திங்கள், 30 மே, 2011

உண்மை எது ? பொய் எது ?

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் 
இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்து பல ஜானிகள் தோன்றினார்கள் பல கருத்துக்களை சொல்லியுள்ளார்கள் எழுதி வைத்துள்ளார்கள் அவை மதங்களாக மாறின.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கருத்துக்கள் கூறின.அதனால் போட்டிகள் பொறாமைகள் தோன்றின.அதனால் அதை பின்பற்றிய மக்கள்,நம்பிக்கையின் பேரில் அதை அதை பிடித்துக் கொண்டு போரிட்டு அழிந்து கொண்டே இருக்கிறார்கள் .

சித்தர்கள் யோகிகள் ஜானிகள் என பலர் உருவாகினர்,அவர்களுள் அக அனுபவ போட்டிகள் தொடங்கின.அதில் கர்மயோகம்.ராஜயோகம்,ஞானயோகம, என சரியை,கிரியை யோகம ஞானம் ,என நான்கு பிரிவுகள்,அதில் ஒவ்வொன்றிலும் நான்காக பதினாறு பிரிவுகள் உருவாக்கப்பட்டன.அதை சொல்லிக் கொடுக்க பல குருமார்கள் உருவானார்கள் அவரவர்கள் கருத்துதான் உயர்ந்தது என்று அதில் போட்டிப்போட்டுக் கொண்டு,இன்றுவரை,பல அமைப்புகள் தியானம் தவம யோகம என வைத்துக் கொண்டு பணம் பறிக்கும் வேளையில் இறங்கி விட்டார்கள்,அதையும் உண்மை என்று நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.அவர்களின் உண்மை அறிந்து பல யோகிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.பலபேர் வெளியே இருக்கிறார்கள், சிறைக்கு செல்லும் வரை நல்லவர்களாக இருந்தவர்கள் பின் கெட்டவர்களாக மாறிவிட்டார்கள்.இவை ஏன்?

உண்மை தெரியாமல் மக்களை ஏமாற்றுபவர்கள் உலகியல் சட்டத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.உலகியல் சட்டமே தண்டனை கொடுக்கும் என்றால்.அருளியல் சட்டம் என்ன செய்யும் ?உண்மை தெரியாமல் மக்களுக்கு போதிப்பதும் அவைகளை மக்கள் ஏற்று கொள்வதற்கும் உண்டான தண்டனைதான் மரணம் என்னும் தீர்ப்பாகும் .இதில் நல்லவர் கெட்டவர் என்ற பேச்சுக்கு இடம் இல்லை.உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கு இடம் இல்லை.குறு சிஷ்யன் என்ற பேச்சுக்கு இடம் இல்லை.ஆன்மீக வாதி ,நாத்திகவாதி என்ற பேச்சுக்கு இடம் இல்லை.அனைவரும் மாண்டு போகின்றனர்.மரணம் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்றன.

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்ன? நமக்கு முன்னாடி போதித்தவகள்,போத்தித்தை பின்பற்றியவர்கள் அனைவருமே மாண்டு போனார்களே,இப்பொழுது நாம் எதை பின்பற்றுவது ,எப்படி மரணத்தை வெல்வது.இதுதான் இப்பொழுது உள்ள கேள்வியாகும்.மரணத்தை வெல்லும் மார்க்கம் ஒன்று உண்டு என்பதை முறையாக கண்டு அதன்படி வாழ்ந்து வழி காட்டியவர் வள்ளலார் அவர்களாகும்.
அவர் ஒரு பாடலில் பதிவு செய்துள்ளது;--

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி 
நோவது இன்று புதிதன்றே என்றும் உளதால் இந்த நோயை நீக்கி 
ஈவது மன்றிடை நடிப்பாய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றுமில்லை என்றால் அந்தோ இச்சிறியேனால் ஆவது தென்னே!

தான் மரணத்தை வென்று வாழ்ந்த வள்ளலார் இச்சிறியேனால் ஆவது ஒன்றுமில்லை என்றால் அதன் அர்த்தம் தன முனைப்பு இல்லாமல் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும்.அவர்களும் இந்த வழியில் வரவேண்டும் என்றும் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.நாம் என்ன செய்வோம் அவராலே முடியவில்லையே நம்மால் எப்படி முடியும் என்ற அர்த்தம் கொள்ளக் கூடாது.வள்ளலார் பாடல்கள் அவரவர் தகுதிக்கு தகுந்த வாறு விளக்கம் தரும்.
நீங்கள் எதை நோக்கி செல்கிரீர்களோ அதற்கு தகுந்தாற் போல் விளக்கம் தரும் அதுதான் திரு அருட்பாவாகும்!

எங்கு எங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டுனும் 
அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெரும் ஜோதி!

என்றார் வள்ளலார் அவரவர் தகுதிக்கு தகுந்த விளக்கமும் லாபமும் கிடைக்கும்.ஆனால் முடிந்த முடிவு என்று ஒன்று உண்டு அதை தேடவேண்டும்.மற்றவர்கள் தேடியும் கிடைக்காமல் ஒரு எல்லையுடன் நின்று விட்டார்கள்.
ஆனால் வள்ளலார் அனைத்தையும் கண்டார் அனுபவித்தார்.தான் கண்டத்தை.அனுபவித்ததை மற்றவர்களும் அடைய வேண்டும் என்ற ஆவல் கொண்டு ஆனம் நேயத்தோடு அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார்.

அதற்க்கு உண்டான வழியையும் காட்டியுள்ளார் சத் விசாரம்,பரோபகாரம்,இந்த இரண்டு வழிகள் மூலமாகத்தான் அனைத்தும் கிடைக்கும்.அதற்கு ஒழுக்கம் மிக முக்கியம்.இந்திரிய ஒழுக்கம்,காரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்.என்பனவாகும்.ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும். ஜீவகாருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் தானே மறையும் .

பக்தி என்பது ;--மன நெகிழ்ச்சி,மன உருக்கம்.அன்பு என்பது;-ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம்,எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே உண்மை பக்தியாகும்.அந்தகரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளை விப்பதாகும்.ஆதலால் ஜீவகாருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும் .அன்பு உண்டானால் அருள் உண்டாகும்.அருள் உண்டானால் சிவானுபவம் பெறலாம்.இதுதான் சுத்த சன்மார்க்கத்தின் அடிபடைக் கொள்கைகளாகும்.

பத்து ஆள்சுமை ஒரு வண்டி பாரம்.நாணூறு வண்டிச சுமை ஒரு சூல் வண்டிபாரம்.சூல்வண்டி.ஆயிரங் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவ முயற்சியில் படிக்கச சிறிய உபாசனை சகாயத்தால் படிக்க முடியும் ,அப்படிப் பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை,ஒருவன் அருள் முன்னிடமாகச சுத்த சிவ நோக்கத்தால்அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்.,இது சத்தியம்.

ஆண்டவர் சோதிக்கிறார் என்பது ;--
பிணி,மூப்பு,பயம்,பசி முதலிய வற்றால் வருந்தச செய்விப்பதில்லை,மரணம் அடையச செய்விப்பதுதான் சோதனையாகும்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் ஞானம ,யோகம ,தவம,விரதம் ஜெபம்,தியானம்,முதலியவைகளைச செய்கின்றவர்கள் கடவுளுக்குச சிறிதும் பாத்திரமாகார்கள்.அவர்களை ஆன்ம விளக்கமுள்ளவர்கள் என்று நினைக்கப்படாது.ஜீவகாருண்யம் இல்லாது செய்யப் படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோசனம் இல்லாத மாயாச செய்கைகளே யாகும் என்று அறியவேண்டும்.இதுவே வள்ளலார் நமக்குத் தந்த உண்மையாகும்.

காலையிலே எந்தனக்கே கிடைத்த பெரும் பொருளே 
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே 
மேலையிலே இம்மையிலே வொருமையிலே தவத்தால் 
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவைஎல்லாம் தருமச 
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே 
சமரச சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே 
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும் 
மானடத்து என் அரசே என் மாலை அணிந்தருளே!

என்கிறார் வள்ளலார் இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டாமா ? வள்ளலார் வழியில் மக்கள் பின் பற்றினால் பொய் சொல்லி பிழைக்கும் ஏமாற்று பேர்வழிகளின் வாய் ஜம்பம் பலிக்காது என்பதால்.அவரவர்கள் வள்ளலாரை வைத்து வியாபாரம் செய்யத் துணிந்து விட்டார்கள்.அவர்களையும் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.அவர்களும் நம்முடைய சகோதரர்கள் என்பதால்.எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களையும் நம்மவராக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளலார் .அவர் கருணையே தனிபபெருங்கருணை என்பதால்தான் .

கடல் கடந்தேன் கரையடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில் 
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சியெலாங் கண்டேன் 
அடர்கடந்த திருஅமுதம் உண்டேன் அருள் ஒளியால் அனைத்தும் 
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை யடைந்தேன் 
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்த்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன் 
இடர் தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் ஓங்க்கினவே 
இத்தனையும் பொது நடஞ் செய் இறைவன் அருட்செயலே.

உண்மை என்பது ஒன்றுதான் அது எந்த விதத்தில் சொன்னாலும் உண்மை உண்மைதான்.

அனைவரும் உண்மை வழியில் வாழ்ந்து வளம் பெருவோம்.

கொல்லாநெறியே குவலயம் ஓங்குக! 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு

நண்பருக்கு கடிதம்

ஆன்மநேய அன்புடைய சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்

வள்ளலார் இந்த உலகத்திற்கு ஏன் வந்தார்?எதற்க்காகவந்தார் ?யாரால் 
அனுப்பிவைக்கபட்டார் ?அவர் வரவேண்டிய அவசியம் என்ன ?என்பதை 
அவரே சொல்கிறார்.பின் வரும் பாடல்களை,நன்கு கவனிக்கவேண்டும்.

அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும் 
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும் 
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த 
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன்,
அடுத்து -
பேருற்ற உலகிலுறு சமயமத நெறி எல்லாம் 
பேய்பிடிப் புற்ற பிச்சுப் 
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல 
பேதமுற்று அங்கும் இங்கும் 
போருற்று இரந்து வீண் போயோனார் இன்னும் வீண் 
போகாத படி விரைந்தே 
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப் 
பொருளினை யுணர்த்தி எல்லாம் 
ஏறுற்ற சுகநிலை யடைந்திட புரிதி நீ 
என் பிள்ளை யாதலாலே 
இவ்வேலை புரிக என்று இட்டணன் மனத்தில் வேறு 
எண்னற்க என்ற குருவே .
நீருற்ற வோள்ளிய நெருப்பே நெருப்பினுள் 
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே 
நிர்க்குனாணந்த பர நாதாந்த வரையோங்க்கும்
நீதி நடராஜபதியே .
அடுத்து ;-
பன்னெறிச சமயங்கள் மதங்கள் என்றிடுமோர் 
பவநெறி இதுவரை பரவியது அதனால் 
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர் 
செறியிருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ 
புன்னேறி தவிர்த்து ஒரு புது நெறிஎனும் வான்
புத்தமுதருள் கின்ற சுத்த சன்மார்க்கத் 
தன்னெறி செலுத்துக என்ற ஏன் அரசே 
தனி நடராஜ என் சற்குரு மணியே.
அடுத்து ;--
நண்ணிய மதநெறி பலபல அவையே 
நன்றற நின்றன சென்றன சிலவே 
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் 
அலைதரு கின்றன அலைவர மகனே 
புண்ணியம் உருதிரு அருள்நெறி இதுவே 
பொது நெறி யென அறிவுற முயலுதி நீ 
தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய் 
தனி நடராய என் சற்குரு மணியே .

என்று தான் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கமும் ,இறைவன்தான் 
அனுப்பி வைத்தார் எனபதையும் ,முன்னாடி வந்தவர்கள் என்ன செயதார்கள் 
அவர்களால் இந்த உலகம் எப்படி அழிந்து கொண்டு இருக்கிறது.அதையெல்லாம் 
எப்படி ஒழிக்க வேண்டும் என்பதை,அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு 
பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் 
என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.இவைபோல் நிறைய 
பாடல்கள் உள்ளன ,
அடுத்து அருட்பெரும்ஜோதியும் நானும் ஒன்றுதான் என்பதை பலபாடல்களில் 
தெரிவித்துள்ளார் .
சபை எனதுளமெனத் தான் அமர்ந்து எனக்கே 
அபயம் மளித்ததோர் அருட்பெரும்ஜோதி !
சாகாக் கல்வியின் தரமேலாம் உணர்த்திச
சாகா வரத்தையும் தந்து மேன்மேலும் 
அன்பையும் விளைவித்து அருட் பேரொளியால் 
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும் 
ஒருருவாக்கிய உன்னியபடி எல்லாம் 
சீருறச செய்து உயிர்த் திறம் பெற அழியா 
அருள் அமுதளித்தனை அருநிலை ஏற்றினை 
அருள் அறிவளித்தனை அருட்பெரும்ஜோதி!

உலக உயிர்த் திரள் எல்லாம் ஒளிநெறி பெற்றிட 
இலகும் ஐந்தொழிலையும் யான செய்யத் தந்தனை! 
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் 
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அழித்தனை!             

சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே 
சத்திய நிலைதனைத் தயவினிற் தந்தனை !
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் 
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !
சுத்த சன்மார்க்கச சுக நிலை பெருக 
உத்தமன் ஆகுக ஓங்குக என் தனை !
போற்றி நின பேரருள் போற்றி நின பெருஞ் சீர் 
ஆற்றலின் ஓங்கிய அருட்பெரும்ஜோதி!

என்பதை திரு அருட்பாவில் தெளிவாக பதிவு செய்துள்ளார் .
வள்ளலார் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இடம் ,என்னைப்போல் 
வேறு யாராவது இந்த உலகத்தில் இருந்தால் எனக்கு காட்டு என்று 
சவால் விடுகிறார் .
அதன் பாடல் வருமாறு ;-
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் மெஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் தேவா நின்
பேரருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே யறை !

இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்.ஐந்தொழில் வல்லபத்தையும் 
வள்ளலாருக்கே கொடுத்துள்ளார் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் !
வாழி நீடுழி வாழி என்று ஓங்குபேர்
ஆழியைஅளித்த அருட்பெரும் ஜோதி !
எச்சம் நினகில்லை எல்லாம் பெருக என்று 
அச்சம் தவிர்த்த என் அருட்பெரும் ஜோதி !
நீடுக நீயே நீளுலகம அனைத்தையும் நின்று 
ஆடுக என்ற அருட்பெரும் ஜோதி.!
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் 
அஞ்சேல் என்ற என் அருட்பெரும்ஜோதி !

இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.இவைபோல் 
ஆயிரக் கணக்கான பாடல்கள் திரு அருட்பாவில் குவிந்து கிடைகின்றன.
அதனால் தான் வள்ளலார் தன்னுடைய உடம்பை யாராலும் அழிக்க முடியாத 
நிலைக்கு கொண்டுவந்த பிறகுதான்,ஆறாம் திருமுறையை வெளியிடச 
சொன்னார்கள்.அவருடைய உடம்பை பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ளது 
அருட் பெரும்ஜோதி ஆண்டவர் அவருடைய உடம்புபோல் வள்ளலாருக்கு 
கொடுத்துள்ளார்.ஒளிதேகம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார் .

காற்றாலே புவியாலே ககன மதனாலே 
கனலாலே புனலாலே கதிராதி யாலே 
கூற்றாலே பிணியாலே கொலைக கருவியாலே 
கொளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே 
வேற்றாலே எஞ்ஞன்றும் அழியாதே விளங்கும் 
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் என் தனக்கே 
ஏற்றாலே இழி வென நீர் நினையாதீர் உலகீர் 
எந்தை அருட்பெரும் ஜோதி இறைவனைச சார்வீரே 

என்கிறார் வள்ளலார்.
வள்ளலார் இந்த உலகத்தை திருத்த வந்தவராகும்,மற்றவர்கள் 
எல்லாம்.பிறவாமை வேண்டும் என்றார்கள் .வள்ளலார் இறவாமை 
வேண்டும் என்றவர்.மற்றவர்கள் எல்லாம் இறைவனை தேடி சென்றார்கள்
ஆனால் வள்ளலாரைத் தேடி இறைவன் வந்தார்.மண்ணுயிரை நினைத்து
 வருந்தியவர் வள்ளலார்.அதனால்தான் 
மன்னுயிரைஎல்லாம் களித்திட நினைத்தனை யுன்றன் 
மன நினைப்பின் படிக்கே 
அன்பை நீ பெருக உலவாது நீடுழி விளை யாடுக
அருட்ஜோதியாம் ஆட்சி தந்தோம் 
உனைக் கைவிடோம் கைவிட்டோம் 
ஆணை நம் ஆணை என்றே 
இன்புறத் திரு வாக்களித்து என் உள்ளே கலந்து 
இசைவுடன் இருந்த குருவே !

என்கிறார்-- வள்ளலார்அருட்பெரும் ஜோதியாகி இப்பொழுது ஐந்தொழில் 
செய்து கொண்டு இருக்கிறார் என்பதை சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள் 
உணர்வார்கள்.மற்றவர்களுக்கு விளங்காது.ஆன்ம அறிவினால் உணர்பவர்களுக்கு 
மட்டும் உண்மை விளங்கும்.வள்ளலார் காட்டிய வழியில் வாழ்பவர்களுக்கு மட்டும் 
விளங்கும்.
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை 
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் --வாடாதீர் 
சன்மார்க்க சங்கத்தைச சார்வீர் விரைந்து இனி இங்கு 
என்மார்க்கமும் ஒன்றாமே !

சாகாத கல்வித் தரமறிதல் வேண்டும் என்றும் 
வேகாத காலுணர்தல் வேண்டும் உடன் --சாகாத் 
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை 
நிலை அடைதல் வேண்டும் நிலத்து .
இதை எல்லாம் உணர்ந்தால்தான் உண்மை அறிவு விளங்கும் என்கிறார் 
வள்ளலார்.ஏதோ அருட்பாவை படித்தால் மட்டும் போதாது.அதன்படி 
வாழ்ந்தால்தான் உண்மை விளங்கும்.முதலில் ஒழுக்கம் தேவை 
இந்திரிய ஒழுக்கம் ,கரணஒழுக்கம் ,இந்த இரண்டு ஒழுக்கத்தையும் 
கடைப்பிடித்தாலே,மற்ற ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கத்தை,ஆண்டவர் 
விளக்குவார் .
என் வாழ்க்கை பற்றி எனக்குத்தெரியும் ,என்னை இயக்கம் கடவுளுக்குத் 
தெரியும்.மற்றவர் களுக்கு தெரியாது .உண்மை அன்பு ,உண்மை இறக்கம்,
உண்மை தயவு,உண்மையான கருணை,இருக்கவேண்டும் .அவை இருந்தால் 
யாவும் தானே கிடைக்கும் இதுதான் உண்மையாகும் .
மேலும் சிந்திப்போம் ;--அன்புடன் கதிர்வேலு

ஞாயிறு, 29 மே, 2011

நண்பருக்கு கடிதம்



Kathir Kathirvelu29 மே 09:50
கோட் செய்யப்பட்ட வாக்கியத்தை மறை
ஆன்மநேய அன்புடையீர் உங்களுக்கு மிகுந்த வணக்கம் ,
உங்கள் சிந்தனை சரிதான் இருந்தாலும் வள்ளலார் நிலை
வேறு மற்றவர்கள் நிலை வேறு,வள்ளலார் வழியில் நின்று
மரணத்தை வென்றால் அவர்களை என்னுடைய சிரசின் மேல்
வைத்து கொண்டாடுகிறேன்.அவர்களை அருட்பெரும்ஜோதி யாகவே
மதிக்கிறேன்.அப்படி அனைவரும் வரவேண்டும் என்பதுதான் .வள்ளலாரின்
விருப்பம்,ஏன் அருட்பெரும்ஜோதி ஆண்டவரின் விருப்பமாகும்.
அதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை.வள்ளலாருக்கு முன்னாடி
வாழ்ந்தவர்கள் உண்மையை உணர்ந்தார்கள்.உண்மையிடம்
செல்ல முடியவில்லை என்பது உண்மையாகும் .அதனால் தான்
முழுமையான உண்மைகளைஅனைவரும் தெரிந்து கொள்ள,
வேண்டுமென்று அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை
இந்த உலகத்திற்கு அனுப்பி வைத்தார் என்பது உண்மையாகும் .

வள்ளலார் உரைத்த அனைத்தும் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்
உரைத்ததாகும்.வள்ளலார் நான் உரைக்கும் வார்த்தை எல்லாம்
நாயகன் தன வார்த்தை என்றார்கள்.நான் யார் ?எனக்கு என ஞான
உணர்வு ஏது ?ஏது அறியாது இருளில் இருந்த என்னை எல்லோரும்
அறிய ஏற்றி வைத்தாய் என்றார் .இவைபோல் பல்லாயிரம் பாடல்கள்
இருக்கின்றன.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான் வள்ளலார்.வள்ளலார்தான்
வள்ளலார்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்பது உண்மையாகும் .
கடவுள் எழுதியது திருஅருட்பாவாகும்.அதனால்தான் திரு அருட்பாவை
விரும்புகிறேன்.வள்ளலாரை விரும்பவில்லை அருட்பெரும்ஜோதியைத்தான்
ஏன் அன்றால் வள்ளலார் வேறு அருட்பெரும் ஜோதி வேறாக அடியேன்
பார்க்கவில்லை.அனைவரும் உயர்ந்த நிலையான சுத்த பிரணவ ஞான தேகம்
பெறவேண்டும் என்பதுதான் அடியேனுடைய விருப்பமாகும் .
மேலும் மற்றவர்களுக்கும் வள்ளலாருக்கும் என்ன வேறுபாடுகள் என்பதை
தெளிவாக்குகிறேன்.அடுத்த கடிதத்தில் தெளிவு படுத்துகிறேன்

மேலும் உங்களுக்கு என்னைபற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால் ,
நீங்கள் என்னுடன் உரிமையுடன் சந்திக்கலாம்.இல்லையேல் உங்களுக்கு
விருப்பம் இருந்தால் அடியேன் உங்களை சந்திக்க விரும்புகிறேன்.நேரில்
பகிந்து கொள்ளலாம்.

சந்தேகங்களை பகிந்து கொள்ளலாம் கருத்துவேறுபாடுகள் இருக்கலாம்
உண்மையில் வேறுபாடுகள் இருக்க கூடாது.இதுவே என்னுடைய
விருப்பமாகும் .
அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு

சனி, 28 மே, 2011

சிலையை வணங்குவது சரியா? தவறா?



கோவில்களில் உள்ள சிலையை கும்பிடுவது ,சரியா?தவறா ?நேர்த்திக்கடன் செய்வது சரியா ? தவறா?

உங்கள் கருத்துக்கள் உண்மைதான் எல்லாமே கற்பனை கதைகளாகும் கதைகளில் வரும் தத்துவங்களை கடவுள்களாக பாவித்து ஆலயங்களை கட்டி அதில் சிலைகளை வைத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
இவை எல்லாம் நமக்கு முன்னாடி இருந்த பெரியவர்கள் செய்த சதி வேலைகளாகும்,.கடவுள் கல்லில் இருந்தால் பேசுவாரா ?கல்லும் மண்ணும்  தங்கமும், செம்பும்,.கடவுளாகி விடமுடியுமா ?அதே கடவுள் பெயரால் வாயில்லாத ஜீவன்களை பரிகாரம் என்ற பெயரில் பலி கொடுக்கிறார்களே ,இதை அந்த பொய்யான கடவுள் ஏற்றுக் கொள்வாரா?
உண்மையான கடவுளாக இருந்தால் இவர்களை விட்டு வைப்பாரா?அதனால்தான் வள்ளலார் இந்தஉலகத்திற்கு அருட்பெரும்ஜோதியால் வருவிக்கவுறறார்.
வள்ளலார் வந்துதான் இவர்கள் முகமூடியை கிழித்து எறிந்தார்கள் கடவுள் ஒருவரே அவர் ஒளியாக உள்ளார் அவர் எல்லா உயிர்களிலும் இயங்கிக் கொண்டு இருக்கிறார் .அதனால் எந்த உயிரையும் அழிக்க கூடாது ,அப்படி அழித்தால் உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என்ற உண்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்,
ஆதலால் பொய்யான கோவில்களில் கடவுள் இல்லை அந்த கோவில்களில் செய்யும் அனைத்து வழிபாட்டு முறைகளும் பொய்யானதாகும்.அங்கு வீண் செலவு செய்வதை விட்டு ஏழைகளின் பசியை போக்குங்கள் என்றார் வள்ளலார் .
உலகில் பசியோடும் பட்டினியோடும் வாழும் மக்களை கவனிக்காமல் கல்லுக்கும் மண்ணுக்கும் கோடிகோடியாய் வீண் செலவு செய்கிறீர்களே என்று வருத்தப்பட்டு வடலூரில் சத்திய தருமச்சாலையை 1867-ஆம் ஆண்டு அமைத்தார் ,அன்றிலிருந்து இன்றுவரை தினமும் ஏழைகளின் பசிப்பிணியை போக்கிக் கொண்டு இருக்கிறது .

அதேபோல் கடவுள் கோவிகளில் இல்லை எல்லாஉயிர்களிலும் உள்ளார் என்பதை காட்டுவதற்கு எண்கோண வடிவமாக பொதுவான ஒரு சத்திய ஞானசபையை வடலூரில் அமைத்துள்ளார் .அந்த சபையில் எந்த சடங்குகளும் இல்லை.ஒளி மட்டும்தான் இருக்கும் அந்த ஒளி இடைவிடாது எரிந்து கொண்டே இருக்கும்

உயிர் எப்படி அனைவரையும் இயக்கிக் கொண்டு இருக்கிறதோ அப்படி கடவுள் ஒளியாக இருந்து அனைத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை விளக்குவதாகும் .
இங்கு சாதி மதம் சமயம் இனம் நாடு என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும், அனைத்து உலகத்திற்கும் பொதுவான கடவுள் கொள்கையை வகுத்து தந்துள்ளார் வள்ளலார் .
மேலும் உண்மையை தெரிந்து கொள்ள வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். உண்மையை நம்புங்கள்,பொய்யை நம்பாதீர்கள்
அன்புடன்- கதிர்வேலு .

ஜீவாத்மா வேறா ?பரமாத்மா வேறா ?

ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்.ஜீவாத்மா,பரமாத்மா,எனபது வேறு வேறு அல்ல!
இந்த உலகம்.இதுபோல் பலகோடி உலகம் யாவும்,ஒன்றிலிருந்து தோன்றியதுதான்.
அதனால்தான் கடவுள் ஒருவரே என்பதாகும் .காரணம் காரியம் என்பதாகும் 
காரணம் இல்லாமல் காரியம் நடைபெறாது .
ஜீவாத்மா தனியாக இருப்பதால் தனியல்ல.தனியாக ஏதோ ஒரு காரியத்திறகாக
ஜீவனை எடுத்துள்ளது,காரியம் முடிந்து விட்டால் உண்மையிடம் தான் செல்லமுடியும்.
வேறு எங்கும் செல்ல முடியாது ,
காரணம் தெரியவில்லை,காரியமும் தெரியவில்லை,அதனால் வேறு வேறாக நினைத்துக் 
கொண்டுள்ளோம் யாவும் ஒன்று என்று எப்பொழுது அறிவின் வெளிப்பாடு செயல்படுகிறதோ 
அப்பொழுது யாவும் ஒன்று என்ற உண்மை தெள்ளத் தெளிவாக தெரியும்.இந்த உண்மை 
தெரியாமல்,பலபேர் பலவழிகளை காட்டி தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.
இந்த உலகம் முழுவதும் உள்ள அனைத்தும் ஒன்றிலிருந்து வந்ததுதான்.வேறு வேறு அல்ல.
நம் கண்களுக்கு வேறு வேறாக தெரிகின்றன.
இந்த உண்மையை சொல்ல வந்தவர்தான் வள்ளலார் அவர்கள்.அவர் வந்த காரணமும் 
காரியமும் சொல்லிவிட்டு அவர் வந்த இடத்திற்கே சென்று விட்டார்.அவர்தான் உண்மையான 
விலாசத்தை தெரிவித்து விட்டு தான் வந்த இடத்தையும்,சென்ற இடத்தையும்.வழியிது,
துறையிது,நீ செய்யும் முறையிது,என்று வாழ்ந்து வழி காட்டியுள்ளார்கள்.
அவர் காட்டிய பாதையில் சென்றால்தான் உண்மைகள் தானே தெரியும் அது வரையில் 
உண்மை தெரியாது.பொய்யான கடவுள்வழிபாடு ,யோகம,தவம,தியானம்,இவைகள் எல்லாம் 
மாயா ஜாலங்கலாகும்.இதை கற்றுக் கொடுத்தவர்களும் ,கேட்டு அதன்படி நடந்தவர்களும்,
மாண்டு கொண்டேதான் இருக்கிறார்கள்..
வேறு வேறு என்றுமனத்தால் நினைத்தால் அனைத்தும் வேறு வேறாகத்தான் தெரியும்.எல்லாம் 
ஒன்று என்று அறிவால் அறிந்தால் அனைத்தும் ஒன்று என்பது தெரியும்.நாம் அனைவரும் 
மனத்தைக் கொண்டுதான் தேடுகிறோம்.அறிவைக் கொண்டு தேடுவதில்லை.மனத்தால் 
உண்மை விளங்காது.
அறிவை அறிவால் அறிகின்ற போது அனுபவம் தெரியும் இதை வள்ளலார் எப்படி சொல்லுகிறார் 
என்பதை பாருங்கள்.

அருளாலே யருளிறை யருள்கின்ற பொழுது அங்கு 
அனுபவ மாகின்ற என்னடி தாயே 
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் 
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே 

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு 
அனுபவ மாகின்றது என்னடி தாயே 
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் 
திருவருள் உருவமேன்று அறியாயோ மகளே!

என்று தெளிவாக திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் அவர்கள்.
படித்து அறிவாலே அறிந்து பயன் பெருவோம்.அதை விடுத்து யாராவது ஒன்று சொல்ல 
கேட்டு அதன்படி நடந்தால் சில நன்மைகள் கிடைக்கும்.அதனால் பல்லிளித்து இறுமாந்து 
கெட நேரிடும்.உண்மை தெரியாது வீணாக அனைவரும் அழிந்தது போல் நாமும் 
அழிந்து விடுவோம்.

எனக்கு வள்ளலார் காட்டிய வழியை சொல்லி விட்டேன்.மேலும் உங்கள் விருப்பம்.
அன்புடன் -கதிர்வேலு  

புதன், 18 மே, 2011

பக்தி சிறந்ததா ?பகுத்தறிவு சிறந்ததா ?

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம் 

பக்தி சிந்தனை சிறந்ததா ? பகுத்தறிவு சிந்தனை சிறந்ததா ?
என்ற கேள்விக்கு பதில் !

பக்தி என்பதற்கு வள்ளலார் சொல்லும் பதில்;--

பக்தி என்பது ;--மனநெகிழ்ச்சி, மனவுருக்கம்,அன்பு என்பது 
ஆன்மநெகிழ்ச்சி ,ஆன்ம உருக்கம்,எல்லாஉயிர்களிடத்தும் 
கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே ஈசுவர பக்தியாம் .
அந்தகரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது .

ஜீவகாருண்யம்உண்டானால், அன்பு உண்டாகும்.அன்பு உண்டானால் அருள் 
உண்டாகும் .அருள் உண்டானால் சிவா அனுபவம் பெறலாம் .
என்கிறார் வள்ளலார் 

பத்து ஆல்சுமை ஒரு வண்டி பாரம் .நானுறு வண்டிச சுமை 
ஒரு சூல் வண்டி பாரம்,சூல்வண்டி ஆயிரம்கொண்ட நூல்களை,
ஒரு ஜென்மத்தில், ஒருவன் அதிதீவிர ஜீவ முயற்ச்சியால்,
படிக்கச சிறிய உபாசனைச சகாயத்தால் முடியும்.
   
அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை 
அறிவை,ஒருவன் அருள் முன்னிடமாகச சுத்த சிவநோக்கத்தால்
அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்.
(எந்திரன் படத்தில் ரஜினி படிப்பதுபோல்)இது சத்தியம் என்கிறார் 
வள்ளலார்.   
         
பகுத்தறிவுக்கு வள்ளலார் சொல்லும்பதில் ;--

மனுஷ்ய தரத்தில் தனக்கு இருக்கிற வல்லபத்தால் அசுத்தங்களை 
நிவர்த்தி செத்து கொள்ளக் கூடுமா என்றால் ;-

எது நல்லது இது கெட்டது,என்று பகுத்தறியும் ஞானத்தால் விஷய 
வாசனையில் கரணங்களைச செல்ல வொட்டாமல்,தடுக்கக் கூடுமே 
ஒழிய நிவர்த்திக்கக் கூடாது.

அது ஆண்டவர் அருளால் சுத்ததேகம் பெற்றவர்களால் தான் முடியும்.
அது அருள்ஒளி கிடைத்தால் அத்தருணமே சுத்தக் காரணமாய் நிற்கும்.
அசுத்தம் வருவதற்குக் காரணம் யாதெனில்;--

செம்பில் களிம்பு இயற்கை --அதுபோல்,ஆன்மாவிற்கு ஆணவம் இயற்கை.
செம்பிலே களிம்பு இயற்கையாயுள்ளதைப் பரிசன வேதியினால் 
நிவர்த்தித்து ஏமமாக்குவதுபோல்,மாயா காரியமான இந்தத் தேகத்தின்கண்
உள்ள ஆன்ம இயற்கையாகிய ஆணவ மலம ஆண்டவர் அருளினால் 
நீக்கப் பெற்று சுத்த உடம்பாக்கி கொள்ளலாம்.                  

ஆண்டவர் அருள் அடைவதற்கு நாம் இடைவிடாது நன் முயற்சியின் 
கண் பழகுதல் வேண்டும்.

இதற்கு பிரமாணம் ;--
ஓடாது மாயையை நாடாது நன்னெறி 
ஊடா திருவென்றீர் வாரீர் 
வாடா திருவென்றீர் வாரீர்.

மேலே உள்ள கருத்துபடி உண்மையான பக்தி ,உண்மையான 
பகுத்தறிவு என்ன  என்பதை வள்ளலார் விளக்கியுள்ளார்..

உலகியல் பக்தி எப்படியுள்ளது ;-

பக்தி என்றால் பொய்யான கற்பனை கதைகளில் வரும் 
கதாபாத்திரங்களான,தத்துவங்களை,கடவுளாக பாவித்து 
ஆலயங்களை கட்டி,மனிதனால் உருவாக்கப்பட்ட,கடவுள் 
எனும் பொம்மைகளை வைத்து,வழிபாடு செய்வதுதான் 
பக்தி என்று போற்றி வழிபட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமா அந்த பொம்மைகளுக்கு அலங்காரம் 
அபிஷேகம்,ஆராதனை,செய்வதோடு விட்டுவிடுகிறார்களா.
மனிதனுக்கு திருமணம் செய்வது போல்செய்து,முதல் இரவு
காட்சியும்,நடத்திவைக்கிரார்கள்.

அது மட்டுமா ?சில மொம்மை சாமிகளுக்கு தங்களுக்கு 
நன்மை செய்யும் என்பதற்காக வாயில்லாத ஜீவன்களை 
ஆடு ,மாடு,,கோழி,பன்றி போன்ற உயிர்களை பலிக் 
கொடுத்து பாவத்தை சம்பாதிக்கிறார்கள்.இதுதான் உலகியல் 
பக்தியாகும்.

அது மட்டுமா ?பொம்மைக் கடவுளுக்கு வியாபாரம் 
செய்கிறார்கள்.எனக்கு இவ்வளவு,உனக்கு இவ்வளவு ,
என்று பேரம் நடக்கின்றன.மக்களிடம் கொள்ளை அடித்து 
வரும் பணத்திலே பொம்மை சாமிக்கு கோடி கோடியாய்,
கொட்டுகிறார்கள்.இதுதான் இன்றைய பக்தி நிலையாகும் .

அதற்கு வள்ளலார் தரும் பாடல்;-

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் 
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை யறியீர் 
பெட்டிமேல் பெட்டிவைத்தாள் கின்றீர் வயிற்றுப் 
பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டியுள் இருந்தீர் 
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் 
பழங்கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர் 
எத்துனை கொகின்றீர் பித்துலகீரே.

பொம்மை தெய்வங்களை வழிபடுவோருக்கு வள்ளலார் 
தரும் பாடல் .
..
தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும் 
சேர்கதி பலபல செப்புகின்றாரும் 
பொய்வந்த கலைபல புகன்றிடுவாரும்
பொய்ச சமயாதியை மேச்சுகின்றாரும் 
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார
மேல்விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார் 
எய்வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர் 
எனைபள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

என்று திருஅருட்பாவில் வள்ளலார் பதிவு செய்துள்ளார்கள்
மேலே எழுதிய பாடலில் பல தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு 
அறிவு இல்லை,எனக்கு அறிவு தெரிவித்ததுபோல் அவர்களுக்கும் 
அறிவு கொடுக்கவேண்டும் என்று ஆண்டவரிடத்தில் நமக்காக 
விண்ணப்பம் செய்கிறார் வள்ளலார்.இவைபோல் ஆயிரக்கணக்கான 
பாடல்கள் பதிவு செய்துள்ளார்கள் .

உண்மையான பக்தி கடவுள் ஒருவரே என்றும்.அவர் அருட்பெரும் 
ஜோதியாக உள்ளார் என்றும்.அவர் எல்லாஉயிர்களிலும் உயிர் 
ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை உணர்ந்து 
அனைத்து உயிர்களும் நம்முடைய சகோதரர்கள் என்பதை 
அறிவு பூர்வமாக அறிந்து,எந்த உயிர்களுக்கும் தீங்கு விளை
விக்காமல்,அன்பு,தயவு ,கருணை கொண்டு வாழ்வதே உண்மை 
யான பக்தியாகும் .அப்படி வாழ்ந்தால் கடவுள் கருணை 
என்னும் அருள் நம்மை தேடிவரும்.

உலகியல் பகுத்தறிவு ;--

பகுத்தறிவு என்றால் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது 
அனைவரின் கருத்தாக இருக்கின்றன .உண்மையை அறிவது 
பகுதறிவாகும் ஆனால் இன்று பகுத்தறிவு எனப்படுவோர்
உண்மையை அறிந்தவர்களா? என்றால் இல்லை என்றுதான் 
சொல்ல வேண்டும்..
 ...    
உதாரணத்திற்கு,உருவ வழிபாடு கூடாது என்று,பகுத்தறிவாளர்கள் 
சொல்லுகின்றார்கள்.அதெல்லாம் கற்பனை,கல்லிலும் 
செம்பிலும் கடவுள் இல்லை.அதெல்லாம் பேசுமா.
அதை கும்பிடுகிறவன்,முட்டாள்.மடையன்,அயோக்கியன் . 
என்றெல்லாம் பேசுகிறார்கள் .கடவுளை கற்பித்தவன் முட்டாள் 
என்றெல்லாம் பேசுகிறார்கள்.அதை எல்லாம் நியாயம் என்றே 
எடுத்துக் கொள்வோம்.இவர்கள் எண்ண செய்கிறார்கள்.

பகுத்தறிவாளர்கள்;-.இறந்து போன அதாவது செத்துப்போன 
தலைவர்களுக்கு,மண்ணால்,கல்லால், உலோகத்தால் செய்த சிலைகளை 
செய்து எங்கு பார்த்தாலும்,முக்கியமான இடங்களில் அந்த 
பொய்யான சிலைகளை நிறுவி,வணங்க்குகிறார்களே,இது 
எந்த விதத்தில் ஞாயம்,அந்த பொம்மைகளுக்கு மாலை 
மரியாதை செய்து வணங்க்குகிறார்களே,இவை எந்த விதத்தில் 
ஞாயம்,இதற்கு பெயர் பகுத்தறிவா?அந்த சிலையும் 
பேசாதே,அதுவும் பொய்யான சிலைதானே.!

நீங்கள் பொய்யான சிலைகளை வணங்கிக் கொண்டு 
மற்றவர்களை வணங்க வேண்டாம் என்பதில் என்ன  
ஞாயம் இருக்கிறது.எண்ணிப்பார்க்க வேண்டும் .

இப்பொழுது உலகியலில் இருக்கும் பக்தியும் பகுத்தறிவும் 
ஒன்றுதான் வேறில்லை என்பது தெளிவாகிறது அல்லவா !

உண்மையான பக்தியும் இல்லை,உண்மையான பகுத்தறிவும் 
இல்லை.உண்மையான பக்தியும் உண்மையான பகுத்தறிவும்.
தெரிந்து கொள்ள வேண்டுமானால் வள்ளலார் எழுதிய திரு 
அருட்பாவில் அனைத்தும் உள்ளன ,அதை படித்து தெரிந்து 
கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருளைப் பெற வேண்டுமானால்.ஒழுக்கம் 
நிறைந்து திரு அருட்பாவை படித்து,அதில் உள்ள உண்மை 
நெறியான சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி வாழ்ந்து 
வளம் பெருவோம்.

நாத்திகம் என்பது வேறு,பகுத்தறிவு என்பது வேறு 
நாத்திகம் என்பது உண்மை தெரியாமல் எதையும் இல்லை 
என்று சொல்லுவதாகும் .
பகுத்தறிவு என்பது;--எது உண்மை, எது பொய்,  என்பதை 
அறிவு பூர்வமாக உண்மையை அறிந்து செயல்படுவதாகும்.
 .  
அதனால்தான் வள்ளலார் ;--

நாத்திகஞ் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு 
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு 
சீர்த்தி பெரும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு 
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு !

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

திருக்குறள்



Sathish Dasarathan18 மே 13:53
திருக்குறள்
1.3.2. புலான்மறுத்தல்
1.3.2 Abstinence from Flesh

251. தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊன்உண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்.
What graciousness can one command 251
who feeds his flesh by flesh gourmand.

252. பொருள்ஆட்சி போற்றாதார்க்கு இல்லை அருள்ஆட்சி
ஆங்குஇல்லை ஊன்தின் பவர்க்கு.
The thriftless have no property 252
And flesh-eaters have no pity.

253. படைகொண்டார் நெஞ்சம்போல் நன்று ஊக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம்.
Who wields a steel is steel-hearted 253
Who tastes body is hard-hearted.

254. அருள் அல்லது யாது எனின் கொல்லாமை கோறல்
பொருள் அல்லது அவ்வூன் தினல்.
If merciless it is to kill, 254
To kill and eat is disgraceful.

255. உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்உண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு.
Off with flesh; a life you save 255
The eater hell's mouth shall not waive!

256. தினற்பொருட்டால் கொல்லாது உலகுஎனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்தருவார் இல்.
None would kill and sell the flesh 256
For eating it if they don't wish.

257. உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்அது உணர்வார்ப் பெறின்.
From eating flesh men must abstain 257
If they but feel the being's pain.

258. செயி஡஢ன் தலைப்பி஡஢ந்த காட்சியார் உண்ணார்
உயி஡஢ன் தலைப்பி஡஢ந்த ஊன்.
Whose mind from illusion is freed 258
Refuse on lifeless flesh to feed.

259. அவிசொ஡஢ந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்து உண்ணாமை நன்று.
Not to-kill-and-eat, truly 259
Excels thousand pourings of ghee!

260. கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்.
All lives shall lift their palms to him 260
Who eats not flesh nor kills with whim.

செவ்வாய், 17 மே, 2011

தமிழக மக்களின் உள்ளத்தில் இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள்,அவருக்கு உடல் நிலை சரியில்லாதது முகவும் வேதனைக்குரியதாகும்.அவர் நலமுடன் வாழ எல்லாம் வல்ல அருட்பெருன் ஜோதி ஆண்டவர் அருள் புரியட்டும் .

   அவர் அடிக்கடி இமயமலை போகிறார் பல துறவிகளை சந்திக்கறார் ஆசிர்வாதம் வாங்குகிறார்.ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு உள்ளவர்.அப்படி இருந்தும் ஏன் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது ?இதை நாம் சிந்திக்கவேண்டும் உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு யாராக இருந்தாலும்.துன்பமும் துயரமும் நோய்களும் வரக்கூடாது என்கிறார் வள்ளலார் .அப்படிவந்தால் அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பது உண்மையாகும்.
     ரஜினி நல்லவர் அவர் என்ன தவறு செய்திருப்பார் என்று பார்க்கும் போது உண்மை தெரிகிறது.உண்மையான ஆன்மீகவாதிகள் உயிர்க்கொலை செய்யக்ககூடாது,புலால் உண்ணக கூடாது .ஆனால் அவர் உயிர்கொலை செய்வதில்லை.புலால் மட்டும் உண்கிறார் என்பது அனைவரும் அறிந்ததாகும்.அவர் பாலச்சந்தர் பேட்டியிலே சொல்லி இருக்கிறார்.அவர் புலால் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும், சிகரெட் பிடிப்பதையும் விட்டு விட்டால் நல்லது,

    சாதாரண மனிதர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ,ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புகிறவர்கள் நிச்சயம் புலால் சாப்பிடக் கூடாது.என்று நான் சொல்லவில்லை.மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளலார் சொல்லுகிறார்.உலக பொதுமறை என்று சொல்லப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் சொல்லுகிறார்.

     வள்ளலார் பாடல் வருமாறு;--

பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலை கொலைகள் புரிகின்றீர் கலகல வென்கின்றீர் 
கைவிளக்கு பிடித்து ஒரு பாழுங் கிணற்றில் விழுகின்றீர் 
களியரெனக் களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் 
ஐவிளக்கு மூப்பு மரனாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முருக்காதோ கொடிய முயற்று உலகீர் 
மெய்விளக்க எனது தனித்தந்தை வருகின்ற தருணம் 
மேவியது ஈண்டு அடைவீரே ஆவி பெருவீரே.

என்கிறார் வள்ளலார் ஆதலால் ரஜினிக்கு எந்த குறை இருந்தாகும் அவர் புலால் மறுத்து புகை பிடிப்பதை நிறுத்தினால் சீக்கிரம் நல்ல குணமடைவார் இது சத்தியம் உண்மையாகும்.

   ஏண் இதை எழுதுகிறேன் என்றால் ரஜினி மீது எனக்கு அளவில்லாத பற்றுண்டு ,அவர் நல்லவர் அவருக்கு போதித்த போதகர்கள் எப்படியோ தெரியவில்லை.எத்தனை கோடி பணமிருந்தாலும்.எவ்வளவு புகழ் இருந்தாலும் ,தன்னுடைய உடம்பை கவனிக்கவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை.

அதைப்பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;-

உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை யறியீர்
உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே யறியீர் 
மடம்புகு பேய் மனத்தாலே மயங்க்குகின்றீர் மனத்தை 
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்றறியீர் 
இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே 
எண்ணி எண்ணி யிளைகின்றீர் ஏழை யுலகிரே 
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம் 
நண்ணியது நண்னுமினோ புண்ணியம் சார்வீரே 

என்கிறார் வள்ளலார் நான் புலால் உண்பதை நிறுத்தி 35, ஆண்டுகள் ஆகிறது.இன்றுவரை எனக்கு எந்த வியாதியும் வந்ததில்லை.வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து வருகிறேன் இன்றுவரை மருத்தவரிடம் சென்றதில்லை.எந்த செக்கப்பும் இல்லை 
மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன் இவை அனுபவமாகும் .

இதே கருத்தை அனைவரும் கடைபிடித்தால் நீண்ட ஆயுள்,நோயற்ற வாழ்வு,மகிழ்ச்சியான வாழ்க்கை,துன்பமில்லாத வாழ்க்கை,பெற்று ஆனந்தமாக வாழலாம்.

இன்றுவரை அடியேன் பல்லாயிரம் மக்களை நல்வழிப் படுத்தியுள்ளேன்.மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அனைவரும் வள்ளலார் வழியை பின்பற்றி வருகிறார்கள் .இந்த உலகத்திற்கு உண்மையை துணிவுடன் சொன்னவர் வள்ளலார் ஒருவரே.திரு வள்ளுவர் வாழ்வதற்கு வழி காட்டினார் .வள்ளலார் வாழ்ந்து காட்டினார்.என்பது அனைவரும் அறிந்ததே.

ரஜினி நலமுடன் வாழ்வதற்கு என் அறிவார்ந்த வாழ்த்துக்கள் .நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் அழியாப்புகழ் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் வாழ மறுபடியும் வாழ்த்துகிறேன் .

அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு.

கொல்லாமை புலால் உண்ணாமை !

அன்புடையவரே வணக்கம் இந்த உலகம் துன்பமும் துயரமும் அடைவதற்கு முக்கிய காரணம் உயிரைக் கொன்று தினபதுதான்என்பது உண்மையாகும், தினமும் தின்னால் சீக்கிரம் அழிந்திடுவான்.ஒரு உயிரை உண்டாக்குவதற்கு முடியாததை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை எனபது இயற்கையின் கட்டளையாகும் ,சட்டமாகும் 
எவ்வளவு செல்வம் இருந்தாலும் பட்டம் பதவிகள் இருந்தாலும்.அவனுக்கும் உயிர்மேல் அளவுகடந்த ஆசை வருகிறது.உயிரைக்காப்பாற்ற அத்தனையும் இழக்க தயாராகிறான்.அந்த உயிரின் பெருமையும் மகத்துவத்தையும் எப்படி சொல்லமுடியும்.உயிர் இருக்கும் வரைதான் அவன் மனிதன்.உயிர் போய் விட்டால் அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்,அந்த உடலுக்கு பிணம என்று பெயராகும் .

அதேபோல் ஒரு உயிரை அழித்தால்,அந்த உயிர்போன பிறகு அதற்கு பெயர் பிணம என்பதாகும் ,மனிதன் இறந்தால் சுடுகாட்டில் பிதைக்கிறோம்.வாயில்லாத ஆடு மாடு,கோழி ,பன்றி ,போன்ற ஜீவன்கள் இறந்தால் மனிதன் வயிற்றில் பிதைக்கிறோம் .மனிதன் வயிறும் சுடுகாடுதான் என்பதை உணரவேண்டும்.சுடுகாட்டில் எண்ண இருக்கும்.அங்கு யார் வாழ்வார் .என்பதை நினைத்து பாருங்கள் ,மனிதன் மனிதனாக வாழவேண்டுமானால்.தாவர உணவுதான் சிறந்ததாகும்.

இன்று உலகம் முழுவதும் தீவிரவாதம்.நக்சல் பார்ட்டிகள், கொலை கொள்ளைகள்.இலங்கை படுகொலை.களவு,கற்பழிப்பு,போனற,கொடுரமான செயல்கள் யாவும் செய்பவர்கள் யார் என்பதை சிந்தித்து பாருங்கள்,அனைவரும் மிருகத்தின் புலால் உணபவர்கள் என்பது தெளிவாகத்தெரியும்,மிருகத்தை தின்பவர்கள் அறிவு மிருக (அறிவு) குணமாகத்தான் இருக்கும் என்பது அறிவியல் வல்லுனர்களின் கருத்தாகும் .

ஆனால் இதை வள்ளலார் 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே தெளிவாக விளக்கியுள்ளார் .திருவள்ளுவரும் 2000,ஆண்டுகளுக்கு முன்னாடியே தெரியப்படுத்தியுள்ளார்.மனிதன் இதையெல்லாம் அறிந்து புரிந்து கொள்ளாமல் மனம் போனபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறான் 
வள்ளலார் பாடல் வருமாறு '-

நலிதரு சிறிய தெய்வம் என்று ஐயோ 
நாட்டிலே பலபெயர் நாட்டிப் 
பளிதர ஆடு பன்றிக் ,குக்குடங்கள்(கோழி )
பலிகடா முதலிய உயிரைப் 
போலியுறக் கொண்டே போகவுங் கண்டே 
பந்தி நொந்து உளம நடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வேங்கோயில் 
கண்டகாலத்தும் பயந்தேன் .

இப்படி பலபாடல்கள் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார்கள் .
திருவள்ளுவர் திருக்குறளில் இரண்டு அதிகாரம் கொல்லாமை புலால் மறுத்தல் பற்றி மிகவும் தெளிவாக எழுதிவைத்துள்ளார் 

தன்ஊன் பெருக்கற்கு பிருதூன் உண்பான் 
எங்கணும் ஆளும் அருள் .
    
கொல்லான் புலால் மறுத்தானை எல்லா 
உயிர்களும் கை கூப்பி தொழும் .

என்கிறார் திருவள்ளுவர் இவைபோல் இருபது குறள்கள் உள்ளன.இதையெல்லாம் ஏன் எழுதி வைத்துள்ளார்கள் என்பதை மனிதர்கள் சற்று சிந்தித்து பார்க்கவேண்டாமா ?
உலகிலேயே பெரிய குற்றம் எதுவென்றால் பிற உயிர்களை கொலை செய்வதும்,அதனுடைய புலாலை (மாமிசம் ) உண்பதும் என்பதை அனைவரும் உணரவேண்டும்..இவைகளுக்கு கடவுளிடம் மன்னிப்பு கிடையாது .

நம்முடைய குழந்தைக்கு உடலில் எதாவது ஒரு கீறல் பட்டால் எவ்வளவு துடி துடிக்கிறோம்.அதுபோல் வாயில்லாத ஜீவனை கத்தியை வைத்து அறுக்கின்ற போது அந்த ஜீவன் எவ்வளவு துன்பப்படும் என்பதை உணராமல் அதை வெட்டி கூறு போட்டு தின்கிறோமே,இவை எந்த விதத்தில் ஞாயம் .

மனிதனை மனிதன் கொலை செய்தால் தூக்கு தண்டனை என்கிறது உலகியல் சட்டம்.வாயில்லாத உயிர்களை கொலை செய்தால் அதற்கு உங்கள் சட்டத்தில் என்ன தண்டனை?அனைவரும் சேர்ந்து உண்பதுதான் உங்கள் சட்டத்தின் தீர்ப்பு.ஆண்டவன் தீர்ப்பு எண்ண தெரியுமா ?நீங்கள் பல பிறவிகள் எடுத்து துன்பப்பட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.உங்கள் வாழ்க்கையில் நிம்மதி மகிழ்ச்சி என்பது இறுதிவரைக் கிடையாது .

மனிதப்பிறவி எடுத்ததின் நோக்கம், கிடைத்ததின் நோக்கம்,மரணத்தை வென்று கடவுள் நிலை அடைவதாகும் .அதாவது மரணமில்லா பெருவாழ்வு என்பதாகும்.நாம் எங்கிருந்து வந்தோமோ அங்கு செல்லவேண்டும்.வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது!வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது ? என்று கண்ணதாசன் பாடல் வரிகள் சொல்லுகின்றன.

அப்படி என்றால் மனிதன் எப்படி வாழ வேண்டும்? என்பதை வாழ்ந்து காட்டியவர் வள்ளலார் .அவர் வாழ்ந்து வந்த பாதையை கடைபிடித்தால் மரணத்தை வென்று கடவுள் மயமாகலாம்.அவர் எழுதி வைத்த திரு அருட்பாவில் அனைத்து உண்மைகளும் மிகவும் தெளிவாக இருக்கிறது .அதை வாங்கி படித்து மனிதர்கன் மனிதர்களாக வாழுங்கள் .

நீங்கள் அப்படி வாழ்கிறீர்களா ?என்று கேள்வி கேட்கலாம்.நான் சத்தியமாக அப்படித்தான் வாழ்கிறேன் .
இந்த உலகத்தில் எனக்கு என்று எதுவும் இல்லை.மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை எதுவுமில்லை.
பணம் சொத்து வீடு என்று எதுவும் இல்லை.நான் யாரிடத்திலும் எதுவும் வாங்குவதில்லை .ஆனால் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன்.

எனக்கு வேண்டியதை எல்லாம் இறைவன் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தருகிறார்.என்னை ஆண்டவர் வழி நடத்துகிறார்.அவர் வழியில் நான் செல்கிறேன் இதுதான் உண்மையாகும் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன 
அங்கே விளங்கிய அருட்பெரும் ஜோதி !
எங்கு எங்கு இருந்து உயிர் ஏது ஏது வேண்டினும் 
அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும் ஜோதி 

என்பார் வள்ளலார் ;-சாதி சமயம் மதம் இனம் நாடு என்ற பேதமில்லாமல்,அனைவரும் அனைத்துயிர்களும் நம்முடைய சகோதரர்கள் என்ற உண்மை தெரிந்து விட்டால்.நாம் கடவுள்கள்தான்.அதில் எந்த சந்தேகமும் இல்லை.உண்மை தெரிந்து விட்டால் எந்த தவறும் செய்யமாட்டோம்.

கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதி ஆண்டவர் !அவரால்தான் இந்த உலகமும் உலக உயிர்களும் படைக்கப்ட்டுள்ளன என்ற உண்மை உணரவேண்டும்.அவர் உருவமாக இல்லை ஒளியாக உள்ளார்,அருள் அணுவாகஉள்ளார் ! அதற்கு மேல் எந்த சக்திகளும் இல்லை என்பதை அறிவால் உணர்ந்தால் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும் 

மனிதன் படைத்த உருவங்கள் எல்லாம் கடவுள் இல்லை,கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாம் கடவுள்கள் இல்லை, கடவுள் உயிர் ஒளியாக எல்லா உயிர்களிடத்தும் இயங்கிக் கொண்டு இருக்கிறார்.அந்த உயிர் ஒளிதான் கடவுளின் ஏக தேசங்கள் என்பதை ,உண்மையுடன் உணர்ந்தால் எந்த உயிரையும் கொலை செய்யமாட்டோம்.நமக்கு வழி காட்டிய பெரியவர்கள் உண்மைக்கு புறம்பாக சொல்லியும் எழுதியும் வைத்து விட்டார்கள் அதையே உண்மை என்று நம்பி அறியாமையால் வாழ்ந்து வருகிறோம்.நம்மீது குற்றமில்லை நமக்கு வழி காட்டியவர்கள் தான் குற்றவாளிகலாகும்.அவர்கள் காட்டிய வழியில் கண்ணை 
மூடிக்கொண்டு வாழ்ந்து கொண்டு வருகிறோம் .

வள்ளலார் வந்துதான் எல்லா உண்மைகளையும் தெளிவு படுத்தியுள்ளார் இந்த உலகத்திற்கு உண்மையை சொன்ன ஒரே அருளாளர் வள்ளலார் ஒருவர்தான் ஒருவர்தான் !

எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம உயிர்போல் எண்ணி யுள்ளே 
ஒத்து உரிமை உடையவராய் யுவக்கின்றார் யாவர அவர் உலந்தான் சுத்த 
சித்துருவா எம்பெருமான் நடம புரியும் இடம் என நான் தெரிந்தேன் அந்த 
வித்தகர் தம் அடிகேவல் புரிந்திட என் சிந்தை மிக விழைந்த்தாலோ !
 
எல்லா உயிர்களையும் ஒன்று என்று யார் நினைக்கின்றார்களோ அவர்களை நான் கடவுளாக பார்க்கிறேன் அவர்கள் இட்ட பணியை என்னுடைய சிரமேற் கொண்டு செயல்பட என்னுடைய அறிவு தயாராக இருக்கிறது என்கிறார். வள்ளலார். 
உண்மையை உணர்ந்து உறுதியுடன் வாழ்வோம் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !  
. .
அன்புடன் உங்கள் ஆன்மநேயன் ;-கதிர்வேலு 

ரஜினிக்கு கடிதம்




Monday, May 16, 2011


ரஜினிக்கு கடிதம்




தமிழக மக்களின் உள்ளத்தில் இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள்,அவருக்கு உடல் நிலை சரியில்லாதது முகவும் வேதனைக்குரியதாகும்.அவர் நலமுடன் வாழ எல்லாம் வல்ல அருட்பெருன் ஜோதி ஆண்டவர் அருள் புரியட்டும் .
அவர் அடிக்கடி இமயமலை போகிறார் பல துறவிகளை சந்திக்கறார் ஆசிர்வாதம் வாங்குகிறார்.ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு உள்ளவர்.அப்படி இருந்தும் ஏன் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது ?இதை நாம் சிந்திக்கவேண்டும் உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு யாராக இருந்தாலும்.துன்பமும் துயரமும் நோய்களும் வரக்கூடாது என்கிறார் வள்ளலார் .அப்படிவந்தால் அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பது உண்மையாகும். ரஜினி நல்லவர் அவர் என்ன தவறு செய்திருப்பார் என்று பார்க்கும் போது உண்மை தெரிகிறது.உண்மையான ஆன்மீகவாதிகள் உயிர்க்கொலை செய்யக்ககூடாது,புலால் உண்ணக கூடாது .ஆனால் அவர் உயிர்கொலை செய்வதில்லை.புலால் மட்டும் உண்கிறார் என்பது அனைவரும் அறிந்ததாகும்.அவர் பாலச்சந்தர் பேட்டியிலே சொல்லி இருக்கிறார்.அவர் புலால் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும், சிகரெட் பிடிப்பதையும், விட்டு விட்டால் நல்லது,
சாதாரண மனிதர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ,ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புகிறவர்கள் நிச்சயம் புலால் சாப்பிடக் கூடாது.என்று நான் சொல்லவில்லை.மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளலார் சொல்லுகிறார்.உலக பொதுமறை என்று சொல்லப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் சொல்லுகிறார்.
வள்ளலார் பாடல் வருமாறு;--
பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர் புலை கொலைகள் புரிகின்றீர் கலகல வென்கின்றீர் கைவிளக்கு பிடித்து ஒரு பாழுங் கிணற்றில் விழுகின்றீர் களியரெனக் களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர் ஐவிளக்கு மூப்பு மரனாதிகளை நினைத்தால்அடிவயிற்றை முருக்காதோ கொடிய முயற்று உலகீர் மெய்விளக்க எனது தனித்தந்தை வருகின்ற தருணம் மேவியது ஈண்டு அடைவீரே ஆவி பெருவீரே.
என்கிறார் வள்ளலார் ஆதலால் ரஜினிக்கு எந்த குறை இருந்தாகும் அவர் புலால் மறுத்து,மதுவை நிறுத்தி, புகை பிடிப்பதை நிறுத்தினால் சீக்கிரம் நல்ல குணமடைவார் இது சத்தியம் உண்மையாகும்.
ஏண் இதை எழுதுகிறேன் என்றால் ரஜினி மீது எனக்கு அளவில்லாத பற்றுண்டு ,அவர் நல்லவர் அவருக்கு போதித்த போதகர்கள் எப்படியோ தெரியவில்லை.எத்தனை கோடி பணமிருந்தாலும்.எவ்வளவு புகழ் இருந்தாலும் ,தன்னுடைய உடம்பை கவனிக்கவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை.
அதைப்பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;-


உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை யறியீர்உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே யறியீர் மடம்புகு பேய் மனத்தாலே மயங்க்குகின்றீர் மனத்தை வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்றறியீர் இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே எண்ணி எண்ணி யிளைகின்றீர் ஏழை யுலகிரே நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம் நண்ணியது நண்னுமினோ புண்ணியம் சார்வீரே


என்கிறார் வள்ளலார் நான் புலால் உண்பதை நிறுத்தி 35, ஆண்டுகள் ஆகிறது.இன்றுவரை எனக்கு எந்த வியாதியும் வந்ததில்லை.வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து வருகிறேன் இன்றுவரை மருத்தவரிடம் சென்றதில்லை.எந்த செக்கப்பும் இல்லை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன் இவை அனுபவமாகும் .
இதே கருத்தை அனைவரும் கடைபிடித்தால் நீண்ட ஆயுள்,நோயற்ற வாழ்வு,மகிழ்ச்சியான வாழ்க்கை,துன்பமில்லாத வாழ்க்கை,பெற்று ஆனந்தமாக வாழலாம்.
இன்றுவரை அடியேன் பல்லாயிரம் மக்களை நல்வழிப் படுத்தியுள்ளேன்.மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அனைவரும் வள்ளலார் வழியை பின்பற்றி வருகிறார்கள் .இந்த உலகத்திற்கு உண்மையை துணிவுடன் சொன்னவர் வள்ளலார் ஒருவரே



திரு வள்ளுவர் வாழ்வதற்கு வழி காட்டினார் .வள்ளலார் வாழ்ந்து காட்டினார்.என்பது அனைவரும் அறிந்ததே.
ரஜினி நலமுடன் வாழ்வதற்கு என் அறிவார்ந்த வாழ்த்துக்கள் .நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் அழியாப்புகழ் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் வாழ மறுபடியும் வாழ்த்துகிறேன் .
அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு

திங்கள், 16 மே, 2011

ரஜினிக்கு கடிதம்


தமிழக மக்களின் உள்ளத்தில் இருப்பவர் ரஜினிகாந்த் அவர்கள்,அவருக்கு உடல் நிலை சரியில்லாதது முகவும் வேதனைக்குரியதாகும்.அவர் நலமுடன் வாழ எல்லாம் வல்ல அருட்பெருன் ஜோதி ஆண்டவர் அருள் புரியட்டும் .

   அவர் அடிக்கடி இமயமலை போகிறார் பல துறவிகளை சந்திக்கறார் ஆசிர்வாதம் வாங்குகிறார்.ஆன்மீகத்தில் நல்ல ஈடுபாடு உள்ளவர்.அப்படி இருந்தும் ஏன் அவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகிறது ?இதை நாம் சிந்திக்கவேண்டும் உண்மையான ஆன்மீக வாதிகளுக்கு யாராக இருந்தாலும்.துன்பமும் துயரமும் நோய்களும் வரக்கூடாது என்கிறார் வள்ளலார் .அப்படிவந்தால் அவர்கள் ஏதோ தவறு செய்கிறார்கள் என்பது உண்மையாகும்.
     ரஜினி நல்லவர் அவர் என்ன தவறு செய்திருப்பார் என்று பார்க்கும் போது உண்மை தெரிகிறது.உண்மையான ஆன்மீகவாதிகள் உயிர்க்கொலை செய்யக்ககூடாது,புலால் உண்ணக கூடாது .ஆனால் அவர் உயிர்கொலை செய்வதில்லை.புலால் மட்டும் உண்கிறார் என்பது அனைவரும் அறிந்ததாகும்.அவர் பாலச்சந்தர் பேட்டியிலே சொல்லி இருக்கிறார்.அவர் புலால் சாப்பிடுவதையும்,மது அருந்துவதையும், சிகரெட் பிடிப்பதையும் விட்டு விட்டால் நல்லது,

    சாதாரண மனிதர்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை ,ஆன்மீகத்தை நம்புகிறவர்கள் கடவுளை நம்புகிறவர்கள் நிச்சயம் புலால் சாப்பிடக் கூடாது.என்று நான் சொல்லவில்லை.மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் வள்ளலார் சொல்லுகிறார்.உலக பொதுமறை என்று சொல்லப்படும் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் சொல்லுகிறார்.

     வள்ளலார் பாடல் வருமாறு;--

பொய் விளக்கப் புகுகின்றீர் போது கழிக்கின்றீர்
புலை கொலைகள் புரிகின்றீர் கலகல வென்கின்றீர்
கைவிளக்கு பிடித்து ஒரு பாழுங் கிணற்றில் விழுகின்றீர்
களியரெனக் களிக்கின்றீர் கருத்து இருந்தும் கருதீர்
ஐவிளக்கு மூப்பு மரனாதிகளை நினைத்தால்
அடிவயிற்றை முருக்காதோ கொடிய முயற்று உலகீர்
மெய்விளக்க எனது தனித்தந்தை வருகின்ற தருணம்
மேவியது ஈண்டு அடைவீரே ஆவி பெருவீரே.

என்கிறார் வள்ளலார் ஆதலால் ரஜினிக்கு எந்த குறை இருந்தாகும் அவர் புலால் மறுத்து புகை பிடிப்பதை நிறுத்தினால் சீக்கிரம் நல்ல குணமடைவார் இது சத்தியம் உண்மையாகும்.

   ஏண் இதை எழுதுகிறேன் என்றால் ரஜினி மீது எனக்கு அளவில்லாத பற்றுண்டு ,அவர் நல்லவர் அவருக்கு போதித்த போதகர்கள் எப்படியோ தெரியவில்லை.எத்தனை கோடி பணமிருந்தாலும்.எவ்வளவு புகழ் இருந்தாலும் ,தன்னுடைய உடம்பை கவனிக்கவில்லை என்றால் அதில் எந்த பயனும் இல்லை.

அதைப்பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் ;-

உடம்பு வருவகை அறியீர் உயிர்வகையை யறியீர்
உடல் பருக்க உண்டு நிதம உறங்குதற்கே யறியீர்
மடம்புகு பேய் மனத்தாலே மயங்க்குகின்றீர் மனத்தை
வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறை கற்றறியீர்
இடம்பெறு பொய் வாழ்க்கையிலே இன்பம் துன்பம் அடுத்தே
எண்ணி எண்ணி யிளைகின்றீர் ஏழை யுலகிரே
நடம்புரி என் தனித்தந்தை வருகின்ற தருணம்
நண்ணியது நண்னுமினோ புண்ணியம் சார்வீரே

என்கிறார் வள்ளலார் நான் புலால் உண்பதை நிறுத்தி 35, ஆண்டுகள் ஆகிறது.இன்றுவரை எனக்கு எந்த வியாதியும் வந்ததில்லை.வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து வருகிறேன் இன்றுவரை மருத்தவரிடம் சென்றதில்லை.எந்த செக்கப்பும் இல்லை
மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன் இவை அனுபவமாகும் .

இதே கருத்தை அனைவரும் கடைபிடித்தால் நீண்ட ஆயுள்,நோயற்ற வாழ்வு,மகிழ்ச்சியான வாழ்க்கை,துன்பமில்லாத வாழ்க்கை,பெற்று ஆனந்தமாக வாழலாம்.

இன்றுவரை அடியேன் பல்லாயிரம் மக்களை நல்வழிப் படுத்தியுள்ளேன்.மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள்.அனைவரும் வள்ளலார் வழியை பின்பற்றி வருகிறார்கள் .இந்த உலகத்திற்கு உண்மையை துணிவுடன் சொன்னவர் வள்ளலார் ஒருவரே.திரு வள்ளுவர் வாழ்வதற்கு வழி காட்டினார் .வள்ளலார் வாழ்ந்து காட்டினார்.என்பது அனைவரும் அறிந்ததே.

ரஜினி நலமுடன் வாழ்வதற்கு என் அறிவார்ந்த வாழ்த்துக்கள் .நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் அழியாப்புகழ் பெற்று என்றும் மகிழ்ச்சியுடன் வாழ மறுபடியும் வாழ்த்துகிறேன் .

அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு.

சன்மார்க்க அன்பருக்கு கடிதம்


ஆன்மநேய அன்பரே வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை நன்கு படித்துவிட்டு உண்மை சேதிகளை வெளியிடுக்கள் எவனோ ஒருவன் எழுதியதை படித்துவிட்டு உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிடக் கூடாது .வள்ளலார் எழுதிய திருஅருட்பாவில் எந்த இடத்தில் கடையை விரித்தேன் கேட்பாரில்லை கட்டிக் கொண்டேன் என்று இருக்கிறது .வள்ளலார் கட்டிகொலவதரறகா திருஅருட்பா எழுதினார் .கட்டிக்கொள்வதற்கா சமரச சுத்தசன்மார்க்கசத்திய சங்கத்தை துவங்கினார் ?கட்டிகொள்வதற்கா தருமச்சாலையை துவங்கினார் ?கட்டிகொலள்வதற்க்கா சத்திய ஞானசபையைக் கட்டினார் ?

எவனோ ஒரு அறிவில்லாதவன் எழுதியதை படித்து விட்டு கண்டபடி எழுதக்ககூடாது.திரு அருட்பாவை நன்றாகப் படியுங்கள்.படித்து உண்மையை உணருங்கள் மற்றவர்கள் சொல்லியதை கேட்காதீர்கள்.
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்பொருள் காண்பது அறிவு. என்பதை உணருங்கள் .

வள்ளலார் கடையை எங்கு வைத்திருக்கிறார் என்பதை வள்ளலார் திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் ,
அந்த பாடல் வருமாறு ;--

ஆரண வீதிக்கடையும்---சுத்த 
ஆகம வீதிகளந்தக்கடையும்
சேர நடுக்கடை பாரீர் --திருச்
சிற்றம்பலத்தே திருநட ஜோதி 

பாடல் மறைகளோர் கோடி--அருட் 
பாத வுருவ சொரூபங்கள் பாடி 
தேட இருந்தது பாரீர் --திருச் 
சிற்றம்பலத்தே திரு நடஜோதி 

என்று வள்ளலார் தெளிவாக எழுதியுள்ளார்கள் 

இந்த உலகத்தில் வேதம்,ஆகமம்,புராணம் ,இதிகாசம்,சாத்திரங்கள் யாவும், உண்மைக்கு புறம்பான கோடிக்கணக்காக பாடல்கள் பாடி ,கடவுளை கண்டு கொள்ளமுடியாமல் இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.அப்படி பொய்யான பாடல்கள் எழுதி கடை விரித்து வைத்துள்ளார்கள் ,அந்தகடைகளை 
அப்புறப்படுத்த,அனைத்து கடைகளுக்கும் மத்தியில் (நடுவில் )என்னுடைய உண்மைக்கடையான் ''திரு அருட்பாவை'' மத்தியில் வைத்துள்ளேன்.அருட்பெரும்ஜோதியின் உண்மையை விளக்கியுள்ளேன் .
என்று ஆணித்தரமாக வள்ளலார் விளக்கியுள்ளார் .

ஆதலால் அன்பர்களே வள்ளலார் மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் அவர் பெருமையை,குலைக்க சமயவாதிகள் செய்த சூழ்ச்சியாகும்.அதனால் அப்படி எழுதியும் மேடையில் பேசியும் வருகிறார்கள்.அவர்களை இனம் கண்டு விரட்டி அடிக்கவேண்டும் அவர்களுக்கு புத்தி புகட்ட வேண்டும்.இவை ஒவ்வொரு சுத்த சன்மார்க்கிகளின் கடமையாகும்.

சாதி சமயம் மதம் போன்ற பற்றுள்ளவர்கள் சுத்த சன்மார்க்கத்தை புரிந்து கொள்வது கடினமாகும்,அதையெல்லாம் விட்டு விட்டால்தான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கம் அறிவு பூர்வமாக விளங்கும்.பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அருள் அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்கிறார் வள்ளலார்.

அறிவை அறிவால் அறிகின்ற பொழுது அனுபவமாகும்.அறிவைத் தேடுங்கள் அனுபவம் தானே வரும் .
வள்ளலார் கொள்கையை பின்பற்றுபவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி உண்மையானது.தூய்மையானது ஒழுக்கமானது,யாராலும் குறை சொல்லமுடியாதது.அதை பின் பற்றுபவர்கள் எப்படி இருக்க வேண்டும்.ஒழுக்கம் நிறைம்பி கருணையே வடிவமாக இருக்கவேண்டும் .

சீவகாருன்யமும், கடவுள் நிலையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற சத்விசாரமும் அவசியம் தேவையாகும்.இவை இரண்டும் மிக முக்கியமானதாகும்.சீவகாருண்யம் விளங்கும்போது,அன்பும் அறிவும் தானாக விளங்கும்.சீவகாருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் தானாக மறையும்.இந்த உண்மையை உலகிற்கு யாரும் இவ்வளவு தெளிவாக சொல்லவில்லை.

அன்பு,தயவு கருணை என்னும் மூன்றும் மிக முக்கியமானதாகும், தயவு என்னும் கருணைதான் என்னை மேலே தூக்கிவிட்டது வேறு எதுவும் என்னை தூக்கிவிடவில்லை,என்று தெளிவுபட தெரிவித்துள்ளார்கள்.
சீவகாருண்யமே மோட்சவீட்டின் திறவுகோல்,சீவகாருண்யமே கடவுள் வழிபாடு.சீவகாருண்யமே ஆன்மநேய ஒருமைப்பாடு.என்னும் கொள்கையை கடைபிடித்தால் கடவுள் நமக்கு கொடுக்க வேண்டியதை கொடுப்பார் இதில் எந்த சந்தேகமும் இல்லை .

ஆன்மநேய அன்பர்களே திரு அருட்பா ஆறாம் திருமுறையை நன்கு படியுங்கள் உண்மையை உணருங்கள்.உலகிற்கு எடுத்து சொல்லுங்கள்.அனைத்துலக மக்களையும் ஒழுக்கமுள்ளவர்களாக தூய்மையுள்ளவர்களாக,கருணை யுள்ளவர்களாக மாற்றுங்கள் .அதுவே நாம் செய்யவேண்டிய கடமையாகும் .உயிர்க்கொலையும் புலால் உண்பதும் கொடுமையான பாதகச்செயல் என்பதை உணர்த்துங்கள்
எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்க 
கொள்ளா நெறியே குவலயம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன்;--கதிர்வேலு

ஞாயிறு, 15 மே, 2011

மாயை

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்.மாயை என்பது பஞ்ச பூதங்களை நிர்வாகம் செய்யும் அதிகாரியாகும்.இங்கு வாழும் உயிர்களுக்கு பாது காப்பு வழங்கும்,உரிமையும் தவறு செய்தால் தண்டனை வழங்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.தண்டனை என்பதுதான் மரணமாகும்.நாம் யார்?நாம் எங்கிருந்து வந்தோம்,எதற்காக வந்தோம்,ஏன் வந்தோம்,மறுபடி எங்கு செல்லவேண்டும்,என்பதை உணர்வது தான் மனிதனுக்கு கொடுத்த அறிவாகும்.மனிதன் உணர்ந்து உண்மையான இறைவனை அடைவதுதான் மனித வாழ்க்கையாகும்.மாயை பொருளை கொடுக்கும் அருளை கொடுக்காது.ஆனால் மனிதன் அருளை தேடுவதற்கு மாயை தடையாக இருக்காது.துணையாக இருக்கும்.இவை இறைவன் சட்டமாகும்.
   இதை வள்ளலார் அருட்பாவில் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு;-

மாயையாற் கலங்கி வருந்தியபோதும் வள்ளல உந்தன்னையே மதித்துன் 
சாயையால் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவா வேறு எண்ணியதுண்டோ 
தூயபொற்பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிச சிறிதும் இங்கு ஆற்றேன் 
நாயகா எனது மயக்கேல்லாம் தவிர்த்து நன்று அருள் 
புரிவது உன் கடனே!

 என்கிறார் வள்ளலார் ஆதலால் நாம் மாயையுடன் தொடர்பு கொண்டு வாழ்ந்தாலும்.மாயையில் இருந்து விலக வேண்டும் என்பது மனிதனின் செயல்களாகும். இறைவன் நமக்கு கொடுத்துள்ள அருளை பெற்றால் தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகமுடியும்.

   அதை விடுத்து நாம் இவ்வுலகிலுள்ள பொருள்களை அனுபவிக்கும் வரை அருள் கிடைக்காது.போருளைத்தேடினால் அருள் கிடைக்காது .அருளைத்தேடினால் அனைத்தும் கிடைக்கும்.அதனால் தான் அருளைத்தரும் கடவுள் அருட்பெருஞ் ஜோதியாகும் என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.மற்றைய கடவுள்களுக்கு அருளைத்தரும் அதிகாரம் இல்லை என்பதாகும்.அப்படியே அந்தகடவுள்கள் அருளைத்தருவதாக இருந்தாலும் அருட்பெரும ஜோதியிடம் வாங்கிதான் தரமுடியுமே தவிர வேறு வழிஇல்லை என்பது உண்மையாகும்.
  அதை வள்ளலார்;-எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெரும் ஜோதி என்கிறார் ,
நாம் யாரை வணங்கினாலும் அதன் மூலமாக அருட்பெரும்ஜோதி தான் வழங்குகிறது.என்பதை வள்ளலார் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளார்.

  மாயை நமக்கு தாய் போலாகும்.அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தந்தைபோலாகும்.தந்தையை தேட முயற்ச்சித்தால் தாய் தடுப்பதில்லை.தாய் நமக்கு துணையாக இருக்குமே தவிர,எதிரியாக இருக்காது என்பதை உண்மையாக உணர வேண்டும் .

நமக்கு முன்னோடியாக வந்த பெரியவர்கள் இந்த உண்மை தெரியாமல்,மாயையை ஒழிக்கவேண்டும் என்ற தவறான் கருத்தை தெரிவித்து விட்டார்கள்.மாயை நாம் செய்யும் செயல்களுக்கு தகுந்தாற்போல்,பிறவிகளை கொடுக்கும்,கொடுத்துகண்டே இருக்கும் பிறவியை ஒழிக்க வேண்டுமானால் வள்ளலார் சொன்ன வழியில் அவர் வாழ்ந்து காட்டிய வழியில் சென்றால் ஒழிய வேறு வழிகள் இல்லை என்பதை நாம் உண்மையுடன் உணரவேண்டும் 

   அதனால்தான் வள்ளலார் புனைந்துரையேன்,பொய்புகளேன்,சத்தியம் சொல்கிறேன்,உண்மை உரைக்கின்றேன் உவந்தடைமின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர் என்மையினால் எனை நினையீர் எல்லாம் செய் வல்லான் என்னுள் இருந்து இசைக்கின்றான் இதனை கேண்மின் இங்கேவம்மீன் என்று சொல்லுகிறார் 

ஆதலால் வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து வளம் பெருவோம் 
அன்புடன் கதிர்வேலு.

சனி, 14 மே, 2011

ஆட்சி மாற்றம்

தமிழக தேர்தல் பெரிய மாற்றத்தை உருவாக்கி இருந்தாலும்,மக்களுக்கு நன்மை கிடைக்கும் என்பது உறுதியில்லை.தி,மு,க,--அ,தி,மு,க -என்ற இரு கட்சிகளும் ஒரே குட்டையில  ஊறிய மட்டைகள்தான்,என்பது அனைவரும் அறிந்ததுதான்.இரண்டு கட்சிகளும் மாறி மாறி வந்துகொண்டுதான் இருக்கும்,இரு கட்சிகளும் கொள்ளை அடிப்பதில் வல்லமை படைத்தவர்கள்.
   இந்த இரு கட்சிகளும் கருத்துவேறு பாட்டினால்,சுய நலத்திற்க்காக பிரிந்த கட்சிகளாகும்,இரு கட்சிகளும் மக்களை பேச்சால் ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.நம்முடைய  பேச்சை மக்கள் நம்பி ஏமாறுபவர்கள் என்பது இரு கட்சிகளுக்கும் தெரியும்.இலவசம் என்ற பெயரில் மக்களுக்கு கூலியை கொடுத்து ஆட்சிக்கு வரும் நிலை ஏற்பட்டுவிட்டது, 
     மக்களுடைய உழைப்பை உறிஞ்சும் ரத்தவெறி பிடித்தவர்கள் இவர்களை விட்டால் நமக்கும் கதியில்லை என்ற நிலை தமிழகத்தில் ஏற்ப்பட்டுவிட்டது.
     தன்னலம் கருதாத தமிழகத்தின் முதல் முதல்வர் ஓமந்துறார்,ராஜாஜி,காமராசர்,பக்தவச்சலம்,சுந்தரவடிவேல்.சுபரமனியன்.போன்ற தலைவர்கள் இந்த த்மிழ் நாட்டை சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்கள்.மக்கள் நலனில் மிகுந்த அக்கறைக் கொண்டு மக்களை அனைத்து  வகையிலும் முன்னேற்றம் அடைய வைத்தார்கள்,அந்த துய்மையனவர்களை,பகுத்தறிவு என்ற பேரால் மக்களை பேச்சின் மூலமாகவும் திரைப்படத்தின் மூலமாகவும்.மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடித்தவர்களாகும்.
இவர்கள் வந்ததிலிருந்து மக்கள் ஒழுக்கம் குறைந்துவர்களாக மாறிவிட்டார்கள்.
      ஆட்சிக்கு வருபவர்கள் முதலில் தனிமனித ஒழுக்கம் தேவை,அவர்களே ஒழுக்கம் இல்லை என்றால் மக்களை எப்படி காப்பாற்றுவார்கள்.பணம் ஒன்றே குறிக்கோளாக இருக்கிறார்களே தவிர மக்கள் நலனில் அக்கறை என்பது யாருக்கும் இல்லை.
      மக்கள் ஒழுக்கமுள்ள நேர்மையுள்ள,சுயநலமில்லாத விபரம் தெரிந்த நல்லவர்களை தேடி கண்டு பிடித்து ஆட்சியில் அமரவைக்கும் காலம் எப்பொழுது வருமோ அப்பொழுதுதான் நம் நாடும் நாட்டுமக்களும் நலமுடன் வாழ முடியும் .அதுவரையில் நாடு உருபடியாகாது மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ முடியாது.வள்ளலார் எப்படிப்பட்டவர்கள் ஆட்சியில் அமரவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிரார்கள் 

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக 
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க ---தெருனயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத் 
எல்லோரும் வாழ்க இசைந்து .

அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற 
விச்சை அரசே விளங்கிடுக --  நச்சரவ 
மாத்திக் கொடிய உயிர்  அத்தனையும் போய்ஒழிக 
நீதிக் கோடி விளங்க நீண்டு .

என்கிறார் வள்ளலார் மக்களை வழி நடத்தும் ஆட்சியாளர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதை தெளிவுபடுத்துகிறார் .

இனிமேலாவது நல்லவர்களை ஆட்சி பீடத்தில் அமர்த்த முயற்ச்சி செய்யுங்கள்.
கொல்லா  நெறியே குவலயம் ஓங்குக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

வியாழன், 12 மே, 2011

பனித்துளி சங்கருக்கு கடிதம்

ஆன்மநேய அன்பர்களுக்கு வணக்கம் நம்மை ஆள்வதற்கு போட்டிபோடும் அரசியல் கட்சிகள் ,நாளை அரண்மனையில் அமர்ந்து ஆட்சி செய்யும் அதிகாரம் யாருக்கு என்பதை மக்கள் ,அரசியல் வாதிகள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மைதான்.யார் வந்தாலும் மக்களுக்கு நன்மை செய்யவேண்டும்.மக்களுக்கு நன்மைசெய்யாத எந்த ஆட்சியாக இருந்தாலும் தூக்கி எறியவேண்டும் .அதில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் .கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக !அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க என்றார் வள்ளலார் ,
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதல் குரல் கொடுத்தவர் வள்ளலார் .இவை யாருக்காவது தெரியுமா ?மக்கள் பசி பட்டினி வறுமை தாண்டவம் ஆட மக்கள் துன்பப்பட்டுக் கொண்டு இருந்த காலத்தில் .வடலூரில் 1867 ஆம் ஆண்டில் முதன் முதலாக தருமச்சாலையை அமைத்து ஏழைகளின் பசிப்பிணியை போக்கினார் வள்ளலார் .பட்டினி உற்றோர் பசித்தனர் என்று பிறரால் கேட்டபோதெல்லாம் உளம் பகீர் ஈன நடுக்குர்றேன் என்ற கருணையே வடிவமானவர் பிறந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை நினைக்கும் போது .மனம் மகிழ்ச்சியடைகிறோம்.
    இந்த தமிழ் நாடு உலகத்திற்கே வழி காட்டியாக இருக்கவேண்டும் .அதற்கு தகுந்தாற் போல் ஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் நலனில் அக்கறையோடு பணியாற்ற வேண்டும்..தன்னலம் கருதாது பொது நலத்திற்கு பாடு பட வேண்டும் .மக்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகள் மக்களுக்கு உண்மை உழியர்களாக பணிபுரியவேண்டும்.அதுவே அனைவருடைய விருப்பமும் வேண்டு கோலாகும்.இது வரையில் எப்படி இருந்தாலும் இனிமேல் தவறு வராமல் மக்களுக்கு பணியாற்றி நல்ல பெயர் வாங்க வேண்டும் அதுவே என்னுடைய விருப்பமும் வேண்டுகோளாகும் ,
     நடு நிலையோடு பணியாற்றி நன்மை செய்ய வாழ்த்துகிறேன் ,மக்களை அழிக்கும் மது ,மாமிசம் அறவே ஒழிக்க வேண்டும் .கடவுள் பெயரால் உயிர்கொலை செய்வதை தடுத்து மக்களை காப்பற்ற வேண்டும் .எல்லாஉயிர்களும் இறைவன் படைப்பு .எந்த உயிரையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .அதை அரசாங்கம் அமல படுத்த வேண்டும். வாடிய பயிரைக கண்டு வாடிய வள்ளலார் பிறந்த நாட்டில் ,உயிர்கொளையும் புலை புசிப்பும் இருக்கலாமா?
      எல்லாவற்றிக்கும் மன்னிப்பு உண்டு உயிர்க்கொலைக்கும்,புலால் உண்பதற்கும் மன்னிப்பு கிடையாது என்கிறார் வள்ளலார்.வள்ளுவரும் கொல்லாமை ,புலால் மறுத்தல் என்ற இரண்டு அதிகாரங்களில் ௨௦ திருக்குறள் எழுதி வைத்துள்ளார் .அதை படித்த அரசியல் வாதிகள் ஏன் அதை மக்களுக்கு எடுத்து சொல்லவில்லை .அவர்களே அந்த தவறை செய்கிறார்கள் அதனால் அவர்கள் மக்களுக்கு எடுத்து சொல்ல தயங்குகிறார்கள்.இனியாவது மக்கள் நன்மைக் கருதி ,மக்களுக்கு அதனால் வரும் தீமைகளை எடுத்துரைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
     ஆட்சி பீடத்தில் அமரும் ஆட்சியாளர்கள் மக்கள் அறியாமையை போக்கி நன்மைகள் எதுவோ அதை செயல்படுத்த வேண்டும்,காந்தி அகிம்சை,சத்தியாகிரகம்,கொல்லாமை புலால் உண்ணாமையை கடைபிடித்து நம் நாட்டிற்கு சுதந்திரம் வாங்கி தந்தார் என்பது யாவரும் அறிந்த உண்மையாகும் .அவர் வள்ளலார் வழியை பின்பற்றியவர்.அவர் வாங்கி கொடுத்த சுதந்திரத்தை காப்பாற்றுவோம்.என்ற உறுதி மொழியை வருகின்ற ஆட்சியாளர்கள் சிரமேர்க் கொண்டு,நாட்டையும் மக்களையும் காப்பாற்றுங்கள்..

அன்புடன் உங்கள் ஆன்மநேயன் ---கதிர்வேலு.

kadavul4u: உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது.

kadavul4u: உருவ வழிபாடு தவறா என்ற வினாவுக்கும்
ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் .உருவ வழிபாடு தேவையில்லை.கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதியாக உள்ளார் என்பது வள்ளலாரின் கொள்கைகளில் முக்கியமானதாகும்.உடம்பின் உறுப்புகளை (தத்துவங்களை)சிலைகளாக வைத்து,பல கடவுள்கள் இருப்பதாக நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்,உண்மையை விட்டு தத்துவங்களை கடவுளாக எண்ணி மக்கள் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்,ஒழுக்கம் என்பது குறைந்து விட்டன,கடவுளுக்கு கை,கால,உடம்,இருபதாகவும்.குடும்பம்,மனைவி மக்கள் இருப்பதாகவும் சித்தரித்து விட்டார்கள்,கடவுளுக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருபதாகவும் அவைகளை மனிதனுக்கு இருப்பதுபோல் காட்டி மக்களை குழப்பி விட்டார்கள்.கடவுளுக்கேஇப்படி இருக்கும்போது நமக்கு ஏன்இருக்க கூடாது என்று தவறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அதனால் ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டன.உருவவழிபாடு மக்களை நல்வழி படுத்தமுடியாது.அதனால் உருவ வழிபாடு தேவையற்றதாகும்.
கடவுள் ஒளியாக உள்ளார்,அவர் எல்லாஉடம்பிலும் உயிராக ஒளியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்,அந்த உயிரே கடவுளாகும்,ஆதலால் எல்லாஉயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே கடவுள் வழிபாடாகும் என்பதை நமது அருளாளர் வள்ளலார் தெளிவுபடுத்தியுள்ளார்.உடம்பிற்கு ஒரு உயிர்தான் இருக்கமுடியும்,அதுபோல் இந்த உலகத்திற்கு ஒரு கடவுள்தான் இருக்கமுடியும்,பல கடவுள் என்பதும் பல தெய்வங்கள் என்பதும் பொய்யான செய்திகளாகும் உயிருள யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே என்றார் வள்ளலார்.உயிர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் வழிபாடாகும் சாதி,மதம் சமயம் எல்லாம் பொய்யானதாகும்.கடவுள் பெயரால் சமயங்களும் மதங்களும் பொய்யான கருத்துகளை சொல்லி மக்களை பிரித்து விட்டார்கள்.அவைகளை நம்பவேண்டாம் என்கிறார் வள்ளலார்.
சாதியையும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உரைத்த அருட்பெரும் ஜோதி!
என்கிறார் வள்ளலார்
கலை உரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமேல்லாம்.மணமூடிப் போக என்று சாடுகிறார் வள்ளலார்.
கடவுள் எப்படி உள்ளார் என்பதை கீழவரும் பாடலில் விளக்குகிறார்.

இயற்கையிலே பாசங்கள் ஒன்ருமிளார் குணங்கள்
ஏது மில்லார் தத்துவங்கள் ஏதுமில்லார் மற்றோர்
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும்
திரிபில்லார் கலங்கமில்ளார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார்
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பமயமாய்
உயத்தகுமோர் சுத்த சிவானந்த சபைதனிலே
ஓங்க்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் .

என்று கடவுளின் தன்மையைப்பற்றி தெளிவாக தெருயப்படுத்தியுள்ளார்.ஆதலால் கடவுள் ஒருவரே அவர் அருட்பெருன் ஜோதியாக உள்ளார்,அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்/

கடவுள் பெயரால் உயிர்பலி செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும் .
எல்லாஉயிர்களியும் தம உயிர்போல் பாவிக்கும் எண்ணம வந்து உண்மையான உரிமையுடன் வாழ வேண்டும்.

மனிதன் மனிதனாக் வாழவேண்டுமானால் அன்பு,கருணை தயவு வேண்டும்.கடவுள் கருணையாக உள்ளார் அதுபோல் நாமும் கருணையுடன் வாழ்ந்தால் நம்மை கடவுள் கைவிடமாட்டார்.

உருவவழிபாட்டினால் கருணை வாராது,பொருளுக்கு முக்கியத்துவம்தான் வருமே ஒழிய அருளுக்கு முக்கியத்துவம் வாராது.அதனால்தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்றார்கள்.போருளைத்தேடினால் அருள் வாராது.அருளைத்தேடினால் அனைத்தும் வந்து சேரும்.இதுவே உண்மையாகும்.அருள் தேவையா ?பொருள் தேவையா ?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.உருவ வழிபாட்டினால் அருள் நிச்சியம் கிடைக்காது.உயிர் ஒளி வழிபாட்டினால் அனைத்தும் கிடைக்கும்.ஆதலால் உருவ வழிபாடு தேவை இல்லை என்பது வள்ளலாரின் முடிந்த முடிவான அருள் கருத்தாகும்.அதை ஏற்று அனைவரும் துன்பம் துயரம் அச்சம் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.--அன்புடன் கதிர்வேலு
ஒரு விளக்கம் தேவைப்படுகின்றது.

உருவவழிபாடு தேவையா ?வேண்டாமா? கடிதம்

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் .உருவ வழிபாடு தேவையில்லை.கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும் ஜோதியாக உள்ளார் என்பது வள்ளலாரின் கொள்கைகளில் முக்கியமானதாகும்.உடம்பின் உறுப்புகளை (தத்துவங்களை)சிலைகளாக வைத்து,பல கடவுள்கள் இருப்பதாக நம் முன்னோர்கள் வைத்துள்ளார்கள்,உண்மையை விட்டு தத்துவங்களை கடவுளாக எண்ணி மக்கள் அறியாமையில் அழிந்து கொண்டு இருக்கிறார்கள்,ஒழுக்கம் என்பது குறைந்து விட்டன,கடவுளுக்கு கை,கால,உடம்,இருபதாகவும்.குடும்பம்,மனைவி மக்கள் இருப்பதாகவும் சித்தரித்து விட்டார்கள்,கடவுளுக்கு இரண்டு மூன்று மனைவிகள் இருபதாகவும் அவைகளை மனிதனுக்கு இருப்பதுபோல் காட்டி மக்களை குழப்பி விட்டார்கள்.கடவுளுக்கேஇப்படி இருக்கும்போது நமக்கு ஏன்இருக்க கூடாது என்று தவறு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.அதனால் ஒழுக்கம் இல்லாமல் போய்விட்டன.உருவவழிபாடு மக்களை நல்வழி படுத்தமுடியாது.அதனால் உருவ வழிபாடு தேவையற்றதாகும்.
   கடவுள் ஒளியாக உள்ளார்,அவர் எல்லாஉடம்பிலும் உயிராக ஒளியாக  செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்,அந்த உயிரே கடவுளாகும்,ஆதலால் எல்லாஉயிர்களிடத்தும் அன்பு செலுத்துவதே கடவுள் வழிபாடாகும் என்பதை நமது அருளாளர் வள்ளலார் தெளிவுபடுத்தியுள்ளார்.உடம்பிற்கு ஒரு உயிர்தான் இருக்கமுடியும்,அதுபோல் இந்த உலகத்திற்கு ஒரு கடவுள்தான் இருக்கமுடியும்,பல கடவுள் என்பதும் பல தெய்வங்கள் என்பதும் பொய்யான செய்திகளாகும் உயிருள யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய் சிவமே என்றார் வள்ளலார்.உயிர்களுக்கு தொண்டு செய்வதே கடவுள் வழிபாடாகும் சாதி,மதம் சமயம் எல்லாம் பொய்யானதாகும்.கடவுள் பெயரால் சமயங்களும் மதங்களும் பொய்யான கருத்துகளை சொல்லி மக்களை பிரித்து விட்டார்கள்.அவைகளை நம்பவேண்டாம் என்கிறார் வள்ளலார்.
   சாதியையும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உரைத்த அருட்பெரும் ஜோதி!
என்கிறார் வள்ளலார்
   கலை உரைத்த கற்பனையை நிலைஎனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கமேல்லாம்.மணமூடிப் போக என்று சாடுகிறார் வள்ளலார்.
கடவுள் எப்படி உள்ளார் என்பதை கீழவரும் பாடலில் விளக்குகிறார்.     

இயற்கையிலே பாசங்கள் ஒன்ருமிளார் குணங்கள் 
ஏது மில்லார் தத்துவங்கள் ஏதுமில்லார் மற்றோர் 
செயற்கைஇல்லார் பிறப்பில்லார் இறப்பில்லார் யாதும் 
திரிபில்லார் கலங்கமில்ளார் தீமை ஒன்றும் இல்லார்
வியப்புற வேண்டுதல் இல்லார் வேண்டாமை இல்லார் 
மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பமயமாய் 
உயத்தகுமோர் சுத்த சிவானந்த சபைதனிலே 
ஓங்க்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் .

 என்று கடவுளின் தன்மையைப்பற்றி தெளிவாக தெருயப்படுத்தியுள்ளார்.ஆதலால் கடவுள் ஒருவரே அவர் அருட்பெருன் ஜோதியாக உள்ளார்,அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்/

  கடவுள் பெயரால் உயிர்பலி செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழ்வதே நல்ல வாழ்க்கையாகும் .
எல்லாஉயிர்களியும் தம உயிர்போல் பாவிக்கும் எண்ணம வந்து உண்மையான உரிமையுடன் வாழ வேண்டும்.

  மனிதன் மனிதனாக் வாழவேண்டுமானால் அன்பு,கருணை தயவு வேண்டும்.கடவுள் கருணையாக உள்ளார் அதுபோல் நாமும் கருணையுடன் வாழ்ந்தால் நம்மை கடவுள் கைவிடமாட்டார்.

 உருவவழிபாட்டினால் கருணை வாராது,பொருளுக்கு முக்கியத்துவம்தான் வருமே ஒழிய அருளுக்கு முக்கியத்துவம் வாராது.அதனால்தான் பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை,அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை என்றார்கள்.போருளைத்தேடினால் அருள் வாராது.அருளைத்தேடினால் அனைத்தும் வந்து சேரும்.இதுவே உண்மையாகும்.அருள் தேவையா ?பொருள் தேவையா ?நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.உருவ வழிபாட்டினால் அருள் நிச்சியம் கிடைக்காது.உயிர் ஒளி வழிபாட்டினால் அனைத்தும் கிடைக்கும்.ஆதலால் உருவ வழிபாடு தேவை இல்லை என்பது வள்ளலாரின் முடிந்த முடிவான அருள் கருத்தாகும்.அதை ஏற்று அனைவரும் துன்பம் துயரம் அச்சம் பயம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.--அன்புடன் கதிர்வேலு

சனி, 7 மே, 2011

நண்பருக்கு கடிதம்

ஆன்மநேய அன்புடையீர் என்றால் நாம் எல்லாம் கடவுளுடைய பிள்ளைகள்,
ஒன்றிலிருந்து வந்தவர்கள்,உண்மைதேரியாமல்,பிரிந்து வேறு வேறாக 
அலைகின்றோம்,உண்மைதேரிந்தவர்கள்,ஆண்மநேயத்துடந்தான் 
இருப்பார்கள்,நீங்கள் என்னை வெறுத்தாலும் நான் உங்களை வேருக்கமாட்டேன்.
நீங்கள் என்னுடைய சகோதர்கள்,வைத்தாலும் வைதிடுமின் வாழ்த்தேனக் 
கொண்டிடுவேன் மனம் கோனேன் மானம் எல்லாம் போனவழி விடுத்தேன் 
பொய்தானோர் ஓர் சிறிதெனினும் புகழேன்,நீவீர் எல்லாம் புனிதமுரும் 
பொருட்டே.
    உங்கள் விருப்பத்திற்கு நான் தடையாக இல்லை,காலம் வரும்போது 
நீங்களே புரிந்து தெரிந்து கொள்வீர்கள்.காலமும் முயற்ச்சியும் தான் 
உங்களுக்கு பதில் சொல்லும்.,
    நான் யார் என்பது எனக்குத்தெரியும்.என்னிலை என்னென்பது என்னைப்
படைத்த அருட்பெரும் ஜோதி ஆண்டவருக்குத் தெரியும்.மற்றவர்களுக்கு 
தெரிய வேண்டும் என்பதில்லை.
   கடவுளை அறியவேண்டுமானால் இரண்டு வழிகள் உண்டு,ஒன்று 
பரோபகாரம் அடுத்து சத்விசாரம்,ஒன்று படியுள்ளது,ஒன்று படியில்லாத்து.
பரோபகாரம் என்பது உயிர்களுக்கு உபகாரம் செய்வதாகும்,அடுத்து 
இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டு உலக உண்மை நிலையை 
அறிவதாகும்,இந்த இரண்டு வழிகள் மூலமாகத்தான் இறைவனை 
அறிந்து அன்புசெய்து மேல்நிலையை அடையமுடியும் என்பதை 
வள்ளலார் எழுதிய திருஅருட்பா மூலமாக,நான் அறிந்து என்னால் 
முடிந்த அளவு உயிர்களுக்கு உபகாரம் செய்து,சத்விசாரத்துடன் வாழ்ந்து 
வருகிறேன்,எனக்கு காட்டவேண்டிய உண்மைகளை இறைவன் காட்டி 
வருகிறார்.
     சுமார் ௩௫ ,ஆண்டுகளாக வள்ளலார் காட்டிய வழியில் தமிழகம் முழுவதும் 
சென்று சுத்தசன்மார்க்க பாதையில் சொற்பொழிவு செய்து வருகிறேன்..
இதுவரையில் யாரிடமும் பணம் வாங்கியதில்லை,என்னுடைய சொந்த 
செலவில் தான் சென்று வருகிறேன்,பணத்தை அன்பர்கள் கொடுப்பார்கள்,
நான் கையில் கூடதொடமாட்டேன்,அதேபோல் எனக்கு எந்த சொத்தும்,
வீடும்,பணமும் கிடையாது.என்பெயரில் எதுவும் கிடையாது.இவையெல்லாம் 
இல்லையே உங்களுக்கு எப்படி பணம் வருகிறது என்று கேட்பீர்கள்,அதுதான் 
ரகசியம்.அதுதான் இறைவன் செயல்.இதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா ?
என்றால் ஏற்காது,
     வள்ளலார் சொல்லுவார் இல்லாமை எனக்கில்லை எல்லாற்க்கும்
தருவேன் என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் என்பார்.
அதுபோல் நீங்கள் இறைவனை உண்மையாக நம்பினால் உங்களுக்கு 
எல்லாம் தானே கிடைக்கும்.உங்களுக்கு எதுதேவை,என்னதேவை,
எப்பொழுது தேவை என்பது இறைவனுக்குத்தேரியும்.இதுதான் என்னுடைய 
இபோதைய வாழ்க்கை.இனி எண்ண நடக்கும் என்பது எனக்குத்தெரியாது.
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ஏற்றுக்கொள்வதும்,ஏற்றுக் கொள்ளாததும் 
உங்கள் விருப்பம்.நான் யார் எனக்கு என ஓர் ஞான அறிவு ஏது,என்று அனைத்தும் 
தெரிந்த வள்ளலார் சொல்லுகிறார் என்பதை நினைக்கும்போது.நான் யார் 
உங்களுக்கு சொல்வது,
     நாம் உலகியலில் நின்று தடுமாறிய வண்ணம் இறைவனை தேடநினைக்கிறோம் 
ஆனால் இறைவனை அடைய வேண்டும் என நினைக்கின்ற செயலில் ஈடுபட்டுள்ள 
உருத்திரர்,விண்ணரசர்,கருடர்,காந்தருவர்,இயக்கர்,பூதர,மறுத்தவர்,யோகியர்,
சித்தர் ,முனிவர்,வானவர்,எல்லாம் அவர்கள் வணங்கும் வேதங்களை கண்டு ஓதி,
இறைவனை அடையும் வழியாது என வினவ ,அவ்வேதமும் நாங்களும் 
காணமுடியாது,இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று கூறுகின்றதாம்

அதை வள்ளலார் திருஅருட்பா வில் பதிவு செய்துள்ள பாடல் ;--                        
 .  .  
உருத்திரர் நாரணர் பிரம்மர் விண்ணோர் வேந்தர் 
உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர் 
மறுத்தவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை 
வானவர்கள் முதலோர் தம மனத்தால் தேடி 
கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங் 
களை வினவ மற்றவையும் காணேம் என்று 
வருத்தமுற்று அங்கவரோடு புலம்பா நின்ற 
வஞ்சவெளியே இன்பமயமாம் தேவே !

என்று வள்ளலார் சொல்லுகின்றதைப் பார்த்தால் நம்முடைய நிலை 
எவ்வளவு தாழ்ந்தநிலையில் உள்ளது என்பதை நினைக்கும் போது,நாம்  
யாருடன் தொடர்பு கொள்வது ,என்பது நன்கு புலப்படும்.இதற்கு மேல் 
நான் அதிகம் சொல்லி உங்கள் மனதை புண் படுத்த விரும்பவில்லை..

அடுத்து திருமூலர்,மாணிக்கவாசகர்,உயர்ந்தவர்கள் அதில் எந்த விதமான 
சந்தேகமும் இல்லை.

  வள்ளலார் எழுதியதை சொல்லியதை மக்கள் கேட்காமல் இருப்பதால் 
திருமந்திரத்தையும் திருவாசகத்தையும் பாருங்கள்,சாத்திரதிற்கு 
திருமந்திரமும்,தொத்திரத்திற்கு திருவாசகமும்,சொல்லி இருக்கின்றன,.
அதற்கு மேல் இறைவனையடைய சுத்தசன்மார்க்க தனி நெறியை 
உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகிய இறைவன் அருட்பெரும் ஜோதி
ஆண்டவர் இலக அருள் செய்தான் இசைந்து,என்கிறார் வள்ளலார் .

பன்னெறிச சமயங்கள் மதங்கள் என்றிடுமோர்
பவநெறி இதுவரை பரவியது அதனால் 
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர் 
செறி இருள் அடைந்தனர் ஆதலில் இனி நீ 
புன்னேறி தவர்த்து ஒரு பொது நெறி எனும் வான் 
புத்தமுதம் அருள்கின்ற சுத்த சன்மார்க்கத் 
தன்னெறி செலுத்துக வென்ற என்னரசே 
தனி நடராஜ வென் சற்குரு மணியே 

என்று உலகம் அத்தனைக்கும் பொது நெறியாகிய அருள் நெறியை 
சுத்தசன்மார்க்கத் தனி நெறியை உலகிற்கு தெரியப்படுத்த வந்தவர்தான் 
வள்ளலார் அவர்களாகும் .

அந்நிய உலகினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அழுத்தம் 
திருத்தமாக அனைவருக்கும் சேர்ந்து உரைத்துள்ளார்கள்.

அடுத்தபாடலில் அந்நியர்களுக்கும் ;-

நண்ணிய மதநெறி பலபல அவையே 
நன்றற நின்றன சென்றன சிலவே 
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் 
அலைதறு கின்றனர்  அலைவர மகனே 
புண்ணியம் முறுதிரு அருள்நெறி இதுவே 
பொது நெறி யென அறிவுற முயலுதி நீ 
தண்ணிய அமுதுண்ணத் தந்தனம் என்றாய்
தனி நடராஜ வென் சற்குரு மணியே 

அனைத்துலக மக்களையும் அழைக்கின்றார் வள்ளலார்.
சாதி, மதம்,சமயம்,சாத்திரம் போன்ற அனைத்தும் பொய் என்று 
சொன்ன வள்ளலார் வழியில் அனைத்தும் விட்டு அவருடைய 
திருவடியை பற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.இதில் 
யாருக்கும் எந்த சந்தேகம் வேண்டாம்.

உங்கள் அன்பன் ;--ஆன்மநேயன் -கதிர்வேலு.