செவ்வாய், 30 ஜூன், 2015

வள்ளலார் என்பவர் யார் ?

வள்ளலார் என்பவர் யார் ?

வள்ளலார் என்பவர் அருட்பெருஞ்ஜோதியாக உள்ளார்
அவர் உருவமாக இல்லை !

வள்ளலாரை வழிபடலாமா ?

வள்ளலார் படத்தை வைத்து வழிபடுவதும் மற்ற தெய்வங்களை வழிபடுவதும் ஒன்றே ! ஆகவே வள்ளலார் காட்டிய உருவமற்ற அருட்பெருஞ்ஜோதி ஒளியைத்தான் வழிபடவேண்டும்.

அருட்பெருஞ்ஜோதியை வழிபட்டாலே அதில் வள்ளலார் உள்ளார் .

தனியாக வள்ளலார் படத்தை  வழிபட வேண்டாம் என்று அவரே சொல்லுகின்றார் .வள்ளலார் பேச்சை கேட்மால் வழிபடுவது .வள்ளலார் சொல்லை மீறிய செயலாகும்.இல்லையா ?

சுத்த சன்மார்க்கம் என்பதே ஒளி வழிபாடாகும்.!

கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர் ! என்பதை வள்ளல்பெருமான் திட்டவட்டமாக மக்களுக்கு சொல்லி உள்ளார் .

அதுவே உலக பொது வழிபாடாகும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய்ய வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போலே வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச்சுகமாய்த்
தன்மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்து அறிமின் ஈண்டே !

என்னும் பாடல் வாயிலாக சன்மார்க்கிகளுக்கு விளக்கமாக விளக்கி உள்ளார் .

வள்ளல்பெருமான் சன்மார்க்கிகளின்  காலில் விழுந்து சொல்லுகிறேன் கேளுங்கள் என்கின்றார். என்னை உங்களைப் போன்று நினைத்துக் கொள்ளுங்கள் என்னை வணங்காதீர்கள் என்கின்றார் ..

மனிதனை மனிதன் வணங்குவது புன் மார்க்கமான, சமய மத மார்க்கங்களின் ,சமய மத வாதிகளின் செயல்களாகும்.அவர்களைப்போல் நாம் செயல்பட வேண்டாம் என்கின்றார்.

எல்லோருக்கும் பொதுவாக விளங்கும் அருட்பெருஞ்ஜோதியை மட்டுமே வழிபட வேண்டும் என்று ஆணையிட்டு ( சத்தியம் வைத்து ) சொல்லி உள்ளார் .

அப்படி சொல்லியும் சன்மார்க்கிகள்    வழிப்பாட்டு முறையில் தவறு செய்து கொண்டே உள்ளார்கள் .அவர்களை சன்மார்க்கிகள் என்று எப்படி சொல்லுவது.

அவர்களுக்கு கடவுள்;அருள் எப்படி கிடைக்கும்..இறைவன் இறுதிவரைப் பார்ப்பார் திருந்தவில்லை என்றால் கடைசியில் கை விட்டுவிடுவார் .

பாடு பட்டீர், பயன் அறியீர்,பாழுக்கு இறைத்து கழித்தீர் இதுவரையில் பட்டது எல்லாம் போதும் இனிமேல் ஈடு கட்டி வந்தால் இன்பம் மிகவும் பெறலாம் .

வள்ளலார் சொல்லிய வார்த்தைகளை சிரமேற் கொண்டு எல்லாம வல்ல அருட்பெருஞ்ஜோதியை வழிபடுவதே சன்மார்க்கிகளின் முக்கிய கடமையாகும்.

சன்மார்க்கிகளே திருந்தவில்லை என்றால் .மக்களை எப்படித் திருத்தப்  போகிறீர்கள்.

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை யூறெலாம்
விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

உலகில் உள்ளவர்களை திருத்த வேண்டுமானால் முதலில் நாம் திருந்த வேண்டும் .பின்புதான் மற்றவர்களை திருத்த முடியும் என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்  

ஆன்மாவின் விடுதலை !

ஆன்மாவின் வாழ்க்கை !

நாம் யார் ?  என்பது ;;--உடம்பா ? உயிரா ? ஆணா ? பெண்ணா ? அலியா ? என்றால் .எதுவும் நான் என்பது இல்லை .

நான் யார் ? என்பது ஆன்மா என்னும் ஒளியைக் குறிப்பதாகும்.

நான் யார் ? நாம் யார் ? என்று தெரியாமலே நாம் வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.

நாம் யார் ? நம்மை படைத்தது யார் ? ,நம்மை அனுப்பியவர் யார் ? நமக்கு உண்மையான தந்தை யார் ? தாயார் யார் ? என்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.

உண்மையான தந்தை , தாயை அறியாத ஆதரவு அற்ற அனாதி களாய் அலைந்து கொண்டுள்ளோம் .

உலகியல் தாய் .தந்தை என்பது !

உலகியல் தாய் தந்தையர் என்பது ! ஆன்மா இந்த உலகில் வந்து வாழ்வதற்கு உயிரையும் உடம்பையும் சுமந்த,ஆண் பெண் என்னும் உபகாரக் கருவிகளாகும் . ஆதலால் அவர்கள் உண்மையான தாய் .தந்தையர்கள் அல்ல என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும் .

நாம் மரணம் அடைகின்ற போது நம்மைவிட்டு பிரியாமல் இருக்கின்றது எதுவோ ? அதுவே உண்மையான தாய் ,தந்தையர் என்பதாகும்.

உண்மையான தாய் ,தந்தை !

தாயாகி தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னை நிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்.
வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம்
மலர் அடி என் சென்னி மிசை வைத்த பெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்து இனிக்கும் தெய்வம்
கருணை நிதித் தெய்வம் முற்றுங்  காட்டுவிக்கும் தெய்வம்
சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம் .

என ,தாய் தந்தை யார் ? என்பதையும். அவர் தான் உண்மையான தாய் தந்தை என்றும்.அவர்தான் கருணை உள்ள தெய்வம் என்பதையும் .அவர் என்றும் அழியாமல் நிலைத்து  ஆன்மாவைப் பாதுகாத்து இயக்கிக் கொண்டு  உள்ளார் என்பதையும்.அவர் எல்லா ஆன்மாக்களிலும் சிற்சபை என்னும் இடத்தில்,(அதாவது சிரசின் நடுவில்)  அமர்ந்து உள் ஒளியாய் இடைவிடாது,இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதையும் வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கி உள்ளார்.

அந்த உண்மையான தெய்வத்தை எப்படி அறிந்து கொள்வது.

நம்முள் இருக்கும் அந்த ஆன்ம ஒளியை நம்மால் பார்க்க முடியாமல் இருக்கின்றோம்.இதுதான் கொடுமையிலும் கொடுமையாகும்.அந்த ஆன்ம ஒளியை யார் பார்க்கின்றார்களோ ! அவர்களே கடவுளைக் காண முடியும்..அவர்களே கடவுளைக் கண்டவர்கள் என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்முள் இருக்கும் கடவுளைக் காண முடியாமல் அறியாமை என்னும் .மாயாத் திரைகள் ஏழு வண்ணங்களாக மறைத்துக் கொண்டு உள்ளது.அந்த திரைகள் நீங்கினால் தான் , நாம் உண்மையான தாய் தந்தையர் யார் ? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

அந்த திரைகளை நீக்குவது எப்படி ?

ஆன்மா என்பது எது ? அது இந்த உலகத்தில் எதற்காக வந்தது ? ஆன்மாவிற்கு உடம்பும், உயிரும் கொடுத்தது யார் ?  இந்த உலகத்திற்கு வாழ  வந்த ஆன்மாவை, ஏன் ? திரைகள் மறைக்க வேண்டும்..
திரைகள் என்றால் என்ன ? என்பதை அறிந்து கொண்டால் .அந்த திரைகளை ஏன் நீக்க வேண்டும் ,என்பதையும் தெரிந்து கொள்ளலாம் .

சமய மத வாதிகள் !

இதுவரையில் நாம் நாமும் பார்த்தும் ,கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் முதலிய கலைகள் யாவும் பொய்யான தத்துவக் கருத்துகளையே விதைத்து உள்ளன .

அதில் தெய்வத்தின் உண்மை இன்னபடி என்றும்,தெய்வத்தின் உடைய உண்மை இன்னதென்றும் கொஞ்ச மேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .

ஆன்மாவைப் பற்றியும் ,உண்மையான ஆண்டவரைப் பற்றியும், அதன் உண்மையை அறிந்து கொள்ள வழி தெரியாமல் ,சமய  மத  வாதிகள் பல குறுக்கு வழிகளை எல்லாம் மக்களுக்கு  காட்டி உள்ளார்கள் .கற்பனையான கதைகளையும்,கற்பனையான  தெய்வங்களையும்,  இடம் ,வாகனம், ஆயுதம்,வடிவம்  ரூபம் முதலியவையும் ஒரு மனுஷனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகவேச் சொல்லி இருக்கின்றார்கள் .


தெய்வத்துக்குக் கை ,கால்,முதலியன இருக்குமா ? என்று கேட்கும்,அறிவியல்,வேதியல் போன்ற அணு  ஆராய்ச்சி விஞ்ஞானிகளுக்கும் , பகுத்தறிவாளிகளுக்கும் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள் .இது உண்மையாக இருப்பது போலவே ,முன்னும் ,பின்னும் உள்ள  பெரியவர்கள் என்று பெயர் இட்டுக் கொண்டு இருந்தவர்களும் .கடவுளின் உண்மையையும்,ஆன்மாவின் உண்மைத் தன்மையும்  ,உயிரின் தோற்றத் தன்மையும்,உடம்பை உருவாக்கும் அணுக்களின் சேர்க்கைத் தன்மையும்,உடம்பின் உள்ளே செயல்படும் செயற்கைக் கருவிகளின் தன்மையும், அறியாது ,அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கண்டதை உளறி இருக்கின்றார்கள்.

ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் ''ஓர் வல்லவன்'' .அவன்தான் .''வேத வியாசர்'' .என்னும் அருளாளன்.அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் உண்மையை கண்ட பாடில்லை.

அவன் மறைத்து பூட்டிய அந்த பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை.இது வரைக்கும் அப்படிப் பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை .

அந்த பூட்டை உடைத்து எரிந்தவர்தான் நமது வள்ளல்பெருமான்.

ஆன்மாவும் உடம்பும் உயிரும் !

ஆன்மா ,உயிர்,உடம்பு வந்த வழியைத் தெரிந்து கொண்டால் மட்டுமே நாம் யார் ? என்ற உயரிய உண்மையை அறிந்து கொள்ள முடியும்..

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம் பெரும் பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரே
நடம் புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நன்னுமினோ புண்ணியம் சார்வீரே !

என்னும் பாடல் வாயிலாக தெளிவுப் படுத்தி உள்ளார் /

உடம்பு வந்த வழியும்,உயிர் வந்த வழியும் தெரியாமல் ,தினமும் உண்டு உறங்கி வாழ்ந்து அழிந்து கொண்டு உள்ளீர்கள்.என்கின்றார்.

அறிவில்லாத குரங்கு மனம் போல மயங்கிக் ,கண்டதை எல்லாம் பிடித்துக் கொண்டு தாவி தாவி  அலைந்து கொண்டு உள்ளீர்கள் .குரங்குபோன்ற மனத்தை அடக்கத் தெரியாமல்,,பொய்யான வாழ்க்கையில் இன்பமும்,துன்பமும்,மாறி ,மாறி அடுத்தே எண்ணி எண்ணி இளைத்து இறுதியில் மரணம் வந்து விடுகின்றது .

மரணம் வருகின்றவர்கள் அனைவரும் இறைவன் அருளைப் பெற முடியாத ஏழைகளாகவே இருக்கின்றீர்கள் .

ஆண்டவர் அருளை தருவதற்கு வருகின்றார்.நீங்களும் என்னைப் போன்று அருளைப் பெற்றுக் கொண்டு மரணத்தை வெல்லலாம்..நான் சொல்லியபடி ,கேட்டு வாழ்ந்து புண்ணியத்தை அடையலாம் வாருங்கள் என ,ஆன்மநேய  ஒருமை என்னும் உரிமையுடன் அழைக்கின்றார்.

வள்ளல்பெருமானிடம் நெருங்கி பழகி உள்ளவர்கள் எவரும் அப்போது வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்கக்  கொளகைகளைப் புரிந்து அறிந்து தெரிந்து பின்  பற்றவில்லை.

இப்போது உள்ள மக்கள் வள்ளல்பெருமான் காட்டிய  சுத்த சன்மார்க்க கொளகைகளை  ஊன்றிக் கேட்டுத் தெளிவு பெறுகின்றார்கள்.அதை நினைக்கின்ற பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .

இன்னும் நம் உள் இருந்து இயங்கிக் கொண்டுள்ள,ஆன்மாவையும் அதனுடைய  உண்மையான தந்தையையும் ,தாயையும் நாம் கண்டு கொள்வதே இல்லை.அதைப் பற்றி தெரிந்து கொள்வதும் இல்லை

ஆன்மா அதன் வாழ்க்கை !

பல கோடி அண்டங்களை தன்னுடைய  அருள் ஆற்றலால் ,அருள் வல்லபத்தால் இயக்கிக் கொண்டு உள்ளவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்னும் உண்மையை முன்பே பார்த்தோம் .அதுவே அருள் நிறைந்த பேரோளியாகும்.

அந்த அருட் பேரொளி இருக்கும் இடம், அருட் பெருவெளியின் மத்தியில் ''ஞான சிங்காதன பீடம்'' என்னும் இடத்தில் அருள் ஆட்சி புரிந்து கொண்டு உள்ளது.அந்த பெருவெளியின் தோற்றம் அருள் அணுக்கள் நிறைந்த அருள் சமூகம் என்பதாகும்.

அந்த சமூகத்தின்  உள்ளே ஒரு தனி சமூகம் உள்ளது   அங்கு ஆன்மாக்கள் நீக்கமற நிறைந்து இருக்கின்றது .அதுவும் அனாதியாய் இருக்கின்றது,அதற்கும் கடவுள் சமூகம் என்று பெயர் .

அங்குள்ள அருட்பேரொளி என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இருக்கும் சமூகத்தில் அணுக்கள் சந்தானமயமாய் நிரம்பி இருக்கின்றன அந்த அணுக்களுக்கு ஆன்மா என்றே பெயர்.

அந்த ஆன்ம ஆகாயமான கடவுள் சமூகததில் ஆன்மாக்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு உள்ளன்.அவற்றிற்கு பக்குவ ஆன்மா ..அபக்குவ ஆன்மா ..பக்குவா பக்குவ ஆன்மா என மூவகைப்படும்.

அறிவு தெளிவாக உள்ளது ...அறிவும் அறிவு குறைந்தும் உள்ளது ...அறிவே இல்லாதது .என மூன்று வகையான ஆன்மாக்கள் உள்ளன.

அப்படி முன்று வகையான ஆன்மாக்களுக்கு அருட் சக்தியின் சமூகத்தில் தோன்றிய இச்சை,ஞானம்,கிரியை .என்னும் பேதத்தால் ஆன்மாக்களுக்குத் தேகம் முன்று உள்ளன.

அவை யாதெனில் ;--கர்ம தேகம் .பிரணவ தேகம்,ஞான தேகம்.என மூன்று வகைப்படும்

அங்கு உள்ள மூன்று தேகம் கொண்ட ஆன்மாக்களுக்கும்  அங்குள்ள கடவுள் யார் என்பது தெரியாது...இதுதான் ரகசியம் .

ஆன்மாக்கள் இவ்வுலகிற்கு வரும் விதம் ;--

ஒரு காலத்தில் கடவுள் சமூகததில் அதாவது அருட் பெருவெளியில் அருட் சக்தி ( ஆற்றல் ) ஆன்மா ஆகாயத்தில் விசிரிம்பிக்க ( அசைவு உண்டாக  ) ,ஆன்மாக்கள் அங்கு இருந்து பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பி வைக்கப் படுகின்றது.

அதே நேரத்தில் அருட்பெரு வெளி சந்தானமானதால் ஆன்மாக்கள் குறைவதின்றி எப்போதும் நிரம்பி கொண்டே இருக்கும்.ஆன்மாக்கள் எப்போதும் குறைவின்றி நிறைந்துகொண்டே இருக்கும்.என்பது ஆண்டவரின் நியதியாகும்.

ஆணவம் !

ஆன்மாக்கள் இங்கு வரும்போது,அங்கேயே  இயற்கை என்னும் ''ஆணவம்'' ஆன்மாவின் பாது காப்பிற்காக ஆன்மாவின் உடன் இணைத்து அனுப்பப் படுகின்றது.

ஆதலால் தான் ஆணவம் இயற்கை என்று சொல்லப்படுகின்றது. ஆன்மாக்களின் உடன் பிரியாமல் இருப்பதால் ஆன்மாவிற்கு முதல் மனைவி ஆணவம் என்பதாகும்..

இந்த உலகத்திற்கு வந்த பிறகு அதற்கு என்ன என்ன வசதிகள்,செய்து கொடுப்பப் படுகின்றது என்பதைப் பார்ப்போம்/

ஆன்மாவின் குடும்பம்.!

ஆன்மாவிற்கு 3,முன்று மனைவிகள் . 8,எட்டு பிள்ளைகள்

ஆன்மாவின் முதல் மனைவி ;-- ஆணவம்

முதல் மனைவி ஆணவத்திற்கு பிறந்த  பிள்ளை ;--அஞ்ஞானம்.என்னும் உயிர் .

ஆன்மாவின் இரண்டாவது மனைவி ;-- மாயை .

இரண்டாவது மனைவி மாயையின் பிள்ளைகள் .;--மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் எனும் நான்கு பிள்ளைகள் .

ஆன்மாவின் மூன்றாவது மனைவி ;- காமியம் ( கன்மம்,)

மூன்றாவது மனைவியின் குழந்தைகள் ;--முக்குணங்கள் ஆகிய சத்துவ குணம்,..இராஜசகுணம்,..தாமசகுணம்..எனும் முன்று பிள்ளைகள் .

ஆன்மாவின் வாடகை வீடு ;--

மேலே கண்ட ஆன்மா இங்கு வந்து வாழ்வதற்கு அதாவது குடியிருப்பதற்கு  .இவ்வுலகில் மாயை,மாமாயை ,பெருமாயை என்னும் மூன்று சக்திகளால்  கட்டிக் கொடுக்கப்பட்ட வீடுதான் உடம்பு என்பதாகும்.அவை
ஒரு வாடகை வீடாகும்.( தேகம் )

அந்த வாடகை வீட்டிற்கு தினமும் வாடகை கொடுக்க வேண்டும்.

அந்த வாடகை வீட்டில் பசி என்னும் ஓர் உபகாரக் கருவியைப் பொருத்தி வைக்கப் பட்டு இருக்கின்றன.பசிக்கு உணவு கொடுப்பதுதான் வாடகை என்பதாகும்.

வாதம் பித்தம் சிலோத்துமம்

வாடகை வீட்டின் வாடகையை வசூலிக்கும் தலைவர்கள் முன்று பேர் உள்ளனர் ;--அவர்கள் வாதம்  ,பித்தம் ,சிலோத்துமம்  என்னும் தலைவர்கள் .

இவ்வுலகில் வாழ்வதற்கு பிண்டம் (உணவு ) என்னும் பெருங் குடிக்கூலி என்னும் வாடகை தினமும் கொடுக்க வேண்டும் கொடுக்கவில்லை என்றாலும் நின்று வாங்கிக் கொண்டுதான் செல்வார்கள்.

தெரியாமல் ஒருநாள் கொடுக்கா விட்டாலும்.அவர்கள் கொடுக்கும் தொல்லைகள் .என்ன ? என்பதை வள்ளல்பெருமான் ''குடும்ப கோரம் ''என்னும் நித்திய கருமம் என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார் .

பிண்டம் என்னும் பெருங் குடிக் கூலி
அன்றைக் அன்றே நின்று வாங்குவர்
தெரியாது ஒருநாள் செலுத்தா விட்டால்

உதரத்துள்ளே உறுங் கனல் எழுப்பி
உள்ளும் புறத்தும்.எண்னெரி ஊட்டி
அருநோய் பற்பல அடிக்கடி செய்வர்

இவர் கொடுஞ் செய்கை எண்ணும் தோறும்
பகீர் என உள்ளம் பதைத்துக் கொதித்து
வெதும்பும் என்னில் விளம்புவது என்னே

சினமிகும் இவர் தம் செய்கைகள் கனவினும்
நினைந்து விழித்து நேர்வதன் முன்னர் .

பசியைப் போக்கவே நேரம் இல்லாத போது ,இவ்வுலகில் உள்ள
உண்மை தெரியாத உலக சமய மதவாதிகள் வருகை !;-----

மற்போர் கருதி வந்தவர் போல
ஓதும் வேதாந்தம் உரைப்பர் சிலபேர்

வாட்போருக்கு வந்தவர் போல
வயங்கு சித்தாந்தம் வழங்குவர் சிலபேர்
தண்டாயுதப் போர் தாங்குவர் போல
இதிகாசத்தை இசைப்பவர் சிலபேர்
உலக்கைப் போரை உற்றார் போல

இலக்கண நூலை இயம்புவர் சிலபேர்
கற்போர் விளக்கக் காட்டுவார் போலச்
சமய நூல்களைச் சாற்றுவர் சிலபேர்
வாய்ப்போருக்கு வந்தவர் போல
விவகாரங்கள் விளம்புவர் சிலபேர்

மடிபிடி போருக்கு வாய்ந்தவர் போல
மத தூஷனைகள் வழங்குவர் சிலபேர்
கட்குடியர் வந்து கலக்குதல் போலக்
காம நூலைக் கழறுவர் சிலபேர்
விழற்கு நீரை விடுவார் போல

வீண் கதை பேச விழைவார் சிலபேர்

இவர்கள் முன்னே இவர்களுக்கு ஏற்ப
குரல் கம்மிடவும் குறு நா உலரவும்
அழலை யெழவும்  அவரவர் தம்பால்
சமயோ சிதமாய்ச் சந்ததம் பேசி
இயன்ற மட்டில் ஈடு தந்து அயர்வேன்.

சமய மத வாதிகள் வந்து அவரவர்களுக்குத் தெரிந்த கற்பனைக் கதைகளையும்,கற்பனைத் தெய்வங்களையும் பற்றி சொல்ல வொண்ணா சொற்களால் சொல்லித் துன்பம் விளைவிக்கின்றார்கள் ,அவரவர்களுக்கு தகுந்த மாதிரி ,விருப்பு ,வெறுப்பு இல்லாமல் சொல்லி அவர்கள் இடம் இருந்து என்னைக் காப்பாற்றிக் கொள்ள இயன்ற மட்டில் ஈடு தந்து காப்பாற்றிக் கொள்வேன் என்கின்றார்.

அடுத்து எனது நித்திய கருமம் என்ன என்பதை பதிவு செய்துள்ளார் ;--

பின்னர் மனையின் பின் புறத்தேகிக்
கலக்கும் மலத்தைக் கடிதே கழித்துக்
கல்லில் அழுக்கைக் கழற்றுதல் போன்று
பல்லின் அழுக்கைப் பண்பின் மாற்றிச்

சோமனைப் போல வெண் சோமனைத் துவைத்து
நன்னீர் ஆடி நறுமலர் கொய்து
தேவருக்கு ஏற்ற திரவியம் கூட்டிப்
பாவையை வைத்துப் பாடி யாடும்
சிறாரைப் போலச் செய்பணி யாற்றி

மண்ணின் சுவருக்கு வண்ணம் தீட்டல்போல்
வெண்ணீர் (விபூதி) அதனை விளங்கப் பூசி
புகழ் ருத்தராஷைப் பூனை என்ன
உற்ற செபவடம் உருட்டி உருட்டிக்
குரண்டகம் போன்று குறித்த யோகம்

செய்த பின்னர் சிறிது நேரம்
அருத்தியிற் பூசனை அமர்ந்து அங்கு ஆற்றி
ஊன் பிண்டத்திற் உறு பிண்டம் மீந்து
குடிக் கூலிக் கடன் குறையறத் தீர்த்துப்
பகல் வேடத்தால் பலரை விரட்டி

நித்திரைப் பரத்தையை நேர்ந்து கூடவும்
பொழுதும் சரியாய்ப் போகின்றது அதுவே !

என்று நிறைவு செய்கின்றார் .

ஆன்மாவின் சொந்த வீடு !

உயர்ந்த அறிவுள்ள ஒவ்வொரு மனிதர்களும் மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட தன்னுடைய வாடகை வீட்டை ,ஆதாவது ஊன் உடம்பையும்,உயிரையும் அழிக்காமல், அதாவது மரணம் வராமல் அருள் ஒளியாக உயிரையும்,உடம்பையும்,மாற்ற வேண்டும்

அதற்கு ''ஆன்ம தேகம்'' என்று பெயர் .ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பைப் பெற்றால் மட்டுமே பிறப்பு இறப்பு இல்லாமல் ஆன்மா விடுதலைப் பெரும்.

ஆன்மா சொந்த வீடு கட்டிக் கொண்டு வாழத் தெரியாமல், இப்படியே வாடகை வீட்டில் குடியிருந்து மாண்டு போக வேண்டியதுதான் ..

ஆன்மா எப்போது சொந்த வீடான ஆன்ம தேகம் என்னும் ஒளி உடம்பை பெற்றுக் கொள்கின்றதோ அப்போது .மரணமும் இல்லை ,மறு பிறப்பும் இல்லை.அதன்பின் ஆன்மா விடுதலைப் பெற்று, எங்கு இருந்து வந்ததோ அங்கு சென்று பேரின்பம் அனுபவிக்கும்.

சொந்த வீடு கட்டிக் கொண்டு வாழ்வது எப்படி என்பதைத்தான் ,வள்ளல்பெருமான் ''சுத்த சன்மார்க்கம்'' என்ற மார்க்கத்தின் வாயிலாக மக்களுக்கு போதித்து ,தானும் வாழ்ந்து காட்டியுள்ளார் .

சுத்த சன்மார்க்கத்தை பின் பற்றும் அன்பர்கள் சொந்த வீடும் என்னும் ஒளி உடம்பை பெற்று மரணத்தை வெல்லுவோம்.

எட்டும் இரண்டும் !

கட்டோடே கனத்தோடே வாழ்கின்றோம் என்பீர்
கண்ணோடே கருத்தோடே கருத்தனைக் கருதீர்
பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர்
கொட்டோடே முழக்கோடே கோலங் காண் கின்றீர்
குணத்தோடே குறிப்போடே குறிப்பதைக் குறியீர்
எட்டோடே இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துணைக் கொள்கின்றீர் பித்துல கீரே !

எட்டு என்பது மேலே சொன்ன மூன்று மனைவிகளுக்கு பிறந்த எட்டுக் பிள்ளைளாகும் .

அதாவது.;--அஞ்ஞானம் என்னும் உயிர்,..மனம் புத்தி ,சித்தம்,அகங்காரம்,..சத்துவகுணம்,இராஜசகுணம்..தாமச குணம் ..என்னும் எட்டு செயல்பாட்டுக் கருவிகளையும்..

ஆன்மா .பரமான்மா என்னும் இரண்டோடு சேர்த்தால் .எட்டும் இரண்டும்.ஒன்றாக மாற்றிவிட முடியும் .

பத்தும் ஒன்றாக பற்றுகின்ற பொது .இறுதியில் ஒன்றாக மாறிவிடும்..

நாம் முதலில் அறிந்து கொள்வது !

எட்டும் இரண்டும் என்ன ?  என்பதை அறிந்து கொள்வதுதான். உடம்பு வந்த வழியும் .உயிர் வந்த வழியும் தெரிந்து கொள்வதாகும்.அந்த உண்மையைத் தெரிந்து கொண்டால்  மரணத்தை வெல்லும்,இலகுவான வழியை தெரிந்து கொள்ளலாம்.

இதைத்தான் வள்ளல்பெருமான் ,அருட்பெருஞ்ஜோதி அகவலிலும்.தெரியப்படுத்தி உள்ளார்.

எட்டு இரண்டு என்பன இயலும் முற்படி என
அட்ட நின்று அருளிய அருட்பெருஞ்ஜோதி.!
இப்படி கண்டனை இனியுறு படி யெலாம்
அப்படியே  எனும் அருட்பெருஞ்ஜோதி !
படிமுடி கடந்தனை பாரிது பாரென
அடிமுடி காட்டிய அருட்பெருஞ்ஜோதி

எட்டு என்பது, எது என்பதையும் இரண்டு என்பது , எது என்பதையும் தெரிந்து கொள்வதே சுத்த சன்மார்க்கத்தின் முதற்படியாகும்

எட்டு என்ற உடம்பை தெரிந்து கொண்டால்.அதை மாற்றும் வழியும் தெரிந்து கொள்ளலாம் .

வாடகை வீடு என்பது பொருள் உடம்பாகும் .
சொந்த வீடு என்பது அருள் உடம்பாகும்.

ஆன்மா சொந்த வீடு கட்டிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்.!


ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்  

சனி, 27 ஜூன், 2015

'கற்பூரம் கொடிய விஷம்! வீட்டில் வைப்பதை தவிருங்கள்!!'

'கற்பூரம் கொடிய விஷம்!
வீட்டில்
வைப்பதை தவிருங்கள்!!'
எனது நண்பரின் நண்பர் மகனுக்கு
நடந்தது. இதனால், அவரது வாழ்க்கை
கடந்த முப்பது நாட்களாக
‘ரோலர்கோஸ்டர்’ போல
மாறிவிட்டிருந்தது. என்ன நடந்தது
என்று அவரே சொல்கிறார் இதோ
கேளுங்கள்:
“வீட்டில் சாமி போட்டோவிற்கு
முன் கற்பூரம் வைத்திருந்தோம்.
அதை ‘கல்கண்டு’ என்று நினைத்து
மூடிவைத்திருந்ததை எப்படியோ
திறந்து ஒரே ஒரு துண்டு
கற்பூரத்தை கடித்து
தின்றுவிட்டான். அதை உடனடியாக
பார்த்த நான் கடித்திருந்த பாதியை
வாயில் இருந்து எடுத்துவிட்டேன்.
‘கற்பூரம் சாப்பிட்டால் என்ன ஆகும்?’-
என்று மனைவி கூகுளில் பார்த்து
தெரிவித்த அடுத்த நிமிடமே, என்
மகனுக்கு இழுப்பு வந்துவிட்டது.
அது நான்கு நிமிடம் நீடித்தது.
உடனே ஆம்புலன்ஸ் 911 உதவிக்
கேட்டேன். அவர்கள் வந்தபோது,
இழுப்பு சரியாகிவிட்டது.
முதலுதவிக்கு வந்தவர்கள் குழந்தை
தூங்கினால் எல்லாம்
சரியாகிவிடும் என்று
சொன்னார்கள்.
ஆனால், மீண்டும் கண்கள் செருக
ஆரம்பித்துவிட்டன. உடனே
'எமர்ஜென்ஸி’ பிரிவுக்கு
குழந்தையை எடுத்துச் சென்றோம்.
கற்பூரத்திலிருக்கும்
‘கேம்பர்’ (Camphor) என்ற கொடிய நச்சுப்
பொருள் கடுமையான
பாதிப்புகளை உருவாக்கக்
கூடியது – என்று ‘நச்சுத் தடுப்பு’
துறையினர் (பாய்ஸன் கண்ட்ரோல்)
மூலம் அறிந்த எமர்ஜென்ஸி
மருத்துவர்கள், உடனே அதற்கு தகுந்த
சிகிச்சையில் இறங்கினார்கள்.
அதற்காக ‘சலைன்’ (டிரிப்) ஏற்ற ஊசி
குத்தும் போது குழந்தை எந்த
விதமான எதிர்ப்பையும் காட்டாதது
எங்களுக்கு அடிவயிற்றைக்
கலக்கியது. அதாவது அவன்
சுயநினைவு இழந்த ‘டிப்ரெஷன்
மோடு’க்கு
சென்றுவிட்டிருந்தான்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்
மீண்டும் ‘டாலஸ் மெடிக்கல்
சென்டரின்’ குழந்தை நல அவசர
சிகிச்சைப் பிரிவுக்கு (சில்ரண்ஸ்
ஐசியூக்கு) மாற்றப்பட்டான்.
ஆம்புலன்ஸில் இருந்து
இறங்கும்போது “அப்பா!” – என்று
ஈனஸ்வரத்தில் அவன் அழைத்தாலும்
அது எனக்குத் தெம்பூட்ட
தைரியமானேன்.
கேம்பர் என்னும் அந்த கொடிய நச்சுப்
பொருளின் மூன்றாம் நிலை
கோமாவுக்கு கொண்டு
சென்றுவிடும்.
அதை என் மகன்
குறைந்த அளவு சாப்பிட்டதால்
கோமா நிலைக்கு செல்லாமல்
தப்பித்துவிட்டான்.
இது ஒருவிதமான
அதிஷ்டமேயானாலும் அது
எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
தகுந்த நேரத்தில் கண்டதாலும், உடனே
சிகிச்சைக்கு கொண்டு
சென்றதாலும் இறையருளால் எங்கள்
கண்மணியை எங்களால் காக்க
முடிந்தது.
அதுவும் கிட்டத்தட்ட 16
மணி நேர மருத்துவப்
போராட்டத்துக்குப் பின்தான்
அதுவும் சாத்தியமாயிற்று!”
கேட்டீர்களா... விபரீதத்தை?
அதனால், கற்பூரம் என்னும் கொடிய
விஷப் பொருளை வீட்டில் வைப்பதை
தவிருங்கள். குழந்தைகளுக்கு
எட்டாமல் பாதுகாப்பாக வையுங்கள்.
அப்படி குழந்தைகள் ஏதாவது
சாப்பிட்டதாக சந்தேகம் வந்தால்..
உடனே தாமதிக்காமல் தகுந்த
மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு
செய்யுங்கள்.
✿ பிடிச்சா லைக் பண்ணுங்கள்...
ரொம்ப பிடிச்சா ஷேர் பண்ணுங்கள்...
சூப்பரா இருந்தா கமண்ட் பண்ணுங்கள்..

வெள்ளி, 26 ஜூன், 2015

பொன்னேரியில் உள்ள சின்னகாவனத்தில் சத்விசாரம் !

பொன்னேரியில் உள்ள சின்னகாவனத்தில் சத்விசாரம் !


திரு அருட் பிரகாச வள்ளல்பெருமான் தாயார் சின்னம்மை சத்திய தருமச்சாலை, ஞான சபை இல்லத்தில் .

ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக் கிழமை மாலை 4-30 to 6.30,வரையில் வள்ளல்பெருமான்  மக்களுக்கு சொல்லிய வாழ்க்கை நெறிகளைப் பற்றி சத்விசாரம் நடைபெறும் .

அதுசமயம் ஒவ்வொரு மாதமும் ஈரோடு கதிர்வேல் அவர்கள் அருள் உரை நிகழ்த்துகின்றார் ..

சென்னையில் உள்ள அன்பர்களும் ,அருகில் உள்ள அன்பர்க்களும்,மற்றும்  அனைவரும் கலந்து கொண்டு ஆன்ம லாபம் ,அருள் லாபம் அடைய அன்புடன் அழைக்கின்றோம்.

இங்கனம் .
சின்னகாவனம் ,சன்மார்க்க அன்பர்கள்.
வள்ளலார் தாயார் சின்னம்மையார் அறக்கட்டளை.
சின்னகாவனம் கிராமம்,பொன்னேரி வட்டம் 
திருவள்ளுவர் மாவட்டம்,,
சென்னை .

கடவுளை வழிபடும் முறைகள் !

கடவுளை வழிபடும் முறைகள் !

பக்தி என்பது ;--பக்தி காண்டிகள், விக்கிரத்தை வைத்து வழிபடுபவர்கள் .கண்,காது,மூக்கு வாய்,உடம்பின் இந்திரியங்கள் வழியாக வழிபடுபவதாகும்.

கர்ம காண்டிகள் ;--அக்கினியை வைத்து வழிபடுபவர்கள் மனம், புத்தி .சித்தம்,அகங்காரம் என்னும் கரணங்கள் வழியாக வழிபடுபவதாகும்.

யோகிகள் ;--இருதயத்தில் வழிபடுபவர்கள் .ஜீவன் (பிராணன் ) என்னும் உயிரின் வழியாக வழிபடுபவர்கள்.

ஞானிகள் ;--கடவுள் எல்லா உயிர்களிலும் உள்ளார் என்பதை அறிந்து வழிபடுபவர்கள்..ஆன்மாவின் வழியாக வழிபடுபவதாகும்.

மேலே கண்ட வழிபாட்டில் சிறந்தது ஆன்மாவின் வழியாக வழிபடுவதாகும்.

அதற்குத்தான் வள்ளலார் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமை எங்களுக்குள் ,எக்காலத்தும் ,எவ்விடத்தும் ,எவ்விதத்தும்,எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளால் வேண்டும்.என்றார் .

ஆகவேதான் ஆன்ம ஒளி வழிபாட்டை புறத்தில் காட்டுவதற்கு வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை'' அமைத்து,சாதி ,சமயம்,மதம் போன்ற வேறுபாடு இல்லாத,  பொது வழி பாட்டு முறையைக் காட்டி உள்ளார் .

எல்லா உயிர்களிலும் இறைவன் ஆன்ம ஒளியாக உள்ளார் .என்பதை மக்களுக்கு போதித்து .''உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு'' என்றார் .

அதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யம் ,..ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.ஜீவ காருண்யமே மோட்சவீட்டின் திறவு கோல் என்றார் .

சன்மார்க்கிகள் அகத்தில் உள்ள ஆன்மாவை தொடர்பு கொண்டு வழிபடுவதே சிறந்த வழிபாடாகும்.

வள்ளல்பெருமான் சொல்லிய ஜோதி வழிபாட்டை விட்டுவிட்டு மற்ற வழிபாடுகள் செய்பவர்கள் சன்மார்க்கிகள் அல்ல, என்பதை அவரவர்களே புரிந்து கொள்ளவேண்டும்.

ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி !

என்னும் பாடல் வாயிலாக சொல்ல வேண்டியதை தெளிவாக சொல்லி  விளக்கி உள்ளார் .

இன்னும் சன்மார்க்கிகள் திருந்தவில்லை என்றால் படவேண்டிய துன்பத்தை பட்டே, அனுபவித்தே திருந்த வேண்டியதுதான்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 24 ஜூன், 2015

உண்மையான தாய் யார் ? தந்தை யார் ?

உண்மையான தாய் யார் ? தந்தை யார் ?

நமக்கு உண்மையான உடம்பைக்  கொடுத்த தாய் ''மாயை'' என்னும் பெண் தன்மை உடைய ஒளியாகும் .

நான் என்னும் ஆன்மாவையும் உயிரையும் கொடுத்தது உண்மைத் தந்தையான அருட்பெருஞ் ஜோதி யாகும் ,..அவை ஆண் தன்மை உடைய அருட் பேரோளியாகும்

உலகியலில்  நமக்கு  தந்தை தாய் ஆகிய இருவரும் உபகாரக்  கருவிகளாகும்..

ஆன்மாவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணின் சுக்கிலத்தில் சேர்த்து .இரண்டு மாதங்களில் உயிரைக் கொடுத்து .பெண்ணின் சோனித உறுப்பினுள் அனுப்பி வைக்கின்றார்.

இரண்டு மாதம் சென்றபின் பெண்ணின் உறுப்பின் வழியாக  உள்ளே கருவறையில் சேர்க்கப்படுகின்றது.

கருவறையில் சென்றதும் மாயை என்னும் பெண்தன்மை உடைய ஒளியினால் பத்து மாதத்தில் உடம்பும் அதற்கு துணையான கருவிகளும்.பஞ்ச பூத சுத்த அணுக்களால்,பயங்கரமான இருட்டு அறையில் உடம்பு என்னும் அழகான வீடு கட்டிக் கொடுக்கப்படுகினறது.

ஆன்மா ஆணின் சுக்கிலத்தில் இரண்டு மாதமும் ,பெண்ணின் கருவறையில் பத்து மாதமும் சேர்ந்து பனிரண்டு மாதத்தில் உடம்பு என்னும் அழகான வீடு கட்டி இந்த உலகத்திற்கு அனுப்பி வைக்கப் படுகின்றது.

ஒரு குழந்தை உருவாக பனிரண்டு மாதங்கள்
ஆகின்றன..அவற்றை கணக்கு வைத்துதான் ஒரு வருடத்திற்கு பனிரண்டு மாதங்கள் என்று கணக்கு வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே உண்மையான தாய் ''மாயை''.உண்மையான தந்தை ''அருட்பெரும்ஜோதி''யாகும்.

மனிதனாக பிறந்த நாம் உண்மையான தாய் ,தந்தை யார் என்று தெரியாமல் ஆதரவு அற்ற அனாதிகலாய்  வாழ்த்து கொண்டு வருகின்றோம்.

நமக்கு உபகார தாய் ,தந்தையை மதித்து உண்மையான தாய் தந்தையரைத் தொடர்பு கொள்ளவேண்டும்.

உண்மையான தாய் தந்தையை தொடர்பு கொண்டால் அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம்.

ஆதலால் தான் வள்ளல்பெருமான் .தாயாகி ,தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் தனக்கு நிகர் இல்லாத தனித்தலைமை தெய்வம் என்கின்றார்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--தான் பெற்ற பேறு என்ற தலைப்பில் .முதல்பாடல்.

உருவமாய் அருவமாய் உபயமுமாய் யலவாய்
ஓங்கும் அருட்பெருஞ் ஜோதி ஒருவன் உண்டே அவன்தான்
பெருமையினால் எனை யீன்றான் நான் ஒருவன் தானே பிள்ளை அவன் பிள்ளை என பெரியர் எலாம் அறிவார் .

என்றும் .அடுத்த 14 வது பாடலில்;--

பெருமாயை என்னும் ஒரு பெண்பிள்ளை நீதான்
பெற்ற உடம்பு இது .

என்பதை தான் அறிந்து மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்...

ஆகவே ஆன்மா என்பது எது என்பதை அறிந்து, உடம்பு வந்த வழியும் உயிர் வந்த வழியும் தெரியாமல் வாழ்ந்து வீண் போகின்றோம் என்பதை வள்ளல்பெருமான் நமக்குத் தெளிவுப் படுத்துகின்றார்.

உறுதி கூறல் என்ற தலைப்பில் ;--ஆறாவது பாடல்.

உடம்பு வரு வகை அறியீர் உயிர் வகையை அறியீர்
உடல் பருக்க உண்டு நிதம் உறங்குதற்கே அறிவீர்
மடம் புகு பேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழி துறை கற்று அறியீர்
இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி இளைக்கின்றீர் ஏழை உலகீரெ
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நன்னுமினோ புண்ணியம் சார்வீரே !

என ;--உடம்பு வந்த வழியும் .உயிர்வந்த வழியும் தெரியாமல்,கண்டது எல்லாம் உண்பதற்கும் தூங்குவதற்கும்,அறிந்து உள்ளீர்கள் .

உங்கள் குரங்கு மனத்தை அடக்கத் தெரியாமல் ,அதை வசப்படுத்தும் வகை தெரியாமல் ,வழி துறை  தெரியாமல், கண்டதை எல்லாம் கேட்டு,பொய்யான வாழ்க்கைக்காக  அலைந்து கொண்டு உள்ளீர்கள் .

இறுதியில் மரணம் வருகின்ற போது எண்ணி எண்ணி அழுது புலம்புகின்றீர்கள் .

மரணம் வருகின்றவர்கள் எல்லோரும் ஏழைகள் தான்,

மரணம் வராமல் தடுக்கும் ஆற்றல் மிகுந்த அருளை கொடுப்பதற்கு நமது தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வருகின்றார் வாருங்கள்,வாருங்கள் என அழைகின்றார் .

உண்மையான தாய் தந்தை யார் ? என்பதை மனிதர்களாக பிறந்த அனைவரும் அறிந்து அருளைப் பெற்று புண்ணி யர்களாக வாழலாம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 23 ஜூன், 2015

ஜீவ காருண்யம் ஏன் செய்யவேண்டும் ?

ஜீவ காருண்யம் ஏன் செய்யவேண்டும் ?

ஒவ்வொரு ஜீவன்களுக்கும் இந்த உலகத்தில் வாழ்வதற்கு ''மாயை'' என்னும் அதிகாரியால் உடம்பு என்னும் வாடகை வீடு கட்டிக் கொடுக்கப்படுகின்றது .

வாடகை வீட்டில் குடி இருக்கும் ஜீவன்கள் வாடகை கொடுக்க முடியாமல் வீட்டை விட்டு காலி செய்யப்படுகின்றது .அதுதான் பிறப்பு இறப்பு என்பதாகும்.

குடி இருக்கும் வீட்டிற்கு வாடகை என்பது உணவாகும்.உணவு என்னும் வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கும் ஜீவன்களுக்கு வாடகை என்னும் உணவைக் கொடுத்து ஜீவன்களை அந்த வீட்டை விட்டு வெளியேறாமல் காப்பாற்றுவதே ஜீவ காருண்யம் என்பதாகும்.

வாடகைக்கு மேலாக சேர்த்து வைத்து இருக்கும் ஜீவன்கள்.அளவுக்கு மேலாக சேர்த்து வைத்திருக்கும் ஜீவன்கள்  .வாடகை கொடுக்க முடியாமல் தவிக்கும் ஜீவன்களுக்கு வாடகை கொடுத்து அவர்களை காப்பாற்றுவதே ஜீவ காருண்யம்.

பசி என்னும் பிணியினால் தவிக்கும் ஜீவர்களுக்கு உணவைக் கொடுத்து அவர்களின் துன்பத்தைப் போக்கு கின்றவர்களுக்கு மோட்ச வீட்டின் கதவுகள் திறக்கப்படும்.

உணவு என்னும் வாடகையைக் கொடுத்து ,உடம்பை விட்டு உயிர் பிரியாமல் காப்பாற்றுவதே ஜீவ காருண்யம்.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடும் ?என்று அறியவேண்டுமானால்.

அருள் என்பது கடவுள் தயவு ,கடவுள் இயற்கை விளக்கம்.

ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் தயவு ,ஜீவர்கள் ஆன்ம இயற்கை விளக்கம்.

இதனால் தயவைக் கொண்டு தயவைப் பெறுதலும்,விளக்கத்தைக் கொண்டு விளக்கத்தைப் பெறுதலும் வேண்டும்.

வேறு ஒன்றினால் பெறக் கூடாது என்பது அனுபவம் ஆகும்.

வேறு ஒன்றினாலும் பெறக் கூடாமை நிச்சயம் என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.

இதற்கு வேறு எந்த செய்கையும் பிரமாணமும் வேண்டாம் என்று அறிவினால் அறிந்து கொள்ளவேண்டும்.

ஜீவ காருண்யத்தின் வல்லபமே அருளைப் பெறுவதுதான் .

அருளைப் பெறுவதற்கு ஜீவ காருண்யமே வழி ஆதலால் அதற்கு ஞான வழி என்பதாகும்.

ஞான வழி என்பதும்,சன்மார்க்கம் என்பதும்,ஜீவ காருணய ஒழுக்கம் என்பதாகும்.

அஞ்ஞான வழி என்பதும்.துன்மார்க்கம் என்பதும் ஜீவ காருண்ய ஒழுக்கம் இல்லாமை என்றும் அறிய வேண்டும்.

ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் உடனாக நின்று விளங்கும்.அதனால் உபகார சத்தி விளங்கும்.அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் உடனே தோன்றும்.

ஜீவ காருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் உடனாக மறையும்.அதனால் உபகார சத்தி மறையும்.உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.

ஆகவே மனிதர்களாகிய நாம் வாடகை கொடுக்கமுடியாமல் உடம்பை விட்டு உயிர் பிரியும் நிலையில், தவிக்கும் ஜீவர்களுக்கு உணவைக் கொடுத்து உடம்பையும் உயிரையும் காப்பாற்றுவதே ஜீவ காருண்யம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 22 ஜூன், 2015

இறந்த பிணத்தை புதைக்கும் இடம் !

இறந்த பிணத்தை புதைக்கும் இடம் !

ஒரு உடம்பில் இருந்து உயிர் பிரிந்தால் அதற்கு பெயர் பிணம் என்பதாகும் .

அந்த பிணத்தை புதைக்கும் இடம் இடுகாடு என்றும் சுடுகாடு என்றும் பெயர் வைத்துள்ளார்கள்

உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் இறந்த உயிர்களின் இறைச்சியை அதாவது மாமிசத்தை தன்னுடைய வயிற்றில் புதைக்கின்றார்கள்

அதற்கு என்ன பெயர் .
நம்முடைய வயிறு என்ன சுடுகாடா என்பதை சிந்திக்க வேண்டும்.

இறந்த உயிர்களின் இறைச்சி எதற்கும் பயன்படாது என்று ஊரைத் தள்ளி புதைக்கின்றார்கள் அதைப் பற்றி நாம் சிந்திக்காமல்.துர்நாற்றம் உள்ள அந்த இறைச்சியை நம்முடைய வயிற்றிலே புதைப்பது என்ன ஞாயம் என்பதை அறிவுடையவர்கள் சிந்திக்க வேண்டும்.

மனிதன் சாத்வீக உணவான தாவர உணவுகளை உட்கொள்ளாமல் அசுத்த பூதகாரிய உணவான துர் நாற்றம் பிடித்த மாமிச உணவை உட்கொள்ளுவதால் அறிவு மழுங்கி தீராத வியாதிகளால் அவதிப்பட்டு அழிந்து போகிறான் .

ஆகவே நம்முடைய வயிற்றை சுடுகாடாக மாற்றாமல் அருளைப்பெரும் தேகமாக மாற்றவேண்டும் என்கின்றார் வள்ளல்பெருமான்.

கடவுளின் உண்மையை அறிவதற்கும்,கருணையான அருளைப் பெறுவதற்கும்,துன்பம் இல்லாமல் வாழ்வதற்கும் மாமிசம் அதாவது இறைச்சி தடையாக இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளவேண்டும்.
மாமிசம் உண்பவர்களுக்கு, புன்மனம்தான் வேலை செய்யும் .நன்மனம் வேலை செய்யாது.

மாமிசம் உண்பவர்களுக்கு எவ்வளவு அன்பு தயவு,கருணை இருந்தாலும் கடவுள் ஏற்றுக் கொள்வதில்லை.அவர்களுக்கு கர்ம வினைகள் தீரவே தீராது .துன்பங்கள் வந்து கொண்டே இருக்கும்.
கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கின்றார்.

ஆதலால் உயிர்க்கொலையும் அதன் மாமிசத்தையும் உண்ணாமல் வாழ்பவர்களே நல்ல மனிதர்கள் .அவர்களை இறைவன் எக்காலத்திலும் கைவிடமாட்டார்..பாதுகாப்பு அரணாக விளங்கிக் கொண்டே இருப்பார் .
உலகத்தில் அதிகமாக தவறு செய்கிறவர்கள் அனைவரும் புலால் உண்பவகளாகவே இருப்பார்கள்.
.
அவர்கள் கொடூரமான மிருக குணம் படைத்தவர்களாகவே இருப்பார்கள் .
கொலை கொள்ளை, கற்பழிப்பு தீவிரவாதம், பயங்கரவாதம்,நக்ஸ்லைட்டுகள் உயிர்க்கொலை செய்பவர்கள் அனைவரும் புலால் உண்பவர்களே

அவர்களுக்கு இரக்க குணமே சுட்டு போட்டாலும் வராது .காரணம் அவர்கள் உண்ணும் உணவிற்குத் தகுந்தாற்போல் உணர்வுகள் மாறிவிடும்.

எனவே நம்முடைய வயிற்றை சுடுகாடாக இடுகாடாக மாற்றாமல் சாத்வீக உணவை உட்கொள்ளும் வயிறாக மாற்றவேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 17 ஜூன், 2015

தவம் ,தியானம்,யோகம்,உடற்பயிற்சி தேவையா ?

தவம் ,தியானம்,யோகம்,உடற்பயிற்சி தேவையா ?

இன்று உலகம் முழுவதும் மக்கள் .தவம்,தியானம்,யோகம்,உடற்பயிற்சி போன்ற செயல்களில் ஈடுபட்டால்  மனம் அமைதி பெரும் என்று அதிகமாக அக்கறை எடுத்துக் கொள்கின்றார்கள்.

அவர்களை வைத்து கோடி கோடியாக பணம் சந்பாதிக்கும் பயிற்சி நிலையங்கள் எங்கு பார்த்தாலும் குவிந்து கிடக்கின்றன.

முதலீடு இல்லாமல் பணம் பறிக்கும், பயிற்சி நிலையங்களை அமைத்து மக்களை சுரண்டிக் கொள்ளை அடித்துக் கொண்டு உள்ளார்கள்.

அதற்கு மத்திய அரசும் அதிக அக்கறை எடுத்துக் கொள்கின்றன.

நல்ல காரியம்தான் அதில் தவறு ஏதும் இல்லை.

மனிதனின் மனநிலை மாறுவதற்கும்,பிணி வருவதற்கும் ,உடல் பருமன் ஆவதற்கும் தீராத வியாதி வருவதற்கும்,தீராத துன்பம் வருவதற்கும் என்ன காரணம் என்று அறிய தவறி  விட்டு விடுகிறார்கள் .

கடப்பாறையை விழுங்கி விட்டு சுக்கு கசாயம் சாப்பிடுவதுபோல் உள்ளது.சுக்கு கசாயத்தால் கடப்பாரை வெளியே வந்துவிடுமா ? சிந்திக்க வேண்டும் .

மனிதன் உண்ணுகின்ற உணவு முறைகள் தான்  அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருக்கின்றது.

ஒவ்வாத உணவுகளை உண்டுவிட்டு பண்ணாத தீமைகள்,,,,பகராத முடியாத கொடுமைகள் , ,செய்யத்தகாத செய்கின்ற செயல்கள் ,அனைத்தும் செய்து விட்டு மனம் அமைதி பெறவில்லை என்றால் எப்படி அமைதி பெரும்.

தவறான முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு எவ்வளவுதான் ,தவம்,தியானம்,
யோகம்,உடற்பயிற்சி செய்தாலும் அவை ஆற்றிலே கரைத்த புளியைப்போல் ஆகிவிடும்..

ஒழுக்கம் இல்லாமல் செயல்படும் எந்த செயல்களாக இருந்தாலும் அவைகளால் எந்த பயனும் இல்லை.

ஒழுக்கம் விழுப்பம் தரலான்  ஒழுக்கம்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் .

என்கின்றார் திருவள்ளுவர் ,ஒழுக்கம் என்பது உயிரை விட மேலானது.உயிரைக் காப்பாற்றுவது ,ஒழுக்கம் என்கின்றார் .

எல்லாவற்றுக்கும் அடைபடையானது ஒழுக்கம் !

வள்ளலார் ஒழுக்கத்தை நான்காக பிரித்து அதன் தனமைகளை விளக்கமாக விளக்கி உள்ளார்.

வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பாவை வாங்கி படித்துப் பாருங்கள் ஒழுக்கம் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அவை ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்.அதிலே நான்கு வகை உண்டு .இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்பதாகும்.

முதலாவதாக உள்ளது இந்திரிய ஒழுக்கம் என்பதாகும் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பு,என்பதாகும் இவற்றைக் கொண்டுதான் புறத்தில் எல்லாச்செயல்களும் செய்து கொண்டு வருகின்றோம்.

நாம் செய்யும் செயல்கள் அனைத்தும்,கரணங்களில் உள்ள மனம் ,புத்தி,சித்தம்,அகங்காரத்தின் ஆதிக்கத்தின் படிதான் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றோம்.

ஆன்மாவில் உள்ள அறிவின்படி எவரும் செயல்படுவதில்லை. கரணங்களில் உள்ள  மனத்தின்படியும், புத்தியின்படியும் தான் செயல்பட்டு வாழ்ந்து கொண்டு வருகின்றோம்.

மனத்தின்படி செயல்படுவதால்,தவம்,தியானம்,யோகம் ,உடற்பயிற்சி போன்ற பயிற்சிகளினால் ,செயல்களினால், மனத்தை அடக்க முடியாது.

அந்த பயிற்சியினால் மனம் அடங்குவதுபோல் தெரியும் மறுபடியும் மனம் அதே பழைய நிலைக்கு வந்துவிடும்.

தியானம் ,தவம்,யோகம்,இவைகளால் சிறு ஒளி உண்டாவதுபோல் தெரியும் .அதனால் பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும் என்கின்றார் வள்ளல்பெருமான்.

அறிவின் படி செயல்பட்டால் நன்மை எது ? தீமை எது என்பது தெரியும்.

ஜீவகாருண்யம் எவை எனில் ;--இந்திரியங்கள் என்னும் கண்,காது,மூக்கு ,வாய்,உடம்பின் வழியாக உலகில் உள்ள உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் மனத்தின் வழியாக துன்பம் செய்யாமல் நன்மையே செய்து வந்தால் மனம் அடங்கும்.எல்லா நன்மைகளும் தானே வந்து சேர்ந்துவிடும்.

முக்கியமாக உயிர்க் கொலை செய்வதையும் ,மாமிசம் உண்பதையும் நிறுத்தி விட்டாலே மனம் அடங்கும்.

வாயில்லாத அப்பாவி உயிர்களை உயிர்க்கொலை செய்து அதன் ஊன் சுவையை உண்டு வாழ்பவர்களுக்கு ,எவ்வளவு தான் இடைவிடாது தியானம்,தவம், யோகம்,உடற்பயிற்சி செய்தாலும் பாறையில் விதைத்த விதைபோல் ஆகிவிடும்.

ஆதலால் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம் இரண்டையும் கடைபிடிப்பவர்களுக்கு மனம் தானே அடங்கும்..

ஜீவகாருண்யத்தை கடைபிடித்து தவம்,தியானம், யோகம்,உடற்பயிற்சி செய்தால் ஓர் அளவிற்கு நன்மைதரும்

கருணை இல்லாமல் எதை செய்தாலும் அதனால் எந்த பயனும் இல்லை .

கருணையோடு செயல்படு வோர்களுக்கு எக்காலத்திலும் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,என்பது எல் அளவும்  வரவே வராது.

அவர்கள் நோய் இல்லாமல் மன அமைதியுடன் நீண்ட காலம் உயிருடன் மகிழ்ச்சியுடனும் வாழலாம்.

சிந்திப்பீர் செயல்படுவீர் !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

செவ்வாய், 16 ஜூன், 2015

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கடவுள் எங்கு உள்ளார் ? அவர் யார் ?

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் !: கடவுள் எங்கு உள்ளார் ? அவர் யார் ?

கடவுளை யார் காணமுடியும் ?

கடவுளை யார் காணமுடியும் ?

உண்ணாமலும் ,உறங்காமலும்,சுவாசிக்காமலும் வாழும் வழியைத் தெரிந்து கொண்டவர்கள் யாரோ அவரே கடவுளைக் காணமுடியும்.

உலக வரலாற்றில் அப்படி வாழ்ந்த ஒரே ஒரு அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே !

கடவுள் உண்ணுவதில்லை,உறங்குவதில்லை,
சுவாசிப்பது இல்லை ..

அதேப்போல் வாழ்ந்தால் மட்டுமே கடவுளைக் காணமுடியும்.!

கடவுள நிலை அறிந்து அம்மயமாக மாற வேண்டுமானால் .கடவுளின் தன்மைக்கு நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.

அதற்கு ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் ஒருமையை உணர்ந்து, உண்மையை  அறிந்து கருணையே வடிவமாக மாற வேண்டும்

எங்கே கருணை இயற்கையில் உள்ளன்
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !

உண்ணாமலும் உறங்காமலும் சுவாசிக்காமலும் வாழ்வதற்கு அருள் என்னும் திரவம் வேண்டும் .

அந்த அருள் கருணை பூரணமாக விளங்குகின்ற போதுதான் இறைவனால் கொடுக்கப்படும்.

வள்ளல்பெருமான் ஜீவ காருண்யம் என்னும் கருணையே வடிவமானவர் அதனால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வாரி வழங்கினார் .

அருள் பூரணமாக கிடைத்தால் மட்டுமே மரணத்தை வென்று ,பேரின்ப சித்தி பெரு வாழ்வு வாழ முடியும்.

வேறு எந்த வழியாலும் கிடைக்காது எனவே வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டிய ,சுத்த சன்மார்க்க உண்மை பெருநெறியைக் கடைபிடித்து பின்பற்றி வாழும் வழியை தெரிந்து வாழ்வோம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புராணங்களின் உண்மை யாதெனில் !

புராணங்களின் உண்மை யாதெனில் !

புராணங்கள் யாவும் ஜடமான தத்துவங்களைப் பற்றியே பேசி இருக்கின்றன.

உலகில் உள்ள எல்லா சமயங்களும்,மதங்களும்,
தத்துவங்களான மனித உடம்பை பற்றியும் .இந்த உலகத்தில் மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றியும் அதற்குண்டான உயிரின் ,உடம்பின் கருவிகளான உறுப்புக்கள்  என்னும் தத்துவ சட்டங்களைப் பற்றியே போதித்து இருக்கின்றன .

பெரிய புராணத்தில் குறித்த 63,தத்துவங்களும் உடம்பில் உள்ள உறுப்புகளாகும்.

அந்த கருவிகளின் செயல்பாட்டை,அதாவது கலைகளை 63,நாயன்மார்களாக படைத்து கதைகளாக கவிதைகளாக மக்களுக்கு போதித்து உள்ளார்கள் .

உத்தரத்திற்கு ;--தேவாரம் என்றால் தேவ் என்றால் தயவு என்பதாகும்....ஆரம் என்றால் ஒழுங்கு என்பதாகும்.ஒழுக்கமான தயவுடன் வாழ வேண்டும் என்பதாகும்.

திருவாசகம் என்றால் ;-- மெய்ப்பொருள் நிரம்பிய கலைகளின் வார்த்தை என்பதாகும்.உண்மையே பேச வேண்டும் என்பதாகும்.அப்போதுதான் இறைவன் யார் என்பதை அறிய முடியும் என்பதாகும்.

திருமந்திரம் என்றால் ;--உயர்ந்த சாத்திரங்களை ,அதாவது கிரக நிலைகளை ( கலைகளை) சொல்லும் ,விளக்கும் மந்திரம் என்பதாகும்.

அதாவது மனித உயிருக்கும், உடம்பிற்கும் பஞ்ச பூதங்களுக்கும்,கிரகங்களுக்கும் உள்ள கலையின் தொடர்பை விளக்கும் உண்மை செய்திகளாகும்.

ஆகவே வள்ளல்பெருமான் பக்தியில் (தோத்திரங்களில்) சிறந்தது திருவாசகம் என்றும்.சாத்திரங்களில் சிறந்தது திருமந்திரம் என்றும் இவற்றை ஊன்றி பார்க்கவும் என்று சொல்லுகின்றார்.

ஊன்றி பார்க்கவும் என்று சொல்லுவதால் .அவற்றில் உண்மையான கடவுள் யார் என்பதும் ஆன்மாக்கள் எங்கு இருந்தன என்றும் ,எப்படி இவ்வுலகத்திற்கு வந்தன என்றும்,ஆன்மா உயிரும் உடம்பும் எப்படி எடுத்தது என்றும்.ஆன்மா மீண்டும் எங்கு செல்ல வேண்டும் என்றும் ஆன்மா திரும்பிச்செல்ல எவை தடையாக இருக்கின்றது என்றும் .தெளிவாக சொல்லவில்லை என்றும் வள்ளல்பெருமான் தெரியப்படுத்துகின்றார்.

நம் நாட்டில் தோன்றிய அருளாளர்கள் ஓர் அளவிற்கு மக்கள் நலன் கருதி ஓர் அளவிற்கு இலை மறை காய் மறையாக சொல்லி உள்ளார்கள் மற்ற நாட்டில் தோன்றிய அருளாளர்கள் அனைவரும் போதகர்களாகவே இருந்துள்ளார்கள் பொருளைப் பற்றியே பேசி இருக்கின்றார்கள் .''அருள்'' என்பது எது ?என்ன? என்பதைப் பற்றி எவருமே சரியாக போதிக்கவில்லை .

வள்ளல்பெருமான் ஒருவர் மட்டுமே எல்லா உண்மைகளையும் விளங்கும்படி விளக்கி உள்ளார் விளக்கியதோடு அல்லாமல் .பெய்ப்பொருள் என்னும் அருளைப் பெற்று  வாழ்ந்து காட்டியவர் .

அனைத்து அருளாளர்களும் பொருளைப் பற்றியே பேசி உள்ளார்கள்.அருளைப் பற்றி தெளிவாக பேசவில்லை விளக்கம் தரவில்லை.

வள்ளல்பெருமான் மட்டுமே பொருளால் வரும் துன்பங்களையும் அருளால் வரும் இன்பங்களையும் தெளிவாக, அனைத்து உலக மக்களும் புரிந்து ,தெரிந்து கொள்ளும் அளவிற்கு விளக்கம் தந்து உள்ளார். சொல்லிய வண்ணம் வாழ்ந்தும்  காட்டி உள்ளார் .

உலகில் உள்ள அனைத்து அருளாளர்கள் எழுதிய நூல்களும் பொய்யானது அவற்றை படிக்க வேண்டாம் நம்ப வேண்டாம் என்று மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார் ..

ஞான சரியை நான்காவது பாடல் ;--

கண்டது எல்லாம் அனித்தியமே கேட்டது எல்லாம் பழுதே

கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே

உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே

உலகயலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே

விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க

மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்கு உணர்ந்தே

எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்

இறவாத வரம் பெறலாம் இன்பம் முறலாமே !

என்று மக்களுக்கு விளக்கி உள்ளார் .இதுவரையில் கண்டது,கேட்டது,கற்றது,களித்தது ,உண்டது ,உட் கொண்டது ,எல்லாம் குறைபாடு உடையது .

இதுவரையில் உண்மையை யாரும் போதிக்க வில்லை.ஆதலால் தளர்ச்சி அடைய வேண்டாம்.பயப்பட வேண்டாம்  இனிமேல் சுத்த சன்மார்க்க உண்மை மெய் நெறியை கடைபிடியுங்கள் .

சுத்த சன்மார்க்க நெறியில்தான் மெய்ப்பொருள் என்னும் இயற்கை உண்மை இறைவன் யார் என்பதை காட்டி உள்ளேன்..

அவரிடம் தொடர்பு கொண்டு என்றும் அழியாது வாழ்வாங்கு வாழும் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வீர்கள் .என்பதை தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

எனவே சாதி,சமயங்கள்,மதங்கள் சொல்லும் பொய்யான மருள் நெறிகளை தூக்கி எரிந்து விட்டு அருள் நெறியை பின்பற்றி வாழ்வோம்.

என்றும் பிரியாத உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 15 ஜூன், 2015

ஆன்மா என்பது வேறு ! உயிர் என்பது வேறு !

ஆன்மா என்பது வேறு ! உயிர்  என்பது வேறு !

ஆன்மா இந்த பஞ்ச பூத உலகத்திற்கு வந்து சுற்றுலா செய்து விட்டு மீண்டும் வந்த இடத்திற்கே திரும்பி செல்ல வேண்டும் என்பதுதான்  இறைவனின் சட்டம் கட்டளை.

ஆன்மா இந்த உலகத்திற்கு வந்து சுற்றுலா செய்ய வேண்டுமானால்,உயிரும் உடம்பும் தேவைப்படுகின்றது.

ஆன்மா இந்த உலகத்தில் சுற்றுலா செய்ய உயிரும் உடம்பும்  மாயையினால் கட்டிக் கொடுக்கப்படுகின்றது.

ஆன்மாவிற்கு  முதலில்உயிர் கொடுத்து தாவரம்,ஊர்வன ,பறப்பன,நடப்பன,தேவர்,நரகர் ,மனிதர் போன்ற ஏழு வகையான உடம்பு கொடுக்கப்படுகின்றது.

உயிர் ஒன்றுதான் உடம்புகள் வேறுவேறாக கொடுக்கப்படுகின்றது.

ஆன்மாவிற்கு கடைசியாக மனிதப் பிறப்புக் கொடுக்கப்படுகின்றது.மனிதப் பிறப்பில் .அறம்.பொருள் ,இன்பம்,அனுபவித்து பின் வீடுபேறு அடைய வேண்டும்.

வீடுபேறு என்பது எங்கு இருந்து வந்ததோ அங்கே திரும்பி செல்லவேண்டும்.

ஆன்மாவிற்கு கொடுத்த உயிரையும்,உடம்பையும், அழிக்காமல்,அதை ஒளியாக மாற்றி திருப்பி மாயையிடம் ஒப்படைக்க வேண்டும்.

ஆன்மா எப்படி இங்கு வந்ததோ அப்படியே திரும்பி செல்லவேண்டும்.

உயிரையும் உடம்பையும் அழித்துவிட்டு செல்ல அனுமதி இல்லை..உயிரையும்,உடம்பையும் அழித்தால் அதற்கு மரணம் என்று பெயர் .

மரணம் வந்தால் மீண்டும் உயிரும் உடம்பும் கொடுத்து .துன்பம் ,துயரம்,அச்சம் பயம் போன்ற துன்பங்களில் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டியதுதான்.

இதுவரையில் வந்த ஆன்மாக்கள் ஒன்று கூட திரும்பி செல்லவில்லை.

இந்த உண்மையை எந்த அருளாளர்களும் மனித தேகம் படைத்தவர்களுக்கு சொல்லித் தரவில்லை.

வள்ளல்பெருமான் வந்து, தான் வாழ்ந்து ,அனைத்து ஆன்மாக்களுக்கும் ஆன்மநேய உரிமையுடன் உண்மையான வழியைக் காட்டி உள்ளார். அதற்கு ''மரணம் இல்லாப் பெரு வாழ்வு'' என்று பெயர் வைத்துள்ளார்.

ஆன்மாக்கள் மீண்டும் திரும்பி செல்ல வேண்டுமானால் அருளைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி .உடம்பையும்,உயிரையும் மாயையிடம் திருப்பிக் கொடுத்து விட்டுத்தான் செல்ல வேண்டும்.

அருளைப் பெறுவதற்கு;-- ,வாங்கிய கடனை திருப்பி செலுத்துவது போல் ..இந்த உலகில் உள்ள உயிர்களுக்கு வரும் .பசி,பிணி,கொலை,தாகம்,இச்சை.எளிமை,பயம், போன்ற துன்பங்களைப் போக்க வேண்டும்.

உயிர்களின் துன்பங்களை போக்கினால் அருள் என்னும் ஆற்றல் ஆன்மாவில் இருந்து சுரக்கும்.அந்த ஆற்றல் உள்ள அருளினால் உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் ஒளியாக்கி முழுவதுமாக மாயையிடம் ஒப்படைத்தால் ஆன்மாவிற்கு என்று ஆன்ம தேகம் கொடுக்கப்படுகிறது.

ஆன்ம தேகத்தைக் கொண்டு சுத்த தேகம்,..பிரணவ தேகம்,..ஞான தேகம் என்னும் ஒளி தேகம் கொடுக்கப்படுகின்றது.அதற்கு 'சுத்த பிரணவ ஞான தேகம்'' என்று பெயர் வைத்தார் வள்ளல்பெருமான்.

''சுத்த பிரணவ ஞான தேகம்'' பெற்றால் எந்த தடையும் இல்லாமல் ஆன்மா இந்த அண்டத்தை விட்டு வெளியே சென்று வந்த இடத்திற்கு சென்றுவிடும்.

தனியாக வந்த ஆன்மா உயிர் உடம்பு,எடுத்து திறம்பட வாழ்ந்து உயிரையும் உடம்பையும் அழிக்காமல் திருப்பிக் கொடுத்து.மாயையிடம்  நல்லபெயர் எடுத்து நற் சான்று பெற்று திரும்பி சென்றால் ஆண்டவர் அற்புதமான பரிசு ஒன்று வழங்குவார்.

அங்கு சென்றவுடன் ஆன்மாவிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் ஐந்தொழில் செய்யும் வல்லபம் என்னும் பரிசு வழங்கப் படுகின்றது.

அதற்கு பேரின்ப வாழ்க்கை பேரின்ப லாபம் ,பேரின்பம் என்று பெயராகும்.

உயர்ந்த அறிவை பெற்றுள்ள மனித தேகம் எடுத்துள்ளவர்கள் உயிரையும் உடம்பையும் மாற்றி இந்த தேகத்தையே நித்திய தேகமாக மாற்றி பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்திட வேண்டும் என்பதற்காகவே வள்ளல்பெருமானை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளார் .

நாம் அனைவரும் வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியைக் கடைபிடித்து அருளைப் பெற்று பேரின்பத்தைப் பெறுவோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

தந்தை பெரியார் சொல்லியது என்ன ?

தந்தை பெரியார் சொல்லியது என்ன ?


வள்ளலார் சொல்லியதைத்தான் பெரியார் சொன்னார் .

வள்ளலார் எழுதிய அருட்பாவைப் படித்து அதில் உள்ள கடவுள் மறுப்புக் கொளகைகளை பார்த்தபிறகுதான் பெரியாருக்கு அறிவு விளக்கமே உண்டானது.

நம்முடைய தமிழ் நாட்டில் இப்படி ஒரு அருளாளரா ?என்று வியந்து போனார் பெரியார்.

பெரியார் கடவுள் மறுப்புக் கொள்கைகள் யாவும் வள்ளலாரிடம் கற்றுக் கொண்டதாகும்.

கடவுளை கற்பித்தவன் பைத்தியக் காரன் என்றார் வள்ளலார் .கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றார் பெரியார்.

கடவுள் இல்லை என்பது இல்லை!.ஆனால் மனிதன் கடவுளை உருவாக்க முடியாது என்பதுதான் வள்ளலாரின் கொள்கைகளாகும்.

கடவுளுக்கு உருவம் இல்லை ! அவர் ஒளியாக உள்ளார் ஒளியானக் கடவுளை எப்படி உருவமாக படைக்கமுடியும் என்பதைத்தான்

வள்ளலார் வடலூரில் சத்திய ஞானசபையைக் கட்டி அங்கு ஒளியே கடவுள் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் .

அந்த சபையின் வெளிச்சுவரில் புலால் உண்பவர்கள் உள்ளே செல்ல அனுபதி இல்லை என்று எழுதி வைத்துள்ளது..
பெரியார் வடலூர் சென்று சத்திய ஞான சபையை உள்ளே சென்று பார்க்க ஆவல் கொண்டு சென்றார் .வெளியில் எழுதி உள்ளதைப் பார்த்து அதை மதித்து உள்ளே செல்லாமல் வந்துவிட்டார் .

வள்ளலாரின் கொள்கைகள் மீது பற்றுக் கொண்ட பெரியார் வள்ளலாரின் கொளகைகளை வைத்து மனித சமுதாயத்திற்கு பகுத்தறிவு கொள்கை என்ற ஒரு புதிய கோணத்தில் மக்களுக்கு அறிவு சார்ந்த கருத்துக்களை விதைத்தார்.

வள்ளலார் எழுதிய திரு அருட்பா .சமய மத வாதிகளின் பிடியில் சிக்கி இருந்த காலத்தில் பெரியார் அவர்கள் வள்ளலாரின் கொளகைகளை வெளியே கொண்டுவந்தார் என்பது சாதாரண விஷயம் அல்ல !
உள்ளபடி மனித சமுதாயம் பெரியாரைப் பாராட்டவேண்டும்.

இன்னும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் சமய மத வாதிகளின் கையில் சிக்கிக் கொண்டு உள்ளது அதை அவர்களுக்கும் புரிய வைத்து வள்ளலாரின் தனித்தன்மை கொள்கைகளை நெறிப்படுத்த வேண்டும்.

கற்பனைக் கடவுள்களின் வழிப்பாட்டில் புதைந்து கிடக்கும் மக்களை திருத்தி உண்மையான வழிபாட்டிற்கு அழைத்து வரவேண்டும் என்பதுதான் வள்ளலாரின் அழுத்தமான கொள்கைகளில் ஒன்றாகும். .

அப்போதுதான் மனிதன் புதிய புனித மனிதனாக வாழ முடியும்.
சாதி,சமயம்,மதம் ,கடவுள் ,தெய்வம் எல்லாம் மனிதர்களால் தோற்று வித்தது...கடவுளால் தோற்றுவிக்கப் படவில்லை.மனிதன்தான் தோற்றுவித்து உள்ளான் .

அதனால்தான் கடவுளைக் கற்பித்தவன் பைத்திககாரன் என்றார் வள்ளலார்.அதையே முட்டாள் என்றார் பெரியார்.

வள்ளலாரின் கொள்கைகளை முழுவதுமாக கடைபிடித்தவர் பெரியார்.ஆனால் ஒன்றை மட்டும் கோட்டைவிட்டார் .மாமிசம் உண்பதை அவரால் விடமுடியவில்லை. அதனால் அவருடைய கொள்கைகள் முற்றும் மக்கள் மத்தியில் ஏற்றுக் கொள்ள முடிய வில்லை.

மாமிசம் உண்ணாமல், போதித்து இருந்தால் அவருடைய கொள்கைகள் இன்னும் வேகமாக மக்கள் மத்தியில் வேறு ஊன்றி இருக்கும்.

வள்ளலாரின் கொள்கை நாத்திகமும் இல்லை ! உலக ஆத்திகமும் இல்லை !. உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் கடைபிடிக்கும் புனிதமான சுத்த சன்மார்க்க வாழ்க்கை நெறியாகும்.

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியானது ஒரு தனித்தன்மை வாய்ந்தது.அதற்கு ஈடு இணையானது உலகில் வேறு எதுவும் இல்லை.
இறுதியில் வள்ளலார் சொல்லுவது !

நாத்திகம் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு
நாக்கு ருசிக் கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு

என்பார் அதற்கு என்ன விளக்கம் என்ன என்றால் .

கடவுள் இல்லை என்பவர் நாக்கு முடை நாக்கு என்பது, பேசமுடியாத நாக்கு இல்லாத ஊமையன் என்பதாகும்.

அடுத்து நாக்கு ருசிக் கொள்வது நாறிய பிண்ணாக்கு என்பது .நாக்கு ருசிக்காக புலால் உண்பவன் மலம் உண்பதற்கு சமம் என்கின்றார் அதாவது துர்நாற்றம் உடைய மலத்தை உண்பதற்கு சமமாகும் என்கின்றார் வள்ளல்பெருமான் .

அதனால்தான் இறைவன் படைத்த உயிர்களை கொலை செய்வதும் பாவம் .அதனுடைய புலாலை உண்பதும் பாவம் என்கின்றார்.
புலால் உண்பவர்களுக்கு கடவுளைப் பற்றி பேச அருகதை இல்லை என்கின்றார் வள்ளல்பெருமான்.

உலகில் உள்ள எந்த மதமாக இருந்தாலும்,எந்த சமயமாக இருந்தாலும்.எந்த சாதியாக இருந்தாலும் அவர்கள் உயிர்க் கொலை செய்வதையும் அதன் புலாலை ( மாமிசம் ) உண்பதை ஆதரிக்க படுவார்களே ஆனால் அவர்கள் மனிதர்கள் அல்ல ! அவர்கள் அருளாளர்களும் அல்ல ! அவர்கள் உண்மையான இறைவனை அறிய தகுதி அற்றவர்கள் என்பார் வள்ளல்பெருமான்.

மனித தேகம் எடுத்த அனைவரும் உயர்ந்த அறிவைப் பெற்றவர்கள் .அறிவைக் கொண்டு அறிவைத் தேடுங்கள் உண்மைகள் தானே வெளிப்படுத்தும்.

கடவுள் இல்லை என்பது ஏமாற்று வேலை !
கடவுள் பலஉண்டு என்பதோ பைத்தியக் காரத்தனம் !
கடவுள் ஒருவர் என்பதே உண்மை அறிவு !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 8 ஜூன், 2015

பொருள் வேண்டாம் அருள் வேண்டும் !

பொருள் வேண்டாம் அருள் வேண்டும் !

பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றில்லை நான்
படைத்த அப்பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும் எறிந்தேன்
கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீ தான் கொடுக்கின்ற பொருளை
எறிகளேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே
கணத்திலே எல்லாம்  காட்டும் நின் அருளைக்
கண்டனன் இனிச்சொல்வது என்னே !

இந்த உலகம் பொருளால் இயங்கிக் கொண்டு உள்ளது .பொருளால் அழிவுவரும் .மரணம் வரும் என்பதை அறிந்து .எனக்கு பணத்திலே சிறிதும் ஆசை ஒன்றும் இல்லை.

அப்படியே எனக்கு கிடைத்த பணத்தை பல நேரங்களில் கிணற்றிலும் குளத்திலும் எறிந்தேன் கால்வாயிலும் எறிந்தேன் .

ஏன் வள்ளலால்பெருமான் கிணற்றிலும்,குளத்திலும் எறிந்தார் வேறு யாருக்காவது கொடுத்து இருக்கலாமே என்று சில அன்பர்கள் கேட்கின்றார்கள் .

உயிரை அழிக்கும் பணத்தை யாருக்கும் கொடுக்கமாட்டார் .அதனால் அவர்கள் அழிந்துவிடுவார்கள்  எனநினைத்து எவருக்கும் வள்ளல்பெருமான் கொடுப்பதில்லை எரிந்து விடுவார் .

அருள் !

அதே நேரத்தில் இறைவன் கொடுக்கும் அருளை எறிவதில்லை.பிறர்க்கு கொடுக்கின்றேன் என்கின்றார் .

இறைவனால் கொடுக்கும் அருள் என்னும் பொருள்,யாரையும்  .எந்த உயிர்களையும், அழிப்பதில்லை. என்பதை நான் கண்டு கொண்டேன் அதனால் பிறர்க்கு கொடுக்கின்றேன் என்கின்றார் .

உயர்ந்த அறிவுள்ள மனித பிறப்பு எடுத்த நாம் பொருளைத் தேடி அலைந்து பொருளை சம்பாதித்து என்னபயன் ? அந்தப்பொருள் உங்கள் உயிரைக் காப்பாற்றாது .உயிரைக் காப்பாற்றாத பொருளைத் தேடி அலையாமல் ,உயிரைக் காப்பாற்றும் அருளைத் தேடுங்கள் என்கின்றார் வள்ளல்பெருமான்.

இந்த உண்மையை அறிந்து இருந்தாலும் போருளுக்காகவே மக்கள் அலைந்து கொண்டு உள்ளார்கள்.

பொருளால் இருள் உறும் என்று தெரிந்தே தவறு செய்து கொண்டு உள்ளார்கள் .

இதற்கு எல்லாம் அடிப்படைக் காரணம் சாதி,சமயம்,மதங்களின் வழிக் காட்டுதலின் படி வாழ்வதால் வந்த மயக்க நிலைகளாகும்

பொருள்மேல் வெறுப்பு உண்டாகி ,அருள்மேல் விருப்பம் வந்தால் மட்டுமே மனிதன் மனிதனாக வாழ்ந்து இறைநிலையை அடையமுடியும்.

உயர்ந்த அறிவு உள்ள மனிதர்கள் தாழ்ந்த நிலைக்கு செல்லாமல் உயர்ந்த அருள் நிலைக்கு செல்லவேண்டும் என்பதற்காகவே மனித பிறவி இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிவுள்ள மனிதர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சாதி ஒழிய வேண்டுமானால் காதல் திருமணம் செய்யுங்கள்.!

சாதி ஒழிய வேண்டுமானால் காதல் திருமணம் செய்யுங்கள்.!

சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திர சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !

ஆதி காலத்தில் இருந்து சாதி,சமயம்,மதம்,சாத்திரம் போன்ற சூழ்ச்சிகளால் மனிதகுலத்தை பலவகையாக பிரித்து வைத்த கோத்திரம் போன்ற குப்பைகளில் தள்ளி மனித அறிவை மழுங்க வைத்துவிட்டார்கள்.அந்த குப்பைகளை நிரைப்பிக் கொண்டு சண்டையிட்டு வீணாக அழிந்து கொண்டு உள்ளீர்கள்.

இனிமேல் அப்படி ஒரு நிலைமை வந்துவிடக்கூடாது .

இப்போது உள்ள சட்டங்களாலும்,ஆட்சியாளர்களாலும் சாதியை ஒழிக்க முடியாது.அவர்கள் சாதியை வளர்த்துக் கொண்டு உள்ளார்கள்.சாதிப் பிரிவினையைத் தூண்டி விட்டுக் கொண்டு உள்ளார்கள்.,

இப்போது இயற்கையின் நீயதிப்படி ,சன்மார்க்க கொள்கைப்படி சாதிகள் ஒழிந்து கொண்டு உள்ளது.

எப்படி சாதிகள் ஒழியும் என்றால் காதல் திருமணத்தினால் தான் சாதியை ஒழிக்க முடியும்.

காதலுக்கு சாதி ,சமயம், மதம்,தெரியாது .காதலுக்கு அன்பு மட்டுமே தெரியும்.ஒவ்வொரு ஆணும் பெண்ணும் அன்பு செலுத்துகின்ற போது சாதிகள் தானே அழிந்துவிடும்.

இப்போது சாதி,சமய,மதங்களில் விழுந்து தவித்துக் கொண்டுள்ள மக்களைத் திருத்துவதற்காக எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளல்பெருமான் உடம்பில் அமர்ந்துகொண்டு மக்களைத் திருத்திக் கொண்டு உள்ளார் .

இதைத்தான் அருட்ஜோதி வீதியிலே விளையாடல் புரிகின்ற தருணம் என்கின்றார் ..இது நல்லத் தருணம் இது நல்லத் தருணம் அருள் செய்ய இது நல்லத்தருணம்

ஆதலால் மக்கள் இந்த நல்லத் தருணத்தை பயன்படுத்திக் கொண்டு அவரவர்கள் தகுதிக்கு தகுந்தாற் போல் காதல் திருமணம் செய்து கொள்ளுங்கள். .சாதி,சமயம்,மதம் தானே ஒழிந்துவிடும்.

உண்மையான ஒரேக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி மட்டுமே என்பதை அறிவால் அறிந்து கொண்டு செயல்படுங்கள் எல்லாம் நன்மையாகவே .மகிழ்ச்சியாகவே நடக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 4 ஜூன், 2015

தமிழன் யார் ?

தமிழன் யார் ?

தினைத் துணையும் பேதமின்றிச் ஜீவகாருண்ய வழி சேர்ந்து வாழ
மனத்திருளை மாற்றி அறிவு ஆனந்தத் துரியமலை வள நாடேறி
நினைத்திடவும் முடியாத நிலைக்கு நம்மை அழைத்தானை நேரிலோர் நாள் 
அனைத்து உலகம் அறிவானைத் தமிழர் இன்னும் அரியானை அணிந்து வாழ்வாம் .;----கவியோகி சுத்தானந்த பாரதியார் .எழுதிய பாடல்.

தமிழையும் தமிழின் பெருமையும் பேசும் தமிழ் அறிஞர்கள் .தமிழ் பத்திரிகைகள் .தமிழ் டி,வி சேனல்கள் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை இருட்டடிப்பு செய்து வருகின்றார்கள் .

உலகம் போற்றும் உத்தமர் வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பா என்னும் அருள் நூலைப் பற்றியோ .அவர் எழுதிய தமிழின் பெருமை பற்றியோ இதுவரையில் சன்மார்க்கிகள் தவிர வேறு எவரும் அதனுடைய பெருமையும் அருமையும் தெரிந்து கொள்ளவில்லை.

தமிழ் பத்திரிகைகளும் வள்ளல்பெருமானைப் பற்றியும் அவருடைய உண்மை நிலைகளைப் பற்றியும் வெளியிடுவதில்லை.

கண்ட கண்ட அருவருக்கத்தக்க செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் சன்மார்க்க நிகழ்ச்சிகளையும்.சன்மார்க்க விழாக்கள் ,சன்மார்க்க மாநாடுகள் நடந்தாலும் பத்திரிகையில் வெளியிடுவதில்லை.இவர்கள் எல்லாம் தமிழர்களா ?

ஏன் இந்த அவலநிலை என்று புரியவில்லை.
அவர்களுக்கு பணம் வேண்டும் பணம் கொடுத்தால் எந்த செய்திகளையும் வெளியிடுவார்கள்.

அதேப் போல் டி,வி,சேனல்கள் வேண்டாத அறுவருக்கதக்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் சேனல்கள் வள்ளல்பெருமானின் அருமை பெருமைகளை,
சன்மார்க்க நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதில்லை

இவர்கள் எல்லாம் தமிழர்களா ? தமிழ் தமிழ் என்று வாய் கிழிய பேசும் இவர்கள் எல்லாம் தமிழன் என்று சொலவதற்கு கேவலமாக இருக்கின்றது.

வள்ளல்பெருமானை தெரிந்து கொள்ளாத தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல .பச்சோந்திகள்

உலகம் எல்லாம் உள்ள தமிழர்களும் மற்ற இனத்தவர்களும் வள்ளலாரின் உண்மை நிலையை அறிந்து வடலூரை நோக்கி வந்து கொண்டு உள்ளார்கள்.

ஆனால் தமிழ் நாட்டில் உள்ளவர்கள் .தமிழை காப்பாற்று பவர்கள் தமிழைப் பற்றி பேசும் போலிகள் வள்ளல்பெருமானைப் பற்றியும் அவர் எழிதிய திரு அருட்பாவையும் அறியாமல் என்ன பேசினாலும் அவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல ! வெறும் வெத்து வெட்டுகள் என்பதை மக்கள் அறிவார்கள் .

வள்ளல்பெருமானைப் பற்றி தெரிந்து கொள்ளாதவர்கள் தமிழர்கள் அல்ல ! தெரிந்து கொண்டவர்களே தமிழர்கள் .

தமிழ் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும்.அரசியல் தலைவர்களும் வள்ளலாரைப் பற்றி சிந்திப்பதே இல்லை .இவர்கள் எல்லாம் தலைவர்களா ? இவர்களை நினைத்தால் தமிழ் தலை குனிந்து நிற்கின்றது.

தமிழ் என்ற சொல்லுக்கு இலக்கணம் வகுத்தவர் வள்ளல்பெருமான்.தமிழ் உலக மொழிக்கு எல்லாம் தந்தை மொழி என்றவர் வள்ளல்பெருமான்.தமிழ் இறைவனால் எழுதப்பட்ட மொழி என்றவர் வள்ளல்பெருமான்.

பணத்திற்காகவும் ,புகழுக்காகவும்.பெருமைக்காகவும்  தமிழ் பேசும் மனிதர்கள் தமிழர்களா ? இல்லை இல்லை ,அவர்கள் மிருகங்கள் .மிருகங்களை விட கேவலமானவர்கள்.

இனிமேலாவது வள்ளல்பெருமானின் உயர்ந்த ஒப்பற்ற உண்மைகளை,கொளகைகளை அறிந்து கொள்ளுங்கள்
தமிழ் உங்களை காப்பாற்றும்.இறைவன் உங்களை காப்பாற்றுவார் .

வள்ளல்பெருமானை விட்டுவிட்டவர்கள் தமிழர்களே அல்ல என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் .

தமிழன் என்று தலை நிமிர்ந்து நிற்க வேண்டுமானால் வள்ளல்பெருமான் எழுதிய ''திருஅருட்பா '' ஒன்றுதான் உங்களுக்கு நல்ல வழியைக் காட்டும்.புரிந்து அறிந்து, தெரிந்து கொள்ளுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 3 ஜூன், 2015

வள்ளலார் உயிர்க்கொலையை மூன்று வகையாகப் பிரிக்கிறார்.

வள்ளலார் உயிர்க்கொலையை மூன்று வகையாகப் பிரிக்கிறார்.

1. கோபத்தால் செய்யப்படும் கொலை.

2. உணவுக்காக செய்யப்படும் கொலை

3 மூடபக்தியால் செய்யப்படும் கொலை ..

கோபத்தால் செய்யப்படும் கொலையைக் கேட்பதற்கு சட்டங்கள் இருக்கின்றன.

காவல்த்துறை இருக்கிறது. நீதிமன்றங்கள் இருக்கின்றன. அரசு இருக்கிறது.

அனால் உணவுக்காகச் செய்யப்படும் கொலைகளையும், மூட்பக்தியினால் செய்யப்படும் கொலைகளையும் கேட்பதற்கு சட்டமும் இல்லை வேறு எதுவும் இல்லை.

கேள்விகள் கேட்பார் இல்லாத இக்கொலைகளுக்கு வாயில்லாப் பிராணிகளே பலியாகின்றன.

மனிதன் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்கிறான்.

கொடிய விலங்குகள் தம்மைத்தாமே பாதுகாத்துக் கொள்கின்றன.

ஆனால் தம்மைத்தாமே பாதுகாத்துக்கொள்ள முடியாத சாதுவான விலங்குகள், பறவைகள் மூட பக்தியால் பலியாகின்றன.

எனவே அனைத்து வகையான உயிர்வதை செய்வதையும் தடை செய்து, தமிழக அரசும் ,மத்திய அரசும் தாவர உணவின் உயர்வையும் முக்கியத்தையும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

வாயில்லாத உயிர்களை தடுப்பது நடைமுறை சாத்தியம்தான்.பெரிய சிரமம் ஒன்றும் இல்லை.

இவற்றை அரசும் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் உயிர்கள் கொலை செய்யப்படுவதை தடுக்கலாம்

ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களும் ,அதிகாரிகளும் முதலில் உண்மையை உணர்ந்து மூட நம்பிக்கையை கைவிட வேண்டும்.அவர்களே தவறு செய்யும்போது மக்கள் எப்படி திருந்துவார்கள்.

இதைத்தான் வள்ளல்பெருமான் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக என்றார்.

உயிர்கள்மேல் கருணை இல்லாது ஆட்சி செய்யும் எந்த ஆட்சியாக இருந்தாலும் .அவை அழிந்துபோய் விட வேண்டும் என்கின்றார்.

அரசியல்வாதிகளும் ஆட்சியாளர்களும் மக்களும் உயிர்க்கொலை செய்வதை சட்டப்படி தடை செய்ய வேண்டும் என்பதே வள்ளல்பெருமானின் அழுத்தமான சன்மார்க்க கருணைக் கொள்கையாகும்..

சன்மார்க்கிகள் எவ்வளவுதான் உயிர்க் கொலை செய்வது குற்றம் என்று கூக்குரல் போட்டாலும்,தடுத்தாலும் விளம்பரங்கள் செய்தாலும்.மக்கள் திருந்துவதாக இல்லை .இந்திய உயிர்கொலை தண்டனை சட்டம் என்பதை கொண்டுவந்து ஆட்சியாளர்கள் சட்டப்படி மக்களை திருத்தவேண்டும்.

அப்போதுதான் மக்களும் உயிர்களும் காப்பாற்றப்படும் .இதுவே இந்த காலக்கட்டத்தில் ஆட்சியாளர்கள் செய்யும் அரும்பணியாகும்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் !

ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் !

ஒன்றே கடவுள் ஒருவனே தேவன் என்று சொன்னார்கள் !

அந்த ஒன்றே ஒரே கடவுள் யார் ? என்பதை எவரும் சொல்லவில்லை .அ வர் யார் ? என்பதை எவரும் காட்டவில்லை.

வள்ளல்பெருமான் ஒருவர்தான் ஒரே கடவுள் யார் என்பதை உலகுக்கு,உலக மக்களுக்கு காட்டியவர் .

ஒரே கடவுள் என்பவர் அருட்பெருஞ்ஜோதி ஒருவர் மட்டுமே என்பதைத் தான் கண்டு உண்மையை வெளிப்படுத்தியவராகும்.

அந்த ஒரே கடவுளை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்துவதற்கு ,தமிழ் நாட்டில்,உள்ள கடலூர் மாவட்டத்தில் பார்வதிபுரம் என்னும் வடலூரில் ''சத்திய ஞான சபையைத்'' தோற்றுவித்து ,சாதி,சமய ,மத என்ற வெறும் பாடுகள் இல்லாமல் உலக மக்கள் அனைவரும் வந்து வழிபடுவதற்கு ஏற்றதாக அமைத்துள்ளார் .

வடலூரில் உள்ள ஒரே உண்மைக் கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

அந்த ஒளியைத்தான் இயற்கை விளக்கமாக மைத்துள்ளார் அவரே உண்மை கடவுளாகும்.அவர் மனிதர்களில் ,தேவர்களில் ,கர்த்தாக்க்களில் சித்தர்களில் யோகிகளில்,ஞானிகளில் ஒருவர் அல்ல .

பல கோடி அண்டங்களையும்,உலகங்களையும்,
உயிர்களையும்,பொருள்களையும்.கிரகங்களையும் .
மற்றை எல்லாவற்றையும்.படைத்து ,காத்து,மாற்றி,
இயக்கிக் கொண்டு உள்ளவராகும்.

அவரே அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.
அவரே எல்லா ஆன்மாக்க்ளிலும் உள் ஒளியாக இருந்து .உயிர்களின் தோற்றமாகி .உடம்பை கொடுத்து இயங்கி இயக்கிக் கொண்டு உள்ளவராகும்.

அந்த உண்மைக் கடவுளை... ஜீவகாருண்ய வல்லப்பத்தாலும்....சத்விசார செயல்களாலும் ..வழிபாடு செய்து அருளைப் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.