நிலை அறிந்து அதன் மயமாக மாறவேண்டும் என்று சொன்னவர் வள்ளலார். 


*தயவு என்னும் கருணைதான் என்னை தூக்கிவிட்டது எனவும் அந்த தயவு வருவதற்கு ஒருமை வரவேண்டும்* *ஒருமை வந்தால் தயவு தானே வரும்.தயவு வந்தால் ஏறாநிலைமிசை ஏறலாம் என்று புதிய கோணத்தில் மக்களுக்கு போதித்தவர் வள்ளலார்*


*ஜீவ காருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்று சொன்னவர் வள்ளலார் ஒருவரே* 


*கடவுளும் கருணையும் ஒன்றே என்றவர்*


*ஒரு கடவுளைத் தொடர்பு கொள்வதே சிறந்த ஒழுக்கமாகும் என்றவர்*


*அந்த ஒழுக்கத்தை கடைபிடிக்க லகுவான இரண்டு வழிகளையும்  சொல்லி  அவற்றையும் வடலூரில் தோற்றுவிக்கிறார்*.


*ஒன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை.ஒன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்பதாகும்* 


*சத்திய தருமச்சாலை வழியாக சென்றால் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் கைகூடும். எனவேதான் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்கின்றார்.*

அதுவே  அருளைப்பெறும் வழியாகும்.


*அருள் வழங்கும் இடம்*


அடுத்து  ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கத்தால் இயற்கை உண்மை கடவுள் விளங்கும் இடமான சத்திய ஞானசபையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையால் அருள் வழங்கும் இடமாகவும் அருளைப்பெறும் இடமாகவும் சத்திய ஞானசபையை வடலூரில் தோற்றுவித்துள்ளார்.


அருளைப் பெறுவதற்கு உயிர் இரக்கமான *பரோபகாரம்* *சத்விசாரம்* என்னும் இரண்டு வழிகளே போதும் என்கின்றார்


*எனவே நாம் பெறவேண்டியது அருள் அருள் அருள் என்பது மிகவும் முக்கியமானதாகும்*  *பொருளை அருளாக மாற்றுவதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*.


*வள்ளலார் வருவிக்க உற்ற நாளான அக்டோபர்  05-10-2021 ஆம் நாளான அன்று அன்னதானம் வழிபாடுசெய்து விழா எடுப்பதுடன் சாகாக்கல்வி கற்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணம் இல்லாப்பெருவாழ்வு வாழ்வதற்கு முயற்சி செய்வதே ஒவ்வொரு சன்மார்க்கிகளின் முக்கிய விரதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 


*வள்ளலார் பாடல்!*


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்க முடியாதே

*சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால்* அதனை


எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழி கொண்டு உலகீர்


*பற்றியபற் றனைத்தினையும் பற்றற விட்டு* *அருள்* அம்

பலப்பற்றே பற்றுமினோ எற்றும் இறவீரே*.! 


*சன்மார்க்க சங்கத்தவர் மீது நம்பிக்கை வைத்து மேலே கண்ட பாடலை பதிவு செய்கிறார் வள்ளலார்.வள்ளலாரின் நம்பிக்கையை பூர்த்தி செய்வதே சன்மார்க்கிகளின் கடமையாக ஏற்றுக்கொண்டு வள்ளலார் வருவிக்க உற்றநாளில் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு வாழ்ந்து காட்ட வேண்டும்*


வள்ளலார் மக்களுக்கு சொல்லியதோடு நிறுத்தாமல் எவ்வாறு வாழ வேண்டும் என்று வாழ்ந்தும் காட்டியுள்ளார்.


*தன்னுடைய பூத உடம்பை அருள் உடம்பாக (ஒளிதேகம்) மாற்றிக்கொண்டு வடலூருக்கு அடுத்து நான்கு மைல் தொலைவில் உள்ள மேட்டுகுப்பம் என்னும் இடத்தில் ஸ்ரீமுக வருடம் தைமாதம் 19 ஆம் நாள் 30-01-1874 ஆம் தேதி இரவு 12 மணிக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து கொண்டார்* 


*நாமும் வள்ளலார் போல் *வாழ்வோம் வாழ்ந்து காட்டுவோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896