வெள்ளி, 26 ஜனவரி, 2018

நம் உடம்பு ஓர் அருள் மாளிகை !

நம் உடம்பு ஓர் அருள் மாளிகை !

நமது உடம்பு ஒரு தெய்வீக நகரம்.அந்த நகரத்தில் இல்லாத்து எதுவும் இல்லை.

அந்த நகரத்திற்கு அருள் மாளிகை வீடு என்று பெயர்.அந்த வீட்டின் நடுவில்(தலைபாகம்) அழகான மேடை ஒன்று இருக்கிறது.அந்த மேடையின் மேலே ஓர் அழகான மூடிய தாமரை மொக்குப் போன்ற மலர் இருக்கின்றது. அதன் நடுவில் தான் ஆன்ம ஒளி அமர்ந்து கொண்டு .இந்த உடம்பு என்னும் மெய் மாளிகையை இயக்கிக் கொண்டு உள்ளது.

மெய் இருப்பதால் உடம்பிற்கு மெய் என்று பெயர்...

அந்த மலரின் நடுவில் இருக்கும் ஆன்மாவைத் தெரிந்து கொள்ள உலகில் எத்தனை வேறுபாடுகள்.குழப்பங்களை சமய.மதங்கள் உருவாக்கி உள்ளன.

அந்த சிறிய இடத்தில் தான் ஆன்மா தனித்து இயங்கிக் கொண்டு இருக்கின்றது.அந்த இடத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டு பிடிப்பது தான்மனித இனத்தின் ஆனமீக வாழ்க்கை.

அகத்தில் தேடாமல் புறத்தில் தேடுவது ஆன்மீகம் அல்ல !

அதை மனிதன் அறிந்து கொள்ள வேண்டியதே சிறந்த வழியாகும்.சிறந்த அறிவாகும்.

இந்த உலகமோ விசாலமானது.நமது இதயமோ சிறியது.அந்த சிறிய இதயத்தில் உள்ள இடமோ.உலகம் போல விசாலமாக விரியும் தன்மை உடையது.அதாவது தெய்வீகத் தன்மை உடையது.

இந்த உலகத்தில் உள்ள அனைத்தும் நம் சிறிய இதயத்துள்ளே அடங்கி இருக்கிறது.அந்த சிறிய இடத்தில் பூமியும்.தண்ணீரும்.நெருப்பும்.காற்றும்.ஆகாயமும்.

சூரியன்.சந்திரன்.நட்சத்திரங்கள். மற்றும் கிரகங்களும்.இடியும்.மின்னலும்.மழையும்.கோடானுகோடி அணுக்களும்.மற்றும் எல்லாவற்றையும் நம் இதயம் என்ற வீட்டிற்குள்ளே காணலாம்.

மனித உடம்பான அருள் மாளிகையில் அமர்ந்து இருக்கும்.தனித்தலைமைப் பெரும்பதியான ஆனமாவைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும்.வழியைக் காட்டுவது தான்.வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்க பெரு நெறியாகும்.

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் குழப்பம் இல்லாமல் பின் பற்றுபவர்கள் மட்டுமே அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும். ஒளி தேகத்தைப் பெறமுடியும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற முடியும்.உடம்பை அருள் மாளிகையாக மாற்றிக் கொள்ள முடியும். அதற்குப் பெயர்தான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்..

வள்ளலார் பாடல் !


என்று உண்மையை எடுத்து சொல்லுகின்றார் வள்ளலார்.

நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பெருநெறியை.உண்மை நெறியை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.புதன், 24 ஜனவரி, 2018

வள்ளலார் பாடல் !

வள்ளலார் பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்றதெலாம் பொய்யே

நீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமே

உட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்கமெய்ந்நெறியைக் கடைப்பிடித்து

மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

இந்த பாடலை ஊன்றி படிக்கவும்..ஈரோடு கதிர்வேல் .தான் மற்றவர்கள் மனது புண்படும் படி எழுதுகிறான்.பேசுகிறான் என்று சில அன்பர்கள் வருத்தப் படுகிறார்கள்.

நான் வள்ளலார் சொல்லியதை மாற்றம் இல்லாமல் பதிவு செய்கிறேன் .அவ்வளவுதான்..

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்பொதுநடங்கண்டு உளங்களிக்கும் போதுமண வாளர்

மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்விளங்கஉல கத்திடையே விளங்குகஎன் றெனது

கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்

மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காணமாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலாரிடம் சொல்லுகிறாராம்.

உலகில் தோன்றிய அருளாளர்கள்.எல்லோரும் பொய்பிடித்தவர்கள்.பொய்யான கடவுளையே பின் பற்றி உள்ளார்கள் .

நீ ஒருவன் தான் மெய்பிடித்தாய் மெய்யான என்னைத் தொடர்பு கொண்டாய்.எனவே நீ என்றும் நீடூழி வாழ்க என்றும்.

உண்மை மார்க்கமான சமரச சுத்த சன்மார்க்கத்தை உலகம் எல்லாம் கொண்டு செல்க என்றார்.நான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் காலைப் பிடித்துக் கொண்டேன்.

களித்திடுக இனி உன்னை கைவிட மாட்டேன் என்று மைபிடித்த விழி உலகர் முன்னாடி வள்ளலாரை அமர்த்தி அறிமுகப்படுத்தி் அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் சொல்லுகின்றார்.

யார் ? யார்? முன்னாடி !

பொய் பிடித்த  அருளாளர்கள்.எல்லோரையும் முன்னே அமரவைத்து அவர்கள் காணும்படி அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர் .வள்ளலாருக்கு ஐந்தொழில்  வல்லபத்தை கொடுத்து அருள் மாலை அணிவிக்கின்றார்.அருட் செங்கோல் வழங்குகிறார். என்பதை தெளிவாக அருட் பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

முன்னாடி இருந்தவர்கள் யார் ? யார் ? என்பதையும் தெரிவிக்கின்றார்.!

உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடிஉறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி

பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்

திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்றுதியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ

வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறிமாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.!

இதைவிட வேறு விளக்கம் தேவையா ? தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

நாம் கடைத்தேர வேண்டுமானால் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதைதான் உண்மையானது.நேர்மையானது.சாதி.
சமயம்.மதம் சாராத பொதுவான மார்க்கமாகும்.

இவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப் பட்டதாகும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 21 ஜனவரி, 2018

பெரியார் !

பெரியார் !

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவைப் படித்து அவற்றில் உள்ள உணமைகளை தெளிவாக அறிந்து. தந்தை பெரியார் பகுத்தறிவு கொள்கையை பின் பற்றினார் .

வள்ளார் சொல்லியது என்று மக்களிடம் சொன்னால். சமய மதவாதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதை அறிந்த பெரியார் தனிக் கொள்கையை உருவாக்கினார்.

கடவுள் மறுப்புக் கொள்கை பெண் விடுதலை.சமூக சீர்திருத்தம்.ஏற்றத்தாழ்வு இல்லாமை..சாதி ஒழிப்பு. பிராமணர் ஆதீக்க   ஒழிப்பு.தீண்டாமை ஒழிப்பு.பொது சட்டம் போன்ற சமூக சீர் திருத்தங்களை கொண்டு வந்தார்.போராடினார். எல்லாமே வள்ளலார் கொள்கைகள் என்பது எவருக்கும் தெரியாது.

பெரியார் வியந்த்து !

பள்ளிக்கு செல்லாமல் யாரிடத்தும் கல்விக் கற்காமல் திருஅருட்பா என்னும் நூலை இலக்கணம் இலக்கியம் பிழை இல்லாமல் .சொற்குற்றம் பொருள் குற்றம் இல்லாமல் இவ்வளவு அற்புதமான அழகு தமிழில் எளிய நடையில் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவை படித்து பார்த்து அதிர்ந்து போய் வள்ளலாரைப் போற்றி புகழ்ந்து உள்ளார் தந்தை பெரியார்.

தமிழ் நாட்டில் பிறந்து.தமிழ் நாட்டிலே வாழ்ந்து. தமிழ் மொழியில் எழுதிய மாபெரும் ஆற்றல் அறிவு அருள் மிகுந்த தமிழன் ஒருவர் உண்டு என்றால் அவர் வள்ளலார் ஒருவர்  மட்டுமே தான் என்று பாராட்டி உள்ளார்.

பெரியார் வடலூர் சென்றார் !

திருஅருட்பாவை எழுதிய வள்ளலார் தோற்றுவித்துள்ள வடலூர் தெய்வ நிலையங்களை பார்வையிட நண்பர்கள் புடை சூழ வடலூர் சென்றுள்ளார் பெரியார்.

வடலூர் சென்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை பார்வையிட முன் பக்கமாய் சென்று உள்ளார் பெரியார்.

முன் நுழை வாயிலில் "புலால் உண்பவர்கள் உள்ளே பிரவேசிக்க கூடாது " என்ற வாசகத்தை படித்துப்பார்த்து உள்ளே செல்லாமல் வெளியே நின்று விட்டார்.தன்மானப் பெரியார்.

அவருடன் வந்தவர்கள்... எல்லோருமே உள்ளே போகிறார்கள் நாமும் உள்ளே போகலாம் வாருங்கள் என அழைத்துள்ளார்கள்.

அதற்கு பெரியார் சொன்ன பதில்...

நான் புலால் உண்கிறேன் அதனால் நான் உள்ளே செல்வது தவறான செயலாகும்.அந்த வார்த்தையை மீறும் செயலாகும். அதில் ஏதோ ஒரு உண்மை உள்ளது என்று சொல்லி. சத்திய ஞானசபையின் உள்ளே செல்லாமல் திரும்பிவிட்டார்....

தருமச்சாலை.!

அடுத்து தருமச்சாலைக்கு அன்பர்களுடன் சென்று பார்வை யிடுகிறார். அங்கு சாதி.சமய.மதம் என்ற பேதம் இல்லாமல்.அனைத்து/தர மக்களும் அமர்ந்து உணவு அருந்துவதைப் பார்த்து மிகவும் ஆச்சரியப் படுகின்றார்.

அடுத்து தருமச்சாலை சுவற்றில் எழுதி உள்ளதை பார்த்து படிக்கின்றார்..

அதில்...ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றும்...ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்...எழுதி வைத்துள்ளதை பார்த்து .பெரியார் அசந்து போய் விட்டார்.

மேலும் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றால் என்ன ? என்பதைப் பற்றியும்.அதில் உள்ள இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்னும் நான்கு ஒழுக்கங்கள் என்ன என்ன என்பதை படித்துப் பார்த்து ஆச்சரியம் அடைந்தார் பெரியார்...

தருமச்சாலை தான் வழிபாட்டிற்கு உகந்த இடம் என்றும் ..சாப்பிடுபவர்களே கடவுள்கள் என்றும்.கோயில்களில் தெய்வம் எதுவும் இல்லை என்றும் ஒப்புக் கொண்டார் பெரியார்.

அப்படிச் சொல்லிவிட்டு மகிழ்ச்சி யுடன் தருமச்சாலையை விட்டு வெளியேறினார்..இது நடந்த உண்மை சம்பவம்.

பெரியாருக்கு.. வள்ளலார் எழுதிய திருஅருட்பா ஆறாம் திருமுறைதான் முழுமையான.பகுத்தறிவுக்கு .உருவ வழிபாட்டை எதிர்த்து போராட வழிகாட்டியது ..என்பது மக்களுக்குத் தெரியாது...

பெரியாரிடம் இருந்த கெட்ட பழக்கம் புலால் உண்பது மட்டுமே..அவர் சொந்த வாழ்க்கையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை...வள்ளலார் கொள்கையை பெரியார் ஏற்றுக் கொண்டார் என்பது சன்மார்க்கிகளுக்கு பெருமைதான்..

 மனிதர்களால் கடவுளை கற்பிக்க முடியாது என்பதால்.கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்றும் காட்டு மிராண்டி என்றும் சொல்ல ஆரம்பித்தார்.

வள்ளலார்... பல தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு அறிவு இல்லை.என்கிறார்.பெரியார் முட்டாள் என்கிறார்..இரண்டும் ஒன்றுதான்.

திருஅருட்பாவில் பெரியாருக்கு மிகவும் பிடித்த பாடல்கள் !

மற்றும்.

மேலும்...

என்பன போன்ற நிறைய பகுத்தறிவு கொள்கைக்கு வித்தான  பாடல்கள் பெரியாருக்கு துணையாக அமைந்துள்ளன.

பெரியார் நேசித்த ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவரே ! என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதே பாணியில் அறிஞர்அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்கின்றேன் என்றார்.
எல்லாமே வள்ளலார் கொள்கைதான்.

பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்குவதே கடவுள் வழிபாடு என்பதை உலக மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

வெள்ளி, 19 ஜனவரி, 2018

தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் எப்படி வந்த்து ? நுழைந்த்து ?

தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் எப்படி வந்த்து ?  நுழைந்த்து ?

தழிழ் நாட்டில் தமிழ் சித்தர்களால் தமிழ் கடவுள்களைத் தோற்றுவிக்கப் பட்டது.தமிழ் மன்னர்களால் ஆலயங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது .

தமிழ் கடவுள்களை தமிழில் தானே வழிபாடு செய்ய வேண்டும்.

தமிழ் கடவுள்களை வழிபாடு செய்ய
தமிழ் நாட்டில் சமஸ்கிருதம் எப்படி நுழைந்த்து.

இங்கே தான் சூழ்ச்சி நடந்துள்ளது. 

தமிழ் நாட்டில் கோயிலைக் கட்ட சொன்னவன்  தமிழன்.
கோயிலைக் கட்டியவன் தமிழன்
கோயிலைக் கட்ட உழைத்தவன் தமிழன்.
சிற்பங்களை செதுக்கியவன் தமிழன்.

உழைத்தவர்கள் அனைவரும் தமிழர்கள்!  .

மக்கள் கடவுளை வழிபாடு செய்ய இடைத்தரகள் எப்படி வந்தார்கள் .

சமஸ்கிருதம் கற்றவர்களை கோயிலுக்கு உள்ளே விட்டவர்கள் யார் ? தமிழ் கடவுளுக்கு சமஸ்கிருதம் தான் பிடிக்குமா ?

கடவுளுக்கு பட்டை அடித்தவன் யார் ?
கடவுளுக்கு நாம்ம் போட்டவன் யார் ?

தமிழ் மக்களுக்கு பட்டை அடிக்கவும் .கொட்டை அணியவும்.நாம்ம் போடவும் கற்றுக் கொடுத்தவன் யார் ?

கேட்டால் வேதம்.ஆகம்ம் புராணம் இதிகாசம்  சொல்கிறது என்பார்கள்.

எல்லாமே மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் உயர்ந்த சாதிக்காரண் என்பவர்களின். சுயநலவாதிகளின் சூழ்ச்சிகள்.என்பதை தமிழக மக்களும் .உலக மக்களும் புரிந்து .தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் வந்துதான் அந்த சுயநலக்கார்ர்களின் சூழ்ச்சியை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றார்.

ஆண்டவரை தொடர்பு கொள்ள வேதம் ஆகம்ம் புராணம் இதிகாசம்.போன்றவைகளின் கொள்கைகளை முழுவதும் பொய்யானது அதிலே கவனம் செலுத்தாதீரகள் என்கின்றார். கடவுளைத் தெரிந்து கொள்ள வழிபாடு செய்ய இவைகள் யாவும் தடைகளாக உள்ளன.இடைத்தரகர்கள் தேவை இல்லை  என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும்  விண்ணப்பம்..

எல்லாம் உடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள்.மதங்கள்.மார்க்கங்கள் .என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.

வருணம்.ஆசிரம்ம்.முதலிய உலக ஆச்சார  சங்கற்ப விகற்பங்களும்.எங்கள் மனத்தில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.என்கிறார் மேலும்

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை.எங்களுக்குள்.எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல்  வேண்டும் என்கிறார் 

எல்லாம் ஆகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே ! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம் ! வந்தனம் ! என்று விண்ணப்பம் செய்ய கற்றுத் தருகிறார் வள்ளலார்

வள்ளலார் பாடல் ! ஊன்றிப் படிக்க வேண்டும் !

வேதம் ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மத்தின் விளைவறியீர் - சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை.

எல்லாமே சூதாக சொல்லி உள்ளார்கள் . அவற்றில்  எதிலுமே உண்மையை வெளிப்படையாக சொல்லவில்லை.எனவே  அவற்றில் கவனம் செலுத்தாதீர்கள் என்கிறார் வள்ளலார்.

 மேலும் அவைகளில் உள்ள சூதை ஆண்டவர் எனக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார் என்கிறார்.

பாடலைப் பாருங்கள் !

வேதநெறி ஆகமத்தின் நெறிபவுரா ணங்கள்விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்

ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டிஉள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே

ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்எள்ளளவும் எண்ணம்இலேன் என்னொடுநீ புணர்ந்தே

தீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!

எவ்வளவு தெளிவாக விளக்கி உள்ளார் நம் வள்ளல் பெருமான்.

கடவுளை தொடர்பு கொள்ள .ஜீவ காருண்யம்  என்னும்  பரோபகாரமும் .இறைவன்  மேல் இடைவிடாது அன்பு கொள்ளும் சத்விசாரமும் என்கின்ற  இரண்டு வழிகள் போதும் என்கிறார்.

இனிமேலாவது திருந்தி வாழ முயற்சி செய்ய வேணுமாய் பணிவுடன் உங்களின்  தாழ் வணங்கி கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 18 ஜனவரி, 2018

காதல் செய்யுங்கள் !

காதல் செய்யுங்கள் !

என் இனிய ஆன்மாக்களே் !

ஒவ்வொரு மனிதர்களிடத்தும் எதோ ஒரு வகையில் ஒன்றின் மேல் அதிக ஈடுபாடு இருக்கும்.

18.வயதுக்கு மேல் ஆண் பெண் இரு பாலருக்கும்  பொதுவான ஒரே தன்மையான ஈடுபாடு காதல். அதுதான் உண்மையான உணர்ச்சியான வெளிப்பாடு.

அதை வேறு எவராலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.அதுதான் சுக்கிலத்தின் (விந்து) உணர்ச்சி தன்மை வேகம்.

அவரவர் தகுதிக்கு உணர்ச்சிக்கு தக்கவாறு.அண் பெண்ணைத் தேடுவதும்.பெண் ஆணைத்தேடுவதும் எல்லோருக்கும் பொது வானதாகும்.

அந்த வயதில் அந்த உணர்ச்சியை மடை மாற்றம் செய்து வேறு எதாவது ஒன்றில் கவனம் செலுத்தினால் அதில் வெற்றி அடைகிறான்.ஏன் என்றால் அவன் விரும்பியதை செயல் படுத்தும் உணர்ச்சி அதன் மேல் காதல் கொள்கிறது.

இதுதான் ஒவ்வொருவரின் வெற்றிக்கு காரண காரியமாகிறது..

அதே உணர்ச்சியை தன் உள் இருக்கும் ஆன்மாவிடம் தொடர்பு கொண்டு காதலித்தால் ஆன்மீகத்தில் வெற்றிப் பெறுகிறார்கள்..

வெளியில் உள்ள பொருள்கள் மீது காதல் கொண்டால் ஆண்பெண் உறவும்..வசதி வாய்ப்பும் .புகழ்.பணம். பொருளும் பெறலாம்.பின் வயது முதிர்ந்து மரணம் வந்து விடும்.

ஆன்மாவிடம் தொடர்பு கொண்டு காதலித்தால் .அருளும் பொருளும் பெறலாம்.என்றும் இளமையோடு இருக்கலாம் .பின் காதல் முதிர்வால்.பூரண அருள் பெற்று.ஊன  உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து.மரணத்தை வென்று என்றும் அழியாத பேரின்ப பெருவாழ்வில் வாழலாம்.

இதுதான் உலக காதலுக்கும் இறைவனை காதலிப்பதற்கும் உள்ள வேறுபாடாகும். இதற்குப் பெயர் ஆன்மீக்க் காதல்.

இதை விடுத்து கோயில் கோயிலாக .சர்சுக்கள்.மசூதிகள் எல்லாம்  சென்று சுற்றுவதால் எந்த பயனும் இல்லை.

வள்ளலார் இறைவனை எப்படி காதலித்தார் பாருங்கள்.!

கண்உறங்கேன் உறங்கினும்என் கணவரொடு கலக்கும்

கனவேகண் டுளமகிழ்வேன் கனவொன்றோ நனவும்

எண்அடங்காப் பெருஞ்ஜோதி என்இறைவர் எனையே

இணைந்திரவு பகல்காணா தின்புறச்செய் கின்றார்

மண்உறங்கும் மலைஉறங்கும் வளைகடலும் உறங்கும்

மற்றுளஎல் லாம்உறங்கும் மாநிலத்தே நமது

பெண்உறங்காள் எனத்தாயர் பேசிமகிழ் கின்றார்

பெண்கள்எலாம் கூசுகின்றார் பெருந்தவஞ்செய் கிலரே.!

உலகில் வள்ளலாரைப்போல் எவரும் என்னை.  காதலிக்க வில்லை.என்கிறார் .அருட்பெருஞ்ஜோதி ஆண்வர் .

இதுதான் உண்மையான காதல் ...மேலும் வள்ளலார் காதல்.

காதல்கைம் மிகுந்த தென்செய்வேன் எனைநீ

கண்டுகொள் கணவனே என்றாள்

ஓதலுன் புகழே அன்றிநான் ஒன்றும்

உவந்திலேன் உண்மையீ தென்றாள்

பேதைநான் பிறிதோர் புகலிலேன் செய்த

பிழையெலாம் பொறுத்தருள் என்றாள்

மாதய வுடைய வள்ளலே என்றாள்

வரத்தினால் நான்பெற்ற மகளே.!

இறைவனைக் காதலிக்கும் காதலே உலகில் உயர்ந்த  காதல்...அழியும் காதல் அல்ல! அழியாத காதலே காதல் !

இறைவனைக்  காதலித்து திருமணம் செய்து கொண்டு வாழ்வதே புனிதமான அருள் நிறைந்த  இல்லற இனிமையான  பேரின்ப பெரு வாழ்க்கையாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 17 ஜனவரி, 2018

கடவுளை யார் வேண்டு மானாலும்

கடவுளை யார் வேண்டு மானாலும் காதலிக்கலாம். !

அது என்ன ஆண்டாள் மட்டும் காதலிக்கனும்.

இல்லாமை எனக்கு இல்லை எல்லோருக்கும் தருவேன் என்பவர் ஆண்டவர்.

எல்லோரையும் ஆண்டு கொண்டு இருப்பதால் அவருக்கு ஆண்டவர் என்று பெயர்.ஆண்டவரை யார் வேண்டுமானாலும் காதலிக்கலாம்.

ஆணுமல்ல.பெண்ணுமல்ல அலியும் அல்ல என்பார் வள்ளலார். எனவே ஆண்டவரைக் காதலிக்க எல்லாருக்கும் உரிமை உண்டு.

நான் தினமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது காதலித்துக் கொண்டே உள்ளேன்.

ஆண்டவரை எந்த குலமாக இருந்தாலும் காதலிக்கலாம்...

ஆண்டவரைக் காதலிக்க .சாதி.சமயம்.மதம்.இனம்.நாடு.மொழி .ஆண்.பெண்.அலி.  போன்ற எந்த பேதமும் தேவை இல்லை.

எல்லோரும் ஒரே குலம் என்பதை அறியாத மனிதர்கள் .உயர்ந்த குலம் என்றும் .தாழ்ந்த குலம் என்றும் வகுக்கின்றீர் .இருகுலமும் மாண்டு போகின்றீர் .

இருகுலத்தையும் புதைக்கின்றீர் கொஞ்ச நாள் கழித்து தோண்டிப் பாருங்கள்.அதில் என்ன குலம் இருக்கும் தெரியுமா ?

புழுவு புழுத்திருக்கும் .புழுக்குலம் தான் இருக்கும்.புழுவுக்கு எந்த குலம் என்று தெரியாமல் .அங்கே புழுக்குலம் தான் இருக்கும் ..

இதுதான் வாழ்க்கை என்பது தெரியாமல் அறியாமையால் அலைந்து திரிந்து அழிந்து கொண்டு உள்ளார்கள் மனிதர்கள். .

உண்மையான கடவுள் யார் என்று தெரியாமல்.பொய்யான கடவுள் பெயரால்  வன்முறையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் வசைமாறி பொழிந்து வீணே அழிந்து கொண்டு உள்ளார்கள்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

நரைமரண மூப்பறியா நல்லஉடம் பினரே நற்குலத்தார் எனஅறியீர் நானிலத்தீர்

நீவிர்வரையில்உயர் குலம்என்றும் தாழ்ந்தகுலம் என்றும்வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்காண் கின்றீர்

புரையுறுநும் குலங்கள்எலாம் புழுக்குலம்என் றறிந்தேன் புத்தமுதம் உண்டோங்கும்

புனிதகுலம் பெறவே

உரைபெறும்என் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் உண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடலில் ...ஒவ்வொரு மனிதனும் புழுக்குலம் அடையாமல்  புனித குலம் பெற வேண்டும் என்கிறார் வள்ளலார்.

நல்லமுறையில் அறிவைப் பயன் படுத்தி உண்மையை  உணர்ந்து .அறிந்து.தெரிந்து தெளிந்து.ஒழுக்கமுடன்  வாழ்வதே புனித குலமான அருள் குலமாகும் ...

ஆண்டவரை காதலித்து அருளைப் பெறுவதே மனித குல வாழ்க்கையாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 16 ஜனவரி, 2018

சமய சின்னங்கள் !

சமய சின்னங்கள் !
கடவுளைப் பற்றி விமர்சனம் செய்யும்.ஆன்மீகப் பெரியவர்களே!   உயர் ஜாதி என்று தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு மக்களை ஏமாற்றும் பெரியவர்களே.சாதியை.சமயத்தை.மத்த்தை யாரால் பிரிக்கப் பட்டது.
சாதி.சமயம்.மதங்களை கடவுளா பிரித்து வைத்தார்.இந்தியாவில் வைணவம் .சைவம் என இரண்டு சமயங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு   கடவுளைப் பற்றி கற்பனை கதைகளைப் படைத்து . வேதம் .ஆகம்ம்.புராணங்கள்.இதிகாசங்களை காவியங்களாக படைத்து போட்டிப் போட்டு வழிபாடு செய்து வருகிறீர்கள்..
(வெளிநாட்டு சமய மதங்களும் சேர்த்துதான் சொல்லுகிறோம்) .
எது உண்மை எது பொய் என்று.இன்றுவரை எவருக்கும் தெரியாத குழப்பத்தை உண்டு பண்ணி இருக்கிறார்கள்.
சாதாரணமாக நெற்றியில் வைக்கும் சமயச் சின்னத்தில் கூட ஒற்றுமை இல்லை யானைக்கு நெற்றியில் நாமம் போடுவதா ? விபூதி அணிவதா ? என்ற போட்டியில் தீர்ப்பு வழங்காமல்  இன்று வரை நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளன.
எல்லா மதங்களிலும் புற சின்னங்களை வைத்து தங்கள் யார் ? என்று  அடையாளப் படுத்திக் கொண்டுதான் வாழ்ந்து வருகிறார்கள்.அதுதான்  சமய  மத வெறி என்பதாகும்.
கடவுளைப் பற்றிய உண்மை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பாவைப் படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும்...
வள்ளலார் கொள்கையை மக்களுக்கு தெரியவொட்டாமல் செய்தவர்களே இந்த சமய.மதவாதிகள் தான்.இப்போது உண்மை வெடித்து வெளியே வந்து கொண்டு உள்ளன.
வள்ளலார் பாடல்கள் பல ஆயிரம் உள்ளன.அதிலே சில.!
சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே சாத்திரச்சந் தடிகளிலே
கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்
அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!
இந்த ஒரு பாடலே போதும்  ஊன்றி படியுங்கள் உண்மை விளங்கும்...மேலும் ஒருபாடல்.
வேதம்  ஆகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர் வேதம் ஆகமத்தின் விளைவறியீர் - சூதாகச்சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவிலை என்ன பயனோ இவை. !
வேதம் ஆகம்ம்  புராணம் இதிகாசம் எல்லாம்  உண்மையை  வெளிப்படையாக சொல்லாமல் சூதாக கற்பனைக் கதைகளாக சொல்லி உள்ளார்கள் அவைகளால் எந்த பயனும் லாபமும் இல்லை என்கிறார் வள்ளலார். மேலும்.
வேதநெறி ஆகமத்தின் நெறி பவுரா ணங்கள்விளம்புநெறி இதிகாசம் விதித்தநெறி முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும் காட்டிஉள்ளதனை உள்ளபடி உணரஉரைத் தனையே
ஏதமற உணர்ந்தனன்வீண் போதுகழிப் பதற்கோர்எள்ளளவும் எண்ணம்இலேன்
என்னொடுநீ புணர்ந்தேதீதறவே அனைத்தும்வல்ல சித்தாடல் புரிவாய்சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.!
எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர்.எனக்கு எல்லா உண்மைகளையும்  வெளிச்சம் போட்டு காட்டிவிட்டார். நான் கண்டேன் களித்தேன் களிப்புற்றேன் கலந்து கொண்டேன்.
எல்லோருக்கும் பொதுவான  ஒரே கடவுள்  அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்ற  உருவமற்ற அருள் ஒளியாகும்.
நீங்களும் தெரிந்து கொள்ள எந்த தடையும் இல்லை.

சாதி.சமயம்.மதம்.போன்ற வெறிப்பிடித்த கற்பனைக்  கொள்கைகளை  விட்டு ஒழித்து வெளியே வந்தால் தான் உண்மைகள் தெளிவாக விளங்கும்.
அதுவரை ஆண்டாள் போன்ற விமர்சனங்கள் .அதற்கும் மேலான விமர்சனங்களும் வந்து கொண்டேதான் இருக்கும்.இவை இன்று நேற்று அல்ல .பல்லாயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டேதான் வந்து கொண்டு உள்ளன.
இதில் இருந்து  வெளியே வருவதற்கு ஒரே வழிதான்.அதுதான் வள்ளலார் தோற்றுவித்த "" சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்"" என்ற பொது நெறியாகும்......
வள்ளலார் பாடல் !
திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு
வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்துவல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே
கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!
என்ற பாடலை ஊன்றி படித்து உண்மை உணர்ந்து பயன் பெறுவதே மக்களுக்கு நன்மை பயக்கும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

திங்கள், 15 ஜனவரி, 2018

கடவுள் ஒருவர் தான் !

கடவுள் ஒருவர்தான் ! அவர் அருட்பெருஞ்ஜோதி மட்டும் தான் !

பாடல் !
உருவ ராகியும் அருவின ராகியும் உருஅரு வினராயும்ஒருவ ரேஉளார் கடவுள்

கண் டறிமினோ உலகுளீர் உணர்வின்றிஇருவ ராம்என்றும் மூவரே யாம்என்றும்

இயலும் ஐவர்கள்என்றும் எருவ ராய்உரைத் துழல்வதென் உடற்குயிர் இரண்டுமூன் றெனலாமே.!

என்னும் பாடல் வாயிலாக வள்ளலார் தெரியப் படுத்துகின்றார்.

ஒரு உடம்பில் உயிர் ஒன்று இருக்குமா ? அல்லது  இரண்டு. மூன்று. ஐந்து உயிர் இருக்குமா ? 

ஒரு உடம்பில் ஒரு உயிர் தான் உள்ளது .என்பது சின்னக் குழந்தைக்கு கூடத் தெரியும்.

உடம்பில் ஒரு உயிர்தான் உண்டு என்பது எவ்வளவு உண்மையோ.அதேபோல் கடவுள் ஒருவர் தான் என்ற உண்மை ஏன் தெரியாமல் போனது என்று வினா எழுப்பி விளங்க வைக்கிறார் வள்ளாலார்.

சுயநலம் உள்ள  ஆன்மீக வாதிகள் தத்துவங்களை எல்லாம் கடவுள்களாக்கி மக்களை அலைய விட்டு விட்டார்கள்.அதனால் உண்மைத்  தெரியாமல் மக்கள் கண்டதை எல்லாம் கடவுள் என்று நினைத்து வழிபாடு செய்கிறார்கள்.

இனிமேலாவது கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ் ஜோதியாக உள்ளார் என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து.

ஒவ்வொரு இல்லத்திலும் ஜோதி ஒன்றையே வைத்து வழிபாடு செய்யுங்கள். எல்லா நன்மையும் சந்தேகம் இல்லாமல்.வீண் செலவு இல்லாமல் நல்லதே  நடைபெறும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 11 ஜனவரி, 2018

ஞானம் என்றால் என்ன ?

ஞானம் என்றால் என்ன?

எக்காலத்தும்  அழிவில்லாத அருள் பெற்றது எதுவோ அதற்கு ஞானம் என்று பெயர்.

எக்காலத்தும் .எவ்விடத்தும்.எவ்விதத்தும் .எவ்வளவும் .தடைபடாமல் வாழ்கின்ற அந்த  ஒப்பற்ற பெரிய வாழ்வை மனித இனமானது /அருள் பூரணத்தைப் பெற்று அழிவில்லாமல்  வாழ்தற்கே ஞானம் என்று பெயர் ..ஞானத்தில் ஞானம் என்றும் பெயராகும்.

பூரண அருள் நிறைந்த தன்மை உள்ள.உடம்பு .உயிர்.ஆன்மா ஆகிய  முன்றும். .சத்து .சித்து.ஆனந்தம் பெற்று வாழ்வாங்கு வாழும் ஆன்மாவிற்கு ஆன்ம ஞானம் என்று பெயர் . சச்சிதானந்தம் என்றும் சொல்லப் படுகின்றது..

ஞானம் என்பதற்கு உருவம் கிடையாது ! ஒளி .ஒலி கலந்த அருள் நிறைந்த    அருள்  பேரொளிக்கு ஞானம் என்று பெயர் ! அருட்பெருஞ்ஜோதி என்றும்  பெயர் ! இதற்கு ஞான தேகம் என்று பெயர் ! கடவுள் உருவம் அற்றவர்  ஞான தேகம் பெற்றவர்  என்று வள்ளலாரால் சொல்லப் படுகின்றார் ! அதனால் தான் வடலூரில் .கடவுள் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும்  இடத்திற்கு ''ஞான சபை'' என்று பெயர் வைத்துள்ளார் ..மேலும்   உத்தர ஞான சிதம்பரம் என்றும்.உத்தர ஞான சித்திபுரம் என்று பெயர் வைத்துள்ளார்..

வள்ளலார் பாடல் !

ஜோதி மலை வீட்டில் தூய திருவமுதம்
மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன் --ஓதரிய
ஏகா அனேகா எழிற் பொதுவில் வாழ ஞான
தேகா கதவைத் திற ...!

என்னும் பாடல் வாயிலாக இறைவன்  ஞான தேகம் பெற்றவர் என்பதை தெளிவாக விளக்கமாகச் சொல்லுகின்றார் ...

கடவுள் அருளைப் பெற்றால் மட்டுமே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக முடியும்.இறைவனிடம் ஆன்மாக்கள் செல்ல முடியும்.அதற்கு ஞானம் என்னும் அருள் தேகம் பெற வேண்டும்.இறைவன் தகுதிப் பெற்றால் மட்டுமே இறைவனிடம் செல்ல முடியும்.

இறைவன் அருளைப் பெறும் வழியைக் காண்போம் !

இறைவன் அருளைப் பெறுவதற்கு  நான்கு மார்க்கங்கள் சமய .மதங்களில் சொல்லப் பட்டு  உள்ளன ...அதில் ஒவ்வொன்றிலும் நான்கு கிளை வழிகள் உள்ளன .

அவற்றிற்கு  சரியை .கிரியை..யோகம்..ஞானம் என்னும் நான்கு மார்க்கங்கள் உள்ளன... .

சரியையில் சரியை ,,,சரியையில் கிரியை ,,சரியையில் யோகம் ,,சரியையில் ஞானம்..என்றும்
கிரியையில் சரியை ,,கிரியையில் கிரியை ..கிரியையில் யோகம் ..கிரியையில் ஞானம் ...என்றும்
யோகத்தில் சரியை ..யோகத்தில் கிரியை ..யோகத்தில் யோகம் ...யோகத்தில் ஞானம் ..என்றும்..
ஞானத்தில் சரியை ..ஞானத்தில் கிரியை ...ஞானத்தில் யோகம் ..ஞானத்தில் ஞானம் ..
என்னும் பதினாறு படிகள் உள்ளன .

இவ்வுலகில் மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றன .  அறிவு விளங்கிய அருளாளர்கள் யோகத்தில் ஞானம் பெற்று சித்தி முத்திகளைப் பெற்று உள்ளார்கள் .ஆனால் ஆன்ம ஞானம் என்னும்.''ஞானத்தில் ஞானம்''என்னும் அருள் பூரணம் நிறைந்த  ஒளி உடம்பை எவரும் பெற்றுக் கொள்ளவில்லை..ஆன்ம நேயத்தோடு எவரும்  வாழ்ந்ததாகத் தெரியவில்லை ..உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை எவரும் காணவில்லை .அவருடன் எவரும் கலந்து கொள்ளவில்லை என்கின்றார் வள்ளலார் ..

வள்ளலார் பாடல் !

நோவாது நோன்பு என்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப் போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் சற்றே நீ யறை !

என்னும் பாடல் வாயிலாகத் தெரியப் படுத்துகின்றார் ..மேலும்

சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும்
தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன்
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்று ஒன்றாய் அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன்
அரிய சிவ சித்தாந்தம் வேதாந்தம் முதலாம்
ஆறந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும்
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம்
பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி !

என்ற அனுபவமாலை என்னும் தலைப்பில் 93..வது பாடலில் வள்ளலார்  பதிவு செய்கின்றார்..எனவே ஞானத்தில் ஞானம் பெறுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மையான நேர் வழியாகும்.அந்த உண்மையான நேர் வழியை அருள் ஒளியால் ஒவ்வொன்றாக அறிந்தேன் என்கின்றார் .

ஞானத்தில்  சரியை ,கிரியை .யோகம்,ஞானம் !

நாம் கடைபிடித்து வந்த பாதைகளில் சென்றால் அருள் பெறுவதற்கு கால  தாமதமாகும்.ஆதலால் சரியை முதலிய சாதகம் நான்கில் நான்காவது இனத்தில் ஞான சரியை .ஞான கிரியை.ஞான யோகம்,ஞானத்தில் ஞானம் என்னும் படிகளில் உள்ளபடி கடைபிடித்தால்  போதும் அருளைப் பெற்று மரணத்தை வென்று ஞான தேகம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுப் படுத்துகின்றார் ..

ஜீவ காருண்ய ஒழுக்கம் !

அதற்கு  ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்கின்றார் !

ஞான சரியை என்பது ;-- இந்திரிய ஒழுக்கம்.
ஞான கிரியை என்பது ;--கரண ஒழுக்கம்
ஞான யோகம் என்பது ;--ஜீவ ஒழுக்கம்
ஞானத்தில் ஞானம் என்பது ;--ஆனம் ஒழுக்கம்

இந்த நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தால் பூரண அருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

 ஞான சரியை  என்னும் தலைப்பில் 28.பாடல்கள் வள்ளலார்  பதிவு செய்துள்ளார் அவற்றில் கண்டுள்ளபடி வாழ்க்கையில் கடைபிடித்தால்.முதல்படியான இந்திரிய ஒழுக்கம் என்னும்  ஞான சரியை வெற்றி பெறும்.அடுத்து .ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் கை கூடும் .அடுத்து ஞான யோகம் என்னும் ஜீவ ஒழுக்கம் கை கூடும் ..ஜீவ ஒழுக்கம் கை கூடினால்..ஞானத்தில் ஞானம் என்னும் ஆன்ம ஒழுக்கம் நிறைவு பெறும்...

இந்த நான்கு ஒழுக்கங்கள் தான் இறைவன் அருளைப் பெறும் சிறந்த வழிகளாகும்.இதற்கு ஞான வழி என்றும்.சுத்த சன்மார்க்கம் என்றும் ,ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றும் பெயர் வைத்துள்ளார் .

ஞான சரியை முதல் பாடல் !

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என புனைந்து உரையேன் பொய் புகலேன்,நான் அனுபவித்த  உண்மையை சொல்லுகின்றேன்  இவை ஞான நடம் செய்கின்ற, ஞான அமுதம் வழங்குகின்ற ஞான நடத்து அரசின் நல்வாக்கு, அதனால் அழைக்கின்றேன் வாருங்கள் என உலக மக்களை அழைக்கின்றார் .

ஒழுக்கம் நான்கு வகை !

இந்திரிய ஒழுக்கம் என்பது .;--  உயிர் உள்ள ஜீவர்களுக்கு உண்டாகும் பசி.பிணி.தாகம்,இச்சை .எளிமை .பயம் .கொலை இவைகளால் வரும் துன்பத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும்.கேட்ட போதாயினும்.இவ்வாறு உண்டாகும் என்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கத்தோடு அவைகளை நீக்க வேண்டும்...இப்படி செய்து வந்தால் துன்மார்க்க குணங்களான தாமச.இராட்சச குணங்கள்  நீங்கி சுத்த  சன்மார்க்க நற் குணமான சத்துவ குணம் வந்துவிடும்.

அதனால்  தான் ஜீவ காருண்யம் விளங்கும் போது அறிவும்.அன்பும் .உடனாக நின்று விளங்கும்.அதனால் உபகார சத்தி விளங்கும்.அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.இதுவே ஞான சரியை என்பதாகும்.

கரண ஒழுக்கம் ;--அன்பும் அறிவும் விளங்கினால் .கரணங்களில் உள்ள மனம்.புத்தி.சித்தம்,அகங்காரம்,என்னும் அந்தக் கரணங்களில் உள்ள...முதன்மையான .மனமானது,வெளியே சென்று அலை பாயாமல். தன் தலைவன் இருக்கும் இடமான ஆன்ம சிற்சபையில் தொடர்பு கொள்ளும்.எனவே தான் சிற்சபையின் கண் மனதை செலுத்துங்கள் என்கின்றார் வள்ளலார் ..இதுவே கரண ஒழுக்கம் என்பதாகும் .இதுவே ஞான கிரியை என்பதாகும்.

ஜீவ ஒழுக்கம் ;--ஆண் மக்கள்.பெண் மக்கள்.முதலிய யாவர்கள் இடத்திலும் ஜாதி.சமயம்.மதம்.,ஆசிரமம்,சூத்திரம்,கோத்திரம்,குலம்,சாஸ்த்திர சம்பந்தம்,தேச மார்க்கம்,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் ,--என்னும் பேதம் நீங்கி எல்லோரும் தம்மவர்களாய் சமமாக பாவித்தல் வேண்டும்,..இதுவே ஜீவ ஒழுக்கம் என்பதாகும்,ஞான யோகம் என்பதாகும்.

ஆன்ம ஒழுக்கம் ;-- யானை முதல் எறும்பு வரையில் தோன்றிய சரீரங்களில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச்சபையாகவும்,அதனுள் பரமான்மாவே பதியாகவும் கொண்டு யாதும் நீக்கமற எவ்விடத்தும்,பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம் ..இதுவே ஞானத்தில் ஞானம் என்பதாகும்...

மேலும் ;--

இந்திரிய ஒழுக்கத்தினால்... சாகாக்கல்வி கற்கலாம்.
கரண ஒழுக்கத்தினால்... ,தத்துவங்களை தவிர்க்கலாம்,நிக்கிரகஞ் செய்யலாம் .ஜீவ ஒழுக்கத்தால்....,ஏம சித்திப் பெறலாம் .
ஆன்ம ஒழுக்கத்தால்....கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம் ..

இவை பெறுவதற்கு ..ஞான சரியை,,,ஞான கிரியை...ஞான யோகம் ..ஞானத்தில் ஞானம் என்று வள்ளலார் சொல்லுகின்றார் ...

ஞானம் என்னும் அருளைப் பெறுவதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கமே முதன்மையானது ..அதிலும் முதன்மையானது பசியோடு வாழும்  ஏழை எளிய மக்களின்  பசியைப் போக்குவதாகும்.

ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும்.ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும்.இவ் விளக்கத்தையும் இன்பத்தையும்,பலகால் கண்டு அனுபவித்தப் பூர்த்தி அடைந்த சாத்தியர்களே ஜீவன்  முத்தர் என்றும்,அவர்களே கடவுளை அறிவார் அறிந்து கடவுள் மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்...அந்த உண்மைக் கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வராகும்.அவரிடம் இருந்துதான் அருளைப் பெற முடியும்.அவரிடம் இருந்து தான்  பேரின்ப சித்திப்  பெருவாழ்வு பெற முடியும்.

மரணத்தை வென்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வார் ..

இறந்தவரை எடுத்திடும் போது அதற்று கின்றீர் உலகீர்
இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு
மறந்தும் இதை நினைக்கின் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங் காண் தெரிந்து வம்மின் இங்கே
பிறந்த பிறப்பு இதில்தானே நித்திய மெய்வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே !

மரணம் வந்தால் மீண்டும் பிறப்பு உண்டு .எனவே இந்த பிறப்பிலே மரணம் வராமல் பிறப்பு இறப்பு அற்று வாழ முடியும் என்று அனைத்து உலக மக்களையும் ஆன்மநேயத்தோடும் அன்போடும் அழைக்கின்றார் நம் வள்ளல்பெருமான் ..வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்.மற்றவர்களுக்கு வழி காட்டுவோம்.

இன்னும் விரிக்கில் பெருகும் .....

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 ..      

புதன், 10 ஜனவரி, 2018

ஆன்மாவே எல்லாவற்றுக்கும் காரணம் !

ஆன்மாவே எல்லாவற்றுக்கும் காரணம் !

ஆன்மா எல்லாவற்றுக்கும் சாட்சியாய் காட்சியாய் மட்டுமே உள்ளது .ஆன்மா இன்பம் துன்பம் அனுபவிப்பதில்லை என்பது சமய.மதக் கொள்கை..்.

வள்ளலார் சொல்லும் சுத்த சன்மார்க்கம்.அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை..இன்பம் .துன்பங்கள் எல்லாம் ஆன்மாதான் அனுபவிக்கின்றது..என்பதை வள்ளலாரை தெளிவாகத் தெரியப்படுத்துகின்றார்

ஜீவகாருண்யம் முதல் பகுதியில் !

சீவர்களுக்குப் பசி தாகம் பயம் முதலியவற்றால் வருந் துன்பங்களெல்லாம் மனம் கண் முதலிய கரணேந்திரிய அனுபவங்களல்லது, ஆன்ம அனுபவங்களல்ல; அதனாற் சீவகாருணியங் கொள்வதில் விசேஷ பிரயோசனம் இல்லையே என்னில்:-

இந்தத் தூலதேகத்தில் சீவனாக இருக்கிற ஆன்மாவும் அறிவுக்கறிவாயிருக்கிற கடவுள் இயற்கை விளக்கமுந் தவிர, கரணம் இந்திரியம் முதலிய மற்றவைகளெல்லாம் கருவிகளாகிய தத்துவ சடங்களே அல்லது சித்துக்கள் அல்ல. ஆகலில் சுகதுக்கங்களைச் சடங்கள் அனுபவிக்க அறியா. செம்மண் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது. அதுபோல், மனஞ் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது.

செம்மண்ணினால் தேகவாழ்க்கைக்கு வீடுகட்டிக்கொள்வது போல, மன முதலான கரணேந்திரியங்களால் சீவ அதாவது உயிர் வாழ்க்கைக்குக் கடவுளால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம் ஒரு சிறிய வீடாகும். இன்பதுன்பங்களை வீட்டில் இருக்கின்றவன் அனுபவிப்பானல்லது, வீடு அனுபவிக்கமாட்டாது. அன்றியும் காசத்தினால் ஒளி மழுங்கப்பட்டு உபநயனங்களாகிய கண்ணாடிகளால் பார்க்கின்ற கண்கள் துன்ப விஷயத்தைக் கண்டபோது, அக்கண்கள் நீர்சொரியுமே யல்லது, கண்ணாடி நீர் சொரிய மாட்டாது. ஆகலில் ஆன்ம திருஷ்டிக்கு உபநயனங்களாக இருக்கின்ற மனம் முதலான கருவிகள் சுகதுக்கங்களை அனுபவிக்க மாட்டா; ஆன்மாவே அனுபவிக்குமென்று அறியவேண்டும்.

ஒரு சீவனுக்குச் சுகம் நேரிட்டபோது மனம் மகிழ்கின்றது; துக்கம் நேரிட்டபோது மனம் தளர்கின்றது; ஆகலில், சுக துக்கங்களை அம்மனம் அனுபவிப்பதாக அறியப்படாதோ என்னில்:- அறியப் படாது. பளிங்கினாற் செய்த வீட்டினுள் இருக்கின்ற வீட்டுத் தலைவனுடைய தேகவிளக்கமும் தேகச் சோர்வும் அந்தப் பளிங்கு வீட்டில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், கண்களின் மலர்ச்சியும் சோர்வும் அக்கண்களிலிட்ட உபநயனங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், சுகதுக்கங்களால் ஆன்மாவுக்கு  கிடைக்கின்றன. ஆகலில் சுகதுக்கங்கள் ஆன்மாவுக்கே அனுபவமென்றும், சுகதுக்கங்களை அறிந்தனுபவிப்பதற்குக் கரணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகாரக் கருவிகளாகும் என்று அறிய வேண்டியது.

கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும்.

முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டான் என்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்; இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்று அறியவேண்டும்.

சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேரும் என்று அறிய வேண்டும்.

எனவே ஆன்மாவும் உயிரும் இந்த பிறவியில் இந்திரிய கரணங்களான.கண்.
மனம் போன்ற  கருவிகளை வெளியே செல்ல வொட்டாமல் ஆன்மாவின் கட்டளைபடி செயல் படும்படி பழக்கத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

எனவேதான் மனதை சிற்சபை கண் செலுத்த வேண்டும் என்கிறார் .

உயிர் இரக்கமும் .சத்விசாரமும் கடைப்பிடித்தால்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால். ஆன்மாவிற்கு உண்டாகும் துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.

துன்பங்களான அறியாமை என்னும் மாயா திரைகள் தான் ஆணவம்.மாயை. கன்ம்ம் என்னும் திரைகளாகும்.திரைகள் நீங்கினால் தான் ஆன்மா அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்..மரணத்தை வென்றால் மட்டுமே இறப்பு.பிறப்பு அற்று பேரின்ப வாழ்க்கை என்னும் முத்தேக சித்தி பெற்று என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கை கிடைக்கும்....

திரை நீக்கம் !

திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ.

உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு
உளமும் ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ.

கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ

செருக்கருதா தவர்க்கு அருளும் சித்திபுரத் தரசே சித்த சிகா மணியே என் திருநடநா யகனே.! என்னும் பாடல் வரிகளிலே தெளிவாக விளக்கம் தருகின்றார் வள்ளலார்...

தொடரும்.....

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 9 ஜனவரி, 2018

பணம் !

பணம் !

தன் வருமானத்திற்கு மேல் சொத்து வைத்து  இருப்பவர்கள் தேச துரோகிகள்.கடவுள் கொள்கைக்கு விரோதமானவர்கள்.

கடவுள் கட்டளைக்கு  எதிரானவர்கள். 

அதனால் நீங்கள் எவ்வளவு பொருள் சேர்த்து வைத்து இருந்தாலும் மரண்ம் வந்து உடம்பை விட்டு .உயிரும்.ஆன்மாவும் பிரியும் போது ஒரு சிறிய துரும்பை கூட  எடுத்து கொண்டு செல்ல முடியாது.

இவற்றை தெரித்தும் தவறு செய்பவர்களுக்கு  அடுத்த  மனித பிறவி கிடைக்க வாய்ப்பே இல்லை.

சண்டாளப் பிறப்பு கிடைத்து அளவிள்ளாத துன்ப்ப் படுவார்கள்.

எனவே தான் வள்ளலார் ஆன்ம நேயம் கொண்டு நமக்கு நல்வழியைக் காட்டுகின்றார்.

நம்மிடம் உள்ள பொருள்களை .நமக்குத் தேவை போக மீதி உள்ளதை .ஆதரவு அற்ற ஏழை எளியவர்களுக்கு உபகாரம் செய்து .புண்ணியத்தை சேர்த்து கொள்ளுங்கள் என்கிறார்.

ஆற்று வெள்ளம் வருவதன் முன் அணை போட அறியீர்
அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்..
கூற்று வருங்கால் அதனுக்கு எது புரிவீர்
கூற்று தைத்த சேவடியை போற்றி விரும்பீரே ....என்றும்

காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டு எருவும் போட்டு கடுகு விரைத்துக் களிக்கின்ற உலகீர்

கூடு விட்டுப் போயினபின் எது புரிவீர் எங்கே குடி இருப்பீர் அய்யோ நீர் குறித்து அறியீர் இங்கே

பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்.பட்டது எல்லாம் போதும் இது பரமர் வரு தருணம்

ஈடு கட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர் .உண்மை உரைத்தேன் அல்ல உண்மை உரைத்தன்னே...

என்கிறார் வள்ளலார்..

ஈடு கட்டுவது தான் ஏழைகளுக்கு உபகாரம் செய்வதாகும். அதற்குப் பெயர்தான் ஜீவ காருண்யம்.என்பதாகும்.அதை கடைபிடிப்பதற்குப் பெயர் தான் ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும்..

ஜீவ காருண்ய ஒழுக்கம் இல்லாதவர்களை இறைவன் ஏற்றுக் கொள்வது இல்லை.

எனவே ஆன்நேய சகோதர்கள் அனைவரும் பணத்தின்மேலும் பொருளின் மேலும்அதிக பற்று இல்லாமல். தேவைக்கு மேல் உள்ளதை. ஆதரவு அற்ற ஏழைகளுக்கு வாரி வழங்கிவிடுங்கள்.

அதனால் பெரிய புண்ணியம் கிடைத்து அருளைப் பெறும் வாய்ப்பு கிடைக்கும்.அதற்குமேல் மரணத்தையே வெல்லும் வாய்ப்பை இறைவன் அருள்வார்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

அருளைப் பெறுவதற்கு உண்மையான வழி எவை ?

அருளைப் பெறுவதற்கு வழி எவை ?

 அருளைப் பெறும் வழியை மிகவும் எளிதாக வள்ளலார் சொல்லுகிறார்..

அருளைப் பெறுவதற்குச் சீவகாருணியமே வழியாதலால், ஞான வழி என்பதும் சன்மார்க்கம் என்பதும் சீவகாருணிய ஒழுக்கம் என்றும்,

அஞ்ஞான வழி என்பதும் துன்மார்க்கம் என்பதும் சீவ காருணிய ஒழுக்கமில்லாமை என்றும் அறியப்படும்.

சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளுந் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத் தீமைகளுந் தோன்றும்.

ஆகலின் புண்ணிய மென்பது சீவகாருணியமொன்றே என்றும்,பாவமென்பது சீவகாருணிய மில்லாமையொன்றே
என்றும் அறியப்படும்.

சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால்கண்டு அனுபவித்துப் பூர்த்தியடைந்த சாத்தியர்களே சீவன் முத்தரென்றும், அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள்மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்.

ஆனால், சீவகாருணிய ஒழுக்கமென்பது என்னெனில்:-?

 சீவர்களுக்குச் சீவர்கள் விஷயமாக உண்டாகின்ற ஆன்ம உருக்கத்தைக் கொண்டு தெய்வவழிபாடு செய்து வாழ்தலென்று அறிய வேண்டும்.

சீவர்கள் விஷயமாக ஆன்ம உருக்கம் எப்போது உண்டாகுமெனில்:-

சீவர்கள் பசி, தாகம், பிணி, இச்சை, எளிமை, பயம், கொலை இவைகளால் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும் கேட்ட போதாயினும் இவ்வாறு உண்டாகுமென்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கம் உண்டாகுமென்று அறிய வேண்டும்.

சீவகாருணியம் உண்டாவதற்கு உரிமை எது என்னில்:-

சீவர்களெல்லாம் ஒரு தன்மையாகிய இயற்கையுண்மை ஏகதேசங்களாய்ச் சர்வசக்தியுடைய கடவுளால் சிருஷ்டிக்கப்பட்டபடியால், ஓருரிமையுள்ள சகோதரர்களேயாவர் சகோதரர்களுள் ஒருவர் ஒரு ஆபத்தால் துக்கப்படுகின்றபோதும், துக்கப்படுவாரென்று அறிந்தபோதும் அவரைத் தமது சகோதரரென்று கண்ட மற்றொரு சகோதரருக்கு உருக்கமுண்டாவது சகோதர உரிமையாகலின், ஒரு சீவன் துக்கத்தை அனுபவிக்கக் கண்டபோதும், துக்கப்படுமென் றறிந்த போதும் மற்றொரு சீவனுக்கு உருக்கமுண்டாவது பழைய ஆன்ம உரிமை யென்று அறிய வேண்டும்.

சீவர்கள் துக்கப் படுகின்றதைக் கண்டபோதும், சிலர் சீவகாருணியம் இல்லாமல் கடினசித்தர்களாயிருக்கின்றார்கள்; இவர்களுக்குச் சகோதர உரிமை இல்லாமற்போவது ஏனெனில்:- ?

துக்கப்படுகின்றவரைத் தமது சகோதரரென்றும் துக்கப்படுகின்றாரென்றும் துக்கப்படுவாரென்றும் அறியத்தக்க ஆன்ம அறிவு என்கிற கண்ணானது அஞ்ஞானகாசத்தால் மிகவும் ஒளி மழுங்கினபடியாலும், அவைகளுக்கு உபகாரமாகக் கொண்ட மனம் முதலான உபநயனங்களாகிய கண்ணாடிகளும் பிரகாச பிரதிபலிதமில்லாமல் தடிப்புள்ளவைகளாக இருந்த படியாலும் கண்டறியக் கூடாமையாயிற்று.

அதனால், சகோதர உரிமையிருந்தும் சீவகாருணியம் உண்டாகாம லிருந்ததென் றறிய வேண்டும். இதனால் சீவகாருணியமுள்ளவர் ஆன்ம திருஷ்டி விளக்கமுள்ளவரென்றறியப்படும்.

என்றும் தெரியப்படுத்துகின்றார்  வள்ளலார்..

ஆன்மாவில் இருக்கும் உண்மையான அறிவு விளக்கம் இல்லாமல் இருப்பதற்கு காரணம் .ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை என்னும்.மாயா திரைகளாகும்.

அந்த திரைகளை நீக்க வேண்டுமானால் ஜீவ காருண்யத்தால் மட்டுமே நீக்க முடியும் என்கிறார்.திரை நீங்கினால் உண்மை அறிவு வெளிப்படும்..உண்மை அறிவு வெளிப்பட்டால் .அருளைப் பெறும் வழியை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தெரிவிப்பார்.அதுவரை உயிர்களுக்கு உபகாரமான ஜீவ காருண்யம் செய்து வரவேண்டும்....வேறு தவரான குறுக்கு வழிகளில் செல்ல வேண்டாம் என்பதுதான் .வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும்...

தொடரும் :-----

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஞானம் என்றால் என்ன ?

ஞானம் என்றால் என்ன ஞானம் என்பது உண்மை அறிவு என்பதாகும் உண்மை அறிவு எங்கு இருக்கிறது உண்மை அறிவு ஆன்மா என்னும் உள் ஒளியில் இருக்கின்றது . அதை அறிந்து கொள்வது எப்படி ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தாலும் சத்விசாரம் என்னும் மனத்தாலும் அறிய வேண்டும் . ஜீவகாருண்யம் என்றால் என்ன பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை போன்ற துன்பங்களால் வருந்தும் உயிர்களுக்கு உண்மையான அன்பு  தயவு,கருணை, இரக்கம் கொண்டு ,நம்மால் முடிந்த அளவுக்கு உபகாரம் செய்வது ஜீவ காருண்யம் என்பதாகும். சத்விசாரம் என்றால் என்ன > நம்முடைய ஆன்மாவின் உள்ளே உண்மையான அறிவு விளக்கம் உள்ளது ,அதை அறிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி அறிவது, நம்முடைய மனம் புத்தியைக் கொண்டு செயல்படுகின்றது .புத்தி என்பது மனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம், இவைகள் நான்கும் புறத்தில் உள்ள அழியும் பொருள்களையே தேடும் .ஆகவே தேடும் பொருள்களும் அழிந்து விடும் அதை தேடும் மனிதர்களும் அழிந்து விடுவார்கள் . ஆன்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளது அறிவு என்பதாகும்,அதற்கு உண்மை அறிவு என்பதாகும்.ஆன்ம அறிவை அறிந்து கொண்டவர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதாகும்.அறிவால் கிடைக்கும் பொருள் அருள் என்பதாகும் . ஆன்மாவும் அழியாது,அதில் இருந்து தோன்றும் அறிவும் அழியாது, அறிவால் கிடைக்கும் அருள் என்னும் பொருளும் அழியாது அழியாத பொருளைப் பெறுவதே ஞானம் என்பதாகும். ஆதலால் பொருளைத் தேடி வெளியே செல்லும் மனத்தை அடக்கி ஆன்மா இருக்கும் இடமான புருவ மத்தியில் செலுத்த வேண்டும். எப்படி செலுத்த வேண்டும் அதற்கு ஞானம் என்று பெயர் ! ஞானம் என்பது நான்கு பிரிவுகளாக உள்ளன்,
அவைகள் '--''ஞானசரியை '' ''ஞான கிரியை ''.''ஞான யோகம்'',''ஞானத்தில் ஞானம்'' என்பதாகும் . வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கு முதல் சாதனம் ஜீவகாருண்யம்,இரண்டாவது சாதனம் சத்விசாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும் . முதல் சாதனம் ஜீவகாருண்யம் ;--ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உண்டாகும் .பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை,போன்ற துன்பங்கள் வரும்போது நம்மால் முடிந்த அளவு உதவி செய்து அவற்றைப் போக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும். இரண்டாவது சாதனம் சத்விசாரம் என்பது ''ஞான சரியை'' என்பதாகும். ஞான சரியை என்பது ;--புறத்தில் செல்லும் மனத்தை வெளியில் செல்ல விடாமல் ஆன்மாவில் செலுத்த வேண்டும் ,இதுவே சுத்த சன்மார்க்க தியானம்...சாதனம்என்பதாகும். அப்படி இடைவிடாது செய்து வந்தால் ஞான சரியையில் இருந்து ,ஞானகிரியை,ஞானயோகம்,ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு கதவுகள் ஒவ்வொன்றாக திறந்து கொண்டே வரும். இறுதியில் இருக்கும் ஞானத்தில் ஞானம் என்னும் கதவு திறந்தால் அருள் என்னும் அமுதம் பூரணமாக கிடைக்கும். அதற்கு அருள் பூரணம் என்று பெயர்

சனி, 6 ஜனவரி, 2018

ரஜினியின் போலியான ஆன்மீக அரசியல் !

ரஜினியின் போலியான ஆன்மீக அரசியல் ! ரஜினிக்கு உண்மையான ஆன்மீகம் என்னவென்று தெரிந்து இருந்தால்.ரசிக மன்றங்களை சேர்ந்த நிர்வாகிகளுக்கு உயிர்களை கொன்று.சமைத்து கிடா விருந்து வைப்பாரா ? இப்படி ஒரு ஆன்மீக அரசியல் நடத்தி பதவிக்கு வருவதை விட தற்கொலை செய்து கொண்டு சாகலாம்... திருவள்ளுவர்.வள்ளலார் போன்ற ஆன்மீக அருளாளர்கள் தோன்றிய தமிழ் மண்ணில்...இப்படி ஒரு ஆன்மீக அசிங்கமா ? உயிர்க்கொலையும் புலைபுசிப்பும் உடையவர்கள் எல்லாம் ஆன்மீகம் பேசுவதற்கு தகுதி அற்றவர்கள்.கடவுளை நினைக்க அருகதை அற்றவர்கள் என்கிறார் வள்ளலார்...ஆன்மீக அறிவு இல்லாதவர்கள் என்கிறார்... வாடியபயிரைக் கண்ட போதெல்லாம் வாடியவர் வள்ளலார். உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றவர்.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றவர்... திருவள்ளுவர் ! கொல்லான் புலால் மறுத்தாணைக் கைகூப்பி எல்லா உயிரும் தொழும்..என்றும் பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை .அருள் ஆட்சி ஆங்கில்லை ஊன் தின்பவர்க்கு.....என்றும். தன்னுயிர் நீப்பினுஞ் செய்யறக தான்பிறி நின்னுயிர் நீக்கும் வினை .. என கொல்லாமை.புலால் உண்ணாமைப் பற்றி இரண்டு அதிகாரங்களில் இருபது திருக்குறல் பதிவு செய்துள்ளார் திருவள்ளுவர்.. இவ்வளவு பெரிய ஆன்மீக அருளாளர்கள் தோன்றிய மண்ணில்..ஆன்மீக அரசியல் நடத்தப் போகிறேன் என்கிறார் ஸ்டெயில் நடிகர் ரஜினிகாந்த்... இவருக்கு கொஞ்சமாவது ஆன்மீகம் தெரிந்து இருந்தால் இப்படி ஒரு கேவலமான செயலைச் செய்வாரா ? ஆன்மீகம் தெரியாதவர்கள் செய்தால் மன்னிப்பு உண்டு.ஆன்மீகம் என்று பெயர் வைத்துக்கொண்டு தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் இறைவன் மன்னிக்கவே மாட்டார் ரஜினி அவர்களே ! கிடாவெட்டி விருந்து வைப்பதை "உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்"" சார்பில் கடுமையாக எதிர்க்கிறோம்.கண்டிக்கிறோம்... இப்படி கேடுகெட்ட. அர்த்தம் அற்ற.மக்களை ஏமாற்றும். ஆன்மீக அரசியலை தமிழ் நாட்டைவிட்டே வெளியேற்ற வேண்டும்.. ஆன்மீகம் பேச தகுதி அற்றவர் ரஜினி அவர்களே..உடனே கிடா வெட்டி விருந்து வைப்பதை நிறுத்தி விடுங்கள்.உங்களுக்கும் நல்லது..சாகப்போகும் உயிர்களுக்கும் நல்லது.தமிழக மக்களுக்கும் நல்லது... இதற்கு மேல் அதிகம் சொல்ல விரும்பவில்லை... உங்கள் மீது நல்ல பற்று மக்களுக்கு இருந்த்து .இந்த விஷயத்தில் அதிக வெறுப்பை.மக்களிடம் சம்பாதிக்காதீர்கள்.திருந்த அதிக வாய்ப்பு உண்டு.திருந்திவிடுங்கள்....்நன்றி. அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.