செவ்வாய், 25 பிப்ரவரி, 2025

12. சமரச சுத்தசன்மார்க்க சத்திய ஞானாசாரம் !



12. சமரச சுத்தசன்மார்க்க சத்திய ஞானாசாரம் !

சுத்ததேகம்

அருட்பெருஞ்ஜோதி

இதுவரையில் கர்ம சித்தருடைய காலம், அதனால் சமயங்களும், மதங்களும், பரவியிருந்தன.

இப்போது வரப்போகிறது. ஞானசித்தருடைய காலம். இனி ஜாதி, சமய முதலான ஆசாரங்களெல்லாம் போய்,

சமரச சுத்தசன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே விளங்கும். சமய மதங்களில் சொல்லுகிற கருத்தர்கள், மூர்த்திகள், ஈசுரன், பிரமம், சிவம். முதலிய தத்துவங்கள் காலப் பிரமாணபரியந்தம் இருப்பதே யொழிய அதற்கு மேலிராது.

சமயமதங்களில் சொல்லுகிற கர்த்தர்களுடைய சித்திகள். சர்வசித்திகளுடைய கடவுளின் சித்தியின் லேசங்கள். அந்த சர்வ சித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள். கோடி,

கோடிபங்கு தாழ்ந்த தரத்திலிருக்கிறார்கள்.

இப்போதிருக்கும் வேதாகம புராணங்களிலும், சமயமதங்களிலும், லட்சியம் வையாதீர்கள். வைத்தால் சமரச சுத்த சன்மார்க்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது. வராவிட்டால் நீங்கள் அடையப்போகிறது ஒன்றுமில்லை. ஆதலால் அதுகளெல்லாம் பற்றற விட்டு,

சர்வசித்தியையுடைய கடவுள் ஒருவருண்டென்றும்.

அவர் ஒருவரே யென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்ய வேண்டும்.

அப்படிப்பட்ட சமரச சுத்தசன்மார்க்கத்திற்குரிய கடவுளை வழி பாடு செய்வதற்குச் சாதனம் இருவகை:

1. பர உபகாரம், 2. சத் விசாரம்:

பர உபகாரம் என்பது - தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது.

சத்விசாரம் என்பது :- நேரிட்ட பக்ஷத்தில் ஆன்ம நேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல், இந்த மார்க்கத்தால் தான் சுத்ததேகம் பெற வேண்டும்.

இங்கனம்
சிதம்பரம் இராமலிங்கம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு