வெள்ளி, 29 செப்டம்பர், 2017

மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் !

மாநாட்டிற்கு வாழ்த்துக்கள் !

வள்ளலார் யார் ?

வள்ளலார் என்ற மனித உருவம் தாங்கி இவ்வுலகிற்கு வந்தவர் தான் அருட்பெருஞ்ஜோதி என்னும் அருள் ஒளியாகும்.

இந்த உண்மையை மனித குலம் அறிந்து கொள்ள வேண்டும்.

மக்களை மிருகங்களாக மாற்றியது எவை என்றால்  இதுவரை  இருந்த ஆன்மீக வரலாறுகள்.

மக்கள் எப்போதும் நல்லவர்கள் ஒன்றும் தெரியாத அப்பாவிகள்.

அவர்களை ஆன்மீகம் என்ற பெயரில் பஞ்சமா பாதகங்களான கள்.காம்ம்..களவு.கொலை பொய் போன்ற தீய செயல்களைச் செய்யத் தூண்டியது தான் பொய்யான.உண்மை அறியாத ஆன்மீகம்...

சாதி.சமயம்.மதம் என்ற பெயரில்  பொய்யான கற்பனைக் கதைகளையும்.அதில் உள்ள பொய்யான கதாப்பாத்திரங்களைத் தெய்வமாக வைத்து .உண்மையான தெய்வங்கள்  என்று நம்ப வைத்து மக்களுக்கு தவறான வழிபாடு முறைகளை காட்டி அறியாதவர்களாக மாற்றி  விட்டார்கள்.

உலகத்தைப் படைத்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சும்மா இருப்பாரா ?   உயர்ந்த அறிவு படைத்த மனிதர்கள் உண்மை அறியாமல் பொய்யைப் பிடித்துக் கொண்டு பொய்யான வழிபாடுகளை பின்பற்றி அழிந்து கொண்டு உள்ளார்கள்.

மனித இனத்தை காப்பாற்றவே வள்ளலார் என்ற உருவம் தாங்கி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இந்த உலகத்திற்கு வந்து உள்ளார்.அவர் வந்து 195 ஆண்டுகள் ஆகின்றன.

வள்ளலார் வருவிக்க உற்ற தினமான அக்டோபர் 5/6 ஆம் நாளை கொண்டாடும் விதமாக. அகில உலக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கமானது் ISO் அண்ணாதுரை அவர்களின் தீவிர முயற்ச்சியால்.சன்மார்க்க அன்பர்களின் துணையோடு சென்னை கலைவாணர் அரங்கில் முதல் மாநாடு நடைபெற உள்ளது.

மாநாடு சிறப்புடன் நடைபெற  எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் புரிய வேண்டி விண்ணப்பம் செய்து வேண்டுகிறேன்.

மாநாட்டிற்கு என் அறிவு சார்ந்த வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பலபேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்போகாத படிவிரைந்தேபுனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீஎன்பிள்ளை ஆதலாலே இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வேறெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்நிறைந்திருள் அகற்றும்ஒளியேநிரள்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்குநீதிநட ராஜபதியே.!....

நடராஜபதிமாலை.ஆறாம் திருமுறை...திருஅருட்பா ..

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.
9865939796.

பொருள் வேண்டுமா ? அருள் வேண்டுமா ?.

பொருள் வேண்டுமா ? அருள் வேண்டுமா ?.

ஆன்மநேய அன்புள்ளங்கள் அனைவருக்கும் வந்தனம்.

இந்த உலகமும் உலகில் உள்ள அனைத்தும்.பொருள்களே !  பொருள் தான் அருளை மறைத்துக் கொண்டு உள்ளது.

பொருளைப் பெற்றாலும் பொருள் மேல் பற்று வைத்தாலும்..பொருளை அனுபவித்தாலும் மரணம் நிச்சயம் என்பது இறைவன் நியதி. இறை சட்டம்.

பொருளை வைத்துக் கொண்டும்.பொருளை அனுபவித்துக் கொண்டும் எவ்வளவு தான் இறை நம்பிக்கையுடன் .தவம்.தியானம். யோகம் வழிபாடு செய்தாலும் பாறைமேல் விதைத்த விதைபோலும்.ஆற்றிலே கரைத்த புளிபோல் தான் வாழ்க்கை அமையும்.

அருள் பெற வேண்டுமானால் பொருளை விட்டு விலகி இடைவிடாது பொது நோக்கத்தோடு  இறைவனைத் தொடர்பு கொள்ள வேண்டும் .

அப்படி இடைவிடாது இறைவனை தொடர்பு கொள்வது என்பது. புறத்தில் உள்ள பொய் தெய்வங்களை அல்ல மெய்யான தெய்வத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.அந்த மெய்யான தெய்வம் எங்கே உள்ளது.? அவரவர் சிரசிலே உள்ளது .அது அகம் என்ற இடத்தின் உள்ளே உள் ஒளியாக (ஆன்மாவாக ) உள்ளது.அவற்றை இடைவிடாது தொடர்பு கொள்ளபவர்களுக்கு பொருள் மீது ஆசை என்னும் இச்சை வராது.  அதைத்தான் அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ  என்கிறார் வள்ளலார்.

பொருள் இச்சை உள்ளவர்களுக்கு பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை .கொலை.பயம் வந்து கொண்டே இருக்கும் இறுதியில் மரணம் என்னும் பிணி வந்து ..  மெய்ப் பொருள் என்னும் ஆன்மாவானது உடம்பை விட்டு வெளியே சென்று விடும்.அதற்குப் பெயர்தான் மரணம் என்பதாகும். மரணத்தை வெல்ல வேண்டுமானால் அருள் மருந்தை பெற்று உடம்பு எல்லாம் செல்லும்படி உண்ண வேண்டும்.

அருள்தான் ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்றும் ஆற்றல் உடையது.

வள்ளலார் அருளை உண்டு மரணத்தை வென்ற வழியைச் சொல்லுகின்றார்..

661. உடற்பிணி யனைத்தையு முயிர்ப்பிணி யனைத்தையு
மடர்ப்பறத் தவிர்த்த வருட்சிவ மருந்தே
662. சித்திக்கு மூலமாஞ் சிவமருந் தெனவுளந்
தித்திக்கு ஞானத் திருவருண் மருந்தே
663. இறந்தவ ரெல்லா மெழுந்திடப் புரியுஞ்
சிறந்தவல் லபமுறு திருவருண் மருந்தே
664. மரணப் பெரும்பிணி வாரா வகைமிகு
கரணப் பெருந்திறல் காட்டிய மருந்தே
665. நரைதிரை மூப்பவை நண்ணா வகைதரும்
உரைதரு பெருஞ்சீ ருடையநன் மருந்தே
666. என்றே யென்னினு மிளமையோ டிருக்க
நன்றே தருமொரு ஞானமா மருந்தே
667. மலப்பிணி தவிர்த்தருள் வலந்தரு கின்றதோர்
நலத்தகை யதுவென நாட்டிய மருந்தே
668. சிற்சபை நடுவே திருநடம்  புரியும்
அற்புத மருந்தெனு மானந்த மருந்தே !

சிற்சபை நடுவே திரை மறைப்பின் உள்ளே இருக்கும்  அற்புத ஆனந்த அருள் மருந்தை உண்டால் மட்டுமே மரணம் என்னும் பெறும் பிணி நீங்கும்.

அருள் பெறுவதற்கு தடையாக இருப்பது தான் பொருள்  என்பதை அறிவால் அறிந்து பொருளை விளக்கினால் மட்டுமே அருள் கிடைக்கும்.

பொருளை ஆதரவு இல்லாத ஏழைகளுக்கு கொடுக்க சொல்வதுதான் ஜீவகாருண்யம் என்பதாகும். இதுதான் உளவு ...

பொருள் உலகம் முழுவதும் நிறைந்து இருப்பதால் அவற்றை விரும்பாமல் வாழ்ந்தேன் என்கிறார் வள்ளலார்.

பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்துநாம் ஒருவர்பால் பலகால்மருவினால் பொருளின் இச்சையால் பலகால் மருவுகின் றான்எனக் கருதிவெருவுவர் எனநான் அஞ்சிஎவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்ஒருவும்அப் பொருளை நினைத்தபோ தெல்லாம் உவட்டினேன் இதுவும்நீ அறிவாய்.!

பொருளை நினைத்தாலே உவட்டினேன் என்கிறார்.வாந்தி வருவதுபோல் உள்ளன என்கிறார்...

நாம் எந்த நிலையில் உள்ளோம் என்பதை சுய பரிசோதனை செய்து கொண்டு அவைகளை கலைந்து வள்ளலார் சொல்லியுள்ள வண்ணம் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே அருளைப் பெறும் வாய்ப்பு உள்ளது.

நான் பொருள் மீது இச்சை இல்லாமல்.பயம் இல்லாமல்.வள்ளலார் காட்டிக்கொடுத்த சுத்த சன்மார்க்கப் பாதையில் பின்பற்றி வாழ்ந்து கொண்டு உள்ளேன்.என்பதை தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருமே என் ஆன்மநேய உறவுகள்.

சிந்திப்போம் செயல் படுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 25 செப்டம்பர், 2017

தலைமைச் சங்கம் எங்கு உள்ளது ?

தலைமைச் சங்கம் எங்கு உள்ளது ?

ஆன்மநேய அன்பு உள்ளங்களுக்கு அன்பான வந்தனம்.

1873.ஆண்டு ஆடி மாதம் 5 ஆம் தேதி அன்று வள்ளலார் வெளியிட்டது.!

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை என்றும்.சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க தருமச்சாலை என்றும்.சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்.பெயர் வழங்குதல் வேண்டும் என்றும் கட்டளை யிட்டுள்ளார்.

வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் தான் தலைமைச் சங்கம்.மற்ற சங்கங்கள் யாவும் கிளைச் சங்கங்களாகும்.

வள்ளலார் தோற்றுவித்த தலைமைச் சங்கம் இப்போது தமிழ்நாடு இந்து அறநிலைய ஆட்சி துறையிடம் உள்ளது.அதை வள்ளலார் தெய்வ நிலையங்கள் என்ற பெயரில் உள்ள  தருமச்சாலை நிர்வாகத்திடம் உள்ளது.அதில் சன்மார்க்கிகள் உறுப்பினராக சேர்ந்து வள்ளலார் கொள்கைப்படி செயல் பட முயற்ச்சி செய்ய வேண்டும்.அப்படி அவர்கள் செயல்பட தவறினால் அதைத் தட்டிக் கேட்டு செயல்பட பாடுபட வேண்டும்.இறைவன் திருவருள் காரியப்படும் போது சன்மார்க்கிகள் பொறுப்பு எடுத்து நிர்வாகம் செய்ய வேண்டும்.அது தான் தலைமைச் சங்கம் என்பதாகும்.

வள்ளலார் தோற்றுவித்த தலைமைச் சங்கத்திற்கு.அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான் தலைவர்..வள்ளல்பெருமான் செயல் தலைவர்.அதனால் தான் நானே சன்மார்க்கம் நடத்துகிறேன் என்று  வள்ளலார் சொல்லுகின்றார்.

வள்ளலார் பாடல்.!.

செத்தவர்கள் எல்லாம் திரும்ப எழுந்துவரச்சித்தம்வைத்துச் செய்கின்ற சித்தியனே - சுத்தசிவசன்மார்க்க சங்கத் தலைவனே நிற்போற்றும்என்மார்க்கம் நின்மார்க்க மே.!

கொள்ளைஎன இன்பம் கொடுத்தாய் நினதுசெல்வப்பிள்ளைஎன எற்குப் பெயரிட்டாய் - தெள்ளமுதம்தந்தாய் சமரசசன் மார்க்கசங்கத் தேவைத்தாய்எந்தாய் கருணை இது.!

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்துவிட்டேன் சுத்தசிவசன்மார்க்க சங்கம் தலைப்பட்டேன் - என்மார்க்கம்நன்மார்க்கம் என்றேவான் நாட்டார் புகழ்கின்றார்மன்மார்க்கத் தாலே மகிழ்ந்து.!

மேலே கண்ட பாடல் பதிவுகளின் படி சன்மார்க்கச. சங்க தலைவர் யார் ? என்பதையும்.செயல் படுத்த வேண்டியவர் யார் என்பதையும். தெளிவுப் படுத்தி உள்ளார்.

இனிமேல் தலைமைச் சங்கம் என்று யாரும் பெயர் வைக்கவோ.உரிமை கொண்டாடவோ கூடாது.

எங்களைக் கேட்டுத்தான் மாநாடு நடத்த வேண்டும்.விழாக்கள் நடத்த வேண்டும் என்ற உரிமையை வள்ளலார் யாருக்கும் கொடுக்கவில்லை.

வாயடங்கி மனம் அடங்கி வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்க நெறிகளை கடைபிடிக்க வேண்டுமேத் தவிர எதிலும் மூக்கை நுழையவிட கூடாது.

தலைமைச் சங்கத் தலைவன் என்று வெளியில் எவரும் சொல்லக் கூடாது.அப்படி தான் தோன்றித்  தனமாக சொன்னால் அவர்களை வள்ளலார் ஓரம் கட்டிவிடுவார்.

தலைமைச் சங்கம் என்பது தருமச்சாலை நிர்வாகம் மட்டுமே.அதன் தலைவர் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் மட்டுமே என்று வள்ளலார் தெளிவாகச் சொல்லி விட்டார்.

அந்த நிர்வாகம் தவரான பாதையில் சென்றால் அவற்றை ஒழுங்குப் படுத்த பாடுபடுவது எல்லா சன்மார்க்க அன்பர்களின் கடமையாகும்...உரிமையாகும்.

இனிமேல் தலைமைச் சங்கம. என்ற பெயர்.தலைவர் என்ற பெயர்  வெளியில்  எங்கும் இருக்க சன்மார்க்கிகள் அனுமதிக்க கூடாது.

 தனிநபர் ஆதிக்கம் சன்மார்க்கத்தில. கிடையாது.தயவு உடையவர்கள் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்பதை அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.வெளியீடு !

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி.வெளியீடு !

வரலாற்று சிறப்புமிக்க அகில உலக சமரச சுத்த சன்மார்க்க முதல் மாநாடு சன்மாரக்க அன்பர்களின் கூட்டு முயற்சியால். சென்னை  கலைவாணர் அரங்கில் அக்டோபர் மாதம் 5/6 ஆம் தேதிகளில் மிகச்சிறப்பான முறையில் நடைபெற உள்ளது.

அகில உலக சமரச சுத்த சன்மார்க்க  சங்க மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நிரல் இன்று இரவு வெளியிடப்படுகிறதுஎன்பதை பெரு மகிழ்ச்சியுன் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதிலே சில சன்மார்க்க அன்பர்கள் அரசியல் சம்பந்தமான விழாபோல் தெரிகிறது என்நினைக்கிறார்கள்.

இந்த மாநாடு முழுக்க முழுக்க வள்ளலார் கொள்கை சம்பந்தமான மாநாடு.

அரசியல் தலைவர்களுக்கும் அரசியல் சம்பந்தமானவர்களுக்கும் வள்ளலார் யார் ? அவர் கொள்கைகள் என்ன என்பதை அவர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பெரு நோக்கத்தோடுதான் அவர்களை அழைத்துள்ளது.மற்றபடி எந்த அரசியல் நோக்கமும் இல்லை என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ் நாட்டில் பிறந்து வாழ்ந்து மரணத்தை வென்று அருள் ஆட்சி நடத்திக் கொண்டு இருக்கும் வள்ளல்பெருமகனார்அவர்கள்

 உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு வாழும் வழியை காட்டிய வள்ளலார் கொள்கைகள் சன்மார்க்கிகள் மட்டுமே தெரிந்து கொண்டால் போதாது. உலகில் உள்ள அனைத்து சாதி சமயங்கள் மதங்கள் அரசியல் சம்பந்தம் உள்ளவர்கள.அனைவருக்கும் சுத்த சன்மார்க்க கொள்கைகளை கொண்டு செல்வது ஒவ்வொரு சன்மார்க்கிகளின் கடமையும் உரிமையும் ஆகும்

வேறு எந்தவிதமான தவறான உள் நோக்கமும் இந்த மாநாட்டுகுழுவிற்கு இல்லை என்பதை உண்மையாக சத்தியமாக தெரிவித்துக் கொள்கிறோம்.

மாநாடு சிறப்புடன் நடைபெற அனைத்து உலக சன்மார்க்க அன்பர்களையும் உதவிகளையும்  செய்து மகிழ்ச்சியுடன் கலந்து கொண்டு சிறப்படைய வேண்டுமாறு தாழ்வணங்கி வருக வருக  வரவேற்கிறோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !.

அன்புடன்
மாநாட்டுக்குழு மற்றும்
ஈரோடு கதிரவேல்
9865939896.
ISO அண்ணாதுரை.
9790787838

வெள்ளி, 22 செப்டம்பர், 2017

அமுதம் உண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் !

அமுதம் உண்டவர்கள் என்றும் வாழ்வார்கள் !

இந்த உலகம் பொருள் நிறைந்த்து.பொருளை அனுபவிக்கின்ற வரை மரணம் வந்து கொண்டேதான் இருக்கும் மீண்டும் பிறப்பு எடுத்து கொண்டேதான் இருக்க வேண்டும். இதுதான் பொருளின் தன்மை.இறைவன் சட்டம்....இந்த சட்டத்தை கிழித்தவர் .கிழிக்க வந்தவர்தான் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

கட்டமும் கழன்றேன் கவலை விட் டொழித்தேன்கலக்கமும் தீர்ந்தனன் பிறவிச்

சட்டமும் கிழித்தேன் தூக்கமும் துறந்தேன்சாவையும் நோவையும் தவிர்ந்தேன்

சிட்டமும் அடைந்தேன் சிற்சபை உடையான்செல்வமெய்ப் பிள்ளைஎன் றொருபேர்ப்

பட்டமும் தரித்தேன் எனக்கிது போதும்பண்ணிய தவம்பலித் ததுவே.!

என்ற பாடல் வாயிலாக தெரியப் படுத்துகின்றார்.

இதுவரை இறைவன் அருளைப் பெற பக்தி மார்க்கத்தில் சென்று  சரியை கிரியை யோகம் ஞானம்.என்னும் வழிகாட்டுதலின் படி செயல்பட்டு  முக்தி நலை பெற நினைத்தார்கள் சில சித்தர்கள் முத்தர்கள்  எல்லாம் கடுமையான பக்தி.தியானம்.தவம்.யோகம்.ஞானம் பெற்று முக்தி நிலை அடைந்தார்கள்.சமாதி அடைந்தார்கள்.பஞ்ச பூதங்களில் கலந்தும் வாழ்ந்து கொண்டும்  உள்ளார்கள்.

ஆனால் அவர்களின் வாழ்க்கை முடிவல்ல...அவர்களின் தகுதி். காலம். அருள் முடிந்த பின்பு மீண்டும் பிறப்பு எடுத்தே  ஆகவேண்டும்.இதுதான் இறை சட்டம்

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் நுமதுவாழ்க்கைஎலாம் வாழ்க்கைஎன மதித்துமயங் காதீர்

மையகத்தே உறுமரண வாதனையைத் தவிர்த்தவாழ்க்கையதே வாழ்க்கைஎன மதித்ததனைப் பெறவே

மெய்அகத்தே விரும்பிஇங்கே வந்திடுமின் எனதுமெய்ப்பொருளாம் தனித்தந்தை இத்தருணந் தனிலே

செய்அகத்தே வளர்ஞான சித்திபுரந் தனிலேசித்தாடல் புரிகின்றார் திண்ணம்இது தானே.!

என்னும் பாடல் வரிகளில் விளக்கமாக சொல்லி உள்ளார்.

உண்மையான கடவுளை நேரில் கண்டவர்கள் இந்த உலகில் ஒருவரும் இல்லை.இறைவனை ஏதோ ஒரு உருவத்தில் வைத்து  நினைத்து  மனம் உருக உள்ளம் உருக உயிர் உருக கண்ணீர் மல்க கசிந்து உருகி வழிபட்டார்கள்.தவம்.தியானம் யோகம்.மூச்சி பயிற்சி போன்ற கலைகளில் ஈடுபட்டார்கள்.இவர்கள் எந்த வழிமுறைகளை பின் பற்றினாலும்.மறைமுகமாக நன்மை செய்பவர். .. ஏக தேச அருளை வழங்குபவர் யார் ?  என்றால் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான்.என்பது அவர்களுக்குத் தெரியாது.....

வள்ளலார் அவற்றை அறிந்து தெரிந்து புரிந்து சொல்லுகின்றார்..

எங்கு எங்கு உயிர் எது எது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருளும் அருட்பெரும்ஜோதி !.

யாரே என்னினும் இரங்குகின்றாரக்குச் சீரே அளிக்குஞ் சிதம்பர சிவமே !

என்பார் வள்ளலார்.இதில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.உண்மையான ஒரே கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான் எல்லாவற்றுக்கும் காரணக் காரியமாக செயல்பட்டுக் கொண்டு இருப்பவராகும்.

 நேரடியாக ஆன்ம அறிவாலே.அருள் அறிவாலே ஆன்மக் கண் கொண்டு. அருட்பெரும்ஜோதி ஆண்டவரைக் கண்டவருக்கு மட்டுமே பூரண அருள் கிடைக்கும். மரணத்தை வெல்ல முடியும்.வேறு குறுக்கு வழியில் செல்பவர்களுக்கு ஏதோ சிறிய ஏகதேச அருள் கிடைக்கும்.சத்து.சித்து ஆனந்தம் கிடைக்கும் அதைக் கண்டு பல் இலித்து இறுமாந்து. ஏமாந்து கெட்டுப்போக நேரிடும்.என்கிறார்.

எனவே நாம் காலம் உள்ள போதே பெற வேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும்....

வள்ளலார் வந்து தான் பிறவிச் சட்டத்தை தடுக்க வேண்டி சுத்த சன்மார்க்கத்தை தோற்றுவித்து உள்ளார்.அந்த உண்மையான.நேர்மையான.ஒழுக்கமான புதிய பாதையைப் பின்பற்றி வாழ்ந்தால் மட்டுமே மரணம் இல்லாமல்..மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ முடியும்.

பிறப்பதும் இறப்பதும் இயற்கை என்றார்கள் நம் முன்னோர்கள்.அந்த சட்டத்தை மாற்றி  இறப்பதும் பிறப்பதும் இயற்கை அல்ல அனைத்தும் செயற்கையே என்றார் வள்ளலார்.

இயற்கை என்பது மரணம் அடையாமல் வாழ்வதுதான் .மரணம் அடைந்தால் மீண்டும் பிறப்பு இறப்பு  உண்டு .ஆனால் எந்த எந்த பிறப்பு கிடைக்கும் என்ப்பது என்பது எவருக்கும் தெரியாது.இதுதான் இறை ரகசியம்..

வள்ளலார் பாடல். !

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்றபெரும்பாவம் தன்னைஎண்ணி

நோவதின்று புதிதன்றே என்றும்உள தால்இந்த

நோவை நீக்கிஈவதுமன் றிடைநடிப்போய் நின்னாலே ஆகும்மற்றை இறைவ ராலே

ஆவதொன்றும் இல்லைஎன்றால் அந்தோஇச் சிறியேனால் ஆவதென்னே.!

சாவதையும் பிறப்பதையும் மாற்றும் அதிகாரம் சட்டம் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் மட்டுமே உள்ளன. அந்த சட்டத்தை சட்ட திருத்தம் செய்தவர் வள்ளல்பெருமான்.பிறவிச் சட்டத்தை கிழித்து போட்டுவிட்டு புதிய சட்டத்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி நிறைவேற்றி உள்ளார்.வள்ளலார் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வகுத்து தந்த சட்டதிட்டத்தின்படி வாழ்ந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்ந்து சுத்த சன்மார்க்க சட்டத்தை உலகம் முழுவதும் கொண்டு சென்று நிறைவேற்றுவோம்..

இதுதான் சத்தியவான் வார்த்தை.! வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!

என்ற சத்தியவான் வார்த்தையைப பின்பற்றி சுத்த சன்மாரக்கத்தை கடைபிடித்து வாழ்வோம் வெற்றி பெறுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 20 செப்டம்பர், 2017

சாதி.சமயம்.மதம் அற்ற சமுதாயம் வளர வேண்டும்!

சாதி.சமயம்.மதம் அற்ற சமுதாயம் வளர வேண்டும்!

எதிலும் சுயநலம் இல்லாத பொது நோக்கம் வேண்டும்.

கடவுள் சுய நலம் இல்லாதவர்.கருணையே வடிவமாக உள்ளவர்.அவருடைய குழந்தைகளாகிய நாம் எப்படி வாழ வேண்டும்.அருட் தந்தை வள்ளல்பெருமான் போல் அன்பு தயவு கருணையுடன் வாழ்ந்தால் மட்டுமே இறை அருளைப் பெற முடியம்.

உண்மைக் கடவுளை அறிந்து கொள்ளாமல பொம்மைக் கடவுளை பிடித்துக் கொண்டு அலைவதால் எந்த பயனும் சிறிதளவும்  கிடைக்காது என்பதை மிகத் தெளிவாக வள்ளலார் பதிவு செய்துள்ளார்.

எய்வகைசார்357 மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்எடுத்துரைத்தே எமதுதெய்வம் எமதுதெய்வம் என்றுகைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்கரிபிடித்துக் கலகமிட்ட பெரியரினும் பெரியீர்ஐவகைய பூதவுடம் பழிந்திடில்என் புரிவீர்அழியுடம்பை அழியாமை ஆக்கும்வகை அறியீர்உய்வகைஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்உற்றதிவண் உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே!

மேலும்

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்சேர்கதி பலபல செப்புகின் றாரும்பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்மேல்விளை வறிகிலர் வீண்கழிக் கின்றார்எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந் தீரே.!

கடவுள் ஒருவர் தான் உள்ளார் என்றும் அவர்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்றும்.அவரிடம் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற முடியும்...அந்த அருளினால் . சத்து சித்து ஆனந்தம் பெற்று மரணத்தை வெல்ல முடியும்

இதற்கு சன்மார்க்க பயிற்சி என்பது ஒழுக்கம் மட்டுமே.

ஒழுக்கத்தில் நான்கு வகை பயிற்சிகள் கொடுத்துள்ளார்.

இந்திரிய ஒழுக்கம். .கரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் என்னும் நான்கு  பயிற்சிகளை வள்ளலார் சொல்லி உள்ளார்.

இந்த ஒழுக்கத்தில் இரண்டு ஒழுக்கமான இந்திரிய ஒழுக்கம்.கரண ஒழுக்கம்.என்பதை முழுமையாக கடைபிடித்தால் போதும் .ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம் தானே விளங்கி விடும். அவை விளங்கினால் அருள் என்னும் திரவம் ஆன்மாவில் இருந்து வெளிப்படும்.அருள் வெளிப்பட்டால் ஊன   உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடையும்.

இவைதான் வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கம் பாதையாகும்.இந்த ஒழுக்கத்திற்கு தடையாக இருப்பதுதான்.சாதி.சமய மதங்களின் மேல் வைத்துள்ள பற்றுகளாகும்.இவைகள் இன்று நேற்று அல்ல பல்லாயிரம் ஆண்டுகளாக நம் ஆனமாவை பற்றிக் கொண்டு உள்ளன.என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலேசாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலேஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவேநீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்தநிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமேவீதியிலே அருட்சோதி விளையாடல் புரியமேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.!

சாதி சமய மதங்களின் பற்றை விட்டு வாருங்கள் இறைவனிடம் அருளைப் பெற்று மரணத்தை வெல்லலாம் என உலக மக்களை அழைக்கின்றார் வள்ளலார்.

உயர்களின் மேல் உண்மை அன்பு.உண்மை தயவு.உண்மை இரக்கம்.உண்மையான கருணை மட்டுமே இருந்தால் போதும் என்கிறார் வள்ளலார் .இதற்கு தடையாக இருப்பது சாதி சமயம்.மதம்
 என்பதை விளக்கமாக விளக்குகின்றார்

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள் மதங்கள் மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும்.வருணம் ஆசிரம்ம் முதலிய சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனதில் பற்றா வண்ணம் அருள் செய்தல் வேண்டும்.

சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷ்யமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்வித்த்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்.

எல்லாமாகிய தனிப்பெரும் தலைமை அருட்பெரும்ஜோதி ஆண்டவரே !தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம்!

என்று தினமும் சொல்லிக் கொண்டு உள்ளோம்.அதில் உள்ள சத்திய பொருளை உணர்ந்து .சாதி சமய மதங்களை விட்டு உள்ளோமா  என்பதை சிந்திக்க வேண்டும்.அவைகளை விடாமல் இருக்கின்ற வரை எந்தவித ஆன்ம லாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை.

விடாமல் வைத்து இருந்தவர்கள் எந்தவித லாபத்தையும் பெறவில்லை அடையவில்லை என்று வள்ளல்பெருமான் தெளிவாக விளங்க வைத்துள்ளார் .

நான் எல்லாவகை பற்றுகளையும் விட்டு விட்டேன் .என்னைப்போல் நிங்களும் விட்டுவிட்டீர்களானால் என்னைப் போன்ற பெரிய லாபத்தை அடையலாம் என்பதை தெளிவாக விளக்கமாக  சொல்லி உள்ளார்.

நாம் இதுவரை இருந்த்துபோல் இனியும் வீண்காலம் கழிக்காமல் நான் சொல்வதை கேளுங்கள் என்கிறார்.இது அருட்பெரும்ஜோதி ஆண்டவர் கட்டளை என்கிறார்.

எனவே நாம் இனிமேலாவது ஆண்டவர் கட்டளையை மீறாமல் செயல்படுவோம்.

மரணம் பிணி மூப்பு.பயம் துன்பம் முதலிய அவத்தைகள் எல்லாவற்றையும் தவிர்த்து இத்தேகத்தையே நித்திய தேகமாக்கி எக்காலத்தும் அழியாத பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வோம்.

ஆன்ம லாபத்தைப் பெற்று மரணத்தை வெல்லுவோம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

திங்கள், 18 செப்டம்பர், 2017

மலடு நீக்கும் அதிமதுரம்மலடு நீக்கும் அதிமதுரம்

 குழந்தை பேறின்மை என்பது இன்றைக்கு அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் மாறிவரும் உணவுப்பழக்கம், காலச்சூழ்நிலையும்தான். ஆணோ, பெண்ணோ மலடாக இருந்தால் அவர்களின் வாழ்க்கையே சூனியமாகிவிடுவதைப்போல உணர்கின்றனர். சந்ததியை உருவாக்க என்ன செய்யலாம் என்பது பற்றி சிந்திக்க தொடங்கிவிடுவார்கள். ஆனால் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மூலிகைகளின் மூலம் மலடு நீக்கும் மருத்துவத்தை கண்டறிந்துள்ளனர் சித்தர்கள். அதிமதுரம் எனப்படும் அரிய மூலிகை எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது ஆண், பெண்களின் குழந்தை பேறின்மையை போக்கும் என்றும் சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மருத்துவ குணங்களைத் தெரிந்து கொள்வோம்.அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது. நவீன ஆய்வின் மூலம் இந்த உண்மை வெளியாகியுள்ளது.மலடு நீங்கும்

அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

அதிமதுரத்தினால் பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை இரண்டு முதல் மூன்று மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

பிரசவத்திற்கு முந்தைய உதிரப்போக்கு

அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை குணமடையச்செய்யலாம்.

தாய்ப்பால் பெருகும்

போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.

மலச்சிக்கல் நீங்கும்

சிறுநீரக கல்லினை நீக்கும் மருந்தாக அதிமதுரம் திகழ்கிறது.

இது சிறுநீர் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும் உதவும்.

அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

தொண்டைக் கட்டு இருமல் சளி

அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு இரண்டு சிட்டிகை எடுத்து தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும். அதிமதுரம் லேகியம் சாப்பிட்டால் வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

ஆஸ்துமா குணமடையும்

அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

வழுக்கை நீங்கி முடி வளரும்

அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.

அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.

அன்புடன் ஆன்மநேயன்ஈரோடு கதிர்வேல்
9865939896.

சுத்த சன்மார்க்கம் என்பது என்ன !

சுத்த சன்மார்க்கம் என்பது என்ன !

வள்ளலார் சிறு வயதில் இருந்தே உண்மையான கடவுளைத் தேடினார் .

சமய மதங்களில் பற்று வைக்கவில்லை.சமய மதங்களில் சொல்லிய காட்டிய தெய்வங்களின் பெயரில் நிறைய பாடல்களை எழுதினார்.வணங்கினார். மிகுந்த ஒழுக்கத்தை கடைபிடித்தார்.ஒவ்வொரு நாளும் அறிவு விளக்கமும்.ஆன்ம விளக்கமும் அருள் விளக்கமும் கூடிக் கொண்டே இருந்தன.

சமய மதங்களில் சொல்லி உள்ள கடவுள்கள் யாவும் தத்துவங்களேத் தவிர உண்மையான கடவுள்கள் அல்ல என்பதை அறிந்நார்.

மேலும் இரவு பகலாக உண்ணாமல் உறங்காமல் உண்மைக் கடவுள்த் தேடிக் கொண்டே இருந்தார்.அந்த காலக்கட்டத்தில் இறைவன் அசரீரியாக உண்மையான வழிகளைக் காட்டினார் வெளிப்படையாகச் சொன்னார்.

இராமலிங்கம் நீ என்னைக் காண வேண்டுமானால்.மரணத்தை. வென்றால் மட்டுமே என்னைக் காண முடியும் என்ற உண்மை செய்தியை இறைவன் வெளிப்படுத்தினார்.அதற்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று இறைவனிடம் கேட்கின்றார்.

இரண்டு வழிகள் உள்ளன.ஒன்று ஜீவ காருண்யம் என்னும் ஏழைகளின் பசியைப் போக்குவது.மற்றொன்று சத்து விசாரம் என்பதாகும் அதாவது இடைவிடாது மனத்தை சிற்சபையின் கண் தொடர்பு கொள்ள வேண்டும் என்றும் இரண்டு வழிகளைக் காட்டினார்.இவை சத்தியவான் வார்த்தை என்பதை உணர்ந்த வள்ளலார் அவற்றை சிரமேற் கொண்டு செயல்பட்டார்.

முதலில் ஜீவகாருண்ய பணியைத் தொடங்கினார்.உலகில்  உள்ள ஜீவர்களின் பசிப்பிணியைப் போக்க வேண்டும் என்ற இறைவன் கட்டளையை நிறைவேற்றினார்.

வள்ளலார் பதிவு செய்து பாடல் !

என்பாட்டுக் கெண்ணாத தெண்ணி இசைத்தேன்என்தன்பாட்டைச் சத்தியமாத் தான்புனைந்தான் - முன்பாட்டுக்காலையிலே வந்து கருணைஅளித் தேதருமச்சாலையிலே வாஎன்றான் தான்.

மேலே கண்ட பாடலின்படி சத்திய தருமச்சாலையைத் தோற்றுவிக்கின்றார்.
அதற்க்காக வடலூர் மக்களிடம் 80.காணி நிலம்(இடம்) பெற்று  பசித்த ஏழைகளின் பசிப்பிணியைப் போக்குவதற்கு..1867.ஆம் ஆண்டு வைகாசி மாதம் 11.ஆம் தேதி அன்று.சத்திய தருமச்சாலையை நிறுவினார்.அவை அன்றிலிருந்து இன்றுவரை அணையா அடுப்பாக  பசிப்பிணியை சுட்டு எரிக்கும் நெருப்பாக  எரிந்து கொண்டு பசிப்பிணியை இடைவிடாது அகற்றிக் கொண்டு உள்ளது.

இறைவனிடம் அருளைப் பெற இறைவன் அமர்ந்து ஆட்சி செய்து கொண்டு இருக்கும் அருள் கோட்டையின் கதவைத் திறந்து உள்ளே செல்ல அருள் என்னும் சாவியைப் பெறவேண்டும்  என்ற வாக்கு மூலத்தின் படி தருமச்சாலையைத் தோற்றுவித்து.பசிப்பிணியைப் போக்கி  வள்ளலார் அருள் என்னும் சாவியைப் பெற்றார்.

சத்விசாரம் என்பது!

இறைவனிடம் அன்பைப் பெறுவது.

கோட்டையின் சாவியைப் பெற்றார் .கோட்டைக்குள் செல்ல வேண்டுமானால் இறைவனிடம் இடைவிடாது அன்பு கொண்டு காதலிக்க வேண்டும்.காதல் என்ற அன்பு முதிர்ந்து ஆன்மாவை பரமான்மா அணைத்து அனுபவிக்க வேண்டும்.அந்த தருணத்தில் அன்பு அருள் ஆனந்தம் பெறுகும்் அந்த சுத்த உஷ்ணம் கிடைத்தால் மட்டுமே கதவு திறக்கும் ் அந்த சுத்த உஷ்ணத்தினால்.மூடிக்கிடந்த  மடல் போன்ற மூலை கொஞ்சம் கொஞ்சமாக .. மலர்ந்து விரிந்து காட்சித் தரும்.அது தருணம்  உள் ஒளியான ஆன்மா மலர்ச்சி அடைந்து.நெகிழ்ச்சி அடைந்து.இரக்கம்.தயவு.கருணைக் கொண்டு.அன்பு நிறைந்து விரியும் பொழுது ஊற்றுபோல் அமுதம் சுரந்து திரவம் போல் வெளியே வரும்.இதற்குப் பெயர்தான் அருள் சுகம் என்பதாகும்.

உள் ஒளி ஓங்கிட உயிர் ஒளி விளங்கிட வெள் ஒளி காட்டிய மெய் அருட் கனலே என்பார் வள்ளலார்.

மேலும்

அருள் அமுதம் அளித்தனை அருள் நிலை ஏற்றினை
அருள் அறிவு அளித்தனை அருட்பெரும்ஜோதி!
என்பார் வள்ளலார்.

முழுமையாக அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் தொடர்பு வைத்து உறவு கொள்ளும் போது.அந்த  இன்பத்தால் அந்த அருள் சுகத்தால் இன்பம் பொங்கி ததும்பி  முழுமை அடைகின்ற போதுதான் அருள் சுரக்கும். அந்த இன்பத்தின் வாயிலாகத்தான் அருள் பெற வேண்டும் பின்பு இறைவன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெற்றால் தான் உண்மையான இறைவனைக் காண முடியும்.இவைதான் சத்விசாரம் என்பதாகும்.

இந்த இரண்டு வழிகளையும் இறைவன் ஆணைப்படி முழுமையாக கடைபிடித்தார் வள்ளல் பெருமான்.

கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்டது. கண்டார் களித்தார் கலந்து கொண்டார்.
உண்மையான இறைவன் யார் ? என்பதை உலக மக்களுக்குத் தெரியப் படுத்தினார்

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவேஇத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே..!

காட்டைஎலாம் கடந்துவிட்டேன் நாட்டைஅடைந் துனதுகடிநகர்ப்பொன் மதிற்காட்சி கண்குளிரக் கண்டேன்கோட்டைஎலாம் கொடிநாட்டிக் கோலமிடப் பார்த்தேன்கோயிலின்மேல் வாயிலிலே குறைகளெலாம் தவிர்ந்தேன்சேட்டைஅற்றுக் கருவிஎலாம் என்வசம்நின் றிடவேசித்திஎலாம் பெற்றேன்நான் திருச்சிற்றம் பலமேல்பாட்டைஎலாம் பாடுகின்றேன் இதுதருணம் பதியேபலந்தரும்என் உளந்தனிலே கலந்துநிறைந் தருளே.!

மேலே கண்ட பாடல்களின் வாயிலாக உண்மையான காட்சிகளை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகின்றார்.

ஆண்டவரே.. தன்னுடைய. உண்மையான பெயரை உலக மக்களுக்கு அறிவிக்க வேண்டும் என்று.வள்ளலாருக்கு ஆணையிடுகின்றார்

ஆண்டவர் ஆணையின்படி.வடலூருக்கு அடுத்த  மேட்டுக்குப்பம் என்னும் இடத்தில்..22-10-1873.ஆம் வருடம் சமரச சுத்த சன்மார்க்க...உலகை கட்டி ஆளும்  நீதிக்   கொடியை ஏற்றி.மகா உபதேசம் செய்கின்றார்.அந்த நாளில் தான் ஆண்டவரின் முழுப்பெயரை வெளிப்படுத்துகின்றார்....

அருட்பெரும்ஜோதி
அருட்பெரும்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெரும்ஜோதி.!

என்னும் மகா மந்திரம் என்னும் மகாவாக்கியத்தை வெளிப்படுத்துகின்றார். அந்த அருட்பெரும்ஜோதி என்னும் அருள் பேர் ஒளிதான் உண்மையானக் கடவுள் என்பவராகும்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவரை மேட்டுக்குப்பம் சித்திவளாக திருமாளிகைக்கு வருகை புரிய வைத்தவர் தான் வள்ளலார்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலாருக்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் ஒளி தேகத்தை கொடுத்து தன் வசமாக இணைத்துக் கொண்டார்.

வள்ளலார் பாடல் !

தன்னைவிடத் தலைமைஒரு தகவினும்இங் கியலாத்தனித்தலைமைப் பெரும்பதியே தருணதயா நிதியேபொன்னடிஎன் சிரத்திருக்கப் புரிந்தபரம் பொருளேபுத்தமுதம் எனக்களித்த புண்ணியனே நீதான்என்னைவிட மாட்டாய்நான் உன்னைவிட மாட்டேன்இருவரும்ஒன் றாகிஇங்கே இருக்கின்றோம் இதுதான்நின்னருளே அறிந்ததெனில் செயுஞ்செய்கை அனைத்தும்நின்செயலோ என்செயலோ நிகழ்த்திடுக நீயே.!

என்றும் மேலும்.

என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனதுபேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமேமின்சாரும் இடைமடவாய் என்மொழிநின் தனக்கேவெளியாகும் இரண்டரைநா
 ழிகைகடந்த போதே.!
 
என்று அருட்பெரும்ஜோதி ஆண்டவர் தன் உடம்பிலே கலந்த நேரத்தையும் நாளையும் குறிப்பிட்டு .ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் சொல்லிவிட்டுதான் இறைவனுடன் கலந்து உள்ளார் .

வள்ளலார் இறைவனுடன் கலந்த காலம்.

30-1-1874.ஆம் நாள் (தமிழ் ஸ்ரீமுக வருடம் தை மாதம் 19 நாள்) வெள்ளிக்கிழமை.அன்று முத்தேக சித்திப் பெற்றார்.

எந்த சத்தியாலும்.மற்றும் தீய சத்தியாலும் தன்னை அழிக்க முடியாது என்பதையும் பதிவு செய்துள்ளார் .அந்த பாடல் !

காற்றாலே புவியாலே ககனமத னாலேகனலாலே புனலாலே கதிராதி யாலேகூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலேகோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலேவேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கேஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!

உலக மக்கள் அனைவரும் வள்ளலார் காட்டிய உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டு.இரக்கத்தோடும்.உருக்கத்தோடும்.நெகிழ்ச்சியோடும்.மகிழ்ச்சியோடும் அன்பைக் கொடுத்து அன்பைப் பெற்று.அருளை அனுபவித்து ஆன்ம இன்ப லாபத்தை அடைந்து.மரணத்தை வென்று பேரின்ப லாபத்தைப் பெற்று என்றும் அழியத பேரின்ப சித்திப் பெரு வாழ்க்கையில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


விரிக்கில் பெருகும்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

சனி, 16 செப்டம்பர், 2017

சென்னை தீபம் அறக்கட்டளை அன்னதானம்!

சென்னை தீபம் அறக்கட்டளை அன்னதானம்!

5&6.-10-2017 அன்று  வள்ளலார் வருவிக்க உற்ற தினத்தை முன்னிட்டு  அகில உலக சமரச சுத்த சன்மார்க்க முதல் மாநாடு *சென்னை கலைவாணர் அரங்கில்*  மிகவும் சிறப்பாக நடை பெற உள்ளது.

லட்ச கணக்கான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகின்றது

இரண்டு நாள் மாநாட்டிலும் இடைவிடாது அன்னதான்  நடைபெற உள்ளது.

சென்னை வேளச்சேரி தீபம் அறக்கட்டளை பசிப் பிணியை போக்கும் ஜீவ காருண்ய  அன்னதானப் பொருப்பை ஏற்று உள்ளது.

அன்னதானத்திற்கு உதவும் கரங்கள் .வாரி வழங்கும் வள்ளல்கள் யாவரும் தீபம் அறக்கட்டளையின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டுமாறு ஆன்ம நேய உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம் ஜீவ காருண்யத்திற்கு தேவையான  அரிசி பருப்பு எண்ணெய் மற்றும் மளிகை.சாமான்கள் .காய்கறிகள் போன்ற அனைத்து பொருள்களும் தீபம் அறக்கட்டளை நிரவாகி  ஜீவகாருண்ய செம்மல் திரு பாலகிருஷ்ணன் அய்யா அவர்களை தொடர்பு கொண்டு  அன்புடன் வாரி வழங்க வேணுமாய்
மாநாட்டுக்குழு சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல் என்பார் வள்ளலார்.

மாநாடு சிறப்பாக நடைபெற ஜீவ காருண்யமே சிறந்த்து.என்பதை அனைவரும் அறிந்து பண உதவி .பொருள் உதவி செய்து ஆன்ம லாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள்.

தீபம் அறக்கட்டளை முகவரி.மற்றும் வங்கி கணக்கு எண் போன் கீழே தரப்பட்டு உள்ளது.

நித்ய தீப தருமச்சாலை.
எண் 7/8 புத்தேரிக்கரை தெரு
தண்டீஸ்வரன் கோவில் அருகில்.
வேளச்சேரி
சென்னை 600042.
போன்...044 22442515
செல்..9444073635.

Donations may be send by Crossed Chegue to

Deepam TRUST.
30.Drowpathi Amman koil Street .
Velachery.
Chennai.600042.

 For Bank Transfer.
Bank /

State Bank of India
/IIT Branch
Current A/C No
30265475129
IFSC..SBIN 0001055.

மேலே கண்ட முகவரிக்கு தொடர்பு கொண்டு நன்கொடைகளை மகிழ்ச்சியுடன் வழங்கவும்..

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

தீபம் அறக்கட்டளைக்கு அனுமதி வழங்குவோர்

மாநாட்டுக்குழு
அன்புடன்
 ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
ISO அண்ணாதுரை.
9865939896.
9790787838.

வியாழன், 14 செப்டம்பர், 2017

அருட்பெருஞ்ஜோதி

அருட்பெருஞ்ஜோதி;
             ஆன்ம உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;
            அறிவுருவான கடவுள் அறிவைப் பெறவேண்டுமானால் ;
    நமது இந்திரிய அறிவு,கரண அறிவு,ஜீவஅறிவ,ஆன்மஅறிவு,அருளறிவு இவைகளைக்கடந்து சென்றுதான் மேலான கடவுள் அறிவைப் பெறமுடியும்;
      அப்படி என்றால் "அறிவை அறிவால் அறியும் அறிவானப் பொதுவாகிய கடவுளைப்" பற்றி முழுமையாக அறிந்து தெளிந்தால்தான் நாம் கடவுள் அறிவை தடையன்றிப் பெறுவதற்கு ஏதுவாகும்;
         
            அதற்கு கடவுளைப்பற்றிய விஷயத்தில் தெளிவு வேண்டும் ;
கடவுளின் "நாம,ரூப,சொரூபத்தை "அறிந்து தெரிந்து தெளிந்து ஐயமற்றிருக்கவேண்டும்;
         புறத்தில் கடவுள் பற்றிய உண்மைகளை வெளிப்படுத்தும்  மார்க்கத்தைப் பற்றியிருக்கவேண்டும்;
         
        கடவுள் உண்மையை வெளிப்பட தெரிவிக்காத மார்க்கத்தில் இருந்து நமது காலத்தை விரயம் செய்து ,
  பிறப்பு இறப்பை நீட்டித்து வீண்போகக்கூடாது;
 
      மார்க்கத்தை நடத்துபவரின் தரத்தையும்,
அந்த மார்க்கத்தின் கொள்கைப்படி அவர்  கடவுள் பூரண ஞானத்தைப் பெற்றுக்கொண்டு கடவுள் நிலையை அடைந்தவரா ? அடைந்து காட்டியவரா ?என்பதையும் அறிந்து அவர்காட்டுகின்ற மார்க்கத்தில் இணைந்து  ,அவர் வகுத்த நெறியைக் கடைபிடித்து ,அந்த நெறிப்படி வாழ்ந்து நாமும் அவரைப்போன்றே அருளைப் பெறுவதற்கு முயன்றிடுதல் வேண்டும்;

    அந்த வகையில் பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கடவுளுடைய திருவுளச் சம்மதத்துடன் வருவிக்கவுற்ற திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான்,
      ஆன்மாக்களாகிய நமது வாழ்வு அழிந்துவிடாமல் மரணத்தை தவிர்த்துக்கொண்டு,ஆண்டவருடைய பரிபூரண அருளைப் பெற்றுக்கொண்டு இவ்வுலகிலேயே நிலையான "அனக"அருள் வாழ்க்கை வாழ்ந்திடவேண்டும் என்ற பெருங்கருணையில் ,
     
       எல்லாம் வல்ல ஆண்டவரின் பூரண அருளைப் பெற்றுக்கொண்டு ,
 அவ்வருளே வடிவாய் இருந்து ,
      மரணத்தை தவிர்த்துக்கொண்டு முத்தேகச் சித்தியுடன் ஒளியுடம்பு பெற்றுக்கொண்டு,
 இவ்வுலகை ஐந்துதொழில் செய்யும் வல்லபத்தையும் பெற்றுக்கொண்டு,
     தாம் பெற்ற "அருட்ஜோதி இயற்கை உடம்பைக்"கொண்டு இவ்வுலக உயிர்திரள்கள் எல்லாம் மருவிக்கலந்து நிறைந்து இன்று ஒவ்வொரு ஜீவர்களுக்குள்ளும் இருந்துகொண்டு இவ்வுலகில் "சுத்தசன்மார்க்கத்தால்" அருளாட்சி செய்கின்றார்கள்;

    தாம்பெற்றுக்கொண்ட அந்த பெரும்பேற்றை இவ்வுலகவரும் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற பெருங்கருணையுடன்,
            இவ்வுலகத்திலுள்ள பிரிந்துகிடக்கும் சமய மதமார்க்கங்களை எல்லாவற்றையும் ஒருநிலைப் படுத்தி "சுத்த சன்மார்க்கம் "என்ற ஒருகுடைக்குள் கொண்டுவந்து இவ்வுலகவருக்கு அருளவிளக்கம் செய்து ,அவர்கள் அனைவரும் கடவுள் பூரண அருளைப் பெற்று இன்புற்று வாழ்ந்திட வேண்டும் என்ற பெருநோக்கத்தில் இன்று இவ்வுலகில் சுத்தசன்மார்க்கத்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான் நடத்திக்கொண்டகின்றார்கள்;

      நாமும் இதுவரை வழிதுறை தெரியாமல் வீணில் காலத்தை விரையாமாக்கி மாண்டு மடிந்ததுப் போல் இல்லாமல் , இப்பிறவியல் இல்லாவிட்டாலும் இனி வரும் பிறவியிலாவது கடவுளின் பூரண அருளைப் பெற்று நிலையான அழிவற்ற அருள் வாழ்க்கை வாழ்வதற்கு சுத்தசன்மார்க்கத்தில் இணைவோம் , சுத்தசன்மார்க்க சுகப்பெருநிலையைப் பெறுவோம்;
...........நன்றி;
............வள்ளல் மலரடி வாழ்க வாழ்க;

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

புதன், 13 செப்டம்பர், 2017

கடவுளைக் கண்டார்! கடவுளிடம் கேட்டார் ! கடவுளிடம் பெற்றார்!

கடவுளைக் கண்டார்! கடவுளிடம் கேட்டார் !
கடவுளிடம் பெற்றார்!

 மனிதனுக்கு அறிவு விளங்கிய காலத்தில் இருந்து உண்மையான தாய் .தந்தை.குரு யார் என்பது தெரியாமல்.உபகாரக் கருவிகளையே தாயாகவும்.தந்தையாகவும்.குருவாகவும் நினைத்து வணங்கி வாழ்ந்து கொண்டு வருகிறோம். அனைத்தும் உண்மை அல்ல.எல்லாமே பொய்தான் என்பதை வள்ளலார் உணர்ந்தார் உலகிற்கும் உணர்த்துகின்றார்.

அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும்.தோற்றுவித்தலும்.இயக்குவித்தலும்.அடக்குவித்தலும்.மயக்குவித்தலும்.தெளிவித்தலும் ஆகிய ஐந்து வகையான  தொழில்களை செய்யும் அருள் வல்லப சக்தி சத்தர்களைப் பெற்ற வர்களையும்.படைத்து் காத்து .பக்குவம் வருவித்து கொண்டு தன்னை வெளியே காட்டிக் கொள்ளாமல் .இயங்கி இயக்கிக் கொண்டு இருக்கும் ஒரே உண்மைக் கடவுள் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும்.அவர்தான் உண்மையான தாய்.தந்தை.குரு என்பவராகும்.

இந்த மாபெரும் உண்மையை தெரிந்து கொண்டாலே.அறிவு விளக்கமும் அருள் விளக்கமும் தானே தோன்றும்.

அந்த எல்லாம் வல்ல தனித்தலைமைப் பெரும் பதியாகிய கடவுள் தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்பவராகும்.

அந்த உண்மைக் கடவுளைக் கண்டவர்தான் நமது அருட்பிரகாச வள்ளல்பெருமான்.

அவரைத் தொடர்பு கொண்டு கருணையுடன் வாழ்ந்து .நம் கருணையை கணக்கில் வைத்து.அவர் பெருங்கருணையால் அருள் வழங்கினால் மட்டுமே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பெரு வாழ வாய்ப்பு கிடைக்கும். என்பதை   உண்மையாக அறிந்து உணர்ந்து வாழ்ந்து உரிமையுடன் அருளைக் கேட்டுப் பெற்றவர் தான் வள்ளலார்.

அருளைப் பெருவதற்கு நாம் அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் எவ்வாறு தொடர்பு கொண்டு கேட்க வேண்டும் என்பதை தெளிவாக கீழ்வரும் பாடல்களிலே பதிவு செய்துள்ளார்.

அவற்றைப் படித்து அவற்றில் உள்ளபடி வாழ்க்கையில் கடைபிடித்து வாழந்து அருளைப் பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ வேண்டும்.என்பது தான் வள்ளலாரின் வேண்டுதலாகும்.

வேண்டுதல் பாடலை  பல முறை நன்கு படித்து தெளிவு பெறவும்....

சுத்த சன்மார்க்க வேண்டுதல் !

1. அப்பாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம்நான் அன்புசெயல் வேண்டும்
எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே
எந்தைநின தருட்புகழை இயம்பியிடல் வேண்டும்
செப்பாத மேனிலைமேல் சுத்தசிவ மார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்
தப்பேது நான்செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவநினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.
2. ஐயாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அடிமுடிகண் டெந்நாளும் அனுபவித்தல் வேண்டும்
பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல் வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல் வேண்டும்
எய்யாத279 அருட்சோதி என்கையுறல் வேண்டும்
இறந்தஉயிர் தமைமீட்டும் எழுப்பியிடல் வேண்டும்
நையாத வண்ணம்உயிர் காத்திடுதல் வேண்டும்
நாயகநின் தனைப்பிரியா துறுதலும்வேண் டுவனே.
3. அண்ணாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அழியாத தனிவடிவம் யானடைதல் வேண்டும்
கண்ணார நினைஎங்கும் கணடு் வுவத்தல் வேண்டும்
காணாத காட்சிஎலாம் கண்டுகொளல் வேண்டும்
பண்ணார நின்றனையே பாடியுறல் வேண்டும்
பரமானந் தப்பெருங்கூத் தாடியிடல் வேண்டும்
உண்ணாடி உயிர்கள்உறும் துயர்தவிர்த்தல் வேண்டும்
உனைப்பிரியா துறுகின்ற உறவதுவேண் டுவனே.
4. அத்தாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகங்களித்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும்இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்
எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்
எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.
5. அரைசேநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அருட்பெருஞ்சோ தியைப்பெற்றே அகமகிழ்தல்வேண்டும்
வரைசேர்எவ் வுலகமும்ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்
மடிந்தாரை மீளவும்நான் வருவித்தல் வேண்டும்
புரைசேரும் கொலைநெறியும் புலைநெறியும் சிறிதும்
பொருந்தாமல் எவ்வுயிரும் புரிந்துவத்தல் வேண்டும்
உரைசேர்மெய்த் திருவடிவில்  எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
6. அடிகேள்நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அண்டமெலாம் பிண்டமெலாம் கண்டுகொளல் வேண்டும்
துடிசேர்எவ் வுலகமும்எத் தேவரும்எவ் வுயிரும்
சுத்தசிவ சன்மார்க்கம் பெற்றிடுதல் வேண்டும்
படிவானும் படைத்தல்முதல் ஐந்தொழிலும் ஞானம்
படைத்தல்முதல் ஐந்தொழிலும் நான்புரிதல் வேண்டும்
ஒடியாத திருவடிவில் எந்தாயும் நானும்
ஒன்றாகி எஞ்ஞான்றும் ஓங்குதல்வேண் டுவனே.
7. அம்மாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆணவம்ஆ தியமுழுதும் அறுத்துநிற்றல் வேண்டும்
இம்மாலைத் தத்துவங்கள் எல்லாம்என் வசத்தே
இயங்கிஒரு தீமையும்இல் லாதிருத்தல் வேண்டும்
எம்மான்நான் வேண்டுதல்வேண் டாமையறல் வேண்டும்
ஏகசிவ போகஅனு போகம்உறல் வேண்டும்
தம்மானத் திருவடிவில் எந்தாயும் நானும்
சார்ந்துகலந் தோங்குகின்ற தன்மையும்வேண் டுவனே.
8. அச்சாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்
எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்
எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்
இச்சாதி சமயவிகற் பங்களெலாம் தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்
உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்
உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.
9. அறிவாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஐந்தொழில்நான் புரிந்துலகில் அருள்விளக்கல் வேண்டும்
செறியாத கரணமெலாம் செறித்தடக்கல் வேண்டும்
சித்தாந்த வேதாந்தப் பொதுசிறத்தல் வேண்டும்
எறியாதென் எண்ணமெலாம் இனிதருளல் வேண்டும்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்களித்தல் வேண்டும்
பிறியாதென் னொடுகலந்து நீஇருத்தல் வேண்டும்
பெருமான்நின் தனைப்பாடி ஆடுதல்வேண் டுவனே.
10. அருளாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
அணுத்துணையும் சினங்காமம் அடையாமை வேண்டும்
மருளாய உலகமெலாம் மருள்நீங்கி ஞான
மன்றிடத்தே வள்ளல்உனை வாழ்த்தியிடல் வேண்டும்
இருளாமை உறல்வேண்டும் எனைஅடுத்தார் சுகம்வாய்ந்
திடல்வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும்
பொருளாம்ஓர் திருவடிவில் உடையாயும் நானும்
புணர்ந்துகலந் தொன்றாகிப் பொருந்துதல்வேண் டுவனே.
11. அமலாநான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்
ஆடிநிற்குஞ் சேவடியைப் பாடிநிற்க வேண்டும்
எமனாதித் தடைஎன்றும் எய்தாமை வேண்டும்
எல்லாம்செய் வல்லதிறன் எனக்களித்தல் வேண்டும்
கமையாதி280 அடைந்துயிர்கள் எல்லாம்சன் மார்க்கம்
காதலித்தே திருப்பொதுவைக் களித்தேத்தல் வேண்டும்
விமலாதி உடையஒரு திருவடிவில் யானும்
விமலாநீ யுங்கலந்தே விளங்குதல்வேண் டுவனே. !

வள்ளலார் மேலே கண்ட பாடல்களில் உள்ளபடி அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடம் தொட்பு கொண்டு.சாதி.சமயம்.மதங்களை கடந்து பொது நோக்கத்தோடு எல்லா உயிர்களும் இறைவன் படைப்பு என்தை அறிந்து உயிர் இரக்கத்தோடு கருணையே வடிவமாக வாழ்ந்த்தால் இறைவன் காட்சி கொடுத்தார் அருளை வாரி வாரி வழங்கினார்.மரணம் இல்லாப்பெருவாழ்வு பெற்றார்.கடவுள் நிலை அறிந்து அம்மயமானார்

என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே  என்னும் விண்ணப்பத்தை அருட்பெரும்ஜோதி ஆண்டவரிடம் பணித்துள்ளார்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவரைக் கண்டார் நாம் அனைவரும்  எவ்வாறு காண வேண்டும் அருளைப் பெற வேண்டும் என்பதை கருணை கொண்டு தூய்மையான சுத்த சன்மார்க்க நெறியை இவ்வுலத்திற்கு படைத்துள்ளார்.

நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் இனைந்து வள்ளலார் காட்டிய பாதையில் பயனிப்போம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

செவ்வாய், 12 செப்டம்பர், 2017

உண்மையான கடவுள் யார் ?

உண்மையான கடவுள் யார் ?

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து.பஞ்ச பூதங்களை படைத்த காலத்தில் இருந்து. கிரகங்களைப் படைத்த காலத்தில் இருந்து.அணுக் கூட்டங்களைப் படைத்த காலத்தில் இருந்து. ஆன்மாக்களை அனுப்பிய காலத்தில் இருந்து.ஆன்மாக்கள் வாழ்வதறகு உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்து.

உயிர்கள் இயங்குவதற்கு அணுக்களான  உடம்பை கட்டிக் கொடுத்த காலத்தில் இருந்து.  ஏழு பிறப்புக்கள் கடந்து.இறுதியாக  உயர்ந்த பிறப்பாகிய மனத தேகத்தை கட்டிக் கொடுத்து. மனிதனுக்கு உயர்ந்த அறிவைக் கொடுத்து.அறம்.பொருள்.இன்பம் .வீடு என்ற நான்கையும் நான்கு காலங்களிலும் முழுமையாக அனுபவித்து பின்பு உண்மையான  இறைவன் யார் ? என்பதை அறிந்து .

அவரிடம் தொடர்பு கொண்டு முழுமையான அருளைப் பெற்று மரணத்தை வென்று ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகத்தை பெற்று இறைவனிடம் செல்ல வேண்டும் என்பதுதான் இறைவன் கட்டளை இறைவன் சட்டம்.

இதற்காகவே இறைவன் இவ்வுலகை படைத்துள்ளார்

இறைவன் உண்மையை.அந்த உண்மைக் கடவுளின்  அருள் விளையாட்டை உலகில் தோன்றிய எந்த ஞானிகளும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை.அருளைப் பெற்று மரணத்தை வென்று ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகத்தை பெற்று கடவுளிடம் இன்று வரை ஒருவரும் செல்லவில்லை.

வள்ளலார் மட்டுமே அருள் தேகத்தை பெற்றதோடு அல்லாமல் ஐந்தொழில் செய்யும் வல்லபம் என்னும் பதவியையும் பெற்றுள்ளார்.

காரணம் !

வள்ளலார் மட்டுமே உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி யைக் கண்டு சிக்கென பிடித்து கொண்டவர்.அவரிடம் இருந்து அருளை எவ்வாறு பெறுவது என்ற உளவைக் கண்டு கொண்டவர்.

அந்த உளவை ஆன்மநேய உரிமையோடு மக்களுக்குச் சொன்னவர்.சொல்லியபடி வாழ்ந்து காட்டியவர்.

வாழ்ந்த வரலாற்றை திருஅருட்பாவில் தெளிவாக எளிய தமிழில் எழுதி வைத்துள்ளார்.படித்து பயன் பெறுவது உலக மக்களின் கட்டாயக் கடமையாகும்.

இதுவரையில்  நாம் உண்மையான  கடவுள் யார் ? என்பது தெரியாமல.சாதி்.சமய.மதங்கள் சொல்லிய காட்டிய எழுதி வைத்துள்ள பொய்யான கற்பனைக் கதைகளை.கற்பனை தெய்வங்களை தொடர்பு கொண்டு வீண் காலம் கழித்துக் கொண்டு பொருளையும் வாழ்க்கையும் அழித்துக் கொண்டு உள்ளோம்.இனியும் வீண் காலம் கழிக்காமல்.உயிர்கள் மேல் உண்மை அன்பு.உண்மை தயவு.உண்மை இரக்கம்.உண்மை கருணைக் கொண்டு.உண்மையான ஆண்டவரை உண்மையான தனிப்பெரும்கருணை உள்ள அருட்பெரும்ஜோதி ஆண்டவரை அறிந்து இடைவிடாது  அன்பு வைத்து காதல் கொண்டு கண்ணீர் மல்க தொட்பு  கொள்ள வேண்டும்

 நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பேநிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்புநனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞானநடத்தரசே என்னுரிமை நாயகனே என்றுவனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

வள்ளலார் பாடல்!

அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம்
அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம்
பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம்
போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம்
இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம்
எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம்
தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
2. எல்லாஞ்செய் வல்லதெய்வம் எங்கும்நிறை தெய்வம்
என்னுயிரில் கலந்தெனக்கே இன்பநல்கும் தெய்வம்
நல்லார்க்கு நல்லதெய்வம் நடுவான தெய்வம்
நற்சபையில் ஆடுகின்ற நடராஜத் தெய்வம்
கல்லார்க்குங் கற்றவர்க்குங் களிப்பருளுந் தெய்வம்
காரணமாந் தெய்வம்அருட் பூரணமாந் தெய்வம்
செல்லாத நிலைகளெலாஞ் செல்லுகின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
3. தாயாகித் தந்தையுமாய்த் தாங்குகின்ற தெய்வம்
தன்னைநிகர் இல்லாத தனித்தலைமைத் தெய்வம்
வாயார வாழ்த்துகின்றோர் மனத்தமர்ந்த தெய்வம்
மலரடிஎன் சென்னிமிசை வைத்தபெருந் தெய்வம்
காயாது கனியாகிக் கலந்தினிக்குந் தெய்வம்
கருணைநிதித் தெய்வம்முற்றுங் காட்டுவிக்குந் தெய்வம்
சேயாக எனைவளர்க்குந் தெய்வமகா தெய்வம்
சிற்சபையில் ஆடுகின்ற தெய்வமதே தெய்வம்.
4. என்னிதய கமலத்தே இருந்தருளுந் தெய்வம்
என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
பொன்னடிஎன் சென்னியிலே பொருந்தவைத்த தெய்வம்
பொய்யாத தெய்வம்இடர் செய்யாத தெய்வம்
அன்னியம்அல் லாததெய்வம் அறிவான தெய்வம்
அவ்வறிவுக் கறிவாம்என் அன்பான தெய்வம்
சென்னிலையில் செம்பொருளாய்த் திகழ்கின்ற தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
5. எண்ணியவா விளையாடென் றெனைஅளித்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லசித்தே எனக்கீந்த தெய்வம்
நண்ணியபொன் னம்பலத்தே நடம்புரியுந் தெய்வம்
நானாகித் தானாகி நண்ணுகின்ற தெய்வம்
பண்ணியஎன் பூசையிலே பலித்தபெருந் தெய்வம்
பாடுகின்ற மறைமுடியில் ஆடுகின்ற தெய்வம்
திண்ணியன்என் றெனைஉலகம் செப்பவைத்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
6. இச்சைஎலாம் எனக்களித்தே எனைக்கலந்த தெய்வம்
இறந்தவர்கள் அனைவரையும் எழுப்புகின்ற தெய்வம்
எச்சமயத் தெய்வமுந்தான் எனநிறைந்த தெய்வம்
எல்லாஞ்செய் வல்லதெய்வம் எனதுகுல தெய்வம்
பிச்சகற்றும் பெருந்தெய்வம் சிவகாமி எனும்ஓர்
பெண்கொண்ட தெய்வம்எங்கும் கண்கண்ட தெய்வம்
செச்சைமலர்267 எனவிளங்குந் திருமேனித் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
7. சாகாத வரம்எனக்கே தந்ததனித் தெய்வம்
சன்மார்க்க சபையில்எனைத் தனிக்கவைத்த தெய்வம்
மாகாத லால்எனக்கு வாய்த்தஒரு தெய்வம்
மாதவரா தியர்எல்லாம் வாழ்த்துகின்ற தெய்வம்
ஏகாத நிலைஅதன்மேல் எனைஏற்றும் தெய்வம்
எண்ணுதொறும் என்னுளத்தே இனிக்கின்ற தெய்வம்
தேகாதி உலகமெலாஞ் செயப்பணித்த தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
8. தூண்டாத மணிவிளக்காய்த் துலங்குகின்ற தெய்வம்
துரியதெய்வம் அரியதெய்வம் பெரியபெருந் தெய்வம்
மாண்டாரை எழுப்புகின்ற மருந்தான தெய்வம்
மாணிக்க வல்லியைஓர் வலத்தில்வைத்த தெய்வம்
ஆண்டாரை ஆண்டதெய்வம் அருட்சோதித் தெய்வம்
ஆகமவே தாதிஎலாம் அறிவரிதாந் தெய்வம்
தீண்டாத வெளியில்வளர் தீண்டாத தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
9. எவ்வகைத்தாந் தவஞ்செயினும் எய்தரிதாந் தெய்வம்
எனக்கெளிதிற் கிடைத்தென்மனம் இடங்கொண்ட தெய்வம்
அவ்வகைத்தாந் தெய்வம்அதற் கப்பாலாந் தெய்வம்
அப்பாலும் பெருவெளிக்கே அப்பாலாந் தெய்வம்
ஒவ்வகத்தே ஒளியாகி ஓங்குகின்ற தெய்வம்
ஒன்றான தெய்வம்மிக நன்றான தெய்வம்
செவ்வகைத்தென் றறிஞரெலாஞ் சேர்பெரிய தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம்.
10. சத்தியமாந் தனித்தெய்வம் தடையறியாத் தெய்வம்
சத்திகளால்எல் லாம்விளங்கத் தானோங்கும் தெய்வம்
நித்தியதன் மயமாகி நின்றதெய்வம் எல்லா
நிலைகளுந்தன் அருள்வெளியில் நிலைக்கவைத்த தெய்வம்
பத்திவலைப் படுகின்ற தெய்வம்எனக் கெல்லாப்
பரிசுமளித் தழியாத பதத்தில்வைத்த தெய்வம்
சித்திஎலாந் தருதெய்வம் சித்தாந்தத் தெய்வம்
சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். !

மேலே கண்ட பாடல்களில் அருட்பெரும்ஜோதி ஆண்டவர் யார் என்ற உண்மை விளக்கத்தை  தெளிவாக எளிய தமிழில் பதிவு செய்து உள்ளார் படித்து பயன் பெறுவோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக.!

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

திங்கள், 11 செப்டம்பர், 2017

சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு !

சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு !

அன்புள்ளம் கொண்ட ஆன்ம நேய ஒருப்பாட்டு உரிமை உள்ள சம்பந்திகள் அனைவருக்கும் வந்தனம்.

உலக மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டுவரும் மார்க்கம் வள்ளலார் தோற்றுவித்த  சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற மார்க்கமாகும்.

இந்த மார்க்கத்தின் முக்கிய கொள்கைகள்  கடவுள் ஒருவரே அவரே அருட்பெரும்ஜோதி யர் என்பதாகும்.அடுத்தது ஆன்ம நேய ஒருமைப்பாடு உரிமை என்பதாகும்.இந்த இரண்டு கொள்கையும் தெரிந்து கொண்டால் உலகத்தில் துன்பம்.துயரம்.அச்சம் பயம் இல்லாமல் மக்கள் வாழலாம்.

இந்த உண்மையை மக்கள் தெரிந்து கொண்டால் சாதி.சமயம்.மதம்.அரசியல்.ஆன்மீகம் போன்ற சூதான குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும்.மக்கள் பஞ்சம்.பட்டினி .வறுமை.ஏழ்மை போன்ற கீழ் நிலையில் உள்ளவர்களை மேல் நிலைக்குக் கொண்டுவர முடியும்.அதற்குமேல் மனித வர்க்கத்தின் நிலை உயர்ந்து கொண்டே போகும் இறுதியில் மனிதனின் அறிவு ஆற்றல் உயரந்து இறைவன் அருளைப் பெற்று மரணத்தையே வெல்லும் வழி கிடைக்கும்.

எனவே உலக மனித ஆன்மாக்களின் அறிவை மேம் படுத்தி அருளைப் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்பதற்காகவே இறைவனால் வருவிக்க உற்றவர் தான் வள்ளலார்.

அவர்களின் கொள்கையானது எல்லா உலகத்திற்கும் பொதுவானது. அந்த பொதுவான சுத்த சன்மார்க்க கொள்கையை உலகம் முழுவதும் கொண்டு செல்வதே ஒவ்வொரு சுத்த சன்மாரக்கிகளின் கடமையாகும்.வள்ளலார் வகுத்து தந்த கொள்கையை உலக மக்களுக்கு கொண்டு செல்வதற்காகவே

*தரும்மிகு சென்னையில் உலக சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாடு நடத்த சன்மார்க்க சான்றோர்களால் நிச்சயிக்க பட்டதாகும்* வருகிற ஆண்டில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடத்த திட்டம் வகுக்கப் பட்டுள்ளது.

முதலில் மாநாட்டுக்குழு தலைவராக ஆன்மநேயர் ஈரோடு கதிர்வேல் அவர்களையும்.
மாநாட்டு குழு அமைப்பாளறாக செயல் வீரறாக.பல மாநாடுகளை நடத்திய அனுபவம் வாய்ந்தவராக உள்ள விழுப்புரம் அருள்மாளிகையின் பொருப்பாளர் திரு .அண்ணாமலை பரதேதி அவர்களை ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அடுத்த ஆலோசனை கூட்டத்தில் மாநாட்டு குழு பொருப்பாளர்களை தேர்வு செய்யப்படும் .அதற்குண்டான அறிவிப்பை தேதியிட்டு தமிழகம் முழுவதும் தெரிவிக்கப்படும்.

எனவே அனைத்து சன்மார்க்க சங்கங்களும்.சன்மார்க்க சம்பந்திகளும் ஒன்று சேர்ந்து உலக சுத்த சன்மார்க்க எழுச்சி மாநாட்டை ஒன்று சேர்ந்து செயல்பட்டு உழைத்து உலகம் அறிய வெற்றி காண்போம்

இதுவே தலைசிறந்த ஜீவ காருண்யம்.

அன்புடன் ஆன்ம நேயர்கள் ஈரோடு கதிர்வேல்.
விழுப்புரம் அண்ணாமலைபரதேசி
தொடர்புக்கு
9941884576
9629876011
9865939896.

அருள் என்பதும் விந்துதான்!

அருள் என்பதும் விந்து தான் !

 ஆன்ம நேயம் கொண்ட அனைவருக்கும் வந்தனம்.

நாம் ஆண் பெண் இருபாலரும் இன்பம்  அடைவதற்கு உடல் உறவு கொள்கிறோம். இடைவிடாது உடல் உறவு கொள்ளும் போது அதாவது ஆண் உறுப்பும் பெண் உறுப்பும் அதிகமாக  உறாயுதல்  ஏற்படும்போது அங்கே உஷ்ணம் உண்டாகின்றது. உஷ்ணம் அதிகமாகும் போதுதான் உணர்ச்சி அதிகமாகி சுக்கிலம் என்னும் விந்து வரும்.இது இரு பாலருக்கும் பொருந்தும்.

உடல் உறவு கொள்ளும் போது வரும் உஷ்ணத்திற்கு அசுத்த உஷ்ணம் என்று பெயர்  ஆணுக்கும் பெண்ணுக்கும் அசுத்த உஷ்ணத்தினால் வரும் இன்பம் சிற்றின்பம் சிறிய இன்பம் என்று சொல்வதாகும்.

இந்த இன்பத்தினால் இறுதியில் என்ன கிடைக்கிறது  மரணம் என்னும் பிணி வந்து மாண்டு போகின்றோம்.

சுக்கிலம் என்னும் விந்து எதனால் உண்டாக்கப் படுகின்றது என்றால் நாம் உண்ணும் உணவினால் தான் பலவிதமான வேதியல் முறை மாற்றங்கள் செய்து வீரியம் உள்ள விந்து வாக உற்பத்தியாகின்றன

ஆணிடம் உணர்ச்சி வெளிப்படும்போது ஆண் விந்துவில் ஆகாசம்.பிரகிருதி.ஆன்ம உணர்ச்சி என்ற மூன்று விதமான அணுக்கள் வெளிப்படுகின்றன.

பெண்ணிடம் உணர்ச்சி வெளிப்படும் போது பெண் விந்துவில் பிருதிவி.அப்பு.தேயு.இயமான்ன் என்னும் வாயு  ஆக நான்கும் ஒருமித்துப் பல்லி முட்டைபோல் நான்கு பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் இருக்கும்.

ஆக ஆணின் மூன்று விதமான அணுக்களும் பெண்ணின் நான்கு விதமான அணுக்களும் ஆக ஏழும் உடல் உறவு கொள்ளும்காலத்தில் உணர்ச்சி மூலமாக அசுத்த உஷ்ணத்தினால் ஒன்று சேர்ந்து பெண்ணின் கருவரைக்குச் சென்றால் தான் கரு தரிக்கும்.

இவை உலகியல் காமத்தால் உடல்உறவு இன்பத்தால் கரு  தரித்து உயிரையும் உடம்பையும் படைக்கப் படுகின்றன. இவை தொடர்ச்சியாக உலகியலில் நடை பெற்று வருகின்றது.இவைதான் இன்ப துன்பத்திற்கு காரண காரியமாயும் இறுதியில் மரணம் வருவதற்கும் காரணமாகவும் இருக்கின்றது.இதுதான் மாயையின் சேட்டை என்பதாகும்.
மாயையின் சேட்டையால் உண்டாவது தான் பூத விந்து என்பதாகும்

வள்ளலார் பாடல் !


என்னும் பாடல்கள் வாயிலாக தெளிவுப் படுத்துகின்றார்.

உலகியல் இன்பம் வேண்டாம் !

இன்பம் இரண்டு வகை >>.ஒன்று பொருள் இன்பம்> ஒன்று அருள் இன்பம். இரண்டுமே  விந்துவால் தான் கிடைக்கின்றது.பொருள் விந்துவால் அடையும் இன்பம் எல்லோருக்கும் தெரியும் அருள் என்னும் விந்து பெறுவதுதான்
மனிதனின் இறுதி வாழ்க்கை.

இரண்டு வகையான விந்துவும்  திரவம் தான்> இரண்டுமே  மனித உடம்பிலே உள்ளன.ஒன்று குண்டலினியில் வருவது.ஒன்று ஆன்மாவில் இருந்து வருவது. ஒன்று

தொடரும் ....
சனி, 9 செப்டம்பர், 2017

மாதவிடாய்சுழற்ச்சி !

மாத‌விடாய்ச் சுழ‌ற்சி:!

மாத‌விடாய்ச் சுழ‌ற்சியைக் க‌ட்டுப்ப‌டுத்தும் மேல‌திகாரியாக‌ச் செய‌ற்ப‌டுவ‌து மூளையின் அடித்த‌ள‌ச்சுர‌ப்பி (hypothalamus) எனும் அமைப்பு. அதுவே Gonadotropin releasing hormone (GnRH) என்ற இயக்கநீரை உருவாக்குகிறது. Gonads என்றால் ஆண் பெண் பாலணுக்களை (முட்டை/விந்து) உற்பத்தி செய்யும் உறுப்புக‌ள்.

ஆண்க‌ளில் உள்ள gonad, விந்துக‌ளை உற்பத்தி செய்யும் விந்த‌க‌ம்/விதைப்பை (testes), பெண்க‌ளில் முட்டைகளை உற்பத்தி செய்யும் சூல‌க‌ங்கள் (ovaries). Gonadotropins இந்த‌ப் பால‌ணு உற்ப‌த்தி செய்யும் உறுப்புக‌ளைச் செய‌ற்ப‌ட‌த் தூண்டும் இய‌க்க‌நீர்க‌ள். Gonadotropins - ஜ உருவாக்கி வெளியேற்று என மூளையின் முன் க‌ப‌ச் சுர‌ப்பிக்கு ( anterior pituitary gland ) உத்த‌ர‌வு பிற‌ப்பிப்ப‌தே இந்த GnRH இன் வேலை.

GnRH த‌க‌வ‌ல் கொடுத்த‌வுடன் முன் க‌ப‌ச் சுர‌ப்பி Gonadotropins ஆன முட்டைக் கூட்டைத் தூண்டும் இய‌க்க நீரையும் (Follicle Stimulating Hormone; FSH) லூட்டின் ஊக்கி இய‌க்க நீரையும் (Luteinizing Hormone; LH) உருவாக்கி வெளியேற்றும். இவை இரண்டும் தகவல் சொல்லப்போவது சூலகங்களுக்கு. FSH முட்டைக் கூடு ( follicle; முட்டையும் அதற்கு உத‌வியாக சுற்றி வர இருக்கும் பல செல்க‌ளும்) விருத்திய‌டைய‌த் தூண்டும் இய‌க்க நீர். LH, விருத்திய‌டைய‌த் தொட‌ங்கிய முட்டைக் கூட்டை முதலில் பெண்மை இய‌க்கு நீரைச் சுரக்கவும் ( Estrogen ) பின் முட்டையை வெளியேற்ற‌வும் தூண்டும்.

முட்டை வெளியேறிய‌பின் எஞ்சியுள்ள முட்டைக் கூடு க‌ருமுட்டைப் பை நீர்க்க‌ட்டி (Corpus luteum) என‌ப்ப‌டும். முட்டை வெளியேறி அத‌ன் விதி என்ன என நிச்ச‌ய‌மாகும் வ‌ரையிலும் (க‌ருக்க‌ட்டலா/சாவா), அதைப் பாதுகாப்ப‌த‌ற்காக இந்த Corpus luteum- த்தைத் தொடர்ந்து பெண்மை இய‌க்கு நீரையும், க‌ருப்பை இய‌க்கு நீரையும் (Progesterone) சுர‌க்க‌த்தூண்டுவ‌தும் இந்த LH தான்.

பெண்மை இய‌க்க நீரையும் (Estrogen) க‌ருப்பை இய‌க்கு நீரையும் (Progesterone) அநேக‌மானவ‌ர்க‌ளுக்குத் தெரிந்திருக்கும். இவை ஒவ்வொன்றிலும் பல வகை இருப்பினும் எல்லாவ‌ற்றையும் ஒன்றாக Estrogen என்றும் Progesterone என்றுமே அழைப்ப‌ர். Estrogen பூப்பெய்தும் போது ப‌லோப்பிய‌ன் குழாய்க‌ளின் வ‌ள‌ர்ச்சிக்கு, க‌ருப்பையின், பெண்ணுறுப்பின் வ‌ள‌ர்ச்சிக்கு, மார்ப‌க‌ங்களின் விருத்திக்கு என பெண்ணின் உட‌லில் பல வ‌கைக‌ளில் செய‌ற்ப‌டுகிற‌து.

Progesterone- உம் க‌ருப்பையின் அக உறையின் விருத்திக்கு, அதை க‌ருவிற்கு ஏற்ற இட‌மாக மாற்றுவ‌த‌ற்கு, முட்டை வெளியேற்ற‌ப்ப‌ட்ட பின் முட்டைக்கு போஸாக்கு வ‌ழ‌ங்குவ‌த‌ற்கு, பின் க‌ர்ப்ப‌கால‌த்தில் க‌ருப்பையின் நிலையைத் த‌க்க‌வைப்ப‌த‌ற்கென‌ப் பல செய‌ல்க‌ளில் ஈடுப‌டுகின்ற‌து.

கடைசியாக மேலிட‌த்திலிருந்து உத்த‌ர‌வு வ‌ந்து Estrogen உம் progesterone உம் போதுமான‌ள‌வு உற்ப‌த்தி செய்தாயிற்று எனும் க‌ட்ட‌த்தில் இவ்விரு இய‌க்க நீர்களும் முன் க‌ப‌ச் சுர‌ப்பிக்கும் மூளையின் அடித்த‌ள‌ச் சுர‌ப்பிக்கும் அவ‌ர்க‌ளின் இய‌க்க‌நீர் உற்பத்திக‌ளை நிறுத்துமாறு த‌க‌வ‌ல் கொடுக்கும். அத‌னால் முழுச்செய‌ற்பாடும் மிகுந்த க‌ட்டுப்பாட்டுட‌ன் ந‌டைபெறும்.

சுருக்க‌மாக, மாதவிடாய்ச் சுழற்சியில் GnRH முன் க‌ப‌ச் சுர‌ப்பிக்குத் த‌க‌வ‌ல் சொல்ல, முன் க‌ப‌ச் சுர‌ப்பி FSH- ஜ‌யும் LH- ஜ‌யும் உருவாக்கும். இவையிர‌ண்டும் சூல‌க‌ங்க‌ளுக்குத் த‌க‌வ‌ல் சொல்ல, சூல‌க‌ங்க‌ள் Estrogen-ஜ‌யும் Progesterone-ஜ‌யும் உருவாக்கும். இவையிர‌ண்டும் க‌ருப்பையின் அக உறையின் வ‌ள‌ர்ச்சியையும் விருத்தியையும் க‌ட்டுப்ப‌டுத்தும்.

கருப்பையின் அக உறை உதிர‌த் தொட‌ங்கும் நாளை (The first day of periods), மாத‌விடாய்ச் சுழ‌ற்சியின் தொட‌க்க நாளாக வைப்போம். தொட‌க்க‌த்தில் பெண்மை இய‌க்க நீரும் க‌ருப்பை இய‌க்க நீரும் மிக‌க் குறைவான அள‌வுக‌ளிலே காண‌ப்ப‌டும். பின் பெண்மை இய‌க்க நீரின் அளவு ப‌டிப் ப‌டியாக‌க் கூடி கிட்ட‌த்த‌ட்ட 12 ஆவ‌து நாள் உச்ச நிலையை அடைந்து, பின் தீடீரென்று கொஞ்ச‌ம் குறைந்து க‌டைசி 12 நாள்க‌ளும் ஓர‌ள‌வு கூடிய அள‌வில் இருக்கும்.

க‌ருப்பை இய‌க்க நீர் முட்டை சூல‌கத்திலிருந்து வெளியேரும் வரை மிக‌க் குறைந்தள‌வில் இருந்து, முட்டை வெளியேறிய பின் மிக‌க் கூடுத‌லான அள‌வில் corpus luteum- ஆல் சுர‌க்க‌ப்ப‌டும். FSH , LH இரண்டும் கூட குறைந்த அள‌வில் தொட‌ங்கி முட்டை வெளியேற முன் உச்ச நிலையை அடையும் (இவ‌ற்றின் உச்ச நிலையே முட்டை வெளியேற்றத்தைத் தூண்டும்). பின் திரும்ப‌வும் இவ‌ற்றின் அள‌வு குறைந்து விடும்.

சுருக்க‌மாக, பெண்மை இய‌க்க நீரினள‌வு தீடிரென‌க் குறைத‌லே LH உச்ச‌ நிலையை அடைய‌த் தூண்டும். LH இன் உச்ச நிலை சூலகத்திலிருந்து முட்டை வெளியேற்ற‌த்தைத் தூண்டும்.

மாத‌விடாய்ச் சுழ‌ற்சியின் தொட‌க்க‌த்தில் விருத்திய‌டையாத முட்டைக‌ளில் கிட்ட‌த்த‌ட்ட 20 முட்டைக‌ள் FSH, LH ஆகிய இய‌க்க நீர்க‌ளின் தூண்ட‌லால் கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக விருத்திய‌டைய‌த் தொட‌ங்கும். முட்டைக‌ள் வளர வளர முட்டைக‌ளைச் சுற்றியுள்ள செல்க‌ளும் (அவ‌ர்க‌ளுக்கு granulosa cells என்று பெய‌ர்) பெருக‌த் தொட‌ங்கும்.

FSH, LH -இன் அள‌வுக‌ள் கூடத் தொட‌ங்க இந்த 20 முட்டைக‌ளில் அநேக‌மாக ஒன்றின் வ‌ள‌ர்ச்சி மிக அதிக‌ள‌வில் இருக்கும். அத‌னால் அதையே விருத்திய‌டைய விட்டு ம‌ற்றைய முட்டைக‌ள் விருத்திய‌டைவ‌தை நிறுத்தி விடும். FSH, LH இன் அள‌வுக‌ள் கூடிக் கொண்டு சென்று உச்ச நிலையை அடைய, கிட்ட‌த்த‌ட்ட 14 ஆம் நாளில் விருத்திய‌டைந்த முட்டைக் கூடு வீங்கி, வெடித்து முட்டை வெளியேறும்.

முட்டைக்கூட்டிலிருந்து முட்டை வெளியேறியதும் மிச்சமிருப்பது கருமுட்டைப் பை நீர்க்கட்டி (corpus luteum). இது முட்டை வெளியேறியது LH-ஆல் தூண்டப்பட்டு, கருப்பையின் அக உறையை விருத்தியாக்கவும் கருப்பையை முட்டைக்கு ஏற்றவாறு வைத்திருக்கவும் கருப்பை இயக்க நீரை (progesterone) அடுத்த 14 நாட்களுக்குச் சுரக்கும்.

சூலகத்தை விட்டு வெளியேறிய முட்டை பலோப்பியன் குழாயில் பயணித்து கருப்பைக்கு வரும். இந்நிலையில் அம்முட்டை ஒரு விந்தையும் சந்தித்து கருக்கட்டல் இடம்பெறாவிட்டால் அழிவதைத் தவிர வேறு வழியில்லை.
[09/09, 08:21] Arulnagalingam Erode: கருப்பையின் அக உறையில் நடக்கும் மாற்றங்கள்

கருக்கட்டல் நடந்தால் கரு, அடுத்த 40 வாரங்களுக்கு இருக்க விருத்தியாகப் போகும் வீடு இதுவே. கருக்கட்டல் நடைபெறாவிடில் கருவுக்காக மெருகூட்டிய அனைத்தையும் உதிர்ப்பதே மாதவிடாயாக வெளியேறுகிறது. மாதா மாதம் இந்தத் திசுவில் நடக்கும் மாற்ற‌ங்களை மூன்று கட்டங்களாகப் பிரிக்கலாம்.
திசு வளரும் கட்டம் (The Proliferative phase)
முதல் நான்கு நாட்களில் கருப்பையின் அக உறையின் மேற்பாகம் உதிர்ந்ததும், அடுத்த கிட்டத்தட்ட 10/11 நாட்களுக்கு இந்தக் கட்டம் இருக்கும். படிப்படியாக அதிகரிக்கும் பெண்மை இயக்க நீரின் தூண்டலால், இந்த‌த் திசுவிலுள்ள செல்கள் எண்ணிக்கையில் பெருகி, முதலில் உதிர்ந்தளவு திசு திரும்பவும் புதிதாக உருவாக்கப்படும்.
இக்கட்டம் முடிவுறும் நிலையில் பெண்மை இயக்க நீரின் சுரப்பும் உச்ச நிலையை அடைந்து பின் திடீரென்று குறைவதால் LH, FSH இயக்க நீர்களின் சுரப்பு உச்சக் கட்டத்தை அடைய, திசு வளர்ந்து முடியும் கட்டத்தில் சூலகத்தில் முட்டையும் வெளியேற்றப்படும்.
திசு விருத்தியடைந்து, சிறப்புப் பணிகளைப் பெற்று, கரு ஊன்றுவதற்குத் அவசியமான பலவற்றைச் சுரக்கும் கட்டம் (The Secretory phase):
இக்கட்டத்தில் (கிட்டத்த்ட்ட இரண்டு வாரங்கள்) பெண்மை இயக்க நீருடன் கருப்பை இயக்க நீரும் சேர்ந்து, போன கட்டத்தில் வளர்ந்த திசுவை மெருகூட்டும் வேலைகள் நடக்கும்.
திசுவிலுள்ள பல வகைச் செல்கள் தேவையான வெவ்வேறு சிறப்புப் பணிகளை ஏற்க, சில சுரப்பிகள் முதிர்ந்து கரு இலகுவாக வந்து அக உறையில் ஊன்றுவதற்கான பல புரதங்களைச் சுரக்கும். இக்கட்டத்தின் இறுதியில் கருப்பையின் அக உறை கரு வந்து தங்குவதற்கான மாளிகை ஆக மாறி விடும்.
கருத்தரிக்காவிட்டால் உதிரும் மாதவிலக்குக் கட்டம் (The Menstrual Phase): இந்நிலையில் முட்டை வெளியேறியதும் விடுபட்ட கருமுட்டைப் பை நீர்க்கட்டி (corpus luteum, இதுவே கருப்பை இயக்க நீரைச் சுரந்து கொண்டிருக்கிறது) கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக் கொண்டிருக்கிறது.
கருப்பையை நோக்கிப் பயணித்திக் கொண்டிருக்கும் முட்டை கருக்கட்டப்பட்டால், கரு இன்னொரு இயக்க நீரான chorionic gonadotropin- ஐச் சுரக்க, இவ்வியக்கநீர் corpus luteum -க்கு "அழிய வேண்டாம், நான் settle பண்ணும் வரையும் தொடர்ந்து எனக்கு கருப்பை இயக்க நீர் வேண்டும்" எனத் தகவல் கொடுப்பதால், corpus luteum தொடர்ந்து இன்னும் சில நாட்கள் வேலை செய்யும்.
அந்தத் தகவல் வராவிட்டால் Secretory phase இன் கடைசியில் corpus luteum முற்றாக அழிய, பெண்மை இயக்க நீரினதும், கருப்பை இயக்க நீரினதும் உற்பத்தி நிறுத்தப்படும். கட்டியெழுப்பட்டட்ட மாளிகையைப் பேணிப் பராமரிப்பதைத் தூண்டிய இயக்கநீர்கள் இல்லாமல் போக, அது கொஞ்சம் கொஞ்சமாக உதிர்வதே அடுத்த 3-5 நாட்கள் தொடரும் இரத்தப்போக்கு. அதன் பின் திசு வளரும் கட்டத்திலிருந்து திரும்பவும் தொடங்கும்.
சுருக்கமாக, முதலில் பெண்மை இயக்க நீர் அதிகரிக்க, கருப்பையின் அக உறை வளரும். பின் பெண்மை இயக்க நீர் சிறிது குறைவதால் LH, FSH இன் அளவுகள் உச்ச நிலையை அடைய, முட்டை வெளியேற்றப்படும். அதன் பின் LH விடுபட்ட முட்டைக் கூடு corpus luteum ஆக வளர்வதைத் தூண்டி, corpus luteum கருப்பை இயக்க நீரைச் சுரக்கும்.
பெண்மை இயக்க நீரும், கருப்பை இயக்க நீரும் சேர்ந்து கருப்பை அக உறையை கருவுக்கான மாளிகையாக மாற்றியமைக்கும். எல்லாம் முடிந்த பின் கருக்கட்டல் நடைபெறாவிடில், மாளிகையின் அஸ்திவாரத்தை மட்டும் விட்டு, மாளிகை இடித்தழிக்கப்படும். அழிக்கப்பட்ட கழிவுகளை வெளியேற்றுவதே மாதத்தில் 3-5 நாட்கள் தொடரும் இரத்தப்போக்கு. அதன் பின் அஸ்திவாரத்தில் இருந்து திரும்ப கட்டுமான வேலைகள் ஆரம்பிக்கப்படும்.

இந்த சுழற்சி சராசரியாக 28 நாட்க‌ள் என‌ச் சொல்ல‌ப்ப‌ட்டாலும், ஆனால் பெரும்பாலான பெண்க‌ளுக்கு 21 -35 நாட்க‌ளாக இருக்கும். அதோடு பூப்பெய்திய பின் சில காலங்களுக்கும் menopause இன் அறிகுறிகள் வந்தபின் மாதவிடாய் நிரந்தரமாக நிற்குமுன்னும் மாதவிலக்கு வருவது ஒழுங்கற்றிருப்பது வழக்கமே.
[09/09, 08:27] Arulnagalingam Erode: 💪மகா மதன லேகியம்

🌿சுக்கு,
மிளகு.
அதிமதுரம்.
கிராம்மபு.
வால் மிளகு.
கோஸ்டம்
கருஞ்சீரகம்.
உளுந்து.
திராட்சை.
கசகசா.
ஏலக்காய்
கடுக்காய்.
பெருஞ்சீரகம்.
அரிசித்.
திப்பிலி.
யானைத்திப்பிலி.
லவங்கப்பத்திரிஇலை.கொத்தமல்லி
நிலப்பனைக்கிழங்கு.
சிறுநாகப்பூ.
தான்றிக்காய்.
நெல்லிக்காய் ஜாதிக்காய்.
சாதிப்பத்திரி.
தக்கோலம்.
இலவங்கபட்டை.
அசவகெந்தி.
செண்பகப் பூ.
கஸ்தூரி மஞ்சல்
நீர் முள்ளிவிதைத்தூள்.
இலவம் பிசின்
பூனைக்காலி விதைத்தூள்

இவைகளில் வறுக்க வேண்டியதை பொன் வறுவலாக வறுத்து இடித்து தூள் செய்து. வகைக்கு 50கிராம் இதற்க்கு சரி எடை விதை .காம்பு நீக்கி சுத்தி செய்த (கெஞ்சா) (கோரக்கர் மூலிகை  )
நிறுத்தெடுத்து ஏழுமுறை தண்ணீர் விட்டுக் கழுவி.காய வைத்து 5 லிட்டர் நீரும் ஒன்றரை லிட்டர் நெய்யும் ஒன்றாக ஊற்றி அதில் கஞ்சாவை போட்டு நன்றாக காய்ச்சி நெய்யை நன்றாக சிட்டிகட்டி நெய்யை கையால் வழித்து பசும்பால் 250 மிலி.சர்க்கரை 800 கிராம்  ஒன்றாகச் சேர்த்து
அடுப்பேற்றி .பாகு பதத்தில் சூரணங்களை சறிது சிறிதாக தூவி கிளறி வருகையில் நெய்யும் விட்டுக் கிண்டவும் யாவும் ஒன்றுபட்டவுடன் மருந்து சிவந்த சமயம் பார்த்து 800மி.லி தேன் கலந்து .விடாமல் கிண்டி வரவும் இதை பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும்

இரவில் சாப்பிட்ட பின். 10 கிராம் லேகியம் பாலில் சாப்பிடவும்

வீரியம் அதிகரிக்கும் கண்கள் பிரகாசிக்கும நரை திரை மாறும்.ஈளை இருமல்.சூலை .ஷயம் வீக்கம் .யோகாப்பியாசிகளுக்கும் .மும்மண்டலமும் தாண்டி ஆனந்த கேசரத்தில் அறிவுண்டாக்கும்.
[09/09, 08:37] Arulnagalingam Erode: ஆண்மைக்கு அருமருந்து

நிலப் பனங்கிழங்கை மேல்தோல் மற்றும் நரம்புகளை நிக்கி உலர்த்தித் தூள் செய்து, அதற்கு சம அளவு சர்க்கரை கூட்டி பத்திரப் படுத்தவும். இதில் ஒன்பது கிராம் வீதம் காலை, மாலை இரு வேளையும் பாலுடன் கலந்து அருந்தி வர விந்தில் உயிரணுக்கள் அதிகரித்து, பத்து மாதங்களில் முத்தான குழந்தையைப் பெறலாம்.

முன்சொன்னப்படி நிலப் பனங்கிழங்கை உலர்த்தித் தூள்செய்து, காலை, மாலை இருவேளையும் ஆட்டுப்பாலுடன் கலந்து 21 நாட்கள் சாப்பிட, வெள்ளைப்படுதல் குணமாகும். மேலும் கன்னம் ஒட்டிக் குழிவிழுதல், உடல் எடை குறைவு போன்ற குறைகள் மாயமாய் மறையும்.

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அருட்பெருஞ்ஜோதி;

அருட்பெருஞ்ஜோதி;
                       "அறிவு ஆறு"

அதற்கு மேல் அருள் அறிவு அதுதான் உண்மையை அறியும் அறிவு.


அதற்குமேல் கடவுள் அறிவு.கடவுள் அறிவு விளங்கினால் மட்டுமே கடவுளைக் காண முடியும்.

ஆன்மநேய உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;
      ஆன்மாக்களாகிய நமக்குள் கடவுள் உயிருக்குள் உயிராகவும், உணர்வாகவும் இருக்கின்றார்கள்;
       உணர்வு என்பது உணர்தல் ,
இந்த உணர்வே அறிவு ,
 கடவுள் அனைத்து உயிர்களுக்கும் அவற்றின் வினைகளைப் பொறுத்து இன்பதுன்பங்களை அனுபவிக்கச் செய்பவராய் இருக்கின்றார்கள்;
    இன்பத்தையும் துன்பத்தையும் பார்க்க இயலாது உணர்ந்து அனுபவிக்கமட்டுமே முடியும்;
     இறைவன் எல்லா உயிர்களுக்கும் இன்பத்தைக்கொடுத்து அனுபவிக்கச்செய்பவராய் அனுபவத்தில் விளங்குகின்றவராய் இருக்கின்றார்கள்;
   அறிவு என்பது ஐந்து புலன்களாகிய கண்,காது,மூக்கு,நாக்கு,உடம்பு முதலிய உடல் உறுப்புகளால் உணரப்படுகின்ற உணர்ச்சிகளாகும் ,;

     அறிவென்பது சிறிதும் இல்லாமல் அஞ்ஞானஇருளில் சிற்றணுப்பசுவாக கிடந்த ஆண்மாக்களுக்கு அவற்றின் உள்ளொளியாக இருந்து முதன்முதலில் ஓரே ஒரு அறிவு விளங்கக்கூடிய அதாவது அறிவு என்றால் உணர்வு ,
   அது என்ன உணர்வு என்றால் "தொடு உணர்வு "  என்ற ஓரறிவு இருக்கக்கூடிய தாவரமான புல், பூண்டு,செடி,மரம் முதலிய பிறவகளில் பிறக்கச்செய்து,
 அந்த ஓரறிவு விளக்கம் பூரணமாகும் வரை அதே தாவரப்பிறவியில் காலில் மிதிப்படும் புல்லினம் முதல் கடவுளுக்கு சாத்துகின்ற பூவாய் விருட்சம் வரைப் பலப்பிறவிகள்  எடுத்து எடுத்து அப்பிறவி ஓரறிவு நிறைவுற்றவுடன்,

  அடுத்து தொடு உணர்வு ,சுவைஉணர்வு என்னும் இரண்டு அறிவுள்ள  சிப்பியாய் முத்தாய் இவற்றில் இன்னும் பலப்பிறவிகளைப் பிறக்கச்செய்து அந்த இரண்டாவது அறிவு விளக்கம் பெற்று பூர்த்தியானவுடன் ,

அடுத்து தொடுஉணர்வு,சுவைஉணர்வு,பார்க்கும் உணர்வு என்னும் மூன்றறிவு உள்ள எறும்பு, ஈக்கள் முதலியப் பிறவிகளைக் கொடுத்து அந்தப்பிறவியிலும் பல்வேறு உயர்ந்த தாழ்ந்த பிறவிகளில் பிறக்கச்செய்து அந்த மூன்றாவது அறிவு பூரணமானவுடன் ,

அடுத்து தொடுஉணர்வு,சுவைஉணர்வு,பார்க்கும் உணர்வு,கேட்கும் உணர்வு உடைய பறவைகளாய் அவற்றிலும் உயர்ந்த தாழ்ந்த பிறவகளாய் பலப்பிறவிகள் பிறக்கச்செய்து அவற்றிலும் அந்த நான்கு அறிவு நிறைவுபெற்றவுடன் ,

அடுத்து தொடுஉணர்வு,சுவைஉணர்வு,பார்க்கும் உணர்வு,கேட்கும் உணர்வும்,நுகரும் உணர்வு ஆகிய ஐந்து உணர்வுகளுடைய விலங்குளாகவும் அவற்றிலும் உயர்ந்த தாழ்ந்த எனப் பலப்பிறவிகளில் பிறந்து பிறந்து அந்த ஐந்தறிவு பூர்த்தியானவுடன் கடவுள் பெருங்கருணையால் ,

அடுத்து மேற்கண்ட ஐந்து உணர்வுகளோடு மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்னும் அந்தகரணங்கள் வழங்கப்பட்டு,
  ஒரு செயலை செய்வதற்கு முன்பு அக்காட்சியை கண்ணால் கண்டு,
பிறகு அக்காட்சி மனத்தால் நினைக்கப்பட்டு,
புத்தியால் விசாரிக்கப்பட்டு,சித்தத்தால் நிச்சயிக்கப்பட்டு,பிறகு அகங்காரத்தால் செயல்படுத்தப்படுகின்றது இவை அனைத்தும் ஒரு செயலின் நன்மைத் தீமைகளை விசாரித்து செய்யலாமா வேண்டாமா என்று விவரித்து அறியக்கூடிய ஆறாவது அறிவாகிய "பகுத்தறிவாகும்",
   இந்த அறிவின்மூலம்தான் ஆன்மாக்களாகிய" நாம் யார்" என்று "தன்னை அறிந்து",நம்மை இயக்கக்கூடிய நமது தலைவனாகிய கடவுளை அறிந்து அக்கடவுள்நிலையறிந்து முடிவில் அக்கடவுள்மயமாக மாறிடுவதற்கு இந்தப் பகுத்தறிவைக்கொண்டுதான் மேலும் பலஅறிவுகள் ஆன்மநிலையில் கடந்து முடிவில் கடவுள் அறிவைப் பெறவேண்டும்;

     இப்படி உயர்வுடைத்ததாகிய ஆறறிவு பெற்றுக்கொண்ட மனிதர்களாகிய நாம் எத்தனை ஆயிரம் பிறவிகள் கடந்து எத்தனை லட்சம் ஆண்டுகள் காத்துக்கிடந்து இந்த மனிதப்பிறவியைப் பெற்றுக்கொண்டோம் என்பதை சற்று சிந்தித்து  ,நம்மை சுற்றி இருக்கும் அத்தனை உயிர்களும் நாம் இதற்குமுன்பிறவியில் கடந்துவந்தப் பிறவிகள்தான் என ஆன்ம உணர்வோடு அவற்றின்மீது கருணைக்கொண்டு ,
அவைகளும் நம்மைப்போன்றே இவ்வுலகில் வாழ்வதற்கு கடவுளால்"படைக்கப்பட்டவை என்பதை அறிவால் உணர்ந்து அவற்றின் வாழ்வை அழிக்க நினையாமல்
எவ்வுயிரையும் தம்முயிர்போல் பாவிக்கும் குணம்கொண்டு  ,அந்த உயிர்குலத்திற்கு தொண்டுசெய்து கடவுள் அருளைப்பெற விழைவோம்;

.....நன்றி;
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க;
வள்ளல் மலரடி வாழ்க !வாழ்க !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

சனி, 2 செப்டம்பர், 2017

ஆன்மநேய அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு வந்தனம்.

ஆன்மநேய அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளுக்கு வந்தனம்.

தனக்காக வாழ்வதை விட மற்றவர்களுக்காக வாழ்வதே உண்மையான வாழ்க்கை.

அப்படி வாழ்கின்ற மனித ஜீவர்களை இறைவன் அன்புடன் ஏற்றுக் கொண்டு அறிவை விளக்கி.அன்பை பெருக்கி அருளைப் கொடுத்து பேர் இன்பத்தை தந்து.மரணத்தை வெல்லும் ஆற்றலைக் கொடுத்து அனைத்துக் கொள்வார்.

உயிர் இரக்கத்தாலும்  அன்பாலும் அறிவாலும் அருளாலும் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்...

வள்ளலார் பாடல்!

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்தம்உயிர்போல் எண்ணி உள்ளே

ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்யாவர்அவர் உளந்தான்

சுத்தசித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்இடம்எனநான் தெரிந்தேன்

அந்தவித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்சிந்தைமிக விழைந்த தாலோ.

என்னும் பாடல் வரிகளில் மிகத்தெளிவாக விளக்கி உள்ளார்.

நாம் வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்து வாழ்ந்து வெற்றி என்னும் அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்

அன்புடன் ஆன்மநேயன்.ஈரோடு கதிர்வேல்
9865939896.

வெள்ளி, 1 செப்டம்பர், 2017

தீட்டு என்றால் என்ன...?

தீட்டு என்றால் என்ன...?

தீட்டு’ என்கிற சொல் புரிந்துகொள்ளப்படாமலேயே காலங்காலமாக பெரும்பாலானோரால் கையாளப்பட்டு வருகிறது. இது குறித்த உண்மையான அர்த்தமுள்ள பார்வை அனைவருக்கும் தேவை.

இறைவழிபாட்டில் விலக்க வேண்டிய தீட்டுக்கள் குறித்து இந்தப் பதிவு தெளிவுபடுத்தும் என நம்பலாம்
தீட்டு என்பது என்ன?
இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது!

தீட்டு என்பது, தீண்டத் தகாததைத் தீண்டுவது. தீட்டுடன் இறைவனைக் கும்பிட்டால், இறைவன் ஏற்கமாட்டான் என்பார்கள். தீட்டுப் பட்டால் துடைத்து விடும், தீட்டுக் கூடாது என்பார்கள்.

ஆண், பெண் கலந்தாலும் தீட்டு, குழந்தைகள் பிறந்தாலும் தீட்டு, பெண்கள் மாதவிடாயும் தீட்டு, இறந்தாலும் தீட்டு! இப்படிப் பார்த்தால்,தீட்டில் உருவான நமது உடலே ஒரு தீட்டு தானே! அதனால் தான் இறந்த பிறகு உடலைப் பிணம் என்று பெயர் வைத்துப் பிணத்தைத் தொட்டால் தீட்டு என்பார்கள்.

தீட்டுடைய இந்த உடலை வைத்து, எப்படிக் கடவுளை வழிபட முடியும்? சிந்தித்துப் பாருங்கள். இதுவல்ல உண்மையான தீட்டு. இவை நாம் சுகாதாரமாய் இருப்பதற்கு. இறைவனை பெயரைச் சொல்லி ஏற்படுத்திய ஒழுக்கங்கள். அப்பொழுது தான் பயபக்தியோடு சுத்தமாக இருப்போம் என்பதற்காகத்தான் இவற்றைச் சொன்னார்கள்.

தீட்டு என்பது வேறு, அவை காமம், குரோதம், லோபம், மதம், மாற்சரியம் என்னும் பஞ்சமா பாதங்கள்!

குடிபழக்கம்.கொலைசெய்தல்.பொய் பேசுதல்.பிற பெண்களை கற்பழித்தல்.திருட்டு தொழில் செய்தல் இந்த பாதகங்கள் செய்துவிட்டு கடவுளை வழியாடுசெய்வதால.எந்தபயனும் இல்லை.கடவுள் கருணைக் காட்ட மாட்டார்.

அதனால கடவுளை வழிபடுவதற்கான தகுதியை இழந்தவர்கள்.அதனால் அவர்களை இறைவன் சந்நிதிக்கு செல்லவும் இறைவனை நினைப்பதற்கும்.வழிபடுவதற்கும் அறுகதை இல்லாத்தனால. அதற்கு தீட்டு என்பதாகும்.

1. காமத் தீட்டு:

காமம் என்பது ஆசை. நாம் எந்தப்பொருள் மீதாகிலும் ஆசை வைத்தால், அந்தப் பொருளின் நினைவாகவே ஆகிவிடுகின்றோம். நம் உள்ளத்தில் எந்த நேரமும், அந்தப் பொருள் மீதே ஞாபகமாக இருப்போம். அதற்காகவே முயற்சிச் செய்வதும், அலைவதுமாக இருப்போம். அந்தப் பொருள் கிடைத்து விட்டால், மனத்தில் சந்தோசம் உண்டாகும். இல்லையென்றால் மனத்தில் சதா வேதனை ஏற்படும். இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான், ஆசைக்கு அடிமை ஆகாதே, அதை தீண்டாதே என்றார்கள்.

2. குரோதத் தீட்டு:

குரோதம் என்பது கோபம். யாராக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால், முன்னே பின்னே பாராமல், தாய், தந்தையர், சகோதரர்கள், உறவினர்கள் என்றும் சிந்திக்காமல், கொடூரமாகப் பேசுவதும், கேவலமான நிலைக்கு ஆளாவதும் நேர்கின்றன. சிலர் கொலை செய்துவிட்டு ஆயுள்பூராகவும் துன்பம் அனுபவிப்பார்கள். சிலர் தூக்கில் இடப்படுவார்கள். கோபத்தைப்போல் கொடியது உலகத்தில் வேறு எதுவும் இல்லை. கோபத்தால் அழிந்தவர்கள் கோடான கோடிப்பேர்,

கோபம் எழும் பொழுது நம் உடலில் உள்ள எத்தனையோ ஜீவ அணுக்கள் செத்து மடிகின்றன. ஆயுளும் குறைந்து விடுகிறது. கோபத்தால் உணர்ச்சி வசப்பட்டவர்கள் எதையுமே செய்யத் துணிவார்கள். இவர்களால் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. இதனால் தான் கோபத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பர். குரோதம் என்னும் கோபமே இரண்டாவது தீட்டு.

3. லோபத் தீட்டு:

லோபம் என்பது சுயநலம், பிறரைப் பற்றிச் சிந்திக்காமலும், இரக்கம் என்பதே இல்லாமலும், சுயநலத்துடன் பொருள்களைச் சேர்த்துவைத்து அழகு பார்ப்பதும், கஞ்சத்தனமும், எல்லாவற்றையும் தானே அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணமும், தீய வழியில் பொருள்களைச் சம்பாதிக்கக் கூடிய நோக்கமும், வஞ்சனை செய்து, பிறர் பொருளை அபகரித்துத் தானே வாழ நினைக்கும் குணமும், எப்பொழுதும் தன் பொருள்களைப் பற்றுடன் பாதுகாப்பதும் எல்லாம் சுயநல வேகமே. இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியாது. அதனால் தான் சுயநலத்திற்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்பார்கள் இது லோபம் என்னும் மூன்றாவது தீட்டு.

4. மதத் தீட்டு:

மதம் என்பது கர்வம் (ஆணவம்) ஒருவரையும்   மனதையோடு இருப்பது இது. எதையும் தானே சாதிக்க முடியும் என்ற கர்வமும் இது. தான் என்னும் அகந்தையால் திமிர் பிடித்து அலைவதும் இது. ஆணவ நெறியால் யாவரையும் துன்பப் படுத்தித் தான் மகிழ்ச்சி அடைவதும் இது. இப்படிப்பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் கர்வத்திற்கு அடிமை ஆகாதே என்பர். அதைத் தீண்டாதே என்பர். கர்வமாகிய மதமே நான்காவது தீட்டு.

5. மாற்சரியத் தீட்டு:

மாற்சரியம் என்பது பொறாமை. பிறர் வாழ்வதைக் கண்டு பொறுக்க முடியாமல் வேதனைப்படுவது இது. எந்த நேரமும் நாம் நல்லபடியில்லையே என்று தன்னையே நொந்து கொள்வதும் இது. எல்லாரும் சுகமாக இருக்கின்றார்களே, இவர்கள் எப்பொழுது கஷ்டப் படுவார்கள், எப்பொழுது செத்துப் போவார்கள் என்பதும் இது.

தான் மட்டும் சுகமாக இருக்கவேண்டும் சாகக் கூடாது என்பதே இவர்கள் எண்ணம். பிறரைப் பார்க்கும் பொழுது தீய எண்ணங்களுடன் பெருமூச்சு விடுவார்கள். தாழ்வு மனப்பான்மையோடு, யாரைப் பார்த்தாலும் சகிக்க முடியாமல் எரிச்சலோடு இருப்பார்கள். இப்படிப் பட்ட நேரங்களில் இறைவனைப் பற்றிச் சிந்தனை செய்ய முடியுமா? இதனால் தான் பொறாமைக்கு அடிமை ஆகாதே, அதைத் தீண்டாதே என்றனர். இதுதான் ஐந்தாவது தீட்டு.

இவை ஐந்தும் மாபெரும் தீட்டுகள். இந்தத் தீட்டுக்களையுடைவர்கள் இறைவனை வழிபட முடியாது. இறைவன் இருக்கும் இடத்தில் இந்தத் தீட்டுகள் ஆகாது.

படித்ததில் பிடித்தது.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.