வியாழன், 21 ஜனவரி, 2016

அருட்பெருஞ்ஜோதி கடவுள் யார் !

அருட்பெருஞ்ஜோதி கடவுள்  யார் !


உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை உலகிற்கு அறிமுகப் படுத்தியவர் வள்ளல்பெருமான் ஆவார் .

அவர் அறிமுகப் படுத்திய கடவுளின் உண்மையான மகா மந்திரம் தான் ''அருட்பெருஞ்ஜோதி  அருட்பெருஞ்ஜோதி  தனிப்பெருங்கருணை  அருட்பெருஞ்ஜோதி ''என்பதாகும்.

இந்த மந்திரத்திற்கு உள் எல்லா மந்திரங்களும் அடங்கி விடுகின்றன .எனவேதான் இதற்கு ''மகா மந்திரம்'' என்று பெயர் வைத்துள்ளார் .

இந்த மந்திரம் தத்துவங்களை எல்லாம் கடந்து தத்துவா  தீதத்தில் உள்ளது .எங்குமாய் விளங்கிக் கொண்டு உள்ளது.

இந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டு வந்தாலே துன்பம் தொலைந்து இன்பம் பெருகும்.

மரணத்தை வென்றவர்கள் மட்டுமே உண்மைக் கடவுளான ''அருட்பெருஞ்ஜோதி'' கடவுளைக் காண முடியும்...

தங்களுடைய உடம்பில் உள்ள ஆன்மாவை பார்க்கத் தெரிந்தவர்கள் அருட்பெருஞ்ஜோதியைப் பார்க்கலாம்..

அருட்பெருஞ்ஜோதியைத் வெளியில் தேட வேண்டாம் ,நம்முடைய சிரனடுவில் உள் ஒளியாக இருப்பவரே அருட்பெருஞ்ஜோதியாகும்.

அதன் அடையாளமாக புறத்தில் வைத்துள்ளது தான் வடலூரில் உள்ள ''சத்திய ஞான சபையாகும் '' அதன் உள்ளே சுடர்விட்டு எறிவதுதான் ''அருட்பெருஞ்ஜோதியின் ''விளக்கமாகும்..அதைத்தான் ''ஜோதி தரிசனம்'' என்று சொல்லப் படுகின்றது.


ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஒழுக்கம் ,உணவு ,வழிபாடு முக்கியமானது !

ஒழுக்கம் ,உணவு ,வழிபாடு முக்கியமானது !ஒழுக்கம் ,உணவு,வழிபாடு.... இந்த  மூன்றையும் முறையாக, சரியாக ,தெளிவாக கடைபிடிப்பவர்கள் வாழ்க்கையில் துன்பம் இல்லாமல் இன்பமாக வாழலாம்

ஒழுக்கம் என்பது ;--கடவுள் கொடுத்த இந்திரியங்களான கண் .காது,.மூக்கு,வாய் ,சிறுநீர் குழாய் .மலக்குழாய்.என்னும் ஒன்பது துவாரங்களை சிரமம் இல்லாமல்  பாதுகாப்பதே ஒழுக்கம் என்பதாகும்.

உணவு ;--ஒன்பது துவாரங்களில் வெளியே இருந்து உள்ளே அனுப்பும் துவாரம் வாய்.என்பதாகும் வாயின் வழியாகத்தான் உணவை உள்ளே அனுப்புகின்றோம்.வேறு எந்த வழியாலும் உடம்பிற்கு உணவை அனுப்பமுடியாது என்பது அனைவருக்கும் தெரியும்.

வயது முதிர்வதற்கும்,நோய் வருவதற்கும் மனம் மாற்றம் அடைவதற்கும் துன்பமும் தொல்லைகளும் ,இறுதியில் மரணம் வருவதற்கும் அடிப்படைக் காரணம் நாம் உண்ணும் உணவே காரணமாகும்.

எனவே தான் உணவே மருந்து ,மருந்தே உணவு என்று பெயர் வைத்துள்ளார்கள் .மாமிசம் அல்லாத ,இயற்கையால் கிடைக்கும் தாவர உணவை தினமும் காலை ஒன்பது மணிக்கும்,மாலை மூன்று மணிக்கும் .அரை வயிறு வரை சாப்பிட வேண்டும் .கால் வயிறு தண்ணீர் அருந்த வேண்டும்..இரவு உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது ..தினமும் இவற்றை கடைபிடிக்க வேண்டும்.

வழிபாடு ;--வழிபாடு என்பது இரண்டு வகையாகும் ஒன்று ஜீவ காருண்யம்,ஒன்று சத்விசாரம்,என்பதாகும்.

ஜீவ காருண்யம் என்பது;-- .நம்மால் முடிந்த அளவிற்கு பிற உயிர்களின் பசியைப் போக்க வேண்டும்.மேலும் துன்பப்படும் உயிர்களுக்கு உதவியாக இருக்க வேண்டும்.தயவும் கருணையும் உள்ளவர்களாக வாழ வேண்டும்.

சத்விசாரம் என்பது ;--நாம் யார் ? நமக்கும் நம்மைப் படைத்த இறைவனுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விசாரிக்க வேண்டும்...அந்த விசாரிப்பு நம்முடைய ஆன்மாவை தொடர்பு கொண்டு விசாரிக்க வேண்டும்.,

புற உருவ வழிபாடுகள் செய்யக் கூடாது,வணங்கக் கூடாது . .கடவுள் ஆன்ம ஒளியாக இருந்து நம்மை இயக்கிக் கொண்டு உள்ளார் என்பதை நினைந்து உணர்ந்து நெகிழ்ந்து ,அவற்றின் மேல் இடைவிடாது அன்பு செலுத்த வேண்டும்.

கடவுளும் ஒளியாக உள்ளார் .ஆன்மாவும் ஒளியாக உள்ளது ,உயிரும் ஒளியாக உள்ளது,மனமும் ஒளியாக உள்ளது ,கண்களும் ஒளியாக உள்ளது ..ஆதலால் புறத்திலே கண்ணாடிக் கூண்டில்அகல் விளக்கு ஜோதியை ஏற்றிவைத்து ஒளி வழிபாடு செய்ய வேண்டும்.

அதன் முன்னாடி அமர்ந்து சிறுது நேரம் மெல்லென அருட்பா பாடல்களில் உள்ள ,வேண்டுதல்,விண்ணப்பம் முறையீடு போன்ற பாடல்களை படிக்க வேண்டும்,

அடுத்து இடைவிடாது கண்களைத் திறந்து ஒளியை நோக்கி பார்த்துக் கொண்டு இருக்க வேண்டும்.அப்படி செய்து கொண்டே இருந்தால்,புறத்தில் உள்ள ஒளி மறைந்து அகத்தில் உள்ள ஆன்மாவிற்கு கண்கள் சென்று விடும்.

ஒழுக்கம் உணவு வழிபாடு என்ற மூன்றையும் முறையாக சரியாக கடைபிடித்துக் கொண்டு வந்தால், துன்பம் இல்லாமல் இன்பமுடன் வாழலாம் .மேலும் முழுமையாக  தெரிந்து கொள்ள வள்ளல்பெருமான் எழுதிய திருஅருட்பா என்ற அருள் நூலில் தெளிவாக உள்ளது படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் விரிவான சந்தேகங்களைத் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளுங்கள் ..இலவசமாக வழங்கப்படும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896,

சனி, 16 ஜனவரி, 2016

நடிகர் சிவகுமார் !

நடிகர் சிவகுமார் !

சிவகுமார் சிறந்த மனிதர் ,சிறந்த நடிகர், சிறந்த ஞாபக சக்தி உடையவர் ,சிறந்த ஒழுக்கம் உள்ளவர் /சிறந்த சொற்பொழிவு செய்பவர்.சினிமா உலகில் நல்ல பெயர் பெற்றவர் .

அவர்மீது எனக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் உண்டு அதனால் இதை எழுதுகிறேன்...

இவ்வளவு இருந்தும் கற்பனைக் கதையான ''மகா பாரதத்தில்'' அதிக கவனம் செலுத்தி உள்ளார் வாழ்க்கையில் பெற வேண்டிய முக்கிய ஆற்றலையும் சக்தியும் பெற வாய்ப்பு இருந்தும் பெற முடியாமல் கற்பனைக் கதைகளையே கற்பனைகளாக சொல்லி வருகின்றார் .

கதைகளை சொல்லிய காலத்தை கழித்துக் கொண்டே இருப்பது வாழ்க்கை நெறி அல்ல ,

மகா பாரதக் கதையின் உட்கருத்து என்னவென்றே தெரியாமல் .உண்மையாக நடந்தது போலவே மக்களை குழப்பிக் கொண்டு வருகின்றார்கள் .அவர்மட்டும் அல்ல அனைத்துப் பேச்சாளர்களும் அப்படித்தான் பேசிக் கொண்டு வருகின்றார்கள்.

தமிழ் நாட்டில் தோன்றி உலக உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் போதித்தவர்..''திருஅருட்பிரகாச வள்ளலார்'' மரணத்தை வென்ற மாபெரும் அருளாளர் .

மனிதன் எப்படி வாழ வேண்டும் என்ற வாழ்க்கை நெறியை போதித்தவர் வள்ளல்பெருமான்.

அவர் போதித்த உண்மை நெறியான சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறியை .நடிகர் சிவகுமார் கடைபிடிக்க தவறியது ஏன் என்பது எனக்கு புரியவில்லை ..

வள்ளலார் எழுதிய ''திரு அருட்பா''என்ற அருள் நூலை அவர் படிக்கவில்லையா ? அவருக்கு அந்த அருள் நூல் கிடைக்கவில்லையா ?
தயவு செய்து சிவகுமார் அவர்கள் வள்ளலார் எழுதிய அருல்நூலான ''திருஅருட்பா''வை படிக்க வேண்டும் .

அப்படி அவருக்கு வாய்ப்பு கிடைத்து படித்துப் பார்த்தால் மற்ற பொய்யான நூல்களை.தூக்கி எரிந்து விடுவார் .

அப்படி கிடைக்கவில்லை என்றால் அவர் சாதாரணமான மனிதர் என்ற வரிசையில் உள்ளவர் என்பது தெளிவாகும் .

திருஅருட்பா என்ற நூல் கிடைக்கவில்லை என்றால் இந்த பிறவியில் அவருக்கு இறைவன் கருணை இல்லை என்பதை தெரிந்து கொள்ளலாம் .
இறைவன் கருணை உள்ளவர்களுக்கு மட்டுமே திருஅருட்பா என்னும் அருள் நூல் கிடைக்கும் மற்றவர்களுக்கு கிடைக்காது என்பதுதான் உண்மையாகும்.

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !....வள்ளலார் .

அவருக்கு திருஅருட்பா கிடைக்க வேண்டும்,அவர் அவற்றை முழுமையாக படிக்க வேண்டும்

அவர் இந்த பிறவியில் கிடைக்க வேண்டிய அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896,

தேர்தலில் வெற்றி யாருக்கு !

தேர்தலில் வெற்றி யாருக்கு !


தமிழகத்தில் உள்ள ஆளும் கடசி தலைவர்களும் ,எதிர் கட்சி தலைவர்களும் ,மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்களும் ,தங்களுடைய அசையும் சொத்துக்கள் அசையாத சொத்துக்கள் அனைத்தையும்  அரசாங்கத்திற்கு பொது சொத்தாக எழுதி வைத்துவிட வேண்டும்.

அவர்களிடம் எந்த சொத்துக்களும் இல்லாமல் தனித்து இருக்க வேண்டும்.

கட்சி விளம்பரம் போஸ்டர் எதுவும் வைக்கக் கூடாது.

அவர்கள் அறிவும் திறமையும்,மக்களுக்கு நன்மை செய்யும் ஆற்றலும், என்ன என்பதை  மட்டுமே தேர்தலில் மக்களிடம் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்க வேண்டும்.

நல்ல ஆட்சி அமைத்து செயல்படும் திறமை மிக்கவர் யார்? என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் .

அந்தக் காலம் வந்தால் பொற்காலமாக மாறும் வாய்ப்பு உள்ளது.மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்.

இதைத்தான் வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ளார் .

கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க-தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெருக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து ...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..

வியாழன், 14 ஜனவரி, 2016

உயிர்களை துன்புறுத்துவது இயற்கைக்கு விரோதமானது !

உயிர்களை துன்புறுத்துவது இயற்கைக்கு விரோதமானது !


ஒரு வாரத்திற்கு முன்பே நண்பர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தேன்.

ஜல்லிக் கட்டு விளையாட்டுகள் வேண்டாம் என்று...மக்கள் கேட்கவில்லை,அரசியல் வாதிகளும் கேட்கவில்லை  உச்ச நீதி மன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து உள்ளது மிகவும் பாராட்டுக்கு உரியது.

குழந்தைகள் போல் அன்புடன் ஆதரவு காட்டி வளர்த்த ஆடுமாடுகளை ,கொலை செய்வதும் ,அதன் புலாலை உண்பதும் .துன்புறுத்துவதும் இயற்கைக்கு விரோதமான செயலாகும்.

ஜல்லிக் கட்டுக்காக வளர்த்த காளைகளை ஜல்லிக் கட்டு நடைபெற வில்லை என்றால் அடிமாட்டுக்கு விற்கப்படும் என்று அதன் உரிமையாளர்கள் சொல்லுகிறார்கள் ..இது எவ்வளவு பாவச்செயலாகும்..

காலை மாடுகளை வளர்த்தால் அதை துன்புறுத்த வேண்டுமா ? அடிமாட்டுக்கு விற்கப்பட வேண்டுமா என்று சுப்ரீம் கோர்ட் கேட்டு உள்ளது .

தமிழ் நாட்டில் பொங்கல் விளையாட்டுகள் நிறைய  இருக்கின்றது அவற்றை மக்கள் விளையாடி மகிழ்ச்சியுடன் கொண்டாடலாமே .

பாரம்பரிய விளையாட்டு என்று ஜல்லிக் கட்டு விளையாட்டை  மட்டும் பேசிக் கொண்டு இருக்கும் அரசியல்வாதிகள்,மற்றும் பொதுமக்கள் மற்ற விளையாட்டுகளை பற்றி பேசாமல் இருப்பது ஏன்? என்ற கேள்வி ஜீவ காருண்யம் உள்ள,,, உயிர் இறக்கம் உள்ள,,  அறிவாளிகள் மத்தியில் எழுந்துள்ளது.

மக்களே சிந்தியுங்கள் உயிர்களை துன்புறுத்தாமல் நல்ல விளையாட்டுகள் நிறைய உள்ளது .அதில் கவனம் செலுத்துங்கள்..

பாரம்பரியம் என்ற பெயரில் உயிர்களை வதைப்பது ..கடவுளின் முன் நிறுத்தி தண்டனைக் கொடுக்கும் குற்றமாகும்....

மேலும் உயிர்களைக் கொள்வது,அதன் புலாலை உண்பது,உயிர்களை துன்புறுத்துவது பெரிய பாவச்செயலாகும் ....இந்த தவறுக்கு மனிதன் தண்டனை கொடுக்க முடியாது.இறைவன்தான் தண்டனைக் கொடுப்பார் .

இயற்கைக்கும் இறைவனுக்கும் பயந்து கட்டுப்பட்டு வாழ்வதே சிறந்த வாழ்க்கையாகும் ,இந்த பொங்கல் நாளின் சிறந்த மகிழ்ச்சி பொங்கும் நாளாகும்...

சிந்திப்பீர் செயல்படுவீர்கள் ..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

புதன், 13 ஜனவரி, 2016

புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !

புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் !
தமிழர் திருநாளான புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள் என்பது தமிழர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல .உலகில் உள்ள எல்லா விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கு உதவியாக இருக்கும் ஆடு மாடுகள் போன்ற  உயிர் இனங்களுக்கும் சொந்தமானது.,

ஏன் என்றால் தமிழ் பேசும் இனத்தால் தைப்பொங்கல்,என்னும் பெயர் வழங்கப்பட்டது .

தமிழ் மொழி என்பது உலக மொழிக்கு எல்லாம் தந்தை  மொழியாகும்.தமிழ் இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட மொழியாகும்.. மாதங்களும்,கிரகங்களும் நாட்களும்  மனித வாழ்க்கைக்கு தகுந்தாற்போல்.தமிழ் மொழியால்  வகுக்கப்பட்டதாகும்.

தமிழ் நாட்டில் இருந்து தைப்பொங்கல் என்பது படைக்கப்பட்டதால் தமிழர்களுக்கு மட்டும் சொந்தம் என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.தமிழும் தமிழால் வகுக்குப்பட்ட பண்பாடுகளும் உலகில் உள்ள அனைவருக்கும் பொதுவானதாகும்.

அதேபோல் தைப்பொங்கல் எல்லா விவசாயிகளுக்கும் சொந்தமானது.

மனிதனாக பிறந்தவர்கள் மனிதனாக வாழ்ந்து மற்றவர்களையும் மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும் என்பதை வகுத்து தந்த மொழி தமிழ் மொழியாகும்.

எல்லா உயிர்களுக்கும் உணவு மிகவும் முக்கியமானதாகும்.அதனால்தான் ''உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் ,மற்று எல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்'' .என்பது சான்றோர்களின் வாக்கு .

உழவுத்தொழில் இல்லை என்றால் மனித உயிர்கள் வாழ்வதற்கு வழியே இல்லை .ஆதலால் நாம் வணங்குவதும் வாழ்த்துவதும் உழவுத் தொழில் செய்யும் மனிதர்களையே யாகும்.

உலகில் ஊழல் இல்லாத ஒரே தொழில் விவசாயம் மட்டுமே !

உணவு கொடுப்பவர்களே கடவுளாகும் ...

வருடம் முழுவதும் உழைக்கும் விவசாயிகளுக்கு தைமாதம் என்பது உழவர்களுக்கு ஒய்வு கொடுக்கும் காலமாகும்.ஆதலால் தைமாதத்தில் மக்கள் உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்பதை வெளிப்படுத்த தைப்பொங்கல் வைத்து கொண்டாடப்படுகிறது.

.''தைபிறந்தால் வழிபிறக்கும்'' என்பது... மறுபடியும் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதாகும்.

வருகின்ற பொங்கல் திரு நாளில் அனைத்து தரப்பு மக்களும் புத்தாடை உடுத்தி,புதிய பானையில்  பொங்கல் வைத்து,இன்ப்பான கரும்பை சுவைத்து அனைத்து மக்களுக்கும் கொடுத்து தங்கள் குடும்பமும் உண்டு  மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம் .

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும், விவசாயிகளுக்கும்  புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனிமையாக வாழ்வோம் இன்பமுடன் வாழ்வோம் .

ஆன்மநேயன்;--கதிர்வேலு ,ஈரோடு .

செவ்வாய், 12 ஜனவரி, 2016

உலகம் எங்கும் ஒளி வழிபாடுதான் !

உலகம் எங்கும் ஒளி வழிபாடுதான் !


உலகம் எங்கும் ,வள்ளல்பெருமான் சொல்லிய, காட்டிய ஒளி வழிபாடுதான் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும்.

இது அருட்பெருஞ்ஜோதி வள்ளல்பெருமானின் வாக்கு ...

உலகம் எலாம் போற்ற ஒளி வடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்து ---திலகன் என
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்து .....

உண்மையான ஒளி !

எல்லா மதங்களும் சமயங்களும் ஒளி வழிப்பாட்டை ஏற்றுக் கொள்கின்றார்கள் .ஆனால் அவர்கள் காட்டிய ஒளி வேறு ,வள்ளல்பெருமான் காட்டிய ஒளி வேறு ,என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமான் காட்டிய ஒளி ....சமயங்கள், மதங்கள், காட்டிய அக்கினி,சூரியன்,சந்திரன் ,நட்சத்திரங்கள் போன்ற ஒளிகள் அல்ல ..இவைகள் யாவும் ''இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஒளியால்'' படைக்கப்பட்ட ஒளிகள்.

வள்ளல்பெருமான் காட்டிய ஒளி ''அருட்பெருஞ்ஜோதி என்னும்'' ஒளியாகும்.இவைதான் அனைத்தையும் படைக்கும் ஒளியாகும்.

பலகோடி அண்டங்களையும் ,அதில் உள்ள பொருள்கள் அனைத்தையும் படைத்தல்,,காத்தல்,;;குற்றம் நீக்குவித்தல், ,பக்குவம்வருவித்தல்,;;விளக்கஞ் செய்வித்தல் ;;;போன்ற ஐந் தொழில் முதலிய பெருங் கருணைப் பெரும் தொழில்களை ..

இயக்கு விக்கின்றவர் என்றும் ,,.எல்லாம் ஆனவர் என்றும்,,,ஒன்றும் அல்லாதவர் என்றும், சர்வ காருண்யர் என்றும்,....சர்வ வல்லபர் என்றும் ..எல்லாம் உடையராய் ..தமக்கு ஒரு வாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெரும் தலைமை...

''அருட்பெருஞ்ஜோதியர்'' என்பதை ,சத்திய அறிவால் (உண்மை அறிவு ) அறியப்படுகின்ற ''உண்மைக் கடவுள் ஒருவரே''என்பதை வள்ளல்பெருமான் உலக மக்களுக்கு காட்டி உள்ளார்

அவர் அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கம் இன்றி நிறைந்த ''சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொது வெளியில்( அருள்வெளியில் ) அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் என்பதை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார் .

அந்த ஒளியின் ஏகதேசம் தான்.. ஆன்மா என்பதாகும் .அதுதான் உள் ஒளி என்பதாகும்...எல்லா உயிர்களின் இயக்கத்திற்கும் அதுவே காரண காரியமாய் உள்ளதாகும்.

எனவே மக்கள் தத்துவ ஒளிகளை,உருவங்களை  வழிபாடு செய்யாமல் உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஒளியை வழிபாடு செய்யுங்கள் என்பதின் அடையாளமாக ..வடலூர் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை அமைத்து ஒளி வழிப்பாட்டை ,உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தி உள்ளார் ....

இவை உலகம் முழுவதும் மக்கள் பின்பற்ற வேண்டும் என்பது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணை கட்டளை என்பதை வள்ளலார் விளக்கி உள்ளார் ..

ஆண்டவர் கட்டளை என்பதால் மக்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் இனி கொஞ்சம் காலத்தில் உலகம் முழுவதும் தடையற்ற உண்மையான ஒளி வழிபாடு தழைத்து ஓங்கும்...

முன்னுள்ள மார்க்கங்கள் நிலை ;--

முன்னுள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னுளம் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத்து அருட்பெருஞ்ஜோதியார் எய்தவே ...

பன்மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே --சொன்மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு....

கண் கொண்ட பூதலம் எல்லாம் சன்மார்க்கம் கலந்து கொண்டே
பண்கொண்ட பாடலில் பாடிப்பாடி படித்துப் பரவுகின்றார்
விண்கொண்ட சிற்சபை ஒன்றே நிறைந்து விளங்குகின்ற
தென்கொண்ட மற்றை மார்க்கங்கள் யாவும் இறந்தனவே !

உலகில் உள்ள,பொய்யான  அனைத்து மார்க்கங்களும் இருக்கும் இடம் தெரியாமல் இறந்து ,அழிந்து ,மறைந்து போய்விடும்.

அருட்பெருஞ்ஜோதியால தோற்றுவிக்கப்பட்ட ,''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்''என்ற மார்க்கம் உலகம் முழுவதும் நிறைந்து விளங்கும்..ஒளிவழிபாடு   ஒன்றே உலகம் எல்லாம் ஒளி வீசும் ....

அனைத்து இல்லங்களிலும் ஒளிவழி பாடு நிலைத்து நிற்க வேண்டும்.எல்லா மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும்.இதுவே இறைவன் பெருங் கருணையாகும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 ...

திங்கள், 11 ஜனவரி, 2016

24-1-2016 அன்று வடலூரில் தைப்பூசம் !

24-1-2016 அன்று வடலூரில் தைப்பூசம் !

அனைவருக்கும் வந்தனம் .

வடலூரில் வருகின்ற 24-1-2016,அன்று தைப்பூச ஜோதி தரிசனம் சிறப்பாக நடைபெற உள்ளது .

26-1-2016 ,அன்று,, வடலூர் அருகில் உள்ள ..., வள்ளலார்  சித்திப்பெற்ற இடமான சித்திவளாகம் என்னும் மேட்டுக்குப்பத்தில் திருஅறை தரிசனம் காட்டப் படுகின்றது.

பல லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் காணவும், திருஅறை தரிசனம் காணவும்  வருவார்கள் .

நீங்கள் அனைவரும் வாருங்கள் ..ஜோதி தரிசனத்தை ஒரு முறை கண்டாலே உங்களின் துன்பம தொலைந்து இன்பம் பெருகும்  ,

துன்பத்தைப் போக்கி இன்பத்தைக் கொடுக்கும் ஒரே  இடம் வடலூர் ஜோதி தரிசனம் .

அங்கு சாதி,சமயம் மதம் என்ற பேதம் இல்லாமல் எல்லா மக்களும் வந்து ஜோதி தரிசனம் காணலாம் .

அங்கு சாதி,சமய,மதங்களில் உள்ள அபிஷேகம் ,ஆராதனை,ஆச்சார சங்கற்பங்கள்  போன்ற பொய்யுலக ஆச்சாரங்கள் கிடையாது,மேளம் தாளங்கள், ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டங்கள் எதுவும் கிடையாது,

இடைத்தரகர்கள்.கிடையாது உயரந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் கிடையாது .

கடவுளைக் காண பணம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அனைத்துத் தர மக்களும் நேரடியாக காண்பதுதான் வழிபாடு ..

அன்னதானம் சிறப்பு !

மேலும் வடலூரில் அன்னதானம் செய்வதுதான் வள்ளலார் போதித்த முக்கிய கொள்கையாகும்.

அவர் அவர்களால் முடிந்த அளவு ஜீவ காருண்யம் செய்து,அதனால் வரும் ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள் என்று வள்ளலார் தெளிவாக விளக்க்ம் தந்துள்ளார் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எல்லோருக்கும் சமமான அருளை வாரி வழங்குவார்.

நீங்கள் இன்பமுடன் வாழ வேண்டுமானால் .வடலூர் வந்து அன்னதானம் செய்யுங்கள்.

23-5-1867,,ஆம் தேதி வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த ''அணையா அடுப்பு'' என்னும் சத்திய தருமச்சாலை மக்களின் பசிப்பிணியைப் போக்கிக் கொண்டு உள்ளது. அங்கும் நீங்கள் அன்னதானம் செய்யலாம்.

மேலும் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து சன்மார்க்க சங்கங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தும் ஆங்காங்கே அன்னதானம் செய்து கொண்டு இருப்பார்கள் அங்கு வேண்டுமானாலும்,செய்யலாம்.

இருப்பவர்கள் உங்களால் முடிந்த பொருள் உதவி செய்யலாம் இல்லாதவர்கள்  உடல் உதவி செய்யுங்கள்   எதுவும் செய்ய முடியாதவர்கள் வந்து ஜோதி தரிசனம் கண்டு மகிழுங்கள்.

வடலூர் வட திசைக்கு வந்து ஜோதி தரிசனம் தரிசித்தால் நல்ல வரம் பெறலாம்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896...

ஞாயிறு, 10 ஜனவரி, 2016

பக்தி என்பது என்ன ?

பக்தி என்பது என்ன ?


கோவில்களில் பொய்யான உருவங்களை வைத்து ,மெய்யான உருவங்களை அடிமையாக்குவதே பக்தி என்பதாகும் .

அப்பாவி மனிதர்களின் உழைப்பை கொள்ளை அடிக்கும் கூட்டம் செய்த சூழ்ச்சிதான் பக்தி என்பதாகும்.

பக்திக்கும் ஆன்மாவிற்கும் சம்மந்தமே இல்லை .

வறுமையில் வாடும் உயிர் உள்ள ஜீவன்களுக்கு உதவி செய்வதே கடவுள் வழிபாடு ,என்பதாகும்.

எனவே தான் வள்ளல்பெருமான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.

உயிர் உள்ள ஜீவன்களின் உயிரைக் காப்பாற்றுவதே வழிபாடாகும் ....

உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார் .

ஆலயங்களில் கொட்டும் பணத்தை ஏழைகளின் வயிற்றில் கொட்டுங்கள் ..உங்களின் துன்பங்கள் இருக்கும் இடம் தெரியாமல் தொலைந்துவிடும் .

உங்களின் உயிருக்கு ஆபத்து வராமல் பாதுகாக்க வேண்டுமானால் ,மற்ற உயிர்களைக்  காப்பாற்ற வேண்டும்..

துன்பத்தை துடைக்கும் ஒரே மருந்து  ஜீவ காருண்யம் என்னும் கருணை மருந்து  மட்டுமே....

 ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் !

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் !


ஒவ்வொரு வருடமும் தைப்பூசத்தன்று தமிழகத்தில் உள்ள கடலூர் மாவட்டம் வடலூரில் உள்ள ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையில்'', ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.

சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை 1872,ஆம் ஆண்டு ''திரு அருட்பிரகாச வள்ளலாரால்;''தோற்றுவிக்கப் பட்டதாகும்.

வடலூரில் காட்டப்படும் ஜோதி தரிசனம் வித்தியாசமானது,தனிச்சிறப்பு வாய்ந்தது .

இந்த ஆண்டு 24-1-2016, ஆம் தேதி காலை 6.00,மணிக்கும் 10.00,மணிக்கும்,நண்பகல் 1.00,மணிக்கும்,இரவு 7.00,மணிக்கும் 10.00,மணிக்கும் ,மறுநாள் காலை 5.00,மணிக்கும் ,ஆக ஆறு காலங்களில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகின்றது.

அன்று காலை நேரத்தில் கிழக்கே சூரியன் தோன்றுவதும் ,மேற்கே சந்திரன நிறைவு பெறுவதும் ,மத்தியில் அருட்பெருஞ்ஜோதி தெரிவதும்,ஒரே நேரத்தில் மூன்று ஜோதியைக் காண்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். இதுவே வடலூரின் தைப்பூச ஜோதி தரிசனத்தின் தனிசிறப்பாகும் .

ஏழு திரைகள் என்பது மனிதனின் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகளாகும்.அந்த திரைகள் நீங்கினால்தான் கடவுளைக் காணமுடியும் என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையாகும்.அதனால் வடலூரில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.,

ஜோதி தரிசனத்தை காண்பதற்கு தமிழ் நாட்டில் இருந்தும் ,மற்ற மாநிலங்களில் இருந்தும்,வெளி நாடுகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான மக்கள் ஜோதி தரிசனம் காண வருகின்றார்கள் .

அங்கே சாதி,சமயம்,மதம்,இனம்,நாடு,போன்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து தர மக்களும் வந்து ஜோதி தரிசனம் கண்டு மனமகிழ்ச்சியுடன் செல்வார்கள்.

மேலும் அங்கே அபிஷேகம் ஆராதனை,,மேளம்,தாளங்கள் போன்ற எந்த சமய, மத ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் எதுவும் இல்லாமல் ஜோதி தரிசனம் மட்டுமே காண்பிக்கப்படும் .ஒத்தாரும் ,உயர்ந்தாரும் ,தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுடன் வந்து வழிபடும் இடமாகும்.

வடலூருக்கு வரும் பல லட்சக்கணக்கான மக்கள் அனைவருக்கும், வடலூரில், வள்ளலார் தோற்றுவித்த சத்திய தருமச்சாலையிலும் , பல சன்மார்க்க சங்கங்களிலும் இடைவிடாது உணவு வழங்கிக்கொண்டே இருப்பார்கள்.மக்கள் அனைவரும் தங்களுடைய பசியை ஆற்றிக் கொண்டு ஜோதி தரினம் பார்க்க வேண்டும் என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையாகும் .

ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பது வள்ளலார் வகுத்து தந்த''சுத்த சன்மார்க்க தனிப் பெரும் நெறியாகும்''.,அதை அனைத்து சன்மார்க்க சங்கங்களும்,சங்கத்தை சார்ந்தவர்களும்  கடைபிடித்து நிறைவேற்றி வருகிறார்கள்.இவைகள் யாவும் வடலுரின் தனிச்சிறப்பாகும்.

அனைத்து உயிர்கள் இடத்தும் ஈரமும், தயவும் கருணையும், இரக்கமும் காட்ட வேண்டும் ,ஆண்டவர் இடத்தில் இடைவிடாத அன்பும் செலுத்த வேண்டும் என்பதுதான் வள்ளலாரின் வழிபாட்டு முறைகளாகும்,

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பது வள்ளலாரின் அழுத்தமான செய்தியாகும்.கடவுள் அன்பும், தயவும்,கருணை உள்ளவர் நாமும் அன்பு,தயவு,கருணை உள்ளவர்களாக மாறினால்தான் இறைவன் அருளைப் பெறமுடியும்.வேறு எந்த வழிகளாலும், செயல்களாலும் கடவுளின் அருளைப் பெறமுடியாது என்பது வள்ளலாரின் அழுத்தமான கொள்கையின் செய்தியாகும் .

ஜோதி தரிசனம் !

பலகோடி அண்டங்களையும்.அதில் உள்ள அனைத்துப் பொருள் களையும் வேற்றுமை இல்லாமல் இயக்கிக் கொண்டு இருக்கும் ஆற்றல் மிக்க ஒரே ஒரு சக்தி, அதுதான்  ''அருட்பெருஞ்ஜோதி ''என்னும் அருள் ஒளியாகும்,  அதுவே கடவுள் என்று சொல்லப்படும் ''அது அருள் நிறைந்த அணு துகள் '' என்பதாகும்.அந்த அணுத்துகள் இல்லை என்றால் அண்டங்கள் உலகங்கள்,உயிர்கள் பொருள்கள் எதுவும் இயங்காது .
அவர் மனித உருவமோ வேறு உருவமோ கிடையாது.(அவர் என்பது அருள் ஒளி ) அந்த ஒளி எப்படி உள்ளது  எங்கு உள்ளது,எவ்வாறு செயல்படுகின்றது  என்பதை வள்ளல்பெருமான் கண்டு,களித்து,அதன் அருளைப் பெற்று அனுபவித்து மக்களுக்கு அறிமுகப்படுத்தி உள்ளார் .

கடவுள் ஜோதிமயமானவர் !

இயற்கையில் தானே விளங்குகின்றவராய் உள்ளவர் என்றும்,இயற்கையில் தானே உள்ளவராய் விளங்குகின்றவர் என்றும்,இரண்டு படாத பூரண இன்பமானவர் என்றும்,
எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகங்களையும்,எல்லா பதங்களையும்,எல்லா சத்திகளையும்,எல்லா சத்தர்களையும்,எல்லா கலைகளையும்,எல்லா பொருள்களையும்,எல்லாத் தத்துவங்களையும்,எல்லா தத்துவிகளையும்,எல்லா உயிர்களையும்,எல்லா செயல்களையும் எல்லா ஞானங்களையும்,எல்லா பயன்களையும்,எல்லா அனுபவங்களையும்,
மற்ற எல்லாவற்றையும் தமது திருவருட் சத்தியால் ,தோற்றுவித்தல்,.. வாழ்வித்தல்,..குற்றம் நீக்குவித்தல்,..பக்குவம் வருவித்தல்,..விளக்கஞ் செய்வித்தல்,என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்று விக்கின்றவர் என்றும் ,எல்லாம் ஆனவர் என்றும்,ஒன்றும் அல்லாதவர் என்றும் ,சர்வ காருணயர் என்றும் சர்வ வல்லபர் என்றும், எல்லாம் உடையராயத் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத
தனிப்பெரும் தலைமை கடவுள் ''அருட்பெருஞ் ஜோதியர் ''என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ,அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார் ..
அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை இவ்வுலகின் இடத்தே ஜீவர்களாகிய (மனிதர்கள் ) நாம் அறிந்து. அன்பு செய்து அருளை அடைந்து ,அழிவில்லாத சத்திய சுகப்பூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழ வேண்டும் என்பதற்காக வடலூர் பெருவெளியில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையைத் தோற்றுவித்து '' அதன் மத்தியில் இயற்க்கை விளக்கமாக ஜோதியை (ஒளியை ) வைத்துள்ளார் வள்ளல்பெருமான்.
ஆதலால் வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு வருடமும் தைபூசத்தன்று ஏழு திரை நீக்கி ''ஜோதி தரிசனம்'' காட்டப்படுகிறது.,
எல்லா நாட்களையும் விட ''தைப்பூசம்'' என்னும் நாள் அருள் நிறைந்த நாள் என்பதாலும் ,இறைவன், அன்று எல்லா உயிர்களுக்கும் நிறைவான அருள் வழங்கும் நாள் என்பதாலும், இறைவன் உலகை நோக்கி வருகிறார் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது.
மேலும் முக்கியமானது ,இறைவன் உலகை நோக்கி வருவதால்,அந்த நாள் உயிர்களுக்கு நிறைவான இன்பம் தரும் நாள் என்பதாலும் இயற்கையில் உள்ள கிரகங்கள் யாவும் தன்னுடைய பணிகளை (வேலைகளை ) செய்யாமல் உயிர்களுக்கு நன்மையே செய்யும் என்பதாலும் ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது அதனால்தான் ''தைபிறந்தால் வழி பிறக்கும்' என்றார்கள் நம் முன்னோர்கள் .
தைப்பூசத் திருநாளில் மனிதர்களாகிய நாம் இறைவனுடைய அருளைப் பெற்று மகிழ்ச்சியான இன்பம் தரும் நாளாகக் கருதி வடலூர் ஜோதி தரிசனம் கண்டு இறைவனுடைய அருளைப் பெற்று ,நீண்ட ஆயுள்,நிறைந்த செல்வம்,அழியாப்புகழ் பெற்று நீடுழி வாழ்வோம்.

வருவார் அழைத்து வாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !.....வள்ளலார் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன்;--செ,கதிர்வேல் ,ஈரோடு ,
கைபேசி ;--9865939896,

சனி, 9 ஜனவரி, 2016

உண்மையான ஆன்மீகம் அறிந்து கொள்ள வாருங்கள் !உண்மையான ஆன்மீகம் அறிந்து கொள்ள வாருங்கள் !


ஆன்மீகம் வெகு தொலைவில் உள்ளது ..


மக்கள் பக்தி தியானம் யோகம் தவம் செய்து கொண்டு உள்ளார்கள்

இவற்றிற்க்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்ற வரையில் ஆன்மீக வாழ்க்கையில் வெகு தொலைவில் பின் தங்கி இருக்கின்றார்கள் என்பது தெளிவாகின்றது .

சாதாரண உலக விஷயங்களில் ஈடுபட்டு தங்களுடைய வாழ்க்கையை அழித்துக் கொண்டு உள்ளார்கள் .

ஆன்மீகம் என்ற பெயரில் எழுதியவர்கள் படித்தவர்கள் நகைச்சுவை ததும்ப பேசி பொன்னான நேரத்தை வீண் அடித்துக் கொண்டு உள்ளார்கள் .மக்களை முட்டாள்களாக மாற்றிக் கொண்டு வருகின்றார்கள்.

வாய் கிழிக்க தத்துவங்களைப் பற்றி பேசி பேசி அனைவரும் காலத்தை வீணாக்கிக் கொண்டு உள்ளார்கள் .

மனதை நேரடியாக இறைவனிடம் செலுத்த வழி தெரியாமல் கோமாளிகளின் கூத்தை பார்த்தும்,கேட்டும், ஆடிக் கொண்டும் உள்ளார்கள் .

மனத்தைக் கொண்டு போய் ஆன்மாவிடம் செலுத்த வழி தெரியாமல் புரத்திலே குரங்கு போல் அலைய விட்டுக் கொண்டு உள்ளார்கள்.

இவர்களால் ஆன்மீகத்தின் அருகில் செல்லக் கூட முடியாது.இவர்கள் பல கோடி  பிறவிகள் எடுத்தாலும் ஆன்மீகத்தின் ஆழத்தையும் உண்மையையும் அறிந்து கொள்ளவே  முடியாது.

ஆன்மீகத்தின் உண்மையான வழியைத் தெரிந்து கொள்ள, வள்ளல்பெருமான் சொல்லிய ''சுத்த சன்மார்க்க கொளகைகளை'' தெரிந்து ,அவற்றை வாழ்க்கையில் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே கடைத்தேற முடியும்.

வள்ளல்பெருமான் வகுத்து தந்த ''சுத்த மார்க்கம்,ஞான மார்க்கமாகும்'' அறிவு சார்ந்த மார்க்கமாகும்.அருளைத் தரும் மார்க்கமாகும் . இறைவனை நேரடியாக தொடர்பு கொள்ளும் மார்க்கமாகும்.

நீங்கள் கடைத்தேற வேண்டுமானால் இங்கே வாருங்கள் என்று வள்ளல்பெருமான அழைக்கின்றார்..

ஞான சரியை பாடல் ...5,

இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திட வாழ்ந்திடலாம்

எல்லாஞ் செய்ய வல்ல சித்தி இறைமையும் பெற்றிடலாம்

அன்புடையீர் வம்மின் இங்கே சமரச சன்மார்க்கம்

அடைந்திடுமின் அக வடிவு அனக வடிவாகிப்

பொன்புடை நன்கு ஒளிர் ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருண் முடிமேல்  பொருளே

வன்பு உடையார் பெறற் கரிதாம் மணியே சிற்சபையின்

மாமருந்தே என்று உரைமின் தீமை எலாம் தவிர்ந்தே

என்று அன்பு கூர்ந்து அழைக்கின்றார் .துன்பத்தை தொலைத்து,இன்பத்தைப் பெற்று புண்ணியத்தை பெற வேண்டுமானால் வாருங்கள் .

ஆன்மீகம் என்பது அருளைப் பெரும் மார்க்கம். .

அருளைப் பெறுவதற்கும் ,அருளைக் கொடுப்பதற்கும் ஒரே இடம் வள்ளலார் வகுத்து தந்த ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்'' என்னும் புதிய புனித மார்க்கமாகும் .ஆசை உண்டேல் வாருங்கள் ...

ஞான சரியை பாடல் ...10

ஆசை உண்டேல் வம்மின் இங்கே அருட்ஜோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்

எசற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான்

எல்லாஞ் செய் வல்ல சித்தன் என்னுயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில் அருட் திரு நடனம் புரியத்

திருவுளங் கொண்டு எழுந்து அருளும் திருநாள் இங்கு இதுவே

மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர்

முக்கலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே !.....

எக்காலத்தினும் அழியாமல் வாழும் வழியைக் கட்டுகிறேன் வாருங்கள் வாருங்கள் என அழைக்கின்றார்

ஆன்ம லாபம் அடைய விருப்பம் உள்ளவர்கள்,ஆன்ம இன்பத்தை அடைய விருப்பம் உள்ளவர்கள்  வாருங்கள்......

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.... 

24-1-2016...அன்று வடலூரில் தைப்பூசம் !

24-1-2016...அன்று வடலூரில் தைப்பூசம் !

தைப்பூசம் என்பது சைவ ஆலயங்களில் உருவ வழிப்பாட்டு நாளாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எல்லா வழிபாடுகளையும் விட ''வடலூர் தைப்பூச ஜோதி தரிசனம்'' மிகவும் சிறப்பு உடையது.ஏன் என்றால் தத்துவங்களைக் கடந்தது ....

பூசம் என்பது நிறைவு என்பதாகும்,அறிவும் அருளும் பூரணமாக நிறைந்த நாளாகும்

உடம்பும்,உயிரும்,ஆன்மாவும் அறிவும் அருளும் ஆண்டவரும் ஒன்றாக இணையும் நாளாகும்

உடம்பில் தனித்தனியாக இயங்கிக் கொண்டு இருந்த ஒளிகள்.அதற்கு துணையாக இருந்த ஏழுவகையான அணுக்கள், அனைத்தும் ஒன்றாக இணைந்து பூரண மாகி ஒரே அருள் ஒளியாக மாற்றம் அடைவதே பூசம் என்பதாகும்.

அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்பதாகும்.மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்.முத்தேக சித்தி என்பதாகும்.கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் என்பதாகும்.

அதேபோல் உலகில் உள்ள உயிர்களுக்கு ஒளி அலைகளைத் தந்து கொண்டு இருப்பது அக்கினி ,சூரியன் ,சந்திரன்,நட்சத்திரங்கள்,என்ற ஒளிகளாகும்

இவைகள் அனைத்தும் படைக்கப் பட்ட ஒளிகளாகும்,அவற்றைப் படைத்தவர் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் நிறைந்த பேரோளியாகும்.

இந்த ஒளிகள் அனைத்தும் தங்களைப் படைத்த அருட்பெருஞ்ஜோதியை தரிசிக்கும் நாளே தைப்பூச நாளாகும்.

வருடத்திற்கு ஒருமுறை எல்லா ஒளிகளுக்கும் ஒய்வு கொடுக்கும் நாளாகும் அன்று இரவு 12,மணிக்கு எல்லா ஒளிகளும் பூரணமாக விலகாமல் தற்சுதந்திரம் இல்லாமல் அருட் சுதந்திரம் பெற்றுக் கொள்ளும் நாளாகும் அதுவே தைப்பூசம் என்பதாகும்.

அந்த நன்னாளில் எல்லா ஒளிகளையும் ஒரே நேரத்தில் ஒரே நேர் கோட்டில் காணலாம் .அவைகளை அனைத்தையும் ஒரே இடத்தில் காணும் இடம் தான் வடலூர் ஜோதி தரிசனமாகும்.

''வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலக மக்களுக்கு தெரியப் படுத்திய தினம் தைப்பூசம் நாளாகும்''.

மனித தேகத்தை பெற்றுக் கொண்ட உயர்ந்த அறிவுள்ள ஆன்மாக்களாகிய நாம் நம் உள்ளே உள் ஒளியில் (ஆன்மாவில ) விளங்கும் பேரருளை பெற்று கடவுள் பிரகாசமாகிய பூரண அருள் ஒளியைப் பெற்று அந்த அருள் ஒளி மயமாக விளக்கம் பெற்று கொளவதற்கு ஏற்ற நாளாக ''தைப்பூச நன்னாள்'' அருட்பெருஞ்ஜோதி என்னும் இயற்கையால் அமைக்கப் பட்டுள்ளது

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் திருவாக்கின் படி 30-01-1874,அன்று இரவு 12-00,மணியளவில் இந்த உலகம் அறிய அருட்பெருஞ்ஜோதி ஆகிய உண்மைக் கடவுள்,வடலூர் அருகில் உள்ள மேட்டுக்குப்பம் என்னும் சித்தி வளாக திருஅறையில் ...(வள்ளல்பெருமான் அமர்ந்துள்ள திருஅறையில்)..  வள்ளல்பெருமானுக்கு தன்னுடைய அருள் உருவைக் காட்டி ..தக்கத் தருணத்தில் சுத்த ,பிரணவ ,ஞான தேகத்தை கொடுத்து ,ஐந்தொழில் வல்லபத்தை கொடுத்த நாள்தான் தைப்பூச திருநாளாகும்.

அந்த அழிவு படாத முத்தேக சித்தியைப் பெற்று கொண்டதன் அடையாளமாகத்  தான் வள்ளல்பெருமான் அவர்கள் திருகாப்பிட்டுக் கொண்ட தினம் தைப்பூச நாளாகும்.

வல்லபெருமான் பதிவு செய்துள்ள அருட்பாடல் ;--

என்சாமி எனது துரை என்னுயிர் நாயகமே
இன்று வந்து நான் இருக்கும் இடத்தில் அமர்கின்றார்
பின்சாரும் இரண்டரை நாழிகைக்குள்ளே எனது
பேர் உடம்பில் கலந்து உளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடைய பெரிய தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்தது இது சத்தியஞ் சத்தியமே
மின்சாரும் இடைமடவாய் என் மொழி நின் தனக்கே
வெளியாகும் இரண்டரை நாழிகை கடந்த போதே !

என்று மக்களுக்குத் தெளிவாக விளக்கி உள்ளார் ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இந்த உலகத்திற்கு வரவழைத்த நாள்தான் தைப்பூசத்  திருநாளாகும்...

உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை வழிபடும் நாள்தான் தைப்பூசத்  திருநாளாகும்.

வள்ளல்பெருமானுக்கு அழியாத் தேகம் கொடுத்த நாள்தான் தைப்பூசத் திருநாளாகும்.

வள்ளல்பெருமான் பதிவு செய்துள்ள பாடல் ;---

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக் கருவியாலே
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாத விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே
ஏற்றாலே இழிவு என நினையாதீர் உலகீர்
என் தந்தை அருட்பெருஞ்ஜோதி இறைவனைச் சார்வீரே!

மேலே கண்ட பாடல் வாயிலாக மரணத்தை வென்று .என்றும் அழியாத, எதனாலும் அழிக்க முடியாத தேகத்தைப் பெற்றேன் .இறைவன் எனக்கு விரைந்து வந்து அருளினார் ..உங்களுக்கும் அருள்வார் .வாருங்கள் என ஆன்மநேயத்துடன் மக்களை வடலூருக்கு அழைக்கின்றார்.

எனவே தான் தைப்பூசம் காணத் தவறாதீர்கள் என்று வள்ளல்பெருமான் உலக மக்களுக்கு கட்டளை இடுகின்றார்.

வடலூரில் தைப்பூசம் அன்று ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் கண்டு வழிபடுவதே சிறந்த வழிபாடாகும் .அவை உருவ தத்துவங்களை கடந்த உண்மையான அருட்பெருஞ்ஜோதிஆண்டவரின் அருள்  வழிபாடாகும்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நேரடியாக காட்சிக் கொடுக்கும் நாள்தான் வடலூர் தைப்பூச ஜோதி தரிசனமாகும்.

வந்து வந்து தரிசிக்க பெருவீர்களானால் ...எல்லோருக்கும் ,தாய்,தந்தை,ஆண்ணன்,தம்பி,உற்றார் உறவினர்கள் முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ ,

அதற்குக் கோடி கோடிப்  பங்கு அதிகமான உதவி கொடுக்கும் படியான இடம் ,,,வடலூர் ஜோதி தரிசனம்... ..வள்ளல்பெருமான் சித்திப் பெற்ற சித்திவளாகத்  திருஅறை தரிசனம், இவைகள் இரண்டும் மிகவும் முக்கியமானதாகும் ..

வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே ..

என்று உலக மாந்தர்களை வடலூருக்கு அழைக்கின்றார் வள்ளல்பெருமான் .

வடலூர் செல்வோம் அருளைப் பெறுவோம் மரணத்தை வெல்வோம் ...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,....  

வெள்ளி, 8 ஜனவரி, 2016

ஜல்லிக் கட்டு விளையாட்டு !

ஜல்லிக் கட்டு விளையாட்டு !


வாய் உள்ள ஜீவர்களை அடக்கத் தெரியாமல்

வாயில்லாத ஜீவனை அடக்குவதில் என்ன லாபம்.

தமிழர்களின் வீர விளையாட்டுகள் என்று காளை மாட்டை அடக்குவதும் ,அதை துன்புறுத்துவதும் பாவத்தின் சம்பளமாகும்.

அதனால் பல உயிர்கள் துன்ப்படுகின்றது ,உயிர்களை துன்பப் படுத்துவது வீர விளையாட்டா ? சிந்தித்துப் பாருங்கள் .

ஜல்லிக் கட்டை வைத்து அரசியல்வாதிகள் அரசியல் நாடகம் நடத்துகின்றார்கள் .

ஒரு காலத்தில் மனிதனுக்கு அறிவு விளக்கம் இல்லாத போது,வீர விளையாட்டுகள் என்று உயிர்களை வதைப்பது பாவம் என்று தெரியாமல் செயல்பட்டதாகும்.

இப்போது மனிதனின் அறிவு அண்டங்கள் அண்டங்களை கடந்தும் செல்கின்றது .இக்காலக் கட்டத்தில் மனிதன் அறிவுக்கு சம்பந்தம் இல்லாமல் ஆட்டையும் மாட்டையும் அடக்குவதனால் எந்த பயனும் இல்லை.

மனதை அடக்கத் தெரியாதவன் மாட்டை அடக்கி என்ன பயன் ?

பாவச்செயலை செய்யாதீர்கள் ...

காட்டிலே வாழும் சிங்கத்தை கொண்டு வந்து ஓட விட்டு அடக்குங்கள் பார்க்கலாம் /...சிங்கத்திடம் உங்களின் வீர தீர விளையாட்டுகளை காட்டுங்கள் அதுதான் வீர தீர விளையாட்டுகள் .

மனிதனை மனிதன் அடக்குங்கள் அதில் உங்கள் வீர தீர விளையாட்டுகளைக் காட்டுங்கள்.

வாய் இல்லாத அப்பாவி உயிர்களைத் துன்புறுத்துவதும் துன்பப்டுத்துவதும் .அவற்றைக் கொன்று அதன் புலால் உண்பதும் .பாவங்களிலே கொடிய பாவங்களாகும்.

அந்தப் பாவங்களை எத்தனைப் பிறவிகள் எடுத்தாலும் உங்கள் ஆன்மாவில் இருந்து நீக்க முடியாது.துன்பங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும் ..

வாடிய பயிரைக் கண்டபோது எல்லாம் வாடினேன் என்கின்றார் வள்ளல்பெருமான் .ஓர் அறிவு உள்ள பயிரைக் கண்டு வாடியவர் ,ஐந்து அறிவு உள்ள மிருகங்களை வதைப்பதால் எப்படி வாடுவார்,வருத்தப் பட்டு இருப்பார் என்பதை சிந்திக்க வேண்டும்.

மாபெரும் அருளாளர் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்ற வள்ளலார் வாழ்ந்த இந்த தமிழ் நாட்டில் .மிருகங்களை துன்புறுத்துவது மன்னிக்க முடியாத குற்றங்களாகும்.

படித்தவர்கள் படிக்காதவர்கள் அனைவரும் இந்த வீர விளையாட்டுகளை விரும்புகிறார்கள் .அதுதான் என்னவென்றே தெரியவில்லை ..உயிர்களை துன்புறுத்துவது வீர விளையாட்டா ? நல்லதை சிந்தியுங்கள் நல்லதை நினைத்து செயல்படுங்கள் ...

மண்ணு உலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை ஒரு சிறிது எனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின் அருள் வல்த்தால்
இசைத்த போது இசைத்த போது எல்லாம்
நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான்
நல்குதல் எனக்கு இச்சை காண் எந்தாய் ...''திருஅருட்பா ''

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

உங்கள் வாழ்க்கை வளம் பெருகும் ...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..

உண்மையான மகா மந்திரம் !

உண்மையான மகா மந்திரம் !

அருபெருஞ்ஜோதி         அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை   அருட்பெருஞ்ஜோதி

என்னும் மகா வாக்கியத்தை வள்ளல்பெருமான் ''மகா மந்திரம்' என்று பெயர் வைத்துள்ளார் .

இந்த மந்திரத்தை நான் சொல்லவில்லை ,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து வெளிப்படுத்தி உள்ளார் என்பதை தெளிவாக விளக்கி உள்ளார் .

வள்ளல்பெருமான் ..இந்த மகா மந்திரத்தை '',சித்திவளாகத்தில்'' ..இது கடைசி வார்த்தை என்று ஒரு பெரிய நீண்ட பேருபதேசம் செய்கின்றார் .

ஐம்பது வருடங்களாக வெளிப் படுத்தாத அந்த ''மகா மந்திரத்தை'' தன்னுடைய ஐம்பத்து ஒன்றாவது வருடத்தில் சித்திப் பெறுவதற்கு முன் வெளிப்படுத்துகின்றார்.

இந்த மகா மந்திரத்தில் என்னதான் உள்ளது என்பதை தெரியப்படுத்து கின்றார்.

இந்த மந்திரத்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளிப்படையாக வெளிப்படுத்த ஆணை இட்டு உள்ளார் என்பதையும் தெளிவு படுத்தி உள்ளார் .

இந்த மந்திரத்தில் /தயவு,கருணை, அருள்,,என்னும்
மூன்றும் அடங்கி உள்ளது .அதுதான் இறைவனுடைய இயற்கை உண்மை ,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம் என்பதாகும்...

மேலும் ஒப்பற்ற பெரும் தயவுடைய அறிவே பூரண இன்பமாம் ..அது ஒப்பற்ற பெரும் தயவு உடைய பேரறிவேயாம் .

இஃது வாச்சியார்த்தம் .இவ்வண்ணம் சாதனம் முதிர்ந்தால் ..முடிவான இன்ப அனுபவம் பெறுவதற்குத் எந்த தடைகளும் இல்லை என்கின்றார்.

உண்மையான கடவுளின் முழு பெயர் ,முழு வடிவம்தான் இந்த மகா மந்திரம் என்பதாகும்...

இந்த மந்திரத்திற்குள் .உலகில் உள்ள எல்லா மந்திரங்களும் அடங்கி விடுகின்றன...ஆதலால் இவை மகா மந்திரம் என்பதாகும்.இதற்குமேல் எந்த மந்திரம் இல்லை..

உலகில் உள்ள மந்திரங்களைப் பற்றி வள்ளல்பெருமான் சொல்லியது ..இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது அசுத்த மாயா காரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள்.

சுத்த மாயா காரிகளாகிய தெரிந்த பெரியோரும் இல்லை .சுத்த சன்மார்க்கமும் இல்லை,சுத்த சன்மார்க்கம் இருந்து இருந்தால் அனுபவித்து அறியாத அனுபவமும்,கேட்டு அறியாத கேள்வியும் நாம் கேட்டு இருப்போம் .

மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்து இருப்பார்கள்.ஆதலால் கேட்டு அறியாத கேள்விகளைக் கேட்கும்படி அருட்பெருஞ்சோதி ஆண்டவர் செய்தது இத்தருணமே ,,ஆதலால் இத்தருணம் இக்காலமே சுத்த சன்மார்க்க காலம் என்கின்றார்.

அசுத்த மாயா காரிகள்,சுத்த மாயா காரிகள் என்று இரண்டு பிரிவினர்களை சொல்லுகின்றார் .

ஆதாவது சுத்த தேகத்தில்  உள்ளவர்கள்  ,பிரணவ தேகத்தில்  உள்ளவர்கள் .என்பதாகும்.அவர்களுக்கு மீண்டும் பிறப்பு உண்டாக்ய்ம்,

ஞான தேகம், கிடைத்தவர்களுக்கு மட்டுமே சுத்த சன்மார்க்கம் விளங்கும்...சுத்த சன்மார்க்கம் என்பது இறைவனுடைய மார்க்கமாகும்...மரணத்தை வென்று ஒளி உடம்பாக மாற்றிக் கொண்டவர்களுக்கு மட்டுமே, ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' தன்னுடைய உண்மையான மார்க்கத்தையும்,உண்மையான கொள்கைகளையும்,உண்மையான உருவத்தையும்  ஒளிவு மறைவு இல்லாமல் காட்டுவார் .

உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் கண்டவர், களித்தவர், கலந்து கொண்டவர்..வள்ளல்பெருமான் ஒருவரே !

எனவேதான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் உண்மைப் பெயரான மகா மந்திரத்தை'' வள்ளல்பெருமான் மூலமாக,உலகிற்கு அறிமிகப் படுத்தி உள்ளார்.  

இத்தருணம் உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின உண்மையான, அழைப்பை குறிப்பதுதான் மேலே சொல்லப்பட்ட,,

,''அருட்பெருஞ்ஜோதி ..அருட்பெருஞ்ஜோதி ..தணிப்பெருங்கருணை ..அருட்பெருஞ்ஜோதி''

என்னும்  மகா மந்திரம் என்பதாகும்.

மேலும் இத்தருணம் ஆண்டவரும் தெரிவித்தார் ,தெரிவிக்கின்றார்,தெரிவிப்பார் .நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள் ,இப்போது நான் சொல்லி வந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள் அதாவது மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள் .என்கின்றார் ..

மகா மந்திரத்தை தொடர்ச்சியாக சொல்லவேண்டும். பிரித்து சொல்ல வேண்டாம் ,இது ரொம்ப முக்கியமானதாகும்.

மகா மந்தரத்தை சொல்லுவதற்கு ..அதற்கு காரணமான ஜீவ காருண்யம் என்னும் தயவு அவசியம் வேண்டி உள்ளது .அந்த தயவு வருவதற்கு தடையாக இருக்கும் சாதி,சமயம்,மதங்கள்,அவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் போன்ற பொய்யான செயல்பாடுகளை தூக்கி எரிந்து விடவேண்டும்...

அப்படி தூக்கி எரிந்தால்தான் உங்களுக்கு ஒருமை என்னும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னவென்பது விளங்கும் என்கின்றார் .

அந்த ஒருமை வருவதற்கு தயவு என்னும் பொது உரிமையும் இருக்க வேண்டும்.அப்படி முயற்சியுடன் இருந்து கொண்டு இருந்தால் ஆண்டவர் வந்த உடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள்

எல்லோருக்கும் ,தாய் தந்தை அண்ணன் ,தம்பி,முதலான உறவுகளினால் செய்யப்பட உதவிகள் எவ்வளவோ ,அதற்குக் கோடி கோடி பங்கு அதிகமாக கொடுக்கும்படியான இடம் இந்த இடம்.என்று ''சித்தி வளாகம்'' என்னும் இடத்தில் கொடிக் கட்டிக் கொண்டு,நீண்ட பேருபதேசம் செய்கின்றார்.

எனவே ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ள சகோதர சகோதரிகளே ..வள்ளல்பெருமான் அறிமுகப் படுத்திய ''மகா மந்திரமான அருட்பெருஞ்ஜோதி மந்தரத்தை'' ,இடைவிடாது உச்சரித்துக் கொண்டும் ,நினைத்துக் கொண்டும் இருந்தாலே ,அளவில்லாத அருள் ஆற்றல் பெருகும்.அதியங்கள் நடக்கும் ஆச்சரியங்கள் உண்டாகும்

நமக்கு உண்டாகும் துன்பம்,துயரம்,அச்சம்,பயம்,மரணம் போன்ற உடல் தொல்லைகள் வராமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் காப்பாற்றப் படும் இது சத்தியம்...

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896,

செவ்வாய், 5 ஜனவரி, 2016

என் மகன் நந்தக்குமார் பதவி உயர்வு !

என் மகன் நந்தக்குமார் பதவி உயர்வு !

என்னுடைய இளைய மகன் நந்தக்குமார் என்பவர் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையில் மிகவும் தீவிர ஈடுபாடு கொண்டவர்.

அவர் முதன் முதலில் மாதம் இரண்டாயிரம் சம்பளத்தில் பணியில் சேர்ந்தார் ..அவருடைய உழைப்பு,நேர்மை,சத்தியம் தவறாமல் பாடுபட்டார் .

அவர் ''KEMIN INDUSTRLES SOUTH ASIA LTD THE TRAPEZIUM.''.கம்பெனியில் ,BUSINESS MANAGER ..பதவியில் பணி புரிந்தார் .இப்போது அவருக்கு GM.அதாவது GENRAL MANEGER பதவி உயர்வு கிடைத்துள்ளது.

இந்த கம்பெனி உலகின் ஏழாவது இடத்தில் உள்ளது.

இன்று இலட்சக்கணக்காக சம்பளம் பெறுகின்றார் .

அவர் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை ஜீவ காருண்ய பணிக்கு  ஒதுக்கி விடுவார் .

ஜீவ காருண்யம் அவருடைய உடம்பின் ரத்தத்தில் ஊறி போனது .அவருக்கு நான் எதையும் சொல்லித் தரவில்லை .அவரை மேலே ஏற்றி விட்டது வள்ளலார் சொல்லிய அன்பு,தயவு,கருணை என்பதுதான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் .

வள்ளலார் கொள்கையைப் முழுமையாக பின்பற்றி வாழ்பவர்களுக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எந்தக்குறையும் வைக்க மாட்டார் என்பது என்னுடைய மகனின் வாழ்க்கையே முழுமையான உதாரணம்  சான்று.

என்னையும் என் மனைவியையும் எந்த குறையும் வைக்காமல் மகிழ்ச்சியாக பாது காத்து வருகின்றார் .

அவர் என்னுடைய மகனாக பிறந்ததற்கு பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் .

நான் இடைவிடாது வணங்கி வாழ்த்திக் கொண்டுவரும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு மேலும் தலை வணங்குகிக் கொண்டே இருப்பேன்.

என்னுடைய அன்பு மகன் நந்தகுமாருக்கு எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும் துணையாக இருந்து ஆசீர் வாதிக்க வேண்டி வணங்கி வாழ்த்துகிறேன் .

இதை நான் பெருமைக்காக எழுதவில்லை ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ளும் சன்மார்க்கிகளுக்கு எந்த குறையும் இல்லாமல் அருள் என்னும் கருவியால்  பாதுகாக்கப் படுவார்கள்.இது சத்தியம்.

உங்களுடைய வாழ்த்துக்களையும் வேண்டுகிறேன் வணங்கி மகிழுங்கள் .நீங்கள்தான் உயிருள்ள கடவுள்கள் நீங்கள் வாழ்த்துவதுதான் சிறந்த சான்று ...

ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக் கேட்ட தாய் .

மகன் தந்தைக் காற்றும் உதவி இவன் தந்தை
என்நோற்றான் கொல்லெனுஞ்  சொல் ...திருவள்ளுவர்

உங்களின் அன்புடைய  ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 4 ஜனவரி, 2016

உயிரைக் காப்பாற்றும் ஒரே கடவுள் !

உயிரைக் காப்பாற்றும் ஒரே கடவுள் !


ஆன்மநேய சகோதர சகோதரிகளே உங்கள் அனைவருக்கும் அன்பு கலந்த வந்தனம் .

ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவருக்கும் மிகவும் முக்கியமானது அவர்களுடைய உயிராகும்.

உயிர் இல்லை என்றால் நாம் வாழ்வே முடியாது .உயிரின்  தன்மையை அதனுடைய ஆற்றலை நாம் அறிந்து கொள்வதே இல்லை.

நமக்கு அழகான மனைவி ,அழகான வீடு ,அருமையான குழந்தைகள் .அழகான பங்களா அளவில்லாத சொத்துக்கள் ,தேவைக்கு அதிகமான வாகனங்கள் வேண்டிய பொருள்கள் .எந்த நேரமும் வீட்டு வேலை செய்ய ஆட்கள் ,இன்னும் தேவையானது எல்லாம் நிறைந்து இருக்கின்றது .

இவ்வளவு இருந்தும் உங்களின் உயிருக்கு ஒரு ஆபத்து வந்து விட்டால்,பணத்தைக் கொடுத்து மருத்துவ மனையில் சேர்த்தும் ,டாக்டர் கை விட்டுவிட்டார் என்றால் உங்கள்  உயிரைக் காப்பாற்ற முடியுமா ?

அளவில் அடங்காத வசதிகள் வாய்ப்புகள் இருந்தும் உங்களின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை என்றால் ,நீங்கள் வாழ்ந்து அனுபவிக்க முடியாமல் உங்கள் உயிர் பிரிந்து மரணம் வந்து விட்டால் என்ன பயன் ?

நீங்கள் பாடுபட்டு சேர்த்த வைத்த மனைவி,மக்கள், சொத்து,சுகம் ஆடம்பரம் அனைத்தையும் விட்டுவிட்டு சென்று விடுகின்றீர்கள்,நீங்கள் அனுபவிக்க முடியாமல் செல்வதற்காகவா? இவ்வளவையும்  சேர்த்து வைத்தீர்கள் சிந்திக்க வேண்டும்.

உயிரை காப்பாற்றிக் கொள்ள ஒரே வழி இருக்கின்றது .

உயிரைக் கொடுத்த கடவுளுக்கு மட்டுமே உங்கள் உயிரைக் காப்பாற்றும் சக்தி ஆற்றல் இருக்கின்றது அதைத்தான் நாம் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு உயிரைக் கொடுத்த ஒரே கடவுள்தான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர'' என்பதாகும்

அவர் ஒளியாக உள்ளார் .உயிரும் ஒளியாக உள்ளது .ஒளிதான், ஒளியைக் காப்பாற்ற முடியும்.

இந்த உலகத்தில் உயிரைக் காப்பாற்றும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும் அதுதான் கருணையே வடிவமானாதாகும் .

உங்கள் உயிர் உடம்பை விட்டு வெளியே செல்லாமல் காப்பாற்ற  வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?

உலகில் துன்பப்படும் உயிர்களை நீங்கள் பாது காத்து காப்பாற்ற வேண்டும். மற்ற உயிர்களை நீங்கள் காப்பாற்றும் போது ,உங்கள் உயிர் ஆண்டவரால் காப்பாற்றப் படும்.''இதுதான் உயிரைக் காப்பாற்றும் பெரிய ரகசியம்''

உங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்காக ,வள்ளல்பெருமான்  ''ஜீவகாருண்ய ஒழுக்கம்'' என்று பெயர் வைத்துள்ளார்.

ஜீவன் என்றால் உயிர் .காருண்யம் என்றால் உயிர்களுக்கு உதவி செய்வது...ஒழுக்கம் என்றால் அவற்றை பின் பற்றுவது.

வள்ளலார் சொன்ன ஜீவ காருண்யம் என்ற ஒழுக்கத்தை இடைவிடாது யார் கடைப் பிடிக்கின்றார்களோ ,அவர்களின் .உயிர் உடம்பை விட்டு பிரியாமல் பாது காக்கப்படும்.

உயிர் உள்ள ஜீவர்களுக்கு வரும் துன்பங்கள் எவை எனில் ;--

பசி,பிணி,கொலை, இச்சை .எளிமை,தாகம், பயம் என்பதாகும் .இந்த துன்பங்கள் எல்லா உயிர்களுக்கும் பொதுவாகவே  இருக்கும்.

மேலே கண்ட துன்பங்களால் தான் மரணம் வருகின்றது.

இதில் உள்ள துன்பங்களில் உங்களால் எந்த துன்பத்தைப் போக்க முடியுமோ அவற்றைப் போக்குங்கள் உங்கள் உயிர் காப்பாற்றப்படும்.

மொத்தம் ஏழு துன்பங்கள் ,;--மேலே கண்ட துன்பங்களில் முதன்மையானது பசித் துன்பம் .பசிக் கொடுமை,மேலும் அதற்கு பசிப்பிணி என்று பெயராகும் .

மற்ற ஆறு துன்பங்களை எவ்வகையிலாவது தாங்கிக் கொள்ளலாம் ஆனால் பசியைத் தாங்கவே முடியாது .பசி இல்லாத உயிர்களே கிடையாது .பசி வந்தால் மற்றவை எல்லாம் மறந்து விடும்.அதனால்தான் பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்றார்கள் .பறந்து போவதில்லை மறந்து போவது என்பதாகும்.

சென்னையில் மழை வெள்ளம் வந்தபோது பசியினால் துன்பப்பட்டவர்களைப் பார்த்தோம் இல்லையா ..பசிக்கு ஏழை பணக்காரன் என்ற பேதம் இல்லை என்பதை கண் கூடாக கண்டோம்.

எனவே நண்பர்களே உங்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் பசித்தவர்களுடைய பசிப்பிணியைப் போக்குங்கள் ,உங்களின் விலை மதிப்பில்லாத உயிரைக் காப்பாற்றிக் கொண்டு ,மனைவி  மக்களோடு மகிழ்ச்சியோடு வாழுங்கள் .

நாம் எதற்க்காக வாழ்கின்றோம் துன்பம் இல்லாமல் ஆனந்தமாக மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும் .அதுதானே வாழ்க்கை ,

எத்தனைக் கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டிலே என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .

நம்முடைய வீட்டில் எந்த உயிர்களுக்கும் ஆபத்து,மரணம், துக்கம்,  இல்லாமல் வாழ்வதே மகிழ்ச்சியான வாழ்க்கையாகும்.

வழிபாடு என்பது,புரத்திலே உள்ள ஆலயங்களிலே,உயிர் இல்லாத உணர்ச்சி இல்லாத சிலைகளுக்கு அபிஷேகம் ஆராதனை செய்தும் அங்குள்ள உண்டியலிலே பணத்தையும், தங்கத்தையும்  பொருளையும் கொண்டு போய் கொட்டுகின்றோம் .அது வழிபாடு அல்ல.

ஆலயங்களிலே கொட்டுவதை .ஏழைகளின் வயிற்றில் கொட்டுங்கள் ..அதுதான் வழிபாடு என்பதாகும் .

ஏழைகளின் பசியைப் போக்குவதே சிறந்த வழிபாடாகும்.அதுதான் உங்களின் உயிரைக் காப்பாற்றும் அருள் நிறைந்த கருவியாகும் .

எனவே தான் ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும்...உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றும்,..ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவு கோல்... என்றும் வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு போதித்து உள்ளார். .

இவை யாவும் வள்ளலார் சொல்லியது அல்ல .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரின் ஆன்மாவில் அமர்ந்து அவருடைய உயிரையும் உடம்பையும் காப்பாற்றி,மரணத்தை வெல்ல வைத்து , ,மக்களுக்கு இவற்றைப் போதிக்க வேண்டும் என்று கட்டளை இட்டதால்,ஆன்மநேய உரிமையோடு ,உயிர்க் கருணையோடு உலக மக்களுக்கு உயிரைக் காப்பாற்றும் உண்மையை வள்ளல்பெருமான் வெளிப் படுத்தி உள்ளார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்;--

வட்டிமேல் வட்டி கொள் மார்க்கத்தில் நின்றீர்
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்
பெட்டிமேல் பெட்டி வைத்து ஆள்கின்றீர் வயிற்றுப்
பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டி உள் இருந்தீர்
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்
பழங் கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர்
எட்டி போல் வாழ்கின்றீர் கொட்டி போற் கிளைத்தீர்
எத்துணை கொள்கின்றீர் பித்து உலகீரே !

எனவே என்னுடைய ஆன்மநேய உடன் பிறப்புகளே உங்களின் உயிர் போனால் மீண்டும் பெற முடியாது .

உங்களின் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வள்ளலார் சொல்லிய ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடித்து பின்பற்றி மகிழ்ச்சியுடன் வாழ வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 ...

சனி, 2 ஜனவரி, 2016

பேஸ்புக் நண்பர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் !

பேஸ்புக் நண்பர்களுக்கு அன்பான வாழ்த்துக்கள் !

2015,ஆம் கடந்து 2016,ஆம் ஆண்டு புதிய புத்தாண்டாக வந்துள்ளது.

இந்த ஆண்டு எந்த ஆண்டும் தர இயலாத மகிழ்ச்சியை உங்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும்.

உங்களுக்காக எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்.

நாம் அனைவரும் ,சாதி,சமயம்,மதம் கடந்து ,ஊர் ,பெயர் ,நாடு .,கடந்து நண்பர்களாக பழகி வருகின்றோம்,

ஒவ் வொருவருக்கும் பிடித்த நண்பர்கள் பிடிக்காத நண்பர்கள் என இருப்பார்கள்.

அவரவர்களின் சொல் செயல் எண்ணங்கள் பலவாறாக இருக்கலாம்,அதையும் தாண்டி நட்புடன் பழகிக் கொண்டு வருகின்றோம்.

நம்முடைய எண்ணங்களில் உதிக்கும் கருத்துக்களை பேஸ்புக்கில் பகிர்ந்து கொண்டும் வருகின்றோம். ஏற்பவர்கள் ஏற்காதவர்கள் இருக்கலாம் .இருந்தாலும் நம்முடைய கருத்துக்களை வெளிப்படுத்த, பகிர்ந்து கொள்ள பேஸ்புக் ஒரு பாலமாக உள்ளது.

இன்றைய பொருளாதார நாகரீக உலகில் பணம் இல்லாமல் பணம் வாங்காமல் உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள இலவசமாக செயல்படும் ''பேஸ்புக் நிறுவனத்திற்கு''  நாம் அனைவரும் நன்றியையும்,மகிழ்ச்சியையும் தெரிவிக்க வேண்டும்.தெரிவித்துக் கொள்கிறேன் .

மேலும் நம்முடைய மனதில் உள்ள ரகசிய கருத்துக்கள்,உணர்ச்சிகள், பிடித்த,பிடிக்காத எண்ணங்கள் ,குடும்ப பிரச்சனைகள், மேலும் எதுவாக இருந்தாலும், பிடித்த நண்பர்களிடம் தொடர்பு கொண்டு பகிர்ந்து மகிழ்ச்சி அடைந்தும்  வருகின்றோம்.

எல்லாமே நேருக்கு நேர் பார்க்காமல்,மறைமுகமாக சாட்டிங் வழியாக ,வெப்காம் வழியாக,எழுத்து வடிவமாக  பகிர்ந்து கொள்வது எவ்வளவு பெரிய சந்தோஷமான செயலாகும்.

உலகில் எந்த மூலையில் யார் இருந்தாலும் அவர்களிடம் தொடர்பு கொண்டு உரையாடுவதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

பேஸ்புக்கில் எனக்கு கிடைத்த தோழர்கள் தோழிகளுக்கு அளவே இல்லை ,அவர்கள் என்மீது வைத்துள்ள அன்பிற்கும்,பாசத்திற்கும், மதிப்பிற்கும் அளவே இல்லை. நான் அவர்களுக்கு என்ன கொடுத்தாலும் அந்த அன்பிற்கு  ஈடு இணை ஆகாது.

அவர்களுக்கு நான் கொடுப்பது எல்லாம் அன்பு,தயவு,கருணை,மேலும் என்னுடைய உள்ளத்தில் உதிக்கும் நல்ல கருத்துக்கள் மட்டுமே கொடுக்க முடியும்.மேலும் நல் வாழ்த்துக்களை கொடுக்க முடியும்.

அதற்கு மேலும் நீங்களும் உங்கள் குடும்பமும்,சுற்ற ங்களும்,நண்பர்களும்,  இந்த ஆண்டும் இனி மேல் வருங்காலமும் எந்த குறைகளும் குற்றங்களும் நெருங்காமல்,எல்லா நன்மைகளும்,பெற்று  இல்லங்கள் நிறைந்து  மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன் .

மேலும் என்னுடன் தொடர்பு கொண்டு உள்ள ,தொடர்பு இல்லாத அத்துணை பேஸ்புக் நண்பர்களுக்கும் மனமார்ந்த மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும் உள்ளங் கனிந்து அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் அனைவரும் எப்போதும் என்னிடம் தொடர்பு கொள்ளலாம் .உங்களின் நட்புக்காகவும் நலனுக்காகவும்  என்றும் துணையாக இருப்பேன் ....

வேண்டுதல் ;--

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்கட்கு  எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
என் தந்தை நின் அருட் புகழை இயம்பி இட்டால் வேண்டும்

செப்பாத மேனிலை மேல் சுத்த சிவ மார்க்கம்
திகழ்ந்து ஒங்க அருட்ஜோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செய்னும் நீ பொறுத்தல் வேண்டும்
தலைவா நினைப் பிரியாத நிலைமையும் வேண்டுவனே!

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896, 

ஆலயங்களில் ஆடை கட்டுப்பாடு அவசியம் !

ஆலயங்களில் ஆடை கட்டுப்பாடு அவசியம் !

ஆலயங்களில் வைத்துள்ள உணர்ச்சி அற்ற பொய்யான மொம்மை தெய்வங்களுக்கு உங்கள் ஆடைகளை கவனிக்கும் வேலையைத்தான் கொடுத்து உள்ளீர்களா ?

ஆலயங்களில் உண்மையான கடவுள்கள் இல்லை அங்கு சென்று வழிபாடு செய்வதால் எந்த பயனும் இல்லை.

அவை தத்துவங்கள் என்பதாகும் .தத்துவங்கள் என்பது உணர்ச்சி அற்ற ஜடப் பொருள்கள் .என்பதாகும் .

பொய்யர்கள் செய்த சூழ்ச்சியே ஆலய வழிப்பாட்டு முறைகளாகும்.அவற்றை மனிதர்கள் மதி மயங்கி பின்பற்றி அழிந்து கொண்டு உள்ளார்கள்.

மனிதர்களுக்கு எப்போதுதான் விழிப்பு உணர்வு உண்டாகி திருந்துவார்கள் என்பது தெரியவில்லை.

உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தான் மக்களுக்கு உண்மையான அறிவையும் ஆற்றலையும் கொடுத்து விழித்து எழ செய்யவேண்டும்.

ஆடைகள் !

ஆடை இல்லாத காட்டு மிராண்டிகளாய வாழ்ந்த மனிதனுக்கு ஆடைகள் ஏன்? எதற்க்காக அணிவிக்கப் பட்டது என்பதை மக்களுக்குப் போதிக்கத் தெரியாமல் ஆலயங்களுக்கு செல்லும் போது மட்டும் ஆடைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கும் சட்டம் இயற்றி உள்ளார்கள் மதிகெட்ட மனிதர்கள்.

மனிதர்களைத் தவிர வேறு எந்த உயிர் இனங்களும் ஆடைகள் அணிவதில்லை .

மனிதர்களுக்கு மட்டும் ஆடைகள் அணிய அவசியம் வந்தது  ஏன்? வந்தது என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

மனிதர்கள் அணியும் ஆடைகளின் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடை என்பது எதற்கு ?;--,

மனிதனுக்கு மட்டுமே உயர்ந்த அறிவை இறைவன் கொடுத்துள்ளான்.

உயர்ந்த அறிவு ஏன் கொடுக்கப்பட்டது ?

மனிதனின் ஆன்மாவில் அருள் என்ற பொக்கிஷம் உள்ளது அதைத் தெரிந்து அவற்றை சுரக்க வைத்து அதை அனுபவித்து மரணத்தை வென்று இறைவனை அடைய வேண்டும் என்பதற்காக மனிதப் பிறப்புக் கொடுக்கப்பட்டு உள்ளது .

அருளைப் பெறுவதற்கு ''விந்து நாதம்'' என்பது மிகவும் முக்கியமானது .அவற்றைப் பாது காக்க வேண்டும்.அவற்றை பாது காக்க மறைப்பதற்காக  ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆடைகள் அவசியம் என்பதை மக்களுக்குப் போதிக்க வேண்டும்.

உணர்ச்சிதான் விந்துவாக உள்ளது.உணர்ச்சித் தரும் உறுப்புக்களை மறைப்பதற்காகவும், உணர்ச்சிகளை கட்டுப் படுத்தவும், உயிர்சக்தியானது வெளியே விரையமாகாமல் பாது காக்கவும் ஆடைகள் தேவை என்பதை மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்.

அந்த ஆடைகளின் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆபாச உறுப்புக்கள் என்பது தவறானது;-- .உயிரைப் பாது காக்கும் பிராண சக்தியானது பெண்கள் உடம்பில் நான்கு இடத்தில் உள்ளது ,ஆண்கள் உடம்பில் முன்று இடத்தில் உள்ளது .

பெண்கள் உடம்பில் உள்ளது .வாய் .கன்னம் ,மார்பு .சுரோணிதம் என்னும் கீழ் உறுப்பு .

ஆண்கள் உடம்பில் உள்ளது  வாய் ,கன்னம்,உபஸ்தத் தடி என்னும் கீழ் உறுப்பு .

உயிர் சக்தியானது  திரவமாக மாற்றப்பட்டு குழந்தை வேண்டும் போது ஆணும் பெண்ணும் உடல் உறவு கொண்டு பெண் உறுப்பில் விந்துவை சேமிக்க வேண்டும் அப்போதுதான்  கரு உண்டாகி குழந்தை பிறக்கும்

தேவை இல்லாமல் விந்துவை வெளியேற்றக் கூடாது அதிகமாக வெளியே விட்டால் சீக்கிரம் மரணம் வந்து விடும்.

விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்பது பழமொழி உண்மையாகும்.

கணவன் மனைவி பதினைந்து நாளைக்கு ஒருமுறை உறவு கொள்ளலாம், மற்றபடி வேறு எந்த ஆபாச வகையிலும் எந்த காலங்களிலும் ஆணும் பெண்ணும் சுக்கில சுரோணிதம் என்னும் விந்துவை வெளியே செலவு செய்யக் கூடாது .

ஆடு மாடுகள் போன்ற மிருகங்கள் ஆறு மாதம் அல்லது ஒரு வருடத்திற்கு ஒரு முறைதான் உடல் உறவு கொள்ளும் .

ஆனால் உயர்ந்த அறிவுள்ள ஆணும் பெண்ணும் உணர்ச்சியைக் கட்டுபடுத்த தெரியாமல் முடியாமல் காமம் என்னும் விந்துவை கண்டபடி செலவு செய்து அழிந்து போகின்றார்கள்

விந்து வெளியே விரையமாக விரையமாக வயது முதிர்ந்து உயிர் சக்தி இழந்து இறுதியில் மரணம் வந்து விடுகின்றது.

உயிர் சக்தியானது விரையமாகும் போது துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம் வந்து கொண்டே இருக்கும்

எனவேதான் உணர்ச்சிகளைப் மறைப்பதற்கும் அவற்றைக் கட்டுபடுத்திக் கொள்ளவும் ஆடைகள் அணிய வேண்டும் என்பது அவசியமாகும் .

கவசிச்சியைக் காட்டி உணர்ச்சியைத் துண்டும் ஆடைகள் அணிவது அபாயகரமானது என்பதை ஆண்களும் பெண்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆண்களும் பெண்களும் ஆடை இல்லாமல் இருந்தால் அதற்கு ஆபாசம் என்றும் அபாயம் என்றும் பெயர் வைத்து உள்ளார்கள் .

ஆலயங்களுக்கு போகும் போது மட்டும் ஆடைகளுக்கு கட்டுபாடும் என்றும் மற்ற காலங்களில் கட்டுபாடுகள் தேவை இல்லை என்பதும் சரியான சட்டம் இல்லை .

மனத்தைக் கட்டுபடுத்த வேண்டும் !

உடம்பை மறைக்க புறத்தே ஆடைகள் அணிகின்றோம் .மனத்தை கட்டுபடுத்த எந்த ஆடைகளை அணிவீர்கள் .

உடம்பையும் உயிரையும் விந்துவையும் கட்டுபடுத்த ஒழுக்கம் மிகவும் முக்கியமானது ஆகும்.

ஒழுக்கம் என்றால் என்னவென்பதே தெரியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளோம்.

வள்ளல்பெருமான் வந்துதான் ஒழுக்கம் என்றால்  என்ன? என்பதற்கு சரியான விளக்கம் தந்து உள்ளார்கள்.

அதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கம் என்பதாகும் .உயிரைக் காப்பாற்றுவதே ஒழுக்கம் என்பதாகும் .வள்ளல்பெருமான் எழுதி வைத்துள்ள ஜீவ காருண்யம் என்ற அருள் நூலைப்  பெற்று படித்துப் பாருங்கள் எல்லா உண்மைகளும் தெளிவாக இருக்கும்.

மனிதன் உண்ணும் உணவு ,அவன் அணியும் உடை,,வாழும் வாழ்க்கை ...கடவுள் யார் ? என்ற உண்மை .கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இருக்கும் உறவு முறைகள் .கடவுளைத்  தெரிந்து கொள்ளும் வழி முறைகள் மரணத்தை வென்று கடவுள் மயமாகும் அருள் ஆற்றல், அனைத்தும் ஒருங்கே ஜீவ காருண்ய ஒழுக்கம் என்ற அருள் நூலில் உள்ளன .

ஆடைகளை கட்டுபடுத்துவதுடன் மனத்தைக் கட்டுபடுத்த தெரிந்து கொள்ளுங்கள் வாழ்க்கையில் வளம் பெறுவீர்கள் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

கடந்த ஆண்டு கனவாக போகட்டும் .இந்த ஆண்டு நினைவாக இருக்க வேண்டும் !.

கடந்த ஆண்டு கனவாக போகட்டும் .இந்த ஆண்டு நினைவாக இருக்க வேண்டும் !.

மனிதன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை நெருங்கிக் கொண்டே இருக்கின்றான் .

காரணம் ;--சாதி ,சமயம்,மதம் போன்ற கற்பனைக் கதைகளின் கொள்கைகளை கடைபிடித்து வாழ்ந்து கொண்டு வருவதால் மனிதன்  மரணத்தை நோக்கி சென்று கொண்டே உள்ளான் .

உண்மையான சுத்த சன்மார்க்க பொது நெறியை தெரிந்து கொள்ளவும்,அந் நெறியைப் பின்பற்றி வாழ்ந்து  மரணத்தை வெல்லவும் வள்ளல்பெருமான் மனிதர்களை அன்புடன் அழைக்கின்றார்.....

குறித்து உரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்,

கோணும் மனக் குரங்க்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்த உம்மால் ஒரு பயனும் வேண்டுகிலேன் ,

எனது மெய் உரையைப் பொய்யுரையாய் வேறு நினையாதீர்

பொறித்த மதம் சமயம் எல்லாம் பொய் பொய்யே

அவற்றில் புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள் எனக் கண்டு அறிமின்

செறித்திடு சிற்சபை நடத்தைத் தெரிந்து துதித்திடுமின்

சித்தி எல்லாம் இத்தினமே சத்தியம் சேர்ந்திடுமே ....

ஞான சரியை பாடல்.

பொய்யான சமயம்,மதம் போன்ற கற்பனை கதைகளில் உருவாக்கப் பட்ட, கற்பனைக் கதாநாயக கதாநாயகி கடவுள்களின் வழிப்பாட்டு முறைகளை ஒழித்துவிட்டு வாருங்கள் என அழைக்கின்றார் வள்ளலார் .

உங்கள் மனம் பேய் பிடித்த குரங்குபோல் தாவி தாவி அலைந்து அலைந்து ,இறுதியில் ஒன்றும் புரியாமல் குருடன் போல் நாணி அழிந்து கொண்டு உள்ளீர்கள்.

மனித குலம் அருள் என்னும் சித்தியைப் பெற்று மரண பயம் இல்லாமல் வாழ்ந்து ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய பேரின்ப லாபமும் பெற்று, பேரின்ப வாழ்க்கையும் பெற்று  வாழலாம் வாருங்கள் என அழைக்கின்றார் .

''கடவுள் ஒருவரே !அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்ற உண்மையை அறிந்து கொண்டு,அவற்றை பின் பற்றி வாழ்வதற்கு,

உலகப் பொது நெறியாகிய, சாதி,சமயம்,மதம் அற்ற  ''சுத்த சன்மார்க்க பொது நெறியையும் அதன் கொள்கைகளும் வாழ்க்கை முறைகளையும் தெளிவாக படைத்துள்ளேன் வாருங்கள் என அன்புடன் அழைக்கின்றார் வள்ளலார்.

கடவுளை வெளியில் தேட வேண்டாம் அவர் கிடைக்க மாட்டார்

மனித தேகத்தில் புருவ மத்தியில் உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டுள்ள ஆன்மாதான் கடவுளின் ஏகதேசம் என்பதை அறிந்து அதனுடன் தொடர்பு கொள்ளுங்கள் அதுதான் உண்மையான கடவுளாகும். அங்குதான் கடவுளின் அருள் இருக்கின்றது

தன்னிடம் உள்ள அருளைப் பெற்று மரணத்தை வெல்லத் தெரியாமல்  உண்மையை அறிந்து வாழத் தெரியாமல், கண்ட கண்ட இடங்களுக்கு சென்று பொய்யான சமய மதக் கற்பனைக் கடவுள்களை வழிபாடு செய்ய வேண்டாம் என்கின்றார் வள்ளலார் .

காலத்தையும் நேரத்தையும் பொருள்களையும் விரையம் செய்யாமல் இன்று இந்த நேரத்தில் இருந்தே முயற்சி செய்யுங்கள் ..இந்த நாளே உங்களுக்கு இனிய நாளாக அமையட்டும் .....அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உங்களுக்கு துணையாக இருந்து நல்ல வழியைக் காட்டுவார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் ..