வெள்ளி, 27 நவம்பர், 2015

வாழ்க்கை என்பது புனிதமானது !

வாழ்க்கை என்பது புனிதமானது !

மனித வாழ்க்கை என்பது மகத்தான வாழ்க்கை .புனிதமான வாழ்க்கை .

மனிதர்கள்  வாழத்  தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

இப்படி மனிதர்கள் வாழ்வது மனிதர்களின் குற்றம் அல்ல .
மனிதர்களுக்கு வாழும் வழியைக் காட்டியவர்கள் .தான் அருளாளர்கள் .

அவர்கள் தான் சாதி,சமயம்,மதங்களை உருவாக்கியவர்கள் .

அவர்கள்தான் கற்பனைக் கலைகளை உருவாக்கி, நிலையாக இருப்பதுபோல் ..கதைகளைக் கட்டி வேதம் ஆகமம்,புராணங்கள் .இதிகாசங்கள் சாத்திரங்கள் போன்ற பொய்யான விதைகளை விதைத்து விட்டார்கள் .
அவை யாவும் உண்மை என்று நம்பி மக்கள் ஏற்றுக் கொண்டு வாழத்  தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

இறைவன் அளவில் அடங்காத அருளைக் கொடுத்து மனிதன் மேனிலைக்கு செல்ல வேண்டும் என்பதற்காகவே  மனிதப் பிறப்பு கொடுத்துள்ளான்.

மனிதன் புனிதமான வாழ்க்கை வாழத் தெரியாமல் புழுதியிலே விழுந்து அழிந்து கொண்டு உள்ளான் .

மனிதனை அழிவில் இருந்து காப்பாற்றத்தான் இறைவன்  வள்ளலாரை இந்த உலகத்திற்கு அனுப்பி உள்ளான்.

வள்ளலார் உலக மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற பெருங் கருணைக் கொண்டு சாதி,சமயம்,மதம்,அற்ற ஒரு பொது நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தயுள்ளார் .

அந்த புனிதமான நெறிதான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற பொது நெறியாகும்.

அந்த புனிதமான நெறியைப் பின்பற்றி வாழ்பவனே மனிதன் .

''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க நெறியைப் பின்பற்றி வாழ்பவனே மனிதன் '' அவனே புனிதமானவன் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

வையத்தீர் வான் அகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே யுறு மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கை அதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே
மெய் யகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித்தந்தை இத் தருணம் தனிலே
செய் யகத்தே வளர் ஞான சித்தி புரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே !

திரு நெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு
வரு நெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெரு நெறியிற் சித்தாடத் திரு உளங் கொண்டு அருளிப்
பெருங் கருணை வடிவுனொடு வரு தருணம் இதுவே
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்
கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

இந்த உலகத்தில் வாழ்பவர்களும் வானத்தில் வாழ்பவர்களும் ,மற்று எங்கு எங்கு வாழ் பவர்களாய் இருந்தாலும் ,எந்த அருளாளர்களாய் இருந்தாலும் சரி ,அவர்களின் வாழ்க்கை எல்லாம் உண்மையான வாழ்க்கை அல்ல .

மனிதனாக பிறந்தவர்கள் உண்மையான கடவுள் என்னும் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்'' ''அருளைப் பெற்று ''மரணத்தை வென்று வாழ்பவர்களே ,புனிதமான வாழ்க்கையைப் பெற்றவர்கள் ஆகும்

மற்ற தெய்வங்கள் இடத்தில் இருந்து பெரும் ''அருளுக்கு மதிப்பும் இல்லை, மரியாதையும் இல்லை,புகழும் இல்லை..சக்தியும் இல்லை,முக்தியும் இல்லை,சித்தியும் இல்லை,ஆற்றலும் இல்லை''.

எல்லோருக்கும் அருளைக் கொடுப்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .அவர் இடத்தில் இருந்து நேரிடையாக பெறுபவருக்கு மட்டுமே மரணத்தை வெல்லும் ஆற்றல் உண்டு.

எனவே, தான் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் நேரிடையாக அருளைப்  பூரணமாகப் பெற்று மரணத்தை வென்றார் .

அதேபோல் உலகத்தில் உள்ள மக்களை நேரிடையாக அருளைப் பெறுவதற்கு அழைக்கின்றார் நமது வள்ளலார் .
நாம் அனைவரும் வள்ளலார் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க'' நெறியில் சேர்ந்து இறைவன் அருளைப் பெற்று ,மரணத்தை வென்று வாழ்வதே, புனிதமான வாழ்க்கையாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.9865939896,

மனிதன் அழிவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளது !

மனிதன் அழிவதற்கு இரண்டு வழிகள்தான் உள்ளது !


ஒன்று மது ..ஒன்று மாமிசம்

கள்,கொலை,காமம்,களவு,பொய்.இந்த ஐந்து பஞ்ச மா பாதகங்களையும் விடவேண்டும்

இந்த மா பாதகங்களில் முதன்மையானது மது ,மாமிசம் இந்த இரண்டையும் விட்டவர்கள் மகிழ்ச்சியுடன் வாழலாம் .இந்த இரண்டையும் விட்டால் மற்றவை தானாக நின்றுவிடும்.

மது ;--,அறிவையும்,புத்தியையும் மனத்தையும் கெடுக்கும் அதனால் பல தவறுகள் செய்து துன்பம் நிறைந்து சீக்கிரம் உயிரை விட்டுவிடுவான் .

மாமிசம்;-- ..அறிவையும்,புத்தியையும்,மனத்தையும், கெடுப்பதோடு அல்லாமல் உடம்பில் உள்ள அணுக்களை கெடுத்து வியாதி உண்டாக்கி சீக்கிரம் அழிந்து விடுவான் .
மேலும் அறிவு விளக்கத்திற்கும் அருள் விளக்கத்திற்கும்  தடையாக இருப்பது மாமிசம்,

மதுவைவிட மிகவும் கொடுமையானது மாமிசம் உண்பது.  ஏன் என்றால் இறைவன் படைத்த உயிர்களை அழிப்பது ,அதன் புலாலை உண்பது இறைவன் ஏற்றுக் கொள்வதில்லை.

எவ்வளவுதான் அறிவு உள்ளவனாக இருந்தாலும் அவன் புலால் உண்பவனாக இருந்தால் அவன் மனித இனத்தை சேர்ந்தவன் அல்ல ...அவன் மிருக குணம் உள்ளவன், மிருக இனத்தை சேர்ந்தவன்  என்கின்றார் வள்ளலார்...

பீகாரில் முழு மது விளக்கு அமல் !

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் அவர்கள் தேர்தலில் மக்களுக்கு வாக்கு அளித்தபடி அந்த மாநிலத்தில் மதுவிலக்கை அமல் படுத்தி உள்ளார் .

மது விற்பனை மூலம் நான்கு ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் வருகின்றது .மக்களை அழிக்கும் அந்தப்பணம் தேவை இல்லை .வேறு வழிகளில் அந்த பணத்தை அரசுக்கு கொண்டு வந்துவிடலாம் என்ற உறுதியோடு மது விலக்கு அமலுக்குக் கொண்டு வந்து விட்டார் .

நம்முடைய தமிழகத்தில் உள்ள முதல்வர் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்கின்றார் .எண்ணக் காரணம் என்று தெரியவில்லை.

வருகின்ற சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு தான் நல்லது நடக்கும்.அதுவரையில் தமிழக மக்கள் பொறுத்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான் .

அரசு மக்களைக் காப்பாற்றுகிறதோ இல்லையோ மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.அதுதான் மக்களுக்கு நல்லது.

எந்த ஒரு மனிதனும் மற்றும் குடும்பங்களும் மது,மாமிசம் இல்லாமல் வாழ்ந்தால் அவர்கள் என்றும் வாழ்க்கையில் குறைவு இல்லாமலும்,துன்பம் இல்லாமலும்,வியாதி இல்லாமலும்,அகால மரணம் இல்லாமலும்,நிறைவுடன்  மகிழ்ச்சியுடன் வாழலாம் .

மது, மாமிசம் இல்லாத வீட்டில் என்றும் இறைவன் பாதுகாப்பாக இருந்து தன்னுடைய அருளை வழங்கிக் கொண்டே இருப்பார்.

மது ,மாமிசத்தை விடுங்கள் மகிழ்ச்சியுடன் வாழுங்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ...9865939896,

வியாழன், 26 நவம்பர், 2015

வள்ளல்பெருமானின் உடம்பு !

வள்ளல்பெருமானின் உடம்பு !

வள்ளல்பெருமான் வடலூர் சத்திய தருமச்சாலையில் தங்கி இருந்த காலம் .

வள்ளலார் தருமச்சாலையில் இருப்பார் ,திடீர் என்று யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று விடுவார் ,எங்கு போகிறார் என்பது எவருக்கும் தெரியாது .

ஒருநாள் வெளியே சென்ற வள்ளல்பெருமான் அதிக நேரமாகியும் திரும்பி வரவில்லையே என்று நினைந்து வேலூர் சண்முகம் அவர்கள் சாலையை விட்டு வெளியே சென்று தேடினார் .

மேட்டுக்குப்பம் செல்லும் வழியில் மரங்கள் நிறைந்த இடத்தில் வள்ளல்பெருமானின் அங்கங்கள் எல்லாம் தனித்தனியாக கிடந்தன .

''கைவேறு ,கால்வேறு,தலைவேறு,உடம்பு வேறாக இருக்கக் கண்டார் .''

அதைக் கண்ட சண்முகம் உடல் நடுங்க உயிர் நடுங்க ''அந்தோ'' ''ஐயோ '' அய்யா இவ்வாறு ஆகிவிட்டாரே ! யாரோ நம் பெருமானாரை இப்படி கண்ட துண்டமாக வெட்டிப் போட்டு விட்டார்களே இனிமேல் என்ன செய்யப் போகிறோம்.என்று கதறி புலம்பி துடிக்கின்ற வேளையில் .

வள்ளல்பெருமான் திடீர் என்று அவருடைய முன்னே தோன்றினார் .அவர் மெய் மறந்து பயந்து நின்றார் .

சண்முகத்தை பார்த்து வள்ளல்பெருமான் ''நீர் இனி இம்மாதிரி என்னைப் பின் தொடர்வதோ பார்ப்போதோ கூடாது என எச்சரித்தார் ''

மேலும் இங்கு நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று கட்டளை இட்டார் .

அவரால் சொல்லாமல் இருக்க முடியவில்லை தருமச்சாலையில் உள்ள அவருக்கு நெருங்கிய நண்பர்களிடம் சொல்லியதால் இச்செய்தி வெளியாயிற்று ..

வள்ளல்பெருமான் ஏன் அப்படி செய்தார் !

வள்ளல்பெருமான் கொள்கையில் மிகவும்  முக்கியமானது ''மரணம் இல்லாப் பெருவாழ்வு'' வாழ்வது என்பதாகும் .

பஞ்ச பூதங்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பை தன்னுடைய அருட் சித்தி வல்லபத்தால் எப்படி எல்லாம் பிரிக்கலாம் ,சேர்க்கலாம்  என்பதை ஒத்திகை பார்த்துள்ளார் .என்பது தெரியவருகின்றது.

தன்னுடைய் உடம்பை எவராலும் எந்த சக்தியாலும் எப்போதும் அழிக்கக் கூடாது ,அழிக்க முடியாது,அதே வேளையில் மரணம் என்பதும் வந்து விடக்கூடாது  என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார் .

அவர் எண்ணிய வாறே, ''அருட்பெருஞ்ஜோதி'' இறைவன் அவருக்கு என்றும் அழியாத அருள் தேகம் என்னும் ஒளி தேகத்தைக் கொடுத்துள்ளார் .

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் !

''காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிர் ராதியாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே''.

என்று ஒரு பெரிய பட்டியலே போட்டு,தான் அடைந்த வல்லபத்தை  மக்களுக்கு தெரியப்படுத்தி உள்ளார் .

மண்,நீர்,அக்கினி ,காற்று,ஆகாயம்,கிரகங்கள்,இடி மின்னல் போன்ற கதிர்கள் ,எமன் என்னும் கூறறுவன்,மேலும் கொலை செய்யும் கருவிகள் ,தீங்கு செய்யும் கொடுஞ் செயல்கள்,

மேலும் அழிப்பதற்கு கண்டு பிடிக்கும் அணு ஆயுத கருவிகள் போன்றவைகள் ,.இன்மேல் அழிப்பதற்கு கண்டுபிடித்தால் அதனாலும் ,எக்காலத்தும் அழியாமல் வாழும் உடம்பு எனக்குத் தரவேண்டும் என்று இறைவனிடம் கேட்டாராம்.

அதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காலம் தாழ்த்தாமல் உடனே விரைந்து.. என்றும் அழியாத அருள் தேகம் அதாவது ஒளிதேகம்'' வழங்கினார் என்று மிகவும் தெளிவாக விளக்கி பாடலில் பதிவு உள்ளார் .

மேலும் நான் சொல்லுவதை நீங்கள் நம்பாமல் இருக்கின்றீர்கள் இழிவாக நினைக்கின்றீர்கள் ./நான் தொடர்பு கொண்டது போல் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்'' சார்பு கொண்டு /நீங்கள் தொடர்பு கொள்ளுங்கள் நிச்சயமாக சத்தியமாக உங்கள் அனைவருக்கும் எனக்கு கிடைத்த அதே தேகம் உங்களுக்கும் கிடைக்கும் என்கின்றார் .

சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலைதனைத் தயவினால் தந்தனை

சுத்த சன்மார்க்க சுக நிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக எந்தனை

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

சுத்த சன்மார்க்க அன்பர்களே ! வள்ளலார் காட்டிய பாதை புனிதமான  புதியபாதை,முடிவு உங்கள் வாழ்க்கையில் உள்ளது .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 24 நவம்பர், 2015

படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை !

படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தம் இல்லை !

படிப்பதால் அறிவு விளங்காது  !

ஒழுக்கத்தால் தான் அறிவு விளங்கும் !

படிப்பு பொருள் சம்பாதிக்க பயன்படும் .

ஒழுக்கம் அருள் சம்பாதிக்க பயன்படும் !

பொருள் மனிதனை அழித்துவிடும் !

அருள் மனிதனை வாழ வைக்கும்.!

பொருள் இருளைக் காட்டும் !

அருள் ஒளியைக் காட்டும் !

இருள் என்பது மறைப்பு !

அருள் என்பது வெளிச்சம் ,ஒளி !

பொருளை வைத்துள்ளவன் பொருளாளன் !

அருளை வைத்துள்ளவன் அருளாளன் !

பொருள் உள்ளவன் அருளாளன் காலில் விழுவான் !

அருளாளன் ஆண்டவரின் காலில் விழுவான் !

பொருளைத் தேடி எமன் எனும் கூறறுவன் வருவான் !

பொருள் உள்ளவனை இருள் சூழ்ந்து கொள்ளும் !

அருள் உள்ளவனை ஒளி சூழ்ந்து கொள்ளும் !

அருளைத்தேடி இறைவன் வருவார் !

இறைவன் வந்தால் இன்பம் வரும் !

எமன் வந்தால் மரணம் வரும் !

பொருளை வைத்து பொருளை மட்டும் வாங்கலாம் !

அருளை வைத்து அனைத்தும் வாங்கலாம் !

பொருள் உள்ளவனை பூமி வாங்கிக் கொள்ளும் !

அருள் உள்ளவனை ஆகாயம் வாங்கிக் கொள்ளும் !

ஆகாயத்தில் இரண்டு வகை உண்டு !

பூத ஆகாயம் ,அருள் ஆகாயம் !

அருள் ஆகாயத்துக்குள் அனைத்தும் அடங்கும் !

பூமிக்குள் பிணம்தான் அடங்கும் !

படிப்பு வேண்டுமா ? ஒழுக்கம் வேண்டுமா ?

மனிதன் வாழ்க்கை மகத்தான வாழ்க்கை !

நீங்களே முடிவு செய்யுங்கள் ......

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

நிவாரணம் ! எச்சரிக்கை !

நிவாரணம் ! எச்சரிக்கை !

மழை நீரால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு தமிழக அரசும் மத்திய அரசும் நிவாரண நிதி வழங்கி உள்ளது ,மேலும் வழங்க உள்ளது .

அந்தப்பணம் முறையாக மக்களுக்கும் ,நிவாரண பணிக்கும் செலவிடப்படுமா ? அல்லது அதையும் மந்திரிகளும் அதிகாரிகளும் பங்குப் போட்டு கொள்ளை அடிப்பார்களா,முறையாக செப்பனிடுவார்களா  என்று தெரியவில்லை.

இனிமேலாவது மழை நீர் தங்கும் இடத்தில்,வீட்டு மனைகள்  போடாமல்,வீடு கட்ட அனுமதி வழங்காமல்  மக்களை அரசாங்கம் காப்பாற்ற வேண்டும்.

குளம் இடத்தில் குளம் தான் இருக்க வேண்டும்,

குட்டைகள் உள்ள இடத்தில் குட்டைகள் தான் இருக்க வேண்டும்.

ஏரிகள் உள்ள இடத்தில் ஏரிகள் தான் இருக்க வேண்டும்.

வாய்க்கால் உள்ள இடத்தில் வாய்க்காலதான் இருக்க வேண்டும்,

ஆறுகள் உள்ள இடத்தில் ஆறுகள்தான் இருக்க வேண்டும்.

நதிகள் உள்ள இடத்தில் நதிகள்தான் இருக்க வேண்டும்.

அணைகள் உள்ள இடத்தில் அனைகளதான் இருக்க வேண்டும் .

கடல் உள்ள இடத்தில் கடல்தான் இருக்க வேண்டும்.

தண்ணீர் உள்ள இடத்தில் தண்ணீர்தான் இருக்க வேண்டும்.

மண் உள்ள இடத்தில் மண் தான் இருக்க வேண்டும்.

காடுகள் உள்ள இடத்தில் காடுகள்தான் இருக்க வேண்டும் .

காற்று உள்ள இடத்தில் காற்றுதான் இருக்க வேண்டும்.

அக்கினி இடத்தில் அக்கினிதான் இருக்க வேண்டும்.

ஆகாயம் உள்ள இடத்தில் ஆகாயம்தான் இருக்க வேண்டும்.

எங்கு எங்கு உயிர்கள் வாழ வேண்டுமோ அங்கு அங்குதான் உயிர்கள் வாழ வேண்டும்.

மனிதன் எங்கு வாழ வேண்டுமோ அங்குதான் வாழ வேண்டும்.

என்பதை இயற்கையின் சட்டப்படி ..

மேலே கண்ட அனைத்தும் முறையாக ,சரியாக இறைவன் படைத்துள்ளார் .

இவை யாவற்றையும் முறை இல்லாமல் சரி இல்லாமல் மாற்றியவன் மனிதன் .

மனிதன் செய்த குற்றங் களினால் மனிதன் துன்பம் அனுபவிக்கின்றான் .

மனித வாழ்க்கையை ஒழுக்குபடுத்தி மக்களை நல்வழியில் கொண்டு செல்லத்  தான்  அரசாங்கம் என்னும் ஆட்சி பீடத்தில் அரசியல்  வாதிகளை தேர்வு செய்து அமர்த்தி உள்ளார்கள்.

வெளியே பயிரை அழிப்பதுபோல் ,ஆட்சியாளர்களே மக்களை அழித்துக் கொண்டு உள்ளார்கள்.

மக்களை காப்பாற்ற வேண்டிய ஆட்சியாளர்கள் .மேலே கண்ட நீர் நிலைகளில் பிளாட்  போட்டு விற்கலாமா ?
வீடு கட்ட அனுமதி வழங்கலாமா ?   மக்களை குடி இருக்க அனுமதிக்கலாமா ? மக்கள் துன்பப் படலாமா ?

மக்களின் துயர் நீக்க, துன்பத்தை துடைப்பதற்காக நிதியைத்  தேடி அலையலாமா ?

சிறிய தவறு செய்வதால் பின்னால் பெரிய நட்டம் உண்டாகும் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரிய வேண்டாமா ?

எதுவும் இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் துன்பம் வருமா ?

தீதும் நன்றும் பிறர்தர வாராது என்பதைக் கருத்தில் கொண்டு இனி வருங் காலத்திலாவது நன்மையைச் செய்து மக்களுக்கு நல்வழிக் காட்டுவது அரசின் கடமையாகும்  .கட்டாயமாகும்.சட்டமாகும் மேலும் மக்களின் கடமையாகும்.

இல்லையேல் இதுபோன்ற இயற்கை சீற்றங்களால் மனித வாழ்க்கைக்கு துன்பங்களும் துயரங்களும், அச்சமும்,பயமும், வந்து மக்களை அழித்துவிடும்.

இதைக் கருத்தில் கொண்டுதான் ஆட்சியாளர்கள் மீது வள்ளலார் கடுமையாக சஷ்டி உள்ளார்.

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க--தெருண் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்து
எல்லோரும் வாழக இசைந்து .......

அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக ---நச்சு அரவ
மாதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீண்டு ...

என்று ஆட்சி யாளர்களுக்கு அறிவுறுத்துகின்றார்

மக்களுக்கு துன்பம் தரக் கூடிய ஆட்சி இருப்பதைவிட அழிந்து விடுவதே நல்லது என்று ,,ஆங்லேயர்கள் ஆட்சி காலத்திலேயே வள்ளலார் சாபம் இடுகின்றார்.

அதேபோல் அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விட்டார்கள் .

பதவிக்காக ,பட்டத்திற்காக பணத்திற்காக ,அதிகாரத்திற்காக ,புகழுக்காக .ஆட்சிக்கு வரக் கூடாது
மக்களைக் பாதுகாக்க வேண்டும், மக்களுக்கு நன்மை செய்யவேண்டும் ,என்ற பெருங் குணத்தோடு ஆட்சிக்கு வரவேண்டும் ஆட்சியில் அமரவேண்டும்.

இல்லையேல் எவராக இருந்தாலும் இறைவனால் தண்டிக்கப் படுவீர்கள்.

ஆட்சியில் அமருபவர்கள் .மக்கள் மீது அன்பு,தயவு,கருணை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

இது எக்காலத்துக்கும் பொருத்தமானது என்பதை ஆட்சியாளர்கள் தெரிந்து கொண்டு நல்லாட்சியைத் தரவேண்டும்..மக்களை காப்பாற்ற வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 19 நவம்பர், 2015

வள்ளல்பெருமான் படத்தை வழிபடலாமா ?

வள்ளல்பெருமான் படத்தை வழிபடலாமா ?

வள்ளல்பெருமான் படத்தை வைத்து வழிபடலாமா ? ஊர்வலமாக கொண்டு செல்லலாமா ? என்ற சந்தேகம் பல சுத்த சன்மார்க்க அன்பர்களின் கேள்வியாக இருக்கின்றது .

வள்ளல்பெருமான் படத்தை வைத்து வழிபடுவதும்,வள்ளல்பெருமான் படத்தை வைத்து ஊர்வலமாக கொண்டு செல்வதும் முற்றிலும் தவறானது .
வள்ளல்பெருமான் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு முற்றிலும் விரோதமானது .

அப்படி செய்வது சமய மத வாதிகளின் ஆசார சங்கற்ப விகற்பங்கள் போன்ற  உருவ வழிபாடு போல் ஆகிவிடும் .

படத்தை வைத்து வழிபாடு செய்வதை வள்ளல்பெருமான் ஏற்றுக் கொள்ள மாட்டார் .

உண்மையானக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும் .

வள்ளல்பெருமான் மரணத்தை வென்று அருட்பெருஞ்ஜோதியாக தன்னை மாற்றிக் கொண்டார் .

அருட்பெருஞ்ஜோதியை வணங்கினால்,அவற்றை  வழிபட்டால் அதில் வள்ளல் பெருமான் இருக்கின்றார்.

வள்ளல் பெருமான் படத்தை வழிபட்டால் வணங்கினால் அதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இல்லை என்பதை சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ளவேண்டும்.

வள்ளல்பெருமான் படம் !

வள்ளல்பெருமான் உருவத்தை போட்டோ எடுக்க சன்மார்க்க அன்பர்கள் விருப்பம் கொண்டு ...சென்னை மாசிலாமணி முதலியார் அவர்களைக் கொண்டு எட்டு தரம் புகைப்படம் எடுத்தும் வள்ளலாரின் திரு உருவம் படத்தில் அமையவில்லை, விழவில்லை பின்னர் அந்த அவ் எண்ணத்தையும் முயற்ச்சியையும் அவர்கள் விட்டு விட்டனர் .

ஞான தேகம் என்னும் ஒளி தேகத்தை படைத்த பெருமானார் திருமேனி புகைப் படத்தில் விழுமா என்ன ?

அதன்பின் சிறிது காலத்தில் பண்ணுருட்டியில் உள்ள குயவர் ஒருவர்  வள்ளலார் திரு உருவத்தைப் பல கால் பார்த்த பழக்கத்தினால் வள்ளலார் உருவத்தை காண்போர் கண்ணைக் கவரும் வகையில், மண்ணினால் செய்து
வள்ளலாரிடம் கொடுத்தார் .

அத் திருஉருவைக் கரத்தில் வாங்கிய வள்ளல்பெருமான் ''பொன்னான மேனி மாண்ணாய் ஆயிற்றே''என்று சொல்லி அப்படியே கை நழுவ கீழே போட்டுவிட்டார் .அவ்வுருவமும் கீழே விழுந்து உடைந்து போனது.

அதன்பின் வள்ளல்பெருமான் மீது உள்ள பக்தியின் காரணமாக, அன்பின் காரணமாக அவருடைய படத்தை பல வடிவங்களில் பல கோணங்களின் வரைந்து சன்மார்க்க சங்க அன்பர்கள் வைத்துள்ளனர்.

சன்மார்க்க அன்பர்கள் அடையாளத்திற்காக வேண்டுமானால் வள்ளலார் படத்தை வைத்துக் கொள்ளலாம் .

அவர் உருவத்தை வழிபடுவதால் எந்த பயனும் இல்லை.

சன்மார்க்கமும் சாதி,சமயம் மதங்கள் போல் ஆகிவிடும்.

வள்ளல்பெருமான் தெளிவாக சொல்லி உள்ளார் .!

சன்மார்க்க அன்பர்கள் வழிபாடு விஷயத்தில் மிகவும் ஜாக்கிரத்தையாக இருக்க வேண்டும் என்கின்றார் .

கடவுள் ஒருவர் உள்ளார் என்றும்.அவர் பொதுப்பட உலகத்தில் உள்ளார் யாவரும் சன்மார்க்கப் பெரும் பயன் பெற்று நித்திய வாழ்வு வாழ்தற் பொருட்டு ''அருட்பெருஞ்ஜோதியாக'' வெளிப்படையாக காரியப் படுகின்றார் .

அது காலையில் நாமும் ஆன்ம லாபத்தைப் பெற்றுக் கொள்ளுவோம் எனவும் நம்பி இங்கே வசிக்கும் யாவரும் வழிபாடு விஷயத்தில் ஒரு தடையும் சொல்லாது இங்கு இருத்தல் அவசியம் என்பதை மிகவும் தெளிவுப் படுத்தி உள்ளார் .

மேலும் ;---ஸ்ரீ முக வருடம் கார்த்திகை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் உள் இருந்த விளக்கைத் திரு மாளிகைப் புறத்தில் வைத்து ''தடைபடாது ஆராதியுங்கள் '' இந்தக் கதவை சார்த்திவிடப் போகிறோம் .இனி கொஞ்ச காலம் எல்லோரும் ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் உங்களுடைய காலத்தை வீணிற் கழிக்காமல் ....

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன் நிதியே ஞான
நடத்து அரசே ஏன் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகயிலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியம் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே !

என்று வழிபடும் முறையையும் சொல்லி உள்ளார் .மேலும் ஞான சரியையில் உள்ள 28,பாசுரங்களில் அடங்கி உள்ள பாடல்களில் கண்டபடி ,''தெய்வ பாவனையை'' இந்த தீபத்தில் செய்யுங்கள் நாம் இப்போது ''இந்த உடம்பில் இருக்கின்றோம் இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வோம் என்கின்றார் .

வள்ளல்பெருமான் இவ்வளவு தெளிவாக சொல்லியும் சன்மார்க்க அன்பர்கள் எதை வைத்து வழிபட வேண்டும் என்பதை இன்னும் புரிந்து கொள்ளாமல் சமய மத வாதிகள் போல் உருவத்தை வைத்து வழிபடலாமா ? என்பதை சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வள்ளல்பெருமான் சன்மார்க்கிகளுக்கு பதிவு செய்துள்ள பாடல் ;---

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்
என் மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாம் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன் மார்க்கத்தவர் போல் வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரண மெய்ச் சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன் ஆணை என் ஆணை சார்ந்து அறிமின் ஈண்டே !

மேலே கண்ட பாடலில் சன்மார்க்கிகள் எல்லோருக்கும் புரியும் படி சொல்லி உள்ளார் .

சன்மார்க்கிகளின் காலில் விழுந்து சொல்லுகிறேன் என்கின்றார்...

என்னை உங்களில் ஒருவனாக நினைத்துக் கொண்டு என்னை வணங்காதீர்கள் .எல்லாம் வல்ல நமது இறைவன் ஒருவர் உண்டு ''அவரே அருட்பெருஞ்ஜோதியர்'' .அவரை வணங்குங்கள் என்கின்றார் .

புன் மார்க்கத்தவர் போல் என்கின்றார் .பொய்யான சமய மத வாதிகளைப் போல் உருவத்தையோ,படத்தையோ,வைத்து வழிபாடு செய்யாதீர்கள் என்கின்றார் .

மேலும் தன் ஆணை,என்ஆணை என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார் .

வள்ளல்பெருமான்  இவ்வளவு சொல்லியும் நாம் கேட்க வில்லை என்றால் நாம் வருவதை அனுபவிக்க வேண்டியதுதான் .அதற்குமேல் அவரவர் விருப்பம் .

இப்போது உள்ள சன்மார்க்கிகளில் நிறையப்பேர் சமய மத வாதிகள் தான் உள்ளனர் .அவர்களை திருத்துவது கொஞ்சம் கடினம் .இனி வருபவர்கள் வள்ளலாரின் கொள்கைகளை முழுதும் தெரிந்து,வள்ளலார் சொல்லியவாறு பின்பற்றி  அதன்படி நடந்தால் மேல் நிலைக்கு செல்ல முடியும் .

எனவே வள்ளலார் படத்தையோ, உருவத்தையோ,வைத்து ஊர் வலமாகவோ வழிபாடு செய்வதாலோ எந்த பயனும் எக்காலத்திலும் கிடைக்க வாய்ப்பே இல்லை ..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் உள்ளார் என்பதை உணர்ந்து உண்மை அன்பால் ..உண்மை அறிவால்,..உண்மை இரக்கத்தால் வழிபாடு செய்வதே சிறந்த வழிபாடாகும்.

''அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு'' என்பதை தெளிவாக, விளக்கமாக,உறுதியாக  சொல்லியும் சன்மார்க்கிகள் கேட்காமல் அவரவர்கள் விருப்பம் போல் செய்வது ...வள்ளல்பெருமான் வாக்கை மீறிய செயலாகும்.

மேலும் வள்ளல்பெருமான சொல்லியது ;---

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு
மருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு .

வள்ளல்பெருமான் அருட்ஜோதியாக ஆகிவிட்டார் .அருள் ஆட்சியையும்,பெற்று விட்டார் .மற்ற சார்புகளை எல்லாம் ஒழித்து விட்டார் .மரணத்தையும் தவிர்த்து விட்டார் .

இப்போது வள்ளல்பெருமான் எந்த வடிவில் உள்ளார்,''ஒளி வடிவில் உள்ளார்''  என்பதை சன்மார்க்கிகள் அறிந்து புரிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.எதை வழிபட வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்...மேலும்

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ்ஜோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை
விளம்பினன் வம்மினோ விரைந்து .

நான் என்றும் அழியாத அருட்பெருஞ்ஜோதி உருவில் கலந்து நிறைந்து நித்தியனாக இருக்கின்றேன் ...சாதி,சமயம்,மதம் ,போன்ற கொளகைகளை அழித்து, இருக்கும் இடம் தெரியாமல் நிறுவி விடுவேன் என்கின்றார் .

மேலும் நாம் தெளிவு இல்லாமல் இருந்தால் என்ன பயன் ?.உங்களுக்கு ஆண்டவர் துணை செய்வாரா ? நீங்கள் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியுமா ? சாதாரண ஒரு படத்தையே விட முடியாதவர்கள் எப்படி பற்றுகளை விடப் போகின்றீர்கள்.

நான் சொல்லுவதால் எவரும் வருத்தப் படாதீர்கள் .வள்ளல்பெருமான் சொல்லியதை நான் சொல்லுகின்றேன்.மேலும் உங்கள் விருப்பம் .

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க நெறியை உங்களால் மக்களுக்கு போதிக்க முடியாது என்பதை தெரிந்து கொண்டுதான் ,''நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன்'' என்றார்.

சுத்த சன்மார்க்கத்தில் தெளிவாக உள்ளவர்களை தட்டி எழுப்பி மேல் நிலைக்கு வள்ளலார் கொண்டு வந்து விடுவார் ..நீங்கள் யாவரும் வாயைத் திறந்து பார்த்துக் கொண்டு இருக்க வேண்டியதுதான்.

இதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் நான் சொல்லுகிறேன் நீங்கள் கேட்க மாட்டீர்கள் .பின்னால் வருவதை அனுபவியுங்கள். என்றார்.

மேலும் வள்ளல்பெருமான் சொல்லியது.

அகில உலக சகோதர ஆன்மநேய ஒற்றுமையைப் பாராட்டும் இச்சங்கத்தில் அங்கத்தினராக வர நீங்கள் அருகர் அல்லர் ..இச்சங்கத்தின் உண்மை அங்கத்தினர்.இந்தியாவிற்கு வடக்கே வெகு தூரத்தில் வசிக்கிறார்கள் .

நீங்கள் நான் சொல்வதைக் கேட்பதில்லை ,எனது போதனையின் கருத்தின்படி நடக்கவும் இல்லை.நான் சொல்லுவதைக் கவனிக்க மாட்டோம் என்று திடப்படுத்திக் கொண்டீர்கள் போலும்.

என்றாலும் காலம் நெருங்கி விட்டது ,ரஷ்யாவில் இருந்தும் அமெரிக்காவில் இருந்தும் இன்னும் இதர நாடுகளில் இருந்தும் அறிவாளிகள் இந்தியாவிற்கு வந்து ,இதே அகில உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டு கொளகைகளை
பிரசங்கிப்பார்கள் .

நான் இப்போது உங்களுக்கு வீணில் சொல்லும் சிறந்த உண்மைகளை ,அப்போது நீங்கள் தெரிந்து கொண்டு மதித்து நடப்பீர்கள் .

வடக்கே வெகு தூரத்தில் வசிக்கும் அம்பல சகோதரர்கள் ,இந்தியாவில் ,அநேக அற்புதங்களை நிகழ்த்தி நமது தேசத்திற்கு அளவிடமுடியாத நன்மைகளை விளை விப்பதை ,சீக்கிரம் நீங்கள் காண்பீர்கள்

என்று வள்ளலார் சொல்லியதாக ...முதல் சீடரான வேலாயுதம் தெளிவாக சொல்லி உள்ளார் .அதனால் தான் வேலாயுதத்தைக் கேட்டால் மனித தரத்தில் சொல்லுவார் என்று பேருபதேசம் என்ற பகுதியில் வள்ளலார் சொல்லி உள்ளார்.

வள்ளல்பெருமான் உடன் இருந்தவர்களைப் பார்த்து நீங்கள் இன்னும் நான் சொல்லும்  சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன வென்று தெரிந்து கொள்ளவில்லை என்று வேதனையுடன் சொல்லுகின்றார்.

இப்போது அறிவு விளக்கம் உள்ள நாம் அப்படி இருக்கலாமா ?

சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள்.!

சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாகிய சமயம்,மதம்,முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவர்களும் ,காமம்,குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் கொலை ,புலை தவித்தவர்களும் ;--ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள்.

மரணம் ,பிணி மூப்பு ,பயம்,துன்பம் --இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள் ,அதாவது --செயற்கையாகிய குணங்களை நன் முயற்ச்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்.

அப்படி இல்லாது இவ்விடம் காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்...அருள் விளங்கும் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்  கூடும்,பரலோக ஞான சித்திகளை பெற மாட்டார்கள்..

சாகாதவனே சன்மார்க்கி ;-சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை.சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்.

சுத்த சன்மார்க்கிகளின்  மிகவும் ஜாக்கிரதையாக அசட்டை செய்யாமல் வள்ளல்பெருமான் சொல்லிய வண்ணம் வாழ்க்கையை  அமைத்துக் கொண்டு வழிபாடு விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

ஆதியும் அந்தமும் இல்லாதோர் அம்பலத்தே ஆடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலே ஏறும்
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.தெய்வத்தைத் தேடி அலையாதீர்கள் !

தெய்வத்தைத் தேடி அலையாதீர்கள் !

நீங்களே தெய்வம் தான் >.

நீ வேறு அல்ல .தெய்வம் வேறு அல்ல >.

உன்னைப் படைத்த இறைவன் உன் உள் இருக்கின்றான்> .

ஊரைத்தேடி அலையாமல் உன்னைத்தேடினால் உண்மை விளங்கும்.>

தன்னை அறிந்தவன் தன் தலைவனை அறியலாம் >.

எல்லா உயிர்களும் இறைவன் வாழும் ஆலயம்> .

இறைவன் இல்லா உயிர் இல்லை .உயிர் இல்லா இறைவன் இல்லை>.

இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி அலையாதே > .

துன்பம் தொலைக்கும் துணைவன் இருக்க ,அந்நியனைத் தேடி அலையாதே >.

அறிவைத்தேடு அனைத்தும் காட்டும் >

அறிவுக் குள்ளே அருள் இருக்கின்றது >.

அருளைக் கண்டால் ஆண்டவன் தெரிவான் >

அருள்வேறு ஆண்டவன் வேறு அல்ல> .

ஆன்மாவுக்குள் அனைத்தும் உண்டு >.

அருளே நம் அறிவு அருளே நம் மனம்
அருளே நம் குணம் அருளே சுத்த சிவம் !>

சுத்த சிவமே அருட்பெருஞ்ஜோதி !!!

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

பேசுகின்ற தெய்வம் ,பேசாத தெய்வம் !

பேசுகின்ற தெய்வங்கள் பேசாத தெய்வங்களை வணங்குகின்றது !

பேசுகின்றவன் மனிதன் பேசாதது சிலைகள் .

சிலைகளைப் பார்த்து பாடுகின்றான் .
சிந்தை கலங்கி வாடுகின்றான் .!

படையல் வைத்து படைக்கின்றான் .
அவனே தின்று தீர்க்கின்றான் !.

கல்லும் மண்ணும் பேசுமா
உன் கவலை யாவும் தீருமா !

பசியால் வாட்டும் உயிர்களுக்கு
பசியைப் போக்கும் வழித் தேடு !

உன் துன்பம் எல்லாம் தீர்ந்து விடும் .
துயரம் எல்லாம் அழிந்து விடும் !

உயிருள் இருக்கும் உத்தமனை
உணவு கொடுத்து வணங்கி விடு!

உண்மைத் தெரியாமல் ஓடாதே
ஓடும் இடம் எல்லாம் வெறும் வீடு !

அறிவைக் கொண்டு அறிந்து விடு
யாவும் நலமாய் அமைந்து விடும் !.

எல்லா உயிரும் இறை வீடு
உன்னை அறிந்து அதைத் தேடு !.

உழைக்கும் பொருளை இழக்காதே
பேசாப் பொருளைத் தேடாதே !.

ஒளியைக் கொண்டு வணங்கி விடு
உன் இருளைப் போக்கும் இறை வீடு

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

செவ்வாய், 17 நவம்பர், 2015

பொய்யான சமய மதங்கள் !

ஆன்மா அழியாது ,உடம்பு அழிந்து விடும் என்பது சமய மதக் கொள்கைகள்.!

ஆன்மாவை இறைவன் அனுப்பி வைக்கின்றார் !

இறைவன் படைத்த இந்த உலகத்தைப் பார்ப்பதற்கும்,உலகத்தில் வாழ்வதற்கும் .வாழ்ந்து பின் வந்த இடத்திற்கே  திரும்ப செல்வதற்கும் ஆன்மாவை இறைவன் அனுப்பி வைக்கின்றார்..

ஆன்மாவின் தந்தைதான் இறைவன் என்பதாகும்.அந்த உண்மையான இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்.

ஆன்மா இந்த உலகத்தில் வந்து வாழ்வதாகவும் அனுபவிப்பதற்கும் .இந்த பஞ்ச பூத உலகத்தில் உயிரும் உடம்பும் மாயையால் கட்டிக் கொடுக்கப் படுகின்றது.உயிரும் உடம்பும் ஆண்டவரால் கொடுப்பதல்ல .என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும் .

நம்முடைய உடம்பு ஒரு வாடகை வீடாகும் ...வாடகை என்பதுதான் நாம் தினமும் கொடுக்கும் உணவாகும் ..

தாவரம் முதல் மனித பிறப்பு கிடைக்கும் வரை ஆன்மா பல கோடி பிறப்புக்கள் எடுத்துக் கொண்டே வருகின்றது .

மனித பிறப்பில் தான் நான் யார் ? நமது தந்தையார் ? நாம் எங்கு இருந்து  வந்தோம் ? .எதற்க்காக வந்தோம் ? இன்பம் துன்பம் என்றால் என்ன  ? மரணம் ஏன் வருகின்றது ? மரணத்தை வெல்ல முடியுமா முடியாதா  ? என்ற கேள்வியும் அறிவும்  வேலை செய்ய ஆரம்பிகின்றது .

உயிர் எப்படி எடுத்தோம் .உடம்பு என்னும் வீடு எப்படி கட்டிக் கொடுக்கப்பட்டது ? உடம்போடும் உயிரோடும் இந்த உலகத்தை விட்டு  திரும்பி செல்ல முடியுமா ? ஆன்மா மட்டும் தான் செல்ல முடியுமா என்ற கேள்விகளுக்கு விடைக் கொடுக்கப் படுகின்றது.

சமய மத வாதிகள் ;--உடம்பும் உயிரும் அழிந்து விடும் .பாவங்களும் புண்ணியங்களும் ஆன்மாவுக்கு இல்லை .உயிருக்கும் உடம்பிற்கும் தான் .என்னும் புளுகு மூட்டையைக் கட்டிக் கற்பனையான கதைகளை எழுதி மக்கள் மத்தியிலே பரப்பி விட்டார்கள் .

அதனால்தான் வள்ளலார் ''கலையுரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும் கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக''' என்னும் சாபம் கொடுக்கின்றார்.

புண்ணியம் செய்தால் சொர்க்கம்,வைகுண்டம் கைலாயம்,பரலோகம்,போன்ற இடங்களுக்கு ஆன்மா சென்று மகிழ்ச்சியுடன் இருக்கும் என்றும் .

பாவங்கள் செய்தால் நரகம் என்ற கொடுமையான இடங்களுக்கு ஆன்மா சென்று துன்பங்களை அனுபவிக்கும் என்றும் கதைகளை கட்டி விட்டு விட்டார்கள்.

மக்களும் அதையே உண்மை என்று நம்பி உண்மைத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள் .

வள்ளலார் சொல்லியது ;--

ஆன்மா வாழ்வதற்கு உயிரும் உடம்பும் மாயையால் கட்டிக் கொடுக்கப் பட்ட வீடாகும் .

வீட்டை அழிப்பது என்பது மரணம் ...எனவே வீட்டை அழிக்க கூடாது / உடம்பு என்னும் வீட்டை ஏழு விதமான அணுக்களால் மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளது .

வீட்டை அழிக்காமல் அணுக்களை தனித்தனியாக பிரித்து மாயையிடம் கொடுத்தால் மட்டுமே ஆன்மா வெளியே செல்ல முடியும் .

மரணம் வந்தால் ஆன்மா இந்த உலகத்தை விட்டு வெளியே செல்ல அனுமதி இல்லை..மறுபடியும் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் என்பதை வள்ளல் பெருமான் கண்டு பிடித்தார் .

ஆன்மா உயிரையும் உடம்பையும் விட்டால் மறுபடியும் வேறு ஒரு உயிரும் உடம்பும் கொடுக்கப்படும் .இது மாயை என்னும்  பஞ்ச பூதங்களின் சட்டம்.

இந்த உலகத்தில் நன்மை தீமைகள்,  பாவம் புண்ணியங்களை  எல்லாம் அனுபவிப்பது ஆன்மாதான் அனுபவிக்கின்றது .

தண்டனை என்பது உயிருக்கோ ,உடம்பிற்கோ கிடையாது .எது நடந்தாலும் அவை ஆன்மாவிற்கே வந்து சேரும்...ஆன்மாவில் பதிவாகி விடும் .

எதையும் உயிரும் உடம்பும் அனுபவிப்பது இல்லை ...உயிரும் உடம்பும் அணுக்களால் கட்டிக் கொடுக்கப் பட்ட உணர்வு அற்ற  ஜடப் பொருள்களாகும்.
ஆன்மா இருக்கும் வரை உணர்வு இருக்கும் .ஆன்மா வெளியேறி விட்டால் எந்த உணர்வும் இருக்காது ..இவற்றை மனித அறிவு தெரிந்து கொள்ள வேண்டும் .

ஒரு வீட்டில் குடியிருப்பவன் அவனுக்கு வரும் துன்பங்களை அவன் அனுபவிப்பானா ?அவன் குடியிருக்கும் வீடு அனுபவிக்குமா ? சிந்தித்து பாருங்கள் விடை கிடைக்கும்.

சாகாக் கல்வி ! மரணம் இல்லாப் பெருவாழ்வு !

உடம்பையும் உயிரையும் அழிக்காமல் .அணுக்களை பிரித்து எடுக்கும் ரகசியத்தைக் கண்டு பிடித்தவர் வள்ளல்பெருமான்.அதற்கு ''சாகாக் கல்வி'',என்றும்''மரணம் இல்லாப் பெருவாழ்வு'' என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.

அணுக்களை எப்படி பிரித்து எடுக்க முடியும் ?

அணுக்களை ,இறைவன் அருளால் வேதியல் முறைப்படி
பிரிக்க முடியும்.   என்பதை அறிந்து ..ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றியவர் வள்ளலார் .

அவர் அடைந்த அந்த உண்மையை மக்களுக்கு போதிக்கவே ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை '' 1865,ஆம் ஆண்டு வடலூரில் நிறுவினார் வள்ளலார்.

அருள் என்பது எல்லாவற்றையும் மாற்றும் .அனைத்தையும் வெல்லும் ஆற்றல் படைத்தது .அருளின் தன்மை என்ன வென்று தெரியாமல் சமய மத வாதிகள் உளறிக் கொண்டு உள்ளார்கள்.

இந்த உலகத்திற்கு வாழ வந்த ஆன்மா ...தான் மீண்டும் திரும்பி செல்வதற்கு  வசதியாக ஆன்மாவில் அருளை வைத்துதான் இறைவன் அனுப்பி உள்ளார் .

அந்த அருளை எடுக்க முடியாமல் மறைத்துக் கொண்டு இருப்பதுதான் அஞ்ஞானம் என்னும் ஏழு  மாயா  திரைகள் என்பதாகும் .

அந்த திரைகளை நீக்க வேண்டுமானால் ஜீவ காருண்யத்தாலும்  சத் விசாரத்தாலும் மட்டுமே நீக்க முடியும் .வேறு எந்த வழியாலும் நீக்க முடியாது என்பதை தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார்.

ஆன்மா ஆணவம் என்னும் துணையைக் கொண்டு ஒளியாக தனியாக வந்தது ,

இங்கே மாயை,கன்மம் என்னும் மலங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டது .

மாயை என்பது;;;-- ஆன்மா வாழ்வதற்கு அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பும் என்னும் வீடாகும்

கன்மம் என்பது;-- ஆன்மா, தான் செய்யும் ஒவ்வொரு காரியங்களுக்கும்.பிறப்பிற்கும் கன்மம் என்று பெயராகும்.

ஆன்மா;--  அருளைப் பெற்று ஆணவம் மாயை கன்மம் என்னும் கருவிகளை பிரித்து எடுத்து மாயையிடம் ஒப்படைத்து விட்டு அருள் என்னும் ஒளி உடம்பாக மாற்றினால் மட்டுமே இறைவனிடம் செல்ல முடியும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


ஞாயிறு, 15 நவம்பர், 2015

மாட்டு இறைச்சி உண்பதா வேண்டாமா !

மாட்டு இறைச்சி உண்பதா வேண்டாமா !


இந்து இந்திய அரசியலில் மாட்டு இறைச்சி பிரச்சனை அதிகமாகப் பேசப்படுகின்றது

ஜனநாயக நாட்டில் விரும்பியதை எதையும் உண்ண ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு .பசிக்காகவோ ,அல்லது ருசிக்காகவோ உண்ணப்படும் உணவை வெறும் உணவாகவே பார்க்க வேண்டும் அதில் குற்றம் காண்பது ஒரு மதச் சார்பு அற்ற நாட்டுக்கு எதிரானது என்பது சில பேருடைய கருத்து .

பால் கொடுக்கும் பசுவும் உழவுக்கு பயன் படும் காளைகள் மற்றும் எருமைகளும் மனிதனுக்கு மிகவும் நெருக்கமானது .என்றும்

பசுக்களை தங்கள் தாயாகவும் தெய்வமாகவும் இந்துக்கள் வணங்குகிறார்கள் ஆதலால் பசுக்களின் உணவை உட்கொள்ள கூடாது என்றும் சொல்லப்படுகின்றது..

ஒரு பிரிவினர் உண்ணலாம் என்றும் ஒரு பிரிவனர் உண்ணக் கூடாது என்றும் ,நாடு முழுவதும் பயங்கர எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகின்றது.

வள்ளல்பெருமான் சொல்லுகின்றார் !

ஒரு உயிரைக் கொள்வதும் குற்றம் .அதன் புலாலை உண்ணுவதும் குற்றம் என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஒருஉயிரைக் கொன்று, அதன் புலாலை உண்பது கொடிய பாவங்களிலே பெரிய கொடிய பாவம் என்கின்றார்.

திருவள்ளுவரும் கொலை செய்வதும் அதன் புலால் உண்பதும் இயற்கைக்கு விரோதமானது,அதனால் அளவில்லாத் துன்பம் உண்டாகும்  என்றும். கொல்லாமை, புலால் உன்னமைப் பற்றி இரண்டு அதிகாரங்கள் எழுதி வைத்துள்ளார்.

எந்த மதங்களாக இருந்தாலும்,எந்த சமயங்களாக இருந்தாலும் .எந்த மக்களாக இருந்தாலும் ஒரு உயிரைக் கொள்ளுவதும் தவறு ,அதன் மாமிசத்தை உண்பதும் தவறு .என்பதை புரிந்து கொண்டும் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை அதுதான நல்லது .

மாட்டு இறைச்சி மட்டும் அல்ல ..காளைகள் மட்டும் அல்ல ...இறைவனால் படைக்கப் பட்ட வாயில்லாத, பேசமுடியாத,பேச தெரியாத  எந்த உயிர்களாக இருந்தாலும்,அதனைக்  கொல்லுவதும் அதன் புலாலை உண்பதும் இறைவன் ஏற்றுக் கொள்ளுவதில்லை என்கின்றார் வள்ளலார் .

ஒரு உயிரை உண்டாக்க முடியாத எவருக்கும் அந்த உயிரை அழிப்பதற்கு இயற்கை சட்டத்தில் இடம் இல்லை.

மனிதனால் உருவாக்கப் பட்ட சட்டத்தைவிட இறைவனால் உண்டாக்கப் பட்ட சட்டம் நிரந்தரமானது நேர்மையானது உண்மையானது ..அவற்றை  மாற்றவும்  அழிக்கவும் எவருக்கும் அதிகாரம் இல்லை .

மதவாதிகளுக்கும் அறிவு இல்லை,.சமயவாதிகளுக்கும் அறிவு இல்லை.அரசியல் வாதிகளுக்கும் அறிவு இல்லை.அறிவியல் வாதிகளுக்கும் அறிவு இல்லை , மக்களுக்கும் அறிவு இல்லை என்கின்றார் வள்ளலார் .

நாக்கு ருசி கொள்ளுவது நாறிய புண்ணாக்கு என்கின்றார் .வள்ளலார் .அதன் விளக்கம் .;--

நாக்கு ருசிக்காக மாமிசம் தின்பவன் மலம் தின்பதற்கு சமம் என்கின்றார் .

மாமிசம் தின்பவன் அவன் கழிக்கும் மலத்தையே தின்னலாமே என்கின்றார்.வள்ளலார் .

உயிர்க்கொலையும் புலைப் புசிப்பும் உடையவர்கள் எல்லாம்
உறவினத்தார் அல்லர் அவர் புற இனத்தார்என்கின்றார் .

உயிர்க் கொலை செய்பவர்களும் அதன் புலாலை உண்பவர்களும் கடவுளை வணங்கவும் ,வழிபடவும், நினைக்கவும் தகுதி அற்றவர்கள் என்கின்றார்.கடவுளின் அருள் அவர்களுக்கு எக்காலத்தும் கிடைக்காது ..என்கின்றார் .

அவர்கள் அகம் கருத்து புறம் வெளுத்து இருக்கின்றது .அதனால் உண்மையை அறியாமல் தவறு செய்கிறார்கள் என்கின்றார்.

மக்களே தயவு செய்து ,எந்த உயிரையும் கொலை செய்யாதீர்கள் அதன் புலாலையும் உண்ணாதீர்கள்

இறவன் எல்லா உயிர்களுக்கும் பொதுவாக தாவர உணவுகளை படைத்து உள்ளார் .தாவர உணவே உங்கள் உயிருக்கும் உடம்பிற்கும் மிகவும் நல்லது .

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கின்றான் .உயிர் இல்லாத இடத்தில் இறைவன் இல்லை.ஆகவே எந்த உயிர்களையும் அழிக்காதீர்கள்.

உண்மையை அறிந்து நல்லதை பின் பற்றுங்கள் நல்லதே நடக்கும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;--

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ
நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றி குக்குடங்கள்
பலிகடா முதலிய உயிரைப்
பொலி உறக் கொண்டே போகவும் கண்டே
புந்தி நொந்து உளம் நடுகுற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங் கோயில்
கண்ட காலத்திலும் பயந்தேன் .......என்கின்றார் .

கடவுளின் பெயரால் ஆடு,மாடு,பன்றி,கோழி முதலிய உயிர்களை கொண்டு போய் பலி இடுகின்றார்கள் .இவை எவ்வளவு அறியாமை என்பதை நினைந்து என் உளம் நடுக்குற்றேன் .என்கின்றார் .

இந்த கோயில்களால் இன்னும் எத்தனை உயிர்களை பலி வாங்குமோ .என்று பயந்தேன் என்கின்றார்.

இந்த கொலையால் மக்களுக்கு அளவில்லாத துன்பம் வருமே என்று பயப்படுகின்றார்.

இந்த உலகத்தில் மக்களுக்கு உண்மையை எடுத்துச் சொன்ன ஒரே அருளாளர் வள்ளல்பெருமான் ஒருவரே .

அவர் சொல்லியது ஆண்டவர் சொல்லியதாகும். அவற்றை மதித்து அவர் சொல்லிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வீர்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

சனி, 14 நவம்பர், 2015

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் !

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகள் !

இன்பம் துன்பங்களை அனுபவிப்பது ஆன்மா !

உலகில் உள்ளதை எல்லாம் கண்கள்  பார்க்கின்றது.

பார்ப்பதை தன்வசமாக மாற்றிக் கொள்வது மனம்....

மனதின் நினைவுகளை பூர்த்தி செய்வது புத்தி...

பூர்த்தி செய்வதை அங்கிகாரம் அளிப்பது சித்தம் ...

அங்கிகாரத்தை செயலாக்கம் செய்வது அகங்காரம்....

அனுபவிப்பது ஜீவன் என்னும் உயிர் ....

அதனால் வரும் இன்பம் துபங்க்களை அனுபவிப்பது ஆன்மா என்னும் உள் ஒளி ..

புறக் கருவிகளால் சேர்க்கப்படும் குப்பைகள் யாவும் ஆன்மாவை மறைத்துக் கொள்கின்றன.

அந்தக் குப்பைகளைத்தான் திரைகள் என்கின்றார் வள்ளலார்.

அறியாமையாலும் அஞ்ஞானத்தாலும் .பழக்கத்தாலும் கண்,மனம்,ஜீவன் வழியாக உள்ளே சென்று ஆன்மாவை ஏழு திரைகளாக ஏழு அடுக்குகளாக மாயா திரைகள் ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது.

அந்த திரைகளின் விபரம்.;---

கரைவின் மா மாயைக்  கரும் பெரும் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந்திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால் பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால் பொருள் உறு வெளியை
அன்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால் கருது அனுபவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளை நீக்கிக் கொள்ளும் அறிவும் ஆற்றலும் உள்ளவர்கள் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் காணமுடியும்.

திரைகளை நீக்கும் ஒரே வழி ;--ஜீவ காருண்யம்,.. சத்விசாரம் என்னும் இரண்டு வழிகள் தவிர வேறு எந்த வழியாலும் திரைகளை நீக்க முடியாது .

திரைகள் நீங்கினால்தான் ஆன்மாவில் இருந்து அருள் அமுதம்.சுரக்கும்.அந்த அருள் அமுதம் உடம்பு முழுவதும் நிறைந்து பூரணமாகும் போதுதான் ஊன உடம்பு ஒளி உடம்பாக  மாற்றம் பெரும் .

ஒளி உடம்பாக மாற்றம் அடைந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்.,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதும் கிடைக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வெள்ளி, 13 நவம்பர், 2015

ஆலய வழிபாடு என்பது முக்கியம் அல்ல !

ஆலய வழிபாடு என்பது முக்கியம் அல்ல !


ஆலய வழிபாடு என்பது ஒரு காலத்தில் பக்தி பரவசத்துடன் நம்பிக்கையுடன் மக்கள் கோவில்களுக்கு சென்று வந்தார்கள் .

கோயிலில் உள்ள கடவுளின் சிலைகளை வணங்குவதால் எந்த நன்மையையும் இல்லை என்பதை மக்கள் தெளிவாக புரிந்து கொண்டார்கள் .

வீட்டில் அடைந்து கிடக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் பெரியோர்கள் அனைவரும் பொழுது போக்குக்காக இப்போது கோவில்களுக்கும் ஆலயங்களுக்கும் செல்கின்றார்கள்.,

வழிபாடு செய்வதற்கும்,துன்பங்களைப் போக்குவதற்கும்  ,ஆண்டவரிடம் அருள் பெறுவதற்கும் தகுதியான இடம் கோவில்கள் அல்ல என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.

கோவில்கள் எல்லாம் இப்போது சுற்றுலா மையாமாக,காட்சிப் பொருள்களாக  மாறிவிட்டது .

அரட்டை அடிக்கவும் ,காதல் செய்யவும்,காதல் திருமணம் செய்யவும் ,அலங்கார ஆடைகள் அணிந்து செல்லவும் ,பொருள்கள் வாங்கவும் ,உணவுப் பண்டங்கள் வாங்கி உண்ணவும்,ஒய்வு எடுக்கவும்,

தனிமையில் மன்ம் விட்டு ஊர் கதையைப்  பேசவும், கோவில்கள் வசதியாக உள்ளன.என்பதை தெரிந்து கொண்டு சுற்றுலா பயனமாக ஆலயங்களுக்கு சென்று கொண்டு உள்ளார்கள்.

கோவில்களுக்கு சென்று வரும்போதே ...அவர்களுக்கு குடிப்பழக்கம் உள்ளதால் குடித்துவிட்டு வண்டி வாகனங்களை ஒட்டிக் கொண்டு வரும்போது விபத்துக்கள் உண்டாகி பல உயிர்களையும் இழக்க நேர்ந்து விடுகின்றது.

ஆதலால் கோவில்களுக்கு சென்று வருபவர்கள் பல வகையான ஆபத்துகளுக்கு உள்ளாகி மரணம் அடைந்து விடுகின்றார்கள்

வாழ்க்கையில் ஒழுக்கத்தை கடைபிடிக்காமல். அளவுகடந்த அநியாயங்களையும் ,அக்கிரமங்களையும் ,செய்து விட்டு ..மக்களுக்கும் மற்ற உயிர்களுக்கும் துன்பம் தருபவர்கள், எத்தனைக் கோவில்களுக்கு சென்று வழிப்பட்டாலும் பயன் ஒன்றும் கிடைக்காது .
.
அறியாமையாலும் அஜாக்கிரதையாலும்,ஊழ்  வகையாலும் துன்பம் நேர்ந்தாலும், பிற உயிர்களுக்கு நன்மை செய்பவர்களுக்கும் உயிர்களின் மேல் இரக்கம் கொள்பவர்களுக்கும், கருணைக் காட்டுபவர்களுக்கும் எந்த வகையிலும் துன்பம் வராது.

கடவுள் கருணை புரிகிறாரோ இல்லையோ, ஆண்டவரிடம் செல்பவர்கள் உண்மையான ஒழுக்கம், அன்பும் பக்தியும் இருந்தால் ஆபத்துக்கள் நேரிடாது

இப்போது ஆலய வழிபாடுகள் எல்லாம் கேலி கூத்தாகி மாறி விட்டது.

உலகில் பணம் பொருள் வாங்கும் கடவுள்களாகவே உள்ளன.
பணம் வாங்கும் கடவுள் மக்களுக்கு நன்மை செய்வாரா ?

பணம் வாங்குவதற்கு கடவுள் என்ன பிச்சைக்காரனா ?

அன்பும்,தயவும்,கருணையும்,காட்டும் கடவுள் பணம் பறிக்கலாமா ?

கொடுப்பதற்குக் கடவுளா ? வாங்குவதற்குக் கடவுளா ?

அதிகமாக பணம் கொடுப்பவர்களுக்கு முன் தரிசனம்,குறைவாகக் கொடுப்பவர்களுக்கு பின் தரிசனம்.பணம் இல்லாத ஏழைகளுக்கு தொலைவில் தரிசனம் .இதுதான் இன்றைய கடவுள் வழிப்பாட்டு முறைகள்.

நீங்களே சிந்தித்து செயல்படுங்கள்.

இதைத்தான் வள்ளலார் தெளிவு படுத்தி உள்ளார் .;--

பண்ணாத தீமைகள் பண்ணுகின்றறீரே
பகராத வன்மொழி பகருகின்றீரே
நண்ணாத தீயினம் நண்ணுகின்றீரே
நடவாத நடத்தைகள் நடக்க வந்தீரே
கண்ணாகக் காக்கின்ற கருத்த்தனை நினைந்தே
கண்ணார நீர் விட்டுக் கருத்தரியீரே
எண்ணாதது எண்ணவும் நேரும் ஓர் காலம்
எத்துணை கொள்கின்றீர் பித்துலகீரே !

தீய குணங்களை அகற்றி உயிர்கள் மேல் அன்பும்,தயவும்,கருணையும்,கொண்டு வாழாமல் உயிர்களுக்குத் தீமைகள்,வன் மொழிகள் ,துன்பங்கள் கொடுத்து வாழ்ந்தால் தீராத துன்பம் நம்மைத் தேடிவரும்.

தீமைகள் செய்யாமல் நன்மைகள் செய்தால் எங்கு சென்றாலும் கடவுள் உங்களை காப்பாற்றுவார் .

ஆலய வழிபாடு என்பது முக்கியம் அல்ல .

கடவுளிடம் அன்பும், உயிர்கள் மேல் இரக்கமும்...தயவும்,... கருணையும், கொண்டு,..ஒழுக்கத்துடன்  வாழுங்கள் .எக்காலத்தும் துன்பம் உங்களை நெருங்காது .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

பாம்பு கடிக்காமல் நின்றது !

பாம்பு கடிக்காமல் நின்றது !


அன்பர் ஒருவர் குறிஞ்சி பாடியில் இருந்து செவ்வாய்க் கிழமை தோறும் வடலூர் வந்து வள்ளலாரைத் சந்தித்து சொற்பொழிவு கேட்டு தரிசனம் செய்வது வழக்கம் ,

ஒரு நாள் ஞாயிற்றுக் கிழமை விடியற் காலையில்,அங்கு உள்ள  குளக்கரையில் ஒரு செடியின் அருகே காலைக் கடனுக்காக உட்கார, ஒரு பாம்பு அந்த அன்பரைத் தீண்ட முற்பட்டது .

உடனே இராமலிங்கத்தின் மேல் ஆணை என்றார் அந்த அன்பர் .அந்தப்பாம்பு வாயைத் திறந்தது திறந்தபடியே அப்படியே நின்று கொண்டது .

இரண்டு நாடகள் கழித்து  அந்த அன்பர் வடலூருக்கு சென்று இராமலிங்க வள்ளலார் பிரசங்கம் செய்யும் இடத்திற்கு வந்து அமர்ந்தார் .

வள்ளலார் பிரசங்கத்தை நிறுத்தி விட்டு ''ஐயோ ''ஒரு உயிர் இரண்டு நாட்களாக உணவு இல்லாமல் பட்டினியாய் இருக்கின்றது என்று கூறி ''பிச் உடனே சென்று ஆணையை விடுதலை செய் ''என்று அந்த அன்பருக்கு கட்டளை இட்டார் .

அந்த அன்பர் ;--இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் அய்யாவுக்கு தெரிந்து உள்ளது என்று அறிந்து ,அவசரமாக கிளம்பி குறிஞ்சிபாடிக்கு சென்று பார்த்தார் .அவ்விடம் அந்த பாம்பு வாய் திறந்த நிலையில் அப்படியே அமர்ந்து இருந்தது .

நான் ஆணையை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என்று சொன்னதும் அந்த பாம்பு பின்னோக்கி புதருக்குள் சென்றது .

வள்ளல்பெருமான் பெயரைச் சொல்லி ,இதுபோல் பல அற்புதங்கள் நடந்து உள்ளன.

கடவுள்மேல் உண்மையான அன்பும் ..உயிர்கள் மேல் உணமையான இரக்கமும் ,தயவும் உள்ளவர்கள் கடவுளுக்கு சமமானவர்கள் .

வள்ளல்பெருமான் கடவுளுக்கு நிகரானவர் அவர் பெயரைச் சொன்னாலே எல்லாத் துன்பங்களும் நீங்கிவிடும்.என்பது இதில் இருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,

வள்ளல்பெருமான் அன்பு,தயவு,கருணையே வடிவமானவர் .இரக்கம் நீங்கில் என் உயிர் நீங்கும் என்பார் .

அவர் காட்டிய கடவுள் உண்மையானக் கடவுள் ஒருவரே .அவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி   அருட்பெருஞ்ஜோதி   தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி '' என்னும் கடவுளாகும்.

அந்த ஒப்பற்ற எல்லாம் வல்ல தனித் தலைமைப் பெரும்பதியான கடவுளைத்  தொடர்பு கொள்ளுங்கள் அவர் சொல்லிய ஜீவ காருண்யத்தைக் கடைபிடியுங்கள் உங்கள் வினைகள் எல்லாம் தீர்ந்து ,துன்பம், துயரம், அச்சம்,பயம்,மரணம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

பக்தி வரும் பழ வினைகள் பறந்தோடும் மூலமலப் பகுதி மாயும் .

புத்தி வரும் புலைகொலைகள் புறம்போகும் ஆனந்தம் பொங்கும் சாந்த முத்தி வரும்

அழியா நன் மோக்கம் முறும் அமுத கடல் சூழ் உலகில் எல்லாச் சித்தி வரும்

 இராமலிங்க தேசிகன் தன் அருட்பாவைச்
சிந்திப்போற்கே .....

வாராத வல்வினை நோய் வந்தாலும் வன்மையோடு
சேராத பாவம் எல்லாம் சேர்ந்தாலும் --தீராது என்று
யார் சொன்னார் எங்கள் அருட்பிரகாசப் பெருமான்
பேர் சொன்னால் போமே பிணி .

இயற்றியது கடலூர் சிவ துரைசாமி தேசிகர்;---

நாம் எந்தக் கடவுளை தேடிச்சென்றாலும் அந்தக் கடவுள் நம்மை காப்பாற்ற வேண்டும் .அப்படி அந்தக் கடவுள் நம்மைக் காப்பாற்ற வில்லை எனில் அந்தக் கடவுள் உண்மையான கடவுள் அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் அழைக்கின்றார் !

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே ! .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

வியாழன், 12 நவம்பர், 2015

நீங்கள் வணங்கும் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை. !

நீங்கள் வணங்கும் கடவுள் ஏன் காப்பாற்றவில்லை. !

ஒருவார காலமாக தமிழகத்தில் அளவில்லா காற்றும் மழையும்  பெய்து உள்ளது .

மரங்களும்,பாலங்களும்,வீடுகளும் அழிந்து உள்ளது மேலும் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்பட்டு உள்ளது.

தீப ஒளி பண்டிகை வியாபாரம் நசுங்கி உள்ளது .மக்கள் அளவில்லா துன்பத்தில் அலைமோதிக் கொண்டு இருந்து உள்ளார்கள் .பண்டிகை கொண்டாட முடியவில்லை என்று மக்கள் வேதனைப் பட்டு கண்ணீரும் கம்பலையுமாக மாறி உள்ளார்கள் .

உங்களின் பல வேண்டுதலுக்காக கடவுளிடம் சென்று முறை இடுகின்றீர்கள் .வணங்கு கின்றீர்கள்,வழிபடு கின்றீர்கள்.

திருமணம்,  குழந்தை பிறப்பு ,...வேலை கிடைக்க,...தீராத நோய்கள் தீருவதற்கு ,...தொழிலில் வருமானம் பெருகுவதற்கு ,....தொழில் தொடங்க ...மேலும் பல காரியங்களுக்காக கடவுளிடம் சென்று முறையிட்டு அவை நிறைவேறி விட்டதாகவும் சொல்கின்றீர்கள் .

இப்போது வந்த காற்று, கனமழையால்  . உயிர் இழப்பு ,பொருள் சேதம் ,பயிர் சேதம் போன்ற அளவில்லா இழப்புகளை உண்டாக்கி உள்ளது .

நீங்கள் வணங்கும் தெய்வங்கள் ஏன் இதை எல்லாம் கண்டு கொள்ளாமல் காப்பாற்ற முடியாமல் அமைதியாக இருந்து உள்ளது.

எல்லா துன்பங்களுக்கும் கடவுளைத் தேடும் ...கடவுளை  வேண்டும்.. நீங்கள்..

இதை மட்டும் அரசு செய்யவேண்டும் .அதிகாரிகள் செய்ய வேண்டும் ..அரசியல் வாதிகள் செய்ய வேண்டும்...மக்கள் செய்ய வேண்டும்  ..தொண்டு நிறுவனங்கள் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றீர்கள் முறையிடுகிறீர்கள் .

தெரிந்து கொள்ளுங்கள் நீங்கள் வணங்கும் கடவுள்கள் உங்களை ஒரு போதும் பாது காக்காது காப்பாற்றாது .

மனிதர்கள்தான் மனிதர்களை காப்பாற்ற முடியும்./

இதைத்தான் வள்ளலார் சொன்னார் .ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும் சொல்லி உள்ளார் .

உயிர்களுக்கு உபகாரம் செய்தால் .உயிர்களிடம் இரக்கம் காட்டினால், கடவுள் உயிர்களின் மூலமாக நன்மையை செய்வார்.

இது போன்ற துன்பங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ள உயிர்களுக்கு நன்மையை செய்யுங்கள் .எந்த உயிர்களையும் அழிக்க நினைக்காதீர்கள்.

எல்லா உயிர்களிலும் கடவுள் இருக்கின்றார் என்பதை உணர்ந்து உயிர்களுக்கு வரும் துன்பத்தை போக்குங்கள்.

கற்பனைக் கடவுள்களை வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

உயிர்கள் மேல் அன்பு,தயவு,கருணை  கொள்ளுங்கள் கடவுள் உங்களை நிச்சயம் காப்பாற்றுவார் .

கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கின்றார் ..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

அறிவாளி யார் ? முட்டாள் யார் ?

அறிவாளி யார் ? முட்டாள் யார் ?

அறிவாளிகள் எல்லாம் முட்டாளைத் தேடுகிறார்கள்> .

முட்டாள்கள் எல்லாம் அறிவாளியைத் தேடுகிறார்கள் >.

அறிவாளி முட்டாள்களை ஏமாற்றுகிறான்>

முட்டாள் அறிவாளியிடம் ஏமாறுகிறார்கள் >.

அறிவாளிப் பொருளைக் கொள்ளை அடிக்கிறான் >.

முட்டாள் பொருளை இழக்கிறான் >

அறிவாளித் பணத்தை தேடுகிறான் >.

முட்டாள் கடவுளைத் தேடுகிறான் .>

பணத்தால் அறிவாளி முட்டாள் ஆகிறான் >.

பணத்தால் முட்டாள் அறிவாளி ஆகிறான்.>

ஆட்சியாளன் மக்களை ஏமாற்றுகிறான் >

மக்கள் ஆட்சி யாளனிடம் ஏமாறுகிறார்கள்>

கருணை இல்லா ஆட்சி கருகி அழியும் >

கருணை உள்ள ஆட்சி என்றும் நிலைக்கும் >

பணம் இருக்கும் இடத்தினிலே குணம் இருப்பதில்லை>.

குணம் இருக்கும் இடத்தினிலே பணம் இருப்பதில்லை> .

அறிவாளிக்கும் மரணம் வருகின்றது >.

முட்டாளுக்கும் மரணம் வருகின்றது>.

அறிவாளியும் அருளைத் தேடுவதில்லை,>

முட்டாளும் அருளைத் தேடுவதில்லை.>

பொருள் இருக்கும் இடத்தில் அருள் இருப்பதில்லை.>

அருள் இருக்கும் இடத்தில் அனைத்தும் இருக்கும்.>

பொருளைத் தேடுபவன் பூமிக்குள் செல்கிறான் >.

அருளைத் தேடுபவன் ஆண்டவரிடம் செல்கிறான்>

பொருளைத் தேடும் அறிவு அறிவு அல்ல >

அருளைத் தேடும் அறிவே அறிவு >

புத்தியால் தோன்றும் அறிவு அறிவு அல்ல >

ஆன்மாவில் தோன்றும் அறிவே உண்மை அறிவு >

புத்தி அறிவுப் பொருளைத் தேடும் >

ஆன்ம அறிவு அருளைத் தேடும் >

தவறு செய்பவன் கடவுளைத் தேடுகிறான் > .

தவறு செய்யாதவன் அருளைத் தேடுகிறான்.>

குற்றம் செய்பவன் கோவிலில் கிடக்கிறான்.>

குற்றம் செய்யாதவன் கருணையைத் தேடுகிறான் >.

அன்பு உள்ளவன் உயிர்களை நேசிக்கிறான் >

அன்பு இல்லாதவன் சிலையை நேசிக்கிறான்>.

அன்பு உள்ளவனை ஆண்டவர் நேசிக்கின்றார் >,

அன்பு இல்லாதவனை எமன் நேசிக்கின்றான் >.

அன்பு உள்ளவனுக்கு அருள் வழங்கப் படுகின்றது.>

அன்பு இல்லாதவனுக்கு பொருள் வழங்கப் படுகின்றது >

பொருள் உள்ளவனுக்கு காமம்,வெகுளி ,மயக்கம் வரும்>

அன்பு உள்ளவனுக்கு அருள் வரும் >

பொருள் உள்ளவன் அழிகின்றான் .>

அருள் உள்ளவன் வாழ்கின்றான் >.

மனித நேயம் உள்ளவன் மடிகிறான் >

ஆன்ம நேயம் உள்ளவன் வாழ்கிறான் >

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்;--- .

உலக சமாதானம் !

உலக சமாதானம் !

உலக சமாதானத்திற்கு ஒரே வழி சமயங்கள் மதங்கள் ஒழிய வேண்டும்.

சமயங்கள் மதங்கள் ஒழிந்தால் உலக ஒற்றுமை அதிவேகமாக உண்டாகும்.

கடவுள் ஒருவரே என்ற  உண்மையை உலக மக்களுக்குப் போதிக்க வேண்டும்.

சமயங்கள் மதங்கள் காட்டிய கடவுள்கள் உண்மைக்குப் புறம்பானது பொய்யானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வேதங்கள்,ஆகமங்கள்,புராணங்கள்,இதிகாசங்கள்,சாத்திரங்கள் அனைத்தும் பொய்யானது என்பதை மக்களுக்கு ஆதாரத்துடன் போதிக்க வேண்டும்.

மனித நேயமும்,ஆன்ம நேயமும் என்ன என்பதை மக்கள் தெரிந்து புரிந்து கொள்ளும் அளவிற்கு போதிக்க வேண்டும்.

உலகத்தைப் படைத்தது யார் ?,ஆன்மாவைப் படைத்தது யார் ?,உயிர்களைப் படைத்தது யார் ? ,பொருள்களைப் படைத்தது யார் ? அந்த  உண்மையான இறைவன் யார் ? என்பதை மக்களுக்கு தெளிவுப் படுத்த வேண்டும்.

இதை எல்லாம் போதிக்க யார் தகுதி யானவர்கள் ?

உலக மக்களை திருத்தி உண்மையான பொது நெறியை உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி ,உலக மக்களை ஒற்றுமைப் படுத்த   வேண்டும் என்பதற்காகவே  இறைவனால் வருவிக்க உற்றவர் தான் ,''திரு அருட்பிரகாச வள்ளலார் ''என்பவராகும்.

அவர் போதித்த உண்மையான நெறிதான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற நெறிதான் தனிப்பெரும்  புனித நெறியாகும்.

இந்த புனிதமான நெறியை உலக மக்களுக்குப் புரியும்படி போதிக்க வேண்டியது சுத்த சன்மார்க்கிகளின் பொறுப்பும் கடமையும் யாகும்.

சுத்த சன்மார்க்கிகள் என்பது,சாதி,சமயம்,மதம்,என்னும் கொள்கைகளை முற்றும் பற்று அற கை விட்டவர்களும், காமம் குரோதம் இல்லாதவர்களாகவும், எதிலும் பற்று இல்லாத பொது நோக்கம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும்.அவர்களே சுத்த சன்மார்க்கத்தைப் போதிக்கும் தகுதி உடையவர்கள்.

வள்ளலார் போதித்த சுத்த சன்மார்க்க நெறி ஒன்றாலேதான், உலகத்தை ஒன்று படுத்த முடியும்...உலக ஒற்றுமையை உருவாக்க முடியும்.உலக சமாதானத்தை படைக்க முடியும்.

உலக மக்களே உலகத்தை ஒருமைப் படுத்த உலக சமாதானத்தை உருவாக்க ,ஆன்ம நேயத்தையும்,மனித நேயத்தையும் புரிந்து கொண்டு மக்களை நல்வழிப் படுத்த  வள்ளலார் போதித்த ''சுத்த சன்மார்க்க
நெறியில் ''தங்களை இணைத்துக் கொண்டு உலக மக்களுக்கு நன்மையை  செய்வோம் வாரீர் வாரீர் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்து
இருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழந்து
இடுதற்கு என்றே எனை இந்த
உலகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே !

எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான் காண
இவ்வுலகில் என் தந்தை எனக்களித்தான் --எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் அடையச் செய்வித்தே
என்மார்க்கம் காண்பேன் இனி .!

அகம் கருத்து புறம் வெளுத்துக் கொண்டு இருக்கும் மக்களைத் திருத்துவதற்காகவே இறைவன் என்னை இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளான் .என்றும்.

உலகில் உள்ள மக்களை திருத்துவதற்காக எனக்கு அருளைப் பூரணமாக கொடுத்து மரணத்தை வென்று எக்காலத்தும் அழியாமல் இருக்கும் தேகத்தையும் கொடுத்து உள்ளான் ...ஆதலால மக்களை திருத்தி உலக சமாதானத்தையும்,ஆன்மநேயத்தையும்,மனித நேயத்தையும் உண்டாக்குவேன் .

இது இறைவன் கட்டளை இவற்றை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என்கின்றார் வள்ளல்பெருமான்.

இறைவனால் தோற்று விக்கப்பட்டது தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்பதாகும் எனவே எல்லா உயிர்களையும் இன்பம் அடைய செய்விப்பதே சுத்த சன்மார்க்க கொள்கைகளாகும் .

இன்னும் கொஞ்ச காலத்தில் இறைவன் ஆணைப்படியே உலக சமாதானம்,உலக ஒற்றுமைகள்  எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

புதன், 11 நவம்பர், 2015

சுயநலம் ! பொது நலம் !

சுயநலம் ! பொது நலம் !

தனக்காக வாழ்வதும் ,தங்களை சார்ந்தவர் களுக்காகவும்  வாழ்வது சுயநலம்>.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்காக வாழ்வது பொது நலம்>

சுயநலத்தில் வாழ்வதால் மனம் மகிழ்ச்சி,மனம் நெகிழ்ச்சி  அடைகின்றது .

பொது நலத்தில் வாழ்வதால் ஆன்மா மகிழ்ச்சி,ஆன்ம நெகிழ்ச்சி அடைகின்றது >

சுயநலத்திற்காக வாழ்வதால் ஆன்மா மகிழ்ச்சி அடைவதில்லை>.

பொது நலத்திற்காக வாழ்வதால் ஆன்மா மகிழ்ச்சி அடைகின்றது>

சுய நலத்தால் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,மரணம் வந்து அழிந்து போகின்றோம்>

பொது நலத்தால் ஆன்மா மகிழ்ச்சி அடைந்து ஆன்மாவில் இருந்து அருள் சுரந்து அழியும் உடம்பை அழியாமல் ஆக்குகின்றது>.

சுய நலத்தில் வாழ்பவரை இறைவன் நாடுவதில்லை>.

பொது நலத்தில் வாழ்பவரை இறைவன் என்றும் பாது காக்கின்றார்>

சுய நலத்தில் வாழ்பவன் இறைவனைத் தேடிச் செல்கின்றான்> .

பொது நலத்தில் வாழ்பவனைத் தேடி  இறைவன் வருகின்றார் >.

உலக துன்பங்களைப் பார்த்துக் கொண்டு இருப்பவன் சுயநலவாதி>.

உலகத் துன்பங்களைப் போக்குபவன் பொது நலவாதி>.

சுயநலத்தில் வாழ்பவன் இறைவனைக் காண முடியாது >.

பொது நலத்தில் வாழ்பவன் இறைவனைக் காண்கின்றான்.>

மனிதர்களை மட்டும் நேசிப்பது சுயநலம்>,

எல்லா உயிர்களையும் நேசிப்பது பொது நலம் >.

சிலைகளை வணங்குவது சுயநலம்> .

உயிர்களை வணங்குவது பொது நலம்>

சுய நலவாதி பொருளைத் தேடுகின்றான் >

பொது  நலவாதி அருளைத் தேடுகின்றான். .

சுய நலம் மறக்கருணை >.

பொது நலம் அறக்கருணை >

அறம் எனப்பட்டது இல்வாழ்க்கை ?

கருணை எனப்பட்டது அருள் வாழ்க்கை >

மனிதனுக்கு உபகாரம் செய்வது அறம் >

எல்லா உயிர்களுக்கும் உபகாரம் செய்வது கருணை >

சுயநலம் இறப்பையும் பிறப்பையும் கொடுப்பது.>

பொது நலம் இறப்பையே வெல்லுவது அதாவது மரணத்தையே வெல்லுவது .

சுயநலம் பிறந்து பிறந்து இறந்து இறந்து கொண்டே இருப்பது.

பொது நலம் பிறப்பு இறப்பு நீங்கி மனிதன் கடவுளாக மாற்றுவது.

வள்ளலார் சொல்லுவது.;

உலகினில் உயிர்களுக்கு உறும் இடை ஊறு எல்லாம் விலக நீ அடைந்து விளக்குக மகிழ்க !

அருள் அமுது அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெருஞ்ஜோதி !

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை .

சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலைதனைத் தயவினால் தந்தனை

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என்றனை .

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

எது சரி எது சரியில்லை என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 9 நவம்பர், 2015

இயற்கையின் நியதி !

இயற்கையின் நியதி !


இயற்கை என்பது இறைவனால் படைக்கப் பட்டது .

மனிதன் வேண்டுதளுக்கோ வேண்டாமைக்கோ இயற்கை கட்டுப்படாது .

இந்த உலகத்திற்கு எது தேவை, எது தேவை இல்லை என்பது இயற்கைக்குத் தெரியும்.

இயற்கைக்கு நாம் கட்டுப்பட்டு வாழ்ந்தால் இயற்கை நம்மை ஒன்றும் செய்யாது.

இயற்கைக்கு மாறுபட்டு செயல்பட்டால் துன்பங்களும்
துயரங்களும்,அச்சமும்,பயமும்,மரணமும் ,நம்மை சூழ்ந்து வந்து கொண்டே இருக்கும்.

உலகத்தையும் உயிர்களையும்,பொருளைகளையும் படைத்த இறைவன் என்னும் இயறகைக்கு,..எல்லாம் தெரியும் என்பதை உணர்ந்து .வாழ்ந்தால் என்றும் மகிழ்ச்சியுடன் வாழலாம்.

மனிதன் தேவைக்கு மட்டுமே பொருளை விரும்ப வேண்டும் .அதற்குமேல் பொருளை விரும்பாமல்  அருளை விரும்ப வேண்டும் .

இறைவன் படைத்த  உள்ள பொருள்களை யாரும் சொந்தம் கொண்டாடக் கூடாது.

நாம் தேவைக்கு மீறி செயல்பட்டாலும் அனுபவித்தாலும், நமக்குத் தெரியாமல் மறைமுகமாக துன்பம் வந்து கொண்டே இருக்கும்.

மனிதர்களைப் பக்குவ படுத்தத்தான் அதிகமான வெப்பம் உண்டாக்குவது மழையே இல்லாமல் இருப்பது ,இடைவிடாத மழை பொழிவது ,புயல் காற்று வீசுவது ,கடல் பொங்குவது.,புயலும் மழையும் பொழிவது போன்ற என்னில் அடங்காத சீற்றங்கள் எல்லாம் இயற்கையினால் உண்டாக்கப் படுகின்றது.

மனிதர்கள் உயர்ந்த அறிவு படைத்தவர்கள் எனவே இறைவனின் படைப்பை உணர்ந்து ...இயற்கையின் உண்மையை அறிந்து அதற்குத் தக்கபடி வாழ்ந்தால் என்றும் இயற்கை நம்மைத் தாக்காது .

எண்ணில் அடங்காத பரந்த பரப்பளவு உள்ள இந்த பூமியில் எங்கு எங்கு வாழலாம் எங்கு எங்கு வாழக் கூடாது என்பதை மக்கள் புரிந்து தெரிந்து கொண்டு வேண்டும்

கடல்களின்  ஓரங்களிலோ .நதிகளின் ஓரங்களிலோ .ஏரிகளின் அருகாமையிலோ ,குலம் குட்டை களின் ஓரங்களிலோ..பாலை வானங்களிலோ,.காடுகளின் அருகாமையிலோ, மனிதர்கள் வீடு கட்டி வாழக் கூடாது.

மனிதனின் அறிவை பயன் படுத்தி வாழ்ந்தால் இயற்கையின் தாக்குதலில் இருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம்.

மக்களை ஆட்சி செய்யும் ஆட்சி யாளர்களும், அதிகாரிகளும், விஞ்ஞான அறிவியல் வல்லுனர்களும் மனிதன் எங்கு எப்படி  வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒழுங்கு முறையை வழி வகுத்து காட்டி மக்களைக் காப்பாற்ற வேண்டும்.

மனிதனைத் தவிர ,உலகில் உள்ள உயிர் இனங்கள் அனைத்தும் இயற்கைக்கு விரோதம் இல்லாமல் இயற்கைக்கு கட்டுப்பட்டுதான் வாழ்ந்து கொண்டு உள்ளன.

மனிதர்கள் மட்டுமே இயற்கைக்கு விரோதமாக வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்

இயற்கையை நேசிக்காமல் உண்மையான இறைவனை தெரியாமல் .கண்ட கண்ட பொய்யான தெய்வங்களை வணங்கிக் கொண்டு கடவுள் காப்பாற்றுவார் என்று அறியாமையில் அலைவது .அறிவு இல்லாதவர்களின் செயல்களாகும்.

இயற்கையுடன் போட்டி போட்டால் அழிவுதான் மிஞ்சும் இயற்கைக்கு விரோதம் இல்லாமல் இயற்கையையுடன் ஒன்றி வாழ வேண்டும்.அதுதான் அறிவுள்ள மனித வாழ்க்கையாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். .

தீப ஒளி நல் வாழ்த்துக்கள் !

தீப ஒளி நல் வாழ்த்துக்கள் !

தீபாவளி என்பது நரகா சூரனை அழித்ததால் அதை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் விதமாக கொண்டாடட்படுவதாக அதற்கு ஒரு மாதத்தையும் தேதியையும் தேர்வு செய்து பெரியோர்கள் வைத்துள்ளார்கள் .

அதன் விளக்கம் !

நம்முடைய உடம்பின் தலைப் பகுதியில் தீபம் என்னும் ஆன்ம ஒளி தான் உடம்பை இயக்கிக் கொண்டு உள்ளது.

நம்முடைய உடம்பில் உள்ள அந்த ஒளியை தெரிய வொட்டாமல் 96 ,தத்துவங்கள் ஏழு திரைகளாக ஏழு விதமான தாதுக்கள் மறைத்துக் கொண்டு உள்ளன.

அந்த ஒளியை தெரிய வொட்டாமல் மறைத்துக் கொண்டு உள்ள தத்துவங்களை தாதுக்களை அறியாமை ,அஞ்ஞானம் என்னும் தீய குணங்கள் மறைத்துக் கொண்டு உள்ளன.

அந்த தீய குணங்களைத்தான் அறியாமை,அஞ்ஞானம் என்பதை அழிக்கும் குணங்களை  நரகாசுரன் என்னும் பெயரை வைத்துள்ளார்கள்

நரகாசுரன் என்பது உயிரைப் பறிக்கும், எமன் என்னும் கூறறுவன் என்பதாகும்.

அறியாமை ,அஞ்ஞானம் ,ஆணவம்,மாயை,கன்மம், என்னும் தீய குணங்களையும் செயல்களையும், அழித்து ஒழித்து,,ஆன்ம ஒளியைக் கண்டு, மரணத்தை வென்று உண்மையான அந்த தீப ஒளியை காண்பதுதான் தீப ஒளித் திருநாள் என்பதாகும்.

அந்த தீப ஒளியை அனைவரும் காண வேண்டும் என்பதுதான் மகிழ்ச்சி தரும் திருநாளாகும்..

அதை மக்களுக்கு தெரியபடுத்தவே கற்பனைக் கதைகளாக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார்கள்.

எப்படியோ தீப ஒளித் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.

புத்தாடைகள்  ,பட்டாசுகள் பலகாரங்கள் அனைத்தும் இன்றைய நாகரிகத்திற்கு தகுந்தாற் போல் புதுப்  புது வண்ணங்களாகவும்,வடிவங்களாகவும் குடும்பம் குடும்பமாக வாங்கி அனுபவித்து கொண்டாடி மகிழுங்கள் .

அதே நேரத்தில் ஆதரவு அற்ற ஏழைகளுக்கும், குழந்தைகளுக்கும் முதியோர்களுக்கும் நம்மால் முடிந்த அளவு  உதவி செய்து அவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்யுங்கள் .அதுவே நாம் செய்யும் புண்ணிய காரியமாகும்..

அந்த புண்ணிய காரியத்தால் நம்முடைய ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை,. அஞ்ஞானம், என்னும் தத்துவங்களான  தீய குணங்களை  நீக்கி தீப ஒளியைக் காட்டும் வழியாகும் .

அன்பு,தயவு,இரக்கம்,கருணையினால் தான் தீய குணங்கள் மறைந்து அறிவு என்னும் சுடர் வெளிப்படும்.

அனைத்து  ஆன்ம நேய அன்பு உள்ளங்களுக்கும் எனது உள்ளம் கனிந்த தீப ஒளி நல் வாழ்த்துக்கள்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்  

வெள்ளி, 6 நவம்பர், 2015

காதலைத் தேடும் காளைகளே கன்னிகளே !

காதலைத் தேடும் காளைகளே கன்னிகளே !

தெரிந்து செய்யுங்கள் தெளிவாக செய்யுங்கள் !

காதல் என்பது மெல்லிய ரோஜா இதழ்போன்றது !.

முள்ளிலே இருத்தாலும் ரோஜா  தன்னைக் குத்தாமல் பாது காத்துக் கொள்கிறது ..

முள் குத்தாமல் தன்னை பாது காத்துக் கொள்வதே காதல் !.

உண்மை உணர்வதே காதல்,!

உலகை வெல்வதே காதல் !

தன்னை உணர்வதே காதல் !

தாகம் தீர்வதே காதல்,!

அன்பினால் மலர்வது காதல்  !

ஆசையில் பூப்பது காதல் !

கண்ணாடிப் போன்றது காதல் !

கலக்காமல் கலக்குவதே காதல்.!

கற்பை இழக்காமல் இருப்பதே காதல்.!

போதையாக மாறாதது காதல் !

கண்ணைப் போன்றது காதல் !

காதலுக்கும் கண் உண்டு !

கண்ணைப் பாதுகாப்பது போல் காதலைப் பாது காக்க வேண்டும் !.

காதல் ரசம் கற்கண்டு போன்றது.!

காதல் கசக்காமல் பாதுகாக்க கற்றுக் கொள்ளுங்கள் !

காதலுக்கு சாதி,சமயம் மதம் தடையாக இருக்க கூடாது !

வீரத்தின் சின்னம் காதல் !

வெற்றியின் சின்னம் காதல்  !

அன்பின் சின்னம் காதல் !

வாழ்க்கையின் சின்னம் காதல் !

வாழ்ந்து காட்டுவதே காதல் !

சோகத்தில் முடியாத காதல் !

சொர்க்கத்தில் மகிழும் காதல் !

எண்ணத்தில் தோன்றும் காதல் !

இன்பத்தில் முடியும் காதல் !

வாழத் தெரிந்த காதல் !

வாழ்க்கையில் முடியும் காதல் !

கருணைக் கொண்ட காதல் !

காலத்தை வெல்லும் காதல் !

கற்பைக் காக்கும் காதல் !

கல்யாணத்தில் முடியும் காதல் !

அதுவே நிலையான காதல் !

காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள் கடமை தவறாமல் வாழுங்கள் ..காலமும் கடவுளும் உங்களை காப்பாற்றும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

வெந்நீரின் (சூடு தண்ணீர்) பயன்கள் !


நம் நாட்டில் நீர் நிலைகள் பல உண்டு .

மழைநீர் ,...பனி நீர் ...கிணற்று நீர்,...குளத்து நீர் ,..வாய்க்கால் நீர், ..ஆற்று நீர்,..தேக்க நீர்,...கடல் நீர் ...கழுவு நீர் என பல வழிகளில் நீர் இருக்கின்றது ,கிடைக்கின்றது .

எல்லா நீர் நிலைகளும் ஒரே சுவையை  தருகின்றதா என்றால் இல்லை என்றுதான் சொல்லுவோம் .

எல்லா நீர்களும் மழையினால்தான் பூமிக்கு வருகின்றது.மழை நீரை பூமிக்கு வராமல் பூமியைத் தொடாமல் நேராக பிடித்து அவற்றை சுவைத்தால் ஒரே சுவையாகத்தான் இருக்கும்.

பூமிக்கு வந்த பிறகு மண்ணின் தன்மைக்குத் தகுந்தாற் போல் ,மலைகளின் தன்மைக்குத் தகுந்தாற்போல் ,அருவிகளின் தன்மைக்குத் தகுந்தாற் போல் .அதன் தன்மை சுவைகள் எல்லாம் மாற்றம் அடைந்து உள்ளதாக இருக்கும் .
ஏன் என்னக் காரணம் ?
இந்த உலகில் ஐந்து வகையான பூதங்களான்  நீர்,மண்,அக்கினி ,காற்று ,ஆகாயம், என்பவை கடவுளால் படைக்கப் பட்டுள்ளன.அதற்குத் தகுந்தாற் போல் ஐந்து வகையான வண்ணங்கள் உண்டு , 
அந்த ஐந்து வகையான பூதங்களின் கலப்பிற்கு தகுந்தாற் போல் தான், தாவரம் ஊரவன்,பறப்பன ,மிருகம் தேவர்,அசுரர் மனிதர்கள் போன்ற உயிர் இனங்கள் பல வண்ணங்கள் வடிவங்களாக  எல்லாம் தோன்றுகின்றன.
எல்லா உயிர் இனங்களுக்கும் முக்கியமாக தண்ணீர்தான் ஆதாரமாக இருக்கின்றது.ஆகாரம் இல்லாமல் இருந்தாலும் இருக்கலாம் தண்ணீர் இல்லாமல் குடிக்காமல் இருக்க முடியாது.
இந்த உலகத்தில் உள்ள தண்ணீரில் நான்கு வகையான கலவைகள் உள்ளன்,.அவை 
பூதம்,அசுத்தம் விஷம்,உஷ்ணம் ,அமுதம் என்ற ஐந்து வகைகள் உண்டு இவை காற்றினால் நீரில் கலக்கப் படுகின்றன .
நாம் தினமும் அருந்தும் நீரில்  பூதம்,அசுத்தம் விஷம்,உஷ்ணம் என நான்கு பங்கும் (பாகம் ) அமுதம் என்பது ஒரு பங்கும்(பாகம் )  உள்ளது .அந்த அமுதபாகம் இல்லை என்றால் உயிர்கள் ஜீவிக்காது . 
நாம் உண்ணும் உணவில் நீருடன் கலந்து விஷம்,பூதம்,அசுத்தம்,உஷ்ணம் அமுதம் போன்ற ஐந்தும் உடம்பிற்குள் செல்கின்றது.
நமக்கு வரும் நோய்களுக்கு அடிப்படைக் காரணம் தண்ணீர்தான்...தண்ணீரின் வழியாகத்தான் எல்லா நோய்களும் வருகின்றன.
வள்ளலார் சொல்லியது.!
நாம் குடிக்கும் தண்ணீரை தினமும் கொதிக்க வைத்து மிதமான சூட்டில் தான் குடிக்க வேண்டும் என்கின்றார்.அதேபோல் குளிக்கவும் வெந்நீரில் தான் குளிக்க வேண்டும் என்கின்றார்.
அதற்கு காரணம் ;--
தண்ணீரை அடுப்பிலோ அல்லது கேஸ் அடுப்பிலோ வைத்து சூடு செய்யும் போது அந்த சூட்டினால் பூதம் அசுத்தம்,விஷம் போன்ற கிருமிகள் வெளியே சென்று விடும் .உஷ்ணம் அமுதம் என்ற இரண்டும் அந்த தண்ணீரிலேயே இருக்கும் .இவை இரண்டும் உடம்பையும் உயிரையும் பாது காக்கும் சக்தி வாய்ந்தது.
எனவே எப்போதும் தண்ணீரை கொதிக்க வைத்து ,ஆரிய பின்னரும் குடிக்கலாம் .இருந்தாலும் இளஞ் சூட்டுடன் குடிப்பது மிகவும் நன்று .
குடிக்கவும் குளிக்கவும் வெந்நீரைப் பயன் படுத்தினால் தொற்று நோய்களும் பிற நோய்களும் மேலும் எந்த வியாதிகளும் நம்மை நெருங்காது.
கொதிக்க கொதிக்க குடித்தவர் வள்ளலார் ;--
வள்ளல்பெருமான் வாழ்நாள் முழுவதும் உணவை நிறுத்தி விட்டு தினமும் வெந்நீரையே அருந்திக் கொண்டு வந்தார் 
யாராலும் தொடமுடியாத அளவிற்கு இருக்கும் கொதிக்கும் வெந்நீரை அப்படியே வாங்கி மிகவும் சாதாரணமாக குடிப்பார் .அந்த அளவிற்கு அவருடைய உடம்பு உஷ்ணம் உள்ளது அவரை யாராலும் தொட்டே முடியாது,தொட்டால் வெந்து விடுவார்கள் .
அதே உஷ்ணத்தை அருள் உஷ்ணமாக மாற்றியவர் வள்ளலார் .அவருடைய ஆன்மா கோடி சூரிய பிரகாசம் உடையது 
அருள் உஷ்ணம் என்பது மற்றவர்களை அழிக்காது காப்பாற்றும் ஆற்றல் உடையது.  
எனவே நாம் அந்த அளவிற்கு போகா விட்டாலும் நமக்கு நோய் வராமல் காப்பாற்ற நாம் தினமும் வெந்நீரில் குளிக்க வேண்டும்.வெந்நீரைக் குடிக்க வேண்டும்.

வெந்நீரின் பயன்கள் ;--
நம்மில் பலர், உடல்நிலை சரியில்லை என்றால் மட்டுமே, வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். இதன் வாயிலாக, வெந்நீர் உடல் ஆரோக்கியத்துக்கு, மிகவும் உதவுகிறது என்று நாம் அறிந்திருக்கிறோம். சுடு தண்ணீரின் முழு பயன்கள் என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
அளவுக்கு அதிகமான உணவோ அல்லது ஏதாவது எண்ணெய் பலகாரம், மற்றும் சுவீட், அல்லது பூரி வடை ,போண்டா பஜ்ஜி ,போன்ற பலகாரங்கள் சாப்பிட்ட பிறகு, நெஞ்சு கரித்துக் கொண்டிருந்தால் ஒரு டம்ளர் வெந்நீரை எடுத்து பருகுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போய்விடும். உணவும் செரித்து விடும்.
காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று பீல் பண்ணுகிறவர்கள், ஒரு தம்ளர் வெந்நீரை உடனே குடியுங்கள்.கொஞ்ச நேரத்தில்  மலப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பு,அதிகப்படியான சதை, குறையவும் வாய்ப்பிருக்கிறது.
வெந்நீரில் தேன் கலந்து அருந்தினால் உடம்பில் உள்ள சதைகள் யாவும் சுருங்கி விடும்.

உணவு சாப்பிட்டு முடித்ததும் சுடுதண்ணீர் பருகினால், இதயத்துக்கு மிகவும் நல்லது. ஏனெனில் கொழுப்புகளை சேரவிடாமல், கரைத்துவிடும் சக்தி வெந்நீருக்கு உள்ளது. 
வீட்டில் வேலை செய்யும் பெண்கள் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் நீங்கி, உங்கள் கைகள் சுத்தமானதாக, ஆரோக்கியமாக இருக்கும்.
உடம்பு வலிக்கிற மாதிரி இருந்தால் நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு சூடாக அருந்துங்கள். நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும். மேலும் சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும்.
வெளியில் சென்று அலைந்துவிட்டு வந்தால், கால் பாதங்கள் வலிக்கும். அவ்வாறு வலிக்கும் போது, பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்கும் அளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, கொஞ்ச நேரம் அதில் பாதத்தை வைத்து எடுங்கள். கால் வலி குறையும்.
காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், பாதமும் சுத்தமாகிவிடும். 

மூக்கு அடைப்புக்கு சிறந்த மருத்துவர் வெந்நீர்தான். வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு குணமாகும்.
வெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. 

ஈஸினோபீலியா, ஆஸ்துமா,அலர்ஜி ,போன்ற உபாதைகள் இருப்போர், தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள். அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், நல்ல இதமாக இருக்கும்; விரைவில் குணமாகும்,

வெளியில் சென்று மழையிலோ ,குளிரிலோ .பனியிலோ நனைந்து வீட்டிற்கு வந்தால் .தலையை உடம்பை துடைத்து விட்டு இரண்டு டம்பளர் வெந்நீரைக் குடியுங்கள் ..சளி,இருமல்,ஜலதோஷம் போன்ற தொல்லைகள் வராமல் நின்று விடும் 

வெந்நீர் நோய் தீர்க்கும் ஒரு அருமருந்து .அசட்டை செய்யாமல் கடைபிடியுங்கள் ஆரோக்கியம் உங்களைத் தேடிவரும் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 5 நவம்பர், 2015

உலகை திருத்தும் ஒரே மார்க்கம் !

உலகை திருத்தும் ஒரே மார்க்கம் !

இன்னும் கொஞ்ச காலத்தில் உலகத்தில் உள்ள எல்லா மார்க்கங்களும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து போய் விடும் .

உலகத்தை திருத்தும் ஒரே மார்க்கம் இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட ..''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்ற புனித அருள் மார்க்கமாகும்.

மற்ற மார்க்கங்கள் யாவும் மனிதர்களால் தோற்றுவிக்கப் பட்ட அனைத்தும் துன் மார்க்கங்களாகும் ,அவற்றை பின்பற்றுவதால் எந்த பயனும் இல்லை.

உலகில் உள்ள ஆன்மீக மார்க்கங்கள் அனைத்தும் ,மாயையால் சிக்குண்ட பெரியவர்களால் தோற்றுவிக்க பட்ட பொய்யான மார்க்கங்கள்.அதாவது சாத்தானின் மார்க்கம்  என்பதை அறிவுள்ளவர்கள் தெரிந்து கொள்ளவேண்டும்.

உலகில் உள்ள மார்க்கங்கள் அனைத்தும் குற்றமே புரியும், அன்பு .தயவு,கருணையே இல்லாத  கொலைக்கார மார்க்கங்கள் .

உண்மையான கடவுளை அறியாத மார்க்கங்கள் ,கடவுளைக் காணாத மார்க்கங்கள்,கடவுளை களங்கப் படுத்திய மார்க்கங்கள்

கண்ட கண்ட பொய்யான தத்துவ உருவங்களை வைத்து இதுதான் கடவுள் என்று அதற்கு பெயர் வைத்து ,மக்களை நம்ப வைத்து,மக்களை படு குழியில்,நாற்றம் மிகும் குப்பையில்  தள்ளி வைத்து விட்டார்கள் .

மேலும் கடவுளின் பெயரால் சாதி,சமயம்,மதம் என்ற வேறு வேறு கொள்கைகளை வைத்து ,மக்களை வேறுபடுத்தி மனித சமுதாயத்தை அழித்துக் கொண்டு உள்ளார்கள் .மனிதர்களை பைத்தியக் காரர்களாக மாற்றி வைத்து விட்டார்கள்.

உலகில் உள்ள அரசியல் வாதிகள்,ஆட்சியாளர்கள்  அனைவரும் சாதி,சமயம்,மதங்களைப் பின் பற்றுபவர்கள் அவர்களால் மக்களை காப்பாற்ற முடியாது .

அவர்கள் அனைவர்களும் மதவாதிகளைப் போல் கொள்ளை அடிக்கும் கூட்டங்கள்

இன்று நாட்டை அழித்துக் கொண்டு உள்ளவர்கள் .அரசியல் வாதிகள் .ஆன்மீக வாதிகள் என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

அரசியலும் ஆன்மீகமும் ஒற்றுமை இல்லாமல், சாதி,சமயம், மதம் என்ற  பிரிவினையைத் தூண்டி விட்டு ,உலகத்தையும், மனிதர்களையும்.பொருளை வைத்துக் கொண்டு பொருளைக் கொடுத்து  அழித்துக் கொண்டு உள்ளார்கள் .

உலகைத்தை காப்பாற்றும் ஒரே மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்பதாகும்.

வள்ளல்பெருமான் இறைவனுடைய அருளைப் பெற்று கொண்டு ,பொருள் உள்ள  எல்லா மார்க்கங்களையும் அழித்துக் கொண்டு வருகின்றார் .

சாதி, சமய ,மதங்களில் சிக்குண்ட மனிதர்களை காப்பாற்றவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளல்பெருமான் .

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் ;---

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் சுத்த சிவ
சன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் --என்மார்க்கம்
நன்மார்க்கம் என்றே வான் நாட்டார் புகழ் கின்றார்
மன் மார்க்கதாலே மகிழ்ந்து ....என்கின்றார்

அடுத்து '--

பன் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே -சொன் மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு .

அடுத்து ;--

சாதி குலம் என்றும் சமய மதம் என்றும் உப
நீதி இல்லா ஆசிரம நீட்டு என்றும் --ஓதுகின்ற
பேயாட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்த்துவே பிறர் தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று ...

என்று சாதி,சமயம்,மதங்களுக்கு சாட்டை அடிக் கொடுக்கின்றார் .

சாதி,சமயம்,மதம்,சாத்திரம்,வேதம் ஆகமம்,புராணம், இதிகாசம்  ஆசிரம,ஆச்சாரங்கள் போன்ற பொய்யான அமைப்புகளை வைத்துக் கொண்டு ,பேய்கள் போல் ஓதிக் கொண்டும் வழிப் பட்டுக் கொண்டும், மனித இனங்களையும்,உயிர் இனங்களையும் கருணை இல்லாமல் நீதி இல்லாமல் அழித்துக் கொண்டு உள்ளார்கள்

உலகில் உள்ள மார்க்கங்கள் யாவும் பேய் பிடித்தது போல் அடிக் கொண்டு உள்ளன .அவைகள் யாவையும் இருக்கும் இடம் தெரியாமல் அழித்து மக்களை காப்பாற்றுவது தான் என்னுடைய முதல் பணியாகும் என்கின்றார் வள்ளலார் .

இந்த துணிவும் துணிச்சலும் உலகில் வேறு யாருக்கும் கிடைக்கவில்லை .ஏன் என்றால் வள்ளலாரை எவராலும் அசைக்க முடியாது ,அழிக்க முடியாது,நெருங்க முடியாது அவர் .இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்றவர்

மக்களே விழித்துக் கொள்ளுங்கள் ,இனிமேல் உங்களை காப்பாற்ற வள்ளலார் உருவாக்கிய ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற மார்க்கத்தை விட்டால் வேறு வழி இல்லை

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார் '=

எவ் வுலகும்.அண்டங்கள் அத்தனையும் நான் காண
இவ்வுலகில் என் தந்தை எனக்கு அளித்தான்--எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் தனை அடையச் செய்வித்தே
என்மார்க்கம் காண்பேன் இனி .

என்கின்றார் ,

நீங்கள் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் இருந்தாலும், உங்களை எந்த வழியிலாவது மாற்றி  புனிதர்களாக்கி சன்மார்க்கிகளாக மாற்றிவிடுவேன் .இது இறைவன் எனக்கு இட்ட கட்டளையாகும் .

நாளைய உலகம் புனிதமுறு சன்மார்க்க உலகமாக மாற்றி .மனிதர்களை புனிதர்களாக மாற்றும் காலம் நடந்து கொண்டு உள்ளன.

உலகை மாற்றும் ஒரே மார்க்கம் சுத்த சன்மார்க்கம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.