வெள்ளி, 25 ஜனவரி, 2013

அருள் ஆட்சி நடத்தும் அருளாளர் யார் ?

அருள் ஆட்சி நடத்தும் அருளாளர் யார் ?

இந்த உலகத்தின் வரலாறுகளைப் பார்த்தால் படித்தால்,நம் அறிவுக்கு எட்டிய மட்டில் ஓரளவு தெரிந்து கொள்ளலாம்.மனித அறிவுத் தோன்றி மக்களை வழி நடத்தும் அருளாளர்கள் ,ஆட்சியாளர்கள் அளவில் அடங்காது .

எத்தனைப் பேரரசுகளும்  ,சிறிய அரசுகளும் தோன்றித் தோன்றி அழிந்து போய் இருக்கின்றன.வரலாற்று அறிவுக்கு முந்திய தோன்றிய அரசுகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது அரசுஆட்சி செய்து வந்து இருக்கின்றன என்பது ,இன்றைய மனித சமுதாயத்திற்கு ஓரளவு தெரிந்தும் தெரியாமலும் இருந்து  இருக்கின்றன.இவைகள் எல்லாம் ஏன் அழிந்து போயின என்பதை நாம் பகுத்தறிவு கொண்டு சிந்திக்க வேண்டும். எல்லா ஆட்சிகளின் தோற்றக் கேடுகள் ,சமரசம் இல்லாத,சமநோக்கம் இல்லாத,சத்தியம் இல்லாத,சரியான முறையான வழிமுறை இல்லாத ஆட்சியாளர்களின்  செயல்பாடுகளே,காரண காரியமாகும்.

முந்தய ஆட்சிகளின் வரலாறுகளை ,ஆட்சியாளர்களின் வரலாறுகளை புதைப்பொருள் ஆராய்ச்சிகளின் வழியாகவும் பழங்கால கல்வெட்டு காட்சிகளின் வழியாவும் புதைப்பொருள் உலோகங்களாலும்,கற்சிலைகள் வாயிலாகவும்  இன்றைய மக்கள் அறிந்து கொண்டு வருகிறார்கள்.அந்த ஆராய்ச்சியின் வாயிலாக ,எத்தனையோ அரசுகள் ,மாமன்னர்கள் சிலகாலம் மணிமுடி அணிந்து அரசு கட்டிலில் இருந்து செங்கோல் செலுத்தி உளார்கள்.பின்னாடி அவர்கள் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து,மறைந்து போய் உள்ளதை வரலாற்று வழியாக படித்தும் கேட்டும் தெரிந்து கொண்டு உள்ளோம் .

இந்த அரசுகள் எல்லாம்,நீண்ட காலம் ஆட்சி செய்யாமல் குறைந்த ஆயுள் உள்ள அற்பமான அரசுகள் என்பதை காண்கிறோம் .மனிதன் மனிதனை ஆட்சி செய்வது அற்பமானதாகும்.அவை நிலைப் பெற்று நிற்காது என்பதையும் நாம் அறிவாலே அறிந்து கொள்ளவேண்டும் .

மனிதர்களையும்,மற்ற உயிர்களையும்,அதன் அதன் தன்மைக்கு தகுந்தால் போல் சம நோக்குடன்  பாதுகாத்து வழிநடத்தும் தகுதி ,ஆட்சி செய்யும் தகுதி ஆண்டவரின் முழுமையான அருள் பெற்றவர்களால் தான், குற்றம் அற்ற குறை இல்லாத ஆட்சி செய்ய முடியும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் சாதாரண அறிவைக் கொண்டு ஆட்சிசெய்தால்,எந்த ஆட்சியாக இருந்தாலும் சீக்கிரம் அழிந்து போய்விடும் .அன்றும்சரி, இன்றும்சரி,என்றும்சரி ! நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆண்டவரின் முழுமையான அருளைப் பெற்றவர்கள் இவ்வுலகில் எவரும் இல்லை என்பதை,அருட்பெருஞ்ஜோதி! யால அறிந்து கொண்டு உள்ளோம் .

இவ்வுலகை தோற்றுவித்தல் ,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல், விளக்கம் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும், எல்லாம் ஆனவர் என்றும் ,ஒன்றும் அல்லாதவர் என்றும் ,சர்வ காருண்யர் என்றும் ,சர்வ வல்லபர் என்றும்,தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத ,தனிப்பெருங் கருணை ,தனிப்பெரும் தலைமை ''அருட்பெருஞ்ஜோதியர்'' என்னும் உண்மைக் கடவுள் ஒருவராகிய அந்த தனிப்பெருங் கருணைக் கடவுள் ,

வள்ளலார் !

இந்த உலகத்தை நிரந்தரமாக,அருள்புரிந்து  ஆட்சி செய்வதற்கு அனுப்பி வைத்த அருளாலர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும் .

நமது உண்மைத் தந்தையாகிய அருட்பெருஞ் ஜோதி ! அம்பலத்து அரசிரின் உயர்ந்த சிறப்பையும் அவரால் அவர் திருஅருளால் உலகம் இயங்கிக் கொண்டு இருப்பதையும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க தோற்றத்தின் வாயிலாக அறிகின்றோம்.நமது அம்பலத்தரசர் அருட்பெருஞ் ஜோதியர் ,அருள் அரசாட்சியும் நித்தியமாக இருப்பதையும் காண்கிறோம் .

அந்த அருட்பெருஞ்ஜோதி ஒருவராக இருந்தும்,தானே எல்லா உயிர்களின் உள்ளும் புறமும் நிலவி, கலந்து, நின்று,நிலைத்து தன்னுடைய தனிப்பெருங் கருணையால் அனைத்து உயிர்களும் இன்பம் அடையும் பொருட்டு ,தடைபடாமல் செயல்பட்டுக் கொண்டும் விளங்கிக் கொண்டும் உள்ளார் என்பதை உணர்ந்து கொண்டோம்.

உலகில் உள்ள நால்வகை யோனி பேதங்களும் ,ஏழ்வகைப் பிறவி நிலைகளையும் கடத்தி வந்து,எவ்வித தடைகளும் சிறிதும் தடைபடாது உயிர்களை வாழவைத்து ,இறுதிப் பிறப்பான மனிதப் பிறப்பை கொடுத்துக் வாழவைத்து வழங்கிக் கொண்டு  வருகிறது .

இறுதிப் பிறப்பான மனிதப் பிறவி எடுத்துக் கொண்ட ஆன்மா உண்மைக் கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வேண்டும் என்பது ,கடவுளின் ஆணையாகும் .இது அவரது அருள் ஆட்சியில் ஒவ்வொரு மனித தேகம் எடுத்து வாழ்ந்து அடையும் தனிப்பெரும் பேராகும் .

இந்த தனிப்பெரும் பேறும்,தனிப்பெரும் வல்லபமும்,பெற்றவர்தான் வள்ளலார் .இவருக்கு முன்னாடி வந்த அருளாளர்கள் எவரும் இந்த பேறு பெறவில்லை என்பதை நாம் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆதலால் இவ்வுலகில் நிலையான ஆட்சியை மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த அருள் நோக்குடன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !திருவுள்ளம் கொண்டு புதிய ஆட்சியைத் தோற்றுவிக்க உறுதிப் படுத்துகிறார் .

இது அவரது அருள் அரசாட்சியில் ஒருவன் அடையும் மாபெரும் பேறு ஆகும் இப்பேறு பெற்று விளங்கியவர் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும். அந்த அருட்பெருஞ் ஜோதி அரசால் ,தன்னுடைய அருட்ஜோதி மகுடமாகிய ,அருட் ஆட்சியை அதாவது அருட்பேரோளித் திருமுடியும் வள்ளல் பெருமானுக்கு சூட்டியுள்ளார்,இதன் பொருள் என்ன ?

ஆதியும் அந்தமும் இல்லாத் தன் அருள் அடசாட்சியை இப்போது நம்முடைய வள்ளல் பெருமானிடம் வழங்கி அதற்கு அடையாளமாக பேரொளித் திருமாமணி முடியும் சூட்டிவிடார் .என்பது உண்மையாகும்.அப் பேரரசின் ,பட்டத்து உரிமை முதற்பிள்ளை இவராக உள்ளதை அறிகின்றோம்.

வள்ளல் பெருமான் அவர்கள் இப்போது சமரச சுத்த சன்மார்க்க சத்திய  அருள் ஒளி என்னும் சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று, அருட்பெருஞ் ஜோதி செங்கோலை தாங்கி ..இக்காலம் முதல் இனிவரும் எக்காலமும் அளவு கடந்த நெடுங்காலம் அருள் ஆட்சி செங்கோல் நடத்திக் கொண்டு உள்ளார் என்பதை ,சமரச சுத்த சன்மார்க்க அன்பர்களும் ,உலகில் உள்ள அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும்.

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் !  

    உண்மை விளக்கம் ;--ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ் ஜோதிக்கடவுள் நம்முடைய வள்ளல் பெருமானுக்கு தன்னுடைய ஜோதி மகுடத்தை சூட்டி,ஆட்சிப் பொறுப்பையும் வழங்கி விட்டார் என்றால் ,அந்தக்கடவுள் தன் போன்று விளங்கும்படி இவரை அரசுக்கட்டிலில் வீற்றிருக்கச் செய்து விட்டுத் தாம் விலகிச் சென்று விட்டதாக எண்ணி விடக்கூடாது.

ஆன்ம அணுவில் இருந்து இதுவரை அருளாட்சி ஆண்டுவந்த அருட்பெருஞ் ஜோதிக்கடவுள் இப்போது அந்நிலையில் இருந்து கொண்டே தன் திருஅருளை ஓர் பக்குவம் உள்ள ஆன்மாவில் பரிபூர்ண நிறைவு பெறச்செய்து ,அருட்பிரகாச சுத்த வடிவோடு தன் நித்திய அருளாட்சியே உலகம் எல்லாம் கண்டு கொள்ளவும், அனைத்து ஆன்மாக்களும் பெரும் நன்மைப் பெற்று ஒங்க செய்யவே இப்படி வெளிப்படத் திகழ்கின்றார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இதற்கு முன் உலகம் உண்மையானக் கடவுளைக் காண்பது முடியாத காரியமாக இருந்தது ,இருக்கின்றது .ஆனால் இந்தக் கடவுள் இப்போது தன்னுடைய அருள் ஆட்சியை உலகம் எல்லாம் கண்டு ஆனத்தம் அடைந்து இருக்கும்படி ,திருஅருட்பிரகாச வள்ளலின் வடிவில் இருந்து ஆளத் தொடங்கி விட்டு உள்ளார் .உலகம் இந்த வள்ளலின் உண்மையைக் கண்டு ,கடவுளின் உண்மையைக் காண்பது எளிதாகி விட்டு இருக்கின்றதாம்.

வள்ளலாரின் உண்மை வடிவம்,மனித உருவில் மிக எளிய தோற்றத்தில் விளங்கிபும் ,அது இப்போது அருட் பிரகாசமான அழியாத் தனிவடிவமாக அகம் இருந்து அனகமாய் விரிந்து நிறைந்து விளங்கிக் கொண்டு உள்ளது.இவர் இப்போது எல்லா ஆன்மாக்களிலும் அகவடிவாய் இருந்து அவரவர்களாய்த் திகழ்ந்து இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை ஆன்ம அறிவால் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆகையால் அவரது புறவடிவமான படத்தை மட்டும் கண்டு வழிபாடு செய்வது அறியாமையாகும்.அதுதான் அவருடைய திருஉருவம் என்று மயங்கி இருத்தல் வேண்டாம்.அருட்கண்களால் அகமாக உள்ள சிற்சபையைக் கண்டு அருட்பிரகாச வடிவைக் கண்டு கொள்ள வேண்டும்.வள்ளல்பெருமான வடிவம் ஒவ்வொருவரின் ஆன்ம வடிவமாக உள் இருந்து இயங்கிக் கொண்டு உள்ளார் .

வள்ளலார் சித்தி பெறப்போகும் போது கடைசியாக சொன்ன வார்த்தை வார்த்தை ;---இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் ,இனிமேல் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஆகவே ,அருட்பிரகாச வள்ளல் பெருமான் இப்போது இயற்க்கை உண்மையான அருட்பெருஞ் ஜோதியாக இருந்து கொண்டு ,இயற்கை விளக்கமான அருளை அனைத்து எல்லா  உயிர்களும் இன்பம் அடைதல் பொருட்டு. இயற்கை இன்பமாகவும் வழங்கி விளக்கிக் கொண்டு உள்ளார் .

ஆதியீ றறியா அருள் அரசாட்சியில்
ஜோதி மாமகுடம் சூட்டிய தந்தையே !

தன்கையில் பிடித்த தனி அருட்ஜோதியை
என்கையில் கொடுத்த எனதனித் தந்தையே !

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் தன்னுடைய ஆட்சிப் பொறுப்புகள் அனைத்தையும் வள்ளல் பெருமான் கையில் கொடுத்துள்ளார் என்பதை மேலே கண்ட அருட்பெருஞ்ஜோதி அகவல் வரிகளில்,தெளிவாக விளக்கி உள்ளார் .

இப்போது வள்ளல் பெருமான் முழுமையான அருளைப் பெற்று ஒளிதேகம் என்னும் சுத்த பிரணவ ஞான தேகத்துடன் அருள் அரசாட்சி செய்து கொண்டு உள்ளார் . இது இறைவரின் புதிய நிலைத் தோற்றமே அன்றி இந்த அருட்பிரகாச வடிவம் வேறு எதுவும் அல்லவாம்.இவரது உண்மை வடிவம் அருட்பெருஞ்ஜோதி அரசின் விளக்கமாக அறிகின்றோம்.

இப்போது அருட்பெருஞ் ஜோதியின் ஞான சிங்காதன பீடத்தில்,அமர்ந்து கொண்டு அருள் ஆட்சி நடத்தும் அருளாளர் நமது வள்ளல் பெருமான்தான் என்பதை அறிவாலே அருளாலே அறிந்து கொண்டு உள்ளோம்..அருள் ஒளிச் செங்கோலைக் கொண்டு உலகு உயிர்ப் பொருள்களை எல்லாம் சுத்த சன்மார்க்க சுகவாழ்வான பேரின்ப வாழ்வு வாழும் பொருட்டு,சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து உள்ளார் .இவற்றை திருஅருளால் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இப்போது வாழ்ந்து கொண்டு இருக்கும் புற உலகம் இன்னும் உண்மையைத் தெரிந்து கொள்ளாது ,பழைய இருள் நெறியை பின்பற்றி சென்று சென்று அழிந்து கொண்டு இருக்கின்றது.உண்மையை அறிந்து கொள்ளும் ,சுத்த சன்மார்க்கத்திற்கு  முக்கிய தடைகளாகிய ,சாதிகள் சமயங்கள்,மதங்கள்,போன்றவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் ,வருணம்,ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்,இருந்து கொண்டு உள்ளது.

வேதம் ,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்ற,எதிலும் பற்று வைக்காமல் உண்மைக் கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ் ஜோதியாக உள்ளார் ,அவர் எல்லா உயிர்களிலும் ஆன்ம ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்ற ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை எக்காலத்தும்,எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் உறுதியுடன் வாழ பழகிக் கொண்டோ மானால்,உண்மைகள் தன்னைத்தானே விளங்கும்.

இப்போது வள்ளல் பெருமான் வேறு அல்ல ! அருட்பெருஞ் ஜோதி வேறு அல்ல !இரண்டு உருவமும் ஒரே அருள் உருவமாக ,இயற்கை உண்மையாக,இயற்கை விளக்கமான,இயற்கை இன்பமாக ,விரிந்து எங்கும் நீக்கமற நிறைந்து செயலாற்றிக் கொண்டு உள்ளது .

இப்போது செயல்பட்டுக் கொண்டு இருக்கும் அருள் ஆட்சியை நடத்திக் கொண்டு இருப்பவர் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமான் என்னும் அருளாளர் ஆவார் !

அருட்பெருஞ் ஜோதி !

மேலும் பூக்கும்;--

ஆன்மநேயன் ,கதிர்வேலு..                   .                 

வெள்ளி, 11 ஜனவரி, 2013

இந்திய நாகரிகம் – ஓர் அறிமுகம்


இந்திய நாகரிகம் – ஓர் அறிமுகம்

இந்திய நாகரிகம் தொன்மையானது, தொடர்ச்சியானது. அரிதானதும்கூட. சீன நாகரிகத்தில் மட்டுமே இத்தகைய தொன்மையையும் தொடர்ச்சியையும் பார்க்க முடியும் என்று பண்டைய இந்திய வரலாறு என்ற நூலில் கே.சி. சௌத்திரி என்ற வரலாற்றாசிரியர் கூறுகிறார்.
‘அந்நியர்கள் வரும்போது அவர்களுடைய கருத்துகளும், ஏற்கெனவே பாவிக்கப்பட்டு வந்த கருத்துகளும் — இவை இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளும் –  இணைக்கப்பட்டன. அதன்மூலம் புதிய கருத்துகள் வார்த்தெடுக்கப்பட்டன. இதுவே இந்திய நாகரிகத்தின் உயிராகவும் மூச்சாகவும் இருந்தது. காலாகாலத்துக்கும் அதற்கு ஒரு தொடர்ச்சியைக் கொடுத்தது.’
மனிதன் நாகரிக உருவாக்கத்துக்கு முந்தியவன், பழைமையானவன். தொல்பொருள் ஆராய்ச்சியில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் வரலாற்றுக் கண்ணோட்டத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னோக்கி எடுத்துச்சென்றன. அவற்றை இணைத்துப்பார்க்கும் போது பல கண்ணிகள் விடுபட்டுப் போயிருப்பதும் புலப்படத்தான் செய்கிறது.
மனிதன் மிகப் பலவீனமான மிருகம். அதே சமயம் மனிதன் மட்டுமே சுற்றுச் சூழலுக்கேற்ப தன்னை மாற்றிக் கொள்ளவும் தன் தேவைக்கேற்ப அதனைக் கட்டுப்படுத்தவும் தெரிந்துகொண்ட மிருகம்.
This begining is as animal as social life itself at this stage. It is mere herd-consciousness, and at this point man is only distinguished from sheep by the fact that with him consciousness takes the place of instinct or that his instinct is a conscious one. (The German Ideology, Marx and Engels).
சுற்றுப்புறத்தைக் கட்டுப்படுத்த அவன் எடுத்துக்கொண்ட விவேகமான முறைமைகளும், மற்ற மனிதர்கள், மனிதக் குழுக்கள் ஆகியவற்றோடு ஒட்டி வாழ அவன் முயன்றதும்தான் மனித நாகரிக முன்னேற்றத்துக்கான ஆணிவேர்களாகும்.
நாகரிக வளர்ச்சியின் அஸ்திவாரம் முதலாவது விவேகம், இரண்டாவது அவனுடைய சூழ்நிலை. சூழ்நிலை என்பது அவன் வாழும் பகுதியின் இயற்கை தன்மையையும், சிறப்புத் தன்மையையும் பொறுத்துள்ளது.
வரலாறு என்பது காலக்கணக்குக்கு உட்பட்டதாகும். இல்லையென்றால் தொடர்பற்ற சில கதைகளாக மாறிவிடும். வரலாற்றின் ஒரு கண் காலக் கணக்கு. மற்றொன்று அது எழுதப்படும் மண்ணின் புவியியலாகும். (Physical Geography).
உலக நாகரிகங்களை, சிந்துவெளி நாகரிகம், நைல் நாகரிகம், டைகரிஸ் – ஈப்ரிடஸ் நாகரிகம், யாங்ஸி நாகரிகம் என்று நான்காகப் பார்க்கிறார்கள். இந்திய நாகரிகம் அல்லது சிந்துவெளி நாகரிகம் என்பது இணையற்ற சில சிறப்பு அம்சங்களைப் பெற்றிருக்கிறது. ஒரு தொய்வில்லாத தொடர்ச்சியைப் பெற்றிருக்கிறது.
அந்நிய கருத்துகள் வந்தபோதும் அதனைச் செரிமானம் செய்துகொண்ட போதும் தனக்கென்று உள்ள சில அடையாளங்களை நிலைநிறுத்திக் கொண்டது. மேற்கத்திய கலாசாரம் கிரேக்கத்திலும், ரோமாபுரியிலும் அதன் ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. இயற்கையை வெல்வதன் மூலம் இது முன்னேறியது. இயற்கையை வெல்வதுதான் நாகரிகத்தின் சாராகக் கருதி தன்னை வளர்த்துக் கொண்டது.
இந்திய நாகரிகமோ ஒத்து வாழ்வதும், சுற்றுச் சுழலோடு இணைந்து வாழ்வதும்தான் முக்கியமானது என்று கருதியது.
‘இயற்கையை ஆளுவோம் என்று மேலை நாகரிகங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். மனிதனுக்கு நேர் எதிராக நிற்கும் இயற்கையிடமிருந்து வளமான வாழ்வைப் பறிக்க முனைவதுதான் மேற்கத்திய நாகரிகத்தின் அடிநாதம்…. ஆனால் இந்தியாவின் பார்வை வித்தியாசமாக இருந்தது. மனிதனும் உலகமும் வெவ்வேறானவை என்று பார்க்காமல், இரண்டும் இணைந்ததுதான் முழுமையான உண்மை, தனி மனிதனுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் இடையேயுள்ள இணக்கம்தான் முக்கியமானது என்று இந்தியா கருதியது.’ (குருதேவர் ரவீந்தரநாத் தாகூர் 1912 – 12ம் ஆண்டுகளில் சிகாகோ, ஹார்வர்டு பல்கலைப்கழகத்தில் ஆற்றிய உரையிலிருந்து).
இந்திய நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதையும் வரலாற்றாளர்கள் சிறப்பான ஒன்றாகப் பார்க்கிறார்கள். அது மொழியில், சமூக அமைப்பில், மதத்தில், இலக்கியத்தில் பரவியுள்ளது.
‘ஹரப்பா நாகரிகத்தில் ஈசன் என்றும், பசுபதி என்றும், அன்னை தெய்வம் என்றும் வழிபட்டு வந்தார்கள். இன்றும் சிவனாகவும் பார்வதியாகவும் வழிபாடு நடப்பது அதன் எச்சம்’ என்கிறார் கே.சி. சௌத்திரி.
‘பனிக்கட்டி உருண்டு வரும்போது தன்னுள் ஏராளமானவற்றை சேர்த்துக் கொள்கிறது. மேலும் மேலும் கனமடைந்தாலும் அதன் உட்பகுதியை மேலே சேர்ந்தவை மூடாமல் பளிங்கு போல வெளிக்காட்டுகிறது. இந்திய நாகரிகமும் இப்படிப்பட்டதுதான்!’ என்று பண்டித ஜவஹர்லால் நேரு தன்னுடைய டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
இந்திய நாகரிகத்தின் அடிப்படை சகிப்புத்தன்மை. அதனை அமல்படுத்தும்போது ஏற்படுவதுதான் ஒற்றுமையில் வேற்றுமை சகிப்புத் தன்மையும், சகோதரத்துவமும் பரந்துபட்ட உலகில் பரவ வேண்டும் என்பதுதான் இந்திய நாகரிகத்தின் அடிப்படையான நோக்கம்.
Brothers and Sisters என்று விவேகானந்தர் சிகாகோ நகரத்துச் சிறு மண்டபத்தில் அழைத்ததன் முழு அர்த்தமும், சாரமும், இந்திய நாகரிகத்தின் வெளிப்பாடுதான். இதுதான் இந்திய நாகரிகத்தின் அழிவற்ற குணம்.
இந்த சகிப்புத்தன்மை என்பது இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல்ரீதியான பலவீனமாகவும் இருந்ததுண்டு. இருந்தும் இதுதான் இந்தியத் தன்மையின் சிறப்பு என்றும் அந்நிய மோதல்கள் ஏற்பட்ட போதும் இந்தச் சிறப்புத் தன்மை தொடர்வதும் முக்கியமானதாகும்.
இந்தியாவில் புவியியல் இருப்பும் அதன் நாகரிகத்தில் சிறப்பான வளர்ச்சியை உருவாக்கியது. கடும்பனியுள்ள வடக்கு மலைப்பகுதி, சிந்து, கங்கை, பிரம்மபுத்திராவால் நனைக்கப்படும் சமவெளிகள், தக்காண பீடபூமி, உயரத்திலிருந்து சரிந்து கடலைச் சந்திக்கும் தென்பகுதி என்று உலகத்தின் எந்த நாட்டுக்கும் இல்லாத வானிலை சூழல் அந்த மக்களின் அன்றாட வாழ்வில் வேறுபாடுகளை உருவாக்கியது.
புகைப்படத்தில் மட்டுமே கடலைப் பார்க்கும் உ.பி. டில்லி கிராமத்துச் சிறுவனும், அதே வயதில் சீறிப் பாயும் கடல் அலை மேல் ஏறி விளையாடும் குமரிச் சிறுவனையும் இந்த தேசத்தில் பார்க்க முடியும். புவியியல் மனிதனின் திறமையை நிர்ணயிக்கிறது என்பதையே இது வெளிப்படுத்துகிறது. இந்த வெளிப்பாடு வரலாற்றையும் வரலாறு நாகரிகத்தையும் பாதிக்கத்தான் செய்யும்.
வானுயர்ந்த மலைத் தொடர், பிரம்மாண்டமான நதிபுரத்து வெளிகள், உயர்ந்த பீடபூமி, பரந்துபட்ட பாலைவனம் ஆகியவை சிறப்புத் தன்மையை அளித்தன. ஷிவாளி மலை முகட்டில் பிறக்கும் கங்கை வங்கத்தில் சங்கமமாகிறாள். எத்தனை மனிதர்கள் – எத்தனை வேறுபாடுகள் – இருந்தும் அந்த வேறுபாட்டை வளப்படுத்திக் கொண்டே அந்த மக்களை இணைக்கும் நூலாகவும் அவள் இருக்கிறாள்.
கைபர் கணவாய் அந்நியர்கள் புக வாய்ப்பளித்தது. ஆரியர்களிலிருந்து அகமது ஷா அப்தாலி வரை பலரும் வந்தார்கள். எத்தனை கருத்துக்கள் வந்து சேர்ந்தன. பாரசீகத்தினர், கிரேக்கர்கள், சாகர்கள், ஹீனர்கள், துருக்கியர்கள், ஆப்கானியர்கள், முகலாயர்கள் என்று இந்தக் கணவாய் பலருடைய வருகைக்குச் சாட்சியாக இருந்தது.
தென் பகுதியின் நீண்ட கடற்கரைகள், ரோம், சினா, மலாய், தென்கிழக்கு ஆகிய நாடுகளோடு தொடர்பைத் தந்தன. இதன்மூலம், இந்தியா, உலக மக்கள் அதிகமாக வாழக்கூடும் மையப்பகுதியாக மாறியது. வேறுபட்ட மதங்கள், இனங்கள், மரபுகள், பழக்க வழக்கங்கள் சங்கமிக்கும் பகுதியாக மாறியது.
இங்கு ஆரியர்களும், ஆரியரல்லாதவர்களும் திராவிடர்களும், சீனர்களும், சாகர்கள், ஹீனர்கள், பாதன்கள், முகலாயர்கள் ஆகியோரும் மிகப் பெரிய சமுத்திரமாக மாறி தங்கள் அடையாளங்களை இழந்தார்கள் என்று ரவீந்திரநாத தாகூர் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.
இந்தியா, இந்துக்களுக்கு பௌத்தர்களுக்கு சமணர்களுக்கு, இஸ்லாமியர்களுக்கு சீக்கியர்களுக்கு, பார்சிகளுக்கு, கிறிஸ்துவர்களுக்கு தாய் வீடாக மாறியது. இனம், மதம், மொழி, பழக்க வழக்கங்கள், மரபுகள் என்று பார்ப்போமானால், இந்தியா பன்முகத் தன்மை கொண்ட மக்கள் தொகுதியாகும்.
அந்தமான், நிகோபர், நாகாலாந்தில் தென்படும் நீக்ரோ சாயல், சிக்கிம், பூட்டான் சிட்டகாங் பகுதியில் காணப்படும் மங்கோலியச் சாயல், வங்கம், பீகார், ஒரிசா, உ.பி., தமிழ்நாடு ஆகியவற்றில் உள்ள பரந்த நெற்றியைக் கொண்ட சாயல், பஞ்சாப், ராஜஸ்தான் சிந்து பகுதியில் உள்ள மத்திய தரைக்கடல் பகுதிச் சாயல் என்று எத்தனை இனங்களின் சாயல்கள் இங்கு உள்ளன! இந்தச் சாயல் கொண்டவர்கள் ஒரு பகுதி என்றில்லாமல் பரந்து வசிப்பது மிகவும் சிறப்பானதாகும்.
இயற்கை தன்னுடைய பன்முக வெளிப்பாட்டைக் காட்ட இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. வேறெந்தப் பூமிப் பகுதியிலும், இயற்கை இத்தனை அழகாக, கம்பீரமாக அமையவில்லை. இதுவே இந்தியாவில் காணும் ஒற்றுமைக்குள் வேற்றுமை என்பதற்கான காரணங்களில் ஒன்றாகும்.
இந்தியா என்பது பல்வேறு இனங்களின் கண்காட்சி சாலையாகும் என்கிறார் வரலாற்றாசிரியர் ஸ்மித். கடும்பனி உள்ள காஷ்மீர், பனிக் காலத்தில் கடும் குளிரும், கோடை காலத்தில் கடும் வெப்பமும் கொண்ட வங்காளம், ஒரிசா, பீகார் எப்போதுமே வெப்பம் கொண்ட தென் இந்தியா ஆகியவை இங்கு மட்டுமே உள்ளன. விதவிதமான விலங்குகள், தாவரங்கள் ஆகியவை இந்த மண்ணில் மட்டுமே உள்ளன. மேலெழுந்த வாரியாகப் பார்ப்பவனுக்கு அதிர்ச்சியைக் கொடுக்கும் அளவுக்கு வேறுபாடுகள் தென்படும்.
அணுகிப் பார்த்தால் இதற்கிடையே ஓர் இணக்கம் இருப்பது புலப்படும். இந்த இணக்கம் தான் இந்தியாவின் ஆத்மா. இந்திய நாகரிகத்தின் அடிநாதம்.
ஆரியர்களும், ஹீனர்களும், முகலாயர்களும் வந்தார்கள். பின்னாளில் டச்சு, பிரான்சு, ஆங்கிலேயர்கள் என்று வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்ததை பின்னங்களாக்கி, அதனை முழுமையாக்கிய ரசாயனம் தான் இந்திய நாகரிகத்தின் உள்ளார்ந்த சுவையாகும். இதன்பால் உருவானதுதான் ஓர் ஒன்றிணைந்த கலாசாரம்.
இந்திய ஒற்றுமை என்பது அரசியல் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு உருவானதல்ல. மௌரிய, குப்த, மொகலாய சாம்ராஜ்ஜியங்கள் இருக்கத்தான் செய்தன. ஆனாலும் மக்களின், சமூக, பொருளாதார ஒற்றுமை என்பது அப்படியே இருந்தது. இது இந்தியர்களிடைய ஒருமைப்பாட்டை வளர்ந்தது. (ஜே.என். சர்க்கார் எழுதிய இந்திய ஒற்றுமை – என்ற கட்டுரை).
‘இந்திய ஒற்றுமை என்பது ரத்தம், நிறம், மொழி, உடை, பிரிவு ஆகியவற்றைக் கடந்த ஒன்று’ என்கிறார் ஆக்ஸ்ஃபோர்டு ஹிஸ்டரி ஆஃப் இந்தியா நூலாசிரியர் வி.ஏ. ஸ்மித். இதன் உன்னதம் பிரிட்டிஷாரை எதிர்த்து நடைபெற்ற சுதந்தரப் போராட்டத்தின்போது வெளிப்பட்டது. மகாராஷ்டிரா மட்டும் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற வேண்டுமென்று மராட்டியனோ, வங்காளம் விடுதலை பெற வேண்டுமென்று வங்காளியோ, தமிழ்நாடு மட்டும் விடுதலையடையவேண்டும் என்று தமிழனோ போராடவில்லை. ஒட்டுமொத்த இந்திய விடுதலைக்காக அனைவரும் போராடினார்கள்.
இயற்கையோடு மட்டுமல்லாமல், சக மனிதனோடும் சேர்ந்து இணைந்து வாழ்வதுதான் இந்திய நாகரிகத்தின் வேரும், சாரமும் ஆகும் .

வள்ளலார் !
1823,ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் தோன்றிய அருளாளர் வள்ளலார் என்பவராகும்.அவர் இறைவனால் வருவிக்க  உற்றவராகும்.நாடு,மொழி,இனம்,நாகரிகம் என்பது உலக  மனித குலத்திற்கு பொதுவானதாகும் என்றார் .அனைத்து உயிர்களும் இறைவன் படைப்பாகும்.அதில் உயர்ந்த அறிவுடைய பிறப்பு மனிதப் பிறப்பாகும்.மனிதர்களை பிரிக்கும் எந்த பிரிவுகளாக இருந்தாலும் அவை உயிர்களை அழித்துவிடும் ,நாட்டை பிரித்து அழித்து விடும். நாகரீகம் என்ற பெயரில் மனிதர்களை வேற்றுமைப் படுத்தி ரத்தம்,நிறம,இனம் மொழி உடை,வாழ்க்கை முறை என்ற பிரிவினையை உருவாக்கி ,மனித குலத்தை வேறுபடுத்தி,மக்கள் போருற்று      இறந்து வீண் போய்  கொண்டு உள்ளார்கள் .மேலும் சாதி சமயம்,மதம் என்ற பிரிவினையை உருவாக்கி பொய்யான கற்பனைக் கடவுள்களை படைத்து மக்களை பிரித்து விட்டார்கள்.இவற்றை எல்லாம் ஒழித்து ,அழித்து புதிய உலகத்தை ,புதிய அமைப்பை உருவாக்க வந்தவர்தான் வள்ளலார் என்பவராகும்.

எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு ,இறவன் படைப்பில் வேற்றுமைகள் இருக்கக் வேண்டாம்.உலகத்தை உருவாக்கி ஆண்டு கொண்டு இருக்கும் கடவுள் ஒருவரே !அவர் அருட் பேரோளியாக உள்ளார் .அறிவுபடைத்த மனிதர்கள் இவற்றை அறிந்து புரிந்து கொள்ள வேண்டும் ,என்பதற்காக     உலக மக்களுக்கு பொதுவான ஒரு அமைப்பை உருவாக்கினார் . அதற்குப் பெயர்தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்ற அமைப்பாகும்

அந்த அமைப்பின் வழியாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது !

கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் என்பவராகும் .

சாதி,சமய,மதம்,இனம்,,மொழி,நாடு என்ற வேற்றுமைகள் கூடாது !

அனைத்து உயிர்களும் ஒன்று என்ற ''ஆன்மநேய ஒருமைப்பாடு வேண்டும் !

சிறு தெய்வ வழிபாடு செய்ய வேண்டாம்.!

கடவுள் பெயரால் உயிர்பலி செய்ய வேண்டாம்.!

எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்க வேண்டும்.!

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு.! ஜீவ காருண்யமே இறை வழிபாடு !

ஜீவ காருண்ய ஒழுக்கமே மோஷ வீட்டின் திறவுகோல்.!

தனிமனித ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம், மிகவும் முக்கியமானதாகும் .!

இறந்தவரை புதைக்க வேண்டும்.எரிக்க வேண்டாம்.!

சமாதி பழக்கம் வேண்டாம் சகஜ பழக்கம் வேண்டும்.!

எதிலும் பொது நோக்கம் வேண்டும் .

மேலே கண்ட ஒழுக்க முறைகளும் ,வாழ்க்கை முறைகளும் மனித வாழ்க்கையை மேம்படுத்த உதவும் ,ஒற்றுமை உலகம் எல்லாம் ஓங்கும் .என்பதை வலியுறித்தி உள்ளார் வள்ளல் பெருமான் அவர்கள் .உலக ஒற்றுமைக்கு இதுவே சிறந்த வழியாகும் ,

இறைவன் மேல் அன்பும் ,உயிர்களின் மேல் இரக்கமும் கொண்டு வாழ்ந்தால் சமுதாயம் நலம் பெரும் ,மனிதன் மனிதனாக வாழ்வதற்கு இதுவே சிறந்த வழியாகும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

கண்டது எல்லாம் அனித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இதுவரையில் உண்மை அறிந்திலிரே
வினடதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியை கடைபிடித்து மேப்பொருள் நன்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என்தந்தை அருள் அடைமின்
இறவாத வரம் பெறலாம் இன்பம் உறலாமே !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து ,நித்தியர்களாகி வாழ்ந்திடல் வேண்டும் .
அனைத்துலக மக்களும் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் .

ஆன்மநேய அன்புடைய சகோதரர் ;--கதிர்வேலு .  

வெள்ளி, 4 ஜனவரி, 2013

சாகும் கல்வி ! சாகாக்கல்வி !


சாகும் கல்வி ! சாகாக்கல்வி !

கல்வி என்பது அன்பு,அறிவு,ஒழுக்கம்,போன்ற நற்குணங்களைப் பெற்றுத் தருவதாகும்.ஆனால் இன்று கல்வி என்பது பொருள் ஈட்டுவதற்கு மட்டும் பயன் தரக்கூடியதாக உள்ளது.அதுவும் நேர்வழியில் பணம் சம்பாதிக்க அந்த கலவி பயன்படாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது .

குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் கலவி ,அவர்களையும் அவரை சார்ந்தவர்களையும் அழித்து விடுகிறது என்பதை உணர வேண்டும் .

கலவி என்பது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் .தங்களைப் போல மற்றவர்களையும் வாழ வைக்கும் பண்பு உடையதாக இருக்க வேண்டும் .அன்பு,அறிவு ஒழுக்கம் நேர்மை,வாய்மை,இறக்கம் பொது நோக்கம் உள்ள கல்வியே சிறந்த கலவியாகும்.எந்த உயிர்களையும் அழிக்காமல் வாழ வைக்கும் கல்வியே சிறந்த கல்வியாகும்..கொலை செய்யாமை ,புலால் உண்ணாமை போன்ற ஒழுக்கத்தை கடைபிடிப்பதே சிறந்த கல்வியாகும் .

கல்வி இரண்டு வகைப்படும் !.

ஒன்று சாகும் கல்வி,மற்றொன்று சாகாக்கல்வி !எந்தவகையிலும் பொருள் சேர்ப்பது சாகும் கலவி ,அறிவுக் கல்வியைக் கற்றுக் கொண்டு இறைவன் அளிக்கும் அருளைப் பெறுவது சாகாக்கலவி யாகும்....சாகாக் கல்வியைக் கற்று வாழ்வதே மனித பிறப்பின் லஷ்யமாகும் .இதை அறிந்தவன் எவனோ அவனே மனிதன்...அவனே இறைவன் ...மனிதனும் தெய்வமாகலாம் ,,என்பது சாகாக் கலவியாகும் ...

சாகாக் கல்வியை கற்றுத் தருவது ,வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையாகும் .அவர்தான் உலக மக்களுக்கு சாகாக் கல்வியை கற்கும் வழியைக் காட்டி உள்ளார் .அனைவரும் படித்து அதன் வழியில் நின்று மேல் நிலைக்கு செல்லலாம்...

வள்ளலார் மக்களுக்கு போதிக்கும் பாடலைப் பாருங்கள் !

சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்
தான் என அறிந்த அறிவே
தகும் அறிவு மலம் ஐந்தும் வென்ற வல்லபமே
தனித்த பூரண வல்லபம்
வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும்
விளைய விளைவித்த தொழிலே
மெய்த் தொழிலாகும் இந்நான்கையும் ஒருங்கே
வியந்து அடைந்து உலகம் எல்லாம்
மாகாதல் உற எல்லாம் வல்ல சித்தாகி நிறை
வான வரமே இன்பமாம்
மன்னுமிது நீ பெற்ற சுத்த சன்மார்க்கத்தின்
மரபு என்று உரைத்த குருவே
தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்து எனைத்
தேற்றி அருள் செய்த சிவமே
சிற்சபையின் நடு நின்ற ஒன்றான கடவுளே
தெய்வ நடராஜ பதியே .

மனிதன் மரணம் அடையாமல் ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ,அருளைப் பெறுவதே சாகாத கல்வியாகும்.அதற்கு வழி என்ன வென்றால் .கடவுள் ஒருவரே என்று அறிந்து கொள்ளும் அறிவே மனித அறிவாகும்.அந்த அறிவினால் ,உடம்பையும் உயிரையும் ஆன்மாவையும் தெரிந்து கொள்ள முடியாமல் மறைத்துக் கொண்டு இருக்கும் ,ஆணவம் ,மாயை,மாமாயை ,பெருமாயை ,கன்மம் ,போன்ற ஐந்து மலங்களையும் ,நீக்கும் வழியைத் தெரிந்து கொள்ளும் வல்லபமே சிறந்த வல்லபமாகும்.

உடம்பானது மண்ணுக்கோ,நீருக்கோ ,நெருப்புக்கோ,காற்றுக்கோ ,கதிர் வீச்சுக்கோ,எமனுக்கோ,கொலைக் கருவிக்கோ ,பிறர் இயற்றும் கொடுஞ் செயலுக்கோ ,வேறு ஏதாவது அழிக்கும் சக்திக்கோ ,மற்றும் எதனாலும் அழிக்க முடியாத ,உடம்பு வேகாத அருள் உடம்பாக மாற்றும் தொழிலே சிறந்த தொழிலாகும்.அதாவது மெய்த் தொழிலாகும் .

இறைவன் அருளைப் பெற்று ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டு வாழ்வதே பேரின்பமாகும்.அதுவே ஐந்தொழில் செய்யும் வல்லபமாகும் .அதுவே என்றும் அழியாத இன்பமாகும்.அந்த இன்பத்தைப் பெற்றுக் கொள்வதே மனிதப் பிறவியின் பயனாகும்.

என்றும் அழியாத அருளைப் பெற்று ஆன்ம தேகத்துடன் (ஒளி தேகம்) வாழ்வதே,சாகாக் கல்வியாகும் மற்ற கல்வி எல்லாம் சாகும் கல்வியாகும்.

சாகாக் கல்வியை உலகுக்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளலார் ஒருவர்தான் என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் .சொல்லியதோடு இல்லாமல் வாழ்ந்து வழி காட்டியவர் நமது அருட் தந்தை அருட்பிரகாச வள்ளலார் .

அந்த அருளாளர் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் சேர்ந்து ,உண்மை ஒழுக்கமுடன் வாழ்ந்து அருளைப் பெறுவோம் !மரணத்தை வெல்வோம்.  

ஆண்மநேயன் ;--கதிர்வேலு.

ஆன்மாவை அறிந்து கொள்வது எப்படி ?

ஆன்மாவை அறிந்து கொள்வது எப்படி ?

ஆன்மா என்பது ஒவ்வொரு ஜீவன் களுக்குள்ளும் விளங்கிக் கொண்டு (இயங்கிக்கொண்டு )இருக்கும் ஒளியாகும் .

ஆன்மாக்கள் உடலுக்குள் மறைந்து இருக்கின்றன.ஆன்மாவில் இருந்து வெளியே வருவது உயிர்ஒளி என்னும் ஜீவனாகும் ,உயிர் வாழ்வதற்கு உடம்பு என்னும் தேகம் தேவைப்படுகிறது.உடம்பு செயல்படுவதற்கு கரணம் ,இந்திரியங்கள் தேவைப்படுகிறது .அனைத்துக்கும் காரண காரியமாக இயங்குவது ஆன்மாவாகும்.

தேக வாழ்வுக்கு இந்த ஒளி என்னும் ஆன்மாக்கள் ஆதாரமாய் இருக்கின்றது.ஆன்மா மறைந்து இருக்கின்றதால் அதன் இயல் உண்மை இன்னது என்று அனைவராலும் தெரிந்து கொள்ள முடிவதில்லை .இந்திரியம் ,கரணம் என்னும் புலன்கள் ,  அறிவுக்கு விளங்காத ஆன்ம உண்மை அகத்தூய்மை உணர்வுடன் உள்ளவர்களுக்கு ,அதாவது ஞான யோகிகளுக்கு ஒருவாறு வெளிப்பட்டு இருக்கின்றது.மற்றவர்களுக்கு வெளிப்படாது மறைந்து செயலாற்றிக் கொண்டு உள்ளது.

அதுவும் வள்ளலார் காட்டிய சுத்த சனமார்க்க அருள் ஞானம் வெளிப்படாத காலத்தே கண்டு உரைக்கப் பட்ட ஆன்ம உண்மையாகும்.அதன் இறை பேரியல் உண்மை ஏகதேச (சிறிய அளவில் ) விளக்கமாகவே இருந்து இருக்கின்றன.ஆகவே இதுவரையில் மறைப்பின்றி முழுதாக வெளியானதில்லை .என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

உடல்தான் அணுக்கள் சேர்க்கையால் ஆன்மாவைச் சூழ்ந்து உருவாகி,வளர்வதும் தளர்வதும் அழிவதுமாய் இருக்கின்றது .தேகப் படைப்பில் இந்த மூன்று தொழில்களும் செயல்பட்டுக் கொண்டு வருவதை எல்லோரும் அறிவார்கள்.ஆனால் இவ்வுடளுக்குள் இருந்து மறைந்து போகின்ற ஆன்மா ,பின்னர் மற்றொரு பிறவி வடிவில் எப்படி வந்து தோன்றுகின்றது என்பது எல்லாம் சாதாரண அறிவு கொண்டு அறிந்து கொள்ள முடிவதில்லை

மறைப்பின் மறைந்தன ! என்று சொல்லுவார் வள்ளலார் .அதாவது தேகத்தில் மறைந்து விளங்கிய ஆன்மா ,தேகத்தை விட்டு நீங்கும் போதும் மறைந்தே போய்விடுகின்றது .அப்படி மறைந்து போன அவ் ஆன்மாவைப் பக்குவப் படுத்தி பிறிதொரு கருவில் வெளியாக்கப் பெற்றுப் புதிய உருவோடு உலகில் வருவிக்கப் படுகின்றது.ஆனால் அந்த உருவிலும் அந்த ஆன்மா மறைந்துதான் இருக்கின்றதாம்.

இப்படி எத்தனையோ உருவில் அஞ்ஞானவாசம் (மறைந்து உறைந்த) முடிவில் தான் மனித தேகம் எடுத்து தோன்றுகின்றது .மனித தேகம் எடுத்ததின் நோக்கமே ஆன்மாவை அறிந்து கொள்வதற்கே !ஆனால மனித தேகம் படைத்தவர்கள் மறைந்து இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவை காணமுடியாமல் மடிந்து மறைந்து போய் கொண்டே உள்ளார்கள் .

பழைய ஆன்மீக வாதிகள் !

காரணம் முன்னாடி இருந்த ஆன்மீக அருளார்கள் வெளிப்பட பார்க்க முடியாமலும் அதனை தெரிந்து கொள்ளும் வழி தெரியாமலும்,சமய மதவாதிகள் ,கற்பனைக் கதைகளை மக்கள் மனதில் விதைத்து விட்டார்கள் .எப்படி எனில் ! கதைகளில் உண்மையை அறிய முடியாது .உண்மையை உண்மையால் தான் அறிய முடியும்.

மனிதன் கடவுளைப் பிரிந்து இருப்பதாகவும் ,கடவுள் வேறு, தான் வேறு என்பதாலும்,  அறிந்தும் அறியாமலும் செய்த ஏதோ குற்றத்திற்காகத் தன புனித நிலையில் இருந்து தாழ்த்தப்பட்டு ,இப்புவி நிலைக்கு ஆன்மாவைத்  தள்ளிவிட்டு இருப்பதாகவும் ,அதனால் மனிதன் புனிதனாக்கும் பொருட்டே இங்கு பிறவி எடுத்துள்ளான் எனவும் ,அவனை ஆணவம் ,மாயை ,கன்மம் என்னும் மலங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ளன என்றும் ,அம்மல ஒழிப்புக்காக மேலும் மாயா கன்ம மலங்களையும் சேர்த்து ,இவ் உலகத்தில் வருவிக்கப்பட்டு உள்ளதாகவும் ,கதைகளைக் கட்டி உள்ளார்கள் .

அதற்காக வேதங்களை  படித்து கடவுளை நினைத்து ஓதி அகம் ,பிரம்மம்,அத்துவைதம்,துவைதம்,மந்திரம் ,தந்திரம் போன்ற கலைகள்   ,நிலையை அறிந்து கொண்ட வேதாந்திகள், ஆன்மாவின் உண்மை தெரியாமல் உண்மை நிலையை அறிந்து கொள்ளாமல் உண்மையை மறந்து ,பிரிந்து பொய்யான மாயா தேக நிலையில் சிக்குண்டு உலகில் உழன்றும் அழிந்தும் கொண்டு உள்ளார்கள் .மக்களையும் அறியாமையில் அழுத்தி விட்டார்கள் .வேதங்களை படிப்பதால் ஓதுவதால் மலங்கள் ஒழிந்து விடுவதில்லை .ஒழிக்கவும் முடியாது.

அப்படி சொல்வது உண்மை அல்ல ! எதுவும் தடை அல்ல !

மனிதன் கடவுள் நிலையில் இருந்து வேறுபட்டவன் அல்லன்,பிரிந்தவன் அல்லன்.ஆகையால் கடவுளை, ஆன்மாவை அறிந்து கொள்வதற்கு எதுவும் தடையாக இல்லை , மனிதனை எதுவும் தடுப்பதில்லை துன்ப வாழ்வில் வருந்தி உழலச் செய்கின்றது ஒன்றும் இல்லை .எல்லாம் அறியாமையால் விளந்த்தாகும் ,அறியாமை என்னும் திரை நீங்கினால் அனைத்தும் விளங்கும்.அறியாமை என்னும் மறைப்பு ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ளது என்கிறார் நமது அருட்தந்தை வள்ளல்பெருமான் அவர்கள் .

மனித தேகம் படைத்தவர்கள் உண்மை தெரிந்து கொள்ளாமல் இருந்ததால் உண்மையை தெரியப்படுத்த உவ்வுலகத்திற்கு இறைவனால் வள்ளல் பெருமானை வருவிக்க உற்றார் என்பதை ,உலகில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .

உண்மையை தெரிந்து கொள்வதற்காக ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''என்னும் அருள் திருநெறியை தோற்றுவித்து உள்ளார்கள் ,அந்த புனித நெறியில் சேர்ந்து உண்மையை உணர்ந்து ,ஆன்மாவை அறிந்து ,அருளைப் பெற்று, கடவுளின் நிலை அறிந்து அதன் மயமாவோம் .என்கிறார் வள்ளலார் அவர்கள்.

இப்பொழுது உலகமும் உலகில் உள்ள ஜீவராசிகளும் மாசுடையதாய் உள்ளது .மனிதன் தன்னுடைய மாசு உடைய மனத்தால் உண்மை அறிந்து கொள்ள இயலாது.உண்மை அறிந்து கொள்ளாத காரணத்தால் ,பொய் நெறிகளைப் பற்றிக் கொண்டு பேரவத்தைப் பட்டு  மடிந்து கொண்டே உள்ளார்கள்.

இவற்றை எல்லாம் ஒழித்து மெய் இன்ப நெறியில் உலகத்தைச் செலுத்தவே ,மெய் நெறியாம் சுத்த சன்மார்க்கத்தை நம் வள்ளல் பெருமான் மூலம் ,இறைவனால் வழங்கப்பட்டு உள்ளன.

மெய்ப் பொருளாகிய கடவுள் என்னும் அருட்பெருஞ் ஜோதி ! எங்கும் எதிலும் என்றும் இருந்த போதிலும் அருள் ஞானமுற்ற மெய்ஞ் ஞானிகள் உளத்தே தான் வெளிப்பட்டு விளங்குகின்றார் என்பது சத்தியமான உண்மையாகும்.அந்த மெய் ஞானிதான் வள்ளல் பெருமான் என்னும் அருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.அதனால்தான்,அவர் அமைத்த மார்க்கத்திற்கு ,மெய் நெறியாம் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ''எனற பெயர் வைத்துள்ளார் .

அவர் உள்ளத்தில் தான் இறைவன் முழுமையான அன்பு கொண்டு விழித்து இருக்கின்றார் .அதனால்தான் ''களங்கம் நீத்து உலகம் களிப்புற மெய் நெறி விளங்க என்னுள்ளே விளங்கும் மெய்ப்பொருளே ''என்று சொல்லியுள்ளார்.

வள்ளலார் உடைய ஆன்மா எதையும் வேறுபட்டு நினைக்காமல் ஒன்றாகவே நினைத்தது ,கடவுள் வேறு ,தான் வேறு ,ஆன்மா வேறு, உலக உயிர்கள் வேறு ,உலகம் வேறு என்று நினைக்கவில்லை ,அதனால்தான் மெய்ப்பொருள் என்னும்,''அருட்பெருஞ்ஜோதி '' அவர் அகம் நின்று விளங்கு கின்றது.என்பதை என்பதை அறிவு படைத்த ஆன்மாக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.

ஆன்மாவை அறிந்து கொள்வது எப்படி !

வள்ளலார் அவர்கள் இந்த உலகில் எப்படி வாழ்ந்துள்ளார் என்பதை அறிந்து அவர்போல் வாழ்ந்தால், நாமும் அவர்போல் அறிந்து தெரிந்து அழியாமல் வாழலாம்.

நாம் பழைய பொய்யான நெறிகளை எல்லாம்,பொய் என்று உணர்ந்து அவைகளைத் தள்ளிவிட வேண்டும்.அகத்தில் உள்ள அறியாமை என்னும் திரை அதாவது மாசு சுத்தமாக நீக்கி ஆன்மாவை பரிசுத்த மாக்கிக் கொள்ள வேண்டும்.ஆண்டவர் இடத்தில் அன்பும் ,உயிர்கள் இடத்தில் இரக்கமும் அதாவது தயவும் கருணையும் கொள்ள வேண்டும் .அப்போது தான் ஆன்மாவில் ...இறைவன் நம்மீது கருணைக் கொண்டு அன்பு என்னும் அருளைத் நிரப்புவார் .அந்த அருள் என்னும் அமுதம்தான் உள்ளதனை உள்ளபடிக் காட்டும் கருவியாகும்.

அழியும் பொருளை விட்டு அழியாப் பொருளான அருளைப் பெற்றவர் உள்ளத்தில் உயிரில் ஆன்மாவில் ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நீங்காது விளங்கிக் கொண்டே இருப்பார் .அதனால் ஆன்மாவிடத்தில் இடைவிடாது அன்பு செலுத்திக் கொண்டே இருக்க வேண்டும் .

வள்ளலார் சொல்லுவதைப் பாருங்கள்.;--''மெய் அகத்தே நம்மை வைத்து விழித்து இருக்கின்றாய் நீ விளங்குக சன்மார்க்க நிலை விளக்குக ''என்று எனது கையகத்தே ஒரு பசும் பொன் கங்கணமும் புனைந்தார் கருணையினால் .என்று வள்ளலார் அனுபவித்து அனுபவமாலை என்னும் தலைப்பில் பதிவு செய்துள்ளார்.

ஆன்மாவில் இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்தேன் .நான்வேறு இறைவன் வேறு இல்லை என்பதை அறிந்தேன்,அதேபோல் உலக உயிர்களும் இறைவன்தான் என்பதை அறிந்தேன் .ஆதலால் ஆன்மநேயப் பற்றுக் கொண்டேன்,எல்லா ஆன்மாக்களும் என்னைப் போன்றதே என்பதை அறிந்து  எத்துணையும் பேதம் இல்லாது எவ்வுயிரையும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை கொண்டேன் .ஆதலால் ஒருமை உண்டானது அந்த ஒருமையால்தான் இறைவன் என்னை விட்டு நீங்காது என் உள்ளே இருந்து இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை தெளிவு படுத்தி உள்ளார் நமது வள்ளல் பெருமான் அவர்கள் .

நாமும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியில் சேர்ந்து பயின்று ஆன்மாவை அறிந்து பேரின்ப வாழ்வில் வாழ்வோம் .  

.
அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

   .