செவ்வாய், 31 மார்ச், 2015

கருணை என்றால் என்ன ?

கருணை என்றால் என்ன ?

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்று கருணை நெறி
உற்றேன் எக்காலமுஞ் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று என பற்றினேனே !

கருணை என்ற சொல் ஆன்மீகம் தோன்றிய காலத்தில் இருந்தே மிகச் சகஜமாக ,மிகச்சாதாரணமாக வழக்கில் வழங்கி வருகின்றது.

கருணை என்றால் என்ன என்று கேட்டால் மிகச் சாதாரணமாக ,அட அது தெரியாதா ? இரக்கம் தானய்யா  கருணை என்பார்கள் இன்னும் சிலர் இரக்கம் தயவு, பச்சாதாபம் என்பார்கள் .ஆக கருணை என்பதற்குரிய சரியான பொருளை வள்ளல்பெருமான் காலம் வரை உலகம் அறிந்து இருக்கவே இல்லை.

கருணை என்னும் உண்மையைத் தெரியாமல் மறைத்துக் கொண்டு இருந்த,.. யாராலும் திறக்க முடியாத மறைக்கப் பட்டு இருந்த பூட்டை அருள் என்னும் சாவியைப் போட்டு திறந்து மக்களுக்கு காட்டியவர்தான் வள்ளல்பெருமான் ஆவார்கள் .

வேறு எதனாலும் திறக்க முடியாது ,முயன்றவர்கள் அனைவரும் தோற்றுப் போயினரே அன்றி வெற்றிப் பெறவில்லை .

வள்ளல்பெருமான் பூரண அருளைப் பெற்று அந்த அருள் நிமித்தமாக புதிய கருணை என்னும் சாவியைப் போட்டு, அந்த பழைய பூட்டை திறந்து,அந்த பூட்டை உடைத்து எறிந்துவிட்டு   உள்ளே நுழைந்து அங்குள்ள காட்சிகளைக் கண்டு அனுபவித்து மக்களுக்கு ''திருஅருட்பா'' வாயிலாக காட்டி உள்ளார்,ஆதலால் நாம் இனிமேல் கோட்டையைத் திறந்து உள்ளே போவதற்கு எவ்விதத் தடைகளும் இல்லை .

வள்ளல்பெருமான் கண்ட காட்சிகளின் பாடல் ;--

கடல் கடந்தேன் கரை அடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில்
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சி எல்லாம் கண்டேன்
அடர் கடந்த திருவமுதம் உண்டு அருள் ஒளியால் அனைத்தும்
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை அடைந்தேன்
உடல் குளிர்ந்தேன் உயிர்க்கு கிளர்ந்தேன் உள்ளம் எலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ள பொருள் உள்ளவனாய் நிறைந்தேன்
இடர் தவிர்க்கும் சித்தி எலாம் என் வசம் ஓங்கினவே
இத்தனையும் பொது நடஞ் செய் இறைவன் அருட்செயலே .!

கருணை என்பது அருட்பெருஞ் ஜோதியிடம் பெரும் அருளாகும் .அருளே கருணை என்பதாகும்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே

என்கின்றார் வள்ளல்பெருமான் .மேலும் ;--

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் ,இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது !

நமது ஆண்டவர் கட்டளை இட்டது யாதெனில் ;-- நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே .ஆண்டவர் முதற் சாதனமாக ---

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை   அருட்பெருஞ்ஜோதி !

என்னும் திருமந்திரத்தை ,வெளிப்படையாக எடுத்துக் கொண்டார் ,எனவும்,மேலும் தயவு,கருணை ,அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும் .

ஆதலால் பெரிய தயவு உடைய அறிவே பூரண இன்பமாம் --அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம்.என்கின்றார்

ஆகவே கருணை என்பது அருளையே குறிக்கும் .அந்த அருளைப் பெறுவதற்கு கடவுளின் துணை வேண்டும் .கடவுளின் துணையைப் பெறுவதற்கு ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் வேண்டும் .

ஜீவ காருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும் ,அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் ,அறிவு உண்டானால் அருள் என்ன என்பது தெரியும்.அருளைத் தெரிந்து கொண்டால்  ,உண்மையான மெய்ப்பொருள் அருட்பெருஞ் ஆண்டவர் என்பது தெரியும்.அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் துணையால் அவரின் அன்பால்,தயவால்  கருணை என்னும் அருள் கிடைக்கும் .  

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் பெருங் கருணையால் மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் .

அகவே  கருணைதான் என்னை மேலே ஏற்றி விட்டது .நீங்களும் கருணையைப் பெறுவதற்கு எவ்வித தடைகளும் இல்லை ,அதற்கு சாட்சி நானே இருக்கின்றேன் என்று மக்களுக்கு தெளிவுப் படுத்துகின்றார் .

நாமும் கருணை என்னும் அருளைப் பெற்று பேரின்ப லாபத்தைப் பெற்று மகிழ்சியுடன் வாழ்வோம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திங்கள், 30 மார்ச், 2015

வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்து எறிந்தார் !

வல்லவன் பூட்டிய பூட்டை உடைத்து எறிந்தார் !
இந்த உலகத்தில் சாதி,சமயம்,மதம் என்ற பொய்யான கற்பனை கலைகளை கதைகளாகக் கற்பித்து,மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி பொய்யான கற்பனைக் கடவுள்களை அறிமுகப்படுத்தி யாராலும் திறக்கமுடியாத பூட்டை போட்டு மறைத்து வைத்து விட்டார்கள் .
அந்த வல்லவன் பூட்டிய பூட்டை திறக்க முடியாமல் திணறிக் கொண்டு இருந்தார்கள் .
வள்ளல்பெருமான் வந்து கருணை என்னும் கருவியைக் கொண்டு அந்த பூட்டை உடைத்து எரிந்து விட்டு,அன்பு ,தயவு,கருணை என்னும் பூட்டை போட்டுள்ளார் .
ஒழுக்கம், அன்பு ,தயவு,கருணைக் கொண்டு,அருளைப் பெற்று யார் வேண்டுமானாலும் அந்த பூட்டை திறந்து உள்ளே போகலாம் என்று உலக மக்களுக்கு அனுமதி வழங்கி உள்ளார் .
இவை உலக மக்களுக்கு கிடைத்து உள்ள ஆன்ம சுதந்திரமாகும்.
இந்த மாயை உலகில் கொடுத்துள்ள தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம் ,போன்ற மூவகை சுதந்திரங்களையும், தூக்கி எரிந்து விட்டு.கருணை நன் முயற்சியால் ஆன்ம சுதந்திரம் பெற்று .
மெய்ப்பொருளான இறைவனை மறைத்துள்ள அருள் கோட்டையின் கதவைத் திறந்துக் கொண்டு ,நமது தந்தை அருட்பெருஞ்ஜோதியின் இல்லத்திற்கு செல்வோம் .
இனிக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல எந்த தடைகளும் இல்லை .
கருணை ஒன்றினால் மட்டுமே கதவை திறந்து உள்ளே போக முடியும் என்ற உண்மையை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டி உள்ளார் நமது வள்ளல்பெருமான் அவர்கள்.
தடையற்ற சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியை கடைபிடித்து செல்வோம் வெல்வோம் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

வியாழன், 26 மார்ச், 2015

வள்ளலார் சிற்றம்பலக் கல்வி கற்றது !

வள்ளலார் சிற்றம்பலக் கல்வி கற்றது !

உலகில் சாகாக் கல்வி,சாகாக் கலை ,சாகாத்தலை ,என்றெல்லாம் உள்ள சொல் வழக்கு சித்தர்கள் காலத்திலே இருந்து தொடர்ந்து வழக்கத்தில் இருந்து வருகின்றது.

அனால் இதை எல்லாம் மீறி வள்ளலாருக்கு ஆண்டவர் சிற்றம்பலக் கல்வி  என்றொரு கல்வியைக் காட்டி கற்றுக் கொடுத்து உள்ளார்.

அந்தச் சிற்றம்பலக் கல்வியில் மட்டும் தான் இயற்கை உண்மையின் அடிப்படையாகிய கருணை என்பது உள்ளது.அதுவே கடவுள் மயமானது.தன்னைப் போலவே வள்ளலாரையும் ஆக்க நினைத்த ஆண்டவர் அவருக்குச் சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்தார் .

இதுவரை தோன்றிய ஞானிகள் யாரும் இயற்கை உண்மைக் கருணையை,அதன் விரிவை ,அனகத்தை,விளக்கத்தைக் கூறி இயற்கையில் உள்ள கருணையே ஆண்டவர் என்று அறிந்து கொள்ளவில்லை.என்பது அறிவைக் கொண்டு தெரிந்து கொள்ளவேண்டும்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்ற அகவலில் இதற்கு சரியான சான்றாகும்.

அந்தச் சிற்றம்பலக் கல்வியுள் கருணை மட்டும் அல்ல ,ஐந்து பெரிய நிலைகள் உள்ளன.அவை வருமாறு ;--

1,சிற்றம்பலக் கல்வியைக் கற்றது.
2,அதனுள் இருந்தே ஒரே நிலையாகிய கருணை நெறியையே தன்னதாகப்
   பெற்றது.
3,எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றது .
4,யாராலும் அடைய முடியாத உயர் நிலையைப் பெற்றது .
5,உலகில் பிற நிலையைப் பற்றாது ,சிவானாந்தப் பற்றையே பற்றாகப்      பற்றியது.

என இவ்வைந்தையும் சிற்றம்பலக் கல்வியுள் இருந்து வள்ளலார் பெற்றார் .பெற்றுக் கொள்ளும்படி ஆண்டவர் சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்தார் .

பாடலைப் பாருங்கள் .

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே !

இதுபோல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யாருக்காவது சிற்றம்பலக் கல்வியைக் கற்பித்து அதனுள் உள்ள ஆற்றல்களைப் பெறுமாறு  பெற்றுக் கொண்டால் வள்ளலார் போல் நாமும் மரணத்தை வெல்லலாம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


  

புதன், 25 மார்ச், 2015

கடவுள் எங்கு உள்ளார் ? அவர் யார் ?

கடவுள் எங்கு உள்ளார் ?அவர் யார் ?

கடவுள் எங்கு உள்ளார் என்பதை இன்று வரைக்கும் யாரும் கண்டு பிடிக்க முடியவில்லை ......{வள்ளலாரைத்தவிர }

உலகம் தோன்றியது தோற்று விக்கப்பட்டது எதற்காக என்றால் ? ..இறைவன் குழந்தையாகிய ஆன்மா என்னும் ஒளி இங்கு வந்து வாழ்வதற்காக உலகம்
படைக்கப்பட்டது .!.

ஆன்மா என்பது எது ? உயிர்கள் என்பது எது ? ஆன்மா ஏன் வாழ வேண்டும் உயிர் ஏன் எடுக்க வேண்டும் ?....உயிர்கள் எங்கு எப்படி வந்தது ?...அந்த உயிர்கள் எதற்காக இங்கு வந்து ஏன் வாழ வேண்டும் ?
.
உலகத்தை உண்டாக்கியது யார் ? பஞ்ச பூதங்களை உருவாக்கியது யார் ?கிரகங்களை உருவாக்கியது யார் ? உயிர்களை உண்டாக்கியது யார் ?இவ்வளவு,செயல்களுக்கும், செயல்பாடுகளுக்கும் யார் காரணம் ? இவ்வளவு செயல்களை எல்லாம், செயல்படுத்துவது யார் ? ..

மனிதனா ?...கடவுளா ?ஆன்மாவா ?....இல்லைப் பேரொளியா ? ....அணுவா ? அல்லது மாயையா ? மேலும் பஞ்ச பூதங்களா? .....கண்களுக்குத் தெரியாத, எதோ ஒரு சக்தியா ?

,வேதம் ..ஆகமம்,...புராணம்,...இதிகாசம்,...சாத்திரங்கள் சொல்லும் கடவுளா ?   சமயம் ,..மதங்களை கற்பித்த மதவாதிகள் சொல்லும் ,..பிரம்மா ,விஷ்ணு,...சங்கரன்,...மயேச்சுவரன்,....சதாசிவன் ,...போன்ற தத்துவ தெய்வங்களா ?....இராமயணம் சொல்லும் இராமனா ?....மகாபாரதம் சொல்லும் கிருஷ்ணனா? ....

இல்லை முகம்மதியர் {நபிகள் நாயகம் }சொல்லும் அல்லாவா?......கிருத்துவம் சொல்லும் {ஏசு }ஜீசஸ், என்னும் கடவுளா ?... ஜைன மதம் சொல்லும் கடவுளா ? ..... சீக்கிய மதம் சொல்லும் கடவுளா ?   புத்தர் {புத்தமதம் }சொல்லும்
கடவுளா ? ....திருவள்ளுவர் சொல்லும் கடவுளா ? ....சன்மார்க்கம் சொல்லும் கடவுளா ?....சுத்த சன்மார்க்கம் சொல்லும் கடவுளா ? ....மற்றும் ..சித்தர்கள் ,...முத்தர்கள் ,...யோகிகள், ...ஞானிகளா ? ....என்பது  போன்ற சந்தேகங்கள்  மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் ஏற்படுவது நியாயமானதே !..
பகுத்தறிவு படைத்தவர்களுக்கும் ,கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்களுக்கும்  இதே சந்தேகம் ரொம்ப காலமாக எழுந்து உள்ளது.

இவ்வுலகில் ஒவ்வொரு மதமும் பல கடவுள்களையும், ஏன் படைத்துள்ளார்கள் ! மனிதர்கள் கடவுளைப் படைக்க முடியுமா ? அப்படியானால், இதில் எந்தக் கடவுள் உண்மையானக் கடவுள்?

யார் சொல்லுவதை நம்புவது ! எவர் சொல்லுவதை விட்டு விடுவது !இத்தனைக் கடவுள்களும் உள்ளார்களா ? ...மாண்டு{இறந்து }போய் விட்டார்களா ?..என்பது ஒன்றும் தெரியாத, புரியாத புதிராகவே உள்ளன் !

இல்லை புதிது புதிதாக கடவுள் தோன்றிக் கொண்டே இருப்பாரா ?

உலகில் உள்ள விஞ்ஞானிகளும்,...வேதியல் வல்லுனர்களும் ...அறிவியல் ஆராய்ச்சியாளர்களும்,....அணு ஆராய்ச்சியாளர்களும்,....ஆன்மீக சிந்தனையாளர்களும்,...முற்றும் துறந்த முனிவர்களும்,....முற்றும் படித்த மேதாவிகளும், ....பொது சிந்தனை உள்ள புரவலர்களும் ...ஆன்மீகத்தை தோற்றுவித்த அருளாளர்களும் ....தேடிக்கொண்டு இருப்பது.. கடவுள் எங்கு உள்ளார்?...அவர் எப்படி உள்ளார் ?...எந்த உருவத்தில் உள்ளார் ?.... என்பதைத்தான்.தேடிக் கொண்டே  உள்ளார்கள்...

அந்த அளவிற்கு .விபரிக்க முடியாத... ,விளங்க முடியாத,....அறிந்து கொள்ள முடியாத, மாபெரும் ஆற்றல் ...''சக்தி '' எங்கு இருந்து செயல் பட்டுக் கொண்டுள்ளன !... இவற்றை இயக்குவது யார் ? பஞ்ச பூதங்களா ?...
அக்கினியா?......சூரியனா ,?...சந்திரனா,?...நட்சத்திரங்களா ?...பிரக்கிருதி அணுக்களா ?.....மாயையா ? சாத்தானா ? சைத்தானா ?.ஏதோ ஒரு பேரணுவா?  அணுத் துகளா ? விஷக்  காற்றா ? பூதக் காற்றா ? ,உஷ்ணக் காற்றா ? அமுதக் காற்றா ? எனற ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே உள்ளன .

இதே போன்ற கலக்கமும்,..மயக்கமும், .தயக்கமும் ..சந்தேகங்களும், அனைவருக்கும் இருந்தது போல், எனக்கும் பல ஆண்டுகளாக இருந்தன ! அவற்றை அறிந்து கொள்வதற்காக, நானும் பல நூல்களையும்,படித்து ஆராய்ந்துப் பார்த்தேன் ,சமயம் ,..மதம்,..மற்றும்,புராணங்களில் ,... சாத்திரங்களில் சொல்லிய பல வழிபாட்டுப் '' பக்தி ''முறைகளையும் செய்து பார்த்தேன்.மேலும் தவம்,....தியானம்,..யோகம், ...பக்தி,...வழிபாடு போன்ற எல்லாக் கலைகளையும் செய்து பார்த்தேன் .கடவுள் எங்கு உள்ளார் என்பது என்னுடைய அறிவுக்கு புலப்படவில்லை ,தேடினேன் தேடினேன் தேடிக்கொண்டே இருந்தேன். எதுவும் தெரிந்த பாடில்லை, தெரிந்து கொள்ளவும் முடியவில்லை.

உலகில் தோன்றிய மிகப் பெரிய அருளாளர்களாகிய  மாகாபாரதம் எழுதிய ''வேத வியாசர்'', ராமாயணம் எழுதிய ''வால்மீகி,''பெரிய புராணம் எழுதிய ''சேக்கிழார் ''மற்றும் இஸ்லாம் மதத்தை தோற்றுவித்த ''நபிகள்'' அவர்கள், கிருத்துவ மதத்தை தோற்றுவித்த ''ஏசுபிரான்''. மற்றும் பல  ஞானிகள் ,..சித்தர்கள்,...யோகிகள்,...தவசிகள் ...இறை தூதர்கள் என்று பலராலும் போற்றப்படும்,பாராட்டப்படும் அருளாளர்கள் ,வாழ்ந்து வந்த இடங்களுக்கு எல்லாம் சென்று பார்த்தேன் ,

அவர்கள் எழுதிய அருள் நூல்களை எல்லாம் படித்துப் பார்த்தேன்...அவர்கள் எழுத்துகளையும்,...சொற்களையும் வாக்கியங்களையும்,...சந்தேங்களையும் அழகான எழுத்துக்களை அடுக்கிக் கோர்த்து,..இலக்கணம்,..இலக்கியம் மாறாமல் ,பாமாலைகளாகவும் ,உரை நடைகளாகவும், விண்ணப்பங் களாகவும்,வியாக்கியாணங் களாகவும்,உபதேசங்களாகவும்   தொடுத்து,''ஏட்டளவில்'' எழுதி வைத்துள்ளார்கள். எதிலும் ''கடவுளைப் பற்றிய உண்மை இல்லை'',

உலகம்

ஆராய்ச்சியாளர்கள் உலகம் தன்னைத்தானே சுற்றிக் கொண்டு உள்ளது என்கின்றனர். இந்த உலக இயக்கம் எங்கிருந்து யாரால் இயக்கப் படுகிறது ?, எப்படி,இயக்கப்படுகின்றது ? எப்படி  செயல்படுகிறது ? என்ற உண்மை இதுவரையில் யாருக்கும்  சரியாக புலப்படவில்லை .தெரிந்து கொள்ளவும் முடியவில்லை ..அவர்கள் சொல்லும் விளக்கம் ,அவர்கள் கண்டுபிடிப்பு எல்லாம் உண்மைக்கு புறம்பானது என்பதை அறிந்து கொண்டேன்.

அவரவர் அறிவுக்கு தெரிந்த உண்மைகளை,..அனுபவங்களை ...எழுதி வைத்துள்ளார்கள்,அவ்வளவுதான், வேறு ஒன்றும் பெரிய உண்மை இருந்ததாக தெரியவில்லை ---இருந்தாலும் என்னுடைய தேடுதல் நின்றபாடில்லை !

இந்த உலகில் உள்ள உயிர்களின் நன்மைக்காக,மனித குல மக்கள் வாழ்க்கைக்காக ,...மக்கள் நலனுக்காக ,...மக்கள் மகிழ்ச்சிக்காக, ...மக்கள் பேரின்பம் ...அடைய வேண்டும் எனற நோக்கத்தோடு எழுதிய நூல்கள்,...இவ்வுலகில் அளவில் அடங்காது குவிந்து கிடக்கிறது ,இன்னும் நிறைய அன்பர்கள் , சொல்லிக் கொண்டும்,எழுதிக் கொண்டும் உள்ளார்கள் .--மேலும் மக்கள் நல் வாழ்க்கைக்காக ,..மக்கள் நலனுக்ககாக...மக்களின் மகிழ்ச்சிக்காக, நூல்கள் எழுதிக் கொண்டே உள்ளார்கள் .

இவ்வளவு நூல்கள் எழுதியும் ,அவைகளைப் படித்தும்,அதன்படி வாழ்ந்தும்  மக்கள் இன்னும் திருந்த வில்லை,மக்கள் மகிழ்ச்சியுடன் வாழவில்லை, என்று அறிவியல் வல்லுனர்களும் ,...ஆராய்ச்சி யாளர்களும்,...படித்த மேதைகளும், ...அரசியல் ஆட்சியாளர்களும், ...பொது நல சிந்தனையாளர்களும் ,...சட்ட நிபுணர்களும் பொது மக்களும் ,..மேலும்,...ஆன்மீக சிந்தனை யாளர்களும்,மற்றும் அனைத்தையும்  படித்துள்ள அறிவு ஜீவிகளும்,-- இன்றுவரை சொல்லிக் கொண்டும் ..தேடிக் கொண்டுமே உள்ளார்கள்.ஏன் ?ஏன் ?

இவ்வளவு அறிவு நூல்கள் இருந்தும்,மக்கள் ஏன் திருந்தவில்லை ?எழுதியவர்கள் குற்றமா ? படித்தவர்கள் குற்றமா ? என்பது ஒன்றும் புரியவில்லை ! மக்களுக்கு புரியாத அளவிற்கு ...எழுதி வைத்து விட்டார்களா ? உண்மையை தெரிந்து கொள்ளாமல் பொய்யையே உண்மை என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்களா ?...உண்மையாக இருந்து இருந்தால் மக்கள் ஏற்றுக் கொண்டு இருப்பார்கள் ...உண்மை இல்லாததால் மக்களின் ஆன்மாவில் அறிவில் பதியவில்லை என நான் நினைக்கிறேன். அப்படித்தான் அறிவுள்ள சிந்தனை யாளர்களும்,நினைப்பார்கள் என நான் கருதுகிறேன் .

உடம்பு !

ஆன்மீக சிந்தனையாளர்கள் உடம்பைப் பற்றி, ..உயிரைப் பற்றி ஓர் ....அளவிற்கு தெரிந்து வைத்துள்ளார்கள் .அதுவும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை. உடம்பைப் பற்றி அறிந்து கொண்ட அளவிற்கு ,ஆன்மாவைப் பற்றியும் ,உயிரைப் பற்றியும் அறிந்து கொள்ளவில்லை ,ஆன்மாவைப் பற்றியும் ...உயிரைப் பற்றியும்,அவைகள் குடியிருக்கும் உடம்பைப் பற்றிய  உண்மையைத் தெரிந்து கொண்டு இருந்தால் ,அனைத்து உண்மைகளும் தெளிவாகத் தெரிந்திருக்கும்,

ஆன்மா அழியாதது,உடம்பும் உயிரும் அழிந்துவிடும் என்பதை மட்டுமே தெரிந்து வைத்துக் கொண்டு இருந்தார்கள்...பிறந்தவர் ஒருநாள் இறந்தே ஆக வேண்டும்...இவை ''இயற்கையின் நியதி'' என்று பொய்யான கற்பனைக்  கதைகளைக் கட்டிவிட்டுச்சென்று விட்டார்கள் .

வள்ளலார் சொல்லும் பாடலைப் பார்ப்போம் !

உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம்புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்று அறியீர்
இடம் பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்ணுமினோ புண்ணியம் சார்வீரே !

மேலே கண்ட பாடலில் எளிய தமிழில் விளக்கமாக விளக்கியுள்ளார் .உலகில் உள்ளவர்கள் அனைவருமே ஏழைகள்தான் ...உண்மையை அறிந்தவன் எவனோ அவனே அருளைப் பெரும் பணக்காரன் ,அவனே மரணத்தை வெல்லும் சக்தி படைத்தவன் ,அவனே பேரின்பத்தை அடைந்தவன் ,அவனே கடவுளின் உண்மை நிலையை  அறிந்தவன் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .மற்றவர்கள் அனைவரும் உலக மாயையில் சிக்குண்டவர்கள் என்கிறார் .

மாயையில் சிக்குண்டவர்கள் !

மாயையில் சிக்குண்டவர்கள் எழுதிய அனைத்து நூல்களும்,''சாத்தானின் வேதங்களாகும்''மாயையில் சிக்குண்டு எழுதிய அறிவு நூல்கள் அனைத்தும் பொய்யானதே !

மாயை என்பது என்ன ?

நாம் வாழும் உலகம் ஒரு அண்டம் என்பதாகும் .இவைப் போல் பலகோடி அண்டங்கள் அனைத்தும் தன்னைத்தானே இயங்கிக் கொண்டு உள்ளன .ஒரு அண்டத்தில் ,,நிலம்,..நீர் ...அக்கினி...காற்று ...ஆகாயம் ..என ஐந்து அணு பூதங்கள் என்னும் பொருட்கள் உள்ளன...அந்த ஐந்து பூதங்களிலும் ,..ஐந்து பூதங்கள் கலவையாக உள்ளன.அவற்றிக்கு துணையாக ...ஞாயிறு ..திங்கள் ...செவ்வாய் ...புதன்...வியாழன...வெள்ளி ...சனி ....ராகு.....கேது ...என ஒன்பது கிரகங்கள் உள்ளன ...
இவற்றில் முக்கிய அணுக்களான.. வாலணு....திரவவணு....குருஅணு... லகுஅணு.... அணு ...பரமாணு ....விபுஅணு ....என ஏழு விதமான அணுக் கூட்டங்கள் உள்ளன .மேலும் பலகோடி விதமான ..சாதாரண ..அசாதாரண .சிற்று அணுக்கள் உலகம் முழுவதும் நிறைந்து இருக்கின்றன .

இவ்வளவு அணுக்கள் நிறைந்து இருந்தும் ஒன்றோடு ஒன்று ''மோதிக் கொள்வதும் இல்லை,அழித்துக் கொள்வதும் இல்லை ''என்பது மிகப்பெரிய அதிசயமாகும் ....அதே நேரத்தில் அனைத்தும் ஒன்றோடு ஒன்று ,அதன் அதன் தேவைக்குத் தகுந்தாற் போல்  ''பகிர்ந்து'' கொள்ளும் .இந்த அணுக்கள் அனைத்தும் ஐந்து பூதங்களுக்கும் ...ஒன்பது கிரகங்களுக்கும் தொடர்பு உடைய,தேவையான அணுக்களாகும்.

இந்த ஏழு விதமான அணுக்களால் மட்டுமே உருவங்களை உருவாக்குவதற்கு  பயன்பட்டுக் கொண்டு உள்ளன ..

மேலே கண்ட ..ஐந்து பூதங்களையும்...ஏழுவிதமான அணுக்களையும் ,.மற்றும் உள்ள துணை அணுக் கூட்டங்களையும் ...ஒன்பது கிரகங்களையும் ...''ஆட்சி செய்யும் அதிகாரம்,..செயல்படுத்தும் அதிகாரம் ''மாயை ...மாமாயை ....
பெருமாயை ...என்னும் மூன்று அதிகாரத் தலைவர்களிடம் கொடுக்கப் பட்டுள்ளது ...மூன்று பேர் என்பதால் மனிதர்கள் என்று நினைத்து விடாதீர்கள் ...புற கண்களுக்குத் தெரியாமல்,... செயல் பட்டுக் கொண்டு இருக்கும் மிகவும் ,''சக்தி வாய்ந்த ஆற்றல் மிகுந்த செயல்படும் அதிகாரத் தலைமை அணு ஒளிகளாகும் இவைகளுக்கு மாயைகள்  என்று பெயராகும் . ''

இந்த மாயைகளுக்கு என்ன வேலை என்றால் !

இந்த உலகத்திற்கு ''ஆன்மா என்னும் ஒளிக் கூட்டங்கள் '' வந்தால்தான் வேலை ,....இல்லை யென்றால் அவைகளுக்கு வேலை கிடையாது .....

இந்த உலகம் என்னும் அண்டத்தை படைத்தது,'''ஆன்மாக்கள் இங்கு வந்து உயிர்ப்பெற்று வாழ்வதற் காகத்தான் '' ...என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .ஆன்மாக்கள் வந்தால் அவைகளுக்கு, உயிர் கொடுப்பது !..
உடம்பைக் கொடுப்பது!,..அதனதன் விருப்பம் போல் வாழ வைப்பது !...குற்றம் செய்தால் தண்டிக்கப் படுவது !...தண்டிப்பது என்றால் மரணம் அடைய செய்விப்பது,! குற்றத்திற்கு தகுந்த மறுபிறப்பு கொடுப்பது,!...தவறு செய்யாத ஆன்மாக்களை பாது காப்பது! ....அதாவது தண்டிக்காமல் பாது காப்பது !...அவை களுக்கு வேண்டிய, அதனுடைய தகுதிக்குத் தகுந்த உயர் பிறப்பை கொடுப்பது! அதற்கு வேண்டிய நன்மைகளை செய்தல் !.போன்ற அனைத்து வேலைகளையும் ..பாராபட்சம் இல்லாமல் ,முறையாக... சரியாக ஒழுங்கு தவறாமல், முறைப்படி,''இயற்கை சட்டத்தின் படி'' ,செயல் புரிந்து கொண்டு இருப்பவைகள் தான் '''மாயைகளின் வேலைகளாகும்.

இந்த உலகத்தை ஆட்சி செய்வதற்கு மாயைக்கு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. இயற்கை சட்டத்தை மீறி எதையும் தானாக செய்யமுடியாது.

மாயையின் ஆட்சியில் ,...ஆன்மாக்களுக்கு ....தாவரம் முதல் மனிதர்கள் வரை உயிரும் உடம்பும் கொடுத்து வாழ வைப்பது,''மாயை '' என்பதை அறிந்தோம் .

இந்த உலகத்தை படைத்து,,,மேலே உள்ள அனைத்தையும் படைத்து ,ஆன்மாவை அனுப்பி....அவைகளுக்கு உயிர்களைக் கொடுத்து ,அவைகளின் விருப்படி வாழவைத்துக் கொண்டு இருக்கும் ''மாயை '' என்னும் சக்தியானது , ஆன்மாக்களை இந்த உலகத்தை விட்டு வெளியே அனுப்பும் அதிகாரம் அவைகளுக்கு கிடையாது..

ஆன்மா ! கடவுள் !

தாவரம் முதல் ஊர்வன,பறப்பன,நட்பான,தேவர் ,அசுரர் மற்றும்  மிருகங்கள் வரை உள் (அகம் ) நோக்கிப் பார்க்கும் அறிவு கிடையாது.மனிதனுக்கு மட்டுமே ''உள்'' ( அகத்தை ) நோக்கிப் பார்க்கும் அறிவு வழங்கப் பட்டுள்ளது.தன்னைத் திருத்திக் கொள்ளவும்,மாற்றிக் கொள்ளவும்,அறிவும்,சுதந்தரமும் கடவுளால் கொடுக்கப்பட்டுள்ளது .அதனால்தான் மனித தேகம் உயர்ந்த அறிவுள்ள தேகம் என்பதாகும்.

ஆன்மாக்களை இந்த உலகத்திற்கு அனுப்பியது யார் ? என்ற உண்மை  ஆன்மாவிற்குத் தெரியாது ஆணவம் என்னும் அஞ்ஞானம் மறைத்துக் கொண்டு உள்ளது ..ஆன்மாவிற்கு,உண்மைத் தெரியாத வரையில் இந்த உலகத்தை விட்டு வெளியேற முடியாது ....மனித தேகம் என்னும் உயர்ந்த அறிவுடைய தேகம் கிடைத்து ,ஆன்ம அறிவை அறிந்து ..ஆன்மாவில் உள்ள அருள் அமுதத்தை கண்டு, அதை உண்டு {புசித்து ) ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றினால்தான் ..இந்த உலகத்தை விட்டு வெளியே செல்ல முடியும் .அதற்கு எந்த தடையும் எதனாலும் இல்லை என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த உலகத்தை விட்டு வெளியற முடியாத மனிதர்கள் அதாவது {ஆன்மாக்கள}''உண்மையைக் கண்டு பிடிக்கும் அறிவு விளக்கம் இல்லாமல் ...மாயை என்னும் உலக போகத்திலே ''தேக சுதந்திரம்,போக சுதந்திரம்,ஜீவ சுதந்திரம்'என்ற மூவகை சுதந்தரங்களில்  வாழ்ந்து கொண்டு இருப்பவர்களாகும் ''.ஆதலால் அவர்களை மாயையில் சிக்குண்டவர்கள் என்று,சொல்லப் படுகிறார்கள் .

மாயையில் வசப்பட்டவர்களால் ''உண்மையை அறியமுடியாது ''உண்மையை
உணரமுடியாது,...உண்மை ஒழுக்க நெறியோடு வாழமுடியாது, ...உண்மையை உண்மையாக எடுத்து ,...மக்களுக்கு போதிக்க முடியாது,...உண்மை இறை நிலையைப் பற்றி எழுத முடியாது ...மரணத்தை வெல்ல முடியாது ...என்பதை வள்ளலார் எழுதிய ''திருஅருட்பா'' என்னும் அருள் நூலின் வாயிலாக அறிந்து கொண்டேன்.மாயையின் சம்பந்தம் உடையவர்கள்,இந்த உலகத்தில் உள்ளவைகளை மட்டுமே அறியமுடியும்.உலகத்தின் வெளியே என்ன செயல்கள் நடந்து கொண்டுள்ளன என்பதை அறியமுடியாது,...உலகில் உள்ள அற்ப முத்திக்  கலைகள் என்னும் , ''தத்துவங்களை'' மட்டுமே அறிய முடியும் ,

தத்துவம் என்பது என்ன ?

தத்துவம் என்பது மனித உடம்பில் செயல்பட்டுக் கொண்டு உள்ள முக்கிய கருவிகளாகும் .அதாவது அகத்தில் உள்ள ''ஆறு ஆதாரங்களாகும் '',அவை மூலாதாரம் ...சுவாதிஷ்டானம் ...மணிபூரகம்...அநாதகம் ....விசுத்தி  ...ஆக்ஞேயம்...என்பதாகும் இவைகளின்  ஒவ்வொரு ஆதாரங்களுக்கும் ஆறு ஆறு தத்துவங்கள் என முப்பத்தாறு தத்துவங்களாக கண்டார்கள்....புறத்தே ''அறுபது'' தத்துவங்கள் உள்ளன ஆக மொத்தம் ''தொண்ணுற்று ஆறு ''தத்துவங்களாகும்.இந்த தத்துவ கருவிகள் உடம்பை இயக்கும் முக்கிய கருவிகளாகும் .

உடம்பில் உள்ள ஆறு அந்தங்களை (ஆதாரங்கள் ) கண்டவர்கள் ஆறு அந்தங்களின் முடிவுகளை மக்களுக்கு போதித்து உள்ளார்கள் .

ஒவ்வொரு அந்தங்களும் ஒவ்வொரு தத்துவ சித்தி கலைகளின்  உண்மைகளை விளக்கும்.அவைகள் சித்தாந்தம் ,வேதாந்தம்,கலாந்தம் ,யோகாந்தம்,போதாந்தம்,நாதாந்தம் என்பவையாகும் .அதற்கு மேல் உள்ள உண்மை நிலையை அவர்களால் காணமுடியாமல் அத்துடன் நின்று விட்டார்கள் ,அதற்கு மேல் கடவுள் நிலை எங்கு உள்ளது என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலைப் பாருங்கள்.

நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த
நண்ணுறு கலாந்த முடனே
நவில்கின்ற சித்தாந்த மென்னும் ஆறு அந்தத்தின்
ஞான மெய்க் கொடி நாட்டியே
மூதாண்ட கோடி களோடுஞ் சராசரம் எலாம்
முன்னிப் படைத்தன் முதலாம்
முத்தொழிலும் இரு தொழிலும் முன்னின்று இயற்றி
ஐம் மூர்த்திகளும் ஏவல் கேட்ப
வாதாந்த முற்ற பல சத்திகளோடுஞ் சத்தர்
வாய்ந்து பணி செய்ய இன்ப
மாராச்சி யத்திலே திருஅருட் செங்கோல்
வளத்தொடு செலுத்தும் அரசே
சூதாண்ட நெஞ்சினிற் தோயாத நேயமே
துரிய நடுநின்ற சிவமே
சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
ஜோதி நடராஜ பதியே

என்கிறார் வள்ளலார் .

மேலும் தத்துவங்களை கடந்த நிலையில் இறைநிலை எப்படி உள்ளது என்பதை வள்ளலார் விளக்கம் அளிக்கிறார் .

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீத மேனிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்திடச் சென்றோம்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தவந் நிலைக்கண் யாமும் எம்முணர்வும்
ஒருங்குறக் கரைந்து போயினம் என்று
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்றோங்கும்
அருட்பெருஞ் ஜோதி என் அரசே !

தத்துவங்களை கடந்த நிலையில்,அதற்கு மேல் ''சித்தி'' நிலைகள் அதற்குமேல் கடவுள் நிலை .கடவுளைச்சுற்றி இருக்கும் அருள் நிலை ,அதற்குமேல் அருட்பெருவெளி நிலை,அதற்குமேல் கடவுள் அமர்ந்து இருக்கும் ''அருட்பெருஞ்ஜோதி '' நிலை ,இவைப் போன்ற எண்ணற்ற நிலைகளைக் கடந்து ,அவற்றை கண்டு களித்து,அதனுடன் இணைந்து இயக்கிக் கொண்டு இருக்கும் கடவுளைக் கண்டவர்கள் இதுவரையில் யாரும் இல்லை ...வள்ளல் பெருமான் ஒருவர்தான் உண்மையானக் கடவுளைக் கண்டவராகும். !

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் ---தேவா நின்
பேரருளை என் போலப் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் நீ சற்றே அறை...

இந்த உலகில் உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியைக் கண்டவர் யாராவது உண்டா ? அவரிடம் அருளைப் பெற்றவர்கள் யாராவது உண்டா ?என்னைப்போல் மரணத்தை வென்றவர்கள் யாராவது உண்டா ? அப்படி யாராவது இருந்தால் என்னிடம் காட்டுங்கள் என்று இறைவனிடமே கேட்டு பதில் அளியுங்கள் என்று சவால் விடுகின்றார் .

எல்லா அண்டங்களையும் ...எல்லா உலகங்களையும் ..எல்லா உயிர்களையும் எல்லா கலைகளையும் ,.....அனைத்து அண்ட, சராசரங்களையும் படைத்து ஐந்தொழிலும் செய்து கொண்டு ,..''ஞான மெய்க் கொடிநாட்டி ,திருவருள் செங்கோல் செலுத்தும் கடவுள்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்'' என்பவராகும் .அவை தத்துவங்களைக்  கடந்ததாகும் .தத்துவங்களைக் கடந்த உண்மை நிலையாகும் .அதுவே அருட்பெருஞ் ஜோதியாகும்.அதுவே பலகோடி அண்டங்களை இயக்கும்  ஆற்றல் பெற்ற அருள் பெருஞ் ஜோதியாகும்.அதுவே ஈடு இணையற்ற கருணை மிக்க அருட்கடலாகும்.

ஐம் மூர்த்திகள் என்று சொல்லப்படும்;--- .

..பிரமன்,...விஷ்ணு,....சங்கரன்,...மகேஸ்வரன்,...சதாசிவம் ...என்பவர்கள் {நிலம்,..நீர்,...அக்கினி,...காற்று ,...ஆகாயம்,}..என்னும் இயக்கத்திற்கு வைத்த பெயர்களாகும் .இவை சிறிய ஆட்சி யாளர்களாகும்.இவர்கள் போன்ற,சிறிய ஆட்சியாளர்களுக்கே உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல்,---தங்களுக்கு கொடுத்த வேலைகளை ...ஒய்வு இல்லாமல்,...காலம் நேரம் கருதாமல் ...இடைவிடாது, செய்து கொண்டு உள்ளார்கள் என்றால் ! மதத் தலைவர் களுக்கும்,...சமயத் தலைவர் களுக்கும் எப்படி உண்மைத்  தெரியவரும்.? உண்மையானக் கடவுளைத் தெரிந்து கொள்ளாமல் ...கண்ட கண்ட தத்துவங்களை கடவுளாக படைத்து விட்டார்கள் .அவைகள் யாவும் தத்துவ சித்திக் கற்பனைக் கடவுள் களாகும் .அதையும் உண்மை என்று நம்பி மக்கள் அழிந்து கொண்டு உள்ளார்கள் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார் .வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் .

கலை யுரைத்த கற்பனையே நிலை எனக் கொண்டாடும்
கண்முடி பழக்கம் எலாம் மண் மூடிப் போக
மலைவறு சன்மார்க்கம் ஒன்றே நிலை பெற மெய் உலகம்
வாழ்ந்தோங்கக் கருதி அருள் வழங்கினை என்தனக்கே
உலைவறும் இப்பொழதே நல்  தருணம் என நீயே
உணர்த்தினை வந்து அணைந்து அருள்வாய் உண்மை உரைத்தவனே
சிலைநிகர் வன் மனங் கரைத்துத் திருஅமுதம் அளித்தோய்
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே !

அருளாளர்கள் எழுதிய அருள் நூல்கள் அனைத்தும் கலையை உரைத்த கற்பனைக் கதைகளாகும் .அந்த பொய்யான கண்மூடிப் பழக்கம் எல்லா வற்றையும் மீண்டும் வெளியே வராமல் ,மக்களுக்குத் தெரியாமல் மண்ணைப் போட்டு மறைத்து விடுங்கள் என்கின்றார் .அவற்றால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை .பயன் இல்லாத எழுதுவும் மக்களுக்கு தேவை இல்லை என்கின்றார் வள்ளல்பெருமான் .

பொய்யான சமய,மதங்களின் கொள்கை களினால் சாதி,சமயம்,மதம் எனற பிரிவினையை உண்டாக்கி கடவுளின் பெயரைச் சொல்லி மக்களைப் பிரித்து விட்டார்கள்.ஆன்ம நேயத்தோடு வாழ வேண்டிய மக்கள்,.மனித நேயம் கூட இல்லாமல், அறியாமையால் ஒருவரோடு ஒருவர் மோதி சண்டையிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள்.ஆதலால் அவற்றை நம்பவேண்டாம் .என்று தெளிவாக விளக்கி உள்ளார் .

மதவாதிகள் !

உடம்பை விட்டு ''ஆன்மா'' வெளியே சென்றால் இறைவனோடு கலந்துவிடும் என்றும் , சொர்க்கம்,..நரகம் ....கைலாயம்,...வைகுண்டம் போன்ற இடங்களுக்கு சென்று விடும் என்றும், பொய்யான கற்பனைகளை மக்கள் மத்தியில்,...விஷத்தை விதைத்து விட்டார்கள்.

அதனால் மக்கள் அகத்தில் உள்ள ஆன்மாவின் உண்மை தெரியாமல்,ஆலயங்களிலும்,புண்ணிய ஸ்தலங்கள்,போன்ற இடங்களில் சென்று  அலைந்து கொண்டு உள்ளார்கள். ...வள்ளலார் சொல்லுவது-- மரணம் அடைந்தால் ஆன்மா அதன் செயல்களுக்குத் தகுந்தாற் போல் ''வேறு உடம்பு'' ...இதே உலகத்தில் எடுத்துக் கொள்ளுமே தவிர ஆன்மா இறைவனிடம் செல்லாது ...என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். மனிதன் மரணம் இல்லாமல் வாழ்ந்து ''ஒளிதேகம் பெற்றுக் கொண்டால் மட்டுமே,இறைவனிடம் செல்ல முடியுமேத் தவிர,..வேறு எந்த வழியாலும் செல்ல முடியாது, அதற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயர் வைத்து உள்ளார்...அவற்றை கற்றுக் கொள்ள ''சாகாக் கல்வி '' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளார் .

சமய மத வாதிகளின் தன்மை எப்படிப்பட்டது என்பதை பின் வரும் பாடலில் பதிவு செய்து உள்ளார் .

அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம் மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங்கு அவர்பால்
இறங்குதலில் என் பேசுதலால் என் பயனோ நடஞ் செய்
இறைவர் அடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

இவ்வுலகில் உள்ள அருளாளர்கள் என்று போற்றப் படுபவர்கள் ,உண்மையான அறிவை அறியாதவர்கள் என்றும் ,அவர்கள் சராசரி மனிதர்கள் போல், உண்ணுவதும் உறங்குவதும் பின் மரணம் அடைவதும்,பின்பு பிறப்பு எடுப்பதுமாக உள்ளவர்கள் ,அவர்கள் எதோ ஒரு சிறிய முயற்சி என்னும், பக்தி, தவம், விரதம் போன்ற செய்கைகளை செய்து மனதை அடக்கி,மனோலயம் அடைந்து, தத்துவகங்களை கண்டு பிடித்து உள்ளார்கள் ,அப்படி சிறிய முயற்சி செய்ததால் , மதத் தலைமையும்,பதத் தலைமையும் ,பெற்றுக் கொண்டாகள் ,அவர்களைப் பின் பற்றுவதால் எந்த பயனும் இல்லை ,---நான் உண்மையான இறைவனுடைய புகழைப் பேசிக் கொண்டு உள்ளேன் என்கிறார் வள்ளலார்.

அந்த உண்மையான கடவுள் எங்கே இருக்கிறார் ! வள்ளல்பெருமான் சொல்லுகின்றார் !

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

அறிவு வந்த காலம் முதல் ,அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,---அடைந்து அறியாத அற்புதக் குணங்களையும்,---கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும்,---செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,--கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,அனுபவித்து அறியாத அற்புத அனுபவங்களையும் ,

இது தருணம் தொடங்கி கிடைக்கப் பெறுகின்றேன் என்று உணருகின்ற ''ஓர் சத்திய உணர்ச்சியால்,பெருங் களிப்பு உடையோனாகி இருக்கின்றேன்,

நீவிர்களும் அவ்வாறுப் பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று,நிறைந்து, எழுந்து வெளிப்பட்ட எனது ''சுத்த சன்மார்க்க லஷியமாகிய ''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமைப் பேராசைப் பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.''!

கடவுள் உள்ள இடம் !

இயற்கை உண்மை !...இயற்கைவிளக்கம் ! ..இயற்கை இன்பமும் ! மாக எங்கும் பூரணமாக இருந்து இயங்கிக் கொண்டு உள்ளவர்,''ஒருவரே''  என்பதை வள்ளலார் எப்படி விளக்கம் அளிக்கிறார் என்பதைப் பார்ப்போம் .

இயற்கையில் தானே விளங்கு கின்றவராய் உள்ளவர் என்றும்,--இயற்கையில் தானே உள்ளவராய் விளங்கு கின்றவர் என்றும்,--இரண்டும் படாத பூரண இன்பமானவர் என்றும்,---எல்லா அண்டங் களையும் ,எல்லா உலகங்களையும்,--எல்லாப் பதங்களையும்,--எல்லாச் சத்திகளையும்,--எல்லாச் சத்தர்களையும்,---எல்லாக் கலைகளையும்,---எல்லாப் பொருள்களையும்,---எல்லாத் தத்துவங்களையும்,--எல்லாத் தத்துவிகளையும்,

எல்லா உயிர்களையும்,--எல்லாச் செயல்களையும்,--எல்லா இச்சைகளையும்,--எல்லா ஞானங்களையும்,--எல்லாப் பயன்களையும்,--எல்லா அனுபவங்களையும்,--மற்றும் எல்லாவற்றையும் ,--தமது திருவருள் சத்தியால் --

தோற்றுவித்தல்,...வாழ்வித்தல்,...குற்றம் நீக்குவித்தல்,...பக்குவம் வருவித்தல்,...விளக்கஞ் செய்வித்தல்,...முதலிய பெருங் கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்,---எல்லாம் ஆனவர் என்றும் ---,ஒன்றும் அல்லாதவர் என்றும்,---சர்வ காருண்யர் என்றும்,---சர்வ வல்லபர் என்றும்,எல்லாம் உடையராயத் தமக்கு ---

ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத் தனித்தலைமை ''அருட்பெருஞ் ஜோதியர்''என்றும்,...சத்திய அறிவால் அறியப் படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே'' அகம் புறம் முதலிய எவ்விடத்தும்,நீக்கம் இன்றி நிறைந்த ''சுத்த மெய் அறிவு என்னும் ''பூரணப் பொதுவெளியில்'' அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

அவரை அறியும் வழி !

அவ்வாறு விளங்குகின்ற ''ஒருவரே'' யாகிய கடவுளை,இவ்வுலகின் இடத்தே ,ஜீவர்கள் அறிந்து ...அன்புசெய்து,..''அருளை அடைந்து,'' அழிவில்லாத சத்திய சுகப் பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல் ,பல்வேறு கற்பனைகளால் ,பல்வேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும் ,பல்வேறு மார்க்கங்களிலும் ,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து ,..அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து ,...பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்தி ...இறந்து இறந்து வீண் போது போகின்றார்கள் .

இனி இச் சீவர்கள் ...விரைந்து விரைந்து ,...இறந்து இறந்து,...வீண் போகாமல் ,உண்மை அறிவு,...உண்மை அன்பு, ...உண்மை இரக்கம்,..முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய்,எல்லா சமயங்களுக்கும் ,---எல்லா மதங்களுக்கும்,---எல்லா மார்க்கங்களுக்கும் ,--உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் ''சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப்'' பேரின்ப சித்திப் பெருவாழ்வில் பெருஞ் சுகத்தையும்,--பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,மேற்குறித்த உண்மைக் கடவுள் --தாமே திருவுள்ளங் கொண்டு --

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ...உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் சத்திய ஞான சபையை'' ....இங்கே {வடலூரில் }தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து,'''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க, யாமே அமர்ந்து விளையாடுகின்றாம் ''என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,--

''அருட்பெருஞ்ஜோதியிராய்''...வீற்று இருக்கின்றார் ,ஆகலின் அறிவித்த தருணம் தொடங்கி வந்து வந்து ,தரிசிக்கப் பெருவீர்களாகில் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவது மன்றி, இறந்தவர் உயிர் பெற்று எழுதல் ,மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல்,முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள்.

என்று 1874,..ஆம் ஆண்டு ஸ்ரீ முக வருடம் ,தைமாதம் 19,ஆம் நாள் --வள்ளலார் மரணம் இல்லாப் பெருவாழ்வு அடையும் நாளில் --திருக்காப்பு இட்டுக் கொண்ட தினம் வெளியிடப்பட்ட ''அற்புதப் பத்திரிகை ''என்னும் தலைப்பில் உலக மக்களுக்காக பதிவு செய்துள்ளார்.

வடலூரில் உள்ள... ''சத்திய ஞானசபையில் ''...உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் வந்து அமர்ந்த இடமாகும்.எதற்காக அங்கு வந்து அமர்ந்தார் ?..''திருஅருட் பிரகாச வள்ளலாரை ஒளி உடம்பாக மாற்றி  அவர் உடம்பிலே தான் அமர்ந்து உலக மக்களுக்கு உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஒன்றே உண்மைக் கடவுள்'' என்பதை வெளிப்படுத்துகின்றார்''.''அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' .வந்து அமர்ந்த இடம் என்பதால் வடலூர் ''சத்திய ஞானசபை' பெருமையும்,புகழும் ,ஆற்றலும் ,அருள்சக்தியும் வாய்ந்த இடமாகும்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து ஆண்டவர் ,----அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் -- ''அருள் உருவம் ''.... என்னும் ,...''அருட்பேரொளி ''என்னும் ஒளி உடம்பு என்னும், ஒளி உருவத்தோடு வந்த, ....''ஒரே இடம்தான் வடலூர் சத்திய ஞான சபையாகும்'' ,...இறைவன் வந்து அமர்ந்த ...''பொது இடமாகும்''.அதனால்தான் அந்த இடத்திற்கு..''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை "....என்று பெயர வைத்தார் வள்ளலார் .உலக மக்கள் அனைவரும் வந்து வழிபடும் பொதுவான ''சத்திய ஞான சபையாகும் '' அங்கே கடவுள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் ..

மேலும் அந்த உண்மைக் கடவுள் எங்கு இருந்து செயல்பட்டுக் கொண்டு உள்ளார் என்பதை... ''திருஅருட்பா'' ...பாடல் வாயிலாக பதிவு செய்துள்ளார் .

ஒரு பிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே
உன்ன முடியாது அவற்றின்
ஓராயிரம் கோடி மாலண்டம் அரன் அண்டம்
உற்ற கோடாகோடியே
திருகலறு பலகோடி யீசன் அண்டம்
சதாசிவ அண்டம் மெண்ணிறந்த
திகழ்கின்ற மற்றைப் பெருஞ் சத்தி சத்தர் தஞ்
சீரண்டம் என் புகலுவேன்
உருவுறு இவ்வண்டங்கள் அத்தனையும் அருள் வெளியில்
உருசிறு அணுக்களாக
ஊடசைய அவ்வெளியின் நடு நின்று நடனமிடும்
ஒரு பெருங் கருணை அரசே
மருவி எனை யாட்கொண்டு மகனாக்கி அழியா
வரந்தந்த மெய்த் தந்தையே
மணிமன்றின் நடு நின்ற ஒரு தெய்வமே எலாம்
வல்ல நடராஜ பதியே !

பலகோடி பெயர் கொண்ட,..பல கோடி அண்டங்களையும் தன் சுதந்திரத்தால் இயக்கிக் கொண்டும்,...இயங்கிக் கொண்டும் ...இருக்கும் இடம்.. ''அருள் பெருவெளி ''...என்கிறார் அதன் நடுவில்...நடு நின்று, ...அசைந்து (நடனம் ) செயலாற்றிக் கொண்டு இருக்கும் இடம் ''அருள் பெரு வெளியாகும்....அதற்கு இயற்கை உண்மை என்று பெயர் வைத்துள்ளார்.... அங்கிருந்து அண்டங்களை எல்லாம் ''அருள் என்னும் கருவியைக் கொண்டு '' ...இயக்கும் ''பெருங் கருணை பேரொளிதான்''..இயற்கை விளக்கம் என்று பெயர் வைத்துள்ளார் ....எல்லா அண்டங்களையும் ..அண்டங்களில் உள்ள எல்லா உயிர்களையும் இன்பம் அடையச் செய்வித்து தன்னுடன் சேர்த்துக் கொண்டு வாழ வைப்பதே,  ''இயற்கை இன்பம்'' என்று பெயர் வைத்துள்ளார் .

இயற்கை உண்மை ...இயற்கை விளக்கம் ...இயற்கை இன்பம் ..என்ற இயக்கத்தை ..இயற்கையாக இயக்கிக் கொண்டு இருப்பவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்சோதி ...தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி ''என்னும் உண்மைக் கடவுளாகும் ..

அவற்றைக் கண்டு அறிந்தவர், ''வள்ளலார் ஒருவர்தான்'' .--அந்த உண்மைக் கடவுள் வள்ளலாரை  தன்னுடைய மகனாக ஏற்றுக் கொண்டு ''அழியாப் பெருவாழ்வு'' என்னும்...''மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப பெருவாழ்வு  வாழும் வரம் தந்து,'' அவரது மணிமன்றில்,''ஆண்டவர் இருக்கும் சிம்மாதனத்தில்,'' தன்னையும் அமர வைத்த ஒரே ஒரு தெய்வமே,! உண்மையான மெய்த் தந்தையே ! என்று போற்றி புகழ்கின்றார் வள்ளலார் ! அதனால் தான் தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்கிறார் .

கடவுள் எங்கு உள்ளார் என்ற உண்மையைத் தெளிவு படுத்தியும்,தெரியப்படுத்தியும்,நாம் உண்மைக் கடவுளைப் பற்றி,...அறிந்து ,...புரிந்து, ...தெரிந்து கொள்ளாமல் ,இன்னும் கண்மூடித் தனமாக செயல் பட்டுக் கொண்டு உள்ளோம்.

உண்மைக் கடவுள் !

வள்ளல் பெருமான் காட்டிய கடவுள் ! ..சமய மதவாதிகள் காட்டிய கடவுள்களில் ஒருவர் அல்லர் ! சமய மதவாதிகள் சொல்லும் ஒளிக் கடவுளும்  அல்ல ! அவர்கள் கண்ட ஒளி வேறு ! வள்ளல்பெருமான் கண்ட ''உண்மையான ஒளிக் கடவுள்'' வேறு ! என்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

அருட்பெருஞ்சோதி என்னும் உண்மைக் கடவுள் , கருணை நிறைந்த,அருள் ஒளியாகும் ! .அக்கடவுள் எல்லா அண்டங்களுக்கும் அருள் ஒளி வழங்கும் கடவுளாகும் ! .அளவுகடந்த அருட் பிரகாசம் உள்ளது ! ,சுடும் தன்மை இல்லாதது ! என்றும் நிலைப் பெற்றது ! எதற்கும் ஒப்பிட முடியாதது !,.. எதற்கும் ஈடு இணை இல்லாத ''தனிப்பெரும்கருணை'' என்னும் தகுதி வாய்ந்தது ! நினைப்பு ,மறைப்பு அற்றது ! அவை ''அகமாக இருந்து,அனகமாக'' விரிந்து கொண்டே இருக்கும் ! எங்கும் பூரணமாக விளங்க விளக்கிக் கொண்டுள்ளது ! அந்த மாபெரும் கருணைக் கடவுளிடம் இருந்து ,அருளைப் பெற்றால்தான் மரணத்தை வெல்ல முடியும்.! .அவற்றின் அருளைப் பெற்றவர்களால் தான் ''மெய்ப் பொருள்'' என்னும் இயற்கை உண்மைக் கடவுளைக் காணமுடியும் !

வள்ளல் பெருமான் காட்டிய கடவுள் ..சமயமத வாதிகள் காட்டிய கற்பனைக் கடவுள்கள் அல்ல ! கணவன் மனைவி ..குடும்பம் குழைந்தைகள் பெற்று ...இன்பம் ..துன்பம் அடையும்.... குடும்பம் நடத்தும் கடவுள் அல்ல! என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்களை பார்ப்போம் .

இயற்கையிலே பாசங்கள் ஒன்றும் இலார் ..குணங்கள்
ஏதும் இலார் ..தத்துவங்கள் ஏதும் இலார்... மற்றோர்
செயற்கை இல்லார்.. பிறப்பு இல்லார் ...இறப்பு இல்லார்..யாதும்
திரிபு இல்லார் ...களங்கம் இல்லார் ...தீமை ஒன்றும் இல்லார்
வியப்புற வேண்டுதல் இல்லார் ...வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி..எங்கும் விளங்கி இன்பமயமாய்
உயத்தருமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

என்றும் ..மேலும்

ஒன்றும் அலார் ..இரண்டுமலார்..ஒன்றும் இரண்டுமானார்
உருவமலார் அருவுமலார் உருஅருவும் மானார்
அன்றும் உளார் ..இன்றும் முளார்..என்றும் உளார் தமக்கோர்
ஆதியிலார் அந்தமிலார் ''அருட்பெருஞ்ஜோதியினார்''
என்று கனல் மதி அகத்தும் புறத்தும் விளங்கிடுவார்
யாவும் மிலார் ..யாவும் உளார்..யாவுமலார் யாவும்
ஒன்றுறு தாமாகி நின்றார் திருச்சிற்றம் பலத்தே
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

கடவுள் உண்டு என்பதையும், அவர் எப்படி உள்ளார் என்பதையும், ,மிகவும் எளிய தமிழில்,அழுத்தமாக உறுதிப் படுத்தி உள்ளார்    

கடவுள் இல்லை என்பது ஒரு கூட்டம்,அவர்களுக்கு வள்ளலார் சொல்லும் பதில் வருமாறு ;--.

அம்பலத்தில் எங்கள் ஐயர் ஆடிய நல் ஆட்டம்
அன்போடு துதித்த வருக் கானது சொல்லாட்டம்
வம்பு சொன்ன பேர்களுக்கு வந்தது மல்லாட்டம்
வந்த தலை யாட்டமின்றி வந்தது பல்லாட்டம்

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு
சீர்த்தி பெரும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு !

உண்மையை அறிந்து கொள்ள,இயலாத அறிவை,  பகுத்தறிவு என்கிறார்கள். ,அவர்களுடைய நாக்கு முடை நாக்கு என்கிறார் ,நாக்கு இல்லாத ஊமையர்கள் என்கிறார் .அவர்கள் உண்ணுவது நாறிய பிண்ணாக்கு என்கிறார் .நாறிய பிண்ணாக்கு என்றால் ''மலம்'' என்பதாகும். அவர்கள் நாற்றம் அடித்த மலம் உண்பவருக்கு சமமாகும் என்கிறார் .இதை நான் சொல்லவில்லை அம்பலவர் என்னும் ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்னும் ஆண்டவர் சொன்ன வாக்கு என்கிறார் .அவை செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு என்கிறார் .

கடவுள் பல உண்டு என்பதோ பைத்தியக்  காரத்தனம்!
கடவுள் இல்லை என்பதோ ஏமாற்று வேலை !
கடவுள் ஒருவர் என்பதே உண்மை அறிவு !

இனிமேலும்..பொய்யான கற்பனைக் கதைகள், எதையும் நம்ப வேண்டாம் ,படிக்க வேண்டாம், நேரத்தையும் காலத்தையும்,வீணாக்க வேண்டாம்  என்பதை கண்டிப்புடன் பதிவு செய்துள்ள பாடல் ;--

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட்கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதனால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்ந் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !

என்பதை நம் அறிவில் பதியும்படி தெரியப் படுத்தி உள்ளார் .நாம் கண்டது,..கேட்டது,...கற்றது ,...களித்தது ...உண்டது ....உட்கொண்டது எல்லாமே பொய்யே என்கிறார் .நாம் உண்டது மலம் என்கிறார் ,உலகில் உள்ள பொருள்கள் யாவும் மலத்திற்கு சமமானது என்கிறார்.ஆதலால் உண்மை அறிந்து கொள்ள முடியவில்லை,...இருந்தாலும் பரவாயில்லை-- இனி மேலாவது ''சுத்த சன்மார்க்கம்'' காட்டும் உண்மைப் பொது நெறியைக் கடைபிடித்து உண்மையை அறிந்து,மெய்ப் பொருளான உண்மைக் கடவுளை அறிந்து அன்பு செய்து ''அருள் என்னும் அமுதத்தை ''அருந்தி
{உட் கொண்டு }என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழுங்கள் என்கிறார் வள்ளலார்.

''திருஅருட்பா'' என்னும் அருள்நூல் எனக்கு நல்வழி காட்டியது ! அறிவுக் கண்ணைத் திறந்தது !

நாற்பது ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரியவர் முலமாக --,வள்ளலார் எழுதிய ,---எழுதியது போல் வாழ்ந்து காட்டிய ''திருஅருட்பா ''என்னும் அருள் நூல் கிடைத்தது.அந்த நூல்தான் என்னுடைய அறிவுக் கண்ணை திறந்தது ! இன்று வரைக்கும் யாரும் சொல்லாத,..காணாத,...எழுதாத மாபெரும், உலக உண்மைகளையும்,   அவற்றை இயக்கம் கடவுள் உண்மைகளையும் ஆன்மாக்களின் உண்மைகளையும் ..உயிர்களின் உண்மைகளையும் இயற்கையின் இரகசியங்களையும் ,பல கோடி அண்டங்களையும்,--- ,படைத்து,...காத்து, ...இயக்கிக் கொண்டு இருக்கும் ,அந்த மாபெரும் உண்மைக் கடவுளை ,இந்த உலக மக்களுக்கு ஒளிவு மறைவு இன்றி வெளிப் படுத்திக் காட்டி உள்ளார் ! என்பதை அறிந்தேன் .

உலகில் உள்ள செய்திகள் அனைத்தும் ''திருஅருட்பாவில்'' உள்ளதைக் கண்டு உணர்ந்தேன்,திரு அருட்பாவில் உள்ளது... வேறு எதிலும் [எந்த நூலிலும்} இல்லை என்பதை அறிந்தேன் ,மற்ற, அனைத்து நூல்களிலும் உள்ளது திருஅருட்பாவில் உள்ளன என்பதையும் அறிந்தேன். திரு அருட்பா என்னும் அருள் நூல் இறைவனால் படைக்கப் பட்டது... என்பதை அறிவு தெளிவு பட அறிந்து கொண்டேன் ,'''இறைவனே'''-- வள்ளலார் உருவம் தாங்கி,இந்த உலகிற்கு வந்து உண்மைகளை போதித்து உள்ளார் என்பதை தெரிந்து கொண்டேன் .

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல், ....என்னுடைய அறிவை மேலும் பல மடங்கு மேல் நிலைக்கு கொண்டு சென்றது .அந்தப் பாடலைப் பாருங்கள் .

நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் தன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான் உரைத்த மணிமன்றில் நடம் புரியும் எம்பெருமான்
வரவெதிர்க் கொண்டு அவன் அருளால் வரங்கள் எலாம் பெறவே
தேனுரைக்கும் உளம் இனிக்க எழுகின்றேன் நீவிர்
தெரிந்து அடைந்து என்னுடன் எழுமின் சித்தி பெறலாகும்
ஏன் உரைத்தேன் இரக்கத்தால் எடுத்து உரைத்தேன் கண்டீர்
யான் அடையும் சுகத்தனை நீர்தான் அடைதல் குறித்தே !

உலகில் உள்ள எல்லா உயிர்களும் ,அறிவு படைத்த எல்லா மனித ஜீவர்களும் உண்மையை அறிந்து கொண்டு மேல் நிலைக்கு வரவேண்டும் என்பதால் ,--அனைத்து ஆன்மாக்களையும், உயிர்களையும் படைத்த, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து சொல்லியதை ,தெளிவுபட அறிந்து கொண்டேன்.  

மனிதன் மனிதனாக வாழ்ந்து ,இறைவனுடைய அருளைப் பெற்று பேரின்ப பெருவாழ்வில் எப்படி வாழலாம் என்பதை ''திருஅருட்பா ''வாயிலாக அறிந்து கொண்டேன்.அவர் காட்டிய உண்மையான பாதையில் வாழ்ந்து கொண்டு வருகிறேன்.நான் மட்டும் அல்ல! என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் வள்ளலார் காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ....தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களை நல் வழிக்கு கொண்டு வந்தால்தான், மற்றவர்களை நல்வழிக்கு கொண்டு வரமுடியும் என்பதை உணர்ந்தேன் ....என்னுடைய எண்ணங்களை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் பூர்த்தி செய்து வைத்துள்ளார் என்பதை ,நினைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சியும் ஆனந்தமும் அடைகிறேன்.

எனக்குத் தெரிந்த உண்மைகளை மக்களுக்கு போதிக்க வேண்டும் என்ற பேராசைப் பற்றியே இதை எழுதுகிறேன் .நான் எழுதுவது எல்லாம் என்னுடைய சொந்த கருத்து எதுவும் இல்லை.இச்சிறியவனுக்கு எதுவும் தெரியாது .--அதிகம் படித்தவன் அல்ல ! எனக்கு தெரிந்து உள்ளவைகள் அனைத்தும் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் உள்ளது தான், என்னுடைய அறிவுக்குத் தெரிந்ததை,...உணர்ந்ததை..அறிந்ததை ..மகிழ்ந்ததை உங்கள் முன் வைக்கிறேன்.

உண்மைக் கடவுளைஅறிந்து கொள்வது எப்படி ?

நாம் உண்மைக் கடவுளை தெரிந்து கொளவதற்கு,முக்கிய தடையாக இருப்பவை,எவை என்றால்? --நாம் இதுவரை பற்று வைத்துக் கொண்டு இருந்த சமயங்கள்,...மதங்கள்,...மார்க்கங்கள்,...சாத்திரங்கள்,...சாதிப் பற்றுதல்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,..மற்றும் வருணம் ஆசிரம் முதலிய உலக ஆசாரப் பற்றுதல்களும், மொழி,..இனம்...நாடு...போன்ற  பற்றுதல்களும் ...நம்முடைய ஆன்மாவில் பதிவாகி உள்ளது ,அதைத்தான் வள்ளலார் மாயா திரைகள் என்கிறார்... அந்த திரைகளை நீக்கினால் தான் உண்மையான..''பெய்ப்பொருளை ''...அறியமுடியும் ' --நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களும் ,--நம்முடைய இந்திரியங்கள்,...கரணங்கள்,...ஜீவன் வழியாக சென்று ''ஆன்மாவில்'' பதிவாகிக் கொண்டே இருக்கும்.அன்மாவில் உள்ள பதிவுகளை அகற்றினால் தான்,முழுமையான உண்மை அறிவு விளங்கும் ,

எல்லா பற்றுதல் களையும்,ஆன்மாவில் பதிய வைத்துக் கொண்டு,உண்மையைத் தேடினால் உண்மை கிடைக்காது ..தெரியாது,---விளங்காது . ஒன்றை விட்டால் தான் ஒன்றை பிடிக்க முடியும். ,உலக பற்று உள்ள இடத்தில் உண்மை விளங்காது ...பார்க்க முடியாது,..அறிந்து கொள்ள முடியாது ...ஆன்ம அறிவால் அறிய முடியாது. பற்றிய பற்று அனைத்தும் ,பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்கிறார் .--எதையும் விடாமல் பற்று வைத்து இருந்தவர்கள் என்ன லாபத்தை அடைந்து உள்ளார்கள் .--இறுதியில் மரணம் வருகின்ற போது,அனைத்தையும் விட்டு விட்டுத்தான் போகிறார்கள்.என்பதை, ஒவ்வொரு ஜீவர்களும் அறிந்து கொண்டுதான் உள்ளார்கள்.---

இருந்தாலும் அவர்களால் எதையும் விட முடிவதில்லை.ஏன்?அதுதான் ஆன்மாவில் பற்றியுள்ள பற்றுகள்.ஒரு வீட்டில் உள்ள குப்பைகளை அகற்றினால்தான் அந்த வீடு சுத்தமாக இருக்கும். அதைப் போல் தான் நம்முடைய ஆன்மாவில் பதிவாகி இருக்கும் அசுத்த மாயா குப்பைகளை அகற்ற வேண்டும்.

அதற்கு வள்ளலார் சொல்லும் பதில் !

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலை மேல் ஏற்றி இருக்கின்றார் ,இப்போது எல்லா வற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் தான் இவை !,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர் களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.--இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது பெரிய லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? பெற்றுக் கொள்ள வில்லை ,

நான்அப்படி அந்த சமய, மதங்களில் வைத்திருந்த லஷியம் என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டது என்றாலோ ,--அந்த லஷியம் என்னை தூக்கி விடவில்லை,என்னை இந்த இடத்திற்கு தூக்கி விட்டது யாதெனில்,--அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதை தெரிவித்தார் என்பதை பல பாடல்களில் தெரியப்படுத்தி உள்ளேன்,மேலும் அந்த உண்மைக்கடவுள் ,தெரிவித்தது,என்னவென்றால் ,''உண்மைப் பெருநெறி ஒழுக்கம்''யாதெனில்,

''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக ''...என்றதுதான் என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது .அது யாதெனில் தயவு,தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது என்கிறார்.அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும்,..தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்.இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கிறது.அது அந்த ஒருமையினால் தான் வந்தது,நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் உங்களுக்கும்,எனக்கு கிடைத்தது போல் அனைத்து நன்மைகளும்  அருளும் ,கிடைக்கும் என்கிறார் வள்ளலார்.

ஒருமை என்பது என்ன ?

கடவுள் எல்லா ஜீவன்களிலும் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை அறிவதே ஒருமை என்பதாகும்.அதற்குப் பெயர் ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.ஆன்மநேய ஒருமைப்பாடு என்பதாகும்.

கடவுள் எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக உள்ளார் ,அவரைக் காண்பது எப்படி ? மனிதர்களாக பிறந்தவர்கள் மட்டும் தான் கடவுளைக் காண முடியும்.!என்பது இயற்கையின் நியதி (சட்டம் )..அதற்கு மனிதர்கள் என்ன செய்ய வேண்டும் ?.மனிதர்களால் உருவாக்கிய தத்துவங்கள் என்னும் ஜடமான  உருவங்களை வழிபாடு செயவதாலோ ! ,அவைகளுக்கு அபிஷேகம் ,ஆராதனை செய்து வழிபடுவதாலோ ! கடவுள் பெயரால் வாயில்லாத உயிர்களை பலியிடுவதாலோ, உயிர்பலிக் கொடுத்து புலால் உண்பதாலோ ,கடவுளை நினைத்து ,..தவம் ...தியானம்,..யோகம ,செய்வதாலோ !காடு ,,மலை ..குகைகளில் சென்று தவம் செய்வதாலோ ! இறைவனைக் கண்டு கொள்ள முடியாது ! மேலும் பொருள்களைக் கொடுத்து கடவுளை வசப்படுத்தவோ முடியாது.

கடவுளைப் பற்றிப் போதிக்கும் அருளாலர்களை வணங்க்குவதாலோ!,...பொம்மைக் கடவுள்களை வணங்கு வதாலோ !பொய்யான ஞானிகளை வணங்க்குவதாலோ !..மற்றும் புற ஆசார சங்கற்ப விகற்ப செய்கைகளாலோ! ...மனிதர்களிடம். மனிதர் குரு உபதேசம் பெறுவதாலோ ! கடவுளைக் காணமுடியாது.!-- கடவுளைப் பற்றிய புத்தகங்களைப் படிப்பதாலோ கடவுளைக் காண முடியாது !

நாம் பல கோடி பிறவிகள் எடுத்து,பலகோடி ஆண்டுகளுக்குப் பிறகுதான் ...இந்த உயர்ந்த பிறவியான மனித பிறப்பு கிடைத்துள்ளது...இந்த உலகத்தில் பல பல பிறவிகள் எடுத்து, உருவம் தாங்கி வந்ததில் இருந்து,... பல,பல உயிர்களின் உதவியால் ...துணையால்,..அன்பால் ..தயவால் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை,..நாம் ஒவ்வொருவரும், உணர்ந்து கொள்ள வேண்டும் .ஐந்து பூதங்களின் சேர்க்கையால் பல உடம்பு எடுத்து, பிறந்து பிறந்து,...இறந்து இறந்து ,...இறுதியாக இந்த மனிதப் பிறவிக் கிடைத்து உள்ளது , அப்படி கிடைத்து  வந்த இந்த மனிதப் பிறவியை அப்படியே, கடவுள் ஏற்றுக் கொள்வாரா ? என்றால் ஏற்றுக் கொள்ள மாட்டார் .

நாம் பல பிறவிகள் எடுத்து வாழ்ந்து வந்த போது,..பல உயிர்களின் உதவியால்,...செயல்களால, இந்த மனித தேகம் கிடைத்து உள்ளது .அந்த உதவி செய்த உயிர் வர்கங்களுக்கு, கைம்மாறு என்ன செய்தோம் .என்றால் எதுவும் செய்யவில்லை .நாம் தந்தை தாய் வழியாக வந்துள்ளோம் .அவர்கள் நம்மை பாலூட்டி,தாலாட்டி,உணவு கொடுத்து ,உடை கொடுத்து ,கல்வி கொடுத்து ,வேலை கொடுத்து ,திருமணம் செய்து வைத்து நம்மை உயர்ந்தோனாக்கி,வாழ வழி வகுத்து தந்துள்ளார்கள்.அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்தோம்.

மேலும் பல உயிர்களின் உதவியால் தொடர்பால் செயலால்...உணவு ...உடை...வண்டி ..வாகனம்...பணம் ..பெண் ...வேலை.. வீடு...போன்ற பல பேருடைய உதவியால் வாழ்ந்து கொண்டு வந்து இருக்கிறோம் அவர்களுக்கு என்ன கைம்மாறு செய்து இருக்கிறோம்.இதனுடைய கணக்கு வழக்குகள் நமக்குத் தெரியுமா ?என்றால் தெரியாது ! இவை எல்லாம் நாம் மற்ற உயிர்களிடம் வாங்கிய கடனாகும் .இதை எல்லாம் நாம் திருப்புத் தர வேண்டாமா ?கடன் இல்லாமல் வாழ்ந்தால் தானே ! மகிழ்ச்சியான வாழ்க்கை ! கடன் இல்லாமல் வாழ்வதற்கும்,...வாங்கிய கடனை திருப்பி செலுத்து வதற்கும் ...வைத்த பெயர்தான் ''ஜீவ காருண்யம் ''என்பதாகும்.

ஜீவ காருண்யம் என்பது ! வாங்கிய கடனை திருப்பி செலுத்துவதாகும்.இதைத்தான் வள்ளலார் ''ஜீவ காருண்யமே மோட்ஷ வீட்டின் திறவு கோல் ''என்றார் ....ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்! .உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் !...இதுவே கடவுளை காணும் துவாரம் என்றார் ! வேறு எந்த வழியாலும் கடவுளைக் காண இயலாது என்றார் !
அதற்கு நாம் என்ன செய்யவேண்டும் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல !

மண்ணுலகதிலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை யொரு சிறிதெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறு எனக்கே நின்னருள் வலத்தால்
இசைத்த போது இசைத்த போதெல்லாம்
நண்ணும் அவ்வருத்தம் தவிர்க்க நல்
வரந்தான் நல்குதல் எனக்கு இச்சைஎந்தாய் !

உலகத்தில் உள்ள உயிர்கள் வருத்தமுடன் வாழுகின்றதைப் பார்த்து ,நாம் மட்டும் மகிழ்ச்சியுடன் வாழ்வது நியாயமா ? அவைகளும் நம்முடைய சகோதர உரிமை உடைய ஜீவ தேகமாயிற்றே! எவரும் உபகாரம் செய்யாத தால் தானே அந்த உயிர்கள் துன்பப்டுகிறது ,...இதை நான் கண்களினால் பார்த்தும் ,பிறர் சொல்லிக் காதுகளில் கேட்டும் ....ஒருகணமும் என்னால் சகிக்க முடியாது ,சகிக்க மாட்டேன் ....ஆதலால் இத்துன்பத்தைப் போக்க, எனக்கு அருளும்,பொருளும் அனுமதியும் வழங்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டுகிறார் வள்ளலார் .

என்னுடைய ஆன்மநேய சகோதர உடன் பிறப்புகளின் துன்பத்தைப் போக்குவது தவிர ,..வேறு எதிலும் எனக்கு இச்சை{ஆசை } இல்லை .அதற்குண்டான --,அந்த துன்பத்தைப் போக்குவதற்கு உண்டான,---தவிர்க்கப் படுவதற்குண்டான--- நல்ல வரம் எனக்கு தந்து அருள வேண்டும் .--இதுவே எனது இச்சையாகும் {ஆசையாகும் }என்கிறார் நமது வள்ளல் பெருமானார்.... .என்னே ! அவருடைய பெருங்கருணை !...இந்த உலகத்தில் தோன்றிய எந்த ஒரு ஆன்மீக அருளார்களுக்கும்,இவ்வளவு கருணை உள்ளம் இருந்தது உண்டா ? ...என்பதை சிந்தித்து ...உணர்ந்து பார்க்க வேண்டும்.என்பதை பணிவோடு பதிவு செய்கிறேன்.

வள்ளல் பெருமான் அவர்கள் .எவரிடத்திலும் எந்த உதவியும் பெற்றுக் கொண்டதில்லை .. எந்த உதவியையும் நாடியதில்லை ....இருந்தாலும் அவர்கள்,உலகில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற கருணை உள்ளம் கொண்டவர் ....எவரிடமும் உதவிப்  பெறாதவர், மற்ற உயிர்களுக்கு உதவி செய்யும் போது ...அனைவருடைய உதவியும் பெற்று வாழ்ந்து கொண்டு உள்ள நாம் ..நம்முடைய சகோதர உயிர்கள் துன்பப் படும் போது, உபகாரம் செய்வது நம்முடைய கடமையாக ..உரிமையாக ..உயிர் இரக்கம் கொண்டு செயல்பட வேண்டும் இல்லையா ?....அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும்...அதுவே கடவுள் வழிபாடாகும் .

உயிர் இரக்கம் !

நாம் என்ன செய்ய வேண்டும் உலகில் உள்ள உயிர்களுக்கு உயிர் இரக்கம் என்னும் உபகாரம் செய்ய வேண்டும் ,அன்பு,தயவு,கருணை என்னும் செயல்வடிவில் ---- உயிர்களுக்கு வரும் இடையூறுகளை தவிர்க்க வேண்டும் ,அதுவே ஜீவ காருண்யம் என்பதாகும் .ஜீவ காருண்யம் என்றால் என்ன ?அனைவருக்கும் பொதுவாக உண்டாகுகின்ற ,பசி ,பிணி,தாகம் .இச்சை எளிமை,பயம் ,கொலை ,துன்பம் போன்ற துயரங்களை,உண்மை உணர்வோடு, உணர்ந்து,... போக்கு கின்றவர்கள் கடவுளைக் காண முடியும் ,அவர்களை கடவுள் அன்புடன் ஆசீர்வாதம் செய்து ஏற்றுக் கொள்வார்,

ஜீவகாருண்யம் விளங்கும் போது ;அறிவும் அன்பும் உடனாக விளங்கும் ;அதனால் உபகார சக்தி விளங்கும் ; அந்த உபகார சக்தியால் ,எல்லா நன்மைகளும் தோன்றும்,

ஜீவகாருண்யம் மறையும் போது ;--அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்;அதனால்,உபகார சக்தி மறையும்,உபகார சக்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்,

ஆகலின் புண்ணியம் என்பது ஜீவகாருண்யம் ஒன்றே என்றும் ,பாவம் என்பது  ஜீவகாருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும்.

ஆதலால் ஜீவகாருண்ய ஒழுக்கமே ''சன்மார்க்கம்'' என்பதை அறிய வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும்.அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும்;--இவ்விளக்கத்தையும்--இன்பத்தையும் பலகால் அறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சாத்திய ஞானிகளே ! மேற் குறித்த பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்றும்,!;அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள் என்றும் ! சத்தியமாக அறிய வேண்டும்.

கடவுள் எங்கு உள்ளார் ?அவர் யார் ?என்பதை அறிந்து கொள்ள, இதுவே உண்மையான சிறந்த வழியாகும் .

சன்மார்க்க அன்பர்கள் பசியைப் போக்கும் பணிகளை மட்டும் செய்து கொண்டு இருக்கிறார்கள் ,அதனால் மட்டும் கடவுளைக் காணமுடியாது .அது ஆரம்ப நிலையாகும் , உலகில் உள்ள வாயில்லாத உயிர்கள், கொலை செய்வதை தடுக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயற்சி செய்ய வேண்டும் ...,புலால் உண்பவர்களுக்கு,உண்மையை எடுத்துச் சொல்லி...அவர்களை சன்மார்க்க சங்கத்தில் சேர்க்க வேண்டும் ., அதற்கு மேல் நம்முடைய உடம்பையும் உயிரையும் காப்பாற்ற வேண்டும்.அதற்கு ஒழுக்கம் மிகவும் முக்கியமானதாகும் .இந்திரிய ஒழுக்கம்,...கரண ஒழுக்கம்,...ஜீவ ஒழுக்கம்.... ஆன்ம ஒழுக்கம் ....என்னும் நான்கு ஒழுக்கங்களையும் வள்ளலார் சொன்னபடி கடைபிடிக்க வேண்டும் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

எத்துணையும் பேதம் முறாது எவ்வுயிரும்
தம் உயிர் போல் எண்ணி யுள்ளே
ஒத்து உரிமை யுடைவராய் யுவக்கின்றார்
யாவர் அவர் உளம் தான் சுத்த
சித்துருவாய் யெம்பெருமான் நடம் புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட
என் சிந்தை மிக விழைந்த தாலோ !

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணி ஒருமையுடன் வாழ்கின்றவர் எவரோ ! அவரிடத்தில் கடவுள் உள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை தெரிந்தேன் அவர்களிடம் சென்று அவர் இட்ட பணிகளை செய்திட என்னுடைய சிந்தை மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறது என்கிறார் .-சாதி,..சமயம் ..மதம் ..இனம் ...மொழி ...நாடு ..என்ற எந்த விதமான பேதமும் இல்லாமல் உயிர்களுக்கு உபகாரம் செய்பவர் எவரோ !அவரே ! இறைவனை தன வசமாக வரவழைக்கும் ''வித்தகர்'' என்பாதால் .அவரை நான் பணிகின்றேன் என்கிறார்.வள்ளலார்.

அவர் யார்? அவர்தான் ''திரு அருட்பிரகாச வள்ளலார்'' என்பவராகும்.! கடவுள் அவருடைய உடம்பில்,உயிரில்,ஆன்மாவில்,அருள் ஒளியாக பதிவாகி,நீங்காது நிலைப் பெற்று வாழ்ந்து கொண்டு உள்ளார் !அவர் காட்டிய கொள்கைகளை ,அவர் வாழ்ந்த வாழ்க்கையை,... பின் பற்றி வாழ்ந்தால் கடவுளைக் கட்டாயம் காணலாம்.கடவுளின் தயவு என்னும் கருணையாலே,...பூரண அருளைப் பெற்று வாழ்ந்து மரணத்தை வெல்லலாம்,பேரின்ப பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறலாம் ,கடவுள் நிலை அறிந்து அம்மய மாகலாம் .என்பது உண்மை !

உண்மைக் கடவுள் பிரகாசம் ,அண்டத்திலும் ,பிண்டத்திலும் காரிய ,காரணமாக எப்படி ?விளங்குகிறது என்பதை பார்ப்போம் .

அகம் ,அகப்புறம் ,புறம் ,புறப்புறம் என்கின்ற நான்கு இடத்திலும் ,கடவுள் பிரகாசம் உள்ளது .அதனில் காரியத்தால் உள்ள விபரம் .;---

பிண்டத்தில் (உடம்பில் )அகம் என்பது ஆன்மா ! ஒரு பொருளினது உண்மையை அறிதல் .அதற்கு ஆன்ம அறிவு என்பதாகும் .

பிண்டத்தில் அகப்புறம் என்பது ஜீவன் ! (உயிர் )ஒரு வஸ்துவின் பிரயோஜனத்தை அறிதல்,அதற்கு ஜீவ அறிவு என்பதாகும் .

பிண்டத்தில் புறம் என்பது கரணம், என்பது மனம் (கரணங்களில் முதன்மையானது )ஒரு வஸ்துவின் நாம ரூபத்தையும்,... குண குற்றங்களையும் ,விசாரித்து அறிதல் ,இதற்கு காரணமாகிய மன அறிவு என்பதாகும் .

பிண்டத்தில் புறப்புறம் என்பது கண் முதலிய இந்திரியங்களாகும் .இதற்கு இந்திரிய அறிவு என்பதாகும் .ஒரு பொருளினது நாம ரூப குண குற்றங்களை விசாரியாமல் ,அந்தப் பொருளைக் கண்கள் மூலமாக காணுதல் .இதற்கு இந்திரிய காட்சி ,..இந்திரிய அறிவு என்பதாகும் .

அதேபோல் ஆன்மக்காட்சி,...ஜீவக்காட்சி,...கரணக்காட்சி ,..இந்திரிய காட்சி என்பதாகும் .

அண்டத்தில் உள்ளது !

அண்டத்தில் அகம் என்பது ,அக்கினி ,...அகப்புறம் என்பது சூரியன் ....புறம் என்பது சந்திரன ,....புறப்புறம் என்பது நட்சத்திரங்கள் .

ஆகவே அண்டத்தில் நான்கு இடத்திலும் ,..பிண்டத்தில் நான்கு இடத்திலும் ஆக எட்டு இடத்திலும் ...''கடவுள் பிரகாசம் ''...காரியத்தால் உள்ளது.

காரணத்தால் உள்ள இடம் ;--பிண்டத்தில் புருவமத்தி என்னும் இடத்தில் உள்ளது ...அண்டத்தில் பரமாகாயம் என்னும் இடத்தில் உள்ளது .

காரிய காரணமாக உள்ள இடம் நான்கு ;---பிண்டத்தில் ..விந்து ,..நாதம் மாக செயல்படுகிறது .....அண்டத்தில் ;---மின்னல் ,..இடி ...சர்வ யோனியிடத்தும்,செயல்படுகிறது .

விந்து விளக்கமாகிய மின்னல் இடத்தும் ,நாத விளக்கமாகிய இடியிடத்தும் ;--இதல்லாது '''பாரொடு விண்ணாய்ப் பரந்ததோர் ஜோதி''' என்றும்..''ஜோதியுள் ஜோதி யாயும் '' கடவுளின் உண்மை வெளிப் படுத்திக் கொண்டு உள்ளது .  

 ''கடவுள் ஒருவரே'' என்ற உண்மையும் ,கடவுள் ஒளியாக உள்ளார் என்ற உண்மையும்,அவருடைய குழந்தைகள் தான் நாம் என்பதையும் , மற்றும்  அனைத்து ஜீவன்களும்,இறைவனுடைய குழைந்தைகள் தான், என்ற உண்மை உணர்வும் ,அறிவும் விளங்க வேண்டும் ...அறிவு விளக்கத்தால் தான்.... ...ஒவ்வொரு உடம்பிலும் உயிரிலும் ''உள் ஒளியாக'' இருப்பதுவே !-- அதாவது {ஆன்மா }ஒளியாக இருப்பதுவே கடவுளாகும் .அதற்கு பெயர் ஜீவ ஆன்மாவாகும் ,

ஜீவனில் உள்ள ''உள் ஒளியைப் பார்த்தால்'' கடவுளின் ''பரமானமா'' என்னும்,அருள் ஒளி ..தானேத் தெரியும் .அப்போது இரண்டாக இருந்த ஒளி ஒன்றாகத் தெரியும் அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மய மாதல் என்பதாகும்.இதுவே கடவுளைக் காணும் எளிய வழியாகும் .ஆன்ம ஒழுக்கமும், ஜீவ காருண்யமும்,பர உபகாரமும் ,சத் விசாரமும் இருந்தால் கடவுளைக் காண முடியும் .இதுவே உண்மை,உண்மை,உண்மை,... சத்தியம்,சத்தியம்,சத்தியம்,

முயற்சி செய்தால் ''சுத்த சன்மார்க்கம் '' என்னும் ''அருள் ஞான,ஆன்மீக வழி'' கிடைக்கும் அருள் சுரக்கும் அதன் வழியாக ஆனந்தம் பெருகும். ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம்  அடையும் .இதுவே வள்ளலார் காட்டிய,சுத்த சன்மார்க்கம் என்னும் ஞானத்தில் ஞானம் என்னும்  மார்க்கமாகும் --திருநெறி ஒன்றே சுத்த சன்மார்க்கப் பொது நெறியாகும்.

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்
பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே அவற்றில்
புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்
செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்
சித்தி எல்லாம் இத்தினமே சத்தியஞ் சேர்ந்திடுமே!

மேலே கண்ட பாடலில் உள்ளபடி ;--பொய்யான சமயம் ,மதம்,ஒன்றையும் பற்று வைக்காமல் ,நம்முடைய உடம்பில் இறைவன் இருக்கும் இடமான தலைப் பாகத்தில் (ஆன்மா இயங்கும் இடம் ) அதாவது புருவ மத்தியில் உள்ள  ,சிற்சபை நடத்தைத் தெரிந்து இடைவிடாது மனதை அங்கு இடைவிடாது பதிய வைத்து ....துதித்துக் கொண்டும் தொடர்பு கொண்டும்  இருங்கள்---,உங்களுக்கு எல்லாச் சித்திகளும், இத்தினமே சத்தியம் கிடைக்கும் என்கிறார்....இதைவிட தெளிவாக வேறு எப்படி சொல்ல முடியும் ,என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

கடவுள் உள்ள இடம்; நம் தலைப்பாகத்தின் மத்தியில் சிற்சபை என்னும் பீடத்தில் ,உள் ஒளியாக உள்ளார் என்பதை விளக்க .அதன் விளக்கமாக காட்டப் பட்டு உள்ளதுதான்,... வடலூரில் உள்ள ''சத்திய ஞான'' சபையாகும் .அங்கே ''கடவுள் ஒளியாக உள்ளார்''என்பதைக் குறிக்கும் வகையில்,அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகளை  நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது .''சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்,சன்மார்க்க சித்தியை யான்  பெற்றுக் கொண்டனன்''.என்பார் ''சிற்சபையும் பொற்சபையும் சொந்தம் எனது ஆச்சு ..தேவர்களும் மூவர்களும் பேசுவது எனது பேச்சு '' என்றும் .'''அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு'' என்று ஆனந்த களிப்பு கொண்டு நம்மை எல்லாம் அழைக்கின்றார் வள்ளல் பெருமான அவர்கள் ..

வடலுருக்கு வாருங்கள் ! ஜோதியின் சுடரைப் பாருங்கள் ! அருளைப் பெறுங்கள் ! மரணத்தை வெல்லுங்கள்.பேர் இன்பத்துடன் ஆனந்தமாக வாழுங்கள் .

அன்புடன் -ஆன்மநேயன்.ஈரோடு கதிர்வேல் 

செவ்வாய், 24 மார்ச், 2015

வள்ளல்பெருமானுக்கு ஏற்பட்ட நடுக்கம் !

உயிர்களைக் கொல்லும்போது ஏற்பட்ட நடுக்கம் !


துண்ணெனக் கொடியோர் பிற உயிர் கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிற உயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணினில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
என் தந்தை நின் திரு உளம் அறியும்.

உலகினில் உயிர்களைக் கொல்லும் கொடியர்களைப் பார்த்த போதெல்லாம் பயந்தேன் என்கின்றார் வள்ளல்பெருமான் .

வாய் பேசாத உயிர்களைப் பதைக்க,பதைக்க அதன் உயிர்களை அழிக்கும் போது,அதைக் கண்ணால் கண்ட காலத்திலும் என் உள்ளமும், உயிரும், மனமும்,.ஆன்மாவும்,உடம்பும்  பதைத்தது  என்கின்றார்.

''மண்ணினில் தூண்டிலும் கண்ணி வகைகளும் கண்ட காலத்திலும் பயந்தேன்''என்றும் ''உயிர்களைக் காவு கொள்ளும் சிறு தெய்வங்களின் கோயில்களைக் கண்ட போதெல்லாம் அஞ்சினேன் ''என்றும் நம் வள்ளல் பெருமானார் ஏன் ? தமது திருவருட்பாவில் அருளியுள்ளார் .

ஆடு மாடுகள் ,பன்றி, கோழி மற்றும் மீன் பிடிப்போர் தூண்டிலில் புழுவை வைத்து நீரில் வீசுவர் .அந்தப் புழுவும்,மற்ற உயிர்களும்,உயிர்ப் போகும் போது வலியால் துடித்துக் கொண்டு இருக்கும்,

அதேபோல் அதன் துன்பத்தை உணராத மீன் வகைகளும் அதை உணவாகப் புசிக்க வந்து தூண்டிலில் மாட்டி அந்தப் புழுவைப் போலவே துடிதுடித்து உயிரை இழக்கும்.இதேபோல் மற்ற உயிர்களும் மீன்களும்  படும் துன்பத்தைப் பாராது மனிதன் அதை உணவாகப் புசிக்கின்றானே இவன் கதி என்னவாகப் போகிறதோ என்றே வள்ளல் பெருமான் அஞ்சி வேதனைப்படுகின்றார் .

பொதுவாக நமக்கு துன்பம் நேரும் போதெல்லாம் இவரால்தான் எனக்கு துன்பம் வந்தது ,அவர்தான் அந்த துன்பத்திற்குக் காரணம் என்று பிறர் மீது குற்றம் சுமத்துகிறோம்.

ஆனால் நம்மால் பிறர் துன்பத்தை அனுபவிக்கும் போது அதை நாம் உணர்ந்து பார்ப்பது இல்லை.''வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை அறுப்பான் ''என்பது பழ மொழி . இதை பொதுவாக பிறர் துன்பபடும் போது நாம் கூறுவது.ஆனால் நமக்கு துன்பம் வரும்போது இதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை.

இதைத்தான் நம் வள்ளுவப் பெருந்தகை ''இன்னா செய்யாமை ''என்ற அதிகாரத்தில் அருளியுள்ளார் .

நோயெல்லாம் நோய் செய்தார் மீதாம் நோய் செய்யார்
நோயின்மை வேண்டு பவர் ....என்பார் .

அதாவது ''பிறர் உயிர்களுக்கு துன்பம் செய்பவரையே துன்பம் வந்தடையும் .ஆதலால் துன்பம் இல்லாமல் வாழ விரும்புவோர் எவ்வுயிர்க்கும் துன்பம் செய்தல் கூடாது ''என்பதே அதன் பொருள்.

தாயின் பெருமையும் பசி தவிர்த்தலின் முக்கியத் தேவையும் எடுத்துரைத்த வள்ளுவப் பெருந்தகையும் ''வினைத்தூய்மை'' என்ற அதிகாரத்தில் கீழ் கண்டவாறு அருளி உள்ளார் .

ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை .....என்கின்றார் .

அதாவது பெற்றவள் பசியோடு இருந்தாலும் கூட தூய்மை இல்லாத செயல்கள் என்று வரை அறுத்துள்ள செயல்களை செய்யக் கூடாது .

நம் வள்ளல்பெருமான் ,வள்ளுவர் போன்ற உண்மை ஞானிகளிடம் உள்ள சிறப்புத் தன்மையே இதுதான் .முன் சொன்ன அருட்பாவும்,திருக்குறளும் ,துன்பம் வருவதற்கான காரணம் பற்றித் தெளிவாக விளக்கி உள்ளார்கள்.

நாம் செய்த உயிர்க் கொலைதான் எல்லா வினைகளுக்கும் முதற் காரணமாக இருக்கின்றது .அந்த வினையை நீக்குவதற்கு உண்டான வழியையும் அருளி உள்ளார்கள்.

மனிததேகம் !

அன்பு ஆன்மநேய உள்ளங்களே ! மனித தேகம் உயர்ந்த அறிவுள்ள பெறற்கரிய தேகம்.ஆனால் வாழ்நாளோ நீர்க்குமிழி போலத்தான் உள்ளது.காட்டில் வாழ்கின்ற துஷ்ட மிருகங்கள் எல்லாம் தன குணத்தை எப்போதும் மாற்றிக் கொள்ள முடியாது .அது கடைசிவரை அப்படித்தான் இருக்கும்.

ஏன் என்றால் அவற்றிற்கு அறிவு என்பது மறைக்கப் பட்டு உள்ளன .விலங்குப் போட்டு  கட்டி வைப்பதுபோல் அறிவு கட்டி வைக்கப்பட்டுள்ளது .அவற்றிற்கு உள் நோக்கிப் பார்க்கும் அறிவுத் தன்மை இல்லை.

ஆனால் மனிதனுக்கு மட்டுமே உள்முகமாகப் பார்த்து தன்னைத் திருத்திக் கொள்ளும் அறிவும்,சுதந்திரமும் கடவுளால் கொடுக்கப் பட்டுள்ளது .எனவே நாம் மனதாலும்,வாக்காலும்,தேகத்தாலும் பிற உயிர்களுக்கு துன்பம் கொடுக்காமல் வாழ்ந்து இன்பம் அடைவோம்.

உலகத்தில் எல்லாவற்றிற்கும் மன்னிப்பு உண்டு .உயிர்க் கொலை செய்வதற்கும் அதன் புலாலை உண்பவர்களுக்கும் மன்னிப்பு என்பதே கிடையாது.

இதுவரையில் தெரியாமல் அறியாமல் பழக்கத்தினால் செய்து இருந்தாலும் இனிமேல் செய்யாதீர்கள் .ஆண்டவர் மன்னிப்பார்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
      

ஞாயிறு, 22 மார்ச், 2015

வல்லவன் பூட்டிய பூட்டு !

எல்லோரும் நல்லவரே !

உலகில் தோன்றிய அருளாளர்கள், சித்தர்கள்,  ஞானிகள்  மதவாதிகள், சமயவாதிகள், .அனைவரும், தங்களுக்காகவும்,மக்களுக்காகவும்,மக்களை நல் வழிப்படுத்த வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான், ஆன்மீக கருத்துக்களை பாடல்களாகவும் கதைகளாகவும், எழுதி வைத்துள்ளார்கள், உபதேசங்களாக சொல்லியும்  உள்ளார்கள்.

அவர்கள் இறைவனைப் பற்றியும்,ஆன்மாவைப் பற்றியும், உயிர்களைப் பற்றியும் ,உடம்பைப் பற்றியும்,அண்டங்களைப் பற்றியும்,அண்டங்களில் உள்ள  கிரகங்களைப் பற்றியும்,அணுக்களைப் பற்றியும்,மாயைப் பற்றியும் பஞ்ச பூதங்களைப் பற்றியும் ,அவைகளின் செயல்பாடுகள் பற்றியும் சொல்லி உள்ளார்கள்.

இந்த பஞ்ச பூத உலகத்தைப் பற்றியும்,,உலகத்திற்கு வந்துள்ள ஆன்மாக்கள் பற்றியும்,உயிர்களைப் பற்றியும் ,உடம்பைப் பற்றியும் .இறுதி வாழ்க்கையான மனித வாழ்க்கைப் பற்றியும் மனிதனைக் கடந்த மனிதனும் தெய்வமாகலாம் என்பதைப் பற்றி எல்லாம் சொல்லி உள்ளார்கள்.

ஆனால் அவர்கள் சொல்லிய வழிமுறைகள் யாவும் முன்னுக்குப்பின் முரணாகத் தவறாகப் போய் விட்டது .,

அவர்களின் குற்றம் அல்ல .அவர்கள் அறிந்து கொண்டதும்,தெரிந்து கொண்டதும் அவ்வளவுதான் .அவர்களுக்கு முழுமையான கடவுளின் ''அருள் பூரணம்''   கிடைக்கவில்லை.

கிடைத்த அருளே போதுமானது என்று உபதேசம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கு தெரிந்த சில உண்மைகளை கதைகளாகவும்,கற்பனை களாகவும்,மக்களுக்குப் படைத்து விட்டார்கள்.

சித்தர்கள் ஒருபக்கம் மக்களை திட்டித் தீர்த்து, சித்தம் போக்கு சிவம் போக்கு என்று ஒப்பாரி வைத்து ஒதுங்கிக் கொண்டார்கள்.

அவர்களைப் பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்  !

அறங்குலவு தோழி இங்கே நீ யுரைத்த வார்த்தை
அறிவறியார் வார்த்தை எதனால் எனில் இம்மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் யுழலும்
மறங்குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர் அங்கு அவர்பால்
இறங்களில் என் பேசுதலால் என் பயனோ நடஞ் செய்
இறைவரடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

வேத வியாசர் !

எல்லா ஞானிகளையும் விட ''வேதவியாசர்'' மிகவும் உயர்ந்தவர் முழுமையான அருளைப் பெற்றவர்.அவருக்கு எல்லா அண்ட ரகசியங்களும்,பிண்ட ரகசியங்களும் தெரிந்துள்ளன.மேலும் உள்ள எல்லா  ரகசிய உண்மைகளும் தெரிந்துள்ளன,அவர் எழுதிய மகாபாரதம்,உடம்பின் தத்துவத்தையும் உயிரின் தத்துவத்தையும் ,ஆன்மாவின் தத்துவத்தையும் கடவுளின் உண்மை தத்துவத்தையும் வெளிப் படுத்தி உள்ளன.

ஆனால் உண்மையான கடவுள் யார் ? என்பதை அவரால் தெரிந்து கொள்ள முடியவில்லை.பரமாத்மா என்றும்,சிவன் என்றும்,கிருஷ்ணன் என்றும் கிருஷ்ண பரமாத்மா என்றும் பெயர் வைத்துள்ளார். தத்துவங்களையும் ,அதன் வல்லமையும் ஆற்றலையும் தெரிந்து கொண்டுள்ளார்.

கற்பனைக் கதைகளாகச்  சொல்லாமல், உண்மையை மக்களுக்கு நேரடியாகச் சொல்லி இருந்தால் இவ்வளவு குழப்பம் வந்து இருக்காது.அவர் எல்லா வற்றையும் மறைத்து விட்டார் .

அவருக்கு பின்னாடி வந்தவர்களான,வால்மீகிமுனிவர் ,மேலும்  ஏசுபிரான் ,நபிகள்நாயகம் அவர்கள் , புத்தர்,போன்ற அருளாளர்கள் அனைவரும் மதத் தலைவர்களாகி விட்டார்கள்.பதத் தலைவர்களாகி விட்டார்கள்..''மதம் என்ற பேய்'' மக்களை பிடித்துக் கொண்டு ஆடாத ஆட்டங்கள் ஆடி மக்களை வேற்றுமைப் படுத்தி அழித்துக் கொண்டு உள்ளன

அதற்கு வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

பேருற்ற உலகில் உறு சமய மத நெறி எல்லாம்
பேய்ப் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதம் உற்று அங்கும் இங்கும்
போருற்று இரந்து.வீண் போயினார் இன்னும் வீண்
போகாத படி விரைந்து
புனித முறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏறுற்ற சுக நிலை அடைந்திடப் புரிதி நீ
என்பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டனன் மனத்தில் வேறு
எண்ணற்க என்ற குருவே .
நீருற்ற வொள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க் குணானந்த பரநாந்த வரை யோங்கும்
நீதி நடராஜ பதியே !......என விளக்கம் தருகின்றார் .

பேருபதேசம் !

வேத வியாசரைப் பற்றி வள்ளலார் மிகத் தெளிவாகச் சொல்லி உள்ளார்.

இதுவரையில் நாம் நாமும் பார்த்தும்,கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம்,ஏன் என்றால் அவைகளின் ஒன்றிலாவது
குழுஉக்குறி யன்னியில் தெய்வத்தை இன்னபடி என்றும்,தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் ,கொஞ்சமேனும் புறங் கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.

அணுமாத்திரமேனும் தெரிவிக்காமல்,பிண்ட லஷ்னத்தை அண்டத்தில் காட்டினார்கள்.

யாதெனில் ;--கைலாசபதி என்றும்,வைகுண்டபதி என்றும்,சத்திய லோகாதிபதி என்றும் பெயரிட்டு .இடம்,வாகனம்,ஆயுதம்,வடிவம்,ரூபம் முதலியவையும் ,ஒரு மனிதனுக்கு அமைப்பதுபோல் அமைத்து உண்மையாக இருப்பதாகவே  .
சொல்லி உருவங்களாகப் படைத்து இருக்கின்றார்கள்.

தெய்வத்திற்குக் கை ,கால்,மூக்கு ,வாய்,காது,தலை (போன்ற) முதலிய உறுப்புகள் இருக்குமா ? என்று கேட்பவர்களுக்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள் .

பெரியவர்கள் என்று பெயர் வைத்துள்ளவர்கள் !

சரி.. வேத வியாசர்தான் அப்படி உண்மையை மறைத்து சொல்லி இருந்தாலும்,அவர்கள் காட்டிய  கொள்கைகளைப் பின்பற்றி வாழ்ந்த,பெரியவர்கள் என்னும்  மகா புருஷர்கள் ,இஃது உண்மையாக இருப்பதாகவே  ---முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயர் இட்டுக் கொண்டு இருந்தவர்களும்,உண்மையை அறியாது அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள்.

அவர்களாவது இதுதான் உண்மை என்று அறிந்து அதன் உட்பொருளை மக்களுக்கு தெளிவுப் படுத்தி இருக்கலாம் .அவர்களும் அப்படி எந்த உண்மையும் தெரியப் படுத்த வில்லை.

மறைத்தவன் ஓர் வல்லவன் ! .

''ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன் ,அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை என்கின்றார் வள்ளல்பெருமான் ''.

உண்மையை மறைத்தவன் சாதாரண ஆள் இல்லை,மற்ற அருளாளர்களை விட , அவர் உயர்ந்த அருள் ஆற்றல் பெற்றவர் ,அவன் பெரிய வல்லவன் அவன் தான் ''வேத வியாசர்'' என்று சொல்லாமல்,.. பெரிய வல்லவன் என்று  வள்ளல்பெருமான் அவரை உயர்த்தி பேசுகின்றார்.

அவன் பூட்டிய ( மறைத்த ) பூட்டை அந்த பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை.இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை,என்கின்றார் அதன் அர்த்தம் என்னவென்றால் நான் அந்த பூட்டை திறக்கவில்லை .திறந்தால் மறுபடியும் பூட்டைப் போட்டு பூட்டி விடுவார்கள்.ஆதலால் அந்த பூட்டை உடைத்து எரிந்து விட்டேன் என்கின்றார் ..
இனிமேல் உலக மக்களுக்கு கடவுளின் உண்மையும்,ஆன்மாவின்  உண்மையும்   வெளிப்படையாக சொல்லுவேன்.என்பது பொருளாகும்.ஆதலால் வேதம் ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,போன்ற கலைகள் எதிலும் லஷியம் வைக்காதீர்கள், எதனையும்  நம்பாதீர்கள்,''அத்தனையும் புளுகு மூட்டைகள்'' என்று வெளிப்படையாக சொல்லி உள்ளார்.

வேதம் ஆகமங்கள்  என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதம் ஆகமத்தின் விளைவை அறியீர் ---சூதாகச்
சொன்னவலால் உண்மை வெளி தோன்ற உரைத்தது இல்லை
என்ன பயனோ இவை .

இதுபோல் சைவம்,வைணவம்,முதலிய சமயங்களிலும், வேதாந்தம், சித்தாந்தம் முதலிய மதங்களிலும்,;லஷியம் வைக்க வேண்டாம் என்கின்றார். ஏன் ? என்றால் அவற்றில் தெய்வத்தைப் பற்றி தத்துவங்களாகக் குறித்து இருக்கின்றதே அன்றிப் வெளிப்படையாக சொல்லவில்லை.நான் சொல்லியும் நீங்கள் கேட்காமல் அந்த வழியிலே செல்வீர்களானால் .

அவ்வாறு பயிலுவோமானால் நமக்குக் காலம் இல்லை.ஆதலால் அவற்றில் லஷியம் வைக்க வேண்டாம்.

ஏன்எனில் அவைகளிலும் --அச்சமய மதங்களிலும்,--அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே அல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆன்மா அனுபவத்தைப் பெற்றுக் கொள்ளுகிறதற்கு,
கூடாது, முடியாது..ஏன் எனில் அவற்றில் உள்ளதை அறிந்து,புரிந்து,தெரிந்து கொள்வதற்கு நமக்குக் காலம் இல்லை.

மேலும் இவைகளுக்கு எல்லாம் சாஷி நானே இருக்கின்றேன் .நான் உங்களைப்போல் முதலில் சைவ சமயத்தில் லஷியம் வைத்துக் கொண்டு இருந்தது இவ்வளவு என்று அளவு சொல்லமுடியாது..அது என்னுடன் இருந்த பட்டினத்துச் சுவாமிகளுக்கும்,வேலாயுதம் அவர்களுக்கும் இன்னும் சிலருக்கும் தெரியும்.அந்த லஷியம் எப்படி போய்ப்  விட்டது ? பார்த்தீர்களா ?

அப்படி லஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியது இல்லை.நான் முதலில் பாடி இருக்கிற திருஅருட்பாவில் அடங்கிய இருக்கின்ற பக்திப் பாடல்களையும்,மற்றவர்கள் பாடி இருகின்ற பக்திப் பாடல்களையும் சபைக்குக் கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும் என்கின்றார்.

என்னவென்று சாட்சி சொல்லும் .மற்ற அருளாளர்கள் பாடிய பாடல்களை காட்டிலும்,வள்ளல்பெருமான் பாடியப் பாடல்கள் உயர்ந்த அருள் ஆற்றல் மிகுந்த கருத்து  ஆழம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.என்கின்றார் . .
ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போது இருந்தது என்றால் அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது என்கின்றார் .

அற்ப அறிவு என்பது வள்ளல்பெருமானுக்கு இல்லை !

வள்ளல்பெருமான் நடித்த நாடகம் !

வள்ளல் பெருமானுக்கு அற்ப அறிவு என்பது இல்லை.அவருக்கு ஐந்து மாதக் குழந்தையாக இருக்கும் போதே தில்லை சிதம்பர ரகசியத்தை திரை விளக்கி காட்டியபோதே ,இறைவன் எல்லா வற்றையும் வெட்டவெளியாக காட்டிவிட்டார் .

மக்கள் சாதி ,சமய,மதங்களிலே பற்று வைத்துள்ளார்கள்.அவர்களை தம் வசம் மாற்ற வேண்டுமானால் ,அவர்கள் பின் பற்றிய தெய்வங்களைப் பற்றியும் பக்தியைப் பற்றியும்,தாமும் அவர்களைப்  போலவே பக்தியில் உள்ளவர் போல் காட்டி,..வள்ளலார் மக்களை தன்வசமாக மாற்றிக் கொண்டார் .

அவர் நடித்த நாடகத்தின் ஒரு பகுதிதான், அவர் எழுதிய முதல் ஐந்து திருமுறைகளாகும். அவர் எழுதிய ஐந்து முறைகளும் அற்ப அறிவாக இருந்தபோது எழுதியது என்று ,அவர் எழுதியதையே குற்றம் என்றும் சொல்லும் அளவிற்கு தன்னை தாழ்த்திக் கொண்டு மக்களுக்கு சொல்லுகின்றார் என்றால் அவருடைய அருள் ஆற்றலை என்னவென்று சொல்லுவது.பெருந்தன்மையை என்னவென்று சொல்லுவது.

எப்படியாவது மக்களுக்கு உண்மையை உணர்த்த வேண்டும் என்ற பெருங் கருணையினால் அப்படி சொல்லி உள்ளார்.

மேலும் .இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார் ,.இப்போது எல்லா வற்றையும் விட்டு  விட்டதினால் வந்த லாபம் இது.,
ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள் .

இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்ற ஒரு கேள்வியை எழுப்பி உள்ளார் . எவரும் பெற்றுக் கொள்ளவில்லை என்று திரு அருட்பாவில் விளக்கம் தந்துள்ளார் ,

நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்து இருந்த லட்சியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டது என்றாலோ ,அந்த லஷியம் தூக்கி விடவில்லை..

என்னை இந்த இடத்திற்குத் தூக்கி விட்டது யாதெனில் ;-அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தார் என்று சத்தியப் பெரு விண்ணப்பத்திலும் ,''எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததே அன்றித தலைவா வேறு எண்ணியது உண்டோ ''எனவும்.''தேடியது உண்டு நின் திருஉரு உண்மை என்னும் தொடக்கம் உடைய பதிகத்திலும்,விண்ணப்பித்து இருக்கின்றேன்.

மேலும் ஆண்டவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில் .''கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெருக "'என்றதுதான் .என்னை ஏறா நிலைமிசை ஏற்றிவிட்டது.அது யாதெனில் ,தயவு,..தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

கருணை ஒன்றினால் மட்டுமே கடவுளைக் காணமுடியும்,அவருடைய அருளைப் பெற முடியும் என்பதை மிகத் தெளிவாக வள்ளல்பெருமான் விளக்கி உள்ளார்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே !

செயற்கை இல்லாமல் இயற்கையான கருணை எங்கு இருக்கின்றதோ அங்கே இறைவன் நிலைப் பெற்று இருப்பான் என்பதை அருட்பெருஞ் ஜோதி அகவலில் தெரியப் படுத்தி உள்ளார்.

அந்த கருணைக்கு தயவு வரவேண்டும் .அந்த தயவுக்கு ஒருமை வரவேண்டும்.( ஒருமை என்பது ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை என்பதாகும் ) அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும்.தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம் .

இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கின்றது ,அது அந்த ஒருமையினாலே தான் வந்தது .நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள்..மேலும் ஒருமை என்பது எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் எண்ணுவதாகும் .

ஆதலால் எந்த உயிர்களையும் கொலை செய்வதோ அதன் புலாலை உண்பதோ பெரியப் பாவமாகும் ,பெரிய குற்றமாகும் என்கின்றார் வள்ளல்பெருமான்.கொலையும் புலையும் செய்பவர்கள் இறைவனை நினைக்கவோ வழிபடவோ தகுதி அற்றவர்கள் .கடவுள் அவர்களை ஏற்றுக் கொள்ள மாட்டார் என்பதை மிக அழுத்தமாக பதிவு செய்துள்ளார் .

மக்களை திருத்த வள்ளலார் சொல்லியது.!

என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத் தனமாய் எப்படி இருந்தாலும்.

அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்

மிரட்டிச் சொல்லுவேன்

தெண்டன் விழுந்து சொல்லுவேன் .

அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன் .

அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன் .

இப்படி எந்த விதத்தில் ஆவது, நல்ல வழிக்கு வரச்செய்து விடுவேன்.நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.என்று சன்மார்க்க அன்பர்களுக்கு கட்டளை பிறப்பிக்கின்றார் .

நான் இல்லாமல் இந்த ஜனங்கள் ஷணநேரம் இருக்க மாட்டார்கள்.என்று ஆண்டவர் இடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன்,அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திரம் அல்ல .உலகத்தில் இருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்.

ஏனெனில் எல்லவரும் சகோதரர்கள் ஆதலாலும்,இயற்கை உண்மை ஏக தேசங்கள் ஆதலாலும்,ஆன்மநேய ஒருமைப் பாட்டுரிமை வைத்துக் கொண்டு இருக்கின்றேன் என்கின்றார்.

ஆன்மா!

இந்த உலக மாந்தர்கள் அனைவரும் இறைவனின் குழந்தைகள் என்பதை மறந்து விட்டார்கள் .இயற்கை உண்மையின் ஏகதேசம் என்கின்றார் வள்ளல்பெருமான்.இயற்கை உண்மை என்பது ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்'' அந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் குழந்தைகள் தான் ,ஆன்மா என்பதாகும்.

ஆன்மாக்கள் இந்த உலகத்தில்,அதாவது அண்டத்தில்,வந்து வாழ்வதற்குகாகவே இந்த உலகத்தை இறைவன் படைத்து இருக்கின்றார்.ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ வேண்டுமானால் தனித்து வாழாது.உயிர் எடுத்து,உடம்பு எடுத்துதான் வாழ வேண்டும்.அதுதான் இயற்கையின் சட்டமாகும்.

உயிரையும் உடம்பையும் கொடுப்பது மாயை ,மாமாயை,பெருமாயை, என்னும்,அதிகாரத் தத்துவங்களாகும்.அந்த தத்துவங்கள் அளவில்லா ஆற்றல் படைத்தது.

இயற்கை உண்மை என்னும் கடவுளின் சட்டப்படி முதல் பிறப்பான தாவரங்கள் தொடங்கி ,ஊர்வன, பறப்பன,நடப்பன,தேவர்,அசுரர்,மனிதர் என்ற ஏழு பிறவிகளுக்கு உண்டான,ஆன்மாவிற்கு  உயிரும் உடம்பும் கொடுத்துக் கொண்டே இருக்கும்.

மனித தேகம் கிடைக்கும் போது மட்டும் தான் ,ஆன்மா தன்னை உணர்ந்து கொள்ளும் அறிவும் அருளும் வெளிப்படும்.மனித தேகத்திற்கு முன் ஆன்மாவிற்கு அறிவும் அருளும் வெளிப்படாது.மனமும் புத்தியும் மட்டுமே செயல்படும்

அன்பாலும் அறிவாலும்,கருணையாலும் அருளாலும் மனதை மாற்றத் தெரிந்தவன் என்பதால் மனிதன் எனற பெயர் ,கொடுப்பப் பட்டுள்ளன.

நமது சமய ,மத வாதிகள் .ஆன்மா அழியாது ,உடம்பும் உயிரும் அழிந்துவிடும் ஆன்மாவிற்கு பந்தமோ ,பாசமோ,இல்லை.நாம் செய்யும் காரியங்களால் உண்டாகும் வினைப் பயன்கள் எல்லாம்.ஆன்மாவில் பதியாது ..உடம்பிலும் உயிரிலும் தான் பதிவாகும்.

நாம் செய்யும் வழிபாட்டாலும்,தோத்திரத்தாலும்,விரதத்தாலும்,புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வந்தால்,வினைப்பயன்களை நீக்கிக் கொண்டு,மரணம் அடைந்தால், சொர்க்கம்,வைகுண்டம்,கைலாயம்,போன்ற மோட்சத்திற்கு சென்று  இன்பங்களைப் பெறலாம் என்று சொல்லி வைத்து விட்டார்கள்.

சமய,மதங்கள் சொல்லிய இந்த பொய்யான புழுகுக் கொள்கைகளை வள்ளல்பெருமான் ஏற்றுக் கொள்ளவில்லை...அவை உண்மைக்கு நேர் விரோதமானது.கடவுளின் உண்மையான,தோற்றத்தையும்,அதன்  கொள்கைகளை எல்லாம் மண்ணைப் போட்டு மறைத்து வைத்து விட்டார்கள் என்கின்றார் வள்ளலார் . .அதை மறைத்தவன் தான் ஒரு வல்லவன் என்கின்றார் .

அவன் படைத்த பொய்யான கருத்துக்களையும்,பொய்யான தெய்வங்களையும்,உண்மை யென்று நம்பி மக்கள் பின் பற்றி வருகிறார்கள்.ஆதலால் நாம் அடைய வேண்டுவது முடிவான் ஆன்ம லாபமாகிய சிவா அனுபவமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அனுபவமாகும் .

இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க ,நரக விசாரம் இல்லை.சுவர்க்க ,நரக விசாரம் உள்ளவர்கள் தங்கள் தங்கள் கருத்தின் படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று முடிவில் தடைப்பட்டுத் மீண்டும் கருணை நன்முயர்ச்சி எடுத்துக் கொண்டு பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள் .அஃது அருமை.ஆதலால் நான் சொல்லுவதை தயவு செய்து கேளுங்கள் என்கின்றார் .

இத்தருணம் ஆண்டவர் எல்லா வற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு ,முடிவான இன்பா அனுபவத்திற்குச் சாதக சகாயகமான திருவருள் மகா வாக்கியத் திருமந்திரத்தை ( தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகா மந்திரத்தை ) எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய் அறிவின்கண் அனுவத்து எழுந்த, உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை,நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன் ,குறிப்பிக்கின்றேன் ,குறிப்பிப்பேன் .என்று மக்களுக்கு தெளிவுபட தெரிவித்து உள்ளார் .

மேலும் நமது ஆண்டவர கட்டளை இட்டது யாதெனில் ;--நமக்கு முன் சாதனம் கருணை ஆனதினாலே ஆண்டவர் முதற் சாதனமாக ,

அருட்பெருஞ்ஜோதி        அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை     அருட்பெருஞ்ஜோதி

என்னும் திரு மந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார் .
தயவு,கருணை ,அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும் என்கின்றார் .ஆதலால் பெரிய தயவு உடைய அறிவே பூரண இன்பமாம் ,--

அது ஒப்பற்ற பெருந் தயவு உடைய பேரறிவேயாம் .இஃது வாச்சியார்த்தம் .இவ்வண்ணம் ,சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெறுவதற்குத் தடை இல்லை.''சந்ததமும் வேத மொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும் '' என்னும் பிரமாணத்தால் உணர்க .

அதாவது வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம்,போன்ற எதனிலும் பற்றுதல் வைக்க வேண்டாம். அப்படிமீறியும்  பற்று வைத்தால் உங்களுடைய வாழ்க்கையே நீங்களே அழித்துக் கொள்வதாகும்.என்று வெளிப்படையாகச் சொல்லுகின்றார்.

மேலும், இதுகாறும் தெயவத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது ,அசுத்த மாயா காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.

சுத்த மாயா காரிகளாகிய தெரிந்த பெரியோரும் இல்லை.

சுத்த சன்மார்க்கமும் இல்லை.சுத்த சன்மார்க்கம் இருந்து இருந்தால் ,அனுபவித்து அறியாத அனுபவமும்,கேட்டறியாத கேள்வியும் கேட்டு இருப்போம்.மேலும்,இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்து இருப்பார்கள் .ஆதலால் கேட்டு அறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே,ஆதலால் இத்தருணம் --இக்காலமே சன்மார்க்க காலம். 


    .

 .      .

ஆரம்பம்.வாழ்க்கை.முடிவு  என்ன என்பதை முழுமையாகத் அறிந்துகொள்ளவில்லை..அவரவர்களுக்குத் தெரிந்தை சொல்லிவிட்டு மாண்டு போய்விட்டார்கள்.சமாதி அடைந்துவிட்டார்கள்.அவர்கள் சொல்லியதை நம்பி வாழ்ந்தமக்களும் அவர்களைப்போலவே சென்றுகொண்டுஉள்ளார்கள்.ஒளிவு,மறைவு இல்லாத உண்மைகளை மக்களுக்குத் தந்தவர் வள்ளலார்.சொல்லியதோடு அல்லாமல் சொல்லியவண்ணம் வாழ்ந்து காட்டியவர்....உலக மக்களுக்கு உண்மையை சொல்லி நல்வழி படுத்த வந்த வள்ளலார்சொல்லியதைக் கேட்பதற்கு என்ன தயக்கம்.ஏன் மயக்கம்,.பொய்யைப்பிடித்துக் கொண்டு உண்மையத் தேடினால் கிடைக்காது.4

புதன், 18 மார்ச், 2015

சன்மார்க்க உலகம் அமைப்போம் !


திருஅருட்பிரகாச வள்ளலார்
ஆன்ம நேய ஒருமைப்பாடு எங்கும் தழைக்க, இவ்வுலகமெல்லாம் உண்மை நெறி பெற்றிட, எவருக்கும் ஆண்டவர் ஒருவரே, எவ்விடத்தும் எவ்வுயிர்க்கும் இலங்கு சிவம் ஒன்றே, அவரே அருட்பெருஞ்ஜோதி என்று கூறி மற்றும், அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும் சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத்திடை செலுத்த இவ்வுலகில் இறைவனால் வருவுவிக்க வுற்ற அருளாளர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் சிதம்பரம் இராமலிங்க அடிகள். அவர்கள் 1823 ஆம் ஆண்டு October மாதம் 5 ஆம் நாள் மாலை 5:30 மணி அளவில் இராமையா பிள்ளை சின்னம்மையார் என்ற தம்பதியாருக்கு ஐந்தாவது மகவாக இறைவனால் வருவிக்க உற்றார். சிறுவயதில் இருந்தே இறைவனால் ஆட்கொள்ளப்பெற்று பல நூற்றுக் கணக்கான அருட்பாடல்களை அருளினார்கள். அவ்வாறு நமக்காக அருளிய பாடல்களே திருவருட்பா என்று போற்றப் படுகிறது.

திருவருட்பா அனைத்தும் அடங்கிய ஒர் அருள் ஞானக்களஞ்சியம். திருவருட்பா என்பது உண்மை உரைக்க வந்த இறை நூலாகும். இதில் பற்பல சாதன ரகசியங்களும், சிவ ரகசியங்களையும், சித்துகளையும் உள்ளடக்கி பாடப்பெற்றுள்ளது. எந்த ஒரு சித்த புருஷரும் வெளிப்டையாக பகிரங்கமாக எடுத்துரைக்காத விசயங்களை எல்லாம் தெள்ளம் தெளிவாக எடுத்துரைக்கப் பெற்ற ஒரே ஒரு நூல் என்று சொன்னால் அதுவே திருவருட்பாவாகும்.

நாம் யார்? நம் நிலை எப்படிப் பட்டது? கடவுள் நிலை என்ன? நாம் கடவுளை விரைந்து எவ்வாறு அடைவது? எங்கனம் அழியாத தேகத்தை பெற்று நித்திய வாழ்வு பெறலாம் என்று ஆராய்ந்து அதனை அடையும் வழியினை கண்டறிந்தார்கள் வள்ளலார். தான் கண்டு அடைந்த அந்த வழியை நாம் எல்லாரும் பெறவே வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். பல கோடி யுகங்கள் கழிந்தாலும், வேதங்கள் பல கற்றலும் மற்றும் எவ்வகையாலும் கண்டுகொள்ள முடியாத ஆண்டவரை மிகவும் சுலபமாக அனைவரும் அடைதற்பொருட்டு வள்ளல் பெருமானால் எற்படுதப்பட்டதே சமரச சுத்த சன்மார்க்கமாகும். இவ்வாறு சன்மார்க்க வழி புகுந்தால் நாம் பெறவேண்டிய அனைத்து ஆன்ம லாபமும் பெறலாம், அது மட்டுமல்ல ஏன் இந்த ஊன் உடம்பும் ஒளி உடம்பாகி ஒளிரும் என்கின்றார் ஒரு பாடலில்,

பொத்திய மலப்பிணிப் புழுக்கு ரம்பைதான் சித்தியல் சுத்தசன் மார்க்கச் சேர்ப்பினால்
நித்திய மாகியே நிகழும் என்பது சத்தியம் சத்தியம் சகத்து ளீர்களே


என்று மலப்பிணியால் பொத்திய இந்த உடம்பை என்று என்றும் உள்ளவாறு அழியாத உடம்பைப் பெற்று நித்தயமாகலாம் என்று வள்ளலார் கூறுகிறார். அன்று தொட்டு இன்று வரை மனிதன் பல வழிகளிலே தெய்வங்களை தேடினான். பல தெய்வங்களை வணங்கிணான், வணங்கிக் கொண்டும் உள்ளான். இப்படி மனிதன் பல பல தெய்வங்களை கூறியும் சேர்கதி பல வற்றில் புகுந்தும் முடிவில் தெய்வத்தின் நிலையறியாது மாண்டுபோனன். இப்படி இருட்டுலகில் மடிந்து கொண்டுருக்கும் மனிதனை ஒளி நெறி பெற்றிட வள்ளல் பெருமானால் எற்படுத்தியதே சுத்த சன்மார்க்கம் ஆகும். அவர் ஒரு பாடலில் பாடுகிறார்,

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும் சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும் பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார் மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்


ஆக மனிதனை துன்பத்தில் இருந்து மீட்டு ஜீவகாருண்ய வழி நடத்தி மனிதனுக்கு தெய்வநிலையை அடையச் செய்விப்பதே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய நோக்குமாகும். சாதியிலே மதங்களிலே பேதமுற்று அலைந்து வீணே அழியும் இந்த உலகத்தவர்களுக்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை என்னும் சாதனத்தை கொண்டு வந்தார்கள், ஒரு படலில் பாடுகிறார்கள்,
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே


ஆக பேதமற்று, கலவரங்கள் இல்லாத அமைதியான இயற்கை ஒட்டிய வாழ்வு பெறவும், என்றென்றும் தடைபடாது அழியாத மெய்வாழ்வு பெறவும் நமக்கு வள்ளல் பெருமான் வழிவகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஆதாவது, நமது ஆன்மாவின் கண் பல திரைகளால் முடப்பட்டுருப்பதாகவும் அவற்றை நீக்கி கொண்டு, ஏமசித்தி, சாகக்கல்வி, தத்துவநிக்கிரஹம் செய்தல், கடவுள் நிலையறிந்து அம்மயமாதல் ஆகிய நான்கு புருஷார்த்தங்களை நாம் பெறுமாறு நமக்கு எடுத்து அருளியுள்ளார்கள். இவ்வாறு முடிந்த முடவாகிய சிவானந்த அனுபவமே தவிர மற்றுவேரில்லை என்றும் அவ்வனுபத்தை எல்லோரும் தன்னைப் போல் பெற ஒரு மார்க்கத்தை கண்டார்கள், அது தான் சமரச சுத்த சன்மார்க்கம் என்னும் ஓளி நெறி மார்க்கமாகும்.

ஆக,சுத்த சன்மார்கத்தின் முக்கிய சாதனம் என்னவென்றால்: எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்பும் முக்கியமானவை. ஆதலால் காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்: அவனே ஆணடவனு மாவான்.

வாடிய பயிரைக் கண்ட போதல்லாம் வாடினேன் என்ற வள்ளல் பெருமான், நாம் உண்மையையும் புனிதமும் பெறும் பொருட்டு அருளியதே திருவருட்பாவாகும். திருவருட்பா பாடல்கள் முழுவதும் உள்ளத்தை உருக்குவன. ஆழ்ந்த கருத்துகளை கொண்டன. ஊன் உருக்கி உள்ளெளி பெருக்கும். இத்திருவருட்பாவில் அமைந்துள்ள 6000 மேற்பட்ட பாடல்களை இசைத்தட்டு mp3 வடிவமாக கடந்த 2004 ஆண்டு முதல் திருவருட்பா இசையமுதம் திட்டதின் மூலமாக Vallalar.Org செயல்படுத்தி கொண்டு வருகின்றது.
நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை
நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே
வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்
வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே
தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்
தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்
ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்
யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே


ஆக இந்த பாடலில் தான் பெற்ற இந்த சுகத்தினை , இந்த ஆன்ம லாபத்தை, அருட்பெருஞ்ஜோதியை உலகில் உள்ள எல்லா உயிர்களும் பெற வேண்டும் என்பதே வள்ளல் பெருமானுடைய ஆசையும் வேண்டுதலுமாகும். ஆதலால் நாமும் நன்முயற்சியுடன் இருந்து பெற வேண்டிய புருஷார்த்தங்களை காலம் தாழ்த்தாது விரைந்து பெறுவோமாக!

மீண்டும் பூக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 10 மார்ச், 2015

சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !


சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள் !

வள்ளலார் கருத்துக்களை வெளிபடுத்தும் அன்பர்கள் வள்ளலார் படத்தை வெளியிடும் போது வள்ளலார் நெற்றியில் எந்த விதமான சமயச் சின்னங்க்கள் உள்ள படத்தை வெளியிட வேண்டாம் .

வள்ளலார் எந்த மதத்தையும் சமயத்தையும் சாதியையும் சார்ந்தவர் இல்லை என்பதை சன்மார்க்கிகள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.சாதி சமய சழக்கை விட்டேன் அருள் ஜோதியைக் கண்டேன் என்கிறார்.... மேலும் பார்க்க
 — குறியிடல்கள் Lalitha Arutperum Jothi,Ramalingam VallalarCirustiyan Subash Sps ஆகியோரும் மற்றும் மேலும் 40 பேர் பேரும் உடன்