திங்கள், 30 ஜூலை, 2012

மனிதன் மனிதனாக வாழ்வோம் !


மனிதன் மனிதனாக வாழ்வோம் !

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் .

இந்த உலகத்தில் மனிதனாக பிறந்த நாம் ,மனிதனாக வாழ வேண்டும் .மனிதனாக வாழ்வது எப்படி ?எல்லா உயிர் இனங்களை காட்டிலும் உயர்ந்த அறிவு மனிதனுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது .இந்த உலகத்தில் மனிதன் வாழ்வதற்கு எல்லா வசதிகளும் கொடுக்கப் பட்டு உள்ளது .மனிதன் அனுபவிக்கலாம் ஆனால் எதையும் எடுத்துச் செல்ல முடியாது என்பது இயற்கையின் சட்டமாகும்.

எல்லா உயிர்களிலும் இயற்கை என்னும் ''ஒளி ''இயற்கையால் படைக்கப் பட்டுள்ளது.அந்த உயிர் ஒளியை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை --உயிர்களை அழிக்காமல் எதை வேண்டுமானாலும் செய்யுங்கள் தவறு இல்லை --ஆனால் வாய் இல்லாத, பேச இயலாத உயிர்களை அடித்து கொன்று உண்பது பெரிய குற்றமாகும் --உணவு என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது --பசி என்பது எல்லா உயிர்களுக்கும் பொதுவானது --பசியை போக்கிக் கொள்ள இயற்கையில் தாவரங்கள் என்னும் இலை,பூ,காய்,கனிகள் போன்ற அளவில்லா உணவு வகைகள்,  இயற்கையில் எல்லா  உயிர்களுக்காகவும்  உணவாக படைக்கப் பட்டு உள்ளது.

மேற்படி தாவர உணவை உட்கொள்ளாமல் உயிர்களை அழித்து உண்ணுவது பெரிய குற்றமாகும்.அதனால்தான் உலகில் உண்டாகும் அனைத்துக் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும்,அச்சங்களுக்கும் பயங்களுக்கும்.காரணமாகும் --இதை அறியாமல் மனிதன் வாழ்வது மனித செயல்கள் அல்ல-- என்பதை உணர வேண்டும் --இதுவே மனித பிறப்பின் பண்பாகும்.

அடுத்து சாதி,சமய ,மதக்  கொள்கைகளை மனிதனால் உருவாக்கியதாகும் அதைப் பிடித்துக் கொண்டு மனிதன் அழிந்து கொண்டு உள்ளான் --உலகில் உண்டாகும் அனைத்து போராட்டங்களுக்கும் அடிபடைக் காரணம் சமய ,மத,சாதி,வேற்றுமைகளாகும்.--இதை உணாடாக்கியவர்கள் மதவாதிகள் ,பொய்யான மதங்களை உண்மை என்று எண்ணி --அவர்கள் காட்டிய கொள்கையில் வாழ்வதால் மனித நேயம் இல்லாமல் -ஒற்றுமை இல்லாமல் வேறுபட்டு வாழ்ந்து வருகிறோம் --அவற்றை முழுதும் பற்று அற விட்டு விட்டால் ,மனிதன் மனிதனாக வாழ்ந்தவனாகக் கருதப்படுவான் ,

அடுத்து பொருள் என்பது அனைருக்கும் பொதுவானது --அதை அனைவருக்கும் பொதுவாக,-- சமமாக பகிர்ந்து வாழப்  பழகிக் கொள்ள வேண்டும்,அதுவே மனித பண்பாகும் ,உயர்ந்தவர் ,தாழ்ந்தவர் என்பது பொருளின் அதாவது பணத்தின் அடிப்படையில் பிரிக்கப் படுகிறது ,அந்த நிலையை மாற்றுவது மனிதப் பண்பாகும் ,-எவ்வளவுதான்  பணம்,பட்டம்,பதவி,படிப்பு -- இருந்தாலும் எல்லோரும் இறுதியில் மரணம் என்னும் பிணியில் அகப்பட்டு அழிந்து விடுகிறோம் ,---அந்த பணமோ,பதவியோ,மரணத்தைக் காப்பாற்றுவது இல்லை --மரணத்தைக் காப்பாற்றாத ,பணம்,பதவி இருந்து என்ன பயன்? என்பதை மனிதனாக பிறந்த அனைவரும் சிந்திக்க வேண்டும்.இவையே மனித பண்பாகும் ,

மனிதன் பொருளை வைத்துக் கொண்டு வாழ்வதால் --இறைவன் என்னும் அருள்  ஒளி அவனுக்கு  நன்மை செய்யாது,இறைவனால் அளிக்கப்படும் அருள என்னும் உயர்ந்த நிதி --கிடைக்காது , எந்தக் கடவுளும் உங்களை காப்பாற்ற மாட்டார் ,உண்மையான கடவுள் யார்? என்றால் எல்லா உயிர்களிலும் உயிர் ஒளியாக இயங்கிக்  கொண்டு இருக்கும் --ஆன்மா என்னும் ஒளிதான் கடவுள் .--அதனால் ஒரு உயிரை அழித்தால் கடவுள் வாழும் ஆலயத்தை அழித்தது போலாகும்

.இதை அறிந்து வாழ்வதுதான் மனித பிறப்பின் ஒழுக்கம் --பண்புகளாகும் --கொல்லா நெறியே குவலயம் ஓங்க வேண்டும் --எல்லா உயிர்களும் இன்புற்று வாழ  வேண்டும் ,--இவை இயற்கையின் சட்டமாகும்.

இவற்றை உலகை ஆளும் ஆட்சி யாளர்களும் ,அறிவு படைத்த அறிவியல் வல்லுனர்களும்,,இயற்கையை கணக்கிடும் விஞ்ஞானிகளும்,ஆராய்ச்சி செய்ய வேண்டும் .இதை விடுத்து எதைக் கண்டு பிடித்தாலும் ,கணக்கு போட்டாலும் ,சட்டம் போட்டாலும் எதுவும் வேலைக்கு உதவாது .மனிதன் உண்மை அறிவை தெளிவு படுத்தி --வெளிக்குள்  வரவேண்டும் ,பொருள் அறிவு பொய்யான அறிவாகும் --அருள் அறிவு மெய்யான அறிவாகும்.--அருள் அறிவை மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் அறிந்து கொள்வது தான் மனிதப் பண்பாகும்

அருள் அறிவைப் பெற்று மனிதன் மனிதான வாழ வேண்டும் .அருள் அறிவை பெறுவதுதான் மனிதப் பிறப்பின் உயர்ந்த அறிவாகும் --உயர்ந்த கொள்கையாகும்

 மனிதன் மனிதனாக வாழ்வோம்!  

உங்கள் அன்புள்ள ஆன்மநேயன் ;--கதிர்வேலு.  

ஞாயிறு, 29 ஜூலை, 2012

பக்தி ,தவம் ,தியானம்,யோகம் வழிபாடு தேவையா ?


பக்தி ,தவம் ,தியானம்,யோகம் வழிபாடு தேவையா ?

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் ,நாம் கடவுளைக் கானபதற்கோ! அறிந்து கொள்வதற்கோ! எதையும் தேடுவதில்லை --நமக்கு துன்பம் துயரம்,அச்சம்,பயம்,வரும்போதுதான் அதைத் தவிர்த்துக் கொள்ள ஏதோ ஒன்றை தேடுகிறோம் நாடுகிறோம்.--அந்த நிலையில் உள்ள மக்களை தன் வசமாக்க,வசப்படுத்த,  பல அமைப்புகள் இன்று நிறைய உள்ளது, அவர்கள் இலவசமாக எதையும் சொல்லித் தருவதில்லை பணம் பெற்றுக் கொண்டு ஏதோ ஒன்றை சொல்லித் தருகிறார்கள்.அவர்களுக்கும் அதன் பயன் என்னவென்று தெரியாது ,அவர்களால் கேட்பவர்களுக்கும் எந்த பயனும் தெரியாது.இன்று பணம் சம்பாதிக்கும் கூட்டம்-- ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றிக் கொண்டு வருகிறார்கள்.

மக்கள் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறார்கள் அவர்களை அறியாமையில் இருந்து மீட்க வேண்டும் , திருத்த வேண்டும் என்றும் என்பதற்காகத்தான் வள்ளலார் இந்த உலகத்திற்கு --இறைவனால் வருவிக்க உற்றவராகும்.மக்களை கவ்விக் கொண்டு இருந்த மூட நம்பிக்கைகளையும் --சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கற்பனைக் கதைகளையும் குழித் தோண்டி புதைக்க வேண்டும் என்றார் .அதை வாயால் சொன்னால் மக்களுக்கு தெரியாது என்பதால் --திருஅருட்பா என்னும் அருள் நூல் வாயிலாக எழுதி வைத்து உள்ளார் .எழுதி வைத்தால் மட்டும் போதாது .அதே போல் வாழ்ந்தும் காட்டி உள்ளார் .

மக்களுக்கு உண்மையை தெரியப் படுத்த வேண்டும் என்பதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "' என்ற அமைப்பை அதாவது சங்கத்தை வடலூரில் ஆரம்பித்து உள்ளார் --அந்த சங்கத்தில் சேருவதற்கு தகுதி என்ன என்றால் அன்பு,தயவு வேண்டும் என்றார் ,மேலும் உண்மையைத் தெரிந்து கொள்வதற்கு  முக்கிய தடையாக இருக்கும் சமயம்,மதம்,முதலிய மார்க்கங்களை முற்றும் பற்று அற கை விட்டவர்களும்,காமம் ,குரோதம்,முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் ,கொலை புலை {அதாவது உயிர்க்கொளையும் செய்யாமலும், புலால் உண்ணாதவர்களும்} தவிர்த்தவர்களும்,ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் என்பதை சன்மார்க்க சட்டமாக ''திருஅருட்பாவிலே''  பதிவு செய்து உள்ளார்கள்.

வள்ளலார் சொல்லியபடி சன்மார்க்கத்திற்கு வருபவர்கள்  புலை,கொலை தவிர்த்து உறுப்பினராகி இருக்கிறார்கள்.ஆனால் வள்ளலார் சொல்லியபடி வாழ்கிறார்களா ?என்றால் இல்லை என்றுதான் அனைவருடைய பதிலாகவும் இருக்கிறது.வள்ளலார் சொல்லியபடி வாழ முடியாவிட்டாலும் பரவாயில்லை ,ஆனால் அவர் கொள்கைகளை தவறாக பயன் படுத்தி --சமய மத வாதிகளைப் போல் பணம் சம்பாதிக்க தொடங்கி விட்டார்கள்--இப்படி செய்பவர்கள் சன்மார்க்கிகளா ?சமய,மத மார்க்கங்களைச் சார்ந்தவர்களா? என்பது புரியாத புதிராக உள்ளது ,பணம் சம்பாதிக்க சமய,மத வாதிகள் சன்மார்க்கர்கள் போல் வேடம் போட்டுக் கொண்டும்  சன்மார்க்கள் என்ற முகமூடியை போட்டுக் கொண்டும்  சன்மார்க்கத்தில் நுழைந்து உள்ளார்கள்

சுத்த சன்மார்க்கத்தில் அழுத்தமான நம்பிக்கை உள்ளவர்கள் இப்படிப்பட்ட காரியங்களை செய்ய மாட்டார்கள் .வள்ளலார் கொள்கையை பின்பற்று பவர்கள் .ஆன்மநேயத்தோடும்,உயிர் இரக்கத்தோடும் வாழ வேண்டும் .மற்ற எதிலும் பற்று வைக்க கூடாது,பொய்யான வழிகளை மக்களுக்கு சொல்லித் தர வேண்டாம் .உண்மை அன்பு ,உண்மை தயவு ,உண்மை கருணை ,இவைகளை மட்டும் போதிக்க வேண்டும். பணம் சம்பாதிக்கும் எந்த தவறான வழிகளையும் பின் பற்றக் கூடாது.அப்படி மீறியும் செயல் பட்டால் ஆண்டவர் நம்மை காப்பாற்ற மாட்டார் .பின் வரும் துன்பங்களை நாம் அனுபவித்தே தீர வேண்டும் .

கடவுள் பெயரைச் சொல்லி நாம் எந்த தவறான பாதையிலும் செல்லக் வேண்டாம் .மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் .உண்மை மார்க்கம் சன்மார்க்கம் --ஞான மார்க்கம் சன்மார்க்கம் --அருளைத் தேடும் மார்க்கம் சன்மார்க்கம்.----ஒழுக்கம் உள்ள மார்க்கம் சன்மார்க்கம்.---தன்னை அறியும் மார்க்கம் சன்மார்க்கம் ,

தன்னை அறிய ---சுத்த சன்மார்க்க சாதனம் என்ன என்பதை வள்ளலார் விளக்குகிறார் !

சாதனம் ஒன்றும் வேண்டாம் --ஏதாவது சாதனம் சொல்லக் கேட்டு ,அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும் ,அதைக் கண்டு பல் இளித்து இறுமாந்து கெட நேரிடும் .ஆதலால் காலம் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன் உயிரைப்போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ள வேண்டும் .இதுவே சாதனம்.

மேலும் எல்லா உயிரிகள் இடத்தும் தயவும் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் அன்புமே முக்கியமானவை ;--கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக --மற்று எல்லாம் மருள் நெறி என எனக்கு அறிவித்த வண்ணமே பெற்று இருக்கின்றேன் ,என்று வள்ளலார் அனுபவித்து நமக்கு தெளிவுபட தெரிவித்து உள்ளார் .அதன் படி அனைவரும் செயல்படுவோம் .

உங்கள். ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

புதன், 11 ஜூலை, 2012

நான் அறிந்த வள்ளலார் !பாகம் -5,

நான் அறிந்த வள்ளலார் !பாகம் -5,


இமாய்யா வீடு !

நண்பகல் நேரம் வீட்டில் சின்னம்மை சமையல் வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார் .

வீடு முழுவதும் மெழுகி விடப்பட்டு இருக்கிறது,வாசல் முழுதும் கோலம் அழகாக வரையப்பட்டு இருக்கிறது ,வீட்டின் உள்ளே இருக்கும் நடராசர் சிலைக்கு அலங்காரம் செய்யப் பட்டு இருக்கிறது.வீட்டு வேளைகளில் கவனமாக இருக்கிறார் சின்னம்மையார்,


  • சிவனடியார் வருகை !


''நமச்சிவாயம் ....அம்மணி ''

என்ற குரல் சின்னம்மையின் காதில் விழுகிறது ,உடனே விரைவாக வாசலுக்கு வருகிறார் .

வாசலில் --

சிவந்த மேனியும், கற்றைத் திருநீறும்..நீண்ட சடாமுடியும் ..காவி உடையும் ,.கமண்டலமும், திருவோடும் கம்பீரமும் .நிமிர்ந்த தோற்றமும்,..வயது முதிர்ந்த தோற்றமும் உள்ள சிவனடியார் நிற்கிறார் .

{அவர் முகத்திலே ஒரு தெய்வீகமான களை இதுவரையில் இது போன்ற ஒரு துறவியை யாரும் பார்த்ததும் இல்லை அப்படி ஒரு தோற்றம் }

அம்மணி என்ற குரல் கேட்டதும் வாசலுக்கு வந்த சின்னம்மை அவரைப் பார்த்ததும் அந்த சிவனடியாரைக் கண்ட மாத்திரத்தில் கைகூப்பி வணங்குகிறார்.

{அந்த நேரத்தில் பம்பை உடுக்கை ஒலி போன்ற தெய்வீக சப்தம் கேட்பது போல் சின்னம்மை உணர்கிறார் }
அடியாரைக் கண்ட பரபரப்பில் அவருக்கு ஒன்றுமே ஓடவில்லை "'வாங்க சாமீ...வாங்க என்று கூறிவிட்டு ,அவர் அமருவதற்காக ஒலைப்பாயை எடுத்துவந்து திண்ணையில் விரிக்கிறார்.

உட்காருங்க சாமீ...

என்று சின்னம்மை கூறியவுடன் ..அடியவர் தன் கையை உயர்த்தி ஆசி வழங்குகிறார்,வீட்டிற்க்குள் வரவேண்டி காலடி எடுத்து வைத்தவர் ...காலை பின்னுக்கு இழுக்கிறார்,வாசலில் கோலமாவில் சிவலிங்கம் படம் போட்டதைப பார்த்து அதை மிதிக்காமல் உட்புறம் நோக்குகிறார்,அங்கே நடராசர் திருவுருவப்படம்,அதன் அருகில் இரண்டொரு இனிப்பு பலகாரங்கள் படையல் வைக்கப்பட்டு இருக்கிறது.

அடியார் மெல்ல புன்னகை பூக்கிறார்,விரித்த பாயில் அமர்கிறார் .அவருக்கு தாக சாந்திக்காக முதலில் தண்ணீர் தருகிறார் சின்னம்மை,

சிவனடியார் தண்ணீர் அருந்திவிட்டு ..

அம்மணி...நான் மிகவும் களைப்போடு இங்கே வந்து இருக்கேன்,உன் வீட்டில் விருந்து உண்டு பசியாற்றிக் கொள்ளவே,நெடும் தொலைவில் இருந்து வருகிறேன் ...நான் வந்த வேளை நல்ல வேலைதானே ?

என்று கேட்கிறார் ..

அதற்கு கின்னம்மை --

சாமீ .. நீங்க பெரியவங்க இந்த குடிசையிலே அடியெடுத்து வச்சதே எங்க நல்ல காலம்தான் சாமீ ...அவுங்களும் இப்போ வந்திடுவாங்கோ  ..உங்களைப் போன்ற சிவனடியாருங்க இந்த வீட்டிற்க்கு வந்தாங்கன்னு தெரிந்தா ..அந்த கடவுளே வந்திட்டதா நெனைச்சி ரொம்போ சந்தோஷப் படுவாருங்க ..என்கிறார்


நீ -கூறித்தான் இதை நான் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதில்லை ,யாம் அனைத்தும் அறிவோம்!--மகளே ,பசி முகவும் வருத்துகிறது அமுது படிக்கிறாயா ?--விருந்து உண்ட பிறகு நான் தில்லைக்குப் போக வேண்டும்.  • ''தில்லைக்கா ''
  • ஆமாம் ..தில்லை அம்பலம் என்னும் சிதம்பரமே எனது இருப்பிடம் .--என்று எழுகிறார் .சிவனடியார் நின்று கொண்டு இருக்கிறார் ,சின்னம்மை --அவர் பாதங்களில் நீர் விடுகிறார் ,சிவனடியார் புன்முறுவலோடு நிற்கிறார் .பின்னர் அவர் பாதம் தொட்டு சின்னம்மை வணங்குகிறார் .


அவர் பாதத்தில் கைவைத்து எடுக்கும் போது ஒருகாலை விட ஒருகால் வித்தியாசமாக இருக்கவே --வியந்து அடியாரை நோக்க அடியார் அதைப்புரிந்து கொண்டு --


தில்லைக்குப் போனால் நான் ஒருகாலைத் தூக்கித்தான் ஆடிக்கொண்டு இருக்க வேண்டி இருக்கிறது .அதனால் வந்த கோளாறு என்று நினைக்கிறேன் .


சின்னம்மை அவரை உற்றுநோக்க --பம்பை உடுக்கை ஒலி போல சத்தம் சின்னம்மை காதில் மெல்என ஒலிக்கிறது அதை அனுபவித்துக் கொண்டே --


சின்னம்மை சிவனடியாருக்கு உணவை ஆவலுடன் பரிமாறுகிறார் ,--சிவனடியார் மகிழ்ச்சியோடு ஆவலாக உண்கிறார்,அவர் அருகில் நின்று கொண்டு பனை ஓலை விசிறியால் அவருக்கு விசிறி விடுகிறார் ,


சிவனடியாருக்கு ஏப்பம் வருகிறது .


''அப்பாடா --பசிக்காக சாப்பிட உட்கார்ந்த நான் --ருசிக்காக,கொஞ்சம் அதிகமாகவே சாப்பிட்டு விட்டேன் என்கிறார் சிவனடியார்.


இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு மோர் குழம்பு விடட்டுமா சாமீ ...என்று சின்னம்மை கேட்க ...போதும் மகளே !...நீ படைத்த அமுதால் வயிறு மட்டும் நிறையவில்லை ...என்னுடைய மனதும் நிறைந்து விட்டது .என்று நீர் அருந்துகிறார் .


பின் சிவனடியார் வீட்டுக்குள் இருந்து வெளியே வருகிறார் ,..அவரைத் தொடர்ந்து சின்னம்மையும் வருகிறார் .வந்தவர் சின்னம்மை பக்கம் திரும்பி ..

அம்மணி ..எனக்கு விருந்து படைத்து உபசரித்த உனக்கு எப்படி நன்றி சொல்வது என்றே புரியவில்லை என்று சொல்கிறார் .

சுவாமீ.. உங்களை மாதிரி அடியார்களுக்கு உபசாரம் செய்யறது --அந்த சிவனுக்கே உபசாரம் பண்றதாத்தான் நினைக்கிறோம் --''இது எங்க கடமை சாமீ ''---என்று பதில் சொல்லுகிறார் சின்னம்மை !

நல்லது மகளே சிவனடியார்களை உபசரித்தால் அந்த சிவனையே உபசரித்தாகத்தான் அர்த்தம் ...

அந்த சிவமாக நின்று உனக்கு ஒரு வரம் தருவோம் !--என்னுடைய வயிற்றுப் பசியை நீக்கிய உன் வயிற்றில் --இந்த உலகம் எல்லாம் உள்ள மாந்தர்களின் அறியாமையைப் போக்கி..அனைவருடைய வயிற்றுப் பசியையும் போக்கி ,மேலும்  அறிவு என்னும் பசியை உண்டாக்க ---

ஒரு ஞானக் குழைந்தை பிறக்கும் !தெய்வாம்சம் அவன்மேல் நின்று ஒளிரும் ,--இறைவனின் பிள்ளை என்று யாவராலும் போற்றப் படும் .அவன் மரணத்தை நீக்கி வாழ்வாங்கு வாழ்வான் !--நீ ஞானக் குழைந்தையைப் பெற்ற புண்ணியவதி என்று போற்றப் படுவாய் ..

ஈன்ற பொழுதின் பெரிது உவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாயாக ..அவன் பெருமையில் நீ வாழ்வாய் !

என்று கூறி திருநீறை சின்னம்மை கையில் வழங்கி ''இதை நீயும் இட்டுக்கொள் --மறவாமல் உனது கணவருக்கும் கோடு ...எல்லாம் நலமாக அமையும்.!''என்று கூறிவிட்டு நிற்கிறார் .

அப்போது பம்பை உடுக்கை ஒலி மெல்லென ஒலிக்கிறது !

''எல்லாம் நலமாக அமையும் '' என்று மீண்டும் கூறிவிட்டு --சின்னம்மையின் பதிலையும் எதிர் பார்க்காமல் புறப்பட்டு சிவனடியார் போகிறார் .

அவர் போவதையே பார்க்கிறார் சின்னம்மை ..நடந்து கொண்டே இருந்த சிவனடியார் உருவம் மறைந்து விடுகிறது .திகைத்த சின்னம்மை ...வந்தவர் அந்த சிவபெருமானே என்று மகிழ்ந்து ஆனந்த கண்ணீர் விட்டுக் கொண்டே .--

நேராக ஒடி நடராசர் திருஉருவ சந்நிதியில் அமர்ந்து ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார் .


                  
மீண்டும் பூக்கும் ;--

செவ்வாய், 10 ஜூலை, 2012

கடவுள் உண்டா ? இல்லையா ?

கடவுள் உண்டா ? இல்லையா ?

கடவுள் உண்டா? இல்லையா ? என்ற வினா, உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே கேட்கப் படும் கேள்விகளாகும்!

கடவுளைக் காட்ட முடியாது ! காண முடியும் ! எல்லா உயிர்களிலும், உடம்புகளிலும் ஒளியாக உள்ளது ,ஒளியை எப்படிக் காட்ட முடியும் ?உணரத்தான் முடியும் !

கடவுள் உண்டா? இல்லையா? என்ற வினாவுக்குப் நாம் போக வேண்டாம்--.நம்மை நாமே சிந்தித்து பார்க்க வேண்டும்!இந்த உலகம் என்னும் உருண்டை வடிவமான வட்டத்திற்குள் பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் --நிலம், ,நீர்,அக்கினி,காற்று,ஆகாயம் என்னும் கருவிகள் எப்படி வந்தன? என்று சிந்திக்க வேண்டும் ,அடுத்து அணுக்கள் என்று சொல்லப்படும் ஏழு விதமான அணுக்கள் --வாலணு,--திரவ அணு,--குரு அணு --லகு அணு --அணு --பரமாணு ---விபு அணு ---போன்ற அணுக்கள் , எப்படி வந்தது என்று சிந்திக்க வேண்டும்,

ஒன்பது நவ கிரகங்கள் எப்படி வந்தது என்று சிந்திக்க வேண்டும்.இந்த உலகம் என்று சொல்லப்படும் அண்டத்திற்குள்,ஆன்மா என்னும் ஒளி கூட்டங்கள் எப்படி வந்தது என்பதை சிந்திக்க வேண்டும்.ஆன்மாவில் இருந்து உயிர்கள் எப்படி தோன்றின என்பதை சிந்திக்க வேண்டும்,உயிர்கள் வாழ்வதற்கு உடம்பு என்னும் தேகத்தை --எங்கு யாரால் கட்டிக் கொடுக்கப் பட்டது என்பதை சிந்திக்க வேண்டும்,

உயிர்களின் தோற்றமும் மாற்றமும் உடம்பின் தோற்றமும் மாற்றமும் ஏன்? மாற்றி மாற்றி அமைக்கப் படுகிறது அதாவது உண்டாக்கப் படுகிறது,தாவரம் முதல் மனித தேகம் வரை, உருவம் கட்டிக் கொடுக்கப் படுவது யாரால் ?எதனால் ?என்பதை சிந்திக்க வேண்டும் மனிதனாக பிறந்த நாம் நம்மைப் பற்றி சிந்திக்க வேண்டும் .

எப்படி சிந்திக்க வேண்டும் என்பதைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு !

உடம்பு வருவகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறியீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்று அறியீர்
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம் புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

புண்ணியம் என்னும் அன்பு,தயவு, கருணை எங்கு உள்ளதோ அங்கே கடவுள் விளங்குவார் !

கடவுள் உண்டு !

இந்த உலகத்தில் நாம் கடவுளாக நினைந்து வழிபடுவது எல்லாம் கடவுள்கள் இல்லை !கடவுளை மனிதன் படைக்க முடியாது ,மனிதன் படைத்த,அனைத்தும் தத்துவங்களே யாகும் ,அனைத்தும் மாயை என்று சொல்லப்படும் மாயையினால் உருவாக்கப் பட்டவைகளாகும்.மாயை என்பது .உருவங்களை உண்டாக்கும் ஆற்றல் படைத்தது,--மாயை --மாயைக்கு உருவம் இருக்கிறதா ?என்றால் இல்லை !அதுவும் உருவம் இல்லாத ஒரு சக்தி--உருவம் இல்லாத சத்தியை வைத்துக் கொண்டு உருவத்தை உண்டாக்குவது தான் மாயையின் வேலையாகும்.--அதுவும் சத்திவாய்ந்த {ஆற்றல் }என்னும் ஒளியாகும் .மாயையை படைத்தது யார் ?அதற்கு மேல் அனைத்தும் படைக்கும் ஆற்றல் அதாவது சத்தி யாருக்கு உள்ளது ?அவை --எங்கு இருக்கிறது --எங்கு இருந்து வருகிறது.--என்பதை இதுவரையில் யாராலும் கண்டு பிடிக்க முடியவில்லை.{வள்ளலாரைத்தவிர }

நமக்கு வழி காட்டிய ஆன்மீகப் பெரியவர்கள்{அருளாளர்கள் } உடம்பின் உறுப்புகளான --செயல்படும் கருவிகளை கண்டு --அதன் இயக்கங்களை அதாவது தத்துவத்தை கோவில்களாக,--ஆலயங்களாக--,சர்சுகளாக---,மசுதிகளாக--,பிரிமிடுகளாக--,இன்னும் பல வடிவங்களில் கடவுள் இருப்பதாக சொல்லி வைத்து ,பிரமன் ,விஷ்ணு,சங்கரன்,மயேச்சுவரன்,சதாசிவன், இயேசு,அல்லா ,புத்தம்,சத்தி,சத்தர்கள்,சூரியன் ,சந்திரன,அக்கினி ,-போன்ற இயக்கங்களை {தத்துவங்களை }படைத்து கடவுளாக வழிபட்டு வருகிறார்கள்.

இவைகள் யாவும் கடவுள்களா ?என்றால் இல்லை !

கடவுள் யார் ?அவர் எங்கே இருக்கிறார் ?என்பதை நமது அருட் தந்தை திருஅருட்பிரகாச வள்ளலார் அவர்கள் காட்டியதை பார்ப்போம் !

வகுத்த உயிர் முதற் பலவாம் பொருள் களுக்கும் வடிவம் 
வண்ணம் நலம் முதற் பலவாம் குணங்களுக்கும் புகுதல் 
புகுத்தல் உறன் முதல் பலவாம் செயல் களுக்கும் தாமே 
புகல் கரண உபகரணம் கருவி உபகருவி 
மிகுத்த உறுப்பு பதி கரணம் காரணம் பலகாலம் 
விதித்திடும் மற்றவை முழுதும் மாகி அல்லாராகி 
உகப்புறு ஓர் சுத்த சிவானந்த சபைதனிலே 
ஓங்க்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

மேலே கண்ட பாடலில்-- கடவுள் எங்கு உள்ளார் !அவர் தகுதி என்ன ?அவர் செயல்கள் என்ன ? என்பதை தெளிவு படுத்தி உள்ளார் .மேலும் அவருக்கு உருவம் என்ன ? அவரை யாராவது உருவாக்க முடியுமா?அவர்க்கு சொந்த பந்தங்கள் உண்டா ?அவருக்கு பிறப்பு இறப்பு உண்டா ?திரிபானவரா ?களங்கம் உள்ளவரா ?தீமை செய்பவரா ?வேண்டுதல் உள்ளவரா ?வேண்டாமை உள்ளவரா ?உண்மையானவரா ?பொய்யானவரா? அவர் எங்கு உள்ளார் என்பதை தெளிவு செய்யும் பாடலைப் பாருங்கள் !

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இல்லார் குணங்கள் 
ஏதும் இலார் தத்துவங்கள் ஏதும் இலார் மற்றோர் 
செயற்கை இல்லார் பிறப்பு இல்லார் இறப்பு இல்லார் யாதும் 
திரிபு இல்லார் களங்கம் இல்லார் தீமை ஒன்றும் இல்லார் 
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்ப மயமாய்
உயத்தரும் ஓர் சுத்த சிவானந்த சபைதனிலே 
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !  

மேலே கண்ட பாடலில் விளக்கம் சொல்லாத அளவிற்கு எளிய தமிழில் --உண்மைக்  கடவுள் நிலையை விளக்குகிறார் அறிவு உள்ள மனிதர்கள் புரிந்து கொள்வார்கள்.அதற்கு மேல் சொல்ல வேண்டுவதில்லை !உடம்பின் தத்துவங்களை உண்டாக்கி உள் இருந்து இயக்கும் ஆன்ம ஒளிதான் மெய்ப்பொருள் அதாவது கடவுளின் ஏகதேசங்களாகும்  

அந்த கடவுள் ஒருவரா ?இருவரா ?அவர் உருவம் என்ன ?என்பதை கிழே கண்ட பாடலில் பாருங்கள்.

ஒன்றும் இலார் இரண்டும் இலார் ஒன்றும் இரண்டுமானார் 
உருவும் இலார் அருவும் இலார் உருவும் அருவும் ஆனார் 
அன்றும் உளார் இன்றும் உளார் என்றும் உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தம் இலார் அருட்பெருஞ்சோதி யினார்
என்றும் கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார் 
யாவும் இலார் யாவும் உளார் யாவும் அலார் யாவும் 
ஒன்று உறு தாமாகி நின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

கடவுள் எங்கு உள்ளார் என்பதை மிகத் தெளிவாக விளக்கி உள்ளார் .இவை தெரியாமல் 
புரியாமல், அறியாமல் --கடவுள் உண்டா ?இல்லையா ?என்று மக்கள் குழம்பிக் கொண்டு உள்ளார்கள்.--இயங்குகின்ற உருவத்தில் கடவுள் உள்ளார் !இயங்காத உருவத்தில் கடவுள் இல்லை !--கல்லிலும் செம்பிலும்,மண்ணிலும் ,தங்கத்திலும்,போன்ற உருவங்களில் கடவுள் இல்லை என்பதை ,அறிவைக் கொண்டு அறிந்து கொள்ள வேண்டும்.

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு
அனுபவம் மாகின்றது என்னடி தாயே
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும்
திருவருள் உருவம் என்று அறியாயோ மகளே !--என்றும்

அருளாலே அருள் இறை அருள்கின்ற பொழுது அங்கு
அனுபவம் மாகின்றது என்னடி தாயே
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும்
திரு நட இன்பம் என்று அறியாயோ மகளே !

அறிவும் அருளும் ஒன்றுபடுகிற போது உண்மை தன்னைத்தானே விளங்கும் -இதை அறியாமல் மருள் என்னும் இருட்டில் இருந்து கொண்டு கடவுள் உண்டா ?இல்லையா ?என வெட்டி வேலையை செய்து கொண்டு உள்ளார்கள்.

மக்கள் மட்டும் அல்ல ,ஆன்மீக வாதிகளும் பகுத்தறிவு வாதிகளும்,விஞ்ஞானிகளும் ,அறிவியல் வல்லுனர்களும் மற்றம் உள்ள பெரியவர்களும் உண்மை தெரியாமல் அலைந்து திரிந்து ஆராய்ச்சி செய்து கொண்டு உள்ளார்கள்!

வள்ளலாருக்கு மட்டும் எப்படி தெரியும் ?

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்தில் அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே !

என்கிறார் ;--

உலக மக்கள் அனைவரும் அகம் கருத்து புறம் வெளுத்து,உண்மை தெரியாமல் அழிந்து கொண்டு உள்ளார்கள் ஆதலால் உண்மை வழியான சுத்த சன்மார்க்க சங்கத்தை தோற்றுவித்து அதன் வாயிலாக இறைவனுடைய உண்மைகளை போதித்து,உண்மை ஒழுக்கம் உள்ளவர்களாக மாற்றி மனிதர்களை --இந்த உலகத்திலே பரத்தின் இன்பங்களைப் பெற்று மகிழுந்து வாழலாம் என்பதை உணர்த்த --இறைவன் என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பதை தெரியப் படுத்துகிறார் .

சொர்க்கம் ,நரகம் ,வைகுண்டம்,கைலாயம்,பரந்தாமம்,பிரம்மம்,பரலோகம்,போன்ற இடங்களில் கடவுள் இல்லை ,--

அதுமட்டும் அல்ல !

மனிதனாக பிறப்பு எடுத்தவர்கள் என்றும் அழியாத இருக்கும் அருளைப் பெற வேண்டும்!அந்த அருளைப் பெற்றவர்களுக்கு மரணம் வராது .மரணம் அடையாதவர்கள்--பிறப்பு இறப்பு அற்றவர்கள் .அவர்களுக்கு மட்டும் தான் உலக உண்மைகளும் உலக ரகசியங்களும் எவ்விதப்பட்ட தடைகளும் இல்லாமல் வெட்ட வெளிச்சம் போல் தெரியும்.

வள்ளலார் அவர்கள் முழுமையான அருளைப் பெற்றவர் !மரணத்தை வென்றவர் !பிறப்பு இறப்பு அற்றவர் .உண்மையான இறைநிலையை அடைந்தவர்,ஆதலால் அவர் சொல்லுவது அனைத்தும் இறைவர் சொல்லுவதே யாகும் .

அப்போது மற்றவர் சொல்லுவது எல்லாம் பொய்யா ?என்ற வினா அனைவருடைய எண்ணங்களிலும் உண்டாகும்  சந்தேகங்கள் நியாயமானதுதான்!

அதற்கு வள்ளலார் சொல்லும் பதிலைப் பாருங்கள்.!

அறங்குலவு  தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத் தலைமை பதத் தலைமை வாய்ந்தனர் அங்கு அவர்பால்
இறங்கலில் ஏன் பேசுதலால் என் பயனோ நடஞ்செய்
இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

நமக்கு கடவுளை காண்பித்த அருளாளர்கள் அனைவரும் உண்மையான அறிவு பெற்றவர்கள் அல்ல !{உண்மை அறிவு என்றால் கடவுளின் உண்மையை அறிதல் உண்மையான அறிவு என்பதாகும் .} அவர்களும் மனிதர்களைப் போல் உண்ணுவதும் உறங்குவதும் இறப்பதும் பிறப்பதுமாக உள்ளவர்கள்,அவர்கள் சில பல விரதங்களை செய்து--சிற்சில,சித்தி சத்திகளை பெற்றதால் -- தன்னை உயர்ந்தவர்கள் என்று காட்டிக் கொண்டவர்கள் ,அவர்களை வணங்குவதிலோ!வழிபடுவதிலோ !அவர்களைப் பற்றி பேசுவதாலோ !எந்த பயனும் இல்லை !நான் உண்மையான இறைவனுடைய புகழைப் பேசிக் கொண்டு இருக்கிறேன்.நீங்களும் உணர்ந்து கொள்ளுங்கள் என்று வள்ளலார் மிகவும் அழுத்தமாக உரைக்கிறார் !

கடவுளை கண்டு பிடித்து விடலாம் என்று---- பல சாதனங்களைக் கொண்டு அளந்தும்,அறிவைக் கொண்டு அளந்தும்,சமய மதங்களை தொடர்பு கொண்டு--பக்தி,தவம்,யோகம,தியானம், விரதம்,போன்றவற்றை செய்து--அளந்தும் பார்த்தார்கள் ஒன்றும் கிடைக்க வில்லை --என்று சோர்ந்து போய் விட்டார்கள் என்பதை விளக்கும் பாடல் !

கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளந்திடும் மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை
விளக்கும் இந்த அளவுகளைக் கொண்டு நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே
அளக்கின்ற கருவி எல்லாம் தேய்ந்திடக் கண்டாரேல்
அன்றி ஒருவாரேனும் அளவு கண்டார் இலையே
துளக்க முறு சிற்றறிவால் ஒருவாறு இன்று உரைத்தேன்
சொன்ன வெளிவரை ஏனும் துணிந்து அளக்கப் படுமோ !

அளவில் அடங்காத கணக்கில் அடங்காத எல்லைகளைத் தாண்டி --பல கோடி அண்டங்களைத் தன்னுள் அடக்கிக் கொண்டு இயக்கிக் கொண்டு இருக்கும் கடவுளை கண்டு கொள்ள முடியுமா ?நான் பார்த்ததை ஒருவாறு உரைத்தேன் அதையாவது உங்களால் துணிந்து அளக்க முடியுமா ?என்று சவால் விடுவது போல் உரைக்கிறார் வள்ளலார் !

கடவுள் எங்கு! எப்படி! உள்ளார் ?என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தும் பாடல் !

ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்ன முடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி மால் அண்டம் அரன் அண்டம்
உற்ற கோடா கோடியே
திருகலறு பலகோடி ஈசன் அண்டம் சதா
சிவன் அண்டம் எண்ணிறைந்த
திகழ்கின்ற மற்றைப் பெறும் சத்தி சத்தர் தம்
சீரண்டம் என் புகல்வேன்
உருவுறு இவ் அண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா
வரம் தந்த மெய்த் தந்தையே
மணி மன்றில் நடு நின்ற ஒரு தெய்வமே எல்லாம்
வல்ல நடராஜ பதியே !

கடவுள் எங்கு உள்ளார்! எப்படி உள்ளார்!  என்பதை வள்ளலார் விளக்குகிறார் !--பல கோடி அண்டங்களை இயக்கம் ஒரு மாபெரும் அருள் வெளி உள்ளது அதன் நடுவிலே அசைந்து  {நடனம் }கொண்டு இருக்கும் ---ஒரு பெருங் கருணை அரசு-- செய்து கொண்டு இருக்கும் ஒளிதான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும் ;அந்த ஜோதி உள்ள இடம், அருள் பெரு வெளி என்கிறார் .அந்த இடத்தில் இருந்துக் கொண்டு பல கோடி அண்டங்களையும் தனிப்பெருங் கருணையினால் இயக்கிக் கொண்டு உள்ளார் --அவரே அருட்பெருஞ்சோதி ஆண்டவர் என்பவராகும் என்கிறார் வள்ளலார்-- அவர் ஒருவர்தான் கடவுள் ! அவை பேரொளியாகும் !

அந்த பேரொளி -- அகம் ,அகப்புறம் ,புறம் புறப்புறம் என்னும் நான்கு பகுதிகளாக செயல் பட்டுக் கொண்டி இருக்கின்றன ,பிண்டத்தில் நான்கு இடத்திலும்,--அண்டத்தில் நான்கு இடத்திலும்,உள்ளன --

பிண்டத்தில் --அகம் என்பது ஆன்மா என்னும் ஒளி   --அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் ஒளி ---புறம் என்பது கரணம் என்னும் ,மனம் புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் ஒளி ---புறப்புறம் என்பது இந்திரியம் என்னும் ஐம்புலன்கள் --,உடம்பு, வாய்,கண்,மூக்கு ,காது,என்னும் உருவங்கள் என்பதாகும் .இந்த நான்கு இடத்திலும் கடவுள் பிரகாசம் உள்ளது .

அண்டத்தில் ;--அகம் என்பது,அக்கினி ஒளி !---அகப்புறம் என்பது சூரியன் ஒளி !--புறம் என்பது சந்திரன் ஒளி ---புறப்புறம் என்பது நட்சத்திரங்கள் ஒளி என்பனவாகும் .

ஆகவே --பிண்டத்தில் நான்கு இடம் ,--அண்டத்தில் நான்கு இடம் --ஆக எட்டு இடத்திலும் கடவுள் ஒளிப் பிரகாசம் காரியத்தால் உள்ளன ,

காரணத்தால் உள்ள இடம் ;--பிண்டத்தில் புருவ மத்தியில் உள்ள ஒளி ---அண்டத்தில் பரமாகாசம் என்னும் இடத்தில் உள்ள ஒளி -- ;அதாவது அருள் பெரு வெளியில் உள்ள ஒளி யாகும்.

காரிய, காரணமாய் உள்ள இடம் நான்கு ;--பிண்டத்தில் விந்து,நாதம் என்னும் ஒளி  !---அண்டத்தில் மின்னல்,இடி என்னும் ஒளி !

மேலும் சர்வ யோனி இடத்தும் விந்து விளக்கமாகிய மின்னல் இடத்தும் :--நாத விளக்கமாகிய இடியிடத்தும்:இது அல்லாது --"'பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி"---என்னும் --ஜோதி உள் ஜோதியாயும் உள்ளதுதான் கடவுள் என்னும் அருட்பெருஞ்சோதி என்பதாகும்.

அவை எப்படி உள்ளது என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்து
அருட்பெரு தலத்து மேனிலையில்
அருட்பெரும் பீடத்து அருட்பெரு வடிவில்
அருட்பெரும் திருவிலே அமர்ந்த
அருட்பெரும் பதியே அருட்பெரும் நிதியே
அருட்பெரும் சித்தி என் அமுதே
அருட்பெரும் களிப்பே அருட்பெரும் சுகமே
அருட்பெரும் ஜோதி என் அரசே !

கடவுள் எங்கு இருந்து செயல் பட்டுக் கொண்டு இருக்கிறார் என்பதை படம் போட்டுக்  காட்டி விளக்குவது போல் காட்டுகிறார் வள்ளலார் .

கடவுள் உண்டா ?இல்லையா ?என்பதை அறிந்து கொண்டோம் இல்லையா ?

கடவுள் பல உண்டு என்பதோ பைத்தியக் காரத்தனம்!
கடவுள் இல்லை என்பதோ ஏமாற்று வேலை !
கடவுள் ஒருவர் உண்டு என்பதே உண்மை அறிவாகும் !

கடவுள் இல்லை என்பவர்களுக்கு வள்ளலார் சொல்லும் பதில் !

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு !

அதாவது கடவுள் இல்லை என்பவர்கள் நாக்கு முடை நாக்கு என்கிறார் {முடை நாக்கு என்பது வாய் பேசாத ஊமைகள் என்கிறார் --அடுத்து அவர்களின் நாக்கு ருசிக் கொள்வது நாறிய பிண்ணாக்கு என்கிறார் --நாறிய பிண்ணாக்கு என்றால் மலம் என்பதாகும் }

அகம, அகப்புறம்,புறம்,புறப்புறம்.!

மேலே சொன்ன நான்கு இடத்தில் கடவுளை அறிந்து கொள்ளுதல் எங்கனம் என்பதைப் பார்ப்போம்.;--  

இந்த நான்கு இடத்தில்-- எது கடவுள் தன்மை உடையது என்றால்--நம் உடம்பில் உள்ள தலைப் பாகத்தில் இயங்கிக் கொண்டு இருக்கும் --ஆன்மா என்னும் ஒளிதான் கடவுள் தன்மை உடையதாகும்.ஆன்மாவை அறிந்து கொண்டால கடவுளை அறிந்து கொள்ளலாம்,ஆன்மாவை எப்படி அறிவது --இந்திரியம் கரணம்,ஜீவன் என்னும் மூன்று நிலைகளும் ஆன்மாவில் இருந்து வெளியே தோன்றியதாகும் மூன்றும் செயல் அற்ற நிலைக்கு வந்தால் ஆன்மாவைக் காணலாம்,எப்படி செயல் அற்ற நிலை உண்டாகும் --

நம் உடம்பில் இந்திரியங்கள் என்று சொல்லப்படும் முக்கிய கருவிகளில் கண்கள் தான் முதன்மையானது .கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மற்ற காது,மூக்கு ,வாய்,உடம்பு,போன்ற கருவிகளும் --மற்றும் கரணங்கள் என்று சொல்லப்படும் --மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,என்னும் கருவிகளும் ,--மேலும் ஜீவன் என்னும் உயிரும் --கண்கள் செல்லும் இடத்திற்கு சென்றுவிடும் .

ஆதலால் கண்களை வெளியே{புறத்திலே }செல்ல விடாமல் ஆன்மா என்னும் உள் ஒளியை தொடர்பு கொள்ள வேண்டும் --அதாவது சிற்சபை நடத்தை தெரிந்து துதித்தால் சித்திகள் அனைத்தும் சத்தியம் கிடைக்கும் என்கிறார் வள்ளலார் .கண்கள் உள்ளே செல்லாமல் வெளியே செல்வதற்கு எவைத் தடையாக உள்ளது என்றால்--

சாதி,சமயம்,மதம் என்பவற்றின் --ஆசார சங்கற்ப விகற்பங்களும் --வருணம்,ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் முக்கிய தடையாக உள்ளன,!இதனால் ஆன்ம நேய ஒருமைப்பாடு என்னும் ஒருமை இல்லாமல் ஒழிந்து விட்டது --அடுத்து  நாம் உண்ணும உணவு தடையாக உள்ளது -உணவு இரு வகைப்படும் -ஒன்று பொருள் உணவு,மற்றொன்று அருள் உணவு என்பதாகும்.

உலகில் உள்ள பஞ்ச பூத உணவுகளை உட்கொள்ளாமல் ,அருள்  உணவை  உட்கொள்ள வேண்டும் .அருள் உணவு எப்படி கிடைக்கும்?,இந்த உலகம் அநித்தியமானது அனைத்தும் தோற்றம் மாற்றம் உள்ளது --நித்தியமானது எதுவோ அதைக் கண்டு அதனுடன் இணைய வேண்டும் என்ற உணர்வு வந்துவிட்டால் --அழியும் பொருள் உணவை விட்டு --அழியா அருள்  உணவைத் தேடும் அறிவு வந்துவிடும்.--அதன்பின் கடவுள் மீது அன்பும் ,உயிர்கள் மீது இரக்கமும் வந்துவிடும் --அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும்.இதைக் கண்களில் கண்டு களித்து அனுபவிக்கின்றவர்கள் உண்மையை உணர்ந்தவர்களாகும்.

கடவுள் மீது அன்பும் உயிர்கள் மீது இரக்கமும் கொண்டு -- இடைவிடாது உண்மையான ஆன்மாவை தொடர்பு கொண்டு, இருந்தோம் மானால் --அன்பும் தயவும் ஒன்றுடன் ஒன்று சேரும் போது -- ''கருணை'' என்னும் அருள் ஒளி தன்னுடன் இணைத்துக் கொள்ளும் --அதன் பின் ஆன்மாவில் உள்ள அருள் என்னும் திரவம் சுரக்கும் --அந்த அருள் திரவம் உடம்பிற்குள் அருள் உணவாக சென்று உடம்பை பொன் உடம்பாக மாற்றம் செய்யும் ,அதன் பின் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் .

அந்த ஒளி உடம்பு பெற்றவர்களால் தான் கடவுளைக் காணமுடியும் !அந்த ஒளி உடம்பை  பெற்றவர்களை எதனாலும் அழிக்கவும்  முடியாது அடக்கவும்  முடியாது !கடவுள் நிலை என்னவோ அந்த நிலையில் தன்னுடைய நிலையும் இருக்கும் --இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும். அதாவது அருள் தேகம் என்பதாகும் ,--சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும் .

அருள் தேகம் பெற்றவர்களை  எதனாலும் அழிக்க முடியாது என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல் களாலே
வேற்றாலே எஞஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட்பெருஞ்சோதி இறைவனைச் சார்வீரே !

அருள் தேகம் பெற்றவர்களை எதனாலும் அழிக்க முடியாது என்பதை விளக்கும் பாடலைப் பார்த்தோம் .

அருள் தேகம் பெற்றவர்கள் தான் கடவுளைக் காண முடியும் ,மற்றவர்களால் கடவுளைக் காண முடியாது .வள்ளலார் கடவுளைக் கண்டவர் ,கடவுள் உண்டு என்பதை உறுதியாக சொன்னவர் .

அவர் சொன்னக் கடவுள் அவர் கண்ட கடவுள் --சமய மதங்களில் சொல்லிய கடவுள்கள் அல்ல என்பதை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ளவேண்டும் .வள்ளலார் கண்ட கடவுள்தான் ''அருட்பெருஞ்சோதி'' என்னும் கடவுளாகும் --அவர் தனிப் பெருங் கருணையாக உள்ளார் -அவருக்கு சமமானது அவரே !

மற்ற கடவுள்கள் எந்த நிலையில் உள்ளார்கள் என்பதை வள்ளலார் விளக்குகிறார் பாருங்கள்.!

தடை உறாப் --பிரமன் --விண்டு --உருத்திரன்-- மயேச்சுரன்-- சதாசிவன்-- விந்து
நடை யுறாப்-- பிரமம்-- உயர் பராசத்தி-- நவில் பரசிவம்-- ஏனும் இவர்கள்
இடை யுறாத் ''திருச்சிற்றம்பலத்து ஆடும்'' இடது கால் கடை விரல் நகத்தின்
கடையுறு துகள் என்று அறிந்தனன் அதன் மேல் கண்டனன் திருவடி நிலையே !

மேலே உள்ள நாம் வணங்கும் கடவுள்கள் எல்லாம் -- சிற்றம்பலத்திலே இயங்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் இடது கால் நகத்தில் உள்ள {வலது கால் நகம் அல்ல }சிறு துகள் {சிறு துரும்பு }என்று அறிந்தேன், என்கிறார் வள்ளலார் .

யார் கடவுள் !

  நம்மை எந்த ஆதாரமும் இல்லாமல் இந்த உலகத்தில் இயக்கிக் கொண்டு இருப்பது
யார் ? நமக்கு உடம்பு ஏன் வந்தது உயிர் ஏன வந்தது ,நமக்கு இன்பம் துன்பம் ஏன வருகிறது .இதற்கு எல்லாம் யார் காரணம் ?இன்பம் வந்தால் மகிழ்கிறோம் ,துன்பம் வந்தால் வேதனைப் படுகிறோம் ,நாம் துன்பத்தில் இருந்து நீங்குவதற்கு ஏதோ ஒருக் கடவுளை வணங்குகிறோம் ,வழிபாடு செய்கிறோம்.

நம் உடம்பில் துன்பமும்,இன்பமும்,வருவதற்கு என்ன காரணம்?எப்படி உடம்பிற்குள் இவைகள் புகுந்தன ,?தானே வந்ததா ?வேறு ஒருவர் மூலமாக வந்ததா? இந்த உண்மைகள் தெரியாமல் நாம் அலைந்து கொண்டு இருக்கிறோம்,இவற்றுக்கு எல்லாம் கடவுள் தான் காரணம் என்று ,பொய்யான கற்பனைக் கடவுள்கள்,  பின் செல்கிறோம்,நாம் ஏதோ ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் ஏதோ ஒரு கடவுளை வழிபடுகிறோம் --சில நேரம் துன்பம் குறைந்து விட்டதாக தோன்றுகிறது. .அனைத்தும் மனத்தின்,எண்ணத்தின்  செயபாடுகளே தவிர கடவுள் வந்து நம்முடைய குறைபாடுகளை தீர்ப்பதில்லை .

கடவுள் தான் நம்மைக் காப்பாற்றுகிறார் என்றால் --நமக்கு இளமை மாறி வாலிபம் வரக்கூடாது--வாலிபம் மாறி முதுமை வரக்கூடாது.முதுமை மாறி இறுதியில் மரணம் வரக்கூடாது.இவை அனைத்திற்கும் காரணம் நமக்கு நாமேதான் காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் .

நாம் பிறந்ததில் இருந்து நாம் செய்யும் ஒவ்வொரு காரியமும் நம்முடைய --உடம்பிலும் உயிரிலும் ஆன்மாவிலும் பதிவாகிக் கொண்டே இருக்கிறது .நாம் செய்யும் காரியங்கள் பிற உயிர்களுக்கு துன்பம் தருவதாக இருந்தால் அந்த துன்பம் நம்முடைய உடம்பின் வழியாக உயிரில் கலந்து ஆன்மா என்னும் ஒளியில் பதிவாகி விடுகிறது ,பின் அதுவே நமக்கு துன்பமாக வருகிறது.அதேபோல்த்தான்  இன்பம் என்பதும்,

நாம் செய்யும் காரியங்கள் பிற உயிர்களுக்கு நன்மையையும் ,மகிழ்ச்சியும் தருவதாக இருந்தால் ,அதே மகிழ்ச்சி நம் உடம்பின் வழியாக உயிரில் கலந்து ஆன்மா என்னும் ஒளியில பதிவாகிறது .இதுவே நன்மையையும் தீமையும் நமக்கு உண்டாகும் பதிவுகளாகும்,

நாம் நன்மையையும் மகிழ்ச்சியும் பிற உயிர்களுக்கு உண்டாக்கிக் கொண்டே இருந்தால் .நமக்கு எந்த துன்பமும் வராது நரை ,திரை,மூப்பு ,பயம் அச்சம்,துயரம் போன்ற எந்த செயல்களும் நம்மை அணுகாது.  நமக்கு இளமை மாறாது,முதுமை வராது,மரணமும் வராது .இதை அறிவு படைத்த மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டும் ,என்றே எனினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மாமருந்து என்று வள்ளலார் சொல்லுவார்,-- நம்மைக் காப்பாற்றும் அருள் மருந்து நம்முடைய ஆன்மாவில் இறைவனால் வைக்கப் பட்டுள்ளது --நமக்கு மட்டும் அல்ல எல்லா உயிர்களிலும் அருள் மருந்து வைக்கப் பட்டு உள்ளது.

பசி ,கொலை,தாகம்,பிணி,இச்சை,எளிமை,பயம்,அச்சம்,துக்கம், மரணம் ,போன்ற அனைத்தும் போக்கும் அருள் மருந்து நம் ஆன்மாவில் உள்ளது அதுவே ஞான மருந்தாகும் -அதுவே வைத்திய நாத மருந்தாகும் ,அந்த மருந்தை கண்டு அறிந்து உண்பவர்கள் கடவுளைக் காணலாம். 

உயிர்கள் தான் கடவுள் வாழும் ஆலயம் -அதனால் கடவுளைத் தேடி அலைய வேண்டாம் -உயிர்களுக்கு செய்யும் உபகாராமே கடவுளுக்கு செய்யும் வழிபாடாகும்,ஜீவன்களுக்கு செய்யும் ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவு கோளாகும் உயிர் இரக்கமே கடவுளை வணங்கும் வழிபாடாகும். 

கடவுள் உண்டா ?இல்லையா?என்ற தேடுதலுக்கு போக வேண்டாம் ,நேரமும் ,காலமும்,வீண் விரையுமும் ,மன உளைச்சலும்,வேதனையும் வெறுப்பும் தான் வந்து சேரும்,

கடவுள் உண்டு !ஆனால் நாம் வணங்கும் கடவுள்களோ,தெய்வங்களோ கிடையாது,எல்லா உயிர்களும் கடவுள்தான் ,எல்லா உயிர்களிலும் கடவுள் என்னும் ஒளி இயங்கிக் கொண்டு இருக்கிறது.ஆதலால் எந்த உயிரையும் அழிக்காதீர்கள் ,தான் வாழ்வதற்கு மற்ற உயிர்களை அழிப்பது மனித பிறவியின் அறிவு அல்ல !மனித பிறப்பின் செயல்கள் அல்ல !

அனைத்து உயிர்களும் கடவுள்தான் , உயிரே கடவுள் ! அதன் உள் ஒளியே கடவுள் !

உள்ளொளி யோங்கிட உயிர் ஒளி விளங்கிட
வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலே!

உள் ஒளியான ''மெய் அருட் கனல்''தான் உண்மையானக் கடவுள் ! 

கொல்லா நெறியே குவலயம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

அன்புடன் ஆன்மநேயன்;--கதிர்வேலு.

சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள் !

செல் ;--9865939896--பொன் ;--0424-2401402,

மீண்டும் பூக்கும் ;--

சனி, 7 ஜூலை, 2012

நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை !

திருஅருட்பிரகாச வள்ளலார் 

நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை !

சிறைச்சாலையில் இருந்து எப்போது விடுதலைப் பெறுவது ?
எப்படி விடுதலை அடைவது ? 

நாம் வாழும் இந்த உலகில் ஐந்து சிறைச்சாலைகள் உள்ளன ! 
நிலம்,நீர்,அக்கினி,காற்று ,ஆகாயம்,என்னும் ஐந்து சிறைச்சாலை களிலும் உயிர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளன. என்பது யாருக்கும் தெரியாது, நிலத்திலும் நீரிலும் தான் உயிர்கள் உள்ளன என்று நினைத்துக் கொண்டு உள்ளோம்.ஐந்து பூதங்களிலும் உயிர்கள் வாழ்ந்து கொண்டு உள்ளன.என்பதை, வள்ளலார் தன் அனுபவத்தால் அறிந்து பதிவு செய்துள்ளார் .

மண் கரு உயிர்த் தொகை வகை விரி பலவா 

அண் கொள அமைத்த அருட்பெருஞ்சோதி !

நீரிடை உயிர்பல நிகழுறு பொருள் பல
ஆருற அமைத்த அருட்பெருஞ்சோதி !

தீயிடை உயிர்பல திகழுறு பொருள்பல 
ஆய்வகை அமைத்த அருட்பெருஞ்சோதி !

காற்றிடை உயிர் பல கதிபல கலைபல 
ஆற்றலின் அமைத்த அருட்பெருஞ்சோதி !

வெளியிடை உயிர் இயல் வித்தியல் சித்தியல் 
அளிபெற அமைத்த அருட்பெருஞ்சோதி ! 

என்று திருஅருட்பாவில் {அருட்பெருஞ்சோதி அகவல் }என்னும் தலைப்பில் ஐம்பூத இயல் வகையில் தெரியப் படுத்தி உள்ளார்; வள்ளலார்   

இந்த உலகத்தில் வாழும் உயிர்கள் அனைத்தும் தண்டனை தேகங்களாகும்.ஒவ்வொரு உயிர்களுக்கும் அதன் அதன் குற்றங்களுக்கு தகுந்தாற் போல்,தண்டனைத் தேகம் என்னும்  உடம்பு கொடுக்கப் பட்டுள்ளது.இந்த உலகத்தில் உயிர்கள் வாழ்வதால், உயிர்களின் சிறைச்சாலை என்பதாகும் !,{அதாவது தண்டனை தேகங்களாகும். }சிறைச்சாலையில் கொடுக்கும் வேலையை இயற்கைச் சட்டத்தை மீறாமல் செய்து கொண்டு இருக்கவேண்டும். உயிர்கள் குற்றம்,குறைகள் இல்லாமல்,முறை தவறாமல் செய்து கொண்டு இருக்க வேண்டும்.அதற்கு வழங்கப்படும் குடிக்கூலி,உணவாகும்--

தண்டனைக்கு தகுந்த ''நியதி '' ஆகாரம் என்னும் உணவு{நியதி ஆகாரம் }வழங்கப்படுகிறது .உயிர்களுக்கு,கொடுக்கும் ''நியதி '' உணவை விடுத்து வேறு எந்த ஆகாரத்தையும் உண்ணக்கூடாது --தண்டனைக்கு தகுந்த உணவை விட்டு, வேறு எந்த உணவை உண்டாலும், அதற்கு தகுந்த ,பிறப்பு இறப்பு,என்பதை இயற்கையின் சட்டத்தின் வாயிலாக,--- இந்த உலகில் உள்ள உயிர்களுக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும்,தவறு செய்யும் ஆன்மாக்களுக்கு மன்னிப்பு நோக்குடன் ஒரு உயிருக்கு ஏழு தடவை அதே உடம்பு கொடுக்கப் படுகிறது,

இந்த உணவு யாரால் கொடுக்கப்படுகிறது என்றால் --மாயை என்னும் அதிகாரியால் --பஞ்ச பூதங்களின் உதவியால் பஞ்சபூத உணவு கொடுக்கப் படுகிறது .

உயிர்களுக்கு எழு பிறப்புகள் உண்டு !

ஏழு பிறப்புகளிலும்,,,மாயை கொடுத்த நியதி ஆகாரத்தை ,மாற்றம் இல்லாமல் புசிக்கும் போது,=குறிப்பிட்ட காலத்தில்,தண்டனையில் இருந்து விடுதலைப் பெற்று,இவ்வுலகில் இருந்து வெளியேறுவதற்கு,--- நியதி ஆகாரத்தை நிறுத்தி ,-{-சிறையை விட்டு வெளியே செல்லும் அருள் உணவு கொடுக்கப் படுகிறது },--அடுத்த மேல் பிறவி கிடைக்கின்றது,--இப்படி ஏழு வகைப் பிறவித் தோற்றங்கள் ஏழு,=ஏழு பிறப்புகளாக--ஆக நாற்பத்து ஒன்பது தேகம் கொடுக்கப் படுகிறது.==இதில் ஏதாவது இயற்கை சட்டத்திற்கு மாறாக செயல் பட்டால் மறுபடியும் கீழ் பிறப்புக்கு தள்ளப் படுகிறது.--இவை தாவரங்கள் முதல் மனித தேகம் வரை ஒரே சட்டமாகும் ,,,அதற்கு உண்டான தேகம் {உடம்பு } என்னும் தண்டனை தேகம் கொடுத்துக் கொண்டே இருக்கும் .அதே நேரத்தில் யாரும் இந்த அண்டத்தை விட்டு வெளியே செல்ல முடியாது ,--எந்த ஒரு பொருளையும் எடுத்து செல்ல முடியாது.--உடம்போடும் வெளியே போக முடியாது.

ஏழு வகைப் பிறவி ! வள்ளலார் சொல்லும் உண்மை !

இந்தத் தேகத்திற்கு பிறப்பு ஏழு உண்டு ,அதுபோல் எழுவகைப் பிறப்பிலும் ,ஒவ்வொரு பிறப்புக்கும் எவ் வேழு பிறப்பு உண்டு ,அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனி பேதங்களின் விரிவெல்லாம் தோன்றி, மேலேறி மறு பிறப்பு உண்டாம்,---ஒவ்வொரு பிறவியும் எந்தக் கல்பத்தில் நஷ்டம் அடைகின்றதோ அந்தக் கல்பகாலம் வரையில் தோற்றம் இல்லாமல் மண்ணில் மறைந்து இருந்து ,மறு கல்பத்தில் தோன்றி,---இவ்விதமாகவே மற்ற யோனிகள் இடத்திலும் பிறந்து முடிவில் இந்த மனித தேகம் கிடைத்து உள்ளது .

அதே போல் இத்தேகத்திற்கும் ஏழு பிறவிகள் உண்டு !

யாதெனில் ;--கற்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாய் இருப்பது ஒன்று !1,--அவயாதி உற்பத்தி காலம் ஒன்று ! 2,--பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று ! 3,----குழந்தைப் பருவம் ஒன்று ! 4,--பாலப் பருவம் ஒன்று ! 5,-----குமாரைப் பருவம் ஒன்று ! 6,---விருத்தப் பருவம் ஒன்று ! 7,---ஆகப் பிறவி ஏழு !7----இவ்வாறே தாவரம் முதல் அனைத்திற்கும் உண்டு ,மேலும் இதில் ஸ்தூலப்பிறப்பு-7---சூட்சுமப் பிறப்பு,7 ---- காரணப் பிறப்பு ,7---;--

ஆதலால் ,மேற் குறித்த ஸ்தூலப் பிறப்பு ,--சூட்சுமப் பிறப்பு ,--யாது எனில்.;-- ---ஜாக்கிரம்,,1-சொப்பனம்,2, ---சுழுத்தி ,3,--ஜாக்கிரத்தில் சொப்பனம்,4,---ஜாக்கிரத்தில் சுழுத்தி ,5,--,சொப்பனத்தில் சொப்பனம்,6,-- -- சொப்பனத்தில் சுழுத்தி ,7,---ஆகப் பிறவி ஏழு !7,

காரணப் பிறப்பு என்பது ;--மனோ சங்கல்பங்கள் எல்லாம் பிறவி எடுத்துக் கொண்டே இருக்கும் .ஆதலால் பிறவிக்குக் காரணம் நினைப்பு,மறைப்பு,அது அற்றால் பிறவி இல்லை,!நினைப்பு மறைப்பு என்றால்? பொருள் உணவு உட்கொள்ளாமல் அருள் உணவு உட்கொள்வதாகும்,அந்த தகுதியைப் பெற்ற ஆன்மாக்களுக்கு,நினைப்பு மறைப்பு அற்று உண்மை அனுபவம் மட்டும் தெரியும்.

மனிதப் பிறப்பு என்பது ஆறாவது பிறப்பு என்பது அறியாமையாகும் ,--மனிதப் பிறப்பு என்பது ஏழாவது பிறப்பாகும் ,

பிறப்பின் தோற்றம் எப்படி எனில் ;--

1,--புல் ,--புண்டு,--மரம்,--செடி ---,கல்,--மண்,--போன்ற பிறப்புகள் ,

2,--எறும்பு,--செல்,--புழு,--பாம்பு,--உடும்பு,--பல்லி,--தவளை,--சிறுமீன் ,---முதலை,--சுறா ---,திமிங்கலம்,--போன்ற பிறப்புகள்

3,---ஈ ,வண்டு,---தும்பி,---குருவி,---காக்கை,---பருந்து,---கழுகு,--போன்ற பிறப்புகளும்,

4,---அணில்,--குரங்கு,---நாய்,---பன்றி,--பூனை,--ஆடு,---மாடு,--யானை,--குதிரை,--புலி,--,கரடி,--சிங்கம்,---போன்ற பிறப்புகளும்,

5,--பசாசர்,---பூதர்,---இராக்கதர்,---அசுரர்,---சுரர்,--போன்ற பிறப்புகளும்,

6,---காட்டகத்தார்,---கரவு செய்வார்,---கொலை செய்வார்,----போன்ற பிறப்புகளும்,

7.---அழியாப் பெருவாழ்வைப் பெறுவதற்குறிய உயர் அறிவு உடைய ''மனித தேகம்'' ஏழாவது பிறப்பாகக் கொடுக்கப்பட்டு உள்ளது.

இப்படி ஏழு பிறப்பு,---தோற்றங்களாகும் .--இந்த ஏழு பிறப்பிலும் மனித பிறப்பு --உயர்ந்தது,--இந்த பிறப்பு கொடுத்ததின் நோக்கம் --,தன் அறிவைக் கொண்டு உண்மையை அறிந்து ,இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து,--வெளியே செல்வதற்காகும்.--இதைத்தான் வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிறார்.

இந்த சிறையில் இருந்து எப்படி வெளியேறுவது ?---இந்த பிறப்பு எப்படி அறும் ? என்றால் ;-- பரோபகாரம் ,சத் விசாரம் ---என்னும் இவ்விரண்டாலும்,மேற் குறித்த குற்றம் --நீங்கி கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் நிலை உண்டாகும் .

இதைத் தெரியாமல் ,உயிர்கள்,மற்றும் மனிதர்கள் ;--யான்,எனது என்னும் தேக சுதந்தரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் ,என்னும் சுதந்தரத்தை வைத்துக் கொண்டு,--தனக்கே எல்லாம்  சொந்தம் என்று எண்ணி அனுபவித்து அவதிக்கு உள்ளாகிறார்கள் ,இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியேற வேண்டுமானால் ,உலகத்தில் உள்ள எந்த பொருளையும் அனுபவிக்காமல் இருக்க வேண்டும்,பின் எடுத்து செல்லவும் முடியாது. .பின் எப்படி வாழ முடியும் என்ற வினா ?--அனைத்து உயிர்களுக்கும்.தோன்றுவது இல்லை ! மனிதப் பிறவிக்கு மட்டும் தோன்றுகிறது.

ஏன் மனித தேகத்திற்கு மட்டும் அந்த அறிவு ,தோன்றுகிறது என்பதை சிந்திக்க வேண்டும்.--மனிதனுக்கு மட்டும் எதையும் அறியும் அறிவும் ,சிந்திக்கும் திறனும் ,பேசும் திறனும்,--எது நல்லது,?,,---எது கெட்டது,,,?--என்பதை அறிந்து கொள்ளும் அறிவுத் திறனும் இயற்கையினால் மனிதனுக்கு கொடுக்கப் பட்டு உள்ளது.!அதனால் தான் மனிதப் பிறவி உயர்ந்த பிறவி,உயர்ந்த அறிவு உள்ள பிறவி என்பதாகும்.

இதை உணர்ந்து முதலில் மனிதன் மனிதனாக,வாழவேண்டும் -- மனித வாழ்க்கை வாழ வேண்டும்.--மனிதன் ஆசை,--காமம்,---வெகுளி,--மயக்கம்,--சுய நலம்,--பேராசை போன்ற ,,,மண்ணாசை,--பெண்ணாசை,--பொன்னாசை களில் பற்று வைத்து வாழக்கூடாது --

எதைப் பற்றியும் கவலைப் படாமல்,மனிதனை மனிதன் ஏமாற்றிக் கொள்ளை அடிப்பதும்,--கொலைகள் செய்வதும்,--வாயில்லாத ஜீவன்களை,குழந்தை போல் வளர்த்து ,பணத்திற்காக,--விற்று----அந்த உயிர்களைக் கொன்று கொலை செய்து ,--அதன் புண் புலாலை{இறைச்சியை } உணவாக உண்டு பசியை போக்கிக் கொள்ளும் மனிதர்களை என்ன வென்று சொல்வது !?இவைப் போன்ற கொடூரமான கொலைக் குற்றம் செய்பவர்களை ,மனிதன் என்று எப்படி சொல்ல முடியும்?.இதற்காகவா மனிதன் என்ற உயர்ந்த பிறப்பு கொடுக்கப் பட்டது.?

சிறையிலே வாழ்ந்து கொண்டு சிறையிலே உள்ள உயிர்களை கொல்லுபவனுக்கு என்ன தண்டனைக் கொடுப்பது ?அறிவு படைத்த மனிதர்கள் சிந்திக்க வேண்டும் !.

குற்றம் செய்பவர்களை கண்டு பிடித்து ,..குற்றத்திற்கு தகுந்த தண்டனை வழங்கும் சட்டம், மனிதர்களாலே உருவாக்கப் பட்டு உள்ளது.அதற்கு நீதி மன்றம் என்று பெயர் வைத்து உள்ளார்கள்.--அங்கும் மனிதர்கள் தான் நீதிமான்கள் !,,,,அந்த நீதிமான்களும் குற்றவாளி களாகவே இருக்கிறார்கள்.--அவர்களும் பேராசை,பெருமோகம், சுயநலம் உள்ளவர்களே ! என்பது அனைவருக்கும் தெரியும்.அவர்கள் சட்டத்தின் வாயிலாக குற்றம் செய்பவர்களை, குற்றம் உறுதிப் படுத்தப் பட்டு ,தண்டனைக் கொடுக்கப்பட்டு, தனிமைப்படுத்தும்,--இடம் தான் சிறைச்சாலை ---மனிதர்களால் உருவாக்கப் பட்ட சிறைச்சாலை யாகும்.,,,குற்றவாளிகளை தனிமைப் படுத்தும் இடம்தான் சிறைச்சாலை-- என்பதாகும்.

உலகமே ஒரு சிறைச்சாலை,!----அதனுள் --மனிதனுக்கு--,மனிதன் தண்டனைக் கொடுத்து,--தனிமைப் படுத்துவது ஒரு சிறைச்சாலை !

இந்த உலகத்தில் குற்றவாளிகளுக்கு குற்றவாளிகளே தண்டனைக் கொடுக்கும் நிலை 
உருவாகி யுள்ளது,இதை எவ்வளவு மூடத்தனம் என்பதா !?முட்டாள் தனம் என்பதா !?அறியாமை என்பதா? சுயநலம் என்பதா?நியாயம் என்பதா ?அநியாயம் என்பதா ? என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது. 

வாய் பேசாத உயிர் இனங்கள் !

நாம் வாழும் உலகம் ஒரு சிறைச்சாலை என்பதை உணராத ,அறிவு படைத்த மனிதர்கள் ,,,
தண்டனை தேகங்களான,வாய் பேசாத, உயிர்களைக் கொன்று உணவாக உண்பது எவ்வளவு பெரிய குற்றமாகும்.

இறைவன் இந்த உலகத்தையும் உயிர் இனங்களையும் ,படைத்து,அதற்கு உண்டான தாவர உணவுகளையும் படைத்து உள்ளார்.-- உயர்ந்த பிறப்பாகிய மனித பிறப்பு எடுத்தவர்கள்,---இயற்கையையும்,---மற்ற ஜீவராசிகளையும்,---பாது காத்து வாழ வைப்பதற்காக படைக்கப் பட்டது தான்,மனிதப் பிறப்பாகும்.----நம்மை படைத்து உயர்ந்த அறிவைக் கொடுத்து சிந்திக்க வைத்து செயல் படுவதற்குத் தான்---மனிதப் பிறப்பு என்பதை புரிந்து,அறிந்து,தெரிந்து கொள்ள வேண்டும்.

தாவரங்களும் உயிர்கள்தான் !

தாவரங்களும் உயிர்கள்தானே அதைப் புசிப்பதும் {உண்பதும் }குற்றம் இல்லையா ?கொலை இல்லையா ?---என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்து கொண்டு உள்ளது .நியாயம் தான்.அதற்கு வள்ளலார் சொல்லும் பதில் .

மரம் ,புல்,நெல்,முதலான தாவரங்களும் உயிர்கள் தான்.அவைகளை இம்சை செய்து ஆகாரம் கொண்டால் அது ஏகதேச தாமச ஆகாரம்தான்;அந்த ஆகாரத்தால் வந்த சந்தோஷமும் அசுத்த கரண சந்தோஷம்தான் ;ஆனாலும் அப்படி அல்ல .மரம்,புல்,நெல் முதலான ஜீவர்கள் பரிசம் என்கிற ஓரறிவு உடைய ஜீவர்கள ஆனதாலும் ,அவ்வுடம்பில் ஜீவ விளக்கம் ''ஒரு சார்'' விளங்குவதாலும் ,அவ்வுயிர்கள் தோன்றும் வித்துக்களும் மற்ற வித்துக்கள் போல் சடமாதலாலும்,அவ் வித்துக்களை நாமே விதைத்து உயிர் விளைவு செய்யக் கூடுமாதலாலும்,

அவ்வுயிர்களை வேறு செய்யாமல் --அவ்வுயிர்கள் இடத்து உயிர் இல்லாமல் ,உயிர் தோன்றுவதற்கு இடமான சடங்களாகத் தோன்றிய வித்துக்களையும் ,காய்கனிகளையும்,--பூக்களையும்,--ழங்குகளையும்,--- தழைகளையும் ---ஆகாரங்களாகக் --கொள்வது தவறு இல்லை என்கிறார் .--இன்னும் விரிக்கில் பெருகும்.

மேலும் ஒரு உண்மையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.தாவரங்களில் இரத்தம் என்னும் ஐந்து  பூத, கலவை இல்லை --நீர் மட்டும்தான் உள்ளது.இதன் விபரம் அடுத்த கட்டுரையில் எழுதுகிறேன் .

அதையும் உயிருடன் பிடுங்கி எடுத்து உணவாக உட்கொள்ளக் கூடாது.----பூ,---காய்,---கனி,---இலைகள்,---கிழங்கு--- வகைப் போன்ற வற்றை உணவாக உட்கொள்ளலாம்,--நம் உடம்பில் தோன்றும்,சுக்கிலம்,நகம்,ரோமம்,முதலியவைகளை நீக்கும் போது ,இம்சை உண்டாகாதது போல்; இம்சை உண்டாகாத படியாலும்,தாவரங்களுக்கு மனம் முதலான அந்தக் கரணங்கள் விருத்தி இல்லாத படியாலும்,அது உயிர்க் கொலையும் அல்ல ,துன்பம் உண்டு பண்ணுவதும் அல்ல ,அதனால் அது ஜீவ காருண்ய விரோதமாகாது என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார்.என்பதை ,அறிவு ,தெளிவைக் கொண்டு அறிந்து ,தெரிந்து கொள்ள வேண்டும். ---மேலும் விபரம் {ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் பகுதியில் உள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள் .}     

வாய் இல்லாத ஜீவன்கள் !

மனிதன் மற்றவர்களிடம் இருந்து ,எவ்வித தந்திரம் செய்தாவது பொருளை சம்பாதிக்கிறான்.---அதை வைத்து ஆனந்தமாக வாழ்வதற்கு விரும்புகிறான்.ஆனால் வாயில்லாத ஜீவ ராசிகள் நம்மிடம் இருந்து எதையாவது,விரும்புகிறதா ?அவைகள் நம்மை என்ன கேட்கிறது ?வசிக்க வீடு,--இருக்க இடம்,---உடுக்க உடை,---அணிய ஆபரணங்கள்,---செலவு செய்ய பணம் ,---பொழுது போக்க,சுற்றுலா செல்ல ---என்று எதையாவது கேட்கிறதா ?, நான் வெளி இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று ---வண்டி, வாகனம்,,ஏதாவது கேட்கிறதா? ---எதுவும் கிடைக்கவில்லை என்று , நம்மை தொந்தரவு செய்கிறதா ?

நாம் உண்ணும உணவைப் பிடுங்கி உண்ணுகிறதா ?---நமக்குத் தெரியாமல் நம்மை ஏமாற்றி எடுத்துக் கொண்டு செல்கிறதா ?---கொலை,--களவு செய்கிறதா?--நம்மைப் போல் பொய் பேசுகிறதா ? இல்லவே இல்லையே !,எதையும் நம்மிடம் இருந்து எதிர்ப பார்க்காமல்.இறைவன் கொடுத்த,''நியதி ஆகார'' உணவை உண்டு கொண்டு வாழும் வாயில்லாத ஜீவன்களை !
துன்பப் படுத்துவது எந்த வகையில் நியாயம் ?எங்கெங்கோ அலைந்து திரிந்து ,தானே தேடிய உணவை உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன.அவைகளை இரக்கம் இல்லாமல் கொன்று தின்பது ,,மனித செயலா?மனிதாபமான இரக்க குணமா ?இவை எவ்வளவு பாபச்செயல் என்பதை அறிவு உள்ள மனிதன் அறிந்து கொள்ள வேண்டாமா ? இவை எவ்வளவு பெரிய  குற்றமாகும். இந்த குற்றங்களை எந்த சட்டத்தில் பதிவு செய்வது ?---இந்த குற்றங்களை விசாரிக்க எந்த நீதி மன்றம் செல்வது ?---இந்த குற்றங்களை விசாரிக்கும் நீதிமான்கள் யார்?---இந்த குற்றங்களுக்கு என்ன தண்டனைக் கொடுப்பது?,இந்த கொலைக் குற்றவாளிகளை எந்த சிறையில் அடைப்பது.?

இதற்கு எல்லாம் யார்க் காரணம் ?

பல்லாயிரம் ஆண்டுகளாக, சாதி,-- சமயம்,--- மதம்,---இனம்,---நாடு --போன்ற,அமைப்புகளை உருவாக்கிய,ஆன்மீகவாதிகளும் அவர்கள் செய்த சூழ்ச்சிகளும்,அவர்கள் படைத்த கடவுள்களும்,--கடவுளால் உண்டாக்கப்பட்ட வழிப் பாட்டு முறைகளும்,--அவர்களால் உருவாக்கப் பட்ட,சமய,--மத,--சடங்குகளும், சாத்திரங்களும்,கோத்திரங்களும்,பரிகாரங்களும்,அந்தக் கடவுளின் பெயரால் உயிர்ப்பலி கொடுக்கும் கொடுமையான பழக்க வழக்கங்களையும் உருவாக்கி உள்ளார்கள்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!

''நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புத்தி நொந்து உளம் நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் !''

''துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போது எல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போது எல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திரு உளம் அறியும் .''

என்று தன்உள்ளக் குமறலை வெளிப்படுத்தி உள்ளார் !ஆன்மீக சிந்தனை உள்ள எந்த அருளாளர்களாவது இப்படி சிந்தித்து உள்ளார்களா ?--இந்த ஆன்மநேயம் யாருக்காவது இருந்தது உண்டா ? சமய,--மதவாதிகளை,அருளாளர்கள் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ?--கருணை இல்லாதவர்களை எப்படி அருளாளர்கள் என்று சொல்ல முடியும் ?--சிந்திக்க வேண்டும் அன்பர்களே !

அறிந்து செய்த குற்றங்கள் !--அறியாமல் செய்த குற்றங்கள் !
   
மேலே கண்ட கொலைக் குற்றங்களை அறிந்து செய்வதால்,--அறியாமல் செய்வதால் கிடைக்கும் இயற்கை கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா ? உயிர்கள் அறியாத செய்த குற்றங்களினால் ,நிலத்திலும்,--நீரிலும்,---நெருப்பிலும் ,--காற்றிலும்,--- வெளியிலும்,---உயிர்கள்,---துன்பம் ---துயரம்,---அச்சம்,---பயம்,--மரணம்,--போன்ற தண்டனையை அனுபவித்துக் கொண்டே இருக்க வேண்டும் !,----தண்டனை பெற்ற உயிர்களை ---தண்டனைப் பெற்ற உயிர்களே !--கொன்று உணவாக உட் கொள்வது எவ்வளவு பெரிய குற்றமாகும்.இதற்கு இயற்கை என்னும் இறைவன் கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா?-மரணம் தான் பெரிய தண்டனை யாகும் 

தெரிந்து செய்த குற்றங்கள்,--தெரியாத செய்த குற்றங்கள் என இரண்டு பிரிவுகள்,--உள்ளன --இவை மனதால்,---வாக்கால்,--தேகத்தால் பதிவாகின்றன..

தெரியாத குற்றங்களுக்கு ,--தண்டனைக் குறைவு ,---குற்றங்கள் செய்த பிறகு --குற்றம் என்று தெரிந்த பிறகும்,--இனிமேலும்,குற்றம் செய்ய மாட்டேன் என்று உறுதிக் கொண்டு ,இறைவனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.அந்த மன்னிப்பு என்ன வென்றால்--இறைவனை நினைந்து,--உணர்ந்து,---உண்மை --ஒழுக்கமுடன்,--ஒரே நினைவில் நின்று பாராயணம் செய்தலும்,--தோத்திரம் --செய்தலும்,ஜீவர்களுக்கு உண்டாகும்,--பசி,--பிணி,--கொலை,--பயம்,--இச்சை,--எளிமை,-- துன்பம் வரும்போது, நம்மால் முடிந்த வரை,அந்த துன்பத்தை போக்க வேண்டும்,--இவையே மனித செயல்களாகும்.

தெரிந்து செய்த குற்றங்களுக்கு அதிக தண்டனை கொடுக்கப்படுகிறது,;--அவை என்ன
தெரியுமா ? --மனதால் செய்யும் குற்றங்களுக்கு --சண்டாள தேகம் என்னும்,கரடி,--புலி,---சிங்கம்,--போன்ற மிருக தேகம் கொடுக்கப் படும்.--வாக்கால் செய்யும் குற்றங்களுக்கு ஆடு--,மாடு,--பன்றி,--குதிரை,--நாய்,--போன்ற பிராணி முதலான தேகம் கொடுக்கப் படும்--தேகத்தால் செய்யும் குற்றங்களுக்கு --மரம், செடி, கொடி போன்ற தேகம் கொடுக்கப்படும்.--இந்த உண்மையைத் தெரிந்து கொண்டு மீண்டும் குற்றம் செய்யாமல் ,இருக்க-- இடைவிடாது, இறைவனை நினைந்து,--நினைந்து,--உணர்ந்து,--உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.--

அதுவும் போக,-- ஆதரவு அற்ற ஏழைகள் இருக்கும் இடம் தேடி அவர்களது பசியைப் போக்க வேண்டும்.--அங்கப் பழுது உள்ளவர்களுக்கு தொண்டு செய்யவேண்டும் .--மீண்டும் உயிர்களை அழிக்காமல் இருக்க வேண்டி --,உயிர்க் கொலை செய்ய கொண்டு போகும் உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டே இருக்க வேண்டும்.-மேலும் --உயிர்களின் மேல் நாம் காட்டும்,--இரக்கம்,-- அன்பு,--தயவு,--கருணை,---இவைகளால்.குற்றத்திற்கு உண்டான தண்டனைக் குறைக்கப் படும்.

 இதைச் செய்யத் தவறினால் --இதற்கு உண்டான தண்டனை மரணம் ,---அடுத்து சண்டாள தேகங்களை இயற்கை, கொடுத்துக் கொண்டே இருக்கும்.-எப்போதும் பிறந்து பிறந்து,இறந்து இறந்து,--தேகத்தை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான்

உலகை ஆளும் குற்றவாளிகள் !

இந்த உலகை ஆளுவதற்கு என்று சில பல குற்றவாளிகள்,உள்ளார்கள்.---குற்றவாளிகளே குற்றவாளிகளைத் தேர்ந்து எடுத்து ,--உலகை ஆண்டு கொண்டு உள்ளார்கள்.அவர்கள் செய்யும் குற்றங்கள் அளவிட முடியாதவை--.குருடனும் குருடனும் குருட்டு ஆட்டம் ஆடி குழியில் விழுந்தார்கள் என்பது போல் உள்ளது,--இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட, காலம் வந்து கொண்டிருக்கிறது --பொறுத்து இருந்து பார்ப்போம்.இவர்களுக்கு கிடைக்கும் தண்டனை அளவில் அடங்காதவையாக இருக்கும் .

அணு ஆராய்ச்சி !

இந்த உலகத்தில் உள்ள அணுக்கள் என்னும் பொருட்களை வைத்துக் கொண்டு ,அறிவியல் ,விஞ்ஞானம் ,வேதியல் ,போன்ற ஆராய்ச்சிகள் வெவ்வேறு விதமாக நடந்து கொண்டிருக்கிறது   , .அவர்கள் கண்டு பிடிக்கும் செயல்பாடுகளை அதிசயம் என்றும்,-- புதிய கண்டு பிடிப்புகள்  என்றும், பறை சாற்று கிறார்கள்,இங்கு உள்ளதைக் கொண்டு எதையும் சாதித்து விடமுடியாது,இந்த உலகத்தில் உள்ளதை வைத்துக் கொண்டு , எதையும் முழுமையாக கண்டு பிடிக்கவும் முடியாது.--கண்டுபிடிக்கும் கருவிகளும் இல்லை .---மனித அறிவைக் கொண்டும் ,--படிப்பு அறிவைக் கொண்டும் உண்மையை அறிந்து கொள்ள இயலாது.

மேலும் ஆராய்ச்சி எனற பெயரில் ,மக்கள் பணத்தை வீண் விரையம் செய்து கொண்டு இருக்கிறார்கள் .செவ்வாய் கிரகதிற்கும் ,சந்திர மண்டலத்திற்கும்,ராக்கெட்,விண்கலம் போன்ற  இயந்திரக் கருவிகளைக் கொண்டு,ஆராய்ச்சி செய்து, உண்மைக்கு புறம்பான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டு வருகிறார்கள் .செவ்வாய் கிரகத்தில் இருந்து மண்ணை எடுத்து வந்தோம் என்றும் ,அங்கும் மக்கள் சென்று வாழலாம் என்றும் ,பொய்யான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார்கள் .ஒரு சில உலக நாடுகள்,விஞ்ஞானம்,அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் போட்டிப் போட்டுக் கொண்டு மக்கள் பணத்தை விரையம் செய்து கொண்டு வருகிறார்கள.இவற்றை தங்களுக்கு சாதகமாக பயன் படுத்தி கொண்டு , ஒரு கூட்டம்,ராஜபோக வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறது .  

உலகில் உள்ள ஆராய்ச்சியாளர்களை ஆஹா ,,ஓகோ என்று போற்றுகிறோம் .நம் தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து அனுபவித்து, உலக உண்மை அதிசயங்களை ஒன்று விடாமல் கண்டு பிடித்து உலக மக்களுக்கு தெரிவித்த ,வள்ளலாரை யாரும் கண்டு கொள்ளவே இல்லை என்பதை நினைக்கும் போது வேதனையாக இருக்கிறது ,நம் தமிழ் நாட்டில் படித்தவர்கள் இல்லையா ?அறிவாளிகள் இல்லையா ?அறிஞர்கள் இல்லையா ?அறிவியல் ஆராய்ச்சி யாளர்கள் இல்லையா ? வள்ளலார் எழுதி வைத்துள்ள அருட்பாவை யாரும் படிக்க
வில்லையா ?படிக்கும் தகுதி யாருக்கும் இல்லையா ?இனிமேலாவது படித்து அறிந்து தெரிந்து கொள்வார்களா ?என்பது தெரியவில்லை,

அழிந்து போகிறவர்கள் கண்டு பிடித்தது எல்லாம் பொய்யானதுதான் ,அழியாத தேகம் படைத்தவர்கள் கண்டு பிடித்தது எல்லாம் உண்மையாகும் ,அருள் தேகத்தில் இருந்து கண்டு பிடித்தது என்றும் அழியாது.--அதுவே உண்மையான கண்டு பிடிப்பாகும் . 

அருள் அறிவு !

அருள் அறிவைக் கொண்டு தான் உண்மையைத் தெரிந்து கொள்ள முடியும் ! .அதை மற்றவர்களுக்கு சொல்லலாம்! ஆனால் காட்ட முடியாது.--அவரவர்களே அனுபவித்தால்தான் அறிய முடியும்,--உணரமுடியும்.--இதுவே உலக ரகசியமாகும்.இதை வள்ளலார் அனுபவத்தால் அறிக என்கிறார்.அனுபவத்தால் அறிந்தால் விளங்கும் என்கிறார் !

கண்டு பிடித்தவனும் சாகிறான் ,கண்டு பிடிக்காதவனும் சாகிறான் ,கண்டு பிடித்தவன் அடைந்த லாபம் என்ன ?--கண்டு பிடிக்காதவன் அடைந்த லாபம் என்ன ?--அனைவருக்கும் மரணம் தான் இறுதி முடிவாக இருக்கிறது .,மறுபடியும் பிறப்பு,--மறுபடியும் இறப்பு ,என்னும் தொடர்கதை நீண்டு கொண்டே இருக்கிறது .இதனால் இவர்கள் அறிந்த உண்மைதான் என்ன ?

பொய்யைக் கொண்டு --பொய்யை கண்டு பிடிக்கிறார்கள்---யாவும் பொய்யே !--இவர்கள் கண்டுபிடிப்பு, உயிர்களை அழிக்கத்தான் கண்டு பிடித்து உள்ளார்களே தவிர,-- உயிர்களைக் காப்பாற்ற எதையும் கண்டு பிடிக்கவில்லை ,இவர்கள் அறிவியல் ஆராச்சியால், ஒரு உயிரை உண்டாக்க முடியுமா?-- இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து வெளியே செல்ல இதுவரைக்கும் யாராவது,எதையாவது கண்டு பிடித்து இருக்கிறாரா ??யாரும், எதையும் கண்டு பிடிக்க வில்லை .---{வள்ளலாரைத் தவிர }

இன்றைய விஞ்ஞானிகள் மட்டும் அல்ல !அன்றைய அருளாளர்களும் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிறார் வள்ளலார் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

கிளக்கின்ற மறை அளவை ஆகமப் பேரளவைக்
கிளந்திடும் மெய்ச் சாதனமாம் அளவை அறிவு அளவை
விளக்கும் இந்த அளவைகளைக் கொண்டு நெடுங்காலம்
மேலவர்கள் அளந்து அளந்து மெலிகின்றார் ஆங்கே
அளக்கின்ற கருவி எலாம் தேய்ந்திடக் கண்டாரேல்
அன்றி ஒரு வறேனும் அளவு கண்டார் இலையே
துளக்கம் உறு சிற்றறிவால் ஒருவாறு என்று உரைத்தேன்
சொன்ன வெளிவரை ஏனும் துணிந்து அளக்கப் படுமோ !

என்கிறார் வள்ளலார் .--இவர்கள் எல்லோரும் இந்த உலகத்தையும்.உலகத்தில் உள்ள  பொருள்களையும் வைத்து .உலகத்தை இயக்கும் ஆற்றல்களையும் {சத்தி }தேடித்தேடி அலைந்து அலைந்து ,அளந்து அளந்து ,அளக்க முடியாமல்,அவர்கள் அளக்கும் கருவிகள் தேய்ந்த்தே ஒழிய அளவு காண முடியவில்லை மேலும் வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் போன்ற சிறிய தேக காரணங்களைக் கொண்டு,சிறிய அருளைப் பெற்று,அந்த சிறிய அருள்  என்னும் கருவிகளைக் கொண்டு அளந்தார்கள் .அருள் என்னும் கருவிகள் தான் தேய்ந்ததே ஒழிய உண்மையான அளவு காண முடியவில்லை .---

அவர்களுக்கு சொல்கிறேன், எனக்கு தெரிந்த உண்மையில் ஒரு சிறிய அளவு சொல்கிறேன் அதையாவது வைத்துக் கொண்டு இவர்களால் துணிந்து அளக்க முடியுமா ? என்று சவால் விடுவது போல் சொல்லுகிறார் வள்ளலார்.--இவர்களால் ஒரு சிறிய துரும்பைக் கூட அசைத்து எடுக்க முடியாது என்கிறார் .

அவர்களாலே முடியவில்லை என்றால் இந்த அறிவியல் விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களால் எந்த உண்மையைக் கண்டு பிடிக்க முடியும் .இவர்களே தண்டிக்கப்பட்ட சிறைச்சாலையில் உள்ளவர்கள் --இவர்களுக்கு அருள் என்னும் உண்மையை எப்படிக் கண்டு பிடிக்க முடியும்.      

இந்த உலகத்தில் ஒரு உயிரை அறிவியல் மூலமாக,விஞ்ஞான மூலமாக,வேதியல் மூலமாக,   உருவாக்க முடியுமா ?முடியாது !

இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து,--உயிர்களை உண்மையான வீட்டிற்கு,அதாவது உண்மையான விலாசத்திற்கு, செல்லும் வழியைக் கண்டுப் பிடிப்பதே உண்மையான கண்டு --பிடிப்பாகும் !. {இங்கு உள்ள ஆன்மாக்கள் --எல்லாம் விலாசம் தெரியாத ஆன்மாக்கள் }--உண்மையான விலாசத்தைக் -- கண்டுப் பிடித்து சென்றவர் வள்ளலார் ஒருவர்தான் .அவர் கண்டுபிடித்த,உண்மையான விலாசத்தை அனைவருக்கும் கொடுத்துள்ளார் ,அந்த விலாசத்தை வைத்துக் கொண்டு தேடினால் கிடைக்காது.அவர்போல் வாழ்ந்தால் தான் கிடைக்கும்,வேறு எந்த வழியாலும் கிடைக்காது ,--இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப் படும்! .எங்கு இருந்து வந்தோமோ அங்கு செலவதுதான் உண்மையான கண்டுப் பிடிப்பாகும்.

இந்த சிறைசாலையில் இருந்து வெளியேற வேண்டுமானால் --நாம் தெரிந்து கொள்ள வேண்டியது,என்ன வென்றால் -- எல்லா ஆன்மாக்களிலும் அமுதம் என்னும், ''அரும் பெரும் --பொருள்'' இறைவனால் ''ஆன்மா என்னும் உள் ஒளியில ''--வைக்கபபட்டு உள்ளது ,அதை அறிந்து,தெரிந்து,--நினைந்து நினைந்து,--உணர்ந்து உணர்ந்து ,--அந்த ''அருள் அமுதை '' எடுத்து உண்ணும் வழியைத் தெரிந்து கொள்ள வேண்டும் .அந்த ''அருள் அமுதம்'' கிடைத்தால் --நமக்கு பொருள் உணவு தேவைப்படாது.!---அருள் அமுதை உட்கொண்டவர்கள் ,இந்த சிறைச்சாலை என்னும் உலகை விட்டு வெளியே செல்ல அனுமதி வழங்கப்படும் ,அருள் அமுதைப் பெறும் வழியை அறிந்து கொள்வதுதான் ''அருள் அறிவு'' என்பதாகும்.அதுவே சாகாக்கலை,என்னும் சாகாக்கல்வி யாகும். அந்த அருள் அறிவைப் பெரும் வழிதான் என்ன வென்றால்;-- --

 இந்திரிய ஒழுக்கம்--கரண ஒழுக்கம்,--ஜீவ ஒழுக்கம்,--ஆன்ம ஒழுக்கம் என்னும் ,நான்கு ஒழுக்கங்களும்,மனிதன் கடைப்பிடித்து ,முழுமைப் பெற்று பரிபூரணம் அடைந்து --ஆன்மாவில் நிறைந்து,பின் எல்லா உயிர்களையும் தம் உயிர்ப்போல் என்னும், ஆன்மநேய ஒருமைப் பாடு என்னும்,''ஒருமையான'' உயிர் இரக்கம் என்னும் , ,அன்பு--தயவு,--கருணை போன்ற செயல்களில், தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ,அருள் அறிவு புலப்படும் --அந்த அறிவைக் கொண்டு அருள் என்னும் அமுதம் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள முடியும்.அறிந்து கொண்டாலும் அவ்வளவு எளிதில் அவை திறக்கப்பட மாட்டாது .--ஆன்ம பரிசோதனை செய்து ,அதிலும் வெற்றிப் பெற்றால்தான் அந்த அருள் வைத்திருக்கும் பெட்டித் திறக்கப்படும்.

அப்படி அறிந்து கொண்டவர் வள்ளலார் ! ,தெரிந்து கொண்ட பிறகும் பெட்டியைத் திறக்க முடியவில்லை --அந்தப் பெட்டி உள்ள இடம் நம்முடைய சிறநடுவில் உள்ள சிற்சபை என்னும் {ஆன்மா }இடமாகும்.அங்கு வைக்கப்பட்ட பெட்டியை ''அருட்பெரும்ஜோதி ஆண்டவரால்'' மட்டும்தான் திறக்கப் படும் என்பதை உணர்கிறார் ! --அவர் ஆண்டவரை எப்படி அழைக்கிறார் என்பதை பின் வரும் பாடலில் பாருங்கள் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.!--

பெட்டி இதில் உலவாத பெரும் பொருள் உண்டு இது நீ
பெருக என அது திறக்கும் பெருந் திறவுக் கோலும்
எட்டும் இரண்டும் தெரியாதே என்கையிலே கொடுத்தீர்
இது தருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக் கணமும் தரியேன்
அரைக் கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக
வட்டியிட்டு உம்மிடத்தே வாங்குவன் உம் ஆணை
மணிமன்றில் நடம் புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே !

 அருட்பேருஞ்ஜோதி ஆண்டவரை,--- விரைந்து வந்து பெட்டியைத் திறக்க வேண்டும் .காலதாமதம் செய்தால் ,ஒவ்வொரு வினாடிக்கும் உம்மிடம் வட்டி போட்டு வாங்குவேன் என்பதை இறைவனுக்கே சவால் விடுகிறார். சத்தியம் --வைத்து விரைந்து வரவேண்டும் என்று.இறைவனுக்கே ஆணையிடுகிறார்.--அந்த அளவிற்கு ஆன்ம பரிசோதனையில் வெற்றிப் பெறுகிறார் .
இறைவன் வள்ளலார் கட்டளையை ஏற்று உடனே வந்து ''அருள் அமுதம்'' வைத்துள்ள பெட்டியைத் திறந்து விடுகிறார் . இதேபோல் மனிதனாக பிறந்த அனைவருக்கும் கிடைக்கும் என்கிறார் வள்ளலார் .  

அருள் அமுதம் உள்ள பெட்டி {ஆன்மா }திறந்த பிறகு,அதில் உள்ள அமுதம் --உடம்பு முழுவதும் சென்று ,அருள் உடம்பாக மாற்றம் அடையும், பின்பு --மாயையால் கட்டிக் கொடுக்கப் பட்ட,--ஊண் உடம்பை சிந்தாமல்,--சிதறாமல்,--பின்னப்படாமல், தனித்தனியாக பிரித்து--{பஞ்ச பூத அணு உடம்பை }மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்,பின் பஞ்ச பூத அணுக்கள் எப்படி சேர்ந்ததோ !அப்படியே பிரித்து எடுக்கப்படும் !---பின்பு அருளின் கருணையால்,ஊன உடம்பு, ஒளி உடம்பாக மாற்றம் செய்து கொடுக்கப்படும் .ஒளி உடம்பைப்  பெற்றுக் கொண்டவர்களை, இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியே மரியாதையுடன்,''மாயையால் '' அனுப்பி வைக்கப்படும் .

ஆன்மா உடம்பு இல்லாமல் வாழ முடியாது !,உடம்பு இல்லாமல் இருக்க முடியாது ! உடம்பை அழிக்கக் கூடாது.உடம்பை அழியாத,பொன்னு உடம்பாக மாற்ற வேண்டும்.-அதுவே பிரணவதேகம்--அந்த பொன்னுடம்பை,ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.ஒளி உடம்பாக மாறும்போதுதான்,சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் ,அழிவற்ற தேகம் கிடைக்கும்.அந்த ஒளி உடம்பு கிடைத்த பின்புதான் ,--இந்த சிறைச்சாலை என்னும் உலகை விட்டு வெளியேற முடியும்.அதன் பின் அந்த ஒளி உடம்பு எங்கு வேண்டுமானாலும் செல்வதற்கு அனுமதி வழங்கப்படும்.

இந்த உலகத்தில் உள்ள பொய்யான ,சாதி,மதம்,சமயம் போன்ற எந்த செயல்களிலும் பற்று வைக்காமல் .நம்மை அனுப்பிய இறைவனையே நினைந்து உணர்ந்து தொடர்பு கொள்ள வேண்டும் .அப்படி இருந்தால் .இறைவனின் அன்பும் கருணையும் நமக்கு கிடைக்கும் ---மறைந்து கிடக்கும் அருள் அமுதம் உள்ள பெட்டியைத் , திறக்க ,இறைவன் வழிக் காட்டுவார் .திறந்து அதில் இருந்து சுரக்கும் அருள் அமுதை உண்டு,--- ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு .இந்த சிறைச்சாலையில் இருந்து வெளியேற முடியும் .----

 அமுதத்தால் உடம்பு எப்படி மாற்றம் அடைகிறது என்பதை வள்ளலார் ''அருட்பா அகவலில்'' ''பதிவு செய்து உள்ளதைப்  பாருங்கள் !

தோல் எலாங் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாங் கட்டவை விட்டு விட்டு இயங்கிட

என்பு எலாம் நெக்கு நெக்கு இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய்யுறத் தளர்ந்திட

இரத்தம் அனைத்தும் உள்இறுகிடச் சுக்கிலம்
உரைத்திட பந்தித்து ஒரு திரளாயிட

மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம் ஊற்று எடுத்து ஒடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளி முகம் மலர்ந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித்து அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட

மெய் எலாம் குளிர்ந்திட மென்மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறு சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங்கு அதிகரிப்பு அமைந்திடச்
சகங்காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

அறிவுருவு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறியுறு ஆன்மதற் போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாமொருங் கொழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட

உலகெலாம் விடயம் உள வெலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட

என்னுளத்து எழுந்து உயிர் எலாம் மலர்ந்திட
என்னுளத்து ஓங்கிய என்தனி அன்பே !

பொன்னடி கண்டு அருள் புத்தமுது உணவே
என்னுளத்து எழுந்த என்னுடைய அன்பே!

தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த என் தனி அன்பே !

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு தரம் எலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே

துன்புள அனைத்தும் தொலைத்து எனதுருவை
இன்புருவாக்கிய என்னுடை அன்பே

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளம் கலந்த என்தனி அன்பே

தன் வசமாகித் ததும்பி மேற் பொங்கி
என் வசம் சுடந்த என்னுடை அன்பே

தன்னுளே பொங்கிய தண் அமுத உணவே
என்னுளே பொங்கிய என் தனி அன்பே !

என்று வள்ளலார் தான் அனுபவித்த அருள் அனுபவத்தையும் --அருள் அனுபவத்தால் தன்னுடைய உடம்பு எப்படி மாற்றம் அடைந்தது என்ற உண்மைகயையும், மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளார் .உலகம் தோன்றிய காலத்தில் இருந்து வள்ளலாரைத் தவிர ,--இந்த உலகம் என்னும், சிறைச்சாலையை விட்டு யாரும் வெளியே செல்லவில்லை .  மனிதனாகப் பிறப்பு எடுத்த அனைவரும் வள்ளலாரைப் போல் வெளியே செல்ல முடியும் --என்பதை வாழ்ந்து வழிக் காட்டி உள்ளார் !--- .நமது அருட் தந்தை திரு அருட்பிரகாச வள்ளலார் என்பதை நாம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.              

இவற்றை எல்லாம் செய்யும் ஆற்றல் யாரிடம் உள்ளது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

இந்த சிறைச்சாலையை நிர்வாகம் செய்யும் ஆற்றல் ''மாயை,--மாமாயை,--பெரு மாயை''என்னும் ---ஆற்றல் மிகுந்த --அணுக்களுக்கு --,அருட்பெரும்ஜோதி !ஆண்டவரால்  முழு உரிமை வழங்கப் பட்டு உள்ளது ,என்பதை அறிவுள்ள மனிதர்கள் அறிந்து கொள்ள வேண்டும் .

இந்த சிறைச்சாலையைப் போல் பலகோடி,ஆண்டங்களில்,பலகோடிச் சிறைச்சாலைகளை உண்டாக்கி இயக்கிக் கொண்டு இருக்கும் ''அருட்பெருஞ்ஜோதி--அருட்பெருஞ்ஜோதி --தனிப்பெருங் கருணை --அருட்பெருஞ்சோதி ! என்னும், ''பேரருள்--- அருள்--பெருஞ்சோதி'' அணுவாகும்.--அவைதான் தனிப்பெருங் கருணையாகும் .

அந்த அருட்பெரும்ஜோதி என்னும் அணுவைத் தொடர்பு கொண்டால் --மாயை என்னும் ''அணு ''வழிக் காட்டும்,-- மாயையின் காவலில் -அதாவது நிர்வாகத்தில் உள்ள சிறைச்சாலையில்  இருந்து வெளியே செல்ல வேண்டுமானால்,---ஆண்டவரால் கொடுத்த அருள் அமுதை உண்டு,--ஊன உடம்பை, ஒளி உடம்பாக மாற்றி --ஆன்மா தனித்து இருக்கும் போது --இந்த சிறைச்சாலையில் இருந்து,அளவில்லா மதிப்பு மரியாதையுடன்,வெளியே அனுப்பி 
வைக்கப் படும் , 

அருள் என்னும் அமுதத்தை கண்டு பிடித்து.--அதை யார் புசிக்கிரார்களோ அவர்களை மட்டும் தான் மாயை என்னும் அணு --சிறையில் இருந்து வெளியேற்றும் /.---மாயைக்கு இவ்வளவு அதிகாரம் உண்டா ? என்று நீங்கள் நினைக்கலாம் ,அருட்பெருஞ்சோதி ஆண்டவர் !அனுப்பிய ஆன்மாக்களுக்கு, உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொடுப்பதே,மாயைதான் ,அதனால்தான் உடம்பு என்னும் வீட்டை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல முடியாது .உடம்பை விட்டு உயிர் பிரிந்தாலும் வெளியே செல்ல முடியாது !மறுபடியும் வேறு ஒரு வீடு கட்டிக் கொடுக்கப்படும், இவை இயற்கையின் கட்டளையாகும்! சட்டமாகும்.

பெரு மாயைதான்--- உடம்பு என்னும் வீட்டைக் கட்டிக் கொடுத்தது என்பதை ,வள்ளலார் சொல்வதைப் பாருங்கள்.!

பெரு மாயை என்னும் ஒரு பெண் பிள்ளை நீ தான்
பெற்ற உடம்பு இது சாகாச் சுத்த உடம்பாக்கி
ஒரு ஞானத் திருஅமுதம் உண்டே ஓங்குகின்றேன் இனி நின்
உபகரிப்போர் அணுத்துணையும் உளத்திடை நான் விரும்பேன்
அருளாய ஜோதி எனக்கு உபகரிக்கின்றது நீ
அறியாயோ என்னளவில் அமைக அயல் அமர்க
தெருளாய உலகிடை என் சரிதம் உணர்ந்திலையோ
சிற்சபை என் அப்பனுக்குச் சிறந்த பிள்ளை நானே !

என்னும் அருட்பா வாயிலாக உண்மையைப் போட்டு உடைக்கிறார் !இந்த உளவை இதுவரையில் எந்த அருளாளர்களும் கண்டுப்பிடிக்க முடிய வில்லை !,வள்ளலார் கண்டு பிடித்து உலக மக்களுக்கு வெளிப்பட காட்டி உள்ளார்கள் !   

உடம்பை அழிக்காமல் ,உடம்பின் அணுக்களை,சிந்தாமல்,சிதறாமல்,பின்னப் படுத்தாமல்  பிரித்து மாயை இடம் ஒப்படைக்க வேண்டும். --அனைத்தும் ஒப்படைத்த பின்தான் மாயை வெளியே அனுப்பும் ,--இதைத்தான் வள்ளலார் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றார்! .பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றார் !-- நித்திய பெருவாழ்வு என்றார் !---சுத்த பிரணவ ஞான தேகம் என்கிறார் ---கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்கிறார் .

இந்த உண்மையான ரகசியத்தை தெரிந்து கொள்ளாமல் --சமய ,மத வாதிகள்,ஒன்று கிடக்க ஒன்றை உளறிக் கொண்டு இருக்கிறார்கள் .ஆன்மா அழியாது ,--உடம்பு அழிந்துவிடும் ,ஆன்மா பரலோகம்,சொர்க்கம் ,வைகுண்டம் ,கைலாயம் போன்ற இடங்களில் போய் பிறப்பு இல்லாமல் வாழும் என்று பொய்யானக் கற்பனைக் கதைகளை கற்பனைகளாக கட்டி விட்டார்கள்--ஆதலால் தான் சமய,---மதங்களை நம்ப வேண்டாம் என்றார் வள்ளலார் .

சமய,--மத வாதிகள் கண்டவர் விண்டதில்லை.விண்டவர் கண்டதில்லை ! என்ற பொய்யான கருத்தை மக்கள் மத்தியில் விதைத்து விட்டார்கள்.வள்ளலார் நான் கண்டு கொண்டேன்,களித்தேன்,களிக்கின்றேன் என்கிறார் .--அவர் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி யெலாம் கண்டேன்
அடர் கடந்த திருவமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என்வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடம் செய் இறைவன் அருட் செயலே !

நான் காணாதது ஒன்றும் இல்லை --அனைத்தும் அறிந்து தெளிந்து கொண்டேன் ,அனைத்து இடர்களையும் தவிர்த்து ,அருள் ஒளியால் அழியாமல் இருக்கும்,அறிவு உருவமாக அடைந்தேன் .உடல் உயிர் உள்ளம் எலாம் தழைத்தேன் என்றும், உள்ளது உள்ளபடி யாவும் அறிந்து கொண்டேன் .என்றும் ,இத்தனையும் இறைவனுடைய அருட்செயலே காரண காரியமாகும் என்றும் திறம்பட திட்டவட்டமாக தெளிவுபடுத்துகிறார் வள்ளலார் .     


இந்த உலகத்தில் வாழ்வது சிற்றின்பம் என்பதாகும் !,வெளியே சென்று,அருள் வெளியில் வாழ்வது பேரின்பமாகும் ! .பிறப்பு எடுத்து வாழ்வது சிற்றின்பம் !பிறப்பு இறப்பு இல்லாமல் வாழ்வது பேரின்பம் ! 

இந்த எளிய வழியைத் தெரிந்து கொள்ளாமல் --பல பொய்யான கற்பனைக் கதைகளும் ,பொய்யான கற்பனை தெய்வங்களும்,--பொய்யான ஆன்மீக --பெரியோர்களின் செய்திகளும்,,--பொய்யான அருளாளர்களால், உலகில் விதைக்கப் பட்டு விட்டது .--மனித உயிர்களை குழப்பி விட்டார்கள் .மனித உயிர்களும் அவர்கள் சொல்வது உண்மை என்று நம்பி ஏமாந்து பிறந்து,--பிறந்து,--இறந்து,--இறந்து-- துன்பத்தில் சிக்கிக் கொண்டே இருக்கிறார்கள் .

உண்மையான வழி தெரியாமல் அலைந்து,திரிந்து கொண்டு இருந்த மனித உயிர்களுக்கு உண்மையான வழியைக் காட்ட வந்தவர்தான் நமது --திருஅருட் பிரகாச வள்ளலார் என்பவராகும் அவர் காட்டிய பாதை நேர் பாதையாகும் !தூய்மையான பாதையும் !உண்மையான பாதையுமாகும் !  இந்த சிறைச்சாலையை விட்டு வெளியேற வேண்டுமானால் வள்ளலார் காட்டிய பாதை மட்டும்தான் உண்மையான {வழி } பாதையாகும்,

உண்மை உரைக்கின்றேன் --தெரிந்து கொள்ளுங்கள்,--என்பதை விளக்கும் பாடலைப் பாருங்கள்.!

உண்மை உரைக்கின்றேன் இங்கு வந்து அடைமின் உலகீர் 
உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர் 
எண்மையினான் என நினையீர் எல்லாம் செய்ய வல்லான் 
என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவிர் 
தண்மையொடு சுத்த சிவ சன்மார்க்க நெறியில் 
சார்ந்து விரைந்து ஏறுமினோ சத்திய வாழ்வளிக்கக் 
கண்மை தரும் மொரு பெருஞ் சீர்க் கடவுள் எனப் புகலும்
கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே !

என்று கூறி, நம்மை எல்லாம் அழைக்கின்றார் வள்ளலார் ! இவை கதைகளோ ,கற்பனைகளோ.--பொழுது போக்கோ கிடையாது ,மனிதன் மனிதனாக வாழ்ந்து ,இறை நிலையை அடையும் உண்மை மார்க்கமாகும்,அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும். 

வேறு எந்த குறுக்கு வழியிலும் வெளியேற முடியாது !--இந்த உண்மையான வழியைக் கண்டுப்  பிடித்துக் காட்டியவர்தான் --திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் .அவர் சென்ற நேர் பாதையை ,நமக்குக் காட்டி உள்ளார்கள் .நாமும் அந்த நேர் வழியைப் பின்பற்றி .இந்த உலகம் என்னும் சிறைச்சாலையில் இருந்து வெளியேறுவோம் .என்றும் பேரின்ப பெருமகிழ்ச்சியுடன் வாழ்வோம் !.

உங்கள் ஆன்மநேயன்; --கதிர்வேலு.

மீண்டும் பூக்கும் ;--