செவ்வாய், 31 ஜனவரி, 2017

திரு அண்ணாதுரை ISO. அவர்கள் கேட்டு உள்ள கேள்விகள்!

திரு அண்ணாதுரை ISO. அவர்கள் கேட்டு உள்ள கேள்விகள்!

சன்மார்க்கிகள் என்று சொல்லுகிறோம்."சாகாதவனே சன்மார்க்கி"' என்று வள்ளலார் சொல்லுகிறார்.
.அப்போது நாம் எல்லாம் சன்மார்க்கிகள் இல்லையா ? சன்மார்க்கத்தில் உள்ளவர்கள் எல்லாம் மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள்.ஏன் இந்த நிலை சன்மார்க்கத்தில் உள்ளது.கேட்பவர்களுக்கு பதில் சொல்ல முடியவில்லை. என்றும்.இதற்கு சரியான விளக்கம் தரவேண்டும் என்று கேட்டு உள்ளார்.

வள்ளலார் நமக்கு "அருள் விளக்க மாலை''என்னும் தலைப்பில் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

தயை உடையார் எல்லாரும் சமரச  சன்மார்க்கம் சார்ந்தவர்கள் என்றும்.

அருள் உடையார் எல்லாரும் சமரச சன்மார்க்கம் அடைந்தவர்கள் என்றும் விளக்கம் தந்து உள்ளார்.

நாமும் நமக்கு முன்னாடி இருந்தவர்களும் .தயவுடன் சன்மார்க்கத்தில் சார்ந்து  ஜீவகாருண்யம் செய்து வருகிறோமேத் தவிர.  எவரும் அருளைப் பெற முயற்சி செய்ய வில்லை.அருளைப்பெற்று சாகாமல் இருந்தால் மட்டுமே முழுமையான சன்மார்க்கி என்பதை "சாகாதவனே சன்மார்க்கி'' என்று வள்ளலார் தெளிவாக சொல்லி உள்ளார்.

வள்ளலார் சொல்லிய உண்மையான சுத்த சன்மார்க்க பாதையை பின் பற்றாமல் அவரவர்களுக்கு தெரிந்ததை பின் பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளதால்.அருளைப் பெற முடியாமலும்.மரணத்தை வெல்ல முடியாமலும் மடிந்து கொண்டே உள்ளார்கள்.

மேலும் வள்ளலார் சொல்லி உள்ளபடி நாம் வாழ்கிறோமா என்பதை சிந்திக்க வேண்டும்.வள்ளலார் சொல்லி உள்ளதை பாருங்கள்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.என்று தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.

மேலே சொல்லியவாறு எந்த சன்மார்க்கியாவது பின் பற்றி வாழ்ந்து உள்ளார்களா ? வள்ளலார் சொல்லியபடி வாழாததால்  மரணம் அடைந்து கொண்டே உள்ளார்கள்.

* இவ்விடம் என்பது மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தைக் குறிக்கும். வள்ளலார் சித்திவளாகத்தில். அங்கிருந்த மக்களுக்கு தெளிவாக  உபதேசம்.செய்து உள்ளார்.

அப்போது உள்ளவர்களும் கேடகவில்லை.இப்போது உள்ளவர்களும் வள்ளலார் சொல்லிய வண்ணம் பின் பற்றவில்லை.எப்படி மரணத்தை வெல்ல முடியும். சிந்திக்க வேண்டும்.

ஆனால் இப்போது சன்மார்க்கத்திற்கு புதியதாக வருபவர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.சாதிசமய மத ஆச்சாரங்களை தூக்கி எறிபவர்களாக இருக்கின்றார்கள்.ஒரேகடவுள் என்ற பூரண நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.அந்த கடவுள் அருட்பெரும்ஜோதிதான் என்ற உண்மையை ஏற்று உறுதியுடன் இருக்கிறார்கள்.

இனி சுத்த சன்மார்க்க காலம். இனிமேல் சுத்த சன்மார்க்கிகள் மரணத்தை வெல்லும் வாய்ப்புக்கள் நிறைய உள்ளது.

சன்மார்க்கிகள்.ஜீவகாருண்யத்தில் தெளிவாக இருக்கின்றார்கள்.சத்விசாரத்தில் தெளிவு இல்லாமல் இருக்கின்றார்கள்.

சத்விசாரம் என்பது தன்னையும்.தலைவனையும் அறிதல்.அதாவது ஆன்மாவையும்.அருட்பெருஞ்ஜோதியையும் தொடர்பு கொள்ளும் தந்திரத்தை அறிவாலே அறிந்து கொண்டால் .அருள் கிடைக்கும் வழி தெரிந்து கொள்ளலாம்.மரணத்தையும் வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்ந்து மற்றவர்களுக்கும் வழி காட்டலாம்.

எது எப்படியோ.இந்த பிறவியில் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க சங்கத்தில் சார்ந்து வாழ்வதற்கே கோடி புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.நாம் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள்.அருளைப் பெருவதற்கு முயற்சி செய்து அருளைப்பெற்று .சன்மார்க்கத்தை அடைந்து காட்டுவோம்.

எக்காரணத்தைக் கொண்டும் நம்மை. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கைவிட மாட்டார்.

முயற்சி செய்து கொண்டே இருப்போம்.நமக்கு நல்ல வழியைக் காட்டுவார் என்ற நம்பிக்கையுடன் வாழ்வோம்.

தாயாகவும்.தந்தையாகவும் தாங்கிக் கொண்டு உள்ளவர்தான் எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை உண்மை அறிவால் அறிந்து.

அருட்பெருஞ்ஜோதி மகா மந்திரத்தை இடைவிடாது தோத்திரம் செய்து கொண்டே இருக்க வேண்டும். அதுதான் தந்திரம்.....

தொடரும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு