வியாழன், 29 செப்டம்பர், 2022

கடவுளைக் கண்டேன் ! பாகம் 7.

 *கடவுளைக் கண்டேன்!*


*எமது வாழ்க்கையின் வரலாற்று  சம்பவங்களை உங்கள் அனைவரின் ஆதரவோடு வேண்டுகோளுக்கிணங்க வெளியிட்டு வருகிறோம்*


*தொடர்ச்சி பாகம் 7.*


*வள்ளலார் பாடல்!*


குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே


சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது


தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர் தீர்த்தே


இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.! 


என்ற பாடல் மிகவும் சிந்திக்க வைக்கிறது.


*இந்த பிரபஞ்ச தலைவி மாயையின் உதவியால் பெற்ற (கொடுக்கப்பட்ட) மனித ஜீவ தேகத்தில் வாழும் ஆன்மாவிற்கு இவ்வுலகில் வாழ்வதற்கு தேகசுதந்தரம் ஜீவசுதந்தரம் போகசுதந்தரம் என மூவகை சுதந்தரம் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சுதந்திரத்தினால் குற்றம் புரிவதே மனிதர்களுக்கு வாடிக்கையான இயல்பு வாழ்க்கையாகி விட்டது.* 


*அதில் ஒன்றுதான் போக சுதந்தரம் அதுவே ஆண் பெண் திருமண பந்தமாகும், உரிமையுடன் தொடர்பு கொள்ளும் உடல் உறவாகும். அந்த உறவால் வேறு ஒரு ஆன்மாவும் உயிரும் உடம்பும் உற்பத்தியாக்கப் படுகின்றது. இதுவே மனிதன் தேகத்தினால் போகத்தினால் செய்யப்படுகின்ற முதற் குற்றமாகும்.இதனால் ஆன்மாக்கள் தொடர்ந்து பிறவி எடுத்துக் கொண்டே உள்ளது, ஆதலால் ஆன்மாக்கள் அதன் அதன் செயல்பாட்டிற்குத் தகுந்தவாறு பிறவிகள் தொடர்ந்து எடுத்துக் கொண்டே உள்ளது.இதற்கு ஒரு முடிவு தெரியாமல் வாழ்வதே வாழ்க்கையாகிவிட்டது.* 


*இந்த ஆன்மாதான் எனக்கு வேண்டும்,இந்த உயிர் உடம்புதான்  எனக்கு வேண்டும் என நினைந்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது* 


*அவரவர் நல்வினை தீவினைக்குத் தகுந்தாற் போல்தான் ஆன்மாக்களுக்கு உயிர் உடம்பு கொடுக்கப்படுகிறது கருத்தரிக்கும்*


*இவற்றை  திருவள்ளுவர் தெளிவாகச் சொல்லுகின்றார்!*


*பிறவிப் பெருங்கடல்  நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் !* என்பார்.


*இவ்உலகில் பொருள்நிறைந்த மாயைக் கடல் என்னும் பற்றில் நீந்துபவன் (வாழ்பவன்) இறைவனைத் தொடர்பு கொள்ளவும் இறப்பை நீக்கவும் வாய்ப்பே இல்லை.*


*உலகப்பற்றை துறந்து அகற்றி ஜீவதயவோடு இறைவனைத் தொடர்புகொண்டு அருள் கடலில் நீந்துவதற்கு (வாழ்வதற்கு) தகுதி உள்ளவர் எவரோ அவரே அருட்கடலில் நீந்தும் தகுதியுடையவராவார்.அவரே இறைவனை தொடர்பு கொள்ளும் தகுதிப் பெற்றவராவார், மரணத்தை வெல்லும் ஆற்றல் பெற்றவராகும் என்கிறார் திருவள்ளுவர்*


*வள்ளலார் வேறு வழியைக் காட்டுகிறார்!*


*குற்றமே  புரியாத செய்யாத வள்ளல்பெருமான் அவர்கள், உலக மக்களுக்காக ஆண்டவரிடத்தில் சொல்லி வேண்டி தெளிவுப்படுத்தி புரிய வைக்கிறார். குற்றம் புரிவது எனக்கு இயல்பாக இருந்தாலும் குணமாகக் கொள்ளல் உமக்கு இயல்பானதாச்சே,ஆதலால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !  எனது அறியாமை.  அஞ்ஞானத்தினால் உண்டாகும் பற்றின் காரணமாக , அச்சம் பயம் துன்பம் துயர் மரணம் போன்ற குற்றங்களை நீக்கி அகற்றி  தீர்க்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் நல்வழிக்காட்டி, அருள் வழங்கி இன்றே என்னை ஆட்கொளல் வேண்டும் என்கிறார்.*


*ஏன் என்றால் நான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலவோ என்ற உரிமையுடன் கேட்கிறார்.*


 *என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என்பதற்காக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் சன்மார்க்க அன்பர்களுக்காக வேண்டி விண்ணப்பம் செய்கின்றார்.*


*இரண்டாவது குழந்தை !*


*இந்த உண்மைத் தெரியாமல் நாங்கள் (கணவன் மனைவி) வாழ்ந்ததால் தேக போக சுதந்தரத்தால்*

*என் மனைவி 1970 ஆம் ஆண்டு இரண்டாவது முறை கர்பமானாள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனைவி கர்பமானாள் மனைவிமீது அளவில்லா பற்று பாசம் மரியாதை பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரித்துவிடும் ஏன் என்றால் ? அதுதான் மனைவியும் கணவனும்  காட்டிய அன்புகலந்து இணைந்த காதல் பரிசின் அடையாளமே குழந்தைதான், எனவே தான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திடலே என்பார்கள்* 


*குழந்தை பிறந்தால் மட்டும் போதாது  அக் குழந்தையை நல்ல குழந்தையாக,உலகம் போற்றும் வகையில் அறிவு சார்ந்த ஒழுக்கம் நிறைந்த நல்ல குழந்தையாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் என் மனைவியும் உறுதியாக இருந்து குழந்தைகளை வளர்த்து வந்தோம்*


*தொழிலும் வளர்ந்தது குழந்தையும் தாய் வயிற்றில் வளர்ந்தது 10 ஆவது மாதத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது, சுமதி என்று பெயர் சூட்டினோம்* 


*இரண்டாவது குழந்தை பிறந்ததும் அதிகமான பொருப்பும் கடுமையான உழைப்பும் அதிகமானது.நாங்கள் விரும்பி செய்த காதல் காமம் வெகுளி,மயக்கம் என்ற குற்றத்தினால் பிறந்த குழந்தைக்காக நமக்குத் தெரியாமலே நாம் ஏதாவது ஒரு தொழில் செய்து, பொருள் ஈட்டும் கட்டாயத்திற்கு தள்ளப் படுகிறோம்.*


*எனக்குத் தெரிந்த தொழிலான தையற்கலையில் ஈரோடு மாவட்டத்தின் பிரபலமான "ஸ்பென்ஸர்ஸ்" தையல் ஷோரூம் சிறப்பான முறையில் மக்கள் மத்தியில் பெயர்பெற்று விளங்கியது.*


*ஸ்பென்ஸர்ஸ்* நிறுவனம் என் மீது வழக்கு தொடர்ந்தது !


*எமது கடையின் விளம்பரம்* *பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பேனர்களிலும், சுவர்களிலும் தியேட்டர்களிலும் நிறைய விளம்பரம் வெளியே செய்து கொண்டே இருந்தது,* 


*அவற்றை எப்படியோ பார்த்து விட்டார்கள் * உலகப் புகழ்பெற்ற ஸ்பென்ஸர்ஸ் நிறுவன கவர்னர் அவர்கள். எங்கள் நிறுவனத்தின் பெயரை நீங்கள் உங்கள் கடைக்கு வைத்தது சட்டபடி குற்றமாகும் என்று எங்கள் கடை மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சம்மன்  அனுப்பி இருந்தார்கள்.*


 *வழக்கறிஞர்!


*ஈரோட்டில் எமக்குத் தெரிந்த கிரிமினல் வக்கீல் சின்னசாமி என்பவரிடம் சம்மனைக் கொடுத்து விபரத்தை சொன்னேன்,அவர் படித்துப் பார்த்துவிட்டு ஸ்பென்ஸர்ஸ் என்ற பெயரை எடுத்துவிட்டு வேறு பெயரை  வைத்துக் கொள்ளுங்கள் பிரச்சனை சரியாகிவிடும் என்றார்.*


*எமக்கு கோபம் வந்துவிட்டது, சார் நான் சொல்லிகின்றபடி நீதி மன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என்றேன்,எவ்வாறு என்றார்?* 


*என் மகன் பெயர் ஸ்பென்ஸர்ஸ்,மகன் பெயரில் கடை வைத்துள்ளோம்.மேலும் எங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் துணிகளை மட்டும் ஆடைகளாக தைத்து தருகிறோம் இது எங்கள் கைத் தொழில் இது எங்கள் உடல் உழைப்பு*


*நீங்கள் தயாரிக்கும் எந்த பொருள்களையும் நாங்கள் தயாரிக்கவில்லை.எனவே எங்கள் தொழிலை, எங்கள் உழைப்பை எங்கள் தனிமனித உரிமையை பறிக்கும் உரிமை உங்களுக்கும் இல்லை,சட்டத்திலும் இடமில்லை என்று பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று எமது வக்கீலுக்கு சொல்லிக் கொடுத்தேன்*


*அவ்வாறே எமது வக்கீல் பதில் மனு தாக்கல் செய்து நீதி மன்ற வழக்கை சட்டப்படி தள்ளுபடி செய்யப்பட்டது. இவை என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்*  


*வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க தனிநெறிக் கொள்கையில் நான் பார்க்கும் பார்வை ஒரு வித்தியாசமானதாகும்*


தொடரும்....


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


 

அன்புடன் 

ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

*9865939896*

திங்கள், 26 செப்டம்பர், 2022

வள்ளலாரின் வைர வரிகள்!

 *வள்ளலாரின் வைர வரிகள் !*


கதை கற்பனை இல்லாதது சுத்த சன்மார்கம்! 


ஆன்மாவைத் தெரிந்து கொள்வதே ஆன்மீகம்! 


கடவுள் வேறு, ஆன்மா வேறு, உயிர்வேறு, உடல் வேறு !


கடவுள் ஆன்மா உயிர் உடல் ஒரே நேர் கோட்டில் இயங்குகிறது !


இயற்கை உண்மை, இயற்கை விளக்கம்,

இயற்கை இன்பம் இம் மூன்றும் இணைந்ததே அருட்பெருஞ்ஜோதி! 


பஞ்ச பூதங்கள் இல்லாத இடத்தில் இருப்பவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! 


உலகம் தானாக சுற்றவில்லை,அருள் (சக்தி) ஆற்றலால்  சுற்றுகிறது!


மனிதன் தானாக இயங்கவில்லை ஆண்டவர் அருளால் இயங்குகிறான்!  


இறப்பை ஒழிப்பதே சன்மார்க்கம்!

சாகாதவனே சன்மார்க்கி !


சாகாத கல்வியே கல்வி !


மெய்ப்பொருள் என்பதே அருட்பெருஞ்ஜோதி! 


வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !


வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரம் உண்மையைத் தெரிவிக்காது !


ஆன்மாவை பிரிக்கப்படுவது எதுவாக இருந்தாலும் பின் தொடராதே !


உயிர்நேயத்தைவிட, மனிதநேயத்தை விட ஆன்மநேயம் முக்கியம் !


ஆன்ம நேயத்துடன் வாழ்பவர் பேரின்ப சித்தி பெற்று வாழ்வார்! 


ஆன்மநேயத்தை அறிந்தவரே கடவுள் நிலை அறிவர்!


தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம்! 


உன்னைப்பார் உன்னுள் என்னைப் பார்!


உன்னைப்பார்த்தால் என்னைப் பார்ப்பீர்கள்!


தன்னை அறிய தந்திரத்தை அறிய வேண்டும்!


ஒழுக்கம் நிறைந்தவன் உயிர் காப்பாற்றப்படுவான்!


இறைவன் திருஅருளைப் பெற்றவர் நீடூழி வாழ்வர் !


பொருள் இருந்தால் மரணம் வரும்! அருள் இருந்தால் மரணம் வராது !


பஞ்சபூத உடம்பிற்கு மரணம் உண்டு, அருள் உடம்பிற்கு மரணம் இல்லை !


அருள் உடம்பை பஞ்ச பூதங்கள் தாக்காது ! 


மனித தேகத்திற்குள் இரண்டு தேகம் உண்டு ! பொருள்தேகம்! அருள்தேகம்!


அழியும் உடம்பை அழியாமல் மாற்றுவதே சாகாக்கல்வி !


வள்ளலார் துறவி அல்ல! முற்றும் அறிந்த அருளாளர்! 


மரணத்தை வென்ற மகாஞானி வள்ளலார்!


மகா மந்திரத்தை சொல்லி மகா உபதேசம் செய்தவர் வள்ளலார்!


கடவுள் மனித உருவத்தில் இல்லை,அருள்ஒளி உருவத்தில் உள்ளார் !


அருள் நிறைந்த ஜோதியே அருட்பெருஞ்ஜோதி !


தனிப்பெருங்கருணையே அருட்பெருஞ்ஜோதி ! 

 

ஒழுக்கம் நிறைந்த உத்தமர் கண்களில் கடவுள் காட்சி தருவார்!


ஆண் பெண் அலி என்ற பேதம் பார்க்காதவரே அருளாளர்! 


உடம்பில் பேதம் உண்டு, உயிர் ஆன்மா கடவுள்  பேதம் இல்லை !


உலகப் பொதுநெறி சுத்த சன்மார்க்க தனிநெறி !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !  


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்! 


இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்க கூடாது !


எக்காரியங்கள் செய்தாலும் அன்னதானம் செய்ய வேண்டும்!


 உண்மை அன்பால் கடவுள் வழிபாடு செய்து அகத்தில் காண கடவுளைக் வேண்டும்! 


உலகப் பொதுநெறி சுத்த சன்மார்க்க தனிநெறி !


தொடரும்.....

சனி, 24 செப்டம்பர், 2022

வள்ளலாரின் முக்கிய கருத்துக்கள்!

 வள்ளலாரின் முக்கிய கருத்துக்கள்!


கடவுள் ஒருவரே !

அவரே அருட்பெருஞ்ஜோதியர்!


நன்மார்க்கம் நன்மார்க்கம்!

சன்மார்க்கம்

சன்மார்க்கம்!


உயிர்க்கொலை செய்யாதே !

புலால் உண்ணாதே!


தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யாதே !


வாடியபயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்!


எங்கே கருணை இயற்கையில் உள்ளதோ அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி! 


என்மார்க்கம் இறப்பை ஒழிக்கும் சன்மார்க்கம்!


நன்மார்க்கர் நாவில் நவிற்றிய பாட்டே 

சன்மார்க்க சங்கம் தழுவிய பாட்டே! 


நம்புறும் ஆகமம் நவிற்றிய பாட்டே

எம்பலம் ஆகிய அம்பலப்பாட்டே!


உலகினில் உயிர்க்களுக்கு உறும் இடையூறு எலாம் விலக,

நீ அடைந்து விலக்குக மகிழ்க! 


சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக

உத்தமன் ஆகுக ஓங்குக !


கொல்லா நெறியே குருவருள் நெறி !


உயிர் எலாம் பொதுவில் உளம்பட நோக்குக !


 உயிர்உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் செய்!


அருள் அலாது அணுவும் அசையாது !

அதனால் அருள்  நலம் பரவுக !


அருள்  நெறி ஓன்றே தெருள் நெறி ! அருள் பெற முயல்க !


அருளறிவு ஒன்றே அறிவு மற்றெல்லாம் மருள் அறிவு !


அருள் பெறில் துரும்பும்  ஓர் ஐந்தொழில் புரியும்!


அருள் சுகம் ஒன்றே அரும்பெறல் பெருஞ் சுகம்! 


அருள் அறியார் தம்மையும் அறியார ! அதனால் அருள் பெற முயல்க !


அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெறும் நிலை !


ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!


உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு ! 


ஏழைகளின் பசிப் பிணியைப் போக்குவதே கடவுள் வழிபாடு ! 


எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாதுகாக்க வேண்டும்!


எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்த வேண்டும்!


சாதி சமயம் மதம் போன்ற வேறுபாடுகள் கூடாது ! 


கருணை உள்ள இதயத்திலே கடவுள் வாழ்கிறார்!


கருணையும் சிவமும் ஒன்றே எனும் காட்சியும் பெறுக ! 


அன்பு தயவு கருணையால் அருள் பெறலாம்! 


அருள் வழங்கும் கடவுளே அருட்பெருஞ்ஜோதி!


எல்லாம் செய் வல்ல தெய்வம் அருட்பெருஞ்ஜோதி எங்கும் நிறை தெய்வம் !


சாகாதே கல்வியே கல்வி 

ஒன்றே சிவம் என அறிந்த அறிவே தகும் அறிவு ! 


ஒத்தோர் உயர்ந்தோர் தாழ்ந்தோர் இணைந்து உலகத்தை நடத்த வேண்டும்!


எல்லாம் செய் வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம் ! 


நல்லாரக்கும் நல்ல தெய்வம் நடுவான தெய்வம் ! 


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் தெய்வம்! 

காரணமாம் தெய்வம் அருட் பூரணமாம் தெய்வம்!


தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம் தனக்கு நிகர் இல்லாத தனித் தலைமை தெய்வம்! 


சேயாக எனை வளர்க்கும் தெய்வம் மகா தெய்வம்!

சிற்சபையில் ஆடுகின்ற தெய்வம் அதே தெய்வம்! 


ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும்!


அம்பலத் தரசே அருமருந்தே ஆனந்த தேனே அருள் விரைந்து !


பொது நடத்தரசே புண்ணியனே புலவரெலாம் புகழ் கண்ணியனே !


உத்தர ஞான சிதம்பரமே சித்தி எலாம் தரும் அம்பரமே !


நடராஜன் எல்லார்க்கும் நல்லவனே நல்ல எலாம் செய் வல்லவனே !


அருட்பொது நடமிடும் தாண்டவனே அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவனே !


நடராஜ பலமது நம்பலமே நடமாடுவது திரு அம்பலமே !


நடராஜர் பட்ட நறும் பாட்டு ஞாலத்தார் பாட்டெலாம் வெறும் பாட்டு!


சிதம்பர பாட்டே திருப்பாட்டு ஜீவர்கள் பாட்டெல்லாம் தெருப்பாட்டு ! 


அம்பலப் பாட்டே  அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் மருட்பாட்டு !


சன்மார்க்கம் சன்மார்க்கம் நன்மார்க்கம்! 


நல்லோர் எல்லார்க்கும் சபாபதியே நல்வரம் ஈயும் தயாநிதியே !


அருட்பெருஞ்ஜோதிக் கண்டோமே ஆனந்த தெள்ளமுதம் உண்டோமே ! 


சிற்சபை நடம் அறிந்து  தியானம் செய்தால் பெற வேண்டியதை பெறலாம்! 


உள்ஒளி ஓங்கிட உயிர்ஒளி விளங்கிட வெள்ஒளி காட்டிய மெய் அருட் கனல்!


தொடரும்....

மனிதன் செய்யக் கூடாத செயல்கள்!

 வள்ளலாரின் அருள் வார்த்தைகள்!

மனிதன் செய்யக் கூடாத செயல்கள்.


*கீழே உள்ளன.*


நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே!


வலிய வழக்கிட்டு மானங் கெடுக்காதே!


தானங் கொடுப்போரைத் தடுத்து நிற்காதே!


கலந்த சினேகரைக் கலகஞ் செய்யாதே!


மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்யாதே!


குடிவரி யுயர்த்திக் கொள்ளை கொள்ளாதே!


ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே!


தருமம் பாராது தண்டஞ் செய்யாதே!


மண்ணோரம் பேசி வாழ்வழிக்காதே!


உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்யாதே!


களவு செய்வோர்க்கு உளவு சொல்லாதே!


பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே!


ஆசை காட்டி மோசஞ் செய்யாதே!


வரவுபோக் கொழிய வழியை யடைக்காதே!


வேலை யிட்டுக் கூலி குறைக்காதே!


பசித்தோர் முகத்தைப் பாராதிருக்காதே!


இரப்போர்க்குப் பிச்சை இல்லையென்று சொல்லாதே!


கோள் சொல்லிக் குடும்பங் குலைக்காதே!


நட்டாற்றிற் கையை நழுவ விடாதே !


கலங்கி யொளிந்தோரைக் காட்டிக் கொடுக்காதே !


கற்பழிந்தவளைக் கலந்திருக்காதே!


காவல் கொண்டிருந்த கன்னியை அழிக்காதே!


கணவன்வழி நிற்போரைக் கற்பழிக்காதே !


கருப்பம் மழித்துக் களித்திருக்காதே !


குருவை வணங்கக் கூசி நிற்காதே !


குருவின் காணிக்கை கொடுக்க மறக்காதே !


கற்றவர் தம்மைக் கடுகடுக்காதே !


பெரியோர் பாட்டிற் பிழை சொல்லாதே !


பக்ஷியைக் கூண்டில் பதைக்க அடைக்காதே !


கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைக்காதே !


ஊன்சுவை யுண்டு உடல் வளர்க்காதே !


கல்லும் நெல்லும் கலந்து விற்காதே !


அன்புடை யவர்க்குத் துன்பஞ் செய்யாதே !


குடிக்கின்ற நீருள்ள குளத்தை தூர்க்காதே !


வெய்யிலுக்கு ஒதுங்கும் விருக்ஷத்தை அழிக்காதே !


பகை கொண்டு அயலோர் பயிரை அழிக்காதே !


பொது மண்டபத்தைப் போய் இடிக்காதே !


ஆலயக் கதவை அடைத்து வைக்காதே !


சிவனடியாரைச் சீறி வையாதே !


தவஞ்செய் வோரைத் தாழ்வு சொல்லாதே !


சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்யாதே !


தந்தைதாய் மொழியைத் தள்ளி நடக்காதே !


தெய்வம் இகழ்ந்து செருக்கு அடையாதே !


தொடரும்...

வெள்ளி, 23 செப்டம்பர், 2022

வள்ளலாரின் முக்கிய கொள்கைகள்!

 அருட்பெருஞ்ஜோதி !

அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை!

அருட்பெருஞ்ஜோதி!


*வள்ளலாரின் முக்கிய  கொள்கைகள்!*


*வள்ளலார் வருவிக்க உற்ற 200 ஆம் ஆண்டு விழா, வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை தொடங்கிய 156 ஆம் ஆண்டு விழா, வடலூரில் சத்திய ஞானசபையை தோற்று வித்து ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 .வது விழா ஆகிய முப்பெரும் விழாவை,  தமிழக அரசு ஆணையின்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்.* 


*சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள  கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 05-10-2022 ஆம் நாள் மாண்புமிகு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு மு.க. ஸ்டாலின்  அவர்கள் சிறப்புரை ஆற்றி  சென்னையில்  தொடங்கி வைக்கிறார்.*


*அவற்றைத் தொடர்ந்து  05-10-2023 வரை 52 வாரங்கள் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள வாரியாக, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சன்மார்க்க சங்கங்கள், சன்மார்க்க தொண்டர்கள் மற்றும் ஜீவகாருண்ய செம்மல்கள  முன்னிலையில் சுத்த சன்மார்க்க சங்கத்தின்  சிறப்பு பேச்சாளர்கள் மூலமாக சன்மார்க்க  கொள்கைகளை அனைத்துலக மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு விழா எடுக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது* 


*"அதற்காக தமிழக அரசை வாழ்த்தி வணங்குவோம்"*


*வள்ளலாரின் கொள்கைகள்!*


 *வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தலைமை சங்கத்தின் சார்பாக வெளியிடப் படுகிறது*


*இதுநாள் வரை எவரும் சொல்லாத செயல் படுத்தாத, சாதி,சமயம், மதம் கடந்த (சார்பற்ற) உண்மைப் பொது நெறியாகிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" தனிநெறியாம் மெய்நெறியின் மூலமாக வள்ளல்பெருமான் வலியுறுத்திய  சுத்த சன்மார்க்க்தின் அடிப்படையான முக்கிய கொள்கை களை அனைத்து உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய  சகோதர சகோதரிகளு ம் தெரிந்து,அறிந்து,புரிந்து  கொண்டு  ஜீவகாருண்ய ஒழுக்க நெறியை வாழ்க்கையில் கடைபிடித்து  இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதற்காக வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் வெளியிடப் படுகிறது.*


*கொள்கைகள்* 


1, *கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


2. *சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது !*


3,*தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது!*


4, *வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரங்கள் உண்மையைத் தெரிவிக்கவில்லை!*


5, *சாதியும் சமயமும் மதமும் பொய் என்பதை உணர்ந்து விலக வேண்டும்!*


6,*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!*


7,*ஜீவகாருண்ய ஒழுக்கமும், உயிர் இரக்கமுமே கடவுள் வழிபாடு!*


8,*ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்குவதே கடவுள் வழிபாடாகும்!*


9,*எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும்!*


10,*உயிர்க்கொலை செய்யக் கூடாது! புலால் உண்ணக் கூடாது !*


11,*கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது!*


12,*மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது!*


13,*இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !*


14,*பெண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்களைச்  சொல்லித்தர வேண்டும்.*


15, *இந்திரிய ஒழுக்கம்,*

*கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கத்தை  கடைபிடிக்க வேண்டும்* !


16,*எதிலும் பொது நோக்கம் வேண்டும்!*


17,*ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் செய்யப்படுகின்ற விரதம்  தியானம், தவம்,யோகம்,யாவும் வெற்று மாயா ஜாலங்களே !*

18, கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம் !

19, பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம்,கர்ம காரியங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் !

20, சாகாதவனே சன்மார்க்கி ! மரணம் இல்லாப் பெருவாழ்வே வாழ்வு !


*மேலே கண்ட வள்ளலார் சொல்லிய சுத்த  சன்மார்க்க கொள்கைகள்  முழுவதையும் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெறும் தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்பதை சமரச சுத்த சன்மார்க்க சத்திய தலைமைச் சங்கத்தின் சார்பாக தெரியப்படுத்திக் கொள்கிறோம்.*


மேலே கண்ட வள்ளலார் கொள்கையை கடைபிடிப்போம்


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெறுவோம்


இங்கனம் 

*வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தலைமைச் சங்கம்*

05-10-2022

தொடர்புக்கு.

+919095905000

+919487417834

+919865939896

புதன், 14 செப்டம்பர், 2022

கடவுளைக் கண்டேன்! தொடர்ச்சி..7

 *கடவுளைக் கண்டேன்!*


தொடர்ச்சி பாகம் 7.


*வள்ளலார் பாடல் !* 


எல்லாம் செய்வல்ல தெய்வம் எங்கும் நிறை தெய்வம்

என்னுயிரில் கலந்து எனக்கே இன்பம் நல்கும் தெய்வம்


நல்லார்க்கும் நல்ல தெய்வம் நடுவான தெய்வம்

நற்சபையில் ஆடுகின்ற நடராஜ தெய்வம்


கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் தெய்வம்

காரணமாம் தெய்வம் அருட் பூரணமாம் தெய்வம்


செல்லாத நிலைகள் எல்லாஞ் செல்லுகின்ற தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம்!


*மேலே கண்ட பாடல்  எல்லோருக்கும் பொதுவான பாடலாகும். கற்றவர் கல்லாதவர் என்ற பேதம் இல்லாமல், அவரவர் செய்கைக்கு ஒழுக்கத்திற்கு தகுந்தாற் போல் மனிதனின் ஆன்ம  சிற்சபையில் உள் ஒளியாக நிறைந்து கடவுள் காரிய காரணமாக விளங்கிக் கொண்டு உள்ளார் என்பதை இப்போது என்னால் புரிந்து உணர்ந்து கொள்ள முடிகிறது.*


*ஈரோட்டில் ஸ்பென்ஸர்ஸ் என்ற பெயரில் டைலரிங் ஷோரூம் ஆரம்பித்து நிறைந்த வாடிக்கையாளர்களை தன்வசமாக வரவழைத்து எல்லோராலும் பாராட்டும் அளவிற்கு வெற்றி நடை போட்டு பெரிய அளவில் புகழுடன் நடைபெற்று வந்து கொண்டு இருந்தது*


*ஈரோட்டில் டைலரிங் தொழிலில் நான் ஒரு கதாநாயனாக திகழ்ந்தேன், எனது நடை உடை பாவனை, மற்றும் தொழிலில்  புதிய புதிய  மாடல், சரியான பிட்டிங்,அழகு அலங்காரம் போன்ற கலை நுணுக்கங்களால் தையல் தொழிலில் புதிய திருப்பம், திறமை, நேர்மை, மரியாதை, நாணயம், நேரம் தவறாமை வாடிக்கையாளர்கள் எல்லோரையும் கவர்ந்தது. அதிகம் பெண் வாடிக்கையாளர்கள் நிறைந்து வழிந்தது*


*பெரிய அளவில் பொருள் செலவு செய்து திருமணம் செயபவர்கள்  விலை உயர்ந்த பட்டு துணிகள் மற்றும் விலை உயர்ந்த எந்த துணிகளாக இருந்தாலும் எங்கள் கடைக்குத்தான் நம்பிக்கையுடன் வருவார்கள் அவர்கள் நம்பிக்கைக்கு  தகுந்தாற்போல் அனைவரையும் திருப்தி படுத்தி விடுவோம்* 


ஓய்வு இல்லாத தொழில்..


*ஓய்வு இல்லாத தொழில் வளம் பெற்று வளர்ந்து கொண்டே இருந்தது.*


*அக் காலத்தில் ரெடிமேட்  எதுவும் அதிகமாக கிடையாது. தீபாவளி வந்து விட்டால் மூன்று மாதம் இரவு பகல் இடைவிடாது தையல் தொழில் செய்து வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.*


*1969 ஆம் ஆண்டு தையற் கடை வைக்கும் போது வருமானத்திற்கு தகுந்தாற் போல் மாதம் 30 ரூபாய் வாடகை வீடு ஒரே ரூம், அதில் நான் மனைவி முதல் குழந்தை மூவரும் அந்த சிறிய வீட்டில் குடி இருந்தோம்*.


*தொழில் வளர வளர ஒரே வருடத்தில் 250 ரூபாய் மாத வாடகைக்கு குடி பெயர்ந்தோம்,அதில் ஒரு ஹால், ஒரு பெட்ரூம், தனி சமையல் அறை போன்ற வசதிகள் மட்டும் இருக்கும். மனைவிக்குத் துணையாக வீட்டு வேலைக்கும் ஒர் பெண்ணை அமர்த்தி கொண்டோம்*


*ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கும் எங்கள் மாமியார் வீட்டிற்கு குழந்தையுடன் சென்று விடுவது வழக்கம்.* 


*அந்த வருடம் தீபாவளி பண்டிகை வந்தது மூன்று மாதம் இடைவிடாது வேலை முடிந்து மாமனார் வீட்டிற்கு சென்று விட்டோம்.*


குடி பழக்கம்! 


*தீபாவளி பண்டிகை யொட்டி இரவு பகல் தூங்காமல் வேலை செய்ததால் எழுந்திருக்க முடியாமல் அசதியாக படுத்தே இருந்தேன். எனது மாமனார் இன்டியன் ஸ்டேட் வங்கியில் பணி புரிந்து வருகிறார். அவர் என் அருகில் வந்து  எழுப்பி இதை குடிங்க சோம்பல் அசதி எல்லாம் நீங்கிவிடும் என்று ஒரு டம்ளரில் ஏதோ ஊற்றி கொடுத்தார் நானும் மாமனார் கொடுக்கின்றாறே என்று மறுக்காமல் மரியாதை நிமித்தமாக, வேண்டா வெருப்பாக வாங்கி குடித்து விட்டேன். கொஞ்சம் சகப்பு கலந்த துவர்ப்பாக இருந்தது விர் என்று உடம்பு முழுவதும் ஒரு விதமான மாற்றம் உண்டாயிற்று .*


*அடுத்து காலை உணவு கோழிக் குழம்பு இட்லி தோசை,பணியாரம் கொடுத்தார்கள் நானும் மாமனாரும் ஒன்றாக அமர்ந்து திருப்தியாக  உண்டோம்.*


*மதியம் ஆட்டுகறி குழம்பு,மட்டன்  பொரியல் சாப்பாடு. மாப்பிள்ளை இப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்று மறுபடியும் ஊற்றி கொடுக்க நானும் அவரும் சாப்பிட்டோம். அப்படியே ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை யானால் பனைமரத்துக்கள்,சாராயம்,பிராந்தி,விஸ்கி குடிக்கும் பழக்கம் உண்டாயிற்று சிகரெட் பிடிக்கும் பழக்கமும் உண்டாயிற்று ஒரு நாளைக்கு பத்து பாக்கெட் சிகரெட் பிடிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது.* 


*சிறுவயதில் இருந்து எந்த கெட்ட பழக்கமும் என்னிடம் இல்லை.திருமணம் முடிந்து மாமனார் மூலமாக குடி பழக்கம் உண்டாயிற்று. எவ்வளவு குடித்தாலும் தடுமாற்றமோ தவறான வார்த்தைகளோ என்னிடம் இருக்காது. நான் குடிப்பது வெளியில் யாருக்கும் தெரியாது. ஞாயிற்றுக்கிழமை மட்டுமே குடிப்போம்.* 


*அடுத்து போலீஸ் பயமில்லாமல் குடிப்பதற்காக எனக்கும் மாமனாருக்கும்  அரசாங்க (அனுமதி) பர்மிட் வாங்கி விட்டோம். சேலம் அல்லது கோயம்புத்தூர் சென்று சிந்தாமணியில் தான் வாங்கிவர வேண்டும். மாதம் நான்கு புல் பாட்டில் கொடுப்பார்கள். நாங்கள் குடியைக் கெடுக்கும் குடிக்காரகள் இல்லை. கவுரமான குடிக்காரர்கள் எங்களால் யாருக்கும் எந்தவிதமான இடையூறுகளும் வராமல் பார்த்துக் கொள்வோம்*


*எப்படி இருந்தாலும் நாங்கள் குடிப்பது என் மனைவிக்கு பிடிக்கவில்லை எதிர்த்து பேசவும் வாய்ப்பு இல்லை, அவ்வளவு மரியாதை கலந்த அன்பு பாசம் காதல் உள்ளவள்*


*பெண்கள் விரும்புவார்கள்!*


*தொழில் ரீதியாகவும் என்னுடைய இளம் வயது, அன்பு அழகு  இனிமையானபேச்சு, பழக்கம் வாய்மை,தூய்மை கலந்த தோற்றத்தின் ரீதியாகவும் நிறைய படித்த வசதியான பெண்கள் என்னை காதலிக்க தூண்டுவார்கள். பொருள் ஆசையைக் காட்டி என்னை விரும்புவார்கள் எவ்வளவு அழகான பெண்களாக இருந்தாலும் என் மனத்தில் யாருக்கும் இடம் கொடுக்க மாட்டேன். யாருக்கும் அடங்க மாட்டேன். நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, அஞ்சாநெஞ்சம் கொண்டவனாக திகழ்ந்தேன்* 


*அப்போது நடந்ததை இப்போது நினைக்கும் போது வள்ளலார் பாடல் ஞாபகம் வருகிறது.*


மங்கையர் எனைத்தாம் வலிந்துறுந் தோறும் மயங்கி நாம் இவரொடு முயங்கி 


இங்கு உளம் களித்தால் களித்தவர்க்கு உடனே இன்னல் உற்றிடும் நமக்கு இன்னல்


தங்கிய பிறர்தம்  துயர்தனைக் காண்டல் 

ஆகும்  அத்துயர்  உறத் தரியேம்


பங்கம் மீ தெனவே எண்ணி நான் உள்ளம் பயந்ததும் எந்தை நீ அறிவாய்! 


*வள்ளலாரை  மாப்பிள்ளை சாமி என்று போற்றி புகழ்வார்கள், அவ்வளவு அழகாக இருப்பாராம், மற்றவர்கள் தம் உடம்பை பார்க்க கூடாது என்பதற்காக ஆடையால் உடம்பு முழுவதையும் மறைத்துக் கொள்வார்.* 


*வள்ளலார் உடம்பை மறைக்க பல காரணங்கள் அதில் இதுவும் ஒன்று.  பல பெண்கள் வள்ளலாரை அனுபவிக்க பலமுறை முயற்சி செய்துள்ளார்கள்.வள்ளலார் அவர்களை கடிந்ததும் இல்லை கலந்ததும் இல்லை என்பார்கள்.* 


வள்ளலார் பாடல் !


வைகிய நகரில் எழிலுடை மடவார் வலிந்து எனைக் கை பிடித்து இழுத்தும் 


சைகை வேறு  உரைத்தும் சரச வார்த்தைகளால் தனித்து எனைப் பலவிசை அறிந்தும் 


பொய் கரைந்தானை  புகன்று மேல் விழுந்தும் பொருள் முதலிய கொடுத்து இசைத்தும்


கை கலப் பறியேன் நடுங்கினேன் அவரைக் கடிந்ததும் இல்லை நீ அறிவாய்!


*என்னும் வள்ளலார்  பாடல் போல் என் வாழ்க்கையிலும் நிறைய நடந்துள்ளது என்பதை நினைக்கும் போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை எப்படி எல்லாம் காப்பாற்றி வந்துள்ளார் என்பதை நினைக்கும் போது மிகவும் அதிசயமாய் ஆச்சரியமாய் உள்ளது.*


*மேலும் உடம்பை கெடுக்கும் உயிரை அழிக்கும் உயிர்க்கொலையான மாமிசம் உண்பதும். அறிவை கெடுத்து தெளிவை மறைக்கும் குடிப்பழக்கமும். சுவாசத்தை கெடுக்கும் புகைப்பழக்கமும் செய்துகொண்டும், பொய்யான ஆன்மீக வேடம் தரித்துக்கொண்டும் பல தெய்வங்களை வணங்குவதும் வழிபட்டு வந்ததையும் இப்போதும் என்னை நான் நினைக்கும் போது, அப்போது எனக்கு அவ்வளவு அற்ப அறிவாக இருந்துள்ளது என்பதை நினைக்கத் தோன்றுகிறது.* 


*இப்போது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை ஏறாநிலைமிசை ஏற்றி வைத்து உள்ளார், ஏன் என்றால் ? எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது,ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப்போல் பெரிய ஆன்ம லாபத்தை பெறுவீர்கள்.இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? என்றால் எதுவும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதே உண்மையாகும்* 


*இவை எல்லாம் வள்ளலார் எழுதிய திருஅருட்பாவைப் படித்தபிறகு எனக்கு தோன்றிய அறிவு ஆற்றல் அருளால் கிடைத்த தெளிவான மாற்றங்களாகும்.* 


*வள்ளலார் பாடல்!*


மாயையாற் கலங்கி வருந்திய போதும்

வள்ளல் உன் தன்னையே மதித்துன்


சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்

தலைவவே றெண்ணிய துண்டோ


தூயபொற் பாதம் அறியநான் அறியேன்

துயர் இனிச் சிறிதும் இங் காற்றேன்


நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே

நன்றருள் புரிவதுன் கடனே.! 


*என்னும் பாடல் என்னை பொய்யில் இருந்து விலகி உண்மை அறிய மடை மாற்றம் செய்து மயக்கத்தை தெளிவித்து உண்மைக் கடவுளைத் தேட தூண்டியது இப்போது மிகவும் தெளிவாக உள்ளேன்.*


*ஒவ்வொரு மனித ஆன்மாக்களும் வள்ளலார் காட்டிய சாதி,சமயம்,மதம் கடந்த "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்" பொது நெறியான தனித்தன்மை வாய்ந்த மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருளை நன்கு உணர்ந்து பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே ஆன்ம லாபத்தையும் அருள் லாபத்தையும்   பெற்றுக் கொள்ள முடியும் இதுவே சத்திய உண்மையாகும்*


அடுத்து 1970 ஆம் ஆண்டு என் மனைவி கர்பமானால்...


தொடரும்....


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக!


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

திங்கள், 12 செப்டம்பர், 2022

வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழா !

 *வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழா !*


*வருகின்ற 05-10-2022 முதல்  05-10-2023 வரை 52 வாரங்கள் தமிழக அரசால் விழா எடுக்க ஆணை பிறப்பித்துள்ளது.* 


*நமது தமிழக முதல்வர் அவர்கள் வள்ளலார் மீது அளவில்லா பற்றுக் கொண்டு தனிப்பட்ட முறையில் பெரு முயற்சி எடுத்துள்ளார்கள் அதற்காக தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் , திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாகவும் அனைத்து சன்மார்க்க அன்பர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறோம்*

*சாதி சமயம் மதம் சாராத,உலகத்திற்கே ஒரு பொதுவான புதிய தனிநெறியான தனிக் கொள்கையான "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை" 1872 ஆம் ஆண்டு  வடலூர் தோற்றுவித்து உள்ளார்கள்.* 


*ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு.உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்  என்பதை உலக மக்கள் தெரிந்து கொள்வதற்காக  வடலூரில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத்" 1867 ஆம் ஆண்டு துவக்கி வைத்து இன்றுவரை ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கி வருகிறது என்பதும் உலகமே அறிந்த்தாகும்*


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்பதை அழுத்தமாக தெரிவித்து, இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் இடமாக வடலூரை தேர்வு செய்துள்ளார்,*


*சமயம் மதம் கடந்தது! சமயம் மதம் சாராதது!*


 *சமயங்கள் மதங்கள் சார்ந்த கடவுளின் பெயரால், கோவில் ஆலயம்,சர்ச், மசூதி போன்ற தெய்வ நிலையங்கள் எதுவும் (தோற்றுவிக்காமல்) வெளிப்படுத்தாமல், உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வழிபாட்டு முறையை, வடலூரில் "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை" யைத் தோற்றுவித்து கடவுள் ஒளியாக உள்ளார் என்னும் உண்மையை அகச் சான்றுடனும், புறச் சான்றுடனும் வெளிப்படுத்தி தோற்றுவித்து  உள்ளார் என்பது உலகமே அறிந்த உண்மையாகும்.*


*அதற்காக வடலூர் மக்கள் 80 காணி நிலமும் இடமும் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இலவசமாக வழங்கி உள்ளார்கள்.* 


*விழாக்குழு உறுப்பினர்கள்!*


*தமிழக அரசால் நியமிக்கப்பட்ட  வள்ளலார் 200  விழாவின் நிர்வாக குழு உறுப்பினர்கள் சமயம் மதத்தை சார்ந்தவர்களாக உள்ளார்கள் அவர்களுக்கு வள்ளலாரின் அடிப்படை கொள்கைகள் என்னவென்று தெரியாமல். வள்ளலார் உருவப்படத்திற்கு சமயச் சின்னமான விபூதி வைக்க வேண்டும்  என்று குழப்பத்தை உண்டாக்கி வருவதாக கேள்விபட்ட சுத்த சன்மார்க்க அன்பர்கள் மிகவும் வேதனையும் வருத்தமும் கொண்டுள்ளார்கள்.* 


*வள்ளலார் படம்!*


*வள்ளலார் ஒளி தேகம் பெற்றவர், முத்தேக சித்தி பெற்றவர் , மரணத்தை வென்றவர்,  வள்ளலாருக்கு மனித உருவம் கிடையாது, வள்ளலாரை பலமுறை போட்டோ எடுத்தும் போட்டோவில் விழாதவர்.*


*பன்ருட்டி குயவனார் ஒருவர் மண்ணால் செய்த வள்ளலார் உருவத்தை  வள்ளலார் இடம் கொடுத்த போது, பொன்னால் ஆன உடம்பை மண்ணாக்கி விட்டீர்களே என்று கீழே போட்டு உடைத்தவர் வள்ளலார். இப்போதுள்ள வள்ளலார் படங்கள் யாவும் உண்மையானது அல்ல, கற்பனையால்  வரைந்த உருவ படங்கள் மற்றும் போட்டாக்கள். என்பதை மக்களும் தமிழக அரசும் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*படமே வேண்டாம் என்ற வள்ளலாருக்கு படம் வைத்து வணங்குவது வழிபடுவது மிகவும் வேதனைக்குறியதாகும்.மேலும் வள்ளலார் படத்திற்கு சமயச்சின்னம்  அனிவது அதைவிட வேதனைக்குறியதாகும்*


*இவற்றை அறிந்து உணர்ந்து தயவு செய்து தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். சுத்த சன்மார்க்கத்தில் ஈடுபாடு கொண்ட சன்மார்க்க அன்பர்களையும் .வடலூரில் உள்ள முக்கிய சன்மார்க்க அன்பர்களையும் விழாக்குழுவில் உறுப்பினர்களாக சேர்த்து, வள்ளலார் 200 விழாக்கள் சிறப்புடன்  நடைபெருவதற்கு ஆவண செய்ய வேணுமாய் ஆதரவு அளிக்க வேண்டும்* 


*ApJ அருள் என்கின்ற இளங்கோ !*


*எனது இனிய ஆன்மநேய சகோதரர் திரு ApJ அருள் என்கின்ற இளங்கோ அவர்கள் நீதி மன்றத்தின் வாயிலாக சென்று வள்ளலார் சாதி சமயம் மதம் கடந்தவர்,சாதி சமயம் மதம்  சாராதவர் என்பதை சட்டத்தின் வாயிலாக நீதிமன்றம் சென்று உறுதிப் படுத்தி அதற்குண்டான நீதி மன்றத்தின் தீர்ப்பில் வெற்றியும் கண்டுள்ளார்* 


*அதற்குண்டான ஆதாரத்தையும்.மேலும் வள்ளலாரின் கொள்கைகளையும் திருஅருட்பாவில் வள்ளலார் இறுதியாக ஆறாம் திருமுறையில் எழுதிய பாடல்களையும் உரைநடைப்பகுதிகளில் எழுதி வைத்துள்ள  சான்றுகளையும் நீதி மன்ற தீர்ப்புகளையும்.தமிழக அரசின் முதல்வர் அவர்களுக்கும் .முதன்மை அதிகாரிகளுக்கும்,அறநிலையத்துறை அமைச்சர் அவர்களுக்கும் தெரியப்படுத்தி உள்ளார்.*


அதன் நகல் இத்துடன் இணைத்துள்ளோம்.


*மேலும் சன்மார்க்க அன்பர்களின் அனைத்து விதமான சுத்த சன்மார்க்க ஆதரவையும் அளித்து உதவி செய்ய வேண்டுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்., நமது வள்ளல்பெருமான் சொல்லியவாறு, சமயம் மதம் சாராத புதிய சன்மார்க்க உலகத்தை படைக்க ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் ஒத்துழைப்பைத் தருவோம் என உறுதி கொள்ளுமாறு மிகவும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உணர்வுடன் பங்கு கொள்வோம். இதன் நகல் எடுத்து தமிழக அரசுக்கு தெரியப்படுத்துவோம்*


*உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்க சுகநிலைப் பெறுக* 

*உத்தமன் ஆகுக ஓங்குக!*


*சாதி,சமயம்,மதம் அற்ற சுத்த சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகும் வழங்கும் இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை என்பது வள்ளலாரின்அருள் வாக்காகும்.*


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896.*

புதன், 7 செப்டம்பர், 2022

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்!

 *சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்!*


*வள்ளல்பெருமான் உலகிற்கு காட்டிய போதித்த புதிய மார்க்கமே "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க ஞானாசாரம்" என்னும் கொள்கையாகும், இவை   சாதி சமயம் மதங்கள் சார்ந்த கொள்கை அல்ல, தனித்தன்மை வாய்ந்த புதிய பொது நோக்கமுள்ள கொள்கையாகும்*


*சுத்த சன்மார்க்க சாதனம்!*


*சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய சாதனம் என்னவென்றால்; எல்லா ஜீவர் களிடத்தில் தயவும்,ஆண்டவரிடத்தில் அன்புமே முக்கியமானவையாகும்.*


*உதாரணம் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது "கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக",மற்று எல்லாம் மருள் நெறி எனவே எனக்கு நீ உரைத்த வண்ணமே பெற்று இருக்கின்றேன் என்கிறார் வள்ளலார்* 


மேலும் சொல்லுகிறார் !


*சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். எதாவது ஓர் சாதனம் சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால் காலம் தாழ்த்தாது எல்லா உயிர்களையும் தன் உயிரைப்போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகின்றவன்! அவனே ஆண்டவனும் ஆவான்* 


*என்பதை உணர்ந்து அறிந்து தெளிந்து, ஒவ்வொரு சன்மார்க்க அன்பர்களும் பின்பற்ற வேண்டும்.* 


*சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் காட்டிய போதித்த கற்பனை கதைகளில் வரும், மூட நம்பிக்கையில் இருந்து விலகி, அறிவு சார்ந்த சுத்த சன்மார்க்கத்தின் ஜீவகாருண்ய ஒழுக்கமான இந்திரிய,கரண,ஜீவ, ஆன்ம ஒழுக்கங்களான நான்கு ஒழுக்கங்களை இடைவிடாது கடைபிடிக்க வேண்டும்.இந்திரிய,கரண இரண்டு ஒழுக்கங்களை  முழுமையாக கடைபிடித்தாலே ஜீவ, ஆன்ம ஒழுக்கத்தை ஆண்டவர் இலவசமாக லேசிலே வழங்கி விடுவார்.* 


*சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை!*


*ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.அப்படிச் செய்வதால் அதில் ஒருவனுக்கு வேண்டியது எல்லாம் அடங்கி விடுகின்றன.*


*பிரார்த்தனை செய்ய வேண்டுமானால் இப்படித்தான் செய்ய வேண்டும் என்று பாடல் மூலமாக தெரிவிக்கின்றார்.*


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி *அருட் 

ஜோதி அளித்து* என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை ஓதி முடியாது *என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே !*


*என்பதே என் பிரார்த்தனை ஆகும் என்கிறார் நமது அருள்தந்தை வள்ளல்பெருமான் அவர்கள்* *எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !*

*கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! என்பதே அருள் வாக்காகும்*


*மேலும் வள்ளலார் சொல்லுகின்றார்*


*சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்!*


*ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றும் அழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.*


எப்படியெனில்:?


*கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! ஆகையால், நம்மையும் சர்வ ஜீவ தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் (ஆன்மாவை) வருவித்தார்.*


*ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாத கேள்வி முதலிய மகா அற்புதங்களான இறந்தார் எழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார்* 


*எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேடம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேடமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது.* 


*ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும் என்கிறார்.* 


*ஆதலால் பக்தி என்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம்,மன மகிழ்ச்சியை உண்டு பன்னும். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம்,ஆன்ம மகிழ்ச்சியை உண்டு பன்னும்.* 


*மனதில் பதிவாகியது நிலை பெறாது விலகிவிடும் ஆண்டவரிடம் செல்லாது. ஆன்மாவில் பதிவாகியது விலகாமல்  நிலைத்து நிற்கும் ஆண்டவரிடம் சென்றடையும்.*


*எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே ஈசுவர பக்தியாகும்.*


*அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது  ஜீவன்,ஆன்மாவை தூய்மை படுத்துவது அன்பு, பரோபகாரம் தயவு,கருணை, அருள் என்பவைகளாகும்* 


*இவற்றில் எவை  முக்கியமானது என்பதை மனிதர்கள் நினைந்து உணர்ந்து கொள்ள வேண்டும்*

 *ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும்.*

 *தத்துவ வொழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றி ஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.*  


*தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள்.*


*அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள்.*


 *ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவ சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுள் அளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.!* 


*மேலே கண்ட சுத்த சன்மார்க் சத்திய ஞானாசாரம் என்னும் உண்மையை அறிந்து வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெற்று, ஊன  உடம்பை ஒளி உடம்பாகிய அருள் தேகமாக மாற்றி  மரணத்தை வென்று,என்றும் எதனாலும், எவராலும் அழியாத அழிக்க முடியாத அருள் தேகத்தை பெற்று வாழ்வதே பேரின்ப சித்தி பெருவாழ்வு என்பதாகும், அதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக வாழ்வாங்கு வாழ்வதாகும்.*


*வள்ளலார் பாடல்!*


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே

கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர்

எந் தந்தை அருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.! 


*என்னும் பாடலில் தான்பெற்ற அனுபவத்தை தெளிவாக வள்ளலார் வெளிப்படுத்துகின்றார்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழா !

 *வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழா !* 


*05-10-1823 ஆம்நாள் இவ்வுலகத்திற்கு இறைவனால் வருவிக்க உற்றவர் வள்ளல்பெருமான் ஆவார், மனித தேகத்தில் மக்களுக்காக 51 ஆண்டுகள் காட்சி கொடுத்துள்ளார்.* 


*சித்திபெற்றது !*


*இயற்கை உண்மை, இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் ஆகிய மூன்றும் ஒருங்கே பொருந்திய எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும்பதியாகிய அற்புதக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு,தனிப்பெருங்கருணை யுடன் பூரண அருளைப் பெற்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் சாகாவரமும், என்றும் அழியாத நித்திய தேகமாகிய அருள் ஒளி ஒலி  தேகத்தை பெற்று ஸ்ரீமுக ஆண்டு தைத்திங்கள் 19 ஆம்நாள் 30-01-1874 ஆம்தேதி வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் உள்ள திருவறையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து அருட்பெருஞ்ஜோதியாக தன்னை மாற்றிக் கொண்டவர் வள்ளல்பெருமான் அவர்கள் .* 


*என்றும் ஐந்தொழில் செய்யும் வல்லபத்தை பெற்ற வள்ளல்பெருமான் அவர்களுக்கு 200 ஆம் ஆண்டு வருவிக்க உற்ற விழாவாகவும்! 156 ஆவது தருமச்சாலை துவக்க விழாவாகவும்,152 ஆவது ஜோதி தரிசனம் விழாவாகவும் என முப்பெரும் விழாவாகவும் வருகின்ற 05-10-2023 ஆம்நாள் அக்டோபர்  மாதம் தொடங்கி 05-10-2023 ஆண்டு வரை 52 வாரங்கள் தமிழக அரசு ஆணைபடி இந்து சமய அறநிலையத்துறை சார்பாக முப்பெரும் விழாவாக எடுக்க இருக்கிறார்கள்.  அதற்குண்டான செயல் திட்டங்களை வகுத்திட, அறிவு சார்ந்த அருள் சார்ந்த,நீண்டகால சுத்த சன்மார்க்க அனுபவம் பெற்றவர்களான 14 சான்றோர்களை உறுப்பினர்களாக நியமித்து இருக்கிறார்கள்* அவர்களை பாராட்டுகிறோம்.


*சத்திய தருமச்சாலை !*


*இயற்கை உண்மையான இறைவனை தொடர்பு கொள்ளவும் அருளைப்பெறவும் மரணத்தை வெல்லவும், உண்மையான இரண்டு நேர் வழிகளை வள்ளலார் காட்டி உள்ளார் அவை!.1,பரோபகாரம் 2,சத்விசாரம் என்பதாகும்.* 


*அவற்றில் ஒன்றுதான் வடலூரில் 23-05-1867 ஆம் தேதி வைகாசி 11 ஆம்நாள் சத்திய தருமச்சாலையை நிறுவினார், அன்றிலிருந்து இன்றுவரை அவர் ஏற்றிவைத்த அடுப்பு அணையாமல் எரிந்து கொண்டுள்ளது ஏழைகளின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு வருகிறது.* 


*வள்ளல் பெருமானின் கொள்கையில் தலையாயது, பசிப்பிணியை போக்கும் ஜீவகாருண்யமே முதன்மையானதாகும்*


*எனவேதான் ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்றார்,ஜீவகாருண்யத்தை வள்ளலார் பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம் கொலை என ஏழுவகையாக பிரித்தார்.* *அதில் மிகவும் முக்கிய மானது. பசித்த ஏழைகளுக்கு உணவு வழங்கி பசிதவிர்த்தல்,(அற்றார் அழிபசி தீர்த்தல்) கொலையினால் துன்பப்படும் உயிர்களை காப்பாற்றும்,கொலை செய்யாமை புலால் உண்ணாமை, இவை இரண்டையும் உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்தை பெற்ற அனைவரும் கடைபிடிக்க வேண்டுவது அவசியமாகும் என்றார்.* 


*எனவேதான் ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றும்,! உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்! மிகவும் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்* 


*சத்விசாரம் !* 


*சத்விசாரம் என்பது கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ! என்ற கடவுளின் உண்மையைத் தெரிந்து கொள்வது, அக் கடவுளிடம்  எவ்வாறு தொடர்பு கொண்டு அருளைப் பெறுவது மரணத்தை வெல்வது என்பதை தெளிவாக அறிந்து கொள்வதே "சத்விசாரம்" என்பதாகும்*


*சத்தியஞான சபை !*


*இயற்கை உண்மை,*

*இயற்கை விளக்கம்* *இயற்கை இன்பம் போன்ற மூன்றும் ஒன்றான கடவுளே அருட்பெருஞ்ஜோதியர் என்பதாகும். அந்த உண்மையை உலக மக்கள் யாவரும் அறிந்து,புரிந்து,தெரிந்து கொள்ளவே,25-01-1872 ஆம் ஆண்டு பிரசோற்பத்தி,தை 13, ஆம்நாள் வியாழக்கிழமை பூசநாளில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளல்பெருமான் அவர்கள் அமைத்துள்ளார்கள்*


*சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனம் வள்ளல்பெருமான் காட்டினாரா ? காட்டச் சொன்னாரா ? என்ற கேள்விக்கு இன்றுவரை எந்த விதமான ஆதாரமும் இல்லை*


*அதன் விளக்கம்,!*


*கடவுளானவர் அருட்பெருஞ்ஜோதி என்ற ஒளி வடிவில் உள்ளார், அவர் தனிப்பெருங்கருணை யாக உள்ளார்  என்ற உண்மையை கண்ட வள்ளல்பெருமான், எண்கோண வடிவில் எட்டு கதவுகளை அமைத்து 16 ஜன்னல்களை வைத்து "சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையைத்" தோற்றுவித்துள்ளார்.*


*ஞானசபையை இயற்கை விளக்கம் என்பார் வள்ளலார். உயர்ந்த அறிவுபெற்ற மனித தேகம் எடுத்துள்ள ஒவ்வொருவரும் அகத்தே  காணுதற்குரிய கடவுள் அனுபவத்தை, புறத்தே பாவணையாக காட்டுவதே சத்திய ஞானசபையாகும் என்பார்.*


*நம் சிரநடுவில் இயங்கிக் கொண்டு இருக்கும் ஆன்மாவே சத்திய ஞானசபையாகும்.அவற்றை அறியாமை அஞ்ஞானம் என்னும் வெவ்வேறு ஏழு வண்ணங்களாகிய திரைகளும் தத்துவ மாயா படலங்களே திரைகள் என்பார்.*


*நம்மிடமுள்ள அஞ்ஞானமாகிய திரைகள் நீக்கப் பெற்றால், ஆன்ம ஒளியாகிய அருட்பெருஞ்ஜோதி யைத் தரிசிக்கலாம் என்பதே வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்க கொள்கை களாகும்.*


 *அகத்தே தாம் பெற்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனுபவத்தையே புறத்தில் சத்திய ஞானசபையாகக் கட்டி காட்டியுள்ளார்,,"திருந்தும் என் உள்ளத் திருக்கோயில் ஞான சித்திபுரம் எனச் சத்தியம் கண்டேன்",என்றும் "சத்திய ஞான சபை என்னுள் கண்டனன் சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்" என்பது வள்ளல்பெருமான் திருவாக்காகும். இவ்வாறு அகத்தில் கண்ட உண்மையை புறத்தில் காட்டியதே சத்திய ஞானசபையாகும் வள்ளல்பெருமான் போல் நாமும் அகத்தில் காண்பதே சத்விசாரம் என்பதாகும்* 


*சன்மார்க்க கொடிக்கட்டி பேருபதேசம் செய்தது !*


*மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகை முன்பு  22-10-1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 ஆம்நாள் செவ்வாய்க்கிழமை காலை 8 எட்டு மணிக்கு முதன் முதலாக சன்மார்க்கத்திற்கு என கொடிக்கட்டி நீண்ட உபதேசம்  ஒன்றையும் அருள் வாக்கின்படி செய்து அருளினார்கள்.அதற்கு மகாஉபதேசம் என்று சொல்லப்படுகின்றது.பேருபதேசத்தை ஒவ்வொருவரும் பலமுறை படித்தால்தான்வள்ளலார் சொல்லியுள்ள உண்மை என்னவென்று தெரியவரும்*


அக்கொடியின் அகம் அனுபவ  விளக்கத்தை வள்ளலார் தெரியப்படுத்துகிறார்.


*இப்போது தான் சன்மார்க்க கொடி கட்டிக்கொண்டது.அக்கொடி உண்மையில் யாதெனில், நமது நாபிமுதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கின்றது; அந்த நாடி நுனியில் புருவமத்தியில் உட்புறத்தில் ஓர் சவ்வு தொங்குகின்றது; அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம் மேற்புறம் மஞ்சள் வர்ணம், அச் சவ்வின் கீழ்   ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது;*  (ஆன்மாவின் அடிப்புறம் மேற்புறம் என்றால் என்ன? என்பதை  முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.)


*இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும். இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமாக கொடி கட்டி கட்டியது இனி எல்லவர்க்கும் நல்ல அனுபவம் அறிவின் கண் தோன்றும் என்கிறார். எத்தனை சன்மார்க்க அன்பர்கள் தங்கள் அக அனுபவத்தை அறிவின் கண்கொண்டு கண்டு தெரிந்து உணர்ந்து இருக்கிறீர்கள் என்பதை. சுயபரிசோதனை செய்து விசாரம் செய்ய வேண்டும்.*


*ஆதலால் இத்தருணம் இக்காலமே சன்மார்க்க காலம்."சாகாதவனே சன்மார்க்கி" சாகிறவன் சன்மார்க்கி எனச் சொல்லத் தகுதியுடையவன் அல்ல, என்பதை சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்* 


*ஜீவகாருண்யஒழுக்கத்தையும், பரோபகாரத்தையும், கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! என்ற உண்மையும்,அவற்றை அறிந்து கொள்ளும் சத்விசாரத்தையும், சாகாக்கல்வியையும், அருள் பெறும் வழியையும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையையும் மிகத் தெளிவாக போதித்த வள்ளல்பெருமான் அவர்களுக்கு நாம் என்ன கைமாறு செய்ய முடியும், அவர் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றவா முடியும். சாதி சமய மதவாதிகள் போல் வருடம் வருடம் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள்,சடங்குகள் சம்ரதாயங்கள் செய்து விழா மட்டும்தான் எடுக்க முடியும்.அதையாவது செய்து பெருமை கொள்வோம் நமக்குத் தெரிந்தது அவ்வளவுதான்*


வள்ளலார் 200 ஆம் ஆண்டு விழாவிற்கு தயாராக இருங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள்.


*வள்ளலார் பாடல்!*


*பெற்றேன் என்றும் இறவாமை* பேதம் தவிர்ந்தே இறைவன் எனை


உற்றே கலந்தான் 

*நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம்*


எற்றே அடியேன் செய்ததவம் *யாரே புரிந்தார்* இன்னமுதம்


துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே.!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வியாழன், 1 செப்டம்பர், 2022

கடவுளைக் கண்டேன் ! தொடர்ச்சி 6

 *கடவுளைக் கண்டேன்!*


தொடர்ச்சி 6.. 


*வள்ளலார் பாடல்!*


அருளரசை அருட்குருவை அருட்பெருஞ் சோதியை என்

அம்மையை என் அப்பனை என் ஆண்டவனை அமுதைத்


தெருளுறும் என் உயிரை என்றன் உயிர்க்குயிரை எல்லாம்

செய்யவல்ல தனித்தலைமைச் சித்தசிகா மணியை


மருவுபெரு வாழ்வை எல்லா வாழ்வும் எனக் களித்த

வாழ்முதலை மருந்தினை மா மணியை என்கண் மணியைக்


கருணைநடம் புரிகின்ற கனகசபா பதியைக்

கண்டுகொண்டேன் கனிந்துகொண்டேன் கலந்துகொண்டேன் களித்தே.!


மேலே கண்ட வள்ளலார் பாடல் எமக்கு அனுபவ ரீதியாக நினைவூட்டுகின்றது.


*அன்பர்கள் வேண்டுகோளுக்கு இணங்க வரலாறு தொடர்கிறது,*


*காணும் பொங்கல் அன்று சென்னையில் இருந்து ஈரோட்டில் உள்ள பூந்துறை ரோடு பழனி செல்லும் சாலையில் உள்ளது அசோகபுரம் என்னும் ஊர்  என் மாமனார் வீடு, விடியற்காலை 5-30 மணிக்கு திடீர் என்று வீட்டின் உள்ளே சென்றேன்.*


மனைவியின் சோகம் கலந்த முகம்!


*மனைவியையும் குழந்தையும் அம்மா வீட்டிற்கு அனுப்பிவிட்டு கணவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியாமல் சோகமான வாடிய முகத்தோடு தன் குழந்தையை அனைத்து படுத்துக்கொண்டு இருந்த காட்சியைப் பார்த்து கண்ணீர் வடிய கதறி அழுதுவிட்டேன்.மழைமுகம் கண்ட பயிர்போல் என் மனைவி அமுதாவின் முகத்தில் மகிழ்ச்சி கலந்த புன்னகை, பேச்சுவராமல் தடுமாறிய வாயின் ஆனந்தம், மலர்ந்த விரிந்த பூ போல் முகம், காணாததை கண்ட பூரிப்பு,மவுன  துடிப்புடன் எழுந்து அனைத்துக்கொண்டு ஆனந்த கண்ணீர் வடித்து அனைத்துக் கொண்டாள் என்மனைவி அமுதா. சிறிதுநேரம் இனம்புரியாத மவுனம் அந்த மவுனத்தில் எண்ண அலைகளின் ஆற்றல், எழுதமுடியாத வரிகள் "அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்!*" 


*திருமணம் முடிந்த நாளில் இருந்து இன்றுவரை என் மனைவி என்னை அன்போடு, ஆசையோடு, ஆர்வத்தோடு காதலித்து வருகிறாள். என் மனைவி எனக்கு கிடைத்த விலை மதிப்பில்லா பொக்கிஷம்.*


வீடே ஆனந்த அமைதி!


*வீட்டில் உள்ளவர்கள் மாமனார் மாமியார் மற்றும் மனைவியின் அண்ணன்கள் தங்கைகள் அனைவரும் எழுந்து அமர்ந்து மலர்ந்த முகங்களோடு அமர்ந்து மவுனம் காத்தனர். நான் வீட்டிற்கு சென்றதும் சோகவம்சம் ஆனந்த வம்சமானது*


நடந்ததை மனைவியிடம் தெரிவித்தல்!  


*சென்னை சென்ற விபரங்களையும் தையல் தொழில் கற்றுக்கொண்ட விபரங்கள் யாவையும் ஓர்அளவு சொல்லிவிட்டு,இனி நாம் நம் ஊருக்கு போக வேண்டாம் ஈரோட்டிலே ஒரு தையல் கடை வைத்து தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்ற முடிவு செய்தோம்* 


*நான் சொல்லிய விபரங்கள் அனைத்தையும் என்மாமனார் மாமியார் இடம் என் மனைவி தெளிவாக சொல்லி விட்டாள்.*


ஊரில் உள்ள நிலம் விவசாயம் கடைஎல்லாம் என்னாவது என்று என்மாமனார் மாமியார் கேட்டுள்ளார்கள், அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என்றும் சொல்லிவிட்டார்.நாம் சொந்த கடைவைத்து சொந்த காலில் நிற்போம், உழைத்து முன்னேறுவோம் என்று திட்டவட்டமாக சொல்லிவிட்டார் என்பதை அவள் அப்பா அம்மாவிடம் தெரிவித்து விட்டாள்


*டைலர் கடை வைக்க ஆயுத்தம்!*


*என் மனைவியின் அண்ணன், எனது மைத்துனர் நடராஜ் அவர்களுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து அதற்கு வேண்டிய வேலைகள் நடந்து கொண்டு உள்ளன. திருமணம் முடிந்ததும்  தையல் கடை வைத்துக் கொள்ளலாம் அதுவரை பொறுமையாக இருக்கச் சொன்னார் எனது மாமனார்* 


*உன் அப்பாவிடம் உதவியோ பணமோ கேட்கவில்லை கேட்கவும் வேண்டாம், உன் அண்ணன் திருமணத்திற்குள் நாம் கடை வைத்து நம் கடையில்தான் திருமணத்திற்கு வேண்டிய துணி தைத்துக் கொடுக்க வேண்டும், அதற்குள் நாம் எப்படியாவது தையற்கடை திறப்புவிழா செய்தே ஆகவேண்டும் என்று திட்டவட்டமாக என் மனைவியிடம் சொல்லிவிட்டேன்,அவளும் தடையில்லாமல் ஒப்புக்கொண்டார்*


*கையில் பணம் இல்லை!*


*என் மனைவி கழுத்தில் பத்து பவுன் சையின் போட்டு இருந்தார்( அப்போது ஒரு பவுன் விலை 150 ரூபாய் )அவற்றை பெற்று ஈரோட்டில்  "ஜானகிஆச்சு'" என்ற நகை அடகு கடையில் வைத்து ஆயிரம் ரூபாய் கிடைத்தது, ஈரோட்டில் முக்கியமான பெயர்பெற்ற பிரப்ரோட்டில் உள்ள ஒரு கடைக்கு அட்வான்ஸ் ஆயிரம் கொடுத்து கடைசாவியைப் பெற்றுக் கொண்டேன்.* 


*மேலும் தையல் மிஷின்கள் மற்றும் கடைக்கு வேண்டிய கட்டிங்டேபிள் ஷோரூமுக்கு வேண்டிய பொருட்கள் வாங்குவதற்கு பணம் வேண்டும். கடைக்கு வேண்டிய பொருட்கள் வாங்குவதற்கு பணம் இல்லாமல் தடுமாறுவதை அறிந்த என் மனைவியின் பெரியப்பாவின் மருமகன் அதாவது எனது பெரிய மாமனார் மருமகன் காலத்தைக் கருதி தேவையைக் கருதி எவற்றையும் எதிர்பார்க்காமல்  இரண்டாயிரம் ரூபாய் கொடுத்து உதவி செய்தார். அவர் விவசாயம் செய்பவர். இன்றுவரை அவர் செய்த உதவியை  நன்றி உணர்வோடு எண்ணி பார்க்கிறேன், மறக்கவே முடியாது நினைவுகள்* 


*கடையின் பெயர் "ஸ்பென்ஸர்ஸ் டையலரிங்"*


*"ஸ்பென்ஸர்ஸ்" என்ற தலைப்பில் கடைக்குப் பெயர் வைத்து ஷோரூம் அமைத்து பத்திரிகை அடித்து,  சிறப்பான முறையில் முக்கியமானவர்களை வரவழைத்து கடை திறப்புவிழாசெய்தோம். ஈரோட்டில் வித்தியாசமான,புதுமையான சிறப்பானதொரு தையற்கடையை ஈரோடு மக்கள் விரும்பும் அளவிற்கு புதிய கோணத்தில்  திறப்புவிழா செய்து தொழிலை ஆரம்பித்துவிட்டேன்.* 


*பெண்கள் ஆண்கள் என வாடிக்கையாளர்கள் அதிகமாக வருகை புரிந்தனர். தையற்தொழிலில் ஒரு புதுமையைப் புகுத்தினேன்.*


*வாடிக்கையாளர்கள் துணி தைக்க கொடுத்துவிட்டு  அலைய வேண்டியதில்லை*


*ஆர்டர் டேட், டிரைய்லர் டேட்,டெலவரி டேட் அதாவது துணி கொடுக்கும் நாள்,சரிபார்க்கும் நாள், வாங்கும் நாள்,அதற்குண்டான பணம்  போன்ற விபரங்களுடன் பில் தயார் செய்து எழுதிக் கொடுத்து வாடிக்கையாளர்களின் மனப்போக்கை மாற்றி தையற் தொழிலின் சிறப்பை வெளிப்படுத்தினேன்,வாடிக்கையாளர்களும் அளவுகடந்த மனம் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட நாளில்  வருகை புரிந்து தைத்த துணிகளை பெற்று சென்றனர்.*


*தையக்காரன் என்ற வார்த்தையை டைலர் என்ற வார்த்தையை உபயோகிக்க செய்தேன்.*


*ஈரோடு மாவட்டத்தில் மிகச்சிறந்த தையல் ஷோரூம் "ஸ்பென்ஸர்ஸ்" தான் என்ற பெயர் பெற்றது. மாவட்டத்தின் உயர் அதிகாரிகளும், கல்லூரி மாணவ மாணவிகளும்படித்தவர்கள் படிக்காதவர்கள,மற்றும் விலைஉயர்ந்த துணிகள் வாங்கும் வசதியானவர்களும் எங்கள் கடைக்கு குவியத் தொடங்கினார்கள்.* 


*எங்கள் கடையில் துணி தைப்பதற்கு மற்ற கடைகளைவிட  அதிகமான பணம் வாங்குவோம் என்பது அனைவருக்கும் தெரியும் (ஸ்பென்ஸர்ஸ்ரேட் என்று சொல்வார்கள்)  அந்த அளவிற்கு சரியான முறையில் அளவு எடுத்து அவரவர்கள் உடம்பிற்குத் தகுந்தவாறு  தைத்து தரப்படும்*


*என்பெயர் கதிர்வேல் என்பது எவருக்கும் தெரியாது, ஸ்பென்ஸர் என்ற பெயரே எமக்கு நிரந்தரமாயிற்று*


*சொல்லியவாறு செய்தேன்!*


*என் மைத்துனர் திருமணத்திற்கு முன்பே தையல் கடையை ஆரம்பித்து, எனது மைத்துனர் திருமணத்திற்கு வேண்டிய துணைகளை எங்கள் கடையிலே தைத்து கொடுத்து திருமணம் நடைபெற்றது*


*எதிலும் விடாமுயற்சி, தன்னம்பிக்கை, நேர்மை, ஒழுக்கம், இரக்ககுணம்  உழைப்பு ,தொழிலில் பற்றுதல்,செய்யும் தொழிலே தெய்வம் என்ற பற்றுதல் இருந்தால் போதும் எந்தவொரு மனிதனும்,எந்த தொழிலாக இருந்தாலும் எதிர்ப்பு இல்லாத, தடையில்லாத முன்னேற்றம் அடையலாம், என்றும் மனநிறைவோடு வாழலாம்.*


*எல்லாம் வல்ல நமது அருட் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் துணையாக இருப்பார் என்பது சத்தியம்*


*வள்ளலார் பாடல்!*


*அருட்சோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்*

அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்


பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்

போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்


*இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்*

*எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்*


தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்

சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.! 


*என்னும் பாடல் வரிகளுக்கு ஏற்ப அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், எனக்கேத் தெரியாமல் என்னுள் அமர்ந்து என்னை இயக்கிக் கொண்டே உள்ளார் என்பதை இப்போதும் உணர்ந்து மகிழ்ச்சி அடைகிறேன்.*


தொடரும்..


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*