வெள்ளி, 31 ஜூலை, 2015

என்னைப் படைத்த இறைவா !

என்னைப் படைத்த இறைவா !

இறைவா நான் எங்கு செல்ல வேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை .

நான் கீழே செல்லவா ? அல்லது மேலே செல்லவா ?

கீழே சென்றால் அதற்கு மரணம் என்று பெயர் .மேலே சென்றால் மரணம் இல்லை என்பது தெரிந்து கொண்டேன் .

மண் எல்லாவற்றையும் தாங்குகிறது என்று சொல்லுகிறார்கள் .அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

என்னைத் தாங்கிக் கொண்டு உள்ளது ஆன்மா என்பதை உணர்ந்தேன் .

எல்லா உயிர்களையும் ஆன்மாதான் தாங்கிக் கொண்டு உள்ளது என்ற உண்மையை அறிந்தேன்.

உயிர் இல்லாத பொருள் கீழ் நோக்கி செல்கின்றது .

உயிர் உள்ளது யாவும் மேல் நோக்கியே செல்கின்றது.

உயிருக்கும் ஆன்மாவிற்கும் எடை இல்லை என்பதை அறிந்தேன்.

உடம்பிற்கு எடை உண்டு என்பதை அறிந்து கொண்டேன்

எடை இல்லாத உடம்பு மேல் நோக்கி செல்லும் .

எடை உள்ள உடம்பு கீழ் நோக்கி செல்லும்.

எடை உள்ள உடம்பை எடை இல்லாமல் ஆக்கும் வழியை சொல்லித் தரல் வேண்டும்.

கருவிகளை தாங்கி வாழும் ஆன்மா கருவிகள் இல்லாமல் வாழும் வகை அறிந்து கொண்டேன்.

கருவிகளுக்கு எடை உண்டு .ஆன்மாவிற்கும் உயிருக்கும் எடை இல்லை என்பதை அறிந்து கொண்டேன்/.

எடை உள்ள உடம்பை, எடை இல்லாத உடம்பாக மாற்றிக் கொள்வது எப்படி ?

ஒளிக்கு எடை இல்லை ,அதுபோல் உடம்பையும் ஒளியாக மாற்றிக் கொண்டால் எடை இல்லை என்பதை அறிந்து கொண்டேன்..

எடை உள்ள உடம்பை எடை இல்லாமல் மாற்றிக் கொண்டால் எங்கு வேண்டுமானாலும் தடை இல்லாமல் செல்லலாம் .என்பதை அறிந்தேன்

ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டால் அதற்கு மரணம் இல்லை யென்பதை அறிந்து கொண்டேன் .

ஒளி என்பது வெளிச்சம் என்பது அல்ல .அது ஆற்றல் மிகுந்த அருள் ஒளி என்பதை அறிந்தேன்

அது சூடும் தரும் ஒளி அல்ல அது சுடாத ஒளி என்பதை அறிந்தேன்

கருவிகளைக் கொண்டு எரியும் ஒளி அல்ல .எந்தக் கருவிகளும் இல்லாமல் எரியும் ஒளி என்பதை அறிந்தேன் .

அருளைப் பெற்றால் உடம்பை எடை இல்லாமல் மாற்றிக் கொள்ளலாம் என்பதை அறிந்தேன் .

உயிர்கள் இடத்தில் இரக்கமும் .கடவுள் இடத்தில் அன்பும் செலுத்தினால் அருள் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டேன் .

இரக்கமும் அன்பும் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன்.

ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்று இறவாமல் வாழும் வகையை அறிந்தேன்

எங்கே கருணை இயற்கையில் உள்ளதோ அங்கே விளங்கும் அருள் என்பதை அறிந்தேன் .

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்பதை அறிந்து கொண்டேன் .

அறிவு என்பது எங்கு உள்ளது என்பதைத் தேடினேன் .

அருள் அறிவு ஒன்றே அறிவு மற்ற எல்லாம்
மருள் அறிவு என்பதை அறிந்தேன் .

அருள் நிலை ஒன்றே அனைத்தும் பெரும் நிலை என்பதை அறிந்தேன் .

அருள் வடிவே ஒளி வடிவம் என்பதை தெரிந்து கொண்டேன் .

அருள் அமுதை உண்டால் ஒளி வடிவம் பெறலாம் என்பதை அறிந்து கொண்டேன் .

ஒளி வடிவம் பெற்றால் மரணம் இல்லை என்பதை தெரிந்து கொண்டேன் .

அருளைப் பெருவதற்கு உன்னுடைய அருள் வேண்டும் என்பதை தெரிந்து உம்மை வேண்டுகின்றேன் .

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்

ஆருயிர்க்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்.

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே நினது அருட் புகழை இயம்பி இடல் வேண்டும்

தப்பேது நான் செய்யினும் நீ பொறுத்தால் வேண்டும் .தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.   

சாதி,சமய மத சடங்குகள் விடவில்லை.!


சாதி,சமய மத சடங்குகள் விடவில்லை.!

முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் அப்துல்கலாம் அவர்களையும் சாதி,சமய மத சடங்குகள் விடவில்லை.!

உலகில் கோடிக்கணக்கான மக்களின், மாணவர்களின் இதயங்களின் குடியிருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் ''அப்துல் கலாம் ''அவர்கள் .மேகலாயா தலைநகர் ஷில்லாங்கில் கடந்த திங்கட் கிழமை 27--7--2015.அன்று மாணவர்களின் பொதுக் கூட்டத்தில் பேசிக் கொண்டு இருக்கும் போதே மாரடைப்பால் மரணம் அடைந்தார் .

அங்கிருந்து அவரது உடல் ஹெலிகாப்டர் மூலம் செவ்வாய்க் கிழமை காலை அசாம் தலைநகர் கவுகாத்தி கொண்டு வரப்பட்டு .பின்னர் அங்கிருந்து விமானப்படை விமானத்தில் டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

டெல்லி பாலம் விமான நிலையத்தில் அப்துல்கலாமின் உடலுக்கு ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ,துணை ஜனாதிபதி,ஹமீதுஅன்சாரி,பிரதமர் நரேந்திரமோடி ,மற்றும் தலைவர்கள்.அதிகாரிகள் மரபுகளை மீறி அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன் பிறகு அப்துல்கலாம் உடல் டெல்லி ராஜாஜி மார்க்கில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மத்திய ஆட்சியாளர்கள் அரசியல் தலைவர்கள்,அரசு அதிகாரிகள்  பொதுமக்கள்  அஞ்சலி செலுத்தினார்கள் .

சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர் .

அப்துல்கலாம் ''இறுதிச்சடங்கை அவரது மதத்தின்'' அடிப்படையில் செய்வதற்கு அவர்களது உறவினர்களின் விருப்பத்திற்கு இணங்க,டெல்லியில் இருந்து விமானம் மூலம்,  மத்திய அரசு அனுமதியுடன் மதுரையில் உள்ள விமான நிலையத்தில் இறக்கினார்கள் .

அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் ராமேஸ்வரத்திற்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது .

விமானம் தரை இறங்கியதும்அதில் இருந்து அப்துல்கலாமின் உடல் வைக்கப்பட்டு இருந்த தேசியக்கொடி போர்த்தப்பட்ட கண்ணாடி பேழை இறக்கப்பட்டது.இந்திய அரசின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையுடன் அப்துல்கலாமின் உடலை தமிழக கவர்னர் கே,ரோசய்யா ,தலைமைச் செயலாளர் ஞானதேசிகன் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் ஆகியோர் பெற்றுக் கொண்டு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். .

 அதன் பிறகு அப்துல்கலாம் உடல் அங்கு இருந்து ராணுவ ஹெலிகாப்டர்
மூலம் ராமநாதபுரம் மாவட்டம் மணடபம் கடற்படை முகாமில் உள்ள ஹெலிகாப்டர் தளத்தில் இறக்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்காக அஞ்சலி செலுத்துவற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த தனி மேடையில் அப்துல்கலாம் உடல் வைத்துஅஞ்சலி செலுத்தினார்கள் .

ராமேஸ்வரம் பஸ்நிலையம் அருகில் உள்ள கிழகாடு மைதானத்தில் வைத்து,ஆட்சியாளர்களும் அரசியல் தலைவர்களும்,உயர் அதிகாரிகளும்,மற்றும் மாணவ மாணவியர்கள்,லட்சகணக்கான பொது மக்கள் அனைவரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

அப்துல்கலாம் உடலை அடக்கம் செய்ய,அவரது வீட்டில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ''பேய்கரும்பு'' என்னும் இடத்தில்  தமிழக அரசு சார்பில் 1-32,ஏக்கர் நிலம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. அந்த இடத்தில் பாரத பிரதமர் மோடிஅவர்கள் ,மற்றும் மத்திய ,மாநில அமைச்சர்கள்,அரசியல் தலைவர்கள்  .அதிகாரிகள் உறவினர்கள் இறுதி மரியாதை செய்து உடல் அடக்கம் செப்பய்ப்பட்டது.

சமய மத சடங்குகள் சம்பிரதாயங்கள் !

அப்துல்கலாம் அவர்கள் சாதி,சமயம்,மதங்களைத்  தாண்டி எவ்வுயிரும் ஒன்று என்று உணர்ந்து மக்களின் நலனுக்காக இடைவிடாது பாடுபட்டவர் என்பது உலகமே அறிந்த உஅனமையாகும்.

அப்துல்கலாம் விஞ்ஞானி மட்டும் அல்ல .அவர் ஒரு சிறந்த தேசபக்தர்.அவர் இந்திய நலனுக்காகவே இறுதி மூச்சு உள்ளவரை, நாட்டுக்காகவும்,நாட்டு மக்களுக்காகவும்,மேலும் மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை எப்படி அமையவேண்டும் என்று மாணவர்களுக்காகவே அயராது உழைத்தவர்,.மாணவர்களின்  உயர்ந்த நோக்கத்திற்காக ,இந்தியாவின் வளர்ச்சிக்காக ''கனவுகான'' வைத்தவர் .சிறந்த ஆசிரியர் .சிறந்த பேச்சாளர் உலகமே போற்றும் உத்தமர் .ஒழுக்கம் நிறைந்த உயர்ந்த பண்பாளர் .அளவில்லா உயர்ந்த பட்டங்களைப் பெற்றவர் .

அப்துல்கலாம் மரணம் அடைந்ததும் ,அவருடைய பெருமையும் புகழையும் உணர்ந்து  ,மத்திய அரசும்  ,மாநில அரசும் பொறுப்பு ஏற்றுக் கொண்டு அவருக்கு  மத்திய அரசு சார்பில் எல்லா மரபுகளையும்,முறைகளையும் மரியாதைகளையும்,மரபுகளையும் மீறி .எல்லோரும் மதிக்கத் தக்க வகையில் மத்திய மாநில அரசு தரப்பில் முறையாக மக்கள் எதிர்ப் பார்க்காத வகையில் மரியாதை செய்துள்ளது பாராட்டுக் குறியதாகும்

அதற்காக நம்முடைய மத்திய அரசையும் மாநில அரசையும் இந்திய மக்கள் பாராட்டியே ஆக வேண்டும்.

சாதி ,மதம் சமயம் என்ற கட்டுப்பாடு இல்லாமல் அப்துல்கலாம் அவர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தியும் .அவரது உடல் மதத்தின் அடிப்படையில் ஆச்சார சங்கற்பங்களில் சிக்கிக் கொண்டுள்ளது .

பொது உடமை யாக்கப்பட்ட அவரின் உடலை அவரது உறவினர்கள் மதத்தின் வழியில் அவரது வீட்டிற்கு கொண்டு சென்று இறுதி சடங்குகள் செய்யப்பட்டது.மிகவும் வேதனைப் படக் கூடிய ஒன்றாகும்.

அரசு உடமை யாக்கப்பட வேண்டிய அவரது உடல் அவரது மதத்தின்
அடிப்படையில்.மதக் கொள்கையின் அடிப்படையில்  அவரது உறவினர்கள் அவரது இல்லத்திற்கு கொண்டு சென்றனர் ..கொண்டு சென்றாலும் பாரவாயில்லை சாதி,சமய ,மத சடங்குகள் செய்து இறுதியில் அரசிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

இப்படி இருந்தால் சாதி ,சமய மத நல்லிணக்கம் எப்படி வரும்.சாதி,சமயம்,மதம் எப்படி ஒழியும்.

அப்துல்கலாம் அவர்கள் ''யாதும் ஊரே யாவரும் கேளீர்'',என்று உலகம் முழுவதும்  குரல் கொடுத்தவர்.சாதி,சமயம்,மதம் அற்ற ''திருக்குறளை'' மிகவும் கையாண்டவர் அவர் எங்கும் நான் இஸ்லாம் மதத்தை சார்ந்தவன் என்று பெருமையாக சொன்னவர் இல்லை. நான் ஒரு இந்தியன் என்று சொல்வதிலே பெருமைக் கொண்டவர் .

வாய்ப்பேசாத,பேசத்தெரியாத, எதிர்த்து போராட முடியாத ,உணர்வு உள்ள உயிர்களை உயிரைக் கொலை செய்து அதன் புலாலை உண்ணும் மதம் இஸ்லாம் மதமாகும் .

அப்துல்கலாம் அவர்கள் இஸ்லாம் மதக் கொள்கையைத் தாண்டி புலால் உண்ணாமல் தாவர உணவை உட்கொண்டு வாழ்ந்தவர் ..

மதக்கொடி !

தேசியக் கொடியைப்  போர்த்தி, அரசு மரியாதையுடன் கொண்டுவந்த அப்துல்கலாம் அவர்கள் உடலுக்கு,அவரது வீட்டிற்கு கொண்டு சென்று ,தேசியக் கொடியை அகற்றி விட்டு அவரது மதக் கொடியைப் போர்த்தி மதச்சடங்குகள் செய்து கொண்டு வந்த காட்சி மக்களை அதிர்வு அடையச் செய்துள்ளது.

மக்கள் மதங்களை விட்டாலும், மதங்கள் மக்களை விடுவதில்லை

இறுதியில் மதமும் அதனுடைய சடங்குகளும் விட்டபாடில்லை என்பதை நினைக்கும் போதுதான் வள்ளல்பெருமான் சொல்லிய உண்மைகள் புலனாகிறது.

சாதியும்,சமயமும்,மதமும்,ஒவ்வொரு ஆன்மாவிலும் ஆழமாக பதிவாகி விட்டது.ஆகவேதான் வள்ளல்பெருமான் .

சாதியும் மதமும் சமயமும் பொய் என
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி ...என்றும்

எங்குலம் எம் இனம் என்பது தொண்ணுற்று ஆறு
அங்குலம் என்றருள் அருட்பெருஞ்சோதி ...என்றார் வள்ளலார் .

வள்ளலாரின் பாடல் ;--

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே அழிதல் அழகலவே
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே
வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே !

எத்தனை தலைவர்கள் வந்தாலும், போதித்தாலும், மக்கள் சாதி ,சமய மதத்தின் ஆச்சார சங்கற்ப கொளகைகளை விட்டபாடில்லை.

என்றைக்கு வள்ளலார் சொல்லிய கருத்துக்களை கொளகைகளை மக்கள் பின்பற்றி வாழ்கிறார்களோ அப்போதுதான் சாதி,சமயம்,மதம் என்ற பேய் மக்களை விட்டு அகலும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


சொல்லிவிட்டு செல்வது மரணம் !.சொல்லிக் கொண்டே இருப்பதுதான் மரணம் இல்லாப் வாழ்வு.!

சொல்லிவிட்டு செல்வது மரணம் !.சொல்லிக் கொண்டே இருப்பதுதான் மரணம் இல்லாப் வாழ்வு.!

சொல்வேன் .சொல்லுகிறேன் சொல்லிக் கொண்டே இருப்பேன்.

நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் ,திருப்பு மயக்கம் இன்றி மரணம் இல்லாமல் .மரணத்தை வென்று வாழ முடியும், வாழ வேண்டும் என்னும் என்னுளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள சகோதர சகோதரிகள் என்னும் உண்மையை அறிந்து கொண்ட காரணத்தினால்... .

குறிப்பித்தேன்,குறிப்பிக்கின்றேன் .குறிப்பிப்பேன் .

உண்மை சொல்ல வந்தாலும் உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை.

நான் மரணம் அடையாமல் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் .ஆதலால் இனி எல்லாவரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

இந்த உலக உண்மையை அறிந்து கொள்வதற்கும் .உங்கள் ஆன்மாவையும், உயிரையும்,உடம்பையும் அழிக்காமல் பாது காப்பதற்கும் இனி எந்த சாதி,சமயம்,மதங்களும் தடை கிடையாது.

''உங்களை அழித்துக் கொண்டு இருப்பது உலகில் உள்ள சாதிகள் ,சமயங்கள் மதங்களால் உருவாக்கப் பட்ட ஆச்சார .சங்கற்ப விகற்பங்களும்,,வருணம் ஆசிரமம் முதலிய உலக ஆச்சார சங்கர்ப்பங்களும் உங்கள் ஆன்மாவின் உண்மையை தெரிவிக்காமல் மறைத்துக் கொண்டு உள்ளன .''

இப்போது நான் சொல்லிய பிரகாரம் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்.அவசியம் இதற்குக் காரணமான தயவு அவசியம் வேண்டும்.

அந்த தயவு வருவதற்கு, எல்லா உயிர்களும் ஒன்று என்றும் அதை உண்டாக்கி இயக்கி இயங்கிக் கொண்டு இருப்பது ஆன்மாதான் என்னும் உண்மையை அறிந்து ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையும் கூட இருக்க வேண்டும்.

அப்படி இருந்து கொண்டு இருந்தால் உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்கள் இல்லம் தேடி வருவார் . வந்தவுடனே எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொள்வீர்கள்.

இது சத்தியம் ,இது சத்தியம் ..இது சத்தியம்.இஃது ஆண்டவர் கட்டளை ....வள்ளல்பெருமான் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 28 ஜூலை, 2015

மரணத்தை வென்று வாழ முடியும் !

மரணத்தை வென்று வாழ முடியும் !

பட்டம் ,பதவி.பாதுகாப்பு ,அதிகாரம்,புகழ் எல்லாம் போச்சு !

மனித வாழ்க்கையில் எவ்வளவு படிப்பு,பதவி,பட்டம் ,ஆராய்ச்சி .புகழ் .பாதுகாப்பு .அனைத்தும் இருந்தும் .தன்னுடைய உடம்பில் உள்ள உயிரைக் காப்பாற்றி பாதுகாக்க முடியாமல் போய் விடுகின்றது .

இறுதியில் உயிர் நின்று விடுகின்றது மரணம் வந்து விடுகின்றது .

தன்னுடைய் உடம்பையும் உயிரையும் பாதுகாக்க முடியும் என்ற அணு ஆராய்ச்சியில் ஈடுபட்டு உயிரையும் உடம்பையும்,மரணம் வராமல்  காப்பாற்றிக் கொண்டவர் நமது தமிழ் நாட்டில் தோன்றிய அருளாளர் .''திரு அருட்பிரகாச வள்ளல்பெருமான்'' அவர்கள் .

வள்ளல்பெருமான் கொள்கைகளையும் அவருடைய உடம்பையும் உயிரையும் காப்பாற்றும் திசுக்களின் அணு ஆராய்ச்சிகளையும்,அறிவியல் ,வேதியல் நுணுக்கங்களையும்  இன்று வரை மக்கள் சிந்திக்கவும் இல்லை .பின் பற்றவும் இல்லை.

பெரிய மனிதர்கள் என்று போற்றப்படும் அனைவருமே இறுதியில் மரணத்தை தழுவி விடுகின்றார்கள்.

மரணத்தை வெல்ல முடியும் என்ற உண்மையைக் கண்டறிந்து அதன்படி,உயிரையும் உடம்பையும் காப்பாற்றி ,அழிக்காமல் அழியும் திசுக்களை அழிக்காமல் ,ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றி  வாழ்ந்து காட்டி மரணத்தை வென்றவர் தான்  வள்ளல்பெருமான்.

உலகில் எவரும் கண்டுபிடிக்காத ,கண்டு பிடிக்க முடியாத ,உடம்பில் உள்ள உயிரை,உயிரை இயக்கம் ஆன்மாவை ,அதற்கு துணையாக இருக்கும் பஞ்ச பூத அணுக்களை அழிக்காமல் பாதுகாக்கும்  .அணு ஆராச்சியைக் கண்டு பிடித்தவர் தமிழ் நாட்டில் பிறந்து மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு இருப்பவர் தான்

''நமது திரு அருட்பிரகாச வள்ளல்பெருமான்''.

சாகும் கல்வியை தடை செய்து ,சாகாக் கல்வியைப் போதித்தவர் .

வள்ளலார் மக்களுக்கு சொல்லிய கற்றுக் கொடுத்த சாகாக் கல்வியை .நமது முன்னாள் குடியரசு தலைவர் ''டாக்டர் அப்துல் கலாம்'' அவர்கள் கற்று இருந்தால் அவரால் மரணத்தை வென்று இருக்க முடியும்.

ஏன் என்றால் அவர் தன்னலம் கருதாமால மக்களுக்காக ,வருங்கால மாணவர்களுக்காக நல்வழியைக் கற்றுக் கொடுத்தவர்.வள்ளலார் சொல்லிய ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்தவர் .

சாகாக் கல்வி என்னும் அணு ஆராய்ச்சியில் அவர் ஈடு பட்டு இருந்தால் நிச்சயம் அவரால் மரணத்தை வென்று இருக்க முடியும்.இவ்வளவு பெரிய சோகம் நமக்கு வந்து இருக்காது.

நான் ஒரு முறை அவருக்கு கடிதம் எழுதி இருந்தேன்.வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை நீங்கள் அவசியம் படியுங்கள் அதில் சாகாக் கல்வியைப் பற்றி அணு ஆராய்ச்சி வழியாகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார் உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்று எழுதி இருந்தேன்.

அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.அவர் படித்து இருந்தால் அவரால் மரணத்தை வென்று இருக்க முடியும் என நான் நினைக்கிறேன்.

ஏன் என்றால் அவரால் முடியும்..அந்த அளவிற்கு ஒழுக்கம் ,நேர்மை,சத்தியம்,விடா முயற்ச்சி,தன்னம்பிக்கை ,மக்கள் மீது அவர் வைத்துள்ள அன்பு,தயவு கருணை  அனைத்தும் அவரிடம் இருந்தது .

அவருடைய இழப்பு இந்திய மக்களுக்கும் .ஏன் உலக அணு ஆராய்ச்சி யாளர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு என்பது அனைவரும் அறிந்ததே.

மீண்டும் அவர் மனித தேகம் எடுத்து மக்களுக்கு பயன் பட வேண்டும் என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிக் கொள்கிறேன்.

சாகாத கல்வித் தரம் அறிதல் வேண்டும் என்றும்
வேகாத கால் உணர்தல் வேண்டும் உடன் --சாகாத்
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை
நிலை அடைதல் வேண்டும் நிலத்து.

கனம் உடையோம் கட்டு உடையோம் என்று நினைத்து இங்கே
களித்து இறுமாந்து இருக்கின்றீர் ஒளிப்பிடமும் அறியீர்
சினம் உடைய ''கூற்று '' வரும் செய்தி அறியீரோ
செத்த உமது இனத்தாரைச் சிறிதும் அறியீரோ
தினகரன் போல் சாகாத தேகம் உடையவரே
திருவுடையார் என அறிந்தே சேர்ந்திடுமின் நீண்டே
மனம் மகிழ்ந்து கேட்கின்ற வரம் எல்லாம் எனக்கே
வழங்குதற்கு  என் தனித் தந்தை வருகின்ற தருணம் தானே !

என்னும் பாடல் வாயிலாக வள்ளல்பெருமான் மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார் .

வள்ளலார் எழுதிய ''திருஅருட்பா'' முழுவதும் ''சாகாத கல்வி என்னும் மரணத்தை வெல்லும்'' வழியைப் போதிப்பதே யாகும்.

இனிமேலாவது மக்கள் அறிந்து தெரிந்து புரிந்து வாழ வேண்டும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 27 ஜூலை, 2015

உலகில் உள்ள மந்திரங்கள் அனைத்தும் பொய்யே !

உலகில் உள்ள மந்திரங்கள் அனைத்தும் பொய்யே !

சிவாயநம .என்றும் நமசிவாய என்றும்,ஓம் என்றும்.அல்லா என்றும்.பரமபிதா என்றும்.ஆதி சக்தி என்றும்.பராசக்தி என்றும்.சரணம் கச்சாமி என்றும்,

இப்படி பல வர்ணங்களையும்,வண்ணங்களையும் சேர்த்து ஒன்று,..இரண்டு,..மூன்று,..ஐந்து ,..ஆறு ...எட்டு ,1O,பத்து,..13.பதின்மூன்று,,14,பதினைந்து,.16,.பதினாறு..,
24,இருபத்திநான்கு,..முதலிய சங்கையில் மந்திரங்களாக அமைத்து வழங்கி வருவிக்க விட்டு அதை உண்மை என்று நம்பி மக்கள் பின் பற்றி வருகின்றார்கள்.

அந்த அந்த மந்திரங்களின் அர்த்தத்தை பிரித்தால் பலவாக விரியும்.

எல்லாமே சடப் பொருள் களான தத்துவத்தையே குறிக்கின்றது.உண்மையான கடவுளை குறிக்கப்பட வில்லை

எந்த சமய மதங்களும்,உண்மையான ஆன்மாவைப் பற்றியோ .உண்மையான இறைவனைப் பற்றியோ மந்திரங்ககளாக சொல்லவில்லை .அந்த மந்திரங்களை உச்சரிப்பதால் எந்த பயனும் கிடைப்பதில்லை என்பதை வள்ளல்பெருமான் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.

வள்ளல்பெருமான் உண்மையான மகா மந்திரம் எதுவென்பதை மக்களுக்கு தெரிவித்துள்ளார் .

வள்ளல்பெருமான் சொல்லியது .;--

இத்தருணம் ஆண்டவர் எல்லாவற்றையும் நீக்கி எல்லோரும் மேலான இன்பத்தை அடையும் பொருட்டு ,முடிவான இன்ப அனுபவத்திற்குச் சாதக சகாயமான திருவருள் மகா வாக்கியத்தை (

தத் தமது உண்மையை வெளிப்படையாக காட்டும் மகா மந்திரத்தை .

ஆண்டவர் எனக்கு வெளியிட்ட அவ்வண்ணம் எனது மெய் அறிவின் கண் அனுபவித்து எழுந்த ,உண்மை அறிவு அனுபவ ஆனந்த இன்பத்தை ,நீங்கள் எல்லாவரும் என்போல் ஐயம் திரிபு மயக்கம் இன்றி அறிந்து கொள்ள வேண்டும்.

ஏன் சொல்லுகிறேன் என்றால் ;--என்னுள்ளே எழுந்து பொங்கிய ஆன்ம நேய ஓரிமைப் பாட்டு உரிமையினால் .உங்களுக்கு குறிப்பித்தேன்,குறிப்பிக்கின்றேன்..
குறிப்பிப்பேன் .

இது நமது ஆண்டவர் கட்டளை இட்டது யாதெனில் ;--நமக்கு முன் சாதனம் ''கருணை '' ஆனதினாலே ஆண்டவர் முதற் சாதகமான ,

''''அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங் கருணை   அருட்பெருஞ்ஜோதி !'''

என்னும் திரு மந்திரத்தை ,வெளிப்படையாக எடுத்துக் கொண்டார் .

அன்பு,தயவு,கருணை .அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும்.ஆதலால் பெரிய தயவு உடைய அறிவே பூரண இன்பமாம் .

அது ஒப்பற்ற பெருந்தயவு உடைய பேரறிவேயாம் ...இது இஃது வாச்சியார்த்தம் .என்கின்றார் .

இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் முடிவான இன்ப அனுபவம் பெறுவதற்குத் தடையில்லை.

எனவே ஆண்டவரைப் பற்றி ஆண்டவரே வெளியிட்ட மகா வாக்கியமான .''அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ..தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி '' என்னும் மகா மந்தரம்தான் உண்மையான மந்திரமாகும்.

இந்த மந்திரம் எல்லோருக்கும் பொதுவானது ..சாதி ,சமயம்,மதம் போன்ற எந்த கொள்கைகளுக்கும் சம்பந்தம் இல்லாதது.

அந்த மகா மந்தரத்தை தினமும் உச்சரித்து வந்தோமானால் .நமக்கு கிடைக்க கூடிய ஆற்றல் களுக்கும் மகிழ்ச்சிகளுக்கும் அளவே இல்லை .

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதி என் உள்ளத்தே

நீதியிற் கலந்து நிறைந்தது நானும் நித்தியன் ஆயினன்
உலகீர்

சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே சத்திய சுத்த சன்மார்க்க

வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை விளம்பினேன் வம்மினோ விரைந்தே !

என்று மகா மந்திரத்தை தெரிந்து உணர்ந்து சொல்லுங்கள் உங்கள் வாழ்க்கை வளம் பெரும் என்று மக்களை அழைக்கின்றார்.

அடுத்து;--

ஆதியும் அந்தமும் இல்லதோர் அம்பலத்தாடும்
ஜோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும்
வீது மற்றைய வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி..

என்றும்  உண்மையான மகா மந்திரத்தின்  தன்மையைப் பற்றி சொல்லி ...இந்த மந்திரத்தினால் நீங்கள் மேன்மை அடைவீர்கள் .மற்றைய பொய்யான மந்திரங்களினால் கீழே இறங்கி துன்பம் அடைவீர்கள் .

உண்மையான மகா மந்திரத்தின் ஆற்றலையும் சக்தியையும் உணர்ந்து பின் பற்றி மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

சனி, 25 ஜூலை, 2015

அவசியம் மக்கள் படிக்கவும் !

அவசியம் மக்கள் படிக்கவும் !
LPG மான்யம் வேண்டாமென்று … பிரதமருக்கு விட்டுக் கொடுத்து விடலாமா ?
கொஞ்ச நாட்களுக்கு முன்பெல்லாம், சமையல் வாயு
சிலிண்டர் தீர்ந்தவுடன், அடுத்ததற்கு பதிவு செய்ய போன்
செய்தால், எடுத்தவுடன் -“நான் நரேந்திர மோடி பேசுகிறேன்” என்று ஒரு குரல் ஆரம்பித்து ( இந்தியில் தான்…!)
நீங்கள் அரசு கொடுக்கும் சமையல் வாயுவுக்கான மான்யத்தை விட்டுக் கொடுத்து இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு
உதவலாமே ” – என்கிற வகையில் ஒரு லெக்சர் வரும்….!
(நாம் அழைப்பதால், போன் செலவு நம்முடையது தானே…! )
சில நாட்களுக்கு முன் பிரதமர் ஒரு சம்மேளனத்தில்
பேசும்போது ” இதுவரை 2.8 லட்சம் பேர் தங்களுக்கான
மான்யத்தை விட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதனால்
நூறு கோடி ரூபாய் மிச்சமாகும். இது இந்த நாட்டின்
ஏழைகளுக்கான வளர்ச்சித் திட்டங்களுக்கு உதவும்.
இன்னும் அதிகம் பேர் ” மான்யத்தை தியாகம் செய்ய ”
முன் வரவேண்டும்” என்றார்.
சம்சாரி ஒருவர் இது குறித்து விலாவாரியாக
விவரித்து ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்.
“நான் ஏன் என் LPG மான்யத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன்”
என்று தலைப்பிட்டு ஆங்கிலத்தில் அந்த கடிதம்
அமைந்திருக்கிறது…. ஒரு நண்பர் அதை எனக்கு அனுப்பி
வைத்து இது குறித்து நீங்களும் எழுதுங்களேன்
என்று கேட்டிருக்கிறார்…
அந்த கடிதம் ஏற்படுத்திய தூண்டுதலில்
அதில் அவர் குறிப்பிடும் சில முக்கிய விஷயங்களையும்
உள்ளடக்கி கீழே நான் எழுதி இருக்கிறேன்….
————-
எங்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களுக்கு –
சமையல் எரிவாயு மான்யத்தை நான் விட்டுக் கொடுக்க
முன்வர வேண்டுமென்று,
வேலை மெனக்கெட்டு,
என் போனிலேயே,
என் செலவிலேயே – வேண்டி, விரும்பி
கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்….!
மகிழ்ச்சியோடு நானும் இதற்கு ஒப்புக்கொள்வேன்…
ஆனால் அதற்கு முன் கீழ்க்கண்ட விஷயங்கள்
நடைபெற்றால் தேவலை….!!!
– நாட்டின் சாதாரண குடிமகன் இதைச் செய்வதற்கு முன் –
இந்த நாட்டை வழிநடத்திச் செல்லும் அரசியல்வாதிகளும்,
அத்தனை அமைச்சர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற
உறுப்பினர்களும், முதலில் தங்கள் மான்யத்தை விட்டுக்
கொடுப்பதாக அறிவிக்கச் செய்ய முடியுமா …?
– உங்களில் முக்கால்வாசிப் பேர்கள் தேர்தலில்
போட்டியிடும் நேரத்தில், உங்கள் சொத்து விவரத்தை
அறிவித்திருக்கிறீர்கள்.
அதில் உள்ள கோடீஸ்வரர்கள் அனைவரும் – தங்களுக்கு
சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்கள் என்கிற முறையில்
கிடைக்கும் சலுகைகளை விட்டுக் கொடுப்பதாக
அறிவிக்கச் செய்ய முடியுமா …?
– சட்டமன்ற, பாராளுமன்ற – கூட்டங்களில் அநேக
பிரச்சினைகளில் – எதிரும் புதிருமாக நின்று
அடித்துக் கொள்ளும் நீங்கள் அனைவருமே,
அதெப்படி உங்களது சம்பளம், படி, சலுகைகளை
உயர்த்தி மசோதாக்கள் வரும்போது மட்டும்- ஒருமித்த
குரலில் ஒன்றுபட்டு – உடனடியாக விவாதமே இன்றி
நிறைவேற்றி கொள்கிறீர்கள் …?
– கட்சி அடிப்படையில் நாட்டின் பிரச்சினைகளை
விவாதிப்பதை விட்டு விட்டு, மக்களுக்கு எது நன்மை-
எது தீமை என்கிற கோணத்தில் உருப்படியாக நீங்கள்
விவாதிப்பதை நாங்கள் என்று காண்பது …?
– வளம் பெற்ற நாடான ஜெர்மனியின் சான்ஸ்லர் திருமதி
ஏஞ்சலா மெர்கெல் -தன் அலுவலகத்திற்கு பணிக்குச்
செல்லும்போது பொதுமக்கள் பயன்படுத்தும்
சாதாரண ரயிலில் செல்லும்போது –
– கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே
வாழும் இந்த இந்தியத் திருநாட்டில், அரசியல்வாதிகளான,
அமைச்சர்களான, சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களான
நீங்கள் மட்டும், அரசாங்க செலவில் தனித்தனியே ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்துக்கொண்டு பயணிப்பது எப்படி …?
– உங்கள் சொந்த வசதி, சௌகரியங்களுக்காக செலவழிக்கப்படும்
ஒவ்வொரு பைசாவும், இந்த நாட்டின் குடிமக்கள் செலுத்தும்
வரியிலிருந்து தான் எடுக்கப்படுகிறது என்பது உங்கள்
நினைவிற்கு வருவதே இல்லையா …?
– நீங்கள் ஒவ்வொருவரும் பயன்படுத்தும்
தொலைபேசிகளுக்காக –
உபயோகப்படுத்தும் மின் வசதிகளுக்காக –
குடும்பத்தோடு தங்கும் சொகுசு பங்களாக்களுக்காக –
இந்தியா முழுவதும் விமானத்திலும், ரயிலிலும்
பயணப்படுவதற்காக – உருப்படியான
வேலை எதுவும் இல்லாமல்,
சும்மாவே ஊர்சுற்றிப்பார்க்க நீங்கள் மேற்கொள்ளும்
வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக –
-எத்தனை கோடி ரூபாய்களை நாங்கள் வரியாகக்
கொடுக்கிறோம் என்பதை என்றாவது நீங்கள் நினைத்துப்
பார்த்திருக்கிறீர்களா ?
– உங்கள் சொந்த சௌகரியங்களுக்காக ஆகும் இந்த
செலவுகளை எல்லாம் நீங்களே ஏற்றுக் கொள்ளும்
சுபதினம் என்றாவது வருமென்று குடிமக்களாகிய நாங்கள்
எதிர்பார்க்கலாமா …?
– மிகச் சாதாரண தலைவலி, வயிற்று வலிகளுக்கெல்லாம் கூட,
நட்சத்திர வசதிகள் நிரம்பப்பெற்ற உயர் மருத்துவ மனைகளில்
தங்கி மருத்துவ உதவி பெறுகிறீர்களே…. உங்கள் சக இந்தியர்கள் எத்தனை பேர் சரியான மருத்துவ உதவி கிடைக்காமல்
தினமும் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என்றாவது
நீங்கள் எல்லாம் நினைத்துப் பார்த்தது உண்டா …?
– இந்த வசதிகளை எல்லாம் நீங்கள் உங்கள் சொந்தக்காசில்
செய்துக்
கொள்ளும் நா
ள் என்றாவது வருமா…. ?
– அப்படி என்ன தங்கள் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமென்று
இத்தனை பூனைப்படைகளையும், துப்பாக்கி ஏந்திய
சிப்பாய்களையும் துணைக்கு வைத்துக்கொண்டு Z என்றும்
Z+ என்றும் சொல்லிக் கொண்டு உங்கள் மந்திரிகள் ?திரிகிறார்கள் ?
தினமும் உங்கள் கூட படாடோபத்திற்காக துணைக்கு வரும்
பூனைப்படை, யானைப்படை – எல்லாவற்றிற்கும் கொடுக்கும்
சம்பளப்பணம் – எங்கள் வரியிலிருந்து வருவது தானே ?
– இந்த நாட்டையே பாதுகாக்க வேண்டிய பொறுப்பில்
இருக்கும் – உங்களை பாதுகாக்க நாங்கள் செலவழிக்க
வேண்டியிருக்கும் இந்த பரிதாப நிலை என்று மாறும் …?
– சம்பாதிப்பது ஒரு வேளை சாப்பாட்டிற்கே பற்றாமல்
எத்தனையோ ஏழைக் குடும்பங்கள் இந்த நாட்டின்
நடைபாதைகளில் பட்டினியோடு படுத்துத் தூங்கும்போது –
– உங்களுக்கு ஏன் பாராளுமன்ற கேண்டீன்களில்
மலிவு விலையில் உணவுப் பொருட்கள் …?
ஒரு கப் டீ ஒரு ரூபாய்க்கும்,
ஒரு சாப்பாடு 12 ரூபாய்க்கும்
எந்த குடிமகனுக்கும் இந்த நாட்டில் கிடைப்பதில்லையே….
கோடீஸ்வரர்களான உங்களிடம் கொடுக்க காசில்லையே
என்றா இந்த மலிவு விலை ….?
– உங்களின் இந்த மலிவு விலை சோற்றுக்கு கூட –
அன்றாடங்காய்ச்சியான இந்த நாட்டின் குடிமகன் தான்
காசு கொடுக்கிறான் என்பது உங்கள் மனசாட்சியை
என்றுமே உருத்தவில்லையா ?
– நாங்கள் செலுத்தும் வரிகள் எத்தனையெத்தனை …
Income tax,
Service Tax,
Professional Tax,
Value Added Tax,
Wealth Tax,
Corporation Tax,
Automobile Registration Tax and Property Tax –
சம்பாதிப்பதில் பாதியை வரியாகப் பிடித்துக் கொள்ளும்
இந்த அரசு நிர்வாகம் உங்களுக்கு மட்டும் எல்லாவற்றிலும்
விலக்கு கொடுத்திருப்பது உங்களுக்கு உறுத்தவில்லையா …?
உங்களுக்கும் சேர்த்து தானே, எங்களிடம் வசூல்
செய்யப்படுகிறது…?
உங்களுக்கு, நீங்களே இயற்றிக்கொண்ட சட்டங்கள் மூலம்
கிடைத்துள்ள அத்தனை சலுகைகளையும் விட்டுக் கொடுத்து
இந்த நாட்டின் கௌரவமுள்ள குடிமகனாக நீங்கள்
எல்லாம் மாறும் நாள் வருமா …?
– இந்த நாட்டை நேர்மையாகவும், பொறுப்புடனும்
நிர்வாகம் செய்வதற்கென்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
நீங்கள் அனைவரும் – என்றைக்கு,
உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொண்டுள்ள
இந்த சலுகைகள் அத்தனையையும் விட்டுக் கொடுக்கிறீர்களோ –
அன்றைக்கு நிச்சயம் குடிமக்களாகிய நாங்கள் அனைவரும்
எங்கள் சமையல் எரிவாயு மான்யத்தை –
நீங்கள் கோராமலேயே நாங்கள் அனைவரும் அவசியம் விட்டுக் கொடுப்போம்…!!!
🙏
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
இச்செய்தியை அனைவருக்கும் பகிர்ந்து விழிப்புனர்வை ஏற்
படுத்துவோம்,
நன்றி !! 🙏

ஒரு தெய்வ வழிபாடு !

ஒரு தெய்வ வழிபாடு !

கொலை செய்து புலால் உண்பவர்கள் கூ ட,ஒரு தெய்வ  வழிபாட்டில் உறுதியாக இருக்கின்றார்கள் .

இஸ்லாம் மதம்,கிருத்தவ மதத்தை சார்ந்தவர்கள் எந்த நாட்டில் இருந்தாலும் ஒரு தெய்வ வழிபாட்டிலும் ஒற்றுமையிலும் உறுதியாக இருக்கின்றார்கள் .

நம்முடைய இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் ,சாதிக்கு ஒரு கடவுள்,சமயத்திற்கு பல கடவுள்கள்,மதத்திற்கு பல கடவுள்கள் என்று அலைந்து திரிகின்றார்கள்.

அதனால் தான் கண்மூடி பழக்கம் எல்லாம் மண் மூடிப்போக என்கின்றார் !.

வாய்பேசாத ,உயிர் இல்லாத பொம்மைக் கடவுள்களான தத்துவ உருவங்களை வைத்துக் கொண்டும் .போக்கு வரத்திற்கு இடையூறாக,தெருத்தெருவாக கோயில்களைக் கட்டிக் கொண்டு அலைந்து திரிந்து போராட்டம் நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.

கடவுள்  கொள்கையில் ஒற்றுமை இல்லாத இந்த இந்துமத மனிதர்களின் செயல்களைப் பார்த்து வள்ளல்பெருமான் மிகவும் வேதனை அடைகின்றார்.

தெய்வங்கள் பல பல சிந்தை செய்வாரும்
சேர்கதி பல பல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலைபல புகன்றிடுவாரும்
பொய் சமயாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த விளக்கம் ஒன்று இல்லார்
மேல்விளைவு அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம் ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

என்று மேலே கண்ட பாடலின் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

பல கடவுள்கள் உண்டு என்று நினைத்து வணங்க்கு கின்றவர்களுக்கும் .வழிபடு வோர்களுக்கும்  அறிவு என்பது கொஞ்சம் கூட இல்லை .

ஆதலால் எனக்குத் தெரிவித்த உண்மையை அவர்களுக்கும் தெரிவித்து உண்மை அறிவை விளக்க வேண்டும் என்று இறைவனிடம் மக்களுக்காக வேண்டி விண்ணப்பம் செய்கின்றார்.

எவ்வளவு படித்த மேதைகளாக இருந்தாலும் கடவுள் கொள்கையில் ஜீரோ வாக இருக்கின்றார்கள் அவர்கள் படித்து என்ன பிரயோசனம் .

ஒரு உடம்பிற்குள் இரண்டு மூன்று உயிர் இருக்குமா ? அதுபோல் கடவுள் பல பல உருவங்களில் பல பல தெய்வங்கள் இருக்குமா ? என்பதை சிந்தித்து பாருங்கள் என்கின்றார் வள்ளல்பெருமான்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஆன்மா தனித்து இருக்க வேண்டும் !

ஆன்மா தனித்து இருக்க வேண்டும் !

ஆன்மா என்பது ஒளியானது அந்த ஆன்மாவை இந்த உலகத்தில் வாழ்வதற்காக இறைவன் அனுப்பி வைக்கின்றார் .

ஆன்மா இந்த உலகத்தில் பல கோடி பிறவிகள் எடுத்து வாழ்ந்து இறுதியாக மனித தேகம் எடுத்து ,மேற்கொண்டு பிறவி எடுக்காமலும் இறந்து போகாமலும் வாழ்வதுதான் மனிதப் பிறவியின் நோக்கம் ,இறைவனின் சட்டம் .

ஆனால் ஆன்மா அழியாது உடம்பும் உயிரும் அழிந்துவிடும் .ஆன்மா யோகத்தின் பயனாக முக்தி அடைகின்றது என்றும் .மேலும் சொர்க்கம் கைலாயம் .வைகுண்ட பதவி அடைகின்றது என்றும் சமய மதங்கள் சொல்லுகின்றன .

ஆன்மா அழியாது என்பதும் அழிக்க முடியாது என்பதும்  எல்லோருக்கும் தெரியும் .

இதற்கு வள்ளல்பெருமான் வந்துதான் ஆன்மாவின் தன்மை என்னவென்றும் ,அது எங்கு இருந்து வந்தது என்றும்.ஏன் வந்தது என்றும் ,எப்படி வாழ்ந்தது என்றும்.அதன் இறுதி முடிவு என்னவென்றும்.அது எப்படி இறைவனிடம் செல்லமுடியும் என்பதை, ஓர் உண்மையான வழியைக் காட்டுகின்றார்.

இதுவரை சமய மதங்கள் சொல்லி வந்த பாதைக்கும்,வள்ளல்பெருமான் சொல்லிய பாதைக்கும் ந நிறைய வேறுபாடுகளும் வித்தியாசமும் மாறுபாடும் உள்ளன .

மனித தேகம் எடுத்த ஆன்மா பிறப்பு இல்லாமலும் .இறப்பு இல்லாமலும் .தன்னுடைய உயிரையும் உடம்பையும் ஆன்மாவின் தன்மைக்கு ஒளியாக மாற்றிக் கொண்டால் மட்டுமே இறைவன் இடத்திற்கு செல்லமுடியும் .

வேறு எந்த வழியாலும் செல்லமுடியாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார் .சொல்லியது மட்டும் அல்ல .அவரே வாழ்ந்து வழியும் காட்டி உள்ளார்

இதுவரையில் ஆணவம் மாயை,கன்மம்,போன்ற மலங்கள் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ளன.

இந்த மலங்களை ஒழுக்கத்தினாலும்,ஜீவ காருண்யத்தாலும் ,அதாவது சத் விசாரத்தாலும்,பரோபகாரத்தாலும் .விளக்க வேண்டும்

அப்படி விலகினால் மட்டுமே ஆன்மா இறைவனுடைய அருளைப் பெற்று ,தன்னுடைய ஊன உடம்பை ஒளியான ஒளி உடம்பைப் பெற்று எங்கு வேண்டுமானாலும் செல்லும் ஆற்றலைப் பெரும்.

இறைவன் எப்படி எங்கும் நீக்கமற நிறைந்து இருக்கின்றாரோ அப்படி ஆன்மாவும் எங்கும் நீக்க மற நிறைந்து இருக்கும் .அதுவே பேரின்ப வாழ்வு என்பதாகும்.

அதுவே மரணம் இல்லாப் பெருமாழ்வு என்பதாகும்.இறைவனுக்கு எப்படி பிறப்பு இறப்பு இல்லையோ அப்படி பிறப்பு இறப்பு இல்லாமல் வாழ்வதுதான் ஆன்மாவின்  இறுதி முடிவாகும்.

ஆன்மா உயிருடனும்,உடம்புடனும் மரணம் அடைந்தால்,அதன் வாழ்க்கையின் தன்மைக்குத் தகுந்தாற் போல்  பிறப்பு நிச்சயம் உண்டு.

ஆன்மா உயிரும் உடம்பும் எடுக்காமல் தனித்து இருக்க வேண்டும்.

ஆன்மா தன்னுடைய் அருள் ஆற்றலால் ஒளி உடம்பாக மாற்றாது வரை இந்த உலகத்தில் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து,பிறவிகள் எடுத்துக் கொண்டே  இருக்க வேண்டியதுதான் .

வேறு எந்த வழியாலும் ஆன்மா இந்த உலகத்தை விட்டு வெளியே செல்லவே முடியாது.இதுதான் இயற்கையின் சட்டம்.

ஆன்மா இந்த உலகத்தில் எத்தன்மையாக வந்ததோ ,அதே தன்மையாக தன்னை மாற்றிக் கொண்டு திரும்பிச் செல்ல வேண்டும் .

இதுதான் வள்ளல்பெருமானின் முடிந்த முடிவான உண்மையாகும் .

வள்ளல்பெருமான் சொல்லியதைக் கேட்டு அதன்படி வாழ்ந்தால் நிச்சயம் நன்மைப் பயக்கும்.

வையத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் உமது
வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர்
மையகத்தே உறும் மரண வாதனையைத் தவிர்த்த
வாழ்க்கை அதே வாழ்க்கை என மதித்து மயங்காதீர்

மெய் அகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது
மெய்ப் பொருளாம் தனித் தந்தை இத் தருணம் தனிலே
செய் அகத்தே வளர் ஞான சித்திபுரம் தனிலே
சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இதுதானே .

என்று தெளிவாக விளக்கம் தந்துள்ளார் .

மண்ணில் மறைந்தவர்களும்,வானத்தில் மறைந்தவர்களும்,மற்றும் எங்கு எங்கு ,எப்படி எப்படி மறைந்து இருந்தாலும் .அதுவெல்லாம் வாழ்க்கை என்பது அல்ல .

முத்தி என்பது வாழ்க்கை அல்ல ..சித்திப் பெறுவதே வாழ்க்கை

முத்தி என்பது நிலை முன்னுறு சாதனம்
சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம்

முத்திக்கும் சித்திக்கும் உள்ள வேறு பாட்டைப் புரிந்து கொள்ளவேண்டும்...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல். 

வியாழன், 23 ஜூலை, 2015

ஆண் பெண் உறவு கொள்வது எப்படி !

பகலில் ஆண் பெண் உறவு கொள்ளக் கூடாது !

பெண்கள் ஆண்கள் உடல் உறவு எப்படி கொள்ள வேண்டும் என்பதை வள்ளல்பெருமான் விளக்கமாக விளக்கி உள்ளார் .

பகலில்;-- காலைப் புணர்ச்சி ..பகல் புணர்ச்சி ...இரவு முன் புணர்ச்சி இல்லாது இருத்தல் வேண்டும்.

பகலில் உடல் உறவு கொள்வதால் உடலில் உள்ள அணுக்கள் சோர்வு உற்று உடம்பை பாதிக்க செய்யும் .பகலில் உள்ள வேலைகளை செய்யமுடியாமல் திசுக்கள் சோம்பல் உண்டாக்கி சுறு சுறுப்பு குறைந்து மந்தம் உண்டாக்கும் .

இரவு 10-00 மணிக்கு மேல் கணவன் மனைவி உடல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும்.

இரவில் இருட்டில் இருக்க கூடாது சிறிது வெளிச்சம் அவசியம் வேண்டும் .

தேக சம்பந்தம் செய்வதற்கு முன் சுமார் பத்து நிமிடம் மனத்தை தேக சம்மந்தத்தில் வையாது வெறு  இடத்தில் வைத்துப் பின் தேக சம்பந்தம் செய்வதற்குத் தொடங்குதல் வேண்டும்.

தொடங்கிய போது அறிவு விகற்பியாமல் --மனம் முதலிய கரணங்களின் சுதந்திரத்தோடு ,தேகத்திலும் கரணங்களிலும் ,சூடு தோன்றாமல் உடல் உறவு கொள்ள வேண்டும்.

இடது புறம் !

பெண்களை இடது புற சாய்வாகப் படுக்கவைத்து தேக சம்பந்தம் செய்ய வேண்டும் .

குழந்தை வேண்டும் என்பதை குறித்து தேக சமபந்தம் செய்ய வேண்டும்.

மற்ற நேரங்களில் சுக்கிலம் வெளியே வராமல் இருக்கத்தக்க உபாயத்தோடு தேக சம்பந்தம் செய்தல் வேண்டும்.

அந்த உபாயம் என்னவென்றால் ;--பிராணவாயுவை உள்ளேயும் அடக்காமல்,வெளியேயும் விடாமல் நடுவே உலாவச்செய்து உடல் உறவு கொள்ள வேண்டும்.

ஒரு முறை அன்றி அதன் மேலும் மேலும் செய்யப்படாது.

தேக சம்பந்தம் செய்தபின் தேக சுத்தி செய்து (குளித்துவிட்டு ) விட்டு படுக்கையில் அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்து விட்டு அமைதியாக படுத்து உறங்க வேண்டும்.

படுத்தல் ;--

எந்தக் காலத்திலும் எங்கு படுத்தாலும் இடது கைப் பக்கமாகவே படுத்து உறங்குதல் வேண்டும்.மூன்று அல்லது நான்கு மணிக்கு மேல் நித்திரை செய்யக் கூடாது.அதன்பின் விழித்துக் கொண்டு நல்ல சிந்திப்புடன் இருத்தல் வேண்டும்.

பகலில் உணவு உட்கொண்டு சிறிது நேரம் ஒய்வு எடுக்க வேண்டும்..எக்காரணத்தைக் கொண்டும் பகலில் நித்திரை செய்யக் கூடாது.

நான்கு நாளைக்கு ஒருதரம் உடல் உறவு கொள்ளலாம்...எட்டு நாளைக்கு ஒருதரம் கொள்ளலாம்.பதினைந்து நாளைக்கு ஒருதரம் கொள்ளலாம் .

அதற்குமேல் செய்தால் சுக்கிலம் ஆபாசப்பட்டு தானே கழியும்.

நான்கு நாளைக்கு ஒருதரம் செய்தால் சுக்கிலம் நெகிழ்ச்சி பட்டுச் சந்ததி விருத்தியைக் கெடுக்கும்.

எட்டு நாளைக்கு ஒருதரம் செய்தால் சுக்கிலம் நெகிழ்ச்சி பட்டு சந்ததி விருத்தியை பாதி அளவு குறைக்கும்.

பதினைந்து நாளைக்கு ஒருதரம் செய்தால் நல்ல அறிவுள்ள குழந்தைப் பிறக்கும்.

பதினைந்து நாளைக்கு ஒருதரம் உடல் உறவு கொள்வதே சிறந்த செயலாகும்.

மேற்படி சொல்லிய வண்ணம் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் ,உடல் உபாதைகள் வராமல் நீண்ட ஆயுளுடன் வாழலாம்..நமக்கு வரும் துன்பங்கள் யாவும் தொலைந்து விடும்.

சுக்கிலத்தின் அளவு ;--

சுக்கிலம் அதிகம் வெளிப்பட்டால் அறிவு விளக்கம் குறைந்து விடும்.அருள் விளக்கமும் குறைந்து விடும்.

நாம் உண்ணும் உணவினால் மூன்று வகையான சுக்கிலம் உறபத்தியாகின்றது .சுக்கிலத்தின் அளவு இரண்டரை வராகன் எடை அளவு உள்ளதாய் இருக்கும் .

அதில் விஷம பாகமாகிய சத்தி ஒரு வராகன் எடை அளவு   ....சாதாரணம் என்னும் பூதமாகிய அறிவு ஒரு வராகன்  எடை அளவு ...அசாதாரண அமுதமாகிய விந்து அரை விராகன் எடை அளவு  ...ஆக மொத்தம் இரண்டரை வராகன் அளவாகும் .அதாவது இரண்டரை ஸ்பூன் அளவு என்று வைத்துக் கொள்ளுங்கள் .

மேலே கண்ட அளவு ,ஆண். பெண் இரண்டு பேரிடமும் சமமாகவே உள்ளன .

உடல் உறவின் போது கோசத்தின் முன் வருவது விஷம் என்னும் பாகமாகும்...இரண்டாவது வருவது பூதமாகிய பாகமாகும் .மூன்றாவது வருவது அமுதம் என்னும் பாகமாகும்.

புணர்ச்சி காலத்தில் விஷபாகமாகிய விந்து  வெளிப்பட்டால் தேக நஷ்டம் உண்டாகும்...பூதமாகிய விந்து வெளிப்பட்டால் வியாதி உண்டாகும்...அமுத பாகமாகிய விந்து வெளிப்பட்டால் சந்ததி (குழந்தை ) விருத்தி உண்டாகும்..

இறை சிந்தனையால் காலச்சக்கரம் போல் இறை உணர்வால் ஏக தேசத்தில் கோச உபஸ்தங்களில் (உறுப்புகளில் ) அமுத அமுதபாக நாடியை முன்னே தள்ளி ,விஷத்தையும்,பூதத்தையும்.பின்னே சேர்த்துக் உடல் உறவு கொண்டு கருத்தரிக்க செய்ய வேண்டும்.

இந்த ஞாயத்தால் இடைவிடாது புணர்ச்சிக் கொள்பவர்களுக்கு கர்ப்பம் உண்டாகாது .

மேலும் .விந்து வளம்,இடவளம்.வன்னி.கிருமி மோக விசேடம் ---இவற்றாலும் கர்ப்பம் உண்டாகாது.

சப்த தாதுக்களின் விபரம் ;--

ஆண்களிடத்தில் மூன்றும்  ....பெண்களிடத்தில் நான்கும் உள்ளன .

ஆணில் மூன்று யாதெனில் .

ஆகாசம் ...பிரகிருதி ..ஆன்ம உணர்ச்சி என்ற தாதுக்கள் மூன்றும் ஒருமித்துப் சுக்கிலமாகத் தடித்துக் கோசத்தின் (ஆண் உறுப்பில்)அடியில் செம்பரத்தம் பூ இதழ் மூன்றும் ஒன்றாக அடிக்கியது போல் இருக்கும்.

பெண்ணிடத்தில் ;--

பிருதிவி ..அப்பு..தேயு ..இயமானன் என்னும் வாயு ஆக நான்கு உள்ளது .அவை ஒருமித்துப் பல்லி முட்டைபோல் நாலு பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் யோனிக்குள் (பெண் உறுப்பில் ) இருக்கும்

ஆக இந்த ஏழு தாதும் கூடி ஒருமித்துச் சுக்கில சுரோணித சம்பந்தப்பட்டு உறவு கொள்ளும் போது,கரு உற்பத்தியாகி பிண்டமாகும் .இதுதான் சப்த தாது என்பதாகும்.

தாதுக்களின் பெயர் ;--

தோல் ..அஸ்தி....தசை...மூளை...சுக்கிலம் ..இரத்தம்...இரசம் .ஆக ஏழு ..

மேற்படி சத்துக்கள் ஆண் இடத்தில் உள்ள இடங்கள் ;--மூளை..தொப்புள் ..லிங்கத்தடி .ஆகிய மூன்று இடத்தில் உள்ளது .

பெண் இடத்தில் ;--மூளை...தொப்புள் ..லிங்கத்தடி ...உபஸ்தத் தடி ...ஸ்தனத்தின் கீழ் ..ஆக நான்கு இடங்களில் உள்ளது.

ஆண் பெண் புணர்ச்சிக் காலத்தில் இந்தச் சத்து சேர்ந்து வெளிப்பட்டால் கர்ப்பம் உண்டாகும்.

இடைவிடாமல் விந்தை விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழியாகும் .....

அடிக்கடி தேக சம்பந்தம் கொள்ளும் போது.அமுத பாகமாகிய விந்து வெளிப்பட்டு .தாதுக்கள் மெலிவடைந்து உடம்பிற்கும் உயிருக்கும் சீக்கிரம் அழிவு உண்டாகும்  அதுதான் மரணம் என்பதாகும்.

நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டுமானால் சுக்கிலத்தை விரையம் செய்யக் கூடாது என்கின்றார் நமது வள்ளல்பெருமான் .

ஆதலால் இந்த உடம்பை அலஷியம் செய்யாமல் பொன்னைப்போல் பாதுகாக்க வேண்டும் ..

மேலே கண்ட உண்மைகளை உணர்ந்து ஆண் பெண் .இல்லற வாழ்க்கையில் கடைபிடித்தால் இல்லறம் நல்லறமாக இயங்கும். நல்லறம் அருள் அறமாக மாறும் ...அருள் அறம் கடவுள் வாழும் இடமாக மாற்றம் அடையும் .

ஆன்மநேயன்  ஈரோடு கதிர்வேல்.

.   
புதன், 22 ஜூலை, 2015

உண்மையான ஞானி ! .அருளாளர் என்பவர் யார் ?

உண்மையான ஞானி ! .அருளாளர் என்பவர் யார் ?

நரை,திரை,பிணி,மூப்பு,பயம்,கொலை துன்பம் ,மரணம்,எதுவும் வராதவர் எவரோ அவரே உண்மையான ஞானி ,உண்மையான அருளாளர் .என்பவராகும்.

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து வள்ளலாருக்கு,முன்னாடியோ,பின்னாடியோ வள்ளல்பெருமானைத் தவிர வேறு எவரும் அப்படி வாழ்ந்தது இல்லை.

முடி நரைக்காமல்,..வயது முதிர்ச்சி அடையாமல்,நோய் வராமல்,பயம் இல்லாமல்,யாராலும் கொலை செய்ய முடியாமல்,எக்காலத்தும் துன்பம் வராமல்,உணவு உட்கொள்ளாமல் ,வாழ்ந்தவர்தான் வள்ளலார்

மேலும் இந்த உடம்பை,ஐந்து பூதங்களான.மண்,தண்ணீர் .அக்கினி,காற்று ,ஆகாயம் போன்ற எந்தக் கருவியாலும் அழிக்க முடியாத ,அருள் என்னும் ஒளித் தேகத்தைப் பெற்று ,மரணம் இல்லாமல் .மரணம் வராமல் வாழ்ந்து கொண்டு இருப்பவர்தான் வள்ளலார் .

செயற்கை யாலோ,இயற்கையாலோ ,எக்காரணத்தைக் கொண்டும் எந்த தீய செயல்களாலும் அழிக்க முடியாத அருள் தேகம் பெற்றவர்தான் .நம்முடைய தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்த வள்ளல்பெருமானாகும்.

தன்னைக் காப்பாற்றிக் கொள்ளாதவர்கள் எப்படி சமுதாயத்தைக் காப்பாற்ற முடியும்..சிந்திக்க வேண்டும்.

ஆதலால் அவர் சொல்லியது,எழுதி வைத்துள்ளது ,அவர் வாழ்ந்து காட்டி உள்ளது அனைத்தும் உண்மையானது.

ஆதலால்தான் அந்த உண்மையான அருளாளர் வாழ்ந்து காட்டிய வழியைப் பின்பற்றி வாழ்ந்து கொண்டு வருகிறேன்.வேறு எந்த காரண காரியமும் இல்லை.

அவர் காட்டிய சாதி,சமய,மதம் அற்ற பொதுவான பாதை ஒன்றுதான் உலக மக்களை நல்வழிப் படுத்தும்

வேறு எந்த பாதைகளும் உண்மையான பாதைகள் அல்ல .என்பதை மக்கள் நினைந்து,உணர்ந்து தெளிந்து வாழ்ந்தால் மனித குலம் மேம்படும்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

செவ்வாய், 21 ஜூலை, 2015

பிரபஞ்சம் பேரண்டம்--PART 2....

பிரபஞ்சம் பேரண்டம்--PART 2....
பகுத்தறிவுள்ள யாரும் பரிணாம தத்துவவாதிகளுடன் வாதிட முடியாது. ஆனால் நாம் இன்னும் ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.அது என்ன ஒவ்வொரு விரிவுக்கும் முன்னால் ஒரு ஒடுக்கம் உண்டு என்பதுதான் அது. விதைதான் மரத்திற்கு தந்தை.அந்த விதைக்கு இன்னொரு மரம் தந்தையாக இருந்திருக்கிறது. விதை என்ற நுட்பமான உருவத்திலிருந்துதான் பெரிய மரம் வெளிவந்திருக்கிறது.பின்னால் மனிதனாகப் போகின்ற ஒரு சிறிய உயிரணு, உண்மையில் ஒடுங்கிய நிலையிலுள்ள மனிதனே.அது விரிவடைந்து முழு மனிதனாகிறது.இதை மட்டும் தெளிவாக புரிந்து கொண்டால் நமக்கும் தத்துவவாதிக்கும் இடையே கருத்து வேற்றுமை இருக்காது.ஆகவே சூன்யத்திலிருந்து எதுவும் தோன்ற முடியாது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.எல்லாம் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கும்.இந்த ஒடுக்கமும் விரிவும் இயற்கை முழுவதிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.மிகவும் சிறிய உயிர் முதல் முழுமையடைந்த மனித வெளிப்பாடுவரை எல்லா பரிணாம வளர்ச்சியுமே,வேறு ஏதோ ஒன்றின் ஒடுக்கமாகவே இருக்க வேண்டும்.எதனுடைய ஒடுக்கம்?எது ஒடுங்கியிருந்தது என்பதுதான் கேள்வி.அது கடவுள்தான் என்ற நம் கருத்து தவறு என்று பரிணாம தத்துவ வாதிகள் கூறுவார்கள் ஏன்?.ஏனெனில் கடவுள் அறிவு வடிவானவர் என்று நாம் சொல்கிறோம்.ஆனால் பரிணாம வளர்ச்சியில் அறிவு மிகவும் தாமதமாக அல்லவா தோன்றுகிறது என்று பரிணாமவாதிகள் சொல்கி றார்கள். மனிதனிடமும் உயர் நிலையிலு ள்ள மிருகங்களிடமும்தான் அறிவு காணப்படுகிறது.எனவே உயிர் தோன்றிப் பலகோடி வருடங்கள் கழிந்த பின்னரே,இந்த அறிவு தோன்றியிருக்கிறது என்றும் பரிணாமவாதிகள் சொல்கிறார்கள்.மரம் விதையிலிருந்து தோன்றி மறுபடியும் விதைக் குள்ளே ஒடுங்குகிறது.ஆரம்பமும் முடிவும் ஒன்றாகத்தான் இருக்கிறது.பூமி அதன் காரணத்திலிருந்து வெளிவந்து அதற்குள்ளே ஒடுங்கிவிடுகிறது.ஆரம்பம் தேரிந்தால் முடிவும் தெரிந்துவிடும்.அதே போல் முடிவு தெரிந்தால் ஆரம்பமும் தெரிந்து விடும். அப்படியானால்,ஒரு முனையில் முதல் உயிரணுவும், மற்றொரு முனையில் நிறைநிலை (முழுஅறிவு) அடைந்த மனிதனும் உள்ள பரிணாம வளர்ச்சிதொடரைஎடுத்துக்கொள்ளுங்கள். இந்தத் தொடர் முழுவதும் ஒரே உயிர்தான்.பரிணாம வளர்ச்சியில் நிறை மனிதன் இருப்பதால்,தொடக்கத்திலும் நிறைமனிதன் தான் இருந்திருக்க வேண்டும்.ஆகவே மிக உயர்ந்த அறிவின் ஒடுக்கமே முதல் உயிரணுவாக இருக்கவேண்டும்.அது நமக்கு தெரியாமல் இருக்கலாம்.ஆனால் அந்த ஒடுங்கிய அறிவு சிறிதுசிறிதாக தன்னை விரிவுபடுத்தி,கடைசியில் நிறைமனிதனாக வெளிப்படுத்துகிறது.இதை கணித முறையில் நிரூபிக்க முடியும்.சக்தியின் அளவு எப்போதும் மாறுவதில்லை என்ற நியதி உண்மையானால் (Energy can neither be created nor it is destroyed, however energy can be converted from one form energy to any other form of energy) புதிதாக எந்த சக்தியையும் உருவாக்க முடியாது, ஒருசக்திதான் இன்னொரு சக்தியாக மாறுகிறது),முதலில் ஓர் இயந்திரத்தில் எதையும் செலுத்தாமல் அதிலிருந்து எதையும் வெளிக்கொணர முடியாது.அப்படியானால் இந்த அறிவு என்பது என்ன? ஏற்கனவே அது முதல் உயிரணு வுக்குள் ஒடுங்கி இருந்திருக்கா விட்டால்,திடீரென்று சூன்யத்திலிருந்து தோன்றியிருக்க வேண்டும் .இது அபத்தம். ஆரம்பத்தில் இந்த அறிவு ஒடுங்கியிருந்தது.முடிவில் அது முற்றிலும் விரிந்து நிற்கிறது.ஆகவே பிரபஞ்சத்தில் வெளிப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்ற அறிவு முழுவதுமே,பிரபஞ்ச தோற்றத்திற்கு காரணமான முதல் கருவில் அடங்கியிருந்த அறிவின் விரிவே ஆகும்.பிரபஞ்சம் முழுதும் பரவி நிற்கும் இந்த அறிவைத்தான் கடவுள் என்கிறோம்.வேறு எந்தப்பெயரால் வேண்டுமா னாலும் அழையுங்கள். ஆரம்பத்தில் இருந்தது. இந்த எல்லையற்ற அறிவுதான் என்பது நிச்சயம்.பிரபஞ்சம் முழுவதும் நிறைந்த இந்த அறிவு, முதல் கருவில் ஒடுங்கிநின்று,பின்னர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விரிவடைந்து கடைசியில்,முக்தன் என்று அழைக்கப் படும் நிறைமனிதனாக பரிணமிக்கிறது.பிறகு இந்த அறிவு மூலகாரணத்திற்குள்ளே மீண்டும் ஒடுங்கி விடுகிறது. அதனால்தான் எல்லா சாஸ்த்திரங்களும் நாம் வாழ்வது, இயங்குவது,இருப்பது எல்லாம் அவருள்தான் என்றுசொல் கின்றன.நாம் கடவுளிலிருந்து வந்தோம் கடவுளிடமே திரும்பிசெல்கிறோம். பிரபஞ்சம் முழுவதும் நிறைந்திருக்கும் இந்த அறிவையே தத்துவவாதிகள் கடவுள் என்று சொல்கிறார்கள்.மனித அறிவைத் திருப்தி செய்கின்ற பிரபஞ்சத்தைப் பற்றிய கருத்து இரு ஒன்றுதான்.ஒரே வார்த்தையில் சொல்லப்போனால் நாம் அவரிலிருந்தே தோன்றினோம்.அவரிலேயே வாழ்கிறோம், அவரிடமே திரும்புவோம். .....சுவாமிவிவேகானந்தர்;

பிராணாயாமம் ;;;PART 1...

பிராணாயாமம் ;;;PART 1...
பிராணாயாமம் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருப்பினும் அவை அனைத்தையும் கற்றுக்கொண்ட பின் அல்லது புரிந்து கொண்டபின்தான் பிராணாயாமப் பயிற்சி செய்ய வேண்டும் என்ற விதியினை எவரும் சொல்லவில்லை என்றே தோன்றுகிறது.
ஏனென்றால் எண்ணிலடங்காப் பிராணாயாம முறைகள் மற்றும் அதன் சாரம் பிற உத்திகளோடு ஒன்றுபடுத்தியோ அல்லது வேறுபடுத்தியோ பார்ப் பதற்கும் கூட ஏதாகிலும் ஒன்றையாவது பின்பற்றி கற்றபின்பே மற்றவைகளைப் பற்றி ஒரு முடிவுக்கு வர முடியும். எந்தப் பிராணாயாமம் எந்த அடிப்படைக்குள் வருகிறது. எந்த முறை சாதகர்களுக்குச் சிறந்தது என்பதை விட, எது ஏற்றது எனவும் அவரவர்கள் நிலைக்கு ஏற்ப குருவின் தீர்மானமே சிறந்ததாகும் என பல சித்த புருஷர்கள் ஒன்று போலக்கூறுவதை அறியலாம்.
ஜாதகத்தில் கோள் நிலைகள் சாதகனின் பிறப்புக் காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாய் இருப்பது போலவும் கர்ப்பகாலம் நீக்கி வரும் திசைகளில் காலக் கணக்கு போலவும் ஒவ்வொரு சாதகனுடைய பல்வேறு பிறவிகளில் கற்றது போக மற்றதைத் தொடர்வது அல்லது எதை எதிலி ருந்து தொடர்வது என்பதையும் குருவால் தீர்மானிக்கப் படுவதாகும்.
திறமையான சாதகர்கள் கற்றுக்கொள்ளும் போதே தனக்குரிய வழிமுறைகளை காலப்போக்கில் உணர்ந்து கொள்வான். அவ்வமயம் அவனுக்குப் பலப்பல உண்மைகள் புரியத்துவங்கும்.
பிராணாயாமம் என்பது ஒரு வெறும் மூச்சுப்பயிற்சி மட்டுமே என்று பலரும் நினைத்துக் கொண்டிருப்பது தவறாகும். இயல்பான சுவாசத்திலிருந்து அது வேறுபடுகிறது என்பதோடு வேறுபடுத்தப்படுகிறது ஒழுங்குபடுத்தப்படுகிறது. மேம்படுத்தப்படுகிறது. சக்தியூட்டப்படுகிறது. மேலும் கால நிர்ணயம் மற்றும் அவை ஒரு கணிதத்திற்கு உட்படுகிறது என்றெல்லாம் கூறலாம்.
ஓடுதல், குதித்தல், தாண்டுதல், நீந்துதல், பளு தூக்குதல், அதிக நிறை உள்ளவற்றை நகர்த்துதல் நீண்ட நேரம் களைப்படையாமல் பணிபுரிதல் ÷ பான்றவற்றை எந்தவிதப் பயிற்சியும் இல்லாத சாதாரண ஒரு மனிதனை விட யோகப்பயிற்சியினை பெற்ற ஒருவரின் மேற்கண்ட செயல்பாடுகள் மிகச்சுலபமாகவும் விரைவாகவும் அதிசயத் தக்க வகையில் செய்யக்கூடியதாகவும் இருக்கும்.
உதாரணமாக பயிற்சி பெற்ற ஒரு சர்க்கஸ்காரன் (வித்தைக்காரன்) செய்யும் சாகசங்களைப் பயிற்சியற்ற மற்ற ஒருவர் செய்ய இயலாது என்பதைப் போல இயல்பான மூச்சை பிராணாயாமத்தின் மூலம் வகைப்படுத்தப்படும் போது மனிதனின் உடல் ஆற்றல் மற்றும் உள்ள ஆற்றல் பல மடங்கு பெருகுகிறது. எனவே பிராணாயாமம் என்பது ஆற்றல்களைப் பெருக்கும் ஒரு வித்தையும் ஆகும்.
இந்த வித்தையினை மூச்சுக்கலை, சரகலை, வாசிக்கலை, என பல பெயர்களை கொண்டதாகும். பிராணாயாமம் என்பதற்கு அடக்குதல் என்பது ஒரு பொதுப்பெயர், பொதுச்சொல் ஆகும். சாதகாணீன் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதாகும்.
சற்குரு ஸ்ரீ பதஞ்சலி மஹரிஷி பகன்ற பிராணனும் பிராணாயாமமும்
பிராணன்
மனிதன், தான் இயங்குவதற்கு இப்பிரபஞ்சத்திலிருந்தே சக்தியினை மூச்சாக இழுத்துக கொள்கிறான், அந்தச் சக்தி தான் பிராணண் எனக் கூறப் படுவதாகும். உயிரற்ற ஒருவனால் மூச்சை இழுத்து வெளிவிட முடியாது. எனவே, உயிர் என்பது வேறொன்றாகிறது. எனவே பிராணண் என்பதும் உயிர் என்பதும் ஒன்றல்ல. வேறு வேறு என்பது புலனாகிறது.
பிராண இயக்கத்திற்குப் பிராண வாயு தேவைப்படுகிறது. உடல் இயக்கத்திற்குப் பிராணனும், அப்பிராணனுக்கு பிராணவாயுவும், என இம்மூன்றும் சேர்ந்து தொழிற்படுவதே மனித உடலியக்கமாகும். இது எல்லா உயிர்களுக்கும் பொதுவானதாகும்.
உயிர்
உயிர் என்பது பற்றி விஞ்ஞானம் இதுவரை ஒரு சரியான முடிவுக்கு வரவில்லை அல்லது வரமுடியவில்லை.
உடல் இயங்கும் வரை உயிர் இருப்பதாவும், அது இயக்கமற்று நின்று போனவுடன் உயிர் போய்விட்டதாகவும் கூறுகின்றனர். அதை மரணம் என்று கூறும் முன்பாக, அம்மரணத்தை நிகழாதிருக்கச் செய்யமுடியவில்லை.
உயிரைத் தனியாக அடையாளம் கண்டுவிட்டால், உடலில் அது எங்கிருக்கிறது என முடிவு செய்துவிட்டால் அது வெளிப்போகாமல் தடுத்திடலாம் அல்லவா?
உடலுள்ளுறுப்புகள் செயல்திறமை குறைபாட்டில் அல்லது செயல்திறன் முற்றும் கோளாறுடையவர்கள் இறக்கும் நிலைக்குப்போய் பிழைத்து விடுவதும் மிகச்சிறிய கோளாறு காரணமாக இறப்பதும் ஏன்?
மரணத்தை கிளினிக்கல் டெத், பிரைன்டெத் என்று கூறுகிறது விஞ்ஞானம்
உடல்
ஒரு சிசு கற்பத்தில் தோன்றியது முதல் இயல்பான வளர்ச்சிக்குப்பின் வயிற்றினின்றும் வெளிவரும் வரை அச்சிசு வேறு ஒரு உயிரைச் சார்ந்தே வளர்கிறது. வெளிவந்த பின் சுவாசிக்கத்தொடங்கியது முதல் தன் உடல் வளர்ச்சிக்கு வித்திடுகிறது எனலாம்.
அதன் உடல் வளர்ச்சி கொஞ்சம் கொஞ்சமாக நடைபெறுகிறது., அதற்கு வளர்சிதை மாற்றப்பண்புகளின் இயக்க இயல்பும் அடிப்படையாகிறது. இந்த மாற்றப்பண்புகளுக்கு உணவும் காற்றும் தொடர்ந்து தேவைப்படுகிறது.
இவ்வுடல் வளர உயிரின் பங்கு என்ன? உயிருக்குப் பரிமாணம் உண்டா? விஞ்ஞானத்தில் இதற்கு சரியான பதிலில்லை. வளர்ச்சி ஒரு இயற்கை நியதி என்று மட்டும் தற்கால அறிவியல் கூறுகிறது.
பிராணண்
காற்று (வாய்வு-ஆக்சிஜன்) என்ற ஒரு குதிரையின் மீது சவாரி செய்து கொண்டிருப்பதே பிராணனாகும். இப்பிரபஞ்ச உயிர்கள். அசையும் அணுப் பொருட்கள் என அனைத்து உயிரிகளுக்கும் இன்றியமையாத்தேவை காற்று Oதுதூஞ்ஞுண ஆகும்.
இக்காற்று. உயிரிகளுக்கு தக்கவாறு எடுத்துக் கொள்ளும் அளவு மாற்றம் இருக்கலாம், ஆனால் அது இன்றி பிராணண் செயல்பட முடியாது. உயிரை ஜீவன் என்று கூறப்புகுவோமெனில், பிராணண் ஜீவசக்தி என்று கூறுதல் சரியாகும்.
மனிதனில் பிராணண்
புலன் உணர்வுகள் தூண்டப்படுவதற்கும், அதற்கேற்றபடி செயல்படவைப்பது பிராணனே. அறிவு, புத்தி, சித்தம், மனம், உடலனுபவம் அனைத்தும் பிராணண் இயங்குவதாலயே இயக்கம்பெறுகிறது.உணரப்படுகிறது.
கோள்களில் பிராணண்
பிரபஞ்சத்தில் எண்ணற்ற கோள்களின் இந்த இயக்கத்திற்கும் காற்று, மழை, மின்னல், இடியோசை என அத்தனை இயற்கையின் இயக்க நிகழ்வுகளுக்குள்ளும் பிராணணின் செயல்பாடு. அல்லது பிராணச்சலனமே காரணமாகும்.
பிரபஞ்சத்தோற்றத்தில் பிராணண்
ஏதுமற்ற ஒன்றிலிருந்து எதுவும் தோன்ற முடியாது. எத்தோற்றத்திற்கும் ஒரு (முன்) இருப்பு இருந்ததாலயே தோற்றம் நிகழ்ந்தது. நாம் குறிப்பிடும் முக்கிய கோள்கள். மில்க்கிவேஸ், கேலக்ஸி அனைத்தும் உருவாகும் முன்பு காண முடியாத அணுப்பிரமாணமாக, பரமாணுக்கூறாக இருந்தது என்கிறது வேதம்.
இறைவனின் சித்தத்தால் அணுக்கள் அத்தனையும் உயிர்ப்பெற்று பிராண சக்தியினை வெளிப்படுத்தத் துவங்கியது. அணுச்சலனமும், அணுக்கூட்டச் சேர்க்கை யால், பிரபஞ்சத்தில் (வெட்டவெளியில்) திடப்பொருட்களும், அத்திடப் பொருட்களின் திரட்சியின் காரணமாக வெடிப்புகளும், அவ்வெடிப்பின் பிரிவுகளே கோள்கள் எனவும், அவ்வெடிப்பின்போது ஏற்பட்ட ஒளி, வெப்பம், தொடர்சலனம், ஈர்ப்பு போன்ற பல நிகழ்வுகளை அதனுள்ளிருந்து, நிகழ்வுறச்செய்ததும், என அனைத்துமாய் இருப்பது பிராணணே.

திங்கள், 20 ஜூலை, 2015

உயிர்க் கொலை செய்யாதீர்கள் ! துன்பத்திற்கு ஆளாகாதீர்கள் !

உயிர்க் கொலை செய்யாதீர்கள் ! துன்பத்திற்கு ஆளாகாதீர்கள் !

உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இறைவனால் படைக்கப் பட்டதாகும்.
ஆன்மா வாழ்வதற்கு இறைவனால் கட்டிக் கொடுக்கப்பட்ட வாடகை வீடுதான் உடம்பாகும்.

வாடகை வீட்டில் குடி இருக்கும் உயிருக்கும் உடம்பிற்கும் எந்த தீங்குகளும் ,கொலைகளும் செய்வது பெரிய குற்றமாகும்.

உன்னுடைய வீட்டில் குடி இருக்கும் உன்னை கொலை செய்தால் நீ தாங்கிக் கொள்வாயா ? ஏற்றுக் கொள்வாயா ? சும்மா விட்டு விடுவார்களா ? சிந்திக்க வேண்டும்.

நம்முடைய உயிர்போல்தான் மற்ற எல்லா உயிர்களும் என்பதை,உயர்ந்த அறிவுள்ள மனிதன் தெரிந்து கொள்ள வேண்டாமா ?

இந்த உணமையைத் தெரியாமல் அறிவுள்ள மக்கள் வாய் பேசாத உயிர்களைக் கொன்று அதன் மாமிசத்தை உண்ணுகின்றார்கள் .

மாமிசம் உண்பதால் வரும் தீமைகளைப் பற்றி,எந்த ஞானிகளும் தெளிவாக சொல்லவில்லை .

அதனால் மக்கள் ஞானிகளின் போதனைகளைக் கேட்டு தவறு செய்து கொண்டு வருகின்றார்கள்.

இறைவன் உண்மையை அறிந்து இருந்தால் அப்படி சொல்லி இருக்க மாட்டார்கள் .ஏன் என்றால் அவர்களுக்கு இறைவன் அருள் கிடைக்கவில்லை .ஆதலால் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை,அறிவு தெளிவு இல்லாமல் மக்களுக்கு போதித்து உள்ளார்கள்.

வள்ளல்பெருமான் வந்துதான் உண்மை நிலையை மக்களுக்கு போதித்து உள்ளார் .,ஏன் என்றால் இறைவன் அருளைப் பெற்றவர் .இறைவனை நேரிலே கண்டவர் மரணத்தை வென்றவர்.

ஆன்மா .உயிர்,உடம்பு யாரால் படைக்கப்பட்டது என்ற உண்மையை தெரிந்து .எந்த உயிர்களையும் அழிக்கும் உரிமை யாருக்கும் இறைவன் கொடுக்கவில்லை என்பதை அறிந்து,தெரிந்து உணர்ந்து மக்களுக்கு உண்மையைத் தெரியப்படுத்துகின்றார்.

உயிர்க்கொலை செய்வதாலும்.அதன் மாமிசத்தை உண்பதாலும் அளவில்லா துன்பங்களும்,துயரங்களும்,அச்சம் ,பயம் போன்ற வேதனைகளும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

ஆதலால் எந்த மதத்தை சார்ந்தவர்களும் சமயத்தை சார்ந்தவர்களும்,சாதியைத் சார்ந்தவர்களும் ,உயிர்களை கொல்லாமல்,அதன் புலாலை அதாவது மாமிசத்தை உண்ணாமல் ,மனிதர்களாக வாழுங்கள்.

மிருகங்களாக மாறிவிடாதீர்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

ஞாயிறு, 19 ஜூலை, 2015

மெய்ப்பொருள் !

மெய்ப்பொருள் !

இந்த உலகம் உமக்கு சொந்தமானது அல்ல

நீ இங்கு வாழ்வதற்கு வந்துள்ளாய் !

நீ வாழ்வதற்காக கட்டிக் கொடுப்படடதுதான் உடம்பு !

உடம்பை எடுத்துக் கொண்டு  நீ செல்ல முடியாது !

இங்குள்ள பொருளை நீ உரிமை கொள்ள முடியாது !

உரிமை கொண்டாலும் தண்டனை உண்டு !

எடுத்து செல்ல நினைத்தாலும் தண்டனை உண்டு!

எந்த பொருள் களுக்கும் சிதைவு  உண்டாக்க கூடாது !

உனக்கு கொடுத்த வேலையை மட்டுமே செய்ய வேண்டும் !

வாழ்வதற்கு வந்தாய் வாழ்ந்துவிட்டு திரும்பச் செல்ல  வேண்டும் !

திரும்பி செல்லவில்லை என்றால்.வேறு, வேறு ,பிறப்பு கொடுத்துக் கொண்டே இருக்கு வேண்டியதுதான் !

 மரணம் வந்தால் மீண்டும் பிறப்பு உண்டு !

நீ இங்கு எப்படி வந்தாயோ,அப்படித்ததான் திரும்பி செல்ல வேண்டும் !

இங்கு, சொர்க்கம் ,..நரகம்,..கைலாயம்,..வைகுண்டம்.. மோட்சம் என்பது எல்லாம் கிடையாது . .

தவறு செய்து விட்டு ,..யோகம் ,..தவம்,..தியானம்..., வழிபாடு செய்து ஏமாற்ற முடியாது !

தவறு செய்தால் நிச்சயம் தண்டனை உண்டு !

துன்பம் ..துயரம்,..அச்சம்,..பயம்,..மரணம் என்பது தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும் !

பொருளைக் கொடுத்து ஏமாற்ற முடியாது !

இங்குள்ள பொருள் உன்னுடையது அல்ல !

பொருள் உள்ளவன் புத்திசாலியும் அல்ல !

பொருள் இல்லாதவன் ஏமாளியும் அல்ல !

நீ அனுபவிக்கும் பொருளால் துன்பம் வந்து கொண்டே தான் இருக்கும்.!

படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லை !

படித்தவன் அறிவாளியும் அல்ல !

படிக்காதவன் முட்டாளும் அல்ல !

கண்டது எல்லாம் அநித்தியமானது !

கேட்டது எல்லாம் பழுது ஆனது !

கற்றது எல்லாம் பொய்யானது !

களித்தது எல்லாம் வீண் ஆனது !

உண்டது எல்லாம் மலம் ஆனது !

உட் கொண்டது எல்லாம் குறை ஆனது !

இதுவரையில் யாரும் உண்மை அறியவில்லை. !

மெய் நெறியைக் கடைபிடிக்க வேண்டும் !

மெய்ப் பொருளை நன்கு உணர வேண்டும் !

இறைவன் அருளைப் பெற வேண்டும் !

இறவாத வரம் பெற்று இன்பம் அடைதல் வேண்டும் !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ......

சனி, 18 ஜூலை, 2015

மனிதன் ?

மனிதன் ?

கடவுளை மனிதனால் படைக்க முடியுமா ? .

இப்போது உள்ள கடவுள்கள் எல்லாம் பொம்மைகள் .

பொம்மையை வணங்குபவர்கள் புத்தி உள்ளவரா ?அறிவு உள்ளவரா ?

பேசாத கடவுளை பேசும் மனிதன் படைக்க முடியுமா?

உயிர் உள்ள கடவுள் இருக்க உயிர் இல்லாத கடவுளை வணங்கலாமா ?

அறிவுள்ள மனிதர்கள் அறிவில்லாத பொம்மையை வணங்கலாமா ?

ஆதியிலே கடவுளை கற்பித்தவன் அறிவு விளக்கம் இல்லாதவன்

குருடன் பின்னால் குருடன் செல்வதுபோல் உள்ளது .

ஒளியான கடவுளை இருக்க உருவமாக படைக்கலாமா ?

உன்னை அறியாமல் உலகத்தை எப்படி அறிவாய் ?

கற்ற நூல்களும் பொய் கண்ட காட்சிகளும் பொய் !

உன்னை அறிந்தால் உலகத்தை அறிவாய் .

உள்ளே பார்த்தால் உண்மை புரியும் ,வெளியே பார்த்தால் உண்மை மறையும்.

ஒளியைப் பார்த்தால் இருள் மறையும் .இருளைப் பார்த்தால் ஒளி மறையும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

செவ்வாய், 14 ஜூலை, 2015

நம்மைப் பற்றிக் கொண்டு உள்ளது !

நம்மைப் பற்றிக் கொண்டு உள்ளது !

காமம், கோபம்,  லோபம்,  மோகம்,  மதம்,  மாச்சரியம்,
கொலை .  இந்த எழுவரும்,அவர்களுக்கு உற்ற உறவானவர்களும் ,ஒவ்வொரு மனிதர்களையும் பற்றிக் கொண்டு உள்ளனர் .

இந்தப் பற்றை நீக்கிக் கொண்டு வாழ்பவனே சிறந்த மனிதன்.என்பதை வள்ளல்பெருமான் விளக்கமாக பதிவு செய்துள்ளார்.

காமப் உட் பகைவனும் கோப வெங் கொடியனும்
கனலோப முழு மூடனும்
கடுமோக வீணனும் கொடு மதம் எனுந் துட்ட
கண்கெட்ட ஆங்காரியும்
ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலை என்
இயம்பிய பாதகனும் இவ்
எழுவரும் இவர்குற்ற உறவான பேர்களும்
எனைப் பற்றிடாமல் அருள்வாய்

1,உட்பகைவன் ..காமம்
2,வெங்கொடியன்...கோபம்
3,முழு மூடன்...லோபம்
4,வீணன் ..மோகம்
5,கண்கெட்ட ஆங்காரி ...மதம்
6,விழலன் ...மாச்சரியம்
7,பாதகன் ....கொலை .

மேலே உள்ள ஏழு கொடிய குற்றவாளிகளும் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு உள்ளன்.மேலும் அதற்குத் துணையான உறவினர்களும் பற்றிக் கொண்டு உள்ளனர் .

இவர்களை எப்படி விரட்டுவது ?

இந்த பற்றுகளை நீக்க வேண்டுமானால் ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து ,அம்பலப் பற்றை பற்றவேண்டும்.அதாவது அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொள்ள வேண்டும்.

பற்று அற்றான் பற்றினை பற்றி இடல் வேண்டும்
பற்று அற்றால் அன்றி பலியாது .

பற்றிய பற்று அத்தனையும் பற்று அற விட்டு அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே !

வள்ளல்பெருமான் ஆன்மாவைப் பற்றியுள்ள பற்றுகள் அனைத்தையும் பற்று அற விட்டு வாழ்ந்ததால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுகொண்டு தன்னை .அருட்பெருஞ்யாக மாற்றிக் கொண்டார்.ஐந்தொழில் வல்லப்பத்தையும் தந்தார்.

நாமும் அப்படி வாழலாம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 11 ஜூலை, 2015

ஆன்ம இன்ப லாபத்தை எதனால் பெறக் கூடும் !

ஆன்ம இன்ப லாபத்தை எதனால் பெறக் கூடும் !

ஆன்ம இன்ப லாபத்தில் மூன்று வகைகள் உண்டு .அவை ;--இம்மை இன்ப லாபம்,...மறுமை இன்ப லாபம்,..பேரின்ப லாபம் என்பவைகளாகும்.

அந்த மூன்று லாபங்களையும் எதனால் பெருக் கூடும் எனில் ;--

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருளின் ஏக தேசத்தைக் கொண்டும் .அருட் பூரணத்தைக் கொண்டும் அடையக் கூடும் என்று  அறிய வேண்டும்.

மூவகை இன்பங்களில் அருளின் ஏக தேசத்தைக் கொண்டு அடையத் தக்கவை எவை ?

அருட் பூரணத்தைக் கொண்டு அடையத் தக்கது யாது ? என்று அறிய வேண்டில்.

இம்மை இன்ப லாபம் ,..மறுமை இன்ப லாபம் ,..என்கிற இரண்டையும் அருளின் ,ஏக தேசத்தைக் கொண்டு அடையக் கூடும் என்றும் .

பேரின்ப லாபம் என்கின்ற ஒன்றையும் --அருட் பூரணத்தைக் கொண்டு அடையக் கூடும் என்றும் அறிய வேண்டும் .

கடவுளின் இயற்கை விளக்கமாகிய அருள் எந்த வண்ணம் உடையது என்று அறிய வேண்டில்;--

சொல்லுவார் சொல்லும் வண்ணங்களும்.நினைப்பார் நினைக்கும் வண்ணங்களும் .அறிவார் அறியும் வண்ணங்களும் ...அனுபவிப்பார் அனுபவிக்கும் வண்ணங்களும் ...ஆகிய சர்வ சத்தி வண்ணங்களும் ;தனது ஏக தேச வண்ணங்களாக விளங்க விளக்கி விளங்குகின்ற பூரண விளக்க வண்ணத்தை  உடையது  என்று  அறிய வேண்டும்.

அந்த அருள் எவ்விடத்து விளங்குகின்றது ? என்று  அறிய வேண்டில் ;--

நோக்குவார் ,நோக்குமிடம் ,நோக்கப்படும் இடம் ,
கேட்பார். கேட்கும் இடம் ,கேட்கப்படும் இடம் .
சுவைப்பார் ,சுவைக்கும் இடம் ,சுவைக்கப்படும் இடம் .
முகருவார் ,முகரும் இடம் ..முகரப்படும் இடம் ..
பொருந்துவார் ,பொருந்தும் இடம் ,பொருந்தப்படும் இடம் .
பேசுவார் ,பேசும் இடம் பேசப்படும் இடம் .
செய்வார் ,செய்யும் இடம் ,செய்யப்படும் இடம் .
நடப்பார் ,நடக்கும் இடம்,நடக்கப்படும் இடம் .
விடுவார் ,விடும் இடம் ,,விடப்படும் இடம் .
நினைப்பார் ,நினைக்கும் இடம்,நினைக்கப்படும் இடம் .
விசாரிப்பார் ,விசாரிக்கும் இடம்,விசாரிக்கப்படும் இடம்.
துணிவார் ,துணியும் இடம் ,,துணியப்படும் இடம் ..
தூண்டுவார்,தூண்டுமிடம்,,தூண்டப்படும் இடம் .
அறிவார் ,அறியும் இடம்,அறியப்படும் இடம் .
அனுபவிப்பார்,அனுபவிக்கும் இடம் ,அனுபவிக்கப்படும் இடம் .

முதலிய எவ்விடங்களிலும் எக்காலத்தும் விளங்குகின்றது என்று அறிய வேண்டும்.

அந்த அருளை எதனால் பெறக்கூடும் என்று அறிய வேண்டில் ;--

ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் பெறக்கூடும் என்று அறிய வேண்டும்.

ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக் கூடும் என்பது எப்படி ? என்று அறிய வேண்டில் .

அருள் என்பது ;-கடவுள் இயற்கை விளக்கம் ,அல்லது கடவுள் தயவு என்பதாகும்.
ஜீவ காருண்யம் என்பது ;--ஆன்மாக்களின் இயற்கை விளக்கம் ,அல்லது ஆன்மாக்களின் தயவு என்பதாகும்.

அதனால் ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும்.சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் போல் என்று அறிய வேண்டும்.

இதனால் ஜீவ காருண்ய ஒழுக்கமே சன்மார்க்கம் என்று அறிய வேண்டும்.

ஜீவ காருண்யம் விளங்கும் போது,அறிவும் அன்பும் உடனாக விளங்கும்.அதனால் உபகார சக்தி விளங்கும்.அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.

ஜீவ காருண்யம் மறையும் போது ;--அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்.;அதனால் உபகார சத்தி மறையும்.உபகார சத்தி மறையவே எல்லாத் தீமைகளும் தோன்றும்.

புண்ணியம் ,பாவம் என்பது !

புண்ணியம் என்பது -ஜீவ காருண்யம் ஒன்றே என்றும்.
பாவம் என்பது ஜீவ காருண்யம் இல்லாமை ஒன்றே என்றும் அறிய வேண்டும்.

அன்றி ,ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும்,அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும் அறிய வேண்டும் .

அவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகால் அறிந்து அடைந்து அனுபவித்து நினைவு பெற்ற சாத்திய ஞானிகளே மேற் குறித்த பேரின்ப லாபத்தைப் பெற்ற முத்தர்கள் என்றும்.

அவர்களே கடவுளை அறிவால் அறிந்து கடவுள் மயமானவர்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்...

மேலே கண்ட உண்மைகளை அறிந்து தெரிந்து கடைபிடித்து வாழ்கின்றவர்களே மனிதர்கள்.

கண்டதை எல்லாம் பேசி காலத்தை வீண் காலம் கழிக்காமல்  ஜீவகாருண்ய வல்லபத்தையும்,ஜீவ காருண்ய இலக்கணத்தையும் புரிந்து செயல்பட அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

பேரின்ப வாழ்க்கை பேரின்ப லாபம் !

பேரின்ப வாழ்க்கை பேரின்ப லாபம் !

உலகத்தில் உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பைக் பெற்றுக் கொண்டவர்கள் இந்த பிறப்பினால் அடையத் தக்க தலைப்பட்ட ஆன்ம இன்ப சுகத்தைக் காலம் உள்ள பொழுதே விரைந்து அறிந்து அடைய வேண்டும்.

ஒவ்வொரு மனித ஜீவர்களும் வாழ வேண்டிய வாழ்க்கை அடைய வேண்டிய ஆன்ம இன்ப லாபம் .மூன்று வகைப்படும் .

அந்தத் தலைப்பட்ட ஆன்ம இன்ப வாழ்வு எத்தனை வகை என்று அறியவேண்டில் ;--

1,இம்மை இன்ப வாழ்வு ....2,மறுமை இன்ப வாழ்வு ,,,3,பேரின்ப வாழ்வு என மூன்று வகை என்று அறிய வேண்டும்.

1,இன்மை இன்ப வாழ்வு ;--

அவற்றுள் சிறிய தேக கரணங்களைப் பெற்றுச் சிறிய முயற்சியால் சிறிய விடயங்களைச் சிலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை இம்மை இன்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.

இம்மை இன்ப லாபம் என்பது ;--மனிதப் பிறப்பில் ,தேகத்திலும் ,கரணங்களிலும்  -புவனத்திலும்,போகங்களிலும் குறைவு இன்றி நல்ல அறிவு உடையவர்களாய் ,பசி,பிணி,கொலை,முதலிய தடைகள் இல்லாமல் ,உறவினர் சினேகர் ,அயலார்,முதலியவர்களும் தழுவ சந்ததி விளங்கத் தக்க சற்குணம் உள்ள மனைவியோடு ,விடயங்களைச் சில நாள் அனுபவிக்கின்றதை இம்மை இன்ப லாபம் என்றி அறிய வேண்டும்.

இம்மை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது ? என்று அறிய
வேண்டில் ;---

அன்பு ,தயவு,ஒழுக்கம்,அடக்கம்,பொறுமை,வாய்மை,தூய்மை முதலிய சுப குணங்களைப் பெற்று அனுபவித்துப் புகழ் பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.

2,மறுமை இன்ப வாழ்வு

மறுமை இன்ப வாழ்வாவது யாது ? எனில்

உயர் பிறப்பில் பெரிய தேக கரணங்களைப் பெற்றுப் பெரிய முயற்சியால் பெரிய விஷயங்களைப் பலநாள் அனுபவிக்கின்ற இன்பத்தை மறுமை இன்ப வாழ்வு என்று அறிய வேண்டும்.

மறுமை இன்ப லாபம் எது ? எனில் ;

உயர் பிறப்பைப் பெற்று இம்மை இன்ப லாபத்தில் குறிக்கப்பட்ட நற் குணங்கள் எல்லாம் பொருந்த உயர் நிலையில்  சுத்த விடயங்களைப் பல நாள் அனுபவிக்கின்ற இன்ப லாபத்தை மறுமை இன்ப லாபம் என்று அறிய வேண்டும்.

மறுமை இன்ப லாபத்தை அடைந்தவர் பெருமை யாது ? என்று அறிய வேண்டில் ;--

அன்பு, தயவு,முதலிய சுப குணங்களைப் பெற்றுச் சுத்த விடய இன்பங்களை எண்ணியபடி தடை படாமல் முயன்று பல நாள் அனுபவித்துப் புகழ் பட வாழ்தல் என்று அறிய வேண்டும்.

3,,பேரின்ப வாழ்வு ;--
பேரின்ப வாழ்வாவது ?;--

எல்லாத் தேகங்களையும்,எல்லாக் கரணங்களையும்,எல்லாப் புவனங்களையும்,எல்லாப் போகங்களையும்,தமது பூரண இயற்கை விளக்கமாகிய அருட் சத்தியின் சந்நிதி விசேடத்தால் தோன்றி விளக்கஞ் செய்கின்ற பூரண இயற்கை உண்மை வடிவினராகிய ,கடவுளின் பூரண இயற்கை இன்பத்தைப் பெற்று ,எக்காலத்தும் ,எவ்விதத்தும் ,எவ்வளவும் தடைபடாமல் அனுபவிக்கப் படுகின்ற ஒப்பற்ற அந்தப் பெரிய இன்பத்தைப் பேரின்ப வாழ்வு என்று  அறிய வேண்டும்.

பேரின்ப லாபம் யாது ? எனில் ;--யாவும் தாமாய் விளங்குவதே .

பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை எது ? என்று அறிய வேண்டில்.

தோல் .நரம்பு,என்பு,தசை,இரத்தம் ,சுக்கிலம்,முதலிய அசுத்த பூத காரியங்களும் அவற்றின் காரணங்களாகிய அசுத்த பிரகிருதி அணுக்களுமாகிய தேகத்தை ,மாற்றி ,மாற்று இவ்வளவு என்று அறியப்படாத உயர்ந்த பொன்னாகிய ,

சுத்த பூத காரிய சுத்த தேகத்தையும்,பொன் வடிவாகத் தோற்றுதல் மாத்திரமே யன்றி ஆகாயம் போல் பரிசிக்கப் படாத சுத்த பூத காரண பிரணவ தேகத்தையும்,தோன்றப் படுதலும் இன்றி ஆகாயம் போல் விளங்குகின்ற ஞான தேகத்தையும் .பெற்றவர்களாய் இருப்பார்கள்.

அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்றும் ..ஒளி தேகம் என்றும்.....மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் ...முத்தேக சித்தி என்றும் ....பேரின்ப சித்தி பெருவாழ்வு என்றும் பல பெயர்களாகும்.

பேரின்ப லாபத்தை அடைந்தவர் வாழ்க்கை :--

அவரது உடம்பு ,;---மண்ணினது திண்மையால் உள்ளே தரிக்கப் படார்கள் .
புறத்தே ,மண்,கல்  முதலியவற்றால் எறியினும் ,அவை அவர் வடிவில் தாக்குவன அல்ல .உள்ளே நீரினது தன்மையால் குளிரப்படார்கள் , புறத்தே நீரில் அழுத்தினும் அவர் வடிவம் அழுந்தாது . உள்ளே நெருப்பினது வெம்மையால் சுடப்பட்டார்கள்.

புறத்தே நெருப்பிற் சுடினும் அவர் தேகத்தில் சூடும் வடுவும் தோன்றுவன அல்ல.உள்ளே ஆகாயத்தினது கலப்பினால் அந்தரிக்கப் படார்கள்.புறத்தே ஆகாயம் அவர் தேகத்தை அந்தரிக்க மாட்டாது .

ஆதாரத்திலன்றி நிராதாரத்திலும் அவர் தேகம் உலாவும்.அவரது கண்கள் முதலிய ஞானேந்திரியங்களும் ,வாக்கு  முதலிய கர்மேந்திரியங்களும் ,பார்த்தல் முதலிய விஷயங்களையும்,பேசுதல் முதலிய விஷயங்களையும் பற்றுவன அல்ல .

தயையினால் விஷயங்களைப் பற்ற வேண்டில் சுவர் ,மலை முதலிய  தடைகளும் ,அவர் கண்களை மறைப்பான அல்ல ,

அண்ட பிணடங்களில் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் உள்ள விடயங்களை அவர் கண்கள் இருந்த இடத்து இருந்தே கண்டு அறியும்.அண்ட பிண்டங்களில் எவ்விடத்து இருந்து பேசினும் அவர் செவிகள் இருந்த இடத்து இருந்தே கேட்டு அறியும்.

எவ்விடத்தில் இருக்கின்ற ரசங்களையும் அவர் நா,இருந்த இடத்திருந்தே சுவைத்து அறியும்.எவ்விடத்தில் இருக்கின்ற பரிசங்களையும் அவர் மெய் (உடம்பு ) இருந்த இடத்தில் இருந்தே பரிசித்து  அறியும்.எவ்விடத்தில் இருக்கின்ற சுகந்தங்களையும் அவர் நாசி (மூக்கு ) இருந்த இடத்தில் இருந்தே முகந்து அறியும்.

எவ்விடத்தில் இருக்கின்றவர் களுக்கும் அவரது கைகள் இருந்த இடத்தில் இருந்தே கொடுத்தல் கூடும் ...எவ்விடத்திலும் அவரது கால்கள் இருந்த இடத்தில் இருந்தே நடத்தல் கூடும் .அவரது வாக்கு ,எவ்விடத்தில் இருக்கின்ற எவ்வெவர் களோடும் இருந்த இடத்தில் இருந்தே பேசுதல் கூடும்.

மற்ற இந்திரியங்கள் ,இருந்த இடத்தில் இருந்தே எவ்விடத்தும் ஆனந்தத்தில் கூடும்.அவரது மனம்,முதலான கரணங்கள் எப்படிப்பட்ட விஷயங்களையும் பற்றுவன அல்ல .தயவினால் பற்றத் தொடங்கில் ,எல்லா உயிர்களினது எல்லாச் சங்கற்ப விகற்பங்களையும் ஒரு நிமிடத்தில் ஒருங்கே நினைத்து விசாரித்து  நிச்சயத்துக் கொள்ளும் .

அவர் அறிவு ஒன்றையும் சுட்டி அறியாது.தயவினால் சுட்டி அறியத் தொடங்கில் ,எல்லா அண்டங்களையும் ,எல்லா உயிர்களையும்,எல்லாப் பண்புகளையும்,ஒருங்கே ஒரு நிமிடத்தில் சுட்டி அறியும்.

அவர்கள் நிர்க்குணத்தரா ஆவார்கள் .அல்லது தாமச,இராசத,சாத்துவிக முதலிய முக்குணங்களாலும்,உள்ளே விகாரப் படார்கள்.புறத்தே அவரது குணங்கள் கரணங்களைப் பற்றுவன அல்ல ...உள்ளே பிரகிருதியினால் மூடப்படார்கள்.புறத்தே அவரது பிரகிருதி குணங்களைப் பற்றுவன அல்ல .

உள்ளே கால தத்துவத்தால் வேற்றுமைப் படார்கள். புறத்தே காலத்தால் அவரது திருமேனி தடைபடாது .உள்ளே நியதி அளவால் அளக்கப் படார்கள்.புறத்தே நியதியால் அவரது திருமேனி வரைபடாது ...

அன்றி காலம்,வித்தை,ராகம்,புருடன்,முதலிய மற்றைத் தத்துவங்களும் ,தத்துவ காரியங்களும் ,அவர்களுக்கு இல்லை.மாயையால் பேதப்படார்கள்.
சுத்த மகாமாயையைக் கடந்து  அதன் மேல் அறிவு உருவாக விளங்குவார்கள்.

ஆகாரம்,நித்திரை,மைத்துனம் ,பயம்,என்பவைகளால் தடைபடார்கள்.அவர்கள் தேகத்திற்குச் சாயை ,வியர்வை,அழுக்கு,நரை,திரை,மூப்பு ,இறப்பு,முதலிய குற்றங்கள் உண்டாவான அல்ல ...பணி,மழை,இடி,வெயில் ,முதலிய வற்றாலும் ,இராக்கதர்,அசுரர்,பூதம்,பிசாசு,முதலிய வற்றாலும்,

தேவர்,முனிவர்,மனிதர்,நரகர் ,மிருகம்,பறவை,ஊரவன் ,தாவரம்,என்பவைகளாலும், எவ்விடத்தும்,எக்காலத்தும்,அவர் தேகம் வாதிக்கப்படாது...வாள்,கத்தி,முதலிய கருவிகளாலும்,கண்டிக்கபடாது,

எல்லா அண்டங்களும்,அணுக்கள் போலச் சிறியதாகத் தோற்றாலும்,எல்லா அணுக்களும் அண்டங்கள் போலப் பெரியதாகத் தோற்றாலும்,அவர் தேகத்திற்கு உரியதாகும்.

மேலும் இறந்தோரை எழுப்புதல் ,வார்த்திபரை வாலிபர் ஆக்குதல்,முதலிய கரும சித்திகளும்,-யோக சித்திகளும்,--ஞான சித்திகளும், வர் சந்நிதியில் இடைவிடாது விளங்கும்.

சிருஷ்டித்தல் ,காத்தல்,அழித்தல்,மறைத்தல்,அனுகிரகித்தல்,என்கிற கிருத்தியங்களும் ,அவர் நினைத்த மாத்திரத்தில் நடக்கும்.பஞ்ச கர்த்தாக்களும் அவர் கடைக்கண் பார்வையால் தங்கள் தங்கள் நடத்துவார்கள்.

அவர் அறிவு கடவுள் அறிவாக இருக்கும்.அவர்கள் செய்கை கடவுள் செய்கையாக இருக்கும்.அவர்கள் அனுபவம் கடவுள் அனுபவமாக இருக்கும்.

சர்வ சத்தி உடையவர்களாய் எக்காலத்தும் அழிவில்லாதவர்களாய் ,ஆணவம்,மாயை,கன்மம்,என்னும் மும்மலங்களும் அம்மல வாதனைகளும் இல்லாதவர்களாய் பேரருள் வண்ணம் உடையவர்களாய் விளங்குவார்கள்.

சாரமாகிய ஒரு துரும்பும் ,அவரது திருநோக்கத்தால் உயிர் பெற்றுப் பஞ்ச கிருத்தியங்களும் செய்யும்.அவரது பெருமை வேதாந்த ,சிந்தாந்த ,கலாந்த,போதாந்த ,நாதாந்த ,யோகாந்தம் என்கின்ற ஆறு அந்தங்களிலும் விளங்கும் .அவற்றைக் கடந்தும் விளங்கும் என்று அறிய வேண்டும்.

இவை பேரின்ப லாபத்தை அடைந்தவர் பெருமை என்று அறிய வேண்டும்.

இவை யாவும் பெற்றவர்தான் வள்ளல்பெருமான் என்பதை மனிதர்களாகிய நாம் புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.      


 ,

வெள்ளி, 10 ஜூலை, 2015

சன்மார்க்க உருவத்தில் சில விஷமிகள் !

சன்மார்க்க உருவத்தில் சில விஷமிகள் !

ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய்யுலகை நம்பாதீர் ---வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர்
கென் மார்க்கமும் ஒன்றாமே !

வள்ளலார் மக்களுக்கு போதித்த சுத்த சன்மார்க்க கொள்கைகளை .திசை திருப்ப சில நபர்கள் வள்ளலார் கொள்கையில் இருப்பது போல் நடித்துக் கொண்டு மக்களை குழப்பிக் கொண்டு வருகின்றார்கள்.

சில சமய மத வாதிகளும் சன்மார்க்கத்தில் இருந்து கொண்டே சன்மார்க்க துரோகிகளாக இருக்கின்றார்கள்..

சில நபர்கள் சித்தர்கள் வழியைக் கடைபிடித்துக் கொண்டு .வள்ளலார் சொல்லிய கருத்தும் சித்தர்கள் சொல்லிய கருத்தும் ஒன்றுதான் என்று மக்களை திசைத் திருப்ப முயற்சி செய்கின்றார்கள்.சுத்த சன்மார்க்கத்திற்கு தீங்கு விளைவிக்கின்றார்கள்

வள்ளலார் கொள்கையை பின் பற்றுபவர்கள் யார் சொல்லுவதையும் கேட்காமல் வள்ளலார் சொல்லிய வள்ளலார் காட்டிய ,வள்ளலார் எழுதி வைத்துள்ள திருஅருட்பாவில் உள்ள சுத்த சன்மார்க்க கருத்துக்களை மட்டும் படித்து அதில் உள்ள உண்மைக் கொளகைகளை கடைபிடித்து வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

சுத்த சன்மார்க்கத்தை யாராலும் அழிக்கவோ ,மாற்றவோ ,திசை திருப்பவோ முடியாது .

சுத்த சன்மார்க்கம் என்பது ;- சாதி,சமயம்,மதங்களைக் கடந்தது.

மக்களை நழ்வழிப் படுத்த,உலகை திருத்த வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகளை விட்டால் வேறு வழியே இல்லை என்பதை மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

என் என்றால் சுத்த சன்மார்க்கம் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வள்ளலார் மூலமாக மக்களுக்கு போதிக்கப் பட்டதாகும்.

இருந்தாலும் சன்மார்க்கத்திற்கு வரும் அன்பர்கள் யாரிடமும் சிக்கிக் கொள்ளாமல் உஷாராக இருக்க வேண்டும்.இதுவே என்னுடைய
அன்பான வேண்டுகோளாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

வியாழன், 9 ஜூலை, 2015

”””””””””சன்மார்க்க உண்மை என்பது என்ன??””””

”””””””””சன்மார்க்க உண்மை என்பது என்ன??””””

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் ஐயா அவர்களுக்கு வணக்கம்;மற்றும் ஏனைய சன்மார்க்க நல்லெண்ண நண்பர்களுக்கும் வணக்கம்.

சன்மார்க்கத்தின் உண்மை என்பது வள்ளலார் நாம் சன்மார்க்க ஒழுக்கத்தில் வாழ்பவர்களுக்காக வழங்கிய மாபெரும் கொடை அல்லவா, அது என்ன?

உண்மை என்பது வள்ளலாருக்கு முன் வந்த எந்த ஒரு ஞானியர்களும் யோகிகளும் இருடியர்களும் தெரிவிக்காத ஒரு மாபெரும் அரிய பொக்கிஷமாகும் என்பதில் ஐயமிருக்க வாய்ப்பில்லை தானே? எனில் அது என்ன?

நாம் அனைவரும் சன்மார்க்க உண்மை என கருதுவதும், கருதி ஆசரிப்பதும் ஜீவகாருண்யம் எனும் மாமருந்தையே அல்லவா? அல்லது ஒளி வழிபாடு என கொண்டாடும் ஜோதி தரிசன வழிபாடு அல்லவா?..எனில் அது தான் சன்மார்க்க உண்மையா என நாம் மறுமதிப்பீடு செய்து ஆராயவேண்டிய தருணம் எப்போதோ கடந்து விட்டது, அந்த உண்மை என்ன?

பேருபதேசம் என வள்ளலார் கடைசியில் நமக்கு தந்து விட்டு சென்றது என்ன என்பதை சன்மார்க்கிகளாகிய நாம் அனைவரும் உலகம் உய்யும் பொருட்டு, சன்மார்க்கம் உய்யும் பொருட்டு தீர ஆலோசித்து பெறவேண்டிய பேருண்மையாக இருக்கின்றது;அந்த பேருண்மை என்ன?

இதுகாறும் வந்த ஞானிகள் உண்மையை மறைத்து விட்டனர் என வள்ளலாரே வருத்தப்படுகின்றார் எனில் அந்த உண்மையின் ரகசியமும் அதன் தன்மையும் எத்தகையது என நாம் சத்விசாரத்தினால் அறிந்து பெற்றுகொள்ளப்பட வேண்டியது மிகவும் அவசியமாகின்றதுவல்லவா?..அந்த உண்மை என்ன?

கொடி கட்டி கொண்டபடியினால் இனி எல்லோரும் உண்மையை அறிந்துகொள்ளுவார்கள் என வள்ளல் பெருமான் சொல்லி சென்றிருக்கின்றாரே, அந்த கொடி என்ன என அவர் சொல்லுமிடத்து ,அது நாபி முதல் புருவமத்தி வரை இருக்கும் ஒரு நாடி என விளக்குகின்றார்.அந்நாடியின் மேல் புருவமத்தியின் உட்புறத்தில் ஒரு சவ்வு தொங்குவதாகவும் ,அதன் நிறத்தையும் சொல்லுகின்றார் அல்லவா?...அதில் ஏறவும் இறங்கவும் நாடி இருப்பதாகவும் சொல்லுகின்றார் அல்லவா?...இதன் உண்மை என்ன?

நாம் சன்மார்க்கிகள் இதுவரைக்கும் இந்த கொடியினை கட்டிகொள்கிறோம் அல்லவா?..ஆனால் இதன் உண்மை எதுவென ஆலோசிக்கவோ, சத்விசாரம் பண்ணவோ நமக்கு நேரமேயில்லை போல தெரிகிறது. 150 வருடங்கள் கழிந்து விட்டாகினும் இதுவரைக்கும் யாரும் சன்மார்க்க கொடியினால் வள்ளலார் சொல்லி விட்டு சென்ர உண்மை என்னவென விளக்கமுன்வரவில்லை என்பது சற்று தீராத வேதனையாகவே உள்ளது.,அல்லவா?

மேற்சொன்ன பேருபதேச பகுதியை நாம் அனைவரும் படித்திருப்பதே தான், அப்படி படித்த நமக்கு தெரிந்த உண்மை என்ன/...அந்த உண்மையினால் கிடைத்த நன்மை என்ன? ஒன்றுமில்லை என்பதுவே பதில், ஏதோ கொடி இருக்கிறது, நாடி இருக்கிறது எனும் ஓர் அறிவு தான் கிடைத்திருக்கிறது. ஆனால் உண்மை கிடைத்திருக்கிறதா என கேட்டால் இல்லை என்பதே பதிலாக அனைவருக்கும் இருக்கும் அல்லவா?..அந்த உண்மை, வள்ளலாருக்கு முன் யாரும் அறிந்திராத உண்மை என்பது நாபி முதல் புருவமத்தி ஈறாக ஒரு நாடி இருக்கிறது என்பதுவா? அல்லது இதற்க்கு உட்கிடையாக மேலும் நாம் தெரிந்துகொள்ளப்பட வேண்டிய ஏதோ ஒன்று விட்டு போயிருக்கின்றதா/? வள்ளலார் சொல்லும் அந்த பேருண்மை என்ன என்பதை தயை கூர்ந்து சத் விசாரத்தினால் பெற்றுகொள்ள நாம் உரிமை உடையவர்களாய் இருப்பதனால், முன் வந்து விளக்கதினை விசாரிப்போமாக, வாழ்க வையகம்.


ஒரு சிறிய விளக்கம் ;--


ஆன்மாவின் வண்ணகம் வெள்ளை வண்ணம்  அருட்பெருஞ்ஜோதியின் வண்ணம் மஞ்சள் என்னும் பொன் வண்ணம் ..வெள்ளை வண்ணமான  ஆன்மாவை இவ்வுலகில் வாழுகின்ற போது ஏழு  வண்ணங்களாக ஏழு திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன.அதனால்  பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளது .பிறப்பு  இல்லாமல்  வாழ வேண்டுமானால் இறைவன் அருளைப் பெற்று திரைகளை நீக்க வேண்டும்.

திரைகள் நீங்கினால் உடம்பின் பஞ்ச பூத இயக்கம் நின்று விடும்.பஞ்ச பூத இயக்கம் நின்று போவதை ,கொடிக் கட்டிக் கொண்டோம் என்கின்றார் .இனி இவ்வுலகில் இயங்கும் இயக்கத்தை நிறுத்தி எல்லா உலகங்களிலும் எல்லா உயிர்களிலும் இயங்கும் ஆற்றலைப் பெற்றேன் என்கின்றார் .

ஆன்மா என்பது பரிசுத்தமான வெள்ளை வண்ணம் .அருள் என்பது மஞ்சள் என்னும் பொன் வண்ணம்.
ஆன்மாவும் அருளும் இணைந்ததை கொடிக் கட்டிக் கொண்டோம் என்று நினைக்கத் தோன்றுகின்றது .
அருளும் ஆன்மாவும் ஒன்றோடு ஒன்று பூரண மாக இணைந்து விட்டால் மரணம் இல்லாமல் வாழலாம் 

அதைத்தான் ;--

கொடி கட்டிக் கொண்டோம் என்று சின்னம் பிடி 
கூத்தாடு கின்றோம் என்று சின்னம் பிடி 
அடிமுடிக் கண்டோம் என்று சின்னம்பிடி 
அருள் அமுதம் உண்டோம் என்று சின்னம் பிடி . .

சிற்சபையைக் கண்டோம் என்று சின்னம் பிடி 
சித்திகள் செய்கின்றோம் என்று சின்னம்பிடி 
பொற்சபை புகுந்தோம் என்று சின்னம் பிடி 
புந்தி மகிழ கின்றோம் என்று சின்னம் பிடி ..என்றும்.

சிற்சபையும் பொற்சபையும் சொந்தம் எனதாச்சு 
தேவர்களும் மூவர்களும் பேசுவது என் பேச்சு 
இச்சமய வாழ்வில் எனக்கு என்ன இனி ஏச்சு 
என்பிறப்புத் துன்பம் எல்லாம் இன்றோட போச்சு.

இந்த உலகின் பிறவித் துன்பத்தை போக்கியவர் .மேலும் பிறவி இல்லாமல் வாழும் வாழ்க்கையை பெற்றதின் நோக்கத்தை கொடிக் கட்டிக் கொண்டதாகவும் சொல்லலாம் .

பொருள் இயக்கத்தை நிறுத்தி ,அருள் இயக்கத்தை பெற்றுக் கொண்டார் வள்ளல்பெருமான் அந்த இயக்கத்தின் வண்ணம் மஞ்சள் வெள்ளை.என்றும் நினைக்கின்றேன்.

அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்ப்பா முரசு 
அருள் ஆட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு 
மருட் சார்பு தீர்ந்தேன் என்று அறையப்பா முரசு 
மரணம் தவிர்த்தேன் என்று அறையப்பா முரசு .

என்ற பாடல்களின் வாயிலாக மக்களுக்குத் தெரியப்படுத்து கின்றார் . என நினைக்கின்றேன் .

கொடி என்பது தொப்புளுக்கும் ஆன்மாவிற்கும் உள்ள தொடர்பு. ஆன்மாவின் மத்தியில் அதாவது புருவ மத்தியில் ஒரு ஜவ்வு உள்ளது .அதன் வழியாக நாம் சுவாசிக்கும் காற்று ஆன்மாவை தொடர்பு கொண்டுதான் உள்ளே செல்கின்றது.அதுதான் பிராண வாய்வு, அந்த காற்றுதான் தொப்புள் என்னும் நாபி வரையில் சென்று உடம்பு இயக்கத்திற்கு உபாயமாக இருக்கிறது.அது ஏறவும் இறங்கவும் இருந்தால் இயக்கம் இயங்கிக் கொண்டு இருக்கின்றது என்பதாகும்.

பிராண வாய்வு ஏறவும் இறங்கவும்இயங்கிக் கொண்டு இருக்கும் வரையில் பஞ்ச பூத உடம்பு இயங்கிக் கொண்டு இருக்கும் அதுநின்றுவிட்டால் மரணம் வந்துவிடும் .அந்த பிராண வாயுவு இயங்காமல்,உடம்பை நிலைத்திருக்க வேண்டுமானால் அருள் வேண்டும்.அருளைப் பெற்றுவிட்டதால் .ஊன்உடம்பு ஒளி உடம்பாக மாறிவிடும்..ஏறி இறங்கும் ஜவ்வு என்னும் நரம்பை இயங்காமல் கட்டிவிடலாம்..அதன்பின் பிராணவாய்வு தேவை இல்லை .

அதைக் கொடிக் கொண்டோம் என்றும் சொல்லிஇருக்கலாம்...அதன் வண்ணம் எப்படி இருக்கின்றது என்பதை கால் பங்கு பொனமை என்றும் முக்கால்பங்கு வெண்மை என்றும் சொல்லுகின்றார் .நான் சொல்லுவதை அனுபவித்தில் கண்டால் மட்டுமே தெரியும் என்கின்றார். 

அனுபவம் எப்படி கிடைக்கும் ?

உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வார் இல்லை.கொடி கட்டிக் கொண்ட படியால் ,இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்.

முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரிய வொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள் .இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார் .தெரிவிக்கின்றார்,தெரிவிப்பார்.

நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்.அவசியம் இதற்குக் காரணமான தயவு இருக்க வேண்டியது .அந்த தயவு வருவதற்கு ஏதுவான பொது உரிமையும் கூட
இருக்க வேண்டும்.

இப்படி இருந்து கொண்டு இருந்தால் ,ஆண்டவர் வந்த உடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள் .எல்லோருக்கும் ,தாய்,தந்தை,அண்ணன்,தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப் பட்ட உதவி எவ்வளவோ ,அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும் படியான இடம் இந்த இடம்.

இது சத்தியம் ,இது சத்தியம்,இஃது ஆண்டவர் கட்டளை. என்று நிறைவு செய்கின்றார்.