வியாழன், 24 டிசம்பர், 2020

பாடுபட்டீர் பயன் அறியீர் !

 *பாடுபட்டீர் பயன்அறியீர்*


ஒவ்வொருவரும் பிறந்து வளர்ந்து வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்பதற்காக பொருள் சம்பாதிக்க ஏதாவது ஒருவகையில் இடைவிடாது உழைக்கின்றோம் பொருள் ஈட்டுகிறோம் அதன் பலனை  *தேக சுதந்திரத்திற்காகவும் போக சுதந்திரத்திற்காகவும் ஜீவ சுதந்திரத்திற்காகவும் மட்டுமே படாதபாடுபட்டு உழைத்து அனுபவிக்கிறோம்.* 

*ஆன்ம சுதந்திரத்திற்காக உழைக்க தவறிவிடுகிறோம்*


உயிரையும் உடம்பையும் அழிக்காமல் பாதுகாக்க ஆன்ம சுதந்திரம் அவசியம் தேவை.ஆன்ம சுதந்திரம் பெற்றால் தான் அருள் சுதந்திரம் பெறமுடியும் அருள் சுதந்திரம் பெற்றால் தான் மரணத்தை வெல்ல முடியும்.மரணத்தை வென்றால் தான்  கடவுள் சுதந்திரம் பெறமுடியும்.கடவுள் சுதந்திரம் பெற்றால் மட்டுமே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக ஆபமுடியும்.


*உழைப்பே உயர்வுக்கு வழிகாட்டும் !* 


*நாம் உழைக்கும் உழைப்பு எதுவாக இருந்தாலும் நம் உயிரையும் உடம்பையும் காப்பாற்ற வேண்டும்*.

உயிரையும்

உடம்பையும் காப்பாற்றாத உழைப்பு வீண் விரையமான உழைப்பாகும்.


*வள்ளலார் பாடல்.* ! 


காடுவெட்டி நிலம் திருத்திக் காட்டெருவும் போட்டுக்

கரும்பைவிட்டுக் கடுவிரைத்துக் களிக்கின்ற உலகீர்


கூடுவிட்டுப் போயினபின் எதுபுரிவீர் எங்கே

குடியிருப்பீர் ஐயோ நீர் குறித்தறியீர் இங்கே


பாடுபட்டீர் பயன்அறியீர் பாழ்க்கிறைத்துக் கழித்தீர்


பட்டதெலாம் போதும் இது பரமர் 

வருதருணம்

ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப் பெறுவீர்

எண்மை உரைத் தேன்அலன்நான் உண்மையுரைத் தேனே.! 


*பாடலின் விபரம்*!


அடர்த்தியான மேடுபள்ளமான பெரிய காடு. அகற்ற சிரமமான பெரிய சிறிய பாறைகள் மற்றும் சிறிய பெரிய கற்கள் மேடுபள்ளமான மண்குவியல்கள். கரடுமுரடான அடர்த்தியான மரம்  செடிகொடிகள் முட்கள் நிறைந்த மரங்கள் மற்றும்  எதற்கும் பயன் படாத நெருக்கமான புதர்கள் நிறைந்த இடத்தை *ஒரு அறிவுள்ள மனிதனிடம் ஒப்படைக்கப் படுகிறது.* 


அந்த மனிதன் அந்த இடத்தை தனது அறிவு கூர்மையுடன் பல திறமையான ஆட்களின் உடல் வலிமைக்கொண்டும் பல பெரிய சிறிய கருவிகளைக் கொண்டும் எல்லோரும் ஆச்சரியப்படும் அளவிற்கு அந்த இடத்தில் தேவை இல்லாததை அனைத்தையும் அகற்றி மற்றும் கருவிகளைக் கொண்டு சமப்படுத்தி.

பன்படுத்தி பயன்படுத்தியும் *நன்செய் பயிர் வைக்கும்* அளவிற்கு இயற்கையான காட்டு எருவும் போட்டு நன்செய் பயிரிடும் நிலமாக  கொண்டு வந்துவிட்டார்.


மேலும் ஆழ்கிணறு தோண்டி நன்செய் விவசாயம் செய்வதற்குண்டான   வற்றாத தண்ணீர் கிடைக்கும் அளவிற்கும்  செய்துவிட்டார்.

இவ்வளவு பெரு முயற்சிசெய்து அறிவுபூர்வமாக  அழகுபடுத்தி விட்டார். அனைத்து மக்களுக்கும் பயன்படும் நெல் கரும்பு வாழை வெற்றிலை போன்ற  நன்செய் பயிர் வைக்கும் அளவிற்கு கொண்டுவந்துவிட்டார்.


இவ்வளவு பாடுபட்டு உழைத்து அனைவருக்கும் பசியைப்போக்கும்.சாத்வீக உணவு கிடைக்கும் நன்மைதரும்  பயிரான *நன்செய் பயிர் வைக்காமல். *கடுகு என்னும் விஷப்பயிர் விதைத்து எவருக்கும் பயன் இல்லாமல் செய்துவிட்டார்*.


இதைத்தான் வள்ளலார் காடுவெட்டி நிலம் திருத்தி காட்டுஎருவும் போட்டு கரும்பை விட்டு கடுகு விதைத்து களிக்கின்ற உலகீர். பாடுபட்டீர் பயன் அறியீர் பாழ்க்கு இறைத்துக் கழித்தீர்  என்று சொல்கிறார்.


*அதேபோல்* கஷ்டபட்டு கிடைத்த மனித்தேகம்.


*மனிதபிறப்பு உயர்ந்த பிறப்பு!*


எல்லாம்வல்ல தனித்தலைமைப் பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் தமக்கு சம்மான ஆன்மாவை இந்த பஞ்சபூத உலகிற்கு அனுப்பி தாவரம்.ஊர்வன.

பறப்பன

நடப்பன.அசுரர். தேவர் போன்ற ஆறு வகையான பிறப்பைக் கொடுத்து அவைகளுக்கு உண்டான துன்பம்.துயரம்.

அச்சம். பயம்.மரணம்  போன்ற துன்பங்களை இடைவிடாது கொடுத்து. அவைகளை சிரமம் பாராமல் அனுபவித்து அந்த ஆறு பிறப்புக்கள் ஒவ்வொன்றிலும் கடினமாக உழைத்து முழுமையாக தேர்ச்சி பெற்று. இறுதியாக  உயர்ந்த அறிவாகிய *ஏழாவது பிறப்பாகிய  மனிததேகம் இறைவனால் கொடுக்கப்பட்டது*.


மனிதர்களுக்கு உயர்ந்த அறிவு கொடுக்கப்பட்டதின் நோக்கமே.

 *எல்லாம்

வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத்*  தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்பசித்தி பெருவாழ்வு வாழவேண்டும் என்பதே மனித தேகம் கொடுக்கப்பட்டதின் நோக்கமாகும்.


*அருள் பெறவேண்டிய மனிதகுலம்*


*மனிததேகமானது அருளைப்பெற்று இறைநிலையை அடையாமல் பொருளைப்பெற்று பிறந்து பிறந்து.இறந்து இறந்து பிறப்பு எடுத்துக் கொண்டே உள்ளது*. 


இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று இறப்பு பிறப்பு இல்லாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழவேண்டிய மனிதகுலம். பஞ்ச பூத உலகின் மாயையில் சிக்கி மண்ணாசை.

பொன்னாசை.பெண்ணாசை போன்ற உலக பொருள் ஆசையில்  ஆர்வம் கொண்டு அருள் பெற முடியாமல்.

அருள்பெரும் வழித்தெரியாமல் இறந்து இறந்து.பிறந்து பிறந்து வெவ்வேறு பிறவிகள் எடுத்து இவ்வுலகிலே  வாழ்ந்து கொண்டு இருக்கின்ற நிலையில் ஆன்மாக்கள் தவித்துக் கொண்டு உள்ளன.


*வள்ளலார் காட்டும் நேர்வழி*


*இதுவரையில் இருந்த்துபோல் இனியும் விண்காலம் கழிக்காதீர்.*  பொய்யான சாதி சமய மதங்களின் கொள்கைகளைப் பின்பற்றி ஆன்மாவின் அருள் அறிவு விளங்காமல். நேர்வழி தெரியாமையால் அறியாமையால் அஞ்ஞானத்தால் உழன்று உழன்று அழிந்து அழிந்து பட்டதெல்லாம் போதும். இது பரமர் வருதருணம் ஈடுகட்டி வருவீரேல் இன்பம் மிகப்பெறுவீர்.இது உண்மை உரைக்கின்றேன் வாருங்கள் என மனிதகுலத்தை மேல்நிலைக்கு அழைத்துச் செல்ல அழைக்கின்றார் வள்ளல்பெருமான்.

மேலும் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கங்களைப் பின்பற்ற வழிகாட்டுகிறார். 


*வள்ளலார் பாடல் !*

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்

அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்


ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்

எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்


தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்

திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே


மோசஉரை எனநினைத்து மயங்காதீர் உலகீர்

முக்காலத் தினும்அழியா மூர்த்தம் அடைந் திடவே.! 


மனிதகுலம் அருள் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே *இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவதற்கு நேரிடையாக வடலூர் சத்திய ஞானசபைக்கு வருகை தருகின்றார்* .

அருள் பெறுவதற்கு ஆசை உள்ளவர்கள் வருகைதாருங்கள் என ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்.


ஆன்மா மனித தேகம் கிடைத்த அருமைத் தெரியாமல்.அருள் பெறமுடியாமல் மரணத்தை வெல்ல வழித்தெரியாமல். வீணாக பாடுபட்டு பயன் அடைய முடியாமல் வீண்காலம் கழித்து கொண்டு இருக்க வேண்டாம்.

இப்பிறவியிலே பெறவேண்டியதை பெற்று கொள்ளலாம் சந்தேகம் வேண்டும் இது அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள்வாக்கு என தெரியப்படுத்துகின்றார்.


*வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்* ! 


சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.! 


மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்


இதுநல்ல தருணம் அருள்  பெறுவதற்கே !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

செவ்வாய், 15 டிசம்பர், 2020

வள்ளலார் அழைக்கிறார் !

 *வள்ளலார் அழைக்கிறார்* ! 

*உலகில் தோன்றிய ஞானிகள் எல்லோரும் அணுபக்ஷத்தின் கூட்டு சேர்க்கையால் தாய் தந்தையின் உறவில் பிறந்தவர்கள்* *வள்ளலார் மட்டுமே இறைவனால் வருவிக்க உற்றவர் அதற்கு சம்பு பக்ஷசம் என்று பெயர்*.

தமிழ்நாடு கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் *மருதூர்* கிராமத்தின் கணக்கராக பணியாற்றிவந்தவர் இராமய்யா அவரின் மனைவியார் சின்னம்மையார் அவர்கள் ஜீவகாருண்ய ஒழுக்கம் நிறைந்தவர்.அவரை சந்தித்து நேர்காணல்  காண்பதற்கு 

சிவனடியார் கோலத்தில் வந்தவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.அவர்  பசிக்கு உணவு கேட்கிறார்.*பசியைப்போக்கிய சின்னம்மையிடம்

என்பசியைப் போக்கிய உமக்கு உலகில் உள்ளோர் அனைவரின் பசிப்பிணியைப் போக்க ஒரு ஞானக்குழந்தை பிறக்கும் என்று *சிவனடியார் உருவில் வந்த  இறைவன். வாயால் சொல்லியவுடன் கருத் தரித்தவர்தான் இராமலிங்கம்* என்னும் திருவருட்பிரகாச வள்ளலார். 

*உயர்ந்த அறிவு பெற்ற மனிததேகம்*!

இவ்வுலகில்  இறைவனால் அனுப்பிய ஆன்மாக்களின் இறுதி பிறப்பாகிய உயர்ந்த அறிவுள்ள மனிதபிறப்பு கொடுக்கப்பட்டதின் நோக்கமே இறைவனைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று  மரணத்தை வென்று பிறப்பை இறப்பை அறுத்து இறைவனும் கலக்கவேண்டும் என்பதுவே இறைவன் விதித்த நியதி சட்டமாகும்.

ஆன்மாக்கள் இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்ளாமலும். அருளைப்பெற முடியாமலும் மாயையில் சிக்குண்டு சாதி சமய மதங்களின்  தவறான கொள்கைகளைப் பின்பற்றி பிறந்து பிறந்து. இறந்து இறந்து அழிந்து கொண்டு இருக்கும் ஆன்மாக்களை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்தான் வள்ளல்பெருமான் அவர்கள். 

*வள்ளலார் பாடல்* ! 

பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவியது இதனால்

செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனி நீ

*புன்னெறி தவிர்த்து ஒரு பொதுநெறி எனும் வான்*

*புத்தமுது* *அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்*

தன்னெறி செலுத்துக என்ற என் அரசேதனிநடராஜ என் சற்குரு மணியே.!

மேலே கண்ட  பாடலில நாம் தெரிந்து கொள்ள வேண்டியது. சாதி சமயம் மதம் அல்லாத புதியதோர் உலகத்தை படைக்க வேண்டும் என்பதற்காக *சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை* 1872 ஆம் ஆண்டு வடலூரில் புதுப்பித்து புதிய கொள்கைகளை முன்வைத்து தோற்றுவிக்கின்றார்

மனிதன் இறைவனைத் தொடர்பு கொண்டு  அருளைப் பெற  வேண்டுமானால். எல்லா உயிர்களையும் தம் உயிர்கள் போல் பாவித்து *பொது நோக்கத்துடன் அன்பு தயவு உயிர்இரக்கம் கொண்டு கருணையுடன் மரணத்தை வென்று வாழவேண்டும்* என்பதே வள்ளலாரின் முக்கிய கொள்கைகளில் முதன்மையானதாகும். 

*சத்திய தருமச்சாலை*

உயிர் குலத்தின் பசிப்பிணியைப் போக்கினால் மட்டுமே அறிவு விளக்கம். ஆன்ம விளக்கம்  பெற்று 

இறைவனிடம் தீராத  அன்பு காதல் கொண்டு நெருங்கிய உறவால் பூரண அருள் பெறலாம் என்ற உண்மையை மக்களுக்கு வெளிப்படுத்தவே.1867 ஆம் ஆண்டு வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலையைத்  தோற்றுவிக்கின்றார்.இன்றுவரை இடைவிடாது தொடர்ந்து மக்களின் பசிப்பிணியை போக்கிவருகின்றது. 

மேலும் *வள்ளலாரின் கொள்கைகள்*

1.கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்! 

2.ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்.

3.சிறுதெய்வ வழிபாடுகள் கூடாது. தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது.

4.உயிர்க்கொலை செய்யக்கூடாது.புலால் உண்ணக்கூடாது.

5.வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள் இதிகாசங்கள் உண்மையைத் தெரிவிக்கமாட்டாது

6.கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்க வேண்டாம்.மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம்.

7.இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்ககூடாது.

8.இறந்தவர்களுக்கு அழுகுரல் செய்யவேண்டாம் கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம்.நேர்ந்த நேரத்தில் நேர்ந்த அளவு அன்னவிரயம் செய்தால் போதும்.

9.பெண்களுக்கும் சம உரிமை வழங்க வேண்டும். யோகம் முதலிய சாதனங்கள் கற்றுத்தர வேண்டும். 

10.எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் என்னுகின்ற ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும்.

11..எதிலும் பொது நோக்கம் வேண்டும்.

*ஆன்ம லாபம்* !

*மனிதகுலம் முக்கியமாக அடைய வேண்டுவது முடிவான ஆன்ம லாபமாகிய சிவானுபவமே அன்றி  வேறு எதவும் இல்லை*.நமக்கு சொர்க்கம் நரகம் என்ற விசாரம் அல்ல.நாம் எல்லோரும் மேலான ஆன்ம இன்பத்தை அடையும் பொருட்டு *இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் தெரிவிக்க வேண்டும் என்னும் கருணையோடு பொது நோக்கத்தோடு  *வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை 1872 ஆண்டு நிறுவுகிறார்*. 

*சத்திய ஞானசபை விளக்கம்* ! 

சாதி சமய மதங்கள் உருவ (பக்தி) வழிபாட்டிற்காக உடம்பை ஆலயம்( கோயில்) ஆக்கினார்கள்.பல தத்துவ உருவங்களை படைத்து பல தெய்வங்களாக்கினார்கள்.

*வள்ளலார் ஞானம் அடைவதற்காக. ஒரே ஒளி. ஒரே குணம்.ஒரே உருவம் உள்ள ஒரேத் தன்மையுள்ள மனிததேகத்தின் அகத்தில் உள்ள ஆன்மாவை அறிந்து கொண்டு அருள் பெறுவதற்காக.புற ஒளி வழிபாட்டிற்காக சத்திய ஞானசபையை* தோற்றுவிக்கின்றார்

ஆரம்ப காலத்தில் சமய மதங்களில் அதிக ஈடுபாடு கொண்டு எல்லா தத்துவ உருவ தெய்வங்கள் மேல் பக்தி உணர்வோடு ஆயிரக்கணக்கான பாடல்கள் பாடி வெளியிட்டுள்ளார்.

இறை அருள்பெற்று உண்மை அறிந்தவுடன் *சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்ஜோதி!* என்னும் வெளிப்படையான இயற்கை உண்மைகடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அறிந்து கொள்கிறார்.

சாதி சமயம் மதம் சாராத சத்திய ஞானசபையை தோற்றுவிக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! மாதிரி வரைபடம் போட்டுத் தருகின்றார்.தான் கண்ட அக ஆன்ம அனுபவத்தை அப்படியே புறத்தில் சத்திய ஞானசபையாக அமைக்கின்றார் வள்ளலார்.

*வள்ளலார் பாடல்* ! 

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்சன்மார்க்க சித்தியை நான்பெற்றுக் கொண்டனன்

நித்திய ஞான நிறையமு துண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் !  அற்புதம் அற்புதமே அருள் அற்புதம் அற்புதமே என்று பதிவு செய்கிறார்.

மேலும்.

*சபை யெனது துளமெனத் தான் அமர்ந்து எனக்கே*

*அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி*!

என்னும் அக அனுபவ ஆன்ம உண்மையை வெளிப்படுத்துகிறார். *ஆன்மாவும் ஒளியாக உள்ளது கடவுளும் ஒளியாக உள்ளார் என்பதை உலக மக்களுக்கு வெளிச்சம் போட்டு  காட்டவே சத்தியஞானசபையை புறத்தில் தோற்றுவிக்கின்றார்*

*வடலூர் மக்கள்* வள்ளலார் மீது வைத்துள்ள  அன்பின் காரணமாக இனாமாக கொடுத்துள்ள 80 காணி பரப்பளவு கொண்ட இடத்தில்.

*எண்கோண வடிவமாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையை* தோற்றுவிக்கின்றார்அவற்றில் 8 எட்டுக் கதவுகள் 16 பதினாறு ஜன்னல்கள் கொண்டதாகும். சபையின் மத்தியில் ஞான சிங்காதன பீடம் என்னும் மேடை உள்ளது. மேடையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ஒளிவடிவமாக அமர்ந்து மக்களுக்கு அருள் பாலிக்கின்றார். என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார்

மேலும் சபையின் புறப்புறத்தில் சுற்றிலும் இரும்பு கம்பிகளால் பின்னப்பட்ட சங்கிலி வளையங்களால்  (மாயாசங்கிலி )  அமைத்துள்ளார்.

இன்றுவரை துருபிடிக்காமல் அப்படியே உள்ளது. உயிர்க்கொலை செய்பவர்கள்

*புலால் (மாமிசம்) மறுத்தவர்கள் மட்டுமே சங்கிலி தாண்டி சபையின் உள்ளே வரவேண்டும் என்ற வாசகம் எழுதி வைத்துள்ளார்.*

*வள்ளலார் வடலூருக்கு அழைக்கின்றார்*

1. வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தாற் பெறலாம் நல்ல வரமே.

2. திருவார்பொன் னம்பலத்தே செழிக்குங் குஞ் சிதபாதர் சிவசிதம் பரபோதர் தெய்வச் சபாநாதர்... வருவார்

3. சிந்தை களிக்கக்கண்டு சிவானந்த மதுவுண்டு தெளிந்தோர் எல்லாரும் தொண்டு செய்யப் பவுரிகொண்டு

இந்த வெளியில்நட மிடத்துணிந் தீரேஅங்கே இதைவிடப் பெருவெளி இருக்குதென் றால்இங்கே வருவார்.....

4. இடுக்கி ல்லாமல் இருக்க இடமுண்டு நடஞ்செய்ய இங்கு அம்பலம்  ஒன்று அங்கே எட்டம் பலம் உண்டைய

ஒடுக்கில் இருப்பதென்ன உளவுகண்டு கொள்வீர் என்னால்

உண்மைஇது வஞ்சமல்ல உம்மேல் ஆணை என்றுசொன்னால் வருவார்...

5. மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து விளையா டவும்எங்கள் வினை

ஓடவும் ஒளித்து எல்லையில் இன்பந்தரவும் நல்ல சமயந்தானிது

இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது

வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே

வந்தாற் பெறலாம்நல்ல வரமே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவுடன் பதிவு செய்து அனைத்துலக மக்களையும் வடலூருக்கு அழைக்கின்றார் வள்ளலார்.

ஒவ்வொரு நாளும் மதியம் இரவும் சாதாரண வழிபாடும் .ஒவ்வொரு மாதப்பூசம் அன்றும் இரவு 8-30 மணிக்கு ஏழுதிரைகள் நீக்கி  மூன்றுமுறை ஜோதி தரிசனமும். தைப்பூசத்தன்று  ஆறுகாலமும் ஏழுதிரைகள் நீக்கி சிறப்பு ஜோதி தரிசனமும் காட்டப்படுகிறது.

வடலூர் வந்து வந்து தரிசிப்பீர்களானால் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அழைக்கிறார்.

*வள்ளல்பெருமான் அவர்கள் உலக மக்களுக்கு சாகாக்கல்வி கற்றுத்தருவதற்காக இறைவனால் வருவிக்க வந்தவர். பூரண அருள் பெற்று மரணத்தை வென்றவர். கடவுள் நிலை அறிந்து அம்மாயமானவர்*.

*வள்ளலார் பாடல்* !

காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக தான் பெற்ற மரணம் இல்லாப் பெருவாழ்வின்  உண்மையை வள்ளலார். வெளிப்படுத்துகிறார்

*பஞ்சபூதங்களால் பின்னப்பட்ட  உடம்பை பஞ்ச பூதங்களில் கலக்காமல்*.

*பஞ்சபூதங்களால் சிதைக்காமல்*.

*இயற்கை உண்மை தனித் தலைமை பெரும்பதி* *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் பூரண அருள் பெற்று.பூத தேக உடம்பின் அணுக்களை அருள் ஒளிதேக அணுக்களாக மாற்றி அதாவது கடவுள் நிலைக்கு தன்னை தகுதியாக்கி இறைவனுடன் கலந்து வாழ்வதே பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்* 

தாம்பெற்ற பெரும் பேற்றை  உலக மக்கள் அனைவரும் பெறவேண்டும் என்பதற்காக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் *கருணை உள்ளத்தோடு வடலூருக்கு வள்ளலார் அழைக்கிறார்*.

*இதுவே வள்ளல் பெருமானின் தனித்தன்மையாகும்*.

*வள்ளலார் பாடல்*

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

ஜோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா *தென்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே*.! 

*மேலும் வள்ளலார் அருள்பூரணம் பெற்று மரணத்தை வென்று இறைவனுடன் கலந்ததால் ஐந்தொழில் வல்லபமான அருள் ஆட்சியை வழங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மகிழ்கின்றனர்*.

*வள்ளலார் பாடல்* !

அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு*

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு *மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு*.!

மேலே கண்ட பாடல் வாயிலாக தெரியப்படுத்துகின்றார்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அருட்பெருஞ்ஜோதி!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

புதன், 9 டிசம்பர், 2020

அருள் அறிவு ! மருள் அறிவு !

 *அருள் அறிவு ! மருள் அறிவு !*


*அருள் அறிவு அறிந்தவன் மரணத்தை வெல்கிறான்.மருள் அறிவில் வாழ்கிறவன் மரணத்தை தழுவுகிறான்*


மனித உடம்பின் ஒவ்வொருவருடைய ஆனமாவிலும் உண்மை அறிவும் அருளும்.இறைவன் நிறைந்து நிறைத்து வைத்து இருக்கின்றார்.


அவற்றை அறிந்து தெரிந்து உணர்ந்து பின்பற்றி வாழ்ந்து அனுபவிப்பவர்களே அறிவுள்ள உண்மையான உயர்ந்த சுத்த சன்மார்க்கம் சார்ந்த உயர்ந்த  மனிதர்களாவார்கள்.


மனிதர்கள் புறத்தை தேடித் திரியும் மனத்தால்.புத்தியால் உண்மையான அருள் அறிவை அறிய முடியாது.


மேலும் ஜீவகாருண்யம் இல்லாமல்  செயல்படும்  தவத்தால்.

தியானத்தால்.

பக்தியால். யோகத்தால் விரத்த்தால் உண்மையான அருள் அறிவை  அறிய முடியாது. 


*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்* !


இறைவனால் படைத்தை உலக உயிர்களின் துன்பத்தை போக்கும் தயவு என்னும்  ஜீவகாருண்யத்தால் மட்டுமே அன்பும் அறிவும் தானே விளங்கும். *அன்பும் அறிவும் விளங்கும் இடம் சிற்சபை என்னும் ஆன்மா இருக்கும் இடமாகும்.*

ஆன்மாவில் இருந்து தோன்றுவதே அருள் அறிவு என்பதாகும்.


அருள் அறிவின் முதிர்ச்சியே கருணை என்பதாகும் *கருணையால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்கொள்ள முடியும். அவற்றைத்தான் சிறிய தயவைக் கொண்டு பெரிய தயவைப் பெறவேண்டும் என்கிறார் வள்ளலார்.அதேபோல் ஆன்மாவின் கருணைக் கொண்டு ஆண்டவரின் தனிப்பெருங கருணை பெறவேண்டும். கருணையால் மட்டுமே அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் பெறவேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும் ..* 

*வள்ளலார் அகவலில் பதிவு செய்துள்ளது*.


அருள் அறிவு வொன்றே அறிவு மற்றெல்லாம்

மருள் அறிவு என்றே வகுத்த மெய்ச் சிவமே!


*அறிவு இரண்டு வகை.... அருள்அறிவு*

*மருள்அறிவு என்பதாகும்*.


தன்னை அறிந்து. தன் தலைவனை அறிந்து.அருள் அறிவு பெற்று இன்பம் உற நினப்பது எதுவோ அதுவே ஆன்ம அறிவு அருள் அறிவு என்பதாகும். .


ஆன்ம அறிவு விளங்கும் போது தான் எல்லா உயிர்களும் தம் உயிர்போல் நினைக்கும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை  விளங்கும். ஆன்ம ஒற்றுமை உரிமை விளங்கினால் எல்லா உயிர்கள் மீதும் அன்பு.தயவு.

கருணை உண்டாகும்.

கருணையே வடிவமாக மாறுவதுதான் அருள் அறிவாகும்.


*மருள்அறிவு என்பது சுயநலம் சார்ந்த்து*.


வள்ளலார் கொள்கையான சுத்த சன்மார்க்க சங்கத்தை சார்ந்து  இருந்தாலும். பொது நோக்கம் இல்லாமல்

தங்களுக்காக.

தங்கள் குடும்பத்திற்காக.

தங்களைச் சார்ந்தவர்களுக்காக.தங்கள் சங்கம் சார்ந்தவர்கள்  மட்டுமே வளர்ந்தால் வாழ்ந்தால்  போதும் என்ற சுயநலத்துடன் இருப்பதுவே மருள் அறிவாகும்.


*பெருமைக்காக புகழுக்காக வாழ்வது*


பல சன்மார்க்க சங்கங்கள் ஜீவகாருண்யம் என்ற பெயரில்.பெருமைக்காகவும் 

புகழுக்காகவும்.பதவிக்காகவும். 

பாராட்டுக்காகவும் விளம்பரத்திற்காகவும்

பிறருடைய பணத்தில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்காகவும்.   தங்களை ஈடுபடுத்திக் கொண்டு செயல்படுவது மருள் அறிவாகும்.


*வள்ளலார் பாடல்*!


எவ்வுயிர்த் திரளும் என்னுயிர் எனவே எண்ணி நல் இன்புறச் செயவும்


அவ்வுயிர் களுக்கு வரும் இடை யூற்றை அகற்றியே அச்சநீக் கிடவும்


செவ்வையுற் றுனது திருப்பதம் பாடிச் சிவசிவ என்றுகூத் தாடி


ஒவ்வுறு களிப்பால் அழிவுறா திங்கே ஓங்கவும் இச்சைகாண் எந்தாய்.! 


எல்லா உயிர்களும் தன்னுயிர் போல் எண்ணி பொது நலநோக்கத்துடன் இன்புறச் செய்வதும்.அவ்வுயிர்களுக்கு வரும் துன்பத்தை அறிந்து அகற்றவும். இறை உணர்வோடு.

இயற்கை உண்மையோடு.

இயற்கை கருணையோடு அச்சம்.பயம்.துன்பம்.துயரம்.கொலை நேர்ந்தால் அவற்றைப் போக்கி காப்பாற்றுவதே.

காப்பாற்ற நினைப்பதே அருள் அறிவாகும்.


அருள் அறிவின் முதிர்ச்சி தான் கருணையாக மாறுகின்றது.

அகம் புறம் கருணை நிறைந்து ததும்பும்போது ஆன்மாவில் இருந்து அருள் சுரக்க ஆரம்பித்துவிடும்.


*கருணைக்கு தேவையானது*

*அன்பு.தயவு.உயிர் இரக்கம்.ஜீவகாருண்யம். ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை*  கொண்டு வாழ்ந்தால் மட்டுமே கருணை என்னும் அருள்  நிறைந்து அகமும் புறமும் நிரம்பி வழிந்து ஊன  உடம்பை ஒளி உடம்பாக மாற்றி மரணத்தை வெல்லமுடியும்.


*ஆன்மாவில் உள்ள நன் நிதிதான் என்றும் அழியாத அருள் நிதியாகும்*  *சுத்த சன்மார்க்கம் என்பதே மருள் அறிவு நீங்கி அருள்  அறிவு பெறுவதாகும்*   


உயர்ந்த பிறப்பு உயர்ந்த அறிவு 

மனிதர்களுக்கு கொடுக்கப்பட்டதின் நோக்கமும்   இயற்கை உண்மையின் ரகசியம் அருள் அறிவு பெறுவதற்கே என்பதை அறிவால்  அறிந்துகொள்ள வேண்டும்.


*வள்ளலார் பாடல்*!


கருணை நிறைந்து அகம் புறமும் துளும்பி வழிந்து

உயிர்க்கெல்லாம் களைகண் ஆகித்

தெருள் நிறைந்த இன்பநிலை வளர்க்கின்ற

கண்ணுடையோய் 


சிதையா ஞானப்

பொருள்நிறைந்த மறையமுதம் பொழிகின்ற

மலர் வாயோய் பொய்ய னேன்றன்


மருள்நிறைந்த மனக்கருங்கற் பாறையும்உட்

கசிந்துருக்கும் வடிவத் தோயே.!


மேலும்


கருணைக் கடலே அதில் எழுந்த கருணை அமுதே கனியமுதில்

தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே


பொருண் மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே

தெருண் மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே.?


மேலும்


கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுக மற் றெல்லாம்


மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்


இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்


தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.!


தனிப்பெருங் கருணை உள்ளவர் கடவுள் !  அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.. அவர்தான் ஒவ்வொரு ஆன்மாவிலும்.உயிரிலும்  உள் ஒளியாக இருந்து இயங்கிக் கொண்டு உள்ளவர்..


சிறு நெறியான சாதி சமய மதங்களின் மருள் நெறியைப் பின்பற்றாமல் .

அருள் பெறும் சுத்த சன்மார்க்க தனிநெறியை. நன்நெறியான அருள் நெறியைப் பின்பற்றிக் கொண்டு வாழவதே அருள் அறிவாகும்.


ஆன்மா என்னும் உள் ஒளியை  மறைத்துக் கொண்டுள்ள  அறியாமை அஞ்ஞானம் என்னும்  திரைகளை அகற்றும் வழி தெரியாமல்  வாழ்வதுதான் அறியாமை.அஞ்ஞானம் என்னும் திரைகளாகும்...அத்திரைகளை நீக்கும் வழியைத் தெரிந்துகொண்டு அகற்றுவதுதான்  *அருள் அறிவாகும்* அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் இந்திரிய .கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்கத்தின் முக்கியமான ஜீவகாருண்ய ஒழுக்கம் நிறைந்த கொள்கைகளாகும் 


*நாம் ஆன்ம அறிவு விளக்கமும்.அருள் அறிவு விளக்கமும் பெற முடியாமல் .மருள் அறிவைக் கொண்டு வாழ்வதால் தான். இதுவரையில் சுத்த சன்மார்க்கத்தில் ஒருவரும் தேரவில்லை*


வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நேர்வழியில் செல்லாமல்.சாதி சமய மதங்களின் குறுக்கு வழியைப் பின்பற்றி. *குறுக்கு வழியே நேர்வழி என நினைத்து வாழ்வதே கண்மூடி பழக்கமாகும்*


*வள்ளலார்பாடல்*


கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்கொண் டாடும்

கண்மூடி வழக்கம்எலாம் மண்மூடிப் போக


மலைவறுசன் மார்க்கம்ஒன்றே நிலைபெறமெய் உலகம்

வாழ்ந்தோங்கக் கருதியருள் வழங்கினைஎன் தனக்கே


உலைவறும்இப் பொழுதேநல் தருணம்என நீயே

உணர்த்தினைவந் தணைந்தருள்வாய் உண்மைஉரைத் தவனே


சிலைநிகர்வன் மனங்கரைத்துத் திருவமுதம் அளித்தோய்

சித்தசிகா மணியேஎன் திருநடநா யகனே.! 


மேலே கண்ட பாடலில் மருள் அறிவைப்பற்றி தெளிவுப்படுத்துகின்றார்.


அருள் பெறும் அருள் அறிவைப் பயன் படுத்த வேண்டும். அதற்குப் பெயர் தான் அருள் அறிவு என்கிறார் வள்ளலார்.


*வள்ளலார் திருஅகவலில் பதிவு செய்துள்ளது*!


 அருள் அறிவு வொன்றே யறிவு 

மற்றெல்லாம்

மருளறி வென்றே வகுத்தமெய்ச் சிவமே!


அருட்சுக மொன்றே யரும்பெறற் பெருஞ்சுகம்

மருட்சுகம் பிறவென வகுத்தமெய்ச் சிவமே!


அருட்பே றதுவே யரும்பெறற் பெரும்பே

றறுக்குமென் றியம்பிய சிவமே!


 அருட்டனி வல்லப மதுவே யெலாஞ்செய்

பொருட்டனிச் சித்தெனப் புகன்றமெய்ச் சிவமே!


 அருளறி யார்தமை யறியார் எம்மையும்

பொருளறி யாரெனப் புகன்றமெய்ச் சிவமே!


அருணிலை யொன்றே யனைத்தும் பெறுநிலை

பொருணிலை காண்கெனப் புகன்றமெய்ச் சிவமே!


 அருள்வடி வதுவே யழியாத் தனிவடி

வருள்பெற முயலுகென் றருளிய சிவமே!


 அருளே நம்மிய லருளே நம்முரு

அருளே நம்வடி வாமென்ற சிவமே!


அருளே நம்மடி யருளே நம்முடி

அருளே நம்நடு வாமென்ற சிவமே !


 அருளே நம்மறி வருளே நம்மனம்

அருளே நங்குண மாமென்ற சிவமே!


அருளே நம்பதி யருளே நம்பதம்

அருளே நம்மிட மாமென்ற சிவமே!


 அருளே நந்துணை யருளே நந்தொழில்

அருளே நம்விருப் பாமென்ற சிவமே!


அருளே நம்பொரு ளருளே நம்மொளி

அருளே நாமறி வாயென்ற சிவமே!


அருளே நங்குல மருளே நம்மினம்

அருளே நாமறி வாயென்ற சிவமே!


அருளே நஞ்சுக மருளே நம்பெயர்

அருளே நாமறி வாயென்ற சிவமே!


 அருளொளி யடைந்தனை யருளமு துண்டனை

அருண்மதி வாழ்கவென் றருளிய சிவமே!


அருணிலை பெற்றனை யருள்வடி வுற்றனை

அருளர சியற்றுகென் றருளிய சிவமே !


வள்ளலார் அருள் அறிவைத் தெரிந்து கொண்டு ஆன்மாவின் உள்ளே நுழைந்தார். ஒவ்வொரு திரைகளாக நீங்கினார். அகத்தில் உள்ள அருளை முழுமையாக சுவைத்தார் உடம்பு முழுவதும் அருளை நிரப்பினார். ஐம் பூத உடம்பை அருள் உடம்பாக மாற்றினார் மரணத்தை வென்றார்..பிறப்பு இறப்பு இல்லாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து கொண்டுள்ளார்.


நாம் வள்ளலார் போல் வாழ்வதற்கு மருள் அறிவை நீக்கி அருள் அறிவைப் பெற்று வாழ்வதற்கு எந்த தடைகளும் கிடையாது. மருள் அறிவினால்

தடைகளை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்..


தடைகளை நீக்குவோம் அருளைப் பெறுவோம்.


*வள்ளலார் பாடல்*!


பிச்சுலகர் மெச்சப் பிதற்றிநின்ற பேதையனேன்


இச்சைஎலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே


அச்சமெலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்


நிச்சலும் பேரானந்த நித்திரைசெய் கின்றேனே.!


என்போல்  இவ்வலகம் பெறுதல் வேண்டும் என்பதே வள்ளலாரின் விருப்பமும் வேண்டுகோளாகும்


மருள் அறிவை நீக்கி.அருள் அறிவை பெருக்கி வாழ்வதே மரணத்தை வெல்லும் வாழ்க்கையாகும்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் 

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

வெள்ளி, 4 டிசம்பர், 2020

அன்பு தயவு கருணை அருள் !

 *அன்பு தயவு  கருணை அருள்* ! 

அன்பு. தயவு . கருணை. அருள் இந்த நான்கு சொற்களுக்கும் உள்ள கருத்துக்களின் விளக்கம் என்ன என்பதையும் அவற்றை எங்கே பயன்படுத்த வேண்டும்?. யாரிடம் பயன்படுத்த வேண்டும்?  எவ்வாறு பயன்படுத்த வேண்டும் ? என்பதை தெரிந்துகொண்டு அவற்றை முறையாக பின்பற்றி வாழ்ந்தால் ஆன்மலாபம் பெறுவதற்கும் அருள் பெறுவதற்கும் மரணத்தை வெல்வதற்கும் இலகுவான வாய்ப்பாக இருக்கும்.

*அன்பு தயவு கருணை அருள் இந்த நான்கு வார்த்தைகளும் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது.* கேட்பதற்கு ஒரே பொருளைக் குறிப்பதாக இருந்தாலும் அர்த்தங்கள் வெவ்வேறானது என்பதை தெரிந்து கொண்டு செயல்பட வேண்டும். 

இந்த நான்கு வார்த்தைகளின் தனித்துவம் மற்றும் சிறப்பு உண்மை தெரியாமல் பின்பற்றி வாழ்வதால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொள்ள முடியாமலும் அருளைப் பெற முடியாமலும்.மரணத்தை வெல்ல முடியாமலும் தவித்துக் கொண்டு உள்ளோம்.

*வள்ளலார் பேருபதேசத்தில் சொல்லியது*.

*தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந் தயவுடைய பேரறிவேயாம்.* மேலும் 

*என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.* என்பதை வெளிப்படையாக வள்ளல்பெருமான் சொல்லுகிறார்.

*உலகியலில் மற்ற ஞானிகள் சொல்லிய கருத்துக்கள் உண்மையானவை என நினைத்து பின்பற்றி வருகிறோம்*..

வள்ளல்பெருமான் தெளிவாக மக்களுக்கு புரியும்படி சொல்லுகின்றார்.

இஙப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலே ஏற்றியிருக்கின்றார். *இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* 

என, *தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். *கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது *யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான்* என்னைத் தூக்கி விட்டது. என்று சொல்லுகிறார்.

மேலே கண்ட விளக்கத்தை நாம் புரிந்து கொண்டால் நேர்வழியில் செல்லவும்.இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வெல்லவும் வாய்ப்புகள் அதிகம்.

*அன்பிற்கு என்ன அர்த்தம் எங்கு செலுத்த வேண்டும் ?*

உலகியலில் அன்பு என்பது காதல் என்றும் *அதற்கு அடையாளமாக  இருதயத்தையும் சுட்டிக்காட்டுவார்கள்*.உலகில் உள்ள உயிர் இனங்களில் மேல் எதாவது ஒருவகையில்  காட்டுவது அன்பு என்றும் சொல்லுவார்கள்.

*பிரதிபலனை எதிர்பார்க்காமல் செலுத்துவதே உண்மையான அன்பு* *அது இறைவன் இடத்தில் மட்டுமே உள்ளது.* 

அழியும் உயிர் இனங்களின் மேல் செலுத்தும் அன்பு நிலையானது அல்ல. *நிலையானது எதுவோ அதன்மேல் செலுத்துவதே உண்மையான அன்பாகும்.*

இவ்வுலகில் உள்ள உயிர்கள் மேல்  செலுத்தும் அன்பு மாறுபடுகிறது. அம்மா அப்பா அண்ணன் தம்பி சகோதரி உற்றார் உறவினர் நண்பர்கள் மேலும் உள்ள உயிர் இனங்கள் மேல் செலுத்தும் அன்பு ஒரே மாதிரியாக செலுத்தமுடியாது ஜீவன்களுக்கு தகுந்தமாதிரி வேறுபடுகின்றது.

அதனால் உண்மையான அன்பு ஒரேமாதிரியாக வெளிப்படாது.

எனவே உயிர்கள் மேல் உயிர் இரக்கமான தயவு மட்டுமே செலுத்த முடியும்.

தயவிற்குப் பெயர் பரோபகாரம் என்றும் வள்ளல்பெருமான் சொல்லுவார் மேலும் ஜீவகாருண்யம் என்றும் சொல்லுவார்.

*ஆன்மாவின் இயற்கை குணமே தயவு என்றும் சொல்லுவார்*

சீவகாருணிய ஒழுக்கத்தினால் அருளைப் பெறக்கூடு மென்பது எப்படி என்று அறியவேண்டில்:-?

*அருள் என்பது கடவுள் இயற்கை விளக்கம் அல்லது கடவுள் தயவு.* *சீவகாருணிய மென்பது ஆன்மாக்களின் இயற்கைவிளக்கம் அல்லது ஆன்மாக்கள் தயவு.*  *இதனால், ஒருமைக் கரணமாகிய சிறிய விளக்கத்தைக் கொண்டு பெரிய விளக்கத்தைப் பெறுதலும் சிறிய தயவைக்கொண்டு பெரிய தயவைப் பெறுதலும் கூடும்*. *சிறு நெருப்பைக் கொண்டு பெருநெருப்பைப் பெறுதல்போல என்றறிய வேண்டும்*.

இதனால் சீவகாருணிய ஒழுக்கமே சன்மார்க்கம் என்றறியப்படும். *சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்*.

ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள இயற்கை உண்மைத்தன்மை யான தயவு வெளிப்படுவதற்கு  ஜீவகாருண்யமே வழியாக உள்ளது.அதன் உண்மைத்தன்மை யான தயவு  வெளிப்பட்டால்தான் உண்மை அறிவும் அன்பும் வெளிப்படும்.

*அறிவு வெளிப்படும்போதுதான் அன்பை எங்கு செலுத்த வேண்டும்  என்ற உண்மை வெளிப்படும்*

*அன்புடையவர் எல்லாம் சன்மார்க்க சங்கத்தவர் என்று வள்ளல்பெருமான் சொல்லவில்லை*

*தயவுடையவர் எல்லாம் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர் என்றுதான் சொல்லுகிறார்.* எனவே *ஜீவர்களிடத்தில் தயவும்*. *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடத்தில் அன்பு செலுத்த வேண்டும்* என்கிறார்.

தயவின் தொடர்ச்சியே கருணை என்பதாகும்.ஆதலால் தான்  *எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி* என்பார் வள்ளலார். 

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் உண்மையான அன்பை செலுத்தி அருள் பெறுதல் வேண்டும்.ஆண்டவர் மீது அன்பு செலுத்தினால் மட்டுமே உயிர்கள் மீது எதிர்பாராத அதாவது பிரதிபலனை எதிர்பார்க்காத  உண்மையான அன்பை செலுத்தமுடியும்.

ஜீவன்கள்மீது உண்மையான காருண்யம். உயிர்இரக்கம் கொண்டால் இயற்கையான கருணை வளர்ந்து முற்றுபெறும். அதனால்தான் கருணையும் சிவமும் ஒன்று என்று சொல்லுகிறார் வள்ளல்பெருமான். 

*ஜீவர்களிடத்தில் தயவும் கருணையும் செலுத்த வேண்டும்*

*ஆண்டவரிடத்தில் அன்பு செலுத்தி அருள் பெறுதல் வேண்டும்*

*வள்ளலார் பாடல்!* 

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.! 

மேலே கண்டபாடலில் வள்ளலார் தெளிவாக அன்பின் வளர்ச்சியைத் தெளிவுப்படுத்துகின்றார்.

*மேலும் வள்ளலார் பாடல்* 

துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித்தது நினைச்சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே

சுதந்தரம தானது உலகில்

வன்பெலாம் நீக்கி நல் வழியெலாம் ஆக்கி மெய்வாழ்வெலாம் பெற்று *மிகவும்மன்னுயிர் எலாம்களித் திடநினைத்தனை* உன்றன்

மனநினைப் பின்படிக்கே*

அன்பநீ பெறுக உலவாது நீடூழிவிளை

யாடுக அருட்சோதியாம்

ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்ஆணைநம் ஆணைஎன்றே

இன்புறத் திருவாக் களித்து எனது உள்ளே கலந்துஇசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்இலங்கு நடராஜபதியே.! 

மேலே கண்ட பாடலில் துன்பம் எலாம் தீர்ந்து சுகம் பலித்த விதத்தை தெரிவிக்கின்றார். பாடலை ஊன்றி படித்து பயன் பெறவும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்9865939896.