வியாழன், 22 நவம்பர், 2018

வள்ளலார் அருள் ஆட்சி பெற்றுக் கொண்டது !

வள்ளலார் அருள் ஆட்சி பெற்றுக் கொண்டது !

வள்ளலார் அருள் ஆட்சியில் பதவிப் பிரமாணம்  பெற்றுக் கொள்கிறார் !

*வள்ளலார் சுத்த பிரணவ ஞான தேகம் பெற்றுக் கொண்ட பின் நடந்தது என்ன ?*

வள்ளல் பெருமான் சித்திவளாகத் திருமாளிகையில்..சுத்த சன்மார்க்க  கொடியேற்றி மகாஉபதேசம் செய்கிறார்..

அந்த உபதேசத்தில் ஒரு முக்கியமான வசனத்தை (வார்த்தை) சொல்லுகின்றார்.

*இது கடைசி வார்த்தை என்று சொல்லுகின்றார்.*

இதுமுதல் -சாலைக்கு ஆண்டவர்  போகிற- பத்துத் தினமாகிய கொஞ்சம் காலம்  வரையில்.நீங்கள் எல்லவரும் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள்..

மேலும் ஜாக்கிரதையாக.நான் மேற் சொன்ன பிரகாரம் .விசாரம் செய்து கொண்டு இருங்கள் என்று மக்களிடம் சொல்லுகின்றார்...

மேலும்

இப்போது நீங்கள் - இதுவரைக்கும் ஒழுக்கத்துக்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த மனுஷ்யர்களாயிருந்தாலும் -

சாலைக்குப் போகக் கொஞ்சதினமிருக்கின்றது - அதற்குள்ளாக நீங்கள் நீங்களும் நல்லொழுக்கத்திற்கு வருவதோடுகூட, மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்விதத் தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது. நீங்கள் கொஞ்ச தினத்துக்கு அப்படிச் செய்து கொண்டிருங்கள்.

*நானும் ஆண்டவரிடத்தில் இவ்வுலகத்திலுள்ள எல்லா ஜீவர்களும் நன்மையடையப் பிரார்த்தித்தும், ஆண்டவரிடத்தில் கேட்டுக்கொண்டும் வருகின்றேன். ஆதலால், நீங்கள் அப்படிச் செய்து கொண்டிருங்கள்..*

*வள்ளலார் பத்து தினம் எங்கு போயிருப்பார் ?*

இங்கு நாம் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்...

வள்ளலார் பாடல் !

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்

கதவுதிறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்

அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல்குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்

உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம்ஓங் கினவே

இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!

என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட் கோட்டையின் கதவு திறக்கப் பெற்று ஆண்டவர்   அழைத்ததை ஏற்றுக் கொண்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருட்சபைக்கு சென்று விடுகின்றார்...

அதற்கு முன்னாடி எல்லா அருளாளர்களுக்கும்.
அவசர அழைப்பு விடுத்து அனைத்து அருளாளர்களும் வந்து அருட்பெருவெளியின் புறத்தில் அமர்ந்து கொண்டு இருக்கிறார்கள்...

*அவர்கள் யார் யார் என்பதை வள்ளலார் தெரியப் படுத்துகின்றார்...*

அனுபவமாலை தலைப்பில் உள்ள 63...64 ஆவது பாடல்கள்..

உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி

பெருத்தமற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில்அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்

திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ

வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.!

அடுத்து அமர்ந்துள்ளவர்கள் !

பார் உலகாதிபர் புவனா திபர் அண்டா திபர்கள்

பகிரண்டாதிபர் வியோமாதிபர் முதலாம் அதிபர்

ஏர்உலவாத் திருப்படிக்கீழ் நின்று விழித்திருக்க

எனை மேலே ஏற்றினர் நான் போற்றிஅங்கு நின்றேன்

சீர்உலவா யோகாந்த நடம் திருக்கலாந்தத்

திருநடம் நாதாந்தத்தே செயும்நடம் போதாந்தப்

பேர் உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்

பெற்றேன்நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.!

மேலே கண்ட அருளாளர்கள் அனைவரும் அருட்சபையின் புறத்தே அமர்ந்திருக்க...வள்ளல்பெருமானை அழைத்து சபை நடுவே அமரவைத்து  அனைத்து அருளாளர் களுக்கும் அறிமுகப் படுத்தி வைக்கிறார்..

அறிமுகப்படுத்திவிட்டு ஓர் உண்மையை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அனைவருக்கும் புரியும் படி  சொல்லி ஆணையிட்டு ஆட்சி மாற்றம் செய்கின்றார்...

அனுபவ மாலை தலைப்பில் உள்ள
56..57 பாடல்கள் !

பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொது நடங்கண்டு உளங்களிக்கும் போது மணவாளர்

மெய் பிடித்தாய் வாழியநீ சமரசசன் மார்க்கம்

விளங்க உலகத்திடையே விளங்குக என் றெனது

கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்

களித்திடுக இனியுனை நாம் கைவிடோம் என்றும்

மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண

மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.!

என்னும் பாடல் வாயிலாக உண்மையை உலக மக்களுக்கு தெரியப் படுத்துகின்றார்..

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி... உலகம் எல்லாம் அருள் ஆட்சி செய்யும் பொறுப்பை..
ஆணையிட்டு வள்ளல்பெருமானுக்கு அருள் மாலை அணிந்து ஆட்சி அதிகாரத்தை அறிவிக்கின்றார்..

ஏன் ஆட்சி மாற்றம் செய்கிறோம் என்னும் உண்மையைப் வெளிப்படையாக தெரிவிக்கின்றார்...

மேலும்....

பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க நான்போய்ப்

பொதுநடங்கண்டு வந்துநிற்கும் போது தனித் தலைவர்

திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்

தெய்வ மல ரடிபிடித்துக் கொண்டேன்
சிக் கெனவே

வருத்தமுறேல் இனிச்சிறிதும் மயங்கேல் காண் அழியா

வாழ்வு வந்தது உன்தனக்கே ஏழுலகும் மதிக்கக்

கருத்தலர்ந்து வாழிய என் றாழிஅளித் தெனது

கையினில்பொற் கங்கணமும் கட்டினர் காண் தோழி.!

என்னும் பாடல்களின் வாயிலாக...எல்லா அருளாளர்களும்.எல்லா உலகமும் அறிய. வள்ளல்பெருமானை வாழ்த்தி. கையிற் அருள் கங்கணமும் கட்டி ஆட்சிப் பொறுப்பில் அமர்த்துகின்றார்....

மேலும் அடுத்து ஒருபாடலில் தெரிவிக்கின்றார் !

பாடல் !

ஆணை ஆணைநீ அஞ்சலை அஞ்சலை

அருள்ஒளி தருகின்றாம்

கோணை மாநிலத் தவரெலாம் நின்னையே

குறிக்கொள்வர் நினக்கே எம்

ஆணை அம்பலத் தரசையும் அளித்தனம்

வாழ்க நீ மகனேஎன்

றேணை பெற்றிட எனக்கருள் புரிந்தநின்

இணைமலர்ப் பதம்போற்றி.!

என்னும் பாடலில்..அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்... ஆணை ஆணை என்று சத்தியம் வைத்து சொல்கின்றார்..

எதற்கும் அஞ்சாமல் அருள் ஆட்சி செய்வாயாக..என்றும் நானும் உம்மைவிட்டு பிரியாமல் இருப்பேன் என்றும்  ஆணையிடுகின்றார்..

மேலும் அருட்பெருஞ்ஜோதி அகவலில் பதிவு செய்கிறார்...

தன் கையிற் பிடித்த தனி அருட் ஜோதியை
என்கையிற் கொடுத்த என்தனித் தந்தையே !

என்றும்..

மூவரும் தேவரும் முத்தருஞ் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை !

என்றும்..

உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம் விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !

என்றும்.

சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக உத்தமன் ஆகுக ஒங்குக என்பவை !

போற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சீர் ஆற்றலின் ஓங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்னும் அருள் வரிகளில் தெளிவுப் படுத்துகின்றார்..

*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு துன்பம் இருந்ததாம்..*

என்ன துன்பம் ?

உண்மைக் கடவுளான  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தெரிந்து கொள்ளாமலும்..
அருளைப் பெற முடியாமலும். மரணத்தை வெல்லும்  வழித் தெரியாமலும் மக்கள் தவறான வழியிலே சென்று மாண்டு( இறந்து) கொண்டே இருந்தார்கள். அதனால் துன்பம் அடைந்தேன்.

உண்மையான அருளாளர்கள் ஆட்சியாளர்கள் இல்லையே என்ற வருத்தமும் வாட்டமும் இருந்ததாம்..

இதுவரையில் நான் அனுப்பிய ஆன்மாக்கள் திரும்பி வரவில்லை என்ற வருத்தம் இருந்ததாம்

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

நடராஜபதி மாலை !
26 வது பாடல் !

 துன்பெலாந் தீர்ந்தன சுகம்பலித் ததுநினைச்

சூழ்ந்ததருள் ஒளிநிறைந்தே

சுத்தசன் மார்க்கநிலை அனுபவம் நினக்கே

சுதந்தரம தானது உலகில்

வன்பெலாம் நீக்கி நல் வழியெலாம் ஆக்கி மெய்

வாழ்வெலாம் பெற்றுமிகவும்

மன்னுயிர் எலாம்
களித்திட நினைத் தனை உன்றன்

மன நினைப் பின்படிக்கே

அன்பநீ பெறுகஉல வாது நீடூழி விளை

யாடுக அருட்சோதியாம்

ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்

ஆணை நம் ஆணை என்றே

இன்புறத் திருவாக் களித்து என் உள்ளே கலந்து

திசைவுடன் இருந்தகுருவே

எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றினில்

இலங்கு நடராஜபதியே.!

என்னும் பாடலில் தெளிவாக தெரிவிக்கின்றார்....

இதில் மிகவும் உயர்ந்தது மண் உயிர் எல்லாம் களித்திட நினைத்தது ..அதாவது 

பாடல் !

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே

வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்

நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக் கண்டுளந் துடித்தேன்

ஈடின் மானிகளாய் ஏழைகளாய்
நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.!

இந்த உயிர் இரக்கம் தான் ஆட்சி பொருப்பில் வள்ளல்பெருமனை.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.. அமர்த்த காரண காரியமாக அமைந்துள்ளது.

இன்னும் விரிக்கில் பெருகும்..

வள்ளலார் சித்திவளாகத்தில் பேருபதேசம் செய்யும் போது.

இது கடைசி வார்த்தை என்றும்  இன்னும் பத்து தினமாகிய கொஞ்ச காலம் வரையில் நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள் என்பதும் ...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அழைப்பை ஏற்றுக் கொண்டு அருட்பெருவெளிக்கு சென்று அருள் ஆட்சி ஆணையை பெற்றுக் கொள்ள சென்றதாகும் 

வள்ளலார் சித்தி பெற்ற நாளில் இருந்து அருள் ஆட்சி நடந்து கொண்டு உள்ளது....

*சத்திய அறிவிப்பு என்னும் தலைப்பில் உள்ள பாடல் !*

சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலை இதனில் சந்தோடம் உறுவாய்

இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள்எலாம் இன்பம் உறு தினங்கள்

சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும் எலா உலகும்

தூய்மை உறும் நீஉரைத்த சொல் அனைத்தும் பலிக்கும்

செத்தவர்கள் எழுந்து உலகில் திரிந்து மகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!

ஆன்ம நேய உரிமை உடைய சன்மார்க்க  சொந்தங்களே! அருள் பெற்றுக் கொண்டு மரணத்தை வெல்ல துடிக்கும் . விரும்பும் ஆன்மீக சான்றோர்களே ! என் அறிவில் விளங்கிய செய்திகளை தந்துள்ளேன் ..ஏற்றுக் கொள்வதும்.ஏற்றுக் கொள்ளாததும் உங்கள் விருப்பம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

செவ்வாய், 20 நவம்பர், 2018

வள்ளலார் வாழ்க்கையின் உடல் மாற்றங்கள் !

வள்ளலார் வாழ்க்கையின் உடல் மாற்றங்கள்...!

வள்ளல் பெருமான் ஐந்து மாதக் குழந்தையாக இருந்த போதே இறைவன் எல்லாவற்றையும் வெட்ட வெளிச்சமாக காட்டிவிட்டார் என்பதை ஆறாம் திருமுறையில் அருள் விளக்க மாலையில் 44 வது பாடலில்  தெரிவிக்கின்றார்...

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் எனவே இறைவனே வள்ளலாரை இயக்கிக் கொண்டு உள்ளார்

பாடல் !

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்

தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போது

வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்

வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளே

காய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியே

கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே

தூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்

சோதிநடத் தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.!

இந்த பாடல் எத்தனையாவது வயதில் பதிவு செய்கிறார் என்றால் ..வள்ளலார் வயது சுமார் 48 ஆவது ஆண்டில் பதிவு செய்கிறார்..அப்போது  வள்ளலாருக்கு *சுத்த பிரணவ ஞானதேகம்* கிடைத்த காலக்கட்டம்..

வள்ளலார் தேகம் மூன்று மாற்றங்கள் அடைகின்றன...

ஒவ்வொரு காலக் கட்ட மாற்றத்திலும் திருஅருட்பா பாடல்கள் மாற்றம் அடைகின்றன.

சுத்த தேகம் !

குழந்தைப் பருவத்தில் இருந்து சமய மத தெய்வங்களைப் பற்றிய பக்தி பாடல்களைப் பாடி முதல் நான்கு திருமுறைகளை வெளியிடுகின்ற வரை சுத்த தேகத்தில் வள்ளலார் வாழ்ந்து கொண்டு உள்ளார்..

பிரணவ தேகம் !

வள்ளலார் 1858.ஆம் ஆண்டு கருங்குழியில் வந்து தங்குகிறார்..அங்கு தண்ணீரில் விளக்கு எரித்தார் என்பது அனைவரும் அறிந்த்தே.. 1865 ஆம் ஆண்டு சமரச வேத சன்மார்க்கம் சங்கம்.பின்பு சமரச சுத்த ஷடாந்த சன்மார்க்கம் என்றும் மாற்றம் செய்கின்றார்..

  1867 ஆம் ஆண்டு வடலூரில் தருமச்சாலையைத் தோற்றுவிக்கிறார் .சில காலம் தருமச்சாலையிலே தங்குகிறார் ..
ஜீவகாருண்யத்தின் வல்லபமான  கொள்கைகளை.. அச்சமயம் மக்களுக்கு போதிக்கின்றார்.முதல் நான்கு திருமுறைகளோடு மீண்டும் ஐந்தாவது திருமுறையும் வெளியிடப் படுகின்றது..

அதுசமயம் வள்ளலாருக்கு 47 ஆம் ஆண்டு துவக்கமாக இருக்கலாம்..

சுமார் 1858. ஆண்டில் இருந்து 1870 ஆம் ஆண்டு வரை வள்ளல் பெருமானுக்கு பிரணவ தேகம் முழுவதும் கிடைக்கின்றது..

ஞான தேகம் !

1870 ஆம் ஆண்டு தனிமையைத் தேடி வடலூருக்கு அடுத்த மேட்டுக்குப்பம் சென்று விடுகிறார்....

தருமச்சாலைக்கு போவதும் வருவதுமாக இருக்கின்றார்..

தன்தேகத்தை ஞான தேகமாக இறைவன் அருளைப் பெற்று.. மாற்றம் அடைய செய்வதை முழுமையாக அறிந்து கொள்கிறார்...

அந்த நேரத்தில் அவர் பட்டபாடு கொஞ்சம் நஞ்சம் அல்ல..

தன் தேகத்தை மாற்றம் அடைய செய்யும்.
உண்மைக் கடவுள்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான.... என்ற உண்மையை அருள் வல்லபத்தால். தெரிந்து கொள்கிறார் ...

ஞானதேகத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தன் தேகத்தில் அமர்ந்து கொண்டு வள்ளலாரை தன் விருப்பபடி இயங்க இயக்கிக் கொண்டு வருகிறார். எனவே தான் நான் உரைக்கும் வார்த்தைகள் யாவும் நாயகன் வார்த்தை என்கிறார்.

வள்ளலார் பதிவு செய்த பாடல் !

நான்உரைக்கும் வார்த்தைஎலாம் நாயகன்றன் வார்த்தை

நம்புமினோ நமரங்காள் நற்றருணம் இதுவே

வான்உரைத்த மணிமன்றில் நடம்புரிஎம் பெருமான்

வரவெதிர்கொண் டவன்அருளால் வரங்களெலாம் பெறவே

தேன்உரைக்கும் உளம்இனிக்க எழுகின்றேன் நீவீர்

தெரிந்தடைந்தென் உடன்எழுமின் சித்திபெறல் ஆகும்

ஏனுரைத்தேன் இரக்கத்தால் எடுத்துரைத்தேன் கண்டீர்

யானடையும் சுகத்தினைநீர் தான்அடைதல் குறித்தே!

என்னும் பாடலை ஞானசரியை தலைப்பில் உள்ள  ..ஆறாம் திருமுறைகளில்  தெளிவாக சொல்லுகின்றார்...

மற்ற ஐந்து திருமுறைகளில் அப்படி சொல்லவில்லை....

மேலும் இப்போது உண்மைச் சொல்லுகிறேன்..ஏன்
என்றால் ? என் உள் இருந்து இறைவன் இயக்கிக் கொண்டு உள்ளார் அதனால் உண்மைச் சொல்ல வைக்கின்றார்..என்கிறார்.

பாடல் !

உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்

எண்மையினான் எனநினையீர் எல்லாஞ்செய் வல்லான்

என்னுள்அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்

தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே !

என்ற பாடலில் தெளிவுப் படுத்துகின்றார்

*வள்ளலார் ஞான தேகத்தில் எழுதியது தான் ஆறாம் திருமுறை அனைத்தும்...*

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணப்படித் தான் வெளிப்படுத்துகின்றார்

வடலூரில் சத்திய ஞானசபையைத் தோற்றிவைக்கிறார்

18-7-1872 ஆம் ஆண்டு சத்திய ஞான சபை வழிபாட்டு விதிமுறைகளை வெளியிடுகின்றார்...

25-11-1872 ஆம் ஆண்டு சத்திய ஞான சபை விளம்பரம.என்ற தலைப்பில் எதற்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சத்திய ஞான சபையை தோற்றுவிக்க சொன்னார் என்ற விளக்கத்தை வெளிப்படுத்துகின்றார்.

மேலும் பழைய சங்கம் .சாலை.சபை அனைத்தையும் இறைவன் ஆணைப்படி மாற்றம் செய்கிறார்..

அன்புடைய நம்மவர்களுக்கு வந்தனம் .

இன்று தொடங்கி சபைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை என்றும் .

சாலைக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை என்றும்.

சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்றும்

பெயர் மாற்றம் செய்கின்றார்...

22-10-1873 அன்று  மேட்டுகுப்பத்தில் மஞ்சள் வெள்ளை வண்ணத்தில் சுத்த சன்மார்க்க கொடியேற்றி

 *மகா உபதேசம் என்னும் பேருபதேசம் செய்கின்றார்...*

அதில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் யார் ?  என்பதைச் சொல்லி *மகாமந்திரத்தை* வெளிப்படுத்துகின்றார்.

நமது ஆண்டவர் கட்டளை யிட்டது யாதெனில் நமக்கு முன் சாதனம் கருணை யானதினாலே ஆண்டவர் முதற் சாதனமாக

**அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி !**

என்னும் திருமந்திரத்தை வெளிப்படையாக எடுத்துக் கொண்டார்..

என்று வெளிப்படையாக  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணைப்படி தெரிவிக்கின்றார்....

ஏன் இவற்றைத் தெரியப்படுத்துகிறேன் என்றால்...

வள்ளல்பெருமான் சுத்த பிரணவ ஞான தேகத்தில் எழுதியது தான் ஆறாம் திருமுறை...அதில் தான்  எல்லா உண்மைகளையும் ஆண்டவர் சொல்லிய வண்ணம்.
வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார்.

ஆறாம் திருமுறை எழுதியது தன் தொண்டர்களுக்கும் .வேறு எவருக்கும் தெரியாது...

வள்ளலார் சித்தி பெற்ற பின் பல ஆண்டுகள் கழித்துதான் ஆறாம் திருமுறை வெளியிடப் பட்டது...

ஒன்றில் இருந்து ஐந்து திருமுறைகள் எழுதியது தொண்டர்களுக்குத் தெரியும்..தன் தொண்டர்கள் வள்ளலாருக்குத் தெரிந்தே ஐந்து திருமுறை புத்தகம் வெளியிட்டார்கள்...

 நித்திய தேகமான. சுத்த பிரணவ ஞானதேகம் முழுமையும் (பூரணமாக ) வள்ளலார் பெற்ற பின்பு தான் 30-1-1874...ஸ்ரீமுக ஆண்டு தைத்திங்கள் 19 ஆம் நாள் வெள்ளிக்கிழமை இரவு 12 மணிக்கு

மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையின் தமது திருவறையில் வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதி யானார்கள்..

எனவே சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று மரணத்தை வென்ற அருளாளர்களால்  தான் வெளிப்படையான உண்மையை மக்களுக்குத் தெரியப்படுத்த முடியும்.

அருளைப் பெறும் நேர் வழியை மக்களுக்கு தெளிவு பெற வழி காட்டவும் முடியும்..மரணத்தை வெல்லும் வழியை பூரணமாக தெரிந்து கொள்ளவும் முடியும்.

உலக மக்கள் இந்த உண்மையைத் தெரிந்து கொண்டால் தான். வள்ளலார் கொள்கை எவ்வளவு.உண்மையானது. தூய்மையானது என்பதை அறிந்து கொள்ள முடியும்...

சில மேதாவிகள் எனக்குப் பாடம் சொல்லித் தருகிறார்களாம்..
அவர்கள் எழுதி விற்பனை செய்யும் புத்தகத்தை படித்து சுத்த சன்மார்க்கம் தெரிந்து கொள்ள வேண்டுமாம்..

நான் யாருடைய புத்தகத்தையைம் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் கருணையால் வள்ளலார் எழுதி வெளியிட்ட திருஅருட்பா ஒன்றே எனக்கு போதுமானது...
அவையே என்னை வாழ வைக்கும்..

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

கற்வாழ்க்கை பொய்யேநீர் களித்ததெலாம் வீணே

உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே

விண்டதனால் என்இனிநீர் சமரசசன் மார்க்க

மெய்ந்நெறியைக் கடைப்பிடித்து மெய்ப்பொருள்நன் குணர்ந்தே

எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.!

என்று வள்ளலாரே சொல்லி உள்ளார் ...

கண்டது.கேட்டது.
கற்றது.களித்தது.
உண்டது .உட்கொண்டது எல்லாம் குறையே..எல்லாம் பொய்யே ! இதுவரையில் உண்மை அறிந்திலிரே....
என்கிறார்...

எனவே நான் திருஅருட்பா தவிர வேறு எந்த நூல்களையும் படிக்க மாட்டேன்....படிக்க வேண்டிய அவசியமும் இல்லை..

திருஅருட்பா வில் உள்ளது வேறு எந்த நூல்களிலும் கிடையாது..

மற்ற நூல்களில் உள்ளது அனைத்தும் திருஅருட்பா வில் உள்ளது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்...

நான் எழுதியதில் வருடம் நாட்கள் தவறாக இருந்தால் திருஅருட்பா வைப் பார்த்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

வள்ளலார் வாழ்க்கை வரலாற்றை வள்ளலாரே தெளிவாக.திருஅருட்பாவில்  எழுதி வைத்துள்ளார்...படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது சாதாரண காரியம் அல்ல...

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை என்கிறார்...

வள்ளலார் போல் வாழ்ந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்..

என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே என்று சொல்கின்றார்....

சுத்த தேகம்.
பிரணவதேகம் .
ஞானதேகம் .
பூரண ஒழுக்கத்தினால் மட்டுமே.. அருள் தன்மைக்குத் தகுந்தவாறு  மாற்றம் அடையும்..

வள்ளலார் முத்தேக சித்தி பெற்று இறைவனோடு கலந்தவர்...

வள்ளலார் இறுதிப் பாடல்.!


சத்திய அறிவிப்பு !

1. ஐயன்அருள் வருகின்ற தருணம்இது கண்டீர்
ஐயமிலை ஐயமிலை ஐயன்அடி ஆணை
மெய்யன்எனை ஆட்கொண்ட வித்தகன்சிற் சபையில்
விளங்குகின்ற சித்தன்எலாம் வல்லஒரு விமலன்
துய்யன்அருட் பெருஞ்சோதி துரியநட நாதன்
சுகஅமுதன் என்னுடயை துரைஅமர்ந்திங் கிருக்க
வையமிசைத் திருக்கோயில் அலங்கரிமின் விரைந்தே
மணியாலும் பொன்னாலும் மலராலும் வியந்தே.

2. தனித்தலைமைப் பெரும்பதிஎன் தந்தைவரு கின்ற
தருணம்இது சத்தியம்காண் சகதலத்தீர் கேண்மின்
இனித்தநறுங் கனிபோன்றே என்னுளம்தித் திக்க
இன்னமுதம் அளித்தென்னை ஏழுலகும் போற்ற
மனித்தஉடம் பிதைஅழியா வாய்மைஉடம் பாக்கி
மன்னியசித் தெல்லாம்செய் வல்லபமும் கொடுத்தே
கனித்தசிவா னந்தமெனும் பெரும்போகம் தனிலே
களித்திடவைத் திடுகின்ற காலையும்இங் கிதுவே.

3. சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்
சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்
இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்
இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்
சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்
தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்
செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்
திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.

4. என்சாமி எனதுதுரை என்உயிர்நா யகனார்
இன்றுவந்து நான்இருக்கும் இடத்தில்அமர் கின்றார்
பின்சாரும் இரண்டரைநா ழிகைக்குள்ளே எனது
பேருடம்பில் கலந்துளத்தே பிரியாமல் இருப்பார்
தன்சாதி உடையபெருந் தவத்தாலே நான்தான்
சாற்றுகின்றேன் அறிந்திதுதான் சத்தியம்சத் தியமே
மின்சாரும் இடைமடவாய்இரண்டரை என்மொழிநின் தனக்கே
வெளியாகும் இரண்டரைநா ழிகைகடந்த போதே. !

மேலே கண்ட பாடல்களை பொறுமையாக  ஊன்றி படித்து தெரிந்து கொள்ளவும்....

சுத்த சன்மார்க்க கொள்கைகளில் மிகவும் முக்கியமானது முதன்மையானது.

**கடவுள் ஒருவரே !
அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்**
என்பதாகும்..

இன்னும் விரித்தால் பெருகும்......

எல்லா உயிர்கள் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.

திங்கள், 19 நவம்பர், 2018

ஞான சித்தர் வள்ளலார் !

ஞான சித்தர் வள்ளலார் !

சித்தர்கள் மூன்று வகை !

கர்ம சித்தர் .
யோக சித்தர்.
ஞான சித்தர்.

கரம் சித்தர்கள் சமாதி அடைந்தவர்கள்...!

யோக சித்தர்கள் பஞ்ச பூதங்களில் கலந்தவர்கள்.!

ஞான சித்தர்கள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்தவர்கள் !

கர்ம சித்தர்களுக்கும்..யோக சித்தர்களுக்கும் மீண்டும் பிறப்பு உண்டு...

ஞான சித்தர்களுக்கு மட்டுமே பிறப்பு இறப்பு என்பது கிடையாது...இவர்கள் மட்டுமே பேரின்ப சித்தி பெருவாழ்வு பெற்றவர்கள். இறைவனுடன் தொடர்பு கொள்ளும் தகுதி உடையவர்கள்..

சாதி.சமயம்.மதம் !

உலகம் தோன்றிய காலத்திலிருந்து, ஒவ்வொரு காலக்கட்டத்திலும், சித்தர்கள், யோகிகள், ஞானிகள், கர்த்தாக்கள் தோன்றிகொண்டே இருக்கிறார்கள். அவர்களுக்கு சுத்த ஆன்மாக்கள் என்று பெயர்.

அவர்கள் உலகில் தோன்றக் காரணம் மனித சமுதாயத்தை மேம்படுத்த, ஒழுங்குபடுத்த, சீர்படுத்த வந்தவர்களாகும். ஆனால் அவர்கள் மாயையில் சிக்குண்டு உண்மையும் பொய்யும் கலந்த செய்திகளை உலகுக்கு தந்துவிட்டு மாண்டு போய்விட்டார்கள்.

அவர்களுக்கு கர்ம சித்தர்கள் என்று பெயர் சூட்டுகிறார் வள்ளலார்...

அவர்களால் தான்.சாதி.சமயம்.மதம் போன்ற கொள்கைகள் உண்டாக்கப்பட்டது

அதனால் மக்களிடையே குழப்பமும் பிரச்சனையும் வேற்றுமையும் உண்டாயிற்று. அவற்றை தடை செய்யத்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலாரை இந்த உலகிற்கு அனுப்பி வைக்கிறார்..

1874 - ம் ஆண்டு வரையில் கர்ம சித்தர்களுடைய காலமாக இருந்தது. அதன் பின் ஞான சித்தருடைய காலம் ஆரம்பம் ஆகியுள்ளது என்பதை வள்ளலார் தெளிவு படுத்துகிறார், கீழே கண்ட பத்தியில்.

சமரச சுத்த சன்மார்க்க
சத்திய ஞானாசாரம் என்னும் தலைப்பில் உண்மையை வெளிப்படுத்துகிறார்..

இதுவரையில் கர்ம சித்தருடைய காலம் அதனால் சமயங்களும், மதங்களும் பரவி இருந்தன, இப்போது வரப்போகிறது ஞான சித்தருடைய காலம். இனி ஜாதி, சமய, மதம், முதலான ஆசாரங்கள் எல்லாம் போய் சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான ஆசாரம் ஒன்றே  விளங்கும்.

சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்கள், மூர்த்திகள், ஈஸ்வரன், பிரம்மன், சிவம், முதலிய தத்துவங்கள் காலப் பிரமாண பரியந்தம் இருப்பதே ஒழிய அதற்க்கு மேல் இருக்காது.

சமய மதங்களில் சொல்லுகின்ற கர்த்தர்களுடைய சித்திகள் சர்வ சித்திகளையுடைய கடவுளின் சித்தியின் லேசங்கள் அதாவது (சிறிய துகள்கள்). அந்த சர்வ சித்திகளுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள். கோடி கோடி பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கிறார்கள்.


இப்போது இருக்கும் வேதாகமங்கள் புராணங்களிலும் சமய மதங்களிலும் லட்சியம் வைக்காதீர்கள். வைத்தால் சமரச சுத்த சன்மார்கத்தில் உங்களுக்கு லட்சியம் வராது. வராவிட்டால் நீங்கள் அடையப்போகிறது ஒன்றும் இல்லை. ஆதலால், அவைகளையெல்லாம் பற்றற விட்டு சர்வ சித்தியை உடைய கடவுள் ஒருவர் உண்டு என்றும் அவர் ஒருவரே அருட்பெரும் ஜோதியர் என்றும், அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்ய வேண்டும்.

சாதனம் இரண்டு !
பரோபகாரம்.!
சத்விசாரம்...!

சமரச சுத்த சன்மார்கத்திற்கு உரிய உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி யை வழிபாடு யசெய்வதற்கும்.தொடர்பு கொள்வதற்கும் சாதனம் இருவகையாகும் : 1 . பர உபகாரம். 2 . சத்விசாரம்.

பர உபகாரம் என்பது :- தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும், உபகாரம் செய்வது.

சத்விசாரம் என்பது :- 

புருவ மத்தியில் உள்ள ஆன்மாவிடம் இடைவிடாது மனதை  தொடர்பு கொண்டு நிற்கச் செய்தல்.

ஆன்ம நேய   தயா விசாரத்தோடு எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் நினைந்து கருணை மயமாக இருப்பது.

கடவுளது புகழை விசாரித்தல் ஆன்மாவின் உண்மையை விசாரித்தல். தன் சிறுமையை கடவுளிடத்தில் விண்ணப்பித்தல் இந்த மார்க்கத்தால் தான் சுத்த தேகம் பெற வேண்டும் என்று தெளிவாக எழுதி வைத்துள்ளார் நம் பெருமான் வள்ளலார் அவர்கள்.

சன்மார்கிகளாகிய  ஆகிய நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம் என்பதை சற்று சிந்தித்து பார்த்து கடைபிடிக்க வேண்டும்.

ஜாதி, மத, சமய பழக்க வழக்கங்களிலே ஊறி போய் அதையும் விடாமல் இதையும் விடாமல் சன்மார்கத்தை பிடித்துக்கொண்டு மதில் மேல் உள்ள பூனைப்போல்  அலைந்துகொண்டு இருக்கிறீர்கள். இப்படி இருந்தால் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்கத்தில் எப்படி வளர்ச்சி அடைய முடியும் ? சற்று சிந்தித்து பாருங்கள்.


நீங்கள் திருந்த மாடீர்கள் என்பது  வள்ளலாருக்குத் தெரியும்

நீங்கள் திருந்தாவிட்டாலும், திருந்தியவர்கள் மூலம் வள்ளலார் காட்டிய அருட்பெரும் ஜோதி ஆண்டவரின் பெருங்கருணையால் சுத்த சன்மார்க்கம் செயல் பட்டுக் கொண்டு இருக்கிறது.

1874 - ஆம் வருடத்திற்கு பிறகு சுத்த சன்மார்க்கம் பல வகைகளிலும் பல வழிகளிலும் பல துறைகளிலும் மறைமுகமாக.தீவிரமாகசெயல் பட்டுக்கொண்டு இருக்கிறது.

இன்னும் கொஞ்ச காலத்தில் வள்ளலார் காட்டிய ஒரே கடவுள் அருட்பெரும் ஜோதியும், வள்ளலார் அமைத்த சுத்த சன்மார்க்க கொள்கைகளும் உலகம் முழுவதும் நிரம்பி நிற்கப்போகிறது. இது சத்தியம்.

வேதம், ஆகமம், புராணம், இதிகாசம், கிருத்தவம், இஸ்லாம், புத்தம் முதலிய அனைத்து மத மார்க்கங்களும் இன்னும் கொஞ்ச காலத்தில் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து ஒழிந்து இருக்கும் இடம் தெரியாமல் விழுந்து .மறைந்து விடும்.

ஞான சித்தர் காலம் ஆரம்பம் ஆகிவிட்டது ஆதலால் பொய்யானவை அனைத்தும் இருக்கும் இடம் தெரியாமல் அழிந்து விடும் என்பதை அருட்பா பாடல் மூலம் தெரிவிக்கின்றார் வள்ளலார் அவர்கள்.

பாடல் !

பன்மார்க்க மெல்லாம் பசையற்று ஒழிந்தனவே

சன்மார்க்க மொன்றே தழைத்ததுவே -- சொன்மார்க்கத்

எல்லா உலகும் இசைந்தனவே எம்பெருமான்

கொள்ளா நெறி அருளைக் கொண்டு.

மேலும்...

சாதிகுலம் என்றும் சமயமதம் என்றும் உப

நீதியில்லா ஆச்சிரம நீட்டென்றும் -- ஓதுகின்ற

பேயாட்டமெல்லாம் பிதிர்ந்து ஒழிந்ததுவே பிறர்தம்

வாயாட்டம் தீர்ந்தனவே மற்று.

என்பன போன்ற ஆயிரக்கணக்கான பாடல்களிலே தெரிவிக்கின்றார்...

எனவே நாம் கர்ம சித்தர்கள் காட்டிய சமய மதவாத கொள்கைகளை முற்றும் பற்று அற விட்டு விட்டு.ஞானசித்தராகிய வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றி வாழ்வாங்கு வாழ்வோம்...

நரை.திரை.பிணி.மூப்பு.துன்பம் மரணம் இல்லாமல் வாழ்வதற்கு வழிகாட்டுவதே வள்ளலார் காட்டும் சுத்த சன்மார்க்கம்....

வள்ளலார் பாடல் !

மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ

சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை

எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்

பற்றியபற் றனைத்தினையும் பற்றறவிட் டருளம்

பலப்பற்றே பற்றுமினோ எற்றும்இற வீரே.!

என்ற பாடல் வழியாக தெளிவாக தெரியப்படுத்துகின்றார்

இன்னும் விரிக்கில் பெருகும்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

சனி, 17 நவம்பர், 2018

வள்ளலாரின் கொள்கைகள் ! மக்களின் குரல் !

வள்ளலாரின் கொள்கைகள் ! மக்களின் குரல் !

வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கைகள் மக்கள் மத்தியில் அதி தீவிரமாக வளர்ந்து வருகின்றது..

வாதத்தாலும்.விவாதத்தாலும்.கருத்து மோதல்களாலும்.மக்கள் மத்தியில் திருஅருட்பா வேகமாக வளரந்து வருகின்றது..

இவற்றை எல்லாம் தினமும் ஊன்றி கவனித்து வருகிறேன்.

என்னிடம் வாட்ஸ்அப்பில்  தனிநபர்.மற்றும் குரூப்  900 தொள்ளாயிரத்திற்கும் மேல் உள்ளது..

பேஸ்புக்கில் மூன்று தலைப்புக்களில் சுமார் 15 ஆயிரம் பேர் உள்ளார்கள் அவரவர்கள்  குரூப்பில் ஆயிரக்கணக்கான நபர்கள் உள்ளார்கள்..

அதற்குமேல் வலைத்தளங்கள் உள்ளன..

இவை அனைத்திற்கும் கட்டுரைகள் தவறாமல் அனுப்பி விடுவேன்..

இத்தனையும் எவருடைய உதவியும் இல்லாமல்  நானே தினமும் செய்து கொண்டு வருகிறேன்..

சலிப்போ வருத்தமோ கவலையோ இல்லாமல் மகிழ்ச்சி யுடன் ஆனந்தமாக செய்து வருகிறேன்..

ஒரு நாளைக்கு நான் அனுப்பும் கட்டுரைகள் சுமார்  ஒரு லட்சத்திற்கும் மேலான நபர்களை சென்று அடைகின்றன.

பொற்காலம் !

இது சுத்த சன்மார்க்க பொற்காலம் என்பது தெளிவாகத் தெரிகிறது..

அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்.

நான் எழுதும் கட்டுரைகளை இடைவிடாது லட்சோப லட்சம் மக்கள் படித்து வருகிறார்கள்...என்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.

சில சமய மத ஈடுபாடுள்ள சன்மார்க்க சான்றோர்களும்.மற்ற சமயம் சார்ந்த சான்றோர்களும் எதிர்ப்பும்.வாதமும் தெரிவிக்கின்றார்கள்.
என்பது அனைவருக்கும் தெரியும்.

தினமும் இடைவிடாது போனில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுகிறார்கள்..

சில அன்பர்கள் !

வள்ளலார் கொள்கைகள் மற்றும் அவர் காட்டிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைப் பற்றியும்..திருமூலர்.
திருவள்ளுவர்.
நாயன்மார்கள்.
மற்றும் சித்தர்கள் மேலும்

வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள்.இதிகாசங்கள் எல்லாமே.
வள்ளலாருக்கு  முன்னாடியும் பல அருளாளர்கள் சொல்லி உள்ளார்களே என்ற வினாவும் எழுப்பி கேள்விக் கணைகளை கேட்பார்கள்..

வள்ளலார் கண்ட காட்டிய கலந்து கொண்ட அருட்பெருஞ் ஜோதிக்கும் மற்றவர்கள் சொல்லிய ஜோதிக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு என்பதை வள்ளலார் சொல்லிய ஆதாரத்தோடு தெளிவாக புரிய வைப்பதற்குள் நேரம் போவதே தெரிவதில்லை.

அவர்களுக்கு பொறுமையாக புரிய வைக்கவே தினமும் நேரம் போதவில்லை..

இடையில் இரவில் தான் கட்டுரை எழுத முடிகிறது.

கேட்காத கேள்வி எல்லாம் கேட்பார்கள் அவர்களுக்கு புரியும்படி சொல்லி புரிய வைப்பதே எனது கடமையாகக் கருதி புரிய வைக்கிறேன்...

இவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் எனக்கு கொடுத்த வரமாகக் கருதுகிறேன்.

ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூட தூங்க வாய்ப்பில்லை...

இரவு 12 மணிக்கு எல்லாம். வெளிநாட்டில் இருந்து அன்பர்கள் போனில் தொடர்பு கொள்வார்கள்
அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரவர்கள் சந்தேகங்களை தெளிவடைய செய்விப்பது மட்டற்ற மகிழ்ச்சியாக இருக்கும்.அவர்களும் மகிழ்ச்சி யுடன் புரிந்து கொள்கிறார்கள்...

இதை எல்லாம் எதற்காக சொல்லுகிறேன் என்றால்... என்னைப்போல் ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் தங்கள் சன்மார்க்க பணிகளை செவ்வென செய்து வருகிறார்கள்...

அவர்களையும் பாராட்ட கடமை பட்டுள்ளேன்.

*அனுபவத்தைக் கேட்பார்கள் !*

சில அன்பர்கள் என் அனுபவத்தைக் கேட்பார்கள்..அதை மட்டும் வெளியில் சொல்ல மாட்டேன்.

இன்னும் ஏற வேண்டிய படிகள் நிறைய உள்ளன.எனவே தம்பட்டம் அடிக்கக் கூடாது என்பது என் எண்ணம்...

நான் சராசரி மனிதனாகவே.
சகஜமாக உங்களிடம.உரையாடிக் கொண்டு இருப்பதே மகிழ்ச்சி யாக கருதுகிறேன்.

யாரும் வருத்தப்பட வேண்டாம்..

மேலும் தமிழகத்திலும்.வெளி மாநிலங்களிலும்.வெளிநாடுகளிலும் சன்மார்க்க சங்கங்களை தோற்றுவித்து ..அன்னதான பணிகளும் சுத்த சன்மார்க்க சொற்பொழிவுகளும் செய்து வருகிறார்கள்.

உலகம் எங்கும் வள்ளலார் கொள்கைகள் அதிதீவிரமாக சென்று கொண்டு உள்ளன..

இனி சுத்த சன்மார்க்க காலம் என்று வள்ளலார் சொல்லியது.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் வாக்கு என்பது வெட்ட வெளிச்சமாக பிரகாசிக்கின்றது.....

வள்ளலார் பதிவு செய்துள்ளது !

மெய் ஒன்று சன்மார்க்கமே தான்---என்றும் விளங்கப் படைப்பாதி மெய்த்தொழில் நீ தான்

செய் என்று தந்தது பாரீர் --திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி !

ஜோதியுட் ஜோதியுட் ஜோதி -சுத்த
ஜோதி சிவஜோதி ஜோதியுட் ஜோதி

ஜோதியுட் ஜோதியுட் ஜோதி!

என்று ஆனந்தக் களிப்பு  -3 ஆம் பகுதியில் வள்ளலார் சொல்லி உள்ளார்...

மேலும்
*ஆனந்த மேலீடு*
 என்ற தலைபில்

அருள் அற்புதமான பாடல்கள் !

எளிய தமிழில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் பதிவு செய்து உள்ளார்..

பொருமையாக படித்து தெரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்..

பாடல்கள் !

ஆடேடி பந்து ஆடேடி பந்து
ஆடேடி பந்து ஆடேடி பந்து.

கண்ணிகள்

2. வாழிஎன் தோழிஎன் வார்த்தைகேள் என்றும்
மரணமில் லாவரம் நான்பெற்றுக் கொண்டேன்

சூழியற் செஞ்சுடர் தோற்றுறு கீழ்பால்
தூய்த்திசை நோக்கினேன் சீர்த்திகழ் சித்தி
ஊழிதோ றூழிநின் றாடுவன் நீயும்
உன்னுதி யேல்இங்கே மன்னரு ளாணை
ஆழி கரத்தணிந் தாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

3. இசையாமல் போனவர் எல்லாரும் நாண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
வசையாதும் இல்லாத மேற்றிசை நோக்கி
வந்தேன்என் தோழிநீ வாழிகாண் வேறு
நசையாதே என்னுடை நண்பது வேண்டில்
நன்மார்க்க மாம்சுத்த சன்மார்க்கம் தன்னில்
அசையாமல் நின்றங்கே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

4. இன்பாலே உலகத்தார் எல்லாரும் காண
இறவாப் பெருவரம் யான்பெற்றுக் கொண்டேன்
தென்பாலே நோக்கினேன் சித்தாடு கின்ற
திருநாள் இதுதொட்டுச் சேர்ந்தது தோழி
துன்பாலே அசைந்தது நீக்கிஎன் னோடே
சுத்தசன் மார்க்கத்தில் ஒத்தவ ளாகி
அன்பாலே அறிவாலே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

5. சதுமறை ஆகம சாத்திரம் எல்லாம்
சந்தைப் படிப்புநம் சொந்தப் படிப்போ
விதுநெறி சுத்தசன் மார்க்கத்தில் சாகா
வித்தையைக் கற்றனன் உத்தரம் எனுமோர்
பொதுவளர் திசைநோக்கி வந்தனன் என்றும்
பொன்றாமை வேண்டிடில் என்தோழி நீதான்
அதுஇது என்னாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

6. தப்பாலே சகத்தவர் சாவே துணிந்தார்
தாமுளம் நாணநான் சாதலைத் தவிர்த்தே
எப்பாலும் எக்காலும் இருத்தலே பெற்றேன்
என்தோழி வாழிநீ என்னொடு கூடி
துப்பாலே விளங்கிய சுத்தசன் மார்க்கச்
சோதிஎன் றோதிய வீதியை விட்டே
அப்பாலே போகாமல் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

7. வெங்கேத மரணத்தை விடுவித்து விட்டேன்
விச்சைஎ லாம்கற்றென் இச்சையின் வண்ணம்
எங்கேயும் ஆடுதற் கெய்தினேன் தோழி
என்மொழி சத்தியம் என்னோடும் கூடி
இங்கே களிப்பது நன்றிந்த உலகோ
ஏதக் குழியில் இழுக்கும் அதனால்
அங்கேபா ராதேநீ ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

8. சிவமே பொருள்என் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்
உவமேயம் இல்லாத ஒருநிலை தன்னில்
ஒன்றிரண் டென்னாத உண்மையில் நின்றேன்
தவமே புரிகின்றார் எல்லாரும் காணத்
தயவால் அழைக்கின்றேன் கயவாதே தோழி
அவமேபோ காதென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

9. துஞ்சாத நிலைஒன்று சுத்தசன் மார்க்கச்
சூழலில் உண்டது சொல்லள வன்றே
எஞ்சாத அருளாலே யான்பெற்றுக் கொண்டேன்
இறந்தாரை எல்லாம் எழுப்புதல் வல்லேன்
விஞ்சாத அறிவாலே தோழிநீ இங்கே
வேதுசெய் மரணத்துக் கெதுசெய்வோ மென்றே
அஞ்சாமல் என்னோடே ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

10. ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி

11. துதிசெயும் முத்தரும் சித்தரும் காணச்
சுத்தசன் மார்க்கத்தில் உத்தம ஞானப்
பதிசெயும் சித்திகள் பற்பல வாகப்
பாரிடை வானிடைப் பற்பல காலம்
விதிசெயப் பெற்றனன் இன்றுதொட் டென்றும்
மெய்யருட் சோதியால் விளைவிப்பன் நீஅவ்
அதிசயம் பார்க்கலாம் ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி
ஆடேடி பந்து ஆடேடி பந்து
அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து.

கலிவிருத்தம்

12. பூவாம லேநிதம் காய்த்த இடத்தும்
பூவார் மலர்கொண்டு பந்தாடா நின்றேன்
சாவா வரம்தந்து வாழ்வாயோ பந்தே
சாவாமல் என்னொடு வீழ்வாயோ பந்தே !

என்ற பாடல்களில் சுத்த சன்மார்க்க கருத்துக்களை மிகவும் தெளிவாக பதிவு செய்துள்ளார்..

படித்து பயன் பெறுவோம்...

மேலும் ஒரு பாடல் !

எவ்வுலகும் அண்டங்கள் எத்தனையும் நான்காண

இவ்வுலகில் எந்தை எனக்களித்தான் - எவ்வுயிரும்

சன்மார்க்க சங்கம் தனைஅடையச் செய்வித்தே

என்மார்க்கம் காண்பேன் இனி.!

*என்மார்க்கம் இறப்பொழிக்கும் சன்மார்க்கம் !*

தடை அற்ற பெருநெறி வள்ளலார் விதைத்த  சுத்த சன்மார்க்கம்..

எல்லா உலகும் நன்மை பயக்கும்...அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஆணை !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஒங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

மரணம் இல்லாப் பெருவாழ்வு சாத்தியமா ? சந்தேகமா ?

மரணம் இல்லாப் பெருவாழ்வு சாத்தியமா ? சந்தேகமா ?

மரணம் இல்லாப் பெருவாழ்வு சாத்தியமா ? என்று உலகில் உள்ள  எல்லோரும் வியக்குகிறார்கள்.

வள்ளல் பெருமான் மரணத்தை வென்று வாழ்ந்து கொண்டு உள்ளார் என்பது சத்தியமான உண்மை...

வள்ளல் பெருமான் சுத்த சன்மார்க்க கொள்கையே மரணம் இல்லாப் பெருவாழ்வு வாழ்வதற்கு வழிகாட்டுவதே யாகும்.

இறைவனுடைய கட்டளையும் அதுவே !

இந்த உண்மைத் தெரியாமல் கடவுள் மறுப்பு கொள்கை உடைய பகுத்தறிவாளர்கள்... பிராமணர்கள் மீது உள்ள வெறுப்பால்...உண்மை என்னவென்று தெரியாமல் முட்டாள் தனமாக.
வள்ளலாரை கற்பூரத்தை வைத்து பிராமணர்கள் கொளுத்திவிட்டார்கள் என்று பொய் பிரச்சாரம் செய்து மக்களை குழப்பி விட்டார்கள்.

அறிவு விளக்கம் இல்லாத அருளாளர்களும். ஆன்மீக வாதிகளும் உண்மைத் தெரியாமல்  கண்டபடி உளரிக் கொண்டு உள்ளார்கள்.

*மக்கள் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.*

எல்லா உயிர்களும் வாழ்வதற்கு பொருள் உணவு வேண்டும்.என்பது அனைவரும் அறிந்த்தே..பொருள் உணவு இல்லை என்றால் எல்லா உயிர்களும் அழிந்து மாண்டு போகின்றது.உண்மைதான்...

உயிர் தோன்றிய காலத்தில் இருந்தே பொருள் உணவால் சிறியதாக தோன்றிய
(தாவரங்களில் இருந்து மனிதர்கள் வரை) உடம்பு பெரியதாக வளர்ச்சி அடைந்து முதுமை அடைந்து பொருள் உணவை முழு வயது உள்ளவரை. ஏற்றுக் கொள்ள முடியாமல் மாண்டு போகின்றது...

மனித உடம்பு வளர்ச்சிக்கு நாம் தினமும் ஆகாரம் உண்கின்றோம்.நாம் உண்ணும்  ஆகாரத்தை ஒருமணி நேரத்தில் அந்த அன்னத்தில் உள்ள அமுதைப் பிரித்து எடுத்து ஊட்ட வேண்டிய தத்துவ உருப்புகளுக்கு ஊட்டுகின்றது.

மறுபடியும் இரண்டு மணி நேரத்தில் அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி  இரண்டரை வராகன் எடையில் கோச நுனியில் ஒன்றும்.நாபியில் ஒன்றும்.பிரமந்திரத்தில் அரையுஞ் சேர்த்து

மற்றவைகளைக் கொண்டு அங்காங்கு விளக்கத்தை யுண்டு பண்ணி .ஈளை.குரும்பை.நகத்தூசு.தொப்புள் அழுக்கை வெளிப்படுத்துகின்றது.

மேற்படி அன்னத்தை மூன்று மணி நேரத்தில் அதில் உள்ள  திரவாம்சத்தைப் பிரித்து.உதிரமாக்கி ஊட்டுகின்றது .
மூன்று மணிக்கு மேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது.இதுபோல் எந்த வஸ்துக்களையும்.தன்னைத்தானே பிரிக்கின்றது...

*இது யாரால் இப்படி செய்யப் படுகின்றது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்*

.நாம் உண்ணும் உணவு பல இரசாயன மாற்றம் செய்து இரத்தமாக மாற்றம் அடைகின்றது. பின் இரத்தமானது உடம்பு வளர்ச்சிக்கு தேவையானதை எடுத்துக் கொண்டு.. அதில் உள்ள வீரிய அணுக்களை பிரித்து வேதியல் மாற்றம் போல் வீரியமான சுக்கிலமாக ஒருபையில் சேர்க்கிறது.

அதற்கு குண்டலினி பை என்றும் குண்டலினி வட்டம் என்றும் சொல்லப்படுகிறது...
அந்த விந்து என்னும் சுக்கிலம் தான் ஆண் பெண் உறவு கொண்டு மீண்டும் ஒரு உயிரை உண்டாக்குகிறது.

இவை அனைத்தும் நாம் உண்ணும் பொருள் உணவால் நம் உடம்பு இயங்குகிறது.. பின்பு நரை.திரை.பிணி.மூப்பு அடைந்து மரணம் வந்து விடுகின்றது.

உடம்பை விட்டு உயிர் பிரிகின்றதை மரணம் என்றும் இறப்பு என்றும் பெயர் வைத்துள்ளோம்.

*வள்ளலார் கண்டு அனுபவித்த அருள் உணவு.!*

அழியும் உடம்பை அழியாமை யாக்கும்  வகையை கண்டு பிடித்தவர் வள்ளலார் !

வள்ளலார் பாடல் !

உடம்புவரு வகைஅறியீர் உயிர்வகையை அறியீர்

உடல்பருக்க உண்டுநிதம் உறங்குதற்கே அறிவீர்

மடம்புகுபேய் மனத்தாலே மயங்குகின்றீர் மனத்தை

வசப்படுத்தீர் வசப்படுத்தும் வழிதுறைகற் றறியீர்

இடம்பெறுபொய் வாழ்க்கையிலே இன்பதுன்பம் அடுத்தே

எண்ணிஎண்ணி இளைக்கின்றீர் ஏழைஉல கீரே

நடம்புரிஎன் தனித்தந்தை வருகின்ற தருணம்

நண்ணியது நண்ணுமினோ புண்ணியஞ்சார் வீரே.!

ஆன்மாவிற்கு உயிர் வந்த வழியும்.உடம்பு வந்த வழியும் தெரிந்து கொண்டால் தான் ஆண்டவர் யார் என்பது தெரிந்து கொள்ள முடியும்..அந்த உண்மையைத் தெரிந்து கொள்ளாமல் எதையும் தெரிந்து கொள்ள முடியாது....

மேலே கண்ட பாடலின் வாயிலாக மக்களுக்கு புரிய வைக்கிறார்.. உடம்பையும்.உயிரையும்.ஆன்மாவையும் இயக்குகின்றவர் யார் ? என்பதை கண்டு பிடிக்கின்றார்...

சமய மதங்கள் சொல்லிய கடவுள்கள் யாவும் உண்மைக் கடவுள்கள் அல்ல ! எல்லாமே ஜட தத்துவங்கள்.இவைகள் யாவும் ஜடங்கள் இந்தக் கடவுள்களுக்கு எந்த சக்தியும் ஆற்றலும் இல்லை .என்பதை வள்ளலார் தெளிவாக தெரிந்து அறிந்து புரிந்து கொள்கிறார்..

தனது சத்திய அறிவால் கடவுளைக் காண முயற்சி செய்து உண்மைக் கடவுளைக் கண்டு கொள்கிறார்...

வள்ளலார் சொல்வதை நன்கு கவனிக்கவும் !

தமது திருவருட் சக்தியால்
தோற்றுவித்தல்.
வாழ்வித்தல்
குற்றம் நீக்குவித்தல்
பக்குவம் வருவித்தல்
விளக்கம் செய்வித்தல்

என்னும் ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை.
இயற்று விக்கின்றவர் என்றும்.
எல்லாம் ஆனவர் என்றும்.
ஒன்றும் அல்லாதவர் என்றும்.
சர்வ காருண்யர் என்றும்.
சர்வ வல்லபர் என்றும்.

எல்லாம் உடையவராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத தனிப்பெருந்தலைமை..

அருட்பெருஞ்ஜோதியர்

என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே ! அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய் அறிவு என்னும் பூரணப் பொது வெளியில் .அறிவார் அறியும் வண்ணங்கள் எல்லாமாகி விளங்குகின்றார்...

என்ற உண்மையை அறிந்து கொள்கிறார்.வள்ளலார்.
மரணத்தை வெல்லும் வழியைக் கண்டு பிடிக்கின்றார்...

முன்பு சொல்லியதைப் போல். பொருள் உணவால் உடம்பும் உயிரும் பிரிகின்றது .ஏன் பிரிகிறது ? எதனால் பிரிகிறது ? என்பதை ஆராய்ந்து.தெரிந்து பிரியாமல் அழியாமல் வாழும் வழியைக் கண்டு பிடிக்கின்றார்..

அருள் உணவு பெற்றால் தான் உடம்பையும் உயிரையும் காப்பாற்ற முடியும்..பிறப்பு இறப்பு இல்லாமல் வாழமுடியும்..என்பதை தெரிந்து கொள்கிறார்.

அருளை யாரிடம் பெறுவது ? நம்மை படைத்த உண்மைக் கடவுள்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம்தான் பெற முடியும் .பெற வேண்டும் என்ற உண்மையை தெரிந்து கொள்கிறார்...

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொள்வது எவ்வண்ணம் என்பதும்.அவரிடம் அருளைப் பெறுவது எவ்வண்ணம் என்பதும் தான் வள்ளலார் எழுதிய திருஅருட்பா முழுவதும் சொல்லப்பட்டு இருக்கின்றது..வள்ளலார் சொல்லியுள்ள ஒழுக்கத்தை கடைபிடித்து திருஅருட்பாவைப் படித்தால் தான் புரியும்.

அருளைப் பெறுவது எப்படி என்பதை ஞானசரியை 28 பாடல்களில் தெளிவாக சொல்லி உள்ளார்...

முதல்பாடல் மிகவும் முக்கியமான பாடல் !

நினைந்துநினைந் துணர்ந்துணர்ந்து நெகிழ்ந்துநெகிழ்ந் தன்பே

நிறைந்துநிறைந் தூற்றெழுங்கண்ணீரதனால் உடம்பு

நனைந்துநனைந் தருளமுதே நன்னிதியே ஞான

நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று

வனைந்துவனைந் தேத்துதும்நாம் வம்மின்உல கியலீர்

மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்

புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியஞ்சொல் கின்றேன்

பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே.!

மேலை கண்ட பாடலிலே இடைவிடாது இறைவனை தொடர்பு கொண்டு நினைந்து.உணர்ந்து.நெகிழ்ந்து அன்பே நிறைந்து ..உடம்பு முழுவதும் கண்ணீர்  நிரம்பும் வரை அழுது நன்நிதி என்னும்.என்றும் அழியாத அருள் அமுத நிதியைப் பெற வேண்டும்.என்கிறார்.

என் உரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்தும் நாம் வம்மின் உலகிலயலீர்
மரணம் இல்லா பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்.

நான் மற்றவர் போல் புனைந்து உரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன் .நான் அருளைப் பெற்று மரணத்தை வென்ற அனுபவத்தை சொல்கிறேன் பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே என்கிறார்...

உடம்பு மாற்றம் !

மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பது ஊன் உடம்போடு நீண்ட காலம் வாழ்வதும் அல்ல...

சமாதி நிலையில் ஒடுங்கி இருப்பதும் அல்ல..!

பஞ்ச பூதங்களில் கலப்பதும் அல்ல.!

காணாமல் போய்விடுவதும் அல்ல !

ஊன் உடம்பை அருளினால்  ஒளி உடம்பாக மாற்றி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் கலந்து மீண்டும் பிறப்பும் இறப்பும் இல்லாமல் வாழும் வாழும் வாழ்க்கையே மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும்

அதற்குத்தான் கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆதல் என்று பெயர் அதற்கு சுத்த பிரணவ ஞான தேகம் என்றும் பெயர்.பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்றும் பெயர்...மரணம் இல்லாப் பெருவாழ்வு என்றும் பெயர்...

அருள் பெற்றால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும்..

உபாய மார்க்கத்தாலோ.உண்மையைத் தெரிந்து கொண்டதாலோ மரணத்தை வெல்ல முடியாது. அனுபவ மார்க்கத்தால் மட்டுமே அருளைப் பெற்று  மரணத்தை வெல்ல முடியும்..வேறு சமய மத மார்க்கத்தின் வழியாக மரணத்தை வெல்ல சாத்தியமே இல்லை..

உடம்பும் உயிரும் அழிக்காமல்  மாற்றம் அடைய செய்விப்பதே மரணத்தை வெல்வதாகும்..அவை வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பொது நெறி என்னும் மெய்நெறி.
திருநெறியால் மட்டுமே சாத்தியமாகும்.

வள்ளலார் பாடல் !

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்

சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

என்னும் பாடலின் வாயிலாக உண்மையைத் தெரிவிக்கின்றார்.

அருள் பெறும் வழி !

அருள் நம் சிரநடு ஆன்மாவில் இருந்து சுரக்க வேண்டும்.வேறு வழியால் அருள் பெற முடியாது...அதுவும் அருட்பெருஞ்ஜோதி பெருங் கருணையால் தான் கிடைக்கும்...

வள்ளலார் கருணையே வடிவமாக தன்னை மாற்றிக் கொண்டார் .எனவே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தனிப்பெருங் கருணையால்.

அறியாமை.அஞ்ஞானம் என்னும் திரைகளை எல்லாம் நீக்கி அருளை வாரி வழங்கினார்.

மேலும் அருளைப் பெறுவதற்காக. ஒழுக்கத்தை முழுவதுமாக கடைபிடித்து .சுத்த உஷ்ணத்தை உடம்பு முழுவதும் நிறைப்பிக் கொண்டார்.எனவே அருளை அவரால் பெற முடிந்தது..

அன்பு.தயவு.கருணையினால் மட்டுமே சுத்த உஷ்ணத்தை உண்டு பண்ணிக் கொள்ள முடியும்...

முரட்டுத் தனமான தியானம்.யோகம்.தவம்.வழிபாடு போன்றவை செய்வதால் சுத்த உஷ்ணம் உண்டாகாது..

சுத்த உஷ்ணம் பெற்றால்.தான் அருளைத் தாங்கிக் கொள்ள முடியும்.அவை கோடிக்கணக்கான அக்கினிப் பிரகாசம் உடையதாகும்.

ஆன்மாவே கோடிக்கணக்கான சூரிய பிரகாசம் உடையது என்கிறார் வள்ளலார்.

*உடல் மாற்றம் !*

அருள் பெரும்போது உடலில் என்ன என்ன மாற்றம் உண்டாகும் என்பதை அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக விளக்கி உள்ளார்...

அகவல் விளக்கம் !

725. தோலெலாங் குழைந்திடச் சூழ்நரம் பனைத்தும்
மேலெலாங் கட்டவை விட்டுவிட் டியங்கிட

726. என்பெலா நெக்குநெக் கியலிடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசையெலா மெய்யுறத் தளர்ந்திட

727. இரத்த மனைத்துமுள் ளிறுகிடச் சுக்கிலம்
உரத்திடை பந்தித் தொருதிர ளாயிட

728. மடலெலா மூளை மலர்ந்திட வமுதம்
உடலெலா மூற்றெடுத் தோடி நிரம்பிட

729. ஒண்ணுதல் வியர்த்திட வொளிமுக மலர்ந்திட
தண்ணிய வுயிர்ப்பினிற் சாந்தந் ததும்பிட

730. உண்ணகை தோற்றிட வுரோமம் பொடித்திடக்
கண்ணினீர் பெருகிக் கால்வழிந் தோடிட

731. வாய்துடித் தலறிட வளர்செவித் துணைகளிற்
கூயிசைப் பொறியெலாங் கும்மெனக் கொட்டிட

732. மெய்யெலாங் குளிர்ந்திட மென்மார் பசைந்திடக்
கையெலாங் குவிந்திடக் காலெலாஞ் சுலவிட

733. மனங்கனிந் துருகிட மதிநிறைந் தொளிர்ந்திட
இனம்பெறு சித்த மியைந்து களித்திட

734. அகங்கார மாங்காங் கதிகரிப் பமைந்திடச்
சகங்காண வுள்ளந் தழைத்து மலர்ந்திட

735. அறிவுரு வனைத்து மானந்த மாயிடப்
பொறியுறு மான்மதற் போதமும் போயிடத்

736. தத்துவ மனைத்துந் தாமொருங் கொழிந்திடச்
சத்துவ மொன்றே தனித்துநின் றோங்கிட

737. உலகெலாம் விடய முளவெலா மறைந்திட
அலகிலா வருளி னாசைமேற் பொங்கிட

738. என்னுளத் தெழுந்துயி ரெல்லா மலர்ந்திட
என்னுளத் தோங்கிய என்றனி யன்பே

739. பொன்னடி கண்டருட் புத்தமு துணவே
என்னுளத் தெழுந்த வென்னுடை யன்பே

740. தன்னையே யெனக்குத் தந்தரு ளொளியால்
என்னைவே தித்த என்றனி யன்பே

741. என்னுளே யரும்பி யென்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை யன்பே

742. என்னுளே விளங்கி யென்னுளே பழுத்து
என்னுளே கனிந்த வென்னுடை யன்பே

743. தன்னுளே நிறைவுறு தரமெலா மளித்தே
என்னுளே நிறைந்த என்றனி யன்பே

744. துன்புள வனைத்துந் தொலைத்தென துருவை
யின்புறு வாக்கிய என்னுடை யன்பே

745. பொன்னுடம் பெனக்குப் பொருந்திடும் பொருட்டா
என்னுளங் கலந்த என்றனி யன்பே !

மேலே கண்ட மாற்றங்கள் எல்லாம் அருள் பெறும் போது உடம்பிற்கு உண்டாகும்..

அந்த அருள் உடம்பை பெற்றவர்களை எந்த தீய சக்தியாலும் அழிக்க முடியாது..பஞ்ச பூதங்களாலும் அழிக்க முடியாது..அணுக் கதிர்களாலும் அழிக்க முடியாது.வேறு எந்த கருவிகளாலும் அழிக்க முடியாது.என்பதை வள்ளலார் பாடலிலே விளக்கமாக தந்து உள்ளார்

பாடல் !

காற்றாலே புவியாலே ககனமத னாலே

கனலாலே புனலாலே கதிராதி யாலே

கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே

கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே

வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும்

மெய்அளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே

ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர்

எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே.!

மேலே கண்ட பாடலில் எல்லோருக்கும் புரியும்படி பதிவு செய்துள்ளார்..

மேலும் எந்த கடவுளைத் தொடர்பு கொண்டால் சாத்தியமாகும் என்பதையும் சொல்லி உள்ளார்.

என் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை தொடர்பு கொண்டால் மட்டுமே சாத்தியமாகும்..

மேலும் ....

அருட்சோதி ஆனேன்என்று அறையப்பா முரசு

அருளாட்சி பெற்றேன்என்று அறையப்பா முரசு

மருட்சார்பு தீர்ந்தேன்என்று அறையப்பா முரசு

மரணந்த விர்ந்தேன்என்று அறையப்பா முரசு.!

இவற்றை விட வேறு என்ன விளக்கம் வேண்டும்.

இந்த சாதி.சமய.மதங்களை பிடித்து அலைந்து. தொங்கிக் கொண்டு இருக்கும்.. அப்பாவித்தனமான.
உண்மை அறியாத உணராத மக்களும் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்....

மரணம் இல்லாப் பெருவாழ்வு சாத்தியமே ! சந்தேகம் பட வேண்டியதில்லை..

ஆன்ம அறிவை அறிந்தால் எல்லாம் தெளிவாகத் தெரியும்.

இன்னும் விரிக்கில் பெருகும்......

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்...
9865939896.

புதன், 14 நவம்பர், 2018

வள்ளலார் உடன் சுற்றி திரிந்தவர்கள் !

வள்ளலார் உடன் சுற்றி திரிந்தவர்கள் !

வள்ளலார் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் அனைவருமே மெத்தப் படித்தவர்கள் பண்டிதர்கள்.புலவர்கள்

இவர்கள் அனைவரும் வள்ளலார் சொல்லுவதையும் பாடல் இயற்றுவதையும் வழிபாடு செய்வதையும் கூடவே இருந்து  நேரில் கண்டவர்கள்..

வள்ளலார் இறுதியில் என்ன சொன்னார் என்பதும் இவர்களுக்குத் தெரியும்..

சாதி சமயம் மதம் பொய் என்றார்...
கடவுள் ஒருவரே என்றார்..
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.

புதியதாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.

சத்திய தருமச்சாலை..

சத்திய ஞான சபை

போன்ற புதிய அமைப்புகளை உருவாக்கினார்.

இறுதியில் அருட்பெருஞ்ஜோதி தான் உண்மையானக் கடவுள் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார்.
வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்கள்..!

தொழுவூர் வேலாயுத முதலியார்.

இறுக்கம் இரத்தின முதலியார்.

பொன்னேரி சுத்தரம் பிள்ளை..

காயாறுஞான சுந்தர ஐயர்.

கிரியாயோகசாதகர் பண்டார ஆறுமுக ஐயர்

புதுவை வேலு முதலியார்.

சோமு செட்டியார்..

மகாராஜராஜஸ்ரீ ராமசாமிநயினார்.

பொன்னுசாமிப் பிள்ளை.

ஆடூர் சத்குணாகர தயாம்பர சுவாமிகள்.

சபாபதி சிவாசாரிய சுவாமிகள்

நங்கோச்சோழன் வீரமணிசூடியார்

ஸ்ரீ செல்வராய முதலியார்.

போன்றவர்களும்  மேலும் இன்னும் நிறைய ஆண்கள் பெண்கள்  வள்ளலார் உடன் நெருங்கி பழகி கூடவே  இருந்துள்ளார்கள்...

ஒருவர் கூட வள்ளலார் சொல்லிய வார்த்தைகளையும் .
சுத்த சன்மார்க்க கொள்கைகளையும்.
புரிந்து கொண்டு பின்பற்றவே இல்லை.

ஒருவர் கூட சாதாரண சாதியைக் கூட விட முடியாமல் பெயருக்கு பின்னாடி சாதிப்பெயரையே பின்பற்றி எழுதி வந்துள்ளார்கள்...

மேலும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி யர் என்று அழுத்தமாக சொல்லியும் எவரும் சாதி சமய மதக் கடவுள்களை விட்டு விட்டு வள்ளலார் சொன்ன அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டும் பின்பற்றவே யில்லை...

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை வெளியிட்டவர்களும் சாதியை விடமுடியாமல் தன் பெயர் பின்னாடி சாதிப் பெயரை போட்டுக் கொண்டார்கள்...

இவர்கள் அனைவரும்  உண்மை உணராத அறியாத முட்டாள்கள் ! என்பதை உணர்ந்து கொண்ட வள்ளலார்...

இதுவரையில் என்னுடன் இருந்தும் என்னுடன் பழகியும் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பதை இவர்களால் புரிந்து கொள்ளாமல் என்னுடன் சுற்றுகிறார்கள்.
அய்யோ பாவம் என்று உள்ளும் புறமும் வேதனை அடைகிறேன் என்று வள்ளலார் மன வருத்தம் கொள்கிறார்.

இராமலிங்கசாமி !

இந்த சாதி வெறிபிடித்த முண்டங்கள் எல்லாம் வள்ளலாருக்கு இராமலிங்க சாமி என்று பெயர் வைத்துள்ளார்கள்..

அந்த பெயரை வள்ளலார் ஏற்றுக் கொள்ளாமல்...

இராமலிங்கசாமி என் வழங்குவிப்பது எனக்கு சம்மதம் அன்று..என்னை ஆராவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில் இனி அங்கனம் வழங்காமை வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்..
வள்ளலார்...

திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயர் சூட்டினார்கள் ..அந்தப் பெயரையே வள்ளலார் ஏற்றுக் கொள்ளவில்லை.. வள்ளல் என்றால் யார் ? என்று கோபத்துடன் ஒரு கேள்விக் கேட்டு அதிர வைத்துள்ளார்

கடைசிவரை சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையொப்பம் இட்டு வந்தார்....

தன் தகப்பனார் பெயரையே உபயோகப் படுத்தவில்லை...இறைவன் பெயரையே தன் பெயருக்கு முன்னாடி போட்டுக் கொண்டவர் வள்ளலார்...

இவ்வளவு உண்மைகள் சொல்லியும் தான் செயல் படுத்தி அனுபவித்து காட்டியும்..

வள்ளலார் உடன் இருந்த அணுக்கத் தொண்டர்கள் ஒருவர் கூட வள்ளலார் சொல்லிய ஒழுக்கத்தில் தேறவில்லை என்பதே வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது...

இறுதியாக தன் அணுக்க தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் எச்சரிக்கை செய்கிறார் !

22-10-1873 ஆம் ஆங்கில ஆண்டு
தமிழ் ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் புதவாரம் பகல் 8 மணிக்கு மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடி கட்டின உடனே நடந்த நிகழ்ச்சியின் முதல்  எச்சரிக்கை வாக்கியம்..

*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது    போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள் என்று அழுத்தமாக சொல்கின்றார்...*

அதன்
பின்பாவது உணர்ந்தார்களா ? திருந்தினார்களா ? என்றால் இல்லவே இல்லை..

மேலும்...

நாம் நாமும் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம்.ஆகமம்.புராணம்.இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று அழுத்தமாக ஆணித்தரமாக சொல்லுகின்றார்..
அதைக் கேட்டாவது தங்களை மாற்றிக் கொண்டார்களா என்றால் இல்லவே இல்லை....

மேலும்..

சைவம்.வைணவம் முதலிய சமயங்களிலும்.வேதாந்தம்.சித்தாந்தம்.முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் அவற்றிலும் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியைச் சொல்ல வில்லை

ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம்.

ஏன்எனில் அவைகளிலும்.அவ் வச்சமய மதங்களிலும் அற்ப பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே அல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆன்மா அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது என்று தெளிவாக சொல்லியும் எவரும் கேட்கவில்லை என்பது தெளிவாகின்றது...

வள்ளலார் உடன் இருந்தவர்கள் எதாவது பொருள் கிடைக்குமா...
சித்துக்கள் கிடைக்குமா என்றே சுற்றிக் கொண்டு இருந்தார்களேத் தவிர அருள் அனுபவத்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை...

ஏன்என்றால் ? அந்த அளவிற்கு சாதி.சமய.மதம் பற்றுக்கள் அவர்கள் ஆன்மாவில் பற்றிக் கொண்டு விடமுடியாததே  காரணமாகும்....

ஏன் என்றால்...

அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி அன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் .தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்..என்கிறார்

இப்போது வளர்ந்து வரும் சன்மார்க்க அன்பர்கள் திருஅருடபாவை நன்கு படித்து தெளிவடைந்து வருகிறார்கள்.மிகவும் பாராட்டிற்கு உரியவர்கள்..

இதெல்லாம் தானாக வருவதில்லை.
வளர்வதில்லை
என்போன்ற சுத்த சன்மார்க்க அன்பர்களின் கடுமையான பிரச்சாரம் .துணிவான பேச்சு.சுயநலம் இல்லாத இடைவிடாத உழைப்பு .மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் சுத்த சன்மார்க்கம் தீவிர வளர்ச்சி பெற்று வருகின்றன..

இப்போதும் சில கத்துகுட்டிகள் தங்கள் சுயநலத்திற்காக வள்ளலார் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்து வருகிறார்கள்...

காலப்போக்கில் உண்மை விளங்கி தெளிவு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்வோம்....

இனிமேலாவது சுத்த சன்மார்க்கம் சொல்லும் உண்மையை உணர்ந்து..சாதி.சமயம்.மதம் போன்ற குப்பைகளில் இருந்து வெளியேறி...வள்ளலார் சொல்லிய ஜீவகாருண்ய ஒழுக்க நெறியை.. வாழ்க்கையில் கடைபிடித்து ..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருள்பெற்று.
மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

மேலும் தொடரும் ....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896..

திருஅருட்பா வெளியிட்ட சமய மதவாதிகள் !

திருஅருட்பா வெளியிட்ட சமய மதவாதிகள் !

திருஅருட்பா வெளியிட்ட சமய மதவாதிகள் செய்த சில சூழ்ச்சிகள்.

வள்ளலார் வழிபடு கடவுள் முருகன் என்றும்

வழிபடும் குரு.திருஞான சம்பந்தர் என்றும்.

வழிபடும் நூல் திருவாசகம் என்றும்..

கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்.என்றும்

வாழையடி வாழைஎன வந்த திருகூட்ட மரபில் வள்ளலாரும் ஒருவரே என்றும்.

மக்களை நம்ப வைத்து குழப்பி விட்டு விட்டார்கள்.

*பொய்யான தகவல்களை திருஅருட்பா வில் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்..*

இவை எதைக் காட்டுகிறது .சமய மதங்களை காப்பாற்ற செய்த சூழ்ச்சிகளாகும்..
அவர்கள் பின்பற்றிவந்த நாயன்மார்களை காப்பாற்ற இப்படி தவறான கருத்துக்களை திருஅருட்பாவிலே சேர்த்து உள்ளார்கள்..

வள்ளலார் வரலாறுகளை முழுவதும் படித்து உணர்ந்து இருந்தால் இப்படி தவறான கருத்துக்களை சேர்த்து வெளியிட்டு இருக்க மாட்டார்கள்..இவற்றை அறியாமை என்று சொல்வதா ? வேண்டும் என்றே செய்தார்கள் என்று சொல்வதா ?

வள்ளலார் சொல்லுவதை கவனமாக கவனிக்கவும்.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவன் நான் என்று வள்ளலார் பாடலில் தெளிவாக சொல்லுகின்றார்..

பாடல் !

அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்

இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த

உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!

என்னும் பாடலை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும்

பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்

போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்

ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

என்பிள்ளை ஆதலாலே

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே

நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.!

சாதி.சமய.மதம் போன்ற  பொய்யான நெறிகளால் உலக மக்கள் சண்டையிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் இனியும் அழியவிடாமல் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதால்.

புனிதமுறு சுத்த சன்மார்க்க மெய்  நெறியை தொடங்கி.மெய்பொருளை நன்கு உணரும்படி செய்ய வேண்டும்.

அதே நேரத்தில் பொய்நெறிகளான சாதி சமய மதம் போன்ற நெறிகளை இருக்கும் இடம் தெரியாமல் மறைக்க வேண்டும்.

ஆகவே நீ என்பிள்ளை என்பதால் இந்த வேலையை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் என்னும் பக்குவம் உள்ள ஆன்மாவை தேர்வு செய்து இவ் வுலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்..

இவற்றை வள்ளார் உடன் இருந்தவர்களும்.
திருஅருட்பாவை வெளியிட்டவர்களும் ஏன் ? புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் என்கேள்வி !

மேலும்  சத்திய பெரு விண்ணப்பத்தில் தெளிவாக எழுதி வைத்துள்ளார்

எனக்கு அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.

வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும்,

அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.

அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்!

என்று எல்லோருக்கும் புரியும்படி எழுதி வைத்துள்ளார்..இப்படி இருக்க..

வழிபடும் கடவுள் முருகன் என்றும்.

திருஞானசம்பந்தர் குரு என்றும்.

வழிபடுநூல் திருவாசகம் என்றும்

திருஅருட்பா வில் பதிவு செய்துள்ள இவர்களை சாடினால் சில சமய மத சன்மார்க்கிகளுக்கு ஏன் கோவம் பொத்திக் கொண்டு வருகிறது....

மேலும்

குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியர் இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு  அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று தெள்ளத் தெளிவாக எழுதி வைத்துள்ளார்....

மேலும் வள்ளலார்.நிறைய  பாடல்களிலே பதிவு செய்துள்ளார் !

கற்றதும் நின்னிடத்தே .பின் கேட்டதும் நின்னிடத்தே என்றும்.

பள்ளியில் பயிற்றாது என்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்தாய் என்றும்.

ஓதாதுணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீதான் என்றும்.

ஓது மறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தினாய் என்றும்

ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்த்தினாய் என்றும்

 ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் என்றும்

ஓதாது உணரந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி!

என்பன போன்ற அகச் சான்றுகள் நிறைய பாடல்களில் உள்ளன..

இப்படி எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்திலே கற்றேன் பெற்றேன் என்கிறார் வள்ளலார்.

இப்படி இருக்க எப்படி ?

வழிபடுகடவுள் முருகன் என்றும்

திருஞானசம்பந்தர் குரு என்றும்

திருவாசகம் வழிபடும் நூல் என்றும்

திருஅருட்பா விற்குள் எப்படி நுழைந்த்து...
இவைகளை நுழைய வைத்தது யார் ? என்று ஈரோடு கதிர்வேல் கேட்டால் கதிர்வேல் தரம் கெட்டவனா ?

முட்டாள்கள் என்றும் அறிவில்லாதவர்கள் என்றும்.முண்டங்கள் என்றும் பித்துலகீரே என்றும் பைத்தியக்கார்ர்கள் என்றும் நான் யாரையும் சொல்லவில்லை வள்ளலாரே மறைமுகமாய்  சொல்லுகிறார் அவற்றை நான் வெளிப்படுத்துகிறேன்..

வள்ளலாரைப்போல் சாதி சமய மதங்களையும் அவற்றை பின்பற்றுபவர்களையும்.வள்ளலாரைப் போல் திட்டியவர்கள் உலகத்தில் எவரும் இல்லை....ஆயிரக் கணக்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன.

மேலும்

வள்ளலார் வாழையடி வாழை என வந்தவர் என்ற புரளி வேறு !

வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் அப்படி இருக்க ..வாழையடி வாழை என வந்த திருகூட்ட மரபை சார்ந்தவர் என்று எப்படி சொல்லுவது.ஏற்றுக் கொள்வது...சிந்திக்க வேண்டும்

வள்ளலார் பாடல் !
பிரியேன் என்றல் தலைப்பில்.....உள்ள பாடல்...

வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட

மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த

ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ

இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ

மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு

மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ

கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்

கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.!

மேலே கண்ட பாடலை தவறாக புரிந்து கொண்டு மேடை மேடையா சமய மதவாதிகள.
பேசுகிறார்கள்.. விபரம் அறியாமல்
சன்மார்க்கிகளும் பேசி வருகிறார்கள்

வள்ளலார் தெளிவாக பதிவு செய்துள்ளார்.

இறைவன் அருள் வழங்க.. காலம். தாழ்த்துகிறார் அதற்கு
வள்ளலார் இறைவனிடம் உரிமையுடன்  கேட்கிறார் .நான் வாழையடி வாழை என வந்த திருக்கூட்டத்தில் ஒருவன் அன்றோ ? என கேள்வி கேட்கிறார்

நான் அந்த வழியில் வந்தவனா ? அப்படி வந்தவன் அல்ல

நீ வருவிக்க வந்தவன் என்பது உமக்குத் தெரியாதா என்பது பொருள்...

 சிவன் அடியார்களுக்கு  பல சோதனைகளையும்  கொடுப்பது உமது வழக்கம் .

என்னை அப்படி சோதனை  செய்யலாமா ?

மாழைமணி பொது நடஞ் செய் வள்ளாய் நான் உனக்கு மகன் அலனோ ! ..நீ எனக்கு வாய்த்த தந்தை அல்லவா ! எனவே இந்த உலக உயிர்கள் படும் துன்பத்தை பார்த்து கொண்டு என்னால் இருக்க முடியாது பொறுக்கவும் முடியாது 

எனவே இப்பொழுதே நின்  அருள் ஒளியை கொடுத்து மகிழ்விப்பாய் என்று இறவனிடம் உரிமையுடன் கேட்டு பெறுகின்றார் வள்ளலார்.

அகவலிலே சொல்லுகின்றார்...

எச்சோதனை களும் இயற்றாது எனக்கே
அச்சோ என்ற அருள்
அருட்பெருஞ்ஜோதி !

எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்ற அருள்
அருட்பெருஞ்ஜோதி !

என்ற வரிகளினால் உணர்ந்து கொள்ள வேண்டும்...வள்ளலார் சமய மத அருளாளர்கள் வரிசையில் வந்தவர் அல்ல..

மேலும்... நான் ஒரு புதியவன் என்று சொல்லுகிறார்....

மேலும் அடுத்து....

கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் என்று வள்ளலார் சொல்லியதாக ஒரு புரளியை சமய மத வாதிகள் கிளப்பி விட்டு விட்டார்கள்...

இதை எல்லோரும் மேடை மேடையா பேசிக் கொண்டே இருந்தார்கள் ..

ஈரோடு கதிர்வேல் தான் வள்ளலார் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று மேடைதோறும் மறுப்பு சொல்லி அடங்க வைத்தவன்.

திருஅருட்பாவில் எந்த இடத்திலும்.கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் என்பதற்கு ஆதாரம் இல்லை...

கடை வைத்துள்ளேன் என்பதற்கு திருஅருட்பாவில் ஆதாரம் உண்டு !

ஆனந்த களிப்பு என்ற தலைப்பில் ! ...

ஆரண வீதிக் கடையும்-
சுத்த ஆகம வீதிக் கடையும்-
சேர நடுக்கடை பாரீர்-
திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி !

ஜோதியுட் ஜோதியுட் ஜோதி-
சுத்த ஜோதி சிவஜோதி
ஜோதியுட் ஜோதியுட்ஜோதி

என்று பதிவு செய்கிறார்..

திருஅருட்பா  வருவதற்கு முன்னாடி.ஆரணக்கடை
வேத ஆகமக் கடை எல்லாம் வைத்துள்ளார்கள்.அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு..மத்தியில் அதாவது நடுவில் நடுக் கடையாக வைத்துள்ளேன் என்கின்றார்....

நடுக்கடை வைத்துள்ளவர் கடையை கட்டிக் கொள்வாரா ? சிந்திக்க வேண்டும்..

இதுவும் சமய மத வாதிகளின் சதியே என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்....

எதையும் ஆதாரம் இல்லாமல் ஈரோடு கதிர்வேல் பேச மாட்டான் எழுதவும் மாட்டான்.என்பதை ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ளவர்கள் தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்...

இது சுத்த சன்மார்க்க காலம் !

சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் விளங்கும்..
இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை .

தடையற்ற பெருநெறி வழங்கும் காலம்..

 இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மேன்மேலும் வழங்கும் என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் பதிவு செய்துள்ளார் வள்ளலார்....

எனவே சமய மதவாதிகளின் சூழ்ச்சியை அருள் வல்லபத்தைக் கொண்டு விரட்டி அடித்து துரத்திக் கொண்டுள்ளார்..
வள்ளலார்....

நாம் சுயநலம் இல்லாமல் பொது நலம் எண்ணம் கொண்டு வாழ்ந்தாலே.அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு   இறைவன் கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டிய காலத்தில் கண்டிப்பாக கொடுப்பார்....

என்ன கொடுப்பார் பொருளை அல்ல .அருளைக்  கொடுப்பார் இது சத்தியம்...

வள்ளலார் பாடல் !

சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே

வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்

விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்

செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே

தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்

ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!

மேலே கண்ட பாடலில் உள்ளபடி என் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன்.
என்னைப் போற்றினாலும்.தூற்றினாலும் எதைப் பற்றியும் நான் வருத்தமோ வாட்டமோ அடைய மாட்டேன்...அஞ்சவும் மாட்டேன்..

காரணம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை இயங்க வைத்து கொண்டு உள்ளார் என்பது எனக்கு தெளிவாகத் தெரியும்..

என்வழி என்வாழ்க்கை வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வழி ஒன்றே ! என் வழி வள்ளலார் காட்டிய நேர் வழி !

தொடரும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

ஞாயிறு, 11 நவம்பர், 2018

வேதாத்திரி மகரிஷியின்விளக்கம் !

வேதாத்திரி மகரிஷியின் விளக்கம் !

வள்ளலார் என் உடம்பிலே உயிரிலே கலந்து உள்ளார் என்று சொல்லி உள்ளார்...

திரு அருட்பாவை நன்கு படித்துள்ளார்.சித்தர் நூல்களும் நிறைய படித்துள்ளார்....

மகரிஷி சுத்த வெளியே இறை நிலை என்று சொல்லி உள்ளார்.அவற்றை பின் பற்றுபவர்களும் அதையே சொல்லிக் கொண்டு உள்ளார்கள்..

மகரிஷியை குறை சொல்வதாக எவரும் நினைத்துவிடக் கூடாது..

மக்கள் தெளிவுபெற வேண்டும்

வள்ளலார் சொன்ன இறைவன் அருட்பெருஞ்ஜோதி ! அந்த உண்மைக்கடவுள் இருக்கும் இடம் இயங்கும் இடம் தான் அருட்பெருவெளி என்பதாகும்...

அருட்பெருவெளியை மகரிஷி சுத்தவெளி என்கிறார் தவறு இல்லை...சுத்தவெளி என்பது பஞ்ச பூதங்கள் அற்ற அருள் நிறைந்த பெருவெளி என்பதாகும்..

பெருவெளியே கடவுளா என்றால் இல்லை.!

அருட்பெருவெளியில் இயற்கை உண்மையே கடவுள் நிலை என்கிறார் வள்ளலார்..

கடவுளுக்கு மூன்று நிலை மூன்று தகுதிகள் உண்டு..

இயற்கை உண்மை !
இயற்கை விளக்கம்!
இயற்கை இன்பம் !

என்னும் நிலைகள் தகுதிகள் உண்டு...

இயற்கை உண்மை என்பதுதான் கடவுளின் உண்மையான முதல் நிலை.அதுவே அருட்பெருஞ்ஜோதி ....

இயற்கை விளக்கம் என்பது இரண்டாவது நிலை அதுதான் அருட்பெரு வெளி என்பதாகும். அதுதான் தனிப்பெருங்கருண என்பதாகும்.

அதைத்தான் மகரிஷி சுத்த வெளி என்கிறார்.முதல் நிலை மகரிஷிக்கு தெரிய வாய்ப்பில்லை போலும்..

இயற்கை இன்பம் என்பது மூன்றாவது நிலை..
எல்லாவற்றையும் அழிவில்லாத இன்பம் பெற... அடைய செய்விப்பதாகும்....

மனிதன் மட்டுமே இந்த மூன்று நிலைகளையும் அடையும் உன்னத தகுதிப் பெற்றவன்..

அந்த இயற்கை இன்பத்திலும் மூன்று நிலைகள் உள்ளன ..

இம்மை இன்பம்
இம்மை இன்பவாழ்வு..

மறுமை இன்பம்
மறுமை இன்பவாழ்வு...

பேரின்பம் பேரின்ப வாழ்வு...

என மூன்று தகுதி மூன்று வாழ்க்கை முறைகள் உள்ளன..

மூன்றையும் மூன்றுவிதமாக பிரிக்கின்றார்...
வள்ளலார்

பேரினப நிலை.பேரின்ப வாழ்க்கை நிலைதான் இறுதி நிலை அருட்பெருஞ்ஜோதி யை நேரடியாக தொடர்பு கொள்ளும் நிலையாகும்...

எல்லா வற்றுக்கும் காரணமாக உள்ளது தான் அருட்பெருஞ்ஜோதி என்பதாகும்..

இயற்கை விளக்கம் இயற்கு இன்பம் என்பது காரிய நிலை என்பதாகும்...

இயற்கை உண்மை என்பது காரண நிலையாகும்.

காரியம் காரணமாகாது .
காரணம் எல்லாவற்றுக்கும் காரியமாகும்...

இதைத்தான் வள்ளலார் நடராஜபதி மாலையில் அருட் மாமாலையாக 34 பாடல்களில் விளக்கி உள்ளார் ! அனைத்தையும் படியுங்கள் தெளிவடையும்..

ஒருபாடல் !

எவ்வுலகும் எவ்வுயிரும் எப்பொருளும் உடையதாய்

எல்லாஞ்செய் வல்லதாகி

இயற்கையே உண்மையாய் இயற்கையே அறிவாய்

இயற்கையே இன்பமாகி

அவ்வையின் அனாதியே பாசமில தாய்ச்சுத்த

அருளாகி அருள்வெளியிலே

அருள்நெறி விளங்கவே அருள்நடம் செய்தருள்

அருட்பெருஞ் சோதியாகிக்

கவ்வைஅறு தனிமுதற் கடவுளாய் ஓங்குமெய்க்

காட்சியே கருணைநிறைவே

கண்ணேஎன் அன்பிற் கலந்தெனை வளர்க்கின்ற

கதியே கனிந்தகனியே

வெவ்வினை தவிர்த்தொரு விளக்கேற்றி என்னுளே

வீற்றிருந் தருளும்அரசே

மெய்ஞ்ஞான நிலைநின்ற விஞ்ஞான கலர்உளே

மேவுநட ராஜபதியே. !

என்னும் பாடலிலே நடராஜபதியே என்பது அருட்பெருஞ்ஜோதி யை குறிப்பதாகும்.

வள்ளலாரே அருட்பெருஞ்ஜோதி நடராஜபதியே என்று பின் வரும் பாடலிலே தெளிவுபடுத்துகின்றார்.

பாடல் !

நாதாந்த போதாந்த யோகாந்த வேதாந்த

நண்ணுறு கலாந்தம்உடனே

நவில்கின்ற சித்தாந்தம் என்னும்ஆ றந்தத்தின்

ஞானமெய்க் கொடிநாட்டியே

மூதாண்ட கோடிக ளொடுஞ்சரா சரம்எலாம்

முன்னிப் படைத்தல்முதலாம்

முத்தொழிலும் இருதொழிலும் முன்னின் றியற்றிஐம்

மூர்த்திகளும் ஏவல்கேட்ப

வாதாந்தம் உற்றபல சத்திக ளொடுஞ்சத்தர்

வாய்ந்துபணி செய்யஇன்ப

மாராச்சி யத்திலே திருவருட் செங்கோல்

வளத்தொடு செலுத்துமரசே

சூதாண்ட நெஞ்சினில் தோயாத நேயமே

துரியநடு நின்றசிவமே

சுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்
சோதிநட ராஜபதியே.!

சிதம்பரம் நடராஜரைத்தான் வள்ளலார் சொல்கிறார்  என்று மக்கள்  நினைத்து விடுவார்கள் என்பதால் அருட்பெருஞ்ஜோதி நடராஜபதியே! என தெரிவிக்கிறார்...

வள்ளலார் சொல்லி உள்ள கடவுள் இயற்கை உண்மைக் கடவுள்...அருட்பெருஞ்ஜோதி...என்பதாகும்.

மகரிஷி சொல்வது சுத்தவெளியை இறை நிலை என்கிறார்..

சுத்த வெளியில் கடவுள் உள்ளார்...வெளி என்பது வேறு ..கடவுள் என்பது வேறு...

மேலும் வள்ளலார் அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தில் தெளிவுபட விளக்கம் தருகிறார்...

பாடல் !

அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத்

தருட்பெருந் தலத்துமேல் நிலையில்

அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில்

அருட்பெருந் திருவிலே அமர்ந்த

அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே

அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே

அருட்பெருஞ் சோதிஎன் அரசே.!

என்னும் பாடலில் அருட்பெருவெளியில் அருட்பெரும் பீடத்தில்.அருட்பெரும் வடிவில் உள்ளவர் அருட்பெருஞ்ஜோதி அரசர் என்கிறார்..

மேலும் ஒருபாடல் !

ஒருபிரமன் அண்டங்கள் அடிமுடிப் பெருமையே

உன்னமுடி யாஅவற்றின்

ஓராயி ரங்கோடி மால்அண்டம் அரன்அண்டம்

உற்றகோ டாகோடியே

திருகலறு பலகோடி ஈசன்அண் டம்சதா

சிவஅண்டம் எண்ணிறந்த

திகழ்கின்ற மற்றைப் பெருஞ்சத்தி சத்தர்தம்

சீரண்டம் என்புகலுவேன்

உறுவும்இவ் வண்டங்கள் அத்தனையும் அருள்வெளியில்

உறுசிறு அணுக்களாக

ஊடசைய அவ்வெளியின் நடுநின்று நடனமிடும்

ஒருபெருங் கருணைஅரசே

மருவிஎனை ஆட்கொண்டு மகனாக்கி அழியா

வரந்தந்த மெய்த்தந்தையே

மணிமன்றின் நடுநின்ற ஒருதெய்வ மேஎலாம்
வல்லநட ராஜபதியே.!

இப்பாடலில்.பொய் தந்தை இல்லை....மெய் தந்தையே என்கிறார் அருட்பெருவெளியில்  உறு சிறு அணுக்களாக ஊடசைய அவ் வெளியின் நடுநின்று நடனமிடும் ஒரு பெருங் கருணை அரசே !

மணிமன்றில் நடுநின்ற ஒரு தெய்வமே எல்லாம் வல்ல நடராஜ பதியே என்கிறார்.

அருட்பெருஞ்ஜோதி உண்மை நிலை தெரியாமல்..சாதி.சமய.மதவாதிகள் போல் மக்களை குழப்பிக் கொண்டு உள்ளார்கள்.

குழப்பவாதிகள் மத்தியில் சுத்த சன்மார்க்கத்தைப் பின் பற்றுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையோடும் எச்சரிக்கையோடும் மக்கள் புரிந்து கொள்ளும் வண்ணம் ...

அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுளை அறிமுகப் படுத்தி விளக்க வேண்டும்..

இல்லாமை எனக்கு இல்லை எல்லோருக்கும் தருவேன் என்னுடைய பெருஞ் செல்வம் என் புகல்வேன் என்பார் வள்ளலார்

மேலும் எப்பாரும் எப்பதமும் எங்கனும் நான் சென்று என் தந்தை நின் அருட்புகழை இயம்பியிடல் வேண்டும் என்பார்...

வள்ளலார் சொல்லிய வண்ணம் செயல்படுவோம்...
அருள் பெறுவோம். மரணத்தை வெல்வோம்.

பேரின்ப லாபத்தை பெற்று பேரின்ப சித்தி பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

திங்கள், 5 நவம்பர், 2018

தினமணி 5-10-2018. *வள்ளலார் *

*வள்ளலார்*

*தினமணி 5-10-18*

மக்களிடையே துறவிகளுக்கு என்றும் வாழ்வில் கசப்படைந்தோ, குறிக்கோளுக்காகவோ, உலக நலன் கருதியோ, உள்ளொளியாலோ துறவியானோர் பலர்.
எனினும், "துறந்தவர்கள் பெருமைக்கு எல்லையில்லை' என்பது திருக்குறள். உடலுக்கு உணவும் மருந்தும், உள்ளத்துக்கு அறிவுரையும் ஆறுதலும், உயிருக்கு வழிபாடும் பயிற்சியும் ஆகிய தீர்வுகளைத் துறவியரிடத்தில் எதிர்நோக்கி மக்கள் வணங்கி வருகின்றனர் .
வாழையடி வாழையென வழி வழியாக வந்த திருக்கூட்ட மரபில் திருவள்ளுவர் தொடங்கி நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள், ஞானியர் முதலியோரெல்லாம் இம்மரபில் வந்தவர்களே.  இவ்வரிசையில் வள்ளலார், புதுமைத் துறவி, பொதுமைத் துறவி, புரட்சித் துறவி, சமுதாயத் துறவி, சீர்திருத்தத் துறவியாவார்.       
வள்ளலார் வெள்ளாடைத் துறவி.  தூய வெண்ணிற ஆடையையே ஓராடையாக அணிந்தார்.  காவி உடுத்தியதில்லை. துறவுக் கோலத்துக்குக் குறியீடாக இருந்த காவி தரிக்காது வெள்ளாடை உடுத்திக் கொண்டார்.
மணிமேகலையைப் போல அமுதசுரபி இல்லாமல் சத்தியத் தருமசாலையில் எளியோர்க்கும் ஏழை மக்களுக்கும் பசியாற்றும் ஞானியாக வடலூரில் விளங்கினார்.  இராமலிங்கர் 151 ஆண்டுகளுக்கு முன்பு சத்தியத் தருமசாலையில்  1867-ஆம் ஆண்டில் ஏற்றிய அடுப்பு இன்றும் அணையாமல் நாள்தோறும் ஆயிரம் மக்களுக்கு அன்னபாலிப்பு அளிக்கிறது.
வள்ளலார் வாழ்ந்த பத்தொன்பதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருபத்து நான்கு பஞ்சங்கள் ஏற்பட்டன.  அப்பஞ்சங்களை அடிகளார் நேரில் கண்டார். பசியுடன் அலைந்தோரையும் இறந்து பட்டோரையும் எண்ணி எண்ணி இவர் மனத்தில் நடுக்கம் கொண்டு அழுதார். பசியால் நேர்ந்த  முப்பதுக்கு மேற்பட்ட அவல நிலைகளைக் கூறி நம் மனத்தை அடிகளார் பிழிகிறார். 
பசியால் பஞ்சடைந்து குழிந்து போகின்றது; காது கும்மென்று செவிடுபடுகின்றது; நா உலர்ந்து வறளுகின்றது; மூக்கு குழைந்து அழல்கின்றது; தோல் மெலிந்து உணர்ச்சி கெடுகின்றது; வாய் உளறுகின்றது; பற்கள் தளருகின்றன; நரம்புகள் குழைந்து நைகின்றன; நாடிகள் கட்டுவிட்டுக் கழறுகின்றன; எலும்புகள் பூட்டுவிட்டு நெக்குவிடுகின்றன; இதயம் வேகின்றது; மூளை சுருங்குகின்றது; வயிறு பகீரென்று எரிகின்றது; உயிரிழந்து விடுவதற்கு நெருங்கிய அடையாளங்கள் தோன்றுகின்றன. பசியினால் இவ்வளவு துன்பங்களும் உயிரினங்களுக்கு ஏற்படுகின்றன.
இத்தனை துன்பங்களும் உணவுண்ட பின் நீங்குகின்றன. பசி போக்கலே
மாபெரும் புண்ணியமாகும்.
அனைத்துச் சமயங்களும் உயிர் நலம் காத்தலையே அடிப்படையாகக் கொண்டவை.  இராமலிங்கரும் எல்லா உயிர்களிடமும் அன்பு கொண்டார். அன்பைக் கடந்த இரக்கமும் உருக்கமும் இராமலிங்க அடிகளாரை முழுமையாக்கின.
"உயிர்தான் உயிர் இரக்கந்தான் ஒன்றல்லது இரண்டிலை
இரக்கம் ஒருவில் என் உயிர் ஒருவும்' என்பது
திருவருட்பா.
இரக்கமே தன் உயிர் என்றார். "உயிரும் இரக்கமும் தனித்தனியாகக் கூற முடியாதவை. பொது நலத்தில்தான் உயிரிரக்கம் பொங்கிப் பெருகும்' என்றார்.
இந்த நிலையில்தான் பசிக்கு உணவு, உணவுக்கு நெல், நெல்லுக்குக் கதிர், கதிர்தான் பயிர், பயிர் வாடினால் உயிர் வாடும் என்று நெகிழ்ந்து நெகிழ்ந்து நினைந்து நினைந்து உடம்பு நனைந்து நனைந்து "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்' வாடினார்.
பசித்துயரத்தோடு அந்நாளைய வரிவிதிப்பு முறையும் உழவர்களைப் பெரிதும் துயருக்குள்ளாக்கின. எளியோர் வட்டிக்குக்  கடன் வாங்கி அவதியுற்றனர். அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, ஆகியவற்றுக்கும் இடர்ப்பட்டுக் கடன்பட்டு வறுமையுற்ற நிலையில் தவித்ததை இராமலிங்கர் நேரில் கண்டார். அதனை "வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்' என்று கடிந்தார்.
சிதம்பரத்திற்கு வடக்கே மருதூர் என்னும் சிற்றூரில் வாழ்ந்த இராமையா பிள்ளையின் ஐந்து மனைவியரும் மகப்பேறின்றி மறைந்தனராம். ஆறாம் முறையாகச் சின்னம்மையைத் திருமணம் செய்து அவருக்கு ஐந்தாம் மகனாக இராமலிங்க அடிகளார்  05-10-1823-ஆம் ஆண்டில் தோன்றினார். அண்ணன் பொறுப்பில், குடும்பத்தினர் தாய் வீடாகிய பொன்னேரியை அடுத்த சென்னை நோக்கி வந்தனர். சென்னையில் தொடக்கக் காலத்தையும், தென்னார்க்காடு மாவட்டச் சிற்றூர்களில் பிற்காலத்தையும், வடலூரில் நிறை வாழ்வையும் நடத்தினார். மருதூரில் பிறந்திருந்தாலும், தம்முடைய நினைவு தெரிந்த நாளிலிருந்து முப்பதாண்டுகளுக்கு மேலாகச் சென்னையிலேயே வாழ்ந்தார்.     
இராமலிங்கரின் வாழ்க்கை வரலாற்று குறிப்புகள் முழுவதும் கிடைக்கப் பெறவில்லை.  ஆங்காங்கே பாடல்களில் புதைந்து கிடக்கும் செய்திகள் சிலவும் அவரின் வரலாற்றை அறிய  உதவுகின்றன. தெய்வமணிமாலையும், கந்தர் சரணப்பத்தும் முதன் முதலில்  கந்தகோட்டத்திற் பாடப் பெற்றவை. வள்ளலார், முதன்முதலிற் பாடி வழிபட்ட சென்னையில் கந்த கோட்டத்தைப் போற்றிப் பாடிய "ஒருமையுடன் நினது திருமலரடி' பாடல் உலகறிந்தது.
வள்ளலார் வலியுறுத்திய கொள்கைகள் பல. அவற்றுள் சில:
1.  கடவுள் ஒருவரே. 2.  ஒளி வடிவில் அன்போடு வழிபட வேண்டும். 3.  சிறு தெய்வ வழிபாடு கூடாது. 4.  தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி கூடாது. 5.  சாதி, சமய வேறுபாடுகளை இல்லாமல் நீக்க வேண்டும். 6. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி ஒழுகும் உயிரிரக்க ஒருமைப்பாட்டுரிமையைக்
கடைபிடிக்க வேண்டும். 7. எளியோர்க்குப் பசி தவிர்த்தலாகிய இரக்கமும் உருக்கமுமே பேரின்ப வீட்டின்  திறவுகோல். 8.  மூடப் பழக்க வழக்கங்களை அறவே ஒழிக்க வேண்டும். 9. சாத்திரங்களும் புராணங்களும் முடிவான உண்மையைத் தெரிவிக்கவில்லை.
பொதுவாக, துறவியர் தம் சார்பாகச் சத்திரம், மடம், கோயில் என்ற நிறுவனங்களை அமைத்துக் கொண்டிருந்தனர். புத்தர் கூறிய மும்மணிகளை மனத்தில் கருதி, "சங்கம்', "சாலை', "சபை' என்ற நிறுவனங்களை வள்ளலார் வடலூரில் உருவாக்கினார். 
ஆங்கில அரசின் கொடுமையை வசைபாடி வருந்தினாலும் சமயப் பணி செய்ய வந்த கிறித்தவர், ஒரு பள்ளியை, மருத்துவ மனையை, கோயிலை அமைத்துக்கொள்வார்கள். மதுரையில் மேநிலைப்பள்ளியும், மருத்துவமனையும், மாதா கோயிலும் அடுத்தடுத்து அமைந்துள்ளதைக் காணலாம்.  அந்த வகையில், உடற்பசி நீக்கச் சாலையும், மனப்பசி போக்கக் கல்வி புகட்டும் சங்கமும், உயிர் உயர்வுபெறச் சபையும் என வள்ளலார் அமைத்தார் என்றும் கருதலாம்.
வள்ளலார் வாழ்ந்த வடலூரின் திசைதோறும் சிதம்பரமும், திருப்பாதிரிப்புலியூரும், திருமுதுகுன்றமும் புகழ் வாய்ந்த பெருங்கோயில்களாக அமைந்துள்ளன.  எனினும், மரபார்ந்த கோயில்களின் வழிபாட்டு முறைகளிலும் வள்ளலாருக்கு மனம் இசையவில்லை. எண்கோண வடிவில் ஞானசபையைத் தானே வடிவ
மைத்து ஒளிவழிபாட்டை நிறுவினார். அருட்பெருஞ்சோதியை வழிபாட்டுக்குரிய பண்பாகவும் தனிப்பெருங் கருணையைப் பயனாகவும் உணரும் வகையில் சமரசச் சன்மார்க்கப் பெருமக்களுக்கு மறைமொழியாகவும் வழங்கினார்.   
ஏழு நிறத் திரைகள் நீக்கிய பிறகு ஒளிச்சுடரைக் கண்டு வழிபடுகிற அமைப்பினை "இயற்கை விளக்கம்' என்றும் அறிவுறுத்தினார். சங்கத்தில் திருக்குறள் வகுப்பை முதன் முதலாகத் தொடங்கிய பெருமிதமும் வள்ளலாரைச் சாரும்.
சன்மார்க்கச் சங்கம் 1865-ஆம் ஆண்டிலும், சத்தியத் தருமசாலை 1867-ஆம் ஆண்டிலும், சத்திய ஞானசபை 1872-ஆம் ஆண்டிலும் அமைந்தன. வள்ளலார் உளமுருகிப் பாடிய பாடல்களுக்கு ஈடில்லை. "இறையருட் பெருநிலையைத் தமிழ் மொழியே அளிக்கும் தமிழ் மொழிக்கு நிகரில்லை, தமிழே தாய்மொழி'
என்றெல்லாம் பாடினார். "உருக்கத்துக்குத்  திருவாசகம்' என்பார்கள். "உருக்கத்தின் ஆழத்துக்குத் திருவருட்பா' என்று கூறலாம். "அருள்' என்ற சொல்லைத் திருவருட்பா ஆளாத இடமேயில்லை. திருவருட்பாவுக்கு உருகாதார், திருவாசகத்திற்கும் உருகார். திருவாசகத்தில் வள்ளலார் தான் கலந்துள்ளதைப் பாடுகிறார் திருவருட்பாவிலும் நாம் கலந்து திளைப்போம்.
தெருக்கூத்து, நாடக மேடைகளில் 1930-ஆம் ஆண்டில் தொடங்கி மக்கள் விரும்பிக் கேட்டு மெய் மறந்து உருகி மகிழ்ந்த பாடல்களான "கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் குளிர்தருவே', "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே', "வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்', "வருவார் அழைத்து வாடி'  முதலிய இசைப்பாடல்கள் இசைக்கு இசையும், பக்தர்களை வசப்படுத்தும் பரிவும் ஈர்ப்பும் உருக்கமும் கொண்டவையாக இருந்தன.
பழகிய சொற்கள், அழகிய தமிழ் இரக்கம், உருக்கம் கொண்ட பாடல்களுக்குத் தாமே ஒரு பண் வரிசை அமைத்துப் பாடல்களைப் பாடிக் கொண்டே தைப்பூசப் பெருவிழாவில் அடியவர்கள் வடலூருக்கு நடந்து வருவதை இன்றும்
காணலாம்.
இந்த நன்னாள்  இராமலிங்க வள்ளலார் சன்மார்க்க நெறியில் உலக மக்களைப் பொதுமைக்கு ஆளாக்க வருவிக்க உற்ற பொன்னாளாகும்.