செவ்வாய், 17 ஜனவரி, 2017

மலேசிய அன்பர் முருகதாஸ் அய்யா அவர்கள்.கீழே கண்ட பாடலுக்கு விளக்கம் கேட்டு உள்ளார்.

மலேசிய அன்பர் முருகதாஸ் அய்யா அவர்கள்.கீழே கண்ட பாடலுக்கு விளக்கம் கேட்டு உள்ளார்.


விழித்து விழித்து இமைத்தாலும் சுடர் உதயம் தோன்றாது !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

விழித்து விழித்து  இமைத்தாலும் சுடர் உதயம் இலையேல்
விழிகள ்விழித் திளைப்பதலால் விளைவு வொன்றும் இலையே
மொழித்திறஞ்செய் தடிக்கடிநான் முடுகி முயன் றாலும்
முன்னவநின் பெருங்கருணை முன்னிடல ்இன் றெனிலோ
செழித்துறுநற் பயன்எதுவோ திருவுளந்தான் இரங்கில்
சிறுதுரும்போர் ஐந்தொழிலும் செய்திடல்சத் தியமே
பழித்துரைப்பார் உரைக்கஎலாம் பசுபதிநின் செயலே
பரிந்தெனையும் பாடுவித்துப் பரிசுமகிழ்ந் தருளே.

என்று ஒரு பாடலை பதிவு செய்து உள்ளார்.

நாம் அனைவரும் நம்மை இயக்கும் சுடர் என்னும் ஆன்ம ஒளியை அறிந்து கொள்வதற்கும்.அருளைப் பெருவதற்கும்.தினமும் கண்களை மூடிக்கொண்டும்.திறந்து கொண்டும் தவமோ.தியானமோ.யோகமோ.பக்தியோ தினமும் செய்து கொண்டு இருக்கிறோம்.

 உண்மையான ரகசியம் என்ன என்று  தெரியாமல்.எந்ந முறையில்.எந்த வழியில் தியானம்.தவம்.யோகம்.பக்தி செய்தாலும் .சுடர் உதயம் தோன்றாமல்.கண்கள் இளைத்து சலித்துப் போகின்றன.என்கிறார் வள்ளலார்.

கருணை ஒன்றினால் மட்டுமே சுடர் உதயத்தை அறிந்து கொள்ள முடியும் என்ற உண்மையை எனக்கு தெரிவித்தயாய் நானும் தெரிந்து கொண்டேன். மற்ற ஆன்ம நேய உடன் பிறப்புகளுக்கும்.உரிமையுடன் சொல்லுகின்றேன்.

எங்கே கருணை இயற்க்கையில் உள்ளன .அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே .அருட்பெரும் ஜோதியே என்கிறார்.

எனவே தான் கருணை இல்லாமல் செய்கின்ற தியானம்.தவம்.யோகம்.பக்தி யாவும் வெற்று மாயா ஜால செய்கைகளே .என்பதை மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்.

நம்முடைய உடம்பக்குள்.இந்திரியம்.கரணம்.ஜீவன்.ஆன்மா என்னும்  நான்கு பகுதிகள் உள்ளன.இதில் ஆன்மா தான் உயிரை.கரணங்களை.இந்திரியங்களை இயக்கும் உள் ஒளி என்னும ஆன்ம  சுடராகும்.

நாம் இந்திரியங்கள்.கரணங்கள் வழியாக செய்யும்.அன்பு.தயவு.கருணை.மட்டும் தான் ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியும்.

மற்றைய அனைத்தும் இந்திரியங்கள் கரணங்கள் வரைதான் செல்லும். என்ற உண்மையை அறிவு பூரணமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் சிறு தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதல் போல்.சிறிய கருணையைக் கொண்டு பெரிய கருணையைப் பெற முடியும் என்பதாகும்.

மேலும் சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சத்தை உண்டாக்க வேண்டும் என்கிறார்.

வெறுமென தியானம்.தவம்.யோகம்.பக்தி.போன்ற வழிமுறைகளை பின்பற்றி  செய்வதால் .இந்திரியங்களும்.கரணங்களும் இளைத்து போகுமேத் தவிர.சுடர் உதயம் தோன்றாது. ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும்.திரைகள் விலகாது.அருள் சுரக்காது.

கருணைக்குப் பெயர்தான் ஜீவகாருண்யம் என்பதாகும்.உயிர் இரக்கம் என்பதாகும்.

ஜீவகாருண்யமும் வேண்டும்.சத்து.சித்து ஆனந்தம் பெறுவதற்கு ்  அக விசாரமும் என்னும் ஆன்ம விசாரம் வேண்டும்.

அக விசாரத்தைத் தான் தியானம்.தவம்.யோகம் என்பதாகும்.அதன் உண்மையை உணர்ந்து செய்தால் எல்லா நன்மையும் கிடைக்கும்.

அகவிசாரம் என்றால் என்ன என்பதை பற்றி "பேருபதேசம்" என்ற பகுதியில் தெளிவாக விளக்கி விளக்கம் தந்து உள்ளார் படித்து தெரித்து கெள்ளவும்.

இன்னும் விரிக்கில் பெறுகும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு