செவ்வாய், 27 டிசம்பர், 2016

நாம் யார் ? நான் யார் ?

நாம் யார் ? நான் யார் ?

எல்லாப் பிறப்புகளிலும் மனிதப் பிறப்பு உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்பதை அனைவரும் அறிந்ததே ... ..

மனிதப் பிறப்பில் தான் நாம் யார் ? நான் யார் ?  என்பதைத் அறிந்து கொள்ளும் பேர் அறிவு என்னும் அருள் அறிவு உள்ளது.  நமக்கும் இந்த உடம்புக்கும்,இறைவனுக்கும்  உள்ள  தொடர்பு என்ன ? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த உடம்பு அழியக் கூடியது தானா ? இந்த உடம்பை அழியாமல் மாற்றிக் கொள்ள முடியுமா ? என்ற கேள்விகளுக்குப் பதில் காண தேடியவர்கள் தான் ,நம்முடைய சித்தர்கள், முத்தர்கள், யோகிகள் என்பவர்கள்..அவர்களில் சிலர் இந்த உடம்பை அழியாமல் பாது காக்க முடியும் என்றும் அறிந்து உள்ளார்கள் .சிலர் உடம்பு அழிந்துவிடும்,ஆன்மா அழியாதது,மரணம் அடைந்த பின் ஆன்மா இறைவனுடன் கலந்து விடும் என்றும் சொல்லி விட்டு மரணம் அடைந்து உள்ளார்கள், மேலும்  மரணம் அடைந்தால் உடம்பு அழிந்துவிடும் ,ஆன்மா சொர்க்கத்திற்கும்,கைலாயத்திற்கும்,வைகுண்டத்திற்கும்,சென்று இறைவனுடன் கலந்து விடும் என்றும் பொய்யானக் கற்பனைக் கதைகளைக் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம், போன்ற கற்பனைக் கதைகளை இயற்றிய  அருளாளர்களும்,வேதாந்தம்,சித்தாந்தம்,    ,யோகாந்தம்,கலாந்தம்,நாதாந்தம்,போதாந்தம் .போன்ற ஆறு அந்தங்களையும்,அறிந்தவர்களும், அவற்றைக் ,கடந்தவர்களும்.,உண்மையான இறைவனை அறியமுடியாமல்,உண்மையான இறைவனை அறிய முடியாமல். வெளியிலே  கரைந்து போனார்கள்...ஏன் ? அவர்களால் .அறிய முடியவில்லை என்று திகைத்து மவுனமாக பிரம்மத்திலே நின்று விட்டார்கள் .
அவர்களுடைய நீண்ட நெடிய அருளாளர்கள் பரம்பரையில் தோன்றிய அருளாளர்களும் இறைவனைக் காண முடியவில்லை..

அவர்கள் அறிந்து,தெரிந்து,புரிந்து   கொள்ள முடியாத உண்மையான அருள் நெறியான  ''சுத்த சன்மார்க்க பேரின்ப  அருள் நெறியை'' உலக மக்களுக்கு தெரிவிக்கவே, திரு அருட்பிரகாச வள்ளலாரை,  உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  இந்த உலகிற்கு வருவிக்க உற்றார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.;--

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்தை அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்து
திடுதற்கு என்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே !......என்கின்றார்.

எல்லா கேள்விகளுக்கும்,ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, பதில்  தெரியாமல் அலைந்து திரிந்த அருளாளர்களுக்கும்,  சித்தர்களுக்கும்,யோகிகளுக்கும்,சமயமத வாதிகளுக்கும்,.அறிவில் முதிர்ந்த உலகில் வாழ்ந்து கொண்டுள்ள மனிதர்களுக்கும் ,விடை காணவே ,,''திருஅருட்பா'' என்னும் அருள் நூலை எழுதி வைத்துள்ளார்  திருஅருட்பிரகாச வள்ளலார் .. .

இந்த பூத  உடலை,பூரண அருளால்  அழியாமல் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் ,மேலும் .  ,மண்ணுக்கோ,தீயிக்கோ,தண்ணீர்க்கோ,காற்றுக்கோ ,ஆகாயத்திற்கோ ,எமனுக்கோ ,கிரகங்களுக்கோ ,பிணிகளுக்கோ, கொலை கருவிகளுக்கோ ,பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களுக்கோ ,இன்னும் வேறு ஏதாவது வழிகளிலோ ,இந்த உடம்பை அழிக்க முடியாத நிலைகளில் வாழ முடியும் என்ற உண்மையை மக்களுக்குத் தெரிவித்தது ,மட்டும் அல்லாமல் ,தான் வாழ்ந்தும் காட்டி உள்ளார் வள்ளலார் .

மேலும் அதற்கு ஆதாரமான பாடலையும் பதிவு செய்து உள்ளார் ;--

காற்றாலே, புவியாலே, ககனம் அதனாலே,
கனலாலே, புனலாலே, கதிராதியாலே,
கூற்றாலே,பிணியாலே ,கொலைக் கருவியாலே ,
கோளாலே ,பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே ,
வேற்றாலே,எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து  அளித்தான் என்தனக்கே
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

நம்முடைய உடம்பானது ,தூல உடம்பு,  சூக்கும உடம்பு ...காரண உடம்பு,என்று மூன்று பகுதிகளாகச் செயல் படுகின்றது.மூன்று சபைகளாக செயல்படுகின்றது.இதிலே இரண்டு சபை முக்கியமானது.ஒன்று பொற்சபை...ஒன்று சிற்சபை என்பதாகும்.

பொற்சபை என்பது ;-ஊன தேகமான புற தேகம் ..
சிற்சபை என்பது ;-- அக தேகமான ஞான தேகம்...
புற தேகத்தையும் அக தேகத்தையும் ஒன்றோடு ஒன்றாக இணைப்பதுவே ஞான தேகம் என்னும் ஆன்ம தேகமாகும்..இதைத்தான் வள்ளலார் ''சிற்சபையும் பொற்சபையும் சொந்தம் எனது ஆச்சு '' என்கின்றார் .

மேலே கண்ட உடம்பின் மூன்று பகுதிகளையும்,சுத்தப் படுத்தி, அவைகளை  இரண்டாக்கி ,மீண்டும் அவைகளை.அருள் ஒளியால.ஒன்றாக்கி,  மாற்றி முத்தேக சித்தி பெறலாம் ,மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் என்பதைத்  தம் அருள் அனுபவத்தால் கண்டவர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் .

தாம் பெற்ற முத்தேக சித்தி அனுபவத்தை ''திருஅருட்பா ஆறாம் திருமுறையில்,'' பா மாலைகளாகத் தொகுத்து.மிக அருமையாக விளக்கி  பதிவு செய்துள்ளார் ,மேலும் உரைநடைப் பகுதியிலும் பாமரர்களும் தெரிந்து கொள்ளும் படி மிக எளிய நடையில்,தமிழில் எழுதி வைத்து உள்ளார் .

இந்தப் பாடல்களையும்,உரைநடைப் பகுதிகளையும்,மேல் எழுந்த வாரியாகப் படிப்பவர்கள் அதன் முழுப் பொருளையும் புரிந்து கொள்ள முடியாது.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியை வாழ்வில், முழுமையாக கடைபிடித்து வருபவர்கள் தான் அதன் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.பொதுவாக திருஅருட்பாப் பாடல்களுக்கும் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

திருஅருட்பாப் பாடல்கள் வெறும் சமய மதப் பாடல்கள் அல்ல ...அவை திருஅருட்பிரகாச வள்ளலார் பெற்று இருக்கும் மரணம் இல்லாப் பெருவாழ்வை விளக்கும் அனுபவப் பாடல்களாகும்.

மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கும் ,அருள் அனுபவப் பேற்றுக்கும் ஒரு புதிய வழியைக் காட்டி இருக்கின்றார் வள்ளலார்.

சமய மதப் பாடல்கள் போல் தோன்றும் !

திருஅருட்பா பாடல்களைப் படிக்கும் போது பல பாடல்கள் சைவ சமயத்தின் உண்மையைக் கூறும் பாடல்கள் போல் தோன்றும்.ஆனால் வெறும் சைவ சமய விளக்கத்தக் கூறும் சந்தைப் பாடல்கள் அல்ல ! அவை எதோ மன சாந்திக்காகப் பாடிய பாடல்கள் அல்ல !

திருஅருட்பா பாடல்கள் அனைத்தும் தாம் பெற்ற பேரின்பத்தை எல்லா உலகமும் பெற வேண்டும் என்ற பெருங் கருணையினால் பாடப்பட்ட அருள் அனுபவப்  பாடல்களாகும்.

நடராஜர் பாட்டே நறும் பட்டு
ஞாலத்தார் பட்டு எல்லாம் வெறும் பட்டு !
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பட்டு எல்லாம் தெருப்பாட்டு !
அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பட்டு எல்லாம் மருட்பாட்டு ! என்றும்

நாத நல்வரைப்பின் நண்ணிய பாட்டே
வேத கீதத்தில் விளை திருப் பாட்டே
நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே

என்று பாடல்களின் தன்மையை விளக்கி உள்ளார் .

 எங்கும்  நீக்கமற நிறைந்த இறைவனைத் தம் உள்ளும் புறமும் கண்டு அதிலே தொய்ந்து ''அருளைப் பெற்று'' தம் உடல் முழுவதும் பரவி ,அகத்தில் இருந்து   அனகமாக விரிவு அடைந்து விளங்குவதையும்,அதனால் தம் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி அழியா முத்தேக சித்திப் பெற்று ,ஆண்டவர் அருளால் ஐந்து தொழில் வல்லபத்தையும் பெற்றுத் தரும் பாடல்களே .திருஅருட்பா பாடல்களாகும்.

சாதாரண தமிழ்ப் புலமை மட்டும் பெற்றவர்களும்,சமய நூல்களில் ஆராய்ச்சி உள்ளவர்களும்,திருஅருட்பா பாடல்களுக்கு உரை எழுதினால் அவை வெறும் சொற்களுக்கு எழுதிய உரையாகவே   இருக்குமேத் தவிர ,வள்ளலாரின் சுத்த சன்மார்க்க அனுபவத்தை விளக்கி கூறுவதாக இருக்காது .

சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ்வில் மேற்கொண்டு முத்தேக சித்தியில் நம்பிக்கை வைத்து ,அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் திருஅருட்பா பாடல்களைப் படித்தால்தான், திரு அருள் வல்லபத்தை புரிந்து கொள்ள முடியும்.

நான் நாற்பது ஆண்டுகளாக ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைபிடித்து வருவதால் ஓர் அளவு என்னால்  புரிந்து கொள்ள முடிகின்றது...இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

மனித தேகம் எடுத்தவர்கள் அனைவரும்,முதலில் வள்ளலார் சொல்லி உள்ள    ,இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கத்தைக் கடைபிடித்து, மனிதனாக வாழ்ந்து, ,சுத்த சன்மார்க்க பொது நெறியை, தனி நெறியை,அருள் நெறியை  அவசியம் தெரிந்து,அறிந்து ,புரிந்து  கொண்டு,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று,மரணத்தை வென்று,என்றும் அழியாத பேரின்ப வாழ்வில்  வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் ...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.....

வெள்ளி, 23 டிசம்பர், 2016

நாம் யார் ? நான் யார்

நாம் யார் ? நான் யார் ?

சென்ற கட்டுரையில் பிறவிகளின் தோற்றம் மாற்றங்களைப் பார்த்தோம்.

எல்லாப் பிறப்புகளிலும் மனிதப் பிறப்பு உயர்ந்த அறிவுள்ள பிறப்பு என்பதை அறிந்தோம்..

மனிதப் பிறப்பில் தான் நாம் யார் ? நான் யார் ?  என்பதைத் அறிந்து கொள்ளும் பேர் அறிவு என்னும் அருள் அறிவு உள்ளது.  நமக்கும் இந்த உடம்புக்கும்,இறைவனுக்கும்  உள்ள  தொடர்பு என்ன ? என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இந்த உடம்பு அழியக் கூடியது தானா ? இந்த உடம்பை அழியாமல் மாற்றிக் கொள்ள முடியுமா ? என்ற கேள்விகளுக்குப் பதில் காண தேடியவர்கள் தான் ,நம்முடைய சித்தர்கள், முத்தர்கள், யோகிகள் என்பவர்கள்..அவர்களில் சிலர் இந்த உடம்பை அழியாமல் பாது காக்க முடியும் என்றும் அறிந்து உள்ளார்கள் .சிலர் உடம்பு அழிந்துவிடும்,ஆன்மா அழியாதது,மரணம் அடைந்த பின் ஆன்மா இறைவனுடன் கலந்து விடும் என்றும் சொல்லி விட்டு மரணம் அடைந்து உள்ளார்கள், மேலும்  மரணம் அடைந்தால் உடம்பு அழிந்துவிடும் ,ஆன்மா சொர்க்கத்திற்கும்,கைலாயத்திற்கும்,வைகுண்டத்திற்கும்,சென்று இறைவனுடன் கலந்து விடும் என்றும் பொய்யானக் கற்பனைக் கதைகளைக் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்.

வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம், போன்ற கற்பனைக் கதைகளை இயற்றிய  அருளாளர்களும்,வேதாந்தம்,சித்தாந்தம்,    ,யோகாந்தம்,கலாந்தம்,நாதாந்தம்,போதாந்தம் .போன்ற ஆறு அந்தங்களையும்,அறிந்தவர்களும், அவற்றைக் ,கடந்தவர்களும்.,உண்மையான இறைவனை அறியமுடியாமல்,உண்மையான இறைவனை அறிய முடியாமல். வெளியிலே  கரைந்து போனார்கள்...ஏன் ? அவர்களால் .அறிய முடியவில்லை என்று திகைத்து மவுனமாக பிரம்மத்திலே நின்று விட்டார்கள் .
அவர்களுடைய நீண்ட நெடிய அருளாளர்கள் பரம்பரையில் தோன்றிய அருளாளர்களும் இறைவனைக் காண முடியவில்லை..

அவர்கள் அறிந்து,தெரிந்து,புரிந்து   கொள்ள முடியாத உண்மையான அருள் நெறியான  ''சுத்த சன்மார்க்க பேரின்ப  அருள் நெறியை'' உலக மக்களுக்கு தெரிவிக்கவே, திரு அருட்பிரகாச வள்ளலாரை,  உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  இந்த உலகிற்கு வருவிக்க உற்றார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்.;--

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்தை அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்து
திடுதற்கு என்றே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே !......என்கின்றார்.

எல்லா கேள்விகளுக்கும்,ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக, பதில்  தெரியாமல் அலைந்து திரிந்த அருளாளர்களுக்கும்,  சித்தர்களுக்கும்,யோகிகளுக்கும்,சமயமத வாதிகளுக்கும்,.அறிவில் முதிர்ந்த உலகில் வாழ்ந்து கொண்டுள்ள மனிதர்களுக்கும் ,விடை காணவே ,,''திருஅருட்பா'' என்னும் அருள் நூலை எழுதி வைத்துள்ளார்  திருஅருட்பிரகாச வள்ளலார் .. .

இந்த பூத  உடலை,பூரண அருளால்  அழியாமல் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் ,மேலும் .  ,மண்ணுக்கோ,தீயிக்கோ,தண்ணீர்க்கோ,காற்றுக்கோ ,ஆகாயத்திற்கோ ,எமனுக்கோ ,கிரகங்களுக்கோ ,பிணிகளுக்கோ, கொலை கருவிகளுக்கோ ,பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களுக்கோ ,இன்னும் வேறு ஏதாவது வழிகளிலோ ,இந்த உடம்பை அழிக்க முடியாத நிலைகளில் வாழ முடியும் என்ற உண்மையை மக்களுக்குத் தெரிவித்தது ,மட்டும் அல்லாமல் ,தான் வாழ்ந்தும் காட்டி உள்ளார் வள்ளலார் .

மேலும் அதற்கு ஆதாரமான பாடலையும் பதிவு செய்து உள்ளார் ;--

காற்றாலே, புவியாலே, ககனம் அதனாலே,
கனலாலே, புனலாலே, கதிராதியாலே,
கூற்றாலே,பிணியாலே ,கொலைக் கருவியாலே ,
கோளாலே ,பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே ,
வேற்றாலே,எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து  அளித்தான் என்தனக்கே
ஏற்றாலே இழிவு என நீர் நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே !

நம்முடைய உடம்பானது ,தூல உடம்பு,  சூக்கும உடம்பு ...காரண உடம்பு,என்று மூன்று பகுதிகளாகச் செயல் படுகின்றது..( இந்த மூன்று உடம்பு எப்படி ஆண்டவரால் கொடுக்கப் பட்டது என்பதை அடுத்தக் கட்டுரையில் விரிவாக சிந்திக்கலாம் )

இந்த உடம்பின் மூன்று பகுதிகளையும்,சுத்தப் படுத்தி,அவைகளை.அருள் ஒளியால. மாற்றி முத்தேக சித்தி பெறலாம் ,மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழலாம் என்பதைத்  தம் அருள் அனுபவத்தால் கண்டவர் தான் திருஅருட்பிரகாச வள்ளலார் .

தாம் பெற்ற முத்தேக சித்தி அனுபவத்தை ''திருஅருட்பா ஆறாம் திருமுறையில்,'' பா மாலைகளாகத் தொகுத்து.மிக அருமையாக விளக்கி  பதிவு செய்துள்ளார் ,மேலும் உரைநடைப் பகுதியிலும் பாமரர்களும் தெரிந்து கொள்ளும் படி மிக எளிய நடையில்,தமிழில் எழுதி வைத்து உள்ளார் .

இந்தப் பாடல்களையும்,உரைநடைப் பகுதிகளையும்,மேல் எழுந்த வாரியாகப் படிப்பவர்கள் அதன் முழுப் பொருளையும் புரிந்து கொள்ள முடியாது.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியை வாழ்வில் கடைபிடித்து வருபவர்கள் தான் அதன் உண்மையை அறிந்து கொள்ள முடியும்.பொதுவாக திருஅருட்பாப் பாடல்களுக்கும் உண்மைப் பொருளை உணர்ந்து கொள்ள முடியும்.

திருஅருட்பாப் பாடல்கள் வெறும் சமய மதப் பாடல்கள் அல்ல ...அவை திருஅருட்பிரகாச வள்ளலார் பெற்று இருக்கும் மரணம் இல்லாப் பெருவாழ்வை விளக்கும் அனுபவப் பாடல்களாகும்.

மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கும் ,அருள் அனுபவப் பேற்றுக்கும் ஒரு புதிய வழியைக் காட்டி இருக்கின்றார் வள்ளலார்.

சமய மதப் பாடல்கள் போல் தோன்றும் !

திருஅருட்பா பாடல்களைப் படிக்கும் போது பல பாடல்கள் சைவ சமயத்தின் உண்மையைக் கூறும் பாடல்கள் போல் தோன்றும்.ஆனால் வெறும் சைவ சமய விளக்கத்தக் கூறும் சந்தைப் பாடல்கள் அல்ல ! அவை எதோ மன சாந்திக்காகப் பாடிய பாடல்கள் அல்ல !

திருஅருட்பா பாடல்கள் அனைத்தும் தாம் பெற்ற பேரின்பத்தை எல்லா உலகமும் பெற வேண்டும் என்ற பெருங் கருணையினால் பாடப்பட்ட அருள் அனுபவப்  பாடல்களாகும்.

நடராஜர் பாட்டே நறும் பட்டு
ஞாலத்தார் பட்டு எல்லாம் வெறும் பட்டு !
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பட்டு எல்லாம் தெருப்பாட்டு !
அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பட்டு எல்லாம் மருட்பாட்டு ! என்றும்

நாத நல்வரைப்பின் நண்ணிய பாட்டே
வேத கீதத்தில் விளை திருப் பாட்டே
நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே
சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே
நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே
எம்பலம் ஆகிய அம்பலப் பாட்டே

என்று பாடல்களின் தன்மையை விளக்கி உள்ளார் .

 எங்கும்  நீக்கமற நிறைந்த இறைவனைத் தம் உள்ளும் புறமும் கண்டு அதிலே தொய்ந்து அருளைப் பெற்று தம் உடல் முழுவதும் பரவி ,அகத்தில் இருந்து   அனகமாக விரிவு அடைந்து விளங்குவதையும்,அதனால் தம் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி அழியா முத்தேக சித்திப் பெற்று ,ஆண்டவர் அருளால் ஐந்து தொழில் வல்லபத்தையும் பெற்றுத் தரும் பாடல்களே .திருஅருட்பா பாடல்களாகும்.

சாதாரண தமிழ்ப் புலமை மட்டும் பெற்றவர்களும்,சமய நூல்களில் ஆராய்ச்சி உள்ளவர்களும்,திருஅருட்பா பாடல்களுக்கு உரை எழுதினால் அவை வெறும் சொற்களுக்கு எழுதிய உரையாகவே   இருக்குமேத் தவிர ,வள்ளலாரின் சுத்த சன்மார்க்க அனுபவத்தை விளக்கி கூறுவதாக இருக்காது .

சுத்த சன்மார்க்கத்தின் ஒழுக்க நெறியைக் கடைபிடித்து வாழ்வில் மேற்கொண்டு முத்தேக சித்தியில் நம்பிக்கை வைத்து ,அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலுடன் திருஅருட்பா பாடல்களைப் படித்தால்தான், திரு அருள் வல்லபத்தை புரிந்து கொள்ள முடியும்.

நான் நாற்பது ஆண்டுகளாக ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கடைபிடித்து வருவதால் ஓர் அளவு என்னால்  புரிந்து கொள்ள முடிகின்றது...இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

மனித தேகம் எடுத்தவர்கள் அனைவரும்,முதலில் நல்ல பக்குவமுள்ள,இந்திரிய ,கரண ஒழுக்கம் உள்ள, மனிதனாக வாழ்ந்து ,சுத்த சன்மார்க்க பொது நெறியை, தனி நெறியை,அருள் நெறியை  அவசியம் தெரிந்து,அறிந்து ,புரிந்து  கொண்டு,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன் ...

தொடரும் ;--

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்....

வியாழன், 22 டிசம்பர், 2016

நான்கு வகைப் பிறப்பு ! எழு வகைத் தோற்றம்.!

நான்கு வகைப் பிறப்பு ! எழு வகைத் தோற்றம்.!

 இறைவன் அருளால் ஆன்மாக்களை இந்த பஞ்ச பூத உலகத்திற்கு அனுப்பி வைக்கப் படுகின்றது. ,ஆன்மாக்கள் இந்த உலகத்தில் வாழ வேண்டுமானால் .உயிரும் உடம்பும் அவசியம் வேண்டும்.... உயிர் பெறுவதற்கு நான்கு யோனி பேதங்களும் , உடம்பு பெறுவதற்கு ஏழு வகையான உடம்பு பேதங்களும்.கொடுக்கப் படுகின்றன.

நான்கு வகையான  யோனி பேதங்களின்  வழியாகப் உயிர்கள் படைக்கப் படுகின்றது .அவை ஏழு வகையான தோற்றங்களாக உருவம் கொடுக்கப் படுகின்றன .என்பதை வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்து வைத்து உள்ளார்.

நான்கு வகையான யோனி பேதங்கள்.;---

அகவல் வரிகள்;--691,...721..

பாரிடை, வேர்வையில்,பையிடை ,முட்டையில்
ஆருயிர் அமைக்கும் அருட்பெருஞ்ஜோதி !....என்றும்.

பைகளில் முட்டையில் பாரினில் வேர்வினில்
ஐ பெற அமைத்த அருட்பெருஞ்ஜோதி .! என்றும்

ஒவ்வொரு உயிர்களும் தோன்றும் விதம்;-- ,தாய் கருப்பை , முட்டை,...நிலம் என்னும் மண்ணில்,,வேர் என்னும் தாவரங்களின் ஆணிவேர்  என்னும் பகுதியில் உயிர்கள் உண்டாகின்றன என்று வள்ளலார்  தெளிவுப் படுத்தி பதிவு செய்து வைத்துள்ளார் .....

அகவல் வரிகள் ;--721, முதல் .729, வரை ..

தாய் கருப்பையினுள் தங்கிய உயிர்களை
ஆய்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி !...என்றும்

முட்டைவாய்ப் பயிலும் முழு உயிர்த் திரள்களை
ஆட்டமே காத்தருள் அருட்பெருஞ்ஜோதி !...என்றும்

நிலம் பெரும் உயிர் வகை நீள் குழு அனைத்தும்
அலம் பெறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி !    என்றும்.

வேர்வுற உதித்த மிகும் உயிர்த் திரள்களை
ஆர்வுறக் காத்தருள் அருட்பெருஞ்ஜோதி !

என்றும்  நான்கு வகையான யோனி  வழிகளில் உயிர்களை இறைவன் படைத்து உள்ளார் .அந்த இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் பேரொளியாகும்.

ஏழு வகையான தோற்றங்கள்.;--

ஊர்வன போன்ற உயிர் இனங்கள் ,மண்ணில் உண்டாகின்றன.!
தாவரங்கள் போன்ற உயிர் இனங்கள் அனைத்து படைப்புக்களும்,வேரின் வழியாக உண்டாகின்றன !.
பறவைகள் போன்ற உயிர் இனங்கள் அனைத்தும் முட்டையின் உள்ளே உண்டாகின்றன.!
மிருகம்,தேவர்,நரகர்,மனிதர்கள் போன்ற உயிர் இனங்கள் அனைத்தும்.கருப்பையில் உண்டாகின்றன.!

இந்த நான்கு வகையான உயிர் இனங்கள் அனைத்திற்கும் ,ஊர்வன ,தாவரம்,பறப்பன,நடப்பன,தேவர்,நரகர்,மனிதர்கள்,என்ற ஏழு வகையான தோற்றங்கள் இறைவனால் படைக்கப்பட்டு உள்ளன,

மேலே கண்ட உயிர்களின் தோற்றத்தின் வகைகள் ,84, என்பத்தி நான்கு லட்சம் யோனி பேதங்களிலும் ''ஆன்மா'' என்னும், இயற்கை உண்மை என்னும்  உள் ஒளியான அருள் ஒளி  தங்கித்தான் உயிரையும்,உடம்பையும் எடுத்துக்  வாழ்ந்து கொண்டு வருகின்றன...

வள்ளலார் அகவலில் பதிவு செய்துள்ள வரிகள்.;--691,ல் இருந்து .

ஊர்வன பறப்பன உறுவன நடப்பன
ஆர்வுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி.!

அசைவில அசைவுள ஆருயிர்த் திரள்பல
அசலற வகுத்த அருட்பெருஞ்சோதி !

அறிவொரு வகை முதல் ஐவகை அறுவகை
அறிதர வகுத்த அருட்பெருஞ்சோதி !

வெவ்வேறு இயலொடு வெவ்வேறு பயன் உற
அவ்வாறு அமைத்த அருட்பெருஞ்சோதி.!

சித்திர விசித்திர சிருட்டிகள் பலபல
அத்தகை வகுத்த அருட்பெருஞ்சோதி !

என்று உயிர்களின் தோற்றமும்,உடம்பின் கருவிகள் தோற்றமும்.,உயிரையும், உடம்பையும் இயக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியானது,உடம்பின் எந்தப் பகுதியில்,  எங்கு இருந்து இயங்குகின்றன,என்பதைப் பற்றி மிகவும் வள்ளலார் தெளிவாக விளக்கி அகவலில் பதிவு செய்துள்ளார்.

எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதங்களிலும்,பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,இறுதியில் இந்த மனித தேகம் இறைவனால் கொடுக்கப் பட்டு உள்ளது.என்பதை ஒவ்வொரு மனித தேகம் எடுத்தவர்களும் அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலே, கண்ட பிறப்புக்களில் மிகவும் உயர்ந்த பிறப்பு மனிதப் பிறப்பாகும்.
மனிதப் பிறப்பில் பட்டுமே நான் யார் ? என்ற உண்மையும்,நாம் எங்கு இருந்து வந்தோம் என்ற உண்மையும்,நம்மைப் படைத்தவன் யார் ? என்ற உண்மையும்,நம்மை ஏன்? அனுப்ப வேண்டும் என்ற உண்மையும், அவருக்கும் நமக்கும் உள்ள தொடர்பு என்ன ? என்பதின் உண்மையும்,.மிண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் வாழும் வழிமுறையின் உண்மையும்.நாம்,மீண்டும்  எங்கு செல்ல வேண்டும் என்ற உண்மையும்,இந்த மனிதப் பிறப்பில்தான் அறிந்து கொள்ள முடியும்,ஆதலால் தான் மனிதப் பிறப்பு எல்லாப் பிறப்புகளிலும்,மிகவும் உயர்ந்த  அறிவுள்ள  பிறப்பு என்று வள்ளலார் பதிவு செய்து உள்ளார் ..

மேலே கண்ட உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் .வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளைக் கடைபிடித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்....வேறு எந்த வழிகளில் சென்றாலும் தெரிந்து கொள்ள முடியாது என்பதை மிகவும் அன்புடன் ஆன்மநேய உரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் சிந்திப்பும்.--

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு  கதிர்வேல்
9865939896.

புதன், 14 டிசம்பர், 2016

நாம் செய்யும் நன்மை தீமைகள் நம்மை எவ்வாறு தாக்குகின்றன ?

[14/12, 11:03 a.m.] aanmaneyankathirvelu22: நாம் செய்யும் நன்மை தீமைகள் நம்மை எவ்வாறு தாக்குகின்றன ?

நன்மை தீமை என்பவை யாவை? நன்மை தீமை யென்பவை புண்ணிய பாவம். புண்ணியமென்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப்பதற்கும் துக்கமாயும், பின் சுகமாயும் விளங்கும். பாவ மென்பது ஆரம்பத்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருக்கும்.

புண்ணிய பாவங்கள் நம்மை எவ்வா றடைகின்றன? மனம் வாக்கு காயம் என்னும் மூன்றினாலும் அடையும். மேலும், மனத்தினிடத்தில் நால்வகையும், வாக்கினிடத்தில் நால்வகையும், சரீரத்தினிடத்தில் நால்வகையும், ஆகப் பன்னிரண்டு வகையாய் நம்மை யடையும். அவையாவன:- மனத்தினால் பரதாரகமனம் பண்ண நினைத்தல், அன்னியருடைய சொத்தைக் கிரகிக்க நினைத்தல், அன்னியருக்குத் தீங்குசெய்ய நினைத்தல், முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அன்னியர்களுக்கு முடிந்ததை நினைத்துப் பொறாமையடைதல் - இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்கள். வாக்கினால் பொய்சொல்லல், கோட்சொல்லல், புறங்கூறல், வீணுக்கழுதல் - இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவங்கள். தேகத்தினால் பிறர் மனைவியைத் தழுவுதல், புசிக்கத்தகாத வேத விரோத ஆகாரங்களைப் புசித்தல், அன்னியர்களை இம்சை செய்தல், தீங்குசெய்கிறவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரஞ் செய்தல் - இந்நான்கும் தேகத்தா லுண்டாகும் பாவங்கள். இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள். பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள். அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்ட
[14/12, 11:06 a.m.] aanmaneyankathirvelu22: தேகத்தா லுண்டாகும் பாவங்கள். இவை போன்றவைகளைத் தவிர்த்து அன்னியர்களுக்கு நன்மை யுண்டாக நினைத்தல், பொறாமை யடையாதிருத்தல், அன்னியர் சொத்தைத் தனதாக்க எண்ணாதிருத்தல், தனது மனைவி தவிர அன்னியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாகச் சிந்தித்தல் - இவை மனத்தால் வரும் புண்ணியங்கள். பொய் சொல்லாமை, கோட்சொல்லாமை, இன்சொல்லாடல், தோத்திரம் செய்தல் - இவை நான்கும் வாக்கினா லுண்டாகும் புண்ணியங்கள். அன்னியர்களுக்குத் தீங்குண்டாகுங்கால் விலக்கல் முதலான நன்மையான கிருத்தியங்க ளெல்லாம் தேகத்தாலுண்டாகும் புண்ணியங்கள்.

அறிந்து செய்த பாவங்களும் அறியாது செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும்? அறிந்த பாவங்கள் செய்தபின், தனக்குப் பாவம் செய்ததாக எவ்வகையிலாவது தெரிந்தபின், "நாம் பாவச் செய்கையை முன்னமே தெரிந்தும், மோகத்தாலும், மறதியாலும், அபிமானத்தாலும், அகங்காரத்தாலும், செல்வச் செருக்காலும், தாக்ஷிண்ய உடன்பாட்டாலும், உணவு பற்றியும், புகழ் பற்றியும், வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே!" என்று பச்சாத்தாபப் பட்டுப் பெரியோர்களை யடுத்து, அவர்களால் நியமனம் செய்யப்படும் பிராயச்சித்தங்களைக் கைக்கொண்டு, அவ்வண்ணம் இச்சரீரத்தைத் தவத்தாலும் விரதத்தாலும் இளைக்கச் செய்வதுமன்றி; யாத்திரையாதிய மேற்கொண்டு, புண்ணிய ஸ்தலங்களிற் சென்று வசித்து, இயன்ற அளவில் அன்ன விரயஞ் செய்தால் நீங்கும். மேலும், சத்தியற்றவர்களாயும் வார்த்திகர்களாயுமுள்ளவர்கள் மகான்களுக்குத் தொண்டு செய்தால் நீங்கும். மகான்கள் நேரிடாத பக்ஷத்தில், பச்சாத்தாபத்துடன் பாவ காரியங்களைச் செய்யாமலும், பாவிகளுடைய கூட்டத்தில் பழகாமலும், திருவருளைச் சிந்தித்து அவர்கள் தரத்திற் கொத்த தெய்வங்களைச் சிந்தித்துக் கொண்டிருந்தால் நீங்கும்.
[14/12, 11:08 a.m.] aanmaneyankathirvelu22: அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

வாடகை கொடுக்காமல்.சொந்த வீடு கட்டீக் கொள்வது எப்படி?

[14/12, 2:58 p.m.] aanmaneyankathirvelu22: வாடகை கொடுக்காமல்.சொந்த வீடு கட்டீக் கொள்வது எப்படி?


முன்தேகம் உண்டென்பது எப்படியென் றறியவேண்டில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த ஒரு சமுசாரி அதற்கு முன்னும் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனம் செய்திருந்தானென்றும், வீடில்லாமல் குடித்தனம் செய்ய மாட்டானென்றும், பின் வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் திரும்ப வேறொரு வீட்டில் குடிபோவா னென்றும், தனக்கென்று சுதந்தரமாக ஒரு வீடு கட்டிக்கொண்டால் முன்போல் குடிக்கூலி கொடுத்துக் குடிபோவதைத் தவிர்வா னென்றும் அறிவதுபோல; இந்தத் தேகத்தில் ஆகாரக்கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சீவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக்கூலி கொடுத்துச் சீவித்திருந்தா னென்றும், தேகமில்லாமல் சீவித்திருக்க மாட்டானென்றும், இந்தத் தேகத்திலும் கலகம் நேரிட்டால் இன்னும் வேறொரு தேகத்திற் குடிபோவா னென்றும், தனக்கென்று சுதந்தரமாக நித்தியமாகிய அருட்டேகத்தைப் பெற்றுக்கொண்டால் பின்பு வேறொரு தேகத்தில் குடிபோக மாட்டானென்றும் அறியவேண்டும்.

சிலர் முன்தேகம் எடுத்ததும் பின்தேகம் எடுப்பதும் இல்லை. இப்பொழுது எடுத்த தேகம் அழிந்தால் தேகியும் அழிந்துவிடுவானென்றும், சிலர் முத்தியடைவா னென்றும், சிலர் பாவ புண்ணியங்களை எக்காலத்தும் அனுபவிப்பா னென்றும், சிலர் தேகம் இல்லாமல் தேகம் அழிந்தவிடத்தி லிருப்பானென்றும் பலவாறு வாதிப்பது எதனாலென்றறியவேண்டில்:- அவரவர்களும் தேகமே ஆன்மாவென்றும் போகமே முத்தியென்றும் கொள்ளப்பட்ட லோகாயத மதத்தாரது கொள்கைக்குச் சம்பந்தப்பட்டவர்க ளாதலால், மூடமாகிய தேகத்தில் அறிவாகிய ஆன்மா ஒருவன் உண்டென்றும் அவனுக்குப் பந்த முத்தி உண்டென்றும் முத்தியடைகின்ற பரியந்தம் பந்த விகற்பத்தால் வேறுவேறு தேகத்தை எடுப்பானென்றும் பிரத்யட்ச அனுமான முதலிய பிராமணங்களால் உண்மையை அறிந�
[14/12, 3:00 p.m.] aanmaneyankathirvelu22: அறிந்துகொள்ள மாட்டாதவர்க ளென்றும், அவர்கள் கொள்கைக்குப் பிரமாணமும் யுக்தியும் அனுபவமும் இல்லை யென்றும் அறியவேண்டும்.

இல்லை யென்பது எப்படி யென் றறியவேண்டில்:- சீவர்கள் தங்கள் தங்கள் சுதந்தரத்தாலே தேக போகங்களை யடைகின்றார்களென்றால், தங்கள் தங்கள் இச்சைக் கடுத்த தேகங்களையும் போகங்களையும் அடையவேண்டும். அப்படி யின்றிச் சிலர் இச்சைக்கடுத்த பழுதற்ற அங்கமுள்ளவர்களாகவும் சுகங்களை யனுபவிக்கின்றவர்களாகவும் சிலர் இச்சைக்குஅடாத பழுதுள்ள அங்கமுள்ளவர்களாகவும் துக்கங்களை அனுபவிக்கின்றவர்களாகவும் இருக்கின்றார்கள். ஆகலில், சீவர்கள் தேகபோகங்களைத் தங்களிச்சையால் அடைந்தவர்களல்லவென்றும்; அவரவர்கள் அப்படி அப்படி யடைவது இயற்கை என்றால், இயற்கை என்பது எக்காலத்தும் வேறுபடாமல் ஒரு தன்மையாக இருத்தல் வேண்டும் அப்படி ஒரு தன்மையாக இராமல் பல வேறுவகைப்படுதலால் இயற்கையல்ல வென்றும்; கடவுள் இச்சை யென்றால் கடவுள் கருணையும் நீதியும் உடையவராதலில் எல்லாச் சீவர்களுக்கும் ஒரு தன்மையாகச் சுக அனுபவங்களையே அடைவிக்கவேண்டும்; அப்படி யடைவிக்காமையால் கடவுளிச்சை யல்ல வென்றும்; கடவுளருளால் சிருஷ்டித்த முதல் சிருஷ்டியில் தமது இயற்கையின்பத்தை அடையும்படி விதித்த விதிகளைப் பழமையாகிய மல வாசனையால் முயற்சி தவறினபடியால், அந்த அநாதிமல வாசனையின் முயற்சி பேதங்களால் பின் பல தேச போகங்கள் இரண்டாவது சிருஷ்டியில் நேரிட்ட தென்றும் பிரமாணித் தறிய வேண்டும்
[14/12, 3:04 p.m.] aanmaneyankathirvelu22: அன்புடன் ஆன்ம நேயன். ஈரோடு கதிர்வேல

செவ்வாய், 13 டிசம்பர், 2016

திருஅருட்பாவை படியுங்கள் !

அன்புடன் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் !

நாம் யார் என்று தெரியாமல இந்த உலகத்தில் வாழ்வது அறியமையாகும்.

அழிந்து கொண்டு இருக்கும் பொருள் மீது ஆசை,பற்று கொள்ளாமல் அருள் மீது பற்று கொண்டு வாழ்வதே மனித வாழ்க்கைக்கு இறைவன் தந்த  கொடையாகும்.

அருள் பெற்று வாழ்வதனால் எனன பயன் ?

மீண்டும் பிறப்பு இறப்பு இல்லாமல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதுதான் .அருளினால் கிடைக்கும் அளப்பரிய லாபமாகும் .

 அருளைப் பெரும் வழியை வள்ளலார் மட்டுமே தெளிவாக தெரிவித்து உள்ளார் . அதன் விளக்கம. ஓழுக்கம அனைத்தும் " திருஅருட்பாவில்"  தெளிவாக விளக்கி பதிவு செய்து வைத்து உள்ளார் .

எனவே நாம் திருஅருட்பாவைத் தவிர வேறு எந்த நூல்களையும் படிக்க வேண்டிய அவசியம் இல்லை.

உலகில் உள்ள அனைத்து நூல்களில் உள்ள விபரமும் . அதற்குமேல் எவரும் சொல்லாத உண்மை விளக்கமும் திருஅருட்பாவில்  மட்டுமே உள்ளது.

மேலும் திருஅருட்பா என்னும் நூல் மட்டுமே உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் அருளப்பட்டது.என்பதை அனைவரும் அறிந்து கொண்டு வாழ்க்கையை வாழ்வதற்கு கற்றுக் கொள்ள வேண்டுமாறு அன்புடன் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்ம  நேயன் ஈரோடு கதிர்வேல்.

https://m.facebook.com/story.php?story_fbid=1330046567045697&id=100001211005910&ref=bookmarks

https://m.facebook.com/story.php?story_fbid=10154708925639462&id=584339461&ref=bookmarks

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

ஆன்மா !

ஆன்மா, உடல் இரண்டின் விசித்திர விளையாட்டு
====================================

ஆன்மா ஆன்ம உலகத்திலிருந்து இறங்கி பூமியில் ஓர் உடலை எடுத்தால் அதன் பெயர்...

பிறப்பு

ஆன்மா ஓர் உடலை விட்டு விட்டு மீண்டும் இன்னொரு உடலை தேர்ந்தெடுத்தால் அதன் பெயர்...

மறுபிறப்பு

ஆன்மா தான் வசிக்கும் உடல் நோய் காரணமாக வாழும் தகுதியை இழந்து அதை விட்டு பயத்துடன் பிரிய வேண்டிய கட்டாயம் நேர்ந்தால் அதன் பெயர்...

மரணம்

ஆன்மா தான் வசிக்கும் உடலானது அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் எதிர்பாரதவிதமாக ஏற்படும் அசம்பாவிதம் காரணமாக உடலை இழந்தால் அதன் பெயர்...

அகால மரணம்

ஆன்மா தான் வசிக்கும் உடலானது அனைத்து தகுதியினை பெற்றிருந்தாலும் தன் உடலை தானே அழித்து அதனின்று வெளியேறினால் அதன் பெயர்...

தற்கொலை

ஆன்மா தான் இருக்கும் உடலில் இருந்தபடியே ஆன்ம உலகிற்கு செல்வதற்காக  தன்னை தான் ஓர் இடத்தில் முற்றிலுமாக முடக்கிக்கொள்வதின் பெயர்...

ஜீவசமாதி

ஆன்மா தனக்கு கிடைத்த உடலை பயன்படுத்தாமல், எந்த செயலையும் செய்யாமல்  மீண்டும் தன் ஆன்ம உலகத்திற்கு போக வேண்டி அடம்பிடிப்பது...

சந்நியாசம்

ஆன்மா தனக்கு கிடைத்த உடல் மீது எந்த ஒரு அபிமானமும் இல்லாமல் அதாவது காமம் கோபம் ஆசை பற்று அகங்காரம்  ஆகிய அவகுணங்களை பிரயோகம் செய்யாமல் அனைத்து காரிய கடமைகளை அனைவரின் நன்மை பொருட்டு செய்தால் அதன் பெயர்...

வைராக்கியம்

ஆன்மா தான் வசித்த உடலை விடும் போது அடுத்து எந்த உடலை எடுக்கப்போகிறோம் என்பதை அறிந்து மரண பயமின்றி ஒரு சட்டையை மாற்றுவது போல் அதனை மிக மகிழ்ச்சியாக செய்தால் அதன் பெயர்...

ஜீவன்முக்தி
இவை யாவும் சமய மதங்களின் கொள்கையின் இறுதி நிலை.

---------------------------------------------------------

பிறப்பு, இறப்பானது ஒவ்வொரு யுகத்திற்கும் மாறுபடும்.

சத்தியயுகம், திரேதாயுகத்தில் ஜீவன்முக்தி.

துவாபர யுகத்தில் ஜீவசமாதி, சந்நியாசம், மரணம்.

கலியுகத்தில் மரணம், அகால மரணம், தற்கொலை.

சங்கம யுகத்தில் வைராக்கியம்.

இதுவே ஞானம், பக்தி மற்றும் வைராக்கிய சுழற்சி

வாழ்க வளமுடன்
[11/12, 8:19 a.m.] ‪+971 52 523 2702‬: மனித இயக்கத்தின் 7 ஆற்றல் சக்கரங்கள்

1. மூலாதாரம்:- முதுகெலும்பின் அடிப்பாகத்தில் ஆசன வாயின் அருகே அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். அமைப்பில் நான்கு இதழ் தாமரை போல் சிவப்பு நிறத்தில் உள்ளது. உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

2. சுவாதிஷ்டானம்:- இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே ஆறு இதழ் தாமரை போல் ஆரஞ்சு நிறத்தில் அமைந்துள்ளது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை அடக்கி அறிகின்ற சக்தியும் இதிலிருந்து தொடர்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

3. மணிபூரகம்:- நாபி என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே பத்து இதழ் தாமரை அமைப்பில் மஞ்சள் நிறத்தில் அமைந்துள்ளது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. மண்ணீரல், இரைப்பை ,கல்லீரல், பித்தப்பை, ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

4. அனாகதம்:- இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் பன்னிரண்டு இதழ் தாமரை அமைப்பில் பச்சை நிறத்தில் இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்.தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

5. விசுத்தி:- இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. இது பதினாறு இதழ்கள் கொண்ட தாமரையாக நீல நிறத்தில் இருக்கிறது. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

6. ஆக்கினை:- இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக கருநீல நிறத்தில் இரண்டு இதழ் தாமரை சின்னத்தில் அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் ( Telepathy ) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்.பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

7. தூரியம்:- இதற்கு சகஸ்ரஹாரம், தாமரைச் சக்கரம் என்ற பெயருகள் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் ஆயிரம் இதழ்கள் கொண்ட தாமரை வடிவத்தில் கருஞ்சிவப்பு நிறத்தில் அமைந்திருக்கிறது. இந்தச் சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவு படுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

சனி, 10 டிசம்பர், 2016

பொருள் ஆட்சியா ? அருள் ஆட்சியா ?

ஆன்ம நேயம் கொண்ட  அன்பு உள்ளங்களே வந்தனம் !

நாம் அனைவரும் எதை ஆள வேண்டும் ,எதை ஆட்சி செய்ய வேண்டும் .

பெண்ணையும் ,பொன்னையும் ,மண்ணையும் ஆண்களையும் ,பற்றிக் கொண்டு ஆட்சி அதிகாரங்களில் அமர்ந்து அழிந்து கொண்டு உள்ளோம்.

அழியும் பொருள்கள் மீது பற்று வைத்ததால் நாமும் அழிந்து போகின்றோம் .

நாம் அழியாமல் நமக்கு நரை திரை மூப்பு பிணி  மரணம் வராமல் இருக்க வேண்டும் என்றால் , அழியாத பொருள் மீது பற்று வைக்க வேண்டும் ,அழியாத பொருளை ஆட்சி செய்ய வேண்டும் ,அதுதான் உண்மையான ஆட்சி அதிகாரம் என்பதாகும் ,

அழியாதது எது ?

அதுதான் உயிர் , ஆன்மா ,அருள் என்பதாகும் ,இதுதான் அழியாதது ,இவை மூன்றும் நம் உடம்பில் உள்ளது , இவைகளைப் பாதுகாக்க வேண்டும் .இவைகள் தான் இறைவன் இருக்கும் இடங்களாகும் ,இவைகள் ஏன் உடம்பை விட்டு சென்று விடுகிறது .

அழியும் பொருள் மீது பற்று வைத்து ஆட்சி செய்வதால் அழியாத பொருள்கள் நம்மைவிட்டு சென்று விடுகின்றன,அழியாத பொருள்களான  அருள், ஆன்மா,, உயிர் மூன்றும் நம்மை விட்டு சென்று விடுவதால் அதற்கு மரணம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது ,

பொருள் மீது பற்று வைத்து ஆட்சி செய்பவர்கள் ் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மரணம் வந்தே தீரும் ,மரணம் என்பது அவரவர் செய்கைக்கு தகுந்தாற் போல் வரும் ,

அழியாத பொருளகள் அனைத்து உயிர் உள்ள  உடம்புகளிலும் உள்ளது .அவற்றை பாதுகாக்கும் வழிமுறைகள் ஒருவருக்கும் தெரியவில்லை, அவற்றைத் தெரிந்த பெரியோரும் இல்லை ,அதனால் மரணம் என்பது இயற்கை என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள் , அனைவருக்கும் மரணம் வந்து கொண்டே இருப்பதால், நாமும் மரணம் என்பது இயற்கை என்று நம்பிக்கைக் கொண்டும் அழிந்து கொண்டும்  உள்ளோம் ,

நமது அருட்தந்தை வள்ளலார் வந்து தான் உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறார் ,

அறிவு இருந்தும் அறிவுக்கு வேலைக் கொடுக்காமல்_அறிவு தெளிவு இல்லாமல்  வாழுகின்ற மனிதர்களைப பார்த்து வேதனைப் படுகின்றார் .

மரணம் என்பது இயற்கை அல்ல ! அவை செயற்கையால் தான் வருகின்றன என்று பகிரங்கமாக சொல்லி உள்ளார் ,

மனிதனாக பிறப்பு எடுத்தவர்களுக்கு மரணம் வரக்கூடாது ,

தப்பாலே சகத்தவர்  சாவே துணிந்தார் என்றும் ,தவறு செய்வதால்தான் ஒவ்வொருக்கும்  மரணம் வந்து கொண்டே உள்ளது என்கிறார் ,

மரணத்தை வெல்ல முடியும் என்பதை மக்கள் அறிந்து தெரிந்து புரிந்து  கொள்ள வேண்டும் என்பதற்காக ,தான் வாழ்ந்து மரணத்தை வென்று மக்களுக்கு புரியும்படி  காட்டினார் ,

நம் தமிழ் நாட்டில் உள்ள மருதூரில்  பிறந்து சென்னையில் வாழ்ந்து ,வடலூர் சென்று 51.வயதில் மரணத்தை வென்று காட்டினார் ,நாம் இன்னும் அவரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம் , இவரைப் போல் வெளிநாட்டில் யாராவது வாழ்ந்து இருந்தால் உலகம் முழுவதும் பரவி இருக்கும் .

அழிந்து போகும் மனிதர்களின் பேச்சைக் கேட்டு  பொருளுக்கு ஆசைப்பட்டு அவர்கள்  பின்னால் ஆட்டு மந்தைகள் போல் சுற்றி சுற்றி வீணே  அழிந்து கொண்டு உள்ளோம் , மாண்டு கொண்டே உள்ளோம் ,

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

உடம்பு வரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர்

மனத்தைவசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்நண்ணியது

 நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

 என்னும் பாடலின் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார் ,

பாவம் செய்தவர்கள் மரணம் அடைவார்கள் !

புண்ணியம் செய்தவர்கள் மரணத்தை வெல்வார்கள் :

மரணம் அடைகின்றவர்கள் அனைவரும் ஏழைகள் !

மரணம் அடையாதவர்களே செல்வந்தர்கள் !

அழியும் பொருள் செல்வந்தர்கள் அல்ல !என்றும் அழியாத அருள் செலவந்தர்கள் .

பொருளை ஆட்சி செய்பவர்கள் கோமாளிகள் !

அருளை ஆட்சி செய்பவர்களே அறிவாளிகள் .

எனவே அன்பு உள்ளங்களே ! இறை  அருளைப் பெற்று என்றும் அழியாமல் மகிழ்ச்சியுடன்  வாழும் வழியைத் தெரிந்து கொள்ள வடலூருக்கு வாருங்கள் என்று வள்ளலார் அழைக்கின்றார் ,

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே

வந்தால் பெறலாம் நல்ல வரமே !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

வெள்ளி, 9 டிசம்பர், 2016

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இறைவனால் தண்டிக்கப் படுவார்கள் !

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இறைவனால் தண்டிக்கப் படுவார்கள் !

வெளி உலகில் நல்லவர்களாக நடிக்கலாம் ,அவர் ஆன்மாவின் உள்ளே  என்ன நினைத்து செயல் படுகிறார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும் ,

பொது நோக்கம் கொண்டு செயல் படும் நல்ல உள்ளங்களுக்கு எப்போதும் இறை ஆற்றல் துணையாக இருக்கும் ,

இறை ஆற்றல் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது , அவை எப்படி செயல் படும் ? என்றால் , சாதி,சமயம்,மதம,இனம் மொழி ,நாடு்  என்ற பேதம்  இல்லாமல் ,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு  உரிமை கொண்டு வாழ்பவர்களுக்கு .எந்தவிதமான துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம் என்பது எப்போதும் வரவே வராது ,

அதன் உண்மையை வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ,

எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடம் கொளும் அருட்பெருஞ்ஜோதி !

என்று வள்ளலார் தெரிவித்து உள்ளார் ,

எனவே தான,் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை  வேண்டும் என்கிறார் ,

எனவே நாம் யாருடன் பழக வேண்டும் ,நட்பு கொள்ள வேண்டும் ,உறவு கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ,

நாம் பொது நோக்கம் இல்லாமல் செயல் பட்டாலும் ,ஆட்சி அதிகாரங்கள் தம் கையில் உள்ளது என்று ஆணவத்தினால் அதிகாரத்தை பயன்படுத்தி சுய லாபத்திற்காக வாழ்ந்தாலும் ,அவர்களுக்கு துணையாக இருப்பவர்களே அவர்களை அழிந்து விடுவார்கள் , அதுதான் இறைவன் கொடுக்கும் தண்டனை ,

எனவே பொதுப் பணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும்  மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் , கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து செயல் பட வேண்டும் ,

 வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க  கொள்கையை பின் பற்றுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் ,

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரேபகராத வன்மொழி பகருகின் றீரேநண்ணாத தீயினம் நண்ணுகின் றீரேநடவாத நடத்தைகள் நடக்கவந் தீரேகண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தேகண்ணார நீர்விட்டுக் கருதறி யீரேஎண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே !

செய்யக் கூடாத செயல்களையும் பண்ணக்கூடாத தீமைகளையும் ,நடக்கக் கூடாத நடத்தைகளையும் செய்து விட்டு ,இறுதியில் கண்ணீர் விட்டு அழுவதினால் என்ன பயன் ?  என்று சொல்லி விட்டு ,அப்படி உள்ளவர்கள் பித்து உலகீர் என்கிறார் .பித்து என்றால் பைத்தியம் பிடித்தவர்கள் என்பதாகும் .

எனவே நாம் சாதி சமயம் மதம் என்ற  கூண்டுக்குள் சிக்காமல் பைத்தியம் பிடித்து அலையாமல்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின தொடர்பு கொண்டு ் நல்ல பிள்ளைகளாக வாழ்ந்து காட்டுவதுதான் சுத்த சன்மார்க்க கொள்கை பிடிப்பு உள்ளவர்களின் கடமையும் உரிமையாகும் .

இடைவிடாது இறைவனைத் தொடர்பு கொண்டு அருள் பேற வேண்டி கண்ணீர் விட்டு அழுது இருந்தால்  எல்லா நன்மையும் கிடைத்து இருக்கும் .

துன்பம் வந்த பின் எண்ணாதது எண்ணி என்ன பயன் என்று கேட்கின்றார் வள்ளலார் ,

 அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

வியாழன், 8 டிசம்பர், 2016

மரண பயம் தவிர்க்காமல் வாழ்வது என்ன பயன் ?மரண பயம் தவிர்க்காமல் வாழ்வதால் என்ன பயன் ?

மரண பயம் தவிர்க்காமல் வாழ்வதால் என்ன பயன் ? என்று கேட்கின்றார் வள்ளலார் ! அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவர் மக்களுக்கு காட்டிய உண்மையான வாழ்க்கை முறைகள் ,அந்த வாழ்க்கையினால் என்றும் அழிக்க முடியாத ஆன்ம லாபம்!,அந்த ஆன்ம லாபத்தால் கிடைக்கும் பேரின்ப லாபம்.! அந்த லாபத்தினால் உயிரையும் உடம்பையும்,....காற்றாலும்,புவியாளும்,அக்கினி யாலும். நீராலும்,ஆகாயத்தாலும்,மற்றும் எமன் என்னும் கூற்று வானாலும் ,வேறு    எவராலும்,எதனாலும்  அழிக்க முடியாத பேரின்ப வாழ்க்கையே அந்த லாபமாகும். ,அந்த லாபத்தை  அனுபவிக்கும் மகிழ்ச்சியான அனுபவங்கள்.  எல்லாம் ,மனித குலத்திற்கு வாரி வழங்கி உள்ளார் .

மனித குலம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கை  முறைகள் , வழி காட்டுதல்கள் ,அதற்கு உண்டான ஒழுக்க நெறிமுறைகள் அனைத்தும் மிகத் தெளிவாக மனித குலத்திற்கு தெரியப் படுத்தியது மட்டும் அல்லாமல் , சொல்லிய வண்ணம் வாழ்ந்தும், காட்டியும், மக்கள் மனதிலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒளியிலும் கலந்தும் என்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளவர் தான் வள்ளலார் ..


இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவும்,பல கோடி பிறப்புக்கள் எடுத்து இறுதியில் ,இறுதியாக உயர்ந்த பிறப்பு என்னும் மனிதப் பிறப்பு கொடுக்கப்பட்டு உள்ளது .இந்த மனிதப் பிறப்பில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கட்டளையின் படி ,சட்டத்தின் படி வாழாமல் ,பொய்யான இந்த உலக  வாழ்க்கையில், அழியும்  பொருள்மேல் இச்சைக் கொண்டு வாழ்ந்து பிறந்து பிறந்து ,இறந்து இறந்து , அழிந்து கொண்டே உள்ளோம்..

பொருள் மேல்  இச்சைக் கொண்டு வாழும்  வாழ்க்கையை விட்டு ,அருள் மேல் இச்சைக் கொண்டு வாழ்வதே,என்றும் அழியாத வாழ்க்கையாகும் என்பதை இன்று வரையில் எவரும் முழுமையாக அறிந்து தெரிந்து கொள்ளவில்லை,என்பதை

கீழே பதிவு செய்துள்ள பாடலின் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.!

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர்
அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
கூற்று வருங்கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ
கூற்று தைத்த சேவடியைப் போற்றி விரும்பீரே
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர்
வீண் உலகக் கொடு வழக்கை விட்டுவிட்டு வம்மின்
சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற
தருணம் இது சத்தியஞ் சிற்சத்தியைச் சார்வதற்கே !

இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்கள்,மனிதர்கள்  உணவு பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டுமானால் மழை வேண்டும். ,விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.. இயற்கையானது  எப்போதும் தண்ணீர் வழங்கிக் கொண்டே உள்ளது.அந்த தண்ணீர் வெள்ளம் போல் வந்து கொண்டே உள்ளது .அது வீணாகிக் கொண்டே உள்ளது....அறிவுள்ள மனிதன் என்ன செய்வான் மழை வந்து வெள்ளம் வருவதற்கு  முன்னமே தண்ணீரைத் தேக்கி வைக்க அணையைக் கட்டி, வாய்க்கால்களை கட்டித்  தண்ணீரைத் தேக்கி வைப்பான்,அந்த தண்ணீர் மழை இல்லாக் காலங்களில் விவசாயத்திற்கு பயன்படும்,விவசாயம் செழித்தால் தான் அனைத்து மக்களுக்கும்,அனைத்து உயிர்களுக்கும்,  உணவு பஞ்சம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழியாய் இருக்கும்.

மழை வந்து வெள்ளம் பெருக்கி எடுத்து ஓடும் காலங்களில் ,அணையைக் கட்டிவைத்து மழை வெள்ளத்தைப்  பாது காக்கத் தெரியாமல் .அகங்காரம் கொண்ட பேய் போல் வீணே ஆடிக்கொண்டு உள்ளான் .அவனை என்னவென்று சொல்வது ..அவன் கேடுகெட்ட புத்தியை சொல்வதற்கு மிகவும்  கேவலமான வார்த்தைகளே இல்லை.

அதுபோல ;----மனிதன் என்றும் அழியாமல் உயிரையும் உடம்பையும் பாது காக்கும் வழி உள்ளது ...அதுதான் அருளைப் பெரும் வழியாகும்..இறைவன் என்றும் அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டே  உள்ளார்  / அருளைப் பெற்றுக்   கொள்ளும் அறிவு இல்லாமல்.அந்த அருளின் தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் ..உலக போகத்தில் உள்ள அற்ப ஆசை களான  மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என்னும் பொருள் மீது ஆசைக் கொண்டு அவற்றைப் பற்றிக் கொண்டு ,அதையும் முழுமையாக அனுபவிக்கத் தெரியாமல் , அழிந்து கொண்டே உள்ளார்கள் மனிதர்கள் ..

இறுதியில்,நரை திரை,  பிணி ,மூப்பு, மரணம் வருகின்ற போது,  உடம்பை விட்டு  உயிர் பிரிகின்ற போதும்,  உடம்பு  அழிகின்ற போதும் ...தான் சம்பாதித்த  எந்தப் பொருளையும் எடுத்து செல்ல முடியாது.என்று தெரிந்தும் அறிந்தும்,,பட்டம்,பதவி,புகழ்,என்ற அற்ப ஆசைகளுக்கு ஆட்கொண்டு ஒருவரை ஒருவர் ,போற்றியும்,புகழ்ந்தும் ,அவமானப் படுத்தியும்,அழித்தும்,அகங்காரம் கொண்டு வாழ்ந்தும்,இறுதியில் ஆழிந்து கொண்டே உள்ளார்கள்...இதுவா மனித வாழ்க்கை ?...இது அல்ல மனித வாழ்க்கை !

மனித வாழ்க்கை என்பது .அறம்,பொருள் ,இன்பம் ,வீடு என்ற நான்கையும் நான்கு காலங்களில்,பெற்று அனுபவித்து ,பின்பு பற்று அற விட்டு , வள்ளலார் காட்டிய ஒழுக்க நெறியைப் பின் பற்றி வாழ்ந்து ,என்றும் அழியாத அருளைப் பெற்று மரணம் அடையாமல் வாழ்வதே வாழ்க்கையாகும்...அதுதான் மனிதனுக்கு ஆண்டவர் வகுத்து தந்த பேரின்ப  வாழ்க்கையாகும்,இறைவன் மனிதனுக்கு படைத்த சட்டமாகும் ..இறைவன் வகுத்துத் தந்த சட்டத்தை மீறினால் இறுதியில் இறைவன் கொடுக்கும் தண்டனை  தான் ''மரணம்'' என்னும்  தண்டனையாகும்.

ஆதலால் வள்ளலார் சொல்லுகின்றார் ;;;உங்களின் பல துன்மார்க்க செய்கையினால் தீ வினையை சேர்த்துக் கொண்டே உள்ளீர்கள்.அதனால் அறிவு மயங்கி ,ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி ,அந்த தீவினையே உங்களை அழித்து விடுகின்றது.அதனால் வீண் உலக கொடுமையான வழக்கை.அதாவது அழியும்  வாழ்க்கையை  விட்டுவிட்டு .அழியாத நல்வினையாகிய வாழ்க்கை வாழ்வதற்கு வாருங்கள் வாருங்கள்  என்று அனைவரையும் அன்போடு,தயவோடு , கருணையோடு அழைக்கின்றார்...எதற்க்காக ?

நான் அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொண்டு அருளைப் பெற்று வாழ்ந்து கொண்டு உள்ளேன் .உங்களுக்கும் ஆண்டவர் அருளைக் கொடுப்பதற்கு தயாராக உள்ளார் .நீங்களும் எந்த தடையும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். .இது சத்தியம் ,சத்தியம்,என்று சத்தியம் வைத்து அழைக்கின்றார் ...அனைத்து மக்களும்  வடலூர் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்று மரணத்தை வென்று,பேரின்ப வாழ்க்கையில்  வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 .
புதன், 7 டிசம்பர், 2016

உயிர் காப்பான் நண்பர் என்பது தவறு !

உயிர் காப்பான்  நண்பர் என்பது தவறு !
உயிர் கொடுப்பான்,உயிர் காப்பான்  நண்பர் என்பது எல்லாம் பொய்யானது ,
ஒருவருடைய நல்லதும் கெட்டதும்,நன்மையையும் தீமையும் நண்பருக்கு மட்டுமே தெரியும்..அவருடைய அந்தரங்க ரகசியங்களை எல்லாம் நம்பிக்கை உள்ள நண்பனிடம் பகிர்ந்து கொள்வது தான் நம்பிக்கையின் அடையாளம்.
அதே நேரம் ஒவ்வொரு நண்பனுக்கும் எதிரி நண்பன்தான் .நண்பன் எதிரி ஆகி விட்டால் தப்பிப்பதே கடினம் .எனவே யாராக இருந்தாலும் சில உண்மைகளை நண்பனிடம் சொல்லவே கூடாது..பழகுவதற்கும் பொழுது போவதற்கும் மட்டுமே நண்பர்களை பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.அந்தரங்க விஷயங்களை நண்பனிடம் சொல்லி வைக்கவே கூடாது.
நண்பன் உயிரைக் காப்பாற்றவே மாட்டான் நேரம் வரும்போது உயிரை வாங்குபவனும் நண்பன் தான்.ஆணாக இருந்தாலும் ,பெண்ணாக இருந்தாலும் நட்பு என்பது எல்லையைக் கடந்து போய் விடக் கூடாது .
எனவே முக்கியமான ரகசியங்களை யாரிடமும் சொல்லி பாது காப்பது அறியாமையாகும்...தன்னுடைய முடிவை தானே எடுப்பது புத்தி சாலித்தனமாகும்,அதுதான் அறிவின் தன்மையாகும்.
உலகில் உள்ள அறிவாளிகளின் வாழ்க்கையைப் பாருங்கள் நண்பனால் அழிந்தவர்கள் தான் அதிகம்.
எனவே வள்ளலார் சொல்லுவார் .
உற்றவரும்,பெற்றவரும் ,மற்றவரும் உடமைகளும்,உலகியலும் உற்ற துணை அன்றே என்பார் .உற்றத் துணை யார் ? என்றால் நம்முடைய உயிரும் ஆன்மாவும்,இறைவனும் மட்டுமே என்பதை புரிந்து கொண்டு வாழ்வதுதான் அறிவாளிகளின் தன்மையாகும் ..
எனவே நல்லதை செய்வோம் நல்லதே நடக்கும்.
அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்

https://m.facebook.com/story.php?sதமிழக முதல்வர் மரணம் !
நமது தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் மரணம் குறித்து பலப்பல சந்தேகங்கள் எழுந்து கொண்டு உள்ளது,
சுமார் 75, நாட்கள் அப்போல்லோ மருத்துவ மனையில் என்ன நடந்தது என்றே இது வரையில் யாருக்கும் தெரியாது ,
அதிமுக கட்சியைச் சார்ந்த முக்கிய மந்திரிகளுக்கும் ,தலைவர்களுக்குமே அப்போலோவில் என்ன நடந்து கொண்டு உள்ளது என்பது தெரியாது ,ஏன் தமிழக கவர்னருக்கும் எதுவும் தெரியாது
மரணம் அடைந்து அவசரம் அவசரமாக அன்றே அடக்கம் செய்ய வேண்டிடிய அவசியம் ஏன் ஏற்பட்டது ,
அதிமுக தொண்டர்கள் கோடி கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்த அம்மாவை கடைசி வரை பார்க்க முடியவில்லை என்று மக்கள் தவித்துக் கொண்டு உள்ள நிலையில் அவசரமாக அடக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏன் வந்தது என்ற சந்தேகம் மக்களின் மனதிலே வேர் ஊன்றி உள்ளது .
எல்லாம் மர்மமாகவே உள்ளது ,
ஜெயலலிதா அவர்களின் உண்மையான நிலவரம் குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரே வழிதான் உள்ளது ,
அவரது உடலை எடுத்து பிரேத பரிசோதனை செய்தால் மட்டுமே உண்மை என்ன எனறு மக்களுக்குத் தெரிந்து விடும் ,
சந்தேகம் என்று வந்தால் அதை தெரியப் படுத்துவது ,உண்மையை வெளிப்படையாக மக்களுக்கு காட்டுவது அரசின் கடமை ,காவல் துறையின் கடமை என்றும் மக்கள் பேசிக் கொண்டு உள்ளாரகள் ,
தமிழக அரசும் காவல்துறையும் என்ன செய்யப் போகிறது என்பதை பொருத்து இருந்து பார்ப்போம் ,
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ,tory_fbid=1323103204406700&id=100001211005910&ref=bookmarks

இந்த உலகம் !

இந்த உலகம் !

இந்த உலக மக்களை பிச்சைக் காரர்களாய் மாற்றி உள்ள#து யார் ?

சமயங்கள் மதங்களின் கொள்கைகள்தான் இந்த உலக மக்களை ஏழைகளாக்கி பிச்சை எடுத்து வாழும் வாழ்க்கையில் தள்ளி உள்ளது ,

உயர்ந்த குலம் என்றும் ,தாழ்ந்த குலம் என்றும் ,உயர்ந்தவன் தாழ்ந்தவன் ,ஏழை பணக்காரன் என்றும் மனித குலத்தை பிரித்து வைத்தது சமயங்கள் மதங்கள்தான் என்பதை உலகமே அறியும் ,

அவற்றை பின் பற்றித் தான் இன்று வரையில் உலகமே பின் பற்றி வருகின்றன ,

இன்று அரசியல் வாதிகளும்,மற்ற மதவாதிகளும் ,ஆண்டவர் பெயரால்  தெரிந்தோ தெரியாமலோ  அவற்றையே பின் பற்றி மக்களை பிச்சைக் காரர்களாய் ஆக்கி ,அவர்களின் ஏழ்மையைப் பயன்படுத்தி பணத்தைக் கொடுத்து அவர்களின் உரிமையைப் பெற்று ஆட்சியில் அமர்ந்து விடுகிறார்கள் ,அந்த பொய்யர்களை உயர்ந்தவர்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள்தான் தெய்வம் என்று அவர்களின் காலடியில் விழுந்து வணங்கி கொண்டு உள்ளார்கள் ,

மக்களின் அறியாமையை என்ன என்று சொல்வது .

அவர்களுக்கும் மரணம் வருகின்றது ,ஏழைகளுக்கும் மரணம் வருகின்றது ,இதில் யார் உயர்ந்தவர்கள் ,

உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று சொல்லுகின்றீர்கள் இரண்டு குலமும் மாண்டு போகின்றார்கள் ,புதைக்கின்றீர்கள் ஒரு மூன்று மாதம் கழித்து அந்த பிணத்தை  தோண்டி பாருங்கள் ,அங்கே என்ன இருக்கும் ? புழுக்கள் தான் நிறைந்து  இருக்கும் ,இதைத் தெரியாமல் ,உயர்ந்த குலம் என்றும் தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் இரு குலமும் மாண்டிடக் காண்கின்றீர் ,புதையுறும் உங்கள் குலங்கள் எல்லாம் புழுக்குலம் என்று அறிந்தேன் என்கின்றார் வள்ளலார் ,

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரேநற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர் நீவிர்வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேபுத்தமுதம் உண்டோங்கும் புனிதகுலம் பெறவேஉரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.

 நரை திரை மூப்பு மரணம் அடையாதவர்களே உயர்ந்த குலத்தார் என்பதை அறிந்து தெரிந்து வாழ்பவர்களே உயர்ந்த குலத்தார் என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார் ,

எனவே நமக்கு உண்மையான  தாயாகவும் தந்தையாகவும் நம்மை பாதுகாப்பவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,

இந்த உலகில் வேறு எவரும் உயர்ந்தவர் இல்லை என்பதை அறிந்து புரிந்து தெரிந்து கொண்டு வாழும் வாழ்க்கை தான் உயர்ந்த வாழ்க்கையாகும் ,

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 6 டிசம்பர், 2016

செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றது !

செத்த பிணங்களைப் பார்த்து சாகும் பிணங்கள் அழுகின்றது !

செத்த பிணங்களைப் பார்த்து, அதாவது இறந்தவர்களை எடுத்திடும் போது அழுகின்றீர்களே உலகீர் இறவாத பெரிய வரம்,அவற்றைப்  பெரும் வழி ஒன்று உள்ளதே அவற்றை ஏன் ? அறிந்து கொள்ளாமல் இருக்கின்றீர்கள் என்று கேள்வி கேட்கின்றார் வள்ளலார் ,

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்
இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்
மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்கு
மறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்
சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே
பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.

மரணம் வருவதற்கு உண்டான அறிகுறிகளான நரை, திரை, பிணி ,மூப்பு,பயம் போன்ற முன் அறிவிப்பு நம் உடம்பிற்கு தோன்றுகிறது ,அவற்றை தவிர்த்து கொள்ளும் வழி உள்ளது .அவற்றை அறியாமல் ,அவற்றைத் தீர்த்துக் கொள்ளாமல் வாழ்ந்து ,இறுதியில் மரணம் அடைந்து விடுகின்றீர்கள் ,பின்பு மரணம் வந்து விட்டதே என்று அழுகின்றீர்கள் ,

மரணம் வரும் வாழ்க்கை வாழ்க்கை அல்ல , மரணம் வந்துவிட்டால் ,நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை வீண் விரையமாகி விடும் ,

நீங்கள இவ்வுலகில் ் எவ்வளவு பெயர்  புகழோடு வாழ்ந்தாலும்  பயன் இல்லை ,இறந்தபின் எல்லாம் மறைந்து விடும் ,மறக்கப்பட்டுவிடும் ,மீண்டும் எந்தப் பிறப்பு கிடைக்கும் என்பது எவருக்கும் தெரியாது ,

எனவே இந்த மனித பிறப்பிலே மரணத்தை வென்று நித்திய மெய்  வாழ்வு என்னும் பேரின்ப பெருவாழ்வு வாழ வேண்டும் ,அவைதான் மனிதனின் உயர்ந்த வாழ்க்கை ,அந்த வாழ்க்கையை மக்களால் கொடுக்க முடியாது ,பொருளால் பெற முடியாது .

நம்மைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே கொடுக்க முடியும் ,அவை பொருளால் கிடைக்காது . அருளால் மட்டுமே கிடைக்கும் ,

அருளைப் பெரும் வழியைக் காட்ட வள்ளலார் அனைவரையும் அழைக்கின்றார் ,எவரும் அருளைப் பெரும் வழியில் செல்ல தயங்குகிறார்கள் ,

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெருவதற்காகவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற ஒரு அமைப்பை படைத்து உள்ளார் .அவற்றில் மரணத்தை வெல்லும் வழி உள்ளது ,அருளைப் பெரும் வழி உள்ளது ,

இனிமேலாவது அருளைப் பெற்று மரணத்தை வென்று என்றும் அழியாத பேரின்ப பெருவாழ்வு  வாழ்வோம் ,

 அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

திங்கள், 5 டிசம்பர், 2016

மரணத்தை வெல்லும் வழி!

மரணத்தை வெல்லும் வழி !மனித தேகம்  எடுத்தவர்கள்   எவ்வளவு சக்தி  படைத்தவர்களாய் இருந்தாலும் ,உலகத்தையே ஆளும்   ஆற்றல்   படைத்தவர்களாய்  இருந்தவர்களாய் இருந்தாலும் , எவ்வளவு வசதி ,பதவி,அதிகாரம் படைபலம் , பணபலம்  இருந்தாலும்  ,மக்கள்  செல்வாக்கு இருந்தாலும்  ,மரணத்தை  வெல்ல முடியாது , மரண வேதனைகளைத் தவிர்க்க  முடியாது, 

 மக்கள் செய்யும்  வழிபாட்டினாலும் மரணத்தை வெல்ல  முடியாது,

அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவரிடம் பூரண அருளைப்  பெற்றால்  மட்டுமே  மரணத்தை வெல்ல  முடியும்  என்பதை  வள்ளலார்  தெளிவாக விளக்கம்  தந்து உள்ளார் ,

 அருளைப்  பெறாமல்  மேலே சொல்லி  உள்ள வசதிகளை  வைத்துக் கொண்டு ,  எவ்வளவு திறமை  வாய்ந்த செயற்கை  மருத்தவர்களைக் கொண்டும ,உயிரைக்,காப்பாற்ற  முடியாது ,என்பதை நிச்சயமாக தெரிந்து கொள்ள வேண்டும் , கால தாமதம்  படுத்தலாம் ,மரணத்தை வெல்ல  முடியாது.

 எனவே  மனித தேகம் எடுத்தவர்கள்  மரணத்தை வெல்லுவதே  இயற்கையின் நியதி . என்பது தெரியாமல்  வாழ்வது  அறியாமையாகும். 

இந்த  ஒப்பற்றை  உண்மையைத் தெரிவிக்கவே  அருட்பெருட்ஜோதி ஆண்டவரால்  வள்ளலார்  வருவிக்க உற்றார்  என்பதை  அறிவால்  அறிந்து கொள்ள வேண்டும் .

 அன்புடன்  ஆன்ம நேயன் ஈரோடு   கதிர்வேல்  ,


வெள்ளி, 2 டிசம்பர், 2016

காவி உடை அவசியம் இல்லை !

காவி உடை அணிபவர்களுக்கு அருள் கிடைப்பது சிரமம் !

சந்நியாசமும் காவி உடையும்
மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை. சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்; தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவ ஆபாசம் உள்ளது , தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி. வெற்றியான பிறகு அடைவது தயவு. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை. தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்; தயவென்பது சத்துவம், சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம், நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம், ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.

சன்னியாசம்
மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயவு யில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும். அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை.

குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம். தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்...

தயவு என்பது ஜீவர்கள்  சிறிய ஜீவதயவு சிறிய வெளிச்சம்  - சுத்தம், வெள்ளை வருணம்,

ஞானம், என்பது அருள் ,கடவுளின் பெரிய தயவு,  பெரிய வெளிச்சம்

சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவையும் ,சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சத்தையும் பெற வேண்டும் என்கிறார் வள்ளலார் _

எனவே காவி உடை சந்நியாசம் வேண்டியதில்லை ,

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

அன்புடன் அனைவருக்கும் !

அன்புடன் அனைவருக்கும் வந்தனம் !

வள்ளலார் சொல்லி உள்ள ஒழுக்கத்தை கடைபிடித்தால் ஈடேறலாம் !

மனித சமுதாயம் நல் வாழவு வாழ வேண்டும் என்பதற்காக வள்ளலார் உண்மையான ஒழுக்க நெறிகளை வகுத்து தந்து உள்ளார் ,

அவைதான் இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கம் ,என்பதாகும் ,

அவற்றை பின் பற்றுவதும் பின் பற்றாததும் உங்கள் விருப்பம் ,

எதை விட வேண்டும் எதை பின் பற்ற வேண்டாம் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் ,அதை விடுத்து அவை பெரியது, இவை பெரியது என்று வாதம் செய்வது ,நமது முன்னேற்றத்தை தடுத்து விடும் ,

அதைக் கருத்தில் கொண்டு தான் " இதுவரை இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள் " நமக்கு காலம் இல்லை என்கிறார் வள்ளலார் .

எனவே ஆன்ம நேய சகோதரர்கள் காலத்தை வீண் கழிக்காமல் இக் காலமே சுத்த சன்மார்க்க காலம் என்பதை உணர்ந்து .நீங்கள் ஒழுக்கிற்கு வருவதோடு மற்றவர்களையும் ஒழுக்கத்திற்கு வரும்படி செய்விக்க வேண்டும் ,அதுவே சிறந்த ஜீவ காருண்யம்.

சுத்த சன்மார்க்க ஒன்றே எல்லா உலகும் விளங்கும் ,வேறு எதிலும் நாட்டம் கொள்ளாமல் ,சுத்த சன்மார்க்க ஒன்றையே பின் பற்றி நாட்டம் கொள்ள வேண்டும் .அதுவே நமது வாழ்க்கையின் லட்சயமாகும் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

வியாழன், 1 டிசம்பர், 2016

எழுவகைப் பிறப்பு !

எழுவகைப் பிறப்பு

இந்தத் தேகத்திற்குப் பிறப்பு 7 உண்டு. அது போல் எழுவகைப் பிறப்பிலும் ஒவ்வொரு பிறப்பிற்கு எவ்வேழு பிறப்புண்டு. அந்த எவ்வேழு பிறப்பும் ஒவ்வொன்றில் அனந்தமாய் விரிந்த யோனிபேதங்களின் விரிவெல்லாம் தோன்றி மேலேறி மறுபிறவி உண்டாம். ஒவ்வொரு பிறவியும் எந்தக் கற்பத்தில் நஷ்டமடைகின்றதோ அந்தக் கற்பகாலம் வரையில் தோற்ற மில்லாமல் மண்ணில் மறைந்திருந்து, மறுகற்பத்தில் தோன்றி, இவ்விதமாகவே மற்றயோனிகளிடத்திலும் பிறந்து, முடிவில் இத்தேகங் கிடைத்தது. இத்தேகத்திற்கும் ஏழு பிறவி யுண்டு. யாதெனில்:- கர்ப்பத்தில் ஐந்து மாதம் வரையில் குழவியாயிருப்பது ஒன்று, அவயவாதி உற்பத்திக் காலம் ஒன்று, பிண்டம் வெளிப்பட்ட காலம் ஒன்று, குழந்தைப் பருவம் ஒன்று, பாலப்பருவம் ஒன்று, குமாரப்பருவம் ஒன்று, விருத்தப்பருவம் ஒன்று ஆகப் பிறவி 7. இவ்வாறே தாவர முதலியவற்றிற்கு முள. மேலும், ஸ்தூலப் பிறப்பு 7, சூட்சுமப் பிறப்பு 7, காரணப்பிறப்பு 7. ஆதலால், மேற்குறித்த ஸ்தூலப்பிறப்பு, சூட்சுமப் பிறப்பு யாதெனில்: ஜாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, ஜாக்கிரத்தில் சொப்பனம், ஜாக்கிரத்தில் சுழுத்தி, சொப்பனத்தில் சொப்பனம், சொப்பனத்தில் சுழுத்தி - ஆக பிறப்பு 7. காரணப்பிறப்பு - மனோ சங்கற்பங்களெல்லாம் பிறவி. ஆதலால் மேற்குறித்த பிறவிக்குக் காரணம் நினைப்பு மறைப்பு. அது அற்றால் பிறவியில்லை. எப்படி அறுமெனில்: பரோபகாரம் சத்விசாரம் - இவ்விரண்டாலும் மேற்குறித்தது நீக்கிச் சிவானுபவம் பெறலாம்.

நாம் வாழும் இந்த பிறப்பு எத்தனையாவது பிறப்பு என்பது தெரியாது .

இந்த பிறப்பு கடைசி பிறப்பாக இருந்தால் சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்தால் தப்பிக்கலாம் இல்லை என்றால் ் ,மீண்டும் மனித தேகம் எடுக்க பல லட்சம் ஆண்டுகள் ஆகும் ,

எனவே மனித தேகம் எடுத்தவர்களை நம்மவர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள் ,அதுவே முக்கியமான ஜீவ காருண்யம் ,

 அதனால் தான் வள்ளலார் சொல்லுவார் .எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் அவர்களை நம்மவர்கள் ஆக்கிக் கொள்ளுங்கள் என்கின்றார்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சுப்பிரமணியன் என்றால் என்ன ?

[01/12, 6:24 p.m.] Kathirvel: வள்ளலார் சொல்லிய முருகன் அவர் வழிபட்ட முருகன் அல்லது சுப்பிரமணியன் யார் ?என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள் ,


சுப்பிரமணியம்

திருச்சிற்றம்பலம்

சுப்பிரமணியம் என்பது என்ன? நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தியிருக்கின்றது. இந்த ஜோதிமணியை ஷண்முகமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். இதன்றி, நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடந்தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடியிருக்கின்றது. இதைச் சுப்பிரமணியம் என்று சொல்லுவார்கள். இந்தத் தேகத்திலுள்ள ஆறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் ஷண்முகமென்பார்கள். ஆறு ஆதாரங்களிலுள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள். ஆயினும், சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உன்மணிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறுதலாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பிரமணியம்.

ஆறு சோதியாயும், ஆறறிவாயும், ஆறு தலையுடையதாயும் இருப்பதால் முகம் ஆறு. கால் இரண்டென்பது தோன்றும் அறிவு, தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷயவுணர்ச்சியும், நிர்விஷய உணர்ச்சியுமேயாம். கை பன்னிரண்டென்பது ஆறாதாரங்களிலுள்ள பிரகாச அப்பிரகாச மாகிய பன்னிரண்டுமாம். தசாயுதம் அபய வரத மென்பவை யாவெனில்: வச்சிரம் என்பது தீக்ஷண்ணியவுணர்ச்சி; வேல் என்பது சத்தி, அருள், அறிவு; மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம்; த்வஜம் என்பது கீர்த்தி; ஸரஸ’ஜம் என்பது தயவு; குக்குடம் என்பது மாச்சரியமில்லாத நிறைவு; பராகம் என்பது பாசநீக்கம்; தண்டம் என்பது வைராக்கிய அறிவு; பாணம் என்பது அன்பு; அபயம் என்பது சமாதான உணர்ச்சி; வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவென்னுஞ் சகிப்பு; கடப்ப மாலை என்பது சர்வ தத்துவ கண்டனம்; பல வர்ணமுள்ளதும், விசித்திர வடிவமானதும், மறதி முதலிய குணங்களுக்குக் காரணமானதும், மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்பிரகிருதியே மயிலென்பது.
[01/12, 6:26 p.m.] Kathirvel: மயிலின் மேல் சுவாமி ஏறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்குக் காரணம் என்னவென்றால்: பிண்டாண்டமாகிய இந்தத் தேகத்திலும் அண்டத்திலும், மூலாஞ்ஞான ஆபரணமாயுள்ள கேவலமாகிய பிரகிருதிமாயையின் அசுத்த கேவலமாகிய அசுத்தாசுத்த மகாஅகங்காரமென்னும் இராக்ஷச அம்சமான சூரதத்துவம் அதின் சோதரமான மூவகைத் தத்துவத்தோடு, அஞ்ஞான தசையில், ஆன்ம அறிவையும், பிண்ட விளக்கமான தேவர்களையும், விஷய விளக்கமான இந்திரியங்களையும், நாடி விளக்கமான யந்திரங்களையும், பிராண விளக்கமாகிய உயிரையும் விழுங்கித் தன்னரசு செலுத்தும். அந்தச் சூரதத்துவத்தை வதைக்கும்போது, மேற்படி தத்துவம் மகாமாயையாகிய மாமரமாயும், மாச்சரியமாகிய கோழியாயும், விசித்திரமாயையென்னும் மயிலாயும், மகா மதமாகிய யானைமுகமாயும், அதிகுரோதமாகிய சிங்கமுகமாயும் விளங்கும். சர்வ தத்துவங்களையும் தன்வசமாக்கி, அகங்காரக்கொடி கட்டி, அஞ்ஞான நாடகம் செய்த தத்துவ அகங்கரிப்பை அடக்கி, பதிபசுபாசம் அநாதி நித்தியம் என்னும் சித்தாந்தத்தை விளக்கிக் காட்டு வதற்காக, மாச்சரிய குக்குடத்தைப் போதமாகிய கையால் அடக்கியும், விசித்திரமாயையாகிய மயிலைக் கீழ்ப்படுத்தி மேலிருந்தடக்கியும், ஆபாசதத்துவங்களைச் சம்மரித்தும், சுத்தவிஷய புவனமாகிய தேவ லோகத்தை நிலைபெறச் செய்தும், இந்திரபதியான ரூபேந்திரனுடைய பெண்ணாகிய தாந்தரதத்துவ மென்னுந் தெய்வயானையை இடப்பாலமைத்தும், இந்திரியங்களாகிய வேடர்களின் கண்ணிற் புலப்பட்ட மானசமென்னும் மானினது கர்ப்பத்திலுண்டான வள்ளியாகிய சுத்த மனதை வலத்தில் வைத்தும், நவதத்துவ காரணமாகிய நவவைராக தத்துவமாகிய வீரர்களைச் சமீபத்திலிருத்தியும், சகல கேவலங்களுக்கும் நினைப்பு மறப்புக்கும் இடையில் விவேகவடிவாயும், பாதம் முதல் நாபி வரையில் உஷ்ணவுருவாயும், நாபி முதல் கண்டம் வரையில் ஆத
[01/12, 6:27 p.m.] Kathirvel: ஆதாரநாடியுருவாயும், கண்ட முதல் புருவமத்தி வரையில் மணியுருவாயும், உச்சியில் ஒளியுருவாயும், புத்தியில் சுத்த அறிவாயும், அனுபவத்தில் நித்தியமாயும், எங்கும் நிறைவாயும், கோணத்தில் ஆறாயும், எக்காலமும் மதங்களில் ஆறாயும், சமயத்தில் ஆறாயும், ஜாதியில் ஆறின் கூட்டமாயும் விளங்குகின்ற உண்மைக் கடவுளே சுப்பிரமணியம்.

சுப்பிரமணியம் ஒருமுகம், மூன்றுமுகம், நான்குமுகம், ஆறுமுகம் ஆனதற்குக் காரணம்: ஒன்று மிரண்டு மில்லாத ஒப்பற்ற பரப்பிரமசொரூபம் நம் பொருட்டுக் குழூஉக்குறியாய், பாவனைக்கு ஒன்றென்று நிச்சயிக்கும், பரகாரண நிமித்தம் (?) ஆகிய அறிவுருவமே ஒருமுகமென்று ஞானிகள் சொல்லுவார்கள். சுத்தராஜசம், சுத்ததாமசம், சுத்தசாத்விகமாகிய மூன்று குணங்களின் கூட்ட விளக்கமாகிய முக்குண விளக்கமே மூன்றுமுகம். பசுமனம், சுத்தமனம், உள்மனம், சங்கலிதமனம் என்னும் நான்கு தத்துவங்களின் கூட்டவிளக்கமே நான்கு முகம். சத்த அறிவின் மூலம், ஒளி யறிவின் மூலம், சுவை யறிவின் மூலம், பரிசவறிவின் மூலம், வாசனை யறிவின் மூலம், ஆத்ம அறிவின் மூலம் என்னும் ஆறு தத்துவங்களின் கூட்டறிவின் மூலகாரணப் பிரகாச விளக்கமே ஆறுமுகம்.

மயிலின் காலின்கீழும் வாயிலும் பாம்பு இருப்பதென்ன? விசித்திரமாயையின் காரியவுருவான அகங்காரம் தோன்றி வெளிப்படுங்கால், மூலாங்காரத்திலும் அதிகரிப்பிலும் பிராணவாயு வென்னும் பாம்பானது கீழும் மேலும் உண்டாயினும் அகங்காரத்தின் முகப்பாகிய மயில் வாய் மூலமாய்ப் பிராணவாயுவினது வேகத்தை விழுங்கிக் கொண்டிருப்பது இயற்கைதான்.
[01/12, 6:28 p.m.] Kathirvel: படைவீடென்ப தென்ன? அடங்கி இருக்குமிடம். அடங்கியிருக்கும் ஸ்தானங்களே இயற்கைவிளக்கம் தங்குமிடங்களாகும். இவற்றிற்கு ஊர் ஆறாவானேன்? ஏரகமென்பது அழகு பொருந்திய உள்ளமென்னும் இடம். திருவாவினன்குடி யென்பது திரு-ஆ-இன்ன-குடி: திரு - இலக்குமியாகிய சந்தோஷமும், ஆ-பசுவாகிய விளக்க மென்னுஞ் சீவனும், இனன் - சூரியனாகிய புத்தியும், ஒன்று கூடி விளங்கும் ஆன்மஅறிவின் சுத்தகாரிய இடம். பழமுதிர்ச்சோலை யென்பது இந்திரிய கரண சீவ முதலிய அனுபவப் பழங்களாகிய பிரயோசன வின்பங்கள் நீங்கிக் குறைவற்ற அறிவாய் விளங்கும் இடம். திருச்சீரலைவாய், திருச்செந்தில், செயந்திபுரம் என்பன: சுத்தமனத்தின் முகத்தில் விஷயக் கடலின் அவாவாகிய அலையடித்துக் கொண்டிருக்கும் இடமாகிய கரை, செந்துக்களினது இருதய ஸ்தானமாகிய மனம், அஞ்ஞான சூரனை நிவர்த்தித்துச் சந்தோஷகரத்தைப் பெற்ற பதிமனத்தின் விளக்கம். திருப்பரங்குன்ற மென்பது அசைவிலாத ஒன்றான விளக்கத்தையுடைய விவேக உல்லாச வின்ப நிறைவு. குன்று தோறாடல் என்பது மலைதோறாடல். மலை என்பது அலைவில்லாத உணர்ச்சிக்கு முதற்காரணமா யுள்ள துரிய நன்னிலை. இத்துரியம் பரதுரியம், சுத்ததுரியம், குருதுரியம், சிவதுரியம், சத்திதுரியம் முதலிய துரியமலைகள் அனுபவக் காட்சியில் அனந்தம் உண்டு. மேற் குறித்த அனுபவக் காட்சிகளுக்குத் தேகத்தி லிடம் எவை? கோசத்தினடி, தொப்புளின் கீழ், தொப்புள், வயிற்றில் தொப்புளுக்கு மேல் மார்புக்குக் கீழ், மார்பு, நெஞ்சு ஆக 6.

பிரமாவைச் சிறையில் வைத்த தென்பது யாது? சுத்த மன சங்கல்ப சிருஷ்டித் தொழிலையுடைய பிரமாவாகிய மனத்தைக் கிரியையில் பிரவேசிக்க வொட்டாமல், சுத்த விளக்க விவேக நிறைவாயுள்ள சுப்பிரமணிய தத்துவத்தால் சர்வ பிண்ட விஷயங்களாகிய தோன்றல், வளர்தல், குற்றம் நீங்கல், ஒன்றினிடத்தில் மலைவடைதல், தெளிதல் முதல��
[01/12, 6:30 p.m.] Kathirvel: தெளிதல் முதலிய பஞ்ச கிருத்தியங்களை விவேக முன்னிலையில் நடத்துங்கால் சலிப்பறப் பந்தித்து இருப்பதே சிறையிட்டது.

ஈசுவரனுக்கு உபதேசித்த தென்ன? உருத்திர தத்துவமாகிய பிரேரக நிலையான காரண தத்துவ முடிவான ஈசுவர தத்துவத்தினியற்கை ஞானம் ஏறிக் கிரியை குறைந்திருப்பதால், கிரியாகாரண பூதமாயும் ஞானகாரண அமிசமாயும் விளங்கும் பிரணவமாகிய உண்மை நிறைவான கிரியையற்ற நிர்விஷய அனுபவம் ஈசுவர தத்துவத்திற்கு - நியதி செய்வது? - சுத்த விவேக தத்துவ அதிஷ்டாதாவான சுப்பிரமணியம் அன்றித் தோன்றாது. இதுபற்றி யுபதேசஞ் செய்தாரென லாயிற்று.

கங்கையிலுள்ள நாணற்காட்டிற் பிறந்தது என்பது என்ன? ஆன்ம இயற்கைக் குணமாகிய தயவே கங்கை. ஆன்மாவின் அனுபவ மத்திய நிலையாகிய சகித்தலென்னும் - சர்வ விஷயங்களிலும் அகங்கார மென்னும் தலையெடாமல் - கீழ்ப்படிந்த குணமே நாணல். இவ்விரண்டின் மத்தியில், அனுபவத்திற்கு இயற்கை விளக்கமாய் விளங்கும் பகுத்தறிவாகிய விவேகம் தோன்றுவதே உற்பத்தியானது.

பின் கார்த்திகை அரிவை பால் கொடுத்த தென்பதென்ன? விவேக விளக்கந் தோன்றுங்கால், பெண்பாலின் குணமாகிய சமனையென்னும் சத்தியின் விளக்கத்தால் இன்பமாகிய அமுத கிரணம் விவேகத்திற்கு ஊட்டுவதே பால் கொடுத்தல்.

சுவாமி அம்மையிடத்தில் குழந்தையைக் கொடுக்க, அம்மை குழந்தை ஆறையும் ஒன்றாய்ச் சேர்த்துக் கையால் தடவ, முகம் ஆறும் ஒன்றி வேறாயும், உடல் ஒன்றாயும், கால் இரண்டாயும் ஆனதென்ன? பரமாத்மாவாகிய சுவாமி அருளென்னுஞ் சத்தியுடன், தயவென்னும் நதிக்கரையில், சகிப்பென்னும் நாணற்காட்டில், சமாதி முதலிய காலத்தில்? தோன்றி விளங்கும்போது, சுத்த வாசனா தோற்றமாகிய அறுபொறியாகிய குழந்தையை யருள் வசமாக்க, அருட்சத்தி விகாரமன்றி அவிகாரமாய் அறு பொறியையும் அருட்போதக் கையால் அடக்க, விஷயங்களை அறிந்து தோயாமலிருக்�
[01/12, 6:32 p.m.] Kathirvel: அறுபொறிகள் ஒன்றாயும், குறிஆறாயும், அனுபவவிளக்கம் சாதனவிளக்கம் இரண்டுந் திருவடியாயுந் தோன்றி, சமாதிநிலை விளங்குவதே.

பிண்டத்தில் இவ்வண்ணமாக இருக்க, அண்டத்தில் இவற்றிற்கு ஊர், ஆலயம், மூர்த்தி, செய்கை முதலியன உண்டாவானேன்? ஆன்மாக்கள் புண்ணிய பாவ கருமங்களால் பேதப்பட்டு, மந்தம் மந்ததரம் ராஜசம் தாமசம் கருமம் முதலிய வேறுபாடுகளால் அனாதி தொடங்கி இன்றளவில் - உயிர்த்திரள் ஒன்றானாலும் - கரணக் கூட்டுறவால் வெவ்வேறு தன்மையாய் விளங்குகின்றன. ஆதலால் மாகருணையுடைய கிருபாநிதியாகிய சிவபெருமான் திருவருளை அங்கையிற் கனியெனவுணர்ந்த அனாதி நித்திய முத்த சித்தராகிய ஈசுவரதத்துவ புவனானுபவ ஈசுவரனால், நாம் உய்யும்பொருட்டு உலகத்தின்கண், பாச நூல்1 பசுநூல்2 அனுபவ நூல்3 என்னும் புராண1 வேத2 ஆகம3 உபநிஷத்துக்கள் உண்டு பண்ணப்பட்டிருக்கின்றன. அவற்றின் வாயிலாகக் கர்மகாண்டம், பத்திகாண்டம், உபாசனா காண்டம், தந்திரகலை, மந்திரகலை, உபதேசகலை முதலிய பேதங்களும், இவற்றிற்கு முக்கியமான ஆசாரம், வருணம், ஆசிரமம் முதலியவைகளும், இவற்றிற்கு ஏதுவான சரியாதி நான்கும், இவற்றிற்கு அடைவாகிய சாலோகாதி நான்கும், இவற்றிற்கு மார்க்கமாகிய தத்துவம், புவனம், பதம், வர்னம், மந்திரம், கலை முதலியனவும் நிர்ணயித்து, பாவநாசத்திற்கு ஏதுவான அனசன சாந்திராயண முதலிய பிராயச் சித்தங்களை விதித்து, இவைகள் செய்வதற்கு யோக்கியமான நதி முதலியவற்றையும், அவற்றிற்கு அங்கமான - தத்துவானுபவங்களாகிய உண்மை நாமங்கள் கெடாதிருக்க - திருப்பெயர் முதலியவைகளை மூர்த்தி ஸ்தல முதலியவைகளுக்கு ஏற்படுத்தி வழங்கச் செய்தார்கள்.
[01/12, 6:33 p.m.] Kathirvel: உபாசிக்கின்றவர்களுக்குத் தத்துவநாமங் கெடாமல் அருட்சத்தி தோன்றக் கிருத்திகையையும், வேதாந்த விளக்கத்திற்கு விசாகத்தையும், சதா சுபத்தைக் குறிக்கச் செவ்வாயையும், ஆறு குறியைக் குறிக்கச் சஷ்டியையும், ஞான நிறைவைக் குறிக்கத் தைப் பூசத்தையும் சுட்டினார்கள். தத்துவங்களைக் கையிலெடுத்து ஆடுவதான போத மெனுங் கையால் விஷய பலத்தைத் தத்துவமாகிய காவடியில் கட்டித் தானாகிய தோளிலேற்றித் தான் கெட்டுத் தான் அவனாகிப் போதவடிவனாய், சங்கல்ப தீவிரனாய், சுப்பிரமணிய தத்துவமாய் விளங்கும் திருவுருவ முன்னுக்கு விஷயாபாவ நியாயமே காவடி யெடுத்ததாயும், சுத்த வைராக்கிய நிச்சய சிவபோதமே இடும்பனாயும் குறிக்கப்பட்டிருக்கின்றன. இருதயாகாச ஷட்கோண வடிவமே யந்திரமாய், அதன் அங்க வேறுபாடே நாற்பத்து முக்கோணமாய், உபாங்கமே நவகண்டமாய், உண்மையே சகரமாய், விஷயநீக்கமே ரகரமாய், நித்திய திருப்தியே வகரமாய், நிர்விஷயமே ணகரமாய், பாவ நீக்க ஏதுவே பகரமாய், ஆன்ம இயற்கைக்குணமே வகரமாய் விளங்குவதே ஆறெழுத்து. நமது சரீர இருதய ஸ்தானமே கோயிலாய், மாயாவிசித்திரமே மயிலாய், நாபியந்தமே பலிபீடமாய், உண்ணாவின் மேலந்தமே கொடி மரமாய், பஞ்சகோசங்களே பிராகாரமாய், முக்குணங்களே வில்வமரமாய், ஆன்ம தயையே தடாகமாய், வாயே வாசலாய், அனுபவ நிலையே கோபுரமாய் விதிக்கப்பட்டிருக்கின்றன.
[01/12, 6:35 p.m.] Kathirvel: ஞானிகள் கடவுளை எங்கும் உபாசிப்பார்கள் என்றும், யோகிகள் இருதயத்தில் உபாசிப்பார்கள் என்றும், கர்ம காண்டிகள் அக்கினியில் உபாசிப்பார்கள் என்றும், பத்தி காண்டிகள் விக்கிரகத்தில் உபாசிப்பார்கள்* என்றும் விதித்திருக்கின்றது. அதற்கு ஒத்தவண்ணம் தத்துவ விசாரத்தையே ஆலயமாக்கினார்கள். ஆலயத்தில் விளங்கும் மூர்த்தியின்பால், பாசங்களில் செல்லும் ஆத்மாக்களை சிவபாசத்தில் பாசநூலைக்கொண்டு அழுத்தி, பசு நூலைக்கொண்டு(?) மேற்குறித்த தந்திர மந்திர கலைகளைக் குருமூலமாய் உபதேசகலையால் விளக்கி, காண்டத் திரயத்தால் நிலைக்கப்பண்ணி, பதிநூலால் அறிவைவிளக்கி, அனுபவநூலால் சமாதியைத் தெரிவித்திருக்கிறது. இவற்றைச் சீவர்கள் மறவாதிருக்க மானைக் காட்டி மானைப் பிடிப்பது போல், ஆலயத்தில் மூர்த்தியாகிய சண்முகப்பெருமானைத் தத்துவவுருவமென்று விளக்கிக் காட்ட, அர்ச்சக வுருவமான ஆசாரியன், நமது அறிவாகிய கர்ப்பூரத்தில், சுப்பிரமணிய உண்மையாகிய விளக்க மென்னும் பிரகாசத்தைக் கொண்டு, அசுத்த விஷய முதலிய எண்ணங்கள் நம்முடைய பொறிகட்குப் புலப்படாமலிருக்க, உண்மை நாதக்குறியாகிய மணியொலியுடனே தரிசிப்பிக்கச் செய்தும்; வேறு பராக்கன்றித் ததாகாரமாய் நிற்க, நமது தரத்திற்கொத்த உபசாரதியர்களால் வழிபடச் செய்தும் - தத்பல மடைய உத்தமர்கட்கு அன்னவினியோகம் செய்வது மார்க்கமென்று சித்தாந்தம் பண்ணினார்கள்.

இவ்வண்ணமாய், அனாதி தொட்டு இன்றுவரை சென்ற நாட்களிலுள்ள அருணிகிரியார் குமரகுருபரர் நக்கீரர் முதலிய மகான்கள் தொண்டு செய்து, உத்தம ஞானிகளாய் நித்திய முத்தர்களாய் விளங்குகின்றார்கள். ஆதலால் நாம் யாவரும் அவ்வுண்மைக் கடவுளை வேதாகம விதிப்படி உண்மையாய்ப் பத்தி செய்து அவர் அருளைப் பெறவேண்டும்.

திருச்சிற்றம்பலம்

சுப்பிரமணியம் முற்றிற்று

 அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்