திங்கள், 30 ஜனவரி, 2023

வள்ளலாரின் தனிச் சிறப்பு !

 *வள்ளலாரின் தனிச் சிறப்பு !* 


நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்

சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் - தேவா நின்

பேரருளை என்போலப் பெற்றவரும் எவ்வுலகில்

யார்உளர் நீ சற்றே அறை.!


*மனித குலத்தை மாற்றுவதற்காக இயற்கை உண்மை கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்தான் வள்ளல்பெருமான் என்பதை முதலில் உலக ஆன்மீக சான்றோர்கள்மற்றும் பகுத்தறிவாளர்கள், அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்,மற்றும் உயர்ந்த பதவி வகிக்கும் ஆட்சியாளர்கள் அரசியல்வாதிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.*


*மேலும் திருஅருட்பாவை தினந்தோறும் படிப்பவர்களும்,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும்,வள்ளல்பெருமான் உருவப் படத்தை வைத்தும் தினந்தோறும் வழிபடுபவர்களும்,மேலும் தினமும் அன்னதானம் செய்பவர்களுமாகிய எனதருமை சன்மார்க்க அன்பர்களும்,சன்மார்க்க சான்றோர்களாகிய மேடைப் பேச்சாளர்களும் திருஅருட்பாவில் என்ன என்ன கருத்துக்கள் எந்த எந்த இடத்தில் எதற்காக பல பல கோணங்களில்  வள்ளல்பெருமான் சொல்லி உள்ளார் என்பதை முழுமையாக படித்து தெரிந்து கொண்டு மேடையில் பேச வேண்டும்*


*ஆளாளாக்கு அவரவர்களுக்கு தெரிந்த உண்மைக்கு புறம்பான ஒவ்வொரு கருத்தைச் சொல்லுவதால் கேட்பவர்களுக்கு குழப்பம் வந்துவிடக் கூடாது ஓர் அளவிற்கு ஒத்த கருத்தாக வேண்டும்*


*சன்மார்க்க அன்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்!*  


*இந்திரியம், கரணம்,ஜீவன்,ஆன்ம ஒழுக்கமும், ஜீவகாருண்ய ஒழுக்கமும் கடைபிடிக்க வேண்டி,சுத்த சன்மார்க்க கொள்கைகளைப்பற்றி சிறந்த பயிற்சி அளிக்க வேண்டும்! அதே நேரத்தில் ஒழுக்கம் நிறைந்து சுத்த சன்மார்க்கத்தை முழுதும் கற்றறிந்து பற்றற்ற வாழ்க்கையை கடைபிடிப்பவர்கள் சுத்த சன்மார்க்கத்தை போதிக்க வேண்டும்.அப்போதுதான் பயிற்சி பெற்றவர்கள் மக்களிடத்தில் சுத்த சன்மார்க்கத்தை முழுமையாக கொண்டு செல்ல முடியும்*


*மரணம் இல்லாப் பெருவாழ்வு !*


*உலகிலே உயர்ந்த கொள்கைகளை சொல்ல வந்தவர் வள்ளலார், அவற்றில் மிகவும் முக்கியமானது,மரணம் அடையும் மனிதன் மரணம் அடையாமல் வாழும் வழியைக் கண்டுபிடித்தவர் வள்ளலார். அடுத்து இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை உலகிற்கு தெரியப்படுத்தியவர் வள்ளலார்.*


*கண்டு பிடித்தது மட்டும் அல்லாமல் 51 ஆண்டு காலம் இந்த தமிழ்நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று,தன்னுடைய ஊன் தேகத்தை ஒளி தேகமாக மாற்றிக் (அருள் தேகமாக ) காட்டி வாழ்ந்து கொண்டு இருப்பவர் வள்ளலார் ஒருவரே !*


*வள்ளலார் மறைந்து விடவில்லை ஐந்தொழில் வல்லபத்தை பெற்று அருள் ஆட்சி செய்து கொண்டுள்ளார். சன்மார்க்கிகளின் செயற்பாடுகளை உற்று நோக்கி கவனித்துக் கொண்டுள்ளார்.வள்ளலாரை யாரும் ஏமாற்ற முடியாது,ஏமாற்ற நினைத்தால் ஏமாந்து போவீர்கள். உண்மை தெரியாமல் கண்டபடி வாழ்ந்ததால் இதுவரை தேரினோர் ஒருவரும் இல்லை.*


வள்ளலார் பாடல்!


*அருட்சோதி ஆனேன் என்று அறையப்பா முரசு*


*அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு*


*மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு*


*மரணம் த விர்ந்தேன் என்று அறையப்பா முரசு.!*


என்று தான் பெற்ற அருட்பெறும் அருட் பேற்றை மேலை கண்ட பாடல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.


மேலும்...


ஐந்தொழில் நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய்

வெந்தொழில் தீர்ந் தோங்கிய நின் மெய்யடியார் சபைநடுவே

எந்தை உனைப் பாடி மகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்

செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்.! 


என்றும் மேலும்..


துன்பெலாந் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்

சூழ்ந்ததருள் ஒளி நிறைந்தே

சுத்த சன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே

சுதந்தரம தானது உலகில்


வன்பெலாம் நீக்கி நல் வழியெலாம் ஆக்கி மெய்

வாழ்வெலாம் பெற்று மிகவும்

மன்னுயிர் எலாம் களித் திடநினைத் தனை உன்றன்

மனநினைப் பின்படிக்கே


அன்ப நீ பெறுக உலவாது நீடூழி விளையாடுக *அருட்சோதியாம்*

*ஆட்சிதந்தோம்* உனைக் கைவிடோம் கைவிடோம்

ஆணை நம் ஆணை என்றே


இன்புறத் திருவாக் களித் து என்னுள்ளே கலந்து

இசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ்செய் 

வல்ல சித்தாகி மணி மன்றினில்

இலங்கும் 

நடராஜபதியே.! 


*மேற்கண்ட பாடல்களில் மரணத்தை வென்றதினால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்ன என்ன பதவிகள் வழங்கியுள்ளார்   என்பதையும் வள்ளல்பெருமான் எந்த உருவத்தில் எந்த சிறப்புடன் விளங்கிக் கொண்டுள்ளார் என்பதையும், அறிவுள்ள அருள் சார்ந்த சுத்த சன்மார்க்கிகள் தெரிந்து கொள்ள வேண்டும்*


வள்ளலார் இறைவனுடன் கலந்து கொண்டார்! 


வள்ளலார்  மறைந்தோ! காணாமலோ! மற்றவர்கள் சொல்வதுபோல் இறந்தோ! மற்றவர்களால் கொலை செய்யப்பட்டோ போகவில்லை.


*வள்ளலாரை யாரும் தொடமுடியாது,அவர் அருகில்  யாரு உட்காரமுடியாது, நேருக்குநேர் அவர் கண்களை எவராலும் பார்க்க முடியாது, நிலம், நீர் அக்கினி காற்று,ஆகாயம், என்னும் ஐந்து பூதங்களும் அவர் மேனியை நெருங்காது, மழை,இடி மின்னல்,புயல் போன்ற இயற்கை செயற்கை ஆக்கிரமிப்புகள் அவரைத் தாக்காது விலகி பறந்து சென்றுவிடும.*


வள்ளலால் பாடல்!


காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே


கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ் செயல்களாலே


வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே


ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார்வீரே.!


என்றும் மேலும்..


ஆராலும் அறிந்து கொளற் கரியபெரும் பொருளே

அம்மே என் அப்பா என் ஐயா என்அரசே


காராலும் கனலாலும் காற்றாலும் ககனக்

கலையாலும் கதிராலும் கடலாலும் கடல்சூழ்


பாராலும் படையாலும் பிறவாலும் தடுக்கப்

படுதலிலாத் தனிவடிவம் எனக்களித்த பதியே


சீராலும் குணத்தாலும் சிறந்தவர்சேர் 

சித்திபுரத் தமுதே என் நித்திரைதீர்ந் ததுவே! 


*மேலே கண்ட பாடல்களில் எதனாலும் எவராலும் அழிக்கமுடியாத தனிவடிவம் ( அருள் ஒளி உடம்பு) பெற்றதை தெளிவாக வெளிப்படுத்துகிறார் வள்ளலார்* 


*இறைவனே வந்து வள்ளலார் உடம்பில் கலந்து கொண்டார்!*


*வள்ளலார் இறுதியாக சத்திய அறிவிப்பு என்ற தலைப்பில்  நான்கு பாடல்கள் இறைவன் அறிவித்த வண்ணம் பதிவு செய்கிறார்! அதில் உள்ள உண்மையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்*


பாடல்கள்! 


1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்

ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை

மெய்யன் எனை ஆட்கொண்ட வித்தகன் சிற் சபையில்

விளங்குகின்ற சித்தன் எலாம் வல்லஒரு விமலன்

துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்

சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க

வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே

மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.


2.தனித்தலைமைப் பெரும்பதி என் தந்தை வருகின்ற

தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்

இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம் தித்திக்க

இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற

மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி

மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே

கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே

களித்திடவைத் திடுகின்ற காலையும் 

இங்கிதுவே.


3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.


4. *என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்*

*இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில் அமர் கின்றார்*


*பின்சாரும் இரண்டரை நா ழிகைக்குள்ளே எனது*

*பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்*


*தன்சாதி உடையபெருந் தவத்தாலே* *நான்தான்*

*சாற்றுகின்றேன்* அறிந்திதுதான் *சத்தியம்சத் தியமே*

*மின்சாரும் இடைமடவாய்* *என்மொழிநின் தனக்கே*

*வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே.!* 


*வள்ளலார் தங்கி இருந்த மேட்டுகுப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே நேரில் வந்து வள்ளலார் உடம்பில் கலந்து பிரியாமல் இருக்கின்றார்என்பதை விளக்கும் பாடல்களே மேலே உள்ள நான்கு பாடல்களாகும்.*


*இப்போது, வள்ளலார் வேறு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வேறல்ல! இருவரையும் பிரிக்க முடியாத அளவிற்கு ஒன்றாகி கலந்து விட்டார்கள். இப்போது யாரை வணங்குவது வழிபடுவது என்பதை சன்மார்க்கிகள் தெளிவுடன் தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும்.*


*அருட்பெருஞ்ஜோதியை வணங்கினால் வள்ளலார் அதிலே உள்ளார். வள்ளலாரின் உருவ சிலைகளையோ,உருவ படங்களையோ வணங்கினால் அதிலே வள்ளலாரும் இல்லை,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் இல்லை என்பதை அறிவு சார்ந்த சான்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்*


*சன்மார்க்கிகள் இதுவரையில் இருந்த்துபோல் இனியும் வீண்காலம் கழிக்காமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டும் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்*


*வள்ளலார் பாடல்!*


பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பி அருட்சோதி அளித்து என் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்


நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான்பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியாது என்போல் இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே! 


*தான் அடைந்த பெரும் பேற்றை அனைத்துலக மக்களும் அடைய வேண்டும் என்று ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் நமக்காக இறைவனிடம்  வேண்டிக் கொள்கிறார்,என்னே பெருங்கருணை வள்ளல்பெருமகனாற்கு!* 


*வள்ளலார் பாடல்!*


இறந்தவரை எடுத்திடும் போ தரற்றுகின்றீர் உலகீர்

இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்


மறந்திருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ நுமக்கு

மறந்தும் இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்


சிறந்திடு சன் மார்க்கம் ஒன்றே பிணிமூப்பு மரணம்

சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே


பிறந்தபிறப் பிதிற்றானே நித்திய மெய் வாழ்வு

பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.! 


*என்கின்றார்.. நாம் உண்மை அறியாமல் மரணம் அடைவதை நினைந்து மிகவும் வேதனையுடன்  அழைக்கின்றார்.வள்ளலார் காட்டிய நேர் பாதையில் தடம்மாறாமல் செல்வோம் மரணத்தை வெல்வோம்*


*இறைவன் திருவருளை முழுமையாக பெற்றவரும், இறைவனிடம் ஐந்தொழில் வல்லபமான ஆட்சியை பெற்று தனிச் செங்கோல் நடத்தும் பொறுப்பை  பெற்றவரும், தனிச்சிறப்பு வாய்ந்தவரும் வள்ளலார் ஒருவரே !*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வெள்ளி, 27 ஜனவரி, 2023

வடலூர் தைப்பூசத்தின் சிறப்பு !

 *தைப்பூசத்தின் சிறப்பு !*


*தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது உலக வாழ்க்கைக்கு பொருத்தமானதாகும், அருள் வாழ்க்கைக்கு உகந்தது அல்ல!* 


*தைப்பூசத்தன்று இப் பிரபஞ்சத்தின்  ஒளி கிரகங்களாகிய அக்கினி,சூரியன்,சந்திரன் ,நட்சத்திரங்கள் போன்ற ஒளிவட்டங்கள் யாவும் ஒரே நேர்க்கோட்டில் சஞ்சரிக்கும் சிறப்புடையதாகும் ஆதலால் அன்று முழு பவுர்ணமி விளங்கும் நாளாகும், அன்று நாள் முழுவதும் விரதம் இருந்து கடவுளை வணங்கினால் நல்ல பலனைத்தரும் என்பது சைவ சமய சான்றோர்களின் திரு வாக்காகும்.*


*தைப்பூசம் என்றாலே உலகம் எங்கும் உள்ள  தமிழ் கடவுளான முருகக் கடவுளை தமிழ் சார்ந்த மக்கள் வழிபடும் விழாவாகத் தொன்று தொட்டு கொண்டாடப்பட்டும் நடைப்பெற்றும் வருகிறது.* 


*வடலூரில் தைப்பூசம்!*


*152 ஆண்டுகளாக தைப்பூசத்தன்று  வடலூரில் வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையில் 7 ஏழு திரைகளை மாட்டி பிறகு நீக்கி ஆறுகால  ஜோதி தரிதனப் பெருவிழாவாகக் கொண்டாடப்பட்டும் நடைப்பெற்றும் வருகிறது.மேலும் ஒவ்வொரு மாதப் பூசத்தன்றும் இரவு எட்டு மணிஅளவில் 7 ஏழு திரைகளை மாட்டி பிறகு நீக்கி ஜோதி தரிசனம் காட்டப் படுகிறது தவறல்ல. ஏதோ ஒருவகையில்  தத்துவ உருவ வழிபாட்டை விட்டுவிட்டு  ஒளியை வழிபடுகிறார்கள் என்பது வரவேற்கக் கூடியதாகும்.ஒளியை வழிபட்டால் ஆன்மா பலம் பெறும், ஆன்ம அறிவு விளங்கும்,ஆன்ம அறிவு விளங்கினால் ஆன்ம லாபம் பெறப்படும். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழலாம்.* 


*அருள் வழங்கும்  ஒரே இடமே வடலூர் சத்திய ஞானசபையாகும். அதனால்தான் அங்கு  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையுடன் அருள் வழங்கும் இடமாக சொல்லப்படுகின்றது.*


*வள்ளலார் தைப்பூசம் மற்றும் மாதப்பூசத்தில் மட்டும் 7 ஏழு திரைகளை நீக்கி  ஜோதி தரிசனம் காட்டச் சொன்னாரா என்று கேட்பவர்களுக்கு திருஅருட்பா பாடல்களிலோ,உரைநடைப் பகுதிகளிலோ எந்த விதமான ஆதாரமும் இல்லை.* 


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபடுவதற்கு காலம் நேரம் தேவை இல்லை என்கிறார் வள்ளலார்*


*அதற்காகவே திருஅருட்பாவில் ஒரு பதிகம் பதிவு செய்துள்ளார் !* 


1. அடங்குநாள் இல்லாது அமர்ந்தானைக் காணற்கே

தொடங்குநாள் நல்லதன்றோ - நெஞ்சே

தொடங்குநாள் நல்லதன்றோ.

2. வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே

நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே

நல்லநாள் எண்ணிய நாள்.


3. காலங் கடந்த கடவுளைக் காணற்குக்

காலங் கருதுவ தேன் - நெஞ்சே

காலங் கருதுவ தேன்.*

4. ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக்

காலங் கருதுவ தேன் - நெஞ்சே

காலங் கருதுவ தேன்.

5. தடையாதும் இல்லாத் தலைவனைக் காணற்கே

தடையாதும் இல்லை கண் டாய் - நெஞ்சே

தடையாதும் இல்லைகண் டாய்.

6. கையுள் அமுதத்தை வாயுள் அமுதாக்கப்

பையுள் உனக்கென்னை யோ - நெஞ்சே

பையுள் உனக்கென்னை யோ.

7. என்னுயிர் நாதனை யான் கண்டு அணைதற்கே

உன்னுவ தென்னை கண் டாய் - நெஞ்சே

உன்னுவ தென்னை கண் டாய்.

8. நான்பெற்ற செல்வத்தை நான்பற்றிக் கொள்ளற்கே

ஏன்பற்று வாயென்பதார் - நெஞ்சே

ஏன்பற்று வாயென்பதார்.

9. தத்துவா தீதத் தலைவனைக் காணற்குத்

தத்துவ முன்னுவதேன் - நெஞ்சே

தத்துவ முன்னுவதேன்.

10. ஒக்க அமுதத்தை உண்டோம் இனிச்சற்றும்

விக்கல் வராது கண்டாய் - நெஞ்சே

விக்கல் வராதுகண் டாய்.!


என்னும் பாடல் வரிகளிலே தெளிவாக விவரிக்கின்றார்


திருஅருட்பா அகவல்! 


*மனித ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை அஞ்ஞானம் என்னும் ஏழு திரைகளைப் பற்றியும் அவற்றை நீக்கும் வழிமுறைகளைப் பற்றியும் அகவல் வரிகளில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார் வள்ளலார், மற்றபடி இயற்கை விளக்கமான சத்திய  ஞானசபையில் இயற்கை விளக்கமாக  வைத்துள்ள ஞான தீபத்திற்கு திரைகளை மாட்டி விளக்கச் சொல்லவில்லை என்பதை சுத்த சன்மார்க்கத்தில் மிகுந்த ஈடுபாடு உள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்,*


*வடலூர் தைப்பூசப் பெருவிழாவானது சமயம் மதம் சார்ந்த விழாவாக மாறிவிட்டது*


*சாதி சமயம் மதம் கடந்து உலக மக்கள் அனைவரும் வந்து வழிபடும் பொதுவான இடமே வடலூரில் உள்ள இயற்கை விளக்கமான சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபையாகும்.அச் சபையிலே அமர்ந்து அருள்பாலிக்கும் இயற்கை உண்மைக் கடவுளே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும்*


சாதியும் மதமும்  சமயமும் காணா

ஆதி அநாதியாம் அருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


மேலும் வள்ளலார் பாடல்! 


சாதிகுலம் சமயமெலாம் தவிர்த்தெனைமேல் ஏற்றித்

தனித்ததிரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே


ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

ஆருயிர்கள் அகம் புறம் மற் றனைத்தும் நிறைஒளியே


ஓதிஉணர்ந் தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான்

ஓதாமல் உணர்ந்துணர்வாம் உருவுறச்செய் உறவே


சோதி மயமாய் விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூய நடத்தரசே என் சொல்லும் அணிந் தருளே.! ( அருள் விளக்கமாலை)


மேலும்

சபையெனது யஉளமெனத் தான் அமர்ந்து எனக்கே

அபயம்  அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி! ( அகவல்) 


மேலும்

சத்திய ஞான சபை என்னுள் கண்டனன்

சன்மார்க்க சித்தியை நான் பெற்றுக் கொண்டனன்


நித்திய ஞான நிறையமுதம் உண்டனன்

நிந்தை உலகியற் சந்தையை விண்டனன் !


*அற்புதம் அற்புதம் அற்புதமே என்பார் வள்ளலார்.*


*சாதி சமய சழக்கை விட்டேன் அருட் ஜோதியைக் கண்டேன் என்பார் வள்ளலார்*


*சாதி சமயம் மதம் கடந்த வடலூர் சத்திய ஞானசபையில் சமயம் மதம் சார்ந்த ஆச்சார சங்கற்ப விகற்பங்கள் அடங்கிய  விழாக்களை தந்திரமாக உள்ளே புகுத்து விட்டார்கள் என்பதே உண்மையாகும்*


*இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம்!*


*வள்ளலார் கொள்கைகளை  மக்கள் புரிந்து கொண்டு பின் பற்றினால் சாதி சமயம் மதம் சார்ந்த தத்துவக் கடவுள்களும் வழிபாட்டு முறைகளும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்துவிடும் என்பதை உணர்ந்த சமய மதவாதிகள்,வள்ளலாரை சாதி சமய மதம் சார்ந்த மதவாதியாக  மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள்அவை ஒருபோதும் நடைபெறாது*


*இப்போது எல்லாம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகளை மக்கள் தெரிந்து அறிந்து புரிந்து கொண்டு தங்களை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அடிமைகளாய் மாற்றிக்கொண்டு வருகிறார்கள் என்பதே சத்திய உண்மையாகும்.*


*அதற்கு சாட்சியாக நாங்களும் எங்கள் குடும்பமும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை  பின்பற்றி வாழ்ந்து வருகிறோம்.*


வள்ளலார் வரிகள்!


*வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே!*


*வடலூர் வந்தால் மட்டுமே நல்ல வரம் பெறலாம் என்று வெளிப்படையாக சொல்லுகி ன்றார் வள்ளலார்* 


*இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,மற்றைய வழிப்பாட்டுத் தலங்களில் நல்ல வரம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது பொருளாகும்*


மேலும் வள்ளலார் சொல்வது ! 


*சன்மார்க்கப் பெரும்பதி வருகை !*


*சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் வழங்கும்,இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை.தடையற்ற பெருநெறி வழக்கம் இக்காலந் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும். அதன்மேலும், அதன்மேலும் வழங்கும்.*


*பல வகைப்பட்ட சமய பேதங்களும்,சாத்திர பேதங்களும்,சாதிபேதங்களும்,ஆசார பேதங்களும்போய்,சுத்த சன்மார்க்கப் பெருநெறி ஒழுக்கம் விளங்கும்.*


*இப்போது வந்திருக்கின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய சாத்திர புராணங்களில் வந்த்தாகச் சொல்லுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்கள்,மூர்த்திகள்,கடவுளர்,தேவர்,அடியார்,யோகி,ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல,*


*இப்படி சொல்லப்பட்ட எல்லா மூர்த்திகளும்,எல்லாத் தேவர்களும், எல்லாக் கடவுளரும், எல்லாத் தலைவர்களும்,எல்லா யோகிகளும், எல்லா ஞானிகளும் தங்கள் தங்கள் அனுபவங்களைக் குறித்து எதிர்பார்க்கின்றபடி எழுந்து அருளுகின்ற தனித்தலைமைப் பெரும்பதி "அருட்பெருஞ்ஜோதியாகும்"*


*இது உண்மை அந்தப் பதியின் அருளை நான் பெறுவேன்,பெறுகின்றேன்,பெற்றேன். என்னை அடுத்த தாங்களும் பெறுதற்கு யாதொரு தடையும் இல்லை. பெறுவீர்கள்,பெறுகின்றீர்கள்,பெற்றீர்கள்அஞ்சவேண்டாம் என உலக மக்களுக்காக வள்ளலார் பதிவு செய்கிறார்*


*ஆகலின் இதுதொடங்கி ஞானசபையில் எழுந்தருளி அருள் வழங்கும் (நல்லவரம்) அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வந்து வந்து தரிசிக்கப் பெறுவீர்களானால் கருதிய வண்ணம் பெற்றுக் களிப்படைவதும் அன்றி இறந்தவர் உயிர் பெற்று எழுதல்,மூப்பினர் இளமையைப் பெற்று நிற்றல் முதலிய பலவகை அற்புதங்களைக் கண்டு பெருங்களிப்பும் அடைவீர்கள்*


*எல்லோருக்கும் தாய், தந்தை,அண்ணன்,தம்பி,முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ,*

*அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம்* *வடலூர் சத்திய ஞானசபையாகும்* *மேலும் வள்ளலார் சித்திபெற்ற மேட்டுகுப்பம் சித்திவளாகமும் அதில் அடங்கும்.*


*இது சத்தியம் இது ஆண்டவர் கட்டளை*


*எல்லோரும் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவில் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு வடலூர் பெருவெளிக்கு வாருங்கள். தங்களால் முடிந்த அளவு அன்னதானம் செய்யுங்கள்,உண்மை உணர்வோடு ஜோதி தரிசனம் காணுங்கள்*


*வள்ளலார் பாடல்!*


ஜோதி எவையும் விளங்க விளங்குஞ் ஜோதி வாழியே ! 


துரிய வெளியில் நடுநின்று ஓங்கும் ஜோதி ஜோதியே!


சூதிலா மெய்ச் சிற்றம்பலத்து ஜோதி ஜோதியே !


துலங்கப் பொன்னம்பலத்தில் ஆடும் ஜோதி ஜோதியே !


மேலும்...


சுத்த சிவ சன்மார்க்க நீதி ஜோதி போற்றியே !


சுக வாழ்வளித்த சிற்றம்பலத்து ஜோதி போற்றியே !


சுத்த சுடர்ப் பொற்சபையிலாடுஞ் ஜோதி போற்றியே !


ஜோதி முழுதும் விளங்க விளக்குஞ் ஜோதி போற்றியே !


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வியாழன், 12 ஜனவரி, 2023

கடவுளைக் கண்டேன்!

 *கடவுளைக் கண்டேன்!*


தொடர்ச்சி...12.


*இனிய தைப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் !*


*வள்ளலார் பாடல்!*


ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற

உத்தமர்தம் உறவுவேண்டும்


உள்ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்


பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும் 


பொய்மை

பேசாது இருக்க் வேண்டும்


பெருநெறி பிடித்தொழுக வேண்டும் 


மதமானபேய்

பிடியாது இருக்க வேண்டும்


மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் 


உனை

மறவாதிருக்க வேண்டும்


மதிவேண்டும் நின்கருணை 

நிதிவேண்டும் 


நோயற்ற

வாழ்வில்நான் வாழவேண்டும்!


*மேலே கண்ட பாடல் வள்ளலார் இயற்றியது என்பது எனது 35 வயதில் தெரியாது, என்றாலும் எனது வாழ்க்கையில் எனக்குத் தெரியாமலே, உண்மை, ஒழுக்கம், நேர்மை,நல்லோர் நட்பு, பொய் சொல்லாமை,உள்ஒன்று வைத்து புறம் ஒன்று பேசாமை, தூய்மையான இறை பக்தி,உயிர் இரக்கம்,ஈகை,கடின உழைப்பு,நோயற்ற வாழ்க்கை போன்ற நல்லொழுக்கங்களை கடைபிடித்து வாழ்ந்து  வந்துள்ளேன்* 


*கடவுள்பக்தி !*


*எனது அப்பா பெயர் சென்னிமலை எங்கள் ஊர் நாட்டான்மைகாரர், அம்மாபெயர் முத்தம்மாள் அவர்கள் இருவரும் தீவிரமான முருகபக்தி கொண்டவர்கள் அதனாலே என் அண்ணாருக்கு சண்முகம் என்றும்,எனக்கு கதிர்வேல் என்றும் பெயர் வைத்துள்ளார்கள்,* 


*எங்கள் அப்பா அவர்கள், மாட்டுச்சாணத்தை உலரவைத்து வேகவைத்து சாம்பலாக்கி சுத்தமாக தயாரிக்கப்பட்ட விபூதி பையை எப்போதும் தன் மடியில் வைத்திருப்பார். அடிக்கடி விபூதி எடுத்து வாயில் போட்டுக்கொள்வார், பிரச்சனை என்று யார் வந்தாலும் விபூதி  கொடுத்து நல்லது செய்வார்.*


*நான் ஒருவருட குழந்தையாக இருக்கும் போது எங்கள் அம்மா உயிர் அடக்கம் கொண்டார், நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது அப்பா வயிற்றுவலி காரணமாக உயிர் அடக்கம் கொண்டார், அப்பா உயிர் பிரிந்ததற்கு காரணம் விபூதி அதிகம் உட்கொண்டதால் வயிற்றில் தங்கி கட்டிபோல் உருவாகி  வயிற்று வலி தாங்கமுடியாமல் உயிர் பிரிந்தது என்று மருத்துவர்கள் சொல்லி உள்ளதை கேள்வி பட்டுள்ளேன்*


*தீவிர பக்தி!*


*அப்பாவிற்கு முருகபக்தி தீவிரமாக இருந்ததால் எனக்கும் பழனிமுருகன்மேல் அளவுகடந்த தீவிர பக்தி உண்டாயிற்று, ஒவ்வொரு மாதமும் கிருத்திகை தினத்தன்று பழனிக்கோயிலுக்குப் சென்று வழிப்பட்டு வருவது பழக்கமாகவும் விரதமாகவும் கடைபிடித்து  வருவது வழக்கமாக கொண்டு பின்பற்றி வந்துள்ளேன்*


*மேலும்

*ஒவ்வொரு  திங்கட்கிழமை அன்றும் மவுனவிரதம் கடைபிடித்து வருவது வழக்கமாக கொண்டு இருந்தோம், தலைமுடி தாடி மீசை எடுக்காமல் சிவனடியார் போல்,நெற்றி நிறைய விபூதி சந்தனம் குங்குமம் அணிந்து சாமியார் போல் வாழ்ந்து வந்துள்ளோம்என்பது  அப்போது தொடர்புள்ள, எங்கள் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்,அன்பர்களுக்கும்,உற்றார் உறவினர்களுக்கும் தெரிந்த அறிந்த செய்தியாகும்*


*ராஜயோகம்!*


*ஈரோட்டில் உள்ள பிரம்ம குமாரிகள் வித்தியாலயம் சென்று ராஜயோகம் பயிற்சி செய்து வந்தோம், அங்கே போதித்த "கல்பனா" என்ற பெயருடைய சகோதரி அவர்கள் தெளிவான சிந்தனை உள்ளவர், அவர்களுக்கு என் மனைவி மீதும் எங்கள் குடும்பத்தின் மீதும் மிகுந்த அக்கரைக் கொண்டவர்,நான் நிறைய கேள்விகள் கேட்பேன் சில கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வார், சில கேள்விகளுக்கு பதில் சொல்லத் தெரியாமல் தடுமாறுவார்கள்,*

 *ராஜயோகத்தின் வாசகம் "நான் ஆத்மா என் தந்தை மரமாத்மா" என்று சொல்லும் வாக்கியம் எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது, ஆனாலும் அந்த பரலோகத்தில் இருக்கும் பரமாத்மா யார் ? அவரின் உண்மையான பெயர் என்ன ? அவர் ஒளியா ?  உருவமா? அருவமா ? அவருக்கும் ஆத்மாவிற்கும் உள்ள தொடர்பு எவ்வாறு உண்டாயிற்று ?  ஆத்மா பரமாத்மாவை தொடர்பு கொள்ள வேண்டிய அவசியம் ஏன் உண்டாயிற்று? என்பதை தெளிவாக விளக்கம் சொல்வதற்கு அவர்களுக்கு தெரிவதில்லை* 


*இருந்தாலும் சாத்வீகமான உணவு,  ஒழுக்கமான வாழ்க்கை, சமாதானத்தில்பற்று, அன்பான பழக்க வழக்கம் மற்றும்,இந்திரிய, கரண நல்லொழுக்கம்,மனித நேயத்துடன் சிறந்து விளங்குவார்கள். மனித ஜீவ ஆத்மாக்களுக்கும் நல் ஒழுக்கத்தை கடைபிடிக்க கற்றுத் தருவார்கள்*


*சபரிமலை ஐய்யப்பன் கோயிலுக்குச் சென்றோம்*!


*1979 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், நானும் என் இளையமகன் நந்தகுமார் வயது 6ஆறு இருக்கும், அவரும் நானும் 48 நாட்கள் கடுமையான  விரதம் இருந்து, இருமுடிகட்டிக்கொண்டு, கல்லும் முள்ளும் நிறைந்த,வன விலங்குகள் நிறைந்த  அடர்ந்த காட்டு நடைபாதை வழியாக சபரிமலைக்குச் சென்று ஐய்யப்பனை வணங்கி  வழிபாடு செய்துவிட்டு வந்தோம்.* 


*சபரிமலைக்கு செல்வதற்கு முன் எங்கள் வீட்டில் ஐய்யப்பன் பூசை, பாடல் பஜனை  வழிபாடு அன்னதானம் வைத்திருந்தோம். அந் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக ராஜயோக போதகர் "கல்பனா" சகோதரி அவர்களை அழைத்திருந்தோம்,அழைப்பை ஏற்று வழிபாட்டில் வந்து கலந்து கொண்டார்கள்*


*அவர்கள் அன்று வழிபாட்டில் பேசியது இன்றுவரை என் மனதில் நீங்காத இடம் பெற்றுள்ளது. அவர்கள் சொல்லியது யாதெனில்?*


*நீங்கள் சபரிமலைக்கு போவதற்காக 48 நாட்கள் விரதம் இருந்து மது அருந்தாமல், புகை பிடிக்காமல், மாமிசம் உண்ணாமல் தவறான பாதையில் செல்லாமல், பனியையும் குளிரையும் பொருட் படுத்தாமல் காலை நான்கு மணிக்கே எழுந்து குளித்துவிட்டு வழிபாடு செய்து,அனைத்து நல்லொழுக்கத்துடன் கடைபிடிக்கிறீர்கள், மனதார உளமார பாராட்டுகிறோம், 48 நாட்கள் தொடர்ந்து விரதம் இருந்தாலே கடவுள் அனுகிரகத்தால்(அருளால்) உங்களுக்கும்,உங்கள் குடும்பத்திற்கும் நன்மை செய்வார் என்ற நம்பிக்கையுடன் விரதம் இருந்து ஒழுக்கத்தை கடைபிடிக்கிறீர்கள், அதேபோல் வருடம் முழுவதும் கடைபிடித்தால் கடவுள் எவ்வளவு பெரிய நன்மை செய்வார் என்பதை சிந்தித்து பாருங்கள் என்றார்.*


*(சிறிய லாபத்துடன் தொடர்ந்து பெரிய லாபம் கிடைக்கும்  என்பது தவிர்க்க முடியாத உண்மையாகும் என்றார்)*


*மேலும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் நல் ஒழுக்கத்தை கடைபிடித்தால்,குடும்பமே கோயிலாக மாறிவிடும் என்றார். நீங்கள் யாவரும் துன்பம் துயரம் அச்சம் பயம் இல்லாமல் இன்பத்துடன் வாழ்வதற்கு கடவுள் கருணை காட்டி அருள் புரிவார் என்பதை நினைவு கொண்டு வாழ்ந்து பாருங்கள் அளவில்லா இன்பத்தில் வாழ்வாங்கு வாழ்வதற்கு கடவுள் அருள்புரிவார் என்றும்,எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவான விளக்கம் தந்தார் கல்பனா சகோதரி அவர்கள்.*


*அந்த வார்த்தைகள் என் மனதில் நீங்காது  நிலைத்துவிட்டது, வழிபாடு முடிந்தது அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, வெளியில் சென்று எங்கும் உணவு உண்ணாத கல்பனா சகோதரி அவர்கள் எங்கள் வீட்டில் மட்டும் உணவு உட்கொண்டு அனைவரையும் உளமார வாழ்த்திவிட்டு  சென்றார் என்பது மறக்கமுடியாத உண்மைப் பதிவாகும்* 


*அடுத்து சினிமா உலகம் என்னை ஈர்த்தது அவற்றைப்பற்றி அடுத்த கட்டுரையில் தொடர்வோம்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

சனி, 7 ஜனவரி, 2023

நல்லநாள் ! கெட்டநாள்!

 *அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது’’ என்று கேட்டாள்*


எது நல்ல நாள்?.....எது கெட்ட நாள்?

அஷ்டமி, நவமி கெட்ட நாட்களா?


"சென்ற வாரம் நான் என் சகோதரி வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கு உணவருந்தி ஓய்வெடுத்த பின் அவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வீட்டுமனை வாங்க வேண்டும் எனக் கூறி வந்ததை நினைவுபடுத்தினேன். எனக்குத் தெரிந்த ஒருவர் நல்ல இடத்தில் ஒரு வீட்டுமனை இருப்பதாகவும் விலையும் சற்று சகாயமாகவுள்ளதாகவும் கூறினார். அதைப் போய் இன்று பார்த்துவிட்டு வரலாம் என்று கூறினேன். உடனே என் சகோதரி இன்று வேண்டாம் அண்ணே என்றாள். நான் ஏன்? இன்று விட்டால் மனை கிடைக்காமல் போகலாம் வேகமாக விற்று வருவதாகக் கேள்விப் பட்டேன். இன்று ஏன் வேண்டாம் என்கிறாய்? எனச் சகோதரியைக் கேட்டேன். அவர் இன்று அஷ்டமி, நாளை நவமி என்றாள். ஆகையால் நாளை மறுநாள் போய் பார்க்கலாம் என்று சொன்னார்.


நான் அஷ்டமி, நவமி என்றால் என்ன? ஏன் கூடாது என்பதற்குக் காரணம் என்ன? என்று கேட்டேன். அதற்கு என் சகோதரி எனக்கு விளக்கம் தெரியாது அண்ணே, ஆனால் எல்லோரும் அவை நல்ல நாட்கள் இல்லை என்பதால் நானும் கூறினேன் என்று கூறினார்.


நான் சிரித்துக் கொண்டே அஷ்டமி, நவமியில் நீங்கள் சாப்பிடுவதில்லையா? ரயில், பஸ், விமானம் ஆகியவை ஓடுவதில்லையா? மருத்துவமனை, வங்கிகள் மற்றும் அலுவலகங்கள் செயல்படுவதில்லையா? அவசர அறுவை சிகிச்சையைத் தவிர்க்கிறோமா? என்று கேட்டேன்.


அதற்கு என் சகோதரி போங்க அண்ணா, நீங்க எப்போதும் இப்படித் தான் எடக்கு முடக்காகப் பேசுவீர்கள் என்று கேலி செய்தார். நான், இல்லையம்மா இதற்கு விளக்கம் கூறுகிறேன். நாம் ஓரளவு படித்தவர்கள் எதையும் அறிவுப்பூர்வமாக சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டாமா? என்று கேட்டேன். மைத்துனரும், என் சகோதரியும் நீங்கள்தான் விளக்குங்களேன் என்றார்கள்.


நான் பின்வரும் விளக்கத்தைக் கூறினேன்.


ஒரு மாதத்திற்கு அமாவாசை, ஒரு பவுர்ணமி வரும். அந்த இரு நிகழ்ச்சிகளும் பூமி மற்றும் சந்திரனின் சுழற்சியால் ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள். நாட்களைச் சுட்டிக்காட்ட அமாவாசையிலிருந்து அல்லது பவுர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்று குறிப்பிட்டுக் காட்டவே பிரதமை முதல் சதுர்த்தசி வரை 14 நாட்களுக்கும் பெயரிட்டிருக்கிறார்கள். பெயர் தமிழில் வைத்திருந்தால் விளங்கும். சமஸ்கிருதம் ஆதிக்கத்தில் இருந்தபோது தமிழ் வருடங்களின் பெயரை கூட பொருள் தெரியாத வடமொழியில் அல்லவா வைத்து விட்டார்கள்? நாமும் அதை மாற்ற மனமின்றி வைத்துக் கொண்டு திண்டாடுகிறோம். அதே போல் தான் நாட்களின் பெயர்களும் பின்வருமாறு வடமொழியில் உள்ளன என்று விளக்கினேன்.


1. பவுர்ணமி, அமாவசைக்கு அடுத்த நாள் பிரதமை பிரதமர் என்றால் முதல்வர் என்று பொருள். அதுபோல் பிரதமை என்றால் முதல் நாள்.


2. துவிதை என்றால் இரண்டாம் நாள் தோ என்றால் இரண்டு. துவிச் சகர வண்டி என்று சைக்கிளைக் கூறுவது தங்களுக்கு தெரியும்.


3. திரிதியை என்றால் மூன்றாம் நாள் திரி என்றால் மூன்று அல்லவா?


4. சதுர்த்தி என்றால் நான்காம் நாள் சதுரம் நான்கு பக்கங்கள் கொண் டது.


5. பஞ்சமி என்றால் அய்ந்தாம் நாள் பாஞ்ச் என்றால் அய்ந்து எனப் பொருள்.


6. சஷ்டி என்றால் ஆறாம் நாள்.


7. சப்தமி என்றால் ஏழாம் நாள். சப்த ஸ்வரங்கள் என ஏழு ஸ்வரங்களைக் கூறுவதில்லையா?


8. அஷ்டமி என்றால் எட்டாம் நாள். அஷ்டவக்கிரம் என்று எட்டு கோணல்களைக் கூறுவதையும் அஷ்ட லட்சுமி என்றெல்லாம் கூறக் கேட்டிருக்கிறோம்.


9. நவமி என்றால் ஒன்பதாம் நாள் நவ என்றால் ஒன்பது என்றும் நவ கிரகங்கள் என்பதும் தங்களுக்குத் தெரியும்.


10. தசமி என்றால் பத்தாம் நாள் தஸ் என்றால் பத்து அல்லவா? தாரம் என்று கடவுளின் அவதாரங்களைக் கூறக் கேட்டிருக்கிறோம்.


11. ஏகாதசி என்றால் பதினொன்றாம் நாள் ஏக் என்றால் ஒன்று தஸ் என்றால் பத்து இரண்டின் கூட்டுத் தொகை பதினொன்று.


12. துவாதசி என்றால் பன்னிரண்டாம் நாள் தோ/துவி என்றால் இரண்டு தஸ் என்றால் பத்து எனவே இதன் கூட்டுத்தொகை பன்னிரண்டு ஆகும்.


13. திரியோதசி என்றால் பதிமூன்றாம் நாள் திரி என்றால் மூன்று + தஸ் என்றால் பத்து ஆகப் பதிமூன்று.


14. சதுர்த்தசி என்றால் பதினான்காம் நாள் சதுர் (சதுரம்) என்றால் நான்கு அத்தோடு தஸ் என்ற பத்து சேர்த்தால் பதினான்கு என ஆகும்.


சதுர்த்தசிக்கும் அடுத்தது பவுர்ணமி அல்லது அமாவாசை ஆகி விடும். இப்படி நாட்களைக் சுட்டிக் காட்ட வைத்த பெயர்களில் என்ன வேறுபாடு இருக்கிறது? அமாவாசை அல்லது பவுர்ணமிக்குப் பிறகு வரும் எட்டாம் நாளும் ஒன்பதாம் நாளும் கெட்டவை என்பதற்கு ஏதேனும் அறிவியல் பூர்வமான விளக்கம் இருந்தால் கூறுங்கள் என்று கேட்டேன். சகோதரியும் மைத்துனரும் வாயடைத்துப் போயினர். இந்த விளக்கம் கண்டு அவர்கள் மிகத் தெளிவு பெற்றனர்.


நான் மேலும் கூறினேன். அட்சய திரிதியையில் தங்கம் வாங்க அறியாத மக்கள் தங்கக் கடைக்கு ஓடுவதும் அறியாமையே என்றேன். என் சகோதரி மிகவும் ஆர்வமாக இதற்கும் விளக்கம் கூறுங்கள் அண்ணா என்று கேட்டுக் கொண்டாள். க்ஷயம் என்றால் தேய்வு (-க்ஷயரோகம் = எலும்புருக்கு நோய் அக்ஷயம் என்றால் வளர்ச்சி அதாவது வளர்பிறையில் அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் திரிதியை என்று ஏற்கெனவே விளக்கிக் கொண்டோம். அதாவது வளர்பிறையில் மூன்றாம் நாள் இதில் என்ன சிறப்பு இருக்க முடியும்? இது தங்க வியாபாரிகள் சேர்ந்து செய்த விற்பனை உத்தியே ஆகும் என்று விளக்கம் கூறினேன்.


மக்கள் எப்படி அறியாமையில் மூழ்கிப் போயிருக்கிறார்கள் என்று அனைவரும் பரிதாபப்பட்டோம். பிறகு அன்றே மூவரும் சென்று வீட்டு மனையைப் பார்வையிட்டு இடம் பிடித்திருந்ததால் முன் பணம் செலுத்தி பத்திர நகல்களை வாங்கி வந்தோம். அஷ்டமி, நவமி பார்த்துத் தாமதம் செய்திருந்தால் இந்த வாய்ப்பு கிட்டுமா என்று மகிழ்ந்தோம்."


"A Good One For Superstitious People" என்ற தலைப்பில் இன்று எனக்கு வந்த மின் அஞசல் செய்தி இது.


அதோடு மேலும் சில செய்திகளும் சொல்லப்பட்டிருந்தன.


“செய்யும் வேலைகளின் வெற்றி தன்னை நம்பி இல்லை, கடவுளை நம்பித்தான் இருக்கிறது“ என்று நினைத்து உருவாக்கப்பட்ட “நல்ல நேரம், கெட்ட நேரம்“ என்ற பயங்கள் உலகெங்கும் மனிதனை ஆட்டிப்படைக்கின்றன. (நம் நாட்டில் கொஞ்சம் அதிகம்).


இந்திய அளவில் உள்ள பஞ்சாங்கங்களின்படி ஒரு மாதத்திற்கு எவ்வளவு கெட்ட நேரம் வருகிறது என்று கணக்கிட்டுப்பார்ப்போம்.


வாரத்தில் செவ்வாய், சனி நல்ல காரியம் துவங்கக்கூடாது (10 நாட்கள்).


மாதத்தின் அஷ்டமி, நவமி நன்மைக்கு உகந்தது அல்ல (4 நாட்கள்).


பாட்டிமுகம் நாளில் நல்லது செய்வது நல்லதில்லை (2 நாட்கள்).


ஒரு மாதத்தில் வரும் ராகு காலம், எமகண்டம், குளிகை இவற்றின் கூட்டுத்தொகை (3 முக்கால்) தவிர கௌரி பஞ்சாங்கத்தின் படி நன்மை செய்ய தகாத நாட்கள் 2 நாட்கள்.


ஆக மொத்தத்தில் ஒரு மாதத்தில் 21 முக்கால் நாட்கள் நாம் நல்லது செய்ய பயந்தால் எப்படி உருப்பட...எப்படி முன்னேற...?


என்று தணியும் நம் மக்களிடம் நிரம்பியுள்ள அறியாமையின் மோகம்?"


அஷ்டமி, நவமி பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அதுபற்றி அதிகமாகத் தெரியாது. மேற்கண்ட மின் அஞ்சல் செய்தியைப் படிதுவிட்டு இரண்டு பெண்களிடம் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று கேட்டேன். 'கெட்ட நாட்கள் என சட்டென பதில் சொன்னார்கள். அப்பொழுதுதான் புரிந்தது எல்லா சகோதரிகளும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று. மேற்கண்ட செய்தியை பிரதி எடுத்துக் கொடுத்தேன். முழுமையாகப் படித்தார்கள். பிறகு மீண்டும் கேட்டேன் "அஷ்டமி, நவமி நல்ல நாட்களா, கெட்ட நாட்களா?" என்று. அவர்களால் சட்டென பதில் சொல்ல முடியவில்லை. மௌனமானார்கள். ஆனால் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்பது மட்டும் தெரிந்தது.


அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார். 


PLEASE SPREAD THIS MESSAGE TO ALL