வியாழன், 31 ஜனவரி, 2019

வள்ளலாருக்கு அருள் மணப்பூ அளித்தது !

வள்ளலாருக்கு அருள் மணப்பூ அளித்தது !

சைவ சமயத்தார் எல்லோருக்கும் திருநீறு அணிவது வழக்கம்.வைணவ சமயத்தார் எல்லோரும் நாம்ம் போடுவது வழக்கம்.

இந்த இரு சின்னங்களும் மரணம் வரும் என்பதை குறிப்பதாகும்.மரணம் அடைந்தால் சாம்பலாய் போய் விடுவீர்கள் என்னும் அர்த்தத்தை குறிப்பதாகும்.

வள்ளலார் மரணத்தை வெல்லும் வழியை கண்டுபிடித்தவர்.

ஒருவர் மரணம் அடைந்தால்் மீண்டும் பிறப்பு உண்டு என்பதால் இறவா வரம் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டவர் வள்ளலார்..

விபூதி அணிபவர்கள் பிறவா வரம் வேண்டும் என்று கேட்டவர்கள்.

விபூதி அணிபவர்களுக்கு கண்டிப்பாய் மரணம் வந்தே தீரும் என்பது உண்மை.பூரண அருளை இறைவன் வழங்கவே மாட்டார்.ஏகதேச அருள் கிடைத்து மரணம் வந்து விடும்.மீண்டும் மனிதப் பிறப்பு  எடுத்து சுத்த சன்மார்க்கத்தை கடைபிடித்து மேலே ஏறவேண்டும்.

வள்ளலார் மட்டுமே இறவா வரம் வேண்டும் என்று கேட்டவர்.அதாவது மரணத்தை வென்றால் மட்டுமே பிறவா நிலை கிடைக்கும் என்பதை அருளால் அறிந்து கொண்டார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் மட்டுமே மரணத்தை தவிர்க்கும் அருள் வழங்கமுடியும் என்பதை உணர்ந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை விடாமல் பிடித்துக் கொண்டார்..

*வள்ளலாருக்கு மட்டுமே அருள் மணப்பூ அளித்தார் !*

ஆரம்பத்தில் வள்ளலாரும் விபூதி அணியும் பழக்கம் உள்ளவர் தான்..

**ஒருநாள் ஆன்மீகத்தில் உள்ளவர்களை எல்லாம் அழைத்து..சபையில் நிற்கவைத்து.மரணம் அடைபவர்களுக்கு எல்லாம் விபூதி கொடுத்துவிட்டு வள்ளலாருக்கு மட்டும்.செஞ்சுடர்பூ வழங்கினார்.**

வள்ளலார் எனக்கும் விபூதி கொடுங்கள் என கேட்க..அன்று அளித்தோம் இனி உனக்கு தேவை இல்லை.என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே  ! அருள் மணப்பூ வழங்குகிறார் என்பதை பின்வரும் பாடல்களில் வள்ளலார் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

படித்து அறிவை பெருக்கிக் கொள்ளுங்கள் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் !

நான்காம் திருமுறை.பிரசாதமாலை என்னும் தலைப்பில் ....

  • திருஉருக்கொண் டெழுந்தருளிச் சிறியேன்முன் அடைந்து 
    திருநீற்றுப் பைஅவிழ்த்துச் செஞ்சுடர்ப்பூ அளிக்கத் 
    தருவுருக்கொண் டெதிர்வணங்கி வாங்கியநான் மீட்டும் 
    தயாநிதியே திருநீறும் தருகஎனக் கேட்ப 
    மருவுருக்கொண் டன்றளித்தாம் திருநீறின் றுனக்கு 
    மகிழ்ந்தளித்தாய் இவைஎன்று வாய்மலர்ந்து நின்றாய் 
    குருஉருக்கொண் டம்பலத்மே அருள்நடனம் புரியும் 
    குருமணியே என்னைமுன்னாட் கொண்டகுணக் குன்றே. 
  • 2. என்வடிவந் தழைப்பஒரு பொன்வடிவந் தரித்தே 
    என்முன்அடைந் தெனைநோக்கி ஔநகைசெய் தருளித் 
    தன்வடிவத் திருநீற்றுத் தனிப்பைஅவிழ்த் தெனக்குத் 
    தகுசுடர்ப்பூ அளிக்கவும்நான் தான்வாங்கிக் களித்து 
    மின்வடிவப் பெருந்தகையே திருநீறும் தருதல் 
    வேண்டுமென முன்னரது விரும்பியளித் தனம்நாம் 
    உன்வடிவிற் காண்டியென உரைத்தருளி நின்றாய் 
    ஒளிநடஞ்செய் அம்பலத்தே வெளிநடஞ்செய் அரசே. 
  • 3. அழகுநிறைந் திலஒரு திருமேனி தரித்தே 
    அடியேன்முன் எழுந்தருளி அருள்நகைகொண் டடியார் 
    கழகநடு எனைஇருத்தி அவர்க்கெல்லாம் நீறு 
    களித்தருளி என்னளவிற் கருணைமுக மலர்ந்து 
    குழகியற்செஞ் சுடர்ப்பூவைப் பொக்கணத்தில் எடுத்துக் 
    கொடுத்தருளி நின்றனைநின் குறிப்பறியேன் குருவே 
    மழகளிற்றின் உரிவிளங்க மணிப்பொதுவிற் சோதி 
    மயவடிவோ டின்பநடம் வாய்ந்தியற்றும் பதியே. 
  • 4. விலைகடந்த மணிஎனஓர் திருமேனி தரித்து
    வினையேன்முன் எழுந்தருளி மெய்யடியர் விரும்பக் 
    கலைகடந்த பொருட்கெல்லாங் கரைகடந்து நாதக் 
    கதிகடந்த பெருங்கருணைக் கடைக்கண்மலர்ந் தருளி 
    அலைகடந்த கடல்மலர்ந்த மணச்செழும்பூ அடியேன் 
    அங்கைதனில் அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் 
    மலைகடந்த நெடுந்தோளில் இதழிஅசைந் தாட
    மன்றில்நடம் புரிகின்ற வள்ளல்அருட் குருவே. 
  • 5. உலர்ந்தமரந் தழைக்கும்ஒரு திருஉருவந் தாங்கி 
    உணர்விலியேன் முன்னர்உவந் துறுகருணை துளும்பு 
    மலர்ந்தமுகம் காட்டிநின்று திருநீற்றுப் பையை
    மலர்க்கரத்தால் அவிழ்த்தங்கு வதிந்தவர்கட் கெல்லாம் 
    அலர்ந்ததிரு நீறளித்துப் பின்னர்என்றன் கரத்தில் 
    அருள்மணப்பூ அளித்தனைநின் அருட்குறிப்பே தறியேன் 
    கலந்தவரைக் கலந்துமணிக் கனகமன்றில் நடஞ்செய் 
    கருணைநெடுங் கடலேஎன் கண்அமர்ந்த ஒளியே. 
  • 6. பிழைஅலதொன் றறியாத சிறியேன்முன் புரிந்த 
    பெருந்தவமோ திருவருளின் பெருமையிதோ அறியேன் 
    மழைஎனநின் றிலகுதிரு மணிமிடற்றில் படிக 
    வடந்திகழ நடந்துகுரு வடிவதுகொண் டடைந்து
    விழைவினொடென் எதிர்நின்று திருநீற்றுக் கோயில் 
    விரித்தருளி அருண்மணப்பூ விளக்கம்ஒன்று கொடுத்தாய் 
    குழைஅசையக் சடைஅசையக் குலவுபொன்னம் பலத்தே 
    கூத்தியற்றி என்னைமுன்னாட் கொண்டசிவக் கொழுந்தே. 
  • 7. முத்தேவர் அழுக்காற்றின் மூழ்கியிடத் தனித்த 
    முழுமணிபோன் றொருவடிவென் முன்கொடுவந் தருளி 
    எத்தேவர் தமக்குமிக அரியஎனும் மணப்பூ 
    என்கரத்தே கொடுத்தனைநின் எண்ணம்இதென் றறியேன் 
    சித்தேஎன் பவரும்ஒரு கத்தேஎன் பவரும் 
    தேறியபின் ஒன்றாகத் தெரிந்துகொள்ளும் பொதுவில் 
    அத்தேவர் வழுத்தஇன்ப உருவாகி நடஞ்செய் 
    ஆரமுதே என்னுயிருக் கானபெருந் துணையே.
  • 8. தெள்ளமுதம் அனையஒரு திருஉருவந் தாங்கிச் 
    சிறியேன்முன் எழுந்தருளிச் செழுமணப்பூ அளித்தாய் 
    உள்ளமுதம் ஆகியநின் திருக்குறிப்பே துணரேன் 
    உடையவளை உடையவனே உலகுணரா ஒளியே 
    கள்ளமிலா அறிவாகி அவ்வறிவுக் கறிவாய்க் 
    கலந்துநின்ற பெருங்கருணைக் கடலேஎன் கண்ணே 
    கொள்ளுதொறும் கரணமெலாங் கரைந்துகனிந் தினிக்கும் 
    கொழுங்கனியே கோற்றேனே பொதுவிளங்குங் குருவே. 
  • 9. கண்விருப்பங் கொளக்கரணங் கனிந்துகனிந் துருகக் 
    கருணைவடி வெடுத்தருளிக் கடையேன்முன் கலந்து 
    மண்விருப்பங் கொளுமணப்பூ மகிழ்ந்தெனக்குக் கொடுத்து 
    வாழ்கஎன நின்றனைநின் மனக்குறிப்பே தறியேன் 
    பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப் 
    பெண்விருப்பந் தவிர்க்கும்ஒரு சிவகாம வல்லிப் 
    பெண்விருப்பம் பெறஇருவர் பெரியர்187உளங் களிப்பப் 
    பண்விருப்பந் தருமறைகள் பலபலநின் றேத்தப் 
    பரமசிதம் பரநடனம் பயின்றபசு பதியே. 
  • 10. உன்னுதற்கும் உணர்வதற்கும் உவட்டாத வடிவம் 
    ஒன்றெடுத்து மெய்யன்பர் உவக்கஎழுந் தருளி 
    முன்னதற்கோர் அணுத்துணையுந் தரமில்லாச் சிறியேன் 
    முகநோக்கிச் செழுமணப்பூ முகமலர்ந்து கொடுத்தாய் 
    துன்னுதற்கிங் கரிதாம்நின் திருஉள்ளக் குறிப்பைத் 
    துணிந்தறியேன் என்னினும்ஓர் துணிவின்உவக் கின்றேன் 
    பொன்னுதற்குத் திலகமெனுஞ் சிவகாம வல்லிப் 
    பூவைஒரு புறங்களிப்பப் பொதுநடஞ்செய் பொருளே. ! 

மேலே கண்ட பாடலில் தெளிவாக பதிவு செய்துள்ளார் வள்ளலார்.

சமய மதச்சின்னங்கள் அணியும்வரை மரணத்தை வெல்லவே முடியாது..

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளே ! சாதி.சமய.மதம்.போன்ற ஆச்சார சங்கற்ப விகற்பங்களே காரணமாக உள்ளன..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 30 ஜனவரி, 2019

அருட்பா மருட்பா போர் !


அருட்பா மருட்பா போர்.!

சைவ சமயத்தில் பக்தி இலக்கியங்களாகப் போற்றப்பட்டவை திருமந்திரம், திருவாசகம், திருப்புகழ். அதன் பிறகு எழுதப்பட்ட பாடல்கள் யா வும் பிரபந்த திரட்டுகள் எனவும், பின் இயற்றப்பட்டப் பாடல்கள் வெறும் திரட்டு எனவுமே அழைக்கப்பட்டன.

கோயில்களில், பசனைகளில், உற்சவங்களில் இப்பாடல்கள் மட்டுமே மிகுந்த சிரத்தையோடு பாடப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் 1867 ஆம் ஆண்டு வள்ளலார் அவர்கள் இயற்றிய பாடல்கள் திருஅருட்பா எனும் தலைப்பில் வெளிவந்தது.

ஆரம்பத்தில் சொற்பொழிவுகளுக்கு முன்னர் பாடப்பட்ட திருஅருட்பா மக்களிடம் வரவேற்பு பெற்றபோது

கோயில்களில் பன்னிரண்டு திருமுறைகளோடு பாடப்பெறும் அளவுக்கு உயர்ந்தது. அதற்கு மேலும் உயர்ந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உயர்ந்து கொண்டே இருந்த்து.

இது சைவ சமயத்தார்கள் பலருக்கு வெறுப்பினைத் தந்தது.

ஏனெனில் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அனைத்தும் தேவை இல்லாத சமயக் கோட்பாடுகளை கேள்வி கேட்டது.

 சாதி சமய கோட்பாடுகளை.மத வேறுபாடுகளை களைய அவர் இயற்றியப் பாடல்கள் பலரின் கவனத்தைப் பெற, சாதி சமய மதங்களில் ஊறிய மனங்கள் அதை எதிர்த்தன.

சைவ சமய மரபியல் சிந்தனைகளை அவர் உடைத்தெறிவதாகக் கூறி சைவ சமய அடிப்படைவாதிகள் அவரோடு சண்டையிட்டனர். வாதம் செய்தனர்.அதில் குறிப்பிடத்தக்கவர் ஆறுமுக நாவலர்.

வள்ளலார் மீது மட்டுமின்றி, சைவ சமய விதிகளைச் சரிவரப் பின்பற்றாத சைவர்கள் அனைவர் மீதும் ஆறுமுக நாவலர் கடுங்கோபம் கொண்டார். அதனால்தான் “நாவலர்” என்னும் பெயரைத் திருவாவடுதுறை ஆதினம் அவருக்கு வழங்கிற்று.

யாழ்ப்பாணத்திலேயே பல சைவக் கோயில்கள் ஆகம விதிப்படி செயல்படவில்லை என்பதைத் தன்னுடைய “யாழ்ப்பாணச் சமய நிலை” என்னும் நூலில் அவர் விளக்கினார்.

சைவ சமயத்திற்கு எதிராக கருத்துகள் கூறும் இராமலிங்க அடிகளின் பாடல்கள் அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், சம்மந்தர் போன்றோரின் பாடல்களுக்கு இணையாக இடம்பெறுதல் கூடாது என்று அவர் தீவிரமாக எதிர்த்துப் பேசினார்.

இராமலிங்கரின் பாடல்கள் அனைத்தும் அருட்பாக்கள் அல்ல மருட்பாக்கள் என எழுதி நூல் வெளியிட்டதோடு, தனிப்பட்ட முறையில் அடிகளைத் தாக்கி பல சொல்லம்புகள் வீசினார்.

ஆறுமுக நாவலரைப் போன்று எதிர்ப்பவர்கள் ஒருபுறம் எனவும் இராமலிங்க அடிகளை ஆதரிப்போர் ஒரு புறமும் என வாதங்கள் தொடர்ந்து நடந்தன.

 அந்தக் காலகட்டத்தில் இராமலிங்க அடிகளுக்கு ஆதரவாக இசுலாமிய தமிழறிஞர் செய்குத்தம்பி பாவலர் பரப்புரை மேற்கொண்டார்.

இராமலிங்க அடிகளும் தனக்கு எதிரான கருத்துக்கள் பற்றி கவலை கொள்ளாது தன் பணியில்.இறை சிந்தனையில் கவனமாக இருந்தார்.

**ஏன் என்றால்  உலகத்தை திருத்த இறைவனால் வருவிக்க உற்றவர்.**

இதனால் கோபமுற்ற ஆறுமுக நாவலர் தன்னை அவமதித்து விட்டதாக அடிகளார் மீது வழக்கு தொடர்ந்தார் ஆனால் அந்த வழக்கு போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆறுமுக நாவலரால் தொடங்கப்பட்ட இந்த அருட்பா – மருட்பா போர் காலங்கள் கடந்தும், இராமலிங்க அடிகள் சித்தி பெற்ற பிறகும்.அதாவது மரணத்தை வென்ற பின்பும். இருபதாம் நூற்றாண்டு வரையிலும் அதற்கு மேலும் அன்றும்.இன்றும்.என்றும் தொடர்ந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றது..

அருட்பா-மருட்பா அறிக்கைப் போர் தொடங்கிய அனைத்துச் செய்திகளையும், அப்போது வெளியிடப்பட்ட நூற்றுக்கணக்கான துண்டறிக்கைகளையும் திரட்டி ஆய்வாளர் ப. சரவணன், 1190 பக்கங்களில் “அருட்பா மருட்பா கண்டனத் திரட்டு” என்னும் பெரியதொரு ஆவண நூலை வெளியிட்டுள்ளார்.

 “அந்நூல் ஒரு புலமைக் களஞ்சியம், அறிவுத் தளங்களை ஆராய முயல்வோருக்குக் கிடைத்த அரிய புதையல்” என்று பாராட்டுகிறார் பேராசிரியர் ஆ.இரா. வேங்கடாசலபதி.

வள்ளலார் சிதம்பர தீட்சிதர்களைக் கருவியாகப் பயன்படுத்தியவர் அல்ல,

 மனிதர்கள் விலங்குகளாக மாறுவதற்கு சாதி.சமய.மதம் போன்ற பகைமை உணர்ச்சியே காரணமென்ற, கொள்கை வழியில் ஆரம்பிக்கப்பட்ட திருஅருட்பா மருட்பா போரில் வள்ளலாரின் திருஅருட்பா சார்பில்

சைவ சமயவாதியான மறைமலையடிகள் வாதத்தில் கலந்துகொள்ள அப்போர் முடிவுபெற்றதாகக் குறிப்பிடப்படுகிறது.

“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா நவின்றகலைச் சரிதம்எலாம் பிள்ளைவிளையாட்டு” என்றும்

“”சாதியும், மதமும், சமயமும் பொய் ”என்றும் “

“சாதி சமயவிகற் பங்களெல்லாம் தவிர்த்தே எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல்வேண்டும் ” என்றும்

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக்கொண்டாடும் கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”

என்றும் பல நிலைகளில் பகுத்தறிவு கருத்துக்களை, சமத்துவ கருத்துக்களை தன் பாடல்களில் வெளிப்படுத்தியதன் காரணமாகவே அவர் சைவ சமயத்தாரிடம் மிகப்பெரிய கண்டணங்களை சந்திக்க நேர்ந்தது என்பதே உண்மை.

எனினும் காலம் கடந்தும் இன்றும் என்றும்.வள்ளலாரின் திருஅருட்பா பாடல்கள் மக்கள் மனதில் பசுமரத்தாணிப் போல் பதிந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

“எப்பொருளும் எவ்வுயிரும், எவ்வுலகும் ஒன்றே” என்ற ஒப்பற்ற சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே வள்ளலாரின் கனவாக இருந்தது என்றால் அது மிகையல்ல.

வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்க இறை கொள்கைகயே! உலக மக்களை ஒன்று படுத்த முடியும் என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு வளர்ந்து வருகின்றன.

சுத்த சன்மார்க்க கொள்கைக்கு நேர் எதிரிகளே சைவ சமயத்தார்களே !
 
வள்ளலார் தன் உருவமே வேண்டாம் என்றவர்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே ஒளியாக வழிபட வேண்டும் என்று கட்டளை இட்டவர்.

சைவசமயத்தை சார்ந்தவர்கள் தான் வள்ளலார் உருவப்படத்தை சித்தரித்து சமய சின்னங்களான விபூதிப் பட்டையை வள்ளலார் படத்திற்கு அணிவித்தவர்கள்.

சைவ சமய நாயன்மார்களில் ஒருவராக வள்ளலாரையும் சேர்த்துவிடுவார்கள்.

நாயன்மார்கள் வரலாறு தத்துவங்களே தவிர உண்மை  அல்ல என்று தெளிவாக வள்ளலார் சொல்லி உள்ளார்.

சுத்த சன்மார்க்கிகள் எச்சரிக்கையாக இருந்து வள்ளலார் கொள்கைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பொருப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நம்மிடம் தந்துள்ளார்..

உலகம் எல்லாம் போற்ற ஒளிவடிவனாகி இலக  அருள்  செய்தான் இசைந்து.
திலகன் என நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான் தானே எனக்கு தனித்து..

என்று வள்ளல்பெருமான் தெளிவாக பதிவு செய்துள்ளார்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்வு !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

வியாழன், 24 ஜனவரி, 2019

வள்ளலார் அடைந்த நிலை என்ன ?

வள்ளலார் அடைந்த நிலை என்ன?அவருடைய தூல தேகம் என்ன ஆயிற்று?தயவு செய்து இந்தக் கட்டுரையை முழுவதுமாக மெதுவாகப் படிக்கும்படி உங்கள் தாள் பணிந்து வேண்டுகிறேன்.
ஜீவகாருண்யம்,பக்தி ,ஒழுக்கம், தவம் ஆகிய நான்கினாலும், வள்ளலாருடைய தூல தேகம் முதலில் சுத்த தேக நிலை பெற்றது. சுத்த தேகமாக அவர் தேகம் மாறியதால் அவர் தேகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள்.
பொன் வண்ணம்,பன்னிரண்டு வயது பருவம், நரை,திரை ,பிணி,மூப்பு, மலம்,ஜலம்,வியர்வை,ஆகாரம்,சாயை முதலியன இல்லாமை.ரோமம் வளர்ச்சி தாழ்ச்சி இல்லாமை. இந்த நிலையை வள்ளலார் அடைந்ததனால் சென்னையிலிருந்து திரு மாசிலாமணி முதலியார் என்பவர் வள்ளலாருக்குத் தெரிந்தும் தெரியாமலும் ஒன்பது முறை அவரைப் போட்டோ பிடிக்க முயற்சி செய்தார். ஆனால் வள்ளலாரின் தேகம் போட்டோவில் விழவில்லை.அதனால்தான் வள்ளலாரின் போட்டோ இல்லை. அவருடைய உண்மையான உருவம் நமக்குக் கிடைக்கவில்லை.இப்போது உள்ள படங்கள் எல்லாம் கற்பனையாக எழுதப்பட்ட உருவமேயன்றி வள்ளலாரின் உண்மை உருவம் அல்ல. வள்ளலார் சுத்த தேகம் அடைந்தார் என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.
அவருடைய தொடர்ந்த முயற்சியால் அடுத்து அவர் பிரணவ தேக நிலை அடைந்தார்.சுத்த தேகத்தில் அவர் அடைந்த நிலையோடு அவருடைய தேகம் ஐந்து முதல் எட்டு வயது பருவமாக மாறியது. அவரைக் கண்களால் பார்க்க முடிந்ததே தவிரக் கைகளால் பிடிக்கமுடியததாக ஆயிற்று. சுடர் போலத் தோன்றுமடா தூல தேகம் என்ற சித்தர் வாக்கும் இதை நிரூபிக்கின்றது.
இறுதியாக அவர் தேகம் ஞான தேகமாக மாறியது. ஞான தேகம் என்றால் அது தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்கிறார் வள்ளலார். சில நாட்கள் வள்ளலார் தோன்றாமலும் இருந்திருக்கின்றார். 1874 ம் ஆண்டில் வள்ளலார் திருக் காப்பிட்டுக்கொண்டு மறைந்தது அனைவருக்கும் தெரியும்.ஆனால் 1870ம் ஆண்டே வள்ளலார் காணாமல் போயிருக்கிறார். வள்ளலாருடைய தலை மாணாக்கராகிய தொழுவூர் வேலாயுத முதலியார். தருமச்சாலையை நிர்வகித்து வந்திருந்த ஆனந்த நாத சண்முகநாத சரணாலய சுவாமிகளுக்கு 8-6-1870 அன்று எழுதிய கடிதத்தில் நம் பெருமான் இப்போது எவ்விடத்து எழுந்தருளி இருக்கின்றது? சாலை என்ன ஸ்திதியில் இருக்கின்றது?அவ்விடத்திய காரியங்களை யார் பராமரிக்கின்றார்கள் இது விபரங்களை உடனே கட்டளையிடும்படிக் கோருகிறேன். அந்தப் பக்கங்களிலிருந்து இங்கு வருபவர்கள் தங்கள் தங்களுக்குத் தோன்றியபடியே சில பல சொல்லுந்தோறும் மனம் துடிக்கின்றது.ஆதலால் உண்மை விடயங்களை உணர அருள் செய்தல் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்தக் கடிதத்தை ஊன்றிப் படித்தால் வள்ளலார் தோன்றாமலேயே இருக்கும் நிலை பெற்றார் என்றும் உண்மை அறியாத ,மக்கள் வேலாயுத முதலியாரிடம் சில பல சொல்லியிருக்கின்றார்கள்.என்றும், உண்மையை உணரவேண்டி வேலாயுத முதலியாரும் தருமச்சாலையில் இருந்த ஆனந்த நாத சண்முக சரணாலய சுவாமிகளுக்குக் கடிதம் எழுதி இருக்கின்றார்.என்றும் அறிய முடிகிறது. பிறர் கண்களுக்குத் தோன்றாமல் வள்ளலார் மறைந்திருந்தார் என்பது நிரூபணமாகின்றது. இதற்குப் பதில் எழுதுவது போல் வள்ளலாரிடமிருந்து ஓர் அறிக்கை வெளியாகின்றது. வள்ளலார் அறிக்கை வெளியிட்ட நாள் 26-10-1870
அன்புள்ள நம்மவர்களுக்கு அன்புடன் அறிவிப்பது.ஒருவனைப்பற்றி அநேகம் பேர்களுக்கு நன்மையுண்டாம் என்பதை உண்மையாக நம்பி இருங்கள் .என்னால் உங்களுக்கு நன்மை கிடைப்பது சத்தியம்.நான் இன்னும் கொஞ்ச தினத்தில் திருவருள் வலத்தால் வெளிப்படுகின்றேன்.அது பரியந்தம் பொறுத்திருங்கள். நான் மிகவும் சமீபத்தில்தானே வெளிப்படுவேன்.அஞ்சவேண்டாம்.சாலையை இலகுவாய் நடத்துங்கள்.
சென்னையில் இருக்கும் பிரம்ம ஞான சங்கத்தாருக்கு வேலாயுத முதலியார் கொடுத்த வாக்கு மூலத்தில் கூட வள்ளலார் அடிக்கடி மறைந்து இருந்ததைக் குறிப்பிடுகின்றார். அவர் கூறியுள்ளது: 1855ம் ஆண்டில் சென்னையைவிட்டு சிதம்பரத்திற்குப் போனார். அங்கிருந்து வடலூர்,கருங்குழி என்ற இடங்களுக்குச் சென்று அங்கு நீண்ட காலம் இருந்தார். அங்கிருக்கும்போது இவர் அடிக்கடி தம் சீடர்கள் அறியாவண்ணம் மறைந்திருப்பது உண்டு. இவர் எங்கு சென்றார் என்பதை அறிவோர் எவரும் இலர். இப்படி வெகுநாள் மறைந்திருப்பார்.
ஞான தேகத்தின் தன்மை தோன்றியும் தோன்றாமலும் இருக்கும். தான் ஞான தேகம் பெற்றதை இவ்வாறு அடிக்கடி மறைந்து மறைந்து சோதித்துப் பார்த்திருக்கின்றார்.என்பதே உண்மை.
ஞான தேகம் பெற்ற வள்ளலாரால் யார் கண்ணுக்கும் புலப்படாமலும் இருக்க முடியும். அவர் நினைத்தால் மீண்டும் தோன்றவும் முடியும்.

வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டார் என்கிறார்களே ?
உண்மைதான். வள்ளலார் இறைவனுடன் இரண்டறக் கலந்துவிட்டது உண்மையே. அவர் கலந்ததை அப்படிச் சொல்லக்கூடாது. இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான் என்றுதான் கூறவேண்டும்.இதுவரை வந்த அருளாளர்கள் இறைவனைத் தேடி ஊர் ஊராக அலைந்தார்கள். ஆனால் அந்த இறைவனோ வள்ளலார் இருந்த குடிசையைத் தேடி வலிய வந்து அவருடன் கலந்தான் என்பதே உண்மை. ஆதாரம் அருட்பா.

வானிருக்கும் பிரமர்களும் நாரணர்களும் பிறரும் மாதவம் பன்னாட் புரிந்து
மணிமாட நடுவே
தேனிருக்கும் மலரணைமேல் பளிக்கறையிநூடே திருவடி சேர்த்து அருள்க
எனச் செப்பி வருந்திடவும்
நானிருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருளமுதம்
நல்கியதன்றியும் என்
ஊனிருக்கும் குடிசையிலும் உவந்து நுழைந்து அடியேன் உள்ளமெனும் சிறு
குடிசையுள்ளும் நுழைந்தனையே ( திரு அருட்பா)
வள்ளலார் திருக்காப்பிட்டுக் கொண்டதற்குச் சில ஆண்டுகட்கு முன்பே இறைவன் வள்ளலாருடன் கலந்துவிட்டான்.ஆண்டவன் வள்ளலாருடன் கலந்ததை அவர் திருக்காப்பிட்டுக்கொண்டபின் நடந்ததாகச் சொல்வது தவறு.

வள்ளலாரின் தேகம் அணு அணுவாக மாறி உலகமெங்கும் பரவிவிட்டது என்று கூறுகிறார்களே?
வள்ளலார் தான் எழுதிய திரு அருட்பாவில் பலப் பலப் பாடல்களில் தான் என்றும் அழியாத தேகம் பெற்றுவிட்டதாக அறிவிக்கின்றார். உதாரணமாக:
காற்றாலே ,புவியாலே, ககனமதனாலே,கனலாலே,புனலாலே, கதிராதியாலே
கூற்றாலே,பிணியாலே, கொலைக் கருவியாலே கோளாலே பிற இயற்றும் கொடும்
செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞான் றும் அழியாதே விளங்கும் மெய் அளிக்கவேண்டும் என்றேன்
விரைந்தளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் எந்தை அருட்பெருஞ்சோதி
இறைவனைச் சார்வீரே
தேகம் எப்போதும் சிதையாத வண்ணம் செய்வித்து எலாம் வல்ல சித்தியும் தந்தே
போகம் எல்லாம் எந்தன் போகமதாக்கிப் போதாந்த நாட்டைப் புரக்க மேலேற்றி
ஏக சிவானந்த வாழ்க்கையில் என்றும் இன்புற்று வாழும் இயல்பளித்து என்னை
ஆகம வீதியில் ஆடச் செய்தீரே அருட்பெருஞ்சோதி என் ஆண்டவர் நீரே
வள்ளலார் அழியாத தேகம் பெற்றுவிட்டதைப்\ பல பாடல்களில் கூறியுள்ளார்.அவர் தேகம் அணு அணுவாகச் சிதையவில்லை என்பதையும் இவ்வாறு சொல்வோர் வள்ளலாரைப் பற்றிய உண்மையை அறியாதவர் என்றும் உணரவேண்டும்.
தேகம் அணு அணுவாகச் சிதைந்து போனால் அவருடைய அந்த உடம்பில் இருந்த அவரது உயிர் என்ன ஆயிற்று என்று கேட்டால் என்ன பதில் சொல்வார்கள். ?

வள்ளலார் எல்லா உடம்புகளிலும் புகுந்து கொண்டார் என்கிறார்களே?a இந்த உடம்பில் இருக்கிறோம் இனி எல்லா உடம்புகளிலும், புகுந்து கொள்வோம் என்று வள்ளலார் கூறியது உண்மைதான். கார்த்திகை மாதம் உள்ளே போனவர் மார்கழி மாதமே வெளியே வந்துவிட்டார்.தை மாதம்தான் மீண்டும் வள்ளலார் தனது அறைக்குள்ளே நுழைந்து திருக்காப்பிட்டுக் கொள்கிறார்..அவர் எல்லோருடைய உடம்பிலும் புகுந்து கொண்டார் என்றால் அப்போதிருந்த மக்கள் உடம்பில் மட்டும்தானா இப்போதுள்ள நம் உடம்புகளிலும்கூடவா  என்று சொல்லலாமா?
உண்மையிலேயே வள்ளலார் நமது உடம்பிலே புகுந்தால் நாம் இப்படியா இருப்போம் ?இதுவரை வந்த மக்கள் உடம்பில் எல்லாம் வள்ளலார் புகுந்து கொண்டார் என்றால் அவர்கள் எல்லோரும் இறந்துதானே போனார்கள் அந்த உடம்புகளில் எல்லாம் புகுந்து கொண்ட வள்ளலார் என்ன ஆனார்?வள்ளலார் யாருடைய உடம்பில் புகுந்து கொண்டாலும் வள்ளலார் புகுந்து கொண்ட உடம்பிற்கு மரணம் வராது. ஆனால் வள்ளலார் தவிர மற்ற எல்லோரும் மரணம் அடைந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். எனவே வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்துகொள்ளவில்லை. எவ்வளவு சொன்னாலும் திருந்தாத மக்களைக் கண்டு அவர்கள் மீது மனம் இரங்கி அவர்கள் உடம்பில் புகுந்தாவது அவர்களைத் திருத்தலாம் என்று வள்ளலார் எண்ணினார். மக்கள் அந்த அளவிற்குப் புண்ணியம் பண்ணவில்லை. அதனால் வள்ளலார் யாருடைய உடம்பிலும் புகுந்து கொள்ளவில்லை. சரி அப்படியானால் அவர் என்னதான் ஆனார்?

வள்ளலார் ஒளி உடம்பு பெற்றார் என்கிறார்களே அது உண்மைதானே?
ஒளி உடம்பு பெற்றார் என்பது உண்மைதான்.நாம் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழில் ஒரு சொல்லுக்கு எத்தனையோ பொருள் உண்டு என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நாம் சிறு பிள்ளைகளாக இருந்தபோது கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடியதை நினைவில் கொண்டுவாருங்கள்.அப்போது என்ன செய்தோம்.ஒருவன் கண்ணை மூடிக்கொள்வான். மற்றவர்கள் ஒளிந்துகொள்வார்கள்.கண்ணைமூடிக்கொண்டு இருந்தவன் ஒளிந்து கொண்டவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவேண்டும். ஒளி என்ற சொல்லுக்கு ஒளிந்துகொள்ளுதல் என்று ஒரு பொருள் உள்ளது புரிகின்றதா? வள்ளலார் நமது கண்களுக்குத் தோன்றாமல் இருக்கும் ஒளி தேகம் பெற்றார் என்பதே உண்மை. ஒளி என்ற சொல்லுக்குப் பிரகாசம் என்று பொருள் கொண்டால் அவர் தேகம் தோன்றவேண்டும். ஒளியை மறைக்கமுடியாது.ஞான தேகம் என்பது
தோன்றியும் தோன்றாமலும் இருக்கும் என்றால் தோன்றாமல் இருக்கும் நிலையே ஒளி தேகம் என்பது. தோன்றவில்லை என்பதால் வள்ளலார் இல்லை என்று சொல்லி விடலாமா. இறைவன்கூடத் தோன்றவில்லை அவன் இல்லை என்றா சொல்கிறோம். ஆகாயம் கூடத் தோன்றவில்லை.அதனால் ஆகாயமே இல்லை என்றா சொல்கிறோம். இதுவும் வள்ளலார் கருத்துதான்.
கனமுடையேம் கட்டுடையேம் என்று களித்து இறுமாந்து இருக்கின்றீர் என்ற பாடலில் வள்ளலார் ஒளிப்பிடமும் அறியீர் என்கிறார்.அடுத்த வரியில் சினமுடைய கூற்று வரும் செய்தி அறியீரோ என்று கேட்கிறார். கூற்று வரும்போது ஒளிப்பிடம் அறிந்தால் கூற்றைத் தடுக்கலாம் என்று அறிகிறோம். ஞான சரியை முதல் பாடலிலேயே கடைசி வரியில் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருணம் இதுவே. அடுத்த பாடல் முதல் வரியிலேயே புகும் தருணம் இது கண்டீர் என்று ஆரம்பிக்கின்றார். இதுதான் ஒளிப்பிடம். ஆக ஒளி என்ற சொல்லுக்கு இங்கே பிரகாசம் என்று பொருள் கொள்வது தவறு.ஒளிந்து கொள்ளுதல் என்றுதான் பொருள் கொள்ளவேண்டும்.
வள்ளலார் என்னதான் ஆனார்?
தன் தேகத்தை மறைத்துக்கொண்டார். !!வள்ளலார் ஞான தேகம் பெற்றுவிட்டதையும் அவரால் பிறர் கண்களுக்குத் தோன்றாமல் மறைந்திருக்க முடியும் என்றும் முன்பே விளக்கப்பட்டுள்ளது. 30-1-1874 வெள்ளிக்கிழமையன்று மேட்டுக் குப்பத்தில் ஓர் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்ததே. சில நாட்கள் கழிந்து அரசாங்கத்தார் வந்து கதவைத் திறந்து பார்த்தலில் அங்கு ஒன்றும் இல்லாதிருந்தது என்றும் நாம் அரசாங்கத்தாரின் அறிக்கையிலிருந்து அறிகிறோம். தான் என்ன செய்துகொண்டேன் என்று அவரே விளக்குகின்றார்.
பஞ்ச பூதங்களாகிய மண் ,நீர், நெருப்பு, காற்று , ஆகாயம் ஆகியவற்றில் மண் ,நீர்,நெருப்பு ஆகிய மூன்றும் நம்முடைய கண்களால் காணமுடிகிறது. காற்றைக் கண்களால் காணமுடியாவிட்டாலும் உணரமுடிகிறது.வானத்திலே அண்ணார்ந்து பார்த்தால் தெரிகிற நீல வண்ணம் ஆகாயம் அல்ல.சூரிய ஒளியின் நீல வண்ணம்தான் நமக்கு ஆகாயம்போல் தோன்றுகிறது. ஆகாயம் என்பது ஒன்றுமல்லாத ஒரு வெளிதான்.மண்,நீர்,நெருப்பு,காற்று ஆகிய நான்கும் தன்னைக் காட்டுகின்றன. ஆனால் ஆகாயம் மட்டும் தன்னைக் காட்டவில்லை.ஆகாயம் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை. வான் செய்து கொண்டது  நான் செய்து கொண்டேன் என்கிறார் வள்ளலார்.
மன் செய்துகொண்ட சன்மார்கத்தில் இங்கே வான் செய்துகொண்டது
நான் செய்து கொண்டேன்
முன்செய்துகொன்டதும் இங்ஙனம் கண்டீர் மூவகையாம் உடலாதியை நுமது
பொன் செய்து கொண்ட பொதுவினில் ஆடும் பொன்னடி காணப்
பொருந்திக் கொடுத்தேன்
என் செய்துகொண்டாலும் செய்து கொள்கிர்ப்பீர் எனைப் பள்ளி எழுப்பி
மெய் இன்பம் தந்தீரே
வான் எப்படித் தன்னைக் காட்டவில்லையோ அதுபோல் நானும் என்னைக் காட்டவில்லை என்று வள்ளலார் தான் பெற்ற நிலையைதெளிவாகஅறிவிக்கின்றார்.
வள்ளலாருடைய தேகம் மண்ணில் புதைக்கப்படவில்லை,நெருப்பினால் தகனம் செய்யப் படவில்லை.எனவே வள்ளலார் இன்றும் தன் தேகத்துடன் இருக்கின்றார். அவருடைய ஞானதேகம் நம் கண்களுக்குப் புலப்படவில்லை. இதுவே உண்மை
வள்ளலார் இருக்கிறார் என்று நாம் அறிவதனால் நமக்கு என்ன நன்மை?
நாம் செய்த,செய்கின்ற வினையின் காரணமாக நமக்குத் துன்பம் நேரிடுகிறது.நாம் செய்த வினைக்குரிய பலனை இறைவன்தான் நமக்கு ஊ ட்டுகிறான்.தீவினை நல்வினை எனும் வன் கயிற்றால் இந்த ஜீவர்களை ஆட்டுகின்ற தேவே என்கிறது மகாதேவ மாலை.
மக்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவதற்கே வள்ளலாரை இறைவன் இந்த உலகிற்கு அனுப்பி இருக்கிறான்.இந்தச் செய்தியை வள்ளலார் தான் எழுதியுள்ள அகவலில் தெரிவிக்கின்றார். \
உலகினில் உயிர்களுக்குரறும் இடையூ றெலாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க
சுத்த சன்மார்க்க சுக நிலை பெறுக
உத்தமனாகுக ஓங்குக என்றனை
இந்த அகவல் வரிகளை ஊன்றி நோக்கினால் நமக்கு வரக்கூடிய இடையூறுகள் எல்லா வற்றையும் வள்ளலார் விலக்கவேண்டும் இது ஆண்டவன் வள்ளலாருக்கு இட்ட கட்டளை. இந்த உத்தரவு வேறு எந்த அருளாளருக்கும் தரப்படவில்லை .வள்ளலார் ஒருவர்தான் இந்த உத்தரவைப் பெற்றவர். இதை உணர்ந்து அவரிடம் போனால், அவரை வணங்கினால், நம்முடைய இடையூறுகள் விலகிப் போகும். இதை விட வேறு என்ன வேண்டும்?
ஆண்டவன் இத்துடன் நிற்கவில்லை. வள்ளலாரை அழைத்து நீ இந்த மக்களுக்கெல்லாம் துணையாய் இருப்பாயாக என்றும் ஆணை இட்டுள்ளான்.
எல்லாருக்கும் கடையாய் இருந்தேனுக் கருள் புரிந்து
எல்லோருக்கும் துணையாய் இருக்க வைத்தாய் எம்பெருமான்
எல்லோருக்கும் பொதுவில் நடம் இடுகின்றோய் இவ்வண்ணம்
எல்லோர்க்கும் செய்யாமை யாது குறித்து இசை எனக்கே/
வள்ளலார் என்ன ஆனார் என்று தெளிவாகப் புரிந்ததா?
அதனால் நமக்கு என்ன நன்மை?
வள்ளலாரை யார் உண்மையாக வணங்குகிறார்களோ, யார் அவர் காட்டிய வழியாகிய ஜீவகாருண்யத்துடன் வாழ்கின்றார்களோ அவர்களுக்கு வரக்கூடிய இடையூறுகளை நீக்குவது மட்டுமின்றி எல்லோருக்கும் அவர் துணையாகவும் இருக்கின்றார். இதைவிட வேறு என்ன பலன் நமக்கு வேண்டும்?

சனி, 19 ஜனவரி, 2019

வள்ளலாரின் வாழ்க்கை சுருக்கம் !

தைப்பூச ஜோதி தரிசனம் காண வாரீர்!

உலகில் இரக்கம் எல்லா சமயங்களுக்கும் எல்லா மதங்களுக்கும் எல்லா மக்களுக்கும் உரியது; உலகியலுக்கும் அடிப்படையாக விளங்குவது எல்லா உயிர்களிலும் இயற்கை விளக்கமாய் திகழ்வது தன்னை மேற்கொண்ட வரை இயல்பாக தன்வயப்படுத்தி எல்லா சித்திகளையும் வழங்குவது கொள்கைகளில் மாறுபடும் தத்துவஞானிகளும் "உயிர்இரக்கம்" என்னும் இனிய எளிய தத்துவத்தில் ஒன்றுபடுகின்றனர் உலக அருளாளர்கள் அனைவரும் உயிர் இரக்கமே வலிமை மிக்க ஆற்றல் என்னும் சிறந்த முடிவினை அறிவிக்கின்றனர் மேலும் உயிர்இரக்கம் பன்னெடுங்காலமாக நம் தமிழகத்தில் வழங்கி வரும் இயற்கை தொன்மை நெறியாகும்.

உயிர் இரக்கம் என்னும் ஒளி எங்கும் பரவத் அதற்கென்றே திருஅருட்பிரகாச வள்ளலார் ஆகிய நம் இராமலிங்க பெருமான் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் ஆணைக்கு இணங்க வருவிக்கவுற்று
 பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழகத்தில் அவதரித்தார்தார்கள்
 அவர்கள்

சிதம்பரத்திற்கு அருகில் உள்ளது மருதூர் இராமையாபிள்ளை சின்னம்மையாருக்கும்5.10.1823
(சுபானு புரட்டாசி 21) ஞாயிற்றுக்கிழமை அன்று இராமலிங்க பெருமான் ஐந்தாவது மகவாக அவதரித்தார்கள்
சிறுவயது முதல் சாதாரண குழந்தை போல் அல்லாமல் இறை உணர்வுடன் சாந்த சொரூபத்துடன் காணப்பட்டார்
அருட் குழந்தையாகிய இராமலிங்க பெருமானுடன் சிதம்பரம் கோயிலுக்கு சென்றனர் கோயிலில்திரையை தூக்கிய பொழுது எல்லாம் வெளியாகத் காணப்பெறும் கடவுள் காட்சியை பெருமான் பெற்றார்கள்

சென்னை வாழ்வு🌟
தந்தையின் மறைவுக்குப் பின் குடும்பம் சென்னைக்கு இடம்பெயர்ந்தது மூத்த அண்ணன் புராண விரிவுரை செய்து குடும்பத்தை பாதுகாத்து வந்தார் ராமலிங்க பெருமான் அன்னை அண்ணன் முதலான அனைவர் மனமும் மகிழுமாறு வளர்ந்து குமாரப் பருவம் எய்தினாதினார்கள் குடும்பத்தில் யாருக்கும் எவ்விதத் துன்பமும் சலிப்பும் இல்லாத வளர்ந்துவந்தார்கள்

திருவருட்பா பாடுதல்

நம் பெருமான் உயிர் இரக்கமும் கடவுள் பக்தியும் பொங்கித் ததும்பும் செந்தமிழ் பாடல்கள் பலவற்றை தம் ஐந்தாவது வயதிலேயே இயற்றிபாடத் தொடங்கினார்கள்.
அவர்கள் சென்னை கந்தகோட்டம் திருத்தணிகை திருவொற்றியூர் திருமுல்லைவாயில் திருவலிதாயம் திருத்தில்லை முதலான அனைத்து தலங்களையும் வழிபட்டு தலங்களில் எழுந்தருளியிருக்கும் தெய்வங்களை தலைவராகிய கடவுளாகவே கண்டு அனுபவித்து பொழிந்த பாடல்கள் யாவும் கல் நெஞ்சத்தையும் கரைப்பவனவாகும்.

திருமணம்🌟
பெரியோர்களின் வற்புறுத்தலாம் உயிர் இரக்கத்தாலும் பெருமான் தமது தமக்கை மகள் தனக்கோடியைத் திருமணம் செய்து கொண்டார்கள் தமது துணைவியார் அருள் நெறியில் பழகி வருமாறு செய்தார்கள் சில ஆண்டுகளுக்குப்பின் அவர்களை தம் சுற்றத்தாருடன் சென்னையில் இருக்குமாறு பணித்தார் மற்றும் அன்பர்களுடன் தமிழகத்தில் உள்ள ஆலயங்கள் பலவற்றையும் வழிபட்டார்கள் சொற்பொழிவுகள் செய்து உயிர் இரக்கத்தையும் கடவுள் பக்தியையும் மக்கள் உள்ளத்தில் மலரச் செய்தார்கள்
புலால் உண்ணும் வழக்கத்தை
கைவிடுமாறு வலியுறுத்தி பேசினார்கள் இவ்வாறு பல இடங்களிலும் புனித பயணம் செய்தபின் கடலூரை அடுத்த கருங்குழி என்னும் ஊரில் வேங்கட ரெட்டியார் என்னும் அன்பர் இல்லத்தில் தங்கி இருந்தார்கள்.

ஜீவகாருண்ய திருநெறி

வள்ளல் பெருமான் செடி கொடி முதலான அனைத்து உயிர்களிடத்தும் சகோதர ஒருமையும் உரிமையும் கொண்டு வாழ்ந்து வந்தார்கள் உயிர்களுக்கு பசி கொலை தாகம் பிணி இச்சை எளிமை பயம் முதலியவற்றால் உண்டாகும் துன்பங்களை நீக்கி அதனால் உண்டாகும் கடவுள் விளக்கத்தையும் கடவுள் இன்பத்தையும் பெறுவதில் ஒரு முழுமையை அடைந்தார்கள் அப்போது அவர்கள் உடம்பு இயற்கை உடம்பாக அருள் உடம்பாக ஒளி உடம்பாக வேதிக்கப்பட்டது அவர்கள் நடந்தால் அடிச்சுவடு உண்டாவதில்லை சூரிய ஒளி முதலியவற்றால் அவர்களுக்கு நிழல் உண்டாவதில்லை  அவர்களை ஒளிப்படம் (photo) எடுக்கபலமுறை பலர் முயன்றும் அவர்கள் அணிந்திருந்த வெண்ணிற ஆடைகள் மட்டுமே ஒளிப்பட தகட்டில் பதிவாயின அவர்கள் உடம்பில் அழுக்கு வியர்வை நரை திரை பிணி மூப்பு இறப்பு முதலியன இல்லை உணவு உறக்கம் முதலியன சிறிதும் தேவை இல்லாத நிலையில் அவர்கள் உடம்பு விளங்கியது அவரது திருமேனி ஒரு சமயம் தோன்றும் ஒரு சமயம் தோன்றாது இவ்வாறு அவர்கள் பால் விளங்கிய ஒளிவண்ணச் சிறப்புகளைக் கண்ட சான்றோர்களும் அறிஞர்களும் பக்தர்களும் யோகிகளும் பெரியோர்களும் அன்பும் வியப்பும்ஒருங்கே அடைந்து அவர்களை அடுத்து வாழத் தொடங்கினார்கள்.

சன்மார்க்க சங்கம் அமைத்தல்

வள்ளல் பெருமான் உயிர்இரக்க நெறி உலகெங்கும் பரவ தமது அன்பர்கள் அனைவரையும் சேர்த்து சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார்கள் புலால் மறுத்த அனைவரையும் சாதி சமய மத இன ஆண் பெண் வேறுபாடு இன்றி சங்கத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.
உயிர் இரக்கமே வடிவான கடவுளை உயிர் இரக்கமே வடிவாய் வழிபட வேண்டும் அப்பொழுது அருள்விளக்கம் உண்டாகும் அருள் விளக்கத்தால் எல்லாவகை உடல் நோய்களும் மனநோய்களும் மாறும்; ஊழ்வினை துன்பம் நீங்கும்; கல்வி செல்வம் தொழில் வளர்ச்சி பதவி உயர்வு முதலான இவ்வுலக இன்பங்கள் தடையில்லாமல் உண்டாகும் அருள் விளக்கம் நிறைவு பெறும் பொழுது உடம்பின் அணுக்கள் அருள் ஒளியால் மாற்றமடைந்து நரை திரை பிணி மூப்பு இறப்பு முதலியன இல்லாத ஒளி உடம்பு வாய்க்கும். ஒளி உடம்புடன் எல்லா உயிர்களிலும் கலந்து கொண்டு கடவுளை போல பேரின்பத்தோடு மரணம் இல்லாமல் வாழலாம். இதுவே கடவுள் கற்பித்த சமரச சுத்த சன்மார்க்க நெறி -ஒளிநெறி பெருநெறி -எல்லா சமயங்களுக்கும்- எல்லா மதங்களுக்கும்- எல்லா காலங்களுக்கும்- எல்லா உலகங்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான இயற்கை திருநெறி' என்று சன்மார்க்கத்தை வள்ளல் பெருமான் வரையறுத்து உபதேசித்தார்கள்.

திருஅருட்பா வெளியீடு
வள்ளல் பெருமானுடைய  நன் மாணவர்கள் பலருள் தலைசிறந்தவர் தொழுவூர் வேலாயுதனார் அவர்கள் பலர் வள்ளற்பெருமான் பாடிய இனிய எளிய அருட்பாக்கள் அனைத்தையும்வள்ளற் பெருமான் கருத்தை உணர்ந்து தொகுத்து ஆறு திருமுறைகளாக வகுத்தார்கள் அவற்றுள் திருஅருட்பா முதல் நான்கு திருமுறைகள் சன்மார்க்க சங்கம் சார்பில் 1867ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது ஐந்தாவது ஆறாவது திருமுறைகள் பிறகு வெளியிடப்பட்டன.

அருள் நிலையங்கள்
உயிர்இரக்க திருநெறியை விளக்குவதற்கு வள்ளற்பெருமான் சத்திய தருமசாலை சத்திய ஞானசபை சித்திவளாகம் என்னும் மூன்று அருள் நிலையங்களை ஏற்படுத்தினார்கள் இவற்றுள் சத்திய தருமசாலை பசி நீக்குதல் என்னும் பேர் அறத்தை நடைமுறைப்படுத்தி காட்டுவது சத்தியஞானசபை எல்லா உயிருக்கும்.
 உயிருக்கு உயிராக பெரும் தயவே  வடிவாகி கடவுள் விளங்குகிறார் என்னும் இயற்கை உண்மையை விளக்குவது .
சித்திவளாகம் உயிர்இரக்கதின் முடிவான சித்திநிலை. கடவுளைபோல எல்லாம் செய் வல்ல திறன் எல்லாம் அறியும் முழு உணர்வு முதலியன விளங்க எல்லா உயிர்களிலும் கலந்து மரணமில்லாமல் வாழுதல் என்பதை அறிவிப்பது.

சத்திய தருமசாலை
வள்ளல் பெருமான் வடலூர் 1867 ஆம் ஆண்டு வைகாசி திங்கள் 11 ம் நாள் சத்திய தருமச்சாலையை துவக்கினார்கள் வளர்ஒளிவிளக்கு(அகண்ட தீபம்)
அமைத்து கடவுளை ஒளி வடிவில் வழிபடும் நெறியை கற்பித்தார்கள் பிறகு தாம் வரைந்த ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற பொது வேதத்தை உயிர்இரக்க பயிற்சி செய்யும் முறையை விரிவாக உபதேசித்து அருள் செய்து அன்றைய தினம் முதல் மூன்று நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பேருக்கு உணவளித்தார்கள் அன்று தொடங்கி அற்றார் அழிபசி தீர்த்தல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது அதன் காரணமாக 1867ஆம் ஆண்டு வைகாசித் திங்கள் 11 ம் நாள் வள்ளற் பெருமான் இயற்றிய அடுப்பு அணையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது இன்று வரையும் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது1870 வரை பெருமான் சத்திய தருமசாலை தங்கியிருந்தார்கள்.

சத்திய ஞானசபை 🌟
மக்களின் வயிற்றுப்பசியை தனித்த வடலூர் வள்ளலார் மக்களின் அறியாமையை நீக்கி அறிவுப்பசியை தூண்டிவிட வேண்டும் என்று விரும்பி தனது சமரச சன்மார்க்க வேதம் பரவுமாறும்
உயிர் இரக்கத்தின் உயர்நிலை அனுபவங்களை வடலூர் என்ற புனித பூமி அறிவை விளக்குவதால் வடலூரை பெருமான் உத்தர ஞான சிதம்பரம் உத்தர ஞான சித்திபுரம் என்று அழைத்தார்கள் உத்தர ஞான சிதம்பரம் ஆகிய வடலூரில் சத்திய ஞான சபை என்னும் என்ற அற்புதமான தெய்வ நிலையத்தை பார்வதிபுர அன்பர்கள் கொடுத்த மனை பரப்பில் அனைவரும் சமரசமாக கலந்து வழிபாடு செய்யத்தக்க அமைப்புடன் சத்திய ஞான சபையை தாமரை வடிவில் எண்கோணமாக அழகுற அமைத்து
25 .1. 1872 பிரஜாபதி தைத் திங்கள் 13-ஆம் நாள் வியாழக்கிழமை பூச நாள் அன்று முதல் முதலாக சபையில் வழிபாடு தொடங்கப் பெற்றது அனைவரும் அருட்பெரும் ஜோதி தரிசனத்தைக் கண்டு களித்தனர்
அதில் ஏழு திரைகள் விடப்பட்டுள்ளன அருட்பெரும் ஜோதியை மறைத்துக் கொண்டிருக்கும் வெவ்வேறு ஏழு திரைகளும் தத்துவ படங்கள் நம்மிடமுள்ள ஞானம் ஆகிய ஏழு திரைகள் நீங்க பெற்றால் அருட்பெரும் ஜோதியை தரிசிக்கலாம் என்பதை இது உணர்த்துகிறது வள்ளலார் தமது அருட்பெருஞ்ஜோதி அகவலில் இத்தத்துவத்தை எடுத்து கூறியுள்ளார்

பூச நன்னாளில் கருந்திரை, நீலத்திரை, பச்சைத்திரை, செம்மை திரை, பொன்மை திரை, வெண்மைதிரை,கலப்பு திரை என்ற 7திரைகளை தைப்பூச நன்னாளில்நீக்கி

எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆகிய இறைவனை

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்ற மகா மந்திரத்தை உச்சரிக்க செய்து அருட்பெருஞ்சோதியை ஜோதி வடிவில் தரிசனம் செய்தார்கள்.
செய்வித்தார்கள்.

சித்திவளாகம்
வள்ளல் பெருமான் 1870 ஆம் ஆண்டு முதல் கடலூரை அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் ஒரு குடிலில் தங்கி இருந்தார்கள் சித்திவளாகம்(உயிர் இரக்கத்தால் உண்டாகும் அருள் சித்திகளை வழங்கும் இடம்)என்று பெயரிட்டார்கள்.
1873 ஆம் ஆண்டு ஐப்பசி திங்கள் 7 ஆம் நாள் மேற்புறமும் கீழ்புறமும் உடைய சன்மார்க்கக் கொடி கட்டி ஒரு சொற்பொழிவு செய்தார்கள் அப்போது என்னை ஏறா நிலைமிசை ஏற்றியது யாதெனில் தயவு தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது என்று கூறி உயிர் இரக்கமே தம்மை கடவுள் நிலைக்கு உயர்த்தியது என்று அறிவித்தார்கள்.

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
என்னும் அருள் மந்திரத்தை வெளிப்படையாக உபதேசித்தார்கள் பெரும் தயவு மயமான பேரழிவை கடவுள் இதுவே பேரின்பம் என்று மந்திரத்தின் பொருளையும் விளக்கி உரைத்தார்கள்

அருட்பெரும் சித்தி

திருஅருட்பிரகாச வள்ளலார் சித்தி வளாகத்தில் வழிபாட்டுக்காக ஒரு திருவிளக்கை கொண்டிருந்தார்கள் அதனை ஸ்ரீமுக ஆண்டு 1873 கார்த்திகை மாதம் முழுநிலவு நாளில் சித்தி வளாகத்தின் வாயிலில் வைத்து இதைத் தடைபடாது ஆராதியுங்கள் கடவுள் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்ற படியால் தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்து உண்மை அன்புடன் வழிபடுங்கள் நான் இப்போது இந்த உடம்பில் இருக்கிறேன் இனி எல்லா உடம்பிலும் புகுந்து கொள்வேன் என்று தமது அருட்பேர் ஒளி நிலையை அறிவித்தார்கள்.

பெருமானின் அறிவுரை
திருஅருட்பிரகாச வள்ளலார் ஆகிய நம் இராமலிங்க பெருமான் சன்மார்க்க சங்கத்தார் பெரும் தயவோடு பின்வரும் அறிவுரைகளை வழங்கினார்
சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியம் உயிர்இரக்கம் ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை இதற்கு சாதி சமய மத உலகியல் ஆசாரங்களிலும் பெரும் வெறுப்பு விருப்புகளேமுக்கிய தடைகள் இவைகளை அறவே கைவிட்டு உயிர் இரக்கத்தையே முக்கிய லட்சியமாகக் கொள்ள வேண்டும்
காலம் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போல பார்க்கின்ற பாவனையை வரவழைத்து கொள்ள வேண்டும்
என்று அறிவுறுத்தினார்

திருக்காப்பிட்டுக் கொள்ளுதல்🌟
வள்ளல் பெருமான் தம் அருள் உடம்பை மக்களின் புறக்கண்களுக்குத் தோன்றாமல் மறைத்துக்கொண்டு உயிர்களுக்கு உதவி செய்வதே சிறந்தது என்று முடிவு செய்தார்கள் அதனால் 1874ஆம் ஆண்டு தைப்பூச நாளில் இரவு 12 மணிக்கு சித்தி வளாகத்தில் அமர்ந்து கொண்டு நான் உள்ளே இருக்கப்போகிறேன் பார்த்து அவநம்பிக்கை அடையாதீர்கள் ஒருகால் கதவைத் திறந்து பார்த்தால் வெறும் வீடாக இருக்கும் படி ஆண்டவர் அருள் செய்வார் என்னை காட்டி கொடுக்க மாட்டார் என்று கூறி கதவுகளை திருகாப்பிட்டு கொண்டார்கள் சில நாட்களுக்குப் பின் அவர்கள் வள்ளலாரின்ஆணையை மீறி சில அரசு அதிகாரிகள் கதவை திறந்து பார்த்த பொழுது வெறும் வெளியாக அறை காட்சி தந்தது
நம்பெருமான் மரணமிலாப் பெருவாழ்வு பெற்று உலகின் கண்களுக்கு பெரும்பாலும் தோற்ற படாமல் சித்தி வளாகத்தில் இருந்த வண்ணம் திருவருட் செங்கோல் செலுத்துகின்றார்கள் அரசியல் அறிவியல் அருளியல் முதலிய அனைத்துத் துறையிலும் உள்ள தன்னலமற்ற தலைவர்கள் அனைவரையும் கருவியாகக் கொண்டு நமது வள்ளற் பெருமான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தை சன்மார்க்க உலகமாக மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறார்கள் உயிர்க்கொலையும் புலைபுசிப்பும்நீக்கி உயிர்இரக்கத் திரு நெறியில் பழகுவோர் பெருமானை வழிபடுங்கால் ஒரு சமயம் ஒளி உடம்புடன் தோன்றி உதவிகள் செய்தும் ஒரு சமயம் ஜோதி வடிவில் தோன்றி மகிழ்வித்தும் எப்போதும் வான் வடிவமாக இருந்து அறிவை விளக்கி வருகிறார்கள்
 என்பது
சத்தியம் சத்தியம் சத்தியம்

வாழ்க வள்ளற் பெருமான்
திருவடிகள்
☀☀☀☀☀
வாழ்க உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.9865939896

வெள்ளி, 18 ஜனவரி, 2019

வடலூருக்கு ஏன் வரவேண்டும் !

வடலூருக்கு ஏன் வரவேண்டும் !

மனித குலத்தை வள்ளலார் வடலூருக்கு வாருங்கள் என அன்போடு அழைக்கின்றார்... ஏன் ?

இந்த உலகத்தையும்.கிரகங்களையும்.அணுக்களையும்.உயிர்களையும்.ஆன்மாக்களையும் படைத்தவர் யார் ? என்பது தெரியாமல் ..நம் பிரச்சினைகள்.துன்பங்கள் தீர்த்து கொள்வதற்கு. கண்ட கண்ட தெய்வங்களை. வணங்கி வழிபாடு செய்துகொண்டு.துன்பங்கள் தீர்க்க முடியாமல்  மூடமாய் வாழ்ந்து கொண்டு இருந்தோம்..

படைத்தவனை விட்டு படைக்காதவர்களை தொடர்பு கொண்டால் நன்மை உண்டாகுமா ? துன்பம் தான் அதிகமாகும்...

பொருளைத்தேடும் மனிதர்கள் அருளைத் தேடுவதில்லை...
அருளைப் பெறாதவரை துன்பம் நீங்காது....

**அருளை வழங்கும் அருட்பெருஞ்ஜோதி !**

பொருளைத் தேடும் மனிதர்களுக்கும்.அருளைத்தேடும் மனிதர்களுக்கும் அருளைக்  கொடுக்கும் கடவுளை கண்டுபிடித்தவர் வள்ளலார்.

உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஒருவர் மட்டுமே என்ற உண்மையை கண்டுபிடித்து உலகம் அறிய வெளிப்படையாகச் சொல்லி பறை சாற்றியவர் வள்ளலார்...

கடவுளை இவ்வுலகிற்கு வரவழைத்தவர் வள்ளலார் ஒருவரே !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வந்து காட்சி கொடுக்கும் இடத்தை தேர்வு செய்து.**வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை 1872.ஆம் ஆண்டு தோற்றுவிக்கிறார்...***

30-01-1874.ஸ்ரீமுக ஆண்டு்  தைமாதம் 19 ஆம் தேதி இரவு 12 மணிக்கு   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானை ஆட் கொண்டு சுத்த பிரணவ ஞான தேகத்தோடு...

வடலூர் சத்திய ஞானசபையில் அருள் நடனம் புரிகின்றார்...

வள்ளலார் முன் கூட்டியே 25-11- 1872 ஆம் ஆண்டு ஞானசபை விளக்கப் பத்திரிகையில் தெரிவிக்கின்றார்...

இனி உலகில் உள்ள மக்கள் அனைவரும் விரைந்து விரைந்து.இறந்து இறந்து வீண்போகாமல்.உண்மை அறிவு.உண்மை அன்பு.உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று.நற் செய்கை உடையராய்..

எல்லாச் சமயங்களுக்கும் .எல்லா மதங்களுக்கும். எல்லா மார்க்கங்களுக்கும் **உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று.பெருஞ் சுகத்தகயும் .பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு.

உண்மைக் கடவுள் !

மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு.சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லக்ஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ...ஓர் ஞானசபையைத் இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து...

***இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமரந்து விளையாடுகின்றோம்***

என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி.அருட்பெருஞ்ஜோதி யராய் வீற்றிருக்கின்றார்...

ஆகலின் .அடியில் குறித்த தருணந் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி.இறந்தவர் உயிர் பெற்று எழுதல்.மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள்....

எனவே தான் **வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே ** என வள்ளலார் உலக மக்களை வடலூருக்கு அழைக்கின்றார்.

வடலூர் சத்திய ஞானசபையில்.ஞான சிங்காதன மேடையில்**அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே** அமர்ந்து நேரடியாக மக்களுக்கு எல்லா நன்மைகளையும் வாரி வாரி வழங்கிக் கொண்டுள்ளார்...

இதிலே முக்கியமான நாள் தைப்பூசத் திருநாள் !


இறைவன் படைத்த முச்சுடர்களும் ஒரே நேர்க்கோட்டில் காட்சித் தரும் ஓர் அற்புதமான நாள் தான் வடலூர் தைப்பூசத் திருநாள்.

மேலே கண்ட உண்மை விளக்கத்தை மக்கள் அனைவரும் அறிந்து தெரிந்து புரிந்து கொண்டு வடலூருக்கு தாங்கள் வருவதோடு மற்றவர்களையும் அழைத்துக் கொண்டு வர வேண்டுமாறு அன்புடனும்.ஆன்மநேய உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறோம்...

எத்தனை லட்சம் மக்கள் வந்தாலும் வடலூரில் உள்ள தருமச்சாலையிலும்.சன்மார்க்க சங்கங்களிலும் .பொது மக்களும் தடைபடாது உணவு வழங்கிக் கொண்டே இருப்பது கண்கொள்ளாக் காட்சி....

வள்ளலார் பாடல் !


எல்லோருக்கும் தைப்பூச நல்வாழ்த்துக்கள்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

தைப்பூச ஜோதி தரிசன சிறப்பு கட்டுரை !

*தைப்பூச ஜோதி தரிசன -   சிறப்புக் கட்டுரை*

தலைப்பு : *வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்ஜோதி அகவலும்...!*

🙏🙏🙏🔥🙏🙏🙏


திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானார் அருளிய திருஅருட்பாவில்  அருட்பெருஞ்ஜோதி அகவல் என்றொரு நெடும்பாடல் உண்டு.  அருட்பாவில் உள்ள 5818 பாடல்களுள்,  அருட்பெருஞ்ஜோதி அகவல் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றது .

   அதுமட்டுமின்றி வள்ளலார் ஏற்படுத்திய சன்மார்க்க சங்க  வழிபாட்டில் ;  இன்றளவிலும் அகவலைப் பாராயணம் செய்தல்  முதன்மையானதாகக் கருதப்படுகின்றது. இவ் அகவல் பற்றிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

அருட்பெருஞ்ஜோதி அகவல்1596 அடிகளைக் கொண்டது. இது நேரிசை ஆசிரியப்பாவல் இயற்றப்பட்டுள்ளது.. திருஅருட்பா எனும் ஞானக் களஞ்சியத்தின் மணிமகுடமாக  அகவல் விளங்குகின்றது..

ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தைக் கூறும் தொல்காப்பியர் , ஆசிரியப்பாவின் அதிகபட்ச அளவு ஆயிரம் அடி என்பார்.
ஆனால்; அந்த தொல்காப்பிய அடி  வரையறையும் கடந்து 1596 அடிகளுடன் அருட்பெருஞ்ஜோதி அகவல் இயற்றப்பட்டுள்ளது.

இந்த நெடும்பாடல் ஆன்மிக உண்மைகளை ஒளிவு மறைவின்றி
வெளிப்படையாக விளக்குகின்றது.

   வள்ளல் பெருமானார் ;  தாம் பெற்ற இறை அனுபவத்தையெல்லாம் இவ் அகவலில் வெளிப்படுத்தியுள்ளார்.

   அதுமட்டுமன்றி , ஆன்மீக -  உள்ளார்ந்த இறை அனுபவத்தைப் பெறுவதற்கான உந்து சக்தியாவும் அகவல் திகழ்கின்றது என்று சன்மார்க்க சாதுக்கள் நம்புகின்றனர்.

   *சமயம் கடந்த உள்ளார்ந்த ஆன்மிக அனுபவத்தைப் பெற நினைப்பவர்கள் அகவல் பற்றித் தெரிந்துகொள்வதும் ; அகவலை வாசிப்பதும் மிக முக்கியமானதாகும்.*

🙏🙏🙏🔥🙏🙏

*அகவல் எழுதப்பட்ட காலம் :*
~~~~~~~~~~~~~~~~~~~~
 வள்ளல் பெருமானார் மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் தங்கியிருந்த  காலக்கட்டத்தில்தான் அருட்பெருஞ்ஜோதி அகவலை எழுதினார்கள்.

 
    வள்ளல் பெருமானார் 1865- இல் சன்மார்க்க சங்கத்தைத் தோற்றிவைத்ததற்குப் பின் ;

   1867-இல் அணையா அடுப்போடு அன்னமிடும் சத்திய தர்மச்சாலையைத் தோற்றிவைத்தற்குப் பின் ;

  1870-இல் சத்திய ஞான சபையைத் தோற்றிவைத்து ஜோதி தரிசனத்தை நிகழ்த்தியதற்குப் பின்தான் ... ;

அருட்பெருஞ்ஜோதி அகவலை வள்ளல் பெருமானார் இயற்றினார்கள் என்பது நினைவில்கொள்ளத்தக்கது.

சுவாமி சரவணாந்தா எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்க நூலின் அணிந்துரையில் -  சென்னை இராமலிங்கர் பணி மன்றத்தின்  தலைவர் பொள்ளாச்சி மகாலிங்கம் ஐயா அவர்கள்  கூறும் கருத்து இங்கு நினைவு கொள்ளத்தக்கது.

" *வள்ளல் பெருமானால் அருளப்பெற்ற திருவருட்பாவின் மணிமுடியாக விளங்குவது அருட்பெருஞ்ஜோதி அகவல். இதற்கு அவரே தலைப்பிட்டுள்ளார். 1872-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினெட்டாம் நாள் இதனை அருளியுள்ளார்."*



*அகவல் தரும் தகவல்கள் :*
----------------------------------

வள்ளல் பெருமானார் ஒன்பது வயதளவிலிருந்து அருட்பாக்களை எழுதத்தொடங்கினார்கள். பன்னிரண்டு வயதளவிலிருந்து ஞான வாழ்வைத் தொடங்கினார்கள். இடைவிடாத ஆன்மீகத் தேடலில் ஈடுபட்டார்கள்...

வள்ளல் பெருமானாரின் மெய்ஞ்ஞானத் தேடலின் முயற்சியால் *பெருமானாரின் 49-ஆம் வயதில் மலர்ந்ததுதான் அருட்பெருஞ்ஜோதி அகவல்.*
 
ஆதலால் ;  *அகவல் சன்மார்க்க - மெய்ஞ்ஞானத்தின் உச்சமாக விளங்குகின்றது*

இவ் அகவல் அமிழ்தில்...  ஒருசில துளிகளைச் சுவைத்துப் பார்ப்போமே..!


" *என்னுள்ளே அரும்பி என்னுள்ளே மலர்ந்து*
*என்னுள்ளே விரிந்த என்னுடை அன்பே*

*என்னுள்ளே விளங்கி* *என்னுள்ளே பழுத்து*
*என்னுள்ளே கனிந்த என்னுடை அன்பே"*

என்று வள்ளல்பெருமனார் அகவலின் 1480-ஆம் வரிகளில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இவ்வரிகளின் மூலம் ....

வள்ளல் பெருமானாரின்  அக அனுபவமே... இறையாற்றலே... அருட்பெருஞ்ஜோதியாக வெளிப்பட்டது என்பதைப் புரிந்துகொள்ளலாம்..

அகவலில் 1555-ஆம் வரியில்..

" *சபை எனது உளம் எனத் தான் அமர்ந்து*
*எனக்கே அபயம் அளித்தோர் அருட்பெருஞ்ஜோதி"*

என்று வள்ளல் பெருமனார் பாடியுள்ளார்கள்.

இதன்மூலம் ,' தன்னுள் விளங்கிய இறை அனுபவத்தையே , வடலூரில் சத்திய ஞான சபையாக அமைத்துக் காட்சிபடுத்தினார்கள் ' என்பதையும் புரிந்துகொள்ளலாம்.

" *சத்திய ஞான சபை* *என்னுள் கண்டனன்*
*சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக்* *கொண்டனன்*
*நித்திய ஞான நிறை அமுது உண்டனன்.."*

என்ற திருஅருட்பா ஆறாம்  திருமுறையின் பாடல் (2173) இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

" *பிண்டமும் அதிலுறு பிண்டமும் , அவற்றுள பண்டமும் காட்டிய பராபர மணியே ! "*

எனும் அகவலின் (1294 ) வரிகள்...

 நம்... மனித உடலுள் ... இறைப்பண்டம் பொதிந்துள்ளது என்பதை அழகாக விளக்குகின்றது.


" *உள்ளகத்து அமர்ந்து எனது உயிரில் கலந்து அருள் வள்ளல் சிற்றம்பலம் வளர் சிவ பதியே..!"*

எனும் அகவலின் (1020) வரிகள் ..

பெருமாரின் உள் அகத்துள் இறையாற்றலானது.. கலந்து ... அருள் செய்தமையை விளக்குகின்றது.

" *இயற்கை உண்மையதாய் , இயற்கை இன்பமுமாம் அயர்ப்பிலாச்  சிற்சபை அருட்பெருஞ்ஜோதி ... "*

எனும் அகவலின் (70) வரிகள் ...

ஒவ்வொரு மனித தேகத்தினுள்ளும் இயற்கையாகவே அருட்பெருஞ்ஜோதியானது அமைந்துள்ளது என்பதையும் ;  அவ் இயற்கை உண்மையைப் புரிந்துகொண்டு... அப்பேரொளியைக் தன்னுள் காண்பதே இயற்கையான பேரின்பம் என்பதையும்  விளக்குகின்றது.

வடலூர் சத்திய  ஞான சபையின் தொடக்க விழா பத்திரிக்கையில்...

" *இயற்கை விளக்கம் என்கின்ற சத்திய  ஞான சபைக்கண்ணே , இயற்கை உண்மை என்கின்ற சத்திய திருவுருவினராய், இயற்கை இன்பம் என்கின்ற சத்திய திரு நடம் செய்தருள்கின்ற ....."*

என்று பெருமானார் குறிப்பிட்டுயிருந்தமையும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.


இயற்கை உண்மையான;  இயற்கை இன்பமான அருட்பேரொளியானது நம் உடம்பில் சிற்சபையில் - புருவமத்தியில் விளங்குகின்றது என்ற மெய்ம்மையை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

*சிற்சபை எங்குள்ளது...?*
~~~~~~~~~~~~~~~~

    " சிற்சபை " என்பதற்கும் ; அருட்பெருஞ்ஜோதி என்பதற்கும் வள்ளல் பெருமானார் கூறும் கருத்தை .... பெருமானாரின் வார்த்தைகளை அடிப்படையாகக்கொண்டு சற்று சிந்திப்போமே....!

   " *இந்தப் பவுதிக உடம்பிலிருக்கின்ற நீ யாரெனில் : நான் ஆன்மா  , சிற்றணு வடிவனன். மேற்படி அணு கோடிசூரியப் பிரகாசமுடையது. லலாட ஸ்தானம் இருப்பிடம் . கால் பங்கு பொன்மை , முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம். இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."*

என்று உபதேசப் பகுதியில் (பக்கம்: 435) வள்ளல் பெருமானார் குறிப்பிட்டுள்ளார்கள்.

 இக் குறிப்புகளிலிருந்து நாம் புரிந்துகொள்வதென்ன... ?

★இறை ஆற்றலானது மனிதத் தேகத்தில் விளங்குகின்றது.

★அது கோடி சூரியப் பிரகாசத்துடன் பெரிய ஜோதியாக விளங்குகின்றது.

★லலாட ஸ்தானம் எனப்படும் புருவ மத்தியில் இப் பெருஞ்ஜோதி  விளங்குகின்றது.

★அது பொன்மையும் வெண்மையும் கலந்த  பேரொளியாத் திகழ்கின்றது.

★அவ் இறையொளியை ஏழு திரைகள் மறைத்துள்ளன.

ஆம்...

இவ் அருட்பேரொளி இறைக் கொள்கையின் உண்மையைப் பொதுமக்கள் புரிந்துகொள்வதற்காக வடலூரில் சத்திய ஞான சபையைப் பெருமானார் அமைத்தார்கள் ; தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு வழிவகை செய்தார்கள்.

அப்பேரொளியை... அவ் அருட்பெருஞ்ஜோதி பற்றிய மெய்ம்மைகளைத்தான் அகவலில் எழுதிவைத்தார்கள்.


*பெருமானார் பெற்ற பெரும் பேறு..:*
~~~~~~~~~~~~~~~~~~
 
             கோடி சூரியப் பிரகாச , அருட்பெருஞ்ஜோதியைத் தன்னுள் கண்ட பெருமானார் பெற்ற பெரும் பேற்றைப் பற்றி ... பெருமானார் கூறும்  வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு சிறிது சிந்திப்போமே..!

" *மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்*

*யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை"*

என்று வள்ளல் பெருமனார் அகவலில் (1582) குறிப்பிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் ,  இம்மண்ணுலகிலும் விண்ணுலகிலும் யாரும் பெறாத மாபெரும் இறையாற்றலைப் பெருமனார்  பெற்றிருந்தார்கள் என்பதை அறியமுடிகின்றது.


"... *அருட் பேரொளியால் இன்பையும் நிறைவித்து*

*என்னையும் நி(உ)ன்னையும் ஓர் உரு(வம்)ஆக்கியான்"*

எனும் அகவல் (1572) வரியாலும் ;

" *தன்னையும் தன்னருள் சத்தியின் வடிவையும் என்னையும் ஒன்றென இயற்றிய தந்தையே...! "*

எனும் அகவல் (1146) வரிகளால் வள்ளல் பெருமானாரும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் ஒரே  உருவமாகியதை புரிந்துகொள்ளமுடிகின்றது.


" *உலகு உயிர்த் திரள் எல்லாம் , ஒளிநெறி பெற்றிட இலகும் ஐந்தொழிலையும் யான் செயத் தந்தனை..! போற்றி நின் பேரருள்...!* "

எனும் அகவல் (1578) வரியால் ;

    படைத்தல் - காத்தல் - அழித்தல் - மறைத்தல் - அருளல் ... எனும் ஐந்தொழில் செய்யும் பேராற்றலை வள்ளல் பெருமானார்  பெற்றமையை அறியமுடிகின்றது .

அதுமட்டுமின்றி  அனைவரும் மெய்ஞ்ஞான ஒளிநெறியைக் கடைபிடித்துப் பேரின்ப பெருவாழ்வு வாழ ... வழிகாட்டும் ஞானகுருவாகவும் பெருமானார் விளங்கும் தன்மையை உணர முடிகின்றது.

*ஒளிநெறிக்கா(ண)ன வழி ... :*
------------------------------------

   நம்முள் - அக அனுபவமாக விளங்கும் - ஆன்ம பேரொளியைத் தரிசிக்க நாம் என்ன செய்ய வேண்டும்.. ?

வள்ளல் பெருமானாரின் அருள் வார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு... சற்றே சிந்திப்போமே...!

 மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளியில் ... முதன்முதலாகச் சன்மார்க்கக் கொடியை ஏற்றிவைத்து நிகழ்த்திய பேருபதேசத்தின் தொடக்கப் பகுதியை நோக்குவது சிறப்பாக அமையும் .


       .".... *யோகிகள் வனம் , மலை , முழை முதலியவற்றிற்குப் போய் நூறு - ஆயிரம் முதலிய வருட காலம் தவஞ் செய்து  சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்கிறார்கள்.*

   *இப்படி தவம் செய்து உஷ்ணத்தைஉண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும் ,*

*தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் , இதை விடக் கோடிப் பங்கு , பத்துக் கோடிப் பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.*

*எவ்வாறெனில் ; ஒரு ஜாம நேரம் மனத்தில் இக விசாரமின்றிப் பர விசாரிப்புடன் ஆன்ம நெகிழ்ச்சியோடு தெய்வத்தைச் சிந்தித்துக் கொண்டாவது அல்லது ஸ்தோத்திரம் செய்து கொண்டாவதிருந்தால் , நாம் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம்... ......"*

என்று வள்ளல் பெருமனார் பேருபதேசத்தில் (பக்கம் 464) கூறியுள்ளார்கள்.

இக் குறிப்பினால் நாம் புரிந்துகொள்வது என்ன...?

★நாம் தினசரி ஒரு ஜாம நேரம் (சுமார் இரண்டு மணி நேரம்)  இறை சிந்தனையுடன்  இருக்க வேண்டும்.

★இறை சிந்தனையுடன்  கவனமாக இருந்தால் அல்லது  அருட்பாக்களை பாராயணம் செய்து கொண்டிருந்தால் ; சுத்த உஷ்ணத்தை நம்முள்  நாம் ஏற்படுத்திக்கொள்ளலாம். ... எனும் ஆன்மிக உண்மையை நாம் புரிந்துகொள்ளலாம்.


     இறை அனுபவத்தின் உச்சத்தில் இவ் அகவல் எழுதப்பட்டதால் ; இவ் அகவலில் உள்ள ஒவ்வொரு சொல்லும் மந்திர ஆற்றல் உடையதாக சன்மார்க்க அன்பர்கள் நம்புகின்றனர்.

    ஆதலால், இவ் அகவலைத் தினசரி வாசித்தால் ; காடு- மலைகளுக்குச் சென்று தவமிருந்து சித்தர்கள் பெற்ற பெரும் தவப் பேற்றை - சுத்த ஞான உஷ்ணத்தை நாமும் பெற்றுக்கொள்ளலாம் என்று சன்மார்க்கிகள் நம்புகின்றனர்.

    இவ் அருட்பெருஞ்ஜோதி அகவலை கூட்டுப் பாராயணமாகச் செய்த பின்பே ; எந்தவொரு சன்மார்க்க விழாவையும் தொடங்குவது சன்மார்க்கர்களின் வழக்கமாக உள்ளது.

     வள்ளல்பெருமனார் காட்டிய சன்மார்க்க வழியில் நடக்கும் பல அன்பர்கள் தினசரி காலை நேரத்தில் இவ் அகவலைப் பாராயணம் செய்து வருகின்றனர்.

" *தோத்திரம் புகல்தல்"* சன்மார்க்கத்தின் ஞான வழிமுறையாகக் கருதப்படுகின்றது.

   "..... *ஞானம் தோன்றிடப் பொன்னொளி தோற்றிய கதிர்தான்*

*சிற்குண வரைமிசை உதயம் செய்தது மாசித்திகள் அடிப்பணி செய்திடச் சூழ்ந்த*

*நற்குண சன்மார்க்க சங்கத்தார் எல்லாம் நண்ணினர் தோத்திரம் பண்ணி நிற்கின்றார்...."*

என்று திருஅருட்பா ஆறாம் திருமுறையில் பெருமானார் பாடியுள்ளமை ; இவ்விடத்தில் நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்... நம்முள்...  மாயைத் தொலைந்து , பொன்னொளி   தோன்றி , சித்திகள் எல்லாம் கைக்கூட வேண்டுமானால் தோத்திரம் பாடுதல் வேண்டும் என்ற பெருமாரின் கருத்தை மேற்கண்ட அருட்பா வரிகளால் புரிந்துகொள்ளலாம்.

*மாயத் திரைகள் அகல.... வழி...:?*
-----------------------------------

       "  *கோடி சூரியப் பிரகாசமுடைய.. ... ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா சக்திகளாகிய ஏழு திரைகள் உண்டு....."* என்று பெருமானார் கூறியுள்ள கருத்துத் தொடர்பாக.... பெருமான் வார்த்தைகளின் அடிப்படையில் சிந்திப்போமே....!

" *தோற்றமா மாயைத் தொடர்பறுத்து அருளின் ஆற்றலைக் காட்டும் அருட்பெருஞ்ஜோதி...!*

எனும் அகவல் (834) வரிகளின் மூலம்...

உலகமெலாம் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் துணைகொண்டே , அவரின் அருளாலே நம்முள் மறைத்திருக்கும் மாயைத் திரைகளை நீக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகின்றது.

 " *எனைத்து ஆணவம் முதல் எல்லாம் தவிர்த்தே அனுக்கிரகம் புரி அருட்பெருஞ்ஜோதி...!* "

எனும் அகவல் (838) வரிகளின் மூலம் ,

சராசரி மனிதனுக்குள் இருக்கும் ஆணவம் , கன்மம் , மாயை , பொறாமை , காமம் , மாச்சரியம் , உலகச்சாரம் முதலிய தடைகளைக் கடந்தால் ; நம்முள் பேரொளியைத் தரிசிக்க முடியும் என்பதை அறிய முடிகின்றது.

வடலூர் சத்திய ஞான சபையின் தைப்பூசச் ஜோதி தரிசனத்தின் பொழுது ஏழு திரைகளை நீக்கியப் பின் பேரொளி தரிசனம் காண்பிப்பதை இங்கு நினைவுகொள்ளத்தக்கது

 " *பவக் கடல் கடந்து நான் பார்த்த போது அருகே உவப்புறு வளங்கொண்டு ஓங்கிய கரையே...!"*

எனும் அகவல் (1392) வரிகளின் மூலம் ,

காமம் , களவு , கொலை முதலிய பாவச் செயல்கள் செய்வதைத் தவிர்த்தால் (பாவம் எனும் பெருங் கடலைக் கடந்தால் )  அருளெனும் கரையைக் கண்டு மகிழலாம் என்பதை அறிய முடிகின்றது.

மேலும் ...

" *சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடைகளாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கை விட்டவர்களும் ,*

*காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும் ,*

*கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்.*

*மரணம் , பிணி , மூப்பு , பயம் , துன்பம்.... இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.*

*அதாவது செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவ லாதிகார மரணம் நீங்கும்..."*

எனும் வள்ளல் பெருமனாரின் உபதேசக் குறிப்பும் (பக்கம் : 411 - 412) இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

மேற்கண்ட பெருமானாரின் உபதேசக் குறிப்பினால்...

... உயிருள் இருக்கும் அருட்பெருஞ்ஜோதியைக் காண தடைகளாக இருப்பனவற்றை பற்றி புரிந்துகொள்ளலாம்.

*உயிர் ஒளியைக் காண தகுதி :*
-----------------------------------

  " *உயிருள் யாம் ; எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே...!* "

எனும் அகவல் (974) வரிகளால்...

 இறையாற்றலானது  நம் உயிருள் பொதிந்துள்ளது என்பதை அறியலாம்.

  " *உயிரெலாம் பொதுவின் உளம்பட நோக்குக செயிரெலாம் விடுக! எனச் செப்பிய சிவமே...!* "

எனும் அகவல் (970 ) வரிகளின் மூலம்...

உலகில் உள்ள உயிரினங்கள் அனைத்தையும்  வேறுபாடு இன்றி பொதுவாக நோக்கவேண்டும் என்பதை அறியலாம்..

 " *எத்துனையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணி உவக்கின்றார் யாவர் அவர் உளம் தாம் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும் இடம் எனத் தெளிந்தேன்..* "

எனும் அருட்பா வரிகளும் இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்...

உலகில் உள்ள அனைத்து உயிரினங்களையும் எவ்வித வேறுபாடும் பார்க்காது... அவற்றைத்  தம் உயிரைப் போல் எண்ணி மகிழ்கின்றார்களோ.... அவர்களின் உள்ளமே இறைவன் தங்கியிருக்கும் இடமாகும்..

 " *எங்கே கருணை இயற்கையின் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெரும் சிவமே.. !* "

எனும் அகவல் (962 )வரிகளால்..

இரக்க குணம் , கருணை உள்ளம் இயற்கையாகவே உள்ளவர்களிடத்தே இறையாற்றல் நிரம்பியுள்ளது என்பதை அறியலாம்.

" *உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக ... நீ அடைந்து விலக்குக மகிழ்க...!* "

எனும் அகவல் (1590 ) வரிகளால்....

உலகில் வாழும் உயிரினங்கள் அடையும் துன்பத்தை  நீக்குபவர்களே பேரின்ப பெருவாழ்வில் வாழ முடியும் என்பதை அறியலாம்.

" *நமக்கு முன் சாதனம் கருணை....* " என்று பெருமானார் பேருபதேசத்தில் குறிப்பிட்டுயிருப்பது இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

வள்ளல் பெருமானார் வடலூர் பெருவெளியில் சத்திய ஞான சபையை அமைப்பதற்குச் சுமார் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பசித்துயர் துயர் நீக்கும்  அணையா அடுப்போடு விளங்கும் சத்திய தர்மச்சாலையை அமைத்தமையை இங்கு நினைவுகொள்ளத்தக்கது.

ஆம்...

நம்முள் விளங்கும் சத்திய ஞான சபையைக் காண முதல் தகுதி... உலக உயிரினத்தின் துன்பத்தை நீக்கும் கருணை உள்ளமே ஆகும்....

*உள்ளொளியைக் கண்டால்....:*
-----------------------

 சிற்சபை நடுவே திருநடம் புரிகின்ற , உள்ளொளி அற்புதத்தை நாம் கண்டுவிட்டால் என்ன... என்ன நிகழும்... வள்ளல் பெருமானாரின் அருள் வார்த்தைகளின் அடிப்படையிலே சற்றுச் சிந்திப்போமே...!

 " *உடல் பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி  அனைத்தையும் அடர்ப்பு அறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே...!* "

எனும் அகவல் (1322) வரிகளால் ..

நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்... நம் உடலைப் பற்றியிருக்கும் அனைத்து உடல் நோய்களும் , உயிர்ப்பிணிகளும் நீங்கிவிடும் என்பதை அறியமுடிகின்றது.

 " *என் துயர்ச் சோடைகள் எல்லாம் தவிர்த்து , உளம் நன்றுற விளங்கிய நந்தனக் காவே...!* "

எனும் அகவல் வரிகளால்...

நம்முள் அருள்பேரொளியைக் கண்டுவிட்டால் , அனைத்து துயரங்களும் சோகங்களும் நீங்கி , மனமானது நிம்மதியாய் நல்ல நிலையில் நிலைத்திருக்கும் என்பதை அறியமுடிகின்றது.

 " *தாழ்வெல்லாம் தவிர்த்துச் சகமிசை அழியா வாழ்வு எனக்கு அளித்த  வளரொளி மணியே...!* "

எனும் அகவல் (1308) வரிகளால்...

உள்ளொளியை நாம் கண்டுவிட்டால் அனைத்து இழிவுகளும் நீங்கி , மரணமிலா பெருவாழ்வில் வாழலாம் என்பதை அறிந்துகொள்ள முடிகின்றது.

 " *அண்ட கோடிகள் எல்லாம் அரைக் கணத்து ஏகிக் கண்டுகொண்டிட ஒளிர் கலைநிறை மணியே...!* "

எனும் அகவல் (1302) வரிகளால் ...

 சித்திக்கு மூலமாக விளங்கும் அருள்பேரொளியை நம்முள் கண்டுவிட்டால்... இவ் அண்ட உண்மைகளை எல்லாம் அரை நொடியில் அறிந்துகொள்ளலாம்... என்பதை அறிந்துகொள்ளமுடிகின்றது.

 " *இரு நிதி  எழு நிதி  இயல் நவ நிதி முதல்  திருநிதி எல்லாம் தரும் ஒரு நிதியே...!* "

எனும் அகவல் (1374 ) வரிகளால் ...

நம் உள்ளொளியைக் கண்டுவிட்டால்.. இப் பிறவியின் மண்ணுலக வாழ்விற்கான நிதியையும் , மறுபிறப்பிற்கான நிதியையும் , விண்ணுலக வாழ்விற்கான நிதியையும் பெற்றுக்கொள்ளலாம் என்பதை அறியமுடிகின்றது.

ஆம்...

 ★ சமரச சத்தியச் சபையில் நடம் புரிகின்ற ,  சமரச சத்தியச் தற்சுயம் சுடரை .... நம்முள் காண்போம்...!

 ★ வேதமும் ஆகம விரிவும் பரம்பரநாதமும்  கடந்த  ஞான மெய்க் கனலை நம்முள் காண்போம்...!

 ★ உள்ளொளி ஓங்கிட...  உயிரொளி விளங்கிட... வெள்ளொளி காட்டிய மெய்யருட் கனலை நம்முள் காண்போம்...!

 ★ எண்ணிய எண்ணிய எல்லாம் தருகின்ற , நண்ணிய புண்ணிய  ஞான மெய்க் கனலை நம்முள் காண்போம்...!

★சித்திகள் அனைத்தையும் தெளிவாகப் பெற்று , சத்திய நிலைதனைப் பெறுவோம்.  ...!

★எங்குமாய் விளங்கும் அருள்பேரொளியை... உள்ளங்கை நெல்லிக்கனி போன்று ... நம் அக அனுபவத்தால் கண்டு  தரிசிப்போம்....!

*நிறைவுரை* :
--------------------
வடலூர் சத்திய தர்மச்சாலையின் மைய மண்டபத்தில் , வள்ளல் பெருமானார் கைப்பட எழுதிய அருட்பெருஞ்ஜோதி அகவல் நோட்டுப் புத்தகம் கண்ணாடிப் பேழையில் பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளது.

அவ் அகவல் நோட்டுப் புத்தகத்தைப் பலரும் பயபக்தியுடன் கைக் கூப்பி வழிபட்டு வருகின்றனர்..

அகவலை வழிபடுபடுவதோடு விட்டுவிடாமல் , அகவல்  காட்டும் ஞான வழியில் வாழ முயற்சிப்பதே வள்ளப்பெருமானார்க்கு காட்டும் உண்மையான மரியாதை ஆகும்



"வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின் ,

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் ,

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே!"

என்ற திருமூலரின் வாக்கிற்கேற்ப தினசரி நாமும் அகவலை  வாசிப்போம்.

அருள் அகவலை வாசிக்க வாசிக்க.... அதனுள் அமைந்த  மந்திர ஆற்றலானது நம்மை வசீகரித்து உயர்த்துவதை அனுபவத்தில் உணர்வோம்...!

தினசரி அகவலை வாசிப்போம்...!
ஞானத் தகவலைப் பெறுவோம்..!


(கருத்துப் பதிவு : அருள்பாவலர் சக்திவேல்
 வெளியீடு : www. vallalarghananeri.com)

இதுபோன்ற .....
வள்ளல் பெருமானார் - திருஅருட்பா - சன்மார்க்கம் தொடர்பான கட்டுரைகளை வாசிக்க வேண்டுமா...?

www.vallalarghananeri.com

எனும் இணையத்தளத்தைப் பார்வையிடுங்கள்..!

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வள்ளல் மலரடி வாழி...! வாழி...!

வியாழன், 17 ஜனவரி, 2019

சுவாசத்தின் நன்மை தீமை !

கபாலத்தில் சளிக்குற்றமும்
அடிவயிற்றில் மலக்குற்றமும்
இல்லாமல் இருக்க காலையில் திரிகடுகும்,
மாலையில் திரிபாலாவும்
தினமும் எடுத்துக்கொள்ளலாம்

" இறைப்பை சுருக்கியும் நுரைப்பை விரிந்தும் இருப்பதே நீண்ட ஆயுள் "

 ' சூரியன் பார்க்க எழாமலும் சூரியனைப் பார்க்க எழுவதுமே நலம் '

மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.

நமது இடது நாசி சந்திரகலை.
அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.

வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.

இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.

பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும்.

அதிக வெயில்அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும்.
இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.

ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.

இதில்எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும்.

ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும்.
ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.

மூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.

சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன.

நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.

சுவாசம்...

11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.

சந்திரகலை என்றால் என்ன?

இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலைஎனவும் அழைக்கப்படும்.

சந்திரகலையை மதி/இடகலை/
இடைக்கால்எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு ‘கால்’ என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது.
அதனால் தான் ‘காலனைக் காலால் உதைத்தேன்’ எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு.

இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.

‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பார்கள்.
இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன்.

16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.எனவே விதி முடிவும் விலகியே போகும்.

ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் .

உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம்.

இதுதான் பிராணாயாமத்தின்
சாராம்சம்.

நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள்.
வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் ‘ஸ்பாஞ்’ போல காற்றுப் பைகளால் ஆனது.

வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ‘பிராணா’ சக்தி சீராகப் பரவுகிறது .

இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சந்திரகலை’. இது குளுமையானது .

வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சூரியகலை’. இது வெப்பமானது.

வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ‘சந்திரகலை’ அதிகரிக்கும்.

இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.

*"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம்

 வணக்கம்.

வாழ்க வளமுடன்.  சந்தோஷம்.

சனி, 12 ஜனவரி, 2019

மல உடம்பை அருள் உடம்பாய் மாற்ற வேண்டும்!


வள்ளலார் பாடல் !

மேலே கண்ட பாடலின் வாயிலாக அறிய வேண்டும்.

நம் உடம்பு பஞ்ச பூதங்கள் கலந்த மல உடம்பு.இந்த உடம்பை இயக்க உயிர் வேண்டும்.உடம்பையும் உயிரையும் இயங்க வைக்க ஆன்மா என்ற ஓளிவேண்டும்.

ஆன்மாவிற்குள் ஓளி உள்ளது.அந்ந ஒளிக்குள் ஓரு அருள் ஒளி உள்ளது.

நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன  ? 

ஆன்மாவைப் படைத்தது யார்..அதற்குள் அருள் என்னும் ஆற்றல் மிகுந்த சக்தி வாய்ந்த அருள் வல்லபத்தை கொடுத்தது யார்? என்ற உண்மை தெரிந்து கொள்ளவதற்காகவே மனித பிறப்பிற்கு உயர்ந்த அறிவு கொடுக்க ப்பட்டுள்ளது..

நாம் நம்மிடம் உள்ள உயர்ந்த அறிவைப் பயன்படுத்தாமல்.நம் முன்னோர்களின் அறிவையே பயன் படுத்தி க்கொணடு வாழ்ந்து வருகிறோம்.

அதனால் வருவதே அச்சம் பயம் துன்பம் மரணம் என்பது எல்லாம் தொடர்ந்து கொண்டே வருகின்றது.

நம் முன்னோர்கள் என்பவர்களும்.ஆன்மீகத்தை போதித்த அருளாளர்களும் நம்மைப் போன்ற மனித தேகம் எடுத்தவர்கள் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

நம் அறிவு மழுங்கியது ஏன் ? 

நாம் பிறக்கும் போது ஒன்றும் தெரியாமல் ..சாதி.சமயம்.மதம்.இனம் மொழி.நாடு.உலகம்.கடவுள்.போன்ற எதுவும் தெரியாமல் .எல்லாவற்றையும் மறைத்து வைத்து தான் நாம் எல்லோரையும் இறைவன் படைத்துள்ளார்..

நாம் மறுபடியும் அறிவு விளக்கம் இல்லாமல் பழைய குப்பைகளை ஆன்மாவில் நினைப்பில் கெள்கிறோம்.....

நாம் பிறந்ததும் தாய் தந்தை சொல்வதையும்.அவர்கள் கொடுக்கும் உணவையும் உட்கொண்டு வாழ்ந்து வருகிறோம்...அவர்கள் பின்பற்றும் எல்லாவற்றையும் பின்பற்றி வாழ்கிறோம்.

அவர்கள்  சேர்க்கும் பள்ளியில் படிக்கிறோம்.. ஆசிரியர் சொல்லிக் கொடுக்கும் பாடங்களைப் படிக்கிறோம்...அதற்குமேல் பொருள் தேடும் கல்வியைத் தேர்வு செய்து பொருள் ஈட்ட ஆரம்பித்து விடுகிறோம்.உலகியல் வாழ்க்கையில் அதிக ஈடுபாடு கொள்கிறோம்...

உலக வாழ்க்கையில் துன்பம் வருகின்ற போது துன்பத்தை போக்கிக் கொள்ள ஆன்மீகத்தை தேடி அலைகிறோம்.நமக்கு பிடித்த எதோ ஒரு கடவுளை கெட்டியாகப் பிடித்துக் கொள்கிறோம். 

அதிலும் மனம் அமைதி பெறவில்லை என்றால் நமக்கு பிடித்த  எதோ ஒருவர் எழுதிய ஆன்மீகம் சார்ந்த புத்தகத்தை படித்து .அவர்கள் சொல்வதைப் பின்பற்றி.சரியை.கிரியை.யோகம்.ஞானம் தியானம் .தவம் .வழிபாடு போன்ற வற்றையும் பின்பற்றி வாழ்ந்து . இறுதியில் வயது முதிர்ந்த நிலையில் மரணம் வந்து மாண்டு போகின்றோம்...

உலகில் உள்ளோர் எல்லோரும் மரணம் அடைவதால்
மரணம் என்பது இயற்கையானது.ஆறிலும் சாவு.நூறிலும் சாவு என்று நினைத்து எல்லோரும் அறியாமையில் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

மரணம் என்பது இயற்கை யானது அல்ல!..அவை செயற்கை யானது ! மரணம் என்பதுதான் மிகப் பெரும் பிணி என்கிறார் வள்ளலார் .மனிதன் தவறு செய்வதால் தான் மரணம் என்னும் பெரும் பிணி வருகிறது..தப்பாலே சகத்தவர் சாகவே துணிந்து விட்டார்கள்.

மரணம் பெரும் பிணி வாரா வகை மிகு கரணம் பெருந்திறல். காட்டிய மருந்தே ! 

உடற்பிணி அனைத்தையும் உயிர்ப்பிணி அனைத்தையும் மடர்ப்பறத் தவிர்த்த அருட்சிவ மருந்தே ! 

என்பது வள்ளலார் வாக்கு

மரணத்தை தவிர்க்கும் அந்த மருந்தை எங்கே பெறுவது யாரிடம் பெறுவது என்பதுதான் நமக்கு உள்ள குழப்பம்....

இந்த உலகத்தில் யாரிடமும் பெறமுடியாது.எவராலும் கொடுக்க முடியாது.எந்ந கடவுளாளும் கொடுக்க முடியாது.... தியானம் யோகம் தவத்தாலும் பெறமுடியாது....

நம்மைப் படைத்த கடவுளால் மட்டுமே வழங்க முடியும்.

அந்த கடவுள் யார்.? 

வள்ளலார் வாழ்க்கையை ஊன்றி கவனித்தால் மட்டுமே சரியான வழி கிடைக்கும்.... 

வள்ளலார் சிறு வயது முதலே அம்மா.அப்பா.அண்ணன்.ஆசிரியர்.
ஆன்மீககுரு. போன்ற எவருடைய பேச்சையும் கேட்கவில்லை.எந்ந ஆன்மீக நூல்களையும் படிக்கவில்லை.பள்ளிக்கு சென்று உலகியல் படிப்பும் படிக்கவில்லை ...

உண்மையான இறைவனைத் தேடிக்கொண்டே இருந்தார்.இறைவனைத் தேடுவதற்குண்டான புற ஓழுக்கத்தையும்.அக ஓழுக்கத்தையும் அவரே கடைபிடித்தார்.

சிறுவயதிலே அவருக்கு உண்மையான இறைவன் யார் என்பதைத் தெரிந்து கொண்டார்...அந்ந இறைவன்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதாகும்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடமே எல்லாக் கல்வியும் கற்றுக் கொண்டார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை பல காரணங்களுக்காக சிறுவயதில் வெளிப்படுத்தாமல் ..தன்னுடைய 47.வயதுக்குமேல் உலக மக்களுக்கு வெளிப்படுத்துகின்றார்..

வள்ளலாரை சிறுவயதிலே இறைவன் ஆட்கொண்டார் என்பதற்கு திருஅருட்பாவிலே ஏராளமான சான்றுகள் உள்ளன...

அதிலே சிலவற்றைப் பார்ப்போம்....


மேலும்...

ஏதும் அறியாது இருளில் இருந்த சிறியேனை எடுத்து விடுத்து அறிவு சிறிது ஏய்ந்திடவும் புரிந்து 

ஒதுமறை முதற்கலைகள் ஒதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தி அருள் உண்மை நிலை காட்டித்

தீதுநெறி சமய நெறி செல்லுதலைத் தவிர்த்துக் திருவருட் மெய்ப் பொது நெறியில் செலுத்தியும் நான் மருளும் 

போது மயங்கேல் மகனே என்று மயக்கம் எல்லாம் போக்கி எனக்கு உள்ளிருந்த புனித பயம் பொருளே ! 

என்றும் மேலும்....



மேலும் ...



மேலும் இப்படி பலநூறு  பாடல்கள் ஆதாரம். உள்ளது..

பாடல்கள் தவிர உரைநடை ப்பகுதியிலும் பதிவு செய்துள்ளார்....

சிறு பருவத்தில் தானே ஜாதி ஆசாரம்.ஆசிரம ஆச்சாரம்.என்னும் பொய் உலக ஆச்சாரத்தைப் பொய் என்று அறிவித்து.அவைகளை அனுட்டியாமல் தடை செய்வித்து.அப்பருவம் ஏறுந்தோறும்.எனது அறிவை விளக்கம் செய்து என்னை மேனிலையில் ஏற்றி நிலைக்க வைத்து அருளினீர்.....மேலும்

வாலிபப் பருவம் அடுக்குத் தருணத்தில் தானே அப்பருவத்திற்கு மிகவும் உரிய விடய இச்சைகளைச் சிறிதும் தலை யெடுக்க வொட்டாது அடக்குவித்து அருளினீர்.....

சிறுவயதிலேயே வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தெரியும் !

அவ் வாலிபப் பருவம் தோன்றுவதற்கு முன்னரே.எல்லா உயிர்களுக்கும் இன்பப் தருவதற்கு அகத்தும். புறத்தும் விளங்குகின்ற **அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே** உள்ளார் என்று அறிகின்ற மெய் அறிவை விளக்குவித்து அருளினீர்..

மேலும் ...

வாலிபப் பருவம் தோன்றிய போதே.**சைவம்.வைணவம்.சமணம்.பவுத்தம் முதலாகப் பல பெயர் கெண்டுபலபட விரிந்த அளவிறந்த சமயங்களும்.அச்சமயங்களில் குறித்த சாதனங்களும்.

**தெய்வங்களும்**அதன்  கதிகளும் தத்துவ சித்திவிகற்பங்கள் என்றும்.அச்சமயங்களில் பலபட விரிந்த**வேதங்கள்.ஆகமங்கள்.புராணங்கள்.சாத்திரங்கள்.முதலிய கலைகள் எல்லாம் தத்துவசித்திக்**கற்பனைக் கதைகள் என்றும்**

உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமய ஆச்சாரங்களைச்சிறிதும் அனுட்டியாமல்  தடை செய்வித்து அருளினீர்....என்று வள்ளலார் சொல்லுகின்றார்..

இதன் உண்மை என்ன ?

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவர் மட்டுமே உண்மை..மற்ற உலகில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் பொய் என்ற உண்மையை .வள்ளலாருக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே...     தெரிவிக்கின்றார்..

நாம் இன்னும் எந்த உண்மையும் தெரியாமல் .தெரிந்து கொள்ளாமல்.மேலும் வள்ளலாரின்வாழ்க்கை முறைகள் தெரியாமலும்.ஓன்று கிடக்க ஒன்றைப் பிடித்துக் கொண்டும் உளரிக் கொண்டும் உள்ளோம்...

நம் உள் இருந்து இயங்கிக் கொண்டு இருக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத தொடர்பு கொண்டு ..வாழ்வதே சிறந்த வாழ்க்கை யாகும்...

வள்ளலார் எதையும் தன் விருப்பம் போல் சொல்லவில்லை...எழுதவும் இல்லை.அருள் பெற்று மரணம் வெல்வதற்கு என்ன என்ன வழிகள் உள்ளன என்பதை மிகவும் தெளிவாக விளக்கியும்.அதன்படி வாழ்ந்தும் காட்டி உள்ளார்....

வள்ளலார் காட்டும் கல்விக்கு மட்டுமே சாகாக்கல்வி என்று பெயர்..சாகாக்கல்வி கற்க பொருள் தேவை இல்லை.. வள்ளலார் சொல்லும் ஒழுக்க நெறிகளை முழுமையாக கடைபிடித்தால் போதும்..

மருள் நெறியாகிய சமய மதம் நெறிகளைபின்பற்றி வாழ்வதால் தான் மரணம் வருகின்றன..அருள் நெறியாகிய சுத்த சன்மார்க்க நெறியை மட்டும் பின்பற்றி வாழ்ந்தால் மரணத்தை வென்று .அருட்பெருஞ்ஜோதியில் கலந்து பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் முழுவதும் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேய ரஷ் ஈரோடு கதிர்வேல்.
9865939896.