சனி, 29 ஆகஸ்ட், 2020

ஒருமையில் உலகம் எல்லாம் ஓங்குக !

 *ஒருமையில் உலகம் எல்லாம் ஓங்குக!* 


ஏற்றத்தாழ்வு அற்ற சமுதாயமாய்.பிரிவினை இல்லாத.

பேதமில்லாத உலகமாய். ஒற்றுமையாய்  உலகம் எல்லாம் ஒரே கொள்கையைப் பின்பற்றி.ஒரேத் தன்மையாய் ஒரே சமநோக்கோடு சீராய் மனிதகுலம் மகிழ்ச்சி யுடன் வாழ்வேண்டும் என்பதே வள்ளலாரின் வேண்டுகோளாகும். 


பலவகையான சாதி சமயம் மதக் கொள்களைக் கொண்ட இவ்வுலகில் இவை எப்படி சாத்தியமாகும் ? எந்த வழிமுறையில் சரிசெய்து நடைமுறைப் படுத்த முடியும் ? இவற்றை சமநோக்கான செயல்பாட்டிற்கு எவ்வாறு கொண்டுவர முடியும். என்பைதை சிந்தித்து பல அறிஞர் பெருமக்கள்.

சிந்தனையாளர்கள்

ஆராய்ச்சியாளர்கள் பல புரட்சிக் கருத்துக்களை எடுத்துரைத்தும்.

அவற்றிற்காக

போராடியும் வெற்றிபெற முடியாமல் தோல்வியே கண்டார்கள்.


இன்னும் பல சிந்தனையாளர்கள் போராடிக் கொண்டும் வருகிறார்கள். 


*வள்ளலார் கொண்டுவந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்*.


*முடியாததை வள்ளலார் எப்பொழுதும் சொல்லமாட்டார்*. *வள்ளலார் வாக்குகள் யாவும் அருள் வாக்காகும்*.


வள்ளலார் பாடல் ! 


அத்தா நான் வேண்டுதல்கேட் டருள்புரிதல் வேண்டும்

அருட்பெருஞ் சோ தியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்

திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்


*ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்*

*ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்*


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல்வேண் டுவனே.! 


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்பதே வள்ளலாரின் கொள்கையாகும்.

அவரின் உண்மையான பேராசையாகும். 

 

உலகின் பழைய வரலாற்றை.

பழைய சமுதாயத்தை.

பழைய குப்பைகளை  அகற்றி.உலகம் 

முழுவதிலும் புதிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கையைத் தோற்றுவித்து புதிய சமுதாயத்தை புதிய வரலாற்றை உருவாக்குவதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்க கொள்கையாகும். இதுவே *இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணையாகும்*. 


வள்ளலார் பாடல் ! 


திருநெறி ஒன் றே அதுதான் சமரச சன் மார்க்கச்

சிவநெறி என் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு


வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்து

வல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்


பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்

பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே


கருநெறி வீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்

கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.! 


மேலே கண்ட சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க திருநெறியின் வாயிலாக புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும்.என்பதே வள்ளலாரின் எண்ணத்தில் எழுந்த எழுச்சியாகும்.


*வள்ளலார் பாடல் !*

ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே

ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்


பெருமை கொள் சமரச சுத்தசன் மார்க்கப்

பெரும்புகழ் பேசினர் பெரியவர் சூழ்ந்தார்


அருமையும் எளிமையும் ஆகிஅன் றாகி

அம்பலத் தேசித்தி ஆடல்செய் பதியே


இருமையும் அளித்தஎன் அருட்பெருஞ் சோதி

என்அர சேபள்ளி எழுந்தருள் வாயே.!  


உலகமே ஒருமையில் ஓங்கவும். பெருமை பெறும் சுத்த சன்மார்க்கத்தின் பெரும் புகழை பெரியவர்கள் எல்லாம் சூழ்ந்து பேசிமகிழவும் இம்மை இன்ப வாழ்வும். .மறுமை இன்ப வாழ்வும் .பேரின்ப வாழ்வும் பெற்று ஆனந்தமுடன் வாழ்வாங்கு வாழவும் அருள் வழங்க எழுந்து அருள்வாய் என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை அழைக்கின்றார் வள்ளல்பெருமான் அவர்கள்.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப்பெற வேண்டும்.

உலகில் இயங்கிக் கொண்டுள்ள கருணை இல்லா ஆட்சியை இருக்கும் இடம் தெரியாமல் அகற்ற வேண்டும் என்பதே வள்ளலாரின் முதல் பணியாகும்.


*வள்ளலார் பாடல் !*  

கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக

அருள்நயந்த நன்மார்க்கர் ஆள்க - 


தெருள்நயந்த

நல்லோர் நினைத்த நலம்பெறுக நன்று நினைத்

தெல்லோரும் வாழ்க இசைந்து.


எல்லோரும் ஏற்றத்தாழ்வு இல்லாமல். சாதி.சமயம் மதம் போன்ற வேறுபாடுகள் இல்லாமல் சரி சமமான வாழ்க்கையும்.மகிழ்ச்சி நிறைந்த  வசதியோடும்  ஒற்றுமையாய் ஒருமையுடன் வாழ வேண்டும்.அப்போதுதான் அனைவரும் இசைந்து வாழமுடியும்.


*சரிசமம் என்றால் எங்கனம் எவ்வாறு !*


உலகில் உள்ள ஒவ்வொருவரும் தாம் செய்யும் தொழிலும். பொருளாதாரம் தான் ஏற்றத்தாழ்வை  நிர்ணயம் செய்கிறது.

 மக்களில்  உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரித்து வைத்து இருக்கின்றது.


*இவற்றை சமப்படுத்த ஒரேவழி*


 உலகில் உள்ள அனைவருக்கும் *தாம் செய்யும் தொழிலில் வித்தியாசம் வேறுபாடு இருக்கலாம்.ஆனால் ஊதியத்தில் பொருளாதாரத்தில்  வேறுபாடு இருக்கக்கூடாது.*


உலகில் உள்ள அனைவருக்கும் *ஒரே சம்பளம் ஒரே ஊதியம்* என்ற நிலை வரவேண்டும்.


*சாதாரண கக்கூஸ் துப்புறவு செய்பவராக இருந்தாலும்.உயர்ந்த பதவியான ஜனாதிபதியாக இருநதாலும் ஒரே சம்பளமாக ஒரே ஊதியமாக இருக்க வேண்டும்*.


*செய்யும் தொழிலில் வித்தியாசம் இருக்கலாம் சம்பளத்தில் வித்தியாசம் இருக்கக்கூடாது* எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்  என்ற நிலை வந்தால் சமரசம் என்பது தானே வந்துவிடும்.


இதைத்தான் வள்ளலார் *ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும்* எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்தல் வேண்டும் என்றார்..


ஒரே உலகம். ஒரே கடவுள் .ஒரே ஆன்மகுலம் . ஒரே கொள்கை. ஒரே ஊதியம்.

ஒரே சமமான வாழ்க்கை. ஒரேத் தன்மையான மகிழ்ச்சி வந்துவிட்டால்.


உலகில் எல்லைத் தகராறு. தீவிரவாதம்.

பயங்கரவாதம்.

நக்சல்பார்ட்டி.லஞ்சம் லாவண்யம் .

கொலை கொல்லை.

கற்பழிப்பு . சொத்து அபகரித்தல்.ஏமாற்றுதல். தீங்கு விளைவித்தல். உயர்ந்தவன் தாழ்ந்தவன்.ஏழை பணக்காரன்.பொய்.

சூதுவாது.

பொறாமை. போன்ற எந்த இடையூறுகளும் மக்கள் மனதில் தோன்றாது.


எல்லோருக்கும் எல்லாம் கிடைத்தால் வேற்றுமைக்கு இடமேஇல்லை.இது நடக்குமா ? என நினைக்கலாம் கண்டிப்பாக நடக்கும். இவற்றை சரிசெய்ய கொஞ்ச காலமாகும்.


இதுவே நடுநிலையான ஆட்சி நடத்தும் வழிமுறைகளாகும்.


வள்ளலார் பாடல் ! 


நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை நண்ணிடா அரையரை நாளும்


கெடுநிலை நினைக்கும் சிற்றதி காரக் கேடரைப் பொய்யலால் கிளத்தாப்


படுநிலை யவரைப் பார்த்தபோ தெல்லாம் பயந்தனன் சுத்தசன் மார்க்கம்


விடுநிலை உலக நடைஎலாங் கண்டே வெருவினேன் வெருவினேன் எந்தாய்.! 


என்னும் பாடலிலே நடுநிலை இல்லா ஆட்சியின் கூட்டத்தைக் கண்டும். கேடு விளைவிக்கும் அதிகாரத்தைக் கண்டும்.அதனால் மக்கள் படும் துன்பம்.துயரம் அச்சம் .பயம் போன்றவைகளால் வரும் இன்னல்களை நினைத்தும்.பார்த்தும்.கேட்டும். நடுநடுங்கி  பயந்தேன் என்கிறார் வள்ளலார்.


இறைவன் படைத்த உலகில் இறைவனால் அனுப்பிய ஆன்மாக்கள்.இறுதியாக மனித தேகம் எடுத்து *அறம் பொருள் இன்பம் வீடு* என்ற நான்கையும் நான்கு காலங்களில் நன்கு அனுபவித்து. 


பின்பு அவற்றை முழுவதும் பற்றுஅற விட்டு விட்டு .இறைவனைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று மரணத்தை வென்று மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதே இயற்கையின் நியதியாகும்.இயற்கையின் சட்டமாகும்.


 இயற்கை சட்டத்தை மீறி மனிதர்களால் புதிய சாதி சமயம் மதம் போன்ற துன்மார்க்க சட்டத்தை உருவாக்கி மக்களை துக்கம்  துன்பம் என்ற நரகத்தில்  தள்ளி விட்டார்கள்.


*வள்ளலார் பாடல்*! 


பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே

பகராத வன்மொழி பகருகின் றீரே


நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே

நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே


கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே

கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே


எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.! 


என்கிறார் வள்ளலார்.


 நினைத்துகூட பார்க்க முடியாத.சிந்திக்க முடியாத எதிர்பார்க்க முடியாத. பண்ணாத தீமைகளை உருவாக்கி. பைத்தியக் காரத்தனமாக  வாழ்ந்து கொண்டு இருக்கும்.

வாழ வைத்துக் கொண்டு இருக்கும் ஆட்சியாளர்களும். மனித குலத்தை. மனிதனால் உருவாக்கிய அதிகாரத்தை  மாற்றி புதிய சமுதாயத்தை உருவாக்குவதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கத்தின் தனிப்பெரும் பொதுக் கொள்கையாகும்.


வள்ளலார் பாடல் ! 


சத்தியவான் வார்த்தைஇது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும்அத் தினங்கள்எலாம் இன்பம்உறு தினங்கள்


சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்எலா உலகும்

தூய்மைஉறும் நீஉரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் 

திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.!


இது நானாக சொல்லவில்லை எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் ஆணைப்படி சொல்லுகின்றேன்.இனி வரும்காலம் எவ்வாறு இருக்கும் என்பதை எளிய தமிழில் விளக்கமாக பதிவு செய்துள்ளார் வள்ளலார்.


எனவே சுத்த சன்மார்க்கத்தை சார்ந்தவர்கள் வள்ளலார் சொல்லிய வண்ணம் மிகவும் எச்சரிக்கையோடு செயல்படவேண்டும்.


அவ்வாறு செயல்படவில்லை என்றால்.

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால்  நிச்சயம் ஓரம் கட்டப்படுவார்கள். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

சாதியை விடாமல் ஜோதி காண முடியாது !

 *சாதியை விடாமல் ஜோதி காண முடியாது*.


சமய மதங்களின் பிரதிபலிப்பே சாதி என்பதாகும். *சமய மதங்களை கூட மக்கள் விட்டுவிடுவார்கள் "சாதியை விடமுடிவதில்லை*


மனிதன் உள்ளத்தில் குடிகொண்டு சவாரி செய்வதே சாதி.சமயம்.மதங்களின் கொள்கைகளாகும்..  


*இவை ஆன்மாவில் பதிவாகி நிறைந்துள்ளது*.


 ஆன்மாவில் பொய்யை நிரப்பிக் கொண்டு உள்ளதால் மெய்ப்பொருளைக் காணமுடியாமல்.அவற்றைத் தொடர்பு கொள்ள முடியாமல் அருளைப் பெற முடியாமல் மாண்டுகொண்டே உள்ளார்கள்.  


ஆன்மாவை அறிந்து கொள்வதே  ஆன்மீகம் என்பதாகும்.


கோயில். ஆலயம்.மசூதி.சர்ச்.

மற்றும் புண்ணிய ஸ்தலங்கள் என்று போற்றப்படும் இடங்களுக்கு சென்று உயிர் அற்ற ஜடப் பொருளை வழிபடுவது ஆன்மீகம் அல்ல. 


உயிர் உள்ள ஜீவன்களான சித்தர்கள் யோகியர்கள் ஞானிகளை வழிபடுவதும் ஆன்மீகம் அல்ல. 


சாதி சமயம் மதத்தினால் பிரித்து பிளவுப்பட்ட ஏழை எளிய மக்களின் துன்பம் துயரம் அச்சம் பயத்தை போக்குவதே ஆன்மாவை அறிந்துகொள்ளும் பாதையாகும்.


அடுத்து தன்னை அறிந்து இன்பம் அடைந்தால் தலைவனை அறியலாம்.எனபதே ஆன்மீகப் பாதையாகும்.


தன்னை அறிந்து இன்பம்உற வெண்ணிலாவே ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே  என்றும்.


சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உரைத்த அருட்பெருஞ்ஜோதி ! என்னும் அகவல் வரிகளில் உண்மையை முதன்முதலில் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியவர் வள்ளலார்.


ஆறு அந்தகளால் மதங்களால் தோன்றின.


மதங்களால் சமயங்கள் தோன்றின.


சமயங்களால் சாதிகள் தோன்றின.


தொழில்களுக்காக சாதிகளைப் பயன் படுத்தினார்கள்.


தொழிலை வைத்து உயர்ந்தவன் தாழ்ந்தவன் என பிரித்தார்கள்.


தொழில் சார்ந்த இனத்தில் பொருளை ( பணம்) வைத்து.பொருள் உள்ளவனை பணக்காரன் என்றும்.பொருள் இல்லாதவன் ஏழை என்று பிரித்தார்கள்.


கீழ்த்தரமான தொழில்களான. ஊரில் உள்ள தெருக்களை துப்புறவுசெய்தல்.

மலம் அள்ளுதல்.இறந்துபோன பிராணிகளையும்.

மனிதர்களையும் கொண்டுபோய் அடக்கம் செய்தல். .எரித்தல் போன்ற கீழ்த்தரமான தொழில்களை செய்பவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் ஊருக்கு வெளியே ஒதுக்கி வைத்தும். சக மனிதர்களை மனித நேயம் இல்லாமல் சாதி இனம் மொழிகளால் பிரித்து வைத்தும் கேவலப்படுத்தியும் நடைமுறையில் தீர்க்கமுடியாத கொடுமைகளுக்கு ஆட்படுத்தி நடந்து கொண்டு வருகின்றது.


இவை எல்லாம் ஆன்மீகம் என்ற பெயரிலும் கடவுள் பெயரிலும். ஆச்சார சங்கற்ப விகற்பங்களால் வேறுபடுத்தி பிரித்து வைத்துள்ளார்கள். 


மனிதர்கள் வணங்கும் வழிபடும் கடவுள்களையும் ஏழைச்சாமி.

பணக்காரச்சாமி என்றும் சைவசாமி அசைவசாமி என்றும்.கொலை கேட்கும் கடவுள் .கொலை கேட்காத கடவுள் என்றும் பிரித்து வைத்துள்ளார்கள். 


இவைகள் யாவும் இன்று நேற்று வந்தது அல்ல. பல்லாயிரம் ஆண்டுகளாக தொன்றுதொட்டு நடந்து வருகிறது.. இதைத்தான் வள்ளலார் சமூகப் பார்வையோடு சாடுகிறார்.சமூகம் என்பது ஆன்மீகத்தோடு பின்னி பினைந்தது.  ஆன்மீகம் வேறு.சமூகம் வேறு அல்ல.


எல்லாமே இறைவனால் படைக்கப்பட்டது.

வேற்றுமையை உண்டாக்க கடவுள் காரணம் அல்ல.

பாவம் புண்ணியம் காரணம் அல்ல.  யார் காரணம் ? 


ஆதியிலே உயர்ந்த சாதி என்று சொல்லுகின்ற  மனிதர்கள் செய்த சூழ்ச்சியே காரணமாகும்.இந்த சூழ்ச்சியின் பின்னணியை மனிதர்களுக்கு புரியவைத்து.தெளிவுப்படுத்தி.உண்மையை எடுத்துரைத்து.சாதி சமயம் மதம் போன்ற பற்றுகளில் இருந்து வெளியேற்றி. மக்களை நல்வழிப்படுத்தி மனிதநேயம் ஆன்மநேயத்தை போதிக்க   வந்தவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.


அக்காலத்திலும் சாதி சமயம் மதங்களை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் நிறையபேர் உண்டு.


ஆண் பெண் என்ற இரண்டு சாதிதான் என்று பிரித்து சொன்னார்கள்.


சாதி இரண்டொழிய வேறில்லை என்றார்கள்.

மேதினியில் இட்டார் பெரியோர்  இடாதார் இழிகுலத்தார்கள் என சொன்னார்கள்.


உயிர் உள்ளது உயிர் இல்லாதது என பிரித்தார்கள்.


ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சொன்னார்கள்.


உயிர்க்கொலை செய்பவர்கள்.உயிர்க்கொலை செய்யாதவர்கள் என பிரித்தார் வள்ளலார் 


அதற்குமேலும் ஆணும்அல்ல.பெண்ணும் அல்ல.அலியும்அல்ல என்றும் எல்லா உயிர்களுக்கும் பொதுவான ஒரேத் தன்மை உடையது *ஆன்மா என்பதை அறிந்து *ஆன்மநேய ஒருமைப்பாட்டு* உரிமையை பின் பற்ற வேண்டும் என்னும் உண்மையை அழுத்தமாக பதிவு செய்தவர்தான் நம் அருட்தந்தை திருஅருட்பிரகாச வள்ளல்பெருமான் ஆவார்கள்.

 

*நாம் அனைவரும். ஆன்ம குலம் ஒன்றே என்று அறிவதே உண்மையான ஆன்மீகம்.*


வள்ளலார் பேருபதேசத்தில் தெளிவாக பதிவு செய்கிறார்.


ஆதியிலே இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.

என்கிறார். 


அதன் உள் அர்த்தம் என்னவென்றால் அவன் சூதாக பூட்டிய பூட்டை இப்போது நான் உடைந்த எரிந்துவிட்டேன் என்கிறார்.


இனி கடவுள் பெயரால் தவறு செய்ய வாய்ப்பு இல்லை.அப்படி மீறியும் செய்வார்களேயானால் *கொரோனோ* போன்ற பலவிதமான தொற்று தொற்றி தீராத துன்பம் அனுபவிக்க தனிமையில் தள்ளப்படுவார்கள்.


வள்ளலார்பாடல்!  


சாதியிலே மதங்களிலே சமயநெறி களிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச்சண் டையிலே


ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்

அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்அழ கலவே


நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர்அவர் தாமே


வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.! 


மேலும்.வள்ளலார் பாடல் ! 


சாதிசம யங்களிலே வீதிபல வகுத்த

*சாத்திரக்குப் பைகள்* எல்லாம் பாத்திரம்அன் றெனவே


ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே

அன்பால் இன்று உண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்


ஓதிஉணர்ந் தோர் புகழும் சமரசசன் மார்க்கம்

உற்றேன் சிற் சபைகாணப் பெற்றேன்மெய்ப் பொருளாம்


சோதிநடத் தரசை என்றன் உயிர்க்குயிராம் பதியைச்

சுத்தசிவ நிறைவை உள்ளே பெற்றுமகிழ்ந் தேனே.!.


*சாதி.சமயம் மதம்.சாத்திரம்  போன்ற குப்பைகளில் இருந்து விடுபடாதவரை இறைவன் தொடர்பும் கிடைக்காது. அருளும் கிடைக்காது*  என்ற உண்மைநிலையை ஆதியில் என் உள்ளத்தில்  அறிவிக்க உள்ளபடி அறிந்தேன் என்கிறார்.


அதன்பிறகு *எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால்* சமரச சுத்த சன்மார்க்கம் உற்றேன் சிற்சபை காண பெற்றேன் என்கிறார்.


மேலும் வள்ளலார் பாடல் !


*சாதி சமயச் சழக்கை விட் டேன்* அருட்

சோதியைக் கண்டேனடி  அக்கச்சி

சோதியைக் கண்டேன டி.! என்கிறார்.

 

மேலும் ..


சாதி குலம் சமயமெலாம் தவிர்த்தெனை மேல் ஏற்றித்

தனித்த திரு அமுதளித்த தனித்தலைமைப் பொருளே


ஆதிநடுக் கடைகாட்டா தண்டபகி ரண்டம்

ஆருயிர்கள் அகம்புறம் மற் றனைத்தும்நிறை ஒளியே


*ஓதிஉணர்ந் தவர்எல்லாம் எனைக்கேட்க* *எனைத்தான்*

*ஓதாமல்* *உணர்ந்துணர்வாம்* *உருவுறச்செய் உறவே*


சோதி மய மாய்விளங்கித் தனிப்பொதுவில் நடிக்கும்

தூயநடத் தரசே என் சொல்லும்அணிந் தருளே.! 


இப்படி ஆயிரக்கணக்கான பாடல்களின் வாயிலாக சாதி சமயம் மதத்தின் குறைபாடுகளை தவறுகளை சுட்டிக்காட்டி. அவற்றின் பற்றுகளை அகற்ற வேண்டும் என்கிறார். உண்மை உணர்ந்து துணிவோடு அகற்றி மற்றவர்களுக்கு வழிகாட்டுவதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்* எவை என்பதைப்பற்றி வள்ளலார் சொல்லிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய  சிறு விண்ணப்பத்தில் தெளிவாக விளக்கி பதிவு செய்துள்ளார். 


*அனைத்து சன்மார்க்க சங்கங்களிலும்  ஜோதி வழிபாட்டில் நாம் தினமும் சொல்லுகிறோம்*.


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே!


இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் *முக்கியத் தடைகளாகிய* சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், 


வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும். 


சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லஷியமாகிய *ஆன்மநேய ஒருமைபாட்டுரிமை* எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும்.


எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி யாண்டவரே!


தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம்! வந்தனம்! 


மேலே கண்ட விண்ணப்பத்தை தெரிந்து சொல்கிறோமா ? தெரியாமல் சொல்கிறோமா ?  அந்த வாசகத்தில் உள்ளபடி பின்பற்றுகிறோமா ? இல்லையா ? என்பதை சிந்திக்க வேண்டும்.


வள்ளலார் தோற்றுவித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்பதே சாதி சமயம் மதம் என்ற பற்று இல்லாதது.என்பதை அறிவால் அறிந்து கொண்டால் பற்றை தூக்கி எறிய தயங்கமாட்டோம். 


பற்றிய பற்று அனைத்தும் பற்றுஅற விட்டு அருள் அம்பலப்பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே என்று சொல்லுகின்றார்.


*நாம் எங்கே சென்று கொண்டுள்ளோம் எவற்றை நோக்கிசென்று கொண்டுள்ளோம் என்பதே ஒன்றும் புரியாத புதிராகவே இருக்கிறது*.


வள்ளலார் பாடல்! 


அச்சாநான் வேண்டுதல் கேட் டருள்புரிதல் வேண்டும்

ஆறந்த நிலைகளெலாம் அறிந்தடைதல் வேண்டும்


எச்சார்பும் ஆகிஉயிர்க் கிதம்புரிதல் வேண்டும்

எனைஅடுத்தார் தமக்கெல்லாம் இன்புதரல் வேண்டும்


*இச்சாதி சமயவிகற் பங்களெலாம்* தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல் வேண்டும்


உச்சாதி அந்தமிலாத் திருவடிவில் யானும்

உடையாயும் கலந்தோங்கும் ஒருமையும்வேண் டுவனே.! 


என்று  இறைவனிடம் விண்ணப்பம் செய்கிறார். இவ்வளவு பாடல்களிலும் விண்ணப்பங்களிலும் எழுதிவைத்தும் நாம் சாதி சமய மதப் பற்றுகளில் இருந்து வெளியே வரவில்லை என்பது நிதர்சனமான உண்மை.


நம்மால் பற்றுகளை விடமுடியாவிட்டாலும்  சுத்த சன்மார்க்கத்தின் உண்மை அறிந்து புதியதாக வரும் அன்பர்களைக்  குழப்பாமல்  வழிவிட்டு ஒதுங்கிக்கொள்வது நாம் செய்யும் பெரிய புண்ணிய நற்காரியமாகும்.


தடைகளை நீக்குவோம்! திரைகளை அகற்றுவோம்! அருளைப் பெறுவோம்.!

மரணத்தை வெல்வோம் ! 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2020

சாகாத்தலை.வேகாக்கால்.போகாப்புனல் !

 *சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் !*


*ஒரு சிறு அனுபவ விளக்கம்*.


ஆன்மாவுக்குத் முத்தேக சித்தி என்னும் ஆன்ம லாபம்.ஆன்ம இன்ப வாழ்வு  தேவைப்படுகிறது. 


ஆன்ம இன்ப லாபம் ஆன்ம இன்ப வாழ்வு வழங்கவே, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர், மகா பிரபஞ்ச காரியத்தை ஆதி முதல் நடத்தி வருகின்றார்.

உண்மையில், அக்கடவுளே தன் இயல் உண்மை நிலையை அனுபவத்தை அறிந்து கொள்ள  ஒவ்வொரு ஆன்ம அணுவிலும் நிரம்ப வைத்துள்ளார். 


அதனால், ஒரு குறிப்பிட்ட ஆன்மாவுக்கு அக அருள் ஆன்ம ஞான அனுபவம் உண்டாக அதற்கு உள்ளிருந்து உயிர்ச் சக்தியை.ஆன்ம அருள் சக்தியை வெளிப்படுத்தி செயல் படுத்தி உள்ளது 

அதுவே பக்குவம் உள்ள ஆன்மாவாகும். அந்த பக்குவம் உள்ள ஆன்மாதான் திருஅருட்பிரகாச வள்ளல் பெருமானாகும்.


உலகம் எல்லாம்  விளங்கத் தேகாதி பிரபஞ்ச வடிவை  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் படைத்துள்ளார்.

எல்லா உயிர்களும் விளங்க .

உடம்புகளும் விளங்க வளர்த்து வருகின்றார். இதனால் ஒவ்வொரு பிறவியாகிய தேகச் சூழலிலும், இந்திரிய அறிவான புலன்  உணர்வு, கரண அறிவான மன அறிவு, ஜீவ அறிவான உயிர்அறிவு. உள்ஒளி அறிவான ஆன்ம அறிவு.அதற்குமேல் அருள் அறிவு.அதற்குமேல் கடவுள் அறிவான ஞான அறிவு முறையாக வளர்ந்து வருகிறது. 


ஆன்மாவில் அகத்தில் நித்திய நிறைவாகியுள்ள அருட்பெருஞ்ஜோதியில் நின்றே ஒவ்வொரு பிறவியிலும், உடல், உயிர்,அன்ம ஞானம் வெளிப்பட்டு வளர்வதும், உட் சுருங்கிக் கிடப்பதும், அதற்கு மேல் அடுத்து வரும் பிறவியிலும் தொடர்கதையாக வந்து கொண்டே இருக்கிறது.


வள்ளலார் பாடல் !


திருவிளங்கச் சிவயோக சித்திஎலாம் விளங்கச்

சிவஞான நிலைவிளங்கச் சிவானுபவம் விளங்கத்


தெருவிளங்கு திருத்தில்லைத் திருச்சிற்றம் பலத்தே

திருக்கூத்து விளங்கஒளி சிறந்ததிரு விளக்கே


உருவிளங்க உயிர்விளங்க உணர்ச்சியது விளங்க

உலகமெலாம் விளங்க அருள் உதவும் பெருந் தாயாம்


மருவிளங்கு குழல்வல்லி மகிழ்ந்தொருபால் விளங்க

வயங்குமணிப் பொதுவிளங்க வளர்ந்தசிவக் கொழுந்தே.! 


என்னும் பாடலிலே தெளிவுப்படுத்துகின்றார்.


இறுதியான உயர்ந்த அறிவுள்ள மனித தேகத்திற்கு

இவ் உண்மை விளங்க விளக்க வந்ததே,

 *சாகாத்தலை, வேகாக் கால், போகாப்புனல் என்பதாகும்*


ஆன்மா என்பது சாகாத்தலை.

ஜீவன் என்னும் உயிர் வேகாக்கால்.

உடம்பு என்பது போகாப்புனல்.என்பதாகும். இவை மூன்றும் பிரியாமல் மாற்றம் செய்வதே மரணம் இல்லாப்பெருவாழ்வாகும்.


1. சாகாத்தலை:

சாகாத்தலை என்பது ஞானம்.அருள் விளங்கும் இடம்.அதாவது ஆன்மா இருக்கும் இடம். இது பிறவி தோறும் உயிர் உடம்பு எடுத்து  தொடர்ந்து பிறப்பு எடுத்துக் கொண்டே இருக்கின்றது.  அதன் விளைவு இறுதியில் மரணம் வந்து கொண்டே இருக்கின்றது.

சாகும் தலையாக உள்ள ஆன்மாவை சாகாத்தலையாக மாற்ற வேண்டும்.விழித்து உயிரை. உடம்பை அழிக்காமல் ஆன்மாவின் தன்மைக்கு அருள் ஒளியாக மாற்றுவதே சாகாத்தலை என்றும் அவற்றைப் பயில்வதற்கு *சாகாக்கல்வி* என்றும் பெயர் வைத்துள்ளார் வள்ளலார்..


ஆன்மாவை மாயா பூத தத்துவங்களான திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன.

தத்துவங்களை கடந்து தத்துவா தீதமாக தன்னை மாற்றிக் கொள்ளவேண்டும்.அதுவே சாகாத்தலையாகும் மீண்டும் பிறப்பு இல்லாமல் வாழ்வதே ஆன்ம லாபம் என்பதாகும்.இது ஆன்ம அனுபவ அருள் காட்சியில் அனுபவிப்பதாகும்.

அனுபவத்தால் மட்டுமே அறியமுடியும்.


2. வேகாக் கால்

வேகாக்கால் என்பது அழியும் ஜீவனை அழியாத ஜீவனாக (உயிர்) மாற்றுவதாகும்.நாம் சுவாசிக்கும்  பிராணவாயுவாகிய உயிர்க்காற்றை.

அமுதக்காற்றாக மாற்ற வேண்டும்.

 

நாம் சுவாசிக்கும் காற்று நான்கு வகை கலவையாக உள்ளது.

விஷக்காற்று .

உஷணக்காற்று.

பூதகாற்று.

அமுதக்காற்று என்பவையாகும்.


நம் உயிர்.உடம்பு பஞ்ச பூதங்களால்.ஆன்மா வாழ்வதற்கு கட்டிக் கொடுக்கப்பட்ட.பஞ்ச பூத வாடகை உடம்பாகும்.

இவை 96 தத்துவங்கள் அடங்கிய உறுப்புக்களால் பின்னப்பட்டதாகும்.

தத்துவங்களை வெல்லுவதற்கும்.

தத்துவங்களை கடப்பதற்கும் வேகாக்காலாகிய அமுதக் காற்றை சுவாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.அமுதகாற்றின் அனுபவத்தால் தத்துவங்களை வெல்ல வழி கிடைக்கும்.

 

இவ்வுலகில் உடம்பை உயிரை. வளர்த்து வாழ்வதற்கு விஷக்காற்று.உஷ்ணக்காற்று.பூதக் காற்றும் .ஏகதேச அமுதகாற்றும் சுவாசித்துக் கொண்டு உள்ளோம்

  

விஷக்காற்றை. உஷ்ணக்காற்றை.

பூதக்காற்றை சுவாசிக்காமல் அழியாத காற்றாகிய வேகாத காற்றாகிய அமுதக்காற்றை  மட்டும் சுவாசிப்பதே வேகாக்கால் என்பதாகும். அதற்கு அமுதகாற்று என்று பெயர்.

*அமுதக்காற்றிற்கு வேகாக்கால் என்று பெயர்* 

ஆன்மாவானது உடம்பை உயிரை விட்டு பிரியாமல் வாழ்வதற்கு வேகாக்காலான அமுதக்காற்றை சுவாசிக்க பழகிக் கொள்ள வேண்டும்.


அமுதக்காற்று தினமும் காலை 4-30 முதல் 6-00 மணிவரை உயிர்களின் நன்மைக்காக  பூமியை நோக்கி  இயற்கையாக இறைவனால் அனுப்பப்படுகிறது.அந்த நேரத்தில் எழுந்து விழித்து அமர்ந்து இறை உணர்வோடு  சுவாசிக்க வேண்டும். ( விரிக்கில் பெறும்)


3. போகாப்புனல்

நம் உடம்பில் பஞ்ச பூதங்கள் நிறைந்து இருக்கின்றது.அதில் .மண். தண்ணீர்.உஷ்ணம் காற்று .ஆகாயத்தால் உடம்பு இயங்கிக் கொண்டு உள்ளது.


*சாகும் தலை சாகாத்தலை என  *இருவகை உண்டு*


*வேகும்கால்* *வேகாக்கால். என இருவகை உண்டு*. 


*போகும் புனல்*. *போகாப்புனல்*

*என இருவகை உண்டு*. 


உணவினால் உண்டாகும் இரத்தம் போகும்புனல். என்பதாகும்.

*போகாப்புனல் என்பது அருள் அமுதம் என்பதாகும்*.


அமுதக்காற்றினால் ஆன்ம உணர்வால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையினால் உண்டாகுவதுதான் அருள் என்னும் அமுதமாகும்.அமுதத் தாரகையாகும்.


பூத உணவால் உண்டாவது இரத்தம் இது நிலைக்காது வயோதிக காலத்தில் உணவு உட்கொள்ள முடியாமல் வற்றிவிடும் இறுதியில் மரணம் நிச்சயம்.


மரணம் வருவதால் போகும்புனலை போகாப்புனலாக மாற்றவேண்டும்.

போகாப்புனல் என்பது அருள் அமுதம் என்பதாகும்

ஆன்மாவில் இருந்து அமுதம் சுரந்து உடம்பு உயிர் நிறைந்து ஒளி உடம்பாக மாற்றும் தன்மை உடையது .பஞ்ச பூதங்கள் அற்றது எனவே அதற்கு போகாப்புனல் என்று பெயர் வைத்துள்ளார் வள்ளலார்.


மனித வாழ்க்கையில் சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றும் சன்மார்க்கிகள் மிகவும் முக்கியமாக தெரிந்து கொள்வதே.

சாகாத்தலை. வேகாக்கால்.

போகாப்புனல் என்பதாகும்.

இது படிப்பால் அறிவது அல்ல. ஒழுக்கம் நிறைந்து கருணை உணர்வோடு அனுபவத்தால் அறிவதாகும்.


*சாகாத்தலை என்பது உடம்பை  உயிரை விட்டு பிரியாமல் இருக்கும் ஆன்மா என்னும் உள் ஒளியாகும்*


*வேகாக்கால் என்பது பூத சூடு பற்றாத பூத கலவை இல்லாத அமுதக்காற்றாகும்*

*போகாப்புனல் என்பது உடம்பை உயிரை ஆன்மாவை பிரியாமல் பாதுகாக்கும் அருள் அமுதமாகும்*.

அமுத நன்னீராக அகத்திலே இருந்து சுரப்பதே போகாப்புனலாகும். 


உயிர் விளங்க உடல் விளங்க.ஆன்மா நிலைக்க பூத உடம்பை அருள் ஒளியாக மாற்றுவதே.

சாகாத்தலை.வேகாக்கால். போகாப்புனல் என்பதாகும்.

 இந்த மூன்றும் ஒன்றோடு ஒன்று இணைந்து எக்காலத்தும் அழியாத சுத்த பிரணவ ஞான தேகம் பெற்று மரணத்தை வெல்லும் துவாரமாகும்.

மனிதப் பிறவியில் மட்டுமே அனுபவ பக்குவத்தின் மூலம் இம்மூன்றும் வெளிப்படுகிறது.. மற்றபடி எப்பொருளிலும், எவ்வுயிரிலும் இவை மறைமுகமாகவே செயல் படுகின்றது.

இதற்கு அனுபவம் அருட்பெருஞ்ஜோதி அகவலில் தெளிவாக சுருக்கமாக நிரப்பி வைத்துள்ளார்.


மேலும் சுத்த சன்மார்க்க மரபு பற்றி பாடல் மூலம் தெரியப்படுத்துகின்றார்.!


சாகாத தலைஅறியேன் வேகாத காலின்

தரம்அறியேன் போகாத தண்­ரை அறியேன்


ஆகாய நிலைஅறியேன் மாகாய நிலையும்

அறியேன்மெய்ந் நெறிதனைஓர் அணுஅளவும் அறியேன்


மாகாத லுடைய பெருந் திருவாளர் வழுத்தும்

மணிமன்றந் தனைஅடையும் வழியும்அறி வேனோ


ஏகாய உலகினிடை எங்ஙனம் நான் புகுவேன்

யார்க்குரைப்பேன் என்னசெய்வேன் ஏதும்அறிந் திலனே!.


மேலும்


சாகாத கல்வியே கல்வி ஒன் றே சிவம்

தான்என அறிந்தஅறிவே

தகும்அறிவு மலம் ஐந்தும் வென்றவல் லபமே

தனித்தபூ ரணவல்லபம்


வேகாத காலாதி கண்டுகொண் டெப்பொருளும்

விளையவிளை வித்ததொழிலே

மெய்த்தொழில தாகும் இந் நான்கையும் ஒருங்கே

வியந்தடைந் துலகம் எல்லாம்


மாகாத லுறஎலாம் வல்லசித் தாகி நிறை

வானவர மேஇன்பமாம்

மன்னும்இது நீபெற்ற சுத்தசன் மார்க்கத்தின்

மரபென் றுரைத்தகுருவே


தேகாதி மூன்றும் நான் தருமுன்அருள் செய்தெனைத்

தேற்றிஅருள் செய்தசிவமே

சிற்சபையின் நடுநின்ற ஒன்றான கடவுளே

தெய்வநட ராஜபதியே.!


என்னும் பாடலில் தெளிவாக விளக்கி உள்ளார்.

இன்னும் விரிக்கில் பெருகும்.


*சுத்ததேகம்.பிரணவதேகம்.ஞானதேகம் என்னும் முத்தேக சித்தி பெற*..

*சாகாத்தலை.வேகாக்கால்.போகாப்புனல்  போன்ற பயிற்சிகள் அவசியம் தேவை.* 


வள்ளலார் பாடல் ! 


சாகாத தலைஇது வேகாத காலாம்

தரம்இது காண் எனத் தயவு செய்து  உரைத்தே


போகாத புனலையும் தெரிவித்து என் உளத்தே

பொற்புற அமர்ந்ததோர் அற்புதச் சுடரே


ஆகாத பேர்களுக்கு ஆகாத நினைவே

ஆகிய எனக்கென்றும் ஆகிய சுகமே

தாகாதல் எனத்தரும் தரும சத் திரமே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!


மேலும் பாடல் !


சாகாத கல்வித் தரம்அறிதல் வேண்டுமென்றும்


வேகாத கால்உணர்தல் வேண்டுமுடன் - 


சாகாத்

தலைஅறிதல் வேண்டும் தனிஅருளால் 


போகாப்புனல்  உண்மை

நிலைஅடைதல் வேண்டும் நிலத்து.!


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

சனி, 22 ஆகஸ்ட், 2020

சுத்த சன்மார்க்க கொள்கைகள் !

 *சுத்த சன்மார்க்கக் கொள்கைகள்* 


 மனிதனுக்கு உயர்ந்த அறிவு கொடுத்ததே உயர்ந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்பதற்கே...


 வள்ளலார் கற்பித்துள்ள சுத்தசன்மார்க்க கொள்கையில்.

*சிறு தெய்வ வழிபாட்டிற்கு இடம் இல்லை.  *ஒரே தெய்வ வழிபாடு*  என்பதை மட்டுமே சுத்த சன்மார்க்கிகள்  பின்பற்ற வேண்டியது அவசியமாகும்..


வள்ளலார் ஆரம்பத்தில் எல்லா தெய்வங்கள் மீதும் பாடலும் பாடி  .

வழிப்பட்டும் வந்துள்ளார் .


*இறுதியாக என்ன சொன்னார் என்பதுதான் நமக்கு ரொம்ப முக்கியமானதாகும்*. 


உலகில் மனிதனால் படைக்கப்பட்ட.

தத்துவ தெய்வங்களை வழிப்பட்ட காலத்திலும் உண்மையான தெய்வத்தை அறிந்துகொள்ள பசித்திருந்து. தனித்திருந்து.

விழித்திருந்து தேடிக்கொண்டே இருந்தார்.


*வள்ளலார் பாடல்* !


தேடிய துண்டு நினது உரு வுண்மை

தெளிந்திடச் சிறிது நின் னுடனே


ஊடிய துண்டு பிறர்தமை அடுத்தே

உரைத்ததும் உவந்ததும் உண்டோ


ஆடிய பாதம் அறியநான் அறியேன்

அம்பலத் தரும்பெருஞ் சோதி


கூடிய நின்னைப் பிரிகிலேன் பிரிவைக்

கூறவுங் கூசும்என் நாவே.! 


மேலும்..


மாயையாற் கலங்கி வருந்திய போதும்

வள்ளல்உன் தன்னையே மதித்துன்


சாயையாப் பிறரைப் பார்த்ததே அல்லால்

தலைவவே றெண்ணிய துண்டோ


தூயபொற் பாதம் அறியநான் அறியேன்

துயர்இனிச் சிறிதும்இங் காற்றேன்


நாயகா எனது மயக்கெலாம் தவிர்த்தே

நன்றருள் புரிவதுன் கடனே.! 


மாயையில் கலங்கி வருந்திய போதும் .பல தெய்வங்களை வழிப்பட்ட போதும் *உன் தூய பொற்பாதம் அறியவும்  உண்மை உருவத்தை அறிந்து கொள்ளவும்* .பல வண்ணங்கள் வடிவங்களால் தோற்றுவிக்கப் பட்ட தெய்வங்களையும் வழிபட்டேன் அவற்றில் உண்மை இல்லை என்பதை அறிந்து கொண்டேன்.எனக்கு உண்மை இறைவனைக்காட்டி அறிவை தெளிவிக்க வேண்டும்  என்கிறார்.


*வள்ளலார் பாடல் !*

வண்ணம் வேறெனினும் வடிவுவே றெனினும்

மன்னிய உண்மை ஒன்றென்றே


எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்

திறையும்வே றெண்ணிய துண்டோ


அண்ணல்நின் பாதம் அறியநான் அறியேன்

அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்


திண்ணமே நின்மேல் ஆணைஎன் தன்னைத்

தெளிவித்துக் காப்பதுன் கடனே.! 


மேலே கண்ட பாடல்களிலே மக்களுக்காக தெளிவாக விளக்கி விளக்கம் தருகின்றார்.


உலகில் உள்ள எல்லாவற்றுக்கும்

*அருட்பெருஞ்ஜோதி* யே காரண காரியமானது என்னும் உண்மையை அருளால் அறிந்து கொள்கிறார்.


வள்ளலார் சொல்வதை கவனிக்கவும் . 

 

சர்வ சித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை நோக்கி - தபசு செய்து சிருஷ்டியாதி பஞ்ச கிருத்தியங்களையும் பெற்றுக்கொண்ட மூர்த்திகளாகியவர்.


 ஒரு தொழிலுடைய பிரமாவும், இரண்டு சித்தியுடைய விஷ்ணுவும், மூன்று சித்தியுடைய ருத்திரனும் - இதுபோன்ற மற்றையர்களும், மேற்குறித்த மூவரால் ஏற்படுத்திய தத்துவ சித்திக் கற்பனைகளாகிய சமய மத மார்க்கங்களை அனுஷ்டித்து, அவர்களையே கர்த்தாக்களாக வணங்கி வழிபாடு செய்துவருகிற இது வரையிலுமுள்ள ஆன்மா ஜீவ அணுக்கள். 


மேற் குறித்தவர்களது பதப் பிராப்தியை - மேற்படி அணுக்கள் - லேசம் பெற்றுக் கொண்டார்கள். ஆதலால் இவர்களை அசைப்பித்து அனுக்கிரகிக்கும் *சர்வ சித்தியையுடைய தனித்தலைமைக் கடவுளின் சித்தியின் லேசங்கள் இவர்களுக்குள*. 


ஆதலால் இவர்கள் அந்தச் *சர்வ சித்தியை யுடைய அருட்பெருஞ்ஜோதி கடவுளுக்குக் கோடி கோடிப்பங்கு தாழ்ந்த தரத்திலிருக்கின்றார்கள்*. *ஆகவே சமயத் தேவர்களை வழிபாடு செய்வது அவசியமல்ல. சுத்த சன்மார்க்க கொள்கை அல்ல*.


மேற்குறித்தவர்கள் அற்ப சித்தியைப் பெற்று, அதில் மகிழ்ந்து அகங்கரித்து, மேல் படிகள் ஏறவேண்டியவைகளை ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல் போல், இங்கு மற்றவைகளை உன்னி அவலமடைந்து நில்லாமல், 


*சர்வ சித்தியுடைய கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவருண்டென்றும்* அவரை உண்மை அன்பால் வழிபாடு செய்து, *பூரண சித்தியைப் பெற வேண்டுவது சுத்த சன்மார்க்கக் கொள்கையாகும்*


மேலும் தனித்தலைவன் லக்ஷியந் தவிர அநித்திய சடதுக்காதிகளைப் பொருட்படுத்தி உபாசனாதி மார்க்கமாய் வழிபடுவது கொள்கை யல்ல. உபாசனை முதலியவற்றால் வழிபடுதலும் மேற் குறித்த தலைவனைக் குறித்ததே தவிர வேறில்லை.


இதற்குப் பிரமாணம்:  *சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" என்னும் திருஅருட்பாசுரத் திருஉள்ளக்கிடையானும், *அறங் குலவு தோழி இங்கே"* என்னும் அருட்பாசுர உள்ளக் கிடையானும் பெரும்பதி தெரிவித்தார். 


வள்ளலார் பாடல் ! 


சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது

*தாள்வணங்கிச் சாற்றுகின்றேன் தயவினொடும் கேட்பீர்*


என்மார்க்கத் தெனைநுமக்குள் ஒருவனெனக் கொள்வீர்

*எல்லாம்செய் வல்லநம திறைவனையே தொழுவீர்*


புன்மார்க்கத் தவர்போலே வேறுசில புகன்றே

புந்திமயக் கடையாதீர் பூரணமெய்ச் சுகமாய்த்


தன்மார்க்க மாய்விளங்கும் சுத்தசிவம் ஒன்றே

தன்ஆணை என்ஆணை சார்ந்தறிமின் ஈண்டே.! 


*மேலும்...*


அறங்குலவு தோழி இங்கே நீ உரைத்த வார்த்தை

*அறிவறியார் வார்த்தை  எதனால் எனில் இம் மொழிகேள்*


உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்

உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்


மறங்குலவும் அணுக்கள் பலர் செய்த விரதத்தால்

மதத்தலைமை பதத்தலைமை வாய்த்தனர்அங் கவர்பால்


இறங்கலிலேன் பேசுதலால் என்பயனோ நடஞ்செய்

இறைவர்அடிப் புகழ்பேசி இருக்கின்றேன் யானே.! 


மேலே கண்டபாடலில் தெளிவாக விளக்கம் தந்துள்ளார்.உண்ணுவதும் உறங்குவதும் இறத்தலும் பிறத்தலும் உள்ள தெய்வங்களை வணங்குவது அறிவு அறியார் வார்த்தை என்று சொல்லுகின்றார்.


*மேலும் வருத்தமுடன் சொல்லுகின்றார்*.


மேட்டுகுப்பத்தில் திருக்கதவும் திறந்து திருக்காப்பிடுவதற்கு முந்தின இரவில் *இதுகாறும் என்னொடு நீங்கள் பழகியும் *சன்மார்க்க ஒழுக்கம்* இன்னதென்று தெரிந்து கொள்ளவில்லை என்று வேதனையுடன் வெளிப்படுத்துகின்றார்.


யாதெனில்: இங்கிருக்கின்ற ஒன்றையும் பொருளாகக் கொள்ளாதீர்கள்; *எல்லாப் பற்றுக்களுக்கும் காரணமான ஆசார சங்கற்ப விகற்ப வகைகளை விட்டுத் தலைவனையே தொழுவீர்கள்* என்ற திருவார்த்தை யதனால் தலைவனைத் தொழுவதே தொழிலாக வுடையது சுத்த சன்மார்க்க கொள்கையாகும்.


பின்பற்ற வேண்டியது சமரச சுத்த சன்மார்க்க  சத்திய சங்க  கடமையாக இருக்கவேண்டும்


சமய மதத்தில் உள்ளவர்கள். மேல்படியாகிய சுத்த சன்மார்க்க ஞான மார்க்கத்திற்கு வரவேண்டும். வந்துதான் ஆகவேண்டும் .

இங்கே வந்தால்தான் அருளைப்பெற்று மரணத்தை வென்று பேரின்ப லாபத்தை அடைய முடியும்.


சமய மதத்தில் பின்பற்றுபவர்கள். சிலர் இங்கே வந்து சமயத்தையும் சுத்த சன்மார்க்கத்தையும் ஒன்று சேர்த்து குழப்பி புதியதாக வரும்  மக்களை குழப்பிக்  கொண்டுள்ளார்கள்.


*தெளிவான சன்மார்க்கிகள்* ! 


வள்ளலார் கொள்கையானது மூடநம்பிக்கை அற்ற  முற்போக்கு அறிவியல் விஞ்ஞானம் வேதியல் சார்ந்த ஆன்மீகம் என  அறிந்து பின்பற்றுவதற்கு ஆவல்கொண்டு.

சுமார்  15 பதினைந்து ஆண்டுகளாக நிறைய வாலிபர்கள்.

பெண்களை். மற்றும் 

புதியவர்கள் . *உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வந்து கொண்டே உள்ளார்கள்* அவர்கள் தெளிவான சிந்தனையில் வருகிறார்கள்  தெளிவாக இருக்கிறார்கள்.

அவர்களை சில  அரைகுறை  சன்மார்க்கிகள் மூடநம்பிக்கையை புகுத்தி குழப்பம் செய்து கொண்டு உள்ளார்கள். 


அவர்கள் அப்படி செய்யாமல் இருப்பது அவர்களுக்கும் நல்லது மற்றவர்களுக்கும் நல்லது. 


எனவே சன்மார்க்க அன்பர்கள்.மற்றவர் சொல்வதை வைத்து குழுப்பம் அடையாமல். வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை நன்கு ஊன்றி  படித்தால் தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.எளிய தமிழில்தான் எழுதி வைத்துள்ளார்.


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய கொள்கைகள்* !


*கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* ! 


சிறு தெய்வ வழிபாடு கூடாது.! 


தெய்வங்களின் பெயரால் உயிர்பலி செய்யக்கூடாது ! 


உயிர்க்கொலை செய்யக்கூடாது புலால் உண்ணக்கூடாது.


ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்! 


எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ண வேண்டும் ! 


ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையை பின்பற்ற வேண்டும் !


வேதங்கள் ஆகமங்கள் புராணங்கள்.

சாத்திரங்கள்  இதிகாசங்கள் உண்மையை தெரிவிக்கவில்லை பின்பற்ற வேண்டாம் ! 


கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்குதல்  கூடாது ! 


மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளல் கூடாது! 


இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது. 


கலையுரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும். கண்மூடிப் பழக்கம் எல்லாம் மண்மூடிப்போக வேண்டும் !


சமாதி பழக்கம் பழக்கம் அல்ல சகஜ பழக்கமே பழக்கம் ! 


எதிலும் பொது நோக்கம் வேண்டும்.


சாகாதவனே சன்மார்க்கி ! 


போன்ற புரட்சி கொள்கைகளை.

சுத்த சன்மார்க்கிகள் இடைவிடாது கடைபிடிக்க வேண்டும். 


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்*!


சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், *காமக் குரோதம்* முதலியவைகள் நேரிட்ட காலத்தில் *ஞான அறிவினால்* தடுத்துக்கொள்பவரும், *கொலை புலை* தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் *சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள்*. 


*மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம்* - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள்.! 


வள்ளலார் பாடல் ! 


ஆதி அந்தமும் இல்லதோர் அம்பலத் தாடும்

சோதி தன்னையே நினைமின்கள் சுகம்பெற விழைவீர்


நீதி கொண்டுரைத் தேன்இது நீவீர்மேல் ஏறும்

வீதி மற்றைய வீதிகள் கீழ்ச்செலும் வீதி.!


மனித குலத்தை மேம்படுத்த சுத்த சன்மார்க்கமே  சிறந்த ஞான மார்க்கமாகும். 


*வடலூரை நோக்கி மக்கள் திரளாக வரத் தொடங்கி விட்டார்கள்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

புதன், 19 ஆகஸ்ட், 2020

அருளாளர்கள் மகாசபை கூட்டம் !

 *அருளாளர்கள் மகாசபை கூட்டம்* ! 


பல கோடி உலகங்களையும். பலகோடி அண்டங்களையும். அதில் உள்ள பஞ்ச பூதங்களையும். ஒளிக் கதிர்களையும். கிரகங்களையும் பொருள்களையும் மற்றும் அனைத்து உயிர்களையும்.மற்றும் எல்லாவற்றையும். தோற்றுவித்தல்.விளக்கம் செயவித்தல்.துரிசு நீக்குவித்தல்.பக்குவம் வருவித்தல்.பலன் தருவித்தல். போன்ற ஐந்தொழிலும்  செய்துகொண்டு உள்ளவர்.


இயற்கை உண்மையானவர் .

இயற்கை விளக்கமானவர் .

இயற்கை இன்பமானவர் என்றும் எல்லோராலும் போற்றப்படுகின்ற *ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்* என்பவராகும். இங்கே ஆண்டவர் என்பது உருவம் *அற்ற அருள் ஒளியைக் குறிப்பதாகும்.*


அந்த அருளால்  படைக்கப்பட்ட அண்டங்களையும் உலகங்களையும்  ஆட்சி செய்ய.நிர்வாகம் செய்ய. பல கோடி அதிபர்களையும் கர்த்தாக்களையும்.

அருளாளர்களையும் மற்றும் பலகோடி ஊழியர்களையும்  நியமித்துள்ளார்.


ஆன்மாக்கள் !   


*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் இவ்வுலகிற்கு  அனுப்பிய ஆன்மாக்கள்.  உயிர் எடுத்து  உடம்பு எடுத்து  இறுதியாக மனித பிறப்பு எடுத்து  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று. மரணத்தை வென்று. ஊன் உடம்பை ஒளி உடம்பாக   மாற்றி அருட்பெருஞ்ஜோதியுடன் கலந்து  பேரின்ப வாழ்க்கை வாழவேண்டும் என்பதே இறைவன்  ஆணையாகும்*.


அருட்பெருஞ்ஜோதி கட்டளைப்படி  ஆணைப்படி நடைபெறவில்லை. காரணம் ! ஆன்மாக்களுக்கு வழிகாட்டிய.உலகில் உள்ள எல்லா அருளாளர்களும் உண்மை பாதி. பொய் பாதியாக.

உண்மைகலந்த பொய்யாகப்  போதித்து  *உண்மைக்கு புறம்பான* செய்திகளையும் கொள்கைகளையும் விதைத்து விட்டார்கள். 


ஆதலால் ஆன்மாக்கள் பெறவேண்டிய ஆன்ம லாபத்தை பெறமுடியாமல் இறந்து இறந்து.பிறந்து பிறந்து துன்பத்திலே சிக்கி வாழ்ந்து கொண்டு உள்ளன.


ஆன்மீகத்தின் பெயரால்  நேர்வழியில் ஆன்மாக்களை  கொண்டுசெல்ல எந்த ஒரு ஆன்மீக அருளாளர்களும் முன்வரவில்லை.

அவர்களும் உண்மைத் தெரிந்துகொள்ள விருப்பம் இல்லாமல் மாயையில் சிக்கிக் கொண்டார்கள்.


எனவே ஆன்மாக்கள் உண்மைத் தெரிந்து உண்மை விளக்கம் பெற்று உண்மை இன்பத்தைப் பெறவேண்டும் என்பதற்காக 


05-10-1823 ஆம் ஆண்டு  பக்குவம் உள்ள ஆன்மாவை இவ்வுலகிற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவர்தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும். 


வள்ளலார் அவர்கள் ஆன்மாக்களுக்கு சொல்ல வேண்டிய உண்மைகள் யாவும் ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியதோடு அல்லாமல்.வாழ்ந்தும் காட்டி உள்ளார்.


எனவே பழைய கருணை இல்லா ஆட்சியை அப்புறப்படுத்திவிட்டு.கருணை உள்ள அருள் நயந்த நல்ல அருளாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு. *ஆட்சி மாற்றம் தேவை* என்பதால்  மாபெரும் அருளாளர்கள் மகாசபையை அருட்பெரு வெளியில்  கூட்டுகின்றார்.


*அருளாளர்கள் மகாசபை கூட்டம்* !  


மகாசபைக்கு வரவைக்கப்பட்டவர்கள் யார் ?  யார்? என்பதை பாடல்கள் மூலமாய் பட்டியல் போட்டு தெரிவிக்கின்றார்.


*பாடல்கள்* !  


உருத்திரர்கள் ஒருகோடி நாரணர்பல் கோடி

உறுபிரமர் பலகோடி இந்திரர்பல் கோடி


பெருத்த மற்றைத் தேவர்களும் முனிவர்களும் பிறரும்

பேசில் அனந் தங்கோடி ஆங்காங்கே கூடித்


திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று

தியங்குகின்றார் நடங்காணும் சிந்தையராய் அந்தோ


வருத்தமொன்றும் காணாதே நான்ஒருத்தி ஏறி

மாநடங்காண் கின்றேன்என் மாதவந்தான் பெரிதே.! 


மேலும் பாடல் 


பார்உலகாதிபர் புவனாதிபர் அண்டா திபர்கள்

பகிரண்டா திபர் வியோமா திபர் முதலாம் அதிபர்


ஏர் உலவாத் திருப்படிக்கீழ் நின்று விழித் திருக்க

எனைமேலே ஏற்றினர் நான் போற்றிஅங்கு நின்றேன்


சீர்உலவா யோகாந்த நடம் திருக்கலாந்தத்

திருநடம் நா தாந்தத்தே செயும் நடம்போ தாந்தப்


பேர் உலவா நடங்கண்டேன் திருஅமுதம் உணவும்

பெற்றேன் நான் செய்ததவம் பேருலகில் பெரிதே.!


மேலே கண்ட அருளாளர்கள் அனைவரும் சபையிலே அமர்ந்திருக்க வள்ளல் பெருமானை மட்டும் அழைத்து சபையின்  நடுவே அமர்த்தி.இவர் யார் ? என்பதையும் அவருடைய பூரண அருள் ஆற்றல் பற்றியும்  அனைவருக்கும் புரியும்படி அறிமுகப்படுத்தி. அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்கின்றார்.


*வள்ளலார் பாடல்* ! 


*பொய்பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க* நான்போய்ப்

பொதுநடங்கண் டுளங்களிக்கும் போது* மண வாளர்*


*மெய்பிடித்தாய் வாழியநீ* சமரசசன் மார்க்கம்

விளங்கஉல கத்திடையே விளங்குக என் றெனது


கைபிடித்தார் நானும்அவர் கால்பிடித்துக் கொண்டேன்

களித்திடுக இனியுனைநாம் கைவிடோம் என்றும்


*மைபிடித்த விழிஉலகர் எல்லாரும் காண*

மாலையிட்டோம் என்றெனக்கு மாலையணிந் தாரே.*! 


மேலும் ஒரு பாடல் !


*பொருத்தமிலார் எல்லாரும் புறத்திருக்க* நான்போய்ப்

பொதுநடங்கண் டுவந்துநிற்கும் போதுதனித் தலைவர்


திருத்தமுற அருகணைந்து கைபிடித்தார் நானும்

தெய்வமல ரடிபிடித்துக் கொண்டேன் சிக் கெனவே


*வருத்தமுறேல் இனிச்சிறிதும்* *மயங்கேல்* *காண் 

*அழியா*

*வாழ்வுவந்த துன்தனக்கே* ஏழுலகும் மதிக்கக்


கருத்தலர்ந்து வாழிய என்று  *ஆழிஅளித் தெனது*

கையினில்பொற் கங்கணமும் கட்டினர்காண் தோழி.!  


மேலே கண்ட பாடல்களின் வாயிலாக  தெளிவான விளக்கத்தோடு எளிய தமிழில் எல்லோருக்கும் ?புரியும்படி சொல்லியுள்ளார்... 


இதுவரையில் ஆட்சியில் இருந்த பொய்பிடித்தவர்களையும்.பொருத்தம் இல்லாதவர்களையும். அகற்றி. அவர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு. *உண்மையான புதிய அருள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருகிறார்*.


இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆணைப்படி   புதிய அருளாட்சியை  தலைமை ஏற்று நடத்திக் கொண்டு உள்ளவர்  தான் திருஅருட்பிரகாச வள்ளலார் என்பவராகும்.


*அவர் செய்யும் ஐந்தொழிலையும் நீயே செய் என்று எனக்கு அளித்தான் என்கிறார்*.


பாடல் ! 


ஐந்தொழில் நான் செயப்பணித்தாய் அருளமுதம் உணவளித்தாய் 


வெந்தொழில் தீர்ந் தோங்கிய நின் மெய்யடியார் சபைநடுவே


எந்தை உனைப் பாடிமகிழ்ந் தின்புறவே வைத்தருளிச்


*செந்தமிழின் வளர்க்கின்றாய் சிற்சபையில் நடிக்கின்றாய்*.!


மேலும் ஒருபாடலில் சொல்லுகின்றார்.!


சத்தியவான் வார்த்தை இது தான்உரைத்தேன் கண்டாய்

சந்தேகம் இலைஇதனில் சந்தோடம் உறுவாய்


இத்தினமே அருட்சோதி எய்துகின்ற தினமாம்

இனிவரும் அத் தினங்கள் எலாம் இன்பம் உறு தினங்கள்


*சுத்தசிவ சன்மார்க்கம் துலங்கும்* எலா உலகும்

தூய்மைஉறும்* *நீ உரைத்த சொல்அனைத்தும் பலிக்கும்*


செத்தவர்கள் எழுந்துலகில் திரிந்துமகிழ்ந் திருப்பார்

திருவருட்செங் கோல்எங்கும் செல்லுகின்ற தாமே.! 


இனி வரும் காலம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க கொள்கைகள் துலங்கும் காலம்.இனி வரும் தினங்கள் எல்லாம் இன்பம் உறும் தினங்களாகும்.

எல்லா உலகும் தூயமை பயக்கும்.நீ சொல்லியது அனைத்தும் பலிக்கும் நிறைவேறும்.

சந்தேகம் வேண்டாம் சந்தோடம் உறுவாய் .


இனி தெத்தவர்கள் மீண்டும் பிறந்து வந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று ஆனந்தமுடன் திரிந்து மகிழ்ந்திருப்பார்கள்.


ஏன் என்றால் ? உலகம் எங்கும் சாதி.சமயம்.மதம் அற்ற  திருவருட் செங்கோல் ஒரே கொள்கையுடன் ஒரே மாதிரியாக பொது நோக்கத்தோடு. *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்* சமமாக  செயல்படும் என்பதை தெரியப்படுத்துகின்றார்.


*வள்ளலார் பாடல்* ! 


உலகமெலாம் போற்ற ஒளிவடிவ னாகி

இலகஅருள் செய்தான் இசைந்தே 


திலகன் என

நானேசன் மார்க்கம் நடத்துகின்றேன் நம்பெருமான்

தானே எனக்குத் தனித்து.! 


என்ற பாடலில் கண்டபடி அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப்பெற்று மரணத்தை வென்று  சுத்த பிரணவ ஞான தேகம் என்னும் முத்தேக சித்திபெற்று ஆண்டவர்  ஆணைப்படி ஒரு திலகம் போல் அருள் ஆட்சி நடத்திக் கொண்டு உள்ளவர் தான் வள்ளலார் என்பவராகும்.


வள்ளலார் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து கொண்டார்.

அவருக்கு மனித  உருவம் இல்லை. அருள் ஒளியாக அருள் தேகமாக உள்ளார்.


எனவே வள்ளலார் உருவத்தை வைத்து வழிபடாமல். உயிர் இரக்கமான பரோபகாரத்தை கடைபிடித்து.  அருட்பெருஞ்ஜோதிஆண்டவர் மேல் தீராத அன்பு கொண்டு.நமது சிற்சபையின் கண் மனத்தை செலுத்தி   வழிபட்டால் பெறவேண்டியதை பெற்றுக் கொள்ளலாம். 


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896. 

திங்கள், 17 ஆகஸ்ட், 2020

வள்ளலார் தனிப்பிறவி !

 *வள்ளலார் தனிப்பிறவி* *! 


உலகில் தோன்றிய பல ஞானிகள் பூர்வ புண்ணியத் தொடர்பாலும். சுய சிந்தனை ஆற்றலாலும்.அபூர்வ அறிவாலும்.

நல்வினைப் பயனாலும்.

அனைவரும் ஆண் பெண் உறவாலும் அவதரித்தவர்கள்.


உலக உயிர்களின் நன்மைக்காகவும் மனிதகுல நல் வாழ்க்கைக்காகவும் இறைவன் அருளைப்பெற்று வாழ்ந்து மக்களுக்கு ஏதோ சிலபல நன்மை செய்தவர்கள் என்பதால் அவர்களை ஞானிகள் என்றும்.

அருளாளர்கள் என்றும் போற்றப்படுவார்கள். 


இறைவன் அருளைப்பெற்ற அருளாளர்கள் ஞானிகள் என்று போற்றப்படுபவர்கள்உலக மக்களுக்கு ஒரே கருத்தை.ஒரே கொள்கைகளை போதிக்கவில்லை.

ஒவ்வொருவரும் மாறுபட்ட  கருத்துகளாகவே போதித்து உள்ளார்கள்.


ஒவ்வொருவரின் கருத்துக்கள் கொள்கைகளை மக்கள் மத்தியிலே கொண்டு செல்ல மதங்கள்.சமயங்கள்.சாதிகள் தோன்றின.அதனால் ஒற்றுமை இல்லாமல் மக்கள் பல பிரிவினைக்களுக்கு தள்ளப்பட்டார்கள்.


அவர்கள் போதித்த கொள்கைகளுக்கு வெவ்வேறான சாதி.சமயம்.மதம் போன்ற சாயம் பூசி .இந்துமதம்.

இஸ்லாம்மதம்.

கிருத்துவமதம்.

பவுத்த மதம் முதலிய மதங்களுக்கு தனித்தனி பெயர் சூட்டி உள்ளார்கள். 


கடவுளின் ஏகதேச அருளைப்பெற்று அருளாளர்கள் கடவுளின் பெயரால் போட்டி பொறாமை.வஞ்சகம்.சூது.வாது போன்ற சுயநலத்தால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற வேறுபாட்டை உண்டாக்கி சண்டையிட்டு மாண்டுபோனார்கள் மாண்டுகொண்டும் உள்ளார்கள்.


இவற்றை தடுத்து நிறுத்தி ஒற்றுமையை உருவாக்க வேண்டும்.உண்மையானக் கடவுளை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவும்.அக்கடவுளை நேரடியாக தொடர்பு கொண்டு அருளைப்பெற்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழவைக்க வேண்டும் என்பதற்காகவே.

இறைவனால் வள்ளல்பெருமானை இவ்வுலகிற்கு   வருவிக்க உற்றார் என்பதை நாம்    முதலில்  தெரிந்து கொள்ள வேண்டும்.


வள்ளலார் வருவிக்க உற்ற பாடல் ! 


பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்

பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்

பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல

பேதமுற் றங்கும்இங்கும்


போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்

போகாத படிவிரைந்தே

புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்

பொருளினை உணர்த்திஎல்லாம்


ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ

*என்பிள்ளை ஆதலாலே*

இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே

றெண்ணற்க என்றகுருவே*


நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்

நிறைந்திருள் அகற்றும்ஒளியே

நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு

நீதிநட ராஜபதியே.! 


மேலும் ஒருபாடல் !


அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்


சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்


இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனை இந்த


*உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே*.!


மேலும் ஒருபாடல் ! 


பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்


செந்நெறி அறிந்திலர் *இறந்திறந் துலகோர்*

*செறிஇருள் அடைந்தனர்* ஆதலின் இனிநீ


புன்னெறி தவிர்த்தொரு *பொதுநெறி எனும்வான்*

*புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்*


தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.! 


மேலே கண்ட பாடல்கள் வள்ளலார் வருவிக்க உற்ற காரண காரியத்தை தெளிவாக தெரியப்படுத்துகின்றார்.


வள்ளலார் ஆண் பெண் உறவில் பிறக்கவில்லை.

சம்புபட்சம்  (சம்புபக்ஷம் ) வாயிலாக பிறந்தவராகும்.


அதன் விபரம் வருமாறு..

. *பக்ஷபேதமும் சிருஷ்டியும்*


சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. 


பக்ஷமாவன--- *அணுபக்ஷம்,* *பரமாணுபக்ஷம்,* *சம்புபக்ஷம்*, *விபுபக்ஷம்,* *பிரகிருதிபக்ஷம்*  ஆக 5. ஐந்து வகைப்படும்.


இவற்றில் சம்பு, விபு - இவ்விரண்டிற்கும் அபக்குவமில்லை. மற்ற மூன்றிற்கும் பக்குவ அபக்குவ முள. இதற்குப் பிரமாணம். *அடர்மலத்தடையால் தடையுறும்", "தடையுறாப் பிரமன்" என்னும் திருப்பாசுரங்களின்* உள்ளக்கிடையா லுணர்க.


மேற்படி பக்ஷ சிருஷ்டி விசித்திரங்களாவன: 


அணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி ஒஷதிகளாலும் பௌதிகங்களாலும்.


 ஆகார மூலமாய் ஸ்திரீ புருஷ சம்பந்தத்தோடு உண்டாக்குவது. 


மேற்படி பக்குவ சிருஷ்டியாவது புருஷன் ஸ்திரீயைப் பார்ப்பது போல் தன் அஸ்தத்தால் ஸ்திரீயைத் தடவி ஊன்றி நோக்கிப் புருஷனோடு தேகசம்பந்தஞ் செய்வித்து உண்டாக்குவது. 


பரமாணுபக்ஷ அபக்குவ சிருஷ்டி தேகத்தைக் கரத்தால் பரிசித்து ஊன்றிப் பார்த்த உடன் கருத்தரித்தல். 


மேற்படி பக்ஷத்தில் பக்குவம் கண்ணால் பார்த்த உடனே புணர்ச்சியன்றிக் கருத்தரித்தல்.  


*சம்புபக்ஷம் வாக்கினால் சொன்னவுடன் கருத்தரித்தல்*.  


பிரகிருதி பக்ஷத்தால் சங்கற்பித்த மூன்றேமுக்கால் நாழிகைக்குள் பிண்டம் கீழ்த்தோன்றுதல். 


விபுபக்ஷசிருஷ்டி பார்த்தவுடன் திரண முதலானவற்றையும் நரனாகச் செய்வித்து அநேக விசித்திரங்கள் உண்டுபண்ணுவது. மேற்படி சிருஷ்டிகள் பல; 


வேதாகமங்களிலேயும் பலபட விரிந்தன. 


*வள்ளலார் சம்புபட்சத்தில் பிறந்தவர்...*


கடலூர் மாவட்டம்.சிதம்பரம் அருகில் உள்ள மருதூருக்கு சன்னியாசி உருவம் தாங்கிவந்த அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்.

இராமய்யா மனைவி சின்னம்மையிடம் பசிக்கு உணவு கேட்டு உண்டு பின். என்பசியை போக்கிய உமக்கு உலகில் உள்ளவர்கள் அனைவருடைய பசியையும் போக்க ஒரு ஞானக்குழந்தை பிறக்கும் என்று வாயால் சொல்லிவிட்டு மறைந்துவிடுகிறார்.


அவர் வாயால் சொல்லிய தருணத்தில் சின்னம்மை கர்பமாகிவிடுகிறார். இறைவன் வாயால் சொல்லிய உடன் கருதரிப்பதற்கு பெயர் *சம்பு பட்சம்* என்று பெயர்.

அதனால்தான் *இறைவனால் வருவிக்க உற்றேன் அருளைப்பெற்றேன் என்கிறார்*.

பள்ளிக்கு போகாமல் உலகியல் கல்விக் கற்காமல் எல்லா அறிவும் எல்லா ஞானமும்.எல்லா அனுபவமும் இறைவனாலே கொடுக்கப்பட்டது. 


எல்லா ஞானிகளையும் விட தனித்தன்மை வாய்ந்த தனிப்பிறவி வள்ளலார். *உண்மை உரைக்கவந்த உத்தமர்* .

திருஅருளாலே எழுதிய நூல் என்பதாலே   *திருஅருட்பா* என்று பெயர் வழங்கப்பட்டது.


இராமலிங்கம் என்ற பெயர் முன்னால் தனது உண்மைத் தந்தையான இறைவனைக் குறிக்கும் சிதம்பரம் ராமலிங்கம் என்று தன் பெயரை எழுதுவார். உபகாரத் தந்தையாகிய இராமய்யா பெயரை எங்கும் எதிலும் பயன் படுத்தியது இல்லை.


*வள்ளல் பெருமானுக்கு முன்பிறவியும் இல்லை.பின்பிறவியும் இல்லை.கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர் வள்ளலார்*.


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே வள்ளலார்.

வள்ளலாரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர். 


எனவே மற்ற ஞானிகளுடன் வள்ளலாரை  ஒப்பிட்டு பேசுவது அறியாமையின் செயலாகும்.


வள்ளலார் பாடல் !


உண்மையுரைக் கின்றேன்இங் குவந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்


*எண்மையினான் எனநினையீர்* *எல்லாஞ்செய் வல்லான்*

*என்னுள்அமர்ந் திசைக்கின்றான்* *இதுகேண்மின் நீவிர்*


தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்

கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.! 


என்னும் பாடலின் வாயிலாக உலக மக்களுக்கு பொதுவான உண்மையை *திருவருளால்* தெளிவாக சொல்லுகின்றார்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

9865939896.

சனி, 15 ஆகஸ்ட், 2020

மிருகங்ள் யாவும் பேசும் !

 மிருகங்களும் பேசும் காலம் வரப்போகிறது.

இன்னும் கொஞ்ச காலத்தில் மிருகங்கள் யாவும் மனிதனைப்போல் பேசப்போகிறது.அப்போது உலகில் உள்ள மனிதர்களின் வாழ்க்கை முறைகள் யாவும் மாற்றம் அடையப்போகிறது.


வெள்ளி, 14 ஆகஸ்ட், 2020

கொலை செய்யாதே ! புலால் உண்ணாதே !

 கொலை செய்யாதே ! புலால் உண்ணாதே ! 


உலகில் பல்லாயிரம் ஆண்டுகளாக வாய்பேசாத உயிர்களைக் கொன்று அதன் புலாலை உண்பது .உயர்ந்த அறிவு பெற்ற  மனிதர்களின் பழக்கமாக உள்ளது.


உலகில் உள்ள சாதி.சமயம்.மதங்கள்   உயிர்க்கொலை செய்வதற்கும்  புலால் உண்பதற்கும் தடையாக இல்லாமல் கண்டும் காணாமல். இலைமறை காய்மறையாக. உள் ஒன்று வைத்தும் புறம் ஒன்று பேசியும் ஆன்மீகம் என்ற பெயரில். மக்கள் செய்யும் தவறான உணவு உட்கொள்ளும் வாழ்க்கை முறையை கண்டும் காணாமல் இருப்பது ஆன்மீகத்தின் ஆழகல்ல.ஆன்மீக கொள்கை அல்ல. 


ஆன்மீகம் என்றால் என்ன ? 


இறைவனால் படைக்கப்பட்ட ஆன்மாவையும் உயிரையும் உடம்பையும் பாதுகாப்பதே ஆன்மீகம் என்பதாகும்.


*உயிர்க்கொலை செய்வதும் புலால் உண்பதும் உலகின் மிகப்பெரிய வியாபாரமாகி விட்டது*.


இதுவே நாட்டின் அழிவுப்பாதைக்கு முக்கிய காரிய காரணமாகும்.


இன்றைய விஞ்ஞானம். அறிவியல். வேதியல்.பவுதீகம்

படித்தவர்கள்.மற்றும் எல்லாம் தெரிந்தவர்கள்.மக்களைக் காப்பாற்றும் 

அரசியல் ஆட்சியாளர்கள் அனைவரும்.உண்மை உணராமல். அறியாமையால் தவறு செய்து கொண்டே உள்ளார்கள்.


உயிர்க்கொலை செய்வதும் அதன் புலால் உண்பதும் மன்னிக்க முடியாத குற்றம் என்பதை திருவள்ளுவரும்.

திருஅருட்பிரகாச வள்ளல்பெருமானும்.வெளிப்படையாக இவ்வுலகிற்கு சொல்லி உள்ளார்கள்.


இவ்வுலகில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் சுதந்திரமாக வாழ்வதற்கு எல்லா உரிமையும் உண்டு.


இறைவனால் படைக்கப்பட்ட உயிர்களை அழிக்க எவருக்கும் உரிமை இல்லை என்கிறார் வள்ளலார். *இயற்கை மரணம் வரலாம் செயற்கை மரணம் செய்யக்கூடாது*


*உலகில் அக இனத்தார் புற இனத்தார் என இரண்டே சாதியை மட்டுமே பிரித்தார் வள்ளலார்*. 


இறைவனிடம் அருள் பெறும் தகுதி உடையவர்கள் யார் என்றால் ?  


உயிர்க் கொலை செய்யாமலும்  புலால் உண்ணாமலும் உள்ளவர்களே *அக இனத்தவர்கள் ஆவார்கள்*.அருள் பெறும் தகுதி உடையவர்கள்.அவர்களைப் புண்ணியவான்கள் எனப்  போற்றப்படுவார்கள்.


உயிர்க்கொலை செய்பவர்களும் புலால் உண்பவர்களும் *புற இனத்தவர்கள் ஆவார்கள்*.

இறைவனிடம் தொடர்பு கொள்ளவும்.அருள் பெறவும் தகுதி அற்றவர்கள். இயற்கைக்கு விரோதமானவர்கள்.மகா பாவிகள் என தூற்றப்படுவார்கள் என்கிறார் வள்ளலார்.


வள்ளலார் பாடல் ! 


உயிர்க்கொலையும் புலைப்பொசிப்பும் உடையவர்கள் எல்லாம்

உறவினத்தார் அல்லர்அவர் புறஇனத்தார் அவர்க்குப்


பயிர்ப்புறும் ஓர் பசிதவிர்த்தல் மாத்திரமே புரிக

பரிந்துமற்றைப் பண்புரையேல் நண்புதவேல் இங்கே


நயப்புறு சன் மார்க்கம்அவர் அடையளவும் இதுதான்

நம்ஆணை என்றெனக்கு நவின்றஅருள் இறையே


மயர்ப்பறு மெய்த் தவர் போற்றப் பொதுவில் நடம் புரியும்

மாநடத்தென் அரசேஎன் மாலைஅணிந் தருளே.! 


புற இனத்தவராக இருந்தாலும் பசி என்று வந்து விட்டால் பசி தவிர்தல் மாத்திரமே புரிய வேண்டும்.மற்றை பண்பு பற்றியும் நன்மை பற்றியும் சொல்லாதீர்கள்.ஏன். என்றால் ?  அவர்கள் அறிவு விளக்கம் இல்லாமல் இருக்கின்றார்கள். 


அவர்கள் புலால் மறுத்து நல்வழிக்கு வரும்போது நற்பண்புகளை சொல்லுங்கள் இதுவே நம் ஆணை என்று அழுத்தமாக சொல்லுகின்றார். இதுபோல் எந்த ஞானிகளும் வெளிப்படையாக சொல்லவில்லை.


*புலால் உணவு மனித உடம்பிற்கு ஏற்றது அல்ல*


ஏற்க முடியாத புலால் உணவை (மாமிசம்) உண்பவர்களுக்கு.

*தீர்க்க முடியாத  தீராத பிரச்சினைகள் வந்து கொண்டே இருக்கும்.*


*அடுத்து மனித பிறப்பு கிடைக்கும் என்பது நிச்சயம் அல்ல*  


எனவேதான் கடவுளின் பெயராலும் மற்றபடி எந்த வேண்டுதலுக்காகவும் வாய்பேசாத உயிர்களை பலி கொடுக்க கூடாது என்று திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.


இவ்வுலகில் பட்டம் பதவி புகழ் பொருள் அதிகாரம் படைத்த எவராக இருந்தாலும். மற்றும் சர்வ வல்லமை பெற்ற ஞானிகளாய் இருந்தாலும். உயிர்களை கொலை செய்து அதன் மாமிசத்தை உண்ணுவதாக *மனதில் நினைத்தாலும்.*

அவர்களை மனிதனாக நினைப்பதே தவறான செயலாகும் என்கிறார் வள்ளலார்.


மனிதனை மனிதன். கொன்றால் தூக்கு தண்டனை வழங்கவேண்டும் என்பது மனிதனால் இயற்றப்பட்ட சட்டத்தில் இடம் உண்டு.


வாய்பேசாத எதிர்த்து கேள்வி கேட்காத அப்பாவி உயிர் இனங்களை குழந்தைபோல் வளர்த்து. மனிதனின் உணவிற்காக கொலை செய்தால் அவனுக்கு கொலைக்குற்ற தண்டனை தண்டனை ஏன் வழங்குவதில்லை.


மனித உயிர்களுக்கு ஒருசட்டமா? மற்ற உயிர்களுக்கு ஒருசட்டமா ? எல்லா ஆன்மாக்களும் எல்லா உயிர்களும் ஒரேத் தன்மை உடையது என்பதை இந்த மனித குலம் புரிந்து கொள்ளாதது ஏன் ? புரிய வைக்காதது ஏன் ? இது யார் குற்றம். சிந்திக்க வேண்டும்.


*மனுநீதிச்சோழன் இதே இந்திய  மண்ணில் ஆட்சி செய்தவன்தான்*.


வாய் பேசாத தாய்ப்பசுவானது. தான் ஈன்று எடுத்த  இளம் பசுங் கன்றானது தேர்க்காலில் அகப்பட்டு துடிதுடிக்க உயிர் இழந்த காட்சியைக் கண்டு தாங்கமுடியாத வேதனையால்  துயரத்தால் நீதி கேட்டு.

மனுநீதிச்சோழன் அரண்மனையில் உள்ள ஆராய்ச்சி மணியைத் தன். கொம்புகளால் அசைத்து மணியோசை எழுப்பி நீதி கேட்டது.


அரண்மனை மந்திரிகள் மூலமாக உண்மை அறிந்த மனுநீதிச்சோழன்.

பசுவின் கன்றை தேர்க்காலில் அகப்பட்டு கொன்றவன்  தன் மகன் வீதிவிடங்கன் என்று தெரிந்தும். இளம் பசுங்கன்று துடிதுடித்து இறந்த அதே இடத்தில் தன் மகனை கிடத்தி *தானே தேர் ஓட்டி சென்று* சக்கரத்தை மேலே ஏற்றி மகனை கொன்ற சம்பவம் வரலாறுகளில் படித்துள்ளோம்.


*மனுமுறைகண்ட வாசகம்* என்ற தலைப்பில் மனுநீதிச்சோழன் வரலாற்றை எளிய தமிழில் அழகான உரைநடையில் வள்ளலார் எழுதிவைத்து உள்ளார் அவற்றில். உள்ள செய்திகளை படித்து உண்மை தெரிந்து கொள்ள வேணுமாய்  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் வாழவேண்டும் வாழ்க்கை அமைத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.


கருணை மிக்கவர் எல்லா உயிர்களையும் தன்  உயிர்போல் நேசிப்பார்கள். *எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி* என்பார் வள்ளலார். கருணை உள்ள நெஞ்சினிலே கடவுள் வாழ்கிறார் 


*திருவள்ளுவர் கொல்லாமை புலால் மறுத்தல் என இரண்டு அதிகாரங்களாக 20 குறட்பாக்கள் தந்துள்ளார்*.


படித்து தெரிந்து கொள்ளவும்.உதாரணத்திற்கு ஒரு குறள்.


*தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது ஊன் உண்பான்*

*எங்கனம் ஆளும் அருள்* ? 


தன் உடம்பை வளர்ப்பதற்காகப் பிற உயிர்களின் உடம்பைக் கொன்று தின்பவனுக்கு இறைவன் அருள் எங்கனும் எவ்வாறு கிடைக்கும் என்று கேள்வி எழுப்புகிறார்.


மேலும் ஒரு குறள்.


உண்ணாமை வேண்டும் புலால் பிறிது ஒன்றன் 

புண் உணர்வார்ப் பெறின் !


தோலை நீக்கிவிட்டால் உடம்பின் பகுதி புண் வடிவத்தில் தோன்றுகிறது.

சிறிது வெளியே தெரிந்தாலும் அருவருப்பு உண்டாகிறது. நமது உடம்பின் புண் நமக்கு அருவருப்பாக இருக்கிறது .

பிறருக்கும் அருவருப்பாகத் தோன்றுகிறது.


ஆதலால் அப்புண்ணை வெளிக்காட்டாமல் மறைத்து விடுகிறோம்.நாவின் சுவையை மட்டும் கொண்டு இந்த அருவருப்பை மறந்து விடுகிறோம்.


புண்ணுக்கு என்ன தன்மை உண்டோ அனைத்தும் புலால் என்னும் மாமிசத்திற்கு உண்டு.சுவையை மறந்துவிட்டால் அது மற்றோர் உடம்பின் புண் என்று அறிவோம்.

அருவருப்பு அடைவோம்.இதை உணர்ந்து புலால் மறுக்க வேண்டும் என்பார் வள்ளுவர்.


நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு என்பார் வள்ளலார்.நாறிய பிண்ணாக்கு என்பது *மலம்* என்பதாகும். மாமிசம் திண்பது நாறிய மலம் தின்பதற்கு சம்மானது என்கிறார்.


எனவே உயர்ந்த அறிவு பெற்ற மனிதர்கள் உயிர்க்கொலை செய்யாமலும் அதன் புலால் உண்ணாமலும் இருந்தால் தனக்கும் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லதே நடக்கும்.


உலகில் உள்ள எல்லா உயிர்களும்  மகிழ்ச்சியுடன் வாழ்வேண்டும் என்பதே  இறைவன் சம்மதம்.

இயற்கையின் நியதி படைப்பு என்பதை உணர்ந்து அறிந்து தெரிந்து புரிந்து வாழ்வோம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

9865939896.

சனி, 1 ஆகஸ்ட், 2020

ஆன்மாவின் வண்ணம் !

*ஆன்மாவின் வண்ணம்* !

ஒவ்வொரு ஜீவ தேகத்தையும் இயக்கிக் கொண்டு இருப்பது உயிராகும். ஒவ்வொரு உயிரையும் இயக்கிக. கொண்டு இருப்பது ஆன்மா என்னும் உள்ஒளியாகும்.
ஒவ்வொரு ஆன்மாவையும் இயக்கிக் கொண்டுள்ளது பரத்தில் உள்ள பரமான்மா என்று சொல்லப் படுகிறது.

ஜீவனில் உள்ளதால் ஜீவான்மா என்றும்.பரத்தில் உள்ளதால் பரமான்மா என்றும் சமய மதங்கள் சொல்லுகின்றன.

சமய மதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பெயர்களை இறைவனுக்கு சூட்டி உள்ளார்கள்.அவற்றிற்கு பல வண்ணங்களும் வடிவங்களும் வைத்து உள்ளார்கள்.

பல வண்ணங்கள் வடிவங்கள் எதுவாயினும் உண்மை என்பது ஒன்றாகத்தான் இருக்க வேண்டும் இருக்க முடியும். அந்த உண்மையை நேரில் ஒருவரும் காணவில்லை.

*நான் காண வேண்டும் இது நின்மேல் ஆணை தெளிவித்துக் காப்பது உன்கடனே என்று இறைவனிடம் முறையிடுகிறார்*.

வள்ளலார் பாடல் !

வண்ணம் வேறு எனினும் வடிவம் வேறு எனினும்
மன்னிய உண்மை ஒன்று என்றே

எண்ணிய தல்லால் சச்சிதா னந்தத்
திறையும் வேறு எண்ணிய துண்டோ

அண்ணல் நின் பாதம் அறியநான் அறியேன்
அஞர்இனிச் சிறிதும்இங் காற்றேன்

திண்ணமே நின்மேல் ஆணை என் தன்னைத்
தெளிவித்துக் காப்பதுன் கடனே.!

காணாததை கண்டது போல் அவரவர்கள் அறிவுக்கு தோன்றிய யூகத்தின் அடிப்படையில் கலையுரைத்தை கற்பனையாக. நிலையாக உள்ளது போல் கடவுளுக்கு பல தோற்றங்களை வைத்துள்ளார்கள்.

*கலையுரைத்த கற்பனையை நிலை எனக் கொண்டாடும் கண்மூடி வழக்கம் எல்லாம் மண்மூடிப்போக என சாடுகிறார் வள்ளலார்*.

எல்லாம் வல்ல பரம்பொருள் எது ? என்பதை நேரில் கண்டு களித்து கலந்துகொண்டு உண்மையைப் உலகிற்கு வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

கடல்கடந்தேன் கரையடைந்தேன் கண்டுகொண்டேன் கோயில்
கதவு திறந் திடப்பெற்றேன் காட்சியெலாம் கண்டேன்

அடர்கடந்த திருஅமுதுண் டருள்ஒளியால் அனைத்தும்
அறிந்துதெளிந் தறிவுருவாய் அழியாமை அடைந்தேன்

உடல் குளிர்ந்தேன் உயிர்கிளர்ந்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளனவாய் நிறைந்தேன்

இடர்தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் ஓங் கினவே
இத்தனையும் பொதுநடஞ்செய் இறைவன்அருட் செயலே.!

மேலே கண்ட பாடலில்  இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கண்டு களித்து அருளைப்பெற்று. உடல் குளிர்ந்து. உயிரைக் காப்பாற்றி உள்ளம் தழைத்து சாகும் உடம்பை சாகாத உடம்பாக்க வேண்டும்.

இடர் தவிர்க்கும் கர்மசித்தி. யோகசித்தி.
ஞானசித்தி மூன்றையும் என்வசம் நிலைத்து நிற்க செய்து ஆன்ம தேகமாகிய பொன். உடம்பு பொருந்திடும் பொருட்டாய் என்உளம் கலந்த என் தனி அன்பே என்று போற்றி புகழ்கிறார்.

அந்த ஒப்பற்ற உயர்ந்த பொன்னிறம் கொண்ட இறைவனாகிய
எல்லாம் வல்ல பரம் பொருளுக்கு. எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியாகிய *அருட்பெருஞ்ஜோதி ஜோதி ஆண்டவர்* என்று பெயர் சூட்டியுள்ளார்.

இங்கே நாம் அவசியம்  கவனிக்க வேண்டியது !

இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒளி வண்ணமாக உள்ளார்.அவர் மாற்றுக் குறையாத பசும் பொன் வண்ணமாக மின்னிக் கொண்டும் உள்ளார். பலகோடி அண்டங்களையும்.
உலகங்களையும் ஐந்தொழில் வல்லபத்தால் இயக்கிக் கொண்டும் உள்ளார்.என்பதை தெரிவிக்கின்றார்.

வள்ளலார் பாடல் !

மாற்றறி யாத செ ழும்பசும் பொன்னே
மாணிக்க மேசுடர் வண்ணக் கொழுந்தே

கூற்றறி யாதபெ ருந்தவர் உள்ளக்
கோயில் இருந்த குணப்பெருங் குன்றே

வேற்றறி யாத சிற் றம்பலக் கனியே
விச்சையில் வல்லவர் மெச்சும்
விருந்தே

சாற்றறி யாத என் சாற்றுங் களித்தாய்
தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

என்னும் பாடலில் விளக்கமாக தெரியப்படுத்துகின்றார்.

கூற்றுவன் என்னும் எமன் நெருங்க முடியாத.ஒளி உடம்பாகிய ஆன்ம தேகம் பெற்றவர்களுக்கு மட்டுமே இறைவன் தன் உண்மையான உருவத்தை.அடையாளத்தை  வெளிப்படையாக காட்டி காட்சி தருவார்.

*ஆன்மாவின் வண்ணமும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வண்ணமும் ஒரே தன்மை உடைய அருள் ஒளியாகிய பொன் வண்ணமாகும்*.

ஆன்மாவை  மாயா சக்திகளாகிய  ஏழு வண்ணங்கள் மறைத்துக் கொண்டுள்ளன.
அவைகள்தான் ஏழுதிரைகளாகும்.
ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள  திரை மறைப்புகள் யாவும்  நீங்கினால் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தொடர்பு கொண்டு அருளைப் பெற்று மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமாக நம்மை  மாற்றிக் கொள்ள முடியும்.

இந்த உண்மை தெரியாமல் உலக வாழ்க்கையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு மரணத்தை வெல்ல முடியுமா என்றால் எக்காலத்திலும் முடியவே முடியாது.

வள்ளலார் பாடல் !

சார்உலக வாதனையைத் தவிர்த்தவர் உள் ளகத்தே
சத்தியமாய் அமர்ந்தருளும் உத்தமசற் குருவை

நேர்உறவே எவராலும் கண்டுகொளற் கரிதாம்
நித்தியவான் பொருளைஎலா நிலைகளுந்தான் ஆகி

ஏர்உறவே விளங்குகின்ற இயற்கைஉண்மை தன்னை
எல்லாம்செய் வல்லபத்தை எனக்களித்த பதியை

ஓர்உறவென் றடைந்துலகீர் போற்றிமகிழ்ந் திடுமின்
உள்ளமெலாம் கனிந்துருகி உள்ளபடி நினைந்தே.!

உலகில் உள்ள சாதி சமய மதங்கள் காட்டிய கொள்கைகளில்  சிறிதும்  எண்ணம் சொல்.செயல். உள்ளம் பற்றாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் காட்டிய தனிமனித.இந்திரிய..கரண.ஜீவ.ஆன்ம ஒழுக்க நெறிகளை பின்பற்றினால் மட்டுமே .ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள திரைகள் ஒவ்வொன்றாக விலகி ஆன்மாவின் *உண்மைத் தன்மையும் உண்மை வண்ணமும் வெளிப்படும்*.

ஆன்மாவின் ஒளித்தன்மை கோடி சூரிய பிரகாச வெப்பம் உள்ளது.அருள் பெறும் போது அவற்றைவிட பலமடங்கு அருள் பிரகாசம் உடையது.ஆனாலும் சுடாத தன்மை உடையது.

வள்ளலார் கொள்கையை பின்பற்றுபவர்கள்.
மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

சாதி சமய.மதக் கொள்கைகளை சுத்த சன்மார்க்க கொள்கையோடு  இணைத்து குழப்பம் செய்வதால் எந்த பயனும் பலனும் கிடைக்கப் போவதில்லை.

வள்ளலார் மிகத் தெளிவாக சொல்லுகின்றார்.

சாதி சமயச் சழக்கை விட் டேன்அருட்
சோதியைக் கண்டேன டி - அக்கச்சி
சோதியைக் கண்டேன டி.!

 மேலும்.

*சாதி சம யங்களிலே வீதிபல வகுத்த*
*சாத்திரக்குப் பைகள் எல்லாம் பாத்திரம்அன் றெனவே*

ஆதியில்என் உளத்திருந்தே அறிவித்த படியே
அன்பால் இன்று உண்மைநிலை அறிவிக்க அறிந்தேன்

ஓதிஉணர்ந் தோர்புகழும் சமரசசன் மார்க்கம்
உற்றேன்சிற் சபைகாணப் பெற்றேன் *மெய்ப் பொருளாம்*

*சோதிநடத் தரசைஎன்றன் உயிர்க்குயிராம்* *பதியைச்*
*சுத்தசிவ நிறைவை* *உள்ளே* *பெற்றுமகிழ்ந் தேனே*.!
என்னும் பாடலில் எளிய தமிழில் தெரிவிக்கின்றார்.

*எனவே நமது உள் ஒளியான ஆன்மாவின் வண்ணம். முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்*.  அதே வண்ணமாக நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும்.

*அவற்றிற்கு தடையாக உள்ளது எதுவாயினும் அகற்ற வேண்டும்*

*பல பொய்யான வண்ணங்களை வணங்கியோ வழிபாடு செய்வதாலோ எந்தவிதமான லாபமோ பெற்றுக் கொள்ளவே முடியாது*.

நாம் தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது என்பதை தெளிவாக தெரியப்படுத்துகின்றார்.

வள்ளலார் பாடல் !

குறித்துரைக்கின் றேன் இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும்வமனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்

வெறித்த உம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்

*பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே* அவற்றில்
புகுதாதீர் *சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்*

*செறித்திடு சிற் சபை* நடத்தைத் தெரிந்து துதித் திடுமின்
சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!

மேலே கண்ட பாடலை பலதடவை படித்து தெரிந்து உணர்ந்து தெளிவு பெற வேண்டும்.

*பஞ்ச பூத வண்ணமான இவ்வுடம்பை ஆன்ம வண்ணமாக மாற்றுவதே சாகாக்கலை.சாகாக்கல்வி யாகும்*.

வள்ளலார் பாடல்.

பொன்செய் நின்வடிவைப் புணர்ந்திட நினைத்தேன்
பொங்கிய தாசைமேல் என்றாள்

என்செய்வேன் எனையும் விழுங்கிய தையோ
என்னள வன்று காண் என்றாள்

கொன்செயும் உலகர் என்னையும் உனது
குறிப்பையும் குறித்திலார் என்றாள்

வன்செயும் அவர்வாய் ஓய்வதென் றென்றாள்
வரத்தினால் நான்பெற்ற மகளே.!

பொன்நிறம் உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை கலந்ததால் என் உடம்பும் பொன் நிறமானது.இதை உலக மக்கள் புரிந்து கொள்ளாமல் உள ளார்கள்.

பொய்யே சொல்லுகின்ற  அவர்கள் வாய் உண்மை உணர்ந்து  மெய் உரைக்கும்  காலம் விரைவில் வரும்.

*கொரோனோ வைரஸ் போன்ற தொற்று வருவதற்கு காரணமே மக்கள உண்மை உணர்ந்து கொள்ள வேண்டும்  என்பதற்காக நடத்தப்படும் இயற்கை உண்மையின்  செயல்பாடாகும்*.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !:

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.