வியாழன், 25 பிப்ரவரி, 2016

மானிடனாக வந்த தெய்வம் !

 மானிடனாக வந்த அருட்பெருஞ்ஜோதி தெய்வம் ! அவர்தான் அருட்பிரகாச வள்ளலார் !

அவர் பிறந்து வளர்ந்து,கல்விக் கற்க,  ஆன்மீகத்தில் வழிக் காட்ட  எவரிடமும் தீட்சை பெறவில்லை. அவருக்கு  எவரும் குரு இல்லை ,ஆனால் அவருக்கோ பல சிஷ்யர்கள்,அனைவரும் நன்கு  படித்தவர்கள்.பட்டம் பெற்றவர்கள் . ஒன்பது வயதி லேயே ,சாதி,சமய,மத வித்தியாசமின்றி அனைவராலும் ஏற்கப்பட்டவர். சிறு வயதிலேயே பக்திப் பாடல்கள் இயற்றும் வல்லமை பெற்று இருந்தார் .அவர் எழுதிய அருட் பாடல்கள் அனைத்தும் தெவிட்டாத தெள்ளமுதம். அருள் தீஞ் சுவை கலந்தது 

ஒரு பார்வையிலேயே மாமிசம் உண்பவர்கள் கூட, அடியோடு அதை விட்டு விட்டனர். அவர் பார்வை தடைகள் இல்லாத எக்ஸ்ரே தன்மை கொண்டது  கூர்மையான அழகிய கண்கள்,அகன்ற நெற்றி, குழி விழுந்த கன்னம்,செவ்விதழ் போல் உதடு,கம்பீரக் குரல் ,நிமிர்ந்த நடை, அவர் அறிவு அருள் அறிவாக இருந்தது.  பிறர் மனத்தில் தோன்றும் எண்ணங்களை எல்லாம் அவரால் உணர முடிந்தது. அவர் எங்கிருக்கிறார் என்று யாராலும் அறியமுடியாது.மற்றவர்கள் கண்களுக்குத் தெரியாமலும் ,அறிந்து கொள்ளவும் முடியாதபடி திடீரென்று காணாமல் போய்விடுவார்.

எங்கு போவார் என்ன செய்கின்றார் என்று எவருக்கும் தெரியாது.

அவரை யாரும் தொட்டுப் பேச முடியாது,அவர் அருகில் அமர முடியாது,அவர் கண்களைப் பார்த்து எவராலும் பேசமுடியாது.அவரை சுற்றி அருள் உஷ்ணம் வட்டம் இட்டுக் கொண்டே இருக்கும்.

பார்ப்பதற்கு, மாநிறம், ஒல்லிய  நிமிர்ந்த உருவம், எலும்பெல்லாம் தெரியும்.நீண்ட மெல்லிய மூக்கு. விசாலமான நெற்றி. கண்களில் ஏதோ ஒரு காந்த சக்தி. முகத்தில் ஏதோ கவலைப் பட்டுக்கொண்டெ யிருக்கிற மாதிரி ஒரு தோற்றம். நீண்ட கூந்தல் மாதிரி தலை முடி. காலில் பாத ரக்ஷை. (அந்த காலத்தில் ஆற்காடு ஜோடு என்று அதற்குப் பெயர்) உடம்பை மூட ஒரு வெள்ளைத் துணி. வேட்டியோடு சேர்ந்து உடலின் மேலும் போர்த்தப்பட்டிருக்கும். 
ஆகார விஷயம் சொல்பம். ஒன்றிரண்டு கவளம் அதுவும் நண்பர்கள் விருப்பதிற்காக ,ரெண்டு மூன்று நாளைக்கொரு தரம். உபவாசம் என்று இருந்தால் அது ரெண்டு மூன்று மாசம் வரை தொடரும். வெந்நீரில் கொஞ்சம் வெல்லம் கலந்து அது தான் ஆகாரம். ஐந்து மாத சிறுவயதிலே சிதம்பர ரகசியத்தைக் கண்டவர்.
குழந்தையாக அம்மா ,அப்பாவின் கையில் இருந்தபோதே சிதம்பரத்தில் ''ரகசியம்'' (ஆனந்த வெளி, பரமஆகாசம்) அவருக்கு புரிந்துவிட்டது. பல பாடல்களில் அதை ,அவரே  வெளிப்படுத்தி உள்ளார் 
துறவியாக  இருந்தும் உலக வாழ்க்கையில் ஈடு பாடு இல்லை.மனித தேகத்தில் ஆன்மா என்னும் உள் ஒளியுடன் வாழ  பிடிக்கவில்லை, தன்னுடைய உடம்பை ஒளியாக மாற்றுவதற்கு படாத பாடு பட்டு உள்ளார் .அந்த துயரத்தை படமுடியவில்லையே என்று கதறி கதறி அழுதுள்ளார்  கதறல். போதும் போதும் பட்டதெல்லாம்.போதும் என்று பல பாட்ல்களில் தன்னுடைய துன்பத்தைப் பதிவு செய்துள்ளார் .
''படமுடியாது இ னித் துயரம் பட முடியாது அரசே
பட்டதெல்லாம் போதும் இந்த பயம் தீர்ந்து இப்பொழுதே என்
உடல் உயிர் ஆதியை எல்லாம் நீ எடுத்துக்கொண்டு உன்
உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எ னக்கே அளிப்பாய்
வடலூரு சிற்றம்பலத்தே வாழ்வாய் என் கண்ணுள்
மணியே, குரு மணியே, மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே, ஞான
நன் மணியே, பொன் மணியே, நடராஜ மணியே
இந்தப் பாட்டில் கண்டபடி தனக்கு இறைவனின் உடல் உயிர் ஆவியை அனைத்தும் இறைவன்  வழங்கி உள்ளார்  அந்த மா மனிதர். தான் அருட் பிரகாச வள்ளலாராக மாறினார் .கருணையே வடிவானவர்.
உயிர் இரக்கமே அவரின் உயிரின் சுவாசம்...ஆடு, மாடு, பறவை, பூச்சி கத்தினாலும் ''ஆண்டவா, அதற்கு என்ன துன்பமோ, என்னால் அதை போக்க முடியுமோ, என்று கலங்குவார், பாவம் அதற்கு என்ன ஆச்சோ என்று பயந்துபோவார்,நடுங்கி போவார் . 
என் அப்பனே , இறைவனே அவற்றின் துன்பம் உடனே போக்கிடுவாய். படம் எடுத்து ஆடும் கொடிய விஷ நாகத்திற்கும் ஏன் படம் எடுக்கின்றது என்ன துன்பமோ தெரியவில்லையே என்று வேதனைப்படுவார் .அவருக்குத்தான் எல்லா உயிரும் சமமாயிற்றே.அதனால்தான்  ஆன்ம நேய ஒருமைப் பாட்டு  உரிமை வேண்டும் என்றார் 

அவர் கலங்கும் பாடல் ;--
.
'' காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேட்டு உளம் குலைந்தேன்
தாக்கிய ஆந்தை குரல் செயப் பயந்தேன்
சாக்குரல் பறவையால் தளர்ந்தேன்
வீக்கிய வேறு கொடுஞ் சகுனம் செய்
வீக்களால் மயங்கினேன் விடத்தில்
ஊக்கிய பாம்பைக் கண்ட போது உள்ளம்
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய் ''

மரம் செடி கொடிகள் போன்ற தாவரங்கள்  தண்ணீர் இன்றி எங்காவது வாடி வதங்கி காய்ந்து தலை சாய்ந்ததைப் பார்த்து பதறுவார். ஐயோ என்ன துன்பம் அதன் பசியை போக்க யாருமில்லையா ?  என்று கதறுவார் .மழை வேண்டி இறைவனிடம் மன்றாடுவார் .
உலகில் எந்த உயிரும் துன்பமுருவதைக் காண சகிக்காத ஜீவகாருண்ய திலகம் வள்ளலார் ...அவர். ''வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடியவர் '' இறக்கம் நீங்கில் என் உயிர் நீங்கும் என்றவர்.இரக்கமே என் உயிர் என்றவர். 
அகம் கருத்து புறம் வெளுத்து இருந்த உலக மக்கள் அனைவரையும் திருத்த வந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.

''அருட்பெருஞ்ஜோதி தான் வள்ளலார் ...வள்ளலார் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்''  

மனித தேகம் எடுத்தவர்கள் மீண்டும் பிறப்பு  இறப்பு இல்லாமல் அருள் தேகம் பெற்று மரணத்தை வென்று,  மரணம்  இல்லாப்  பெரு வாழ்வு   வாழும் தகுதி உடையவர்கள் என்பதை ,உலக மக்களுக்குத் தெரியப் படுத்தவே இறைவனால் வருவிக்க உற்றவர்த்தான் வள்ளல்பெருமான் அவர்கள்.

மனித தேகம் எடுத்த நாம் அனைவரும் அவர் காட்டிய சுத்த சன்மார்க்கப் பாதையில் சென்று அவர் போல் வாழ்ந்து ,மற்றவர்களுக்கும் வழிக் காட்டுவோம் ,/.

அருள் பெற்று வாழ்வதற்கு தடையாக இருக்கும் ,சாதி,சமய,மதங்களின் கொள்கைகளை விட்டு ,வள்ளலார்  காட்டிய  பாதையில் வீறு நடைபோடுவோம்.வாருங்கள்..வாருங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896....

புதன், 24 பிப்ரவரி, 2016

வள்ளல்பெருமான் யார் ?

வள்ளல்பெருமான் யார் ?


வள்ளலார் ஒரு ஆன்மீகவாதியா ? இல்லை

வள்ளலார் ஒரு சமுதாய சிந்தனை யாளரா? இல்லை

வள்ளலார் ஒரு புரட்சியாளரா ? இல்லை,

வள்ளலார் ஒரு பகுத்தறிவு வாதியா ? இல்லை.

வள்ளலார் ஒரு சீர் திருத்த வாதியா? இல்லை.

வள்ளலார் ஒரு அறிவியல் மேதையா ? இல்லை.

வள்ளலார் ஒரு அரசியல் வாதியா ? இல்லை.

வள்ளலார் ஒரு பக்தி யாளரா ? இல்லை.

வள்ளலார் ஒரு யோகியா ? இல்லை

வள்ளலார் ஒரு ஞானியா ? இல்லை.

வள்ளலார் ஒரு சிந்தாந்தியா ? இல்லை

வள்ளலார் ஒரு வேதாந்தியா ? இல்லை.

வள்ளலார் ஒரு கலாந்தியா ? இல்லை.

வள்ளலார் ஒரு யோகாந்தியா ? இல்லை..

வள்ளலார் ஒரு நாதாந்தியா ? இல்லை.

வள்ளலார் ஒரு போகாந்தியா ? இல்லை.

வள்ளலார் ஒரு போதகரா ? இல்லை.

வள்ளலார் ஒரு மதவாதியா ? இல்லை.

வள்ளலார் ஒரு சமயவாதியா ? இல்லை.

வள்ளலார் ஒரு ஜாதியை சார்ந்தவரா ? இல்லை

வள்ளலார் ஒரு இந்தியரா ? இல்லை

வள்ளலார் ஒரு மொழியை சார்ந்தவரா ? இல்லை.

வள்ளலார் ஒரு காந்திய வாதியா ? இல்லை.

வள்ளலார் ஏதாவது ஒரு நாட்டை சார்ந்தவரா? இல்லை.

வள்ளலார் ஒரு அண்டத்தை சார்ந்தவரா ? இல்லை.

மேலே கண்ட செயல் பாடுகளில் வள்ளலார் ஒருவர் அல்ல என்பதை.நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போ வள்ளலார் யார் ?

வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்.

சுத்த பிரணவ ஞான தேகம் பெற்றவர்.

மரணம் இல்லாப் பெருவாழுவு பெற்றவர்.

வள்ளலார் கடவுளின் தேகம் பெற்றவர்.

அவருக்கு பிறப்பு இல்லை இறப்பு இல்லை.

தோற்றம் மாற்றம் இல்லாதவர்.

வள்ளலார் என்ன செய்து கொண்டு உள்ளார் ?

இயற்கை உண்மையாக இருக்கின்றார்..இயற்கை அறிவினராக இருக்கின்றார்....இயற்கை இன்பமாக இருக்கின்றார்..நிற்குணராக இருக்கின்றார்...சிற்குணராக
இருக்கின்றார்...நித்தியராக இருக்கின்றார்..சத்தியராக இருக்கின்றார்..ஏகராகஇருக்கின்றார்...அநேகராக இருக்கின்றார்...ஆதியாக இருக்கின்றார்..அனாதியாக இருக்கின்றார்..அமலராக இருக்கின்றார்.
.
அருட்பெருஞ்ஜோதியாக இருக்கின்றார்..

மேலும் அற்புதர் என்றும்,,நிரதியர் என்றும்,
எல்லாம்ஆனவர் என்றும்,எல்லாம் உடையவர் என்றும்.எல்லாம் வல்லவர் என்றும்,அனைவராலும் குறிக்கப்படுதல். முதலிய அளவு கடந்து திருக்குறிப்புத் திருவார்த்தைகளால் குறிக்கப் படுபவராக உள்ளார்.

எல்லாம் அறிந்த சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும்,உணர்ந்தும்,புணர்ந்தும்,அனுபவிக்க விளங்குகின்ற தனித் தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுளாக உள்ளார்..

மேலும்;--

எல்லாச் சத்தி களுக்கும், எல்லாச் சத்தர் களுக்கும், எல்லாத் தலைவர் களுக்கும். அறிந்து கொள்ளுதற்கு மிகவும்அரியதாய்,

எல்லாத் தத்துவங் களுக்கும்,எல்லாத் தத்துவி களுக்கும், அப்பால் அப்பாலாய்,விளங்கும் ஓர் ''சுத்த ஞான வெளியில்'' தமக்கு ஒரு விதத்தாலும், ஒப்பு உயர்வு சிறிதும்,குறிக்கப்படாத ''தனிப் பெரும்தலைமை அருட்பெருஞ்ஜோதியராய்'' விளங்கிக் கொண்டு உள்ளார்.

இப்போது வள்ளல்பெருமான் ''அருட்பெருஞ் சோதியாக ''அருள் ஆட்சி செய்து கொண்டு உள்ளார்''என்பதை அனைத்து தரப்பு மக்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்....

மேலும் சுத்த சன்மார்க்கிகள் வள்ளலாரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமானை யாருக்கும், எவருக்கும்,எதற்கும், ஈடு இணையாக வைத்து ,நினைப்பது, பேசுவது, வாதம் செய்வது, சுத்த அறிவு இல்லாத அறியாமையாகும்.

வள்ளல்பெருமானுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளிய அருள் வாக்கியத்தை பதிவு செய்துள்ளார் படித்து தெரிந்து,அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.

துன்பம் எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்திரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வாழ்வு எலாம் ஆக்கி
மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும்
மண் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்
மனம் நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெருக உலவாது நீடுழி விளையாடுக
அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திரு வாக்கு அளித்து கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றில்
இலங்கு நடராஜ பதியே......

மேலே கண்ட அருட்பாடல்களின் வாயிலாக இறைவனுடன் கலந்து அருட்பெருஞ்ஜோதியின் ஆட்சியை வள்ளல்பெருமானுக்கு தந்துள்ளார்.

இப்போது பல கோடி அண்டங்களையும் ,அதில் உள்ள உயிர்களையும்,பொருள்களையும் ,அனைத்தையும்,

தோற்றுவித்தல்,இயக்குவித்தல்,அடக்குவித்தல்,
மயக்குவித்தல்,தெளிவித்தலும் ஆகிய ஐந்தொழில் வல்லபத்தை செய்து கொண்டு இருப்பவர் தான் வள்ளல்பெருமான்.

ஆன்மநேய உடன் பிறப்புகளே நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.புரிந்து கொள்ளுங்கள்,அறிந்து கொள்ளுங்கள்.

சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.....

செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

குரு என்பவர் யார் ?

குரு என்பவர் யார் ?


நான் யாருக்கும் குரு அல்ல ..எனக்கு யாரும் குரு அல்ல

மாதா, பிதா,குரு,தெய்வம் என்பார்கள்.

அதற்கு என்ன பொருள்;--, அம்மாவுக்கும், அப்பாவுக்கும்,குரு என்னும் ஆசிரியருக்கும், குருவாக இருப்பவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்னும் தனித் தலைமைப் பெரும் பதியாகும்..

நாம் ஒவ்வொருவரும் சுதந்திர மானவர்கள்,நமக்கு நாமே குரு..நமது சிரசின் நடுவே,மத்தியில் உள்ளே உள்ள ஆன்மாவே நமக்கு குருவாகும்.

தன்னை அறிகின்றவர் எவரோ, அவரே, அவருக்கு குருவாகின்றார்.

நமக்கு நாமே குருவாகின்ற போது தான் , நம்மைப் படைத்தவர் யார் ? என்பது தெரியும்.

வள்ளல் பெருமான் சொல்லுவார்.

தன்னை அறிந்து இன்பம் முற வெண்ணிலாவே ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும்வெண்ணிலாவே !
என்பார்.

தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம்.என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்.

''மருட் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே
அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி''

என்றும்,, தனக்கு குரு அருட்பெருஞ்ஜோதி தான் என்பதை அகவல் வரிகளில் அழகாக ,தெளிவாக விளக்கி உள்ளார்..

உலகில் உள்ள அனைவருக்கும்,தாயாகவும், தந்தையாகவும்,குருவாகவும் விளங்கிக் கொண்டு உள்ளவர்தான் ''எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வராகும்''...

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்றும்,தனக்கு நிகர் இல்லாத, தனித் தலைமை தெய்வம் என்றும் தெரியப் படுத்தி உள்ளார்.

எனவே நம்மிடம் உள்ள அறிவையும் ஆற்றலையும், அருளையும்  தெரிந்து கொள்ளாமல்,சாகும் மனிதர்களின்  காலில் விழுவதும், வணங்குவதும், குருவாக நினைப்பதும், தெய்வமாக நினைப்பதும் அறியாமையாகும்.

வள்ளலார் பதிவுசெய்துள்ள பாடல்;--

ஆதி அந்தமும் இல்லாதோர் அமபலத்து  ஆடும்
சோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலே ஏறும்
வீதி மற்றைய  வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி....

நமக்கு வேண்டிய அனைத்து சக்திகளும் நம்மிடம் உள்ளது ,நீங்களே உங்களுக்கு தலைவன்,உங்கள் அறிவையும்,ஆற்றலையும், சக்தியையும் தட்டி எழுப்புங்கள் ,தெளிவாக சிந்தித்து தெளிவாக இருங்கள்,

குரு குரு என்று தங்களை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர் வழிகளிடம்,தங்களை அடமானம் வைத்து ஏமாறாதீர்கள்,,

இவ்வளவு காலம் நாம் ஏமாந்தது போதும் இனிமேல் விழிப்புடன் இருங்கள்..எல்லாம் நலமாகவே நடக்கும்.

அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 22 பிப்ரவரி, 2016

நான் என்பதும் ! நாம் என்பதும் !

நான் என்பதும் !  நாம் என்பதும் !


நான் சொல்லுகிறேன் ,நான் செய்கிறேன்,என்னுடைய ஆட்சி,என்னுடைய ஆணை, நான் நினைத்தால் எதையும் செய்வேன், என்பது எல்லாம் ..எவ்வளவு  பெரிய மனிதர்களாக இருந்தாலும்.எவ்வளவு பெரிய ஞானிகளாக இருந்தாலும்.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் .ஆன்மீக சிந்தனையாளர்களாய் ,இருந்தாலும் .அவர்களின் செயலும் சிந்தனையும் சீக்கிரம் அழிந்து விடும்.அவர்களும் அழிந்துவிடுவார்கள்.

அது அகங்காரத்தின் ஆணி வேறு என்பதாகும்.அகங்காரம அறிவை அழித்துவிடும்.

நாம்,நமது  என்பது,அவர்களின்,அறிவு கூர்மையைக் மேம்படுத்தும். அகங்காரம் அழிந்து நற்செயலுக்குக் கொண்டுசெல்லும்.

மேலும் அனைவராலும் மதிக்கப் படுவார்கள்.

எனவே நான், எனது,என்னுடையது என்னும் செருக்கு அற்று வாழ்வதே மனித நேயமாகும். அதுவே மனிதத் தன்மையாகும்.

அதைவிடப் பெரியது ஆன்மநேயத்தை வலுப்படுத்தும் பெரிய கருவியாகும்.

ஆன்மநேயத்தை விரும்புவரை மட்டுமே இயற்கை என்னும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படும்.

இதைத்தான் வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கின்றார்.

எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உரிமை உடையது என்பதை அறிந்து செயல்படுபவரே உயர்ந்த மனிதராகும்.அவரே இறைவனை தொடர்பு கொள்ளும் உரியைப் பெற்றவராகும்...

ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 17 பிப்ரவரி, 2016

காதல் செய்யுங்கள் !

காதல் செய்யுங்கள் !
காதல் செய்து திருமணம் செய்தால் மட்டுமே சாதி ,மத,சமயங்களை  ஒழிக்க முடியும்.

சட்டத்தாலோ.திட்டத்தாலோ,பேச்சாலோ சாதியை ஒழிக்க முடியாது.

உலகத்தில் மனித நேயம்,ஆனமநேயம்,இல்லாமல் போனதற்கு அடிப்படைக் காரணம்.சாதி,மதம், சமயங்களின்,கொள்கைகள் தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

ஒரு ஆணோ பெண்ணோ,மனம் விரும்பி ,பேசிப்பழகி,அன்பை பகிர்ந்து திருமணம் செய்யும் அளவிற்கு வந்து விடுகிறார்கள்.அவர்களின் அன்பை,காதலை,நேசத்தை தடுத்து நிறுத்துவது, சாதி,சமயம்,மதம் என்ற புழுத்துப் போன பழைய சாதியின், வெறித்தனமான பழக்க வழக்கங்கள்.காரண காரியமாக இருக்கின்றன.

ஆண் பெண் காதல் கொள்வது சாதாரணமாக நிகழ்ந்து விடாது.

ஒரு பெண்ணும் ஆணும், நெருங்கிப் பழகும் போதுதான் அது அன்பாக மாற்றம் அடைகின்றது,அடுத்து அன்பு காதலாக மாறுகின்றது,அடுத்து காதல் பாசமாக மாற்றம் அடைகின்றது ,அடுத்து பாசம், ஆசையாக மாற்றம் அடைகின்றது,அடுத்து ஆசை மோகமாக மாற்றம் அடைகின்றது,அடுத்து மோகம் காமமாக மாற்றம் அடைகின்றது.காமம்வெகுளியாக மாற்றம் அடைகின்றது.

காமம்,வெகுளி இரண்டும் அதிகமாக மாற்றம் அடைகின்றபோது,உடல் உறவு கொள்ளும் நிலை உண்டாகின்றது.

திருமணம் நடக்கின்ற வரையில் உடல் உறவு கொள்ளக் கூடாது.

வீட்டில் எந்த எதிர்ப்பு வந்தாலும் திருமணம்.செய்து கொண்டு வாழ்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

தனித்து வாழ வேண்டும் என்ற நோக்கத்தோடு படிப்பிற்குக் தகுந்த வேலையைத் தேடிக் கொள்ளவேண்டும்.

வீட்டில் உள்ள தாய் தந்தையர் பெரியவர்கள் முன் பின தெரியாத அறிமுகம் இல்லாத யாரோ ஒருவரை,ஒருவளைப் பார்த்து ஆண்,பெண்,விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைப்பது,அவ்வளவு சிறந்த வாழ்க்கையாக இருக்காது.அமையாது.

எதோ ஒன்று திருப்தியாக இருக்கும் மற்றவை எல்லாம் வாழ்நாள் முழுவதும் திருப்தி இல்லாமல் வாழும் வாழ்க்கையாக  அமைந்துவிடுகின்றது.

எனவே காதலை வரவேற்பதும் காதலித்தவர்களை சேர்த்து வைத்தும் திருமணம் செய்து வைப்பதும் சாலத் திறந்தது.

காதலை வரவேற்று குழந்தைகளை மதித்து பெரியவர்கள் மற்றும் அப்பா, அம்மா, அவர்கள் விருப்பபடி திருமணம் செய்து வைத்தால் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்,

காதலுக்கு சாதி மதம் தடை இல்லை,அன்பு தான் காதலுக்கு ஆணிவேர்..அந்த வேரை பிடுங்காமல் வளர விடவேண்டும்.அது நன்றாகவே வளரும்.அதன் பலனை அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ் ஜோதி,

சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதி அனாதியாம் அருட்பெருஞ்ஜோதி

என்று வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் இறைவன் படைப்பில் சாதி,மதம் சமயம் என்ற வேறுபாடுகள் கிடையாது.

காதலுக்கு இறைவன் தடை இல்லை.

உலகில் உள்ள சாதி மதவாதிகள்,சமயவாதிகள் எல்லாம் மனிதர்களை மனிதர்களே பிரித்து வைத்து விட்டார்கள்.எனவே காதலுக்கு சாதி,மதம்,சமயம் தடையாக இருக்கின்றது..

தடையை உடைத்து எறியுங்கள்.

வருங்கால இளைஞர்கள் மனம் ஒத்த அன்பினால் காதல் செய்யுங்கள்,திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு நல் வழிக் காட்டுங்கள்..

சமுதாயத்தில் வேறு ஊன்றி போன சாதியை,மதத்தை,சமயத்தை ஒழிக்க காதல் திருமணம் ஒன்றே சிறந்த ஒரே வழியாகும்.

வாழ்க காதல் ,வளர்க சமுதாயம் !

அன்புடன் ஆனமநேயன் ஈரோடு கதிர்வேல்..

செவ்வாய், 16 பிப்ரவரி, 2016

எந்த நாற்றத்தை மக்கள் விரும்புவார்கள் என்று தெரியவில்லை.

தமிழக அரசியல் நாற்றம் அடிக்க ஆரம்பித்து விட்டது.

எந்த நாற்றத்தை மக்கள் விரும்புவார்கள் என்று தெரியவில்லை.

எல்லா அரசியல் கட்சிகளும் துர்நாற்றம் வீசும் கட்சிகளாகவே உள்ளது.

எந்த எந்த நாற்றம் எதன் எதன் உடன் சேரப்போகிறதோ தெரியவில்லை.

எல்லாமே கலவை கலந்த துர் நாற்றமாகவே அடிக்கும்.

மக்கள் ஏதாவது ஒரு நாற்றத்தை விரும்பிதான் ஆகவேண்டும்.வேறு வழிஇல்லை.

சுகந்தம் வீசும் நாற்றத்தை சுவாசிக்கும் சூழ்நிலை நமக்கு இல்லை,

நல்ல மனம் வீசும் அரசியல் கட்சிகளே இல்லை என்ன செய்வது நமது தலை எழுத்து என்று நினைத்து ,துர் நாற்றத்தையே சுவாசிக்கும் பழக்கம் .நமக்கு புதியது அல்ல .பழகிப்போச்சு..

ஏதாவது ஒரு நல்ல காலம் வராதா எதிர்பார்த்துக் காத்திருப்போம்..

உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 15 பிப்ரவரி, 2016

எவரும் காணா அருட்பெருஞ்ஜோதி !

எவரும் காணா அருட்பெருஞ்ஜோதி !


உருத்திரர்கள் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர்
உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை
வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடிக்
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்கள்
வினவ மற்றவையும் காணோம் என்று
வருத்தம் உற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற
வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே !

மேலும்;--

பாயிரமாம் மறை அனந்தம் அனந்தம் இன்னும்
பார்த்து அளந்து காண்டும் எனப் பலகால் மேவி
ஆயிரம் ஆயிரம் முகங்களாலும் பன்னாள்
அளந்து அளந்து ஓர் அணுத் துணையும் அளவு காணாதே
இறங்கி அழுது சிவ சிவ என்றே ஏங்கித்
திரும்ப அருட் பர வெளியில் வாழ் சிவமே ஈன்ற
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்போல் வாரைத்
தண்ணருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே!

உலகில் தோன்றி உள்ள அருளாளர்கள் என்று அனைவராலும் வணங்கி வழிப் பட்டுக் கொண்டு இருக்கும்,ஐந்தொழில் கர்த்தர்கள் ஆன பிரம்மா,விஷ்ணு,சங்கரன்,மகேஸ்வரன், சதாசிவம் போன்றவர்களும்,
மற்றும்.விண்ணோர் வேந்தர் காந்தர்வர்,இயக்கத்தார்,பூதர்,மருத்துவர்,யோகியர்,
சித்தர், முனிவர் ,,,மற்றைய வானவர்கள் முதலானவர்கள் அனைவரும்,தம்முடைய மனத்தால் தேடியும்,ஒவ் வொருவராக தனித்தனியே சென்றும்

'''வேதங்கள்'' மற்றும் ''ஆகமம், புராணம்,இதிகாசம்,சாத்திரங்கள்'',போன்ற கொள்கைகளைப் படித்து,அறிந்து சிவ,சிவா என்று அழுது புலம்பியும்,உண்மையான இறைவனைத் தேடியும்,அவர்களால் பார்க்க முடியவில்லை,அறிய முடியவில்லை என்கின்றார்,நமது வள்ளல்பெருமான்.

மேலும்,இந்துமதம்,கிருத்தவமதம்,முகம்மதியமதம்,புத்தமதம்,ஜைனமதம்,போன்ற மதத் தலைவர்களாலும், உண்மையான இறைவனைக் காண முடியவில்லை.

மேலும் பல ஆயிரம் திருமறைகள்,வழியாக அற்ப அருளைப் பெற்று, அளந்து அளந்து பார்த்தார்கள்,மற்றும் ஆயிரம், ஆயிரம்,முகங்களைக் கொண்டு பல்லாண்டு காலமாக அளந்தும் அளந்தும் பார்த்தார்கள். உண்மையானக் கடவுள் அவர்களின் அளவுகளின் கருவிகளால் அணுத் துணையும்அளக்க முடியவில்லை,அவர்களுடைய கருவிகள் அனைத்தும் தெய்ந்திடக் கண்டார்களே அன்றி அளவு கண்டார் யாரும் இல்லை என்கின்றார் வள்ளலார் .....

உண்மையான இறைவனைக் கண்டவர்கள் இவ்வுலகில் வள்ளல்பெருமானைத் தவிர வேறு எவராலும் காணமுடியவில்லை.கண்டு பிடிக்கவும் முடியவில்லை.

உண்மையான இறைவனைக் கண்டு பிடித்து உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர்தான் வள்ளலார்.

படைத்தவனை வணங்காமல்,படைக்கப் பட்ட பொருள்களை வணங்குவது அறியாமையாகும்.

உலகத்தையும்,அண்டங்களையும், உயிர்களையும்,அனைத்துப் பொருள்களையும், கிரகங்களையும்,அருளாளர்களையும்,யோகிகளையும்,
சித்தர்களையும்,படைத்தவர் தான்,

''எல்லாம் வல்லத் தனித்தலைமை பெரும்பதி என்னும் ,அருட்பெருஞ்ஜோதி'' ஆண்டவர் என்னும் ஒரே அருள்பேரொளி என்னும் கடவுளாகும்.

அதைத்தான் வள்ளலார் மிகவும் அழுத்தமாக...''கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர்''என்று தெரியப் படுத்துகின்றார்.

உண்மையை இன்னும் மக்கள் அறிந்து கொள்ளாமல்,கற்பனைக் கடவுள் களான ஜடப் பொருள்களை,இருளான உருவங்களை,
( அதாவதுபொம்மைகளை) வணங்குவதும்,வழிபாடு செய்வதும்,எந்தவிதத்தில் உண்மையாகும்.

தயவு செய்து உண்மையை அறிந்துகொண்டு உண்மையான கடவுளை வணங்குகள், வழிபடுங்கள், உங்களுக்கு எல்லா நன்மையையும், ஆன்ம லாபமும், என்றும் அழியாத அருளும், அளவில்லாமல் கிடைக்கும்.

இதை நான் எழுதுகிறேன் என்றால் நீங்கள் அனைவரும் என்னுடைய ஆன்ம நேய உடன் பிறப்புக்கள், என்பதாலும், என்னுடைய சகோதர உரிமையில் எழுதுகிறேன்.தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

வள்ளல்பெருமான் சொல்லுவார்...

செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில்
திரு நடஞ் செய் பெருங் கருணைத் திறத்தான் அங்கு அவனை

மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம்

மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்

வைத்தாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன்

மனங் கோனேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்

பொய் தான் ஓர் சிறிதெனினும் புகலேன் சத்தியமே

புகல்கின்றேன் நீவீர் எலாம் புனிதம் உறும் பொருட்டே...

என்கின்றார் வள்ளலார்.

நீங்கள் எவ்வளவுத் தவறு செய்து இருந்தாலும் மன்னித்து ஏற்றுக் கொள்வார் ...நம்முடைய தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..எனவே என்னைத் திட்டினாலும் பரவாயில்லை .அவற்றை நான் வாழ்த்துக்களாக ஏற்றுக் கொள்கிறேன்.

உங்களுக்காக அச்சம் ,நாணம்,மடம், பயிர்ப்புக்களை விட்டும் மானம் போனாலும் மனம் தளர மாட்டேன்.

பொய் என்பது என்னுடைய உள்ளத்தில் இருந்து சிறிது அளவும் வராது.என்னை நம்புங்கள் என்று வாயே பறையாய் அறைகின்றார்..

ஏன் என்றால் நீங்கள் அனைவரும் புனிதம் என்னும் அருளைப் பெற வேண்டும். மரணம் இல்லாப் பெருவாழுவு வாழ வேண்டும் என்ற பெருங் கருணையால்,சொல்லுகின்றேன் என்கின்றார்.

அதேபோல் உங்களுக்காக வள்ளலார் சொல்லிய உண்மைகளை நான் தெரியப் படுத்துகின்றேன்.

என்னைத் திட்டினாலும், தூற்றினாலும்,எனக்கு கவலை இல்லை உங்கள் நன்மைக்காக எழுதுகிறேன் ஏற்றுக் கொண்டு நம்முடைய தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வத்தை தொடர்புகொள்ளுங்கள்.

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ்ஜோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை
விளம்பினேன் நம்மினோ விரைந்தே...

நீங்கள் நான் சொல்லிய வண்ணம் கேட்டு வந்தாலும் வராவிட்டாலும், உங்களை எப்படியும் வரவைத்து விடுவேன்,உண்மையை இந்த உலகத்தில் நிறைவித்து விடுவேன் ,,,அனைவராலும் ஏற்றுக் கொள்ள செய்வித்து விடுவேன் இதுதான் உண்மை....இதுதான் ஆண்டவரின் கட்டளையாகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896.....