செவ்வாய், 30 ஜூலை, 2013

வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் !


அருட்பெருஞ் ஜோதி !     அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங் கருணை !    அருட்பெருஞ்ஜோதி !  


வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் !

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம் !

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள்,உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால்,இந்த உலகிற்கு வருவிக்க உற்றவராகும்.உலக மக்கள் அனைவரும் உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்து பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் எனற பெருங்கருணை யோடு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் 1872,ஆம் ஆண்டு தோற்று வைத்துள்ளார்.அவை உலகப்  பொது நெறியாகும்.

உலக மக்கள் அனைவரும் உண்மையானக் கடவுளைக் கண்டு வழிபட வேண்டும் என்ற பெருங் கருணையோடு வடலூர் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ''யை எண்கோண வடிவத்தில் அமைத்து ,அதன் மத்தியில் ''அருட்பெருஞ்ஜோதி ''என்னும் ''ஒளியே கடவுள்'' என்பதை அறிந்து கொள்ள ''தீபத்தை'' உண்மையின் விளக்கமாக வைத்துள்ளார்.

இறைவன் அருளைப் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ள '' ''திருஅருட்பா'' என்னும் ஆறு திருமுறைகள்,எழுதி வைத்துள்ளார் .அதில் ஆறாம திருமுறையில்,முடிந்த முடிவாக சன்மார்க்க கொள்கைகளையும்,சன்மார்க்க ஒழுக்க நெறிகளையும் ,மனிதன் மரணத்தை வெல்லும் அருள் வல்லபத்தையும் எழுதி வைத்துள்ளார்.

அதில் உள்ள முக்கிய உண்மைக் கருத்துக்களை ,மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் எனற பெருங் கருணையோடு ''வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் " என்ற தலைப்பில் இச்சிறிய நூலை.''திருஅருட்பா ஆராச்சி மையத்தின் ''சார்பாக முதல் நூலாக,முதல் பதிப்பாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.அனைவரும் பெற்று படித்து,பயன் அடைந்து இறைவன் அருளைப்பெற்று பேரின்ப லாபம் அடைய விரும்புகிறேன்.

இச்சிறிய நூல் விலையில்லா ,விலை மதிப்பு இல்லா நூலாகும்.அவரவர்கள் விரும்பிய பொருள் உதவிச் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

மலேசிய நாட்டில்;-- ,அருள்திரு டாக்டர் லலிதா அவர்கள் தலைமையில் நடைபெறும்,ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாட்டில் ,''வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் ''என்னும் இச்சிறிய நூல வெளியிடப்படுகிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் கிடைக்கும் பொருளைக் கொண்டு ''வள்ளலார் வாழ்கிறார் ''என்ற தலைப்பில் அறிய பெரிய உண்மைகளைக் கொண்டு, அடுத்த நூல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையோடு வெளிவர இருக்கின்றன..என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் அன்புடன்;---

 செ,கதிர்வேலு.
''திருஅருட்பா ஆராய்சசி மையம் ''
108,c,நந்தா இல்லம்,
வையாபுரி நகர் ,வள்ளலார் தெரு,
46, புதூர் அஞ்சல்.
ஈரோடு ,..638002,
தமிழ் நாடு ,..இந்தியா .
செல்--9865939896,..போன்,0424 2401402,...வெள்ளி, 26 ஜூலை, 2013

வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் !


அருட்பெருஞ்ஜோதி !     அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங் கருணை !அருட்பெருஞ் ஜோதி !


வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் !


ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம் !

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள்,உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால்,இந்த உலகிற்கு வருவிக்க உற்றவராகும்.உலக மக்கள் அனைவரும் உண்மை ஒழுக்க நெறிகளை கடைபிடித்து வாழ வேண்டும் எனற பெருங்கருணை யோடு ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை வடலூரில் 1872,ஆம் ஆண்டு தோற்று வைத்துள்ளார்.அவை உலக பொது நெறியாகும்.

உலக மக்கள் அனைவரும் உண்மையானக் கடவுளைக் கண்டு வழிபட வேண்டும் என்ற பெருங் கருணையோடு வடலூர் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை ''யை எண்கோண வடிவத்தில் அமைத்து ,அதன் மத்தியில் ''அருட்பெருஞ்ஜோதி ''என்னும் ''ஒளியே கடவுள்'' என்பதை அறிந்து கொள்ள ''தீபத்தை'' உண்மையின் விளக்கமாக வைத்துள்ளார்.

இறைவன் அருளைப் பெறுவது எப்படி என்பதை அறிந்து கொள்ள '' ''திருஅருட்பா'' என்னும் ஆறு திருமுறைகள்,எழுதி வைத்துள்ளார் .அதில் ஆறாம திருமுறையில்,முடிந்த முடிவாக சன்மார்க்க கொள்கைகளையும்,சன்மார்க்க ஒழுக்க நெறிகளையும் ,மரணத்தை வெல்லும் அருள் வல்லபத்தையும் எழுதி வைத்துள்ளார்.

அதில் உள்ள முக்கிய கருத்துக்களை ,மக்கள் எளிதில் அறிந்து கொள்ள வேண்டும் எனற பெருங் கருணையோடு ''வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் " என்ற தலைப்பில் இச்சிறிய நூலை.''திருஅருட்பா ஆராச்சி மையத்தின் ''சார்பாக முதல் நூலாக,முதல் பதிப்பாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.அனைவரும் பெற்று படித்து,பயன் அடைந்து இறைவன் அருளைப்பெற்று பேரின்ப லாபம் அடைய விரும்புகிறேன்.

இச்சிறிய நூல் விலையில்லா ,விலை மதிப்பு இல்லா நூலாகும்.அவரவர்கள் விரும்பிய பொருள் உதவிச் செய்து பெற்றுக் கொள்ளலாம்.

மலேசிய நாட்டில்;-- 5--10--2013,--முதல்--6--10--2013,-ஆம் தேதிவரை அருள்திரு டாக்டர்,லலிதாஅவர்கள்,அருள்திரு,NCR,நாதன்அவர்கள் தலைமையில் கலா மண்டபத்தில் (பிரிக்பீல்ட்ஸ்) நடைபெறும்,ஆறாவது உலக சுத்த சன்மார்க்க மாநாட்டில் ,''வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் ''என்னும் இச்சிறிய நூல வெளியிடப்படுகிறது. என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதில் கிடைக்கும் பொருளைக் கொண்டு ''வள்ளலார் வாழ்கிறார் ''என்ற தலைப்பில் அறிய பெரிய உண்மைகளைக் கொண்டு, அடுத்த நூல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையோடு வெளிவர இருக்கின்றன..என்பதை பெரு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் அன்புடன்;---

 செ,கதிர்வேலு.
''திருஅருட்பா ஆராய்சசி மையம் ''
108,c,நந்தா இல்லம்,
வையாபுரி நகர் ,வள்ளலார் தெரு,
46, புதூர் அஞ்சல்.
ஈரோடு ,..638002,
தமிழ் நாடு ,..இந்தியா .
செல்--9865939896,..போன்,0424 2401402,...


அருட்பெருஞ்ஜோதி !       அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங் கருணை !  அருட்பெருஞ்ஜோதி !                                                        

  1. வள்ளலாரின் அருள் பொன் மொழிகள் !
  • உலகப் பொது நெறியான ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்'' தலைவராகிய திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் அவர்கள் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவில் அடங்கிய முக்கிய, அறிய பெரிய அருள் அற்புத பொன் மொழிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.,என்றும் உங்கள் அன்பில் நிறைந்து இருக்கும் ஆன்மநேயன் ;--.
  • செ,கதிர்வேலு...சன்மார்க்க ஆராய்ச்சி மையம்,108,C,நந்தா இல்லம்,..வையாபுரி நகர்,..வள்ளலார் வீதி, 46,,புதூர் அஞ்சல் ,,,ஈரோடு,638002 ,..தமிழ் நாடு.இந்தியா.தொலைத் தொடர்பு ;--செல் ,9865939896, போன் 0424 2401402,..
உலகம் எல்லாம் போற்ற ஒளிவடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்து --திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்
தானே யெனக்குத் தனித்து.!

1) உலக மக்களுக்காக வள்ளல்பெருமான் போதித்த சுத்த சன்மார்க்க கொள்கைகளில் முக்கியமானது ;--

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவ காருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவு கோலாகும் !

சிறு தெய்வ வழிபாடு கூடாது ! அத் தெய்வங்களின் பேரால் உயிர்பலி செய்யக் கூடாது !

புலால் உண்ணக் கூடாது !

சாதி சமய மதம் முதலிய வேறுபாடுகள் கூடாது !

எவ்வுயிரையும் தம் உயிர் போல் எண்ணும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைப் பிடிக்க வேண்டும் !

புராணங்களும் சாத்திரங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்க
மாட்டாது !

இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !

கருமாதி, திதி,முதலிய சடங்குகள் வேண்டாம் !

கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் கூடாது !  மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்தல் கூடாது !

எதிலும் பொது நோக்கம் வேண்டும் .!

வள்ளலார் காட்டியக் கடவுள்; ---

2)  கடவுள் ஒருவரே !

3) அவர் அருட்பெருஞ் ஜோதியாக உள்ளார் !

3) கடவுள் உருவமாக இல்லை,அருவமாகவும் இல்லை,உரு அருவமாக உள்ளார்.!

4) கடவுள் ஒன்றும் இலார், இரண்டும் அலார் ,ஒன்றும் இரண்டு மானார் ! அன்றும் உள்ளார்..இன்றும் உள்ளார் ...என்றும் உள்ளார் தமக்கோர் ஆதியில்லார்,அந்தமில்லார் அவரே அருட்பெருஞ்ஜோதியர் !

5) எல்லாம் தானுடையதுவாய் எல்லாம் வல்லதுவாய் ,எல்லாம் தானானதுவாய் எல்லாம் தானலதாய்ச் சொல்லாலும்,பொருளாலும் தோன்றும் அறிவாலும் துணிந்து அளக்க முடியாததாய் ,அணுவும் செல்லாத நிலைகளினுஞ் செல்லுவதாய் விளங்குவது அருட்பெருஞ்ஜோதி யாகும்.!

6) அக்கடவுளுக்கு பாசங்கள் இல்லை,குணங்கள் இல்லை,தத்துவங்கள் இல்லை,மற்றவர் செயற்கை இல்லை,பிறப்பு இல்லை,இறப்பு இல்லை,யாதும் திரிபு இல்லை,களங்கம் இல்லை,தீமை ஒன்றும் செய்பவர் இல்லை,வேண்டுதல் இல்லை,வேண்டாமை இல்லை,மெய்யே மெய்யாகி எங்கும் விளங்கி இன்பத்தை தருபவர் அவர் அருட்பெரு வெளியில் சிவானந்த சபையில் ஓங்குகின்ற தனிக் கடவுள் அவரே அருட்பெருஞ் ஜோதியர்.!

7) எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும்,புறத்தும் நீக்கமற நிறைந்து இருப்பவர உண்மைக் கடவுளான அருட்பெருஞ் ஜோதி என்னும் அருள் நிறைந்த பேரணுவாகும்.,!

8) இயற்கை உண்மையாக இயங்கிக் கொண்டு உள்ளது அருட்பெருஞ்ஜோதி என்னும் ''அணு ''அருள் பேர் ஒளியாகும் ! அது தோற்றம் மாற்றம் இல்லாதது.(அதுவே கடவுள் துகள் ஒளி )

9) இயற்கை விளக்கமாக உள்ளது;-, அந்த இயற்கை உண்மையான அணு ஒளியில் இருந்து வெளிப்படும் அருள் என்னும் ஆற்றலாகும்,அதுவே பல அண்டங்களையும்,அண்டங்களில் உள்ள பதங்களையும்,அண்டங்களில் உள்ள பொருள்களையும்,அண்டங்களில் உள்ள உயிர்களையும்,மற்றை எல்லாவற்றையும் இயக்கிக் கொண்டு உள்ளதாகும். . !

10 ) இயற்கை இன்பமாக உள்ளது;--அருளைப் பெற்று வாழும் எல்லா சத்திகளுக்கும்,எல்லா சத்தர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும்,மற்றும் உள்ள எல்லா ஜீவன்களுக்கும், அவரவர் தகுதிகளுக்குத் தகுந்தாற்ப் போல்  என்றும் அழியாத ,இன்பத்தை மற்றும் பேரின்பத்தைத் தருவதாகும் !

11) ஆண்டவர் விளங்கும் இடம் நான்கு அவை ;--அண்டத்தின் நான்கு இடம் , பிண்டத்தின் நான்கு இடம் !

அவை ;--அகம், அகப்புறம் ,புறம்,புறப்புறம்

அண்டத்தில்;-- அகம் என்பது ,அக்கினி ,..அகப்புறம் என்பது சூரியன் ,...புறம் என்பது  சந்திரன் ,...புறப்புறம் என்பது நட்சத்திரங்கள் !

பிண்டத்தில் ;--அகம் என்பது ஆன்மா ! அகப்புறம் என்பது ஜீவன் ! புறம் என்பது கரணங்கள் ! புறப்புறம் என்பது இந்திரியங்கள் !

12 ) இயற்கை உண்மைக் கடவுளை அறிய ஒழுக்கம் நான்கு வகைப்படும் !

இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம் ,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம்.!

இந்திரிய ஒழுக்கம் ;--ஜானேந்திரியம்,கருமேந்திரியம் என இரண்டு வகைப்படும்.

13 ) ஞானேந்திர ஒழுக்கம் !

காதுகளின் செயல் ;---கொடிய சொல் செவிபுகாமல் நாதம் முதலிய தோத்திரங்களை உற்றுக் கேட்டல் ! மற்றவை கேலாதிருத்தல் !

அசுத்த பரிசமில்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல் !

கண்களின் செயல் ;--கொடூரமாக பாராதிருத்தல் !  தயா வண்ணமாக கருணையுடன் பார்த்தல் !

வாய் செயல் ;---ருசியின் மீது விருப்பம் இன்றி இருத்தல் !

மூக்கு;--- சுகந்தம் விரும்பாதிருத்தல்.!

14 ) கருமேந்திர ஒழுக்கம் ;--

வாயின் செயல் ;--இனிய வார்த்தை யாடுதல் ! பொய் சொல்லாதிருத்தல் !
ஜீவ இம்சை நேரிடும் காலத்தில் எவ்விதத் தந்திரத்திலாவது தடை செய்தல்.

கால்களின் செயல் ;--அறிவு சார்ந்த பெரியோர்கள் எழுந்தருளி இருக்கும் இடங்களுக்கு செல்லுதல் !உயிர்களுக்கு உபகார நிமித்தமாக சன்மார்க்க சாதுக்கள் இருக்கும் இடத்திற்கும்,திவ்விய திருபதிகளுக்கும் சஞ்சரித்தல்!
வெளியில் சஞ்சரிக்கும் காலத்தில் காலில் கவசம் (மிதியடி ) தரித்தல் !

கைகளின் செயல் ;--உயிர்க்கு உபகார நிமித்தம் கையால் உபகரித்தல் !
நன்முயற்சியால் கொடுத்தல் எடுத்தலாதி செய்தல் !

வாயின்  செயல் ;----மித ஆகாரம் (அரை வயிறு ) செய்தல் ! இனிய வார்த்தை யாடுதல் ! பொய் சொல்லாது இருத்தல் !

சுக்கிலத்தை அடக்குதல் ;--மித போகம் (பதினைந்து நாளைக்கு ஒருதரம் செய்தல்) வேறு எந்த எவ்வகையிலும் சுக்கிலம் வெளிப்படாமல் நிறுத்தல் !(சுத்தசன்மார்க்கிக்கு ) சுக்கிலத்தை அக்கிரத்தில் வெளியில் விடாது நிற்றல் !(மந்ததரனுக்கு )

மலத்துவாரம் ;---மல ஜலோ உபாதிகளை கிரமமாய் ஒழித்தல் !
மலம், கால பேதத்தால் உஷ்ண ஆபாசாத்தால் தடை நேர்ந்தால் ஓஷதி (மூலிகை) வகைகளாலும் பவுதீக மூலங்களாலும்,சரபேத அஸ்த பரிச தந்திரத்தாலும் ,மூலாங்கப் பிரணவத்தின் சங்கற்பத்தாலும் தடை தவிர்த்துக் கொள்ளல்.!

உடம்பை பாதுகாத்தல் ;---இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் (துணியால் ) மறைத்தல் ஆண்,பெண் இருபாலருக்கும் ! உச்சி ,மார்பு,உடம்பு,முதலிய அங்கங்களையும் மறைத்தல் !அழுக்கு ஆடை உடுக்காது இருத்தல் !

இவைகள் யாவும்  கருமேந்திரிய  ஒழுக்கமாகும்..

15 ) கரண ஒழுக்கம் ;--

மனம் ;---மனதை சிற்சபையின் கண்ணே நிறுத்துதல்அதாவது முதலில் புருவ மத்தியின் மூலையின் நடுவில்,ஆன்மா இருக்கும் இடத்தில் நிற்கச் செய்தல் !

புத்தி ;---துற்குண விஷயத்தைப் பற்றாது இருக்கச் செய்தல்.

சித்தம் ;---ஜீவ தோஷம் விசாரியாதிருத்தல் ! பிறர் குற்றம் விசாரியாதிருத்தல்,தன்னை மதியாதிருத்தல் !

அகங்க்காரம்;-- செயற்கை குணங்களால் ஏற்படும் கெடுதிகளை (இராகாதிகளை ) நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாய் இருத்தல் !பிறர் மீது கோபியாது இருத்தல் ! தன்னை மதியாதிருத்தல் !

தனது சத்துருக்களாகிய தத்துவங்களைக் கோபித்தல், அக்கிராமத்தில் செல்லாது கண்டித்தல்! அக்கிரம அதிக்கிரம புணர்ச்சி செய்யாதிருத்தல் !
முதலியன கரண ஒழுக்கமாகும்.

16) ஜீவ ஒழுக்கம் ;--

ஆண்மக்கள் பெண்மக்கள் முதலிய யாவர்கள்  இடத்திலும் ஜாதி,சமயம்,மதம் ஆசிரமம்,சூத்திரம்,கோத்திரம்,குலம்,சாத்திர சம்பத்தம்,தேச மார்க்கம்,உயர்ந்தோர்,தாழ்ந்தோர்,என்னும் பேதம் நீங்கி எல்லோரும் தம்மவர்களாய்ச் சமத்திற் கொள்ளுதல் வேண்டும்.;--இவை ஜீவ ஒழுக்கமாகும்.

17) ஆன்ம ஒழுக்கம் ;--

பெரிய யானைமுதல் எறும்பு ஈறாகத் தோன்றிய சரீரங்களில் உள்ள ,எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதங்கள் இடத்தும் உள்ள ஆன்மாக்கள் இடத்தும் இரங்கி, ஜீவ ஆன்மாவே திருச்சபை யாகவும்,அதன் உள்ளொளியே பதியாகவும் கண்டு கலந்து பூரணமாக நின்று, யாதும் நீக்கமற ,எவ்விடத்தும் பேதமற்று ,எல்லாம் தானாக நிற்றல்.,ஆன்ம ஒழுக்கமாகும்,

மேலும் ;--இடம் தனித்திருத்தல்,இச்சை இன்றி நுகர்தல்,தெய்வம் பராவல்,பிற உயிர்க்கு இரங்கல்,பெருங்குணம் பற்றல்,பாடிப்பணிதல்,பக்தி செய்து இருத்தல்,முதலிய நற்செயல்களில் பலகால் முயன்று பயின்று பழகிப்பழ்கி நிற்றல் ஆன்ம ஒழுக்கமாகும்.

17 ) இந்திரிய ஒழுக்கம் ,கரண ஒழுக்கம் என்னும் இவை இரண்டு ஒழுக்கங்களையும் நாம் ஒவ்வொருவரும் உண்மை உணர்ச்சியுடன் மேற்கொண்டு ஒழுக வேண்டும்.!

18) ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் என்னும் இருவகையான அரிய ஒழுக்கங்கள் திருவருள் துணை பெற்றபின் கைகூடும் !

19 ) கடவுள் சர்வ ஜீவ தயாபரன், சர்வ வல்லமை உடையவன்,ஆகையால் சர்வ ஜீவதயை உடையவர்களாய்ச் சர்வ வல்லமையும் பெற்று கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்துள்ளார் !

20 ) தயவு என்பது இரண்டு வகைப்படும் ஒன்று கடவுள் தயவு,! ஒன்று ஜீவ தயவு !

21) கடவுள் தயவு என்பது ;--இறந்த உயிரை எழுப்புதல்,தாவரங்களுக்கு மழை பெய்வித்தல்,மிருகம் ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட் சத்தியால் ஊட்டுவித்தல்,சோம சூரிய அக்கினி பிரகாசங்களைக் கால, தேச,வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல்,பக்குவிகளுக்கு அனுகிரகத்தில்,அபக்குவிகளுக்குச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி ,தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல்,

22 ) ஜீவ தயவு என்பது ;--தன சத்தியின் அளவு உயிர்களுக்கு உபகரித்தல்,அல்லது ஆன்ம நேய சம்பந்தம் பற்றித் தயா வடிவமாய் இருத்தல்,  
23 ) நம்முடைய தலைவராகிய கடவுளை நாம் அடைவதற்கு அவர் எழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவி வேண்டும் !

24 ) ஜீவகாருண்யமே மோட்ஷ வீட்டின் திறவு கோல் (சாவி ) !

25 ) ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

26) உயிர் இரக்கம்,அன்பு,தயவு,கருணை, அருள் அறிவு,அனுபவம் ,ஒன்றுடன் ஒன்று இணைந்தது.!

27) உயிர் இரக்கம் ,பரோபகாரம் இவை இரண்டும் இறை அருளைப் பெறுவதற்குண்டான துவாரமாகும்.!

28) சத்விசாரம் என்பது ;--நம் நம்முடைய நிலை எப்படிபட்டது ?நமக்கு மேல் நம்மை அதிஷ்டிகின்ற தெயவத்தினுடைய நிலை எப்படிப் பட்டது  ? இந்த உலகம் எப்படி உண்டானது ? உலக உயிர்கள் எப்படி உண்டாயின ?ஆன்மா என்ற ஒளி எப்படி வந்தது ? எங்கு இருந்து வந்த்தன ? ஆன்மாவுக்கும் உயிருக்கும் என்ன தொடர்பு ?

கடவுளுக்கும் ஆன்மாவுக்கும் என்ன தொடர்பு ? நாம் ஏன் பிறக்கிறோம் ? நாம் ஏன் இறக்கிறோம் ? நாம் இறக்காமல் இருப்பதற்குண்டான வழி என்ன ? அருள் என்றால் என்ன ? அருளைப் பெரும் வழி என்ன ? இவற்றை எல்லாம் எப்படி அறிந்து கொள்வது ? என்பன சத்விசாரமாகும்.

29 ) உயிர் இரக்கம்,பரோபகாரம் என்னும் ;--ஜீவ காருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும்,அன்பு உண்டானால் தயவு என்னும் உறவு உண்டாகும்,தயவு உண்டானால் இறைவனின் கருணை உண்டாகும்,கருணை உண்டானால்,அருள் விளக்கம் உண்டாகும்,அருள் விளக்கம் உண்டானால் கடவுள் அறிவு என்னும் உண்மை அறிவு உண்டாகும்,உண்மை அறிவு உண்டானால் இறை அனுபவம் தோன்றும்.! இறை அருள் அனுபவம் தோன்றினால் பேரின்பம் தோன்றும்.பேரின்பம் உண்டானால் மரணத்தை வெல்லலாம் .

30 ) அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம்.இதுதான் முக்தி அடைவதற்கும்,சித்தி அடைவதற்கும் முதற்படியாய் இருக்கின்றது.ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் உடையவர்களாகி சீவர்களைப் பசிஎன்கின்ற அபாயத்தில் இருந்தும் நீங்கச செய்கின்ற உததமர்கள் எந்த ஜாதியாராயினும்,எந்தச் சமயத்தாராயினும் ,எந்தச் செய்கை உடையவராயினும் ,தேவர்,முனிவர்,சித்தர்,யோகர் முதலிய யாவராலும் வணங்கத்தக்க சிறப்புடையர் ஆவார்கள் என்று சர்வ சக்தியுடைய கடவுள் சாட்சியாக சத்தியஞ் செய்யப்படும் என்று அறியவேண்டும்.

31 ) கடவுளது திருவருளை எவ்வாறு பெறக் கூடும் !

அருள் என்பது கடவுள் தயவு,ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் ஜீவர்கள் தயவு,ஆதலால் சிறு வெளிச்சத்தைக் கொண்டு பெரு வெளிச்சத்தைப் பெறுவது போல் ,சிறிய தயாவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெருந்தயவாகிய கடவுள் அருளைப் பெற வேண்டும்.

புத்தி தத்துவத்தால் நன்மை தீமையை விசாரித்து நன்மையே உருவாய் விளங்கும் பெரியாரைத் துணைக்  கொண்டு அவரால் கட்டளையிடும் உயிர் இரக்கத்  திருப்பணியைக் கைக் கொண்டு இடையறாது செய்யில் அவ்வருளைப் பெறலாம்.

நன்மை தீமை என்பவை யாவை ? நன்மை தீமை என்பவை புண்ணியம்,பாவம்.;--புண்ணியம் என்பது ஆரம்பத்தில் செய்வதற்கும் அனுபவிப்பதற்கும் முயற்சிப் பதற்கும் துக்கமாயும்,பின் சுகமாயும் விளங்குவது நன்மையாகும்  ...பாவம் என்பது, ஆரம்பித்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருப்பது பாவமாகும்.  

31 ) மரணம் இயற்கை அல்ல அவை செயற்கையாகும்  !

32 ) மரணம் இல்லாமல் வாழும் வாழ்க்கையே மனித வாழ்க்கையாகும்.மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் !

33 ) கல்வி இரண்டு வகைப்படும் ;--பொருள் ஈட்டும் கல்வி சாகும் கல்வி ! அருள் ஈட்டும் கல்வி சாகாக் கல்வி,!

35 ) சாகாத கல்வியே கல்வி !ஒன்றே சிவம் என்று அறிந்த அறிவே தகும் அறிவு !

36) மலம் ஐந்தும் வென்ற வல்லபமே தனித்த பூரண வல்லபம் !

37 ) வேகாத காலாதி கண்டு கொண்டு எப்பொருளும் விளைய விளைவித்த தொழிலே மெய்த் தொழிலாகும்.அந்த தொழிலின் பூரண வல்லபம் பெற்றால் ஐந்தொழில் செய்யும் ஆற்றல் கிடைக்கும்  !

38) தோற்றுவித்தல்,வாழ்வித்தல்,குற்றம் நீக்குவித்தல் ,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,இவைகளே ஐந்தொழில்.!

39 ) உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய தேகத்தைப் பெற்றவன் மனிதன் !

40 ) நாம் பல பிறவிகளையும் தாண்டி மேலான இந்த மனிதப்பிறவி எடுத்தது ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளை பெறுவதற்கே ! கடவுளை நிலை அறிந்து அம்மயமாகும் உயர்ந்த அறிவுள்ள தேகத்தைப் பெற்றவன் மனிதன்.!            
41) கடவுள் நிலை அறிந்து அம்மயமாதலே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும் அதுவே பேரின்பம்.!

42 ) முத்தி என்பது முன்னுறு சாதனம் !சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் !

43 ) சமாதி பழக்கம் பழக்கம் அல்ல ! சகஜ பழக்கமே சன்மார்க்கப்  பழக்கம் !

44 ) உண்மையாக இறைவனை நினைத்தால் அழுத் கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ !

45 ) அறிவு என்பது இரண்டு வகைப்படும் !

கலை அறிவு !அருள் அறிவு !

பத்து ஆள் சுமை ஒரு வண்டி பாரம் ,நானுறு வண்டிச சுமை ஒரு சூல் வண்டி பாரம்,சூல்வண்டி ஆயிரங் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவ முயற்சியால் படிக்கச் சிறிய உபாசனைச் சகாயத்தால் முடியும்,அப்படி பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் ..கலை அறிவை, ஒருவன் அருள் முன்னிடமாகச் சுத்த சிவ நோக்கத்தால் அருள் அறிவு வழியாக அறியத் தொடங்கினால் ஒருகணத்தில் படித்துக் கொள்ளலாம்.இது சத்தியம்.

46 ) ஆண்டவர் சோதிக்கிறார் என்பது ;--பிணி,மூப்பு,பயம்,பசி,துன்பம்  முதலியவற்றால் செய்விப்பது அல்ல ! மரணம் அடையச் செய்விப்பதுதான் சோதனை.!

47 ) இங்கு இருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள் !

48 ) எல்லாப் பற்றுகளுக்கும் காரணமான ஆசார வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள் !

49 ) இரவில் தீபம் இல்லாத இடத்தில் இருக்காதீர்கள் ! பிராண நஷ்டம் உண்டு பண்ணும் !

50 ) ஆகாரம் அரை 1/2 ,தூக்கம்,அரைக்கால் 1/8 ,மைத்துனம் வீசம் 1/16 ,பயம் ஜீரோ,,..இவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.

51 ) காற்று நான்கு வகையாக உள்ளது ! விஷக்காற்று, உஷ்ணக் காற்று,பூதக் காற்று,O, அமுதக் காற்று,

51 ) அமுதக் காற்றை சுவாசித்தால் அருள் கிடைத்து மரணம் நீங்கும்.

52 ) பகலில் சூரியன் தோன்றிய பின், வீசுவது விஷக காற்று, உஷ்ணக் காற்று, பூதக் காற்று,...காலையில் சூரிய உதயத்திற்கு முன் வீசுவது அமுதக் காற்று,!

53 ) தூங்காமல் விழித்து அமுதக் காற்றை சுவாசிக்க வேண்டும்.  

54 ) சோதனை நீக்கி சாதனைப் படைக்க அமுதக் காற்று அவசியம் வேண்டும் !

55 ) பசித்திரு !,தனித்திரு!விழித்திரு ! என்பது இறைவன் அருளைப் பெரும் துவாரமாகும் !

56 ) சாகாக்கல்வி, வேகாக்கால், போகாபுனல்,மரணத்தை வெல்லும் வழியாகும்.!

57 ) சாகாக்கல்வி அருளைப் பெரும் கல்வியாகும் !

58 ) வேகாக்கால் என்பது உடம்பை மாற்றும் அமுதக் காற்றை சுவாசிப்பது !

59 ) போகாப்புனல் என்பது உடம்பை விட்டு உயிர்க்கனல் பிரியாமல் இருப்பது !

60 ) வாழ்க்கையின் இன்ப வாழ்வு மூன்று வகைப்படும் ,இம்மை இன்ப வாழ்வு,மறுமை இன்ப வாழ்வு ,பேரின்ப இன்ப வாழ்வு !

61 ) தேகம் நான்கு வகைப்படும் ;-- அசுத்த தேகம்,..சுத்த தேகம்,..பிரணவ தேகம் ,..ஞான தேகம் !

அசுத்த தேகத்தை,..சுத்த தேகம், பிரணவ தேகம்,ஞான தேகமாக மாற்ற வேண்டும்.!

சுத்த, பிரணவ, ஞான தேகம் பெற்றவர்கள் விபரம்;--சுத்த தேகம் பெற்றவர்கள் கர்ம சித்தர்கள்,பிரணவ தேகம் பெற்றவர்கள் யோக சித்தர்கள் ,ஞான தேகம் பெற்றவர்கள் ஞான சித்தர்கள்,!

62 ) சுத்த, பிரணவ, ஞான தேகம் என்னும் மூன்று தேகத்தையும் ஒருங்கே பெற்றவர்கள்,சுத்த பிரணவ ஞானதேகம் என்னும் ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து ,கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்கள் ,அவர்களே பிறப்பு இறப்பு அற்றவர்கள் !

63 ) ஞானம் என்பது மூன்று வகைப்படும் !

உபாய ஞானம் ,உண்மை ஞானம் ,அனுபவ ஞானம் !

64 ) நட்சத்திரப் பிரகாசம் போல் தோன்றிய ஜீவ அறிவே உபாய ஞானம் !

64 ) சந்திரப் பிரகாசம் போல் தோன்றிய அறியும் ஆன்ம அறிவே உண்மை ஞானம் !

65 ) எல்லா வஸ்துக்களையும் தெரிந்து அனுபவிக்கச் செய்கின்ற சூரியப் பிரகாசம் போன்ற கடவுள் அறிவே அனுபவ ஞானம் !

66 ) ஒரு வஸ்துவை அதன் நாம ரூபமின்றிக் காண்பது இந்திரியக் காட்சி இந்திரிய அறிவு என்பதாகும் !

67 ) என்ன உருவம் என்று, உருவமாக (கூடமாக )அறிதல் கரணக் காட்சி கரண அறிவு என்பதாகும் !

68 ) இன்னதென்று தெரிதல் ஜீவ காட்சி ,ஜீவ அறிவு என்பதாகும் !

69 ) எதையும் தானாக அறிதல் ஆன்மக் காட்சி ஆன்ம அறிவு என்பதாகும் !

70 ) ஒரு வஸ்துவின் இடத்தில் பற்றுதல் வைப்பது அவா ! அதை அனுபவிக்க வேண்டும் என எழுந்தது ஆசை !அதன் மயமாதல் காமம் ! அதைக் தன் வசபடுத்த எழுவது மோகம் ! எந்த வஸ்துவிடத்தும் மோகமாதிகள் இன்றி அவாமயமாய் நிற்றல் ஆன்ம இயற்கை குணம் !

71 ) கள் ,காமம்,கொலை,களவு,பொய்,இவை ஐந்தும் கொடிய துக்கத்தை உண்டுபண்ணும் !

72 ) இவை ஐந்தில் கொலை கொடிய விஷேச பாவம், எனினும் கள்ளு உண்டவனுக்குக் காமம் உண்டாகாமல் இருக்காது,கொலை செய்யத் துணிவு வராமல் இருக்காது,களவு செய்யாமல் இருக்க மாட்டான் .பொய் பேச அஞ்ச மாட்டான்.ஆகையால் இந்த ஐந்தையும் ஒழிக்க வேண்டுவது அவசியம்.இதில் ஒன்றை அடைந்தவனானுலும் அவனை மற்றவை தொடராமல் இருக்காது.

73 ) இந்தப் பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யாரெனில் ;--நான் ஆன்மா ,சிற்றணு வடிவினன் ,மேற்படி அணு கோடி சூரிய பிரகாசம் உடையது.நான் இருப்பது புருவ மத்தியில் லலாடஸ்தான இருப்பிடம்;-- .கால்பங்கு பொன்மை முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம் .இப்படிப் பட்ட ஆன்ம பிரகாசத்தை மறைக்க மாயா சத்திகளாகிய ஏழு திரைகள் உண்டு !

74 ) நம்முடைய ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக் கொண்டு இருக்கின்ற அறியாமை என்னும் மாயா திரைகள் ஏழு !...கறுப்புத் திரை,..நீலத் திரை ,...பச்சைத் திரை,...செம்மைத் திரை...பொன்மைத் திரை ,...வெண்மைத் திரை ,...கலப்புத் திரை,...என்பவைகளாகும்.!

74 ) எழுதிரைகளில் அழுத்தமாய் இருக்கின்ற முதல் திரையாகிய பச்சைத் முதலில் நீங்க வேண்டும் அது நீங்கினால் மற்றத் திரைகள் அதிக விரைவில் நீங்கிப் போய் விடும் .அந்தப் பசுமை வர்ணம் எப்படிப்பட்டது என்றால் கருமைக்கு முதல் வர்ணமான பசுமை இருக்கின்றது .இவை மனித தரத்தில் நன் முயற்சியுடன் இருந்து நீக்கிக் கொள்ள வேண்டும் .மற்ற திரைககளை ஆண்டவர் கருணையால் அதிவிரைவில் நீக்கி விடுவார் .

75 ) நமது ஆன்மாவைத் தெரியவொட்டாமல் மூடி இருக்கின்ற பச்சைத் திரையாகிய ராகாதிகளை;--ஜீவ காருண்யத்தாலும்,  சத்விசார அதி உஷ்ணத்தால் அல்லது மற்ற உஷ்ணங்களால் நீக்க முடியாது .அந்த உஷ்ணம் யோகியின் உடைய அனுபவத்தில் தெரியும்.அதை மனுஷ்ய தரத்தில் உண்டு பண்ணுவதற்குத் தெரியாது.

76 ) அந்த உஷ்ணத்தை உண்டுபண்ண ...இடைவிடாது ஆண்டவரை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும்,தெய்வத்தை நினைக்கின்றதிலும்,அதிக உஷ்ணம் உண்டாகும்.அந்த உஷணத்தால் கருமையில் பச்சை வர்ணமுடைய முதல் திரையை நீக்கிக் கொள்ளலாம்.மற்றத் திரைகள் ஆண்டவர் கருணையால் நீக்கப்படும் .

77 ) யோகிகள் ,வனம்,மலை,முழை,(குகை ) முதலிய வற்றிற்குப் போய் நூறு ,ஆயிரம் முதலிய வருஷ காலம் தவம் செய்து இவ்வுஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்வார்கள் இப்படித் தவம் செய்து உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ளுகிறதைப் பார்க்கிலும் ,உயிர் இரக்கத்தாலும், தெய்வத்தை ஸ்தோத்திரம் செய்கின்றதிலும் நினைக்கின்றதிலும் இதைவிடக் கோடிப் பங்கு,பத்துக் கோடி பங்கு அதிகமாக உஷ்ணம் உண்டு பண்ணிக் கொள்ளலாம்.

78 ) நாம் பெரும் புருஷார்த்தம் நான்கு ;--சாகாக் கல்வி,..தத்துவ நிக்கிரகஞ் செய்தல் ....ஏமசித்தி....கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்.!

79 ) புருஷார்த்தம் பெறுவதற்கு ஒழுக்கம் நான்கு வகைப்படும் ;--இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம்

80 ) ஜீவகாருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம்.! ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு !

81 ) திருநெறி  ஒன்றே அதுதான் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்னும் உண்மை நெறியாகும்.

82 ) சுத்த சன்மார்க்க சாதனம் ;--சாதனங்கள் ஒன்றும் வேண்டாம் ஏதாவது ஒன்று சொல்லக் கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும்,அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும்.ஆதலால் காலந் தாழ்த்தாது,எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும் இதுவே சாதனம்,இந்தக்குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன் ,அவனே ஆண்டவனுமாவான் .

83 ) சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய சாதனம் என்னவென்றால் ,எல்லா சீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்புமே முக்கிய சாதனமாகும் உதாரணம் ;--.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது ;--கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெருக,மற்றெல்லாம் மருள்நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்றிருக்கின்றேன் .

84 ) சிறு தெய்வங்களான உருவ வழிபாட்டு முறைகள் வேண்டாம் !  

85 ) சிறு தெய்வங்கள் அனைத்தும் தத்துவ விளக்கங்களே யாகும் !

86 ) தத்துவ விசாரத்தையே ஆலயமாக்கினார்கள், ஆலயத்தில் உள்ள விக்கிரகங்கள் தத்துவங்களே தவிர உண்மையான தெய்வங்கள் அல்ல !

87 ) சர்வ சித்தியுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி,அணுக்கள் தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்க்ளையும் பெற்றுக் கொண்ட மூர்த்திகள் ஆகியவர் ஒரு தொழிலை உடைய பிரம்மா விஷ்ணு ,சங்கரன், மகேஸ்வரன்,சதாசிவன் போன்ற மற்றைய தெய்வங்களும் தத்துவ சித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்து வருகிறார்கள் .

88 ) இதுவரையில் உள்ள அணுக்கள் மேல் குறித்தவர்களது பதப் பிராப்தியை ,மேற்படி அணுக்கள் லேசம் பெற்றுக் கொண்டார்கள்,ஆதலால் இவர்களை அசைப்பிடித்து அனுகிரகிக்கும் சர்வ சித்தியுடைய தனித் தலைமைக் கடவுளாகிய ,அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள ,ஆதலால் அந்த சர்வ சித்தியுடைய கடவுளுக்குக் கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.

89 ) ஆகவே சமய மதத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல,மேல் குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று அதில் மகிழ்ந்து அகங்கரித்து மேல்படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு நிற்கிறார்கள் .ஆதலால் சிறு தெய்வ வழிபாடுகள் வேண்டாம்.

90 ) சிறு தெய்வங்களான தத்துவங்கள் அனைத்தும் உடம்பைப் பற்றி பேசுகின்றன சுத்த சன்மார்க்கம் ,உடம்பைப் பற்றியும் உயிரைப் பற்றியும், ஆன்மாவைப் பற்றியும் ,உண்மையானக் கடவுளைப் பற்றியும் பேசுகின்றன .

91) சமய மத நூல்களில் பிழை ;--சமய,மத சாத்திரங்களில் அனேக இடத்தில் பிழைகள் இருக்கின்றன.அதற்குக் காரணம் அவற்றை இயற்றியவர்கள் மாயையின் சம்பந்தத்தை அடைந்து இருந்தவர்கள், .ஆகையால் முன்னுக்குப் பின் மறைப்புண்டு தப்புகள் நேரிட்டு இருக்கின்றன.

மாயையை வென்ற சுத்த ஞானிகளுக்கு அல்லாது மற்றவர்களுக்குப் பிழையற இயற்ற முடியாது.அந்தப் பிழைகள் சுத்த சன்மார்க்கம் விளங்குகிற காலத்தில் வெளிப்படும் .!

92 ) பெரிய புராணத்தில் குறித்த அறுபத்து மூன்று நாயனமார்களும் தத்துவங்களே ஒழிய வேறில்லை.அதை,அதை விசாரித்து அனுஷ்டித்தால் ,அது அது ஒவ்வொரு சித்தியைக் கொடுக்கும்.கணபதி,சுப்பரமணிய சுவாமிகளும் தத்துவங்களே தவிர வேறல்ல.அதேபோல் புராணங்களின் இருதய மெல்லாம் தத்துவ சம்மாரமே .இதன் உண்மை சுத்த சன்மார்க்கத்தில் விவரமாய் வெளியாகும்.

93 ) சாதி,சமயம்,மதம் யாவும் பொய் ;--தத்துவ ஒழுக்கம் பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன.தொழில் ஒழுக்கம் பற்றிச் சாதிகள் ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கின்றன.....இவைகள் யாவும் தயவை,அன்பை,கருணையை  விருத்தி செய்ய தடையாய் இருக்கின்றன.

94 ) சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு,முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்களை .அவையாவன ;--ஜாதி ஆசாரம்,... குலம் ஆசாரம் ..ஆசிர ஆசாரம்,...லோகாசாரம் ,..தேசாசாரம்,..கிரியாசாரம்,...சாச்திராசாரம்,..முதலிய ஆசாரங்கள் .ஆதலால் மேற்குறித்த ஆசாரங்களை ஒழித்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால் ,மேற்படி ஜீவ காருண்யம் விருத்தியாகிக் கடவுள் அருளைப் பெற்று ,அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமே அல்லாது ,இல்லாவிடில் கூடாது !

95 ) சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடையாக இருப்பது ;-சமயங்கள் ,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விபகாரங்கள்,மேலும் வருணம் ,ஆசிரமம்,முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களாகும்.

96 ) சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சயமாகிய ஒருமை என்னும் ஆன்மநேய ஒருமைப்பட்டு உரிமை எங்களுக்குள் ,எக்காலத்தும்,எவ்விடத்தும்,எவ்விதத்தும்,விலகாமல்,நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே !தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்,வந்தனம்.

97 ) திருவருட் சுதந்திரம் நமக்கு எந்த வழியால் கிடைக்கும் என்று அறியத் தொடங்கிய தருணத்தே ...எனது யானெனும் ,தேக சுதந்திரம் ..போக சுதந்திரம்,..ஜீவ சுதந்திரம்  என்னும் மூவகைச் சுதந்தரங்களும் நீங்கியவிடத்தே கிடைக்கும் என்று தேவரீர் திருவருளால் அறிவிக்க உள்ளபடி அறிந்தேன்.

தேவரீர் திருவருட் சகத்ந்தரத்தை என்னிடத்தே வைத்தருளி ;--மரணம்,பிணி,மூப்பு ,பயம்,துன்பம்,முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி ,எக்காலத்தும் அழியாத் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.

98 ) சன்மார்க்கம் என்பது ;--தாசமார்க்கம்,சற்புத்திர மார்க்கம்,சகமார்க்கம் ,சன்மார்க்கம் என்பதாகும் .

99 ) சமரச சுத்த சன்மார்க்கம் சத்திய சங்கம்,..என்பது எல்லா மார்க்கங் களுக்கும் பொதுவான மார்க்கமாகும்.!

100 ) சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ;--சாதி,சமயம் ,மதம் இனம், நாடு ,போன்ற வேறுபாடுகள் இல்லாதது..எல்லா மார்கங்களுக்கும்,பொதுவானது  அதீதமானது.!

101 ) சுத்த சன்மார்க்கம் என்பது ;--சத் மார்க்கம்.,சத்மார்க்கத்தின் ஏகதேசம் என்பது எந்தக் காலத்தும் எவ்வகை தடைகளும் இன்றி அழியாத சுத்தப் பிரணவ ஞான தேகம் என்கின்ற தேக சித்தியும்,எல்லாம் வல்ல சர்வ சித்தியும் பெற்றுக் கொள்வது.!

102 ) கடவுளைக் காண  உண்மையாக விரும்பினால் அழுத கண்ணீர் மாறுமா ? ஆகாரத்தில் இச்சை செல்லுமா ?

103 ) தன்னைக் காட்டாது ஒழிக்க வேண்டும்.!இகபர காமங்களை விரும்பாதிருத்தல் வேண்டும் !

104 ) சுத்த சன்மார்க்க லஷ்யம் உடையவர்களுக்கு ;--மண்ணாசை,பொன்னாசை,பெண்ணாசை போன்ற இச்சைகள் கனவிலும் வரக்கூடாது !

105 ) தங்களப் பார்க்க வேண்டுமானால் என்னைப் பாருங்கள்.! என்னைப் பார்க்க வேண்டுமானால் தங்களைப் பாருங்கள் ! தங்களைப் பார்த்தால் ,என்னைப் பார்ப்பீர்கள் ! என்னைப் பார்த்தால்,தங்களைப் பார்ப்பீர்கள் !

106 ) கவலை கூடாது,;--உள்ளும் புறமும் ஓர் துணையாக வள்ளல் இருப்பதால் ,வாட்டம் அடைவதற்குக் காரணமே இல்லை !

107 ) நித்திய துறவு என்பது ,அறம்,பொருள்,இன்பம்,வீடு,--இந்த நான்கையும் நித்தியம் நான்கு காலங்களில் செய்து அனுபவித்துப் பற்றற்று இருப்பதே நித்தியத்தை அடைவதற்கு ஏதுவாக இருக்கின்றன.!

108 ) இந்த உடம்பை அலஷியம் பண்ணாமல் பொன்னைப் போல் பார்க்க வேண்டும்.!

109 ) இவ்வுலகில் விருப்பு,வெறுப்பு இல்லாமல் இருக்க வேண்டும்.! நினைப்பு மறைப்பு இல்லாமல் இருக்க வேண்டும் ! மரணம் நீங்கும் !

110 ) பூதம் என்பது யாது ?அதனது சொரூப ரூப சுபாவங்கள் என்ன ? பூதம் எனபதற்கு சப்தார்த்தம் ;---பூ ,மலர்ந்தது பிரகாசம் ...த..தடித்தது ,காரியம் ,...ம் ,ஊன்றியது, நிலை ...இதற்குத் தாத்பரியம் ;--நிலை பெற்ற காரிய பிரகாசம்.

111 ) மேலும் பூத அக்கினித் தோற்றம் என்றும் பெயர் ,பூதகாரிய அக்கினி என்றும் பெயர்...பத்து இடத்தில் பூதகாரிய அக்கினித் தோற்றம் உண்டு.கல்லுக்குள் இருக்கிற நெருப்பு பஞ்சில் காரியப்படுவது போலாம் ,பத்துப் பொது ஸ்தானங்கள் ;--மண்,நீர்,அக்கினி,காற்று,வெளி,பிரகிருதி ,மாயை,சூரியன்,சந்திரன்,நஷ்சத்திரங்கள் ஆக பத்து இடங்களாகும்.!

112 ) இறந்தவர்கள் உயிர் பெற்று வருவது ஞான சிருஷ்டி ,ஆதலால் ஞானத்தோடு வருவார்களா ?,முன்னிருந்த அறிவோடுதான் வருவார்களா ?என்றால் ,

இந்த மானிட தேகம் ஆண்டவரது சிருஷ்டி அன்று, மாயா சிருஷ்டி ,..முன்னிருந்த ஞான அஞ்ஞானத்தோடுதான் வருவார்கள்.ஆனால் கிஞ்சித்து ஞான விஷேசம் உண்டாயிருக்கும் .ஆதலால் மீள தரிசன விசேஷத்தால் மந்தம் நீங்கி ஞானம் விளங்கும்.

113 ) மனுஷ்ய வல்லபத்தால் தனக்கு இருக்கின்ற அசுத்தங்களை நிவர்த்தி செய்து கொள்ளக் கூடுமா என்றால் ;--இது நல்லது,இது கெட்டது என்று பகுத்தறியும் ஞானத்தால் விஷய வாசனையில் கரணங்களைச் செல்ல வொட்டாமல் தடுக்கக்கூடுமே ஒழிய ,நிவர்த்திக்க கூடாது. அது ஆண்டவர் அருளால் சுத்ததேகம் பெற்றவர்களால் தான் முடியும்.      

114 ) சமய மதங்கள்;-- பிறக்காமல் இறப்பதைப் பற்றி பேசுகின்றன,சுத்த சன்மார்க்கம் இறக்காமல்,பிறக்காமல் இருப்பதைப் பற்றிப் பேசுகின்றன.

115 ) சாகாதவனே சன்மார்க்கி !;-- சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை,சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன் !

116 ) மரணத்தை வென்றவனே,இறைவனைக் காணமுடியும்  இறைநிலையை அடைய முடியும்.!

117 ) சுத்த சன்மார்க்க ஞானிகள் ,கடவுளை எங்கும் உபாசிப்பார்கள்,..யோகிகள் இருதயத்தில் உபாசிப்பார்கள்,...கர்ம காண்டிகள் அக்கினியில் உபாசிப்பார்கள் ....பக்தி காண்டிகள் விக்கிரத்தில் உபாசிப்பார்கள் !.,

118 ) கொல்லாமை !புலால் உண்ணாமை ! ;---

உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் கூடாது.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

119 ) உயிரைக் கொடுக்கும், ஆன்ம ஒளியின் ஆற்றல் ஒருகோடி சூரிய பிரகாசத்தின் சக்தி உடையது.அதனால் கொலை செய்யக் கூடாது !

120 ) எத்துணையும் பேதம் இல்லாமல் எவ்வுயிரையும் தம் உயிர் போல் பாவிக்க வேண்டும் !

121 ) எல்லா உயிர்களிலும் ஆண்டவரின் அருள் விளங்குவதாலும் இயற்கை உண்மை என்னும் ஆன்ம ஒளி குடி இருப்பதாலும் ,இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு உடம்பு என்பதாலும், உயிர்க் கொலை செய்யக் கூடாது ! அசுத்த பூத காரிய அணுக்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட உடம்பு என்பதால் புலால் உண்ணக் கூடாது ! அதனால் விளையும் ஆபத்துக்கள் அதிகம்.!

121 ) ஒரு உயிரை உண்டாக்க முடியாவர்கள் ,ஒரு உயிரை அழிக்க உரிமை இல்லை,என்பது ஆண்டவரின் கட்டளையாகும்,!

122 ) உயிரை அழிப்பவர்கள்,புலால் உண்பவர்கள்,இவர்கள்  இறைவனைத் தொழும் தகுதியை இழந்தவர்கள் ,அவர்களுக்கு இறைவனிடம் மன்னிப்புக் கிடையாது.அவர்களுக்கு அருள் கிட்டுவது கடினம்.!

123 ) குற்றங்களில் பெரிய குற்றம் உயிர்க் கொலை செய்வது .புலால் உண்பது.!

தாவரங்களும் உயிர்கள்தான் !

124 ) தாவரங்களும் உயிர்கள்தான் ,இலை,பூ ,காய்,கணி,பழம் போன்றவற்றை பறித்து உண்ணலாம் ,வேரோடு பிடுங்கக் கூடாது .அப்படி பிடுங்கினால் அதுவும் கொலைதான் .!

125 ) நம்முடைய நகம்,மூடிபோன்றதை எடுக்கும் போது,நமக்குத் துன்பம் இல்லை அதேபோல் தாவரங்களில் உள்ள இலை,பூ ,காய்,கணி,பழம் ,இவைகளை பறித்து உண்பதால் தாவரங்களுக்குத் துன்பம் இல்லை ,உயிர்க் கொலையும் இல்லை !

126 ) தாவர உணவே சன்மார்க்க உணவு ! உணவே மருந்து !,மருந்தே உணவு !

127 ) சுத்த சன்மார்க்கம் என்பது உண்மை மார்க்கம் ! இறைவனால் தோற்றுவிக்கப் பட்டது !

128 ) சுத்த சன்மார்க்கத்திற்கு உரிவர்கள் சாதி,சமயம்,மதங்களை முற்றும் பற்று அற கைவிட்டவர் களாகும் !

129 ) சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள், மதங்கள்,மார்க்கங்களை முற்றும் கைவிட்டவர்களும்,காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக் கொள்பவரும் ,கொலை புலை தவிர்த்தவர்களும் ,ஆகிய இவர்கள்தான் சுத்த சன்மார்கத்திற்கு உரியவர்கள் ஆவார்கள் .

130 ) மேலும் மரணம்,பிணி, மூப்பு, பயம்,துன்பம் ...இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.அதாவது ...செயற்கை யாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிகார மரணம் நீங்கும்.அப்படி இல்லாது இவ்விடம் காத்து இருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக் கொள்ள மாட்டார்கள்.

131 ) சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறில்லை,சாகின்றவன் சன்மார்க்க் நிலையைப் பெற்றவன் அல்ல ! சாகாதவனே சன்மார்க்கி.!

132 ) தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும்.ஒருவன் ஒரு நாளைக்கு ஒருமணி நேரம் தூங்கப் பழக்கஞ் செய்வானானால் அவன் ஆயிரம் வருடம் ஜீவித்து இருப்பான ,எப்போதும் மறைப்பில்லாமல் இறைவனுடைய திருவடியை ஞாபகஞ் செய்து கொண்டு இருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாகும் .!

133 ) பக்தி என்பது மனநெகிழ்ச்சி மன உருக்கம் ! அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம் ! ஆதலால் எல்லா உயிர்கள் இடத்தும் அன்பு செலுத்துவதே கடவுள் வழிபாடாகும்.!

134 ) ஆனந்தம் என்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்தியால் சந்தோஷிப்பித்துத் தான் அதிசியமின்றி நிற்றல்.

135 ) இரவில் தீபம் இல்லாத இடத்தில் இருக்கக் கூடாது ! ஏனெனில் அஃது பிராண நஷ்டம் உண்டு பண்ணும் ,ஆதலால் நமது கிருகத்தில் (வீட்டில் ) தீபம் வைத்து இருளைப் போக்கி ஆனந்த மயமாய் நித்திரை இல்லாது இருத்தால் ஆயுள் விருத்தியாகும் ,!

136 ) நம் நடுக் கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டும் உள்ளது. மேற்படி பூட்டை அருள் என்கிற திறவு கோலைக் கொண்டு திறக்க வேண்டும் ஆதலால் மேற்படி அருள் என்பது ஆன்ம இயற்கையால் அடையும் பெருந்தயவு ,நாம் தயாவடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.!

137 ) அகத்தில் உள்ள ஒளியை (ஆன்ம ஒளியை )அறிந்து கொள்ள புறத்தில் உள்ள ஜோதியை (ஒளியை ) வழிபட வேண்டும்.

138 ) ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல ,இந்த உலகம் எல்லாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும்.அப்படிச் செயவதால் ,அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன.

139 ) சந்நியாசம் ..காவி வேஷ்டி வேண்டாம் ;--மூன்று ஆசைகளில் விஷேசம் பற்று உள்ளவகளாகித் தயவு இல்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக் கொள்ள வேண்டும் ,மேற்படி குற்றம் அற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை.!

140 ) சந்நியாசி;--காவி உடை தரிப்பதற்கு  நியாயம்;--தயவில்லாத கடின சித்தர்கள் ஆகையால் தத்துவ ஆபாசம் உள்ளது.தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக் குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி உடை ,வெற்றியான பிறகு அடைவது தயவு.ஆதலால் வெற்றிக் கொடி வெள்ளை, .தயவு வெள்ளை என்பதற்கு நியாயம்;-தயவு என்பது சத்துவம் ,சத்துவம் என்பது சுத்தம்,..சுத்தம் என்பது நிர்மலம்,..நிர்மலம் என்பது வெள்ளை வருணம்,...வெள்ளை என்பது தயவு,..தயவு என்பது காருண்யம்.!

141 ) பெண்களுக்கு யோகம் முதலிய சாதனங்கள் அவசியம் கற்பிக்க வேண்டியது .மேலும் பேதமற்று அபேதமாய்ப் படிப்பு முதலியவையும் சொல்லிக் கொடுக்க வேண்டியது .அவசியம்.தத்துவம் முதலியவற்றின் சொரூப ரூபாதிகளைத் தெரிவித்துச் சரளமாக்கினால் ,பின் தடையின்றி நம்முடைய துரிய ஆசிரம காலத்தில் ஒத்து இருப்பார்கள்.''தெய்வந்தொழாஅள்'' என்னும் குறளால் இதை அறிக !

142 ) தியானம் செய்ய வேண்டுமானால் தீபத்தைப் பார்த்து தியானம் செய்யவேண்டும்.உருவமாக பார்த்து தியானம் செய்தால் உருவம் கரைந்து அருவமாகும் .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும்...எப்படி எனில் ;--பார்க்கும் தான் கெடுவது அத்துவைதம் ,பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம் ..சத்தியம்.!

143 ) சுத்த சன்மார்க்க சாதகர்கள் எக்காலத்தும் புழுக்காது இருக்கின்ற வஸ்துவைக் உட் கொள்ள வேண்டும்.புழுக்காத வஸ்துக்கள் யாதெனில் ;--சர்க்கரை ,தேன்,கற்கண்டு,வெல்லம்,அயம் (இரும்பு ) முதலிய செந்தூரம்,தாமிரம் அயம் முதலிய பஸ்பம்,ஆதலால் அவசியம் ஆகாரத்திற்கு முக்கிய வஸ்து மேற்குறித்தவை !.பரியாயத்தில் சர்க்கரை என்று லவணத்தைக்  (உப்பு ) குறிப்பாக சொல்லுவதும் உண்டு மேற்படி லவணத்தை துரிசு போக்கி ஐய வண்ணமாய்க் கட்டி ஆகாரத்தில் கொண்டால் தேகம் நீடிக்கும் .இதன்றி சத்துவ பதார்த்தத்தில் லவணம் சிறுகச் சேர்த்துக் கொள்ளவும் கூடும்.

144 ) இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்ககூடாது,;--இறந்து போனவரின் உயிர் மறு பிறப்பு கிடைக்கும் வரை ,ஆன்மாவில் அடக்கம் கொள்கிறது.உடம்பை விட்டு வெளியே போகாது ,ஆதலால் உடம்பை எரிப்பதும் ஒரு கொலைக்கு சமமாகும் ! ஆதலால் பதைக்க வேண்டும் !

145 ) கணவர் இறந்தால் மனைவி தாலி வாங்குதல்  கூடாது --கர்ம கால முதலிய பேதங்களால் யாருக்காயினும் தேக ஆனி (மரணம் ) நேரிட்டால்,தகனம் செய்யாமல் சமாதியில் வைக்க வேண்டும்.இறந்தவர்கள் திரும்பவும் எழுந்து நம்முடன் இருக்கப் பார்ப்போம் என்கிற முழு நம்பிக்கையைக் கொண்டு எவ்வளவும் துயரபபடாமலும்,அழுகுரல் செய்யாமலும் சிற்றம்பலக் கடவுள் சிந்தையுடன் இருக்க வேண்டும்.

146 ) புருடன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்,மனைவி இறந்தால் புருடன் வேறு கல்யாணப் பிரயத்தனஞ் செய்ய வேண்டாம்.பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம்.கர்ம காரியங்கள் ஒன்றுஞ் செய்ய வேண்டாம்.தெரிவிக்கத் தக்கவர்களுக்குத் தெரிவித்து ஒரு தினத்தில் நேரிட்டவர்களுக்கு நேரிட்டமட்டில் அன்ன விரயஞ் செய்ய வேண்டும்.இவ்வாறு உண்மையாக நம்பிச் செய்யுங்கள்.

147 ) அவ்வாறு செய்து இருந்தால் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமும் மேற்படி தருமச்சாலையும் நிலைபெற விளக்கஞ் செய்யும் பொருட்டாகவும்,கருணை கூர்ந்து நமது தந்தையாராகிய எல்லாம் வல்ல திருசிற்றம்பலக் கடவுள் அனைவருக்கும் காட்சிக் கொடுப்பார் .! இது சத்தியம்.! இது சத்தியம்.

148 ) இந்த விபரம் வெளிப்பட்டு அறிந்து கொள்ளாமுன் இறந்தவர்களையும் எழுப்பி அருள்வார்.இது வெளிப்பட்டு அறிந்த பின் தகனஞ் செய்தல் கூடாது..அது சன்மார்க்கத்திற்கு தக்கதல்ல .ஆகலின் மேற்கண்டபடி உண்மையாக நம்பிக்கையுடன் வாழ்வீர்களாக !.

149 ) எனக்கு உலக அறிவு தெரிந்தது தொட்டு எனது தந்தையார் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் திருவருளை நாம் அடையும் வரையில் என்னுடன் பழகியும் என்னை நம்பி அடுத்தும் என்னைக் கேளிவியால் விரும்பியும் எனக்கு உரிமைப் பட்டும் இருந்து இறந்தவர்களை எல்லாம் எழுப்பிக் கொடுத்து ,சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை விருத்தி செய்விக்கத் திருவுள்ளத்துக் கருதிய பெருங் கருணை வள்ளல் சாலைக்கு உரியவர்களாகி இருந்தும் அவநம்பிக்கையுடன் இருக்கின்றவர்கள் விஷயத்திலும் இந்த உபகாரம் செய்தே அருள்வார்.ஆனால் அவர்கள் சன்மார்க்க சங்கத்திற்கு மாத்திரம் அருகராகார்கள் .ஆகலின் நம்பிக்கையுடன் இருங்கள் பெரிய களிப்பை அடைவீர்கள்.இது சத்தியம்,இது சத்தியம்.!

150 ) எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையை வரவைத்துக் கொள்ளவேண்டும்.ஏன் என்றால் எண்பத்து நான்கு லட்சம் யோனி பேதமுள்ள சீவர்களிடத்தும்,இரக்கம் வைத்து தயவுடன் கருணை காட்ட வேண்டும். எல்லா உயிர்களிலும் ,ஆண்டவர் ஏகதேசமாய் ஆன்ம ஒளியாக விளங்குகிறபடியால்,ஆன்மாவே சபையாகவும் அதன் உள்ளொளியே பதியாகவும் கண்டு பேதமற்று,எல்லாம் தானாக, ஒருமையுடன் இருக்க வேண்டும்.!

151 ) உலகில் தோன்றிய அனைத்தும் இறைவனால் படைக்கப் பட்டது என்பதை ,பகுத்து அறிந்து , எத்துணையும் பேதம் இல்லாமல் ,,சாதி,சமயம்,மதம்,இனம்,மொழி,நாடு என்ற பேதம் இல்லாமல் பொது நோக்கத்துடன் வாழ்வதே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் பொது கொள்கையாகும்.ஆதலால் எதிலும் பேதம் இல்லாமல் பொது நோக்கம் வேண்டும்.

152 ) சமய மதங்களில் தெய்வத்தினுடைய உண்மையைக் குழு உக்குறியால் குறித்து ,அக்குறிப்பையும் வெளிப்படையாகக் காட்டாது சிவயநம என்றும் ,நமசிவாய என்றும்,இது போன்ற அனந்த வர்ணங்களைச் சேர்த்து ஒன்று,..இரண்டு ..மூன்று,..ஐந்து,..ஆறு ..எட்டு..பத்து,..பதிமூன்று..,பதினைந்து பதினாறு ...இருபத்து நான்கு முதலிய சங்கையில் மந்திரங்களாய் அமைத்து வழங்கி வருவிக்கப் பட்டு நடந்து வருகின்றது.அவ்வவ் மநதிரங்களின் அர்த்தம் பலவாக விரியும்.!

153 ) நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்ம லாபம்மாகிய சிவானுபவமே யன்றி வேறில்லை.இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமல்ல .சுவர்க்க நரக விசாரம் உள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று ,முடிவில் தடைப்பட்டுத் திருவருட் துணையால் கருணை நன் முயற்சி எடுத்துக் கொண்டு ,பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள் அஃது அருமை.!

154 )இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு,முடிவான இன்பானுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகாவாக்கியத் திருமந்திரத்தை ,தமது உண்மையை வெளிப்படக் காட்டும் மகாமந்திர வாக்கியத்தை ..எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய்யறிவின் கண் அனுபவித்தெழுந்த உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை ,நீங்கள் எல்லவரும் என்போல் ஐயம்,..திரிபு ,மயக்கமின்றி அடைய என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைப் பற்றிக் குறிப்பிகின்றேன்,குறிப்பிப்பேன் .!

155 ) நமது ஆண்டவர் கட்டளை யிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே ஆண்டவர் முதற்சாதனமாக
அருட்பெருஞ்சோதி !        அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !   அருட்பெருஞ்ஜோதி !
என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்.தயவு,கருணை,அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும்.ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம்.அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம் 1

156 ) இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றி இருக்கின்றார்.எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த லாபம் இது.ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப் போல் பெரிய லாபத்தைப் பெற்றுக் கொள்வீர்கள்.இது வரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டு இருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா பெற்றுக் கொள்ளவில்லை.!

157 ) ஆதியிலே உண்மையை மறைத்தவன் ஓர் வல்லவன் அவர் (வேத வியாசர் ) மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை.அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்க வரவில்லை.இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை .அவைகளில் ஏகதேச கர்ம சித்திகளைக் கற்பனைகளாகச் சொல்லி இருக்கின்றார்கள்.ஆதலால் அவைகளில் லஷியம் வைக்க வேண்டாம்.!

158 ) சமய மத  வாதிகள் ;--உண்மையான கடவுள் யார் என்று கேட்பவர்களுக்கு பதில் சொல்லத் தெரியாமல் விழிக்கின்றார்கள் .இஃது உண்மையாக இருப்பதாகவே முன்னும் பின்னும் உள்ள பெரியவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டு இருந்தவர்களும் உண்மையை அறியாது .அப்படியே கண்ணை மூடிக் கொண்டு உளறி இருக்கிறார்கள் .(பெரியவர்கள்,ஆதிசங்கரர்,இரானுஜர் ,காமகோடிபீடாதிபதி சங்கராச்சாரியார்,மத்துவாச்சாரியார், புத்தர் போன்றவர்கள் ) மேலும் ஏசு,நபிகள் நாயகம் போன்றோர்கள் .!

159 ) நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லஷியம் வைத்துக் கொண்டு இருந்த  வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லஷியம் வைக்க வேண்டாம்.ஏனென்றால் ,அவைகளில் ஒன்றிலாவது குழுஉக்குறி யன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியைச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் !.

160 ) இறைவனை அறிய, இறைவன் அருளைப் பெற, ஒரே வழி கருணைதான் !

161 ) உலகத்தில் உயர்ந்தப் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்த பிறப்பினால் அடையத்தக்க பிரயோசனத்தைக் காலம் உள்ளபோதே அறிந்து அடைய வேண்டும்.

162 ) இயற்கை இன்பத்தைப் பெற்று தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதானால் அடைய வேண்டும் எனில் கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைப் கொண்டே அடைய வேண்டும் என்று அறிய வேண்டும்.

163 ) கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடும் எனில் ;-ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக் கூடுமே அல்லாது  வேறு எந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்று உறுதியாக அறிதல் வேண்டும்.

164 ) ஜீவ காருண்யத்தின் முக்கிய லஷியமாவது எது எனில்,; எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லஷியம் என்று அறிய வேண்டும்.

165 )ஆதலால் அந்த ஜீவ காருண்யத்தை பின் பற்றும் பொருட்டு கடலூர் மாவட்டம் வடலூர் என்கின்ற பார்வதிபுரத்தில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்று ஒரு தருமச்சாலையை 23--5--1867 ஆம் ஆண்டு ஏற்ப்படுத்தப்பட்டு இருக்கின்றது .அது பலர் சகாயத்தாலே நிலைபெற வேண்டும் ஆதலால் ஜீவதயை உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடியவரையில் பொருண் முதலிய உதவி செய்து ''அதனால் வரும் லாபத்தைப் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை .!

166 ) ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்கள் உண்மையான இறைவனை அறிந்து அன்பு செய்து அருளை அடைந்து சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழ்வதற்கு,வடலூர் என்னும் பார்வதி புறத்தில் ,சத்திய தருமச்சாலையின் அருகில் உள்ள வடலூர் பெருவெளியில்,எட்டு திக்கு மக்களும் வந்து உண்மையான இறைவன் யார் ? என்பதை அறிந்து கண்டு களிக்கவும் ,வழிபடவும், கருதி பெருங் கருணை யோடு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ,வள்ளலார் உடம்பில் அமர்ந்து '' எண்கோண வடிவமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை '' 25--1--1872 ,ஆம் ஆண்டு தோற்றுவித்துள்ளார் !

167 ) இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல் உண்மை அறிவு ,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவராய் ,எல்லாச் சமயங்களிக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும் ,உண்மைப் பொது நெறியாக விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்று ,பெருஞ் சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு ,

மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருயுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ஓர் ஞானசபையை இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்றுவித்து ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றோம் ''என்னும் திருக்குறிப்பை வெளிப்படுத்தி,அருட்பெருஞ் ஜோதியிராய் வீற்றிருக்கின்றார் !

168 ) ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி ,இறந்தவர் உயிர் பெற்று எழுதல் மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள்.

169 ) வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் ஊரில் உள்ள சித்திவளாகம் என்னும் இடத்தில் வள்ளல்பெருமான் சித்தி அடைவதற்கு முன் வெளியிட்ட அறிவிப்பு;;--தான் தன் அறையில் வழிபட்டு வந்த உள்ளிருந்த விளக்கைத் திருமாளிகைப் புறத்தில் வைத்து;--இதைத் தடைபாடாது ஆராதியுங்கள் .இந்தக் கதவைச் சாத்திவிடப் போகிறேன்,

170 ) இனி கொஞ்ச காலம் எல்லோரும், ஆண்டவர் இப்போது தீப முன்னிலையில் விளங்குகின்றபடியால் உங்களுடைய காலத்தை வீணில் கழிக்காமல் ,நினைந்து நினைந்து என்னும் தொடக்கமுடைய இருபத்திஎட்டு பாசுரம் அடங்கிய .''ஞான சரியை ''.பாடலில் கண்டபடி தெய்வ பாவனையை இந்தத் தீபத்தில் செய்யுங்கள் .நான் இப்போது இந்த உடம்பில் இருக்கின்றேன் ,இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன் என்று திருவாய் மலர்ந்து அருளினார்கள்.!

171 ) 30--1--1874,ஆம் நாள்  சன்மார்க்க சங்கத்தார்க்கு இட்ட இறுதிக் கட்டளை ;--  நான் உள்ளே பத்துப் பதினைந்து தினம் இருக்கப் போகிறேன் ,பார்த்து அவநம்பிக்கை யடையாதீர்கள் .ஒருகால் பார்க்க நேர்ந்து பார்த்தால் யாருக்கும் தோன்றாது வெறு வீடாகத்தான் இருக்கும்படி ஆண்டவர் செய்விப்பார்.என்னைக் காட்டிக்கொடார் .!  

172,) கடவுளை அறிந்து ,கடவுளின் அருளைப் பெற ஜீவ காருண்யமே முதற்படியாக உள்ளது ஆதலால்,சமரச சுத்த சன்மார்க்க சத்தியச் சங்கத்தை சார்ந்தவர்கள் ஏழைகளின் பசியைப் போக்குவதே தங்களுடைய முதற்பணியாக,கடைபிடிக்க வேண்டும்.இதுவே இறைவன் கட்டளையாகும்.அடுத்து சத்விசாரம் என்னும் இடைவிடாத அன்பை இறைவன்பால் செலுத்த வேண்டும்.இறைவன் கருணைக் கொண்டு அருளைத் தந்து நம்மை மேலே ஏற்றுவார் .

173 ) பசியினால் வருந்துகின்ற ஜீவர்களுக்கு ஆகாரம் கொடுத்து நினைத்த போது,நினைத்த புண்ணியரது ''மனம் ''வேறு பற்றுகளை விட்டுச்சுத்தக் கரணமாகி நினைத்தபடியால் ,அந்தப் புண்ணியர்களை யோகிகள் என்றே என்றே உமையாக அறிய வேண்டும்.;--ஆகாரங் கொடுக்க நினைத்தபடி உபசரித்துக் கொடுக்கும் போது,அவர் உண்ணுவது தாம் உண்ணுவதாக அறிந்து களிக்கின்றபடியால் ,ஜானிகள் என்றே உண்மையாக அறிய வேண்டும்..

174 )ஆகாரம் கொடுக்க உண்டு ,பசி தீர்ந்தவர்களுக்கு அத்தருணத்தில் ''ஆன்மாவின் உள்ளும் புறத்தும் கீழும்,மேலும்,நடுவும்,பக்கமும்,நிறைந்து கரண முதலிய தத்துவங்கள் எல்லாம் குளிர்வித்துத் தேகம் முழுவதும் சில்லென்று தழைய ,'' முகத்தினிடமாகப் பூரித்து விளங்குகின்ற கடவுள் விளக்கத்தையும்,திருப்தி இன்பமாகிய கடவுள் இன்பத்தையும்,பிரத்தியட்சத்தில் தெரிசித்து அனுபவிக்கின்றார்கள்

175 ) ஆதலால் அந்தப் புண்ணியர்கள் கடவுளைக் கண்டவர்கள் என்றும் கடவுள் இன்பத்தை அனுபவிக்கின்ற முத்தர் என்றும் அறியவேண்டும் .பசி நீங்க உண்டு சந்தோஷித்தவர்கள் இந்தப் புண்ணியத்தைத் தெய்வமாகப் பாவிக்கின்றார்கள் ஆதலால் இவர்களே தெய்வம் என்று உண்மையாக அறியவேண்டும்.

இளம் வெய்யில்,கடும் வெய்யில்,மழை,குளிர்,பெருங் காற்று,இவைகளால் உடம்பை வருத்தாமற் காத்துக்கொள்ள வேண்டும்.!

நித்தியம் சூரிய உதயத்திற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னே எழுந்து அமுதக் காற்றை சுவாசிக்க வேண்டும்.!

மலத்தைச் சிறிதும் அடக்கப்படாது !
சுக்கிலத்தைச் சிறிதும் வீணில் விடப்படாது !
துன்மார்க்கப்  பழக்கம் செய்யக் கூடாது !

எந்த வேலை செய்யுனும் ,எந்த விவகாரஞ் செய்யினும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சிந்தனையுடன் செய்து பழகுதல் வேண்டும்.!

காலை மத்தியானம்,சாயங்காலம்,இப்போழுதுகளிலும் இரவு மத்தியிலும் நித்திரை செய்யாதிருத்தல் வேண்டும்.!

காலைப் புணர்ச்சி,பகற்புணர்ச்சி ,அந்திப் புணர்ச்சி ,இரவு முன் பங்குப் புணர்ச்சி இல்லாமல் இருத்தல் வேண்டும்.!காலை போஜனம் ,அந்திப் போஜனம்,முதலியவை இல்லாதிருத்தல் வேண்டும்.!

படுத்து விழிக்கிற பரியந்தம் இடக்கை கீழிருக்கச் செய்தல் வேண்டும்.!பிராணவாய்வு விரையம் ஆகாது !

கரிசாலையை தினம் தினம் பச்சையாவது சமையல் செய்தாவது சாப்பிட்டு வரவேண்டும்.

பிரதம உள்ளுடம்பை நீடிக்கப் பண்ணும் மேல்குறித்த கரிசாலையை அல்ஷ்யம் செய்யாது ,இறைவன் திருவடியின் கண்ணே இலஷ்யம் வைத்து எவ்வித தந்திரத்திலாவது தினம் தினம் உட்கொண்டால் தேகக் கெடுதலாகிய அசுத்தம் நீங்கி ,தேகம் வலுவுள்ளதாக நெடுநாளைக்கு இருக்கும்.!

கரிசாலை மூலிகை முக்தி யடைவதற்கு சகாயமாய் இருக்கும் மகான்களிடத்தில் ,அனந்த காலம் காத்தாலும் மேல்குறித்த மூலிகையின் பிரயோஜனத்தையும்,உண்மையையும் ,அனுபவத்தையும் வெளியிடார்கள் பரம கருணாநிதியாகிய நம் தலைவனால் கிடைத்தது.அசட்டையின்றி உட்கொள்ளல் வேண்டும்.!

தூதுவளை ;--அறிவை விளக்குவதற்கும் ,கவனசக்தி உண்டு பண்ணுவதற்கும்,கரணம் ஓய்வதற்கும், கபத்தை அரிப்பதற்கும் யோக்கியதை யுடையது தூதுளை.அதை மேற்குரித்தபடி அனுஷ்டித்தால் விஷேச நன்மை செய்யும்.!  

தினமும் ;--தண்ணீரைச் முன்றில் ஒருபங்கு சுண்டக் காய்ச்சி குடிக்க வேண்டும்..மிதமான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டும்.!

தேகம் முதலிய கருவிகளை சாக்கிரதையாக பாதுகாத்தல் வேண்டும்.!

எந்தகாலத்தில் எந்தஇடத்தில் எந்தவிதமாக எந்தமட்டில் எதை அனுபவிக்க வேண்டுமோ ,அந்தக்காலம் அந்தஇடம் அந்தவிதம் அந்தமட்டு பொருந்தப் பொசிக்கின்றது ,திருவருட் சத்தியாய் இருந்தால் நமக்கு என்ன சுதந்திரம் இருக்கின்றது .

எல்லாம் திருவருட் சத்தி காரியம் என்று சிற்சபை நடத்தை தெரிந்து தியானித்து இருக்க வேண்டும்,உண்மை இது .இதைக் கொண்டு தெளிந்து இருக்க வேண்டும். !

நானோ புந்தி தெரிந்த நாள் தொடங்கி இதுபரியந்தம் ,இந்தப்ப் பிண உடம்பும் இதற்குக் கொடுக்கின்ற பிண்ட துன்பங்களும் பெருஞ் சுமையாக இருக்கின்றது .இது என்றைக்குத் தொலையும் என்றி எண்ணி எண்ணி இளைத்துத் துன்பப் படுகின்றவனாக இருக்கின்றேன்.

இடைவிடாது அருட்பெருஞ் ஜோதி மகாமந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.எல்லா நன்மைகளும் தோன்றும்.!

ஆறு ஆதாரத்தில் அனாகத்தில் சத்திசிவம் பத்துஇதழில் 8+2,எட்டு இரண்டாக இருப்பதாக கொள்ளல் வேண்டும்.இரண்டு இதழ் ஆசனபாகமாக கொள்ளல் வேண்டும்.அன்றியும் பன்னிரண்டு இதழில் எட்டு இதழ் சத்தியிருப்பு,இரண்டு இதழ் சிவத்தின் இருப்பு ,மற்றை இரண்டு இதழ் கீழும் அடையிருப்பு இது அனுபவத்தில் தெரியும் .!

செல்லும்போது செலுத்துவேன் சிந்தையை !வெல்லும்போது விடுவேன் விடுவேன் வெகுளியை !

சுக்கிலம் மேலேற்றும் பழக்கத்திற்குப் பத்தியம் தூக்கம் சோம்பல் ஆகாது !.

குண்டலனி சக்தியை தன் முயற்ச்சியால் மேலேற்றக் கூடாது,உயிர்க்கு ஆபத்தை உண்டாக்கும். இந்திரிய ஒழுக்கத்தாலும், கரண ஒழுக்கத்தாலும் தானே மேலே ஏறவேண்டும்.!

சுக்கிலம் மேலேறுவதாவது ;--கீழே சுக்கிலப் பையில் சேர்வது,குறைந்து மேலே பிரமந்திரத்தில் சேர்வது மிகுதிப்படலாம் .சப்த தாதுக்களுள் அஸ்தி மூலாதாரத்திற்கும், பேதை சுவாதிட்டானத்திற்கும் ,மாமிசம் மணி பூரகத்திற்கும்,உதிரம் அனாகத்திற்கும் ,துவக்கு விசுத்திக்கும் ,மச்சை ஆக்ஞைக்கும்,சுக்கிலம் சகஸ்ராரத்திற்கும் உரியன >!

காமத்தால் விந்து கீழே இறங்கும் ,ஞானத்தால் விந்து மேலே ஏறும் !

சுத்த சன்மார்க்க சங்கத்தைச் சார்ந்து ,சத்திய தருமச்சாலையைச் சார்ந்து,சத்திய ஞானசபையை சார்ந்து இருப்பவர்களை எல்லாம் ,இறந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீண்டும் எழுப்பிக் கொடுத்து அருள்வார் !

நாம் அடையவேண்டுவது முடிவான ஆன்மலாபமாகிய அருள் அனுபவமே அன்றி வேறில்லை .!

சரியை,கிரியை,யோகம்,ஞானம்,முதலிய சாதகம் நான்கில்,நான்காவது படியாகிய ஞானசரியை ,சுத்த சன்மார்க்கத்திற்கு முதற் படியாகும்.!

ஒரு பதார்த்தத்தை அனுபவித்தால் அல்லது அந்தப் பதார்த்த்தின்  உடைய ருசி தெரியாது .ருசி தெரியாத பதார்த்தத்தின் மேல் இச்சைப் போகாது .அதுபோல் தெய்வத்தை உள்ளபடி அனுபவித்தால் அல்லது தெய்வத்தின் மேல் பிரியம் வராது !

ஆதலால் உண்மையான தெய்வத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற முக்கிய லட்ஷியத்தில் இருந்து கொண்டு விசாரஞ் செய்து கொண்டு இருங்கள் .உண்மைகள் யாவும் அகண்டமாகத் தெரியும்.!

அன்பிற்கும், தயவுக்கும், கருணைக்கும் ஒருமை வரவேண்டும் .அந்த ஒருமை இருந்தால்தான் அன்புவரும் ,தயவுவரும் .கருணைவரும், நாம் பெரிய நிலைமேல் ஏறலாம் ,இப்போது என்னுடைய அறிவு அண்டம் அண்டங்களுக்கு அப்பாலும் கடந்து இருக்கின்றது .!

ஒருமை என்பது எல்லா உயிர்களிலும் ஆண்டவர் இருக்கிறார் என்பதை அறிவால்,அன்பால,தயவால்,கருணையால் உயிர் இரக்கத்தால் மட்டுமே வெளிப்படுத்தப்படும்.

எல்லா உயிர்களிடத்தும் கடவுள் ஒளியாக இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை அறிந்து கொள்வதே ''ஆன்மநேய ஒருமைப்பட்டு உரிமை ''என்பதாகும்.!

ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும் என்று இறைவனிடம் விண்ணப்பிக்க வேண்டும்.!

தேகசுதந்திரம் ,ஜீவசுதந்தரம் ,போகசுதந்திரம் ஆகிய மூவகை சுதந்தரமும் நீங்கிய இடத்தே கடவுள் சுதந்திரம் தானே கிடைக்கும் .!

என்னை வணங்க வேண்டாம் .எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி தன்னையே வணங்குதல் வேண்டும் !.

நான் உண்மை உரைகின்றேன்.என் மொழியைப் பொய் மொழி என்று எண்ணாதீர் !

என்னால் நீங்கள் பெரிய லாபத்தை அடையப்போவது உண்மை !

தியானம் ,தவம்,யோகம்,எதுவும் வேண்டாம் .அதில் அழுந்தினால் சிறு ஒளி உண்டாகும் அதனால் பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும் .உபாயத்தை நம்பாதீர்கள் உண்மையை நம்புங்கள் !

உபாயமார்க்கம் ,உண்மை மார்க்கம்,அனுபவமார்க்கம் ,இதில் அனுபவ மார்க்கமே சிறந்தது .! எதையும் அனுபவத்தால் அறிய வேண்டும்.!

அறிவைக் கொண்டு அறிவை அறிய வேண்டும்.அருளைக் கொண்டு அருளை அறிய வேண்டும் . அருளைக் கொண்டு ஆண்டவரை அறிய வேண்டும்.!

கடவுள் யாரையும் தண்டிக்கப் படுவதில்லை .நாம் செய்யும் குற்றங்களுக்கு நாமே தண்டனைப் பெறுகிறோம்.!

உண்மையுடன் வாழ்ந்தால் ,உண்மை உம்மைத் தேடி வரும்.!

அண்டங்களை ஆள்பவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் ,பிண்டத்தை ஆள்பவர் பெருமாயை என்னும் சக்தி !

மாயைக் கொடுப்பது அழியும் பொருளாகும்,.அருட்பெருஞ்சோதி ஆண்டவர் கொடுப்பது என்றும் அழியாத அருளாகும் !

மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட வீடு நம் உடம்பு என்னும் வாடகை வீடாகும். அதற்கு உணவு என்னும் வாடகை தினமும் கொடுக்க வேண்டும்.

வாடகை வீட்டில் குடி இருப்பது ஆன்மா என்னும் ஒளி யாகும் .வாடகை என்னும் உணவை நிறுத்தி ,அருளைப் பெற்று சொந்த வீடாக மாற்றிக் கொள்ளவேண்டும்.!

பொருள் தேகத்தை விட்டு அருள் தேகமாக மாற்றிக் கொள்வதே ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்....அதுவே சுத்த பிரணவ ஞானதேகம் என்றும்,....முத்தேக சித்தி என்றும்,...கடவுள் நிலை அறிந்து அம்மயமாகுதல் என்றும் ..என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும் சொல்லப்படும்.!

மனிதன் செய்யக் கூடாத செயல்கள் ;---

நல்லோர் மனத்தை நடுங்கச் செய்யாதே !

வலிய வழக்கிட்டு மானங் கெடுக்காதே !

தானங் கொடுப்போரைத் தடுத்து நிற்காதே !

கலந்த சினேகிகரைக் கலகஞ் செய்யாதே !

மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்யாதே !

குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்ளாதே !

ஏழைகள் வயிறு எரியச் செய்யாதே !

தருமம் பாராது தண்டஞ் செய்யாதே !

மண்ணோரம் பேசி வாழ்வை அழிக்காதே !

உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்யாதே !

களவு செய்வோர்க்கு உளவு சொல்லாதே !

பொருளை இச்சித்துப் பொய் சொல்லாதே !

ஆசைக் காட்டி மோசம் செய்யாதே !

வரவு போக்கு ஒழிய வழியை அடைக்காதே !

வேலையிட்டுக் கூலி குறைக்காதே !

பசித்தோர் முகத்தைப் பாராது இருக்காதே !

இரப்போர்க்குப் பிச்சை இல்லை எனாதே !

கோள் சொல்லிக் குடும்பங் குலைக்காதே !

நட்டாற்றில் கையை நழுவ விடாதே !

கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுக்காதே !

கற்பழிந்தவளைக் கலந்து இருக்காதே !

காவல் கொண்டிருந்த கன்னியை அழிக்காதே !

கணவன் வழி நிற்ப்போரைக் கற்பழிக்காதே !

கர்ப்பம் அழித்துக் களித்து இருக்காதே !

குருவை வணங்கக் கூசி நிற்காதே !

குருவின் காணிக்கை கொடுக்க மறக்காதே !

கற்றவர் தம்மைக் கடுக்கடுக்காதே !

பெரியோர் பாட்டிற் பிழை சொல்லாதே !

பட்ஷியைக் கூண்டில் பதைக்க அடைக்காதே !

கன்றுக்குப் பாலுட்டாது கட்டி வைக்காதே !

ஊன் சுவை உண்டு உடல் வளர்க்காதே !

கல்லும் நெல்லும் கலந்து விற்காதே !

அன்புடையவற்குத் துன்பஞ் செய்யாதே !

குடிக்கின்ற நீர் உள்ள குளத்தை தூர்ககாதே !

வெய்யிலுக்கு ஒதுங்கும் விருட்சத்தை அழிக்காதே !

பகை கொண்டு அயலோர் பயிரை அழிக்காதே !

பொது மண்டபத்தைப் போய் இடிக்காதே !

ஆலயக் கதவை அடைத்து வைக்காதே !

சிவனடியாரைச் சீறி வையாதே !

தவஞ் செய்வோரைத் தாழ்வு சொல்லாதே !

சுத்த ஞானிகளைத் தூஷ்ணம் செய்யாதே !

தந்தை தாய் மொழியைத் தள்ளி நடக்காதே !

தெய்வம் இகழ்ந்து செருக்கு அடையாதே !

எந்தப் பாவமும் செய்யாதே ! நன்மையே செய் !

  •   வேண்டுதல் ;--
அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்த சிவ மார்க்கக்கம்
திகழ்ந்தோங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான் செயினும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே !
  •  ஆன்மநேய அன்புடைய அனைவருக்கும் வந்தனம் ,எனக்குத் தெரிந்த அளவிற்கு வள்ளலாரின் அருள் பொன் மொழிகளை தந்துள்ளேன் .ஏதாவது முக்கியமான செய்திகள் விடுபட்டு இருந்தால் வள்ளலார் எழுதிய ஆறாம் திருமுறை ''திருஅருட்பா'' என்னும் அருள் நூலில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

என்றும் உங்கள் ஆன்மநேயன் ;--கதிர்வேலு ,ஈரோடு , செல் ;--9865939896 .... 

சனி, 20 ஜூலை, 2013

அருள் எங்கே இருக்கிறது.? எப்படிப் பெறுவது.?

அருள் நம் சிரநடுவில் மூலையின் மத்தியில் ஆன்மாவின்  ஒளியின் உள்ளே இறைவனால் பதிய வைக்கப்பட்டுள்ளது.கண்களுக்குத் தெரியாத ஒரு சிறிய துகள் போன்றது.அதில் உள்ள அருள் ஆற்றல் அளவிடமுடியாதது.அவை வெளியே வந்து தன சுய தன்மையைக் காட்டினால் உலகமே அதிசயிக்கும்படி பல அற்புதங்களைக் காட்டும் .அவை இறைவனுக்கு சமமானது.உலகை படைக்கும் தன்மையுடையது.ஐந்தொழில் வல்லமைப் பெற்றது.

அந்த மாபெரும் சக்திவாய்ந்த அருளைப் பெறுவது என்றால் சாதாரண விஷயமல்ல.அதில் ஏழுவகையான அருள் சுரப்பிகள் உள்ளன. ஒருசில சுரப்பிகளில் தோன்றும் அருளப் பெற்றவர்கள்,சுத்த தேகிகள்,பிரணவ தேகிகள்,அவர்கள் இம்மை இன்ப வாழ்வு,மறுமை இன்பவாழ்வு வாழ்ந்தவர்கள்.அவர்கள் இந்திரிய ஒழுக்கம் கரண ஒழுக்கத்தை  மட்டும் கடைபிடித்தவர்கள். அதற்கு மேல் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கத்தை அவர்களால் கடைபிடிக்க முடியவில்லை.  

ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் ஏழு படிகளான ஏழு திரைகளும் நீக்கி பரிபூரண அருளைப் பெற்றவர்தான் வள்ளலார் என்பவராகும்.அவர் இந்திரிய ஒழுக்கம்,கரண ஒழுக்கம்,ஜீவ ஒழுக்கம்,ஆன்ம ஒழுக்கம் எனற நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தவர்.

இவ்வுலகில் முழுமையான பூரண ஆருளைப் பெற்றதினால் வள்ளலாருக்கு ஐந்தொழில் வல்லபத்தை அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் கொடுத்துள்ளார்.இவை யாவும் இறைவன் செய்யும் தொழில்.அத்தொழிலை அச்சுதந்தரத்தை வள்ளலாரிடம் ஒப்படைத்து உள்ளார்.

சுதந்திரம் உனக்கே கொடுத்தனன் உனது
தூய உடம்பினுள் புகுந்தோம்
இதந்தரு உளத்தில் இருந்தனம் உனையே
இன்புறக் கலந்தனம் அழியாப்
பதந்தனில் வாழ்க அருட்பெருஞ் ஜோதிப்
பரசு பெற்றிடுக பொற்சபையுஞ்
சிதந்தரு சபையும் போற்றுக என்றாய்
தெய்வமே வாழ்க நின் சீரே >

மேலே கண்ட பாடல்படி இறைவன் முழு சுதந்தரத்தையும் வல்லார் இடத்தில் கொடுத்ததோடு ஆல்லாமல்.அவர் உடம்பினுள் இறைவன் புகுந்து கொண்டார்,மேலும் என்றும் அழியாமல் வாழ அருட்பெருஞ் ஜோதிப் பரிசும் கொடுத்துள்ளார்.பரிசு என்பது ,மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.ஐந்தொழில் வல்லபமாகும்.

இதுவே அருள் இருக்கும் இடமும் அதைப் பெற்றிடும் வழியுமாகும்.வள்ளலார் போல் வாழ்ந்தால் நாமும் அருளைப் பெறலாம்.வேறு குறுக்குவழியில் பெறமுடியாது.கிடைக்காது.

எத்துணையும் பேதமுறாது ''ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை''  என்னும் உணர்வை ஒழுக்கத்தை வரவழைத்துக் கொண்டால் அருளப் பெறலாம்.

ஆன்மநேயன்;--கதிர்வேலு.

புதன், 3 ஜூலை, 2013

நான் ஆன்ம ஒளி ! இரண்டாம் பாகம் !நான் ஆன்ம ஒளி ! இரண்டாம் பாகம் !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை யின் விளக்கம் !

கலவி கேள்விகளாற் பகுத்து அறியத் தக்க அறிவை உடைய உயர் பிறப்பாகிய மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் அனைவருக்கும் வந்தனம் செய்து அறிவிப்பது.

உலகத்தில் மனிதப் பிறப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் இந்தப் பிறப்பினால் அடையத் தக்க பிரயோசனத்தைக் காலம் உள்ள போதே அறிந்து அடைய வேண்டும்.

அந்த பிரயோஜனம் யாதோ எனில் ;--எல்லா அண்டங்களையும் எல்லா புவனங்களையும்,எல்லாப் பொருள்களையும்,எல்லாச் சீவர்களையும்,எல்லாச் செயல்களையும்,எல்லாப் பயன்களையும், தமது பரிபூரண இயற்கை விளக்கமாகிய அருட் சத்தியால் தோன்றி விளங்க,வில்ககஞ் செய்விக்கின்ற இயற்கை ''உண்மை வடிவனராகிய கடவுளின் ''பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் தடைபடாமல் வாழ்கின்ற ஒப்பற்ற பெரிய வாழ்வை அடைவதே இந்த மனிதப் பிறப்பினால் அடையத் தக்க பிரயோஜனம் என்று அறிய வேண்டும்,

இயற்கை இன்பத்தைப் பெற்று தடைபடாமல் வாழ்கின்ற அந்தப் பெரிய வாழ்வை எதனால் அடைய வேண்டும் எனில் ; கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளைக் கொண்டே அடைய வேண்டும் என்று அறிய வேண்டும்.

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளை எதனால் பெறக்கூடும் எனில் ; ஜீவ காருணிய ஒழுக்கத்தினால் கடவுள் அருளைப் பெறக் கூடும்,அல்லது வேறு எந்த வழியாலும் சிறிதும் பெறக்கூடாது என்பதை உறுதியாக அறிதல் வேண்டும்.

ஜீவ காருண்யத்தின் முக்கிய  லஷியம் யாது எனில் ;

எந்த வகையாலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குக் உண்டாகுகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லஷியம் என்று அறிய வேண்டும்.

ஆகலில் அந்த ஜீவ காருண்ய ஒழுக்கத்தை நடத்தும் பொருட்டு கடலூர் மாவட்டம் வடலூர் தாலுக்காவைச் சார்ந்த வடலூர் என்கின்ற பார்வதி புரத்தில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை''என்று ஒரு தருமச்சாலை ஏற்ப்படுத்தப் பட்டு இருக்கின்றது.

அது பலர் சகாயத்தாலேயே நிலை பெற வேண்டும் ஆதலால் ,ஜீவதயை உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவிகளைச் செய்து அதனால் வரும் லாபத்தை ஜீவ காருண்யமுள்ள சமுசாரிகள் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் கோரிக்கை யாகும்.என்பதை வள்ளலார் அறிவிக்க அறிந்து கொண்டேன்.மேலும் வள்ளல் பெருமான்  சொல்லியது .

உலகம் முழுதும் ஆளுகின்ற சக்கரவர்த்தி யாகிய அரசனுக்கும் உலகம் முழுதும் ஒரு நிமிடத்தில் வெல்லத்தக்க சுத்த வீரனுக்கும் ,மூன்றுஆசைகளையும் ஒழித்து உண்மை அறிந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஜீவன் முத்தர்களுக்கும்,பசி நேரிட்டபோது மனம் இளைத்தும் வலி குலைந்தும்  அனுபவம் தடைப்பட்டும் வருந்துகின்றார்கள் என்றால்,எந்த வகையிலும் ஆதாரம் இல்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்டால் என்ன பாடுபடுவார்கள் ! பசி உண்டாகுகின்ற போது ஒவ்வொரு ஜீவர்களுக்கும் உடம்பில் உண்டாகுகின்ற மாற்றங்களைப் பற்றி வள்ளலார் மிகத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்.இவை போன்ற உண்மை நிலைகளை உலகில் தோன்றிய எந்த அருளாளர்களும் தெளிவு படுத்தவில்லை.ஏன் என்றால் பசியின் அவத்தைகள் பற்றி அவர்களுக்குத் தெரியாது.

பசியினால் உண்டாகும் அவத்தை !

பசி அதிகரித்த காலத்தில் முகம் புலர்ந்து போகின்றது.!
உச்சி வெதும்பு கின்றது !
பிரமரந்திரம் அடிபடுகின்றது.!
காது கும்மென்று செவிடு படுகின்றது.!
கண் பஞ்சடைந்து எரிந்து நீர் உலர்ந்து குழிந்து போகின்றது.!
நாசி அழன்று கலைமாறி பெரு மூச்சு விடுகின்றது.
நாக்கு நீர் உலர்ந்து தடிப் பேருகின்றது !
மெய் முழுவதும் கருகி சகதியற்று ஸ்மரணை கெடுகின்றது !
வாக்கு குழறித  தொனிமாறுகின்றது !
கைகளும் கால்களும் தடதடத்துச் சோர்ந்து தடுமாறுகின்றது .!
மலசல வழி வெதும்பி வேறுபடுகின்றது.!
உரோமம் வெறிக்கின்றது.!
பற்கள் கருகித் தளர்கின்றது !
இரத்தமும் சலமும் சுவருகின்றது.!
சுக்கிலம் தன்மை மாறி வறளுகின்றது..!
எலும்புகள் குழைந்து நோக்காடு உண்டாகின்றது.!
நாடி நரம்புகள் வலியிழந்து மெலிந்து கட்டுவிக்கின்றது !
வயிறு பகீர்ரென்கிறது !
மனது தளர்ந்து நினைவு மாறுகின்றது !
புத்தி கெட்டு நிலை மாறுகின்றது .!
சித்தம் கலங்கித் திகைப்பேறு கிகினறது !
அகங்காரம் குலைந்து அச்சம் உண்டாகின்றது !
பிரகிருதி சுருங்குகின்றது .
கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும் மறைபடுகின்றது.!
தாப சோபங்கள் மேன்மேலும் உண்டாகின்றது.!

இவ்வளவு அவத்தைகளும் ஏக காலத்தில் உண்டாகின்றது.எல்லாச் சீவர்களுக்கும் பொதுவாகவே இருகினறது..ஆகாரம் உண்டு பசி நீங்கிய  தருணத்தில் தத்துவங்கள் எல்லாம் தழைந்து கடவுள் விளக்கமும் ஆன்ம விளக்கமும்,அகத்திலும் புறத்திலும் வெளிப்பட்டு ,திருப்தி இன்பம் உண்டாகின்றது.

ஆகலில் நாம் அனைவரும் எந்த வகையிலும் ஆதாரமில்லாத ஏழைகளுக்குப் பசி நேரிட்ட போது மிகவும் கருணை உள்ளவர்களாகி தம்மாற் கூடியமட்டில் அந்தப் பசி என்கின்ற ஆபத்தைப் பொதுவாக நிவர்த்தி செய்வதற்கு முறச்சி செய்வதே ஆன்ம லாபம் என்று அவசியம் அறிய வேண்டும்.

பசியை நீக்கும் குணமுடைய புண்ணியர்கள் ,மேலும் ஜீவர்களுக்கு உண்டாகும் பிணி,கொலை ,தாகம்,இச்சை,எளிமை,பயம்,போன்ற துன்பங்களையும் போக்குவார்கள் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை இதுவே  சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையின் நோக்கமும் செயலுமாகும்.என்பதை,வள்ளலார் எழுதி வைத்துள்ள ''திருஅருட்பா''என்னும் அருள்  நூலின் வாயிலாக என்னுடைய ஆன்மா அறிந்து கொண்டது.

கடவுள் ஒருவரே !

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையின் விளக்கம் !

வள்ளலார் வெளியிட்டது .

உலகத்தின் இடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்களே !

அறிவு வந்த கால முதல் அறிந்து அறியாத அற்புத அறிவுகளையும்,அடைந்து அறியாத அற்புத குணங்களையும் கேட்டு அறியாத அற்புதக் கேள்விகளையும் ,செய்து அறியாத அற்புதச் செயல்களையும்,கண்டு அறியாத அற்புதக் காட்சிகளையும்,இது தருணம் தொடங்கிக் கிடைக்கப் பெறுகின்றேன்  என்று உணருகின்ற ஓர் சத்திய உணர்ச்சியாற் பெருங் களிப்புடையே னாகி இருக்கின்றேன்.

நீவிர்களும் அவ்வாறு பெற்றுப் பெருங்களிப்பு அடைதல் வேண்டும் என்று எனக்குள்ளே நின்று நிறைந்து எழுந்து வெளிப்பட்ட எனது ''சுத்த சன்மார்க்க லஷ்யமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு ''உரிமைப் பேராசை பற்றியே இதனைத் தெரிவிக்கின்றேன்.

இயற்கையில் தானே விளங்க்கு கின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும் ,எல்லா அண்டங்களையும் எல்லா உலகங்களையும் ,எல்லாப் பதங்களையும் ,எல்லா சத்திகளையும்,எல்லாச் சத்தர்களையும் ,எல்லாக் கலைகளையும் ,எல்லாப் பொருள்களையும்,எல்லாத தத்துவங் களையும்,எல்லாத் தத்துவி களையும்,எல்லா உயிர்களையும் எல்லாச் செயல்களையும்,எல்லா இச்சைகளையும்,எல்லா ஞானங்களையும் ,எல்லாப் பயன்களையும்,எல்லா அனுபவங்களையும் மற்ற எல்லா வற்றையும்,

தமது திருவருட் சத்தியால் தோற்றுவித்தல்,வாழ்வித்த்தல்,குற்றம் நீக்குவித்தல்,பக்குவம் வருவித்தல்,விளக்கஞ் செய்வித்தல்,முதலிய பெருங்கருணைப் பெருந் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும்.எல்லாம் ஆனவர் என்றும் ,ஒன்றும் அல்லாதவர் என்றும்,சர்வ காருண்யர் என்றும்,சர்வ வல்லவர் என்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும்,ஒப்பு உயர்வு இல்லாத் தனிப் பெருந்தலைமை ''அருட் பெருஞ் ஜோதியர்''என்றும் சத்திய அறிவால் ஆரியப் படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே '' அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த ''சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில்'' அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் .

அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே யாகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்கள் அறிந்து அன்புசெய்து ''அருளை அடைந்து'' அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,பலவேறு சமயங்களிலும்,பல்வேறு மதங்களிலும்,பலவேறு மார்க்கங்களிலும்,பல்வேறு லஷியங்களைக் கொண்டு நெடுங்காலமும் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தரகளாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துகளினால் துன்பத்தில் அழுந்து இறந்து இறந்து வீண் போகின்றார்கள் .

இனி இச்சீவர்கள் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண் போகாமல்,உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம்,முதலிய சுப குணங்களைப் பெற்று நற்செய்கை உடையவர்களாய் ,எல்லாச் சமயங்களுக்கும் ,எல்லா மதங்களுக்கும், எல்லா மார்க்கங்களுக்கும், உண்மைப் பொது நெறியாகி விளங்குஞ் ''சுத்தசன்மார்க்கத்தைப் பெற்று ,பெருஞ் சுகத்தையும்,பெருங் களிப்பையும்'' அடைந்து வாழும் பொருட்டு,

மேற்குறித்த உண்மைக் கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு ,சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற ''ஓர் ஞானசபை யை'' இங்கே தமது திருவருட் சம்மதத்தால் இயற்று வித்து ''இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப் படாத நெடுங்காலம் அளவு குறிக்கப்படாத அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து விளையாடுகின்றாம் ''என்னும் திருக் குறிப்பை வெளிப்படுத்தி ,அருட்பெருஞ் ஜோதியிராய் வீற்றி இருக்கின்றார்.

ஆகலின் ,அடியிற் குறித்த தருணம் தொடங்கி வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர் களாகிற் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி ,இறந்தவர் உயிர் பெற்று எழுதல் மூப்பினர் இளமைப் பெற்று நிற்றல் முதலிய பல்வகை அற்புதங்களைக் கண்டு பெருங் களிப்பும் அடைவீர்கள் .என்று உண்மையான கடவுளை இந்த உலகத்திற்கு வள்ளல் பெருமான் அவர்கள்  காட்டி உள்ளார்கள்.மேலும் விளக்கமாக எழுதிக் கீழே கையொப்பம் இட்டு உள்ளார்கள்.

இங்கனம்
சிதம்பரம் இராமலிங்கம் .

மேலும் வடலூரில்  தோற்றுவித்து உள்ள ''சத்திய ஞானசபையை'', அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அனுமதியைப் பெற்று வள்ளல் பெருமான் தோற்றுவித்து உள்ளார்.மேலும் அந்த ஞானசபையில் உண்மைக் கடவுள் என்னும் ''அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரே'' அருள் ஒளியாக வந்து அமர்ந்து ,அளவு குறிக்கப்படாத நெடுங்காலம், உலக உயிர்களுக்குத் நன்மையை வழங்கும் நிமித்தமாக அமர்ந்து ஆட்சி செய்து கொண்டு வருகிறார் .

ஆதலால் உலகில் உள்ள அனைத்து ஜீவன் களுக்கும் ''அருளைத் தரும் இடம்'' வடலூரில் உள்ள சத்திய ஞானசபையாகும் . என்பதை வள்ளலார் மக்களுக்குத் தெரியப் படுத்தி உள்ளார் .அந்த உண்மையை அறிந்து வடலூர் சென்று சத்திய ஞானசபையில்,உண்மைக் கடவுளான ''அருட்பெரும் ஜோதி ஆண்டவர்''அமர்ந்து இருக்கும் ஞான சிங்காதனப் பீடத்தை கண்குளிரக் கண்டு உண்மை அன்பால வழிபாடு செய்து கொண்டு வருகிறேன் என்பதை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.அதனால் ஆன்மாவாகிய நான் அடைந்த ஆன்ம லாபத்திற்கு அளவே இல்லை .அவ்வளவு பெருங் களிப்பு உடையவனாக இருக்கிறேன்.

வள்ளலார் சித்தி பெற்றது.!

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சித்திவளாகத் திருமாளிகை !

வள்ளல் பெருமான அவர்கள் ,கருங்குழி என்னும் கிராமத்தில் 1858 ,இல் இருந்து  1867 வரையில் தங்கி இருந்து , வடலூரில் சத்திய தருமச் சாலையையும் , சத்திய ஞான சபையையும் நிறுவியபின் , தனிமையையும் அமைதியையும் விரும்பி, வடலூருக்குத் தெற்க்கே ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேட்டுக் குப்பம் என்னும்  சிற்றூரில் உறையத் தொடங்கினார்கள்.மேட்டுக் குப்பத்தில் பெருமானார் உறைந்த இடத்திற்கு திருமாளிகை என்று பெயர் வைத்து இருந்தனர்.

இறைவனும் வள்ளல் பெருமானும் ஒருவரோடு ஒருவர் இணைந்து ஒளிதேகம் பெற்று சித்திப் பெற்ற இடம் அந்த இடம் .ஆதலால் அந்த இடத்திற்கு சித்தி வளாகம் என்னும் பெயர் வழங்கப் பட்டு ,தற்போது  ''சித்திவளாகத் திருமாளிகை'' என்று மக்களால் போற்றப் பட்டு வருகிறது.

வள்ளல் பெருமான் அவர்கள் இந்த உலகில் பிறந்து வாழ்ந்து,அனைத்து ஆன்மாக்களுக்கும் வழிகாட்டி உள்ளார்கள்.

ஒரு ஆன்மா இந்த பஞ்ச பூத உலகில் வந்து, ...தான் வாழ்வதற்கு உயிரும் உடம்பும் எடுத்து  பலகோடி பிறப்புகள் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து, ,இறுதியாக மனிதப் பிறப்பு எடுத்துதான் அருளைப் பெற முடியும் என்பது இறைவன் கட்டளையாகும்.இறைவன் கருணையால் அருளைப் பெற்று, அந்த அருள் சக்தியால்தான் , பஞ்ச பூதங்களால் கட்டிக் கொடுக்கப்பட்ட,வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும். அணுக்களால் உருவாக்கப்பட்ட  ஊன் உடம்பை,அருள் சக்தியால் ''வேதியல்'' மாற்றம் போல் ஒளி உடம்பாக மாற்ற வேண்டும்.அந்த தேகத்திற்கு அருள் தேகம் என்றும்,ஒளி தேகம் என்றும்,ஞான தேகம் என்றும் பெயராகும்.இந்த தேகம் கிடைத்தால் தான் இறைவனைக் காண முடியும்.இதுவே சொந்த வீடாகும்.

பஞ்ச பூத அணு உடம்பானது ,சுத்த தேகம்,பிரணவ தேகம்,ஞான தேகம்,என்னும் முத்தேக சித்தி பெற்றவர்தான் நமது வள்ளல் பெருமான் ஆவார்கள்.பிறப்பு,இறப்பு இல்லாமல், மரணம் அடையாமல் ஒளிதேகமாக தன்னை மாற்றிக் கொள்வதுதான் ''மரணம் இல்லாப் பெருவாழ்வு'' என்பதாகும்..''பேரின்ப சித்திப் பெருவாழ்வு '' என்பதாகும்..

மேலே கண்ட,அருள் தேகம்,என்னும் ஒளி தேகம் பெற்ற ஆன்மாக்கள் மட்டுமே இறைவன் இருக்கும் இடத்திற்கு செல்ல முடியும்.,என்ற பேருண்மையை வள்ளலார் எழுதிய ''திரு அருட்பா ''என்னும் அருள் நூல் வாயிலாக ஆன்மாவாகிய நான் அறிந்து,கொண்டேன்.இதுவே ஆன்மா தனக்கு என்று சொந்த வீடு கட்டிக் கொள்வதாகும்.அந்த ஒளி உடம்பு பெற்றுக் கொண்ட ஆன்மா எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்லும் ஆற்றல் படைத்ததாகும்.இதுவே கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் தன்மை யுடையதாகும்..

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரால் ,வள்ளல் பெருமான் அவர்களுக்கு என்றும் அழியாத அருள் தேகம் கிடைத்துள்ளதைப் பற்றி பதிவு செய்துள்ள பாடல் !

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல் களாலே
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவென நினையாதீர் உலகீர்
எந்தை அருட்பெருஞ் ஜோதி இறைவனைச் சார்வீரே !

ஆன்மாவாகிய நான்,வள்ளல் பெருமான் அவர்கள்,காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின்,வழிகாட்டுதலின் படி வாழ்ந்து வருகிறேன்.நீங்களும் உண்மையை அறிந்து மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்து இறைநிலையை அடைய வேண்டுமாறு,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

மீண்டும் பூக்கும்,

உங்கள் ஆன்மநேயன் ;---கதிர்வேலு.