ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

நான் அறிந்த வள்ளலார் ! பாகம்,3,

நான் அறிந்த வள்ளலார் !காட்சி -4,

வடலூர் சத்திய ஞான சபையையும், தருமச்சாலையும் பார்த்து என்னுடைய மனமும் அறிவும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தது. இவரைப்போல் ஒரு அருளாளர் எந்த உலகத்திலும் கேள்விப்பட்டதும் இல்லை படித்ததும் இல்லை,அறிந்ததும் இல்லை,பார்த்ததும் இல்லை,-ஆண்டவரை அடையும் வழி கருணை ஒன்று தான் என்பதை ஆணித்தரமாக சொல்லியவர் --.சொல்லியதோடு நில்லாமல் ,உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கடவுளுக்கு ஆலயம் அதாவது கோயில் என்று கல்லாலும் மண்ணாலும் கட்டிடங்களை கட்டி ,அதில் ஓர் தத்துவ ஜடப் பொருள்களை பொம்மைகளாக வடித்து,அந்த சிலைகளை வைத்து இதுதான் கடவுள் என்று வைக்காமல்,சொல்லாமல்.

கடவுளை வணங்க வேண்டுமானால் பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பது தான் கடவுள் வழிபாடு என்பதை ,செய்முறையில் செய்து காட்டியவர்தான் என்னைக் கவர்ந்த ,என்உள்ளத்தைக் கவர்ந்த ,என்னுடைய அறிவுக்கு விளக்கு என்னும் ஒளி ஏற்றியவர் என்னைவிட்டு நீங்காத என் உள்ளத்தின் உள்ளே என்றும் நிறைந்து நீங்காது இருப்பவர்தான்--என்னை ஆண்டு கொண்டு நிலையாக இருக்கும், எனது உண்மையான தந்தை தனிப் பெருங் கருணை என்னும் அருட்பெரும்ஜோதி அருட்பிரகாச வள்ளலாகும் .அவருடைய வாழ்க்கை வரலாற்றை உண்மையுடன் மக்களுக்கு தெரியப் படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன்.

வள்ளலார் யார் ?--அவர் ஏன் இந்த உலகிற்கு வரவேண்டும்?.--அவரை யார் அனுப்பிவைத்தவர்?-- ,அவர் ஏன் தமிழ் நாட்டில் அவதரித்தார்?,--அவருடைய தந்தை தாயின் குண நலன்கள் யாது ?--அவர் உலகத்திற்கு என்ன சொல்லவந்தார் ?--கடவுள் உண்டா?இல்லையா?--கடவுள் யார்?--அவர் எங்கே உள்ளார்?--அவரை எப்படி அறிந்து கொள்வது ?--என்ன சொல்ல வந்தார் -- சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாரா?--அவர் ஏன் மறைந்தார் ?--அவர் ஒளிதேகம் பெற்றது எப்படி? --ஏன் ?-வள்ளலாரின் கருத்துக்கள் மக்களுக்கு தேவையா? --அவர் காட்டிய சுத்தசன்மார்க்கம் என்றால் என்ன ?--வள்ளலாருக்கு முன் உலகம் எப்படி இருந்தது?--பின் எப்படி இருந்து கொண்டு உள்ளது ?--மரணம் இல்லா பெருவாழ்வு என்றால் என்ன?--அசுத்ததேகம்,-சுத்ததேகம்,-பிரணவதேகம்,-ஞானதேகம் -என்றால் என்ன ?--முன்வந்த ஞானிகள் நிலை என்ன ?--இவருடைய ஞான நிலை என்ன ?

போன்ற அனைத்து சிந்தனைகளுக்கும் அவர் எழுதிய திரு அருட்பாவில் இருந்தே விளக்கம் தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன் உண்மைக்கு புறம்பான செய்திகள் எதுவும் இதில் இடம் பெறாது .

முப்பத்தைந்து ஆண்டுகளாக வள்ளலார் காட்டிய சுத்தசன்மார்க்க கொள்கையில் நான் மட்டும் அல்ல, என்னுடைய மனைவி அமுதா,-,மற்றும் என்னுடைய குழைந்தைகள் ;-மகன் கார்த்திகேயன் -,மகள் சுமதி,-மகன் நந்தகுமார் -,மற்றும் மருமகன் கந்தசாமி--மருமகள்கள்,ஹேமா,-ஜெயலஷ்சுமி ,- அவர்கள் குடும்பம் குழைந்தைகள் அனைவரும் வள்ளலார் வழியில் நெறி தவறாமல் ஜீவகாருண்ய ஒழுக்கமும் ,கடவுள் ஒருவரே! அவரே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் !என்ற உண்மை உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள்.என்பதை சொல்லிக் கொள்வதில் அளவில்லா ஆனந்தமும் ,மகிழ்ச்சியும் அடைகிறேன் .அதற்கு காரணம் வள்ளலார் மீது உண்மையான பற்றும் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான் உண்மையான கடவுள் என்பதை அறிவு பூர்வமாக அறிந்து கொண்டு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடைபிடித்து வாழ்ந்து வருவதால்,கிடைத்த லாபம் ஆகும் .

எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,எங்களை வழிநடத்தி வாழவைத்துக் கொண்டு உள்ளார் இதுவே உண்மை ,சத்தியமாகும்.. . 

தருமச்சாலை உட்புறத் தோற்றம் ;--வள்ளல் பெருமான் தருமச்சாலையை நிறுவிய பிறகு ஞானசபையைக் கட்டிய பிறகு, அவர் தம் திருக் கரங்களால் 1872,ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25,ஆம் நாள் ஏற்றிவைத்த திருவிளக்கு,அவரே ஏற்றிவைத்த ஜோதி தான் தருமச்சாலையில் உள்ளது .அப்போது வள்ளலார் உருவச்சிலை அங்கு இல்லை,வள்ளலார் மறைவுக்குப் பின் சன்மார்க்க அன்பர்கள் அன்பின் காரணமாக வள்ளலார் சிலையை வைத்து வழிபட ஆரம்பித்துள்ளார்கள் .

வள்ளலார் ஜோதியைத்தான் வழிபட சொன்னார் -தன் உருவத்தை வழிபட வேண்டாம் என்று திட்டவட்டமாகச் சொலலியும் .அன்பர்கள் விபரம் அறியாமல் சிலையை வைத்து இன்றுவரை வழிபாடு செய்து வருகிறார்கள்.

சிலையை வைத்ததோடு அல்லாமல் வள்ளலாருக்கு சமயச் சின்னமான விபூதி பட்டையையும் இட்டு சமயவாதியாக கற்பித்து உள்ளார்கள் .இவை யாவும் சமயவாதிகள் செய்த சூழ்ச்சியாகும் {அறியாமையாகும் }.இவை வள்ளலாருக்கு நாம் செய்யும் துரோகமாகும். 

சமரசம் கண்ட வள்ளலாருக்கு சமயச்சின்னம் வைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். 

தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் விபூதி இல்லாத வள்ளலார் படமே இல்லை .நான் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோட்டில் சன்மார்க்கத் தலைவராக இருந்தேன் அப்போது முப்பெரும் விழா மூன்று நாட்கள் நடைப் பெற்றது .ஒரு திருமண மண்டபத்தில் அன்னதானம் ,ஒரு திருமண மண்டபத்தில் சன்மார்க்க சொற்பொழிவு நடந்து கொண்டு இருந்தது.

அதில் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சன்மார்க்க பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் .

அருட்செல்வர் மகாலிங்கம் - துறவி கந்தசாமி,-ஊரனடிகள் ,--பழ சண்முகனார் ,-வீர சண்முகனார் ,-சேலம் டாக்டர் துரைசாமி,-டாக்டர் ராஜமாணிக்கம் ,--புதுகோட்டை சந்தானகொபாலகிருஷ்ணன் ,-மூ,பாலு,--விழுப்புரம் கோவிந்தசாமி,--ராஜவேலு,--முத்துக்குமாரசாமி --மணி ,-பகிரதன் ,-கிரிதாரிபிரசாத் ,--சென்னை நீதிபதிகள் பழனிச்சாமி,-பஞ்சாட்சரம் ,-மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தியானேஸ்வரன் ,-மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ,--மற்றும் தமிழ் நாட்டில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் .

தமிழ் நாட்டில் முதன் முதலாக வள்ளலார் படத்திற்கு விபூதி இல்லாத கட்அவுட்டுகள்,தயார் செய்து ஈரோடு பிரப்ரோட்டில் பெரிய அளவில் பிரமாண்டமான ஆர்ச்சு வைத்தேன் .விழா மேடையில் வள்ளலார் படம் விபூதி இல்லாமல் ,-ஞானசபையை வைத்து ,-அருட்பெரும்ஜோதி தகரக் கண்ணாடி விளக்கு வைத்து விழா மேடையை ,அனைவரும் பாராட்டும் அளவிற்கு பிரமாண்டம் செய்து விழா எடுத்தேன் .

இவற்றை கண்ணுற்ற சமயவாதிகள் வள்ளலார் படத்திற்கு விபூதி இல்லாமல் பார்க்க சகிக்காமல் சண்டைக்கு வந்து விட்டார்கள் .அவர்களுடைய எதிர்ப்பை காவல்துறை பாதுகாப்புடன் எதிர்கொண்ட வரலாற்றை சொல்ல வார்த்தைகள் இல்லை ,என்னுடைய நாக்கை அறுத்து எறிவோம் என்று ஒரு கூட்டம் என்னைச்சுற்றி வட்டமிட்டது .தனி ஒருவனாக இருந்து வள்ளல் பெருமான் கருணையால், துணையால் ஆருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளால் விழா சிறப்பாக நடைபெற்று நிறைவேறியது ,இவை தமிழக சன்மார்க்க உலகம் அறியும் .

அந்த விழாவிற்கு பின் மகாலிங்கம் அவர்கள் ராமலிங்க பணிமன்றம் சார்பில் விபூதி இல்லாத வள்ளலார் படம் தயாரித்தார்கள் ,பின் நிறைய அன்பர்கள் அதை ஏற்றுக் கொண்டு சமயச் சின்னங்கள் வள்ளலார் படத்திற்கு அணிவிக்க கூடாது என்பதை உணர்ந்து கொண்டார்கள் .இன்னும் சில அன்பர்கள் விபூதி அணிந்த வள்ளலார் படம் தயாரித்துக் கொண்டு உள்ளார்கள் .அவர்களுக்கு வள்ளலார்தான் அறிவு புகட்ட வேண்டும் .

வள்ளலார் ஏற்படுத்திய வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களில் வள்ளலார் படத்தை வழிபடுவதும் விபூதி பிரசாதம் வழங்குவதுமாய் உள்ளது அதை எதிர்த்து போராடி வருகிறோம் .என்னுடைய போராட்டம் ஓய்ந்தபாடு இல்லை இன்னும் நிறைய உள்ளது பின்பு தெரிவிக்கிறேன் .

சன்மார்க்க அன்பர்கள் சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல் இப்படி எல்லாம் செய்வார்கள் என்பதை உணர்ந்து -என்னை வணங்காதீர்கள் அருட்பெரும்ஜோதியையே வணங்குங்கள் என்பதை தெளிவாக திருஅருட்பாவில் தெளிவுபடுத்தி உள்ளார் வள்ளல்பெருமான் அவர்கள்.

பாடல்வருமாறு ;--

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச சாற்றுகிறேன் தயவினோடுங் கேட்பீர்
என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாஞ் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர் போலே வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரணச மெய்ச சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன்னானை என்னானை சார்ந்து அறிமின் நீண்டே !

என்று தெளிவு படுத்தியுள்ளார் வள்ளல் பெருமான் ,என்னை வணங்கினால் இறைவன் அருள் கிடைக்காது,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியை வணங்குங்கள் எல்லா நலமும் கிடைக்கும் என்கிறார் .

இதில் ஓர் உண்மை உள்ளது வள்ளலார் ஒளிதேகம் அடைந்து விட்டார்கள் .அவர் உருவமாக இல்லை உருவத்தில் இருந்தால் வணங்குவது தவறு இல்லை ,அருட்பெரும்ஜோதியை வணங்கினால் அதில் வள்ளலார் உள்ளார் .வள்ளலார் உருவத்தை வணங்கினால் அதில் அருட்பெரும்ஜோதி இல்லை என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்தால் தெளிவு கிடைத்துவிடும் .

வள்ளலார் உருவம் ஓர் அடையாளம் அவ்வளவுதான் அதற்காக அதை மதிக்கிறோம் ஆனால் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்பதை உணரவேண்டும் .அதேபோல் சுத்த சன்மார்க்கி யாருடைய காலிலும் விழக்கூடாது.அப்படி விழுந்தால் அவர்கள் சுத்த சன்மார்க்கி அல்ல .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் நம்முடைய சிரநடுவில் உள்ளார் என்பதை அறிந்தால் அவரை காலில் விழ வைக்கலாமா ? மரியாதை என்பது வேறு ?வந்தனம் சொல்வது வேறு ,காலில் விழுவது என்பது வேறு.இதை நாம் உணரவேண்டும்.

தொடரும் ;--           
சனி, 25 பிப்ரவரி, 2012

யோகத்தின் பயன் !

யோகத்தின் பயன் !

யோகம என்பது ஏழு வகைப்படும் அவை ;-இராஜயோகம,கருமயோகம்,ஹடயோகம்,இலயயோகம்,பக்தியோகம் ,மந்திரியோகம்,ஞானயோகம் என்பவையாகும் ,

யோகம் என்பது யாவுமே ஸ்துலத்தை நினைவில் கொள்ளாமல் சூஷ்மத்தை,நினைப்பதாகும்,யோகம என்ற பெயரில், விபரம் தெரியாமல் கண்டதை நினைத்து யோகம் 
,தவம ,தியானம் ,செய்யக்கூடாது,நம்முடைய உடம்பை இயக்கம் ஆன்ம உயிர் ஒளியான சூஷ்மமான உள் ஒளியை நினைத்து யோகம செய்யவேண்டும்.அதற்கு ஞானயோகம என்பதாகும்.இதைத்தான் வள்ளலார் ஞானத்தில் சரியை,கிரியை,யோகம ,ஞானம் .என்பதில் உள்ள பதினைந்தாம் படியாகிய,ஞானத்தில் யோகம என்னும் ஞானயோகம் செய்யச்சொல்கிறார்,

இவை யாதெனில் நம் உடம்பில் இறைவன் குடிருக்கும்.புருமத்தியில் உள்ள ஆன்ம ஒளியை இடைவிடாமல் தொடர்பு கொள்ள வேண்டும்.நம் மனதை அங்குதான் செலுத்தவேண்டும்.அப்படி அங்கு செலுத்தும்போது,நம் உடம்பில் உள்ள எழுபத்தி இரண்டாயிரம் நாடி நரம்புகளும் முறையாக வேலை செய்யும்.உடம்பில் அனைத்து வியாதிகளும் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்து விடும் .அறிவு தன்னைத்தானே தெளிவாகும் .

ஆன்மாவில் இருந்து வெளிவரும் ஆற்றல் அதாவது அருள்மருந்து,உடலையும் உயிரையும் காப்பாற்றும் சக்தியாகும் .இதை தெரியாமல் மக்கள் மற்றவர்களிடம் ஏமாந்து பணத்தையும் நேரத்தையும் விரையம் செய்து கொண்டு உள்ளார்கள் .

மக்களை ஏமாற்றி பணம் பரிப்பதற்காகவே , பல பல பொய்யான அமைப்புகள் இயங்கிக் கொண்டு உள்ளது.அவர்கள் போடும் விளம்பரத்தால் வேஷத்தால்,மக்கள் மதிமயங்கி வாழ்க்கையை சின்னாபின்னமாக்கி கொள்கிறார்கள் ..இதற்கு அரசாங்கமும் அரசியல்வாதிகளும் ஆதரவு தருகிறார்கள் . 

மனம் ஒருமைப் பாட்டுக்கு வருவதற்கு ஏழை எளியவர்களுக்கு உபகாரமும,இரக்கமும் செலுத்தினால் அதுவே மனதை ஒருமைப்படுத்தும் .இதுவே இயல்பான வழியாகும் 

பள்ளியில் படிக்கும் மாணவ ,மாணவிகளுக்கு ஒழுக்கத்தைப் பற்றி சொல்லித் தராமல் பொய்யான யோகத்தையும் தியானத்தையும் சொல்லிக் கொடுக்க பலகோடி பணத்தை செலவு செய்து கொண்டு உள்ளார்கள்.இதை யாரிடம் சொல்வது எப்படி சொல்வது.ஆண்டவர்தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்.

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு..

நான் அறிந்த வள்ளலார் ! பாகம் 2,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !காட்சி ;---3,

உத்தர ஞான சித்திபுரம் என்றும்.,உத்தரஞான சிதம்பரம் என்றும்,திருஅருளால் ஆக்கப்பட்ட சிறப்பு பெயர்களும் .--பார்வதிபுரம் என்றும் ,வடலூர் என்றும்,உலத்தாரால் குறிக்கப்பட்ட குறிப்பு பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் பதியின் இடத்தே இயற்கை விளக்க நிறைவாகி உள்ள ஒரு சுத்த சிவானுபவ ஞானசபை ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை'' இதுதான்

ஒளிவடிவில்,திருநடனமிடும் எல்லாம் வல்ல தனித்தலைமைக் கடவுளராகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆட்சி செலுத்துகின்ற புனிதத் திருத்தலம் {ஞானசபை }இதுதான் .

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே,ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர் --அலைந்து அலைந்து வீணே நீர் அழிவது அழகல்ல --என்று மனித சமுதாயத்திற்கு அறிவு வழிகாட்டி --

கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப் போக என்று சினந்து கூறி--சீர்திருத்த உலகை நிர்மாணிக்க புரட்சிக் குரல் கொடுத்து --சன்மார்க்கம் என்னும் நன்மார்க்கம் தந்து --உலகத்தார் அனைவரும் ஒருதாய் மக்கள் தான என்று வலியுறுத்தி,''ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை "'என்னும் உயரிய கொள்கைத் தந்தவர் --திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள் !

இறைவனால் வருவிக்க உற்ற இறைமகன் .இறைவன் அருளை முழுமையாகப் பெற்ற அருட் தந்தை, அனைத்து உயிர்களிலும் இதயங்களிலும் குடி இருக்கும் இதய தெய்வம்.!--

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறான் --எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் கருத வேண்டும் என்று போதித்த மாமேதை !

வாடிய பயிரைக் கண்ட பெதேல்லாம் வாடி 
வருந்திய இரக்கத்தின் எழுஞாயிறு!

கருணைக் குன்றென நிமிர்ந்து நின்ற திருஅருட்பிரகாச வள்ளல பெருமான் எழுப்பியதே இந்த சத்திய ஞான சபையாகும். !

இது ஆலயம் அல்ல! ,இது சர்ச் அல்ல! ,இது மசூதி அல்ல! ,இது பிரமிடு அல்ல!இது கோயில் அல்ல! ,இது தேவாலயம் அல்ல ,உண்மைக் கடவுளான ''அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ''நடனமிடுகின்ற ''ஞான சிங்காதன பீடம் ''என்னும் மேடையாகும்.,எல்லா உயிர்களிலும் இறைவன் ஆன்ம ஒளியாக இருந்து இயங்கும் தோற்றமாகும் .சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்,சன்மார்க்க சித்தியை யான பெற்றுக் கொண்டனன் என்று தான் கண்ட உண்மைக காட்சியை உலக மக்களுக்கு காட்ட வேண்டும் என்ற,ஆண்டவன் கட்டளைப்படி தோற்று விக்கப் பட்டதுதான் --சத்திய ஞான சபையாகும்.!

இங்கே சடங்குகள் இல்லை!இங்கே சாதி சமய மதம் முதலான எந்த ஆசாரங்களும் இல்லை சாதிகள் இல்லை !சமயங்கள் இல்லை !மதங்கள் இல்லை !வேத மந்திரங்கள் இல்லை,நாடு,மொழி இனம்,போன்ற உலகாசார சங்கற்ப விகற்பங்கள் !இல்லை!

எல்லோரும் ஓர் குலம் !
எல்லோருக்கும் ஒரே இறைவன் !
அவரே அருட்பெரும்ஜோதி !
அந்த அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வாழும் புனித இல்லமே இந்த ஞான சபையாகும்.அதற்கு பெயர்தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !''  என்பதாகும்.   
.
இனி சத்திய தருமச் சாலையைப் பார்ப்போம்! 

சத்திய தருமச்சாலை !


வள்ளலார் ஏற்றிவைத்த அணையா அடுப்பு பழையது,புதியது.!


சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை ;--

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் !ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு ! உயிர் இரக்கமே இறைவனை அடையும் வழி ! கருணைக் காட்ட முடியாதவனால் கடவுளை நெருங்க முடியாது !

என்று மனித குலத்திற்கு போதித்த வள்ளல பெருமான் ,போதித்ததோடு நில்லாமல்,ஜீவகாருண்ய நெறியான பசிப்பிணியைப் போக்கும் அறப்பணிக்காக நிர்மாணிக்க பட்டது தான் சத்திய தருமச் சாலையாகும்.

இங்கே பசியோடு வருவோற்கு இல்லை என்று கூறாமல் உணவு வழங்கப் படுகிறது.இவை '-1867,ஆம் ஆண்டு மே மாதம் 23,ஆம் தேதி .{அதாவது வைகாசி 11,ஆம் தேதி ஆரம்பிக்கப் பட்டு --இன்றுவரை அன்னதானம் நடந்து கொண்டு வருகிறது .    

கொடுங் கோலான ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஆரம்பித்த தருமச்சாலையில் வள்ளல் பெருமான திருக்கரத்தால் மூட்டப்பட்ட நெருப்பு -இன்றும் கனன்று கொண்டு இருக்கிறது,இந்த அடுப்பிலே அன்று பெருமான் ஏற்றிய நெருப்பு --பசி அரக்கனை --வறுமைப் பேயைப் பொசுக்கிட மூட்டிய நெருப்பாகும் .

தினமும் ஆயிரக்கணக்கான பேர்களுக்கு குறையாமல் மூன்று வேலையும் அன்னதானம் நடைப் பெற்றுக் கொண்டு இருக்கிறது.

இறைவனை அடையும் வழி {சாலை }உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்ய வழியை இறைவன் எனக்கு காட்டிய அந்த வழியை பின் பற்றியதால் தான்,இறைவன் அருளைத்தந்து அனைத்து ஆற்றல்களையும் தந்தார் என்பதை வள்ளல் பெருமான் எழுதிய பாடலைப் பார்ப்போம்.

என் பாட்டுக்கு எண்ணாதத எண்ணி இசைத்தேன் என்
தன் பட்டைச் சத்தியமாத் தான் புனைந்தான் --முன்பாட்டுக்
காலையிலே வந்து கருணை அளித்தே தருமச்
சாலையிலே வா என்றான் தான் !

என்று பாமாலை சாற்று கின்றார்--இறைவன் சொல்லியபடி தருமச்சாலையை தோற்று விக்கிறார் வள்ளலார் .அதன் பின் எவ்வாறு பெரும் பயனை இறைவன் தந்தார் என்பதை விளக்கும் பாடல் !

''அருள் விளக்க மாலை!''என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ள பாடல் ;--

காலையிலே என்தனக்கே கிடைத்த பெரும் பொருளே 
களிப்பே ஏன் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே 
மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால் 
மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எல்லாம் தருமச்
சாலையிலே ஒருபகலிற் தந்த தனிப்பதியே 
சமரச சன்மார்க்கத் தலையமர்ந்த நிதியே 
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்து ஆடும் 
மாநடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே !

என்று-- தனக்கு இறைவன் தந்த அருள் ஆற்றலை மேலே கண்ட பாடல் மூலம் தெரியப் படுத்துகிறார்.

வள்ளலார் கொள்கைகளை ஏற்றுக் கொண்ட கருணை மிகுந்த சன்மார்க்க அன்பர்கள் தருமச்சாலைக்கு வேண்டிய அனைத்து பொருள்களையும் அதாவது ,அரிசி,பருப்பு காய்கறிகள் .விறகு மற்றும் பணம் போன்ற அனைத்தும் விலைக் கொடுத்து வாங்காமல்,வாரி வழங்கிக் கொண்டு உள்ளார்கள்.

 தொடரும் ;--திங்கள், 20 பிப்ரவரி, 2012

நான் அறிந்த வள்ளலார்1பாகம்.1,

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

காட்சி ;;1,

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !

கதிரவனின் பொன் ஒளிப்பட்டு வடலூரில் எழுந்தருளி இருக்கும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கொலுவிருக்கும் ''ஞான சிங்காதன பீடம்'' ''சத்திய ஞானசபை'' அழகையே ஆடையாக அணிந்து ஜொலித்துக் கொண்டு இருக்கிறது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையும்,பசித்தவர்களுக்கு அன்னம் அளிக்கும் அட்சயப் பாத்திரம் போல் மங்கள கரமாகத் தோற்றம் அளிக்கிறது.

''சத்திய ஞான சபை வடலூர் ''என்ற அழகிய எழுத்துக்களைத் தாங்கி நிற்கும் அலங்கார வளைவில் இருந்து என்னுடைய அகக் கண்ணின் காட்சி ஆரம்பமாகிறது..

தில்லை அம்பலம் என்கிற பூர்வ ஞான சிதம்பரத்தில் --நடராஜப்பெருமான் ஒரு அம்பலத்தில் இருந்து நடனம் ஆடுகின்றார் .

இங்கே உத்தரஞான சிதம்பரம் என்னும் வடலூர் சத்திய ஞான சபையில் அருட்பெரும்ஜோதி என்னும் நடத்தரசர் சிரமம் இன்றி நடனமாட எட்டு அம்பலம் இருக்கிறது.

அதன் விளக்கமே --எண்கோண வடிவம் ! அதனை சுற்றிலும் ,எங்கிருந்து நோக்கினும் அருட்பெரும்ஜோதி தரிசனம் தெரிந்திட எட்டு அம்பலம் எழிலுற இலங்குகிறது.ஞானசபையை சுற்றிலும் பறந்து விரிந்து இருக்கும் அருட் பெருவெளியின் அழகிய தோற்றம்.

தைப்பூசத் தினத்தில் லட்சக் கணக்கான மக்கள் எட்டு அம்பலத்தின் வழியாக அருட்பெரும்ஜோதியின்,ஞான சிங்காதன பீடத்தை கண்டு களிக்கும் அற்புதக் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.அங்கே ஒலிக்கும் மகா மந்திரம்

''அருட்பெரும்ஜோதி அருட்பெரும்ஜோதி!தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி ! ''

என்பதாகும்..

காட்சி ;--2,

வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை !

பசித்தவர்களுக்கு உணவு அளிப்பதுதான் உண்மையான கடவுள் வழிபாடு,என்னும் உயரிய நெறியை நடைமுறைப் படுத்த ஏற்படுத்தப் பட்டது தான் சத்திய தருமச்சாலையாகும்.இங்கே சாதி,சமயம்,மதம்,இனம்,மொழி ,நாடு போன்ற எந்த வேறுபாடும் இல்லாமல் உணவு வழங்கப்படுகிறது..

தருமச்சாலையின் மையப்பகுதியின் நடுவே -திருஅருட் பிரகாச வள்ளலார் ஒளி வெள்ளத்தின் நடுவே திரு உருவாய் கொலு மொம்மைப் போல் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது.

வழிபாடும் நடக்கிறது !
பாராயணம் பரவசமாய் ஒலிக்கிறது. !

அடுத்து தானிய உண்டியல்கள் ;--அதன் அருகே ஜீவகாருணயம் குறித்து வள்ளல பெருமான் குறிப்பிட்ட பொன் மொழிகள் தாங்கிய விளம்பர அட்டைகள் சுவரில் மாட்டப்பட்டு இருக்கிறது.

சாலையில் அன்னதானம் தடைபடாமல் நடக்க ,பொருட்களாகவும் --பணமாகவும் ,வாரி வழங்கிய வழங்கிக் கொண்டு உள்ள தயவு, இரக்கம் உள்ள வள்ளல் பெருமக்களின் பெயர்களின் பட்டியல் தெரிகிறது.

அடுத்து தருமச்சாலைக்குள் வள்ளல பெருமான் தன்னுடைய திருக்கரத்தால் நெருப்பு மூட்டிய பெரிய அடுப்பு ,அதிலிருந்து வரும் நெருப்பின் அனலால சமையல் வேலைகள் நடந்து கொண்டு உள்ளது ..பசியால் பற்றி எரியும் ஏழைகளின் பசிக் கொடுமையை,பசி அரக்கனை, வயிற்றுப் பசியை,போக்க வள்ளல் பெருமான் ஏற்றி வைத்த நெருப்புக் கனல் ஆற்றிக் கொண்டு இருக்கிறது.

அங்கே பசித்த ஜீவர்கள் அனைவரும் வரிசையில் அமர்ந்து உண்கின்ற காட்சி நெஞ்சை நெகிழவைக்கிறது.

அடுத்து,தருமச்சாலையில் உள்ள வள்ளலார் திரு உருவப்படம் இடத்தில் --அவருக்கு இடது புறத்தில் திரு விளக்கு காட்டப்படுகிறது.

வள்ளல்பெருமான் தன் திருக்கரத்தால் 1867,ஆம் ஆண்டு ஏற்றிய தீபச்சுடராகும்.

வள்ளல பெருமான் திரு உருவப்படத்திற்கு வலதுபுறம் ஒரு கண்ணாடிப் பேழை உள்ளது . அதில் வள்ளல்பெருமான் ஒரே இரவில் தம் திருக்கரத்தால் எழுதிய,''அருட்பெரும்ஜோதி அகவல்'' 1596,வரிகளைக் கொண்ட கைப்பிரதி {மூலம}வைக்கப்பட்டுள்ளது .

ஞானசபையை சுற்றிலும் உள்ள சூழ்நிலைகள் ;--
மக்கள் வாழ்க்கை --
பல சன்மார்க்கிகள் கட்டிய மடங்கள் அதில் நடைபெறும் அன்னதானங்கள் -
ஞானசபை ,தருமச்சாலை ,வடலூர் சிறப்புகள் குறித்து விளக்கம் .கீழே தரப்படுகிறது..---

தொடரும் ;--
ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

பிஞ்சு மனதில் நஞ்சு விதைப்பது நல்லதல்ல !

  திருஅருட் பிரகாச வள்ளலார்  

            

பிஞ்சு மனதில் நஞ்சு விதைப்பது நல்லதல்ல !

துள்ளி விளையாடும் பள்ளிக் குழைந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு விளை விப்பிபது நல்லதல்ல !

எதிர்கால ஆற்றலின் வடிவங்களான அவர்களுக்கு சாதி சமயம் மதங்களைத் தாண்டி,மனித நேயத்தையும் .ஆனமநேயத்தையும்,கற்றுத் தருவதே கல்விக் கூடங்களின்,கடமையாகவும் பணியாகவும் இருக்க வேண்டும்.

பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கலவி கற்கப்படுகிறது. பொருளையும் தாண்டி பொது அறிவைக் கற்றுக் கொள்ளவேண்டும் .அன்பு கருணை பொது நோக்கம் மிகவும் முக்கியமாகும்

குழைந்தைகளின் மனதில் கருணை என்னும் விதையை விதைத்து,அன்பு என்னும் தண்ணீரைப் பாய்ச்சி,பாது காப்பு என்னும் வேலியை அமைத்து பசுஞ் சோலைகளாக வளரச செய்து ,,அதில் இருந்து கிடைக்கும் மகரந்த சேர்க்கையை ஒருங்கிணைந்து எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் வழங்குவதை செய்விப்பதே நமது கடமையாகும்.

குழந்தை பிறந்ததும் அம்மைக் குத்துவதற்கு முன்பே சாதி,சமயம்,மதம் என்னும் முத்திரையை குத்துவது மனிதநேயம் ஆகாது.கடவுளைக் காப்பாற்றுவது நமது கடமை அல்ல .நம்மைக் காப்பாற்றுவதே கடவுளின் கடமையாகும் பொறுப்பாகும் .நாம் இப்படி பல பேதப்பட்டு வாழ்ந்தால் கடவுள் எப்படி நம்மைக் காப்பாற்றுவார் என்பதை சிந்திக்க வேண்டும்.

குழைந்தைகள் பள்ளிக்கு வரும்போது தூயமையான வெண்மை காகிதமாய துளிர்ந்து வருகிறார்கள் .எதுவும் எழுதப்படாத அவர்கள் உள்ளத்தில் கருணையையும் ,அன்பையும் ,தயவுயையும் கனிவையும் ,கவிதையாய் எழுதிக் காட்டுவதே நம்முடைய பங்களிப்பாக இருக்க வேண்டும்.

அதில் சாதி,சமயம்,மதம் என்னும் வேறுபாடுகளை எழுதி விதைத்து காகித்தை கசக்கவோ அந்த கவிதைகளை நசுக்கவோ நமக்கு உரிமை இல்லை.ஆதலால் விதைக்கும் முன்னே நல்ல விதைகளை விதைக்க வேண்டுயது பெற்றோர்கள் கடமையும் ஆசிரியர்கள் கடமையும்.ஆரசாங்கத்தின் கடமையும் முக்கிய பங்காக இருக்க வேண்டும்.

மாணவர்களோ எல்லோரையும் நேசிப்பதற்கு ஆசைப் படுகிறார்கள்.சில நிறுவனங்கள்,பாட புத்தகங்களை வேதப் புத்தகங்களாக்கி,பூந்தளிர்களை புத்தகப் புழுக்களாக்கி புழுங்க செய்கின்றன.ஒரு சில அமைப்புகள் தங்கள் நம்பிக்கையை அவர்கள் மூலையில் ஆணியை போல் அறைகின்றன.

தேனீக்கள் மலர்களில் மகரந்தத்தை சேமிப்பது போல மென்மையாக அவர்கள் உள்ளத்தில் அன்பு, தயவு,கருணை போன்ற மாற்றத்தை,வாழ்க்கை குறித்த நுடபத்தை ஆன்மநேயத்தை ,மனித நேயத்தை,பதிய வைப்பதே கல்வி அமைப்புகளின் நோக்கமாக இருக்க வேண்டும் .இதனைக் கடைபிடிக்கும் அமைப்புகள் எத்தனை உள்ளது எனபதை நாம் சிந்திக்க தவறி விட்டோம் விரல் விட்டு என்னும் அளவிற்கு அருகிய அமைப்புகளே.

நம்பிக்கை ,விசுவாசம் ,என்பவை எல்லாம் அந்தரங்கத்தை சார்ந்தவையாகும்,மார்க்கங்கள் எல்லாம் ஒரே உண்மையை நோக்கி செல்லும் என்பதை புரிந்து கொண்டவர்கள் ,வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்கள்.அவர்கள் ஓம் ,ஆமீன் ,ஆமென்,ஆதி சக்தி,ஆகியவை ஒன்று என்று உரக்க சொல்கிறார்கள்.

அவர்கள் தெய்வங்களின் பெயர்களை தாண்டி ஆதியில் உள்ள மூலத்தை தனக்குள் தேடுபவர்ளாகும்.அவர்களுக்கு அபிஷேகம், ஆராதனை,பிரார்த்தனை,வேண்டுதல் வேண்டாமை எதுவும் இருக்காது.இந்த நிலையில் உள்ளவர்கள் யாரோ அவர்கள் முற்றும் துறந்த ஞானிகளாகும்.அவர்கள் சொல்லுவதில் ஞாயம் இருக்கிறது.

வழிபாடு என்பது வாழ்வின் ஒவ்வொரு செயளிலுமே ஐக்கியமாகி அழகுபடுத்தும்,உன்னத நெறி ,அதை எந்த மத மைய்யங்களுக்கு உள்ளும் போகவோ குறுக்கவோ அடிக்கவோ பதுக்கவோ வேண்டுயதில்லை அது அவரவர்கள் விருப்பமாகும்.

ஆனால் கல்விக் கூடங்களில் குழைந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்க கூடாது. பள்ளி அமைப்புகள் எந்த மதத்தை சார்ந்து இருக்கிறதோ அந்த அமைப்புகள் மறைமுகமாக தங்கள் மதக கொள்கைகளை படிப்பில் புகுத்துகிறார்கள்.இவை குழைந்தைகளின் எதிர் காலத்தை பாதிக்கும் செயலாகும்.

பேரண்டமே பெருங் கோயிலாகும்.காலையில் இருந்து இரவு உறங்கும் வரை செய்கிற ஒவ்வொரு செயலும் பணியும் ,பிரார்த்தனையாகும்.இறை வழிபாடாகும். பக்குவத்தை ஒழுக்கத்தை,நேர்மையை அன்பை ,தயவை,கருணையை,குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டும்.குழந்தைகள் உள்ளம்,மனம் .அறிவு ,கடல் பஞ்சு போன்றது. எதையும் உடனே உறிஞ்சிக் கொள்ளும் தன்மை யுடையது. அதற்கு பிறகு ஆசிரியர் இல்லா விட்டாலும் வகுப்பில் அமைதி இருக்கும்.பெற்றோர் இல்லா விட்டாலும் வீட்டில் கற்றுக் கொல்வது கட்டாயம் நிகழும்.

அடுத்தவர் திணிக்கும் எந்த தீய செயல்களையும் எடுத்துக் கொள்ளாது.எந்த தேவையற்ற கட்டுப்பாட்டுக்கும் தலை வணங்காது. தனக்குள் இருக்கும் தூய்மையை வளர்த்துக் கொண்டே இருக்கும்,அக் குழைந்தைகள் ..பக்கத்து வீட்டுக் காரர்கள் எதிரியாக இருந்தாலும் நேசிக்க தொடங்கும்.ஆதலால் குழைந்தைகள் நல்லவன் ஆவதும் கெடடவன் ஆவதும் .பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் அரசாங்கம் ,இவை மூன்றும் முக்கிய பங்காகும்.

சாதி.சமயம்,மதங்களை போதித்து அதனால் வரும் சண்டை ,கொலை .விரிசல்களை உண்டாக்குவது அல்ல கல்வி.

அவை ஒவ்வொரு மனித மனங்களையும் இணைக்கும் மாபெரும் பாலமாகும்.கற்க கற்க நம் குறிகிய மனம் அகலமாக விரியும் வானத்தில் பறக்கும் அழகிய பறவையின் ஒரு சிறகு உதிர்ந்தாலும் அத்தக கண்டு வருத்தப்படும் எந்த உயிர்களையும் தன் உயிர்போல் பாவிக்கும் மனப்பக்குவம் வந்துவிடும்.மனிதநேயத்தைக் கடந்து ஆன்மநேயத்தை கடைபிடிக்கும் கருணை உள்ளம் இயற்கையாக தோன்றிவிடும்.

அப்படிப்பட்ட அன்பு வட்டம் தோன்றி விட்டால் ,கொலை கொள்ளை ,கற்பழிப்பு,கலவரங்கள் இல்லை உலகம் எங்கும் அமுத பூங்காறறு வீசும் எதிர்காலம் வசந்த காலமாக மலரும் .
.          
குழைந்தைகள் வருங்கால அறிவுள்ள சிற்பிகள் அந்த அறிவை செம்மைப் படுத்துவது பெற்றோர்கள் ,கல்விக் கூடங்கள்,ஆசிரியர்கள் .அரசாங்கம்.ஆகியோர்களின் கடமையாகும்.எதிர்காலம் மகிழ்ச்சியுடன்  பொலிவுபெற வாழ்த்துகிறேன்.  
 .    
அன்புடன்.ஆனமநேயன் ,கதிர்வேலு.ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

சமரச சுத்த சன்மார்க்க சத்திய யுகம் ஆரம்பம் !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய யுகம் ஆரம்பம் !
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !நாம் வாழும் இந்த உலகம் நான்கு யுகங்களை கொண்டது !

சத்திய யுகம் !-----17,28,000.--வருடங்கள்
திரேதாயுகம் !----- 12,96,000--வருடங்கள்.
துவாபரயுகம் !-----8,64,000---வருடங்கள்.
கலியுகம் !----------4,32,ooo---வருடங்கள் .

என்பதாகும் .இவை அணு பஷ காலம் ,சம்புபஷ காலம் என்பதாகும் .இந்த காலங்கள் நான்கு சுழற்ச்சியைக் கொண்டது இந்த காலங்களில் மனிதர்களும் உலக உயிர்களும் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் கொண்டதாகும் .

இப்பொழுது கலியுகம் நடந்து கொண்டு இருப்பதாக உலக வரலாறுகள் கூறுகின்றன .கலியுகம் முடிய 5000.ஐந்து ஆயிரம் ஆண்டுகள் இருக்கின்றன அப்படி அந்த கலியுகம் நீடித்தால் உலக உயிர்கள் யாவும் அழிந்துவிடும் .

உலக உயிர்களை காப்பாற்ற ,உலகைப் படைத்த அருட்பெரும்ஜோதி ஆண்டவர் திருஅருட்பிரகாச வள்ளலார் என்னும் உண்மை அருளாலரை இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கிறார் .

உண்மைப் பத்திரிகை !

1871,ஆம் ஆண்டு பிரஜோத்பதி வருடம் ,சித்திரை மாதம் ஒன்றாம் தேதி வள்ளலார் கொடுத்த உண்மை பத்திரிகை என்னும் வாக்குமூலம்.

சமரச சுத்த சத்திய சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும் .இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு ,அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும் .அதன் மேன் மேலும் வழங்கும்.

இதுவரையில் உள்ள பலவகைப்பட்ட சமய மதங்களும் ,சாத்திர பேதங்களும் ,ஜாதி பேதங்களும்,ஆசார பேதங்களும்,போய்,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும் .அது கடவுள் சம்மதம்,இது --29,வருஷத்திற்கு மேல் {இவை கலியுகம் -5000--க்கு மேல் }

இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய மத சாத்திர புராணங்களில் வந்ததாகச சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள் ,கடவுள்,தேவர்,அடியார்,யோகி,ஞானி,முதலானவர்களில் ஒருவர் அல்ல ,

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும்,எல்லாக் கடவுளரும் எல்லாத் தலைவர்களும் ,எல்லா யோகிகளும்,எல்லா ஞானிகளும், தாங்கள்,தங்கள் அனுபவங்களைக் குறித்து அவர்கள் எதிர் பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற கடவுளும் அதே அருட்பெரும்ஜோதி  தனித் தலைமைப் பெரும்பதியாகும்.அதுவே அருட்பெரும் ஜோதியாகும்.
.
இது உண்மை உண்மையாயின் அந்தப் பதியின் முழுமையான அருளை நான் பெற்றேன் !பெறுவேன் !! பெறுகின்றேன் !!! என்னை அடுத்தவர்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை .பெறுவீர்கள் !பெருகின்றீர்கள் !பெற்றீர்கள் !!அஞ்சவேண்டாம்

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம் .

மேலே கண்ட வாசகத்தை 1874,ஆம் ஆண்டு ,சித்திரை மாதம் ஒன்றாம் தேதி சித்திவளாக திருமாளிகையில் வெளியிடுகிறார் .

இதில் இருந்து நாம் அறிந்து கொள்வது யாதெனில் கலியுகம் தொடங்கி 5000,ஆண்டுகள் தொடரும் தருவாயில் கலியுகத்தை தொடர விடாமல் தடை செய்து உள்ளார் வள்ளலார் இது கடவுள் சம்மதம் என்கிறார்

ஏன் அப்படி செய்துள்ளார் என்றால் கலியுகம் முடியும் வரை நீட்டித்தால் உலக உயிர்கள் அழிந்து விடும் .,உலக உயிர்களைக் காப்பாற்ற ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கத்தை ''ஆரம்பித்து உள்ளார் .

உண்மைக கடவுளான ''அருட்பெரும்ஜோதி என்னும் ஒளியை இந்த உலகத்திற்கு அறிமுகப் படுத்தி உள்ளார் .இன்று நடந்து கொண்டு இருப்பது! இனி வருவது ,!எக்காலத்தும் நிலைத்து நிற்பது! வள்ளலார் காட்டிய ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும் .இதற்கு எவ்வகைப்பட்ட தடைகளும் கிடையாது .இது சாத்தியமாகும் .

1874,ஆம் ஆண்டு, ஸ்ரீமுக வருடம் ,தை மாதம்,19,நாள் வெள்ளிக்கிழமையில்  இருந்து உலக மாற்றம் உருவாக்கப் பட்டுள்ளது.இதை உலக மக்கள் அனைவரும் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ளவேண்டும்.

உங்கள் ஆன்மநேயன் கதிர்வேலு.

வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

உலகின் உண்மைக கடவுள் யார் ?

உலகின் உண்மைக கடவுள் யார் ?

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை !


உலகில் உள்ள மக்கள் அனைவரும் பொய்யான கடவுளை வணங்கி அழிந்து கொண்டு இருக்கிறார்கள். உண்மைக கடவுளை கண்டவர்கள் யாரும் இல்லை உலகுக்கு காட்டியவர்கள் யாரும் இல்லை .கண்டவர்கள் விண்டதில்லை ,விண்டவர்கள் கண்டதில்லை என்று பொய்யான கருத்துக்களை சொல்லி ஏமாற்றிக் கொண்டு உள்ளார்கள் மக்களையும் ஏமாற்றி விட்டார்கள்

அதனால் அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் கடவுளை கண்ணால் காணமுடியும் கண்டேன் களித்தேன் கண்டு கொண்டேன் என்கிறார். அருள் முழுமை பெற்றால்தான் கடவுளை காண முடியும் என்கிறார்.

மனிதன் இயற்கை சட்டத்தை ஏற்று ஒழுக்கமுடன் வாழ்ந்தால் அருள் என்னும் அமுதம் நம் ஆன்மாவில் இருந்து சுரக்கும்,அந்த அமுதம் தடை இல்லாமல் முழுமையாக ஊற்று எடுத்து உடம்பு முழுவதும் பரவி ,ஊன உடம்பு ஒளி உடம்பாக மாறும் போதுதான் உண்மைக கடவுளைக் கண்ணால் காணமுடியும் அப்படிக் கண்டவர்தான் வள்ளலார் அவர்கள்

.உண்மையான கடவுளைக் கண்ணால் கண்டதால் தான் ''அருட்பெரும்ஜோதி !அருட்பெரும்ஜோதி !தனிப்பெரும் கருணை !அருட்பெரும்ஜோதி !என்று பெயர் வைத்தார்கள் அந்தக் கடவுள் தான் அருட்பெரும் ஜோதியாக உள்ளார் தனிப பெரும் கருணையுடன் உலகத்தை இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை உலக மக்களுக்கு தெளிவுப் படுத்தி உள்ளார்

அதை வெளிப்படுத்த தமிழ் நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில் வடலூர் என்னும் ஊரில் அருட்பெரும் ஜோதிக்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை'' அமைத்து உள்ளார் .எல்லா உலகுக்கும் பொதுவான உண்மைக கடவுளான அருட்பெரும் ஜோதி உருவத்தைக் காண்பிக்க ஜோதி என்னும் அணையா விளக்கை வைத்துள்ளார் அதுவும் உண்மைக கடவுள் அல்ல கடவுளின் தோற்றம் எப்படி உள்ளது என்பதைக் காட்டும் ஒரு மாதிரிதான் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் ..

உண்மைக கடவுள் என்பது எல்லா உயிர்களிலும் உள்ள ஆன்ம ஒளியே கடவுளின் ஏக தேசமாகும் அதனால்தான்

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே !

உயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக
செயிரெலாம் விடுக எனச செப்பிய சிவமே !

கொல்லா நெறியே குருவருள் நெறி யெனப்
பல்கால் எனக்குப் பகர்ந்த மெய்ச சிவமே !

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எலாம
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

என்று தெளிவுப் படுத்தி உள்ளார் அதனால்தான் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார் வள்ளலார் அவர்கள். உலக மக்கள் அனைவரும் உண்மைக் கடவுளை உணர்ந்து உண்மையுடன் வாழ்வோம் .

அன்புடன் உங்கள் ஆன்மநேயன் கதிர்வேலு .