புதன், 31 மே, 2023

ஆன்மா உயிர் உடம்பு !

 *ஆன்மா உயிர் உடம்பு !*


*ஆன்மா உயிர் உடம்பு இவை மூன்றும் இணைந்து வாழ்வதே மனித தேகமாகும்.*


*இவை போன்றே தாவரம்,ஊர்வன,பறப்பன, நடப்பன, அசுரர், தேவர் முதலிய எல்லா உயிர் இனங்களுக்கும் பொதுவான படைப்பு முறையாகும்* 


*எல்லா ஆன்மாக்களின் எல்லா  உயிர்களின்  இவ்வுலக வாழ்க்கை தத்துவமே ஆன்மா உயிர் உடம்பு இணைப்பாகும்* 


*தாவரம் முதல் மனிததேகம் வரை உடம்பை விட்டு ஆன்மா உயிர் பிரிவதால், ஆன்மாக்கள் மீண்டும் மீண்டும் வேறு வேறு உடம்பை  எடுத்துக் கொண்டு வாழ்ந்துதான் ஆகவேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.* 


*ஆன்மா !*


*ஆன்மா இவ்வுலகிற்கு வரும்போது உயிர் உடம்பு இல்லாமல் ஆணவத்தின் துணைக் கொண்டு வந்தது.இங்கு வந்த ஆன்மா உயிர் உடம்பு எடுத்து எடுத்து வாழ்ந்து வாழ்ந்து இறுதியாக மனிததேகம் எடுத்துள்ளது.*


*மனித தேகம் எடுத்த ஆன்மாவிற்கு உயர்ந்த அறிவு வழங்கப் படுகிறது, பேசும் திறன், சிந்திக்கும் திறன், செயல்படும் திறன்,தன்னை அறியும் திறன் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையால் வழங்கப்பட்டு உள்ளன.*


*மனித வாழ்க்கையில் உயர்ந்த அறிவைக் கொண்டு அறம்,பொருள்,இன்பம் வீடூ என்கின்ற நான்கையும் நான்கு காலங்களில் அனுபவித்து  பின்பு பற்று அற்று இறைவனைத் தொடர்பு கொண்டு அருள் பெற வேண்டும் என்பதே மனித வாழ்க்கையின் ஆன்மாக்களின் முடிந்த முடிவாகும்* 


*சமயம் மதங்கள்!*


*இறைவனுடன் தொடர்பு கொண்டு அருள்பெற்று இறைவனுடன்  ஐக்கியமாவதே ஆன்மாவின் இறுதியான வாழ்க்கை என்பதை சமயங்கள் மதங்களைச் சார்ந்த ஆன்மீக அருளாளர்களும் சொல்லியுள்ளார்கள்,அதற்காக ஆலயங்கள், மசூதிகள்,சர்ச்சு போன்ற கட்டிடங்களை தோற்றுவித்து சரியை, கிரியை போன்ற வழிப்பாட்டு முறைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்.சரியை,கிரியை யோகத்தினால் அடையும் லாபம் முக்தி நிலையோடு நின்று விடுகின்றது. அதற்குமேல் சென்று அருள் பூரணத்தை பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் சித்தி நிலையைப் பெற வேண்டும். சமய மதவாதிகளால் மேல் நிலைக்கு செல்ல முடியவில்லைஎன்பதே உண்மையாகும்.*


*முத்தி நிலை பெற்றவர்களுக்கு மீண்டும் பிறப்புண்டு*

*சித்தி நிலை பெற்றவர்களுக்கு மீண்டும் பிறப்பு இல்லை*


*முத்தி என்பது முன்னுறு சாதனம்*

*சித்தி என்பது நிலை சேர்ந்த்து நிலை சேர்ந்த அனுபவம்*

முத்தி சாதனம்,

சித்தி சாத்தியம் என்பார் வள்ளலார்.


*வள்ளலார்.!*


*சமயங்கள் மதங்கள் சார்ந்த கொள்கைகளை வள்ளலார் ஏற்றுக் கொள்ளவில்லை. சாதியும் மதமும் சமயமும் பொய் என்றார். முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றார் கலை உரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும் கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக வேண்டும்  என்று ஆணை யிடுகின்றார்*


*ஆன்மாக்களுக்கும் உயிர்களுக்கும் துன்பம் கொடுக்கும் ஆட்சி அதிகாரங்களை சாடுகின்றார்*


*வள்ளலார் பாடல்!*


கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

*அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க -*


தெருள்நயந்த

நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்றுநினைத்

தெல்லோரும் வாழ்க இசைந்து.!


மேலும்


நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்


கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்


படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் *சுத்தசன் மார்க்கம்*


விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.! 


என்னும் பாடல்கள் மிகவும் முக்கியமானதாகும்


*ஆன்மாக்கள் இவ்வுலகில்  வாழ்வதற்கு மிகவும் துணையாக இருந்த ஆணவம்  உயிர் உடம்பு என்னும் கருவிகளை அழித்துவிட்டு, கழட்டிவிட்டு விட்டு இறைவனிடம் செல்வதற்கு இறைவன் அருள் வழங்கமாட்டார் என்பதை அறிவுள்ளவர்கள் சிந்தித்து யோசிக்க வேண்டும்*


*வாடகை வீடு !


 *ஆன்மாக்கள் உயிர் எடுத்து இவ்வுலகில் குடியிருந்து வாழ்வதற்கு  பஞ்சபூத அணுக்களைக்கொண்டு  மாயையால் கட்டிக்கொடுக்கப்பட்ட உயர்ந்த அழகான "வாடகை வீடுதான் உடம்பாகும்." வாடகை வீட்டை அழித்துவிட்டு இறைவனுடன் செல்ல மாயை  அனுமதி வழங்காது. இறைவனும் அருள் வழங்க சம்மதிக்க மாட்டார். ஆதலால் வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும்.* 


*ஆன்மா அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று வாடகை வீட்டை அருள் என்னும் அழியாத நன்நிதியைக் கொடுத்து சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும்*


*அதன்பின்தான் ஆணவம் மாயை, மாமாயை, பெருமாயை, கன்மம் (கர்மவினை) என்னும் ஐந்து மலங்கள் ஆன்மாவை விட்டு விலகும் இதுவே ஆன்மாவின் தனித்த பூரண வல்லபம் என்பதாகும்*.


*வள்ளலார் பாடல்!*


சாகாத கல்வியே கல்வி ஒன்றே சிவம்தான் என அறிந்தஅறிவே

தகும்அறிவு மலம்ஐந்தும் வென்றவல் லபமே

*தனித்தபூ ரணவல்லபம்*


வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்

விளையவிளை வித்ததொழிலே

மெய்த்தொழில தாகும்இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம்எல்லாம்


மாகாத லுறஎலாம் வல்லசித் தாகிநிறை

வானவர மேஇன்பமாம்

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்

மரபென் றுரைத்தகுருவே


தேகாதி மூன்றும் நான் தருமுன் அருள் செய்தெனைத்

தேற்றிஅருள் செய்தசிவமே

*சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே*

தெய்வநட ராஜபதியே.! 


மேலே கண்ட பாடல் அற்புதமான அழகு தமிழ் பாடல்*


*ஆன்மாவுடன் இறைவன் இனைய வேண்டும்!*


( *இறைவனிடம் அருள் பெற்றுத்தான்  உயிர் உடம்பு உள்ளம் யாவையும் அழிக்காமல் (வேதியல் முறைப்படி) ஒளிமயமாக மாற்றினால் மட்டுமே "கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாறமுடியும்".*)


*(தன்னையே எனக்குத் தந்து அருள் ஒளியால் என்னை வேதித்த என் தனி அன்பே ! திருஅகவல )*


*உயிர்உடம்பு உள்ளம் போன்ற உள் உருப்புக்கள் வெளி உருப்புக்கள் யாவும்,1,வாலணு,2,திரவவணு,3,குருவணு,4,லகுஅணு,5,அணு,6,பரமாணு, 7,விபுஅணு  என்னும் ஏழுவிதமான சாதாரண அசாதாரண அணுக்களைக்கொண்டு தன்னைத்தானே இயங்கும் தன்மையுடன்  கட்டிக்கொடுக்கப்பட்ட அழகான மெய் உடம்புதான் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் வாடகை வீடாகும்.* 


*தனித்தனி அணுக்களாக இருந்த அனைத்து அணுக்களையும் ஒன்றோடு ஒன்றாக இணைத்து, ஆன்மா வாழ்வதற்காக கட்டிக்கொடுத்து,தன்னைத் தானே இயங்கும் அழகான உடம்பாக படைத்துள்ளவர் யார் ? என்பதை தெரிந்து கொண்டால்  உயிரையும் உடம்பையும் அழிக்க மனமோ துணிவோ வருமா சிந்திக்க வேண்டும் ?*


*வீட்டின் உரிமையாளர்!*


*இவ்வுலகை நிர்வாகம் செய்யும் மாயை, மாமாயை, பெருமாயை  என்னும் மூன்று மாயா சத்திகளே வீட்டின் உரிமையாளர்களாகும்.*


*(இதுவே கல்வி, செல்வம், வீரம் அதாவது சரஸ்வதி, லட்சுமி,பார்வதி என்று மூன்று பெண் தெய்வங்களாக படைத்தார்கள்.)*


*ஆன்மா குடியிருந்த வாடகை வீட்டை அழித்துவிட்டு, ஆன்மா இறைவனுடன் செல்வதற்கு வீட்டின் உரிமையாளர் சம்மதிப்பாரா? இறைவன் தான் வாடகை வீட்டிற்கு அருள் வழங்குவாரா என்ற அறிவு சமய மதவாதிகளான தலைவர்களுக்குத் தெரியவில்லை தோன்றவில்லை.* 


*அப்படியும் இறைவன் அருள் வழங்கினால் இறைவன் நேர்மையானவரா ?  என்பதை உற்று நோக்கி சிந்திக்க வேண்டும்*


( சமய மதங்கள் இறைவனையே குற்றவாளிகளாககாட்டும் கொள்கையாகும்)


*சொந்த வீடாக மாற்ற வேண்டும்!*


*ஆன்மா வாழும் வாடகை வீட்டை சொந்த வீடாக மாற்றிக் கொள்ள வேண்டும் ! அதற்குண்டான விலையைக் கொடுத்து  சொந்த வீடாக மாற்றும் வழியைக் கண்டுபிடித்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார்.*


*ஆன்மா வாழ்ந்து கொண்டு இருந்த அழியும் பூத உடம்பை அழியாமை ஆக்கும் வகையைக் கண்டு பிடித்தவர் வள்ளலார்.*


*ஊன் உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் உளவைக் கண்டு பிடித்தவர் வள்ளலார்* 


*வள்ளலார் பாடல்!*


திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே


*திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ*


உருக்கிஅமு தூற்றெடுத்தே *உடம்பு உயிரோடு உளமும்*

*ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அரு ளாயோ*


கருக்கருதாத் தனிவடிவோய் *நின்னை என்னுட் கலந்தே*

*கங்குல் பகல் இன்றி என்றும் களித்திடச் செய் யாயோ*


செருக்கருதா தவர்க்கு அருளும் சித்திபுரத் தரசே

சித்த சிகா மணியே என் திருநடநா யகனே.! 


என்னும் பாடலில் மிகத் தெளிவாக வெளிப்படுத்துகின்றார்.


*எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அமர்ந்து அருள் செங்கோல் ஆட்சி செய்யும் இடத்தை அறியாமை அஞ்ஞானம், என்னும் ஏழு திரைகளால் ஆன்மாவை மறைத்து கொண்டு உள்ளன.*


*திரை மறைப்பை எல்லாம் நீக்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவுருவைத் தொடர்பு கொள்ள வேண்டும்*


*அழியும் வாடகை  உடம்பாகிய ஊன் உடம்பை  அழியாமல் பாதுகாக்க வேண்டுமா னால்,சொந்த வீடாக மாற்ற வேண்டுமானால். அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு  துணைக் கொண்டு அருளைப் பெற்று அருளின் சுத்த உஷ்ணத்தினால் அழிக்காமல் திரைகளை விலக்கிக் கொள்ள வேண்டும்*, 


*ஊன் உடம்பை முழுவதுமாக உருக்கி உயிர், உடம்பு, உளம் யாவையும் ஒளிமயமாக ஆக்கி ஆன்ம உணர்ச்சியை ஆன்ம நெகிழ்ச்சியை ஆன்ம மகிழ்ச்சியான ஆன்ம இன்ப லாபத்தையும்,ஆன்ம பூரண அருள் இன்பத்தையும்  இனைத்து சுத்த பிரணவ ஞான தேகமாக மாற்ற வேண்டும், அதற்கு அருள் தேகம்,ஒளிதேகம்,ஞானதேகம் என்று பெயர்.*


*மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட அசுத்த பூதகாரிய தேகத்தை, சுத்த பூதகாரிய தேகமாக மாற்றி, சுத்த தேகத்தையும்  பின் மாற்று குறையாத சுத்த பசும் பொன்னாகிய சுத்த பிரணவ தேகத்தையும்,மாற்று இவ்வளவு என்று அளவு சொல்ல முடியாத சுத்த பிரணவ ஞான தேகத்தையும் பெற்றால் மட்டுமே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக மாற்றம் அடையமுடியும்.*


*மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட பஞ்சபூத அணுக்கள் அடங்கிய பொருட்களின் கலவையால் கட்டிக்கொடுக்கப்பட்ட வாடகை வீட்டை,விலை மதிப்பில்லா அருள் என்னும் விலை கொடுத்து,ஆன்மா சொந்த வீடாக மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் மாயையின் தடையில்லா சான்று வழங்கப்படும்.மாயையே ஆசீர்வதித்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம்  மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கப்படும்*


*வள்ளலார் பாடல்!*


*சுத்த வடிவும் சுகவடிவாம் ஓங்கார 

நித்த வடிவும் நிறைந்தோங்கு--சித்தெனும் ஓர் 


ஞான வடிவும் இங்கே நான் பெற்றேன் எங்கெங்கும்

தான விளையாட்டு இயற்றத்தான்!* 


*ஆன்மா உயிர் உடம்பு பிரியாமல் இருக்க இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டலரைத் தொடர்பு கொண்டு ஊன உடம்பை  ஒளி உடம்பாகிய அருள் தேகமாக மாற்றி வாழ்வாங்கு வாழ்வதே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும். இதுவே சாகாக்கல்வி கற்கும் முறையாகும்*


*வள்ளலார் பாடல்!* 


இன்புறலாம் எவ்வுலகும் ஏத்திடவாழ்ந் திடலாம்

எல்லாம்செய் வல்லசித்தி இறைமையும்பெற் றிடலாம்


அன்புடையீர் வம்மின்இங்கே சமரசசன் மார்க்கம்

அடைந்திடுமின் *அகவடிவிங் கனகவடி வாகிப்*


பொன்புடை நன் கொளிர் ஒளியே புத்தமுதே ஞான

பூரணமே ஆரணத்தின் பொருள்முடிமேல் பொருளே


வன்புடையார் பெறற்கரிதாம் மணியே சிற் சபையின்

மாமருந்தே என்றுரைமின் தீமையெலாம் தவிர்ந்தே.! 


மேலே கண்ட பாடல்களை ஊன்றி படிக்கவும் அதிலே உண்மைகள் நிறைந்துள்ளது


*வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்கம் மரணத்தை வெல்லும் மார்க்கமாகும்*


தொடரும்...


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

ஞாயிறு, 28 மே, 2023

வடலூர் வந்து நல்ல வரம் பெற்றீர்கள்!

 *வடலூர் வந்தீர்கள் நல்ல வரம் பெற்றீர்கள் !*  


*அருட்பெருஞ்ஜோதி!*

*அருட்பெருஞ்ஜோதி!*

*தனிப்பெருங்கருணை!*

*அருட்பெருஞ்ஜோதி!*


*உலக வரலாற்றில் முதன் முதலாக ஏழைகளின் பசிப்பிணியைப் போக்குவதற்காக 23-05-1867 ஆம் ஆண்டு அதாவது பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாளில் கடலூர் மாவட்டம் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை என்ற பெயரில், உலக மக்களின் நலன் கருதி வள்ளல்பெருமான் அவர்கள்  தருமச்சாலை நிறுவினார்கள்.*


*24-05-2023 அன்று மாதப் பூசம், 25-05-2023 வியாழன் அன்று 157 ஆவது தருமச்சாலை துவங்கிய நாள் ,மூன்றுநாட்கள் திருஅருட்பா இசை நிகழ்ச்சிகள் முன்னிட்டும்.*


 *வடலூரில் எங்கள் திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் குழுக்களின் முக்கிய  நிர்வாகிகள்*


*நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் ஜீவகாருண்ய தயவாளார் உயர்திரு,கந்தசாமி அவர்களின் தலைமையில் திருவாளர் இராமலிங்கம் அவர்கள்,திருவாளர் தனபால் அவர்கள் திருவாளர் வெங்கடாசலம் அவர்கள்,*


*ஈரோடு மாவட்டம் ஜீவகாருண்ய தயவாளர் உயர்திரு போகர் இராசமாணிக்கம் அவர்களின் குழுக்கள்.*


*சேலம் மாவட்டம் ஜீவகாருண்ய தயவாளர் உயர்திரு, சுகுமார் அவர்களின் குழுக்கள்  ஆகிய அனைவரின் ஒத்துழைப்புடன் மற்றும் சன்மார்க்க அன்பர்களின் ஒத்துழைப்புடன்.*


*மூன்று நாட்கள் தொடர்ந்து உயர்தர சிறப்பு அன்னதானம்,மேலும் திருஅருட்பா இசைக் கச்சேரிக்கு வருகைத் தந்த அன்பர்கள் அனைவருக்கும் வெய்யிலுக்கு சுவையான நீரமோர்.ஜிக்கிரிதந்தா குளிர்பானம்,இஞ்சி டீ, காப்பி மற்றும் தயிர்சாதம்,*

*தக்காளிசாதம்,பருப்புசாதம்வழங்கப்பட்டது.*


*வள்ளலார் பாடல்!*


காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எலாம் தருமச்


சாலையிலே ஒருபகலில் தந்த தனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே


மாலையிலே சிறந்த மொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற் 

யதநடறருளே.! 


*மேலே கண்ட பாடலில் தருமச்சாலையின் உண்மையை, அதனால் கிடைக்கும் அருளின் (நன்மையை) தன்மையைப் பற்றி தெளிவான விளக்கத்தை எளிய முறையில் வள்ளல்பெருமான் அவர்கள் வழங்கி உள்ளார்*


*அதுசமயம் வடலூரில் நமது திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாகவும் சன்மார்க்க அன்பர்களின் கூட்டு முயற்சியாலும்,24-05-2023  மாதப்பூசத்தன்றும் 25-05-2023 தருமச்சாலை துவங்கிய நாளை முன்னிட்டும்,திருஅருட்பா இசைவிழாவை முன்னிட்டும் தொடர்ந்து சிறப்பு அன்னதானமும்,*


*நமது திருஅருட்பா ஆராய்ச்சி மைய இல்லத்தில் சன்மார்க்க ஆன்மீக சத்விசாரம் மற்றும் சிறப்பு சொற்பொழிவும் சிறப்பாக நடைபெற்றது.*


*முக்கிய சிறப்பு விருந்தினர்!*


*மலேசிய நாட்டில் அருட் பேரொளி சபை நிறுவனரும், ஆதரவு அற்ற குழந்தைகளின் காப்பாளரும், ஒவ்வொரு வருடமும் சன்மார்க்க சிறப்பு மாநாடு நடத்திக் கொண்டு வருகின்றவரும்,வருகின்ற செப்டம்பர் மாதம் 09-09-2023 to 10-09-2023 வரை   வள்ளலார் 200 வது ஆண்டு திருஅருட்பிரகாச வள்ளலார் வருவிக்க உற்ற நாளை முன்னிட்டு இரண்டுநாள் பிரமாண்ட மாநாடு மலேசியாவில் நடத்துகின்ற ஆன்மநேய அன்புள்ளம் கொண்ட ஜீவகாருண்ய திலகம் "அருள்திரு இந்துபாபா அவர்கள்" நமது இல்லத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்து அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டது மிகவும் சிறப்புடையதாகும்,அவர்களுக்கு நமது மையத்தின் சார்பாக வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியும் தெரிவித்துக் கொள்கிறோம்.*


*அனைவரும்  ஆன்மநேய உரிமையுடன் அன்புடன், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆன்மலாபம் பெற்று சென்றார்கள் என்பதை அக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்* 

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  அருள் பெறும் வரமான நல்ல வரத்தை பெற்றுக் கொண்டு செல்வதற்கு வாருங்கள் வடலூர் பெருவெளிக்கே வந்தால் பெறலாம் நல்ல வரம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வாடிய பயிரைக் கண்ட வள்ளலார்!

 *வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலின் அருளுள்ளமும் வைகாசி பதினொன்றும்....!*


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்…! எனும் அருள்கவியின் வரியை கேள்வியுறாத தமிழ்ச் செவிகளே இருக்க வாய்ப்பில்லை...!




        *''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்…!’'* எனத் தொடங்கும் அருட்பாவின் அடுத்த வரி என்னவென்று தெரியுமா....?


 *“பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்...!''* என்பதே அடுத்த வரியாகும்.


           பசிக் கொடுமையினால்  வீடுதோறும் பிச்சை கேட்டும்,  உணவு கிடைக்காமல் உடல் இளைத்து மெலிந்த ஏழை எளியோரைக் கண்டு தம் உள்ளம் நடுநடுங்கியதாக வள்ளல் பெருமானார் இப்பாடலில் குறிப்பிடுகின்றார்.


        பசிக்கொடுமையினால் அயர்ந்து சோர்ந்த தமிழர்களுக்கு ஏதாவது செய்தாக வேண்டுமென , அத்தூய துறவுள்ளம் துடிதுடித்தது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மையப்பகுதியான அன்றைய தமிழகத்தில் ஆங்கிலேய - அன்னியரின் சுரண்டலாலும் , உணவு பஞ்சத்தாலும் பட்டினி சாவு அதிகரித்திருந்தன. எந்த வகையாலும் ஆதாரம் (ஆகாரம்) இல்லாத ஏழை எளியோர்களுக்குத் தினசரி பேதமின்றி உணவு வழங்க வள்ளல் பெருமானாரின் கருணை உள்ளம் திட்டம் தீட்டியது. அதன் விளைவு ; ஆதரவற்ற ஏழை எளியோர்களுக்குத் தினசரி மதிய - இரவு உணவுகளை வழங்கும் நோக்கத்தோடு சத்திய தருமச்சாலை எனும் அமைப்பை வடலூரில் வள்ளல் பெருமனார் தொடங்கினார்கள். 


       *பிரபவ வருடம் (1867) வைகாசி 11-ஆம் நாள் வியாழக்கிழமை  சத்திய தருமச்சாலையின் தொடக்கவிழா நடைப்பெற்றது.* அன்றயதினம் வள்ளல் பெருமானாரின் தவக்கரத்தால் மூட்டிய அடுப்புத் தீ இன்று வரை அணையாமல் ஏழை எளியோரின் பசித்தீயை அணைத்து வருகின்றது. 


                   சத்திய தருமச்சாலையின் தொடக்க விழாவே புதுமையாய் அமைந்திருந்தது. சத்திய தருமச்சாலையின் செங்கல் கட்டடம் கட்டுவதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி ஒருபுறம் நடைப்பெற்றது; அதேவேளையில் மறுபுறம் தற்காலிகமாக அமைக்கப்பட்ட இடத்தில்  தருமச்சாலை தொடங்கி ஏழையெளியோர்களின் பசிப்பிணியை நீக்கிக்கொண்டிருந்தது.


        ஆம்... , பொதுமக்களின் நலன் காக்கும் தர்மப் பணியின் மனை முகூர்த்தமும் , தர்மக் காரியத்தின் தொடக்க விழாவும் ஒருங்கே ஒரே நாளில் ஒரே பொழுதில் நடந்தேறியது.


           'நன்றே செய்க; இன்றே செய்க' - என்ற தமிழ் மரபில் வந்த வள்ளல் பெருமானாரின் செயல் வீரத்தைப் பாராட்டுவதா ? அல்லது ஏழை எளியோரின் பசிப்பிணியை உடனடியாக நீக்க துடித்த கருணையுள்ளத்தைக் கண்டு வியப்பதா? . 


              *'பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்*' - என்று  வள்ளல் பெருமானார் எழுதியதுடன் மட்டும் நின்றுவிடாமல் , ஏழை எளியவர்களின் பசிப்பணியை நீக்க வழிவகையையும் செய்தார்கள்.


         தருமச்சாலையின் தொடக்க விழா நடைபெற்ற பொழுதே, அவ்விடத்தின் அருகே கிணறு , குளம் முதலிய நீர் நிலைகளும் தோண்டப்பட்டன. சத்திய தருமச்சாலையின் முதல் நாள் அன்னதானத்திற்கு , மாட்டு வண்டிகள் மூன்றில் அரிசி மூட்டைகளும் , ஒரு வண்டியில் காய்கனிகளும் வந்திறங்கியதைக் கூ. துரைசாமி ஐயா எழுதிய கடிதத்தால் அறிய முடிகின்றது.  தருமச்சாலையின் தொடக்க விழா நாளில் மட்டும் சுமார் மூவாயிரம் பேர் சாப்பிட்டதாக மு.அப்பாசாமி ஐயா எழுதிய கடிதத்தால் அறியமுடிகின்றது.


            இருபத்தொன்றாம் நூற்றாண்டின் இன்றைய சூழலில் கூட, ஆங்காங்காகே தேனீர் கடைகளில் தனிக் குவளை கலச்சாரம் தலைவிரித்தாடுகின்றது . ஆனால் , இன்றளவிலிருந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே அனைத்துச் சாதியினரையும் ஒன்றாக அமர வைத்துச் சமபந்தி சாப்பாடு போட்டு, சமூக நீதிக்கு வள்ளல் பெருமானார் வித்திட்டார்கள். 


              தருமச்சாலையின் தொடக்க விழாவில் பெருமானார் எழுதிய 'ஜீவகாருண்ய ஒழுக்கம்' எனும் உரைநடை நூலின் சில பகுதிகள் வாசித்து விளக்கி உரைக்கப்பட்டன.  


              *''ஜீவகாருணியத்தின் முக்கிய லட்சியமாவது எது எனில்; எந்த வகையாலும்       ஆதாரமில்லாத ஏழைகளுக்கு உண்டாகின்ற பசி என்கின்ற பெரிய ஆபத்தை நிவர்த்தி செய்கின்றதே முக்கிய லட்சியம் என்று அறிய வேண்டும்...''*


*' பசி என்கின்ற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாராத்தால் அவிக்கின்றதுதான் சீவகாருணியம்...'*


என்பன போன்ற பகுதிகள் தருமச்சாலையின் தொடக்க விழாவில் விவரிக்கப்பட்டன..


            தருமச்சாலையின் நோக்கம் குறித்து  ஓர் அறிக்கையும் பெருமானார்  அன்றையதினம் வெளியிட்டார்கள். அதன் நிறைவில் , *''ஜீவ தயையுடைய புண்ணியர்கள் தாங்கள் தங்களால் கூடியவரையில் பொருள் முதலிய உதவி செய்து , அதனால் வரும் லாபத்தை பாகஞ் செய்து கொள்ள வேண்டும்..!''* என்று  கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.


                வடலூரில் தருமச்சாலையை ஒட்டி நிலம் வைத்திருந்த சுமார் நாற்பது பேர் ஒன்றுகூடி, எண்பது காணி நிலத்தை இனமாக எழுதி பத்திரம் செய்து கொடுத்தனர்.


      1867- வைகாசி 11- இல் தொடங்கிய சத்திய தருமச்சாலை இன்றுவரை தொய்வின்றி , தடைபடாது - இடைவிடாது ஏழைகளுக்கு உணவு வழங்கி வருகின்றது.


       இக்கட்டுரையின்  தொடக்கத்தில் குறிப்பிட்ட;  *”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்...” என்ற பாடலின், இரண்டாம் வரியின் செயல் வடிவமே தருமச்சாலையாய் மலர்ந்த்து. 'பசியினால் இளைத்தே வீடுதோற் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்' என்று கவிஞராய்ப் படைப்பிலக்கியவாதியாய் எழுதியதோடு மட்டும் அல்லாமல், ஏழைகளின் பசிப் பிணியை நீக்க தீர்வையும் கண்டார்கள்.*


           *''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்...!''* எனத் தொடங்கும்  பாடலின் மூன்றாம் அடி…. என்னவென்று தெரியுமா?


      *' நீடிய பிணியால் வருந்துகின்றோர்; என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்...!''*- என்பதே அப்பாடலின் மூன்றாம் அடி ஆகும்.


       அன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்களில் பெரும்பாலானோர் நோய்களால் , பிணிகளால் துன்பப்பட்டு வருத்தப்படுவதைக் கண்டு வள்ளல் பெருமானாரின் கருணை உள்ளம் துடிதுடித்ததாம். அதன் விளைவாகச் சத்தியத் தருமச்சாலையின் கிளைச்சாலையாக வைத்தியச் சாலையைப் பெருமானார் தொடங்கினார்கள்.


        வாழையடி வாழையாகத் தமிழ்ச் சித்தர்களின் வழியில் வந்த வள்ளல் பெருமானார், தருமச்சாலையின் கிளைச் சாலையான வைத்தியச் சாலையில் சித்த மருத்துவத்தை பொதுமக்களுக்கு வழங்கினார்கள். தருமச்சாலையானது பசிப்பணியை நீக்கியதோடு;  உடல் நோயை நீக்கும் சித்த மருத்துவமனையாகவும் திகழ்தது.

    

          வள்ளல் பெருமானார் எழுதியுள்ள 485 மூலிகைகள் பற்றிய மூலிகை குண அட்டவணையும், சஞ்சீவி மூலிகைகள் பற்றிய குறிப்பும், மருத்துவக் குறிப்புகளும் பெருமானாருக்கு இருந்த சித்த மருத்துவ ஞானத்தைப் பறைசாற்றும்.      


         *''நீடிய பிணியால் வருந்துகின்றோர்; என் நேர் உறக் கண்டு உளம் துடித்தேன்...!'' - என்று பெருமானார் எழுதியதுடன் மட்டும் நின்றுவிடாமல்,பொது மக்களின் நோயை நீக்க மருத்துவமனையையும் அமைத்துத் தீர்வு கண்டார்கள்.*


       ''வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்'' எனும் அருட்பாவின் *நான்காம் அடி* பற்றி இனி சிந்திப்போமே...!  


       *''ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்சு இளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்!''* என்பதே அப் பாடலின் நிறைவான அடி ஆகும்.    


       தமிழக மக்கள் ஏழைகளாய் வாழ்வதைக் கண்டு வள்ளல் பெருமானாரிரின் மனம் வருந்தியதை, இவ் வரிகளால் நாம் புரிந்துகொள்ளமுடிகின்றது. தமிழர்களின் வறுமைக்குக் காரணம் என்னவென்று அத்தூய உள்ளம் ஆராயத்தொடங்கியது. மக்களின் வறுமை ஒழிய வழிவகை செய்தாக வேண்டுமென, அவ் அருள் உள்ளம் திட்டம் தீட்டத் தொடங்கியது. மக்களின் பசிப்பிணிக்கும், வறுமைக்கும், நோய்க்கும் மக்களின் அறியாமையே அடிப்படைக் காரணம் என பெருமானார் எண்ணினார்கள். மக்களின் அறியாமையைக் கல்வியால்தான் நீக்க முடியும் என முடிவுசெய்தார்கள். 


            அதன் விளைவாகச் சத்தியத் தருமச்சாலையானது பொதுமக்களின் வயிற்றுப் பசியை நீக்கியதோடு  மக்களின் அறியாமையை நீக்கி அறிவுப் பசிக்கும் தீர்வு கண்டது. தருமச்சாலையின் அடுத்த கிளைச் சாலையாகச் சன்மார்க்கப் போதினி (1867) எனும் சாஸ்திரசாலை உருவானது. 


        சன்மார்க்கப் போதினியில் சிறுவர் முதல் முதியோர் வரை அனைத்து வயதினர்க்கும் பொதுக்கல்வி கற்பிக்கப்பட்டது.  இப் பாடச்சாலையில் தமிழ், ஆரியம், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளும்  கற்பிக்கப்பட்டன. இங்கு தினசரி காலை மாலை இரு வேளையும் ஐந்தைந்து நாழிகை நேரம் திருக்குறள் சொல்லிக் கொடுக்கப்பட்டது. 


       இப் பாடச் சாலையையொட்டி பின் (1872) சமரச வேத பாடசாலை என்றொரு சன்மார்க்க உயர் பாடசாலையும் உருவானது. இதில் பதினைந்து வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் சன்மார்க்க உயர்கல்வி கற்பிக்கப்பட்டது.  இதில் படிப்பவர்களின் பயிற்சிக்கும் அவரவர்களின் குடும்பத்திற்குத் தக்கப்படி மாதந்தோறும் பொருளுதவியாகக் கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.. 


     மேலும், தருமச்சாலையிலிருந்து *சன்மார்க்க விவேக விருத்தி”* எனும் இதழும் வெளிவந்தது. வள்ளல் பெருமானார் தலைமையில் பரங்கிப்பேட்டை காதர் சகாயு உள்ளிட்ட 49 அன்பர்கள்,  இப் பத்திரிக்கை மாதந்தோறும் வெளிவருவதற்காகப் பொருளுதவி செய்தனர். 


        சத்தியத் தருமச்சாலையானது பொது மக்களின் பசிப்பிணியை நீக்கியதுடன், அறிவுப் பசியையும் நீக்கியது. 


                இவ்வாறாகச் சத்தியத் தருமச்சாலையைச் சார்ந்து வைத்தியச் சாலை, சாஸ்திர சாலை, உபகார சாலை, விருத்தி சாலை, உபாசனா சாலை, யோக சாலை, விவகார சாலை  என ஏழு கிளைச் சாலைகளும் செயல்பட்டன. 


               தருமச்சாலை பொதுமக்களுக்கு தினசரி உணவு வழங்கியதுடன் நோயாளிகளுக்கு மருத்துவத்தையும் வழங்கியது. அது மட்டுமின்றி *தருமச்சாலையில் தினசரி திருக்குறள் சொல்லிக்கொடுக்கப்பட்டு தனிமனித ஒழுக்கத்தை வளர்த்தது.*

மேலும், சிறுவர் முதல் முதியோர் வரை அனைவருக்கும் மும்மொழியில் பாடம் கற்பிக்கப்பட்டது. தருமச்சாலையானது வள்ளல் பெருமானார் காலத்தில் சோறு வழங்குவதோடு மட்டுமில்லாமல் அறிவுசால் பல்கலைக் கழகம் போலவும் விளங்கியது.!.


    ஓரறிவுடைய பயிர் வாடுவதைக் கண்டு வாடிய வள்ளல் பெருமானாரின் கருணையுள்ளமானது, அன்றையத் தமிழர்களின் அவல நிலையைக் கண்டும் வாடியது. அவ்வாறு வாடியதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவ் அவலத்தை நீக்கவும் திட்டம் தீட்டி செயல் வடிவம் கொடுத்தது.  



சத்தியத் தர்மச்சாலை வள்ளல் பெருமனாரைப் பொறுத்தவரை தவச்சாலையாகவும் திகழ்ந்தது...... என்பது உங்களுக்குத் தெரியுமா....?..!


★பொதுவாக துறவிகள் - முனிவர்கள் - சித்தர்கள் தவம் செய்வதற்காக ; மக்கள் நடமாட்டமில்லாத மலை குகைக்கோ - காடுகளுக்கோ செல்வார்கள்...


★ஆனால், மிகப்பெரிய ஞானத் துறவியாக வள்ளலார் இருந்த பொழுதிலும்..... தவம் செய்வதற்காக ..... மக்களை விட்டுவிட்டு எங்கும் செல்லவில்லை..


★ஏழைகளின் வயிற்றுப் பசிக்கு உணவும் ; ஞானப் பசிக்கு அறிவு கற்பித்தலும் ;  நோய்க்கு சித்த மருத்துவமும் வழங்கி  மக்கள் தொண்டு செய்தார்கள்...


★இவ்வாறாக... வள்ளலார் தினசரி பகல் நேரம் முழுவதும் தர்மச்சாலையில் மக்கள் தொண்டாற்றினார்கள்..


★தர்மச்சாலையில் வள்ளலார் இரவு 12 -மணி முதல் 3 -மணி வரை மட்டுமே உறங்கினார்கள். (சித்திவளாகத்தில் வள்ளலார் இருந்த பொழுது இரவில் ஒரு மணி நேரம் மட்டுமே உறங்கினார்கள்)


★இரவில் மீதி இருந்த நேரம் எல்லாம்  ... வள்ளல் பெருமனார் தவம் புரிந்தார்கள்.. 


★வள்ளல் பெருமனார் செய்த தவம் பலித்தது வள்ளலார் சொல்லும் வார்த்தை இதோ....


*காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே!*


*களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங் கனியே!*


*மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்*


*மேவுகின்ற பெரும் பயனாம் விளைவை எலாம்*


*தருமச் சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப் பதியே!*


*சமரச சன்மார்க்க சங்கத் தலை அமர்ந்த நிதியே....!*


★எனும் திருஅருட்பா (4181) பாடலால் நாம் புரிந்து கொள்வன என்ன.... சற்றே சிந்திப்போமே..!


★வள்ளலாரின் தவத்திற்கு இரங்கிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ; ஒரு நாள் காலைப் பொழுதில் தர்மச்சாலையில் எழுந்தருளி அருள் செய்தார்கள்.....


★பல பிறவிகள் கடுந் தவம் செய்து அடையத்தக்க  பெரும் பயனின் விளைவுகளை எல்லாம் இறைவன் வள்ளலாருக்குத் தந்தருளினார்கள்.


★இது போன்ற கருத்தை வள்ளலார் மேலும் சில பாடல்களில் பதிவு செய்துள்ளார்கள்..... அவை வருமாறு..


 " *காலையிலே நின்றன்னைக் கண்டு கொண்டேன்*


*சன்மார்க்கச் சாலையிலே இன்பம் தழைக்கின்றேன்...."* (அருட்பா 3893)


*"...காலையிலே வந்து கருணை அளித்தே*


 *தருமச் சாலையிலே வா என்றான் தான்"* (திருஅருட்பா4038)


மேற்கண்ட திருஅருட்பா வரிகளால் நாம் புரிந்துகொள்வன.....


★தர்மச்சாலை ஏழைகளின் பசியைத் தவிர்க்கும் பணியோடு மட்டும் நின்றுவிடவில்லை..


★தர்மச்சாலையில் வள்ளலார் மிகப்பெரிய கடுந்தவம் புரிந்தார்கள்.


★தர்மச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளலாருக்குக் காட்சியளித்து அருளினார்கள்......


(கருத்துப் பதிவும் பகிர்வும்: அருள்பாவலர் சக்திவேல் .வே..)

திங்கள், 22 மே, 2023

தேடிவந்த திருஅருட்பா !

 *தேடிவந்த திருஅருட்பா !* 


*எங்களைத் தேடிவந்தது திருஅருட்பா, எங்களுக்கு அறிவு விளக்கம் தந்தது திருஅருட்பா,! எங்களை நல்வழிக்கு கொண்டு சென்றது திருஅருட்பா ! எங்களை மேல்நிலைக்கு கொண்டு சென்றது திருஅருட்பா!*


*நாங்கள் இடைவிடாது வணங்கும் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரே !*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் உருவிலே வள்ளல்பெருமானைக் காண்கின்றோம்.*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எங்களுக்கு அறிவித்த தெரிவித்த சுத்த சன்மார்க்க கருத்துக்களை உண்மைகளை 45 ஆண்டுகளாக பிரதிபலன் எதிர்பார்க்காமல், மக்களுக்கு மேடைகள் தோறும்,சத்விசாரமாகவும் நேரிடையாகவும் விளக்கியும் தெரிவித்தும் தெளிவுபடுத்தியும் வருகின்றோம்அதனால் பல்லாயிரம் பேர் நன்மை அடைந்து வருகிறார்கள்.*


*எங்களுக்கு யாருடைய மனதையும் புன்படுத்தும் நோக்கம் அல்ல*


*அவரவர்களின் எண்ணம் சொல் செயல்களுக்குத் தகுந்தவாறுதான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் வழங்குவர் என்பதுதான் உண்மை.*


*வள்ளலார் அகவல் வரிகள்!*


எங்கெங் கிருந்து உயிர் ஏதெது வேண்டினும்

அங்கங்கு இருந்து அருள்  அருட்பெருஞ் ஜோதி!


*எங்கே கருணை இயற்கையில் உள்ளன*

அங்கே விளங்கிய அருட்பெருஞ் சிவமே! 


*சாதியு மதமுஞ் சமயமுங் காணா*

ஆதிய நாதியா மருட்பெருஞ் ஜோதி!


*சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென*

ஆதியி லுணர்த்திய வருட்பெருஞ் ஜோதி!


*என்பது வள்ளலார் அகவல் விளக்கம்*


*நாம் எந்த அளவில் சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றி வருகிறோம் என்பதை,எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கண்காணித்துக் கொண்டே இருப்பார் என்பதே சத்திய உண்மை.*


*வள்ளலார் பாடல்!*


குறித்துரைக்கின்றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்

கோணும் மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்


*வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன்* *எனது

மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்*


*பொறித்த மதம் சமயம் எலாம் பொய்பொய்யே* அவற்றில்

புகுதாதீர் சிவம் ஒன்றே பொருள்எனக் கண்டறிமின்


*செறித்திடு சிற் சபைநடத்தைத் தெரிந்து துதித் திடுமின்*

*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!*


*என்பது வள்ளல்பெருமான் அவர்களின் அருள் வார்த்தையாகும்*


*சிந்திப்போம் திருந்துவோம் செயல்படுவோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம்  ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

ஞாயிறு, 21 மே, 2023

அரசு விழா !

 *அரசு விழா !*


*தமிழக அரசு எடுக்கும் வள்ளலார் 200 விழா இவ்வாண்டு முழுவதும் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை அன்று மாரியம்மன் கோவில் விழாபோல்,  வள்ளலாரின் சிலை ஊர்வலம் மேளம், தாளம், தப்பட்டை, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் கோலாட்டம், குத்தாட்டம், கிரகாட்டம் யாவும் சிறப்பாக நடந்து கொண்டு உள்ளது.* 


*மேலும் சுத்த சன்மார்க்கிகளின் அற்புதமான ஆழமான முற்போக்குத் தனமான கலப்படம் இல்லாத வள்ளலார் அறிவுறுத்திய  சுத்த சன்மார்க்கத்தின் அற்புதமான சிறப்பு  பேச்சு. மேலும் மாலை மரியாதை சிறப்பு விருந்து சிறப்பு விருது மூத்த சுத்த சன்மார்க்க சான்றோர்களுக்கான பாராட்டுக்கள், மேலும் விழாக் குழுவினர்கள, மற்றும் அரசு நிர்வாகிகள் வசம் சிக்கித் தவிக்கும் பணம் படுத்தும்பாடு யாவும் அபாரமாக நடந்து கொண்டு உள்ளது*


*அரசுபணம் அழகாக குற்றம் காணமுடியாத,கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு ரசீதுகள் யாவும் சரியாகப் போடப்படுகிறது அற்புதம் அற்புதமே*


*சன்மார்க்கிகளின் கூட்டம்,பொது மக்களின் கூட்டம் எங்கு பார்த்தாலும் விழாவைக் காண அலை மோதுகிறது,விழாக்களை கண்டு களித்து லட்சக் கணக்கான மக்கள் வடலூரை நோக்கி வந்த வண்ணமாக உள்ளார்கள்.*


*அப்பப்பா பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.*


*சுத்த சன்மார்க்கம், உலகம் முழுவதும் விரைவில் வெளிப்படும் காலம் நெருங்கி விட்டது*


*எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், கண்டு களித்து கண்காணித்துக் கொண்டுதான் உள்ளார்*


*வள்ளலார் புகழ் வாழ்க !*


*சுத்த சன்மார்க்கம் வளர்க  !*


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

செவ்வாய், 16 மே, 2023

வந்தால் பெறலாம் நல்ல வரமே !

 *வந்தால் பெறலாம் நல்ல வரமே !*  


*அருட்பெருஞ்ஜோதி!*

*அருட்பெருஞ்ஜோதி!*

*தனிப்பெருங்கருணை!*

*அருட்பெருஞ்ஜோதி!*


*உலக வரலாற்றில் முதன் முதலாக ஏழைகளின் பசியைப் போக்குவதற்காக 23-05-1867 ஆம் ஆண்டு அதாவது பிரபவ வருடம் வைகாசி மாதம் 11 ஆம் நாளில் கடலூர் மாவட்டம் வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலை என்ற பெயரில், உலக மக்களின் நலன் கருதி வள்ளல்பெருமான் அவர்கள் நிறுவினார்கள்.*


*வருகின்ற 25-05-2023 வியாழன் அன்று 157 ஆவது தருமச்சாலை துவங்கிய நாளை முன்னிட்டு வடலூரிலும், மற்றும் உலகில் உள்ள சன்மார்க்க சங்கங்களிலும்,அன்னதானமும் அருட்பெருஞ்ஜோதி வழிபாடும்  வெகு விமரிசையுடன் சிறந்த முறையில் கொண்டாடப் படுகின்றது.*


*வள்ளலார் பாடல்!*


காலையிலே என்றனக்கே கிடைத்த பெரும் பொருளே

களிப்பே என் கருத்தகத்தே கனிந்தநறுங் கனியே


மேலையிலே இம்மையிலே ஒருமையிலே தவத்தால்

மேவுகின்ற பெரும்பயனாம் விளைவை எலாம் தருமச்


சாலையிலே ஒருபகலில் தந்த தனிப் பதியே

சமரசசன் மார்க்கசங்கத் தலைஅமர்ந்த நிதியே


மாலையிலே சிறந்த மொழி மாலைஅணிந் தாடும்

மாநடத்தென் அரசே என் மாலையும் ஏற் றருளே.! 


*மேலே கண்ட பாடலில் தருமச்சாலையின் உண்மையை, அதனால் கிடைக்கும் அருளின் (நன்மையை) தன்மையைப் பற்றி தெளிவான விளக்கத்தை எளிய முறையில் வள்ளல்பெருமான் அவர்கள் வழங்கி உள்ளார்*


*அதுசமயம் வடலூரில் நமது திருஅருட்பா ஆராய்ச்சி மையத்தின் சார்பாகவும் சன்மார்க்க அன்பர்களின் கூட்டு முயற்சியாலும்,24-05-2023  மாதப்பூசத்தன்றும் 25-05-2023 தருமச்சாலை துவங்கிய நாளை முன்னிட்டும், தொடர்ந்து சிறப்பு அன்னதானமும்,சன்மார்க்க ஆன்மீக சத்விசாரம் மற்றும் சிறப்பு சொற்பொழிவும் நடைபெறுகின்றது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்*


*அனைவரும் ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் கலந்து கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின்  அருள் பெறும் வரமான நல்ல வரத்தை பெற்றுக் கொண்டு வாழ்வாங்கு வழ்வதற்கு வடலூர் வடதிசைக்கு வர வேண்டுமாய் (வரவேற்கின்றோம்) அன்புடன் அழைக்கின்றோம்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்*

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

சனி, 6 மே, 2023

உண்மைக் கடவுள் ஒருவரே !

 *உண்மைக் கடவுள் ஒருவரே !*


*எல்லா உலகத்திற்கும் உண்மைக் கடவுள் ஒருவரே என்ற உண்மை அறிந்தவர் வள்ளலார் ஒருவரே !* 


*அறிந்தது மட்டும் அல்ல,அவரை நேரில் கண்டவர் வள்ளலார் ஒருவரே!* *அவருடைய உண்மையான பெயர்* அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை!

அருட்பெருஞ்ஜோதி!*


*என்னும் மகா மந்திர வாக்கியமாகும்.*


*இந்த மகாவாக்கியத்தை வெளிப்படையாக வெளியிடச் சொன்னவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! என்ற உண்மையை*,


*22-10-1873. ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் புதவாரம்  பகல் 8 மணிக்கு,மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடி கட்டிக்கொண்டு பேருபதேசம் செய்கின்றார் அத்தருணம் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக,ஆண்டவரின் பெயரை வெளியிட்டு இம் மகாவாக்கிய மகாமந்திரமானது எல்லா உலகத்திற்கும் பொதுவான இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் குறிக்கும் மகாவாக்கிய மகாமந்திரமாகும் என்னும் உண்மையை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்*


*ஞானசபை தோற்றுவித்தது !*


*உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில்?*


திருவருட் சத்தியால் 1,தோற்றுவித்தல், 

2,வாழ்வித்தல்,

3,குற்றம் நீக்குவித்தல்,

4,பக்குவம் வருவித்தல்,

5,விளக்கம் செய்வித்தல்,

என்னும் 


*ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவரென்றும்,ஒன்றும் அல்லாதவரென்றும்,சர்வ காருண்யரென்றும்,சர்வ வல்லபரென்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத*


*தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில்,அறிவார் அறியும் வண்ணங்கள்எல்லாமாகி விளங்குகின்றார்.* 


*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்பு செய்து, அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,*


*பல்வேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும்,பலவேறு மதங்களிலும், பல்வேறு மார்க்கங்களிலும்,பலவேறு லட்சியங்களைக் கொண்டு,நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்,வீண்போகின்றோம.*


*ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று,நற்செய்கை உடையவர்களாய்,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,*


*உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ்சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற*


*ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச் சந்நிதானத்திற்கு அடுத்த உத்தரஞான சிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மத்த்தால் இயற்றுவித்து,இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாதநெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருளித் திருவிளையாடல் செய்து அருள்கின்றொம்*


*என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணைக் கடலாராகிய அருமைத். தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும்பிரசித்தப்பட வெளிப்படுத்தி அருட்பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்தருளி,அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்ல  சித்தத் திருக்கோலங் கொண்டு அருளரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளுகின்றோம் என்னும் திருக்குறிப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளியிடுகின்றார்* 


*ஆதலால் எல்லா உலகத்திற்கும்  அருள் வழங்கும் இடமாகவும், இயற்கை உண்மைக் கடவுள் அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் இடமாகவும் வடலூரில் சத்தியஞானசபையை வள்ளல்பெருமான் தோற்றுவித்துள்ளார்.*


*இங்கே அருள் வழங்கும் கடவுள் சாதி சமயம் மதம் சார்ந்த கடவுள்களில் ஒருவர் அல்ல என்பதை எல்லா மக்களும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்*


*எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ,அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக தன்மையும், உதவியும் அருளும் கொடுக்கும்படியான இடம் வடலூர் சத்தியஞானசபையாகும்.இது ஆண்டவர் கட்டளையாகும்.*


*வள்ளலார் பாடல்!*


உலகமெ லாந்தொழ உற்றது எனக்குண்மை ஒண்மைதந்தே


இலக எலாம்படைத்து ஆருயிர் காத்தருள் என்றது என்றும்


கலகமிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்


திலகமெனா நின்றது *உத்தர ஞான சிதம்பரமே.!*(வடலூர்)


*காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது* காலமெல்லாம்


வீணாள் கழிப்பவர்க் கெய்தரிதானது வெஞ்சினத்தால்


கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று


சேணாடர் வாழ்த்துவது *உத்தர ஞான சிதம்பரமே.!*( வடலூர்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

வெள்ளி, 5 மே, 2023

இதுவரையில் எவரும் தேரவில்லை !

 *இதுவரையில் எவரும் தேரவில்லை !* 


*வள்ளலார் உலகிற்கு வகுத்து தந்த பொது நெறியான சுத்த சன்மார்க்க தனிநெறிக் கொள்கைகளை  இதுவரை ஒருவரும் பின் பற்றியதாக தெரியவில்லை.அவரவர் விருப்பம்போல் செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள்.ஆதலால் இதுவரையில் ஒருவரும் தேரவில்லை.* 


*வள்ளலார் காலத்திலும் எவரும் சுத்த சன்மார்க்க கொள்கைகளைப் பின் பற்றவில்லை.இன்று வரையிலும் ஒருவரும் பின் பற்றவில்லை* 


*நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்றார் வள்ளலார்!*


*சன்மார்க்க சங்கத்தின் தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


*வள்ளலாரே சொல்கின்றார்!*


செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்

சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - 


*சுத்தசிவ*

*சன்மார்க்க சங்கத் தலைவனே* நிற்போற்றும்

என்மார்க்கம் நின்மார்க்கமே !.


என்றும் மேலும்!


உலகமெலாம் போற்ற ஒளி வடிவனாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே - திலகன் என


*நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன்* நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.!


*என்றும், சுத்த சன்மார்க்கத்திற்கு தலைவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்றும்.சுத்த சன்மார்க்க சங்கத்தை வழிநடத்தும் பொருப்பை நானே( வள்ளலார்) நடத்துகின்றேன் என்றும் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்*


*ஆனால் நாம் ஒவ்வொருவரும் சன்மார்க்க சங்கத்தை தாமே நடத்துவது போலவும், தாம் இல்லை என்றால் சன்மார்க்க சங்கம் செயல்படாது  என்பது போலவும்,அவரவர் ஆணவத்தின் செயலால், கற்பனையில் வாழ்ந்து செயல்பட்டு கொண்டுள்ளோம் என்பதை நன்கு சிந்தித்து செயல் பெறல் வேண்டும்.மேலும் உண்மை விளக்கம் பெறல் வேண்டும்*


*நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை வள்ளலார் தெளிவாக சொல்லுகின்றார் !*


*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டிராதீர்கள் என்று மிகவும் அழுத்தமாக சொல்லுகின்றார்*  


*நமது ஆன்ம அறிவை விளக்கமின்றி மூடிக்கொண்டிருக்கின்ற அழுத்தமான அசுத்த மாயா திரைகள்,மற்றும் சுத்த மாயாதிரைகள் நீங்க வேண்டும் என்கின்ற நன் முயற்சியுடன் இருங்கள் என்கின்றார்.திரைகள் நீங்கினால்தான் அறிவு விளக்கமும், அருள் விளக்கமும் வெளிப்படும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்*


*அப்படிப்பட்ட அழுத்தமான திரைகள் நீங்க வேண்டும் என இயற்கை உண்மை கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் இடமான நமது சிரநடு ஆன்ம சிற்சபையின் கண்ணே நமது மனத்தை இடைவிடாது தொடர்பு கொண்டு, ஸ்தோத்திரத்தும்,தெய்வத்தை நினைத்தும், நமது குறையை ஊன்றியும் இவ்வண்ணமாக,இருக்கின்ற போதும்,படுக்கின்றபோதும் இடைவிடாது இவ் விசாரத்தோடு,,,ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற நன் முயற்சியுடன் இருந்தால் தெரிய வேண்டியதைத் தெரிந்து கொள்ளலாம் என்கின்றார்*


*மேலே கண்டவாறு வள்ளலார் சொல்லியவாறு இதுவரையில் சன்மார்க்கிகள் யாராவது கடைபிடித்தது உண்டா? உண்மையைத் தெரிந்து கொண்டது உண்டா ? ஆன்மாவைக் கண்டதுண்டா ? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்*


*ஆன்மாவைத் தொடர்பு கொள்வதற்கும்  அருளைப் பெறுதற்கும் எவை எவை தடையாக இருக்கின்றது என அறிந்து அவற்றை எல்லாம் விட்டு விலகவேண்டும் என்கிறார்*


*வள்ளலார் சொல்வதை ஊன்றி கவனிக்க வேண்டும்!*


*சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை.* 


*அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் ? நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன்*


*இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது.*


*ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்?*


*தயவு,தயவு என்னுங் கருணைதான்  தூக்கிவிட்டது என்கிறார், தயவு தானே வராது*


*அந்தத் தயவுக்கு ஒருமை வர வேண்டும். அந்த ஒருமை இருந்தால்தான் தயவு வரும். தயவு வந்தால்தான் பெரிய நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது. அது அந்த ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப்போல் ஒருமையுடனிருங்கள் பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளலாம் என்கிறார்..* 


*ஒருமை என்றால் என்ன ?*


*ஆன்மாக்கள் எல்லாம் ஒரேத் தன்மையுடையது,இயற்கை உண்மை யேக தேசங்கள் என்னும் சகோதரர்களாதலாலும், ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்னும் உண்மையை உணர்ந்து கொள்வதே ஒருமை என்பதாகும்* 


*நாம் அடைய வேண்டுவது முடிவான ஆன்ம லாபமாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் அன்றி வேறில்லை.*


*அருளைப் பெறுவதே சுத்த சன்மார்க்க கொள்கை யாகும்,அருள் பெற்றால் மட்டுமே சுத்ததேகம், பிரணவதேவம்,ஞானதேகம் என்கின்ற மூன்று வகையான தேக மாற்றம் உண்டாகும், அருள் தேகம் என்னும் ஞானதேகம் பெறுவதே,பேரின்ப சித்தி பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாப் பெருவாழ்வாகும்,அதுவே ஆன்ம இன்ப லாபம் என்பதாகும்*


*உண்மை சொல்ல வந்தன்னே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை என்று வள்ளலார் மிகவும் வேதனைப் படுகின்றார்.*


*வள்ளலார் பாடல்!*


சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே


வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்

விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்


செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே

தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்


ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.! 


*என் வார்த்தைகள் யாவும்  உண்மையானது என்கின்றார்*


*மேலும் இத்தருணம் இங்கு உண்டாகும் கூச்சல் முதலியவையும் அடுத்தவர்களுக்குப் பக்குவம் வருவிக்கவும் பாவிகளை விலக்கவும் உண்டாயின.ஆதலால் நாம் எல்லவரும்,இதுவரையில் இருந்தது இனியும் வீண்காலம் கழிக்காமல், இப்போதே விசேஷ நன் முயற்சியுடன் இருந்தால், ஆண்டவர் வருகின்ற போது ஆன்மாவை மறைத்துக் கொண்டிருக்கின்ற திரைகள் யாவும் விலகிவிடும்.திரைகள் நீங்கினவுடனே ஒருவன் பஞ்சகிருத்திய முதலானவையுஞ் செய்வான் (ஐந்தொழில்)*


நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்!


*இப்போதே நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவாய், உண்மை அனுபவமாய் விசாரம் செய்து கொண்டிருங்கள்,அவசியம் இதற்குக் காரணமான தயவு இருக்க வேண்டியது,அந்த தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும்.இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள்*


*இது சத்தியம்,சத்தியம்,சத்தியம் இது ஆண்டவர் கட்டளை*


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கட்டளைபடி வாழ்க்கையில் கடைபிடிப்பவர்களே சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பெறும் தகுதி பெற்றவர்களாவார்கள்.மரணத்தை வெல்லும் தேர்ச்சி பெற்றவர்களாவார்கள்*


*வள்ளலார் பாடல்!*


ஆற்றுவெள்ளம் வருவதன்முன் அணைபோட அறியீர்

*அகங்காரப் பேய்பிடித்தீர்* ஆடுதற்கே அறிவீர்


கூற்றுவருங் கால்அதனுக் கெதுபுரிவீர் ஐயோ

கூற்றுதைத்த சேவடியைப் போற்ற விரும் பீரே


வேற்றுரைத்து வினைபெருக்கி மெலிகின்ற உலகீர்

வீணுலகக் கொடுவழக்கை விட்டுவிட்டு வம்மின்


சாற்றுவக்க எனதுதனித் தந்தைவரு கின்ற

தருணம்இது சத்தியஞ் சிற் சத்தியைச்சார் வதற்கே.! 


*சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள்!*


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!*


*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்.*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.*


*எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!*


*தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்!*


தொடரும்....


எல்லா உயிரும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல் திருஅருட்பா* ஆராய்ச்சி மையம்

*9865939896*