ஞாயிறு, 27 நவம்பர், 2022

மாறுங்கள்! மாற்றுங்கள்!

 *மாறுங்கள்! மாற்றுங்கள்!*


*சுத்த சன்மார்க்கியாக மாறுங்கள்! மாற்றுங்கள்!*


*சன்மார்க்கிகளே வள்ளலார் சொல்லியதை கவனமாக பின் பற்றுங்கள்*


*ஜீவகாருண்யம் என்றால் பசியைப் போக்குவது மட்டும் அல்ல. பசிப்பிணி என்னும் பசிக்கொடுமை மிகவும் வேதனையானது, முக்கிமானது, முதன்மையானது.அதற்கு அடுத்தது கொலை, பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயமும் சேர்ந்து ஏழுவகையான துன்பம் மனித தேகத்திற்கு உண்டாகின்றது.* 


*நரகவேதனை,சனனவேதனை,மரணவேதனை இந்த மூன்று வேதனையும் சேர்ந்ததே பசிவேதனை என்பார் வள்ளலார்*! 


முன் பிறவியின் தண்டனை ! 


*ஏழ்மை நிலையில் வாடி வதங்கி பசி தாங்கமுடியாமல் உணவைத் தேடி, அலைந்து வந்து, காத்திருந்து சாப்பிடுபவர்கள்,முன் பிறப்பில் பசியினால் தவித்தவர்களை கண்டு கொள்ளாமலும்,பசியைப் போக்காமலும் இருந்ததால், அவர்கள் இப்பிறப்பில் உணவிற்கு வழியில்லாமல் உணவைத் தேடி அலைந்து தவிக்கிறார்கள்,அவர்கள் பசி அறிந்து உணவளிப்பது சன்மார்க்கிகளின் கடமையாகும்*,


*உணவுப்பொருள் கொடுப்பவர்களுக்கும்,உணவு தயாரித்து வழங்குபவர்களுக்கும்,தொண்டு செய்பவர்களுக்கும்,பாகப்பிரிவினைபோல் அவரவர்களின் உழைப்பிற்கும்,தகுதிக்கும் தகுந்தாற்போல் ஏகதேச ஆன்மலாபம்,இயற்கை உண்மையின் விளக்கச் சுழற்சியால் பிரித்து வழங்கப்படுகிறது. என்பதே வள்ளலார் சொல்லிய ஜீவகாருண்யத்தின் ஆன்ம லாபமாகும்.*


*சன்மார்க்கிகளின் செயல்பாடுகள்!*


*சாப்பிட வருபவர்களின் தரத்திற்கு தகுந்தாற்போல் ஆன்மநேய உரிமையோடு  10,பத்து நபரையாவது கொலை,புலை தவிர்த்தவர்களாக்கி,ஜீவகாருண்யத்தின் ஒழுக்க நிலையின் உண்மையை விளக்கி, சன்மார்க்கிகளாக மாற்ற வேண்டுவது சன்மார்க்கிகளின் கடமையாக ஏற்று செயல்பட வேண்டும்*


*ஒவ்வொரு சன்மார்க்கியும் பத்து நபர்களை மாற்ற வேண்டும், பத்து நூறாகும், நூறு ஆயிரமாகும்,ஆயிரம் லட்சமாகும், லட்சம் கோடியாகும்,கோடி பலகோடியாகும்  இவ்வாறு சன்மார்க்கிகளாக மாற்றினால்  உலகமே சன்மார்க்க உலகமாக மாற்றம் அடையும்*


இதைத்தான் வள்ளலார் தெளிவாகச் சொல்லி விளக்குகிறார்,


*எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களை நம்மவராக்கிக் கொள்ளுங்கள் என்கிறார்.*


*எவ்வாறு  மாற்றுவது?*


*வள்ளலாரே நமக்கு சொல்லித் தருகிறார்* 


என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு.... 


*1,நல்ல வார்த்தை சொல்லுவேன்;*


*2_மிரட்டிச் சொல்லுவேன்;*


*3,தெண்டன் விழுந்து சொல்லுவேன்;*


*4,அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்;*


*5,அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.*


*இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே  என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்.*


 *ஏன் ? அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்:! எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.* என்று தெளிவாக புரியும்படி வள்ளலார் சொல்லுகின்றார்.


*சன்மார்க்க சங்கம் வைத்து நடத்துபவர்கள்.அதில் தொண்டு புரிபவர்கள் பொருள் கொடுப்பவர்கள் யாவரும் வள்ளலார் சொல்லிய வண்ணம் கடைபிடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம்  என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.* 


*நாம் யார் என்பதை தெரிந்து இருக்க வேண்டும்,நம்மைப் படைத்து அனுப்பிய எல்லாம் வல்ல  இயற்கை உண்மைத் தனித்தலைமை பெரும்பதி யார் ? என்பதை தெரிந்து இருக்க வேண்டும்.மேலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்றால் என்ன ? என்பதை தெரிந்து இருக்க வேண்டும்* 


*இந்த இயற்கை உண்மை,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம் போன்ற தன்மைகள் செல்பாடுகள் எல்லாம் அறிந்து கொள்ளாமல், கலையுரைத்த கற்பனைகளாகிய,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்றவற்றை நிலை எனக் கொண்டாடும்  கண்மூடித் தனமான  பழக்கத்தை பொய் என்று தெரிந்து,,அவற்றின் மேல் உள்ள பற்றுகள் அனைத்தையும் பற்று அற விட்டு விட்டீர்களானால் ஆன்ம அறிவு விளக்கம் பெறும்* 


*அறிவு விளக்கம் பெற்றால் வள்ளலார் சொல்லிய உண்மைகள் யாவும் தெள்ளத் தெளிவாக விளங்கும்*


வள்ளலார் நமக்குச் சொல்லிக் கொடுத்த உண்மையை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்! 


வள்ளலார் சொல்லியது ! 


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! 


*இதுதொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,வருணம்,ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும்  எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்*


*எல்லாமாகிய தனித் தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம் !* என்று வேண்டி விண்ணப்பம் செய்கின்றார். 


*வள்ளலார் சொல்லியதை ஒன்றை கூட கடைபிடிக்காமல் எல்லா சங்கங்களிலும் சன்மார்க்க அன்பர்கள் உணவு அளிப்பதைத் தவிர,வேறு எதையும் கடைபிடிக்காமல் வீண் காலம் கழித்துக் கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குறிதாகும்.*


*இதுவரையில் இருந்ததுபோல் இனியும் வீண்காலம் கழிக்காதீர்கள் என்று பல இடங்களில் வள்ளலார் பதிவு ( திருஅருட்பா வில்) செய்தும் நாம் கேட்பதற்கு தயாராக இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.* 


*இப்படியே இருந்தால் ஒருவர் கூட கடைத்தேற முடியாது என்பது சத்தியம்*


வள்ளலார் பாடல்!


சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

*துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே*


*வெல்லுகின்ற வார்த்தைஅன்றி* வெறும்வார்த்தை என்வாய்

விளம்பாது* *என் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்*


செல்லுகின்ற படியே நீ காண்பாய் இத் தினத்தே

தேமொழி அப் போதெனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்


ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றே னடிநான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!


*உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை என மிகவும் வேதனைப் படுகின்றார் வள்ளலார்.* 


சித்திவளாகத் திருமாளிகைப் புறத்தில் சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டு இறுதியாகச் சொல்லுகிறார்.


*கொடி கட்டிக் கொண்டபடியால் ,இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்,முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரிய வொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.*


*இத்தருணம் ஆண்டவர் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார்,நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவால் ( ஆன்ம அறிவால்) விசாரம் செய்து கொண்டிருங்கள்.*


*அவசியம் இதற்குக் காரணமான தயவு இருக்க வேண்டியது அவசியம்,அந்த தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும்*


*இப்படி இருந்து கொண்டிருந்தால்,ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொள்வீர்கள்.இது சத்தியம்,இது சத்தியம்,இது சத்தியம்,இது ஆண்டவர் கட்டளை என்று ஆண்டவர் மேல் சத்தியம் வைத்து சொல்கின்றீர்*


மேலும் *எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ,அதற்குக் கோடி கோடிபங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான  இடம் இந்தஇடம் இது ஆண்டவர் கட்டளை என நிறைவு செய்கிறார்.*


*நாம் இதுவரை இருந்த்து போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் சுத்த சன்மார்க்க கொள்கைகளை நாம் முழுமையாக கடைபிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்க வைத்தால்தான்  வள்ளலார் சொல்லியவாறு அருள் நயந்த நன்மார்க்கர்கள்  உலகம் முழுதும் ஆட்சி செய்ய முடியும்.* 


நாம் மாறுவோம் மாற்றுவோம். 


*வள்ளலார் பாடல்!*


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை


எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்


பற்றிய பற் றனைத்தினையும் பற்றறவிட்டு அருள் அம்

பலப்பற்றே பற்றுமினோ என்றும்இற வீரே.!


*மேலே கண்ட பாடலில் கண்டபடி பொருள்கலந்த உலகப் பற்றை மாற்றி அருள் நிறைந்த அம்பலப் பற்றை பற்றுவதே சன்மார்க்கிகளின் அறிவு நிலையாகும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

**9865939896*

வெள்ளி, 25 நவம்பர், 2022

கண்டேன் களித்தேன் கலந்து கொண்டேன்!

 *கண்டேன் களித்தேன். கலந்து கொண்டேன்!*


*கண்களால் கடவுளைக் காணமுடியாது என்றார்கள் முன்னோர்கள்*


*கடவுளைக் காணமுடியும் என்றார் வள்ளலார்.*


*கடவுளைக் கண்டார் களித்தார் கலந்து கொண்டார் வள்ளலார்,*


*கடவுளைக் காண்பதற்கு அருள் பெறுவது ஒன்றே முக்கியம் என்கின்றார்,*


*அருள் பெறுவதற்கு உண்டான உண்மை வழியைக் கண்டுபிடித்து அதற்கான நேர்வழியைக் காட்டியவர் வள்ளலார் ஒருவரே !* 


*தன் ஆன்மாவைக் கண்டு  ஆன்மநேயத்தின் உண்மையை அதன் ஒருமைப்பாட்டு உரிமையை உணர்ந்து வாழ்பவரே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற முடியும் என்ற உண்மையை உலக மனித குலத்திற்கு தெரிவித்தவர் வள்ளலார்* 


*கடவுளின் அருளைப்பெறுவதற்கான பயிற்சியைப் பெறுவதற்காகவே  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் தோற்றுவித்துள்ளார்.* 


*வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சங்கமே தலைமைச் சங்கமாகும்*


*அச் சங்கத்தின். தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே! அச் சங்கத்தை இயக்குபவர் வள்ளலார் ஒருவரே!* 


*ஆதாரம் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்!*


செத்தவர்கள் எல்லாம்  திரும்ப எழுந்துவரச் சித்தம் வைத்துச் செய்கின்ற சித்தியனே 


*சுத்தசிவ சன்மார்க்க சங்கத் தலைவனே* நிற்போற்றும் என் மார்க்கம் நின் மார்க்கமே !


 மேலும் சன்மார்க்க சங்கத்தை நடத்துபவர் வள்ளலார் பாடல்!


உலகம் எல்லாம் போற்ற ஒளி வடிவனாகி இலக அருள் செய்தான் இசைந்தே திலகன் என 


*நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான் தானே எனக்குத் தனித்து ! 


என்னும் பாடல்களிலே *தலைவர் யார்?* *நடத்துனர் யார்?* என்ற உண்மையை வெளிப்படையாக  தெரியப்படுத்தி உள்ளார் என்பதை சன்மார்க்கிகள் உணர்ந்து தெரிந்து கொள்ள வேண்டும் 


*சாகாக்கல்வி!*சாகாக்கலை*


*சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் வாயிலாக சாகாக்கல்வியும்,சாகாக்கலையும் (பயிற்சி) கற்றுக் கொள்வதே முக்கியமானதாகும், கற்றுக் கொடுப்பவரே வள்ளலார்*


*திருஅருட்பா ஆறாம் திருமுறை!*


*பயிற்சியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகளை பின்பற்றும் வழிமுறைகளைக் கற்றுக்கொள்ளவே திருஅருட்பா ஆறாம் திருமுறை என்னும் அருள் நூலை எழுதி ( அருள் பொக்கிஷம்) வைத்துள்ளார்* 


*சாகாக்கல்வி கற்கும் மாணவர்களுக்கு சுத்த சன்மார்க்கி என்று பெயர் வைத்துள்ளார்* 


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்!*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய  சாதி சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*


*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.* 


*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள்.* 


*அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள். எனத் தெளிவாக பதிவு செய்துள்ளார் வள்ளலார்.*


*சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய சாதனம்!*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது; கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் என்கிறார் வள்ளலார்"* 


*மேலே கண்ட உண்மை உணர்ந்து ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெறும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளார் வள்ளலார்*


*மேலும் கடவுளே சொல்லியதாகச் சொல்கிறேன் என்கின்றார். !*


*கடவுள் ஒருவர் உண்டென்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.*


*மேலே கண்ட உண்மையை உணர்ந்து வாழ்க்கையில்கடைபிடிப்பவர்களே சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றும் தகுதி உடைவர்கள் ஆவார்கள்* 


வள்ளலார் பாடல் !


அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்


எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே

எந்தை நின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்


செப்பாத மேனிலை மேல் *சுத்தசிவ மார்க்கம்*

திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்


தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்

தலைவ நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.!


*சுத்த சன்மார்க்கம் என்பது பக்தி மார்க்கம் அல்ல !*


*சரியை கிரியை  மார்க்கத்தை தாண்டிய ஞானயோக மார்க்கத்தில் உள்ளவர்களுக்காக சொல்லியதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும் என்கின்றார்*.


வள்ளலார் பாடல் !


ஆக மாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்

பாகமாம் பர வெளிநடம் பரவுவீர் உலகீர்


மோக மாந்தருக் குரைத்திலேன் இதுசுகம் உன்னும்

*யோக மாந்தர்க்குக் காலம் உண் டாகவே உரைத்தேன்.!*


மேலும் ஒரு பாடல்! 


வாட்டமொடு சிறியனேன் செய்வகையை அறியாது

மனமிக மயங்கிஒருநாள்

மண்ணிற் கிடந்து அருளை உன்னி உல கியலினை

மறந்து துயில் கின்றபோது


நாட்டமுறு வைகறையில் என்அரு கணைந்து என்னை

நன்றுற எழுப்பி மகனே

*நல்யோகம்* *ஞானம் எனி னும் புரிதல் இன்றிநீ*

*நலிதல் அழகோ* எழுந்தே


ஈட்டுக நின் எண்ணம் பலிக்க *அருள் அமுதம்* 

உண்டு

இன்புறுக என்றகுருவே

என்ஆசை யேஎன்றன் அன்பே நிறைந்த பே

ரின்பமே என்செல்வமே


வேட்டவை அளிக்கின்ற நிதியமே *சாகாத*

*வித்தையில்* விளைந்தசுகமே

*மெய்ஞ்ஞான* நிலைநின்ற *விஞ்ஞான* கலர்உளே

மேவுநட ராஜபதியே.!


**மேலே கண்ட பாடல்களின் வாயிலாக படித்து தெரிந்து கொள்ள வேண்டும். ஞான சரியை ,ஞானகிரியை,ஞான யோகம்,ஞானத்தில் ஞானம் என்னும் சாகாக்கல்வியைக் கற்றுக் கொள்வதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்* 


*எனவேதான் இறுதியாக மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் புறத்தில், வள்ளலார் சொல்லியது, ஸ்ரீமுக வருடம் கார்த்திகை மாதத்தில் உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து..*


*இதைத். தடைபடாது ஆராதியுங்கள்  இந்தக்கதவைச் சாத்திவிடப் போகிறேன்,* 


*இனி கொஞ்சம் காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால்,உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல்*


*நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய (ஞானசரியை) 28 பாசுரம் அடங்கிய பாடல்களில் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்திற் செய்யுங்கள்.*


*நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன்,இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று திருவார்த்தைகளால் அருளியுள்ளார்கள்.* 


*நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன்,பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள்,ஒருகால் பார்க்க  நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார் ,என்னைக் காட்டிக்கொடார்* என்று தெளிவாகச் சொல்லி உள்ளார்.


*வள்ளலார் இப்போது எங்கு இருக்கின்றார்? என்ன ரூபமாக இருக்கின்றார்? என்ன செய்து கொண்டு இருக்கின்றார்? என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்...*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

**9865939896*

திங்கள், 21 நவம்பர், 2022

கடவுளைக் கண்டேன்! தொடர்ச்சி .10.

 *கடவுளைக் கண்டேன்!*


தொடர்ச்சி..10 


*நண்பனே பகைவன்,! நண்பனே எதிரி!* 

*நண்பனே துரோகி!*


*நல்லோர் மனத்தை நடுங்க செய்யாதே !*


*மனம் மொத்த நட்பிற்கு வஞ்சகம் செய்யாதே !*

வள்ளலார் சொல்லியது !


*கடந்த வாரக் கட்டுரையை படித்துப் பார்த்த நண்பர் ஒருவர்,ஆடிட்டர் இராம சுப்ரமணியம் ஐயா அவர்கள் மகனுக்கு அனுப்பி வைத்துள்ளார் அவர் படித்து பார்த்துவிட்டு,என்னிடம் போனில் தொடர்புகொண்டு ரொம்ப நேரம் மகிழ்ச்சியுடன் பேசி மகிழ்ந்தார், அவர்பெயர் சேகர் அவரும் ஆடிட்டராக உள்ளார்.*


*தொழிற்சாலை ஆய்வாளர் !*


*சென்னையில் இருந்து ஈரோட்டிற்கு மாற்றலாகி வந்தவர், தொழிற்சாலைகளின் ஆய்வாளராக பணிபுரிந்தவர் மணிவண்ணன் என்பவர். அவரும் அவருடைய மனைவியும்.துணி தைப்பதற்காக  எங்கள் கடைக்கு வந்தார்கள், அவர்கள் விருப்பபடி துணி தைத்து கொடுத்ததால்நட்பும் பழக்கமும் அதிகமாயிற்று*


வீடு வாடகை ! 

 

*நல்ல தண்ணீர் வசதியான  வீடு வாடகைக்கு வேண்டும் என என்னிடம் சொன்னார்கள்.நாங்கள் இடையன்காட்டுவலசு ஒத்தைப் பனைமரம் என்ற இடத்தில் லைன் வீட்டில் குடி இருந்தோம், அதில் ஒரு வீடு காலியாக இருக்கிறது. வந்து பாருங்கள் பிடித்தால் வந்து விடுங்கள் என்றேன்.அந்த வீட்டு உரிமையாளர் பழனிச்சாமி என்பவர் முன்னாள் வார்டு உறுப்பினர் எமக்கு நன்கு பழக்கமானவர் என்றேன்*


*வீட்டை வந்து பார்த்தார்கள் பிடித்துவிட்டது,உடனே அட்வான்ஸ் கொடுத்துவிட்டு குடிவந்து விட்டார்கள்.*


*ஈரோடு டவுன் காவல்துறை துணை ஆய்வாளர் சாகுல்அமீத் அவர்கள் குடும்பமும் எங்கள் லைன் வீட்டில் குடி இருந்தார்கள்.*


*நாங்கள் மூன்று குடும்பமும் நல்ல நட்புடன் பழகி வந்தோம். சமையல் உணவுப் பொருள்கள் முதற்கொண்டு கொடுப்பதும் வாங்குவதும், பரிமாற்றம் செய்யும் அளவிற்கு மூன்று குடும்ப பெண்களுக்கும் நல்ல பழக்க வழக்கம் இருந்தது.அது கொஞ்சம் காலம்தான் நீடித்தது.*


*அவர்கள் இரண்டு குடும்பமும் அரசு சம்பளம் வாங்குபவர்கள்,நாங்கள் தையல் தொழில் செய்து சம்பாதித்து வாழ்பவர்கள், இருந்தாலும் எங்களின் குடும்ப வாழ்க்கை, கணவன் மனைவி ஒற்றுமை, குழந்தை வளர்ப்பு, போன்ற செயல்கள்  அந்த  இரண்டு குடும்ப பெண்களுக்கும்  பொறாமை என்ற குணம் பற்றிக் கொண்டது. அவர்கள் தேவை இல்லாமல் உள்ஒன்று வைத்து புறம் ஒன்று  பேசுவது,தற்பெருமை பேசுவது, வெட்டி பந்தா காட்டுவது என் மனைவிக்கு பிடிக்கவில்லை.பிடிக்கவில்லை என்றால் அவர்களுடன் பழகுவதை நிறுத்திக்கொள் என்றேன்*


என் மனைவிக்கு உண்மை ஒழுக்கம்

நேர்மை மிகவும் முக்கியமானதாக கருதி வாழ்பவள்


*மேலும் அரசு அதிகாரிகளின் மனைவிகள் என்றால் பெருமை மிக்கவர்கள் அதிகாரம் பெற்றவர்கள். மற்றவர்களைவிட உயர்ந்தவர்கள் என நினைக்கும் அற்ப குணமுடையவர்கள்*, 


*மேலும் அரசு அலுவலக பியூன்களைக் கொண்டு மளிகைப் பொருட்கள், காய்கறிகள் வாங்கி வரச்செய்வது,மேலும் வண்டி வாகனங்களை சுத்தப் படுத்துவது. வீட்டு வேலைகளைச் செய்ய சொல்வது,குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வது, அழைத்து வருவது,மேலும் எல்லா வேலைகளையும் தங்களுக்கு அடிமைபோல் வேலைக்காரனைப் போல் பயன் படுத்திக் கொள்வதால், எல்லோரையும்விட தங்களை உயர்ந்தவர்களாக வெளியே பந்தா காட்டிக்கொள்வது அப் பெண்களின் பழக்கம்.* 


*மற்ற குடும்ப பெண்களைக் காட்டிலும் தாங்கள்தான் அறிவாளிகள் புத்திசாலிகள் என்று மனக்கோட்டை கட்டிக் கொண்டு மிகுந்த ஆணவத்துடன் ஒருவரை ஒருவர் புறம் பேசுவதும் கிண்டல் அடிப்பதும் வாடிக்கையாக கொண்டு அந்த இரண்டு அதிகாரிகளின் மனைவிகளும் பேசுவதால், என் மனைவி அவர்களுடன் பேசுவதையும் தொடர்பு கொள்வதையும் நிறுத்திக் கொண்டாள்.* 


*அது அவர்களுக்கு மேலும் கோபத்தையும் வக்ர புத்தியும் உண்டாக்கியது.அவர்கள் கணவன்மார்கள் மனைவிகள் சொல்லை கண்மூடித் தனமாக நம்புபவர்கள்.*


*அவர்களுடைய கணவன்மார்களிடம் எங்களைப்பற்றி ஒன்று கிடக்க ஒன்று பொய்யான விஷயங்களைச் சொல்லி விரோதத்தை ஏற்படுத்தி விட்டார்கள். அந்த மணிவண்ணனும் சாகுல்அமீதும் என்னிடம் நன்றாக பேசியவர்கள் மனைவிகளின் பேச்சைக் கேட்டு என்னிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டார்கள்.நான் எதையும் கண்டு கொள்ளாமல் என் தொழிலில் கவனமாக இருந்தேன். எங்களிடம் துணி தைப்பதையும் நிறுத்திக் கொண்டார்கள்*


*வேறு தையல் கடைகளில் ஜாக்கெட் (பிளவுஸ்) தைக்க துணி கொடுத்து உள்ளார்கள். அவர்கள் தைத்து கொடுத்தது, பிட்டிங் சரியில்லாத்தால் அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஆதலால் அவர்கள் ஆபீஸ் பியூனிடம் ஜாக்கெட்  தைக்க துணி கொடுத்து அனுப்பி உள்ளார்கள். அவர் துணிகளை கொண்டு வந்து கொடுத்து நடந்த விபரத்தைச் சொல்லி துணி தைத்து தரும்படி கொடுத்தார். அவர் நல்ல மனிதர் என்னிடம் நல்ல அன்பு கொண்டவர்*


துணி வாங்காமல் திருப்பி அனுப்பியது!


*எங்கள் கடையில் வேலை அதிகமாக உள்ளது இப்போது தைத்துதர வாய்ப்பில்லை,ஒருமாத காலமாகும் என்றேன்,சரிங்க கேட்டு வருகிறேன் என்று துணி எடுத்துக் கொண்டு சென்று விட்டார்*


*என்மேல் புகார் கொடுத்தவன்!*


*பேக்டரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணனிடம் அவர் மனைவி, துணி தைத்து கொடுக்காமல்  ஸ்பென்ஸர்ஸ் டெய்லர்  வாங்க மறுத்து விட்டார் என்று மனைவி சொல்லியுள்ளார். அரசு அதிகாரி என்று தெரிந்தும், துணி தைத்துதர மறுத்தது அவருக்கு அதிக  கோபத்தை உண்டாக்கிவிட்டது.* 


*அவருக்கு அதிக கோபத்தை தூண்டி பழிவாங்கும் அளவிற்கு அவர் மனைவி சொல்லியுள்ளார், சரி நான் அவரை வேறு வழியில் பழி வாங்குகிறேன் என்று பழிவாங்க ஆரம்பித்து விட்டார்*


பொய் புகார் கொடுத்தல்! 


*மனைவியின் பேச்சைக் கேட்டு, என்னுடைய "ஸ்பென்ஸர்ஸ்" தையல் கடைமீதும் என்மீதும் வருமானவரி அலுவலகத்திற்கு,வருமானவரிஏய்ப்பு செய்வதாக பொய்புகார் கொடுத்துள்ளார்.என்பதை ஆடிட்டர் இராம சுப்ரமணியம் ஐயா மூலமாக  தெரிந்து கொண்டேன்* 


உண்மை அறிந்த நான் அவர் மீது புகார் கொடுத்தேன்.! 


*பேக்டரி இன்ஸ்பெக்டர் மணிவண்ணன்  மீது லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அவர்மீது ஆதாரத்துடன் புகார் கொடுத்தேன். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள், அவர் அரசு அதிகாரி என்பதால் மணிவண்ணன் அலுவலகத்திற்கு சென்று உங்கள் மீது லஞ்சம் வாங்குவதாக புகார் வந்துள்ளது ஞாக்கிரதையாக இருங்கள் என அட்வைஸ் செய்துவிட்டு சென்றுள்ளார்கள், நான்தான் புகார் கொடுத்துள்ளேன் என்பதை அதிகாரிகளின் வாயிலாக தெரிந்து கொண்டார் மணிவண்ணன்*


*ஆள் வைத்து அடிக்க திட்டம் !*

  *அக்காலத்தில் ஈரோடு மரப்பாலம் என்ற இடம் ரவுடிகள் அதிகம் உள்ள பகுதியாகும், பணம் கொடுத்தால் எதையும் செய்வார்கள். மணிவண்ணனுக்குத்  தெரிந்த ஆட்களைக் கொண்டு என்னை அடிப்பதற்கு திட்டம் வகுத்து  ஏற்பாடு செய்துள்ளார்.*


*நான் கடையின் வேலையை முடித்துக் கொண்டு இரவு 9-00 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம்.*


 *எங்கள் வீட்டின் வெளியே நான்கு ரவுடிகள் என் வருகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்து உள்ளார்கள் அவர்கள் மணி வண்ணனுடன் பேசிக் கொண்டு இருப்பதை என் மனைவி தெரிந்து கொண்டு பக்கத்து வீட்டில் உள்ள  லேண்ட லைன்  போனி்ல் பயத்துடன் விபரம் தெரிவித்தாள், சரி நீ எதற்கும் பயப்படாதே, குழந்தைகளை சாப்பிட வைத்து கதவை சாத்திக்கொண்டு உள்ளே படுத்துக் கொள், எதுவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்என்னைத் தவிர வேறு யார் வந்து கதவைத் தட்டினாலும் கதவைத் திறக்காதே என்று கண்டிப்பாக சொல்லிவிட்டேன். எதையும் சந்திப்பேன் சாதிப்பேன் என்பது என் மனைவிக்கு நன்கு தெரியும்*    


*கோவை S P க்கு தகவல் தெரிவித்தல் !*


*அப்போது ஈரோடு டவுன் தாலுக்கா தலைமை காவல் நிலையம் உள்ளது. அதில் புகார் கொடுக்கலாம் என்றால் நாங்கள் குடியிருக்கும்  லைன் வீட்டில்  குடியிருப்பவர் சப் இன்ஸ்பெக்டர் சாகுல்அமீது,அவர் மணிவண்ணன் நண்பர் அதனால் நேர்மையாக கண்டிக்க மாட்டார், விசாரிக்க மாட்டார் என்ற எண்ணம் எமக்குத் தோன்றியது. அதனால் ஈரோட்டில் புகார் கொடுக்கவில்லை.* 


*நேரடியாக கோவை மாவட்ட S P யிடம் புகார் கொடுக்கலாம் என எண்ணம் தோன்றியது.கோவை SP காவல் நிலையத்திற்கு என் கடையில் உள்ள  போனில் அவசரகால  லைட்டிங்கால் புக் செய்து   தொடர்பு கொண்டேன்*


*அப்போது கோவை மாவட்ட காவல்துறை SP யாக திரு.பஞ்சாட்சரம் அவர்கள் பணியில் இருந்தார். நல்ல நேர்மையானகாவல்துறை அதிகாரி ஆவார்.*


அதன்பிறகு என்ன நடந்தது என்பதை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.


*வள்ளலார் பாடல்!*


தடித்த ஓர் மகனைத் தந்தை ஈண் டடித்தால் தாயுடன் அணைப்பள் தாய் அடித்தால்


பிடித்தொரு தந்தை அணைப்பன் இங்கு எனக்குப் பேசிய தந்தையும் தாயும்


பொடித்திரு மேனி அம்பலத் தாடும் புனித நீ ஆதலால் என்னை


அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும் அம்மைஅப்பா இனிஆற்றேன்! 


*வள்ளலார் பாடிய பாடல்போல் அப்போது என் மனம் ஊசலாடியது.*

*எனக்கு தாயும் தந்தையும் சிறு வயதிலே காலமாகி விட்டார்கள் ஆகையால் என்னை ஆதரிக்க அரவணைக்க காப்பாற்ற ஆண்டவரைத் தவிர வேறு உற்ற துணை யாரும் இல்லை என்பதை எப்போதும் உணர்வேன். மனிதர்கள் யாரையும் நான் முழுவதுமாய் அப்போதும் இப்போதும் எப்போதும் நம்புவதே இல்லை.*  


தொடரும்...


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

புதன், 16 நவம்பர், 2022

கடவுளைக் கண்டேன்! பாகம் 9,

 *கடவுளைக் கண்டேன்!*


தொடர்ச்சி பாகம் ..9 


*ஈரோட்டில் ஸ்பென்ஸர்ஸ் என்ற பெயரில் பெரிய ஷோரூம்,பவானியில் ஒருஷோரூம்.நிறைய வேலை ஆட்கள்,வீட்டிற்கு வேலைக்காரி,பைக்,போன் ஆடம்பரமான வாழ்க்கை,மகிழ்ச்சியான குடும்பம், நிறைய வருமானம் கொட்டுகிறது என ஈரோட்டு மக்கள் கண்களில் கண்டு மனதில் பொறாமை,உள் வேக்காடு போன்ற குணங்கள் தோன்றியது.*


*பொய் புகார் பெட்டிஷன்!*


*ஈரோடு  வருமான அலுவலகத்திற்கு பொய்யான புகார்... கதிர்வேலுக்கு நிறைய வருமானம் வருகிறது,அரசாங்கத்திற்கு  கணக்கு காட்டாமல் வரிஏய்ப்பு செய்கிறார் என்று ஒருவர் என் மீது புகார் கொடுத்துள்ளார்* 


*அந்த புகாரின் அடிப்படையில் வருமான அதிகாரிளுடன் பானுதுறை என்பவர் வீட்டிற்கும் கடைக்கும் வந்து சோதனை நடத்தினார்கள்,பணம் ஏதும் இல்லை நகைகள் ஏதும் இல்லை, வீட்டில்  கடையில் உள்ள கொஞ்சம் ஆடம்பரமான பொருள்கள், மற்றும் வேலையாட்கள் அவர்கள் சம்பளம் மற்றும் மாதவருமானம்,வருட வருமானம் எல்லாம் விசாரித்து  கணக்கெடுத்து பேப்பரில் எழுதி பதிவு செய்து கொண்டு சென்று விட்டார்கள். அலுவலகத்திற்கு விசாரனைக்கு வரும்படி தேதி நாள் குறித்த  சம்மன் அனுப்பினார்கள்*


*நாம் செய்யும் தொழிலோ வியாபாரம் அல்ல.உடல் உழைப்புத் தொழில்.உழைப்பிற்குத் தகுந்த வருமானம், வருமானத்திற்கு தகுந்த அளவு நியாயமான, நிம்மதியான,நேர்மையான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வந்தோம். இதில் வரி ஏய்ப்பிற்கு ஏதும் இடமில்லை.*


*இந்த உலகத்தில் மகிழ்ச்சியுடன் ஆனந்தமாக வாழ்வது, ஒரு சிலரின் உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள  இடமில்லை.*


*வருமானவரி அலுவகத்தில் இருந்து வந்த சம்மனைப் பார்த்ததும் மனம் வேதனையில் துடித்தது.நமக்கும் எதிரிகள் உள்ளார்கள், அவர்கள் யாராக இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருந்தேன்*


*வள்ளலார் பாடல்!*


தீது நினைக்கும் பாவிகட்கும் செய்தாய் கருணை எனத்தெளிந்து


வாது நினைக்கும் மனக்கடையேன் மகிழ்வுற் றிருந்தேன் என்னளவில்


சூது நினைப்பாய் எனில்யார்க்குச் சொல்வேன் யாரைத் துணைகொள்வேன்


ஏது நினைப்பேன் ஐயோநான் பாவி உடம்பேன் எடுத்தேனே.! 


மேலும்


கூடுங் கருணைத் திருக்குறிப்பை இற்றைப் பொழுதே குறிப்பித்து


வாடுஞ் சிறியேன் வாட்டம்எலாந் தீர்த்து வாழ்வித் திடல் வேண்டும்


பாடும் புகழோய் நினைஅல்லால் துணை வே றில்லைப் பரவெளியில்


ஆடுஞ் செல்வத் திருவடிமேல் ஆணை முக்கால் ஆணையதே!


*என்ற வள்ளலார் பாடல்போல் மனம் அலை பாய்ந்தது!*


 ஆடிட்டர் வருகை ! 


*சம்மன் வாங்கி படித்து பார்த்து மனம் வேதனையில் இருந்த தருணம்,ஈரோட்டில் முதன்மையான் எல்லோராலும் மதிக்கத்தக்க அனுபவம் வாய்ந்த ஆடிட்டர் திரு. இராம சுப்ரமணியம் ஐயா அவர்கள், என்கடையின் முன்பு காரில் வந்து இறங்கி தனக்கு சுப்பா தைப்பதற்காக துணி எடுத்துக் கொண்டு வந்தார். அவரும் அவருடைய குடும்பமும் என்னுடைய நிரந்தர வாடிக்கையாளர்கள் ஆவார்கள்.*


*என்மீது அளவில்லாத அன்பும் நட்பும் பாசமும் கொண்டவர்.ஓய்வு நேரங்களில் என்னிடம் உரையாடி மகிழ்வார். என் வளர்ச்சியைப்பார்த்து பெருமையுடன் பாராட்டும் நல்ல குணமுடையவர்*


*நடந்த வண்ணம் உரைத்தல்!*


*நடந்த விபரங்களை ஆடிட்டரிடம்  விளக்கமாக சொல்லி சம்மனைக் கொடுத்தேன், படித்து பார்த்துவிட்டு சிரித்தார். அவர் சிரிப்பை கண்டு மகிழ்ச்சி உண்டாயிற்று. இதற்கு ஏன் கவலைப்படுகிறாய் நான் பார்த்துக் கொள்கிறேன். என்று சொல்லிவிட்டு நாளை காலை 10 மணிக்கு வருகிறேன் ரெடியாய் இரு, நானே வந்து அழைத்து செல்கிறேன் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.* 


*சொல்லியவாறு   மறுநாள் காலை வந்தார் அவர் காரிலேயே என்னை அழைத்துக் கொண்டு சென்றார். வருமானவரி அலுவலகத்திற்குள் சென்றார்.* *அவரைக் கண்டதும் அதிகாரிகள் எழுந்து நின்று பவ்வியமான மரியாதை கலந்த வணக்கம் தெரிவித்து வாருங்கள் வாருங்கள் என அழைத்து அமர வைத்தார்கள்.அவ்வளவு மரியாதை வருமானவரி அலுவலகத்தில் அவருக்கு. எனக்கு ஆச்சரியமாக இருந்தது*


*சம்மனை தள்ளுபடி செய்தல்!*


*உயர் அதிகாரியிடம் எனக்கு வந்த சம்மனைக் காட்டி விபரம் கேட்டார். அதிகாரி அவர்கள் என்மீது பொய்புகார் அனுப்பிய மனுவை ஆடிட்டரிடம் கொடுத்தார். படித்து பார்த்துவிட்டு என்னிடம் கொடுத்து இவர் யார்? உமக்குத் தெரிந்தவரா என்று கேட்டார், ஆம் ரொம்ப பழக்கமானவர் தெரிந்தவர் எனறு சொன்னேன்* 


*இதுபோன்று கூடவே இருந்து குழியைப் பறிக்கும் குள்ளநரிகள் நிறையபேர் உண்டு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுபவர்களிடம் உறவு வைத்துக் கொள்ளாதே தொடர்பு வைத்துக் கொள்ளாதே என்று அறிவுரை கூறினார்.*


*அதிகாரி புகார் மனுவை ரத்து செய்தார்!*


*வருமானவரி அதிகாரியிடம் ஆடிட்டர் என்னைப்பற்றிய விபரங்களை நன்கு எடுத்துரைத்தார்*


*மேலும் கோடி கோடியாய் கொள்ளை அடிக்கும் வியாபாரிகள்,பெரிய பெரிய கம்பெனிகள் மற்றும் அரசியல்வாதிகள்,மற்றும் அதிகாரிகள் போன்றவர்கள் கோடி கணக்கில் வரிஏய்ப்பு செய்து அரசாங்கத்தை ஏமாற்றிக் கொண்டுளார்கள் அவர்களை நாம் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்க முடிவதில்லை.இதுதான் இன்றைய உலகத்தின் சட்டத்திட்டங்கள் என அதிகாரிகளிடம் விமர்சனம் செய்தார்*


*என்னுடைய நண்பர் கதிர்வேல். அவர் தொழிலில் கடுமையாக உழைக்கும் அறிவு சார்ந்த உழைப்பாளி. தையல் நுணுக்கங்களைத் நன்கு தெரிந்தவர்.* 


*ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவரையும் திருப்தி படுத்தும் தையல் தொழில் வல்லுனர்.தையல் தொழிலில் டாக்டர் பட்டம் பெற்றவர். நிறைய வாடிக்கையாளர்களை கொண்டவர். நேர்மையான முறையில் சம்பாதிக்கின்றவர். அவர்  தொழில் வரிஏய்ப்பு செய்ய முடியாத நேர்மையான  தையல் தொழிலாகும் என்பதை விளக்கமாக அதிகாரியிடம் எடுத்துரைத்தார். அதிகாரி ஆச்சரியமாக கேட்டுக் கொண்டே இருந்தார்* 


*கதிர்வேல் பற்றிய விபரங்கள் யாவும் எமக்கு நன்குத் தெரியும், அவருக்காக நான் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்று அதிகாரியிடம் தெரிவித்து, வக்காளத்து பேப்பரில் கை எழுத்துப் போட்டு கொடுத்தார். மேற்கொண்டு பொய்யான புகார்மனு மீது  எந்த  நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லி மனுவை ரத்து செய்ய  வைத்துவிட்டார்.* 


*உயர்அதிகாரி எந்த பதிலும் சொல்லாமல் நீங்கள் சொல்லியவாறு செய்து விடுகிறேன் ஐயா என்று மனுவை தள்ளுபடி செய்தார்* 


*ஆடிட்டர் இராம சுப்ரமணியம் அவர்களை என் வாழ்க்கையில் மறக்கவே முடியாத பெரிய மனிதர் , இனிமையான நண்பர். நல்ல  உயர்ந்த குணம் உள்ளவர், நல்ல அழகானவர், உலக அனுபவம் தெரிந்தவர், நல்ல ஆன்மீக சிந்தனையாளர், அப்படி ஒரு நல்ல பண்பு உள்ளவர் இப்போது அவர் இல்லை என நினைக்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது.* 


*நமக்கு எதிரிகள் நம் அருகியிலேயே இருப்பார்கள் இருக்கின்றார்கள்,ஜாக்கிரதையாக நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் !*  


*நம்முடன் நன்கு பழகுபவர்கள்,நம் உறவினர்கள், நம் தொழில் எதிரிகள், நம் நண்பர்கள், நம் வாடிக்கையாளர்கள் இவர்களே நமக்கு எதிரிகளாகவும் துரோகிகளாகவும் மாறி விடுவார்கள,காரணம் நம்மைப்பற்றிய எல்லா  விபரங்களும் அவர்களுக்கு நன்குத்தெரியும், நம் செயல்கள்  அவர்கள் விருப்பத்திற்கு பாதகமாக மாறுகின்ற போது நேர்மறையாக பேசி தீர்வு கானாமல் நமக்கு பாதிப்பு உண்டாக்கும் வகையில்  எதிரிகளாக மாறிவிடுகின்றார்கள்,இதுவே உலகியல் சுயநலமாகும்*


*நாம் எவ்வுயிருக்கும் துன்பம் செய்யாமல், ஜீவகாருண்ய உணர்வோடு நன்மையே செய்து வந்தால், அதாவது  பொதுநல நோக்கத்தோடு வாழ்ந்தால் எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் இறைவன் எளிதில் நம்மைக் காப்பாற்றி விடுவார், இதுவே சத்தியமான இயற்கை உண்மையாகும்* 


(அப்போது எமக்கு வள்ளலாரைப் பற்றியோ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றியோ தெரியது)


*எம்மீது வருமானவரி அலுவலகத்திற்கு பொய்யான புகார் கொடுத்தவர் யார் ? என நான் தெரிவித்தால் மிகவும் ஆச்சரியப்படுவீர்கள்.* 


அடுத்த கட்டுரையில் தெரிவிக்கிறோம் 


தொடரும்....


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வெள்ளி, 11 நவம்பர், 2022

ஜீவகாருண்யம் சத்விசாரம் என்றால் என்ன ?

  *ஜீவகாருண்யம் என்றால் என்ன ?*


*தவறான வழியில்  சம்பாதித்தை பணத்தை ஏழை எளியவர்களுக்கு கொடுத்துவிட்டு   தன் உயிரைக்  காப்பாற்றிக் கொள்வதே ஜீவகாருண்யம் என்பதாகும்.*


*பணம்( பொருள்) வைத்திருப்பவரை ஆண்டவர் கண்டு கொள்வதே இல்லை.*


 சத்விசாரம் என்றால் என்ன ?*


*எதிலும் பற்று இல்லாமல் இறைவனிடம் மட்டும் பற்று வைக்கும் பரதேசியைத் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆட்கொள்வார்.*


*நமது வள்ளலாருக்கு இராமலிங்க பரதேசி என்று பெயர்.*


*பரத்தை நேசிப்பவருக்கு பரதேசி என்று பெயர் இதுவே சத்விசாரம்.*


*வள்ளலார்போல் வாழ்ந்தால் மட்டுமே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவார் மரணத்தை வெல்ல முடியும்.* 


நன்றி....

பணக்காரனிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் !

 *அருட்பெருஞ்ஜோதி!*


*வள்ளலார் பாடல்!*


பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்து நாம் ஒருவர்பால் பலகால்


மருவினால் *பொருளின் இச்சையால்* பலகால் மருவுகின்றான் எனக் கருதி


வெருவுவர் என நான் அஞ்சி எவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்


ஒருவும் அப் பொருளை நினைத்த போ தெல்லாம் *உவட்டினேன்* இதுவும் நீ அறிவாய்.! 


*பொருள் உள்ளவன் தொடர்போ சவகாசமோ வைக்க வேண்டாம் என்கிறார் வள்ளலார்,* 


*பொருள் உள்ளவனிடம் சென்றால் பொருளின் இச்சையால் நம்மிடம் வருகின்றான் என,பொருள் உள்ளவன் நினைப்பானாம் ஆதலால் அவனிடம் செல்வதற்கு நான் பயந்தேன் என்கிறார் வள்ளல்பெருமான்.*


*நான் அப்பொருளை நினைக்கின்ற போதெல்லாம் உவட்டினேன் அதாவது வாந்தி வருவதுபோல் இருந்தது என்கிறார்* 


(பொருளுக்கு  உயிர்க்கொல்லிஎன்று ஒரு பெயர் உண்டு)


*எனவே உண்மையான ஒழுக்கம் நிறைந்த சுத்த சன்மார்க்கிகள் பொருள் உள்ள பணக்காரனிடம் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.*


*மேலும் பொருள் உள்ளவனிடம் சென்றால் பொருளைக் காட்டி, ஆசைக்காட்டி, வசதியைக் காட்டி,ஆடம்பரத்தைக் காட்டி அவனுக்கு சாதகமாக நம்மை அடிமைகளாய் மாற்றி விடுவான் அதனால் சன்மார்க்கிகள் பொருளுக்கு அடிமை யாகாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அடிமைகளாகி அருளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்!*


வள்ளலார் பாடல் !


அத்தாநான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்

*திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்*


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டுவனே! 


*என்னும் பாடல் மூலம் திருச்சபைக்கே அடிமைகளாய் செய்வித்தல் வேண்டும் என்கிறார்*


மேலும்...


ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற

*உத்தமர்தம் உறவுவேண்டும்*


*உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்*

*உறவு கலவாமை வேண்டும்*


*பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்* பொய்மை

பேசாதிருக்க்வேண்டும்


பெருநெறி பிடித்தொழுக வேண்டும் *மத மானபேய்*

பிடியா திருக்கவேண்டும்*


*மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் *உனைமறவா திருக்கவேண்டும்*

*மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்* 

*நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்!*


*நாம் யாருடன் பழக வேண்டும் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை மேலே கண்ட பாடல்களில் தெளிவாக சொல்லுகின்றார் வள்ளலார், தெரிந்து புரிந்து அறிந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்*


*நான் அப்படித்தான் தனித்து இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு வாழ்ந்து வருகிறேன்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

புதன், 9 நவம்பர், 2022

நீதி மன்றத்தில் நடந்தது என்ன ?

 *நீதி மன்றத்தில் நடந்தது என்ன !*


*திருஅருட்பா மருட்பா என்ற போராட்டம் வழக்கு சைவ சமயத்தாருக்கும் வள்ளலாருக்கும் நடைபெற்றது.*


*அதன் உண்மையை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்..!*


*வள்ளல்பெருமான் எழுதிய பாடல்களைத் திரட்டி பல அன்பர்களின் உதவியோடு வள்ளலாரின் அனுக்கத் தொண்டர்களில் முதன்மையானவர் திரு. வேலாயுதனார் அவர்கள் புத்தகமாக 1867 ஆம் ஆண்டு வெளியிட்டார்கள*. 


*அதில் உள்ள அருள் நிறைந்த தெய்வீக கருத்துக்கள் அடங்கிய பாடல்கள் அனைத்தையும், பள்ளிக்குச் செல்லாத, ஆசிரியரிடம் பாடம் கற்காத, எந்த நூல்களையும் படிக்காத, எவற்றையும் பின் பற்றாத வள்ளல்பெருமான் அவர்கள் எழுதிய அருள் நிறைந்த பாடல்களைப் படித்து பார்த்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆவலோடு புத்தகமாக வெளியிட்டார்கள்* 


*அந்த அருள் நூலுக்கு திருஅருட்பா என்னும் பெயரே பொருத்தமானதாகும் என்பதை அறிந்த, பன்மொழிப் புலவரான உபயகலாநிதி  பெரும்புலவர் என்று வள்ளலாரால் பெயர் சூட்டப்பட்ட "வேலாயுதனார்" அவர்கள் வள்ளலாரின் அனுமதி பெறாமலே புத்தகத்திற்கு,"திருஅருட்பிரகாச வள்ளலார்" அருளிய "திருஅருட்பா" என்னும் தலைப்பு வைத்து நூல் வெளியிட்டார்கள்*


*தமிழகம் முழுவதும் பரவியது!*


*திருஅருட்பா என்பதும், திருமுறை என்பதும் சைவ சமய நூல்களுக்கு மட்டுமே பொருத்தமானதாகும்.வள்ளலார் எழுதிய நூலுக்கு பொருத்தமானது அல்ல என்ற சலசலப்பு,பல கோணங்களில்,பல போராட்டங்கள் நடந்தன*


*தமிழ் படித்த சான்றோர்கள், அறிஞர்கள் இரண்டு பக்கமும் போதிய ஆதாரத்துடன் வாதமும் பிரதிவாதமும் துண்டு அறிக்கைகளின் வாயிலாக எங்குபார்த்தாலும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டே இருந்தன* முடிவு தீர்ந்தபாடில்லை.


*நீதி மன்றம் செல்லுதல்!*


*வள்ளலார் பாடல்!*


மக்கள் சிந்திக்க வேண்டும்...!


*நான்காம் திருமுறை பாடல்!*


சுற்றது மற்றவ்வழி மாசூதது என்று எண்ணாத் தொண்டர் எலாங் கற்கின்றார் பண்டும் இன்றுங் காணார்


எற்றதும்பு மணி மன்றில் இன்ப நடம் புரியும் என்னுடைய துரையே நான் நின்னுடைய அருளால்


*கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே*

*கண்டதும் நின்னிடத்தே உட் கொண்டதும் நின்னிடத்தே*


பெற்றதும் நின்னிடத்தே இன்புற்றதும் நின்னிடத்தே பெரிய தவம் புரிந்தேன் என் பெற்றி அதிசயமே !


மேலும்...


ஏதும்அறி யாதிருளில் இருந்தசிற யேனை

எடுத்துவிடுத் தறிவுசிறி தேய்ந்திடவும் புரிந்து


*ஓதுமறை முதற்கலைகள்* *ஓதாமல் உணர*

*உணர்விலிருந் துணர்த்தி* *அருள் உண்மைநிலை காட்டித்*


*தீதுசெறி சமயநெறி* செல்லுதலைத் தவிர்த்துத்

திருஅருண்மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான்மருளும்


போது மயங் கேல்மகனே என்றுமயக் கெல்லாம்

போக்கி எனக் குள்ளிருந்த புனிதபரம் பொருளே.!


*ஓதாது உணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது  நீ தான்* என்பதெல்லாம் திருஅருட்பாவில் வள்ளலாரே எழுதிய அகச் சான்றுகள்


மேலும்


*ஓதாது உணர்ந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி!* என்பன அகவல் வரிகள். 


*இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளலார். திருஅருட்பா என்பது இறைவன் சொல்ல சொல்ல வள்ளலார் எழுதியது* *ஆதலால் தான் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம் நாயகன் வார்த்தை என்பார் வள்ளலார்* 


மேலும் சொல்லுகிறார்! 


நாடுகலந் தாள்கின்றோர் எல்லாரும் வியப்ப

நண்ணி எனை மாலைஇட்ட நாயகனே நாட்டில்


ஈடுகரைந் திடற்கரிதாம் திருச்சிற்றம் பலத்தே

இன்பநடம் புரிகின்ற இறையவனே எனைநீ


பாடுகஎன் னோடுகலந் தாடுகஎன் றெனக்கே

பணிஇட்டாய் நான்செய்பெரும் பாக்கியம்என் றுவந்தேன்


*கோடு தவறாது* *உனை நான் பாடுதற்கு இங்கேற்ற*

*குணப் பொருளும் இலக்கியமும் கொடுத்து மகிழ்ந் தருளே.!* 


*என்பன போன்ற திருஅருட்பா சான்றுகள், இறைவனால் எழுதப்பெற்றது என்பதை கருத்தில் கொண்டு  "திருஅருட்பா" என பெயர் சூட்ட காரண காரியமாக இருந்துள்ளன*  *இவற்றை அறியாத சைவ சமயத்தைச் சார்ந்தவர்கள் அருட்பா மருட்பா போராட்டத்தில்ஈடுபட்டு இருந்துள்ளார்கள்* 


*திருஅருட்பவை முழுதும் படிக்காதவர்கள், படித்த பண்டிதர்கள், மற்றும் பகுத்தறிவாளர்கள் இன்றுவரை வள்ளலாரைப் பற்றிய செய்திகளை உண்மைக்கு புறம்பாக அவதூராக பேசிவருகிறார்கள்* அவர்களும் இக் கட்டுரையைப் படித்து தெரிந்து கொள்ள வேண்டும்.


*ஆறுமுகநாவலர் வருகை !*


*யாழ்பாணத்தை சேர்ந்தவர் ஆறுமுக நாவலர் சிறந்த சைவ  சமய பற்றுள்ள வெறியர்*


*சைவ சமயத்திற்கு எதிராக கருத்துகள் கூறும் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்மந்தர் போன்றோரின் பாடல்களுக்கு இணையாக இடம்பெறுதல் கூடாது என்று அவர் தீவிரமாக எதிர்த்துப் பேசினார். இராமலிங்கரின் பாடல்கள் அனைத்தும் அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள் என எழுதி,துண்டு பிரசுரங்கள் வாயிலாக நூல் வெளியிட்டதோடு, தனிப்பட்ட முறையில் வள்ளல்பெருமானைத்  தாக்கி பல சொல்லம்புகள் வீசியுள்ளார்.*


*எதையும் கண்டு கொள்ளாமல் மறுப்பான பதில் சொல்லாமல் வள்ளலார் அமைதிகாத்து வந்துள்ளார். மேலும் நாவலருக்கு கோபம் அதிகரித்தது.கடலூரில் உள்ள மஞ்சகுப்பம் நீதி மன்றத்தில் சைவ சமயவாதிகளின் உதவியோடு திருஅருட்பா மீது மருட்பா என்னும்  வழக்குத் தொடர்ந்தார்.*


*வடலூர் தருமச்சாலையில் தங்கிஇருந்த வள்ளல் பெருமானுக்கு நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வந்தது அவற்றை வாங்க மறுத்துவிட்டார்.அருகில் இருந்த வேலாயுதம் அவர்களின்  வற்புறுத்தலினால் பெற்றுக் கொண்டார்*


*நீதி மன்ற விசாரணை நாள் வந்தது !*


*தமிழ்நாட்டில் உள்ள படித்த அறிஞர் பெருமக்கள் சைவ சமயத்தை சார்ந்தவர்களும்,வள்ளலார் தொண்டர்களும் மற்றும் அவருடைய அபிமானிகளும் பொது மக்களும் நீதி மன்ற வளாகத்தில் குவிந்து விட்டார்கள்.*


*வழக்கு தொடுத்த ஆறுமுகநாவலரும் அவரது ஆதரவாளர்களும் வந்து அமர்ந்து கொண்டார்கள்,*


*நீதிபதியும் வந்து அமர்ந்து கொண்டார் வள்ளல்பெருமான் மட்டும் வரவில்லை.*


*இராமலிங்கம் இராமலிங்கம் என அழைப்பாளர் குரல்  அழைக்கப்பட்டது திடீர்என வள்ளலார் உள்ளே நுழைந்தார், அவரைக் கண்டதும் அமர்ந்திருந்தவர்கள் அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் வைத்தனர்.* 


*தன் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதியும் தன்னை அறியாமல் எழுந்து நின்று அவரும் வணக்கம் வைத்தார்.நீதிமன்றம் சிறிது நேரம் ஏதும் புரியாமல் அமைதியான மவுனம் நீடித்தது. நீதிபதிக்கு ஒன்றும்  புரியாமல் எழுந்தவர் சட்டென அமர்ந்து கொண்டார்*


நீதிபதி கேள்வி !


*வழக்குத் தொடுத்த ஆறுமுக நாவலரைப் பார்த்து நீங்கள் வழக்குத் தொடுத்தவர் இராமலிங்கம் வந்தபோது திடீரென பதட்டமுடன் எழுந்து நின்று வணக்கம் சொன்னது ஏன்? என்று கேட்டார்*


*அவர் எல்லோராலும் மதிக்கத்தக்கவர்,மரியாதைக்குறியவர் அதனால் மரியாதை திமித்தமாக எழுந்து நின்று வணக்கம் வைத்தேன் என்றார்.*


*அவற்றை அறிந்து ஏற்றுக் கொண்ட நீதிபதி அவர்கள், நீங்களே எல்லோராலும் மதிக்கத் தக்கவர்,மரியாதைக்குறியவர் என்று ஒப்புக்கொள்வதால் அவர் எழுதிய திருஅருட்பா மறுப்பா அல்ல,அவை திருஅருட்பாதான் என்று தீர்ப்பு அளித்து வழக்கை வள்ளலாருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கிவிட்டு நீதிபதி விடைபெற்று சென்று விட்டார்*


அடுத்த சம்பவம் மிகவும் முக்கியமானது! அதிசயமானது! அற்புதமானது!

உண்மையானது!


*நீதி மன்றத்தில் வள்ளலாருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கியதை பார்த்துக்கொண்டு இருந்த மக்கள் ஆனந்தம் பொங்க கரகோசம் எழுப்பி மகிழ்ச்சியுடன் கலைந்து சென்றார்கள்*


வள்ளலார் நீதி மன்றத்திற்கு எப்படி வந்தார் எவ்வாறு சென்றார் என்பது எவருக்கும் தெரியாது.


வடலூர் மக்கள் உண்மை வெளிப்படுத்தி விட்டார்கள்!


*வடலூரில் இருந்து நீதி மன்றத்தின் தீர்ப்பை காண வந்த மக்கள் வடலூர் சென்று தருமச்சாலையில் உள்ளவர்களிடம், வள்ளலார் நீதி மன்றத்திற்கு வந்தார், வெற்றிகண்டார் என்ற செய்தியை ஆனந்த கூத்தாடி சொல்லி மகிழ்ந்தார்கள்.*


*அவற்றை கேட்ட தருமச்சாலையில் உள்ள அன்பர்கள் வள்ளலார் காலையில் இருந்து இங்கேதான் எங்களுடன் இருந்தார்கள் அவர் எப்படி நீதி மன்றத்திற்கு வந்தார் என்று ஆச்சரியமாக சொல்லி பேசிக் கொண்டார்கள்,*


*அவர்கள் பேசிக்கொண்டு இருந்ததை கவனித்த வள்ளலார் உடனே பிச் என்று சொல்லி அவர்களை அழைத்து இங்கு நடந்ததை வெளியில் சொல்லாதீர்கள் என்று கண்டிப்புடன் சொல்லி உள்ளார்.இருந்தாலும் நம் மக்கள் ரகசியத்தை காப்பாற்ற முடியாமல் வெளியில் சொல்லிவிட்டார்கள்* 


*வாயடங்கி மனமடங்கி இருக்க மாட்டீர்கள் என வள்ளல்பெருமான் கண்டித்துள்ளார்.*


*நீதி மன்றம் சென்றவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*உலக வழக்கில் கவனம் செலுத்தாத வள்ளலார் நீதிமன்றம் செல்லவில்லை*  *ஏன் என்றால்? திருஅருட்பா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லித்தான் வள்ளலார் எழுதியுள்ளாரேத் தவிர வள்ளலார் விருப்படி எதுவும் எழுதியது அல்ல.* *ஆதலால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார் என்ற நம்பிக்கையுடன் வடலூர் தருமச்சாலையிலே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் தொடர்பு கொண்டு இருந்துள்ளார்.*


*ஆதலால் வள்ளலார் உருவத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நீதிமன்றம் சென்றுள்ளார் என்பதே உண்மையாகும்* *அதற்கு சாட்சி நீதிமன்றத்தில் நடந்த காட்சிகளே யாகும்* 


*அகவல் தகவல் வரிகள்!*


அருளலாது அணுவும் அசைந்திடாது அதனால்

அருணலம் பரவுகென்று அறைந்த மெய்ச் சிவமே!


அருணெறி யொன்றே தெருணெறி மற்றெலாம்

இருணெறி யெனவெனக் கியம்பிய சிவமே!


அருள்பெறிற் துரும்புமோர் ஐந்தொழில் புரியும்

தெருளிது வெனவே செப்பிய சிவமே!


என்னும் அகவல் வரிகளில் காணலாம்.


மேலும் வள்ளலார் பாடல்!


என்னையும் என் பொருளையும் என் ஆவியையும்

தான்கொண்டிங் கென்பால் அன்பால்


தன்னையும் தன் பொருளையும் தன் ஆவியையும்

களித்தளித்த தலைவன் தன்னை


முன்னையும் பின்னையும் எனக்கே முழுத்துணையாய்

இருந்த முழு முதல்வன் தன்னை


*அன்னையைச்சிற் றம்பலத்தென் அருட்பெருஞ்சோ

தியைப்பெற்றேன் அச்சோ  அச்சோ.!*


என்னும் பாடல்கள் வரிகளில் நிறைய காணலாம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எலாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

சனி, 5 நவம்பர், 2022

சாதி சமய சழக்கை விட்டேன்!

 *சாதி சமய சழக்கை விட்டேன்!* 


பொறுமையாக படிக்கவும்!


*சாதி சமய சழக்கை விட்டேன் அருட்ஜோதியைக் கண்டேன் !*


*சாதியும் மதமும் சமயமும் பொய்*! 


*சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன் சாத்திரக் குப்பையும் தணந்தேன் !*


*சாதியும் மதமும் சமயமும் காணா ஆதி அநாதியாம் அருட்பெருஞ்ஜோதி!*


*எனபன போன்ற பலநூறு பாடல்களிலும் உரைநடைப் பகுதிகளும் சாதி சமயம் மதங்கள் யாவும் பொய் என்றும்  அவற்றைச் சார்ந்த தெய்வங்களும்  அத் தெய்வங்கள் பெயரால் செய்யப்படுகின்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் யாவும் சுத்த சன்மார்க்கத்திற்கு எதிரானவை தடையானவை என்றும் தெளிவாக சொல்லியும் எழுதியும் வைத்துள்ளார் வள்ளல்பெருமான்* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெறுவதற்கு தடையாக இருப்பதே சாதி சமயம் மதம் போன்றவை என்பதை மிகத் தெளிவாக பதிவு செய்துள்ளார்*


*சன்மார்க்கிகள்  தினமும் வழிப்பாட்டில் செய்யும் விண்ணப்பம்!*


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*


*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,* 


*வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.*


*எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!*


*தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!*


*என்று தினமும் வழிப்பாட்டில் சொல்லிக் கொண்டே இருக்கிறோம்.* அவற்றின் உண்மை என்னவென்று அறிவைக் கொண்டு அறிந்து விலகி விட்டோமா ?


*மேலும் சொல்கின்றார்!*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்!*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்* 


*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும்.* 


*அப்படி இல்லாது இவ்விடம்* *காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.* 


என்றும் எளிய தமிழில் புரியும்படி சொல்லி உள்ளார்.


மேலும்...


*சுத்த சன்மார்க்க சாதனம்!*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால், எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்து அன்புமே முக்கியமானவை. உதாரணம் அருட்பெருஞ் சோதி ஆண்டவர் சொல்லியது;* 


*கருணையுஞ் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக மற்றெல்லாம் மருணெறி யெனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்றிருக்கின்றேன்"*


*சன்மார்க்க சாதனம்!*


*சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம்*. 


*இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.!*


மேலும்...


*நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*


*ஏனென்றால்,? அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும், தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும், கொஞ்சமேனும் புறங் கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள்.*


*இதுபோல், சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.* 


*அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம்.*


மேலும்....


*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.** 


*இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்*?


*உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில்.? "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** *என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.* 


*உண்மைக் கடவுள் யார்? என்பதை தெரிந்து கொள்ளாமல் என்னை தெய்வம் என்று சுற்றுகிறார்கள்!*


*சமயந்தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி யென்று பெயரிட்டுக் கொண்ட பெரியவர்களும் உண்மை யறியாது, சமயவாதிகளைப் போலவே ஒன்று கிடக்க ஒன்றை உளறுகிறார்கள்.* 


*ஆதலால் நீங்கள் அஃது ஒன்றையும் நம்பவேண்டாம் எவைகளிலும் தெய்வத்தைப் புறமுகமாகப் புலப்படச் சொல்லவில்லை. "தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைத் தெய்வமெனச் சுற்றுகின்றார்கள்.* 


*ஐயோ! நம் சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள்!" என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக் கொண்டே இருந்தேன், இருக்கின்றேன், இருப்பேன்.*


*இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் - சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது -* 


*அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்*


*வள்ளலார் இவ்வளவு தெளிவாக  சொல்லியும் சன்மார்க்கி என்று சொல்லிக் கொள்ளும் அன்பர்கள் சாதி சமய மதங்களை விட்டு வெளியே வராமல் சாதி சமய மதம் சாத்திரம் போன்ற குப்பையிலே உழன்று கொண்டு. இருப்பது சுத்த சன்மார்க்கத்திற்கு அழகல்ல என்கிறார் வள்ளலார்.*


வள்ளலார் பாடல்!


சாதியும் மதமும் சமயமும் சாத்திரக் குப்பையும் தணந்தேன்


நீதியும் நிலையும் சத்தியப் பொருளும் நித்திய வாழ்க்கையும் சுகமும்


ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா *அருட்பெருஞ்ஜோதி* என்று அறிந்தேன்


ஓதிய அனைத்தையும் நீ அறிந்தது நான் உரைப்பது என் அடிக்கடி உனக்கே ! 


மேலும் பாடல்!


சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே


ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

ஆருயிர்கள் அகம்புறம்மற் றனைத்தும் நிறை ஒளியே


*ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க* *எனைத்தான்*

*ஓதாமல் உணர்ந்துணர்வாம்* *உருவுறச்செய் உறவே*


சோதிமய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூயநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே!   


*இதுபோல் ஆயிரக்கணக்கான பாடல்களிலும் உரைநடைப் பகுதிகளிலும் தெரியப்படுத்துகின்றார். நாம்தான் அறிவாலே அறிந்து கொள்ள வேண்டும்*


*வள்ளல் பெருமானை எல்லோருக்கும் பிடிக்கும் அதுதான் அவர் தனித்தன்மை*


*சமய சன்மார்க்கியா ?*

*மத சன்மார்க்கியா ?*

*சுத்த சன்மார்க்கியா ?*


*என்பதை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்* 


வள்ளலார் பாடல்!


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை


எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் *சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்*


*பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்*

*பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!*


*எல்லா பற்றுகளையும் விட்டுவிட்ட சுத்த சன்மார்க்கிகளால்தான் அருளைப் பெற முடியும் மரணத்தை வெல்ல முடியும்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*