வியாழன், 28 ஆகஸ்ட், 2014

விநாயகர் என்பது என்ன ?

விநாயகர் என்பது என்ன ?

நமது இருதயத்தின்  ஸ்தானத்தில் இரண்டரை அங்குலத்தில் மலர்ந்த வாழைப் பூ போல் ஒரு பை உண்டு .அது வெண்மையாய் இருக்கும்.இதைக் கைலாயம் என்று சொல்லப் படுகின்றது.அந்தப் பைக்கு அருகில் கோடி பங்கில் ஒரு பங்காக வெகு நேர்மையாய் அக்கினி மயமாய் ஒரு ஆவி இருக்கும் அதற்கு காரணாக்கினி என்று பெயர் இப்பையின் அருகில் இடது புறத்தில் மலர்ந்த தாமரைப் பூப்போல் ஒரு பை உண்டு அந்த பை பசுமை வண்ணமாய் இருக்கும்.

அதற்கும் முன் சொன்ன வெண்மைப் பைக்கும் ஒரு நாடி உண்டு அதன் மூலமாய்க் கார்ணாக்கினி அதிகப் படுத்தாமலும் குரை படுத்தாமலும் சமம்படுத்தி வைக்கும்.இந்த மலர்ந்த பைக்கும் கீழ் இருக்கும் ஷீராப்திப் பைக்கும் ஒரு நாடி உண்டு.அதன் மூலமாய் அதற்கு உஷ்ணம் கொடுத்து நிலையில் வைக்கும்.இதனால் ருத்திரன் இடத்தில் விஷ்ணு பிறந்ததாய் சொப்பப்டுகின்றது.

இந்த நாடி மூலமாய் விஷ்ணு இடமாகிய ஜலத்திலும் ,பிரமன் இடமாகிய இந்திரியத்தாலும் உள்ள குற்றங்களைக் கண்டிப்பதால் ருத்திரனை சம்கார கர்த்தா என்று சொல்லப் படுகின்றது.

இந்த அக்கினிப் பையில் ,குண்டலினி வட்ட நரம்பு ஒன்று உண்டு .அதில் மூன்றாகப் பிரியும் கிளை உண்டு.அது மூலம்  முதல் பிரமந்திரம் வரையில் இடம் ,வலம், நடு, என்று கத்திரி மாறலாய்ப் பிராணனுக்கு இடங் கொடுத்துக் ஊடுருவி  நிற்கும். இந்த நரம்புகளுக்கு சோம சூரிய அக்கினி என்று பெயர்.

விநாயகர் .

இதன்றி இக் குண்டலி வட்ட நரம்பின் அடியில் நின்று இரண்டு நரம்புகள்...வலது புறத்தில்  அஞ்சு கவருடைய தலையையும் ....இடது புறத்தில் ஆறு தலை உடைய கவராயும் நிற்கின்றன

வலத்தில் உள்ளது கணபதி என்று சொல்லப் படுகின்றது .இடத்தில் உள்ளது சுப்பரமணியர் என்று சொல்லப் படுகின்றது.வலத்தில் உள்ள கணபதி
(விநாயர் ) என்னும் நாடி இடைவிடாமல் அசைந்து கொண்டே இருக்கும்.இடைவிடாது அசைந்து கொண்டு உள்ளதால் அதற்கு யானை துதிக் கை போன்று வைத்துள்ளார்கள் .இந்த நரம்பு இடைவிடாது அசைந்து கொண்டு உள்ளதால் நாம் உண்ணும் உணவை அரைத்து திரவமாக்கிக் வெளியே ஒரு பாகம் சக்கையாகவும்,(மலம் )ஒருபாகம்,திரவமாகவும் தள்ளி விடுகின்றது .
இருந்த இடத்தில் இருந்தே அந்த நாடி வேலை செய்வதால் அதற்கு பிள்ளையார் என்றும் .விநாயகர் என்றும்,ஆணை முகத்தான் என்றும் சொல்லப் படுகின்றது.

வெளியே வரும் அந்த திரவத்தை இடது புறம் உள்ள நாடியின் வழியாக உடம்பில் உள்ள அனைத்து நாடிகளுக்கும் பிரித்து அனுப்பப் படுகின்றது .ஆறு ஆதாரங்கள் வழியாக உடல் முழுவதுக்கும் அனுப்புவதால் அதற்கு ஆறு முகம் என்றும் .சுப்பரமணியர்  என்றும் சொல்லப் படுகின்றது.

அந்த இரு நாடிகளும் ஒன்றை ஒன்று பிரியாமல் செயல்படுவதால் சகோதரர்கள் என்று சொல்லப் படுகின்றது.அதாவது ஆண்ணன் தம்பி என்று வைத்துள்ளார்கள்.

இந்த இரண்டு நாடி களும் இல்லை என்றால் நம்முடைய உடம்பிற்கு சக்தி என்னும் திரவம் செல்லாது.அந்த இரண்டு நாட்களின் செயல்களால் எழுபத்தி இரண்டாயிரம் (72000) நாடிகளும் இடைவிடாமல் செயல் படுகின்றன.

சிவன், பார்வதி கையில் உள்ள ஞானப் பழத்தை யார் முதலில் உலகத்தை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்கு தருவதாக சொல்லப்படும் கதையில் ,விநாயகர் தாய் தந்தையரை சுற்றி வந்து பெற்றுக் கொள்கிறார் என்பது .ஆன்மாவில் இருந்து வரும் பிராணவாயுவு என்னும் உஷ்ண சக்தியை விநாயகர் என்னும் நாடி அருகில் உள்ளதால் ஆன்மாவை சுற்றி வந்து பெற்றுக் கொள்கிறார் என்பதாகும்.

சுப்பரமணி என்னும் நாடி நேராக ஆன்மாவை தொடர்பு கொள்ள முடியாது எல்லா நரம்புகள் வழியாக சென்றுதான் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும் ஆதலால் மாயை என்னும் மயில் மீது ஏறி சென்று ஆன்மாவைப் தொடர்பு கொள்ளுவதால்.முருகன் நேரம் கழித்து வந்தார் என்றும் .விநாயகர் அம்மை அப்பனை சுற்றி ஞானப் பழத்தைப் பெற்றுக் கொண்டார் என்றும் சொல்லப்படுகின்றது.

இந்த உடம்பின் தத்துவத்தை மக்களுக்கு புரிய வைக்காமல் மறைத்து வைத்து விட்டார்கள் .மக்கள் உண்மையாகவே விநாயர் ஒருவர் உள்ளார் என்றும்.முருகன் என்பவர் ஒருவர் உள்ளார் என்றும் நம்ப வைத்து விட்டார்கள்

இன்னும் உடம்பின் தத்துவத்தின் உண்மையை வெளிப்படையாக வள்ளல்பெருமான் தெளிவுப் படுத்தி விட்டார் .அதனால்தான் வள்ளல்பெருமான் பெருபதேசத்தில் இதை மறைத்தவன் ஓர் வல்லவன் அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை. உடைக்கவும் வரவில்லை என்கிறார்.அவன்தான் மறைத்து வைத்து விட்டான்

அவர்களுக்கு பின்னாடி வந்த பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்ட ஆன்மீக பெரியவர்களும் கண்ணை மூடிக் கொண்டு ஒன்று கிடக்க ஒன்றை உளறி வைத்து விட்டார்கள் என்று வேதனைப் படுகின்றார் .

இந்த உண்மைகள் எல்லாம் மக்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகின்றார்களோ தெரியவில்லை.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும். .

நாளைக்கு ஆயிரக்கணக்கான மண்ணால் ஆன விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்து ஆற்றிலும் கடலிலும் கொண்டுபோய் விடுவார்கள் .இதனால் மக்கள் என்ன லாபத்தை அடைகிறார்கள் என்பது தெரியவில்லை.

வள்ளல்பெருமான் கொள்கைகளை பின்பற்றினால் அல்லது உண்மையை இந்த உலகம் தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .  

சுத்த சன்மார்க்கம் !


சுத்த சன்மார்க்கம் !பழமையான நெறிகள் பலவாகக் குறிக்கப்பட்டன. அது, புறநிலை நின்று காணப்பட்டதால் அப்படி அமைந்தன. அம்மார்க்கம் முற்றும் யோக நெறிகள் பாற்படும். யோகம் என்றாலே சேருதல், கூடுதல் என்றே பொருளாம். 

அன்று காணப்பட்ட அந்த யோக நெறி முக்கியமாக நான்கு பிரிவோடு விளங்கினது, அவையாவன ; ஞான யோகம், பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் என்னும் மகாயோகம் ஆம். இவை எந்த ஒன்றாலும் கூடக் கடவுளைக் கலந்து கொள்ளலாம் என்பது ஆன்றோர் கருத்து. இவர்களுடைய முடிவான கடவுட் கலப்புதான் முன்பே “உடலை விட்டு நீங்கி மறைந்து போவதுதான்” என்று அறிந்திருக்கின்றோம். 

அந்த முடிவால் கடவுள் அனுபவ வாழ்வில், அக்கடவுளைப் போன்று நிலைத்திருத்தற்கு வழியில்லாக் குறை அன்று தோன்றவில்லை. ஆனால் இப்பொழுது தோன்றிவிட்டதால், அக்குறை தவிர்க்கும் ஒரு பரிகாரம் காண வேண்டிய அவசியமும் அவசரமும் ஏற்பட்டு விட்டதாம். இதனை நிறைவேற்றுவதற்கு என்றே நம் அடிகளார் (திரு அருட்பிரகாச வள்ளலார்) தோற்றுவிக்கப்பட்டார்.

அனக சுத்த சிவநெறி. 

அவர் புற நெறிகளை எல்லாம் மறுத்து, அகத்திலிருந்து உதிக்கும் அனக நெறியைக் கண்டுபிடித்து வெளிப்படுத்தினார். அந்த அனக நெறியும், சைவ தெய்வக் கற்பனையின் மீது அமைக்கப்பட நேர்ந்ததால் சுத்த சிவ நெறியாகப் போற்றிக் கொள்ளப்பட்டது. 

“சுத்த சிவம் என்பது உண்மையில் உள்வளர் அருட்பெருஞ்ஜோதியே ஆம்”. மற்றபடி சகள, நிஷ்கள (உருவ, அருவ) தோற்றங்களையோ, சகுண, நிர்க்குண தத்துவங்களையோ கொண்ட சிவசம்பந்தங் குறிக்கும் நெறி அல்ல, இந்தச் சுத்த சிவ சன்மார்க்கம் என்பது. 

சச்சிதானந்த பரம்பொருளின் எல்லாம் வல்ல அருள் அல்லது தயவுதான் அந்த மெய்ப்பை உடன் கொண்டு வாழும் உத்தம நெறியாய்க் கற்பிக்கின்றார். இதனை, 

“ஒன்றே சிவமதை யொன்றுஞ்சன் மார்க்கமும் ஒன்றே யென்றீரிங்கு வாரீர் நன்றே நின்றீரிங்கு வாரீர்” 

என்ற பாவால் குறிப்பிடுகின்றார். அருட்பெருஞ்ஜோதிபதியை ஒன்றுவதற்கு அவர்தம் அருளே வழியாகும். 

“அன்பறிவோ டின்பாம் அவனை அடைதற்கு வன்பற்ற அன்பே வழி” 

என்ற தயவுக் குறளாலும், அன்புருவக் கடவுளை அடைவதற்கு அன்பே மார்க்கம் எனத் தெளிவுறலாகின்றதாம். 

வேறு வேறாகிய புற நெறிகள் எல்லாம் மனிதனை மறைத்து விடுகின்றன. அருளொடு உண்ணின்று உதிக்கும் இந்த அருள் அனக நெறி ஒன்றே மனிதனை அவ்வருள் வடிவாக மாற்றி அழிவின்றி வாழச் செய்வதாம். இம்மாதிரியான இன்ப வாழ்வு முந்தின உலக நெறிகளுக்கு அதீதமானது. 

எல்லாம் ஒரு வழி ? 

எம்மதமும் சம்மதம் என்று சொல்லிக் கொண்டும், எதிற் சென்றாலும் இறுதியில் அடையும் முடிவு ஒன்றே என்றும் கூறுகின்ற சமரச ஞானிகள் அடைகின்ற முடிவு யாவரும் அறிந்ததே ! அம்முடிவு சூனியமான ஏமாற்றமே ஆகும். இவர்கள் ஒன்றான உண்மைக் கடவுளை அறிந்தவர்கள் அல்லர். பலவான பேதத் தோற்றமும், குண சக்திச் செயல்களும் கொண்ட கற்பனா தெய்வங்களையே, தெய்வச் சின்னங்களையே கருத்திற் கொண்டு வழிபட்டு அடைகின்ற முடிவு நிலைகள் எல்லாம் இறப்பைத் தவிர வேறு எந்த ஒன்றாக இருக்க முடியும் ! 

மேலும் இவர்கள் வழிபடும் பலவாகிய நாம ரூபங்களைக் கொண்ட தெய்வங்களும் ஒன்றையே குறிக்கும் என்று மட்டும் சொல்லிவிட்டால் போதுமா ? அஃது எங்ஙனம் பொருந்தும் ? அவர்களில் எல்லா விதமான வந்தனை வழிபாடுகளையும் ஏற்றுப் பலன் அளிக்கின்ற ஒன்றான கடவுளை அவர்கள் எங்கே அறிகின்றார்கள் ? 

உண்மைச் சத்விசாரமாகிய கண்ணைத் திறந்து அருள் ஒளியில் இருந்து கண்டால்தான் அந்த ஒன்றான கடவுளைக் காண்பார்கள். முதலில், கண்டு புறநிலை வழிபாட்டால் ஓரளவு பயனடைந்து, மேல் முழுப் பயன்பெற்று வாழவேண்டி, அந்தக் கடவுள் நிலையிற் பொருந்தி, அருள் வாழ்வு மேற்கொண்டு வாழ வேண்டியவர்களாகின்றார்கள். 

ஆகையால் எல்லோருக்கும் உரிமையான ஒன்றான அருட்ஜோதி ஆண்டவரை அறிந்து, அகத்திற் கலந்து நின்று அருளாகிய பெருநெறி பற்றி ஒழுகுதலே சிறந்த முறையாகும். இந்த அருட்பெருநெறியே எவர்க்கும் பொருந்தும், சுத்த சன்மார்க்கமாம். செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

பார்வை இல்லாதவர்கள் ஞானம் பெற முடியுமா?


பார்வை இல்லாதவர்கள்  ஞானம் பெற முடியுமா?


நம் உயிரைப்  பற்றி உள்ள வினைதிரைகள் நம் கண்மணி மத்தியில் உள்ள ஊசி முனை அளவு உள்ள துவாரத்தில் துலங்கும் ஒளியை (இறைவன் திருவடி) மறைத்து கொண்டு உள்ளது. இவ்வினைதிரை பார்வை சக்தி உள்ளவர்களுக்கு கண்ணாடி போல் அமைந்து உள்ளதால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிகிறது.

இதில் மிக பெரிய பாவம் குருடராக பிறப்பது. இவர்களுக்கு வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளத்தால் கண் ஒளியை கொண்டு பார்க்க முடிவதில்லை. எதை விட பெரிய துரதிஷ்டம் திருவடியான கண்ணை அல்லது கண் ஒளியை பற்றி தவம் செய்ய முடியாமல் போவதே.
ஆனாலும் இறைவன் கருணை வடிவானவர். குருடர்கள் நேரடியாக தம் ஆன்ம ஸ்தானத்தை நினைத்து , அதில் குரு தீட்சையின் முலம் உணர்வு பெற்று தவம் செய்ய வேண்டும். இவ்வாறு தவம் செய்வது கடினமே என்றாலும் விடா முயற்சியின் மூலமும், வைராக்கியதுடனும் சாதனை செய்தால் வினை திரை அகன்று ஞானம் பெறலாம்.
என பல சற்குருமார்களும் சொல்ல நீங்கள் கேட்டிருக்கலாம். ஆனால் அதில் எந்தளவுக்கு ஞானம் இருக்கிறது என ஆராய்வது அவசியம். அல்லாவிட்டால் துர்மரணம் அடைந்து விடுவது நிச்சயம்.

கண்மணி என்பது பார்வை செயல்படுமிடம் என்பது தெரியும் . காது போன்ற ஏனைய இந்திரியங்கள் எவ்வாறு மனதுக்கு செயல் ஆற்ற உதவுகிறதோ அவ்வண்ணமே கண்ணும் செயல் படுகிறது. ஐந்து இந்திரியங்களின் மூலம் அறிவானது செயல்பட்டு நமக்கு உலக நிகழ்வுகளை அறிவுக்கு கொண்டு வருகிறது.ஒளி என்பதோ ஓசை என்பதோ கண்ணிலோ காதிலோ இருப்பது அல்ல. அது இந்திரியங்களின் மூலம் அறியப்படுவதாகும். தூங்கி கிடக்கும் போது கண்ணில் ஒளி இருக்காது, ஏனெனில் அப்போது அறிவானது கண்களினூடே செயல்படாது.அல்லாது கண்மணியில் தான் உயிர் இருக்கிறது என்பது முட்டாள் தனமான மூட நம்பிக்கை. அதினால் எந்தவொரு பயனும் நிகழ்ந்து விடப்பொவதில்லை என்பதை மனதில் கொள்வது நலம்.

முதலில் கண்மணி மத்தியில் ஊசிமுனை அ்ளவு ஒரு துவாரம் இல்லை என்பதனை தெளிந்து கொள்ளுங்கள்...ஒளி ஊடுரும் தன்மையினாலான ஒரு அமைப்பே உள்ளது...சந்தேகம் இருந்தால் ஒரு கண் மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்கவும்...அந்த அமைப்பானது விரியவும் சுருங்கவும் கூடிய ட்தன்மையில் உள்ளது. கண்ணாடியில் எப்படி ஒளி ஊடுருவுமோ அதே படி இங்கும் ஒளி ஊடுருவும் தன்மை கொண்டது..... திரைகள் என்பவை ஆன்மாவை மூடி இருக்கும் தன்மை உடையது...அது கண்மண் தவத்தினால் கண்ணீர் பெருக்கினால் உருகும் தன்மை கொண்டது இல்லை. சுக்கிலத்தில் இருக்கும் போதே திரையானது இருக்கும்...அது கண்மணியில் வருவது கிடையாது. ஒரு மனிதன் வினை திரை அகலாது செத்து போனால் அவன் கூட இந்த கண்மணியும் கூடவே செல்லாது அல்லவா?..அப்படி இருக்கும் போது அவனுடைய வினைதிரையானது எங்கிருக்கும் என ஆலோசிப்பது நலம்...ஆன்ம ஸ்தானம் என்பது உடம்பை பற்றியதி இல்லை, அதாவது தூல பொருள் இல்லை...உடம்பாலது தூலம்,, மனம் சூட்சுமம், அதையும் கடந்தது ஆன்மா...அது தூலமான உடம்பில் ஒரு இடத்தில் இருப்பது இல்லை...அப்படி இருக்காது , ஏனெனில் சூட்சுமமானது தூலத்தில் அடையாளமாக இருக்காது...தூலம் என்றால் அதற்க்கு நிறை இருக்கும், கொள்ளளவு எனும் இடம் இருக்கும்...அப்படி சொல்லப்படும் ஒன்று பருப்பொருள் எனப்பெடும்...ஆன்மா பருப்பொருள் இல்லை..அதற்க்கு எடை இல்லை,..இடம் இல்லை...அப்படி இருக்க எப்படி அது தூலத்தில் இருக்கும் என சிந்திப்பது நலம்....தேவை இருந்தால் இதற்க்கும் ஆழமாக விவாதிகலாம்....

கண் தானம் பண்னுவது தெரியுமில்லையா...செத்தவர் கண்மணியில் இருக்கும் இந்த ஒளி ஊடுருவும் அமைப்பையே அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்து வேறொருவருக்கு தானம்மாக செய்கிறார்கள்...அப்போது இந்த கண்மணியில் இருக்கும் வினையானது கந்தானம் பெற்றவருக்கு போய் விடுமா என்பதை ஆழமாக விசாரியுங்கள்...அப்போது கண்மணி தவத்தின் பொய் தோற்றம் புலப்பெடும்

மட்டுமல்ல கண்மணி தவத்தினால் எவனொருவனும் கண்மணியினூடே உள்ளே புகுந்து போகமுடியாது. எனெனில் புகுந்து செல்லவேண்டுமெனில் முதலில் அவன் கண்மணியின் வெளியில் இருக்கவேண்டும்.ஆனால் அவன் இருப்பதொ உள் எனப்பெடும் ஆன்மீக ரகசியஸ்தானத்தில் தான். அதையே இருதயம் என்பார்கள். உள்ளெ இருப்பவனாகிய அவன் எப்படி வெளியில் இருந்து கண்மணி வழியே உட்புகுவான்? அப்படி புகவேண்டுமெனில் அவன் ரெண்டு மணி வழியாகவும் ஏக காலத்தில் உட்செல்வானா?.அப்படி செல்லமுடியுமா என்பதை சற்று அறிவுடையவர்கள் அறிந்து கொள்ளவேண்டாமா?

பிழைகள் உள்ளது திருத்த வேண்டும் .

திங்கள், 25 ஆகஸ்ட், 2014

மரணம் இல்லாப் பெருவாழ்வு.!

மரணம் இல்லாப் பெருவாழ்வு.!

வள்ளல்பெருமான் சொல்லிய மரணம் இல்லாமல் பெருவாழ்வு வாழலாம் என்பதை ,வள்ளலார் கொள்கைகளை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்களே சரியாக புரிந்து கொள்ளாமல் உள்ளார்கள்.அவர்கள் எப்படி மக்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியும்.என்பதை நினைக்கும் போது,மிகவும் வேதனையாக உள்ளது.

அவரவர்களுக்குத் தெரிந்த எதோ ஒன்றை சொல்லி மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள்.

உண்மையைத் தெரிந்து கொள்ள ..உபாய மார்க்கம்,உண்மை மார்க்கம் .அனுபவ மார்க்கம் என்று மூன்று வழிமுறைகளை வள்ளல்பெருமான சொல்லி உள்ளார்.

உபாயத்தைக் கொண்டு அறிவது யாதெனில் ,...எதோ ஒன்றை பிடித்துக் கொண்டு கொஞ்சம் அருளைப் பெற்று மேலேறுவது.....

உண்மையை அறிந்து கொண்டு அறிவது யாதெனில் ...அருள் கிடைக்கும் வழியைத் அறிந்து அதை முக்கால் பங்கு அனுபவித்து நீண்ட வருடங்கள் மரணம் இல்லாமல் வாழ்ந்து அனுபவித்து மீண்டும் பிறப்பு எடுப்பவர்கள்.,..

அதை விட அனுபவத்தால் அறிவது யாதெனில்,,தான் முழுமையான அருளைப் பெற்று மரணத்தை வென்று பிறப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.

சித்தர்களை மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளனர் .உபாயத்தைக் கொண்டு சென்றவர்கள் கர்ம சித்தர்கள், உண்மையை அறிந்து கொண்டு சென்றவர்கள் யோக சித்தர்கள்.
கடவுள் நிலையை அறிந்து மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்பவர்கள் ஞான சித்தர்கள்.

அதற்குமேல் கடவுள நிலை அறிந்து அதன் மயமானவர்கள் ,அதாவது கடவுளாக மாறியவர் .உலகத்தில் ஒரே ஒருவர்,அவர்தான் வள்ளல்பெருமான்..

ஆதலால் நாம் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க மெய் நெறிக் கொள்கைகைகளை முழுமையாக கடைபிடித்து.மரணத்தை வென்று ,எல்லாம் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் எவ்வுலகமும் ஏத்திட வாழ்ந்திடலாம். .

அன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வரலாறை படித்து என்ன பயன் ? !

வரலாறை படித்து என்ன பயன் ? !
வரலாறுகளைப் படித்து என்ன செய்யப்போகிறோம். .வரலாறுகள் தான் மக்களை அழித்து கொண்டு உள்ளன ,வரலாறுகள் தான் மக்களை பிரித்து உள்ளன .வரலாறுகள் தான் மக்களை முட்டாள்களாக மாற்றி உள்ளன.வரலாறுகள் தான் கொலை கொள்ளை கற்பழிப்பு ,போன்ற செயல்களுக்கு வழிகாட்டி உள்ளன .
மேலும் உயர்ந்தவன் தாழ்ந்தவன்,ஏழை பணக்காரன் போன்ற கொடூரமான பிரிவை உருவாக்கி உள்ளது.
சாதி,சமயம்,மதம் போன்ற பொய்யான கற்பனைக் கதைகளை காட்டி நாட்டை கெடுத்து நாசமாக்கி வைத்துள்ளது.எந்த வரலாறுகளும் மனிதனை மனிதனாக வாழ வைக்கவில்லை.
மனிதன் உயர்ந்த அறிவு படைத்தவன் .அவனுடைய அறிவுக்கு வேலைக் கொடுக்காமல்.மாற்றான் அறிவை காப்பி அடித்து தன்னுடைய அறிவை மழுங்க வைத்து விடாதீர்கள்
சுய சிந்தனையும் சுய அறிவையும் பயன் படுத்துங்கள் அதில் அளவிடமுடியாத பொக்கிஷங்கள் அடங்கி இருககின்றன
வரலாறுகள் நம்முடைய அறிவை மறைத்து கொண்டு இருக்கும் திரைகள்
திரையை அகற்றி ஆன்ம அறிவை பயன் படுத்துங்கள் .வரலாற்றை மாற்றி விடுவீர்கள் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வரலாறுகள் !

வரலாறுகள் !
சாகும் மனிதன் வாழ்ந்து காட்டிய வரலாறுகள் செத்துக் கொண்டே இருக்கும்.சாகாதகல்வியைக் கற்று அருள் பெற்றவர்களின் வரலாறுகள் மனித குலத்தை வாழ வைக்கும்
சாகாதவர்களின் வரலாறுகளை தெரிந்து கொள்ளுங்கள் அதனால் அறிவு விளக்கமும்,ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும்,கிடைக்கும் அதனால் மனிதன் மேன்மை அடையலாம்,
அதைத்தான் வள்ளலார் மக்களுக்கு சொல்லுகிறார் .அந்தப் பாடலை நன்கு படித்துப் பாருங்கள் உண்மைகள் விளங்கும்.
பாடல் !
கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலரே
வினடதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !
நம்முடைய வரலாறுகள் சாகும் வழியைத்தான் காட்டி உள்ளன .அதனால் நமக்கு என்ன பயன்.எப்படி வாழ்ந்தாலும் இறுதியில் மரணம் வந்து விடுகிறதே .மரணத்தை வெல்லும் வழி ஒன்று இருக்கின்றது என்பதை நம்முடைய வரலாறுகள் சொல்லவில்லையே .வரலாறுகளில் வாழ்ந்தவர்களும் .வரலாறுகளை எழுதியவர்களும் மாண்டு போய் விட்டார்களே .
மாண்டு போன வரலாறுகளைப் படிப்பதால் என்ன் பயன் ?என்கிறார் நமது வள்ளல் பெருமான்.
கண்டது,கேட்டது,கற்றது,களித்தது,உண்டது உட் கொண்டது எல்லாம் குறைபாடுகளாகவே உள்ளனவே அதனால் மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளல்பெருமான் சொல்லிய சாகாத வரலாறுகளைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள் ...மனிதன் மனிதனாக வாழ்ந்து அருளைப் பெற்று பேரின்ப வாழ்க்கை வாழலாம் .அதுதான் மனித பிறவிக்கு இறைவன் கொடுத்த வாழ்க்கை முறைகளாகும்.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 18 ஆகஸ்ட், 2014

மரணம் இல்லாப் பெருவாழ்வு.!

மரணம் இல்லாப் பெருவாழ்வு.!
வள்ளல்பெருமான் சொல்லிய மரணம் இல்லாமல் பெருவாழ்வு வாழலாம் என்பதை ,வள்ளலார் கொள்கைகளை பின்பற்றும் சன்மார்க்க அன்பர்களே சரியாக புரிந்து கொள்ளாமல் உள்ளார்கள்.அவர்கள் எப்படி மக்களுக்கு சொல்லிப் புரிய வைக்க முடியும்.என்பதை நினைக்கும் போது,மிகவும் வேதனையாக உள்ளது.
அவரவர்களுக்குத் தெரிந்த எதோ ஒன்றை சொல்லி மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள்.
உண்மையைத் தெரிந்து கொள்ள ..உபாய மார்க்கம்,உண்மை மார்க்கம் .அனுபவ மார்க்கம் என்று மூன்று வழிமுறைகளை வள்ளல்பெருமான சொல்லி உள்ளார்.
உபாயத்தைக் கொண்டு அறிவது யாதெனில் ,...எதோ ஒன்றை பிடித்துக் கொண்டு கொஞ்சம் அருளைப் பெற்று மேலேறுவது.....
உண்மையை அறிந்து கொண்டு அறிவது யாதெனில் ...அருள் கிடைக்கும் வழியைத் அறிந்து அதை முக்கால் பங்கு அனுபவித்து நீண்ட வருடங்கள் மரணம் இல்லாமல் வாழ்ந்து அனுபவித்து மீண்டும் பிறப்பு எடுப்பவர்கள்.,..
அதை விட அனுபவத்தால் அறிவது யாதெனில்,,தான் முழுமையான அருளைப் பெற்று மரணத்தை வென்று பிறப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கையில் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள்.
சித்தர்களை மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளனர் .உபாயத்தைக் கொண்டு சென்றவர்கள் கர்ம சித்தர்கள், உண்மையை அறிந்து கொண்டு சென்றவர்கள் யோக சித்தர்கள்.
கடவுள் நிலையை அறிந்து மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்பவர்கள் ஞான சித்தர்கள்.
அதற்குமேல் கடவுள நிலை அறிந்து அதன் மயமானவர்கள் ,அதாவது கடவுளாக மாறியவர் .உலகத்தில் ஒரே ஒருவர்,அவர்தான் வள்ளல்பெருமான்..
ஆதலால் நாம் வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க மெய் நெறிக் கொள்கைகைகளை முழுமையாக கடைபிடித்து.மரணத்தை வென்று ,எல்லாம் வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம் எவ்வுலகமும் ஏத்திட வாழ்ந்திடலாம். .
அன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.