ஞாயிறு, 30 நவம்பர், 2014

உண்மை அறிவு !

உண்மை அறிவு !
நம்பிக்கைக்கும் ,மூடநம்பிக்கைக்கும்,பகுத்தறிவுக்கும் மயிரிழை அளவே வித்தியாசம் உள்ளது. அதைத் துல்லியமாக இனம்பிரித்து புரிந்துக்கொள்வதே உண்மையான பகுத்தறிவு.
மனோசக்தியே மந்திர சக்தி.என்பார்கள் அந்த மனோசக்தியை எப்படி பயன் படுத்திக் கொள்வது என்பதை உண்மையான அறிவைக் கொண்டு சிந்திப்போம்.
எப்படி மின்சாரத்தைப் பற்றிப் படித்து,தெரிந்து அதை அனுபவிக்க மின்சார விசிறியும், மின் சாதன கருவிகளையும்,மின்சாரத்தால் இயங்கும் மின்சார ரெயிலும் ஓட்டுகிறோமோ, அதைப்போல மனதைக் கட்டுப்படுத்தும்,மனதைத் திருப்பும் வழியைக் கற்றுக்கொண்டோ மானால், நம் மனோசக்தியின் மூலம் நாம் விரும்பும் பல்வேறு காரியங்களை சாதிக்கலாம்.
நமது நாட்டில் பலர் ஏழைகளாக இருப்பதற்கும், சிலர் சுகமாக எல்லா வசதிகளுடன் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் படிப்பில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான்.அனைவரும் சொல்லிக் கொண்டு உள்ளார்கள் .
அந்தப் படிப்பைப் பெற்றவர்கள் கூட படிப்பிலே எது முக்கியம் என்று தெரிந்து கொள்வதில்லை. அந்த முக்கியமான விஷயம் ஏட்டுப் படிப்பால் தெரிந்து கொள்ள முடியாது.
மனதை திருப்பி மாற்றி எங்கு செல்ல வேண்டுமோ அங்கு திரும்பச் செல்ல  வைக்கும் முறைக்கு தியானம் என்று சொல்லப்படும் ..
இன்று அமெரிக்காவில் பல பல்கலைக் கழகங்களிலும் மற்ற நாடுகளிலும்  தியானத்தைப் பற்றி சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அதேபோல் ஊருக்கு ஊர் தியானம் சொல்லிக் கொடுக்கும் சங்கங்கள் இருக்கின்றன.
ஒரு மனிதன் செல்வந்தனாக இருப்பதற்கும் மற்றொருவன் ஏழையாகவும் வாழ்வதற்கும் காரணம், அவர்கள் மனதில் கொண்டிருக்கும் எண்ணங்கள், ஆசைகள் தான் என்று மனவியல் அறிஞர்கள் கூறுகிறார்கள். அதேபோல அந்த ஆசைகளை எப்படி சீர்படுத்தி, வாய்க்கால் வெட்டி, பாத்தி கட்டி,தண்ணீர் விட்டு செல்ல வேண்டிய இடத்திற்கு செலுத்தி பயிர் இடுவது போல்

மனதை எங்கு செலுத்த வேண்டுமோ அங்கு செலுத்துவது தான் தியானம் என்பதும்,மனதை ஒருமுகப் படுத்துதல் என்பதாகும்..
பூதக் கண்ணாடியைப் பார்த்திருப்பீர்கள். கீழே ஒரு தாளை வைத்து பூதக் கண்ணாடியை சூரியனுக்கு எதிராகப் பிடித்தால், சூரியக் கதிர்கள் ஒருமுகப்பட்டு தாள் எரியத் தொடங்குகிறது. பூதக் கண்ணாடி சூரிய சக்தியை ஒரு முகப்படுத்துகிறது. ஒருமுகப்படுத்தும் போது சக்தி அதிகமாகிறது. அதன் வலிமை, எரிக்கும் சக்தி அதிகமாகிறது.அதேபோல் 
 நம் மனதை, மனச்சக்தியை கொண்டு, அந்த சக்தியை ஒருமுகப்படுத்தும் மார்க்கங்களைத்தான் 'ஜெபம்' என்றும் 'தியானம்' தவம் என்றும் சொல்லுகிறோம். உதடுகள் அசைந்து ஒலியுடன் சொல்வதை 'பிரார்த்தனை ,ஜெபம்' என்றும், மனதிற்குள் எண்ணங்களை அடக்குவதை 'தியானம்' என்றும் சொல்கிறோம். யோகிகள் மனதை ஒருமுகப்படுத்த சில மந்திரங்களை இரகசியமாகச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்த எண்ணமும் மனதிற்குள் இரகசியமாக வைக்க வைக்க, அதற்கு வலிமை அதிகமாகிறது. இதுதான் இரகசியமாகச் சொல்வதின் காரணம்.
மந்திரம் என்று எதைச் சொல்கிறார்கள்? ஒரு சொல்லை அதாவது மந்திரத்தை ஆழ்மனம் திரும்பத் திரும்பச் சொல்வது தான் மந்திர சக்தியை  ஏற்படுத்துகிறது. எதைத் திரும்ப திரும்பச் சொல்கிறோமோ அதன் பொருள் நம் ஆழ் மனதில் பதிந்து நமக்கு எப்போதும் மந்திர சக்தி உதவத் தயாராயிருக்கிறது.

அந்த மந்திரத்தைக் கொண்டு "வழிகாட்டு" என்று முறையிட்டோமானால் அந்த மந்திர சக்திக்கு தகுந்த சக்தி நமக்கு வழிகாட்டும்.
திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம் விஷயங்கள் ஆழ்மனதிற்குப் போகின்றன. ஆழ்மனதில் போடப்பட்ட விஷயங்களை ஆழ்மனம் நிறைவேற்றி வைக்கிறது. இதுதான் உண்மை.அது முழுமையானதா என்றால் முழுமையானது அல்ல .அதனால் ஒரு சிறிய சக்தி என்னும் ஒளி கிடைக்கின்றது.

முன்னூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பிரான்சு நாட்டு மருத்துவர், "நான் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வகையிலும் முன்னைவிட ஆரோக்கிய மானவனாக இருக்கிறேன்" என்று நோயாளிகள் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்ததன் மூலம் அவர்களது நோயைக் குணப்படுத்தினார். இது இன்னும் "நமக்கு நாம் சொல்லிக் கொள்ளுதல்" என்ற தத்துவத்தின் கீழ் மருத்துவர்களால் பயன்படுத்தப்படுகிறது.

இப்படியாக மனதை ஒருமுகப்படுத்தும் பழக்கந்தான், நாளைக்கு நாம் ஒரு வேலையைச் செய்யும்போது மனதை அந்த விஷயத்தில் ஒருமுகப்படுத்துவது எளிதாகிறது. இதனால் அந்த முயற்சிகள் வெற்றியடைகின்றன.

ஜெபம், தியானம் தவம் மூலம் மனதை ஒருமுகப்படுத்தும் திறனையும், நம் ஆசைகளை, இலட்சியங்களை, ஆழ்மனதிற்கு அனுப்பி வைக்கும் முறையையும் கற்றுக் கொள்கிறோம்.

சுயகட்டுப் பாட்டின் முக்கியமான பாடம் இதுதான். இதை விடாது நீங்கள் பயிற்சி செய்து பார்த்தீர்களானால், அதி ஆச்சரியமான நிகழ்ச்சிகள் உங்கள் வாழ்வில் நேர்வதைப் பார்ப்பீர்கள்; வெற்றி உங்கள் கைக்குள் வந்து சேரும். இதுவே இத்தனை நாள் அதிகம் பேருக்கு சொல்லிக் கொடுக்கப்படாத இரகசியமாக இருந்தது

அருட்பெருஞ்ஜோதி தியானம் !

உலக மக்களுக்கு தெரியப்படுத்த வள்ளல்பெருமான் ஒரு பெரிய மகா மந்திரத்தை நினைத்து தியானம் செய்ய சொல்லி உள்ளார்கள் .அந்த மந்திரத்தை சொல்லும் போது கண், மனம்,ஜீவன் ,உள்ளம் அனைத்தும் வெளியே செல்லாமல் உள் ஒளியான ஆன்மாவைத் தொடர்பு கொண்டு அதையே இடைவிடாது,நினைந்து தியானம் செய்ய வேண்டும்.அதுவே சத் விசாரம் என்கின்றார் வள்ளலார் .

மற்ற மந்திரங்கள் அனைத்தும் அந்த அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி ..தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி என்னும் மந்திரத்தின் உள்ளே அடங்கி விடுகின்றது .அதனால் அதற்கு மகா மந்திரம் என்று பெயர் வைத்துள்ளார்.

நாம் அந்த மகா மந்திரத்தை இடைவிடாது சொல்லிக் கொண்டே புருவ மத்தியில் மனத்தை செலுத்த வேண்டும்..அப்போது மனம் வெளியில் செல்லாமல் ஆன்மாவை தொடர்பு கொள்வதால் நம் உடம்பின் தலைப் பாகத்தில் உள்ள ஆன்மாவில் இருந்து பேராற்றல் என்னும் மாபெரும் சக்தி உடல் முழுவதும் பரவி ஒரு பேரானந்தம் உண்டாகும் .

அந்த ஆனந்தம் தான் மனிதன் அடைய வேண்டிய ஆனந்தமாகும்.அதை அனுபவிப்பவன் மனித நிலையில் இருந்து கடவுள் நிலைக்கு மாறுகின்றான் .

இதையே தொடர்ந்து ஒவ்வொரு நாளும் தியானம் செய்கின்றவர்களுக்கு மனத்திற்கும் ஆன்மாவிற்கும் தொடர்பு உண்டாகி, அதிகமான சுத்த உஷ்ணம் உண்டாகும் .அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவில் இருந்து அருள் என்னும் திரவம் சுரக்கும்.அந்த அருளைப் பெற்றவர்களுக்கு உலகின் அனைத்து உண்மைகளும்.வெட்ட வெளிச்சமாக தெரியும்.

வள்ளலார் சொல்லிய சன்மார்க்க தியானத்தை செய்பவர்களுக்கு அளவில்லா மகிழ்ச்சியும் இன்பமும்,மேலும் என்றும் அழியாத உடம்பும் உயிரும் பாதுகாக்கப் படும். அதற்கு ஞான மருந்து என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளல்பெருமான்.

என்றே எனினும் இளமையோடு இருக்க நன்றே தரும் ஒரு ஞான மாமருந்து என்கின்றார்.அந்த ஞானமருந்தை தியானத்தின் வழியாக பெற்று பெருங் களிப்பை அடைவோம்,பெறுவோம்.இதுவே உண்மை அறிவாகும்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  

சனி, 29 நவம்பர், 2014

உலகத்தின் பொது நெறி

சுத்த சன்மார்க்க பொது நெறி !

வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியாக

திருநெறி ஒன்றே அதுதான் சமரச சன்மார்க்கச்
சிவநெறி என்று உணர்ந்து உலகீர் சேர்ந்திடுமின் நீண்டு
வருநெறியில் எனை ஆட்கொண்டு அருள் அமுதம் அளித்து
வல்லப சத்திகள் எல்லாம் வழங்கிய ஓர் வள்ளல்
பெருநெறியில் சித்தாடத் திரு உளங் கொண்டு அருளிப்
பெருங்கருணை வடிவனொடு வரு தருணம் இதுவே
கரு நெறி வீழ்ந்து உழலாதீர் கலக்கம் அடையாதீர்
கண்மையினால் கருத்து ஒருமித்து உண்மை உரைத்தேனே !

உலகத்தின் பொது நெறி வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறியாகும்.

உலகத்திற்கான பொது நெறியை வழங்கிய ஒப்பற்ற ஆசான் வள்ளலார் வருவிக்க உற்ற நாள் அக்டோபர் 5,10- 1823. ஆம் ஆண்டாகும் வள்ளல் அடிகளாரின் வான்புகழை அனைவரும் வருடம் முழுவதும் கொண்டாடுவோம்!

இந்து மதமும் சைவ மதமும் தழைத்தோங்கி இருந்த காலக் கட்டத்தில், வள்ளலார் இந்த சமயங்களில் உள்ள வேதங்கள், புராணங்கள்,இதிகாசங்கள் போன்ற  கட்டுக் கதைகள் ,கற்பனைகள் முதலானவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தினார். ஆரியப் புராணங்களான இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். கடவுள் என்பவர் ஒருவரே, பலர் அல்ல, அவர் அருட்பெருஞ் ஜோதியாக ..ஒளியின் ஊடாக அண்ட சாரசரங்கள் அனைத்திலும் உள்ளார். ஒளியை கடவுளாக பாவித்து, ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கமே கடவுள் வழிபாடாக கொண்டு , அன்பு, தயவு,கருணை  சார்ந்த வாழ்கையை வாழப் பழகுதலே உலகில் நிரந்தர அமைதியை நிலை நாட்டும். அதுவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய உலகத்தை உருவாக்கும் என்று வள்ளலார் போதித்தார்.

சாதிகள், மதங்கள், சமயங்கள், அனைத்தும் பொய் பொய்யே என்று அறுதியிட்டு கூறினார். சிறுதெய்வ வழிபாடு, சிலைகள் வழிபாடு வேண்டாம் என்றும் கூறி உலக மக்களுக்கு புதிய மார்க்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். உலகில் உள்ள அனைத்து மதங்களும் பொய்யான செய்திகளை மக்களிடம் புகுத்தி வந்த நடைமுறைகளை முற்றிலும் மறுக்கச் சொன்னார்

வள்ளலார். இறந்தவர்களை எரிக்க வேண்டாம் என்றும், இறந்தவர்களுக்கு திதி தவசம் முதலிய ஈமக் கிரியையை செய்தல் வேண்டாம் என்று அறிவுறுத்தினார். கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டாம்,என்றும் ,மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்ய வேண்டாம் என்ற புரட்சி செய்தியை மக்களுக்கு போதித்து வந்தார் .

சிறு தெய்வ வழிபாடு செய்தல் வேண்டாம் என்று சொன்னதோடு அந்த தெய்வங்களின் பேரில் உயிர் பலியிட வேண்டாம் என்றும் கூறினார். கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் ஒரு பூசகர் தேவை இல்லை எனவும் , கடவுளை உண்மை அன்பால் நேரடியாக வழிபாடு செய்தல் வேண்டும் என்றும் , இயற்கை விளக்க ஒளி வழிபாடே உண்மை வழிபாடு என்றும் போதித்தார்.

இயற்கையின் சகல சக்திகளையும் நேரே வள்ளலார் உள் வாங்கியதால், நாத்திகம் பேசுபவர்களை கடுமையாக கண்டித்தார் வள்ளலார். உண்மைக் கடவுளை, உண்மை அன்பால் வழிபாடு செய்தால் அக்கடவுளின் பூரண அருளை மனிதர்கள் பெறலாம் என்றும் , இயற்கை அருளின் துணைக் கொண்டு என்றும் அழியாத பேரின்ப வாழ்வில் மனிதர்கள் என்றும் வாழலாம் என்று உலகிற்கு வழிகாட்டினர் வள்ளலார்.

மதம் என்னும் பேய் பிடித்து மக்களிடம் பல்வேறு நம்பிக்கையை, பண்பாட்டை , மொழியை திணிக்க முயலும் மத வாதிகளை கடுமையாக சாடுகிறார் வள்ளலார். சாதியும் மதமும் சமயமும் பொய் என்றும் ,அவை மனிதற்கு உண்மையை உணர்த்தாது துன்பத்தையே தரும் என்பதை தெளிவாக உணர்த்துகிறார

வள்ளலார். இப்படி ஒரு தெளிவான அன்பும் அற நெறியும் இயற்கை சார்ந்த ஒரு மார்க்கத்தை வள்ளலார் தவிர உலகில் வேறு யாருமே இது வரை வழங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டையும் இந்திய நாட்டையும் ஒரு மதத்தின் கீழ் கொண்டு வந்து மதவாதத்தை மக்களிடம் கட்டவிழ்த்து நாட்டை கலவர பூமியாக்கத் துடிக்கும் அத்தனை சக்திகளுக்கும் வள்ளலாரின் அறிவுரை தற்போது மிகவும் அவசியமாகிறது.

இவ்வாறு அரும்பெரும் கருத்துக்களை உலகிற்கு வழங்கிய வள்ளலாரை போற்றுவது ஒவ்வொரு தமிழரின் கடமையாகும். போற்றுவது மட்டுமல்லாது அவர் கூறிய வழியில் நாம் அனைவரும் நடக்க முயற்சிக்க வேண்டும். தமிழகத்திற்கு தமிழ் மொழியில் அவர் வழங்கிய அருட்பாக்களை நாம் உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் மொழிபெயர்த்து கொண்டு செல்லவேண்டும்.

குறிப்பாக இன வெறியை உமிழ்ந்து இந்தி, சமஸ்கிருத மொழியை அனைவரின் மீதும் திணிக்கும் ஆதிக்க வட இந்திய மக்களுக்கு வள்ளலார் காட்டிய நன்னெறியை நாம் கொண்டு செல்வோம். இந்திய ஒன்றியத்தில் நல்லாட்சி மலர இந்திய அரசு வள்ளலார் காட்டிய அன்பு வழியில் பயணிக்க வேண்டும். அப்போது தான் கருணையில்லா இந்த ஆட்சி முடிவுக்கு வரும். நல்லாட்சி மலரும். அனைத்து மாநில மக்களும் நிம்மதியாக வாழ்வாங்கு வாழ்வார்கள். பேதங்கள் நீங்கி மனிதம் தழைத்து ஓங்கட்டும் ! வாழ்க வள்ளலாரின் வான்புகழ் !

உலகம் முழுவதிற்கும்  இனிமேல் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க நெறி மட்டுமே நல்ல வழியைக் காட்டும் என்பதை மக்கள் புரிந்து கொள்வார்கள்.

பிணக்கும் பேதமும் பேயுல கோர்புகல்
கணக்குந் தீர்த்தெனைக் கலந்தநல் நட்பே

அருட்பெருஞ்சோதி அகவல்

ஆன்மநேயன் ஈரோடு செ ,கதிர்வேல்

புதன், 19 நவம்பர், 2014

அறம்,பொருள் ,இன்பம்,வீடு என்றால் என்ன ?


அறம்,பொருள் ,இன்பம்,வீடு என்றால் என்ன ?

அறம் என்பது இரண்டு வகைப்படும் ,ஒன்று இல்லறம் இது பொது நலத்தை சார்ந்தது,தனக்காகவும் ,பிறருக்காகவும் பொருள் ஈட்டி தர்மம் செய்து வாழ்வதாகும் ,இது சிறந்த அறமாகும்

துறவறம் என்பது சுயநலம் கருதி வாழ்வது .தான் மட்டும் தனிமையில் இருந்து பிறர் பொருளை அனுபவித்து இறைவனை அடையலாம் என்று நினைப்பதாகும்.இது சரியான துறவறம் அல்ல !

பொருள் ;- நேர்வழியில் பொருள் சம்பாதித்து அனைவருக்கும் கொடுத்து தானும் அனுபவித்து மற்றவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்விப்பதாகும் இது சிறந்த வழியில் பொருள் ஈட்டி வாழ்வதாகும்,

இன்பம் ;-- எல்லோரும் இன்பமுடன் வாழும் வழியைக் காட்டி அந்த இன்பத்தில் தானும் வாழும் வாழ்க்கையே சிறந்த இன்பமாகும்..

வீடு ;-- நாம் வாழும் இந்த உலகமும் ,உடம்பிற்குள் நாம் வாழும் வீடும் சொந்தமானது அல்ல,வாடகைக்கு குடி இருக்கிறோம் என்பதை அறிந்து  ..நாம் எங்கு இருந்து வந்தோம், நம்முடைய சொந்தமான வீடு எங்கே உள்ளது என்பதை அறிந்து சொந்தமான வீடு என்னும் ஆன்ம தேகம் (அதாவது ஒளி தேகம்,அருள் தேகம் ) பெற்று நம்முடைய தந்தையின் அருட்பெருஞ்ஜோதியின் இல்லத்திற்கு சென்று வாழ்வதே சொந்த வீடு பேராகும்,.

மேலும் அறம்,பொருள் ,இன்பம்,வீடு ,இவை நான்கையும் நான்கு காலங்களில் நன்கு அனுபவித்து பின்பு பற்று அற்று இருப்பதே கடவுளை அடைய எதுவாக இருக்கும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக பதிவு செய்து உள்ளார் .

மேலே கண்ட நான்கு வழிகளிலும் தடம் மாறாமல் வாழ்ந்து மக்களுக்கு வழி காட்டுவதே மனிதப் பிறப்பின் லட்ஷியமாகும் ,லட்ஷணமாகும்,வாழ்வோம் வழி காட்டுவோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் . .

செவ்வாய், 18 நவம்பர், 2014

கடவுள் யார் ? என்பது தெரியாமல் மக்கள் உருவமான மொம்மைகளை வைத்து வணங்குகிறார்கள்,வழிபாடு செய்கிறார்கள் !


கடவுள் யார் ? என்பது தெரியாமல் மக்கள் உருவமான மொம்மைகளை வைத்து வணங்குகிறார்கள்,வழிபாடு செய்கிறார்கள் !

விளக்கோ ,மின்சாரமோ இல்லை என்றால் அந்த மொம்மைக் கடவுள்களைப் பார்க்க வெளிச்சம் கொடுக்க முடியுமா ? அவைகளைப் பார்க்க அவைகள் வெளிச்சம் தராமல் இருக்கும் போது மக்கள் குறைகளையும் ,மக்கள் வேண்டுதல்களையும் அவைகளால் எப்படி தீர்க்க முடியும் .

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை .இந்த பொய்யான தெய்வங்களை வழிபாடு செய்து நேரத்தை வீண் கழிக்கின்றார்கள் .உண்மையான இறைவன் உயர்ந்த அறிவு படைத்த மனிதர்களுக்கு உயர்ந்த அறிவைக் கொடுத்தும் தாழ்ந்த அறிவைக் கொண்டு தாழ்ந்து தரம் கேட்டுப் போகின்றார்கள் ,என்று வள்ளல்பெருமான் வேதனைப் படுகின்றார்.

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்று கின்றாரும்
பொய்ச் சமயாதியை மெச்சு கின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றும் இல்லார்
மேல்விளை அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

என்று மக்களுக்காக இறைவனை வேண்டிக் கொள்கின்றார் .

எனக்கு அறிவையும் தெளிவையும் கொடுத்த இறைவா ,அறிவு தெளிவு இல்லாமல் இந்த மக்கள் ...உண்மையான இறைவன் யார் ? என்பது தெரியாமல் மெய்யான அறிவு விளக்கமும்,அருள்  விளக்கமும் இல்லாமல் வீணே அழிந்து கொண்டு உள்ளார்கள் .

எனக்கு தெளிவித்த அறிவையும் அருளையும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .என்று ,,ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் மக்களுக்காக .அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மைக் கடவுள் இடம் வேண்டிக் கொள்கின்றார் .

இனிமேலாவது பொய்யான கற்பனைக் கடவுள்களை வணங்காமல்,

எல்லா அண்டங்களையும்,,எல்லா உலகங்களையும்,எல்லா உயிர்களையும்,மற்றும் எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவளால் செங்கோல் கொண்டு நடாத்து வித்து அருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்குங்கள் ,வழிபாடு செய்யுங்கள் .என்கின்றார் நமது அருள் வள்ளல் வள்ளல்பெருமான்

இனிமேலாவது உண்மையை அறிந்து உணர்ந்து தெளிந்து வழிபாடு விஷயத்திலும் ,வணங்கும் விஷயத்திலும் ,வேண்டுதல் விஷயத்திலும் ,உண்மைக் கடவுளையே வேண்டுவோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திங்கள், 17 நவம்பர், 2014

திருஅருட்பா - பதிகம் 97 - நடராஜபதி மாலை,..





திருஅருட்பா - பதிகம் 97 - நடராஜபதி மாலை,..
பக்கம் 292 - பாடல் 1369 [28]
=================================================
சாகாத கல்வியே கல்விஒன் றேசிவம்
தான்என அறிந்தஅறிவே
தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே
தனித்தபூ ரணவல்லபம்
வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்
விளையவிளை வித்ததொழிலே
மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே
வியந்தடைந் துலகம்எல்லாம்
மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை
வானவர மேஇன்பமாம்
மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்
மரபென் றுரைத்தகுருவே
தேகாதி மூன்றும்நான் தருமுன்அருள் செய்தெனைத்
தேற்றிஅருள் செய்தசிவமே
சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே
தெய்வநட ராஜபதியே.
=================================================
மெய்த்தொழில்கள் 4 என்று குறிக்கப்படுகிறது. அவை யாவன?

1. சாகாத கல்வி
2. ஒன்றே சிவம் என அறிவு
3. மலம் ஐந்தும் வென்ற வல்லபம்
4. வேகாத கால்
5,மெய்த்தொழில்
6,இன்பம் .

உலகியல் கல்வி சாகும் கலவி,அருளைப் பேரும் கல்வி சாகாக் கல்வி !

உலகியலில் உள்ள தெய்வங்கள் யாவும் தத்துவங்கள் ,உண்மையான கடவுள் அருட்பெருஞ்ஜோதி என்னும் சுத்த சிவம் என்பதை அறிந்து கொள்வதே அறிவு என்பதாகும். !

நம்முடைய உடம்பில் உள்ள ஆன்மா என்னும் உள் ஒளியை மறைத்துக் கொண்டு இருக்கும் ஐந்து மலங்களாகிய ஆணவம்,மாயை ,மாமாயை,பெருமாயை,கன்மம் என்னும் மலங்களை அறிந்து அவற்றை வெல்லும் அதாவது நீக்கிக் கொள்ளும் வல்லபமே வல்லபம்,!

நாம் சுவாசிக்கும் கால் என்னும் காற்று வெந்து கொண்டு உள்ளது .அதை நிறுத்தி வேகாத காலாகிய அமுதக் காற்றை சுவாசிப்பதே வேகாத காலாகும் .!

நாம் செய்யும் தொழில் கருவிகளை வைத்துக் கொண்டு செய்கிறோம் .அது அழிந்து விடும் .எந்தக் கருவியும் இல்லாமல் நினைத்த மாத்திரத்தில் அருளைக் கொண்டு எதையும் உருவாக்கும் தொழிலே மெய்த் தொழிளாகும் !

மேலே கண்ட சாகாக் கல்வி,மெய் அறிவு,,மலங்களை வென்ற வல்லபம், வேகாத காலாகிய அமுதக் காற்றை சுவாசிக்கும் கலையைக் கற்றுக் கொண்டு ,தோற்றுவித்தல்,இயக்குவித்தல்,அடக்குவித்தல்,மயக்குவித்தல்,
தெளிவித்தல் ஆகிய ஐந்தொழில் செய்வதே மெய்த் தொழிலாகும் .

ஒரு ஆன்மா என்னும் உள் ஒளி மேலே கண்ட உண்மைகளை உணர்ந்து அதைக் கற்று அதன்படி வாழ்ந்து அதனால் அடையும் இன்பமே இன்பமாகும் .அதுவே பேரின்பம் .அதுவே மரணத்தை வெல்லும் மரணம் இல்லாப் பெரு வாழ்வு என்பதாகும்.அதுவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க மரபு,என்பதாகும்.

இந்த சுத்த சன்மார்க்க மரபை கடைபிடிப்பவர்களே சன்மார்க்கிகள் .அதனால்தான் சாகாதவனே சன்மார்க்கி என்பார் வள்ளலார் .

இந்த உயர்ந்த பிறப்பாகிய மனிதப் பிறப்பினால் மட்டுமே முடியும் .இந்த மனிதப் பிறப்பு கொடுக்கப் பட்டதே ,மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி வாழ்வதே மனிதப் பிறப்பின் லட்சியமாகும் .

மனிதப் பிறப்பு எடுத்த நாம் ஒவ்வொருவரும் சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்பதே கடவுளின் கட்டளை யாகும். முயற்சி செய்வோம் முடியாதது எதுவும் இல்லை .வள்ளல்பெருமான் வாழ்ந்து காட்டி உள்ளார் .நாமும் வாழ்ந்து காட்டுவோம்

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 11 நவம்பர், 2014

சுத்த சன்மார்க்கத்தின் உண்மையை எப்படி அறிந்து கொள்வது ?



சுத்த சன்மார்க்கத்தின் உண்மையை எப்படி அறிந்து கொள்வது ?

வள்ளல்பெருமானின் வாழ்க்கை உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனி போன்றது .அவர் காட்டிய அருள் நிறைந்த சுத்த சன்மார்க்க நெறியை சார்ந்து வாழ்பவர்கள் பசு மாட்டின் மடியில் உள்ள பாலினை நேராக அருந்து பவர்கலாகும் .

பின் பற்றாதவர்கள் அந்த பசு மாட்டின் பாலினை அருந்தாமல் அந்த மாட்டின் குருதியை ( ரத்தம் ) அருந்தும் முலை உண்ணி போன்ற பாங்கு உடையவர்கள் ஒரு பகுதியினர் .

அடுத்து வள்ளல் இருக்கும் இடத்தில் கிடைக்கின்ற பசுமையாம் திருவருட் புல் ,பூண்டு,காய் கனி ,பழம்,போன்ற தாவரங்களை உண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளாமல் வேறு இடங்களில் தெரிகின்ற பசுமையை நோக்கி நடந்து கொண்டு திரியும்,காட்டு எருமை போன்றவர்கள் ஒரு பகுதியினர்.

திரு அருட்பிரகாச வள்ளலாரின் கருணை என்னும் பாற்கடலில் இருக்கும் அமுதத்தை உணராமல்,உண்ணாமல்,..அலைகின்ற கசப்பு மிக்க அசுத்த நீரை உண்ணுகின்ற கடல் மீனை ஒத்தவர்கள் ஒரு பகுதியினர்.

அத்தைகைய வர்கள் பரிபூரண திருவருளின் நிறைவினை உடைய வள்ளல்பெருமானின் சமூகத்தில் இருந்தும் உண்மையை உணரவில்லை என்றால் ஐயகோ ! இருந்தும் என்ன பயன் ?

உண்மையை உணராமல் வள்ளல்பெருமானின் கொள்கையான சுத்த சன்மார்க்க நெறியில் இருந்தும்,அவற்றை பின்பற்றி வாழாமல் அந்த நற்பயனை அறியவும் அனுபவிக்கவும் இயலாது.

உண்மையான சுத்த சன்மார்க்க நெறியை பின்பற்றி வாழாமல், வாழ்பவர்கள் உயிரின் துன்பத்தில் இருந்தும் ,உடம்பின் துன்பத்தில் இருந்தும் மீளவே முடியாது.அத்துடன் மீளாத் துன்பத்தில் இருந்தும் மீள முடியாது.இவர்கள் எல்லாம் முதன்மையான அஞ்ஞான கூட்டத்தினர்கள் என்பது தெளிவாகக் தெரிந்து கொள்ளலாம் .

உண்மையை சொன்னாலும் தெரிந்து கொள்வார் இல்லை என மன வேதனையுடன் வள்ளல்பெருமான் சொல்லுவார்.

அத்தகைவரகளுக்கு என் போன்றோர் சொல்லி என்ன பயன் என்பதை நினைந்து மிகவும் வருந்து கின்றேன்.இருந்தாலும் காலம் வரும்போது உண்மையை உணர்ந்துதான் ஆக வேண்டும் என்ற ஆன்மநேய உரிமையில் இதை நான் தெரிவிக்கின்றேன்.

வள்ளல்பெருமானைப் போல் உலக உயிர்களுக்கு உண்மையை எடுத்து உரைத்தவர்கள் யாரும் இல்லை என்பதை என்னுடைய அறிவு எனக்கு உணர்த்தியது .அதனால் நான் நற்பயனை அடைந்து வருகின்றேன் அதேபோல் நீங்கள் எல்லோரும் என்னுடைய சகோதரர்கள் என்ற உரிமையுடன் தெரிவிக்கின்றேன்.மேலும் உங்கள் விருப்பம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.   

வெள்ளி, 7 நவம்பர், 2014

வள்ளலார் போல் நாம் மரணத்தை வெல்ல முடியாதது ஏன் ?


வள்ளலார் போல் நாம் மரணத்தை வெல்ல முடியாதது ஏன் ?

வள்ளல்பெருமான் தமது உடல்,பொறு,ஆவி மூன்றையும் இறைவனுக்கே உரிமை ஆக்கினார் .அவர் எப்படி கொடுத்தார் என்பதை பாட்டாலும் உரையாலும் பல இடங்களில் தெரிவித்து உள்ளார் .

சத்தியம் சத்தியம் அருட்பெருஞ் ஜோதித்
தந்தையேரே எனைத் தாங்கு கின்றீரே
உத்தமம் ஆகும் உம திரு சமுகத்தில் என்
உடல் பொருள் ஆவியை உவப்புடன் அளித்தேன்
இத்தகை உலகிடை அவைக்கும் என் தனக்கும்
ஏதுஞ் சுதந்திரம் இல்லை இங்கு இனி நீர்
எத்தகை ஆயினும் செய்து கொள்கிற்பீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

மெய் இன்பப் பேறு என்னும் பதிகத்தின் பத்துப் பாடல்களிலும் உடல் பொருள் ஆவியை இறைவனுக்கே உரிமை யாக்கியதாக கூறப்பட்டு உள்ளது மேலும்

எனது சுதந்தரமாகக் கொண்டு இருந்த தேக சுதந்தரத்தையும் ,ஜீவ சுதந்தரத்தையும் ,போக சுதந்தரத்தையும் தேவரீர் திருவருட்கே சர்வ சுதந்தரமாகக் கொடுத்து விட்டேன்.கொடுத்த தருணத்தே ,இத் தேகமும் ஜீவனும் போகப் பொருள்களும் சர்வ சுதந்தரராகிய கடவுள் பெரும் கருணையால் கொடுக்கப் பெற்றனம் அன்றி ,நமது சுதந்தரத்தால் பெற்றன அல்ல என்னும் உண்மையை அருளால் அறிவிக்கவும் அறிந்து கொண்டேன் .

இனி இத் தேகத்தின் இடத்தும்,ஜீவன் இடத்தும்,போகப் பொருள்கள் இடத்தும் தேவரீர் திருவருள் சாட்சியாக எனக்கு எவ்விதத்தும் யாதோர் சுதந்தரத் தோற்றமும் தோற்ற மாட்டாது ,தேவரீர் திருவருட் சுதந்தரத்தை என்னிடத்தே வைத்து அருளி ,மரணம்,பிணி,மூப்பு,பயம்,துன்பம் முதலிய அவத்தைகள் எல்லா வற்றையும் தவிர்த்து ,இத் தேகத்தையே நித்தியா தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் என்னை வாழ்வித்தல் வேண்டும்.இவை உரை நடைப்பகுதியில் கூறியதாகும்.

இங்கனம் பாட்டாலும் உரையாலும் தமது உடல் பொருள் ஆவியை இறைவனுக்கே அர்ப்பணித்து,என் உடல் பொருள் ஆவியை நீ எடுத்துக் கொண்டு உன் உடல் பொருள் ஆவியை எனக்கு அளிப்பாய் என வேண்டுகிறார் .கொடுத்தார் .மேலும்

படமுடியாது இனித் துயரம் படமுடியாது
பட்டது எல்லாம் போதும் இந்தப் பயம் தீர்த்து இப்பொழுது என்
உடல் உயிர் ஆதியை எலாம் நீ எடுத்துக் கொண்டு உன்
உடல் உயிர் ஆதியை எல்லாம் உவந்து எனக்கே அளிப்பாய்
வடலுறு சிற்றம் பலத்தே வாழ்வாய் என் கண்ணுன்
மணியே என் குரு மணியே மாணிக்க மணியே
நடன சிகாமணியே என் நவமணியே ஞான
நன்மணியே பொன் மணியே நடராஜ மணியே ...

என்னும் பாடலின் வாயிலாக வள்ளல்பெருமான் வேண்டிய வண்ணமே பெருமானாரது உடல் பொருள் ஆவியை இறைவன் எடுத்துக் கொண்டு தனது உடல் பொருள் ஆவியை பெருமானாருக்குத் தந்தான் .இங்கனும் இருவரும் ( (பெருமானாரும் இறைவனும் ) உடல் பொருள் ஆவியை மாற்றிக் கொண்டார் என்பதை .

என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே இசைந்து கொடுத்திட வாங்கி இட்டு அதன் பின் மகிழ்ந்தே தன உயிரும் தன உடலும் தன பொருளும் எனக்கே தந்தார் எனவும் தெளிவுப் படுத்துகின்றார்.

என்னையும் என் பொருளையும் என் ஆவியும் தான் கொண்டு என்பால் தன்னையும் தன பொருளையும் தன ஆவியையும் களித்து அளித்த தலைவன் எனவும்,....என் உடலும் என் பொருளும் என் உயிரும் தான் கொண்டான் .தன உடலும் தன பொருளும் தன உயிரும் என்னிடத்தே தந்தான் எனவும்,....  தம் தேகம் எனக்கு அளித்தார் தம் அருளும் பொருளும் தம்மையும் இங்கு ஈனக்கு அளித்தார் எனவும் வள்ளல்பெருமான் புகல்வதால் தெரிந்து கொள்ளப் படுகின்றது.

என் உயிரும் என் உடலும் என் பொருளும் யானே
இசைந்து கொடுத்திட வாங்கி இட்டதன் பின் மகிழ்ந்தே
தன உயிரும் தன உடலும் தன பொருளும் எனக்கே
தந்து கலந்து எனைப் புணர்ந்த தனித்த பெருஞ் சுடரே
மன் உயிருக்கு உயிராகி இன்பமுமாய் நிறைந்த
மணியே என் கண்ணே என் வாழ் முதலே மருந்தே
மின்னிய பொன் மணி மன்றில் விளங்கு நடத்தரசே
மெய்யும் அணிந்து அருள்வோய் என் பொய்யும் அணிந்து அருளே.

என்னையும் என் பொருளையும் என் ஆவியையும்
தான் கொண்டு இங்கு என்பால் அன்பால்
தன்னையும் தன பொருளையும் தன ஆவியையும்
களித்து அளித்த தலைவன் தன்னை
முன்னையும் பின்னையும் எனக்கே முழுத்துணையாய்
இருந்த முழு முதல்வன் தன்னை
அன்னையைச் சிற்றம் பலத்து என் அருட்பெருஞ் ஜோதியைப்
பெற்றேன் அச்சோ அச்சோ ...

என்னும் பாடலின் விளக்கத்தால் தெரிந்து கொள்ள வேண்டும் .
மேலே கண்ட உண்மைகளை உணர்ந்து அதன்படி வாழ்ந்தால் மட்டுமே  நாமும் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழலாம் .

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

வியாழன், 6 நவம்பர், 2014

உலகில் உள்ள அணைத்து இடங்களிலும் ஜோதி விளங்க வேண்டும் !



உலகில் உள்ள அணைத்து இடங்களிலும் ஜோதி விளங்க வேண்டும் !

உலகில் உள்ள ஆலயங்கள்,மற்றும் சர்ச்சு,மசூதி போன்ற அனைத்து இடங்களிலும் வள்ளலார் சொல்லிய, காட்டிய அருட்பெருஞ்ஜோதி ஒளி விளங்க வேண்டும் அதுவே இறைவன் கட்டளையாகும் .

உலகில் தோன்றிய அருளாளர்கள் மெய்ப்பொருள் என்னும் கடவுளைக் காண்பதற்கு பல தவம், யோகம்,தியானம் வழிபாடு போன்ற வழிமுறைகளை கடைபிடித்து அலைந்து ,உண்மையான இறைவனைக் காணமுடியாமல் மறைந்து விட்டார்கள் .

அவர்கள் பல முயற்சிகளை செய்து தேடி அலைந்து, முடிவில் கடவுள் ஒளியாகத்தான் இருப்பார் என்று யூகமாக சொல்லி உள்ளார்கள் .

இந்து மதமும் முடிந்த முடிவாக.கடவுள் உருவமாக இல்லை என்பதை உணர்ந்து லிங்கம் போன்ற உருவம் அற்ற உருவத்தை வைத்து வழிபாடு செய்து வந்தார்கள்

இஸ்லாம் மதமும் கடவுள் ஒளியாகத்தான் இருக்கின்றார் என்பதை அறிந்து ஒளியே கடவுள் என்பதை அல்லா என்ற பெயர் வைத்து வழிபாடு செய்து வந்தார்கள் .

கிருத்தவ மதமும் கடவுள் ஒளியாகத்தான் உள்ளார் அவர் பர லோகத்தில் உள்ளார் என்பதை உணர்ந்து ஒளியே கடவுளாக வழிபட்டுக் கொண்டு வருகின்றனர் .

முக்கிய மதங்களான மூன்று மதங்களும் கடவுள் ஒளியாக இருப்பார் என்பதை வெளிப் படுத்தி உள்ளார்கள் .ஆனால் அவர்கள் பார்த்த, கண்ட ,உணர்ந்த ஒளி என்பது வேறு .

வள்ளல்பெருமான் கண்ட அருட்பெருஞ்ஜோதி என்பது வேறாகும்.அவர்கள் அண்டங்களின் இடைவெளியில் உள்ள ஒளியைக் கடவுள் எனக் கண்டார்கள் உண்மையான அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் பேரொளியைக் காணவில்லை.வள்ளல்பெருமான் கண்டார் .

அண்டம் எல்லாம் பிண்டம் எல்லாம் உயிர்கள் எல்லாம் பொருள்கள்
ஆன வெலாம் இடங்கள் எலாம் நீக்கமற நிறைந்தே
கொண்ட வெலாம் கொண்ட வெலாம் கொண்டு கொண்டு மேலும்
கொள்வதற்கே இடம் கொடுத்துக் கொண்டு சலிப்பின்றிக்
கண்டம் எலாம் கடந்து நின்றே அகண்டமதாய் அதுவும்
கடந்த வெளியாய் அதுவும் கடந்த தனி வெளியாம்
ஒண்டகு சிற்றம் பலத்தே எல்லாம் வல்லவராய்
ஓங்குகின்ற தனிக் கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் !

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எப்படி இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவுப் படுத்தி உள்ளார் .

வள்ளல்பெருமான் ஒருவரே உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யைக் கண்டு கலந்து அதன்மயமாகி உலக மக்களுக்கு தெரியப் படுத்தி உள்ளார் .

கடவுள் எப்படி உள்ளார் எங்கு உள்ளார் எப்படி இயங்கிக் கொண்டு உள்ளார் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வடலூரில் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபையை '' தோற்று வித்து கடவுள் ஒளியாக உள்ளார் என்பதை வெளிப் படுத்தி உள்ளார் .அங்கு சாதி,சமய,மத என்ற வேறுபாடு இல்லாமல் உலகில் உள்ள மக்கள் அனைவரும் வந்து வழிபாடு செய்ய பொதுவான வழிப் பாட்டு முறையை அமைத்த உள்ளார்.

இனி உலகில் உள்ள ஆலயங்கள் மசூதிகள்,சர்ச்சுகள் .அனைத்திலும் உருவ வழிப் பாட்டை எடுத்துவிட்டு அருட்பெருஞ்ஜோதி என்னும் ஒளி வழிப்பாட்டை கொண்டு வந்தாலே போதுமானதாகும்.

இதை உலகில் உள்ள ஆட்சியாளர்களும் .ஆன்மீக சிந்தனை யாளர்களும் சட்டப்படி கொண்டு வந்து அமல் படுத்தினால் நாடும் நாட்டு மக்களும் நலம் பெறுவார்கள் .

அப்படிக் கொண்டு வந்தால் நாட்டில் சாதி,சமயம்,மதம் போன்ற பேய் ஆட்டம் ஒழிந்து விடும்.தீவிர வாதம்,பயங்கர வாதம்,நக்சலைட் போன்ற கொடுர செயல்கள் ஒடுங்கி விடும்,எல்லைதகராறு ,ராணுவ போராட்டம்,நாட்டுக்கு நாடு போர் போன்ற துன்மார்க்க செயல்கள் எல்லாம் இல்லாமல் மக்கள் மன அமைதியுடன் சுத்த சன்மார்க்க அறவழியில் வாழ்வார்கள் .

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள நீதித் துறை ,காவல் துறை,சிறைச்சாலை போன்ற செயல்கள் இல்லாமல் உலகம் அமைதி பூங்காவாக அமையும்.

வள்ளல்பெருமான் சொன்ன சுத்த சன்மார்க்கம் எங்கும் பரவி மக்கள் நல்லொழுக்கம் உள்ளவர்களாக மாறி விடுவார்கள் .

மனித நேயம் வளர்ந்து ஆன்ம நேயம் பரவி ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையைக் கடைபிடித்து உலகம் எங்கும் அமைதி நிலவும்... வள்ளல்பெருமான் சொன்ன அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்று,மக்கள் மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்வதற்கு வழி கிடைக்கும்

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல்பெருமானிடம் சொல்லிய சுத்த சன்மார்க்கம் உலகம் தோன்றும் .

உலகம் எலாம் போற்ற ஒளி வடிவனாகி
இலக அருள் செய்தான் இசைந்தே ...திலகம் என
நானே சன்மார்க்கம் நடத்து கின்றேன் நம் பெருமான்
தானே எனக்குத் தனித்தே .

முன்னுள்ள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னுளம் தெளிந்தன பதி நடம் ஓங்கின
என்னுளத் அருட்பெருஞ்ஜோதி எய்தவே !

வள்ளல்பெருமான் சொல்லியது அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியது .ஆதலால் நிச்சயம் உலகம் எல்லாம் ஒளி நெறி என்னும் சுத்த சன்மார்க்க தனிநெறி,பெரு நெறி ,அருள் நெறி பரவியே தீரும்

ஆதலால் உலகில் உள்ள எல்லா ஆலயங்களிலும் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளி சுடர் விட எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுவோம்.சாதி ,சமய,மதம் அற்ற பொது சமுதாயம் உலகம் எல்லாம் ஒங்க வேண்டும் .

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ,கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஒங்க வேண்டும்.

வாழ்க உலக உயிர்கள் ! வளர்க சுத்த சன்மார்க்கம் !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.  



புதன், 5 நவம்பர், 2014

சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?


சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ?

மார்க்கம் என்பது வழி ! வழி என்பது சத் என்னும் பொருளின் உண்மையைத் தெரிவிக்கின்ற மார்க்கம் ஆகையால் எவ்வகையிலும் உயர்வு உடையது சுத்த சன்மார்க்கம் என்பதாகும்.

சமய மதங்களின் சன்மார்க்கம் !

சமய சன்மார்க்கம் ,மத சன்மார்க்கம் ஆகிய இவற்றிக்கு உள் அடங்கிய சன்மார்க்கம் ஆனந்தம்.அதில் சமய சன்மார்க்கம் 36.அதை விரிக்கில் ஆறு கோடியாம்.இது போலவே மதத்திலும் 36, மேற்குறித்த சமயம் மதங்களிலும் ஏம சித்தி, தேக சித்தி முதலியவைகள் உண்டு .

அவை சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர் ,மூர்த்திகள் ,ஈஸ்வரன் ,பிரமம்,சிவம்,முதலிய தத்துவங்களின் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்கு மேல் இராது.

சமய மதங்களிலும் சமரசம் உண்டு.வேதாந்த சிந்தாந்த சமரசம்.யோகாந்த கலாந்த சமரசம்,இதற்கு அதீதம் ஷடாந்த சமரசம், இதற்கு அதீதம் சன்மார்க்க சமரசம்.இதற்கு அதீதம் சுத்த சமரசம்.ஆதலால் சுத்த சமரசத்தில் சன்மார்க்கத்தைச் சேர்க்கத் சுத்த சமரச சன்மார்க்கமாம் .இவை பூர்வோத்திர நியாப்படி கடைதலைப் பூட்டாக ,சமரச சுத்த சன்மார்க்கம் என மறுவின என்று வள்ளல்பெருமான் தெளிவு படுத்தி உள்ளார் .

சுத்த சன்மார்க்கம் !

ஆன்மாவுக்கு ஆனன்னியமான அருள் எப்படியோ அதைப் போல் சுத்த சன்மார்க்கத்திற்கு ஆனன்னிய மாக இருப்பது சர்வ சித்தியாம்.சுத்த சன்மார்க்கத்திற்கு படி மூன்று....ஷடாந்தங்களின் பொதுவாகிய ஷடாந்த சன்மார்க்கம் ஒன்று...சமரச சன்மார்க்கம் ஒன்று,..சுத்த சன்மார்க்கம் ஒன்று,..ஆக மூன்று,...ஆதலால் சுத்த சன்மார்க்கத்திற்குப் படிகள் மூன்று,

சிற்சபை
பொற்சபை
சுத்த ஞானசபை

ஆக மூன்று இவைகள் மூன்றும் தான் படிகளாக இருக்கும் .
சுத்த தேகத்தின் உடைய அனுபவத்தை விரித்தால் விசேஷமாகும் .சுத்த சன்மார்க்கம் விளங்கும் காலத்தில் எல்லாம் ஆண்டவர் வெளிப்படையாகத் தெரிவிப்பார்.

சுத்த சன்மார்க்க சாத்திய நிலை !

சுத்த சன்மார்க்கம் ஒன்றுக்கே சாத்தியம் கை கூடும் .
என்றும் சாகாத நிலையைப் பெற்றுச் சர்வ சித்தி வல்லபமும் பெறக்கூடும் .மற்ற சமய மத மார்க்கங்கள் எல்லாம் சுத்த சன்மார்க்கத்திற்குச் செல்ல கீழ்ப் படிகள் ஆதலால் ,அவற்றில் ஐக்கியம் என்பதே இல்லை .

தாயுமானவர் முலானவர்கள் சுத்த சன்மார்க்கிகள் அல்லர் .மத சன்மார்க்கிகள் என்று ஒருவாறு சொல்லலாம் இதில் நித்திய தேகம் கிடையாது.இது சாதக மார்க்கமே அன்றிச் சாத்தியம் இல்லை இதில் நித்திய தேகம் கிடையாது .

சுத்த சன்மார்க்கம் விளங்கும் போது இவர்கள் யாவரும் உயிர் பெற்று மீளவும் வருவார்கள் .முன் இருந்த அளவைக் காட்டிலும் விஷேச ஞானத்தோடு சுத்த சன்மார்க்கத்திற்குக் உரியவர்வகள் ஆகி வருவார்கள் ,சாத்தியர்களாய் இரண்டறக் கலப்பார்கள் .

சுத்த சன்மார்க்கக் கொள்கை !

சர்வ சித்தியை உடைய தனித் தலைமைப் பதியாகிய அருட்பெருஞ் ஆண்டவரை நோக்கி ஆன்ம அணுக்கள் தபசு செய்து சிருஷ்டி யாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக் கொண்ட மூர்த்திகள் ஆகியவர் ஒரு தொழிலை உடைய பிரம்மாவும்,இரண்டு தொழிலை உடைய விஷ்ணுவும் ,மூன்று சித்தி உடைய ருத்திரனும்,இது போன்ற மற்றவர்களும் .

மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவசித்திக் கற்பனைகலாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து ,அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்து வருகின்ற ,இது வரையிலும் உள்ள ஆன்மாக்கள் மேற்க் குறித்தவர்களது பதப் பிராப்தியை மேல்படி அணுக்கள் லேசங்கள் அதாவது சிறிய அற்ப சித்திகள் இவர்களுக்கு உள.

ஆதலால் இவர்கள் அந்தச் சர்வ சித்தியை உடைய அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்குக் கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள் .

ஆகவே சமய மதத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியம் அல்ல என்பதை வள்ளல்பெருமான் உறுதியாக அறுதி இட்டு சொல்லுகின்றார் .

மேற் குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று ,அதில் மகிழ்ந்து அகங்கரித்து ,மேபடி ஏற வேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை அடையாமல் தடைப்பட்டு நிற்றல் போல், இங்கு சன்மார்க்கிகள் மற்றவைகளை உன்னி அவலம் அடைந்து நில்லாமல்,

சர்வ சித்தி உடைய கடவுள் ஒருவர் உண்டு என்று ,அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து,பூரண சித்தியைப் பெற வேண்டுவது சுத்த சன்மார்க்கக் கொள்கையாகும்.,,,தனித்தலைவன் லஷியம் தவிர அநித்திய சட துக்காதிகளைப் பொருட் படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை அல்ல

உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை என்பதை சுத்த சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும் .

சுத்த சன்மார்க்க முடிபு !

சுத்த சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதே அன்றி வேறு இல்லை ..சாகின்றவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவன் அல்லன்...சாகாதவனே சன்மார்க்கி .

சாகாத கல்வி !

தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்து சொல்லி இருக்கின்றது என்கின்றார் வள்ளல்பெருமான் .அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம் என்று வள்ளல்பெருமான் சொல்லி இருக்கின்றார் .தக்க ஆசிரியர் என்பது வள்ளல்பெருமான் தக்க ஆசிரியர் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குறளுக்கு விளக்கம் திரு அருட்பாவில் மட்டுமே உள்ளது .வேறு எந்த நூல்களிலும் இல்லை என்பதை அறிவு விளக்கம் உள்ளவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் .

சன்மார்க்கம் என்பது எல்லா சமய மதங்களிலும் உள்ளன.மக்கள் அதுதான் இது என்பது இல்லை என்பதை உணர்த்தவே சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்து உள்ளார் வள்ளல்பெருமான் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பது இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப் பட்டதாகும் .

சன்மார்க்கப் பெரு நெறி ஒழுக்கம் !

நாம் பெரும் புருஷார்த்தம் நான்கு !

சாகாக்கல்வி கற்றல்
தத்துவ நிக்கிரகம் செய்தல்
ஏம சித்திப் பெறுதல்
கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் ...என்பவைகளாகும்.

அவற்றைப் பெறுவதற்கு ஒழுக்கங்கள் நான்கு !

இந்திரிய ஒழுக்கம்
கரண ஒழுக்கம்
ஜீவ ஒழுக்கம்
ஆன்ம ஒழுக்கம் ..

என்னும் நான்கு ஒழுக்கங்களும் சுத்த சன்மார்க்க வழிபாடாகும் இந்த ஒழுக்கங்களை இடைவிடாமல் கடைபிடிப்பவனே சுத்த சான்மார்க்கி என்னும் தகுதியைப் பெற்றவர் ஆகும் .

ஒழுக்கம் என்ன என்பதை ஜீவ காருண்ய ஒழுக்கம் என்னும் தலைப்பில் வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக வள்ளல்பெருமான் எழுதி வைத்துள்ளார்.படித்து ,கேட்டு ,சிந்தித்து ,தெளிதல் வேண்டும்.

முன் உள்ள மார்க்கங்கள் யாவும் முடிந்தன
மன்னுள சுத்த சன்மார்க்கம் சிறந்தது
பன்னுளம் தெளிந்தன பதிநடம் ஓங்கின
என்னுளத்து அருட்பெருஞ்சோதியார் எய்தவே !

பன்மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே
சன்மார்க்கம் ஒன்றே தழைத்ததுவே --சொன்மார்க்கத்
எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்
கொல்லா நெறி அருளைக் கொண்டு.

சுத்த சன்மார்க்கம் இன்னது என்று அறிந்து அதன் கொள்கைகளைக் கடைபிடித்து அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
       

திங்கள், 3 நவம்பர், 2014

சாதி சமய மதம் பற்று இல்லாமல் வாழ்பனே மனிதன் !


சாதி சமய மதம் பற்று இல்லாமல் வாழ்பனே மனிதன் !
கடவுள் எந்த சாதி,சமய,மதத்தையும் தோற்றுவிக்க வில்லை இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை சாதி சமய மதம் என்ற பொய்யான கொள்கைகளை மக்கள் மத்தியில் விதைத்து அவை அழிக்க முடியாத மரங்களாக வளர்ந்து விட்டது
கடவுளை நினைப்பதற்கும் தொழுவதற்கும் தடையாக இருப்பதே சாதி சமயம் மதம்,என்பவைகளாகும் இதைப் புரியாமல் சாதிக்கு ஒரு கடவுள் சமயத்திற்கு பல கடவுள் .மதத்திற்கு தனித்தனி கடவுள் என்று பிரித்து மனிதர்களை மடையர்களாக ஆக்கி விட்டார்கள் .
இதை எல்லாம் மறைத்தவன் ஒரு வல்லவன் அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்கவில்லை,அதை உடைத்து எறியவும் யாரும் வரவில்லை .
வள்ளல்பெருமான் வந்துதான் சாதி,சமய மத குப்பைகளை குழி தோண்டி புதைக்க வந்தவராகும்.மறைத்தவன் சூழ்ச்சியை உடைத்து எரிந்தவர்தான் வள்ளல்பெருமான்.
இறைவன் யார் என்ற உண்மைகளை வெளிச்சமாக காட்டியுள்ளார் .இப்போதுதான் மனிதர்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் இனி கொஞ்சம் காலத்தில் சாதி,சமயம்,மதம் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும்
சாதி சமய மதத்தை தோற்றுவித்தவர்கள் கர்ம சித்தர்கள் ..இனி வரப்போவது நடந்து கொண்டு இருப்பது ஞான சித்தர்கள் காலம் உண்மைகள் தானாகவே விளங்கும் காலம் .மனிதனுடைய அறிவு தெளிவு பெரும் காலம் .
ஆதலால் பொய்யான சாதி சமய மத பற்றுகளை விட்டு மனிதநேயம் ஆன்மநேயம் கொண்டு வாழ்பவனே மனிதன்
மனிதனுக்கு உயர்ந்த அறிவு உண்டு ,உயர்ந்த அறிவு உண்மை எது ?பொய் எது ? என்பதை உணர்ந்து கொள்ளும் அறிவே உயர்ந்த அறிவாகும் .
மனிதன் மனிதனாக வாழ்ந்து எல்லா உயிர்களும் தம் உயிர்போல் நேசிக்கும் அன்பையும் தயவையும் கருணையும் கொண்டு வாழ்வோம் .அதுவே மனிதத் தன்மையாகும்
அன்புடன்
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

விலாசம் தெரியாத மனிதர்கள் !


விலாசம் தெரியாத மனிதர்கள் !
உலகம் தோன்றி உயிர்கள் தோன்றி ,மனிதனாக பிறப்பு எடுத்த மனிதர்கள் அறிந்து கொள்வது என்ன ?
நாம் எங்கு இருந்து வந்தோம்? ஏன் வந்தோம் ? எதற்க்காக வந்தோம் ? மீண்டும் எங்கு செல்ல வேண்டும் ?என்ற உண்மை தெரியாமல் பிறந்து பிறந்து ,இறந்து இறந்து ,பல உயிர்கள் எடுத்து பல உடம்புகள் எடுத்து வாழ்ந்து வாழ்ந்து அழிந்து கொண்டே உள்ளோம் .
வள்ளல்பெருமானுக்கு முன்னாடி தோன்றிய அருளாளர்கள் நாம் செல்ல வேண்டிய இடம்,சொர்க்கம் ,கைலாயம் ,வைகுண்டம்,பரலோகம்,,பரம பிதா வாழும் இடம்,அல்லா இருக்கும் இடம் என்ற பொய்யான இடங்களை காட்டிவிட்டு அவர்களும் மடிந்து போனார்கள் .
நாமும் அவற்றை எல்லாம் உண்மை என்று நம்பி பல பிரிவுகளாக பல மதங்கள் ,பல சமயங்கள் சொல்லியதை ஏற்றுக் கொண்டு அலைந்து திரிந்து அழிந்து கொண்டே உள்ளோம் .
வள்ளல்பெருமான் ஒருவரே சரியான வழியைக் காட்டி நாம் செல்லவேண்டிய இடத்தைக் காட்டி ,எப்படி வாழ்ந்தால் அங்கு செல்ல முடியும் என்பதை தான் வாழ்ந்து மரணத்தை வென்று வழி காட்டி உள்ளார் .
நாம் செல்ல வேண்டிய இடம் ...பலகோடி அண்டங்களை இயக்கிக் இயங்க வைத்துக் கொண்டு இருக்கும் இடம் ,அருட்பெருவெளி என்பாதாகும்.அங்கு அருள் நிறைந்து இருக்கும்.அந்த அருளை இயக்குவது அருள் நிறைந்த போரொளி என்னும் இயற்கை உண்மையாம் ''அருட்பெருஞ்ஜோதி '' என்பதாகும் .அந்த ''அருட்பெருஞ்ஜோதிதான் உண்மையான கடவுள்'' என்பதை கண்டு ,உண்டு,களித்து அதன்மயமாகி உலகில் உள்ள நமக்கு எல்லாம் வழி காட்டி உள்ளார்கள்.
அந்த அருள் பெருவெளியில் உள்ள ஆன்மா ஆகாயத்தில் இருந்துதான் ஆன்மாக்கள் எல்லாம் அனைத்து அண்டங்களுக்கும் அனுப்பி வைக்கப் படுகின்றன.
ஆன்மாக்கள் என்னும் ஒளிதான் கடவுளின் குழந்தைகள் என்பதாகும்
இந்த பஞ்ச பூத உலகத்தில் ஆன்மாக்கள் வந்து உயிரையும் உடம்பையும் எடுத்து வாழ்ந்து கொண்டு உள்ளன.உடம்பும் உயிரும் ஆன்மாவைப் பற்றிக் கொண்டு இருக்கும் வரை ஆன்மாக்கள் அருட்பெரு வெளிக்கு செல்ல முடியாது என்பதை வள்ளல்பெருமான் தெள்ளத் தெளிவாக தெரிவித்து உள்ளார்.
இந்த உலகத்தில் வாழும் ஆன்மாவிற்கு ஜீவ தேகம் உள்ள ஆன்மா என்று பெயர் .உடம்பையும் உயிரையும் ஒளிமயமாக மாற்றிக் கொண்டால் அதற்கு ஆன்ம தேகம் என்று பெயர்.ஆன்ம தேகம் எடுத்த ஆன்மாக்கள் மட்டுமே இந்த பஞ்ச பூத உலகை விட்டு வெளியேற முடியும் .அதற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்று பெயர் வைத்துள்ளார் வள்ளல்பெருமான்.
ஆட்ண்டவர் இருக்கும் விலாசத்தை மக்களுக்கு கொடுத்து .அங்கு செல்லும் வழியைக் காட்ட வந்தவர்தான் அருட்பிரகாச வள்ளலார் .
உடம்பையும் உயிரையும் ஆன்ம தேகமாக மாற்றும் ஆற்றல் சக்தி ,அருளுக்கு மட்டுமே உள்ளது .அந்த அருளைப் பெறுவதே மனித தேகம் எடுத்த ஆன்மாக்களின் செயல்களாகும்
அருளைப் பெறுவதற்கும் அங்கு செல்வதற்கும் எவை எவை தடையாக இருக்கின்றது அவற்றை எல்லாம் எவ்வாறு விடவேண்டும்,விலக்க வேண்டும், அங்கு செல்வதற்கு எந்த எந்த காரியங்களை செயல்களை பின் பற்ற வேண்டும் என்பதை திருஅருட்பா ஆறாம் திருமுறையில் மிகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார் படிந்து அறிந்து கொள்வது மனித தேகம் படைத்த அறிவு உள்ளவர்களின் செயலாகும்.
வள்ளல்பெருமான் விலாசம் கொடுத்துள்ளார் ,விலாசத்தை கண்டு பிடித்து செல்வது நமது முயற்ச்சியாகும் நமது கடமையாகும்
அறிவைக் கொண்டு அறிவைத் தேடவேண்டும்.பின் அருளைக் கொண்டு அருளைத் தேடவேண்டும்.அருள்தான் ஆண்டவர் இருக்கும் இடத்தை சரியாக காட்டும் .
முயற்சித்தால் முடியாததது ஒன்றும் இல்லை.
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

அறிவு இருக்கா ? புத்தி இருக்கா ?





அறிவு இருக்கா ? புத்தி இருக்கா ?

அறிவு புத்தி என்ற வார்த்தைகள் மக்கள் மத்தியில் அதிகமாகப் பேசப்படுகின்றது .

நம்முடைய உடம்பு நான்கு வகையாக நான்கு பிரிவுகளாக உள்ளன .

இந்திரியம்,கரணம்,ஜீவன்,ஆன்மா என்ற நான்கு பிரிவுகளாக ,உள்ளன,

அகம்,என்பது ஆன்மா இருக்கும் இடம்,அகப்புறம் என்பது ஜீவன் என்னும் உயிர் இருக்கும் இடம்,புறம் என்பது கரணங்கள் என்னும் மனம் ,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் கருவிகள் இயங்கும் இடமாகும் .புறப்புறம் என்பது இந்திரியங்கள் என்னும் கண் ,காது,மூக்கு,வாய்,உடம்பு என்னும் கருவிகள் இருக்கும் இடங்ககலாகும் .

இந்திரியங்களில் இருந்து தோன்றும் அறிவு இந்திரிய அறிவு,கரணங்களில் இருந்து தோன்றும் அறிவு கரண அறிவு,ஜீவன் என்னும் உயிரில் இருந்து தோன்றும் அறிவு ஜீவஅறிவு,ஆன்மாவில் இருந்து தோன்றும் அறிவு ஆன்ம அறிவு .

மனிதர்கள் பேசுகின்ற அறிவு கரணங்களில் இருந்து தோன்றும் புத்திதான் அறிவு என்று நினைத்துக் கொண்டு இருக்கின்றோம்.

புத்தியில் இருந்து தோன்றும் செயலுக்கு நினைப்பு,மறைப்பு இருந்து கொண்டே இருக்கும் .

உண்மை அறிவு என்பது ஆன்மாவில் இருந்து தோன்றும் அறிவாகும்.அந்த  அறிவுக்கு  உண்மையைத் தவிர வேறு எதுவும் தெரியாது .உண்மை மட்டும்தான் தெரியும் .உண்மையைப் தெரிந்து கொண்டவர்கள் பேசுபவர்கள் உலகில் யாரும் இல்லை .

உண்மை அறிவுக்கு நினைப்பு மறைப்பு என்பது இருக்காது .

நினைப்பு மறைப்பு இல்லாமல் ஆன்ம அறிவை அறிந்து கொண்டவன் மட்டுமே உயர்ந்த அறிவு உள்ள மனிதன் .அவனால் எதையும் சாதிக்க முடியும்,உலகையே மாற்ற முடியும்.அவனுக்கு அருளை அறிந்து கொண்டு அதை பெரும் வல்லமை உடையவன் .அந்த அருளால் மரணத்தை வெல்ல முடியும்,உண்மையான கடவுளைக் காண முடியும்.

அதனால் புத்தியை அறிவு என்று நினைக்காமல் ,ஆன்மாவில் உள்ள ஆன்ம அறிவை பெற்று அதனால் கிடைக்கும் அருளை அனுபவித்து ,கடவுள் நிலை அறிந்து அதன் மயமாய் தன்னை மாற்றிக் கொள்பவனே அருளாளன் என்பவன் ஆகும் அவர்களே முற்றும் தெரிந்த ஞானிகள் என்று போற்றப் படுபவர்களாகும்.

அந்த அறிவை பெறுவதற்கு  சாதி,சமய ,மதம் என்ற விஷத் தனமையான கூண்டுக்குள் இருந்து வெளியே வந்து ,எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைத்து .அன்பு,தயவு,கருணைக் கொண்டு,அனைத்து உயிர்களிலும் உடம்பு களிலும் உள் ஒளியாக ஆன்மா என்னும் அருள் ஒளி ஒரே தன்மையாக உள்ளன என்பதை அறிந்து , ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் வாழ வேண்டும்.

அந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் வாழ்பவனுக்கு மட்டுமே ஆன்ம அறிவு என்னும் உண்மை அறிவு தோன்றி விளங்கும்..அதுவே அறிவு என்பதாகும் .

அறிவுக்கும் புத்திக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து புத்தியை அறிவு என்று நினைக்காமல் அறிவை தெரிந்து கொண்டு அதன்படி உண்மை ஒழுக்கமுடன் வாழ்வோம்.ஆன்ம அறிவைப் அறிவோம் .அதில் உள்ள அருளைப் பெறுவோம்.
அருளைப் பெற்று பேரின்ப வாழ்வை அடைந்து ...,பசி இல்லாமல் ,,,பிணி இல்லாமல் ,,,தாகம் இல்லாமல் ,,,இச்சை இல்லாமல் ,,,எளிமை இல்லாமல் ,,,பயம் இல்லாமல் ,,,துன்பம் இல்லாமல் ,,,,கொலை இல்லாமல்  ,மகிழ்ச்சியுடன் வாழ்வோம் .

இவைகள் யாவும் உயர்ந்த அறிவு படைத்த மனிதனால் மட்டுமே முடியும் .

மேலே கண்ட உண்மை அறிவைத தெரிந்து அதன்படி வாழ்ந்து ,பூரண அருளைப் பெற்று மரணத்தை வென்று ,கடவுள் நிலை அறிந்து அதன் மயமானவர்தான் நமது தமிழ் நாட்டில் தோன்றிய வள்ளல்பெருமான் ஆவார் .

இராமலிங்கம் என்பவர் ,வள்ளலார் ஆனார்,அதன்பின் திரு அருட்பிரகாசர் என்னும் ஒளி உடம்பை பெற்று கடவுள் நிலையை அடைந்தவராகும்.

அவர் காட்டிய சுத்த சன்மார்க்க மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப் பொருளை நன்கு உணர்ந்து அருளைப் பெற்று என்றும் அழியாத பேரின்ப பெரு வாழ்வில் வாழ்வோம்.

உங்கள் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .