திங்கள், 29 ஏப்ரல், 2019

ஜீவ சமாதி என்றால் என்ன ?

*ஜீவசமாதி என்றால் என்ன ?*

ஜீவன் என்றால் உயிர்.. சமாதி என்றால் மரணம்.

உயிரை நிறுத்திக் கொண்டு மரணம் அடைவதற்கு ஜீவசமாதி என்று பெயர்.

இப்படி ஜீவசமாதி அடைவதால் எந்த பயனும் கிடையாது.

*மறுபடியும் அவர்களுக்கும் பிறப்பு உண்டு.*

இறைவன் அருள் பெற்று மரணம் அடையாமல் வாழ்ந்தால் மட்டுமே மீண்டும் பிறப்பு இல்லை.

உடம்பும். உயிர் என்ற ஜீவனும் முழுமையான அருள் பெற்று.உட்ம்பில் உள்ள அனைத்து பஞ்சபூத அணுக்களும்  ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றிக் கொண்டால் மட்டுமே..அதற்கு அருள் தேகம் என்றும் ஒளிதேகம் என்றும் பெயர்.

சமாதி பழக்கம் பழக்கம் அல்ல.சகஜ பழக்கமே பழக்கம் என்கிறார் வள்ளலார்.

*உலகில் சமாதி அடைந்த சித்தர்கள் காடுகளிலும்.
மலைகளிலும் .குகை களிலும் அமரந்தபடியே உயிர் அடக்கம் கொண்டவர்கள்*.

அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பிறப்பு உண்டு என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

இந்த பழக்கத்திற்கு சமய மதங்களில் முத்தி நிலை என்பார்கள்..

முத்தி நிலை வேறு சித்தி நிலை வேறு.

முத்தி என்பது முன்னுறு சாதனம் என்றும்.

சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் என்றும் வள்ளலார் சொல்லி உள்ளார்.

சாதனம் முதிர்ந்தால் சாத்தியம் கைகூடும்..

சாத்தியம் என்பது சித்தி நிலை அதாவது மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.

மரணத்தை வென்றவர்கள் மட்டுமே இறைவனிடம்  தொடர்பு கொள்ள முடியும் .மீண்டும் பிறப்பு இல்லாமல் பேரின்ப சித்தி பெருவாழ்க்கை வாழ்வதற்கு வழி கிடைக்கும்..

எனவே ஜீவசமாதி என்பதும் ஒரு வகையான மரணம் தான் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

உட்கார்ந்து கொண்டே உயிர் அடக்கம் கொள்வதால் உடம்பு மடங்காது அப்படியே கட்டைபோல் நின்றுவிடும் .

எந்த நிலையில் உயிர் அடக்கம் கொள்கிறதோ அப்படியே உடம்பு அமைந்து விடும்..

ஜீவசமாதி அடைவதால் அவர்களுக்கும் எந்த லாபமும் இல்லை.மக்களுக்கும் எந்த லாபமும் இல்லை..

வள்ளலார்பாடல் !

அந்தோ ஈததிசயம்
ஈததிசயம் என் புகல்வேன்

அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே

இந்தோங்கு சடைமணி நின் அடிமுடியுங் காட்டி

இதுகாட்டி அதுகாட்டி என் நிலையுங் காட்டிச்

சந்தோட சித்தர்கள் தந் தனிச்சூதுங் காட்டி

சாகாத நிலைகாட்டிச் சகசநிலை காட்டி

வந்தோடு நிகர்மனம்போய்க் கரைந்த இடங் காட்டி

மகிழ்வித்தாய் நின்அருளின் வண்மை எவர்க் குளதே.!

மேலே கண்ட பாடலில் சித்தர்களின் தனி சூதும் காட்டி புரிய வைத்தாய் என்கிறார் வள்ளலார்.

மேலும் சாகாத நிலைக்காட்டி சகஜ நிலையும் காட்டி புரிய வைத்தாய் என்று.உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை போற்றுகிறார்.

மேலும் கடும் தவம் செய்த சித்தர்களுக்கும் அருள் கிடைக்கவில்லை .
இறைவன அவர்களுக்கு தன் உண்மை சொரூபத்தைக் காட்டவில்லை என்று பின் வரும் பாடலிலே பதிவு செய்கிறார்.

*ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற யோகம்.தவம்.தியானம்.வழிபாடுகள் யாவும் வெற்று மாயா ஜாலங்களே என்கிறார் வள்ளலார்*.

மகாதேவமாலை பாடல் 55.../

கற்பங்கள் பலகோடி செல்லத் தீய

கனலினடு ஊசியின்மேல் காலை ஊன்றிப்

பொற்பற மெய் உணவின்றி உறக்க மின்றிப்

புலர்ந்தெலும்பு புலப்பட ஐம் பொறியை ஓம்பி

நிற்பவருக் கொளித்து மறைக் கொளித்து யோக

நீண்முனிவர்க் கொளித்து அமரர்க் கொளித்து மேலாம்

சிற்பதத்தில் சின்மயமாய் நிறைந்து ஞானத்

திருவாளர் உட்கலந்த தேவ தேவே.!

என்னும் பாடலிலே தெளிவுபட விளக்கம் தருகிறார் வள்ளலார்.

இவற்றை எல்லாம்  மக்கள் புரிந்து தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.

கண்மூடித்தனமாக பழக்கத்தை போற்றி புகழ் வேண்டாம். என்றும் அவைகளை பின்பற்ற வேண்டாம்  என்றும் சொல்கிறார்.

நமக்கு உண்மையான மார்க்கத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார்  மூலமாக தந்து உள்ளார்..

*அதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய மார்க்கமாகும்..*

அதுதான்.உயர்ந்த அறிவு பெற்ற மனித தேகம் எடுத்த மக்கள் கடைபிடிக்க வேண்டிய திருநெறி என்பதாகும்.

வள்ளலார் பாடல் !

திருநெறி ஒன்றே அதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனை யாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடலிலே இருள் நெறியான மருள் நெறியில் வீழ்ந்து காலத்தை வீண் விரையம் செய்யாமல்.

அருள் நெறியைக் கடைபிடித்து வாழ்க்கையை செம்மையாக அமைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்...

*உலகில் உண்மையான ஒரே அருள் நெறி சுத்த சன்மார்க்க நெறி என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

பசியும் கொலையும்ஏன் தவிர்க்க வேண்டும்.

*பசியும் கொலையும் ஏன் தவிர்க்க வேண்டும் !*

ஒரு உயிருக்கும் உடம்பிற்கும் ஏழு வகையான துன்பம் வருகின்றது..

அவைகள்...
பசி.கொலை.பிணி.
ஆபத்து.பயம்.இச்சை.
எளிமை.என்பதாகும்.

*இந்த துன்பங்கள் உடம்பையும் உயிரையும் எப்படி பாதிக்கின்றன என்பதை தெளிவாக வள்ளலார் விளக்குகின்றார்*.

*பசி என்பது,* ஆகாரம் பொறாமையால் வயிற்றினுட் பற்றிநின்று தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களின் தன்மைகளைச் சுடுதல் செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்து வித்தற்கு முதற்காரணமாகிய விகற்ப மாயாகாரியப் பிண்டப்பகுதி நெருப்பு.

*கொலை என்பது,* தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களைப் பல்வேறு கருவி கரணப் புடைபெயர்ச்சிகளால் பதைப்புண்டாகக் கலக்கஞ்செய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாகிய விகற்ப பூதகாரியக் கொடுந்தொழில்,

*பிணி என்பது*, வாத பித்த சிலேட்டும விகற்பங்களால் மாறுபட்டு, தேகத்தின் அகத்தும் புறத்தும் உள்ள கருவி கரணங்களை நலிவுசெய்து அறிவை மெலிவித்து ஆன்மாவை வெளிப்படுத்துவித்தற்கு நிமித்தமாக நின்ற விகற்ப மாயாகாரியப் பிண்டப் பகுதி வேற்றுமை விளைவு.

*ஆபத்து என்பது,* அகங்காரத்தாலும் மறதியாலும் கரும வேறுபாட்டாலும் தேகபோக அனுபவங்களைத் தடுக்கின்ற விக்கினங்கள்.

*பயம் என்பது*,
தேக முதலிய கருவிகளுக்கு நட்டஞ் செய்வதாகிய விடயங்கள் நேரிட்டபோது கரணங்களுக்கும் அறிவுக்கும் உண்டாகின்ற நடுக்கம்.

*இன்மை என்பது,* கல்வி செல்வம் முதலிய கருவிகளைத் தற்சுதந்திரத்திற் பெறாமை.

*இச்சை என்பது* அடையக் கருதிய விடயங்களில் அருமை குறித்து அவற்றை மேன்மேலும் கருதச் செய்கின்ற சித்தவிருத்தி என்று அறியவேண்டும்.

*இவற்றுள் பசி கொலை என்பவை* இம்மைஇன்பம், மறுமை இன்பம், பேரின்பம் என்கிற மூன்றையும் தடுத்தலால் முதற்பட்ட தடைஎன்றும்;
.
பிணி, பயம், ஆபத்து, இன்மை என்பவை இம்மை மறுமை இன்பங்களைச் சிறிது தடுத்தலால் இடைப்பட்ட தடை என்றும்,

ஆசை இம்மைஇன்பத்தைச் சிறிதுதடுத்தலால் கடைப்பட்ட தடை என்றும் அறியவேண்டும்.

*சீவகாருணியத்தின் வல்லபம் யாதென்றறியவேண்டில்:*-

பிற உயிர்களிடத்துப் பசி கொலை முதலியவற்றுள் எதனாற் காருணியந் தோன்றியதோ அதனால் அவ்வுயிர்கள் வருந்தாதபடி அதை நீக்குதற்கு முயல்விப்பது அதன் வல்லபமென் றறியவேண்டும்.

*சீவகாருணித்தின் பிரயோசனம் யாதென்றறியவேண்டில்:-*

உயிர்களுக்கு இன்பம் உண்டுபண்ணுவது அதன் பிரயோசனம் என்றறியவேண்டும்.

*மேலே கண்ட துன்பங்களில் பசியும்.கொலையும்  மிகவும் தவிர்க்க வேண்டிய அவசியம் யாதெனில்*

இறைவனிடம் அருளைப் பெறுவதற்கு பசி.கொலை நீக்குதல் மிகவும் முக்கியமானதாகும்.
இதற்கு *பர ஜீவகாருண்யம்* என்றும்

மற்றவை *அபர ஜீவகாருண்யம்* என்றும்.இரண்டாக பிரிக்கின்றார்.

*வள்ளலார் எவ்வளவு தெளிவாக விளக்குகின்றார் பாருங்கள்..*

பசி, கொலை, தாகம், பிணி, ஆபத்து, பயம், இன்மை, இச்சை என்பவைகளால் வரும் அபாயத்தை நிவர்த்தி செய்விப்பது சீவகாருணியத்திற்கு லக்ஷியமாக இருக்கவும்.

*இவ்விடத்துப் பசியினாலும் கொலையினாலும் வரும் அபாயங்களை மாத்திரம் நிவர்த்தி செய்விப்பது தலைப்படும் காருணியம் என்று குறித்தது ஏன் ? என்று அறியவேண்டில்:-*

சீவகாருணிய ஒழுக்கத்தில் *பரசீவகாருணிய மென்றும் அபரசீவகாருணியம் என்றும் இருவகையாம்*.

அவற்றில் பசிநீக்கலும் கொலைநீக்கலும் பரசீவகாருணியம்.

மற்றவை அபரசீவகாருணியம். ஆகலில், பரசீவகாருண்யம் விசேஷமாகக் குறிக்கப்பட்டதென்று அறியவேண்டும்.

அன்றியும், பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்குப் பசியை நிவர்த்தி செய்விக்கின்ற தயவுடையவர்கள் தாகம் நீங்குவதற்குத் தண்­ணீர் கொடாமலிரார்கள். தண்­ணீர் கொடுப்பது பிரயாசமுமல்ல. தண்­ணீர் ஏரி, குளம், கால்வாய் முதலிய இடங்களிலும் இருக்கின்றது.........!

எனவே மனிதர்கள் பசி.கொலை தவிர்க்கும் ஜீவகாருண்ய உபாயத்தால் மட்டுமே இறைவன் அருளைப் பெற முடியும்.என்பதை நாம் ஒவ்வொருவரும் அவசியம் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டும்...

ஜீவகாருண்யத்தால் மட்டுமே ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகள் விலகும்.

எனவேதான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல் என்றார் வள்ளலார்..

எனவே தான் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார் வள்ளலார்.

*ஜீவகாருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும் என்றார்*

அறிவும் அன்பும் விளங்கினால் தான் உண்மை இறைவன் யார் என்பது தெரியும்.

ஜீவகாருண்யத்தால் உயிர் இரக்கத்தால் உண்மை இறைவனைக் கண்டவர் வள்ளலார்.

*அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பவராகும்*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே அருளை வழங்க முடியும்.

*அன்பும் அறிவும் விளங்கினால் தான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரை விலகும். திரை விலகினால் மட்டுமே ஆன்மாவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொண்டு அருள் வழங்குவார்.*

அருள் பூரணம் பெற்றால் தான் ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

*ஒளி உடம்பு பெற்றால் தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற முடியும்..இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.*

எனவே இறைவனை அறிந்து கொள்வதற்கும் இறைவனிடம் இருந்து அருளைப் பெறுவதற்கும்.பர ஜீவகாருண்யமாகிய பசிப்பிணியையும்.கொலையையும் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும் என்பதை வள்ளலார் விளக்கமாக தெளிவாக தெரியப்படுத்து கின்றார்.

வள்ளலார் பாடல் !

காலையிலே என்றனக்கே கிடைத்தபெரும் பொருளே

களிப்பேஎன் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே

மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவைஎலாம் தருமச்

சாலையிலே ஒருபகலில் தந்ததனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே

மாலையிலே சிறந்தமொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசேஎன் மாலையும்ஏற் றருளே.!

என்னும் பாடலின் வாயிலாக வள்ளலார் தெளிவு படுத்துகின்றார்..

மனித அறிவை பயன் படுத்தி மகிழ்ச்சி யுடன் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

உலகின் உண்மை மார்க்கம் உண்மை நெறி !

*உலகின் உண்மை மார்க்கம் உண்மை நெறி !*


தமிழ்நாட்டில்... இறைவனால் வருவிக்க உற்ற  ஒரே அருளாளர் திருஅருட்பிரகாச வள்ளலார்.

உலக ஒருமைப்பாட்டிற்கு வழிகாட்டியவர் வள்ளலார் ஒருவரே !

ஆன்மநேய  ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றி உலக மக்களுக்கு தெளிவுபடுத்தியவர் வள்ளலார்.

சாதி சமய மதங்களின் வேற்றுமையால் மக்கள்
மருள் நெறிகளான இருள் நெறியில்  வாழ்ந்து அழிந்து கொண்டே உள்ளார்கள்.

மக்களை உண்மையான ஒழுக்க நெறியை காண்பித்து. நல்வழிக்கு கொண்டு செல்லவே .உலகப் பொது நெறியான *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற தனிநெறியை வள்ளலார் தோற்றுவித்துள்ளார்..

அதுதான் சமரச சுத்த சன்மார்க்க திருநெறியாகும்.

வள்ளலார் பாடல் !

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனை யாட்கொண்டு அருளமுதம் அளித்து

வல்லப சத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெரு நெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறி வீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடலின் வாயிலாக மக்களுக்கு தெளிவுப்படுத்தி விளக்கம் அளிக்கிறார் வள்ளலார்.

மேலும் வள்ளலார் நிறைய பாடல்களிலும் உரைநடைப் பகுதியிலும் விளக்கம் அளிக்கின்றார்

வள்ளலார் பாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும் ஓர்

பவநெறி இதுவரை பரவியது அதனால்

செந்நெறி  அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்து ஒரு பொதுநெறி எனும் வான்

புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்ற என் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

என்னும் பாடலிலே.. உலகம் முழுவதும் பல சமயங்கள் மதங்கள் தோன்றினாலும். உண்மையான ஆன்மீகத்தில் வாழ்வதற்கும். மக்கள் இறைவன்  அருளைப் பெறுவதற்கும்   மனித குலத்திற்கு எந்த சமயமும். மதமும்  நல்வழி காட்டவில்லை. போதிக்கவில்லை..

மனிதன் மாண்டு போவதற்கே..
உண்மைக்கு புறம்பான இருள் நெறியான.மருள் நெறியே  காட்டினார்கள்  அதனாலே மக்கள் உண்மை அறியாமல்  மாண்டு கொண்டே உள்ளார்கள்...

*என் மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம் என்பார் வள்ளலார்*

எனவேதான் இறப்பை ஒழித்து பிறப்பை ஒழித்து என்றும் அழியாமல் வாழும் அருள் நெறியை வள்ளலார் தோற்றுவித்து உள்ளார்.

*மற்ற மார்க்கங்களுக்கு போட்டியாக சுத்த சன்மார்க்கம்  தோற்றுவிக்கவில்லை..*

இறைவனால் படைக்கப்பட்ட உயர்ந்த அறிவுள்ள மனித குலம் .புனித குலம் பெற வேண்டும் என்ற அருள் நோக்கத்தோடு.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் துணைக் கொண்டு தோற்றுவிக்கப்பட்டது தான் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற பொது மார்க்கமாகும்...

அகம் கருத்து புறம் வெளுத்து அறியாமையால் வாழும் மக்களை காப்பாற்றவே இறைவன் என்னை இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தார் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார்..

*நான் இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டுதான் இந்த உண்மையைச் சொல்லுகின்றேன் என்கிறார்*

உலகில் உள்ள அனைத்து மனித குலத்தையும் திருத்தவே  இறைவன் அனுமதியோடு வந்துள்ளேன் .மக்களை
திருத்தியே தீருவேன்.

*எனவே மனித குலம் இனிமேல் மூடமான மதங்களையும். சமயங்களையும்.சாதிகளையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை..*.

ஏன் என்பதை வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

முயன்றுலகில் பயன்அடையா மூடமதம் அனைத்தும்

முடுகி அழிந்திடவும் ஒரு மோசமும் இல்லாதே

இயன்ற ஒரு சன்மார்க்கம் எங்கும் நிலை பெறவும்

எம்மிறைவன் எழுந்தருளல் இது தருணம் கண்டீர்

துயின்று உணர்ந்தே எழுந்தவர்போல் இறந்தவர்கள் எல்லாம்

தோன்ற எழுகின்றது இது தொடங்கி நிகழ்ந் திடும் நீர்

பயின்று அறிய விரைந்து வம்மின் படியாத படிப்பைப்

படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே.!

மேலே கண்ட பாடலில்.. *இதுவரையில் நீங்கள் படிக்காத படிப்பை இனிமேல் படிக்க போகின்றீர்கள்*

இதுவரையில் படித்தது எல்லாம் சந்தைப் படிப்பு.இனிமேல் படிக்கப் போவதுதான் சொந்தப் படிப்பு என்கிறார் வள்ளலார்..

எனவேதான் படியாத படிப்பை படித்திடலாம் உணர்ந்திடலாம் பற்றிடலாம் சுகமே என்கிறார் ...

சாகும் படிப்பை மாற்றி சாகாமல் வாழ்வதற்கு வழிகாட்டும் சாகாக்கல்வி என்னும் கல்வியை கற்றுத்தரவே சுத்த சன்மார்க்கத்தை இறைவனால்  தோற்றுவிக்கப் பட்டதாகும்.

எனவே திருநெறியாம் பெருநெறியாம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் உண்மை நெறியை பின்பற்றி மேன்மை அடையுங்கள் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

சேர்ந்திடவே ஒருப்படுமின் சமரச சன் மார்க்கத்

திருநெறியே பெருநெறியாம் சித்தி எலாம் பெறலாம்

ஓர்ந்திடுமின் உண்ணுதற்கும் உறங்குதற்கும் உணர்ந்தீர்

உலகமெலாம் கண்டிடும் ஓர் உளவைஅறிந் திலிரே

வார்ந்த கடல் உலகறிய மரணம்உண்டே அந்தோ

மரணம் என்றால் சடம் எனும் ஓர் திரணமும் சம் மதியா

சார்ந்திடும் அம் மரணமதைத் தடுத்திடலாம் கண்டீர்

தனித்திடு சிற் சபை நடத்தைத் தரிசனஞ் செய் வீரே.!

என்னும் பாடலிலே தெளிவாக விளக்கி உள்ளார்..

மக்கள் உண்ணுதற்கும் உறங்குதற்கும்.பின்பு மரணம் அடைவதற்கும் மட்டுமே தெரிந்து கொண்டு உள்ளீர்கள்..

*மரணம் அடையாமல் வாழ்வதற்கு ஓர் உளவு உள்ளது இருக்கின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்துகின்றார்.*

வள்ளலார் ஆரம்ப காலத்தில் 1865 ஆம் ஆண்டின் முதலிலே சங்கங்கள் அமைத்தார்கள்

சமய மதங்களை சார்ந்த *சமரச வேத
சன்மார்க்க சங்கம்* என்று பெயர் வைத்து சமரசத்தை கொண்டு செல்லாம் என்று நினைத்து ஆரம்பித்தார் ..அதன் மூலம் சமரசத்தை உருவாக்க முடியவில்லை... என்பதை அறிந்த வள்ளலார் அதை  கைவிட்டு விட்டார்.

அடுத்ததாக..எல்லாச் சமயங்களுக்கும் மதங்களுக்கும்  பொதுவாகிய.   *ஷடாந்த சமரச சுத்த சன்மார்க்கம்*  என்று பெயர் வைத்து ஆரம்பித்தார்.

மேலே கண்ட இரண்டு மார்க்கத்திலும் உலக சமரசத்தை. சகோதர உரிமையை.ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கொண்டு ஒருங்கிணைந்த சமுதாயத்தை உருவாக்க முடியாது என்பதை உணர்ந்து கொண்ட காலத்தில் ..

வள்ளலாருக்கு ஓர் அருள்  அறிவிப்பு வருகின்றது..அதுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அறிவிப்பு.

*திருஅருட்பாவில் நீண்ட விளக்கம் உள்ளது..சுருக்கமாக சொல்கிறேன்.*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் அறிவிப்பால் புதிய. பொதுவான.தனிநெறியான. திருநெறியை.
அருள்நெறியை.சுத்த சிவநெறியை.சுத்த சன்மார்க்க உண்மை நெறியை வள்ளலார் 1872 ஆம் ஆண்டில் தோற்றுவிக்கிறார் வள்ளலார்.....

உண்மை இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து உலக மக்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என்பதற்காக..

தமிழ்நாட்டில் உள்ள வடலூரில் .. ஒரு சத்திய ஞானசபையை  1872 ஆம் ஆண்டு தோற்றுவித்து .சங்கம்.சாலை.ஞானசபையை தோற்றுவித்துள்ளார்.

அவைகளுக்கு தனிப்பெயர் சூட்டுகின்றார்.

வள்ளலார் இறைவன் அனுமதியோடு பெயர் மாற்றம் செய்கின்றார்...

வள்ளலார் பெயர் மாற்றம் செய்யும் போது எவ்வாறு  சொல்கின்றார்.
பாருங்கள் !

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம்.

இன்று தொடங்கி ..

சபைக்கு...
சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும்.

சாலைக்கு....
சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.

சங்கத்திற்கு...
சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்

பெயர் வழங்குதல் வேண்டும் என்று சுத்த சன்மார்க்க கட்டளையாக வெளிப்படுத்துகின்றார்.

சுத்த சன்மார்க்க அன்பர்கள் சங்கங்கள் அமைத்தால். சாலைகள் அமைத்தால். சபைகளை அமைத்தால். வள்ளலார் சொல்லிய வண்ணம். வள்ளலார் கட்டளை வண்ணம் பெயர் வைக்க வேண்டும்..

இதுவரை அவரவர் விருப்பம் போல் பெயர் வைத்து இருந்தாலும் இனிமேலாவது வள்ளலார் சொல்லிய வண்ணம் பெயர் மாற்றம் செய்து கொள்ளுவதே நல்லதாகும்.

இதுவே நீங்கள் செய்யும் நற்பன்புகளாகும். நற்செயல்களாகும்....

ஒவ்வொரு சங்கங்களும் தலைப்பில் *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்* என்ற தலைப்பில் இருக்க வேண்டும்..அதற்கு கீழே உங்கள் அறக்கட்டளைகள்.
மற்றும் உங்கள் வசதிக்கேற்ப
புனைப்பெயர்கள் போன்ற பெயர் இருந்தாலும் தவறில்லை.

மற்றபடி இது எனது தனிப்பட்ட கட்டளை அல்ல ஒவ்வொரு சன்மார்க்கிகளும் சிந்தித்து செயல்படுங்கள்....
அனைவருக்கும் நல்லது...

இப்போது நடந்து கொண்டு இருப்பது சுத்தசிவ சன்மார்க்க காலம் என்பதை வள்ளலார் *உண்மை பத்திரிகை* என்னும் தலைப்பில் வெளியிடுகின்றார்...

மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் 1874 ஆம் ஆண்டு வெளிப்படுத்துகின்றார்.

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் விளங்கும்.இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு.அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மேன்மேலும் வழங்கும்.

பலவகைப்பட்ட சமய பேதங்களும் .சாத்திர பேதங்களும். சாதி பேதங்களும்.ஆச்சார பேதங்களும் போய் .சுத்த சன்மார்க்கம் பெருநெறி ஒழுக்கம் விளங்கும் .
**அது கடவுள் சம்மதம்**இது 29 ஆண்டுகளுக்கு மேல்..(கலி 5000 க்கு மேல் )

இப்போது வருகிற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்த்தாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்.மூரத்திகள்.கடவுள்.தேவர்.அடியார்.யோகி.ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல..

இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்.எல்லாத் தேவர்களும்.எல்லாக் கடவுளரும்.எல்லாத் தலைவர்களும்.எல்லா யோகிகளும்.எல்லா ஞானிகளும் தாங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பாரக்கின்றபடி எழுந்தருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி..அவர்தான் அருட்பெருஞ்ஜோதி!

இது உண்மையாயின் அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன் ! பெறுகின்றேன் !! பெற்றேன்!!!

என்னை அடுத்தவர்களும் பெறுவதற்கு யாதொரு தடையும் இல்லை.பெறுவீர்கள் ! பெறுகின்றீர்கள்!! பெற்றீர்கள் !!! அஞ்சல் வேண்டும்..

இப்படிக்கு
சிதம்பரம் இராமலிங்கம்.

இந்த உண்மைப் பத்திரிகை செய்திகள் அருள் நியதியின்படி வெளிப்படுத்துகின்றார்.

எனவேதான் வள்ளலார்  சொல்லுகிறார் !

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன்

சுத்த சிவ சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் என்மார்க்கம்

நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ்கின்றார்

மன்மார்க்கத்தாலே மகிழ்ந்து !

என்று வள்ளலார் தெளிவாக சுத்த சன்மார்க்கத்தின் உண்மையை வெளிப்படுத்துகின்றார்..
சுத்த சன்மார்க்கம் என்பது உண்மை ஒழுக்க நெறியான ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்து அதன்மூலம் சத்விசாரத்தால்  இறைவனை அறிந்து.அருளைப் பெற்று மரணத்தை வெல்லும் மார்க்கமாகும் .

எனவே பேரின்ப சித்திப் பெருவாழ்வை பெறுவதற்கு ஒரே மார்க்கம் அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற புனித மார்க்கமாகும்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 17 ஏப்ரல், 2019

வள்ளலார் மகா உபதேசத்தின் ஒரு பகுதி !

*வள்ளல் பெருமான் உபதேசித்த மகா உபதேசம் !*

வள்ளலாரின் கடைசி உபதேசம்.....

இந்த உபதேசத்தின் சிறிய பகுதியை வெளியிட்டுள்ளேன்

பாடம் படிப்பதுபோல் படிக்காமல்.ஒவ்வொரு வரியையும் பொறுமையாக ஊன்றி படியுங்கள்.

*கடவுள் உண்மைத் தெரியாமல் நாம் வாழ்ந்து எந்த பயனும் இல்லை*.

வள்ளலார் சொல்லியதை கேட்டு படித்து அறிந்து உணர்ந்து நம் வாழ்க்கையில் ஆன்ம லாபம் பெறுவதே இந்த மனிதப் பிறப்பின் முக்கிய லட்சியமாகும்.

வள்ளலாரின் வாய் மொழி !

இதுவரையில் நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

ஏனென்றால், அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், *மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*

 அணுமாத்திரமேனுந் தெரிவிக்காமல், பிண்ட லக்ஷணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில்: *கைலாசபதி என்றும் வைகுண்டபதி என்றும் சத்தியலோகாதிபதி யென்றும் பெயரிட்டு, இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபம் முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பதுபோல் அமைத்து, உண்மையாக இருப்பதாகச் சொல்லியிருக்கின்றார்கள்*

 "தெய்வத்துக்குக் கை கால் முதலியன இருக்குமா?" என்று கேட்பவர்க்குப் பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள். இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்களென்று பெயரிட்டுக் கொண்டிருந்தவர்களும் உண்மையை அறியாது, அப்படியே கண்ணை மூடிக்கொண்டு உளறியிருக்கிறார்கள்.

 ஆனால், ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன்.(வேத வியாசர் ) அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

*அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லியிருக்கின்றார்கள். அதற்காக ஒவ்வொரு சித்திக்குப் பத்து வருஷம் எட்டு வருஷம் பிரயாசை எடுத்துக் கொண்டால், அற்ப சித்திகளை யடையலாம்.*

அதற்காக அவற்றில் லக்ஷியம் வைத்தால் ஆண்டவரிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிற லக்ஷியம் போய்விடும்.

*ஆண்டவரிடத்தில் வைத்த லக்ஷியம் போய்விட்டால், நீங்கள் அடையப் போகிற பெரிய பிரயோஜனம் போய்விடும். அல்லது, அதில் முயற்சி செய்து, அவ்வளவு காலம் உழைத்து, அந்த அற்பப்பிரயோஜனத்தைத் தெரிந்து கொண்டு, அதனால் ஒரு லாபத்தை ஏகதேசம் அடைந்தால், முக்கிய லாபம் போய்விடும். ஆகையால், அவைகளில் லக்ஷியம் வைக்காமல், ஆண்டவரிடத்திலேயே லக்ஷியம் வைக்கவேண்டியது.*

முன் சொன்ன ஏகதேச சித்தி கற்பனை யென்கின்றது வாசகப் பெரு விண்ணப்பத்தாலும் இயல்வேதாகமங்கள் புராணங்கள் என்ற அருள்விளக்கமாலைப் பாசுரத்தாலு* முணர்க. மேலும் அதிற்கண்ட குறிப்பையுந் தெரிந்து கொள்ளுங்கள்.

பாடல் !

* இயல்வேதா கமங்கள்புரா ணங்கள்இதி காசம்
இவைமுதலா இந்திர
சாலங்கடையா உரைப்பார்

மயல்ஒருநூல் மாத்திரந்தான் சாலம்என அறிந்தார்
மகனேநீ நூலனைத்தும் சாலம் என அறிக

செயல்அனைத்தும் அருளொளியால் காண்கஎன எனக்கே
திருவுளம் பற்றிய ஞான தேசிகமா மணியே

அயல் அறியா அறிவுடையார் எல்லாரும் போற்ற
ஆடுகின்ற அரசே என் அலங்கல்அணிந் தருளே.
- திருஅருட்பா 4176

மேலும் இதுவரை நம் பின்பற்றி வருகின்ற..

*சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்*.

அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதே யன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமே யானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.

ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமே யல்லது, *ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது*.

ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். "*நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது*. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும்.

அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - *திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும்*. அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும்.

 ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால்,

*அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது*.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலே ஏற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்தலாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.

இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.
*நான் அப்படி அந்தச் சமயத்தில்
வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை.*

*என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ*

என, "தேடியதுண்டு நினது திருஉரு உண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன்.

மேலும் ஆண்டவர்  தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்.

*"கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது

**யாதெனில் தயவு
தயவு என்னுங் *கருணைதான் என்னைத் தூக்கி விட்டது**.

பாடல் !

* மாயையாற் கலங்கி வருந்திய போதும்
வள்ளல் உன் தன்னையே மதித்துன்

சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்
தலைவவே றெண்ணிய துண்டோ

தூயபொற் பாதம் அறியநான் அறியேன்
துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்

நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே
நன்றருள் புரிவதுன் கடனே.
- திருஅருட்பா 3635

கருணையும் சிவமே பொருள்எனக் காணும்
காட்சியும் பெறுக
மற்றெல்லாம்

மருள்நெறி எனநீ எனக்கறி வித்த
வண்ணமே பெற்றிருக் கின்றேன்

இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
எய்திய தென்செய்வேன் எந்தாய்

தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
சிறுநெறி பிடித்ததொன் றிலையே.
- திருஅருட்பா 3503

*அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம்*.

*இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது*. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள்.

என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும்,

*அவனுக்கு நல்ல வார்த்தை சொல்லுவேன்*;

*மிரட்டிச் சொல்லுவேன்;*

*தெண்டன் விழுந்து சொல்லுவேன்;*

*அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்;*

*அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்*.

இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும்.

*இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே என்று, என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்*.

ஏன் அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்: எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம்
*ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்*.

இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் -

சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது - ( வடலூர் சத்திய ஞானசபைக்கு ) அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடு கூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது.

*நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள். நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன்*.

 ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்.
*சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள்*.

 ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை.

*"தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள். ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!"*

 என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன். தெய்வத்தை ஏன் தெரிந்துகொள்ளவில்லையென்றால்:

*ஒரு பதார்த்தத்தை அனுபவித்தாலல்லது அந்தப் பதார்த்தத்தினுடைய ருசி தெரியாது. ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சை போகாது. அதுபோல், தெய்வத்தையுள்ளபடி அனுபவித்தாலல்லது, தெய்வத்தினிடத்தில் பிரியம் வாராது*.

ஆதலால், தெய்வத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற முக்கிய லக்ஷியத்திலிருந்து கொண்டு விசாரஞ் செய்துகொண்டிருங்கள்.
*அந்த விசாரம் செய்வது எப்படியென்றால்: அண்டத்தில் சூரியன் சந்திரன் நக்ஷத்திரங்கள் - இவைகள் எப்படிப்பட்டன? இவைகளினுடைய சொரூப ரூப சுபாவம் என்ன?*

இவை முதலானஅண்ட விசாரமும், பிண்டத்தில் நாம் யார்? இத் தேகத்தின் கண் புருவம் கைம்மூலம் - இவைகளிலும் இவை போன்ற மற்ற இடங்களிலும் உரோமம் உண்டாவானேன்? *நெற்றி முதலான இடங்களில் அது தோன்றாதிருப்பதென்ன?*

கால் கைகளிலுள்ள விரல்களில் நகம் முளைத்தலும் அந் நகம் வளர்தலும் - இவை போன்ற மற்றத் தத்துவங்களினது சொரூப ரூப சுபாவங்களும் என்ன வென்னும் பிண்ட விசாரமுஞ் செய்து கொண்டிருங்கள்.

 இப்படி இடைவிடாது விசாரஞ் செய்து கொண்டிருந்தால், இவ்வுலகத்தின் கண் உள்ள ஜனங்கள் அதைக் குறித்து ஏளனமாக சொல்லுவார்கள்.

*அப்படிச் சொல்லுவது அவர்களுக்குச் சுபாவம்.* ஏனெனில், அவர்களுக்கு உண்மை தெரியாது. ஆதலால் நீங்கள் அதை லக்ஷியம் செய்யக்கூடாது.

இப்படியே "காதில் இரண்டு பெரிய பொத்தல் செய்து வர விடுத்தவர் - ஆணுக்குக் கடுக்கனிடுதலும் பெண்ணுக்கு மூக்குத்தி முதலியவை போடுதலும் தமக்குச் சம்மதமானால் - *காதிலும் மூக்கிலும் அதற்கு வேண்டிய பொத்தல்களிட்டு வரவிட்டிருக்க மாட்டாரா*"

என்று விசாரித்துத் தெரிந்து கொள்ளுகிற பக்ஷத்தில், காதில் கடுக்கனிடவும் மூக்கு முதலியவற்றில் நகையிடவும் சம்மதம் வருமா? இப்படி விசாரித்துப் பிரபஞ்ச போகத்தின்கண் அலக்ஷியம் தோன்றினால், நிராசை உண்டாம்,

ஆதலால், சரியை முதலிய சாதகம் நான்கில், நான்காவது ஞானத்தில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கின்ற நான்கில்,

*மூன்றாவது படியாகிய ஞானத்தில் யோகம்* செய்கின்ற பலனாகிய நிராசை யென்னும் படி உண்டாகின்றது. ஆகையினாலே, இந்த விசாரத்திலிருந்து கொண்டிருங்கள்.

*இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார்.*

 மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள்.

இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள்

 *இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை*.

இது முதல் - கொஞ்ச காலம் - சாலைக்குப் போகின்ற வரைக்கும், ஜாக்கிரதையாக மேற்சொன்ன பிரகாரம் விசாரஞ் செய்து கொண்டிருங்கள்.
மேலும்,

 சமய மதங்களில் தெய்வத்தினது உண்மையைக் குழூஉக்குறியால் குறித்து, அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது

சிவாயநம என்றும், நமசிவாய என்றும், இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து, ஒன்று இரண்டு மூன்று ஐந்து ஆறு எட்டு பத்து பதின்மூன்று பதினைந்து பதினாறு இருபத்துநான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கவிட்டு நடந்து வருகின்றது.

அவ்வவ் மந்திரங்களின் அர்த்தம் பலவாக விரியும் ஆதலால்....

*நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய சிவானுபவமேயன்றி வேறில்லை*.

இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சி யெடுத்துக் கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

இத் தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு, முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான *திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை - தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை* -

எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம், எனது மெய்யறிவின்கண் அனுபவித்தெழுந்த - *உண்மையறிவனுபவானந்த இன்பத்தை நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி* அடைய என்னுள்ளே எழுந்து பொங்கியஆன்ம நேய உரிமைப்பாட்டுரிமையைப் பற்றிக் குறிப்பித்தேன்; குறிப்பிக்கின்றேன்; குறிப்பிப்பேன்.

நமது ஆண்டவர் கட்டளையிட்டது யாதெனில்: *நமக்கு முன் சாதனம் கருணையானதினாலே,*

 ஆண்டவர் முதற்சாதனமாக

*அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதிதனிப்பெருங் கருணை அருட்பெருஞ் ஜோதி*

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.

*தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம். இஃது வாச்சியார்த்தம். இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால், முடிவான இன்பானுபவம் பெறுவதற்குத் தடையில்லை. "சந்ததமும் வேதமொழி யாதொன்று பற்றின் அதுதான் வந்து முற்றும்"* என்னும் பிரமாணத்தால் உணர்க.

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, *அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்*.

சுத்த மாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. *சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம்*

. மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே.

*ஆதலால் இத் தருணம்இக்காலமே சன்மார்க்கக் காலம்*
.
இதற்குச் சாக்ஷியாக இப்போது தான்சன்மார்க்கக் கொடி கட்டிக் கொண்டது. அக்கொடி இப்போதுதான் கட்டிக் கொண்டது.

அக்கொடி உண்மையில் யாதெனில்:

*நமது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி யிருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியின் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம்; மேற்புறம் மஞ்சள் வர்ணம்; அச் சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது*;

இக்கொடி நம் அனுபவத்தின்கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளிமுகத்தில் அடையாள வர்ணமான கொடி கட்டியது. இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்.

*உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.*

 கொடி கட்டிக் கொண்டபடியால், இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.

*முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரியவொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.*

 இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார். நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மையறிவாய் விசாரம் செய்து கொண்டிருங்கள்.

அவசியம் இதற்குக் காரணமான தயவிருக்க வேண்டியது. அந்தத் தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும். இப்படி இருந்து கொண்டிருந்தால்

*ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள்.*

 இதுசத்தியம், சத்தியம், சத்தியம். இஃதுஆண்டவர் கட்டளை.
*எல்லோர்க்கும் தாய், தந்தை, அண்ணன், தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ*, அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்.

*இது ஆண்டவர் கட்டளை.*

ஆண்டவர் கட்டளையை ஏற்று அதன்படி வாழ்வதே சுத்த சன்மார்க்கிகளின் கடமை..

இன்னும் பழைய துன்மார்க்க நெறிகளான சாதி.சமய.மதம் போன்ற நெறிகளைப் பின்பற்றிக் கொண்டும்.சன்மார்க்க நெறியை பின்பற்றிக் கொண்டும் இருந்தீர்கள் என்றால் எந்த வகையான பிரயோஜனமும் இல்லாமல் பயனும் இல்லாமல் போய்விடும்.

உங்கள் வாழ்க்கை உங்கள் முயற்சியில் தான் உள்ளது .

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி!!!!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896..

புதன், 10 ஏப்ரல், 2019

பாவம் ! புண்ணியம் !

பாவம் !  புண்ணியம் !

நாம் பாவம் செய்வதையும் .புண்ணியம் செய்வதையும் எவ்வாறு தெரிந்து கொள்வது !

ஒருமனிதன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தவறான வழியில் பொருள் சம்பாதித்து. சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவிட்டு இறுதி காலத்தில் துன்ப்ப் படுவதும்..
மரணவேதனைப் படுவதும் நிகழ்ந்தால்..அவர் நிறைய *பாவச்செயல்* செய்தவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்...

புண்ணியம் என்பது !

ஒருமனிதன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில்  நேர்மையாக உழைத்து  ரொம்ப சிரமப்பட்டு.கஷடப்பட்டு பொருள் ஈட்டி மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து. உழைத்தவர்கள்.

  இறுதி காலத்தில் எந்த சிரமமும்.கஷ்டமும் இல்லாமல் மகிழ்ச்சி யுடன் வாழ்வதும் நோய்வாய் படாமல் .. மரணத் துன்பம் இல்லாமல் வாழ்வதே *புண்ணியம்* என்பதாகும்

*புண்ணியத்துடன் மரணம் அடைந்தால். அடுத்த பிறவி மனிதப் பிறவி நிச்சியம்.*.

*பாவத்துடன் மரணம் அடைந்தால் அடுத்தப் பிறவி துஷ்ட ஜந்துக்களாக பிறக்க நேரிடும்...*

பாவம் புண்ணியம் என்பது இந்தப்பிறவியிலே தெரிந்து கொள்ளலாம்.

எனவே ரொம்ப ஜாக்கிரதையுடன் இந்த பிறவியின்  வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்....

இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  நம்மை கவனித்துக் கொண்டே உள்ளார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது....

வள்ளலார் பாடல் !

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே

பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே

நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே

கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

மேலே கண்ட பாடலை கவனிக்கவும்..

அற்ப ஆசைகளுக்காக செய்யக்கூடாத செயல்களை எல்லாம் செய்து அற்ப மகிழ்ச்சிக்காக பண்ணாத தீமைகள் எல்லாம் பண்ணி.அதனால் வரும் அற்ப மகிழ்ச்சியினால் எந்த  ஒரு பயனும் இல்லை...

இறுதியில் வரும் துன்பத்தை தடுத்து நிறுத்த முடியாமல் சொல்ல முடியாத துன்பத்தில் ஆழ்ந்து.கண்ணீர்விட்டு அழுதும் பயன் இல்லாமல் போய்விடும்..

எனவே சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன்.காலம் உள்ளபோதே நேர்மையாக உழைத்து.நம்மால் முடிந்த அளவு  ஜீவகாருண்யம் செய்து பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் உயிர் இரக்கத்துடன் வாழ்ந்து  புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளுங்கள்...

இதுவே மனிதப் பிறப்பின் தலையாய கடமையாகும்.புண்ணியம் பெறும் வழியாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 8 ஏப்ரல், 2019

சந்நியாசமும் காவி உடையும் !

சந்நியாசமும் காவி உடையும் !

மேலே கண்ட தலைப்பில் வள்ளலார் .காவி உடை யுத்தகுறி என்று அதற்கு விளக்கம் தெளிவாக பதிவு செய்து இருந்தார்..

அவற்றை வெளியிட்டு இருந்தேன்.

அதற்கு ஆதாரம் இருக்கிறதா ? வள்ளலார் அப்படி சொல்லி இருக்க மாட்டார் ..நீங்கள் ஆதாரம் இல்லாமல் வெளியிட மாட்டீர்கள் ஆதாரம் இருந்தால் தெரியப் படுத்துங்கள் என்று சில ஆன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க

வள்ளலார் பதிவு செய்துள்ளதை அப்படியே அனுப்புகிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

உரைநடைப்பகுதி
எண் 111..

111. சந்நியாசமும் காவி உடையும் !

மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை.

சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்;

*தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது;*
 *தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி*

*. வெற்றியான பிறகு அடைவது தயவு*

. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை.

தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்;

"தயவென்பது சத்துவம்,* சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம்*,

நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம்,

ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.*

*சன்னியாசம்
மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயையில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்*.

அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை.

குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம். தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்...

தயவு
தயவு - சுத்தம், வெள்ளை வருணம், ஞானம், தயவு - அருள் காருண்ணியம்.

*காவிவேஷ்டி
காவிவேஷ்டி தரிப்பது தயவுக்கு விரோதமானவைகளை ஜெயிப்பதற்கடையாளம்*

 மேலே கண்ட விபரங்களை நன்கு பொறுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்..

பாடல் !

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

தத்துவங்களை கடந்தால் தான் இறை அருளைப் பெற முடியும்...

தத்துவங்களை கடக்க முடியாதவர்கள் அணிந்து கொள்வது காவி உடை...

காவி உடை அணிந்துள்ளவர்கள் கடின சித்தர்கள் என்கிறார் வள்ளலார்...

வெள்ளை உடையே வெற்றியின் சின்னம்.

காவி உடையால் கடவுளைக் காண முடியாது...

நமது வள்ளலார் வெள்ளாடை வேந்தர் !
மரணத்தை வென்ற மகான் .

இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட .எல்லாம் வல்லவர்.

எனவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையானது ..அருளைப் பெறுவதற்கு நேர் நோக்குப்  பாதையாகும்.

மனிதகுல மேம்பாட்டிற்காக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் வள்ளலார்...என்பதை மறந்தும் தவறாக நினைத்து விடாதீர்கள்.

வள்ளலார் உருவம் மனித உருவம் அல்ல ! அருள் உருவம் என்பதை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.

ஈரோடு கதிர்வேல் ஆதாரம் இல்லாமல் ஒருபோதும் பொய்யான செய்தியை வெளிப்படுத்த மாட்டான்
என்பதை அருள் கூர்ந்து தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 1 ஏப்ரல், 2019

மகிழ்ச்சியுடன் வாழும் வழி !


*மகிழ்ச்சியுடன் வாழும் வழியைத் தெரிந்து கொள்வோம்...!*

உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சி யைத்தான் விரும்புகிறார்கள் விரும்புவார்கள் 

துன்பத்தை எவரும் விரும்புவதில்லை..

தீதும் நன்றும் பிறர்தர வாரா ! என்பது முன்னோர்கள் கண்ட உண்மை..

மகிழ்ச்சியும் துன்பமும் தானாக வருவதில்லை.

அவரவர்கள் செய்யும் செயகையினால் தான் நன்மை தீமை உண்டாகின்றது.

எல்லாவற்றிலும் பெரிய துன்பம் மரணம் மட்டுமே ! 

எல்லாத் துன்பங்களிலும் மிகப்பெரிய துன்பம் மரணம் என்பது உலகமே அறிந்துள்ள விஷயம்..

மரணம் என்பது பெரியபிணி என்கிறார் வள்ளலார்.

அந்த பெரிய பெரும் பிணியை போக்கும் மருந்தை கண்டு பிடித்தவர் வள்ளலார்.

மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு கரணப் பெருந்திரல் காட்டிய மருந்தே !

என்றும்...

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் அடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே !

என்கிறார் வள்ளலார்.

உடற்பிணியால் தான் உயிர்ப்பிணி வருகின்றது..உயிர்ப்பிணியால் ஆன்மாவானது உயிரையும் உடம்பையும்  விட்டு வெளியே சென்று விடுகின்றது..

அதற்குப் பெயர் தான் மரணம் என்று பெயர் வைத்துள்ளார்கள்.

மரணத்தை எவரும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை...!

உலகியல் துன்பத்தக தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு.

வறுமையை ஏற்றுக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்பவர்களும் உண்டு.

மேலும் தங்களால் தாங்கிக் கொள்ள முடியாமல் துன்பம் வருகின்ற போது தற்கொலை செய்து கொள்பவர்களும் உண்டு..

உடல் மெலிந்தும் முதுமை அடைந்தும்.செயல்
இழந்தும்.நோய்வாய்ப்பட்டும்.
நோய்வராமலும் இறுதியில் மரணம் வந்து விடுகிறது..

இவைகள் எல்லாமே மரணத்திற்கு பின் துன்பம் தீர்ந்துவிடும் என்பது அறியாமையாகும்.மேலும்.தற்கொலை செய்து கொண்டாலோ தீர்ந்து விடும் என்பது அறியாமையிலும் அறியாமையாகும்.

எந்த வகையில் மரணம் அடைந்தாலும் மீண்டும் பிறப்பு உண்டு என்பதை அறியாமல் செய்யும் தவறுகள் ஆகும்..

மனிதர்கள் மகிழ்ச்சி யுடன் வாழ்வதற்குத்தான் மனிதப் பிறப்பு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன.

உடற்பிணி உயிர்பிணி !

இரண்டுமே நோய் என்கிறார் வள்ளலார்..

உடற்பிணி உயிர்பிணி .இந்த இரண்டு பிணிகளுமே துன்பத்திற்கு காரண காரியமாக உள்ளன. மரணத்திற்கும் இதுவே காரண காரியமாக உள்ளன.

உடற்பிணியால் தான் உயிர்பிணி வருகின்றன.

உடற்பிணி வரும்போது.அந்த துன்பத்தை தாங்க முடியாமல் உயிர் பிரிந்து விடுகின்றது...

துன்பமே காரணம் !

மக்கள்  மரணம் அடைவதற்கு காரணமே துன்பம் தான் என்பதை நாம் ஒவ்வொரு மனித ஜீவர்களும் அறிந்து கொள்ள வேண்டும்..

உடம்பையும் உயிரையும் காப்பாற்றத் தெரியாமல் மனிதர்கள் மரணம் அடைந்து விடுகிறார்கள்.

உலகில் தோன்றிய ஞானிகள் என்னும் அருளாளர்களும் மரணத்தை வெல்லும் வழியை சரியாக முறையாக தெரிந்து கொள்ளவில்லை.கற்றுக் கொள்ளவில்லை..ஆதலால் அருள் கிடைத்தும் அருள் பூரணம் அடையாமல் .கிடைக்காமல் மரணம் வந்து மாண்டு போகிறார்கள்.

*அருளால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்*.

அறிவியல் வளர்ச்சியில் முன்னேறிய அறிவியல் வல்லுனர்களும்.அணு ஆராய்ச்சி யாளர்களும்.அளவில் அடங்கா விஞ்ஞான ஆராய்ச்சி யாளர்களும் இறைவனால் படைக்கப்பட்ட அணுக்களைக் கொண்டு நிறைய அணு ஆராய்ச்சிகள் கண்டுபிடிப்புகள்  கண்டு பிடித்து அதிர்ச்சியை உள்ளாக்கி இருக்கிறார்கள்..

இருந்தாலும் மனிதன் மரணத்தை வெல்லும் வழியை எவரும் கண்டுபிடிக்கவில்லை...

மனித உடம்பின் அணு சேர்கையை அழிக்காமல் பிரித்து எடுக்கும் உளவை எவரும் கண்டுபிடிக்கவில்லை.

மரணத்தை வென்றவர் வள்ளலார் மட்டுமே  !

மரணத்தை வெல்லும் வழியைக் கண்டுபிடித்தவர் அருள் விஞ்ஞானி வள்ளலார் ஒருவர் மட்டுமே என்பது உலகம் அறிந்த உண்மையாகும்...

வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் சாத்திரங்களிலும் சொல்லி இருக்கிறது என்று சிலர் சொல்வார்கள்.அவைகள் எல்லாமே கற்பனைக் கதைகளேத் தவிர உண்மை அல்ல என்பதையும் வள்ளலார் தெரியப்படுத்தி உள்ளார்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !


வேதநெறி ஆகமத்தின் நெறி பவுராணங்கள்
விளம்புநெறி இதிகாசம் விதித்த நெறிமுழுதும்
*ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி*
உள்ளதனை உள்ளபடி உணர உணரத்தனையே
ஏதமற உணர்ந்தன்ன் வீண்போது கழிப்பதற்கு ஓர்
எள்ளளவும் எண்ணம் இலேன் என்ணொடு நீ கலந்தே
தீதறவே அனைத்தும் வல்ல சித்தாடல் புரிவாய்
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே....!

என்கிறார் மேலும்

வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவு அறியீர் சூதாகச்
சொன்னது அலால் உண்மை வெளி தோன்ற உரைக்க வில்லை
என்ன பயனொ இவை...!

என்கிறார்.. கற்பனைக் கதைகளை உருவாக்கி சூதாக.உண்மைக்கு புறம்பான கற்பனைக் கதைகளை கற்பனைகளாக தோற்றுவித்து மக்களை அலைய விட்டு விட்டார்கள்.

இதுசமயம் எல்லா உண்மைகளையும் ஒளிவு மறைவு இல்லாமல் எனக்கு உண்மை உணர்த்தி விட்டாய் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! என்கிறார் வள்ளலார்.

எனவே என்னுடைய ஆன்மநேய உடன் பிறப்புகளாகிய உங்களுக்கு உண்மையை உண்மையாக எடுத்து சொல்வதற்கு உண்மை அறிவை விளக்கி உள்ளாய் ஆதலால் உண்மை உரைக்கின்றேன் என்கின்றார் வள்ளலார்.

என்மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம் என்று வெளிப்படுத்துகின்றார்..!

இறைப்பை ஒழிப்பது சாத்தியமா ? என்று எல்லோரும் வியக்கின்றார்கள்.
சாத்தியம் சத்தியம் என்று உணர்ந்து அறிந்து அனுபவித்து வாழ்ந்து மரணத்தை வென்றுதான் உலக மக்களுக்கு பறை சாற்றுகிறார்...

சாகாக்கல்வி !

வள்ளலார் கண்டுபிடித்த சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு சாகாக்கல்வி என்றே பெயர் சூட்டுகின்றார்...

இதுவரையில் பொருள் ஈட்டும் கல்விக்கு சாகும் கல்வி என்றும்..நான் அருள் ஈட்டும் கல்வியைத் கற்றுத் தருகிறேன்.அதற்கு சாகாக்கல்வி என்றும் பெயர் மாற்றம் செய்கின்றார்.

சாகாக்கல்விக்கு நான்கு மரபுகளை அதாவது நான்கு பாடங்களைச் சொல்லித் தருகின்றார்..அதில் வெற்றி பெற்றால் மரணத்தை வென்று விடலாம் என்கிறார்...

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சாகாத கல்வியே கல்வி

ஒன்றே சிவம் தான் என அறிந்த அறிவே தகும் அறிவு

மலம் ஐந்தும் வென்ற வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம்

வேகாத காலாதி கண்டுகொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலாகும்

இந்நான்கையும் ஒருங்கே வியந்து அடைந்து உலகம் எல்லாம்

மா காதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறைவான வரமே இன்பமாம்

மன்னும் இது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின் மரபு என்று உரைத்த குருவே...

தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்தேற்றி  அருள் செய்த சிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே தெய்வ நடராஜபதியே !

என்ற பாடல் வாயிலாக சுத்த சன்மார்க்க மரபைப் பற்றித் தெளிவாக விளக்கி உள்ளார்..

சாகாத கல்வி கற்க வேண்டுமானால் ஒரே கடவுள் என்ற உண்மையும்..அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ற உண்மையை அறிந்து கொள்பவரே ! சிறந்த உயர்ந்த உண்மை அறிவு பெற்றவர் ஆவார்...

அவரால் மட்டுமே ஐந்து மலங்களை வெல்ல முடியும்.

ஐந்து மலங்களை வென்றவர்களால் மட்டுமே வேகாத காலாகிய அமுதக் காற்றை சுவாசிக்க முடியும்.

*அமுதக் காற்றை சுவாசிப்பவர்களால் மட்டுமே .உடம்பில் உள்ள ஒன்பது துவாரங்களை அடைக்க முடியும்.*

ஒன்பது துவாரங்களை அடைக்க கற்றுக் கொண்டவர்களால் மட்டுமே துரியமலை துவாரம் திறக்கப்படும்.அதாவது தலையின் உச்சி (கபாலம் ) திறக்கப்படும்..

உச்சி திறந்தால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  மெய் அருள் கனல் ஆன்மாவைத் தொடர்பு கொள்ளும்  .

மெய் அருள் கனலின் (சுத்த உஷ்ணம்) சூட்டினால்.ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் ஒவ்வொன்றாக விலகிவிடும்.

திரைகள் நீங்கியவுடனே ஆன்ம ஒளியும் அருட்பெருஞ்ஜோதி ஒளியும் தொடர்பு கொள்ளும்.

ஆயிரத்தெட்டு கமல இதழ்களால் மூடிக்கொண்டு இருக்கும் ஆன்மாவானது இதழ்கள் விரிந்து மலர்ந்து அருட்பெருஞ்ஜோதி யை அனைத்துக் கொள்ளும்.

அனைகின்ற போது உண்டாகும் அருள் *சுகத்தை மகிழ்ச்சி யை* சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை என்கிறார்

அனுபவமாலையில் பதிவு செய்கின்றார் !

கண்கலந்த கணவர் எனைக் கை கலந்த தருணம் கண்டறியேன் என்னையும் என்கரணங்கள் தனையும்

எண்கலந்த போகம் எல்லாம் சிவபோகம் தனிலோர் இறையளவு என்று உரைக்கின்ற மறையளவின் றறிந்தேன்

விண் கலந்த திருவாளர் உயிர் கலந்த தருணம் வினைத் துயர் தீர்ந்து அடைந்த சுகத்தை நினைத்திடுந் தோறும் எல்லாம்

உண்கலந்த ஆனந்தப் பெரும் போகம் அப்போது உற்றது எனை விழுங்க்க் கற்றது காண் தோழி !

என்னும் பாடல் வாயிலாக தன் அனுபவத்தை அனுபவமாலை என்னும் பதிகத்தின் மூலம் வெளிப்படுத்துகிறார் வள்ளல் பெருமான்..

மேலும் ஒரு பாடலிலே அருள் அமுத்த்தை எப்படி அனுபவித்தேன் அகம் மகிழ்ந்தேன் என்பதை பதிவு செய்கின்றார் பாருங்கள்...

*மாடமிசை யோங்கும் நிலா மண்டபத்தே எனது மணவாளர் கொடுத்த திரு அருள் அமுதம் மகிழ்ந்தே*

ஏடவிழ் பூங்குழலாய் நான் உண்ட  தருணம் என்னையும் அறிந்திலேன் உலகம் தன்னையும் நான் அறியேன்

தேடரிய நறும்பாலும் தேம்பாகும் நெய்யும் தேனும் மொக்கக் கலந்த்து எனச் செப்பினும் சாலாதே

ஈடறியாச் சுவை புகல என்றால் முடியாது தென்னடியோ அவ்வமுதம் பொன்னடி தானிகரே !

மேலே கண்ட அனுபவமாலையில் தான் அடைந்த அருள் சுகத்தை இன்பத்தை மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை என்கிறார்..

எனவே சுத்ந சன்மார்க்க சான்றோர்களே! என்றும் அழியாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை வாழ்வதற்கு இந்த மனித தேகமே தகுதி வாய்ந்த்து .

ஆதலால் நாம் அடைய வேண்டியது ஆன்மலாபம்.ஆன்ம சுகம் ஆன்ம மகிழ்ச்சி என்பதாகும்.

ஆன்மா மகிழ்ச்சி அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தொடர்பு அவசியம் ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள எவைகள் எல்லாம் தடையாக இருக்கின்றதோ அவற்றை எல்லாம் விளக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டால் மட்டுமே அருள் கிடைக்கும்.

*வேறு எந்த தெய்வத்தின் தொடர்பாலும் அருள் கிடைக்காது* என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தான் இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்கிறார் வள்ளலார்.

அதற்கு இயற்கை உண்மை.இயற்கை விளக்கம்.இயற்கை இன்பம் என்று பெயர் சூட்டி விளக்குகின்றார்.

அந்த அருட்பெருஞ்ஜோதி அருள் கிடைத்தால் மட்டுமே மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.