திங்கள், 28 நவம்பர், 2016

குற்றம் யார் செய்தாலும் குற்றம் தான் !

[28/11, 10:19 a.m.] Kathirvel: ஆன்ம உடன் பிறப்புகளுக்கு வந்தனம் !

குற்றம் என்பது யார் செய்தாலும் குற்றம் குற்றம்  தான் !

நாங்கள் சமய மதவாதிகளை திட்டவில்லை , தப்பான வழி காட்டியவர்களைத் தான் வள்ளலார் சாடுகின்றார் .அவர் சொல்லி உள்ளதைத்தான் சொல்லுகிறோம் .

இன்னும் எத்தனை காலத்திற்கு உண்மையை மறைப்பது .மக்களுக்கு தெளிவு படுத்துவது ஒவ்வொரு சன்மார்க்கர்களின் கடமை ,அதுவே ஜீவகாருண்யம் .

வள்ளலார் சொல்லி உள்ளதை கவனிக்க வேண்டும் .

இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள். ஆதலால், கேட்டறியாத கேள்விகளைக் கேட்கும்படி ஆண்டவர் செய்தது இத்தருணமே. ஆதலால் இத் தருணம் இக்காலமே சன்மார்க்கக் காலம்!

மேலும் வள்ளலார் சொல்லுகின்றார் ! கவனித்து ஊன்றி படியுங்கள் .

தொடரும் :।।
[28/11, 10:21 a.m.] Kathirvel: சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை.
[28/11, 10:32 a.m.] Kathirvel: நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

மேலே கண்டுள்ள வள்ளலார் சொல்லிய  உண்மை செய்திகளை மக்களுக்கு சொல்வதால் உங்களுக்கு ஏன் வருத்தம் ,அதனால் உங்களுக்கு என்ன நட்டம் .

இனி காலம் இல்லை என்கிறார் வள்ளலார் .அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது .இது  அருட்பெருஞ்ஜோதி ஆணை ! ஆண்டவர் சொல்லை மீறுவது பெரிய தவறு ,பெரிய குற்றம் ,இனி மக்கள் புரிந்து கொள்வார்கள் .எல்லோருக்கும் நன்மை கருதியே வெளிப்படையாக சொல்ப்பட்டது,

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

சனி, 26 நவம்பர், 2016

அதி தீவிர பக்குவம் உள்ளவர் !

[25/11, 1:58 p.m.] Kathirvel: அதிதீவிர பக்குவி

சீவன் என்கிற தீபத்துக்குச் சுக்கிலம் திரி, இரத்தம் எண்ணெய். ஆகையால் சுக்கிலமாகிய திரியை விசேஷம் தூண்டிச் செலவு செய்து விட்டால் ஆயுசு நஷ்டமாய் விடும். ஆனால் சிட்டத்தை மாத்திரம் எடுத்துவிட வேண்டியது. அதாவது 16 தினத்திற்கு ஒருதரம் தேகசம்பந்தஞ் செய்து ஆபாசப்பட்ட சுக்கிலத்தை வெளிப்படுத்தி விட வேண்டும். ஆசானுடைய அல்லது ஆண்டவருடைய திருவடியில் சதா ஞாபகமுடையவனுக்குக் கோசத்தடிப்பு உண்டாகாது. ஆகையால், தேகசம்பந்தம் ஏகதேசத்திற் செய்யலாமென்றது மந்ததரத்தையுடையவனுக்கேயன்றி, அதிதீவிர பக்குவிக்கல்ல.

108. நம்மை நஷ்டஞ் செய்யும் நான்கு

நம்மை நஷ்டஞ் செய்வன நான்கு. அவையாவன: ஆகாரம், மைதுனம், நித்திரை, பயம் - ஆகிய இந்நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். இந்த நான்கிலும் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். ஆதலால் இவ்விரண்டிலும் அதனிலும் அதிக ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும். இந்த இரண்டிலும் முக்கியமானது மைதுனம். ஆதலால், இந்த விஷயத்தில் எல்லாவற்றைப் பார்க்கிலுமதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும். அவ்வாறு இராவிடில் தேகம் அதி சீக்கிரத்தில் போய்விடும். பின்பு முத்தியடைவது கூடாது. முத்தியடைவதற்கு இம்மானிட தேகமே தக்கதாயும் வேறு தேகத்தாலதையடைவது அரிதாயும் இருப்பதாதலால், எவ்விதத்தாலாயினும் தேகம் நீடித்திருக்கும்படி பாதுகாத்தல் வேண்டும்.

ஜாக்கிரதை

ஆகாரம், நித்திரை, மைதுனம், பயம் - இந்த நான்கிலும் அதிக ஜாக்கிரதையாயிருக்க வேண்டும், இவற்றில் முக்கியமானவை ஆகாரம், மைதுனம். இவற்றிலும் முக்கியமானது மைதுனம். இதனளவில் ஒரு மனிதன் தன்னை ஸர்வ ஜாக்கிரதையுடன் காக்கவேண்டும். இல்லையாயின் அதி சீக்கிரத்தில் மரண மடைவான்; சந்தேகமில்லை. இல்வாழ்வானுக்கு மைதுனம் ஊற்றுக்கேணி நியாயத்தையுடையது.
[25/11, 2:21 p.m.] Kathirvel: தேக நஷ்டத்தின் முதற் காரணங்கள்

இந்த உலகத்தில் மனிதர்களுக்குத் தேகம் சீக்கிரத்தில் நஷ்டம் அடைவதற்குக் காரணம் இரண்டு. அவையாவன: ஆகாரம், மைதுனம். ஆகாரத்தா லொன்பது பங்கு நஷ்டமும், மைதுனத்தாலொரு பங்கு நஷ்டமும் உண்டாகிறது. எப்படியெனில்: பிண்ட உற்பத்தியின் காலம் தொடங்கி இறந்து போகிற பரியந்தம் ஆகாரம் உண்டு. இது இயற்கை. சிசு, வாலிபம், விருத்தாப்பியம் - இந்தப் பருவங்களில் மைதுனம் கிடையாது. கவுமாரம், யௌவனம் - இந்த இரண்டு பருவங்களில் மாத்திரம் மைதுனம் உண்டு. இந்தப் பருவங்களிலும், நோயாலும் துக்கத்தாலும் தரித்திரத்தாலும் பசியாலும் பயத்தாலும் வேறு அநந்தவகையால் உண்டாகும் துன்பங்களாலும் மைதுனம் தடைப்படும். இந்தக் காலத்திலும் ஆகாரம் உண்டு. பொருந்தல் ஏகதேசம். நஷ்டமும் அப்படியேயிருக்கிறது. ஆகாரவிஷயத்தில் அதிக்கிரமம், அக்கிரமம், அஜாக்கிரதை, அசாதாரணம் இப்படிப்பட்ட உணவுகளை நீக்கி, சுத்த சத்துவ ஆகாரங்களைப் புசித்து ஆயுள் விருத்தி செய்து கொள்வது சுத்த சன்மார்க்க ஏற்பாடு.

மேலே கண்ட செய்தியில் மரணம் வருவதற்கு இரண்டு காரணத்தை வள்ளலார் சொல்லுகிறார .ஒன்று உணவு ,அந்த உணவினால் உண்டாகும் சுக்கிலம் என்னும் விந்து ,

அந்த சுக்கிலத்தை தியானத்தால் தவத்தால் நிறுத்தி விடலாம் என்பது அறியாமை , எரிவதை நிறுத்தினால் கொதிப்பது அடங்கி விடும் என்பது குழந்தைக்கு கூட தெரியும் .

உணவை நிறுத்தினால் சுக்கிலம் நின்று விடும் .

இதற்கு தவம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை .

இடைவிடாது இறைவனிடம் தொடர்பு உடையவர்களுக்கு ,அழுத கண்ணீர் மாறுமோ ஆகாரத்தில் இச்சை செல்லுமோ என்கிறார் வள்ளலார் ,

அதனால்தான் மனதை சிற்சபையின் கண் இடைவிடாது செலுத்துங்கள் என்கிறார் .

அப்படி செலுத்தும் போது ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும் ,அருள் உணவு கிடைத்தால் பொருள் உணவு தானாகவே நின்று விடும் .

செய்ய வேண்டியதை செய்யாமல் செய்ய வேண்டாததை செய்வதால்  எந்தப் பயனும் இல்லை ,

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

இன்பம் இரண்டு வைகப்படும் !

இன்பம் இரண்டு வகை !

 உலகில் ஆண் பெண் இணைந்து அனுபவிப்பது ஒரு இன்பம் , அந்த இன்பத்தின் சுகத்தை அனுபவித்து  உணரத்தான் முடியுமேத் தவிர விவரிக்க முடியாது ,

ஆனால் அந்த இன்பம் அந்த சுகம் நிரந்தரமாக இருப்பதில்லை .இதற்கு பொருள் சுகம் என்றும் சிற்றின்பம் என்றும் பெயர் .

அதற்கு மேல் ஒரு சுகம் ,ஒரு இன்பம் உள்ளது அதற்கு அருள் சுகம் என்றும் அருள் இன்பம் என்றும் பெயர் , அந்த இன்பம் நிரந்தரமானது .இடைவிடாதது , தெவிட்டாது கிடைக்கும் இன்பமாகும் , இதற்கு பேரின்ப பெரும் சுகம்  என்பதாகும் .

அந்த இன்பத்தைத் தருபவர் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராகும் .

 அந்த இன்பத்தை அனுபவிக்க எத்தனை யோ அருளாளர்கள் முயன்றும் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்கிறார் வள்ளலார் .

இதைத்தான் அகவலில் தெளிவாக பதிவு செய்து உள்ளார்

மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும் யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அளித்தனை ! என்கிறார் .

மேலும் தான் அனுபவித்த இன்பத்தை  அனுபவமாலை என்ற தலைப்பில் பதிவு செய்து உள்ள பாடல் !

கற்பூரம் மணக்கின்றது என் உடம்பு முழுதும் கணவர் திரு மேனியிலே கலந்த மணம் அதுதான்

இற்பூத மணம் போலே மறைவது அன்று கண்டாய் இயற்கை மணம் துரியநிறை இறை வடிவத் துளத்தே

பொற் பூவும் நறுமணமும் கண்டு அறியார் உலகர்
புண்ணியனார் திருவடிவில் நண்ணியவார் அதுவே

நற்பூதி அணிந்த திரு வடிவு முற்றும் தோழி நான் கண்டேன் நான் புணர்ந்தேன் நான் அது ஆனேனே !

என்னும் பாடல் வரிகள் மூலமாக தான் அனுபவித்த இன்பத்தை சகத்தை  வெளிப்படையாக சொல்லுகின்றார் .

ஆண் பெண் அனுபவித்த இன்பத்தையே வெளியில்  சொல்ல முடியாது .

ஆனால் வள்ளலார்  தான் அனுபவித்த இன்பத்தை சுகத்தை  அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்ற பெருங்கருணையோடு வெளிப்படையாக வெளிப் படுத்துகின்றார் .

நாமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை காதலித்து என்றும் அழியாத பேரின்ப சுகத்தை அனுபவித்து மரணத்தில் இருந்து விடுபடுவோம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

செவ்வாய், 22 நவம்பர், 2016

மந்திரங்களின் மகிமை !மந்திரங்களின் மகிமை !

ஆறு  பேர்  நண்பர்கள் _   அவர்கள்   ஒரு நாள் உல்லாச பயணமாக ஊட்டிக்கு    காரில் பயணம்  செய்தார்கள் ,கார் பிரேக் பிடிக்காமல் பல்லத்தில்  விழுந்து  பலத்த  அடிபட்டுவிட்டது   . . .

    உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தவர்களை  . .  அருகில் உள்ளவர்கள்  அவர்களை வேறு ஒரு காரில்  ஏற்றிக்  கொண்டு போய் அருகில் உள்ள  மருத்தவ மணையில்  சேர்த்து  விட்டார்கள்  ,மருத்துவர்கள்  அவசர சிகிச்சை  பிரிவில்  வைத்து தீவிர    சிகிச்சை  அளித்தார்கள் . சிகிச்சை  பலன்  அளிக்காமல்  இருப்பதால்  எங்களால்  முடிந்த அளவுக்கு  சிகிச்சை  அளித்தோம்  இனி கடவுள்  தான்  உங்களை காப்பாற்ற வேண்டும்  .என்று மருத்துவர்கள்  கையை  விரித்து  விட்டார்கள் .

 அந்த ஆறு  பேரும் வேறு வேறு மதத்தைச்  சாரந்தவர்கள் .

ஒருவர்  இஸ்லாம் மதத்தை சார்ந்தவர்

 ஒருவர் கிருத்துவ மதத்தை  சார்ந்தவர்

ஒருவர் புத்த மதத்தை சார்ந்தவர்

 இரண்டு பேர்  இந்து மதத்தை  சார்ந்தவர்  ,அதில்  ஒருவர் சைவ சமயத்தை  சார்ந்தவர்

ஒருவர்  சாதி சமயம்  மதம் கடந்த  சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்

அவர்களின் பெற்றோர்கள் வந்து  அவரவர்கள்  வழிபடும்  தெய்வங்களைக்  குறிக்கும்  மந்திரங்களை  சொல்லி பிரார்த்தனை  செய்து கொண்டு  இருந்தார்கள் .

தொடரும் 

நாம் செய்ய வேண்டியது என்ன ?

நாம் செய்ய வேண்டியது என்ன ?

  உண்மையான ஜீவ காருண்யம் மட்டுமே செய்யுங்கள் .அடுத்து எல்லாம் செயல்  கூடும் என் ஆணை அம்பலத்தே எல்லாம் வல்லான் தனையே ஏத்து .

எல்லாம் வல்லவன் யார் ? என்பது ஜீவ காருண்யத்தால் மட்டுமே தெளிவாகும் ,அது எப்படி ? என்று விணா வரலாம் .

அதற்கான விடையை வள்ளலார் தெளிவாக  சொல்லுகின்றார் .

ஜீவ காருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானாகவே விளங்கும் .

ஜீவ காருண்யம் செய்யாத  போது அன்பும் அறிவும் தானாகவே மறையும் .

அறிவு விளக்கம் தான் உண்மையை வெளிப்படுத்தும் கருவி

சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் அளவிற்கு மிகவும் எளிமையாக விளக்கம் தந்து உள்ளார் வள்ளலார் .

 ஜீவ காருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும் .அன்பு உண்டானால் அறிவு உண்டாகும் _அறிவு உண்டானால் அருள் உண்டாகும் , அருள் உண்டானால்  அருட்பெரும்ஜோதி யார் ? என்பது தெரியும் .அருட்பெரும்ஜோதி  உடன் தொடர்பு கொண்டால் மட்டுமே கிடைக்க வேண்டியது கிடைக்கும் .

இதைத்தான் வள்ளலார் தெளிவாக சொல்லுகின்றார் .

அருட்ஜோதி தெய்வம் என்னை ஆண்டு கொண்ட தெய்வம் ,அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்த தெய்வம்

பொருட்சாரும் மறைகள் எல்லாம்  போற்றுகின்ற தெய்வம் போதாந்த தெய்வம் உயர் நாதாந்த தெய்வம் ,

இருட்பாடு நீக்கி ஒளி ஈந்தருளும் தெய்வம் எண்ணிய நான் எண்ணியவாறு எமக்கு அருளும் தெய்வம் .

தெருட்பாடல் உவந்து எனையும் சிவமாக்கும் தெய்வம் ,சிற்சபையில் விளங்குகின்ற தெய்வம் அதே தெய்வம் .

எனவே அருளைப் பெற உண்மையானக் கடவுள் யார் ? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் .

அந்தக் கடவுள் இடம் இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்

அந்தக் கடவுள் இடம் இருந்து மட்டுமே அருளைப் பெற வேண்டும் .

மேலே கண்ட அருளைப் பெற்று மரணத்தை வெல்லுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மை வழியாகும்

எல்லா வற்றுக்கும் ஆணிவேர் ஜீவ காருண்யம் மட்டுமே என்பதை அறிவுள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் ,

அறிவு விளக்கம் இல்லாதவர்கள் ஜீவ காருண்யம் செய்து அறிவு விளக்கம் அடையலாம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

மா தவம் செய தவர்களின் நிலை !

மா தவம் செயதவர்களின் நிலை !

வானிருக்கும் பிரமர்களும் நாரணரும் பிறரும் மாதவம் பன்னால் புரிந்து மணிமாட நடுவே

தேன் இருக்கும் மலர் அணை மேற் பளிக்கரையின் ஊடே திருவடி சேர்த்து அருள்க எனச் செப்பி வருந்திடவும்

நான் இருக்கும் குடிசையிலே வலிந்து நுழைந்து எனக்கே நல்ல திரு அருள் அமுதம் நல்கியதும் அன்றியும் என்

ஊன் இருக்கும் குடிசையிலும் உவந்து எளியேன் உள்ளம் எனும் சிறு குடிசை உள்ளும் நுழைந்தனையே !

 மேலே கண்ட பாடலை பல தடவை படியுங்கள் . முன் உள்ள அருளாளர்களின் நிலையும் ,மற்றும் உள்ள சமய மத அருளாளர்களின் நிலையும் , அளவில்லாத காலமெல்லாம் தவம் செய்தவர்களின் நிலையும் ,எந்த அளவில் உள்ளன என்பது விளங்கலாம் .

சாதி சமயம் மதம் அற்ற
பொது நோக்கத்தோடு வாழந்து மக்களுக்கு உண்மையான வழியைக் காட்டிய வள்ளலார் நிலையும் எப்படி உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம் .

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானை எந்த அளவிற்கு நேசித்து அருளை வழங்கி ஆட்கொண்டார் என்பதை அழுத்தம் திருத்தமாக மேலே கண்ட பாடல் வாயிலாக தெரியப்படுத்தி உள்ளார் ,

 அன்பு உள்ளங்களே யார் குழம்பி  குழப்பினாலும் , செவி சாய்க்காமல் ,வள்ளலார் சொல்லிய நேர் வழியில் உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

அன்புடன்

ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

வள்ளலாற்கு முன்பு எங்கே சென்றார்கள் !

அன்புடன் மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் !

அன்பு உள்ளம் கொண்ட அனைவருக்கும் வந்தனம்

வள்ளலாருக்கு முன்பு எங்கே சென்று இருந்தார்கள் சமய மத வாதிகள் .

அவர்களால்  மக்களை ஏன் நல்வழியில் கொண்டு  செல்ல முடியவில்லை .

வள்ளலார் வழி காட்டிய பிறகு அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று சப்பைக் கட்டு கட்டுவது ஏன் ?

இன்னும் வள்ளலார் யார் ? எனபதே புரிந்து கொள்ளாமல் ,தெரிந்து கொள்ளாமல் ,வள்ளலார் எதற்காக வந்தார் ?ஏன் வந்தார் ? என்பதே தெரியாமல் மக்களை குழப்புவது அறியாமையைக் காட்டுகிறது ,

இறைவனால் வருவிக்க உற்றேன் என்று சொல்லியும் உணர்த்தியும் கூட அறிந்து தெரிந்து கொள்ள முடியவில்லை என்றால் , அறியாமையா ?  அல்லது சமய மத பற்றா . ? அல்லது சித்தர்கள் மீது வைத்து உள்ள பற்றா ?

வள்ளலார் வருவதற்கு முன் சன்மார்க்கம் இருந்தது ,சுத்த சன்மார்க்கம் என்பதும் இல்லை .இப்படி எல்லாம்  சொல்வார்கள் என்பதை அறிந்து தான் வள்ளலார் " சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம"் என்று பெயர் வைத்தார்

எந்த அருளாளர் எழுதி வைத்து  உள்ள நூலில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயர் வைத்து உள்ளார்கள் .

தயவு செய்து மக்களை குழப்பாதீர்கள் .உங்களால் நல்ல வழியைக் காட்ட முடியாவிட்டாலும் .வழியை அடைக்காதீர்கள் .

முன்னாடி இருந்த அருளாளர்கள் எல்லாம்  மறைத்து வைத்து இருந்த தடைகளை எல்லாம் வள்ளலார் உடைத்து எறிந்து விட்டார் .

மனிதன் நல்வழியில் செல்ல ஒழுக்கம் நிறைந்த தூய்மையான அருள் வழியை வள்ளலார் காட்டி உள்ளார் .அவர் காட்டிய வழியில் சென்று முதலில்  மனிதனாக வாழ்ந்து ,அனைத்து உயிர்களுக்கும நன்மை செய்து _இறைவனிடம் அன்பு கொண்டு அருளைப் பெற்று _பேரின்ப பெருவாழ்வு என்னும் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழ்வோம் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

ஒரு அன்பர் கேட்டு உள்ள விணா ?

ஒரு அன்பர்  கேட்டு உள்ள விணா !

ஆன்மா வேறா ? உயிர் வேறா ? எனபதே அந்த விணா !

ஆன்மா என்பது ஒளித்தன்மை உடையது அதுதான் அருட்பெருஞ்ஜோதி தன்மை உடையது .
அது இருந்த இடம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இயங்கிக் கொண்டு உள்ள  அருட்பெருவெளி என்னும் இடமாகும்  .

அந்த அருட்பெருவெளி என்னும் சமூகத்தில ஆன்மா ் உள்ளதால ஆண்டவரின் குழந்தைகள் என்று சொல்லப்படுகிறது . ஆன்மாவுக்கும் ஒரு தேகம் உள்ளது , அதற்கு ஆன்ம தேகம் என்று பெயர் . ஒளி தேகம் என்றும் பெயர் .

அந்த ஆன்மா . . இந்த பஞ்ச பூத உலகிற்கு இறைவனால் அனுப்பி வைக்கப்படுகிறது ,

இந்த உலகத்தில் ஆன்மா தனித்து ஒளித்தேகத்துடன்  வாழ்வதற்கு வசதிகள் கிடையாது . இந்த மாயை உலகத்தின் சட்டப்படி ஆன்மா வாழ்வதற்கு ,உயிரும் உடம்பும் கொடுக்கப் படுகிறது .

அதனால் தான் நம்முடைய  தேகத்திற்கு ஜீவ தேகம் என்று பெயர் . ஜீவன் என்றால் உயிர் என்பதாகும் .

ஆன்மா இல்லை  என்றால் உயிருக்கும் ,உடம்பிற்கும் வேலை இல்லை ,

ஆன்மா ் இந்த உலகத்தில் வாழ்வதற்கு கொடுத்த உயிரையும் உடம்பையும் பழுது இல்லாமல் திருப்பிக் கொடுத்தால் மட்டுமே பழைய ஆன்ம தேகம் என்னும் ஒளி தேகம்   கிடைக்கும் .

 ஆன்மா இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் மற்ற உயிர்களுக்கு துன்பம் கொடுத்த காரணத்தால் .துன்பங்கள் அனைத்தும் திரைகளாக ,ஆன்மாவை மறைத்து கொண்டு உள்ளது .அதற்குப் பெயர்  தான் மாயா திரைகள் என்பதாகும் .

 அந்த திரைகள் நீக்குவதற்கு சமய மதங்கள் பல தவறான வழிகளை காட்டி உள்ளது .அதுதான் கலை உரைத்த கற்பனைக் கதைகள் என்கிறார் வள்ளலார் .

வள்ளலார் வந்து தான் உண்மையான வழியைக் காட்டி உள்ளார் . அதற்காக ஜீவ காருண்யம் என்றும் ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின  திறவு கோல் என்றும் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார்

ஆன்மா வேறு உயிர் வேறு .அதே நேரத்தில் ஆன்மா இல்லை என்றால் உயிரும் உடம்பும் இயங்காது .

உயிர் இருக்கும் வரை ஆன்மா பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கும் .எனவே தான் ஒளி தேகம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார் .ஒளிதேகம் பெற்றுக் கொள்வதுதான் மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும் .

உயிருள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவு என்று உரைத்த மெய்ச் சிவமே !

என்றும்

உயிர் எலாம் பொதுவில் உளம் பட நோக்குக செயிரெலாம் விடுக எனச் செப்பிய சிவமே !

எனத் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .

உயிர் எல்லாம் ஒரு நீ திருநடம் புரியும்  ஒரு திருப்   திருப்பொது என அறிந்தேன் .

செயிரெலாம் தவிர்தேன் திருவெலாம் அடைந்தேன் சித்து எலாம் வல்லது ஒன்று அறிந்தேன்

மயிரெலாம் புளகி உளமெலாம் கனிந்தே மலர்ந்தனன் சுத்த சன்மார்க்கப்

பயிர் எலாம் தழைக்கப் பதி எலாம் களிக்கப் பாடுகின்றேன் பொதுப் பாட்டே !

 எனவே அன்புள்ளம் கொண்ட அன்பர்கள் உண்மையை உணர்ந்து உயிர் இரக்கம் என்னும் ஜீவ காருண்யப் பணியில் அக்கரைக் கொண்டு பூர்த்தி அடைந்து .பின் இறைவன இடம் ் தொடர்பு கொண்டு அருள்  வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள் ,

அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அலைய வேண்டாம் .மனிதன் சொல்லியதை விட்டு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லியதை பின் பற்றுங்கள் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896

புதன், 16 நவம்பர், 2016

இன்பம் இரண்டு வகைப்படும் !


அவை பொருள் இன்பம் , அருள் இன்பம்  . என்பதாகும்  . .  

  உலகில் உள்ள இன்பங்களில் மிகவும்  முக்கியமானது , ஆண் பெண் உறவுகள் , இதில் தோல்வி   அடைந்தால்  வாழ்க்கை  வாழ்ந்து  எந்த பிரயோஜனமும்  இல்லை 

அந்த இன்பம் இரவில் இருட்டு அறையில் சிறிது நேரம் அனுபவிக்கும் இன்பம் , அந்த இன்பத்தால் இந்திரியங்கள் கரணங்கள் ஜீவன் அனைத்தும் உணர்ச்சியில் ஒடுங்கிப் போய் விடும் . இதற்கு  பொருள்   இன்பம்  என்று பெயர்  .

  நாம்  உண்ணும்  உணவால் உண்டாகும் சுக்கிலம்  என்னும் விந்து  உணர்ச்சியைத்  தூண்டி ஆண் பெண்  உடல் உறவு கொள்வதால்  அதற்கு பொருள் இன்பம் என்று பெயர் .  
பொருள்  இன்பத்தை அடிக்கடி  பயன் படுத்துவதால் , நரை, திரை,பிணி,  மூப்பு ,  பயம்  இறுதியில் மரணம்   வந்துவிடுகின்றது  .

மரணம்  வந்தால் மீண்டும் பிறப்பு என்பது  உறுதியாகி விடுகிறது ,. இதுதான் உலகியல் வாழ்க்கையின் நியதியாகும் , 

இந்த உலக இன்பத்தில்  இருந்து விடுபட்டு அருள் இன்பம்் பெற வேண்டும்  ,அந்த அருள்  இன்பத்தைப் பற்றி கற்றுக்  கொள்வதுதான் சாகாக்கல்வி என்று பெயர் .. 
 

சமயம் மதங்கள் பொய்யானது !

சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும், வேதாந்தம் சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லக்ஷியம் வைசக்க வேண்டாம். அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது. ஏனெனில் நமக்குக் காலமில்லை. மேலும், இவைகளுக்கெல்லாம் சாக்ஷி நானே யிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சுவாமிகளுக்கும் வேலாயுத முதலியாருக்கும் இன்னும் சிலருக்குத் தெரியும். அந்த லக்ஷியம் இப்போது எப்படிப் போய்விட்டது. பார்த்தீர்களா! அப்படி லக்ஷியம் வைத்ததற்குச் சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கிற - திருவருட்பாவில் அடங்கியிருக்கிற - ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும் சபைக்குக் கொண்டு வந்தால், அவைகளே சாக்ஷி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம் எனக்கு அப்போதிருந்ததென்றால், அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்தலாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்களானால், என்னைப்போல் பெரிய லாபத்தைப் பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்தச் சமயத்தில் வைத்திருந்த லக்ஷியமே என்னை இந்த நிலையில் தூக்கி விட்டதென்றாலோ, அந்த லக்ஷியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த இடத்துக்குத் தூக்கிவிட்டது யாதெனில்: அக்காலத்திலேயே எனக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவித்தாரென்று வாசகப் பெரு விண்ணப்பத்தினும், "எத்தேவரையும் நின் சாயையாய்ப் பார்த்ததேயன்றித் தலைவ! வேறெண்ணியதுண்டோ* என, "தேடியதுண்டு நினதுருவுண்மை" என்னும் தொடக்கமுடைய பதிகத்திலும் விண்ணப்பித்திருக்கின்றேன். மேலும் அவர் தெரிவித்த உண்மைப் பெருநெறி ஒழுக்கம் யாதெனில். "கருணையும் சிவமே பொருளெனக் காணும் காட்சியும் பெறுக"** என்றது தான். என்னை யேறாநிலை மிசை யேற்றி விட்டது யாதெனில் தயவு. தயவு என்னுங் கருணைதான் என்னைத் தூக்கி விட்டது.

ஆன்ம நேயன்  ஈரோடு  கதிர்வேல் ,

பிரதமர் மோடியின் அறிவிப்பு !

ஒரு நண்பர் கேட்டார் !

பிரதமர் மோடியின் அறிவிப்பைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார் ,

ஐந்நூறு ஆயிரம் செல்லாது என்ற அறிவிப்பு மிகவும் அவசியமானதாகும் .

சாதாரணமான ஏழை நடுத்தர  மக்களின் நன்மைக்காகவும் ,நாட்டின் வளர்ச்சிக்காகவும் ,அறிவிக்கப்பட்டதாகும் .

நாம் ஒவ்வொரு நாளும் உழைக்கும் உழைப்பும் மறைமுகமாக  கோட்டீஸ்வரன் வங்கியில் குவிந்து கொண்டு உள்ளது ,

அவர்கள் அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு நாட்டையே விலை பேசுகிறார்கள் ,

விலை நிலங்கள் எல்லாம் அவர்களின் வியாபார கிடங்குகளாகவும் ,அடுக்கு மாடி கட்டிடங்களாகவும்  மாறிவிட்டன ,விவசாய நிலங்கள் கருப்புப் பண திமிலங்கள் வசம் சென்று கொண்டு உள்ளன .

பணம் வைத்து இருப்பவன் எல்லாம் அரசியலில்  MLA ,MP.,மந்திரிகளாக மாறிவிட்டார்கள் ,கள்ளக்கடத்தல் ,கொள்ளை ,கருப்பு பணம் ,பதுக்கள்  மற்றும் போலிகள் எல்லாம் திரைப்பட தயாரிப்பாளர்களாக மாறிவிட்டார்கள் .இவர்கள் எல்லாம் ,அரசியல்வாதிகளின்  துணையாக நாட்டையே சுரண்டிக் கொண்டு உள்ளார்கள் ,

மேலும் கள்ள நோட்டுக்கள் நாட்டில் பரவலாக நுழைந்து விட்டன .

இவற்றை எல்லாம் எப்படி தடுப்பது .எதாவது ஒரு அதிரடி நடவடிக்கை எடுத்து தான் ஆகவேண்டும்

இவற்றை தடுக்க எந்த அரசும் முடிவு எடுக்க முடியாமல் ,திணரிக் கொண்டு இருந்தார்கள் .

மோடி அவர்கள் மிகவும் துணிச்சலாக இந்த நல்ல  முடிவு எடுத்து உள்ளது பாராட்ட வேண்டிய தாகும் ,மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற உள்ளது _

இதை அரசியல் வாதிகளும் மீடியாக்களும் மக்களுக்கு சிரமமாக உள்ளது  என்ற வதந்திகளைப் பரப்பிக் கொண்டு உள்ளது .

இன்னும் சில மாதங்களில் எல்லாம் சரியாகி விடும் .

அதுவரையில் மக்கள் பொருமையாகவும் சிக்கணமாகவும்  வாழ்க்கையை அமைத்து கொள்ள வேண்டும்.

இந்த  சிரமத்தை மக்கள் பொது நோக்கத்திற்காக பொருத்துக் கொள்ள வேண்டும் .

ஆரம்பம் சிரமம் அடுத்தது மகிழ்ச்சி என்பது உண்மை

    மக்கள்  எல்லாம் நல்லதே நடக்கும் என்ற எண்ணத்தை வருவித்துக் கொள்ள வேண்டும்

இது வள்ளலார் அறிவித்த  சன்மார்க்க காலம் அதனால் இதுபோன்ற நல்ல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

 அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

சனி, 12 நவம்பர், 2016

மக்களைத் திட்டவில்லை !

மக்களைத் திட்ட வில்லை !

மனித குலத்தை  அழித்துக் கொண்டு இருக்கும்  மூட நம்பிக்கைக்கும் ,அறியாமைக்கும்   காரணமே  சமய மதங்களின்  கொள்கைகள்தான்  ,

 அதனால்   வள்ளலார்  சமய மதங்களைத்   தோற்றுவித்தவர்களை   சாடுகின்றார்  .அதை  அறிந்த  சுத்த சன்மார்க்கிகள்  வள்ளலார்   சொல்லிி கருத்துக்களை  கொள்கைகளை மக்களுக்கு   சொன்னால்  வருத்தப்பட  வேண்டிய  அவசியம் இல்லை  .

உண்மையான கருத்துக்களை   வெளியில் சொல்லாமல்  மறைத்து வைப்பது     தான்  குற்றம்.

இதுவரையில் இருந்தது போல் இனியும் வீண் காலம் கழிக்காதீர்கள் என்கிறார் வள்ளலார் .சாதியும் சமயமும் மதமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி !என்கிறார்

 உண்மையை அறிந்து கொள்ள சாதி சமயம் மதம் போன்ற கொள்கைகள் தான் தடை யாக உள்ளது  . என்பதை மக்களுக்கு  உணர்த்துவதற்கு கடமை பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் .  சுத்த  சன்மார்க்கிகள்  சாதி  சமயம் மதங்களின்   தவறுகளை  எடுத்து உரைப்பது  தவறு அல்ல   .

அருட்பெருஞ்ஜோதி   ஆண்டவரின்   பெருமையும்    உண்மையும்  அருளையும்  அனைத்துத்  தர மக்களும்  அறிந்து கொள்ள வேண்டும் ,அதனை அறிந்து மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும்   என்பதுதான்  சுத்த சன்மார்க்கிகளின்   விருப்பமாகும் .

ஏனோ  ஒரு சிலருக்கு சமய மதக் கொள்கைகளை  குறை சொன்னால்  வருத்தமாக  இருக்கிறது .அவர்கள்  .உண்மையை  அறிந்து கொள்ளாமல்  பொய் மீது  அதிகம்  பற்று  வைத்து உள்ளார்கள்  .அதனால்  அவர்கள்  திருந்துவதற்கு  காலம்தான்   பதில் சொல்ல வேண்டும்  .

எதிலும் பொது நோக்கம் வேண்டும்  என்பார் வள்ளலார் .  பொது நோக்கம் வந்தால் எல்லாம் தானே  புரிந்து   தெரிந்து கொள்வார்கள் .

  எல்லா  உயிர்களையும்  தன்  உயிர்போல்  அறிந்து கொள்வதே  பொது  நோக்கம்  .அதை  அறிந்து கொண்டவன்  எவனோ அவனே  ஆன்ம நேய ஒருமைப் பாட்டு உரிமைக்குத்  தகுதியானவன்  .

அவனை மட்டுமே   அருட்பெருஞ்ஜோதி  ஆண்டவர்  ஏற்றுக்  கொள்வார் .அறிவைத் தெளிவு படுத்துவார்  .அருளை வாரி வழங்குவார்

எனவே  உலகில் உள்ள எல்லா சமய மதங்களும் அதன் கொள்கைகளும்  பொய்யானவைகள் . அவற்றை  தோற்றுவித்தவர்களும்  பொய்யானவர்கள்  அவற்றை பின் பற்றுபவர்களும்  அறியாதவர்கள்  .

வள்ளலார்  சொல்லிய உண்மையான சுத்த  சன்மார்க்க  கொள்கைகள்  மட்டுமே மக்கள் பின் பற்றி வாழ வேண்டும்  என்பதே இறைவன்  அறிவித்துள்ள சட்டம் . சட்டத்தை மீறுவது  பெரிய குற்றம் .

குற்றத்திற்கு  தண்டனை   மரணம் ,

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன்  ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்


புதன், 9 நவம்பர், 2016

உயிரா ? ஆன்மா ?

உயிரா ? ஆன்மாவா ?

 இதில் எதைக் காப்பாற்ற வேண்டும் ,பாதுகாக்க வேண்டும் .

உயிரைக் காப்பாற்ற வேண்டும் . தன்னுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டுமானால் பிற உயிர்களை காப்பாற்ற வேண்டும் .

பிற உயிர்களுக்கு பொருளைக கொடுத்தும் கருணைக்  காட்டியும் உயிரைக் காப்பாற்ற வேண்டும் ..அப்படிக் காப்பாற்றும் போது அந்த உயிர்களுக்கு மகிழ்ச்சி உண்டாகும் .

அந்த மகிழ்ச்சி ஆன்ம  நெகிழ்ச்சியாக மாற்றம் அடைந்து ,கருணைக் காட்டியவரின் ஆன்மாவில் சென்று பதிவாகும் .அந்தப் பதிவு மோதி மோதி,அவருடைய ஆன்மாவில்  சுத்த உஷ்ணத்தை உண்டாக்கும்

அந்த சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் அறியாமை என்னும் மாயா திரைகள் விலகும் .திரைவிலகினால் தான் ஆன்மாவில் இருக்கும் அருள் சுரக்கும் .அந்த அருள் ஐந்து வகையாக உள்ளது . ஐந்தாவது அமுதமான இனிப்பு உள்ள மணிக் கட்டியாக இருக்கும் .அதற்கு ரகசியா அமுதம் என்று பெயர் .மெளனா அமுதம் என்றும் பெயர் .

அந்த ஐந்தாவது அமுதத்தை உண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெற்றவர்களாகும் . அவர்களின் உடம்பும் உயிரும் அருள் ஒளியாக மாற்றம் அடைந்து ,ஆன்ம தேகமாக ஒளிரும் .அதற்கு அருள் தேகம் என்று பெயர் .பொன் உடம்பும் என்றும் பெயர் .

இதைத்தான் வள்ளலார் .பொன் உடம்பு எனக்கே பொருந்திடும் பொருட்டாய் என்னுளம் கலந்து என் தனி அன்பே என்று அகவலில் தகவலாக வெளிப் படுத்தி உள்ளார் .

மேலும் :- உயிர் உள் யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே உயிர் நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே !

என்கிறார் வள்ளலார் .

எங்கே கருணை இயற்கையில் உள்ளன
அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி !

என்று மக்களுக்கு தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் .

எனவே உடம்பையும் உயிரையும் அழிக்காமல் காப்பாற்றுவதே சாகாக் கல்வியாகும் . அதனால் வெற்றி அடைவதே மரணம் இல்லாத பெருவாழ்வாகும் .அதுவே என்றும் அழியாத  பேரின்ப பெருவாழ்வாகும் .

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .

திங்கள், 7 நவம்பர், 2016

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் எட்டு பாடல் !

அருட்பெருஞ்ஜோதி அட்டகம் எட்டு  !

அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தின் எட்டுப் பாடல்களுக்கும் சுருக்கமாக விடை காண்போம்.

1,வது பாடலின் விளக்கம் முதல் பாடலில் ''அருட்பெரும் ''என்ற சொற் தொடர்  பன்னிரண்டு முறை வருகிறது .இவை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் தன்மையைப் பன்னிரண்டு வகையாக விரித்து விளக்கிக் காட்டுகின்றார் வள்ளலார் .

2,வது பாடலில் அருட்பெருஞ்ஜோதியின் அருள் அரசு,உலகில் உள்ள  கோடிக்கான உயிர்களிலும்,உலகங்களிலும்,அவற்றில் இருக்கும் பொருள்களிலும் அகமும் புறமும் நிறைந்து ஆட்சி புரிந்து வருகின்றது .

அவ்வாறு அருட்பெருஞ்சோதி அருள் அரசு நடைபெருவத்தின் நோக்கம் எல்லா உயிர்களும் சத்து,சித்து ஆனந்தம் என்னும் அனுபவம் பெற்றுக் கொள்வதற்காக பொதுவாக செயல்பட்டுக் கொண்டு உள்ளவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் .

3,வது பாடல் ...மனிதர்களின் கண்,காது .மூக்கு,வாய்,மெய் ,என்னும் பொறி புலன்களிளாலும் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்  முதலிய கரணங்களாலும், இறைவனைக் காண முடிய வில்லையே என்று எண்ணி ஏங்கி இருக்கிறார்கள் முந்தைய அருளாளர்கள் .அவர்களுக்கு மிக நெருங்கி இருக்கும் ஒரே பொருள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்தான் என்று அவர்களுக்கு புரிய வைக்கின்றார் வள்ளல்பெருமான்.

அப்படி நெருங்கி இருக்கும் இறைவன் முதலும் முடிவும் இல்லாதவன் நித்தியமானவன் மிக நுட்பமானவன் அருள் ஒளி வடிவம் உள்ளவன் ,அந்த இறைவன் தன் அருளால் தன்னை சிறிது சிறிதாக வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றான்,தனது நுட்பமான அருள் நிலையை உணர்வு மூலமாக அறிந்து கொள்ளும்படி அருட்பெருஞ்ஜோதியாய் நின்று அனைத்தையும் ஆண்டுகொண்டு வருகின்றது . .

4,வது பாடல் ;--தனது உயர்ந்த அறிவினால் இறைவனை அடைந்து அனுபவித்து விடலாம் என்று எண்ணி முயன்றவர்கள் எல்லோரும் அவ்வாறு அடைய முடியாமல் வாய் திறக்க முடியாமல் மவுனிகளாய் ஆகி விட்டார்கள்.அறிவுடையவர்களை மவுனிகளாக ஆக்கிய இறைவன் இப்போது அருட்பெருஞ்ஜோதியாகி நம்மை ஆண்டு கொண்டு வருகின்றார்.நாம் எந்த வழியில் சென்றால் முழுமை பெறலாம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

5,வது பால ;-- இறைவன் ஆறு அந்தங்களுக்கும் முழுமையாக விளங்காதவன் ,,அவைகளையும் கடந்து நிற்பவன் அவ்வாறு விளங்கும் இறைவன் ,அவன் அருள் கொண்டு நோக்கும் போது அவன் சமரச சுத்த சன்மார்க்க சத்துப் பொருளாக புத்தமுதம் தருகின்ற ஜோதியாக பரி பூரணமாக விளங்கிக் கொண்டு உள்ளார் ..

6,வது பாடல.;-- இறைவன் ஒன்றாகவும்,பலவாகவும் காணுகின்ற இருவித தோற்றம் உடையவன் இறைவன்,..அப்படிப்பட்ட இறைவன் உடன் கூடியும் ,கூடாமலும் இருந்த முன் இருந்த ஞானிகளின்  அவர் அவர் தரத்திற்கு ஏற்பப் போற்றப் பட்டு ஓங்கி நிற்பவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ..

7,வது பாடல் ;-- முன் இருந்த ஞானிகள் பலவகை சாதனைப் பயிற்சிகளில் படிபடியாக மேலே ஏறி உள்ளனர் .ஆனால் அவர்கள் சிவ ஜோதி அனுபவம் பெறுகின்ற போது சிவ ஜோதிக்  காட்சியும் ,அதனைக் காணும் அவர்கள் உணர்வும் ஒன்றில் ஒன்று இணைந்து வெளியே நின்று  கலந்து கரைந்து போயினர் .,உள்ளே செல்ல முடியவில்லை.இறைவனுடன் கலக்க முடியவில்லை  என்கின்றார் வள்ளல்பெருமான்.

இதனால் அவர்கள் சிவஜோதிக காட்சியும் ,அதனைக் காணும் உணர்வும் தன் தனித் தன்மையை இழந்து விடுகின்றார்கள் .இதை உணர்ந்த ஞானிகளுக்கு அவரவர் நிலையில் போற்றும்படி இருப்பவர் எவரோ அவரே அருட்பெரும்ஜோதி ஆண்ட்வராகும்.

8,வது பாடல் ;-- அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே ! எங்கும் அருள் ஜோதி மயமாய் விளங்குகின்ற  திருச் சிற்றம்பலத்தில் என்னை ஈடு படுத்தினீர்கள் .எனக்குப் புதிய நல்ல அமுதத்தை ஊட்டி அருளிநீர்கள் ,அந்த அமுதத்தைத் தந்து அதை அனுபவிக்கும் நிலையையும் எனக்கு அளித்தீர்கள்.,உள்ளங் கையில் நெல்லிக் கனி பளீர் என்று விளங்குவது போல் .என் உள்ளேயும் விளங்கிக் கொண்டு இருக்கிறீர்கள் .என்கின்றார் வள்ளலார் ...

அருட்பெருஞ்ஜோதி அட்டகத்தில் உள்ள எட்டுப் பாடல்களின் கருத்துக்களை ஓர் அளவு உணர்ந்து கொள்ள வேண்டும்.அட்டகத்தின் பொருள் உணர்ந்து படிக்க வேண்டும்.அவ்வாறு படித்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை உணர்ந்து கொள்ளலாம்.அந்த உணர்வுடன் வாழ்ந்து பேரின்பத்துடன் வாழலாம் .

எட்டோடு இரண்டும் சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துணைக் கொள்கின்றீர் பித்து உஅலகீரெ !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

விரிவான விளக்கம் வேண்டும் என்றால் ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனியாக விளக்கம் முழுமையாக பகிர்ந்து கொள்ளலாம்.

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

புதன், 2 நவம்பர், 2016

சித்தர்கள் காணா சுத்த சன்மார்க்கம் !

சித்தர்கள் காணா சுத்த சன்மார்க்கம் !

 வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கம்  சித்தர்கள்  காணவில்லை  .

வள்ளலார்  பதிவு செய்து உள்ள பாடல்:--

 தேவர்களோ சித்தர்களோ சீவன் முத்தர் தாமோ

சிறந்த  முனித் தலைவர்களோ  செம்பொருள் கண்டாரோ

மூவர்களோ அறுவர்களோ முதற்  சத்தி அவளோ

முன்னிய நம் பெருங் கணவர் தம்மியலை உணர்ந்தோர்

 யாவர்களும் அல்ல வென்றால்  யான்  உணர்ந்து சொல்ல

 அமையுமோ  ஒரு  சிறிதும்  அமையாது  கண்டாய்

 ஆவலொடு அன்பர் தொழக்  கனகசபை  நடிப்பார்

 அவர்  பெருமை எவ்விதத்தும்  அவர் அறியார்  தோழி !

மேலும்  அவர்கள்  காணாத காட்சி எல்லாம்  காண்கின்றேன்  என்றும்  வள்ளலார்  சொல்லுகின்றார் .

காணாத காட்சி எல்லாம்  காண்கின்றேன்  பொதுவில்

கருணை நடம் புரிகின்ற கணவரை உட் கலந்தேன்

கோணாத மேனிலை  மேல் இன்ப அனுபவத்தில்

குறையாத வாழ்வு அடைந்தேன் தாழ்வு  அனைத்தும் தவிர்த்தேன்

நாணாளும் திருப்பொதுவில் நடம்பாடிப் பாடி

நயக்கின்றேன்  நற்றவரும் வியக்கின்ற படியே

மாணாகம்  பொன்னாக மாக வரம் பெற்றேன்

வள்ளல் அருள் நோக்கம் அடைந்தேன்  கண்டாய் என் தோழி !

 எனவே இயற்கை உண்மை  அறிந்தவர் கண்டவர்  வள்ளலார்  . . . இயற்கை விளக்கத்தையும்   இயற்கை  இன்பத்தையும்  அனுபவித்தவர்  வள்ளலார்  .

எனவே  வள்ளலார்  கண்ட அனுபவத்தை  எல்லா  மனித தேகத்தைப்  பெற்றவர்களும்  கண்டு அனுபவிக்கலாம்  என்று  ஆன்மநேய ஒருமைப்பாட்டு  உரிமையுடன்  அழைக்கின்றார்


இந்த உலகத்தில் மரணத்தை வென்று  பேரின்ப வாழ்க்கை வாழ வேண்டுமானால் . யாருடைய கொள்கையைப் பின்பற்றி வாழ  வேண்டும் என்பதை  நாம் தான் அறிவினால்   அறிந்து  கொள்ள வேண்டும்

நம்முடைய  வாழ்க்கையை  நாம்தான்  முடிவு செய்ய வேண்டும் .

தொடரும்  .  . .


ஆன்ம நேயன்  ஈரோடு  கதிர்வேல்
9865939896.

செவ்வாய், 1 நவம்பர், 2016

பெற்றோர்களே காரணம் !

பெற்றோர்களே காரணம் !  

 குழைந்தை பிறந்ததும் அக்குழந்தையின் வாழ்க்கை பெற்றோர்கள் உடையது . . .

அக்குழந்தைக்கு  உலகின் வாழ்க்கை முறையைப் பற்றி ஏதும் தெரியாது மூட நம்பிக்கையைப் சொல்லியும் ,காட்டியும் வளர்த்து வருகின்றனர் ,அதனால் அக்குழந்தைகள் தன்னுடைய அறிவுக்கு வேலை கொடுக்காமல் பொய்யானக் கற்பனை கடவுள்களின் ் பின்னால் தள்ளப்படுகின்றார்கள் .

அவர்கள் உண்மையான கடவுள் யார் ? என்று தெரிந்து கொள்வதற்குள் வயது முதிர்ந்து மாண்டு போகின்றார்கள் . . . . ஆன்மீகத்தை பின் பற்றுபவர்கள் எல்லோரும் வயது முதிர்ந்தவர்கள் என்பது உலகம் அறிந்த உண்மை . . .

ஆன்மீகம் என்றாலே இன்றைய  வாலிபர்கள் வெறுப்பு உடையவர்களாக இருக்கின்றார்கள் .   அதற்கு காரணம் ,உண்மையான கடவுள் கொள்கை இல்லாமையே !  வள்ளலார் வந்த பின்தான் மக்கள் சிந்தித்து தெளிவு அடைய  ஆர்வம் காட்டுகிறார்கள் .அவர்களை தெளிவு அடைய வைப்பதற்கும் பழைய ஆன்மீக வாதிகள் தடையாக உள்ளார்கள் ..பழைய ஆன்மீக வாதி என்பவர்கள்  . . சன்மார்க்கத்தில் உள்ள சமய மத கொள்கை உடையவர்கள் .அவர்கள் தான்  இளைய சமுதாயத்தை குழப்பிக் கொண்டு உள்ளவர்கள் .் சன்மார்க்க வளர்ச்சிக்கு தடையாக உள்ளவர்களும் அவர்களே !  வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல் .சமய மதக் கொள்கைகளை ,சன்மார்க்கத்தில் இணைத்து குழப்பத்தை உண்டாக்கிக் கொண்டும்  உள்ளார்கள் .

இன்றைய இளைஞர்களை பெரியவர்கள் தயவுசெய்து விட்டு விடுங்கள் .அவர்களே உண்மையைத் தேடி வந்து விடுவார்கள் .பழைய குப்பைகளை அவர்கள் மனதிலே கொட்டாதீர்கள் .இன்றைய இளைஞர்கள் எல்லோரும் அறிவாளிகள் .அவர்களின்  பெற்றோர்கள் தான் உண்மையை அறிந்து கொள்ள தடையாக இருக்கின்றார்கள் .    .

 அவற்றையும் தாண்டி மக்கள் சன்மார்க்கத்திற்கு வந்து கொண்டு உள்ளார்கள் ...ஏன் என்றால் ? இது சன்மார்க்க காலம் எனவே  எவ்விதப்பட்ட தடைகளும் அகற்றப் பட்டு விடும் .சாதி சமய மதங்கள் கடந்தது வள்ளலார் சொல்லி உள்ள சுத்த சன்மார்க்கம் .     . . . இன்றைய இளைஞர்கள் உண்மையை அறிந்து கொண்டு நல் வாழ்வு வாழ்வதற்க சமய மத பற்று உள்ள  பெற்றோர்கள் ஒதுங்கிக் கொள்வது மிகவும் நல்லது .

இனி வரும் காலம் நல்லவையாகவே நடக்கும் .  

 அன்புடன்

kathirvel C. ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்